muththi nichchayam in romanized script
சிவ சிவ
சீர்மேவும் ஆரூர்ச் சிதம்பர நாதனெனும்
பேர்மேவு ஞானப் பிரகாசன் - தார்மேவு
சேவடிகள் போற்றித் திகழ்முத்தி நிச்சயமொன்
றாவ தென மொழிவேன் யான் - ௧
சந்தான நற்குரவர் தக்கோர் பிறர்சமயம்
நந்தாது தோற்றுவித்த நற்குரவர் - முந்தவே
எந்தமுத்தி சித்தாந்த மென்றார்கள் சைவத்தில்
அந்தமுத்தி நிச்சயிப்போம் யாம் - ௨
அந்நிலையா னும்பிறவு மான்மாநந் தந்திறமாம்
என்னிலையே சித்திக்கு மென்றியம்பில் - உன்னிலைதான்
இல்லதென வேநீ யியம்பு மளவைமுதல்
சொல்லுமது கேளாய் துணிந்து - ௩
ஈசன் றனதுசத்தி யின்பருந்து மீசனால்
ஆசறத்தன் சத்தியிலின் பான்மாவு - நேச
முடனருந்து மென்னின் முத்தி யொவ்வாது பாசம்
விடசு துவாய் நிற்பதுவாமே - ௪
சிற்றின்பம் பேரின்பஞ் சீவகுண மென்றணை நீ
உற்றின் பிரண்டு முணர்ந்திலையோ - சிற்றின்பம்
நாடிற் கருமபல நாதனுருப் பேரின்பம்
நீடிப்ப டிகம்போல் நீ - ௫
பெறுவானும் பேறுநான் பெம்மானுள் ளுண்டேல்
அறிவாயோ வா நந்த மன்றி - யறிவேனான்
ஆநந்தங் காட்டி யகத்திருப்ப னாகிலது
மானந்தான் கண்டறியாய் மற்று - ௬
வேதாக மத்தின் விதித்த முத்தி தாளன்றி
நீதானே யின்பமென்றல் நீதியோ - பேதாய்
பெறுவானீ யா நந்தம் பேறென்றுரைத்த
தறியா திருந்தனை நீயாம் - ௭
உன்னுருவங் கண்டிருப்ப தோகெட்டேன் முத்திசிவன்
தன்னுருவங் கண்டிருக்கத் தக்கதே - முன்னறிஞர்
ஓதுசிவன் தோற்ற மொன்றே காண்பரெனும்
போத மறந்த னையிப் போது - ௮
ஈசனையே காண லெனத்தவமுன் செய்ததெலாம்
மோசமாய் வந்து முடிந்ததே - பாச
விளையகன்ற போதும் விமலனே நின்றாள்
தனையறியா மூடர்க்குத் தான் - ௯
தானன்றி நிற்கவெழுஞ் சச்சிதா நந்தனை நீ
யானென் குணமென் னிரும் பென்னோ - ஊனநீ
ஞானகுணம் பெற்றின்னு நாளானென நவிலும்
ஈனகுணம் போன நிலையே - ௧0
தோன்று பரமாநந்தச் சோதியன்றி நின்னறிவில்
தோன்று சுக முண்டென்றாய் சுத்தப்பொய் - தோன்று இன்பம்
ஈசனுயிர றிவ தீதன்றி வேறுண்டேல்
பாசமலாதே துண்டு பார் - ௧௧
அண்ணலைப்போ லாநந்த மான்மாவிற் குண்டாகில்
எண்ணில் பிறப் பிறப்பை யெய்துமோ - கண்ணிருளை
ஓட்டாதோ ஆதவனுக் கொத்தவொளி யுண்டாகிற்
கேட்டாயோ கேட்டிலையேற் கேள் - ௧௨
ஓரின்ப மில்லா துறுமலங்கள் போக்கியிடும்
பேரின்ப நின்குணமென் பேதாய்கேள் - பேரின்பம்
நின்குணம் போல தோன்றுமது நீயாகையான் இரும்பு
தன்குணமோ தீயியல்பு தான் - ௧௩
ஆசகற்றி நின்னறிவி லாநந்த மாஞ்சிவனைக்
கூசகற்றி யுன்றன் குணமென்று - பேசியிடும்
பேயாவாதிக் கேது பேசிடில் நீ தானந்த
மாயா வா திக்கே மகன் - ௧௪
என்றும் பிரியா விருளருளா னீங்கவின் பாய்த்
துன்று சிவ போகமெனச் சொல்லாமல் - உன்றன்
நலம் போக மென்றுரைத்தாய் நாமறிவோ நீயு
மலம் போக முத்தியென்பவன் - ௧௫
தன் பிரம கீதை வேதாந்தஞ் சிவாகம நூல்
இன்பமுயிர்க் குண்டென் றியம்பிய தேல் - இன்பஞ்சீ
வான்மாவிற் குண்டென் றனறந்ததன்று நின்றபர
மான் மாவிற் குண்டென்ற தாம் - ௧௬
சிவசத்தியைத் திளைப்பர் சீவன்முத்த ரென்னு
மவசத்த மாபா தகமென் - சிவசத்தி
தன் னைப் புணர்ந்ததன்று சாற்றுவமை யுந்தெரியா
தன்னை முலைப் பாலென் றறி - ௧௭
சிவசத்தி யைத்திலைப்ப ராதிமுத்த ரென்னு
மவசத்த மாபா தகமென் - சிவசத்தி
தன்னைக் கண்டாங் கருளால் சச்சிதாநந்த மெனு
மன்னைத் திளைத்துவாழ் வார் - ௧௮
அன்றியுயிர் சற்சித்தே யாநந்த மில்லையதற்
கென்று பல வாற்றானு மெய்து விக்க - நின்ற
முறையாலு மீசனொடு முற்றஞ் சமதை
யறையாமை கூறியது மாம் - ௧௯
ஆநந்த மின்றி யரன்சமதை முத்தியெனிற்
றானந்த வேதாகமஞ் சாற்றா - ஊனம்
படுமே தசகாரியத்திற் பலவுங்
கெடுமே யொன்றா மெனலுங் கேள் - ௨0
சிவசமமெ முத்தியெனிற் சித்தாந்த மன்றாம்
சிவசமய பேதமெனச் செப்பும் - அவைகளிலே
யொன்றென்பர் வேறெனினு மோரேக தேசமதம்
அன்றெனிற் மற்றோற்கும் அது - ௨௧
உள்ள மலநீங்கி யோங்கு சிவாநந்த
வெள்ளத் திளைத்ததுவாய் மேவுதலே - கள்ளவிழ்பூங்
கொத்தார் விரிசடையார் கூறு சிவாகமத்திற்
சித்தாந்த முத்தியெனத் தேறு - ௨௨
முத்தி நிச்சயம் முற்றிற்று