logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

மதுரைத் திருஞானசம்பந்தசுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி

திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்


கணபதி துணை


மதுரைத் திருஞானசம்பந்தசுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி

திருச்சிற்றம்பலம்


			விநாயகர்துதி

2670	ஒத வினிய தமிழ்க்கூட லோங்கு ஞான சம்பந்தர்
	பாத யுகமே லொருபதிற்றுப் பத்தந் தாதித் தொடைசாத்தப்
	போத மலர்நா ரினிதுதவும் பொல்லா வினையிற் புக்குழலு
	மாத ரகஞ்சா ராவொருகோட் டாம்ப லடித்தா மரைமலரே. 		1


			நூல்

2671	சீர்பூத்த திருமுகமுந்தேவிமுலைப்
		பால்பூத்த செய்ய வாயு,
	மேர்பூத்த வருள்பொழியு மிருவிழியும்
		பொற்றாள மேந்து கையும்,
	பேர்பூத்த தமிழ்க்கூடற் றிருஞான
		சம்பந்தப் பெருமான் செம்பொற்,
	றார்பூத்த சிறுதண்டைத் தாளுமுளத்
		துள்ளிவினை தள்ளி வாழ்வாம். 				1

2672	வாழிநெடு வழுதிபுறக் கூனிமிர்த்த
		நினக்கரிதோ மாறாச் சன்ம,
	வாழியுழல் வேனகக்கூ னிமிர்ப்பதுதென்
		கூடலம ரமல வாழ்வே,
	வீழியித ழுமையளித்த வள்ளநிறை
		பரஞான வெள்ளமுண்டாய்,
	காழிவளர் மாமணியே கவுணியர்தங்
		கற்பகமே கலைவ லோயெ. 				2

2673	கலைபுகழா யிரமுகத்தெய் வதமந்தா கினியுடைய
		கடவுண் மற்றை,
	யலைபுனலாட் டவுமகிழு மதுபோற்றென்
		கூடலகத் தன்பர் வாழ்வே,
	விலையில்கவு ணியமணியே வேதாதி
		முழுதுடையவிமல நீயோ,
	தலையடையாச் சிறியேன்செய் புன்றுதிக்கு
		மகிழ்கூர்த றக்க தாமே. 					3

2674	தக்கபடி யன்றியிரும் படியிடந்து
		வரையுருட்டிச் சலதி மோது,
	மிக்கபுனற் பேர்யாற்றிற் பல்லோருங்
		கரையேறி விளங்கச்செய்தாய்,
	தொக்கசுவைத் தமிழ்க்கூடற் கவுணியக்கன்
		றேயொருவேன் றொடர்ந்து நாளும்,
	புக்கபவப் பேர்யாறுங் கரையேறச்
		செயினினக்குப் புகழன் றாமோ. 				4

2675	புகழ்பரவு தமிழ்மதுரைப் புகலிகா
		வலசலசப் பூந்தார்மார்ப,
	நிகழ்கருணைக் குரவமறை நிறைசெல்வ
		பரஞான நேய வாய,
	வகழ்வினைய ருளத்தமரு மமரசிறு
		சிலம்பொலிக்கு மம்பொற் றாள,
	திகழ்வினையி லமணரென வடியன்மல
		நினக்கெதிராய்ச் சிதைவ தென்றோ. 			5

2676	என்றுநிகர் மணிமாடக் கூடலிட
		மோவிணையி லெண்டோ  ளம்மா,
	னன்றுதிரு வரத்துறையி லளித்தமணிச்
		சிவிகைகொலோ வருநோன் புற்று,
	நன்றுமிகு சிவபாத விருதயர்தந்
		திருத்தோளோ நாயே னுள்ள,
	மொன்றுதலி னீயுறைய மழவிளங்கன்
		றேமணியே யுவட்டாத் தேனே. 				6

2677	தேனார்க்கு மலர்த்தடத்து மோட்டெருமை
		பாயவெரீஇச்சினந்த வாளை,
	கானார்க்குங் கற்பகத்தின் கழுத்தொடிய
		மீப்பாயுங் கணிசூழ் கூடல்,
	வானார்க்கும் பெரும்புகழாய் வண்புகலிப்
		பெருந்தகையே மறையோர் பேறே,
	யானார்க்குங் குடியல்ல னினக்கடியேனுய்யுநெறி
		யருள்க வின்றே. 					7

2678	அருண்மிகுபொற் றில்லைமூ வாயிரருங்
		கணநாத ராக வாங்கே,
	தெருண்மிகுநன் னீலகண்டப் பாணருக்குக்
		காட்டியநீ தேமாஞ்சோலை,
	பொருண்மிகுவிண் ணுலகளக்கும்
		புகழ்க்கூடற் சம்பந்தாபுலவரேறே,
	வெருண்மிகுநா யேன்காண வொருநினைக்காட்
		டாதிருக்கும் விதமற் றென்னே. 				8

2679	என்னையிவன் றனையடிமை கொள்கென்பா
		னடியார்தாமில்லை யோவென்,
	றன்னையனை யாய்கூடற் சம்பந்தா
		நீநினையே லலகிலாச் செம்,
	பொன்னையுடை யாருளதன் வரவைவெறுத்
		தாருமெவர் புத்த ரானோர்,
	முன்னையடி யாராகக் கொண்டவனு நீயன்றி
		மொழியின் யாரே. 					9

2680	மொழியுமறை யாயிரமு மெண்ணிறந்த
		மறையோர்க்கு மொழிந்தா சங்கை,
	யொழிதரவைந் தெழுத்துமே யந்தியின்மந்
		திரமென்று முணர்த்தி நின்றாய்,
	பொழிநறவப் பூஞ்சோலைப் புகழ்க்கூடற்
		சம்பந்தா புகலடைந்தேன்,
	வழிதருமத் துணைவேண்டா வைந்தெழுத்தே
		யுணர்த்து கெனின் வருத்தமென்னே. 			10


			வேறு

2681	வருந்துபொய்ப் பவஞ்ச வாழ்க்கையை
		மதித்துன் மலரடி யிணைமதி யாதே,
	யிருந்தஞர்ப் பிறந்தை யுற்றுழல் வேன்கொ
		லின்னமு மிடையறா வன்பி,
	னருந்தவர்க் கரசே யாலவா யமுதே
		யருட்கவு ணியர்குலக் கன்றே,
	திருந்துபல் லோர்க்குஞ் சிவகதிப்
		பரிசுசேர்தர நல்குதே சிகனே. 				11

2682	தேசினாற் பொலிநின் றிருமணத் தடைந்த
		செழுந்தவத் தவரொடும் விரைந்து,
	கூசிலா தடியே னடைந்திலே னடையிற்குலவுவா
		னவர்க்கெலா மரிய,
	வாசிலாப் பதப்பே றெளிதினி முன்னியாவதெ
		ன்னாவவென் செய்கேன்,
	மாசிலா மணியே மதுரைவாழ்தருவே
		வளர்கவு ணியர்குல விளக்கே. 				12

2683	குலவுநின் கருணை பெரியர்பா லன்றிக்
		குணமிலாச் சிறியனேன் பாலு,
	நிலவுறப் புகுதல் வழக்கருண் மதுரை
		நிறைதிரு ஞானசம் பந்தா,
	மலர்தலை யுலகில் வருபெரு வெள்ளம்
		வாரிவாய்ப் புகுவதே யன்றிப்,
	புலர்தரு முறவி யளையினு மோடிப்
		புகுதனீ யறிந்திலாய் கொல்லோ. 				13

2684	கொல்லையா னுகைக்குங் குழகனா
		ரிடப்பால்குடிகொளுங்கோதைமெல் லருப்பு,
	முல்லைநேர் நகையாண் முலைபொழி
		தீம்பான்முற்றுமுண் டாங்குமிழ்ந் தாங்கு,
	வல்லமா மறைநற் றமிழ்பொழிமதுரை
		வள்ளலே புகலிமா மணியே,
	யில்லையன் பென்பா லாயினும் புரத்த
		லிலகுநின் னருட்கியல் பன்றே. 				14

2685	இயறெரி புலவர் புகழுமோத் தூரி
		லேற்றுவன் பனையெலா மிலகி,
	மயலறு கதியிற் புகவருள் புரிந்தாய்
		மற்றவை செய்தவன் பென்னே,
	புயறவழ் குடுமி மாளிகை மதுரா
		புரியுறை முத்தமிழ் விரகா,
	வுயலுற வெனையு மங்ஙன நினைந்தாண்
		டுன்னடி யிருத்துத லழகே. 				15

2686	அழகிய மயிலை யத்தியைப் பூவை
		யரசுசெய் தனையுதவாமை,
	பழகிய பெண்ணை பலவுமின் குரும்பை
		பலகொளப் பாடினைபற்பல்,
	கழகமுற் றோங்கு மாலவா யமுதே
		கவுணியர் பெருங்குலவிளக்கே,
	மழவிளங் களிறே யென்மனந் திருத்தின்
		மற்றுமப் புகழொடொன் றாமே. 				16

2687	ஒன்றுவெங் காமம் வெகுளியுண் மயக்க
		மோங்குமும்மதமெனக் கொண்டு,
	கன்றுமென் மனமாங் களிறகல்
		பவஞ்சக்காடெலா முழிதரு மதனை,
	வென்றியா னடக்க வலியிலா
		மையினான்மேதகு கூடலென் றுரைக்குங்,
	குன்றில்வாழ் தெய்வக் குருபர சமயகோளரி
		சரணடைந் தனனே. 					17

2688	அடையல ரஞ்சுஞ் சூற்படைச் சொக்க
		ரங்கயற் கண்ணியோ டமர்ந்த,
	நடைகெழு கூட னன்மறைக் கொழுந்தே
		நண்ணினர்க் கெய்ப்பினில் வைப்பே,
	யிடையறா வன்பி னெண்ணிலார்
		குழுமியேத்துநின் சந்நிதா னத்திற்,
	கடையனேன் புரியன் பறுதுதி நாணங்கழித்தெதி
		ரடையவும் பெறுமே. 					18

2689	பெறலருஞ் செல்வ நின்னடி யேத்தும்
		பெருமையேயென்பது தெரிந்துந்,
	திறல்கொண்முற் றவமில் லாமையால்
		வருந்தித்திகைத்திடு நெஞ்சமென் செய்கே,
	னறவருள் விளக்கே யாலவாயமுதே
		யற்புதக் கற்பகக் கனியே,
	புறவவண் களிறே போற்றுவார்பொன்னே
		பொங்குபே ரருட்பெருங் கடலே. 				19

2690	கடல்விளிம் புடுத்த கண்ணகன் புவியிற்
		கழிதரு பொய்யெனு மெய்யை,
	யடன்மிக யானென் றவாய்வினைச்
		சிமிழ்ப்புண்டவத்தைக டொறும்புகு மடியே,
	னுடலபி மான முதலிய வெறுத்துன்
		னொண்சிலம் படியடை குவனோ,
	மடல்விரி கமல வாவிசூழ் மதுரை
		மாநகர்க் கவுணியக் கன்றே. 				20


			வேறு

2691	கன்றி யொருவே னிவண்வருந்தக் கடவ
		னோவங் கயற்கண்ணி,
	யொன்றிமகிழு மொருமுதல்வ னுறைதென்
		கூடற் சம்பந்தா,
	துன்றி வருத்து குளிர்க்கஞ்சித் தொண்டர்
		குழுமி முறையிடுமு,
	னன்றி யுகவு நீலகண்ட நவின்று
		தீர்த்த நல்லோயே. 					21

2692	நல்லாய் கூடற் சம்பந்தா நல்லார்
		போல நமைத்தொழநீ
	கல்லாயென்று கைவிட்டாற் கடையே
		னுய்யு நெறியுளதோ,
	செல்லாமழைபெய் யாதொழியிற்
		றிரைசூழ் புவிக்குய் வகையுண்டோ ,
	வல்லா யுறவென் றூழுதய மாகா
		விடிற்கண் ணறிவதெவன். 				22

2693	அறிவ தறியும் வகையுணர்த்தி
		யால வாயி னகத்தொருநீ
	செறிய வுறைத லாற்புகலித் தேவர்
		வடியர் சிறந்துய்ந்தார்,
	வெறியனாயி னேனொருவேன்
		வெய்யோ னுதயத் தெவர்விழியுங்,
	குறிகொளொளியே யடைமவிருள்
		கூகை விழிக ளடைவனபோல். 				23

2694	அடைய வினிமை யருளுநின்பொன்
		னடிக ளடைந்தேனதற்கேற்ப,
	விடைய றாத வன்பில்லே
		னெனினுங் கூடற் சம்பந்தா,
	தடையி லடியா னினக்கென்றே
		சாற்றா நிற்ப ரெனையுலகர்,
	மிடைசில் லுறுப்பி லார்தமையு
		மக்க ளென்றே விளம்புதல்போல். 				24

2695	விள்ளுங் கருணைப் பெருந்தகையே
		விண்டாழ் பொழில்சூழ் வியன்மதுரை,
	யுள்ளு மடியே னுள்ளுமுறை
		யொருவா பெருமுத் தமிழ்விரகா,
	தள்ளு மமணர் குலகாலா
		தண்டைத் தாளா தனிமுதலே,
	துள்ளுங் கயல்சேர் வயற்புகலித்
		தோன்றா லென்முன் றோன்றாயே. 			25

2696	தோன்றாய் விழிமுன் மனமாசுந்
		துடையா யென்னோவருந்திமன,
	மான்றா யென்றும் வாய்மலராய்
		மன்னன் றென்னன்மதுரைவளர்,
	சான்றாய் பெருமா னிடப்பாகத்
		தையன் முலைப்பாலுண்டனே,
	கான்றாய் போலின் றமிழ்பொழிந்த
		கருணாநிதியே யிதுதகவோ. 				26

2697	தகவே யென்றுன் சரண்புகுந்தேன்
		றள்ளி விடநீ வல்லாயோ,
	நகவே திரிவா னடியார்போ னடிக்குங்
		கள்வ னிவனம்பாற்,
	புகவே தகானென் றுளத்தெண்ணல்
		புகழ்த்தென் கூடற் புகலியாய்
	மிகவே யலைசெய் வாரிதியுள்
		விரைந்தங் கணநீ ரும்புகுமால். 				27

2698	புகுமே பிறந்தை யென்பாலும்
		போமே பொறியின் வாய்மனமு,
	நகுமே சகமு மெனை நோக்கி
		நண்ணு மேயுண் மயக்கமுநீ,
	தகுமே யென்று தடுத்தாளிற்
		சம்பந் தாதோ மொருமூன்றுஞ்,
	செகுமே லவர்க டொழுங்கூடற்
		றேவா குரவர் சிகாமணியே. 				28

2699	மணியே யனையாய் திருப்புகலி
		மறையோர் பேறே மதுரைநகர்க்,
	கணியே தோர் பலரையுநீ யடிமை
		கொண்டா யதற்காகத்
	தணியே முனிவென் றுனைவெறுக்கத்
		தக்கார் சிலரு மிருந்தாரோ,
	துணியே யெனையு மடிமைகொளத்
		துணிந்தால் வெறுப்பரெவரையா. 				29

2700	ஐய வயனா னெடுமாலா லளந்து
		காணாப்பரம் பொருளைத்
	துய்ய வொருகை விரலாலே
		சுட்டிக் காட்டுஞ் சம்பந்தா
	வைய மதிக்குந் தென்கூடன்
		மணியே வயங்கு பொற்றாளக்
	கைய வுன்னை யெனக்கறியக்
		காட்டி லதுவே போதுமால். 				30


			வேறு

2701	போது செறி பிரமபுரப் பொய்கையதன் கரையிடத்துத்
	தாது செறி மலர்ச்சோலைத் தண்கூடற் சம்பந்தர்
	யாதுரைசெய் கேன்ஞான வமுதுண்ட நாளமண
	ரோதுகொடுங் கடியவிட முண்டார்போன் றுலைந்தனரே. 		31

2702	உலையாத புகழ்க்கூட லுவமையின்முத் தமிழ்விரகர்
	கலையாரு மதியனைய காமர்மணிச் சிவிகைமிசை
	யிலையார்தண் பொழிலுலக மேத்தவே றியஞான்று
	கொலையாரு மனத்தமணர் கூர்ங்கழுவே றினரொத்தார். 		32

2703	ஒத்தபுக ழாலவா யுறையுமறைக் கவுணியனார்
	சித்தமகிழ் திருமுனெழு திருச்சின்னப் பெருக்கோசை
	வித்தகமி லமணருக்கு வெங்கூற்றி னோசைகொலோ
	குத்திரவம் மறலிகடாக் குரலோசை யோவறியேம். 			33

2704	அறிவுருவ னாலவா யாண்டகைமுத் தமிழாளி
	செறிநிழல்செய் மணிமுத்தின் சிவிகைகுடை செழும்பந்தர்
	பறிதலைய ரூற்றைவாய்ப் பதகர்முதற் பரசமய
	வறியவருக்கு வேனில்வெயில் வயங்குதலொத் திருக்குமால். 		34

2705	இருக்குமுத லோதாம லெளிதுணர்ந்த கவுணியர்கோன்
	குருக்கிளர்சண் பையினின்றுங் கூடலடைந் திருந்தவுடன்
	றருக்கமிகப் பேசிமயிர் தலைபறித்திட் டுழலமணக்
	குருக்கள்புவி நின்றுகழுக் கூடலடைந் திருந்தனரே 			35

2706	இருந்தவர்க ளேத்தெடுக்கு மெம்மிறைமுத் தமிழாளி
	யருந்தமிழ்நா வலருறையு மாலவா யமரண்ணல்
	பொருந்துதிரு மறைக்காட்டிற் புகல்சதுர மறைப்பாடல்
	வருந்துமனப் பரசமயர் வாயடைத்த பாட்டன்றோ. 			36

2707	பாட்டுவரிச் சுரும்புளரும் பைம்பொழிலிற் பசுமயிலிற்
	கோட்டுமுலை யார்பயிறென் கூடன்மறைக் குலக்குருளை
	வாட்டுவினை கடிமயிலை மட்டிட்ட வெனப்புகல்பா
	வூட்டுபுகழ்ப் பெருஞ்சைவர்க் குயிர்கொடுத்த பாவன்றோ. 		37

2708	அன்றுகனி ?வொடுபோக மார்த்தபூண் முலையாண்மற்
	றென்றுகவு ணியாமதுரைக் கிறைவாரு ளியபதிக
	நன்றுசெறி நெறியொருவா நல்லறிவி னோர்முகங்கட்
	கொன்றுபொலி வுறுத்தியதே லுவமையதற் குளதாமோ. 		38

2709	உளரளிவண் பொழின்மதுரை யொப்பிலா மணிபுகலிப்
	பளகில்கவு ணியக்கன்று பாலறா வாய்க்குருளை
	வளமலிபா சுரமொன்றே வான்சைவ மீடேற
	வளவிலமண் கழுவேற வாற்றெதிரே றியதம்மா 			39

2710	மாமேவு திருவால வாய்ஞான சம்பந்தர்
	பூமேவு திருக்காத்தாற் புரிந்தளித்த திருநீறு
	கோமேவு வுழுதியுடல் குளிர்தரச்செய் தாங்கிருந்த
	தீமேவு தொழிலமணர் சிந்தையில்வெப் புறுத்தியதே. 		40


			வேறு

2711	தேவர் தானவர் சித்தர்வித் தியாதரர்
		திசைபுரப் பவர்மற்றும்
	யாவருள்ளவ ரவரெலாம் வந்துவந்
		தடியிணை தொழமேவு
	மூவா தம்பிரா னாலவா யினிதமர்
		முத்தமிழ் விரகாயான்
	பாவரோடுற வுறறுழ வாதுநின்
		பதத்துற வுறவுன்னே. 					41

2712	உன்னு வார்பிறப் பொழித்திடு
		மொருவனை யுத்தமர்பெருமானைப்,
	பன்னு வார்க்கினிப் பானைமெய்ஞ்
		ஞானவின் பாலறாவாயானை,
	மன்னு வார்பொழின மதுரையா
		சிரியனை வழிபடா தவரெல்லாந்,
	றுன்னு வார்பிறப் பொழிவரோ
		வொழிவார் தொழுதவத்தவரேனும். 			42

2713	தவரெனப்படு வார்களு மும்மலத்
		தடையறு சிவஞானத்,
	தவரெனப்படு வார்களு மிருவளி
		யடைத்தொரு வழிநிற்பா,
	ரிவரெனப்படு வார்களுஞ் சிவகதிக்
		கெதுவழி யென்றோயாய்,
	பவரெனப்படு வார்களு மதுரைச்சம்
		பந்தன்மெய் யடியாரே. 					43

2714	அடியா செல்வமே யாலவாய்
		முத்தமி ழாளிகேண் மதிபொல்லாக,
	கொடிய நாயினேன் விண்ணப்ப
		மொன்றுவான் குளிர்மதி நதிசூடு,
	முடிய னையநிற கெனையனெற
		கனையைநீ முடிவினமறறவற்***,
	நெடிய சீர்புனை யெனையனமற்
		றனையனோ நினக்கியானலலேனே. 			44

2715	அல்லை நேர்களத் தண்ணறன்
		றிருவடிக் கருகரா யனைவோருந்,
	தொல்லை மாவினைத் தொடரோழிந்
		தானந்தந் துயத்திடவருள்கூர்ந்து,
	வில்லை வீசுபஞ் சாக்கர மோதிய
		வித்தக வியன்கூட,
	னல்லை நீயடி யேற்குமவ் வாறரு
		ணலகிடி னுயவேனே. 					45

2716	உய்ய லாம்வகை யொன்றுகண் டேனஃ
		துண்மையேயின்தோமன்,
	வைய வாழ்வடை மயங்கியே யுழிதரு
		மாந்தாகாண் மடைநண்ணான்
	... .... .... ...
		சம்பந்தன்,
	.... ..... .... .....
		தொழும்புபூண்றேறானே. 					46

2717	உறவும் வேனினண் பகலழ லிடைப்புகுந்
		துணங்குதலுணாநீத்தே,
	யறவும் வாடுதன் மூச்சவித் திருத்தல்கா
		லாதிதுய்த்தலுமோவ,
	லிறவு நேருமென் றிடக்குகை வனம்புகல்
		யாவுநீத்திடும்வம்மின்,
	புறவ நாயகன் கூடல்வாழ் புண்ணியன்
		பொன்னடி யடைவீரே. 					47

2718	அடையு நற்பசு விருக்கயான் கற்பசு
		வடைந்தனென் கறந்தெய்த்தே,
	னடைகொ ளாலவா யிடையமர் தருபர
		ஞானபோனகக்கன்றே,
	குடையும் யானமும் பந்தரு முத்தமாக்
		கொண்டமுத்தேபொன்னே,
	மிடையு மும்மல மகன்றருள் பெறும்வகை
		மெய்யருள் புரிவாயே. 					48

2719	வாய்ந்த செம்பொனாற் செய்கொழுக்
		கொண்டியான் வரகினுக் குழலுற்றே,
	னேய்ந்த தீஞ்சுவைக் கனியொரீஇக்
		காய்கவர்ந்தென்றுமுண் பவன்போன்றே,
	னாய்ந்த நாவலர் புகழ்மது ராபுரியண்ணலே
		யடல்கொண்டு,
	காய்ந்த காமத்தர் கருதிடுங் கவுணியர்
		காவலா வருள்வாயே. 					49

2720	அருந்து தற்கமை பாலைவிட் டருந்தினே
		னமைதராப் புளிங்காடி,
	பொருந்து கங்கையா டப்புகுந் தள்ளலைப்
		பூசிடு பவன்போன்றேன்,
	றிருந்து மாலவாய்த் தெள்ளமு தேவர
		சிரபுரத் தவரேறே,
	மருந்து நேருன தருண்மொழி பெற்றியான்
		மலமறுத் துயலென்றே. 					50


			வேறு

2721	என்றவ றனைத்து மெண்ணா தின்னருள் புரிய வேண்டு
	நின்றசீர் நெடிய மாற னிலவுநன் னெறிக்க ணேவந்
	தொன்றமுன் றடுத்தாட் கொண்டா யுவமைதீர் புகலி வாழ்வே
	வென்றசீ ருடையாய் கூடல் விளக்கமே மெய்மமை யானே. 		51

2722	யானென தெனுங்கோண் ஞான வழல்கொடு நிமிர்க்க வல்லான்
	ஞானசம் பந்த னன்றி நாடின்மற றகிலத் தியாவ
	ரீனமி லறவொர் சூழு மிருந்தமிழ்க் கூடல் சார்ந்து
	மானமா ரனையா வள்ளன் மலரடி வணங்கு வீரே. 			52

2723	வணங்குவா ருள்கு வார்வாய் வாழ்த்துவார் வழுத்து வாரோ
	டிணங்குவார் நின்பொற் பாத மெய்துவா னெண்ணி யன்பர்
	குணங்குலாந் துவாத சாந்தக் கூடனமே வியசம் பந்தா
	விணங்குறாப் பவஞ்ச வாழ்க்கை யேட்டையே னென்செய் கேனே. 	53

2724	செயம்மலி துவாத சாந்தத் திருநக ரொருசம் பந்தா
	..... .... .... .... ....
	மெய்யம்மலி செல்வ ரின்பம் விழைத்தனர் புகுநின் றாளிய
	பொயம்மலி யேழை வாழ்க்கைப் புன்மையென புகலொ ணாதோ. 	54

2725	ஒண்ணுத லுமையாள் கொங்கை யூறிய பரமெய்ஞ் ஞானங்
	கண்ணுத லருளா லுண்ட கவுணியர் காளாய் மேலோ
	ரெண்ணுதல் செய்யுங் கூட லுடையநீ யென்னோ டூடல்
	பண்ணுத றகாதுன் றீராப் பரவருட் பெருமை நோக்கின். 		55

2726	நோக்குயர் கூடல் வாழ்வே நோன்மைசா லருட்சம் பந்தா
	தேக்குசீர் வீரட் டானச் சிவபிரா னாடல் கண்டா
	யாக்கிய புகழின் மேலா மையநின் சித்த மென்றன்
	பாக்கிய மலர ருட்கட் பார்வைக்கே பார்வை வைத்தேன். 		56

2727	வையகத் தன்பு பூண்டார் குற்றமு மற்றஃ தில்லார்
	செய்யநற் குணமு முள்ளஞ் செறித்திடாக் கருணை வாழ்வே
	பொய்யகன் மதுரை மூதுர்ப் புகலியாய் நின்றா ளன்றி
	வெய்யவேழ் பிறவி யென்னும் வீரைக்கோர் மதலை யின்றே. 	57

2728	இன்றடம் பொழில்சூழ் கூட லெழிற்கவு ணியர்தங் கன்றே
	யொன்றவைந் தெழுத்தி னுள்ளே யோதுமுப் பொருளுந்தேற
	நன்றடி யவர்க்கு ணர்த்தி நலமுறுத் திடுதல் போலெற்
	கென்றருள் புரிவை யென்றே யிருந்தன னெதிர்பார்த் தம்மா. 		58

2729	அம்மைபா லுண்ட ஞான வருட்பெருங் குருளை கூட
	லெம்மையா ளுடைய தெய்வ மிலகரு ணோக்கஞ் செய்ய
	நம்மையாய் புரிந்த பாச நசித்திடு நம்பு நெஞ்சே
	வெம்மையார் கதிரோன் றோன்ற வீடிடா விருளு முண்டோ . 	59

2730	உண்டுடுத் துழல்வேன் றெய்வ முண்டெனு முறுதி நெஞ்சுட்
	கொண்டுசற் றறியேன் காமக் கொள்கல னாகி நிற்பேன்
	றொண்டுபட் டுன்றா ளேத்தத் துணிவனோ கணித மில்லா
	வண்டுதுற் றியபூஞ் சோலை மதுரைமா ஞான வாழ்வே. 		60


			வேறு

2731	வாழு மாறுளத் தெண்ணினன் மற்றது மருவத்
	தாழு மாறுனைத் தாழ்ந்தில னாகிலென் றவறே
	சூழு மாதவிச் சோலையின் மலர்தொறுந் தும்பி
	வீழு மாலவாய் மேவிய சிரபுர வேந்தே. 				61

2732	வேந்த ராகிலென் முப்பகையறுத்தற விளங்குஞ்
	சாந்த ராகிலென் றக்கவ ராகிலென் றவஞ்செய்
	மாந்த ராகிலென் மதுரையிற் கவுணியன் மலர்த்தா
	ளேந்த வாய்ந்தநெஞ் சுடையரே சிறந்தவ ரென்றும். 			62

2733	என்று நேர்மணி மாளிகைக் கூடல்வா ழிறையை
	யன்று ஞானபோ னகமினி துண்டவா ரமுதைக்
	கன்று சூழ்வினை களைந்தடி யார்க்கருள் கனியை
	நன்று கண்டுதோத் திரஞ்செயார் நாவென்ன நாவே. 			63

2734	நாவ லோர்புகழ் ஞானசம் பந்தனை நல்லோ
	ராவ லோடணை யாலவா யிருந்தரு ளமுதைத்
	தேவ லோகமே யெனச்சொலுஞ் சிரபுரச் செல்வர்
	காவ லோனைநேர் கண்டிடார் கண்ணென்ன கண்ணே. 		64

2735	கண்ண கன்புவி தொழுதெழ வாலவாய் கலந்தே
	யெண்ண வம்புரி யமணரைக் கழுவில்வைத் தியார்க்கும்
	வண்ண நீறளித் திருந்தருண் ஞானமா மணியின்
	றிண்ண வண்புகழ் கேட்டிடார் செவியென்ன செவியே.		65

2736	செவிய வாவுமின் றமிழ்பொழி செய்யவாய்த் தேனைப்
	புவியு ளோர்புகழ் மதுரைமா நகருறை பொன்னைச்
	சவிவி ராங்கவு ணியர்குல மணியைவெண் டாளக்
	கவிகை யாளியை யருச்சியார் கையென்ன கையே. 			66

2737	ஏல வார்குழ லுமையருண் ஞானமுண் டெழுந்து
	சால வெங்கணும் பொழிதமிழ்க் கொண்டலைத் தாவாச்
	சீல மாதவ ராலவாய் மேவிய கேவைத்
	தால மேலுற வணங்கிடார் தலையென்ன தலையே. 			67

2738	தலைமை வைதிக மெய்தவுந் தெய்வமாச் சைவ
	நிலைமை யெய்தவு ஞானவா ரமுதுண்ட நிதியை
	யிலைகு லாம்பொழில் சூழ்மது ராபுரி யிறையைக்
	கலைவ லாளனைச் சூழ்தரார் காலென்ன காலே. 			68

2739	காலி னார்பொழிற் கனியுதிர் தரவெழுங் கடுப்பிற்
	சேலி னார்வயற் றிருமது ராபுரித் தேவைச்
	சாலி னார்மறைக் கவுணியன் றனைத்தொழச் சாரா
	மாலி னாருடைப் பிறப்பையெப் பிறப்பென வகுக்கேன். 		69

2740	வகைசெய் மூலமா விலக்கிய மாகவு மறையிற்
	றகைசெய் பல்பொருண் முற்றவுந் தமிழ்பொழி தருவை
	முகைசெய் வான்பொழி லாலவாய் மேவிய முதலைத்
	தொகைசெ யுந்துதி சொற்றனன் சிறந்ததென் றுணிவே. 		70


			வேறு

2741	துணியு மாறொன்று சொல்லுவன் யார்க்கும்வான்
	பணியுங் கூடற்சம் பந்த னடிதொழிற்
	றணியும் வெவ்வினை சார்த லறும்பவ
	மணியு மொன்றியொன் றாக்கதி யாருமே. 				71

2742	யாரு மேத்து மியன்மது ராபுரிச்
	சீருந் தேசுந் திருந்துசம் பந்தர்தா
	மூரும் யானமுன் றாங்கின ரொண்பதந்
	தேரு நீரிலென் சிந்தையுந் தாங்குமே. 				72

2743	தாங்கு பேரருட் சம்பந்தன் கூடலா
	னோங்கு மாமுறை யோதி யெழுதினோ
	ரேங்கு வேனுக் கெழுவகைச் சன்மமுந்
	தேங்கு மாறெழு தாவகை தீர்ப்பரே. 				73

2744	தீரன் ஞான சிகாமணி பூந்தரா
	யூரன் கூட லொருக்கன் றிருமுன
	ரார வொண்டிருச் சின்னம தூதுவார்
	வீர மல்கென் வினையையு மூதுவார். 				74

2745	வாரு மன்பினர் வாழ்த்தும் பகலியார்
	தேருங் கூடற் றிகழ்கரு பிள்ளையார்க்
	கோரு மன்பின் விருந்தமு தூட்டினா
	ராரு மெற்கரு ளாரமு தூட்டுவார். 					75

2746	ஊட்டி யன்புயிர்க் கோரெழு சன்மமும்
	வீட்டி யாளும் விரகர்சம் பந்தர்க்கு
	நாட்டின் மிக்கநல் லாலவா யீதென்று
	காட்டி னாரெற் கருங்கதி காட்டுவார். 				76

2747	வார மிக்க மதுரையிற் சம்பந்தர்
	சேர வாற்றியெண் ணாயிரந் தீக்கழு
	வார வஞ்ச வமணருக் கூன்றினார்
	பார வாங்கதிப் பாடெனை யூன்றுவார். 				77

2748	ஊன்ற வுள்ளத்தி னுள்ள பொருளெலா
	மீன்ற மாதொடு மின்றமிழ்க் கூடல்வா
	ழான்ற சம்பந்தர்க் காக வொதுக்கினார்
	மான்ற வென்னை மலநின் றொதுக்குவார் 				78

2749	குவல யம்புகழ் கோமது ராபுரித்
	தவல ரும்புகழ்ச் சம்பந்தப் பிள்ளையா
	ருவமை தீரடித் தொண்டருக் கொல்லையே
	கவலி றொண்டுசெய் வார்கன வானரே. 				79

2750	வான வாழ்வு மதிப்பரி தாஞ்சிவ
	மோன வாழ்வெனு முத்தியு நல்குமிக்
	கான கூடன்மெய் யாறு முகத்திரு
	ஞான சம்பந்தர் நாண்மலர்ப் பாதமே. 				80


			வேறு

2751	பாதக மும்மல பந்தத் தாலுறு
	நோதக வொழிதர நூலு ணர்ச்சிசான்
	மேதக வோர்குழு மேவு மாலவாய்ப்
	போதகன் கவுணியன் புகழ்வி ரும்புவாம். 				81

2752	விரும்பிடப் படுவது மெய்ம்மை யாவதுங்
	கரும்பினு மினிப்பதுங் கவலை தீர்ப்பதுஞ்
	சுரும்புளர் நறுமலர்ச் சோலை யாலவா
	யிரும்புகழ்ப் பிள்ளையா ரிணையில் சீர்த்தியே. 			82

2753	சீர்மலி யாலவாய் திகழும் வானகம்
	பேர்மலி கவுணியப் பிள்ளை யார்மதி
	யார்மலி யவர்புக ழம்ம திக்கதிர்
	நார்மலி யடியவர் சகோர நாளுமே. 				83

2754	நாள்பல கண்டதென் மதுரை நற்றட
	நீள்பல விதழ்மலர் நிலவு சம்பந்த
	ராள்பல சீர்த்தியவ் வலரி லூறுதேன்
	றாள்பல வளிக்குலந் ததைந்த வன்பரே. 				84

2755	அன்பமை யாலவா யவிரு மோர்சிலம்
	பின்பமை சம்பந்த ரினிய நீர்முகின்
	மன்பெருங் கருணையம் மங்குல் பெய்யுநீர்
	துன்பமி லடியவர் சூழு மாமயில். 					85

2756	மயலகல் கூடல்லாள் வழங்கு வானக
	முயல்புரி கவுணிய ரோங்கு கற்பகஞ்
	செயன்மிகு பொருட்கொடை திருவ ருட்கொடை
	யயல்விரா வடியவ ரளவில் வானவர். 				86

2757	வானமும் புகழ்திரு மதுரை பாற்கடல்
	ஞானசம் பந்தனார் நயக்கு நல்லமு
	தூனமில் சைவர்க ளுவந்த வானவர்
	தீனவெவ் வமணரே திதிதன் மைந்தர்கள். 				87

2758	மைந்துசே ருதயமால் வரைதென் னாலவாய்
	நந்துசீர் மழகதிர் ஞான சம்பந்தர்
	முந்துபு முகமலர் முளரி சைவரே
	சிந்திரு ளறிவிலா வமணர் தேரரே. 				88

2759	தேருமின் கவுணியர் செய்ய சீரினி
	தோருமி னவர்கனிந் துரைத்த மாமறை
	சாருமி னாலவாய் சார்ந்து தாழ்வற
	வாருமி னருங்கதி யகிலத் தியாருமே. 				89

2760	மேவுதென் னாலவாய் விரும்பு புண்ணியன்
	மூவுல கும்புகழ் முதல்வன் சம்பந்தன்
	பூவுயர் பொன்னடி போற்று வார்மல
	நோவுதீர்ந் துய்வது நுவல வேண்டுமோ. 				90


			வேறு

2761	வேண்டாமை வேண்டேன் விழைந்தே திரிந்தேன்
	பூண்டார் நினக்கன்பு பொய்ப்பாச மற்றா
	ராண்டா தரிப்பா யருட்கூடன் மேய
	தூண்டா விளக்கே தொழுஞ்சண்பை யானே. 			91

2762	யானேது செய்கேனென் மனமெங்கு மோடுங்
	கோனே தடுத்தாட் கொளிற்பொய்ய னுய்வேன்
	றேனே கரும்பே திருக்கூடல் வாழம்
	மானே பெருஞ்சண்பை வள்ளற்பி ரானே. 				92

2763	பிரான்வேறும் வேண்டேன் பிதற்றித் திரிந்தே
	னிராதார னாகாம னீயாண்டு கொள்வாய்
	குராவாச மென்சோலை கொள்கூடன் மேவும்
	பராஞான சம்பந்த பண்பாளர் பேறே. 				93

2764	பேறே துதிப்பார் பெருஞ்சண்பை யாள
	ரேறே தமிழ்க்கூட லின்பப் பிரானே
	மாறே படும்புன் மனத்தேன் மதித்துன்
	னாறே யடைந்துய்வ தறிகின்றி லேனே. 				94

2765	ஏமங் குறித்தே யிருந்தே னதற்குன்
	னாமங் குறித்தோத நாவைத் திருப்பேன்
	பூமங்கை மேவும் புகழ்க்கூடல் வைப்பே
	காமங்கை யாருட்பு காச்சண்பை வாழ்வே. 				95

2766	வாழ்வான திருண்மாய மென்றெண்ண மாட்டேன்
	றாழ்வான தேகொண்டு தடுமாறு கின்றேன்
	சூழ்வான ரேத்தித் தொழுங்கூடல் வாழ்வே
	யாழ்வாரி சூழ்காழி யாள்வார்க டேவே. 				96

2767	தேவே கரும்பே தெவிட்டா ததேனே
	கோவே திருக்கூடல் குடிகொண்ட பொன்னே
	மாவேரி யொண்டா மரைத்தொங்கன் மார்பா
	நீவேறு செய்தென்னை நீக்காம லாளே. 				97

2768	ஆளா னவர்க்கே யருட்டே சுறுத்துந்
	தோளாத முத்தே தொழுங்கூடல் வைப்பே
	நீளாத ரத்தியாரு நின்றேத்து காழிக்
	காளா யெனைக்கா கருப்பால் கடிந்தே. 				98

2769	கடிமா மலர்ச்சோலை ககனந் துழாவும்
	படிமே லெழுந்தண் பழங்கூடல் வைப்பே
	கொடிமாட மிகுவெங் குருக்கொண்ட லேநின்
	னடிமா மலர்க்கென்னை யான்செய்த பிழையே. 			99

2770	பிழையாது செயினும் பிறக்கா தகற்று
	மழையா ரருட்பெருமை வாழ்கவளர் கூடற்
	றழையாறு முகஞான சம்பந்த குரவன்
	விழையாறு நனிவாழ்க மிகவாழ்க சீரே. 				100

- மதுரைத்திருஞானசம்பந்தசுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று -

 

Related Content

துறைசையமகவந்தாதி

Arputhath Thiruvandhathi

Civa Bhoga Caram (The Essence Of Blissful Experience)

Discovery of the god to mortals

Madurai Chokkanathar Ulaa in English