logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கூவப் புராணம் (திருவிற்கோலம்) - ஆசிரியர்: துறைமங்கலம் சிவபிரகாசர் - Cooum (Koovam) Thiruvirkolam purANam

ஆசிரியர்: துறைமங்கலம் சிவபிரகாசர்

கூகம் - திருவிற்கோலம் இறைவர் மீது பாடப்பெற்றது.


திருக்கூவப்புராணம்
ஆசிரியர்: துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

பாயிரம்.(1- 16)
நைமிசாரணியச்சருக்கம்.(17-86)
திருத்தலச்சருக்கம்.(87- 164 )
திரிபுரதகனச்சருக்கம்.(165-302)
சந்தானகிரி சந்தானச்சருக்கம்(303 -324)
அடிமுடி தேடிய சருக்கம்(327-368)
செந்நெல்வைத்தசருக்கம்(369- 410)
தாருகன்வதைச்சருக்கம்(411 - 703)



கணபதி துணை.
Source: 
திருக்கூவப்புராணம்.

திருக்கைலாசபரம்பரைப் பொம்மையபாளையம் சிவாஞான பாலைய தேசிகராதீனத்து நல்லாற்றூர் 
அல்லது துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்தது.

இஃது ஆதீனத்துச் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளால்
பரிசோதிக்கப்பட்டு காயாறு ஞானசுந்தரஐயராலும் காஞ்சீபுரம்-பச்சையப்பமுதலியார்
தருமபரிபாலன சபைத்தலைவராகிய பாளையம் சோமசுந்தரசெட்டியாராலும்
சென்னை: மிமோரியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
தாரண வருஷம் ஆனி மாதம்*
Registered Copy right.




கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.

திருக்கூவப்புராணம்.
பாயிரம். 
காப்பு. 

1குவளத்தந்தக்குளிர்விண்வளத்துறக்
கவளத்தந்தக்கரணமிருத்திய
பவளத்தந்தப்படிவநிகர்த்தொளிர்
தவளத்தந்தத்தலைவனைவாழ்த்துவாம்.
(1)
2நச்சிறுத்தநயனக்குவிமுலைப்
பொச்சிறுத்தநுசுப்பினர்ப்போற்றிவாய்
மிச்சிறுத்தவிரகிலிக்காங்கொலோ
வச்சிறுத்தவடிகளடிகளே.
(2)

 

3திரிபுராந்தகநாதர்.
நீர்கொண்டசடையொடுநம்பெருங்காமத்தழல விப்பநிற்கின்றானைக், 
கூர்கொண்டகனன்மழுமானாண்மையும் பெண்மையுமாயகூற்றிற்கேற்பச், 
சீர்கொண்ட வலனிடங்கொணாயகனைப்புகலியிறைச்செந்தமிழ்ப்பூந்,
தார்கொண்டதிருவிற்கோலப்பெருமான்றனையிதயத்த விசின்வைப்பாம்.
(1)
4திரிபுராந்தகநாயகி
பைத்தசிறுமணியரவந்தாழ்ந்துமதிகவர்கின்ற பரிசதென்ன, 
மெய்த்தவிரும்புகழ்த்திருவிற்கோல நாயகன்மகிழ விற்கோலத்தை, 
யொத்தநறுநுதலிடைப்பொற்சுட்டியின்கீழ்வெண்டிலக மொளிரத்தீட்டி, 
வைத்தருளுமெழி லுடைப் * பையரவல்குலம் மைபதம்வணக்கஞ்செய்வாம். 
* பையரவல்குலம்மை என்பதும் தேவிதிருநாமம்.
(2)
5சபாநாதர்.
சீர்கொண்டமலைமாதின்றருநுதல்கண்டராப்பகைவெண்டிங்கணீக்கி, 
யார்கொண்டசடையரவமல் குலைக்கண்டடற்கையுழைப்பகையயர்த்து,
நேர்கொண்டவுழைவிழிகண்டகுருமெய்ப் புலிப்பகைநீத் திருப்பநின்றே, 
யேர்கொண்டதனித்தில்லைநடம்புரியெம் பெருமானையிறைஞ்சல்செய்வாம்.
(3)
6சிவகாமியம்மை.
வன்னிகரம்வளர்வுறநற்பணிபயிலவருவார்க்குச்சுவர்க்கமீந்து,
பன்னு நுதன்மதியடியார் பரிபுரங் கொண்டெழிற்கனிமெல்லிதழியாரப், 
பொன்னணு குமலரவைசேர்ந்திசைகொளரிமறையோதி புரிந்து தாழத், 
தன்னையிடத்திருத்துபரம்பொருளை நிகருமையம்மைசரணிற்றாழ்வாம்.
(4)
7விநாயகக்கடவுள்.
கற்றை நெடுஞ் சடாமவுலிப் பிறையுமொருதன் கோடுங்கர்த்திற்சேர்த்தி, 
மற்றைநிறைமதியாக்கிமறுவிகந்துவல்லபைதன்வடிவுபூத்த, 
நெற்றிநிகர்த்தமையன்றி யழலொழுகுதிருமுகத்தை நிகர்ப்பநேயம், 
பெற்றமழகளிற்றைமனச்சேவகத்தினிறுவியிடர்ப்பிறவிதீர்ப்பாம்.
(5)
8சுப்பிரமணியக்கடவுள்.
நான்குமுகன்றொழுமைந்துமுகனீன்றவாறுமுகநாதன்றன்னை, 
வான்குலவுமொருகடவுள்யானையின்பாகனைப்புனத்துவடிவுகூர்ந்த, 
மான்குறுகவேங்கையுருவெடுத்தானை யசுரர்குலமாய்த்துப்பேய்கட்,
கூன் குருதியொடுமளவிப்புதுவிருந்திட்டானை நமதுளத்துள்வைப்பாம்.
(6)
9திருநந்திதேவர் - வேறு.
பாக்குலங்கள்பழிச்சுமைநெஞ்சமும்
வாக்குமங்கைவடிவுநிகர்த்தொளி
தேக்கும்வெள்ளிச்சிலம்புடனெம்மையுங்
காக்குநந்திகழறொழுதேத்துவாம்.
(7)
10காரைக்காலம்மையார்.
கிடந்துகண்களிற்கேட்குமவன்புக
லடைந்தகைகொடுயிர்ப்பவனத்தன்வாழ்
வடந்தயங்குவனத்திற்றலையினா
னடைந்தவம்மைபதமலர்நண்ணுவாம்.
(8)
11திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.
அங்கமானதணங்கினுமேம்படு
மங்கையாகப்படைத்துமகளெனப்
பங்கயாதனன்வெள்குறப்பார்த்தருள்
பொங்குஞானசம்பந்தனைப்போற்றுவாம்
(9)
12திருநாவுக்கரசுநாயனார்.
மருக்குலாவுமறைவனத்தொன்றிய
திருக்கபாடந்திறந்தசொல்வேந்தனை
யருட்குலாவுமறிவினைமூடிய
விருட்கபாடந்திறக்கவுமேத்துவாம்.
(10)
13சுந்தரமூர்த்திநாயனார்.
கன்றுகாமங்கழன்றிலர்தம்முரு
வென்றுமோர்வரிதென்றிருப்போன்றனை
யன்றுதூதுவனாகவரிவைபாற்
சென்றுவாவென்றதீரனைவாழ்த்துவாம்.
(11)
14மாணிக்கவாசகசுவாமிகள்.
இன்பமாணிக்கவாசகனென்னுமோர்
மன்பெரும்பெயரியாரும்வழங்குறத்
தன்பெயர்க்கொடையோடுதரித்தபே
ரன்பன்றன்னையகத்துளிருத்துவாம்.
(12)
15அவையடக்கம்-வேறு.
மூதறிவாளருமறிவின்மூகரு
மோதுறுநடுநிலையோருஞ்சொற்பொருட்
டீதுரைப்பதற்கொருசெயலுங்கண்டிலே
னாதலினென்கவிக்கழிவின்றாகுமால்.
(13)
16நூல்வந்தவழி - வேறு.
மேவுமாசனற்குமாரசங்கீதையில்விரித்த
தாவில்காளிகாகாண்டமென்கடற்புகழ்தன்னிற்
கூவ நீர்மையுட்கொண்டியான்கூறுவன்றமிழால்.
(14)


பாயிரமுற்றிற்று.
ஆகச் செய்யுள் - 16.

நைமிசாரணியச்சருக்கம். (17-86)

 

17சீதவம் புலாமலர்க்கொடிநானிலந்திகழும்
பாதவம்பு தலாதியவளமெலாம்பயின்ற
தாதவம்பனிமழையொலிக்குடைந்திடாதமர்ந்து
மாதவம்புரிவோர்க்கிடநைமிசவனமே.
(1)
18பொன்னுலாமலர்க்கற்பகாடவிநிழற்போக
மின்னலாமெனவெறுத்திந்தவனத்திடையின்ப
மன்னயான்புகவருளெனவீசனைமகவா 
னுன்னிவேண்டுவனெனிலதனசிறப்பெவருரைப்போர்
(2)
19வந்ததேயுணவாகிமற்றூணுணாமறுத்துச்
சந்தயோகிகள்போன்றுபோகிகளுறத்தமது
புந்திபோம்விரிவொடுக்கியேபொறிப்பணமடக்கு
முந்துபோகிகள்போன்றியோகிகளுறுமுதிர்கான்.
(3)
20எலியும் பாம்புமங்கதமுமஞ்ஞையுமிளமயலு
நலியுங்கோம்பியுமொருத்தலுமடங்கலுநவியும்*
புலியுந்தாம்பெறுபகையொரீஇப்புணருமவ்வனத்தின்
மெலியும்பாவமுமறமுமேபகையன்றிவிரவா. 
* நவ்வி என்பது நவி என்றாயிற்று.
(4)
21ஆதிமாலயன்மனத்தெழுமகந்தையையடக்க
மீதுலாமழன்மயநெடுந்தம்பமிக்குயர்ந்த
சோதிமாமரமுகிலதிற்சூழ்தருதூமந்
தீதிலாவகிமணிசிதறியபொறிச்சிவணும்.
(5)
22கரணநான்கையுங்கடந்தமுக்கட்பெருங்கடவுள்
சரணவாரிசம்பற்றெனவடைந்ததாபதர்க்குத்
தருணவேள்வியிற்பகைஞர்சாதித்திடப்படாத
வரணமாயதுநலந்தருநைமிசாரணியம்.
(6)
23பேரசோகமேயெனக்கொடுபிண்டிவின்மதவேள்
வீரவாளியாய்மலர்ந்துதுன்பங்களேவிளைத்த
கோரபாவமற்றப்பெயர்மெய்பெறக்குளிர்ந்து
வாரமாதவர்சோகநீத்திடமலர்வழங்கும்.
(7)
24அருந்தவம்பயின்றைம்புலக்குறும்பினையடர்த்துத்
திருந்துநன்முனிவரர்வனத்தொருதனித்திகிரி
மரந்தயங்குவெண்குடைநிகர்மதிதனாதும்பர்
பொருந்துகின்றுழிக்காம்பெனும்பெயரினைப்புதுக்கும்
(8)
25வேறு.
நெட்டிலைகொண்டுநிமிர்ந்தெழுதாழை
கிட்டியிணைந்துறுகின்றனதோகைப்
புட்டனையொக்குமிசைக்கதிர்ப்போது
நட்டிவர்செவ்வயினம்பியையொக்கும்.
(9)
26எரிபுரைகின்றவிளந்தளிர்மாவி
னருகுறநீனிறமார்தருபுன்னை
மருவுதல்செஞ்சடைவள்ளன்மருங்கு
தருமம்வளர்ப்பவடங்குதலொக்கும்
(10)
27ஒன்றினோடொன்றிழையொண்கழைதம்மில்
வன்றழல்வந்துவளர்ந்தெழமீது
சென்றமர்மந்திதிடுக்கிடவிண்ணின்
மன்றனெடுந்தருவின்மிசைவாவும்.
(11)
28பாசிலைகொண்டுயர்பாதவமென்பூ
மாசறுமையர்மருங்கினுகுத்தல்
கேசவனன்புகிடைத்தவர்மீது
வீசுறுமொய்ம்மலர்மாரியின்மேவும்.
(12)
29வேறு.

இத்தகைநலம்பெற்றுள்ளவெழிறருவனத்தின்மேய, 
மெய்த்தவர்புலன்களைந்தும்விரவுறுமனமுமீட்டு, 
முத்தலையெஃகமேந்து முதற்பெருங்கடவுடன்பா, 
லுய்த்தவருலகவாழ்வை யொருபொருளாகக்கொள்ளார்.
(13)
30உலகினர்செல்வநந்தலுரைப்பொருளிரண்டுங்கோட,
லிலகுவிண்மதியங்காட்டவென்றுமோர்தகைத்தாய்ச்சேறல்,
விலகுதஞ்செல்வமெங்கள்விழுப்பொருளாயவண்ண,
லலகில்செஞ்சோதிப்பின்னலணிமதியுணர்த்தவாழ்வார்.
(14)
31அன்புகொண்டருஞ்சிவத்தோடயர்ந்தனுபவித்திருக்கு,
மின்பமுமுத்தியன்றென்றிகந்துறந்துடையமேலோர்,
துன்பமிக்கெய்திமின்னிற்றொலைந்துபோஞ்சிற்றின்பத்திற்,
றன்பரிவறத்துறத்தல்சாற்றவேண்டுவதுமுண்டோ.
(15)
32சேயரிநெடுங்கட்செவ்வாய்ச்சிறுநுதற்கரியகூந்தல்,
வேயமர்வலயப்பொற்றோள்வெற்புறழ்குவவுக்கொங்கை,
யாயிழைமகளிர்நேயத்தணையினுமவரையீன்ற,
தாயெனக்கருதுநீரார்தபனியமோட்டிற்காண்பார்.
(16)
33பற்றிகலிலாதஞானப்பண்பினர்நட்டார்ப்பேண,
மற்றவர்ச்செறுக்கவுன்னில்வல்லமெய்த்தவத்தின்மேலோர்,
முற்றுறுமின்பதுன்பமுன்புளதொடர்புடற்கென்,
றற்றமின்மகிழ்ச்சிவாட்டமகன்றநற்றுணிவின்மிக்கார்.
(17)
34கண்டிகைக்கலனுநீற்றுக்களபமும்பொலிந்தயாக்கை
*மண்டிதர்சடிலக்கற்றைமவுலியர்நிறைந்த
தெண்ணீர்க், குண்டிகைதண்டுதாங்குகையினர்குன்றவில்லி, 
புண்டரீகத்தாட்கன்புபொருந்தியமனத்தர்மாதோ. )
*மண்டிதர்-அலங்காரமுடையவர்
(18)
35கண்புனறுளிப்பநெஞ்சங்கரைந்துகமயிர்பொடிப்பத், 
தண்புனறரித்தவேணித்தம்பிரான்பூசை செய்வார், 
பண்பயின்மறைகணான்கின்பயத்தவாமஞ்செழுத்து, 
நண்புடன்பகருகின்றநாவர்முக்குற்றந்தீர்ந்தார்.
(19)
36வேதன்மாறமையுமன்னார்வியன்பதந்தமையுங்கொள்ளா, 
ராதிநாயகனெம்மீசனருளினாலவர்தஞ்செய்கை, 
யாதுமோர்திரணந்தன்னையியற்றிடநிறுவவல்லா, 
ரோதுறுதுதிநிந்தைக்கணுவகையும்வெறுப்புமில்லார்.
(20)
37ஆதரவின்சொற்றூய்மையருணெறியொழுக்கமெய்ம்மை, 
மேதகவுடையர்திமைவிரகம்பொய்யாசைகோபங், 
காதரவிலர்வேதாந்தக்கருத்துணர்பெரியர்செம்பொற், 
பூதரவில்லிதானம்புகுந்திறைஞ்சு தற்குநேயர்.
(21)
38வேறு.
இப்பெருமுனிவர்தம்முண்முன்பொருநாளிருந்தவக்காசிபன்வசிட்டன், 
றுப்புறழ்சடிலக்கௌதமன்பாரத்துவசன்கண்ணுவன்சவுனகனே,
மெய்ப்புலத்தியனிற்சனகனாரதன்வான்மீகன்சாதாதபனாதி,
யொப்பிலரநேகர் குழுமியவ்வனத்தினொருபுடைவந்துவீற்றிருந்தார்.
(22)
39இருந்தவர்சனனசாகரங்கடத்தற்கிணையறும் பரசிவகதியிற், 
பொருந்தினர்க்கன்றியரிதெனத்தமதுபுந்திகொண்டனைவருமதுதான்,
வருந்திறமுயல்வதெந்நெறியென்னாமற்றதையாய்ந்தனருசாவ, 
வருந்ததிகொழுநன்முதுக்குறைவதனாலடிகள்கேண்மின்களென்றறைவான்.
(23)
40வேறு.
எவ்வகைப்பொருள்களுமீயவல்லது
செவ்வியதவமதேதெரியின்வேறிலை
யிவ்வுலகினிலஃதியற்றுகின்றதே
யுவ்வுடலெடுத்தபேருறுதியென்பவே.
(24)
41தவத்தினிலமர்புரிசமனைவெல்லலாந்
தவத்தினிலெழுகடறமையுமுண்ணலாந்
தவத்தினில்வடவரைகளைந்துதாங்கலாந்
தவத்தினிலனலமுந்தரிக்கலாகுமே.
(25)
42நன்றிகொடவத்திலைம்பூதநல்கவுந்
துன்றியவுயிர்த்தொகைதோற்றுவிப்பவு
+மன்றியவுலகுயிரடவுநண்ணினர்க்
கொன்றருள்புரியவுமொருங்கினெய்துமால் 
+ அன்றுதல்-பகைத்தல்
(26)
43அண்டமும்பொருள்களுமடங்குபேருருக்
கொண்டிடவணுவெனக்குறுகவாழ்புனல்
விண்டலன்மிசைச்செலவிளிவிலாதுற
வொண்டவமன்றியாடதுதவவல்லதே.
(27)
44பொன்றணிமார்பகப்புனிதனாதியை
நின்றுழிதவத்தினானினைந்தழைத்திட
லன்றியுமவர்க்கரிதாயவெள்ளியங்
குன்றிறைசரணமுங்குறுகலாகுமால்.
(28)
45ஆதலினொப்புயர்வகன்றுதன்னைநேர்
மாதவமேசெயும்வழக்கமாமென
வோதினன்வசிட்டனங்குணர்த்தநின்றசா
தாதபனினையனசாற்றன்மேயினான்வேறு.
(29)
46வேறு.
தருமமேயிணையில்பொருடரையிடைத்தகைசா
லொருமையின்பினையுதவிவிண்ணுலகினுமுடன்போ
யருமையின்பமுய்த்தந்தகற்செறுமெனிலறமே
யிருமையுந்துணையாகுவதன்றிமற்றில்லை.
(30)
47புகழுங்கல்வியுஞ்செல்வமும்வீரமும்பொலிவு
மகிழுங்கோலமுமொழுக்கமும்விழுப்பமும்வழங்கி
யிகழும்பாவமும்பழியுநீத்தரனுமையிடத்திற்
றிகழும்பூதனாயவரருள்செய்யவுஞ்செய்யும்.
(31)
48ஏற்றின்மேல்வருமெந்தைதன்னெழிலுருவறமா
மாற்றிலன்னதேயாற்றுகவென்றவனறைய
நீற்றின்மேனியிற்கண்டிகைமாலைகணிரம்ப
வீற்றிருந்திடுங்கவுதமனினையனவிளம்பும்.
(32)
49மனைகடோறுமுற்றிரந்திடுகபாலியுண்மகிழ
வனகமால்விடையூர்ந்துவந்தெளிதினிலருளக்
கனைகருங்கடலுலகினிற்செய்வதுகருதின்
வினைகடீர்ந்திடுதானமேயன்றிவேறுளதோ.
(33)
50அரியவாகியகலைகள்யாவையும்பயிலறிஞர்
பெரியமாதவருயர்தருகுலத்திடைப்பிறந்தோ
ருரியதானியைப்புகழ்ந்தனருறுவரவ்வளவோ
தரியலார்களுமுறவுசெய்தவன்புடைசார்வார்.
(34)
51சூழும்வான்முகிலெனப்பயன்றூக்குறாதளிப்போன்
பாழிமாபுகழ்ப்படலைபோய்ப்பரந்திடுமுலகீ
ரேழுமாமயன்மான்முதலிமையவர்தமிற்றாம்
வாழுமேம்பதமனையெனவாக்குறமலைவார்.
(35)
52இகத்தினன்கொடைப்பெருமையையறிந்துளோரில்லென், 
றகத்தினாமமுமுரைசெயாரவரரிதாகத்,
தொகுத்தவோர்பொருணல்குவரென்பதென்றுணிந்து, 
மிகுத்தவாவியுங்கொடுப்பரால்வேண்டுமுன்விரும்பி.
(36)
53புவியிலின்கொடையில்லவன்றோற்றத்தின்பொலிவு, 
கவிர்மலர்ந்திடற்கொப்பெனக்கழறுவரதனா, 
லவிர்பெரும்புகழ்க் கொடையதேயதிகமென்றறைந்தான், 
சவிதருஞ்சடைக்கௌதமன்காசிபன்சாற்றும்.
(37)
54உவமந்தீர்ந்திடுவாய்மையொன்றேயுறினுலகிற்
றமமுந்தானமுமொருங்குறச்செய்தலிற்றலையாய்ப்
பவமகன்றுநான்மறைமுடிவாகியபரம
சிவனரும்பதம்பெறும்படியுயர்த்திடுந்தெரியின்.
(38)
55இரவிவாண்மதியுதித்தொடுங்குதலொலியியங்கல்
பரவைதானிகவாதுறல்பயோதரம்பொழிதல்
கருவினூடுவந்தமர்தல்பின்னோற்றுதல்காயத்
தருவமாமுயிர்நிற்குதல்வாய்மையினன்றோ.
(39)
56மன்னனாகியிவ்வுலகெலாம்புரந்திடவரினு,
மின்னறானுழந்துடலம்விட்டிறந்திடவரினும், 
பன்னும்வாய்மையிற்பிறழந்திடாதொழிகவிப்பவம்போய், 
மின்னுலாஞ்சடையெம்பிரான்பதம்புகவேண்டின்.
(40)

 

57என்றுகாசிபமுனிவரன்வாய்மையினியல்பை
யொன்றவேவிரித்தருந்தவர்தங்களோடுரைப்ப
வன்றுசார்ந்துறும்பரத்துவசப்பெயரறிஞன்
குன்றுபோலுயர்குணத்தினீர்கேண்மெனக்கூறும்.
(41)
58விண்ணுளோர்தமக்கவியுணாமகிழ்தரவிளைத்து
மண்ணினாருயிர்க்கெழிலிகொண்டுணவினைவழங்கி
யெண்ணிலெவ்வுலகிற்குமின்பீந்துநற்றானம்
புண்ணியந்தவம்வளர்த்தலான்யாகமேபொருளாம்
(42)

 

59வேறு.
இரதிகொண்கனெழிலுருவட்டவன்
பெரிதுமுண்மகிழ்பெற்றிடச்செய்வத
சுருதிசொன்மகமென்றவன்சொற்றிடக்
கருதிமற்றொன்றுகண்ணுவன்கூறுவான்.
(43)
60இல்லொழுக்கமியைந்துபிதிர்க்கட
னொல்லும்வண்ணமுஞற்றிமரபுளோர்
செல்லும்வெந்நிரயத்துயர்சிந்துவான்
வல்லமக்கட்பெறற்கிணைமற்றிலை.
(44)
61மெத்துகின்ற விழுமிய சீர்த்தியோ 
டெய்த்தலின்றியிருமையின்புந்தரும்
புத்திரற்பெரும்புண்ணியவாழ்க்கைதா
னத்தவத்தினுமாற்றச்சிறந்ததே.
(45)
62என்றுநன்மகப்பேற்றையினிதெனக்
கன்றுநற்றவக்கண்ணுவன்சொற்றிடக்
கொன்றையஞ்சடைக்கூத்தனைப்போற்றியே
ரொன்றுமெய்த்துருவாசனுனரைசெய்வான்.
(46)
63உறவுதந்தைதாயொண்டொடிமாதரார்
சிறுவர்வண்புவிசெல்வம்பெரும்புகழ்
பிறவினும்படுமாசைபிரிந்தமெய்த் 
துறவினல்லதுதுன்பமகலுமோ.
(47)
64வேறு.
ஈட்டுறுங்காலையினேமஞ்செய்வுழிக்
கூட்டலிற்றுயரினைக்குறுகுஞ்சுற்றமும்
வாட்டிடும்பகைஞராம்வகைசெய்வித்தலின்
வேட்டிடும்வெறுக்கையைவெறுக்கையின்பமே.
(48)
65கொடுங்கனன்மதுவிடங்குறுகினுண்டிடிற்
சுடுங்கருத்தழித்திடுந்தொலைவுசெய்யுமாற்
கடுந்துயர்க்காமமோகருதினன்னசெய்
திடும்பினுந்தொடர்ந்துவெந்நிரயத்திட்டிடும்.
(49)
66ஆதலிற்பெண்மயக்காதிநீங்கியே
தீதறத்துறந்திடுமரியசெய்கையே
மேதகக்கதியினில்விடுமென்றோதினான்
மாதவத்துயர்துருவாசமாமுனி.
(50)
67இனையனவீற்றுவீற்றியம்பிமாதவர்
வினையறுநன்னெறிதெரியும்வேலையி
னனையவர்தவமுருவாகிநண்ணல்போற்
றுனியிறவாயிடைச்சூதன்றோன்றினான்.
(51)
68கண்டிகைவடமுரங்கவினநீற்றொளிர்
புண்டரநுதன்மிசைப்பொலியவங்கையிற்
றண்டொடுகமண்டலந்தாங்கிவந்திட
வண்டவர்சூதனல்வரவுகண்டனர்.
(52)
69பொருக்கெனவெதிர்கொடுபோற்றிக்கொண்டுசென்
றுருக்கிளராதனமுதவியையனீ
யிருக்கெனவாயிடையிருத்திமாதவ
ரருக்கியமுதலனவளித்துக்கூறுவார்.
(53)
70துய்யமெய்க்கதிபெறுஞ்சூழ்ச்சியாய்ந்தியா
மையமுற்றிருந்துழியடிசில்வேட்கையான் 
மையலுற்றழுங்குவோர்மாட்டுமூரல்கொண்
டொய்யெனத்தரவருபவரினுற்றனை.
(54)
71தொல்லையம்புராணநூற்றொகுதியாவையும்
வல்லநன்முனிவநின்வரவினுய்ந்தன
நல்லவர்தாம்பெறுநலத்தகல்வியுஞ்
செல்வமும்யாவருஞ்சிறப்பிற்பெற்றவாம்.
(55)
72வாதநாராயணமுனிவரனையொத்தமெய்ப்
போதநாயகவருட்பொழியுஞ்செம்முகச்
சூதமாதவவினைத்தொடர்புபோய்ச்சிவன்
பாததாமரைபெறும்பரிசுகூறென்றார்.
(56)
73வேறு.
என்றலுமுவகைநெஞ்சத்தெழுந்திடச்சூதனீர்வே,
றொன்றொருபொருளுமுன்னாதுலப்புறாமுத்தியெய்தக், 
கன்றினீரதனாலும்பாற்கண்ணுதலருள்பதிந்த, 
தின்றுமையடைந்தியானுமுய்ந்தனனென்றுசொல்வான்.
(57)
74அரியதாம்விச்சைமூவாறவைமறைநான்காறங்கங்,
கருமஞானங்கள்சொன்னூன்மிருதிகாந்தருவம்வின்னூல்,
பரதம்வாகடம்புராணம்பகருநன்னியாயமென்ன, 
விரிதருமிவற்றுட்சீர்சால்புராணமே மேலதாகும்.
(58)
75பன்னுமப்புராணமீரொன்பானெனும்பாகுபாட்டான்,
முன்னுறுதலைமைக்கேற்பமுக்கணெம்பிராற்கீரைந்து,
சென்னிகர்ப்பவற்குநான்குதிசைமுகற்கிரண்டுசெங்கேழ்,
துன்னுறு+கனலியென்பேர்ச்சுடர்களுக்கொவ்வொன்றாமே. 
+கனலியென்பேர்ச்சுடர்கள் - அக்கினி, சூரியன் என்பவர்.
(59)
76அனையவற்றதிகமெந்தையமலராக்கதையீரைந்து,
நனிசிறப்பவற்றுட்காந்தமதனினுணலத்ததம்மா,
தனிவருசனற்குமாரசங்கிதையதனுட்சால,
வினியதுகாளிகாண்டமென்பர்மூதறிவின்மேலோர்.
(60)
77அன்னதில்வியாதனெங்கோனருளினாற்றமியேன்கேட்பத், 
தன்னிகரிலாதமுத்திசார்ந்திடற்கேது தன்னை, 
முன்னமங்குரைத்தானன்னான்மொழிந்தவாறுமக்கியானும்,
பன்னுவனுடம்பெடுத்தபயன்பெறுமுனிவிர்கேண்மின்.
(61)
78இச்சிறைப்பவங்கணீங்கியிணையிலாமுத்தியெய்தன்,
மெய்ச்சிவஞானத்தன்றிவேறுளகருமத்தாகா, 
தச்சிவஞானம்பெற்றோரயனதுகற்பவீற்றிற்,
சச்சிதானந்தமுத்திசார்குவரென்பமாதோ.
(62)
79பிறைமுடிக்கின்றமுக்கட்பிரான்றிருத்தலங்கடம்மி, 
லறமுடிப்பவர்த்துரந்தோரறிந்துமஞ்ஞானபாவத்,
துறைமுடிக்கிற்போரேனுந்துரிசெலாமெளிதினீற்று,
மறைமுடிக்கரியஞானமன்னிமெய்க்கதியிற்சேர்வார்.
(63)
80வலியுகமலமெய்ஞ்ஞானமருவிடவேண்டிற்சார்ந்த, 
புலியுகளத்தாள்போற்றப்பொதுநடம்புரிவோன்றானங், 
கலியுகமதனிற்சாலக்கசிந்துறவேண்டும்பாம்பி, 
னெலியுகணைமிகப்பேரிருந்தவவனத்தீரென்றான்.
(64)
81சூதமாமுனிவனின்னசொற்றிடவுவகைபூத்துத், 
தீதிலாமுனிவமுத்திசிவனிடமளிக்குமென்றாய்,
வாதராயணன்மலர்ந்தாண் மருவுமாணாக்கர்தம்மு,
ளோதியாலுயர்ந்தோய்சொல்வதொன்றுளதென்றுசொல்வார்.
(65)
82தண்ணிலாமலர்ந்தவேணித்தாணுவுமுமையுந்தங்கள், 
கண்ணுலாமக்களோடுங்கயிலைபோலிருப்பதாகி, 
யெண்ணிலாவமரர்வேள்வியிறையயன்முராரியென்று, 
முண்ணிலாவுவகையோடுமுவர்த்தொழுதமர்வதாகி.
(66)
83அளப்பருமனந்தகோடியமலமெய்த்தலங்கடோறுங், 
கொளப்படுபயன்கண்முற்றுமெளிதினிற்கொடுப்பதேயாய்த், 
தளப்பதுமதுமேலோனந்தினுநந்தாதாகி, 
யுளப்படுபோகமுத்தியொருங்குறவுதவுஞ்சீர்த்தாய்.
(67)
84கங்கையாதிகளின்மிக்ககாமருபுனிததீர்த்தந்,
தங்குவதாகியுன்னிற் சாற்றிடில்வினவிற்செங்கேழ்ப்,
பங்கயன்மாயோனெம்மான்பதந்தரவல்லதாகி, 
யிங்கொருதலத்தையையவியம்புதியெங்கட்கென்றார்.
(68)
85என்றவருரைத்தலோடுமெழுந்தபேருவகைபொங்கக், 
குன்றவிற்கோலத்தெம்மான் *கூவரங்கருதியுள்ளங், 
கன்றுளுமன்னைநெஞ்சிற்கரைந்துகமயிர்பொடிப்ப, 
மென்றுளிவிழியரும்பவிதிர்விதிர்த்தினையசொல்வான். 
* கூபரம்# என்னும் வடமொழி-கூவரம் எனத் தற்பவமாயிற்று.
(69)
86அருந்தவமுனிகணீவிரறைந்தனமுழுதும்பெற்ற, 
பெருந்தலமுளதொன்றம்மவதனதுபெருமைதன்னைப், 
பரந்திடுமுகங்கள்கோடிபஃறலையரவப்புத்தே, 
ளிருந்துரைப்பினுமடங்காதியான்சிறிதறிந்தசொல்கேன்.
(70)


நைமிசாரணியச்சருக்கம் முற்றிற்று.
ஆகச்செய்யுள்-86.

3. திருத்தலச் சருக்கம்.(87- 164 )

87நாட்டுச்சிறப்பு.
பண்டுளமுத்தளைபறியமெய்க்கதி
கண்டிடவனைநருங்கனகமேரு+கோ
தண்டமண்டிதருறுதலத்தைச்சூழ்தரு
தொண்டைநன்னாட்டணிதொகுத்துக்கூறுவாம்
+கோதண்டமண்டிதர்-விற்கோலநாதர்.
(1)
88வேறு.
வாய்த்தகார்புனற்சாடியின்வெண்படாம்வயங்கத்
தோய்த்துவான்மகள்கருமைகூர்துகில்தரவிரித்துப்
போர்த்ததாமெனமிளிர்தருதவளவண்புயல்க
ணீத்தவாரிதிபடிந்துகார்நிறமொடுபரந்த.
(2)
89விண்ணுலாவியபுழைக்கைபோன்முகிலினமேவிக்
கண்ணுலாவியசூல்வளைநித்திலங்கரையிற்
றண்ணுலாவியவலையெறிசலதிநீர்முகந்து
மண்ணுலாவியமதகரிபோன்மெனவந்த.
(3)
90வேறு.
சிந்துரத்திருத்தென்ககயிலாயம்வா
ழெந்தைதன்முடிக்கீரம்புனலாட்டல்போ
னந்தியம்பெருநாகச்சிகரிமேல்
வந்துநின்றுமழைமுகில்பெய்தவே.
(4)
91கோடுகொண்டுயர்குன்றினுநின்றுநீர்
மாடுதுன்றுமணியொடிழிந்திட
லாடுமங்கதமண்ணன்முடியைவிட்
டோடுகி்ன்றவியல்பினையொத்ததே.
(5)
92கடியமன்னர்கவர்ந்துகொண்டேகியே
விடின்விரைந்துதம்வீழ்நகர்செல்பவர்
படியதென்னப்பயோதரம்பெய்புன
னெடியமைக்கடனேடிநடந்ததே.
(6)
93காரடைந்துகாராவினமுதினைச்
சீரடைந்தசிலம்பிற்பொழிதலு
மேரடைந்தபாலாறென்றொருபெரும்
பேரடைந்துபுவியிற்பெயர்ந்ததே.
(7)
94மெலியர்மேவும்வியன்சிறைநீக்குபு
வலியர்வந்துமீட்டேகுதன்மானவே
யொலிகொணீத்தமொண்கோடுடைத்தொல்லையிற்
பொலியும்வாவிநன்னீர்கொடுபோகுமால்
(8)
95வானமேயவலிகெழுகோளரா
வானவீர்ங்கதிரென்னவங்காந்திடக்
கானமோடிக்கடுந்திரையாலெடுத்
தேனமாமருப்பெற்றுமந்நீத்தமே.
(9)
96கலவிரும்புனற்றொண்டைநன்னாட்டினி
னிலவளங்கணிரப்புவதன்றியும்
புலனிலங்குபுதுமணியாதிய
மலைவளங்களுந்தந்திடவந்ததே.
(10)
97குங்குமங்கலந்தோர்புறங்கூர்ஞ்சுனை
தங்கிநின்றுறுந்தாதளைந்தோர்புறம்
பொங்குதண்புனல்போதுவதொண்மலை
மங்கைபாதிமணந்தவர்ப்போன்றதே.
(11)
98வில்லிருந்திரைவின்னாண்குறுக்கிடு
வல்லியொண்கணைசெவ்விதின்வந்ததா
ளல்லிநன்முகையாக்கொடுவேலையோ
டொல்லும்வெஞ்சமர்க்குற்றிடல்போன்றதே.
(12)
99பெண்ணைசாய்த்துப்பெருகிக்காவேரியி
னண்ணியோதிமநன்குறவைகைசேர்ந்
தெண்ணுகம்பையியைந்துமீணித்திரண்
மண்ணியேகும்வளங்கெழுபாலியே.
(13)
100வேறு.
சிலம்படிமருவிச்சந்தத்திலகமுன்னெற்றியிட்டுப்,
பொலங்கொடியிடைசூழ்காஞ்சிபொருந்திமென்னகின்மேலார,
மிலங்குறவளைகள்கைசேர்ந்திரத்தினப்பணிதாங்காவுற், 
பலம்பயிலளகமோடும்பாலியாமடந்தைபோந்தாள்.
(14)
101சேட்டிளவாளைதாக்கத்தெங்கிள நீர்மார்த்தாண்டன், 
பூட்டுவெம்பரித்தேர்காறும்விசையினிற்போதுத்தெண்ணீர், 
வேட்டவணிருந்தபாகன்விரைவினிற்பற்றியுண்ணு,
மூட்டுமூழெங்குற்றாலுமனைவர்க்குமூட்டிடாதோ.
(15)
102துருக்கமுநறியசந்துஞ்சுடர்கெழுமணியுமுத்து, 
மருக்கிளர்மலருந்தாங்கிமதமுமிழ்கரிமேற்கொண்டு,
பெருக்கமுற்றளவின்மாக்கள்பரவப்பேரியாற்றுவேந்து, 
பொருக்கெனக்கடலோர்காதமெதிர்புகுந்தழைப்பப்போமால்.
(16)
103நண்ணியபுறத்துமாசோடாடியநரர்க்குமற்றை,
யுண்ணிகழ் மனத்தழுக்கு மொருங்குடன் றீரும்வண்ண, 
மண்ணுபுமறித்துநண்ணாவகைபுரிந்தமலநல்கும், 
புண்ணியதீர்த்தம்பாலியல்லதுபுவியின்யாதோ.
(17)
104தன்னையாதரவிற்கண்டோர்தங்கட்காதனமாய்நல்கப், 
பொன்னிதழ்க்கமலப்போதும்பொருந்தியாடுநர்கடாங்க, 
வந்நிலையளிப்பச்சங்குமடுத்துவந்துட்கொண்டோர்கள், 
பன்னகமணிதற்கீயப்பரித்தொழுகுறுமந்நீத்தம்.
(18)
105பொய்கையுங்கிடங்குங்காவும்புகுந்துலாம்பாலிநீத்தஞ், 
செய்களின்மள்ளரார்ப்பச்சிரமொராயிரம்பெற்றீசன், 
வைகுமொண்கயிலை நண்ணிவலம்புரிமுழக்குங்கம்பன், 
கைகளினிமிரும்பாங்கர்க்கால்களினிவந்துசெல்லும்.
(19)
106தேஞ்சிலம்பெழுந்தபாலித்தெண்புனல்பரவமள்ளர், 
தாஞ்சிலம்பியமோடார்த்துத்தலைக்தலைக்குழுமிச்செய்க்க, 
ணாஞ்சிலம்பகடுபூட்டிநல்லெழின்மாதர்தங்காற், 
பூஞ்சிலம்பெனச்சால்கீறிப்புடைபரந்துழுவாரன்றே.
(20)
107அந்தகனிவருமூர்தியன்னவெம்பகட்டேர்பூட்டி, 
யுந்தியங்குரப்பிமள்ளருழும்பணையெகினஞ்சங்கைத், 
தந்திடுமண்டமென்னச்சடக்கெனவெடுத்துவான்போய், 
நந்தெனவிடுப்பவீழ்வநளிர்மதிதவறிற்றொக்கும்.
(21)
108சுரும்பினமிரியல்போகத்தொத்திதழ்க்கமலச்செப்பு, 
ணிரம்புகட்கைம்மடுத்துநிறையவுண்டெழுந்துமள்ளர், 
வரும்புனறேக்கியான்றவயலுழுதளைந்தசேறு, 
பரம்படித்திழுதுசெய்துபறித்தநாறெங்குநட்டார்.
(22)
109களைகளைவிப்பமள்ளர்கருதித்தம்மாதர்ப்பாரா
விளையமிர்தன்னீர்நுங்கள்விழியிதழ்வதனமோடு
முளரியொண்குமுதநீலமுரணிநிற்கின்றவென்ன
வளைகலித்திடவேரோடுமற்றவைகளைதல்செய்வார்.
(23)
110வேறு.
முற்றிடுநளிர்மதிமுகத்துழத்திய
ருற்றிடவயலினெம்முறையிற்கண்களான்
மற்றெமையிகலினோர்வருதலென்னென
வெற்றிடுமறிந்திடவெழுந்தசேல்களே.
(24)
111முண்டகநறைமலர்மொய்த்தபாங்கரி
லொண்டொடிமார்திருவுருவமெண்ணில
கொண்டவைதொறுமரீஇக்குதித்துநின்றென
மண்டுறுபெரும்புனல்வயற்கணிற்பரால்.
(25)
112அலைபுனற்றண்பணையகத்துச்செந்நெலோ
ரிலைபுடைவளைவுறவீர்ம்பசுங்கதிர்
நிலைபெறவெழுந்துமேனிமிர்ந்துதோன்றுவ
கொலைமதகரியினங்குசங்கள்போன்றவே.
(26)
113உண்ணியவந்துறுநாரையோடமே
னண்ணியவாளைபாய்நலத்தபண்ணையிற்
பண்ணியபயிர்பெரும்பாலிநாட்டுளோர்
புண்ணியந்தெரிவுறவிளைந்தபொற்பினால்.
(27)
114மேனிமிர்பைஞ்சுருள்விரித்தசாலிகள்
பானிறைதருங்கதிர்பழுத்தகண்ணுறீஇக்
கூனிரும்பினைக்கரங்கொண்டரிந்தரோ
வானகடுரிஞ்சுபோர்வகுப்பர்மள்ளர்கள்.
(28)
115எர்க்கதிர்வாள்கொடேயீர்வர்வீக்கிமெய்
வேர்க்கவங்கெடுத்துராய்வீழ்த்தியெற்றுவர்
சூர்க்கரும்பகட்டினாற்றுவைப்பித்தார்ப்பராற்
போர்க்களம்புகுந்துபோர்புரிநன்மள்ளரே.
(29)
116வேறுறும்பலாலநீத்துலவைமேவுழி
மாறரும்பதடிகண்மாற்றிநெற்குவா
லாறினொன்றரையருக்களித்துமற்றவைங்
கூறுநல்லறங்களிற்குலவச்செய்வரால்.
(30)
117வேறு.
பிரிந்தமடவாரளகங்குழைக்காதுவிழியதரம்பிறங்குமூரல், 
பொருந்துகளமுலைபாணியுந்திமுழந்தாள்கணைக்கால்புறந்தாள்வாவி,
பரந்திடுசைவலம்வள்ளைகயலாம்பற்றரளமணிபணிலங்கண்ணி ,
விரிந்தமரைசுழியலவன்வரால்கமடமிளைஞருளம்விரும்பக் காட்டும்.
(31)
118வானமெழுநிறைமதியந்தண்டகநாட்டரிவையர்தம்வதனம்போலா, 
தூனமுடனலமரவிப்பதுமமாமலர்மலர்ந்தேயொப்பவிங்ஙன், 
றானமர்வதென்னுக்கென்றழுக்காறுமனத்தடையத்தடத்தவாவித்,
தேனவிழுமிதழ்க்கமலச்செழும்போதின்றனதழகைச் சிதைக்குமன்றே.
(32)
119வேறு
தண்ணம்பாசடைதுன்னுபுசார்ந்துள
கண்ணகன்புனற்காமருபைந்தடம்
வண்ணவொண்குமுதங்கண்மலர்ந்தன
விண்ணின்வந்தெழுமின்றிரள்போன்றவே.
(33)
120வாடுகின்றமருங்குல்வருத்துபூண்
மூடுகின்றமுகிண்முலைமாதரார்
பாடுகின்றஞிமிறுபரந்தெழ
வாடுகின்றனவம்புயவாவியே.
(34)
121வேறு
வாவியம்புனல்குடையுமெல்லியர்மதர்மழைக்கண்,
காவியென்றிதழ்குமுதமென்றானனங்கமலப்,
பூவதென்றிருட்குழலினமென்றுபல்பொறிவண்,
டாவல்கொண்டுவந்தணைதரப்பொருக்கெனவாழ்வார்.
(35)
122
கோட்டிரும்புனற்றடத்தினின்மூழ்கியேகுடங்கை,
காட்டிநின்றிரிந்தோடியவோதிமங்காணா,
வேட்டிலங்கியகமலமென்றதனிடையிவரப், 
பேட்டினங்கணெஞ்சழுங்குறவனிதையர்பிடிப்பார்.
(36)
123குடைந்துவாவிநீர்படியுமோர்குளிர்மதிமுகத்தி, 
யடைந்துதாமரைமுகத்தியையலைக்குமொண்மயிலா, 
மடந்தையோரரவல்குலைப்பிடிக்கும்வாரணம்போ, 
னடைந்தகோதையைமடங்கலாமருங்குலாணலியும்.
(37)
124நகரச்சிறப்பு.
இன்னவாகியவளங்கெழுதொண்டைநாடேமந்
தன்னிலாமொளிர்மதாணியாமற்றுளதலங்கண்
மன்னஞாங்கரிற்சூழ்தரவழுத்தியமணியாக்
கொன்னுலாநடுநாயகமாயதுகூவம்.
(38)
125வம்புமாமதயானைகளிரண்டொருவயிரக்
கம்பமேவுறக்கட்டுமையறங்களைக்காட்டுஞ்
செம்பொன்மாமதிற்காஞ்சிதென்றிக்கினிற்றிகழ
விம்பர்மேயதுதனக்கிணையிலாதவக்கூவம்.
(39)
126தேங்குசோதிமாநவமணிபொன்கொடுசெய்த
வோங்குகோபுரமாடமாளிகையொளிர்வேரம்
பாங்குசூழ்மதின்மண்டபந்தெற்றிகள்பலவு
மீங்குவாழ்தருமிந்திரனகரெனவிலங்கும்.
(40)

 

127சோதிபெற்றவொன்பானெணுமணிகளுந்துவன்றி
மேதகப்பெருஞ்செய்குன்றுபற்பலவிளங்கல்
பாதலத்தராவிறைசிரம்பரித்தபன்மகுடம்
பூதலத்துமேற்புறப்படத்தோன்றுவபோலும்.
(41)
128திங்கள்வாணுதலரிவையர்நடுநிலைசெறியத்
துங்கமாகியமரகதச்சிகரிகடோன்றல்
பங்கயாதனப்பொறிபலமார்பகம்பயில
மங்குல்வான்முகடளவுநீண்முராரிகண்மானும்.
(42)
129தெண்ணிலாவொளிர்மேனிலச்சேக்கையின்மாதர்
நண்ணிநாயகர்தங்கலைநெகிழ்த்திடநாணி
மண்ணிவாள்விருபதுமராகப்பணிமறைத்து
வெண்ணிலாவிருள்பட்டிடநீலணிவிரிப்பார்
(43)
130தருக்குமங்கலக்கடைத்தலைதொறுமணிதழைப்ப
நிரைக்குமொண்கழையரம்பைபூகதமிவைநிகழ்த
லரக்குமெல்லிதழ்மாதர்தோடொடைகளத்தழகை
யிர்க்கும்வண்ணம்வந்தேகடைகாக்குமாறேய்க்கும்
(44)
131ஓதிமஞ்சினகரத்தயனிறுவியேயுட்போ
யாதியங்கழல்பணிந்துமீண்டிடுமுனங்கடைந்த
மாதர்நன்னடைவிழைந்துபின்சென்றிடவந்து
போதனங்கதுகண்டிலன்றேடியேபோகும்.
(45)
132முன்னனங்கன்மாட்டெய்துபூண்முலையினாட்கண்ட
மன்னுமைந்தர்தங்காதல்கூர்மகளிரைநோக்கி
யென்னைநம்மெதிர்தமியளாய்நேர்ந்தவளார்கொ
லென்னவங்கவரூடுவர்விழைந்தனரென்று.
(46)
133மருவுமாடவரெழின்மிகுவடிவினைநோக்கிப்
பொருவின்மாரவேடனதுளம்பொறாமலேவெள்கி
யுருவமாயிவர்கண்முனமுற்றிடாதியாமுன்
னருவமாயதுநன்றெனத்தேறியேயகல்வான்
(47)
134உள்ளமாதரங்கூரவின்சொற்புகன்றுதவும்
வள்ளலாகியகூவமாநகருறைமாந்தர்த்
தெள்ளுநீர்மைகண்டைந்தருத்தேனுவொண்சிந்துப்
பள்ளமார்தருகருமுகிலினம்பயப்படுமால்.
(48)
135மோகசாகரங்கடந்துநூற்கரைகண்டமுனிவர்
யாகசாலையினறும்புகைப்படலைகளெழுந்து
பாகசாதனன்பதம்பெறுபசும்பொன்மாளிகைப்பான்
மேகசாலங்கண்மேருவைச்சூழ்ந்தெனமேவும்.
(49)
136தலவிசேடம்.
இனையதாகியகூவமாந்தனிநகரிடத்து, 
முனிவர்வானவர்சூழ்தரமுப்புரமுடிப்பான், 
புனிதனேகுழிக்கரிமுகன்புகுந்து * கூவரத்தைத், 
தனியுலாங் கரத்தொடித்தனன்செலவினைத்தடுத்தான். 
--
*கூவரம் - ஏர்க்கால் ஏர்க்காலோடு ஆரையும் அச்சையும் 
ஒருங்குசேர்த்து ஒடித்தனராகலின் ஆரையொடித்தனர்
அச்சையொடித்தனர் எனவும் வரும்.
(50)
137ஆனகாலையினமரர்தந்துயர்கெடவாண்டு
ஞானநாயகன்றிரிபுரம்பொடிபடநகைத்து
வானநாடவர்வாழ்வுபெற்றுய்ந்திடவழங்கிக்
கூனன்மேருவிற்பிடித்தமர்க்கோலமாய்நின்றான்.
(51)
138நின்றவாதிகூவரந்தனையொடித்திடுநிலையா
லன்றுகூவரக்கினரெனும்பிள்ளையோடமரிற்
சென்றதாலுடன் * வயிரவாகாரையாந்தேவி
யொன்றமேருகோதண்டமண்டிதரெனவுறைந்தான். 
--
* வயிரவாகாரை - பயங்கரமானவுருவத்தையுடையவள்.
(52)
139வேறு.
+ காங்கெயன்வடுகன்றக்கற்காதி ++ கூர்மாண்டன்காரி, 
யோங்குறுகாலச்செந்தீயுருத்திரனாடகேசன்,
பூங்கமலத்தன்மாயோன்புரந்தரன்முனிவர்விண்ணோர், 
தாங்களுமிறைவற்போற்றித்தங்கினர்கூவமூதூர். 
--
+ காங்கேயன் என்பது - காங்கெயன் எனக்குறுகிநின்றது.
++ கூஷ்மாண்டன் என்பது - கூர்மாண்டன் என்றாயிற்று.
(53)
140என்றுமிக்கூவமேயவெந்தைதன்கலைகடம்மி
லொன்றினையாயிரங்கூறிட்டவற்றொன்றதாக
மன்றலங்கயிலைமன்னுமாங்கமர்மற்றுளோருந்
துன்றியதமதுதானந்துன்னுவதற்றேயாகும்
(54)
141அந்நகரத்தின்வந்தவமரர்கண்ணிமைத்துக்கால்க
ளிந்நிலவரைப்பிற் சேர்த்தியிலங்குபேர் வேறுகொண்டு, 
முன்னுறுமுகங்கணான்குமுறையினந்தணர்கண்மன்னர், 
தொன்னிதிவணிகர்தூயசூத்திரரென்னவாழ்வார்.
(55)
142அறந்தலைநிற்றலாற்பேரறிவினாற்கொடையாலன்பான், 
மறந்தருகொலைகளாதிமாற்றலால்வாய்மைச்சொல்லா, 
னிறைந்தவிக்கலியுகத்துநிலைத்தசீர்க்கூவமூதூர்ச், 
சிறந்தவேளாளரானோர்தேவரென்றறியலாமால்.
(56)
143தளங்கமழ்கமலவாசச்சதுர்முகன்கற்பவீற்றிற்,
றுளங்கிடவுலகமெல்லாந் தொலைக்குமப்பிரளயத்தும், 
வளங்கெழுவிற்கோலத்தெம் வள்ளலூர்க்கிறுதியின்றால், 
விளங்கியகூவநீரைவெள்ளங்கொண்டகலுமோதான்.
(57)
144கயிலைகேதாரங்காசிகச்சிதென்மதுரைசோண,
சயிலமாரூர்காளத்திதடம்பணைத்தில்லையாதி, யிய
லுறுதானந்தோறுமிருந்திறைபகர்வதெல்லாம், ப
யிலுமாதவர்வாழ்கூவப் பதிப்பெரும்புகழேயம்மா.
(58)
145தக்கநற்காசியாதிதலங்களினிழைத்ததீமை,முக்
கணெம்பெருமானேயமுழுதுறுங்கூவத்தெல்லை, 
புக்கவக்கணமேதீரும்போற்றுமந்நகரிற்செய்த, மிக்க
வெம்பவமவற்றால்விலக்கிடப்படாதாலென்றும்.
(59)
146நடைவலம்வரலிருத்தனற்சுகாதனம்வணக்கங்,
கிடைமொழிதுதித்தல்கேட்டல் கேள்வியுன்னுதறியான, 
மடைதுயில்சமாதிசெய்கையரன்றொழினோக்கல்கொன்றைச், 
சடையனைநாடலாகுந்தனைநிகர் கூவத்தன்றே.
(60)
147சீருறுமிணையில்கூவச்செழுநகரிடத்துமேவி
யோரணுவளவியற்றுமோரறமேன்மேலோங்கி
மேருவின்வளருமன்னமேருவிற்செய்ததீமை
நேரணுவதனினொய்தாய்நீறுபட்டழியுமாதோ.
(61)
148வேறு.
மைந்தரையன்னையைமாதரையாவைத்
தந்தையையந்தணர்தம்மைவதைத்த
வந்தமில்பாதகராயினுமெல்லை
வந்திடினந்நகர்வண்கதிநல்கும்.
(62)
149பன்றியயங்கள்பதாயுதநாய்மா
வன்றில்கரங்கொடியங்கதமாகி
கொன்றைமிலைந்தவர்கூவபுரத்தே
யொன்றினயாவையுமொண்கதிநண்ணும்.
(63)
150அருத்திமிகுந்திடவப்பதியின்பே
ருரைத்தவர்நெஞ்சுறவுன்னினரங்ஙன்
கருத்தனின்வந்துகலந்துபிறந்தார்
மரித்தவர்மெய்க்கமன்னுவரன்றே.
(64)
151அந்நகரத்தினயற்பதியாமோர்
கன்னலிருப்பினயன்சதகற்ப
மன்னுவர்மெய்ச்சிவலோகவளத்தே
யென்னினதற்கிணையாதுரைசெய்வாம்.
(65)
152ஆயிரகோடியயன்றிருமாறான்
மேயினர்பூசைவிளைத்தனர்கூவத்
தூயனையேவழிபாடுதொடங்கி
யேயினவிந்திரருக்களவின்றே.
(66)
153வேறு.
அண்டர்சித்தரியக்கர்கின்னரராழ்பிலத்துறைநாகர்வின், 
மண்டிதற்கிடனாகிவைகியகூவமாநகர்சூழ்தர, 
வெண்டிசைக்கணும்வந்தமைத்தவர் பூசைசெய்தவிலிங்கமோ,
கண்டவர்க்குயர்புத்திமுத்தியளித்திருப்பகணிப்பில.
(67)
154பன்னரும்புகழ்மேயகூவபுரத்தினிற்குடபாலினிற்,
கின்னரும்புரைகொங்கைமேனகைகெண்டையங்கணுருப்பசி, 
#முன்னரம்பையரிளமைநல்லெழின்முற்றுறாதரம்பேசனா,
மென்னவொண்சிவலிங்கமொன்றையியற்றியேவழிபட்டனர். 
-----
# அரம்பையராற் பூசிக்கப்பட்ட இத்தலம், ரம்பா என்னும் வடமொழி லம்பா 
என்றாகித் தமிழ்விதிப்படி மொழிமுதற்கண் இகரம் பெற்று ஆகாரவீறு 
ஐகாரவீறாகி நிற்க அதனோடு கோட்டூர் என்னும் ஊர்ப்பெயர் புணருங்கால் 
அம்முச்சாரியை தோன்றப்பெற்று, இலம்பையங்கோட்டூர் என வழங்குகின்றது; 
இது தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று.
(68)
155அந்தமெய்ச்சிவலிங்கம்வேண்டுநர்வேண்டியாங்குவழங்கியே, 
சுந்தரத்துறுமாலதன்குணதிசையின்முன்புதொடங்கிய,
பந்தமற்றிட*முனிவர்பூசைபயின்றகண்ணுவலிங்கமுற்,
றிந்திரத்திருவந்துகண்டவர்பெற்றிடும்படியீயுமே. 
----------------
* முனிவர்-கண்ணுவமுனிவர்
(69)
156வேறு.
செம்பொனிதழ்க்கொன்றைபுனைவிற்கோலத்தெம்பெருமான்றிருமுன்னாக,
வம்பவளச்சடைக்கங் கைதனிற்புனிததீர்த்தமொன்றுண் டறையக்கேண்மி,
னும்பருமங்கதின்மூழ்கிமனக்களங்கமொழித்திடுவருயர்ந்தவிற்கோ, 
னம்புபடிற்பிழைக்குமோவினையனைத்துமக்கணமேயகன்றுபோமால்.
(70)
157அத்தகையதீர்த்தமிவணவதரித்தவகையவுணர்புரங்கண்மாயச். 
சுத்தனடற்புரலிநெடுங்கொடிமணித்தேர்மிசையமரர்சூழ்ந்துபோற்ற,
வித்தலநின்றிடுங்காலையிரதகூவரத்தையிப முகத்தெம்பெம்மான்,
கைத்தலங்கொண்டிறுத்தவிடத்தெழுந்ததுநம்பவமாசுகழுவுநீராய்.
(71)
158ஆதலினங்கதற்கரியதிருநாமமச்சிறுகேணியதாமென்றே, 
யோதுவரங்கதன்பெருமையுமையொருபாலுடையபிரானுரைப்பதல்லாற், 
போதமிலென்புந்தியினாற்புகலவெளிதோவதனைப்புகழ்ந்துபோற்றிற், 
றீதகலுமெனும்பொருட்டாற்றமியேனும்றிந்தபடிசெப்புவேனால்.
(72)
159வந்ததனிலிருநான்குபகன்மூழ்கின்வரன்முறையாலொவ்வோர்வைகற், 
கந்தமறும்பவம்போம்புண்ணியம்வளருமகபதிதனரியதான, 
முந்துபிரசாபதிதன்றானமயனுறுதானமுகுந்தன்றான, 
மெந்தையுமையொருபாகனிருந்தான முத்தியிவையெய்துமன்றே.
(73)
160செங்கதிர்வெண்கதிர்நாளட்டமியயனமுவாவாதிகினங்கணண்ணி, 
யங்கதனிலாடுநர்களரும்புதல்வாரசாட்சியாக்கமெய்தித், 
தங்கியிருங்கதியடைவரதிற்றோய்ந்துபோம்பறவைசார்ந்தவாவிப்,
பொங்குபுனற்படிந்தவரும்வினைதீர்ந்து மெய்க்கதியிற்புகுவரன்றே.
(74)
161தீர்த்தமுலகுளவெவையுமப்புனிததீர்த்தத்துக்கொவ்வாவெல்லா, 
'மூர்த்திகளும்விற்கோலமூர்த்திதனக்கிணையல்லமுந்நீர்சூழ்ந்த, 
பார்த்திகழுமருந்தலங்களெனப்பகரப் பட்டவெலாம் புவனமூன்றும், 
போர்த்தபெரும்புகழ்படைத்தகூவமாநகரதனைப்போன்றிடாவே.
(75)
162எண்ணிறந்தவுகங்கடவம்பயின்றதனால்விழிநுதலினிமைக்குமீச,
னுண்ணிறைந்தகருணையினாலிவகுகுருபரனருளாலொழிவில்சீர்த்திப், 
பண்ணிறைந்தகூவநகர்ப்பெருமை சிறிதறிந்துரைத்தேன் பவா*கடீரக்,
கண்ணிறைந்தமலபாகம்வரநீவிரதுவினவ*காதல்கொண்டீர்.
(76)
163என்றினையசூதமுனிபுகன்றிடலுமிருந்தவர்*ளுவகையெய்தி, 
யின்றெமதுவிழிசிறப்பநினைக்க*ணும்பேறுடையேமுலகினெல்லா, 
நன்றியையுமுடையேம்வெம்பவப்பிணிக்குமருந்தாகி நணுகுங்கூவஞ், 
சென்றுதொழுமரும்பயனும்பெற்றனமென்றுரைத்திதனைச்செப்புகின்றார்.
(77)
164அருந்தவநீமுனம்புகன்றதிரிபுரத்தினியல்பெ*வன்கொலதிபராகி, 
யிருந்தவர்யாரவர்நாமமேதமரர்குழுவோடுமிறைவன்சாட, 
வருந்திறம்யாதைங்கரத்துத்தனிக்கடவுளமலனினர்வையத்தாழி, 
பொருந்துறுமாரொடித்ததென்னுக்குரைத்தியெனச்சூதமுனிபுகல்வதானான்.
(78)

திருத்தலச்சருக்கம் முற்றிற்று.
ஆகச்செய்யுள் - 164.
-----------------------------

4. திரிபுரதகனச்சருக்கம். (165-302)

 

165தாலமேற்புகழ்வைத்துள்லதாரகன்சிறாராய்வித்துன்
மாலியேதாரகாக்கன்வயக்கமலாக்கனென்ன
வேலுலாந்தடக்கைவென்றிவீரர்கண்மூவர்பாவ
மூலகாரணமதாயமுக்குற்றம்போலுண்டானார்.
(1)
166பேருகமனேகமெண்ணில்பெரும்புவியண்டமாண்ட,
* தாருகனுயிர்கூற்றுண்ணச் சட்டகங்கடைவாய்பெய்நெய்த், 
தோருகவயிலிற்செவ்வேடொலைத்தபின்மூவரும்பங்,
கேருகவிறையைநோக்கிக்கெடலருந்தவமுயன்றார். (2)
------------
*தாரகன் என்பது எதுகைநோக்கித் தாருகன்என நின்றது.
(2)
167துய்த்தலற்றளவில்காலந்துயரொடுநோற்றுமேனி, 
யெய்த்தவர்க்கருளவன்னமுடனிருங்கரகத்தெண்ணீர்,
கைத்தலந்தன்னிற்கொண்டுகமலபீடிகையினேயம்,
வைத்தமர்ந்துலகமாக்கும்வள்ளன்முன்வந்துநின்றான்.
(3)
168நின்றலுமதனைக்காணாநிலமுறப்பணிந்தெழுந்து, 
வன்றிறலவுணர்போற்றமான்மகனுவகையெய்தி, 
யென்றனைநினைந்துநோற்றதேதுளம்விரும்பிநீவிர், 
நன்றுறமொழிமினென்னவஞ்சலிநவிற்றிச்சொல்வார்.
(4)
169மூவுலகத்துமொன்றமூவெயிலளிக்கவேண்டு, 
மூவருமவணுறைந்துமுடிவிலாவுகங்களாண்டு, 
மேவலர்ச்செகுக்கவேண்டும்பத்துநூறாண்டிற்கோர்கான், 
மேவுறவெயில்கண்மூன்றுங் கூடவும்வேண்டுமன்றே.
(5)
170இன்னமுமொன்றுண்டையவெந்தமக்கிறுதிநாளுண், 
டென்னினுமொருவனேநின்றெளிதினிலாடலேபோற், 
றன்னொருகணையாலெம்மையொருங்குறத்தடிவதல்லாற், 
பின்னொருசெயலான்வெல்லாப்பெருமையும்வேண்டுமென்றார்.
(6)
171அன்னவர்மொழியைக்கேளாவம்புயனற்றாகென்று
தன்னருள்புரிந்துபோனான்றயித்தியர்நிற்பவங்ங
னுன்னதமகற்சிநூறியோசனையாமூன்றிஞ்சி
பொன்னயம்வெள்ளிதன்னாற் பொற்புடனானவன்றே.
(7)
172ஓதிமனாணைதன்னாலுயர்வினுக்கேற்றவாறு
மேதினிதனிலயத்துமிளிர்மதிலந்தரத்துச்
சோதிகொள்வெள்ளியிஞ்சிதுறக்கத்தாடகத்தினாய
மூதெயிலுறவவற்றைமூவருமுறையிற்கொண்டார்
(8)
173கொண்டவரேவவாங்குக்கோபுரங்கோயிறெற்றி
மண்டபமவுணவெள்ளமருவிடந்துரகசாலை
விண்டொடுசேவகம்பொன்வீதியாவணஞ்செய்குன்று
தண்டலைவாவியாதிதந்தனன்மயனென்கின்றான்.
(9)
174அவ்வளமனைத்துநோக்கியவுணர்களுவகைபூத்துச்,
செவ்விதுநங்கட்கிந்தச்செழும்புரமெனவிருப்ப,
வெவ்வமில்கலைகடேர்ந்தவிருந்தவமயனென்றுள்ளோன்,
றெவ்வடுபுயவீரர்க்கோருறுதியைத்தெருட்டுகின்றான்.
(10)
175வேறு.
செல்வமும்பதாதியுஞ்செறுநர்தங்களை
வெல்வதும்வீரமும்புகழுமேன்மையுங்
கல்வியும்புதல்வருங்கதியும்வேண்டுந*
*ரெல்வருமிலிங்கபூசனையியற்றுவார்.
(11)
176அல்லலும்பழிகளும்பகையுமச்சமுஞ்
செல்லலும்பிணிகளுஞ்செயிருநிந்தைகள்
சொல்லலுமிடியும்வெஞ்சோகமோகங்கள்
புல்லலுமிலிங்கபூசனையிற்போகுமால்.
(12)
177அங்கையினடங்குநீரிலிங்கத்தாட்டியே
யெங்கணுமுடையபச்சிலையொன்றிட்டுமால்
பங்கயனடிதொழும்பரனைப்பூசியா
மங்குறுபவர்கடம்மடமென்சொல்லுவாம்.
(13)
178எய்திவாழ்வொடுஞ்சிலரிருப்பக்கண்டுமுன்
செய்தபூசாபலமென்னச்செப்புவார்
மெய்தவவிலிங்கபூசனைவிரும்பியே
செய்திடாதுழன்றிடுஞ்செய்கையென்சொல்வாம்.
(14)
179இருள்புரிபவமகன்றின்பமெய்திட
வருள்புரியிலிங்கபூசனையையாற்றிடா
மருள்புரிமனத்தினோர்மருவுந்தீயுடல்
சுருள்புரிசுணங்கன்வாற்றோற்றம்போலுமால்
(15)
180பரசிவலிங்கமெய்வடிவிற்பட்டிட
விரைமலரொன்றறியாமல்வீசிய
நரர்களேயிந்திரனாமங்கொண்டுபோய்ச்
சுரர்தொழவனுதினந்துறக்கமேவுவார்.
(16)
181வீழ்ந்ததுவளைந்ததுமிஞிறுதான்விழப்
போழ்ந்ததுபழையதுபுலர்ந்ததேமயிர்
சூழ்ந்ததுகளைந்தொருதூயபூமனம்
வாழ்ந்தரன்முடியிடின்மரித்துதித்திடார்.
(17)
182பொலக்கடிமலர்களாற்சிவனைப்பூசியா
வலக்கயிறெறிதருமறலிதன்னையுங்
கலக்கமிலறிவன்மார்க்கண்டன்வென்றுமுன்
விலக்கரும்விதியையும்விலக்கினானரோ.
(18)
183வேண்டியபொருளெலாம்வேண்டியாங்குறக்
*காண்டகுநீறுடற்புனைந்துகண்டிகை
பூண்டிலிங்கார்ச்சனைபுரிமினென்றன
னேண்டருமயனெனுமிணையில்சூழ்ச்சியான். 
----------------
*காண் - அழகு.
(19)
184அன்னவனறைந்தசொல்லவுணத்தீயர்கேட்
டுன்னருமிலிங்கபூசனையுஞற்றிடு
நன்னலமடைந்தனர்நஞ்சுகான்றிடும்
பன்னகமணியையும்பரிக்குமாறுபோல்.
(20)
185அன்னதின்பின்னரவ்வவுணர்மாதிர
மன்னரையமரரைமற்றுளோர்தமைத்
துன்னியவலியினாற்கேடுசூழ்ந்தொறுத்
தின்னலுற்றிடப்பிடித்தேவல்கொண்டனர்.
(21)
186கான்றிடுமெரிவிழிக்கடியமூவருந்
தோன்றிடுமுயிரெலாந்துயரின்மூழ்குற
மூன்றெனுமுலகங்கண்முற்றும்வெற்றிகொண்
டான்றதம்மாணையேநிறுவியாண்டனர்.
(22)
187புரந்தரனவுணர்செய்புன்மையாற்றிடா
தரந்தையின்விரைந்தயிராணியைக்கொடு
வருந்தியமையோரொடுமருவிமேருவிற்
கரந்தனனிருந்தனன்கணிப்பில்காலமே.
(23)
188சிறந்திடுமிந்திரன்றிருவும்பொன்றியே
மறைந்துதன்மனையொடுவறியன்போய்மலை
யுறைந்தனனென்றிடினொருங்குமுற்றவுந்
துறந்திடுமின்பமேதுன்பமில்லதே.
(24)
189வெங்கொடிவருத்துறவெருவிக்கூகைக
டங்கள்வன்காலம்பார்த்தொளித்துத்தங்கல்போற்
*சிங்குறவவுணரைச்செறுக்குநாடெரிந்
தங்குறுமமரர்களரையற்கோதுவார். (25)
---------------------------
*சிங்கல்-அழிதல்
(25)
190பொய்வகையவுணர்கள்புரியும்வெந்துய
ரெவ்வகையகலுமென்றிதயத்தெண்ணிநீ
யவ்வகைமுயன்றிலைவறிதமர்ந்தனை
யுய்வகையடியரேமுஞற்றவல்லமோ
(26)
191என்றிமையவர்பரிந்தியம்பவிந்திரன்
பொன்றிகழ்சரோருகப்பொகுட்டுவள்ளல்பாற்
சென்றுநந்துயரெலாந்தீர்த்தியையநீ
யென்றுநாம்வேண்டுதும்வம்மினென்றனன்.
(27)
192வேறு.
அம்மொழிதுன்பங்கூரிமையோர்கேட்டார்வத்தா
லெம்மிடர்போயிற்றின்றுடனென்னவெழுந்தெய்த
மும்மதிலோர்கட்கஞ்சியொளித்தேமுகிலூருஞ்
செம்மனறுங்கமலத்திறைதன்னுழிசென்றுற்றான்.
(28)
193உற்றவனும்பருடன்சரணத்திலுறத்தாழூஉ
நற்றுதியோடுநலிந்தவணிற்பநறுங்கஞ்சப்
பொற்றவிசண்ணறெரிந்துமுகங்கள் புலர்ந்துள்ளீர்
சொற்றிடுநெஞ்சிலடுத்தகலாதுறுதுன்பென்றான்
(29)
194வேறு.

என்றலுமகவான்சொல்வானிறைவநின்னருளினோன்மை,
யன்றுறுமவுணரெம்மையலைப்பநைந்துள்ளமாழ்கி, 
மின்றிகழ்முகில்கண்டஞ்சும்வியன்சிறைக்குயிலிற்பொன்னங்,
குன்றிடையின்றுகாறுங்குறுகினொங்கரந்துமன்னோ.
(30)
195துன்னியவசுரர்தம்மைத்தொலைத்தினியெமைப்புரப்பான், 
பன்னுதுமெனவந்துற்றேம்பாரதியுடையநீயே, 
யின்னலங்கடல்கடத்தினன்றியாரியற்றவல்லார், 
நின்னருள்புரிதியென்னச்சதுர்முகனிகழ்த்துகிறான்.
(31)
196புரத்தினொன்றவுணர்மிக்கபொருவலியெம்மானீக்குந், 
தரத்ததன்றடைகண்மூயதடத்தலர்ந்திலங்குகின்ற, 
விரைத்ததண்குவளையன்னவிழியுடற்கடவுணுந்தங், 
கருத்துவெந்துயாமெல்லாங்களைகுவன்கமலக்கண்ணன்.
(32)
197என்றயனிந்ததிராதியிமையவர்க்கொண்டுமால்பாற், 
சென்றடிவணங்கியன்னோர்திருவிழந்தவுணர்தம்மால், 
வன்றுயருழக்குமாறுமனமுளைந்தியம்பித்தீய, 
புன்றொழிலசுரர்ச்சாடிப்புரந்தருள்புனிதவென்றான்.
(33)
198நாரணனதனைக்கேளாநவிலும்பற்றலர்கடம்மைப், 
போரினி*லுபசத்துக்கள்பொருதழித்திடுவரென்ன, 
வாரணமுரைத்தறன்னாலனையரைவிடுத்துமூன்று, 
வீரருமடியச்செய்தும்விரையவென்றிதனைச்செய்வான். 
-----------------------
*உபசத்து-ஒருவகைமந்திரங்கள்; இங்கே அவை அந்த
மந்திரங்களின் அதிஷ்டானதேவதைகளை உணர்த்திநின்றன.
(34)
199மனத்தினிலுபசத்துக்கள்வருகவென்றுன்னமாயோ,
னினைத்தனனென்னவன்னோர் நேர்ந்தனர்நிற்பநீவிர், 
சினத்தெயிலவுணர்தம்மைச்செற்றுவானவர்களின்ன, 
லனைத்தையுமகற்றுமென்றான்படியளந்தளிக்குமண்ணல்.
(35)
200அன்னவரதனைக்கேளாச்செல்லுதுமவுணர்ச்சாட, 
வென்னலுமகிழ்ந்து தன்பாலிருங்கணந்தனிலெண்ணிலார், 
துன்னியவனிகமாகத்தூண்டினன்சென்மினென்னப்,
பன்னகசயனன்பொற்றாள்பணிந்தனர்போயினாரால்.
(36)
201தண்டுவேல்வயிரவொள்வாள்சரம்பொழிசாபமாழி, 
பிண்டிபாலங்கள்சூலம்பேரெழுக்கணிச்சியாதி, 
கொண்டபாணிகளோடண்டங்குலுங்கவார்த்தெழுந்துவேக, 
சண்டமாருதம்போனேர்ந்துசமர்த்தொழில்புரியச்சென்றார்.
(37)
202பேரெயின்மீதினேமிப்பிரான்விடுதானைநீத்தம்,
வாரிதிதன்னைநாடிவருநதிபோலச்செல்ல, 
வேருறுகடலெதிர்த்தாலென்னவாண்டமருஞ்செங்கட், 
கரருடலவுணர்கேடடுக்கதுமெனச்சமரினேர்ந்தார்.
(38)
203வில்லுமிழ்சரமுந்தண்டும்வேல்களுமழுவும்வாளுங், 
கல்லுறழெழுவுந்தாளுங்கரங்களுந்தலையுஞ்சிந்தச், 
செல்லுமிழ்முகிலினின்றுசிந்தினரவுணரன்ன, 
மல்லலம்படைகளார்த்துமற்றவர்தாமுந்தூர்த்தார்.
(39)
204இத்தகையுடன்றுவெம்போரிருதிறத்தவருமாற்ற
மத்தவெங்களிறுபோலுமறவருக்குலகமுண்ட
வித்தகன்விடுத்தசேனைவென்னிடவதனைக்காணா
வத்தலைநின்றவானோரலக்கணுற்றோடிவந்தார்.
(40)
205வந்தவருயங்கிமாயோன்மலரடித்தலத்துவீழ்ந்து, 
சுந்தரவரவிற்றுஞ்சுந்தோன்றனீவிடுப்பப்போனார், 
வெந்திறலவுணரோடும்போர்த்தொழில்விளைத்துவன்மை, 
சிந்தினரிரியல்போனார்செயுஞ்செயலினியாதென்றார்.
(41)
206மாயவன்வினவியுள்ளமாழ்கிவெய்துயித்துவன்கட்,
டீயவர்சிவலிங்கத்தையருச்சனைசெயலால்யாவ,
ராயினும்வெல்லற்கொண்ணாவெனநினைந்தழுங்கிநிழ்குஞ்,
சேயுயர்விசும்பிருக்குந் தேவரைநோக்கிச்சொல்வான்.
(42)
207வேறு.
பன்னகத்தினாலடுஞ்சின விலங்கினாற்பசாசாற்
றுன்னவக்கிரகங்களாற்பிணிகளின்றொடர்பான்
மன்னரிற்கொடியோர்களாற்கரவரான்மருவு
மின்னன்மெய்ச்சிவலிங்கபூசனையினோர்க்கியையா
(43)
208பாவகோடிகள்பயின்றிடுபதகரேயெனினுந்
தேவதேவனைச்சிவலிங்கத்தருச்சனைசெய்வோர்
தாவின்மாதவப்புண்ணியரேயவர்தம்பான்
மேவுவானலனந்தகன்றனதுளம்வெருவி.
(44)
209ஆதலாலெயின்மூன்றுடையவுணர்தாமரனைப்
பூதிசாதனம்புனைந்துபூசனைசெயுமளவும்
யாதுமோர்செயலான்முடிவெய்திலரியாமோர்
போதசூழ்ச்சியினவரருச்சனைவிடப்புரிதும்.
(45)
210நீங்குநும்மனத்துயர்சுரர்காளெனநிகழ்த்தி
யோங்குமாமரகதக்கிரியொன்றிருசுடரும்
பாங்குவைத்தெனக்குருமணியாழிவெண்பணிலந்
தாங்குமாயவனாரதற்கினையனசாற்றும்.
(46)
211வேறு.
அற்புடைமகிணர்தம்மாவியாகிய
கற்புடைமங்கையர்கருதிற்பல்வகைப்
பொற்புடையுலகெலாம்பொன்றுமாறுமாம்
வற்புடைமுனிவரின்வலியரன்னரே.
(47)
212கணவரைத்தொழப்படுங்கடவுளென்றுளும்
பணவரவல்குலார்பணித்ததொன்றையான்
மணமலர்த்தவிசயன்மகிழ்ந்திழைத்தலோ
விணையிலெங்கருத்தனாமிறையுஞ்செய்யுமால்
(48)
213புனிதமெய்க்கற்பறாப்பொருவின்மாதரார்
மனமகிழ்வுற்றிடின்வராதநன்கிலை
சினமுறப்பெற்றிடிற்றீங்குமன்னதே
யனையவர்தன்மையாரறியக்கூறுவார்.
(49)
214மிடியினர்குணமிலர்விருத்தர்நோயினர்
வடிவிலருறுப்பிலர்வஞ்சர்மூடர்வெங்
கொடியவராயினுங்கொழுநர்தம்மிடை
மடிவிலரன்புகற்புடையமாதரே.
(50)
215இத்திறக்கற்பினரெயில்கண்மூன்றுடைக்
குத்திரக்கொடியவர்க்குறுகுமாதரா
ரத்திறத்தினுமடற்கரியரன்னகற்
பெத்திறத்தினுமொழித்தெய்தென்றேவினான்
(51)
216நாரணனிவைசொலநாரதப்பெய
ராரணமுனிவரனரும்புணர்ப்பினால்
வாரணமனையவர்மாதர்கற்பெலாங்
காரணவகற்றுவன்கடிதென்றேகினான்.
(52)
217வேறு.
முனிசென்றதற்பினிமையோர்துவன்றுமவையுற்றமாயைமுதல்வன்,
றனியங்கெழுந்துபுரவாணர்தங்கள்சிவலிங்கபூசைதவிரும், 
வினையொன்றிழைப்பலெனவேநினைந்துமறைகட்குவேறுதருநூன், 
மனமொன்றும்வண்ணமுரைசெய்துபுத்த வடிவோடுகொண்டுவருவான்.
(53)
218மறமொன்றுகின்றவரணங்கடம்மின்வரு*மம்புயக்கணிறைவன்,
றிறமொன் றுபுத்தனருகன்றயங்குசினனென்னவங்கணடையா, 
வறமென்றுவஞ்சமதிநூன்மருட்டியறைகின்றகாலையவுணர், 
நிறமொன்றுபூதிமணியோடிலிங்கநிலைவிட்டகன்றனரரோ. 
----------------------------------------------
* லிட்டுணு, புத்தன் அருகன் சினன் என்னமூவுருக்கொண்டு 
முப்புரங்கட்கும் சென்றனர் என்பது கருத்து.
(54)
219விதியென்றுமாயன்வினயத்துரைத்தவெறும்வஞ்ச்நூலின்விதியைக், 
கதியென்றுகொண்டுமனமாலடைந்துகதியற்றதீயகயவர், 
நிதியென்றுகொண்டதிருநீறிழந்தநிலைபாழுடம்புநிலவு, 
மதிநின்றுசென் றுமறைகாலிருண்டுவளமற்றகங்குல்புரையும்.
(55)
220புரமொன்றுதீயர்மடமாதராருமுனம்வந்துபுக்கமுனிவன், 
விரகங்கலந்துமிகுதிட்பநெஞ்சினிகழும்படிக்குவினயந், 
தருகின்றசொல்லின்மயல்செய்யவும்பர்தம்புண்ணியத்தின்வலியின், 
றிரமொன்றுகற்புநிலைபோயகன்றுதெறுகாமமுற்றுமெலிய.
(56)
221வேறு.
இனிமாய்குவர்தானவரின்றொடெனா
முனிமாதவனார்வமுகிழ்க்கவரா
நனிமாயையினாயிடைநண்ணியவா
றுனிமாகருவப்பவுரைத்தனரால்.
(57)
222அக்காலையினாரணனஞ்சரண
முக்கால்வலம்வந்துமுடிக்கணியா
நக்காடுவர்பாடுவர்நம்பகைஞ
ருக்காரெனவுண்மகிழும்பரெலாம்.
(58)
223அம்மாகருவப்பரிகண்டருளி
நும்மாகுலமுற்றையுநூறிடவெம்
பெம்மானொடுபேசுதும்வம்மினொனா
வெம்மான்மலையெய்துவன்யாவரொடும்.
(59)
224அந்நாரணன்வானவராகுலமென்
றன்னாயகனொண்சரணந்தொழுது
சொன்னாலஃதின்றுதொலைப்பனெனா
வுன்னாவரும்வெற்பணியோதியிடின்.
(60)

 

225வேறு.
பண்டுதற்கம்பரித்தபரமனை
மண்டுதன்றலைவைப்பத்தவத்தினால்
விண்டலந்தொடவெண்மதிபேருருக்
கொண்டெழுந்தெனநின்றதக்குன்றமே.
(61)
226வருணமிக்கபால்வாரிதிசிற்கன
புரணனுக்குமோர்பொற்றவிசாவுனித்
திரணமொத்ததிருவனலாமையாற்
பரிணமித்தெழும்பண்பனதவ்வரை.
(62)
227இத்திறத்தினிலங்குகயிலையாம்
வித்தகத்தனிவெற்புழியிந்திரை
யத்தனும்பர்குழுவொடுமஞ்சலிக்
கைத்தலந்தலைகாட்டினனேகினான்.
(63)
228எண்ணிகந்தவிருங்கணமேத்துற
வண்ணனந்திருநந்தியமர்ந்தருள்
வண்ணவொண்கடைவந்தவனைத்தொழாக்
கண்ணனின்றிதுகட்டுரைக்கின்றனன்.
(64)
229சென்றுதெய்வசிகாமணிக்கிங்ஙன்யா
மொன்றும்வண்ணமுரைத்தருளையநீ
யென்றுகண்ணனியம்பவருளியே
நன்றுநின்மெனப்போயினனந்தியே.
(65)
230அளவிலொண்புவனாதிபர்பல்கண
மளவினன்முனிவோர்நிறைவாமவை
யளவில்சோதியவிர்மணிப்பீடம்வா
முளவில்பேரருளாளிமுன்னெய்தினான்.
(66)
231எந்தைதாண்முன்னிறைஞ்சிமலரய
னிந்திராதியிமையவர்சுற்றமால்
வந்துளான்மணிவாய்தலினென்றலு
நந்திகூவுதியென்றனனாயகன்.
(67)
232இறையினிற்கடையெய்தியுமைப்பர
னுறவழைத்தியென்றோதினன்வம்மெனச்
சிறைவிடுத்ததெண்ணீரெனவோடினார்
நிறைமகிழ்ச்சிநெடியவனாதியோர்.
(68)
233மின்னுலாஞ்சடைவித்தகனெற்பெறு
மன்னையோடுமமர்ந்தவவைக்களந்
தன்னினேகிமுன்சாயும்பணைமர
மென்னவேபணிந்தன்பினெழுந்தனர்.
(69)
234கூர்ந்தவன்பிற்குவித்தகையுச்சிகொண்
டோர்ந்தசொற்றளர்வுற்றுமனனெக
வார்ந்தகட்புனன்மார்புநிரம்பமெய்
சோர்ந்துநின்றுதுதித்திடன்மேயினார்.
(70)
235வேறு
நிறைந்தநின்றொல்லையுண்மைநிலைதிரிவின்றியாங்கள், 
பிறந்திறந்திடுதறீர்ப்பான்பேரருளுருவுகொண்டிங், 
குறைந்தநின்கருணைபோற்றியுயிர்க்குடலளித்தியக்கிச், 
செறிந்தமுன்வினையருத்தித்தீர்த்திடும்பரிவுபோற்றி.
(71)
236உலகுயிரின்பந்துய்ப்பவுனதுபேரருளைமாதென், 
றிலகுறவிடத்திருத்தியிருந்திடுங்கருணைபோற்றி, 
விலகியவ்வின் பஞ்சில்லோர்விடுக்கவவ்வுருவகன்ற, 
வலகினல்லருள்கொண்டுற்றவமலவக்கருணைபோற்றி.
(72)
237ஐம்பெரும்பூதமாதியாயதத்துவசாலங்க, 
டம்பெருகறிவொடுக்குந்தனியிருண்மலம்வேறாக, 
நம்பநின்னருளினின்றநற்றவர்தம்மின்வேறா, 
யிம்பரினறிந்துகூடாதிருந்தவாறிருப்போய்போற்றி.
(73)
238அருவுநல்லுருவுமற்றையருவுருவதுவுமாகப், 
பரவுமொன்பதிற்றுப்பேதப்பகுதியுஞ்சத்தியைந்தின்,
விரிவுமன்றாயவுன்றன்மேனிலைதமதேயாகப், 
பொருவருமன்பர்க்காக்கும் பொருவிடைப்பாகபோற்றி.
(74)
239இனையனபகர்ந்துபோற்றவெங்கணாயகன்முராரி, 
தனையருள்கொண்டுநோக்கிச்சததளக்கமலக்கோயின், 
வனிதையங்குவட்டுக்கொங்கைமுகடுழும்வயிரத்தோளாய், 
துனியுறுமமரரோடும்வந்ததென்சொன்னீயென்றான்.
(75)
240என்றலுந்திகிரிப்புத்தேளியம்புவனையவிண்ணோர், 
வன்றிறலெயில்கண்மூன்றும்மலரயன்றரப்பெற்றுள்ள, 
புன்றொழிலவுணரின்னல்புரியநொந்தனாயனோடு, 
மின்றளவெல்லைகாணாவிருந்துயர்க்கடலிணாழ்ந்தார்.
(76)
241கருணையங்கடனீவிண்ணொர்கலங்கஞர்விடுத்துநின்பொற், 
சரணபங்கயங்கட்கேவல்சந்ததமியற்றும்வண்ண,
மரணவெங்கொடியோராற்றலழித்தருள்புரிதியென்ன, 
வருணகுங்குமப்புயத்துமாயவன்வழங்கிநின்றான்.
(77)
242படைக்கலமைந்துபெற்றோன்பகர்ந்திவைநிற்குமெல்லை, 
தொடைக்கலன்பயிலும்பொற்றோட்சதமகன்சுரர்களோடு, 
புடைக்கலஞ்சுழலுங்காகம்போன்றனந்தமியேமுந்த, 
னடைக்கலங்கருணைசெய்யென்றமலநாயகற்பணிந்தான்.
(78)
243வானுளோர்மனத்துமிக்கவன்றுயரகற்றவுன்னி, 
ஞானநாயகனகைத்துநாமெழுந்தருளிவந்து,
மானவேலவுணர்தம்மை மாய்க்குதுமதற்குநம்பா,
லானபோர்க்கருவியில்லென் றறைந்தனனருளின்மாதோ.
(79)
244கண்ணுதலுரைத்ததன்மைகடவுளர்கேட்டுவப்பா, 
லெண்ணருமுலகமெல்லாமிகைப்பினிற்படைத்தளித்து, 
நண்ணுறவொடுக்குமண்ணனவின்றதோராடலென்னப், 
பண்ணமைதங்கடச்சற்பார்த்திதுபகரலுற்றார்.
(80)
245பெருந்தகைக்கேற்றவையம்பெருமிதம்பெறச்செய்யென்ன, 
விரைந்துநற்புவிதேராழியிருசுடர்வேதம்வாமா,
னருந்திறற்கமலன்பாகன்மேருவில்லனந்தனாரி,
*சரந்தழல்சசிமாலாகச்சமைத்தனன்றெய்வத்தச்சன். 
--------------------------------------------
*ஏனைப்புராணங்கள், தழல்,வாயு மால் என்னும் மூவரும் சரமாயினர் 
எனக் கூறினவேனும், இத்தலத்தின் வடமொழிப்புராணம், 
வாயுவைக்கூறாது சசியையே கூறுகின்றது.
(81)
246விண்ணவரவைகண்டார்வமிக்கெழுமனத்தராகி, 
யண்ணலைவணங்கிநின்றருளினாமிவைகொண்டாதிப்,
பண்ணவவமலமுக்கட்பராபரவெமையணக்கு, 
நண்ணலர்தமைமுருக்கிநங்களைப்புரத்தியென் றார்.
(82)
247சங்கரனதுகேட்டெங்கடாயுடனெழுந்து துன்றி, 
யங்குறுமனைவருஞ்சூழ்ந்தன்பினிற்சயசயென்னப், 
பங்கயவடிமணிப்பொற்பாதுகைமிசையிருத்திப், 
பொங்கொளிவிரிக்குங்கோயிற்புறத்தெழுந்தருளினானால்,
(83)
248ஆண்டுறுதிகிரிப்பொற்றேரணிநலந்திருக்கண்சாத்தி, 
யேண்டருமலைமாதோடுமிவர்ந்துகூர்ங்கணையுமற்றை, 
மாண்டருதனுவுஞ்செங்கேழ்மரைமலர்க்கரங்கள்பற்றிக், 
காண்டருமழநெறிப்பநின்றனன்கருணைவள்ளல்.
(84)
249மருவுலாங்குவளைவென்றுவண்கயன்மருட்டிநீள்கா, 
துருவவோடரித்தடங்கணுமைமணம்புணருங்கோமான், 
பொருவிறோள்கண்டுமிக்கபொலிவுபெற்றிருந்தமேரு, 
வருவினாணடைந்துசாலவன்றலைவளைந்ததம்மா.
(85)
250தன்மனையிரதமாகத்தன்மகன்மலவனாகத்,
*தன்மகன்பேரனோடுதனக்குமைத்துனன்காலாகத்,
தன்மலரணைநாணாகத்தானெடும்பகழியானான், 
றன்மனமிடங்கொண்டுற்றசங்கரன்றனக்குமாயன். 
---------------------------------------------
*தன்மகன் பிரமன் அவன்மகன் காசிபன் அவன்மகன்
சூரியன் ஆகலின், சூரியனைத் தன்மகன்பேரன் எனவும், திருப்பாற்கடலிற் 
சீதேவியோடு உதித்தமையால், சந்திரனைத் தனக்கு மைத்துனன் எனவும் விதந்தார்.
(86)
251இளங்கதிர்விரிக்குங்கோடியிரவியோருருவங்கொண்டு, 
வளங்கெழுமிரதமொன்றின்வந்தெனநிற்கவையன், 
களங்கமிலமரர்கண்கள்களிப்பக்கண்டுவகையெய்தி,
யுளங்கவலொருவிவிண்ணின்றொண்மலர்மாரிதூர்த்தார்.
(87)
252பாடினர்பரமன்சீர்த்திபாதபங்கயங்கள்சென்னி, 
சூடினரெழுந்துதுள்ளித் தொடைபுடைத்தனர்துணங்கை, 
யாடினர்துகிலெறிந்துபற்றினராசைதோறு,
மோடினருவகையென்னுமுத்தியிற்படிந்தவிண்ணோர்.
(88)
253மன்னுதன்னிலைபிரிந்தமயிரெனவிகழ்விலாதென்,
றன்னைநன்புனிதமாக்கிச்சகம்புகழ்சிறப்பளித்தான்,
மின்னுசெஞ்சடையோனென்னுமிகுமுவப்பெய்தியாட,
லென்னநின்றிருமருங்குமிரட்டினர்க வரிபல்லோர்.
(89)
254மாசுணம்பலவளப்பில்வண்கதிர்கவ்வியெங்க
ளீசனதுருநாகங்கட்கீந்திடநீட்டிவாங்கி
மோசமதிழைக்கலுற்றமுறைமையெம்மருங்குநின்று
வீசினரெண்ணிலார்கண்மிளிருநெட்டாலவட்டம்.
(90)
255திங்களாயிரமொருங்குசேர்ந்தெனவாய்கடோறுங்,
சங்கமாயிரம்வைத்தார்த்தான்சயங்கெழுபானுகம்பன்,
பொங்கொலிமுழவம்பேரிபொருவில்சச்சரிதடாரி,
யெங்கணுமெண்ணிலோர்களிரட்டினரிடிகளேபோல்.
(91)
256அறிவுருவானோன்வந்தானன்பினிற்றிகழ்வோன்வந்தான். 
பிறவிவேரறுப்போன்வந்தான்பேரருண்மூர்த்திவந்தான், 
குறைவிலானந்தஞானக்கூத்துடையாளிவந்தான், 
கறையுலாமிடற்றோன்வந்தானென்றெழுங்காகளங்கள்.
(92)
257நஞ்சுகுமெயிற்றுப்பேழ்வாய்நாகமதணிந்தவெங்கோன்,
வெஞ்சமர்புரியச்செல்வன்மேருவிற்பிடித்தென்றிட்ட,
கஞ்சுகங்கிழியவீங்கக்கல்லுறழ்குவவுத்திண்டோ,
ணெஞ்சுகுமுவகைவிம்மப்பாரிடநீத்தஞ்சூழ்ந்த.
(93)
258வெள்ளிவெண்கொடுவாண்மாறிவைத்தெனவிளங்கும்பல்ல, 
பள்ளவெம்பிலனிகர்த்தவாயினபருப்பதத்தி, 
னுள்ளுறுமுழைகளன்னவுட்டுளைப்பெருந்துண்டத்த, 
மெள்ளவின்சொற்புவிக்கண்விழுமிடிபோலச்சொல்வ.
(94)
259மண்டலவாடியென்னவயங்கெரிசிதறுங்கண்ண,
வொண்டழனிமிர்ந்தெழுந்த தொத்தகுஞ்சியினவிந்த, 
வண்டமதிடினுமாற்றாவகட்டினகுறுகுந்தாள,
பண்டுளபூதமைந்தும்படைத்தளித்தழிக்கவுல்ல.
(95)
260அத்தனென்றன்னைநீயேயவுணரைக்கொல்லெனானோ, 
வித்திரடனிலெற்கின்றி யார்க்கமர்கிடைக்குமோவென், 
னொத்தவரடநான்பார்த்து வறிதுறுகுவனோவென்று, 
தத்தமினினைந்துவாடுந்தன்மையபூதமுற்றும்.
(96)
261விண்ணகநிறைந்தவாதிவிதியகநிறைந்தமாயோன், 
கண்ணகநிறைந்தவோதைக்கடலகநிறைந்தபாழி, 
மண்ணகநிறைந்தமேவிவரையகநிறைந்தவெங்கும், 
பண்ணகநிறைந்தவோசைப்பரிசினிற்பனகணங்கள்.
(97)
262குதிப்பனவயிரத்திண்டோள்கொட்டுவதம்மைத்தாமே, 
துதிப்பனவமர்வேட்டண்ணற்றொழுவனதங்களாற்றன், 
மதிப்பனவரைகளைந்துதாங்குவவாரியுட்க, 
வதிர்ப்பனமகிழ்வவாகியடற்கணஞ்சென்றவம்மா.
(98)
263கற்புயங்கொட்டியண்டகடாகமுமதிரவார்த்து
வற்புறும்பூதவெள்ளம்வந்திடவும்பரெண்ணில்
பொற்புறுகவிகையொங்கிப்புணரிகளேழுமார்ப்பப்
பற்பலமதியெழுந்தபரிசெனநிகழ்ந்தமாதோ
(99)
264பொன்னுலகிகழுமென்னைப்பொருவனென்றகிலம்போவ, 
தென்னநுண்டுகள்சென்றேறவெதிர்த்ததுமலைதலொப்பத், 
துன்னுறுமமரர்தம்பொற்சுண்ணம்வந்துடன்கலப்ப, 
மின்னுறுங்கொடியடித்துவிலக்குவபோலவாடும்.
(100)
265வேறு.
இந்தவாறெழும்பூதவெள்ளங்களினிடையே
யந்திவானிறமனையவனாழியந்தடந்தேர்
கந்தவாரிசப்பண்ணவன்றென்றிசைக்கடவ
வந்தவானவரனைவருந்துவன்றுறவந்தான்.
(101)
266பூதநாயகன்கயிலையம்பொருப்புவிட்டலகில்
காதமோரிறைப்பொழுதினிற்கடந்துவந்தருளிச்
சீதவார்பொழிற்கூவமென்றிருநகரடைந்தான்
பாததாமரைவணங்கிவிண்ணவர்குழாம்பரவ.
(102)
267அங்கப்போதினிற்கடமெனுந்திருவருளறாத
துங்கப்போதகமுகப்பிரானிதழியந்தொடையோன்
றங்கப்போதிரதத்தினார்தன்புகழைக்கரத்தாற்
சிங்கப்போயொடித்திட்டனன் றிடுக்கிடவெவரும்.
(103)
268பொருக்கெனச்சினவிடையுருக்கொண்டிடைபுகுந்தா, 
னிரைக்குநற்கொடிவையம்வென்றாங்கினனெடும்பாம், 
பரைக்கசைத்தவனன்பினினிகரிலாதமரர், 
வருக்கமுற்றும்வந்திறைஞ்சுபொற்பதாம்புயமாயன்.
(104)
269தந்தையுற்றருளிரதகூவரத்தினைத்தனயன், 
வந்திறுத்தலுமிமையவர்மனம்பதைத்தின்னன், 
முந்தையிற்பதின்மடங்குறீஇமுகத்தறைந்தழலுற், 
றெந்தமொட்டலர்செயலெனத்திசைதொறுமிரிந்தார்.
(105)
270அருளுலாந்திருமுகங்களோராறுமொள்ளலங்கல், 
புரளுமார்பமும் புயங்களூமருமறைப்பொருளாய்த், 
தெருளுலாம்பதமலருங்கொண்டெனதுளந்திகழ்வான், 
வெருளுலாமனத்திரியல்போம்விண்ணவர்க்கண்டான்.
(106)
271நின்மினின்மினீரஞ்சலிர்நிகழுமென்றந்தை, 
பொன்மிளிர்ந்திடுதேரினாரொடித்தவர்புலவீ, 
ரென்முன்வந்திடுங்கரிமுகத்தண்ணலவ்வெயில்சேர், 
வன்மனம்பெறுமவரலவம்மினென்றழைத்தான்.
(107)
272மீண்டுவானவர்குகன்புடையடைந்தினிவெம்போ
ராண்டநாயகன்புரிவதெவ்வாறெனவையம்
பூண்டுநின்றனர்நம்மிறைபுதல்வன்முன்றனையாம்
வேண்டிவந்திரதம்புகாமையிலிதுவிளைத்தான்.
(108)
273என்றுளங்கொடுமலைமகளீன்றருள்யானைக், 
கன்றைவந்தனைசெய்கிலார்முயறருங்கருமம், 
பொன்றுமென்பதுகாட்டிடக்கூவமாபுரத்தி, 
லன்றவன்கழல்கனிமுதல்கொண்டருச்சித்தான்.
(109)
274பின்புவிண்ணவர்மனத்துயர்பெயர்ந்திடத்தனது
முன்புமும்மதில்வந்துறமுன்னினன்முதல்வ
னன்புகொண்டொருநூறியோசனையகன்மதில்க
டுன்புபெற்றிடவனைவருந்துண்ணெனவடைந்த.
(110)
275கரிகளோடுமாருதந்தனின்விரைந்துபாய்கவனப்
பரிகளோடும்விண்முகடுழும்படுமணியிரதக்
கிரிகளோடும்வெங்கனலினுங்கிளர்சினக்கழற்கா
லரிகளோடும்வந்தமர்செய்வான்சமைந்தனரவுணர்.
(111)
276கண்டுமற்றதுவிண்ணவர்கலக்கமுற்றுயர்கோ, 
தண்டம்வைத்தலைச்சுடுசரமிடம்வலத்தடக்கை, 
கொண்டுநிற்பவற்குறுகிநல்வேலையீதடுதற், 
கெண்டயித்தியர்ச்சமர்புரிந்தட்டருளென்றார்.
(112)
277என்றுவிண்ணவரியம்பியாதெம்பிரான்வினவி
நன்றினங்கையைநோக்கினனகைக்கவந்நகையி
னின்றுவன்றழற்கொழுந்தொருநிமிடத்திற்பாதி
சென்றொடுங்குமுன்புரங்களிற்சென்றுபற்றியதே.
(113)
278பகவன்வாய்மலர்வைத்திருந்துமிழ்ந்தெனப்பற்றித், 
திகுதிகென்றெரிந்தெழுமழற்கொழுந்துசேணளப்பத், 
தகுவர்மென்புழுவெனப்பதைபதைத்துயிர்தணந்தார், 
நிகரினீறுபட்டிடாவுடனீறுபட்டனவே.
(114)
279தேரெரிந்தனபுரவிகளெரிந்தனசெழுங்கைக்
காரெரிந்தனசிகரமுமெரிந்தனகழகச்
சாரெரிந்தனபொழிலினமெரிந்தனதகுவ
ரூரெரிந்தனவெரிந்தனவடங்கலுமொருங்கு
(115)
280திருத்தமொன்றெயின்மூன்றுநெக்குருகுபுசிதைந்த
கருத்தரென்றவணுறையுமுக்கயவருமடைந்த
வரத்தினின்றனர்மரித்திடாதளிவரமலர்ந்து
விரைத்ததண்பணையிழந்துறும்வெறியபாதவம்போல்
(116)
281பகைஞரொன்றுமுப்புரங்களிற்செஞ்சடைப்பகவ
னகையினின்றுசென்றுற்றதீயிடத்தெழுநறிய
புகைபரந்தகல்விசும்பிடமடங்கலும்போர்த்து
முகில்களென்றிடப்பட்டுநின்றனவின்றுமொழியின்
(117)
282நெறித்தகுஞ்சியந்தானவரெயில்களினிமல, 
னெறித்தவெண்ணிலாநகையினின்றெழுந்தபேரெரிசென், 
றுறைத்துவெள்ளிமாமதில்கரைந்துருகுழிச்சிதறித், 
தெறித்தபோலும்விண்ணிடைச்செழுந்திங்களுமுடுவும்.
(118)
283பரிந்துதற்பதங்குறுகினர்பழையதீவினைபோ,
லெரிந்துமுப்புரம்பொடிபட விறந்திடாதுயிர்கொண், 
டிருந்தவப்பெருங்கொடியரையெம்பிரான்கண்டு, 
பொருந்துபொற்சிலைவாங்கினன்சிலீமுகம்பூட்டி
(119)
284குனித்தபொற்சிலைவலிகெழுங்குணவுருவணையி, 
னுனித்தவப்புருக்கொண்டுநிற்கின்றநோனரிக்குத், 
தனித்தபொற்றிருவாசிகைபோன்றொளிதழைத்த, 
தினித்தசொற்கொடியிடத்தினன்மலர்க்கரமிசைந்து.
(120)
285பொருவிற்கொண்டிடுநெடுநுதிப்பகழியைப்புனிதன், 
விரைவிற்சென்றவருயிர்குடித்திடுகெனவிடுத்தான், 
மருவிக்குன்றெனநின்றிடுமூவர்மார்பினும்பட், 
டுருவிச்சென்றதப்புறத்தினினொருகணப்பொழுதின்.
(121)
286மீண்டுசங்கரன்வலக்கரமடைந்ததுவிசிக, 
மாண்டுபுங்கமுன்பட்டபோதவுணர்களலறிச், 
சேண்டொடும்படிதுள்ளிவீழ்ந்துணர்வுகள்சிதைந்து, 
மாண்டுபோயினரிமையவர்மனத்துயர்மாள.
(122)
287அம்புபட்டிடுமசுரர்கண்மார்பகப்புழையிற்,
செம்புனற்புறம்பெருக்கெடுத்திரைந்தலைதிரைத்துக்,
கம்பமுற்றெழுந்தோடினகளேபரமலைப்பாற்,
சம்புபற்பலவாண்டிற்குண்டிரையெனச்சார்ந்த.
(123)
288திருந்துதேவரும்பணிசெயத்திரிபுவனமுமாண்
டிருந்தமூவெயிலரக்கருமிறந்துசெய்கடன்கள் 
புரிந்துகாணவுமொருவரற்றிகலனாய்புரட்டி
யருந்தவேகிடந்தனரெனின்வாழ்வுவப்பறிவோ.
(124)
289கதம்படைத்தபூதர்க்கமர்கொடாதரன்கடிது
மதம்படைத்தவர்ச்சாடியதோதனம்வறியர்க்
கிதம்படைத்திடுகுலமெனக்கொண்டுபோயிற்பாற்
பதம்படைக்கிலம்போமெனப்பகர்ந்ததொத்ததுவே.
(125)
290மருளையொத்தனமுப்புரமப்புரமருவு, 
மிருளையொத்தனரவுணரவ்விருளினையிரிக்கு, 
மருளையொத்தனன்முகுந்தனவ்வருளினையுடைய, 
பொருளையொத்தனனப்பொருளாகியபுராரி.
(126)
291செப்புரம்பதித்தன்னமாதுமைமுலைதிளைக்குந்
துப்புரம்பெறுபராபரன்றூநகைக்கணையான்
முப்புரம்பொடிபட்டதுமுதல்வர்தம்முயிர்போ
யப்புரம்பொடிபட்டதுங்கண்டனரமரர்.
(127)
292வேறு.
ஆர்த்தனர்முகிலினமஞ்சப்பூமழை
தூர்த்தனர்மகிழ்ச்சியிற்றுணங்கையாடிமெய்
வேர்த்தனரருகுபோய்வெய்யர்மெய்களைப்
பார்த்தனர்குதித்தனர்பரமற்பாடினார்.
(128)
293சரமொடுகுனிசிலைதாங்கிநின்றிடு
மொருவனதடிமலருச்சிசூடினர்
கரையறுமுவகையங்கடலினாழ்ந்தனர்
பரவினர்கடவுளர்பகர்தன்மேயினார்.
(129)
294இந்நகரதனிடையிறைவநின்மலர்ப்
பொன்னடியருச்சனைபுரிந்துவாழ்வுற
நின்னருள்புரிகெனநிகழ்த்தவாயிடை
மன்னியவிலிங்கநல்வடிவமாயினான்.
(130)
295ஆதலுமனமகிழ்ந்தமரரிந்திரன்
மாதவனயன்முனிவரர்கண்மஞ்சனம்
போதொடுசுடர்நறும்புகைகொண்டர்ச்சியா
வீதுடலெடுத்தபேறெனநின்றேத்தினார்.
(131)
296குலவுறுமரியவிற்கோலங்கொண்டுமுன்
னிலகுறநின்றதாலிலிங்கமாகியு
நலமருணாமம்விற்கோலநாதனென்
றுலகினருரைசெயவமலனுற்றனன்.
(132)
297ஐங்கரக்கடவுள்வேலரசன்மாலயன்
புங்கவர்க்கிறையவன்புவனநாயகர்
துங்கமெய்த்தவர்முதற்றுவன்றினோரெலா
மெங்களுக்குறுமிடமிஃதென்றுற்றனர்.
(133)
298எழிறருமுமையொடுமெங்கணாயக
னொழிவறநிரந்தரமுற்றதன்மையாற்
பொழிறிகழ்கூவமாபுரத்திற்கெங்கணு
மொழிதருபெயரவிமுத்தமாகுமால்.
(134)
299அலங்குறுமிரதகூவரத்தையாயிடை
வலங்கிளர்கிம்புரிக்கோட்டுமாமுக
னிலங்குறுபுழைக்கரத்திறுத்ததன்மையா
னலங்கிளர்கூவரநாமம்பெற்றதே.
(135)
300ஓவிலொண்பதிநடுக்கூவமொப்பவே
மூவுலகங்களுமுன்னிவந்தரோ
தாவிலின்பெய்துறுதன்மையாலெழிற்
கூவமென்றொருபெயர்கொண்டதந்நகர்.
(136)
301மேலைநாளிழைத்ததீவினைகட்கெங்கள்விற்
கோலநாயகன்றிருக்கூவமுள்குத
வாலநாகங்களுக்கரும்புள்வேந்தினைத்
தாலமேனினைக்குறுந்தன்மைபோலுமால்.
(137)
302என்றிவைபற்பலவியம்பிவண்டுழுங்
கொன்றையஞ்சடையினோன்கூவமானகர்ச்
சென்றடைந்தருங்கதிசேர்மினென்றனன்
வன்றிறற்புலனெறிமறித்தசூதனே.
(138)


திரிபுரதகனச்சருக்கம் முற்றிற்று.
ஆகச்செய்யுள் - 302
--------------------------------------------------------

சந்தானகிரி சந்தானச்சருக்கம் (303 -324)

303சூதமுனிவரன்புகன்றமொழிவினிவியுலகமயறுரக்குமேன்மை, 
மாதவர்நெஞ்சுவகைபெறீஇக்கூவபுரத்தியல்கேட்பவளருமெங்கள், 
காதலமைவுற்றதிலைபுராணமுனியின்னுமுளங்கருணைகூர, 
வோதுகவென்றுரைத்தனரவ் வுரைக்குமிகக்களித்திதனையுரைப்பதானான்.
(1)
304அன்றுவிறற்கொடுமதில்கடழலெழப்புன்முறுவல்புரிந்தசுரர்ச்சாடித், 
தென்றிசைக்கூவரநகரினரசிங்கந்தொழத்தேவசிங்கம்வாழ்நாட், 
டுன்றுதுயர்க்கடனீந்தியார்வநெடுங்கடற்படிந்த சுரரைநோக்கிப், 
பொன்றிகழ்நற்கமலமலர்த்தவிசின்வீற்றிருக்குமிறைபுகலுகின்றான்
(2)
305வண்டுகிளைத்தொழுகுநறைமதுப்பருகியிசைகூருமலர்மந்தாரத், 
தண்டெரியற்புலவிர்மிகவல்லவனிம்மாயவனித்தலத்திற்சூழ்ச்சி, 
கொண்டுபகைப்பினர்கரீவாட்போக்கிவதைப்பது போலக்கொடியர்நீறு, 
கண்டிகைமெய்ச்சிவனுருவமகற்றியரம்கணையாகிக்கடிந்திட்டானால்.
(3)
306ஆதலினாலமலசிவலிங்கபூசனைபுரிவோரறிவிகந்த, 
பாதகரேயெனினுமழிகுவரென்றுமஃதிலரிப்படியின்வல்ல, 
மாதவர்களெனினுமழிகுவரென்றுமறிந்தனமான்மனம்விழைந்து, 
நீதிகொடுபரமசிவபூசைபுரிவோர்பெருமைநிகழ்த்தற்பாற்றோ.
(4)
307இம்மைமருமைப்பயனுமறையின்முடிதெருட்டுறுபேரின்பவீடு, 
மெய்ம்மைபெறத்தரவல்லதச்சிவபூசனையன்றிவேறுமுண்டோ, 
செம்மைமனத்திலிங்பூசனைபுரியாதருங்கதியிற்செறியக்காத, 
றம்மனம்வைத்திடல்சிறகிலொருசிறுபுட்பறக்கவிழைதகைமைபோலும்.
(5)
308திரையெறியுஞ்சடைக்கங்கைத்துளிதெறிப்பநனைந்தகுளிர்சிறுவெண்டிங்கள்,
கரமலரினிருந்தெழுசெங்கனற்கொழுந்திற்காய்ந்தொழிக்குங்கடவுடன்னைப்,
பரமனெனவுணர்கிலாதளியனுமவ்வரியுமாய்ப்பயின்றதீமை, 
பொருவில்புகழ்க்கூவபுரத்திலிங்கபூசனைபுரிந்துபோக்கியுய்ந்தேம்
(6)
309பூதிமணிக்கலன்புனைந்துசிவலிங்கபூசனையைப்புரிந்திடாதோர், 
பாதகரிற்பாதகரெங்கட்கவர்கள்புறமானோர்பகரிலென்று, 
மாதலிற்புங்கவர்நீவிர்சிவலிங்கபூசனையையகன்றிடாது, 
காதலிற்செய்திடுதிரெனப்புகன்றனனாரணமனைத்துங்கரைகண்டோனே
(7)
310அண்டரயனுரைத்தமொழிவினவிமனமகிழ்ந்தவன்மெல்லடியிற்றாழ்ந்து, 
கொண்டறவழ்மணிமாடக்கூவபுரத்திலிங்கவுருக்குலவச்செய்தே, 
மண்டுமனத்தன்பின்வழிபட்டனரச்சிவலிங்கவடிவந்தோறும், 
புண்டரிகவதட்டிருவிற்கோலநாயகனின்றுபுரப்பன்மாதோ.
(8)
311இத்தகையவிணையிறிருக்கூவபுரத்தெவரேனுமெய்தினம்ம, 
சுத்தபரஞானமடைந்தரியசிவானந்தசுகந்துய்ப்பர்விண்ணோர், 
மெய்த்ததவமொருகோடிபுரிந்துநரவுருவாகிவிமலனல்கு,
மத்தலனிலவதரித்துவாழ்வரெனிதன்பெருமையளக்கற்பாற்றோ
(9)
312தன்னைமனத்தமைத்தவர்க்குமலமகற்றுஞ்சந்தானகிரிசந்தான,
னென்னுமருட்குரனெழிற்கூவமாநகரினிடையிருக்கின்றோர்கட்,
குன்னருநற்கருணையினிலுபதேசித்திடவுலகினொழிவிலின்ப,
மன்னிமனக்களிப்பொடிருந்தழிவில்பரகதியடைவின்மருவுவாரால்.
(10)
313என்றினையசூதமுனியிணையிறிருக்கூவபுரத்தியல்புகூற,
மன்றன்மலர்க்கரங்குவியாவருந்தவரெஞ்செவிக்கமுதம்வழங்கவந்தோய்,
கொன்றைமலர்த்தொடைபுனையுஞ்சடாமகுடத்தண்ணன்மகிழ்கூவமூதூ,
ரொன்றுமவர்க்கருள்புரியுங்குரவன்யாரியம்புகெனவுரைப்பதானான்.
(11)
314வேறு.
முன்னமோர்காலத்தாதிமுகுந்தனுமயனும்பின்றாழ், 
பின்னன்மாதவருஞ்செம்பொற்பிறழ்முடிச்சுரருமீசன், 
றன்னதாஞ்சத்திபாதஞ்சார்தலானுடல்வெறுப்புற், 
றுன்னருஞானானந்தமறுவதற்குவகையுற்றார்.
(12)
315உற்றவர்கயிலைநண்ணியுமையொருபாகற்போற்றிச்,
சிற்றறிவுடையேம்புன்மைச்சிறையுடற்பொறைதணந்து,
பற்றறிவுருவமாகப்பதிபசுபாசத்துண்மை, 
முற்றுமெங்கட்குணர்த்திமுதல்வநீபுரத்தியென்றார்.
(13)
316என்றவரியம்பவெங்கோனெல்லையில்கருணையெய்தி, 
நன்றெனக்கயிலைசூழ்ந்தநாற்பெருங்கிரிகடம்மு, 
ளன்றரிதனக்குச்சீர்சா லாமர்த்தகிரியினுச்சி,
யொன்றிநற்குரவனாகி யுண்மையை யுணர்த்துகின்றான்.
(14)
317ஆதியுநடுவுமீறுமருவமுமுருவுமாகும், 
பேதமுமளவுமின்றிப்பேரறிவுருவமாகி,
வேதமுமுணர்வுமெட்டாவிமலமாய்நிறைவதாகிச், 
சாதலும்பிறப்புமற்றோர்தன்மையாம்பதியின்றன்மை.
(15)
318மூலமாமலத்தாலன்றேமூயபேரறிவதாகிச்,
சீலமாயையினாற்றோன்றுஞ்சிற்றறிவுடையதாகி,
மேலைநாள்வினையாற்றோற்றம்விளிவுடைத்தாகி
வானம்போலவேயடுத்ததாகிப் புணர்வதுபசுவின்றன்மை.
(16)
319ஆதியன்றாகியொன்றாயளப்பருஞ்சத்தியாகி
யோதரும்பலவாமாவியுணர்வெலாந்தடுப்பதாகிப்
பேதமிலருஞ்சிற்சத்திபிறழ்தருமுயிர்க்குநீங்கிப்
போதுமத்தன்மைத்தாகும்புகலிருளாணவந்தான்
(17)
320சுத்தமோடசுத்தமூலப்பகுதியென்றொடர்பு
பெற்றுத்தத்துவமைந்தோரேழுதகுமிருபத்துநான்கா
யித்தகையிற்பிரேரம்போக்கியம்போகமென்ன
முத்தகைக்காண்டமாகவுதவிமும்மாயைநிற்கும்.
(18)
321மனமொழிமெய்யியற்றவருவதாயறம்பாவங்க, 
ளெனவிருவகைத்தாய்ச்சஞ்சி தாதிமூன்றியல்பாய்ப்புத்தி, 
தனிலுறுநிலையதாகித்தகையிற்றுய்த்தொழிப்பதாகி, 
வினையெனும்பேர்பெற்றொத்துவிடுமிருங்கன்மமன்றே.
(19)
322என்றுமுப்பொருளின்றன்மையியம்பியிம்மலங்களெல்லா, 
முன்றனக்கயலென்றோர்வித்தொழித்தறிவுருவமாகி, 
நின்றநிற்பாரென்றான்மாநிலையினையுணர்த்திமீது, 
வன்றுணையாகிநின்றமல்குதன்னருளைக்காட்டி.
(20)
323சென்றுபுல்குறுவதன்றிச்சேர்ந்துநிற்பதுவுமன்றி, 
யொன்றிரண்டென்பதன்றியுணர்வுசுட்டொழிந்துநீயா, 
யென்றுநின்றிடுமென்றன்னையிருந்தவாகாண்டியென்று, 
துன்றுதன்னிலைசொல்லாதசொல்லினாலுபதேசித்தான்.
(21)
324இன்னவாறயற்கும்புட்பகிரியிடையிருடிகட்கு,
மன்னுவானளவுகோளகிரியிடைவானவர்க்குந்,
தன்னைநேர்கின்றபொற்பிற்சந்தானகிரியினண்ணி,
முன்னைவான்பொருள்கண்மூன்றுமொழிந்தனன்குரவனாகி.
(22)
325அப்பெருங் கிரியி னாமத் தடுத்ததா ரியற்கு நாமஞ்,
செப்பருங் கூவத் துள்ளோர் தேவரா தலின வர்க்குத், 
தப்பில்பே ரருளி னாசான் சந்தான கிரிசந் தான,
னிப்பெருங் கரவ னங்க ணென்றும்வீற் றீருப்பன் மாதோ.
(23)
326கொத்தல ரிதழி யெம்மான் குருவுரு வாகி நேயம்,
வைத்துப தேசஞ் செய்யும் வளங்கெழு கூவ மூதூர்க்,
கொத்ததென் றயன்மற் றொன்றை யொப்புரை செயலா காதென், 
றத்தலத் தியல்பு முற்ற மறைந்தனன் சூத னன்றே.
(24)


சந்தானகிரி சந்தானச்சருக்கம் முற்றிற்று.
ஆகச்செய்யுள் - 326.
---------

அடிமுடி தேடிய சருக்கம் (327-368)

327சூதனி யம்பம கிழ்ந்தற வோரரி தொல்வேத
னாதிய கம்பர மென்றுத மிற்பகை யானாரென்
றோதினை பின்பர னைப்பர மென்றவ ரோர்வுற்ற
வேதுவெ னிங்கதி யம்புக வென்னவி யம்புற்றான்.
(1)
328மேனாண் மண்டு பிரளயம் வந்து விரவுங்காற்
கானார் கஞ்சன் றுஞ்சுறு மவ்வுழி கண்ணுற்றே
யானா வின்பத் தந்தணர் கைவைத் தங்கத்தின்
மானா மங்கைக் காவிய னாய்துயின் மாறென்றார்.
(2)
329என்றலும்வேதனெழுந்துகளிப்போடெறிநீரிற்
சென்றுலவாநின்றனனதுபோதிற்றிகழ்வாக
மொன்றுறுமேகந்தங்குதலேபோலுததிக்கண்
மென்றுயின்மேவுங்கண்ணபிரானைவிழியுற்றான்.
(3)
330மாலான்மாலைமாலவடித்தேமணிநீரின்
பாலாநீயாரென்றுவினாவப்பதியாகு
மேலாநாராயணனானென்றுவிரைந்தோதி
யேலாதாகுமகந்தைகொடங்கணெழுந்தானால்.
(4)
331மாயனுரைதெழுகின்றமைகண்டேமலர்வேத
னீயலநற்பரம்யானெனவோதிமுனின்றானா
லாயிடைச்சுதன்மிக்கெழுகோபத்தவனாகிப்
போயயன்விற்பொலிமார்பினெதிர்ந்துபுடைத்தானால்.
(5)
332முண்டகவேதனுநெய்சொரிதீயின்முனிவுற்றே,
யண்டகடாகமுடைந்ததெனும்படியங்கையான்,
விண்டுவின்மார்பெதிரெற்றினனித்திறம் வெம்போர்கண்,
மண்டிருவோர்கடமக்கும்விளைந்தனவந்தம்மா.
(6)
333குற்றுவர்மார்புகுழிந்திடநின்றுகுதித்தோடி
யெற்றுவராடகவெற்பொடுமைம்மலையெய்திச்சூழ்
வுற்றதுபோலவுடன்சுழல்வாருடலுக்கப்போய்ப்
பற்றுவர்கீழ்மேலாகவிழுந்துபதைப்பார்கள்.
(7)
334கட்டியெடுத்துவிழுத்தியிடக்கைகழுத்தூடே
யிட்டுவலத்தினழுத்தியுரத்தினிடிக்கொப்ப
முட்டிபிடித்தகரத்தொடுகுத்துவர்முட்டுற்றே
வட்டணைசுற்றுவரித்திறமுற்றினர்மற்போரே.
(8)
335வேறு.
மருவோகைகொண்முனிவோருடன்வரும்வானவர்கண்டே,
பொருவோர்களினிவர்போலறியோமென்றுபுகழ்ந்தார்,
விரைவோடுபினுருமேறெனும்வெடிசொல்லினராகி,
யிருவோர்களுமுறைவாள்களையுருவிக்கொடெதிர்ந்தார்.
(9)
336மின்னாமெனவெதிர்வீசியமிளிர்வாளொளியல்லா
லின்னாரிவரிவணுற்றனரெனவேதமையிமையா
வந்நாகருமறியாவகையறைகின்றவொலிக்கு
முன்னாடுகறங்காமெனமுறைவட்டணைவந்தார்.
(10)
337வரையேகுவரமராபதிநகரேகுவர்மலையுந்,
திரையேகுவர்பிலமேகுவர்திசையேகுவரென்றூழ்,
தரையேகுவர்விடையாளியையறியாதுசமழ்ந்தே,
புரையேகொடுசனனந்தொறுமுழல்கின்றவர்புரைய.
(11)
338தாணாடுவர்கரநாடுவர்தலைநாடுவர்மலருந்
தோணாடுவர்களநாடுவர்தொயைநாடுவர்சுடரும்
பூணாடுறுமுரனாடுவர்வயினாடுவர்பொலியும் 
வாணாடுறுவிழிநாடுவரிவ்வாறுமலைந்தார்.
(12)
339வேறு.
கொந்துலாமலர்முடியண்டகோளகைகடப்ப,
வந்துபாதலமுழுவதுமலர்ப்பதமிகப்ப,
வந்தவேலையினிருவர் தம்மகந்தையுமறுப்பா,
னெந்தையாயிடையழல்வடிவிலிங்கமாயெழுந்தான்.
(13)
340ஆதிமாலயனன்பகத்திருளறவமைத்த, 
தீதின்மாமணிவிளக்கெனத்திகழ்வதவ்விலிங்கம், 
மேதையாமவரகத்திருளொருசிறுவிளக்கின், 
சோதிபோக்குமோவப்பெருஞ்சோதியேயல்லான்.
(14)
341அங்குவந்தெழுமருட்கனற்றாணுவையயன்மாற்
றங்கள்வெஞ்சமர்தணந்தனர்நோக்கியித்தாணு
விங்குவந்த்தென்னென்றனர்தாணுவென்றறியார்
கங்கரன்றனையவன்கணாலன்றியார்காண்பார்.
(15)
342மண்டுவெஞ்சமர்தணந்தினியிருவருமலர்வு
கொண்டவங்கியினடிமுடிபார்ப்பமக்குறிமுன்
கண்டவன்பரமெனத்தமிலியைந்தனர்களிகூர்
வண்டுழுங்கமலாதனக்கடவுளுமாலும்.
(16)
343எனமாயரிமலரயனெகினமாய்ப்பிலமும்,
வானுமேகுபுமனமொழிதனிலுமேமருவா, 
ஞானநாயகனடிமுடிவிழிகொடுநாடப்,
போனமூதறிவுடைமையினினைந்துபோயினரால்.
(17)
344குன்றுபோல்வருமும்மதக்கோட்டுவாரணத்தை
யன்றுவாய்குடர்சொரிந்திடவேமிதித்தழுத்திக்
கொன்றதாண்மலரென்றறியாததைக்குறுகிக்
கன்றியோர்சிறுபன்றிகீழ்ப்பட்டதுகடிதின்.
(18)
345முளைத்த வெண்பிறை யெனுமுடக் கோடு தேய்வுறமண்,
கிளைத்து வெம்பில மனைத்தையு மிகந்து மிக்கேழ,
லிளைத்த தன்றிவான் றொடையை யுங்கடந் ததிலின்பம் 
விளைத்த வெந்தைதாள் விலங்குறப் பட்ட தோவிளம்பீர்.
(19)
346வருந்தி மெய்யிருங் கேழலி னுருவு கொண்மாயன்,
றிருந்து நங்குறி கண்டில மலர யன்சென்று, 
பொருந்து பொன்முடி கண்டுறிற் புகல்வ தென்னெனுநா,
ணருந்து நெஞ்சொடு மொருவகைப் புவியின் மீண்டடைந்தான்.
(20)
347விண்ணி னேகிய வியன்சிறை யோதி மம்விரைந்தே
யண்ணன் மாமுடிக் கங்கை யின்றுறை படிந்தாடக்
கண்ணி யேகுத லெனச்செழுங் கதிரிட முதலா 
வெண்ணும் யாவையும் பரந்திவர்ந் திகந்து போயினதால்
(21)
348விண்டு காண்குவ னடியினை முடியி னைவிரைந்து,
கண்டு நாமிணை யாகுவ மெனவ யன்ருத்திற், 
கொண்டு தேவமா வருடமோ ராயி ரங்குலவு, 
மண்ட மேறியு மடைந்தில னமலன் மார்பளவும்
(22)
349சிறகு நொந்திளைத் திடுத லானப் புறஞ்சேணிற்,
குறுகு கின்றதன் செயலொ ழிந்தெகி னுருக்கொண்டோ,
னிறுகு திண்புயத் தரிசெய லென்கொ லோவென்று, 
மறுகு நெஞ்சொடு மீண்டு வந்தடைந் தனன்மண்ணில்.
(23)
350இட்டதங்குறிகண்டுதாம்பரமெனவிச்சைப்
பட்டனேகநாட்படாதபாடுகளெலாம்பட்டா
ரிட்டமொன்றிலரெம்பிரானடிமுடியினைப்பூப்
பட்டகண்ணினர்காண்பரோவெத்தனைபடினும்.
(24)
351வந்துகூடியங்கிருவருமனத்தெழுமகந்தை,
சிந்திவாண்முகம்புலர்ந்துநின்றிடுதலாற்சிந்தை,
தந்திடுங்குறிகாண்கிலாதமைத்தமிலறிந்தே,
யுந்துகின்றநாணிருவருமொத்தலினொழிந்தார்.
(25)
352எங்கணாயகனருள்சிறிதுறுதலினையோர், 
தங்கணாகியமயக்கொழிந்தற்புதத்தாணு,
நங்கணாயகனாகியேநமக்கருணெற்றிச், 
செங்கணானுறுமுருவமோவென்றுசிந்தித்தார்.
(26)
353ஆனகாலையின்மணியிடத்தாடுறுமொளிபோன்
ஞானநாயகனழனெடுந்தாணுவினடுவண்
மானுமாமழுவுந்திகழ்கரமுமொண்மார்புந்
தூநிலாநகைவதனமுந்தோன்றுறநின்றான்.
(27)
354நின்றகாலையின்மிடற்றணிநீலமுமுரத்திற்
றுன்றுமாலிகைத்தலைகளுங்கண்டுளந்துணுக்குற்
றொன்றுநாணுடனச்சமுமொருங்கெழவயன்மால்
சென்றுநாயகன்றிருவடிசிரம்படவிழுந்தார்.
(28)
355எழுதிரஞ்சலிரென்றுமைநாயகனியம்பத்
தொழுதகையொடு மெழுந்துநின்றறிந்தவாதுதித்தே
யிழுதையேமுனைப்பரமெனவறிந்திடாதியற்றும்
பழுதுதீர்த்தருளென்றிடப்பராபரன்பகரும்.
(29)
356நும்மைநாம்படைத்திருதொழினுங்களுக்குதவ
வெம்மைநீரெனவுமதறிவொன்றியும்வேறாய்க்
கொம்மைமாமுலையுமையொடுவடிவுகொண்டிருக்கு
மெம்மைநீர்மறந்துமைமதித்தமர்புரிந்திளைத்தீர்.
(30)
357நீவிர்நம்மையேபரமெனநினைந்திடாதமர்செய்
பாவநந்திநும்பதநிலைபண்டுபோலடைய
வாவல்கொண்டுநம்வடிவமாமிலிங்கநன்கமைத்துக்
கூவநண்ணியர்ச்சியுமெனப்புகன்றினுங்கூறும்.
(31)
358நீறுகண்டிகைபுனைந்துநந்நிகழ்வடிவென்னக்
கூறிலிங்கபூசனைபுரிகுணத்தரைநாமாத்
தேறுகின்றவரொழிவில்பேரின்பமெய்த்தேவர்
வேறுகண்டவர்வெந்துயர்விடாததீநரகர்.
(32)
359கலைகள்யாவையுமுணர்ந்தவராயினுங்கருதி,
யிலகுநாமகிழிலிங்கபூசனைதனையியற்றா, 
நிலையரொன்றையுமுணர்கிலாரஃதுடைநெறிய,
ருலகினொன்றையுமுணர்கிலரேனுமுற்றுணர்ந்தோர்.
(33)
360நரரினீசரேயாயினுநல்லிலிங்கத்திற், 
பரிவினான்மைப்பூசனைபுரிகுவர்பகரிற்,
சுரரின்மேலவரஃதிலர்சுரர்களிற்சிறந்த, 
வரர்களாயினும்புலையரேமெய்ம்மையிம்மாற்றம்.
(34)
361மகிழ்ந்திலிங்கபூசனைசெய்வோனெக்குலம்வரினும்
புகழ்ந்தவன்றனைநாமெனவந்தனைபுரிவோர்
திகழ்ந்தநம்பதம்பெறுகுவரவன்குலஞ்சிந்தித்
திகழ்ந்தபுன்மையனீசனாய்நரகில்வீழ்ந்திகவான்.
(35)
362என்றுகூறியத்தாணுவின்மறைந்தனனிறைவ 
னின்றமாலயனுவகைபூத்தண்ணல்சொன்னினைந்து
சென்றுகூவமாநகரிடைச்சிவலிங்கமமைத்து
மன்றன்மாமலர்மஞ்சனங்கொடுவழிபட்டார்.
(36)
363வினைகடீர்ப்பதுபுனிதன்மெய்ஞ்ஞானமேவிளைப்ப
தனகனேயமோடிருப்பதக்கூவமாதலினாற்
கனவிலாயினுமிந்நகர்கடக்கொணாதென்றங்
கினியமேருவிற்கோலநாயகற்றொழுதிருந்தார்.
(37)
364மாலுநான்முகக்கடவுளும்வழிபடுமெழில்விற்
கோலநாயகர்க்கண்டிடிற்பன்னிருகோடி
மூலமாமிலிங்கங்களைமுறைமையிற்சென்று
சீலமோடுகண்டுறுபலனக்கணஞ்செறியும்.
(38)
365அருவிப்பூதரமெனவருமதகரியட்ட,திருவிற்கோ
லநாயகன்பெயர்பலவுளசெப்பிற்,கருவிற்போக்குறு
மிருவினைகளையுமக்கணத்தின்,விறைவிற்போக்குவவ
வற்றினிற்சிலபெயர்விளம்பின்.
(39)
366வேறு.
*இரக்ககர்தியாகரிசைச்சந்ததாரரெழின்மிகவளர்சடைக்கூத்த, 
ரருட்சகநாதரஞ்சனாபகண்டரருங்கிலானிக்கினரோடுந், 
திருக்கறுபுவனநாயகர்திரிபுரக்கினரப்பிரதிட்டர், 
தெரித்திடுகூவநாதரன்பர்க்குச்செந்நெல்வைத்தவரெனலாமால். (40)

----------------------------------------------
*இரக்ககர் -இரக்ஷிப்பவர். தியாகர் - தேவர்கட்கும் முனிவர்கட்கும் 
தியாகமளித்தவர். சந்ததாரர் - அன்பர்களைச் சமுசாரபயத்தினீக்கி 
நன்குகாத்தவர். வளர்சடைக்கூத்தர் - தீர்க்கசடாநிர்த்தர். தீர்க்கம் - நீட்சி. 
சகநாதர் - சர்வகர்த்தர். அஞ்சனாபகண்டர் - விடத்தால் அஞ்சனம்போலும் 
காந்திபெற்ற கண்டத்தையுடையவர். கிலானிக்கினர் - அடியவர்களுக்குச் 
கலிகாலக்கிலேசத்தை நீக்கி யருளினவர். கிலானி - கிலேசம். 
புவனநாயகர் - அசுரரைமாய்த்துப் புவனங்களைக் காத்தவர். 
திரிபுரக்கினர் - திரிபுரத்தை யழித்தவர். அப்பிரதிஷ்டர் - பிரதிஷ்டையல்லாதவர்:
எனவே, சுயம்பு என்றபடி, கூவநாதர் - கூபரநாதர். செந்நெல்வைத்தவர் - நீவாரதர். 
நீவாரம் - செந்நெல். என்பர் வடநூலார். அன்றியும், அப்பிரதிஷ்டர் என்னும் 
திருநாமத்தை அப்பிரதிஷ்டா அந்நியதாகர்த்தர் எனப்பாடமோதி அதற்கு, 
தம்மை அடைந்தவர்களுக்கு அளித்த பதத்தை என்றும் அகற்றாதவர் எனப் பொருளுரைப்பர்.
(40)
367இப்பெரும்பெயர்கள்பன்னிரண்டினையுமியம்புவோரிவற்றினுளொருபேர்,
செப்பரும்புதல்வற்கிடுபவர்புவியிற்சிதைவின்மெய்ப்போகங்கடுய்த்தே,
யொப்பருங்குளிர்வெண்டிங்கள்வண்கடுக்கை யுண்ணுழைந்தினியதாதளைந்து,
மெய்ப்பசும்பொன்னிற்றிகழ்சடாமவுலிவிமலனதடியின்மேவுவரால்
(41)
368வேறு
என்றுகூவத்திறைவன்பெரும்புகழ்
துன்றுமாசையிற்சூதமுனிவர
னன்றுமேவுநயிமிசமாவனத்
தொன்றுமாதவர்க்கோதினனென்பவே.
(42)


அடிமுடிதேடியசருக்கம் முற்றிற்று
ஆகச்செய்யுள்-368
----------------------

செந்நெல் வைத்த சருக்கம் (369-410)

369மறுவறுதவத்தின்முனிவரர்மிக்கமகிழ்ச்சியின்மறித்துமச்சூத,
னறுமலர்க்கமலத்திருவடிபரவிநங் களுக்கையவிற்கோலச், 
சிறுநுதற்குமரியிடத்தின்வைத்தவற்குச் செந்நெல்வைத்தவனெனும்பெயரெம்,
முறைமையினடுத்ததுரைத்தியென்றியம்பமுனிவனன்றெனவதுமொழிவான்
(1)
370முன்னரக்கூவபுரத்திடைக்காமமுதலியமுக்குறும்பெறிந்தோர்,
புன்னெறிப்படுமைம்புலன்களுந்தடுத்தோர்பொய்யினைமெய்யினிற்கண்டோர்,
சென்னியிற் பிறைகொண்டவன்றனக்கன்பு செறிந்தமை யடியர்கட்டிரழ்த்து, 
நன்னிலைத்தருமசீலனாரெனவோர்நாமவந்தணருளரானார்.
(2)
371உருவநல்லறமாக்கறைமிடற்றிறையன்புயிரெனவந்ததேயனையார், 
பொருவினன்னெறியின்வரும்பெருஞ்செல்வர்புரமெரிபடுத்தவிற்கோலத்,
தொருவனதடிமுப்பொழுதும்வந்தனைசெய் துறுசுவையடிசின்மாதவர்க்குப், 
பரிவொடுமளித்துமிச்சில்கொண்டெமக்குப்பயனிதுவெனவொழுகுறுநாள்.
(3)
372வேறு.
கோதினந் தரும சீலர் கொடைகண்டு நாணுட் கொண்டோ,
மேதரு மலர்தம் மேன்மை விளக்கவோ வறிந்தி லேமா, 
லோதமுண் முகிலொ டுங்கிற் றொருபுடை யதனால் யாரும், 
பேதுறு பசிநோய் கூரப் பெருமித மிழந்து நைந்தார்.
(4)
373வறியவக் காலம் போத மறுவறுந் தரும சீலர், 
செறியுமெய்த் தவர்கட் கெல்லாஞ் செழுங்கறி யமுதி னோடு, 
நறியமென் புழுக்க லன்பா னற்சுவை யளித்த ளித்தந், 
நெறியினிற் பெரும்பே றொன்றே நிற்கநின் றிலது செல்வம்.
(5)
374பழகுதஞ் செல்வ மெல்லாம் பயன்றரு கதலி யாக,
வழகுதம் பெருகு கற்பி னளவலா தளவி லாம, 
லொழுகுநன் மனைவி யார்தம் முரியபொற் றாலி யாதி, 
முழுதும்விற் றடியார்க் கன்பான் முதிர்சுவை யமுத ளித்தார்.
(6)
375மனையிலுள்ளனவனைத்துமாண்டிடச்செயலொன்றின்றி, 
யினியருந்தவர்கட்கந்தோவென்செய்கேனெனத்துளங்கி, 
யனையவர்க்கிரப்புற்றேனுமமுதமிட்டொழிந்ததுண்பே,
னெனமனந்துணிந்தவ்வாறுநெற்பலியிரந்துசெய்தார்.
(7)
376இத்திறமொழுகுநாளின்மைமேன்மேல்வந்தெய்த, 
வெய்த்திடுபவர்களின்றியெண்பகல்பலிக்குழன்றே, 
யுத்தமர்வறிதுமீண்டங்குடற்றும்வெம்பசிநோய்கூர,
மைத்தடங்கண்மாதோடும்வருந்திமெய்தளர்ந்திருந்தார்.
(8)
377கொழுநர்தம்மெய்வருத்தங்காண்டொறுங்குழைந்துநெஞ்சம்,
விழிபொழிவெள்ளமோடவெய்துயிர்த்தென்செய்கோமென்,
றெழுதுயர்மனத்தினோங்கவில்லினுக்குரியார்செந்தீ,
மெழுகெனவுருகிநைந்தார் வினைகொலோவிதுவென்றெண்ணி.
(9)
378அன்பர்தாமுடறளர்ந்துமகந்தளர்வின்றிச்சென்று,
முன்பெனநதிநீர்மூழ்கிமொய்ம்மலர்புனல்கொண்டெய்திப், 
பொன்புரைதிருவிற்கோலப்புனிதனைவழிபட்டேத்திப்,
பின்புதன்மனையின்மெல்லப்பெயர்ந்துவந்திருந்தாரெய்த்தே.
(10)
379இம்முறை யந்த ணாள ரெண்டின முணவொன் றின்றித், 
தம்முட றளர்ந்தொன் பானாட் டையல்பா கனைப்பூ சித்தே, 
யம்மனை வருகு வார்மெய்ய யர்ந்துவந்தருகுவீழ்ந்தார், 
மைம்மலிகுழலினார்தம்மதிமுகத்தறைந்தழுங்க.
(11)
380அவ்வமையத்திலீசனடியவரொருவர்யாண்டுந்
*துவ்வரிதாகமேனிதுவண்டுகண்ணுள்விழுந்து,
செவ்விதழ்புலர்ந்துவாடுந்திருமுகமோடுமுன்றில்,
லெவ்வியபசியின்வந்தேன்வினையிலீரென்றுசென்றார். 
............
*துவ்வு - உணவு.
(12)
381தொண்டர்வந்துரைத்தமாற்றஞ்சுடுதழற்காய்ந்தவெவ்வேல், 
புண்டுளைபடப்புக்கென்னச்செவிப்புலம்புக்குநெஞ்ச, 
முண்டிடவெழுந்துபோகியுரிந்** நன்மனையாரோடும், 
வண்டவர்தமைவணங்கிமனையினுட்கொண்டுபுக்கார்.
(13)
382ஆதனத்திருத்திமேனியயர்வுகண்டழுங்கிக்கெட்டேன், 
மாதிடத்தவர்தம்மன்பர்வருந்தவிவ்வாறுகண்டே, 
னேதினிச்செய்வேனென்னாவிணைவிழியருவிபாய, 
மூதழற்படுமரக்கின்மும்மைநெஞ்சுருகிநைந்தார்.
(14)
383அன்னைபங்குடையோனன்பரயர்வுகண்டாற்றலாகா, 
தின்னுமிந்நகரமுற்றுமிரந்துகாண்குவன்புகுந்து, 
செந்நெல்வந்திலதேலாவிதீர்ப்பனென்றில்லிற்கோதித், 
தன்னிகரிலாதாரன்புதரும்வலிகொண்டுசென்றார்.
(15)
384நனையவிழிதழியார்க்குநல்லவரிளைத்தாரென்ன,
வினைவுறு மனத்தோடங்கங் கிருந்திருந்தெழுந்துமெல்ல, 
மனைதொறும்பலிக்குப்புக்கார்வடிவுறுவருத்தஞ்சற்று, 
நினைகிலரன்புபற்றாய்நின்றதந்தணருக்காவி.
(16)
385எம்மையாடிருவிற்கோலத்திறையவன்கருணைதன்னாற், 
செம்மையாமனத்தர்க்கெய்தச்செந்நெலங்கிரண்டுநாழி,
நம்மையாளுடையதொண்டர்நனிபெருஞ்செல்வமுன்னின்,
மும்மையாயடைந்ததென்னமுதிர்மகிழ்வுற்றுமீண்டார்.
(17)
386அந்தணர்செல்லநங்கையருந்தவரயர்வுகாணா, 
வந்தெழுந்துயரமோர்பான்மனத்தெழுந் தலைப்பக்கேள்வர்,
தந்தளர்வுண்ணின்றோங்குந்தனிப்பெருந்துயரமோர்பான்,
முந்துறவழுமிரங்குமுலைமுகட்டெற்றிவீழும்.
(18)
387இன்னலங்கடலின்மூழ்கியெழுந்திடாதழுங்குகின்றார், 
செந்நெல்கொண்டந்தோநங்கடிருத்தொண்டர்பசித்தாரென்று, 
துன்னுறுதுயரநூக்கத்துணைவனார்வருதல்கண்டு, 
மின்னெனவெதிர்வணங்கிவிரைந்துவாங்கினரச்செந்நெல்.
(19)
388வாங்கியசெந்நெற்குத்திமாதவர்பசிநோய்தீரப்,
பாங்கொடுமமுதமாக்கிப்படைத்திடவேண்டுமென்ன, 
வோங்குறுமனத்தன்பாற்றம்முடற்றளர்வெண்ணாதமாபொற்,
பூங்கொடியார்*போனம்பொருக்கெனவமைத்துப்பின்னர். 
---------------
+போனகம் என்பது-போனம் எனத்தொக்குநின்றது.
(20)
389திருந்தியகொழுநர்க்காயிற்றமுதெனச்செப்பிநம்பா.
லருந்துயர்கெடவந்தாரையமுதுசெய்விப்பீரென்ன,
விருந்தினர்தமைவணங்கியமுதுசெய்வித்தவேலை,
மருந்தெதிர்பவரின்மிக்கமறையவர்மகிழ்ச்சிகொண்டார்.
(21)
390மாதவரமுதுசெய்துமகிழ்ச்சிகொண்டெய்தப்பின்போ,
யாதரவொடும்வணங்கியவரருள்விடைகொண்டேகித்,
தீதகலன்பின்மிக்கார்சேடித்தவமுதுண்பாக்குப்,
போதுமவ்வமையந்தன்னிற்புகுந்தவர்பதமுரைப்பாம்.
(22)
391வேறு.
அந்தணாளர்தம்மன்பினையுலகிடையலர்த்த,
நந்திலாவருட்கூவநாயகனுளநாடித்,
தந்தமாவுரிபோர்த்ததன்றனியுருமறைத்து,
முந்துதொண்டர்கள்போலொருமூப்புருவெடுத்தான்.
(23)
392அன்றுமேவியகாரைக்காலம்மையேயம்மை
யென்றவாசகமெய்பெறவவளுருவென்னத்
துன்றுமேனியிற்றசையொழிந்தென்பெலாந்தோன்ற
மன்றுளாடியதிருவடிமலர்நடைதளர.
(24)
393பொருவிறன்னைவிற்கோலத்தனெனும்பெயர்புதுக்க, 
வுருவமுள்வளைந் தொருகழைத் தண்டுமுன்னூன்றித்,
திருவிறைஞ்சுபொற்பையரவல்குலாள்சிரிப்பத், 
தருமசீலர்தம்மனையிடைப்புகுந்தனன்றலைவன்.
(25)
394புகுந்திளைத்தனமொருபிடிபோனகமிடிலோ
மிகுந்தபுண்ணியமுமக்கெனவிளம்பினன்விமலன்
பகர்ந்தவாசகங்கேட்டலும்பதமுணவிருந்தார்
நுகர்ந்திடாமுனமடியர்வந்ததுதவநோன்மை.
(26)
395என்றகங்களித்தெழுந்துபோயெம்பிரானிளைத்து
நின்றவந்நிலைகண்டுளம்பொறாதுநெக்குருகித்
துன்றருந்துயர்கூர்ந்திருகண்கணீர்சொரியப் 
பொன்றிலன்பொடுவணங்கியுட்கொண்டுபுக்கனரால்.
(27)
396வேறு.
ஐயனையாதனத்திருத்தியிங்குநா
முய்யவந்தவர்தமக்குள்ளபோனகம்
பையரவல்குலாய்படைத்தியென்னலு
மையலின்மங்கையர்மகிழ்வுற்றிட்டனர்.
(28)
397இட்டலுமிறையவனெண்டினங்கணீர்
பட்டினியொடுமிகப்பரிந்துதொண்டுசெய்
*நிட்டையின்வழுவுறாநுங்கணெஞ்சிடை
மட்டிலையன்பெனமறைந்துகூறுவான். 
----------
*நி - உறுதி.
(29)
398கலிமிகுசிறுவிலைக்காலஞ்செல்வரை,
மெலிவறநுமக்குநம்விளங்குமாலயத், 
துலைவறவனுதினமொருமணிக்குட, 
மலிவுறுசெந்நென்முன்வைத்துங்கொண்மென.
(30)
399அண்ணல்சொற்றிடவதையந்தணாளர்கேட்
டுண்ணெகிழ்வொடுகரமுச்சிகூப்பியே
கண்ணிணைபுனலுகக்கடையனேனையு
மெண்ணிவந்தருளியவிறைவனோவென.
(31)
400ஆலயந்தனிலடைந்தன்புவேண்டுவிற்
கோலவங்கணர்தமைக்குறுகித்தாழ்ந்தெழுங்
காலையினங்கொருகடநிரம்புசெஞ்
சாலிகண்டுவந்தனர்தருமசீலரே.
(32)
401கொண்டுபோய்மனையினக்குடநிரம்புநெல்
லண்டர்நாயகர்திருவடியரெண்ணிலா
ருண்டிடநல்லமுதுதவிச்சேடமுண்
டொண்டொடியவரொடுமுவப்புற்றாரரோ.
(33)
402இத்திறநாடொறுமிறைவனாலயம்
வைத்தசெந்நெற்கொடுவருந்தொண்டர்க்கெலாந்
துய்த்திடவமுதறுசுவையொடும்படைத்
துத்தமர்சிவனரும்பதத்திலொன்றினார்.
(34)
403வேறு.
மறையவர்தமக்கிம்முறைமையிற்செந்நெல்வைத்தலானரியவிற்கோலத், 
திம்றயவனுலகிற்செந்நெல்வைத்தவனாமென்னுமெய்ப்பேரடைந்தனனா, 
லறையுமப்பெயரை மனம்விழைந்துரைப்போ ரழிவிலாமிக்கசீர்ச்செல்வ,
நிறைபெருங்கல்விபெருகுவர்பின்னுநிகரில்பேரின்பவீடடைவார்.
(35)
404அந்தவிற்கோலத்திறைசெயும்வெள்ளியடுக்கலிற்சந்தியாநிருத்த,
நந்துபொற்பொதுவினரியவானந்தநடமிலங்குறுவடவனத்தி, 
லுந்துநற்சண்டதாண்டவங்கூவத்துலைவறுதருக்கமாதெனவே, 
வந்தவச்சத்தியனுதினங்காணமகிழ்ந்*திரக்காநடம்புரிவன். 
---------------------
*இரக்காநடம்-இரக்ஷாநடனம்
(36)
405சாற்றரும்பெருமைக்கூவமாநகரிற்றருக்கமாதாவெனும்பெயராள், 
போற்றுறநடஞ்செய்யெம்பிரானாமம்போற்றுறுவளர்சடைக்கூத்தன், 
காற்றுணைக்கமல மொருபகற்சென்றுகண்டவரளப்பருங்கல்வி,
மாற்றருஞ்செல்வம்பெரும்புகழ்படைத்துமறுமையிற்சிவகதியடைவார்.
(37)
406எம்பிரானடஞ்செய்கூவமாநகரினிருப்பவர்க்கொருதினையளவு, 
செம்பொனீகுறிலொண்காசியாதிகளாய்ச்சிறந்திடுந்தலங்களிற்சென்றே, 
யம்பொனாயிரநான்மறையவர்த்தேடியளித்திடு பலனிகர்த்திடுமாற், 
றம்பிரானடியார்கரத்ததையளிக்குந்தனிப்பலனுரைப்பதற்கெளிதோ.
(38)
407கூவமாநகரிற்பிடியடங்கடிசில்கொடுத்திடினந்தணர்தமக்குத், 
தேவர்மூவருமுண்மகிழ்மக நூறுசெய்பலனக்கணஞ்செறிவ,
ரோவின்மாதவருக்கொருபகனிரம்பவோதனமத்தலத்திடுவோர், 
பூவினோன்றிருமால்பதங்களோ வடைவார்புராரிதன் பதம்பெறுகுவரால்.
(39)
408மாதவர்க்கினியகூவமாபுரத்தோர்மடமமைத்துதவுவோர்தம்பாற், 
போதுறுமடம்விட்டின்பவீடடைவர் பொன்றுறுபதங்களிற்புகுதா, 
ராதரவினிலோர்சிவனடியவருக்கங்கையின்றுணைவிளைநிலமொன், 
றீதவ்செய்பவரெக்காலமுமகலாதிருப்பரொண்கயிலைமால்வரையில்.
(40)
409அருந்தவர்தமக்குக்கூவமாநகரிலாடையொன்றளித்திடிலதனிற்,
றிருந்திழையொன்றிற்கொருசதகோடிதேவராண்டருஞ்சிவலோகத், 
திருந்துபின்பரமன் றிருவடிக்கமல் மெய்துவர்பெற்றமொன்றுதவிற், 
பொருந்துறுபலனிவ்வளவெனக்கணித்துப்புகன்றிடற்கரிதரிதம்மா.
(41)
410கொன்றையங்கண்ணிமிலைந்தவன்மகிழுங்கூவமாநகரிடத்தியற்று, 
மொன்றொருதருமமனந்தகோடிகளா யுலப்பறுபலன்களை யுதவு, 
மென்றதனியல்பைமுனிவரருவப்பவியம்பிமன்புலனெறிகடந்து,
சென்றரும்பரமானந்தவாரிதியிற் றிளைத்திடுஞ்சூதனென்பவனே.
(42)

செந்நெல்வைத்தசருக்கம் முற்றிற்று.
ஆகச்செய்யுள்-410
------

தாருகன்வதைச் சருக்கம். (411- 703 )

411சுருக்கமிலறிவுடைச்சூதமாதவன்
றிருக்கிளர்கூவமாநகர்ச்சிறப்பெலா
முரைக்கவுண்மகிழ்ந்துகையுச்சிகூப்பிமா
லிரிக்குநன்முனிவரரியம்பன்மேயினார். (1)
(1)
412முன்னநீதருக்கமாதெனமொழிந்தவ
டன்னதுதோற்றமென்றனிப்பொற்கூவமா
நன்னகரிடைநடமாடவந்தவா
றென்னகொலியம்பெனவிசைத்தன்மேயினான் (2)
(2)
413பேரறங்களுநிலைபெயரக்காமநோ
யாருதலெனநிகழகிலம்யாவையுங்
கூரிடர்மூழ்குபுகுலையமேலைநாட்
டாருகனெனவொருதகுவன்றோன்றினான்.
(3)
414சேண்டொடுதனதுடற்சிந்துசெம்புனற்
காண்டுளிமுழுதுந்தற்கடுத்தெழுந்திட
வாண்டகையோர்களாலழிவுறாதுற 
மாண்டகுதவத்தினான்வரம்படைத்துளான்.
(4)
415எண்டிசையரையரையெழுபிலத்தினில்
விண்டலமிசையுறுவேந்தர்தங்களை
மண்டுதன்சேனைகாவலர்களால்வயங்
கொண்டனுதினமுங்குற்றேவல்கொள்பவன்
(5)
416தறுகண்வஞ்சினக்கொடுந்தாருகன்றிசை
உறுகரிதினந்தொறுமொரோவொன்றாகவே
குறுகியதூதராற்கொணர்வித்தேறியோர்
மறுகெனவுலகெலாம்பவனிவந்துளான்
(6)
417ஒள்ளொளியிரவிதேர்க்கிள்ளையொத்தவேழ்
கிள்ளைகண்மீதுமொண்கிண்கிணிச்சரண்
பிள்ளையேழ்தினத்தினுமேற்றிப்பேரெழின்
ஞெள்ளலினுலாவருவித்துநீக்குவான்
(7)
418கொம்மெனப்புறவடிகொண்டொரெற்றினான்
மைம்மலிதிரைக்கடல்வறப்பவெற்றுவான்
செம்மகமேருவினோடுசிற்சிலம்
பம்மனையெனவெடுத்தாடுமாற்றலான்
(8)
419வானிதிநந்துதாமரைதன்வாவியிற்
பானிகமழ்வளையொடுபதுமமாகவே
யானிரைதனிற்பசுவாகத்தேனுவைங்
காநகர்மலர்ப்பொழிலாகக்கண்டுளான்
(9)
420வித்தகவிடையினோன்வில்லிற்பொன்கவர்ந்
தத்தனுவளைவுறவசைத்தநாரியின்
மெத்தொளிமணிகொளாவியப்பவாக்கிய
புத்தணியவயவம்புனைந்தமாட்சியான்
(10)
421மணங்கமழ்குழலரமகளிர்ப்பற்றிவந்
திணங்குறுதகுவியர்க்கேவல்செய்வியா
வுணங்குறுசிறைபுரிந்துடன்றணக்கியே
யணங்கியரெனும்பெயரவனிட்டானரேர்.
(11)
422மேயதன்றிகழவைவிளங்கராவிறை
மாயிருந்தலைகளேவனைந்ததம்பமா
மீயிலங்கொளிமணியிருள்விழுங்குறு
மாயிருஞ்சுடர்களாயமரவைத்துளான்.
(12)
423ஒல்லையிற்பொழுதுணர்ந்தோலக்கத்துறு
மெல்லையிற்புகுந்திடாதிருந்ததேவரைக்
+கொல்லுலைக்கனல்விழிக்கொடியதூதரான்
வல்லியிட்டருஞ்சிறைப்படுத்தவன்மையான். 
----------------
+கொல் என்பது-கொல்லன் என்னும் பொருளில் வந்தது.
(13)
424கனவினுமவன்றனைக்காணினிந்திரன்
மனநடுநடுங்கிவாய்குழறிவல்லையி 
னனவினையடைந்துபின்னடுங்குநெஞ்சகத்
தினைவுறலொருபகலெலாமொழிந்திடான்.
(14)
425ஒருங்குலகங்களினுயிர்களுக்கெலாம்
வருங்கொடுநோயெனவருமவன்றனா
லருங்கடவுளரருச்சனையறங்கள்வான்
றருங்கலைநெறிமகந்தவமகன்றதே.
(15)
426அக்கொடுந்தயித்தியனாணையிற்படா,
வுக்குநெஞ்சிடர்ப்படுங்காலத்தோர்பகன்,
மிக்கவிண்ணவரரிவிரிஞ்சனிந்திரன்,
றொக்கொருங்கொருபுடைதுயரொடீண்டினார்.
(16)
427தங்கள்வெந்துயருமத்தகுவனாவியு
மங்கொருங்கழியுநாளடுத்ததாதலாற்
சங்கரன்றனையினிச்சரணென்றெய்திடின்
மங்குநந்துயரெனமனந்துணிந்தனர்.
(17)
428துணிந்தவர்கயிலையைத்தொழுதங்கெய்துபு
தணிந்தமெய்ம்மனனுடைத்தவத்தர்சென்னி மீ
தணிந்திடுநந்திதாளரணடைந்துநேர்
பணிந்தனரினையனபகர்தன்மேயினார்.
(18)
429தடுத்தசெங்கோலுடைத்தாருகன்றனா
லடுத்தவெந்துயருரைத்தகற்றவந்தனம்
படைத்தெமையளித்திடும்பராபரன்முனம்
விடுத்தருளையநீயென்றுவேண்டினார்.
(19)
430தன்னைநேர்கின்றவன்சைவதேசிக
னென்னையாளுடையநந்தீசன்சென்மென
மின்னுலாஞ்சடையினோன்வீற்றிருந்துழித்
துன்னுவானவரெலாந்தொழுதுபோயினார்.
(20)
431வருணமாமணியொளிர்மண்டபத்திடைத்
தருணவாரணப்பகைத்தவிசின்மீமிசை
யருணகோடிகடிரண்டமர்ந்ததென்னவாழ்
கருணைவாரிதிதனைக்கண்டிறைஞ்சினார்
(21)
432விழிப்புனறுளிப்பமெய்விதிர்பவாளெரி,
யுழிப்படுமரக்கினெஞ்சுருகிவெந்துயர்ச்,
சுழிப்படுமெனக்கருள்சுரக்குமீசனை,
மொழிப்பயன்பெறத்திருமுன்னின்றேத்துவார்.
(22)
433வானாதிகளாய்நிகழ்வாய்சரணமறைமாமுடியின் பொருளேசரண,
மூனாருயிரேசரணஞ்சரணமுணர்வுக்குணர்வேசரணஞ்சரணந்,
தேனார்மொழிபங்கினனேசரணஞ்சிவசங்கரனேசரணஞ்சரண,
மானாவமுதேசரணஞ்சரணமருளாகரனேசரணஞ்சரணம்.
(23)
434மருவேமலரேசரணஞ்சரணமணியேயொளியேசரணஞ்சரணந்,
திருவேபொருளே சரணஞ்சரணந்தேனேயமுதேசரணஞ்சரண,
மிரவேபகலேசரணஞ்சரண மெமையாளுடையாய்சரணஞ்சரண,
மருவேயுருவேசரணஞ்சரணமருளாகரனேசரணஞ்சரணம்.
(24)
435வேறு
என்றிவைபுகன்றுபோற்றியிணைமலர்க்கரங்குவித்து,
நின்றவர்தமைமென்கொன்றைநெடுஞ்சடைக்கடவுணோக்கிப்,
பொன்றிகழ்மரைதீப்பட்டபோன்முகம் புலர்ந்த வுங்கட்,
கொன்றுநெஞ் சகன்றி டாத துயரமே துரைத்தீ ரென்றான்.
(25)
436பெருந்தகை யியம்ப மாயோன் பெயர்வின்றிப் பொருள்க டோறு, 
மிருந்துட னியக்கு கின்ற வெந்தைநீ யெங்க ணெஞ்சி,
னருந்துய ரறியாய் போல வினவிய தடியே முய்யப்,
பொருந்திய கருணை யென்று போற்றிநின் றுரைப்ப தானான்.
(26)
437தாருக னென்ன வெய்ய தயித்திய னொருவன் றோன்றிப், 
பாரிடை முன்னை வேதம் பகர்மக மறத்தின் பேதஞ்,
சீரிய தவங்க டானஞ் சிதைந்தன துன்ப மெய்தி, 
யாருயிர் தரித்தி ருந்தா ரமரரா கையினால் விண்ணோர்.
(27)
438சற்றுமுட் கருணை கொள்ளாத் தாருக னிழைத்த தீமை, 
யிற்றெனக் கிளக்க வெம்மான் முடிவுறா தெம்பி ரானே, 
மற்றினிப் புகல்வ தென்கொல் வலிகெழு மழன்ற னக்குன்,
சிற்றடிக் கேவல் செய்யுஞ் செயலெனத் தினமுஞ் செய்தோம்.
(28)
439அந்தவே லவுணன் றீமை யாற்றரி தெங்கட் குந்தன், 
கந்தவா ரிசப்பொற் றாளே காப்பென வபயம் புக்கே,
மெந்தைநீ யெம்மைத் துன்பக் கடலினின் றெடுத்தாட் கோடி, 
தந்தையே யன்றி வேறார் தனயர்த மின்ன றீர்ப்பார்.
(29)
440அச்சுத னெனுமென் னாமத் தமரரென் சுரர்க ணாமத்
திச்சக மறிய நின்ற முதலெழுத் திகவா தொன்ற
*நச்சினை மிடற்ற டக்கு நாதவன் னஞ்சிற் றீயன்,
கைச்செமைத் தினமொ றுக்குங் கடுந்திறற் றாரு கன்றான். 
----------------------------------------------
* நச்சினைமிடற்றடக்காவழி, திருமாலும் அயன்முதலிய தேவரும் 
இறத்தலையுடையராக; அச்சுதன் அமரரென்னும் அவர்நாமங்கள், 
அகரத்தையிழந்து முறையே சுதனெனநின்று அழிவை யுடையவனெனவும், 
மரரெனநின்று மரித்தலையுடையவரெனவும், பொருள்பட்டு நிற்குமாகலின், 
முதலெழுத்திகவாதொன்ற நச்சினைமிடற்றடக்குநாதன் என்று விதந்தார்.
(30)
441எம்முயி ரொழியா தென்று மிருந்திடர்ப் படவ ருத்து, 
மம்மற வனையட் டாட்கொள் ளஃதின்றே லடியே மெல்லா,
மிம்மென விமைப்பின் மாள வெமைமுனம் புரக்க வைத்த,
வெம்மைகொண் மணிமி டற்றின் விடத்தைவிட் டிடுதி யையா.
(31)
442என்றர வணையிற் றுஞ்சு மெழிலரி யியம்பக் கேட்டுப், 
பின்றிகழ் சடிலக் கற்றைப் பெருந்தகை யருண்மீ தூர, 
வன்றிற லவுணன் றன்னை மாய்த்துவா னவர்க ணெஞ்சந், 
துன்றுறு துயர னைத்துந் தொலைத்திட வுளங்கொண் டானால்.
(32)
443வன்மனத் தவுணர் கோமான் வரத்தொடு வலியு முள்கிப்,
பொன்மலைச் சிலைகு னித்துப் புரமெரி படுத்த வெம்மான், 
சின்மயக் கிரிப யந்த தேவிதன் வதன நோக்கி, 
மென்மலர்க் கரந்த னாது மிடற்றினா லத்து வைத்தான்.
(33)
444வைத்தவக்கணத்தினெண்டோண்மலைபிணைத்தன்னகொங்கை,
மெய்த்தழற்கொழுந்துபோலுமென்சிகைகுழைதாவால,
மொத்தகட்பேழ்வாய்வாரியுண்முகில்புரையுமேனிக்,
கைத்தலக்கழுமுட்டுங்கக்காளிவந்துதித்தாண்மன்னோ.
(34)
445அண்டகோளகையிற்றாக்கியணிமுடிவளையமிக்க,
வெண்டிசாமுகத்தினெல்லை யெண்புயமளப்பக்கண்கண்,
மண்டுதீச்சொரியச்சூலம் வண்கையிற்றிரியவூழிக்,
கொண்டலாயிரமுழங்குங்கொள்கையினதிர்த்தெழுந்தாள்.
(35)
446செந்தழறனக்குவெம்மையியல்பெனச்சீற்றமென்று,
மந்தமில்குணமாயுள்ளாளடைந்தவர்க்கருளுஞ்செய்வா,
ளிந்தவண்டங்கள்கோடியியற்றிடவெண்ணுநெஞ்சா,
ளுந்துறுமாற்றலாலெவ்வுலகினுமுவமையில்லாள்.
(36)
447மைந்நகநடுவட்சூழ்ந்தமாலையின்செக்கர்போலத்,
தன்னரைவிரித்துடுத்ததயங்குசெந்துகிலின்பொற்பாள்,
கொன்னுனைவடுகன்சூலக்கொடும்படைநிகர்த்தசூல,
மன்னியமலர்க்கரத்தாண்மணிச்சிலம்பரற்றுந்தாளாள்.
(37)
448ஞாலத்தினுயிர்களெல்லாநடுங்குறக்கரத்திற்கொண்ட,
சூலத்தினுதியிற்குத்திச்சோரியுண்டிடக்குறிப்பாள்,
வேலைத்திண்டிரையிற்றோன்றி யுலகெலாம் விழுங்க வந்த, 
வாலத்தி னுதித்தா ளென்றா லஃதவட் கடுத்த தன்றோ.
(38)
449உன்னரு முதிர்சூன் மேக மொத்ததிர்த் தெழுந்த செங்கட், 
கன்னியை யுமைகண் டேங்கிக் கைவிர னெரித்துச் சென்று, 
தன்னிக ரமலன் மார்பிற் பண்டுறு தன்ற ழும்பிற், 
பொன்னவிர் சுணங்கு பூத்த முலைபடப் புல்லிக் கொண்டாள்.
(39)
450அன்னவ ளெழுதல்கண்ட வச்சுத னெம்பி ரான்முன், 
பின்னுரை செய்த வாறே பெருவிடத் தினைமா தாக்கி, 
யிந்நிலை யெமைவ தைப்ப விடுத்தன னென்ன மாழ்கித் 
தன்னக மருண்டு நின்றான் சதுர்முக னுடல் கம்பித்தான்.
(40)

 

451இந்திரன்மனந்த ளர்ந்தா னெரியுடல் வெயர்த்தான் கொல்லு, 
மந்தக னாவு லர்ந்தா னிருதிமெய் யயர்ந்தா னோதைச், 
சிந்துவி னிறைவெருண் டாண்சமீரணன் றிகைத்தான் மூர்ச்சித், 
துந்துறு குபேரன் வீழ்ந்தா னுயங்கியீ சான னின்றான்.
(41)
452ஏனைய வும்ப ரெல்லா மெழுந்தமா காளி கோர
மேனியை யெதிர்கண் டேங்கி விழிபுதைத் தனரவ் வேலைக்
கூனல்வெண் பிறைமி லைந்த குரிசிலோ டகில மீன்ற
ஞானநா யகியைத் தாழ்ந்து நவிலுமச் சூலி மாதோ.
(42)
453வேறு.
பரம வென்னைப் படைத்தவ நானிவண்
புரியு மேவல் புகன்றரு னன்னதுன்
னருளினாற்றுவனென்னவரன்சுரர்
வெருவுநெஞ்சமகிழவிளம்புவான்.
(43)
454தேவரென்றுஞ்செயத்தகவல்லகுற்
றேவல்செய்யவிடர்புரிதாருக
னாவிகொண்டவர்க்காக்கமுதவுவான்
பாவைநின்னைப்படைத்தனமென்றரோ.
(44)
455காரிபட்டகடுந்தொழிற்றாருகன்
சோரிபட்டதுகளுமனையவன்
மார்பட்டவடிவுகொண்டுற்றெழு
மூரிபட்டமுகிண்முலைக்காளியே.
(45)
456சூலத்தாற்குத்துபுசொரிசோரிக
பாலத்தேற்றுப்பருகியவனெடு
நீலத்தாக்கையைநீயேவிழுங்குதி
யாலத்தூடுதித்தாயென்றறைந்தனன்.
(46)
457குனித்தவார்சிலைக்குன்றினன்றம்மன
நினைத்தவாறுநிகழ்த்தினனாதலாற்
கனத்தவார்முளைக்காளிமகிழ்வுறீஇ
நுனித்தோர்மாற்றநுவலுதன்மேயினாள்.
(47)
458அண்டர்நாதவளியன்றனக்குநீ
யுண்டலேபணியாகவுதவினை
தொண்டராகநிற்சூழ்ந்திடுவோர்தமுட்
கொண்டநின்னருளென்னிடைக்கூர்ந்ததே.
(48)
459ஐயநீயென்பணித்தனையன்னதே
செய்யநான்கடவேனெனச்செப்பியே
கையின்மான்மழுக்கொண்டகடவுடன்
றுய்யதாளைத்தொழுதுநின்றாளரோ.
(49)
460அன்னகாலையனீகமதாகவே
கன்னியோகினிவெள்ளங்கணிப்பில
மன்னுகாளிவடிவிலுதித்தெழ
வென்னையாளுடையீசனினைந்தனன்.
(50)
461அம்குமாரியனையவடிவொடு
கைக்கபாலங்கழுமுட்டிகழ்தர
மிக்கயோகினிவெள்ளமசனியே
றொக்கவார்த்தவண்மெய்ந்நின்றுதித்ததே.
(61)
462எந்தைசென்னியிளம்பிறையொத்தபல்
கந்தரத்திற்கடுவைநிகர்த்தமெய்
செந்தளிர்க்கைச்செழுங்கனல்போன்றகண்
ணுந்துமுத்தலையோகினிகட்கரோ.
(52)
463வேறு.
கண்ணுதற்பரமன்பினர்க்காளியைநோக்கி,
யெண்ணிலித்திறல்யோகினிவெள்ளமோடேகிப், 
புண்ணியப்பகைத்தாருகனாவியைப்போக்கிப், 
பண்ணவர்க்கருள்செய்யெனவேவினன்பணித்து.
(53)
464எம்பிரானையுமகிலநாயகியையுமிறைஞ்சிக்
கும்பமாமுலைத்தறுகண்யாமளைவிடைகொண்டு
செம்பொனாலயப்புறத்துவந்தடைந்தனள்செறிந்த
வும்பராங்கதுகண்டனர்மனப்பயமொழிந்தார்.
(54)
465தேறினார்மனமெம்பிரான்றிருவருட்செயலைக்
கூறினார்மகிழ்ந்தொருவர்மேலொருவர்தாங்குப்புற்
றேறினார்கரங்கொட்டினார்பாடினாரிருகாண்
மாறினார்சுழன்றாடினாரரன்புடைவந்தார்.
(55)
466அந்தணாவெமதாருயிர்போக்கவன்றதிர்த்து
வந்தகாளத்திற்காளியைவருவித்திங்கவளை
யெந்தமாவியைநிறுவிடப்பணித்தனையின்று
நுந்தமாரருட்பெருமையாரறிபவர்நுவலின்.
(56)
467என்னவீசனதருடுதித்திறைஞ்சுபுவிடைகொண்
டன்னையாகியயாமளைபுடையின்வந்தடைந்து
மன்னும்வானவரனைவருந்தனித்தனிவணங்கித்
துன்னுமாமலர்மழையவண்முடிமிசைச்சொரிந்தார்.
(57)
468சொரிந்தவிண்ணவர்தங்கள்கம்மியற்கொடுசூல, மி
ருந்தகையுடையாமளைகேற்றதோரிரதம், விரைந்
துநன்குறவாக்குவித்தளித்திதன்மீது, பொருந்திந
ண்ணலற்செகுத்திடப்போதுதியென்னா.
(58)
469புகழ்ந்துநிற்பவவ்விரதத்தின்பொலிவினைநோக்கி
மகிழ்ந்துமற்றதைக்கடவவோர்யோகினிமாதைப்
பகர்ந்திருத்தியெண்டோளியாயிடையதிற்பாய்ந்தா
ணிகழ்ந்தநன்முனிவரர்சயசயவெனநிகழ்த்த.
(59)
470தலைவியாகியயாமளையிவரவத்தடந்தேர்
வலவிபாரிடைத்தூண்டினள்காற்றெனவலிதி
னிலவிமூவிலைப்படைகொடுயோகினிநீத்தஞ்
சுலவிவேலையினெண்மடங்கார்த்தனசூழ்ந்து.
(60)
471நிலத்தினேகினவானகத்தேகினநிமிர்பா
தலத்தினேகினமுகிலிடத்தேகினதடத்த
புலத்தினேகினகடலகத்தேகினபொருப்புக்
குலத்தினேகினகுமரிதன்பெண்படைகுழுமி.
(61)
472துடியதிர்ந்தனபதலைகளதிர்ந்தனதுளைச்சங்
கிடியதிர்ந்தனகாகளமதிர்ந்தனவிரலை
வெடியதிர்ந்தனமுரசதிர்ந்தனபணிவேந்தின்
முடியதிர்ந்தனவதிர்ந்தனதரணியுமுழக்கால்.
(62)
473மிக்கயோகினிப்படைசெலப்பொடிவிசும்பிவர்த
லிக்குமேவியெற்காலொடுந்தொடத்தகாதெனவே
புக்குறார்முடியிடவர்ந்திமையவரெனல்போக்கி
மக்கள்போற்புரிகிற்பனென்றேகுதன்மானும்.
(64)
474கார்மறைத்தனதிசைளைமறைத்தனகதிரின்
றேர்மறைத்தனகுலகிரிமறைத்தனதிரைமுந்
நீர்மறைத்தனவுடுக்கணமறைத்தனநெடுவா
னூர்மறைத்தனமறைத்தனவுலகெலாம்பூழி.
(64)
475தொடுக்குமாலையங்குவிமுலைச்சூலிதாரணியை
யெடுக்குநாகமெய்நெளித்தலமரவதிர்த்தெழுந்து
நடக்கும்யோகினிவெள்ளமோடமரர்நன்னதிமட்
டடுக்குமாமதிற்றாருகபுரத்தயலடைந்தாள்.
(65)
476வேறு.
ஒற்றரன்னதுணர்ந்தனரோடினார்,
கொற்றமன்னன்குருமணிப்பொற்றவி
சுற்றபேரவையுற்றுவணங்குபு
முற்றும்வெஞ்சினமூண்டெழக்கூறுவார்.
(66)
477ஐயநீவிண்ணவர்ப்பணிகோடலாற்
கையுலாம்படைக்காளியெனவொரு
தையல்யோகினித்தானைகளோடமர்
செய்யவிவ்வுழிச்சேர்ந்தளென்றனர்.
(67)
478அந்தவொற்றரறைந்திடுமவ்வுரை
சந்தனப்புயத்தாருகன்சீற்றமா
முந்துமுட்கனன்மூண்டெழக்கூறிய
மந்திரத்தைநிகர்த்ததுவந்தரோ.
(68)
479பன்னுமம்மொழிபாதிசெவிபுகு
முன்னந்தீச்சினமூண்டதவனகந்
துன்னுரும்புகைதுண்டத்தெழுந்தன
வன்னிவெம்பொறிவாட்கண்சிதறின.
(69)
480மட்டில்வெஞ்சினவன்னியறிவினைச்
சுட்டதிவ்வளவிற்றொலைகின்றதோ
கிட்டினோரையுங்கேளையுந்தன்னையு
மட்டிடுந்துணையும்மலியாததே.
(70)
481இதழதுக்கியெயிறுகறித்தன
னுதன்மிசைச்செலநூக்குபுருவியாய்
மதரரிக்கண்மலரவிழித்தனன்
முதிர்சினத்தினன்மீசைமுறுக்கினான்.
(71)
482பொன்றில்கற்பகப்புட்களெழக்கர
மொன்றோடொன்றுறத்தாக்கியுருமுவீழ்
கின்றதென்னநகைத்தனன்கேட்டசொன்
னன்றுநன்றெனச்சீறிநவிலுவான்.
(72)
483அடியொன்றாலுலகியாவுமளந்தமா, 
நெடியன்றானுமென்னேவலினின்றிடும், 
படியன்றாற்றுமென்பாலமர்க்கென்றுபெண், 
கொடியொன்றெய்திலென்கொற்றநன்றாகுமால்.
(73)
484இந்திராதிகளியாரையும்வென்றிடு
மந்தமேவருமாற்றலுண்டென்னிடை
வந்துளாளொருமாதமர்க்கென்னுமிந்
நிந்தைதானுயிர்நீங்கினுநீங்குமோ.
(74)
485புவனம்யாவினும்போர்த்தொழில்வந்துசெய்
பவரிலாமையிற்றோட்பயனின்றியே
கவலுநெஞ்சினன்காரிகையோடமர்
நவிலுலோர்பழிநண்ணினனாவனால்.
(75)
486என்னைவெல்லவிங்கேந்திழையெய்தலான்
மின்னைவெல்லவுரகமுமேவுமான்
மன்னைவெல்லமலையும்வரும்புலி
தன்னைவெல்லவுழைகளுஞ்சாருமால்.
(76)
487கண்ணன்வேதன்கடவுளரிந்திர
னண்ணன்மாமுனிவோர்களபயமோர்
பெண்ணின்பாற்புகும்பெற்றிமையாலவர்
நண்ணுமாண்மைநனிசிறந்திட்டதால்.
(77)
488வேறு.
இந்திரற்பிடித்தெடுத்தெற்றிவீழ்ப்பனோ
வந்தகற்பதைத்திடவடித்துக்கொல்வனோ
சந்திரற்கதிரொடுமெடுத்துத்தங்குபூம்
பந்தெனப்புடைப்பனோபடியிற்பாணியால்.
(78)
489கனலியைவிழுங்கியேழ்கடலுமுண்பனோ
சினமறவமரரைப்பதத்திற்றேய்ப்பனோ
முனிவரர்குலமெலாமுடிப்பனோவென
வினையனபலபகர்ந்தெரியிற்சீறினான்.
(79)
490சீறியதாருகத்தீயன்யாமளை
வீறியவெனைத்தொழமேவினாள்கொலோ
மாறமர்புரிந்திடவந்துளாள்கொலோ
கூறுதிரொற்றினீர்குறிப்பென்னென்றனன்.
(80)
491என்றலுமொற்றர்களிறைஞ்சியையகேள்
வன்றிறல்யாமளைமறலிதன்னையும்
வென்றிகொள்படையொடும்பொருதல்வேண்டியே
யொன்றினளையமின்றுண்மையுண்மையே.
(81)
492மாதெனவுளங்கொளேலவளைமன்னநீ
யோதருமசுரருஞ்சுரருமுட்கமுன்
மோதுறுதிரைக்கடன்முகட்டெழுந்தவப்
பாதகநஞ்சமேபடிவங்கொண்டதால்.
(82)
493உம்மெனவவளுரப்பொலிகொல்கின்றதீ
வெம்மைகொணமனையும்வீட்டுமாயுதங்
கைம்மலைபரித்தவக்கண்ணற்கோர்தலைச்
சும்மைகொள்சுமையவளெடுத்தசூலமே.
(83)
494வேறு.
இனையனவொற்றர்கூறுமெல்லையிற்கடைநாட்பொங்கித், 
கனைகடலுடைந்ததென்னக்காளிதன்றானையார்க்கு,
நனியொலிசெவிப்புலத்துநடந்ததுதாருகன்றன், 
சினவெரிக்கிழுதுமன்றிச்சமிதையுஞ்சொரிந்ததேபோல்.
(84)
495ஆயதுகாலைதன்னிலழவினெண்மடங்குசீறிச்,
சேயிழைமகளிர்ப்பற்றிச்சிறைபுரிந்திடுவன்றூதீர்,
போயெனதனிகமுற்றும் பொருக்கெனத் தருதிரென்ன,
வேயினனவருநன்றென்றிறைஞ்சுபு விரைந்துசென்றார்.
(85)
496சென்றபினவுணர்செம்மல்செருத்தொழிற்கோலங்கொள்வான், 
கன்றியங்கெழுந்துட்போகிக்கதிரிளம்பரிதிநீலக், 
குன்றின்வந்தெழுந்ததென்னக்குருமணிமகுடமொன்று, 
தன்றலைகவித்தான்யாருஞ்சயசயென்றெடுத்துவாழ்த்த.
(86)
497கல்லெனமிழற்றும்வீரக்கழலடித்தலத்திலார்த்தான், 
மல்லலங்கச்சுவீக்கிமருங்கினிற்சுரிகைசேர்த்தான், 
புல்லுறுமங்கிமேனிப்புறந்தெரியாதுபோர்த்தான், 
வில்லுமிழ்சரம்பெய்தூணிவெரினிடைத்தூக்கினானால்.
(87)
498அங்கையிற்கோதைசேர்த்தானணிவிரற்புட்டிலிட்டான், 
கொங்கலர்தும்பைமாலைகுருமணிமவுலிசூழ்ந்தான்,
புங்கவப்படையனந்தம்பூசனைபுரிந்தெடுத்தான், 
செங்கையிற்றொழுதுமேருச்சிலைநிகர்சிலையுங்கொண்டான்.
(88)
499இம்முறையமரின்கோலமெய்தியொள்ளிலைவேன்மன்னன், 
கொம்மெனத்தனதுகோயிற்புறத்தினிற்குறுகுமுன்னந், 
தெம்முனைமுருக்குஞ்சேனைதரமுனஞ்சென்றதூதர், 
தம்மனந்தனில்விரைந்துதலைத்தலைபரவிச்சென்றார்.
(89)
500சென்றவரொட்டகத்திற்செழுமுரசெறிந்துநுங்கட், 
கின்றொருபெரும்போர்வந்துகிடைத்ததிங்கெழுகசேனை, 
யென்றலுமவுணர்வேழமிரதமம்புரவியென்னத், 
துன்றுறுமனிகவெள்ளந்தொகையிலவெழுந்தமாதோ.
(90)
501போரெனச்செந்நெற்சூட்டுப்பெயரினைப்புகலுற்றாலு, 
மேருறுதடந்தோள்வீங்கியெங்ஙனென்றெழுந்துதுள்ளும், 
வீரர்களவுணர் தர்வெஞ்சமர்க்கெழுமினென்ன, 
வாருறுபணைமுழக்கமகிழ்ச்சிகொள்வதையென்சொல்வாம்.
(91)
502வீங்கினர்புயங்கணெஞ்சம்விம்மினரமரிற்றுன்ப, 
நீங்கினரெழுவும்வாளுநேமியுமழுவும்வில்லுந்,
தாங்கினர்பகைஞரெங்ஙன் சார்ந்தனர்காட்டுமென்ன, 
வோங்குறுமண்டகூடமுடைந்தெனவார்த்துச்சூழ்ந்தார்.
(92)
503இந்திரன்வயிரந்தன்னாற்சிறகர்முன்னீரப்பட்ட, 
வந்தமில்கிரிகளெல்லாமனையவன்பகைஞனான,
நந்துறுமவுணன்றன்பா னட்புறநடந்தவென்னச்,
சுந்தரத்திகிரிப்பொற்றேர் திசைதொறுஞ்சூழ்ந்தவம்மா.
(93)
504சோர்ந்துறுகற்பின்மாதர்துணிவுறுமுள்ளம்வேறாய்ச், 
சேர்ந்திடுகொழுநரேவற்றிருந்துறச்செய்யுமாபோ, 
லூர்ந்திடுபாகர்தம்பாலுளத்திடைமுனிவுகொண்டு, 
கூர்ந்தவர்குறித்தல்செய்யுங்கொடுமதமாக்கள்சூழ்ந்த.
(94)
505நிலத்திடைப்பாயுஞ்சென்றுநெடுவிசும்பகட்டிற்பாயும், 
பிலத்திடைப்பாயும்பாழிப்பெருங்கடன்முகட்டிற்பாயு, 
முலத்திடைப்பாயுஞானவொருநெறியோங்குறாமற், 
புலத்திடைப்பாயும்புல்லர்மனமெனப்புரவியீட்டம்.
(95)
506ஈண்டியவனிகநான்குமெழுந்தனவவுணர்கோமான், 
காண்டலுமுவகைபூத்துக்கவனவாம்புரவிகோடி, 
பூண்டுறுமிரதமொன்றிற்பொருக்கெனவாவிப்புக்குத்,
தூண்டுறுவலவற்பாராவினையனசொல்வதானான்.
(96)
507பாகனீநொடிப்பின்மாதின்படையெதிர்நமதுபொற்றே, 
ரேகுறவிடுத்தியென்னவிறைஞ்சிநின்றையவென்னா, 
மாகவாம்பரிகடம்மைமத்திகைத்தொழிலாலுந்திச்,
சேகுலாமுருளைத்திண்டேர்ச்செலுத்தினன்விரைந்துசெல்ல.
(97)
508அடைப்பைகோடிகங்களாஞ்சியாலவட்டங்களொள்வா, 
ளெடுப்பவர்பலருஞ்சூழவிழிக்குறிகாட்டவந்து, 
படைப்புறமொய்க்குமீக்களகற்றுறும்பரிசுபோலப், 
புடைப்பரிசனங்கணின்றுபொலியும்வெண்கவரிவீச.
(98)
509தாருகமன்னனேகுந்தன்மைகண்டனிகவெள்ளம், 
வாரிதியேழுமுட்கவல்லிதினார்த்தெழுந்து, 
சீருறுமனந்தனாமப்பணியிறைசென்னிமாற்றப்,
பாரதம்போழ்பட்டேங்கப்படர்ந்தன திசைகண்முற்றும்.
(99)
510படிமகளசுரநீசப்பரிசனஞ்செய்தபாவ, 
முடிவுறக்கடவுட்கங்கைமூழ்குவான் படர்தலென்னக்,
கொடியவெம்படைகளார்த்துக் கொம்மெனநடக்குமேல்வைப், 
பொடிவிசும்படங்கநுங்கிமீமிசைப்போயிற்றம்மா.
(100)
511விண்ணெழும்பூழிமாலைவெண்குடையடைந்தப்பாற்போய்க், 
கண்ணகன்கதிரின்மேனிக்கவினழியாதவண்ண,
நண்ணுபுதடுத்தவாழிநஞ்சுதானருந்திமுக்கட், 
பண்ணவனமரர்க்காத்தபேரருட்பான்மையேபோல்.
(101)
512நீங்கியநாணுப்பெற்றுநிறையழிகணிகைமாதர்,
தாங்களோருழியிற்கூடித்தத்தமின்மலைதலேபோற்,
பூங்கழன்மிழற்றச்செல்லும்பொருநர்கைப்பற்றவிண்ணி,
னோங்கியேகொடிகளொன்றோடொன்றுதாக்குற்றவன்றே.
(102)
513தழங்கினமுரசமார்த்ததண்ணுமைகலித்தமொந்தை,
முழங்கினபடகமெல்லாமொய்ம்பினினியவர்தாக்குஞ், 
செழுங்கரவிசைகட்கேற்பச்சிலம்பினபுவனிமாந்த,
ரழுங்கிரலோசையேற்றுமடுக்கியன்றெழுதலேபோல்.
(103)
514இவ்வகையனிகமென்னுமிருங்கடல்விரைந்துசூழத், 
தெவ்வடுகுவவுத்திண்டோட்டிருகுளத்தவுணர்கோமான்,
கொவ்வையங்கனிவாய்ச்செங்கட்குமரிதன்படைவந்தெய்து,
மவ்வுழியெதிர்சென்றேற்றானமரர்கணடுங்கியேங்க.
(104)
515மண்டுறவுணவெள்ளமலிந்தெதிர்வந்ததன்மை, 
கண்டனர்வடவையேபோர்கனன்றியோகினிகள்சூலந், 
திண்டிறலோடுசெங்கைவிரல்களாற்றிரித்துமிக்க, 
வண்டகோளகைவெடிப்பவார்த்தெதிர்சென்றுபுக்கார்.
(105)
516வேறு.
எழுக்களுமுசலமுமிலைகொள்வேல்களு
மழுக்களும்வளைகளும்வாளும்வாளியுங்
கழுக்களுமலைகளுங்கதையுங்காளிகள்
குழுக்களுமவுணர்மேற்கொதித்துவீசினார்.
(106)
517தோமரமொளிறுவாள்சுரிகைமுத்தலை
நேமிகள்சிலையுமிழ்நெடுஞ்சிலீமுக
நாமவேன்முதலின்நஞ்சிற்றீயவர்
தாமும்யோகினிகண்மேற்றருக்கிவீசினார்.
(107)
518கரங்களின்முசலமுங்கதையுநல்கியே
யுரங்கிளர்சொரிமறவொருத்தலுந்தினார்
மருங்குறவொளிறுகைவாள்விதிர்த்துவன்
றுரங்கராசிகடமைத்தூண்டியீண்டினார்.
(108)
519தார்கெழுதடம்புயத்தகுவராழியந்
தேர்களைமுடுக்கியெண்டிசையுஞ்சூழ்ந்துகொண் 
டேர்கிளர்கொடுமரமிமைப்பின்வாங்கிவிண்
கார்களின்மும்மைவெங்கணைகள்சிந்தினார்.
(109)
520விழுந்தனதலையுடல்வேறுவேறதா
யழுந்திடவரைகளினாற்றிற்செம்புன
லெழுந்தனவிருதிறத்தினுமெண்ணில்லவ
ருழுந்துருள்பொழுதினிலுலந்துபோயினார்.
(110)
521கண்டனரவுணர்தங்களிப்புமாற்றலு
மொண்டழடழலெனவுளமுருத்துப்பொங்கினா
ரண்டமுமிடிபடவதிர்த்துவல்லையின்
மண்டியோகினிகடாமலைதன்மேயினார்.
(111)
522பரியொடுபரிகளும்பனைக்கைமும்மதக்
கரியொடுகரிகளுங்கதிருலாமணி
யிரதமொடிரதமுமெடுத்துவீசினார்
சுரருளமகிழ்வொடுதுணங்கையாடவே.
(112)
523சிறந்திடுநெடுமணித்திகிரித்தேர்களை
யுறைந்தவரொடுமெடுத்தும்பர்வீசினார்
மறந்தருபெருவலிமாருதம்பறித்
தெறிந்திடுமேருவின்முடிகளென்னவே.
(113)
524கொய்யுளைமாவும்வெண்கோட்டுவேழமு
மொய்யெனவேயெடுத்துகைக்கின்றோருடன்
மையலில்சூரரமகளிர்வீசினார்
வெய்யவன்றேரொடுவிலங்கவிண்ணின்மேல்.
(114)
525அருகுறுமவுணரையடர்ந்துபற்றியே
கருகுறுமிடற்றினைக்கடித்துக்கொக்கிடைத்
திருகுறுகனியெனச்சுவைத்துச்செம்புனல்
பருகினர்முனிவொடுபசிசற்றாற்றினார்.
(115)
526பிடித்தனர்குருதிநீர்பிலிற்றக்கைகளா
லடித்தனரவுணர்தம்மாக்கையென்பெலா
மொடித்தனர்நகநிரையுதிரத்தண்டினா
லிடித்தனருயிரைவிண்ணேற்றினாரரோ.
(116)
527வேறு.
வெருட்டினருதைத்தனர்மிதித்தனர்துகைத்தார், 
மருட்டினரிடித்தனர்வளைத்தனர்செறுத்தார்,
புரட்டினரெடுத்தனர்புடைத்தனர்கறுத்தா, 
ருருட்டினர்தயித்தியருயிர்க்கிடரிழைத்தார்.
(117)
528அடுத்தவசுரக்குழுவெடுத்ததிருறுங்கா, 
ரிடத்தினுநகத்தினுநிலத்தினுமெறிந்தார்,
நொடித்திடுவரைப்பினுணொறுக்கினரனந்தம், 
படைத்தலைவரைப்பதைபதைத்திடவறைந்தே.
(118)
529இத்திறமியோகினிகளெங்கணுநெருங்கிக், 
கொத்தசுரவெள்ளமயுதங்கடிதுகொன்றா, 
ரத்திறமனைத்துமொரடற்புயவமைச்சன்,
னெய்த்தழலெனக்கனலுநெஞ்சமொடுகண்டான்.
(119)
530கண்டவனிலங்கிரதமங்கெதிர்கடாவி, 
விண்டுமகமேருவும்வெடித்திடவதிர்த்து, 
வண்டுபொழிகின்றதனிவார்சிலைவளைத்துக், 
கொண்டொருகணத்தினிலடைந்தடல்குறித்தான்.
(120)
531குறித்தவனதிர்ப்பொடுபெய்கொண்டல்கணிகர்ப்பப், 
பிறைத்தலைநெடுஞ்சரமதிர்ப்பினொடுபெய்து,
மறைத்தனனிருந்திசைகள்வஞ்சனிகள்சென்னி,
யறுத்தனனுருட்டினனலக்கணுறவிண்ணோர்.
(121)
532கரத்தினையறுத்தனகழற்றுணையருத்த, 
புரத்தினையறுத்தனபுயத்தினையறுத்த,
சிரத்தினையறுத்தன செருக்கினையறுத்த,
வரத்தினையறுத்தனவமைச்சன்விடுவாளி.
(122)
533வேறு.
மண்டுமாரழர்கடவுளைவந்தலைக்கின்ற,
சண்டமாருதமெனப்புகுந்தமைச்சர்கடலைவன்,
வண்டுமாமழைபொழிந்தியோகினிகலைமலையக்,
கண்டுதானையந்தலைவியுங்கொருத்தியுட்கனன்றாள்.
(123)
534அந்தயோகினியசனியேறுக்கிட்வதிர்த்தே,
யிந்தநீசனதுயிர்குடித்திடுவனென்றிமைப்பின்,
வந்துகூடியக்கடுந்திறலமைச்சனைவானத், 
துந்துமாழியந்தேரொடுமுடனெடுத்தெறிந்தாள்.
(124)
535வீரயோகினியவனதுவீரக்குமழ்ந்து,
யேருலாவுறுதுறக்கமேலேவினளென்னத்,
தேரொடேயெடுத்தெறிந்திடத்தினகரன்றிருத்தே,
ரூரும்வானெறிகடந்துபோயொல்லையின்மீண்டான்.
(125)
536மீண்டுவீழ்பவன்மேலொருபெருங்கதைவிரைந்து, 
தூண்டினாளதிர்த்தவனதுவுணர்ந்துதுண்ணெனவோர், 
நீண்டவாளெடுத்ததிர்த்திரதத்தினுநீங்கித், 
தாண்டிவானிடைத்துணித்துவண்டரைதனிற்குதித்தான்.
(126)
537இரதம்வீழ்ந்துநுண்டுகளதாயிற்றதவ்வேலை,
நிருதன்வான்கதைதுணித்துமண்குதித்தவணிற்பக், 
குருதிகால்விழிச்சூர்மகள்கண்டுளங்கொதித்துப், 
பரிதிபோலொளிர்கின்றவெம்பரிதியொன்றுய்த்தாள்.
(127)
538உய்த்தவாழியம்மாயவன்னேமிபோலுருத்து,
மெத்துதீயுமிழ்ந்துறுசெயல்கண்டுவில்வளைத்துப்,
பத்துநூறெனும்பகழிகடுரந்ததுதுணித்துத், 
தத்துவார்திரைக்கடலெனவார்த்தனன்றருக்கால்.
(128)
539திகிரிமாய்வுறக்கனன்றன*டிகிரியொன்றொழியிற்
பகருமாதியப்பெயர்த்தினையொல்லையிற்பறித்து
நிகரில்வீரன்மேலெறிந்தனளஃதவனீக்கா
னகலவாகுவிலேற்றனனார்த்தெதிர்புகுந்து. 
---------------
*திகிரி என்னும் மூன்றெழுத்துள் ஆதியாகிய ஒரெழுத்தொழியில் 
பகரப்படும்பெயர்கிரிஅப்பெயரையுடையதுமலை.
(129)
540அந்தவெற்பவனடற்புயந்தாக்கிமீண்டதிர்ந்து,
வந்துபட்டவண்முலைத்தடத்திற்றதுவறிதே, 
முந்துமற்றவர்புயமுலைக்குடைந்திடுமுனிவா, 
லுந்தவுற்றவையொடும்பொருதிறந்தவாறொப்ப.
(130)
541வெய்யவொண்கிரியிற்றலும்விரைந்துவில்வணக்கி,
யையிரண்டுவெம்பகழிகளவனுதலழுத்திக்,
கையில்வன்கதையொன் றெடுத்திமைப்பினிற்கலந்து,
+ மொய்யிலங்கவன் முடிமிசைமோதினண் முடிந்தான். 
---------------
+ மொய் - பொருகளம்
(131)
542முன்னர்மெய்யொடும்விசும்பிடையேற்றினாண்முனிந்து, 
பின்னர்மந்திரக்கிழமையோன்றனையுடல்பிரித்து,
மன்னுமும்பரின்மீண்டிடாதேற்றிடமகிழ்ந்து,
துன்னுபுங்கவர்குரவையாட்டயர்ந்தனர்துள்ளி.
(132)
543ஆனகாலையினமைச்சனங்கிறந்தமையறிந்து,
தானமாநிகரவுணர்கள்சீறியச்சண்டி,
சேனைநாயகிமீதுபல்படைக்கலஞ்சிதறி,
மீனவேலைகண்முழக்கமுமழுங்கமிக்கார்த்தார்.
(133)
544அன்னதன்மைகண்டியோகினிகடிதினோரடல்வாட், 
டன்னையங்கைகொண்டப்படையனைத்தையுந்தடிந்து,
*பன்னலின்குவைபாற்றிடுஞ்சூறைமாருதம்போன்,
மன்னுவெந்தொழிலவுணருட்புகுந்தனண்மலைந்தாள். 
----------
*பன்னல்-பருத்திப்பஞ்சு.
(134)
545தாடுணித்தனடலைகளைத்துணித்தனள்சயங்கூர், 
தோடுணித்தனள்கரங்களைத்துணித்தனள்சுடரும், 
வாடுணித்தனள்கொடுமரந்துணித்தனள்வயஞ்சொல், 
சூடுணித்தனலிளிமைப்பினிற்கறங்கெனச்சுழன்று.
(135)
546சிலைகளற்றனவுடம்பிடியற்றனசெழுமூ
விலைகளற்றனநெடுங்கரமற்றனவெழிற்றோண்
மலைகளற்றனதுணைப்பதமளற்றனவயவர்
தலைகளற்றனதகுவியர்தாலியுமற்றார்.
(136)
547குன்றமெண்ணிலபோலவேகளேபரங்குவிந்த,
துன்றுமோங்கலிற்றொடங்கியோடாறெனச்சோரி,
யொன்றிவீழ்பிணக்குவாலினுநின்றிழிந்தொலித்துச்,
சென்றுவேலைபுக்கனகருங்கடற்பெயர்தீர.
(137)
548படர்ந்தகாகமுமெருவையும்வன்சிறைப்பருந்து,
மடைந்தஞாளியுமிகலனுமளைக்குறுநரியுங், 
குடைந்துமூளையுநிணங்களுந் தின்றுபேய்க்கூத்தாய்க்,
கிடந்ததெங்குமவ்விறலியோகினிபொருங்களமே.
(138)
549பிறங்கல்போலுயர்பிணக்குவையுண்டவெம்பேயின், 
றிறங்களோர்பெரும்பேயரசென்றுசெங்களத்து, 
நிறங்கொண்மாமுடிகவித்திடுங்கவிகைகணிழற்றுங்,
கறங்குபம்பையுமியம்புறுங்கவரிகளிரட்டும்.
(139)
550சோரிவாய்மடுத்துண்டுமென்னிணங்களைச்சுவைத்துப், 
பேரியாதியகளத்துளவதிர்த்துவெம்பேய்கண்,
மூரிவேலுடைக்காளியெம்மிடிகளைமுடித்தாள், 
போரின்மேவியென்றவடனைப்புகழ்ந்துநின்றாடும்.
(140)
551நீங்குபேரர்வையம்பணையினைநிறுவிவேனிருத,
ரோங்குமூரல்களரிசியிற்பெய்துநீளுலக்கை,யாங்கு
வேழவெண்மருப்புமொண்முசலமுமாகத், தாங்கி
மாவெனவிடித்தனதருக்குபெண்பேய்கள்.
(141)
552மிக்கமென்றசையிருந்திடவெற்றெலும்பதனைத்,
தக்கதென்றுபுன்ஞமலிகள்கறித்தனதளர்ந்து, 
துக்கமொன்றுமிறம்மனைதுறந்துபோய்ப்பிற்ரில், 
புக்குவெந்துயர்க்கடற்படுமிழுதைகள்போல.
(142)
553இன்னதன்மையதாயசெங்களத்திடையெடுத்த,
மின்னல்வாளினாலியோகினியவுணரைவீசிச், 
சின்னபின்னமதாகவேதுணித்திடச்சிலர்தாம், 
வென்னளித்தனருயிரினைக்காப்பதுவிழைந்தார்.
(143)
554அதனைத்தாருகமன்னவனவ்விடைக்கண்டான்,
கதுவிப்புக்குலைக்கடுங்கனலாமெனக்கதமுற், 
றிதழைக்கவ்விவன்பற்கறித்தெனதிருஞ்சேனை, 
சிதையக்கொல்பவர்மாதரோநன்றெனச்சிரித்தான்.
(144)
555சிரித்ததீயவன்யோகினித்திரடனைச்செழுந்தீப்,
பருத்திவான்குவைப் புக்கெனப்படுப்பனென்றெண்ணிக்,
கரத்திலோர்பெருங்கதைகொடுகலினமான்றேர்விட்,
டுருத்துமாநிலவரைப்பினிலொய்யெனப்பாய்ந்தான்.
(145)
556பாய்ந்தகாலையிற்பெரும்புவிவெடித்ததுபணிக,
ளோய்ந்தமாதிரக்கடகளிறோடினவெருண்டு, 
சாய்ந்தமேருமால்வரைமுதலாயினசயில,
மேய்ந்தவானவரென்கொலோமுடிவதென்றினைந்தார்.
(146)
557தேரினின்றுகுப்புற்றவன்செயறனைத்தெரிந்து,
போரில்வென்றிகொள்யோகினிகாற்றெனப்புகுந்து,
தாரின்மல்கியவசுரர்கோன்றடம்புயமீது,
மூரிநல்வசியோச்சினளுருமெனமுழக்கி.
(147)
558தரியலார்புகழ்விறலினோன்றடம்புயந்தாக்கு, 
மரியவாள்சிறிதேனுமுற்றற்றிடாத்திலே, 
பெரியரோ டிகலறிவறுபேதையர்போல,
முரியவாங்கதுகண்டனன்றாருகமுதல்வன்.
(148)
559கண்டதீயவனவளுரத்தெடுத்ததோர்கரத்துத்,
தண்டினாற்புடைத்தானலன்றனதிடக்கரத்தா,
லண்டகூடமேயுடைந்ததென்றயிர்த்திடவடித்தான்,
விண்டுமார்பகங்குருதிவாய்சொரிந்திடவீழ்ந்தாள்.
(149)
560தலைவிவீழ்தலும்யோகினித்தானைகளனைத்துஞ்,
சுலவிவேன்மழுத்தண்டுவாள்சூலமாதிகளாம், 
பலவுமோவறத்தாருகப்பதகன்மேற்றூர்த்தார், 
நிலவுமாரழன்மீதெதுரும்புகர்ப்ப.
(150)
561வேறு.
ஒடிந்தனசிற்சிலவடைந்தசிற்சில
பொடிந்தனசிற்சிலபோழ்ந்தசிற்சில 
மடிந்தனசிற்சிலமறிந்துவந்துமண்
படிந்தனசிற்சிலபடைக்கலங்களே.
(151)
562வீடினபடைகளிவ்விதத்திலாயிடைக்
கூடியவவுணர்கோன்கொதித்துமாதரு
ளோடினரொழியவிங்குற்றுளோர்தமைச்
சாடுவலெனவெதிர்தலைப்பட்டானரோ.
(152)
563அடிகளுங்கரங்களுமறுவைசூழ்தரு
*கடிகளும்புயங்களுங்காளிமாதர்தம்
முடிகளுஞ்சிதறிடமோதினான்கருங்
கொடிகளுங்களிப்புறக்கொடியன்றண்டினால். 
----------------
*கடி-நிதம்பம்
(153)
564ஆயிரநீலிகளடியொன்றாலகன்
மாயிருஞாலமேன்மறிந்துவீழ்ந்திடப்
போயருங்கதையினாற்புடைத்துவீட்டினான்
றீயுருமேறெனத்தெழிக்குமார்ப்பினான்.
(154)
565சிலவரைக்கதையினாற்சிரங்கள்போக்கினான், 
சிலவரைக்கரத்தினாற்செருக்குநீக்கினான், 
சிலவரைப்புயத்தினாற்றிகைப்பதாக்கினான், 
சிலவரைப்பதத்தினாற்சினத்துத்தாக்கினான்.
(155)
566உதைத்தனன்சிலவரையுதிரச்சேற்றிடைப்,
புதைத்தனன்சிலவரைப்பொறிகலங்கிடச், 
சிதைத்தனன்சிலவரைத்திருகிச்சென்னிகள், 
வதைத்தனன்சிலவரைமடங்கல்போன்றுளான்.
(156)
567பற்றினன்சிலவரைபடுக்கும்வானிடைச்
சுற்றினன்சிலவரைத்தொலைக்குங்கால்களாற்
றெற்றினன்சிலவரைச்செறுக்குமார்பிடைக்
குற்றினன்சிலவரைக்குமைக்குந்தாருகன்.
(157)
568பாரினில்வரையினிற்பாதலத்தினிற்
காரினிலுவரியிற்கடத்தின்மாலய
னூரினின்மகபதியுழியிலாதபன்
றேரினிலுலகினிற்சிலரைவீசினான்.
(158)
569முரிந்தனவென்புகண்முரிந்தபன்னிரை
முரிந்தனபாணிகண்முரிந்தவான்றொடை
முரிந்தனதாளினைமுரிந்ததோட்டுணை
முரிந்தனகந்தரமுரிந்தநாசியே.
(159)
570ஓடினகுருதியாறெங்கும்வெற்பென
நீடினகளேபரநிறைந்தஞாளிகள்
பாடினகழுதுகள்பறந்தலைக்கணின்
றாடினகவந்தமோரயுதமென்பவே.
(160)
571மொழிந்திடுபுகழினோன்முருக்கவெல்வகை
யொழிந்திடும்யோகினிமகளிரோடினார்
வழிந்திடுபுனல்விழிவதனத்தெற்றியே
யழிந்திடுமுணர்வொடுமமரர்தேம்பினார்.
(161)
572கண்டனன்யோகினிக்கணங்கள்சிந்திய
தொண்டிறலவுணர்கோனுருள்பொற்றேரின்மேற்
றண்டொடுமொய்யெனத்தாவினான்சின
மண்டுறுபெருவலிமடங்கலென்னவே.
(162)
573தானவப்படையெலாந்தருக்கிச்சிந்துபு
போனவப்படைகளைத்தொடர்ந்துபோக்கியே
மானவப்படைபுலான்மழுக்கள்வாண்முத
லானவப்படையெலாமார்த்துவீசினார்.
(163)
574எஞ்சலிறன்படையிரிதல்காளிகண்
டஞ்சலிரஞ்சலிரவுணரியாரையும்
புஞ்சமென்சிறுபுழுப்போலவிவ்விடைச்
செஞ்சிலம்படியினாற்றேய்ப்பனென்றனள்.
(164)
575என்றவள்வலவியைநோக்கியிம்மெனத்
துன்றுறுமவுணர்தஞ்சூழன்முன்னரே
சென்றுறநமதுதேர்ச்செலுத்துவாயென்றா
ணன்றெனவவடொழாநடத்தினாளரோ.
(165)
576கடங்கவிழ்சுவுணெடுங்களிறுவவ்வுறு
மடங்கலின்மிசைவருஞ்சிம்புண்மானவே
விடங்கதுவுறுமொழிவிமலைதேரொடு
மடங்கலரெதிர்புகுந்தடுதன்மேயினாள்.
(166)
577முதிர்ந்திடுசினமொடுமூரிவில்லெடுத், 
தெதிர்ந்திடுமவுணர்முன்பெய்திமேதினி, 
யதிர்ந்திடமேருவுமலையவானமீ, 
னுதிர்ந்திடவுகிரினாணொலிக்கொண்டாளரோ.
(167)
578வெருண்டனர்சிற்சிலர்வீழ்ந்துமண்ணின்மேற்
புரண்டனர் சிற்சிலர்செவிகள்பொத்தியே
மருண்டனர்சிற்சிலர்மணிப்பொற்றேரொடு
முருண்டனர்சிற்சிலருலவுந்தானவர்.
(168)
579நாணொலிசெவிப்புகநடுங்குந்தானவர்
நாணுமிழ்சுடுசரநணுகுமுன்னரே
நாணுளமுழுவதுநழுவினோடுவா
னாணொருசிறிதுறாநலியநின்றனர்.
(169)
580நின்றலுமனலுமிழ்நெடியவாளிகள்
குன்றெனும்வரிசிலைகுனித்துச்செண்டுபோற்
பின்றலிலவுணர்மெய்விடாதுபெய்தனள்
சென்றுறுகுருதியாறுததிச்செல்லவே.
(170)
581ஆழிமான்றேரினுமயங்கண்மீதினுஞ்
சூழிமால்கரியினுஞ்சுடுசரங்கடா
மூழிமாமுகில்களுமுடையச்சிந்தியே
பாழிமாநிலமிசைப்படுத்தினாளரோ.
(171)
582உரங்களையறுத்தனவுடலறுத்தன
வரங்களையறுத்தனவயினறுத்தன
சிரங்களையறுத்தனசிலையறுத்தன
கரங்களையறுத்தனகாளிவாளியே.
(172)
583அறுத்தனகரிகளையறுத்ததேர்களை
யறுத்தனபரிகளையவுணர்கோன்புக
ழறுத்தனபுரையவேயறுத்தவெண்குடை
யறுத்தனகொடிகளையாசுகங்களே.
(173)
584சுரங்களிலோடினசுறவுமோதுசா
கரங்களிலோடினகடவுளோர்கடம்
புரங்களிலோடினபுழைக்கைதங்குமா
திரங்களிலோடினசிலீமுகங்களே
(174)
585அறைதருகழலொடுமடிகளோர்திசை
கறைகெழுபடையொடுங்கரங்களோர்திசை
சிறையளிமலரொடுஞ்சிரங்ளோர்திசை
பிறைமுகநெடுங்கணைபிடுங்கிவீசுமால்
(175)
586கூற்றுறழ்தனதுகைச்சாபங்கொண்டவர், 
சாற்றிடுபழுதில்வாய்ச்சாபமெண்ணில, 
மாற்றினளென நொடிவரையிற்றாருகன், 
போற்றுறுபடைகளொன் றில்லபோக்கினாள்.
(176)
587வரிசிலையீர்த்தனவாள்களீர்த்தன
வெரிவிழியவுணர்மெய்யீர்த்ததேரொடும்
பரிகளையீர்த்தனபணைகளீர்த்தன
கரிகளையீர்த்தனகறைவெள்ளங்களே.
(177)
588காளிவாளிகள்விடுங்காலைவீரமில்
கோளராமவுணர்கள்குலைந்தநெஞ்சராய்த்
தோளுலாம்படைகளைத்துறந்திங்கன்னைநீ
யாளுவாயெமையெனவறைகின்றார்சிலர்.
(178)
589குடையறக்காம்பினைக்குமரிவன்கதைப், 
படையெனத்தெறுமெனப்படிவிட்டார்சில, 
ரடுகளத்தி றுகுடையதனையீட்டியிக், 
கடைகொளுவுதுமெனக் கைக்கொண்டார்சிலர்.
(179)
590பூங்கதிர்வாளினைப்போக்கிவாம்பரி
நீங்கியதுபிடீஇநிற்கின்றார்சில
ராங்குறுபுரவிவாயடுத்தபுல்லினை
வாங்குபுதமதுவாய்வைக்கின்றார்சிலர்.
(180)
591வாங்கியதனுவினாண்பூட்டும்வாளியுந்
தாங்கியகரமொடுந்தரைப்பட்டார்சில
ரோங்கியவயவரென்றுணரவீக்கிய
வேங்குறுகழலறுத்தெறிகின்றார்சிலர்.
(181)
592அழிந்தவர்தன்மையுமழிவுறாதுயி
ரொழிந்தவரிவ்வகையுயங்குந்தன்மையுங்
கழிந்திடுபுகழினோன்கண்டுநாட்கடை
யெழுந்திடுகனலினுஞ்சீற்றமெய்தினான்.
(182)
593எய்தியவவுணர்கோனிரதமிம்மென
மொய்திகழ்குமரிமுன்முடுகவந்தன
னொய்தெனமடங்கன்முன்னோன்மையோடிகல்
செய்தொருகளிறெதிர்செய்கைபோலவே.
(183)
594வந்தவள்பயங்கரவடிவங்கண்டனன்
சிந்தையின்வியந்திவடெரிவையாயினு
மெந்தமதமரினுக்கேற்றுளாளென
நந்திடுமறிவினானவிறன்மேயினான்.
(184)
595வேறு.
மாதுநீயாரைவென்றிமதகரியினையுமஞ்ச,
மோதுமாண்புலியைவெல்வான்முன்னிமானடைந்ததென்னப், 
போதனாதியரைவென்றவென்னொடுபொரநீவந்த, 
தேதுகாரணமுரைத்தியென்றனனறமிலாதான்.
(185)
596அன்னசொற்குமரிகேளாவசனியேறென்னநக்கு, 
நன்னரிற்பகைவனானகவையுறுமசுரகேண்மோ,
துன்னமக்கடவுளர்க்குத் துயரநீயிழைத்தலாலே,
யென்னைநிற்கொல்வான்முக்க ணெம்பிரானிவண்விடுத்தான்.
(186)
597ஆதலான்மதவேழத்தையட்டுணப்பிணாமடங்கல், 
போதுமாறென்னநின்னைப்புகுந்தொருகணத்தினுங்கி, 
யோதும்வானவர்கடுன்போடுடற்றுமென்பசியுநீங்குங், 
காதலாலிவண்வந்துற்றேன்காளிநானெனவுரைத்தாள்.
(187)
598உரைத்தலுமவுணர்கோமானோருகையோடொருகைதாங்கிச்,
சிரித்தெமைநுகர்வனென்றுதெரிவைநீயுரைத்தமாற்றங், 
கரத்தினில்விசும்புபற்றிக்கவ்வுவனென்பதொக்குந்,
தரித்தமிவ்வளவுமுன்னைத்தையலென்றடாமலென்றான்.
(188)
599என்றலுமிறைவிகேளாவிழிதொழிலவுணவென்னை, 
வென்றியின்மடந்தையென்னவிளம்பினையுலகமெல்லா, 
மொன்றொருகணத்தின்மாற்றியொடுக்குவதெமையாள்வெள்ளிக், 
குன்றிறைசத்தியன்றோகுறித்திலைபோலுமென்றாள்.
(189)
600என்றவளுரைத்தல்கொள்ளானிழுதையாதலினாற்சீறித், 
தன்றனிவரிவில்லொன்றுதாங்கிநாணொலிக் கொண்டார்த்தான்,
மின்றிகழ்முகிலுடைந்துவீழ்ந்தனபணிபுரண்ட, 
குன்றமுநிலனுமண்டகூடமும்வெடித்தவம்மா.
(190)
601தார்மலிவயிரத்தோளான்றனுவினாணெரியக்கண்டு, 
வார்முலையிறைவிதானுமம்பினைவழங்குமுன்னங், 
கார்முகமதிர்ப்பதென்னக்கார்முகமதனைவாங்கிக், 
கூர்முகவம்புவீசநாணொலிக்கொண்டுநின்றாள்
(191)
602அம்மைவெஞ்சிலைநாணோசையவுணனாணொலிவிழுங்கி, 
இம்மெனவெழுந்ததம்மயாமளையவனைநுங்க, 
வெம்மைகொண்டிருந்தாளென்றலவளதுவில்லினார்ப்புக், 
கொம்மையங்குவட்டுத்தோளான்குணவொலிவிழுங்கிடா தோ.
(192)
603பின்னரங்கவுணன்றானோர்பெருங்கணைசிலையிற்பூட்டித், 
தன்னடிவிரன்முன்பிறேர்தாங்குறச்சானுவாங்கி, 
முன்னுரமுறவளைந்துநின்றுமொய்குதைநாண்கையைக், 
கன்னமதளவுமீர்த்துக்காளிமேற்செல்லவெய்தான்
(193)
604விரைந்தடலிறைவிபூட்டிவில்லினோர்பகழிதூண்டிப், 
பொருந்துறுமதனைமாற்றிப்பொருக்கெனப்பின்னுநூறு, 
சரந்தெறவெதிர்விடுத்தாடாருகன்கண்டுமாறாத், 
தெரிந்திடுங்கணைகணூறுசெலுத்தியங்கவையறுத்தான்
(194)
605அறுத்தலுமிறைவிசீறியாயிரஞ்சுடுசரங்க. 
டெறித்தவன்கலினமான்றேர்ச்சிந்தினள்பாகனோடுங், 
கறுத்துமற்றொருதேர்வாவிக் கணைகளோர்பத்துநூறு, 
குறித்திடவந்துவாளிகுமரிமேலுற்றவன்றே
(195)
606வாளிகடாக்கிநொய்தினழிந்திடவலவிநின்ற, 
காளியங்கதனைக்காணூக்கணைகளீரேழுசிந்தி, 
மூளுறு சினத்துவெய்யோன்பற்றுகார்முகந்துணித்தா, 
ளாளியேறனையான்மற்றோர்ரடற்சிலையெடுத்துக்கொண்டான்
(196)
607அச்சிலைகுனித்துவாளியைம்பதுசிதறிச்சூலி, 
கைச்சிலைதுணித்துமுப்பான்கணையெதிர்புகவிடுத்தா, 
னச்சிலைபகழியெல்லாநாந்தகமொன்றானூறி, 
முச்சகம்புகழுமம்மைமூரிவில்லொன்றெடுத்தாள்
(197)
608எடுத்தவெஞ்சிலைகுனித்தங்கீருமீர்ம்பகழிநொய்தின்,
விடுத்தனளவுணன்மார்பின்விசிகமற்றவனுரத்தி.
னடுத்தனவடுத்தலோடுமன்னதுவிலக்கமற்றுந்,
தொடுத்திருசரங்களன்னோன்சுடர்முடிதள்ளியார்த்தாள்
(198)
609பொறையறுந்தவமுமாட்சிப்பொருளறுங்கவியுமான்ற, 
மறையறுமுணர்வுஞ்செய்யமகவரும்வாழ்வுநீதி, 
யிறையறுமுலகுமன்போடியைபறுமறமும்போல, 
முறையறுமவுணர்முடியிழந்தழகொழிந்தான்
(199)
610சேகரங்குமரிதள்ளத்தீயவனாணுட்கொண்டான், 
மாகரங்கெழுந்துதுள்ளிமலர்க்கரமெறிந்துநக்கார், 
சாகரங்கிளர்நஞ்சன்னதாருகன்கொதிதுச்செங்கே
ழாகரங்கடுக்குமற்றோரணிமுடிமுடிகவித்தான்
(200)
611பின்னரவ்வசுரன்மேருப்பிறங்கனேர்சிலைவளைத்துத், 
துன்னுறுசோனைமாரிதோற்றடப்பகழிதூர்த்தா, 
னந்நிலையமரரெல்லாமஞ்சினரிரியல்போனார்,
மன்னிருசுடருமீனு மறைந்தனவிருண்டவெங்கும்.
(201)
612நதித்திரையென்னமேன்மேனஞ்சினுங்கொடியன்சாப, 
நுதித்தலைப்பகழியீட்டமுமிழ்ந்திடநொறில்பரித்தேர்க், 
கதிர்த்தினமணிமறைப்பக்கழியிருள்புகலுங்கண்டம், 
புதித்திரையினர்கடாமற்புதத்தொடுமருட்சிகொண்டார்.
(202)
613பொற்றடமரைகுவிந்தபொலிந்தனகுவளைபுட்க, 
டெற்றுறுகுடம்பைபுக்கசெய்தவர்திகைத்தாரின்றுங்
கற்றையஞ்சடிலத்தெந்தைகண்களையிமயமீன்ற,
பொற்றொடிக்கரத்தெம்மன்னை புதைத்தனள்கொல்லோவென்று.
(203)
614அதுதனையிறைவிகாணாவசனியேறுட்கநக்குக்,
கதுமெனநெற்றிநாட்டக் கனலினாற்பகழிமுற்றுஞ்,
சிதைவுறவடலைசெய்தாள் செழுமறைச்சிரத்தினாடும், 
புதுமதிமிலைந்தவண்ணல்புரம்பொடிபடுத்ததேபோல்.
(204)
615கூர்ங்கணைப்படலைமாயக்குலவு*மூழ்விளங்கிற்றொல்லை, 
யீர்ங்கதிர்புனைந்தவண்ணலருளினாலிரியமூட, 
நீங்கருமறிவிருந்துநிகழ்வுறுந்தன்மைபோல, 
வாங்கதுவிழியிற்கண்டானறமென்பதறிகிலாதான். 
-------------------
* ஊழ் - பழைமை
(205)
616அன்னது கண்ட வெய்ய னாயிரப் பத்து வாளி, 
தன்னிகர் குமரி யெண்டோ டாக்குற விடுத்தான் றாக்கப், 
பன்னுனி விசிக நீறு பட்டன படலு மூழி, 
வன்னியிற் கனன்று கோடி வாளியங் கவன்மேற் றூர்த்தாள்.
(206)
617அத்துணைப் பகழி தூண்டி யவனவை யறுத்து வீழ்த்தா, 
னித்திற மிருவர் தாமு மொருவர்மீ தொருவ ரேவும், 
வைத்தலைப் பகழி மாற்றி மகிழ்ச்சியுந் துயருங் கொண்டு, 
மொய்த்துறு மமரர் நோக்க முதிர்சமர்த் தொழில்பு ரிந்தார்.
(207)
618வானகத் தோடு மேரு வரைமுத லாகி நின்ற, 
மானகத் தோடுந் துங்க மகரவே லைகளி னோடுங்,
கானகத் தோடு மண்ட கடாகத்தி னோடு மானற், 
போனகத் தோடு மன்னோர் பொழிந்திடு சுடுச ரங்கள்.
(208)
619மாதிரத் தேகு நேமி வரையகத் தேகு மான்ற, 
பாதலத் தேகு முற்றும் பாழியங் கடலி னேகு, 
மீதலத் தேகு மண்ட முகட்டினி லேகு மீண்டும், 
பூதலத் தேகு மன்னோர் போர்செயத் திரங்க ளன்றே.
(209)
620இவ்வகை யமர்செய் கின்ற வேலையிவ் வரிவை தன்னை, 
வெவ்விய கடவு ளோர்தம் படைகளால் வெல்வ னென்னத், 
தெவ்வடு குவவுத் தோளான் சிந்தனை செய்து கூர்ந்த, 
பவ்வமன் னவன்ற னாது படையெதிர் செல்ல வுய்த்தான்.
(210)
621பொங்குவா ரிதிக ளாறும் புறப்பெருங் கடலு மொன்றா
யிங்குவந் தெழுந்த தென்ன விருனிலம் விசும்பு மெல்லா
நுங்கிவன் றிரையெ றிந்து நோன்மைகொண் டார்த்து நண்ண
வங்கியின் படைசெ லுத்தி யழித்தன ளதனைச் சூலி
(211)
622மற்றது தெரிந்து தீயன் வன்னிமாப் படைவி டுத்தான்
சுற்றுறு முகிலி ரிந்து சூலழிந் திறப்ப வாழி
வற்றுற வமரர் நைந்து மருண்டிட வெழுந்து பொங்கி
யுற்றிட வதனைக் காளி யொலிப்படை தந்த ழித்தாள்.
(212)
623தீப்படை யழித லோடுஞ் சினமலி யவுணன் வாயு
மாப்படை விடுத்தா னெல்லா வரைகளுஞ் சுழல விண்ணின்
காப்பணை முறிய வீசிக் கலித்தெழு மதனை நாகப்
பூப்படை செலுத்தி மாற்றிப் புணரியு முட்க வார்த்தாள்
(213)
624கொடியவ னதுகண் டுள்ளந் தழலென கொதித்து நாகப்
படையினை விடுத்தா னான்ற பஃறலைப் படம்வி ரித்துக்
கடுவினை வாய்க டோறுங் கான்றது வருத லோடு
மிடலுறு கலுழ வென்றிப் படையினை விடுத்தொ ழித்தாள்.
(214)
625கண்டக னதுமற் றேவக் கலுழவெம் படைதன் பாங்கர்
மண்டுறு சிறகர்க் காற்றா னிறுதிநாண் மருத்து முட்கக்
கொண்டலு மிரிய வோங்கு குன்றுகள் பொடிப்ப வங்கி
யொண்டிற லழிய வாயி னுரகமோ டடைந்த தன்றே
(215)
626அந்தவான் படையி னாற்ற லம்மைகண் டரற்கொப் பாய
நந்திவான் படையெ டுத்து நறுமல ராதி கொண்டு
சிந்தையால் வழிபட் டேத்தித் திகழ்படைக் கின்றைநீ யன்னோ
னுந்துமாண் படையின் வன்மை யொழித்தரு ளெனவி டுத்தாள்
(216)
627வேறு
விடுக்கவது விடையுருக்கொண் டிமிலண்ட முகடுரிஞ்ச வியன்ஞா லத்தை
அடிக்குரமொன் றெற்றுறக்கட் டழறூர்ப்ப வாயினீ ரதனைக் காட்டத்
தொடைக்கிளர்கிண் கிணிக்களத்திற் றடவரவந் தரமருத்துச் சுடுதீ யண்ட
மடுக்குமணிப் புழைநாசி விழிகாட்ட வுலகமெலா மயர்ந்து வீழ
(217)
628வாலடியான் மேருகிரி முதலாய வரைபெயர்ந்து மறிந்து வீழ
மேலடன்மா மருப்பெறிய வுரியதிலா மையினிலங்கி மிசையி ருப்ப
மாலொடுவா னவர்கரங்க ளுச்சிகுவித்தி றைஞ்சிநனி வாழ்த்த வெங்கள்
பாலுடையா னெமையாளும் பதமுடையான் றிருநந்திப் படைபோ யிற்றால்
(218)
629நந்தியடற் படைகண்ட வுடன்கலுழப் படைநடுங்கி நஞ்சு காலுந்
தந்தமணி யரவுதனைக் கண்டதென வழிந்ததுபின் றலைவ னாகு
மெந்தையிறை விடையவுணன் மேற்செல்ல வவனுமதை யெதிர்வி டுத்தான்
வந்தனைசெய் தவைதம்மிற் பொருதுவிடுத் தவரகத்து மறிந்து புக்க
(219)
630இந்திரன்மா மலரயன்மா லெனுமிவர்கள் படைகடமை யெடுத்துப் பின்ன,
ருந்தினனங் கவுணனவை யவருருக்கொண் டதிர்ந்துநனி யுருத்தெ ழுந்து,
வந்திடலு மவர்படைக டானுமெதிர் செலவிடுத்து மாற்றி நின்றாள்,
கொந்தவிழு மலரிதழ்ச்ச டாமகுடத் திறைவிடுத்த குமரி மாதோ.
(220)
631வேறு.
இங்கினி யிவளை யெல்லா வுலகமு மிமைப்பின் மாற்றுஞ், 
சங்கரன் படைவி டுத்துச் சாடுது மென்னத் தீயோ,
னங்கதை விரைந்தெ டுத்தே யருச்சனை மனத்தி யற்றி, 
மங்கைதன் னுயிர்கு டித்து வருதியென் றிறைஞ்சி யுய்த்தான்.
(221)
632ஊழியங் கனலி யோர்சா ருருமொடு முகில்க ளோர்சா, 
ராழியங் கடல்க ளோர்சா ருலகடு மால மோர்சார், 
சூழியங் கரிக ளோர்சார் சுடுகரத் தொகுதி யோர்சார், 
பாழியம் புயத்து வென்றுப் பாரிடக் குழுக்க ளோர்சார்.
(222)
633கடவுளர் படைக ளோர்சார் காரிருட் படலை யோர்சார்,
படவர வினங்க ளோர்சார் பாய்புலி யரிமா னோர்சா, 
ருடலுறு பவன மோர்சா ருடலுருத் திரர்க ளோர்சார், 
மிடலுறு வடுக ரோர்சா ருக்கிர வீர ரோர்சார்.
(223)
634கான்றுவல் விரைந்து முக்கட் கடவுடன் படைமுன் வந்து, 
தோன்றலுங் குமரி கண்டு துணுக்கெனத் தானு மங்ஙன், 
மூன்றெனும் புரமு ருக்கு முதல்வன் வெம்ப டையைப் பூசை,
யான்றதன் மனத்தி னாற்றி யதற்கெதிர் செல்ல வுய்த்தாள்.
(224)
635உய்த்திட வனைய தவ்வா றுருவுகள் பலவு மாகி, 
யத்தலை யவுணன் றூண்டு மடற்படை யுடன்சென் றேற்று,
மெத்தமர் புரிந்த தம்மா வேலைக டணந்த வண்ட,
பித்திகை பிளந்த தம்பொற் பிறங்கலும் வெடித்த வன்றே.
(225)
636இருவர்தம் படையு மிவ்வா றேற்றமர் புரிந்து மீண்டு, 
மருவின வவர்பால் வெய்யன் மனமகிழ்ந் தவடன் மீதி, 
லுரவிய கதையொன் றொல்லை யோச்சின னதனைப் பாந்தட், 
பொருவுறு சரமீ ரைந்து போக்கின டுணித்து வீழ்த்தாள்.
(226)
637பின்னரைம் பதிற்றி ரட்டிப் பிறைமுகக் கணைக டூவி, 
மன்னவன் றடந்தேர்ச் சாய்ப்ப மற்றொரு திகிரித் திண்டேர், 
தன்னிலொண் பணையி னூடு தாவும்வா னரம்போற் பாய்ந்தா,
னன்னது மறித்தும் வீழ்த்தா ளடற்கணை நூறு போக்கி.
(227)
638மற்றது தெரிந்து தீயன் மறுகுறு மனத்த னாகிப்,
பற்றலர் புகழுங் காளி தேரினிற் பாய்ந்தி மைப்பி,
னிற்றது புவிகொ லோங்கு மிமயங்கொ லென்னக் கையா,
லெற்றியங் கவடன் மார்பி னிருநிலத் தனிற்குப் புற்றான்.
(228)
639கண்டன ளதனைக் காளி கடையுகக் கனலிற் சீற்றங்,
கொண்டினி யிவனை யின்னே கொல்வனென் றனந்தற் காண, 
மண்டலம் வெடிப்ப மன்னர் மன்னவ னுடன்குப் புற்று,
விண்டிட வுரத்தெ றிந்தாண் முத்தலை வேலொன் றம்மா.
(229)
640எறிந்திட வயர்ந்து நின்றான் மனச்சின வெரிபோந் தன்ன,
நிறந்தரு குருதி யோங்கி நிலத்திழிந் தோடிற் றீசன்,
மறந்தரு மவுணன் சோரி மண்புகா தேற்ற ருந்தென்,
றறைந்தரு்ண் மொழிய யர்த்தா ளடுத்தவெஞ் சினத்தாற் காளி.
(230)
641மன்னவன் குருதி தோய்ந்த மண்ணினுண் டுகள னைத்து, 
மன்னவன் வடிவ மாய வவுணரா யால கால,
மென்னவெங் கொடிய ராகி யிரும்படைக் கலங்க ளோடுந், 
துன்னுறு முகிலு மஞ்ச வார்த்தனர் தோன்றி னாரால்.
(231)
642தோன்றிய வவுணத் தீயோர் தொகுத்தொரு பதினான் கென்ன, 
வான்றிடு முலக னைத்து நிறைந்தன ரனையோர்க் கண்டு, 
கான்றிடு முயிர்ப்ப டங்கிக் கைப்பொருள் சோர்ந்தி றந்தோர்,
போன்றனர் புலனி ழந்து புலவரென் றுரைக்கப் பட்டோர்.
(232)
643சூலமு மழுவும் வாளுஞ் சுரிகையு மெழுவும் பிண்டி, 
பாலமுஞ் சரமும் வீசித் தாருகன் படிவங் கொண்டோ, 
ராலமு மனலு மன்ன வடற்பெருங் காளி தன்னைத், 
தாலமும் விழுங்கு மாவஞ் சனிப்படை யொடும்வ ளைந்தார்.
(233)
644மிண்டிய வசுரர் தங்க டோற்றமுஞ் சமர்க்கு மிக்கு, 
மண்டுறு செயலுங் கண்டு மாதொரு பாகன் சொல்லுட், 
கொண்டுதன் படைய னைத்துங் கூவியவ் வசுரர் தம்மை,
யுண்டிடு மென்று தாமு மவர்தமை யுண்ப தானாள்.
(234)
645முத்தலை யதனா லன்னோர் மொய்ம்பினிற் குத்தி நெய்த்தோர், 
கைத்தலத் திருந்த பாழிக் கபாலத்தி னேற்ற ருந்தி, 
மைத்தட வரைக ளன்ன வளரியாக் கைகளு முண்டா,
*ளுத்தரந் தனிலு மோங்கு முதரவங் கியினான் மிக்காள். 
-----------------
*உத்தரம்-ஊழித்தீ
(235)
646விரிந்திடு வயிறொண் குண்ட மாயிடை மேவு மங்கி,
யெரிந்திடு முதவ கன்றா னெனவசு ரர்கடஞ் சோரி,
சொரிந்தவ ருடனி ணங்க டூர்த்தொரு வீர யாகம்,
புரிந்தன ளுலக மெல்லாம் புகழ்தருங் குமரி யன்றே.
(236)
647மூர்த்தமொன் றதனி லாண்டு மொய்த்தயோ கினிக ளோடு, 
மார்த்துவந் தெதிர்த்த தீய வவுணரை யெல்லா முண்டாள், 
சீர்த்தியங் குமரி பின்னர்த் தாருகன் றெளிந்து சீறிப், 
பார்த்தனன் றனியாய் நெஞ்சம் பதைத்தவட் புடைப்ப வந்தான்.
(237)
648வந்திட விலைவெஞ் சூல மார்பினின் மீண்டு மோச்சிச், 
சிந்திடு குருதி யங்கைச் செழுங்கபா லத்தேற் றுண்ணா, 
விந்தமண் மகடன் பார மிறக்கின ளென்ன வங்ஙன், 
வெந்தொழிலவுணன்மாளயாக்கையும்விழுங்கினாளால்.
(238)
649மற்றதுகண்டுவிண்ணோர்வலியதாருகனையன்னை,
செற்றனணுங்கியிங்ஙன்றேவரென்றுரைக்குநம்மைப், 
பெற்றனளின்றென்றார்வப்பெருங்கடற்படிந்துநெஞ்ச, 
முற்றவெந்துயரகன்றுபாடினாரோடினாரால்.
(239)
650வேலையூடெழுந்தநஞ்சம்விமலனுண்டளித்தசெய்கை, 
போலநீயம்மாவின்றுபொருவிறாகருகனையுண்டு, 
பாலராமெமையளித்தாயென்றனர்பழிச்சிவானோர், 
சூலிமீதிடைவிடாமற்சொரிந்தனர்பூவின்மாரி.
(240)
651ஆயிடையுளமகிழ்ந்தேயவுணர்கண்மலைப்பமாய்ந்து, 
போயினவனிகமுற்றும்பொருக்கெனவுயிர்பெற்றுய்ய, 
நாயகிகுமரிநின்றுநவின்றனணவின்றகாலை, 
மேயினதுயிலொழிந்துவிழித்தெனவெழுந்துசூழ்ந்தார்.
(241)
652வேறு.
அன்னதுகாலையிலவுணர்சோரியுந்
துன்னியவுடல்களுந்துய்த்ததன்மையான்
மன்னியகுமரிதன்மதிமயங்கியே
தன்னிகரிலையெத்தருகிகனாளரோ.
(242)
653தருக்கியவுளத்தினாலடாங்கிநல்லியாழ்
திருக்கரவிரலினாற்றெறித்துப்பாடியே
முருக்கியபுயங்களுமுடியுந்தாள்களுங்
கரக்குலைகளுஞ்செறிகளத்தினாடினாள்.
(243)
654நடித்திடவவளதுநாடிப்பெண்கடாம்
வெடித்திடநிலமுடுவீழவாவிக
டுடித்திடவிமயமுந்துளங்கக்கைகளை
அடித்தனரதிர்த்தனராடன்மேயினார்.
(244)
655கொட்டுபுகரங்களைக்குலாலநேமிபோல்
வட்டணைவிரலினில்வருகின்றார்சிலர்
கிட்டியவலகைகள்கீதம்பாடியே
நட்டமதிடவுடனடிக்கின்றார்சிலர்.
(245)
656தண்ணுமைதனையடிச்சதிக்கிசைந்தொலி,நண்
ணுறமுழக்குபுநடிக்கின்றார்சில, ரண்ணவந்தலயித்தி
யராக்கைக்குன்றின்மேற்,றுண்ணெனவிவர்ந்தனர்
துவைக்கின்றார்சிலர்.
(246)
657மாகமீதெறியுமம்மனைகள்பற்பல
வாகவீழ்தலையெடுத்தாடுவார்சிலர்
வாகுவால்விலாவுறத்தாக்கிமெய்வளைந்
தோகாயானடநவின்றுழல்வோர்சிலர்.
(247)
658மெலிவுறுமடிகள்வாய்விழிபுரூரமங்
குலிவிகாரப்படக்குனிக்கின்றார்சிலர்
வலியவெண்கவடிகணிரைத்துவைத்தபோ
னலியெயிறிலகுறநகைக்கின்றார்சிலர்.
(248)
659முத்தலைவேலினான்முடைப்பிணங்களைக்
குத்துபுதாங்கியேகுனிக்கின்றார்சிலர்
மத்தகரெனக்குடர்மாலைதோளிடா
வத்திகளெனவதிர்த்தாடுவார்சிலர்.
(249)
660இனையனபலவிதத்தெண்ணில்யோகினி
வனிதையர்குருதிநீர்வாய்மடுத்திடு
நனிவருகளிப்பினான்மத்தநரகமே
யனையவெங்குமரியோடாடினாரரோ.
(250)
661ஆடுறுமரவமுமவர்முழக்கமுங்
கூடுறுமங்கைகள்கொட்டுமோசையு
நீடுறுமுலகெலாநீங்கவந்தெழா
மூடுறுமுகிற்கணமுழக்கைவென்றதே.
(251)
662போழ்ந்தனபுவியெலாம்பொடித்தவெற்பெலாம்
வீழ்ந்தனமுகிலெலாமெலிந்துமூர்ச்சையி
னாழ்ந்தனவுயிரெலாமலைந்தவான்சுடர்
சூழ்ந்தனவுலகெலாந்துயரவேலையே.
(252)
663துப்புறுகுமரிகடொகுதியாடுறச், 
செப்பரும்புகழுடைச்சேடன்பாரினை, 
யப்பரம்பொறுக்கிலாதாயிரங்கமுங், 
கொப்புளங்கொளவுளங்குலைந்துதாங்கினான்.
(253)
664மாதவனயன்மகத்தரசன்வானவர்
மூதறிவுடையமாமுனிவர்யாவரும்
பேதுறவந்திளம்பிறைமுடித்தவெம்
மாதியோடபயமென்றறைதன்மேயினார்.
(254)
665எந்தையேதாருகனிழைத்தவெந்துயர்
வந்தமாகாளியெங்கட்குமாற்றியே
யந்தவான்றுயரினுமதிகமாக்கினாண்
முந்துகான்முட்பறீஇமுளையடித்தல்போல்.
(255)
666தாருகனால்வருந்துயரந்தன்னைநின்
பேரருளாலொருபெண்ணினீக்கினை
யாருறுசெருக்கினாலவள்செய்துன்பமு
நீருறுசடையினாய்நீக்கியாட்கொணீ.
(256)
667நஞ்சிஅனியருந்தியுங்கனலையேந்தியு
மஞ்சிடம்தகரியட்டுமேழையே
முஞ்சிடவருளியவொருவகாளிதன்
விஞ்சியசெருக்கையும்வீட்டியாளுவாய்.
(257)
668என்றிவரனைவருமியம்பிக்கைதொழா, 
நின்றிடவெங்கணுநிறைந்தவெம்பிரான், 
வென்றியங்குமரிதன்மிகுஞ்செருக்கினை, 
யொன்றொரு*சாழலாலொழிக்கவுன்னினான். 
------------------
*சாழல் - ஒர்விளையாட்டு
(258)
669வேறு.
உன்னுநாயகனுலகெலாமீன்றவளோடுந், 
துன்னுவான்கணஞ்சூழ்தரச்சூரரமகளி, 
ரன்னையாடிடம்வடவனமாகவாயிடையின்,
மன்னுபோருட்டன்மையாலிமைப்பினில்வந்தான்.
(259)
670வந்துகாளிமுன்பேருருக்கொண்டுமாமறையு,
மந்தநாரணக்கடவுளுமறிவதற்கரிய, 
கொந்துலாமலர்த்திருவடிசிவந்திடக்குனித்தான்,
றந்தையாகியெவ்வுயிரையுமளித்தருடலைவன்.
(260)
671கோதுக்கரகரமாகியேசெருக்குறுங்குமரி, 
மாதுக்கோர்புறமளித்தவன்செயல்கண்டுவணங்கி, 
யேதுக்காடுகின்றாய்வறிதென்னொடுமீண்டு, 
வாதுக்காடுதிவருதியென்றுரைத்தனண்மயங்கி.
(261)
672என்றவாசகங்கேட்டலுமடியவர்க்கெளிய,
னன்றுகாளிநீதருக்கதாண்டவஞ்செயநவின்றாய், 
வென்றிதோல்விகண்டுரைத்திடச்சான்றுநம்விமலை, 
நின்றுதாண்டவம்புரிதியென்றாடனனிமலன்.
(262)
673கற்றைவேணியிற்செருகியகதிரிளம்பிறையைச்,
சுற்றிவால்கொடுகட்செவிநான்றிடச்சுருதிப், 
பற்றதாகியபதமலர்ச்சிலம்பொலிபரப்பப், 
பொற்றமாநகநாயகன்றிருநடம்புரிந்தான்.
(263)
674படியும்வானமுநடுங்கிடப்பரவைகளடங்கக்,
கொடியயோகினிக்குழுவெலாம்பாணிகள்கொட்டி,
நடநவின்றிடமயன்மிகுயாமளைநடித்தா, 
ளடியர்வேண்டியவேண்டியாங்களிப்பவனுடனால்.
(264)
675
திருந்துதென்றிருவாலங்காட்டருந்தவஞ்செய்யா, 
விருந்த*முஞ்சிகனோடுகார்க்கோடகனென்னப்,
பரந்தசீர்த்திமாநாகமுஞ்செஞ்சடைப்பகவன், 
புரிந்தநாடகங்கண்டருங்கதியிடைப்புகுந்த. 
-----------------------------------------------
*சுனந்தமுனிவரென்பவர், கைலாயத்திலே தாணடவ தரிசனந் 
தந்தருளப் பிரார்த்தித்து, சிவபெருமான் அனுக்கிரகப்படியே 
திருவாலங்காட்டையடந்து,நெடுங்காலம் அருந்தவம் புரிந்திருந்துழி, 
மண்மேடிட்டுத் திருமேனிமறைந்து கேசத்தோடு முஞ்சிப்புல் 
முளைக்கப்பெற்றமையால், முஞ்சிகேச முனிவரென்னும் 
திருநாமமுடையரா யிருக்க; கார்க்கோடகர் என்பவரும், 
கைலாயத்திலே சிவபெருமானுக்குக் கங்கணமாயிருக்குங்கால், 
அறியாமையால் விடத்தைக்கக்கி, அக்குற்றங் காரணமாக 
அக்கடவுளருளியவாறு அத்தலத்தை யடைந்து, தவநிலையினின்று 
தாண்டவதரிசனம் கிடைக்கப்பெற்று, அம்முனிவரோடு முத்தியடைந்தனர்.
(265)
676
வேதனாரணன்விண்ணவர்முனிவரர்விமலன்,
போதநாடகங்காண்டலுமெய்ம்மயிர் பொடிப்ப,
வோதும்வாசகந்தளர்ந்துளநெக்குநெக்குருகிக், 
காதலாலரகரவெனக்கூப்பினர்கரங்கள்.
(266)
677அண்டர்நாயகன்றிருநடம்புரிவயினடுத்துப்,
பண்டைநான்மறையுருவுகொண்டன்பொடுபாடக்,
கண்டுநான்முகன்றாளமொத்தினனதுகாலை, 
மண்டுமரபுகழருணந்திமத்தளமதிர்த்தான்.
(267)
678எங்கணாயகனுலகெலாமாடல்கண்டிருக்கு,
மங்கைநாயகனடனமிவ்வாறுசெய்தருள, 
வங்குவாதுசெய்துடன்சுழன்றாடுவாளெய்த்தாள், 
பொங்குமானமுற்றிடுதலாற்பினுநடம்புரிந்தாள்.
(268)
679வேறு.
நொந்துளாடனைநோக்குபுவாதினான்
வந்தநாடகமாற்றவருள்கொளா
வந்தவேலையினண்டமுகடுற
எந்தைதாளொன்றெடுத்தனனென்பனவே.
(269)
680தொண்டராகுலந்தீர்க்குந்தொழிலினோ
னண்டகூடமளவுமெடுத்ததா
ளுண்டதாலமுமிழ்நெடுமான்முனங்
கொண்டபேருருக்கொள்கைநிகர்க்குமால்.
(270)
681வேறு.
மண்ணிடையொருதாளூன்றிமற்றொருகமலப்பொற்றாள்,
விண்ணிடையெடுத்துமேலோனடிப்பதுவீரிகண்டு,
துண்ணெனநாணுட்கொண்டுசுடுங்கனற்பட்டமென்பூ,
வண்ணமதெனப்புலர்ந்துவதனம்வன்றலைகுனித்தாள்.
(271)
682நாணினான்முகங்கவிழ்ந்துநண்ணியசெருக்குநீங்கி,
யேணுலாங்குமரிநிற்பவெண்ணில்யோகினிகளெல்லாங்,
காணுறாநடமொழிந்துசூத்திரங்கழலநிற்கு,
மாணுலாம்பாவைபோலவறிதுநின்றனர்களன்றே.
(272)
683ஆங்கதுகண்டுவிண்ணோருவகைபூத்தமலன்மீது,
தூங்குறுமழையின்மும்மைசொரிந்தனர்பூவின்மாரி,
பாங்கரின்வந்துவீழ்ந்துபணிந்தனெரெழுந்துதுள்ளி,
வாங்குதெண்டிரைக்கடற்கெண்மடங்கொலியெழத்துதித்தார்
(273)
684ஆயகாலையினிற்காளியஞ்சியாரணங்கடாமு,
மாயனாதியருங்காணாநின்றனைமதித்திடாமற்,
பேயனேன்செய்ததீமைபொறுத்தருள்பெருமவென்று,
தூயமாஞானானந்தசோதியைத்தொழுதுநின்றாள்.
(274)
685நின்றவடன்னைநோக்கிநீயுளம்வெருவலென்றே,
தன்றிருவருள்புரிந்துசண்டதாண்டவமிதம்ம,
வுன்றனக்கிதனைநோக்க லரிதெனவுரைத்துத்
தன்றாளென்றலைபொறித்தமுக்க ணெம்பிரானியம்புகின்றான்.
(275)
686வேறு
திகழ்வுறுமிந்தவடவனந்தனக்குத்தென்றிசையாகவோர்நகரம்,
புகழ்வுறுங்கூவபுரமெனவுளதப்புரிகயிலையங்கிரிதன்னி,
னிகழ்வுறுபெருமைபெற்றதுநமைப்போனிகரிலாதனிடையென்று,
மகிழ்வொடுமுலகமனைத்தையும்புரப்பான்மதித்திரக்காநடம்புரிதும்.
(276)
687அப்பெருங்கூவபுரத்திடையேகியருள்புரிநந்திருநடனஞ்,
செப்பருங்காதலாற்றினங்கண்டுதிகழுமந்நகருளாரெல்லா,
மொப்பருநமதுநந்தியங்கணத்தினுள்ளவரென்றுநீகருதி,
வெப்பதுமுதலாம்பிணிமிடிபேய்கள்விலங்கினான்வருந்துயர்களைவாய்.
(277)
688என்றிவையிசைத்துநம்மொடுதருக்கமியம்பிநீநடநவின்றதனா,
லுன்றனக்கொருபேர்தருக்கமாதாவென்றோங்குகவினையதுமன்றித்,
தென்றிருக்கூவநகர்தனைக்காத்துச்செறிந்திடுபீடைகளிரிப்ப,
வென்றிகொள்*பீடாரியென்றுலகின்விளங்குகவென்றனன்விமலன். 
----------------
*பீடாரி என்பது-உலகவழக்கில் பிடாரியென மருவிற்று.
(278)
689அன்னசொற்குமரிகேட்டுளமகிழ்வுற்றன்பினான்மும்முறைவணங்கி,
நின்னருளதனாலடியனேன்றீமைநீத்தெனையாண்டவாரமுதே,
பன்னருங்கூவபுரத்திடைச்சென்றுன்பவுரிகண்டந்நகர்காப்பே,
னென்னவங்கியம்பி விமலனைவிடைகொண்டெய்தினள்கூவமாநகரின்.
(279)
690எய்தியகுமரிகூவமாநகரையிறைஞ்சியாலயத்தினுட்போகிச்,
செய்தவமுடையோர்விழியினினெளிதிற்றெரியும்விற்கோலநாயகனைக்,
கைதொழுதகலாலன்பினாற்பணிந்து களிப்பொடும்போந்தடியவர்க்கு,
மெய்தருமருள்சேர்வளர்சடைக்கூத்தன்விளங்கருநாடகங்கண்டாள்.
(280)
691கண்டலுமனலிற்படுமெழுகெனவேகரைந்துளமுருகிவாள்விழிநீர்,
கொண்டல்கண்மலைமேற்சொரிவதுகடுப்பக்குவிமுலைமீதுவீழ்ந்தொழுக,
மண்டலமதனிலைந்துறுப்பணைய வணங்கியங்கெழுந்தனள் போற்றி,
விண்டிடவ ரியமெய்ப்ப ரமானந்த வெள்ளத்திற் றிளைத்த னளன்றே.
(281)
692இத்திறம மலனருண டங்காணா வின்பமுற் றிடுபெருஞ் சூலி,
கைத்தலம மர்ந்தமழு வினோனாலங் காட்டினி லருளிய முறையே,
மெய்த்தவர்பு கழுங்கூவ மாபுரத்து விருப்பொடு மிருந்தொரு துயரு,
மத்திருந கரிற்குறாவ கையென்று மன்னைபோற் காத்திருக் கின்றாள்.
(282)
693வேறு. 
இனையதிருக் கூவபுரப் பெருமையினை யிவ்வளவென் றியம்ப வல்லோ,
ரனையநகர் தனையிடங்கொண் டருடிருவிற் கோலநா யகரே யல்லாற்,
பினையொருவ ருரைத்திடுதற் கெளியதுவோ வியாதனெனப் பெயர்பெற் றுள்ள,
முனிவனருள் கொண்டுசிறி ததன்பெருமை தமியேனு மொழியப் பெற்றேன்.
(282)
694அண்ணலருந் தவமுனிவீர் முத்திதரு சிவஞான மளிக்க வல்ல,
கண்ணுதலான் றலங்கடமி லனந்தகோடி யினினொருத லத்தை யுன்னித், 
துண்ணெனவிங் குரைத்தியெனப் புகன்றனீ ராதலினாற் சுரர்கள் போற்று, 
மெண்ணரிய புகழ்க்கூவ மாநகரைக் குருவருளா லியம்பி னேனால்.
(284)
695இக்காதை தனையொருக்காற் புகன்றருள வினவினவ ரிசைகூர் வண்டு,
புக்காரு நளினமலர்ப் புங்கவனா குவரிருக்காற் புகலிற் கேட்பின்,
மைக்காரி னிகர்நிறத்த கமலவிழிப் புவியளந்த மாய னாவர்,
முக்காலவ் வகைபுரியி னெனையாளுங் கயிலைமலை முதல்வ னாவார்.
(285)
696பழுதிறிருக் கூவபுரா ணத்தினையோ திடுபவர்க்கும் பயன்கேட் போர்க்குங், 
கழுதுபல விலங்குநவக் கிரகாதி யாலணையுங் கடிய வின்னன்,
முழுதுமிலை யவமரணந் துற்கனவு மிடிபிணிகண் முற்று மின்றா,
மெழுதுபவர் வினையனைத்து நமன்கணக்கர் தமதேட்டி னெழுதி டாரே.
(286)
697இக்கதையை யன்பினொடு படிப்பவர்க ளரும்பயன்கேட் டிடுவோர் மேன்மை, 
மக்கடமை யுயிர்த்திடுவ ரென்றென்று மொழியாத வாழ்வு சேர்வர்,
மிக்கபெருஞ் சித்திகளோ ரிருநான்கு மடைவர்மனம் விழைந்த வெல்லா,
மக்கணமே பெறுகுவரீ ரேழுலகு தனினுமவர்க் கரிய தின்றே.
(287)
698தீங்கிறிருச் சினகரமே தவர்மடமே யறந்திறம்பாத் திகழு மில்லே, 
யோங்குமலைக் கடமேநன் னதிக்கரையே யெனுமிவற்று ளொன்றின் மிக்க; 
பூங்கடிமண் டபமியற்றி யதிலிருந்து திருக்கூவப் புராணந் தன்னைத், 
தேங்கமழு மலர்புகையொண் சுடர்கொடுபூ சனையியங்கள் சிலம்பச் செய்தே.
(288)
699ஓதிடுக வோதிடுநாட் டொடங்கிநால் வகையுண்டி யோடு மன்ன, 
மாதவருக் கிடுகமுடி வுறுநாளிற் படித்தவர்கண் மலர்ப்பொற் றாளி, 
னாதரவு கொடுபரம சிவனெனவே வந்தனைசெய் தறுவை யோடுந், 
தீதிலணி விளைநிலம்பாற் பசுவிவைக ளளித்திடுக சிறக்கப் பின்னர்.
(289)
700பொய்யின்மறை புகழ்திருவிற் கோலநாய கர்ப்புகழும் புராண மோடு,
துய்யமன னுடன்படித்துப் பொருள்விரிக்கும் பெரியோனைத் தொழுது போற்றி,
வையமுத லூர்திகளி னிருத்தமிகு பல்லியம்வான் மழையி னார்ப்பச்
செய்யநக ரலங்கரித்து வலம்வருவித் திடல்வேண்டுந் திகழு மன்பால்.
(290)
701இந்தவகை புரிந்திடுவோர் பாவகோடி களகற்றி யிம்பர் தன்னிற், 
புந்திவிழை பொருளனைத்து மீந்துதிரு விற்கோலப் புனித மூர்த்தி,
கந்தமல ரயன்முதலாங் கடவுளர்க்கு மரியபர கதியு நண்ணத், 
தந்தருள்வ னெனவுரைத்தான் சூதமாமு னிவனெனுந்த வத்தர் கோமான்.
(291)
702சூதமுனி யுரைத்தமொழி நைமிசமா வனத்துறையுந் தூய நெஞ்ச, 
மாதவர்க ளனைவருங்கேட் டுவந்தனையோன் றனைவழுத்தி வந்து கூவப், 
போதநகர் தனினரிய விற்கோல நாயகனைப் போற்றி மேவி, 
மூதறிவு வந்ததனான் மூலவிரு ளகன்றுபர முத்தி சேர்ந்தார்.
(292)
703வேறு.
தீதி லாவிறை செங்கோல் வழங்குக
வேத வாகம மெய்ந்நெறி யோங்குக
போத னாதிய புண்ணியர் மல்குக
வோது மூவர்தம் மொண்டமிழ் வாழ்கவே.
(293)

 

தாருகன்வதைச்சருக்கம் முற்றிற்று.
ஆகச்செய்யுள்-703
---------
திருக்கூவப்புராணம் முற்றுப்பெற்றது.
திருச்சிற்றம்பலம்.
------
சிவப்பிரகாச சுவாமிகள் திருவடி வாழ்க.

--------
முற்றிற்று.
--------


This file was last updated on 15 April 2010. 

Please send your corrections

மேலும் பார்க்க :

  • கூவப் புராணம் - உரையுடன்

 

Related Content