logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருக்குடந்தைத்திரிபந்தாதி

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் 
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் 

Thirukkudandhai thibandhadhi - written by mahavidwan sri minatchisundharam pillai avarkal.கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
திருக்குடந்தைத்திரிபந்தாதி.

காப்பு.

ஆதிவிநாயகர்துதி.
சோதிக்களிற்றையலோடுறுமாறுதுதிசெயற்கா
நீதிக்களிற்றைவரையருந்தாப்பிழைநீங்கவரால்
சாதிக்களிற்றையளாநீர்க்குடந்தையந்தாதிசொல்வா
னாதிக்களிற்றையடுத்தாமடுத்தவனைத்தும்வந்தே..

1

அவையடக்கம்.
குடந்தையந்தாதிதிரிபாவொருசதங்கூறிடுவ
னடந்தையந்தாதிகழுமாவலியென்றநாதனிற
மடந்தையந்தாதிவினைசெயவாழ்மங்களைமகிழ்ந
னிடந்தையந்தாதிவருந்தாடருமெனுமெண்ணங்கொண்டே.

2

நூல்.

 

பூந்தாமரையில்வதிவானுமாயனும்போற்றிடப்பொன்
னாந்தாமரையில்வளக்குடமூக்கமரண்ணற்கடி
யேந்தாமரையில்வனத்துழலாந்தவமெய்தவஞர்
மாந்தாமரையில்வன்னாருமுடாமுள்ளிவாழ்குதுமே. .

1

வாழும்பரவைபுகழ்குடமூக்கமர்வள்ளலுல
கேழும்பரவையமுதகும்பேசனிருந்தளியைச்
சூழும்பரவைவிடமயின்றாயென்றுசொல்லுமெதிர்
தாழும்பரவைமனைக்கேகவன்செயுந்தண்ணளியே.

2

தண்ணஞ்சுமந்ததிருக்கரத்தானைச்சலதிசுற்று
மண்ணஞ்சுமந்தகனையுதைத்தானைவிண்மாய்க்குமென்று
கண்ணஞ்சுமந்தமுறுத்தவொண்ணாநங்கடேசற்றொழா
ரெண்ணஞ்சுமந்தவறிவினராயளற்றெய்துவரே.

3

வரசங்கைமங்கையுதித்தார்கல்லேற்றவரதகலைப்
பிரசங்கமங்கையுறுநாவரேத்தும்பெருங்குடந்தை
யரசங்கமங்கையுடைக்கணையாய்நின்னடிக்கமலம்
பரசங்கமங்கையுறுமாறுண்டோவெம்படரொழிந்தே.

4

படவரவத்தையணிவார்கும்பேசர்படியளந்த
விடவரவத்தையறுப்பார்நகர்விலையேந்திழையார்
நடவரவத்தையுகப்பாரெனினுநமக்கருளக்
கடவரவத்தையடையவிடார்பொற்கனங்குழையே.

5

கனகச்சிலம்புவளைத்தார்கும்பேசர்கனமறையா
மனகச்சிலம்புபுனைவார்மறுகிலணிவிடைமீ
துனகச்சிலம்புமுரசோடணையத்தொழுதவர்பான்
முனகச்சிலம்புதொடுப்பான்கொலோமதன்முற்றிழையே.

6

முற்றத்துவந்தனைசெய்தேனுனக்குமுழுமதியே
சொற்றத்துவந்தனையாய்குடமூக்கமர்சுந்தரர்வெண்
பெற்றத்துவந்தனையார்மார்புறயான்பெறுந்துணைதீர்
செற்றத்துவந்தனையாய்ப்பயில்வாயச்செழுவிசும்பே.

7

செழுங்கமலத்துவெடிவாளைபாய்தரத்தேனெனக்கீழ்
விழுங்கமலத்துவழிசார்குடந்தைவிமலர்பொற்றா
ளழுங்கமலத்துநிலங்கரையக்கரைந்தன்பினுள்வாம்
புழுங்கமலத்துவிழுந்துயர்தீர்ந்தின்பம்புல்லுதற்கே.

8

புல்லாவரையுடைநல்குங்குடந்தைப்புகழ்ப்பதியா
வல்லாவரையுடைசார்கயிலாயவரைவிடையேழ்
வெல்லாவரையுடையாரெனக்கூறும்விதமென்னெனு
மொல்லாவரையுடைகொங்கையிம்மங்கையுணர்ச்சிநன்றே.

9

நன்றாதரித்தகுடந்தைப்பிரானைநயந்துவெள்ளிக்
குன்றாதரித்தமழுவாவெனத்துதிகூறக்கற்றோம்
பொன்றாதரித்தவினைகாளெமைவிட்டுப்போய்விரைவி
னன்றாதரித்தகையோராரவரையடைமின்களே.

10

அடைந்தவராகமளவாப்பசப்பினமையச்சுற்றந்
தடைந்தவராகமளித்தருள்வார்கொறவாதவலி
மிடைந்தவராகமருப்பணிந்தார்விண்ணர்மேவிமல
முடைந்தவராகமரூஉங்குடமூக்கமருத்தமரே.

11

உத்தமனத்தனவிர்மழுவோடுழையுற்றமரு
மத்தமனத்தனடிதேடநீண்டவனாய்மலர்தூய்
நித்தமனத்தனவாங்குடமூக்கமாநின்மலனிப்
பித்தமனத்தனமன்றானென்றென்னையும்பேணுவனே.

12

பேணாததென்னைதமைப்பேணுவாரைப்பிறைமதிய
மாணாததென்னைவருத்துதற்கேயெழும்வானளவு
கோணாததென்னையடர்குடமூக்கிற்குலாங்குழகர்
நாணாததென்னையுறுபுகழார்கனனாட்டத்தரே.

13

நாட்டஞ்சிவந்தனையென்செயலாநமனேகுடந்தைக்
கோட்டஞ்சிவந்தனைநேர்ந்தேயுறுமங்குக்கூடிமலப்
பூட்டஞ்சிவந்தனைசெய்தோங்கருணைபுரிந்ததிலை
வாட்டஞ்சிவந்தனைப்பொன்சொரிந்தாலுமதிக்கலமே.

14

மதிக்கலமாலயனாதியர்வாழ்க்கையைமற்றுமொன்றைத்
துதிக்கலமாலயமாமறையானென்புந்தொண்டர்நெஞ்சு
நிதிக்கலமாலயமாகக்கொண்டான்பதநெஞ்சுள்வைத்தா
முதிக்கலமாலயனீத்தாங்குடந்தையுவந்தனமே.

15

உவமையிலாடுபலவரிந்தாலுமொழிவதுண்டோ
வவமையிலாடுகரத்தனத்தாகும்பத்தற்புதனே
தவமையிலாடுதுறையாயலருந்தவாதுநெருங்
குவமையிலாடுதையுந்துயர்நீங்கக்குறித்தருளே.

16

அரும்பாவலருமுலையென்பதென்பல்லுமத்தன்மைத்தே
விரும்பாவலருமகள்சுரம்போதல்விழைந்ததென்னோ
வரும்பாவலரும்புகழ்குடமூக்கமர்வள்ளல்வெற்பிற்
றிரும்பாவலருமுலகெங்குமாகுந்திறந்துணிந்தே.

17

திறம்பாவமென்றுகுறிப்பார்மனைதொறுஞ்சென்றுழன்ற
மறம்பாவமென்றுமறிதருமேதிமரைபலர்வாய்
நிறம்பாவமென்றுதிரிகுடமூக்கமர்நித்தசிலை
பறம்பாவமென்றுகடலூருளாக்கொண்டபண்ணவனே.

18

பண்ணப்பணைத்ததிருவுமுருவும்பலமகவுங்
கண்ணப்பணைத்தமொழியார்கலப்புங்கலப்புறுதோ
மண்ணப்பணைத்தவளவளையூரும்வளக்குடந்தை
விண்ணப்பணைத்தசடையானைமேவினமேவினமே.

19

மேவியகல்லும்படியென்னைத்தென்றலும்வெண்மதியு
மோவியகல்லும்புனைதலெமையென்றொலிவளைமேற்
றூவியகல்லும்பொறுத்தார்கும்பேசர்துனைந்தருளா
ராவியகல்லும்படியுற்றதாலினியாரணங்கே.

20

ஆரம்பரந்தமுலையாய்பங்கேருகத்தண்ணலும்பொற்
பேரம்பரந்தகையிற்புனைவானுமுட்பேணிவளங்
கூரம்பரந்தமிலாநல்லமேவிகுடந்தைவெற்பிற்
காரம்பரந்தவழுஞ்சென்றுளார்வரக்கண்டிலமே.

21

கண்டத்திருப்புவயவிடமாவுட்கலங்குபுமா
றண்டத்திருப்புவதுமழுவாதண்டமிழ்க்குடந்தை
யண்டத்திருப்புவளைஞாலமேத்தவமர்பதியா
மண்டத்திருப்புவனச்சடையார்க்கெனுமாமயிலே.

22

மாமையிலங்கையரிவிழிபால்வண்குடந்தையனை
நாமையிலங்கைநகத்தரிப்பாற்றருநம்பனைவெந்
தீமையிலங்கையறச்செற்றவாளிச்சிவனையெண்ணார்
தாமையிலங்கையையோவென்செய்வார்வெஞ்சமன்வலிக்கே.

23

வல்லியம்பாயும்வனங்குடமூக்குள்வையாரினுயிர்
கொல்லியம்பாயும்வன்மீனாற்றின்வாய்க்குலவேதந்துழாய்
புல்லியம்பாயும்ப்ராரிறையோயென்புராணர்வெற்பி
வல்லியம்பாயும்பலைநேர்பவரிங்கடைதனன்றே.

24

அடைக்கலமாலைவளக்குடமூக்கமர்வாய்தலைப்பன்
முடைக்கலமாலையணிவாய்மறையின்முழுமுதலே
யுடைக்கலமாலைவகைப்பொறியாற்றலுன்றாளுக்கன்பு
படைக்கலமாலையறோமெங்ஙன்வாழும்பரிசுளதே.

25

உளத்துக்கலந்தகடுந்துயர்யாவுமொழிவதென்றோ
களத்துக்கலந்தகவில்லாநஞ்சாகிக்கனலில்விழுந்
தளத்துக்கலந்தகமலைமுன்னோரைத்தழைவித்தவா
வளத்துக்கலந்தகராக்குடமூக்கமர்மாமுதலே.

26

மாமனுக்காட்டுமுகங்கொடுத்தாற்குமதுப்பெய்கொன்றைத்
தாமனுக்காட்டுவளப்பதத்தாற்குத்தவாதநல்லோர்
நாமனுக்காட்டுகுடந்தைப்பிராற்குநகுதழனீர்
காமனுக்காட்டுகண்ணாற்கடியோமுட்கலங்கலமே.

27

கலங்கலந்தாரையறியாரினின்றுகைகூப்பினல்கு
நலங்கலந்தாரைவளக்குடமூக்கமர்நம்பரைக்கண்
டலங்க்லந்தாரையருண்மினென்றேயிவ்வணங்குவிழிக்
குதங்கலந்தாரைகவிழ்ப்பநின்றாளென்னகோலமிதே.

28

கோலமருப்புமுறித்தார்குடந்தைக்குழகரிந்தக்
காலமருப்புமுலையார்க்கருளக்கடவரல
ரேலமருப்புகுதும்போதிழிக்குமிருங்குழன்மிக்
கோலமருப்புவனஞ்செவிதீத்திடுமொண்டொடியே.

29

தொடிக்கமலங்குவித்தேன்குடமூக்கிற்சுடர்மறுகி
னடிக்கமலங்குபயில்பண்ணைத்தில்லைநயந்தவர்க்கு
முடிக்கமலங்குலவப்புனைந்தார்க்கிம்முதுபிழைக்காத்
துடிக்கமலங்குமனமமர்ப்பானொருதுட்டனென்னே.

30

என்னையப்பாவலர்தூற்றுநர்தூற்றவெண்ணாதெறிந்து
நன்னையப்பாவலர்சூழுங்குடந்தைநகுமுதலே
யன்னையப்பாவலர்செஞ்சடைமேலென்றுரைத்தடைந்தேன்
பின்னையப்பாவலர்கூட்டத்துச்சேர்த்துப்பிறக்குகவே.

31

பிறப்பாலனந்தமஞராமவற்றினும்பேணுதலி
லிறப்பாலனந்தமடுப்பதுநேருமென்செய்துமுற்றார்க்
குறப்பாலனந்தமகிழ்விற்றருமொண்குடந்தையுள்ளா
யறப்பாலனந்தமரசேயின்பெய்தவருள்புரியே.

32

புரிந்தவரங்கம்வெதுப்புதலால்வரல்புண்ணியமோ
பரிந்தவரங்கம்வணக்கிடுமுன்னம்பரிந்துவந்து
விரிந்தவரங்கம்பலையருள்கும்பவிமலரென்று
தெரிந்தவரங்கம்புகலவுள்ளார்க்கிதுசீர்த்தியன்றே.

33

அன்றலைவாரியெனக்கொடுபோகவழுங்குபுயான்
பொன்றலைவாரியெடுத்தொழித்தார்க்கன்றிப்புன்மைபுகல்
வன்றலைவாரிசனுக்கொழித்தான்கும்பவள்ளல்வெற்பி
லின்றலைவாரிவரியாருறுவர்கொலென்மணமே.

34

என்னப்பனாகம்பவளமொப்பான்மின்னிருஞ்சடைமேன்
மின்னப்பனாகம்பகர்குடமூக்கமர்வித்தகன்பேர்
பன்னப்பனாகம்படுவிடந்தீர்ந்தோர்பனவன்மகன்
மன்னப்பனாகம்பலைக்கவுய்ந்தானொர்வணிகனுமே.

35

வண்ணக்குவளைவிழியாளிவளென்றுமாழ்கிமண்ணோ
ருண்ணக்குவளைமுதுகாயினீரென்றுரையளவு
மெண்ணக்குவளையிலக்காக்குவீர்பயனென்குடந்தை
யண்ணக்குவளையணிபெருமானையடுத்துய்ம்மினே.

36

உய்யாதபாதகனாமெனையாருணர்வார்குடந்தை
மெய்யாதபாதபுகழாய்துறைசைவெளிப்பட்டுநீ
யெய்யாதபாதரசம்போறலையற்றிருவென்றுநோய்
செய்யாதபாதமலர்தலைச்சூட்டல்செய்யாவிடினே.

37

விடக்கந்தரத்தருமாபாகர்கும்பவிமலர்பைம்புற்
றடக்கந்தரத்தருவாவுரித்தார்பொற்றடவரைவா
யடக்கந்தரத்தருமம்புரிவார்நமதன்பர்வினை
மடக்கந்தரத்தருமஞ்சுமிவ்வாற்றுவரல்கொடிதே.

38

வரந்தந்தவரைபெறநாவன்மேயவர்வாழ்த்துநரைப்
புரந்தந்தவரையுயர்த்துங்கும்பேசர்பொருப்பிலருள்
சுரந்தந்தவரைசெயவந்தயானைதொலைத்தென்னுயிர்
திரந்தந்தவரைவிடுத்தெவர்க்கார்க்குமித்திண்முரசே.

39

முரசம்பலவனிதஞ்சிலைக்குங்குடமூக்கமர்வா
னரசம்பலவனிகமஞ்சொற்றானெளியானரியான்
பரசம்பலவனியுள்ளார்க்கரன்வெற்பிற்பங்கயத்து
விரசம்பலவனிதாய்கொடுங்கூற்றுநின்மெய்ம்முற்றுமே.

40

மெய்யாதரித்தமழுவாசெந்தாமரைவெள்ளையன்னஞ்
செய்யாதரித்தகுடமூக்குளாயென்றுதேர்ந்துரைப்போ
மெய்யாதரித்தவினைகாள்விரைந்தினியெம்மைவிட்டுப்
பொய்யாதரித்தகவில்லார்கட்சென்றுபுகுந்துய்ம்மினே.

41

புக்கவரிக்குமயனுக்குமுய்தல்பொருந்தநஞ்சுண்
டக்கவரிக்குவயற்குடமூக்கமர்சங்கரர்நீர்
மிக்கவரிக்குவியன்றேரர்சீரன்றிவெவ்வியகா
னக்கவரிக்குநிகர்வாரைப்பாடுதனன்றலவே.

42

அலவானினக்குமொழிகுவதொன்றுண்டதுகுடந்தை
வவலானினக்குமிளிரவருமொருவள்ளல்வெற்பிற்
குலவானினக்குநலனாந்தவனெற்குறித்துறுங்கா
னலவானினக்குவெளிப்படலோவுநலமுணரே.

43

நலப்பரியாயமறையான்குடந்தைநகர்புரப்பான்
கலப்பரியாயவளியாதொளிக்குங்கடவுள்பெயர்
சொலப்பரியாயமனந்தமுண்டேத்தித்தொழுதுருகி
யுலப்பரியாயமுதேயெனிலாடலொருதலையே.

44

ஒருதலையாகவமோவிப்பொழிலிலுதையத்தொன்னார்
விருதலையாகவவேடர்செறிவர்வெய்யோன்மறையுங்
கருதலையாகவலாமலின்றேகுகழியயன்மா
றருதலையாகவமான்கும்பநாதன்றமிழ்வரைக்கே.

45

வரைதலையாற்றுவருவானிரவென்றுமாழ்குமங்கை
கரைதலையாற்றுவிடாவின்பந்துய்த்தியெங்காவல்வெண்
டிரைதலையாற்றுவரைநேர்சடைக்கணிசெய்துமிலான்
புரைதலையாற்றுமகிழ்வான்கும்பேசன்பொருப்பகத்தே.

46

அகத்திருப்பாரைமுகத்தாயெனினவரைப்பவத்து
நகத்திருப்பாரையரிக்கண்ணிபாகர்நடுங்குபுர
முகத்திருப்பாரைமுன்னூர்ந்தார்கும்பேசரையுற்றுத்தொழாச்
சகத்திருப்பாரையிரந்தும்பெறீர்மிடிதாக்கப்பட்டே.

47

பட்டாதிசைவரகங்கணமாபணிபாயும்விடை
முட்டாதிசைவரவேயூதியாகுடமூக்கிடமா
தொட்டாதிசைவரவாய்ப்போற்றமேவுநந்தோன்றற்கெனுந்
தட்டாதிசையவரனாமேலின்பாமெனுந்தாழ்குழலே.

48

குழக்கன்றியங்கமுலைபசுவாய்க்கொடுத்தாயெழுமா
முழக்கன்றியங்கநகைபுடைத்தாய்குடமூக்கமர்வாய்
சழக்கன்றியங்கம்மலிகடலானம்புதைப்பத்தென்ற
லுழக்கன்றியங்கமெலிதலுற்றாளென்னொருமகளே.

49

ஒருத்தலரிக்குக்கரும்பொன்செம்பொன்னிற்குடுவொளியே
திருத்தலரிக்குக்கடுப்பாய்வரினும்வெந்தீயவிடம்
வருத்தலரிக்குக்கழித்தாய்சுதைக்கும்பவாணமயக்
கிருத்தலரிக்குக்கரனைச்செற்றாய்நினக்கில்லையொப்பே.

50

ஒத்தவராகவருவாரிலாய்மலரொண்டொடிவாய்
முத்தவராகவலனழித்தாய்குடமூக்கமருஞ்
சித்தவராகவனமுலைமாதுசினந்தகரும்
புத்தவராகவந்தீர்வதெஞ்ஞான்றுபுகலுதியே.

51

புகவெளிதாயமனுமஞ்சதரிருள்போந்ததிங்கல்
குகவெளிதாயபதமூனருந்திக்குறியிடம்வா
னகவெளிதாயதுணர்ந்தேகலாமன்பநப்பொருணூன்
மிகவெளிதாயமையென்றீகும்பேச்சுரர்வெற்பகத்தே.

52

வெற்புக்குமரியவாங்கும்பநாதர்விலங்கலிலென்
பொற்புக்குமரியதோர்மகள்காதற்புணர்ப்பென்றிபோ
ரிற்புக்குமரியவாள்விதிர்போய்நின்னிசைப்பருந்தோள்
வற்புக்குமரியகற்புக்குமீதுவனப்பல்லவே.

53

வனத்தையவாயமலப்பாண்டம்வீழ்முனமால்விடைவா
கனத்தையவாயவினிப்பாய்குடந்தைக்கண்ணாய்மறைவ
சனத்தையவாயவுனையேயுணருந்தவாதவன்ப
ரினத்தையவாயவியான்சேரச்சேர்ப்பித்தினிதருளே.

54

அருளாகரனைமலமாயைகன்மமகழ்ந்தவர்க்கே
பொருளாகரனைவிடுத்தயலேயென்புலன்கள்சென்று
மருளாகரனையடரேவக்கும்பவரதனையே
தெருளாகரனைவரும்வாழ்கவிச்சேணிலத்தே.

55

நிலங்கமலங்கனல்கால்வெளியென்றுநிலாவுயிரென்
றிலங்கமலங்கனல்குங்குடமூக்கினிறையவனை
யலங்கமலங்கனல்காரருளென்னினவ்வாணவநோய்
கலங்கமலங்கனல்கூர்தரவாளுங்கருணையென்னே.

56

கருங்கலசத்தையுவந்தார்குடந்தைக்கண்ணார்சிலம்பி
வருங்கலசத்தையுடையாரின்வேலரடைந்ததொன்றா
மருங்கலசத்தையலையிழந்தாடுயர்மாற்றுதற்கோ
பெருங்கலசத்தைவதைப்பதற்கோவன்னைபேசுகவே.

57

பேசவந்தானலமார்க்கமுள்ளாரினோர்பேதையுள்ளா
ரேசவந்தானலமோநிற்கெனவேகினான்விடம்பூ
வாசவந்தானலமார்குடமூக்கர்வயக்கிடினை
யோசவந்தானலவோவவன்றாழ்புருடோத்தமனே.

58

மனவருத்தத்தையடைந்தோம்புவியைமடந்தையரைக்
கனவருத்தத்தைவிழைந்தேயொழிவதெக்காலமறை
யினவருத்தத்தைமுனிவருக்கோதுகும்பேசரின்பா
கனவருத்தத்தையொருபாகர்தாண்மலர்க்காணம்வைத்தே.

59

ஆணவமாயமலம்பலநாளுமலைக்கப்பட்டேன்
பூணவமாயவிரங்கலெஞ்ஞான்றுபுவனமெல்லாங்
காணவமாயவனையேச்செய்தாய்கும்பக்கண்ணுதலே
யேணவமாயவிவனாவுறுமெனவெண்ணலற்றே.

60

எண்ணம்பலவன்குடமூக்கிறைவனிசைப்பரிய
வண்ணம்பலவன்மனுப்பீடமங்களமாதுபங்கன்
விண்ணம்பலவன்முடியாளன்வெற்பினின்மேனியலாற்
கண்ணம்பலவன்மலர்க்குழலாயுயிர்காற்றுவதே.

61

காற்றருந்தும்பையராப்பூண்கும்பேசர்கடல்கிடக்கு
மேற்றருந்தும்பைதிரப்புவியார்கொன்றையீயுமெனப்
பாற்றருந்தும்பைமதற்கீந்தனர்பயினாணமெனு
மாற்றருந்தும்பையறுத்தெழுமாலென்மனப்பசுவே.

62

மனவிடையாமைமவனையுங்கும்பேசர்வனம்பயிலுஞ்
சினவிடையாமைதவிரெனவாண்டருள்செல்வர்வெற்பி
னனவிடையாமைவரக்கண்டிலஞ்சுற்றிநள்ளிருள்கூர்
கனவிடையாமையனைக்கண்டுங்கண்டிலங்கண்விழித்தே.

63

கண்ணப்பரைவரையாதாண்டவர்கும்பக்கண்ணுதலார்
வண்ணப்பரைவரைமாதொருபாகர்வனச்சடைமேல்
விண்ணப்பரைவரைவெல்லாமெனினும்விழைந்தருளே
பண்ணப்பரைவரைநீழலில்வாழெங்கள்பண்ணவரே.

64

பண்ணஞ்சுமாறுபடச்செயுமாற்றம்பதுமமுகங்
கண்ணஞ்சுமாறுவராகுங்குழலிதழ்கன்னியிய
லெண்ணஞ்சுமாறுமொருநான்கிரண்டொன்றுமெய்தெழுத்தார்
மண்ணஞ்சுமாறுபுனைந்தார்கும்பேசர்வரையிடமே.

65

வரையாரணியமகிழ்வார்கும்பேசர்மதலையொடு
விரையாரணியமலர்கலர்காணரும்வித்தகரா
திரையாரணியவர்க்கேயினிப்பார்தந்திருவருட்டேன் 
றரையாரணியமமருவுவரவர்தாங்கொள்வரே.

66

கொள்ளப்படாதுசிறுகாமமுமதுகொள்ளின்மத
னள்ளப்படாதுவிடுமோகம்பேசரணிமலர்த்தார்
கள்ளப்படாதுகதிரெனுமிந்துகைக்கும்மெனுங்கண்
டள்ளப்படாதுமலர்க்குழல்சோரத்தரைவிழுமே.

67

தரங்கப்ப்ரவையெழுவிடநோக்கிச்சதுமுகன்மால்
குரங்கப்பரவையருளாலஃதுண்குழகர்புவி
யரங்கப்பரவைமுடித்தார்குடந்தையமலரன்பர்க்
கிரங்கப்பரவைபுகுத்தியுயாத்தியெமைவைப்பரே.

68

வையம்படைத்தவரன்றாழ்கும்பேசன்மடங்கருமோ
தையம்படைத்ததிருமால்வடவரைத்தாதுமலர்க்
கையம்படைத்தகைவாகைவில்லான்பொற்கழறொழுவே
நையம்படைத்தகராச்சினக்கூற்றுவனண்ணினுமே.

69

நண்ணாதவரைநணுகாய்குடந்தைநகர்த்தளிவா
ழண்ணாதவரையகலாய்மெய்ப்பாதியணங்குடையாய்
விண்ணாதவரைவிழிபறித்தாயுனைவிட்டுமற்றொன்
றெண்ணாதவரைநிழற்பாற்பயிலினுமென்மனமே.

70

மனமடங்காதுபொறிவழிபோம்பத்திமார்க்கமியங்
கினமடங்காதுநெறிகாட்டவுங்கண்டிலமென்செய்வோ
மனமடங்காதுகுடைமுரசார்ப்பவரம்பையெலாங்
கனமடங்காதுகிழிக்குங்குடந்தையிற்கண்ணுதலே.

71

கண்ணுதலத்தனைவண்குடமூக்கிற்கடவுளைநீர்
மண்ணுதலத்தனையீவானையாழின்வளம்புகழ்வீர்
பண்ணுதலத்தனையும்பழுதென்னுஞ்சொற்பாகனைப்ப
லெண்ணுதலத்தனையேத்தார்பிறப்புமற்றெப்பிறப்பே.

72

பிறவியலைக்கவருந்துகென்றேனிற்பெறுவதற்கா
மறவியலைக்கவலாதுணரேனினையன்றியெவ
னுறவியலைக்கவரிசெய்குடந்தையொருவவண்டு
நறவியலைக்கவருங்கொன்றையாயிந்தஞான்றருளே.

73

அரும்பாதகன்மத்தன்மாறாவெங்கோபத்தனாகமநூல்
விரும்பாதகன்மத்தன்யான்கும்பமேயவவிற்கழல
திரும்பாதகன்மத்தன்மானத்தருவிடஞ்சேர்களத்தே
வரும்பாதகன்மத்தன்பித்தனென்பேர்க்கொப்பவந்தருளே.

74

வந்தித்தலையுந்துதித்தலையும்முளம்வைத்தலையு
நிந்தித்தலையுந்துகில்லேனுறுப்பொடுநீண்மகத்து
முந்தித்தலையுந்துமித்தார்தென்காற்றின்முறுக்கவிழ்பூக்
கந்தித்தலையுந்துநீர்க்குடமூக்கரென்கற்பிப்பரே.

75

கற்பனையத்தனையாதிகும்பேசனைக்காய்மலமா
மற்பனையத்தனையீயும்பிரானையடியவர்க்கே
பற்பனையத்தனைமாமயிலானைப்பண்பார்முகத்தோர்
பொற்பனையத்தனையீன்றானையன்றிப்புகழ்கிலமே.

76

புகழுமலத்தையெடுத்தொன்னலார்நிறம்போழ்தருமா
லகழுமலத்தையுடையவனாகவடிதொழுநா
தகழுமலத்தையனேத்துங்குடந்தைத்தலத்தவின்றே
திகழுமலத்தையுடையானெனவெற்சிறப்பிப்பையே.

77

சிறந்தவருக்கன்மதியழனாட்டச்சிவன்றெளிய
வறந்தவருக்கன்றமையச்சொற்றானறமாயதனை
மறந்தவருக்கன்பிலார்சேர்குடந்தைவரதன்முடி
யுறாந்தவருக்கன்பரிந்தெனையாண்டனனுண்மைசொற்றே.

78

உண்மையறுக்கமிகச்செயுமன்னையரோர்கிலராய்
வண்மையறுக்கமுயல்வார்கும்பேசமகிழ்ந்தெனைவந்
தண்மையறுக்கவுகரநள்ளுற்றாதநங்கனறுந்
திண்மையறுக்கவலாதின்பெனாமைநின்சீரருட்கே.

79

அருகாதவன்பகத்தைத்தெறுமென்றறிந்தாருக்கென்றுந்
திருகாதவன்பகத்தைத்தடிந்தானென்சிறுசொற்குந்தேந்
தருகாதவன்பகத்தைக்கும்வெஞ்சூலன்றண்கும்பத்தைச்சார்ந்
துருகாதவன்பகத்தைப்பெற்றுளாரிடருற்றவரே.

80

உற்றவரையரைவண்கும்பநாதரையொண்புலித்தோல்
சுற்றவரையரையெண்ணாரினங்கைத்துணரொடலை
வற்றவரையரைசூழிப்புனத்திலலைத்தனன்றோ
கற்றவரையரையிந்துவொப்பாநுதற்காரிகையே.

81

காரியங்காதுசுடலஞ்சியத்தகுகானின்று
வேரியங்காதுவலைசெயமேற்றவழ்விண்ணைமக
தூரியங்காதுகுடந்தைப்பிரானைத்தொழாரினிள
நாரியங்காதுமென்றோரேதிலன்பினடந்தனளே.

82

நடலையகற்றிநமைப்புகழ்கல்விநயப்பலென்றா
சடலையகற்றியெனையாண்டுகும்பத்தருளினமர்
விடலையகற்றியறான்புனிற்றாவெனமேவவுந்த
முடலையகற்றியுழல்வார்பரமத்தூமர்களே. (அங)

83

ஊமரும்பாவலராவார்வறியருமுத்தரநற்
றேமரும்பாவலராவாவினிச்செப்பவேண்டுவதேன்
னாமரும்பாவலராவாசவன்றொழுநற்குடந்தைக்
காமரும்பாவலராவாரடிநினைக்கைதொழினே. (அச)

84

தொழுதனையேற்றாமருங்கும்பநாதனைச்சொன்மயல்பூண்
டழுதனையேற்றமருகத்தவனருள்வான்கொலெங்குங்
கெழுதனையேற்றமருவினரேகெழுமக்கொடுப்பான்
பழுதனையேற்றாமருவந்தவேள்செயல்பண்ணலென்னே. (அரு)

85

என்னாயகனைமகராலயநஞ்சிறுத்தகண்ட
பொன்னாயகனையமுன்னங்குழைத்தபுராணமலர்
மின்னாயகனைவிடைசெய்தகும்பவிமலவென்று
பன்னாயகனையறுத்தின்பவீடுபடரநெஞ்சே.

86

படப்பாயலையம்பரம்விரித்தோன்றெழும்பண்ணவர்தோம்
விடப்பாயலையம்பரவேற்றுக்கும்பவிமலர்வெற்பி
னடப்பாயலையம்பரம்புவிபோர்த்தனநண்ணருங்கான்
கடப்பாயலையம்பரக்கண்ணோடும்வைகிக்காலையிலே.

87

காலையம்போருகமேகமுகங்குழல்கண்கடுவா
ழாலையம்போருகமேவாரைநோக்கபயன்பைதிரஞ்
சோலையம்போருகமேயதென்பாய்துயர்நீர்நொடியும்
வேலையம்போருகமேகும்பநாதனைமேவிலர்க்கே.

88

மேவாதவரைவிழையார்கும்பேசவிமலர்வலி
தாவாதவரைவளைத்தாருருக்கண்டுதண்மதிகண்
டோவாதவரைவிடுத்தாரெவரெனுமோர்மதன
னாவாதாவரைவளைப்பதென்னோவெனுமாயிழையே.

89

ஆயத்தவரைமறந்தாளெனையுமறமறந்தாள்
சேயத்தவரையறையில்வெப்புந்தெளியாள்புரங்கண்
மாயத்தவரைவளைத்தகும்பேசர்வரையிலய
னேயத்தவரைமதித்தேகினாளென்னிரைவளையே.

90

வளையவளையவரம்பார்செய்வேழம்வளைத்தனன்வே
ளிளையவளையவமேகொல்லுவானெவன்செய்வளின்பம்
விளையவளையவருளுங்கும்பேசவிரும்புமன்ப
ருளையவளையவயவிடையாயெங்களுத்தமனே.
மன்னவராகமதாணிவலாரிமலரயன்மான்
முன்னவராகமதித்துழலாங்குடமூக்கின்மணி
யன்னவராகமநூல்கொண்டறிவதறிந்தடங்கி
நன்னவராகமலரடிக்காட்செய்நசையினமே.
இன்னம்பரம்பரவாயவர்நேயவிருங்குடந்தை
நன்னம்பரம்பரவாயவனியைநடாத்தினவ
ருன்னம்பரம்பரவாயமன்சேர்முனென்றோதுறின்வை
மன்னம்பரம்பரவாயகண்ணோடும்வந்தாளுவரே.
ஆளாயமைதலையெண்ணாவிருவரடிமுடிதேர்
கோளாயமைதலைவென்றுழல்வேங்கும்பகோணமமர்
காளாயமைதலைசாயப்பொலிகவின்றோட்கருங்கண்
வாளாயமைதலையாகாதிடங்கொண்டவானவனே.
வானவரம்பரையாண்டாருலாக்கொண்டுமாண்டபத்தி
யானவரம்பரைதாங்குடமூக்கரடிமையுறின்
மோனவரம்பரை யோடும்வந்தீபவர்மூன்றுதலைத்
தான்வரம்பரையேத்தாரிருத்தலிற்சாதனன்றே.
சாத்திரமோதியளவுணர்ந்தேமிருதன்மைபடப்
பாத்திரமோதியமென்பதனாலெவன்பன்னிரண்டு
சூத்திரமோதியமைந்துகும்பேசற்றொழுதுருகி
யேத்திரமோதியமண்ணீரிடரிரியீருண்மையே.
உண்மையவாவியநாயேனுறும்வகையுற்றமலத்
திண்மையவாவியவென்றாளுநாளென்றுதேர்வரிய
நுண்மையவாவியசெவ்வியன்மேனிநுவலொருபாற்
பெண்மையவாவியதென்குடமூக்கிற்பெருந்தகையே
தகைத்தலையாற்றுதிநேர்மலநாளுந்தகச்செயுந்தோ
முகைத்தலையாற்றுதியார்தொழவாழ்குடச்மூக்கிறைவா
நகைத்தலையாற்றுதிதாராக்கினாயென்னலிபிறவி
யகைத்தலையாற்றுதிநின்வசத்தாக்கென்னறிவினையே.
வினையகலாமதியாப்பரமார்க்கவிழைவகற்று
மனையகலாமதியாதாங்குடந்தையனையிடத்தங்
கனையகலாமதியார்முடியாள*மூக்கண்ணவென்ற்றேத்
தினையகலாமதியார்க்குஞ்சமார்கஞ்செறிப்பதற்கே
பத்திக்கணங்கணமேனும்விடாதுபடர்குடமூக்
குத்திக்கணங்கணந்தோமறநோக்கியுங்கும்பிட்டுய்வாங்
கத்திக்கணங்கணவென்னவொர்பானல்குகாரணனெம்
புத்திக்கணங்கணவப்பதித்தான்றன்பொற்பூவடியே

 

திருக்குடந்தைத்திரிபந்தாதி முற்றிற்று.

Related Content