ஒருவிகற்ப எதுகைக் கலிநிலைத்துறை முன்ன மாலய னிந்திர னமரர்கண் முனிவர் பன்னு மாரணம் போற்றுதற் கரியநம் பரமன் மின்னு லாவிய சடாடவிக் கடவுள்வீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 1 அன்ன மாயும்வெண் பிறைமருப் பேனமென் றாயு முன்ன நான்முக னாரணன் றேடரு முதல்வன் பின்னு வார்சடைப் பெருந்தகை பீடமாக் கோடற் கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 2 தன்னை மேவிவந் தனைபுரி பவன்செய றடுப்பா னுன்னி மேல்வரும் வெந்திறற் கூற்றினை யுதைத்த மன்னு மாலயற் கரியவன் வந்துவீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 3 தன்னை நேர்வட காசிதென் கயிலைகே தார மன்ன வார்வய லம்பல நமன்றமர் வராமற் கன்னன் மாமதற் றெறும்விழிக் கடவுள்வீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 4 கன்ன லாரமு தினுஞ்சுவை தருவதாய்க் காண்பா னுன்னு மாலயற் கரியதா மொருமலை யுச்சி மன்னு மோர்பவப் பிணிமருந் தௌ¤துவந் திருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 5 அன்னை யாகியின் னுயிர்க்குயி ராமரு ளாளன பொன்னு மாரமு மணியுமா ரமுதமும் போல்வான் றன்னை நாடொறுங் கண்டுகண் களிப்பதாச் சார்தற் கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 6 அன்ன மூர்பவன் முதலியோ ரபயமென் றடைய முன்ன மாலமுண் டவர்துயர் களைந்தருண் முதல்வன் மின்னு மாமழு வலமுடை வீரன்வீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 7 பன்னு மாமறை தமிழினாற் பாடுநம் பிக்குப் பொன்னு மாடையு மணிகளு மூர்தியும் பொருளு மின்னு மீபவ னருளினான் மேவிவீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 8 பின்னும் வார்திரைக் கடலின்வீழ்ந் தமிழ்கையிற் பிடிப்ப முன்ன மோர்புணை யகப்படு முறைமைபோற் பிறப்பி னின்னல் கூர்பொழு தெம்பிரான் வந்துவீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 9 தன்னை யோர்பொழு திறைஞ்சுவான் கருதியித்தரைமேன் மன்னு மாலயம் யாண்டுள தெனவல மராமற் பொன்ன வாமலர்ச் சடையுடைப் புனிதன்வீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 10
- கைத்தல மாலை முற்றிற்று -