logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருத்தில்லை யமகவந்தாதி

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் 
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் 

Thiruththillai yamakavandhathi - mahavidwan sri minatchisundharam pillai avarkal composition



கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
 

கற்பகவிநாயகர் துதி.

1709.

கற்பகப்பாவடிவாரணம்பாற்கடந்தோன்செந்தமிழ்க்
கற்பகப்பாவடிவாரணங்கண்டவர்கோனருள்வி
கற்பகப்பாவடிவாரணங்கார்மலர்க்காமொய்தில்லைக்
கற்பகப்பாவடிவாரணம்யான்பெறக்காட்டிடுமே.

 

 

நூல்.

1710.

திருவம்பலவமருந்தடையுந்தபச்சேர்தரும்பி
திருவம்பலவமருந்தநெஞ்சேசிவஞானத்தின்மு
திருவம்பலவமருந்தடஞ்சோலைதிகழுந்தில்லைத்
திருவம்பலவமருந்தனையாற்றுதிசெய்தினமே.

1

1711.

தினந்தினமேவரியாரம்பலஞ்சிந்தியோஞ்செழுமுத்
தினந்தினமேவரியாரம்பணைத்தில்லைசேர்ந்திலம்பத்
தினந்தினமேவரியாரம்படாமுலைசேர்விருப்பத்
தினந்தினமேவரியாரம்பனீயென்றுதேர்வரின்றே.

2

1712.

இன்னம்பரம்பரனேகதங்காவதத்தீசர்தில்லை
இன்னம்பரம்பரனேர்விழிபாகரென்பார்க்கிறையே
இன்னம்பரம்பரனேபிறைதோணிகொலென்னமுடி
இன்னம்பரம்பரனேதுயராதருளின்னருளே.

3

1713.

அருகாதவத்தலைவாதில்லையம்பலத்தாடியடி
அருகாதவத்தலைவாரொடுறாதருள்வாயெனக்கும்
அருகாதவத்தலைவாசிகையாயென்றறைவல்புத்தா
அருகாதவத்தலைவாவென்பிரேலுமையாட்டுவனே.

4

1714.

வனசங்குவளையலர்பணைசூழ்தில்லைவாணவென்செய்
வனசங்குவளையலர்படராவகைமாற்றுங்கழல்
வனசங்குவளையலர்பயிலேநலம்வாடுறப்பாய்
வனசங்குவளையலர்படுவீரையும்வாய்விடுமே.

5

1715.

வாய்ப்பணியாகமஞ்சாரருணெக்குமனநனிநை
வாய்ப்பணியாகமஞ்சாற்றியவாசெய்வர்மாண்பினரை
வாய்ப்பணியாகமஞ்சார்பொழில்சூழ்தில்லைவாணநின்றாள்
வாய்ப்பணியாகமஞ்சாலாச்சிலர்கருவன்றலையே.

6

1716.

தலைமாலையாவம்பதிதில்லையாய்வளியைத்தழன்மு
தலைமாலையாவம்பயிலேச்செய்தாய்சந்தக்கால்கொடுமு
தலைமாலையாவம்பலர்மொழியாதழலம்புவிம்மு
தலைமாலையாவம்பலையென்றுநீங்குமென்றார்க்குழலே.

7

1717.

தாராதரிக்குமழும்விழுஞ்சோருந்தனிமதிதண்
தாராதரிக்குமழுவமுஞ்சீறுந்தமியுணர்போர்த்
தாராதரிக்குமழுங்கச்செயுமெங்கடையலைக்கே
தாராதரிக்குமழுவாவருடில்லைத்தற்பரனே.

8

1718.

பரமாதவர்பணிநாடர்பொன்னாடர்பதுமர்பொன்னம்
பரமாதவர்பணிநாதபொல்லார்கரும்பாரிடையம்
பரமாதவர்பணிநாவடையாவகைபாலிப்பதோர்
பரமாதவர்பணிநாகமென்பாதில்லைப்பண்ணவனே.

9

1719.

வனவலங்கற்புயமாயோனெஞ்ஞான்றும்வணங்குதில்லை
வனவலங்கற்புயர்மாதுறையாதிடம்வைத்தவயவ்
வனவலங்கற்புயனேர்குழற்பேதைக்குமன்மதன்செய்
வனவலங்கற்புயங்கத்துயிர்ப்பாய்த்தென்வளிநந்துமே.

10

1720.

நந்தாதரத்தகரவித்தையோசெயுநாடகத்தால்
நந்தாதரத்தகரவித்தையற்கஞர்நன்கருள்வாய்
நந்தாதரத்தகரவித்தையார்கணயக்கவென்றா
நந்தாதரத்தகரவித்தைமன்றுணடிப்பவனே.

11

1721.

பவளங்கருமையனேரெனுமேனிப்பயல்வரையுற்
பவளங்கருமையனேயெனநல்குபண்பாமகளென்
பவளங்கருமையனேயகறில்லைப்பதிநிகரின்
பவளங்கருமையனேகங்கொன்றாலும்பயத்தலின்றே.

12

1722.

இன்றாதரங்கம்புரைபவமுற்றதினுமொழிந்தது
இன்றாதரங்கம்புரைபடையம்பவிரும்பொழிற்பூவ்
இன்றாதரங்கம்புரைவானதிச்செயுமேர்கொடில்லை
இன்றாதரங்கம்புரைதீர்மன்றாவருளெற்கடிக்கே.

13

1723.

கடவாரணங்கடையார்ப்பமண்ணாள்வரொண்கட்டிரும
கடவாரணங்கடையார்பின்கலப்பர்கதிபரியாக்
கடவாரணங்கடையார்புரந்தீத்தகணைமெய்முலைக்
கடவாரணங்கடையார்ச்சடையார்தில்லைகண்டவரே.

14

1724.

கண்டங்கரியன்றுவர்மேனியன்றில்லைக்கட்பொலிவோன்
கண்டங்கரியன்றுசாராதபாதன்கரிசறுத்தென்
கண்டங்கரியன்றுதிவெற்பர்பொய்த்தனர்கட்டுரைய
கண்டங்கரியன்றுகொல்லோவித்தெய்வமுங்கார்க்குழலே.

15

1725.

காக்கைக்குளவிடைமாறின்றிவருங்கதியெனவங்
காக்கைக்குளவிடைமாறும்பவமன்றுகைதொழின்மண்
காக்கைக்குளவிடைமாவாய்கழுமலங்காசிகச்சி
காக்கைக்குளவிடைமாமருதூருங்கலந்தவனே.

16

1726.

கலங்காமரிக்குமயற்குமெட்டான்கொன்றைகண்ணுறினி
கலங்காமரிக்குமயற்குணநிற்குங்கரத்துவளைக்
கலங்காமரிக்குமயற்குலப்பேச்சுங்கழியுமயங்
கலங்காமரிக்குமயற்குதவிற்றில்லைக்காரிகையே.

17

1727.

காரிகையாதவவியாக்கியதில்லைக்கண்ணிருவி
காரிகையாதவன்பல்லுகநீட்டியைக்காமுற்றெங்கள்
காரிகையாதவநோமேயுயிர்த்தென்னைக்காய்வதுசங்
காரிகையாதவமோவென்றுவேண்முன்கரைதருமே.

18

1728.

கரவரைக்கொன்றடியார்க்கருடில்லைக்கடவுட்குநீள்
கரவரைக்கொன்றடியாரதள்போர்வையொண்காம்பினைநி
கரவரைக்கொன்றடியார்நகத்தோலுடைகண்டுமா
கரவரைக்கொன்றடியாவுலேர்மகள்காமுறுமே.

19

1729.

காமாவடுவனவம்பகத்தாள்பங்கன்கஞ்சம்வில
காமாவடுவனவம்பகலற்கருங்கண்ணிதருங்
காமாவடுவனவம்பகமன்றணுகாரின்மயங்
காமாவடுவனவம்பகலாயிக்கடையைவிட்டே.

20

1730.

கடையாவஞ்சாவரும்பப்புரிவாரிகரியவன்வென்
கடையாவஞ்சாவருமேவானைக்காலிற்கடுங்கண்டகங்
கடையாவஞ்சாவருந்தாவுழல்வேன்மன்றிற்கண்டுதொழேன்
கடையாவஞ்சாவருகென்றுவெங்கூற்றங்கடுகுமுன்னே.

21

1731.

கடுகத்தனையன்புரிகடும்போர்கணிறைத்திடவ
கடுகத்தனையன்புலையேன்விண்ணோர்கழியாதயின்றான்
கடுகத்தனையன்புலியூரன்குஞ்சிதக்கான்மலர்க்குக்
கடுகத்தனையன்புமில்லேனெவ்வாறுகதியுறலே.

22

1732.

கதங்காமநந்தியங்காமம்மர்தீர்ந்தருட்காப்பிடையே
கதங்காமநந்தியங்காதுமுண்டோவினைகாலைச்சுற்றங்
கதங்காமநந்தியங்காவறடாதுமெய்காட்டொழியங்
கதங்காமநந்தியங்காவிமன்றாகறைக்கண்டத்தனே.

23

1733.

தனக்கோங்கரும்புமடவார்முயக்கிற்றலைப்பட்டுநந்
தனக்கோங்கரும்புவிலானிலென்பீரத்தருக்கதெனுந்
தனக்கொங்கரும்புகர்தீர்வதென்றோசிற்சபைநடிப்பான்
தனக்கோங்கரும்புகழ்வாசிகையாற்குச்சரண்புகுமே.

24

1734.

சரம்பலவாணன்றென்றிக்கிறையென்னவெய்தார்வெஞ்சித்த
சரம்பலவாணன்றென்கார்தாங்குகூடற்றலைவனுயிர்ச்
சரம்பலவாணன்றென்கான்முழவாபடைகங்களம
சரம்பலவாணன்றென்றேத்துபொற்பாதன்றரான்கொன்றையே.

25

1735.

தரையாவிரதந்தடவரையாதவர்தாபதமா
தரையாவிரதந்தபுத்ததென்பாவணிதாரெனும்பந்
தரையாவிரதந்தவிர்முத்தர்வம்மின்சபைக்கென்றுகந்
தரையாவிரதந்தரநடிப்பாய்மகடற்கிரங்கே.

26

1736.

இரங்காதமரவடியார்பணிசெய்திலமென்றொராய்
இரங்காதமரவடியார்கொலென்னவெங்குந்திரிந்தெய்த்து
இரங்காதமரவடியார்மலர்தருமீர்ந்தில்லைசேர்ந்து
இரங்காதமரவடியார்வெஞ்சூலவென்னேமென்னிரே.

27

1737.

ஏதாயினுமினியாயறநல்கென்றிரப்பநல்க
ஏதாயினுமினியாயமென்பாரிலையென்பரிறை
ஏதாயினுமினியாயம்புயலிவரிற்றில்லையைய்
ஏதாயினுமினியாயகற்றப்புல்லிணக்கமதே.

28

1738.

தேவாரமாதிருவாசகமாயைசெறேனடைந்தேன்
தேவாரமாதிருவாசகமாசெயுஞ்செய்யுள்குயத்
தேவாரமாதிருவாசகமாறெழுந்தில்லையமு
தேவாரமாதிருவாசகமாற்றிச்சிற்றம்பலத்தே.

29

1739.

அம்பலவவம்பலவாகதிர்க்கழித்தாயெனுநேய்
அம்பலவாவம்பலவாகுளிரெனுமாய்மணமீது
அம்பலவாவம்பலவாவெனவிண்ணறைபொழில்சூழ்
அம்பலவாவம்பலவாவெனுமெம்மருமணியே.

30

1740.

மணக்கோலஞ்செய்யதிருமேனியார்செய்யவந்திலர்வேண்
மணக்கோலஞ்செய்யவருமேபவமெனுமைக்குழம்பு
மணக்கோலஞ்செய்யமருமனஞ்சூழ்தில்லைவாழ்த்திலராய்
மணக்கோலஞ்செய்யநல்கூர்ந்திருப்பாரின்மதித்தெனையே.

31

1741.

மதியாதவனங்கிவாள்விழியாய்நல்வழிச்செலச்சம்
மதியாதவனங்கிநீயங்கம்யானெனும்வாய்மையையுண்
மதியாதவனங்கிரிக்கீழுறமன்றவாணவருண்
மதியாதவனங்கிளர்மறையோன்றெழுமாநடனே.

32

1742.

மானநந்தாதவிரகர்கள்வாழ்தில்லைவாணவிழி
மானநந்தாதவிரகவிதழ்க்குழல்வாமவிலா
மானநந்தாதவிரகருண்மேயமன்னாகுழைச்சு
மானநந்தாதவிரகம்பிரமவழியெனக்கே.

33

1743.

என்றாமதியாதவன்சுடக்காரணமெற்குநலம்
என்றாமதியாதவன்மதன்பூங்கணையீருமினி
என்றாமதியாதவன்மணிகண்டனிங்கெய்தத்தடை
என்றாமதியாதவன்றாழ்மன்றன்னளிரங்குறுமே.

34

1744.

இரங்கத்தனித்தனியாயமென்னோவென்னிடத்தினும்வய்
இரங்கத்தனித்தனியாயதன்முற்குறிலேய்பவனுய்
இரங்கத்தனித்தனியாயமன்றெண்ணலரிற்பதியாய்
இரங்கத்தனித்தனியாயமிலான்பின்மினேகினளே.

35

1745.

நள்ளாறுதிக்குமகிழ்பதியார்தில்லைநாடகமால்
நள்ளாறுதிக்குமயிர்மாலைத்துத்தநகைமுத்தநீர்
நள்ளாறுதிக்குமறல்குழல்வேல்கணகுநலத்தி
நள்ளாறுதிக்குமரிக்கோடுகொங்கைநண்பாநங்கைக்கே.

36

1746.

நங்கைக்கரியவரமார்பன்றாழ்தில்லைநன்னகர்ம
நங்கைக்கரியவரதனம்போலுநடநவில்வோன்
நங்கைக்கரியவரநேர்கட்கொங்கைநன்றென்றுவந்தூர்
நங்கைக்கரியவரஞ்செய்யுமாலையுநன்குதந்தே.

37

1747.

தந்தவரைவரையாருமையைச்செய்தகுமறைவி
தந்தவரைவரையானனர்வாரித்தடஞ்சிலைமி
தந்தவரைவரையாதாண்டவர்தில்லைத்தாண்டவர்தோந்
தந்தவரைவரையாம்வெலநல்குவர்தாம்வரமே.

38

1748.

வரநகரம்பதம்வன்னிமப்பூதம்வயிறுவநல்
வரநகரம்பதம்பூண்டோள்சிதுடிவதனமிந்தீ
வரநகரம்பதம்பாலிக்குந்தில்லைவண்கைமுடிய
வரநகரம்பதம்போல்வானில்லான்மன்றவாணனுக்கே.

39

1749.

வாளாவிருந்தவர்தூற்றுவராமுண்மடலுமுடை
வாளாவிருந்தவர்வாங்குவனாமதன்வைதுமுனி
வாளாவிருந்தவர்கேட்பவுமன்னைநின்மாலைமணி
வாளாவிருந்தவர்காளெனுந்தில்லைமன்னாதரினே.

40

1750.

தருக்கம்பலவிடவாய்கொடுபேசுவந்தாழ்குழன்மா
தருக்கம்பலவிடவாண்மைவிழியென்றுசாற்றுவமுத்
தருக்கம்பலவிடவார்முலையாய்மறைதன்முடியில்
தருக்கம்பலவிடவாவெங்ஙனேகதிசாருதுமே.

41

1751.

சாரம்பலமுறைநூலுமிதேயெனச்சாற்றுமென்வி
சாரம்பலமுறைவேடரிற்கூடித்தளர்மனமா
சாரம்பலமுறையார்சிவகங்கைத்தடம்படிதி
சாரம்பலமுறைசாங்காறுங்கூத்துத்தரிசித்திடே.

42

1752.

சிற்றம்பலங்கண்டுபோற்றேன்மின்னார்கள்செவ்வாய்தருமெச்
சிற்றம்பலங்கண்டுபோலக்கொள்வேன்சிந்தையுந்திகைத்தெஞ்
சிற்றம்பலங்கண்டுமுன்னாண்டுகோடிசிலைச்சிலைக்கோர்
சிற்றம்பலங்கண்டுயர்படையாற்செய்தசேவகனே.

43

1753.

கனக்கந்தரத்தனமலைபங்காளன்களிமயில்வா
கனக்கந்தரத்தனமலைக்குநீர்த்தில்லைக்கண்விடைப்பா
கனக்கந்தரத்தனமலைநதியற்கைத்தார்புனன்மு
கனக்கந்தரத்தனமலைபுன்காடிக்கலைபவரே.

44

1754.

கலையாவனவளவாத்தில்லையாய்கமழ்குங்குலியக்
கலையாவனவளவாழ்மனைச்செல்கைதொடுவெனப்பு
கலையாவனவளவாவுதியாகைதவாவிடவுள்
கலையாவனவளவானினைச்சார்ந்தெனைக்காத்தருளே.

45

1755.

காதரங்காதரமாயமின்னார்கண்புரியமயங்
காதரங்காதரமாதர்கள்சூழ்தில்லைக்கண்டிசைமு
காதரங்காதரமாநிலமாக்குதிகாவென்வளைக்
காதரங்காதரமாய்நமையாள்வர்கருதுநெஞ்சே.

46

1756.

கருமங்கருமங்கணம்பரமாககழியக்கழுவுங்
கருமங்கருமங்கணம்பரமாகடிந்தாண்முகினி
கருமங்கருமங்கணம்பரமாகலைமான்றிசைமு
கருமங்கருமங்கணம்பரமாகம்பலக்கனியே.

47

1757.

கனியக்கனியமனந்துதியாங்கைதொழாமெங்ஙன்றீக்
கனியக்கனியமனந்தும்பதன்றில்லைக்கண்ணமர்நக்
கனியக்கனியமனந்துயிர்யாவையுங்காமரிடக்
கனியக்கனியமனந்துடியான்கடுங்கோதெமக்கே.

48

1758.

கோவாகுளத்துமுழுமுதலேபொறிக்கூட்டநலங்
கோவாகுளத்துமுழுவயற்சோற்றுங்குழையுமைய
கோவாகுளத்துமுழுவலன்பீந்துகைக்கொண்டருள்வேட்
கோவாகுளத்துமுழுகென்றதில்லைக்குணமலையே.

49

1759.

மலையானிலங்கம்பலவுடைப்பாம்பின்வருமெவரோ
மலையானிலங்கம்பலராயென்றேவினர்வாடும்வெண்க
மலையானிலங்கம்பலமில்படையான்வணங்கிடத்த
மலையானிலங்கம்பலநடங்கண்டமடமயிலே.

50

1760.

மடங்கலையாதரியாநிறப்பூண்பன்றிவன்கொம்புக
மடங்கலையாதரியாப்புலித்தோலிடமன்றுகண்டு
மடங்கலையாதரியானானைமேவுவள்வன்னியின்மும்
மடங்கலையாதரியாதேகுமோமதன்வாளிகளே.

51

1761.

வாளம்பரவையகிலம்பணிமன்றவள்ளுகிர்தோல்
வாளம்பரவையகிலம்படாதுவன்றொண்டர்முனி
வாளம்பரவையகிலம்படாமுலைவாழ்வித்தவா
வாளம்பரவையகிலம்பராவுமெய்வாழ்வருளே.

52

1762.

அருத்தமருத்தமென்றேயுழல்வேந்துப்பொரைம்பொறிக்கும்
அருத்தமருத்தமென்றேரிற்புரியுமென்னாமுதனூல்
அருத்தமருத்தமென்றேங்குழல்பாகரடியர்க்கெளிய
அருத்தமருத்தமென்றேய்மன்றிற்கூத்தென்றருளுவரே.

53

1763.

வருந்தவருந்தநமன்செறுமென்னமலத்துவெய்ய
வருந்தவருந்தநமன்றதுவாமுன்மண்ணீர்கொண்மின்றே
வருந்தவருந்தநமன்றோழமன்றும்வட்காருயிர்க
வருந்தவருந்தநமன்னாப்பொன்னாவெனெம்மான்றுணையே.

54

1764.

மானம்பரம்பரமென்றொழிப்பார்கண்மருங்குன்முலை
மானம்பரம்பரவோங்கலொப்பார்பொதுமாதரில்வா
மானம்பரம்பரவாயொருவாதுறைமாட்சியினம்
மானம்பரம்பரன்வான்றில்லையோவவர்தம்மதிக்கே.

55

1765.

தமனியமன்றமலரோன்முனோர்தொழத்தானிற்குமுத்
தமனியமன்றமர்வ்ந்தெனைப்பற்றத்தடுத்திவன
தமனியமன்றமச்செய்கையிலாளில்ற்றாழையுமங்க
தமனியமன்றமற்றென்னாதுதான்செயும்பேரருளே.

56

1766.

பேரம்பலம்பலகாற்சூழ்தரேம்பித்தடிமையென்றும்
பேரம்பலம்பலங்கோதியிவணின்றுபேரெனினும்
பேரம்பலம்பலமாவிச்சித்தேமுதற்பின்னடைநாப்
பேரம்பலம்பலவீன்பொழிலூர்தில்லைபெற்றபொன்னே.

57

1767.

பொன்னம்பலவன்மலக்கருங்குன்றைப்பொடித்திநிறப்
பொன்னம்பலவன்மலர்கதிராழிப்புவியிரத
பொன்னம்பலவன்மலர்க்குழல்பாகவென்னாம்புலியூர்ப்
பொன்னம்பலவன்மலங்கொழித்தீயுங்கொல்பொற்பதமே.

58

1768.

பதஞ்சலியாதவனேர்விளங்கும்புலிப்பாதர்தொழப்
பதஞ்சலியாதவனேநடித்தற்குன்பதமென்றுவாய்ப்
பதஞ்சலியாதவனேராக்கைதீயதுபாழ்மனமென்
பதஞ்சலியாதவனேசிப்பவென்றுகண்பார்த்தருளே.

59

1769.

பாரத்தனமலைபாகனசொற்கமையாசைபற்றென்
பாரத்தனமலைபாகனல்லேன்முதற்பாற்சுவடை
பாரத்தனமலைபாகனடாவுடபரியிரதப்
பாரத்தனமலைபாகனமன்றன்பரிவதென்றே.

60

1770.

பரவரியக்கவணங்கேமுகில்கற்பறையரியம்
பரவரியக்கவணங்கேசெயலெழும்பற்றுடைப்பொற்
பரவரியக்கவணங்கேள்வரெய்தப்பகழிகலம்
பரவரியக்கவணங்கேடின்மன்றற்பரவுதுமே.

61

1771.

பரமானந்தத்தையனாக்கொண்டெல்லாம்படைப்பானுமற்றம்
பரமானந்தத்தையநடுக்கட்சொற்றிருப்பண்பனுந்தா
பரமானந்தத்தையயர்வானென்பானும்பற்றாவெனக்கும்
பரமானந்தத்தையருள்வானுந்தில்லைப்பதிப்பரனே.

62

1772.

பரவம்பரவத்தவரோடுறவும்பண்ணேங்கடுவெப்
பரவம்பரவத்தவறடைவார்ப்பற்றுவாமன்றநம்
பரவம்பரவத்தவத்தலைவாவம்பலவபொன்னம்
பரவம்பரவத்தவர்சிலையாயென்றும்பாடிலமே.

63

1773.

பாடகந்தண்டையலையுணவென்னுட்பதிபதம்பூண்
பாடகந்தண்டையலைவாமம்வைத்தவன்பல்புலவோர்
பாடகந்தண்டையலைமோதிண்டைத்தடம்பாவுதில்லைப்
பாடகந்தண்டையலைநமன்றோன்றுமுன்பற்றினனே.

64

1774.

பற்றினகரனுக்குத்தகரப்புரிபண்பற்குமான்
பற்றினகரனுக்குத்தகரய்யனப்பற்குத்தில்லைப்
பற்றினகரனுக்குத்தகரக்குழல்பாகற்கெனம்
பற்றினகரனுக்குத்தகரற்கிதப்பட்டனனே.

65

1775.

பட்டவம்போருகந்தானங்கொடில்லைப்பரமநுதற்
பட்டவம்போருகந்தானடக்காக்கயம்பைத்தவிழும்
பட்டவம்போருகந்தானடல்வேளென்படுமயிலூர்
பட்டவம்போருகந்தானறைந்தாலும்படுதலின்றே.

66

1776.

தலத்ததிகம்பரஞானமயசிற்சபையென்றுநு
தலத்ததிகம்பரவூண்படைபள்ளியன்றாழுங்கண்ணு
தலத்ததிகம்பரவோரேனுயவிவ்வுயிர்தழற்பா
தலத்ததிகம்பரமில்லதென்றாளத்தகுநினக்கே.

67

1777.

தகரானனந்தக்கனுக்கியைத்தான்கலர்தம்மலக்கல்
தகரானனந்தக்கவின்மன்றன்வெற்பிற்றவர்கழைப்பா
தகரானனந்தக்கடுமாவழங்குந்தனிவழிப்போ
தகரானனந்தக்கவர்வருவாரென்கொல்சாற்றுவதே.

68

1778.

சாதனமாயவைநன்றினிலேனைச்சமனடவஞ்
சாதனமாயவைவேல்விழியார்மயற்றாழ்தருநெஞ்
சாதனமாயவைதாநரகென்னுமுனஞ்சத்தியோ
சாதனமாயவைதென்புலியூரநின்றண்ணருளே.

69

1779.

தண்டாதரித்தநமனென்னையாண்முன்றடவரைக்கோ
தண்டாதரித்தநமப்பவுண்ணென்றளித்தாய்வெள்ளிவே
தண்டாதரித்தநமன்பணைசூழ்தில்லைச்சங்கரவோ
தண்டாதரித்தநமக்களைந்தாளுகைதக்கதுவே.

70

1780.

வேதப்பரியவிலங்கஞ்சப்பாகன்விடுவையஞ்சு
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகஞ்சொன்மின்விடைத்தே
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகண்டபுண்ணிலருள்
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகஞ்செய்மன்றத்தனே.

71

1781.

மன்றலங்காரப்புரிசடையாரிமவான்மகளை
மன்றலங்காரப்புரிபரனாரிருண்மாய்தரவ
மன்றலங்காரப்புரிதில்லையாரெனைவைப்பரிய
மன்றலங்காரப்புரிதலந்தீர்த்தருள்வான்றலமே.

72

1782.

வானம்பவனந்தனஞ்சயனீர்குவலயமுமா
வானம்பவனந்தனஞ்சயன்மான்மடியாமலயில்
வானம்பவனந்தனஞ்சயஞ்சூழ்தில்லைமன்னிவளர்
வானம்பவனந்தனஞ்சயற்போய்வைப்பன்மன்னருளே.

73

1783.

மனம்பாலனையமடமொழியாரிடைமாழ்குறக்கா
மனம்பாலனையமடங்காத்துயரின்மன்னாமலிய
மனம்பாலனையமடங்கலிற்சீறிவருமுனைங்கை
மனம்பாலனையமடற்கொன்றையாயென்பமன்றஞ்சென்றே.

74

1784.

மனம்பாவரியம்புயங்கநின்றாளிற்பொன்மாதரிற்க
மனம்பாவரியம்புயங்கறைகேட்பமுய்வாங்கொல்பொறி
மனம்பாவரியம்புயங்கடுக்கைப்பரமன்றப்பெரு
மனம்பாவரியம்புயங்கலந்தாற்கருமாமணியே.

75

1785.

மாதங்கமடங்கல்சேர்வழிநள்ளிருள்வாய்ப்பொறைமண்
மாதங்கமடங்கல்வாயரவொப்பர்வருவர்கொல்பூ
மாதங்கமடங்கல்விச்சாலையார்தில்லைமன்சுரர்த
மாதங்கமடங்கல்பூண்பவன்காளத்திமால்வரைக்கே.

76

1786.

வரைவனஞ்செய்யுந்தடமுஞ்சுலாங்கமலைவன்குற
வரைவனஞ்செய்யுந்தடங்கழுக்குன்றுறைமன்றுடையான்
வரைவனஞ்செய்யுந்தடவுவில்லாயினிமாழ்கவுனை
வரைவனஞ்செய்யுந்தடக்கெனையுவ்வுமொய்வார்முரசே.

77

1787.

வாரிக்குவளையும்வண்ணம்பயின்றுமதன்பன்மலர்
வாரிக்குவளையும்வண்ணம்படப்பெய்வதுசொல்வரு
வாரிக்குவளையும்வண்ணம்பதமென்வன்மூரியருள்
வாரிக்குவளையும்வண்ணம்பயின்மறைமன்றடைந்தே.

78

1788.

அடையம்புயங்கலந்தானச்சுதற்குமரியநின்றாள்
அடையம்புயங்கலந்தானரவாய்பவவாரழல்வாய்
அடையம்புயங்கலந்தானஞ்சலென்றருளையநின்கை
அடையம்புயங்கலந்தானங்கொளிங்கென்றருண்மன்றனே.

79

1789.

அரும்பாவருந்தனமாகமுளைத்திலவம்பன்முல்லை
அரும்பாவருந்தனமாகண்டிலாளயலான்பின்புதீய்
அரும்பாவருந்தனமாகக்கொள்ளாமன்றத்தாடியமர்
அரும்பாவருந்தனமாகவினூரடைந்தாள்சுரத்தே.

80

1790.

தேயம்பலதிரியாக்கவன்றாட்டியர்சேற்கணரந்
தேயம்பலதிரியாக்கடிவேலென்றுதேடிப்புனைந்
தேயம்பலதிரியாக்கடையேஞ்செல்லற்செல்வமமு
தேயம்பலதிரியக்கவைதோங்கோறிருத்துவையே.

81

1791.

திருத்தாதடிமைதவத்தேம்புதலுந்திருவருளோ
திருத்தாதடிமைதவச்சிரஞ்சூட்டுசிறப்புறுமெய்த்
திருத்தாதடிமைதவமாக்குதிசிவகங்கையெனுந்
திருத்தாதடிமைதவழ்மாடத்தில்லைச்சிவக்கொழுந்தே.

82

1792.

சிவசிவசங்கரவைம்முகவென்றன்பர்சேர்தில்லைவ
சிவசிவசங்கரவைம்பொறியாமுருடீரக்கொல்வ
சிவசிவசங்கரவைப்பூணியததுசேர்தரநே
சிவசிவசங்கரவையவென்முன்னாந்தெளிமனமே.

83

1793.

நம்பனையன்றினகரன்பல்வீழ்த்தகைநாயகன்வா
நம்பனையன்ரினரூரெரித்தானடமன்றிற்கண்டாள்
நம்பனையன்றினல்லார்கள்பல்லோரலர்நாட்டுறத்தி
நம்பனையன்றினகக்கூவவாடுமிந்நன்னுதலே.

84

1794.

தலையரியக்கவலார் தனக்கில்லவன்றாம்பெறும
தலையரியக்கவலார்கோன்மன்றன்சரம்பூண்பொன்முடித்
தலையரியக்கவலார்புனலாற்கிணர்த்தாழ்குழல்கா
தலையரியக்கவலார்முலையாய்சென்றுசாற்றுகவே.

85

1795

கவியமகந்திரிவாப்பிறவாக்கழறாநரர்பாற்
கவியமகந்திரிவாச்சிறுதெய்வங்கருதமுழங்
கவியமகந்திரிவாரழலார்புகைகாண்மயில
கவியமகந்திரிவான்பொழிற்றில்லைமன்காதலமே.

86

1796.

காதற்பரவையகம்படிவேமறங்காய்ந்திலநீங்
காதற்பரவையகம்பயில்வேமெங்ஙன்கார்க்குழல்பங்
காதற்பரவையகம்பணிதில்லைக்கண்மேயகுழைக்
காதற்பரவையகம்பங்கொல்வேங்கடுங்காலன்முன்னே.

87

1797.

முனிவருமானந்தக்கூத்தம்பலத்தன்புமுற்றுமிரு
முனிவருமானந்தக்கூப்பிக்கையேத்தச்செய்முத்தகுழை
முனிவருமானந்தக்கூர்விழிபாகமொய்க்கூற்றமெனை
முனிவருமானந்தக்கூடன்றியாவர்க்குமூத்தவனே.

88

1798.

மூவாயிரவருந்தானவன்வாழ்முடியாய்முன்கைசேர்
மூவாயிரவருந்தாழ்வில்சொற்பேசச்செய்மொய்யன்புக்கொண்
மூவாயிரவருந்தாவுணவீரென்முதல்வமன்றுண்
மூவாயிரவருந்தாழநின்றாயருண்முத்தியின்பே.

89

1799.

முத்தரும்பாவருமந்தண்டுறைத்தில்லைமுன்னவபன்
முத்தரும்பாவருமந்தநிற்கொப்புமுளரிமின்வாய்
முத்தரும்பாவருமந்தமினாவருமோமுந்தவி
முத்தரும்பாவருமந்தருங்கூறார்முனி்ந்தொப்பென்றே.

90

1800.

முதலைப்பரவைத்திருக்காழியார்சொன்முதல்வர்செவ்வாய்
முதலைப்பரவைத்திருக்காமுறன்பர்சொன்மொய்த்ததில்லை
முதலைப்பரவைத்திருக்காற்றுந்தாளவென்பாமுழுவிம்
முதலைப்பரவைத்திருக்காற்றைமாயமுருக்குவமே.

91

1801.

குவலையவம்பரமானந்தவாதவர்கோவரவா
குவலையவம்பரமானந்தவாதவர்கோமன்றகட்
குவலையவம்பரமானந்தவாதவர்கோள்புரிதீங்
குவலையவம்பரமானந்தவாதவர்கோவத்தனே.

92

1802.

அத்தவெற்பாதவர்வெள்ளிவெற்��

Related Content