உ
திருச்சிற்றம்பலம்.
விருத்தாசலத்தில் ஸ்ரீபெரியநாயகியார்
வரப்பிரசாதியாயெழுந்தருளியிருந்த
ஸ்ரீகுமாரதேவர் திருவாய்மலர்ந்தருளிய
சாத்திரக்கோவை
இஃது,
சிதம்பரம் கருணானந்தசுவாமிகள் அவர்களால் பரிசோதித்துச்
சிந்தாத்திரிப்பேட்டையிலிருக்கும் பிரபாகர அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1868ம் வருடம்
குமாரதேவர் அருளிச்செய்த சாத்திரங்கள் 16
1. மகாராஜா துறவு. - 127 |
9. வேதநெறியகவல். |
--------
உ
குருவே துணை.
குமாரதேவர் அருளிச்செய்த சாத்திரங்கள் பதினாறினுள் முதலாவது :
1. மகாராஜா துறவு.
(காப்பு) |
1 |
குருவணக்கம். |
2 |
பாயிரம். |
1 |
(வேறு - விருத்தாம்பிகை துதி.) |
2 |
(சபாநாயகர் துதி) |
3 |
(வேறு - சிவகாமியம்மை துதி) |
4 |
(வேறு - விநாயகர் துதி.) |
5 |
(வேறு - சுப்பிரமணியர் துதி.) |
6 |
(வேறு - அடியார்துதி.) |
7 |
(வேறு - அவையடக்கம்.) |
8 |
(வேறு) |
9 |
(வேறு - வாழ்த்து.) |
10 |
பாயிரமுற்றிற்று.
நூல்
நைமிசாரணியரிஷிகள் |
11 |
(இது-முதல்.எ-பாட்டு-அரசன்சிறப்பு) |
12 |
(வேறு.) |
13 |
(வேறு.) |
14 |
(வேறு.) |
15 |
அரசர்தம்முடியுழுதவிருந்தாளினான் |
16 |
(வேறு.) |
17 |
இந்திரனாலயம் போலிலங்கிய மண்டபத்தில் |
18 |
(அரசன்றனக்குப் புத்திரனின்மையால் வியாகுலமுற்றது) |
19 |
(இது முதல் உ-பாட்டு தீர்த்தயாத்திரை |
20 |
ஆலயஞ்சாலையக் கிராரநந்தன வனங்கள் |
21 |
(இது - முதல் உ - பாட்டு |
22 |
(வேறு.) |
23 |
(இரதபரீக்ஷைமுதலியவற்றிற் பயிற்றுவித்தபின் |
24 |
(அரசர்களுக்கு விவாகபத்திரமனுப்புதல்.) |
25 |
(வேறு.) |
26 |
(வேறு.) |
27 |
(இது - முதல் 3 - பாட்டு |
28 |
மூவுலகதனிலுள்ள முகிழ்முலைக் கருங்கட்செவ்வாய்ப் |
29 |
(வேறு.) |
30 |
(மகாராஜனுக்குப்பட்டாபிஷேகஞ்செய்தல்.) |
31 |
(மகாராஜன் மனைவியோடு வாழ்ந்திருந்தானெனச் |
32 |
(இது - முதல் 2 - பாட்டு - |
33 |
தனியிடமதனிலிருந்திருவர்களுந்தங் |
34 |
(இது-முதல்-3-பாட்டு- |
35 |
மனைதனிலாசைபொருந்தியேநின்று |
36 |
வேதவாகமசாத்திரபுராணங்கள் |
37 |
(சற்குருவையடைந்து விண்ணப்பங்கூறல்.) |
38 |
(சற்குருமாணாக்கனுக்கு உபதேசித்தல்.) |
39 |
(மகாராஜன் சிலகாலத்தின்பின் தனித்திருந்து |
40 |
(இது-முதல்-2-பாட்டு-தன்னைவந்துகண்ட |
41 |
ஆண்டதோரரசுதனிலும்போகத்து |
42 |
(இது-முதல்-3-பாட்டு-இராச்சியத்தைவிடலாகா |
43 |
அலதுநீயேகி னவனியுங் காப்பற்றவத்திலே |
44 |
இவ்வரசியற்கை யற்பமற்றிதனாலெய்திடுந் |
45 |
(மகாராஜன் நகரைவிட்டுப்போம்போது |
46 |
(இது-முதல். 2-பாட்டு-நகரத்தாருடைய |
47 |
வினையுளவளவுங் கூடியேநிற்கும் |
48 |
உறவினர்கள் தமதுறவு பாராட்டி- |
49 |
(வேறு) (அரசன் உறவுபகை வேறெனல்.) |
50 |
(தாய்தந்தையர் அரசனைத்தடுத்தல்.) |
51 |
(அரசன்நீவிர் தாய்தந்தையரன்றெனல்.) |
52 |
(மனைவிவந்து தடுத்தல்.) |
53 |
(அரசன் நாயகன் வேறெனல்.) |
54 |
(மனைவிபெண்களுக்குக் கணவனையின்றிக் |
55 |
(அரசன் மறுத்துச்செல்லல்.) |
56 |
(இது-முதல்.2-பாட்டு-மனைவிபுலம்பிக்கொண்டு |
57 |
வேந்தனேயுனைவிடுத்து முலகமதி |
58 |
(இது-முதல்.4.பாட்டு- |
59 |
(வேறு.) |
60 |
பொருந்திவாழிடமொன்றாகிற் |
61 |
தோன்றிடு முலகமெங்கே தோன்றிடு |
62 |
தோன்றிடும் பொருள்களுண்டாய்த் |
63 |
கடிநகர்தோறுஞ் சென்றுங்கானகந் தோறுஞ்சென்றும்- |
64 |
முத்தியேவடிவமான முடியுடைவேந்தா வேந்தன்- |
65 |
தன்னையேயன்றியொன்றுந்தானுதியாவிடத்தின்- |
66 |
உலகினைவேறதாகவுணர்ந்திடிற்பந்தமாகும், |
67 |
ஏகசக்கரமதாக விருந்தரசாள்வோன் செல்வப் |
68 |
பந்தம்வீடென்றுமில்லை பரம்பொருளொன்றேயென்றும்- |
69 |
குறைவிலாநிறைவதாகிக்குளிர்ந்திளைப்பாறிவேந்தன், |
70 |
எங்குமாய் நிறைந்துநின்ற வேகராச்சியம தாள்வோன்- |
71 |
சீவன்முத்தர்கள் பானிற்குஞ் செப்பியமனத்தரூபம், |
72 |
(இது-முதல்-4-பாட்டு |
73 |
பூவணையாகி வானம் பொருந்துமே மேற்கட்டியாகித், |
74 |
ரதமுதற்சேனை சூழரத்ந சிங்காசனத்தில், |
75 |
கரிரதமிவர்தலின்றிக் கானடையாகி யெங்கும், |
76 |
(இது-முதல்-2பாட்டு-மந்திரி அரசனைவினாவுதல்.) |
77 |
பதத்தினை வேண்டின்முன்னம் பற்றிநின்நில்லறத்தைப்- |
78 |
(இது-முதல்-34-பாட்டு-அரசன்மந்திரிக்கு உத்தரங்கூறல்.) |
79 |
பதமதைவேண்டினில்லைப் பதப்படநிறுத்தியேகல், |
80 |
மனமிரு பொருளைப்பற்ற மாட்டாதட்டாவதான |
81 |
வேறு. |
82 |
பாசந்தான் பகையதாகப் பார்வை பெற்றிடிற்பாசத்தில்- |
83 |
அந்தமாதியு மிலாவீடடைந்துடற் பிறப்பறுக்கச் |
84 |
வேறு. |
85 |
பாலனான பருவம்போம்பன்னு குமாரப்பருவம்போம்- |
86 |
கருவினின்று மகிழ்ந்து போங்கண்ட குழந்தையினுங்குமரப்- |
87 |
பஞ்சபூதமழிந்துபோம் பானுத்திங்களுடுக்கள்போம்- |
88 |
தோலிரத்தமெலும்பிறைச்சிசுக்கல |
89 |
அரந்தையதனை யொழுங்காக |
90 |
விருத்தபருவ மிகத்துன்பம் விளங்குமிளமை |
91 |
தந்தை தாயராசிரியர் தாங்கண் முனிதறனக்கஞ்சிச்- |
92 |
பொருளுண்டாகிற் காப்பதனாற் பொருந்துந்துன்பமரசாகின்- |
93 |
மாகர்க்கசுரர் பகையுளது மகிழ்ச்சிவாட்டமிகவுமுள- |
94 |
தேவர்மனிதர் துன்பத்தின் றிறங்களிவ் வாறாகியிடில்- |
95 |
(வேறு.) |
96 |
பொய்யென்றிதனை யறிந்தோர் பொருந்திநிற்பதுளதோ- |
97 |
பொய்யை மெய்யென்றறிந்து போதமின்மையாலே- |
98 |
துன்பந்தோன்றி லெவருந் துறந்தேகராய்த்தனித்தே- |
99 |
இழிவை யுணர்ந்தாலுணர்வை யெவருந்தேடிநோக்கும்- |
100 |
பேதவாதிகளைப் போற்பிரபஞ்சம் வேறெனவே, |
101 |
இருந்தவிடத்தி லிருந்தே யெய்தலாமென் றுரைக்கில்- |
102 |
முனமேமனைத்து முடித்துமுழுது முணர்ந்தோரில்லின், |
103 |
ஒருத்தனோரூருளனை யொருவெந்தரக் கின்முன்னம்- |
104 |
(வேறு) |
105 |
தீதுறுமனையின் பினையிகழ்ந்தந்தச் |
106 |
இல்லற மதனிலுறைந்துளோரிடத்தி |
107 |
முனமனைவர்களு முறைவதுமில்ல |
108 |
ஆடிய சகலமடங்குகேவலமு |
109 |
வினைகளோரிரண்டுஞ் சமமதாய்ஞான |
110 |
விடையவின்பதனினசையுளோர் தமக்கும் |
111 |
பற்றிலையாயினவை யினிலிருப்பேன் |
112 |
பவமதை யினிமை யெனவெணி விடையம் |
113 |
கொடிமுதல்வாடும்வேர் முழுதினையுங் |
114 |
ஆணவமதனைத் தோய்ந்திடவினை |
115 |
(வேறு.) |
116 |
கதிரவன் முன்னிருளிருக்கு நயனமுடை |
117 |
இங்குறைந்த பாண்டமதின்வாதனையில் |
118 |
உணர்வுடைய ஞானியெவை புரிந்திடினுமிழி |
119 |
கருவயிற்றை யுடையதுவுங் கனவயிற்றை |
120 |
அருச்சுனற் குமிராமருக்கு மதிகாரமவை |
121 |
(பின்பு அரசன் சமாதியிலிருக்கக்கண்டு மந்திரி அதிசயித்தல்.) |
122 |
மந்திரிசென்றுநகரத்தாருக்கு அரசன்தன்மைகூறல். |
122 |
(இது-முதல்.2-பாட்டு-கேட்டோர்கள் அரசனைக்கண்டவிடத்து |
124 |
வந்தபேர்களுடன் வார்த்தை மலரா திருப்பதவரறிந்து- |
125 |
நூற்பயன் (வேறு.) |
126 |
(வேறு.) |
127 |
முதலாவது - மகாராஜாதுறவு-முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.
ஆக-பாடல்-127
உ
சிவமயம்
2. சுத்தசாதகம்.
காப்பு
பாயிரம்
ஆழத்துப்பிள்ளையார் துதி |
1 |
(வேறு.)விருத்தாசலேஸ்வரர் துதி. |
2 |
பெரியநாயகியார் துதி. |
3 |
இதுவுமது. |
4 |
நூல்வரலாறு. |
5 |
இதுவுமது. |
6 |
பாயிரமுற்றும்.
நூல்.
ஈசனதுரையுங் கிரியையதென்று |
7 |
கிரியையினெறியை யிலங்கிடவியம்புங் |
8 |
இருக்கு முன்னான்கின்முடிவி லெண்ணான்கா |
9 |
முத்தியாமிடத்துமும்முத லென்றே |
10 |
சைவ நன்னெறியுந் தந்திரமவையுந் |
11 |
|
12 |
பந்தமதகன்று சுத்தமாயிருத்தல் |
13 |
பந்தமதுறுமான்மாவையே நோக்கிப் பந்த |
14 |
முன்பத சிருட்டிப் பதிபசுபாச மூன்றையு |
15 |
முன்பதமானதொம்பதப் பசுவே |
16 |
கங்கையுமிடைச்சேரியு மொன்றுக்கொன்று |
17 |
சீவனது பாதியீசனதுபாதி தீர்ந்து |
18 |
விட்டலக்கணையும் விடாதலக் கணையும்விட்டு |
19 |
தத்துவ மசியென்றுரைக்கு முப்பதத்திற்றகு |
20 |
சுத்தமாய் நின்றாலிச்சை சுத்தியதாந் |
21 |
தொம்பதம் விளங்கின்மேல் வினைமறத்த |
22 |
அடுத்த மற்றிரண்டு சனனத்தில் வீட்டை |
23 |
ஒடுங்கிடுங்காலந் தோன்றினவடைவினொடுங்கிடு |
24 |
மேலொருவடிவை யெடுத்ததேயாகின் |
25 |
சூக்கும மதனினின்று முன்வினையிற் |
26 |
தூலவிவ் வுடலைவிடுத்து நில்லாது |
27 |
வினையினிலெடுத்த விவ்வுடன் மேலும் |
28 |
சீவசிற்றறிவுமிம் முத்தவறிவாய்த் |
29 |
பிறாரத்த முடன்பாடென்றெந்த நெறியும் |
30 |
அன்னைதன் முலைப்பாலருந்திடும் பருவமகன்றப் |
31 |
இந்த நல்லொழுங்கின் முன்னிருபதமு |
32 |
முத்தியிற் சிவமு முயிரிரண்டாகின் |
33 |
சச்சிதானந்தத் தற்பரசிவமே தனது |
34 |
ஏகமாயசையாத் தற்பரலிங்கமி |
35 |
சலமதுதானே திரண்டுப்பதாயச் சலம்வந்துள் |
36 |
சரமந்தவிருளிலிருந் திடுங்காலைத் |
37 |
இருள்வடிவதுவு மருள்வடிவதெனிலெய்தியே |
38 |
அருளுறுவடிவே முன்னியல்பான்மா |
39 |
மருள்வடிவதனில் னீங்குதலின்றி |
40 |
இருளினிற் பகுப்பின் றியசட்மயமாமிம் |
41 |
வடிவதின்விருள தாய்நிற்குங் காலை மன்னுயிர் |
42 |
இருளுறு பசுவதாய் நிற்குங்காலை |
43 |
இருளதுவாகி நிகழ்ந்திடுங் காலையிரும் |
44 |
அரியவவ் வருளேமூன்றியல் பதுவு |
45 |
பிரணவமதுவு மூன்றியல்பதுவும் பிறங்கு |
46 |
மருளுறுமாயை யதுவுமூன்றியல்பும் |
47 |
ஐந்துநற்குறியு மூன்றியல்பதுவுமாகிய |
48 |
உருவமா முணவே யெதிரதாமுபைய |
49 |
உருவமா முணவாலுருவ மாமுடைய |
50 |
அன்னிய தசையை யருந்துதன் மனிதர்க்கடாது |
51 |
அசுத்தவிவ் வுணவே புசித்திடுமளவு |
52 |
திரிவித குணத்திற்றாமதமோகந் |
53 |
அன்னைதன் வயிற்றிற் புசித்தவக் குணமாயாக்கையும் |
54 |
உலகினில் விடைய விச்சையை |
55 |
தமகுணப்புசிப்பே மயக்கத்தையளிக்குந் |
56 |
அடிசின்முன்னுரைக்குமறுசுவையவையை- |
57 |
இடம்பொருளேவன்மூன்றையு |
58 |
தந்திரகிரியைநெறிதனிலிசன்றந்திடப் |
59 |
இருவகைநெறியும்வரவுபோக்குடைத்- |
60 |
முன்புறுநிட்டைசவிகற்பமாகி- |
61 |
சவிகற்பநிருவிகற்பநிட்டையதுஞ் |
62 |
சகசநன்னிட்டையியல்புதம்முயற்சி- |
63 |
அருளண்டமாகி லுயிர்பிண்டமாகு |
64 |
இருளினிலிருந்தும் பருவம்வந்ததற் |
65 |
மருள்வடிவதற்குமஃதைநானென்றே |
66 |
சாக்கிரமதனினிற்குந்தத்துவத்திற் |
67 |
மருள்வடிவாகியிருந்திடுமிடமு- |
68 |
சகசநிட்டையது லபித்திடுங்காலை |
69 |
அருளொளியிச்சைய துதனிலு |
70 |
இருளுறுமவத்தையடைந்தெங்கு |
71 |
மாயையிதடைந்தபின்பிருளவத்தை |
72 |
இருளினிலடைந்துதானுமவ்- |
73 |
சத்துவகுண மேவருத்தனையாகித்தங்கியே |
74 |
ஆதலிற்சகலகேவல சுத்தமடைந்திடலிங்கு |
75 |
சீவனிம்மாயை தனின்முத்த னருளிற் |
76 |
அந்தர வடிவசீவன் முத்தர்களிவ் |
77 |
எங்கெங்கு நோக்கின் மருண்மயமாகி |
78 |
அருள்வடிவதுவே பார்வையிற்றொக்கி |
79 |
பழுதையிற்கிளிஞ்சில் கட்டையினின்றும் |
80 |
கனவதுபோல் விவகாரமுண்டென்னிற் |
81 |
சொற்பன மதனிற்கனவி தென்றிடுமோர் |
82 |
வெந்துறுபடமும் வறுத்திடும்வித்தும் |
83 |
மண்ணினிற்றடுக் கச்சலத்தினின்னைக் |
84 |
மூன்றுநற்சுடரினின்னை யொப்பவராய் |
85 |
அகவிருண்மாயைக் கருமமிம்மூன்று |
86 |
பிரணவவமுதே புசித்தனுதினமும் |
87 |
தேகமும்பொறியுங்கரணமு |
88 |
இக்குலந்தனக்கிச் சமையமதென்று |
89 |
அன்னிய சத்தங்க வருதலகற்றி |
90 |
அன்னியற் கையில் வாங்குதலகற்றி |
91 |
சமைய நற்கிரியையனைத்தையும் விடினுந் |
92 |
புரிசடையோனுக் கற்பித்துக்கொளினும் |
93 |
ஞான சங்கமத்துக்கிந்நெறியதனி |
94 |
சடுத்தலமதினுமிலிங்கமேயாகித் |
95 |
இன்னதன்மையவாஞ் சுத்தபாவனையி |
96 |
அறிவிலாக் குழந்தைப் பருவத்தின் முலைப்பால |
97 |
அனமதும்பாலுஞ் சருக்கரைகண்டு |
98 |
உபையநல்லமுதே புசித்தனுதினமு |
99 |
இந்நிலை சின்னாட் சீவர்கணிமித்த |
100 |
என்றெனையாண்ட விருத்தவம்பிகையே |
101 |
சுத்தசாதகம்-முற்றிற்று.
------
உ
திருச்சிற்றம்பலம்
3. விஞ்ஞானசாரம்.
காப்பு
பாயிரம்
விநாயகர் துதி
அஞ்சுகரமுடைக் - குஞ்சரந்தனைத் |
|
வேறு - பெரியநாயகியார் துதி |
|
வேறு - இதுவுமது. |
1 |
அருளுமுமையினடிபணிந்தே |
2 |
பாயிரமுற்றும்.
நூல்.
முன்னாட்புரிந்ததவப்பயனான் முதல்வனொருவனுளனென்றே- |
3 |
சத்யாசத்யவத்துவினைத் தகவேபிறித்துத்தானறிதன்- |
4 |
சித்தம்பிரகாசத்தையறிற் சேருநான்கு சாதனமும்- |
5 |
விடையமதின் மோகியைப்போல விமலந்தானேமூவுருவாய்- |
6 |
தந்தைதனது சுதர்கையின்முன்றந்து பொருளைத்தானேபின்- |
7 |
மூன்றுவடிவாய்மும்மலத்தை மூன்றுபங்காய்த்தான்கொண்டு- |
8 |
இந்தத்திறனிற்பணிவிடைக ளியற்றியவினைகள்சமமாகில்- |
9 |
சத்தினிபாதந்தான் பிறந்துசாற்றுமந்தக்கரணங்கள்- |
10 |
சத்தாசத்துவத்துவினைத்தகவேபிறித்துத்தானறிபில்- |
11 |
இந்தநான்கு சாதனமுமில்லாதவர்கட்கொருக்காலும்- |
12 |
பண்டித்தலத்தையுழவாளர் பண்டி முகத்திற்கொழுப்பிணிக்கின்- |
13 |
இந்நேர்நெரியிற்சாதனங்களிவைநான்கினும்வந்தெய்தியதேல்- |
14 |
ஞானமார்க்கமிருவகையாய் நவில்வர்விகங்கம்பிபீலிகையென்- |
15 |
ஆசான்மாணாக்கன்னுடைய வதிகாரங்க ளவைபார்த்தே- |
16 |
தோன்றுமுலகமெய்யாகிற்றோன்றுமதிலைவிடயங்கள்- |
17 |
உலகமெதினின்றுதித்திடுமென் றுன்னிநோக்கினினைவதனில்- |
18 |
உலகமிலங்கும்வகையுண்டா யுதித்தின்பமதாயுருநாமத்- |
19 |
மூன்றங்கிசமுமதிட்டானமொழியும்பினிரண்டங்கிசமும்- |
20 |
நாமரூபந் தனைமெய்யாய் நாடுமிடத்தின்முப்பொருளாம்- |
21 |
ஆடியதனிற்றோன்றுநிழலதுபோல்விகற்பந்தீர்ந்தறிவில்- |
22 |
ஒருவிகற்பங்களுமில்லாவொன்றாம்பிரமவதினின்றே- |
23 |
தனதுமாயைதன்னாலேதனையேயனேகமாய்க்காணும்- |
24 |
என்றுநிலையிலொருபடியாயிருந்துதனையே கண்டிருக்கச்- |
25 |
அடியுமுடியுநடுவுமிலாவகண்டவொளியாமொருதனையே |
26 |
இந்தநெறியிலுணராதார்க் கியம்பும்பிபீலிகையினெறியை- |
27 |
வந்தவாறுநெறியுரைக்கின் மாயை தோன்றும்பிரமத்தில்- |
28 |
அந்தப்பிரமந தனினின்றே யனுர்வாச்சியமாம் பினைதோன்றும்- |
29 |
மதியினகங்காரந் தோன்றி வகுத்து மூன்றுகுணமாகும்- |
30 |
அவையைப் பஞ்சீகரணஞ்செய் யிலாகுமைந்துமாபூதம்- |
31 |
முப்பதினையு நீங்கிநிற்க மொழியுமவத்தைப் பத்தாகச்- |
32 |
(வேறு) |
33 |
நனவதனிற்பூதஞ்சூக்குமபூதமறியும்- |
34 |
(வேறு) |
35 |
பூதநீங்கிற்பகுப்புபோம்பொறிகணீங்கிற்காட்சிபோம்- |
36 |
வந்தவியோமநீங்கியிடில்வாங்குமிரண்டாம்பாழ்பரத்தின்- |
37 |
ஏதேதகன்றததுமுன்ன மியற்றிந்தொழில்கடன்னிடத்தப்- |
38 |
நேரே நெறியிலடைவோர்க்கு நியதிநெறியிலடைவோர்க்கும்- |
39 |
அறையிவ்வொழுங்குகளிலொன்றி லாசானூன்மாணாக்கனெவ்வக்- |
40 |
நானேயென்றுமெவ்விடத்து நன்றாயுண்டாயிருக்குகேன்- |
41 |
உண்டாயென்றுமெவ்விடத்து முளதாயிருந்தலென்சத்தே- |
42 |
இருந்தேதோன்றியிடவேண்டு மெந்தப்பொருளேயானாலும்- |
43 |
எனதுசுயலீலையினாலேயென்னைத்தானேநானாவாய்- |
44 |
எங்கும்விடையமாய்நிகழு மீசனானாயங்கங்குத் |
45 |
சித்தநானாய்ச் சத்தமுன்னாய்ச் செப்புங்கந்தமீறாக- |
46 |
உம்பர்நானாய்நரர்நானா யூர்வநீருறைவநானாய் |
47 |
தந்தைநானாய்த்தாய்நானாய்த்தனையர்நானாய்த்தமர்நானாய்ச்- |
48 |
தோற்றறானாய்த்திதிநானாய்த் துடைத்தனானாய்த்திரோபாவம்- |
49 |
தங்கத்தனந்தவிதமாகித்தானேநிகழும் பணிதியெல்லாம்- |
50 |
சத்தையின்றியொருபொருளுந்தானேயுண்டாயிருக்குமோ- |
51 |
நித்தமாகியேநிற்கினிகழுங்காலபரிச்சேதம்- |
52 |
சத்தைவேறொன்றிலாமையினாற்சாதிபேதமதுமாயை- |
53 |
என்னையெனதுநினைவினாலிதுவாய்நானாவாய்க்காண்கேன்- |
54 |
எல்லாநானாயன்றுமுதலிருந்துவிளையாடாநிற்க- |
55 |
இதுவே துணிவென்றறியாதா ரென்றுநீந்தாரிடர்க்கடலை- |
56 |
இந்தஞானமகிழ்ச்சியுளோர்க் கியம்பஞானசரிதைப்படி- |
57 |
குலத்தையுடையோர்தங்களுக்குக் குலாசாரத்தின்வழிநிற்கும்- |
58 |
விடையமீதிலுபாதியு மேவுமுயிர்மேனனியருளும்- |
59 |
ஆசாரங்களவையில்லா வசடரிடத்தில் விஞ்ஞானம்- |
60 |
கான்றசோறின்விடையமதைக் கண்டுமுனங்கைவிடுத்தொழிந்தே- |
61 |
இமயநியமத்துடையரா யெழிலா ஞானயோககராய்- |
62 |
மனனசமாதியுடையோர்க்கு வகுத்தவியமநியமமுமில்- |
63 |
அந்தரங்கத்தொருவனையோ ரரிவையொருத்திதான்புணரும்- |
64 |
மருளையுடையபித்தனையு மருளில்லாதசுத்தனையும்- |
65 |
தத்துவங்களெழுநான்குஞ்சாற்றுமாயைதானிவையின்- |
66 |
யோகமதனிலுறுபயனையுவர்த்தேஞானநெறிமேவி- |
67 |
அலைவையிறந்தவிடத்தந்த வானந்தம்மற்றவ்வின்பம்- |
68 |
சுணங்கன்றனதுரசமிதென்றே |
69 |
உள்ளபொருட்கேயின்பென்றுமுளதாமென்றுமில்லாத- |
70 |
ஊனதாகிநிற்போற்கேயுலகனென்றுபேருடைத்தாம்- |
71 |
ஏகதேசதேகமதாயிருந்தேயறிவானந்தமதை- |
72 |
எங்கெங்கிருந்தெய்திடுமின்பமெழில்வீட்டின்பமெனவேகண்- |
73 |
பங்கேதோன்று மில்லாத பரமாயெங்குநிற்கினுமுன்- |
74 |
இமயநியமமியற்றாம லெழிலர்நிட்டையடைவோர்க்குச்- |
75 |
தனதென்றுரைக்குமவையெல்லாந் தள்ளியினிமேற்றனதென்னாக்- |
76 |
உடந்தையானஉடன்முதலையுயிர்க்குவேறுகூறாக்கிக்- |
77 |
ஆகுவுறையுங் கட்டியிதென் |
78 |
அகத்திலுளதேபுறத்துண்டா மகத்தில்லாதேபுறத்தில்லை- |
79 |
போடவேண்டும்புடமெல்லாம் போட்டுத்தங்கமாகினதில்- |
80 |
உலகத்துளவெப் பொருள்களையு முளலக்கணங்கொண்டிகுதீதென்- றிலகக்குணிக்கலாமஃதினில்லாமாயையில்லெனவே- |
81 |
பிணிகளொழிங்கிலாயுமற்றைப்பேசுந்தெய்வீகத்தாயும்- |
82 |
எறியிற்கதிரோன்சாளரத்திலிருந்துதோன்றும்பூதவணு- |
83 |
தரையுளோர்கண்மிகவருந்தித் தரினுமுடையூணிவையன்றிப்- |
84 |
உடலைக்குறித்தோபாலருந்தலூரைக் |
85 |
கனியும்பாலுஞ்சருக்கரையுங்கலந்தவன்ன நிரம்பவே- |
86 |
ஞானமுடையோர்க்கேதுறினு நணுகாகுற்றமெனத்துறவோர்- |
87 |
அபாஞானமுயர்குருவாலையந்திரிவுமறக்கேட்டு |
88 |
அந்தமுகத்தின்புறுவோர்களழியும்போகமின்பென்றே- |
89 |
போகத்துறைவோன்றன்மனையைப் |
90 |
இடைமுன்னிறிலகண்டபரத்தேகமாகி யானந்தம்- |
91 |
இதுவேநான்குசாதனமு |
92 |
இந்தநெறியில் விகங்கமதையெய்தியானுமவளருளால்- |
93 |
வேறு. நிமலமாம்பிரமவனுபவமுரைத் |
94 |
அலைவிற்சிற்சொரூபமஃது மல்லாதா |
95 |
பரசொரூபத்துக்கபினமும்பினமும்பகர் |
96 |
எனைமறைப்பறைச்சி தீண்டியுமகத்தி |
97 |
என்னையேதோன்றாவகைகொலைபுரிந்து |
98 |
இத்தகைசூதங்கள்பாதங்க |
99 |
வேறு. |
100 |
விஞ்ஞானசாரம் - முற்றிற்று.
4. அத்துவிதவுண்மை.
காப்பு.
பாயிரம்.
ஆழத்துப்பிள்ளையார் துதி |
|
பெரிய நாயகியார் துதி. |
பாயிரமுற்றும்.
நூல்.
மேலாஞ்சதுட்டசாதனங்கண்மேவி நிறைந்தபோக்குரைக்கின் |
1 |
உண்டாய்த்தோன்றிரமித்திடுத லொருநம்வடிவேயுருநாமம் |
2 |
எந்தச்சத்திலசத்தாகுமிந்தவுலகுசத்தாகும்- |
3 |
எல்லாநாமேயெனவறிந்தா லெஃதைநினைவானினைத்திடுதல்- |
4 |
நானாவாகத்தோன்றியிடுநாமரூபமிவையனைத்தும்- |
5 |
தங்கந்தானேபணிதியாய்ச் சாற்றும்விதமாய் விளங்குதலின் - |
6 |
இன்னானன்னானிதுவதுவென் றியம்புமுலகம் வேறன்று- |
7 |
தங்கமொன்றேபணிதிகளிற் சாற்றும்விதங்கள் வெவ்வேறு- |
8 |
தானுண்டாகிலுலகுண்டாந் தானுண்டாகிலுயிருண்டாம்- |
9 |
மந்தவிருளிற்கயிற்றரவின் மாறுபாடாய்த் தோன்றுதல்போல்- |
10 |
அனந்தவிதமாய் கீற்றையுடைத் தாகுஞ் சிலையொன்றதைப்பார்க்கின்- |
11 |
மையேமிகுநித்திரைமோக மயக்கிற் கனவைக்கனவதனில்- |
12 |
கனவினனவே யுணர்ந்துயர்ந்தோர் கனவென்றொருவற் குரைத்திடினும்- |
13 |
கனவைக்கனவென்றுணர்ந்தவனைக் கனவினீயாரெனவொருவன்- |
14 |
நனவிற்றானோரிடத்திருக்க நவி னித்திரையின் மோகத்தால் |
15 |
கனவிற்றோன்றும்பொருளெல்லாங்கனவிற்கனவென்றுணர்ந்தக்கால் |
16 |
மனத்திற்கனவிற்கனவெனவே மதிக்கினந்தவிவகாரத் |
17 |
சிங்காதனத்தில் வீற்றிருக்குஞ்சிறப்பாராசுங்கனவடைந்து |
18 |
கனவைக்கனவென் றுணர்ந்தந்தக் கனவினனவைநோக்கிடினக |
19 |
கனவையொழிந்து நனவதனைக்கண்டார்நனவினின்றுபினக் |
20 |
உறக்கமோகமதிற்கனவி லுலகமுயிர்கள்விவகாரம் |
21 |
ஒருவனுளதாகையிற்கனவு முண்டாமுறக்கமோகமதின் |
22 |
படிகத்தடுத்தநிறங்களதிற் பத்திபாயுமந்நிறமாய்ப் |
23 |
பழுதையதனிற்றோன்றியிடும்பாம்பையுள்ளபடிநோக்கில் |
24 |
தோன்றிவிளங்கும்பொருளெல்லாநதொல்வேதாந்தவிசாரனையில் |
25 |
ஏகமாகிநின்மலமா யிருக்குநமக்கிப் பந்தமெனும் |
26 |
பரவைதானேயோரலைவிற் பலவாய்விளங்குமோரலையில் |
27 |
கடங்கடமதுகாரணத்தைக்காட்டிடாதுமுன்விளங்கும் |
28 |
மரத்தைநோக்கின்மதகரியுமறைந்து விளங்குமதைநோக்கில் |
29 |
நாகத்துதிக்கைதனைநோக்கினாசிகரமுந்தோன்றியிடும் |
30 |
ஊனாம்போகமெமதென்றேயுன்னல்விசாரமிலாமையினால் |
31 |
மாயையெனு மிவ்வுரைக்கருத்தமதிக்கின்யாதொன்றிலாததுவே |
32 |
நாமரூபந்தனைநோக்கிநாடன்மனமும்புறமுகமும் - |
33 |
அரையகுமாரன்புலையருடனணுகிமறந்து மொருவரால் - |
34 |
படியிற்பொருளின்மெய்யென்றுபடிறொன்றிந்தவிருவகையும்- |
35 |
அகிலந்தோன்றும்பொழுதுமறைந்ததிட்டானமதாய்விளங்கியிடும்- |
36 |
முத்தியாதோவெனவெண்ணியமுயக்கவேண்டாமிஃதறுதி- |
37 |
இல்லாமாயைதங்கணிலையாருநிற்கவம்மம்ம |
38 |
எல்லாநீங்கிச்சற்குருவையெங்குந்தேடியடைந்தருளி, |
39 |
விளங்குஞ்சகங்களனைத்தினிலும்விளங்குநாமாதிகணீங்கி- |
40 |
நாமரூபம்விளக்கல்பரம்நாடலுயிராமனவமாயை- |
41 |
உருவநாமநோக்கிடத்திலுளதாமிந்தைவைவகையும், |
42 |
விவகாரத்திற்பகுப்புகளாய்விரியும்பரமார்த்தம்மதனில்- |
43 |
பந்தத்திசையிற்பலவென்றும் பரமார்த்தத்திலொன்றென்றும்- |
44 |
மித்தியவாதிவேதாந்தி விளங்குஞ்சைவசி்த்தாந்தி- |
45 |
சகமதென்பதிலையெங்குந்தானேநின்றுவிளங்கியிடும்- |
46 |
பந்தமின்றிவீடின்றிப்பரமேயெங்கும்விளங்கிடவும் |
47 |
தோன்றிநிகழுமுலகெலாஞ் சொரூபமேமற்றுருநாமம்- |
48 |
உருவநாமமவைக்கிருப்புமுதிப்புஞ் சொரூபத்தினையன்றி- |
49 |
பந்தமென்றும் வீடென்றும்பயிலுநினைவேபந்தமதாம்- |
50 |
உருவநாமந்தனைநோக்கி லொருதன்னிலையை நீங்கினதாம்- |
51 |
கொள்ளுநெறியேதேதுபந்தங்கூடுமவீடேதெனவேண்டாம் - |
52 |
ஒளியேயெங்கும் விளங்கிடுமவ்வொளியில்விளங்குமுலகெல்லாம்- |
53 |
மாயைவேறென்றெனவுன்னிமதிக்கவேண்டாம் பேதவதி - |
54 |
விளங்கியிடுமிவ்வுலகெல்லா மித்தைவடிவேயென்பதுவும்- |
55 |
தனதுசங்கற்பந்தனிலே சகங்களாகிவிளங்கியிடும்- |
56 |
நிலைமைநீங்கிற்சகமுதித்துநிசமுமாகுமற்றவையின் |
57 |
எல்லாநாமெப்படியாவோமென்னவேண்டாமிலக்கணம்பார்த்- |
58 |
வெள்ளிவிகற்பமதிற்கிளிஞ்சில்விள்ங்கும்விகற்பந்தனைநீக்கித்- |
59 |
ஒன்றேயென்னின்முத்தியில்லை யொருவன்வேறேயுண்டென்னில்- |
60 |
விகற்பமிலதுமுதற்றோன்றி விளங்கும்விமலமதினின்றும்- |
61 |
இந்தவிடையமவையில்வரு மின்பும்பேரின்பத்திருந்தே- |
62 |
விருத்தியொன்று மில்லாமல் விளங்குநிலையே நாமதனில்- |
63 |
நிருவிகற்பநமதிடத்தினின்றுவிகற்பமுதித்தளவில், |
64 |
ஏகபரத்திற்றோன்றுலகிலெங்கும்விடையமாதல்பரம்- |
65 |
எங்கும்விடையமாம்பரத்துக்கிருளெக்காலுமிலையாகும்- |
66 |
மாயையதனில்மும்முதலும்வகுப்பாய்விளங்கியிடுமந்த- |
67 |
இந்தமாயைக்கழிவிலதே னிந்தவுயிருக்கொருக்காலும்- |
68 |
தன்னைமறைத்தபந்தமதைத் தள்ளிநீங்கிற்றான்விளங்கும்- |
69 |
தன்னையறியாவியற்கையினிற் சத்தேபோல விளங்கியிடும்- |
70 |
இல்லாமாயைதானிருந்தென் னிறந்தென்னவைபந்தமதாகா- |
71 |
நினைவேமூலமற்றதனினின்றுவிரியுமும்முதலும்- |
72 |
நினைவுநீங்கிலுருநாமநீங்குமவையைத் தள்ளிடினும், |
73 |
நினைவைநீக்கிநோக்கியிடினிமலசொரூபந்தோன்றியிடும்- |
74 |
தனதுநிலையிற்றானிற்கச் சாற்றுமாயா மோகமதில்- |
75 |
கானனீருங்கயிற்றரவுங் கட்டையதனிற்கள்வனுமே- |
76 |
அதிட்டானமதுதோன்றளவு மதுமெய்போல விளங்கியிடும், |
77 |
தன்னைச்சீவனெனத்திரிவாய்த் தானின்றுணர்தலஞ்ஞானம்- |
78 |
நிமலநெஞ்சை யுடையோர்க்கு நிலத்திலாகானெழுந்தருளி- |
79 |
எங்கேநிறுத்தினங்கிருக்கு மியல்பையுடையநெஞ்சுடையோர்க்- |
80 |
ஒருவவேண்டுமனைத்துமென வுன்னவேண்டாவினை நீங்கில்- |
81 |
சொரூபநாமேயெனத்திடமாய்த்துணிந்தபேர்களில்லறத்தை- |
82 |
மருவியில்லினிருந்தவர்க்குமருருவுஞ்சோகமோகமென்றும்- |
83 |
மித்தையதனைப்பற்றிடவும் விடவும்வேண்டாவிவ்வுலகை- |
84 |
இல்லமென்றுந்துறவென்றுமெண்ணவேண்டாமற்றவையில்- |
85 |
விளக்குஞ்சொரூபநோக்காவிளக்குமுலகைநோக்கியிடின்- |
86 |
தன்னைமறைத்தபந்தமதைத் தள்ளிநீக்கித்தனையறியில்- |
87 |
மூலவக்காம்மதனின் மூன்றக்கரமுநின்றதுபோல்- |
88 |
எல்லாமாகுந்தற்சொரூபமிருக்குமளவுமாயையுமுண்- |
89 |
பகுத்துநின்றதற்சொரூபம் பரசீவருக்குச்சாட்சியதாய்ப்- |
90 |
இந்தச்சீவன்கற்பிதமே யின்றிவேறோர்பொருளல்ல- |
91 |
இதனாற்பந்தமுத்தியுமுண் டிதனாற்பந்தமுத்தியுமின் - |
92 |
இந்தநெறியிலணுதினமுமேகாந்தத்திலொருநினைவாய்ப்- |
93 |
கோர்த்துப்பத்துத்திசைகளி னுங்குலவும்பதினாலுலகத்தும்- |
94 |
கொக்குமிரைதேருதலினருட் குருவினருளிலியானோக்கத்- |
95 |
அந்தோவந்தோ யாளாவிவ் வனுபூதீயினையறியாது- |
96 |
எந்தனுடைய சரித்திரங்களெனக்கேநகைவந்திடுநினைக்கில்- |
97 |
எனதுவடிவையறியாமலிந்தவுயிராய் நின்றதுவும்- |
98 |
என்னையறியாதிதுவரையுமேங்கியழன்று கிடப்போற்குத் |
99 |
எழிலார்விருத்தாசலவடிவாமெந்தைவாழ்கவெனையாளும்- |
100 |
வேறு. |
101 |
அத்துவிதவுண்மை-முற்றிற்று.
------------
சிவமயம்.
5. பிரமானுபூதிவிளக்கம்.
அனுபூதியரனுரைக்கவாழத்துப்பிள்ளையெனக்
கனுகூலமாயிருந்தேயடைவாய்முடித்திடுமே (1)
பிரமானுபூதியினைப்பெரியநாயகியெனக்குத்
திரமாகவருளியவாசெப்புவேனவனருளால் (2)
அவளருளினாலேயனுபூதியின்விளக்க
மிவணுரைக்கேனந்நிலையையெய்தினோரேகளிக்க (3)
இவ்வனுபூதியையுரைக்கேனிவ்வனுபூதியைநன்றாய்ச்
செவ்விதியினறிந்தோர்கள்தேர்ந்துமிகக்களிக்க (4)
வடிவினைநோக்காதுளத்தின் வண்மையைத்தேருதலினெந்தன் -
கொடியவுரைபாராதுகொள்ளுவர்மேலோரருத்தம் (5)
அறிவறியாக்குழந்தைதனதனைமுன்னேகுழறுதலின்
பிறிவறியாதவர்முன்னே பேசுகேனனுபூதி (6)
குழந்தைகுழறும்மொழிக்குக்கொண்டாடுமனைபோல-
இழந்தவுயர்ஞானிகளு் மென்னுரைகெட்டுண்மகிழ்வர் (7)
முத்தியைவேண்டிடினிப்பேர் முயலவே வேண்டுமெனப்-
புத்தியெனக்கருள்செய்தபொதுவை யெங்குங்கண்டனமே (8)
தனைத்தவிரவொன்றைத்தான்வேறாய்க்கண்டுவிடிற்
பினைச்சென்மநீங்காதுபிரமானுபவமலவே (9)
தன்னைவிடவேறொன்றுந் தானில்லாத்தன்னிடத்திற்
றன்னினைவினாலேசகம்போலத்தோன்றிடுமே (10)
எங்குஞ்சிதம்பரமாயெங்குநிறைந்திருக்கத்
தங்குநினைவாலஃதேசகம்போலத்தோன்றிடுமே (11)
தங்குநினைவதனைச்சாராதுநீக்கிடத்தில்.....
எங்குஞ்சிதம்பரமாயிருளறவேகண்டனமே (12)
மந்தவிருளிற்கயிறுமாசுணம்போற்றோன்றுதலி
னிந்தவுலகென்னிடத்திலில்குமாரோபிதமாய் (13)
பழுதையினின்றோர்சத்தி பாம்புபோற்றோன்றுதற்குப்-
பழுதையினுண்டதைப்போலப்பரத்தினுமுண்டோர்சத்தி (14)
சூனியஞ்சித்துப்பிரமஞ் சுத்தசிவம்பரமென்று
தானிகழ்தல்வேறில்லைத் தனக்கேபரியாயம (15)
சங்கற்பசத்தியினாற் சகம்போலத்தோன்றியிடுஞ்
சங்கற்பசத்தியதுந்தன்னைவிடவேறில்லை (16)
......ன்சத்தையேயுண்டாய்த் தானிருக்குமெப்போது
......தன்சத்தைதன்னிற்சகத்திற்குத்தானிருப்பே (17)
தன்சித்தேதோன்றித்தானிருக்குமெப்போதுந்
தன்சித்தனாலே சகசமும்விளங்கிடுமே (18)
தன்னின்பேயின்பாய்த்தானிருக்குமெப்போதுந்
தன்னின்பினாலேசகமின்பாய்த்தோன்றிடுமே (19)
தானந்தமில்லாததானேயுண்டாய்விளங்கி
யானந்தமாகியென்றுமன்றேநிகழ்ந்திடுமே (20)
தனதுசங்கற்பத்திற்றனுண்டாதலிற்சகமுந்
தனதங்கிசமூன்றுஞ்சகத்தினிகழ்ந்திடுமே (21)
தனதங்கிசமூன்றுந்தான்பிறித்துத்தானோக்கிற்
றனதங்கிசந்தோன்றுஞ்சகம்போயொளித்திடுமே (21)
சகமாகநோக்கியிடத்திற்றன தங்கிசமூன்றுஞ்.
சகமாகக்காரணமாய்த்தானதிட்டானமதாகும் (23)
சகமாகநோக்கிடத்திற்றானதிட்டானமதாகிச்
சகமாகவிளங்குதலாற்றனைத்தவிரவொன்றில்லை (24)
தானாய்ப்பார்த்திடுமிடத்திற் சகலமுந்தானாய்த்தோன்றுந்,
தானாய்ப்பாராவிடத்திற் சகலமும்வேறாய்த் தோன்றும் (25)
தனைத்தவிரவேறொன்று தான்காணிலவனுக்குப்
பினைப்பயமும்போகாதுபெரும்பயமுநீங்காது (26)
தன்னினைவினாலேசகமாய்விரிந்ததென்ன
தன்னினைவைநீங்கித் தானாயிருந்தனமே ... (27)
உண்டாயொடுங்குவதுமுண்டானதன்னிடத்தே
யுண்டாகுமென்றேயொடுங்கியிருந்தனமே (28)
ஐந்துதொழிலுமைந்தொழிலைத்தானடத்து... ...
மைந்துகருத்தாவுமாகியிருந்தனமே ... (29)
இவ்வடிவுநரமல்ல வென்றுநியதிபண்ணி
யவ்வடிவைநோக்கிடத்திலனைத்துநாமேயானோம் (30)
இவ்வடிவுபந்தமெனவெண்ணியேநீக்கிடத்தி
னெவ்வடிவந்தானாயிருந்தேனதிசயமே ... (31)
இப்பந்தம்போகவெண்ணியேநீக்கிடத்தி
லெப்பந்தமுமாகியிருந்தேனதிசயமே (32)
இவ்வடிவந்தானாகியெங்குந்திரிவேனுக்
கெவ்வடிவுந்தானாயிருக்கிலினியென்செய்தேன் ... (33)
ஒருவடிவுகாக்கவுழன்றுதிரிவேற்கு
வருவடிவெல்லாமாகின் வாட்டமறக்காப்பதெங்கே,
சீவனாய்நீங்கிற்றிகைத்தனனோருருவுக்குத்
தேவனாய்ப்பேர்நீக்கிற் றிகையேனொன் றினைக்குறித்தும் (35)
உலகமுயிர்பரமென் றுரைத்திடுமுவகைப்பொருளு
மிகலவேயானாகவென்னனுபூதியிற்கண்டேன் (36)
எனைத்தவிரவேறொன்றுமில்லையெனக்கண்டளவிற்
பினைத்தவிப்புநீங்கிப் பிரமமாயேயிருந்தேன் (37)
தன்னுடையசன்னிதானத்தனினின்று .
பின்னுலகமெல்லாம்பிறவின்விளங்கிடுமே ... (38)
சங்கற்பசத்திதானனந்தமாய்விரியு ...
மங்கப்படிநிகழுமண்டபிண்டமானதெல்லாம் (39)
சங்கற்பமென்றுஞ்சகமென்றும்வேறில்லை
சங்கற்பமேசகமுஞ்சகமேசங்கற்பமதும் ... (40)
ஓரிடத்திற்கூவுமுறைமப்படியெதிரிட்
டோரிடத்திற்கூவுதலினுலகுநினைவேயாம் (41)
நினைவென்றசங்கற்பநிசவடிவைநோக்கிடத்திற்
றனையன்றிவேறில்லைத் தங்கத்திற்பணிதியைப்போல்.
யானாகேனென்றகற்றும்யாதும்பிறிவின்றி
யானாகிநிற்குகேனென்னவதிசயமே ... (43)
ஆங்காரஞ்சித்தமந்தவனமதியிறந்து
நீங்காதவென்னிடத்தினிலையாயிருந்தனமே (44)
சங்கற்பமுண்டாகிற்சாற்றுமகக்கரண
மங்கப்போதுண்டாகியகங்காரமாதிகளாம் (45)
ஐய்ந்துணிவுலபிமானஞ்சிந்தனைகள்
செய்யுமகக்கரணச்சித்தமுதனான்கும் .. (46)
ஓசைபரிசமுருவஞ்சுவைகந்த
மாசையினிற்றானறியவறிவிந்தியந்தோன்றும் (47)
அறிவிந்தியமதனிலறிந்துசெயக்கருமப்
பொறியைந்துந்தோன்றும் பொருந்துமிவைபதினாலாம்
சங்கற்பம் வேறாகிர்றான்பதனாலும்வேறாஞ்
சங்கற்பந்தானாகிற்றானாய்விளங்கிடுமே (49)
எவ்வெவ்வடிவுதொறுமிருந்துநினைவெப்படியோ
வவ்வவ்வடைவேயடைந்ததேயிருந்தனமே (50)
அவ்வவ்வடிவுமவ்வவர்க்கேதோன்றியிடு
மெவ்வடிவுமியாமென்ன விருந்தனுபூதியி லறிந்தே
எல்லாவடிவுமியாமெனவேகாண்பதன்றி
யெல்லாரனுபவமுமியாமறியவேண்டுமதில் (52)
ஒரொருவற்கண்டிடலுமுயிராச்சித்தியிற்காண்டற்
பேருருவைக் கண்டவர்க்கும் பிறிதொன்றுங்காணாதே (53)
எல்லோரனுபவமுமிதுவெனவேகண்டிடலு
நில்லாநினைவதனினிசமாகக்கூடியன்றோ (54)
நினைவதனைநீக்கிநிசசொருபங்கண்டவர்க்கு
நினைவதனைக்கூடநினையாதொருக்காலும் (55)
எந்தப்பொருள்களினின்றெய்தியிதிமின்பனைத்து
மந்தப்பிரமத்தினானந்தலேசமதே (56)
அந்தப்பிரமவானந்தந்தானடைந்தோர்
எந்தெப்பொருள்களினு மின்புவதென் றெண்ணுவரோ (57)
சகலகர்மங்களையுந்தானேககாலத்தி
லகமகிழ்வேயடைந்தவதிசயமும்பெற்றனமே (58)
ஒருகுடைக்கீழரசாள்வோனோரூருக்கரசாகக்
கருதுவனோவதினொன்றுங்கலங்காதிருந்தனமே (59)
காண்பதெல்லாந்தன் னுருவாய்காண்பதன்றிவேறாகக்
காண்பதுவமுண்டோகயிற்றைவிடவரவுண்டோ (60)
இத்தகைநிச்சயமுணர்ந்தேயிதிற்கலக்கமில்லாமற்
பத்திசமாதானத்தைப்பொருந்தல் சமாதியதாகும். (61)
பேதவாதியைக்குறித்துபேசுமறைசெகசிருட்டி
பேதநீங்கின்றதென் றும்பிரமமேயுளதாகும் (62)
தோற்றமொடுக்கமில்லைத்தோற்றமொடுக்கத்திலுள்ள
மாற்றறியபெத்தமுத்திமருளென்றறிந்தனமே (63)
முத்தியிள்ள தென்றெண்ணின் மொய்ப்பந்தமுண்டாகும்
புத்தியினி லஃதொருவிப்போதமாயிருந்தனமே (64)
வாரிபலவடிவான வாறுபோற்சங்கற்ப
நேரினாற்றான்றானே நிலையில்சகமாய் நிகழும் (65)
சகமென்றுந்தானென்றுஞ்சாற்றிடுதன்மாத்திரமே
யகமதிற்றேர்ந்திடுமிடத்திலகண்டமாயிருந்ததுவே. (66)
சத்தேயளதென்றுஞ் சகமதனிற்றானின்று
சத்தேபோற்றோன்றியிடுந்தான்சித்தேயெக்காலும். (67)
தோற்றிடுத றன்சத்தே தோற்றிடுந்தன் சத்தையினிற்-
றோற்றிடுமிச்சகமனைத்துஞ் சோற்றிடுங்கற்பிதவடிவே (68)
சத்தைக்கே தோற்றரவு தாணுண்ட சத்தினுக்குச்-
சத்தைப்போற் றோற்றமில்லைச் சத்தையினிற்றானிகழும் (69)
சத்தையிடமாய்நின்றே தான்வேறு போற்றோன்றிச்-
சத்தைபோலேநிகழுஞ்சகமசத்தேயல்லவோ (70)
அசத்தொருகாலையுந்தோன்றாதந்தவுளசத்தையே
யசத்தையுளதினிவ்ளக்குமதிட்டானமாய்நின்றே (71)
தோற்றிடுமிச்சகமனைத்துஞ்சொல்லாய்முடிந்ததுவே
றோற்றிடுமிச்சகமனைத்துஞ் சொல்லாய்முடிந்ததுவே (72)
சத்தைக்கேதோற்றரவுஞ் சார்ந்திடுமானந்தமதுஞ்.
சத்தையில்லாதிந்தச்சகத்தினுக்குத்தானுண்டோ (73)
சித்துக்கேயுள்ளிருப்புஞ்சேர்ந்திடுமானந்தமதுஞ்
சித்தில்லாதிந்தச்செகத்தினுக்குத்தானுண்டோ (74)
ஆனந்தமானதற்கே யானவிருப்பும்முதிப்பு
மானந்தமில்லாதவகிலத்துக்கும்முளதோ (75)
சச்சிதானந்தத்திற் சகங்கற்பிதமாகிச்
சச்சிதானந்தத்தைத்தான்விடாதேநிகழும் (76)
தோன்றுவதுசித்தேதொல்லுலகுநானாவாய்த்
தோன்றுவதுகற்பிதமேசொரூபமன்றிவேறுண்டோ (77)
சொரூபலக்கணஞ்சகற்றோன்றிவிளங்குதலாற்
சொரூபமேயென்றுதுணிந்தேயமைந்தனமே (78)
அறியாமையாலேயகிலம்போற்றோன்றியிடு
மறியாமைநீங்கிடத்திலறிவாயேதோன்றியிடும் (79)
என்னமொருபடியாயிருந்தபடியிருக்க
நின்றபடிபாராமுன்னிலைகலங்கிநின்றனமே (80)
நிலைபிறிந்தபோதுநிலையினில்வந்திடுபோது
நிலைபிறியாதேநிகழுநிஜசொருபமல்லவோ (81)
நிலைபிரிந்ததென்றுநிலையினினின்றேநோக்கி-
னிலைபிரிந்ததேயிலையாய்நிஜசொரூபந்தோன்றினதே. (82)
பந்தமுத்தியென்னப்பகர்ந்திடுமிரண்டென்று
மந்தபரிபூரண்த்திலன்றேயிலையலவோ (83)
தன்னையேகண்டுதானிருக்கவெல்லோருந
தன்னையாரென்றேதவிப்பதுவுமென்னையோ (84)
கண்டிடுதலெல்லாங்கனசொரூபமேயன்றோ
கண்டிடுதல்வேறென்றுகலங்குவதுமென்னையோ (85)
தோன்றிவிளங்குவதுதொல்லுலகுக்குமுண்டோ
தோன்றிவிளங்குவதுசொரூபத்துக்கேயன்றோ (86)
ஆதலினாற்காண்பதெல்லாமறிவுரு வேயெனக்கண்டு
போதவிழிதிறந்துபொருளாயிருந்தனமே (87)
முன்வினையாஞ் சஞ்சிதத்தின் முடிச்சை யவிழ்த்தனமே-
பின்வினையா காமியத்தைப்பிடுத்துப்பிசைந்தனமே (88)
வீடுபந்தமென்றிடுதன்மித்தையேயாதலினா
வீடுவினையிரண்டுமெங்கேயுளதாகும் (89)
ஒருகாலுநிலைகலங்கா துண்டாய்ப்பெற்றதிலமைந்த.
வருகாலஞ்செல்காலமதியாதிருந்தனமே (90)
தெரிசனத்தின் முத்தியெனச செப்புஞ சிதம்பரத்தைக்-
கரிசனமாய்க்கண்டுகருக்கழியநின்றனமே (91)
பார்த்தவிடமெங்கும்பரிபூரணமாகிக்
கோத்திருந்தபாழ்தனிலேகுடியாயிருந்தனமே (92)
செகமதையுந்தான்விழுங்கிச்சீவனையுமுள்வாங்கி
யகமதுவும்வுறமுமிலாவகண்டமாய்நின்றனமே (93)
அதுவிதுவென்றிடவில்லாவகண்டபரிபூரணமாம்
பொதுவதனிற்குடியாகிப்புகுந்தேயிருந்தனமே (94)
தந்தையார்தாயார்தாரமார்புத்திரரார்
பந்தமாரெல்லாம்பரமாயிருந்ததே (95)
ஊரேதுலகேதுடலேதுண்பொருளேது
சார்பேதுளவெல்லாந்தானாயிருந்தனமே (96)
படித்தறிந்தபோதேபலகலையாகமங்களெல்லா,
மெடுத்தெரிந்துவிட்டேனெனைவிடவேறிலையென்றே (97)
தெருள்விழியோர் துணிவிதெனத் தேர்ந்தனுபூதியிற்கொள்வர்-
மருள்விழியோர்திரிவிலிரை மாயாவாதமதென்பர் (98)
ஓவதனின்மூவெழுத்துமோரெழுத்தேயானதுபோற்-
சீவபரசிவமூன்றுஞ்சித்தொன்றேயல்லவோ (99)
புத்தியில்லாவென்றனக்கும் போதவிழிதான்றறிந்து
முத்திபதங்காட்டுவித்த முதுகிரிக்கென்கைம்மாறே
யாணுணர்ந்தவிப்படியேயிப்பிரமவனுபூதி
தானுணர்ந்தேயெல்லோருஞ்சதிராய்வாழ்ந்திடவேண்டும் (100)
முமலவிருளினைநீக்கிமுத்திபதமெனக்களித்த
நிமலவிருத்தாம்பிகையேநீடூழிதான்வாழ்க (101)
பிரமானுபூதிவிளக்கம்-முற்றும்.
-------------
6. ஞானவம்மானை.
ஆழத்துப்பிள்ளையடிதொழுதம்மானே (1)
ஐயந்திரிவையறுத்தேன்காணம்மானே (2)
விருத்தவம்பிகைப்பதமேவியேயம்மானே (3)
மெய்ஞ்ஞானக்கண்ணைவிழித்துப்பின்னம்மானே(4)
கருத்திற்றுணிவைக்கருதிநின்றம்மானே (5)
கண்டபடியேகழறுகேனம்மானே (6)
தந்தைதாய்தாரந்தமரேனுமம்மானே (7)
சாற்றுமுயிர்ச்சார்வுதனம்பணியம்மனே (8)
புவிகாணியென்னும்பொருட்சார்வும்மானே (9)
புறப்பற்றெனுமிவைபொருந்திநின்றம்மானே (10)
குலஞ்செல்வமுங்குழகுங்கோலமம்மானே (11)
குறைவில்லையெனவெணிக் கொண்டுழன்றம்மானே (12)
திரிதருகின்றேன்சிலகாலமம்மானே (13)
செம்மைநெறிதனைச்சிந்தியாதம்மானே (14)
சிவநேசந்தவந்தானஞ்செய்யாமலம்மானே (15)
சித்தந்தெளிந்ததுதெய்வீகத்தம்மானே (16)
அனித்தமசுத்தமரந்தையேயம்மானே (17)
ஆனவிம்மாயையசத்தேகாணம்மானே (18)
நித்தியநின்மலநீடின்பமம்மானே (19)
நிஜமானமுத்திநிலைசந்தேயம்மானே (20)
என்னவுணர்ந்தபினில்லின்பையம்மானே (21)
ஏறநோக்காதிளைமைதனிலம்மானே (22)
பொய்யெனவிட்டுப் புறப்பட்டேனம்மானே (23)
போதகுருச்சாந்தன பொன்னடிக்கம்மானே (24)
வந்துதுதித்து வணங்கினேனம்மானே (25)
மலரடியென்சென்னி வைத்துப்பின் னம்மானே (26)
முத்திநெறியை மொழிந்துட னம்மானே (27)
முதுகிரியிற்றவ முயலென்றானம்மானே (28)
அவனுரைத்தபடியங்கிருந்தம்மானே (29)
அல்லும்பகலு மசைவறமம்மானே (30)
மேவிநின்றேதவ மேவினேனம்மானே (31)
விருத்தவம்பிசைவந்து விளங்கினானம்மானே (32)
அவள்விளங்கநன்றா யனுபவமம்மானே (33)
ஐயந்திரிவற வறிந்தேன்காணம்மானே (34)
எம்மதத்தோர்க்கு மெழில்வீட்டிலம்மானே (35)
ஏகமாயனன்னிய மெய்துதலம்மானே (36)
சம்மதமத்தகைசம்மதிக்கம்மானே (37)
தத்துவமசியென்றுசாற்றிடுமம்மானே (38)
இந்தச்சம்மதிக்குயிரீசனுமம்மானே (39)
இருமுதலென்றலிழியுகாணம்மானே (40)
ஒன்றாகின்முத்தியுமொன்றாதென்றம்மானே (41)
உரைத்திடிலபின்னையிலொன்றுங்காணம்மானே (42)
பின்னையிலிருமுதல் பேசரமலம்மானே (43)
பேசொணாதபினையிற் பிரமமொன்றம்மானே (44)
அபினையிலேகமாமனுபவமம்மானே (45)
ஐந்தாகும்பின்னையி லனுபவமம்மானே (46)
சத்தியின்றியுண்டு சத்தியமானம்மானே (47)
சத்திமானையின்றிச் சத்தியிலம்மானே (48)
பந்தத்துக்கேதுவாம் பகர்பின்னையம்மானே (49)
பந்தம்விடற்கேது பகர்மற்றதம்மானே (50)
இப்பந்தம்வீடின்றியிருந்திடுமம்மானே (51)
ஏகமதையன்றியிவையில்லையம்மானே (52)
அதனாலேகமென்றலாந்துணிவம்மானே (53)
ஆந்திரிவிருமுதலாகுமென்றம்மானே (54)
பிரத்தியக்கமதாகபபேசுகேனம்மானே் (55)
பிராகாபாவமதிற்பிரமமொன்றம்மானே (56)
நினைவிற்கூடியபின்னைநிகழ்மாயையம்மானே (57)
நிஜமாய்நோக்கிடிலிரண்டாய்நிகழுங்காணம்மானே (58)
நினையுந்தனையன்றிநில்லாதென்றம்மானே (59)
நீக்கிடிற்றானேயாய்நிகழுங்காணம்மானே (60)
தோன்றுதலெல்லாஞ்சொரூபமென்றம்மானே (61)
தோன்றுதல்வேறென்றுசொல்லிடிலம்மானே (62)
ஐந்துபதார்த்தமுமாறாதுமம்மானே (63)
ஆகிவேறுபோலமர்ந்திடுமம்மானே (64)
அனைத்துஞ்சொரூபமென்றனுபவத்தம்மானே (65)
ஆறாறுமைந்துமதுவாங்காணம்மானே (66)
இதனாலெல்லாநாமேயென்றுகண்டம்மானே (67)
ஏதும்பதைப்பற்றிருந்தேன்காணம்மானே (68)
என்சத்தேயுண்டாயிருக்குங்காணம்மானே (69)
என்சித்தேதோன்றியிடும்பின்னையம்மானே (70)
என்னின்பேயின்பாயெய்துங்காணம்மானே (71)
எல்லாஞ்சத்துச்சித்தின்பங்காணம்மானே (72)
என்னாலெனையுங்கண்டெய்தினேனம்மானே (73)
இன்பமேயெய்தியிருந்தேன்காணம்மானே (74)
எந்தப்பொருளிலுமின்பெய்தலம்மானே (75)
என்னின்பமேயென்றிசைந்தேன்காணம்மானே (76)
இனியோர்பொருளையுமெண்ணிநின்றம்மானே (77)
இச்சைசெய்யேனதிலின்பமில்லம்மானே (78)
ஆசைபயமவையற்றேன்காணம்மானே (79)
ஆனந்தநித்தியனாதாலம்மானே (80)
நிகழ்காலமதுதனினேரிட்டதம்மானே (81)
நிராசையிற்றுய்த்துநிலைநிற்கேனம்மானே (82)
என்னினைவிலென்னையிதுவென்றேயம்மானே (83)
இன்னானாவாய்கண்டிருக்கேன்காணம்மானே (84)
என்னினைவிண்மையிலேகமாயம்மானே (85)
என்னையேயான்கண்டிருக்கேன்காணம்மானே (86)
இங்குமங்குமென்னையானேகண்டம்மானே (87)
ஏதுங்கவலையற்றிருக்கேன்காணம்மானே (88)
அசைவுசெய்பின்னையிலன்றேநின்றம்மானே (89)
ஆடுகுதலிதென்றறிந்தேன்காணம்மானே (90)
என்னாணையெனையன்றியிலையொன்றுமம்மானே (91)
இதுதுணிவெனமழுவேந்துவேனம்மானே (92)
என்னையறியாமலிவ்வளவம்மானே (93)
ஏங்கிவழிகாணாதேற்குமேயம்மானே (94)
தன்னைநிகராகுஞ்சங்கரியம்மானே (95)
தண்ணருள்செய்ததயவினுக்கம்மானே (96)
என்னகைம்மாறுமுண்டென்னிடத்தம்மானே (97)
இனியவளடியவர்க்கெழிற்பணியம்மானே (98)
விரும்பியேசெய்வதுவிதியிந்தவம்மானே (99)
விருத்தகிரித்தலம்விளங்கிடவம்மானே (100)
ஞானவம்மானை-முற்றிற்று
-------------
திருச்சிற்றம்பலம்
7. வேதாந்தத் தசாவவத்தைக் கட்டளை.
மோக்ஷமுண்டென்கின்ற வெம்மார்க்கத்துக்கும்
உபக்கிரமத்திற்பந்தமும்,உபசங்காரத்தின்முத்தியுஞ்
சித்தாந்த மாகையினாலே இம்மார்க்கத்தி னுடைய-
பெந்தமுத்திவிவகாரஞ் சுருக்கமானச்சொல்லப்படா
நின்றதெப்படியெனில், சத்தியம்-ஞானம்-அனந்தம்-
ஆனந்தமென்னும் இலக்கணத்தையுடையசுயம்பி
ரகாசமாகிய பரவத்துவின் கண்ணின்று வாசகஞ்செயவொணாத
பின்னாசத்திதோன்றும்-அதினின்று மாயைதோன்றும்-
அதில் ஊர்த்தமாயையினின்றும் பரதத்துவந் தோன்றும்-
அதினின்றும் வியோமந்தோன்றும்-அதிற் காலபரந்தோன்றும்-
அதோமாயையினின்றும புருடன்றோன்றும்-
அதின் மூலப்பகுதி தோன்றும்-அதின்மான்தோன்றும்-
அதிலாங்காரந் தோன்றும்-அந்தவாங்காரந் திரிகுணமாகவிரியும்-
அவையிற் சாத்துவிதாங்காரத்தின் மனமும்
ஞானேந்திரியங்களைந்துந்தோன்றும்-இராசதவாங்காரத்தில்
கன்மேந்திரியங்க ளைந்துந் தோன்றும்- தாமதவாங்காரத்தில்-
சத்தாதிகளைந்துந்தோன்றும்-இந்த சத்தாதியைந்தையும்
ஒவ்வொன்றை யிரண்டு கூறுபண்ணி-
அவையிலொருகூறில்-ஒவ்வொன்றை நன்னாலுகூறாகப்
பண்ணிதனது கூறல்லாத நாலினுங்கூட்ட பஞ்சீகரணதூலபூதமாம்-
உபக்கிரமமுற்றும் இனிதத்துவங்களினுடையவகை யெப்படியென்னிவ்,
பஞ்சீகரண தூலபூதமைந்து சத்தாதியைந்து
ஞானேந்திரியமைந்து-கன்மேந்திரியமைந்து-
அந்தக்கரணங்கணாலு-புருடன்-காலபரம்-வியோமம்-பரம்-
ஆக தத்துவமிருபத்தெட்டு-மேல்மாயை யொன்று-
பின்னாசத்தியொன்று ஆக 30.இவையே பந்தம்-இனியிவை
முப்பது நீங்கி மேற் சுயம்பிரகாசத்தை யடைதலே
உபசங்காரம்-இதற்கு மார்க்கமெப்படியென்னில்,
தூல் பூதமைந்து-சூக்ஷபூதமைந்து-ஞானேந்திரியமைந்து-
கன்மேந்திரியமைந்து ஆக இருபதுஞ்சீவசாக்கிரம்-
இதிற்றிரோதாயிநீங்கும்- மனம்புத்தியாங்காரமூன்றுஞ்
சீவசொற்பனம்-பிரகிருதிசீவசுழுத்தி புருடன்பரசாக்கிரம்-
இதிற்பிரகிருதிநீங்கும்-கால பரம்பர சொற்பனம்-இதில்-
அசுத்தமாயைநீங்கும்-வியோமம்பரசுமுத்தி-பரம்சிவசாக்கிரம்-
மாயைவிசுவக்கிராசம்-இதிற்கன்மநீங்கும்-பின்னாசத்தி
உபசாந்தம் இதிற் சுத்தமாயை நீங்கும்-சுயம்பிரகாசமே குருதுரியம்-
இதில் ஆணவநீங்கும்-ஆகவவத்தைபத்து-இதுவே முத்தி-
இவ்வொழுங்கி-ஞானாசாரியர்கைகாட்டுப்படிக்குச் சமாதியிலிருந்து-
அனுபவம் பண்ணிக் கொள்ளவேண்டியது.
வேதாந்தத் தசாவவத்தைக் கட்டளைச்சுருக்கம் - முற்றும்.
--------
8. வேதாந்தத சகாரியக்கட்டளை.
நித்திய நைமித்திய காமியப் பிராச்சித்த உபாசனாதிகன்மங்களை
யனேக ஜென்மாந்திரங்களிலே பண்ணப்பட்டு கிருதகிருத்தியனாய்-
நித்தியா நித்தியவத்து விவேகம்-
இகமூத்திரார்த்த பலபோகவிராகம்-
சமையாதி சட்கம் முமூட்சத்துவம்-
என்கிறசாதன-சதுஷ்டயசம்பத்தியுடைய-
அதிதீவர பக்குவமுடையோர்-
மேற்செனன மெடாதவகைக்கு-
பிரம்ம கைவல்லியஞ் சமாதியிலிருந்தடைகுதற்கு
மேலான மார்க்கம் வேதமுடிவாகிய்-
உபநிடத்தில்தேசகாரியமாகவிருக்கும்-
இதற்குத் தொகையெப்படியெனில்-
மாயாரூபமென்றும்-மாயாதெரிசனையென்றும்-
மாயாசத்தியென்றும்-சீவரூபமென்றும்-
சீவதெரிசனை யெனறும்-சீவசுத்தியென்றும்-
பிர்ம்மரூபமென்றும்-பிர்ம்மதெரிசனையென்றும்-
தேககைவல்லியமென்றும்-விதேககைவல்லியமென்றும்-
ஆக-பத்து-இது தொகையாகிய சிரவணம்.
இதற்கு வகையெப்படியென்னில்-
மாயாரூபமாவது-
சர்வப்பிரபஞ்சங்களும் இத்தனை அங்கிசத்துடனேகூடி-
விளங்குமெனக் காண்கை-
மாய தெரிசனமாவது-
அந்த அங்கிசத்தில் இத்தனையங்கிசம்-
மாயா சம்பந்த மெனக்காண்கை-
மாயா சுத்தியாவது-
அதினுடையவ திட்டானத்தைக் காண்கை-
சீவரூபாவது-
விளக்க-விளங்கப்பட்ட மாயாரூபத்தைக்காண்குதற்கோ
ரறிவுண டெனக்காண்கை-
சீவதெரிசனமாவது-அவ்வறிவைத் தானெனக் காண்கை-
சீவசுத்தியாவது-அவ்வறிவின திட்டானத்தைக் காண்கை-
பிர்ம்மரூபமாவது-மாயாரூபத்துக்குஞ் சீவரூபத்துக்ககு
மதிட்டானம் பிரமமெனக் காண்கை-
பிரமதெரிசனமாவது-ஆரோபிதமு மதிட்டானத்தைவிட
வேறில்லாததுபோல மாயையுஞ் சிவனும்
பிரமாகத் தானே காண்கை-
தேககைவல்லியமாவது-அந்தப் பிரமமாகத்தானே
காண்கிறபோதமு நீங்கிஆனந்த மயமாய்நிற்கை-
விதேககை வல்லியமாவது-அந்தப் பிரமானந்ததீதத்தை யடைகை-
இதுவகையாகிய மனனம்-
இனிவிரிவெப்படி யென்னில்-
சத்தாதி விடையத்திலவாவறுத்து-
ஒரே காந்தத்திலிருந்து-
நிதித்தியாசனத்தில சமாதியைப்பொருந்தி-
சாட்சாத்கரிக்கும்வகை-
மாயாரூபமாவது இதுவென்று காணப்பட்ட
சர்வம் பிரபஞ்சமு முண்டாய் விளங்கிரம்மியமாய்
நாமரூபமாய் இவை ஐந்தங்கிசத்துடனே
விளங்குதலைக் காண்கை-
மாயாதெரிசனையாவது-அந்த ஐந்தங்குசத்தில்-
பின்பு சொல்லப்பட்ட நாமரூபமாகிய விரண்டங்கிசமு
மாயையெனக்காண்கை-
இனிமாயாசுத்தியாவது- இந்தமாயா சம்பந்தமாகிய-
நாமரூபத்துக்கு முன்சொல்லப்பட்ட உண்டாய்விளங்கி
இரம்மியமாகிய மூன்றங்கி சத்தையுடைய அதிட்டானத்தைக் காண்கை-
சீவரூபமாவது- ஐந்தங்கிசத்துடனே விளங்கப்பட்ட சர்வத்தையுநோக்கி
அவையில் பின்பு சொல்லப்பட்ட-
இரண்டங்கிசமு மாயாசம்பந்தமென்றும்,
அந்த மாயாசம்பந்த முன்பு சொரூபசம்பந்தமாகிய-
சச்சிதானந்தத்தைவிட வேறின்மையென்றுங்
கண்டவறிவொன்றுண்டெனக் காண்கை
சீவதெரிசனையாவது- நாமரூப மயமாகிய கேவலமுநீங்கிச்,
சச்சிதானந்தமாகிய- பிர்மத்தைப் பற்றிநிற்கை-
இதுசாக்கிர அவத்தை- சீவசுத்தியாவது- அந்தச் சச்சிதானந்தமயமாகிய-
பிரமத்தை அவ்வொளியே கண்ணாகக்கொண்டிருந்து-
அதிற்சீவத்துவ போதமடங்கி அச்சீவனுக்கு அதிட்டானமாகிய-
பிரமந்தானாய்நிற்கை - பிரமரூபமாவது-
மாயாரூபமாகிய நாமரூபத்திற்கும்- அதையுணருஞ் சீவனுக்கு
மதிட்டானமாய் விளக்கப்பட்டது, சச்சிதானந்தமே யெனக்காண்கை,
இதுசொற்பன வவத்தை- பிரமதெரிசனையாவது-
பழுதை-கிளிஞ்சில்-கட்டை-சூரியன்-தங்கம்-
மண்முதலிய எந்த வதிட்டானங்களில் கற்பிக்கப்பட்ட பாம்பு-
வெள்ளி- கள்வன்- கானனீர்- ஆபரணம்-
கடகலசமு லிவ்வாரோபிதம் விசாரித்தவிடத்தில் -
அவ்வதிட்டானமேயாய் விளங்குதல்போல
ஆரோபிதமாய் விளங்கப்படுகிற நாமரூபமயமாகிய மாயையும் -
அம்மாயையை யறியப்படா நின்றசீவனும்-
அதைவிளக்கப்பட்ட பரமும்-
நாம்ரூபமு மறியப்பட்டதானும் அறிவிக்கப்பட்ட
பரமேயெனக் காட்டாமல்
நாமரூபத்தை யுந்தன்னையும் வேறுபோல் விளக்கப்பட்ட
அஞ்ஞானமும் அதற்கு நியதமாகிய கர்மமும்
இந்த ஐந்து பதார்த்தமும அதிட்டானமாகிய சச்சிதானந்த
சொரூபமேயாய்க் காண்கை-
இதுசுழுத்தி-தேககை வல்லியமாவது-
அப்படிஅந்த ஐந்துபதார்த்தமுஞ் சொரூபமேயாய்க் காணப்பட்ட
வாதனையுநீங்கி அவ்விடத்திற் பிரகாசிக்கப்பட்ட
சொரூபானந்தத்தைப்பெற்று நிற்கை
இதுதுரியம்-விதேககைவல்லியமாவது-
அந்தசொரூபானந்தத்தைப் பெற்று ஆனந்தாதீதனாய்-
வாக்குமனாதீத கோசரமரமாகிய பிரமகை வல்லியத்தைப் பெறுகை
இதுதுரியாதீதம்-இவ்வொழுங்கில் குருகாருண்ணியத்தினாலே-
சென்றுதெச காரியமுமனுபவப்பட்டு பிரமகை வல்லியமடையில்-
அப்போது பந்தமுத்தி விவகாரஞ் சொற்பனம் போலக்கண்டு
பண்டைப்படியாய் நின்றுமேற் செனனத்து-
வித்தாகிய ஆசைபயமிரண்டும்-
தான் சர்வானந்தத்திற்கு மதிட்டானமாகிய
பிர்ம்மானந்த மயமாகையால் ஆசையும்-தற்சொரூபமாகிய-
பிரமத்தைத விரபிரத்தியக்கா வேறொன்று மில்லாத தாகையால்
பயமுமொழியும்.
வேதாந்ததசகாரியக்கட்டளை முற்றும்.
-----
9. வேதநெறியகவல்.
சாதனநான்குந்தன்னிடத்துதித்த
பின்னர்விசாரம்பேதமபேதம்
எனவிரண்டவையளீசனுமுயிரும்
இருமுதலென்றேயியம்புதறிரிவு
ஒருமுதலென்றலொள்ளியகாட்சி
ஆகையின்வேதத்தந்தவிசாரம்
செய்திடவேண்டுஞ் சிறப்பெனிலாகமம்
அன்றறுசிறப்பாமத்தியான்மீகம்
சொல்லியபிரபலசுருதியேசிறப்பு
இத்தகவன்றியெழிலார்சுருதி
அரசனதுரையினவைமற்றெல்லாம்
மற்றோருரையின்மறையினைப்பற்றி
நிற்குமதன்றிநிமலன்சுவாசம்
வேதமாகமம்விளங்கியவாக்காம்
அதனான்முந்தியதருமறையாகும்
இதற்கதிகாரமின்றியவைசியர்
சூத்திரராதிசொல்லியபேர்க்கும்
விசாரணைபண்ணிவிளங்கிடலாகும்
அவரவர்சரிதையவரவர்க்கேயாம்
பத்தியுஞானமும்பகர்வயிராகமும்
எக்குலத்தோர்க்குமெய்திடலாகும்
அறிவேகுலமென்றறைந்திடுமுலகம்
நற்குலம்வினையினண்ணினதாகும்
மூன்றுகடனுமுனமுடித்தோர்க்கே
ஞானவிசாரணை நாடிமேற்கொள்ளும்
நாமாரிந்தநானாவிதமாம்
பிரவஞ்சத்தின்பிறப்பிடந்தானே
தெவரினையுடையதெமக்கிப்பிறவி
எய்தினதெந்தவேதுவினிஃதும்
இறந்திடுமெந்தவேதுவினென்றும்
தேர்ந்திடவேண்டுந்தேசேந்திரியாதி
நாமலசித்தேநமதுருவகிலம்
பழுதையையிரவிற் பாம்பென்பதுவின்
சிவமஞ்ஞானத்திருக்கிற்றிரிவாய்ச்
சகமெனத்தோன்றுஞ்சங்கற்பத்தில்
பழுதையிணுளதாய்ப்பகர்ந்திடும்வடிவே
ஆரோபிதமாமரவிற்றங்கலில்
அச்சிவவடிவேயகிலந்தங்குஞ்
சகப்பொருளெல்லாஞ்சத்துசித்தின்ப
வடிவநாமமுமிவ்வகையைந்தியல்பில்
உதித்திடுமுன்னமுரைத்திடுமூன்றும்
சொரூபசம்பந்தன் சொல்லும்பினிரண்ம்
மாயைச்சம்பந்தமற்றிவைதன்னை
யூகித்துணராதுணர்வுடைத்தாகித்
தோன்றிடும்பொருள் துவக்கிற்பிறவி
சிதைந்திடுஞ்சகலத்தியாகந்தன்னில்
சகலத்தியாகந்தானெ துவென்னில்
பாம்பெனநீக்கிப்பழுதையென்றறிதல்
போலநாமாதிபோக்கிச்சொரூபம்
பெற்றிடலஃதெப்பெற்றியிலுண்டாம்
அரவெனும்பிராந்தியகன்றிடுந்தீபம்
வந்துவிளக்கில்வகையதுபோல
ஆசானருளிலருமறையந்த
ஞானவிசாரமேஞானதீபமுமாம்
அவ்விளக்கங்கொண்டறிந்திடவேண்டும்
அதிட்டானந் தோன்றிலாரோபிதம்போம்
தனையாரென்றேதான்முதற்றேரின
துளபடியுணரினொருங்கேயனைத்தும்
தோன்றிடும்பழுதை தோன்றினவுடனே
கட்செவியென்றல்காணாதெஃதின்
அகிலமுநீங்கலன்றியேதோன்றில்
பேய்த்தேர்போலப்பிரவர்த்தகமும்
கனவதுபோலக்காண்டிடுமவையாய்
நின்றிடலொருவிநித்திரைதன்னில
கண்டிடுங்கனவிற்காட்சியீதென்று
தனைவேறாகத்தாணுணர்ந்திடலின்
உடன்முதற்றள்ளியொருசிவநாமென்
றிருளகன்றுறுதியிதையத்துதித்துக்
கந்தர்ப்பநகரங்கண்டிடலிற்சகம்
கண்டிவ்வுறுதிகலக்கமில்லாமல்
நிற்றல்சமாதிநிலையிதுவாகும்
உடலந்தத்திலொன்றுவன்முத்தி
இதுநின்மலமுடையிதையருக்காகும்
மலினநெஞ்சுடையமகற்குமுன்னானா
விதமாமசுத்தம்விலக்கும்பொருட்டுச்
சுத்தவாதனையைத்தொடங்கி
மனோலயஞ்செய்யின்வாய்த்திடும்வீடே
வேதநெறியகவல் முற்றும்.
------
10. சகச நிட்டை.
சவிகற்பநிருவிகற்பத்தகநிட்டையெனவுரைக்கும்
இவிகற்பமென்றுமின்றியிடைவிடாச்சகசநிட்டை
செவியதினெனக்குநீயுந்திருவுளஞ்செய்யவேண்டும்
அவியமில்விருத்தவெற்பிலம்மையேயன்பர்வாழ்வே (1)
பொதுவுறத்தருமம்பண்ணிப்புகல்வினைச்சமமதாகி
அதுவிததென்னுஞ்சித்தமமலமாயநித்தநித்தம்
இதுவெனவுணர்ந்தநித்தத்திகபரத்திச்சையற்ற
சதுரர்களிடத்திற்பரசந்தகர்ந்திடும்பத்திதோன்றும் (2)
பத்திதான்பதிந்தகாலைப்பகரங்கத்தலமடைந்து
சுத்தியாயங்கமந்தத்தொல்லருட்சத்தியாகி
நித்தியானந்தலிங்கநேரதாய்த்தரிக்கப்பட்டுத்
தித்தியாநின்றவின்பந்திருத்தியிற்களிக்குமென்றும். (3)
சமரசம்பதிந்தகாலைத்தலமயிக்கியத்தடைந்திங்
கமரங்கமானவான்மாவந்தச்சிற்சத்தியாகி
விமலமாலிங்கந்தன்னைவிளங்குநெஞ்சினிற்றரித்து
நிமலமாம்பரமானந்தநிஜதிருத்தியிற்களிக்கும் (4)
ஆனந்தம்பதிந்தகாலையச்சரணத்தடைந்து
வானந்தத்தங்கமாகுமகபராசத்தியாகித்
தானந்தப்பிரசாதத்தைத்தரித்துச்சோத் திரத்திலென்றும்
ஊனந்தமில்லாவின்பவேசையிற்களிக்குமென்றும். (5)
அனுபவம்பதிந்தகாலையடைந்துநற்பிராணலிங்கத்துத்
தெனுமங்கவாயுநின்றங்கெழிலாதிசத்தியாகி
உனுஞ்சரலிங்கந்தன்னை யொன்றுந்தொக்கினிற்றரிகததுப்
பனுமந்தப்பரமானந்தபரிசத்திக்களிக்குமென்றும் (6)
அவதானம்பதிந்தகாலையடைந்தந்தப்பிரசாதத்தை.
இவனானதேயுவங்கமிச்சைநற்சத்தியாகி
நவமானசிவலிங்கத்தைநயனமற்றதிற்றரித்திங்
குவமானமில்லாவின்ப வுருவினிற்களிக்குமென்றும். (7)
நயிட்டியம்பதிந்தகாலைநன்மயேசுரத்தடைந்து
சயித்தியசலமாமங்கந்தகுஞானசத்தியாகி
வியப்புறுங்குருலிங்கத்தைமேவுநாவினிற்றரித்திங்
குயப்பெறுபரமானந்தவுருசியிற் களிக்குமென்றும் (8)
சற்பத்திபதிந்தகாலைத்தகும்பதத்தலமடைந்து
முற்பகர்தரையாமங்கமொய்யதாங்கிரிகையாகித்
தற்பராசாரலிங்கந்தரித்துநாசினியிலந்தச்
சிற்பரானந்தகந்தந்தேர்ந்ததிற்களிக்குமென்றும் (9)
ஒருபத்திதானேயாருயொருதலந்தானேயாறாய்
ஒருவங்கந்தானேயாறாயொருசத்திதானேயாறாம்
ஒருலிங்கந்தானேயாறாயொருமுகந்தானேயாறாய்
ஒருவின்பந்தானே யாறாயொன்ரதாய்க் களிக்குமென்றும் (10)
அனாதியிற்சிவமேலிங்கமபினையேயங்கமாகும்
அனாதியவ்வபினைவேல்வங்கமதாயிற்றென்றால்
அனாதியச்சிவமேயந்தவங்கத்திற் புறம்புந்தோன்றும்
அனாதியக்குருவத்தீக்கைக்கருத்தமுவிவையேயாகும் (11)
சகசநிட்டை-முற்றும்.
---------------
11. பிரமசித்தியகவல்.
எழுவகைப்பிறப்பிலெடுத்தற்கரிய
மானிடப்பிறவிவாய்ப்பினிலொருவற்
காயிடினதுகொண்டம்முத்தியினை
அடைகுதலேபயனஃதினையன்றிச்
சித்திபுத்திகளிற்சிந்தனைசெய்யின்
ஏதமதாகுமெதினாலென்னில்
உலகத்தின்கண்ணொப்பிலொருவன்
அன்புகிடைத்தாலவனாலாகிய
பயன்பெறுகுதலேபழுதில்சிறப்பும்
அஃதினைப்போலலவனியின்மனிதப்
பிறப்பினைக்கொண்டேபிறவாநெறியை
அடைந்திடுமதற்கறிதற்கரிய
அவதியியல்பென்றறிந்துளபோதே
எத்தனம்பண்ணாதிருப்பவன்றனக்குத்
தான்வஞ்சகனெனச்சாற்றலுமாகும்
இத்தகவாகினியம்பிடுசித்தி
அடைந்திடுகுதல்பய னலவோவென்னில்
அனந்தசித்தியடைந்திடுமதற்குள
பிரமசித்திபெறுகுதலேபயன்
அணிமாதிசித்தியடைகுதல்பயனன்
றிஃதையுமன்றியியம்பிடுமட்ட
யோகந்தானுமொள்ளியபிரம
சித்திக்கங்கஞ்செப்பியவவையின்
கருத்தறியாதுகருதிமாறாக
அனுட்டித்தேயவ்வணிமாதிதன்னைப்
பெறுவர்கருத்தைப்பேசக்கேண்மின்
காமாதிகளைக்கைவிடலியமம்
விட்டபொருள்கண்மேவிடிற்றள்ளி
நிற்குதனியமநிருபாதிகமாய்
ஒராதனத்திலுறைகுதலாதனம்
நாமரூபத்தைநாடுமனத்தை
இருதயமதனிலிருக்கப்புகுத்தல்
பிராணாயாமம்புறவிடயத்தைப்
பெயர்த்துளேமீட்டல்பிரத்தியாகாரம்
விடையவாதனையைவிகற்பறநிறுத்தல்
தாரணையாகுந்தற்சொரூபத்தை
நாடறியானநவிற்றிடுபுறமும்
உள்ளுமறவவ்வொளிதானேயாய்
ஒத்துநின்றிடலேயோங்கியசமாதி
ஆதிலினிந்தவட்டயோகமதும்
பிரமசித்திபெறுதற்கங்கம்
என்னலுமாகுமினிப்புத்தியதும்
பயனலவோவெனிற்பகர்ந்திடுபுத்தி
இடம்பொருளுறவுவின்பங்கீர்த்தி
என்றைவிதமாமிவையைந்தினையும்
நன்றாய்த்தேரினன்முத்தியதாம்
இஃதினையன்றியிம்மாயாவித
சம்பந்தந்தனைத்தரனினைந்திடுதல்
அறியாமையாகு மஃதினைக்கேண்மின்
இடமுமழியாவிடமேயிடமாம்
பொருளுமழியாப்பொருளேபொருளாம்
உறவுநீங்காவுறவேயுறவாம்
சுகநிரதிசயசுகமேசுகமாம்
புகழும்பெரியோர்புகழ்தலேபுகழாம்
ஆகையிற்புத்தியாகியவிதங்கள்
எழிலார்வீடேயிவ்வகையன்றி
மாயையிலுளதாய்வந்திசித்தி
புத்திகளென்றுபுகலிரண்டினையும்
அடைந்திடநினைத்தலபமதாகும்
எதினாலென்னியம்பிடுமாயா
சம்பந்தத்தைத்தானடைகுதற்கும்
சத்தியமுத்திசம்பந்தத்தை
அடைந்திடுமதற்குமாகியவருத்தம்
எட்டுணையானுமிச்சையச்சங்கள்
உள்ளின்றியேவிட்டொன்றியகாயக்
கிலேசம்பண்ணிக்கிளர்தவமதனில்
அடைந்திடவேண்டுமாகியவிந்த
இரண்டுவகைக்குமேற்றமுந்தாழ்வும்
இன்றிவருத்தமெய்தல்சமமாம்
இத்தகைவருத்தமெய்தப்பட்டும்
அனித்தப்பொருளையடைகுதல்சபலம்
அழியாப்பொருளையடைகுதல்சபலம்
அன்றியுதன்றாயறிந்தவிடத்தில்
அவைகளிரண்டுமசத்தாதலினால்
இன்பமோர்காலுமிலையவைதன்னின்
றடைந்திடுமின்பமலையாவறிவின்
ஆனந்தலேசமஃதறியாமையில்
இவைகளினிடமாயெய்திவந்ததுபோல்
அறிந்திடுமதனாலறிவானந்தம்
பொருந்திடிற்சகலபுத்திசித்திகளும்
எக்காலத்திலெய்தினதாகும்
இதுவன்றிவேதமெழிலாகமத்தும்
புருடார்த்தமாகப்புகனான்கினிலும்
சிவமடைகுதலேசிறப்பெனவோதும்
அச்சிவமென்னுமழகியவீட்டை
ஐயந்திரிவுமறவேயடைதல்
எம்மார்க்கத்தாலென்றிடில்வேத
முடிவினின்மொழியுமொய்நெறியதனில்்
அடைந்திடவேண்டுமம்மார்க்கத்தின்
ஒழுங்கைக்கேண்மினுபநிடமதனில்
ஏகமேவாவத்துவிதீயம்
பிரமமேயென்றுபேசிடுமதற்குச்
சுசாதிவிசாதிசுவகதபேதம்
சொல்லியமூன்றுஞ்சொரூபத்தின்மை
என்ற துவாகினெழில்வேதாந்தப்
பக்கந்தனக்குப்பகர்ந்திடும்பந்தம்
வீடிவையிரண்டின்விவகாரத்துணி
வெத்தகையென்னிலியம்பிடக்கேண்மின்
நித்தியமாகையினிகழ்ந்திடுகால
பரிச்சேதமதும்பரிபூரணத்தும்
ஆகையிற்றேசவறைபரிச்சேதமும்
ஏகமதாகினியம்பிடுவத்து
பரிச்சேதமதும்பகர்ந்திடவொண்ணா
தறிவாய்ச்சத்தாயானந்தமதாய்ப்
பந்தமுத்தியெனப்பகர்விவகார
அதீதமாகியசைவறவிளங்கும்
தன்னிடந்தனிலேசங்கற்பசத்தி
சஙகற்பமல்லாத சங்கற்பசத்தி
என்றிவையிரண்டுண்டிவையிற்சங்கற்ப
சத்தியேதென்னிற்சாற்றிடக்கேண்மின்
நினைவுரூபமதாநிகழ்ந்திடுமதற்கு
வடிவேதென்னில்வகுத்திடுநாமம்
உருவமயமேயோரோரிடத்தில்
ஒருவன்கூவுமுறையதுதானே
எதிரிட்டப்படியெழுவதுபோல
நினைவதுவென்றுநிகழ்ந்திடுநாமம்
உருவதுவென்றுமொருபேதமுமில்
நவிற்றிடுரூபநாமமயமும்
மாயாமயமேமாயையென்றதுதான்
யாதொன்றில்லாததுமாயையாகும்
உள்ளதுமலவாயுருப்பெயர்மயமாய்
நினைவுரூபமாய்நிகழ்சங்கற்ப
சத்திசத்தாயதற்சொரூபமதாம்
அதிட்டானத்திலாரோபிதமாம்
ஆரோபிதமுமதிட்டானமின்றி
விளங்காததுபோல்விளக்கிடுந்தன்னைத்
தவிரச்சஙகற்பசத்தியுந்தோன்றா
தித்தகைதோன்றுமிருஞ்சங்கற்ப
சத்திமயமாஞ்சருவஙகளையும்
சத்தாய்நிகழுந்தற்சொரூபத்தில்
ஆரோபிதமென்றறிந்தமையாது
புறம்பெனச்சத்தியபுத்தியைப்பண்ணிப்
பார்த்திடுமிடத்தில் பரமுயர்செகமென்
றுரைத்திடப்பட்டவொருமுப்பொருளும்
விளங்கிடுமவையைவிளம்பிடக்கேண்மின்
சங்கற்பசத்திதன்மயமான
நாமரூபமதேநாட்டிடுசெகமாம்
அவையினைநோக்குமறிவேயுயிராம்
அவையினைவிள்க்குமறிவேபரமாம்
இத்தகையாகவியம்புமுப்பொருளும்
உதித்திடுமிந்தவுயிர்பரமிரண்டில்
மேற்பரஞ்சர்வவிடையமதாகும்
சீவனோவேகதேசவிடையம்
இந்தச்சீவனிப்படிபொய்யாய்ச
சடமாய்த்தோன்றுஞ் சகத்தினுடைய
புணர்ச்சியிற்சடமாய்போதவடிவை
விட்டுடனிச்சைவிளங்கிடுஞானக்
கிரியையுடைத்தாய்க்கிளக்குமிவையில்
கன்மமுண்டாய்க்கன்மந்தன்னால்
தோற்றமுடைத்தாய்த்தொன்றுதொட்டுச்
செனனமரணஞ்சென்றுடன்வரும்
இத்தகைபுரியுமிச்சங்கற்ப
சத்தியேபந்தந்தகுஞ்சங்கற்ப
சத்தியின்வடிவினிற்சாற்றக்கேண்மின்
பிராந்தியிலொருவன்பிசகிமாறாகத்
திக்குகடன்னைத்தேருமிடத்தில்
சூரியனின்றுதோற்றியதிசையைக்
கண்டுந்துணிவாய்க்காண்குதல்கூடா
தையமாய்த்தோன்றுமடுத்தபிராந்தி
உண்ணின்றுநீங்கிலுள்ளபடியே
துணிவாய்நேரேதோற்றுமதன்றி
மந்தவிருளின்மறைந்திடுகயிற்றைப்
பாம்புபோலப்பார்த்திடுமிடத்தில்
பாம்பலவென்றும்பழுதையேயென்றும்
ஆறதனாலேயறிந்திடுபோதும்
துணிவதுவாகத்தோன்றாதந்த
மந்தாந்தகாரமாறிடிற்றோன்றும
அஃதினைப்போலவறிந்திடுசாத்திர
ஜென்னியஞானஞ்செப்புதலன்றி
கிருதகிருத்தியனாய்க்கிளர்சாதனங்கள்
நான்குமுடைத்தாய்ஞானாசிரியர்
அருளதினாலேயாரணமுடிவாம்
மாவாக்கியத்தின்வகுத்திடுபொருளை
விருப்பமதுடனேவிசாரணைபண்ணி
இச்செகஜீவவிருபரம்மவைக்
கதிட்டானமாகியவப்பரசொரூபம
தானேயென்றுதன்னுள்ளிருளை
யகன்றுசமாதியென்றறைந்திடுகின்ற
சமாதானபுத்திதானதுபிறந்து
தனதுசங்கற்பசத்தியினாலே
ஆரோபிதமாயனேகத்துவங்கள்
விளங்கினதென்றும் விளங்கிடுமிவைக்கதிட்
டானந்தானேயாமெனவென்றும்
பழுதையினிடத்திற் பாம்பொருகாலும்
இல்லாதஃதினிவ்வாரோபிதம்
இலையெனநீங்கியெழிலதிட்டானம்
ஆய்நிற்குதலேயசங்கற்பசத்தி
இதுவேமுத்தியிச்சங்கற்பம்
அசங்கற்பமென்னவறைந்திடுமிவைக்
கதீதனேதானாகையிலவையின்
ஊதாம்பந்தமோங்கியமுத்தி
இவைதனக்கதீதனென்னலுமாகும்
இத்தகையொருவனெழிற்குருவருளில்
ஐயந்திரிவறவறிந்துசொரூபம்
தன்னுடசன்னிதானமதனில்
சங்கற்பத்திற்றானானாவாய்
விரிந்ததுவென்றும் விரிந்திடுமெவையும்
அசங்கற்பத்திலடங்கிடுமென்றும்
இவையேபந்தமெழில்வீடென்றும்
இவைகளிரண்டுமென்கணோர்காலும்
இலையிவைவிளங்கலெம்மிடமதனில்
ஆரோபிதமென்றறிந்தவறிவு
கலக்கமில்லாமற்காத்திரநீங்கும்
தன்னளவதனுந்தயிலதாரையினில்
நின்றிடின்முடிவினிகழ்பந்தமுத்திக்
கதீதமதாகுமழகியபிரம
சித்தியதனைச்சேருவனேரே
பிரமசித்தியகவல்-முற்றும்.
---------
12. உபதேசசித்தாந்தக்கட்டளை
ஆத்மாக்களை முத்தியிலே விடவேண்டி வாக்குமனாதீத
கோசரமாகிய அருட்சத்தி-தானே-பாசவயிராக்யஞ்-
சீவகாருண்ணியம்-ஈஸ்வரபக்தி பிரமஞானமென்கின்ற
நான்குமே ஒருதிருமேனியெனக் கொண்டருளிய-ஞானாசாரியர்
இனிப்பிறவாத முடிந்த பிறப்பில் நித்தியா நித்திய வத்துவிவேகம்-
இகமூத்தாத பலபோகவிராகம்-சமையாதி சட்கம்முமூட்சத்வமென்கின்ற
சாதனசதுஷ்டய சம்பத்தியே-ஓர்வெனக்குண்டசற்சீடனுக்கு-
அனுக்கிரகம் பண்ணுமுறைமை-உலகத்தின் கண்ணே
வயித்தி்யராயினோர்-ஒருவனதுவியாதியை-
நிச்சயம் பண்ணியித்தனை தினத்தின்மேல்-
அவுடதங் கொடுக்க வேணுமென்று நியமமிருப்பினும் ஒரோர
அசாத்திய வியாதியையுடையவனுக்குக் கண்டவக்கணமே-
கனமாகியபூபதி முதலிய-அவுடதங்களைக் கொடுத்து
உடனே திருப்பவேண்டும் அதைப்போலச் சாதனங்களையுடைய
தீவாதர பக்குவனுக்கும் ஓராண்டாகிலுஞ் சோதித்து அனுக்கிரகம்
பண்ண வேணுமென்றாலும் ஓரோர் அதிதீவரதர பக்குவனுக்கு
அந்தக்கணமே இந்த உபதேச சித்தாந்தத்தை அனுக்கிரகம்
பண்ணி பவரோகத்தை யுடனே நிவிர்த்தி பண்ணவேண்டும்-
இந்த உபதேச சித்தாந்த மார்க்கத்திலொழிந்து மற்றைய
மார்க்கத்தினாலே பவரோக நீங்காதோவென்னில்- பாதாதிகேச
பரியந்தம்-அக்கினி பற்றிக்கொண்டவனுக்கு விழுந்த துறையிலே
அவனை விழுங்கி மேலிடப்பட்ட மடுவிலேயன்றிக் கொஞ்ச ஜலத்தில்
பிரவேசிக்கில் உடனேய விந்துமுடியாது-அதைப்போல-
அதீத பக்குவனுக்குடனே-அவனையும் விழுங்கி மேலிடப்பட்ட
அகண்டா காரஞானம்-இம் மார்க்கத்திலே பிரவேசித்த-
அக்கணமே யுண்டாம்-அதெப்படி யென்னில்-சற்குரு சந்நிதியிலே
சற்சீடனானவன்- தேனிரம்பிய மலரைத்தேடும் அளிகள்போல்
பூதலமெங்குந் தேடி வெப்பந்தீராமல் வந்தடைந்து கண்ட அக்கணமே-
உள்ள மகிழ்ச்சியையடைந்து தாரகமாகிய சிவமே யெனக்கண்டு-
அவருடைய அருள்சுரக்கும்படி பண்ணிக்கொண்டு (சுவாமி நானார்
இந்தநானாவாகிய உலகமேது-இது ஆரையுடையது-எனக்குச்செனன
மரணம் வந்தவாறேது-இது யாதினாலே நீங்கும்-இவற்றை யனுக்கிரகஞ்
செய்ய வேண்டும்-இவையிற் பிரதமத்தில்-அடியேன்
நானாரென்னும் விண்ணப்பஞ் செய்தபடிக்கு என்னையறிவத்தால்-
மற்றைய நாலும் அடியேனே விண்ணப்பஞ் செய்வேனென்று
சற்சீடன் நானாரென்று கேட்க ஆசாரியனுக் கிரகம் பண்ணுகிறார்
நல்லது உன்னைக் கரதலாமலகம் போலக் காட்டுகிறோம், நீ நன்றாகப்
பார்க்கக்கடவாயென்று திருவடியைச்சூட்டி-அஸ்த
மத்தக சையோகம் பண்ணி கிருபாதிஷ்டியினாலே நோக்கியிங்கே
யுண்டாய் விளங்குவதெல்லாம் நீயேயென்னில்
சுவாமீ யிங்கேயுண்டாய் விள்ங்குவதெல்லாம் நானெப்படியாவேன்
ஆனாலுனக்கிங்கே-என்னபிரகாசியா நிற்குதென்னில்-
(சுவாமீ) நாமரூபமயமாகிய உலகமே தோன்றுது-ஆனாலந்த
உலக மெவ்விடத்தினின்று தோன்றுதென்னில்-
(சுவாமீ) யென்னுடையநினைவிலேநின்று தோன்றுது-
ஆனால் நினைவு வேறுஉலகம் வேறோவென்னில்-
(சுவாமீ) உலகமெதிரிட்டுக்கான்கையினாலே வேறுதானே-
ஆனால் உலகமாகிய நாமரூபத்தைநீக்கி நினைவைப்பாரென்னில்-
(சுவாமீ) அப்படி பார்க்குமிடத்தில் நினைவைக் காணேன்- ஆனால்
நினைவைநோக்கி நாமரூபத்தைப்பாரெனில் (சுவாமீ)
அப்படி பார்க்குமிடத்தும் நாமரூபத்தைக் காணேன்-
ஆனால், நாமரூபமயமாகிய உலகமேதென்னில்
(சுவாமீ) யென்னுடைய நினைவுதானே-ஆனால்
அந்நினைவு எங்கே நின்றுதோன்று தென்னில்
(சுவாமீ) என்னிடத்திலே நின்றூதோன்றுது-ஆனால்
நினைவுவேறு நீவேறோவென்னில்-
(சுவாமீ) என்னினை வாகையினாலே-வேறின்றிநான்றானே-
ஆனால் நினைவை நீக்கியுன்னைப் பாரென்னில்-
(சுவாமீ) யான் பிரகாசியாநிற்கின்றேன் ஆனால் நினைவு-
நீயெப்படி யாவாயென்னில்
(சுவாமீ) நினைவு என்னைவிடவேறுதானே-ஆனால்
உன்னைப் பிறித்து நினைவைப்பாரென்னில்-
(சுவாமீ) அப்படி பார்க்குமிடத்தில் நினைவைக்காணேன்-
ஆனால் நினைவுயாதோவென்னில்-
(சுவாமீ) நினைவானது நானுமல்ல என்னைவிடவேறுமல்ல-
ஆனாலஃதெப்படியென்னில்,
(சுவாமீ) தங்கத்தினிடத்திலே பணிதியானது
தங்கமுமல்லாமல் தங்கத்தைவிட வேறுமல்லாமல்
கற்பிக்கப்பட்டதுபோலநினைவு மென்னிடத்திலே கற்பிதம்-
ஆனாலிந்தநினைவு வேறேசத்தையோவென்னில்,
(சுவாமீ) அதற்குவேறே சத்தையில்லை-என்னுடைய
சத்தையே தோன்றிவிளங்கா நிற்குது-ஆனாலிங்கே
தோனறுவதெல்லாம்-யாதென்னில்.
(சுவாமீ) இங்கே தோன்றி விளங்குவதெல்லாம் நானே-ஆனால்-
நாமுன்னம், எல்லா நீயேயென்று சொன்னோமே-
அதற்குனக்கு ஐயந்தோன்றிற்றே-இப்போது எல்லாநானே
யென்று நீ சொன்னது திரிவோந்ன்றாய்ப் பாரென்னில்
(சுவாமீ) முதற்றிரிவினாலே எல்லாம் நானெப்படி
யாவனென்று கேட்டேன்.சுவாமி கடாக்ஷத்தினாலே-
திரிவு பண்ணிக்கொண்டிருந்த அஞ்ஞான விருள்
போய்த் துணிவாகத்தானே-எல்லா நானேயெனக்கண்டேன்-
ஆனால் உன்னைக் கண்டஇடத்தில் அனுபவ மெப்படியிருந்ததென்னில்-
(சுவாமீ) அகண்டாகாரமயமாய்ச்-சுட்டிறந்த சுகாதீதமாய்
பழுதையினிடத்தி்ற் பாம்பொருக்காலுமில்லாததுபோல்-
உலகமுயிர் பரமென்பது-ஒருக்காலு மில்லாததாய் பிரகாசியா நிற்குது-
ஆனாலிதுவே தற்சொரூபமுத்தி-யிதிற்கலக்கமில்லாமல்
தேகதனபரியந்தம் நிற்பாயாக-இதன்றி அந்தமுத்தி நீயானதுக்குக்குறி-
மற்றைநாலும்-நீயுன்னனுபவப்படிக்குச் சொல்லென்னில்-
(சுவாமீ) நானாவிதமாகிய பிரபஞ்சம் என்னிடத்திலே
ஆரோபிதம்-அது சங்கற்பத்தையுடையது-அந்தச் சங்கற்பத்தையுடைய
ஆரோபிதமாகிய பிரபஞ்சம்-அதிட்டானமாகிய என்னைவிட
வேறல்லவென்று காணாத திரிவினாலே எனக்குச்செனன
மரணமில்லை-இப்படி மற்றைநாலும் சுவாமி கடாக்ஷத்தினாலே
எனக்கனுபவமாச்சுது-நல்லது நம்முடைய அனுபவமிதுவே
சுருதியினுடைய முடிவிலே சொல்லுவதுமிதுவே-
உன்னுடைய வனுபவமு மிப்படியே யாகில் இதுவே-
உபதேசசித்தாந்தம்-என்று இதிற்கலக்கமில்லாமல்
வாழ்வாயாக வென்று ஆசீர்வாதம் பண்ணினார்.
உபதேச சித்தாந்தக்கட்டளை முற்றும்
------------------
13. சிவதரிசன அகவல்.
உரோமசமுனிகளுண்மகிழ்ச்சியுடன்
பணிந்திடுகின்ரபழங்கிரிமேய
விருத்தவம்பிகையேவிண்ணப்பமொன்றுண்
டுரைக்கேன்யானுமுன்செவிசாத்தி
அருள்செயவேண்டுமறைநீயென்னில்
கடையனேன்றனக்குங்கருணையதாக
சுட்டிறந்தொளிருஞ்சுயம்பிரகாச
சிவதெரிசனத்தைச்செப்பிடவேண்டும்
நல்லதுனக்குநாமேயகவிருள்
நீக்கிமுன்படியேநிலையினில்வைத்த
வகைப்படியேநீவகுத்துரையென்னில்
இருளறநீக்கியிதுவறநோக்கில்
இவ்விடத்துண்டாயிலகுவதேசிவம்
விளம்புமச்சிவத்தைவிளக்குவதேநீ
நீவிளங்குஞ்சிவநின்றறிகுதல்யான்
இவ்வனுபவத்திலியம்பியஞாதுரு
ஞானநேயம்மிவைநண்ணீநிற்கையினில்
சிவதெரிசனமெனச்செப்பிடலாகா
என்றெனில்யானுரையெழிலனுபவத்தில்
சிவம்நீயானெனச்செப்பியமூன்றும்
உரைமாத்திரமவையொருமுதறானே
எப்படியோர்முத லென்றெனிற்சொல்கேன்
சச்சிதானந்தத்தன்மயஞ்சிவமெனச்
சாற்றுதல்போலுஞ்சாறறுமோங்காரதறு்
தடங்கிநின்றிடு மூன்றக்கரம்போலும்
நீலோற்பலமெனநிகழ்த்திடல்போலும்
கடமடமகதாகாயமெனவே
சாற்றுத்ல்போலுஞ்சாற்றியவிவையில்
உரையேபின்னமூளபடிநோக்கில்
ஏகமேயாமித்தகைபோல
நானீசிவமெனநவிற்றிடுமூன்றும
சொன்மாத்திரமேசொரூபமதொன்றே
ஒன்றேயாகிலுயிர்க்கிதுவதுவென்
றுரைத்திடப்பட்டவுருப்பெயர்மயமா
மாயைதோன்றும்வகையேதென்னில்
அஞ்ஞானத்தாலச்சொரூபத்தை
மறந்துயிரிதுவெனுமாயையைக்காணும்
ஒருமுதலானவுயிக்கிருளென்றால்
பரசிவமதற்கேபந்தமுண்டாகும்
மேலுமோர்சிவம்விளங்குதலிலையில்
ஒருகாலையினுமொருவாபந்தம்
என்றெனிலந்தவெழிற்சொரூபற்குப்
பந்தமுத்திபகர்ந்திடலாகா
உன்னருளதனிலுபக்கிரமத்தை
அன்றெனக்குநீயருளீயவகையே
சொல்கேனந்தச்சொரூபவொளியில்
கதிரொளிதோன்றுங்கானலேபோலப்
பேசவொண்ணாதபின்னாசத்தி
தோன்றிடுமதனிற்சொரூபசிற்சத்தி
சாயைபதியிற்சகமுயிற்பரமென
ஒர்முப்பொருளுடனேவிளங்கும்
எத்தகைெயன்ன்னிலியம்பியபின்னை
திரிகுணசமுகஞ்சேர்ந்துநிகழும்
சத்துவகுணத்திற்சாயையேபரம்
எண்ணிறந்தவிராசதகுணத்தில்
சாயைகளேயுயிர்தாமதமிரண்டாம்
இருண்மாயையெனவிருளுயிர்வையை
மறைத்தேநிற்குமாயைசெகமாம்
தனுமுதலானசகமதுண்டாகக்
கணக்கதுவாகக்கன்மமுநிகழும்
இத்தகைபின்னாவிருஞ்சத்திதன்னில்
ஐந்துபொருளுமன்றேநிகழும்
இதிற்பந்தமுத்தியிசைத்திடலாகும்
இராசதகுணத்திலிசைந்திடுசாயை
ஆகியவுயிர்களகிட்டானமான
தற்சொரூபத்தைத்தாமதவிருளால்
மறந்துமூவகையாய்மாயையிலுழலும்
ச்சத்துவகுணபரந்தனக்கொருகாலும்
இருளேயில்லாவியற்கையிலருளில்
தனதங்கிசமுயிர்தானெனவறிந்து
கூபத்தில்வீழ்ந்தகுழந்தையெடுக்கத்
தாயேவீழ்ந்ததகமையின்பரமே
மாயைதனிலேவந்துருவைக்கொண்
டைந்தொழிலுமடைவுடனடத்தி
இருளினைமாற்றியெழிலதிட்டான
தற்சொரூபத்தைத்தானடைவிக்கும்
இருளதுநீக்கியிருந்தவிடத்தில்
உயிர்பரமிரண்டு முடலுயிர்போலப்
பின்னாசத்தியிற்பெற்றிடுமுத்தி
உயிர்பரமிரண்டுமொன்றேயாகி
அபினாசத்தியிலடைந்திடுமுத்தி
அபினையைப்பார்த்தேயதுநீயென்ன
அருமறையோதுமதுவறியாமல்
பின்னையைப்பார்த்தேபேதவாதிகள்
பாவனையென்றேபகுத்துரைசெய்வர்
உயிரின்சாக்ஷியொருநானேயாம்
பரத்தின்சாட்சிபரைநீயேயாம்
அப்பால்விளங்குமதுசிவமேயாம்
பின்னாசத்தியிற்பிறிவைக்குறித்தே
இவ்வகைமூன்றாயியம்புரையன்றிப்
பார்த்துடனோக்கிற்பரம்பொருளொன்றே
இப்பரம்பொருளேயெழிற்சிவதரிசனம்
என்றேமுன்னேமியம்பியதுமையே
சுட்டொடுநோக்கிற்றோன்றிடுமூன்றாய்
சுட்டின்றிநோக்கிற்றோன்றிடுமொன்றாய்
மூன்றுமிறந்தமுப்பாழதனில்
தற்சிவசொரூபந்தானாய்விளங்கும்
பின்னாசத்தியிற்பிறந்ததுமூன்றும்
பின்னைதனிலே பெயர்ந்தேயொடுங்கும்
அப்பால்மவுனத்தழகியசிவமே
அழகியசிவத்திலாரோபிதமாய்ப்
பின்னைநிகழும்பெயராதொன்றும்
அதிட்டானமானவச்சிவநேயம்
உலகமாய்த்தோன்றிலுயிருமருளும்
விளங்கிடுஞ்சிவமாய்விளங்கிடும்போதில்
உயிருமருளுமொருசிவமேயாம்
இத்தகைகண்டேனெழிற்சிவதரிசனம்
சிவம்நமக்கருளியசிவதரிசனத்தின்
படியேயுனக்குநம்பார்வையிலுண்டாய்
விளங்கிற்றந்நிலைவிட்டுநீங்காது
நில்லெனவருளினிமலநாயகியே
மலத்தினுநாயைவளப்பமதுடைய
சிங்காதனத்திற்சேர்த்திவைத்ததுபோல்
எனக்கேநகைவருமெனதுசரித்திரம்
எனக்குமிந்தவெழிற்சிவதரிசனம்
அளித்தனையிதற்கோரறைகைமாறென்
பரையேயுனக்கேபரங்காணென்னைக்
காத்ததுகாத்தாய்கடைபோகக்கண்
பார்த்தெனைவிடாதுபரிந்துகொண்டருளே
சிவதரிசன அகவல்-முற்றும்.
---------------------
14. ஆகமநெறியகவல்..
சத்தினிபாதந்தான்பிறந்திதையம்
சுத்தமதடைந்துதொல்லைமூவுலகும்
கான்றசோறதனிற்கண்டெனவிடுத்து
வீட்டின்பினையேவிரும்பிடினாகம
விசாரணைசெய்யவேண்டிடுமுத்தி
உண்மையின்மும்முதலுண்மையதாகும்
அஃதையுமன்றியவனியிலோர்பொருள்
உணர்ந்திடுமிடத்திலுருவுடனாமம்
தோன்றுதன்முன்மேதோன்றிடுஞ்சிவமதை
இருளினிற்றெரியாதிதுவெனச்சுட்டி
எய்திடுமாயையிருவினையதனின்
ஆசையிற்பதிபசுவாணவமாயை
கருமமுந்தோன்றுங்கருவிதினோக்கின்
மும்முதலவையின்முத்தியிற்பசுவும்
விடவேண்டுமென்னும்விருப்பமதனில்
இருவகையாகுமிரும்பதிபசுவும்
மூவகையாகுமும்மலந்தனின்மற்
றவைதனக்குக்குறியதுவிதுவாகும்
அதுவிதுநீங்கிலவைமூன்றகலும்
அவையினின்மூலமாணவமாகும்
அறுவைக்கழுக்கையகற்றிடுமூவரும்
சாணமும்போலச்சாற்றியவிரண்டு
மூலங்கெடுக்கமூலனேகூட்டி
உற்பவமுதலாயுரைத்திடுமைந்து
தொழில்செய்திடுவன்றொன்மையிலேநின்
றந்தகன்கண்ணிலப்படலந்தனை
எடுத்திடுமுனமதற்கேற்றவுடதங்கள்
சேர்த்திடினிதமாயத்தீர்ந்திடுகாலம்..
பொறாததுபோலும்புகன்றிடுமாயைப்.
பிறப்பினுக்கஞ்சிப்பிறப்பைநேர்நீக்கும்
நெறியயதெனெவந்நெறியினையுரைப்பார்
ஆரெனத்தேடியரற்றிடுகாலையின்.
சிவமேஞானதேசிகனாகும்.
அவனருளாலேயாகமநெறியின்.
ஐந்துதொழிற்குமரனேபுரியன்..
ஆமென்றுயிர்பொருளச்சார்பவையும்.
உடற்காவலையுமொருங்கேநீக்கி.
அருளினநோக்கியாசானருளில்.
உச்சியினிற்குமுவலம்போல.
ஆணவமாயையவையினிற்றோன்றும்.
மறப்புநினைப்புமாற்றிடிலம்பகல்.
அற்றவீடென்றேயறைந்திடுமாகமம்..
அவ்வீடதனினனுபவந்தன்னின்.
பெத்தத்தினிற்கும்பெற்றியைப்போல
இதுவெனத்தோன்று மெவையவையனைத்தும்
நியதிசெய்ததுவாய்நிற்றல்சமாதி
சமாதியைநீங்கியசாக்கிரந்தனினும்.
சிவமேயைந்துசெய்கையினடித்தல்
கண்டுதற்செயலைக்கைவிடவேண்டும்
இத்தகைநெறியையெய்திப்பாலன்
பித்தன்பசாசன்பெற்றகுணங்கள்.
மருவியேநிற்றல்வாய்மைநெறியாம்
தேகாந்தத்திற்சிவமேசேர்வன்
இஃதாகமநெறியினியாரணநெறி.
ஆகமநெறியகவல்-முற்றும்
--------------------
15. பிரமானுபவ அகவல்.
நன்னெஞ்சேவாநானுரைக்கக்கேள்
பிரமானுபவத்தைப்பிரத்தியக்கமதாய்
அருட்குருவருளிலறைகுவன்கேளாய்
யாதோர்பொருளும்யாவராயினும்
சுருதியுத்தமதாய்ச்சொற்றிடவேண்டும்
மனவுரையதனின்மதித்திடவொண்ணாச்
சச்சிதானந்தத்தற்சொரூபத்தில்
சிறந்தசிற்சக்திசெகசத்தியென்றும்
இருவகைசத்தியெனவன்றேயுள
தவையிதிற்பின்னையகிலத்துக்கேது
சிற்சத்திமுத்திதானதற்கேது
பரத்தினிலபினாபாவமாயொன்றாய்
சிற்சத்திநிக்குஞ்செகசத்தியதும்
தற்சொரூபத்தைத்தானதுவிடாமல்
வேறுபோற்றோன்றிவிளங்குமுக்குணமாய்
சாத்துவிதராசததாமதமெனவே
சத்துவகுணத்திற்றாக்கியசாயை
பரமாயெங்கும்பார்த்திடுமிராசத
சாயையுயிராந்தாமதமிரண்டாம்
இருண்மாயையெனவிருளுயிர்த்தடுக்கும்
இருளினையிரியயிருமாயைசேர்க்கக்
கணக்கதுவாகக்கருமமுண்டாகும்
ஆகவைவிதமுமன்றேநிகழும்
இவ்வைவிதமாயிலங்கியபின்னை
பரத்தினையன்றிப்பார்த்திடிலில்லை
சர்வவிடையதற்பரஞ்சுவாசம்
சுருதியதாகுஞ்சொல்லாகமமாம்
என்றெனவோதுமெழிலார்சுருதி
இஃதேதுணிவென்றெம்மையுமாண்ட
அருட்டேசிகனுமறைந்தனனன்றோ
நானாரெனவேஞானநற்குருவை
வினவிடிலித்தகைவிளங்கியபிரமம்
நீயேயென்றுநிச்சயமாகத்
தத்துவமசிகொடுசாற்றினனன்றே
இவ்வுரைப்படியேயிருந்தனுபவத்தில்
காட்டுகேனுனக்குக்கருத்தசையாவது
நன்றாய்நோக்காய்நன்னெஞ்சகமே
அரசன்றன்சேயடாதார்சேரி
சேர்ந்தவரினம்போற்றிரிந்திடுமவனை
அறிந்தவனொருவனவ்விடத்தேகி
அன்னோனிடத்திலரசவிலக்கணம்
காட்டியணர்த்துங்கணக்கதுபோல
நீசீவன்போனிற்குமுன்கண்ணே
சிவத்தின்குறியைச்செப்பிடக்கேளாய்
சாக்கிரமதனிற்றாக்கிடும்பொருளில்
நினைவெழுமுனமேநின்றிடுநிலையே
நின்மலநிலையந்நிலையினினோக்கின்
விளங்கிடுஞேயம் விளக்கிடுஞானம்
நோக்கிடுஞாதுருநுவலுமிம்மூன்றும்
நாமேயாகநன்றாய்விளங்கும்
அவ்விடத்தறிந்ததமலசத்தியினால்
அபினாபாவமாயேகமுமாம்
அந்நிலைநின்றேயசைவுசெய்நினைவில்
அடைந்திடுமிடத்திலைவகைப்பொருளும்
முன்பின்னன்றிமுழுதுநிகழும்
இஃதுணர்ந்திடுதலிரும்பின்னையினில்
அசைவுசெய்நினைவிறடைந்தவக்கணமே,
சுவாசமங்கிசமெனத்தோன்றிடும்வாக்கு.
நான்றானெனெவேநவிற்றிடாநிற்கும்.
இவையேசுருதியெழிலாகமமாம்.
நிலையினிலொன்றாய்நினைவினிலைந்தாய்.
விளங்குநம்மிடத்தின்மேவுசத்திகளால்.
இத்தகையன்றேயிருந்துடனிகழும்.
இதனானாமேயிருஞ்சிவமாகும்.
இவ்வனுபவத்தையிலங்கிடநீயும்..
கண்டுடனிருந்துங்கலக்கமதுற்றுக்.
கண்டிடும்பொருளைக்கருதிவேறாகச்.
சீவனைப்போலத்தியங்கினையினிநீ...
நின்றநிலையேநிலையெனநிற்கில்.
கண்டிடைம்பொருளுங்கரையுநாமாக..
நினைவொடுநிலையேநிலையெனநிற்கில்
விளம்புமைம்பொருளும்வேறாய்விளங்கும்
நின்றமுன்னிலைக்கு நினைவொடுநிலைக்கும்
நாமேயிடமெனநம்மையேபோற்றி
விளங்காதென்றும்விளங்கிடுமுன்னிலை
சற்சத்தியென்றுஞ்சாற்றியபின்னிலை
அசற்சத்தியென்றுமவையின்முற்சத்தி
சுயசத்தியென்றுஞ்சொல்லுபிற்சத்தி .
கற்பிதமென்றுங்கருதியுணர்ந்தே
அனைத்துநாமெனவேயறிந்தந்தறிவே
இடைவிடாதிவ்வுடலிறந்திடும்
வரையுநிற்றிடில்வாய்க்குநம்வீடே
-------
பிரமானுபவ அகவல்-முற்றும்.
----------------------
16. சிவசமரசவாத-அகவல்.
கலிவலியினதுகறக்கமோர்காலும்
சித்தமாயில்லாதிருமுதுகிரிவாழ்
என்னையும்பொருளாவெண்ணியாண்டருளும்
விருத்தவம்பிகையேவினையனேற்கிஃதொன்
றையமிவ்வையமனையேநின்னால்
அன்றிமற்றொருவராரினுநீங்கா
திவ்வையந்தனையானின்றகற்றத்
துணிவிதுவென்னச்சுருதியின்முடிவின்
அருளியபடியேயருள்செயவேண்டும்
ஏதெனிற்சொல்கேனெழில்வேதாகமத்
துயிர்பரமேகமோரிரண்டெனவே
ஓதியவகையிலும்பர்கண்முனிவர்
ஆரியர்தந்தமகமிசைக்கொண்ட
படியினிற்சென்றுபரமடைந்தனர்கள்
அவையிலொன்றையலநெறியென்றே
தள்ளுதல்கூடாச்சமரசமாகத்
திரிவையமறச்சிவையேயுனதின்
அனுபவப்படியேயனுக்கிரகஞ்செய
வேண்டிடுமோர்நெறிமேவியேமுயலும்
சாதகர்தமக்குச்சமரசவாதம்
அருளில்விளங்காதனுட்டித்தீறில்
தானிகழ்முத்திதானானவர்கட்
கருளிவிளங்குமருளாலுனக்குத்
திருவடிசூட்டித்திரிவுசெய்யிருளைத்
தீரவகற்றிச்சிவமதினாமே
வைத்தபரிசேவகுத்துரையென்னில்
உரைக்கேனியானுமுன்னருளதனில்
இதுவதுவென்னுமியல்புகளில்லாச்
சச்சிதானந்தத்தற்சொருபத்தில்
பேதவப்பேதப்பேசுதலின்றி
அநிர்வசனமதாயதுவுளபோதே
சயிற்றினிலரவுகற்பிதம்போல
நினைவுரூபமதாய்நிகழ்ந்திடும்பின்னை
அஃதனில்விளங்குமறைமுப்பொருளும்
எத்தகையென்னிலியம்பியநினைவும்
சுட்டியேநிற்கும்சுட்டிக்கண்டிடில்
செகமதுவாகுஞ்செப்பியவதனைக்
காண்குதலுயிராங்காணவிளக்கல்
பரமதுவாகும்பற்றியசகத்தில்
செகமதுமாயைசெகத்தினைநோக்கப்
பண்ணலஞ்ஞானம்பார்த்திடுமிடத்தில்
அதுவிதுவெனலாலருள்வினையில்வகை
நினைவினின்மும்மலநிகள்பரமுயிரென்
றைவகைப்பொருளுமனாதியேநிகழும்
சொரூபமுன்னளவுஞ்சொத்திடும்பின்னை
கற்பிதவடிவாய்ககலந்துடனிற்கும்
நினைவதுவில்லாநிஜசொரூபத்தைக்
குறித்திவைகற்பிதங்குறியாவிடத்தில்
கற்பிதமாகவைந்துநிகழும்
நினைவில்சொரூபநிகழ்வேதாந்தம்
நினைவொடுசொரூபநிகழாகமாந்தம்
அதனாலிரண்டுமனாதியதாகும்
நிஜசொரூபற்குநிகழ்பந்தமுத்தி
ஒருகாலமுமிலுளநினைவதனின்
பந்தமுத்திபகர்ந்திடலாகும்
நினைவிலுண்டாய்நிகழ்ந்திடுமியானும்
மறதியிலுயிர்வோன்மயங்கியுழன்று
நின்னருளதனினியதிசெய்தனைத்தும்
நீயுமியானுநினைவினிலுயிருடன்
போலவேநின்றும்போக்கியவிடத்தில்
ஒன்றாய்க்கண்டேனுறுதியதாக
இரண்டென்றவர்க்குமிரண்டதாய்நிற்கும்
ஒன்றென்றவர்க்குமொன்றதாய்நிற்கும்
இத்தகைகண்டேனெழின்முத்தியதை
இதனாலொன்றின்னையுறுதியாய்க்கொண்டே
ஒன்றினைத்தள்ளவொருக்காலுங்கூடா
நினைவில்சொரூபநிகழ்ந்திடுமிரண்டாய்
இஃதினிலையமெள்ளளவானும்
இன்றியந்தேனிவ்வனுபூதி
திரிவோதுணிவோசெப்பிடவேண்டும்
வராய்புதல்வாமாசறநீயும்
சமரசவாதஞ்சாற்றியபடியே
என்னுபவமுமெழின்மறைமுடிவும்
இதுதிரிவல்ல வெழிற்றுணிவேயாம்
நமதருளாலேநன்றாயறிந்தாய்
இதினீவாழ்வாயென்றெனைவாழ்த்தி
இதுபிரமாணமெனவென்றெனக்கு
உறுதியாய்நீயேயுரைக்கிலுன்னருளில்
திரிவையமறத்தேர்ந்து
சமையிகளுடனேதற்கித்தலற்றேன
சிவசமரசவாத அகவல் - முற்றும்.
திருச்சிற்றம்பலம்
------------------
உ
ஸ்ரீ குமாரதேவர் சரித்திரம்.
ஸ்ரீஅகண்டபரிபூரண சச்சிதானந்தஸ்வரூபமே ஓருருவாகத்தடித்த
ஸ்ரீகுமாரதேவரர் முற்பிறப்பில் பரமசிவத்தை நோக்கி மல்லிகார்ச்சுன
பர்வதத்தில் நிஷ்காமதவஞ்செய்கையில்-அந்தச்சுவாமிகளோடுகூட-
வேறொருவர்-அந்தப் பர்வதத்தின்கண்-தவஞ்செய்துக் கொண்டிருந்தார்-
அப்போது, பரமசிவம்-அவரது தவத்திற்கிரங்கிப் பிரத்தியட்சமாயெழுந்தருளி
வந்து, உனக்கு-என்ன வரம் வேண்டுமென்று கேட்குமளவில்-அவரோ-
ஒன்றைக்கருதி-ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில்-பரமசிவம்-திருவுளத்தில்
முனிவுகொண்டு-அடா நீ-ஜடா முனியாகக் கடவதென்று சபிக்க-அது
கேட்டு-அவரும்-திடுக்கிட்டெழுந்துநின்று-(சுவாமீ)
இந்தச் சாபம்-அடிமைக்கு-எந்தக் காலத்தில் விமோசனமாகுமென்று கேட்க-
அடா நீ போய்-விருத்தாசலத்தில்-மணிமுத்தா நதிக்கரையிலிருக்கின்ற-
அரச மரத்தின் மேலிருந்தாயாகில்-இந்தப்பர்வதத்தில்-உன்னோடு-
தவஞ்செய்து நிற்கின்ற-எமது அன்பனாகிய ஒருவன்-கன்னடதேயத்தில்
ராஜனாகவவதாரஞ்செய்து-சிறிது நாள் அரசு பண்ணி-பிற்பாடு-
விரத்தியுண்டாய்-பேரையூர்ச் சார்ந்த லிங்கசுவாமிகளிடத்தில்-
அனுக்கிரகப் பெற்றுக்கொண்டுஷ-ஆசிரியருத்தாரப்படி விருத்தாசலம்
வந்து-நீ இருக்கின்ற அரசமரத்தினீழலில்-உள்க்காருவான்-அப்போது-
நீ அவனைக்கண்டு வணங்கிக் கேட்டால்-அவன்-விமோசனஞ்
செய்வானென்று, திருவாய் மலர்ந்தருளிய மாத்திரத்தில்-
அந்த ஜடாமுனியும்-(சுவாமீ)அவருக்கு-முத்தித்திசை-எப்போதென்று
கேட்க-அடா-இந்த-அன்பன்-இதற்கு முன்னர்-ஐந்து சுத்ததேகமெடுத்து-
நம்மை நோக்கி-நிஷ்காம தவஞ்செய்திருக்கிறான் இஃது ஆறாவது
தேகம் இன்னம்-ஒருதேசத்தில் முத்தியைப் பெறுவானென்றருளிச் செய்ய-
அதுகேட்டு-ஜடாமுனியும் பாக்கியமென்று சுவாமியிடத்தில்
விடை பெற்றுக்கொண்டு-போய்-மேற்சொல்லிய அரசமரத்தின்
மேலிருந்து எப்போது விமோசனகாலம் நேரிடுமென்று வழி
பார்த்துக் கொண்டிருந்தான்.
குமாரதேவரோ வென்றால் - பரமசிவத்தின் -திருவருட்படி-அருளே-
திருவுருக்கொண்டபோதினும்-ஆசிரியர் வேண்டியிருப்பதால்-
கன்னடதேயத்திலவதரித்து-சிறிது நாளரசு செய்து-துறவு பூண்டு
ஒருநாள் தம்மிடத்திலுள்ள மந்திரிமார்களில்-முதல் மந்திரியானவரால்
தமது சரித்திர முழுதும் பேரையூர்ச்சாந்த லிங்கசுவாமிகளுக்குத்
தெரிவித்த பின் பூதரமேபோய் ஷசுவாமிகளைக்கண்டு-வணங்கி நிற்ற,
அது தெரிந்து சுவாமிகளும் இவரது பரிபாகத்தை நோக்கும் பொருட்டு-
தம்மிடத்திருக்கும்-கையேட்டுத் தம்பிரானைப்பார்த்து-அப்பா
இவனைப் பார்த்தால்-அரசனைப் போலிருக்கின்றது-இவன்-
இந்த வழிக்குப் பாத்திரவானல்ல-ஆதலால்-இவனை அரசுக்கே-
போகும்படி சொல்லென்று சொல்ல-அதற்கு-அந்தத் தம்பிரானும்
(சுவாமீ) இந்த அரசனிடத்தில்-அதிதீவர பக்குவமுடைய சற்சீஷருக்குள்ள-
பதினெண்குறியும் உண்டாயிருக்கிறதேயென்று-சைகையாகச் சொல்ல-
சுவாமிகளும் முன்பே-அறிந்திருப்பதால்-இவனை நமது எருதுக்குப்
புல்லறுத்துப் போடச்சொல்லென்று கட்டளையிட்டருள-அப்படியே-
தம்பிரான்-அரிவாளும்-புல்லு கட்டுங் கயிறுங் கொடுத்தனுப்ப-
மேற்படி குமாரதேவரும்-அந்தத் திருப்பணியைச் சிரசாவகித்துக்
கொண்டு-வயலுக்குப்போய்-பள்ளர்கள் புல்லறுப்பதைப் பார்த்து-
தாமும்-அறுக்கநினைத்து-இடக்கையால்-புல்லைப்பற்றி-வலக்கையிலுள்ள
அரிவாலைப் புல்லின் மேற்பூட்டாமல் இடக்கை மேற்பூட்டியிழுக்க-
கையறுபட்ட மாத்திரத்தில் மேற்படி வலக்கையைப் பார்த்துக் கோபித்தார்-
இந்தஅதிசயத்தை-மேற்படி-பள்ளர்கள்கண்டு, நீர்-ஆரென்று
கேட்க-நான்இன்ன-சுவாமிகளுடைய வாகனத்திற்குப்
புல்லறுப்பவனென்று சொல்ல-அதுகேட்டு அவர்கள்-ஆச்சரியமடைந்து
இவர் அரசனைப் போலிருக்கிறதென்றெண்ணி தாங்களே-புல்லறுத்து-
கட்டுகட்டி-அவர் திருமுடிமேல் வைக்க-அந்தச் சுமை பொறாமல்-
திருமுடி சாய்ந்து போவதைக்கண்டு-அப்பள்ளர்களே அந்தப்
புற்சுமையை எடுத்துவந்து-மேற்படி-மடாலயத்து வெளியில்
வைத்துப்போனார்கள்.
இந்தப்படி-இரண்டு நாள் சென்றபின்பு மூன்றாவது நாள்-
மேற்படி புற்சுமையை எடுத்துவந்த பள்ளன்-இவர் சேதி முழுதும்
கையேட்டுத் தம்பிரானுக்குத் தெரிவிக்க- அவரும்-இவர்கையறுப்புண்ட
சேதியை சுவாமிகளுக்குக் குறிப்பாகத் தெரிவிக்க, அது தெந்து-
சுவாமிகளும், குமாரதேவரைப் பார்த்து-முனிவு கொள்ள,
அவரும் பயந்து பேசாமலிருந்துவிட்டார்.
பிற்பாடு அன்று ராத்திரி சுவாமிகள் கையேட்டுத் தம்பிரானை யழைத்து-
அப்பா எங்களிருவருக்கும் வெவ்வேறே கட்டமுதுகட்டி- ஒரு
தண்டத்தில் மாட்டி,அரசனிடத்திற் கொடுத்து-நம்மோடுகூட-
அனுப்பிவையென்று கட்டளையிட்டருள-அவரும் அப்படியே
செய்து அனுப்பிவைக்க-சுவாமிகள் முன்னும்-குமாரதேவர் பின்னுமாய்ப்
போகையில்-சிலதூரம் போய் சுவாமிகள்-இவரைத் திரும்பிப் பார்த்து
என்ன தாமசமென்ற தட்ட-அதுகேட்டு-இவரும்-பயந்து
சுவாமீ ஒருபுறம்-அச்சிலிங்கம்-மற்றொருபுறம் கணாயுத்
தமிழுக்கின்றதேயென்று சொல்ல-அந்தக் குறிப்பறிந்து சுவாமிகள்-
தமக்குத்தாமே மகிழ்சியடைந்து-அவிடத்துள்ள-ஒரு குளக்கரை
மேலிறங்கினார் அவிடத்தில் இருவரும் ஒன்றாக-உட்கார்ந்து,
இரண்டன்னத்தையும் ஒன்றாகச் சேர்த்து-ஸ்ரீகுமாரதேவர்
சுவாமிகளூக்குப் பரிமாற ஷசுவாமிகள் நைவேத்தியங் கொண்டபின்பு
சேடமான மகாபிரசாதத்தைத்-தாமும்-உட்கொண்டு-சிறிது நேரம்
அவிடத்தில்இருவரும்-வசனித்துக்கொண்டிருந்து-பிற்பாடு-
மடாலயத்திற்கு வந்துசேர்ந்து சில நாள்கழித்து-மேற்படி-
சுவாமிகளிடத்தில்.அனுக்கிரகம் பெற்றுக்கொண்டு-சாதனை செய்து
முதிர்ந்த காலத்தில்-ஒருநாள் சாந்தலிங்க சுவாமிகள்
இவரை மகாராஜா வென்று பெயரிட்டழைத்து அப்பா
நீ விருத்தாசலத்துக்குப் போக வேண்டுமென்று கட்டளையிட்டருள-
அங்கனே நல்லதென்று விடை பெற்றுக்கொண்டு விருத்தாசலத்தை
நோக்கி வருகிறவழியில்-சின்னசேலத்திற்குக் கீழ்ப்புறமான காட்டில்
இவர் நிமித்தம் அன்புகூர்ந்து-பழமலை நாதரே-ஒருபிராமண
ரூபமா யெழுந்தருளிவந்து-தண்ணீர்ப் பந்தல் வைத்துக் கொண்டிருந்து
இவரைக்கொண்டு அப்பா நீ ஆயாசமாய்ப் போகிறபடியால் நால்வகை
ஜலமுமிருக்கின்றது-உனக்கு வேண்டிய மட்டும்-சாப்பிட்டு விடாய்
தீர்க்கலாமென்றுபசரித்துத்-தண்ணீர்க்கொடுக்க-இவர் அதைச் சாப்பிட்டு-
தாக நிவிர்த்தி பண்ணிக்கொண்டு-விருத்தாசலம் வந்துசேர்ந்து-
மணிமுத்தா நதிக்கரையிலிருக்கின்ற அரசமரத்தினீழலில்
ஆயாசமாய்ச் சயனித்துக் கொண்டு-பிரமானந்த
நித்திரையிலிருந்தருளினார்.
அதுசேதி பெரியநாயகியாரறிந்து தனத பிடேகத்திற்கு
சுவண பாத்திரத்தில் வைத்திருந்த பசுவின் பாலை ஏந்திக்கொண்டு
ஓர் பிராமண ஸ்திரீயைப்போல இவரிடத்தில் வந்து-
தலை மாட்டிலுட்கார்ந்து-தனது திருமடியின்மேல்-
இவரது திருமுடியைத் தூக்கிவைத்து-அந்தப் பாலைப் புகட்டினபின்பு-
இவர் ஆயாசந் தீர்ந்து-கண்ணை விழித்து-நீ- ஆரம்மாவென்று
கேட்க அப்பா குமாரதேவா-நான்தான் பெரியநாயகி நீ
எப்போதும் என்னிடத்தில் தானே சுகமா யிருவென்று திருவாய்
மலர்ந்தருளி-உடனே மறைந்துவிட்டாள் இதை மேற்படி-
ஜடாமுனி கண்டு-மரத்தை விட்டுக் கீழேயிறங்கி- பிராமணவுருவமாய்
வண்ங்கி நிற்க-இவர்-அந்த ஜடாமுனியைப் பார்த்து-
நீ யாரென்றுகேட்க நான் ஜடாமுனி யென்றுசொல்ல நீ இவிடத்திற்கு
வந்த காரியமென்னவென்று கேட்ட மாத்திரத்தில் ஜடாமுனி
தனது சரித்திர முழுதும் விவரமாகச் சொல்ல-அதுகேட்டு-
குமாரதேவரும்-சந்தோஷமாய் ஜடாமுனியின் சாபநிவர்த்தி பண்ணி
சிறிதுநாள் அவிடத்திற்றானேகர பாத்திரம் பண்ணிக் கொண்டிருக்குங்
காலத்தில் அவிடத்திலுள்ள ஒரு குடும்பியானவன் இவரை
மகாமுனியென்றறிந்து-நாள் தோறும் உண்மையாய்த்
தரிசனம் பண்னிக்கொண்டேவர- அவனுக்கு நாளுக்கு நாள்
சகல சம்பத்தும்-அபிவிர்த்தியடைந்து வருகையில்
ஒருநாள் அவன்,குமாரதேவரைக் கண்டு வணங்கி-(சுவாமீ)
அடியேனுக்கு ஏதேனும் ஒர் திருப்பணிக்கட்டளை யிட்டருள வேண்டுமென்று
வருந்திக்கேட்க-குமாரதேவரும்-அப்பா-அப்படி உனக்கிஷ்டமிருந்தால்-
ஸ்ரீ பெரியநாயகியார் சந்நிதானத்திற்கெதிராக்-ஒரு மண்டபங்கட்டிவை
யென்றுகட்டளையிட்டருள அவனும் அப்படியே மகாபாக்கியமென்று
மண்டபங்கட்ட எத்தனித்துக் கட்டும்போது-உத்திரக்கல் மேலேறாமல்
வருத்தமடைந்து-குமாரதேவருக்குத் தெரிவிக்க குமாரதேவரும்,
விபூதியைக் கொடுத்து இதை-அந்தக் கல்லின்பேரில் போட்டுத்
தூக்கென்றுத்தரவு செய்ய- அப்படியே செய்துமுடித்த பின்பு-
அந்தக் குடும்பியும் சந்தோஷசித்தனாய்-குமாரதேவரை வணங்கி
நின்று (சுவாமீ) தேவருடைய பிரபாவத்தை இன்னதென்றளவிட்டுச் சொல்ல-
ஆராலாகுமென்று நானாவிதமாகத் தோத்திரன் செய்ய-
குமாரதேவரும்-அவனை அழைத்துக் கொண்டுபோய் கோபுரவாயிலிற்
செய்து வைத்திருக்கும்-இரண்டு துவாரபாலகருடைய முதுகும் உரைபட்டிருப்பதைக்
காண்பித்து-இவர்களுக்குத் தவனகஞ்சிகாய்ச்சி நைவேத்தியம்
பண்ணென்று கட்டளையிட்டருள-அவனும்-மகா பாக்கியமென்று
அப்படியே செய்வித்து-கிருதகிருத்தியனானான்.
பிறகு ஒருநாள் குமாரதேவரும் ஓர்குடும்பி வீட்டுவாசலில்
கரபாத்திரத்திற் குச்சென்றுகையேந்த-அவர்கள் இவரது மகிமையறியாதவர்களாய்-
தங்கள் வீட்டில் சமைத்து வைத்திருந்த-மச்சத்தை அன்னத்தோடு
கலந்து இவர்கையிற்பறிமாற அதுதெரிந்து ஸ்ரீகுமாரதேவரும்
அங்ஙனே குளக்கரைக்குச் செல்ல அந்த மச்சம் உயிரோடு குளத்திற்
குதித்துப் போய்விட்டது.
இப்படியிருக்க ஒரு குஷ்டரோகியானவன் தனது தேகவருத்தம்
நீங்கவேண்டுமென்று நாள் தோறும் இடைவிடாமல்-ஸ்ரீகுமாரதேவரைக்
கண்டு தரிசனம் பண்ணிக்கொண்டே வருகையில் ஒருநாள்
அதிக வாதனையினால்ச கிக்கப்படாதவனாய் ஸ்ரீகுமாரதேவரது
திருவடியில் வந்து விழுந்து கோவென்று முறையிட்டுச் சொல்ல
குமாரதேவரும்-அப்பா நாம் வயித்தியனல்லவேயென்று சொல்ல
அவனும் (சுவாமீ) தேவரது திருக்கையினால் விபூதி கொடுத்தால்
எனது ரோக நிவர்த்தியாகுமென்றிரங்கிக் கேட்க,குமாரதேவருந்
திருவுளமிரங்கி விபூதியையள்ளி அவனது இடக்கையில் வைத்து
வலக்கையால் மூடிக்கொள்ளச்சொல்லி பழமலையார் சந்நிதானத்தினுள்
ஒரு மாடத்திலிருக்கும் விக்கினேஸ்வரரைக் குறியாகக்காண்பித்து
நீ அந்த விக்கினேஸ்வரர் முன்னேபோய் இரண்டு கண்களையு
மூடிக்கொண்டு நின்று அங்கே நடக்கின்ற அதிசயத்தை நமக்கு
வந்து சொல்லென்று கட்டளையிட்டருள அவனும் அப்படியே
போய் நின்றமாத்திரத்தில்அவனுக்குச் சுழுத்தி போற்றோன்ற
அத்தருணத்தில் அந்த விநாயகக் கடவுள் தமது துதிக்கையை
நீட்டி இவனது இடது கையிலிருந்த விபூதியைத் தொட்டதுபோலக்
கண்டுவிழித்துச் சுவாமிகளிடத்திற்கு வந்து விண்ணப்பஞ் செய்த
மாத்திரத்தில் குமாரதேவரும் ஆனந்தமாய்-அந்த விபூதியைத்
தொட்டுத் தரித்துக்கொண்டு அவனையும் தரித்துக் கொள்ளும்படி-
உத்தரவு செய்ய அவன் அப்படியே தரித்து வருங்காலையில் அவனது
குஷ்டரோகம் நிவிர்த்தியாகிச் சவுக்கியமடைந்தான்.
இப்படியிருக்கின்ற நாளையில் ஒருநாள் ஸ்ரீகுமாரதேவரும் திருவாரூர்
மகோச்சவத்திற்குப் போயிருந்தபோது-ரதோச்சவத்தினன்றைக்கு-
தியாகராயர் ரதமேறிமாட வீதிவருகையில் அந்த ரதத்திற்கு
நேரே குமாரதேவர் நின்று பார்த்துக்கொண்டிருப்பதை இரண்டு சைவர்கள்
கண்டு ஒருவருக்கொருவர் விகடமாய் வீரசைவமருளைப்
பார்த்தீர்களோவென்று பேசிக்கொள்ள-அந்த விகட வார்த்தையைக்
குமாரதேவர் கேட்டு ரதத்தில்வருந்தியாக ராயரைப் பார்த்து-
(தியாகராயா) வீரசைவம்-மருளானால் ரதம் நடக்க அருளானால்
ரதம் நிற்கவென்று திருவாய் மலர்ந்தருளி சில தூரம்போய் ஒரு
மரத்தினிழலில் உட்கார்ந்திருந்தார்-அது தெரிந்து அத்திருவிழாவின்
தர்ம் மகர்த்தாவாகிய தஞ்சாவூர்-அரசன்-ரதமானது-நிலைவந்து
சேர்ந்தபிறகு போஜனஞ் செய்கிறதென்னும் நிச்சயமுடையவனாதலால்-
என்ன செய்வதென்றச்சமுற்று-இவிடத்தில் நடந்த-ரகசியந் தெரியாதபடியினால்-
சாயங்கால பரியந்தமும்-அந்த ரதம் நடக்கும்படிஅனேக-
பிரயெத்தினங்கள் செய்வித்தும் அஃது, சற்றாகிலும் அசையாது நிற்க
பிறகு மேற்படி அரசன் இவிடத்தில் நடந்த ரகசியத்தைக் கேள்விப்பட்டு
ஸ்ரீகுமாரதேவரிடத்திற்கு வந்து அவரைக்கண்டு வணங்கி விண்ணப்பஞ்செய்ய
ஸ்ரீகுமாரதேவரும் அரசனைப் பார்த்து இந்த மருளனிடத்தில் உங்களுக்கு
என்ன அலுவல் போங்களென்று சொல்ல அரசனும் (சுவாமீ) இந்தப்
பிழையை மன்னித்து ரதத்தை நடப்பித்தருள வேண்டுமென்று
வெகுவாகத் தோத்திரஞ் செய்ய அதற்கு ஸ்ரீகுமாரதேவரும்
திருவுளமிரங்கி அந்த ராஜனுடனுஞ் சேனைகளுடனும்
எழுந்தருளி வந்து ரதத்தின் முன்னே நின்று தியாகராயரைப் பார்த்து
(தியாகராயா) வீரசைவம்-அருளானால்-ரதம் நடக்க மருளானால்
ரதம் நிற்கவென்று திருவாய் மலர்ந்தருளின மாத்திரத்தில்-
ரதம் ஜரேலென்று நடந்து நிலையிற்போய்ச்சேர்ந்தது.
இப்பால் குமாரதேவர் மறுபடியும் விருத்தசைலம் வந்து அவ்வரச
மரத்தின்கீழ் வாசம் பண்ணிக் கொண்டிருக்குங் காலையில்-
பிற தேசத்திலுள்ள ஓர் மாந்திரீகனானவன் விருத்தசைலத்திலுள்ள
பத்திரகாளியைத் தன்கைவசமாக்கிக் கொள்ள எண்ணி-
தனது நாட்டை விட்டு மணிமுத்தாநதியின் வடதிசையாக
வருகையில் மேற்படி பத்திரகாளியறிந்து அச்சமுற்றவளாய்
ஒரு ஸ்திரீயைப் போல ஸ்ரீகுமாரதேவரிடத்திற்கு வந்து
அவரைப் பிரதக்ஷிண நமஸ்காரம் பண்ணி அவருக்கெதிரே
நிற்க-அது கண்டு குமாரதேவரும் நீயாரென்று வினவ-
சுவாமீ நான் பத்திரகாளி என்னையிந்தப் பிரகாரஞ்
செய்யும்படி ஓருசண்டாளன் வருகிறான் அதனால் பயந்து
வந்தேனென்று விண்ணப்பஞ் செய்ய அதற்கு குமாரதேவரும்
என்னால் உனக்கு ஆகவேண்டிய தென்னென்று வினவ-
பத்திரகாளியும் சுவாமீ தேவரது திருவடிகளை அடியாள்
சிரசின்மேல் வைத்தால் எனது ஆபத்து நீங்குமென்று
விண்ணப்பஞ்செய்ய - ஸ்ரீகுமாரதேவரும் திருவுளமிரங்கி
அங்ஙனே நல்லதென்று பத்திரகாளி சந்நிதிக் கெழுந்தருளிவந்து
அந்த விக்கிரகத்தின் முடிமேல் தமது திருவடியைத்
தூக்கிவைத்த மாத்திரத்தில் அந்த மாந்திரீகனுடைய
இரண்டு கண்களும் அவன் மனம்போலவே இருளடைந்தது-
அது தெரிந்து அந்த மாந்திரீகனும் பயங்கொண்டு இந்த
ஸ்தலத்தில் பெரியவாள் வாசஞ் செய்கிறாற் போலிருக்கிற
தென்றெண்ணி அவிடத்தில் விசாரிக்க - ஸ்ரீகுமாரதேவரிருக்கிறதைக்
கேள்விப்பட்டு- அவரிருக்கு மிடந்தேடி வந்து அவரைக் கண்டு
வணங்கிநிற்க- ஸ்ரீகுமாரதேவரும் அவனைப் பார்த்து
நீயாரென்றுவினவ- சுவாமீ நான் மாந்திரீகன் - நான்
இவிடத்திற்கு இந்த உத்தேசமாய் வந்தஇடத்தில் எனக்கு
இவ்வகையான ஆபத்து நேரிட்டது இதைத் தேவரே தீர்த்தருள
வேண்டுமென்று வெகுவாகத் தோத்திரஞ் செய்துநிற்க-
ஸ்ரீகுமாரதேவரும் சற்றே திருவுளமிரங்கி அடா உன் சரீரமுள்ளவரையிலும்
இந்த மாந்தரீகத்தை விட்டிருப்பையாகில் உனக்கு ஓருகண்
மாத்திரந் தெரியுமென்று ஆக்கியாபித்தருளிய மாத்திரத்தில்-
அவனும் அப்படியே நல்லதென்று ஸ்ரீகுமாரதேவரது
திருவடியைத் தொட்டுச் சொன்னவளவில் ஓருகண்தெரிந்து
தன்னுடைய தேசத்திற்குப் போய்விட்டான்.
இப்பால் ஓருகுடும்பியானவன் புத்திரா பேக்ஷையினால்
ஸ்திரீயுந்தானும் நெடுநாளாய் விசனப்பட்டுக் கொண்டு
ஸ்ரீகுமாரதேவரைக் கண்டு நாள்தோறுந் தரிசனம் பண்ணி
வருகையில்-ஒருநாள் குமாரதேவர் திருவுளமிரங்கி
ஷகுடும்பிக்கு விபூதியளிக்க அவ்விபூதி முன்னிலையால்
அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்து அதுகள்
வளர்ந்து ஐந்து வயதாகி பள்ளிக்கூடத்தில் வைத்து
வித்தியாப்பியாசஞ் செய்வித்த பிறகு-அந்தப் பிள்ளைகளுக்கு
இலக்கணாப்பியாசஞ் செய்விக்கவேண்டி இலக்கண
வித்துவானாகிய சிதம்பர பிள்ளையென்பவரை,
மதுரையிலிருந்து வரவழைத்து,ஷஇரண்டு பிள்ளைகளுக்கும்
இலக்கணாப்பியாசஞ் செய்வித்து வருங்காலத்தில்-
ஒரு நாள் ஸ்ரீகுமாரதேவர் குக்ஷிபாதை நிமித்தம்
அந்தக்குடும்பி வீட்டுக்கு வருகையில் ஷ சிதம்பர
பிள்ளையென்னும் உபாத்தியாயர் இவரிடத்தில் மதிப்பற்று
இறுமாந்திருப்பதைக் கண்டு அவரைத்தடுத்தாட் கொள்ளத்
திருவுளங்கொண்டு அவரை நோக்கி ஓர் வாக்கியத்தைக்கூறி-
அதற்குப் பயன்வினவ-அவருக்கென்ன வித்வசாமர்த்தியமிருந்த
போதினும் இந்தச் சந்நிதானத்தில் நாவெழாமையால் பயன்கூறாது
மயங்கிநின்று சற்றே தெளிவுண்டாகி குமாரதேவரது திருவடியில்
விழுந்துவணங்கி சுவாமீ அடிமையை ரக்ஷித்தருள வேண்டுமென்று
விண்ணப்பஞ் செய்து-அது முதல் துறவுபூண்டு
ஷகுமாரதேவரது பின்னாகவே சாயைபோற்றொடர்ந்து
தானுங்கர பாத்திரம் பண்ணிக்கொண்டிருந்தார்,
அவரது ஆராமையையும்,மெய்யன்பையும், குமாரதேவரறிந்து
அவரைத் தமது ஆசிரியரிருக்கும் திருப்பேரையூருக்குக் கூட்டிக்கொண்டு
நடந்து, மடாலயத்திற்குச் சமீபமாகப் போகையில்-
விடியற்காலையாகையினால் எழுந்திருந்து வெளியே வந்து
நிற்கிற தம்பிரான்களைக் கண்டு சுவாமிகளிருக்குஞ்
சமையமெப்படியென்று வினவ-சுவாமிகள்
பரநிட்டையிலெழுந்தருளியிருக்கின்ற தெனக்கூற-
ஆனால் நாம் பணிசெய்வோமென்று நினைத்து-
ஸ்ரீகுமாரதேவர் சாணச்சட்டியெடுத்துக்கொண்டு திருமெழுகிட-
சிதம்பர சுவாமிகளும் திருவலகெடுத்துக்கொண்டு திருவலகிட்டார்-
இத்திருப்பணி முடித்தபின்பு சுவாமிகள் திருக்கண்
விழித்தருளியசேதி தெரிந்து-இவ்விருவர்களும்
மடாலயத்துட்சென்று சுவாமிகளைக் கண்டு வணங்கிநிற்க-
சுவாமிகளும் குமாரதேவரைப் பார்த்து அப்பா உன்னை
யடுத்துநிற்கின்றவன் யாரென்று வினவ-தென்னாட்டுச்
சைவனென்று சொல்ல-இவனை ஏனழைத்து வந்தாயென்று
கேட்க அதற்குக் குமாரதேவர் மௌனமாயிருந்துவிட்டார்-
இப்படி இரண்டு தினஞ் சென்றபின்பு-சிதம்பரசுவாமிகளது
நடையைக் கையேட்டுத் தம்பிரானறிந்து சுவாமிகளை வணங்கி
நின்று- சுவாமீ இந்தச்சைவன் மிகுந்த வல்லவனா
யிருக்கிறபடியால் இவனைத் திருவடிக்கு
ஆளாக்கிக் கொள்ளவேண்டுமென்று விண்ணப்பஞ்
செய்ய-அதற்குச் சுவாமிகளும் ஷதம்பிரானைப் பார்த்து
அப்பா நமக்கிருக்கிற சந்ததி போதும்- நமது சந்ததிக்குச்
சந்ததி நெடுநாளாயில்லாதிருந்து இப்போது கிடைத்தபடியால்
அப்படியே செய்விக்கவேண்டுமென்று கட்டளையிட அதற்குத்
தம்பிரான் மௌனமாயிருந்துவிட்டார்-இப்படி இரண்டு நாள்
கழிந்தபின்பு மூன்றாவது நாள் சாந்தலிங்கசுவாமிகள்
குமாரதேவரைஅழைத்து நீஊருக்கு போவென்றுசொல்ல
குமாரதேவரும் இவன் இவிடத்திலிருக்கட்டுமென்று
விண்ணப்பஞ் செய்ய-சுவாமிகள் இவிடத்தில்வேண்
டாம்நீயேயழைத்துக் கொண்டுபோவென்றுசொல்ல
ஸ்ரீகுமாரதேவரும் இவனைக்கொண்டுபோய் அடிமை என்ன
செய்கிறதென்று கேட்க-சுவாமிகளும் ஸ்ரீகுமாரதேவரைப்
பார்த்து அப்பா நீ இவனைக்கொண்டு போய் பக்குவமறிந்து
உனக்குச் சொன்னதை இவனுக்குகுச் சொல்லிவை யென்று
கட்டளையிட குமாரதேவரும் மகாப்பிரசாதமென்று விடைபெற்றுக்
கொண்டு இருவரும் விருத்தாசலம் வந்துசேர்ந்து-
பிறகு சிதம்பரசுவாமிகளது பக்குவஞ்சோதித்து அனுகிரகஞ் செய்தருளினார்-
அவர்தான் திருபோரூர்ச் சந்நிதானம் விளக்கிய சிதம்பரசுவாமிகள்.
இப்படிநடந்து வருங்காலத்தில் பெரியநாயகியாரும் குமாரதேவரால்
சாஸ்திரஞ்செய்விக்கும்படி திருவுளங்கொண்டு குமாரதேவரதுயோகில் வந்து
அப்பா குமாரதேவா-நீ சாஸ்திரஞ் சொல்லவேண்டுமென்று திருவாய்மலர்ந்தருள-
குமாரதேவரும் அம்மா` அடிமையாற்சொல்லமுடியாதென்று
விண்ணப்பஞ்செய்ய பெரியநாயகியாரும் ஆனால் நாமே
உனது நாவில்நின்று சொல்லி முடிக்கிறோமென்று
ஆக்கியாபித்து-அங்ஙனே இந்த ஷோடசமகா சாஸ்திரங்களையுஞ்
சொல்லிமுடித்தருளினார்
இப்படிஅனந்த மகத்துவங்களைச்செய்து அந்தத்தில் ஸ்ரீகுமார
தேவரும் சொருபசாக்ஷாத்கார பரிபூரணதிசையையடையுஞ் சமயமறிந்து
இரண்டாவது அடிமையாகியரெட்டி சிதம்பரசுவாமிகள் ஸ்ரீகுமாரதேவரைப்
பார்த்து சுவாமீதேவர் பரிபூரணமானபின்பு அடியார்கள் தரிசனஞ்
செய்து உய்யும்பொருட்டு ஓர் திருப்பணிகட்டளையிட்டருள வேண்டுமென்று
விண்ணப்பஞ்செய்ய,அதற்கு ஸ்ரீகுமாரதேவர் நாம் செத்தும் நமது
பெயரிருக்க வேண்டுமாவென்று அகண்டபரிபூரண சாக்ஷாத்கார
சொரூபவியாபகத்திற் கலந்தருளினார். இப்பால் ரெட்டி சிதம்பரசுவாமிகளும்
ஸ்ரீபெரியநாயகியாருத்தாரப்படி-ஸ்ரீகுமாரதேவர் திருநாமத்தினால்
கோயில் மடாலய முதலாகிய துகளுஞ் செய்வித்து, பிறகு
தாமுப் பரிபூரணதிசையையடைந்தருளினார்.
இஃது, மேற்படி சுவாமிகள் மரபிலுள்ள அடியார்களில்
ஒருவரால் சுருக்கமாகத் தெரிந்தெழுதப்பட்டது
இரண்டாமுறை விரிவாக அச்சிடப்படும்.
ஸ்ரீகுமாரதேவர் சரித்திரம் முற்றிற்று.