ஸம்ஸ்க்ருத விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம்
[சிவஞான பூஜா மலர் – துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
முன்னுரை
பதினெட்டு மஹாபுராணங்களில் ஒன்றானதும் மிகப் பழமையானதுமான மத்ஸ்யபுராணம் 290 அத்தியாங்கள் கொண்டது. திருமாலைக் குறித்துத் தவமியற்றிய மனுவின் தவத்தினால் மகிழ்ந்த திருமால் அவனை வரம் யாதுவேண்டும் என்று வினவ அவனும் பிரளயகாலம் வந்துற்ற்பொழுது உலகமனைத்தையும் காத்திடும் ஆற்றலைத் தான் பெற்றிட வேண்டினான். அவ்வாறே அருளிய திருமால் முன்னோர்களுக்கு அஞ்ஜலி செய்ய நீர் ஏந்திய மனுவின் கையளவு நீரில் ஒரு மீன் வடிவில் தோன்றித் தன்னைல் காத்தருள வேண்டினார். பின்னர் படிப்படியாக அதன் உருவம்பெரிதாவதைக் கண்டு வியந்த மனுவும் அதை முறையே பெரும் நீர்த்தேக்கங்களில் இட்டு காத்துவர, மீனும் ‘என்னை இம்மாதிரி காக்குங்கால் பிரளயகாலம் வந்துற்ற பொழுது உன்னையும் உலகினையும் காப்பேன்’ என்று கூறியது. பின்னர் பிரளயம் வந்தபொழுது உலகின் உயிரினங்களனைத்தையும் மனுவுடன் ஒரு படகில் ஏறும்படிச் செய்து அதை நீரில் மூழ்காமல் காத்தருளல் முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. பின்னர் மனுவிற்கு மீன் வடிவில் தோன்றிய திருமால் கதைகளைக் கூறுவதாகக் கொண்டு அமைந்திருப்பதால் இப்புராணம் மத்ஸ்யபுராணம் (மத்ஸ்யம் என்றால் மீன் என்று பொருள்) என அழைக்கப்படுகிறது.
மிகப் பழமையான புராணமானபடியால் புராணங்களுக்கு இருக்க வேண்டிய ஐம்பெரும் அம்சங்கள் பெருமளவு காணப்படுகின்றது என்று சொல்லலாம். உலகின் படைப்பைப் பற்றியும், மனுவின் வழி தோன்றியவர்களின் விவரமும், சந்திர சூரிய வமிச மன்னர்களின் பரம்பரையும், மற்றும் பல்வேறு நோன்புகள், தானங்கள், புண்ணிய தல வரலாறுகள் முதலியனவும், விண்ணவர் தானவர் இவ்விருவருக்குமிடையே நடைபெற்ற கடும் போரைப் பற்றியும், தாரகன் என்னும் அரக்கனின் வரலாறும், திரிபுரம் எரித்த வரலாறும் இங்கு விவரித்து கூறப்பட்டுள்ளன. மேலும் புண்ணிய பூமியான காசியின் மேன்மையை விளக்கி விரிவாகவும், சிவ வழிபாட்டு முறைகளை விளக்கும் பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது இப்புராணம். இப்புராணத்திலும் யயாதி முதலானவர்களின் வரலாறு போன்ற பல கதைகள் இருப்பினும் சிவரமாக உள்ள கதைகளை மட்டும் இங்கே காண்போம்.
மயன் என்னும் அரக்கனின் வரலாறு
முன்னொரு ஸமயம் மயன் என்றொரு அரக்கனிருந்தான். விண்ணவரால் போரில் தோல்வியுற்ற அவன் கடுந்தவம் புரிந்தான். அவனுடன் வித்யுந்மாலீ, தாரகன் என்னும் இரு அரக்கர்களும் தவம் செய்தனர். அவர்கள் மூவரும் தவம் செய்யுங்கால் மூன்று எரியும் நெருப்பு ஜ்வாலைகள் போல் காட்சி அளித்தனர். குளிர் காலத்தில் நீரில் நின்றும் கோடக்காலத்தில் நாற்புறமும் நெருப்பு சூழவும் மேலே சூரியனின் கடும் கதிர்கள் எரிக்கவும், மழைக்காலத்தில் வானிலிருந்தும் தவமியற்றினர். அவர்கள் தவத்தினால் உலகமனைத்தும் அல்லலுற்றது. அவர்கள் தவத்தினால் மகிழ்ந்த நான்முகன் அவர்கள் முன் தோன்றி அவர்களைக் கேட்டார்.
நான்முகன்: நான் வரமளிக்க உங்கள் முன் தோன்றி உள்ளேன். நீங்கள் வேண்டுவது என்ன?
மயன்: ‘தாரகாமயம்’ என்னும் போரில் நாங்கள் முன்னர் தேவர்களால் வெல்லப்பட்டோம். அதனால் யாது செய்வது என்றறியாது தவம் செய்யத் துவங்கினோம். இப்பொழுது தேவர்களாலும், மற்றும் முனிவர்களின் சாபத்தினாலும் வேறு எந்தவிதமாகவும் அழிக்க முடியாத மூன்று கோட்டைகளை எங்களுக்கு அருள் வேண்டும்.
நான்முகன்: யாதொன்றாலும் அழிவற்றது என்பது இயலாத காரியம்.
மயன் அப்படியாயின் சிவனார் ஒரே ஸமயம் ஒரு அம்பினாலேயே எங்கள் கோட்டைகளை எரிக்கட்டும். மற்ற எந்த காரணத்தின் மூலமாகவும் எங்களுக்கு அழிவு ஏற்படக்கூடாது.
நான்முகன்: அப்படியேயாகட்டும்.
இவ்விதம் அருளி நான்முகன் மறைந்த பின்னர் மயன் மிகவும் ஆலோசனை செய்து பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் தனித்தனியாக ஆன மூன்று மாபெரும் அளவுகளுள்ள கோட்டைகளை உருவாக்கினான். இவைகள் முறையே வானத்திற்கு மேல்புறமும், வானிலும், புவியிலும் அவ்வரக்கர்கள் விருப்பின்படி சென்று மற்றவரை அச்சுறுத்துமாறு இயக்கினான். தங்கள் இருக்கைக்கு உகந்தமாதிரி அவைகளில் நீர்நிலைகள், நந்தனங்கள் முதலியன ஏற்படுத்தி அரக்கர்கள் அனைவரும் தம் சுற்றம் சூழ அக்கோட்டைகளில் அந்தி வேளையில் நுழைந்தனர். பின்னர் ஒரு ஸமயம் மயன் அரக்கர்களைக் கூட்டி தான் கண்ட கெட்ட கனவைக் கூறி அவர்களை அறவழியில் தளராது செல்ல வேண்டினான். முன்னர் நல்வழியின் பயனாக பெரும் பேற்றுடன் வாழ்ந்து வந்த அவர்கள் தமக்கு இன்னல் வரும் என்றறிந்த உடனேயே அறவழியைத் துறந்து தீயவழியில் செல்லத் தலைப்பட்டனர். மயனால் உரைக்கப்பட்ட அறிவுரைகளை அவர்கள் புறக்கணித்து தேவர்களின் நந்தவனம், வசிக்குமிடம் முதலியனவற்றை அழிக்க முற்பட்டனர்.
இதனால் அல்லலுற்ற ஆதித்யர்கள், வஸுக்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள், மருத்கணங்கள் முதலியவர்கள் நான்முகனிடம் முறையிட்டனர். தேவர்களின் முறையீட்டைக் கேட்ட நான்முகன் தான் மயனுக்களித்த வரன் செயல் படுங்காலம் நெருங்கிவிட்டது என்று கூறி அவர்களின் முப்புரங்களையும் ஒரே பாணத்தால் அழிக்க வல்லவர் சிவனாரே என்று கூறி அவர்களனைவருடன் கைலாயம் சென்று அன்னை உமையுடனும் நந்திகேசுவரருடன் கூடிய சிவனாரைப் பின்வருமாறு புகழ்ந்து பாடினார்.
நமோ பகவதேசாய ருத்ராய வரநாய ச |
பசூனாம் பதயே நித்யம் உக்ராய ச கபர்தினே ||
மஹாதேவாய பீமாய த்ரயம்பகாய ச சாந்தயே |
ஈசானாய பயக்னாய நமஸ்த்வந்தக காதினே ||
நீலக்ரீவாய பீமாய வேதஸே வேதஸாஸ்துதே |
குமாரசத்ரு நிக்னாய குமாரஜனகாய ச ||
விலோஹிதாய தூம்ராய வராய க்ரதனாய ச |
நித்ய நீலசிகண்டாய சூலினே திவ்யசாயினே ||
உரகாய த்ரிநேத்ராய ஹிரண்யவஸுரேதஸே |
அசிந்த்யாயாம்புகாபர்த்ரே ஸர்வதேவஸ்துதாய ச ||
வ்ருஷத்வஜாய முண்டாய ஜடினே ப்ரஹ்மசாரிணே |
தப்யமானாய ஸலிலே ப்ரஹ்மண்யாயாஜிதாய ச ||
விச்வாத்மனே விச்வஸ்ருஜே விச்வமாவ்ருத்ய திஷ்டதே |
நமோ அ ஸ்து திவ்யரூபாய ப்ரபவே திவ்யசம்பவே ||
அபிகம்யாய காம்யாய ஸ்துத்யாயார்ச்யாய ஸர்வதா |
பகதானுகம்பினே நித்யம் திசதே யந்மனோகதம் ||
இவ்விதம் அவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற சிவனார் அவர்களது துயர் யாது என் வினவினார்.
சிவனார் - தேவர்களே உங்களுக்கு என்ன தீங்கு நேர்ந்தது
தேவர்கள் - பிரபோ மயன் என்னும் அரக்கன் முப்புரத்தை நிருமாணித்துள்ளான். அதில் வாழும் அரக்கர்கள் அச்ச மற்றவர்களாக எங்களைத் தாக்கி எங்கள் நந்தவனம் முதலியவற்றை அழித்து, தேவ மடந்தையரையும் தூக்கிச் சென்றுள்ளனர். மேலும் இந்திரனின் ஐராவதம் முதலான யானைகளையும் கவர்ந்து சென்றுள்ளனர்.
சிவனார் - நீங்கள் யாவரும் அரக்கர்களினின்றும் அச்சம் தவிர்த்து இருங்கள். முப்புரத்தை நான் அழிக்கின்றேன். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதை கவனமாகக் கேளுங்கள். வெற்றி வாகை சூடி வர எனக்கொரு இரதம் ஏற்பாடு செய்யுங்கள்.
சிவனார் கூறியபடியே இரதன் ஒன்றை தேவர்கள் ஏற்பாடு செய்தனர். புவி, மேரு, மந்தர மலைகள், சூரியன், சந்திரன், தேய்பிறை, வளர்பிறை, புதன், அங்காரகன், சனி முதலான கோள்களும், கங்கை, யமுனை, ஸிந்து முதலான ஆறுகளும், மற்றும் அரவங்கள் முதலியனவும் இரதத்தின் பல்வேறு பகுதிகளாகவும் மற்றும் கதை முதலான ஆயுதங்களாகவும் அமைந்தன. இரதத்தைக் கண்டு முதலான ஆயுதங்களாகவும் அமைந்தன. இரதத்தைக் கண்டு மெச்சிய சிவனார் அதற்குகந்த தேர்ப்பாகனையும், ஏற்பாடு செய்யுமாறு கூறினார். இதைக் கேட்ட தேவர்கள் செய்வ தறியாது குழம்பி நின்றனர். முன்பே திருமால், ஸோமன், அக்னி, இம்மூவரும் அம்புகள் ஆகிவிட்டபடியால் இப்பொழுது தேர்ப்பாகனாக யா உகந்தவர் என்ற சிந்தனையிலாழ்ந்தனர். அப்பொழுது அனைவரும் போற்ற நான்முகன் தானே தேரை ஓட்ட முன் வந்தார். பின்னர் நான்முகன் தேரைச் செலுத்தத் துவங்கினார். இரதத்தின் போக்கை புராணம் பின்வருமாறு விவரிக்கின்றது.
ப்ருகுர் பரத்வாஜவஸிஷ்டகெளதமா: க்ரது: புலஸ்த்ய: புலஹஸ்தபோதனா: |
மரீசிரத்ரிர்பகவானதாங்கிரா: பராசராமஸ்த்யமுகா மஹர்ஷய ||
ஹரமஜிதமஜம் ப்ரதுஷ்டுவுர்வ்சனவிஷைர் விசித்ரபூஷணை |
ரதஸ்த்ரிபுரே ஸகாஞ்சனாசலோ வ்ரஜதி ஸபக்ஷ இவாத்ரி ரம்பரே ||
கரிகரிரவிமேகஸந்நிபா: ஸஜஸ பயோத நிநாத நாதின: |
ப்ரமத கணா: பரிவார்ய தேவ குப்தம் ரதமமராபி யயு: ஸ்மதர்பயுக்தா: ||
இதற்கிடையில் முப்புரத்தை அடைந்த நாரத மாமுனிவரை தானவர் யாவரும் வரவேற்று மரியாதை செய்தனர். தகுந்த இருக்கையில் அமர்ந்த மாமுனிவரிடம் மயன் தான் கண்ட கனவை எடுத்துரைத்து தன் ஐயம் தீர்க்க் கோரினான்.
நாரதர்: – மயனே! வரும் கெடுதலைக் குறிக்கும் நிகழ்ச்சிகள் எப்படி ஏற்படுகின்றன என்று கூறுகிறேன் கேள். தாரணம் (தாங்குதல்) என்ற பொருளுடைத்த வினைச் சொல்லினின்று ‘தர்மம்’ என்ற சொல் தோன்றியது. நமக்கு நன்மை பயத்தலால் அதற்கு ‘தருமம்’ என்று பெயர். இவ்விதமே சான்றோர்கள் கூறியுள்ளனர். அவர்கள் நமக்கு நன்மை பயக்காததை நமக்கு எடுத்துரைப்பதில்லை. நல்வழியினின்றும் பிசகிச் சென்றால் அவனுக்கு அழிவு ஏற்படும் என்று மறையறிந்தவர் கூறுகின்றனர். தேவர்களுக்கு தீங்கு இழைக்கும் அரக்கர்களுடன் கூடி அவர்களுக்கு உதவி செய்கின்றாய். இதனால் சினந்த பரமன் உலகமயமான இரதத்தில் ஏறி உன்னை அழிக்க வந்து கொண்டிருக்கின்றார். அதனால் இப்பொழுதே அவரைச் சரணடைந்து வழிபடுவாயாக.
நாரதமுனிவர் புறப்பட்டுச் சென்றபின்னர், தேவர்களை அழித்து தேவலோகத்தையும் தான் நுகர விரும்பிய மயன் தன் படைவீரகளை போருக்கு ஆயுத்தம் செய்தான். தான் முப்புரத்தின் உட்புறம் அடைந்து மனத்தால் சிவனாரை போற்றிப் பணிந்தான். இதற்கிடையில் முப்புரம் சென்று திரும்பிய நாரதர் இலாவ்ருதவர்ஷம் என்னும் இடத்தில் தேவர்களைக் கண்டு முப்புரத்தில் தான் கண்டதை விவரித்தார். தேவர்களை ஊக்குவித்த பரமன் இந்திரன் முதலானவருடன் போருக்குப் புறப்பட்டார். அவர்கள் படை செல்லும் பொழுது எழுந்த ஒலியினால் கவரப்பட்ட அரக்கர்கள் அவர்களை வியப்புடன் நோக்கி பலவிதமான ஒலிகளையும் எழுப்பிக் கொண்டு தாக்க முற்பட்டனர். அவர்களிடையே கடும்போர் மூளவும், நந்தி, பரமன் கொடுத்த வஜ்ராயுதத்தால் வித்யுந்மாலியை அடிக்க அவன் வேரற்ற மரம்போல் கீழே விழுந்தான். இந்தத் துயர்மிக்க செய்தியைக் கேட்ட தாரகாக்ஷன் மிகவும் உக்கிரமாகத் தாக்கி பல கணங்களை வீழ்த்தினான். மயனும் பலவிதமாக சிந்தனை செய்தான்: – ‘காலமே மிகவும் பலமுள்ளது. காலம் நல்ல படி இருந்தால் எல்லாம் நன்கு கை கூடி வரும்.’
தன் மாயையின் பலத்தினால் ஒரு மாபெரும் கிணற்றைக் தோற்றுவித்து அதன் நீரை வித்யுந்மாலியின் மீது தெளிக்க அவனும் கட்டைகளினால் வளர்ந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போன்று எழுந்து வந்தான். மிக்க மகிழ்ச்சி அடைந்த மயனும் அவனை அணைத்துக்கொண்டு கொண்டாடினான். மிக்க உற்சாகத்துடன் பேரி முதலானவை முழங்கவும் அரக்கர்களும் போருக்குக் கிளம்பினார். நந்தி கேசுவரன் அடித்து வீழ்த்திய அரக்கர் மயன் ஏற்படுத்திய கிணற்று நீரினால் புத்துயிர் பெற்று எழுந்து போரிட்டனர். அப்பொழுது அரக்கருடன் போராடி உள்ளே நுழைந்த திருமால் அந்த கிணற்று நீர் அனைத்தையும் குடித்து விட்டார். தோல்வியடைந்த அரக்கர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த மாயக்கிணற்று நீர் குடிக்கப்பட்டு கிணறு வற்றிவிட்ட செய்தியை அறிந்த மயன் தான் தோல்வியடையும் அறிகுறி அது என்று உணர்ந்து தன் வீரர்களை ஊக்குவித்து பிரமத கணங்களின் உறைவிடமான ஸாகரத்தை நோக்கி தன் முப்புரங்களையும் செலுத்தினான். அப்பொழுது அரக்கர் படைக்கும் தேவர்களுக்குமிடையே கடும்போர் மூண்டது. அப்பொழுது சிவனார் அம்பு எய்து முப்புரத்தையும் ஒரே ஸமயத்தில் தாக்கினார். அந்த நெருப்பினால் தாக்கப்பட்ட மாளிகைகள், கட்டிங்கள் முதலான அனைத்தும் கொழுந்துவிட்டு எரிந்தன.
தாரகனின் பிறப்பும் அவன் அழிந்த வரலாறும்
நான்முகனின் மனத்தால் படைக்கப்பட்டவன் தக்ஷபிரஜாபதி என்பவன். அவனுக்குத் தன் மனைவியான வைரிணியின் மூலம் அறுபது பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் முறையே பத்து பேர்களை தருமனுக்கும், பதின்மூன்றை கச்யபருக்கும், இருபத்தேழு பேரை ஸோமனுக்கும், நால்வரை அரிஷ்டநேமிக்கும், இருவரை பாஹுகபுத்திரனுக்கும் (பஹுபுத்திரனுக்கும்) இருவரை ஆங்கிரஸ்ஸுக்கும். இருவரை கிருசாச்வருக்கும் மணம் செய்வித்தான். இவர்களில் கச்யபரின் மனைவியான அதிதிக்குப் பிறந்தவர்கள் இந்திரன் உபேந்திரன் முதலான தேவர்கள், திதிக்குப் பிறந்தவர்கள் ஹிரண்யகசிபு முதலான அரக்கர்கள்.
மக்களைத் துன்புறுத்திய ஹிரண்யகசிபுவை திருமாலும் மற்ற அரக்கர்களை இந்திரனும் கொல்லவே, திதியும் தன் கணவனிடம் இந்திரனை வெல்லும் வலிமையுடைய ஒரு மகவுக்காக வேண்டினான். அவரும் அவளை நியமங்களுடன் இருக்கக் கூறி ஒரு மகவு பிறக்கும் என்றருளினார். அவளும் இந்திரனைக் கொல்ல பிறக்கப் போகும் மகவை நினைத்து மிகவும் கவனத்துடன் நியமங்களை கடைப்பிடித்து வந்தாள். அவளை அண்டிய இந்திரன் செய்து வந்த பணிவிடைகளை ஏற்றாள். விரதம் முடிய இன்னும் பத்து ஆண்டுகள் உள்ள போது தனக்குப் பிறக்கப் போகும் மகவுடன் தன் செல்வச் சிறப்பு அனைத்தையும் பகிர்ந்து நுகருமாறு இந்திரனை வேண்டி பின் துயிலுற்றாள். அப்பொழுது அவள் கால்கள் சுத்தம் செய்யாது துயிலுற்றதினால் இதற்காகவே காத்திருந்த இந்திரன் அவள் கர்ப்பத்தில் புகுந்து அந்த கர்ப்பத்தை நாற்பத்தொன்பது துண்டுகளாகச் செய்தான். அப்பொழுது அவள் விழித்தெழ, மிகவும் பணிவுடன் அவள் முன் நின்று தான் அவள் கர்ப்பத்திற்கிழைத்த தீங்கை எடுத்துக் கூறி அதற்கு மாற்றாக நாற்பத்தொன்பது பேருக்கும் தேவலோகத்தில் உகந்த இடம் தருவதாகக்கூறவும் அவளும் அதற்கிசைந்தான். மீண்டும் தன் கணவனை அழைத்து அஸ்திரசஸ்திரங்களால் அழிக்க முடியாத மகனை வேண்டினாள். அவரும் பத்தாயிரம் ஆண்டு தவமியற்றி ஒரு மகனை பெறுவாள் என்றும் அவன் பிளக்க முடியாத வஜ்ரம் போன்ற உடலைப் பெற்று அதனால் வஜ்ராங்கன் என்ற பெயருடன் விளங்குவான் என்றும் கூறினார். அவ்வாறே அவள் தவமியற்ற அனைத்து அஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவனாகவும் மிகவும் வலிமை உடைய உடலுடன் கூடியவனாகவும் வஜ்ரங்கன் பிறந்தான். பிறந்த உடனேயே தான் என்ன செய்ய வேண்டுமென அன்னையை வினவ அவளும் தன் மகவு அனைத்தையும் கொன்ற இந்திரனைப் பழிவாங்க அவனைக் கொல்ல வேண்டுமெனக் கூறினாள். அன்னை சொற்படு புறப்பட்டு வஜ்ராங்கனும் விண்ணுலகை அடைந்து இந்திரனைக்கட்டி தன் தாயின் முன்னர் கொணர்ந்து நிறுத்தினான். இதற்கிடையில் நடந்ததை அறிந்த நான்முகனும் கச்யபடும் அவ்விடத்தை அடைந்தனர். நான்முகன் வஜ்ராங்கனிடம் ஒருவனுக்கு அவமானமே அவனைக் கொன்றது போன்றாகும். அதனால் இந்திரனை விட்டுவிடு என்று கூறினார். அவனும் தன் தாயின் சொற்படி தான் நடந்ததாகவும். இப்பொழுது தன் பாட்டனார் சொற்படி இந்திரனை விட்டுவிடுவதாகவும் கூறினான். நான்முகன் வராங்கனை என்னும் பெண்ணைப் படைத்து அவனுக்களித்தார். அவளுடன் வனம் சென்ற வஜ்ராங்கன் பஞ்சாக்னியின் மத்தியில் உயர்த்திய கைகளுடன் நின்று உணவின்றி ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவமியற்றினான். பின்னர் ஆயிரம் ஆண்டுகள் நீரில் நின்று கடுந்தவமியற்றினான். அவன் தவத்தைக் கலைக்க இந்திரன் செய்த முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயின. கடைசியில் நான்முகன் அவன் முன் தோன்றி அவன் வேண்டும் வரமனைத்தும் கொடுக்க சித்தமாய் நின்றார். அவனும் தனக்கு அஸுரத்தன்மை ஒருபொழுதும் வேண்டாமென்றும், தவத்திலேயே ஈடுபாடு இருக்க வேண்டும் என்றும் வேண்டினான். நான்முகனும் அவ்வாறே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். உணவு அருந்த தன் மனைவியைத்தேடவும் அவளைக் காணாது கடைசியில் மலைக்குகையில் அழுது கொண்டிருக்கும் அவளைக் கண்டான். பின்னர் தேவேந்திரன் அவளை அடித்துத் துன்புறுத்தினான் என்றறிந்தான். தன்னுயிர் துறக்க எண்ணிய அவள் தன்னைக் காக்க தனக்கொரு மகனைக் கொடுக்குமாறு அவனை வேண்டினான். அதன் பொருட்டு மீண்டும் தவமியற்ற எண்ணின வஜ்ராங்கனைத் தடுத்த நான்முகன் தவமியற்றாமலேயே அவன் எண்ணம் கைகூடும் என்றும், தாரகன் என்னும் மகன் பிறப்பான் என்றும் கூறி அருளினார். (தாரக என்னும் சொல்லிற்கு காப்பவன் என்று பொருளாரும்). அவ்வண்ணமே ஆயிரம் ஆண்டுகள் கர்ப்பம் தரித்து வராங்கனை ஒரு மகனை ஈன்றெடுத்தாள். அவன் பிறந்த உடன் உலகமே ஆட்டமுற்றது. அவனை அஸுரர் தம் தலைவனாக்கினார்.
அரக்கரனை வரையும் கூப்பிட்ட அவன் தேவர்களுக்கும் தமக்குமிருக்கும் தீராப்பகையை எடுத்துரைத்து தேவர்களை தவத்தின் வலிமையின் பயனால் தான் வெல்ல வேண்டுமென்று கூறி, பாரியாத்ர மலைத் தொடரை அடைந்து, உணவின்றி பஞ்சாக்னியின் மத்தியில் கடுந்தவம் இயற்றி தன் உடலினின்று தினமும் மாம்ஸத்தை எடுத்து அக்னிக்கு அளித்து வந்தான். அவன் தவத்தினால் உலகமனைத்தும் தஹிக்கப்படும் அவன்முன் தோன்றிய நான்முகன் தன் மனமகிழ்ச்சியைத் தெரிவித்து அவன் வேண்டும் வரம் தர சித்தமாய் நின்றார். அவன் தனக்கு எவ்வுயிரினின்றும் எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாதென்று வரம் கேட்டான். ஆனால் நான்முகன் உலகில் பிறந்த யாவரும் இறக்க வேண்டியவரே என்றும் அதனால் இறப்பில்லா வரம் தர இயலாதெனக் கூறினார். பின்னர் தாரகன் பிறந்து ஏழு நாட்களே ஆன பாலகனால் தனக்கு மரணம் ஏற்படவேண்டுமென்று வேண்டினான். நான்முகனும் அவ்வாறே ஆகட்டும் என்று வரமருளினார்.
அனைவரும் அவனுக்குப் பணி செய்ய அவன் தன் குறிக்கோள் தன் தாயின் துயர் துடைப்பதே என்று கூறி, இந்திரனை வெல்ல எண்ணி போருக்கு ஆயத்தம் செய்தான். பெரும் தானவர் படை தம்மைத்தாக்க வருவதை வாயுவின் மூலம் அறிந்த இந்திரன் தேவகுருவுடன் ஆலோசனை செய்து அவர்களுடன் போர் செய்வதற்கு ஏற்பாடுசெய்யுமாறு கட்டளை இட்டான். இருவர் படைகளுக்குமிடையே கடும்போர் மூண்டது. போரின் முடிவில் தோல்வியுற்ற தேவர்கள் நான்முகனை அடைய அவரும் தாரகன் தவத்தால் பெற்றுள்ள வரத்தை எடுத்துரைத்து அவனைக் கொல்ல பாலகன் சிவனார் மூலம் பிறக்கவேண்டுமென்று கூறினார். சிவன் பார்வதி இவ்விருவரிடையே பிணக்கம் ஏற்பட தன்னின்றும் முன்னர் தோன்றிய ‘நிசை’யை பணிந்தார் நான்முகன். பின்னர் இந்திரன் கூற்றுப்படி நாரதமுனிவர் இமவானை அடைந்தார். இமவானும் அவரை வரவேற்ற பின்னர் தன் மகளை அவரை வணங்கச் செய்தான். மேனை அவளுக்கு எவ்விதமான கணவன் வாய்ப்பான் என்றறிய ஆவல் கொண்டாள். நாரதமுனி வரும் அவளுக்குக் கணவன் பிறக்கவில்லை என்றும் லக்ஷணங்களும் அற்றவன் என்றும் கூறும்பொழுதே கணவன் மனைவி இருவருமே பெரிதும் வருந்தினர். அப்பொழுது நாரதர் அந்தப் பரமன் பிறப்பற்றவர் என்றும், நான்முகன் முதலான மற்றவர் பிறப்பு, இறப்பு, மூப்பு முதலியன உடையவர் என்றும் கூறி பார்வதியின் சிறப்பான லக்ஷணங்களின் வரப்போகும் மேன்மையான பலன்களை எடுத்துரைத்தார். பின்னர் இந்திரனை அடைந்தார். இந்திரனும் காமனை வரவழைத்து தவம் செய்யும் சிவனாரின் மனத்தில் கிளர்ச்சி உண்டாக்கி பணிவிடை செய்யும் பார்வதிமீது மனம் லயிக்குமாறு செய்ய ஊக்குவித்தான். தக்க காரணமின்றி தன் மனம் சஞ்சலம் அடைவதற்குக் காரணம் காமனே என்று அறிந்த சிவனார் சினம் கொள்ள அவர் நெற்றிக்கண்ணினின்றும் எழுந்த பொறி காமனைச் சாம்பலாக்கியது. நடந்ததை அறிந்த ரதியும் மிக்க துயரத்துடன் கண்ணீர் விட்டுக் கதறினாள். பின்னர் வசந்தனால் தேற்றப்பட்டு சிவனாரைப் பணிந்து பின்வருமாறு அவரை துதித்தாள்:
நம: சிவாயாஸ்து நிராமயாய நம: சிவாயாஸ்து மனோமயாய |
நம: சிவாயாஸ்து ஸுரார்ச்சிநாய துப்யம் ஸதா பக்தக்ருபாபராய ||
நமோ பவாயாஸ்து பவோத்பவாய நமோ(அ)ஸ்து த்வஸ்த மனோபவாய |
நமோ (அ)ஸ்து தே கூடமஹாவ்ரதாய நமோஅஸ்து மாயா கஹனாச்ரயாய ||
நமோ(அ)ஸ்து சர்வாய நம: சிவாய நமோ(அ)ஸ்து ஸித்தாய புராதனாய |
நமோ(அ)ஸ்து காலாய நம: கலாய நமோ(அ)ஸ்து தே ஞானவரப்ரதாய ||
நமோ(அ)ஸ்து தே காலகலாதிகாய நமோ நிஸர்காமல பூஷணாய |
நமோ(அ)ஸ்த்வமேயாந்தகமர்தகாய நம: சரண்யாய நமோ (அ)குணாய ||
நமோ(அ)ஸ்து தே பீமகணானுகாய நமோ(அ)ஸ்து நாநா புவனாதிகர்த்ரே |
நமோ(அ)ஸ்து நாநாஜகதாம் விதாத்ரே நமோ(அ)ஸ்து தே சித்ரபலப்ரயோக்த்ரே ||
ஸர்வாவஸானே ஹ்யவிநாசநேத்ரே நமோ(அ)ஸ்து சித்ராத்வரபாக போக்த்ரே |
நமோ(அ)ஸ்து பக்தாபிமதப்ரதாத்ரே நம: ஸதா தே பவஸங்கஹர்த்ரே ||
அனந்தரூபாய ஸதைவ துப்யமஸஹ்ய கோபாய நமோ(அ)ஸ்து துப்யம் |
சசாங்கசிஹ்னாய ஸதைவ துப்யமமேயமானாய நம: ஸ்துதாய ||
வ்ருஷேந்த்ரயானாய புராந்தகாய நம: ப்ரஸித்தாய மஹெளஷதாய |
நமோ(அ)ஸ்து பக்த்யாபிமதப்ரதாய நமோ(அ)ஸ்து ஸர்வார்த்திஹராய துப்யம் ||
இவ்வாறு துதித்த ரதியின்பால் கருணை கொண்ட பரமன் அவளுடைய கணவன் உலகில் ‘அனங்கன்’ என்ற பெயருடன் விளங்குவான் என்று கூறி மறைந்தார். பெரும் துயரத்துடன் கூடிநின்ற ரதியைக்கண்டு தேற்றிய இமவான் அவளைத் தன் இருப்பிடம் அழைத்துச் செல்ல நினைத்த பொழுது இமவானின் மகள் தன்னுடைய நற்பேறற்ற உடலினால் என்ன இன்பம் என்று கருதி தவத்தினால் உடலை வற்றச் செய்தாலும் மேலானது எனத் துணிவு கொண்டாள். உமா (ஓ! பெண்ணே வேண்டாம்) என்று அன்னை கூறிய இரு எழுத்துக்கள் ‘உமா’ என்று அவளுடைய பெயராகவே அமைந்துவிட்டன. தன் எண்ணப்படியே அவள் மிக்க உறுதியுடன் பரமனை அடையக் கடுந்தவம் மேற் கொண்டாள். உலகில் அனைத்து உயிரினங்களும் அத்தவத்தினால் அல்லல்படவே இந்திரன் ஏழு மாமுனிவர்களையும் (ஸப்தரிஷிகள்) அழைத்து அவளது நோக்கம் அறிந்து வர வேண்டினான். அவர்களும் உமையுடன் பேசி அவளது நோக்கத்தை அறிந்து பரமனை அடைந்து உமையின் மேன்மையை எடுத்துக் கூறிப் பின்னர் இமவானை அடைந்து பரமன் அவரது மகளை மணம் புரிய விரும்புகிறார் என்று கூறினார். பின்னர் முனிவர்கள் உமையை அடைந்து மறுநாள் சிவனாருடன் அவளுக்குத் திருமணம் நடக்கப் போகிறதென்று கூறி அவளை வீட்டிற்குச் செல்லுமாறு பணித்தனர். பின்னர் அவ்விருவருக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.
ஒரு ஸமயம் பார்வதி வாசனை எண்ணை தேய்த்துக் குளிக்கும் பொழுது அந்த நீரினின்றும் தோன்றினான் ஒரு பாலகன். விளையாடிக் கொண்டிருந்த அந்த பாலகனை தேவி நீரில் தள்ளிவிட அந்தப் பாலகன் நல்ல வலிமையுடன் கூடிய பருத்த உடலைப் பெற்றான். அவனை ‘காங்கயே’ என்றும் பின்னர் ‘கஜாநநர்’ என்றும் தேவர்கள் போற்றினர்.
பின்னர் கணங்களைக் குறித்து சிவ பார்வதி இவ்விருவரிடையே பிணக்கம் ஏற்பட அதை வீரகன் என்றும் கணம் தீர்த்து வைத்தான். பின்னர் தன் இல்லத்தில் நுழைந்த பார்வதியுடன் சிவனார் பலகாலம் இன்பமாகக் காலம் கழித்தனர். ஓராயிரம் ஆண்டுகல் கழிந்த பின் என்ன நடந்தது என்றறிய ஆவல் கொண்ட தேவர்கள் ‘அக்னிதேவனை’ அனுப்பினர் அவனும் ஒரு கிளிவடிவாகச் சென்று பரமன் தேவியுடன் இன்புற்றிருப்பதைக் கண்டான். இம்மாதிரி தன் இச்சையில் இடையூறு செய்ததின் பலனாக தனது வீர்யம் உடனேயே அக்னிதேவனை அடையும் என்று சபித்தார். அக்னிதேவனும் அதை பணிவுடன் ஏற்றுக் குடித்தான். இது மற்ற தேவர்களிடமும் அவரவர் உடலுக்கேற்ப பரவி நின்று பின்னர் வெளியேறி பொன்நிறத்தில் ஒரு பெரும் குளமாக மாறியது. பின்னர் அதைக் கேள்வியுற்ற பார்வதியும் அந்நீரில் விளையாடி அதன் கரை மீதமர்ந்து அந்நீரைப் பருக நினைக்கையில் அவள் அந்நீரில் நீராடி வரும் ஆறு கிருத்திகை பெண்டிரையும் கண்டாள். அப்பொழுது அவர்கள் பார்வதியிடம் தாங்கள் தாமரை இலையில் கொணரும் நீரைப் பருக ஏற்படும் மகவுக்கு தாமும் தாயாவோம் என்று கூறி அந்தக் குழந்தைக்கு தம்முடைய பெயரும் இடப்படட்டும் என்று கேட்டுக் கொண்டரன். அவ்வண்ணமே அந்நீரைப் பார்வதி பருகவும் அவள் வயிற்றினின்றும் சித்திரைமாதம் அமாவாசையில் பாலகன் பிறந்தான். அவன் கதிரவனின் ஒளியுடனும், ஆறு தலைகளுடன் கூடியவனாகவும் இருந்தான். அவனுக்கு சாகன், விசாகன், ஆறுமுகத்தோன், ஸ்கந்தன் (பிளந்து கொண்டு வந்ததினால்,) கார்த்திகேயன் என்ற பெயர்கள் ஏற்பட்டன. சித்திரை மாதம் வளர்பிறை ஷஷ்டி திதியில் இந்திரன் அவனை தேவர் படைத்தலைவனாக்கினான், இந்திரன் தேவஸேனை என்னும் தன் மகளை ஸ்கந்தனுக்கு மணம் செய்வித்தான். தேவர்கள் ஒவ்வொரு வௌம் தம் சிறப்பான ஆயுதங்களையும் சக்திகளையும் கொடுத்து பின்வருமாறு போற்றினர்.
நம: குமாராய மஹாப்ரபாய ஸ்கந்தாய ச ஸ்கந்திததானவாய |
நவார்க்க வித்யுத் த்யுதயே நமோ(அ)ஸ்து தே ஷண்முக காமரூப ||
பிநத்த நாநாபரணாய பர்த்ரே நமோ ரணேதாருணதாருணாய |
நமோ(அ)ஸ்து தே(அ)ர்க்கப்ரதிமப்ரபாய நமோ(அ)ஸ்து குஹ்யாய குஹாய
துப்யம் ||
நமோ(அ)ஸ்து த்ரைலோக்யபயாபஹாய நமோ(அ)ஸ்து தே பாலக்ருபாபராய |
நமோ விசாலாமலலோசனாய நமோ விசாகாய மஹாவ்ரதாய ||
நமோ நமஸ்தே(அ)ஸ்து மனோஹராய நமோ நமஸ்தே(அ)ஸ்து ரணோத்கடாய |நமோ மயூரோஜ்ஜ்வல வாஹனாய நமோ(அ)ஸ்து கேயூரசராய துப்யம் ||
நமோ த்ருதோதக்ர பதாகினே நமோ நம: ப்ரபாவப்ரணதாய தே(அ)ஸ்து |
நமோ நமஸ்தே வரவீர்ய சாலினே க்ரியாபராணாம் பவபவ்ய மூர�