logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்புOm symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


சிவஞான யோகிகள் அருளிய பிரபந்தத் திரட்டு - பாகம் 5 உ கணபதி துணை. திருச்சிற்றம்பலம். 5.3 திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு. ஆனந்தமானந்தந்தோழி - கம்பர் ஆடுந்திருவிளையாட்டினைப்பார்க்கில் ஆனந்தமானந்தந்தோழி. ஒன்றுவிட்டொன்றுபற்றாமல் - என்றும் ஒன்றுவிட்டொன்றினைப்பற்றவல்லாருக் கொன்றுமிரண்டுமல்லாமல்-நின்ற ஒன்றினைவாசகமொன்றிலளிப்பார்,ஆனந்தம். இரண்டுவினையால்விளைந்த-வகை இரண்டையுங்காட்டியென்சென்னியின்மீதே இரண்டுசரணமுஞ்சூட்டி-அஞ்சில் இரண்டையிரண்டிலடக்கவல்லாராம்,ஆனந்தம். மூன்றுலகும்படைப்பாராம்-அந்த மூன்றுலகும்முடனேதுடைப்பாராம் மூன்றுகடவுளாவாராம்-அந்த மூன்றுகடவுளர்காணவொண்ணாராம்,ஆனந்தம். நாலுவருணம்வைப்பாராம்-பின்னும் நால்வகையாச்சிரமங்கள்வைப்பாராம் நாலுபாதங்கள்வைப்பாராம்-அந்த நாலுக்குநாலுபதமும்வைப்பாராம்,ஆனந்தம். அஞ்சுமலமஞ்சவத்தை-பூதம் அஞ்சுதன்மாத்திரையஞ்சிந்திரியம் அஞ்சுதொழிலஞ்சுமாற்றி-எழுத் தஞ்சுமஞ்சாகவமைக்கவல்லாராம்,ஆனந்தம். ஆறாறுதத்துவக்கூட்டம் -உடன் ஆறத்துவாக்களு மாதாரமாறும் ஆற்றுகுற்றங்களுநீங்க-இரண் டாறின்முடிவினடனஞ்செய்வாராம்,ஆனந்தம். ஏழுபுவனப்பரப்புங்-கடல் ஏழுஞ்சிகரிகளேழும்பெருந்தீ ஏழும்பிறவிகளேழும்-இசை ஏழும்படைத்தவிறைவரிவராம்,ஆனந்தம். எட்டுவடிவுமாவாராம்-அந்த எட்டுவடிவுக்குமெட்டரியாராம் எட்டுக்குணமுடையாராம்-பத்தி எட்டுமுடையோரிதயத்துளாராம்,ஆனந்தம். ஒன்பதுமொன்பதுமொன்றும்-மற்றை ஒன்பதுமுப்பதுமொன்பதுமொன்றும் ஒன்பதுமொன்பதுமொன்றும்-பின்னும் ஒன்பதுமானவைக்கப்புறத்தாராம்,ஆனந்தம். பத்துத்திசையுடையாராம்-பத்துப் பத்துப்பத்தாந்திருப்பேருடையாராம் பத்துக்கரமுடையாராந்-தவம் பத்தினிலொன்றுபத்தாகச்செய்வாராம்,ஆனந்தம். ஞானமுஞேயப்பொருளும்-பற்றும் ஞாதாவுமில்லையென்பார்க்கரியாராம் ஞானமுஞேயப்பொருளும்-பற்றும் ஞாதாவுமாய்ப்பகுப்பார்க்குமெட்டாராம்,ஆனந்தம். மெய்யிலணிவதும்பாம்பு-மலை வில்லினினாணாய்விசிப்பதும்பாம்பு கையிற்பிடிப்பதும்பாம்பு-அவர் காட்டினநாடகங்காண்பதும்பாம்பு,ஆனந்தம். நாதத்துடியினடிப்பும்-மெல்ல நடந்துநடந்துநடிக்குநடிப்பும் வேதம்படிக்கும்படிப்பும்-நுதல் மீதுவிளங்குகுறுவேர்ப்பொடிப்பும்,ஆனந்தம். கையிற்கபாலத்தழகுந்-திருக் காலினிற்பாதுகைசேர்த்தவழகும் மெய்யணிநீற்றினழகும்-மையல் மீறுங்குறுநகைமூரலழகும்,ஆனந்தம். உடுப்பதுகாவியுடையாம் - மறை ஓதிமந்தேடுஞ்சிரமேற்சடையாம் எடுப்பதுபிச்சையமுதாம் - மார்பில் ஏற்பதுகாமாட்சிகொங்கைச்சுவடாம்,ஆனந்தம். ஆனந்தக்களிப்பு முடிந்தது. மெய்கண்டதேவர்திருவடிவாழ்க. சிவஞானயோகிகள்திருவடிவாழ்க.

Related Content

கலைசைப் பதிற்றுப்பத்து அந்தாதி

கச்சித் திருவேகம்பரந்தாதி

Kachchi Ekambam (Alandhan ukandhu)

Sundarar Thevaram - 7.061 - Kachiekambam - Alanthan Ugandhu

கச்சிக்கலம்பகம் உரையுடன்