குறிப்பு: காயத்ரீ மந்த்ரத்தில் 24 அக்ஷரங்கள் அமைத்திருக்கின்றன. காயத்ரீ வல்லபத்வாத் என்று ஆரம்பிக்கும் இந்த பஞ்சரத்ன சுலோகங்களில் 24 காரணங்கள் சொல்லி, சிவோத் கர்ஷம் பாடியிருக்கிறார்.
(1) காயத்ரீ வல்லபத்வாத் தசரததனய ஸ்தாபிதாராதி தத்வாத் செளரே: கைலாஸ யாத்ரா வ்ரத முதிததயா அபீஷ்ட ஸந்தான தானாத் | நேத்ரேண ஸ்வேன ஸாகம் தசசத கமலை: விஷ்ணுனா பூஜிதத்வாத் தஸ்மை சக்ர ப்ரதானாதபி ச பசுபதி: ஸர்வதேவ ப்ரக்ருஷ்ட: || (2) கந்தர்ப் பத்வம்ஸகத்வாத் கரள கபளனாத் காலகர்வா பஹத்வாத் தைதேயாவாஸபூத த்ரிபுர விதலனாத் தக்ஷயாகே ஜயித்வாத் | பார்த்தஸ்ய ஸ்வாஸ்தர தானாத் நரஹரிவிஜயாத் மாதவே ஸ்த்ரீசரீரே சாஸ்துஸ் ஸம்பாத கத்வாதபி ச பசுபதி: ஸர்வதேவ ப்ரக்ருஷ்ட: || (3) வாராணஸ்யாம் ச பாராசரி நியமிபுஜ ஸ்தம்பனாத் ப்ராக் புராணாம் ப்ரத்வம்ஸே கேசவேனா ச்ரித வ்ருஷவபுஷா தாரித க்ஷ்மாத லத்வாத் | அஸ்தோகர் ப்ரம்ம சீர்ஷை: அனிசகல க்ருதாலங்க்ரியா பூஷிதத்வாத் தானாத் ப்ரக்ஞான முக்த்யோரபி ச பசுபதி: ஸர்வதேவ ப்ரக்ருஷ்ட: || (4) பூமெள லோகைரனேகை: ஸதத விரசிதாராதிதத்வாத் அமீஷாம் அஷ்டைச்வர்ய ப்ரதானாத் தசவித வபுஷா கேசவேனாச்ரி தத்வாத் | ஹ ம்ஸ க்ரோடாங்க தாரி த்ருஹிண முரஹரான் விஷ்ட சீர்ஷாங்க்ரிகத்வாத் ஜன்மத்வம்ஸாத் யபாவாதபி ச பசுபதி: ஸர்வதேவ ப்ரக்ருஷ்ட: || (5) வைசிஷ்ட்யே யோனி பீடாயித முரரிபுச்லிஷ்ட பாவேன சம்போ: ஸஸ்த்ரீ கார்த்த ப்ரதீகாயித ஹரிவபுஷா ஆலிங்க தத்வேன யத்வா | அப்ராதான்யாத் விசிஷ்டாத்வய ஸமதிகமே தானவானா மராதே: சம்போருத்க்ருஷ்ட பாவாதபி ச பசுபதி: ஸர்வதேவ ப்ரக்ருஷ்ட: || இந்த பஞ்சரத்ன சுலோகங்களுக்கு ஸ்ரீ பாஷ்யகாரராகிய மாதவ சிவஞானஸ்வாமிகள் அருளிச் செய்த பஞ்சரத்ன மொழி பெயர்ப்பு ஸ்ரீ பாஷ்யம் முதல் ஸூத்ரம் இரண்டாவது அதிகரண வுரை. உயர் காயத்திரிக் குரிய பொருளாதலிற் றசரதன் மதலைத் தாபித் தேத்தலிற் கண்ணன் கயிலையி னண்ணி நின்றிரப்பப் புகழ்ச்சி யினமைந்த மகப் பேறுதவலிற் றனாது விழியுட னொராயி ரங்கமலப் புது மலர் கொண்டரி பூசனை யாற்றலி னாங்கவர்க் கிரங்கி யாழி யீந் தருடலி னைங்கணைக் கிழவனை யழல்விருந் தாக்கலி னமைப் பருங் கடுவிட மமுது செய்திடிதலிற் றென்றிசைத் தலைவனைச் செகுத்துயிர் பருகலி னவுணர் முப்புற மழியவில் வாங்கலிற் றக்கன் வேள்வி தகர்த்தருள் செய்தலின் தனஞ்சயன் தனக்குத் தன்படை வழங்கலின் மானுட மடங்கலை வலிதபக் கோறலின் மாயோன் மகடூஉ வாகிய காலைத் தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருதலின் கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற் பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின் முப்புற மிறுப்புழி முகுந்தப் புத்தேள் மால்விடையாகி ஞாலமொடு தாங்கலி னயன் சிரமாலை யளவில் வணிதலின் ஞானமும் லீடும் பேணினற் குதவலின் னாழ்கடல் வரைப்பி னான்றோ ரனேக ரன்புமீ தூர வருச்சனை யாற்றலி னான்கிரு செல்வமு மாங்கவர்க் கருடலி னையிரு பிறப்பினு மரியருச் சித்தலி னிருவரு மன்னமு மேனமு மாகி யடிமுடி தேட வழற் பிழம்பாகலிற் பிறப்பிறப் பாதி யுயிர்க்குண மின்மையிற் பசுபதிப் பெயரிய தனிமுதற் கடவு ளும்பர்க ளெவர்க்கு முயர்ந்தோ னென்பது தெளிக வியல்புணர்ந் தோரே.
குறிப்பு:
பஞ்சரத்ன சுலோகங்களில், முதல் நான்கு சுலோகங்களில் சொல்லப்பட்ட 22 காரணங்கள் தான் இந்த மொழி பெயர்ப்பில் அமைந்திருக்கின்றன. ஐந்தாவது சுலோகத்திலுள்ள இரண்டு காரணங்களையும் பெரியோர்களிடம் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டுமென்பது ஸ்ரீ சிவஞான ஸ்வாமிகளின் அபிப்பிராயம். ---------(தி.வி.க)
மேற்படி 22 காரணங்களின் விவரம்
This file was last revised on 05 May 2007