திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி - மதிப்புரை
(ஆசிரியர் : இரசிகமணி சிதம்பரநாத முதலியார்; 1937)
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் அருமையான கவிகள் இயற்றப்பட்டன. திருக்குறள், திருவாசகம், காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, குலசேகர ஆழ்வார் பாசுரங்கள், பொய்கையாழ்வார் பாடல்கள், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம் முதலானவை அனுபவிக்கத்தக்க கவிகள். அவைகளைக் கற்கும்போது தமிழராகிய நமக்குத் தனித்த ஒரு பேருவுவகை பிறக்கிறது. அவைகளுக்குப் பிற்பாடு உண்டாயிருக்கிற நூல்கள் - புராணங்கள், கோவைகள், அந்தாதிகள் எல்லாம் அனேகமாய்க் கவித்துவம் என்பது இல்லாத, எதுகை மோனைகளைக் கணக்காக அமையும்படி செய்து தீர்த்த செய்யுள்களாகத்தான் முடிந்தன. பூர்வமான, தமிழ்ப்பண்பு, கவிப்பண்பு, இதயப்பண்பு இவைகளை ஆசிரியர்கள் அறவே மறந்துவிட்டார்கள் அல்லது ஒழித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. "ஏது தமிழ்க்கவி அஸ்தமித்தே போய்விட்டதோ?" என்று அஞ்சவே தோன்றும்.
இந்த நிலைமையில் இருநூறு வருஷங்களுக்கு முன் திருநெல்வேலி ஜில்லாவில் மேலகரம் என்ற - சுமார் ஐம்பது கூரைவீடுகள் உள்ள - சிறிய ஊரில் இருந்த புலவர் ஒருவர் தமிழ்ப்பாஷையின் இன்ப நிலைகளை அனுபவத்தறிந்து அற்புதமான கவிகளைப்பாடி உதவினார் என்பது பாலைவனத்துக்கு மத்தியில் கற்பகக்காவைக் கண்டக் கணக்குத்தான். புலவர் திரிகூடராஜப்ப(ன்) கவிராயர் பாடிய "குறவஞ்சி" தன்னுடைய புலமையைக் காட்டிவிட வந்த சொற்கோவை அன்று; உண்மையாக இதயம் அனுபவித்த ரசங்களைத் தமிழுக்கே உரிய இசையிலும் தாளத்திலும் வைத்துப் பாடிய பாடல்கள். வழக்கோடு ஒட்டிய தமிழில் எளிமைபடக் பாடியிருப்பதால் தமிழராய்ப் பிறந்த யாருமே கவிரஸத்தை அனுபவிக்கும்படியாக இருக்கின்றன. தமிழ் நூல்களை முறையில் கற்றுணர்ந்தவர்களுக்கோ கற்கக் கற்கத் தெவிட்டாத தேன்தான்.
நாற்பது ஐம்பது வருஷத்துக்கு முன்பு திருநெல்வேலி மதுரைச் சீமையில் தமிழ் கற்றவர் என்றால் குற்றாலக் குறவஞ்சியைக் கல்லாதவர் இருக்கமாட்டார்கள். மந்தை நாடகத்திலும் பரதநாட்டியத்திலும் குறவஞ்சிப் பாடலைப் பாடுவது சாமான்யம். எல்லாப்பள்ளிக்கூடங்களிலுமே பாடமாக வைத்துப் பாடும்படியாகக் கற்பிப்பார்கள். "தமிழ் கற்பதே அகௌரவம். குற்றாலக் குறவஞ்சியைப் படிப்பது அனுபவிப்பது என்பது எவ்வளவு கேவலம்! ஆங்கிலக் கவிகளை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, அனுபவித்தோம்" என்று மாத்திரம் சொன்னால் போதும் அவர்களுக்குப் பெரிய பெரிய மதிப்பு.
பல பதிப்புகள் வௌிவந்தும், குறவஞ்சியைத் தமிழுலகம் கவனித்த பாடாக இல்லை. காரணம், மேலே சொன்ன ஆங்கில மோகம் ஒன்று. மற்றது, பண்டைத்தமிழ். பண்டைத்தமிழ் என்று வழக்கொழிந்த பாஷையில் எழுதிய நூல்களின்மேல் ஏற்பட்ட மோகம். தற்போது இந்த மோகம் எல்லாம் கொஞ்சம் தௌிந்து வருகிறது. உண்மையான தமிழ்க்கவியை அனுபவிக்கவேண்டும் என்ற அவா தமிழர் பலருக்கும் உண்டாகி வருகிறது.
குறவஞ்சி ஆசிரியர் காலத்தில் சாமான்ய மக்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் வின்னியாசமான செய்யுள்களிலும் கற்பனைகளிலும் மற்றும் போலியான விகடங்களிலுமே விருப்பம் இருந்தது. ஆகவே அவர்களுடைய விருப்பத்திற்கிணங்கியோ அல்லது மற்றப்புலவர்களோடு ஒட்டிப்போகும் காரணத்தினாலோ சிற்சில அவசியம் அல்லாத விஷயங்களும் கவிப்போக்குகளும் அங்கொன்று இங்கொன்று காணக்கிடக்கின்றன. அவைகளை ஒதுக்கிவிட்டு நூலைப்பார்ப்போமானால் ரொம்ப ரொம்ப வியக்கக்கூடிய தாயும் தெவிட்டாத ரஸம் உள்ளதாகவுமே இருக்கக்காண்போம். ஏதோ பழம் புத்தகங்களையும் நிகண்டுகளையும் வாசித்துவிட்டு அவைகளையுமே அப்படியுமிப்படியாக புரட்டுகிற காரியம் அல்ல. இயற்கையை - புற இயற்கையையும் மக்களின் உள இயற்கையையும் தன் இதயத்தோடு ஒட்டவைத்து அனுபவித்தவர்
ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
இது புலவர் திருக்குற்றாலத்தைக் கண்டு பாடியதல்லவா! திணையிலக்கணத்தை முன்னால் வைத்துக் கொண்டு எழுதிய வெறும் சம்பபிரதாயச் செய்யுளா? மேலும் உண்மையான பழந்தமிழ்க் கவிகளை இதய தத்துவம் புலப்படும்படியாக ஊடுருவிக் கற்றிருக்கிறார்.
வாகனைக்கண் டுருகுதையோ - ஒரு
மயக்கமதாய் வருகுதையோ
மோகம்என்பது இதுதானோ - இதை
முன்னமே நான் அறியேன்! ஓ!
ஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற
அன்னைசொல்லும் கசந்தேனே
தாகம் அன்றிப் பூணேனே - கையில்
சரிவளையும் காணேனே.
காதல் துறையில் வெள்வளையைக் காணோமே! காணோமே! என்று பாடியதெல்லாம் பார்த்துச் சடைத்துப் போயிருக்கிறோம். ஆனால் நம்முடைய ஆசிரியர் அதைக் கையாளுகிற விதத்தில் நாயகி கைவளையல்களை உண்மையில் காணாமல் போக்கிவிட்டு அங்குமிங்குமாகத் திகைத்துப் பார்க்கிற சாயல் நம் கண் முன்னால் வந்துவிடுகிறது.
குறத்தி வருகிறது, குறி சொல்கிறது, வேடன் வருகிறது, பறவைகள் மேய்கிறது முதலான பாடல்களைப் பார்த்தால் கவியெல்லாம், காட்டிலும் மலையிலும் தான் சஞ்சரிக்கிறது என்று சொல்லத் தோன்றும். எத்தனை தடவை படித்தாலும் அந்தப் பாடல்கள் புதிதாகவே தோன்றும்.
சமயபக்தி என்றால் அது சம்பந்தமாக மூர்த்தியையும் ஸ்தலத்தையும் அனுபவிக்கிறதும் கூடத்தான்.
சுற்றாத ஊர்தோறும் சுற்றவேண்டாம் புலவீர்
குற்றாலம் என்றொருகால் கூறினால்
போதும், என்று அழகாக அனுபவித்துப் பாடுகிறார். இயற்கை அழகையும், கடவுள் தத்துவத்தையும் ஒன்றாய்ச் சேர்த்து அனுபவித்து விடுகிறார். சிருஷ்டி தத்துவங்களில் உள்ள உண்மைகளை தற்காலத்து அறிவியல் நிபுணர்களைப்போல நேர்முகமாகக் கண்டு அனுபவித்துப் பாடுகிறார். ஒரே ஒரு தத்துவந்தான் சகல பகுதிகளையும் ஒழுங்கான முறையில் இயங்கச் செய்கிறது என்பது தற்காலத்து அறிவியல் முடிபு. அதை இருநூறு வருஷங்களுக்கு முன் நமது மேலகரம் கவிராஜர்
சாட்டிநிற்கும் அண்டம் எலாம் சாட்டையிலாப் பம்பரம்போல்
ஆட்டுவிக்கும் குற்றாலத் தண்ணலார்
என்று உடல் புளகிக்கப் பாடுகிறார்.
இப்படிச் சிறிய விஷயம் பெரிய விஷயம் எல்லாவற்றையும் பற்றிப் பாடுகிறார். ஆனால் ஒன்று: அவைகளுக்குள் எல்லாம் ஒரு ஹாஸ்ய ரசமும் ஒரு பக்தி ரஸமும் பின்னிக்கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம். இதைப் பார்த்து அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள்தாம்.
(ரசிகமணி, 1937)
திரிகூடராசப்பக் கவிராயரின்
திருக்குற்றாலக் குறவஞ்சி
தற்சிறப்புப்பாயிரம்
விநாயகர் துதி |
...1 |
|
...2 |
|
...3 |
|
...4 |
தாங்குகட லேழழைத்த திருக்குற் றாலர் செழித்தகுற வஞ்சிநா டகத்தைப் பாட அத்தியிலே பூவையந்நா ளழைப்பித் தானும் கனகுளத்தில் எடுத்தானுங் காப்ப தாமே. |
...5 |
|
...6 |
|
...7 |
செல்வருக்குந் தேவருக்கு மிரங்கி மேனாள் கொடியபஞ்ச பாதகமும் தீர்த்த தாலே நினைத்தவரம் பெறுவரது நினைக்க வேண்டிப் படிப்பவர்க்குங் கேட்பவர்க்கும் பலனுண் டாமே. |
...8 |
|
...9 |
நூல்
கட்டியக்காரன் வரவு |
...1 |
இராகம் - தோடி, தாளம் - சாப்பு புரந்திடுஞ்செங் கோலான் பிரம்புடையான் வாசற் கட்டியக்காரன் வந்தனனே. |
....2 |
நன்னகர மூதூர் வீதி கரங்காட்டும் வள்ள லார்சீர்த் பாதர்விடைச் சிலம்பி லேறி ஞாயிறுபோல் மேவி னாரே |
...3 |
இராகம் - பந்துவராளி, தாளம் - சாப்பு அசுரர் கூட்டமு மனித ராகிய சூழ்ந்து தனித்தனி மயங்கவே பகுத்து நிறுவிய வேளை தொறுந்தொறும் மகுட கோடியிற் புடைக்கவே (பவனி) தரித்த சுடர்மழு விரித்த தொருகரம் இலங்கப் பணியணி துலங்கவே ஆனை கொடுத்தவி தானச் சேலையும் கொடுத்த பரிகல மிசையவே. (பவனி) தோன்றற் செயப்படை தாங்கவே தரசு வேல்வலம் வாங்கவே பதக்க மணியொளி தேங்கவே டுலகெலாந் தழைத்தோங்கவே. (பவனி) யானை மேற்கன பேரிமு ழக்கமும் துதிக்கை யாற்செவி புதைக்கவே அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள் மறைக ளொருபுறம் வழங்கவே. (பவனி) யாசை வீணை மிழற்றவே ஆல வட்டம் நிழற்றவே வரிசை விசிறி சுழற்றவே சகல தேவரும் வழுத்தவே. (பவனி) சகல சமயமு மேற்கவே கமலத் தோன்புடை காக்கவே அமரர் நாயகன் வந்தனன் சின்ன மெடுத்தெடுத் தார்க்கவே (பவனி) தேரின் பெருக்கமுந் தாரின் பெருக்கமும் அவனி முழுதினு நெருங்கவே மூடி யடங்கலும் ஓடி யிருண்டபின் மெழுந்து திசைதிசை விளங்கவே (பவனி) குரவை பரவையை நெருக்கவே ளுலக மேழையு முருக்கவே மயில னார்நடம் பெருக்கவே தைய லாளிட மிருக்கவே (பவனி) |
...4 |
பவனி காணப் பெண்கள் வருதல் |
...5 |
ஒருகோடி மான்கள்போல் வருகோடி மடவார் பொங்கரவ மேதுதனிச் சங்கமேது என்பார் விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார் ஈசனிவன் திரிகூட ராசனே என்பார். தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார் இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார். கையுமா ஒருகணிட்ட மையுமாய் வருவார் நில்லானோ ஒருவசனஞ் சொல்லானோ என்பார் வெண்மதியும் விளங்குதெங்கள் பெண்மதிபோல் என்பார் பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார் என்னமுலை நமக்கெழுந்த வன்னமுலை என்பார் மாயமோ சடைதரித்த ஞாயமோ என்பார் |
...6 |
|
..7 |
மாரனைக்கண் ணாலே மருட்டிச் தெய்வரம்பை போலவே வந்தாள் கண்ணுதலைப் பார்வையால் வெல்லப் பேடையன்னம் போலவே வந்தாள். கண்ணிலொரு நாடகம் இட்டு ஓவியம் போலவே வந்தாள் சங்கநெடு வீதிதனிலே உருவசியும் நாணவே வந்தாள். |
...8 |
கொண்டையாள் - குழை கெண்டையாள் இதழினாள் - வரிச் நுதலினாள். புருவத்தாள் - பிறர் பருவத்தாள் சொல்லினாள் - கடல் பல்லினாள். முத்தினாள் - மதி முகத்தினாள் கழுத்தினாள் - சகம் எழுத்தினாள். செங்கையாள் - எங்கும் கொங்கையாள் உந்தியாள் - மீதில் பந்தியாள். இடையினாள் - காமத் தொடையினாள் உடையினாள் - மட நடையினாள். மேனியாள் - ஒரு சீனியாள் பெருக்கமே - சத்தி உருக்குமே. |
...9 |
|
...10 |
என்றாட - இடை கலந்தாட - இரு குழைந்தாட - மலர்ப் பந்து பயின்றாளே. புரண்டாடக் - குழல் வண்டோட - இனி திண்டாட - மலர்ப் பந்து பயின்றாளே. நின்றாடப் - புனை கொண்டாட - நய வீதியிலே - அணி அடர்ந்துபந் தாடினளே. மோகினியோ - மன தோவெனவே - உயர் வீதியிலே - மணிப் பந்துகொண் டாடினளே. |
...11 |
|
...12 |
மகரக் குழைக ளூச லாடச் தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மெனப் (பந்) மின்னி னொளிவு போலவே தோழியருடன் கூடிக் கூடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம்மெனப் (பந்) |
...13 |
வசந்தபூங் கோதை காலில் இருபந்து முலைகொண் டாட ஒருசெப்பி லைந்து பந்துந் சித்தரை யெதிர் கொண்டாளே |
...14 |
|
...15 |
திரிகூடச் செல்வர் கண்டாய் இறையவ ரிவரே யென்று நன்மொழித் தேறல் மாந்தி மனங்கொண்டாள்; மயல்கொண் டாளே. |
...16 |
|
...17 |
நன்னகர் வசந்த வல்லி வீதியிற் சங்கம் தோற்றாள் தன்னுடை கொடுத்தா ளையன் ஊர்கின்ற தேர்கொண் டாளே. |
...18 |
யாடாள் பாடாள் வாடா மாலை சூடாள் காணெண்பார் பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார். பாச்சோ என்பார் மூச்சே தென்பார் பேச்சே தோவென்பார் கையா திரி கூடநாதா கண்பாரா யென்பார். |
...19 |
மையலால் வசந்த வல்லி தமனிய மாடஞ் சேர்த்து மின்னனார் விழுந்த பேரைக் குளிர்ச்சியால் வெதுப்புவாரே |
...20 |
மூட்டி மூட்டி விசிறி வீசுவார் கரியுதே முத்தம் பொரியு தேயென்பார். அணைத்து வாழைக் குருத்திற் கிடத்துவார் பெருநி லாவி னொடுக லாவினாள். |
...21 |
பிரமை யாலே மயக்கந் தானோ காந்திக் காந்தி வெண்ணி லாவே. |
...22 |
தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே. விட்டுநா னெறிந்ததற்கோ வெண்ணிலாவே காந்தியாட்ட மாடுகிறாய் வெண்ணிலாவே. ஆட்கடியன் போற்குறைந்தாய் வெண்ணிலாவே வேகமுனக் கானதென்ன வெண்ணிலாவே. வாகுகுழற் பின்னல்கண்டாய் வெண்ணிலாவே கூடலிங்கர் முன்போய்க்காய்வாய் வெண்ணிலாவே. |
...23 |
தைய லார்கள் றெவர்சொன் னாரோ மமைந்தி டாரோ வேனி லானே |
...24 |
செக்கரும் பாவி நிலாவுமே போதாதோ மன்மதா வல்லார்க்கு மால்கொண்டாற் பொல்லாப்பென் மேலுண்டே மன்மதா சின்னம் பிடித்தபின் னன்னம் பிடியாதே மன்மதா அல்லாமல் தாயொரு பொல்லாத நீலிகாண் மன்மதா நித்திரை தானொரு சத்துரு வாச்சுதே மன்மதா பெண்பிள்ளை மேற்பொரு தாண்பிள்ளை யாவையோ மன்மதா. வந்தது கண்ணல்ல சிந்தூர ரேகைபார் மன்மதா நன்னகர்க் குற்றாலர் முன்னமே செல்லுவாய் மன்மதா. |
...25 |
படைமா மதனைப் பயிற்றியசொல் அதுநான் பயின்றா லாகாதோ கொம்பே வம்பு பொருதமுலைப் பிள்ளாய் கருத்து விள்ளாயே. |
...26 |
|
...27 |
தமனியக் கொடியே மாதர் சொன்னபேதை மைக்கென் சொல்வேன் வளர்சங்க மறுகி னூடே நங்கைநீ மயல்கொண் டாயே. |
...28 |
கேளாயோ மானே அவர் ஓரடிகாண் மானே தேவர் செல்வ மானே வாசல்கண்டாய் மானே. ஆசைகொண்டேன் மானே பல ஆசைகொண்டார் மானே டோதரியாள் மானே அவர் செய்தாளோ மானே |
...29 |
வெடித்த தீந்தேன் பசுந்தேன் கங்கை நிமல மூர்த்தி பெண்கண் டாயே. |
...30 |
வல்லிக்கு வல்லி பேசி பரமர்மே லாசை கொண்டாய் நிரந்தர மூர்த்தி யுன்பால் இசையநீ யிசைத்தி டாயே |
...31 |
ஒருத்தி காம நெருப்பை யவிக்கிலார் பருவ மலையைக் கையி லிணக்கிலார். அஞ்சு தலைக்கொ ராறுதலை வையார் நஞ்சு பருகி யமுதங் கொடுக்கிலார். சின்னத் துரைதன் சாபந் தீர்க்கிலார் இரங்கு வாரெனக் கிரங்கிலார் பெண்ணே. |
...32 |
நாதர்மே லாசை பூண்டு சொல்லவும் படித்துக் கொண்டாய் தக்கதோ மிக்க தோகாய் இனியுன திச்சை தானே |
...33 |
மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்ம மென்று சலுகைக் காரர்க் காசையானே னிப்போது (தூதுநீ) நித்திரா பாவிக்கென்ன போட்டி நடுவே இந்தக் மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி (தூதுநீ) மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர் தான்பெண்ணா கியபெண்ணை நான்விடே னென்று. (தூதுநீ) |
...34 |
திரும்பத் தாமே லறவ ரேவும் காணொ ணாதால் மின்ன னாளே. |
...35 |
தினமுமொன் பதுகாலம் கொலுவிற் சகியே. பேசுதற்குச் சமயமல்ல கண்டாய் சகியே. மாதவழி வருடவழிச் சிறப்பும் சகியே. உகந்திருக்குங் கொலுவேளை கண்டாய் சகியே. பெருங்கொலுவில் சமயமறி யாமற் சகியே. திருவாசற் கடைநிற்பார் சிலபேர் சகியே. ஆட்கொண்டார் குறட்டில்நிற்பார் சிலபேர் சகியே. வாசல்தொறுங் காத்திருக்குங் கண்டாய் சகியே. குற்றாலச் சிவராம நம்பிசெயுஞ் சகியே. பணிமாறு காலமுங்கொண் டருளிச் சகியே. நாலுகவிப் புலவர் புதுப்பாட்டுஞ் சகியே. நீக்கமிலை எல்லார்க்கும் பொதுக்காண் சகியே. ஆசைசொலக் கூடாது கண்டாய் சகியே. முயற்சிசெயுந் திருவனந்தல் கூடிச் சகியே. கோயில்புகும் ஏகாந்த சமயஞ் சகியே. மருமாலை வாங்கியே வாராய் சகியே. |
...36 |
|
...37 |
பாவலர்மனுக் காவலர் நாயகர் பதஞ்சலி பணிதாளர் குறும்ப லாவினிற் கூடுவ ராமெனிற் கூடலேநீ கூடாய் காரணமறை யாரணம் படித்தவர் கருதிய பெருமானார் குறும்ப லாவினிற் கூடுவ ராமெனிற் கூடலேநீ கூடாய் |
...38 |
மரங்கு வீட்டில் தியங்கும் போதிற் கூடை தாங்கி வருகின் றாளே. |
...39 |
|
||
(1) |
சைவமுத் திரையை வானின் மேற்றரிக்குந் |
|
(5) |
ஏரிநீர் செழிக்க வாரிநீர் கொழிக்கு |
|
(10) |
ஈரா யிரமருப் பேந்திய யானையான் |
|
(15) |
வாலசுந் தரிகுழல் வாய்மொழி அருட்கட் |
|
(20) |
குலமணிப் பாசியுங் குன்றியும் புனைந்து |
|
(25) |
உருவசி அரம்பை கருவமு மடங்க |
|
(30) |
மட்டிலாக் குறிகளுங் கட்டினா லடக்கிக் |
|
(35) |
மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி |
|
(40) |
எக்குறி ஆயினு மிமைப்பினி லுரைக்கும் |
...40 |
விருத்தம் செச்சை சூடிக் மணிக்கூடை தாங்கி முதல்வர் சாரல் வருகின் றாளே. |
...41 |
வில்லை யனநுதல் முல்லை பொருநகை வல்லி அவளினு மெல்லி இவளென புல்லி வருகுறி சொல்லி மதுரித செல்வி புணர்பவர் கல்வி மலைக்குற (வஞ்சி) குன்றி வடமுலை தங்கவே நின்று தரள மிலங்கவே மூச லிடுகுழை பொங்கவே கின்ற சரணினர் வென்றி மலைக்குற (வஞ்சி) காடு இணைவிழி சாடவே னூடு பிதுங்கிமல் லாடவே மோடி பெறஇசை பாடியே சூடு மலைதிரி கூட மலைக்குற (வஞ்சி) |
...41-1 |
|
...41-2 |
கொம்மைமுலை யார்க்கு நல்ல அம்மேயம்மே என்று செல்ல (வஞ்சி) வாலகோ கிலம்வந் தாற்போற் றாலமலை வாழும்குற (வஞ்சி) சாத்திரக்கண் பார்வை பன்னத் பூத்தமலர்க் கொடியென்ன (வஞ்சி) |
...42 |
ரருளைப் பாடி மகிழ்ச்சி கொண்டு தைய லேயுன் சொல் லென்றாளே. |
...43 |
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார். செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும். குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே. முற்றமெங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக்கொண் டோடும். கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம் தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும் வளம்பெருகுந் திரிகூட மலையெங்கள் மலையே அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும் விந்தையகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும் காகமணு காமலையில் மேகநிரை சாயும் நிலைதங்குந் திரிகூட மலையெங்கள் மலையே கனகமகா மேருவென நிற்குமலை யம்மே சகலமலை யுந்தனக்கு ளடக்குமலை யம்மே வானிரவி முழைகள்தொறு நுழையுமலை யம்மே துங்கர் திரிகூடமலை யெங்கள் மலை யம்மே கொழுநனுக்குக் காணிமலை பழனிமலை யம்மே இமயமலை யென்னுடைய தமயன்மலை யம்மே தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை யம்மே திரிகூட மலையெங்கள் செல்வமலை யம்மே உறவுபிடித் தாலுவிடோங் குறவர்குலம் நாங்கள் வேங்கையாய் வெயில்மறைத்த பாங்குதனைக் குறித்தே ஆதினத்து மலைகளெல்லாஞ் சீதனமாக் கொடுத்தோம் பரமர்திரி கூடமலை பழையமலை யம்மே |
...44 |
குறிஞ்சி பூத்த காட்டு வானேன்? தோகை யேயுன் நவிலு வாயே. |
...45 |
துரைவந் தான்றுரை வந்தானென் றூத அல்குல் தேர்க ளலங்காரஞ் செய்யப் பறக்குங் கிள்ளைப் பரிகள்முன் கொஞ்சத் திருக்குற் றாலர்தென் னாரிய நாடே. கடலைச் சேர்ந்த கறுப்பான மேகம் மலையைச் சேர்ந்து சிலையொன்று வாங்கி நீளக் கொண்டலந் தேரேறி வெய்யவன் திருக்குற் றாலர்தென் னாரிய நாடே. சொரியும் பாலைப் பருகிய வாளை கொழும் பலாக்கனி வாழையிற் சாய வருவி ருந்துக் குபசரிப் பார்போல் சந்திர சூடர்தென் னாரிய நாடே. றாடவர் மண்ணில் மூடுங் கரும்பு தோளை வென்று சுடர்முத்த மீன்று பிரியுங் காலத்திற் பெண்மையை வெல்லக் கடவுளாரிய நாடெங்கள் நாடே. சகல தேவர்க்கு மன்புள்ள நாடு சிவத்து ரோகமு நீங்கிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு வசந்த ஆரிய நாடெங்கள் நாடே. அநேக கோடி யுகங்கண்ட நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு செங்கண் மால்சிவ னாகிய நாடு வசந்த ஆரிய நாடெங்கள் நாடே. வருடம் மூன்று விளைவுள்ள நாடு விசேஷ மூன்றுங் குலாவுள்ள நாடு புவனமூன்றும் வலஞ்செயு நாடு நாத ராரிய நாடெங்கள் நாடே. நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல் சுழலக் காண்பது தீந்தயிர் மத்து வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை ஈச ராரிய நாடெங்கள் நாடே. ஒடுங்கக் காண்பது யோகிய ருள்ளம் வருந்தக் காண்பது சூலுளை சங்கு புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து திருக்குற் றாலர்தென் னாரிய நாடே. |
...46 |
அரிதாய் நின்ற தெவிட்டா தம்மே கைவில் லேந்தி நவிலக் கேளே. |
...47 |
நானறிந்த வகைசிறிது பேசக்கே ளம்மே மேவுமொரு சிவலிங்கம் தேவரக சியமாய் அருந்தவத்துக் காய்த்தேடி திரிந்தலையுங் காலம் முதுகங்கை யாறுசிவ மதுகங்கை யாறே செண்பகாட வித்துறையின் பண்புசொல்லக் கேளாய் சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும் காத்திருக்குங் கயிலாய மொத்திருக்கு மம்மே நங்கைமார் குரவையொலிப் பொங்குமா கடலே. பொருந்துசித்ர நதித்துறைகள் பொன்னுமுத்துங் கொழிக்கும் கலந்தாடிற் கழிநீராய்த் தொலைந்தோடும் பாபம் தழைத்தமதிற் சிகரமெங்குங் கொழுத்தகயல் பாயும் குற்றாலத் திரிகூடத் தலமெங்கள் தலமே வளமைபெறுஞ் சதுரயுகங் கிழமைபோல் வழங்கும் நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே பற்றாகப் பரமருறை குற்றாலத் தலமே மிருகமதாய்த் தவசிருக்கும் பெரியதல மம்மே |
...48 |
திருக்குற் றால முறையால் கண்டேன் வருக்கை வாசர் கிளத்து வாயே. |
...49 |
குலம்பார்க்கில் தேவரினும் பெரியகுலம் கண்டாய் பெண்கொடுத்த மலையரசன் தனைக்கேட்க வேணும் உயர்மதுரை மாறனுக்குஞ் செயமருகர் கண்டாய் வித்தகர்க்குக் கண்ணான மைத்துனர்கா ணம்மே ஆகுவா கனத்தார்க்கும் தோகைவா கனர்க்கும் தருகாழி மகனார்க்கும் தகப்பனார் கண்டாய் தேனீன்ற மலைச்சாரல் மானீன்ற கொடிக்கும் காமனார் தமக்குமிவர் மாமனார் அம்மே பூதலத்தின் முனிவருக்கும் பாதலத் துளார்க்கும் அல்லார்க்கு முன்னுதித்த செல்வர்கா ணம்மே மொழிந்தாலு மொழியலாம் பழுதிலைகா ணம்மே நானுரைப்ப தரிதுலகம் தானுரைக்கும் அம்மே |
...50 |
நிமலர்குற் றால நாதர் குறவஞ்சிக் கொடியே கேளாய் கருதிநீ விருந்தாச் சொல்லுஞ் தெரியவே செப்பு வாயே. |
...51 |
மக்க மராடம் துலக்காணம் மெச்சி சிங்கம் ஈழம் கொழும்புவங் காளம் சங்க மதுரைதென் மங்கலப் பேட்டை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் (வித்தாரம்) நாட்டுமெண் ணூற்றெண்பத் தேழாண்டு தன்னில் பாண்டிய னார்முதல் சிற்றொடு வேய்ந்த சின்னணஞ் சாத்தேவன் செப்போடு வேய்ந்த மோகன மாலைபார் மோகன வல்லி (வித்தாரம்) ஆண்டொரு நானூற் றிருபத்து நாலில் செண்பக மாறற்குச் சொன்னபேர் நாங்கள் நாயகர் வந்து மணக்கோலஞ் செய்ய எங்களைக் கேட்டதும் சங்கத்தார் சாட்சி (வித்தாரம்) |
...52 |
காமனைச் சிங்கி கொள்வாய் குறவஞ்சி குறைவைப் பாயோ பரமர்குற் றாலர் நாட்டில் எனக்கொரு குறிசொல் வாயே. |
...53 |
ஏறுவே னெதிர்த்தபேரை வெல்லுவே னம்மே வயிற்றுக்கித் தனைபோதுங் கஞ்சி வாரம்மே பெரிய குடுக்கைமுட்ட மண்டுவே னம்மே சீனச்சரக் குத்துக்கிணி கிள்ளித்தா அம்மே ஆக்கம் வருகுதுபார் வெள்ளச்சி யம்மே மேல்புறத்தில் ஆந்தையிட்ட வீச்சுநன் றம்மே சூட்சுமாகப் பூரணத்தை வெல்லுதே யம்மே கூடமலைத் தெய்வமுனக் குண்டுகா ணம்மே |
...54 |
பகரும் திரிகூ டத்தில் கழுத்தின்மேற் கறுப்பு முள்ளான் நன்னகர்த் தலத்தா னாக மாப்பிள்ளை வருவா னம்மே |
...55 |
தாங்காய்முப் பழம்படைத்தாய் தேங்காயும் உடைத்து வைப்பாய் அம்மே அப்பமவல் வர்க்கவகை சர்க்கரையோ டெள்பொரிவை யம்மே நிலவரத்தைத் தேர்ந்துகொள்வாய் குலதெய்வத்தை நேர்ந்துகொள்வா யம்மே குறும்பலவர் திருவுளத்தாற் பெரும்பலனாங் குறிசொல்லவா அம்மே... |
...56 |
|
...57 |
முன்கை முதாரிட்ட கையைக் காட்டாய் அலங்கார நௌியிட்ட கையைக் காட்டாய் செங்கமலச் சங்கரேகைக் கையைக் காட்டாய் சஞ்சீவி யேயுனது கையைக் காட்டாய் |
...58 |
|
...59 |
மனையறத்தால் அறம்பெருக்கித் திறம்வளர்க்குங் கையே மேன்மேலும் பாலமுதம் அளையுமிந்தக் கையே அணங்கனையார் வணங்கிநித்தம் போற்றுமிந்தக் கையே பிறவாத நெறியார்க்கே றேற்குமிந்தக் கையே. |
...60 |
கைப்பிடிப் பவர்தா மெட்டுத் செகமக ராசி நீயே இறையவர் திரிகூ டத்தில் வியப்புற வணங்கு வாளே |
...61 |
|
...(62) |
கர்த்தர்குற் றாலர் நேசம் பேசுது சக்க தேவி சொல்லுசொல் லெனவே வாயில் இனிக்குறி சொல்லக் கேளே. |
...(63) |
தோகையர்க் கரசேகுறி சொல்லக் கேளாய் மோகனப் பசுங்கிளியே சொல்லக் கேளாய் பணியாபர ணம்பூண்ட பார்த்திபன் வந்தான் சேனைகண்ட வெருட்சிபோற் காணுதே யம்மே |
...(64) |
நாட்டான பேர்க்கான வார்த்தைநா னறியேனோ உளப்பிப்போட் டாய்குறியைக் குழப்பிப் போட்டாய் மையலும் கிறுகிறுப்பும் தையவர்க் குண்டோ எந்தவகை என்றுகுறி கண்டுசொல்லடி |
...(65) |
வங்காரப் பவனியாசைப் பெண்களுக் குள்ளே சொல்லப் பயந்திருந்தேன் சொல்லுவேன் முன்னே காய்ச்சலல்ல காய்ச்சலல்ல காமக்காய்ச் சல்காண் மோகக்கிறு கிறுப்படி மோகனக் கள்ளி |
...(66) |
காமியென்றாய் குறவஞ்சி வாய்மதி யாமல் தாருஞ்சொல்லிப் பேருஞ்சொல்லி ஊருஞ் சொல்லடி ஊரும்பேருஞ் சொல்லுவதுங் குறிமுகமோ பெண்சேர வல்லவன்காண் பெண்கட் கரசே |
...(67) |
மதியாமற் பெண்சேர வல்லவ னென்றாய் கானமலைக் குறவஞ்சி கள்ளி மயிலி பெண்ணுடன் சேரவென்றால் கூடவு மொக்கும் திரிகூட நாதனென்று செப்பலா மம்மே |
...(68) |
மாணிக்க வசந்தவல்லி நாணிக் கவிழ்ந்தாள். நாணமெல்லாம் நாளைநானுங் காணவே போறேன் கக்கத்தி லிடுக்குவாயோ வெட்கத்தை யம்மே ஈட்டுசரு வாபரணம் பூட்டினாளே |
...(69) |
பாவை கூந்தல் பொலிவாய்ப் பூண்டு நடக்கு நாளில் வருகின் றானே. |
...(70) |
வரித்தோர் கச்சை தூணி தூக்கிக் கண்ணி சேர்த்துத் சிங்கன் வந்தான். |
...(71) |
வழியைத் தேடி வெறித்து நோக்கிக் கையில் வாங்கித் தோன்றி னானே. |
...(72) |
|
...(73) |
தமலர்நாட்டில் வேட்டை யாடி நரிபோல் பம்மிக் குளுவன் நானே. |
...(74) |
சித்திர சபையார் சித்திர நதிசூழ் குருவிகள் படுக்கும் குளுவனு நானே. கைந்நரம் பெடுத்துக் கின்னரந் தொடுத்துப் பறவைகள் படுக்கும் குறவனு நானே. தகையினை வணங்கார் சிகைதனைப் பிடித்தே பறவைகள் படுக்கும் குளுவனு நானே. உரியவி நோதர் திரிகூட நாதர் திரிகூட நாமச் சிங்கனு நானே. |
...(75) |
போர்மத யானை சாய்க்கும் மதப்புலிச் சிங்கன் முன்னே கையிலே ஈட்டி வாங்கி ஈப்புலி நூவன் வந்தான். |
...(76) |
உள்ளானும் வலியானும் எண்ணிக் கொண்டு கோட்கார நூவனும் வந்தானே. கானாங் கோழிக்குப் பொரியுங் கொண்டு வாய்ப்பான நூவனும் வந்தானே. எலியனைப் புலியனை யேவிக் கொண்டு வங்கார நூவனும் வந்தானே. ஒட்டகம் போலே மேலிலங்கக் மட்டீவாய் நூவனும் வந்தானே. |
...(77) |
மூரலால் வீரஞ் செய்த திருவிளை யாட்டந் தன்னிற் பறவைபோற் பறவை கூவ வரும்பட்சி பார்க்கின் றானே. |
...(78) |
வாட்டமில் லாப்பண்ணைப் பாட்டப் புறவெல்லாம் கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும் (வருகினு) திரிகூட நாதர் கிரிமாது வேட்கையில் மங்கைக்கு நானே வரிசைசெய் வேனென அடுக்களை காணப் புறப்படு நேர்த்திபோல் புரிந்து புவனம் திரிந்து குருகினம். (வருகினு) காக்கை வருகுது கொண்டைக் குலாத்தியும் மற்றொரு சாரியாய்க் கொக்குத் திரளெல்லாங் கூடுஞ் சமணரை நீடும் கழுவேற்ற றிட்ட திருமுத்தின் பந்தர்வந் தாற்போல (வருகினு) மீன்கொத்திப் புள்ளு மரங்கொத்திப் பட்சியும் கேகயப் பட்சியும் நாகண வாய்ச்சியும் ஓலஞ்செய் தேகூடி நாலஞ்சு பேதமாய்த் தொட்டாடும் ஐவனப் பட்டாடை போலவே (வருகினு) |
...(79) |
|
...(80) |
சந்தனக் காட்டுக்கும் செண்பகக் காவுக்கும் குற்றால நாயகர் சிற்றாற்று வெள்ளம்போல் (சாயினு) காடுவெட் டிப்பற்று நீடுசுண் டைப்பற்று ஸரீகிருஷ்ணன் மேடு முனிக்குரு கன்பேரி இராசகுல ராமன் கண்டுகொண் டான்மேலை நேரிப்பற் றும்சாத்த னேரிப்பற் றும்சுற்றிச் (சாயினு) பாட்டப் பெருங்குளம் செங்குறிஞ் சிக்குளம் உயர்ந்த புளியங் குளத்து வரைக்குள வழிமறித் தான்குளம் மாலடிப் பற்றும் அபிஷேகப் பேரிக் கணக்கன் பற்றிலுஞ் (சாயினு) அப்பா லொருதாதன் குற்றாலப் பேரிச் செங்கோட்டை சீவல நல்லூர்சிற் றம்பலம் சுரண்டை யூர்முத லுக்கிடை சுற்றியே குருவிளை யாடுந் திருவிளை யாட்டத்தில் (சாயினு) |
...(81) |
|
...(82) |
வியன்குல சேகரப் பட்டிக் குளங்களும் அயிரையுந் தேளியு மாராலுங் கொத்தியே. (மேயினு) அன்னசத்தி ரங்கட்டி அப்பாலுந் தென்காசிப் பத்த சனங்களைக் காக்கத் துசங்கட்டி வழித்தொண்டு செய்திடக் கச்சைகட் டிக்கொண்ட சிறுகால சந்தித் திருத்துப் புறவெல்லாம் (மேயினு) சைவக் கொழுந்து தருமத்துக் காலயஞ் செல்வன் மருதூர் வயித்தி யப்பனுடன் வள்ள லெனும்பிச்சைப் பிள்ளை திருத்தெல்லாங் கற்பூரக் காற்பற்றுந் தட்டான் குளச்சுற்றும் (மேயினு) வடகரை வீட்டுக்கு மந்திரி யாகவும் தென்காசி யூருக்குத் தாயக மாகவும் தலத்தை வளர்க்கின்ற தானிக ளாகவும் நள்ளார் தொழும்பிச்சைப் பிள்ளை திருத்தெல்லாம் (மேயினு) நாயகர் கோவில் கொலுமண் டபங்கட்டித் தெப்பக் குளங்கட்டித் தேர்மண் டபங்கட்டிப் பசுப்புரை கோடி திருப்பணி யுங்கட்டி அனந்த பற்பநாபன் கட்டளைப் பற்றெல்லாம் (மேயினு) தருமத் துக்குநிலைக் கண்ணாடி போலவே இரண்டு குறிஞ்சிப் படித்துறை யுஞ்செய்த குற்றால நாதன்முன் உற்ற சகோதரன் மன்னன் வயித்திய நாதன் திருத்தெல்லாம் (மேயினு) அடங்கார் குறும்பு மடக்கியே தென்காசி உடையவர் குற்றாலர் பூசைநை வேத்தியம் சித்திர மண்டபஞ் சத்திரஞ் சாலையும் பாலன் வயித்திய நாதன் திருத்தெல்லாம் (மேயினு) அன்பன் திருமலைக் கொழுந்துதன் கட்டளை நங்களொல் லாரரி நரபாலன் கட்டளை மிக்கான ஓமலூர்க் கிருஷ்ணன் வணிகேசன் பேரான கட்டளைச் சீரான பற்றெல்லாம் (மேயினு) தணியாத காதற் பணிவிடை செய்கின்ற மிக்க கருவைப் பதிராம நாயகன் நல்லூர் வருசங் கரமூர்த்தி கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளைப் பற்றெல்லாம் (மேயினு) |
...(83) |
|
...(84) |
காரார் திரிகூடச் சாரலி லேவந்து பறவைக ளெல்லாம் பரந்தேறி மேயுது (கண்ணி) மந்திரி யார்கையில் முந்திப் பணம்போட்டுத் தரிகொண்ட தில்லை நரிகொண்டு போச்சுது காக்கை படுத்தான் கருமுகில் வண்ணனும் விடைமே லிருப்பார் சடைமே லிருக்குது (கண்ணி) மூத்த நயினார் மொடுவாய்க் கொடுபோனார் பிள்ளைக் குறும்பாற் பிடித்துக்கொண் டேகினார் பரிகல மீந்திடும் பார்ப்பானுக் கீந்தனர் வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே (கண்ணி) வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள் அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில் தாமுங்கொண் டார்சைவர் தாமுங்கொண் டார்தவப் பிக்குச்சொல் லாமலே கொக்குப் படுக்கவே (கண்ணி) |
...(85) |
|
...(86) |
காக்கையும்படுமே குளுவா காக்கை யும்படுமே வக்கா வும்படுமே குளுவா வக்கா வும்படுமே உள்ளா னும்படுமே குளுவா உள்ளா னும்படுமே குற்றால மலைமேற் குளுவா குற்றால மலைமேல். |
...(87) |
|
...(88) |
கிருபைப் புறவிற் பறவை படுக்கையில் வந்த குருவி கலைந்தோடிப் போகுது (கெம்பா) எத்திசைப் பட்ட குருகும் வருகுது நூவனு நானு மிருந்தோ முனக்கினிப் பேசாமல் வாடைப் பொடியா கிலுமரைக் கொம்பா கிலுந்தாரேன் வம்புகள் பேசியே (கெம்பா) பொட்டிட்டு மையிட்டுப் பொன்னிட்டுப் பூவிட்டுக் கண்ணிக்குள் ளேபடுங் காமுகர் போலவும் அடியொட்டிப் பாறை அடியொட்டி னாற்போலுந் சிக்குது பார்கறி தக்குது பாரினிக் (கெம்பா) ஆசாரக் கள்ளர்போல் நாரை திரியுது மேலுந் திரிந்திடும் வேடிக்கைக் காரர்போற் கண்ணிக்குள் ளாகும் பறவையைப் போகட்டுப் பல்லொடிக் கச்சிறு கல்லகப் பட்டாற்போல (கெம்பா) |
....(89) |
செண்பகக்கால் திருந்தமதி சூடி னார்கால் கள்ளிகுளம் அழகர்பள்ளங் கூத்தன் மூலை வடவருவி யாற்றுக்கால் வடகால் தென்கால் கூவினான் நூவனைவிட் டேவி னானே. |
...(90) |
|
...(91) |
காமத்தால் கலங்கி வந்த நோக்கிய வேட்டைக் காட்டில் ஆசையா லன்னப் பேட்டைச் சிங்கிமேற் பிரமை கொண்டான். |
...(92) |
ஏகாந்தச் சிங்கியைக் கூவாத தென்னகு லாவே மாமலர்த் தாள்நடை காட்டாத தென்னவி காரமே தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட் டாலுப காரமே கண்டிட மெல்லாம் அவளாகத் தோணுதே பாவியே. |
...(93) |
|
(94) |
பொல்லாத தக்கன் மகத்தை அழித்தநாள் வானவர் தானவர் போனது போலவே (போயினு) மின்னார்கை தப்பியென் முன்னாக வந்தது பின்னொரு சேவலும் கூடத் தொடர்ந்தது சுந்தோப சுந்தர்போல் வந்த கலகத்திற் கண்ணியுந் தட்டியென் கண்ணிலுங் குட்டியே (போயினு) னப்பாலே போயொரு மிப்பா யிருக்கையில் மறைத்து விறைத்துக் கிடப்பது போலவே கண்ணி கழற்றி நிலத்திலே வைத்தபின் செபித்த மன்னவன் பாவம்போ னாற்போலப் (போயினு) தாம்வாழப் பார்ப்பவர் செல்வங்கள் போலவும் பாவங் கழுநீராய்ப் போவது போலவும் குதித்தோடிப் போன வயிணவர் போலவும் அடியவர் மேல்வந்த துன்பங்கள் போலவும் (போயினு) |
...(95) |
மாமியாள் மகள்மேற் கண்ணும் பான்மைபோல் வேட்டை போனாய் கற்பித்த மகள்போ லென்னைச் சிரித்தது காமப் பேயே. |
...(96) |
காமத்தால் வாமக் கள்ளைக் கொக்குநீ படுத்து வாழ்ந்தாய் ஆசைப்பே யுனைவி டாது சிங்கியைத் தேடு வாயே. |
...(97) |
மெய்யிலா தவனென் றென்னை லுருவிலி பகைத்தா னென்மேற் புறப்பட மாட்டேன் நூவா சிங்கியைக் காட்டு வாயே. |
...(98) |
லவளைநீ யணைந்தா லென்ன நூவனுக் குண்டோ நட்டம் காசலை யுனக்குண் டானால் கூட்டிவா காட்டு வேனே. |
...(99) |
சீகாழி சிதம்பரதென் னாரூர் காசி கோகரணஞ் செகநாதங் கும்ப கோணம் அடங்கலும்போய்ச் சிங்கிதனைத் தேடிச் சிங்கன் மதிகொண்டான் திரிகூட மெதிர்கண் டானே. |
... (100) |
வேள்திருச்செந் தூர்குருகூர் சீவை குந்த நிலைதருஞ்சிற் றூர்குமரி திருவாங் கோடு தொன்மருதூ ரத்தாள நல்லூர் தேடிச் திரிகூடச் சிங்கிதனைத் தேடு வானே. |
...(101) |
மாடப் புறாவுக்குப் போனேன் வேடிக்கைச் சிங்கியைக் காணேன். ஆலாப் படுக்கவே போனேன் மாலான சிங்கியைக் காணேன். வேட்டையைத் தப்பிவிட் டேனே வைபவ மாச்சுது தானே. எவ்வாறு தீர்த்துக்கொள் வேனே சிங்கியைக் காணகி லேனே. |
...(102) |
நன்னகரத் தலத்தில்வந்து பெறுவார் பேறு பிரமலோ கம்வரைக்கும் பேறுண் டாமோ வடகாசி குமரிமட்டு மலைந்த சிங்கன் கூடினான் சிங்கிதனைத் தேடி னானே. |
...(103) |
சீர்வளர் குற்றாலர் பேர்வளம் பாடிய சல்லாபக் காரியை உல்லாச மோகனச் (சிங்கி) அசைத்துநின் றாளதை யானைக்கொம் பென்றுநான் கொஞ்சத் தனத்தை யறிந்து சுகக்காரி பாவியே னாவி மறந்துவிட் டேனுடன் சிங்கார மோகனம் சிங்கிகொண் டாளந்தச் (சிங்கி) புளக முலையை நெருடி நெருடி எடுத்த சுருளு மிதழா லிடுக்குவள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின் அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம் (சிங்கி) தடமார் பிறுகத் தழுவவந் தாலவள் மறுத்துநான் பூசினும் பூசலாகா தென்பாள் தீரா மயல்தந்த தீராமைக் காரியைக் காரியப் பூவையை ஆரியப் பாவையை (சிங்கி) |
...(104) |
|
...(105) |
கையத் தனையகலங் காணுமடா பிடித்தால் மதப்பயலும் பெலப்பானோ (கறு) பகைவருந் திரும்பிப் பார்ப்பாரடா வகையாய் வருகுதென்னை மயக்குதையே (கறு) சடையில் இளம்பிறைபோல் தனிநுதலாள் ளுடையி லழகுமென்னை உருக்குதையோ (கறு) |
...(106) |
|
...(107) |
மரப்பாவை பின்தொடர மாயப்பொடியும் கூடியிருப் பார்களைக் கலைக்க மருந்தும் கண்கட்டு வித்தைகளுங் காட்டித் தருவேன் வெற்பிலுறை சிங்கிதனைக் காட்டா யையே. வாராத முலைகளும் வரப்பண்ணுவேன் மோகினி மந்திரஞ்சொல்லி வரப்பண்ணுவேன் தெரியாமற் போகவரச் சித்துமறிவேன் காட்டிவிட்ட சிங்கிதனைக் காட்டா யையே. |
...(108) |
லாகாச மார்க்க மோடத் திரிகூட மலையில் சிங்கா சகலர்க்குங் குறிகள் சொல்லிப் புதுத்தெரு இதுகண் டாயே. |
...(109) |
கேளா மலுமு யக்குவள் தோளசைக் காரிசிங்கி சும்மா கிடக்கமாட்டாள் (எங்கே) கைக்குறியும் கண்டு சொல்லுவள் மைக்குளடங் காதுவிழி கைக்குளடங் காதகள்ளி (எங்கே) பத்தியில்லாப் பேயர்போலே அத்தனையுங் குடித்துப்போட் டார்பிறகே தொடர்ந்தாளோ (எங்கே) |
(110) |
|
...(111) |
திருநாட்டி லிருவருந்தாம் கண்ட போது கைகலக்கும் போதுகரை குறுக்கிட் டாற்போல் விண்ணாணச் சிங்கிதனைக் கண்டு சிங்கன் துலங்குதம யந்தியவ ளாயி னாளே. |
...(112) |
சங்கை பாராய் காமச்சிங்கி யாரே (இங்கே) |
...(113) |
|
...(114) |
எங்கே நடந்தாய்நீ சிங்கி (எங்கே நடந்தாய்நீ) குறிசொல்லப் போனனடா சிங்கா (குறிசொல்ல) பயமா இருக்குதடி சிங்கி (பயமா) அஞ்சாமற் சொல்லடா சிங்கா (அஞ்சா) கடித்துக் கிடப்பானேன் சிங்கி (கடித்து) சிலம்பு கிடக்குதடா சிங்கா (சிலம்பு) திருகு முருகென்னடி சிங்கி (திருகு) கொடுத்த வரிசையடா சிங்கா (கொடுத்த) நௌிந்த நௌிவென்னடி சிங்கி (நௌிந்த) பாடக மிட்டதடா சிங்கா (பாடகம்) மார்க்கம தேதுபெண்ணே சிங்கி (மார்க்க) அணிமணிக் கெச்சமடா சிங்கா (அணிமணி) சுருண்டு கிடப்பானேன் சிங்கி (சுருண்டு) காலாழி பீலியடா சிங்கா (காலாழி) விரித்து மடித்ததார் சிங்கி (விரித்து) நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா (நெறிபிடி) சாரைப்பாம் பேதுபெண்ணே சிங்கி (சாரை) செம்பொனரை ஞாணடா சிங்கா (செம்பொ) கொப்புளங் கொள்வானேன் சிங்கி (கொப்பு) பாரமுத் தாரமடா சிங்கா (பார) பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி (பத்தெட்டுப்) இட்ட சவடியடா சிங்கா (இட்ட) |
...(115) |
வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா வள்ளியூ ரார்தந்த மாணிக்கத் தண்டொட்டி சிங்கா முந்நீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திகாண் சிங்கா குருகையூ ரார்தந்த குப்பியுந் தொங்கலுஞ் சிங்கா வன்னப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்குங்காண் சிங்கா கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா வெட்ட வௌியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா பட்டப் பகலில்நா னெட்டிக் கொடுப்பேனோ சிங்கா மட்டுப் படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா நாலுபேர் முன்னெனை நாணங் குலையாதே சிங்கா போதம் வருடிப்போய் பூனையைக் குத்தடா சிங்கா வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா சந்தேக மோஉன்றலைப் பேனைக் கேளடா சிங்கா இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய் சிங்கா பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா பாடிக்கொண் டால்போது மாடிக்கொள் வேனடா சிங்கா ஆக்கப்பொறுத்தவ ராறப் பொறர்களோ சிங்கா. |
...(116) |
|
(117) |
(* "வடவருவி யான் மறுபிறவிச் சேற்றில்" என்றிருந்தது. தளைத்தட்டலை நீக்க |
|
வெற்றிமழுப் படையானை விடையானை வாழ்த்துகிறேன். வேதசங்க வீதியனை வேதியனை வாழ்த்துகிறேன். மைந்தரெனு மிறையோனை மறையோனை வாழ்த்துகிறேன். மாமனுக்கு வரிசையிட்ட மாமனைநான் வாழ்த்துகிறேன். மாமனென வேபகரும் வள்ளல்தனை வாழ்த்துகிறேன். தேடரிய திரிகூடச் செல்வனையான் வாழ்த்துகிறேன். சித்ரசபை நடத்தானைத் திடத்தானை வாழ்த்துகிறேன். அனவரதத் தாண்டவனை ஆண்டவனை வாழ்த்துகிறேன். திரிகூட பரம்பரனைத் திகம்பரனை வாழ்த்துகிறேன். குற்றாலத் துறைவானைக் குருபரனை வாழ்த்துகிறேன். வடஅருவித் துறையவனை மறையவனை வாழ்த்துகிறேன். மாதுகுழல் வாய்மொழிசேர் மன்னவனை வாழ்த்துகிறேன். |
...(118) |
வதுவை சூட்டும் தலைநாட் சொன்ன பேரா லோங்கும் டூழி தானே. |
...(119) |
திருக்குற்றாலக் குறவஞ்சி முற்றிற்று
திரிகூடராசப்பக் கவிராயரின்
திருக்குற்றால மாலை
காப்பு |
|
|
|
|
...(1) |
|
...(2) |
|
|
|
...(3) |
|
...(4) |
|
...(5) |
|
...(6) |
|
...(7) |
|
...(8) |
|
...(9) |
|
...(10) |
|
...(11) |
|
...(12) |
|
...(13) |
|
...(14) |
|
...(15) |
|
...(16) |
|
...(17) |
|
...(18) |
|
...(19) |
|
...(20) |
|
...(21) |
|
...(22) |
|
...(23) |
|
...(24) |
|
...(25) |
|
...(26) |
|
...(27) |
|
...(28) |
|
...(29) |
|
...(30) |
|
...(31) |
|
...(32) |
|
...(33) |
|
...(34) |
|
...(35) |
|
...(36) |
|
...(37) |
|
...(38) |
|
...(39) |
|
...(40) |
|
...(41) |
|
...(42) |
|
...(43) |
|
...(44) |
|
...(45) |
|
...(46) |
|
...(47) |
|
...(48) |
|
...(49) |
|
...(50) |
|
...(51) |
|
...(52) |
|
...(53) |
|
...(54) |
|
...(55) |
|
...(56) |
|
...(57) |
|
...(58) |
|
...(59) |
|
...(60) |
|
...(61) |
|
...(62) |
|
...(63) |
|
...(64) |
|
...(65) |
|
...(66) |
|
...(67) |
|
...(68) |
|
...(69) |
|
...(70) |
|
...(71) |
|
...(72) |
|
...(73) |
|
...(74) |
|
...(75) |
|
...(76) |
|
...(77) |
|
...(78) |
|
...(79) |
|
...(80) |
|
... (81) |
|
...(82) |
|
...(83) |
|
...(84) |
|
...(85) |
|
... (86) |
|
...(87) |
|
...(88) |
|
...(89) |
|
... (90) |
|
... (91) |
|
...(92) |
|
...(93) |
|
...(94) |
|
...(95) |
|
...(96) |
|
...(97) |
|
...(98) |
|
...(99) |
|
...(100) |
திருக்குற்றால மாலை முற்றிற்று
-------
திரிகூடராசப்பக் கவிராயரின்
திருக்குற்றால ஊடல்
காப்பு |
|
|
|
|
|
|
...(1) |
|
|
|
...(2) |
|
|
|
...(3) |
|
|
|
... (4) |
|
|
|
...(5) |
|
|
|
...(6) |
|
|
|
...(7) |
|
|
|
..(8) |
|
|
|
...(9) |
|
|
|
...(10) |
|
|
|
...(11) |
|
|
|
...(12) |
|
|
|
...(13) |
|
|
|
...(14) |
|
|
|
...(15) |
|
|
|
...(16) |
|
|
|
...(17) |
|
|
|
...(18) |
|
|
|
...(19) |
|
|
|
...(20) |
திருக்குற்றால ஊடல் முற்றிற்று
வாழ்த்து
வார்வாழுட் டனித்திகுழல் வாய்மொழியி னும்பிகை வாழி வதுவை சூட்டும்
தார்வாழி திரிகூடத் தார்வாழி குறுமுனிவன் தலைநாட் சொன்ன
பேர்வாழி யரசர்சொங் கோல்வாழி நன்னகரப் பேரா லோங்கும்
ஊர்வாழி குற்றாலச் சிவனடி யார்வாழி நீடுழி வாழி.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய
திருக்குற்றாலப்பதிகம்
|
|
|
...1 |
|
...2 |
|
...3 |
|
|
|
...4 |
|
...5 |
|
...6 |
|
...7 |
|
...8 |
|
...9 |
|
...10 |
|
...11 |
திருக்குற்றாலப்பதிகம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய
திருக்குறும்பலாப்பதிகம்
பண் - காந்தாரம் |
|
|
...1 |
|
...2 |
|
...3 |
|
...4 |
|
...5 |
|
...6 |
|
...7 |
|
...8 |
|
...9 |
|
...10 |
|
...11 |
திருச்சிற்றம்பலம்
This page was first put up on April 11, 2001
Please send your comments and corrections to the Webmaster(s) of this site