கண்டதேவிப் புராணம்.
திரிசிரபுரம் மஹாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.
கணபதி துணை
source:
கண்டதேவிப் புராணம்.
திரிசிரபுரம் மஹாவித்துவான்
மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியது.
-------------
இஃது சிவநேசம் பொருந்திய
வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள்
அநுமதிப்படி தேவகோட்டை
மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர்
முத்தரசப்பசெட்டியாரால்
சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.
யுவ வருஷம் - புரட்டாசி மாதம்
-------------------
சூசீபத்திரம்.
படலம் | படலம். | பாடற்றொகை. |
கடவுள் வாழ்த்து (1-24) | 24 | |
அவையடக்கம் (25-29) | 5 | |
1 | சிறப்புப் பாயிரம் (30) | 1 |
2 | திருநாட்டுப்படலம் (31-110) | 80 |
3 | திருநகரப்படலம் (111- 200 ) | 90 |
4 | நைமிசைப்படலம் (201-237) | 37 |
5 | திருக்கண்புதைத்தபடலம் (238-312) | 75 |
6 | தேவிதவம்புரிபடலம் (313-362) | 50 |
7 | தேவியைக்கண்ணுற்றபடலம் (363-412) | 50 |
8 | சண்டாசுரன்வதைப்படலம் (413-544) | 132 |
9 | திருக்கலியாணப்படலம் (545 - 634) | 90 |
10 | உருத்திரதீர்த்தப்படலம் (635- 651) | 17 |
11 | விட்டுணுதீர்த்தப்படலம் (652 - 669) | 18 |
12 | பிரமதீர்த்தப்படலம் (670-685) | 16 |
13 | சூரியதீர்த்தப்படலம் (686-700) | 15 |
14 | சந்திரதீர்த்தப்படலம் (701-727) | 27 |
15 | சடாயுபூசைப்படலம் (728-767) | 40 |
16 | காங்கேயன்பூசைப்படலம் (768-798) | 31 |
17 | பொன்மாரிபொழிந்தபடலம் (799-835) | 37 |
18 | சிலைமான்வதைப்படலம் (836-853) | 18 |
19 | சிவகங்கைப்படலம் (854-868) | 15 |
20 | தலவிசேடப்படலம் (869-884) | 16 |
ஆக திருவிருத்தம் . 884.
--------------
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
கண்டதேவிப்புராணம்
கடவுள் வாழ்த்து
1 | விநாயகர் பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் | 1 |
2 | சொர்ன்னவருடேசர் மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங் கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந் தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும் பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் | 2 |
3 | தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக் காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி | 3 |
4 | பெரியநாயகி சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங் கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற் சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் | 4 |
5 | வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர் வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் | 5 |
6 | சபாநாயகர். மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் | 6 |
7 | சிவகாமியம்மை. ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர் சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் | 7 |
8 | தட்சணாமூர்த்தி. வேறு. ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும் வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித் தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும் பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் | 8 |
9 | வயிரவர். புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப் பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் | 9 |
10 | மருதவிருட்சம். வேறு. பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும் விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக் கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் | 10 |
11 | வலம்புரிவிநாயகர். வேறு. ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந் தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் | 11 |
12 | சுப்பிரமணியர். வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர் கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். | 12 |
13 | திருநந்திதேவர். வேறு. வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும் விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும் புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். | 13 |
14 | தமிழாசிரியர். வேறு. பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப் பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும் பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப் பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. | 14 |
15 | திருஞானசம்பந்தசுவாமிகள். அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். | 15 |
16 | திருநாவுக்கரசுசுவாமிகள். நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ் சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத் தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். | 16 |
17 | சுந்தரமூர்த்திசுவாமிகள். எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும் புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். | 17 |
18 | மாணிக்கவாசக சுவாமிகள். மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந் தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். | 18 |
19 | தண்டீசநாயனார். மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும் பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். | 19 |
20 | அறுபத்துமூன்றுநாயன்மார். வேறு. பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத் தேன்றவஞ்சகமாதியிருப்பினுந் தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா லான்றமேன்மையறுபத்துமூவரே. | 20 |
21 | பஞ்சாக்கரதேசிகர். பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற் பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. | 21 |
22 | அம்பலவாண்தேசிகர். வேறு. மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன் பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. | 22 |
23 | சித்தாந்தசைவர்கள். பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம் புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும் தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். | 23 |
24 | ஆலப்பணிசெய்வோர்கள். அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம் பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின் விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். | 24 |
கடவுள் வாழ்த்து முற்றிற்று.
------------
அவையடக்கம்.
25 | தரைபுகழ்வேதசாரமாம்விபூதிசாதனமேபொருளாக்கொண் டுரைபுகழ்சிறந்ததேவிசாலப்பேருத்தமவணிகர்கள்யாரும் வரைபுகழமைந்தகண்டதேவியிற்பொன்மாரிபெய்தருளியபெருமான் குரைபுகழ்விளங்குதெய்வமான்மியமாய்க்குலவியபெருவட்மொழியை. | 1 |
26 | மொழிபெயர்த்தெடுத்துமதுரமிக்கொழுகிமுழங்கிமுப்புவனமும்போற்றப் பழிதபுத்துயர்ந்துபரவுசெந்தமிழாற்பாடுகவென்றலுமனையார் கழிசிறப்புவகைமீக்கொளப்புகன்றகட்டுரைமறுப்பதற்கஞ்சி யுழிதரற்றகையமனமுடையானுமுரைசெயத்துணிந்தனன்மன்னோ. | 2 |
27 | வேறு. இருவகையெழுத்துமல்லாவாய்தமுற்குறிலுமீற்று மருவுவல்லெழுத்துங்கூடவன்னமாயெழுதல்போல விருவகைவழக்குமல்லாவென்கவியிறைவன்சீரு மருவுநற்பெரியோரன்புங்கூடலான்மதிக்கும்பாவாம். | 3 |
28 | வேறு. மறைமுழுதுணர்ந்தசிறையுடைக்கழுகுவானகந்துருவியுமுணராப் பிறைவளர்முடிமேற்சிறையிலாக்கழுகுபெய்தபூநிறைதரக்கொண்ட விறையவன்செவிகற்றுணர்ந்தவர்மொழிபாவேற்றலிற்கற்றுணராத குறையினேன்மொழியும்பாக்களுமேற்குங்குறித்துணர்பொருட்டிறமதனால். | 4 |
29 | மறையவனுணராமதிமுடிப்பெருமான்மருதமர்வனப்பெருங்கோயி லுறைபவன்புராணமுரைக்குநீபொருளுக்கொக்குமாறுரைப்பைகொலென்னி னிறையவனருளாவியன்றமட்டுரைப்பேனிமித்தகாரணனெனற்கந்த விறையவன்குலாலனென்றுரைத்ததுதானெற்றுமற்றற்றுணர்ந்தவரே. | 5 |
அவையடக்க முற்றிற்று.
-----------------
சிறப்புப்பாயிரம்.
30 | இலங்குமதிநதிபொதியுஞ்சடிலத்தெம்மா னினிதுமகிழ்ந்திருக்குமுயர்கண்டதேவித் தலங்குலவுமான்மியநன்கெம்மனோர்க டருக்கியுணவமுதுகுசெந்தமிழாற்செய்தா னலங்குலவுஞானகலைமுதலாவெண்ணி னவில்கலைகளுந்தெரிந்தநல்லோனெங்குந் துலங்குபெரும்புகழ்படைத்தவொருமீனாட்சி சுந்தரநாவலவனுயர்தோற்றத்தானே. | 1 |
சிறப்புப்பாயிர முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 30
1. திருநாட்டுப்படலம். (31- 110)
31 | பிறங்கருள்வடிவமானபெரியநாயகியாரோடு மறங்கிளர்செம்பொன்மாரிபொழிந்தவரமர்ந்துமேவு நிறங்குலாங்கண்டதேவிமுதற்பலநெருங்கக்கொண்ட திறங்கமழ்பாண்டிநாட்டின்வளஞ்சிலசெப்பலுற்றாம். | 1 |
32 | வான்றவழிமயமென்னமாலயற்கரியனாய தேன்றவழ்கடுக்கைவேணிச்செம்மலைமருகாப்பெற்ற மீன்றவழ்வசத்தண்ணல்விளங்குவெண்குடைநன்னீழ றான்றவழ்தரப்பொலிந்துதழைவதுபாண்டிநாடு. | 2 |
33 | திருந்துபல்லுயிர்க்குஞ்செம்பொற்றிருவடிநீழனல்கும் பெருந்தகைவழுதியீன்றபேரெழிலணங்கைவேட்டுப் பொருந்துபொன்முடிகவித்துப்பொலிகுடைநீழல்செய்ய வருந்தவம்புரிந்ததம்மாவணிகெழுபாண்டிநாடு. | 3 |
34 | உமைநிகர்சிறப்புவாய்ந்தவுலோபாமுத்திரையோடன்பி னமைசிவபெருமானன்னவகத்தியமுனிவர்கோமான் கமைமிகுதமிழ்விரித்துக்கவினவீற்றிருக்குந்தெய்வச் சிமையமால்வரையுடைத்தத்திருத்தகுபாண்டிநாடு. | 4 |
35 | பெரும்பொருள்வெறுப்பத்தோற்றும்பெற்றியான்மற்றைநாடும் விரும்புறத்தக்கதாகிமெலிதராவிளையுணாளு மரும்புபல்செல்வர்சான்றோரமைதரவுடையதாகி யிரும்புகழ்படைத்துமேவுமேற்றஞ்சால்பாண்டிநாடு. | 5 |
36 | புனைபிருதுவிமுனைந்தாம்பூதகாரியமேயென்று நினைதருபுவனமோம்பநிலவுமப்பூதமைந்து ளினைதலிலொன்றுதெவ்வவெண்ணியப்புகழ்சால்பூதந் தனைநிகருருவக்கொண்மூதழைவிசும்பாறுசென்று. | 6 |
37 | பொழிபுனன்மிகவும்வேண்டும்புகழ்ப்பணைக்காவல்பூண்ட வழிமதுக்கற்பமாலைவானவன்றிசையிற்புக்குக் கழிபுனல்வெறுப்பவுண்டுகரைந்தவைம்பூதந்தம்மு ளழிவுசெயொன்றைநட்டாங்கதனுருக்கொண்டுமீண்டு. | 7 |
38 | நாட்டுமைம்பூதந்தம்முண்டுநிலைப்பூதமாயும் வாட்டுவெங்கோடையோடுமருவியெவ்வுயிருந்தீய மூட்டுதல்கருத்துட்கொண்டுமுதுசினங்கொடுமுழங்கிப் பூட்டுதல்செய்யாச்சாபம்பொருக்கனவொன்றுவாங்கி. | 8 |
39 | அளவருந்தீட்டாவம்புமலங்குபமின்னெனும்பல்வாளும் பளகரும்வலியிற்றாங்கிப்பரவிடங்கொடுக்குமாற்ற லுளவொருபூதமாயவாகவப்பூமியுற்று வளனமைமற்றோர்பூதமருவுவெப்பொழிந்ததென்ன. | 9 |
40 | திசைபுகழ்ந்தேத்துங்கண்டதேவியின்மருதநீழ லசைவறவமர்ந்தவெங்கள்சிறையிலியண்ணன்முன்னம் வசைதவிரரசற்காகப்பொழிந்தபொன்மாரிபோல விசைநிமிர்ந்தெழுச்சிமேவப்பொழிந்தனவெங்கு மாதோ. | 10 |
41 | புலவர்கள்பெருமான்முன்னம்பொழிந்தபொன்மாரியாலே நலவர்கள்புகழ்காங்கேயன்வெங்கலிநசித்தாற்போல வலவர்களுவக்குங்கொண்மூவளவறப்பொழிந்தநீராற் குலவரகணெருங்கும்பார்வெங்கோடைபோயொழிந்ததன்றே. | 11 |
42 | சிறையிலிநாதர்பெய்தசெம்பொன்மாமழையாலன்று தறையகத்துள்ளவாயசிலவுயிர்தழைத்தவின்று குறையறவாரியுண்டுகுயின்பொழிமழையினாலே நிறைபலவுயிர்களெல்லாந்தழைத்தனநிரம்பினமண்மேல். | 12 |
43 | நிறத்துமின்னுடையதாகிக்கறுத்தமானேயம்பூண்டே யறத்தினாலுலகமோம்புமென்பதையறையக்கேட்டோ நிறத்துமின்னுடையதாகிக்கறுத்தமானேயம்பூண்டே யறத்தினாலுலகமோம்புமென்பதையமையக்கண்டோம். | 13 |
44 | வான்றமிழ்பொதியக்குன்றமழைபொழிபெருநீரெங்குந் தான்றவழ்கின்றதோற்றஞ்சந்தனஞ்செறியக்குன்ற மான்றவெங்கோடைமாயவடர்ந்துமிக்கெழுகார்கால மீன்றதண்குளிர்க்குடைந்துவெண்படாம்போர்த்ததேய்க்கும். | 14 |
45 | வரையகங்காந்தட்டீபம்வயக்கினகலிகைகானத் தரையகமாம்பியோம்பித்தழைந்தனநாரையோடை நிரையகம்பீலியூதிநிரைத்தனநெய்தல்பூத்த திரையகம்பவளமுத்தஞ்சிந்தினமுகிற்புத்தேட்கே. | 15 |
46 | தலைமிசைவீழ்ந்தநன்னீரடியுறத்தள்ளிமீட்டுந் தலைமிசைக்கொள்ளாக்குன்றந்ததையருவியினகைக்குந் தலைமிசைவீழ்ந்தநன்னீரடியுறத்தள்ளிமீட்டுந் தலைமிசைக்கொள்ளும்பல்பாதவஞ்செறிகானைமாதோ. | 16 |
47 | உண்டதுபோகவெஞ்சியுள்ளதைப்புறத்துவீசுந் தண்டருச்செறிந்தகானந்தளவினானகையாநிற்கு முண்டதுபோகவெஞ்சியுள்ளதைப்புறம்போக்காது தண்டலில்சிறையினாக்குந்தடம்பணைவைப்பைமாதோ. | 17 |
48 | மழைபொழிநன்னீர்முற்றுஞ்சுவைகெடாவண்ணந்தேக்கி விழைதரவுதவம்பண்ணைநாரையான்மிகநகைக்கு மழைபொழிநன்னீர்முற்றுஞ்சுவைகெடும்வண்ணந்தேக்கி விழைதரப்படாதாச்செய்யும்வீரையைநோக்கிமாதோ. | 18 |
49 | வெள்ளியமேகம்பச்சைவீரைநீர்மடுத்துத்தாமு நள்ளியபசுமையந்தமேகநன்னீர்மடுத்துத் துள்ளியவேனிலாலேவெள்ளெனுந்தோற்றமுற்ற வொள்ளியபுவியும்புல்லாற்பசந்ததாலொருங்குமாதோ. | 19 |
50 | முன்றளையுண்டதின்னுமயர்த்திடாமுகில்களெல்லா நன்றளைபாண்டிநாட்டிற்பொழிவளநவில்வார்யாரே யென்றளையோங்கலாதியிருந்திணையைந்துண்முன்னங் குன்றளைவளந்தொகுத்துக்கூறுதலுற்றாஞ்சில்ல. | 20 |
குறிஞ்சி.
51 | வேறு. அமரமான்மியமுள்ளதென்றறிஞரேயறையுந் தமரமோங்கிடப்பெருவளநனிகொடுதழையும் பமரமார்தொடைப்பசுவருக்கத்தகப்படாத குமரவேளினிதிருந்தரசாட்சிசெய்குறிஞ்சி. | 21 |
52 | கிளக்குந்தெய்வமான்மியமுடைத்தாதலிற்கிரிக ளளக்கலாவளவரும்பொருள்வறப்பினுமளித்த றுளக்கலாநிலைதோற்றமுற்கொடுகலைத்தொகைகள் விளக்குமாரியர்க்கொப்பெனவிளங்குவமாதோ. | 22 |
53 | கருங்குடாவடியிறவுளர்காய்கணைக்கஞ்சி மருங்கொர்கந்தரம்புக்கதுமற்றதுகதிர்கண் டொருங்குவெந்தழல்பொழிதரவுள்ளலைந்துயங்கு முருங்குதுன்பமெவ்விடஞ்சென்றுமுருக்கிடாரொத்தே. | 23 |
54 | வட்டமாகியபளிக்கறைநடுவொருவழுவை யிட்டமேவுறத்துயிறல்கண்டிறவுளர்மடவார் பட்டநீரலாற்கறைமதிப்பிரதிவிம்பந்தா முட்டவானுயர்வரையகமுகிழ்க்குமோவென்பார். | 24 |
55 | தலைவரில்வழிமாரவேட்குறுசரந்தந்து மலையுமாசெயலென்னெனமங்கையருதைப்ப வுலைவில்பூப்பலமீளவுநல்குமொண்செயலை நிலையதங்குணம்வருத்தினுநீக்குறார்நிகரும். | 25 |
56 | விளவுதாழ்வரைச்சாதல்வாய்விழைபிடிவாய்த்தே னளவிறால்பறித்தூட்டுவமால்களிறதுகண் டுளவுபாதியினறுமுறுத்துறவிழிசிவப்பார் களவுமேற்கொடாவயிற்பயில்காளையரம்மா. | 26 |
57 | காந்தண்மெல்லரும்புடைதரக்கண்டமாமஞ்ஞை பாந்தள்பைத்ததுபணமெனப்படர்ந்தெதிர்கொத்தி யேய்ந்தநாணமுற்றுள்ளவாறரவெதிர்வரினு மாய்ந்தசிந்தையினையமுற்றுழிதருமம்மா. | 27 |
58 | மறந்தவாவிழிமங்கையர்புணர்ச்சியைமதித்துச் சிறந்தவாடவர்நள்ளிருட்முறியிடைச்செலும்போ துறந்தசெம்மணிவிளக்கெடுத்திடையிடையுதவ நிறந்தவாவரவீன்றிடுநெடுவரைச்சாரல். | 28 |
59 | அறையிடைத்தினைக்குரல்பலபரப்பியிட்டவைமேற் கறையடிச்சிறுகன்றுகள்சுழன்றிடக்கண்டு பிறைமருப்புலக்கையினரற்குழியவைபெய்து குறையறுத்தவைத்தளாவியின்றேன்கொள்வார்பலரும். | 29 |
60 | ஐயவற்புதக்குமரவேள்வள்ளியோடமரச் செய்யமாதவமுஞற்றியசிலம்புயர்சீர்மை யெய்யவல்லவர்யாவரேபலவளமியைந்து பெய்யவல்லகானத்திறஞ்சிறிதுபேசிடுவாம். | 30 |
முல்லை.
61 | பராவுகற்பொருமடந்தைபாற்பாற்றியதோட மராவுமாறுளங்குறித்தளவிறந்தகற்பாகி விராவுமேன்மையிற்பொலிதரவிருத்திசெய்தென்று முராரிவாழ்வதற்கிடமெனத்திகழ்வதுமுல்லை. | 31 |
62 | எவ்விடங்களும்பசுந்துழாய்க்குலஞ்செறிந்திடலால் வெவ்விடங்கொள்கட்பிருந்தையைப்புணர்சுகம்விராவ வவ்விடங்குடிகொண்டனனலங்குநான்முகத்துக் கவ்விடங்கொளப்பூத்தவோருந்தியங்கடவுள். | 32 |
63 | என்றுமால்சிவபத்தரிற்சிறந்தவனென்ப தொன்றும்வாய்மையேகூவிளங்குருந்தொளிர்தூர்வை கொன்றையானைந்துமல்கியவிடங்குடிகொண்டான் பொன்றுமாறிலாப்பூசனைபுரிதரற்பொருட்டே. | 33 |
64 | ஒன்றுமுல்லையுந்தெய்வதபூமியென்றுரைத்தற் கென்றுமோரிடையூறிலையேதுவென்னென்னிற் றுன்றுதேவெலாமுறுப்புறச்சுமந்தபல்பசுவு மன்றவண்டரும்வைகலேசாலுமால்மதியீர். | 34 |
65 | தூயவேய்ங்குழலோசையுந்தொகுநிரைக்கழுத்தின் மேயமாமணியோசையுமேகம்வாய்விடுக்கும் பாயவோசையுந்தனித்துறைபாவையருவப்பா ராயநாயகர்தேர்வருமோசைகேட்டம்மா. | 35 |
66 | வளர்த்தநாந்தனித்தமர்வுழிமாரவேளெய்து தளர்த்தவீசுவீரரும்பெனத்தையலார்நகைக்க விளர்த்தமுல்லைகண்மீளவும்வீசுவவரும்பு கிளர்த்மாதரார்கிளர்நகைக்கெதிர்நகைத்தென்ன. | 36 |
67 | மலர்ந்தபூம்புனமுருக்குகள்சூழ்ந்தனமருவ வலர்ந்தபூவைகளதனடுப்பொலிதருங்காட்சி கலந்தசெந்தழற்கோட்டையுள்வாணண்முற்கரையும் வலந்தவாவிறற்றானவருறைவதுமானும். | 37 |
68 | பூத்துநின்றிடுபலாசுநஞ்சிவபிரான்புரையு மேத்துகார்புறஞ்சூழ்ந்ததுகரியதளியையும் வார்த்தசெய்யதேனத்தகுதோனின்றுவழியு மார்த்தபுண்ணிழிநீரெனலாம்வனத்தம்மா. | 38 |
69 | வரகுஞ்சாமையுமவரையுந்துவரையுமலிந்து விரவும்பல்வளமேதகப்பொலிவனவொருபாற் பரவுதீஞ்சுவைப்பாறயிர்மோர்பகர்வெண்ணெ யுரவுவாசநெயிவ்வளம்பொலிவனவொருபால். | 39 |
70 | கன்றுமாக்களுஞ்சேக்களும்பொலிபெருங்கானத் தொன்றுமேன்மையையென்னுரைசெய்தனமுலவா தென்றுநீர்வளமலிந்துகண்கவர்பொழிலியைந்து துன்றுமென்மைசான்மருதத்தின்வளஞ்சிலசொல்வாம். | 40 |
மருதம்.
71 | தருவுந்தேனுவுஞ்சங்கமும்பதுமமுமணியும் வெருவும்வாள்வலித்தேவருமிடுபணிவிரும்பத் திருவுநேர்கலாச்சசிமுலைச்சுவடுயர்திணிதோண் மருவுமிந்திரன்காவலிற்பொலிவதுமருதம். | 41 |
72 | மருதமென்பதுந்தெய்வமான்மியமுளதென்று கருதவோரிடையூறிலைகமழ்சுராபான மொருவுறாதுசெய்வார்களங்குறைதலுமாம்பை வெருவுறாதமர்நீர்மையுமேதகுசான்றாம். | 42 |
73 | கொங்குதங்கியசந்தமுங்காரகிற்குறடுந் தங்குமால்கரிக்கோடுமாமயிற்பெருந்தழையு மெங்குமாகவெள்வயிரஞ்செம்மணிபலவெடுத்துப் பொங்குவெண்டிரைகொழித்துலாய்வரும்பெரும்பொருநை. | 43 |
74 | வலியவச்சிரமேந்திவெள்வாரணமூர்ந்து பொலியநன்கரம்பைகடழீஇத்தானத்திற்பொருந்தி யொலியகற்பகக்கானளாயுறுதலிற்பொருநை கலியவாம்கழற்காலுடையிந்திரன்கடுக்கும். | 44 |
75 | ஓதிமஞ்செலுத்திடுதலாலொளிகெழுபணில மாதியேந்துபுபூமணந்திடுதலாலலவன் சோதிமாமணியரவஞ்சார்வேணிசூழ்தரலா னீதிமூவருநிகர்ப்பதுநெடும்புனற்பொருநை. | 45 |
76 | அன்றுதாகநோயொருகுறடணிந்திடவார்த்து வென்றுவந்ததுபற்பலதாகநோய்வீட்ட வின்றுவந்ததோவென்றிடமிகப்பெருக்கெடுத்து நன்றுபொங்கியார்த்தெழுத்ததுநலமலிவையை. | 46 |
77 | போந்துமேகம்வாய்மடுத்தொழித்திடுமெனல்பொய்யே யேந்துமிந்நதிமடுத்துவரொழித்தநீரெடுத்து மாந்துவிண்ணினிதாப்பெயுமெனவராவளர்கண் மோந்துபொங்கியார்த்தெழுவதுமுதுமதுநதியே. | 47 |
78 | வாரியேழுமொன்றாயினுமதித்திடப்படுமோ ரேரிபோல்வதோவெனப்புகல்பற்பலவேரி மூரிநீர்கடைபோகவுமுதுகரையலைத்து மாரியாரினுமறாதருள்வாமெனமலிந்த. | 48 |
79 | மொழிபல்லேரியினதிகளின்புனன்முதுமதகின் வழிபுகுந்துபோய்வயலெலாம்புகுந்தனமறாத பழிவிளைத்திடுமலமறப்பத்திசெய்தொழுகு மிழிவிலாரிடத்தெம்பிரானருள்புகுந்தென்ன. | 49 |
80 | திரைபரந்தெழுதீம்புனல்வயறொறும்புகுத நுரைபரந்தெழுகட்புனனுளையவாய்ப்புகுத்தி வரைபரந்தெழுதோளுடைமள்ளருண்மகிழ்ந்து விரைபரந்தெழுபூம்பணைபுகுந்தனர்விரைந்தே. | 50 |
81 | பிறங்குமாயவன்மனைவிதன்பேருடல்பிளப்ப நிறங்குலாமவனொருபவத்துறுபடைநிறுத்தி மறங்குலாவுதென்றிசையினானூர்திவன்பிடரி னறங்குலாநுகம்பிணைத்தனர்மேழிகையணைத்தார். | 51 |
82 | வலக்கையுட்குறுமுட்டலைக்கோலொன்றுவாங்கி விலக்கருங்கடுப்பமைதரவிளாப்பலகோலி நலக்குறும்படைச்சால்செறிதரநகுபலவு முலக்கவன்பகடுரப்பினருழுதனர்மாதோ. | 52 |
83 | முன்னநம்முருக்கொண்டவன்முருக்குவெம்படையே யன்னவன்றிருமனையொடுநம்மையுமடர்ப்ப தென்னறிந்திலமெனச்சிலமீனெழீஇத்துள்ளும் பன்னருந்துயருற்றொளித்திடும்பலகூர்மம். | 53 |
84 | கரக்குமாந்தர்பாலிரவலர்முகமெனக்கவிழ்ந்த புரக்குமாயவன்கண்ணிலும்பொலிபலகமலம் பரக்குமின்னனவிங்ஙனமாகவும்பாரார் தரக்குமஞ்சியவலியினாலுழுதொழில்சமைந்தார். | 54 |
85 | வடக்கிருந்துதென்றிசைசெலநடத்தியும்வயங்கு குடக்கிருந்துகீழ்த்திசைசெலநடத்தியுங்குளிர்செ யடக்குபுன்முதலியாவையுமழிந்துசேறாகிக் கிடக்கும்வண்ணமேயுழுதனர்கெழுவலிமள்ளர். | 55 |
86 | செறுவின்சீருறவரம்புருக்குலைந்ததுதேர்ந்து மறுவில்செய்ப்புகழ்நுமக்குறாதெனமறுப்பார்போற் பெறுவலத்துயர்மள்ளர்கள்பேணுகங்கரிந்து கொறுகொறுத்துஞெண்டுழன்றிடக்குலையுயர்த்தினரால். | 56 |
87 | ஓதுவேதியர்முதலியோர்நடுநிலையுறுதற் கேதுவாஞ்செறுநடுநிலையெனுஞ்சமமெய்தத் தீதுதீர்பரம்பேறுபுமள்ளர்தாஞ்செலுத்தக் கோதுதீர்படிமக்கலம்போற்சமங்கொண்ட. | 57 |
88 | மேகவாகனனாகியவேந்தனைத்தொழுது பாகமார்தரச்சமைந்தநென்முளைகள்பற்பலவும் வேகமாய்விதைத்துறவழிநாட்புனல்வீழ்த்திக் காகமாதிகளுறாவகையோப்பினர்களமர். | 58 |
89 | வெள்ளியங்குரித்தெனப்பொலிமுளையெலாம்விழைநீ ரள்ளியுண்டுயர்மரகதமங்குரித்தென்னப் புள்ளிதீர்பசப்புற்றதுபொற்புறத்தளிர்த்தாங் கொள்ளிதாலெனத்தளிர்த்தனபெரும்பணையொருங்கு. | 59 |
90 | உற்றகேவலத்துயிர்களைப்புவனங்களொருங்கு பற்றவற்றதோர்பருவத்துவிடுபராபரன்போ லற்றமற்றபைம்பயிர்களைப்பருவநன்கறிந்து கொற்றமள்ளர்கள்கொண்டுபோய்வயறொறுநடுவார். | 60 |
91 | நட்டபைம்பயிர்நன்னிலந்தாழ்ந்தெழுநயமே யொட்டமுன்புதாழ்ந்தெழுந்துபின்வளர்வுழியூறா வட்டவாய்மலர்தாமரைகுமுதங்கண்மலிந்த பட்டவாயிறங்குணங்களும்பாற்றுலோபம்போல். | 61 |
92 | எறிதருங்களையெறிதரும்பருவமீதென்று செறிதரும்புயவலியுடைக்களமர்கள்செப்பக் குறிதருங்கருங்கயல்விழியுழத்தியர்குழுமி மறிதரும்புனல்வயலிடையனமெனப்புகந்தார். | 62 |
93 | அங்கண்மேவியவுழத்தியரளவையோராம்ப லங்கண்வாங்கயல்வெண்டரங்கங்களேயாம்ப லங்கண்ஞெண்டுநாற்காலிலோர்கானடையாம்ப லங்கண்மாரிகைபொழிதரக்களைவதுமாம்பல். | 63 |
94 | கண்ணுமாற்றுக்காலாட்டியர்கொங்கைகோகனகங் கண்ணுமற்றவர்குழல்பொழிமதுவுங்கோகனகங் கண்ணும்வாண்மெய்யினொளியுமற்றையகோகனகங் கண்ணுமாதெனத்தடிவதுமதுப்பெய்கோகனகம். | 64 |
95 | வாயுரைப்பதுவள்ளைகைதடிவதும்வள்ளை யாயகையணிநகுவளையழிப்பனகுவளை யோயமாய்ப்பதுசைவலமிசைவலமுடைய பாயமென்பணையகம்புகூஉத்தொழில்செய்பாவையரே. | 65 |
96 | இன்னவாறுபல்களைகளைந்தெழுதலுமுலோப மென்னவோதுதலொழிதரக்குணந்தடித்தென்னப் பன்னவாம்பயிர்முழுமையுந்தடித்துறப்பணைத்துப் பின்னர்வான்சதிரீன்றனபேருலகுவப்ப. | 66 |
97 | உம்பல்வாய்கிழித்தெழுமரப்பெனக்கதிரொருங்கு நம்புபைம்பயிர்மடல்கிழித்தெழுந்துநன்மதியம் பம்பவாக்கியகிரணத்தாலினியபால்பற்றி யம்பர்முற்றுறவிளைந்துசாய்ந்தனபணையகத்து. | 67 |
98 | பிறையுருப்புனையிரும்புகைக்கொடுபெருங்களமர் முறையறுத்தவைமுழுமையும்வரிந்திருங்களத்து நிறைதலைச்சுமையாக்கொடுசென்றுபோய்நிரப்பிச் சிறைகுலைத்துமேற்கடாம்பலமிதித்திடச்செய்வார். | 68 |
99 | சங்கநின்றும்வெண்டாளம்வேறெடுத்தெனவைநின் றங்களத்தடுசெந்நெல்வேறெடுத்தினிதாகத் துங்கமார்தருவளியெதிர்தூற்றினர்குவித்தார் சிங்கலில்லதோர்காலெடுத்தளந்தனர்சிறப்ப. | 69 |
100 | இறைவன்பாகமுமேனையர்க்கீவதுமீந்து குறையிலெஞ்சியயாவையுங்கொண்டுபோய்மனைவாய் நிறையவிட்டுவைத்தைம்பலத்தாற்றையுநிலைசெய் மிறையிலாக்குடியெங்கணுநிறைந்துளமேன்மேல். | 70 |
101 | கரும்புமஞ்சளுமிஞ்சியுந்தெங்குமொண்கமுகும் விரும்புமேனம்பொலிதருமருதத்தின்மேன்மை யரும்பும்வாஞ்சையிற்சிறிதுரைத்தனஞ்சிறிதறைவாஞ் சுரும்புசூழ்தருநெய்தல்சார்தொடுகடல்வளமும். | 71 |
நெய்தல்.
102 | வேறு. வருணன்காவலின்வயங்குநெய்தல்வாய்ப் பொருணன்கீட்டியபோகுதோணியு மருவிலவல்விரைஇவருபொற்றோணியு மொருவுறாதொன்றோடொன்றுமுட்டுமே. | 72 |
103 | மிக்ககைதையும்விரவுஞாழலுந் தொக்கபுன்னையுந்தோட்டுநெய்தலு மொக்கவீசுதோறுற்றவாசனை புக்குலாவலிற்புலவுமாறுமே. | 73 |
104 | கொடியிடைப்பரத்தியர்குழற்கணி நெடியதாழைவாசனைநிரம்பலாற் படியின்மற்றவர்பகர்புலாற்கயல் கடியமீனெனக்களித்துக்கொள்வரால் | 74 |
105 | உப்புமீனமுமொன்றுபட்டிட வப்புநீர்மையினமைத்துணக்குவார் தப்புறாதுபுள்சாயச்சாடுவார் பப்புவாள்விழிப்பரத்திமார்களே. | 75 |
106 | வலையிழுப்பவர்வயக்குமோதையு முலைதரத்திமிலுந்துமோதையும் விலைபடுத்துமீன்விற்குமோதையு மலைகடற்கெதிராய்முழங்குமே. | 76 |
107 | வேறு. பரவுவாரிசூழ்நிலப்பெருவளமெவர்பகர்வார் குரவுநெல்லியுமிருப்பையுங்கோங்கமுங்கொண்டு விரவுநண்புடன்போக்கினர்விரும்புமாறேன்ற புரவுசெய்திடுபாலையும்பொலியுமாங்காங்கு. | 77 |
108 | திணைமயக்கம். வரையகம்பொலிகளிறுகைநீட்டிவண்கானத் தரையகம்பொலியிறுங்குகொள்வதுமொருசாராம் விரையகம்பொலிகான்குயின்மென்பணையோடை நிரையகம்பொலிமாந்துணர்கோதலுநிகழும். | 78 |
109 | பணைவிராவியவயலைபோய்ப்புன்னைமேற்படாப் பெணைவிராவியகடற்றுகிர்வஞ்சிமேற்பிறங்கு மணைவிராவியசங்கினான்பாலோடுதேனு மிணைவிராவியமாங்கனிச்சாறும்வீழ்ந்தியையும். | 79 |
110 | இன்னவாயவைந்திணைவளப்பாண்டிநாட்டியல்பைப் பன்னகேசனும்பகரமுற்றாதெனப்பகர்வா னென்னின்யாமெவன்சொற்றனநகரங்களெவைக்கு முன்னிலாவியகண்டதேவிப்புகழ்மொழிவாம். | 80 |
திருநாட்டுப்படல முற்றிற்று.
ஆக படலம்-2-க்கு. திருவிருத்தம்--110
2. திருநகரப்படலம். (111- 200 )
111 | அண்டருமுனிவருமவாவிச்சூழ்வது தண்டருமறம்பொருளின்பஞ்சார்ந்தவர்க் கெண்டரும்படியளித்தெச்சமெய்தவுங் கண்டருமான்மியக்கண்டதேவியே. | 1 |
112 | பூமருவுயிர்த்தெழுபுவனம்போர்க்குங்கா வாமருவுலகமுமங்கைகூப்பிடப் பாமருபுண்ணியம்பலவுமாக்கிடுங் காமருவளத்ததுகண்டதேவியே. | 2 |
113 | ஏற்றமார்தனைக்குறித்தெவருமாதவ மாற்றவாழம்மையேயடைந்துமாதவம் போற்றவாந்தலமெனிற்புரைவதில்லைதோங் சாற்றவாமான்மியக்கண்டதேவியே. | 3 |
114 | சிறைவலிக்கழுகொன்றுதேடிக்காணுறா நறைமலர்த்திருமுடிநயந்துகண்டொரு குறையுடைக்கழுகருள்கூடச்செய்தது கறையறப்பொலிவளக்கண்டதேவியே. | 4 |
115 | பண்ணியமாதவப்பண்பினோர்க்கலா லண்ணியவேனையோர்க்கமைதராததா லெண்ணியயாவையுமெளிதினல்கிடுங் கண்ணியபெருவளக்கண்டதேவியே. | 5 |
116 | புறநகர். கருங்கடலுவர்ப்பொடுபுலவுங்காற்றுவர் னொருங்குமுற்றுறவளைந்துறுத்துதித்தெனப் பெருங்குரற்புட்களின்பெருமுழக்கொடு மருங்குறச்சூழ்தரும்பசியவான்பொழில். | 6 |
117 | அக்கருங்கடலகத்தளாந்துகிர்க்கொடி யிக்கருஞ்சோலைவாயிளையமாதரா ரக்கருங்கடலகத்தலங்குநித்தில மிக்கருஞ்சோலையுளிலங்கரும்பரோ. | 7 |
118 | அனையபைங்கடலகத்தாயநுண்மண லினையபைஞ்சோலைவாயியைந்தபூம்பொடி யனையபைங்கடலலையெழுந்தவெள்வளை யினையபைம்பொழனை்மிசையிலங்குவெண்பிறை. | 8 |
119 | தலம்புகுநல்லவர்தங்களுக்கிரு நலம்புகுமன்னவைநல்குமாதரார் குலம்புகுமாதனங்குழுமியென்னநீர் நிலம்புகுமோரிருநிறத்தகஞ்சமும். | 9 |
120 | ஐயநீர்ப்பெருந்தடம்யாககுண்டமாஞ் செய்யதாமரையழல்செறியுங்காரளி வெய்யவாம்புகையழல்வளர்க்கும்வேதியர் மையறீர்சுற்றெலாம்வயங்குமன்னமே. | 10 |
121 | வானவர்சூழ்தலினவர்மரீஇயமர் தானமென்றறிதரத்தக்கபன்மல ரானவைசெறியவண்டளிகண்மொய்த்திட வீனமினந்தனஞ்சூழுமெங்குமே. | 11 |
122 | ஒன்றுநந்தனவனத்தொருங்குகாரளி சென்றுசென்றுழக்குவபகைவர்சேரிட மென்றுகண்டசுரர்களெய்திநாடொறு மன்றுதல்புரிந்தளாயடர்த்தன்மானுமே. | 12 |
123 | ஒருகழுகினுக்கருளுதவிக்காத்தவன் றிருநகராதலிற்சேர்ந்தியாமெலா மருவிடினக்குமின்னருள்வழங்குமென் றொருவில்பைம்பொழிலுள்வீயொருங்குவைகுமே. | 13 |
124 | நன்மலர்செறிதருநந்தனந்தொறு மின்மலர்செருந்திகள்வீயுகுப்பன வன்மலர்களத்தினானருளின்முன்னைநாட் பொன்மழைபொழிந்ததைப்புதுக்கினாலென. | 14 |
125 | தம்முருவெடுத்தவன்றனதுவெம்பகைக் கம்மவீதினமெனவறிந்தடர்த்தல்போற் செம்மலிதளர்பலசெறிந்தமாவெலாங் கொம்மெனமிதித்தளாய்க்குயிலுலாவுமே. | 15 |
126 | கதிர்படுசெந்நென்மென்காற்றினாலசைந் ததிர்வருகரும்படியறைந்துகீறலா லெதிரறப்பொழிந்தசாறெழுந்துபோயயற் பிதிர்வறவரம்பைகள்வளர்க்கும்பேணியே. | 16 |
127 | நம்மையூருமையயற்றலத்துநன்புலஞ் செம்மையிற்காத்தலிற்றெவ்வலாமென வம்மதண்பணைதொறுமளாவிநெற்கதிர் கொம்மெனப்பசுங்கிளிக்குலங்கொண்டேகுமே. | 17 |
128 | பித்தருமிகழ்தராப்பெரியநாயகி கைத்தலமமர்தலிற்காமர்கிள்ளைக ளெத்தலத்தெதுகவர்ந்தேகுமாயினுஞ் சித்தமிக்குவப்பரந்நகரஞ்சேர்ந்துளார். | 18 |
129 | மருவலர்முடித்தலைதெங்கங்காயின்வைத் தொருவறமிதித்தலினுறுசெந்நீரினாற் கருவுரனிகர்த்தலாற்கறையடிப்பெய ரிருபொருள்படப்புனைவழுவையெண்ணில. | 19 |
130 | உருமுறழ்முழக்கினவூழித்தீயென வெருவருந்திறலினவீசுவாலின பொருபிறைக்கோட்டினபுலிங்கக்கண்ணின வருகளிறுகள்செறிகூடமல்குவ. | 20 |
131 | விழைமதகளிறுகண்மிக்குலாவுவ தழைகருங்கீழிடந்தயங்குமேலிட மழைமதச்சுரகரிமகிழ்ந்துலாவுவ பிழைதபுவாரிகள்பிறங்குமெங்குமே. | 21 |
132 | ஒன்னலர்மணிமுடியுருளத்தாவுவ பன்னருமனத்தினும்பகர்கடுப்பின வென்னருநடுநடுக்கெய்துந்தோற்றத்த பொன்னணிமணிவயப்புரவியெண்ணில. | 22 |
133 | குலமகளெனத்தலைகவிழுங்கொள்கையி னிலகுவெம்பரிசெறியிலாயமீமிசை யுலவதல்வழக்கெனவுவந்துலாவுறு மலருமப்பெயர்புனைவானமீனரோ. | 23 |
134 | ஆருறுகுடத்தினவம்பொற்சுற்றின பாருறுவன்மையைப்பகிர்ந்துசெல்வன காருறுவிண்ணையுங்கலக்குஞ்சென்னிய தேருறுமிருக்கைகள்சிவணும்பற்பல. | 24 |
135 | அடித்தலந்தேர்பலவமைத்தகூடத்து முடித்தலந்தவழுதன்முறைமையாமெனத் தடித்தலமரவொளிர்பரிதிசாலுந்தேர் நொடித்தலங்கூர்ந்துசெனோக்கமிக்கதே. | 25 |
136 | வாளொடுபரிசையும்வயக்குங்கையினர் தாளொடுகூடியகழலர்தாங்கிய கோளொடுகூற்றொடுமலைக்குங்கொள்கையர் வேளொடுநிகர்த்தமாவீரரெண்ணிலர். | 26 |
137 | தெள்ளியவிஞ்சையர்வியக்குஞ்சீர்த்திய ரெள்ளியபுறக்கொடையென்றுமில்லவர் நள்ளியவினைத்திறநாளுநாடியாற் றொள்ளியதாயகல்லூரியும்பல. | 27 |
138 | அன்றுவெங்கரிபரியாதிபோலநா மென்றங்கீழ்நோக்குதலில்லையாலெனா நன்றுமேனோக்குபுநடக்குமொட்டகங் கன்றுறாதமர்தருங்கைப்பவாவியே. | 28 |
139 | கரிபரிதேர்க்குறுகருவியோடுகால் வரிகழல்வீரர்கள்வயக்குமேதிகள் புரிநர்பல்வளத்தொடுபொலியுஞ்சேரியுந் தெரிதரினளப்பிலசிறந்தவாவயின். | 29 |
140 | அறநகரெனப்புகலனையமாநகர்ப் புறநகர்வளஞ்சிலபுகன்றுளாமினி துறநகர்பலவுமுள்ளுவக்குஞ்சீரிடைத் திறநகர்வளஞ்சிலசெப்புவாமரோ. | 30 |
141 | இடைநகர். வேறு. வாவியோடைமலர்ந்தவுய்யானமு மாவியன்னவணங்கனையாரொடு மேவிமைந்தர்விராவுசெய்குன்றமு மோவியம்புனைமாடமுமோங்குவ. | 31 |
142 | குழல்கையேந்திக்குறுந்தொடியார்களுங் கழலினாடவருங்கலந்தாடுவா ரொழுகுநீர்களிறும்பிடியும்விராய் முழுகுநீர்கைமுகந்திறைத்தாடல்போல். | 32 |
143 | இம்மையேமறுமை்பயனெய்துதல் செம்மைசாலித்தலத்தின்சிறப்பென வம்மையூர்மனைமேற்பயிலந்நலார் கொம்மைவான்றருவின்கனிகூட்டுண்பார். | 33 |
144 | ஒண்ணிலாநுதலாரொளிர்மாடமேல் வெண்ணிலாமுற்றத்தாடவிழுமலர் கண்ணிலாங்குப்பைகாற்றவுங்கற்பக மெண்ணிலாமலர்க்குப்பையிறைக்குமே. | 34 |
145 | மாடமேனிலைமண்ணுந்தொழிலினர் பாடமைந்தகளிப்புறப்பான்மதி கூடவாங்குக்குலவுமக்கல்லற னீடவாக்கிநிலவுறமண்ணுமே. | 35 |
146 | புதுமணத்தமர்பூவையர்நாணுறா மதுமலர்ப்பந்தின்வண்சுடர்மாற்றலு முதுமணிக்கலமொய்யொளிவீசலா லெதுவினிச்செயலென்றுகண்பொத்துவார். | 36 |
147 | தோன்றுமாடமிசைத்தொடிக்கையினார் சான்றவெம்முலைசார்ந்துபவனத்து ளான்றவொன்றடுப்பக்கண்டவாடவர் மூன்றுகொங்கைமுகிழ்த்தமையென்னென்பார். | 37 |
148 | மன்னுமேனிலைமாடத்தின்மூடிய மின்னனார்முத்தமாலைகைவீசுபோ தன்னமாலைசிதறிவிண்ணாழ்ந்தன வின்னுமோதுவர்தாரகையென்னவே. | 38 |
149 | நன்றுநுங்கணலியுமருங்குலவிண் ணென்றும்வெல்லுமிரண்டுகும்பங்கொளா வொன்றுகொண்டநலிவில்விண்ணொப்புவ தன்றுகாணென்றுவப்பிப்பராடவர். | 39 |
150 | வளியுலாமதரூடுதன்மாண்கர மொளிநிலாவுறப்போக்குதலொண்மல ரளிநிலாங்குழலார்முகத்தாரெழில் களிநிலாவக்கவர்வதற்கன்றுகொல். | 40 |
151 | மேகந்தாழநிவந்தவெண்மாடமேற் போகுசூலம்பொலிவுற்றுத்தோன்றிடு மாகர்போற்றவயங்குகயிலைமே லேகபாதவுருத்திரனின்றென. | 41 |
152 | மாண்டசெம்பொன்வயங்குசெய்குன்றினைக் காண்டருங்கருமேகம்வளைத்திடல் பூண்டவந்திநிறத்தொருபுண்ணிய னீண்டயானைத்தோல்போர்த்தனிகர்க்குமே. | 42 |
153 | உள்ளெலாம்வயிரத்தொளியோங்கிட வெள்ளிநீலம்வெளிவைத்திழைத்தலி லுள்ளுசத்துவமுட்புறந்தாமதங் கொள்ளுங்கோலவுருத்திரன்போலுமே. | 43 |
154 | நீலவம்மனைகைக்கொடுநேரிழைக் கோலமங்கையராடக்கொழுநர்தா மாலநின்றமனத்தொடுதாமரைப் பாலவீழ்வண்டுபற்பலவென்பரால். | 44 |
155 | ஊசலாடுவரொள்ளிழைமாதரார் காசுலாமவர்காதிற்குழையொடு மாசிலாதவலியுடையாடவர் நேசமார்மனமுந்நெகிழ்ந்தாடுமால். | 45 |
156 | கொந்துவார்குழற்கோதையர்மேற்றுகில் சந்துவாண்முலைநீங்கத்தவாதுபொற் பந்தடிப்பர்பகைக்குத்தெரிவித்தே யுந்துதண்டமவைக்குறுப்பாரென். | 46 |
157 | உன்னுதம்மொழியொப்புமைநோக்கல்போன் மன்னுமாளிகைமீமிசைமாதரார் பன்னும்யாழ்கொடுபாடுவர்விஞ்சையர் துன்னும்வாஞ்சையிற்கேட்டுத்துணிவரே. | 47 |
158 | ஊடலோதையுமூடலுணர்த்துபு கூடலோதையுங்கோலத்திவவுயாழ் பாடலோதையும்பாடற்சதிதழீஇ யாடலோதையுமல்குவவாயிடை. | 48 |
159 | பூவுஞ்சுண்ணமுஞ்சாந்தும்பொரியும்வின் மேவுமுத்தமும்வெள்வயிரங்களும் பாவுசெம்மணியும்பலவாயமற் றியாவுங்குப்பையிடைநகர்வீதியே. | 49 |
160 | அளவிலாவளமாயவிடைநக ரளவிலாச்சிறப்பாருறைசெய்பவ ரளவிலாப்பல்குடியமையுண்ணக ரளவிலாச்சிறப்பிற்சற்றறைகுவாம். | 50 |
161 | உண்ணகர். வேறு. மடலவிழ்துளபத்தண்டார்மாயவனாயமீனம் படலரும்வலிசார்கூர்மங்கலக்கிடப்படாததாய கடல்கொலிவ்வகழியென்றுகருதிடப்பரந்துநீண்டு தொடலரிதென்னவாழ்ந்துசூழ்ந்ததுகிடங்குமாதோ. | 51 |
162 | வெள்ளியதரளமொண்பூவிரைகுளிர்புறத்தும்வெம்மை நள்ளியவன்மீனாதியகத்துங்கொணகுகிடங்கு வள்ளியபுறத்துச்செம்மையகத்துவன்கொடுமைபூண்ட தெள்ளியவிலைமின்னாரொத்திருப்பதுதெரியங்காலே. | 52 |
163 | அன்றுலகளந்தமாயோன்வளர்ந்ததிவ்வளவையென்ன நன்றுலகறியத்தேற்றித்தானவர்நடுங்கச்சூழ்ந்து சென்றுபோர்மலையாவண்ணந்தேவர்வாழ்நகருங்காத்துப் பொன்றதலறநிற்கும்பாம்புரிவளையகப்பாமாதோ.. | 53 |
164 | பொறிபலவடக்கலானுஞ்சலிப்பறுபொலிவினானும் பறிநிகர்வேணியெங்கள்பரனையுட்கோடலானு மறிவருமுயற்சியானும்பகையறவயங்கலானு முறிவருந்தவத்தின்மேலாமுனிவரும்போலுநொச்சி. | 54 |
165 | சாற்றுகிர்க்குறிகைகொண்டுதட்டல்பற்குறியணைத்தல் போற்றுநல்லமுதுதுய்த்தன்முதற்புறக்கரணமோடு மாற்றகக்கரணமாயகரிகரமாதியாவுந் தோற்றுவபரத்தைமாதர்சுடர்மனப்புறத்திலோவம். | 55 |
166 | பன்னரும்வனப்பினானும்பயின்றபல்விஞ்சையானு நன்னலக்கண்டதேவிநகரமர்கணிகைமாதர் பொன்னமர்திருவைவேதன்புணர்மடமாதைவென்றா ரன்னவரற்றைநாடொட்டலர்மடந்தையரானாரே. | 56 |
167 | சுவைநனியுடையவூனும்பிறர்விழிசிறிதுதொட்டா னவைமிகுமெச்சிலென்றேகழிக்குநன்மறையோர்தாமு மவையகம்புகுதுநல்லார்பலர்நுகரதரவூறல் செவையெனக்கொள்வார்தெய்வவலியெனத்தெளிந்தார்போலும். | 57 |
168 | அந்தணராதிநால்வரனுலோமராதியாக வந்தவர்யாவரேனுமறாமலின்பளிக்குநீராற் சந்தணிகுவவுக்கொங்கைத்தாழ்குழற்பரத்தைமாதர் செந்துவர்ச்சடிலமோலிச்சிவபிரான்றானோதேறோம். | 58 |
169 | கணிகையர்சிறந்தோரென்றுகரைவதற்கையமின்று மணிகெழுகூந்தலாதிமாந்தளிரடியீறாக வணிகெழுமைந்தர்தம்மைமயக்குமற்றனையார்நல்கு பணியுடைகளுமயக்குமவர்மயங்காதபண்பால். | 59 |
170 | உருவுடைமைந்தர்யாருமுறுபெருவிரத்தியாரிற் பருவநன்மனைவியாதிப்பலரையம்வெறத்துமிக்க பொருண்முதலனைத்துநல்கிப்பணிகளும்புரிவர்ஞானக் குருவெனக்கொண்டார்போலுமவர்திறங்கூறற்பாற்றோ. | 60 |
171 | விருந்துவந்துண்டாலன்றிமென்மலராதிகொண்டு திருந்துசுத்திகளோரைந்திற்சிவார்ச்சனைசெய்தாலன்றி வருந்துதீர்த்திரப்போருள்ளமகிழ்ச்சிசெய்திட்டாலன்றி யருந்துதல்செய்யார்சாவாவமுதமும்வேளாண்மாக்கள். | 61 |
172 | ஒழுக்கமன்பருளாசாரமுறவுபசாரமுற்று விழுக்குடிப்பிறப்பையோம்பிமேவபிமானம்பூண்டு மழுக்கலில்சிறப்பில்வாழும்வண்மைசால்வேளாண்மாக்கள் செழுங்குடிக்கிரகமேயதிருமறுகணிவிண்போலாம். | 62 |
173 | மழைகருக்கொண்டதெண்ணீர்முழுவதுமாநீர்ஞாலத் துழையுறவிழுதலன்றிவிண்முதலுறாமைபோலத் தழைதருபுவியினாயதவாப்பொருளெலாமந்நாயகர் விழைதருமாடமன்றிவேறிடம்புகுதாவென்றும். | 63 |
174 | புலியதளுடுத்துவானும்பொலந்தருநல்கவாங்கி மெலுவறவுடுத்துவாருமன்றிவேறிடத்துள்ளாரு ளொலிபுகழ்க்கண்டதேவிநகருறைவணிகமாக்கண் மலிநியமத்துளாடைவாங்குவான்புகாரும்யாரே. | 64 |
175 | மலைவருமணிகமாக்கண்மருவியநியமமெல்லா முலைவருகளங்கநீக்கியுவாமதியினைச்சேறாக்கி நிலையுறப்பூசியன்னசுண்ணவெண்ணிகழ்ச்சியாலே கலைமகளெனலாம்பற்பல்கலையமைந்திருத்தல்சான்றே. | 65 |
176 | கோடுதலின்றிக்கோடிகோடியாக்கொடுக்கவல்லார் நாடுயரவரேயன்றிஞாலத்துமற்றையார்கா ணீடுறக்கொள்வானெண்ணியெத்தனைபேர்வந்தாலுங் கூடுகைசலிப்புறாதுகொடுத்திடுவிரதம்பூண்டார். | 66 |
177 | நென்முதலொருபாலாகுநேத்திரமொருபாலாகும் பன்மணியொருபாலாகும்பரவுபொன்வெள்ளிசெய்பூ ணென்னவுமொருபாலாகுமிருங்கலையொருபாலாகு மன்னவர்நியமம்பொற்கோனருங்கருவூலம்போலும். | 67 |
178 | வருந்தியெவ்விடத்துஞ்சென்றுமாண்பொருளீட்டல்போலத் திருந்தியவன்னதானஞ்சிவாலயப்பணிமுன்னான பொருந்தியபலவுஞ்செய்துபுண்ணியப்பொருளுமீட்டிப் பெருந்திருவேற்றோர்க்கீய்ந்துபெரும்புகழ்ப்பொருளுங்கொள்வார். | 68 |
179 | கரப்பினெஞ்சுடையராகிக்கடனறிவாருமாய்ச்சீர் பரப்புமவ்வணிகரானோர்பாலிரவாருமில்லை நிரப்புமற்றவரைக்கண்டநேயத்தோரூருமில்லை யிரப்புமற்றவரானாளுமிழிவினையடைந்ததில்லை. | 69 |
180 | வெள்ளியநீறுபூசிவிளங்குகண்மணிகள்பூண்டு தெள்ளியவெழுத்தைந்தெண்ணிச்சிவார்ச்சனைவிருப்பினாற்றித் தள்ளியவினைஞராகித்தழைந்துவாழ்வணிகமாக்க ளொள்ளியமாடவீதியுரைத்திடமுற்றுங்கொல்லே. | 70 |
181 | வரூபரிதரங்கங்காட்டமதமலைமகரங்காட்டத் திருவளர்கொடிஞ்சிப்பொற்றேர்செறிதருநாவாய்காட்டப் பொருபடைக்கலமீன்காட்டப்பொருனர்மீனெறிவார்காட்டக் கருநிறக்கடலேமானுங்காவலர்மாடவீதி. | 71 |
182 | மருவலர்தருமண்கொண்டுவானகமவர்க்குநல்கிப் பேருமையிலிழிந்ததேற்றுப்பிறங்கிமிக்குயர்ந்ததாய பொருவருமின்பநலகும்புண்ணியப்பிரானையொத்த திருவளர்மன்னர்வாழுந்தெருவளஞ்சொல்லப்போமோ. | 72 |
183 | பசுவுடம்பழித்துமுக்கட்பதியுடம்போம்பிக்கொள்வார் வசுவளர்த்ததனுட்சொன்னவள்ளலைத்தரிசிப்பார்பன் முசுவுகள்சோலைதோறுமொய்த்தவானவரைக்கூவி யுசுவினூண்மகத்தினூட்டுமொண்மையர்வீதியோர்பால். | 73 |
184 | காலையின்முழுகியாப்பிகைக்கொடுபவித்திரஞ்செய் மாலையினட்டில்புக்குமடையமைத்தேந்தியுச்சி வேலையினதிதியர்க்குவிருப்புடனூட்டுமஞ்சொற் சோலையிற்கிளியன்னாராற்றுலங்குவமறையோரில்லம். | 74 |
184 | எண்ணில்வேதாகமங்களையமெய்தாமையாய்ந்து மண்ணிலான்மார்த்தத்தோடுபரார்த்தமும்வயங்கப்பூசித் தொண்ணிதியருட்பேறெய்தியொழிந்தமும்மலத்தினாராம் புண்ணியவாதிசைவர்பொலிதிருமறுகுமோர்பால். | 75 |
186 | எழுமதமழகுபத்துங்குற்றமீரைந்தும்போகத் தழுவியொண்கருத்துமுன்னாச்சாற்றியவைந்தனாலுங் கெழுதகுபிறவாற்றாலுங்கிளரியலுரைக்கவல்ல முழுதுணர்புலவர்மேயகழகமுமுகிழ்க்குமோர்பால். | 76 |
187 | புண்ணியமறையோராதியாவரும்புகுந்துமேலோர் கண்ணியவுமையோர்பாகக்கண்ணுதற்பெருமான்பொற்றா ணண்ணியவின்பேயென்றுநயப்புறவின்பமேன்மேற் பண்ணியதாயதண்ணீர்ப்பந்தரும்பொலியுமோர்பால். | 77 |
188 | வேதியராதியோர்கள்விலாப்புடைவீங்கவுண்பான் கோதியலாதவல்சிகுய்கமழ்கருனைபாகு மோதியசுவையநெய்பான்முதலியபலவுநல்குந் தீதியலாதசெல்வத்திருமடங்களுமுண்டோர்பால். | 78 |
189 | குலவியதெய்வஞானக்குரவனாரருளினாலே நிலவியசமயமாதிநிகழொருமூன்றும்பெற்றுக் கலவியபாசமைந்துங்கழிதரவொன்றியொன்றா தலவியலாதவின்பமுறுநர்வாழ்மடமுமோர்பால். | 79 |
190 | இன்னபன்மறுகுஞ்சூழவெறிகதிர்மதாணிநாப்பண் மின்னவிர்மணயேபோலவிளக்கமிக்கமைந்துமேவும் பின்னமில்கருணைத்தாயாம்பெரியநாயகியோடெங்கண் முன்னவன்மருதவாணன்முனிவறப்பொலியுங்கோயில். | 80 |
191 | உருத்திரப்பெருமான்றீர்த்தமுலகளந்தவன்செய்தீர்த்தந் திகுத்தகுபிரமதீர்த்தஞ்செறிபுகழ்ச்சடாயுதீர்த்த மருந்தபன்மலரும்பூத்துவாசமெண்காதம்வீசிக் கருத்தமைகோயில்சூழ்ந்துகவின்கொடுபொலியாநிற்கும். | 81 |
192 | திரிபுரமெரித்தஞான்றுசேணுலகனைத்துந்தாங்கப் பரிபுரம்புலம்பும்பூந்தாட்பரையொருபாகத்தண்ண றெரிபுரம்பொலியுமேருவேறொன்றசெறித்ததென்ன வரிபுரந்தரன்முன்னானோரடைபொற்கோபுரநின்றன்றே. | 82 |
193 | பகைத்தமும்மதிலுநீறுபட்டமையுணர்ந்துதீயா நகைத்தவனருள்கொள்பாக்குநயந்துயரொன்றுமேவி யுகைத்தவெஞ்சினத்துத்தீயருறாவகையொதுக்கிச்சூழ்ந்து தகைத்ததுநிற்றல்போலுந்தவாச்சுடர்ச்செம்பொனிஞ்சி. | 83 |
194 | ஒருமதிலின்னதாகவொருமதிலுணர்ந்துவல்லே தருமவெள்விடையினார்க்குத்தவாநிழனாளுஞ்செய்ய மருமலர்த்தருவொன்றாகிநிழல்செய்துவயங்கிற்றென்னப் பொருவில்வெண்மருதநாளும்பூத்துறத்தழையாநிற்கும். | 84 |
195 | மற்றுமோர்மதிலும்போந்துமண்டபமாதியாய முற்றுமாய்ப்பொலிந்ததென்னமொய்த்தகால்பத்துநூறு பற்றுமண்டபமுன்யாவும்பாரிடைக்கருங்கற்போழ்ந்து செற்றுநன்கமைத்தலாலேகருங்கதிர்திகழவீசும். | 85 |
196 | தனைத்தவர்செய்தஞான்றுதனக்கெதிர்முளைத்ததோர்ந்து நினைத்தபொன்மேருவள்ளனிறையருணிரப்பிக்கொள்ள முனைத்தபல்விமானமாகிமுகிழ்த்ததென்றெவரும்பேச வினைத்தெனவறிதராப்பொன்விமானங்களெங்குமோங்கும். | 86 |
197 | கூண்டவன்புடையதாயகுட்டிமமுன்றிலெங்கு நீண்டவன்முதல்வானோருநிறைபெரும்புவியுளார மாண்டவன்புடையராகிவந்துபொன்மாரிதூர்ப்பா ராண்டவன்பொழிந்தவாறேயடியரும்பொழிவாரென்ன. | 87 |
198 | மழைநிகர்களத்துப்பெம்மான்வண்மைசால்திருமுன்னாகத் தழைமலர்சிறிதுமின்றிப்பிறதழைமலரேசார வுழையமாமிசையுமின்றியொருதருநின்றுசூழ்வோர் விழைதருபலன்களெல்லாங்கொடுத்திடுமேலுமேலும். | 88 |
199 | அரகரமுழக்குநால்வரருட்டிருப்பாடலார்ப்பு முரசதிரொலியும்வீணைமுழவெழுமிசைப்புமம்மான் பரவுசந்நிதிமுன்னாகப்பணிந்தெழுமடியார்பாவ வுரவுவெங்களிறுமாய்க்குமரிமுழக்கொத்திசைக்கும். | 89 |
200 | கண்ணலங்கனிந்தவன்பிற்கடவுளோர்முதலோரீண்டி யெண்ணலங்கனிந்தவெல்லாமெய்தியின்படையநல்கிப் பெண்ணலங்கனிந்ததெய்வப்பேரருட்பெரியாளோடு மண்ணலங்கனிந்தமேனியமலனக்கோயின்மேவும். | 90 |
திருநகரப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 3க்கு, திருவிருத்தம். 200
--------------------
4. நைமிசைப்படலம். (201 - 237)
201 | தருப்பொருந்தலாற்சலதரமூர்தலாற்சசியை விருப்பொருங்குறத்தழுவலால்விண்ணவர்விழையுந் திருப்பொருந்தலாற்கண்மலராயிரஞ்செறிந்த வுருப்பொருந்தலானைமிசமிந்திரனொக்கும். | 1 |
202 | மலரணங்குறத்தழுவலான்மருவுநால்வாயா லலர்மிசைப்பொலிமாண்பினான்மண்ணளித்தலினா னலர்விரும்புபல்கலைப்பொலிவுடைமையானாளு முலர்தராதநைமிசவனம்விதியையுமொக்கும். | 2 |
203 | உற்றதானவர்தமையொழித்தமரரையூட்டக் கற்றமேன்மையாற்பூமணம்பொருந்தலாற்கருங்கார் செற்றமேனிவந்தமைதலாலளிவளர்திறத்தாற் கொற்றநேமியங்கடவுளும்போலுமக்குளிர்கான். | 3 |
204 | பிறையுங்கங்கையுமீமிசைத்தவழ்தலாற்பிறங்கி நிறையும்பல்சடையுடைமையானிலவுபூங்கொன்றை நறைமணத்தலாற்கூவிளநயத்தலானாளுங் குறைவிலாச்சிவபரனையுமானுமக்குளிர்கான். | 4 |
205 | திருந்துவானவர்முனிவரர்மொய்த்தலாற்செவ்வே யிருந்துநன்னலமெய்தினர்க்களித்தலாலால மருந்துசெய்தவனமர்தலாற்சலிப்பரும்வலியாற் பொருந்துவெள்ளியங்கயிலையும்போலுமக்கானம். | 5 |
206 | மோகமாதிகளொழிந்தவம்முழுத்தவவனத்து யாகசாலையினெழும்புகையெங்கணுந்துழாவி மேகமார்தருவெளியிடைப்படிதலாலன்றோ மாகமார்நிறம்புகைநிறமென்பர்மண்ணுலகோர். | 6 |
207 | ஓங்குநைமிசத்துஞற்றிடுமகத்தழற்கொழுந்து வீங்குபொன்னுலகுருக்குமென்றஞ்சியேவிண்ணோர் தேங்குகங்கையுமங்குலுங்கீழுறச்செய்தா ராங்குநின்றிவணுறுவதுங்குளிரவாயன்றோ. | 7 |
208 | மேயபற்பலதருக்களினின்றுமேலிடத்துப் போயபல்விடபங்களின்மலர்தொறும்புகுந்து பாயவண்டுகளுகுத்தசெந்தாதுவீழ்பண்பாற் றேயமோதும்விண்ணுலகுசெந்தாதுலகென்றே. | 8 |
209 | விண்ணளாவியமகத்தழற்கொழுந்துமேலெழுந்து கண்ணளாவியமரமுதற்கரைதருக்கொழுந்த மெண்ணளாவியவேற்றுமைதெரிவரிதென்றுந் தண்ணளாவியதண்மையும்வெப்பமுந்தவிர்ந்து. | 9 |
210 | அண்டவாணர்தம்பசிதவிர்த்தருளுமத்தானம் புண்டரீகமுமாம்பலும்புரிமகப்பொருட்டி னண்டுகூர்மமும்பறவையுமளப்பரியதாய வண்டுமொய்த்தலின்வனமெனற்கொத்ததுமாதோ. | 10 |
211 | வேறு. இன்னபல்வளத்தநைமிசவனத்திலிருப்பவர்விதிவிலக்கமைதி சொன்னமெய்ப்பொருணூலாகியமறையுந்துளக்கமிலங்கமோராறும் பன்னரும்புகழ்சாலாகமத்திரளும்பகர்தருமற்றுளவெவையு நன்னயம்பயப்பப்பாலுணுங்குருகினவையொருமூன்றுமற்றுணர்ந்தார். | 11 |
212 | கொடுமருத்தெழுந்துநெடுவரைபிடுங்கிக்குவலயநடுங்கவீசிடினும் படுதிரைக்கடலோரேழுமொன்றாகிப்பரந்துமேற்பொங்கினுங்கொண்மூ வடுதிறற்பெருந்தீயுருமுவீழ்த்திடினுமணுத்துணையஞருமுட்கொளார்வெங் கடுமிடற்றமைத்தகண்ணுதற்பெருமான்கழல்கழலாதுள்வைத்திருப்பார். | 12 |
213 | வானமர்நறவுக்கற்பகநீழல்வாழ்பவன்றோற்றமுயிறப்புங் கானமர்கமலமலர்மிசைப்பொலியுங்கடவுடன்றோற்றமுமிறப்பு மூனமர்திகிரிவலனெடுத்துவணமுயர்த்தவன்றோற்றமுயிறப்புந் தானமர்காலமெனப்பலகண்டார்தவாதினும்பற்பலகாண்பார். | 13 |
214 | இருவினைப்பயனென்றுரைசெயப்பட்டவின்பமுந்துன்பமுமெய்தி னுருவினைவிடாமுன்னமைந்தனவேயென்றுவப்புறார்முனிதராரென்றுங் கருவினையொழிக்குஞ்செயல்செயலன்றிக்கருதுறார்பிறநகையிடத்தும் வருவினையருளினிரிதரக்காண்பார்மாசறுகாட்சியிற்பொலிவார். | 14 |
215 | என்னபல்பிறப்புந்துயரமேவிளைக்குமித்தகுபிறப்பறற்குபாயம் பன்னருமறையீறளப்பரும்பெருமான்பாதங்காணுதலதற்குபாய மன்னவன்விபூதிகண்மணிபுனைந்தோரைந்தெழுத்தெண்ணியாங்காங்கு மன்னவீற்றிருக்குந்தலப்புகழ்கேட்டுமனங்கொளலென்றுளந்துணிந்தார். | 15 |
216 | மொழிதருதவத்துச்சவுநகமுனிவன்முதற்பலமுனிவரர்குழுமி வழிதருமதுப்பூங்கொன்றையானுவக்குமாமகம்பன்னிரண்டாண்டிற் கழிதருமொன்றுபுரிந்தனரதனைக்காணியநீற்றொடுபரமன் விழிதருமணிபூண்முனிவரர்பலருமேவினாரம்முனிவரருள். | 16 |
217 | செங்கதிரகத்துப்பொலிந்ததென்றுரைத்தல்செய்யமெய்ஞ்ஞானமும்புறத்துத் தங்கவெண்மதியம்போர்த்ததென்றுரப்பத்தவலரும்விபூதியுமுடையோன் பங்கமில்பரமன்விழிமணிபூண்டுபரவெழுத்தைந்துமுட்கணித்துத் துங்கமாணவர்தங்குழாம்புடைசூழத்சூதமாமுனிவனும்வந்தான். | 17 |
218 | வந்தமாமுனியையிருந்தமாமுனிவர்மகிழ்ந்தெதிர்சென்றடிபணிந்து சந்தமாரிருக்கையழகுறவிட்டுத்தனித்ததன்மேலுறவிருத்திக் கந்தமாமலர்முற்கொண்டருச்சித்துக்கவின்றபாத்தியமுதலளித்துத் தந்தமாதரவிற்பணிந்தனரிருந்தார்சவுநகமுனிவரனுரைப்பான். | 18 |
219 | மறைமுழுதுணர்ந்துவகுத்துபகரித்தவாதராயணமுனிவரன்பாற் குறையறவுணர்ந்தவருட்பெருங்கடலேகோதிலாக்குணப்பெருங்குன்றே துறைபலதெரிக்கும்புராணமுற்றளந்துதொகைவகைவிரியினிற்றெரித்து மிறைதபுத்தருளுங்கற்பகதருவேவிமலவாழ்வேயெனத்துதித்து. | 19 |
220 | துன்னியகருணைச்சிவபிரானுவக்கத்தொடங்கினமொருமகமுடிப்பான் மன்னியவதுபோதனையனேயிரங்கிவந்தெனவந்தனையொருநீ முன்னியநினதுதரிசனமதனான்முடிந்ததித்தினஞ்சுபதினமாய் நன்னியமத்தேநானுமற்றியாருநன்மகமிம்மகமன்றோ. | 20 |
221 | ஓரிடந்தலமற்றோரிடந்தீர்த்தமோரிடமூர்த்திநீர்சூழ்ந்த பாரிடமதனிற்சிறந்ததாயிருக்கும்பகர்ந்தவோர்மூன்றன்மான்மியமு மோரிடஞ்சிறந்தேயிருப்பதெத்தானமுரைக்கினுங்கேட்கினும்விழைவு பாரிடங்குணிப்பக்குனிக்குநம்பரமன்பரிந்தருள்செய்வதெத்தானம். | 21 |
222 | எத்தலநினையிற்றருமமாமதனோடெத்தலமுரைக்கினன்பொருளா மெத்தலவங்காணினின்பமாமவையோடெத்தலம்வசிக்கின்வீடாகு மெத்தலமனாதிமுத்தனெம்பெருமானிடையறாதிருப்பதுமற்று மெத்தலமயன்மாலாதியர்போற்றியிறைஞ்சிடவெற்றைக்கும்பொலியும். | 22 |
223 | இத்தனைவளங்கண்முழுவதுமமைந்தவிருந்தலமொன்றுநீநவின்றா லத்தனையனையாயுய்குவமறைந்ததகலிடத்துண்டுகொலிலைகொன் முத்தனையவதுநன்கிருந்திடுமேன்மொழிந்தவெம்பாக்கியமாமாற் சித்தனையாதுதெளிதரவுரைத்திதேசிகோத்தமத்தவவென்றான். | 23 |
224 | தவத்துயர்பெருமைச்சவுநகமுனிவன்றன்மொழியகஞ்செவியேற்றுச் சிவத்துயர்கருணைச்சூதமாமுனிவன்செம்மனத்துவகையனாகிப் பவத்துயரகற்றுமிதுபகரென்றபடிநனிநன்றுநன்றந்தோ வவத்துயரிதுபோற்களைவதுபிறிதின்றகலிடத்தென்றுரைசெய்வான். | 24 |
225 | நெடியமாதவத்துச்சவுநகமுனிவநீவினாவியதுலகோம்பும் படியதாயெவர்க்கும்பேருபகாரப்பண்பதாய்நின்றதுகண்டாய் கொடியதாகியநஞ்சமுதுசெய்தருளாற்குவலயம்புரந்தாம்பெருமா னடியவாயடைதற்குபாயமீதன்றியாய்தரினும்பிறிதிலையே. | 25 |
226 | விழைவினீவினாயபடியெலாம்பொருந்திமேவுமோர்தலமுமுண்டதன்வாய்க் கழைகுலாஞ்சிலையோற்காய்ந்தவர்தமக்குக்கயிலையாதிகளினும்பிரியந் தழைதருமனையதலமிதுகாறுஞ்சாற்றியதிலையொருவருக்குங் குழைதருமனத்தினீவினாவியதாற்கூறுதுமனையமந்தணமே. | 26 |
227 | மிகுபுகழ்படைத்ததமிழ்வளநாட்டுண்மேதகுபாண்டியநாட்டிற் றகுபெருந்துறைக்குச்சற்றுமேற்றிசையிற்சாற்றுறும்யோசனையொன்றி னகுபொழிற்கானப்பேருக்கீசானநற்றிசையோசனையொன்றி னுகுதலில்சாலிவாடியூர்க்கழலோனுறுதிசையோசனையரையில். | 27 |
228 | ஒருதிருப்புத்தூர்க்குற்றகீழ்த்திசையினொன்றரையோசனையளவிற் பொருவருபுனவாயிலுக்கியைமருத்துப்புணர்திசையோசனையொன்றிற் றருவடர்பொழிலாடானைக்குவடபாற்றழைதிசையோசனையொன்றில் வெருவருவீரைவனத்திற்குத்தென்பால்விராந்திசையோசனையொன்றில். | 28 |
229 | மதுநதிவிரிசன்மாநதிமுறையேவடக்கினுந்தெற்கினுமொழுகப் புதுமதிமுடித்தான்றனக்கிடமாகிப்பொலிதருமொருதலமதன்பேர் முதுதவமருதவனமெனமொழிவர்முளைத்தொருமருதமர்திறத்தா லிதுவலாற்கண்டதேவியென்றொருபேரெய்தியதின்னமும்பலவால். | 29 |
230 | போற்றியநாமகாரணம்பின்னர்ப்புலப்படுமித்தலமேன்மை யூற்றியலமைந்தசுவையுடைக்காந்தத்துருத்திரசங்கிதையுரைக்குந் தேற்றியகானப்பேர்ப்புராணத்துஞ்செப்பியதுண்டிவையனைத்து மாற்றியதவத்தோய்கேண்மதியுரைப்பாமற்புதம்பயப்பதென்றறிமோ. | 30 |
231 | செறியொருமுகுர்த்தமெண்ணியுமிதன்மேற்சிறந்ததாயொருதலமுணரே மறிவுருவனையதலமகத்துவத்திற்காகரமாயதுமற்று முறிவினாற்பொருளுஞ்சேய்த்திருந்தகத்துமுன்னினுங்கொடுப்பதுகண்டாய் குறிகெழுமனையதலத்துமான்மியமுற்கூறுதுந்தொகுத்துளங்கோடி. | 31 |
232 | ஊழியுஞ்சலியாக்கயிலையங்கிரியினும்பர்தம்பிரான்றிருமுகக்கண் வீழியங்கனிவாய்வெண்ணகையுமையாண்மென்கரங்கொடுபுதைத்ததுவும் வாழியவனையானேவலிற்கழுவாய்வயக்கிடவுலகமுற்றுயிர்த்தாள் பூழியர்நாட்டினருச்சுனவனத்துப்புகுந்துமாதவம்புரிந்ததுவும். | 32 |
233 | வழிகெழுசண்டன்கொடுந்தொழிற்கஞ்சிமாலயன்முதலியோர்கயிலை யொலிகெழுகழற்காற்சிவபிரானேவவொருங்குவந்தளவிலாவளமை பொலிகெழுமருதவனத்திடைப்புகுந்துபூரணிதன்னைக்கண்டதுவுங் கலிகெழுசண்டாசுரனுயிரவியக்காளியைத்தோற்றுவித்ததுவும். | 33 |
234 | தேவியைமருதவனத்தமர்பெருமான்றிருக்கலியாணஞ்செய்ததுவுங் காவியங்களத்தோனருடலைக்கொண்டுகருதுருத்திரப்பெருமானு மோவியமனையாளுற்றமாமார்பத்தொருவனுங்கலைமகடவனும் வாவிமூன்றாங்குத்தனித்தனியகழ்ந்துவரமலிபூசைசெய்ததுவும். | 34 |
235 | நிறைபுகழ்க்கதிருமதியுமாங்கெய்திநெடுந்தடந்தனித்தனிதொட்டுக் குறையறப்போற்றிப்பூசைசெய்ததுவுங்கொடியவாளரக்கனோடமர்த்துச் சிறையிலியாயசடாயுபூசித்துத்திருத்தகுமுத்தியெய்தியது மறைவிதிப்படிகாங்கேயனோர்தீர்த்தம்வகுத்துறப்பூசித்தவாறும். | 35 |
236 | மற்றவன்பொருட்டுமருதமர்நிழல்வாழ்வள்ளல்பொன்மழைபொழிந்ததுவுங் கொற்றவெங்சிலைமான்றனைவதைத்ததுவுங்குளிர்சிவகங்கையின்சிறப்பு மற்றமிறலத்துப்பெருமையும்புகழ்சாலத்தலமான்மியமென்று கற்றவர்புகழுஞ்சூதமாமுனிவன்கனிவொடுதொகுத்தினிதுரைத்தான். | 36 |
237 | மன்னியதவத்துச்சவுநகமுனிவன்மற்றதுகேட்டுளமகிழ்ந்து மின்னியபுகழோய்தொகுத்துரைத்ததனைவிரித்துரைத்தருளியென்றிரப்பத் துன்னியவுவப்பிற்குசூதமாமுனியுஞ்சொற்றனனதனைமாதவத்தோர் பன்னியதமிழான்மொழிபெயர்த்தெடுத்துப்பாடுவான்றுணிந்தனனுய்ந்தேன். | 37 |
நைமிசைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 4-க்கு, திருவிருத்தம். 237.
------------
5. திருக்கண்புதைத்தபடலம். (238 -312)
238 | வண்டுதுற்றதாமரைமலர்மிசையமர்மறையோன் றண்டுசக்காம்வளைசிலைவாள்கொள்கைத்தலத்தோ னண்டுவண்பதத்தோற்றமுமிறுதியுமனந்தங் கண்டுநிற்பதுகண்ணுதல்வெள்ளியங்கயிலை. | 1 |
239 | அரவுகான்றசெம்மணிபலமேற்பொதிந்தலங்கப் பரவுமேன்மையிற்பொலிவரைபரம்பரனுதற்க ணுரவுசால்விழிச்செந்தழற்கொழுந்தகத்தொருதான் விரவுதன்மையைத்தெரித்ததுபோன்மெனவிளங்கும். | 2 |
240 | அகத்துவைகியசெந்தழல்புறஞ்சுலாயழற்ற மிகத்தழங்குபாற்புணரிமேற்பொங்கினாலொக்கு நகத்தழைந்தசெந்தளிர்ப்பொழில்சூழ்விராய்நண்ண மகத்துவம்பொலிந்தோங்கியவன்னமால்வரையே. | 3 |
241 | மருவுபாற்கடல்பொங்கிமேலெழுதரமாலு மொருவுறாதுமீமிசைக்கிடந்துறங்குவதேய்ப்பப் பொருவிலாதுயர்ந்தோங்கியவத்தகுபொருப்பின் றிருவலாஞ்சிகரத்துமாலுறங்குவசெறிந்தே. | 4 |
242 | அடிவறைத்தலைமடங்கறாழ்கந்தரமணையா முடிவிலாவருவித்திரளாரமாமோலி நெடியநாயகன்கோயிலாநிறைமதிகுடையாப் படியிலாவரசிருக்குமத்தகுபருப்பதமே. | 5 |
243 | எய்துமானிறக்கறுப்பன்றிக்கறுப்புவேறில்லை தையன்மார்நடுத்தளர்வன்றித்தளர்வுவேறில்லை வெய்யதங்கணனுதல்விழியன்றிவேறில்லை யையபாதவவஞ்சமன்றில்லைமற்றாங்கே. | 6 |
244 | பற்றுபேரிருண்முழுமையுமழிதரப்பருகிச் சுற்றுமேயசெம்மணிநடுச்சுடர்ப்பெருங்கற்றை செற்றுமால்வரைத்தோற்றமொண்செந்தழனாப்பண் மற்றுவெண்ணிறப்புனலெழுந்தமைவதுவயக்கும். | 7 |
245 | மிக்கபேரொளியவ்வரைவீற்றிருந்தருளத் தக்கவாதனமாகியதன்மைதேர்ந்தன்றோ மைக்கண்மெல்லியறழுவிடக்குழைந்தமெய்வானோன் கைக்கும்வில்லெனக்குழைந்ததோர்காமருபொருப்பு. | 8 |
246 | நறியபைம்பொழிலவ்வரைத்தியானஞ்செய்நலத்தாற் குறியமாமுனியொருகரம்மைத்தலுங்கோள்செ னெறியபாவமாயினதெனுங்கவலைநீத்துவப்ப வறியயாவருமழுந்தியதொருவரைபிலத்தே. | 9 |
247 | இறைவன்மேனியுமேனியிற்பூதியுமேற்ற பிறையுந்தும்பைமருக்கமுமனவும்பேணிறகு நிறையுமேறுமால்யானையும்வெள்ளெனநிலாவி யுறையுமவ்வரையுறுசுடர்மூழ்கலானன்றோ. | 10 |
248 | அன்னமால்வரைதனைத்தொழுவலிகுறித்தன்றோ மின்னவாவியமார்புடைவித்தகனொருகை முன்னமோர்வரையெடுத்திடமெலியதாமுடிந்து நன்னர்வான்குடையாயதுநானிலம்வியப்ப. | 11 |
249 | அயனையோர்மலர்சுமக்குமற்றரியைநீர்சுமக்கும் வியனிலாவுமிவ்வேதுவான்மெல்லியரவரே பயனிலாவுமிம்மால்வரைசுமத்தலிற்பரனே சயநிலாம்வலியோனெனிற்சாற்றுவதென்னே. | 12 |
250 | வானநாடவர்சூட்டியபொன்னரிமாலைக் கானமெங்கணுங்கிடப்பனகழித்திடவீழ்ந்து பேனவார்திரைப்பாற்கடற்பெருக்கமேற்பிறங்கி யானபற்பலாயிரந்துகிர்க்கொடிப்படர்வனைய. | 13 |
251 | பொலங்கொள்கற்பகப்புதுமணம்போர்த்தியபுரமு நலங்கொள்சத்தியவுலகமும்வைகுந்தநகரு நிலங்கொளவ்வரைக்கடிமையாய்நிகழ்தலின்றோ வலங்கொளப்பொலிதரலுடன்மாறுமாறுறினே. | 14 |
252 | உலகுபற்றுயிர்சரியையாதியவொருமூன்று மிலகுபொற்புறப்புரிதலவ்வரைகுறித்தென்னி லலகுமுற்றுறாவத்தகுமால்வரைப்பெருமை பலகுறித்துளத்தெண்ணினும்பாடமுற்றுவதோ. | 15 |
253 | வேறு. அன்னமால்வரைமேலாயிரங்கோடியவிரிளங்கதிரொருங்குதித்தா லன்னமாமதில்கோபுரங்கருக்கிரகமத்தமாமண்டபம்விமான மன்னமாநடையாராடரங்காதியாடகப்பசும்பொனான்மணியா னன்னகாவண்ணமமைத்ததம்மனையோடங்கணரினிதமர்கோயில். | 16 |
254 | அனையவான்றளியுளாயிரங்கரமுமாயிரங்கால்களாநிறுவிப் புனையவாங்கதிரேமேற்பரப்பாகப்பொருந்தியதென்னமண்டபமொன் றெனையநாவலரும்புகழமுற்றாததிலங்குமம்மண்டபநாப்பண் வினையம்வாய்ந்தவருமிற்றெனப்படாதமிளிர்மணிவேதியொன்றம்ம. | 17 |
255 | அத்தகுமணிசெய்வேதிமேல்விறல்சாலாளரியாகியஞான்று பொத்தியவகங்காரந்தவிர்த்தாண்டபுண்ணியந்தெரிந்ததுவிளைக்கும் வித்தகமலசத்தியுந்தவிர்த்திடுவான்விழைந்தரிமுழுவதுமரியா யுத்தமனடிகடாங்கினாலென்னவொளிர்மணிமடங்கலாதனமேல். | 18 |
256 | உருவுளொன்றாயும்விழியுளொன்றாயுமொளிவளர்தலைக்கலனாயு மருவியவிரதக்காலுளொன்றாயும்வைகிடமாயும்வீற்றிருப்பெற் கொரவரங்களங்கமொழியெனவிரப்பவொழித்தலுமுவந்தருடெரிப்பான் வெருவருமதியமுடிமிசைப்பொலியும்விதமெனவெண்குடைநிழற்ற. | 19 |
257 | அற்புதமுடிமேல்விரையிலாவருக்கமகற்றுபுதாம்வதிதருவான் பொற்புறமலர்வெண்டாமரைமலர்கள்புந்தியுற்றெழுந்திருபாலும் விற்பயின்மதிகண்டுறத்தலைகவிழ்ந்துமீளவுமெழுந்துழிதரல்போ லெற்பொலிபசும்பொற்பூணணிமடவாரிரட்டுசாமரைதலைபனிப்ப. | 20 |
258 | புலிதருசருமப்பிருதிவியரையிற்பொங்கொளியப்புவான்முடியி னொலிதருதழல்கைநுதற்கணினடியாருறுமலக்குரோதவானுளத்தின் மலிதருநம்போலெங்கணுங்கலந்துவயங்குவதில்லெனவுவந்து கலிதருசிவிறிவிடுவளியெழுந்துகமழ்திருமெனிமேற்றவழ. | 21 |
259 | திரிபுரமெரித்தாய்காலனைக்குமைத்தாய்சிலைமதனீறெழவிழித்தா யரிபிறப்பைந்திற்றண்டநன்குஞற்றியதண்முதலறிகுறிபூண்டாய் பரிகலமறையோன்றலையறுத்துவந்தாய்பற்பலதேவரென்பணிந்தா யிரிதரவசுரரளவிலர்ச்செற்றாயென்றுவந்தியர்விறல்பாட. | 22 |
260 | பலமுகமுழவமுதற்பலவியமும்படர்கணத்தவர்சிலரதிர்ப்ப நலமலிபணிலம்வயிர்குழல்பீலிநகுதுளைக்கருவிகள்பிறவுஞ் சிலகணமிசைப்பத்திவவியாழெடுத்துச்சிலர்நரம்புளர்ந்திசையமுத மலகறவூற்றவரம்பையர்முதலோரபிநயத்தொடுமெதிர்நடிப்ப. | 23 |
261 | சாரணரியக்கர்சித்தர்கந்தருவர்தக்ககிம்புருடர்கின்னரர்வெள் வாரணரமரர்தயித்தியரரக்கர்மடலவிழ்கமலம்வீற்றிருக்கு மாரணர்நறியபசுந்துழாய்ப்படலையலங்கியவிலங்கெழினிறத்து நாரணர்பிறருந்தலைமிசைக்கரங்கணன்றெழீஇக்குவித்தனர்நெருங்க. | 24 |
262 | குழிவிழிப்பிறழ்பற்குடவயிற்றிருண்மெய்க்குறுகுறுநடந்திடுகுறுத்தாட் பழிதபுத்தியங்குபாரிடக்குழுவும்பற்பலவயிரவர்கணமுங் கழியருட்கொடியசிறுவிதிமகத்தைக்கருக்கியவீரனுமறத்தை யழிவறக்காக்குமையனும்பிறருமணிமையினெருங்கினர்நிற்ப. | 25 |
263 | முனைவனங்குரவன்றிருமரபினுக்குமுதற்குருவாகியமுன்னோ னனைவரும்பரமசிவனெனப்புகழ்வராரருணிரம்புறப்பெற்றோன் றனைநிகர்கருணைநந்தியெம்பெருமான்றடங்கரச்சூரல்சற்றசைத்து நினையவரவர்தந்தராதரந்தெரிந்துநிறுத்துபுதிருமுனருலாவ. | 26 |
264 | கயமுகத்தவுணனுயிர்தபமாட்டிக்கடவுளர்பலரையும்புரந்த வயவொருமருப்புப்புகர்முகக்கடவுள்வலப்புறத்தினிதுவீற்றிருப்ப வியனமருலகமுழுதுமீன்றெடுத்தும்விளங்கருட்கன்னியேயாய கயன்மருள்கருங்கட்செய்யவாய்ப்பசுந்தோட்கவுரிமற்றிடத்துவீற்றிருப்ப. | 27 |
265 | ஒருவரைதாழ்த்திக்கொடுந்தொழிற்றகுவருடலெனும்பலவரையுயர்த்தி வெருவருமொருவாரிதியறச்சுருக்கிவிளம்பியதகுவர்மெய்நெய்த்தோர் பெருகியபலவாரிதியுறப்பெருக்கிப்பிறங்குமத்தகுவரைச்சாய்த்துப் பொருவில்வானவரைநிமிர்த்தவேடனக்கும்புண்ணியவுமைக்குநள்ளிருப்ப. | 28 |
266 | சடைமுடிநிலவுவெள்ளமுதொழக்கச்சற்பங்கள்காரமுதொழுக்க வடையொருகரமானுடையெனப்பொலியுமரைப்புலியஞ்சியதேய்ப்ப மிடைமிசைத்தாவவெள்ளியதரங்கம்விரிபுனல்கைத்தழலெழறேர்ந் துடைதரும்பொருட்டுக்கிழக்கிழிதரவேரொருங்கமைதிருமுகம்பொலிய. | 29 |
267 | புண்ணியநீறுநெற்றியிற்பொலியப்பொங்கிமேலெழுந்தழனோக்கந் திண்ணியபகைதேர்ந்தடங்கியதொளிரத்திருமுகக்கண்களோரிரண்டுங் கண்ணியகருணைமடைதிறந்தென்னக்கதிர்த்திடக்கரிசறுப்பவரே யெண்ணியகழலிற்கழலுறத்தனிவீற்றிருந்தனனெம்மையாளுடையான். | 30 |
268 | வேறு. காமருதிருவோலக்கங்கண்களிகொள்ளநோக்கித் தேமருவலரின்மேலான்றிகழ்மணிமறுவினோடு மாமருவலங்கன்மார்பன்வலனுயிர்குடித்ததோன்றல் பாமருவியசீர்மற்றயாவரும்படிந்தாரின்பம். | 31 |
269 | அவரவர்முறைப்பாடெல்லாமஞ்செவிநிறையவேற்றுத் துவர்படுசடிலத்தோன்றறூயநன்மொழியாற்கங்கை யிவர்முடியசைப்பானோக்குநோக்கினாலின்பமெய்தக் கவரருள்செய்துபோக்கிக்கவுரியோடெழுந்தானன்றே. | 32 |
270 | காந்தளம்போதிற்செய்யகமலமென்மலரேய்ந்தென்ன மாந்தளிர்மேனியம்மைவலக்கரமிடக்கைபற்றிப் பூந்தளிரடிப்பூமாயோன்புதல்வன்வாய்வைத்துக்காப்புற் றாய்ந்தபாதுகைமேற்சூட்டியந்நின்றுபெயர்ந்தானன்றே. | 33 |
271 | மரகதச்சுடரினோடுமாணிக்கச்சுடரெழுந்து பரவுறநடந்தாலென்னப்பயப்பயநடந்துசென்று கரவறவெதிர்தாழ்வோர்க்குக்கண்ணருள்வழங்கிப்புக்கான் குரவமந்தாரமாதிகுலவுபூந்தெய்வச்சோலை. | 34 |
272 | புண்ணியப்பொழிலினூடுபுகுதலும்பொழில்காப்பாளர் நண்ணியவிருப்பிற்போற்றிநயந்திருபாலுமோடித் தண்ணியமலர்களகொய்துதருந்தொறும்வாங்கிமோந்து துண்ணியமருங்குனாசிநுனையினுஞ்சேர்த்தாநின்றான். | 35 |
273 | அறிபொருள்செறியத்தோன்றுமான்றவர்கவிபோல்வித்துச் செறிகனிசுமந்துநிற்குந்தாடிமச்சிறப்புநோக்காய் குறிபருப்பொருளொன்றேய்ந்தசெய்யுளிற்குலவித்தோன்றும் பறிகனிசுமவாநின்றுபரந்தமுந்திரிகைநோக்காய். | 36 |
274 | மிகுபொருளமையக்கற்றும்வெளிப்படைசெய்யார்போல மிகுகனிமண்ணுட்கொண்டுவெளிசெயாப்பலவுநோக்காய் நகுபொருள்பலவுமியாருந்தெவ்வுறநயப்பார்போல நகுகனிபலவுமியாரந்தெவ்வவாழ்நன்மாநோக்காய். | 37 |
275 | தம்முடையாயுள்காறுநூலொன்றேசமைப்பார்போல விம்முகாய்க்குலையொன்றம்மவெளிசெயுமரம்பைகாணா யம்மபற்பலசெய்வாரினடர்பழக்குலைபல்கொண்டு செம்மையுமுயர்வுவாய்ந்துதிகழ்தருதெங்குகாணாய். | 38 |
276 | சிலகவியானுஞ்செய்துசெறிதருபயன்படாரா யலகறவுரைவிரித்துப்பயன்படுமவரையொப்பச் சிலகனியானுமீன்றுசெறிதருபயன்படாவா யலகறவலர்விரித்துப்பாடலமமைவநோக்காய். | 39 |
277 | ஒருகவியேதுக்கொண்டுபலவிரித்துரைப்பார்போன்றோர் மருவடிகொண்டுபற்பல்விரிந்தமாதவியைநோக்காய் பெருகியசெய்யுட்கோதம்பிறங்கிலக்கணமாறுற்றுக் கருதடியொன்றேகொண்டவஞ்சியைத்தெரியக்காணாய். | 40 |
278 | ஆன்றநின்கொங்கைபோலவரும்பியக்கொங்கைமேலாற் சான்றவொண்சுணங்குபோலத்தண்சுணங்கெழமலர்ந்தே யேன்றநின்பதத்துமென்மையெனப்பொலிபஞ்சிகாய்த்துத் தோன்றவிங்கமராநிற்குஞ்சொற்பொலிகோங்கம்பாராய். | 41 |
279 | ஏயுநின்மேனிவண்ணமெனப்பசுந்தளிர்களீன்ற யாயும்வெண்ணகையின்வண்ணமாமெனவரும்புகான்று சாயுநுண்மருங்குல்வண்ணமெனத்தளர்தொசிவதாகித் தோயுமென்குணத்தமுல்லைக்கொடிபலதுவன்றல்காணாய். | 42 |
280 | எனப்பொழில்வளத்துட்சில்லவிமயமீன்றெடுத்தபாவை தனக்கினிதியம்பியெங்கடம்பிரானங்கண்மேய மனக்கினிதாயசெம்பொன்மண்டபத்தினிதுமேவி யுனற்கருமுவப்பிற்சிங்கவொளிரணையிருந்தான்மன்னோ. | 43 |
281 | அண்ணலவ்வாறுமேவமற்றவனனுஞைபெற்று வண்ணமென்மலர்கள்கொய்வான்மலைமகளாயவன்னை யெண்ணருமிகுளைமார்களேவலினுவந்துமேவக் கண்ணகனாங்கோர்பாங்கர்க்கயிற்சிலம்பொலிக்கச்சென்றாள். | 44 |
282 | உந்தியின்வனப்பைவவ்வியொளித்தனவென்றுதேர்ந்து முந்தியமௌவல்கொய்துமுளையெயிற்றழகுவவ்வி யந்திலிங்கொளித்ததென்றுதளவரும்படங்கக்குற்றுஞ் சந்தணிகொங்கைநங்கைவேறிடஞ்சாரச்சென்று. | 45 |
283 | படர்வளியலைப்பத்தேம்பிப்பற்றுக்கோடின்றியொல்கு மடர்பசுங்கொடிகட்கெல்லாந்தனித்தனியவிர்கொம்பூன்றித் தொடர்புசெய்திடுமினென்றுதோழியர்சிலரையேவி யிடர்தபுத்தெம்மையாளுமேந்திழையந்நின்றேகி. | 46 |
284 | மற்றொருபாங்கரண்மிமணங்கமழ்ந்திங்குமேய பொற்றபாடலத்தின்பூவும்புதுமதுப்பொழியுங்கோங்குஞ் செற்றமந்தாரப்பூவுஞ்செறிதரக்கொணர்மினென்றே யுற்றவர்சிலரைப்போக்கியந்நின்றுமுவந்துசென்று. | 47 |
285 | வேறுமோரிடத்தையண்மிமென்புனலகத்துப்பூத்த நாறுசெங்கழுநீர்நீலநக்ககோகனகமின்ன கூறுகொண்டணைமினென்றுகூடநின்றவரையேவித் தேறுநர்க்கருளந்தேவிதனித்தனடிருமினாளே. | 48 |
286 | மதிமுடிக்கணவற்சாரும்வாஞ்சையின்வருபிராட்டி திதியமைபாண்டிநாடுசெய்தமாதவத்தின்பேற்றால் வதிமருதவனச்சீர்த்திவானமும்பொதிர்த்துச்செல்ல வதிரருமகிழ்ச்சியாலேயாடலொன்றகத்துட்கொண்டு. | 49 |
287 | பாதசாலங்களெல்லாம்பாதமேற்செலவொதுக்கி யோதருங்காஞ்சியாதியுத்தராசங்கங்கொண்டு மேதகமரங்குல்யாத்துமென்மெலநடந்துபின்போய்ப் பூதநாயகன்முகக்கண்புதைத்தனண்மலர்க்கைகொண்டு. | 50 |
288 | நிறைகலைமதியத்தேவேநிகழ்கதிர்த்தேவேநீவி ரிறையவன்முகத்துக்கண்ணாயிருக்கினும்விடேம்யாமென்று கறைமுகில்கரங்கணீட்டிக்கதுமெனமறைத்ததொக்கு மறைபெரும்புவனமின்றாளையர்கண்புதைத்தகாட்சி. | 51 |
289 | மூராரியென்றுரைக்கும்பெண்யான்முதலைநீங்குபுதனித்து விராம்வனத்துறைவதோர்ந்தும்வெளிப்பட்டுமறைந்தும்வாட்ட லிராவகையொழிப்பவின்றேயென்றவண்மறைத்ததொக்கும் புராதனர்முகத்துநாட்டம்புராதனிமறைத்தகாட்சி. | 52 |
290 | மறைமொழியிகந்தபாவிமகத்தவியுண்ணப்புக்கு முறைதிறம்புற்றுமையன்முகத்துவீற்றிருந்துநாளு மறைதரவிளங்கலொல்லாதவிரிருகதிர்காளென்று பிறைநுதல்சினந்துபொத்தும்பெற்றியும்பொரூஉமக்காட்சி. | 53 |
291 | அடியவருளத்துநீங்காவருட்பிரான்முகத்துநாட்டங் கடியமைக்குழலிவ்வாறுகரங்களாற்புதைத்தலோடு நெடியபல்புவனமுற்றுநிறைந்தபல்லுயிருஞ்சாம்பக் கொடியகேவலமேயென்னக்குருட்டிருள்பரந்ததம்மா. | 54 |
292 | எண்ணருநாள்கடோறுமெழுந்துதற்காயாநிற்கு மண்ணலங்கதிர்கடம்மையடர்த்திடவலியிலாமை யொண்ணலமின்றித்தேம்பியொடுங்கியவந்தகாரந் தண்ணமுதனையாள்செங்கைத்தலங்களைப்புகழ்ந்ததன்றே. | 55 |
293 | தெறுபகையொழிந்ததென்றுசெறிந்தெழுமிருளோடொத்துக் கறுவுநம்பகையுந்தீர்ந்துகழிந்ததென்றுவப்புமேவி மறுவறவிதுசெய்தாட்குமாறெவன்செய்வாமென்று குறுநகைச்செவ்வாய்மாதைக்கூகையும்புகழ்ந்ததம்மா. | 56 |
294 | செய்யதாமரைநேர்நாட்டச்செல்வனுமெண்கணானு மையவாயிரங்கணானுமிமைப்பிலாதமர்விண்ணோரும் வெய்யவாளவுணர்சித்தர்விஞ்சையர்முதலோர்யாரு மொய்யவாமிருள்வீக்கத்தான்மூட்டமொத்திருந்தாரன்றே. | 57 |
295 | வெருவில்பாதலத்துநாளுமேவிவாழுலகரெல்லா மிருபுலன்கவராநிற்குமேற்றமார்நமதுகண்க ளொருபுலன்கவருமற்றையொருபுலன்கவர்ந்ததில்லை மருவுகாரணம்யாதோவென்றெண்ணினர்மயங்காநின்றார். | 58 |
296 | மம்மருற்றுயிர்களெல்லாமின்னணமயங்காநிற்ப வம்மவென்செய்தாள்பேதையாயினார்போலவென்று செம்மலெம்பெருமான்வலலேதிருவுளத்திரக்கம்பூண்டு விம்முசெந்தழனுதற்கண்டிறந்தனன்றிமிரம்வீய. | 59 |
297 | நுதல்விழிதிறத்தலோடுநோக்கியவெம்பிராட்டி விதலையுற்றஞ்சியென்னாய்விளைந்ததென்செய்தாமென்று முதலவனெதிரேவந்துமுன்னுறாதிழைத்தகுற்ற மதலையாய்பொறுத்தியென்றுவணங்கினளெழுந்துநின்றாள். | 60 |
298 | திருவடிவணங்கிநின்றசேயிழையணங்கைநோக்கிப் பொருவருங்கருணைமூர்த்திபுண்ணியப்பூங்கொம்பன்னா யொருவருமுயிர்கண்மம்மருழந்திடநீயென்செய்தாய் மருவுநித்தியமுன்னாயகருமங்கண்மாய்ந்தவன்றே. | 61 |
299 | நீள்வரியறலைவென்றநிறைகுழற்கொம்பனாய்நம் வாள்விழிபுதைத்துவிட்டவரையறைகணமேயேனு மாள்செய்பல்லுயிர்க்குமூழியாயிற்றேயனையதாய மூள்வருபாவநின்மேற்றன்றியார்முகந்துகொள்வார். | 62 |
300 | எண்ணரும்பாவமேனுமிரித்தருள்கொழிக்கவல்ல கண்ணருநமதிலிங்கபூசனைகைக்கொண்டன்றிப் பண்ணருங்கழுவாய்வேறுபகர்ந்திலமனையதாய நண்ணருங்கழுவாயாற்றினாம்வந்துகலப்பேமென்றான். | 63 |
301 | என்றலும்பிரியாத்தேவிபிரிவதற்கிரங்கியேங்கி யொன்றியபிரிவாற்றோன்றுமச்சமுமுஞற்றுபூசை நன்றியல்சிறப்பாற்றோன்றுமன்புநன்கிருபாலீர்ப்பத் தன்றுணைப்பெருமான்றுாளிற்றாழ்ந்தெழுந்திதனைச்சொல்வாள். | 64 |
302 | அடிகளோடடியேனாற்றுமாடலைக்கருதியன்றோ தொடியவாங்கரத்தாற்கண்கள்புதைத்ததுசொல்லொணாத கொடியதீவினையாய்வந்துமுடிந்ததுகூறலென்னே கடியதாம்பிரிவையுன்னிநெஞ்சகங்கலங்காநின்றேன். | 65 |
303 | எவ்விடத்தடியேன்சென்றுபூசனையியற்றாநிற்ற லெவ்வமுற்றொழியநீவந்தருளுநாளெந்நாளென்று கௌவையிற்றேவிநெஞ்சங்கரைந்துவிண்ணப்பஞ்செய்யக் கௌவையிற்கடனஞ்சுண்டோன்கனிந்திஃதருளிச்செய்வான். | 66 |
304 | மங்கைநீயஞ்சேனின்னைப்பிரிந்தியாம்வழங்கலில்லை துங்கமார்பரதகண்டந்துற்றமர்பன்னாட்டுள்ளுஞ் சிங்கலிறமிழ்நாடொன்றேசிறந்ததந்நாட்டினுள்ளும் பங்கயப்பழனஞ்சூழும்பாண்டிநாடுயர்ந்ததாமால். | 67 |
305 | அத்தகுபாண்டிநாட்டுளருச்சுனவனமென்றொன்று வித்தகமாயதானம்விருப்பமிக்குடையேமன்ன வுத்தமதலத்திலியாமேயாதலாலுங்கணெய்திச் சித்தம்வைத்தருச்சிப்பார்க்குவிரைந்தருள்செய்தல்கூடும். | 68 |
306 | ஆதலாங்கணெய்தியருச்சனையாற்றினொல்லைக் காதலாலருள்வோமியாம்வந்தென்றனன்கருணைமூர்த்தி போதெலாம்பொலியுங்கூந்தற்பொற்கொடியிருகைகூப்பி மாதர்சாலனையதானத்தெல்லையைவகுத்தியென்றாள். | 69 |
307 | தன்னுயிர்த்தேவிவேண்டத்தம்பிரானருளிச்செய்வான் றென்னுயிர்த்தழகுவாய்ந்ததிருப்பெருந்துறைக்குச்சற்றே மின்னுயிர்த்தனையாய்மேற்கில்விரிபொழிற்சாலிவாடி யென்னுயிர்த்தலத்திற்குத்தென்கீழெனவிசைக்குந்திக்கில். | 70 |
308 | மன்னியவளஞ்சால்வீரைவனத்திற்குத்தெற்குவாய்மை மின்னியதிருவாடானைத்தலத்திற்குவடக்குமேலோர் பன்னியவொருதேனாறும்பகர்தருவிரிசலாறுந் துன்னியவடக்குந்தெற்குந்துன்னவுற்றுளதத்தானம். | 71 |
309 | அத்தகுபெருந்தானத்தினருச்சுனவலிருக்கநீழ லுத்தமவிலிங்கமாகியொளிருவோம்வன்மீகத்துள் வித்தகநீயங்கெய்திமேதகுருபூசையாற்றிற் சத்தறிவின்பயாம்வந்தருளுதுஞ்சார்தியென்றான். | 72 |
310 | என்றருள்புரிந்துபெம்மானிரும்பொழிலிருக்கைநீத்து மின்றிகழ்பேரத்தாணியகத்தெழுந்தருளிமேவி யொன்றவந்திரப்போர்க்கெல்லாமருள்சுரந்துறைந்தானிப்பான் மன்றலங்குழலாள்கூடத்தொடர்ந்தனண்மாதர்சூழ. | 73 |
311 | நாயகனிருக்கைசார்ந்துநளினமென்பதத்திற்றாழ்ந்து தூயநல்விடையும்பெற்றுத்துவன்றியகணங்கள்சூழப் பாயதென்னாடுசெய்தபாக்கியப்பேற்றாலம்மை யாயமென்மருதவைப்பையணைவதற்குள்ளங்கொண்டாள். | 74 |
312 | இன்னநற்காதைகேட்டுமிண்டையாதனத்தினானைப் பன்னகப்பாயலானைப்பானுவைமற்றையோரை யுன்னரும்பிரமமென்பாரொள்ளியவாயும்வாழ்க நன்னர்கொணாவும்வாழ்கவென்றுமேனவிலலுற்றான். | 75 |
திருக்கண்புதைத்தபடலம் முற்றிற்று.
ஆக படலம் 5 -க்கு திருவிருத்தம். 312.
------------------
6. தேவிதவம்புரி படலம். (313 - 362 )
313 | பன்னியெவருந்தழுவுபாண்டிவளநாட்டு மன்னியவருச்சுனவனம்புகுதும்வாஞ்சை முன்னியெழவேழுலகுமுற்றுமினிதீன்ற சுன்னிதலைமீதுகுவிகையொடுமெழுந்தாள். | 1 |
314 | வாழியறமோம்புமலைமங்கையெழலோடும் வீழிபொருவாயெழிலனிந்திதைமுன்மேய தோழியரெழுந்தனர்துவன்றிமகிழ்துள்ளிக் காழ்வலியமைந்துயர்கணங்களுமெழுந்த. | 2 |
315 | குடைகவரிசாமரைகொழுஞ்சிவிறிபிச்ச மிடையொலியறோரணம்விரும்புவடவட்டந் தடையறநெருங்கினதடாரிபணைதக்கை யுடைகடன்முழங்குமுழவாதிகளொலித்த. | 3 |
316 | சங்குவயிர்பீலியுறுதாரைகணரன்ற நங்குதவிர்வீணையினரப்பொலியெழுந்த மங்குதலில்கஞ்சவொலியாதிகண்மலிந்த பொங்குமறைவாழ்த்தொலிபொலிந்துதிசைபோர்த்த. | 4 |
317 | பன்னரியசெங்கதிர்பலப்பலதிரண்டா லன்னதொருதிப்பியவிமானமெதிரண்ணப் பொன்னகரவாணர்பொழிபூமழையின்மூழ்கித் தன்னனையதாய்மகிழ்தலைக்கொளலிவர்ந்தாள். | 5 |
318 | ஏவறலைநிற்குமடமாதருமிவர்ந்தார் காவலமைகூன்குறள்கனன்றுமுனெழுந்த வோவவிலதாவிருதுமாகதருரைப்ப நாவலர்சொறென்றிசைநடத்தினள்விமானம். | 6 |
319 | வடாதுதிசைநின்றுயர்தெனாதுதிசைவாஞ்சை படாதமகிழ்வோடெழுபருப்பதமடந்தை தடாதவலியோனமர்தலந்தொறுமணைந்து விடாநசையினேத்துபுவிமானமிசையுய்ப்பாள். | 7 |
320 | காசியையடைந்துவிரிகங்கைநதிமூழ்கிப் பூசியவிபூதியொடுபுண்டரிகன்மாயோன் பேசியபுகழ்ப்பரமர்பெய்கழல்வணங்கி யாசில்பலநாடுநதியாவையுமிகந்து. | 8 |
321 | தண்டையெனநெல்விளைதடம்பணையுடுத்த தொண்டைவளநாட்டுமகிழ்துன்றிடவணைந்து கண்டைவிடையானமர்கவின்பொலிதலந்தோ றிண்டைமலராதிகொடுபூசனையியற்றி. | 9 |
322 | நாடுபலபோற்றுநடுநாட்டகநுழைந்து காடுபடுசெஞ்சடையர்காமர்தலமெல்லா நீடுபெருகன்புநிகழப்பெரிதுபோற்றி யாடுமயிலன்னவியலாவயினகன்று. | 10 |
323 | பொங்குபுனறங்குபொருபொன்னிவளமன்னி யெங்குநிகழ்சோழவளநாட்டினிடையெய்தித் தங்குபலவாகியதலந்தொறுமிறைஞ்சிக் கொங்குமலர்தூயதுகடந்துகுறிகொள்வாள். | 11 |
324 | வெடிகெழுவராலெழுபுமேகமிசைபாயும் படிகெழுதடங்கள்பொலிபாண்டிவளநாட்டுத் துடிகெழுமருங்குலொருதோகையடைகுற்றாள் வடிகெழுமலர்த்தொகுதிவானவரிறைப்ப. | 12 |
325 | ஆங்குமருவந்தலமனேகமும்வணங்கிப் பாங்குபெறுகோனுரைகுறிப்படிபடர்ந்து தீங்குதவிரன்புநெகிழ்சிந்தையுணிரம்ப வோங்குநலருச்சுனவனத்தினருகுற்றாள். | 13 |
326 | மதுநதியுமான்மியம்விழாவிரிசலென்னு முதநதியுநாயகன்மொழிந்தபடிகண்டாள் சதுமுகன்முன்னோர்தொழுதலங்களொருநான்கும் புதுமையுறநாற்றிசைபொலிந்துறுதல்கண்டாள். | 14 |
327 | இறைவனுரைசெய்தலமிதேயெனமதித்து நிறையொளிவிமானமிசைநின்றுடனிழிந்து குறையறுகணங்கண்முதலோர்குழுமியேத்தப் பொறைகெழுமடந்தைபுவிபோந்தனள்பணிந்தாள். | 15 |
328 | வேறு. பணிந்தெழந்துபராவிக்கரங்குவித் தணிந்தபாங்கியரியாருமணைதரத் துணிந்தவென்றிக்கணங்களுஞ்சூழ்வரத் தணிந்தசாகையத்தாழ்வனம்புக்கனள். | 16 |
329 | செல்லச்செல்லச்சிவானந்தமூற்றெழ வொல்லற்காயவுரோமஞ்சிலிர்த்திட மல்லற்றோகைமயில்பலவற்றையும் வெல்லற்காம்பலவிம்மிதநோக்குவாள். | 17 |
330 | பகலெலாம்பன்மரத்தோடொன்றாயிருந் திகலிலாவிரவெய்திடும்போழ்தினிற் புகரிலாவழல்பொங்கியதொத்தொளிர் நிகரிலாதநெடுந்தருவோர்புறம். | 18 |
331 | இளமரத்தின்கனைப்பங்கெழுந்தொறுங் களமிலாவிளங்கன்றுகனைத்ததென் றுளநெகிழ்ந்துகனைத்துறமேதியவ் வளநிலம்புகுமாட்சியுமோர்புறம். | 19 |
332 | கொம்பரேறில்வெண்கோட்டுக்களிறுமா வம்பொற்றேர்முதலாகியவற்புத மும்பராரும்வியப்பவுண்டாக்கிடும் வம்பறாததருவொருமாடரோ. | 20 |
333 | பட்டகட்டையிற்பாதுகைசெய்ததி லொட்டவேறினுடனும்பரார்பதிக் கிட்டமாகவெழுந்துகொடுசெலுங் கட்டமில்லாத்தருவொருகண்ணெலாம். | 21 |
334 | உறவிளைத்தவுடம்புடையார்களு முறவடுப்பினுதிப்பவளாரினா லுறவடித்துமறலியுறுநக ருறவிடுக்குந்தருவுமொருபுறம். | 22 |
335 | அடித்துமோதியலைக்குந்தருவொரீஇத் துடித்தயற்புறந்துன்னினச்செல்லலை நொடித்துவல்லையுயச்செயுநோன்றருப் பிடித்துமேவப்பிறங்குமொருபுறம். | 23 |
336 | ஆயைநீத்தவமலன்றிருவருண் மேயையாலெத்தவம்விளைத்தாய்கொலிம் மாயைநீத்தவடிவமுறற்கெனச் சாயைநீத்ததருவுமொருபுறம். | 24 |
337 | எந்தநோயினிடர்ப்படுவார்களு முந்தவந்துபரிசித்துமோப்பரே லந்தநோய்நரையாதித்துயரொடுஞ் சிந்தநல்குந்தருவுஞ்செறியுமால். | 25 |
338 | கவலைவெம்பசிகாற்றுஞ்செயலிலார் திவலைபாலுணிற்றிங்களோராறள வுவலைபோன்றவுடம்பைவருத்துமத் தவலைநீக்குந்தருவுமொருபுறம். | 26 |
339 | அன்னபேதியகிலமவாங்கருஞ் சொன்னபேதிசுடுவிடத்திற்கமு தன்னபேதியூன்பேதியவைமுதற் சொன்னபேதித்தருக்கடுவன்றுவ. | 27 |
340 | போற்றுநீர்நிழல்போலப்பொலிதரு மேற்றுவார்கொடியெந்தைகொலோவெனச் சாற்றுமேன்மைதனைப்பிறர்காணுறத் தோற்றுறாததருவுந்துவன்றுவ. | 28 |
341 | கருநிறத்தவுங்காலையிளங்கதிர் பொருநிறத்தவுமாகிப்பொலிதரு திருநிறத்தவிர்சித்திரமூலங்கள் வருநிறத்தவ்வனத்தொருபாலெலாம். | 29 |
342 | வெட்டுகின்றநலியம்விளங்கொளி பட்டுமல்கும்பசியபொன்னாயுறு முட்டுநீக்கமுகிழ்க்குந்தருக்களும் பெட்டுநிற்கும்பிறங்கியோர்பாலெலாம். | 30 |
343 | வேறு. இன்னவாயவளம்பலவெங்கணுநோக்கின ணன்னரற்புதமற்புதமென்றுநயந்தனண் முன்னருஞ்சிவலிங்கமுகிழ்த்தவருச்சுன மன்னநின்றதெங்கன்றுதுருவினள்வல்லியே. | 31 |
344 | அன்னமென்னடையாடுருவிச்செலுமாயிடை யென்னரும்புகழ்கின்றவருச்சுனமென்பது நன்னர்மேயசெழுமையிளமைநலங்கொடு முன்னர்நின்றதுகண்டனளின்பமுகிழ்த்தெழ. | 32 |
345 | வானமுட்டவெழுந்ததருக்கண்மலிந்தவிக் கானமுட்டறுமாலயமாகக்கவின்றதா லீனமுட்டறவெண்ணினர்க்கும்மருள்சூக்கும மானமுட்டிலருச்சுனமென்றுவியந்தனள். | 33 |
346 | தேவியங்ஙனஞ்செப்பிவியந்ததிறத்தினா லோவிலாதுசிறுமருதூரென்றுரைப்பராற் காவிமேயகழிக்கடல்சூழுநிலத்தவர் பாவியத்தருநோக்கினும்பண்ணவனாவனே. | 34 |
347 | அன்னதாருவையங்கைகுவித்தடிநோக்கினாண் முன்னமாலயன்காணரிதாயமுழுமுதன் மன்னமேயவன்மீகமுங்கண்டுவணங்கின ளின்னவற்புதங்கண்டறியேனெங்குமென்றனள். | 35 |
348 | செய்யதாமரைமேலுறைநான்முகச்செம்மலும் பையராவணைமேற்றுயில்செங்கட்பகவனு மையவின்னமுநாடருஞ்சிற்பரவற்புதன் வெய்யவெற்கெளிதாயினனென்றுவியந்தனள். | 36 |
349 | பூசையாற்றும்விருப்பமுளத்துப்பொலிதர மாசைநீத்தமணியிற்பொலிந்துவயங்கரு ளீசைமேற்றிசையெய்தியோர்தீர்த்தமுண்டாக்கின ளோசைகூர்சிவகங்கையையங்கணுறுத்தினள். | 37 |
350 | இன்னதீர்த்தப்பெயர்சிவகங்கையென்றிட்டனள் சொன்னநூல்விதிபோற்றியத்தீர்த்தந்துளைத்தனண் மன்னநீறுபுனைந்தொளிர்கண்மணிமாலையு மன்னமென்னடைபூண்டலர்கொய்யவெழுந்தனள். | 38 |
351 | தோழிமாருமத்தீர்த்தந்துளைந்துவெண்ணீறணிந் தாழிபோலுமருட்பரைபாங்கரடுத்திட வாழிவாய்ந்தபிடகைமலர்க்கரந்தாங்கியே யூழிநாளுமுலப்பருநந்தனத்துற்றனள். | 39 |
352 | வேறு. நந்தியாவட்டமலரிபுன்னாகஞாழன்மந்தாரமொண்வகுளங் கொந்தவிழ்செருந்தியசோகுகூதாளங்கொழுமலர்வழைகன்னிகாரங் கந்தமார்கடுக்கைபாடலங்கொன்றைகருதுவெட்பாலைசெவ்வகத்தி முந்தியவேங்கைகொக்குமந்தாரைமுகித்தபொன்னாவிரைவெட்சி. | 40 |
353 | மருவுபொன்மத்தமாதளைபட்டிமராமலர்பருத்திசெவ்வரத்தம் பொருவருகாஞ்சிகடம்பெருக்கழிஞ்சில்புரசுபன்னீர்திருவாத்தி கருநிறச்செம்பைதுரோணம்வெள்ளிலோத்தங்கண்டங்கத்திரிவழுதுணைமா வொருவருங்கூத்தன்குதம்பைநற்றாளியொள்ளியகுராமலர்கோட்டம். | 41 |
354 | கரைதருவில்வஞ்சதகுப்பைதிருமால்காந்திபச்சறுகொளிர்வன்னி யுரைதருநாவல்செவ்வந்திதுளசியோங்குவெண்காக்கணம்பூளை விரைதருபச்சைகருவிளங்காசைவிருப்புறுகாரைசெங்கீரை வரைதருதருப்பைமருதிருவேலிமருவுநீர்முள்ளிமாதவியே. | 42 |
355 | தூவிலாமிச்சவேர்வெட்டிவேரொண்சூரியகாந்திமஞ்சணாத்தி தாவிலாநரந்தமெலுமிச்சைபாரிசாதகமுறுபுலிதொடக்கி மேவியகிளுவைசந்தனநாணல்வெள்ளின்மாவிலிங்கநாயுருவி பாவியவிதழொன்றுடையதாமரையெட்பசுமலர்கொட்டையங்கரந்தை. | 43 |
356 | நெல்லியொண்கரந்தையிலந்தைசிந்துவாரநீர்மிட்டான்கேதகைவாகை சொல்லியகுச்சிப்புல்கருங்காலிதோன்றிசாலிப்பயிர்தான்றி மெல்லியகுருந்துமருமருக்கொழுந்துவெற்றிலைமல்லிகைமயிலை நல்லியற்குளவிகுமுதமென்குவளைநளினமற்றிவைமுதற்கொய்து. | 44 |
357 | சுவைபடுகனிகளுள்ளனகவர்ந்தூயநன்மருதடியடைந்து செவையுறமுகந்துதோழியர்கொடுக்குஞ்சிவகங்கைமஞ்சனமாட்டி நவையறவாய்ந்தபூமுதற்பலவுநன்மனுப்புகன்றுறச்சூட்டிக் குவைபடுகனிகளூட்டிவன்மீகக்குழகனைப்பூசனைபுரிந்து. | 45 |
358 | திருந்துவன்மீகந்தனக்கியல்வடகீழ்த்திசையுறுகாடுமுற்றகழ்ந்து பொருந்துபல்கணங்களியற்றிடப்பட்டபுனிதமாம்பன்னசாலையின்க ணருந்துதெள்ளமுதுநஞ்சமாக்கொண்டவண்ணலார்திருவுருநினைந்தே யிருந்தனள்புவனத்துயிரெலாம்வருந்தாதீன்றுகாத்தருளுமெம்பிராட்டி. | 46 |
359 | புற்றிடங்கொண்டசிவலிங்கப்பெருமான்பூசனைகாலங்கடோறும் பற்றிடங்கொண்டவன்பொடுபுரிந்துபன்னசாலையினினிதமர்ந்து கற்றிடங்கொண்டகருத்தினர்கருத்திற்கழலுறாக்கழலகத்திருத்தி மற்றிடங்கொண்டவுலகமுற்றுயிர்த்தாள்வைகலுமமர்பவளானாள். | 47 |
360 | மலர்மணமெனவுமணியொளியெனவுமதுச்சுவையெனவுமுற்றுணர்ந்த பலர்புகழ்பெருமானிடத்தகலாதபாவைமாதவம்புரிபண்பா லலர்செறியனையவனத்தரிக்குருளையானைக்கன்றோடளவளாவு முலர்தலிலுழுவைமுலைபொழிசுவைப்பாலுணங்குமான்கன்றினையருத்தும்.< | 48 |
361 | கொடுவெயிலுடற்றநெளியராக்குருளைகுளிர்நிழல்பெறச்சிறைவிரித்துக் கடுமுரட்கலுழன்மீமிசைப்பயிலுங்கருப்பைகளுணங்குறாவண்ணம் படுவிடப்பாந்தள்பரூஉப்பணம்பைக்கும்பைம்புதலிடையகப்பட்ட வடுவறுமானமானுடையுரோமம்வானரமெலவிடுவிக்கும். | 49 |
362 | பட்டபன்மரமுநனிதழைத்தரும்பிப்பண்புறக்காய்த்துறப்பழுத்த துட்டபல்விலங்குமியங்குவார்க்கியன்றதொழிற்றலைநின்றுபகரிப்ப கட்டமிலனையபுதுமைமுற்றளந்துகட்டுரைத்திடுநருமுளரோ வட்டவொண்சடையாய்தெரிதியென்றுரைத்துமாதவச்சூதன்மேலுரைப்பான். | 50 |
தேவிதவம்புரிபடலம் முற்றிற்று.
ஆக படலம் 6-க்கு திருவிருத்தம். 362.
-------------------
7. தேவியைக்கண்ணுற்றபடலம். (363-412 )
363 | அறிதருநெறிதழுவுநராயவமரர்கண்மனநிலையழிவெய்தக் குறிதருகொடுவினைநனியாற்றுங்கோணைவல்லவுணர்கள்களியெய்தச் செறிதருபிறவுயிர்களும்வாடித்திசைதிசைநிலைகுலைதரமுன்னா ளெறிதருபெருவலிமிகுசண்டனென்றொருதானவனுளனானான். | 1 |
364 | எரிவடவனல்குளிர்தருகண்ணானிகலுருமொலிநிகர்குரலுள்ளான் வரிகழலொலிகழல்வலிமிக்கான்வடவரைகவிழ்தருதிணிதோளான் றரியலர்பிறகிடநகைசெய்வான்சலதியினிலையெனுமுருவத்தான் கரிபரியிரதமெய்வலிவீரர்கடல்பலவெனவளைதரவுற்றான். | 2 |
365 | பொருவலியவுணர்கள்பலர்சூழப்புகரெனுமொருகுரவனையுற்றுத் திருகறவருள்செயுமடிகேணின்சேவடிசரணெனவடைகுற்றேன் மருவியவொருகதியிலிநாயேன்வாழ்வகையருளிதியெனத்தாழ்ந்தான் கருதியகுரவனுமெழுகென்றுகருணையின்முகமலர்ந்திதுசொல்வான். | 3 |
366 | வலிமிகுவானவர்நினக்கையமாற்றலராயினுமென்னாவ ரெலிபலகூடினுமொருநாகமெறியுமுயிர்ப்பினிலறமாயும் பொலிதருபனிவரைப்பாலண்மிப்புரிசடைக்கடவுடனடியுள்ளி மலிதவமியற்றினவ்வருளாளன்வந்துவரம்பலநல்குவனால். | 4 |
367 | இமையவர்மாற்றலராதலினீயியற்றுதவத்தினுக்கிடையூறே யமைதரவாற்றுவரவைக்கேதுமஞ்சலையெஞ்சலிறவமோங்க வுமையொருபாலுடைப்பெருமான்வந்தொல்லையினருளுவனுறுசெல்வஞ் சமைதரவோங்கிடுமின்னேநீதாழ்க்கலைநடமதியென்றனனால். | 5 |
368 | என்றருளாரியனடிபோற்றியெழுந்தனனிமவரைப்பாற்சென்றான் பொன்றலில்மனவலியுடையோனாய்ப்பொறிவழிச்செலவுமுற்றறவோப்பி மன்றவெழுந்தழல்சூழ்ந்தோங்கிமல்கவளர்த்ததனடுவைகிக் கொன்றைமுடிப்பெருமான்பாதங்குறித்துணறீர்ந்தருந்தவஞ்செய்தான். | 6 |
369 | இடிபலவீழ்த்துதன்முதலாகவெண்ணரிதாமிடையூறாற்றிக் கடிமலர்மாலிகைமுடிவானோர்கழிந்தனரொன்றுமஞ்சிலனென்றே மடிவருமொருநிலையினனாகிவரடமோராயிரந்தவமாற்றப் பொடியணிமேனியெம்பெருமான்முன்போந்தனனவன்புரிதவமகிழ்ந்தே. | 7 |
370 | இறையவன்காட்சிதந்தனனமக்கீங்லென்றுணர்ந்தெழுந்தனனடிபணிந்தான் முறைவலம்வந்தனன்சென்னிமிசைமுகிழ்த்தகைவிரித்திலன்முன்சென்று மறைநவிறோத்திரம்பலசெய்துவரழ்ந்தனன்வாழ்ந்தனனென்றுரைத்தான் கறைகெழுகண்டனண்மகிழ்ச்சியனாய்க்கருதியவரமெவனரையென்றான். | 8 |
371 | ஐயநின்னடிமலரிடத்தென்றுமளப்பருமன்பெனக்குண்டாக வையமும்வானமும்பாதலமுமாற்றலரிரிதாத்துரந்தரசு செய்யவெவ்வுலகினுமாணுருவஞ்சிவணினர்சிவணியவிரண்டாலு மெய்யமராற்றுழியுடையாதவித்தகவீரமிக்குளதாக. | 9 |
372 | இந்திரன்மாலயன்முதலாகயாவருமென்பணிதலைக்கொள்ள வந்திலிவ்வரங்கொடுத்தருளென்றானண்ணலுமிளநகைமுகத்தரும்பச் சந்தணிமுலைக்கொடியிடைமடவார்தமைப்பொருள்படுத்திலன்வானோர்செய் சிந்தலிறவப்பயனெனமகிழ்ந்துசெப்பியயாவுந்தந்தனமென்றான். | 10 |
373 | மனநிலைபலவரமும்பெற்றேன்வாழ்ந்தனன்வாழ்ந்தனனடியேனென் றனகன்மெல்லடிமலர்மிசைப்பணிந்தானங்கணன்மறைந்தனனவணின்று தனதருட்குரவனதிடஞ்சார்ந்துதாழ்ந்தனன்றவம்புரிந்ததும்பெம்மான் கனவரங்கொடுத்ததுமெடுத்தோதிக்களிப்பொடுவிடைகொடுபுறம்போந்தான். | 11 |
374 | வேறு. வானளவோங்கியவொருபருப்பதத்தைமாகடல்வளைந்தெனவவுணர்தற்சூழக், கானளவோங்கியகற்பகநாட்டிற்காற்றினும்விரைதரப்புகுந்தறைகூவி, யூனளவோங்கியபெரும்படைவானோருடன்றமராடினரொருங்குடைந்தோட, மீனளவோங்கியபாற்கடல்கலக்கும்வெற்பெனக்கலக்கினன்விறலுடைச்சண்டன். | 12 |
375 | வஞ்சினம்பகர்ந்தனன்வச்சிரம்விதிர்த்தான்மதமலையுகைத்தனன்விழியழல்கால, வெஞ்சினங்கொடுசமர்புரிந்தனன்மகவான்விளைசமர்க்காற்றிலனோட்டெடுத்துய்ந்தா, னஞ்சினர்யாவருமனையபொன்னுலகையடிப்படுத்தினன்கொடிநாட்டினனினப்பா, லெஞ்சினவுலகங்களெங்கணும்புகந்தானிருஞ்சமராடினனிகலறுத்தெழுந்தான். | 13 |
376 | மீதலத்தமரரிந்திரனயன்மாலோன்வெந்கொடுத்திரிதரத்துரந்தனன்பொருது, பூதலத்தியங்கினனொருநொடிப்பொழுதிற்பொள்ளெனத்தாட்படுத்துறுபிலவழியே, பாதலத்திழிந்தனனாவயிற்பொலியும்பலரையும்வாட்டினனாணைவைத்தெழுந்து. மாதலத்துயரியபூமியின்மீட்டும்வந்தனன்பற்பலமாதரைமணந்தான். | 14 |
377 | விரைதரத்தென்றிசைமயன்சமைத்துதவும்விசயமென்றுரைசெயுநகர்குடிபுகுந்து, புரைதரச்சிங்கவொண்மணியணையிருந்துபூங்குடைநிழற்றிடச்சாமரையிரட்டக், கரைசெயற்கரும்பலதேவரும்போற்றக்கண்ணில்பல்லவுணருங்களித்தனர்சூழ, வுரைசெயற்கரும்பலபோகமுந்துய்த்தேயுவந்தரசிருந்தனனுறுவலிக்கொடியோன். | 15 |
378 | கொடியவனிங்ஙனமரசுசெய்நாளிற்குளிர்விசும்பமரர்கள்கற்பகமாலை, முடியவனெனுமகபதிநறிதாயமுண்டகம்வீற்றிருப்பவன்றுளவணியு, நெடியவன்முதலியவமரர்கள்குழுமிநிலைகுலைந்தென்னினிச்செய்குதுமென்று, கடியவன்மனத்தவன்புரிதொழிற்கஞ்சிக்கயிலையங்கிரியினையடைந்தனர்மாதோ. | 16 |
379 | வெள்ளியங்கிரிமிசையிவர்ந்தனர்நந்திவிமலனையடிதொழுதேத்தினரடிகே, டுள்ளியகொடுந்தொழிற்பெருவலிச்சண்டாசுரன்றவம்புரிந்துபல்வரங்களும்பெற்று, நள்ளியவெங்களைஞாட்பிடைப்பொருதுநடுநடுங்கிடத்துரந்தெவ்வகைவளனு, மெள்ளியகுறிப்பொடுந்தெவ்வினனமர்வானிதுமுறையிடுவதற்கடைந்தனமென்றார். | 17 |
380 | என்றலுமிரங்கியநந்தியெம்பெருமானிறையவன்றிருமுனமிமையவர்பலருஞ், சென்றிடவிடுத்தனன்கொன்றையஞ்சடிலத்தேவெதிர்சென்றனர்தொழுதடிவிழுந்தா , ரொன்றியகவலையங்கடற்கரைகாணாதுயங்கினமடிகளென்றுரைத்துரைத்தழுதார், கன்றியமத்தெமைக்காத்தல்செய்திரங்காய்களைகண்மற்றிலமுனையன்றியென்றிரந்தார். | 18 |
381 | பெருந்தவமாற்றியடுவலிச்சண்டன்பெறும்படியடிகண்முன்னருளியவரத்தாற், கருந்தலையவுணர்கள்பலரொடும்புகுந்துகற்பகநாடுமுற்பற்பலநாடு, மருந்திறல்வலியினிற்கவர்ந்தனமர்வானவனுயிர் தொலைத்தெமைப்புரத்தியின்றென் னிலிருந்தநின்களவிடத்தினைவெளிவிடுத்தியின்றெனினுதல்விழியாவதுதிறத்தி. | 19 |
382 | இசைந்தவித்திறங்களிலியாதுசெய்திடுதியியம்புகென்றடிபணிந்தனாரவரைக்கண், ணசைத்தவன்றிருவுளமிரங்கிமற்கருணையலர்முகத்தெழவிசைத்தருளுவனமரீர், பசைத்தவிர்தருதலின்மன்னுடையவுணன்பகரருந்தவம்புரிந்துறுவரங்கொளுநாள், வசைத்தலைவிடுமெனமகளிரைப்பொருளாமதித்திலனதுநுமக்குதவியதுணர்வீர். | 20 |
383 | வேறு. ஆணுருவமைந்தோராலுமமைந்தனவாலுமாலு மேணுருவனையான்றன்னைவேறலின்றிமையீர்பெண்மை பூணுருவொன்றேயன்னாற்பொருதுயிர்சவட்டுமற்றான் மாணுருவுமையாள்பாதம்வணங்கியீதுரையினென்றான். | 21 |
384 | என்றலுமயன்மாலாதியிமையவரெம்பிரானே நன்றருள்செய்தாயெங்கணாயகியமர்வதெங்கே கன்றலின்றெளியேமுய்யக்கருணைசெய்தருள்வாயென்றா ரன்றவர்க்கியம்பியெங்கோனருள்சுரந்தருளுமன்னோ. | 22 |
385 | நம்மிடையொருவினோதநயந்துகண்புகைத்தலாலே விம்முபேரிருளின்மூழ்கிமெலிந்துயிர்கருமநீத்த வம்மவிப்பிழைதீரும்பாக்காற்றுதிகழுவாயென்று செம்மைசேர்புவியுண்மேவச்செலவிடுத்தனமெங்கென்னில். | 23 |
386 | நாவலந்தீவின்மேலாம்பரதகண்டத்துநாளு மோவரும்பலதேயத்துமுத்தமமாகிவைகுந் தாவருந்திராவிடி்சாறேயத்துத்தவத்தாரன்றி முவரம்பாண்டிநாட்டுவிளங்குமோர்தெய்வத்தானம். | 24 |
387 | மதுநதிவடபாலோடவயங்கியவிரிசலென்னு முதுநதிதென்பாலோடமுகிழ்த்ததோரடவியாங்கு விதுவெனவிளங்காநிற்கும்வெள்ளியமருதொன்றுண்டா லதுதுயரகற்றாநிற்குமடைந்துகண்டவர்க்குநாளும். | 252 |
388 | அத்தருநிழலில்யாமோரருட்குறிவடிவமாகி நித்தலும்வசிப்போநம்மைநெடியவன்மீகமொன்று பொத்தியாங்கிருக்குமந்தப்புண்ணியதலத்தைச்சார்ந்து சித்திசானமக்குமேலாற்றீர்த்தமொன்றியற்றிக்கொண்டு. | 26 |
389 | காலங்கடொறுந்தப்பாமேகருத்துறுபூசையாற்றி யேலங்கொள்குழலாள்பன்னசாலைசெய்தினிதுமேவிச் சீலங்கொணமைத்தியானஞ்செய்துவீற்றிருப்பளந்த மூலங்கொடலத்தையுற்றுமொழிமினீதனையாட்கின்னும். | 27 |
390 | அனையமாதலத்தைநீவிர்காதலித்தடைந்தபோதே நினைவெலாமுற்றாநிற்குநெடும்பகைக்கிறுதிகூடுந் துனையநம்மருளும்வந்துசூழ்தருமாதலாலே புனையவாமமரீரங்குப்போவதுகுறிமின்யாமும். | 28 |
391 | பெய்வளைக்கருளுமாறுபின்னரேவருதுமென்றா னெய்வளைத்தொளிருமொண்கூர்நேமியோனாதிவானோர் மைவனைத்தன்னகண்டவள்ளலார்செம்பொற்பாதங் கைவளைத்திரைஞ்சிப்போற்றிவிடைகொண்டார்களித்துமாதோ. | 29 |
392 | விடைகொடுபோந்துவானோர்வெள்ளியங்கயிலைநீங்கி யுடைகடற்புடவியுற்றாருறுவலிச்சண்டற்கஞ்சி யடையுருமுழுதுமாறியாற்றிடைப்பட்டகங்கைச் சடையவன்றானமெல்லாந்தாழ்ந்துதாழ்ந்திறைஞ்சிப்போந்தார். | 30 |
393 | காழகிற்றுணியுஞ்சந்துங்கதிர்மணித்திரளுநால்வாய் வேழமெண்மருப்பும்பொன்னுநித்திலக்குவையும்வீசி யாழ்கடற்கிடங்குதூர்க்குமகன்புனற்பொருனைசூழ்ந்து வாழியவளமிக்கோங்கும்வழுதிநன்னாடுபுக்கார். | 31 |
394 | சங்கினமுயிர்த்தமுத்தந்தலைத்தலைநிலவுவீசிக் கங்குலும்பகலேயாகக்கண்டிடும்பாண்டிநாட்டி லெங்குளதலமும்போற்றியெம்பிரானருளிச்செய்த பொங்குமாதலமெங்குள்ளதென்றுளம்பொருந்தவாய்ந்தார். | 32 |
395 | வரைபெயர்த்தெறிந்துசெல்லுமதுநதிகண்டுகொண்டு கரையகலந்நீருள்ளுங்களிப்பினுங்கலந்துமூழ்கி விரைசெலற்பெருக்குவாய்ந்தவிரிசலாறதுவுங்கண்டக் குரைபுனலகத்துமூழ்கிக்குலவுபேரின்பமுற்றார். | 33 |
396 | இருதிறநதியுங்கண்டோமிவைக்கிடையுள்ளதாய மருமலர்வனமேயம்மான்வன்மீகத்தமராநிற்குந் திருவமர்மருதமேவித்திகழ்வனமென்றுதேர்ந்து பொருவிறம்முருவங்கொண்டார்பொய்யுருவகற்றிமாதோ. | 34 |
397 | தேவியைக்காண்பான்சிந்தைசெய்தினிதேகுவார்முன் மேவியவளியலைப்பவிடபங்களசையுந்தோற்றங் காவியங்கண்ணாளென்னுளிருக்கின்றாளென்றக்கானம் பூவியல்கரங்கணீட்டிப்புலவரையழைத்தல்போலும். | 35 |
398 | மருதமர்கானமெங்குமாமலர்பொலியுந்தோற்றங் கருதுநந்தமைநீங்காதகடவுளர்பலரும்வந்தா ரொருதனிமுதல்விசெய்யுமோங்கருட்குரியராவார் பொருதடுபகையுந்தீர்வாரெனப்பொலிதோற்றம்போலும். | 36 |
399 | நால்வகைநோயுமின்றிநண்ணியதருச்சால்கானம் பால்வகைவளங்களெல்லாங்கண்குளிர்படைப்பப்பார்த்து மால்வகைகழிந்ததூயமனத்தினராகிப்புக்குச் சேல்வகையுகளுந்தெய்வச்சிவகங்கைத்தீர்த்தந்தோய்ந்தார். | 37 |
400 | வெள்ளியநீறுபூசிவிரும்புகண்மணியும்பூண்டு வள்ளியவெழுத்தைந்தெண்ணிமருதமர்தானஞ்சார்த்து தெள்ளியவன்மீகத்திற்செறிசிவக்கொழுந்தைக்கண்டு துள்ளியவுவகையோராய்ச்சூழ்ந்துதாழ்ந்தெழுந்தார்வானோர். | 38 |
401 | தந்தையைக்கண்டுகொண்டோந்தாயினைக்காண்போமென்று சிந்தையுட்களிப்புமேவவடகிழக்கெல்லைசேர்ந்து நிந்தையில்பன்னசாலைநேருறப்புகந்தாராங்கு முந்தைமாமறையுங்காணாமுதல்வியைக்கண்டாரன்றே. | 39 |
402 | காண்டலுமுவகைபொங்கக்கண்கணீரருவிபாய நீண்டமெய்ப்புளகம்போர்ப்பநெஞ்சநெக்குருகாநிற்பத் தாண்டவம்புரியாநிற்குந்தம்பிரானிடப்பான்மேய மாண்டவொண்குணத்துத்தேவிமலரடிதொழுதுவீழ்ந்தார். | 40 |
403 | அடியரேமுய்ந்தேமுய்ந்தேமசுரரால்வருத்தப்பட்ட மிடியரேமுய்ந்தேமுய்ந்தேம்வெவ்வினைத்தொடக்குண்டஞ்சுங் கொடியரேமுய்ந்தேமுய்ந்தேங்கோலங்கண்டின்பமுற்ற படியரேமுய்ந்தேமுய்ந்தேமெனப்பகர்ந்தாடினாரே. | 41 |
404 | அரியநாயகியைக்கண்டோமம்பலத்தாடியுள்ள மரியநாயகியைக்கண்டோம்வண்மையினமையாட்கோடற் குரியநாயகியைக்கண்டோமுலகெலாமொருங்குபெற்ற பெரியநாயகியைக்கண்டோமெனப்பலபேசினாரே. | 42 |
405 | வழுத்துவார்பவநோய்தீர்க்கமலைவருமருந்தேவன்மை கொழுத்தவாளவுணன்சாடக்குலைகுலைந்தடைந்தவேழைத் தொழுத்தையேமுய்யுமாறுசுரந்தருள்செய்யிலென்று முழத்தபேரறிவினூடுமுயக்கியதாகுமென்றார். | 43 |
406 | இவ்வண்ணமலறியோலமிடுமையவரைநோக்கி யவ்வண்ணம்போலவெங்குமறிவுருவாகிநிற்குஞ் செவ்வண்ணப்பெருமான்பாகந்தீர்தராச்செல்விநுங்கட் கெவ்வண்ணமுற்றதிங்ஙனெய்தியதெற்றுக்கென்றாள். | 44 |
407 | என்றலும்பிரமனேர்சென்றிருகரங்கூப்பிச்சொல்வான் மன்றலங்குழலாய்சண்டனென்பவன்றவத்தான்மாண்டு மின்றயங்கிடைநல்லாரைப்பொருள்செயான்விண்ணோராதி யொன்றமற்றியாவராலுமுடைதராவரம்பெற்றுள்ளான். | 45 |
408 | அன்னபாதகனானாடுமுதலியவனைத்துந்தோற்றுப் பன்னகாபரணன்முன்போய்ப்பகர்ந்தனங்கயிலாயத்தின் முன்னவனின்பான்மேவமுடுக்கினானிங்குமேவி யுன்னதாள்போற்றப்பெற்றோமென்றுரையாடினானே. | 46 |
409 | வண்ணப்பொன்மலரின்மேலான்மலர்க்கரங்குவித்துச்செய்த விண்ணப்பமுழுதுங்கேட்டுமிகுபெருங்கருணைகூர்ந்து தண்ணப்பண்சடைப்பிரானார்தந்திருவருளோநீவிர் கண்ணத்துன்பகற்றுமிங்குக்கலந்ததென்றுவகைபூத்தாள். | 47 |
410 | நிறைவலியவுணன்சாடநிலைகுலைந்திங்குமேய கறையில்வானவர்காணெஞ்சங்கவன்றிடீரஞ்சல்வேண்டா குறைபடவனையாற்கொன்றுகுலத்தொடுநம்மைக்காப்போ மிறையிலென்றபயமீந்தாளேழுலகீன்றசெல்வி. | 48 |
411 | தேவியாதரவிற்கூறும்வார்த்தைதஞ்செவியிற்கேட்டுப் பாவியேமுய்ந்தேம்யாதும்பயமிலையினிமேலென்று மேவிமாமலரிற்சீர்த்தமென்பதம்பலகாற்போற்றி வாவிசூழனையகானமருவிவீற்றிருந்தார்வானோர். | 49 |
412 | வண்மைசாறவத்துவாய்மைச்சவுநகமனிவர்வானோர் திண்மைசாலங்குச்சென்றுதேவியைக்கண்டவாற்றா லொண்மைசாலறிஞர்கண்டதேவியென்றுரைப்பரந்தத் தண்மைசாலறத்தையென்றுசாற்றிமேற்சாற்றுஞ்சூதன். | 50 |
தேவியைக்கண்ணுற்றபடலம் முற்றிற்று.
ஆக படலம் 7-க்கு, திருவிருத்தம்- 412.
-----------------
8. சண்டாசுரன்வதைப் படலம். (413- 544 )
413 | கந்தமலரோன்முதல்வானோர்கண்டதேவியெனுந்தலத்து நந்தமருதினடியமருநம்மானடித்தாமரைமலருஞ் சந்தமுலைமென்கொடிமரங்குற்றலைவியடித்தாமரைமலர முந்தவணங்கிப்பெருகன்பின்முதிர்ந்துபணிசெய்தொழுகுநாள். | 1 |
414 | மிறைசெயவுணன்கொடுங்கோன்மைவெள்ளிவரைநம்பெருமான்பால் முறையினியம்பமருதவனமுற்றியிறைவியடிவணங்கி யறைமினெனவுய்த்தனனிறைவியடிசார்ந்துரைப்பவஞ்சாமே யுறைதீர்கவலையொழித்துமெனவுரைத்தாளுரைத்தமொழிப்படியே. | 2 |
415 | வல்லையியற்றும்படிதுதிப்போம்வம்மினெனவானவர்யாரு மொல்லையெழுந்துசிவகங்கையுற்றுமூழ்கிநீறணிந்து செல்லையலைக்குமருதவனத்தேவதேவனடிபணிந்து முல்லைமுறுவற்பெருந்தேவிமுன்வந்திறைஞ்சித்துதிக்கின்றார். | 3 |
416 | எல்லாம்வல்லசிவபெருமானெழிலார்தருநின்னொடுகலந்தே யெல்லாவுலகும்படைத்திடுவானெல்லாவுலகும்புரந்திடுவா யெல்லாவுலகுந்துடைத்திடுவானெல்லாவுயிர்க்குமறைப்பருள்வா னெல்லாவுயிர்க்கும்வீடருள்வானென்றாற்பெரியநாயகிநீ. | 4 |
417 | எல்லாமறையின்வடிவானாயெல்லாமறையும்வியாபித்தா யெல்லாமறையுந்தொழப்படுவாயெல்லாமறையுமேகலையா யெல்லாமறைக்குமுதலானாயெல்லாமறையின்முடியமர்வா யெல்லாமறையின்முடிவுணராயென்றாற்பெரியநாயகிநீ. | 5 |
418 | என்றுதுதிக்கும்வானவருக்கிரங்கியருள்கூர்ந்தருட்செல்வி நன்றுநுமதுதுதிமகிழ்ந்தோநயந்துபெரியநாயகியென் றின்றுநமைநீர்சொற்றமையாலென்றுநமக்கிப்பெயராக வொன்றுநுமதுகவலையுமின்றொழிப்போமுணர்மினென்றுரைத்து. | 6 |
419 | பொல்லாவவுணன்மடவாரைப்பொருளாமதித்திடாமையினா லொல்லாவனையானவமதித்தார்தமைக்கொண்டவனையொறுத்தலே நல்லாதரஞ்செய்திறனென்றுநன்றாராய்ந்துதன்கூற்றி னெல்லாவுலகுநடுங்கவருவித்தாளொருபெண்ணிறைவியே. | 7 |
420 | கரியகடலொன்றிரண்டுபிறைகவ்வியெழுந்ததோற்றமெனத் தெரியவுயர்ந்தபெருவடிவஞ்சிலைக்கும்வாயில்வளையெயிறும் பெரியவடமேருவுஞ்சமழ்க்கப்பிறங்குமுலையுமிளங்காலைக் குரியகதிராயிரம்வளைந்தாலொக்குமரையிற்செம்பட்டும். | 8 |
421 | வாளதாதிபொலிகரமும்வடவைகால்கண்களுமண்ட கோளமேவுநெடுமுடியுங்குறிக்குந்திசைபேர்த்திடுபுயமு மூளவெழுந்தசினக்கனலுமுழங்குமுருமிற்பொலிகுரலுங் காளவுருவுங்கொடுதோன்றிக்காளியெனும்பேர்தழீஇநின்றாள். | 9 |
422 | நின்றகாளியிறைவியடிநேர்சென்றிரைஞ்சிப்போற்றியெழுந் தொன்றவுலகம்வாய்மடுக்கோவுருட்டிவரைகள்பொடிபடுக்கோ கன்றவயன்மாலாதியரைக்கையிற்பிசைந்துபொட்டிடுகோ துன்றவமைந்தகடல்குடிக்கோசொற்றிபுரியும்பணியென்றாள். | 10 |
423 | என்றுகுமரிகூறுதலுமிமையோர்க்கிடுக்கணனிசெய்யுங் குன்றுநிகர்தோட்சண்டனுயிர்குடித்திநினக்குப்பணிபுரிய வொன்றுமகளிர்பற்பலருமுகைக்கும்விறல்சாலூர்தியுநா மின்றுபடைத்தத்தருகின்றோமென்றாணினைந்தாளப்பொழுதே. | 11 |
424 | குன்றுபிளப்பவுலகநிலைகுலையமுழங்குங்குரல்யாளி யொன்றுவெளிப்பட்டதுகடல்வந்தொருங்கசூழ்ந்தாலெனவதிர்த்துத் துன்றவலிசாலிடகினிகள்சூழ்ந்தார்குமரியூர்தியா யொன்றுபணிசெய்திடுவாராயுறுகமாவேமடவீரே. | 12 |
425 | என்றுகருணைநோக்கருளியிகல்சால்வீரியுருவஞ்சித் துன்றுமனத்துட்குடையாராய்த்தூரத்தகலுமாலாதிக் கன்றுமமரர்தமைநோக்கிக்கடவுளானீரெல்லீரு மொன்றுமடவார்வடிவமெடுத்துறுவீர்குமரியுடனென்றாள். | 13 |
426 | என்றபொழுதேயிந்திரன்மற்றிந்திராணியுருக்கொண்டான் மன்றல்கமழுமலர்மேலான்வயங்குபிராமியாயினான் வென்றதிகிரிப்படைமாயோன்விறல்சாலொருவைணவியானா னொன்றமற்றைவானவருமுற்றமடவாருக்கொண்டார். | 14 |
427 | கோடிகோடிவானவர்தங்கூறென்றுரைக்குமடவாருங் கோடிகோடிவலவைகளுங்கூடிப்போற்றவெழுந்துலகங் கோடிகோடிமுறையுயிர்த்தாள்குளிர்தாட்கமலமிசைநறும்பூ கோடிகோடிதூய்ப்பணிந்துகொண்டாள்விடைவெங்குரற்காளி. | 15 |
428 | கண்ணார்மருதவனத்தளவுங்காலானடந்துகடந்தப்பா னண்ணார்வெருவவருகாளிநாடுமுழுதுங்குடியேற விண்ணார்நகரந்திருவேறவிழைபுண்ணியமுமீடேற வெண்ணார்நிறங்கீண்டுதிரம்வாய்மடுக்கும்யாளியேறினாள். | 16 |
429 | கலிக்குந்தத்தமூர்திமிசையிவருமாறுகடைக்கணிப்ப வொலிக்குமணிப்பூண்மடவார்கள்பலருமுள்ளமுவந்திவர்ந்தார் சலிக்கும்புடவிவெரிநெளியத்தாங்கக்கடலுங்குமிழியெழ வலிக்குமொருதென்றிசைநோக்கிவிடத்தாள்யாளிமாகாளி. | 17 |
430 | இருகுரோசத்தளவெய்தியாளியிழிந்தங்கினிதிருந்தா ளருகுமாதரரசாதற்கபிடேகஞ்செய்தடிபணிந்து பெருகுகாலமெனச்சூழ்ந்துபேணிக்காவல்புரிந்திருந்தார்* கிருகுதீரவ்விடஞ்சிவணுந்தேலிசாலமெனுந்திருப்பேர். | 18 |
431 | அன்னதேவிசாலபுரமம்மைசெம்மையபிடேக மென்னநவிலந்திருவடைந்தவிடமாதலினந்நகருள்ளார் பன்னவரியபெருந்திருவம்பொருந்திப்பயில்வரடைந்தோருஞ் சொன்னமுதலாம்பலவளனுந்துலங்கப்பெறுவரெஞ்ஞான்றும். | 19 |
432 | அந்தத்தலத்தினினிதமர்ந்தவலகைக்கொடியாள்வைணவிமற் சந்தக்குவிமென்முலைமடவார்தம்மைநோக்கியொருதூது முந்தப்பகைவனிடத்தனுப்பிமுன்னந்தெரிந்துமற்றவன்போர் நந்தப்பொருதலறனென்றாணன்றென்றுரைத்தாரெல்லாரும். | 20 |
433 | ஆனாலங்குப்போய்மீளுமாற்றலுடையார்யாரென்ன மானாவியன்றகருநெடுங்கண்மடந்தைபிராமியெனப்படுவாள் போனானன்றுபுகன்றுவருமென்றுபுகன்றாள்வயிணவிமற் றூனால்விளங்குஞ்சூலத்தாளுள்ளதுரைத்தாய்நீயென்றாள். | 21 |
434 | என்றலோடும்பிராமியெழுந்திறைஞ்சியானேபோய்வருவ லொன்றவிடைதந்தருளென்றாளுவப்புற்றனையாண்முகநோக்கி மன்றவிசையநகரடைந்துவல்லவவுணன்றனைக்கண்டு கன்றவியற்றல்கடனன்றுகடவுளாரையெனப்புகறி. | 22 |
435 | ஈதுமொழியினவன்மறுப்பானென்னில்விரைந்துபடையோடு மோதுசமருக்கெழுதியெனமொழிந்துவருதியென்றுரைத்தாள் காதுகொடுஞ்சூற்கங்காளிகருதும்பிராமிநன்றென்று போதுமலர்தூய்ப்பணிந்தெழுந்துபோந்தாள்விசையநகர்நோக்கி. | 23 |
436 | வெளியேவழியாவிரைந்தெழுந்துசென்றுவிசையநகர்புகுந்து களியேயடைத்தமனத்தவுணர்கைகள்கூப்பித்தொழுதெத்த வொளியேமண்மாமண்டபத்துளோங்குமடங்கலாதனமே லளியேயாதகுணத்தினமர்சண்டாசுரன்முன்னடுத்தனளால். | 24 |
437 | அடுத்துநிற்குமடந்தைமுகமவுணர்கோமானெதிர்நோக்கிக் கடுத்துநமக்குநேராகக்காமர்மங்கையிவளடைதற் கெடுத்துநிறுவுகருமம்யாதிவள்யாரின்னேயறிதுமென மடுத்துநீயார்நின்வரவென்மடந்தாயுரைத்தியாலென்றான். | 25 |
438 | உலகுபோற்றுமருதவனத்துறையாநின்றமாதேவி யிலகுசரணமடுத்திறைஞ்சியேத்தியிமையாரெல்லாரு மலகுதவிர்நின்பெருங்கொடுமையறைந்துகாத்தியென்றுரைப்ப நலகுமானைமுன்னுயிர்த்தநங்கையொருமங்கையையுயிர்த்தாள். | 26 |
439 | மேருவிடிக்கவேண்டிடினும்வீரைகுடிக்கவேண்டிடினும் பாரும்விசும்புமேல்கீழாப்படுத்துநிறுத்தவேண்டிடினு மாரும்வியக்கவொருநொடியிலமைப்பாள்காளியெனும்பெயராள் சோருமமரர்தமைப்புரந்துதுட்டர்தமைமாட்டிடுந்துணிபாள். | 27 |
440 | அனையள்விடுக்கவருந்தூதியான்பிராமியெனப்பெயரே னினையவமரர்கொடுங்கோன்மையியற்றுகுணநீத்தெஞ்ஞான்றும் புனையவமையுஞ்செங்கோன்மைபொருத்துகுணநீபொருந்திலுனை முனையசூலப்பெருமாட்டிமுனியாதுவக்குமுயிர்வாழ்வாய். | 28 |
441 | அன்றேலவள்கைப்படைக்குவிருந்தாதல்சரதமிதுபுகல்வா னின்றேயினளென்றனையுணர்தியிதுநீகருத்தினுறக்கொள்ளி னன்றேபணியவுடன்போதியன்றேலமர்க்குநண்ணுதிவன் குன்றேபுரையுந்தோளாயென்னுரைத்திகூறுகூறென்றான். | 29 |
442 | கேளாமாற்றங்கேட்டிடலுங்கிளர்வெங்கோபந்தலைக்கொண்டு மூளாநிற்பவிழிசிவந்துமுகரோகங்கடுடிதுடிக்க வாளாநகைத்துக்கையெறிந்துவானமுழுதுமடிப்படுத்த தாளாண்மையினேற்கிம்மொழியுங்கேட்டறகுமென்றிஃதுரைப்பான். | 30 |
443 | நீயோர்பேதைநின்னைவிடுத்தவளுநினக்குமூத்தாளே பாயோரரவாக்கொண்டான்முற்பலரும்போரிற்புறங்கண்டே னாயோர்பகையுமில்லாதேற்கடுத்தபகையுமழகிற்றே பேயோர்கொடியாடூதுவிடுபெற்றிநினைக்குந்தொறும்வியப்பே. | 31 |
444 | பேதாயிங்குநீமொழிந்தபேச்சுமுழுதும்பெரிதாய தீதாய்முடிந்ததுனைத்தண்டஞ்செய்தல்புகழன்றிவணின்று போதாய்விரைந்தென்றனன்கேட்டபொற்கொம்பனையாண்முறுவலித்துக் கோதாய்விடுமேகுணமுமழிகாலங்குறுகினென்றிசைத்தாள். | 32 |
445 | என்றலோடுமோதிபிடித்திழுத்துவம்மினிவளையென நின்றசிலரைப்பார்த்துரைக்கநெடியோனாதிவானவர்மே லொன்றவேவாதுரைத்தமொழியுரைக்கவந்தவொருபெண்மே லின்றவாவியேவியதென்னென்றுபிணங்கியவரகன்றார். | 33 |
446 | கண்டமாதுமுறுவலித்துக்கழியுங்காலங்குறுகிற்று சண்டவிரைந்தாகவபூமிதன்னிலுனதுபெரம்படையோ டண்டவடைந்திலாயெனினின்னாண்மையெவனாமென்றுரைத்துக் கொண்டவிரைவினவணின்றுமெழுந்தாடேவிமுன்குதித்தாள். | 34 |
447 | கண்டதேவிவாழ்வானோகழிவானோசண்டாசுரனுட் கொண்டதுணிபென்னுரையென்றாள்குணப்பிராமியடிவணங்கி மண்டநெடும்போராற்றுதற்கேவருவான்வந்துமாய்வான்மற் றண்டர்புரிமாதவம்பழுதாங்கொல்லோவன்னாயறியென்றாள். | 35 |
448 | சான்றதேவியொருதேவிசாலபுரத்திவ்வாறிருந்தா ளான்றவிசையநகர்மேவுமவுணர்கோமானுளங்கறுத்துத் தோன்றவமைச்சர்படைத்தலைவர்முதலோரிங்குத்துன்னகவென் றேன்றதூதுவிடவவருமிறுத்தார்பணியென்னெனவினவி. | 36 |
449 | வந்தார்முகத்தைவாளவுணர்கோமானோக்கிமறமுடையீர் சந்தார்முலையோர்மாகாளிசாற்றிவிடுத்ததுணர்ந்தீரே முந்தாரவத்திற்படைகளொடுமுழங்கிஞாட்பிற்கெழுகவென வந்தார்புனையுமவரிசைந்தாரமைச்சர்பல்லோருளுங்கனகன். | 37 |
450 | தொழுதுநவில்வான்பெருமான்பாற்றோலாவரநீகொண்டநாள் பழுதுபடுமேந்திழையாரென்றெண்ணிப்பொருளாப்பற்றிலா யெழுதுபுகழாயதனாலேயெண்ணிப்போருக்கெழுகென்றா னுழுதுவரிவண்டுழக்குதாருரவோன்சினங்கொண்டீதுரைப்பான். | 38 |
451 | அந்தநாளிற்பொருளாகமதித்தேனல்லேனதுமறப்புற் றிந்தநாளிற்பொருளாகமதித்துளேன்கொலென்னுரைத்தாய் முந்தவமருக்கஞ்சினாயென்றுமொழிந்தவவன்கருத்தை யுந்தவுணராதிகந்துரைத்தான்மூர்க்கர்க்குணர்த்துவாருளரோ. | 39 |
452 | அன்னபொழுதின்மகதியாழ்முனிவன்விரைவினாங்கடுத்து மன்னநினக்கேயாக்கமுளவாகவென்றுவாய்மொழிந்து பொன்னங்கடுக்கைமுடிக்கணிந்தபுத்தேணினக்குக்கொடுத்தவரந் தன்னமுணராதொருமடந்தைசமருக்கெழுந்தாள்படையோடும். | 40 |
453 | படையுமிடையுஞ்சிறுமருங்குற்பாவைமாரையென்றக்கா லடையும்விறன்மற்றவட்காமேயண்ணால்பெண்ணென்றிகழாமே யுடையுங்கடனேர்படையினொடுமுருத்துச்சென்றுபோர்புரிதி மிடையும்வாகைநின்னதேயென்றான்கேட்டவெங்கொடியோன். | 41 |
454 | குய்யம்வைத்துமுனியுரைத்தகூற்றைக்கூற்றென்றெண்ணானா யையநன்குமதித்துரைத்தாயறிஞர்சூடாமணிநீயே வெய்யபெரும்போராற்றிடினும்வெற்றிகொள்வேனொருகணத்தென் செய்யவல்லாளொருபேதையென்றுநகைத்துச்செப்பினான். | 42 |
455 | வல்லையதுசெய்யென்றுமுனிவரனுண்மகிழ்ந்துவிடைகொண்டான் மல்லைவிழைக்குந்திணிதோளான்வயவரானார்தமைநோக்கி யொல்லைநமதுபெரும்படையோடொருங்குசென்றுகாளியம ரைல்லையடைமின்யாமும்விரைந்தெய்துவாமென்றார்த்தெழுந்தான். | 43 |
456 | இறைவனுரைத்தமொழிப்படியேயெழுகபடையென்றுறவியவ ரறையுமுரசமெருக்குதலுமாங்காங்குள்ளமதகளிறு நிறையுங்கலினவாம்பரியுநெருங்குகொடிஞ்சிப்பொற்றேரும் பிறையுஞ்சமழ்க்குமெயிற்றவுணர்குழுவுமெழுந்தபெருங்கடல்போல். | 44 |
457 | எட்டிமுகிலைத்துதிக்கைவளைத்திறுகப்பிழிந்துநீர்குடிப்ப கிட்டிமருப்பாற்றிசையானைகீளப்பொதிர்ப்பமால்வரையை முட்டியருகுசாய்த்திடுவமுருகுவிரிகற்பகக்குளகு கட்டியெனக்கொள்வனவலகங்கலங்கவெழுந்தமால்யானை. | 45 |
458 | பற்றார்முடிமேற்குரமழுந்தப்பதிப்பவுததியோரேழும் பொற்றார்புலம்பத்தாவுவபல்புவனமுழுதுமுழிதருவ சுற்றார்தரவல்லிடிமாரிசொரியுமேனுந்துளக்கறுவ கற்றாராலுமதித்துரையாக்கடுப்பிற்படர்வவாம்பரியே. | 46 |
459 | முடியால்விசும்பைப்பொதிர்த்திடுவமுழக்கான்முகிலையடக்கிடுவ வடியானிலனைப்பிளந்திடுவவச்சால்வரையைப்பொடித்திடுவ கடியாலினனைமழுக்கிடுவகடுப்பாற்காற்றைத்துடைத்திடுவ கொடியால்வெளியைமறைத்திடுவகூடாரஞ்சுங்கூவிரமே. | 47 |
460 | இடியுங்கனலுங்கொடுவிடமுமேகவுருக்கொண்டனநீரார் படியும்விசும்புநிலைகுலையப்பரவையேழுங்குடித்தெழுவார் கடியுஞ்சினக்கூற்றெதிர்ந்தாலுங்கலங்காரருளற்றுழிதருவார் மிடியுந்துயருமுலகுறுத்தும்வெய்யோர்வெய்யவாள்வீரர். | 48 |
461 | தானக்களிறுசுறவாகத்தாவும்புரவிதிரையாக மானக்கொடிஞ்சிப்பொலந்திண்டேர்வயங்குஞ்சிதைப்பாரதியாக வானத்தவர்தம்பகைவீரர்வருமீனெறியுமவராக வீனக்கொடியோன்பெரும்படைதானெழுந்துகடலிற்படர்ந்ததே. | 49 |
462 | இன்னவாறுபடையேகவெழுந்தசண்டாசுரன்புனலுண் முன்னமூழ்கியுண்டுடுத்துமுடிகுண்டலமாதிகளணிந்து பன்னவரியபடைக்கலங்கள்பலவுமாராய்ந்தனனெடுத்தப் பொன்னங்கொடிஞ்சிநெடுந்திண்டேரிவர்ந்தான்சங்கம்புயன்முழங்க. | 50 |
463 | ஆர்த்தமுரசுமுழவுபணையார்த்தபணிலம்வயிர்பீலி யார்த்தவயவரணிந்தகழலார்த்தவிறற்றோள்புடைக்குமொலி யார்த்தவளைந்தவெஞ்சிலைநாணார்த்தபுழைக்கைமால்யானை யார்த்தகடுப்பின்வாம்புரவியார்த்தபலவுமடங்காதே. | 51 |
464 | கண்டான்வீணைத்திருமுனிவன்கடிதுபடர்ந்துகாளிமுனந் தொண்டானிறைஞ்சியெழுந்துவலிதோலாத்திறல்சால்வீரரொடு மண்டாகின்றபடைநெருங்கவந்தான்வானோர்புலஞ்சாய்த்த சண்டாசரனீபோர்க்கெழுதிதாழாயெனக்கூறினன்போனான். | 52 |
465 | வேறு. முனிவரனுரைத்தவார்த்தைகேட்டுவந்துமுகிழ்நகையரும்பினளிருந்தா ணனிவளமடியார்பெறவருள்பெரியநாயகியுயிர்த்தமாகாளி வனிதையர்பலருமொய்யெனவெழுந்துவட்டுடையரையுறப்புனைந்து கனியிருட்கூந்தனாண்கொடுவரிந்துகச்சிறுக்கினர்முலைமறைய. | 53 |
466 | பரிசையும்வாளும்பற்றினர்சில்லோர்பகழிசால்கூடுவெந்நசைத்து வரிசிலைகுழையவாங்கினர்சில்லோர்வடித்தவேலேந்தினர்சில்லோ ரெரிகிளர்ந்தனையபரசுவெஞ்சூலமிருகையுந்தரித்தனர்சில்லோர் விரிசுடர்க்குலிசமேந்தினர்சில்லோர்விறற்கதைசமந்தனர்சில்லோர். | 54 |
467 | இன்னராய்மகளிர்யாவருங்குழுமியெரிகிளர்ந்தெனச்சினமூண்டு நன்னராதரத்தினிறைவிபொற்றிருத்தாணயந்தனர்தாழ்ந்துதாழ்ந்தெழுந்து முன்னராடமர்க்குவிடைகொடுத்தருடிமுதல்வியென்றிரத்தலுமனையாள் சொன்னவாறடைந்தாடுகசமர்யாமுந்தொடர்ந்தடைகுதுமெனவிடுத்தாள். | 55 |
468 | கரியிவர்ந்தாருமரியிவர்ந்தாருங்காய்கடுந்தழலுமிழ்செங்க ணரியிவர்ந்தாருமறுகிவர்ந்தாருமலைதொழிற்பேயிவர்ந்தாரும் விரிசிறைபறவைமிருகமற்றுள்ளவிழைந்திவர்ந்தாருமாயெவரும் பரிகரியிரதந்துவன்றியவவுணர்படைக்கடல்கலந்தனரார்த்தே. | 56 |
469 | பரந்துவந்தடுத்தபாவையராயபகைப்பெருங்கடலினைக்குய்யஞ் சுரந்துகொண்டிருக்குமன்னுடையவுணர்சுடர்விழிநெருப்பெழநோக்கி நிரந்தரம்பந்துங்கழங்குமம்மனையுநிகழ்தரக்கோடலையொழித்தே யரந்தடிபடைகளேந்திவந்தடுத்தீரரிவைமீரெனநகைத்தமர்த்தார். | 57 |
470 | ஒருகடலொடுமற்றொருகடல்கலந்தாலொப்பெனவிருதிறத்தாரும் வெருவறக்கலந்தார்வெஞ்சிலைவளைப்பார்விறல்கெழுநாணொலியெறிவார் பொருதிறற்பகழிபற்பலதொடுப்பார்போகயர்வரைபொடிபடக்கும் பெருவிறற்றண்டஞ்சுழற்றினரடிப்பார்பிறங்குசக்கரந்திரித்தெறிவார். | 58 |
471 | மகபடாமிழந்துங்கிம்புரிவயங்குமுதுபெருங்கோடுகனிழந்து மகனிலந்துழாவும்புழைக்கரமிழந்துமடர்நிரியாணமற்றிழந்தும் புகர்முகமிழந்தும்போகுவாலிழந்தும்புகல்கறைக்காத்திரமிழந்தும் தகவமருயிரேயிழந்துமிவ்வாறுசலித்தனகலித்தமாலியானை. | 59 |
472 | கடுநடையிழந்துங்கடுநடையொருநாற்கால்களுமிழந்துநாற்காலோ டடுதிறல்படுபாய்த்திழந்துமப்பாய்த்தொடமைவலிமார்பகமிழந்து மிடுகிலம்மார்போடெறுழ்வெரிநிழந்துமிசைத்தவவ்வெரிநொடுமணிகள் படபெருங்கலனையிழந்துமிவ்வாறுபட்டனபட்டவாம்புரவி. | 60 |
473 | கொடிபலமுறிந்துங்கொடிஞ்சிகளழிந்துங்குடங்குடைமதலியவிழந்தும் வடிமணிசிதர்ந்துங்கிடுகள்முறிந்தும்வயங்கியதட்டுகளுடைந்தும் படிகிழித்தியங்குகால்பலகழன்றும்பரியநீளச்சுகடெறித்துங் கடியவிர்செம்பொணாதனம்விரிந்துங்கழிந்தனகலந்ததேரெல்லாம். | 61 |
474 | தாளொடுகழலுந்தலையொடுமுடியுந்தயங்கியபூணொடுமார்பும் வாளொடுகரமுமிறுகுறச்செறிந்தவட்டுடையொடுமிடையிடையுந் தோளொடுதொடையும்விழியொடுகனலுந்தும்பைமாலிகையொடுபோருங் கோளொடுகுரலுங்குலைந்தனர்வீழ்ந்தார்கொடியபோரேற்றவல்லவுணர். | 62 |
475 | வேறு. புரந்துளைத்தனதுளைத்தனபொம்மல்வெம்முலையைக் கரந்துளைத்தனதுளைத்தனவட்டுடைக்கலானை யுரந்துளைத்தனதுளைத்தனவொண்டொடிப்புயத்தைச் சிரந்துளைத்தனமகளிர்கட்டெவ்வர்வில்விடுகோல். | 63 |
476 | முறிந்தவாளிகள்முறிந்தனகேடகம்வடிவான் முறிந்தவங்குசமுறிந்தனபிண்டிபாலங்கண் முறிந்ததோமரமுறிந்தனமுழுக்கதைஞாங்கர் முறிந்தவெஞ்சிலையிருதிறத்தவர்க்குமொய்போரில். | 64 |
477 | மலையுருண்டனவெனத்தலையுருண்டனவையக் கலையுடைந்தனவெனக்கமழரக்குநீரெழுந்த நிலைகுலைந்தனநிகழறக்கடையெலாமென்னத் தலையவிந்தனசாடியவவுணர்தந்தானை. | 65 |
478 | எங்கணுங்குடரெங்கணுங்குருதியெங்கணுமென் பெங்கணுங்கொழுவெங்கணுநாடியெங்கணுந்தோ லெங்கணுந்தடியெங்கணுமிருளெங்கணுங்கை யெங்கணுஞ்சிரமெங்கணுமழன்களாயிறைந்த. | 66 |
479 | ஆடுகின்றனகுறைத்தலைப்பிணங்களோடலகை யோடுகின்றனவுற்றநெய்த்தோரொடுமுயிர்கண் மூடுகின்றனதசைகுடர்வழும்பொடுமூளை வீடுகின்றனகொண்டமானத்தொடுவீரம். | 67 |
480 | இன்னவாறிருபடையினும்பெருஞ்சிதைவெய்த முன்னமேயமர்புரிந்திலமெனச்சினமூண்டு சொன்னதானவர்தொழுமிறைமகன்றொகுவானோர் வென்னவாவதிவீரனென்பவன்விரைந்தெழுந்தான். | 68 |
481 | வாங்கினான்கொடுமரத்தினைமால்வரைகுலையத் தாங்கினானெறிந்தார்த்தனன்சரம்பலதொடுத்தா னேங்கினாரரமாதர்கள்பலருமெய்த்திருதோள் வீங்கிநேரெழுந்தார்தார்த்தனள்விறலயிராணி. | 69 |
482 | இருவர்வார்சிலையுமிழ்தருசிலீமுகமெழுந்து மருவுவார்கடல்குடிப்பனவரைபொடிபடுப்ப வொருவுறாதுவிண்பொதிர்ப்பனவுருவுவவையம் வெருவினார்பலவுலகரும்விளைந்ததுபெரும்போர். | 70 |
483 | கொடியதானவனாயிரங்கொடுங்கணைகோத்து நெடியசீரயிராணிமேல்விடுத்தனனிகழும் படியபல்கணையவையெலாம்பாய்தலற்றொல்லை யொடியவேவினளத்தொகைப்பகழிமற்றொருத்தி. | 71 |
484 | தருநறுந்தொடைமிலைச்சியதையலாயிரங்கோ லொருவன்மேற்றொடுத்தேகினளவுணனுட்சினந்து வெருவிலாயிரங்கோறொடுத்தவையெலாம்வீழ்த்தான் பருவமங்கையேவினளொருபிறைமுகப்பகழி. | 72 |
485 | ஆலமேயெனவதுசினந்தடுத்தலுமடுதீக் கோலமேயெனவவனொருபிறைமுகங்கொடுங்கோன் ஞாலமேவிசும்பேயிவைநடுங்கிடவுய்த்தான் சாலமேயெனக்கலாய்த்துமாய்ந்தனதளர்ந்திரண்டும். | 73 |
486 | தீயன்வச்சிரமெடுத்தயிராணிமேற்செலுத்தப் பாயவச்சிரமேவினாளுடல்விழிப்பாவை யாயமற்றிருபடைகளுநெடும்பொழுதமர்த்துச் சாயவெய்த்தனவிட்டவர்கைத்தலஞ்சார்ந்த. | 74 |
487 | கடியவாயிரம்பகழியோராயிரங்கண்ணி நெடியயானைமேற்செலுத்தினானெடியவாளவுண னொடியமற்றவையாயிரங்கடுங்கணையுகைத்துக் கொடியன்றேரினையாயிரஞ்சரங்களாற்குலைத்தாள். | 75 |
488 | வேறுதேரிவர்ந்தாயிரங்கடுங்கணைவிடுத்துத் தாறுபாய்களிநான்மருப்பியானையைச்சாய்த்திட் டூறுசோரிமிக்கொழுகிடவானநாடுடையா ளேறுகோமலர்மேனியைத்துளைத்தனனிளைத்தாள். | 76 |
489 | இளைத்ததோர்ந்தனனகையெறிந்தார்த்தனனிருங்கை வளைத்தவெஞ்சிலையொடுங்கணைமழையொடுமுழிதந் துளைத்தவான்மடமாதர்களொருங்குவீழ்ந்தவிய முளைத்ததீயனான்சிறிதுதன்மொய்ம்புகாட்டினனால். | 77 |
490 | ஈதுநோக்கியவயிணவிகலுழன்மேலிவர்ந்தாள் சாதுநோக்கியமகளிரைத்தளரற்கவென்றாள் போதுநோக்கியகைத்தலங்கார்முகம்பொறுத்துத் தீதுநோக்கியசிலீமுகம்பற்பலசெறித்தாள். | 78 |
491 | தலையிழந்தனர்சிலர்நறுந்தாரணிதடந்தோண் மலையிழந்தனர்சிலர்பெருவாரிநின்றன்ன நிலையிழந்தனர்சிலர்நிலைகுலைதரநிகழ்த்துங் கொலையிழந்தனர்சிலர்துழாய்வயிணவிகோலால். | 79 |
492 | ஓடினார்சிலரொளிந்துகொண்டுய்வதற்குறுதே நாடினார்சிலரொளிந்துமென்னென்றுளநைந்து வீடினார்சிலர்தலையறுபடவிசையொடுநின் றாடினார்சிலரவுணருளவனதுகண்டான். | 80 |
493 | கண்டவெய்யவன்கடுங்கனலினுமிகக்கனன்று தண்டமொன்றெடுத்தெற்றினன்வயிணவிதலைமே லண்டம்விண்டதென்றஞ்சினவதுபொறுத்தனையாள் கொண்டதண்டவன்றலைப்புடைத்தனள்புவிகுலுங்க. | 81 |
494 | தலைபிளந்ததுதானவன்வெஞ்சினந்தலைக்கொண் டுலைவில்வெஞ்சிலைவாங்கியோராயிரமயுத மிலைமுகக்கணைதொடுத்தனனார்த்தனனெல்லாங் கொலைபடப்புயம்பாய்ந்ததுவயிணவிகொதித்தாள். | 82 |
495 | ஓங்குதேவியார்திருவடியுளங்கொளீஇயொளிகள் வீங்குசக்கரமெடுத்தனள்பூசித்துவிடத்தா ளாங்குவெஞ்சுடரெனப்படர்ந்தவன்றலையறுத்துப் பாங்குவந்ததுபனிமலர்பொழிந்ததுபடர்வான். | 83 |
496 | இறைவன்மைந்தனாருயிர்துறந்தமையுளத்தெண்ணிக் குறைவில்வெம்படைத்தலைமையோன்வலிகெழுகோரன் பிறையெயிற்றுவன்றானவர்குழாத்தொடும்பெயர்ந்து கறைபடக்கதழ்ந்துழக்கினன்கன்னியர்குழாத்தை. | 84 |
497 | ஆயகாலையின்மூர்ச்சைதீர்ந்தெழுந்தயிராணி தீயனோடமரேற்றனடிசாதிசைதிரிந்தார் பாயவேதிகள்பற்பலவிடுத்தனர்பதைத்துக் காயமேகினர்மண்ணிடைக்குதித்தனர்கனன்று. | 85 |
498 | இனையவெஞ்சமராடுழிவச்சிரமெடுத்துப் புனையவல்லவிந்திராணியப்பதகன்மேற்போக்க முனையவப்படையவன்விடுபடையெலாமுருக்கித் துனையவேகிமற்றவன்றலைதுணித்துமீண்டன்றே. | 86 |
499 | கோரன்மாய்தலுங்கனகனென்றுரைபெயர்கொண்ட வீரன்வந்தமராடலும்பிராமியுள்வெகுண்டு சேரவெம்படைபலவிடுத்தமர்த்தவன்சென்னி பாரவன்கதைமோதலுந்தலைவிண்டுபட்டான். | 87 |
500 | மற்றுமுள்ளபல்வீரருமந்திரத்தவரு முற்றுவெஞ்சமராடினரச்சமிக்குறுத்தார் பற்றுவெஞ்சினந்தலைக்கொடுவலவைகள்பல்லோர் சுற்றுநின்றுபல்படைவிடுத்திடவுயிர்தொலைந்தார். | 88 |
501 | யானையெண்ணிலமுயல்களாலிறுப்புண்டதென்னச் சேனைவீரருமந்திரத்தலைவருஞ்சேயும் வானையார்மடமாதறாற்றொலைந்தனர்மாற்றா ரூனையார்படையாயென்றுதூதர்சென்றுரைத்தார். | 89 |
502 | உரைத்தவார்த்தைதன்செவிபுகவுள்ளமிக்குழைந்து குரைத்தபூணதிவீரனுமாண்டனன்கொல்லோ வரைத்தசாந்தணிமுலையினாரமரழகென்று விரைத்ததார்ப்புயச்சண்டன்வெங்கனலெனவெகுண்டான். | 90 |
503 | கடவுதேரெனப்பாகனுக்குரைத்திடக்காற்றை நடவுமாறெனநடத்தினனுலகெலாநடுங்கத் தடவுவார்முலைமடவரலியர்குழாஞ்சார்ந்தான் புடவியேத்தும்யாழ்முனிவரன்காளிமுன்போந்தான். | 91 |
504 | பொருவிலாவலிச்சண்டனம்படையினுட்புகுந்தான் வெருவிலாவிறல்யாளியைநடத்தெனவிளம்ப மருவிலாபநம்படைக்கின்றுவந்ததென்றெண்ணி யொருவிலாவடற்காளிநக்கிவர்ந்தனளூர்தி | 92 |
505 | வலவைமார்பலர்தாங்கியபடையொடும்வளையக் குலவைவாயினைநடத்திவெஞ்சண்டன்முன்குறுகக் கலவையார்முலைக்கன்னியைக்கண்களாற்கண்டா னுலவையோடுறுவிடமெனத்தேரொடுமுற்றோன். | 93 |
506 | கண்டகாலையில்வெஞ்சினங்கொழுந்தெழக்கனலா வண்டம்வாய்திறந்தெனப்புலைவாய்திறந்தறைவான் கொண்டசிற்சிலவிரும்பிற்குங்குரூஉச்சுடர்மதியத் துண்டநேர்சிலபல்லிற்குந்துளங்குவேனல்லேன். | 94 |
507 | காகமேறிடப்பனம்பழம்வீழ்ந்திடுங்கதைநே ராகவாயுடீர்ந்தவர்சிலரமர்த்துநின்னணியா மேகவார்குழலார்விடபடைகளால்வீந்தா ரேகவீரன்யானவர்களோடெண்ணலையென்றான். | 95 |
508 | அன்னவாய்மொழிகேட்டலுமவிதருதீப மென்னவேதலையெடுப்பினோடுரைத்தனையெல்லாம் பின்னரோரலாங்கூற்றுவன்பிடர்பிடித்திருந்தா னென்னவோதினாளுலகெலாமுய்விக்குமிறைவி. | 96 |
509 | வீரிவாய்மொழிகேட்டலும்வெகுண்டுவெங்கொடியோன் மூரிவெஞ்சிலைவாங்கினன்முழங்கினாணெறிந்தான் வாரிசூழ்புவிவிண்டதுவானகநடுங்கிற் றோரியார்த்திடுகளத்திலுற்றவரெலாமுலைந்தார். | 97 |
510 | கண்டதேவியுங்கைச்சிலைவளைத்தநாணெறிந்தா ளண்டம்விண்டனவரையெலாம்பொடிந்தனவாழி யுண்டமேகங்களஞ்சிமிக்குதிர்த்தனவுருமு விண்டபல்வகைப்புவனமும்விளம்புவதென்னோ. | 98 |
511 | ஒன்றுபத்துநூறாயிரமயுதமோரிலக்கந் துன்றுவாளிகளொரோவொருதொடையுறத்தொடுத்துக் கன்றுமாதரைக்கலக்கினன்கலங்கினரழுதார் வென்றுமேம்படுவாள்வலிவிறலுடைச்சண்டன். | 99 |
512 | அஞ்சுமாதரையஞ்சலீரெனக்கரமமைத்து நஞ்சுநேர்கணைதைத்தலினாகியநலிவுந் துஞ்சுமாகடைக்கணித்தனடொடிக்கையார்பலரும் பஞ்சுவாய்நுதித்துனைவடுக்களுமறப்பட்டார். | 100 |
513 | தனையவாவியயாவருமூறின்றித்தழையப் புனையவாம்விறற்செல்விகண்டகமகிழ்பூத்துத் துனையமாற்றலன்பெரும்படையனைத்தையுந்துகள்செய் தினையவாக்குவன்சண்டனையென்றுகோலெடுத்தாள். | 101 |
514 | கரிகண்மேற்பதினாயிரங்கால்விசைத்தெழுவாம் பரிகண்மேற்பதினாயிரம்படருருள்பூண்ட கிரிகண்மேற்பதினாயிரங்கேழ்கிளர்கழற்கா லரிகண்மேற்பதினாயிரமழற்கணைதொடுத்தாள். | 102 |
515 | மண்ணெலாங்கணைவாரியெலாங்கருணைவயங்கு விண்ணெலாங்கணைதிசையெலாங்மேருக் கண்ணெலாங்கணைவேறுளவரையெலாங்கணைமற் றெண்ணெலாங்கணையாயினவெனப்பலவிடுத்தாள். | 103 |
516 | அரவணிந்தவன்கட்டழலெனச்சிலவடுக்கும் பரவுமற்றவனகைத்தழலெனச்சிலபாயுங் கரவிலன்னவன்கைத்தழலெனச்சிலகடுகு முரவுசால்விறற்காளிவெஞ்சிலையுமிழ்வாளி. | 104 |
517 | அழிந்தவாரணமழிந்தனவாம்பரியச்சிற் றழிந்தகூவிரமழிந்தனவவுணர்தங்குழுக்க ளழிந்தவேதிகளழிந்தனவூர்திகளனைத்து மழிந்தவானவர்கட்டமொட்டறக்கடையனைத்தும். | 105 |
518 | வரையெலாம்பிணமண்டியமலர்செறிகானத் தரையெலாம்பிணந்தாமரையோடைகால்பொய்கை நிரையெலாம்பிணநெடுங்கழிநெய்தல்வீநாறுந் திரையெலாம்பிணமாக்கினகாளிவில்செலுத்தே. | 106 |
519 | மருவரக்குநீர்ப்பெருக்கின்மேற்கேடகமறித்து வெருவில்பேய்க்கணங்கிடத்திமேலிவர்ந்தங்குமிதக்கும் பொருவிலாக்கழக்கடைகொடுபோகுமாறுந்துந் திருவமல்கியபாரிடமெங்கணுஞ்செறிந்தே. | 107 |
520 | பட்டுவீழ்ந்தமால்கரிச்செவிப்பரிகலந்திருத்திக் கிட்டுபேய்ப்பிணாமூளைவெண்சோறுமேற்கிளர விட்டுமென்றசைக்கறிபலபடைத்திழுதிரத்தம் விட்டுநன்குபசரிப்பனவாண்மயன்மிசைய. | 108 |
521 | திருந்துவன்றடிகொழுவழும்பீருள்வான்செந்நீர் விருந்துபற்பலகிளையொடும்விரும்பிமிக்குண்டு பருந்துங்காகமுமெருவையுமேலெழீஇப்பந்தர் பொருந்துநீர்மையிற்பறப்பனபோர்க்களமுழுதும். | 109 |
522 | தேருமற்றனபெருமதமழைபொழிசெங்கட் காருமற்றனகடும்பரியற்றனவயவர் போருமற்றனதனித்தனியுரைப்பதென்பொருன ராருமற்றனரொருவனாய்நின்றனனவுணன். | 110 |
523 | துன்றுவெம்படைதொலைந்ததுந்தேவர்தந்தொகுதி வென்றுமேம்படுவீரர்களொழிந்ததும்விறல்மிக் கொன்றுவீரிதன்படையொடுபொலிவதுமுணர்ந்து நன்றுநன்றுநஞ்சேவகத்திறனெனநகைத்தான். | 111 |
524 | ஆயிரங்கணானுலகுகூட்டுண்டவனழன்றோ ராயிரங்கணையம்மைமேற்றொடுத்துவிட்டார்த்தா னாயிரங்கணையாயிரங்கணைகளாலறுத்தோ ராயிரங்கணையவுணன்மேற்செலுத்தினளம்மை. | 112 |
525 | அனையவாளியோராயிரம்வாளியாலறுத்துத் துனையவானவர்வலியெலாந்தொலைத்ததோர்தண்ட மினையவேவினன்சண்டன்மற்றதனைத்தன்னியல்கைப் புனையவாயதண்டாற்பொடிபடுத்தினளம்மை. | 113 |
526 | தண்டமாய்தலும்வெஞ்சினந்தலைக்கொடுசண்டன் கொண்டன்மாமழைபொழிந்தெனமாயையாங்கொடுங்கோ லண்டம்யாவையுமுயிர்த்தவளளித்தவண்மறையக் கண்டயாவருநிலைகலங்கிடக்கதழ்ந்தெய்தான். | 114 |
527 | மாயையாங்கணைபடர்ந்தனகாளியைமறைத்த வேயைவென்றதோள்வயிணவியாதியர்மெலிவுற் றாயைநீத்தழுமழவெனப்புழுங்கினரழுதார் பேயைவன்கொடியேற்றினாண்மற்றதுபேணி. | 115 |
528 | ஞானவாளியைவிடுத்தனண்மாயைபோய்நசித்த தூனமில்லெனத்தெரிந்துமிக்குவந்தனருலகோர் மானநாயகிதிருவருவாட்டியதிறத்தா லானவவ்விடந்தனையுருவாட்டியென்றறைவார். | 116 |
529 | விடத்தைநேர்பவன்மெய்யெலாந்துளைபடவிசிகங் குடத்தைநேர்முலைதொடுத்தனள்யாவரங்குழுமி நடத்தையாற்றிமங்கலநனிநவின்றனரனைய விடத்தைமங்கலமென்றுரைசெயுமுலகின்னும். | 117 |
530 | விரவுவெஞ்செருப்புரிந்தபேரிடமெலாம்விளங்கப் பரவுமிங்ஙனமொவ்வொருகாரணம்பற்றி யுரவுசால்பெயருரைப்பர்வாரிதிவளையுலகோர் புரவுமேயவவ்விடந்தொறும்பொலிவண்மாகாளி. | 118 |
531 | மெய்யடங்கலுந்துளைபடவெஞ்சினங்கொண்டு பொய்யடங்கலுமுள்ளவன்புகுத்தினன்வானிற் செய்யடங்கலுமுள்ளதன்றேரதுநோக்கி மொய்யடங்கலுமோருருக்கொண்டன்னமுதல்வி. | 119 |
532 | தன்னதூர்தியுஞ்செலுத்தினளாவயிற்சமர்த்தா ரென்னகூறுதுமிருவர்தம்போர்த்திறமெல்லா நன்னராய்ந்துணர்த்திடுபவர்ஞாலத்துமுளரோ பன்னருங்கடுப்பொடுசுழன்றனர்பலவிடமும். | 120 |
533 | விண்ணிற்சூழுவமேருவிற்சாருவதிசையின் கண்ணிற்பாய்வனகடலினும்புகுவனகருது மெண்ணிற்சீர்த்தவல்விரைவொடுமிங்ஙனமுழன்று மண்ணிற்சார்ந்தனவிருவரூர்தியுமுன்போல்வயங்கி. | 121 |
534 | வையமேவலுங்குமரிவெஞ்சினங்கொடுவலிசால் வெய்யயாளியைமற்றவன்றேர்மிசைச்செலுத்தி யையபாகனைப்பரிகளைவாளெடுத்தடர்த்துச் செய்யநீர்ப்பெருக்கெழத்தலைகீழ்விழச்செய்தாள். | 122 |
535 | ஊரும்வையமற்றூர்தராவையமுற்றுரவோன் யாருமச்சுறவெஞ்சிலைவளைத்தனனதனைத் தேருமுன்னரவ்வாள்கொடுதொலைத்தனள்செல்வி பாரும்விண்ணமுமுநடுங்குமோர்சக்கரம்பரித்தான். | 123 |
536 | அந்தச்சக்கரஞ்சுழற்றிமேலெறிந்தனனதுபோ திந்தச்சக்கரமென்னதேயென்றுகையேற்றாள் சந்தச்சக்கரங்கழிதலுந்தோமரந்தரித்தான் முந்தச்சக்கரப்பகவனைமுருக்கிமூர்க்கன். | 124 |
537 | அன்னதோமரந்தன்னையும்வாளினாலறுத்தா னென்னசெய்துமென்றெண்ணியோர்வரைபறித்தெழுந்து முன்னர்வந்தனனதையொருதண்டினான்மோதிப் பின்னமாக்கினளுலகெலாம்பெற்றவள்பெற்றாள். | 125 |
538 | படையெடுத்தமராடலென்மேற்சென்றுபற்றி யடைதரச்சினந்துயிருண்பனெனச்சினந்தடுத்தா னுடையநாயகிபதநினைந்தொய்யெனவொருதன் புடைவிராவுவெஞ்சூலத்தையேவினள்புரப்பாள். | 126 |
539 | கொடியநஞ்செனக்கூற்றெனக்கொடந்தழலென்னக் கடியசூலஞ்சென்றவனுரந்துளைத்துயிர்கவர்ந்து படியவாங்கடன்மூழ்கிவான்மலரினும்படிந்து நெடியகாளியையடத்ததுபுவிமகிழ்நிரம்ப. | 127 |
540 | பற்றிவெங்கொலைச்சண்டனைப்படுகளத்தவித்து வெற்றிமேவியவிடத்தினைவெற்றியூரென்பர் முற்றியாவரும்வளைந்தனர்சோபனமொழிந்தார் கொற்றிமற்றவனூரழித்திடும்படிகூறி. | 128 |
541 | அழித்துவந்தவர்தம்மொடுங்கானப்பேரடைந்து செழித்தநின்றருடம்பிரான்சேவடிசேவித் தொழித்துவெம்பகையுய்ந்தமாதர்களொடுமுவகை கொழித்துமீண்டனள்தேவிப்பதிகுறுக. | 129 |
542 | வாவிசூழ்கண்டதேவியுண்மகிழ்ந்துவந்தடைந்து தேவியார்திருவடிதொழுதெழுந்தனள்செல்வி காவிநேர்தருங்கண்ணியர்பலருமுட்கனிந்து பாவியேங்களுய்ந்தனமெனப்பன்முறைபணிந்தார். | 130 |
543 | பணிந்தமாதர்கள்பலரையுந்தேவியார்பார்த்துத் துணிந்தபேரருள்செய்திடத்தொழுதெழுந்திருந்தா ரணிந்தபெண்ணுருவாயினார்யாவருமாங்குத் திணிந்தவாணுருவாதல்பெற்றகமகிழ்சிறந்தார். | 131 |
544 | முன்னுமாதவத்துயரியசவுநகமுனிவ மன்னுவெந்திறற்சண்டனைவதைசெய்ததிதுமேற் பன்னுதம்பிரான்பெரியநாயகிக்கருள்பண்பி னுன்னுமற்புதங்கேளெனவுரைத்திடுஞ்சூதன். | 132 |
சண்டாசுரன்வதைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 8-க்கு திருவிருத்தம் - 544.
-----------
9. திருக்கலியாணப்படலம். (545 - 634)
545 | சிறுமருதடவிமேயசிற்றிடையெம்பிராட்டி மறுவறுகருணையாலேவானவர்பகைவனாய தெறுதொழிற்சண்டன்மாயச்செழித்தனவுலகமெல்லா முறுமகமாதியாவும்பொலிந்தனவூறுதீர்ந்தே. | 1 |
546 | பேசுபல்லுலகுமீன்றபெரியநாயகியென்பாண்மற் றாசுதீர்ந்துயிர்கள்செம்மையடைந்ததின்மகிழ்ந்தாளேனு மூசுபேரன்புவாய்ந்தோர்முன்னத்தின்வழியேநிற்குந் தேசுசால்கொழுநற்காணாக்கவலையுஞ்சிந்தையுள்ளாள். | 2 |
547 | பண்டுபோலெழுந்துமேல்பாற்பயில்சிவகங்கைமூழ்கி மண்டுபேரன்புபொங்கமலர்முதலாயயாவுங் கொண்டுவன்மீகம்போற்றிக்குறித்தமரிருக்கைசார்ந்து விண்டுவாதியர்காணானைமிகநினைத்திருந்தாளன்றே. | 3 |
548 | நினையாரைநினையானாகிநினைப்பாரைநினையாநிற்கு நனையாரைவேய்ந்தமோலிநாயகன்கருணைபூத்து முனையாரைமுனையாவென்றிமுழுவிடைமேற்கொண்டெங்க ளனையாரையருளவந்தானம்மருதவனத்தம்மா. | 4 |
549 | கறையகலத்துக்காட்சிகழிதரப்புறத்தேதோற்று மிறைதிருக்காட்சிநோக்கியெழுந்திருகைகள்கூப்பி மறைமுடிக்கரியபாதமலர்மிசைத்தொழுதுவீழ்ந்து குறையறக்களித்தெழுந்துகோற்றொடிதுதிக்லுற்றாள். | 5 |
550 | பாரிடையைந்துமாகிப்பாருமாய்நின்றாய்போற்றி நீரிடைநான்குமாகிநீருமாய்நிகழ்வாய்போற்றி போரிடையழலின்மூன்றாயழலுமாய்ப்பொலிவாய்போற்றி தேரிடைவளியிரண்டாய்வளியுமாய்த்திகழ்வாய்போற்றி. | 6 |
551 | வெளியிடையொன்றேயாகிவெளியுமாய்விளைந்தாய்போற்றி யளியுயிர்க்குயிருமாகியுயிருமாய்விரவாய்போற்றி தெளிபுவிபுனறீகால்வான்செஞ்சுடர்மதியான்மாவென் றொளிசெயெட்டுடம்புபெற்றமுடம்பொன்றுமில்லாய்போற்றி. | 7 |
552 | தொழில்களோரைந்துசெய்துந்தொழிலொன்றுமில்லாய்போற்றி யெழில்செயெற்கலந்திருந்தும்விகாரமொன்றில்லாய்போற்றி பொழில்களோரீரேழாயும்பொழில்கடந்தவிர்வாய்போற்றி விழிலெழுந்தெழிலழுந்திமிளிர்ந்துமவ்வில்லாய்போற்றி. | 8 |
553 | காரணமெவைக்குமாயுங்காரணமில்லாய்போற்றி யாரணமுடிவிருந்துமதற்கறிவொண்ணாய்போற்றி நாரணன்பிரமராயுநயந்தவர்காணாய்போற்றி பூரணமுதல்வபோற்றிபுண்ணியப்பொருளேபோற்றி. | 9 |
554 | பிறையவிர்சடையாய்போற்றிபிறங்குவெள்விடையாய்போற்றி கறையவிர்களத்தாய்போற்றிகருதுநருளத்தாய்போற்றி யறைமழுவலத்தாய்போற்றியற்புதநலத்தாய்போற்றி மறைநவில்சனத்தாய்போற்றிமருதமர்வனத்தாய்போற்றி. | 10 |
555 | என்றுநெஞ்சுருகக்கண்ணீரிறைத்திடத்துதியாநிற்குங் குன்றுவெம்முலையினாளைக்குழகனாரருளினோக்கி யொன்றுவல்விடையினின்றுமிழிந்தருகுற்றுப்பின்பா னன்றுதைவந்திளைத்தாய்நற்றவம்புரிந்துநீயே. | 11 |
556 | இருளெனப்படுகூந்தான்மற்றிலகுறுநமக்குநம்பே ரருளெனப்படுநினக்குமறக்கடையில்லையேனும் பொருளெனப்படுபேரன்பிற்பூசித்துப்புவனமுய்வான் றெருளெனப்படுமிப்பூசைசெய்யெனச்செப்பினேமால். | 12 |
557 | சொல்லியவாறேநீயுஞ்சுருதியின்முழக்கமாறா நல்லியலினையதானநண்ணிநீநோற்றாயற்றாற் புல்லியபாவமுற்றும்போயதபுனிதமுற்றா யல்லியங்குழலாய்நம்பாலவாம்வரம்பெறுதியென்றான். | 13 |
558 | வளவிடைப்பிரானிவ்வாறுவாய்மலர்ந்தருளப்போற்றி யிளமகப்பிணிக்கீன்றாளேமருந்தயின்றிடுதலெண்ணி யுளமகிழ்பூப்பவெல்லாவுயிர்களுமுய்யுமாற்றாற் றளரிடையெம்பிராட்டிவரங்கொளச்சமைந்தாளன்றே. | 14 |
559 | இத்தலநாமஞ்சொற்றோரித்தலமுளஞ்சிந்தித்தோ ரித்தலந்தரிசித்தோர்மற்றித்தலம்வசித்தோர்நாளு முத்தலம்புகழவாநின்சாலோகமுதலோர்நான்கு முத்தலமருநீர்ணேியாய்முறையுறதல்வேண்டும். | 15 |
560 | மறையுணர்ந்தவரைச்செங்கோன்மன்னரைவணிகர்தம்மைக்; கறையில்சூத்திரரைத்தந்தைதாயரைக்கடும்பைப்பீளைப் பறைதருபாவைமாரைப்பசுக்களைவதைத்தபாவ மிறைவநின்றரிசனத்தாலித்தலத்தொழிதல்வேண்டும். | 16 |
561 | மேயவித்தலத்தைச்சார்ந்துவிளம்புநின்கோயிலாதிப் பாயமல்பணியுமாற்றிப்பகர்தருபூசையோடு மாயவுற்சவமுநன்குசிறப்பிப்போரவனியாண்டு மாயவன்முதலோராய்ப்பின்னின்பதமருவல்வேண்டும். | 17 |
562 | ஒருதமியேனன்றாற்றுமுயர்சிவகங்கைதோய்வார் கருதருங்குட்டமாதிக்கடும்பிணியனைத்தும்பற்றிப் பொருதலைத்திடும்பேயாதித்துன்பமும்பொரிந்துபோக மருதமர்பிரானேயெல்லாவளங்களும்பெறுதல்வேண்டும். | 18 |
563 | பலவுரைத்திடுவதென்னைபற்பலநாளுமிந்தத் தலனடைதவத்தினோர்க்குன்றாட்பிழையொன்றுநீங்க வலனுயர்கொடியவாயபாதகமனைத்துமாய்ந்து புலனனிசிறந்தோராயெப்போகமும்பெறுதல்வேண்டும். | 19 |
564 | ஆன்றவன்மீகநின்றுமருட்குறிவடிவம்யார்க்குந் தோன்றநீயருளல்வேண்டுந்தொழுதபல்லுயிருமுய்ய மான்றவென்றனைநீயின்னேவதுவைசெய்தரளல்வேண்டுஞ் சான்றவெண்குணத்தாயென்றாளுலகெலாமீன்றதையல். | 20 |
565 | அம்மைவாயுரைத்தவார்த்தையடங்கலுஞ்செவியினேற்றுச் செம்மைசான்மேனியம்மான்றிருமுகமலர்ச்சிகாட்டி மும்மையாருலகுமுய்வான்முயன்றனையனைத்துநன்று கொம்மைவாரணிந்தகொங்கைக்கோற்றொடிமடந்தாய்கேட்டி. | 21 |
566 | நாடவன்மீகநின்றுநம்மருட்குறியின்றோன்று மாடுபாம்பனையவல்குழாயிழாயதான்றுமற்றை நீடுபல்வரமுமின்னேபெறுகெனநிகழ்த்தினானுட் கூடுமோகையளாயுய்ந்தேனென்றுகைகுவித்தாளம்மை. | 22 |
567 | அன்னதுகண்டவேந்தனயனரிமுதல்வானாட ரென்னருமுய்ந்தோமுய்ந்தோமென்றுதாள்பணிந்தெழுந்தார் மின்னகுசூலக்காளிவிரைமலர்ப்பாதந்தாழ்ந்து பொன்னவிர்சடையாயிந்தத்தலத்தில்யான்பொலிதல்வெண்டும். | 23 |
568 | என்னைவந்திப்போர்நாளுமெண்ணருஞ்செல்வத்தாழ்ந்து முன்னைவல்வினையினீங்கிமுளைகடும்பாதிமல்க வன்னையினருண்மிக்கோராயலங்குறவேண்டுமென்றாள் பொன்னைநேர்சடையானவ்வறாகெனப்புகன்றுவிட்டான். | 24 |
569 | அவ்வரம்பெற்றகாளியத்தலவடபாற்கோயிற் செவ்விதிற்கொண்டுமேவிச்சேவித்துப்போற்றுவாருக் கெவ்வமுற்றொழித்துநாளுமிட்டகாமங்கைகூடி யொவ்வவெவ்வரமும்பாலித்துறும்பிரசன்னமாயே. | 25 |
570 | பொங்குமங்கலங்களெல்லாம்பொலிதரவெவர்க்குநல்கி யங்குமங்கலமாய்நாளுமமர்கின்றாடன்னைவானோர் தங்குமங்கலமுண்டாகத்தழைதிருமேனிமுற்றுங் குங்குமங்கலவச்சாத்திக்குங்குமகாளியென்றார். | 26 |
571 | அவணிலையன்னதாகவயன்முதலாயவானோர் தவமலியம்மைவேண்டத்தம்பிரானிசைந்தவாறே கவலரும்வதுவையாற்றக்கடைப்பிடித்துவகைபொங்க வவமையின்றுய்ந்தோநாமென்றொருங்கருனைவருந்தொக்காரே. | 27 |
572 | முருகியலன்பிற்கஞ்சனியவரைமுன்னர்க்கூவிப் பெருகியவனப்புவாய்ந்தபெரியநாயகியம்மைக்கு முருகியமனத்துமேவுமொருசிறுமருதூரர்க்குந் திருகியமனத்தர்காணாத்திருமணநிகழ்தலாலே. | 28 |
573 | காதலமருங்கும்பக்கொங்கையரோடாடவர்களீண்ட மீதலமருங்குந்தெண்ணீர்விரிதிரைக்கடலுடுத்த பூதலமருங்குஞ்சென்னிப்பொலிமணியுடையார்மேய பாதலமருங்குஞ்சென்றுபடர்முரசறைதிரென்றான். | 29 |
574 | என்றலுமுவகைமீக்கொண்டியலருட்டலைமைபூண்டார் நன்றமர்புனலுண்மூழ்கிநல்லனதுய்த்துடுத்து வென்றபல்லணியணிந்துவெய்யவெங்களிறுபண்ணி யொன்றமற்றதன்மேலேற்றினுரிப்பெருமுரசிட்டேறி. | 30 |
575 | வாழியகுணில்கைக்கொண்டுவாழியசெருத்தலாக்கள் வாழியமறையுணர்ந்தோர்வாழியவேள்விச்செந்தீ வாழியமழைபெய்வானம்வாழியவுயிர்களெல்லாம் வாழியசைவநீதிவாழியமன்னர்செங்கோல். | 31 |
576 | சிறுமருதூரின்மேயதேவதேனுக்குமன்பிற் பெறுமொருசிறுமருங்குற்பெரியநாயகிக்குமன்ற லுறுவதுகாணயாருமொல்லையினணிந்துகொண்டு மறுவறுசிறப்புமேவவம்மினென்றெருக்கினானே. | 32 |
577 | எருக்கியமுரசங்கேளாயாவருமுளத்துமேன்மேற் பெருக்கியவுவகைதுள்ளப்பெறலரும்பேறும்பெற்றோ முருக்கியவினைஞரானோமூழ்கினமின்பத்தென்று தருக்கியதன்மையோராய்த்தம்முளெக்கழத்தமுற்றார். | 33 |
578 | தண்டகநிழற்றுங்கற்பதருவுறையமரர்வேந்து முண்டகமலரின்மேயமுதல்வனுமுருகுவெள்ளம் வண்டகங்குடையவூற்றும்வனத்துழாய்மாலைத்தேவு மெண்டகமற்றையோருமிருங்களிபயப்பச்சூழ்ந்து. | 34 |
579 | விச்சுவகன்மற்கூவிமெல்லியலுமைக்கும்வேத வச்சுவப்பெருமானுக்குமருங்கடிநிகழ்தலாலே மெச்சுவமானமின்றிவிளங்குமண்டபங்களாதி யெச்சுவர்க்கமுமோகிக்கவியற்றுதிகடிதினென்றார். | 35 |
580 | வேறு. என்றபொழுதகத்துவகையெய்தநனிமுகமலர்ந்து மன்றவருவிக்கினங்கண்மருவாதுமுடிவெய்தி யொன்றவலம்புரிக்களிற்றையுரைக்குமனுவாற்போற்றி நன்றமைமண்டபமாதிநவிற்றிடலுற்றான்மயனே. | 36 |
581 | கருங்கடன்மேற்பலபரிதிகாலூன்றிநின்றாற்போ லொருங்குமணிக்குறடியற்றியுதன்மீதுசெம்மணித்தூ ணெருங்குபலபலநிறுவிநின்றபரிதிக்கிறைமே லருங்குரைத்தென்றிடக்கிடந்தாலனபொற்போதிகைகிடத்தி. | 37 |
582 | மீதுமதிகிடந்ததெனவெள்ளியவுத்திரம்பொருத்திக் கோதுதவிரம்மதிமண்டலத்திறைமேற்குலாயதெனப் போதுமரகதப்பலகைபொருந்திடவெங்கணும்பரப்பி யோதுகனலெனத்துகிர்விமானமேலுறவமைத்து. | 38 |
583 | அந்தவொளிமண்டலத்துக்கரசுமேலமர்ந்ததெனச் சந்தமலிசெம்மணிசெய்தசும்புமேலுறவமைத்துச் சுந்தரமார்நாற்புறத்துஞ்சோபானமியற்றியதிற் பந்தமுறவிவ்விரண்டுபக்கமும்யாளிகணுறுவி. | 39 |
584 | அத்தகையமண்டபச்சுற்றருகுமுழந்தாழ்ந்திருப்ப வெத்தகையமண்டபமுமிதற்கிணையாகாவென்ன முத்தகையவுலகடங்கமொய்த்திடினுமிடங்கிடப்ப வித்தகையதெனப்புகறற்கியலாமண்டபமொன்று. | 40 |
585 | ஒளிவளர்பொற்குறட்டுமிசையுறுவயிரக்கானிறுவித் தெளிவளர்செம்மணிப்போதிசெறிதருநீலுத்திரங்கள் வெளிவளர்மேதகப்பலகைமேதினிநீரழலுழலும் வளிவளர்வானடுக்கென்னமாண்புபெறும்படியியற்றி. | 41 |
586 | பித்தியும்பொற்சாளரமும்பிறங்கியொளிர்நிலைப்புதவு மொத்தியல்பல்கொடுங்கைகளுமொள்ளியபொன்னரிமாலை நித்திலமாலிகைபவளமாலைநிகழ்மணிமாலை கொத்தியல்பூமாலைமுதல்யாவுமெழில்கொளப்பொருத்தி. | 42 |
587 | அன்மயில்கிளிபூவையான்றகபோதகமுதலா வென்னபறவையும்பொலியலிணர்மலராதிகணெருங்கி வன்னமிகச்சித்திரித்தவான்பட்டுவிதானித்துப் பொன்னமையுமரதனகம்பலம்பொலியக்கீழ்விரித்து. | 43 |
588 | இருவகைமண்டபஞ்சூழவியைந்தபெருவெளிமறையத் திருநிலைகாவணமிட்டுத்தெங்கிளநீர்பைங்கரும்பு பொருவருதாற்றுக்கதலிபூம்பிணையன்முதலாக வொருவருபல்லலங்காரமுலகம்வியப்புறப்புரிந்து. | 44 |
589 | அன்னகாவணஞ்சூழவைந்தருவும்பணிசெய்யப் பன்னகாபரணர்திருவருள்பபோலும்பதஞ்செய்யச் சொன்னமாமணியாதிதுலங்குபலவிதத்தமைந்த தென்னவாமிளஞ்சோலைதேவர்புலங்கொளப்புரிந்து. | 45 |
590 | ஆயகாவணஞ்சூழவழகுபொலிநான்மறுகு மேயவிருபான்மாடமாளிகையும்விண்டடவத் தேயமெலாஞ்சிறிதென்றுசெப்பவிடங்கொளப்புரிந்து பாயதோரணமுதலாப்பலவலங்காரமுஞ்சமைத்து. | 46 |
591 | நாற்புறமுஞ்சோபானநயந்தநறுநீர்வாவி யேற்புறநாற்றிசையிடத்துமிண்டையாதிகண்மலர்ந்து நூற்புறமிலிலக்கணத்தினோன்மையதுகொளச்சமைத்து மாற்புறங்கண்டிடும்வதுவைமண்டபத்தினடுவாக. | 47 |
592 | நாடுமுறைமுதல்பெரியநாயகியோடினிதமரப் பாடுமுடங்குளைமடங்கல்பலசுமந்தமணிப்பீட நீடுவனப்புறவிட்டுநிகழ்பவளக்காலூன்றி மாடுசெறிமணிவிளங்கவளர்விமானமுஞ்சமைத்து. | 48 |
593 | சுற்றமையுங்கொடுங்கைதொறுந்தூக்கியநித்திலமாலை முற்றமையுமிருண்மேய்ந்துமுழுநிலாக்கதிர்காலப் பற்றமையுமத்தகையபைம்பொனணைக்கெதிராக மற்றவையும்வேதியுங்குண்டமும்பிறங்கும்வகைபுரிந்து. | 49 |
594 | விரவுபுவியிடத்தவர்கண்மிகநோக்கியிமையாரா யுரவுசெறிசுரராகவும்பர்களுமுறநோக்கி விரவுதிருவடியின்பமேவியவரேயாகப் பரவுசிவலோகமெனும்படியழகுபெறச்சமைத்தான். | 50 |
595 | வேறு. பெருகியவனப்பிற்சமைத்தகல்யாணப்பிறங்குபொன்மண்டபச்சிறப்பை யுருகியமனத்தின்யாவருநோக்கியுவந்தனர்மற்றதனூடு முருகியகளிப்பினியவர்களறைந்தமுரசொலியகஞ்செவிநிறையப் பருகியவொருமூன்றுலகினுளாரும்பரந்ததிவிரைந்துசென்றடைவார். | 51 |
596 | மருவியவாட்கேசர்கூர்மாண்டர்வயங்கியபுத்தியட்டகர்தோ மொருவியகாலாக்கினியுருத்திரர்பூவுறைபவன்புரூரநள்ளுதித்தோர் வெருவியவவரால்விதித்திடப்பட்டோர்விளங்கொருகாலுருத்திரர்தீப் பொருவியசூலகபாலத்தராகிப்பொலிதருவயிரவர்முதலோர். | 52 |
597 | வானவர்மகவான்மலர்த்தலையுறைவோன்வண்டழாய்த்தொடைப்புயமாயோன் றானவரியக்கர்சித்தர்கிம்புருடர்சாரணர்வித்தியாதரர்க ளானவர்செழங்கந்தருவர்கின்னரர்மற்றாசைகாப்பாளர்வல்லரக்கர் மானவர்பரிதிமதியுறுகோணாண்மாதவமுனிவரர்முதலோர். | 53 |
598 | அரமடந்தையரேயவிர்புலோமசையேயையவெண்டாமரைமகளே வரமிகுதிருவேயருந்ததிமுதலாமாதவமுனிவர்பன்னியரே பரவியநாகநாட்டுமங்கையரேபற்பலபுவிமடந்தையரே விரவியமற்றைக்கருநெடுந்தடங்கண்வெண்ணகைச்செய்யவாயினரே. | 54 |
599 | அனைவருநெருங்கித்தோளொடுதோளுமழகியமுடியொடுமுடியும் புனைவருகழற்காலொடுகழற்காலும்பூணணிமார்பொடுமார்பு மினைவருமடந்தைமாரொடாடவருமிறுகிமிக்குரிஞுறப்புகுந்து நினைவருமனையர்தகுதியினிருந்தார்நின்மலன்மணவணியுரைப்பாம். | 55 |
600 | வேறு. கடிமலர்த்தவிசினானுங்கண்ணியந்துளவினானு முடிவிலாமுதல்வன்பாதமுன்சென்றுவணங்கிப்போற்றி யொடிவின்மஞ்சனஞ்செய்சாலையுள்ளெழந்தருளவேண்டு மடிகளோவென்னவையனலர்முகமுறுவல்பூத்து. | 56 |
601 | மாயவனெடுத்துவைக்கும்பாதுகைமலர்த்தாள்சேர்த்துத் தூயபட்டமைந்தமுன்கையிருவருந்துணைந்துநீட்டச் சேயகைக்கமலம்வைத்துத்திருத்தகநடந்துசென்று பாயமஞ்சனஞ்செய்சாலையுட்புக்கான்பரமயோகி. | 57 |
602 | மறைமுடியென்றுந்தூயமாதவருள்ளமென்று மறைதருமொருபொற்பீடத்தமர்ந்தினிதிருக்கவேத னிறைசிவகங்கைத்தெண்ணீர்நிலையுறும்படிபூரித்த குறைவில்பொற்குடங்கையேந்தியாட்டினான்குளிரமாதோ. | 58 |
603 | நுழையிழைக்கலிங்கங்கொண்டுநோக்குடைத்திருவாழ்மார்பன் மழைமிடற்றடிகண்மேனிமெல்லெனமருவவொற்றக் குழையுடைச்செவியாலாலசுந்தரன்குறுகிநீட்டும் பிழையில்வட்டகைவெண்ணீறுபிறங்குறநுதலிற்சாத்தி. | 59 |
604 | மன்னியவரைநாண்பட்டுக்கோவணமாயோனீட்டத் துன்னியவீரமாற்றிமற்றவைசூழச்சேர்த்து மின்னியசெம்பொற்பன்னூல்விளிம்புசெய்வெண்பட்டாடை முன்னியவரைப்பின்போக்கிமுகிழ்த்தழகெறிப்பச்சாத்தி. | 60 |
605 | வடதிசைத்தலைவனிட்டமாயவனுவந்துவாங்கிப் படவரவாடிச்சீறும்பண்பிவணாகாதெனுங் கடன்மதித்தடக்கல்போலங்கங்கையைமறைத்தல்போலு மடர்மணியிழைத்தசெம்பொன்னவிர்முடிமுடியிற்சேர்த்து. | 61 |
606 | கடிமணப்பணிகணோக்கக்காதல்செய்முகநாட்டம்போற் பொடியணிநதலினாப்பட்பூத்தகண்டிறவாவண்ணம் படிதரக்கட்டும்பட்டப்பண்பெனப்புனைபொற்பட்டத் தொடிவில்பன்மணியும்வாரியுண்டிருளனுக்கச்சேர்த்து. | 62 |
607 | படுகடலுலகமேத்தும்பாண்டிநாடாளுஞ்சீருந் தொடுசிலைமதவேண்மேனிசுண்ணஞ்செய்திட்டசீரும் வடுவறவிளக்கியாங்குமாண்பிலேன்மொழிபுன்பாட்டு மிடுபெருஞ்செவியினாலமகரகுண்டலங்களிட்டு. | 63 |
608 | பன்மணிபொலியுஞ்செம்பொற்பருப்பதந்தனைக்குழைத்த வன்மையைமதித்துமிக்கவன்மையுற்றடைந்துவீங்குந் தன்மையைத்தடைசெய்தென்னத்தவாப்பலமணிகால்யாத்த புன்மையில்பொற்கேயூரம்புயவரைபொலியச்சேர்த்து. | 64 |
609 | வெருவரவுலகமெல்லாம்விழுங்கியவிருள்கால்சீப்பத் திருமகண்முதலாயுள்ளதெய்வமங்கையர்தங்கண்ட மொருவரும்பலபூண்பூணவுதவிசெய்திருக்கண்டத்திற் பொருவருமொளிசால்கட்டுவடம்பலபொலியப்பூட்டி. | 65 |
610 | நிலம்புணரேனக்கோடுநெடுவலிக்கூர்மத்தோடும் புலம்புகொண்டினைந்துதேம்பப்பொங்கொளிமணிமதாணி நலம்புனைதரளக்கோவைநகுமுபவீதம்வெய்யோன் றலம்புகர்படுக்கும்வீரசங்கிலியாதிசேர்த்து. | 66 |
611 | குடங்கைசெங்கமலமென்றுகுறித்திளங்கதிர்சூழ்ந்தென்ன வடங்கலுங்கமலராகமழுத்தியகடகமுன்கை யிடங்கொளப்பனைந்துமாயமீன்விழியெலும்புள்ளூடத் தடங்கரவிரலினூடுதவாமணியாழிகோத்து. | 67 |
612 | அகத்தமர்கருணைபோலப்புறத்தினுங்குளிர்ச்சியார மிகத்தழைகலவைச்சாந்தும்விளங்குறமார்பிற்பூசிப் புகத்தகுமரவம்போக்கிப்பொன்னரைஞாணுந்தேசு தகத்தழையுதரபந்தமுந்திருவரையிற்சாத்தி. | 68 |
613 | கரியுரிகழித்துச்செம்பொற்கலிங்கவுத்தரியம்போர்த்தி வரிகழன்மறையீரெட்டாமலர்ப்பதநாலவீக்கி விரிமலர்மாலைசூட்டிவிளங்குபேரழகுநோக்கி யரியயனாதியெல்லாவமரருந்தொழுதுநின்றார். | 69 |
614 | பல்லியமுகிலினார்ப்பப்பனவர்வாய்வாழ்த்துமல்க நல்லியலடியார்ரெல்லாநயந்துபன்மலருந்தூவ வல்லியமுரித்தபுத்தேண்மணவரைத்தவிறசுமேவி யல்லியங்குழலாராடுமாடல்கண்டிரந்தானன்றே. | 70 |
615 | கருங்குழலிந்திராணிகலைமகடிருமான்மற்று மருங்குளமகளிர்கூடிமலர்க்கரங்குவித்துப்போற்றி யொருங்குலகீன்றாடன்னையுறுவிரைதுவர்களப்பி நெருங்குபல்லியங்களேங்கநிலவுநீராட்டினாரே. | 71 |
616 | மெல்லிழைக்கலிங்கங்கொண்டுமேனியினீரமொற்றி வல்லிருமுலைப்பொன்னோதிவாசனையூட்டிச்சீவி நல்லியலெஃகந்தொட்டுநலம்புனைதெய்வவுத்தி வில்லியல்பிறைமுற்சேர்த்துவிளக்கஞ்சால்செருக்குச்செய்து. | 72 |
617 | மழைமுகிலடுத்துநின்றவானவிற்பொலிவுமானத் தழையெழினுதலின்மேலாலிலம்பகந்தயங்கச்சூட்டிக் குழையுமற்றதற்குநாப்பட்டடித்தொன்றுகுலாயதென்னப் பிழையில்செம்மணிகால்யாத்தபட்டமும்பிறங்கச்சேர்த்து. | 73 |
618 | அவையடியொருமீன்றோன்றிற்றெனவவிர்பொட்டொன்றிட்டே யிவைகளானோக்கப்பட்டோர்க்கிருங்கருமலமென்றுள்ள நவைபுறப்படுமாலென்றுஞாலத்துக்கறிவிப்பார்போற் செவையிவர்கட்புறத்திலஞ்சனந்திகழத்தீட்டி. | 74 |
619 | மதிவளர்குலத்திற்றோன்றிமாண்புமிக்களித்தாய்நாயேன் பதிதருங்குலத்துந்தோன்றிற்பண்புமிக்காமேயென்று கதிரிருசெவியினூடுங்கரைவதற்கடுத்ததொப்பத் துதிசெயுங்குழைகடுக்குந்தோடிருகாதும்பெய்து. | 75 |
620 | நகைமுகமதியமீன்றநகுகதிர்முத்தமென்னத் தகைகெழநாசிமேலாற்றயங்கொளிமுத்தொன்றிட்டு மிகையுறுகொங்கைவெற்பின்மேலெழுபசுவேயீன்ற பகையில்பன்முத்தமென்னப்படர்முத்தமாலைசாத்தி. | 76 |
621 | கந்தரமெனும்பேர்பூண்டவளைநிதிகமலராக முந்தொளிவயிரஞ்செம்பொன்முதற்பலவீன்றதென்ன நந்தியவிருள்கால்சீத்துநகுகதிர்விளக்கஞ்செய்ய வந்திலாங்கியையத்தக்கவணிகள்பற்பலவும்பூண்டு. | 77 |
622 | படரொளிமுத்தமாலையுள்ளுறப்பைம்பொன்மாலை யடரும்வித்துருமமாலைமரகதமாலையான்ற தொடர்புடைவயிரமாலைதோற்றஞ்சான்மற்றைமாலை விடலருமதாணியோடுமேதகவொழுங்கிற்பூண்டு. | 78 |
623 | இறையவன்முகத்துக்கண்ணாயிருந்துநாடோறும்வாழு முறையுடையெங்கடேசுமுருக்குறாதருள்கவென்றே யறையிருகதிருங்கைசூழ்ந்தமைந்தெனப்பதுமராக நிறையொளிவயிரம்யாத்தகடகங்கைநிகழச்சேர்த்து. | 79 |
624 | காந்தளம்போதுமேலாற்கலந்தபொன்வண்டர்மானப் போந்தபொன்மணிபதித்தவாழிபொன்விரலிற்கோத்து மாந்தளிர்மருட்டும்பட்டுவயங்கியமருங்குல்சேரச் சேந்தபன்மணிகால்யாத்தமேகலைசிலம்பச்சேர்த்து. | 80 |
625 | சிலம்புகிண்கிணிபொற்றண்டைமுதற்செறிபாதசால மலம்புறமறையீரெல்லாமளப்பருமடியிற்சூட்டி நலம்புரியுத்தரீயநககதிர்விளக்கஞ்செய்ய நிலம்புகழ்நறம்பூமாலைநிறைதரவெடுத்துச்சூட்டி. | 81 |
626 | திருமகண்முதலாயுள்ளார்செங்கரங்குவித்துப்போற்றி யருகுகைகொடுத்துப்போதமென்மெலவடிபெயர்த்துப் பெருகபல்லியங்களார்ப்பப்பெருமறைமுழக்கஞ்செய்ய மருமலர்க்கூந்தல்போந்துவள்ளல்பாலிருந்தாளன்றே. | 82 |
627 | வடவறைமுகட்டின்மேலான்மாணிக்கத்தருவும்பச்சைப் படரொருகொடியுஞ்சேர்ந்தபான்மையிற்சிவபிரானு மிடர்கெடுத்தெம்மையாளுமெழிற்பராபரையுஞ்செய்ய சடர்மணித்தவிசின்மேவக்கண்டவர்தொழுதுவாழ்ந்தார். | 83 |
628 | மாயவனெழுந்துவள்ளன்மலரடிவிளக்கியந்தப் பாயதண்புனறன்சென்னிமேற்படத்தெளித்துக்கொண்டு நேயமிக்குறப்பூசித்துநிலவுபல்லியமுமார்ப்பச் சேயமாமுதல்வன்செங்கைச்சிரகநீரொழிக்கினானே. | 84 |
629 | தருப்பைமாவிலையினோடுஞ்சார்ந்தவாண்டளப்பானாங்கு விருப்பமாரரணிச்செந்தீமேகலைக்குண்டத்திட்டே யருப்புபல்சமிதையுஞ்சேர்த்தாச்சியஞ்சிருக்கின்வாக்க வுருப்பவெந்தழன்மிக்குண்டுவலஞ்சுழித்தோங்கிற்றன்றே. | 85 |
630 | மறையவர்வாழ்த்துமல்கமங்கலவியங்களார்ப்பக் முறையறுத்துலகமெல்லாங்கூறொணாக்களிப்பின்மூழ்கப் பிறைமுடிப்பெருமானங்கைபிறங்குமங்கலநாணெல்லா முறையுயிர்த்தவடன்கண்டமுகிழ்த்திடத்தரித்திட்டானே. | 86 |
631 | மின்னியபெருமான்முன்னர்மிகுமதுப்பருக்கநல்கி மன்னியசுரர்முன்யாருமுத்தவாலரிசிவீசித் துன்னியமகிழ்ச்சிமேவச்சொலற்கருபேரானந்த நன்னியமத்தரானார்நாமினிப்புகல்வதென்னே. | 87 |
632 | பெரியநாயகிபெற்செங்கைபிறங்குதன்கையாற்பற்றி யரியதானென்னுந்தீச்சூழ்த்தமைதரப்பொரிகளட்டித் தெரியவோர்கையாற்றூக்கிச்சீறடியம்மிசேர்த்துப் பிரியமார்சாலிகாட்டிமகிழ்வித்தான்பெருமான்வையம். | 88 |
633 | மற்றுளசடங்குமுற்றும்வழுவறமுடித்தபின்னர்க் கற்றுளமனிவர்போற்றக்காமனைக்காய்ந்தபெம்மான் சற்றுளவிடையாளோடுந்தவாவுவளகத்தையுற்றான் முற்றுளவுவகைபூப்பமுழுகினார்யாருமின்பம். | 89 |
634 | இடைசிறிதுடையாளோடுமெம்பிரான்காட்சிநல்க மிடைதருபலருங்கண்டுவாழ்ந்தனர்விடையும்பெற்றா ரடைதருதத்தம்வைப்பையடைந்தனரமர்ந்தாரப்பாற் சடையுடைமுனிவகேட்டியென்றனன்றவாதசூதன். | 90 |
திருக்கலியாணப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 9-க்கு திருவிருத்தம் 634
----------------
10. உருத்திரதீர்த்தப்படலம். (635 - )
635 | ஒருநொடிவரைப்பொழுதுலகழித்திடும், பெருவிறலுருத்திரப்பிரானபேதமாந் திருவடைதரமனங்குறித்துச்செம்மலைப், பொருவருபூசனைபுரிதற்கெண்ணினான். | 1 |
636 | எண்ணியமுத்தலைவேற்கையெம்பிரான், நண்ணியதீர்த்தமுந்தலமுமூர்த்தியும் புண்ணியம்பயப்பதோர்பொருவின்மான்மிய, நண்ணியவிடமெதுவென்றுநாடினான். | 2 |
637 | மறுவறுகடிமணமகிழ்ந்துகண்டநா, ளுறுபெரும்புண்ணியமொன்றிக்கூடலாற் கறுவுவெம்பவப்பகைகாற்றுமான்மியச், சிறுமருதூரெனத்தெளிந்தெழுந்தனன். | 3 |
638 | எண்ணியவெண்ணியாங்கெய்தநல்குமப், புண்ணியப்பெருந்தலம்பொருக்கென்றண்மினான், கண்ணியபுகழ்ச்சிவகங்கைமூழ்கினான், புண்ணியபற்றுளாம்பரனைப்போற்றினான் | 4 |
639 | செம்மலுக்கெதிரொருதீர்த்தமாக்கினா, னம்மலர்ப்பெருந்தடத்தகிலதீர்த்தமும் விம்முறத்தாபித்துவிரும்பிமூழ்கினான், றும்முவெந்தீப்பொரிச்சூலத்தண்ணலே. | 5 |
640 | நிலவுவெண்ணீற்றொடுநிகரில்கண்மணி, யிலகுறப்பூண்டெழுத்தைந்துமெண்ணிய வ், வுலகவாம்புனல்முகந்தாட்டியொள்ளிய, பலனருள்வில்வமுற்பலவுஞ்சூட்டினான். | 6 |
641 | அருக்கியமுதலியவனைத்துமன்புறு, திருக்கிளரபேதமாந்தெளிவுமேவுற மருக்கிளர்பூசனைவயங்கச்செய்தபின், பொருக்கெனத்துதிபலபுகறன்மேயினான். | 7 |
642 | கற்பனையென்பனகழன்றசோதிநீ, யற்புதமூர்த்திநீயனைத்துமாகிய, சிற்பரவியோமநீசெல்வமிக்குயர், பொற்பமர்சிறுமருதூரிற்புங்கவ. | 8 |
643 | மறைமுடியமர்தரும்வள்ளனீநெடு, மறைமுடிமுழக்கிடுமான்மியத்தனீ மறைமுடியணுகரம்வரதநீபுகன், மறைமுடிபொருமருதூரின்வாழ்பவ. | 9 |
644 | என்றுதோத்திரம்பலவிசைக்குமேந்தன்மு, னொன்றுநாயகனெழுந்தருளியுத்தம நன்றுநீகருதியநலமளித்தனஞ், சென்றுநின்பெரும்பதஞ்சிவணிவாழ்தியால். | 10 |
645 | ஒன்றியவெமக்குமற்றுனக்கும்பேதமே, யின்றிஃதுணர்பவரெம்மொடொன்றுவர் நன்றியதகைநினைநம்மின்வேறுசெய், புன்றகையினர்க்கிலைபொருவின்ஞானமே. | 11 |
646 | புரிதொழில்குறித்திருபுலவரோடுனைச், சரிசொலுமவர்விழுந்தகையர்கும்பியி னெரிமருள்சூலிநீயியற்றுதீர்த்தந்தோய், பரிவினரெண்ணியபலவுமெய்துவர். | 12 |
647 | என்றநல்வரங்கொடுத்திறைமறைந்தன, னொன்றுவெஞ்சூலிதன்னுலகம்புக்கன னன்றுயர்பலமெலாநலக்கவெய்துவர், சென்றுநல்லுருத்திரதீர்த்தமூழ்குவோர். | 13 |
648 | நீதியவுருத்திரநீரின்மூழ்குதற், கோதியநாளெலாமுறுவிசேடமா மாதிரைநாளவற்றதிவிசேடமாந், தீதியலாதவித்தினங்கடம்முளும். | 14 |
649 | மார்கழியாதிரைமருவிமூழ்குறிற், சீர்கழியாப்பலசிறப்புஞ்செல்வமும் பார்கழிமுத்தியும்பயப்பதுண்மையாற், கார்கழிஞானமுட்கலக்குமெண்ணினும். | 15 |
650 | செம்மைசாலுருத்திரதீர்த்தமான்மிய, மும்மையார்புவனத்துமொழியவல்லார் ரம்மையோர்பாகங்கொண்டகிலங்காத்திடு, மெம்மையாளிறைவனேயிசைக்கவல்லவன். | 16 |
651 | வரத்திரவுரவமுற்றுயரமாழற்றுற, முருத்திரதீர்ததத்தினுயர்ச்சிகூறினுங் கருத்திரமுறாதெனக்கரைந்துமற்றதுங், குருத்திரவியமெனக்கூறுஞ்சூதனே. | 17 |
உருத்திரதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 10-க்கு, திருவிருத்தம். 651.
-----------------------------------
11. விட்டுணுதீர்த்தப்படலம். (652 - 669)
652 | சங்குசக்கந்தாங்குந்தடக்கையான், பொங்குதானவரோடுபொரல்குறித் தெங்குநாஞ்சென்றிறைஞ்சுதுமென்றெண்ணித், தெங்குமேயசிறுமருதூருற்றான். | 1 |
653 | தெளிசெய்நாயகிசெய்சிவகங்கையு, மொளிசைய்மேன்மையுருத்திரதீர்த்தமு மளிசெயன்பினணைந்துமுழுகினாள், களிசெய்வண்டுகலக்குந்துழாயனே. | 2 |
654 | திருந்துநீறதிகழப்புனைந்தறம், பொருந்துகண்மணிபூண்டெழுத்தைந்தையும் வருந்துதீரமதித்துக்கொடுவிட, மருந்துநாயகன்முன்னரணைந்தனன். | 3 |
655 | அங்கமெட்டினுமாறினுமைந்தினும், பங்கமோவப்பணிந்துபணிந்தெழுந் துங்கணீங்கியுருத்திரதீர்த்தப்பாற், றுங்கமார்கிழக்கோர்தடந்தொட்டனன். | 4 |
656 | முன்னமூழ்கிமுகிழ்க்குமலர்செறி, யன்னதீர்த்தங்கொண்டையனையாட்டியே பன்னமாதிப்பலமலர்சூட்டிமிக், குன்னவாங்கனியாதியுமூட்டினான். | 5 |
657 | செய்யவேண்டுபசாரமெலாஞ்செயா, வையவிங்ஙனமம்மையையும்புரிந் தெய்யமீண்டுபிரான்முனமெய்தினான், றெய்யவான்றுதிசெப்பலுற்றானரோ. | 6 |
658 | ஆதியேயறமேயருளேயுமை, பாதியேபரமேபரவானமே மோதியேயிருள்சாடுமுழுப்பெருஞ், சோதியேயுன்றுணையடிபோற்றினேன். | 7 |
659 | ஐயனேயழல்கான்மழுமான்மறிக், கையனேபொய்கடிந்தவருள்ளமர் மெய்யனேயந்திமானமிளிருருச், செய்யனேயுன்றிருவடிபோற்றினேன். | 8 |
660 | காலகாலகபாலசுபாலன, நீலவாலமிடற்றநெருப்பெழும் பாலலோசனபார்ப்பதிபாகவி, சாலசீலநின்றாளிணைப்போற்றினேன். | 9 |
661 | பொருதமேவும்புயவலித்தானவர், நிருதராதியர்நீங்கவருள்செய்வாய் கருதமிக்கினியாய்கண்டதேவிவாழ், மருதவாணநின்மாண்பதம்போற்றினேன். | 10 |
662 | என்றுதோத்திரஞ்செய்யுமிணர்த்துழா, யொன்றுமாலையலப்புயத்தானெதிர் கன்றுமான்மழுவேந்துகைத்தம்பிரா, னன்றுதோன்றியருளுதன்மேயினான். | 11 |
663 | திதிமகாரொடுநீபொரல்சிந்தைவைத், ததிகபூசனைநம்மடிக்காற்றினை யெதிரிலாதொளிரித்தலத்தாதலான், மதிசெய்மாயவவுள்ளமகிழ்ந்தனம். | 12 |
664 | வலியதானவர்மாட்டமராடிநீ, பொலியவாகைபுனைவரநல்கினோ மொலியவாங்கழலாயுனக்கின்னுமென், மெலியலாவரம்வேண்டுமுரையென்றான். | 13 |
665 | என்றபோதினிறைஞ்சியிம்மாத்தலத், தொன்றநின்னடிபோற்றியுறைதர நன்றவாவினனான்புரிதீர்த்தத்து, மன்றமூழ்கினர்வாழ்தரவேண்டுமால். | 14 |
666 | ஈதுமையநல்கென்றடிதாழ்தலுந், தீதுதீரநிருதித்திசைவயி னோதுகோயில்கொளுன்புனன்மூழ்குவோர், காதுதீவினைக்கட்டறுத்துய்வரால். | 15 |
667 | என்றுகூறிமறைந்தனனெம்பிரா, னன்றுமாயவனத்திசைக்கோயில்கொண்டொ ன்றுதானவர்தம்வலியோட்டியே, யென்றும்வாழ்வனுற்றார்க்கின்பருளியே. | 16 |
668 | அனையனாற்றியவப்புனலோணநா, ணினையமூழ்குனர்நீடுவறுமைநோ யினையவெவ்வகைச்செல்வமூமெய்துவார், துனையவன்னானுலகத்துந்துன்னுவார். | 17 |
669 | ஈதுமாயவன்றீர்த்தச்சிறப்பினிச், சாதுமேன்மைச்சவுநகமாதவ போதுசேரயன்றீர்த்தப்புகழ்மையு, மோதுகேனென்றுரைத்திடுஞ்சூதனே. | 18 |
விட்டுணுதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 11-க்கு திருவிருத்தம் - 669.
-----------------------
12. பிரமதீர்த்தப்படலம் (670 - 685)
670 | இண்டைமாமலரிருக்குநான்முகன், றொண்டைவாயொருதோகைமாதைமன் கண்டையாவுளங்கலங்கிமோகித்தான், பண்டையூழ்வினைபாற்றவல்லரார். | 1 |
671 | அன்னபாவமேலடர்ந்துபற்றலு, முன்னமாந்தொழின்முழுதுந்தீர்ந்ததா லென்னசெய்துநாமினியென்றுற்றனன், கன்னல்வேலிசூழ்கண்டதேவியே. | 2 |
672 | அங்கண்வந்துமையமைத்ததீர்த்தமுஞ், சிங்கறீருருத்திரநற்றீர்த்தமுஞ் சங்கபாணியோன்சமைத்ததீர்த்தமுந், துங்கமார்தரத்துளைந்தெழுந்தனன். | 3 |
673 | செங்கண்மாயவன்றீர்த்தத்தென்றிசை, முங்குதீர்த்தமொன்றாக்கிமூழ்கினான் புங்கநீறுகண்மணிபுனைந்தன, னங்கணுற்றெழுத்தைந்துமெண்ணினான். | 4 |
674 | அன்னநீர்முகந்தாட்டியையனைச், சொன்னகூவிளமாதிசூட்டியே யுன்னவாஞ்சுவையுணவுமூட்டினா, $னென்னசெய்கையுமினிதியற்றினான். | 5 |
675 | கண்டவாமொழிக்கண்ணிபாகனே, கண்டவாநுதற்காலகாலனே கண்டமாமதிகலந்தசென்னியாய், கண்டதேவிவாழ்கருணைமூர்த்தியே. | 6 |
676 | அண்டராதியோரலறியச்சமுட், கொண்டதோர்ந்துவெங்கொலைசெய்நஞ்சினை யுண்டநாயகாவுமையோர்பாகனே, கண்டதேவிவாழ்கருணைமூர்த்தியே. | 7 |
677 | என்றுதோத்திரமியம்பியிவ்வண, மொன்றுபல்பகலுறையுமேல்வையிற் கன்றுமான்மழுக்கையர்தோன்றினார், நன்றுநான்முகனயந்துபோற்றினான். | 8 |
678 | அன்னவூர்திகேளான்றவித்தல, மென்னபோதுநீயெய்தப்பெற்றுளா யன்னபோதுபோயழிந்ததுன்கரி, சென்னமேன்மையுமெய்தப்பெற்றுளாய். | 9 |
679 | இந்தமாத்தலம்யாலரெய்தினும், பந்தமாருமெப்பாதகங்களு முந்தவோட்டுவார்,முத்தியெய்துவார், சந்தமேவுமெய்ச்சிறப்புஞ்சாருவார். | 10 |
680 | இங்குறாதுநீயெங்குமேவினும், பொங்குதீவினைபோதலில்லைகாண் கொங்குசார்மலர்க்கோயின்மேவுவோய், தங்குநின்றொழிற்றிறமஞ்சார்தியால். | 11 |
681 | இன்னும்வேண்டுவதியம்புகென்றனன், மன்னநான்முகன்வணங்கியையவென் முன்னுதீர்த்தநீர்மூழ்குவோரெலாம், பன்னுமேன்மையிற்படரநல்கென்றான். | 12 |
682 | அன்னதாகெனவருளிவள்ளலா, ருன்னவாயபுற்றுண்மறைந்தனர் பின்னல்வார்குழற்பெரியநாயகி, தன்னதாள்களுந்தாழ்ந்துபோற்றினான். | 13 |
683 | ஓங்குசத்தியவுலகநண்ணினா, னாங்குமுன்றொழிலாற்றிவாழ்ந்தனன் றேங்குமற்றவன்றீர்த்தமூழ்குவோர், பாங்குசால்வரம்பலவுமெய்துவார். | 14 |
684 | தெரிந்துரோகணித்தினத்தின்மூழ்குவோ, ரரிந்துதீவினையாக்கமெய்துவார் புரிந்துமற்றவன்பதத்தும்போய்ப்புகுந், திரிந்துதீர்தராதென்றும்வாழ்வரே. | 15 |
685 | கஞ்சமேலவன்கண்டதீர்த்தமீ, தஞ்சமாமனுவமைந்தசிந்தையாய் தஞ்சவெய்யவன்சமைத்ததீர்த்தமுந், துஞ்சவோர்தியென்றோதுஞ்சூதனே. | 16 |
பிரமதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 12-க்கு, திருவிருத்தம் -685.
-------------------------------
13. சூரியதீர்த்தப்படலம் (686 - 700)
686 | மோதுகடன்முகம்புழுங்கமுளரிமுகைமுறுக்குடைய வோதுமலர்தலையுலகத்துயிரெலாங்கண்விழிப்பச் சாதுமறைமுழக்கெடுப்பத்தழைகருமச்சான்றாகித் தீதுவிரோராழித்தேருதையமெழுவெய்யோன். | 1 |
687 | ஒருமனைவியவன்கனல்வெப்புடறழுவற்காற்றாளாய்ப் பொருமியழுதினைந்தேங்கிப்போய்த்தந்தைபாலுரைப்ப வெருவில்வலித்தந்தையெனும்விச்சுவகன்மன்றெரிந்து குருமலிபொற்பூங்கொடியையஞ்சற்கவெனக்கூறி. | 2 |
688 | சான்றபரிதியைப்பிடித்துச்சாணையிடைவைத்துரைத்திட் டான்றகதிர்களைத்தேய்த்தானாறியதுவெப்பமுட னேன்றகுலக்கொடிமகிழ்ந்தாள்கதிர்முழுதுமிழந்தமையாற் றோன்றவருசெம்பரிதிசுடரின்றிமழுங்கிற்றே. | 3 |
689 | இனியாதுசெய்குதுமென்றெண்ணியடைந்தவர்க்கெல்லா முனியாதுகருணைபொழிமுதல்வனார்சிறுமருதூர் பனியாதுசென்றடைந்துபரவுதுமேற்றுயர்முழுதங் கனியாதுசெய்வரென்றுகண்டதேவியையடுத்தான். | 4 |
690 | கண்டதேவியினயன்மால்காணாத்தேவியையொருபாற் கொண்டதேவனைவணங்கிக்குலவியமற்றவன்றென்பால் விண்டதேமலர்நாளுமிடைசிவகங்கைக்கீழ்பால் வண்டர்தேதேயெனும்பன்மலர்த்தடமொன்றியற்றினான். | 5 |
691 | அன்னபெரும்புனன்மூழ்கியழகியவெண்ணீறணிந்து பன்னருங்கண்மணிபூண்டுபரவுறுமைந்தெழுத்தெண்ணிச் சொன்னபுனன்முகந்துமருதடிவளர்சோதியையாட்டி மின்னகுபன்மலர்சூட்டிவில்வமுங்கொண்டருச்சித்தான். | 6 |
692 | இவ்வண்ணம்பூசைபுரிந்திருக்குநாளிரங்கிமிளிர் செவ்வண்ணப்பெருமானார்திருக்காட்சிகொடுத்தருள வுய்வண்ணமுண்டாயிற்றுண்டாயிற்றென்றெழுந்து மைவண்ணத்துயரொழிந்துமலரடிதாழ்ந்திதுததிப்பான். | 7 |
693 | திருமுகத்துவலக்கண்ணாய்த்திருமேனிகளுளொன்றாய்க் பொருசமருக்கெழங்காலைப்புவியியக்கும்பதத்தொன்றாய் மருவுமிருக்கையுளொன்றாய்வயங்குமொருசிற்றடியே னுருவவொளியிழந்திருத்தலுன்பெருமைக்கழகேயோ. | 8 |
694 | பிறங்குபெருங்குணக்குன்றேபெரியநாயகியைமணந் தறங்குலவவுலகினுக்கின்பளித்தபேரருட்கடலே நிறங்குலவுமருதடிவாழ்நித்தியநின்மலச்சுடரே புறங்கிளருமொருநாயேன்பொலிவிழத்தலழகேயோ. | 9 |
695 | புரமூன்றுமொருநொடியிற்பொடிபடுத்தபுண்ணியனே சிரமூன்றுமொருநான்குஞ்செறிந்தாருக்கறிவரியாய் வரமூன்றும்படியடைந்தார்தமக்கருளுமாநிதியே திரமூன்றுமொளியிழந்தியான்றேம்பிடுதலழகேயோ. | 10 |
696 | என்றுதுதித்திடுவானுக்கெம்பிரானருள்சுரந்து நன்றுகுணக்குதித்திடுவோய்நாமொழிதிமுன்போலத் துன்றுமொளிபெறுதியிருடொலைத்துவாழுதியின்னு மொன்றுவரம்வேண்டுவதென்னுரைத்தியெனப்பணிந்துரைப்பான். | 11 |
697 | ஐயவறிவிலிநாயேனுய்ந்தனனெ்ன்னழலுடலஞ் செய்யமனையவடழுவுந்திறமுமுதவுதல்வேண்டு மெய்யமையவென்றீர்த்தம்விரும்பிமுழுகுனர்நினது மையிலருட்குரியராய்வயங்கிமருவுதல்வேண்டும். | 12 |
698 | இனையவரந்தருதியெனவிரந்தனனீலிழைந்தபடி யனையவரந்தந்தனமென்றருளிமறைந்தனன்பெருமான் முனையமழுப்படையேந்துமுதல்வனைமற்றவனிடப்பா னனையமலர்க்குழற்பெரியநாயகியைப்பணிந்தெழுந்து. | 13 |
699 | தன்னுலகம்புகுந்துகதிர்தழைந்துகருகிருளோட்டி மன்னுலகவிழியாகிவயங்கினான்மார்த்தாண்டன் றுன்னுலகம்புகழுமவன்றொட்டதீர்த்தம்படிவோர் பொன்னுலகமடைந்துபெரும்போகமெலாந்துளைந்திடவார். | 14 |
700 | ஆதிவாரம்படிவோரையனருட்குரியராய்ச் சோதிவார்கயிலாயந்துன்னிடுவர்பரிதிதட நீதிகாணிதுமதிசெய்நெடுந்தீர்த்தப்பெருமையுங்கே ளோதியாயென்றுரைத்துமேலுமறைத்திடுஞ்சூதன். | 15 |
சூரியதீர்த்தப்படலம் முற்றிற்று..
ஆக படலம் - 13 க்கு, - திருவிருத்தம் 700.
------------------------
14. சந்திரதீர்த்தப்படலம் (701- 727)
701 | மதியெனுங்கடவு, டுதிபுரிகுரவன், பதிமனையவடன், பொதிநலனகர்ந்தான். | 1 |
702 | அதுதெரிகுரவன், விதுமுகநோக்கி, முதுசினங்கடவக், கதுமெனவைதான். | 2 |
703 | நீகயரோகி, யாகவென்றுரைத்த, மோகமிலுரைகேட், டாகமிக்குளைந்தான். | 3 |
704 | என்னினிச்செய்வ, தென்னநைந்தழிந்தே, யென்னவந்தறின, மென்னரனுளனால். | 4 |
705 | என்றுளந்துணிந்தா, னன்றுவந்தடைந்தான், றொன்றுவெவ்வினைதீர்த், தொன்றுபொன்மாரி. | 5 |
706 | மருதடிமேய, வொருதனிக்கடவு, ளிருசரண்போற்றிப், பருவரறீர்ப்பான். | 6 |
707 | தூயவள்பெரிய, நாயகிபதமு, நேயமிக்குருகி, யாயறப்பணிந்தான். | 7 |
708 | மடக்கொடிபாகற், கிடப்புறமாகக், கடப்படுரெயா, டடத்தொருகீழ்பால். | 8 |
709 | ஒருதடமாற்றி, வெருவறமூழ்கித், திருவமர்நீறு, மருவமெய்ப்பூசி. | 9 |
710 | வாலியவக்க, மாலிகைபுனைந்து, கோலியவெழத்தைந், தாலியவெண்ணி. | 10 |
711 | அப்பனன்முகந்து, வெப்பமில்பெருமான், றிப்பியமுடிமே, லொப்பறவாட்டி. | 11 |
712 | மலர்பலசூட்டி, யலர்கனியூட்டி, யலர்சுடர்கோட்டி, நலர்கொளத்துதிப்பான். | 12 |
713 | அறிவிலிநாயேன், செறிதரப்புரிந்த, முறிவில்வெம்பழியைப், பிறிதுசெய்பெரும. | 13 |
714 | குணமிலிொாயேனணவுறப்புரிந்த, தணவரும்பழியை, யுணவுசெய்யொருவ. | 14 |
715 | கோடியநாயேன், றேடியபழியை, வாடியபுரிதி, நீடியநிமல. | 15 |
716 | சிறுமருதூர்வாழ், மறுவறுதேவே, கறுவுசெய்நாயேன், பெறுபழிதவிர்த்தி. | 16 |
717 | என்றுரையாட, வன்றுநங்கோமான், முன்றனித்தோன்றி, நின்றனனுவந்தே. | 17 |
718 | கண்டனனாலோன், றண்டருமுவப்பின், மண்டனிற்றோயத், தெண்டனிட்டெழுந்தான். | 18 |
719 | குரவனெப்பிழைத்த, வுரவுடைப்பாவம், விரவியித்தேயத்துப், பரவலிற்றீர்த்தோம். | 19 |
720 | தேய்தலும்வளர்வு, மாய்தரலின்றி, யாய்தரப்பொலிதி, பாய்மதித்தேவே. | 20 |
721 | வேண்டுவதினியென், னீண்டுரையென்னக், காண்டகுதிரத்தாள், பூண்டிஃதுரைப்பான். | 21 |
722 | தோற்றியநாயே, னாற்றியதீர்த்தம், போற்றியமேலோர், பாற்றிருவுறுக. | 22 |
723 | இதுதருகெ்ன்றா, னதுநனியருளிக், கதுமெனமறைந்தான், விதுமுடிப்பெருமான். | 23 |
724 | மதிதனதுலகம், பதிதரப்புகுந்தான், றுதியவன்றீர்த்தம், விதியொடுதோய்வார். | 24 |
725 | வேண்டியசெல்வம், பூண்டினிதமர்வா, ராண்டவன்வார, மூண்டுறப்படிவோர். | 25 |
726 | எண்ணியதடைவார், புண்ணிமதிநீர், நண்ணியதிதுமேற், கண்ணியகதையும். | 26 |
727 | சொற்றிடக்கேட்டி, நற்றவனேயென், றுற்றுரைசெய்வான், சொற்றகுசூதன். | 27 |
சந்திரதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 13-க்கு, திருவிருத்தம். - 727.
----------------------
15. சடாயுபூசைப்படலம் (728 - 767 )
728 | முராரிமுற்பிருகுமாமுனிவன்சாபத்தாற், றராதலித்தயோத்தியாடசாதற்கிணை யராவளைதிகிரிகளனுகராயுற, விராமனென்பெயர்புனையெச்சமாயினான். | 1 |
729 | நிறைபெருங்கலையெலாநிரம்பக்கற்றபின், குறையொழியிளவல்பின்றொடரக்கோசிக னறைமகச்சாலையையடைந்துதாடகை, முறைமகனோடுயிர்முடியப்பாற்றியே. | 2 |
730 | மகவினைநிரம்புறக்காத்துமாமைசா, லகலிகைகல்லுருவகற்றியாய்வள மிகலுடைமிதுலையிற்புகுந்துவில்லிறுத், திகல்விழிச்சீதைகையினிதபற்றியே. | 3 |
731 | மழுப்படையிராமனைவழியினேற்றவன், கொழுப்படைதரப்பறித்தகன்றுகூடிய முழுப்படையொடுமதிலயோத்திமுன்னினான், விழுப்படையேந்தியவீரர்வீரனே. | 4 |
732 | இளையதாய்கலாம்புரிந்திடலிற்சீதையும், வளைசிலைத்தம்பியுந்தொடரமன்னனெஞ் சுளைதரநகரநீத்துவந்துபோயொரு, விளைவலிக்குகனையம்விரும்பிநட்டரோ. | 5 |
733 | பாதுகைகொடுத்தழும்பரதற்போக்கியே, மோதுவல்விராதனைமுடித்துமாதவச் சாதுமாமுனிவர்தம்மைப்போற்றிநட், டோதுகோதாவிரிதீரத்துற்றனன். | 6 |
734 | ஆவயினரக்கிமூக்கரிந்துபோக்கிட, மேவியகரன்முதலோரைவீட்டிமெய் சார்வருநவ்விமாரீசன்சார்தரக், கூர்வரும்பகழியொன்றேவிக்கொன்றனன். | 7 |
735 | வையமேத்திளவன்முன்மாட்டுச்சென்றிடக், குய்யம்வைத்ததிதிபோற்குறுகிநோக்கிய வெய்யவாளரக்கர்கோன்விரும்புசீதையை, யையகொண்டேகலுமவள்பலம்புவாள். | 8 |
736 | ஓதரும்பேதமையுறைத்தநீர்மையாற், றீதமையும்படிசிந்தைசெய்துளெ னாதகாதெனவிவணடைந்துகாத்தியென், னாதனேநாதனேயென்றுநையுமால். | 9 |
737 | வளமிலைமாயமான்வண்ணமென்னவு, மளமருமனத்தொடுமவாவப்பட்டயான களமிகுமரக்கனாற்கலங்கிநொந்துளே, னிளவலேயிளவலேயென்றுதேம்புமால். | 10 |
738 | வேறு. சீதையிங்ஙனமழுதழுதிரங்குபுதேம்பு மோதையஞ்செவியூடழற்சலாகையினுறல மாதையாவனோகொடுசெல்வானெனமதித்திராமன் றாதையாகியநெடுவலிப்பெருஞ்சிறைச்சடாயு. | 11 |
739 | எழுந்துவான்மிசைப்பறந்தனனேகுதேரெதிருற் றழுந்துதுன்பமுற்றயர்தருமருகியைக்கண்டான் விழந்துதேம்பிநீமெலியற்கமெல்லியலென்று கொழுந்துகொண்டெழுவெகுளியான்கொடியனைநோக்கி. | 12 |
740 | என்னகாரியஞ்செய்தனைகொழுந்தழுலெடுத்துத் தன்னதாடையிற்பொதிபவர்தம்மைநீநிகர்த்தாய் மன்னன்மைந்தனீதுணர்தரின்வாழுவைகொல்லோ வன்னனோருமுன்னணங்கைவிட்டகலுதியாக்க. | 13 |
741 | என்றுகூறலுநீயொருசழுகுமற்றெனக்கு நன்றுகூறுதனன்றுநன்றாலெனநகைத்தான் வென்றுமேம்படுமென்னுரைவிழைந்திலைநகைத்தாய் கொன்றுநின்னுயிர்குடிப்பலென்றுருத்தனன்சடாயு. | 14 |
742 | வில்வளைத்தனனன்வெஞ்சரம்பற்பலதொடுத்தான் மல்வளைத்ததோளிராவணன்மற்றதுநோக்கிச் சொல்வளைத்தவெஞ்சிறைவலிச்சடாயுவுந்துனைந்து கொல்வளைத்தனனலகினாற்குலைதரக்கறித்தான். | 15 |
743 | மீட்டும்பற்பலவெஞ்சரந்தொடுத்தனன்றோட்டி காட்டுமூக்கினுங்காலினுஞ்சிதர்தரக்கழித்துப் பாட்டுவண்டுளர்மாலைமற்றவன்கரம்பரித்த கோட்டுவெஞ்சிலைப்பறித்ததுமுறித்ததுகுருகு. | 16 |
744 | புள்ளுவன்மைமிக்கழகிதானென்றிறும்பூது கொள்ளுநெஞ்சினன்மூட்டுமோர்கொடுஞ்சிலைகொண்டு தெள்ளுகூர்ங்கணைபற்பலவுடம்பெலாஞ்செறிந்து நள்ளுமாறுதொட்டார்த்தனன்வானமுநடுங்க | 17 |
745 | ஆர்த்தகாலையினெருவையுந்தனதுமெய்யடங்கப் போர்த்தவாளிகளனைத்தையுமுதறுபுபோக்கிக் கூர்த்தமூக்கினாற்குண்டலமணிமுடிபுயத்துச் சேர்த்தபூண்முதற்பறித்துமட்சிதறியதன்றே. | 18 |
746 | கொடியவெஞ்சினங்கொதித்தெழவேலொன்றுகொண்டு நெடியவன்சிறைச்சடாயுமேல்விடுத்தனனிருதன் மடியமற்றதுசிறைவலிக்காற்றினான்மாற்றிப் படியமண்ணிடைப்பாகனைச்செகுத்ததுபறவை. | 19 |
747 | தண்டமொன்றுகொண்டெறிந்தனனரக்கர்தந்தலைவ னண்டம்விண்டதென்றறைதரவதுவிரைந்தணுகல் கண்டபுள்ளுமற்றென்செயுமிதுவெனக்கடுகித் துண்டம்வைத்திருதுண்டமாக்கியதவன்சோர. | 20 |
748 | நாட்டுமன்னவன்மருகியுணலிதரப்பொழுது நீட்டுகின்றதென்னென்றுவெஞ்சினங்கொடுநிமிர்ந்து கோட்டுவார்சிலைதூணியாழ்க்கொடியையுங்குறைத்துப் பூட்டுவாம்பரிமுழுமையுங்கொன்றதுபுள்ளே. | 21 |
749 | இனையவெஞ்சமராற்றுழியிராவணனெண்ணின் முனையவெம்படைசெலுத்தியுமொருமயிர்முனையு நினையமாய்ந்திலதென்னினிச்செயலெனநினைந்து வினையமொன்றனால்வெல்லுவான்குறித்திதுவிளம்பும். | 22 |
750 | வருதிவீரருள்வீரனீயுயிர்நிலைமதித்தே பொருதனன்றுநின்னுயிர்நிலைபுகலெனப்புகன்றான் கருதல்வேறிலானின்னுயிர்நிலைகழறென்றா னிருதனென்வலத்தாட்பெருவிரனிலையென்றான். | 23 |
751 | வஞ்சமில்லவனிருஞ்சிறையடியெனவகுத்து நஞ்சமன்னவனகுபெருவிரற்றலைமோதத் துஞ்சறீர்ந்தவனிருந்தனன்சுடர்வடிவாள்கொண் டெஞ்சுறாதிருசிறையையுமறுத்துமண்ணிட்டான். | 24 |
752 | சடாயுவீழ்தலுஞ்சாநகிதனைக்கொடுபோனான் கடாவுவாள்வலியரக்கன்மற் றிவணிலைகலங்கிப் படாதமெய்யுரைத்திறத்தலின்வெற்றியென்பாற்றே கெடாதசீருமுண்டாயதென்றுவந்ததுகிளர்புள். | 25 |
753 | உண்மைகூறுதலெங்குநன்றாயினுமுறாரை யண்மையாரெனமதித்ததுகூறுதலடாதா லெண்மையாயினேன்படையிடத்தஃதிசைத்தெனினும் வண்மைசால்புகழ்க்கீறிலையென்றுளமகிழ்ந்தான். | 26 |
754 | கறைவிடந்தருகூரெயிறிழந்தகட்செவியும் பிறைநிகர்த்திடுமருப்பிழந்துழன்றபேருவாவு மிறைசெயேதிகையிழந்தவோர்வீரனும்விசைக்குஞ் சிறையிழந்தமற்றியானுமொப்பினிச்செயலென்னே. | 27 |
755 | மண்ணின்மீமிசையிருந்துயிர்வாழ்தலின்மதிப்பா ரெண்ணின்மேவியசிவபிரான்பூசனையியற்றி விண்ணின்மேலெனுமவனடியடைவதேமேன்மை கண்ணினீங்கிதிற்சிறந்ததுவேறொன்றுகாணேன். | 28 |
756 | என்றுதேறினன்மென்மெலநடந்துவந்திமையோர் சென்றுபோற்றிடுமருச்சுனவனத்தினைச்சேர்ந்தான் கன்றுமாலயற்கறிவரியான்பெருங்கருணை நன்றுசெய்திடப்பூசனைபுரிதிறநயந்தான். | 29 |
757 | மன்னுதம்பிரான்பச்சிமதிசையுமைவகுத்த துன்னுதீர்த்தத்தின்குணதிசையொருதடந்தொட்டான் முன்னுமத்தடமுழுகிவாயப்புனன்முகந்து மின்னுநீண்முடியாட்டினன்வேடர்கோமகன்போல். | 30 |
758 | நறிய கூவிள மாதி கணயந் துகொய்தெடுத்துச் செறியச் சூட்டி னன்காய் கனியூட் டினன்சேவித் தறிய முன்ன நின்றன் புறவடிக் கடிபணிந்து நிறிய மேன்மை யிற்புகுந் திடுதோத் திரநிகழ்த்தும் | 31 |
759 | சிறையி லாத வென்பவத் துறுசிறை தவிர்ப்பதற்கே குறையி லாத விக்கான் மருதடிக் குடிகொண்டாய் மிறையி லாத வெம்மழுப் படைவித் தகவிமல கறையி லாத நின்கண் ணருள்வழங் கிடக்கடவை | 32 |
760 | அரிய சான்புகுந் தருந்தவ மாற்றி லேனந்தோ பிரிய மேமிகுந் தூனுகர் வாழ்க்கை யேபெற்றேன் றெரிய நின்னடிக் கடிய னாயடைந் தனன்சீர்சால் பெரிய நாயகி மணாள நின்பே ரருள்புரிதி | 33 |
761 | என்று வேண்டலு மெம்பிரான் பெரிய நாயகியோ டன்று மால்விடை மேற்பொலி காட்சி தந்தருள நன்று போற்றுபு நின்றன னாய கனோக்கி யொன்று பத்தியிற் புரிந்தநின் பூச னையுவந்தேம் | 34 |
762 | யாது வேண்டினுங் கொடுப்ப தற்கொரு தடையின்றா லோது கென்றலுஞ் சடாயு மற்றுவப் பொடுபணிந்து சாது மாமறைத் தலைவ நின்னிரு சரண்சார்ந்தேன் போது மேயநின் னடித்த லம்புணர் தலேவேண்டும் | 35 |
763 | சிறையி லாதவென் பூசனை யேற்ற லிற்செழுந்தே னுறைசெய் கொன்றையாய் சிறையிலி நாத னென்றொருபேர் நிறைய நின்றனக் காக யானிய மித்ததீர்த்தத் துறையின் மூழ்குவோர் தூய ராய்ப்பொலி வதுவேண்டும் | 36 |
764 | இன்ன மூவகை வரமுந் தந்தரு ளெனவிரந்தா னன்ன தாகென வருளு புமறைந் தனனமலன் பின்ன ராவயிற் பெயர்ந்தி ராகவன் வரல்பேண முன்னர் வந்தன னடந்த காரிய மெலாமொழிந்து | 37 |
765 | பொத்தை யூன்பொதி புலையுடம் பொழித்த னன்பொலிந்து மித்தை யாகிய பவஞ்ச வாழ்வனைத் தையும்வெறுத்து நத்தை யேந்தினோன் முதலி யோர்நணு குதற்குரிய சித்தை மேயினன் சிவானந்த போக மேதிளைத்தான் | 38 |
766 | ஒற்றை மேருவில் வாங்கி முப்புரத் தெரியூட்டுங் கற்றை வார்சடை மருத வாணரைக் கடவுளர்க ளற்றை நாண்முதற் சிறையிலி நாத ரென்றறைவார் பற்றை யார்மனு வெனப்படும் பகர்ப வர்க்கப்பேர் | 39 |
767 | சடாயுதீர்த்தநீர்மூழ்குவோர்தவாவினைதணந்து படாதபேரின்பவாரியுண்மூழ்குவர்பத்தி விடாதபுள்புரிபூசைசொற்றனமொருவேந்தன் கெடாதபூசைசெய்மாட்சிகேளெனச்சொலுஞ்சூதன். | 40 |
சடாயுபூசைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 15 - க்கு, திருவிருத்தம் - 767.
------------------------
16. காங்கேயன்பூசைப்படலம் (768 - 798)
768 | அருண்முகத்தமைந்தநெஞ்சிற்பாண்டிநாடடங்கவாழ்வோ னிருண்முகந்துண்டுமேற்செலிலங்கிலையலங்கல்வேலான் பொருண்முகந்தெடுத்துவீசிப்புவியெலாம்புரக்குங்கையான் வெருண்முகந்தொழியாவென்றிக்காங்கேயனெனுமோர்வேந்தன். | 1 |
769 | தாறுபாய்களிற்றானேற்றதரியலர்மகுடமேலா லேறுபாய்பரியானெங்குமெதிர்ந்துசெலிவுளித்தேரான் மாறுபாய்வயவர்வெள்ளமகிதலமுழுதும்போர்க்கப் பாறுபாய்களத்துச்சென்றுபகைப்புறங்காணவல்லான். | 2 |
770 | செழுமணிப்பூணான்சார்ந்தவுயிர்க்கெலாஞ்செய்யுநீழன் முழுமதிக்குடையானெல்லாக்கலைகளுமுற்றக்கற்றான் பழுதில்வெண்ணீற்றுச்செல்வம்பாலிக்கும்பண்புமிக்கான் றொழுதகுசிவமேமேலாம்பரமெனத்துணிந்தநீரான். | 3 |
771 | காமருகண்டதேவி ெஇனுநகர்கலந்துநாளு மாமருமனைவிமக்கண்மலிதரவாழுநீரான் பூமருவீசுமாலைப்புயாசலன்கடுஞ்சொலில்லான் றேமருவடைந்தார்காட்சிக்கெளியவன்றிறத்தான்மிக்கான். | 4 |
772 | அனையவன்மதியான்மிக்கவமைச்சராதியர்தற்சூழ நினைதருசெங்கோலோச்சிநீடுலகளிக்குநாளின் வினையுறுவலியென்சொல்வாமேவுகோணிலைதிரிந்து வனைதருமாரியின்றிவற்கடநிரம்பிற்றன்றே. | 5 |
773 | பரவுசோதிடநூல்வல்லார்பற்பலர்தம்மைக்கூவி யுரவுநீர்ஞாலத்தென்னோமழைபெயலொழிந்ததென்றான் புரவுசேரளியாயாண்டுபன்னிரண்டொழிந்துபோனால் விரவுநீர்பொழியுமேகமென்றனர்வேந்தன்சோர்ந்தான். | 6 |
774 | உற்றபல்லுயிருமந்தோவுணவின்றிவருந்துமேயென் றற்றமிலரசன்வேறுகளைகணுமறியானாகிச் சொற்றடுமாறவீழ்ந்துசோர்ந்தனன்சோராநின்ற மற்றவனுயிருண்கூற்றின்வற்கடம்பரந்ததன்றே. | 7 |
775 | கருமுகிலேட்டிலன்றிக்ககனத்துக்காண்பாரில்லை யொருவிறம்பாணியன்றியுண்டிடும்பாணியில்லை மருவுவெந்தாகநோயும்பசிநோயும்வருத்தலாலே பொருவில்வெங்காமவேளும்போர்த்தொழிலொழிந்தானன்றே. | 8 |
776 | உழுதொழின்மறந்தாரெல்லாவுழவருமுழன்றுவெம்போர்க் கெழுதொழின்மறந்தாரெல்லாவீரருமெரியுட்டெய்வந் தொழுதொழின்மறந்தாரெல்லாப்பனவறுஞ்சோறுசோறென் றழுதொழின்மறந்தாரில்லையகலிடத்தெவருமம்மா. | 9 |
777 | பூசைசெய்தன்றியொன்றும்புரிதராப்புந்தியோர்க்கு மாசைதம்முயிர்போகாமற்காப்பதையன்றியில்லை மாசையேவிகை்குஞ்சோரமரீஇப்புணர்மடந்தைமாரு மோசைகூர்கற்பின்மிக்கமாதரொத்திருந்தாரண்றே. | 10 |
778 | கமர்பலவுடையவாகிக்கடும்பணியுலகந்தோற்றி யமர்பலவேரியெல்லாமறல்கவர்நசைமீக்கஐொண்டே யிமிழ்முகிலினங்காள்வேட்கையிரிதரவொருங்குநீலி ருமிழ்புனலென்றுகாண்போமென்றுவாய்திறத்தலொக்கும். | 11 |
779 | விரும்புசெஞ்சாலிமற்றைவெண்சாலியரம்பையிஞ்சி கரும்புகள்விளையாநின்றகாமருகழனியெல்லாம் வரம்புபோய்நின்னதென்னதெனக்கொளும்வழக்குமாறிக் கரம்புகளாயவென்றாலுயிர்நிலைகரைதற்பாற்றோ. | 12 |
780 | பாதலம்புகுதற்காயபாதையொன்றமைப்பார்போலப் பூதலங்குடைந்துதண்டமாயிரமகழ்ந்துபோந்துங் காதலம்புனல்கண்காணார்காணிலங்கவருமுன்னர் மீதலம்பயிலும்வெய்யோன்வெப்பமுண்டொழிக்குமன்றே. | 132 |
781 | நகர்வயினில்லந்தோறுநகுமடைப்பள்ளியெல்லாந் தகரருமடுப்பினூடுதழைந்தனமுளைத்தவாம்பி புகர்படுமாணைபல்லிபுகுந்தனமுட்டையிட்டு நிகரறக்கிடக்குமேன்றானிகழ்த்துவதின்னுமென்னே. | 14 |
782 | விழைதருகுளகிலாதுமெலிதருகளிநல்யானை மழைபொழிதுவாரம்போலமதம்பொழிதுவாரமாகிக் குழைதருதூங்கலாயுங்குறித்துரையத்தியாயும் பிழைகண்முற்றுறுதோலாயுமொழிந்தனபெயர்தலற்றே. | 15 |
783 | கடுவிசைமுரணிற்றாவுங்கவனவாம்பரிகளெல்லாம் படுபுனலுணவோடற்றுப்பசித்தழல்வெதுப்பப்பட்டு நெடுவிலாவெகும்புதோற்றிநெட்டுயிர்ப்பெறிந்துதேம்பி முடுவல்போனாக்குநீட்டிமுயங்கினவியைமாதோ. | 16 |
784 | குடம்புரைசெருத்தலாக்கள்கோதனமீனாவாகி விடம்புரைகருங்கட்செவ்வாய்த்தெய்வமெல்லியலாரொத்த கடம்புரைபறவையெல்லாங்கடுப்பொடுபறத்தலற்றுத் தடம்புரைசடாயுவேபோற்றரைத்தலைநடந்தமாதோ. | 17 |
785 | ஒருவர்மற்றரிதுபெற்றசிற்றமுதொருகலத்து மருவவைத்துண்ணுங்காலைமனங்கொளார்மிச்சிலென்று வெருவவந்தொருவரீர்ப்பர்விரைந்திருவரும்வந்தீர்ப்பர் கருதருமிதனைநோக்கிக்கரந்துவெத்துண்பாராரும். | 18 |
786 | முன்னவர்வேதமோதுமுறைமையுமறந்தார்செங்கோன் மன்னவர்படையெடுக்குமாட்சியுமறந்தார்நாய்க ரென்னவர்துலைக்கோறூக்குமியற்கையுமறந்தார்மற்றைப் பின்னவருழுதலென்னும்பெற்றியுமறந்தாரம்மா. | 19 |
787 | காய்பசிதணிக்கவேண்டிக்காட்டகத்தூடுபுக்கு மாய்தருவனைத்துநோக்கித்தழைகளுமாண்டவென்பா ராய்தருமாயோன்முன்னாண்மண்முழுதள்ளியுண்டா னேய்தருமுணவிலாதவித்தகுகாலத்தென்பார்.. | 20 |
788 | இன்னணமுயிர்கள்சாம்பல்கண்டிரங்குறகாங்கேய மன்னவன்றன்பண்டாரமன்னியநிதிகளெல்லா முன்னரிதாகமொண்டுமொண்டுபல்லிடத்தும்வீசி யன்னனும்வறியனானானாரினித்தாங்கவல்லார். | 21 |
789 | நிதியெலாமாண்டபின்னர்நெடுமணிப்பணிகளெனப் பதியெலாம்விற்றுவிற்றுப்பாருயிரோம்பிவந்தான் றுதியெலாப்பொருளும்விற்றுத்தோற்றபினியாதுசெய்வான் றிதியெலாவுயிர்க்குஞ்செய்யுந்திருநெடுமாலைச்சார்ந்தான். | 22 |
790 | ஆண்டவனருளினாலேயலங்குமிந்நகரத்துள்ளாற் காண்டகநிருதித்திக்கிற்கவின்றவோர்கோயில்கொண்டு பூண்டநற்கருணையாலேபோற்றுவையுயிர்களெல்லா மீண்டவந்தடுத்தவெய்யகலியிரித்திடாமையென்னே. | 23 |
791 | என்றளியரசன்றாழ்ந்துவேண்டலுமிணர்த்துழாய்மா னன்றுளமிரங்கியன்னான்காணமுன்னணுகிமன்னா வொன்றுவெங்காலத்தீமைக்கியற்றலொன்றில்லையேனுஞ் சென்றுநம்பிரானைத்தாழ்ந்துதெரியவிண்ணப்பஞ்செய்வோம். | 24 |
792 | வருதியென்றரசனோடுமருதமர்நீழன்மேய பெருவிறலடிகட்சார்ந்துபெய்மலர்ப்பாதம்போற்றி முருகமர்மாலைவேந்தன்முகிழ்த்தவற்கடத்தினாலே யிருநிலத்துயிர்கள்சாம்புமெனப்பெருந்துயரத்தாழ்வான். | 25 |
793 | அன்னவன்றுயரந்தீரவாரருள்சுரத்தல்வேண்டு மென்னரும்பரவிப்போற்றவிணர்மருதடியில்வாழு முன்னவவென்றுபோற்றிமுகுந்தன்மிக்கிரத்தலோடுந் தன்னருள்சரந்துமுக்கட்டம்பிரானருளிச்செய்வான். | 246 |
794 | மாயநீயிரந்தவாறேமன்னவற்கருளிச்செய்வோ மாயவெங்கலியைத்தாங்குமளிதலைக்கொண்டுநம்பான் மேயநீயின்றுதொட்டுக்கலிதாங்கியெனவிளம்புந் தூயபேரொன்றுகோடியென்றனன்றெழுதான்மாலே. | 27 |
795 | தொழுதுமானிருதித்திக்கிற்றோன்றுதன்கோயிலுற்றான் பழுதுதீரன்றுதொட்டுக்கலிதாங்கிப்பகவனென்று முழுதுலகவனையோதுமுழங்குமப்பெயர்சொல்வார்க ளெழுதுசீர்த்தியராய்வெய்யகலியிரித்திருப்பரன்றே. | 28 |
796 | அளிகிளர்திருமாலேகவண்ணல்காங்கேயனென்பான் களிகிளர்நிருதிமூலைகலந்தொருநீர்த்தமாக்கித் தெளிகிளரந்நீர்மூழ்கித்திப்பியநீறுபூசி யொளிகிளருருத்திராக்கம்பூண்டெழுத்தைந்துமுன்னி. | 29 |
797 | அன்னபுண்ணியநன்னீர்மொண்டமலனையாட்டியாட்டிப் பன்னரும்வில்வமாதிப்பற்பலமலருஞ்சூட்டிச் சொன்னபல்லுணவுமூட்டித்தொக்கபல்லுபசாரங்க ளென்னவுமினிதுசெய்துதிருமுனரிறைஞ்சிநின்றான். | 30 |
798 | இன்னணம்பூசையாற்றியிலங்கிலைவேற்காங்கேய மன்னவன்வருநாண்முக்கண்வானவன்மருதநீழன் முன்னவனருளிச்செய்ததிறமினிமொழிவாமென்று பன்னருஞ்சூதன்சொல்வான்சவுநகமுனியைப்பார்த்தே. | 31 |
காங்யேன்பூசைப்படல முற்றிற்று.
ஆக படலம் - 16 - க்கு, திருவிருத்தம் - 798.
---------------------
17. பொன்மாரிபொழிந்த படலம் (799 - 835)
799 | வட்டவெண்குடைக்காங்கேயமன்னவன்றன்னாலாக்கப் பட்டநீராட்டியாட்டிப்பரம்பரன்றன்னைப்பூசித் திட்டமிக்குறுநாளோர்நாளருளுவதெந்நாளென்று முட்டகலன்பினோடுமுன்னின்றுதுதிக்கலுற்றான். | 1 |
800 | வற்கடகாலமேலிட்டுயிரெலாமயங்கச்சாடி யற்குதலுடையதாகவடியனேவருந்திச்சோர்வே னொற்கமிலுணர்ச்சியாளர்க்குள்ளொளியாகிநிற்குஞ் சிற்கனசொரூபவென்றோதிருவருள்செய்யுநாளே. | 2 |
801 | உறுகலிவருத்தாநிற்கவுயிரெலாம்வாடநோக்கித் தெறுவகையில்லேனாயசிதடனேன்வருந்துகின்றேன் மறுவறதவத்தோருள்ளம்வயங்குபுமன்னாநிற்குஞ் சிறுமருதூரவென்றோதிருவருள்செய்யுநாளே. | 3 |
802 | வாவிமேன்மேலும்வந்துவற்கடம்வருத்தாநிற்கப் பாவியேன்வருந்துகின்றேன்பளகிலாக்குணத்தோர்தம்மைக் கூவியாட்கொள்ளுந்தெய்வக்குணப்பெருங்கடலேகண்ட தேவிவாழ்பரமவென்றோதிருவருள்செய்யுநாளே. | 4 |
803 | என்றுநெஞ்சுருகிநையவிருகணீரருவிபாய நின்றுதன்வருத்தமோம்பனினைந்துவிண்ணப்பஞ்செய்யும் பொன்றுதலில்லாவன்பற்கிரக்கமில்லாரேபோல வொன்றும்வாய்மலராதையரிருந்தனருடைந்துபோனான். | 5 |
804 | போனவன்கிரகம்புக்குப்புந்திசெய்யுணவும்வேண்டா னானவன்றரைமேல்வீழ்ந்துகிடந்தனனனையபோது வானவனருளினாலேநித்திரைவந்ததாக வூனவன்மயக்கந்தீர்ப்பான்கனவகத்துற்றானன்றே. | 6 |
805 | நரைபொலிசிகைமுடிந்துநாலநெற்றியில்வெண்ணீறுந் திரைபொலிமார்பிற்பூண்டதெய்வப்பூணூலுமல்க வரைபொலிசழங்கற்பின்போக்காடையுத்தரீயத்தோடு தரைபொலிதாளராகித்தண்டமொன்றூன்றிச்சென்றார். | 7 |
806 | விருத்தவேதியராய்ச்சென்றார்வேந்தர்கோன்முன்னநின்று கருத்தமைதுயரமெல்லாங்காற்றுதிபெரியாளோடும் வருத்தமொன்றின்றித்தெய்வமருதர்சிவம்யாங்கண்டாய் பொருத்lமின்றுன்னைவாட்டிப்பொருகலிக்கின்றுதொட்டு. | 8 |
807 | நிலவுநாமமர்வன்மீகநின்றொர்பொற்கொடிமேற்றோன்றுங் கலவமற்றதையரிந்துகோடிநாடோறுநின்பாற் கலவுவார்தமக்குநல்கக்காணுமென்றருளிவானோர் பலவுபாயத்துங்காணாப்பரமனார்மறைந்துபோனார். | 9 |
808 | கற்றைவார்சடிலத்தையர்கனவில்வந்தருளிச்செய்த வற்றைநாண்முதற்கொண்டியாருமவர்தமைவிரத்தரென்பார் புற்றையார்பிரானோவென்றுபொருக்கெனவிழித்தான்வேந்த னொற்றையாழியந்தேரோனுமொத்துடன்விழித்தானன்றே. | 10 |
809 | அதிசயம்பயப்பமன்னன்சிரமிசையங்கைகூப்பி மதிமகிழ்சிறப்பவான்றமந்திரர்முதலோர்க்கூவிப் புதியதன்கனவுகூறிப்பொருக்கெனவெழுந்துசென்று கதியருடெய்வமேன்மைச்சிவகங்கைகலந்துமூழ்கி. | 11 |
810 | நித்திய கரும முற்றி நிறைந்துபே ரன்பு பொங்கச் சத்திய ஞானா னந்தத் தனிப்பரஞ் சோதி வைகும் பொத்திய திருவன் மீகத் தெதிர்புகுந் திறைஞ்சிக் கண்டான் மெத்திய தேசு மிக்கோர் பொற்கொடி விளங்கா நிற்றல். | 12 |
811 | கனவிடை யையர் வந்து கட்டுரைத் திட்ட வாறே நனவிடை நிரம்பக் கண்டு நயந்துகா ரேனக் கோடு மனவிடை யமைத்தார் செய்த திருவருண் மதிக்குந் தோறப் புனவிடை யாரைப் பல்காற் போற்றுவான் றுதிப்பான் மன்னன். | 13 |
812 | பூசைமுன் போலச் செய்து புற்றின்மேற் றோன்றா நிற்கு மாசையங் கொடியை வாளா லரிந்துகைக் கொண்டு மாடத் தோசையங் கழலான் சென்றா னற்றைநா ளுற்றோர்க் கெல்லா மீசைபங் குடையான் றன்பே ரருணிகர்த் திருந்த தன்றே. | 14 |
813 | வழிவரு நாளு முன்போல் வந்துபூ சித்துச் செம்பொன் பொழிகொடி முன்னை நாள்போற் பொலிந்திருந் திடவ ரிந்து கழிமகிழ் சிறப்பக் கொண்டு கலந்தவர்க் கிலையென் னாது பழிதப வன்று நல்கும் படிநிறைந் திருந்த தம்மா. | 15 |
814 | பற்பல நாளு மிந்தப் படியரிந் தரிந்தெ டுத்துப் பொற்புற வருவோர்க் கெல்லாம் வறுமைபோக் கிடுவா னேனு மற்புற வற்றைக் கன்றி மறுதினத் திற்க வாவும் பெற்றிமற் றொழிந்த தின்றே யுயிர்க்கெனப் பெரிது முள்வான். | 16 |
815 | ஒருதினம் பண்டு போல வுற்றுவண் கொடியைப் பற்ற மருதமர் முக்கண் மூர்த்தி மற்றவன் கவலை தீர்ப்பான் கருதுபைங் கொடியை யுள்ளாற் செலுத்தினன் கவலை யோடு வெருவுமுள் ளலைப்பப் பற்றி விடாதிழுத் தனன்பார் வேந்தன். | 17 |
816 | இழுத்தலும் புற்று விண்டு சிதர்ந்ததங் கிலிங்க மாய முழுத்தசெஞ் சோதி தோன்ற முகிழ்த்தபொற் கொடியை விட்டே யெழுத்தடந் தோளா னஞ்சி யிருகரங் குவித்து வீழ்ந்தான் பழுத்தபே ரன்பன் காணும் படிவெளி வந்தா ரையர். | 18 |
817 | கனவகம் வந்தாற் போல நனவினுங் காட்சி நல்கும் பனவரைக் கண்டு தாழ்ந்து பார்த்திபன் றுதித்து நின்றான் றினகர கோடி யென்னத் திருவுருக் கொண்டு நின்ற வனகமா மறையோர் பொன்பெ யெழிலியை நினைத்தா ரன்றே. | 19 |
818 | நினைத்தலு மோடி வந்து நெஞ்சநெக் குருகித் தாழ்ந்து நனைத்தடங் கொன்றை மாலை நம்பனே பணியா தென்னக் கனைத்தமா முகில்காள் கண்ட தேவியி னெல்லை காறு முனைத்தபொன் பொழுதி ராலோர் முகுர்த்தமென் றருளி னானே. | 20 |
819 | இவ்வண்ணமருளிச்செய்தேயிலிங்கத்துண்மறைந்தானெம்மான் வெவ்வண்ணவேலான்மிக்கவிம்மிதனாகிநின்றான் செவ்வண்ணப்பெருமான்சொற்றதிருமொழிசென்னிமேற்கொண் டவ்வண்ணப்புயல்களெல்லாமெழுந்துவானடைந்தமாதோ. | 21 |
820 | வானகம்பரந்துநின்றேவளர்கண்டதேவியெல்லை யானவைங்குரோசமட்டுமமைதரவொருமுகுர்த்த மீனமில்செம்பொன்மாரியெல்லையில்லாதுபெய்த தேனகமலர்பூமாரிதேவரும்பொழிந்தாரன்றே. | 22 |
821 | புடவிபொன்னிறமேயென்பார்பொன்னெனாதென்னோவென்பா ரிடவியபுவிமறைத்தவித்துணைச்செம்பொன்முற்றுந் தடவியெங்கெடுத்துவந்தித்தண்முகில்பொழிந்ததென்பார் மடவியல்வறுமைசெய்தவற்கடமொழிந்ததென்பார். | 23 |
822 | மன்னியபுகழ்க்காங்கேயன்வான்றவம்பெரியதென்பார் மின்னியவனையானொக்கும்வேந்தருமுளரோவென்பார் துன்னியவவன்செங்கோலேதூயசெங்கோல்காணென்பார் பன்னியவவனேதெய்வம்படிக்குவேறில்லையென்பார். | 24 |
823 | வையகமாந்தரெல்லாமின்னணமகிழ்ந்துகூறச் செய்யகோன்மன்னர்மன்னன்சேனையைக்காவலிட்டே யையபொன்னடங்கவாரியமைந்ததென்மேருவென்ன வெய்யவற்கடம்போய்நீங்கிவிலகுறக்குவித்துப்பார்த்தான். | 25 |
824 | மலையெனக்குவிந்தசெம்பொன்வளமுழுதமையநோக்கி யிலையெனற்கிசையார்யாருமிரந்திடப்படுவோராகக் கலையெனப்படுவவெவ்லாங்கற்றுணர்ந்தவருஞ்செல்வ நிலையெனவாரிவாரிக்கொடுத்தனனிருபர்வேந்தன். | 26 |
825 | மிடிகெடமுகந்துசெம்பொன்வேந்தர்கோன்கொடுக்கும்போதே படிகெடவருத்திநின்றபாவவற்கடகாலத்தின் குடிகெடவெழுந்துகொண்மூகுரைகடலுண்டுவெய்யோன் கடிகெடவிசும்புபோர்த்துக்கதிர்த்தவில்லொன்றுவாங்கி. | 27 |
826 | மிடிபுரிகாலந்தன்னைவாள்கொடுவெட்டியாங்குக் கடிபுரிதடித்துவீசிச்சளசளவென்றுகான்ற படிபுரிகளிநல்யானைப்பரூஉப்புழைக்கானேர்தாரை வெடிபுரியேரியாதிவெள்ளமாய்முடியமாதோ. | 28 |
827 | விரம்புநீரெங்கும்போர்ப்பமென்பணையுழுதலாதி யரும்புபஃறொழிலுமேன்மேன்மூண்டனவாதலாலே யிரும்புலமெங்குஞ்செந்நெல்வெண்ணெலாதிகளுமீண்டக் கரும்புபைங்கதலியாதிகஞலினபாண்டிநாடு. | 29 |
828 | உரம்பொலிவறுமைநீங்கியொழிந்துசெல்வஞ்செருக்கி வரம்பொலிபாண்டிநாடுவாழ்தரக்கண்டமன்ன னிரம்பொலிநறுநீர்வேணிநின்மலனருளாவலிந்தப் பரம்பொலிமகிழ்ச்சியெங்கும்பராயதென்றுவகைபூத்தான். | 30 |
829 | சிறுமருதூரின்மேயதெய்வநாயகர்க்குமன்பிற் பெறுமொளிர்கருணைமேனிப்பெரியநாயகிக்கும்பாசந் தெறுமொருகுஞ்சிதத்தாட்டிருநடராசருக்கு மறுதியின்மற்றையோர்க்குமாலயமெடுக்கலுற்றான். | 31 |
830 | வானளவோங்குசெம்பொற்கோபுரம்வயங்குநொச்சி யூனமில்கருவிலத்தமண்டபமுரையாநின்ற வேனவுஞ்செம்பொனாற்செய்திலங்குபன்மணிகால்யாத்துக் கூனல்வெஞ்சிலையானன்னாட்கும்பாபிடேகஞ்செய்து. | 32 |
831 | குடைகொடிமுதலாயுள்ளவிருதும்பொற்குடமுன்னாக மிடைபல்பாத்திரமுமோலியாதிவில்வீசுபூணு மடைதருகனகவாடையாதிவட்டமும்பல்லூரு முடைமதக்களிறுமாவுமெண்ணிலவுதவினானே. | 33 |
832 | நித்தியவிழவுமுன்னாநிகழ்பலவிழவுஞ்செய்து சத்தியஞானானந்தத்தனிப்பரஞ்சுடர்க்குயாரும் பொத்தியவொளிர்பொன்மாரிபொழிந்தவரென்னும்பேரிட் டொத்தியனகர்க்குஞ்செம்பொன்மாரியென்றுரைத்தானாமம். | 34 |
833 | பொலிதருசெம்பொன்மாரிபொழிந்தவர்திருமுன்னாக வொலிதருகழற்கான்மன்னனெஞ்சியவொளிர்பொன்னெல்லா மலிதரும்படிபுதைத்துவைத்தனன்கணங்கள்காத்து நலிதருவருத்தமாக்குமாங்குநண்ணுநரையின்னும். | 35 |
834 | எண்ணருநாள்களிவ்வாறிருந்தரசாட்சிசெய்து நண்ணரும்பொன்பொழிந்தகண்ணுதலருளினாலே நண்ணருஞ்சிவலோகத்தைநண்ணிவீற்றிருந்தான்வானோர் மண்ணருமகிழ்ச்சிபொங்கமலர்மழைசொரிந்தாரன்றே. | 36 |
835 | போற்றுபொன்மாரியூரிற்காங்கேயன்பொலியமுந்நா ளாற்றுநீர்படிவோர்யாருமரும்பெரும்போகத்தாழ்வார் நீற்றுமாமுனிவசெம்பொன்பொழிந்தமைநிகழ்த்தினோமேற் சாற்றுதுங்கேட்டியென்றுதவப்பெருஞ்சூதன்சொல்வான். | 37 |
பொன்மாரிபொழிந்தபடலம் முற்றிற்று.
ஆக படலம்-17-க்கு-திருவிருத்தம்-835
-------------------------
18. சிலைமான்வதைப்படலம் (836 - )
836 | பஞ்சுசேரடிபங்காருள்செய, மஞ்சுகான்றகனகத்துண்மன்னவ னெஞ்சுசெம்பொன்புதைத்திருக்கின்றசொல், விஞ்சுமானிலத்தெங்கும்விராயதே | 1 |
837 | வடபுலத்தவன்வாய்ந்தபடையினா, னடல்மிகுத்தவனாழியவாவினான் மடனுடைச்சிலைமானெனும்பேரினான், விடனொருத்தன்விழைந்திதுகேட்டனன் | 2 |
838 | கேட்டபோதுகிளர்ந்தெழும்வேட்கையா, னாட்டமார்கண்டதேவியைநண்ணி யே, யீட்டரும்பொனெலாங்கவர்வாமெனா, வோட்டமாய்வருவான்படையோடரோ. | 3 |
839 | வலத்துமிக்கவடபுலத்தான்வந்து, கலக்கும்வார்த்தைமுன்கண்டவர்கூறிடத் தலத்துமேவியயாருமவன்றனை, விலக்குமாற்றலிலேமென்றுவெம்பினார். | 4 |
840 | என்னசெய்துயினியெனநாடியே, முன்னவன்றிருக்கோயிலைமுன்னினா ரன்னமன்னவணங்கொருபாலுடைச், சொன்னமாரிபெய்தாரைத்தொழுதனர். | 5 |
841 | சம்புசங்கரதற்பரவற்புத, வெம்புமெங்கண்மெலிவைத்தவர்த்தருள் வம்புசெய்யும்வடபுலத்தான்வந்துன், பம்புசெம்பொன்கொளாவகைபண்ணியே. | 6 |
842 | என்றுகூறியிறைஞ்சிமுறையிட, வன்றுநாயகனாகாயவாணியா லொன்றுமாறுரைப்பானொன்றுமஞ்சலீர், வென்றுமற்றவனாருயிர்வீட்டுவோம். | 7 |
843 | பின்னமில்லாப்பெரியசிறையிலி, சின்னமேயசிறியசிறையிலி யென்னவாழ்நம்மிடபமிரண்டையு, முன்னமேவமுடுக்குவிடுமென்றான். | 8 |
844 | என்றசொற்செவியேற்றுமகிழ்ந்தனர், குன்றநேர்தருகுண்டையிரண்டையு மன்றவையன்றிருமுன்வரவழைத், தொன்றநல்லுபசாரம்புரிவரால். | 9 |
845 | ஆட்டிநீரினரியவுணவெலா, மூட்டியப்பியுவப்புறுசாந்தந்தார் சூட்டியங்கைதொழுதுபகைவனை, மாட்டிவம்மினென்றார்தலவாணரே. | 10 |
846 | தலையசைத்துப்பயப்பயத்தாள்பெயர்த், திலையப்பிலமாலையிலங்குற நிலையகாரிருள்கோட்டணிநீக்கிட, மலைபெயர்ந்தெனச்சென்றனமால்விடை. | 11 |
847 | கோடுகொண்டுவன்மீகங்குதர்ந்துநாத், தோடுகொண்டிருதுண்டந்துழாவியே மாடுகொண்டெழுவாஞ்சையனைத்துரீஇ, நீடுகொண்டகடுப்பொடுநேர்ந்தன. | 12 |
848 | காலினாற்சிலர்தம்மைக்கலக்கிடும், வாலினாற்சிலராருயிர்மாய்த்திடும் வேலினாற்பொலிவீரர்தம்முட்சுவைப், பாலினாற்பொலிபுல்லங்களென்பவே. | 13 |
849 | பூட்டிநாண்விற்பொருகணையேவிட, வீட்டியன்னவையாவும்விரைந்தெழீஇக் கோட்டினாற்குத்திச்சாய்த்துக்குளிறிடு, மீட்டினாற்பொலிபுல்லங்களென்பவே. | 14 |
850 | இன்ன வாறுப டையினை யீறுசெய் தன்ன வெஞ்சிலை மானை யடர்ந்தெழுந் துன்ன வாமவ னேதி யொருங்குமேற் றுன்ன வாலின டித்துத் துடைத்தன. | 15 |
851 | கல்லி னைப்பொடி கண்டிடு தோளினான் வில்லி னைப்பொடி காணமி தித்தவன் மல்லி னைப்பொடி தோற்றி வயங்கிளர் புல்லி னைப்பொடி பூணி முழங்கின. | 16 |
852 | ஆய காலைய வன்சினங் கொண்டுநேர் பாய வேறுக ளும்மெதிர் பாய்ந்திடத் தீய மார்பிற் றிணிமருப் பாழ்ந்தன போய தாலவ னாவிபு லம்பியே. | 17 |
853 | மீண்டு நாயகன் கோயிலை மேவின வாண்டி யாரும திசய மெய்தின ரீண்டு வான்சிவ கங்கையி ரும்புகழ் வேண்டு மாநவில் வரமெனுஞ் சூதனே. | 18 |
சிலைமான்வதைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் - 18 - க்கு - திருவிருத்தம் - 853.
-------------
19. சிவகங்கைப்படலம் (854- 868)
854 | திருவளர் சிறப்பு வாய்ந்த சிவகங்கை மூழ்கு வோர்க்கு மருவளர் தரும நல்கும் வளத்தினாற் றரும தீர்த்த முருவள ரருத்த நல்கு முண்மையா லருத்த தீர்த்தங் கருவளர் காம நல்கு மேதுவாற் காம தீர்த்தம். | 1 |
855 | பெறவரு முத்தி நல்கும் பெற்றியான் முத்தி தீர்த்த முறலருந் தீர்த்த மெல்லா முறுதலிற் சறுவ தீர்த்த மறவரு ஞான மேன்மேல் வளர்த்தலான் ஞான தீர்த்தஞ் செறலரு மிட்ட மெல்லாஞ் செறித்தலி னிட்ட தீர்த்தம். | 2 |
856 | குட்டநோய் தொழுநோய் பொல்லாக் குன்மநோய் விழிநோய் வெய்ய கட்டநோய் நெய்த்தோ ராதி காலுநோ யிரக்க முற்றும் விட்டநோ யென்று யாரும் விளம்புநோ யனைத்து மாய்ந்து பட்டநோ யாகு மந்தப் பட்டநீர் மூழ்கு வார்க்கே. | 3 |
857 | பெயர்வரி தாய மண்ணை பிரமராக் கதம்வெம் பூத மயர்வரு மனைய தீர்த்த மாடினோர் தமைவிட் டேகு முயருறு மனைய தீர்த்தத் தொருநுனி பட்ட போது மயருறு பாவ மெல்லாம் வயங்கழ லிட்ட பஞ்சாம். | 4 |
858 | அன்னமா தீர்த்தக் கோட்டிற் றென்புலத் தவருக் காற்று நன்னர்வான் செய்கை யெல்லா நயந்தனர் நாடி யாற்று லென்னபா தகரே யேனு மெய்துவர் சுவர்க்க மாக தன்னமு மடையா ரெல்லாப் போகமுந் தழுவி வாழ்வார். | 5 |
859 | ஆண்டுயர் தோற்ற மாதத் தோற்றமீ ரயனம் யாரும் வேண்டுமீ ருவாவி யாள மதிகதிர் விழுங்கு கால மீண்டுநற் சோம வார மிவைமுத லியநா ளன்பு பூண்டதிற் படிவோ ரெய்தும் புண்ணிய மளவிற் றாமோ. | 6 |
860 | அலர்செறிகற்பநாட்டினமர்ந்துசெயரசுவேண்டின் மலர்மிசையிருக்கைவேண்டின்மூசுணக்கிடக்கைவேண்டி னுலர்வவென்றிவற்றையெள்ளியுறுபெருவாழ்க்கைவேண்டிற் பலர்புகழனையதீர்த்தம்படிந்தினிதாடல்வேண்டும். | 7 |
861 | அன்னநீரகத்துதித்ததவளைமீனாதியாய வென்னவுங்கயிலாயத்தையெய்திவீற்றிரந்துபன்னாட் பின்னரத்தலத்தேவந்தோர்பெறலரும்பிறவியுற்று நன்னர்மெய்ஞ்ஞானம்பெற்றுநம்பிரான்பதமேசாரும். | 8 |
862 | புண்ணியம்பயக்குநாளிற்பொங்குமத்தீர்த்தமூழ்கிக் கண்ணியமருதவாணர்கழலடிக்கன்பராய தண்ணியமறையோர்மற்றைச்சாதியோரெவர்க்குங்கையி னண்ணியசெம்பொனாதிநல்குமாதவத்தின்மிக்கார். | 9 |
863 | மனைமகவாதியெல்லாச்சுற்றமுமருவவாழ்ந்து கனைகடலுலகநீத்துக்கற்பகநாடுபுக்குப் புனைபெரும்போகமார்ந்துபுண்ணியனருளாலீற்றிற் றனைநிகர்சிவலோகத்திற்சார்ந்துவாழ்ந்திருப்பரன்றே. | 10 |
864 | விரிதிரைபரப்புங்கங்கைகாளிந்திவிருத்தகங்கை புரிதருயமுனைகண்ணவேணிபொன்பொலிகாவேரி யிரிதலில்பொரநையாதியெய்துபுபன்னாண்மூழ்கி னுரியபேறனையதீர்த்தத்தொருதினம்படியினுண்டாம். | 11 |
865 | பற்பலவுரைப்பதென்னைபாரிடத்தெவருஞ்சென்று சொற்பொலியனையதீர்த்தந்துளைகமுற்றாதேயென்னி லற்புறவரவழைத்தாவதுபடிதருதல்வேண்டு மற்பொலியதுவுமுற்றாதென்னின்மற்றுரைப்பக்கேண்மோ. | 12 |
866 | சாற்றுமந்நீரிற்றோய்ந்ததவமுடையரைக்கண்டேனும் போற்றுதல்வேண்டுமன்னாரரியரேற்புகலத்தீர்த்த மேற்றவழ்காற்றுவந்துமேனியிற்படுமாறேனு மாற்றுதல்வேண்டும்போகமாதிகள்விரம்பினோரே. | 13 |
867 | மன்னியகதிரோன்றீர்த்தமதியவனியற்றுதீர்த்தம் பன்னியசடாயுதீர்த்தம்பரவுகாங்கேயன்றீர்த்த மன்னியபிரமனாதிமூவரும்புரிந்ததீர்த்த நன்னியமத்தமேன்மைநவின்றனமுன்னங்கண்டாய். | 14 |
868 | எண்ணரும்புகழ்சாறேவியியற்றியவனையதீர்த்தக் கண்ணரும்பெருமையாரேகணித்தெடுத்துரைக்கவல்லார் பண்ணருந்தவத்தினாரேபற்றமத்தலத்தின்மேன்மை விண்ணருமவாவுநீரதறியெனவிளம்புஞ்சூதன். | 15 |
சிவகங்கைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 19- க்கு திருவிருத்தம். 868
-----------------
20. தலவிசேடப்படலம். (869-884)
869 | பார்கெழுகயிலைமேருபருப்பதம்வாரணாசி சீர்கெழுதிருக்காளத்திதிருவாலங்காடுகாஞ்சி யேர்கெழுமுதுகுன்றண்ணாமலைகழுகிருக்குங்குன்ற மார்கெழுதில்லைகாழியணியிடைமருதூராரூர். | 1 |
870 | ஆலவாய்திருக்குற்றாலமணியிராமீசமின்ன சீலமார்தலங்களுள்ளுஞ்சிவபிராற்கினியதாய மூலமாந்தலமாயெல்லாவளங்களுமுகிழ்ப்பதாயெக் காலமுமுளதாயோங்குதலங்கண்டதேவியொன்றே. | 2 |
871 | புண்ணியமுதல்வியென்னும்புவனங்களீன்றதாயே நண்ணியவிருப்பின்மேவிநற்றவம்புரிந்தாளென்னி லெண்ணியவனையதானம்போல்வதொன்றினியுண்டென்று கண்ணியவமையுங்கொல்லோகரையுமுப்புவனத்துள்ளும். | 3 |
872 | உலகெலாமீன்றசெல்வியுறுதவம்புரிந்ததன்றி யலகிலத்தவத்தின்பேறாவையர்பாலளவிலாது நிலவுபல்வரமுங்கொண்டுநிரப்பினண்மேலுமென்னிற் குலவுமத்தலத்துக்கொப்பொன்றுளதெனல்கூடுங்கொல்லோ. | 4 |
873 | மிடிதவிர்த்தருளாயென்றுவேண்டிடுமடியார்க்கென்றும் படியில்பொற்காசுமுன்னாப்பலவளித்திட்டதன்றி நெடியபொன்மாரிபெய்ததுண்டுகொனெடுநீர்வைப்பி லொடுவிலத்தலத்திற்கொப்பென்றொருதலஞ்சொல்லப்போமோ. | 5 |
874 | அன்னமாதலத்திலாதிசைவர்களமருமாறும் பன்னகாபரணனன்பிற்பனலர்மற்றுள்ளோராய வென்னருமமருமாறுமிடஞ்சமைத்துதவுவோரு நன்னுமற்றவர்க்குவேண்டுமடைமுதல்வழங்குவோரும். | 6 |
875 | சத்திரமியற்றியன்னதானஞ்செய்திடுகின்றோரு மொத்தியன்மடங்களாக்கிமுனிவருக்குதவுவோரு மெத்தியபொழிலுண்டாக்கிவெள்விடைப்பெருமாற்கென்று பத்தியினுதவுவோரும்பழனங்கணல்குவோரும். | 7 |
876 | திருமுடியாட்டுமாறுதிருந்துபால்பொழியாநிற்கும் பெருமடித்தலத்தினாக்கள்பேணிநன்குதவுவோரு மருவியகிலமாயுள்ளமண்டபமதின்முன்னாய பொருவில்பற்பலவுநன்குபொலிதரப்புதுக்குவோரும். | 8 |
877 | திருவிழாச்சிறப்பிப்போரும்பூசையைச்சிறப்பிப்போரு மருவியவேனிற்காலம்வளங்கெழுதண்ணீர்ப்பந்தர் பொருவரவைக்கின்றோருநந்தனம்பொலியச்செய்து திருவமர்பள்ளித்தாமஞ்சாத்திடல்செய்கின்றோரும். | 9 |
878 | இன்னவர்பலருமண்ணிலிருங்கிளைசூழவாழ்ந்து பன்னருஞ்சுவர்க்கமேவிப்பற்பலபோகமார்ந்து பின்னர்நம்பெருமான்செய்யும்பேரருட்டிறத்தினாலே யன்னவன்சிவலோகத்தையடைந்துவாழ்ந்திருப்பரன்றே. | 10 |
879 | பற்பலவுரைப்பதென்னைபாரிடத்தறஞ்செய்வோர்க ளற்பதம்பயவாநிற்குமத்தலமடைந்துசெய்யி னற்பயன்மேருவாகுநவிலணுவளவேயேனுங் கற்பனையன்றீதுண்மைகரிசறுத்துயர்ந்தமேலோய். | 11 |
880 | இத்தகுபுராணத்தாங்காங்கிசைத்தனமனையதானத் துத்தமவிசேடமெல்லாமுரைத்திடமுற்றுங்கொல்லோ சத்தறிவின்பரூபத்தனிமுதல்சரணஞ்சார்ந்த சுத்தமெய்த்தவத்தோயென்றுசொற்றனன்சூதமேலோன். | 12 |
881 | சாற்றருமகிழ்ச்சிபொங்கச்சவுநகமுனிமுன்னானோர் மாற்றருந்தலத்துச்சூதமாமுனிபாதம்போற்றி யாற்றருமகமுமுற்றியனைவருமெழுந்துபோந்து சேற்றருநறுநீர்வாவிச்சிறுமருதூரையுற்றார். | 13 |
882 | தெளிதருநன்னீராயசிவகங்கையாதித்தீர்த்தங் களிதருசிறப்பின்மூழ்கிமருதடிகலந்துளானை நளிதருகருணைவாய்ந்தபெரியநாயகியைப்போற்றி யளிதருமுவகையோராய்நைமிசமடைந்துவாழ்வார். | 14 |
883 | பழுதகல்கண்டதேவிப்புராணத்தைப்படிப்போர்கேட்போ ரெழுதுவோரெழுதுவிப்போரிரும்பொருளாய்வோர்சொல்வோர் முழுதமைசெல்வத்தாழ்ந்துமுனிவரும்போகமாந்திப் பொழுதுபற்பலதீர்ந்தீற்றிற்புண்ணியனடியேசார்வார். | 15 |
884 | வேறு. சீர்பூத்தபொன்மாரிசிறுமருதூரெனுங்கணடதேவிவாழ்க பார்பூத்தவனையதலபாலனஞ்செய்வணிகரெல்லாம்பரவிவாழ்க கார்பூத்தகுழற்செவ்வாய்ப்பெரியநாயகியம்மைகருணைவாழ்க வேர்பூத்தபொன்மழைபெய்தவர்மணிமன்றெடுத்தபொற்றாளென்றும்வாழ்க. | 16 |
தலவிசேடப்படலம் முற்றிற்று.
ஆக படலம் - 20 க்கு திருவிருத்தம் - 884.
-----------------------
கண்டதேவிப்புராணம் முற்றிற்று.