logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை

பரஞ்சோதி முனிவர் அருளிய

(திருவாலவாய் மான்மியம்)

 

திருச்சிற்றம்பலம்

 

இரண்டாவது - கூடற் காண்டம்

(வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம் முதல் நாரைக்கு
முத்தி கொடுத்த படலம் வரை)

40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம்

1963.	பண் கொண்ட வேத முதல் இடை ஈறு நாடரிய பரமன் 
                       மாமனாகிய ஒரு வணிகன் 
எண் கொண்ட காணி பொருள் கவர் ஞாதி மாதுலரை 
                 எதிர் ஏறி வென்ற படி இதுவாம் 
தண் கொண்ட நேமி வரகுண தேவன் எய்து பழி 
             தன்னைத் துடைத்து அனையம் அவன் 
கண் கொண்டு காண உயர் சிவ லோகம் மதுரை தனில் 
                 வருவித்த காதை இனி மொழிவாம். 	

1964.	இய மானன் இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல 
                 எறிகால் எனும் பகுதி இரு நால் 
மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை 
                 வழிபாடு அடைந்து வர குணனாய்ச் 
சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு 
                 சத வேள்வி இந்திரனை நிகர்வோன் 
இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி 
                 இனன் தேசு வென்ற வர குணனே. 	

1965.	மறை ஆதி கலை பலவும் மகம் ஆதி பல வினையும் 
                 வழுவாது நிறுவு தலின் மலர்மேல் 
இறை ஆகி மலர் வனிதை பிரிவான திருமகளிர் இக 
                 போகம் விளைய முறை செயலால் 
கறை ஆழி வளைகள் அணி கரன் ஆகி இகல் செய் பொறி 
                 கரண் ஆதி பகைகளையும் நெறியால் 
அறை வாய்மை உரையின் முழுது உணர்வால் எவ் உயிரும் 
            நிறை அரன் ஆகி உலகு முறை செயு நாள். 	

1966.	வேட்டம் செய் காதல் ஒரு நாட்டம் ஏகி வன மேட் 
                     டெங்கும்மா தடவி எரியா 
நாட்டம் செய் காய் உழுவை நீட்டும் கை யானை முக 
                நாட்டும் பல் ஏனம் இவை முதலா 
ஓட்டம் செய் தேரி ரவி கோட்டின் கணேறி இருள் ஊட்டம் 
                அந்தி மாலை வரும் அளவாக் 
கோட்டம் செய்வார் சிலையின் மாட்டு அம்பின் ஊரியிர் 
                கூட்டு உண்டு மா நகரில் வருவான். 	

1967.	காலில் கடும் புரவி மேலிற் கடிந்து வரு காலக் கடம் 
                         தனில் ஓர் மறையோன் 
மால் உற்று அயர்ந்து முகம் வேர்வைக் குறும் திவலை 
                வாரக் கிடந்து விழி துயில் வோன் 
மேலக் கடும் புரவி கால் வைப்ப அந்தணனும் வீவுற்று 
                         அவிந்தனன் அறியான் 
கோலில் செலும் பரியின் மீனத்தனும் தனது கோயில் 
                          புகுந்தனன் வளவே. 	

1968.	கனவட்டத்து அடி இடறப் பொறி விட்டுப் புலன் அவியக் 
            கரணத் உட்பொதி உயிர் விட்டவன் ஆகம் 
தனை ஒக்கல் பவனர் எடுத்தனர் கிட்டிக் குரிசில் கடைத் 
            தலை இட்டத் திறம் மொழியத் தமிழ் மாறன் 
இனை உற்றுப் பனவர் கையில் கனகக் குப்பைகள் நிறை 
            வித்து எமதிக் உற்றவனை எடுத்து எரிமாலை 
புனைவித்த அக் கடன் முடிவித்தனன் மற்றப் பழி படரின் 
             புதையப் பற்றியது இடைவிட்டு அகலாதே. 	

1969.	பற்றிய பழிக்குத் தீர்வு பழ மறைக் கிழவர் சொன்ன 
பெற்றியினை வேறுண்டி நதிக்கரைப் பெரு நூற் கேள்வி 
முற்றிய மறை யோர்க்கு ஈந்து மூவராம் தாரு வேந்தைச் 
சுற்றியும் தூர்வை கொய்து சுரபிகள் சுவைக்க ஈந்தும். 	

1970.	அக மருடணத்தால் ஒமம் ஆற்றியும் ஆன் ஐந்து ஆவின் 
நகை மணிக் கோடு தோய்ந்த நளிர் புனல் குடித்தும் தான 
வகை பல கொடுத்து நீங்கா வலியதாய் இழுது பெய்த 
புகை அழல் என மேல் இட்டுப் புலப்பட வளைந்தது  அன்றே. 	

1971.	ஏங்கும் பெருமூச்சு எறியும் கை யெறியும் குன்றின் 
ஒங்கும் சிறுகும் உடன் ஆர்த்திடும் முன்னும் பின்னும் 
பாங்கும் தொடரும் சிரிக்கும் பகுவாயை மெல்லும் 
நீங்கும் குறுகும் பழிதா என நேர்ந்து பற்றும். 	

1972.	மாசு உண்ட தெய்வ மணிபோல் பணி வாயில் பட்ட 
தேசு உண்ட தீம் தண் மதிபோல் ஒளி தேம்பி வண்டு 
மூசு உண்டதான முகமா உண்ட வெள்ளில் போலக் 
காசுண்ட பூணன் அறைபோய கருத்தன் ஆனான். 

1973.	மறையோர்கள் பின்னும் பழி மேலிடு வண்ண நோக்கி 
இறையோய் இது நான் முகன் சென்னி இறுத்த கூடல் 
அற வேதியனைத் தினம் ஆயிரத் எண்கால் சூழல் 
உறவே ஒழிக்கப் படும் இன்னம் உரைப்பக் கேட்டி. 	

1974.	ஆனா விரத நெறியால் இரண்டு ஐந்து வைகல் 
வான நாடனையும் அம் முறையால் வலம் செய்து வந்தாய் 
ஆனல் அதற்கு வழிகாட்டும் என்று ஐயர் கூறப் 
போனான் அரசன் புனிதன் திருக் கோயில் புக்கான். 

1975.	விழி ஆயிரத் தோன் பழி தீர்த்தனை வேதியன் தன் 
கழியாத மாபாதகம் தீர்த்தனை கௌவைக் கங்கைச் 
சுழி ஆறு அலைக்கும் சடையாய் எனைத் தொட்டு 
                                  அலைக்கும் 
பழியான் அதுந் தீர்த்து அருள் என்று பணிந்து வீழ்ந்தான். 	

1976.	எண்ணும் படியும் முறையால் வளைந்து ஏத்த ஐயன் 
விண்ணின்று இயம்பும் அரசே பரி மேத வேள்வி 
நண்ணும் பயனோர் அடிவைப்பின் நண்ண வெம்மைப் 
பண்ணும் வலத்தான் மகிழ்ந்தேம் பழி அஞ்சன் மன்னோ. 	

1977.	பொன்னோடு முத்தம் கொழிக்கும் துறைப் பொன்னி நாடன் 
நின்னோடு அமர் ஆற்ற நினைந்து எழு நீயு நேர்வாய் 
அன்னோன் உனக்குப் புறகு இட்டு அகன்று ஓடும் நீயும் 
பின்னோடி எட்டிப் பிடிப்பாரில் துரத்தும் எல்லை. 	

1978.	எமையாம் அருச்சித்து இருக்கும் தலத்து எய்து வாயால் 
அமையாத வன்கண் பழி ஆற்றுதும் என்னச் சேல்கண் 
உமையாள் மணாளன் அருள் வாழ்த்தி உரகன் உச்சிச் 
சுமையாறு தோளான் தொழுதான் இருக்கை புக்கான். 	

1979.	ஆர்த்தார் முடியோன் சில நாள் கழித்து ஆற்றல் ஏற்ற 
போர்த்தாவு வேங்கைக் கொடித்தானை புடவி போர்ப்பப் 
பேர்த்தார் கலிவந்து எனப் பேரியம் ஆர்ப்பக் கன்னிப் 
பார்த்தாமம் வேன் மீனவன் நாட்டில் படர்ந்த எல்லை. 	

1980.	மிடைந்து ஏறு நேரிப் பொருப்பன் படை வேலை மேல் 
                                    சென்று 
அடைந்து ஏறி மீனக் கொடி யோன் அமர் ஆட வாழி 
கடைந்து ஏறு வெற்பில் கலங்கிற்று எனக் கிள்ளி சேனை 
உடைந்து ஏக வெந்நிட்டு உடைந்தோடினன் உள்ளம் 
                                    வெள்கா. 	

1981.	சுறவக் கொடி அண்ணல் துரந்து பின் பற்றிச் செல்வோன் 
புறவக் கடி முல்லையும் தாமரைப் போதும் ஏந்தி 
நறவக் கழி நெய்தலங் கானலின் ஞாங்கர் மொய்த்த 
இறவப் புலவு கழுவீர்ந் துறைப் பொன்னி சேர்ந்தான். 	

1982.	பூசத் துறையில் புகுந்து ஆடியப் பொன்னித் தென்சார் 
வாசத்து இடை மா மருதைப் பணிதற்கு வைகைத் 
தேசத்தவன் கீழ்த்திசை வாயில் கடந்து செல்லப் 
பாசத் தளையும் பழியும் புற நின்ற அன்றே. 	

1983.	சுருதிச் சுரும்பு புறம் சூழ்ந்து குழறத் தெய்வ 
மருதில் சிறந்த பெரும் தேனைக் கண் வாய் அங்காந்து 
பருகிப் படிந்து அழல் வாய் வெண்ணெய்ப் பாவை ஒப்ப 
உருகிச் செயல் அற்று உரை அற்று உணர் வாகி நின்றான். 	

1984.	நிரா மய பரமானந்த நிருத்த நான் மாடக் கூடல் 
பராபர இமையா முக்கண் பகவ பார்ப்பதி மணாள 
புராதன அகில நாத புண்ணிய மருதவாண 
அரா அணி சடையா என்று என்று அளவு இலாத்துதிகள் 
                                    செய்தான். 

1985.	சொல் பதம் கடந்த சோதி துதித்து அடி பணிந்த வேந்தை 
மற் பெரும் தோளாய் கீழை வாயிலில் பிரமச் சாயை 
நிற்பதம் நெறியால் செல்லேல் நிழல் மதி உரிஞ்சு மேலைப் 
பொற்பெரு வாயின் நீங்கிப் போதி நம் மதுரைக்கு என்றான். 	

1986.	வரகுணன் அது கேட்டு ஐயன் மருதினை வளைத்து 
                                    நீங்கற்கு 
அருமையால் வாயில் தோறும் அடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து 
வரை துளைத்து அன்ன மேலை வாயிலால் போவான் 
                                    அன்ன 
திருமணிக் கோபுரம் தன் பெயரினால் செய்து சின்னாள். 	

1987.	திருப்பணி பலவும் செய்து தென் திசை வழிக் கொண்டு 
                                    ஏகிச் 
சுருப்பணி நெடு நாண் பூட்டுஞ் சுவைதண்டச் சிலையால் 
                                    காய்ந்த 
மருப்பணி சடையான் கோயில் வழி தொறும் தொழுது 
                                    போற்றிப் 
பொருப் பணி மாடக் கூடல் பொன்னகர் அடைந்தான் 
                                    மன்னோ. 	

1988.	தொடுபழி தொலை வித்து ஆண்ட சுந்தரத் தோன்றல் பாதக் 
கடிமலர் அடைந்து நாளும் கைதொழுது உலகம் எல்லாம் 
வடு அறு செங்கோல் ஒச்சும் வரகுணன் அறவோர் நாவால் 
அடு சுவை அமுதம் அன்ன அரன் புகழ் செவி மடுப்பான். 	

1989.	வேதம் ஆகமம் புராணம் மிருத்திகள் முதலா நூலும் 
ஒதுவது உலகின் மிக்கத்து ருத்திர உலகம் என்னும் 
போதம் அது அகம் கொண்டு அந்தப் பொன் பதி காண வேண்டும் 
காதல் செல் வழியே ஈசன் கங்குலில் கோயில் எய்தா. 	

1990.	மாழை மான் மட நோக்கிதன் மணாளனை வணங்கிப் 
பிழை ஏழ் பவம் கடந்து நின் அடி நிழல் பெற்றோர் 
சூழ நீ சிவபுரத்தில் வீற்று இருப்பது தொழுதற்கு 
ஏழை யேற்கு ஒரு கருத்து வந்து எய்தியது எந்தாய். 	

1991.	என்ற காவலன் அன்பினுக்கு எளியராய் வெள்ளி 
மன்ற வாணர் அவ் உலகை இவ் வுலகு இடை வருவித்து 
இன்று காட்டுதும் இவற்கு எனத் திரு உளத்து எண்ணம் 
ஒன்றினார் அ•து உணர்ந்ததால் உருத்திர உலகம். 	

1992.	கோடி மாமதிக் கடவுளார் குரூச்சுடர் பரப்பி 
நீடி ஒர் இடத்து உதித்து என மின் மினி நிகர்த்து 
வாடி வான் இரு சுடர் ஒளி மழுங்க வான் இழிந்து 
தேடினார்க்கு அரியான் உறை சிவபுரம் தோன்ற. 	

1993.	ஆண்ட நாயகன் நந்தியை அழைத்து எமக்கு அன்பு 
மாண்ட காதலான் வரகுண வழுதி நம் உலகம் 
காண்டல் வேண்டினான் காட்டு எனக் கருணையால் ஏவல் 
பூண்ட வேத்திரப் படையினான் தொழுதனன் போந்தன். 	

1994.	வருதியால் எனப் பணிந்து எழு வரகுணன் கொடு போய்க் 
கருதி ஆயிரம் பெயர் உடை கடவுளன் முகத்தோன் 
சுருதி ஆதி ஈறு அளப்பரும் சொயம் பிரகாசப் 
பரிதி ஆள் சிவபுரம் இது பார் எனப் பணித்தான். 	

1995.	கருப்பும் கமழ் துளர் பசும் கால்களால் உதை உண்டு 
அருப்பினம் சிதைந்து ஆயிரப் பத்தி யோசனை போய் 
மருக் கமழ்ந்து நூறு ஆயிரம் வால் இதழ்க் கமலம் 
இருக்கும் ஒடைகள் புடை தொறும் தழுவிய ஆறும். 	

1996.	வரம்பின் மாதரார் மதுரவாய் திறந்து தேன் வாக்கும் 
நரம்பின் ஏழ் இசை யாழ் இசை நகை மலர்த் தருவின் 
சுரும்பின் நேரிசை நாரத தும்புரு இசைக்கும் 
இரும்பு நீர் மெழுகு ஆக்கிய இன்னிசை எங்கும். 	

1997.	அமுத வாவியும் பொன் மலர் அம் புயத் தடமும் 
குமுதவாய் அரமாதர் ஆம் குயில் இனம் பயிலும் 
நிமிர வாள் விடு மரகத நெடிய பைம் காவும் 
திமிர மாசறக் கழுவிய தேவர் வாழ் பதமும். 

1998.	அலங்கு பால் கடல் போல் புறத்து அமுதநீர் அகழும் 
பொலம் செய் ஞாயில் சூழ் புரிசையும் பொன் செய் 
                                  கோபுரமும் 
நலம் கொள் பூ இயல் விதியும் நவ மணி குயின்ற 
துலங்கு மாளிகைப் பந்தியும் சூளிகை நிரையும். 	

1999.	ஐம் புலங்களும் வைகலும் விருந்ததா வருந்த 
வெம்பு நால் வகை உண்டியும் வீணையும் சாந்தும் 
செம் பொன் ஆரமும் ஆடலின் செல்வமும் தெய்வப் 
பைம் பொன் மேகலை ஓவியப் பாவை ஒப்பாரும். 	

2000.	படர்ந்த வார் சடை உருத்திரர் பணைத்து இறு மாந்த 
வடம் கொள் பூண் முலை உருத்திர மகளிரொடு அமரும் 
இடம் கொள் மாளிகைப் பந்தியும் இகல்விளை துன்பம் 
கடந்த செல்வமும் கவலை இல் போகமும் காட்டி. 	

2001.	முண்டக ஆசனன் பதம் இது மூவுலகு அளந்த 
தண் துழாயவன் புரம் இது தனி முதல் வடிவம் 
கொண்டு வீறு சால் உருத்திரர் கோப்பதி இன்ன 
எண் திசா முகம் காவலர் உறை விடம் இவை காண். 	

2002.	புலரும் முன் புனல் ஆடி நீறு ஆடி நம் புனிதன் 
இலகும் ஆலயம் வினக்கி நம் தன் பணி இயற்றி 
மலர் கொய்து ஆய்ந்தனர் தொடுத்து அரன் புகழ் செவி மடுத்து இவ் 
உலக வாணராய்ப் போகம் உற்று உறைகு நர் இவர்காண். 	

2003.	தூயர் ஆகி ஐஞ் சுத்தி செய்து அகம் புறம் இரண்டின் 
நேயராய் விதி நெறியின் நான் முகமன் ஈர் எட்டால் 
காயம் வாய் மனம் ஒருமையால் அர்ச்சித்துக் கடவுள் 
நாயன் அரருகு உறைபதம் நண்ணினார் இவர் காண். 	
2004.	கிளர்ந்த காலினால் அங்கியை நிமிர்த்து மேல் கிடைத்து 
வளர்ந்த பிங்கலை இடை நடு வழி உகு மதியின் 
விளைந்த இன் அமுது உண்டு நம் விடையவன் வடிவம் 
குளம்தனில் குறித்து அவன் உருக் கொண்டவர் இவர் 
                                    காண். 	

2005.	முக்கண் நாயகன் பொருட்டு என வேள்விகள் முடித்துத் 
தொக்க வேதியர் இவர் புனல் சாலை இத் தொடக்கத் 
தக்க பேர் அறம் புகழ் பயன் தமை நன்கு மதிக்கும் 
பொக்க மாறிய நிராசையால் புரிந்தவர் இவர் காண். 	

2006.	மறையின் ஆற்றினார் தந்திர மரபினான் மெய்யின் 
நிறையும் நீற்றினர் நிராமயன் இருந்த ஐந்து எழுத்தும் 
அறையும் நாவினர் பத்தராய் அரன் புகழ் கேட்கும் 
முறையினால் இவர் வினை வலி முருக்கினார் கண்டாய். 	

2007.	மறைகளின் சத உருத்திர மந்திரம் நவின்றோர் 
நிறை கொள் கண்டிகை நீறு அணி நீரர் யாரேனும் 
குறி குணம் குலன் குறித்திடாது அன்பரைச் சிவன் என்று 
அறியும் அன்பினால் பிறவி வேர் அறுத்தவர் இவர் காண். 	

2008.	ஆன் அஞ்சு ஆடிய பரம் சுடர் இறை சிவஞான 
தானம் செய்தவர் தருப்பணம் செய்தவர் சாம 
கானம் செய்தவற்கு ஆலயம் கண்டு தாபித்தோர் 
ஊனம் சேர் பிறப்பு அறுத்து வாழ் உத்தமர் இவர்காண். 	

2009.	சிவனை அர்ச்சனை செய்பவர்க்கு இசைவன செய்தோர் 
அவன் எனக் குறித்து அடியரைப் பூசை செய்து ஆறு 
சுவைய இன் அமுது அருத்தினோர் தொண்டர் தம் 
                                   பணியே 
தவம் எனப் புரிந்து உயர்ச்சியைச் சார்ந்தவர் இவர்காண். 	

2010.	ஆதி சுந்தரக் கடவுளுக்கு ஆலயம் பிறவும் 
நீதியால் அருச்சனை பிற பணிகளும் நிரப்பிப் 
பூதி சாதன வழி நிலம் புரந்து இவண் அடைந்த 
கோது இலாத நின் குடிவழிக் கொற்றவர் இவர்காண். 	

2011.	என்று வேத்திரம் கொடு குறித்து எம் இறை நந்தி 
கொன்றை வேணியன் அடியர் தம் குழாத்தினைத் தேற்றி 
நின்று வீழ்ந்து வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்திட நெறியே 
சென்று வானவர் நாயகன் திரு முன்பு விடுத்தான். 	

2012.	மறைகள் ஆகமம் வடிவு எடுத்து இரு புடை வாழ்த்த 
நறை கொள் யாழ் தழீஇத் தும்புரு நாரதர் பாட 
அறை கொள் வண்டு இமிர் கொம்பரின் அரம்பையர் ஆடக் 
குறைகொள் வானவர் பதம் கிடையாது இறை கொள்ள. 	

2013.	மதங்க விழ்க்கும் ஆல் வரை முக மைந்தனும் சூரன் 
கதங்கவிழ்த்த வேல் கந்தனும் கருதலன் வேள்வி 
விதங்க விழ்த்த வாள் வீரனும் வெயின் முடித்தார் தேன் 
பதங்க விழ்ப்ப வீழ்ந்து ஏயின பணி வழி நிற்ப. 	

2014.	தூங்கு தானையை ஒதுக்கி வாய் துணைக் கரம் பொத்தி 
ஓங்கு மால் அயன் தம் குறை ஒதுங்கி நின்று உரைப்ப 
வாங்குவான் சிலை இந்திரன் முதல் திசை வாணர் 
தாங்கள் தாம்புரி காரியக் குறை நின்று சாற்ற. 	

2015.	எழுவினோடு தண்டு ஏந்தி வாய் மென்று எயிறு அதுக்கிக் 
குழுமு பாரிடத் தலைவரும் கோடி கூற்று ஒதுங்கி 
விழும முழ்கி மெய் பனித்திட விதிர்க்கும் முக்குடுமிக் 
கழுமுள் ஏந்திய கணத்தவர் கடை தொறும் காப்ப. 	

2016.	சித்தர் வானவர் தானவர் சாரணர் திணி தோள் 
வைத்த யாழினர் கின்னரர் மாதவர் இயக்கர் 
பைத்த பாரிடர் காருடர் பாதல வாணர் 
சுத்த யோகியர் முதல் கணத் தொகை எலாம் பரவ. 	
2017.	இனி வரும் பிறப்பு அறுத்து எமைக் காத்தியால் எனத் தம் 
கனி அரும்பிய அன்பு எழு கருணை ஆர் அமுதைப் 
பனி வரும் தடம் கண்களால் பருகி மெய் பனிப்ப 
முனிவர் சங்கர சிவ சிவ என முறை முழங்க. 	
2018.	வரம் தவாதன யாவர்க்கும் வரன் முறை வழங்கி 
முருந்தவா நகை மலைக் கொடி முகிழ் நகை அரும்பத் 
திருந்த ஆயிரம் கதிர் விடு சிங்க மெல் அணைமேல் 
இருந்த நாயகன் இருக்கை கண்டு இறைஞ்சினான் இறைவன். 	

2019.	உரைகளும் தடுமாற மெய் உரோமமும் சிலிர்ப்பக் 
கரை இறந்த இன்னருள் பெரும் கடலில் அன்பு எனும் 
திரை இறந்தவாறு ஈர்த்திட மிதந்து போய்ச் செப்பின் 
வரை இறந்த ஆனந்த வார் அமுதை வாய் மடுத்தான். 	

2020.	தன் புலன்களும் கரணமும் தன்னவே ஆக்கி 
அன்பு உடம்பு கொண்டு அவன் எதிர் அருள் சிவ லோகம் 
பின்பு பண்டு போல் மதுரையாப் பிராட்டியும் தானும் 
முன்பு இருந்தவாறு இருந்தனன் சுந்தர மூர்த்தி. 	

2021.	வேந்தர் சேகரன் வரகுணன் விண் இழி கோயில் 
ஏந்தல் சேவடி இறைஞ்சி நின்று இறை அருள் பெருமை 
ஆய்ந்த வாவு தன் அகம் புக இன்ப மோடு அன்பு 
தோய்ந்து ஆரையர் துளும்ப நாக் குழறிடத் துதிப்பான். 	
2022.	நாயினேன் தன்னை நடுக்கும் பழி அகற்றித் 
தாயின் நேர் ஆகித் தலை அளித்தாய் தாள் சரணம் 
சேயினேன் காணச் சிவலோகம் காட்டிப் பின் 
கோயில் நேர் நின்ற அருள் குன்றெ நின் தாள் சரணம். 	

2023.	மாழ் ஆழ்ந்து செய்யும் வினை வழி போய் வல் நரகில் 
ஆழா அடியனேற்கு அன்பு தந்தாய் தாள் சரணம் 
ஏழ் ஆகி நான்கு வகையாய் எழுபிறப்பும் 
பாழாக என்னைப் பணி கொண்டாய் தாள் சரணம். 	

2024.	வெம்கண் பழியின் வினையேனை வேறு ஆக்கித் 
திங்கள் குலக் களங்கம் தீர்த்தாய் நின் தாள் சரணம் 
அம் கண் சிவபுரம் உண்டு அன்புடையார்க்கு என்பதை 
                                      இன்று 
எங்கட்குக் காட்டி இசைவித்தாய் தாள் சரணம். 	

2025.	என்ன ஏத்தி இன் அருண் முகத்து ஈறு இலா அன்பால் 
பின்னர் வேறு பல் பூசையும் பிறக்கு வித்து இருந்தான் 
மன்னர் ஏறு அடையார்க்கு ஒரு மடங்கலே அடல் வேல் 
தென்னர் ஏறு எனத் தோன்றிய வர குண தேவன். 	

2026.	என்ற தென் மலை முனிவனை இருடிகள் நோக்கி 
அன்று வாசவன் பழி கரி சாபம் அந்தணனைக் 
கொன்று தாயொடும் கூடிய கொடுவினை முதலாத் 
துன்று பாவமும் மதுரையில் தொலைத்தனன் அன்றோ. 	

2027.	பரமன் எண் குணன் பசுபதி வரகுணன் பற்றும் 
பிரம வன் பழி இடை மருது இடை விட்டுப் பெயர 
வரம் அளித்தவாறு என்னைகொல் வள்ளலே இதனைத் 
திரம் உறப் புகல் எமக்கு என முனிவர் கோன் செப்பும். 	

2028.	பூத நாயகன் சுந்தரன் புண்ணிய மூர்த்தி 
ஆதலால் அன்ன தலத்து உறை அடியவர் அஞ்சிப் 
பாதகம் செயாது ஒழுகு உறூஉம் படி நினைந்து இனைய 
தீது உறூஉம் பழிதனை இடை மருதினில் தீர்த்தான். 	

2029.	என்ற அகத்திய முனி இறை இறை கொடுத்து இயம்ப 
நன்று எனச் சிரம் பணித்து மெய்ஞ் ஞான ஆனந்தம் 
துன்றி நற்றவர் சுந்தரச் சோதி சேவடிக் கீழ் 
ஒன்று அற்புத ஆனந்த உததியுள் குளித்தார்.	

2030.	அன்ன தனித் தொல் மதுரை அன்று தொடுத்து இன்று 
                                      எல்லை 
தன் அனையது ஆகிய தலங்கள் சிகாமணி ஆகிப் 
பொன் நகரின் வளம் சிறந்து பூ உலகில் சிவலோகம் 
என்ன இசை படப் பொலிந்தது ஏழ் இரண்டு புவனத்தும். 	

உலவாக்கோட்டை அருளிய படலம் சுபம் 

41. விறகு விற்ற படலம்

2031.	நெடியவன் பிரமன் தேட நீண்டவன் தென்னற்கு ஏழின் 
முடியது ஆம் சிவ லோகத்தைக் காட்டிய முறை ஈது ஐயன் 
படிமிசை நடந்து பாடிப் பாணன் தன் விறகு ஆளாகி 
அடிமை என்று அடிமை கொண்ட அருள் திறம் எடுத்துச் 
                                        சொல்வாம்.	

2032.	மன்றல் அம் தெரியல் மார்பன் வரகுணன் செங்கோல் 
                                      ஓச்சிப் 
பொன் தலம் காவலானில் பொலியும் நாள் ஏமநாதன் 
என்று ஒரு விறல் யாழ்ப் பாணன் வட புலத்து இருந்தும் 
                                       போந்து 
வென்றி கொள் விருதினோடும் விஞ்சை சூழ் மதுரை 
                                  சார்ந்தான். 	

2033.	பூழியர் பெருமான் கோயில் புகுந்து வேத்து அவையத்து 
                                       எய்திச் 
சூழி மால் யானை யானைத் தொழுது பல் புகழ் கொண்டாடி 
ஏழ் இசை மழலை வீணை இடந்தழீ இச் சுருதி கூட்டி 
வாழியின் இசைத்தேன் மன்னன் அரும் செவி வழியப் 
                                       பெய்தான். 	

2034.	முகை உடைத்து அவிழ்ந்த மாலை முடித்தலை துளக்கித் 
                                            தூசு 
பகல் அவிர் மணிப்பூண் நல்கிப் பல் உணாக் கருவி நல்கி 
அகன் மனை வேறு காட்டி அரசர் கோன் வரிசை செய்ய 
இகல் அறு களிப்பினோடு இசை வல்லான் இல்லில் 
                                        புக்கான். 	

2035.	மீனவன் வரிசை பெற்ற செருக்கினும் விருதினானும் 
மான மேல் கொண்டு தன்னோடு இன்னிசை பாடவல்ல 
தான யாழ்ப் புலவர் வேறு இங்கு இல் எனத் தருக்கும் 
                                       செய்தி 
கோன் அறிந்து உழையர்க் கூவி பத்திரற் கொணர்திர் 
                                    என்றான். 	

2036.	உழையரால் விடுக்கப் பட்ட பத்திரன் உவரிவென்றோன் 
கழல் பணிந்து அருகு நிற்பக் கௌரியன் நோக்கிப் பாணி 
பழகு இசை வல்லானோடும் பாடுதி கொல்லோ என்ன 
மழலை யாழ் இடம் தோள் இட்ட பாணர் கோன் வணங்கிச் 
                                       சொல்வான். 	

2037.	தென்னவர் பெரும யான் உன் திரு உள வலனும் கூடல் 
முன்னவன் அருளும் ஊட்டும் முயற்ச்சியான் முயன்றுபாடி 
அன்னவன் விருது வாங்கி அவனை வீறு அழிப்பன் 
                                       என்றான் 
மன்னவன் நாளைப் பாடு போ என வரைந்து சொன்னான். 	

2038.	இல் கண்ணே இசைவல்லா போய் இருந்துழி அனையான் 
                                      பாங்கர் 
கற்கும் பாண் மக்கள் மல்ல ஆவணம் கவலை மன்றம் 
பொன் குன்றம் அனைய மாட மறுகு எங்கும் போகிப் 
                                      போகிச் 
சொல் குன்றா வகையால் பாடித் திரிந்தனர் வீறு தோன்ற. 	

2039.	இவ் விசை கேட்டு நன்று என்று அதிசயித்து இசை 
                                 வல்லான்பால் 
வவ்விசை மைந்தர் பாடும் வண்ணம் ஈது என்னை 
                                   கெட்டேன் 
அவ்விசை வல்லான் பாடும் முறை எற்றோ அவனை 
                                     நாளைச் 
செவ்விசை பாடி வெல்வது எவன் எனத் திவவுக் கோலான். 	

2040.	மை அணி மிடற்றினானை மதுரை நாயகனை வந்தித்து 
ஐயனே அடியேற்கு இன்று உன் அருள் துணை செய்யல் 
                                       வேண்டும் 
மெய்யனே என்று போற்றி வேண்டு கொண்டன்பு தோய்ந்த 
பொய்யறு மனத்தான் இல்லாம் புக்கு இனிது இருந்தான் 
                                       இப்பால். 	

2041.	வருத்தன் ஆகி வந்து இரந்தவன் இசைப் பகை மாற்ற 
விருத்தன் ஆம் விறகு ஆள் என விண் இழி விமானத்து 
ஒருத்தனான் அறிவு ஆகிய உண்மை ஆனந்தத் 
திருத்தனார் தமது இச்சையால் திரு உருக் கொள்வார்.	

2042.	அழுக்கு மூழ்கிய சிதர் அசைத்து அவிர் சடை அமுதம் 
ஒழுக்கு வான்மதி வாங்கியே செருகியது ஒப்ப 
மழுக்கு கனல் வெள் வாய்க் குயம் வலம் படச் செருகி 
இழுக்கு தேய் செருப்பு அருமறை கடந்தான் ஏற்றி. 	

2043.	பழைய தோர் பொல்லாம் பொத்திய பத்தர் யாழ்க்கோன் 
                                        தோள் 
உழைய தாகி விட்டு எருத்தலைத்து ஊசல் ஆடிய ஒண் 
குழைய காதினில் களவிணர்க் குறிய காய் தூக்கித் 
தழையும் வார்சிகை சரிந்திடச் சுமை அடை தாங்கி. 

2044.	தறிந்த இந்தனம் தினந்தோறும் தாங்கி நீள் பங்கி 
பறிந்து தேய்ந்து அழுந்திய தலை உடையராய்ப் பரிந்து 
மறிந்த கங்கையும் பங்கு உறை மங்கையும் காணா 
தெறிந்த இந்தனச் சுமை திரு முடியின் மேல் ஏற்றி. 	

2045.	என்பு தோன்றி ஊன் இன்றியே இளைத்த யாக்கையராய் 
அன்பு தோன்றியே கண்டவர் அகம் கனிந்து இரங்க 
வன்பு தோன்றிய மன மொழி கடந்த தாள் மலர் பார் 
முன்பு தோன்றிய தவத்தினாள் முடிமிசைச் சூட. 	

2046.	திருமுகத்து வேர் அரும்ப வாய் குவித்து ஒலி செய்ய 
வருவர் கல் சுமை தாங்கி மேல் சார்த்து வார் மடு நீர் 
பருகுவார் எடுப்பார் தலை வெம்மை வேர்பறிய 
இருகை யாலடிக் கடி எடுத்து ஏந்தி ஊர் புகுவார். 	

2047.	நடந்து கொள்ளுநர்க்கு அறவிலை பகர்ந்து நான் மாடம் 
மிடைந்த வீதியும் கவலையும் முடுக்கரு மிடைந்து 
தொடர்ந்த வேதமும் பிரமன் மால் சூழ்ச்சியும் பகலும் 
கடந்து போகி அவ் இசை வலான் கடைத் தலைச் செல்வார். 	

2048.	வரவு நேர்ந்து அழைப்பவர் என ஆம்பல் வாய் மலர 
இரவு கான்று வெண்மதி நகைத்து எழ உயிர்த்துணைவன் 
பிரிவு நோக்கினார் எனக் கணீர் பில்கு தாமரையின் 
நிரைகள் கூம்பிடக் கதிரவன் குட கடல் நீந்த. 	

2049.	பறவை வாய் அடைத்து அருகு அணை பார்ப் பொடும் 
                                பெடையைச் 
சிறகரால் அணைத்து இரும் பொழில் குடம் பையுள் செறிய 
நறவவாய்ப் பெடை உண்ட தேன் நக்கி வண்டு ஓடைப் 
பொறைகொள் தாமரைப் பள்ளியுள் புகுந்து கண் படுக்க.	

2050.	புல் என் நீள் நிலைக் குரங்கினம் பொதும்பர் புக்கு உறங்க 
முல்லை யாய் மகா உய்த்தரக் கன்று உள்ளி முந்திக் 
கொல்லை அன் நிரை மனை தொறும் குறுகிடச் சிறுபுன் 
கல்வி மாணவச் சிறார் பயில் கணக்கு ஒலி அடங்க. 	

2051.	புனைந்த வாழ் கடல் கரும் படாம் உடம்பு எலாம் போர்த்து 
வனைந்த பூண் முலை நிலமகள் துயில்வது மானக் 
கனைந்த கார் இருண் மெல் எனக் கவிதரப் பிரிவால் 
இனைந்த காதலர் நெஞ்சில் வேள் எரிகணை நாட்ட. 	

2052.	திங்கள் வாள் நுதல் முயல் கறைத் திலகமும் சிவந்த 
மங்குல் ஆடையும் மயங்கு இருள் ஓதியும் வான்மீன் 
பொங்கும் ஆரமும் பொலிந்து தன் கொண்கனைப் 
                                  பொருப்பன் 
மங்கை தேடி வந்தாள் என வந்தது மாலை. 	

2053.	எடுத்த இந்தனம் ஒருபுறத்து இறக்கி இட்டு ஊன்றி 
அடுத்த வன்புறம் திண்ணை மீது அமர்ந்து இளைப் பாறித் 
தொடுத்த இன்னிசை சிறிது எழீப் பாடினார் சுருதி 
மடுத்தி யார் அவன் பாடுவான் என்று இசை வல்லான். 	

2054.	வண்டு அறை கொன்றையான் முன் வந்து நீ யாரை 
                                     என்றான் 
பண் தரு விபஞ்சி பாணபத்திரன் அடிமை என்றான் 
முண்டக மலரோன் மாயோன் புரந்தரன் முதல் மற்ற ஏனை 
அண்டரும் தன் குற்றேவல் அடிமையாக் கொண்ட 
                                    அம்மான். 	

2055.	கனி இசைக் கிழவன் தன் கீழ்க் கற்பவர் அனேகர் தம் 
                                          முள் 
நனி இசைக் கிழமை வேட்டு நானும் அவ் வினைஞன் 
                                       ஆனேன் 
தனி இசைக் கிழவன் நோக்கித் தலை எலாம் ஒடுங்க 
                                       மூத்தாய் 
இனியிசைக் கிழமைக்கு ஆகாய் என்று எனைத் தள்ளி 
                                      விட்டான். 	

2056.	வெவ் விறகு எறிந்து கட்டி விலை பகர்ந்தேனும் ஐய 
இவ்வயிறு ஓம்புகேன் இத் தொழில் பூண்டேன் என்ன 
நைவளம் தெரிந்த ஏம நாதனும் விறகு மள்ளா 
அவ்விசை ஒருகால் இன்னும் பாடு என ஐயன் பாடும். 	

2057.	குண்டு நீர் வறந்திட்டு அன்ன நெடும் கொடிக் குறுங்காய்ப் 
                                        பத்தர்த் 
தண்டு நீள் நிறத்த நல் யாழ் இடம் தழீஇ தெறித்துத் 
                                        தாக்கிக் 
கண்டு ஆடகம் திரித்துக் கௌவிய திவ விற் பாவ 
விண்டு தேன் ஒழு கிற்று என்ன விக்கி மென் சுருதி கூட்டி. 	

2058.	விசை யொடு தானம் தோறும் விரல் நடந்து ஊசல் ஆட 
இசை முதல் ஏழில் பல் வேறு இன்னிசை எழும் சாதாரி 
அசை யோடு வீதிப் போக்கு முடுகியல் அராகம் யார்க்கும் 
நசைதரு நரம்பு கண்ட ஒற்றுமை நயம் கொண்டு ஆர்ப்ப. 	

2059.	வயிறது குழிய வாங்கல் அழுமுகம் காட்டல் வாங்கும் 
செயிர் அறு புருவம் ஏறல் சிரம் நடுக்கு உறல் கண் ஆடல் 
பயிர் அரு மிடறு வீங்கல் பையென வாய் அங்காத்தல் 
எயிறு அது காட்டல் இன்ன உடல் தொழில் குற்றம் என்ப. 	

2060.	வெள்ளை காகுளி கீழோசை வெடி குரல் நாசி இன்ன 
எள்ளிய எழாலின் குற்றம் எறிந்து நின்று இரட்டல் எல்லை 
தள்ளிய கழி போக்கு ஓசை இழைத்தன் நெட்டு உயிர்ப்புத் தள்ளித் 
துள்ளல் என்று இன்ன பாடல் தொழில் குற்றம் பிறவும் தீர்ந்தே. 	

2061.	எழுது சித்திரம் போல் மன்னி இழும் எனும் அருவி ஓதை 
முழவு ஒலி கஞ்சம் நாதம் வலம் புரி முரலும் ஓசை 
கொழுதிசை வண்டின்று ஆரி என குணனும் வேரல் 
விழும் இலை சிரன் மீன் மேல் வீழ் வீழ்ச்சி போல் பாடல் பண்பும். 	

2062.	பொருந்த மந்தரத் தினோடு மத்தி மந்தாரம் போக்கித் 
திருந்திய துள்ளல் தூங்கல் மெலிவது சிறப்பச் செய்து 
மருந்தன செய்யுள் ஓசை இசை ஓசை வழாமல் யார்க்கும் 
விருந்து எனச் செவியின் மாந்தப் பாடினார் வேத கீதர். 	

2063.	விரைசார் மலரோன் அறியா விகிர்தன் 
அரசாய் மதுரை அமர்ந்தான் என்னே 
அரசாய் மதுரை அமர்ந்தான் அவன் என் 
புரை சார் மனனும் புகுந்தான் என்னே. 	

2064.	பாடல் மறையும் தௌ¤யாப் பரமன் 
கூடல் கோயில் கொண்டான் என்னே 
கூடல் போலக் கொடி ஏனகமும் 
ஆடல் அரங்கா அமர்ந்தான் என்னே. 	

2065.	நீல வண்ணன் தேறா நிமலன் 
ஆல வாயில் அமர்ந்தான் என்னே 
ஆல வாயான் அலரில் வாசம் 
போல் என் உளமும் புகுந்தான் என்னே. 	

2066.	பாணர் தம்பிரானைக் காப்பான் பருந்தோடு நிழல் போக்கு 
                                         என்ன 
யாழ் நரம்பிசை பின் செல்ல இசைத்த இன்னிசைத் தேன் 
                                         அண்ட 
வாணர்தம் செவிக்கால் ஓடி மயிர்த்துனை வழியத் தேக்கி 
யாணரின் அமுத யாக்கை இசை மயம் ஆக்கிற்று அன்றே. 	

2067.	தருக்களும் சலியா முந்நீர்ச் சலதியும் கலியா நீண்ட 
பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா 
அருள் கடல் விலைத்த கீத இன்னிசை அமுதம் மாந்தி 
மருள் கெட அறிவன் திட்டி வைத்த சித்திரமே ஒத்த. 	

2068.	வீணை கை வழுக்கிச் சோர்வார் சிலர் சிலர் விரல் 
                                       நடாத்தும் 
யாணர் அம்பு எழலும் கண்டத்து எழாலும் வேறு ஆக 
                                       வேர்ப்பர் 
நாண மோடு உவகை தள்ள நாத்தலை நடுங்கித் தங்கள் 
மாண் இழை அவர் மேல் வீழ் வார் விஞ்சையர் மயங்கிச் 
                                       சில்லோர். 	

2069.	போது உளான் பரமன் பாதப் போது உளான் ஆனான் 
                                       வேலை 
மீது உளான் பரமானந்த வேலை மீது உள்ளான் ஆனான் 
தாது உளாங் கமலக் கண்போல் சதமகன் உடலம் எல்லாம் 
காது உளான் அல்லேன் என்றான் கண் உளான் கானம் 
                                       கேட்டு. 	

2070.	முனிவரும் தவத்தர் ஆதி முத்தர் மாசித்தர் அன்பன் 
துனி வரும் பழங்கண் தீர்ப்பான் சுந்தரத் தோன்றல் கீதம் 
கனிவரும் கருணை என்னும் கடலில் அன்பு என்னும் ஆற்றில் 
பனி வரும் கண்ணீர் வெள்ளம் பாய்ந்திட இன்பத்து ஆழ்ந்தார். 	

2071.	ஊதி வேறு ஒதுங்கித் துன்ப உவரியுள் குளித்தார் தம்மில் 
கூடிவேறு அற்ற இன்பக் குளிர் கடல் வெள்ளத்து 
                                     ஆழ்ந்தார் 
நாடி வேறு இடைப் பிரிந்தார் மேல் மனம் நடாத்தி மேனி 
வாடி வேள் அலைப்பச் சோர்ந்து மம்மர் நோய் உழந்தார் 
                                     மண்ணோர். 	

2072.	பைத் தலை விடவாய் நகம் பல் பொறி மஞ்ஞை நால்வாய் 
மத்தமான் அரிமான் புல்வாய் வல்லிய மருட்கை எய்தித் 
தத்தமாறு அறியாவாகி தலைத்தலை மயங்கிச் சோர 
இத்தகை மாவும் புள்ளும் இசை வலைப் பட்ட அம்ம. 	

2073.	வன்தரை கிழிய வீழ்போய் வான் சினை கரிந்து நின்ற 
ஒன்றறி மரங்கள் எல்லாம் செவி அறி உடைய ஆகி 
மென்தளிர் ஈன்று போது விரிந்து கண் நீரும் சோர 
நன்று அறி மாந்தர் போல நகை முகம் மலர்ந்த மாதோ. 	

2074.	வாழிய உலகின் வானோர் மனிதர் புள் விலங்கு மற்றும் 
ஆழிய கரணம் எல்லாம் அசைவு அற அடங்க ஐயன் 
ஏழ் இசை மயமே ஆகி இருந்தன உணர்ந்தோர் உள்ளம் 
ஊழியில் ஒருவன் தாள் புக்கு ஒடுங்கிய தன்மை ஒத்த. 	

2075.	கண் நிறை நுதலோன் சாம கண்டத்தின் எழுந்த முல்லைப் 
பண் நிறை தேவ கீதம் சரா சர உயிரும் பாரும் 
விண் நிறை திசைகள் எட்டும் விழுங்கித் தன் மயமே 
                                      ஆக்கி 
உள் நிறை உயிரும் மெய்யும் உருக்கிய இசை வல்லானை. 	

2076.	சிந்தை தோயும் ஐம் பொறிகளும் செவிகளாப் புலன்கள் 
ஐந்தும் ஓசையா இசைவலான் இருந்தனன் ஆகப் 
பந்த நான்மறை நாவினால் பத்திரன் ஆளாய் 
வந்து பாடினார் இந்தனச் சுமையொடு மறைந்தார். 

2077.	யான் அறிந்த சாதாரி அன்று இம்பருள் இதனை 
நான் அறிந்தது என்று ஒருவரும் நவின்றிலர் தேவ 
கான மீது அவற்கு உணர்த்தினோன் கடவுளே அன்றி 
ஏனை மானுடர் வல்லரோ இது வியப்பு என்னா. 	

2078.	இழுக்கி விட்ட இக் கிழமகன் இசை இதேல் அந்த 
வழுக்கு இல் பத்திரன் பாதல் எற்றோ என மதியா 
அழுக்கம் உற்று எழுந்து இசைவலான் அடுத்த தன் பண்டர் 
குழுக்களும் குலை குலைந்திட இருள் வழிக் கொண்டான். 	

2079.	மடக்கு பல் கலைக் பேழையும் அணிக்கலம் பிறவும் 
அடக்கும் பேழையும் கருவியாழ்க் கோலும் ஆங்கே 
                                     ஆங்கே 
கிடக்க மானமும் அச்சமும் கிளர்ந்து முன் ஈர்த்து 
நடக்க உத்தர திசைக்கணே நாடினான் நடந்தான். 	

2080.	சிவிகை ஓர் வழி விறலியர் ஓர் வழி செல்லக் 
கவிகை ஓர் வழி கற்பவர் ஓர்வழி கடுகக் 
குவிகை ஏவலர் ஒருவழி கூட நாண் உள்ளத் 
தவிகை யோ வரும் ஒருவழி அகன்றிட அகன்றான்.	

2081.	அன்று பத்திரன் கனவில் வந்து அடல் ஏற்று அழகர் 
இன்று பத்திர இசைவலான் இடை விறகு ஆளாய்ச் 
சென்று பத்திரன் அடிமையாம் என்று பாண்செய்து 
வென்று பத்திரம் செய்து நின் வேண்டுகோள் என்றார்.	
2082.	குஞ்சி நாள் மலர் கொன்றையார் அங்ஙனம் கூறும் 
நெஞ்சினான் இனைப் பரிய சொல் கேட்டலும் நெஞ்சம் 
அஞ்சினான் இது செய்யவோ அடியனேன் மறைகள் 
கெஞ்சினாரை இன்று இரந்த வாறு என்று கண் விழித்தான். 	

2083.	கண் மலர்ந்து எழு பத்திரன் கரை இலா உவகை 
உண் மலர்ந்து எழும் அன்பு கொண்டு ஊக்க 
                                    வெம்கதிரோன் 
விண்மலர்ந்து எழு முன்பு போய் விசும்பு இழி கோயில் 
பண் மலர்ந்த நான் மறைப் பொருள் அடித்தலம் 
                                    பணிந்தான்.	

2084.	கடிய கானகம் புகுதவோ கட்டிய விறகை 
முடியில் ஏற்றவோ முண்டகத்தாள்கள் நொந்திட வந்து 
அடியனேன் பொருட்டு அடாதசொல் பகரவோ வஞ்சக் 
கொடியனேன் குறை இரந்தவா விளைந்ததே குற்றம். 	

2085.	நெடிய னேன் முதல் வானவர் நெஞ்சமும் சுருதி 
முடியன் ஏகமும் கடந்த நின் முண்டகப் பாதம் 
செடியனேன் பொருட்டாக இச் சேண் நிலம் தோய்ந்த 
அடியனேற்கு எளிது ஆயதோ ஐய நின் பெருமை. 	

2086.	நாத அந்தமும் கடந்த மெய்ஞ் ஞான ஆனந்த 
போதம் என்பர் அ•து இன்று ஒரு புடவி மானுடமாய் 
ஆதபம் தெற வெறிந்த இந்தனம் சுமந்து அடியேன் 
பேதை அன்பு அளவு ஆயதோ பெரும நின் உருவம். 	

2087.	மறிந்த தெண் திரை கிடந்தவன் உந்தியில் வந்தோன் 
அறிந்த அன்று அரும் பொருள் வரம்பு அகன்று 
                                 எழுவிசும்பும் 
செறிந்த அண்டமும் கடந்தது சிறியனேன் பொருட்டாத் 
தறிந்த இந்தனம் சுமந்ததோ தம்பிரான் முடியே. 	

2088.	என்ன வந்தனை செய்து நின்று ஏத்தி அம் கயல் கண் 
மின் அமர்ந்த பங்கு ஒருவனை வலம் கொடு மீண்டு 
மன்னர் தம்பிரான் ஆகிய வரகுண தேவன் 
தன்னை வந்து அடி பணிந்தனன் தந்திரிக் கிழவோன். 	

2089.	வந்த ஏழ் இசைத் தலைமகன் வரவு அறிந்து அரசன் 
அந்த ஏழ் இசைக் கிழவனை அழை என உழை யோர் 
பந்த யாழ் மகன் இருக்கை போய்ப் பார்த்தனர் காணார் 
சிந்தை ஆகுலம் அடைந்தவன் போனவா தெரியார். 

2090.	எங்கு உளான் எனத் தேடுவார் இவர் எதிர் அயல்வாய் 
அங்கு உளார் சிலர் அறிந்த வாறு அறைகுவார் அவன் 
                                         நேற்று 
இங்கு உளான் விறகு எடுத்து ஒரு முது மகன் இவன் பால் 
பொங்கும் ஏழ் இசைப் பத்திரன் அடிமையாய்ப் போந்தான். 	

2091.	பாடினான் பின்பு பட்டது தெரிகிலேம் பானாள் 
ஓடினான் எனக் கேட்டலும் ஒற்றர் போய்க் கொற்றம் 
சூடினான் அவை அடைந்தவர் சொல்லிய வாறே 
ஆடினார் வியப்படைந்து அனுமானம் உற்று அரசன். 	
2092.	தன் அடைந்த அத் தந்திரித் தலைவனை நோக்கி 
என்னவாறு அவன் போனவாறு இங்கு இனும் போன 
பின்னை யாது நீ செய்தனை என இசைப் பெருமான் 
தென்னர் கோன் அடி தொழுது தன் செய்தியை 
                                 மொழிவான். 	

2093.	நென்னல்வாய் அடியேன் நினது தாள் நிழல் நீங்கிப் 
பின்னல் வார் சடை மௌலி எம் பிரான் அடி பணிந்தேன் 
இன்னலார் குறை இரந்து மீண்டு இருக்கை புக்கு இருந்தேன் 
கன்னலார் மொழி பங்கர் என் கனவில் வந்து அருளி. 	

2094.	ஓடி உன் பொருட்டாக நாம் விறகு எடுத்து உழன்று 
வாடி நின் பகைப் புறம் கடை வந்து சாதாரி 
பாடி வென்று நின் பகைவனைத் துரந்தனம் எனச் சொல் 
ஆடினார் விழித்தேன் இது நிகழ்ந்தது என்று அறைந்தான். 	

2095.	ஏவல் மைந்தர் போய் விளங்கி வந்து இசைத்தலும் வீணைக் 
காவலன் கனா நிகழ்ச்சியும் ஒத்தலில் கைக்கும் 
பூ அலங்கலான் இ•து நம் பொன் நகர்க் கூடல் 
தேவர் தம்பிரான் திரு விளையாட்டு எனத் தௌ¤ந்தான். 	
2096.	இகழ்ந்த கூற்று எறி சேவடிக்கு இடை அறா நேயம் 
திகழ்ந்த பத்திரன் அன்பையும் தேவரைக் காப்பான் 
அகழ்ந்த ஆழி நஞ்சு உண்டவன் அருளையும் வியந்து 
புகழ்ந்து போய் மதுரா புரிப் புனிதனைப் பணியா. 	

2097.	பத்தர் யாழ் இசைக் கிழவனைப் பனைக்கை மான் எருத்தில் 
வைத்து மாட நீள் நகர் வலம் செய்வித்து மலர்ந்த 
சித்தம் ஆழ்ந்திட வரிசை கண் மிதப்புறச் செய்து 
தத்து மான் தொடை தேரினான் தன் மனை புகுவான்.	

2098.	தேவரும் தவமுனிவரும் தேவரில் சிறந்தோர் 
யாவரும் தமக்கு ஆத் செய இருப்பவர் இருதாள் 
நோவ வந்து உமக்கு ஆட் செய்து நும் குறை முடித்தார் 
அவரேல் உமக்கு அனைவரும் ஏவலர் அன்றோ. 	

2099.	ஆதலால் எனக்கு உடையார் நீர் உமக்கு நான் அடியேன் 
ஈதலால் எனக்கும் உமக்குமொடு வழக்கு வேறிலை நான் 
ஓதல் ஆவது ஒர் குறை உளது இன்று தொட்டு உமக்கு 
வேத நாதனைப் பாடலே கடான் என விடுத்தான். 	

2100.	அரசன் நல்கிய வெறுக்கை பூண் ஆடைகள் பிறவும் 
பரசு நாவலர் மாணவர் யாவர்க்கும் பகிர்ந்து 
வரிசையால் இசைக் கிளையொடு மனையில் வந்து எய்திக் 
கரை செயா மகிழ் சிறந்து இசைக் காவலன் இருந்தான். 	

விறகு விற்ற படலம் சுபம் 
 

42. திருமுகம் கொடுத்த படலம்

2101.	முன்னவன் மதுரை மூதுர் முழுமுதல் இசைவலானை 
இன்னிசை பாடி வென்றது இன் உரை செய்தேம் அந்தத் 
தென்னவன் சேரன் மாடே திருமுகம் கொடுத்துப் பாணர் 
மன்னவன் தனக்கு செம் பொன் வழங்கிய வழக்கம் 
                                      சொல்வாம். 	
2102.	இனி மதி எமக்கு ஈது என்னா யாழ் வல்லோன் அன்று தொட்டுப் 
பனி மதி மருமான் கோயில் பாண் இசைக் கிழமை நீத்துக் 
குனிமதி மிலைந்த நாதன் கோயில் முப்போதும் எய்திக் 
கனிமதி அன்பில் பாடும் கடப்படு நியமம் பூண்டான். 	

2103.	இத் தொழில் அன்றி வேறு தொழில் இவற்கு இன்மையாலே 
பத்திரன் இலம்பாது எய்த பொறுப்பரோ பழனக் கூடல் 
சித்தவெம் அடிகள் வேந்தன் பொன்னறைச் செல்வம் 
                                     வெளவிப் 
பத்தர் யாழ் இடத் தோள் ஏந்திப் பாடுவான் காணவைப்பார். 	

2104.	சில பொலம் காசு சில் நாள் மணிக்கலன் சில் நாள் 
                                       செம்பொன் 
கலைவகை சில் நாள் அம்பொன் சாமரைக் காம்பு சில் 
                                       நாள் 
அலர்கதிர் அரிமான் சேக்கை ஆடகத்தகடு சில் நாள் 
குலமணி வருக்கம் சில் நாள் கொடுத்திடக் கொண்டு 
                                       போவான். 	

2105.	கைவரும் பொருளைத் தந்த கள்வரும் தானும் அன்றி 
எவ் எவர் தமக்கும் தோற்றாது எரியில் இட்டு அழித்தும் 
                                       சின்னம் 
செய்வன செய்தும் தன்னைச் சேர்ந்தவர் இரந்தோர் 
                                       கைபார்த்து 
உய்பவர் பிறர்க்கு மாறாது உதவி உள் கவலை தீர்ப்பான்.	

2106.	வைகலும் கொடுப்போர் பின் நாள் மறுத்தனர் ஆகப் 
                               போய்ப் போய்க் 
கை தொழுது இறைஞ்சி வாளா வரும் அவன் கலியின் 
                                       மூழ்கி 
உய் வகை வேறு காணாது ஒக்கலும் ஒக்க வாடிக் 
கையறாவு அடைய நோனாது உறங்கினான் கனவின் 
                                      எல்லை. 	

2107.	சித்த எம் பெருமான் வந்து செப்புவார் அப்பா நிம்பத் 
தொத்தவன் கோசம் தன்னில் தும்பி உண் கனியின் வெளவி 
இத்தனம் இன்று காறும் ஈந்தனம் எம்பால் அன்பு 
வைத்தவன் அறிந்தால் சங்கை மனத்தன் ஆய் விகற்பம் 
                                       கொள்வான். 	

2108.	மயல் அறக் கற்புக் காக்கும் மகளிர் போல் துறவு காக்க 
முயலும் யோகரில் உட்காப்பு முரசு எறி புறம் சூழ் காப்பும் 
கயல் இலச்சினையும் நிற்கக் கவர்ந்த அற்புதம் இக் கள்வன் 
உயிர் தொறும் ஒளித்து நின்ற ஒருவனோ வறியேன் 
                                   என்பான். 	

2109.	கோமகன் இனைய செய்தி அறியும் மேல் கோசம் 
                                   காப்போர்க் 
காமுறு தண்ட நின் போல் அன்பகத்து எம்மை வைத்த 
தேம் மரு போந்தின் கண்ணிச் சேரமான் தனக்கு இப்போது 
நாம் ஒரு முடங்கல் தீட்டி நல்குவம் போதி என்னா. 	

2110.	மறைக்கு உரை செய்த வாக்கான் 'மதி மலி புரிசை' என்னும் 
சிறப்பு இயல் சீர்சால் செய்யுள் பாசுரம் செப்பித் தீட்டிப் 
பிறைச் சடைப் பெருமான் நல்கி மறைந்தனன் பெரும்பாண் 
                                      செல்வன் 
உறக்கம் நீத்து ஆடிப் பாடி உவகை மாக் கடலில் 
                                      ஆழ்ந்தான். 	

2111.	வாங்கிய திருமுகம் மணிப் பட்டாடை இட்டு 
ஆங்கு இறை அடிபணிந்து அகன்று பத்திரன் 
ஓங்கிய கோயிலை வலம் கொண்டு ஒல்லென 
நீங்கி மேல் வரைப் புல நெறிக் கொண்டு ஏகுவான். 	

2112.	கொல்லையும் குறிஞ்சியும் கொதிக்கும் வெம் பரல் 
கல்லதர் அத்தமும் கடந்து முள் புறப் 
பல் சுளைக் கனி அடி இடறப் பைப் பைய 
நல் வளம் கெழு மலை நாடு நண்ணினான்.	

2113.	அலைகடல் நெடும் துகில் அந்த நாடு எனும் 
தலைமகள் தனக்கு வான் தடவு குன்று பூண் 
முலை என விளங்கின முகத்தில் தீட்டிய 
திலகமே ஆனது திரு வஞ்சைக் களம்.	

2114.	அறமகள் ஆக்கமும் மலரின் மேய செம் 
நிறமகள் ஆக்கமும் நீதி சான்ற போர் 
மற மகள் ஆக்கமும் வடசொல் தென் கலைத் 
திறமகள் ஆக்கமும் சிறந்தது அந்நகர்.	

2115.	மண் புகழ் அந் நகர் மறுகின் மாது ஒரு 
தண் புனல் சாலையில் சார்ந்து உளான் இப்பால் 
விண் புகழ் நீதி அவ் வேந்தற்கு அன்றி இராக் 
கண்புனை நுதலினார் கனவில் தோன்றினார்.	

2116.	தென்னவன் மதுரையில் இருக்கும் சித்தர் யாம் 
நின் இடை வந்துளே நின்னைக் கண்டு தான் 
நன் நிதி வேண்ட நம் ஓலை கொண்டு நம் 
இன்னிசைப் பாண பத்திரன் இங்கு எய்தினான்.	

2117.	மற்று அவற்கு அருநிதி கொடுத்து மன்ன நீ 
தெற்று என வரவிடுக என்று சித்தர் தாம் 
சொற்றனர் போயினார் சுரக்கும் தண் அளி 
ஒற்றை வெண் குடையினான் உறக்கம் நீங்கினான்.	

2118.	கங்குல்வாய் கண்ட அக் கனவைப் பெண்ணை அம் 
தொங்கலான் தமரொடு சொல்லிச் சேல் கண்ணாள் 
பங்கினாள் திருமுகம் கொணர்ந்த பத்திரன் 
எங்கு உளான் கொல் எனத் தேட எண்ணுவான்.	

2119.	மற்று அவர் தமைத் துரீஇ வருக இல் லெனக் 
கொற்றவன் ஏவலோர் குறுகி மாடமும் 
தெற்றியும் நியமமும் மன்றும் சென்று சென்று 
எல்திகழ் மணி நகர் எங்கும் தேடுவார்.	

2120.	தரும நீர்ப் பந்தரில் இருக்கும் தந்திரி 
வரும் இசைக் கிழவனைக்கண்டு வல்லை போய்த் 
திரு மகற்கு உணர்த்தினர் சேனை யோடு எழீப் 
பெருமகன் பாணர்தம் பிரானை நண்ணினான்.	

2121.	கண்டனன் முகிழ்த்த கைக் கமலம் சென்னி மேல் 
கொண்டனன் பாடினன் கூத்தும் ஆடினன் 
தண்டு என வீழ்ந்தனன் பின் தண் நறா 
வண்டு என மகிழ்ந்தனன் மன்னர் மன்னனே.	

2122.	வாங்கினன் திருமுகம் மலர்க்கண் ஒற்றினன் 
தாங்கினன் முடிமிசைத் தாமம் போல் மகிழ் 
தூங்கினன் தடம் கணீர் துளிப்ப மெய் எல்லாம் 
வீங்கினன் பொடிப்பு எழ வேந்தர் வேந்தனே.	

2123.	மின் அவிரும் செம் பொன் மணி மாடக் கூடல் மேய 
              சிவன் யாம் எழுதி விடுக்கும் மாற்றம் 
நன்னர் முகில் எனப் புலவர்க்கு உதவும் சேர நரபாலன் 
              காண்க தன் போல் நம்பால் அன்பன் 
இன் இசை யாழ்ப் பத்திரன் தன் மாடே போந்தான் 
            இருநிதியம் கொடுத்து வர விடுப்பதுஎன்னத் 
தென்னர் பிரான் திரு முகத்தின் செய்தி நோக்கிச் சோர் 
              பிரான் களிப்பு எல்லை தெரியான் ஆகி. 

2124.	பொன்னின் தளிகை மிசை வைத்துப் புழைக்கை மதமான் தலை ஏற்றி 
மன்னும் கொளை யாழ்ப்புலவனை முன் வைத்துப் பின்னே தான் இருந்து 
மின்னும் கதிர் கால் இணைக் கவரி வீசிப் பல வேறி யங் கலிப்பத் 
தென்னென் தளியார் இசைத்தார் ஆன் திருமா நகரை வலம் செய்யா. 	

2125.	பஞ்சு தடவும் சீறடியார் பல மங்கலம் கொண்டு எதிர் போத 
மஞ்சு தடவு நீள் குடுமி மாடாமனையில் கொடு போகி 
நஞ்சு தடவு மணிகண்டன் அன்பன் தனை நன்னீர் ஆட்டி 
அஞ்சு தடவி ஓவியம் செய்து அமைத்த மணி மண்டபத்து 
                                           ஏற்றி. 	

2126.	அம் பொன் தவிசு இட்டு அருச்சனை செய்து ஆறு 
                      சுவையின் அமுது அருத்திச் 
செம்பொன் கலவை நறும் சாந்தம் தீம் பூ ஆதி முகவாசம் 
பைம்பொன் கலத்து வெள் இலை தீம் பழுக்காய் பிறவும் 
                                  முறை நல்கி 
உம்பர்க்கு இறைவன் திருமுகத்தில் உய்ப்பது எனலால் உய்த்தும் என. 	

2127.	செம் பொன் அறையைத் திறந்து அழைத்துக் காட்டி 
                             இனைய திரு எல்லாம் 
உம்பர் பெருமான் அடியீர் நீர் உடையீர் கவர்ந்து 
                                  கொள்மின் என 
இம்பர் நிழற்றும் வெண் குடையான் இசைப்ப எதிர் 
                             தாழ்ந்து இசைக் கிழவன் 
நம்பன் அருளுக்கு உரியீர் நீர் நல்கிற்று அமையும் 
                                  எனக்கு என்ன. 	

2128.	மன்னன் தான் எண்ணிய ஆற்றால் வழங்க வழங்க மறுத்து மறுத்து 
இன்னல் திரும் இசைக் கிழவன் இலங்கும் பொலம் பூண் இரு நிதியம் 
பொன் அம் சிவிகை கரி பரிமான் பொன் பட்டாடை பல பிறவும் 
தன்ன என்னும் அளவு ஆற்றால் தானே கொள்ளத் தார் வேந்தன். 	

2129.	பின்னே ஏழ் அடி சேண் சென்று பெருமை சான்ற 
                                  வரிசையினால் 
தன் நேரிசையான் தனை விடுத்து மீண்டான் ஆகத் தமிழ் 
                                  மதுரை 
மின்னேர் சடையார் இசைத் தொண்டன் தானும் மீண்டு 
                                  வெயில் விரிக்கும் 
பொன்னேர் மௌலி நிதிக்கிழவன் போல மதுரை நகர் 
                                  புக்கான். 	

2130.	வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி 
                                        எல்லாம் 
இந்து மருமான் நகர் உள்ளார் யாவும் அறிய யாவர்க்கும் 
முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை 
                                        நல்கிச் 
சந்த யாழின் இசைப்பாணர் தருமம் அனையான் வைகினான். 	

திருமுகம் கொடுத்த படலம் சுபம் 

43. பலகை இட்ட படலம்

2131.	கருத் துழாய் முகில் ஒருபால் கலந்து அவர் பத்திரற்கு நிதி 
திருந்து தார் உதியன் இடைத் திருமுகம் ஈந்து அளித்த இது 
வருந்தி யாழவன் இசைப்ப மழை தூங்கு நள் இரவில் 
இருந்து பாடு எனப் பலகை இட்டதூம் இனிப்பகர்வாம்.	

2132.	முன்பு உடைய நாயகனை முப்போதும் புகுந்து இறைஞ்சி 
இன்பு உறும் ஏழ் இசைக் கிழவன் இரு நிதியம் அருளிய பின் 
அன்பு சிறந்து அரை இரவு அடைந்து பணிந்து அடல் விடையின் 
பின்புற நின்று ஏழ் இசையும் பாடி வரும் பேறு அடைவான். 	

2133.	தொழும் தகை அன் பரும் தேவர் தொகுதிகளும் தொழத் 
                                        திங்கள் 
கொழுந்து அலைய நதி அலையக் குனிக்கின்ற தனிக் 
                                      கடவுள் 
செழும் தரளச் சிவிகையின் மேல் தேவி திருப் பள்ளி  
                                    யறைக்கு 
எழுந்து அருளும் போது பணிந்து ஏத்துவான் ஓர் இரவில். 	

2134.	இன்னிசை யாழ்ப் பெரும் பாணன் எவ் இடையூறு 
                                  அடுத்தாலும் 
தன் நியம நெறி ஒழுக்கம் தவான் என்பது உலகு அறியப் 
பொன் இயலும் சடை மௌலிப் புராணர் திருவிளை 
                                  யாட்டால் 
அன்னிலையில் கரும்கொண்மூ ஆர்த்து எழுந்த திசை 
                                  எல்லாம். 	

2135.	தடித்து நிரை புடை பரப்பித் தடுமாறி திசை மயங்கத் 
துடித்து விடவாய் அரவம் சோர்ந்து சுருண்டு அளை 
                                       ஒதுங்க 
இடித்து உடுவின் கணம் புதைப்ப இருள் கான்று சலபதி 
                                         முன் 
முடிதிடுவான் வரவிடுத்த முகல் ஏழும் வளைந்த என. 	

2136.	கரும் கடலை விசும்பு எடுத்துக் கவிப்பது என வெண் 
                                      தாரை 
நெருங்கி இருளின் இருப்புக் கோன் நிரைத்த என நிறம் 
                                      கருக 
ஒருங்கு சொரிந்து உள் உணரார் உள்ளம் போல் உள் 
                                      புறம்பு 
மருங் கொடு கீழ் மேல் என்று தெரியாத மயங்கு 
                                      இருள்வாய். 	

2137.	மா மாரி இடை நனைந்து வருவானம் மாரி தனைப் 
பூ மாரி என நினைந்து திருக்கோயில் புகுந்து எய்திக் 
காமாரி தனைப் பணிந்து கருணை மாரியின் நனைந்து 
தே மாரி பொழிவது எனத் தௌ¢ விளி யாழ் வாசிப்பான். 	

2138.	விடைக் கடவுள் பின்னின்று வீணை இடத் தோள் கிடத்திப் 
புடைத்து நரம்பு எறிந்து மிடற்று ஒலி போக்கிப் பொலம் 
                                      கொன்றைச் 
சடைக் கடவுள் செவி வழிபோய் அருள் பைங் கூழ் தலை 
                                      எடுப்பத் 
தொடைத் தமிழின் இசைப் பாணிச் சுவை அமுத மடை 
                                      திறந்து. 	

2139.	நரம்பு நனைந்து இசை மழுங்க நனைந்து உடலம் பனிப்ப 
                                           இசை 
வரம்பு ஒழுகு விரல் விறைத்து வலி வாங்க மயிர் சிலிர்ப்ப 
நிரம்பிய சேறு அடிபுதைப்ப நின்று நிறை அன்பின் 
                                     இசையாய் 
அரும்புதல் போல் என்பு உருக்கும் அமுத இசை பாடும் 
                                         ஆல். 

2140.	மாதர் நகையாய் மதுரேசர் உண் பலிக்கு எம் மனைவாய் 
                                           வந்து 
காதன் முகத்து அரும்பிக் காட்டி என் சிந்தை கவர்ந்தார் 
                                        போலும் 
காதன் முகத்து அரும்பக் கையறவு தீரக் கலப்பேன் பாதி 
பேதை உருவாய் இருந்தார் நாணி விழித்து ஆவி 
                          பிழைத்தேன் போலும். 	

2141.	ஒண் நுதலாய் வெண் தலை கொண்டு உண் பலிக்கு நம் 
                           மனையின் ஊடேகூடல் 
கண் நுதலார் உள் ஆளக் கானம் இசைத்து என் உள்ளம் 
                                கவர்ந்தார் போலும் 
கண் நுதலார் பாடு அவி நயம் கண்டு ஆகம் கலப்பேன் 
                                         பாதி 
பெண் உருவமாய் இருந்தார் வெள்கி விழித்து ஆவி 
                             பெற்றேன் போலும். 	

2142.	ஐயரி உண் கண்ணாய் திருவால வாயுடையார் ஐயம் 
                               கொள்வான் 
மையன் நகை செய்து என் வனமுலையின் மேல் செம் 
                         கைவைத்தார் போலும் 
மைய நகை செய்வது என் வனமுலை மேல் கை வைப்ப 
                               மாழ்கிச் சோர்வேன் 
தையல் இடம் கண்டு நடு நடுங்கி விழித்து ஆவி 
                               தரித்தேன் போலும்.	

2143.	பாடுவார் இருவர்க்கு அன்று பரிசிலாக் கொடுத்த சங்கத் 
தோடுவார் செவியில் ஊட்டும் தொண்டு கண்டு இதன் 
                                 மேல் நின்று பாடுவாய் உனக்கே இந்தப் பலகை என்று ஆழ்ந்த 
                                    அன்பின் 
நாடுவார் விசும்பில் கூறி நகை மணிப் பலகை இட்டார். 	

2144.	இறை அருள் ஆணை அஞ்சி இட்ட பொன் பலகை ஏறி 
நறை கெழு மதுர கீதம் பாடி நான் மறைகள் சூடும் 
அறை கழல் அகத்து உட்கொண்டு பலகையும் அம் கை 
                                      கொண்டு
மறை வழி யாழ் வல்லோன் தன் மனைவயின் செல்லும் 
                                       எல்லை. 	

2145.	மின்னுமா மேகம் நீங்கி விசும்புவாய் விளங்கித் தென்றல் 
மன்னு மா மலய மேய மாதவன் குடித்த வைகல் 
பொன்னு மா மணியும் முத்தும் புலப்படக் கிடந்த வேலை 
என்ன மீன் விளங்கித் தோன்ற ஏகி இல் புகுந்தான் இப்பால். 	

2146.	பாய் இருள் படலம் கீண்டு பரிதி கண் விழித்துச் செம் கை 
ஆயிரம் பரப்பி முந்நீர் அலைகடல் நீந்தும் எல்லை 
மாயிரு ஞாலம் காக்கும் வரகுணன் இரவு தங்கள் 
நாயகன் பாடற்கு ஈந்த நல் அருள் பரிசில் கேட்டான். 	
2147.	இன்னிசைக்கு அரசை இட்ட பலகை மீது இருத்தி மன்னர் 
மன்னவன் இவனே எங்கள் மதுரை நாயகன் என்று உன்னி 
மின்னிவர் மணிப்பூண் நல்கி விளை நில மிகவும் நல்கி 
நன்னிதி வெறுப்ப நல்கி வரிசையான் நடாத்தி வந்தான். 	

2148.	இறை அருள் வரிசை பெற்ற பத்திரனும் மேறு   
                       உயர்த்தவரை நாற்போதும் 
முறையினால் வழிபட்டு ஒழுகுவான் ஆக முடிகெழு 
                              வரகுண வேந்து 
மறை முதல் அடிகள் வந்து வந்தனையால் வழுத்துவான் 
                              சில் பகல் கழிய 
நிறை பெரும் சுடரோன் திரு உரு அடைந்து நெறியினால் 
                              சிவபுரம் அடைந்தான். 

பலகை இட்ட படலம் சுபம் 


44. இசைவாது வென்ற படலம்

2149.	கூடல் அம் பதியில் ஆடக மேருக் கொடிய வில்குரிசில் 
                                   அடியவனுக்குப்
பாடலின் பரிசில் ஆகிய செம் பொன் பலகை இட்டபடி 
                               பாடின மன்னான்
வீடரும் பொருவில் கற்புடையாள் ஓர் விறலி யைப் பரமன் 
                               இறை அருள் பற்றி 
மாடகம் செறியும் யாழ் வழி பாதி வாது வென்ற வரலாறு 
                                   இசைப்பாம். 	

2150.	வரகுணன் கதி அடைந்தபின் அம் பொன் மௌலி சூடிய 
                                    இராச ராசப் 
புரவலன் புவி மடந்தையை வேட்டுப் புயம் தழீஇக் கொடு 
                               நயம் தரு நாளில் 
பரவு மன்பதை புரந்து ஒழுகும் அந்தப் பஞ்சவற்கு உரிய 
                               அஞ்சன உண்கண் 
மரபின் வந்த மடவார் பலர் ஏனை மையல் செய்யும் 
                               மடவார் பலர் மாதோ. 	

2151.	அன்ன போக மடாவாருள் ஒருத்தி அரசனுக்கு அமுதும் 
                                ஆவியும் ஆகும் 
மின்னலாள் மதுர கீதம் இசைக்கும் விஞ்சையின் துறை 
                                வலாளவளுக்கும் 
பன்னக ஆபரணன் இன்னிசை பாடும் பத்திரன் பொருவில் 
                                கற்புடை யாட்கும் 
மன்னு கீத வினையால் இதன் மூள வழுதி காதல் மடமாது 
                                பொறாளாய். 	

2152.	பாடினிக்கு எதிர் ஒர் பாடினி தன்னைப் பாட விட்டிவள் 
                               படைத்த செருக்கை 
ஈடழிப்பல் என எண்ணி எழீத் தன் இறை மகற்கு அ•து 
                               இசைத்தலும் அந்தத் 
தோடிறப் பொருகயல் கணி நாடகன் சொன்ன வாறு ஒழுகு 
                               மன்னவர் மன்னன் 
நாடி அத்தகைய விறலியை ஈழ நாட்டினும் வர வழைத்து 
                                      விடுத்தான். 	

2153.	பந்தயாழ் முதுகு தைவர விட்டுப் பாட லயம் இரு பக்கமும் 
                                    மொய்ப்ப 
வந்த பாடினி மடந்தையும் மன்னர் மன்னனைத் தொழுது 
                           ஓர் கின்னர மாதின் 
சந்த ஏழிசை மிழற்றினாள் தன்னை நோக்கி 
                           ஒருமின்னிடையாள் மேல் 
சிந்தைபோக்கி வரு தீப்பழி நோக்காத் தென்னருக்கு 
                           அரசன் இன்னது செப்பும். 	

2154.	பத்திரன் மனைவி தன்னை எம் முன்னர்ப் பாடுதற்கு 
                      அழை அதற்கு அவள் ஆற்றாது 
உத்தரம் சொலினும் யாம் அவள் சார்பாய் உனை 
                      விலக்கினும் விடாது தொடர்ந்தே 
சித்தம் நாணம் உற வஞ்சினம் இட்டுச் செல்லல் நில் 
                      என வளைந்து கொள் என்னா 
எய்த்த நுண் இடையினாளை இருக்கைக்கு ஏகி நாளை 
                      வருக என்று விடுத்தான். 	

2155.	பின்னர் இன்னிசைப் பத்திரன் பெருந்தகை விறலி 
தன்னை அங்கு அழைத்து உளத்து ஒன்று புறத்து ஒன்று 
                                       சாற்றும் 
என்னோடு இன்னிசைப் பாடுவார் உளர் கொலோ இங்கு 
                                        என்று 
உன்னி வந்து இருக்கின்றனள் இசைவலால் ஒருத்தி. 	

2156.	ஆடு அமைத் தடம் தோளினாய் அவளடும் கூடப் 
பாட வல்லையோ பகர் எனப் பாடினி பகர்வாள் 
கோடரும் தகைக் கற்பும் இக் கூடல் எம் பெருமான் 
வீடரும் கருணையும் எனக்கு இருக்கையால் வேந்தே.	

2157.	பாடி வெல்வதே அன்றி நான் பரிபவம் உழந்து 
வாடுவேன் அலேன் என்று உரை வழங்கலும் மதுக்கால் 
ஏடு வார்குழல் அவளையும் இருக்கை உய்த்து இருந்தான் 
நீடு வார் திரைப் பொருனை அம் தண் துறை நிருபன். 	

2158.	மற்றை வைகல் அவ் இருவரைப் பஞ்சவன் மதுரைக் 
கொற்றவன் தன் அவை இடை அழைத்து நேர் குட்டிக் 
கற்ற ஏழ் இசை கேட்கு முன் கலத்தினும் போந்த 
வெற்றி வேல் மதர் நெடும் கணாள் விறலியை வைதாள். 	

2159.	குற்றம் எத்தனை எத்தனை குணங்கள் யாழ்க் கோலுக்கு 
உற்ற தெய்வம் ஏது இசைப்பது எவ் உயிர் உடம்பு உயிர் 
                                           மெய் 
பெற்ற ஓசை எவ் அளவைக்கு உத்தரம் பேசி 
மற்ரு என்னோடு பாடில்லையேல் வசை உனக்கு என்றாள். 	

2160.	இருமையும் பெறு கற்பினால் இயம்புவாள் கலத்தின் 
வரும் அரும் பெறற் கல்வியும் வாதின் மேல் ஊக்கப் 
பெருமையும் பலர் விரும்புறு பெண்மையின் செருக்கும் 
திருமகன் சபை அறியவாய் திறக்க வேண்டாவோ.	

2161.	நெய் உண் பூம் குழல் மடவரான் இன்னொடும் வாது 
செய்யும் பூசலுக்கு எதிர் அலால் தீயவாய் திறந்து 
வையும் பூசலுக்கு எதிரலேன் மானம் விற்று உன் போல் 
உய்யும் பாவையரே அதற்கு எதிர் என உரைத்தாள்.	

2162.	வென்றி மீனவன் விலக்குவான் போல் எதிர் விலக்கித் 
துன்று தார் குழல் மடந்தை மீர் பாடுமின் தோற்றோர் 
வென்ற மாதரார்க்கு அடிமையாய் விடுவதே சபதம் 
என்று மானம் உண்டாக்கலும் ஈழ காட்டு அரிவை.	

2163.	முந்தி யாழ் இடம் தழீஇக் குரல் வழி முகிழ் விரல் போய் 
உந்தவே பெருமித நகை உள் கிடந்து அரும்பச் 
சந்த ஏழ் இசை இறை மகன் தாழ் செவிக்கு அன்பு 
வந்த காதலால் மழையின் அமுது என ஆர்த்தாள். 	

2164.	வீணை வாங்கினள் மாடகம் முறுக்கினள் விசித்து 
வாண் நரம்பு எறிந்து இரு செவி மடுத்தனர் இயக்கர் 
நாண மெல் விரல் நடை வழி நாவிளை அமுதம் 
பாணர் கோமகன் விறலியும் பலர் செவி நிறைத்தாள்.

2165.	அரசன் உட்கிடை அறிந்திலர் அவைக் களத்து உள்ளார் 
விரைசெய் வார் குழல் பாடினி பாடலை வியந்தார் 
புரைசை மானிரைப் பூழியன் இலங்கையில் போந்த 
வரை செய் குங்குமக் கொங்கையாள் பாடலை மகிழ்ந்தான். 	

2166.	தென்னவன் உள் கோள் எல்லை தெரிந்தனர் வையத்து 
                                      உள்ளார் 
அன்னவன் புகழ்ந்த வாறே புகழ்ந்தனர் அவளைத் தானே 
முன்னவன் அருளைப் பெற்று மும்மையும் துறந்தோர் ஏனும் 
மன்னவன் சொன்னவாறே சொல்வது வழக்காறு அன்றோ. 	

2167.	பொன் தளிர் அனையாள் மையல் புதுமது நுகர்ந்து தீது 
நன்று அறியாத கன்னி நாடவன் அனவையை நோக்கி 
இன்று ஒரு நாளில் தேரத் தக்கதோ இது என்று அந்த 
வென்று அடு வேல் கணாரைப் போம் என விடுத்தான் 
                                     மன்னோ. 	

2168.	மருவிய ஆயம் ஏத்த விருந்தினாள் மனைவந்து எய்திப் 
புரவலன் தனது பாட்டைப் புகழ்ந்ததே புகந்தது ஆகப் 
பெருமிதம் தலைக் கொண்டாள் அப் பெரும் களிப்பு 
                             அடைந்து மஞ்சத்து 
திரு மலர் அணை மேலார் வந்து இளைத்து இனிது 
                             இருந்தாள் இப்பால். 

2169.	வணங்கு உறு மருங்கில் கற்பின் மடவரல் மதங்கி தானும் 
அணங்கு இறை கொண்ட நெஞ்சன் அம் கயல் கண்ணி 
                                       பாகக் 
குணம் குறி கடந்த சோதி குரை கழல் அடிக்கீழ் எய்தி 
உணங்கினள் கலுழ் கண்ணீர் ஒதுங்கு நின்று இதனைச் 
                                       சொன்னாள். 	

2170.	தென்னவன் ஆசி வையம் செய்ய கோல் செலுத்திக் காத்த 
மன்னவ வழுதி வார வழி வழக்கு உரைப்பது ஆனான் 
அன்னவன் கருத்துக்கு ஏற்ப அவையரும் அனையர் ஆனார் 
பின் நடு நிலைமை தூக்கிப் பேசுவார் யாவர் ஐயா. 

2171.	உன் அருள் துணை செய்து என் பால் உறு கண் நோய் 
                               துடைப்பது என்ன 
மின் அனாய் நீயே நாளை வெல்லும் மா செய்தும் 
                                     அஞ்சேல் 
என்ன ஆகாய வாணி ஈறு இலான் அருளால் கேட்டு 
மன்னரும் கற்பின் ஆடன் மனை புகுந்து இருந்தான் 
                                      மன்னோ. 	

2172.	அன்று போல் மற்றை ஞான்றும் அழைத்தனன் பாடல் 
                                     கேட்டுக் 
குன்று போல் புயத்தான் தென்னன் கூறிய வாறே கூற 
மன்று உளார் பலரும் அன்ன வண்ணமே சொன்னார் 
                                      கேட்டு 
நின்ற பாண் மடந்தை பாண்டி நிருபனை நோக்கிச் 
                                   சொல்வாள். 	

2173.	தென்னர் ஏறு அனையாய் ஞால மனு வழிச் செங்கோல் 
                                       ஓச்சும் 
மன்னர் ஏறு அனையாய் வார வழக்கினை ஆதலால் நீ 
சொன்னவாறு அவையும் சொல்லத் துணிந்தது துலை நா 
                                       அன்ன 
பன்னக ஆபரணர் முன் போய்ப் பாடுகேம் பாடும் எல்லை. 	

2174.	இருவரேம் பாட்டும் கேட்டுத் துணிந்து இவள் வென்றாள் 
                                        என்னா 
ஒருவர் சந்நிதியில் சொன்னால் போதும் என்று உரைத்தாள் 
                                        பாண்டித் 
திரு மகன் அனைய வாறே செய்மினீர் செய்மின் என்ன 
மருவளர் குழலினார் தம் மனை புகுந்து இருந்தார் பின் 
                                        நாள். 	
2175.	தென்றல் நாடனும் மந்திரச் செல்வரும் 
நன்று தீது உணர் நால் வகைக் கேள்வியோர் 
ஒன்ற ஏகி ஒளி விடு வெள்ளி மா 
மன்ற வாணர் மா மண்டபத்து எய்தினார்.	

2176.	எய்தி அம் மடமாதரை இங்கு உறச் 
செய்திர் என்னத் திருமகன் ஏவலோர் 
நொய்தின் ஓடி நொடித்து அழைத்தா ரொடு 
மை திகழ்ந்த விழியார் வருவர் ஆல்.	

2177.	படிமையார் தவப் பாடினி வந்து எனக்கு 
அடிமையாவள் இன்று ஐயம் இன்றால் எனக் 
கொடுமையார் மனக் கோட்டச் செருக் கொடும் 
கடுமையாக வந்தாள் கலத்தின் வந்தாள்.	

2178.	கற்பின் மிக்கு எழு கற்பும் கருத்தினில் 
சிற் பரஞ் சுடர் சேவடி மேல் வைத்த 
அற்பு மிக்கு எழ மெல்ல வந்தாள் அரோ 
பொற்பின் மிக்கு உள பத்திரன் பொன் அனாள்.	

2179.	அலங்கு ஆ ரமோடு அங்கதம் ஆதி பல் 
கலன்கள் தாங்கிக் கலைஞர் குழாத்து இடை 
இலங்கு மாட மதுரைக்கு இறைவரும் 
புலம் கொள் நாவலர் போல் வந்து வைகினார்.	

2180.	அந்த வேந்து அவை தன்னில் அரும் கலம் 
வந்த வேய்த் தடம் தோள் இசை மாதராள் 
முந்த வேத்திசை பாடினாள் முந்தை யோர் 
சிந்தை வேட்டு ஒன்றும் செப்பினர் இல்லை ஆல்.	

2181.	வீணை தோள் இடன் ஏந்திய வெண் மலர் 
வாணி பாட இருக்கையின் வைகியே 
யாழ் நரம்பு எறிந்து இன்னிசை ஓர்ந்து எழீப் 
பாணர் கோமகன் பன்னியும் பாடும் ஆல்.	

2182.	குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு இமையாக் 
                                   குஞ்சரமும் 
படம் கொள் பாயும் பூ அணையும் தருவாய் மதுரைப் 
                                    பரமேட்டி 
படம் கொள் பாயும் பூ அனையும் கையில் படுதலை 
                                    கொண்டு 
இடங்கள் தோறும் இரப்பாய் என்று ஏசுவார்க்கு என் 
                                   பேசுவனே. 	

2183.	தேனார் மொழியார் விழிவழியே செல்லாதவர்க்கே வீடு 
                                       என்று 
நானா வேதப் பொருள் உரைத்தாய் நீயே மதுரை நம்பரனே 
நானா வேதப் பொருள் உரைத்தாய் நீயே பாதி நாரி உரு 
ஆனாய் என்று பிறர் பழித்தால் அடியேன் விடை ஏது 
                                       அறைவேனே. 	

2184.	வரதன் ஆகி எவ் உயிர்க்கும் மாயா விருத்தி வலி 
                                   அடக்கிச் 
சரதம் ஆன வீட்டு இன்பம் தருவாய் மதுரைத் தனி முதலே 
சரதம் ஆன வீட்டு இன்பம் தருவாய் வீடு பெறுவார் போல் 
விரத யோக நிலை அடைந்தாய் என்பார்க்கு என் நான் 
                                   விளம்புவனே. 	

2185.	கண் நுதல் மதுரைப் பிரானை இவ்வாறு கருதிய பாணியால் 
                                         கனிந்து 
பண் நுதல் பரிவட்டு அணை முதல் இசைநூல் பகர் முதல் 
                           தொழில் இரு நான்கும் 
எண் உறுவார் தல் வடித்து இடன் முதல் ஆம் எட்டு 
                           இசைக் காரணமும் பயப்ப 
மண்ணவர் செவிக்கோ வானவர் செவிக்கும் ஆக்கினாள் 
                                  விளை அமுதம். 	

2186.	இடையினோடு ஏனைப் பிங்கலை இயக்கம் இகந்து மூலம் 
                                   ஒடுத்து இயக்கி 
நடு உறு தொழிலால் பிரம நந்திரம் நடைபெற இசைக்கும் 
                                   உள் ஆளாம் 
மிடறு வீங்காள் கண் இமைத்திடாள் எயிறு வெளிப் படாள் 
                              புருவம் மேல் இமிராள் 
கொடிறு அது துடியாள் பாடலும் அது கேட்டு அனைவரும் 
                              குதூகலம் அடைந்தார். 	

2187.	கன்னி நாடு உடையான் கைதவன் எனும் பேர்க் காரணம் 
                            தேற்றுவான் எனத்தான் 
இன்னிசை அறிஞனாகியும் முன்போல் இயம்புவான் ஒரு 
                            படு கின்றான் 
முன்னவன் அருளால் தன் மனக் கோட்ட முரண் கெடப் 
                            பொதுமையான் நோக்கி 
இன்னவள் தானே வென்றனள் என்றோன் இனையவாறு 
                            அனைவரும் மொழிந்தார். 	

2188.	கரி உரை மொழிந்த கைதவன் இலங்கைக் கைதவப் 
                                பாடினி கழுத்தில் 
புரிகுழல் மாதை இருத்து என இருத்தும் போதுமை இடம் 
                                கரந்து இருந்த 
அரிய நாவலர் ஈது அற்புதம் ஈது அற்புதம் என 
                                அறைந்தவை காண 
விரிகதிர் மின் போல் மறைந்தனர் யாரும் வியந்தனர் 
                                பயந்தனன் வேந்தன். 	

2189.	செம் கண் ஏறு அழகர் ஆடல் ஈது என்றே யாவரும் 
                               தௌ¤ந்தனர் ஏத்தி 
அம் கண் நாயகர் தம் கருணையின் திறனும் அடியவர் 
                               அன்பையும் தூக்கித் 
தம் கணார் அருவி பெருக ஆனந்தத் தனிப் பெரும் 
                               சலதியில் ஆழ்ந்தார் 
வங்கம் மேல் வந்தாள் பிடர் மிசை இருந்த மாண் இழை 
                               விறலியை மன்னன். 	

2190.	இறக்குவித்து அவட்கு முந்த முத்தாரம் எரிமணிக் கலன் 
                            துகில் வரிசை 
பெறக் கொடுத்தேனை அவட்கு உள் மகிழ்ச்சி பெறச் சில 
                            வரிசை தந்து அவையில் 
சிறக்க வந்து ஒருங்கு வைகி வான் இழிந்த தெய்வதக் 
                            கோயில் புக்கு இருந்த 
அறக் கொடி இடம் சேர் பெரும் புல வோர்க்கு அரும் 
                            கலன் ஆதிகள் நல்கா. 

2191.	மன்னவர் வலிகள் எல்லாம் தெய்வத்தின் வலிமுன் நில்லா 
அன்ன மா தெய்வம் செய்யும் வலி எலாம் அரண் மூன்று 
                                         அட்ட 
முன்னவன் வலிமுன் நில்லா எனப்பலர் மொழிவது எல்லாம் 
இன்ன பாண் மகளிற் காணப்பட்டது என்று இறும்பூது 
                                          எய்தா. 	

2192.	மின் இயல் சடையினானை விடை கொடு வலம் செய்து 
                                         ஏகி 
இன்னியம் இயக்கம் செய்ய எழில் கொடு தன் கோயில் 
                                       எய்தித் 
தொல் நிதி பெற்றான் போலச் சுகுண பாண்டியனைப் 
                                       பெற்று 
மன்னிய மகிழ்ச்சி வீங்க வைகினானன் இராசராசன். 

இசைவாது வென்ற படலம் சுபம் 	 	 

45. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்

2193.	இருளைக் கந்தரத்தில் வைத்தோன் தன் இடத்து என்றும் 
                                      அன்பின் 
தெருளைத்தந்து அவட்கு மாறாத் தெரிவையை இசையால் 
                                      வெல்ல 
அருளைத் தந்து அளித்த வண்ணம் அறைந்தனம் தாயாய்ப் 
                                      பன்றிக் 
குருளைக்கு முலை தந்து ஆவி கொடுத்தவாறு எடுத்துச் 
                                      சொல்வாம். 	

2194.	முறை என இமையோர் வேண்ட முளைத்த நஞ்சாய் இன்று 
                                        சான்றாய் 
உறை என மிடற்றில் வைத்த உம்பரான் மதுரைக்கு ஆரம் 
திறை என எறி நீர் வைகைத்து எற்கது குரு இருந்த 
துறை என உளது ஓர் செல்வத் தொல் மணி மாடமூதூர். 	

2195.	தரு நாதன் ஆதி வானோர் தம் குரு இருந்து நோற்பக் 
குரு நாதன் எனப் பேர் பெற்றுக் கோது இலா வரம் தந்து 
                                          ஏற்றில் 
வருநாதன் சித்திரத் தேர் வலவனார் உடனே கஞ்சத் 
திரு நாதன் பரவ வைகி இருக்கும் அச் சிறந்த ஊரில். 	

2196.	சுகலன் என்று ஒரு வேளான் அவன் மனை சுகலை 
                                     என்பாள் 
இகல் அரும் கற்பினாள் பன்னிரு மகப் பெற்றாள் செல்வப் 
புகல் அரும் செருக்கால் அன்ன புதல்வரைக் கடியார் ஆகி 
அகல் அரும் களிப்பு மீதூர் அன்பினால் வளர்க்கும் 
                                      நாளில். 	

2197.	தந்தையும் தாயும் மாயத் தறுகண் மிக்கு உடையார் ஆகி 
மைந்தரும் வேட ரோடு கூடி வெம் கானில் வந்து 
வெம் தொழில் வேட்டம் செய்வார் வெயில் புகாப் புதர் 
                                    கீழ் எய்தி 
ஐந்து அவித்து இருந்து நோற்கும் குரவனை அங்குக் 
                                      கண்டார். 	

2198.	கைத்தலம் புடைத்து நக்குக் கல்லும் வெம் பாலும் வாரி 
மெய்த்தவன் மெய்யில் தாக்க வீசினார் வினையை வெல்லும் 
உத்தமன் விக்கம் செய்தார் தவத்தினுக்கு உவர் என்று 
                                      உன்னிச் 
சித்தா நொந்து இனைய வஞ்சத் தீயரைச் செயிர்த்து 
                                      நோக்கா. 

2199.	தொழும் தொழில் மறந்து வேடத் தொழில் உழந்து உழல் 
                                     வீர் நீர் மண் 
உழும் தொழில் உடைய நீரால் பன்றியின் உதரத்து எய்திக் 
கொழும் தொழில் அனைய ஏன குருளையாய்த் தந்தை 
                                     தாயை 
இழந்து அலம் உறுமின் என்னா இட்டனன் கடிய சாபம். 	

2200.	பாவத்தை அனைய மைந்தர் பன்னிருபேரும் அஞ்சிச் 
சாவத்தை ஏற்று எப்போது தணிவது இச் சாபம் என்ன 
ஆவத்தை அகற்றும் ஈசன் அருள் கழல் நினைந்து வந்த 
கோவத்தை முனிவு செய்தக் கடவுளர் குரவன் கூறும். 	

2201.	என்னை ஆளுடைய கூடல் ஏக நாயகனே உங்கள் 
அன்னையாய் முலைதந்து ஆவி அளித்து மேல் அமைச்சர் 
                                         ஆக்கிப் 
பின்னை ஆனந்த வீடு தரும் எனப் பெண் ஓர் பாகன் 
தன்னை ஆதரித்தோன் சொன்னான் பன்னிரு தனயர் 
                                      தாமும். 	

2202.	தொன்மைசால் குரு இருந்த துறை அதன் புறத்த ஆன 
பன்மைசால் கான வாழ்க்கைப் பன்றிகட்கு அரசாய் வைகும் 
தன்மைசல் தனி ஏனத்தின் தன் பெடை வயிற்றில் சென்று 
வன்மை சால் குருளை ஆகிப் பிறந்தனர் வழக்கான் 
                                     மன்னோ. 	

2203.	ஆன நாள் ஒருநாள் எல்லை அரசருக்கு அரசன் ஆன 
மீனவன் மதுரை நீங்கி மேல் திசைக் கானம் நோக்கி 
மானமா வேட்டம் செய்வான் மத்தமா உகைத்துத் தண்டாச் 
சேனை தன் புறம் பே மொய்ப்பச் செல்கின்றான் செல்லும் எல்லை. 	

2204.	மா வழங்கு இடங்கள் தேர வல்ல தோல் வன்கால் ஒற்றர் 
பாவடிச் சுவடு பற்றிப் படர்ந்து நாறு அழல் புலால் வாய்த் 
தீ விழி உழுவை ஏனம் திரி மருப்பு இரலை புல்வாய் 
மேவிடம் அறிந்து வல்லே விரைந்து வந்து எதிரே 
                                  சொன்னார். 	

2205.	மறத்துறை வேட்ட மாக்கள் வல்லை போய் ஒடி எறிந்து 
புறத்துவார் வலைகள் போக்கி நாய் அதன் புறம்பு போர்ப்ப 
நிறைத்து மா ஒதுக்கி நீட்டும் படைஞராய் நிரை சூழ்ந்து 
                                         நிற்ப 
அறத்துறை மாறாக் கோலான் ஆனைமேல் கொண்டு நிற்ப. 	
2206.	சில்லரித் துடி கோடு எங்கும் செவிடு உறச் சிலையா நிற்பப் 
பல்வகைப் பார்வை காட்டிப் பயில் விளி இசையா நிற்பர் 
வல்லியம் இரலை மையன் மான் இனம் வெருளா நிற்ப 
வில் இற வலித்து வாங்கி மீளி வெம் கணைகள் தூர்த்தார். 	
2207.	செறிந்த மான் முறிந்த தாள் சிதைந்த சென்னி செம்புனல் 
பறிந்தவாறு வெள் நிணம் பரிந்து வீசு கை இறா 
மறிந்த ஏழு உயர்ந்த வேழம் மாண்ட எண்கு வல்லியம் 
பிறிந்த ஆவி யோடும் வாய் பிளந்தவாய் விழுந்ததே. 	

2208.	தொட்ட புல் கிழங்கு வாடை தொட விரைந்து கண்ணியுள் 
பட்டவும் பொறித்து வைத்த பார்வை வீழ்ந்து அடுத்தவும் 
கட்டி இட்ட வலை பிழைத்து ஞமலி கௌவ நின்றவும் 
மட்டிலாத ஒட்டிநின்ற மள்ளர் வேலின் மாய்ந்தவே. 	

2209.	பட்டமா ஒழிந்து நின்ற மற விலங்கு பல் சில 
வட்டமா வளைந்து உடுத்த வலையின் உந்தி அப்புறத்து 
எட்டி நின்ற கொலை ஞர் மேல் எதிர்ந்து மீள்வ வெயில் 
                                        வளைந்து 
ஒட்டினாரை மலையும் மாப் பொறிக்கணங்கள் ஏத்தவே. 	

2210.	வல்லியம் துளைத்து அகன்று மான் துளைத்து அகன்று 
                                        வெம் 
கல் இயங்கு எண்கினைத் துளத்து அகன்று கயவு வாய் 
வெல் இன்பம் துளைத்து மள்ளர் விட்ட வாளி இங்ஙனம் 
சொல்லினும் கடிந்து போய்த் துணித்தமா அளப்பு இல. 	
2211.	மடுத்த வாளியில் பிழைத்து வலையை முட்டி அப்புறத்து 
அடுத்த மானை வெளவி நாய் அலைத்து நின்ற ஆதிநாள் 
உடுத்த பாசவினையினின்று உய்கு வாரை ஒய் எனத் 
தடுத்த வா விளைத்து நின்ற தையலாரை ஒத்தவே. 	
2212.	மதியை நேர் வகிர்ந்து கௌவி அனைய வான் மருப்பு 
                                        வெங் 
கதிய வேழம் மீது தாது காலு நீல முகையின் நீள் 
நுதிய வேல் நுழைந்து செம் புண் நூழில் வீழு முதிர நீர் 
முதிய கான வரையின் மீது மொய்த்த தீயை ஒத்தவே. 	

2213.	மள்ளர் ஓசை துடியினோன் ஓசை வாளிபோய்த் 
தள்ள வீழ் விலங்கின் ஓசை தப்பி ஓடும் மானின் மேல் 
துள்ளு நாய் குரைக்கும் ஓசை கான மூடு தொக்கு வான் 
உள் உலா உடன்று ஒலிக்கும் உருமின் ஓசை புரையுமால். 	

2214.	இன்ன வேறு பல் விலங்கு எலாம் மலைத் இலங்குவேல் 
மன்னர் ஏறு தென்னர் கோ மகன் குடக்கின் ஏகுவான் 
அன்னபோது ஓர் ஏனம் அரசு இருக்கும் அடவி வாய் 
முன்னர் ஓடி வந்து நின்று வந்த செய்தி மொழியும் ஆல். 	

2215.	எங்களுக்கு அரசே கேட்டி இங்கு உள மிருகம் எல்லாம் 
திங்களுக்கு அரசன் கொன்று வருகிறான் என்று செப்ப 
வெம் களிப்பு அடைந்து பன்றி வேந்தனும் அடுபோர் 
                                       ஆற்றச் 
சங்கை உற்று எழுந்து போவான் தன் உயிர்ப் பெடையை 
                                       நோக்கா. 	

2216.	இன்று பாண்டியனை நேரிட்டு அரும் சமர் ஆடி வென்று 
வன்திறல் வாகையோடு வருகுவன் ஏயோ அன்றிப் 
பொன்றுவன் ஏயோ நீ உன் புதல்வரைப் பாதுகாத்து 
நன்று இவண் இருத்தி என்ன நங்ககைப் பேடு இன்ன 
                                         கூறும். 	
2217.	ஆவி அங்கு ஏக இந்த வாகம் இங்கு இருப்பதே இப் 
பாவியோ மேல் நாள் அந்தப் பறழினை வகுத்த தெய்வம் 
மாவ அமர் ஆடி வென்று வருதியேல் வருவேன் அன்றி 
நீ விளிந்து இடத்து மாய்வேன் நிழலுக்கும் செயல் வேறு 
                                        உண்டோ. 	

2218.	போதுகம் எழுக என்னாப் பொருக்கு என எழுந்து நீலத் 
தாது உறழ் எனப் பாட்டி தன் புடை தழுவிச் செல்லும் 
பேது உறழ் பறழை நூக்கிப் பின் தொடர்ந்து அணைந்து 
                                        செல்லக் 
காது எயிற்று எறுழி வேந்தன் கால் என நடந்தான் அன்றே. 	

2219.	பல் வகைக் சாதி உள்ள பன்றியில் கணங்கள் எல்லாம் 
வெல் படைத் தறுங்கண் சேனை வீரராய் முன்பு செல்லச் 
செல் எனத் தெழித்துச் செம் கண் தீயுக மானம் என்னும் 
மல்லர் வாம் புரவி மேல் கொண்டு எழுந்தனன் வராகவீரன். 	

2220.	முன்படு தூசி ஆக நடக்கின்ற முரட் கால் பன்றி 
மல் படு சேனை நேரே வருகின்ற மன்னர் மன்னன் 
வெற்படு தடம் தோள் வன் தாள் வீரர் மேல் சீறிச் செல்லப் 
பிற்பட ஒதுங்கி வீரர் பெய்தனர் அப்பு மாரி. 	28

2221.	சொரிந்தன சோரி வெள்ளம் சொரிந்தன வீழ்ந்த யாக்கை 
சரிந்தன குடர்கள் என்பு தகர்ந்தன வழும்பு மூளை 
பரிந்தன சேனம் காகம் படர்ந்தன உயிரும் மெய்யும் 
பிரிந்தன ஏன நின்ற பிறை மருப்பு ஏன வீரர். 	

2222.	பதைத்தனர் எரியில் சீறிப் பஞ்சவன் படைமேல் பாய்ந்து 
சிதைத்தனர் சிலரைத் தள்ளி செம்புனல் வாயில் சோர 
உதைத்தனர் சிலரை வீட்டி உரம் பதை படக் கோடு 
                                      ஊன்றி 
வதைத்தனர் சிலரை நேரே வகிர்ந்தனர் சிலரை மாதோ. 	

2223.	தாள் சிதைந்தாரும் சில்லோர் தலை சிதைந்தாரும் சில்லோர் 
தோள் சிதைந்தாரும் சில்லோர் தொடை சிதைந்தாரும் 
                                        சில்லோர் 
வாள் சிதைந்தாரும் சில்லோர் வரை அறுத்து அலரோன் 
                                        தீட்டும் 
நாள் சிதைந்தாரும் சில்லோர் நராதிபன் சேனை வீரர். 	

2224.	கண்டனர் கன்னி நாடு காவலன் அமைச்சர் சீற்றம் 
கொண்டனர் முசல நேமி கூற்று என வீசி ஆர்த்தார் 
விண்டனர் மாண்டார் சேனை வீரரும் அனைய எல்லைப் 
புண் தவழ் எயிற்று வேந்தைப் புடைநின்ற பேடை 
                                   நோக்கா. 	

2225.	ஏவிய சேனை எல்லாம் இறந்தன இனி நாம் செய்யல் 
ஆவது என் வாளா நாமும் அழிவது இங்கு என்னை தப்பிப் 
போவதே கருமம் என்று புகன்ற அத் துணையை நோக்கிச் 
சாவதை அஞ்சா ஏனத் தனி அரசு ஒன்று சாற்றும். 

2226.	நுண் அறிவு உடையர் ஆகி நூலொடு பழகினாலும் 
பெண் அறிவு என்பது எல்லாம் பேதைமைத்து ஆதலால் 
                                      உன் 
கண் அறிவு உடைமைக்கு ஏற்ற காரியம் உரைத்தாய் 
                                      மானம் 
எண் அறிவு உடை யோர்க் எல்லா இழுக்கு உடைத்து 
                                 அன்றோ ஈதால். 	

2227.	தூங்கு இருள் வறுவாய்ச் சிங்கம் இரண்டு உறை துறையின் 
                                       மாடோர் 
ஆங்கு இரு மருப்புக் கேழல் வந்து நீர் பருகி மீளும் 
வீங்கு இருள் உடல் கார் எனும் ஒன்று உறை துறையில் 
                                       வீரத்து 
ஆங்கு இரு மடங்கல் நீர்க்குத் தலைப்பட அஞ்சும் 
                                       அன்றே. 	

2228.	அத்திட மரபின் வந்து பிறந்து உளேன் ஆதலாலே 
கைத்திடு தாரான் வீரம் கவர்ந்து திசை திசையும் வானும் 
வைத்திட வல்லேன் அன்றி மடந்திட வல்லேன் ஆகில் 
பொய்த்திடும் உடம்பே அன்றி புகழ் உடம்பு அழிவது உண்டோ. 	

2229.	நீநில் எனத் தன் பெடை தன்னை நிறுத்தி நீத்து என் 
கானில் என வாழ் கருமாவின் கணங்கள் எல்லாம் 
ஊனில் உயிர் உண்டனம் என்று இனி ஓடல் கூடல் 
கோனில் என ஆர்ப்பவன் போலக் கொதித்து நேர்ந்தான்.   	

2230.	நிலத்தைக் கிளைத்துப் பிலம் காட்டி நிமிர்ந்த தூள்வான் 
தலத்தைப் புதைப்பத் தனியேன் வரவு நோக்கி 
வலத்தைப் புகழ்ந்தான் வியந்தான் சிலைவாங்கி வாளிக் 
குலத்தைச் சொரிந்தான் பொருனைத் துறைக் கொற்கை 
                                        வேந்தன். 	

2231.	குறித்துச் செழியன் விடு வாளியைக் கோல வேந்தன் 
பறித்துச் சில வாளியை வாய் கொடு பைம்புல் என்னக் 
கறித்துச் சில வாளியை கால் கொடு தேய்த்துத் தேய்த்து 
முறித்துச் சில வாளியை வாலின் முறித்து நின்றான். 	

2232.	மானம் பொறாது மதியின் வழி வந்த வேந்தன் 
தானம் பொறாது கவிழ்க்கும் புகர்த் தந்தி கையில் 
ஊனம் பொறாத முசலம் கொடுத்து ஏறி உய்த்தான் 
ஏனம் பொறாது ஆர்த்து இடி யேற்றின் எழுந்தது அன்றே. 	

2233.	தந்திப் பொருப்பைத் துணிக்க என்று அழன்று சீற்றம் 
உந்திக் கதலிக் கொழும் தண்டு என ஊசல் கையைச் 
சிந்திப் பிறைவாள் எயிறு ஓச்சித் சிறைந்து வீட்ட 
முந்திக் கடும் தேர் மிசைப் பாய்ந்தனன் மூரித்தாரான். 	

2234.	திண் தேர் மிசை நின்று அடல் நேமி திரித்து விட்டான் 
கண்டு ஏன வேந்தன் விலக்கிக் கடும் காலில் பாய்ந்து 
தண் தேர் உடையத் தகர்த்தான் பரி தன்னில் பாய்ந்து 
வண்டு ஏறு தாரான் விட வேலை வலம் திரித்தான். 	

2235.	சத்திப் படைமேல் விடு முன்னர்த் தறுகண் வீரன் 
பத்திச் சுடர் மாமணித் தார்ப் பரிமாவின் பின் போய் 
மொத்திக் குடர் செம்புனல் சோர முடுகிக் கோட்டால் 
குத்திச் செகுத்தான் பொறுத்தான் அலன் கூடல் வேந்தன். 	

2236.	மண்ணில் குறித்து வலிக்கண்டு வராக வேந்தை 
எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால் 
புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப 
விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால். 	

2237.	வேனில் கிழவோனில் விளங்கி வியந்து வானோர் 
தேனில் பொழி பூ மழை பெய்ய நனைந்து தெய்வக் 
கானத்து அமுது உண்டு இருகாது களித்து வீர 
வானத்து அமுது உண்டு அரமங்கையர் கொங்கை 
                                    சேர்ந்தான். 	

2238.	பின் துணை ஆய பெடைத் தனி ஏனம் 
என் துணை மாய இருப்பது கற்போ 
வென்றிலன் ஏனும் விசும்பு அடை வேனால் 
என்று இகல் வேந்தை எதிர்த்த உருத்தே. 	

2239.	விறல் நவில் பேட்டை விளிப்பது வேந்தர்க்கு 
அறன் அல வென்றவன் ஆள் வினை மள்ளர்க்கு 
இறை மகன் ஆன சருச்சரன் என்று ஒர் 
மறமகன் நேர்ந்து அமர் ஆட வளைந்தான்.	

2240.	நனி பொழுது ஆட அமர் ஆடினான் நஞ்சிற்
கனி சினவன் பெடை காய்சின வேடத் 
தனி மகனை தரை வீட்டி தனது ஆற்றல் 
இனி இலை என்ன விளைத்து உயிர் சோர்வான்.	

2241.	இரும்பு செய் தண்டினை இம் என ஓங்கிப் 
பொரும் படை சென்னி புடைத்து விளிந்தான் 
விருந்தினர் ஆய் இருவோரும் விமானத்து 
அரும் திறல் வானம் அடைந்தனர் அன்றே. 

2242.	வன் திறல் மன்னவர் மன்னவன் உந்தன் 
பொன் திகழ் மா நகர் புக்கனன் இப்பால் 
பன்றி விழுந்து பருப்பதம் ஆகா 
நின்றது பன்றி நெடும் கிரி என்ன. 	

2243.	அன்று தொடுத்து அதனுக்கு அது பேராய் 
இன்றும் வழங்குவது இம்பரின் அந்தக் 
குன்றில் அரும் தவர் விஞ்சையர் கோபம் 
வென்றவர் எண் இலர் வீடு உற நோற்பார்.	

2244.	என்று கூறிய அரும் தமிழ்க்கு இறைவனை நோக்கித் 
துன்று மாதவர் அறிவிலாச் சூகர உருவக் 
குன்றின் மீது இருந்தவர் எலாம் கோதற நோற்று 
நின்ற காரணம் யாது எனக் குறு முனி நிகழ்த்தும்.	

2245.	வேனில் வேள் என விளங்கு விச்சாதரன் என்னும் 
தான யாழ் மகன் புலத்தியன் தவத்தினுக்கு இடையூறு 
ஆன பாண் செயப் பன்றியாச் சபித்தனன் அறவோன் 
ஏனம் ஆகுவோன் உய்வது என்று எனக்கு என முனிவன். 	

2246.	மன்னர் மன்னன் ஆம் தென்னவன் வந்து நின் வனத்தில் 
துன்று பல்வகை விலங்கு எலாம் தொலைத்து உனை 
                                    மாய்க்கும் 
பின்னர் இவுரு பெறுக எனப் பணித்தனன் இயக்கன் 
அன்னவாறு வந்து இறந்து பின் பழ உரு அடைந்தான். 	

2247.	ஆய புண்ணிய விஞ்சையன் ஆகமாய்க் கிடந்த 
தூய நீர் ஆதலால் அவ்வரை மீமிசைத் துறந்த 
பாய கேள்வியர் இறை கொளப் பட்டது எவ் உயிர்க்கும் 
நாயனார் மதுரே நயந்து அவண் உறைவார். 

2248.	என்று அகத்தியன் விடை கொடுத்து இயம்பினன் இப்பால் 
பன்றி ஏற்றையும் பாட்டியும் பைம் புனத்து இட்டுச் 
சென்று அவிந்தபின் பன்னிரு குருளையும் திகைப்பு உற்று 
அன்று அலக்கண் உழந்தமை யார் அளந்து உரைப்பார். 	

2249.	ஓடுகின்றன தெருமரல் உறுவன நிழலைத் 
தேடுகின்றன தாய் முலைத் தீய பால் வேட்டு 
வாடு கின்றன ஆக வெம் பசி நனி வருத்த 
வீடுகின்றன வெயில் சுட வெதும்பு கின்றன ஆல்.	

2250.	இன்ன வாறு இவை அணங்கு உறு எல்லை வேல் வல்ல 
தென்னர் ஆகிய தேவர்கள் தேவர் அம் கயல் கண் 
மின்னனாள் ஒடு மின் அவிர் விமானம் மீது ஏறி 
அன்ன கானகத்து இச்சையால் ஆடல் செய்து இருந்தார். 

2251.	ஏனம் என்பறழ் உறுகண் நோய்க்கு இரங்கினார் இச்சை 
ஆன அன்பு தந்து அத் துயர் அகற்றுவான் ஈன்ற 
மான அன்புடைப் பெடையின் வடிவு எடுத்து அயரும் 
கான வன் பறழ் கலங்கு அஞர் கலங்க நேர் வந்தார். 	

2252.	கிட்டுகின்ற தம் தாய் எதிர் குட்தியும் கிட்டி 
முட்டுகின்றன மோப்பன முதுகு உறத்தாவி 
எட்டு கின்றன கால் விசைத் தெரிவன நிலத்தை 
வெட்டு கின்றன குதிப்பன ஓடுவ மீள்வ. 	

2253.	ஏனம் இன்னமும் காண்ப அரிதாகிய ஏனம் 
ஆன மெய்ம் மயிர் முகிழ்த்திடத் தழுவி மோந்து 
                                   அருளினன் 
மான மென் முலை அருத்தி மா வலனும் வன் திறனும் 
ஞானமும் பெருந் தகையும் நல் குணங்களும் நல்கா. 	

2254.	துங்க மா முகம் ஒன்றுமே சூகர முகமா 
அங்கம் யாவையும் மானுட ஆக்கைய ஆக்கிக் 
கங்கை நாயகன் கடவுளர் நாயகன் கயல் கண் 
மங்கை நாயகன் கருணை ஆம் திரு உரு மறைந்தான்.	

2255.	இம்மை இப்பவத் தன்னையாய் இனிவரு பவமும் 
செம்மை செய்த சேதனத்தையும் கேதனம் செய்தார் 
எம்மை எப்பவத்து ஆயினும் எனைப் பல உயிர்க்கும் 
அம்மை அப்பராய்க் காப்பவர் அவர் அலால் எவரே.	

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் சுபம் 
	 	 

46. பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

2256.	தந்தை தாய் இழந்து அலமரு குருளையத் தாயாய் 
வந்து நாயகன் முலை கொடுத்து அருளிய வகையீது அந்த வாறு இரு மைந்தரு மந்திரர் ஆகி 
எந்தையார் சிவபுரம் புகுந்து இருந்தவாறு இசைப்பாம். 	

2257.	ஆதி நாயகன் திரு உரு மறைந்தபின் அனைய 
கோது இல் ஆறு இரண்டு ஏனம் ஆக் குமரரும் காலைச் 
சோதி ஆறு இரண்டு அருக்கர் போல் தோன்றி அப் 
                                    பொருப்பில் 
ஓதி ஆய்ந்த பல் கலைஞராய் ஒருங்கு வீற்று இருந்தார். 	

2258.	அனையராய் அவர் வைகு நாள் அறைபுனல் கூடல் 
புனித நாயகன் அருள் திறம் உயிர்க்கு எலாம் பொதுவாய் 
இனிய ஆவன என்பதை யாவரும் தேற 
வனிதை பால் மொழி மங்கைதன் மணாளனை வினவும். 	

2259.	வெவ் விலங்கினும் வெய்யவாய் அசேதன விலங்காம் 
இவ் விலங்கே இற்றேம் என குருளைகட்கு இரங்கிக் 
கை விலங்கினை எய்த நீ கருணையாய் முலை தந்து 
இவ்விலங்கு அறிவகற்றியது யாது என இறைவன்.	

2260.	அகில வேதமும் ஆகம பேதமும் நம்மைச் 
சகல சிவ தயாபரன் என்று உரை சால்பால் 
இகலில் சேதன அசேதனம் ஆகிய இரண்டும் 
புகலில் வேறு அல எமக்கு அவை பொதுமைய அதனால். 	

2261.	தாய் இழந்து வெம் பசித்து அழல் அகம் சுடத் தழன்று 
காயும் மா தபம் புறம் சுடக் கான் இடைக் கிடந்து 
தீயும் ஏனம் மென் குருளைக்கு தெருமர இரங்கி 
ஆயும் ஆய் முலை அளித்து உயிர் அளித்தனம் அதனால். 	

2262.	அளவு இல் ஆற்றலும் திறனும் நல் அரும் பெறல் கல்வி 
விளைவும் ஞானமும் கிடைத்தனர் மீனவற்கு இனிமேல் 
வளைவு இலாத கோல் அமைச்சராய் வளம் பல பெருக்கிக் 
களைவு இல் பாசம் நீத்து எம்பெரும் கணத்தவர் ஆவார். 

2263.	என்று நாயகன் நாயகிக்கு இறை கொடுத்து இயம்பி 
அன்று மீனவன் கனவில் வந்து அரச கேள் பன்றிக் 
குன்றில் ஏன மா முகத்தராய்ப் பன்னிரு குமரர் 
வென்றி வீரராய் வைகுநர் மிக்க அறிவுடையார்.	

2264.	அவரை நின் கடைக் அமைச்சராக் கோடி என்ற அளவில் 
சிவ பரம் சுடர் அருள் செயச் செழியர் கோ வேந்தன் 
கவலரும் களிப்பு உடையனாய்க் கண் மலர்ந்து எழுமான் 
தவழ் நெடும் திரைக் கரும் கடல் தத்தி நீந்து எல்லை. 	

2265.	மாண்ட கேள்வி சால் மந்திரர்க்கு உணர்த்தி அம் மலை 
                                           மேல் 
காண்ட ஏனமா வீரரைக் கொணர்க எனக் கருணை 
பூண்ட காவலன் அமைச்சரும் போய் அவர்க் கண்டு 
வேண்ட வீரரும் ஈண்டினார் மீனவன் திருமுன். 	

2266.	வந்து இறைஞ்சிய வராக மா மைந்தரை நேர் கண்டு 
அந்தம் இல் களிப்பு அடைந்து வேந்து அமைச்சியல் 
                                      கிழமை 
தந்து வேறு பல் வரிசையும் தக்க வா நல்கிக் 
கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர். 	

2267.	பழைய மந்திரக் கிழார் மடப்பாவை போல் வாரை 
விழவு சால் கடி மங்கலம் விதியினால் புணர்த்தி 
அழகு இதாம் என நடத்தினான் அனையரும் வீரக் 
கழலினாற்கு ஒரு கவயமும் கண்ணுமாய் நடப்பார்.	

2268.	உடம்பு ஆறு இரண்டில் உயிர் ஒன்று என ஒன்றி 
                                    இயைவாய் 
விடம்பாய் அரவும் விழுங்கும் இரை ஒத்து நெஞ்சம் 
திடம் பாடு கொள்ள வினை வாங்கிச் செழியன் கல்வி 
இடம் பாடு நல்கும் பயன் போல் மகிழ்வு எய்த நின்றார். 

2269.	நல் ஆவின் பாலில் நறும் தேன் கலந்து என்னப் பல் நூல் 
வல் ஆரும் ஆகி மதி நுட் பரும் ஆகிச் சோர்வில் 
சொல்லால் அடையார் மனமும் களிதூங்கச் சொல்லிப் 
பல்லார் பிறர் சொல் பயன் ஆய்ந்து கவர வல்லார். 	

2270.	பழை யேம் இறையுள் கொளப்பட்டம் என்று ஏமாப்பு 
                                        எய்தார் 
உழை யேவல் செய்யும் சிறார் போல ஒதுங்கி வேந்தன் 
விழைவு ஏது அதனை விடம் போல் வெறுத்து வெ•கார் 
அழல் போல் அணுகார் அகலார் நிழல் அன்ன நீரார். 	

2271.	மறுக்கும் செயல் நீத்து நடக்கையின் வையத் தோரை 
ஒறுக்கும் பொருளும் பணி கேட்கையின் ஒன்னலாரைச் 
செறுக்கும் பொருளும் கவரார் விளை செல்வ மாக்கள் 
இறுக்கும் பொருளே இறைவற்கு இவர் ஈட்டும் செல்வம்.	

2272.	மறத் தாம வேலான் மனக் கொள்கை தன் நெஞ்சு மள் 
                                         வான 
நிறத்தாடி நீழல் எனத் தோற்றம் நிறுத்து மற்ற 
அறத்து ஆறு எனில் ஆற்று வார் அன்று எனில் ஆக்கம் 
                                         ஆவி 
இறத்தான் வரினு மனத்தானும் இழைக்க ஒண்ணார். 	

2273.	இன்னவாறு ஒழுகும் பன்னிரு வோரும் ஈகையும் தருமமும் 
                                          புகழும் 
தென்னர் கோ மகற்கு வைகலும் பெருகத் திசை எலாம் 
                         விசயம் உண்டாக்கிப் 
பன்னக ஆபரணன் சிவபுரம் அடைந்து பரன் கண நாதருள் 
                                          கலந்து 
மன்னி வீற்று இருந்தார் மன்னர் மன்னவனும் வான் பதம் 
                         அடைந்து வீற்று இருந்தான். 	

பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் சுபம் 	 	 

47. கரிக் குருவிக்கு உபதேசம் செய்த படலம்

2274.	வரிக்கு உருகிப் பத்திரற்குப் பலகை இட்ட மணி கண்டன் 
அரிக்குருளை வடிவான அடல் வீரர்க் அரசன்பார்
பரிக்கும் அமைச் சியல் அளித்த பரிசு உரைத்தாம் பசுபதி 
                                            யாற் 
கரிக்குருவி குரு மொழி கேட்டு அருள் அடைந்த கதை 
                                     பகர் வாம். 	

2275.	மன்னவன் இராச ராசன் வானவர்க்கு அரசன் ஆன 
பின்னவன் குமரன் ஆன பெருவலி மடங்கல் அன்னான் 
துன்னலர் அடுபோர் சாய்க்கும் சுகுண பாண்டியன் நீர் 
                                        ஞாலம் 
இன்னல் தீர்த்து அறக் கோல் ஓச்சி ஈரங் குடை நிழற்றும் 
                                        நாளில். 	

2276.	ஆற்றல் சால் ஒருவன் மேல் நாள் ஆற்றவும் அறனே 
                                       ஆற்றி 
மாற்றம் இல் சிறிது பாவம் செய்த தன் வலத்தால் வந்து 
தேற்றம் இல் கயவாய் ஆகிச் செனித்தலால் காகம் ஆதி 
கூற்று என ஊற்றம் செய்யக் குருதி சோர் தலையது ஆகி. 	

2277.	புட்கு எல்லாம் எளிதா ஊறு பாடு அஞ்சிப் புரத்துள் வைகி 
உட்கி நீள் வனத்துள் போகி வழி மருங்கு ஒரு சார் நிற்கும் 
கட்கு அவிழ்ந்து ஒழுகப் பூத்த கவிழ் இணர் மரம் மேல் 
                                      வைகி 
வெட்கம் மீதூரச் சாம்பி வெய்து உயிர்த்து இருக்கும் 
                                      எல்லை. 	

2278.	விடையவன் நீறு பூசும் மெய்யவன் பூண்ட கண்டித் 
தொடையவன் புறம்பும் உள்ளும் தூயவன் குடையும் கையில் 
உடையவன் தரும தீர்த்த யாத்திரை ஒழுக்கம் பூண்ட 
நடையவன் ஒருவன் அந்த நறும் தரு நிழலில் சார்ந்தான். 

2279.	இருந்தவன் சிலரை நோக்கி இயம்புவான் எர்க்கும் பேறு 
தரும் தலம் தீர்த்தம் மூர்த்தித் தன்மையில் சிறந்த அன்பு 
அரும் தமிழ் மதுரை பொன் தாமரைத் தடம் சுந்தரேசப் 
பெரும் தகை என்று சான்றோர் பேசுவார் ஆதலாலே. 	

2280.	ஓர் இடத்து இனைய மூன்று விழுப்பமும் உள்ளது ஆகப் 
பார் இடத்து இல்லை ஏனை பதி இடத்து ஒன்றே என்றும் 
சிர் உடைத்து ஆகும் கூடல் செழும் நகர் இடத்தும் 
                                      மூன்றும் 
பேர் உடைத்து ஆகும் என்றால் பிறிது ஒரு பதி யாது 
                                     என்றான். 	

2281.	இம் மது ரேசன் சேவித்து ஏத்து வோர்க்கு எளியன் ஆகிக் 
கைம் மலர் நெல்லி போலக் கருதிய வரங்கள் எல்லாம் 
இம்மையின் உடனே நல்கும் ஏனைய தலத்து வானோர் 
அம் மையின் அன்றி நல்கார் ஆதலால் அதிகன் என்றான். 	

2282.	மற்று அது கேட்டுக் கொம்பர் வைகிய கயவாய் ஞானம் 
பெற்றது பறவை ஆகிப் பிறந்ததும் பிறவும் தேற்றம் 
உற்றது நாம் இச் சன்மம் ஒழிப்பதற்கு அறவோன் இங்ஙன் 
சொற்றதே உறுதி என்று துணிவு கொண்டு எழுந்தது 
                                    அன்றே. 	

2283.	ஆய் மலர்க் கான நீங்கி ஆடக மாடக் கூடல் 
போய் மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனல் தோய்ந்து 
                                  ஆம்பல் 
வாய் மலர்க் கயல் உண் கண்ணாள் மணாளனை வலம் 
                                  செய்து அன்பில் 
தோய் மலர் கழல் இனானை அகத்தினால் தொழுது 
                                  அர்ச்சித்தே. 	

2284.	இன்னணம் மூன்று வைகல் கழிந்தபின் எம்பிராட்டி 
தன் அமர் காதலானைத் தாழ்ந்து எதிர் நோக்கி ஐய 
என்னைக் இக் கயவாய் செய்யும் செயல் இதன் வரவு யாது 
                                          என்ன 
முன்னவன் அதன் தன் செய்தி வரவு எலாம் முறையால் 
                                          கூறா. 	

2285.	பத்திமை நியமம் பூண்ட பறவை மேல் கருணை நாட்டம் 
வைத்து இமையாத முக்கண் மறை முதல் ஒரு சேய்க் கன்று 
நித்திய நிலைமை நல்கி நேர்ந்த வெம் கூற்றைக் காய்ந்த 
சத்திய ஞான மிருத்திஞ்சயத்தினை உபதேசித்தான். 

2286.	உவமை அற்றவன் உரைத்த மந்திரம் 
செவி மடுத்தலும் சிற்றுணர்ச்சிபோய்ப் 
பவம் அகற்றிடப் படுக் கரிக் குரீஇ 
கவலை விட்டரன் கழல் வழுத்தும் ஆல்.	

2287.	எண் இலா உயிர்க்கு இறைவ போற்றி வான் 
தண் நிலா மதிச் சடில போற்றி என் 
புண்ணியப் பயன் போற்றி அம் கயல் 
கண்ணி நாத நின் கருணை போற்றி ஆல்.	

2288.	தௌ¤தல் இன்றியே செய்த தீமையால் 
விளியும் என்னையும் ஆளல் வேண்டுமோ 
எளியர் எங்கு உளார் என்று தேர்ந்து தேர்ந்து 
அளியை ஆவது உன் அருளின் வண்ணமே.	

2289.	உம்மை நல் அறம் உடைய நீர்மையால் 
இம்மை இம் மனு இயம்பினாய் இது 
அம்மை நல் நெறிக்கு ஏது ஆதலான் 
மும்மையும் நலம் உடைய மொய்ம்பினேன்.	

2290.	ஆயினும் எனக்கு ஐய ஓர் குறை 
தீய புள் எலாம் ஊறு செய்து எனைக் 
காயும் மனமும் கழியக் கண்ட பேர் 
ஏ எனும் படிக்கு எளியன் ஆயினேன்.	

2291.	என்ன அக் குரீ இயம்ப எம்பிரான் 
அன்ன புட்கு எலாம் வலியை ஆகெனப் 
பின்னும் அக் குரீஇ தாழ்ந்து பேதை யேற்கு 
இன்னும் ஓர் வரந் தருதி என்றதால்.	

2292.	வலியை என்பது என் மரபினுக்கு எலாம் 
பொலிய வேண்டும் எப்போதும் நீ சொன 
ஒலிய மந்திரம் ஓதி ஓதி நாங் 
கலியை வெல்லவும் கருணை செய்கென.	

2293.	ஆவது ஆக என்று அமரர் நாயகன் 
மூ எழுத்தினான் முடிந்த அம்மனு 
தாவி தெய்வதம் இருடி சந்தமோடு 
ஓவில் ஓசை மூன்று ஒடு தெருட்டினான்.	

2294.	குரு மொழி பயின்று முள் வாய்க் குருவி தன் குலனும் 
                                       தன் போல் 
அரு மறை முதல்வன் ஈந்த ஆற்றலால் பறவைக்கு 
                                       எல்லாம் 
பெருமை சால் வலியான் என்னும் பெயரவாய் உலகின் 
                                       மன்னக் 
கருமணி கண்டன் செம்பொன் கனை கழல் அடி சேர்ந்த 
                                       அன்றே. 	

2295.	இக்கரிக் குருவி தான் நோற்று எய்திய வரத்தைத் தன் 
                                        போல் 
ஒக்கலும் எளிதாய் எய்தப் பெற்றதால் உலகின் மேன்மை 
தக்கன் ஒருவன் வாழத் தன் கிளை வாழ்வது என்ன 
மிக்கவர் எடுத்துக் கூறும் பழமொழி விளக்கிற்று அன்றே. 

2296.	ஈசன் அடிக்கு அன்பு இல்லார் போல் எளியார் இல்லை 
                                  யாவர்க்கும் 
ஈசன் அடிக்கு அன்பு உடையார் போல் வலியார் 
                               இல்லை யாவர்க்கும் 
ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் எளிதாய் திரிந்த 
                                  இக் கயவாய் 
ஈசன் அடிக்கு அன்பு உடைமையினால் வலிது ஆயிற்றே 
                                  எவ்வுயிர்க்கும். 

கரிக் குருவிக்கு உபதேசம் செய்த படலம் சுபம் 	 	 
 

48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

2297.	அத்தி தந்த விமான அழகியார் 
பத்தி தந்த பறவைக்கு மந்திர 
சித்தி தந்த திறன் இது நாரைக்கு 
முத்தி தந்த கருணை மொழிகுவாம். 	

2298.	தேக்கு நீர் வைகை நாட்டு ஒரு தென் புலத்து 
ஆக்கும் மாடவை வைப்பு ஒன்று உள அவ்வயின் 
வீக்கு யாழ் செயும் வண்டுக்கு வீழ் நறவு 
ஆக்கு தாமரை வாவி ஒன்று உள்ளது ஆல்.	

2299.	ஆழம் மிக்க கயம் தலை அத்தலை 
வாழும் மீனம் அனைத்தையும் வாய்ப் பெய்து 
சூழநந்து முத்து ஈனும் துறைக் கணே 
தாழ்வதோர் செய்ய தாள் மட நாரையே.	

2300.	சிறிய நாள் மழை இன்றி அச்சே இதழ் 
வெறிய தாமரை ஓடை வியன் கரை 
இறை கொள் நாரை இருவினைப் பௌவமும் 
வறியது ஆகி வறப்ப வறந்தது ஆல்.	

2301.	நுரை செறித்து அன்ன நோன் சிறை நாரையும் 
இரை விரும்பி அவ்வாவி இகந்து ஒரீஇ 
விரைவந்து ஒரு கான் இடை வீழ்ந்ததால் 
புரையிலோர்க்கு இடன் ஆகும் அப் பொங்கர் வாய்.	

2302.	முத்தர் ஆன முனிவர் குழாத் தொடும் 
சுத்த ஆனந்த வாரியுள் தோய்ந்து தன் 
சித்த மாசு கழீச் சிவம் ஆகிய 
சத்தியத் தவ மா முனி தங்கும் ஆல்.	

2303.	கூப்பிட்டு எல்லைக் குணித்துச் சதுர மா 
யாப்ப மைந்து சுற்று எங்கும் படித்துறைக் 
கோப்பு அமைந்து குளிர் சந்தி யாம் மடம் 
காப்ப அமைந்து ஓர் கயம் தலை உள்ளது ஆல்.	

2304.	விரை செய் சண்பகம் பாதிரி வேங்கை தேன் 
இரை செய் வஞ்சி இலஞ்சி குரா மரா 
நிரை செய் கிஞ்சுக நீள் மருது ஆதியா 
உரை செய் பன் மரமும் புறத்து உள்ள ஆல்.	

2305.	அந்த வாவியின் பேர் அச்சோ தீர்த்தம் என்று 
இந்த ஞாலம் இயம்புவதால் இரை 
உந்த வாவு கொடு ஊக்க எழுந்து முன் 
வந்த நாரை அதன் கரை வைகும் ஆல்.	

2306.	ஆய்ந்த மாதவர் அப்புனிதத் தடம் 
தோய்ந்து தோய்ந்து அங்கு எழும் தொறும் தோள் புறம் 
சாய்ந்த வார் சடைக் கற்றையில் தத்து மீன் 
பாய்ந்து பாய்ந்து புரள்வன பார்த்தரோ. 	

2307.	ஈண்டை இத் தவத்தோர் திரு மேனியைத் 
தண்ட எத்தவம் செய்தனவே கொல் என்று 
ஆண்டை மீன் நம்கு ஆகா என விரை 
வேண்டு நாரை வெறுத்து அங்கு இறுத்தலால்.	

2308.	தன் நிகர் தவத்தோர் யாரும் தடம் படிந்து ஏறி நித்த 
மன்னிய கருமம் முற்றிச் சந்தியா மடத்தில் வைகி 
மின்னிய மகுடம் சூடி வேந்தனாய் உலகம் காத்த 
பொன்னியல் சடையான் கூடல் புராண நூல் ஒதுகின்றார். 	

2309.	அண்ணல் எம் பெருமான் செய்த அருள் விளையாட்டும் 
                                          ஆதிப் 
பண்ணவன் சிறப்பும் கூடல் பழம் பதிச் சிறப்பும் தீர்த்தத் 
தெண்ணரும் சிறப்பும் சேர்ந்தோர்க்கு எளிவரும் இறைவன் 
                                        என்னும் 
வண்ணமும் எடுத்துக் கூறக் கேட்டு அங்கு வதியும் நாரை. 	

2310.	மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித் 
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து 
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை 
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ. 	

2311.	வாங்கிய திரை சூழ் பொற்றா மரை படிந்து இமையா வேழந்
தாங்கிய விமான மேய தலை வனைத் தாழ்ந்து சூழ்ந்து 
தேங்கிய அருள் கண் நோக்கத் தெரிசித்துத் திருமுன் வைகி 
ஓங்கிய கருணை மேனி உள்ளுறத் தியானம் செய்து. 	

2312.	இந் நிலை நியமம் மூ ஐந்து எல்லை ஞான்று இயன்று பின் 
                                          நாள் 
அந் நிலை ஒழுகு நாரை ஆடக கமலம் தோய்வான் 
வன் நிலை மதில் சூழ் ஞாங்கர் வந்துழிப் பசியால் வெந்து 
மின் நிலை வேல் போல் துள்ளும் மீன் கவர்ந்து உண்கும் 
                                          என்னா. 	

2313.	சிறிது உளத்து உள்ளி நாதன் திருவருள் வலத்தால் பின்னர் 
அறிவு வந்து அச்சோ இந்த அறப் பெரும் தீர்த்தத்து 
                                       உள்ளே 
எறியும் மீன் அருந்த ஆசை எழுந்ததே எனக்கு இப்போதிப் 
பிறவி என்று ஒழிவது என்னாப் பேர் அஞர் அடைந்து 
                                      பின்னும். 	

2314.	சுந்தரச் செம்மல் பாதத் துணை மலர் அன்பில் தோய்ந்து 
சிந்தை வைத்து இருக்கும் எல்லை தேவரும் மறையும் 
                                     செய்யும் 
வந்தனைக்கு அரியா னாரை மன நினை வடிவாய்த் 
                                     தோன்றி 
எம் தமக்கு இனியாய் வேண்டும் வரம் என் கொல் 
                             இயம்புக என்றான். 	

2315.	செய்ய கால் மட நாரையும் சென்று தாழ்ந்து 
ஐயனே இப் பிறவி அறுத்து நின் 
மெய்யர் வாழ் சிவ லோகத்தின் மேவி நான் 
உய்ய வேண்டும் ஒன்று இன்னமும் உண்டு அரோ. 	

2310.	மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித் 
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து 
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை 
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ. 	

2317.	என்று இத் தட மின் இலவாக நீ 
நன்று சால் வர நல் கென வெள்ளி மா 
மன்று உளானும் வரம் தந்து போயினான் 
சென்று நாரை சிவலோகம் சேர்ந்தது ஆல்.	

2318.	இயங்கள் ஐந்தும் இயம்ப விமான மேல் 
புயங்க கணான்குமுக் கண்களும் பொற்ப வான் 
வியம் கொள் பூ மழை வெள்ளத்துள் ஆழ்ந்து போய்
வயம் கொள் நந்தி கணத்துள் வதிந்ததே.	

2319.	அன்று தொட்டு இன்று அளவும் பொன் தாமரை 
என்று உரைக்கும் எழில் மலர் ஓடையில் 
சென்று உகைத்துத் திரிகின்ற மீன் அலால் 
ஒன்று மற்றன நீர் வாழ் உயிர்களும்.	

2320.	தன் கிளை அன்றி வேற்றுப் பறவைகள் தாமும் தன் போல் 
நன் கதி அடைய வேண்டிற்றே கொல் இந் நாரை செய்த 
அன்பினில் வியப்போ ஈசன் அருளினில் வியப்போ 
                                     அன்பர்க்கு 
இன்பு உருவான ஈசன் அன்பருக்கு எளிதே ஐய. 	

2321.	மறக் குறும்புக் களைக் கட்டு மண்ணின் மேல் 
அறப் பெரும் பயிர் ஆக்கி அதன் பயன் 
சிறக்க நல்கிட உண்டு செருக்கு வான் 
துறத்தம் எய்தி இருந்தான் சுகுணனும்.	

நாரைக்கு முத்தி கொடுத்த படலம் சுபம் 	  	 

இப்பணியைச் செய்து அளித்த செல்வி. கலைவாணி கணேசன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு நன்றி.

Please send your comments and corrections

Back to Tamil Shaivite scripture Page
Back to Shaiva Sidhdhantha Home Page

Related Content

Discovery of the god to mortals

Thiruvilaiyadal puranam - The sacred sports of Siva

Thiruvilaiyatar puranam

தல புராணங்கள்

திருவிளையாடற் புராணம்