logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சித்தாந்த சிகாமணி 2 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம் றிய சித்தாந்த சிகாமணி - siddhanta shikhamani Tamil translation of sivapragasar

சித்தாந்த சிகாமணி

இரண்டாம் பாகம்

பன்னிரண்டாவது

(12) சதுர்விதசாரத்தலம்

[அதாவது - குரு லிங்க ஜங்கம பூஜையுடன் அவர்களின் ப்ரசாதங்களையும் ஸ்வீகரிக்கும் சிவபக்தனே சதுர்வித சாரமுள்ளவனென்று சொல்லப்படுவன் என்பது.]

கலிவிருத்தம்                 பத்தி கொண்டரன் பாதப் புனலெனச்                சத்தெ னுங்குரு சங்கம மெல்லடிக்                குய்த்த வொண்புன லுங்களித் துண்பரா                னித்த லுஞ்சிவ நேச மடைந்துளார்.                                                    1                 பொங்கு றும்புனி தத்திற் புனிதமாய்                மங்க லந்தனின் மங்கல மாகியே                சங்க ரன்றிருத் தாட்புனற் றாரண                மிங்க ளித்திடுஞ் சித்திகள் யாவுமே.                                                    2                 அத்த னந்தி யணிந்த மலரொடு                பத்தி ரங்க டலையிற் பரித்துள                சுத்த னிங்கோர் கணத்தினிற் றூங்குகை                மத்த வேழ மகம்பய னண்ணுவான்.                                                    3                 உருத்தி ரன்கொளு மோதநங் கொள்கமற்                றுருத்தி ரன்பெற் றுயிர்ப்ப துயிர்க்கவோ                ருருத்தி ரன்பரு கொண்புன லுண்கவெண்                றுரைத்தி டுங்கொண் டுயர்சொற் சுருதியே.                                                4                 நற்ப ழங்கடி நாண்மலர் பத்திர                மெற்ப தம்புன லேமுதல் யாவையுந்                தற்பெ ருஞ்சிவ லிங்கந் தனக்கரோ                வர்ப்பி தஞ்செய்து கொள்ளுவ னன்பினோன்.                                            5                         பிரபுலிங்க லீலை                 குடிப்பன விழுங்குவ கூரெ யிற்றினாற்                கடிப்பன நக்குவ வனைத்துங் கைம்மலர்                அடுத்துள சிவன்றனக் கர்ப்பித் துண்பவன்                விடுத்தவன் மேல்வரும் வினைகள் யாவும்.                 உலக னைத்தினு மோங்கொளி யாகியே                யிலகு மெய்ச்சிவ லிங்க விறைபெருந்                தலைமை பெற்றிட லாலவன் றானுகர்                பலவு முற்றிடல் பத்தர்க் கியல்பரோ.                                                   6                 தீத கற்றுஞ் சிவனிரு மாலிய                மேதி னிக்கண் விமலற் றரித்துளோ                ராத ரத்தி னடைகுவ தன்றிமற்                றேதி லர்க்கஃ தெய்த வொணாதரோ.                                                    7                 அண்ண லீசனுக் கர்ப்பிதஞ் செய்துபின்                னுண்ணு மோதனத் தோரவி ழொன்றினுக்                கெண்ணு மாபரி யாக விரும்பய                னண்ணு வார்சிவ பத்தர் நயந்தரோ.                                                    8                 பரம னுண்டு பவித்திர மாயது                நிரும லம்பெற லானிரு மாலியம்                பெருமை தங்கு நிருமலன் பெற்றுணுங்                கருமை தங்கு கயவர்க் கடாதரோ.                                                       9                 சுத்த மாகுஞ் சுடர்சிவ னுண்ணுபு                வைத்த வானிரு மாலியங் கொண்டுறப்                பத்தியோவிய பாவிக ளாமெனக்                கைத்து ளோரதி காரிக ளல்லரே.                                                         10                 அருளி லிங்கத் தரும்பிர சாதத்தால்                வருமி ரும்பலன் வண்குரு சங்கமந்                தருமி ரும்பிர சாதமுந் தந்திடு                மொருமை கொண்டுவந் துண்பவர்க் கென்றுமே.                                         11                 ஆத லானல் லருட்சிவ லிங்கமெய்                நாத னாகிய நற்குரு சங்கமங்                காத லாகிக் கசிந்து தொழுதவர்                சாத மாதர விற்றரித் துண்கவே.                                                         12                         பிரபுலிங்க லீலை                 புலம்பி நைந்திருக் கின்றவப் போதினி                லிலிங்க முங்கர முந்திகழ் வெய்துற                நலங்கொ ளல்லம னண்ணனி னண்ணலுங்                கலங்கி நின்றவக் காரிகை கண்டனன்.  

- சதுர்விதசாரத்தலம் முற்றிற்று -
* * *

 

 

பதின்மூன்றாவது

(13) உபாதிதானத்தலம்

[அதாவது - மேற்கூரிய நான்குவித ஸாரமுள்ளவனும், பலாபேக்ஷையினால் குரு லிங்க ஜங்கமங்களுக்குத் தானம் செய்பவனுமான சிவபக்தனே சோபாதிகதாநி என்று சொல்லப்படுவன் என்பது.]

                       கலிவிருத்தம்                 தேசி கற்குஞ் சிவலிங்கத் திறகுமா                லாச கற்று மருட்சிவ யோகிக்கும்                பேச லுற்ற வவர்பிர சாதவூ                ணேச முற்றவர் நின்று கொடுக்கவே.                                                   1                 தான மூவகை தக்கசோ பாதிக                மேனை மாநிரு பாதி சகசமென்                றூன மாம்பல னுன்னி யளித்தலே                ஞான மேவிலர் நச்சுசோ பாதிகம்.                                                     2  

- உபாதிதானத்தலம் முற்றிற்று -
* * *

 

 

பதினான்காவது

(14) நிருபாதிகதானத்தலம்

[அதாவது - தானத்தைப் பெற்றுக் கொள்பவனுடைய சந்தோஷத்தின் பொருட்டுத் தானம் செய்து, அவ்வித தானத்தில் எவ்வித பலாபேக்ஷையு மில்லாமல் அது ஈச்வரார்ப்பணம் என்னும் புத்தியுள்ள சிவபக்தனே நிருபாதிகதாநி என்று சொல்லப்படுவன் என்பது.]

                       கலிவிருத்தம்                 விடுத்து நெஞ்சம் பலனை விழைதலை                யடுத்த வீசனுக் கர்ப்பித மென்றுனிக்                கொடுக்கு மந்தக் கொடையை யுரைப்பரிங்                கெடுத்து நன்னிரு பாதிக மென்னவே.                                                   1  

- நிருபாதிகதானத்தலம் முற்றிற்று -
* * *

 

 

பதினைந்தாவது

(15) சகசதானத்தலம்

[அதாவது - தானம் பெற்றுக்கொள்ளத்தக்கவன் தானம் செய்யத்தக்கவன் தானம் செய்யும் பதார்த்தம் ஆகிய இவைகளெல்லாம் சிவஸ்ரூபமென்றும், தான் கொடுக்கத் தக்கவ னல்லவென்றும், குருவும் லிங்கமும் பூஜ்யமான ஜங்கமமும் தன் பதார்த்தத்தை ஸ்வீகரிக்கிறார்க ªளுன்றும் எண்ணி, அதனால் கர்த்ருத்வ புத்தி செய்யாது தானம் செய்பவனான சிவபக்தனே சகசதானி என்று சொல்லப்படுவன் என்பது.]

                       கலிவிருத்தம்                 இரத்தல் செய்பவ னீபவ னீத்துறு                மருத்த நின்றவ ருஞ்சிவ மென்றுதான்                கருத்த னென்னுங் கருத்தில னாகியே                தரித்தி டுஞ்செயற் றானஞ் சகசமே.                                                    1                 இறப்ப நன்கொடை யாவினு மேலதாய்ச்                சிறப்ப டைந்து செயுஞ்சக சக்கொடை                பிறப்பெ னுந்துர்ப் பிணிமருந் தாகிய                மறப்ப ருஞ்சிவ ஞானம் வழங்குமால்.                                                  2                 பத்த ரோடு பரமனுக் கீத்துறு                மெய்த்த தானஞ் சகசம் விமலனுக்                குய்த்த போதொன் றுதவுநற் பாத்திரத்                தத்த மாயிர மீயு மரும்பயன்.                                                         3                 பாத்தி ரஞ்சிவ னுங்கன பாத்திரஞ்                சாத்தி ரந்தெரி தக்க குரவனு                மேத்தி யொன்றவர்க் கீயு மரும்பலன்                மூத்து நிற்கு முடிவில தாகியே.                                                       4                 காணு றுஞ்சிவ னாகிக் கருநெறி                நாணு றுஞ்சிவ ஞான மருவியே                யேணு றுஞ்சிவ யோகிக் கிடும்பொருண்                மாணு றும்பர மார்த்த மெனப்படும்.                                                    5                 எக்கொ டைக்குமெ டுத்தசற் பாத்திர                மிக்க மெய்ச்சிவ யோகி மிகையென                வொக்க வொன்றிங் குரைப்பதி லையிலை                பக்க நூல்கள் பலவினு மென்பவே.                                                     6                 சாந்த மாய தனிச்சிவ யோகிகை                யேய்ந்த வோர்பிடி பிச்சை யிடும்பலன்                கூர்ந்த வோர்சத கோடி மகஞ்செயு                மாந்த ரானு மருவுத லன்றரோ.                                                        7                 திருத்தி யொண்சிவ யோகி பெறிற்சிவன்                றிருத்தி யெய்துவ னச்சிவ னெய்திய                திருத்தி கொண்டு செறியு முலகெலாந்                திருத்தி யெய்துஞ் சிவமய மாதலால்.                                                  8                           பிரபுலிங்க லீலை          உலகி லொருவன் சிவயோகி யுண்ட தம்ம சராசரமா         மலகி லுயிர்க ளெலா முண்ட தாகு மென்ன மறைகூறு         மிலகு முறையைக் காட்சியா னின்றில் குணர வுணர்த்தினான்         கலக வினைக டீர்க்குமருட் கண்ணன் றிகழ் லமதேவன்.                 ஆத லாற்சிவ யோகிக் கநுதிநங்                காத லாலெக் கருமத்தி னானுமே                யோத நாதியி லொன்றுங் குறைவறத்                தீதி லாது திருத்திசெய் கிற்பரே.                                                        9                 தாவி லாதுயர் சச்சிதா நந்தமாய்                மேவு மீசனுக் காக விரும்பியே                யாவு நல்குவன் யாவ னனையனே                யோவி லாத வொருபெருஞ் சங்கரன்.                                                  10                 உரைத்த நன்னெறி யுற்றுயர் தானியா                யருத்த மாமய னாதியர் வாழ்வினில்                விரத்த னாகும் விழுமிய பத்தனே                தரித்து நிற்குமா கேசத் தகைமையே.                                                   11  

- சகசதானத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் எக்காரணத்தினால் பிண்டம், பிண்டஜ்ஞானம், சம்சாரஹேயம், குருகாருண்யம், லிங்கதாரணம், விபூதி, ருத்ராக்ஷம், ஸ்ரீபஞ்சாக்ஷர ஜபம், பக்தி, உபயம், த்ரிவிதசம்பத்தி, சதுர்விதசாரம், உபாதிமாடம், நிருபாதிமாடம், சஹஜமாடம் என்னும் பதினைந்து ஸ்தலங்களுடனே கூடியிருத்தலானும் சிவசக்தியினாலும் எவன் பக்தியுள்ளவ னானானோ அக்காரணத்தினால் அவன் முதலாமவனான பக்தன் என்று அறியப்பட்டான்.

1-வது பத்தத்தலம் முற்றும்
* * *

 

 

இரண்டாவது மாகேசத்தலம்

[அதாவது - எக்காலத்தும் லிங்கநிஷடையினால் ஆஸ்திக்ய நித்யகர்ம சத்ய சதாசார தர்மசௌசீல்யாதிகளை யடைந்து வீரசைவ வ்ரத சம்பந்னனாயிருத்தல் என்பது.]

( இதனுட்பிரிவு )                         கலிவிருத்தம்                 சாற்றினை யுவந்துபத் தத்த லத்தினைப்                பாற்றிய வினைநெறிப் பத்த னிங்ஙனெவ்                வாற்றினி லடைவன்மா கேசத் தன்மையை                மாற்றிரி கணேசநீ வகுத்துக் கூறுவாய்.                                                 1                 மாசறு சகசநற் றானம் வல்லனாய்                வாசவ னாதியர் பதத்தின் மாற்றிய                நேசமோ டொருபெரு நேசத் துற்றவ                னீசனை யிணையின்மா கேசத் தன்மையான்.                                            2                 முன்னர்நஞ் சங்கரன் மொழிந்த வாறிவண்                பன்னுவன் மகேசநற் றலத்தின் பான்மையுந்                தன்னிகர் மகேச்சுரன் றன்மை யங்கதன்                பின்னர்வந் திலிங்கநன் னிட்டை பெற்றிடும்.                                             3                 பூருவாச் சிரயமத் துவிதம் போந்துபி                னாருமா க்குவாந மட்ட மூர்த்திபின்                சாருமியாண் டினுநிலை தடுத்தல் பின்சிவம்                பாரமா வுலகொடு பத்த னாந்தலம்.                                                     4                 இம்முறை * நவவித மெய்தி நின்றுள                மெய்ம்மலி மகேசநற் றலம்வி ளம்புதுஞ்                செம்மையோ டொருங்கிய சித்த னாகியே                யெம்முனி வரவிருந் தினிது கேட்கவே.                                                 5

(* மற்றொரு பிரிவு :- அதாவது மாகேசனானவன் இகலோகவீரன் பரலோகவீரன் லிங்கவீரன் என மூன்று வகைப்படுவன். இவர்களில், மத்யலோக கணங்கள் புகழும்படி ஷட்தர்சனங்களின் நிரசனம் செய்து தன்சமயத்திற்கு ப்ராணனை வ்ரயம் செய்பவனே இகலோகவீரன் எனப்படுவன்; தேவலோக கணங்கள் புகழும்படி சர்வசங்க பரித்யாகம் செய்து தர்மாதர்ம காமமோக்ஷங்களை விட்டிருப்பவனே பரலோகவீரன் எனப்படுவன்; அங்க லிங்க சங்கத்தினால் சர்வ கரணங்களும் ஒன்று பட்டிருப்பவனே லிங்க வீரன் எனப்படுவன். மாகேச்வரனை பிண்ட ப்ரஷ்மம் என வழங்குதலு முண்டு.)
 

பதினாறாவது

(16) மாகேச்சுரத்தலம்

[அதாவது - ப்ரம்மா முதலிய சமஸ்த பிராணிகளுக்கும் ஸ்வாமியான பரசிவன் ஒருவனே சர்வ ச்ரேஷ்டன் என்றறிந்தவனும், பரஸ்த்ரிசங்கம் பரத்ரவ்யாபேக்ஷை அவித்தை முதலிய பஞ்சக் லேசங்கள், அகங்காரம் மாத்சர்யம் கோபம் ப்ராணஹிம்சை ஆகிய இவை முதலிய குணங்களில் வர்த்தியா திருப்பவனும், சகஜதாநியானவனும், ப்ரஹ்மாதிகளின் பதங்களில் ஆசக்தியில்லாதவனும், ப்ரஹ்மாதி பதங்களை த்ருணோபாதியில் அறிபவனும், ஸ்ரீபரமேச்வரனிடத்தில் த்ருடமான பக்தியுள்ளவனும் ஆசக்தனுமான சிவபக்தனே மாகேச்வரன் என்று சொல்லப்படுவன் என்பது.]

                       கலிவிருத்தம்                 உலகினை யளித்தரு ளுருத்தி ரன்மிகு                முலகினை யுண்டிடு மொருவன் றன்னினுந்                தலைமைய னென்றெவன் றுணியுந் தன்மையா                னிலகுறு மனையன்மா கேச னென்பவே.                                                1                 விமலனா கியநுதல் விழியி னோனொடு                சமவரா கியநிலைச் சதுமு கப்பெருங்                கமலனா தியர்தமை யொப்புக் காண்குறு                மமைவிலா னரியமா கேச னாகுவான்.                                                 2                 பங்கய னாதிய பசுக்கட் கென்றுமே                யிங்கிறை யாகிய வீசன் றன்னையே                துங்கனென் றுணர்தரு துணிவு பெற்றுளோன்                மங்கல நெறியுடை மகேச னாகுவான்.                                                  3                 பெருமல முற்றிடு பிரம னாதியர்                தரும்வலி யிலர்தனி முத்தி நல்குவோ                னிருமல மகேசனே யென்னு நெஞ்சினோன்                மருவரு நிலையுடை மகேச னாகுவான்.                                                4                 மாலய னாதியர் மருவு வாழ்வெலாஞ்                சால வோர்து ரும்பெனத் தள்ளி யைம்புல                னாலுறு சுகங்களை மகேச னாற்றியே                சீலமோ டவன்சிவா னந்தத் தெய்துவான்.                                                 5                 பிறர்மனை பிறர்பொருள் பெறல வாச்சின                மறுபகை முதனவை யனைத்து நீக்கியே                பொறையொடு பரனது புகழ்வி ரும்பிநன்                னெறிதரு சிவாகம நேய முள்ளனாய்.                                                  6                 அரற்குயர் வளித்திடு மளவை கொண்டுதான்                பரற்கிதஞ் செய்துநம் பரம்பொ ருட்டவாய்த்                திரத்தொழில் புரிந்துமெய்ச் சிவநிந் தைக்கணே                மரித்திடு நிலையினும் வலிய னாகியே.                                                 7                 நிந்தனை யுடையரை நீக்கி யோர்சிவ                வந்தனை யுடையரை மருவி யென்றுமே                புந்தியின் மகிழ்பெறீஇப் புனித னாயுறு                மைந்துடை யவனரு மகேச னாகுவான்.                                                8  

- மாகேச்சுரத்தலம் முற்றிற்று -
* * *

 

 

பதினேழாவது

(17) இலிங்கநிட்டைத்தலம்

[அதாவது - சர்வஸ்வமும் நாசமாயினும் சிரச்சேதமாய்க் கொண்டிருப்பினும் மற்ற வஸ்துக்களில் நிராபேக்ஷையுள்ளவனாய், நமஸ்காரம் தர்சனம் ஸ்பர்சனம் பூஜை முதலியவைகளினால் நியமமாய், எக்காலத்தும் சிவலிங்க பூஜையாகிய மகா வ்ரதத்தைக் கைவிடாத மாகேசனே பரம லிங்க நிஷ்டனென்று சொல்லப்படுவன் என்பது.]

                               கலிநிலைத்துறை                 ஆவி மாளினுஞ் சிவலிங்க நிட்டையை யடைந்தோ                னோவி லாநெறி நிற்கவொன் றுணர்தர வுணர்த்துந்                தாவி லாதவிச் சிவலிங்க நிட்டையந் தலந்தான்                றேவ தேவனைப் பொருளெனு மகேசனைச் செறியும்.                                    1                 பொருளெ லாஞ்சிதைந் துயர்தலை யற்றுவீழ் பொழுது                மருளு லாஞ்சிவ லிங்கபூ சனைவிட லாகா                தெருளி னாலரன் பூசனை செய்திடா துண்ணு                மருளி லான்கரத் துற்றிடு முத்திமா நிதியம்.                                             2                 சம்பு பூசனை யாகிய தக்கதோர் தரும                மிம்பர் வீடுற வளித்திடு மினையதை யன்றி                நம்பு மேனைய சிறுபய னல்குறு தருமங்                கும்ப மாமுனி செய்வதென் பெறுவது கொண்டு.                                         3                 நியமங் கொண்டுபூ சனைசெயு நிமலலிங் கத்திற்                செயலி லன்புட னர்ப்பிதஞ் செய்தசே டத்தை                யயில்பு மெய்வளர்ப் பவனெவ னனையதன் மையனே                மயல கன்றுயர் தருதனி வீரமா மகேசன்.                                                 4                 விடுத்து மற்றுள பயனெலாம் விமலலிங் கத்தி                லடுத்த நெஞ்சமும் பரமலிங் கத்தரும் புகழே                யெடுத்த றைந்திடு வாயுமர்ச் சனைசெய வென்றும்                படைத்த கைகளு முடையனே யுருத்திரன் பகரின்.                                         5                 பரம லிங்கநன் னிட்டையை யுளன்பரா னந்த                வொருபெ ருஞ்சிவ மதனையே யடைவனென் றுரைக்கு                மிருள றுங்கலை யாவுமற் றவன்றனக் கென்னாந்                திரமி ழந்துறு துறக்ககா ரணமெனுஞ் செயல்கள்.                                         6                 நீறு கண்டிகை புனைந்துநன் னெறியிடை நின்று                தேறு மஞ்சிவ லிங்கமா நிட்டையிற் சிறந்த                பேற டைந்தவன் றன்னையப் பிரமனே முதலோர்                மாற ருந்துதி செய்துநின் றிறைஞ்சுவர் மன்னோ.                                        7                         பிரபுலிங்க லீலை          நெஞ்சஞ் சோகம் பாவனையி னிற்க நிறுத்தி விடயங்க         ளஞ்சுந் துறவாத் துறந்தசிவ யோகி யொருவ னடியணையிற்         றுஞ்சுந் திருமான் முதலமர ருள்ள மவனைத் துதித்திறைஞ்சா         தெஞ்சுந் தவமா முனிவரிலை யெனநான் மறையு மியம்புமால்.  

- இலிங்கநிட்டைத்தலம் முற்றிற்று -
* * *

 

 

பதினெட்டாவது

(18) பூருவாச்சிரய நிரசனத்தலம்

[அதாவது - மேற்கூரிய க்ரமத்தில் லிங்க நிஷ்டையுள்ளவனும், கிடைக்கப்பெற்ற சிவாசாரத்தை யாச்ரயிப்பவனும், மாகேச்வர சமயத்திற்கு விருத்தங்களானதும் தீக்ஷைக்கு முன்னர் நிகழ்ந்தவைகளும் ஜாதி குல சம்பந்தத்தால் வரும் தர்மங்களுமாகிய பூர்வாச்ரயங்களைக் கைவிட்டவனுமான வீரமாகேச்வரனே பூர்வாச்ரய நிராசகனென்று சொல்லப்படுவன் என்பது.]

                               கலிநிலைத்துறை                 கொண்டு றுங்சிவ லிங்கநன் னிட்டையைக் கொண்டு                விண்டு றும்பவ நெறியடை வீரமா மகேசன்                கண்ட ருஞ்சிவ நெறிவிலக் காயிவண் கலந்த                பண்டு றுங்கரு மங்களோ விடுத்திடப் படுமால்.                                          1                 சோதி லிங்கநன் னிட்டையின் விலக்கெனத் தோன்றுஞ்                சாதி தன்குல தருமங்க ளனைத்தையுந் தணந்த                நீதி யொன்றுள னாகிய நிலைபெறு மகேசன்                றீத டைந்துள தொல்லையாச் சிரயத்திற் றீர்ந்தோன்.                                     2                 பற்று றுஞ்சிவ தீக்கையிற் பவித்திரன் றனக்கு                முற்ற ருங்கரு மங்களி னென்பயன் மூடம்                பெற்று றும்பவப் பிணியின ரேயவை பெறுவா                ருற்றி டுஞ்சிவ தீக்கையி னோனவை யொழியும்.                                        3                 மனிதர் சுத்தரு மசுத்தரு மெனவிரு வகையர்                புனிதர் மெய்ச்சிவ தீக்கையைப் பொருந்தின ரொழிந்தோ                ரினிதெ னுஞ்சிவ தீக்கையை யிலாதவ ரென்ப                வனிதை பங்குடை யமலனூற் பெருநெறி வல்லோர்.                                     4                 வருண நன்னிலைத் தருமங்க ளிருவகைப் படுமொன்                றரன றைந்தது மற்றைய தயனறைந் ததுவாம்                பரன றைந்தது பயிலுவர் சிவாச்சிர யத்தர்                பிரம னல்கிய தருமமே பிராகிரு தர்க்கு.                                                5                 முந்தை யுற்றுள விந்தநத் துருவங்கண் மூண்ட                வெந்த ழற்கவர்ந் துண்ணுற விரவுறா வாபோ                னந்து றச்சிவ தீக்கையை நண்ணினோர் தமக்குட்                பந்த முற்றுள சாதிவேற் றுமையிலை பகரின்.                                          6                                 சிவஞான தீபம்          இந்தநங்கள் பலபலபே ருடைய வாகு மெரிதழலி னிடையிடவே யெல்லாஞ் சேர         வெந்துவிற கினினாம நாச மாகி வெண்ணீறென் றொருபெயராய் விளங்கு மாபோற்         பந்தமுறுங் குலாசார மயக்க மெல்லாம் பரமகுருத் திருநோக்கம் பரித்தவாறே         வெந்தழியு மொருபுழுவேட் டுவனா மாபோல் விமலனுரு வாயெவர்க்கு மேலா மன்றே.  (இந்தனம் - விறகு, விரவல் - கலத்தல், நந்தல் - பெருநல், நண்ணினோர் - அடைந்தவர், பந்தம் - கட்டு.)                 பாச மற்றுயர் தீக்கையிற் சிறந்துள பத்த                ரீச னைப்பெறு பத்தர்பா லோரிடத் தெனினும்                பேசி லுற்றிடு சாதியுன் னுதன்மிகப் பிழையென்                றூச லொத்துழல் பிறப்பிறப் பகன்றவ ருரைப்பார்.                                         7                         பிரபுலிங்க லீலை                 சங்கமந் தனக்கொரு சாதி யுன்னினான்                அங்கையி னமர்தரு மரற்கு முன்னினான்                சங்கர னொடுசரந் தம்மில் வேறெனும்                அங்கவ னறிவரு மளற்ற ழுங்குவான்.  

- பூருவாச்சிரய நிரசனத்தலம் முற்றிற்று -
* * *

 

 

பத்தொன்பதாவது

(19) அத்துவித நிரசனத்தலம்

[அதாவது - லங்க பூஜைக்கு விருத்தங்களான பூர்வாச்ரய தர்மங்களை எவ்வாறு விட வேண்டியதோ அவ்வாறே அத்வைத ஜ்ஞானமும் லிங்கபூஜைக்கு விருத்தமானதினால் அவ்வத்வைத ஜ்ஞானத்தைவிட்டு லிங்கமே பூஜ்யம் அங்கமே பூஜகம் என்னும் த்வைத பாவத்தையே அங்கீரிக்கும் மாகேச்வரனே அத்வைத நிராசகனென்று சொல்லப்படுவன் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          பூசனை செய்வோன் கொள்வோன் பேதமென் றுறலாற் போற்றும்         பூசனை யாதி கன்மம் பொன்றலா லிலிங்க நிட்டை         நாசம துறலா லெங்கும் பெறஞான மிலாமை தன்னா         லீசனை வந்திக் கின்றோ னெங்குமத் துவிதஞ் செய்யான்.                                        1          இறையவ னியக்கு கின்றோ னியங்குறப் பட்டு நிற்போ         னறைதரு முயிரென் றெண்ணி யாயவிவ் வேறு பாடு         பெறுமுறை யதனா லந்தப் பிரேரகன் றனையர்ச் சித்த         னெறியொடு புரிக செய்யே னிகழ்த்துமத் துவிதந் தன்னை.                                         2          பராபரன் பதியா மந்தப் பதிதொடர் பசுவா மான்மா         விராவிவர் தம்மி லென்றும் வேறுபா டிலரே யாயிற்         றராதல மதனி லீசத் தன்மையோ டடிமைத் தன்மை         வராவென வுரைப்பர் மிக்க மறைகளா கமங்கள் வல்லோர்.                                         3          எம்முறை பராப ரன்றா னிலங்குறு போத கத்தான்         மெய்ம்மலி காட்சி யுற்று விளக்கமோ டெய்தி நிற்கு         மம்முறை பெறவ டைந்த வத்துவி தப்பேர் வாழ்க்கை         யிம்மையின் ஞான மில்லோர்க் கென்றுமின் றாகு மன்றே.                                         4          கருமவே துவினைக் கொண்டு காண்குறும் வேறு பாடு         மருவுறு மதனா லென்றும் வளங்கெழு மருச்ச நாதி         புரிதரு நெறியி னின்றோன் பொருந்துநற் கரும மெலலா         மொருவவந் தெய்து மத்து விதத்தினை யுற்றி டானால்.                                          5  

- அத்துவித நிரசனத்தலம் முற்றிற்று -
* * *

 

 

இருபதாவது

(20) ஆவாகன நிரசனத்தலம்

[அதாவது - அத்வைத நிரசனத்தைச் செய்தலும் லிங்க நிஷ்டையுள்ளவனால் லிங்காஹ்வான சித்யர்த்தமாய் ஒரு மூர்த்தியைக் கல்பிக்க வேண்டியதாயின் அநித்யத்வப்ரசங்க முண்டாகும் காரணத்தினாலும், லிங்கத்தின் பரிபூர்ண தசையினாலும், சிவலிங்க பூஜார்த்தமாய் அத்வைத பாவத்தை விட்டு த்வைத பாவத்தை அங்கீகரிப்பவனும், சைவனைப்போலப் பூஜார்த்தமாய் ஸ்ரீ குருதத்தமான இஷ்டலிங்கத்தினிடத்தில் பூஜைக்கு அங்கமான ஆஹ்வான நிரசனம் செய்பவனுமாகிய மாகேச்வரனே அஹ்வான நிராசகனென்று சொல்லப்படுவன் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          அச்சிவ லிங்கம் வந்தித் தத்துவி தத்தை நீத்தோன்         மெய்ச்சிவ மயமாய் நின்று விளங்குதன் னிட்ட லிங்கத்         திச்சையி னரனை யாவா கநித்திட லியல்பன் றென்பர்         பொய்ச்செயல் கடந்து மிக்க புலக்குறும் பெறிந்த வீரர்.                                           1          சிற்கலை யொடுதி கழ்ந்த சிவலிங்கந் தீக்கை தன்னா         னற்குரு வளித்த வன்றே நண்ணுறு மமல னென்றும்         பொற்புறு முணர்வின் மாறாய்ப் பொருந்துமா வாகனந் தான்         பிற்பெறு தினங்க டோறும் பேணுத லாலென் பேறே.                                               2          என்றுநல் லிட்ட லிங்கத் திசைந்துநன் னிட்டை பெற்றோன்         றன்றனி யிலிங்கந் தன்னிற் சங்கரன் றன்னை வைத்துப்         பின்றனி விடுக்க லாகா துணிவிது பெருநூற் கென்று         தென்றமிழ் மலயத் துற்ற சிவமுனி யறிந்து கொள்ளே.                                           3  

- ஆவாகன நிரசனத்தலம் முற்றிற்று -
* * *

 

 

இருபத்தொன்றாவது

(21) அட்டமூர்த்தி நிரசனத்தலம்

[அதாவது - லிங்கமானது பரிபூர்ணமான சிவனே என்னும் ஜ்ஞானத்தை யாச்ரயித்து ஆவாஹனத்தை நிரசனம் செய்ததுபோல, ப்ருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் சூரியன் சந்திரன் ஆத்மா ஆகிய இவைகள் பசுக்களாயிருக்கின்றன வென்றும், சிவத்தின் அவயவங்க ளென்றும், சிவத்தினிடத்தில் ஏகத்வத்தை யடைந்தவைகளல்ல வென்று மறிந்து, அவைகளின் பேதத்தையும் நிரசனம் செய்த மாகேச்வரனே அஷ்டமூர்த்தி நிராசகன் என்று சொல்லப்படுவன் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          அத்தனோ டுயிர்க்கிங் கெவ்வா றயிக்கவத் துவித மாகா         தத்திற மிறைவ னுக்கு மம்புவி யாதி கட்கு         முய்த்துண ரட்ட மூர்த்தித் தன்மையவ் வொருவற் கென்றும்         வைத்தது மதிட்டா நத்தால் வயங்கொரு மையினா லன்றால்.                                     1          காரிய ஞால மாதி கருத்தனொண் மகேச னாகுஞ்         சீரிய குலால னாகா செய்கட மதுபோ லீசன்         பாரிய வுலக மாகான் பராபர னான்மா வென்ப         ரேரிய நிலமுன் பாய வெண்வகை யுடம்பி னுக்கும்.                                             2          நிலமுத லாய வெல்லா மசேதன நின்ற வான்மா         மலமுறு மூட னாகு மாதலால் வயங்கு மீச         னலவகை யட்ட மூர்த்த மாகிய வுடம்பி னுக்கு         மிலகுறு மான்மா வாகு மீசற்கும் பேத முண்டோ.                                                 3          பார்புன லங்கி வங்கூழ் விசும்பொடு பரிதி திங்க         ளார்தரு மான்மா வென்னு மட்டமூர்த் தங்க டம்மிற்         சீர்கெழு பரமன் றன்னை வேறுறத் தெரிந்து காண்போ         னேர்தரு மட்ட மூர்த்தி நிராசக னாகு மன்றே.                                                   4  

- அட்டமூர்த்தி நிரசனத்தலம் முற்றிற்று -
* * *

 

 

இருபத்திரண்டாவது

(22) சர்வகத நிரசனத்தலம்

[அதாவது - சிவன் சர்வகதனாயின் அஸ்ப்ருச்யனாவானாதலால் அந்த அஸ்ப்ருச்ய த்வத்தைப் பரிகாரம் செய்வதினிமித்தம் அச்சிவத்தின் சர்வகதத்வத்தை லிங்கநிஷ்டை யொன்றானே நிரசனம் செய்பவனும், பூஜாகாரியத்தி னிமித்தம் சிவன் எந்தெந்த விடத்திலுமிராமல் இஷ்டலிங்கத்தில் மாத்திரமே இருப்பன் என்னும் ஜ்ஞான முள்ளவனுமான மாகேச்வரனே சர்வகதநிராசகன் என்று சொல்லப்படுவன் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          இருந்திடு மிறைவ னெங்கு மென்றிடி னிறைவற் கெங்கும்         வரந்தரு பூசை யாகுஞ் சிவலிங்க மாத்தி ரத்தி         லரந்தையி னிட்டை கூடா தாதலா லமல னெங்கும்         பரந்தவ னென்று கூறப் படானென வறிந்து கொள்ளே.                                            1          நிறந்தவ னெங்குமேனு நிமலன்ற னாத ரத்திற்         சிறந்துறு நிறைந்த வன்னி தன்மரஞ் செறித லேபோ         லறிந்திதை யமலன் றன்னை யனைத்தையும் விடுத்துத் தன்பா         லுறைந்திடு மிட்ட லிங்கத் துவந்தருச் சிக்க மாதோ.                                               2          எங்கணு நிறைவோ னாக வியம்பினு மமலன் றன்னைத்         தங்குறு நூல்க ளெல்லாந் தனதுபற் றாகி நின்ற         மங்கல மாமி லிங்க மாதிய வடிவி லென்று         மங்கண னதிக மாக வமர்வன்பூ சனைப்பொ ருட்டு.                                               3          உருத்திர நினது மெய்யே துற்றநன் மங்க லத்தைப்         பரித்திடு மகோர மாகிப் பாவத்தி  னகன்று நிற்கு         முரைத்ததி லுறைவோ னாகி யொளிர்வைநீ யென்று மிக்க         கருத்தொடு மறையா நிற்குங் கடிவருஞ் சுருதி யன்றே.                                          4          ஆதலா லருச்ச னைக்க ணுயர்ந்தவ னனைத்தும் விட்டுக்         காதலாற் சிறந்து மூல காரணன் விளங்கா நின்ற         சோதியா மிட்ட லிங்கந் துணிவொடு பூசை செய்க         நீதியா மனைய னெங்கு நிறைதலை விலக்கினானே.                                             5  

- சர்வகத நிரசனத்தலம் முற்றிற்று -
* * *

 

 

இருபத்து மூன்றாவது

(23) சிவஜகந் மயத்தலம்

[அதாவது - பின்னும், எவ்வாறாயினும் சிவன் சர்வகதனல்லாமல் ப்ராதேசிகனானால் அவனுக்கு உத்கர்ஷம் எவ்வாறு நிகழும்? ஆதலால் அந்த லிங்க நிஷ்ட்டையினால் மாகேச்வரனுக்கு ப்ரயோஜனமில்லை யென்னும் ஆசங்கை நிகழுமாயின் கூறுகிறார். சிவன் பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கும் வல்லமையுள்ளவன், இவ்வாறகிய ஓர் புத்தியினால் சிவோத்கர்ஷத்தி னிமித்தம் அங்கீகரிக்கப்பட் டிருப்பவனும், சிவன் எவ்விடத்து மிருத்தலை நிராகரிப்பினும் ப்ரமாண வல்லமையினால் அந்த சர்வகதம் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறதோ அவ்வாறே ப்ரமாண வல்லமையினால் சர்வவ்யாபகத்வத்தையும் அங்கீகரித்திருப்பவனுமான மாகேச்வரனால் ஜகந்மயத்வத்தின் சித்திவிரும்பப்பட் டிருத்தல் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          பூசனை நியமந் தன்னாற் பொருந்திலிங் கத்தின் கண்ணே         தேசுற விலங்கா நின்ற சிவன்றனை யருச்சிப் போனு         மீசனை யுலக மெல்லாம் வியாபக னென்னக் கொண்டு         பாசம தகல நின்று பாவிக்க வேண்டு மன்றே.                                                   1          மண்ணினிற் றோன்றுங் கும்ப மண்ணின்வே றாமோ வேலைக்         கண்ணினிற் றோன்று மொக்கு ணுரைதிரை கடலின் வேறோ         வெண்ணிடிற்  பரனாற் றோன்று மிருஞ்சரா சரமே யாகப்         பண்ணுறுத் துலக மெல்லாம் பரனில்வே றாமோ வாகா.                                         2          ஒண்டளிர் முதலா யுள் வுருவொடு மரநின் றாங்கு         மண்டல முதலா யுள் வடிவொடு பரம னிற்குங்         கண்டுறு மிழையி னாய காழக நூலா மாபோற்         பண்டுள வுலக மெல்லாம் பரன்மய மாகு மன்றே.                                                 3          தன்னொரு சத்தி கொண்ட மலர்ச்சியாற் சகங்க ளாகி         மன்னுறு மிறைவி ரிந்து படங்குடி வடிவா மாபோ         லிந்நிலை யதனா லெல்லா மிறைமயங் கயிற்றிற் றோன்றும்         பந்நகம் வேறி லாத பான்மைபோற் பரனி லொன்றும்.                                            4          கயிற்றர விப்பி வெள்ளி குற்றியிற் கள்வன் மிக்க         வெயிற்படு கானற் றெண்ணீர் விண்ணிற்கந் தர்வ வூர்போற்         பயிர்ப்பறு நித்த சச்சி தானந்த சிவத்தின் கண்ணே         செயப்படு பொருளாய்த் தோன்றுஞ் செப்பிய வுலக மன்றே.                                        5                         கைவல்ய நவநீதம்          கானனீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்வ நகர்க னாவூர்         வானமை கயிற்றிற் பாம்பு மலடிசேய் மயலின் கோடு         பீனமாந் தறிபு மானிப்பி ரபஞ்ச மெல்லாம் பொய்யே         ஞானமெய் மகனே யுன்னை நம்மாணை மறந்தி டாதே.                         ஞானவாசிட்டம்          வெங்காதற் பெரும்பாம்பு நெளிபுற்றாங் குடும்பபரம் வெறும்பொய் யென்றே         இங்காசை யறநீக்கி யெல்லையிலாப் பிரமபதத் திருந்து வாழ்வாய்         சிங்கார கந்தர்வ நகரிருந்தென் சிதைவுற்றென் றீதோ நன்றோ         பங்கான மனைமக்கள் வாழ்ந்தாலென் கெட்டாலென் பாச மாயை.  

- சிவஜகந்மயத்தலம் முற்றிற்று -
* * *

 

 

இருபத்து நான்காவது

(24) பத்ததேகிகதேவத்தலம்

[அதாவது - சிவனுக்கு ஜகந்மயத்வம் சித்தமாயினும் ஸுககரனான அந்தப் பரமேச்வரன் ஜகந்மயமா யிருப்பினும் சிவபக்தர்களின் இருதய கமலத்தில் விசேஷமாய் ப்ரகாசிக்கின்றனன் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          சங்கர னாகு மீசன் சகமய மெனினு முள்ளப்         பங்கய மலரி லென்றும் பத்தர்பாற் சிறந்து தோன்றும்         பொங்குறு கயிலை பொன்னம் பொருப்பொடு மந்த ரத்து         மங்கது போல்வி சேடித் தமர்தரு மிறைவ னன்றே.                                                1          அலர்கதிர் நிறைந்து விம்பத் தளவுபட் டமர்தல் போல         வுலகுரு வாய்நி றைந்த வொருவனும் பத்தர் நெஞ்ச         மலர்மிசை யிலகு முன்றன் வடிவெனு மிலிங்க மீச         பலர்புகழ் பத்தர் தம்பாற் பதியுமென் றுரைக்கும் வேதம்.                                         2          சுத்தர்க ளிடத்துந் தீர்ந்த துறவின ரிடத்து ஞானச்         சித்தர்க ளிடத்து மிக்க சிவவேடத் தவரி டத்து         முத்தம ரிடத்தும் பாச முதறுமா கேச ராகும்         பத்தர்க ளிடத்து மென்றும் பரசிவம் விளங்கு மன்றே.                                            3          இந்நிலை மகேச னென்போ னேதில ரிடத்திற் றீர்ந்த         தன்னக விழைவி னோனாய்த் தனாதிட்ட லிங்கந் தன்னின்         மன்னிய மனத்த னாகிச் சகஞ்சிவ மயமாய்க் கண்டு         பின்னமி னிலையி னின்ற பெயர்ப்பிர சாதி யாவான்.                                            4  

- பத்ததேகிக தேவத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் எக்காரணத்தினால் லிங்கநிஷ்டை, பூர்வாச்ரய நிரசனம், அத்தை நிரசனம், ஆஹ்வான நிரசனம், அஷ்டமூர்த்தி நிரசனம், சர்வகத நிரசனம், சிவஜகந்மயத்வம் என்னும் ஏழு ஸ்தங்களுடனே கூடியிருத்தலால் எவன் வீசைவ வ்ரத சம்பந்ன னானானோ அக்காரணத்தினால் அவன் இரண்டாமவனான மாகேச்வரன் என்று அறியப்பட்டான்.

இரண்டாவது மாகேசத்தலம் முற்றும்
* * *

 

 

மூன்றாவது பிரசாதித்தலம்

[அதாவது - ஒவ்வொரு இந்த்ரிய த்வாரா அநுபவிக்கும் சௌக்யத்தை முதலில் லிங்கத்திற்கு சமர்ப்பணம் செய்து பின்னர் அதை ப்ரசாத புத்தியினால் மாகேச்வரன் அநுபவித்தல் என்பது.]

( இதனுட்பிரிவு )                                  கலிவிருத்தம்                 உரைத்தனை மகேசனல் லொழுக்க முற்றுநீ                கருத்துறு மிரேணுக கணேசப் பேரினோ                யருத்திகொண் மகேசனா மனைய னெங்ஙனம்                வரப்பிர சாதிதா னாகும் வண்ணமே.                                                   1                 தனக்குறு மிலிங்கநிட் டாதி சார்பினால்                வினைப்பகை கடந்துள விறன்ம கேசனொண்                மனப்பிர சாதமே மருவு மாற்றினாற்                கனப்பிர சாதியா மென்பர் கற்றுளோர்.                                                  2                 சாற்றுறு புகழ்ப்பிர சாதி யின்றல                வேற்றுமை *யேழ்வகைப் படும்வி ளம்புறிற்                றோற்றுறு மியற்பிர சாதித் தூய்த்தலம்                போற்றுற வாதியிற் பொருந்து மென்பவே.                                                3

( * மற்றொரு பிரிவு :- அதாவது அர்ப்பித ப்ரசாதி, அவதான ப்ரசாதி, பரிணாம ப்ரசாதி என்று மூன்று வகைப்படுவன். சரீரஹஸ்தத்தினால் சகல பதார்த்தங்களையும் இஷ்ட லிங்கத்திற்குச் சமர்ப்பித்துக் கொள்பவனே அர்ப்பித ப்ரசாதி. மனோ ஹஸ்தத்தினால் பஞ்சேந்த் ரியங்களில் பஞ்சலிங்க ப்ரதிஷ்டை செய்து அவ்வவ்விடங்களில் வரும் சுகத்தைக் கொள்பவனே அவதான ப்ரசாதி. அங்காச்ரயம் அறவே ஒழிந்து லிங்காச்சயம் ஓங்கி வளர்ந்து பாவ ஹஸ்த பரிதனானவனே பரிணாம ப்ரசாதி. ப்ரசாதியைக் கலாப்ரஹ்மம் என வழங்குதலு முண்டு.)

               சற்குரு லிங்கசங் கமநற் பத்தர்பின்                சிற்பர சரணரொண் சேட மேயென                நிற்பவர் மான்மியம் யாம்நி கழ்த்துதும்                பொற்புறு முனிவர புகன்ற வாறரோ.                                                   4

 

இருபத்தைந்தாவது

(25) பிரசாதித்தலம்

[அதாவது - ஸ்ரீ குருமூர்த்தியின் தசையினாலும் லிங்கத்தின் தசையினாலும் நிச்சேஷமாய் ஜங்கமத்தின் தசையினாலும் கிடைக்கப்பெற்ற சித்த பரிபாக முள்ளவனும் சிவஜ்ஞான சித்தியின் பொருட்டு லிங்கத்தினிடத்தில் இடப்பட்ட கரணமுள்ளவனும், லிங்கத்ரயத்தினிடத்தில் அர்ப்பிதமான பதார்த்தங்களை நுகர்பவனும், அந்த லிங்கார்ப்பித மல்லாதவைகளை விசர்ஜிக்கிறவனுமான மாகேச்வரனே ப்ரசாதி என்று சொல்லப்படுவன் என்பது.]

                       கலிவிருத்தம்                 சிந்தனை நிருமலஞ் செறியு மக்குறி                சந்தத முயர்பிர சாத மென்பரால்                வந்துறு மதுசிவ லிங்க மாவுரு                வெந்தைத னருட்பிர சாதத் தெய்துமே.                                                 1                 நிருமலன் றனக்குற நிவேதி தஞ்செயு                மருநிரு மாலிய மரிய சைவர்தம்                பெருமன நிருமலம் பெறவ ளித்திடற்                கொருபெருங் காரண மென்ப ரோர்ந்துளார்.                                                2                 போதகா ரணமெனும் புனித னற்பிர                சாதமா கியநிரு மாலி யந்தனைத்                தீதிலா மனப்பிர சாதத் திற்குணு                மீதுளா னற்பிர சாதி யென்பவே.                                                         3                 தத்துவ சுத்தியே யந்ந சுத்திதா                னத்தனுண் டொழிபிர சாத மாயின                தொத்திட வரியதோ ருணர்விற் கேதுவாஞ்                சித்தநின் மலந்தனைச் செய்யு மென்பவே.                                                4                 தனக்கென வீட்டுபு தந்த யாவையு                நினைப்பரி தாகிய நிமலற் காக்கியே                மனப்பிர சாதமே மருவ வுண்கவென்                றனைத்தையு முணர்ந்தவ ரறைகு வாரரோ.                                             5                 பரனிரு மாலியம் பவம ருந்துநல்                குரவுட னிடரிடை யூறு கொல்வது                திரமுற வாயுளைச் செய்வ தின்பமே                தருவது முத்தியுந் தருவ தாகுமால்.                                                    6                         பிரபுலிங்க  லீலை          பசிக்கு மருந்து மாய்வீடு பயக்கும் வண்மை சேர்ந்துபவம்         ஒசிக்கு மரன்றன் பிரசாத வூதி யந்தா னுணர்ந்திங்கு         வசிக்குந் தகைமை சங்கரற்கே வருவ தன்றிப் பசிக்குணவு         புசிக்கு மனிதர் தமக்கென்றும் பொருந்தா தென்றா னெம்பிரான்.                 பத்திர மலரொடு பலாதி யாவையும்                வத்திர மைந்துடை வள்ளற் காக்கியே                துய்த்துறு நிலையினோர் தொன்மை பாதகக்                கொத்தினை யடியொடுங் கொல்வ ரென்பரே.                                             7                 சம்புவி னருட்பிர சாத மென்னவே                நம்புறு குருவொடு ஞான சங்கமர்                தம்பிர சாதமுந் தானு கர்ந்திடும்                வெம்புறு பவமெறி வீர சைவனே.                                                       8  

- பிரசாதித்தலம் முற்றிற்று -
* * *

 

 

இருபத்தாறாவது

(26) குருமான்மியத்தலம்

[அதாவது - சம்யக் ஜ்ஞானமே ஸ்வரூபமாயுள்ளவனும், கபடத்தினால் மனித ரூப முள்ளவனும், சாக்ஷாத் சிவரூபனாய் போகமோஷாதி சகல சித்திகளைக் கொடுப்பவனுமான ஸ்ரீ சத்குருவினது பரிபூர்ணமான ரூபமே குருமான்மியம் என்பது.]

                       கலிவிருத்தம்                 சீரணி தருமெலாச் சித்தி கட்குமோர்                காரண வுயர்குரு வாகுங் கண்ணுத                றாரணி தனிற்குரு வடிவஞ் சார்ந்தருட்                பேரணி கலமொடு பிறங்கு மென்பவே.                                                 1                 நிட்கள வுணர்வுரு நித்த னாஞ்சிவன்                வட்கறு குருபர வடிவி னாலொரு                பெட்புறு சகளனாய்ப் பெரிது யிர்க்கெலாந்                கட்கரு மருள்செயச் சரிக்கு மென்பவே.                                                 2                 பரசிவ னுயர்குரு பரம சற்குரு                வரமுறு பரசிவ னென்ன வைப்பரிவ்                விருவரும் வேறென வெண்ணு றான்பவம்                வேருவுற வருசிவ ஞானம் வேட்டுளான்.                                                3                         பிரபுலிங்க லீலை          காந்தங் கண்ட விரும்புபோற் கண்ட பொழுதே யநிமிடன்ற         னேந்துஞ் செங்கைச் சிவலிங்க மெங்கள் பெருமான ங்கைமலர்         போந்தங் கிருந்த ததுபொழுதிற் புனிதன் சீவ கலைதானும்         சார்ந்தங் கிருந்த சிவலிங்கந் தன்னோ டவன்பாற் சார்ந்ததால்.          ஐய நினையு நின்கரத்தி னடைந்த சிவலிங் கத்தினையும்         பொய்யில் குரவன் றனையுமொரு பொருளென்றறிந்தே னின்றென்று         செய்ய கமலத் திருவடியிற் சென்று தொழுதல் லமநாம         மெய்ய னெதிநின் றன்பினால் விளம்பும் வனங்கா வலனன்றே.                 கரசர ணணதிகள் கடுக்குந் தன்மையா                னரரொடு குரவனை யொப்பு நாடுறா                ருரமுறு குரவனை யுவந்து போற்றியே                பரகதி வேண்டுநர் பணிதல் வேண்டுமே.                                                4                 நற்குரு பத்தியில் லார்க்கு நாடுறிற்                றற்சிவ பத்தியுஞ் சனித்தி டாதொரு                சிற்கன சிவனிடை செய்யும் பத்திபோற்                சற்குரு பத்தியுஞ் செய்யத் தக்கதால்.                                                   5  

- குருமான்மியத்தலம் முற்றிற்று -
* * *

 

 

இருபத்தேழாவது

(27) இலிங்கமான்மியத்தலம்

[அதாவது - பரிபூர்ண ஜ்ஞானமுளளவனான சத்குருவினால் குருமஹிமையையும், ஸ்வஸ்ரூப ஜ்ஞானத்தையும் அறியும்படி போதிக்கப்பெற்ற சீஷனால் ஜ்ஞானஸ்வரூப சர்வகாரணமானதும் ஸ்வயம் ப்ரகாசமானதும் சர்வோத் க்ருஷ்டமானதுமே மானதும் லிங்கமாம் என்று அறியப்பட்டது லிங்கமான்யம் என்பது.]

                       கலிவிருத்தம்                 அருட்குரு மான்மிய வறிவின் மேன்மையான்                மருட்கழி பரசிவ லிங்க மான்மியம்                பொருட்பட வறிகுவன் புகழி லிங்கமே                தெருட்சக காரண மென்னத் தேர்கவே.                                                  1                 ஆதியாய்ச் சச்சிதா நந்த மாகிவான்                சோதியாய்த் தளையிலாச் சுத்த வாழ்வதாய்                வேதகா ரணமெனும் விமல லிங்மோர்                நாதனால் குருவலா னணுக லாகுமோ.                                                  2                 வேதனா ரணருமவ் விசும்பிற் றோன்றிய                சோதியா மிலிங்கமுன் தொடர்ந்து காண்கில                ராதலா லியாவரே யறிவர் மாதுமை                பாதியா மிளிர்தரு பரம லிங்கமே.                                                        3                 பிறகட வுளர்நிக ராத பேருல                கிறைமைகொள் பவனெனு மியல்பை யென்றுமே                முறைதரு பரசிவ லிங்க மூர்த்தியா                யுறைபர மன்றனக் கோதும் வேதமே.                                                   4                 பெரிதுயர் தருபர சத்தி பீடிகை                தெரிதர வருபர சிவமி லிங்கமவ்                வரிதுணர் வுறுசிவ சத்தி யாகிய                வொருதனி யிலிங்கமே யுலகம் யாவுமே.                                                 5                 பற்பல மொழிகொடென் பயன்வன் பாசமோ                டுற்பவ மறுசிவ யோகி கண்மன                நிற்பதெவ் விடத்திலவ் விமல லிங்கமே                யற்புத முறுபரப் பிரம மாகுமால்.                                                        6                 தாமரை மலர்மிசைத் தலைவ னாதியால்                காமரு கடவுளர் சனக னாதியர்                மாமுனி வரர்சிவ லிங்கம் வந்தியாத்                தாமுறு நிலையினைத் தான டைந்தனர்.                                                7  

- இலிங்கமான்மியத்தலம் முற்றிற்று -
* * *

 

 

இருபத்தெட்டாவது

(28) சங்கமமான்மியத்தலம்

[அதாவது - பயங்கரமான சம்சாரம் என்னும் இருளைப்போக்கி, காமக்ரோதாதிகளை ஜயித்து, மண் பொன் சத்ரு ஆகியவைகளைச் சமானமாய்க் கண்டு சகல சைதந்ய ஸ்வரூபமாயும் அத்யதினமான சிவஜ்ஞான யுக்தமாயு மிருப்பவனே ஜங்கமன் என்று கூறுவதே சங்கமமான்யிம் என்பது.]

                       கலிவிருத்தம்                 ஆரிய னருளினா லறிந்த டைந்துள                பேரிய லிலிங்கநற் பெருமை கொண்டுதான்                சீரிய வுலகெலாஞ் சிவமெ னத்தெரிந்                தோரியல் கொடுசரத் துயர்ச்சி கூறுவார்.                                                1                 உலகுரு வாகிய வொருத னிச்சிவ                மிலகுறு தன்வடி வாக வென்றுமே                மலைவற வுணர்பவ னியாவன் மற்றவ                னலைவறு சங்கம மாகு மென்பவே.                                                    2                         பிரபுலிங்க லீலை          தன்னைச் சிவமென் றறிந்தவனே யறிந்தான் றன்னை யுண்மையாத்         தன்னைச் சிவமென் றறியாதா னறியா னென்றுந் தன்னுண்மை         தன்னைச் சிவமென் றென்றறிவ னன்றே பாசந் தனைநீப்பன்         தன்னைச் சிவமென் றறியாதான் றனக்குப் பிறப்பே துணையாகும்.                 சிவமய மெனச்சக மியாவுந் தேர்பவ                னெவனவன் மலவிரு ளிரிக்குஞ் சோதியா                யருவிணர் வுடையவ னெவன வன்றொட                ருவமையி லொருசிவ யோகி யென்பவே.                                                 3                 முற்றுறு காமமுஞ் சினமு மோகமு                மற்றவ னுறவொடு பகையு மற்றவ                னுற்றிடு பசும்பொனோ டோடு மொன்றெனப்                பெற்றவ னுயர்சிவ யோகிப் பேரினோன்.                                                4                 நந்துறு மரியமெய்ஞ் ஞான மெய்ச்சிவ                சிந்தனை யுடையனாய்த் தீர்ந்த வெண்பவப்                பந்தனை யொருவிய பரம யோகியே                வந்துறு பரசிவ மயனெ னப்படும்.                                                        5                 ஓங்குறு புகழ்ச்சிவ யோகி தன்றுணைப்                பூங்கம லர்திரு வடியிற் பூந்துக                ளீங்கெவர் மனையிடை சிசைந்து வீழ்தரு                மாங்கது புண்ணியத் தலம தாகுமால்.                                                  6                 தரிசன மளித்திடுஞ் சகல சித்தியும்                பரிசன மழித்திடும் பாவ மியாவையும்                பரிசுறு மலிபுகழ்ப் பரம யோகியின்                கரிசறு பூசனை முத்தி காரணம்.                                                       7                 மெய்ப்பர சிவனது மெய்ம்மை யுற்றுணர்ந்                தப்பர சிவசுகத் தழுந்து மேன்மையா                லொப்பறு மொருசிவ யோகி சங்கமிங்                கெப்பய னுதவிடா தியம்புங் காலையே.                                                 8  

- சங்கமமான்மியத்தலம் முற்றிற்று -
* * *

 

 

இருபத்தொன்பதாவது

(29) பத்தமான்மியத் தலம்

[அதாவது - ஹஸ்தங்களினால் சிவபூஜா ரூபமான காயிக க்ரியையினாலும், சிவமூர்த்தி த்யான ரூபமான மானசிக க்ரியையினாலும், சிவஸ்தோத்ர ரூபமான வாசிக க்ரியையினாலும், லிங்க ரூபமான மகாதேவனைப் பூசித்து ஜனன மரணங்களைப் பக்தன் நாசஞ் செய்யத்தக்கதும், குரு லிங்க ஜங்கமர்களின் மாகாத் மியங்களை யறிந்தவனென்று நிர்வசனம் செய்து கிடைக்கப்பெற்ற அதிசயமுள்ள சிவக்தனது பேரன்புருவாயிருப்பதுமான மகிமையே பத்தமான்மியம் என்பது.]

                       கலிவிருத்தம்                 குருவொடு மெய்ச்சிவ லிங்கங் கோதறு                சரமுறு புகழினைச் சாற்றுந் தன்மையாற்                பரவைசூ ழுலகினிற் பத்தன் றானுமவ்                வரமுறு துதியையவ் வாறு மன்னுமே.                                                 1                 சந்திர சேகரன் றன்னை நல்லர                விந்தமென் மனமொழி மெய்யி னாற்றினம்                வந்தனை புரிபவன் யாவன் மற்றவன்                பந்தம தறுசிவ பத்த னாகுவான்.                                                         2                 பாவமா யுறுசிவ பத்தி யென்பதி                யாவரா யினும்பெறற் கரிய திங்கது                மேவினா னியாவன்மற் றவன் விளம்புறிற்                றாவிலா துயர்சிவ பத்தன் றானரோ.                                                    3                 பவப்பிணி யுளர்க்கிறை பத்தி யின்றெனிற்                றவப்பல வேதமுஞ் சாத்திரங்களு                முவப்புறு விரதமு மொண்ம கங்களு                மவர்க்குத வுறுவவென் றறிந்தி லோமரோ.                                                4                 உறுதிகொள் பரசிவ பத்தி யுற்றிடார்க்                கறவினை யெனினுமே யவம தாகுமாற்                சிறுவிதி தனக்குமுன் செய்த வேள்விதான்                மறுதலை யுறுபயன் வழங்கிற் றென்பவே.                                                5                 மிக்குறு பாவவல் வினைய னாயினும்                புக்கர பத்தியாற் புனித னாகுவான்                றக்கதன் றந்தையைக் கொன்ற தண்டிதான்                சிக்குறு பத்தியாற் சிவம தாயினான்.                                                   6                 அறமொடு பாவமு மமல பத்தியா                னிறைபவர் தமக்கிலை நித்த பத்திதா                னறுபவர் தமையடைந் தார்த்துக் கொண்டுபோய்ப்                பிறவியாங் கடலினுட் பெரித ழுத்துமால்.                                                 7                 அரவணி கடவுளை யடைந்த பத்தர்கட்                கிருவினை செயுமிட ரில்லைப் பொங்கொலிப்                பரவையின் முகட்டெழும் பரிதி வானவன்                புரவிக டமையிருட் டுயர்பொருந்துமோ.                                                8                 பந்தனை வினைசிவ பத்தர் தங்களை                வந்தணை வுறுகில மரைமுட் டாட்சிறு                தந்துவி னாகிய சங்கிலித் தொடர்                கந்தொடி மதமுமிழ் களிற்றைக் கட்டுமோ.                                                9                 மறையவ னரசனல் வணிகன் சூத்திரன்                பிறனென விலைசிவ பத்தி பெற்றுளா                னிறையவ னெனவுல கெங்கும் வந்தனை                பெறுபவ னவனெனப் பேசும் வேதமே.                                                  10                 இறைவனை யடைந்தவர்க் கில்லைச் சாதியின்                றிறமெரி தழலிடைச் சேரிற் பேதமெவ்                விறகுள வுயர்சிவ பூசை வேட்டுளோர்                கறைதவிர் நிலமிசைக் கணங்க ளல்லரோ.                                                11  

- பத்தமான்மியத்தலம் முற்றிற்று -
* * *

 

 

முப்பதாவது

(30) சரணமான்மியத்தலம்

[அதாவது - மாயா சம்பந்தமான வைபவத்தினால் கூடியிருக்கும் ப்ரஹ்மாதி தேவர்களை விட்டுப் பரசிவனை யாச்ரயித்து மோஷத்துக்கு அவனே காரணன் என்று அறிந்தடைதலே சரணமான்மியம் என்பது.]

                       கலிவிருத்தம்                 அணங்கறு குருபர னாதி மான்மிய                மிணங்குற வுணர்த்துறு செயலெ லாங்கொடு                பணிந்திட வருசிவன் பதியெ னத்தெரிந்                துணர்ந்திடல் சரணநற் றலமென் றோதுவார்.                                            1                 மாயையால் வருமொரு வாழவு பெற்றுள                சேயநான் முகன்முதற் றெய்வம் விட்டொரு                தூயனா கியபர சிவனைத் துன்னுத                லாயினா கமமது சரண மாகுமால்.                                                     2                 முக்கண னேயுயிர் முழுது மாள்பவ                னக்கட வுளையரு ளெனவ டைக்கலம்                புக்கவன் புகல்சர ணாக தப்பெயர்                தக்கவ னெனவுரை தருவர் மேலையோர்.                                                 3                 விடுத்துறு புலன்வழி விண்ணு ளோர்பதத்                தெடுத்துள வவாவகன் றிறையை முத்திவேட்                டடுத்தவ னேசர ணார்த்தி யென்பவன்                குடத்தினி லுதித்துயர் குவட்டி லுற்றுளோய்.                                             4                 மனமொழி மெய்வினை கொண்டு வாண்மதி                புனைமுடி யிறைவனைப் புகலென் றெய்தினோர்க்                கினைவுறு செயன்மலி யாக மாதியாம்                வினைகொடு பெறுபய னியாது வேண்டியே.                                             5                 பண்ணிய மகவினை பலவினாற் கெடும்                விண்ணுறு பதமலால் வேறுண் டாகுமோ                கண்ணுதல் சரண்புகுங் கருத்தின் மேன்மையோ                னண்ணுவ தழிவுறா ஞான விடரோ.                                                    6                 தனையடை பவர்க்குத்தண் ணளிசெய் கற்பக                மெனுமர னிணையடி புகலென் றெய்துறி                னினைவரும் பாதக நீச ராயினும்                பினையவர் பெறாதபே றேது பேசினே.                                                  7                 பரமனை யடைதரும் பாச நெஞ்சினோன்                பெருமைகொள் பிறவியே பிறவி யன்னவன்                றிருமல ரடியிணை சேர்ந்தி டாதவர்                வருமவப் பிறப்பினைப் பிறப்பில் வைத்திடார்.                                          8                 பெறலரு மானிடப் பிறவி பெற்றுமோ                ரறிவுரு வாகிய வவிர்ச டைப்பிரான்                றிறமுணர் குறுநெறி சேர்ந்தி டாரெனின்                வறிதவ ருயிரொடு வாழு நாளரோ.                                                    9                 புறந்திரி யாதுளம் புராரி தன்கணே                செறிந்திடு மொருபெருஞ் சிறப்புப் பெற்றுளோன்                பிறந்திடு குலமதே பெருமை பெற்றிடு                முறைந்தவன் வாழுநாள் பயனொ டொன்றுமால்.                                        10  

- சரணமான்மியத்தலம் முற்றிற்று -
* * *

 

 

முப்பத்தொன்றாவது

(31) பிரசாதமான்மியத்தலம்

[அதாவது - குரு லிங்கம் ஜங்கமன் சிவபக்தன் சரணன் இவர்களின் மகிமானுபவம் சிவ ப்ரசாதத்தா லுண்டாதலாலும், முக்திக்குப் பக்தி மூலமாதல் போலப் பக்திக்கு ப்ரசாதம் மூலமாதலாலும், சம்சார நிவாரணம் செய்தலாலும், பிரசாத மான்மியம் என்பது.]

                       கலிவிருத்தம்                 குருபரன் முதலியோர் பெருமை கூட்டுணத்                தருவது சிவப்பிர சாத மாதலா                லுரைசெயு மதனது பெருமை யோதுவ                ரிருவினை யெனும்பகை யெறிந்து ளோர்களே.                                          1                 புகலெனச் சிவபிரான் றனைப்பொ ருந்தினோர்க்                கிகலறு சிவப்பிர சாத மெய்துறு                மிகுபவப் பகையென விளம்பு மன்னதிவ்                வகலிடத் தரிதரி தயல வர்க்கரோ.                                                       2                 மந்திர மகந்தவந் தியான மற்றுள                தந்திர மறிவிவை யாவுந் தண்கதிர்ச்                சந்திர முடிபிர சாத மெய்துற                வந்தன வெனவறி மனந்து ணிந்தரோ.                                                  3                 மொழிதரு சிவப்பிர சாத மூலத்த                தொழிவறும் பத்திதா னோதும் வேதிய                ரிழிவின ரெனவிலை யாரு முய்குவர்                விழிநுத லினன்பிர சாத மேவினே.                                                     4                 பங்கய மலரவ னாதிப் பண்ணவர்                சங்கர னருட்பிர சாதங் கொண்டுதம்                மங்கல பதங்களின் வாழ்வு மன்னியே                சிங்கலி னித்திய சித்த ராயினார்.                                                         5                 தவநிகழ் சிவப்பிர சாத மெய்துறிற்                சிவமய மாகியே திகழும் யாவையும்                பவவலை யறவரு பான்மை யுண்டுகொ                லவமறு மரன்பிர சாத மன்றியே.                                                               6                 பலமொழி பகர்தலாற் பயனென் மூன்றெனு                முலகினு ளொத்தது முயர்வு கண்டது                மிலையிலை யிவ்வுரை யுண்மை யீர்ஞ்சடைத்                தலைவன தருட்பிர சாதத் திற்கரோ.                                                   7                 யோகம்வேண் டுறும்பிர சாத முற்றிட                வேகமாய்ஞ சிவமய மாகு மியாவையு                மாகையாற் சிவமெனு மாவி யோனிவன்                பேர்கிலா நிலையுடைப் பிராண லிங்கியாம்.                                             8  

- பிரசாதமான்மியத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் எக்காரணத்தினால் குருமான்மியம், லிங்கமான்மியம், ஜங்கமமான்மியம், பக்தமான்மியம், சரணமான்மியம் என்னும் ஐந்து ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் லிங்க பிரசாதத்தை நுகர்வதற் குரியவனானானோ அக்காரணத்தினால் அவன் மூன்றாமவனான ப்ரசாதி என்று அறியப்பட்டான்.

- மூன்றாவது பிரசாதித்தலம் முற்றும் -
* * *

 

 

நான்காவது பிராணலிங்கத் தலம்

[அதாவது - ப்ராணேந்த்ரியாதிக ளெல்லாமும் எனது என்னும் ப்ராந்தியை விட்டு எல்லாமும் லிங்கமே என்றறிந்து லிங்கைக்யாயத்த சித்தனாயிருப்பவனே பிராணலிங்கி என்பது.]

( இதனுட்பிரிவு )                 அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          பத்தனோ டொண்ம கேசன் பகர்பிர சாதி யென்றிங்         கொத்தனே வருவ னென்ன வுரைத்தனை பிராணலிங்கி         யெத்திற மதனா லாவ னிவனிது தனையுங் கூறாய்         கைத்தல மழுவி னோன்வாழ் கைலையங் கணங்கள் வேந்தே.                                    1          ஒப்பறு கரும யோகத் துயர்ச்சியாற் பத்த னாதி         முப்பெயர் புனைந்து நின்றான் மொழிதரு மிவனி வற்குத்         தப்பறு ஞான யோகஞ் சாற்றிடத் தக்க தீங்குத்         துப்புறழ் சடிலக் கற்றைத் துகளின்மா முனிவ ரேறே.                                            2          பேரறி வுருவாய் நின்ற பிரமமே யிலிங்க மாமவ்         வோருறு மிலிங்க சத்தி பிராணநல் லுருவாய் நிற்குந்         தேருறு மினைய வாறாஞ் சிவலிங்கந் தனையு ணர்ந்தோ         னேருறு பிராண லிங்கி யென்பவ னெப்ர் மேலோர்.                                                3          ஆசறு பிராண லிங்கித் தலமொரைந் * தாகு முன்னர்ப்         பேசுறு பிராண லிங்கித் தலமொடு பிராண லிங்க         பூசனை யதன்பின் மிக்க சிவயோக சமாதி பெற்று         நேசம துறுமி லிங்க நிசமங்க லிங்க மென்றே.                                                   4

( * மற்றொரு பிரிவு :- அதாவது ஆசாரப்ராணி, லிங்கப்ராணி, ஜங்கமப்ராணி என்று மூன்று வகைப்படுவன். மனோ வாக் காயங்களில் ஆசாரத்தை க்ரகிப்பவனே ஆசார ப்ராணி; பாஹ்யாசாரத்தை மறந்து லிங்கத்திற்கு ப்ராணனைப் பூஜிப்பவனே லிங்கப்ராணி; ஜங்கமத்திற்கு உடல் மனம் ப்ராணன்களை நிவேதனம் செய்பவனே ஜங்கமப்ராணி ப்ராணலிங்கியை ஆனந்த ப்ரஹ்மம் என வழங்குதலு முண்டு.)
 

முப்பத்திரண்டாவது

(32) பிராணலிங்கித்தலம்

[அதாவது - லிங்கமே மந்த்ரஸ்வ ரூபம், அந்த மந்த்ரத்திற்குப் போதினியான சக்தியே ப்ராணரூபம், அந்த ரூபமான லிங்க ஜ்ஞான முள்ளவனும், ஸ்ரீ குரூபதேசாநுக்ரமமாய் ப்ராணவாயுவை அபானவாயுவுடனே பரஸ்பரம் சங்கடனம் செய்து நாபிக் கிழங்கின் நடுவிலிருந்து வெளிப்படும் ஜ்யோதியே ப்ராணலிங்க மென்றறிந்து அதனது அநுசந்தானத் திருப்பவனுமான ப்ரசாதியே பிராண லிங்கி என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          தயங்குறு பிராணா பாந சமநிலை பெறலான் மூலத்         துயர்ந்தெழு சோதி யாதவ் வொளிமிகு சோதி தானே         வயங்குறு பிராண லிங்க மென்னவே வகுக்கப் பட்ட         தியங்குறு பிராணா பாந நிரோதிக ளென்போர் தம்மால்.                                          1          பரிதியு ளடங்கு மெய்கூர் பனியென யாதன் கண்ணே         திரிதரு பிராண னொன்றிச் செறிந்திடு மதுவே கூறி         னரிதெனும பிராண லிங்க மென்பரங் கதுத ரித்தோ         னுரைதரு பிராண லிங்க வுரையுடை யோனா மன்றே.                                           2          அறிவுருவாகி யெங்கு மமர்பரப் பிரம மாகுங்         குறியுய ரிலிங்க ஞான யோகுடைக் குணத்தா னெஞ்சி         லெரிசுட ராகி நின்றே யிலங்குறு மறிவி லாராற்         செறிவுறு பொருளன் றாகு மென்றுரை செய்பவர் மேலோர்.                                        3          இலங்கொளி யாகி யென்று மிதயநன் மலரிற் றோன்றி         நலந்தரு பரமானந்த ஞானலிங் கத்தை நீங்கிக்         கலந்துள புறத்தி லிங்கக் கருத்துள னாகி யுற்றோன்         மலங்குறு பரம மூட னென்னவே மதிக்கப்ப பட்டான்.                                            4                         பிரபுலிங்க லீலை                 மனமி லிங்க மருவிலை யேலுட                றனிலி லிங்கந் தரித்து மிலையிலை                யெனவி யம்பு மிணையிலி யாகம                நினைவ ரன்கழ னிற்க நிறுத்தினாய்.          புறப்பொரு ளிதன்கட் செல்லும் புத்திவிட் டகத்தி லென்றுஞ்         சிறப்புறு மொளியாய்த் தோன்றுஞ் சிந்மய லிங்கந் தன்னைக்         குறித்துணர் கருத்தின் றிட்பங் கொண்டுற நின்று ளோனே         மறப்பறு பிராண லிங்கி யென்குவர் மதியின் மிக்கோர்.                                           5          மாயையின் விகற்பந் தன்னால் வந்துள சகந்தோன் றாமற்         போயொழிந் திடுமா றென்றும் பொருந்துபு சிந்தை செய்து         பாயொளி யறிவானந்த பராபர லிங்கந் தன்னிற்         றூயநெஞ் சடங்க வல்லோன் றுகளறு பிராண லிங்கி.                                            6          சத்தையாஞ் சத்தி தானே தக்கதோர் பிராண னாகுஞ்         சத்ததாம் பிராண லிங்கந் தற்சம ரசஞா னத்தால்         வைத்ததாம்பிராண லிங்கி யெனும்பெய ரெனவ குப்பர்         தத்துவா தீத மாய தனிநிலை யுணர்ந்து நல்லோர்.                                                7  

- பிராணலிங்கித்தலம் முற்றிற்று -
* * *

 

 

முப்பத்துமூன்றாவது

(33) பிராணலிங்கார்ச்சனத்தலம்

[அதாவது - சைதந்யாத்மகமானதும், ப்ராண வாயுவினால் வ்யாப்தமாய் சூக்ஷ்மமான தகராகாசத்தில் ப்ரகாசிப்பதுமான ப்ராண லிங்கத்தை க்ஷமாரூபாபிஷேக நித்யாநித்யவஸ்து விவேகவஸ்த்ர சத்யரூபாபரண பாவநாபூஷ்பாதி ஜ்ஞானஸ்வரூபமான மானசிக த்ரவ்யங்களினால் பூஜித்து ப்ராலிங்க சம்பந்தியானதே பிராணலிங்கார்ச்சனம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          நன்றுறு மிதயந் தன்னின் ஞானலிங் கத்தை யெய்தி         நின்றெழு மன்பி னாலே நினைவெனு மலர்கள் கொண்டு         புன்றொழி லிலாது செய்யும் பூசனை யதுவே கண்டா         யொன்றொரு பிராணலிங்க பூசையென் றுரைப்ப தன்றே.                                         1          அகத்துறு பவனன் தன்னை யடைத்துநுண் விசும்பு பூத்து         மிகத்தலை மதியு குப்ப வீழமு தினிற்கு ளிர்ந்து         தகைக்குமொன் பதுவா யுற்றுத் தனியறி வெனும்பவி ளக்கிட்         டுகப்புறு மிதயத் தீசற் குஞற்றுக பாவ பூசை.                                                   2          ஆடறல் பொறைவி வேக மாடைபூண் வாய்மை மாலை         தாடரு துறவு கந்தஞ் சமாதியக் கதையாங் கார         வீடெழு தூபந் தூய்மை விளக்கறி வுலக மெல்லாம்         பீடுறு நிவேத னந்தம் பிராற்கொலி மணிநன் மோனம்.                                           3                         பிரபுலிங்க லீலை                 பொருலில்சற் பத்தியாந் தாரம் பூண்டொரு                வரவயி ராகமாம் வத்தி ரம்புனைந்                தொருவலி லுணர்வெனுஞ் செச்சை யொன்றுறப்                பரமனை யிருத்துவோன் பத்தனா குவான்.                 அருளெனும் புனலினை யாட்டிச் சாந்தமாம்                வரைநறுஞ் சந்தொடு மருவ விந்திய                விரைமலர் புனைதறி வினைய ருத்துறிற்                பரமனை யவன்சிவ பத்த னாகுவான்.                 ஒன்றினொன் றுள்ளுற வுடம்பு மூன்றையு                மன்றநல் வத்திர மடிய தாக்கியே                என்றுமங் கமைவுற விட்டம் வைப்பனேல்                அன்றவன் சிவமய மாகு மென்பவே.          பொறிவிட யார்ப்பி தந்தரம் பூலமவ் விடயத் தோய்த         லறுமது வலம திக்கிங் கதன்வடி வாகுஞ் சத்தி         பெறுமது வணக்க மாமிப் பெற்றியின் மனலிங் கத்தை         மறுவறு மனத்தர்ச் சிக்க வாலிய பொருள்கள் கொண்டே.                                         4  

- பிராணலிங்கார்ச்சனத்தலம் முற்றிற்று -
* * *

 

 

முப்பத்துநான்காவது

(34) சிவயோகசமாதித்தலம்

[அதாவது - பூர்வோக்த ப்ராணலிங்கார்ச்சன க்ரமங்களினால் அந்தரங்க க்ரியாசக்தனான ப்ராணலிங்கிக்கு சிவ ஜீவர்களின் சமான சாமரஸ்யாநுசந்தான மென்னும் சம்பத்தே சிவயோக சமாதி என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          புகன்றுள பிராண லிங்க பூசனைத் தொழிலின் கண்ணே         யுகந்துள விவர்க்கு மிக்க வொருசிவ ரூப மாகத்         திகழ்ந்துள தியானந் தன்னைச் செப்புறுஞ் சமாதி யென்ன         வகன்றரி பரந்த வொண்க ணரிவைபங் கினனூ லன்றே.                                          1          உரைமன மிறந்த சச்சி தானந்த வொளியாய் மேலாய்ப்         பரவுதத் துவங்கட் கெல்லாம் பரமசிற் சத்தி தன்னா         லுரமுற வொளிரு மஞ்ச வுருவமாம் பரமான் மாவைத்         திரமொடு பாவ கஞ்செய் திகழ்சோக பாவங் கொண்டு.                                           2                         பிரபுலிங்க லீலை          என்றுதன தியலுணர்த்தி யுடம்புநா னென்றிருந்த வியல்பு போல         நின்றவெனை யுணர்ந்துநீ சோகம்பா வனைகொண்டு நிற்பை யாயிற்         பொன்றலுறு விடங்கலுழன் றன்னை நினைப்பப் போதல்போற் போம் விச்சை         நன்றறிதி யெனவறிவித் தனனெங்கோன் கோரக்க நாதன் றன்னை.          பிறங்கொளி மாலிங் கந்தான் பிரமமென் றுரைப்ப நிற்குஞ்         சிறந்துள பிராணன் றன்னைச் செப்புவர் சீவ னென்ன         வறைந்துள வவற்றி னேக பாவமா மனத்தி னானே         யுறுஞ்சிவ சமாதி யோக முற்றவ னென்பர் மேலோர்.                                            3          ஆகமுறு சக்க ரங்க ளாறினு முற்ற கஞ்சஞ்         சகமருள் பிரம னாதி தானமென் றுன்னி யப்பால்         வகையிதழ் பத்து நூறு மருவுபங் கயம தன்கண்         மிகநிறை விமல விந்து விம்பமொன் றுளது மாதோ.                                            4          அத்தட மதியி னுட்ப மாம்புழை யொன்று காண்க         வத்தொளை கயிலை யாக வறிந்தவண் வீற்றி ருந்த         சத்திய ஞான னந்த சங்கரன் றனைப்பா விக்க         வெய்த்தகா ரணங்கட் கெல்லாங் காரண னென்ன வன்றே.                                        5          புறத்திரி வதனாற் றோன்றும் புகல்சக விகற்ப முள்ளிற்         செறிந்திடு மனத்தி னோர்க்குத் திகழ்ந்திடு மான்மா னந்த         முறுங்கடை யுவகை தன்னா லுயிரெனு மரணி தன்னிற்         பிறந்துள ஞானத் தீயாற் பெரும்பவஞ் சுடுவ னன்றே.                                            6          கருமவேர் செறிந்து துன்பப் பாசிலை காட்டி நிற்கு         மொருபெரும் பவம ரத்திற் குற்றவெம் பரசு தானாம்         பெருமல விருளி னுக்குப் பிறங்கொளி யிரவி யாகுந்         தெருமரு மனம டக்குஞ் சிவனுருத் தியாக மன்றே.                                               7                         பிரபுலிங்க லீலை          வாயு நிற்ப மனநின்று மனந்தா னிற்பப் பொறிநின்று         பாய பொறிக ணிற்பவிடர் படுபுன் புலன்க ணின்றனவா         லாய புலன்க ணின்றமையா லகிலந் தோன்றா துள்ளத்தே         தூய பரமா நந்தபரஞ் சோதி தோன்றக் கண்டிருந்தார்.          பொறியிற் புறத்து மனஞ்செல்லிற் புலனே தோன்றி யிடுமகத்திற்         செறியக் கரணம் பரானந்த சிவமே தோன்றுஞ் சிவந்தோன்ற         வறிவிற் பரந்த விடயமய மாகு முலகந் தோன்றாமற்         பிறவித் துயரக் கடல்கடந்து பேரின் பஞ்சார் குவரென்று.                 மரிப்பொ டுதிப்பு மறிக்குது மென்று                கருத்தை வெளிக்கரு மத்தின் விடுத்து                விரிக்குத னெய்யை விடுத்தெரி கின்ற                நெருப்பை யவிப்ப நினைப்பதை யொக்கும்.                 மட்டற வோடு மனத்தை நிறுத்திக்                கட்டுதல் வீடு விடுத்திடல் கட்டன்                றொட்டிய பண்பி னுரைத்தல மப்பேர்                சிட்டன வட்கருள் செய்தன னன்றே.          கருமமும் யோகந் தானுங் கரணத்தைப் புனித மாக்கிப்         பொருமிடர் வாயி றோறும் புக்குழல் கறங்கு போலத்         தெருமரா துண்ணி றுத்துந் தௌ¤ந்தவக் கரணந் தன்னா         னிருமல னாகு மீச னித்தனென் றுணர்வு திக்கும்.          நித்திய னிமல னென்னு நினைவுறி னனித்த மாகிப்         பொய்த்தழி யுடம்பு டம்பைப் பொருந்திய பொருள் வெறுத்து         மெய்த்தருள் குரவன் றன்னை விரும்பினன் சென்று சார்ந்து         தத்துவ முதறி நின்ற தனியறி வினையே காணும்.          புலன்களை யொழித்த போதே பொறிகளும் பூத மைந்துங்         கலங்குறு கரண நான்குங் கலாதியுஞ் சுத்த மைந்தும்         விலங்குறு மடியில் வைத்த வெறுங்குடந் தன்னின் மேன்மேன்         மலங்குற வொருங்க டுக்கு மட்கலம் விழுத லேபோல்.          இந்திய மோரொன் றாய்விட் டிடின்மற்றை யொன்று சாரு         முந்திய மனம ழிப்ப முற்றும்போ மணிய பாம்பி         னைந்தலை களினு ளொன்றை யரிந்திடின் மற்றொன் றாலஞ்         சிந்திடு மிடற ரிந்தாற் றீர்ந்திடு மொருங்கு மாதோ.          ஆதலால் மன மடங்கி லங்கலிங் கங்க டம்முட்         பேதமோ வபேத மோவென் றழிவுறு பித்து நீங்குந்         தீதிலா யென்றி யம்பிச் சித்தரா மற்கு நாவா         லோதொணா வுணர்வி னுண்மை யுணர்த்தினன் குருகு கேசன்.                 தாவி லாத மனமொடு சார்தரா                தோவு மாயி னுலகிற் புனலுமொண்                பூவு நாடொறும் போக்குறு பூசனை                ஆவி போகிய வாக நிகர்க்குமால்.                 புறம்பு காண்குவன் புல்லிய னீசனை                அறிந்த ஞானி யகமுறக் காண்பனால்                எறும்பி காணுறி லின்கரும் பேகொளும்                செறிந்த வாடிலை தின்பன வென்பவே.                 கரங்க ணல்ல கருமஞ் செயாநிற்பத்                திரிந்து செல்லுஞ் செலாதவி டத்துநெஞ்                சொருங்கு றாத வொருமனந் தன்னினும்                பரந்த வல்லற் படுக்கும் பகையிலை.                 துயிலை யின்பெனச் சொல்லுத லிந்தியத்                தியலு நெஞ்ச மிலாமையி னாலன்றோ                பயிலு நெஞ்சம் பரந்து திரிதருஞ்                செயலி லில்லைச் சிறிதுஞ் சுகமரோ.                 மனமொ ருத்தன் வசப்படு மேலவன்                பினைவ ருத்தும் பிறப்பை யடைந்திடான்                மனமொ ருத்தன் வசப்படா தோடுமேல்                நனிபி றப்பிடை நாளுஞ் சுழலுமே.                 அறவி னைக்கு மரும்பொரு ளின்பொடு                பெறுவ தற்கும் பெருங்கல்வி கற்றுயர்                விறலி னுக்குநல் வீரந் தனக்குமொண்                டுறவி னுக்குந் துணைமன மென்பவே.                 நல்ல செய்து நரரை யுயர்த்தவும்                அல்ல செய்தங் களற்றிடை யாழப்பவும்                வல்ல திந்த மனமல தையனே                இல்லை யென்ன வியம்பு மறையெலாம்.                 நெஞ்ச மாதுமை நேசனை நண்ணுமேல்                விஞ்சு பாதகங் கோடி விளைப்பினும்                அஞ்சு றானவ னவ்வினை யாவையும்                பஞ்சு தீயிடைப் பட்டென மாயுமே.                 மக்கண் மானிட ரென்று மனத்தினான்                மிக்க மேன்மை விளங்கின ரில்லெனில்                பொக்க மேவும் பொறிகளோ ரைந்தினால்                ஒக்கு மாவினை யொத்துயர் வுற்றிடார்.                 கெடுக்க வல்துங் கெட்டவர் தங்களை                எடுக்க வல்லது மிம்மன மென்றதை                அடக்க வல்லவ னைய பவக்கடல்                கடக்க வல்லவ னாவன் கடிதரோ.                 ஆயின் மிக்கோ ரரிய செயலெலர்                நேய மிக்க மனத்தை நிறுத்தல்காண்                வாயு நிற்க மனமு முடனிற்கும்                தோய நிற்குறி னிற்குந் துரும்புமே.                 ஓடு மாவை நிறுத்துறி னுள்ளுறக்                கோடும் வாய்க்க லினத்தினைக் கொள்ளுவார்                நீடு மாமன நிற்க நிறுத்துறில்                ஓடும் வாயுவை யுள்ளுற வீர்ப்பரால்.                 அடுத்த நாடிக ளாங்கொரு மூன்றினும                விடுத்தும் வாங்கியு மேவ நிறுத்தியும்                தடுத்தும் வாயுவைத் தன்வச மாக்கின்வாய்                மடுத்தி டாது மனமும் வசப்படும்.                 ஓடும் பொன்னு முறவும் பகையுமோர்                கேடுஞ் செல்வமுன் கீர்த்தியு நிந்தையும்                வீடுங் கானமும் வேறற நோக்குதல்                கூடுந் தன்மை கொளுமன நன்மனம்.                 மன்னு காம வெகுளி மயக்கமென்                றின்ன கூடி யெறிவளி முற்சுடர்                என்ன வாடு மியன்மனந் தீமனம்                தன்னை யாருந் தடுக்கத் தகாதரோ.                 மறிந்தி டாது மனபவ நங்கடாம்                செறிந்த வாயிற் சிவமய மாகுமால்                அறிந்து வாயுவை யங்ஙன மெய்தினோன்                இறந்தி டாத விலிங்கப் பிராணியாம்.                 ஒடுக்குமனம் வீட்டுநெறிக் கொருதுணையா கும்புறத்து                நடக்குமன நிரயவழி நடப்பதற்குத் துணையாமென்                றிடக்கர்மன மடக்கும்வகை யெம்பிரா னியம்பியவா                றடக்கமன முறுநெறியி னருணந்தி தலைப்பட்டான்.                 நில்லாது போமனத்தைக் கால்பிடித்து நிறுத்தியே                வில்லாரு மதியமுதம் விருந்திட்டு நட்புறீஇப்                பொல்லாத புலனுகரப் புறத்துநிலை தடுமாறிச்                செல்லாம லுடன்கொண்டு சித்திரமொத் திருந்தனனால்.                 மனத்தை யடக்க மனந்துணை யாகும்                பினைத்துணை யின்றது றெ¢றன னாயிற்                றனிச்சிவ மேயொரு தானென வாழ்வ                னினைத்து மறந்து நிலத்து ழலானே.                 வாரண மாகு மனத்தை யடக்கிற்                காரண மாயை களைந்தொழி யாத                பூரண மாகிய போத மடைந்திட்                டாரண மோது மரும்பொரு ளாவான்.                 விரிந்த நெஞ்சங் கருவியாம் விடய முணர விரியாம                லொருங்கு நெஞ்சங் கருவியாந் தன்னை யுணர வொருங்காமல்                விரிந்த நெஞ்ச முடையவனை விடாது பிறவி யென்றுணர்க                வொருங்கு நெஞ்ச முடையானை யுறாது பிறப்பென் றுணர்கவே.  

- சிவயோகசமாதித்தலம் முற்றிற்று -
* * *

 

 

முப்பத்தைந்தாவது

(35) இலிங்கநிசத்தலம்

[அதாவது - சமாதி யில்லாத மற்றக் காலத்திலும் பக்தர்களின் மேலதான வாத்சல்யத்தினால் சிவபிரான் அவர்களது தேகங்களி லிருப்பானோ, பக்தர்களினால் தேகமுள்ள லிங்கத்தின் எந்த பரோக்ஷமல்லாத அநுபவஜ்ஞான முண்டோ, பூர்வோக்த ரீதியான சிவலிங்க சமாதி வல்லமையினால் அச்சிவலிங்கமே தானாவதோ, அதே இலிங்க நிசம் என்பது.]

                அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்          பொருந்துறு மிதய மென்னும் புனிதநன் முளரி சேர்ந்த         வருஞ்சிவ லிங்க மெய்ம்மை யநுபவ சித்தி தானே         பரஞ்சு டராமி லிங்க நிசமெனப் பகரா நிற்பர்         திருந்திய கலைகள் யாவுந் தெரிபெரும் புலவரன்றே.                                             1          வேதனா தியராந் தேவர் வேதமா தியவா நூல்க         ளியாதினி லடங்கித் தோற்ற மெய்துறு மவ்வி லிங்க         மோதரும் பிரம மேயா முலகுதிக் குறுமி லிங்கந்         தீதறு ஞானா னந்த சிவமேமற் றொழிந்த வல்ல.                                                2          உரைப்பதென் பலமாற் றங்க ளுலகுதித் தொடுங்கும் வண்ணந்         தரித்திடு மிடம தாகுஞ் சச்சிதா னந்த மேனிப்         பரப்பிர மந்தா னேகாண் பரசிவ னாமங் கொண்டே         தெரிப்பறு மிலிங்க மென்று செப்புறப் பட்ட தன்றே.                                                3                         பிரபுலிங்க லீலை          பரசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி         யுரைமன மிறந்து நின்ற வொருசிவ லிங்கந் தன்னின்         வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் றனைப்பொ ருந்து         மருமைகொண் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன்.          மாசறு நிகழ்வே தாந்த வாக்கியத் துதிக்கு ஞான         மாசறு மிலிங்க மென்ன வறைதரு கிற்பர் சில்லோர்         பேசுறு மதுதான் மிக்கப் பிரமமா மிலிங்கந் தன்னாற்         றேசுற வறிவ தாகுஞ் செய்கையாற் பிறிதொன் றாமல்.                                          4          உலகெலாந் தருவ தற்கிங் கொருதனி மூல மாகி         யிலகுறு மவ்வி யத்த மிலிங்கமென் றிசைப்பர் மிக்க         தலைமைகொ ளிலிங்கி யீசன் றானென வகுத்துச் சொல்வர்         நிலவுமிம் மதம்பொ ருத்த மன்றென நிகழ்த்து நூலே.                                            5          விரவுறு மாலிங் கந்தான் மிளிர்தலு மதியு மீனு         மிரவியு மழலு மின்னு மிலங்குறா விலங்கு சோதி         யுருவமா மவ்வி லிங்கத் தொளியினா லவைய னைத்துந்         திரிவற விலங்கு முண்மை செப்புமிம் மாற்ற மன்றே.                                           6          உலகெலாந் தோன்றி நின்றங் கொடுங்குதற் கிடந்தா னாகி         யிலகுமா விலிங்கந் தன்னி னிலைபர மதனான் ஞான         நிலையில்வாழ் பிரம மேயந் நிசலிங்க மென்று கொள்ளிற்         றொலைவிலா விலிங்க வுண்மை தோன்றிடு மைய மின்றி.                                        7  

- இலிங்கநிசத்தலம் முற்றிற்று -
* * *

 

 

முப்பத்தாறாவது

(36) அங்கலிங்கத்தலம்

[அதாவது - அங்கமென்னும் ஜ்ஞானமும் அந்த ஜ்ஞானத்தினா லறியப்படும் லிங்கமும் ஆகிய இவ்விரண்டு முண்டானவனும், பீஜாங்குர நியாயப்படி அங்கமென்னும் ஜீவாத்மா வினிடத்தில் லிங்கமும் லிங்கத்தினிடத்தில் ஜீவாத்மாவும் சமரசமாயிருக்கும் ஜ்ஞான முண்டானவனுமான ப்ராணலிங்கியே அங்கலிங்கி என்பது.]

        ஞானநல் லங்க மென்பர் நாசமி லிலிங்க ஞேயந்         தானென வறைவ ரிங்ஙன் சாற்றிய விரண்டும் யாவன்         பானிகழ வுறுமிங் கன்னோன் பகரங்க லிங்கி யென்று         நூனிலை யுணர்ந்த மேலோர் நுவன்றிடப் படுவ னன்றே.                                         1          அங்கத்தி லிலிங்க மொன்றி யவ்விலிங் கத்தி லங்கந்         தங்குற்று நிகழ்வோ னியாவன் றானவ னங்க லிங்கி         பொங்குற்ற மனத்தி லிங்க முணர்ந்துழிப் பூசை செய்யுந்         துங்கத்தன் யாவ னன்னோன் றுகளறு மங்க லிங்கி.                                                2          ஒருதனி யிலிங்கந் தானே யொளிர்தரும் பிரம மென்றும்         வருசக மூல மென்றும் வான்முத்தி வைப்ப தென்றுஞ்         கருதிகண் முதலா யுள்ள தொல்லைய கலைக டம்மாற்         பெரிதுணர்ந் திடப்பட் டோங்கு மென்றறி பெருந்த வத்தோய்.                                       3          பகர்ந்திடு மினய லிங்கம் பரமுத்தி யுருவ மென்ன         வுகந்துள வுளத்தன் மெய்யோ டுறினுமே முத்த னாவன்         சகந்தரு மூல மென்னச் சம்புவா மிலிங்கந் தன்னை         யகங்கொளு நிலையி லாதா னருங்கதி யிலாத மூடன்.                                           4          யாவனற் பிராண லிங்க பூசனை யெழுவாய் மேவிப்         பாவுறு சிவமாய்த் தன்னைப் பாவிக்கு மறிஞ னன்னோன்         மேவுறு ஞான பாக விளைவினாற் சரண னாமந்         தாவறு முலக மெல்லாஞ் சாற்றிடப் படுவ னன்றே.                                               5  

- அங்கலிங்கத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் எந்தக் காரணத்தினால் பிராண லிங்கார்ச்சனம், சிவயோகசமாதி, அங்க லிங்கம் என்னும் மூன்று ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் எவன் சிவனிடத்தில் ப்ரீதியுள்ளவனானானோ அந்தக் காரணத்தினால் அவன் நான்காமவனான ப்ராணலிங்கி என்று அறியப்பட்டான்.

- நான்காவது பிராணலிங்கித்தலம் முற்றும் -
* * *

 

 

ஐந்தாவது சரணத்தலம்

[அதாவது - அறிவினது வெளிச்சத்தினால் தேகேந்திரியாதிக ளெல்லாம் தன் ஸ்வரூப மென்றறிந்து சகல விஷயங்களிலும் அகப்பட்டிரப்பினும் சுத்தாத்மாவாயும் ஆனந்த ரூபமாயுமிருத்தல் என்பது.]

( இதனுட்பிரிவு )                         கலிவிருத்தம்                 பின்ன ரந்தப் பிராணலிங் கிப்பெயர்                மன்னி னோனெவ் வகைச்சர ணப்பெயர்                தன்னை யெவன் சாற்றிது தன்னையு                மன்னை போலு மருட்கண நாதனே.                                                    1                 அங்க லிங்கி யரிய சதியெனத்                துங்க லிங்கம் பதியெனச் சொல்வரிச்                சங்க மெய்துந் தனிச்சுக மெய்தினோற்                கிங்கு வந்துறு மின்சர ணப்பெயர்.                                                        2                 இந்த லத்திற * மீரிரண் டாகுமுன்                வைத்தி டுஞ்சர ணத்தல மற்றுறுஞ்                சித்த தாமத நீக்கநிர்த் தேசமோ                டெய்த்த சீலசம் பாதன மென்னவே.                                                    3

( * மற்றொரு பிரிவு :- அதாவது இஷ்டலிங்கார்சசகன், ப்ராண லிங்கார்ச்சகன், த்ருப்தி லிங்கார்ச்சகன் என்று மூன்று வகைப்படுவன். அநிஷ்டங்களை நஷ்டம் செய்பவனே இஷ்ட லிங்கார்ச்சகன்; ஸ்வயபரங்களை யறியாதிருப்பவனே ப்ராண லிங்கார்ச்சகன்; இகபரங்களை யறியா திருப்பவனே த்ருப்திலிங்கார்ச்சகன். சரணனை விஞ்ஜானப்ரஹ்மம் என வழங்குதலு முண்டு.)

                இனைய நான்கு தலத்தினி லக்கணந்                தனையு மிங்கு முறைதரச் சாற்றுது                நினையு நெஞ்ச மொருக்கி நிலையொடு                சினம விழ்ந்த முனிவ செவிக்கொளே.                                                 4

 

முப்பத்தேழாவது

(37) சரணத்தலம்

[அதாவது - பதிவ்ரதா ஸ்த்ரீயானவள் பரபுருஷரிடத்தில் விமுகையாய்ச் சகல க்ருத்யங்களிலும் தன் ப்ராண காந்தனிடத்திலேயே அநுரக்தையாயிருப்பதுபோல, ஜ்ஞானமே ரூபமானவனும் அங்கலிங்கியுமான தானே சதி சிவலிங்கமே பதி என்று பாவித்து இதர தேவர்களிடம் விமுகனாயிருந்து, அந்த சதிபதியின் சம்யோகத்தினால் நிகழும் சுகமுடைய ப்ராணலிங்கியே சரணன் என்பது.]

                       கலிவிருத்தம்                 காந்த னைக்கொள் கனங்குழை போலவே                சாந்த மெய்ச்சிவ னுக்கொரு சத்தியா                யாந்த னைக்கொண் டயன்முக நோக்குறா                னேய்ந்த நற்சர ணத்தல மெய்தினோன்.                                                 1                 புரக்கு மீசன் புலப்படி னியாவர்தாம்                விருப்ப மெய்துவர் வேறுளர் தம்மிடை                வரப்பெ றிற்பெரு மாநிதி யாவர்போ                யிரப்பர் மண்ணை யிடுகெனத் தேடியே.                                                 2                 பற்றெ னுஞ்சிவா நந்தம் படைத்துளோன்                மற்றும் வேறு மனத்தின் விழையுமோ                பெற்ற வன்பெருங் கங்கைப் பெருக்கினை                யுற்றி டுங்கொல் கெங்கானலை யோடியே.                                                3                 துன்னும் வெம்பவ மாகிய தொல்லிரு                டன்னை வென்று துரந்திடிற் சங்கர                னென்னும் வெங்கதி ரன்றி யெழுந்தழி                மின்னெ னுஞ்சுரர் வென்றிட வல்லரோ.                                                 4                 பிறவி நோயினன் பிஞ்ஞகன் றன்னையே                யுறுவ தன்றி யுறான்பிற தேவரை                நிறைவு றுஞ்சசி நிற்க வுடுவுறா                தறவ ருந்தவ வாவு சகோரமே.                                                        5                 பவமெ னுங்கடும் பாம்பினை மீட்பவ                னெவையு நன்குண ரீச னலாலிலை                சிவமு ணர்ந்துதெ ளிபெறும் யோகிதா                னவைத ரும்பிறி தொன்றினை நண்ணுறான்.                                            6                 முற்று மேவெம் முயற்சியி னானுமிங்                குற்ற வன்சிவன் றன்னை யுவகையே                பெற்றி டும்பர மானந்தப் பேற்றினான்                மற்ற வும்பர்க ளான்மகிழ வுற்றிடான்.                                                  7  

- சரணத்தலம் முற்றிற்று -
* * *

 

 

முப்பத்தெட்டாவது

(38) தாமசநிரசனத்தலம்

[அதாவது - ப்ரஹ்மானந்த பரிபூர்ண குருவாகிய சரணனால் தமோகுண விகாரங்கள் அத்யந்தமாய்த் தள்ளப்பட்டும், சிவஜ்ஞானத்திற்குப் பந்துக்களான சாந்தி பாஹ்யேந்த்ரிய நிக்ரஹம் விவேகம் வைராக்யம் அகண்ட த்யானம் க்ஷமை பூததயை விச்வாசம் சிவபக்தி சிவாசாரம் ஆகிய சத்வகுணங்கள் கொள்ளப்பட்டு மிருத்தலே தாமசநிரசனம் என்பது.]

                       கலிவிருத்தம்                 பராப ரற்பெற் றுவகை படைத்துளோன்                விராவு மத்தமோ பாவம் விடுத்தலாற்                றராத லத்திற் றனைநிகர் தாமத                நிராச கப்பெய ரோடு நிலாவுவான்.                                                     1                 இருட ருந்தம மெய்து மறிவினோர்க்                கருட ருங்கதி யில்லை யறிவினுக்                கொருபெ ருந்தனிக் காரண மொண்கதி                தருமி ருங்குண சத்துவ மென்பவே.                                                    2                 மெய்ம்மை சாந்தி தமைவி வேகம்பொறை                செம்மை நல்லொழுக் கஞ்சிவ பத்திதா                னம்ம பூரண பாவ மருடுற                விம்மை யுள்ளவன் சத்துவ மெய்தினோன்.                                             3                 வெய்ய காம வெகுளி மயக்கமா                மையு லாமத யானை வளர்ந்தெழு                செய்ய மாசிவ ஞான மடங்கல்முன்                னுய்யு மோநின் றொருகண மேனுமே.                                                  4                 மாசி ராசத மன்னிய நெஞ்சினோ                னீச னாரிடத் தெங்கும் வெறுப்பினோன்                பேசி லன்னவற் காணிற் பெரியவர்                கூசி நிற்பர் குலைகு லைந்துள்ளமே.                                                   5                 யாவ ரேடு மிகல்புரி கிற்பவன்                பாவ மாகும் படிற்றுரை கூறுவோன்                காவி லாதவாங் கார மருவினோன்                யாவ னன்னவன் றாமசி யென்பவே.                                                    6                 மூல மாகத்த மோகுண முற்றிய                மேலு லாவும் விருப்பு வெறுப்பெனுங்                கோல மாமரங் கூர்சிவ ஞானமா                மேலு மாமழு வாலெறி யப்படும்.                                                        7                 இரவி யாயிரம் போல விலங்குறும்                பொருவில் வான்சிவ ஞானம் பொருந்துறிற்                பரவு மொண்சிவ ஞான பதத்தர்முன்                மருவு மோதம மாகிய வல்லிருள்.                                                     8  

- தாமசநிரசனத்தலம் முற்றிற்று -
* * *

 

 

முப்பத்தொன்பதாவது

(39) நிர்த்தேசத்தலம்

[அதாவது - ப்ராணிகளுக்கு முக்தி சாதனமாய் சம்சார ப்ரவிர்த்திக்கு மூலகாரணமான தமோ குணங்களைப் போக்கத்தக்க ஜ்ஞானத்தை ஸ்ரீசத்குருவினால் உபதேசிக்கப்பெறுவதே நிர்த்தேசம் என்பது.]

                       கலிவிருத்தம்                 பிறப்பு மூலப் பெருந்தம நீக்கியே                சிறப்ப ஞான நிர்த்தேசப் படினதை                யிறுப்பர் நின்றநிர்த் தேச மெனக்குறித்                தொறுப்பு றும்புலத் தொட்டறு நெஞ்சினோர்.                                             1                 குரவ னேபர தத்துவங் கூட்டுவோன்                பருவ மேவினர் பால்வந் திலகுற                விரவி நின்ற விருளை விளங்கிய                விரவி யன்றி யிரிப்பவ ரியாவரோ.                                                    2                 பிறவி நாமப் பெரும்பிணி நல்லறி                வறிவு றுங்குரு வன்றி யகலுமோ                மறையு ணர்ந்த மருத்துவ னன்றியே                செறிவு றும்பிணி யாது சிதைவதே.                                                    3                 மூட மாசின் முழுகு மனமெனு                மாடி தன்னை யறிவெனும் பூதியா                னீட நின்று நிகழ விளக்குவோன்                பீடு றுங்குரு வென்பர் பெருமையோர்.                                                  4                 தாவி லாவப ரோட்சி ததத்துவ                சீவன் முத்தத் தியல்புறு தேசிகன்                மேவு மின்ப விழக்கடை நோக்குறி                னியாவை யெய்தற் கரியன வென்பவே.                                                5                 நீங்க ருங்கரு ணைக்கு நிலையராய்த்                தீங்கி லாத சிவாத்து விதத்தரா                யோங்கு முத்தி யுதவுங் குரவர்தா                மீங்க டைந்திடற் கென்று மரியரே.                                                     6                 பொருப்பின் மேரு புணரி யிற்பாற்கட                லருக்கன் கோளி லமரரிற் சங்கரன்                மரத்தி லார மெனப்புகழ் வாய்த்தவன்                குருக்க ளிற்சிவ நண்ணுங் குரவனே.                                                   7  

- நிர்த்தேசத்தலம் முற்றிற்று -
* * *

 

 

நாற்பதாவது

(40) சீலசம்பாதனத்தலம்

[அதாவது - பூர்வோக்த நிர்த்தேச சம்பந்தத்தினால் பரதத்வத்தை யறியவேண்டு மென்று ஜனிக்கும் அபேக்ஷையும், அதனால் உண்டாகும் ப்ரத்யக்ஷாநுபவமும் ஆகிய இவையே சீலசம்பாதனம் என்பது.]

                       கலிவிருத்தம்                 குரவ னுற்றுநிர்த் தேசித்த கொள்கையா                லொருமை யிற்சிவ தத்துவ மோர்ந்திடு                மருவி ருப்பது சீல மஃதுளோன்                றிருமி குத்துயர் சீலி யெனப்படும்.                                                       1                 சரண டைந்தவர் தங்களைக் காத்திடும்                பரனை நெஞ்சுறப் பாவிக்குந் தன்மையே                திரமு றும்பெருஞ் சீலமென் றோதுவா                ருரமு ணர்ந்த வுரனுடை யாளரே.                                                       2                 சிவனை யெய்தியொன் றாந்திறத் தோன்றானை                யவனை யன்பொ டறிந்தவ னைச்செறிந்                துவகை யொன்று முளத்தனைச் சீலவா                னிவனெ னுங்கலை யின்றிறம் யாவுமே.                                                3                 பற்று றும்பதி ராகப் பயத்தினாற்                பொற்றி ருந்திழை சீலம் பொலிதல்போற்                பெற்று றுஞ்சிவ ராகப் பெருமையோ                டுற்ற வன்றிகழ சீல முளானரோ.                                                        4                 மாதர் கட்கு மகிணன் பணியல                தேத முற்றிடு மிங்கிது போலவே                சோதி மெய்ச்சிவ மன்றித் துளங்குறு                மேதி லர்க்குறு சேவை யிகழ்வுறும்.                                                    5                 நட்டு றுஞ்சிவ ஞானிக டம்மிடை                நிட்டை கொள்ளு நிலையது சீலமவ்                வொட்டு றுந்தனிச் சீல முடையனே                சிட்ட ரெண்ணுநற் சீல முளானரோ.                                                    6                 அங்க லிங்க வறிஞரை வேட்டுளஞ்                சங்க ரன்றனைத் தான்சர ணென்றுபோ                யிங்க டைந்த விவனல் லயிக்கிய                மங்க லந்தரு நாம மருவுவான்.                                                        7  

- சீலசம்பாதனத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் எந்தக் காரணத்தினால் தாமச நிரசனம் நிர்த்தேசம் சீலசம் பாதனம் என்னும் மூன்று ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடி யிருத்தலால் சுத்தாத்மாவும் ஆனந்த ரூபியுமானானோ, அந்தக் காரணத்தினால் அவன் ஐந்தாமவனான சரணன் என்று அறியப்பட்டான்.

- ஐந்தாவது சரணத்தலம் முற்றும் -
* * *

 

 

ஆறாவது அயிகியத்தலம்

[அதாவது - நான் நீ என்னும் வ்யவஹாரம் இரண்டிற்கும் விஷயமானவன் யானே ப்ராண தேஹேந்த்ரியாதி பேதங்களெல்லாம் ப்ராந்தி ஐந்யங்களே யன்றி என்னிடத்தில்லை என்னும் பாவத்தினால் சூகசாமரஸ்ய ரூபமாயிருப்பதே அயிக்கியம் என்பது.]

( இதனுட்பிரிவு )                         கலிவிருத்தம்                 தாமத நிரசன மாதி சார்வினா                லேமுறு சரணனா மிவன யிக்கிய                னாமமெவ் வகையினா னண்ணு மிங்கது                காமரு மிரேணுக கணேச கூறுவாய்.                                                    1                 மலிதரு சிவசுக வாரி மூழ்குபு                நலமுறு சிவமுட னயிக்க நாடுறு                நிலையுற வயிக்கனாம் பிராண லிங்கமுன்                றலைமைகொ ளியல்பினாற் சரண னாயினோன்.                                         2                 மனுந்தல மிஃதுநால் * வகைய யிக்கமோ                டினங்கொ ளாசார சம்பத்தி யேகபா                சனஞ்சக போசனத் தலமெ னப்புலன்                முனிந்துள முனியிவை முறையிற் கூறுவாம்.                                          3

( *மற்றொரு பிரிவு :- அதாவது காயலிங்கைக்யன், ஜீவ லிங்கைக்யன், ஜ்ஞான லிங்கைக்யன் என்று மூன்று வகைப்படுவன். க்ரியா சாரத்தை மறந்திருப்பவனே காயலிங்கைக்யன்; அநுபவத்தை யறிந்திருப்பவனே ஜீவலிங்கைக்யன்; அறிவு வெளிப்பட்டிருப்பவனே ஜ்ஞான லிங்கைக்யன் ஐக்யனை பரப்ரஹ்மம் என வழங்குதலு முண்டு.)
 

நாற்பத்தொன்றாவது

(41) அயிக்கியத்தலம்

[அதாவது - சப்தாதி விஷயங்களினா லுண்டாகும் அற்பானந்தத்தில் ஆசையில்லாதவனும், சிவானந்தமென்னும் மகாசமுத்திரத்தில் சாமரஸ்யத்தினால் ப்ரவேசம் செய்தவனும், நிஷ்களங்க மநோவ்யாபாரத்தினால் கூடி நானே சிவன் என்னும் விசாரத்தினால் லிங்கத்தில் ஏகத்வம் அடைந்தவனுமான சரணனே அயிக்கியன் என்பது.]

                       கலிவிருத்தம்                 அழிதரு நிலைவிட யானந் தத்துளி                விழைதலை விடுத்துள விமல நெஞ்சினோ                னெழுதரு சிவானந்த மென்னும் வேலையுண்                முழுகுத லயிக்கமென் றுரைப்பர் முன்னையோர்.                                        1                 தளைந்துள தளைவலி தணந்து மாசறத்                தௌ¤ந்துள நெஞ்சினாற் சிவோகம் பாவனை                யுளங்கொளு நிலையுடை யொருவ னேகலை                யளந்தறி முனிவர வயிக்கிய னாகுவான்.                                                 2                 செயலறு சிதானந்த சிவமொ டொன்றிய                வியலுறு மயிக்கிய னென்னப் பட்டவன்                மயலுறு மாயையின் வயிறு தந்துள                துயருறு முலகத்தின் றோற்றங் காணுறான்.                                             3                 தத்துவ மாந்திரை சார்ந்து பல்வகைப்                புத்தய னண்டமாம் புற்பு தஞ்செறி                மைத்தனி மாயையாம் வாரி வற்றுமான்                மெய்த்துள வயிக்கியமாம் வடவை மேவவே.                                           4                 மறைப்புறு மாயையின் வலியி னாலுயிர்க்                குறப்பெறு வேறுபா டுயர்சி வத்துட                னிறப்புறி னனையதிங் கேக மன்றியே                பெறப்படு குவதிலை பேத மென்பதே.                                                   5                 பசுத்துவ மொடுபதித் துவம்ப கர்ந்திடின்                முசிப்புறு மாயையா மோக கற்பித                நசித்திடி னதுபசு யார்சொ னன்றுற                விசைப்பறு நற்பதி யார்சொ லிங்கரோ.                                                  6                 சாருறு பேதவன் மீகந் தங்கிய                கோரசம் சாரமாங் கொடிய பாம்பினுக்                காருறு பரமவத் துவித பாவனை                நேருறு மருந்ததாய் நிற்கு மென்பவே.                                                  7                 நந்துறு பேதபுத் தினி னண்ணியே                வந்துறு பவக்கட றன்னை மன்னிய                சிந்தனை யறுசிவாத் துவித புத்தியாஞ்                சுந்தர வம்பியாற் கடக்குந் தோமிலான்.                                                 8                 மயங்குமஞ் ஞானவல் லிருளொ டொன்றியே                யயர்ந்துள காமமா மரக்கர் செய்கையின்                முயங்குறு பவமென்று மூடு கங்குறான்                பயந்திரி தருநலத் துவித பாநுவால்.                                                    9                 மிக்குறு பவத்துயர் விட்டு நீங்குறத்                தக்குறும் யோகிக டங்கட் கிவ்விடை                பக்கொழி வருசிவாத் துவித பாவனை                யொக்குறு முபாயமிங் கொன்று மில்லையே.                                            10                 ஒருகண முயர்சிவாத் துவித பாவனை                தருசுக மியாதது தக்க போகமிங்                கரிதுறு பவர்களாற் கோடி யாண்டினும்                பருகுற வருமொரு பான்மைத் தன்றரோ.                                                 11                 சென்றுறு சகமடங் கியநற் சித்தமோ                டொன்றிய பரசிவ யோகிக் கோய்வற                நின்றுயர் சிவானந்த நிறைவ தேபர                மென்றுரை தருந்தனி முத்தி யென்பதே.                                                12  

- அயிக்கியத்தலம் முற்றிற்று -
* * *

 

 

நாற்பத்திரண்டாவது

(42) ஆசாரசம்பத்தித்தலம்

[அதாவது - சிவஸ்ரூபனான லிங்கைக்யன் தான் தேகாபிமான முள்ளவனாகா திருப்பினும், சீவன் முக்தனா யிருப்பதினால் ஜங்கமத்துடனே ஏகத்வத்தை யடைந்து ஜாதி சூதகம் வர்ணம் முதலிய ஸ்வேச்சாசாரங்களினால் சம்பந்தியாதிருத்தலே ஆசார சம்பத்தி என்பது.]

                       கலிவிருத்தம்                 உடம்பொடு மருவினு மொருமைப் பாறுளை                தொடங்குறு மவர்க்கிலைச் சூத காதியத்                திடம்பெறு மொரு சிவாத் துவித தேசிகற்                கடைந்துள விருவினைப் பயனு மாகுறா.                                                 1                 சமதரி சனனெனுந் தகுதி பெற்றுளோ                னமைவுறு சிவனுட னயிக்க பாவமோ                டிமைபெற மாவினை யியற்று மாயினுஞ்                சமையுமவ் வினைப்பய னவனைச் சார்ந்திடா.                                          2                 அந்தண னாயினும் புலைய னாயினும்                பந்தனை வினையுடைப் பாவி யாயினு                முந்துறு புண்ணிய னெனினு மொக்குமா                னந்துறு மயிக்கிய நண்ணி னற்கரோ.                                                   3                 வன்னமோ டுறுநிலை வழியொ ழுக்கினா                லென்னுறு பயன்சிவ ஞான மெய்தினோற்                கன்னிய வுலகவா சார மென்பது                தன்னிக ரவற்கிலை யென்று சாற்றுவார்.                                                4                 இலகுறு ஞானவங் கியினி லிட்டயல்                விலகற வறுத்துள வினைவித் தோடுதா                னிலைவுறு தேகிபோ லமர்ந்த ஞானிமெய்                யுலகின ருடலினை யொத்தி யங்குமால்.                                                5                 புனலுறு மரையிலை போல ஞானி தான்                வினையொடு புணர்கிலன் வேறி லாவவன்                கனவிலு நனவிலுங் கதியி ருப்பினுந்                தனைநிகர் சங்கரன் பூசை சார்ந்துளான்.                                                 6                 காண்பன பரசிவ காட்சி யுன்னுவ                மாண்படு தியானம்வாய் வார்த்தை நற்றுதி                யேணபடு தொழல்சிவ பூசை யேவினை                நாண்பரி யயிக்கிய ஞானி கட்கரோ.                                                    7  

- ஆசாரசம்பத்தித்தலம் முற்றிற்று -
* * *

 

 

நாற்பத்துமூன்றாவது

(43) ஏகபாசனத்தலம்

[அதாவது - இந்த ஜகத்து சிவமயமானதென்று அறிந்திருக்கும் சிவயோகிக்கு சிவன் ஒருவனே ஆச்ரயனாயிருப்பதனால் தனது ஜ்ஞானத்தில் தனக்கும் சிவனுக்கும் ஜகத்துக்கும் பேதமில்லை, சிவன் சர்வகதனான காரணத்தினால் எல்லாம் சிவமயமாகியே காண்பது என்னும் புத்தியுடன் கூடியிருத்தலே ஏகபாசனம் என்பது.]

                       கலிவிருத்தம்                 அகிலமுஞ் சிவமென வறிந்த பாவனை                நிகழ்வுறு நிலையினோற் கென்று நீள்சிவ                மகிழொரு பாசன வடிவ மாதலா                லிகலற வியம்புவ ரேக பாசனம்.                                                         1                 சகந்தனக் கொருதனக் குயர்ப ரற்கிவன்                மிகுந்திடு மத்து விதநற் காட்சியா                னிகழ்ந்திடு மேக பாசன நிலைத்தலாற்                புகும்பிர சாதத்து மேக புத்தியே.                                                       2                 இச்சகஞ் சிவத்திடை யெய்தி நின்றிடு                மச்சிவஞ் சகத்திடை யமர்ந்தி லங்குறு                முச்செய லாலிவை யொன்றிற் கொன்றுதான்                வைச்சவா தாரவா தேய மன்னுமால்.                                                  3                 அறிவொரு சிவமய மாகும் பாசன                மறியுல கெலாமுமா மறிவை யன்றியே                யறிவுறு பொருளிலை யாத லான்மிகு                மறிவினை யுடையவர்க் ககில மில்லையே.                                             4                 தன்னுள விருத்திபோய்த் தனிச்சி வத்தினுண்                மன்னுற வாகுல மழிந்து பெற்றுள                செந்நெறி யோகியே சீவன் முத்தனென்                றுன்னரு மறிவுடை யுலக மோதுமே.                                                   5  

- ஏகபாசனத்தலம் முற்றிற்று -
* * *

 

 

நாற்பத்துநான்காவது

(44) சகபோசனத்தலம்

[அதாவது - தான் வ்யாபகனான காரணத்தினால் சாக்ஷாத் சிதாகாரமான தன்னிடத்தில் சிவத்தையும் குருவையும் ப்ரபஞ்சத்தையும் ஏகரூபத்துடன் எப்போதும் சம்யோகம் செய்து ப்ரபஞ்சத்தின் பின்ன பாவத்தைக் கெடுத்திருத்தலே சகபோசனம் என்பது.]

                               கலிவிருத்தம்                 மன்னிய சிவன்றனைக் குருவை மைந்தனைத்                தன்னொரு வடிவென வுணருந் தன்மைதா                னுன்னரு முலகெலா முண்ட லாதலாற்                பன்னுற வருசக போச னத்தலம்.                                                      1                 அறிவுரு வாந்தனி லாகிலந் தன்னையுஞ்                செறிவுறு குருவையுஞ் சிவபி ரானையும்                பிறிவற வேகமாய்க் காணும் பெற்றியே                குறிசக போசன மென்னக் கூறுவார்.                                                    2                 குருவிவன் சிவனிவன் கூறப் பட்டிடுஞ்                சரமுட னசரமாஞ் சகம திங்கிது                திரமுறு மினையனா னென்னுஞ் சிந்தனை                யொரு வினோன் யாரவ னுலக முண்பவன்.                                            3                 இறைசிவ னடிமைநா னிவன ருட்குரு                வுறுமக னானெனு முளமி லாதவன்                மறுவறு மொருசிவவாத் துவித வான்பதம்                பெறுதவ னெனமறை பெரிதி யம்புமே.                                                 4                 குருவுநா னுலகுநான் கூறு தற்கரும்                பரமுநா னெனவொரு பரி சறிந்திட                லிருளறு பூரண வகந்தை யென்னவே                திரிவறு மறிவினோர் தெரிந்து கூறுவார்.                                                5                           திருநாவுக்கரசு சுவாமிகள்                          திரு அங்கமாலை          இறுமாந்திருப்பன் கொலோ - வீசன் - பல் கணத்தெண்ணப்பட்டுச்         சிறுமானேந்தி தன் சேவடிக்கீழ்ச் சென்றங் - கிறுமாந்திருப்பன் கொலோ.                 அனைத்தினு மிலங்குபூ ரணவ கந்தையாய்                மனிப்பொலி தருபர மான வங்கியிற்                றனித்திடு துவிதநற் சமிதை வேள்வியா                னினைப்பறு மகிலவோ மத்த னென்பவே.                                                 6                 போதமென் றிடுமொரா தாரப் பூந்தழற்                பேதமொன் றுலகவி பெய்து வேட்பவ                னோதுறு சகவவி யுண்டு நின்றிடு                மேதமொன் றுறாதுயர் ஞான யோகியே.                                                7                 அறிவுறு வாம்பரா காசத் தாசற                நிறைதரு பரானந்த மென்ன நின்றுள                செறிகதி ரிடைவிரி சித்த மொன்றினோர்க்                குறுசக நிலைமைகண் ணுறுவ தின்றரோ.                                                 8                 ஆசறு சிதம்பர மதனிற் றன்னையே                பாசமில் சமரச பாவத் தொன்றியே                தேசுள னாகவே சிந்தை செய்திடின்                மாசறு வித்தையென் றுரைப்பர் மாதவர்.                                                 9                 சிதம்பர வொளிநிகழ சிவனொ டொன்றுற                விதந்தரு மயிக்கிய பாவத்தை யெய்தினோன்                மதஞ்செய் பத்தாதி நனமார்க்க நண்ணலாற்                பதந்தனி முத்தியே யாகப் பற்றுவான்.                                                  10  

- சகபோசனத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் எந்தக் காரணத்தினால் சர்வாசார சம்பத்தி, ஏகபாஜனம், சகபோஜனம் என்னும் மூன்று ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் எவன் சிவனிடம் ஏகீபாவ மடைந்தவனானானோ, அந்தக் காரணத்தினால் அவன் ஆறாமவனான ஐக்யன் என்று அறியப்பட்டான்.

-ஆறாவது அயிகியத்தலம் முற்றும்- - - - -ஆக - காப்பு பாயிரம் உள்பட செய்யுள் - 530 ப்ரதமபரிச்சேதமாகிய

அங்கஸ்தலம் சம்பூர்ணம்
* * *

 

 

த்விதியபரிச்சேதம்

இலிங்கஸ்தலம்

1 - வது ஆசாரலிங்கத் தலம்

[அதாவது - நிவ்ருதிகலா சமேதமாய் க்ரியாசக்தியுடன் கூடி கர்மசாதாக்யத்தைப் பொருந்தி சித்தகம்யமாயிருத்தல் என்பது.]

(பக்தஸ்தலத்தைச் சேர்ந்த உட்பிரிவுகள்)

                                கலிநிலைத்துறை                 ஆறெ னுந்தலங் களின்முறை யறிந்தவா சாரப்                பேற டைந்தவன் றனக்கிலிங் கத்தலம் பிறங்கக்                கூறி டுஞ்சிவ பிரா னரு ளாகமங் குறித்து                மாறொ ழிந்திடு சீவன்முத் தியில்வழங் குவவாய். 

அங்கஸ்தலமானது பக்தஸ்தலம், மாகேச்வரஸ்தலம், ப்ரஸாதிஸ்தலம், ப்ராண லிங்கிஸ்தலம், சரணஸ்தலம், ஐக்யஸ்தலம் என ஆறு பகுப்புக்களையுடையது போல, இலிங்கஸ்தலமும் ஆசாரலிங்கம், குருலிங்கம், சிவலிங்கம், ஜங்கமலிங்கம், பிரசாத லிங்கம், மகாலிங்கம் என ஆறு பகுப்புக்களை யுடையதாகும்.

ஷட்விதலிங்கம் பஹுவித பாவனை:- ப்ருதிவி சம்பந்தமானதே ஆசாரலிங்கம், ஜல சம்பந்தமானதே குருலிங்கம், அக்னி சம்பந்தமானதே சிவலிங்கம், வாயு சம்பந்தமானதே ஜங்கமலிங்கம், ஆகாச சம்பந்தமானதே ப்ரசாதலிங்கம், ஆத்ம சம்பந்தமானதே மகாலிங்கம்|| தேகத்தின் குதஸ்தானத்திலிருக்கும் ஆதார சக்கரத்தில் ஆசார லிங்கம், குஹ்யஸ்தானத்திலிருக்கும் ஸ்வாதிஷ்ட்டான சக்கரத்தில் குருலிங்கம், நாபீஸ்தானத்திலிருக்கும் மணிபூரக சக்கரத்தில் சிவலிங்கம், இருதயஸ்தானத்திலிருக்கும் அனாகத சக்கரத்தில் ஜங்கமலிங்கம், கண்டஸ்தானத்திலிருக்கும் விசுத்தி சக்கரத்தில் ப்ரசாத லிங்கம், புருவ மத்திய ஸ்தானத்திலிருக்கும் ஆஜ்ஞேய சக்கரத்தில் மகாலிங்கம்|| க்ராணனில் ஆசாரலிங்கம், ஜிஹ்வாவில் குருலிங்கம், சக்ஷுவில் சிவலிங்கம், த்வக்கில் ஜங்கமலிங்கம், ச்ரோத்ரத்தில் ப்ரசாதலிங்கம், இருதயத்தில் மகாலிங்கம்|| இரத்தத்தில் ஆசாரலிங்கம், மாம்சத்தில் குருலிங்கம், மேதையில் சிவலிங்கம், அஸ்தியில் ஜங்கமலிங்கம், மஜ்கையில் ப்ரஸாதலிங்கம், சர்மத்தில் மகாலிங்கம்|| சித்தத்தில் ஆசாரலிங்கம், புத்தியில் குருலிங்கம், அகங்காரத்தில் சிவலிங்கம், மனதில் ஜங்கமலிங்கம், ஜ்ஞானத்தில் ப்ரசாத லிங்கம் பாவத்தில் மகாலிங்கம்|| இவ்விதமாய் ப்ருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் ஆத்மா என்னும் ஷட்பூத சம்பந்த க்ரமத்தைப் பிடித்து, சர்வாவயவம் லிங்கமய மாயிருக்கிறது.

இங்கு அறியத்தக்க விசேஷம் யாதெனின்:- பிண்டாண்டம் என்று சொல்லப்பட்ட தேகம் ஷட்பூத சம்பந்தத்தினால் லிங்கமயமா யிருப்பதுபோல ப்ரமாண்டம் என்று சொல்லப்பட்ட ப்ரபஞ்சமும் தத்சம்பந்தத்தினால் லிங்கமயமாயிருக்கிறது. எவ்வாறெனின்:- ப்ருதிவி சம்பந்தமான பூமி, பர்வதம், கல், மண் முதலியவைகளில் ஆசாரலிங்கம்; ஜல சம்பந்தமான சமுத்ரம், கதி, தடாகம், மேகம் முதலியவைகளில் குருலிங்கம்; அக்னி சம்பந்தமான ஜ்வாலாமுகி, காட்டுத்தீ, படபாக்னி, மின்னல் முதலியவைகளில் சிவலிங்கம்; வாயு சம்பந்தமான வெறுங்காற்று, மந்தமாருதம் முதலியவைகளில் ஜங்கமலிங்கம்; ஆகாச சம்பந்தமான பள்ளத்தாக்கு, குகை முதலியவைகளின் வெளிப் பிரதேசத்தில் ப்ரசாதலிங்கம்; சர்வாதார பூதமான ப்ரமத்தில் மகாலிங்கம். இவ்விதமாய்த் தேகமெல்லாம் லிங்கமய மாயிருப்பதுபோல ப்ரபஞ்சமெல்லாம் லிங்கமயமாயிருக்கிறது. தேக மயமான லிங்கத்திற்கும் ப்ரபஞ்சமயமான லிங்கத்திற்கும் பேதமில்லை. தேகத்திலும் ப்ரபஞ்சத்திலும் ஒரு சிவசைதந்யமே வெவ்வேறு பதார்த்தங்களின் மூலமாய், வெவ்வேறாய் வர்த்திப்பதின் தசையினால் வெவ்வேறு பெயருள்ளதா யிருக்கிறது. எவ்விடத்திலும் லிங்கமே வர்த்திப்பதனால் லிங்கத்தை விட்டு வேறே யாதொரு பதார்த்தமுமில்லை. ஆதலால், “ஏகமேவாத்விதீயம் ப்ரஹ்மா” என்று ஸ்ருதி கோஷிக்கிறது. பின்னும், க்ராணம் ஜிஹ்வா சக்ஷு த்வக்கு ச்ரோத்ரம் இருதயம் என்னும் ஷண்முகங்களின் மூலமாய், லிங்கம் முறையே ஆசாரலிங்கம் குருலிங்கம் சிவலிங்கம் ஜங்கமலிங்கம் ப்ரசாதலிங்கம் மகாலிங்கம் என்னும் பெயர்களினால், கந்தம் ரசம் ரூபம் ஸ்பரிசம் சப்தம் த்ருப்தி ஆகிய இவைகளை அறிகிறது என்னும் விஷயத்தில், ஜீவியே அவைகளை அறிகிறவனாய் அந்த லிங்கம் இந்த ஜீவியே யாயிருப்பன். ஆதலால், “அஹம் ப்ரஹ்மாஸ்மி”, “தத்வமசி”, “அயமாத்மா ப்ரஹ்மா”, “ப்ரஜ்ஞானம் ப்ரஹ்மா” என்று வேதாந்த மகாவாக்யங்கள் முறையிடுகின்றன. முன்னரே, அங்கமே ஜீவாத்மா, லிங்கமே பரமாத்மா என்று கூறப்பட்டதன்றோ. மேற் காட்டியபடி ஜீவனே லிங்கமானதனால் ஜீவாத்ம பரமாத்மைக்யம் சொல்லப்பட்டதாயிற்று. இதே அங்கலிங்க சங்கம்; இதே சிவ ஜீவைக்யம்; இதே சிவாத்வைத ஜ்ஞான சாரம்.

பின்னும், ஸத்ஸ்வரூபமே ஆசாரலிங்கம், சித்ஸ்வரூபமே குருலிங்கம், ஆனந்த ஸ்வரூபமே சிவலிங்கம், நித்ய ஸ்வரூபமே ஜங்கமலிங்கம், பரிபூரண ஸ்வரூபமே ப்ரசாத லிங்கம், அகண்ட ஸ்வரூபமே மகாலிங்கம்|| அறிவேன் அறிந்தேன் அறியேன் என்பதிலும், காமாதி வ்ருத்திகள் தோன்றுவதிலும் தோன்றா திருப்பதிலும், இதம் என்பதற்கு தான் ஆச்ரயமாய்த் தனக்கு ஒரு வாதை யில்லாது தானுண்டென்பது சத்தாகவும், அப்படிப்பட்ட சத்தே ஆசாரலிங்கம்; ஜாக்ரம் ஸ்வப்னம் ஸுஷுப்தி என்னும் மூன்றவஸ்தைகளிலும் தோன்றத்தக்க சமஸ்த விஷயங்களை வெவ்வேறாயறிவதே சித்தாகவும், அப்படிப்பட்ட சித்தே குருலிங்கம்; தேடிப் பார்க்கவும் எவ்விடத்திலு மில்லாத நேயம் தன்னில் நிலைத்திருக்க அத்யந்த ப்ரீதிக்கு விஷயமாயிருப்பதே ஆனந்தமாகவும், அப்படிப்பட்ட ஆனந்தமே சிவலிங்கம்; ப்ராகபாவம் ப்ரத்வம்சாபாவம் அத்யந்தாபாவம் அந்யோந்யாபாவம் ஆகிய இவைகள் கடாதி ஜட பதார்த்தங்களுக்குண்டா யிருப்பதே யன்றி தனக்கில்லா திருப்பதே நித்யமாகவும், அப்படிப்பட்ட நித்யமே ஜங்கமலிங்கம்; தேச பரிச்சேதம் கால பரிச்சேதம் வஸ்துபரிச்சேதம் ஆகிய இவைகளில்லாமல் ககனாதி ப்ரபஞ்ச மெல்லாமும் தன்னிலிருப்பதென்பதே பரிபூர்ணமாகவும், அப்படிப்பட்ட பரிபூர்ணமே ப்ரசாதலிங்கம்; பரிமாணத்தை யறியவொண்ணா திருப்பதே அகண்டமாகவும், அப்படிப்பட்ட அகண்டமே மகாலிங்கம்|| ஷடக்ஷர மந்த்ரத்தில் நகாரமே ஆசாரலிங்கம், மகாரமே குருலிங்கம், சிகாரமே சிவலிங்கம், வகாரமே ஜஞ்கமலிங்கம், யகாரமே ப்ரசாதலிங்கம், ஓங்காரமே மகாலிங்கம்|| கைத்தலத்தில் பூஜையைக்கொள்ளும் இஷ்டலிங்கத்தில் வ்ருத்தமே ஆசாரலிங்கம், மத்யஸ்தானமே குருலிங்கம், கோமுகமே சிவலிங்கம் வர்த்துளமே ஜங்கமலிங்கம், நாளமே ப்ரளாதலிங்கம், பீடமே மகாலிங்கம்|| தாரணை பேதத்தினால் லிங்கம் கைத்தலத்தில் தரிக்கப்பட்டபோது ஆசாரலிங்கம், கக்ஷஸ்தலத்தில் தரிக்கப்பட்டபோது குருலிங்கம், வக்ஷஸ்தலத்தில் தரிக்கப்பட்டபோது சிவலிங்கம், மஸ்தகஸ்தலத்தில் தரிக்கப்பட்டபோது ஜங்கமலிங்கம், சிகாஸ்தலத்தில் தரிக்கப்பட்டபோது ப்ரசாத லிங்கம், அமள ஐக்கியமாய் தரிக்கப்பட்டபோது மகாலிங்கம்|| பக்தனுக்கு ஆசாரம் முக்யமானதனால் ஆசாரமே ஆசாரலிங்கம், மாகேச்வரனுக்கு குரு முக்கியமானதனால் குருவே குருலிங்கம், ப்ரசாதிக்கு சிவன் முக்கியமானதனால் சிவனே சிவலிங்கம், ப்ராணலிங்கிக்கு ஜங்கமம் முக்கியமானதனால் ஜங்கமமே ஜங்கமலிங்கம், சரணனுக்கு ப்ரசாதம் முக்கியமானதினால் ப்ரசாதமே ப்ரசாதலிங்கம், ஐக்கியனுக்கு மகம் முக்கியமானதினால் மகமே மகாலிங்கம்|| பின்னும், வீரசைவன் ஆசாரத்தில் ச்ரத்தா பக்தியுள்ளவனா யிருக்கையில் பக்தனா யிருப்பன்; அப்படிப்பட்ட ஆசாரத்தைப் போதித்த குருவினிடத்தில் நிஷ்டா பக்தியுள்ளவனா யிருக்கையில் மாகேச்வரனா யிருப்பன்; அப்படிப்பட்ட குரு கொடுத்த லிங்கத்தில் அவதான பக்தியுள்ளவனா யிருக்கையில் ப்ரசாதியா யிருப்பன்; அப்படிப்பட்ட லிங்கத்திற்கு முகமாயிருக்கும் ஜங்கமத்தில் அநுபவ பக்தியுள்ள வனாயிருக்கையில் ப்ராணலிங்கியா யிருப்பன்; முன்னர்க் கூறிய குரு லிங்க ஜங்கமங்களின் ப்ரசாதத்தில் ஆனந்த பக்தியுள்ளவனா யிருக்கையில் சரணனா யிருப்பன்; அப்படிப்பட்ட ப்ரசாதத்தினால் ப்ரகாசமாகும் மகாலிங்கத்தில் சமரச பக்தியுள்ளவனா யிருக்கையில் ஐக்யனா யிருப்பன்|| இவ்வாறு ஷடஸ்தலங்கள் ஒன்றுக் கொன்று சம்பந்தித்துக் கொண்டிருக்கின்றன.

நவலிங்க லக்ஷணம்

சரீரத்தின் குதஸ்தானத்தில் பீதவர்ணத்தின் நான்கிதழின் ( ) நகார பீஜத்தின் ப்ருதிவி அங்கத்தின் ஆதார மண்டபத்தில் க்ரியா சக்தி யுக்தமான ஆசாரலிங்கம் க்ராண முகத்தினால் கந்தத்தை க்ரகிக்கும்.

சரீரத்தின் குஹ்யஸ்தானத்தில் ச்வேதவர்ணத்தின் ஆறிதழின் ( ) மகார பீஜத்தின் அப்பு அங்கத்தின் ஸ்வாதிஷ்டான மண்டபத்தில் ஜ்ஞான சக்தி யுக்தமான குருலிங்கம் ஜிஹ்வா முகத்தினால் ரசத்தை க்ரகிக்கும்.

சரீரத்தின் நாபீஸ்தானத்தில் ரக்தவர்ணத்தின் பத்திதழின் ( ) சிகார பீஜத்தின் அக்னி அங்கத்தின் மணிபூரக மண்டபத்தில் இச்சா சக்தி யுக்தமான சிவலிங்கம் சக்ஷு முகத்தினால் ரூபத்தை க்ரகிக்கும்.

சரீரத்தின் இருதயஸ்தானத்தில் நீலவர்ணத்தின் பன்னிரண்டிதழின் ( ) வகார பீஜத்தின் வாயு அங்கத்தின் அனாகத மண்டபத்தில் ஆதிசக்தி யுக்தமான ஜங்கமலிங்கம் த்வங் முகத்தினால் ஸ்பர்சத்தை க்ரகிக்கும்.

சரீரத்தின் கண்டஸ்தானத்தில் ஸ்படிகவர்ணத்தின் பதினாறிதழின் ( ) யகார பீஜத்தின் ஆகாச அங்கத்தின் விசுத்தி மண்டபத்தில் பராசக்தி யுக்தமான ப்ரசாதலிங்கம் ச்ரோத்ர முகத்தினால் சப்தத்தை க்ரகிக்கும்.

சரீரத்தின் ப்ரூமத்யஸ்தானத்தில் மாணிக்க வர்ணத்தின் இரண்டிதழின் ( ) ஓங்கார பீஜத்தின் ஆத்ம அங்கத்தின் ஆஜ்ஞேய மண்டபத்தில் சித்சக்தி யுக்தமான மகாலிங்கம் இருதய முகத்தினால் த்ருப்தியை க்ரகிக்கும்.

சரீரத்தின் மஸ்தகஸ்தானத்தில் ப்ரபாஜ்யோதிர் வர்ணத்தின் ஆயிரவிதழின் அகார பீஜத்தின் த்யாகாங்கத்தின் ப்ரஹ்ம மண்டபத்தில் நிஷ்களலிங்கம் ஆனந்தமய மாயிருக்கும்.

சரீரத்தின் சிகாஸ்தானத்தில் மகாஜ்யோதிர் வர்ணத்தின் மூன்றிதழின் உகார பீஜத்தின் போகாங்கத்தின் சிகா மண்டபத்தில் சூந்யலிங்கம் விப்ராந்தி மயமாயிருக்கும்.

சரீரத்தின் சிகாந்தஸ்தானத்தில் அகணித ஜ்யோதிர் வர்ணத்தின் ஓழிதழின் மகார பீஜத்தின் யோகாங்கத்தின் பச்சிம மண்டபத்தில் நிரஞ்ஜன லிங்கம் நிரந்த நிராமய மாயிருக்கும்.

ஈண்டு, இச்செயுட்களைக் கவனிக்க:-

                       பிரபுலிங்க லீலை                 அங்க லிங்க மயிக்க மிதுவென                மங்க லந்தரு மாமறை யின்முடித்                தங்கு றுந்தத் துவமசி தன்பொருள்                பங்க மின்றிப் பகர்பவ ரோர்சிலர்.                 பாசமேது பசு வெனப் பட்டதே                தீசன் யார்பதி யெவ்வகை யாருயிர்க்                காசுதீர வருளு மருளுடைத்                தேசிகா வெனத் தேர்பவ ரோர்சிலர்.                 புறந்தி னஞ்செயும் பூசையி னன்றெனச்                சிறந்த கஞ்செய் தியான மருவிமெய்                மறந்தி ருந்த மனஞ்சிவ லிங்கமுற்                றிறந்தி டுந்திற மெய்தின ரோர்சிலர்.          முதனிலை முதலா மூவிரு நிலையின் மூலமா முதலவா தார         விதழவிழ் கமலப் பொகுட்டினு ணின்ற விலிங்கமோ ராறென நின்று         நுதன்மிசை யிலகு நிட்களம் போல நுவன்ற வேழாநிலை யாகு         மதன்மிசை யமல னல்லம தேவ னமர்ந்தன னமரரும் வியப்ப.          உடம்பொடு பொறிநாற் கரணமற் றுயிரென் றுரைத்திடப் படுமு பாதிகளைக்         கடந்துள நிலையிற் சோதியா யிலங்கக் கண்டிடு துரியனைப் போல         நெடுந்தவி சமைய வமைத்த செம்மணிப்பொன் னிலைகளோ ரேழையுங் கடவா        விடந்தனி விசும்பென் றல்லம னிருப்ப விருந்தவர் யாவருங் கண்டார்.          இந்தியம் விடயங் கரணமெய் யென்னு மியாவையுங் காண்கில னோங்கு         மந்தர வணைமே லிவர்ந்திருந் தருளு மண்ணலைக் கண்டவப் பொழுதே         முந்திய பரமா னந்தவா ரிதியுண் மூழ்கின னழுந்தின னம்மா         தந்திர மெவற்றுஞ் சிறந்தது சைவ தந்திர மெனு மருணந்தி.          மண்டல மவத்தை குணமபி மான மலமிவை யனைத்தையுங் கடந்துட்         கண்டிடும் வண்ணம் புறத்துநீ யெம்மைக் காணிய வமைத்தவிச் செய்கை         வெண்டிரை சுருட்டுங் கருங்கட லுலகில் வேறுளர் செய்வதன் றென்று         தொண்டர்க டுதிக்கும் வசவனைத் துதித்தான் சுரரெலாந் துதிக்குமெம் பெருமான்.          உன்னரு ளுளதேற் கமலன் மாறொழிலு மொருசிறு துரும்புசெய் கிற்கு         மென்னநல் வசவன் புகன்றுகை கூப்பி யிணைவிழி புனலுக வுருகித்         தன்னுணர் கிலனாய் வசமற நிற்பத் தண்கதிர்ச் செம்மணி குயின்ற         பொன்னரி யணைமேல் விசும்புற விருந்தான் புல்லரு மல்லம தேவன்.                                 நிரஞ்சன மாலை                 இல்லாள் புதல்வ ரனைதந்தை பொன்மண் ணிடைவிழைவு                செல்லா மருளு மயறீர்ந்து நின்கழல் சேர்ந்துனக்கே                யெல்லா முதவுநற் சித்தத் துறைகுவை யென்கையுள்ளாய்                நல்லார் புகழ்தரு மாசார லிங்கமென் னாமமுற்றே.                 பழியாம் பிறர்தம் பொருண்மனை வேட்கை பரதெய்வமோ                டொழியா வருடரு மட்டாவரண முவந்து கொண்டே                யழியா துயருநற் புத்தியெனுங்கை யமர்வை கண்டாய்                மொழியா வருங்குரு லிங்கமென் றேயென் கைமுன்னவனே.                 விடயங் களினண்ணி யானென தென்னு மிகையொருவி                யடையும் புலனினக் காக்குந் தவிரகங் காரப்பெய                ருடையங் கரமிசை நற்சிவ லிங்கமென் றுற்றனைகாண்                புடையம் பிகையொ டமர்வாயெ னங்கைப் புராந்தகனே.                 நில்லா தியங்கும் வளியொடு கூடி நிலையழிந்தே                புல்லா விடயத் தலமர னீங்குபு பொய்யினெறி                செல்லா தொளிர்நன் மனத்தே யிருத்தியென் செங்கையுள்ளாய்                கல்லா ரறிவருஞ் சங்கம நாமங் கடைப்பிடித்தே.                 உடம்பு சதிபதி தானாய் விடயங்க ளுண்டுழலா                தடங்கு சதியொரு தானாகி நீபதி யாகவுனைத்                தொடர்ந்து நுகருநன் ஞானாக் கரத்திடைத் தோன்றுவைமால்                கடந்து வரு பிரசாதமென் றேயென்கைக் கண்ணுதலே.                 யானா ரடிமை சிவனே யிறையென் றிருப்பதுபோய்                நீநா னெனப்படும் பேத மிலாமை நெறியுதவு                மானா துயர்ந்தசற் பாவத்து மாலிங்க மாகிநின்றாய்                வானா டரியவ னேகர பீடத்து மாணிக்கமே.                                 சகச நிட்டை                 சமரசம் பதிந்தகாலைத் தலமயிக் கியத்தடைந்திங்                கமரங்க மானவான்மா வந்தச்சிற் சத்தியாகி                விமலமா லிங்கந்தன்னை விளங்குநெஞ்சினிற் றரித்து                நிமலமாம் பரமானந்த நிஜதிருத் தியிற்களிக்கும்.                 ஆனந்தம் பதிந்தகாலை யச்சர ணத்தடைந்து                வானந்தத் தங்கமாகு மகபரா சத்தியாகித்                தானந்தப் பிரசாதத்தைத் தரித்துச்சோத் திரத்திலென்றும்                ஊனந்த மில்லாவின்ப வோசையிற் களிக்குமென்றும்.                 அனுபவம் பதிந்தகாலை யடைந்துநற் பிராணலிங்கத்                தெனுமங்க வாயுநின்றங் கெழிலாதி சத்தியாகி                உனுஞ்சர லிங்கந்தன்னை யொன்றுந்தொக் கினிற்றரித்துப்                பனுமந்தப் பரமானந்த பரிசத்திற் களிக்குமென்றும்.                 அவதானம் பதிந்தகாலை யடைந்தந்தப் பிரசாதத்தை                இவனான தேயுவங்க மிச்சைநற் சத்தியாகி                நவமான சிவலிங்கத்தை நயனமற்றதிற் றரித்திங்                குவமான மில்லாவின்ப வுருவினிற் களிக்குமென்றும்.                 நயிட்டியம் பதிந்த காலைநன்மயே சுரத்தடைந்து                சயித்தியசலமா மங்கந்தகு ஞான சத்தியாகி                வியப்புறுங் குருலிங்கத்தை மேவுநா வினிற்றரித்திங்                குயப்பெறு பரமானந்த வுருசியிற் களிக்குமென்றும்.                 சற்பத்தி பதிந்தகாலைத் தகும்பத்தத் தலமடைந்து                முற்பகர் தரையாமங்க மொய்யதாங் கிரியையாகித்                தற்பராசார லிங்கந்தரித்து நாசியினி லந்தச்                சிற்பரானந்த கந்தந் தேர்ந்ததிற் களிக்குமென்றும்.                 ஒருபத்தி தானே யாறாயொரு தலந்தானேயாறாய்                ஒருவங்கந் தானேயாறா யொருசத்தி தானேயாறாய்                ஒருலிங்கந் தானேயாறா யொருமுகந் தானேயாறாய்                ஒருவின்பந் தானேயாறா யொன்றதாய்க் களிக்குமென்றும்.                 அநாதியிற் சிவமேலிங்க மபினையே யங்கமாகும்                அநாதியிவ் வபினையே யிவ்வங்கம தாயிற்றென்றால்                அநாதியச் சிவமேயந்த வங்கத்திற் புறம்புந்தோன்றும்                அநாதியக் குருவத்தீக்கைக் கருத்தமு மிவையேயாகும்.                                   1                 பத்த னேமுத லயிக்கனீ றாகவே பகர்ந்த                வத்த லங்களின் றிறமுரைத் தருளினை யைய                சத்த தென்றுரை செயுமிலிங் கத்தலந் தானியா                தெத்தி றங்களி னுரைத்திடப் படுமஃ தியம்பாய்.                                          2                 தொலைந்த பந்தபத் தாதியா மறுதலந் தொடர்ந்த                விலங்கு மொண்குரு முதன்ஞான சூனிய மீறாய்ப்                பலந்த ருந்தல மேழ்தலை யிட்டவைம் பதுவு                நலந்த ரும்பொறை முனியினி நவின்றிடப் படுமால்.                                     3                 முன்ன ரொன்பதிங் குளபத்தத் தலந்தொடர் முறையா                லன்ன முன்றிகழ் தீட்சைபின் சிட்சைஞா னத்தாற்                பன்னு றுங்குரு கிரியையொண் பாவஞா னத்தான்                மன்னி லிங்கநற் றலஞ்சுய சரபரம்* வகுப்பாம்.                                          4

* ஆசாரலிங்க ஷட் பக்தர்கள் :- ஆசார லிங்கமோஹி, ஆசார லிங்கபக்தன், ஆசார லிங்கபூஜகன், ஆசார லிங்கவீரன், ஆசார லிங்கப்ரசாதி, ஆசார லிங்கப்ராணி என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், ஆசாரஹீனரான ஸ்த்ரீ புத்திரர்களை விட்டு நிர்மோஹியா யிருப்பவனே ஆசார லிங்கமோஹி, சிவாசாரத்திற்கு விருத்தமான பூர்வீகர்களின் நடத்தைகளை விட்டிருப்பவனே ஆசார லிங்கபக்தன், அந்யதேவதாபஜனையை யொழித்து லிங்கார்ச்சனா தற்பரனே ஆசார லங்கபூஜகன், கைப்பற்றிய ஆசாரத்தை ப்ராணத்யாகம் வரினும் விடாதவனே ஆசார லிங்கவீரன், சூச்யசூச்யாதி சங்கல்ப ரஹிதனே ஆசார லிங்கப்ரசாதி, சிவமாகேச்வர நிந்தைகளைச் சொல்லாமல் போற்றினவனே ஆசார லிங்கப்ராணி.

த்ரிவிதாசார லிங்கம்:- சதாசாரம், நியதாசாரம், கணாசாரம் என மூன்று வகைப்படும். இவைகளில், யாதாமொரு தன் சன்மார்க்கத்தினால் சகல சரணர்களுக்குச் சந்தோஷத்தை யுண்டாக்கச் செய்தலே சதாசாரமாம், பக்தியினால் தான் கைப்பற்றிய வ்ரதத்தை ப்ராணாந்தம் வரையிலும் நடத்துதலே நியதாசாரமாம், சிவமாகேச்வரர்களை நிந்திப்பவர்களை சிக்ஷித்தலே கணாசாரமாம்.)
 

நாற்பத்தைந்தாவது

(45) தீக்ஷாகுருஸ்தலம்

[அதாவது - எதனால் உத்க்ருஷ்டமான ஜ்ஞானம் கொடுக்கப்படுகிறதோ, மலத்ரயாதி பாசங்கள் க்ஷயமடையப்படுகிறதோ, அதே தீக்சை எனப்படும்; இவ்விதமான தீக்ஷையைச் செய்பவனே தீக்ஷாகுரு என்பது.]

                               கலிநிலைத்துறை                 யாதி னாற்பர ஞானமீந் திடப்படு மிங்ங                னோது பாசபந் தனங்கெடுத் திடப்படு மதுதான்                றீதில் தீட்சையென் றுரைத்திடப் படுமிது செய்யு                நீதி யொண்குரு மிக்கதீட் சாகுரு நிகழ்த்தன.                                            1                 கூற ருங்குணா தீதமே குகாரமாம் ருகாரம்                வேறி லங்குரூ பாதீத மென்குவர் மேலோர்                தேறி டுங்குணா தீதமா மருவருள் செய்யு                மாற டைந்தவ னியாரவன் குருவென மதிப்பாய்.                                         2                 சாத்தி ரப்பொருள் விளங்குற விரித்திடுந் தகையால்                வாய்த்த மிக்கவா சாரத்தின் வழிநிறுத் துதலாற்                சீர்த்த வச்செய றானுமா சரித்திடுஞ் செயலா                லேத்து றப்படு மென்றுமா சாரிய னென்றே.                                             3                 அத்து வாமுடி யோகமுற் றருஞ்சிவ மாகு                மெய்த்த தேசிக னேபவக் கடற்கரை விடுவோ                னெய்த்தி டாவறி வாயுல கிலங்குறு மெவனா                லத்த யாகுரு வுலகெலாம் விளக்குறு பவனாம்.                                         4  

- தீட்சாகுரு ஸ்தலம் முற்றிற்று -
* * *

 

 

நாற்பத்தாறாவது

(46) சிக்ஷாகுருஸ்தலம்

[அதாவது - மேற்கூறிய தீக்ஷாகுருவே, தான் போதகனாகவும் சீஷனைப் போத்யனாகவும் அறிந்து சீஷனுக்கு ப்ரச்நோத்தர மூலமாய் உபதேசம் செய்கையில் ஜ்ஞான முகத்துடன் சதா சாரங்களை விதிப்பதனால் சிக்ஷாகுரு என்பது.]

                               கலிநிலைத்துறை                 போத கத்தின னாகியே தனையடை புதல்வர்க்                கேத மற்றிடு கடாவினுக் தெதிர்விடை யிசைப்பாற்                றீத கற்றுசிட் சாகுருப் பெயரினைச் செறியு                மோத லுற்றதீட் சாகுரு வேயென வுணர்வாய்.                                          1                 போத கஞ்சிவ தந்திரம் போதகப் படுத                லோத ருஞ்சிவ ஞானமென் றுணர்வுற வுரைப்போன்                றீத கன்றசிட் சாகுருப் பவவிருள் சிதைக்கு                மேது விந்துவாம் வாசக னாரிய னென்பான்.                                            2                 உலக முற்றிடு மாயையை யொழித்திட வற்றா                யிலகு மத்துவி தத்தினுக் கேதுவா யிருந்த                தலைமை யிற்பதி ஞானநல் குறுமவன் றானே                புலமை பெற்றுள வாரிய னென்பவன் புவியில்.                                          3                 போத மாகிய சகவிகற் பத்தொடு பிறங்கு                மாதி பூருவ பக்கமாக் கொண்டுமுற் றறிவாற்                றீதி லாதவோ ரத்துவி தஞ்செய்தித் தாந்த                மேதை யோடுள விக்குரு பரன்குண மிகுத்தோன்.                                        4                 யாவன் வாய்மொழி யையமென் வனத்தினை யெறிய                வாவு மொண்பர சாமவன் குருசிகா மணியா                மேவு தன்மொழி யாடியில் விம்பமாய் விளங்கு                மேவின் முத்தியந் திருவுளன் பவக்கட லெடுப்பான்.                                        5                 பரிந்து சீடர்த் மகத்தினை ஞானதீ பத்தாற்                றிருந்த விங்கில குறுபவற் கொப்பிலை செப்பிற்                பொருந்து றும்பவப் பிணியினுக் கேகமாம் போத                மருந்து தந்தருள் குருபரன் வாய்க்குமோ மண்ணில்.                                     6  

- சிக்ஷாகுரு ஸ்தலம் முற்றிற்று -
* * *

 

 

நாற்பத்தேழாவது

(47) ஞானகுருத்தலம்

[அதாவது - ரகஸ்யார்த்தங்களின் போதத்தைச் செய்து சீஷனது சந்தேகத்தைப் போக்கும் இந்தச் சிக்ஷாகுருவே, ப்ரத்யக்ஷமானதும் ஜீவன் முக்தி தாயகமானதுமான சிவஜ்ஞானத்தை யுண்டுபண்ணுவதனால் ஞானகுரு என்பது.]

                               கலிநிலைத்துறை                 ஐய நீக்குப தேசஞ்செய் திவன்றிக ழறிவைச்                செய்யு முண்மையாற் பெயர்ஞான குருவெனச் செறியு                மைய லின்றியே வளரொளி மலிசிதம் பரத்தை                யுய்ய நல்குவோன் ஞானதே சிகனென வுரைப்பார்.                                         1                 தேய்ந்து தானல மருமதி மறுவொடு செறியும்                வாய்ந்த ஞானமா மதிமறு வற்றது மருங்கிற்                சேர்ந்த வல்லிரு ளகற்றுவ தொளிமணித் தீப                மேய்ந்த ஞானநல் விளக்கிரு ளிரிப்பதெவ் விடத்தும்.                                    2                 அனைத்தி னுக்குமோர் காரண மாகிய வறிவை                நுனித்து ரைத்தருள் குரவனே சிவனரு ணோக்காம்                பனிக்க திர்க்குஞா னக்கடல் பொங்குறப் பவமாந்                தனித்தி ருட்டற வருகுரு ஞானபா ரகனால்.                                             3                 பொங்கு செங்கதிர்ப் புறத்துநின் றிணைவிழி புதைக்குங்                கங்குல் வல்லிரு ளொன்றையே போக்குறுங் கருதி                னிங்கு நல்லருண் ஞானதே சிகனெனு மிரவி                தங்கு முள்ளொடு புறத்துறு மிருளெலாந் தள்ளும்.                                         4                 கடைக்க ணோக்கினாற் றியாநாதி கற்பனை யின்றி                யடுக்கு மோர்சிவ வேதக மாக்குறு மறிவை                விடுக்கு மாலுடை யுயர்சீவன் முத்தனாய் மேவக்                கொடுக்கு மாரியன் ஞானசா கரனெனக் குறிப்பாய்.                                         5                         பிரபுலிங்க லீலை          இவ்வா றருளாற் றனையுணர்த்தி யிருந்த ஞான வியல்வீர         சைவா சிரிய னல்லமனித் தரையிற் பருவந் தலைசிறப்ப         வுய்வா னினைந்து தனைநோக்கி யுற்ற வடியார்க் குபதேசஞ்         செய்வா னியன்ற வடிவொடுசென் றருள்செய் செயல்செய் துலாவினான்.  

- ஞானகுருத்தலம் முற்றிற்று -
* * *

 

 

நாற்பத்தெட்டாவது

(48) கிரியாலிங்கத்தலம்

[அதாவது - ஜ்ஞானகுருவினா லுண்டான ஜ்ஞானத்தினால் ஆசக்தனாய்ச் செய்யும் எல்லா சத்க்ரியைகளும் எந்த வஸ்துவினிடத்தில் லயமடைகிறதோ, அந்த வஸ்துவாகிய இஷ்டலிங்கமே கிரியாலிங்கம் என்பது.]

                               கலிநிலைத்துறை                 ஞான தேசிகன் ஞானயோ கங்கொடு நண்ணி                மான மேவிய கிரியையெவ் விடத்தினின் மாயு                மான விங்கது தான்கிரி யாலிங்க மாமென்                றூன மின்றிய நூன்முறை யுணர்ந்தவ ருரைப்பார்.                                         1                 அறிவு மேனியா யுண்மையா யானந்த வடிவாய்ப்                பொறியு றாவொரு பிரமமே கிரியையின் பொருட்டுக்                 குறியு றாவரு மிலிங்கமென் றாதலாற் கொண்ட                மறிவி லாவிலிங் கார்ச்சனை பலமெலாம் வழங்கும்.                                    2                 யாக மாதிய கிரியைகள் யாவையும் விடுத்து                யோக மாதவர் சித்தர்கள் யாவரு முவந்தே                யேக மாகிய விலிங்கபூ சனையையே யிசைவ                ராகை யாலிலிங் கஞ்சிறந் தொப்பிலா தாகும்.                                           3                 அரிய மாதவ மியாகங்க ளாற்பய னென்கொல்                பெருகு மாதர விலிங்கபூ சனையினிற் பெற்றான்                கிரியை யாவையுந் தரும்பல மவனரோ கிடைந்ததான்                றெரியி லோவவற் கரிதென லில்லையோர் சிறிதும்.                                       4                 வேதன் மான்முத லாகிய விண்ணவர் குழாமுந்                தீதி லாதுயர் சித்தர்தங் கணங்களுஞ் சிறந்த                போத மாகிய விலிங்கபூ சனையினைப் புரிந்து                பேத மாயதம் பதமொடு தந்தொழில் பெற்றார்.                                          5  

- கிரியாலிங்கத்தலம் முற்றிற்று -
* * *

 

 

நாற்பத்தொன்பதாவது

(49) பாவலிங்கத்தலம்

[அதாவது - க்ரியாலிங்கம் க்ரியைகளுக்கு எவ்வாறு லயஸ்தானமோ, அவ்வாறு பிராணலிங்கம் மனோலயத்திற்கு ஸ்தானமாயுள்ளதே பாவலிங்கம் என்பது.]

                               கலிநிலைத்துறை                 கிரியை யெவ்வண மிலயமுற் றிட்டது கிளத்தி                னரிய பாவமு மவ்வகை யவ்விடத் தடங்கு                முரிய தாமது வேபாவ லிங்கமென் றுரைப்பர்                தெரிய நூல்பல கற்றுணர் வுடையதே சிகரே.                                            1                 பகவ னாகிய பரசிவன் பாவமுற் றிடுவன்                றிகழ்ப ராபரற் கனையதாற் செய்திடுஞ் செயலெ                னிகரி லாதவவ் விறையவ னித்தபூ ரணனாந்                தகையு ளானென வுள்கவென் றமறை சாற்றும்.                                         2                 கண்டி தப்படா வறிவுரு வாகிய கடவுள்                கொண்டு பத்தர்செய் துறுமுப சாரமே கொள்வான்                விண்ட வத்துயர்ப் பாவத்தின் விளங்குறு மென்று                பண்டு கற்றறி நல்லிசைப் புலவர்தாம் பகர்வார்.                                         3                 மண்ணி லஞ்சிலை முதலிய கொண்டுதாம் வகுத்துப்                பண்ணு றுஞ்செய லிலிங்கமெங் கதினிகழ் பாவ                நண்ணி லிங்கமே சிறந்தது ஞானகா ரணமா                யெண்ணு றுங்குறை யின்றியே யமைவுறு மியல்பால்.                                   4                 புறத்தி லிங்கம்விட் டுளத்தினிற் போதலிங் கத்தை                மறப்ப றும்படி வைத்துளிப் பாவமென் மலராற்                சிறப்பு றுஞ்சிவ பூசனை யன்பொடு செய்யு                மறப்பெ ருந்தகை தனைப்பாவ லிங்கியென் றறிவாய்.                                    5                 மருவு மாதியா தாரநன் மனமலர் வரிவிற்                புருவ நாப்பணென் றுரைத்திடப் பொருந்திவற் றொடுன்றிற்                றிரிவி னல்விளக் குருவமாஞ் சிவன்றனைப் பாவ                வுருவ நற்பொருள் கொண்டருச் சிப்பவன் யோகி.                                        6                 மரங்கல் மண்ணினால் வகுத்துள விலிங்கவந் தனையைப்                புரிந்தி டானனு பூகியாற் பரஞ்சுடர்ப் புணர்வோன்                விரிந்தி டுங்கிரி யாபூசை புல்லறி வினர்க்கந்                தரங்க பூசனை யுரித்து மெய்ஞ் ஞானிக டமக்கே.                                        7  

- பாவவலிங்கத்தலம் முற்றிற்று -
* * *

 

 

ஐம்பதாவது

(50) ஞானலிங்கத்தலம்

[அதாவது - மேற்கூறிய ப்ராண லிங்கத்தை ப்ரகாசப்படுத்தும் ஜ்ஞானம் லயமா யுள்ளதும், ஜ்ஞானத்திற்கு ஆச்ரயபூதமா யுள்ளதும், சாஸ்த்ரவிசாரம் குருவசனம் ஸ்வாநுபவங்களினால் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்கள் என்னும் மூர்த்திகளைக் கடந்ததும், சாத்விகம் ராஜசம் தாமசம் ஆகிய முக்குணங்களைக் கடந்ததுமாக அறியப்பட்டுள்ள வஸ்துவே ஞானலிங்கம் என்பது.]

                               கலிநிலைத்துறை                 அன்ன பாவஞா பகஞான மெவ்விடத் தடங்கி                மன்னி நின்றிடு மதுஞான லிங்கமா மதிக்கி                னென்ன விங்குரை யாடுவர் நன்றுற விலங்க                வுன்ன ருஞ்சிவ தத்துவ முணர்ந்திடு முரவோர்.                                         1                 முக்கு ணங்கண் மும்மூர்த்திகள் கடந்துணர் முதன்மை                தக்கு றும்பரப் பிரமமே ஞானலிங்க கந்தான்                பக்க தூலசூக் குமங்களிற் கிரியைநற் பாவம்                புக்கு றும்மபராற் பரத்தினின் ஞானமே பொருந்தும்.                                        2                 தூல சூக்கும வுருவங்கள் கற்பனை சொல்லின்                மேல தாம்பரஞ் சுடர்க்கவற் றால்விளை பயனென்                மாலி லாதுயர் ஞானலிங் கத்தையே மதிக்க                நூலெ லாமொரு வந்தமிங் குரைத்திடு நுனித்து.                                         3                 சிறந்த சச்சிதா னந்தமெய்ச் சோதியாஞ் சிவனை                யறிந்து ளானெவ னவன்ஞா னலிங்கியென் றறிவாய்                புறந்த ருஞ்செயற் கிரியையும் பாவமும் போக்கி                நிறைந்தி டுஞ்சிவ மடைப வனேமுத்த னிகழ்த்தின்.                                        4  

- ஞானலிங்கத்தலம் முற்றிற்று -
* * *

 

 

ஐம்பத்தொன்றாவது

(51) சுயத்தலம்

[அதாவது - ஜ்ஞானலிங்கமுள்ளவனே ஸ்வயஸ்தலத்தை யடையப் பெற்றவனும், ப்ராண லிங்கத்தை ப்ரகாசப்படுத்தும் ஜ்ஞானத்திற்கு லயஸ்தானமாகி அந்த ஜ்ஞானலிங்கத்தை யடைந்தவனும், ஸ்வேச்சாசார சந்துஷ்டி விஷயாதி மமகார ராஹித்ய முதலிய குணங்களோடு கூடினவனும், ஸ்வயலிங்க மென்னுமபிதான முள்ளவனும், ப்ரபஞ்சக் கூட்டுறவினின்றும் விடப்பட்ட வனுமாயினும் க்ரியையுள்ளவனாய்க் காணப்படுபவனாதலால் சுயன் என்பது.]

                               கலிநிலைத்துறை                 பாவ ஞாபக ஞானமெய்ஞ் ஞானத்தின் பாற்போய்                மேவி யேயொடுங் குறுமந்த ஞானவான் விளம்பிற்                பூவின் மேவுறுஞ் சுயனாம மென்னவே புகல்வர்                காவி வாணெடுங் கண்ணுமை பங்கனூல் கற்றோர்.                                        1                 சோதி லிங்கதற் பரனுமாய்த் தோன்றுறு முலக                மியாது மோர்சிவ மயமெனக் கண்டுதன் னிச்சை                நீதி செய்துறு மொருமுனி புங்கவ னிகழத்தி                னாதி யாயுயர் சுயனாம முடையவ னாகும்.                                             2                 பிச்சை யூணடைந் தொழிந்தவாங் காரமும் பெற்று                நிச்ச மிந்திய மவித்துறு கிலேசங்க ணீக்கி                நச்சு பூதிய னாகியே நடுநிலை நண்ணி                யிச்சை யோடுவர்ப் பிலான்பர முத்தனென் றிசைப்பர்.                                    3                 துன்ப வெம்பவ நேமியிற் சுழன்றிடு பவரைத்                தன்பெ ருங்கணிற் கண்டிறும் பூதொடு சார்வுற்                றின்ப வெள்ளத்தின் மூழ்கினோ னாகியே யிருப்பன்                முன்ப கர்ந்துள நிலையிடை நின்றிடு முனிவன்.                                         4                 நண்ணு றுஞ்சிவத் தியானநற் சைவஞா னந்தா                னுண்ணு றுஞ்செயற் பிச்சையே காந்தசீ லத்தோ                டெண்ணு மிங்கிவை நான்கையு மன்றிமே லெண்ணப்                பண்ணு றுஞ்செய லொன்றிலை பரமயோ கிக்கே.                                        5  

- சுலயத்தலம் முற்றிற்று -
* * *

 

 

ஐம்பத்திரண்டாவது

(52) சரத்தலம்

[அதாவது - மேற்கூறிய ஸ்வயலிங்க சம்பந்நனானவனே அகங்கார மமகாரங்கள் சூன்யமான தனால் தன் ஜ்ஞான ரூபமொன்றையே தரித்தவனாகவும், சாக்ஷாத் சிவஸ்வரூபனாகவும் சரிக்கின் றானாதலால் சரன் என்பது.]

                               கலிநிலைத்துறை                 ஒழிந்து போகுமாங் காரமு மமதையு முளனாய்                மொழிந்தி டாததன் சொரூபஞா னத்தினின் முதிர்ந்தோன்                றழங்கு வேலைசூ ழுலகினிற் றானேதா னாகி                வழங்க வேசரித் திடுதலாற் சரப்பெயர் மருவும்.                                         1                 தீர்ந்த காமமே முதலன செறிந்துயர் சாந்தி                தாந்தி யோடெலாஞ் சிவமய மாகவே சார்ந்து                போந்து வீதுயர் வீதிழி வென்பது போக்கிச்                சார்ந்தி டுஞ்சம புத்தியாற் சரித்திடும் யோகி.                                            2                 அரிய கூடத்த னாயதன் னிலையினை யடைந்த                துரிய யோகிதான் றனைத்தொழு வாரிடைத் தோன்றும்                பரிவு றானிகழ்ந் தவரிடை வெறுத்துளம் பகைக்குந்                திரிவி லானொரு பரிசினாற் சரித்திடல் செய்யும்.                                        3                 மாயை பெற்றிடாக் குணமொடு மருவியே யென்று                மாய வத்துவி தானந்தப் பெருங்களிப் படைந்த                தூய மெய்ச்சிவ யோகிதான் றொல்சக நகைத்துச்                சாயு மற்றுள வுடம்பிபோற் சரித்திடு மன்றே.                                           4                 விதிவி லக்கினிற் பட்டிடா வொருஞான வீரன்                கதிய டுத்திடு புண்ணிய பாவமுங் கருதான்                மதிம யக்குறு மாயைவாழ் வினையுள மதியா                னதிக வத்துவி தானந்த முற்றக மகிழ்வான்.                                            5  

- சரத்தலம் முற்றிற்று -
* * *

 

 

ஐம்பத்து மூன்றாவது

(53) பரத்தலம்

[அதாவது - சரலிங்கயோகியே தானே தானான பாவத்தையடைந்து சஞ்சரிப்பதனாலும், தன்னைவிட வேறொரு பதார்த்தமில்லை யென்பதனாலும், கடந்த வர்ணாச்ரம முள்ளவனா யிருப்பதனாலும் பரன் என்பது.]

                               கலிநிலைத்துறை                 வேண்டு மாறுதான் சரித்திடும் விமலநல் யோகி                யீண்டு தன்சொரூ பந்தனிற் பரமிலை யென்னு                மாண்ட ஞானத்தி னுக்குயர் பரமரூஉ மெனவே                நீண்ட நூற்பொரு ளுணர்ந்துளோர் நிகழ்த்துவ ரன்றே.                                    1                 தன்னை யேபரத் துவத்தினாற் பாவிக்குந் தகையா                னென்ன வாயின தொழில்களுஞ் சுதந்தரத் தியற்றி                யின்ன லாமுல கினையொரு பொருளென வெண்ணான்                வன்ன மாச்சிர மங்களா சாரங்கள் மதியான்.                                             2                 உருவ ஞானமா யுலகிறந் தொருசிவ மென்னப்                பரவு றும்பரப் பிரமமே நானெனப் பார்க்கு                முரவ னேயுயர்ந் தோனுல குறுமய லொழித்துக்                கரவி லாததன் சொரூபமே காண்பவன் முத்தன்.                                         3                 பன்ன ருங்கரு மங்கடந் துளவொரு பதத்திற்                றன்னை யொண்சிவ மாகக்கண் டிருப்பவன் றனக்கு                முன்னு றுங்கரு மத்துறு பதத்தயன் முதலோ                ரென்ன செய்கில ரேவலென் றிசைப்பதற் கிசைந்து.                                        4                 விட்ட தேகமா னத்தினை யுடையவன் வேண்டு                மிட்ட மாகிய நெறியினிற் சரித்திரு வினையுட்                பட்டு ளோர்க்குறு தரிசன பரிசனங் களினாற்                கட்டு மாய்வுறச் செய்வனென் றியம்புவர் கற்றோர்.                                        5                 மயலிலா தசச் சிதானந்த வடிவமாஞ் சிவத்தி                லயலி லாதவோர் சமானதை யடைந்துள யோகி                செயலெ லாந்தன திச்சையாச் செய்துதே சிகன்போற்                சயமு றாவுயிர் முத்தனாய் வியப்பொடு சரிக்கும்.                                         6  

- பரத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் க்ரியாலிங்கம், பாவலிங்கம், ஜ்ஞானலிங்கம், ஸ்வயன், சரன், பரன் என்னும் ஆறு ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடி யிருத்தலால், சிதானந்த வடிவமாகிய பரசிவத்தில் சமத்வம் எய்தித் தனது இச்சையின்படி சஞ்சரிக்கும் ஜீவன் முக்தனும், அங்கஸ்தலத்து முதலாமவனுமான பக்தனே ஆசாரலிங்க பக்தன் என்று அறியப்பட்டான்.

1 - வது ஆசாரலிங்கத்தலம் முற்றும்
- - - - - -

 

·  முதல் பாகம் : பாயிரம்

·  மூன்றாம் பாகம் : குருலிங்கத் தலம்

 

Related Content

பிரபுலிங்க லீலை - பகுதி-1 - Prabhulinga leelai - Part-I

பிரபு லிங்கலீலை - பகுதி-2 - Prabulingaleelai - Part-II

பிரபுலிங்கலீலை - மூன்றாம் பகுதி - Third part of Prabhulingal

குமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை

சித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்