logo

|

Home >

Scripture >

scripture >

English-Translation

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - தமிழ் உரை English Translation Part 1

தமிழ் உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் 
 

Thirugyanasambandhar Thevaram - Second Thirumurai - Part 1

 English Translation and Tamil Explanation

(Copyright Courtasy: Socio Religious Guild, Thirunelveli)

 

திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ  THIRU-P-POONTHARAAI - cennel am kazanip
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை  THIRU-VALAN-CHUZHI - viNTu elAm malara(v) virai      
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்  THIRU-TH-THELI-CH-CHERI - pU alarntana koNTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி  THIRU-VAAN-MIYOOR - karai ulAm kaTalil
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை  THIRU-ANEGA-THANGA-VATHAM - nITal mEvu nimirpun caTai 
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்  THIRU-VAIYAARU - kOTal, kOgkam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை THIRU-VAANJIYAM - vanni konRai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல  THIRU-CH-CHIKKAL - vAn ulAvum mati 
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை  THIRU-MAZHA-PAADI - kaLaiyum, valvinai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்  THIRU-MANGALAK-KUDI - cIrin Ar maNiyum(m)
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை  SEERKAAZHI - nallAnai, nAlmaRaiyOTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்  KACH-CHITH-THIRUVEGAMBAM - maRaiyAnai, mAcu ilAp
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை  THIRU-K-KOZHAMBAM - nIRRAnai, nILcaTaimEl
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்  THIRU-VENNIOOR - caTaiyAnai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை  THIRU-K-KAARAAYIL - nIrAnE, nILcaTaimEl
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பு  THIRU-MANANCH-CHERI - ayil Arum ampu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்  THIRU-VENU-PURAM - nilavum, punalum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையாய் எனுமால்  THIRU-MARUKAL - caTaiyAy enumAl
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா  THIRU-NELLIKKAA - aRattAl uyir kAval
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்  THIRU-ALUNDOOR - tozum ARu vallAr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்  THIRUK-KALIP-PAALAI - punal ATiya puncaTaiyAy
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்  THIRUK-KUDA-VAAYIL - tikazum tirumAloTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா  THIRU-VAA-NAIKKAA - mazai Ar miTaRA
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே  THIRU-NAAKECH-CHURAM - pon Ertaru mEniyanE
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு  THIRUP-PUKALI - ukali AzkaTal Ogku pAruLIr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி  THIRU-NEL-VAAYIL - puTaiyin Ar puLLi
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற  THIRU-INDIRA-NEELA-PARUP-PATHAM - kulavu pAriTam pORRA
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி  THIRUK-KARUVOOR-AANILAI - toNTu elAm malar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்  THIRU-PUKALI - munniya kalaipporuLum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி  THIRUP-PURAM-BAYAM - maRam payam malaintavar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை  THIRUK-KARUP-PARIYALOOR - cuRRamoTu paRRu avai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி  THIRU-VAI-YAARU - tirut tikaz malaicciRumiyOTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர  THIRU-NALLAARU - ETu mali konRai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்  KEELAP-PAZHU-VOOR - muttan, miku mU ilai nalvElan
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்  THIRUTH-THEN-KURANGU-AADUTHURAI - paravak keTum, valvinai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ  THIRU-IRUM-POOLAI - cIr Ar kazalE tozuvIr!
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்  THIRU-MARAIK-KAADU - catura(m) maRaitAn tuticeytu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து  THIRUCH-CHAAYK-KAADU - nittalum niyamam ceytu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்  THIRU-SHETRAK-KOVAI - ArUr, tillai ampalam, vallam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்  THIRU-BRAHMA-PURAM - empirAn, enakku amutam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்  THIRUCH-CHAAYK-KAADU - maN pukAr, vAnpukuvar; manam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்  THIRU-AAKKOOR - akku irunta Aramum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை  THIRUP-PULLIRUKKU-VELOOR - kaL Arnta pUgkonRai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்  THIRU-AAMAATH-THOOR - tunnam pey kOvaNamum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்  THIRUK-KAICH-CHINAM - taiyal Or kURu utaiyAn
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்  THIRU-NAALOOR-MAYAANAM - pAl Urum malaippAmpum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னை - THIRU-MAYILAI - maTTiTTa punnai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானும் - THIRU-VENKDU -  kaN kATTum nutalAnum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி  SEERKAAZHI - paNNin nEr mozi
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை  THIRU-AAMAATH-THOOR - kunRa vArcilai  
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி  THIRUK-KALAR - nIruL Ar kayal vAvi
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்  THIRU-K-KOTTAARU - karunta TagkaNin
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன  THIRU-P-PURAVAAR - PANANG-KAATTOOR - viN amarntana
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்  THIRU-P-PUKALI - uru Arnta melliyal OrpAkam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்  THIRU-TH-THALAICH-CHANGAADU - nalac cagka veNkuzaiyum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்  THIRU-IDAI-MARUTHOOR - pogku nUl mArpinIr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி  THIRU-NALLOOR - peN amarum tirumEni
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்  THIRU-K-KUDA-VAAYIL - kalai vAzum am kaiyIr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்  SEERKAAZHI - nalam koL muttum    
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்  THIRU-P-PAASOOR - cintai iTaiyAr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை  THIRU-VENN-KAADU - uNTAy nanjcai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்  THIRU-MEEYACH-CHOOR - kAyac cevvik kAmaR
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்  THIRU-ARISIRKARAI-P-PUTH-THOOR - minnum caTaimEl
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்  THIRU-MUTHU-KUNDRAM - tEvA! ciRiyOm pizaiyaip poRuppAy 
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்  THIRU-P-PIRAMAPURAM - kaRai aNi vEl ilarpOlum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திரமாவது நீறு  THIRU-AALA-VAAI-THIRU-NEETTRU-P-PATHIGAM - mantiram Avatu nIRu
 

            திருச்சிற்றம்பலம்

            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 137                    பதிக எண்: 1

1. திருப்பூந்தராய்                         1. THIRU-P-POONTHARAAI
பண் : இந்தளம்- வினாஉரை                Pann: Indhalam - Vinaa Urai

            திருத்தல வரலாறு

    இத்திருப்பிரமபுரத் திருத்தலமானது சோழவள நாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள 
14ஆவது தலமாகும். நாகை மாவட்டத்தில் சீகாழி கோட்டத்தின் தலைநகர். மயிலாடுதுறை- சிதம்பரம் 
இருப்புப்பாதையில் இரயில் நிலையம், பேருந்து வசதிகள் உள்ள பெரிய ஊர். பிரமபுரம், வேணுபுரம், 
புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, சீகாழி, கொச்சைவயம், கழுமலம் 
என்ற பன்னிரண்டு திருநாமங்களை உடையது. இவற்றின் பெயர்க்காரணங்களைப் பதிகம் அறுபத்து 
மூன்றில் திருஞானசம்பந்தர் சுவாமிகளே எடுத்து விளக்கி உள்ளார்கள். அது 'பல்பெயர்ப்பத்து' என 
அமைக்கப் பெற்றுள்ளது. திருக்கழுமல மும்மணிக்கோவையுள் 'வசையில் காட்சி' என்னும் செய்யுளில் 
இப்பன்னிரண்டு பெயர்களும் பன்னிருயுகத்தில் வழங்கினவாகப் பட்டினத்தடிகளால் உணர்த்தப் 
பெறுகின்றது. இவையன்றி, சங்கநிதிபுரம் முதலாகப் பதினான்கு பெயர்களும் உள்ளனவாகத் 
தலபுராணம் சொல்லும்.

    புறவாழிக் கடல் பொங்கி எழுந்த பேரூழிக்காலத்தில் இறைவன் அறுபத்துநான்கு கலைகளையும் 
ஆடையாக உடுத்திப் பிரணவத்தை தோணியாகக் கொண்டு அம்மையப்பனாக எழுந்தருளி வரும்போது 
ஊழியிலும் அழியாத இத்தலத்தில் தங்கினார். இங்கே ஒரு மலை உண்டு. இது இறைவன் ரோமச முனிவருக்காகத் 
திருக்கயிலைச் சிகரமொன்றை இந்த இடத்தில் தோற்றுவித்து, தானும் அம்மையுமாக இருந்து காட்சி 
வழங்கும் இடம். இதனை 'இருபது பறவைகள் ஏந்திக் கொண்டிருக்கின்றன'. இங்கே குரு, இலிங்க, சங்கமமாகிய 
மூன்று திருமேனியையும் வழிபடலாம். குருமூர்த்தம் தோணியப்பர்; இலிங்க மூர்த்தம் பிரமபுரீசர்; 
சங்கம மூர்த்தம் சட்டைநாதர். இதுவே திருஞானசம்பந்தப் பெருமானின் அவதார ஸ்தலமாகும்.

    சுவாமி பிரமபுரீசர், அம்மை திருநிலைநாயகி. சுவாமி-அம்மன் கோயில்களுக்கு இடையில் 
திருஞானசம்பந்தர் ஆலயம் இருப்பது சோமாஸ்கந்தர் நிலையை நினைவூட்டுகிறது. திருத்தோணிச் 
சிகரத்துள்ள இறைவர் பெரியநாயகர்; தோணியப்பர் எனவும் வழங்கப் பெறுவர்.

இறைவி பெரியநாயகி; திருஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிவஞானப்பால் அளித்தவர் இவரே.

    பிரமதீர்த்தம், காளிதீர்த்தம், கழுமலநதி, விநாயகநதி, புறவநதி முதலிய இருபத்திரண்டு 
தீர்த்தங்கள் உள்ளன.

    முருகன், காளி, பிரமன், இந்திரன் முதலியோர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்,
 மாணிக்கவாசகர், பட்டினத்து அடிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், அருணகிரிநாதர்
 முதலியோர் போற்றியுள்ளனர். கணநாத நாயனார் அவதரித்த தலம். திருக்கயிலாய பரம்பரையில் 
வந்தருளிய திருநமச்சிவாயர், காழிக்கங்கை மெய்கண்டார், சிற்றம்பலநாடிகள் முதலியோர் 
வாழ்ந்த தலம்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அர்த்தயாமத்தில் ஸ்ரீசட்டைநாதருக்கு விசேஷ வழிபாடு 
நடைபெறும். சித்திரை மாதம் இறைவன் இறைவியர்க்குப் பெருவிழா நடைபெறும். அதில் இரண்டாம் 
திருநாள் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை அளித்தருளிய திருமுலைப்பால் திருவிழா. 
இவ்விழாக்களில் பெரும்பகுதி திருஞானசம்பந்தர் ஐதீகத்தை ஒட்டியனவேயாம்.

பதிக வரலாறு

    இத்திருப்பதிகம் சீகாழிப் பதிகங்களுள் ஒன்று. அவற்றுள் சில பதிகங்களுக்கே வரலாறு காணப்படுகின்றது.

1470.     செந்நெலங் கழனிப்பழனத் தயலேசெழும் 
    புன்னைவெண் கிழியிற்பவ ளம்புரைபூந்தராய் 
    துன்னிநல் லிமையோர்முடிதேய் கழலீர்சொலீர்
    பின்னுசெஞ் சடையிற்பிறைபாம் புடன்வைத்ததே.        1

    செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும் 
    புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் 
    துன்னி, நல் இமையோர் முடி தேய் கழலீர்! சொலீர் 
    பின்னுசெஞ்சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே?

    cennel am kazanip pazanattu ayalE cezum 
    punnai veN kiziyil pavaLam purai pUntarAy 
    tunni, nal imaiyOr muTi tEy kazalIr! colIr- 
    pinnucenjca Taiyil piRai pAmpu uTan vaittatE?

பொருள்:     திருப்பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் செந்நெல் விளையும் அழகிய வயல்கள் எங்கும் 
உள்ளன. வயல்களின் அருகே புன்னை மரச் சோலைகள் உள்ளன. அம்மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள், 
வெண்மையான துணியில் பவளங்கள் பரப்பினாற்போலக் காட்சி அளிக்கின்றன. இவ்வாறு விளங்கும் 
திருப்பூந்தராய்ப் பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் திருவடிகளை, நல்ல தேவர்கள் நெருங்கி 
வந்து தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்பெறும் திருவடிகளை 
உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம்பிறையையும், அதற்குப் பகையாக உள்ள
 பாம்பையும் சேர்த்து வைத்துள்ளது ஏனோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இத்திருப்பதிகம் முதலாக நான்கு பதிகத்தில், 
சிவபெருமானை முன்னிலையிற் பெற்று, வினாவுதலும், விடை கூறியருள வேண்டுதலும் அமையப் 
பாடியிருத்தல்பற்றி, இவற்றை, 'வினாவுரை' என்றனர். இத்தலைப்புடைய பிறமூன்றும் காண்க. 
இதன் ஒவ்வொரு திருப்பாடலிலும் வெவ்வேறு பொருளைக் குறித்து வினாவினார். முதல் வினா இறைவன்
திருமுடிச் சார்புடையது. ஈற்றுவினா, திருவடிச் சார்புடையது. இடையிலே எருதேற்றம், மாதுபாகம், 
காமதகனம், கங்கையடக்கம், குழையும் தோடும் குலவும் முகம், இராவணனுக்கு அருளிய ஆக்கம் 
என்பவை வினாவிற்குரிய பொருளாயுள்ளன. மூன்றாம் அடிகளிலுள்ள விளிகளால் திருவடிப் பெருமையும், 
அமலமும் (யானையுரித்த வரலாறும்), விருப்பு வெறுப்பில்லாத வித்தகமும் (பிறையும் பாம்பும் சூடிய வரலாறும்),
உயிர்களைத் தாங்கியுதவும் அருளுடைமையும் (மானேந்தியதால் விளங்கும் பசுபதித்துவமும்), திருவெண்ணீற்றுத் 
திருமேனிப் பொலிவும், மால்விடையூரும் மாட்சியும், மறை முதலாகும் இறைமையும், அடியாரைக் காக்கும் 
அடியும் (காரணமும்) குறிக்கப்பட்டன. 

    இவ்வாறு பதிகந்தோறும் உய்த்துணர்ந்து போற்றிவரின், சிவபிரான் திருவருள் எளிதின் எய்தும் 
திருமுறையைப் பாராயணம் புரிவோர் அதனால் பெறும் பயன் அவரவர் அநுபவத்தால் அன்றி அறிய ஒண்ணாது. 
பாக்கள் வெளிப்படையாகத் தோன்றலாம். கருத்து அருள்வெளியைக் கவர்ந்தது. மருளுலகம் இவ்வண்மையை 
உணராது, வேதத்தின் இயல்பே இதன் இயல்பு.

    முதற்பத்துத் திருப்பாடல்களுள்ளும் 'சொல்வீர்' என்று விடையிறுத்தருள வேண்டுவதுணர்க. 
சடையில் பிறையும் பாம்பும் ஒருசேர வைத்ததற்குக் காரணம் சொல்ல வேண்டுகின்றார்; சந்திரனைப் பாம்பு
விழுங்குவதாகக் கொள்ளும் ஐதிகத்தைக் கருத்திற்கொண்டு, பகைப்பொருள்கள் இரண்டும் ஓரிடத்தில் 
 இருப்பது குற்றம் என்பார்க்கு, 'வேண்டுதல் வேண்டாமை இல்லான்' ஆகிய சிவபிரான் சடையில் பகை
நீங்கி உறவுகொள்ளும் நிலையை அவ்விரண்டும் அடைந்துள்ளன என்றார். பிறையைச்சூடிய வரலாறு
சிவாபராதம் புரிந்தாரும் அதனை உணர்ந்து அந்த இறைவனை வணங்குவராயின், அவர்க்குத் திருவருள்
கிடைப்பது உறுதி என்னும் உண்மையை உணர்த்துவது. ஐந்தலைப் பாம்பணிந்தது. 'பிறவி ஐவாய் அரவம்
 பொரும் பெருமான்' (திருவாசகம் 139) என்ற கருத்தினது. "தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறியா
 மதியான் என அமைத்தவாறே" (பட்டினத்தார் ஒருபா ஒருபஃது 6).

    "சோழ வளநாடு சோறுடைத்து" இதிலுள்ள செந்நெல் அம்கழனிப்பழனம் உடைமை. சீகாழிக்கும் 
உரித்தாயிற்று. கிழி- துணி. கிழி (துணியும் அறுவையும்) காரணப்பெயர். புரை-  ஒத்த. துன்னி- நெருங்கி. 
துன்னித்தோய்கழல் என்க. பழனத்தின் அயலிடங்களில் புன்னைப் பூக்கள் விழுந்துகிடக்கும் தோற்றம் 
வெள்ளைத் துணியில் பவளம் கிடக்கும் காட்சியை ஒத்திருந்தது என்க. 'புன்னை பொன்தாது உதிர்மல்கும் 
அந்தண்புகலி' (தி. 3. ப. 7. பா. 9) என்றதால் அதன் பூக்கள் செம்பவளம் போல்வன ஆதல் அறியப்படும். 
பாண்பு என்பது பாம்பு என்று திரிந்தது. பாண் - பாட்டு. பாட்டைக் கேட்கும் இயல்புடையது பாண்பு. 
இதில், பிறையும் பாம்பும் சடையில் ஒருங்கு வைத்தவற்றை வினாவினார்.

    Thirup-poontharai is one of the twelve names of Sirkazhi and Lord Civan is 
seated in the Temple here. This city is surrounded by fertile red paddy fields. Along
with these fields thick groves of mastwood trees (Calophyllum) are grown in plenty.
White flowers with coral coloured top petals fall from the trees in the grove. This
scenery looks like corals strewn over a broad white sheet in the entire grove. In such a 
rich place, oh Lord Civa! You are seated in the big temple; where the blessed devas
arrive, bow their heads with their hair lapping on the ground and offer their worship. 
We wonder why You should adorn Your head both with the young crescent moon and its 
enemy the snake. You may tell me.

1471.     எற்றுதெண் டிரையேறிய சங்கினொடிப்பிகள் 
    பொற்றிகழ் கமலப்பழனம் புகுபூந்தராய்ச் 
    சுற்றிநல்லி மையோர்தொழு பொற்கழலீர் சொலீர் 
    பெற்றமேறு தல்பெற்றிமை யோபெருமானிரே.        2

    எற்று தெண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள் 
    பொன்-திகழ் கமலப் பழனம் புகு பூந்தராய்ச் 
    சுற்றி, நல் இமையோர் தொழு பொன்கழலீர்! சொலீர் 
    பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ? - பெருமானிரே!

    eRRu teN tirai ERiya cagkinoTu ippikaL                                
    pon-tikaz kamalap pazanam puku pUntarAyc 
    cuRRi, nal imaiyOr tozu ponkazalIr! colIr- 
    peRRam ERutal peRRimaiyO?--perumAnirE!

பொருள்:     பூந்தராய் என்னும் சீகாழிப் பதியின்கண் உள்ள தெளிந்த கடலில் அலைகள் மாறி மாறி 
வந்து கரையில் மோதுகின்றன. அந்த அலைகளில் ஏறிவந்த சங்குகளும் சிப்பிகளும் பொன்போல் விளங்கும் 
தாமரை மலர்கள் மலர்ந்த வயல்களில் வந்து புகுகின்றன. நல்ல தேவர்கள் சூழ்ந்து தொழும் அழகிய 
திருவடிகளை உடைய சீகாழிப்பதி இறைவரே! அயிராவதம் முதலிய ஊர்திகள் இருக்க, விடைஏறி வருதல் 
உமக்கு ஏற்றத் தன்மைத்தாகுமோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     எற்று - எறிந்த. திரை - அலை. இப்பி - சங்கினத்துள் முதலாவது. இடம்புரியும் வலம்புரியும் 
சலஞ்சலமும் பாஞ்ச சன்னியமும் ஆகிய சங்கினம் நான்கும் முறையே இப்பி முதல் சலஞ்சல முடியக்கூறும் 
நான்காலும் ஆயிரம் ஆயிரமாகச் சூழப்பெற்ற பெருமையின. (நிகண்டு, தொகுதி 3 பா. 73) பெற்றம்- எருது. 
பெற்றிமை- தன்மை,பேறு,உயர்வுடையது. சிறந்த பாக்கியம் என்னுங் கருத்தில் வந்தது. பெருமகன் என்பது 
பெருமான் என்று மருவிற்று. மகன் - தேவன், (மகள் - தேவி, திருமகள் - நாமகள்) பெருமாளிர்- விளி, 
ஏகாரம் ஈற்றசை, சீகாழிக் கழனியிற் சங்கும் இப்பியும் பொன்போல் விளங்கும் தாமரைகளும் மிக்குள்ளன. 
பெற்றமேறுதல் - 'பசு வேறும் பரமன்' விடையேறுதல்; பசுபதி என்பதைக் குறித்தது. இதில் விடை (பசு) ஏறும் 
உண்மையை வினாவினார்.

    The city of Poontharaai is enriched with lotus ponds of golden coloured flowers 
lending to the place a golden appearance. The seashore is near the city. There, the conches and 
oysters are widely mixed with each other and reach the banks and thereafter roll into the 
lotus ponds. In such a glorious city, the blessed devas (angels) flock together and offer 
worship to Your holy feet bearing golden anklets. Now tell me, You the great Lord! is it fit 
for You to mount the bull to go round the world, though You have for Your comforts, the 
elephant of Devendra (Iyravadham) and many more vehicles at Your disposal?

1472.     சங்குசெம் பவளத்திரள் முத்தவை தாங்கொடு
    பொங்குதெண் டிரைவந்தலைக் கும்புனற்பூந்தராய்த் 
    துங்கமால் களிற்றின்னுரி போர்த்து கந்தீர்சொலீர் 
    மங்கைபங் கமுமங்கத் தொடொன்றிய மாண்பதே.        3

    சங்கு செம்பவளத்திரள் முத்து அவைதாம்கொடு 
    பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய், 
    துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர் - 
    மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே?

    cagku cempavaLattiraL muttu avaitAm koTu 
    pogku teNtirai vantu alaikkum punal pUntarAy, 
    tugka mAlkaLiRRin uri pOrttu ukantIr! colIr- 
    magkai pagkamum agkattoTu onRiya mANpu atE?

பொருள்:     நீர்வளம் மிகுந்த பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் உள்ள தெளிந்த கடலில் 
பொங்கி வரும் அலைகள் சங்கு, செம்பவளம், முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து கரைகளில் 
வீசுகின்றன. உயரிய பெரிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து மகிழ்ந்து உறையும் 
சிவபெருமானே! உமது திருமேனியின் இடப்பாகமாக உமையம்மையை ஓருடம்பில் ஒன்றுவித்துள்ள 
மாண்பு யாதோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     பொங்குதல் - உயர்தல், மிகுதல், புனல்-  நீர், துங்கம் - உயர்ச்சி. பவளத்தின் 
அடைமொழியால் மற்றையிரண்டின் நிறம் வெளிப்படை. திரள்- திரட்சி; தொகுதியுமாம். 
களிறு - மதக்களிப்புடையது (யானையின் ஆண்). மால்-  பெருமை, மயக்கமுமாம். உரி- தோல், உகந்தீர்-        
 உயர்ந்தவரே, பங்கம்-கூறு (பங்கம் +அம்). அங்கம் -உறுப்பு, இங்குத் திருமேனியைக் கொள்க;    ஒன்றிய மாண்பு - 
 அர்த்தநாரீச்சுரவடிவின் சிறப்பு. - , யானையை உரித்தது ஆணவமல நாசம் என்பர்,  மங்கை பங்கு; 
போகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் பற்றியும் உயிர்க்கு இச்சாஞானக் கிரியா
 பலத்தை மிக விளைத்தல் பற்றியும் ஆயிற்று. ஆற்றலுக்கு அதுவே ஏது. களிற்றையுரித்த போது தேவியார்
 அஞ்சியதாகச் சொல்வது. ஞானமும் அஞ்சத் தக்க அத்துணைக் கொடியது இருண்மலம் என்பதுணர்த்த. 
 இதில் மெய்ப்பாதியில் மாதிருக்கும் உண்மையை வினாவினார்.

    In the city of Poontharaai the surging water of the sea flings conch shells, corals
and beautiful pearls on the shore. Lord Civa! You are seated in the temple of the city
gracefully. You were pleased to wear the skin of the great male elephant removing its 
fleece after killing it. Despite this terrific deed and decoration You have accepted the
tender body of Uma Devi on the left side of Your body. These two incongruities may be
explained to me.

1473.     சேமவன் மதில்பொன் னணிமாளிகை சேணுயர் 
    பூமணங் கமழும்பொழில் சூழ்தருபூந்தராய்ச் 
    சோமனும் மரவுந்தொடர் செஞ்சடையீர்சொலீர் 
    காமன் வெண்பொடி யாகக்கடைக் கண்சிவந்ததே.        4

    சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர் 
    பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய், 
    சோமனும் அரவும் தொடர் செஞ்சடையீர்! சொலீர் 
    காமன் வெண்பொடிஆகக் கடைக்கண் சிவந்ததே?

    cEma val matil pon aNi mALikai cEN uyar 
    pU maNam kamazum pozil cUztaru pUntarAy, 
    cOmanum aravum to Tar cenjca TaiyIr! colIr- 
    kAman veN poTi Akak kaTaikkaN civantatE?

பொருள்:     பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும், 
பொன்னால் அழகுறுத்தப் பெற்ற அழகிய மாளிகைகளும், மிக உயர்ந்து மலர் மணங்கமழும் 
சோலைகளும் சூழ்ந்துள்ளன. இத்துணை வளமுள்ள சீகாழிப்பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! 
உமது திருமுடியின் செஞ்சடையில் சந்திரனும், பாம்பும் தங்கியுள்ளன. உயிர்கட்கு போகத்தின்மேல் 
அவாவினை விளைவிக்கும் மன்மதன் வெண்பொடி ஆகுமாறு அவனைக் கடைக்கண் சிவந்து 
அழித்தது ஏனோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     சேமம் -காவல். சேண் உயர்தல்- விண்ணில் மிக வோங்குதல். பொழில்- சோலை. 
சோமன்- பிறை. அரவு- பாம்பு. காமன் - மன்மதன். வெண்பொடி-(எரித்த) சாம்பல். சிவத்தல்- கோபக்குறிப்பு.
 ''கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்" (தொல், சொல், உரிச்சொல் 76). மன்மத தகனம், யோகியாய், 
யோகமூர்த்தி உதவுதற் பொருட்டு நிகழ்கின்ற இயற்கை (சித்தியார் 70) இதில் காமனை எரித்தவாற்றை 
வினாவினார்.

    Poontharaai is surrounded by strong ramparts all around. Also the palaces and 
mansions are all gold plated. In addition, the city is enriched by the gardens of fragrant
flowers in the trees which rise to touch the high sky. Oh Lord Civa! in Your matted hair of 
red beauty the young moon and the snake reside and follow You for salvation. You know well 
that kaaman or cupid (the Roman god of Love, the son of Roman goddess Venus and Greek equivalent 
god Eros) is the god to be invoked for marital happiness of human beings. In spite of this, 
You got angry with him for his petty fault and winked Your lotus eye for a second. In a moment 
he was burnt into white ashes. Oh Lord!  please tell us why You have destroyed him into ashes.

1474.     பள்ளமீனி ரைதேர்ந்துழலும் பகுவாயன 
    புள்ளுநா டொறுஞ்சேர் பொழில்சூழ் தருபூந்தராய்த் 
    துள்ளு மான்மறியேந் தியசெங்கை யினீர்சொலீர் 
    வெள்ள நீரொருசெஞ் சடைவைத்த வியப்பதே.        5

    பள்ளம் மீன்இரை தேர்ந்து உழலும் பகுவாயன 
    புள்ளும் நாள்தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய், 
    துள்ளும் மான்மறி ஏந்திய செங்கையினீர்! சொலீர் 
    வெள்ளநீர் ஒரு செஞ்சடை வைத்த வியப்பு அதே?

    paLLam mIn irai tErntu uzalum pakuvAyana 
    puLLum nAltoRum cEr pozil cUztaru pUntarAy, 
    tuLLum mAnmaRi Entiya cegkaiyinIr! colIr- 
    veLLa nIr oru cenjca Tai vaitta viyappu atE?

பொருள்:     சோலைகளால் சூழப்பட்ட பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் நீர்நிலைகள் 
வளப்பமாக உள்ளன.  அவைகளில் இருக்கும் மீன்களை இரையாகக் கொள்ளுவதற்கு பிளந்த வாயை
 உடைய நாரைப் பறவைகள் நாள்தோறும் பல இடங்களிலிருந்து வந்து  தங்குகின்றன. இவ்வளவு 
செழிப்பான சீகாழிப்பதியில் எழுந்தருள்புரிகின்ற சிவபெருமானே! துள்ளுகின்ற மான்கன்றை 
செங்கையில் உடையவராய் விளங்குகின்றீர். பெருகிவந்த கங்கைநதியின் வெள்ளத்தைச் சிவந்த 
உமது சடையில் தடுத்து நிறுத்தித் தாங்கிய வியத்தகு செயலுக்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     நீர்ப்பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து அலையும் நாரைகள்
நாள்தொறும் சோலையில் தங்கும் வளமுடையது சீகாழி. நாரை பகுந்த (பிளந்த) வாய் உடைமையால்
பகுவாயன புள்ளு என்றார். 'வெண் குருகும் பகுவாயன நாரையும் திரைவாய் இரைதேரும் வலஞ்சுழி' 
(தி.2. ப.2 பா.2) என்றது காண்க. உணவும் இரையும் ஒன்றல்ல என்பதை "இழிவறிந்துண்பான்கண்
 இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்" (குறள் 946). என்றதனால் அறிக. செஞ்சடைமேல்
 நீர்ப்பெருக்கை வைத்த வியப்பைச் சொல்வீர் என்று துள்ளுகின்ற மான்கன்றை ஏந்திய செங்கையை
 உடைய சிவபெருமானை நோக்கி வேண்டுகின்றார். காட்டில் இருக்கத்தக்க மானைக் கையிலும் கையில்
இருக்கத்தக்க (கமண்டல) நீரைச் சடைக் காட்டிலும் ஏந்தியது வியப்பு. இதில் கங்கையைத் தாங்கிய 
ஆற்றலை வினாவினார்.

    All sides of Poontharaai city are surrounded by beautiful gardens. The split-billed 
herons (storks, water birds) throng in this garden of Poontharaai from all four sides everyday. 
They prey on fish in brooks nearby for their food. In such a flourishing city Lord Civa, 
You are seated in the great temple holding in Your fair left hand a leaping deer. Oh Lord!
Why have You arrested the Ganges river of gushing water on Your reddish matted hair! You 
stopped the flow of the river and kept it on Your head. What is the reason for this great 
action? Please tell me!

1475.     மாதிலங் கியமங்கை யராடமருங்கெலாம்
    போதிலங் கமலம்மது வார்புனற் பூந்தராய்ச் 
    சோதியஞ் சுடர்மேனி வெண்ணீ றணிவீர்சொலீர் 
    காதிலங் குழைசங்க வெண்தோடு டன்வைத்ததே.        6

    மாது இலங்கிய மங்கையர் ஆட,மருங்குஎலாம் 
    போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய், 
    சோதிஅம்சுடர்மேனி வெண்நீறு அணிவீர்! சொலீர் 
    காதில் அம் குழை சங்கவெண்தோடு உடன் வைத்ததே?

    mAtu ilagkiya magkaiyar ATa, marugku elAm 
    pOtil am kamalam matu vAr punal pUntarAy, 
    cOti am cuTar mEni veN nIRu aNivIr! colIr- 
    kAtil am kuzai cagka veNtOTu uTan vaittatE?

பொருள்:     நீர்வளம் மிக்க பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் உள்ள அழகிய பெண்கள் ஆங்காங்கே 
நடனம் ஆடுகின்றார்கள். இந்த ஊரின் மருங்கெல்லாம் பூத்துள்ள அழகிய தாமரை மலர்கள் தம்மிடம் 
நிறைந்துள்ள தேனை ஒழுக விடுகின்றன. இத்துணை செழிப்பான சீகாழிப்பதியில் எழுந்தருளிய 
சிவபெருமானே! உமது ஒளிமிக்க அழகிய திருமேனியில் வெண்ணீறு அணிந்துள்ளீர். உமது காதுகள் 
இரண்டனுள் ஒன்றில் குழையையும், மற்றொரு காதில் சங்குத் தோட்டையும் அணிந்துள்ளீர். இவ்வாறு 
மாறுபட்ட அணிகலன்கள் அணிவதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை:     மாது - அழகு. இலங்குதல் - விளங்குதல். மருங்கு- பக்கம்.   போது- மலரும் பருவத்து அரும்பு. 
கமலம் - தாமரை, மது -கள், குழையும் தோடும் காதணிகள். சீகாழியில் அழகிய மங்கையர் ஆடுதற்குப் பரிசாகத் 
தாமரை மலர்கள் தேனை ஒழுக்குகின்றன என்று நீர்நிலவளம் உணர்த்தப்பட்டது. செம்மேனியில் வெண்ணீற்றை 
அணிவீர் என்று அழைத்து, திருக்காதில் குழையும் தோடும் உடன் வைத்த  புதுமையை வினாவினார். 'தோடுடையான் 
குழையுடையான்' (தி.1 ப.61. பா.8) 'தோலும் துகிலும் குழையும்  சுருள்தோடும்.... உடைத்தொன்மைக் கோலம்' என்பது 
திருவாசகம் (232).

    In the city of Poontharaai beautiful damsels dance all over the places. The city is
enriched by plenty of lotus ponds. These flowers pour their honey into the water of the pond, 
which is already sweet. Oh Lord Civa! Your divine body, glowing already is adorned with sacred 
white powder. Oh Lord! please tell us why You have adorned one of Your ears with thodu (conch)         
and the other with beautifully carved ear jewel.

7.    ஏழாவது பாட்டு கிடைக்கப் பெறவில்லை.

1476.     வருக்கமார் தருவான் கடுவன்னொடு மந்திகள் 
    தருக்கொள் சோலைதருங் கனிமாந்திய பூந்தராய்த் 
    துரக்குமால் விடைமேல் வருவீரடிகேள் சொலீர் 
    அரக்கனாற் றலழித்தரு ளாக்கியஆக்கமே.        8

    வருக்கம் ஆர்தரு வான் கடுவ(ன்)னொடு மந்திகள் 
    தருக் கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய், 
    துரக்கும் மால்விடைமேல் வருவீர்! அடிகேள்! சொலீர் - 
    அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே?

    varukkam Artaru vAn kaTuva(n)noTu mantikaL
    taruk koL cOlai tarum kani mAntiya pUntarAy,
    turakkum mAlviTaimEl varuvIr! aTikEL! colIr-
    arakkan ARRal azittu aruL Akkiya AkkamE?

பொருள்:     பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் பழங்கள் தரும் மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள் 
பல உள்ளன. அச்சோலைகளில் ஆண் குரங்குகளும், பெண் குரங்குகளும் கூடி மரங்களில் உள்ள கனிகளை 
வயிறார உண்டு மகிழ்ந்து வாழ்கின்றன. இப்பதியில் எழுந்தருளி இருக்கின்ற சிவபெருமானே! திருமால் 
உமக்கு வாகனமாக வரவேண்டுமென்று விரும்பி காளை உருவம் தாங்கிவர, அதன்மேல் அமர்ந்து காட்சி தரும் 
அடிகளே !  இராவணனை உமது கயிலாய மலையின்கீழ் அடர்த்தி அவன் தருக்கினை அழித்தீர். இடையூறு செய்த 
அவனுக்கு உடனே அருளும் வழங்கினீர். இந்த ஆக்கச் செயலுக்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     வருக்கம் - இனம். கடுவன் - ஆண் குரங்கு. மந்தி - பெண் குரங்கு. தரு - மரம். மாந்திய - தின்ற. 
துரக்கும் - துரத்தும் (பிறவினை) துரந்த, துரந்து எனல் தன்வினையாட்சி. அருகிய வழக்கு. வருவீராகிய அடிகேள் 
என்று விளித்து. இராவணனது ஆற்றலை அழித்து அருள்கொடுத்த ஆக்கத்தைப் பற்றி இதில் வினாவினார்.

    Poontharaai city is surrounded by thick groves full of fruit yielding tall trees. 
Male and female monkeys in this area join in groups and enter into the groves. Here they 
select the sweet fruits and eat well to their hearts' content and play with each  other. 
In this Poontharaai, Lord Civan appears riding on the bull of Thirumaal (At the request of 
Thirumaal, Lord Civa gave permission to be transformed into a Bull and to be his vehicle). 
Oh my Lord Civa! My Supreme! tell me why You punished the all powerful demon king of Sri Lanka; 
but immediately blessed him also with divine grace.

1477.     வரிகொள்செங் கயல்பாய்புனல் சூழ்ந்தமருங்கெலாம் 
    புரிசைநீடுயர் மாடநிலா வியபூந்தராய்ச் 
    சுருதிபாடி யபாணியல்தூ மொழியீர்சொலீர் 
    கரியமா லயன் நேடியுமைக் கண்டிலாமையே.        9

    வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் 
    புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய், 
    சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர்! சொலீர் 
    கரிய மால் அயன் நேடி உமைக் கண்டிலாமையே?

    vari koL cegkayal pAy punal cUznta marugku elAm 
    puricai nITu uyar mATam nilAviya pUntarAy, 
    curuti pATiya pAN iyal tU moziyIr! colIr- 
    kariya mAl, ayan, nETi umaik kaNTilAmaiyE?

பொருள்:     பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் மதில்களால் சூழப்பட்ட நீண்டு உயர்ந்த மாட 
மாளிகைகள் எங்கும் விளங்குகின்றன. அதன் பக்கங்களில் எல்லாம் நீர்நிலைகள் சூழ்ந்துள்ளன. 
இந்த நீர்நிலைகளில் வரிகளைக் கொண்டுள்ள செவ்விய கயல்மீன்கள் பாய்ந்து துள்ளி விளையாடிக் 
கொண்டிருக்கின்றன. இப்பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நீர் வேதங்களைப் பாடுவதும், 
இசைப்பாடல் போன்ற இனிய மொழிகளைப் பேசுவதுமாக விளங்குகின்றீர். கரிய திருமாலும், பிரமனும் உம்மைத்
தேடியும் காண இயலாத அனற்பிழம்பாகத் தோன்றினீர். இதற்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக. 

குறிப்புரை:     சீகாழியில் உள்ள  மாட மாளிகைகளின் உயர்வும் நீள்வும், புரிசையும், நீர்வளமும்  
அந்நீரிற்பாயும் மீன்களின் செழுமையும் குறிக்கப்பட்டன. வேதாகமங்கள் சிவபெருமான் திருவாக்காதலின்,
சுருதிபாடிய பாண் இயல் தூமொழியீர் என்று விளித்தார். இதில், அரியும் அயனும் அடிமுடி தேடிக்
காணாமையை வினாவினார். பாடிய பாண் (பாட்டு) இயலும் மொழி தூமொழி. சுருதி - கேள்வி,
எழுதாக்கிளவியாதலின் கேள்வியால் தொன்று தொட்டுணர நின்றன. நேடி - தேடி.

    In the city of Poontharaai ramparts are so high as to touch the sky. All around
the city brooks run, always with profuse water. In these brooks streaked red carp fish
leap and move all around for their prey. Oh Lord Civa! You are the Originator and the
Author of all the Vedas and aagamaas that are meant for the benefit of human race. 
Oh Lord Civa! can You enlighten me how Lord Vishnu and Brahma could not trace Your
holy feet and supreme head when You appeared as an infinite fiery column, even after
tireless search for millions of years?

1478.     வண்டலங் கழனிம்மடை வாளைகள் பாய்புனற் 
    புண்டரீக மலர்ந்துமதுத் தருபூந்தராய்த் 
    தொண்டர் வந்தடிபோற்றி செய்தொல் கழலீர்சொலீர் 
    குண்டர் சாக்கியர் கூறியதாங் குறியின்மையே.        10

    வண்டல் அம் கழனி(ம்) மடை வாளைகள் பாய் புனல் 
    புண்டரீகம் மலர்ந்து மதுத் தரு பூந்தராய், 
    தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல்கழலீர்! சொலீர் 
    குண்டர்சாக்கியர் கூறியது ஆம் குறிஇன்மையே!

    vaNTal am kazani(m) maTai vALaikaL pAy punal 
    puNTarIkam malarntu matut taru pUntarAy, 
    toNTar vantu aTi pORRicey tol kazalIr! colIr- 
    kuNTar cAkkiyar kURiyatu Am kuRi inmaiyE?

பொருள்:     பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் எங்கும் வயல்கள் சூழ்ந்துள்ளன. அதில் வளம்
 மிக்க வண்டல் மண் மிகுதியாக உள்ளன. வயல்களின் மடைகளில் வாளைமீன்கள் பாய்ந்து 
கொண்டிருக்கின்றன. எல்லா மருங்கிலும் நீர்நிலைகள் மிகுதியாக உள்ளன. இங்கு தாமரை
மலர்கள் மலர்ந்து தேனைத் தந்து கொண்டிருக்கின்றன. இத்துணை வளம் மிக்க சீகாழிப்பதியில் 
எழுந்தருளிய சிவபெருமானே! உமது கழல் அணியப் பெற்ற பழமையான திருவடிகளில் தொண்டர்கள் 
வந்து வணங்கும் வண்ணம் உள்ளார்கள். சமணர்களும், சாக்கியர்களும் (புத்த சமயத்தவர்களும்) உம்மைக் 
கூறும் பொருளற்ற பழிச் சொல்லுக்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     வண்டல் - வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப்பட்ட உரம்மிக்க மணல். மடை - நீர்மடை. 
புண்டரிகம்- தாமரை. தொல்கழல் - திருவடியின் தொன்மை. ஆதியும் மத்தியும் அந்தமும் இல்லாதது. கழல் என்பது 
எருதினது கொம்பு போல் அமைந்தது. பகைவர் உடம்பில் ஊறுபடுத்த, வலக்காலில் தரிக்கப்படுவது. "தாள், 
களங்கொளக் கழல்பறைந்தன கொலல் லேற்றின் மருப்புப் போன்றன" (புறநானூறு 4.3-4) என்னும் அடிகளால் அறிக. 
தேய்ந்த பின் மழமழவென்றாகி எருதின் கொம்பை ஒத்தது. வடிவில் முழுதும் ஒப்பது. குண்டர் - சமணர். 
குறியின்மை - பிழையாத குறி இல்லாமை (தி.2. ப.82.பா.10). இதில் புறப் புறச்சமயத்தார் செய்யும் நிந்தையின் 
பொருளின்மையை வினாவினார்.

    The city of Poontharaai is encircled by paddy fields of rich sediment soil. Through the water 
outlet, the excess water in the field flows out of the fields carrying the Trichiurus lepturus fish 
(Vaalai fish) that reach the lotus ponds, which now overflow with the honey dripping in them. 
The water in the lotus tank, naturally sweet, now becomes sweeter. In such a plentiful city of 
Sirkazhi, also called Poontharaai, devotees in large groups gather in the temple and worship the 
ancient holy feet of Lord Civa. Oh Lord Civa! Tell me how You are not affected by the harsh words of 
the denying sects - Jains and Buddhists.

1479.     மகரவார் கடல்வந் தணவும்மணற் கானல்வாய்ப் 
    புகலிஞான சம்பந்தனெழில் மிகுபூந்தராய்ப் 
    பகவனாரைப் பரவுசொன் மாலைபத்தும் வல்லார் 
    அகல்வர் தீவினைநல் வினையோடுடனாவரே.        11

    மகர வார்கடல் வந்து அணவும் மணல் கானல்வாய்ப் 
    புகலி ஞானசம்பந்தன், எழில் மிகு பூந்தராய்ப் 
    பகவனாரைப் பரவு சொல்மாலைபத்தும் வல்லார் 
    அகல்வர், தீவினை; நல்வினையோடு உடன்ஆவரே.

    makara vArkaTal vantu aNavum maNal kAnalvAyp 
    pukali njAnacampantan, ezil miku pUntarAyp 
    pakavanAraip paravu colmAlaipattum vallAr 
    akalvar, tIvinai, nalvinaiyOTu uTan AvarE.

பொருள்:     வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெற விரும்புவீராயின், விரதங்களை மேற்கொண்டு 
உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருப்பூந்தராயை அடைந்து ஞானசம்பந்தர் ஓதியருளிய 
செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே 
ஞானத்தைத் தருவதாகும்.

குறிப்புரை:     மகரம் - சுறாமீன். அணவும் - பொருந்தும். கானல்-  கடற்கரைச்சோலை. புகலி - சீகாழி.
எல்லாவுயிர்க்கும் புகலிடமானது. பகவனார்- திரு, ஞானம் முதலிய ஆறு குணங்களும் உடையவர்,
பரவுதல் -  வாழ்த்தல். தீவினையை அகல்வர்-  நல்வினையை அகலாது உடனாவார். ஓடு உடன் இரண்டும் 
இணைந்து வந்தவாறு அறியத்தக்கது. 

    The seacoast in Pukali (Sirkazhi) is full of white sand. This is bathed by the
waves full of sharks. This city is the birthplace of Gnanasambandar. He sang these ten
songs in praise of Lord Civa of this place. Whoever could recite these ten songs sincerely 
and continuously for long, will shed all evils from their life, retaining only good. 
They will also be blessed with boons.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            1ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 1st Hymn


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 138                        பதிக எண்: 2


2. திருவலஞ்சுழி                             2. THIRU-VALAN-CHUZHI
பண் : இந்தளம் - வினாஉரை                    Pann: Indhalam - Vinaa Urai


திருத்தல வரலாறு

    பிலத்தினுள் சென்றுவிட்ட காவிரி வெளிப்படும் பொருட்டு ஏரண்ட முனிவர் பிலத்தினுள் இறங்க,
 காவிரி வெளிவந்து வலமாகச் சுழித்துக் கொண்டு சென்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது. இது 
கும்பகோணம் - தஞ்சாவூர் தொடர்வண்டிப் பாதையில், சுவாமிமலை தொடர்வண்டி நிலையத்திற்கு 
வடக்கே முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 25ஆவது 
தலம் ஆகும். கும்பகோணம் - தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. இறைவர் கற்பகநாதேசுரர். 
இறைவியார் பெரியநாயகி. தீர்த்தம் காவிரி. அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் 
கடைந்த பொழுது பூசித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இங்குக் கொண்டு வந்து எழுந்தருளுவித்து 
வழிபட்டான். வெள்ளைப் பிள்ளையார் கோயில் மிகவும் வேலைப்பாடுடையது. இக்கோயிலில் ஏரண்ட 
முனிவரின் பிரதிமையும், பக்கத்தில் வலஞ்சுழி நாதர் என்னும் சிவலிங்கத் திருமேனியும் இருக்கின்றன. 
இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகங்கள் மூன்று, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று 
ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.

பதிக வரலாறு

    முத்தமிழ் விரகர், மாதவத்து முதிரும் அன்பர்கள் எதிர்கொள, வலஞ்சுழிப் பெருமான் கோயில் வந்து 
எய்திக் கோபுரம் இறைஞ்சி, உள்புகுந்து, வலங்கொண்டு, உச்சிமேல் அஞ்சலியினராய்ப் பெருகும் ஆதரவுடன்
 பணிந்தெழுந்து ஊனமில் இசையுடன் விளங்கிய இத்திருப்பதிகத்தைப்பாடி வினாவியருளினார்.

            திருச்சிற்றம்பலம்

1480.    விண்டெலா மலரவ்விரை நாறுதண் தேன்விம்மி 
    வண்டெலா நசையாலிசை பாடும்வலஞ்சுழித் 
    தொண்டெலா ம்பரவுஞ்சுடர் போலொளியீர் சொலீர் 
    பண்டெலாம் பலிதேர்ந்தொலி பாடல் பயின்றதே.        1

    விண்டு எலாம் மலர(வ்)விரை நாறு தண் தேன் விம்மி, 
    வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி, 
    தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர் 
    பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?

    viNTu elAm malara(v) virai nARu taN tEn vimmi, 
    vaNTu elAm nacaiyAl icai pATum valanjcuzi, 
    toNTu elAm paravum cuTar pOl oLiyIr! colIr- 
    paNTu elAm pali tErntu olipATal payinRatE?

பொருள்:     திருவலஞ்சுழியில் செழிப்பான சோலைகள் எங்கும் சூழ்ந்து விளங்குகின்றன. 
அச்சோலைகளில் மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. அம்மலர்களில் குளிர்ச்சியான 
தேன் உள்ளன. அத்தேனை உண்ணும் விருப்பினால் வண்டுகள் இசை பாடிக் கொண்டு பூக்களிடம் வந்து 
சேருகின்றன. இத்துணை செழிப்பான திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! செஞ்சுடர் 
போன்ற ஒளி உமது திருமேனியில் திகழ்கின்றது. தொண்டர்கள் பலர் உம்மைப் பாடிப் பரவுகின்றனர். 
முன்பெல்லாம் நீர் இசையோடு பாடல்களைப் பாடியும் உலகெலாம் சுற்றிக் கொண்டு அங்கு வாழும் 
பெண்களிடமிருந்து பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. 

குறிப்புரை:     விண்டு - திறந்து, எல்லாம் - போதுகள் யாவும், விண்டு மலர என்க. விரை - மணம். 
நசை -விருப்பம். தொண்டு - தொண்டர் (ஆகுபெயர்). சுடர் - செஞ்சுடர். ஒலிபாடல் - வினைத்தொகை.

    In the city of Thiru-valan-chuzhi many flower gardens exist. The fragrant flowers 
in these gardens spread their aroma in the air all around. The flowers are filled with honey. 
The bees with a desire to devour the cool honey, hum pleasingly and fly towards the flower 
gardens. Their delightful humming reverberates all over the area. In such a glorious city, 
inside the Hindu temple, Lord Civa! seated in the sanctum sanctorum You bless the devotees 
who sing Your greatness. There, You shed very bright light, which looks like sun's bright 
red rays. In those days, Oh Lord Civa! You used to move all around the cosmos, singing very
melodious songs and asking for offerings (பலி-food for gods) from ladies living in those areas. 
Oh Lord Civa! kindly tell me the reason why You behaved like this.

1481.     பாரல்வெண் குருகும்பகுவா யனநாரையும் 
    வாரல்வெண் டிரைவாயிரை தேரும்வலஞ்சுழி 
    மூரல்வெண் முறுவல்நகு மொய்யொளியீர்சொலீர் 
    ஊரல்வெண் டலைகொண்டு லகொக்க வுழன்றதே.        2

    பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும் 
    வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழி 
    மூரல் வெண்முறுவல் நகு மொய் ஒளியீர்! சொலீர் -
     ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே?

    pAral veN kurukum pakuvAyana nAraiyum 
    vAral veN tiraivAy irai tErum valanjcuzi, 
    mUral veN muRuval naku moy oLiyIr! colIr- 
    Ural veN talai koNTu ulaku okka uzanRatE?

பொருள்:     திருவலஞ்சுழியில் உள்ள காவிரி நதியில் தண்ணீர் வெண்மையான அலைகளோடு 
எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கின்றது. நீளமான கழுத்தினை உடைய கொக்குகளும் பிளவுண்ட வாயை 
உடைய நாரைகளும், தங்களுடைய இரையை அத்தண்ணீரில் தேடிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு 
செழிப்பான திருவலஞ்சுழியில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே! புன்னகை புரியும் வெண்மையான 
பற்களோடு ஒளிச்சுடராய் எழுந்தருளியிருக்கிறீர். இத்தகைய சிறப்பான தோற்றத்தை உடைய நீர், மண்டை 
ஓட்டை மாலையாக அணிந்து கொண்டு கையில் ஒரு கபாலத்தையும் ஏந்திக் கொண்டு உலகம் முழுவதும் 
சுற்றி அங்குள்ள மாதர்களிடமிருந்து பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக!

குறிப்புரை:     பாரல் - நீளல், அல்விகுதி. வாரல் - வார்தல், ஒழுகுதல். திரைவாய் இரைதேரும்- அலை 
நீரிலுள்ள மீன் உணவு ஆராயும், குருகு - கொக்கு, மூரல் - புன்னகை, முறுவல் - பல், நகு - விளங்கும். ஊரல்- ஊர்தல். 
பாரல்- நீளல், நீண்டவாய், பிளத்தல் - பிளந்தவாய் எனில் 'பகுவாய்' கூறியது  கூறலாகும். 'பாரல் வாய்ச்சிறுகுருகு' 
(தி. 3. ப. 63. பா.5) பார்க்க.

    In the city of Thiru-valan-chuzhi, the river Cauvery flows all around the city with 
pure waters, and small waves dashing on both the banks of the river. The long billed white 
storks as well as the split-billed herons seek their prey on the shores of the rippling 
Cauvery water. In such a nice city Oh Lord Civa! You are seated in the sanctum sanctorum 
of the Hindu temple with a smiling face and gleaming white teeth shedding light of greatness 
all around. In spite of such a beauteous appearance in the temple, Oh Lord Civa! You wear a garland 
of skulls on Your body and hold a skull in Your hand wandering over the cosmos, seeking food 
(பலி) everywhere. Kindly tell me the reason for such behaviour.

1482.     கிண்ண வண்ணம ருங்கிளர்தா மரைத்தாதளாய் 
    வண்ண நுண்மணல் மேலனம்வைகும் வலஞ்சுழிச் 
    சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவலீர்சொலீர் 
    விண்ண வர்தொழவெண் டலையிற்பலி கொண்டதே.         3

    கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத் தாது அளாய் 
    வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி, 
    சுண்ணவெண்பொடிக்கொண்டு மெய்பூச வலீர்! சொலீர் - 
    விண்ணவர் தொழ வெண்தலையில் பலி கொண்டதே?

    kiNNa vaNNam malkum kiLar tAmarait tAtu aLAy 
    vaNNa nuN maNal mEl anam vaikum valanjcuzi,
    cuNNa veN poTik koNTu mey pUca valIr! colIr- 
    viNNavar toza, veNtalaiyil pali koNTatE?

பொருள்:     காவேரி நதியின் கரையில் உள்ள பொடி மணலில் அன்னம் (தாமரைப் பூந்தாதுக்கள் 
பொருந்திய) தங்கி விளையாடுகின்றன. இவ்வளவு வளமுடைய திருவலஞ்சுழியில் உடம்பெல்லாம் 
திருநீற்றைப் பூசியவனாய் ஒளி மிகுந்து விளங்குகின்ற  சிவபெருமானே! தேவர்கள் அனைவரும்
 உம்மை வந்து வணங்குகிறார்கள். அவர்களுக்கெல்லாம் தலைமைத் தன்மை கொண்ட சிவபெருமானே! 
வெள்ளிய தலை ஓட்டை கையில் எடுத்துக்கொண்டு நீர் பலி ஏற்பதற்காக உலகம் முழுவதும் திரிவதற்குக்
 காரணம் யாதோ? சொல்லுவீராக! 

குறிப்புரை:      தாமரைகள் கிண்ணத்தின் உருவம்போல மலர்தலை உணர்த்தினார்.  கிளர்- விளங்குகின்ற.
அளாய் - அளாவி, கலந்து, வண்ணம் - கிளர் நிறம், அழகு, அன்னம் தாமரைப் பூந்தாதுக்களைப் பொருந்திய 
அழகுடன் பொடி மணலில் வைகும் வளத்தது வலஞ்சுழி, பொடிக்கொண்டு பூசுதலின் வன்மை சர்வ சங்கார 
கர்த்திருத்துவத்தைக் குறித்தது. வைகல் - தங்குதல். 

    In the city of Thiru-valan-chuzhi swans in bevy rest on the fine sand bed of the 
Cauvery river, after collecting the pollens of the blooming bowl shaped red lotuses in the 
ponds nearby. In such a nice city, Oh Lord Civa! You are seated in the sanctum sanctorum 
of the Hindu temple. Holding a skull in Your hand, You wander all over the cosmos seeking 
food (பலி) from all. Kindly tell me the reason for such behaviour.

1483.    கோடெலா நிறையக்கு வளைம்மலருங்குழி 
    மாடெலா மலிநீர்மண நாறும்வலஞ்சுழிச் 
    சேடெலா முடையீர்சிறு மான்மறியீர்சொலீர் 
    நாடெலா மறியத்தலை யின்னறவேற்றதே.        4

    கோடுஎலாம் நிறையக் குவளை(ம்) மலரும் குழி 
    மாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி, 
    சேடுஎலாம் உடையீர்! சிறுமான்மறியீர்! சொலீர் - 
    நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே?

    kOTu elAm niRaiyak kuvaLai(m) malarum kuzi 
    mATu elAm malinIr maNam nARum valanjcuzi, 
    cETu elAm uTaiyIr! ciRumAn maRiyIr! colIr- 
    nATu elAm aRiyat talaiyil naRavu ERRatE?

பொருள்:     திருவலஞ்சுழியில் கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் விளங்கும்
 தாமரை மலர்கள் நிறைந்த தடாகங்கள் உள்ளன. அந்தப் பூக்கள் பொழிகின்ற தேனைக் குடிப்பதற்கு அன்னங்கள் 
இத்தடாகத்திற்கு வந்து தாமரை மலர்களைச் சுற்றிச் சுற்றி வந்து தேனைக் குடிக்கின்றன. இவ்வாறு பறந்து 
சுற்றும் பொழுது அதன் இறகுகள் பூக்களின் உட்பக்கம் உள்ள தாதுக்களில் உராயப்பட்டு இறகுகள் முழுமையும் 
தாதுக்களால் அணியப்பட்டுள்ளன. இந்த அன்னங்கள் நடமாடும் திருவலஞ்சுழியில் உள்ள குழிகளிலும், 
குழிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் குவளை மலர்கள் நிறைந்துள்ள சிறுசிறு குட்டைகளில் 
உள்ள தண்ணீரில் வசிக்கின்றன. அதனால் குவளை மலரின் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இத்துணை 
வளமிக்கது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நீவீர் சிறிய அழகான மான்குட்டியைக் 
கையில் ஏந்திக் கொண்டு யாவரும் வியக்க காட்சி கொடுத்து அருள்வழங்கிக் கொண்டிருக்கிறீர். அவ்வாறு 
இருந்தும் தலையோட்டைக் கையில் ஏந்திக் கொண்டு உலகெலாம் சுற்றிவந்து பலிகொள்வது எதற்காக? சொல்லுவீராக.

குறிப்புரை:     கோடு- கரைகள், குழி- அக்கரைகளுக்கு நடுவிலுள்ள பள்ளம்.  மாடு-பக்கம், கரைகளில் பூத்த 
குவளை மலரின் மணம் பள்ளத்திலுள்ள நீரில் நாறும். சேடு-பெருமை , தலை-  பிரமகபாலம். நறவு - ஈண்டுப் 
பிச்சையேற்ற உணவு குறித்து நின்றது. 

    In the city of Thiru-valan-chuzhi, a good number of pits exist. They are full of  water and 
nelumbo (குவளைமலர்) flowers in plenty, swans go round the lakes to drink the honey dripping from 
the lotus. These flowers dissipate their sweet smell all over the surrounding areas. In such a 
beautiful city Oh Lord Civa! You are seated in the city temple with name and fame. You hold a small 
beautiful deer in Your hand. But what a contrast, You carry also a skull of human head, and accept 
alms in it roaming in the cosmos, while the whole world watches such a disgrace.

1484.    கொல்லைவெண் றபுனத்திற்குரு மாமணி கொண்டுபோய் 
    வல்லைநுண் மணல்மேலனம் வைகும்வலஞ்சுழி 
    முல்லைவெண் முறுவல்நகை யாளொளியீர்சொலீர் 
    சில்லைவெண் டலையிற்பலி கொண்டுழல் செல்வமே.         5

    கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு போய், 
    வல்லை நுண்மணல்மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி, 
    முல்லை வெண்முறுவல் நகையாள் ஒளியீர்! சொலீர் 
    சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே?

    kollai vEnal punattin kuru mA maNi koNTu pOy, 
    vallai nuN maNal mEl annam vaikum valanjcuzi,
    mullai veN muRuval nakaiyAL oLiyIr! colIr- 
    cillai veN talaiyil pali koNTu uzal celvamE?

பொருள்:     முல்லை நிலக்காடுகளில் மணிகள் கிடக்கின்றன. அம்மணிகளை எடுத்து வந்த 
அன்னங்கள் திருவலஞ்சுழியிலுள்ள மணல் பரப்பில் வாழுகின்றன. இவ்வளவு வளமுடையது திருவலஞ்சுழி. 
முல்லைப் பூப்போன்ற பற்களையும் புன்முறுவலையும் உடைய பார்வதியின் சிவபெருமானே! நீவிர்! 
ஒளிபோன்று வெண்மை மயமாக விளங்குகின்ற தலையோட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு உலகெலாம் 
சுற்றி வந்து பலிகொண்டு திரிவதை, இந்தச்சிறுமையான செயலைச் செல்வமாக எண்ணுவது ஏனோ? 
சொல்லுவீராக

குறிப்புரை:     குரு - நிறம், வல்லை - விரைவு. முல்லைப்பூ வெண்முறுவலை உடைய நகை (பற்)களுக்கு
 ஒப்பு. சில்லை-சிறுமை. முல்லை வெண்முறுவல் நகை -பார்வதி.

    In the wild jasmine forest (முல்லைக்காடு -கொல்லை) gems are available everywhere. 
The river Cauvery carries the gems, and scatters them on the bank. The swans pick up those 
gems and rest on the sand banks of the river Cauvery. In such a luxurious and flourishing 
city, Oh! Lord Civa! You are seated in the Hindu temple enjoying the company of Your consort
Uma Devi who is beautiful with her smile and her pure white teeth resemble the jasmine flower. 
Your brightness also combines with hers. Oh Lord Civa! tell me why You carry the skull of dead 
people in Your hand and roam everywhere in the cosmos. Why do You regard this mean action 
as an act that brings You wealth?

1485.     பூசநீர் பொழியும்புனற் பொன்னியிற் பன்மலர் 
    வாசநீர் குடைவாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித் 
    தேசநீர் திருநீர்சிறு மான்மறியீர் சொலீர் 
    ஏசவெண் டலையிற்பலி கொள்வதிலாமையே.        6

    பூசம் நீர் பொழியும் புனல்பொன்னியில் பல்மலர் 
    வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி, 
    தேசம் நீர்; திரு நீர்; சிறுமான்மறியீர்! சொலீர் - 
    ஏச,வெண்தலையில் பலி கொள்வது இலாமையே?

    pUcam nIr poziyum punal ponniyil palmalar 
    vAcam nIr kuTaivAr iTar tIrkkum valanjcuzi,
    tEcam nIr; tiru nIr; ciRumAnmaRiyIr! colIr- 
    Eca, veNtalaiyil pali koLvatu ilAmaiyE?

பொருள்:     தை முதல் பன்னிரு மாதங்களின் பூச நன்னாளில் மலரோடு நீர் உருகி வரும் மணம் 
கமழும் காவிரி நீரில் மூழ்கி நீராடுபவர்களின் துயர்களைத் துடைத்து அருள்பவர் திருவலஞ்சுழியில் 
உறையும் சிவபெருமானே! நீவீர் சிறிய மான்குட்டியைக் கையில் ஏந்தியுள்ளீர். சிறப்புடைய தோடும் 
திருவும் உடைய சிவபெருமானே! இறந்தவர்களின் தலையோட்டைக் கையில் ஏந்திக்கொண்டு 
பலிகொள்வது உமக்கு செல்வமில்லை என்ற வறுமையா என்பதைச் சொல்லுவீராக.

குறிப்புரை:     பூசம் - தை முதலிய பன்னிரு திங்களிலும் வரும் நன்னாள், பூச நட்சத்திரம். "பூசம் 
புகுந்தாடிப் பொலிந்தழகாய ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ" (தி. 1 ப. 32 பா 5) என்றருளியது
உணர்க. குடைவார் - முழுகுவார். தேசமும் திருவும் நீவிரே. பலி கொள்வதாகிய இல்லாமை என விரிக்க .
இல்லாமை - வறுமை.

    The river Cauvery with profuse water flows by the side of Thiru-valan-chuzhi city 
carrying different kinds of fragrant flowers. Here on the holy day of Poosam (தைப்பூச நன்னாள்) 
people gather in large numbers, take holy bath in the sweet smelling water and pray to Lord 
Civan to wash off all their sufferings. Oh Lord Civa! You are the holy place; You are wealth; 
You are everything; You are the remover of all distress. You carry a small beautiful deer 
in one of Your hands. Oh Lord Civa! in spite of such a glory, You beg with a skull in 
Your hand and roam all over the cosmos provoking people to cast aspersions on You. 
Does it indicate Your wealth or Your poverty? Tell me.

1486.     கந்தமா மலர்ச்சந் தொடுகாரகிலுந் தழீஇ 
    வந்தநீர் குடைவாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி 
    அந்தநீர் முதல்நீர் நடுவாமடி கேள்சொலீர் 
    பந்தநீர் கருதாதுல கிற்பலி கொள்வதே.        7

    கந்தமாமலர்ச் சந்தொடு கார்அகிலும் தழீஇ, 
    வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி, 
    அந்தம் நீர், முதல் நீர்,நடு ஆம் அடிகேள்! சொலீர் 
    பந்தம் நீர் கருதாது, உலகில் பலி கொள்வதே?

    kantamAmalarc cantoTu kAr akilum tazIi, 
    vanta nIr kuTaivAr iTar tIrkkum valanjcuzi, 
    antam nIr, mutal nIr, naTu Am aTikEL! colIr 
    pantam nIr karutAtu, ulakil pali koLvatE?

பொருள்:     மணமுள்ள மலர்கள், சந்தன, அகில் மரங்களைத் தாங்கி வருவது காவிரி ஆறு.
காவிரியாற்றில் குளிப்பவர்களின் துன்பங்களைத் துடைப்பவர் திருவலஞ்சுழியில் உறையும்
சிவபெருமானே! முதலும் நடுவும் முடிவுமாய் விளங்கும் சிவபெருமானே! பலிகொள்வது பற்றை 
விளைவிப்பது என்று மக்களைப் போல் எண்ணாமல், இறைவரே நீவிர் பலிகொள்வது ஏனோ? 
சொல்லுவீராக.

குறிப்புரை:     கந்தம் - மணம், சந்து - சந்தனவிருட்சம், கார்அகில் - கரிய அகில், அந்தமும் ஆதியும் 
நடுவும் நீவிரே. 'அடிகள்' விளியாங் கால் அடிகேள் என்றும் ஆகும். பந்தம் கருதாமை; பிச்சையேற்றலில் 
உயிர்க்கு ஆகும் பந்தம். இறைவனுக்கு இன்மையை உணர்த்தி நின்றது. பந்தமென்று கருதாமல் 
என்னும் உரை சிறவாது.

    The holy river Cauvery running in Thiru-valan-chuzhi brings multi-coloured fragrant 
flowers, sandal branches, and Aloe wood (அகில்). Local people in large numbers go to this river, 
take bath very happily and then reach the Civan temple. There the devotees offer prayers to 
Lord Civan and request You to dispel all their sufferings. You bless them. Oh Lord Civa! 
You are there; You are the beginning; You are the middle; and the end of all; You are different 
from ordinary people who are affected by worldly attachment. As our Lord You must be completely 
detached. Tell me, why You beg for alms all around the world like a man of wordly attachment.

1487.     தேனுற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டினம் 
    வானுற்ற நசையாலிசை பாடும் வலஞ்சுழிக்
    கானுற்ற களிற்றின்னுரி போர்க்க வல்லீர்சொலீர் 
    ஊனுற்ற தலைகொண்டு லகொக்கவுழன்றதே.        8

    தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம் 
    வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி, 
    கான் உற்ற களிற்றின்(ன்) உரி போர்க்க வல்லீர்! சொலீர் 
    ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?

    tEn uRRa naRu mA malarc cOlaiyil vaNTu inam 
    vAn uRRa nacaiyAl icai pATum valanjcuzi, 
    kAn uRRa kaLiRRin(n) uri pOrkka vallIr! colIr- 
    Un uRRa talai koNTu, ulaku okka uzanRatE?

பொருள்:     திருவலஞ்சுழிப்பதி முழுவதும் பெரிய மலர்ச்சோலைகள் செழிப்பாக உள்ளன. அங்கு தேன் 
நிறைந்துள்ள மலர்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மலர்களில் உள்ள தேனை உண்ண வேண்டும் என்ற 
ஆசையால் வண்டுகள் கூட்டம் கூட்டமாக உயரிய இசையைப் பாடிக் கொண்டே, மலர்ச்சோலைகளில் புகுந்து 
பறந்து கொண்டும் பாடிக்கொண்டும் அங்குள்ள மலர்களில் உள்ள தேனைக் குடித்து இசை பாடுவதால் 
திருவலஞ்சுழியில் இந்த ஓசை ஊரெங்கும் நிலவுகின்றது. இத்துணை சிறந்த திருவலஞ்சுழியில் எழுந்தருளி 
யிருக்கின்ற சிவபெருமானே! உம்மைக் கொல்ல வந்த காட்டு யானையை எதிர்த்து நின்று அதன் தோலை 
உரித்து உமது உடலில் போர்த்திக் கொள்ளக் கூடிய அளவிற்கு ஈடுஇணையற்ற மிகுந்த வலிமை உடைய 
சிவபெருமானே! இத்தனை வலிமை உடையவராக இருந்தும், நீர் ஊன் பொருந்திய தலையோட்டைக் 
கையில் ஏந்திக் கொண்டு உலகெங்கும் சென்று வருவது ஏனோ? சொல்லுவீராக.

குறிப்புரை:      நசை - விருப்பம், களிறு - ஆண்யானை, மதக்களிப்பை உடையது என்னுங் காரணப் பொருளது. 
கான் - காடு, உலகு ஒக்க - உலகெல்லாம் என்றவாறு.

    Thiru-valan-chuzhi city is encircled by very big gardens of blossoms, full of honey. 
Bees in large numbers, desirous to devour the nectar in the flowers reach the groves 
humming pleasantly and this reverberates in the city creating a pleasant atmosphere. 
Oh Lord Civa! You reside in this city. When a male elephant ferociously ran towards 
You to kill You, Oh Lord! You had the greatest strength to kill the elephant, You skinned 
the elephant's body and covered Your body with that skin. You had such greatness,
which had no parallel. Despite this valorous deed, why do You beg for alms wandering 
all over the cosmos, holding a fleshy human skull in Your hand? Tell me.

1488.    தீர்த்த நீர்வந்திழி புனற்பொன்னியிற் பன்மலர் 
    வார்த்த நீர்குடை வாரிடர்தீர்க்கும் வலஞ்சுழி 
    ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த்தீர் சொலீர் 
    சீர்த்த வெண்டலை யிற்பலிகொள் வதுஞ்சீர்மையே.        9

    தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில் பல்மலர் 
    வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி, 
    ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர் 
    சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே?

    tIrttanIr vantu izi punal ponniyil palmalar 
    vArtta nIr kuTaivAr iTar tIrkkum valanjcuzi, 
    Arttu vanta arakkanai anRu aTarttIr! colIr- 
    cIrtta veNtalaiyil pali koLvatum cIrmaiyE?

பொருள்:     திருவலஞ்சுழியில் புனிதமான நீர் ஓடிக்கொண்டிருக்கும் காவிரி நதியில் மக்கள்
 கூட்டம் கூட்டமாக வந்து பலவிதமான மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்கி அங்கு எழுந்தருளியுள்ள 
சிவபெருமானை உள்ளன்போடு வணங்குகிறார்கள். அவர்களுடைய இடர்களைச் சிவபெருமான் போக்கி 
அருள்பாலித்து வருகிறார். அக்காலத்தில் இராவணன் தன் வலிமையைப் பெரிது எனக்கருதி ஆரவாரித்துக் 
கொண்டு நீவிர் வீற்றிருக்கும் கயிலையங்கிரியை அசைத்து அகற்றுவதற்கு முற்பட்டான். அப்பொழுது 
அவனை அடர்த்திய பெருமைமிகக் கொண்டவரே. இத்துணை பெருமை உடையவராய் இருந்தும் நீர் 
உமது திருக்கரத்தில் சிறுமை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்று உண்பது உம்பெருமைக்கு 
அழகோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     தீர்த்த நீர் - பரிசுத்தம் புரியும் ஆற்றலுடைய நீர், காவிரி முதலிய ஆறுகள் புண்ணிய நதிகள் ஆகும். 
தீர்த்தமாகா நதிகளும் உள. பொன்னி - காவிரி, ஆர்த்து-  ஆரவாரம் செய்து, சீர்த்த- சீருடைய.

    The river Cauvery which flows along the city of Thiru-valan-chuzhi carrying the sacred 
water is beautified on the surface with varied fragrant flowers. The sufferings and woes of 
these devotees, who take a dip in the sacred water of the river Cauvery, are wiped out by the 
grace of Lord Civan who stays in the temple nearby. Oh Lord Civa! You are there; and once when 
the demon king Raavanan arrogantly attempted to move Your abode to make way for his Airplane in 
which he was flying, You crushed him by slightly pressing Your mountain abode. He got crushed 
under it and could not extricate himself out of it. The whole world knows that You have no 
parallel for such great valour. Instead of this good behaviour, is it right for you to beg for 
alms in the white human skull roaming all over the cosmos?

1489.    உரமனுஞ் சடையீர் விடையீரும தின்னருள் 
    வரமனும் பெறலாவது மெந்தை வலஞ்சுழிப் 
    பிரமனுந் திருமாலு மளப்பரியீர் சொலீர் 
    சிரமெனுங் கலனிற்பலி வேண்டிய செல்வமே.        10

    உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது இன்அருள் 
    வரம் மனும் பெறல்ஆவதும்; எந்தை! வலஞ்சுழிப் 
    பிரமனும் திருமாலும் அளப்ப(அ)ரியீர்! சொலீர் - 
    சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே?

    uram manum caTaiyIr! viTaiyIr! umatu in aruL
    varam manum peRal Avatum; entai! valanjcuzip 
    piramanum tirumAlum aLappa(a)riyIr! colIr- 
    ciram enum kalanil pali vENTiya celvamE?

பொருள்:     பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே !
 நிலையான வரம் பெறுவதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே ! பிரமன் 
திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே,நீர் தலையோடாகிய உண்கலனில் பலியைச் 
செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     உரம்- பெருமை.(சிவபிரானுக்குச் சடையும் ஞானமாதலின்) அறிவுமாம்.  பலியேற்கும் 
பாத்திரம் பிரம கபாலமாதலின் "சிரமெனுங்கலம்" என்றார். பா. 5.10இல் செல்வம் என்றது குறிப்பு. 
வரம்பெறலாவதும் மன்னும் என மாற்றலுமாகும். 

    Oh Lord Civa of Thiru-valan-chuzhi! Your matted hair represents not only true wisdom 
(the state of the most exalted ascetic) but also Your immense strength. whenever You want to 
move anywhere You have the divine bull; You bestow all the boons on those who pray to You 
with devotion. And You are the one who could not be easily seen by Lord Vishnu and Brahma 
when they tried to see Your holy feet and head.  In spite of all this esteem, tell me,
why You beg for wealth, by carrying a human skull in Your hand, and roam all over the cosmos.

1490.     வீடுஞான மும்வேண்டு திரேல்விரதங்களால் 
    வாடிஞான மென்னாவது மெந்தை வலஞ்சுழி 
    நாடிஞான சம்பந்தன செந்தமிழ் கொண்டிசை 
    பாடுஞானம் வல்லாரடி சேர்வது ஞானமே.        11

    வீடு ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால் 
    வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி 
    நாடி,ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை 
    பாடு ஞானம் வல்லார், அடிசேர்வது ஞானமே.

    vITum njAnamum vENTutirEl, viratagkaLAl 
    vATin njAnam en Avatum? entai valanjcuzip 
    nATi, njAnacampantana centamiz koNTu icai 
    pATu njAnam vallAr, aTi cErvatu njAnamE.

பொருள்:     வீடு பெறுதற்கும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெற விரும்புவர்கள், விரதங்களை 
மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்து விடாது என்பதை உணருங்கள். எந்தையாகிய 
சிவபெருமான் வீற்றிருந்து அருளும் திருவலஞ்சுழியை அடைந்து அல்லது மனத்தால் நாடி, 
வாக்கால் திருஞானசம்பந்தப் பெருமான் ஓதி அருளிய செந்தமிழ் பாக்களை இசையோடு பாடும் 
ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவது ஒன்றே ஞானத்தைத் தருவதாகும் 
என்று உணர்க.

குறிப்புரை:     வீடும் அதற்கு ஏதுவான ஞானமும் வேண்டுவீரெனில், விரதங்களால் உடல்மெலிந்தால் 
ஞானம் ஆவதும் என்? என்று வினாவுக. விரதங்களால் உடல்வாட்டம் அன்றி உண்மை ஞானப்பேறு 
வாயாது என்றவாறு. எந்தையாகிய சிவபிரானது திருவலஞ்சுழியை (மனத்தால்) நாடி, (வாக்கால்) 
ஞானசம்பந்தருடைய செந்தமிழ் கொண்டு இசைபாடும் ஞானம் வல்லவர் திருவடி சேர்வது ஒன்றே 
ஞானமாகும் என்று பொருள் கொள்க. இத்திருமுறை பாடுவாரடிமலர் சேர்வதே வீடுதரும் ஞானமாகும் 
என்பது கருத்து. 'சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்குக' என்று இக்காலத்தில் வழங்கும் தொடரில், 
'தமிழ்' என்றது திருமுறைகளையே குறிக்கும். பழந்தமிழ் நூல்களையும் தமிழ் மொழியையும் குறித்ததன்று. 
அவை வேறு பல சமயக் குறிப்புக்களையும் கொண்டிருத்தலாலும், சைவத்தொடு நெருங்கிய 
தொடர்பில்லாமையாலும், தமிழில் பிறசமய நூல்கள் பல உள்ளமையாலும் அவற்றை ஈண்டுச் 
சைவத்தொடு சேர்த்து வாழ்த்தினார் என்றல் பொருந்தாது. பிற்காலப் பதிப்புக்களில் 'வாடி' என்ற 
பாடமே உளது.

    Oh! You people of this world! If you are sincerely interested in salvation and holy 
wisdom, do not resort to penances, which result in torturing Your body rendering it weak. 
Your hopeful actions are totally wrong. To attain salvation think of great saints, who possess
sublime religious knowledge and sing harmoniously the pure Tamil songs of Thiru-gnana-Sambandar 
on Lord Civan of Thiru-valan-chuzhi. Then pray in full devotion at their pure feet and repeat 
the songs of Thiru-gnana-Sambandar on Lord Civan of Thiru-valan-chuzhi. This is the wise way 
to be spiritually wise. In case you can yourself sing harmoniously all these Tamil songs of 
Thiru-gnana-Sambandar on Lord Civan of Thiru-valan-chuzhi, you may do so. These are the only 
ways to attain salvation and wisdom.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            2ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 2nd Hymn


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

பதிகத் தொடர் எண்: 139                     பதிக எண் :3

3. திருத்தெளிச்சேரி                     3. THIRU-TH-THELI-CH-CHERI
பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    இத்திருப்பதிகம் கோயில்பத்து என்று வழங்கப் பெறுகின்றது. இத்தலம் காரைக்காலுக்கு வடபால் 
உள்ளது.  பொறையாறு- காரைக்கால் பேருந்து வழியில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள ஐம்பதாவது தலமாகும். 
இறைவரின் திருப்பெயர் பார்வதீசுவரர். இறைவியாரின் திருப்பெயர் சத்தியம்மை. பங்குனி மாதத்தில் 
13ஆம் தேதி முதல் பத்துநாள்களுக்குச் சூரிய பூசை நிகழ்வது. ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

    இவ்வூருக்கு அணிமையில் போதிமங்கை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூர், புத்தர்கள் வசிக்கப் 
பெற்றது. அதன் வழியாக ஞானசம்பந்தரது அடியார் திருக்கூட்டம், பரசமய கோளரி வந்தார் என்று முத்துச் 
சின்னங்களை ஊதிச் சென்றது. அதைப் பொறாத புத்தர்கள் தடுத்தனர்.  அப்பொழுது தேவாரத் திருமுறை 
யெழுதும் சம்பந்த சரணாலயர் 'புத்தர் சமண்கழுக்கையர்' என்று  தொடங்கும் பஞ்சாட்சரப் பதிகத் 
திருப்பாட்டை ஓத, புத்தர்கள் தலைவனான புத்தநந்தி தலையில் இடி விழுந்தது. உடனே அவன் இறந்து 
போனான். மீளவும் புத்தர்கள் சாரிபுத்தனைத் தலைவனாகக் கொண்டு வாது செய்ய வந்தனர். 
சம்பந்த சரணாலயர் ஞானசம்பந்தர் முன்னிலையில் அவர்களை வாதில் வென்று சைவர் ஆக்கினார்.                
கோயில் மேற்குச் சந்நிதி. கோயில் முழுதும் செட்டிமார்களால் புதுப்பிக்கப்பட்டது. 

பதிக வரலாறு

    சண்பை வள்ளலார் திருநள்ளாறு வணங்கிச் சென்று திருத்தெளிச்சேரியினைச் சேர்ந்து
பரவிப் பாடிய பதிகம் இது.

            திருச்சிற்றம்பலம்

1491.     பூவலர்ந்தன கொண்டு முப்போது மும்பொற்கழல் 
    தேவர்வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர் 
    மேவருந் தொழிலாளொடு கேழற்பின் வேடனாம் 
    பாவகங் கொடுநின்றது போலுநும் பான்மையே.        1

    பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல் 
    தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்! 
    மேவரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன்ஆம் 
    பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?

    pU alarntana koNTu muppOtum um pon kazal 
    tEvar vantu vaNagkum miku teLiccEriyIr! 
    mE varum tozilALoTu kEzalpin vETan Am 
    pAvakamkoTu ninRatu pOlum, num pAnmaiyE?                            

பொருள்:     அலர்ந்தனவான பூக்கள்! அவற்றைக் கொண்டு மூன்று வேளைகளிலும் அருச்சித்துத் 
தேவர்கள் வந்து வழிபடுவர். அத்தகு புகழ்மிக்க திருத்தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! யாவராலும் 
செய்தற்கரிய செயல்களைப் புரிபவள் உமையம்மை. நீர் பொய்வேடந் தரித்து அம்மையையும் வேடச்சியாக 
வேடந்தரிக்கச் செய்து பன்றியின் பின் வேடர்களாகச் சென்றது உம் பெருமைக்கு ஏற்ற செயலாகுமா?

 குறிப்புரை:     தெளிச்சேரியில் மூன்று வேளையிலும் தேவர்கள் பூக்களைக் கொண்டு வந்து சிவபூசை 
செய்த வரலாறு உணர்த்தப்பட்டது. மேவரும்தொழில், சிவசத்தியின் கிருத்தியம் ஏனையோரெவராலும் 
அடைதற்கரியவை. கேழல் - பன்றி. சிவனும் உமையும், வேடனும் வேட்டுவிச்சியுமானதை உணர்த்திற்று.
 பாவகம் - மெய்யல்லாமை குறித்தது.

    In the Civan temple situated in Thiru-th-theli-ch-cheri facing the western direction,
 Lord Civan Paarvatheeswarar along with his consort Sathiammai graces the devotees who gather 
here to worship Him. The devas (celestials) visit this temple thrice a day and offer their 
worship bowing at Lord Civan's golden feet with flowers blooming. In such a famous city 
temple, Your consort Sathiammai, who is non-parallel and carries on the entire operations
in the universe which none else can do, is also seated. Oh Lord Civa! What made You consider 
Your action of following a pig, along with Your consort Uma Devi, both as hunters, as one that 
will bring fame to You?

1492.     விளைக்கும்பத்திக்குவிண்ணவர்மண்ணவரேத்தவே 
    திளைக்குந்தீர்த்தமறாததிகழ்தெளிச்சேரியீர் 
    வளைக்குந்திண்சிலைமேலைந்துபாணமுந்தானெய்து 
    களிக்குங்காமனையெங்ஙனநீர்கண்ணிற்காய்ந்ததே.        2

    விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே, 
    திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்! 
    வளைக்கும் திண் சிலைமேல் ஐந்துபாணமும் தான் எய்து, 
    களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே?

    viLaikkum pattikku viNNavar maNNavar EttavE, 
    tiLaikkum tIrttam aRAta tikaz teLiccEriyIr! 
    vaLaikkum tiN cilaimEl aintu pANamum tAn eytu, 
    kaLikkum kAmanai egganam nIr kaNNin kAyntatE?

பொருள்:     பக்தியை விளைத்தீர்! விண்ணவரும் மண்ணவரும் உம்மை வழிபட வருவர். அவர் 
திளைத்து மூழ்கும் தீர்த்தம் விளங்கும் திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே ! 
 வளைந்த வரிய வில்லில் ஐந்து மலர்களைப் பாணமாக உம்மீது எய்து களிப்புற்றான் மன்மதன். 
நீர் அவனை நெற்றிக்கண்ணினால் எரித்தது ஏன்?

குறிப்புரை:     சிவபத்தியை விளைத்தலால் தெளிச்சேரி தீர்த்தத்தில் விண்ணோரும், மண்ணோரும்
 திளைப்பர். அத்தகைய தீர்த்தம் இடையறாத கீர்த்தியை, அத்தலம் உடையது. சிலை - (கரும்பு) வில்,
ஐந்து (மலர்க்)கணை. எய்து களித்த மன்மதனை நெற்றிக் கண் நெருப்பைப் பெய்தெரித்தது                   
எங்ஙனம் என வினாவினார். காய்தல் - எரித்தல். காம தகனம் புரிந்ததைக் குறித்தது.

    In Thiru-th-theli-ch-cheri, there is a tank, which holds pure holy water perennially. 
All the celestials and all the men on the earth gather here in large numbers with a firm belief 
that they will ward off all their sufferings if they come to Thiru-th- theli-ch-cheri to 
worship You, after taking bath in the holy tank. Due to unwanted pressure given by Lord Maha 
Vishnu, cupid - god of love shot five flowers using his sugarcane bow at Lord Civa who was 
then in yogic stage. His yoga was disturbed . So He got angry and opened his third eye in His 
forehead from where very dreadful fire darted forth against cupid and he died instantaneously. 
Oh Lord Civa! Why did you burn cupid into ahses?

1493.     வம்படுத்தமலர்ப்பொழில்சூழமதிதவழ் 
    செம்படுத்தசெழும்புரிசைத்தெளிச்சேரியீர் 
    கொம்படுத்ததொர்கோலவிடைமிசைக்கூர்மையோ 
    டம்படுத்தகண்ணாளொடுமேவலழகிதே.        3

    வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி தவழ் 
    செம்பு அடுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்! 
    கொம்பு அடுத்தது ஒர் கோல விடைமிசை, கூர்மையோடு 
    அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே?

    vampu aTutta malarppozil cUza, mati tavaz 
    cempu aTutta cezum puricait teLiccEriyIr! 
    kompu aTuttatu or kOla viTaimicai, kUrmaiyOTu 
    ampu aTutta kaNNALoTu mEval azakitE?

பொருள்:     மணம் பொருந்திய மலர்களை உடையன பொழில்கள். அவற்றால் சூழப்பெற்றது 
திருத்தெளிச்சேரி. மேலும் செம்பினை உருக்கி வார்த்துச் செய்த மதில்கள் சூழ்ந்தும் விளங்குகிறது. 
அங்கு எழுந்து அருளிய இறைவரே! கூரிய அம்புகளைப் போன்ற கண்களை உடையவள் பார்வதிதேவியார். 
அவளோடு, கொம்புகளை உடைய அழகிய விடைமீது மேவி வருவது அழகு தரும் செயலாகுமா?

குறிப்புரை:     வம்பு - மணம். மதி - சந்திரம். செம்பு - உலோகம். புரிசை - மதில். செம்பு மதில், 
கொம்பு - எருதின்கோடு, கோலம் - அழகு. கண்ணாள்- - பார்வதி தேவியார்,மேவல் எழுந்தருளியிருக்கும் 
காட்சி, இடபாரூடரானதை உணர்த்திற்று. 

    In and around the city of Thiru-th-theli-ch-cheri groves with fragrant flowers are many. 
The forts surrounding the city are very high and look as though their tops touch the moon. 
The construction of these walls is extraordinary because they are built of a mixture of melted 
copper and other materials such as mortar etc. In such an appealing city of Thiru-th-theli-ch-cheri, 
Lord Civan is seated in His temple blessing the devotees who gather before Him. Goddess Uma 
with her narrowed eyes, which look like sharp arrows, is beauty in divinity. Oh Lord Civa! 
You and Uma move about riding the admirable bull, which has very strong horns. Is such an 
appearance of Yours an attractive one?

1494.    காருலாங்கடலிப்பிகள்முத்தங்கரைப்பெயும் 
    தேருலாநெடுவீதியதார்தெளிச்சேரியீர் 
    ஏருலாம்பலிக்கேகிடவைப்பிடமின்றியே 
    வாருலாமுலையாளையொர்பாகத்துவைத்ததே.        4

    கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப் பெயும் 
    தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்! 
    ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்பு இடம் இன்றியே 
    வார் உலாம் முலையாளை ஒர்பாகத்து வைத்ததே?

    kAr ulAm kaTal ippikaL muttam karaip peyum 
    tEr ulAm neTuvIti atu Ar teLiccEriyIr! 
    Er ulAm palikku EkiTa, vaippu iTam inRiyE 
    vAr ulAm mulaiyALai orpAkattu vaittatE?

பொருள்:     நீர் முகந்து செல்லும் மேகங்கள் உலவுவது கடலுக்கு மேல் உள்ள வெளி. முத்துச்
 சிப்பிகளையும், முத்துக்களையும் கடல் அலைகள் கரையில் கொண்டு வந்து சேர்க்கின்றன.
தேர் உலாவும் நீண்ட வீதிகளையும் உடையது திருத்தெளிச்சேரி. அங்கு விளங்கும் இறைவரே! 
எழுச்சி மிக்கவராய்ப் பலியேற்கச் செல்கின்றீர் நீர். கச்சணிந்த தனபாரங்களை உடையவள் 
உமையம்மை. அவளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லுதற்கு வேறு இடமில்லையோ? 
உமது திருமேனியில் ஒருபாகமாக வைத்துக் கொண்டு அர்த்தநாரீச்சுவரராகக் காட்சியளிப்பது 
அழகாகுமோ? 

குறிப்புரை:     கார்- மேகம். இப்பி - (முத்துப் பிறக்குமிடங்களுள் ஒன்றாய) சங்கினத்தின் முதற்பிறப்பு.
 முதற்பதிகம். இரண்டாவது பாட்டின் குறிப்பிற் காண்க. தேருலாவும் பெருந்தெரு. ஏர் -எழுச்சி,அழகு.
வார் - கச்சு. அர்த்தநாரீச்சுர வடிவமானதை உணர்த்திற்று.  

    The water bearing clouds gather and drift round the sky over the sea, city of 
Thiru-th-theli-ch-cheri. Now and then the clouds pour water into the sea. The waves of
the sea dash against the sea shore along with conches and pearls in large numbers.
Inside the city during the festival of the Hindu temple, the chariots carrying Lord Civan
 moves along the long streets making people merry in the festival crowd. Oh Lord Civa !
You move about the cosmos for alms, keeping Your consort Uma Devi, with her brassiere-bound 
breasts, on one half of Your body. Is it because You consider that as the safest place for her?

1495.     பக்கநுந்தமைப்பார்ப்பதியேத்திமுன்பாவிக்கும் 
    செக்கர்மாமதிசேர்மதில்சூழ்தெளிச்சேரியீர் 
    மைக்கொள்கண்ணியர்கைவளைமால்செய்துவௌவவே 
    நக்கராயுலகெங்கும்பலிக்குநடப்பதே.        5

    பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் 
    செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்!
    மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து வெளவவே, 
    நக்கராய்  உலகு எங்கும் பலிக்கு நடப்பதே?                            

    pakkam numtamaip pArppati Etti mun pAvikkum 
    cekkar mA mati cEr matil cUz teLiccEriyIr! 
    maik koL kaNNiyar kaivaLai mAl ceytu vauvavE, 
    nakkarAy ulaku egkum palikku naTappatE?

பொருள்:     உம்மை ஒரு பாகமாக உள்ளவள் பார்வதி தேவி. அவள் எக்காலத்திலும் உம்மைத் 
துதித்து, தன் உள்ளத்தே பாவித்து வழிபடுகின்றாள். செவ்வானத்தில் தோன்றும் பூரணச் சந்திர ஒளி 
மதில்மேல்படும் தலமாகிய இத்திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! ஆடையின்றிப் பல 
இடங்களுக்கும் நடந்து சென்று பலி ஏற்றதற்குக் காரணம்,  தாருகாவனத்தில் வசிக்கும் மைபூசப்பெற்ற 
இளம்பெண்களை மயக்கி அவர்களின் கைவளையல்களைக் கவர்வதற்குத் தானோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     முதற்பாட்டிலும் எட்டாவது பாட்டிலும் உள்ளவாறே இதிலும் முன்னிலை ('உம்', 'நும்') 
நின்றவாறுணர்க. பார்ப்பதி - பருவதபுத்திரி. செக்கர்- செவ்வானம். மாமதி - பூரணசந்திரன். தேவி பூசித்த 
திருத்தலம் ஆதலை ஈரடியில் உணர்த்தினார். கண்ணியர் - தாருகாரணியத்து மாதர். வளை-வளையல்,
மால்- காம மயக்கம். வௌவல்- கவர்தல். நக்கர் (நக்நர்)- ஆடையில்லாதவர். 'இக்கலிங்கம் போனால் என் 
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை' என்று நக்நராதலாலும் கூறினார் இரட்டைப் புலவருள் 
ஒருவர். பலியேற்றதைச் சொல்லிற்று.

    Oh Lord Civa! You are manifest as a great personage in the renowned city of 
Thiru-th-theli-ch-cheri, where the high forts around the city touch the moon in the reddish sky.
Here Your consort Paarvathi Devi keeps You always in her mind and worships You. You walk around 
the cosmos in nude form. Is it Your intention to fascinate them and then to steal the bangles 
from those eye-tex adorned women of Daarukaa forest who come out of their houses to offer 
alms to You? Please tell me.

1496.    தவளவெண்பிறைதோய்தருதாழ்பொழில்சூழநல் 
    திவளமாமணிமாடந்திகழ்தெளிச்சேரியீர் 
    குவளைபோற்கண்ணிதுண்ணெனவந்துகுறுகிய 
    கவளமால்கரியெங்ஙனநீர்கையிற்காய்ந்ததே.        6

    தவள-வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ,நல் 
    திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்! 
    குவளை போல் கண்ணி துண்ணென, வந்து குறுகிய 
    கவள மால்கரி எங்ஙனம் நீர் கையில் காய்ந்ததே?

    tavaLa-veNpiRai tOytaru tAzpozil cUza, nal 
    tivaLa mA maNi mATam tikaz teLiccEriyIr! 
    kuvaLai pOl kaNNi tuNNena, vantu kuRukiya 
    kavaLa mAlkari egganam nIr kaiyin kAyntatE?

பொருள்:     திருத்தெளிச்சேரி என்ற ஒரு சிறந்த ஊரில் அருள் செய்து வரும் சிவபெருமானே! 
 உமது ஊரில் விண்ணில் வெண்மையான பவள நிறத்தை ஒத்த அழகிய சந்திரன் உலவிக் கொண்டிருக்கிறான். 
மிக உயரமான மரங்களைக் கொண்ட தோட்டங்களின் உச்சியிலும் அழகிய ஒளியினை வீசுகின்ற 
மணிகளால் இழைக்கப்பட்ட மாட மாளிகைகளின் உச்சியிலும் சந்திரன் தவழ்ந்து செல்லுகின்ற காட்சி 
மிகவும் அற்புதமானது. இத்துணை சிறந்த நகரில் இருந்து நீர் அடியார்களுக்கு அருள்புரிந்து வருகின்றீர். 
குவளை மலர் போன்ற கண்களை உடைய உம்முடைய தேவியாகிய உமையம்மையும் நீரும் ஒன்றாக 
வீற்றிருக்கும் சமயம் கவளம் சாப்பிடுகின்ற ஓர் ஆண் யானை மதமயக்கம் கொண்டு உங்கள் இருவரையும் 
நோக்கி விரைவாக வந்தது. அந்த யானையைக் கண்டவுடன் அம்மை நடுக்கலுற்றாள். உடனே நீர் 
யானையின் எதிரே சென்று உமது கைகளால் அழித்து அதன் தோலை உரித்து உமது உடலில்
போர்வையாகக் போட்டுக் கொண்டீர். நீர் எவ்வாறு உமது கைகளால் இந்தக் கொடிய வேலையைச் 
செய்தீர்? சொல்லுவீராக.

குறிப்புரை:     தவளம்- வெண்மை. அழகுமாம். வெண்பிறை என்றது. அடையின் பொருளின்றிப்
 பெயரளவாய் நின்றது போலும். திவள் அம் எனப் பிரித்து, திவள்கின்ற அழகிய எனப் பொருள் கொள்க.
 திவளல்- அசைதல், திகழ்தல் -விளங்குதல் ‘குவளைக் கண்ணி கூறன் காண்க'. துண்ணெனல்
 விரைவுக் குறிப்பு. கவளம் - யானை கொள்ளும் உணவுத் திரட்சி, மால்கரி-  மத மயக்கமும் துதிக்கையும்
உடைய யானை. கரத்தை உடையது கரி. யானையுரித்ததை உணர்த்திற்று. 

    All around the city of Thiru-th-theli-ch-cheri grand tall trees are in plenty. 
The white crescent moon traverses over these tall trees of the groves. These gardens surround 
the balconies of the palaces studded with all kinds of gems in the city. When Lord Civa, 
You and Your consort the lotus eyed Uma, were together a very large frenzied elephant,
rushed towards You to kill. Uma suddenly got frightened at the sight of the elephant 
approaching. At this stage, Oh Lord Civa! how You went near the mad elephant, killed it 
and covered Your body with its skin is an enigma. Please tell us.

1497.     கோடடுத்தபொழிலின்மிசைக்குயில்கூவிடும் 
    சேடடுத்ததொழிலின்மிகுதெளிச்சேரியீர் 
    மாடடுத்தமலர்க்கண்ணினாள்கங்கைநங்கையைத் 
    தோடடுத்தமலர்ச்சடையென்கொல்நீர்சூடிற்றே.        7

    கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும் 
    சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்! 
    மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கைநங்கையைத் 
    தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே?

    kOTu aTutta pozilinmicaik kuyil kUviTum 
    cETu aTutta tozilin miku teLiccEriyIr!
    mATu aTutta malarkkaNNinAL kagkai nagkaiyait 
    tOTu aTutta malarc caTai enkol nIr cUTiRRE?

பொருள்:     மரக்கொம்புகள் நிறைந்துள்ள பொழிலின்கண் இசைபாடும் குயில்கள் இருந்து 
கூவுகின்றன. பெருமையான தொழிலின்கண் ஈடுபட்டோர் மிகுதியாக வாழ்கின்றனர். அத்தகைய 
திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! செல்வம் நிறைந்தவளும், மலர் போன்று கண்ணினளும் 
ஆகியவள் கங்கை நங்கை. இதழ்கள் பொருந்திய கொன்றை மலர்கள் அணிந்த சடையின்கண் 
அவளைச் சூடியது ஏனோ? கூறுவீர்.

குறிப்புரை:     கோடு- கொம்பு. பொழில்- சோலை. சேடு - பெருமை. மாடு - பொன். செல்வம். 
கண்ணினாளும் கங்கையுமாகிய நங்கை. தோடு - இதழ். கங்கை சூடியதைக் கூறிற்று.

    In the outskirts of the city gardens of tall trees are many. Here the cuckoo birds 
sing melodiously and their music floats in the air. In this city, a large number of people 
are engaged in honourable occupations, deserving Lord Civan's blessings. Oh Lord Civa! 
You wear the beautiful petalled cassia flowers on Your matted hair. Tell me why You keep on 
the same hair the wealthy and lotus-eyed Ganges, the beautiful damsel.

1498.     கொத்திரைத்தமலர்க்குழலாள்குயில்கோலஞ்சேர் 
    சித்திரக்கொடிமாளிகைசூழ்தெளிச்சேரியீர் 
    வித்தகப்படைவல்லஅரக்கன்விறற்றலை 
    பத்திரட்டிக்கரநெரித்திட்டதும்பாதமே.        8

    கொத்து இரைத்த மலர்க் குழலாள், குயில்கோலம் சேர் 
    சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்! 
    வித்தகப் படை வல்ல அரக்கன் விறல்-தலை, 
    பத்து,- இரட்டிக் கரம், நெரித்திட்டது, உம் பாதமே?

    kottu iraitta malark kuzalAL, kuyilkOlam cEr 
    cittirak koTi mALikai cUz teLiccEriyIr! 
    vittakap paTai valla arakkan viRal-talai,
    pattu,iraTTik karam, nerittiTTatu, um pAtamE?

பொருள்:     வண்டுகள் விரிந்த மலர்க் கொத்துக்களைச் சூடிய கூந்தலினள் பார்வதி  தேவி.
 குயில் வடிவம் கொண்டு அவள் வழிபட்ட தலம் திருத்தெளிச்சேரி. ஓவியம் எழுதப்பட்டகொடிகள் 
கட்டப்பட்ட மாளிகைகள் சூழ்ந்தது அத்தலம். அங்கு வாழும் இறைவரே!  தவத்தால் பெற்ற வாள்போரில் 
வல்லவன் இராவணன். தலைகள் பத்தும் கைகள் இருபதும் கொண்டவன். அவனைக் கால் விரலால் 
நெரித்தது உம்பாதம் அன்றோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     தெளிச்சேரியில், தேவியார் குயிலுருவுற்றிருக்கின்றார் போலும்! மலர்க்கொத்து. 
(வண்டுகள்) இரைத்த மலர், குழல் - கூந்தல். அத்தலத்து மாளிகையின் மேலுள்ள கொடியின் சித்திரம்
 எனலாம். சித்திரம் - அழகுமாம். வித்தகப்படை - சிவன் தந்த வாள். அரக்கன்- இராவணன். விறல்- வலிமை. 
தலைபத்து, கரம்- கை. இரட்டி- இருபது. 'பத்துமோ ரிரட்டி தோளன்' (தி.4. ப.70 பா 10) இராவணனை 
அடக்கிய திறம் குறித்தது.

    In the city of Thiru-th-theli-ch-cheri, goddess Paarvathi Devi adds beauty to her
appearance by adorning her hair with flower bunches. Once, she took the form of a cuckoo bird 
in this city and worshipped Lord Civa. In Thiru-th-theli-ch-cheri, there are many tall palaces 
where flags with pictures are tied to the top portion of these buildings. These flags with 
pictures are attractive and in this appealing city, Oh Lord Civa! You are manifested. 
Once King Raavanan of Sri Lanka, with his strong ten heads and twenty hands, won a sword from 
You for the penance he observed and became the most chivalrous warrior of his time. Prompted by 
egoism and bravery he attempted to move, a little aside, Your abode on Mount Kailash. 
The mountain very slightly got tilted. Lord Civa understood the situation and pressed the mountain 
with His toe and crushed him under. Tell me how Your Holy Feet did that action.

1499.    காலெடுத்ததிரைக்கைகரைக்கெறிகானல்சூழ் 
    சேலடுத்தவயற்பழனத்தெளிச்சேரியீர் 
    மாலடித்தலம்மாமலரான்முடிதேடியே 
    ஓலமிட்டிட எங்ஙனமோருருக்கொண்டதே.        9

    கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல் சூழ் 
    சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்! 
    மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியே 
    ஓலம் இட்டிட எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே?

    kAl eTutta tiraikkai karaikku eRi kAnal cUz 
    cEl aTutta vayal pazanat teLiccEriyIr! 
    mAl aTittalam, mA malarAn muTi, tETiyE 
    Olam iTTiTa, egganam Or uruk koNTatE?

பொருள்:     காற்றால் எடுத்துக் கொணரப் பெறுவது கடலின் திரைகளாகிய கைகள். அவை 
கரையின்கண் வீசப்பெறும். கடற்கரையில் சோலைகள் சூழ்ந்து விளங்கும். சேல்மீன்கள் தவழும் 
வயல்களை உடைய மருதநிலம் பொருந்தியுள்ளது. அத்தகைய திருத்தெளிச்சேரியில் உறையும் 
இறைவனே! திருமால் அடியையும், தாமரை மலரில் உறையும் நான்முகன் முடியையும் தேட முற்பட்டனர். 
காணாது ஓலம் இட்டனர். நீர் எவ்வாறு ஒப்பற்ற பேருருக் கொண்டீர்? உரைப்பீராக.

குறிப்புரை:     கால்- காற்று, திரை- அலை. சேல் - மீன்வகையுள் ஒன்று. திருவடியைத் திருமாலும் 
திருமுடியைப் பிரமனும் தேடிக் காணாத அருமையைத் தெரிவித்தது.

    In the eastern side of Thiru-th-theli-ch-cheri, the Bay of Bengal makes it a seashore,
heavy wind over the sea, creates big waves in the sea. These hands of the sea waves dash against
the coast and backwaters are formed. In the beaches big gardens with rich and tall trees are many. 
Here paddy fields filled with water and carp fish are also many. Oh Lord Civa! You are manifested
in such a delightful city of Thiru-th-theli-ch-cheri. Thirumaal (one of the manifestations of 
Maha Vishnu) made a very serious effort to search for Lord Civan's holy feet by digging the earth 
for many years. Alas! He could not succeed in his efforts. Simultaneously Brahma (Naanmugan) 
residing in the lotus flower took the form of a swan and flew over the sky to find Your head. 
He flew for many many years, but could not succeed. They both realised their inability to see
Your holy feet and head but wailed in the end. Oh Lord Civa! How did You take this matchless,
biggest holy body of fiery column? Tell us how?

1500.     மந்திரந்தருமாமறையோர்கள்தவத்தவர் 
    செந்திலங்குமொழியவர்சேர்தெளிச்சேரியீர் 
    வெந்தலாகியசாக்கியரோடுசமணர்கள் 
    தந்திறத்தனநீக்குவித்தீரோர்சதிரரே.        10

    மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர், 
    செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்! 
    வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள் 
    தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே?

    mantiram taru mA maRaiyOrkaL, tavattavar, 
    centu ilagku moziyavar, cEr teLicEriyIr! 
    vental Akiya cAkkiyarOTu camaNarkaL 
    tam tiRattana nIkkuvittIr; Or catirarE?

பொருள்:     வேத மந்திரங்கள் ஓதுபவர் மறையோர்கள். பெரும் தவத்தை உடையவர்கள்.
 செந்து என்ற பண் போன்ற இனிய மொழி பேசுபவர் மகளிர். அத்தகையோர் வாழும் திருத்தெளிச்சேரியில் 
உறையும் ஒப்பற்ற சதுரரே! கருநிறங் கொண்ட சாக்கியர்களும் சமணர்களும் பேசும் சமய சிந்தனைகளை 
எவ்வாறு நீக்குவித்தீர்? அந்தச் சாமர்த்தியம் எவ்வாறு உமக்கு வந்தது? சொல்லுவீராக. 

குறிப்புரை:     மறையோர்கள், தவத்தவர் (தவத்தையுடையவர்) என்று பிரிக்க. செந்து - ஒரு பெரும் பண்.
செந்தினத் திசையறுபதமுரல் (தி.2 ப.82 பா.9) நல்ல செந்திசைப்பாடல் (தி.1 ப.114 பா.11) செந்து நேர்  மொழியார் 
(தி.2 ப.51 பா.11) மொழியவர் - சொல்லுடைய மகளிர், வெந்தல் - எரிந்தகட்டை. திறம் பற்றிய  உவமை. 
ஆகிய - உவம உருபு. அது சமணர்க்கும் அடையாகும். 'காரமணர்' என்ற வழக்குணர்க. சினமுமாம். 
திறத்தன - வகையின. நீக்குவித்தீர் - நீங்கச் செய்தீர். சதிரர் - மேம்பட்டவர், சாமர்த்தியர்.

    In this famous city of Thiru-th-theli-ch-cheri learned people who are exponents 
of vedas live in large numbers. They always utter the sacred mantras in the proper tone. 
Several men, good at penance, also live in this city. There are damsels, who are well trained 
in musical mode called Chendu (செந்து) and they play it very often. Like this many good people 
with different associations live in this city. Oh Lord Civa! You are manifested in such a 
great city as an unparalleled sagacious person. There You have proved Your capability in 
defeating the red-ochred Jains and the Buddhists. What an omnipotence it is!

1501.     திக்குலாம்பொழில்சூழ்தெளிச்சேரியெஞ்செல்வனை 
    மிக்ககாழியுள்ஞானசம்பந்தன்விளம்பிய 
    தக்கபாடல்கள்பத்தும்வல்லார்கள்தடமுடித் 
    தொக்கவானவர்சூழஇருப்பவர்சொல்லிலே.        11

    திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி எம் செல்வனை, 
    மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய 
    தக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித் 
    தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே.

    tikku ulAm, pozil cUz, teLiccEri em celvanai,
     mikka kAziyuL njAnacampantan viLampiya 
    takka pATalkaL pattum vallArkaL, taTa muTit 
    tokka vAnavar cUza iruppavar, collilE.

பொருள்:     எட்டுத் திசைகளிலும் பொழில் சூழ்ந்து இலங்கும் திருத்தெளிச்சேரியில் உறையும் 
எம் செல்வரே! உம்மீது புகழ்மிக்க காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய 
பதிகம் இதுவே. பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் அடையும் பயன் என்ன? பெரிய முடிகளைச் 
சூடிய வானவர்கள் சூழ்ந்து இருப்பவர்களைச் சுற்றி ஓதவல்லவர்கள் பாடிக்கொண்டே இருப்பார் ஆவர்.

குறிப்புரை:     திக்கு - எட்டு திக்குகளிலும், மிக்க - எல்லா உலகிலும் மேம்பட்ட தட - பெரிய. 
தொக்க- ஒன்றுகூடிய. வல்லார்கள்- எழுவாய். இருப்பவர்- பயனிலை. சொல்லில் என்பது சொல்லுங்கால் 
என்றவாறு. சொல்லில், பத்தும் வல்லவர் வானவர்சூழ இருப்பவர் ஆவர் என்க.

    In all the eight directions of Thiru-th-theli-ch-cheri, gardens are plenty with tall
trees and flowers and beautify the city. Sri Thiru-gnana-Sambandar born in Seerkazhi,
the very famous city in the universe, sang on our Lord Civan of Thiru-th-theli-ch-cheri 
who is manifested in the city, ten most appealing songs in appropriate melodious tone.
Those devotees residing in this city who are experts in singing all these ten songs
according to vedic rules in proper tone will be great, i.e., they (their souls) will go 
to the devas' world and be respected by them. These devotees will be surrounded by the 
congregation of devas who wear flowers and crowns.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            3ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 3rd Hymn


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 140                    பதிக எண்: 4

4. திருவான்மியூர்                         4. THIRU-VAAN-MIYOOR
பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam - Vina Urai


திருத்தல வரலாறு

    சென்னையிலுள்ள தலம். வான்மீக முனிவர் பூசித்த பதியாதலால் இப்பெயர் பெற்றது. இது 
மயிலாப்பூருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. இது தொண்டை நாட்டின் இருபத்தைந்தாவது 
தலமாகும். இறைவர் திருப்பெயர் பால்வண்ணநாதர். இறைவி திருப்பெயர் சொக்கநாயகி. இலிங்கத் திருமேனி 
சற்று வடபக்கமாகச் சாய்ந்திருக்கின்றது. வான்மீகி முனிவர்க்கு இவ்வூரில் தனிக்கோயில் இருக்கின்றது. 
இவ்வூர்த் தலபுராணம் பூவை கல்யாண சுந்தர முதலியார் அவர்களால் எழுதப்பெற்றது. அச்சில் வெளிவந்துள்ளது.

பதிக வரலாறு

    அழுது உலகை வாழ்வித்த ஆளுடைய பிள்ளையார் திருமயிலைப் பதியில் அமர்ந்தருளிய நாளில், 
பல தலங்களை வணங்கிச் சென்று நிறைகாதலருத்தியொடும் திருவான்மியூரை அணைந்து, திருத்தொண்டர் 
எதிர்கொள்ளச் சென்று, திருக்கோபுரத்தை வணங்கி வலங்கொண்டு உள்ளணைந்து, பிறவி மருந்தான 
பெருந்தகையை வினாவுரைச் சொன்மாலையாகப் பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1502.    கரையுலாங்கடலிற்பொலிசங்கம்வெள்ளிப்பிவன் 
    திரையுலாங்கழிமீனுகளுந்திருவான்மியூர் 
    உரையுலாம்பொருளாயுலகாளுடையீர்சொலீர்
    வரையுலாமடமாதுடனாகியமாண்பதே.        1

    கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன் 
    திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர் 
    உரை உலாம் பொருள்ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர் -
    வரை உலாம் மடமாது உடன்ஆகிய மாண்புஅதே?

    karai ulAm kaTalil poli cagkam veL ippi van
    tirai ulAm kazi mIn ukaLum tiru vAnmiyUr; 
    urai ulAm poruL Ay ulaku AL uTaiyIr! colIr-                     
    varai ulAm maTamAtu uTan Akiya mANpu atE?

பொருள்:     கடலின் கண் விளங்குவது சங்குகளும், வெண்ணிறமான சிப்பிகளும் ஆகும். அவை 
கரையில் வந்து உலாவுமாறு அலைகள் வீசுகின்றன. அவ்வலைகளை உடைய கழிகளில் மீன்களும் பிறழ்கின்றன. 
அத்தகைய தலம் திருவான்மியூர். அங்கே எல்லோராலும் புகழப்படும் பொருளாய் விளங்கும் இறைவரே!  
உலகம் அனைத்தையும் ஆட்சி புரிபவரே! மலைமாது எனப்படுபவள் பார்வதி தேவி. அவளை ஓர் உடலில் 
உடனாகக் கொண்டுள்ள மாண்பிற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை:     கடலில் விளங்கும் சங்குகளும் வெள்ளையிப்பிகளும் கரையில் வந்து உலாவும்படி
 வலியனவாக அலைகள் வீசுகின்றன. அவ்வலைகளையுடைய கழிகளில் மீன்கள் பிறழ்கின்றன. உகளல்- பிறழ்தல். 
அத்தகைய வளமுடைய திருவான்மியூரில் எழுந்தருளிய சிவபிரானை முன்னிலையாக்கி வினாவியருளினார். 
'சொற்பொருளாயும் எல்லாம் உலகங்களையும் ஆளுபவராயும் இருக்கும் சுவாமீ ! மலைமங்கையுடனாகிய 
மாட்சியை மொழிவீர்' என்றார். மாதியலும் பாதியனான உண்மைகளை  வினாவிற்று இத்திருப்பாடல். 
சொல் - உமை. பொருள் - சிவம். உரையுலாம் பொருள் - மங்கை பங்கன்; அம்மையப்பன்.

    The Bay of Bengal borders on the eastern side of the city of Thiru-vaan-miyoor.
The strong waves of this sea bring along with the sea water glittering conches and the white 
coloured oysters in plenty to the shore. Also the waves bring fishes of various types and 
they leap into the backwaters. All the people in the world praise You ; Oh Lord Civa! You 
are the world and its meaning. You rule over the whole world. You keep Your consort the 
daughter of the Himalayan mountain - goddess Uma Devi on half of Your body on the left side 
as concordance. Is it for Your virtuous dignity You keep Your consort like this? Please 
tell me the reason!

1503.     சந்துயர்ந்தெழுகாரகில்தண்புனல்கொண்டுதம் 
    சிந்தைசெய்தடியார்பரவுந்திருவான்மியூர்ச் 
    சுந்தரக்கழல்மேற்சிலம்பார்க்கவல்லீர்சொலீர் 
    அந்தியின்னொளியின்னிறமாக்கியவண்ணமே.        2

    சந்து உயர்ந்து எழு கார் அகில் தண்புனல் கொண்டு, தம் 
    சிந்தை செய்த அடியார் பரவும் திருவான்மியூர்,
     சுந்தரக்கழல்மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர்! சொலீர் - 
    அந்தியின்(ன்) ஒளியின் நிறம் ஆக்கிய வண்ணமே?

    cantu uyarntu ezu kAr akil taNpunal koNTu, tam 
    cintai ceytu aTiyAr paravum tiru vAnmiyUr, 
    cuntarakkazalmEl cilampu Arkka vallIr! colIr- 
    antiyin(n) oLiyin niRam Akkiya vaNNamE?                            

பொருள்:     திருவான்மியூரில் அடியார்கள் சந்தனமும் உயர்ந்து வளர்ந்த கரிய அகிலும், குளிர்ந்த 
அபிடேகத் தீர்த்தம் ஆகியவற்றைக் கொண்டு வந்து தியானம் புரிந்து ஆட்டுவர். தமது சிந்தையில் 
இறைவரை நினைந்து பரவுவர். அத்தகைய தலம் திருவான்மியூர். அங்கே வலது திருவடியில் அழகிய 
கழல் அணிந்துள்ளீர். இடது திருவடியில் சிலம்பு விளங்குகிறது. இவை ஆரவாரிக்கும் திருவடிகளை 
உடையவரே! மாலை அந்தியின் ஒளி போன்ற செவ்வண்ணத்தை உம் நிறமாகக் கொண்ட காரணம் 
யாதோ? சொல்வீராக.

குறிப்புரை:     திருவான்மியூரில் அடியார், சந்தனமும், அகிலும் அபிடேகத் தீர்த்தமும் கொண்டு, தியானம்    
புரிந்து வழிபடுஞ்சிறப்பும், அழகிய திருவடியில் சிலம்பும் கழலும் கட்டவல்லராதலும், அந்தி வண்ணராதலும் 
இதிற் குறிக்கப்பட்டன. சந்து - சந்தனம். கார் அகில் - கரிய அகிற்கட்டை, (புகைத்தற்குரியது). கழல்- வெற்றி 
குறித்து வலக்காலில் அணிவதொரு படை, எருதின் கொம்பு போன்ற வடிவுங்கூர்மையும் அன்றி அருப்புத் 
தொழிலும் அமைந்தது. 'தாள் களங்கொளக் கழல் பறைந்தன', கொல்லேற்றின் மருப்புப் போன்றன. 
சுந்தரம் - அழகு. அந்தி - மாலையந்தி, வண்ணம் - அழகு.

    The devotees of Thiru-vaan-miyoor collect sandalwood sticks and eaglewood sticks and 
cool water, and give You the sacred bath meditating on Your glory. Then they extol Your 
greatness. In such an atmosphere Oh Lord Civa! You are manifested wearing on Your right leg 
the victorious warrior's bracelet and on the left leg the ringing anklet. Your feet are holy 
and are worshipped by one and all. You have turned the colour of Your body into red like that 
of the twilight in the evening. What is the purpose, behind the changed colour of Your body? 
Kindly tell me.

1504.     கானயங்கியதண்கழிசூழ்கடலின்புறம் 
    தேனயங்கியபைம்பொழில்சூழ்திருவான்மியூர்த் 
    தோனயங்கமராடையினீரடிகேள்சொலீர் 
    ஆனையங்கவ்வுரிபோர்த்தனலாடவுகந்ததே.        3

    கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம் 
    தேன் அயங்கிய பைம்பொழில் சூழ் திரு வான்மியூர், 
    தோல் நயங்கு அமர் ஆடை யினீர்! அடிகேள்! சொலீர் - 
     ஆனை அங்க(வ்) உரி போர்த்து, அனல் ஆட உகந்ததே?

    kAn ayagkiya taNkazi cUz kaTalin puRam 
    tEn ayagkiya paimpozil cUz tiru vAnmiyUr,
    tOl nayagku amar ATaiyinIr! aTikEL! colIr- 
    Anai agka(v) uri pOrttu, anal ATa ukantatE?


பொருள்:     திருவான்மியூரின் கடற்கரைகளில் சோலையும் உப்பங்கழிகளும் சூழ்ந்து விளங்குகின்றன.
 அதன் புறத்தே தேன் சொரியும் பசுமையான பொழில்களும் சூழ்ந்து விளங்கும். அங்கு புலித்தோலை 
ஆடையாகக் கொண்டு எழுந்தருளிய அடிகளே. நீர் யானையின் தோலை உரித்துப் போர்த்தியும் கையில் 
நெருப்பை வைத்துக் கொண்டும் ஆடலை விரும்பியது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை:     கான்- காட்டில், அயங்கியகழி - பள்ளமானகழி, அசங்குதல் என்பதன்              
மரூஉவாக் கொண்டுரைத்தலுமாம். கான், கழி, கடல் ஆம் மூன்றன் வேறுபாடும் ஈண்டு உணர்க.         
தேன் அயங்கிய-  தேன் சொரிந்த பொழில்- சோலை, தோல்- நயங்கு+அமர் +ஆடை நயங்கு அமர் 
தோலாடையினீர் என்றலுமாம். ஆடையினீர் - உடையை அணிந்தவரே, நயங்க- நசங்க முன்னைய 
நிலைமை குலைய (ப.162 11: 211:4) அடிகேள்- அடிகளென்பதன் விளியுருவம். அங்கம் உரி என்பது 
அங்கவ்வுரி என்று விகாரமாயிற்று. அங்கம் - உடம்பு. உரி - தோல், தீயாடியதை வினாவினார். 
ஆடல் என்றிருந்ததோ?  'தோனயங்கம ராடையினீர்' என்பதற்குச் செம்பொருள் கொள்ளல் எளிதன்று. 
தோல் ஆடை இரண்டற்கும் இடையில் உள்ளதைப் பிரித்தல் எவ்வாறு? நயம் கமர் என்னின் 'கமர்' 
என்பதன் பொருள் யாது? நயங்கு அமர் என்னின் 'நயங்கு' என்பது தமிழில் இல்லை. தோன் எனப் 
பிரித்தல் ஒவ்வாது.

    In Thiru-vaan-miyoor by the side of the seashore, there are forest like gardens;
also cool and deep backwaters. In these green gardens nectar filled flower trees are in 
large numbers. In such a graceful city of Thiru-vaan-miyoor, Oh Lord Civa ! You are manifested 
wearing the tiger skin on Your loins. You cover Your body also with the elephant's skin and 
perform that cosmic dance with fire on one hand. Why do You do so? Kindly tell me the reason.

1505.    மஞ்சுலாவியமாடமதிற்பொலிமாளிகைச் 
    செஞ்சொலாளர்கள்தாம்பயிலுந்திருவான்மியூர்த் 
    துஞ்சுவஞ்சிருளாடலுகக்கவல்லீர்சொலீர் 
    வஞ்சநஞ்சுண்டுவானவர்க்கின்னருள்வைத்ததே.        4

    மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகைச் 
    செஞ்சொலாளர்கள் தாம் பயிலும் திரு வான்மியூர், 
    துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர்! சொலீர் - 
    வஞ்ச நஞ்சு உண்டு, வானவர்க்கு இன்அருள் வைத்ததே?

    manjcu ulAviya mATa matil poli mALikaic 
    cenjcolALarkaL tAm payilum tiru vAnmiyUr, 
    tunjcu anjcu iruL ATal ukakka vallIr! colIr-
    vanjca nanjcu uNTu, vAnavarkku in aruL vaittatE?

பொருள்:     திருவான்மியூரில் உள்ள மாடமாளிகைகளின் உயர்வு மேகங்கள் தங்கும் 
அளவினதாயிருந்தது. மதில்களையும், அழகிய மாளிகைகளையும் கொண்டது. இனிய சொற்களைப் 
பேசுவோர் வாழ்வதாய் விளங்குவது. எல்லாரும் உறங்கும் கரிய இருட்போதில் ஆடலை விரும்பி 
மேற்கொள்ளுபவரே! வன்மையை உடையவராய் இலங்கும் இறைவனே! கரிய விடத்தை நீர் உண்டு 
தேவர்களுக்கு இனிய அருள் வழங்கியது ஏனோ? சொல்வீர். 

குறிப்புரை:     பொருண்மொழி வல்லார் வாழ்ந்தவூர். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதர், 
நஞ்சுண்டு வானோரைக் காத்தருளிய திறத்தை வினாவினார். மஞ்சு - மேகம், செஞ்சொல் - பொருள் 
பொருந்திய செவ்விய சொல். துஞ்சுதல் - துயிலுதல். இருள் தூங்கும்பொழுது ஆடல். வஞ்சு - வஞ்சம், கறுப்பு. 
வஞ்சிருள் - காரிருள். வஞ்சநஞ்சு - கருவிடம். பயிலும் - பெருகியிருக்கும். 

    In the city of Thiru-vaan-miyoor, mansions, forts and compound walls - all these 
are very tall. Therefore, the clouds traverse over the top portion of these mansions and
other buildings. The devotees living in this town always speak pure words gently and sweetly. 
These scholars go to worship Lord Civan in the temple. Oh Lord Civa! You do Your cosmic dance 
in the city during dark midnight. Oh Lord Civa! Tell me how you drank the poison that came 
out of the sea while the devas and asuras were churning. You know well that it is a highly 
destructive poison. Yet You drank it and rescued the devas and the universe from total 
destruction. Kindly tell me why You bestowed grace on them! 

1506.     மண்ணினிற்புகழ்பெற்றவர்மங்கையர்தாம்பயில் 
    திண்ணெனப்புரிசைத்தொழிலார்திருவான்மியூர்த் 
    துண்ணெனத்திரியுஞ்சரிதைத்தொழிலீர்சொலீர் 
    விண்ணினிற்பிறைசெஞ்சடைவைத்தவியப்பதே.        5

    மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில் 
    திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர்திரு வான்மியூர், 
    துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர் - 
    விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே?

    maNNinil pukaz peRRavar magkaiyartAm payil 
    tiNNenap puricait tozil Ar tiru vAnmiyUr,
    tuNNenat tiriyum caritait tozilIr! colIr-                 
    viNNinil piRai cenjcaTai vaitta viyappu atE?

பொருள்:     திருவான்மியூர் மங்கையர் கற்பு முதலியவற்றாலும் சிவபத்தியாலும் உலகம் புகழப் 
பெற்றிருந்தனர். அவ்வூர் மதில் உறுதியும் வேலைப்பாடும் நிறைந்தது. எல்லாரும் வியப்படையும் 
வண்ணம் பலியேற்கச் செல்லும் தொழிலை மேற்கொண்டு உறைபவரே! நீர்  வானத்தில் விளங்கும் 
வெண்பிறையை உம் செஞ்சடைமேல் வைத்துள்ளீர். அவ்வியப்புடைய செயலை ஏன் செய்தீர்? சொல்வீராக. 

குறிப்புரை:     திண்ணெனல் - உறுதிப்பாடு. புரிசை - மதில். தொழில் -வேலைப்பாடு. ஆர்தல்-நிறைதல். 
துண்ணெனல் - குறிப்புமொழி. திரியுஞ்சரிதைத் தொழில் - பிச்சையேற்கச் செல்லுந்தொழில்
(சிந்தாமணி.3072. 3 உரை) இதில் பா.9 இன் வினாக் காண்க. பிறை - பிறத்தலுடையது. பிறை சூடியதை
வினாவினார். செஞ்சடை என்றதால் வெண்பிறை எனக் கொள்ள வைத்தார். விண்பிறையைச் செஞ்சடையில் 
வைத்தது வியப்பாதல் அறிக. 

    The forts in the city of Thiru-vaan-miyoor built of strong materials with highly skilled 
labour, stand very firmly for many many years. In this city beautiful ladies of very fine chastity, 
character and discipline live in large numbers. They are praised by all the people in the city. 
Oh Lord Civa! You are manifested in this town; but You go round the cosmos begging with a bowl 
of human skull. All the people of the town wonder at Your begging. Oh Lord Civa! Tell me why 
You retain the white crescent moon of the sky, on Your red entangled hairlock which makes 
people wonder at it.

1507.     போதுலாவியதண்பொழில்சூழ்புரிசைப்புறம் 
    தீதிலந்தணரோத்தொழியாத்திருவான்மியூர்ச் 
    சூதுலாவியகொங்கையொர்பங்குடையீர்சொலீர் 
    மூதெயில்லொருமூன்றெரியூட்டியமொய்ம்பதே.        6

    போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம் 
    தீதுஇல் அந்தணர் ஓத்து ஒழியாத் திரு வான்மியூர், 
    சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர்! சொலீர் - 
    மூதெயில்(ல்) ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே?

    pOtu ulAviya taNpozil cUz puricaip puRam 
    tItu il antaNar Ottu oziyAt tiru vAnmiyUr,
    cUtu ulAviya kogkai orpagku uTaiyIr! colIr- 
    mUteyil(l) orumUnRu eriyUTTiya moympu atE?

பொருள்:     மலர்கள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்தது. மதில்களைப் புறத்தே உடையது. 
வேதபாடசாலை, வீடு, சத்திரம் முதலியவற்றில், மாசற்ற அந்தணர்கள் வேதங்களை நிறுத்தாமல் 
அத்தியாயனம் செய்து வரும் சிறப்புடையது திருவான்மியூர். அத்தகைய திருவான்மியூரில், சூதாடு 
கருவி போல வடிவத்தை உடைய தனங்களைக் கொண்ட பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு 
எழுந்தருளி இருப்பவரே! பழமையான முப்புரங்களை எரிசெய்து அழித்த உமது வீரச் செயலுக்குக் 
காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை:     போது - பூக்கும் பருவத்தது. பொழில்- சோலை. புரிசைப்புறம் - மதிற்புறத்தில் உள்ள 
வேதபாடசாலை, வீடு, சத்திரம் முதலியவற்றில், மாசற்ற அந்தணர் வேதாத்திய நயம் ஒழியாச் 
சிறப்புடையது திருவான்மியூர். சூது - சூதாடுதற்கருவியாகிய வல்லுக்கு ஆகுபெயர். கொங்கைக்கு
உவமை. கொங்கை - உமாதேவி. ஆகு பெயர். முதுமை + எயில்= மூதெயில். மொய்ம்பு - வலிமை. 
திரிபுர சங்காரத்தை வினாவினார்.

    The city of Thiru-vaan-miyoor is surrounded by forest like groves surrounded by
the city fort. In the groves buds just before blooming along with the breeze add to the 
coolness of the place. Here blemishless Brahmins recite vedas ceaselessly. Oh Lord Civa! 
You have manifested Yourself in this city along with goddess Paarvathi Devi with breasts 
looking like gamblers' conical pieces. You burnt and destroyed the three ancient aerial 
cities flying in the air. Tell me the reason for such a valorous deed!

1508.     வண்டிரைத்தடம்பொழிலின்நிழற்கானல்வாய்த் 
    தெண்டிரைக்கடலோதமல்குந்திருவான்மியூர்த் 
    தொண்டிரைத்தெழுந்தேத்தியதொல்கழலீர்சொலீர்
    பண்டிருக்கொருநால்வர்க்குநீருரைசெய்ததே.        7

    வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த் 
    தெண்திரைக் கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர், 
    தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல்கழலீர்! சொலீர் 
    பண்டு இருக்கு ஒருநால்வர்க்கு நீர் உரைசெய்ததே?

    vaNTu iraitta taTam pozilin nizal kAnalvAyt
    teNtiraik kaTal Otam malkum tiru vAnmiyUr,
    toNTu iraittu ezuntu Ettiya tolkazalIr! colIr-
    paNTu irukku orunAlvarukku nIr uraiceytatE?

பொருள்:     திருவான்மியூரைச் சுற்றி வண்டுகள் ஒலிக்கின்ற பெரிய சோலைகள் உள்ளன. 
 அதன் நிழலிலும், கானலிலும் தெளிந்த அலைகள் மோதிக் கொண்டிருக்கின்றன. அங்கே அடியவர்கள் 
சிவநாமங்களைச் சொல்லித் துதிப்பர். பழமையான கழல்களை அணிந்துள்ள இறைவரே! முற்காலத்தே 
நீர் சனகாதியர் நால்வருக்கு (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) மட்டும் சிவஞானத்தை 
உபதேசித்தது ஏனோ? கூறுவீர்.

குறிப்புரை:     இரைத்தல் -ஒலித்தல். திரை- அலை. ஓதம் - நீர், தொண்டு -தொண்டர், இரைத்து - சிவநாம 
தோத்திரஞ்செய்து, பண்டு- கல்லாலின் நிழற்கீழ் உபதேசித்த அன்று. இருக்கு - சிவஞானோபதேசம். வேதமுமாம். 
நால்வர் - சனகாதியர். தட்சிணாமூர்த்தியாய் இருந்து உபதேசித்ததை வினாவினார்.                

    The bees boom becomes melodies in the fertile big groves in the coastal area of 
Thiru-vaan-miyoor. The sea waves, so clear and pure, bring coolness to the shores. Oh Lord Civa! 
Your age-old anklets are worshipped loudly by Your devotees of this city repeating Your name 
as Om! Sivaaya Namaha:, which is the mystical word (Mantra - மந்திரம்). In ancient days, as 
Dakshinamoorthy You sat under the shadow of stone banyan tree and transmitted divine knowledge 
(மெய்ஞ்ஞானம்) (Civa Gnaanam and other Vedas) through Your gestures only to the four saints 
Sanakar, Sananthanar, Sanathanar and Sanarkumarar. Please tell me why You did so.

1509.     தக்கில்வந்ததசக்கிரிவன்றலைபத்திறத் 
    திக்கில்வந்தலறவ்வடர்த்தீர்திருவான்மியூர்த் 
    தொக்கமாதொடும்வீற்றிருந்தீரருளென்சொலீர் 
    பக்கமேபலபாரிடம்பேய்கள்பயின்றதே.        8

    தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்து இறத் 
    திக்கில் வந்து அலற(வ்) அடர்த்தீர்! திரு வான்மியூர்த் 
    தொக்க மாதொடும் வீற்றிருந்தீர்! அருள் என்? சொலீர் 
    பக்கமே பலபாரிடம் பேய்கள் பயின்றதே?

    takkil vanta tacakkirivan talaipattu iRat 
    tikkil vantu alaRa(v) aTarttIr! tiru vAnmiyUrt
    tokka mAto Tum vIRRiruntIr! aruL en colIr 
    pakkamE palapAriTam pEykaL payinRatE?

பொருள்:     இலங்கை மன்னனாகிய இராவணன் தகுதியற்ற நெறியில் கயிலை மலையைப் 
பெயர்க்க முற்பட்டான். அவன் தலைகள் பத்தும் பல திசைகளிலும் வெளிப்பட்டன. தலைகள் கயிலையின்கீழ் 
நசுக்கப்பட்டபோது அவன் அலறுமாறு அவனை அடர்த்தவரே! திருவான்மியூரில் தன் திருமேனியோடு 
இணைந்த உமையம்மையாரோடும் வீற்றிருந்து அருளியவரே! பல பூதகணங்களும், பேய்க் கணங்களும் 
உம்மைச் சூழ்ந்து பயிலக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை:     தகு இல் - தகுதியில்லாத நெறியினில், தசக்கிரீவன் - பத்துத்தலை இராவணன். 
கிரீவம் - கழுத்து. திருக்கயிலையை எடுத்தபோது அடர்த்த வரலாறு. இதில் இரண்டு முறை விளித்ததை 
அறிக. பலபாரிடம் - பூதகணம்.

    Oh Lord Civa! You have manifested Yourself in Thiru-vaan-miyoor by keeping
Your consort Uma Devi on the left half of Your body and grace all Your devotees. The
king Raavanan of Sri Lanka impertinently, with excessive egoism came to Your abode-
Mount Kailash and tried his best to shift the mountain a little to the other side. He
failed in his attempt and got crushed under the mountain with his ten heads. He cried
aloud through his ten heads towards all directions. Oh Lord Civa! You slightly pressed
the mountain with Your toe after which he suffered and begged Your pardon. Many aids of 
Yours- the dwarf goblins and ghosts come near You to help You in this avocation. 
Oh Lord Civa! Please tell me the reason why Your goblins and ghosts wish to follow 
Your avocations. 

1510.     பொருதுவார்கடலெண்டிசையுந்தருவாரியால் 
    திரிதரும்புகழ்செல்வமல்குந்திருவான்மியூர்ச் 
    சுருதியாரிருவர்க்குமறிவரியீர்சொலீர் 
    எருதுமேல்கொடுழன்றுகந்தில்பலியேற்றதே.        9

    பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால் 
    திரிதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர், 
    சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர்! சொலீர் 
    எருதுமேற்கொடு உழன்று, உகந்து இல் பலி ஏற்றதே?

    porutu vArkaTal eN ticaiyum taru vAriyAl-
    tiritarum pukaz celvam malkum tiru vAnmiyUr,
    curutiyAr iruvarkkum aRivu ariyIr! colIr-
    erutumERkoTu uzanRu, ukantu il pali ERRatE?

பொருள்:     பெரிய கடல் எட்டுத் திசைகளில் இருந்தும் முத்து, பவளங்களைக் கொண்டு வந்து தரும். 
அவ்வளங்களால் பரவிய புகழ், செல்வம் ஆகியன நிறைந்தது திருவான்மியூர். அங்கே வேதங்களை ஓதி 
திருமாலும் பிரமனும் மகிழ்வர். அந்த இருவர்க்கும் அறிதற்கரியவராய் விளங்கும் இறைவரே! எருதின்மேல் 
ஏறி உழன்று பல இடங்கட்கும் செல்வீர். மகிழ்வோடு சென்று பலியேற்றற்குரிய காரணத்தைக் கூறுவீராக.

குறிப்புரை:     பொருது- அலைகள் மோதி, வார்- நீளும். வாரி- வருவாய். புகழ் செல்வம்- வினைத்தொகையும் 
உம்மைத் தொகையும் ஆக நின்றது அறிக. சுருதியார் - வேதங்களில் கூறப் பட்ட அயனும் அரியும், சிவபரத்துவங் 
கேட்டவர் எனலுமாம்.  ஆனேறிச் சில்பலிக்குத் திரிந்த வரலாறுணர்த்தினார். இதனை, 5இல் விளியாற் 
குறித்தது உணர்க.

    Very big waves of the sea bring pearls and corals from all directions to the shores 
of Thiru-vaan-miyoor. These stones are of all sizes and shapes and become very famous all 
over the world and the city abounds in such wealth. Oh Lord Civa! You are unknown to both 
Maha Vishnu and Brahma who happily recite the vedas daily; You become a riddle to both. 
However, You ride on Your Bull, go round the cosmos and beg for alms from Your devoted 
ladies. Please tell me the reason for Your begging like this.

1511.    மைதழைத்தெழுசோலையின்மாலைசேர்வண்டினம் 
    செய்தவத்தொழிலாரிசைசேர்திருவான்மியூர் 
    மெய்தவப்பொடிபூசியமேனியினீர்சொலீர் 
    கைதவச்சமண்சாக்கியர்கட்டுரைக்கின்றதே.        10

    மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டுஇனம் 
    செய் தவத்தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் 
    மெய் தவப் பொடி பூசிய மேனியினீர்! சொலீர் - 
    கைதவச் சமண்சாக்கியர் கட்டுரைக்கின்றதே?

    mai tazaittu ezu cOlaiyil mAlai cEr vaNTu inam 
    cey tavattozilAr icai cEr tiru vAnmiyUr 
    mey tavap poTi pUciya mEniyinIr! colIr-
    kaitavac camaNcAkkiyar kaTTuraikkinRatE?

பொருள்:     திருவான்மியூரில் கரிய மேகங்களால் சூழப்பட்ட சோலைகள் உள்ளன. மாலை 
நேரத்தில் இச்சோலைகளை நோக்கி வண்டுகள் கூட்டம் கூட்டமாக ரீங்காரம் செய்து கொண்டு 
சோலைப்பூக்களில் உள்ள தேனைக் குடிக்க வருகின்றன. இந்த வண்டுகளின் ரீங்காரம் அந்தணர்கள் 
இராகத்தோடு வேதங்களை ஓதிக்கொண்டிருக்கும் ஓசையுடன் கலந்து அவைகளும் இசைபாடுவது 
போல் தோன்றுகிறது. மேனிமீது மிகுதியாக வெண்பொடி அணிந்த திருமேனியை உடைய 
சிவபெருமானே! வஞ்சனையை உடைய சமணர், சாக்கியர் உம்மீது பொய்யுரை கூறிப் பழித்துரைக்கக் 
காரணம் யாதோ? கூறுவீர்.

குறிப்புரை:     மை- மேகம். கரியது என்னும் பொருள்தரும் மைப்பு என்ற பெயரின் மரூஉவாகிய 
மப்பு என்னும் வழக்குமொழியை உணர்க. மாலை- ஈண்டுப்பொழுது, செய்தவம் ஆகிய தொழிலுடைய 
அந்தணர். முனிவர் இசை - வேதாகம முழக்கம். புகழெனல் பொருந்தாது. மெய்தவப் பொடிபூசல்-
 பால்வண்ண நாதர் என்னும் பெயர்க்கொப்பத் திருமேனியில் தவக்கோலத்தின் குறியாகிய திருநீற்றைப்
பூசுதல். வழிபடுவார் உடம்பு (பிறவி) ஒழிய வெண்பொடி பூசுதல் எனினுமாம். கைதவம் - வஞ்சகம். 
சமண்- சமணர். கட்டுரைத்தல் - கட்டிச்சொல்லும் பொய்யுரை, புறப்புறச் சமயத்தார் பொருளில்லாத 
மொழியைக்  குறித்த வினா இது.

    The deep dark clouds rise above the tall groves around the city of Thiru-vaan-miyoor. 
In the evening hours bees in large numbers gather, humming round the flowers for honey. 
This humming resembles the reciting of the vedas in pure note by the Brahmins for penance.
Oh Lord Civa! You appear in this city smearing the holy white ashes all over Your body, 
and appear graceful. Oh Lord Civa! Please tell me the reason why the cunning Jains and 
Buddhists attribute much falsehood to You.

1512.     மாதொர்கூறுடைநற்றவனைத்திருவான்மியூர் 
    ஆதியெம்பெருமானருள்செய்யவினாவுரை 
    ஓதியன்றெழுகாழியுள்ஞானசம்பந்தன்சொல் 
    நீதியால்நினைவார்நெடுவானுலகாள்வரே.        11

    மாது ஓர் கூறுஉடை நல்-தவனைத் திரு வான்மியூர் 
    ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை 
    ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் 
    நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.

    mAtu Or kURu uTai nal-tavanait tiru vAnmiyUr 
    AtiemperumAn aruLceyya, vinAurai 
    Oti, anRu ezu kAziyuL njAnacampantan col 
    nItiyAl ninaivAr neTuvAn ulaku ALvarE.                        

பொருள்:     திருவான்மியூரில் உறையும் ஆதியாகிய சிவபிரான் உமையம்மையைத் தமது 
உடம்பில் ஒரு கூறாக உடையவர். நல்ல தவத்தின் வடிவானவர். அவர் அருளிச் செய்தற் பொருட்டு 
வினாவி இதனை ஓதினார் ஞான சம்பந்தர். ஊழி முடிவாகிய அக்காலத்தே மிதந்து எழுந்தது காழிப்பதி. 
அதனுள் தோன்றியவன் ஞான சம்பந்தன். அவன் சொல்லால் எழுந்தது இப்பதிகம். இதனை முறையோடு 
ஓதி நினைபவர் நீண்ட வானுலகை ஆள்வர்.

குறிப்புரை:     நல்தவன்- நல்ல தவத்தன். செய்ய- செய்யற் பொருட்டு. வினாவுரை - இறந்தகால 
வினைத்தொகை. உரையை ஓதி என்க. நீதி- சைவாசாரத்தில் விதித்த ஒழுங்கு. நெடுவானுலகு-  திருவடி நீழல் 
அருள்செய்த என்ற பாடம் பின்னோர் படைத்தது. அது பொருந்தாது.

    Oh Lord Civa! the ancient and the first and foremost, You reside in Thiru-vaan-miyoor 
along with Your consort Uma Devi kept on Your left side. To enable Him to shower His grace 
on His devotees these ten poems were sung by Thiru-gnana Sambandar. He makes it appear 
in this poem as though he questions Lord Civa for his various avocations. Thiru-gnana-Sambandar 
was born in the world famous city of Seerkaazhi unique in its history. This city was the only 
one floating in water while the entire universe fully went under water. He sang this chapter 
of ten verses. Those who can study and sing in the proper musical tone all these eleven 
verses of this hymn will rule the great heaven.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            4ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 4th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 141                        பதிக எண் 5 

5. திருஅனேகதங்காவதம்                         5. THIRU-ANEGA-THANGA-VATHAM

பண் : இந்தளம் -வினாஉரை                    Pann: Indhalam - Vina Urai


திருத்தல வரலாறு

    இத்திருத்தலம் வடநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. கேதாரம் செல்லும் வழியில் உள்ளது. 
இறைவி கௌரி என்னும் திருநாமத்தோடு தவஞ்செய்த பதியாதலின் கௌரிகுண்டம் என்றும் கூறப்பெறும். 
இமயத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இத்தலத்தை திருக்கேதார யாத்திரை செல்வோர் எளிதில் தரிசித்து 
இன்புறலாம். ரிஷிகேசத்திலிருந்து கேதாரம் செல்வோர் கௌரி குண்டம் வரை பேருந்துகளில் செல்லலாம். 
கௌரி குண்டத்தில் உள்ள சிறிய வெந்நீர் ஊற்று நீராடற்கேற்றது. இங்குள்ள ஆலயமே அனேகதங்காவதமாகும். 
இதில் சந்திரர் சூரியர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இதற்குத் திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்று உள்ளது.
இறைவரின் திருப்பெயர் அனேகதங்காவதநாதர். இறைவியாரின் திருப்பெயர் மனோன்மணி.

பதிக வரலாறு

பாடிய சமயம் எழுதப்பட்டிலது.

                திருச்சிற்றம்பலம்

1513.    நீடல்மேவுநிமிர்புன்சடைமேலோர்நிலாமுளை 
    சூடல்மேவுமறையின்முறையாலொர்சுலாவழல் 
    ஆடல்மேவுமவர்மேயஅனேகதங்காவதம் 
    பாடல்மேவுமனத்தார்வினைபற்றறுப்பார்களே.        1

    நீடல் மேவு நிமிர்புன்சடை மேல் ஓர் நிலாமுளை 
    சூடல் மேவு,மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் 
    ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் 
    பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே!

    nITal mEvu nimirpun caTaimEl Or nilAmuLai                    
    cUTal mEvu, maRaiyin muRaiyAl or culAvu azal 
    ATal mEvumavar mEya anEkatagkAvatam 
    pATal mEvum manattAr vinai paRRu aRuppArkaLE!

பொருள்:     சிவபெருமான் தனது நீண்டு உயர்ந்த சடைமுடிமீது பிறைமதியைச் சூடியுள்ளார். 
வேத விதிப்படி வளர்க்கப் பெற்றுச் சுழன்று எரியும் தீயில் அவர் ஆடுதலை விரும்புபவர். அவர் 
உறையும் தலம் அனேகதங்காவதம். அத்தலத்தைப் பற்றிப் பாடுதலை விரும்பும் பக்தர்கள் 
இசையோடு பாடுகின்றார்கள். இறைவர் அவர்கள் வினைகளையும் அவற்றால் விளையும் 
பற்றுக்களையும் அறுத்து அவர்களை ஆசீர்வதிப்பார்.

குறிப்புரை:     நீடல்- (நீள் + நல்) நீளல், நீடுமாம். நிமிர்தல்-  உயர்தல். புன்மை- மென்மை, பொன்மையுமாம். 
நிலாமுளை - பிறையாகிய முளை. சூடல் - சூடுதல். மறையின்முறை-  வேதவிதி. கலாவு அழல் - கழன்றெரியுந்தீ. 
அழலாடல் - தீயிலாடுதல். அனேகதங்காபதம் - வடநாட்டிலுள்ளதொரு மலை. பாடல்- பாடுதலை. மேவும் - விரும்பும். 
வினைபற்று -  வினையும் அதனால் வரும் பற்றும். உம்மைத்தொகை.

    Goddess Uma Devi with another name Gowri did penance in a place called Gowrikundam 
in the Himaalayaas where hot water spring exists. This place is on the way from Rishikesh 
to Ketharam. The temple in this place is called Thiru-anega thanga-vatham' (திருஅனேகதங்காவதம்). 
The God in this place is called Anega-thanga vatha-naathar'. Goddess is called 'Manonmani'. 
Lord Civan is manifested in the temple here. He retains the crescent moon on His long matted 
hair. He does His delightful dancing in the whirling flames of the sacred fire raised as per 
vedic norms. The devotees who take satisfaction in singing the songs of this place in proper 
tone will get rid of their past bad deeds and the resultant good effect will be enjoyed by them.

1514.     சூலமுண்டுமழுவுண்டவர்தொல்படைசூழ்கடல் 
    ஆலமுண்டபெருமான்றனனேகதங்காவதம் 
    நீலமுண்டதடங்கண்ணுமைபாகம்நிலாயதோர் 
    கோலமுண்டளவில்லைகுலாவியகொள்கையே.        2

    சூலம் உண்டு, மழு உண்டு, அவர் தொல் படை; சூழ் கடல் 
    ஆலம் உண்ட பெருமான்தன் அனேகதங்காவதம், 
    நீலம் உண்ட தடங்கண் உமை பாகம் நிலாயது ஓர் 
    கோலம் உண்டு; அளவு இல்லை, குலாவிய கொள்கையே!

    cUlam uNTu, mazu uNTu, avar tol paTai; cUz kaTal 
    Alam uNTa perumAntan anEkattagkAvatam, 
    nIlam uNTa taTagkaN umai pAkam nilAyatu Or 
    kOlam uNTu; aLavu illai, kulAviya koLkaiyE!

பொருள்:     அனேகதங்காவதத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிவபெருமான் சூலத்தையும், மழுவையும், 
படைக்கலங்களாகக் கொண்டவர். இறைவன் உலகைச் சூழ்ந்துள்ள ஆழமான கடலில் தோன்றிய விடத்தை உண்டு 
உலகைக் காத்தருளிய பெருமான் ஆவார். நீலநிறம் பொருந்திய பெரிய கண்களை உடையவள் உமையம்மை. 
அவளை ஒரு பாகமாக விளங்கும் அழகினர். அவ்வம்மையோடு குலாவும் செயல்களுக்கு அளவில்லை.

குறிப்புரை:     உண்டு என்னும் இரண்டும் வினைமுற்று. அவர் தொல்படையாகச் சூலமும் 
மழுவும் உள என்க. ஆலம் - நஞ்சு. நீலம் - நீலநிறம். நீலோற்பலமுமாம். கோலம் - திருக்கோலம். 
நிலாவுதல்- பிரகாசமாயிருத்தல். குலாவுதல் - பொருந்துதல்.

    Lord Civa at Thiru-anega-thanga-vatham owns in His hands a trident and an axe
as His ancient war weapons. He consumed the poison that came out of the deep sea
which surrounded the universe and thus saved the entire humanity in the world. He
appears with His consort Uma Devi, whose eyes are beautifully blue, keeping her on 
the left half of His body. His beauty has no bounds and His love is limitless.

1515.     செம்பினாருமதில்மூன்றெரியச்சினவாயதோர் 
    அம்பினாலெய்தருள்வில்லியனேகதங்காவதம் 
    கொம்பின் நேரிடையாளொடுங்கூடிக்கொல்லேறுடை 
    நம்பன்நாமனவிலாதனநாவெனலாகுமே.        3                

    செம்பின் ஆரும் மதில்மூன்று எரிய, சின வாயது ஓர் 
    அம்பினால் எய்துஅருள் வில்லி, அனேகதங்காவதம் 
    கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல்ஏறு உடை 
    நம்பன், நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?

    cempin Arum matilmUnRu eriya, cina vAyatu Or 
    ampinAl eytu aruL villi, anEkatagkAvatam 
    kompin nEr iTaiyALoTum kUTik kol ERu uTai 
    nampan, nAmam navilAtana nA enal AkumE?

பொருள்:     விண்ணிலே சதா காலமும் பறந்து சென்று கொண்டிருக்கும் திரிபுரம் என்று 
சொல்லப்படும் மூன்று கோட்டைகளை செம்பு உலோகத்தால் மிக உறுதியாகக் கட்டி அதில் அசுரர்கள் 
சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் சதாவும் தேவர்களுக்கு துன்பங்களைக் கொடுத்து வந்தார்கள். 
தேவர்கள் சிவபெருமானிடம் தங்களின் குறைகளைக் கூறிக் காப்பாற்ற வேண்டினார்கள். 
அனேகதங்காவதத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் அவர்களுக்கு இரங்கி முனையில் அக்கினி உள்ள 
பாணத்தை அந்தத் திரிபுரத்தின் மதில்களை நோக்கிச் செலுத்தினார். மூன்று கோட்டைகளும்             
அதில் உள்ள அசுரர்கள் அனைவரும் அழிந்தனர். சிவனை சதாவும் வணங்கும் மூவர் உயிர் தப்பினர். 
பூங்கொம்பு போன்ற இடையினை உடையவள் உமையம்மை. அவளோடு கூடிய சிவபெருமான் கொல்லேற்றை 
ஊர்தியாகக் கொண்டவர் ஆவார். அப்பெருமான் திருப்பெயரைச் சொல்லிப் பழகாத நாக்கள் நாக்கு ஆகமாட்டா.

குறிப்புரை:     மதில் மூன்று - திரிபுரம். சினம் வாயது - எரிதலையுடைய முனையுடையது. விண்டுவாகிய 
பாணத்தின் முனையில் அக்கினியிருப்பதுபற்றிச் சினவாய் எனப்பட்டது. கொம்பின் நேர் இடையாள்-
 கொம்புபோன்ற இடையினையுடைய அம்பிகை. நம்பன் - எல்லா உயிர்களாலும் விரும்புதற்கு உரியவன். 
சிவநாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகாத நாக்கள் நாவாக. (தி. 3 ப. 4 பா. 6, 9) நவிலல் - நாவாற் சொல்லி 
அடிப்படல். 'மறை நவில் அந்தணர்' (புறநானூறு, கடவுள் வாழ்த்து).

    The three aerial flying fortresses were mainly built of copper. They were very strong 
buildings. The asuras who lived in these fortresses troubled devas always. At the request 
of the devas, Lord Civa decided to destroy the three fortresses. Mount Meru was used by Civa 
as His bow and He created fire at the tip of the arrow and shot the arrow at these three fortresses.
Instantly all the three fortresses were completely destroyed and all the asuras were killed 
except the three who were sincere devotees of Lord Civa. Thus He graced the devas. He is 
manifested in Thiru-anega-thanga-vatham and He shares half His body with His consort Uma Devi.
Whenever He moves about on His bull He keeps Uma Devi also on the Bull. Those tongues which 
do not recite the great name of our Lord Civa can not be called tongues.

1516.     தந்தத்திந்தத்தடமென்றருவித்திரள்பாய்ந்துபோய்ச் 
    சிந்தவெந்தகதிரோனொடுமாசறுதிங்களார் 
    அந்தமில்லவளவில்லஅனேகதங்காவதம் 
    எந்தைவெந்தபொடிநீறணிவார்க்கிடமாவதே.        4

    தந்தத்திந்தத்தடம் என்ற அருவித்திரள் பாய்ந்து போய்ச் 
    சிந்த வெந்த கதிரோனொடு மாசுஅறு திங்கள் ஆர் 
    அந்தம் இல்ல அளவு இல்ல, அனேகதங்காவதம் 
    எந்தை வெந்தபொடி-நீறு அணிவார்க்கு இடம்ஆவதே.

    tantattintat taTam enRa aruvittiraL pAyntu pOyc 
    cinta venta katirOnoTu mAcu aRu tigkal Ar 
    antam illa aLavu illa, anEkatagkAvatam, 
    entai ventapoTi-nIRu aNivArkku iTam AvatE.

பொருள்:     சிவபெருமான் அனேகதங்காவதத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறார்.
 இந்த ஊரில் நான்கு பக்கங்களிலும் மிகுந்த உயரத்தில் இருந்து அளவற்ற மழைநீரோடு சதாவும் விழுந்து 
ஊர் முழுவதும் நீர் சிந்தி ஓடுகின்றது. இந்த அருவிக்கூட்டம் பாயும் போது தந்தத்திந்தத்தடம் என்ற 
ஒலிக்குறிப்போடு பாய்கின்றன. சுடர்ந்த கதிர்களை உடைய சூரியன் தன் வெங்கதிர்களை வீசிக் 
கொண்டிருக்கின்றான். சந்திரனும் குற்றமற்ற ஒளியை வீசிக் கொண்டிருக்கின்றான். இந்த இரண்டிற்கும் 
நாசமும் இல்லை அளவும் இல்லை. இந்த சிறப்பான இடத்தில் எந்தையாகிய சிவபெருமான் திருநீற்றை 
உடல்முழுவதும் பூசிய அடியார்களுக்கு அருள்வழங்கி வருகின்றான்.

குறிப்புரை:     அருவிக்கூட்டம் பாயும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு. 'தந்தத் திந்தத் தடம்' என்றுள்ளதாம். 
பாய்தலால் சிந்துகின்றன. வெந்த - சுடர்ந்த. கதிரோன் - கதிர்களையுடைய சூரியன், வெந்தகதிர்-வெங்கதிர். 
மாசு - குற்றம். திங்கள் - சந்திரன். அந்தம் - முடிவு. அளவு - எல்லை, நாசமுமில்லை அளவுமில்லை என்றபடி.

    In the city of Thiru-anega-thanga-vatham torrential water falls bring water that
flows all over the city. The water falling from a height makes a heavy noise. It resembles a 
musical note 'Thanthath, Thinthath thadam'. The warm sun's rays as well as the flawless rays 
of the moon fall on the city. There is no beginning nor any end to these two rays. 
In this grand city Lord Civa who has adorned His body with holy ashes, has manifested 
Himself here and graces the devotees who pray to Him.

1517.     பிறையுமாசில்கதிரோனறியாமைப்பெயர்ந்துபோய்
    உறையுங்கோயில்பசும்பொன்னணியாரசும்பார்புனல் 
    அறையுமோசைபறைபோலுமனேகதங்காவதம் 
    இறையெம்மீசனெம்மானிடமாகவுகந்ததே.            5

    பிறையும் மாசுஇல் கதிரோன் அறியாமைப் பெயர்ந்து போய் 
    உறையும் கோயில், பசும்பொன் அணியார், அசும்பு ஆர் புனல் 
    அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம் 
    இறை,எம் ஈசன், எம்மான், இடம்ஆக உகந்ததே.

    piRaiyum mAcu il katirOn aRiyAmaip peyarntu pOy 
    uRaiyum kOyil, pacumpon aNiyAr, acumpu Ar punal
    aRaiyum Ocai paRai pOlum anEkatagkAvatam, 
    iRai, em Ican, emmAn, iTam Aka ukantatE.                

பொருள்:     அனேகதங்காவதத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோயில் வானளாவியது. 
விண்ணில் பாய்ந்து செல்லும் சந்திர சூரியர்கள் இந்தக் கோயிலின் உயரத்தை அறியாமல் 
திருக்கோபுரத்தைத் தாண்டுவதற்கு உயர்ந்து செல்ல மாட்டாமல் பக்கத்தில் பெயர்ந்து போவர். 
பசும்பொன் போன்ற நீர்த்துளிகளை உடைய பறை போன்று ஒலித்து ஒழுகும் அருவிகள் ஊரைச் 
சுற்றி உள்ளன. அத்தகையது அனேகதங்காவதம். அதுவே நம் ஈசனாகிய இறைவன் தனது இடமாகக் 
கொண்டு உகந்து அருளுகிறான்.

குறிப்புரை:     பிறையும் - சந்திரனும். மாசு- குற்றம். கதிரோன் - சூரியனும். அறியாமை - அறியாமல். 
கோயிலின் உயர்ச்சியை அறிய மாட்டாமல். பெயர்ந்து - அப்பால் விலகி. சூரிய சந்திரர் திருக்கோபுரத்தைத்              
 தாண்டற்கு உயர்ந்து செல்ல மாட்டாமல் பக்கத்திற் பெயர்ந்து போவர் என்றது. அசும்பு-நீர்த்துளி. 
துளித்தல் பொருந்திய புனல். புனல் - நீர். அறையும் - ஒலிக்கும். பறை - வாத்திய ஓசை.

    The temple towers in the city of Thiru-anega-thanga-vatham look tall as the sky. 
The moon and the faultless sun while traversing through the sky are unable to traverse 
and cross the temple towers due to its tallness. Therefore, they both change their pathway 
in the sky and move away from the towers and pass through. The shining waters in the falls 
make echoes like drum beating and the bright water flows around the city of Thiru-anega-
thanga-vatham. Lord Civa has selected this town as His commanding abode and graces the 
devotees who approach Him in the temple.

1518.     தேனையேறுநறுமாமலர்கொண்டடிசேர்த்துவீர் 
    ஆனையேறுமணிசாரலனேகதங்காவதம் 
    வானையேறுநெறிசென்றுணருந்தனைவல்லிரேல் 
    ஆனையேறுமுடியானருள்செய்வதும்வானையே.        6

    தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்! 
    ஆனை ஏறும் அணிசாரல் அனேகதங்காவதம் 
    வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல், 
    ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே.

    tEnai ERu naRumAmalar koNTu aTi cErttuvIr! 
    Anai ERum aNi cAral anEkatagkAvatam 
    vAnai ERum neRi cenRu uNarum tanai vallirEl,
    Anney ERu muTiyAn aruLceyvatum vAnaiyE.

பொருள்:     தேனை மிகுதியாகப் பெற்றவை மணம் கமழும் சிறந்த மலர்கள். அவற்றைப்
பறித்து இறைவன் திருவடிகளில் சேர்ப்பிக்கும் அடியவர்களே! வீடுபேறு அடைதற்குப் பின்பற்றுவன 
சரியை, கிரியை முதலான நெறிகள். அவற்றில் நின்று அவனை உணர நீவீர் வல்லீரோ? அவ்வாறாயின் 
சிவபிரான் உங்கட்கு வானுலகப் பேற்றினை வழங்கி அருளுவான். யானைகள் ஏறி உலாவும் அழகிய 
சாரலை உடையது அனேகதங்காவதம்.  அங்கே விளங்கும் இறைவன், ஆனைந்தாடும் தலைவனாகிய 
சிவபெருமான் ஆவான்.

குறிப்புரை:     தேனையேறும்-தேனை மிகுதியாகப் பெற்ற. அடி- திருவடியில். சேர்த்துவீர் - (தூவித்) 
தொழுபவர்களே என்று விளித்தார். ஆனை - யானை. வானை - பேரின்ப வீட்டு வகை. நெறி-சரியை
 முதலிய நான்குநெறி. உணருந்தனை - உணரும் அளவை. ஆன்ஐ - பசுவினிடத்துண்டாகும் பால் தயிர் 
நெய் முதலிய ஐந்து ஆனிலங்கிளர் ஐந்தும் அவிர்முடியாடி. வானை ஏறு நெறியுணர வல்லீரேல்
 ஆனையேறுமுடியவன் அருள்வதும் வானையே (தி. 2 ப. 10 பா. 5) என்று ஐயந்தீர்த்தருளினார்.

    The devotees in the city of Thiru-anega-thanga-vatham collect sweet smelling flowers 
full of honey and offer them at the holy feet of Lord Civan. If you are capable of  receiving 
His grace, do not think of any other place than Thiru-anega-thanga-vatham.  To get salvation 
you should follow the principles consisting the four fold as explained in the aagamaas, 
called 'Carya and Kriya'. Then worship Lord Civan in the temple at Thiru-anega-thanga-vatham 
where elephants climb the hill with fine falls, and roam happily. In this renowned place, 
Lord Civa rests Himself happily, it is He who delights in His sacred bath of the five items 
obtained from the cow. He will grace you with the divine salvation to reach heaven, if you 
really aspire for it.

1519.     வெருவிவேழமிரியக்கதிர்முத்தொடுவெண்பளிங் 
    குருவிவீழவயிரங்கொழியாவகிலுந்திவெள்
     அருவிபாயுமணிசாரலனேகதங்காவதம் 
    மருவிவாழும்பெருமான்கழல்சேர்வதுவாய்மையே.        7

    வெருவி வேழம் இரிய, கதிர் முத்தொடு வெண்பளிங்கு 
    உருவி வீழ,வயிரம் கொழியா, அகில் உந்தி, வெள் 
    அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம் 
    மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே.

    veruvi vEzam iriya, katir muttoTu veNpaLigku 
    uruvi vIza, vayiram koziyA, akil unti, veL 
    aruvi pAyum aNi cAral anEkatagkAvatam 
    maruvi vAzum perumAn kazal cErvatu vAymaiyE.

பொருள்:     அனேகதங்காவதம் என்னும் மலையின் மேலிருந்து பாயும் வெள்ளருவி ஒலியால் 
யானைகள் அஞ்சி ஓடும். அவ்வருவி முத்துக்களையும் பளிங்குகளையும் வைரங்களையும் அகில் முதலிய 
மரங்களையும் அடித்து வருகின்றது. அத்தகைய அழகிய சாரல் உடைய அம்மலைமேல் எழுந்தருளிய 
இறைவன் திருவடி சேர்வது மெய்ந்நெறி. வெருவி அதனை அடைந்து அங்கு வாழும் பெருமான் திருவடிகளை 
அடைவதே மெய்ந்நெறியாகும்.

குறிப்புரை:     வெருவி - அஞ்சி. வேழம் - யானை. இரிய- ஓட. உருவி - ஊடுருவி. வயிரம்-வச்சிரமணி. 
கொழியர் -கொழித்து. அகில் -  மணமுள்ளதொருமரம். வாய்மை -மெய்ந்நெறிக்குப் பண்பாகுபெயர். 

    The city Thiru-anega-thanga-vatham has very attractive mountains in the vicinity. 
Pure silvery waterfalls flow in plenty from clouds gathering on hilltops. The elephants 
grazing near the falls, hear the great noise and become panicky without knowing wherefrom 
the noise comes, and run hither and thither. The stream brings very bright pearls, white
marbles and diamonds and eaglewood. These rush in the water flow and settle along the brook 
banks. Oh! Ye gentlemen! Please go to this enchanting hill country of attractive slopes 
where Lord Civan resides. Worship His holy feet and this is only correct path to virtue 
and salvation.

1520.     ஈரமேதுமிலனாகியெழுந்தஇராவணன் 
    வீரமேதுமிலனாகவிளைத்தவிலங்கலான்
     ஆரம்பாம்பதணிவான்றனனேகதங்காவதம் 
    வாரமாகிநினைவார்வினையாயினமாயுமே.            8

    ஈரம்ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் 
    வீரம்ஏதும் இலன்ஆக விளைத்த விலங்கலான், 
    ஆரம் பாம்புஅது அணிவான்தன், அனேகதங்காவதம் 
    வாரம்ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே.

    Iram Etum ilan Aki ezunta irAvaNan
    vIram Etum ilan Aka viLaitta vilagkalAn, 
    Aram pAmpu atu aNivAntan, anEkatagkAvatam 
    vAram Aki ninaivAr vinai Ayina mAyumE.

பொருள்:     இலங்கை மன்னனாகிய இராவணன் தன்னிடம் 'அன்பு' என்று ஒரு சிறிதும் இன்றித் 
தன் வலிமையைப் பெரிது என்று எண்ணி கயிலை மலையை நகர்த்த எழுந்தான்.  பக்தியின்றி வீரம் 
ஒன்றே கொண்டு கயிலையைத் தூக்கிய இராவணனுக்கு அவ்வீரம் சிறிதும் இல்லாதவனாக்கினார் 
சிவபிரான். பாம்பை ஆரமாக அணிபவனாகிய சிவபிரானின் அனேகதங்காவதத்தை அன்போடு 
நினைப்பவர் வினைகள் யாவும் மாயும்.

குறிப்புரை:     ஈரம் - அன்பு. ஏதும் - யாதும், சிறிதும். விலங்கல்-(கயிலை) மலை. ஆரம் - மாலை. 
வாரம் - அன்பு.

    King Raavanan of Sri Lanka had egoistic feelings and had pride regarding his 
unparalleled physical courage. He forgot his respectful love to Civan, Lord of Thiru-
anega-thanga-vatham. Raavanan, therefore, once tried his best to move Mount Kailash,
the abode of Lord Civan a little to the farther side, but failed, got crushed under the 
mountain and cried. Lord Civan who has His abode on Mount Kailash and wears the snake 
around his neck totally destroyed the bravery of Raavanan. Those devotees who think deeply         
of the greatness of Lord Civan and pray will get their sufferings and evils chased fully.

1521.     கண்ணன்வண்ணமலரானொடுங்கூடியோர்க்கையமாய் 
    எண்ணும்வண்ணமறியாமையெழுந்ததோராரழல் 
    அண்ணல்நண்ணுமணிசாரலனேகதங்காவதம் 
    நண்ணும்வண்ணமுடையார்வினையாயினநாசமே.        9

    கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம்ஆய் 
    எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர்ஆர்அழல் 
    அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் 
    நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.

    kaNNan vaNNa malarAnoTum kUTiyOrkku aiyam Ay 
    eNNum vaNNam, aRiyAmai ezuntatu Or Ar azal 
    aNNal naNNum aNi cAral anEkatagkAvatam 
    naNNum vaNNam uTaiyAr vinai Ayina nAcamE.

பொருள்:     திருமாலும் நான்முகனும் கூடி சிவபிரானின் அடிமுடி அறிய முற்பட்டனர். அவர்கள்
அறிய முடியுமா என ஐயுறும் வண்ணம் நிகழ்ந்தது ஒன்று. அவர்கட்கு இடையே எழுந்தது ஓர் அழற்பிழம்பு. 
அச்சிவபெருமான் எழுந்தருளிய அழகிய சாரலை உடையது அனேகதங்காவதம். அதனை நண்ணும் 
இயல்புடையார் வினைகள் நாசமாகும்.

குறிப்புரை:     கண்ணன் – கிருட்டிணனாக அவதரித்த திருமால். வண்ணமலர் - தாமரை. 
வண்ணம் – அழகு. ஐயம் - சந்தேகம். அறியாமை - அறியாமல். ஆர் அழல்-  நிறைந்த பெரிய தீப்பிழம்பு 
(அக்கினிமலை வடிவம்) அண்ணல்- சிவபிரான். நண்ணும் - சேர்ந்து வழிபடும். வண்ணம் - வகை 
கூட்டியோர்க்கு ஐயமாய் எனப் பொருள் காண்க. மதுரைத் திருஞானசம்பந்தப்பிள்ளைப்பதியில் 
'கையமாய்' என்ற பாடமுளது.

    Lord Thirumaal and the four faced Brahma argued about their superiority in the world. 
They came to a conclusion that among the two whoever was the first in seeing Lord Civan's 
head or feet will be superior to the other. Thirumaal went underground in search of Civan's 
holy feet; while Brahma went in search of the Lord's head in the sky. They both failed 
in their search. At that moment Lord Civa rose between them boundlessly as a fire of 
indescribable appearance which Vishnu and Brahma could not even dream of. That Lord Civan 
is in this attractive place of mountains and valleys known as Thiru-anega-thanga-vatham. 
The devotees who can approach this place and offer worship to Lord Civan will be relieved 
of all their malevolent actions and their effect.

1522.     மாபதம்மறியாதவர்சாவகர்சாக்கியர் 
    ஏபதம்படநின்றிறுமாந்துழல்வார்கள்தாம் 
    ஆபதம்மறிவீருளிராகிலனேகதங் 
    காபதம்மமர்ந்தான்கழல்சேர்தல்கருமமே.        10

    மா பதம் அறியாதவர் சாவகர் சாக்கியர், 
    ஏ பதம் பட நின்றி இறுமாந்து உழல்வார்கள்தாம் 
    ஆ பதம் அறிவீர்உளிர்ஆகில், அனேகதங் 
    காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் கருமமே.

    mA patam aRiyAtavar cAvakar cAkkiyar, 
    E patam paTa ninRu iRumAntu uzalvArkaL tAm 
    A patam aRivIr uLir Akil, anEkatag 
    kApatam amarntAn kazal cErtal karumamE.

பொருள்:     சிறந்த சிவபதத்தை அறியாதவர் சமண, புத்த சமயத்தவர்கள். அவர்கள் பிறரால்
 இகழப்படுபவர்கள். இறுமாப்புடையவராய் உழல்பவர்கள் ஆவர். நாம் அடையத் தக்கது சிவபதம் 
என்று அறியாதவர்களாயின் அனேகதங்காவதத்துள் எழுந்தருளியுள்ள சிவபிரான் திருவடிகளை 
ஆராய்ந்து உணர்தலே நீவீர் செய்யத்தக்க கருமம் ஆகும்.

குறிப்புரை:     மாபதம்- பெரிய பதவி. ஏ பதம் - ஏ ஏ என்னும் இகழ்கின்ற சொல்; 'ஏ ஏ இவள் ஒருத்தி 
பேடியோ' என்றார் (சீவக சிந்தாமணி. பா.652) அறிவீருளிர் -அறிவீராயிருப்பீர் (ஆகில்). கருமம்-
 இன்றியமையாது செயல்பாலதொருகடன்.

    Those Jains and Buddhists, also called Savakar and Saakiar, are all ignorant people 
and do not understand the Supreme Holiness of Lord Civan and His highest state of achievements. 
They are always on the beaten track of ignorance. They are scorners of Saivite philosophy 
and are always conceited. You devotees, if you are really interested in reaching the true
abode of eternal bliss, then it is your duty to reach the holy feet of Lord Civan at 
Thiru-anega-thanga-vatham.

1523.     தொல்லையூழிப்பெயர்தோன்றியதோணிபுரத்திறை 
    நல்லகேள்வித்தமிழ்ஞானசம்பந்தன்நல்லார்கள்முன் 
    அல்லல்தீரவுரைசெய்த அனேகதங்காவதம் 
    சொல்லநல்ல அடையும்மடையாசுடுதுன்பமே.        11

    தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை 
    நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் - நல்லார்கள்முன் 
    அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம் 
    சொல்ல நல்ல அடையும்; அடையா, சுடுதுன்பமே.

    tollai Uzip peyar tOnRiya tONipurattu iRai- 
    nalla kELvit tamiz njAnacampantan--nallArkaL mun 
    allal tIra urai ceyta anEkatagkAvatam 
    colla,nalla aTaiyum; aTaiyA, cuTutunpamE.

பொருள்:     பழமையான ஊழிக்காலத்தே தோணியாய் மிதந்த காரணத்தால் தோணிபுரம் என்னும் 
பெயர் பெற்றது சீகாழிப்பதி. அதன் தலைவனும், நல்ல நூற்கேள்வியை உடையவனும் ஆகியவன் 
தமிழ்ஞானசம்பந்தன். நல்லோர்கள் திருமுன்னர், அல்லல் தீர உரைத்து அவர் அருளியது இப்பதிகம். 
அத்தகு அனேகதங்காவதத்தைப் புகழ்ந்து போற்றின், நல்லன வந்துறும். நம்மைச் சுடும் துன்பங்கள் 
நம்மை அடைய மாட்டா.

குறிப்புரை:     தோணிபுரம்- சீகாழி. இறை - தலைவர். தமிழ்- சைவத்தமிழ் நூல்களை அருளும். கேள்வி- சுருதி. 
ஒவ்வொரு பதிகமும் ஒவ்வொரு நூலாதல் ஆசிரியர் திருவாக்காலறியலாம். 'கழுமலத்தின் பெயரை நாளும் 
பரவிய சீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையால் பனுவல்மாலை' (தி.2. ப.70 பா.12). 'வன்றொண்டன் 
பன்னு தமிழ் நூல் வல்லார்' (தி. 7 ப. 41 பா. 10) நல்லார்கள்- சிவனடியார்கள். நல்ல - நல்லன. நல்ல அடையும், 
சுடுதுன்பம் அடையா என்க.

    Thiru-gnana-Sambandar in this last poem of this chapter gives the name of Seerkaazhi as 
Thoni-puram, one of the twelve names of the sacred place from ancient times. Here he was born, 
he was an eminent scholar of good inquisitive talent. He was graced by Lord Civan of Thonipuram. 
Thiru-gnana-Sambandar sang these songs to dispel the sufferings of the virtuous men. Those people 
who recite these verses in proper tune and in the proper mode on Lord of Thiru-anega-thanga-vatham 
and praise Him will have all benevolence, malevolence will not strike them.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            5ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 5th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 142                    பதிக எண்- 6

6. திருவையாறு                        6. THIRU-VAIYAARU
பண் : இந்தளம்                        Pann: Indhalam


திருத்தல வரலாறு

    கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி முடியத் திருவையாற்றிலிருந்து 
கண்டியூர் வரை காவிரி நதிதான் பரவியிருந்தது. கண்டியூர் திருச்சோற்றுத்துறை இவைகளைப் பாடிய 
தேவார ஆசிரியர்கள் இவ்விரு பதிகளையும் காவிரிக்கரையிலுள்ள பதிகளாகவே குறிப்பிட்டுள்ளனர்.

    திருவையாற்றுக்கும் கண்டியூருக்கும் இடையிலுள்ள குடமுருட்டியாறு அக்காலத்தில் இல்லை. 
அது காவிரியிலிருந்து கும்பகோணத்திற்குக் கிழக்கே பிரிந்து சென்றது. கடுவாய் என்பது குடமுருட்டியாறாகும். 
இக்கடுவாய்க்கரையிலுள்ள புத்தூரை, கடுவாய்க்கரைப்புத்தூர் என்று சிவநெறி காட்டியருளிய குரவர்கள் 
குறிப்பிட்டுள்ளதுபோல, அக்காலத்தில் குடமுருட்டியாகிய கடுவாயாறு கண்டியூர்ப் பக்கமாக ஓடியிருக்குமானால் 
அதைக் கடுவாய்க்கரைக் கண்டியூர் என்றே கூறியிருக்க வேண்டுமே! அங்ஙனம் குறிப்பிடாததன் காரணத்தையும்
 உணரவேண்டும். இதற்குப் பிற்காலத்தேதான், திருக்காட்டுப்பள்ளியைத் தலைப்பாகக் கொண்டு குடமுருட்டியாற்றை 
வெட்டி, கும்பகோணத்திற்குக் கிழக்கிலிருந்து செல்லும் கடுவாயாற்றோடு சேர்த்து, காவிரி ஆற்றைக் குறுக்கி, 
மக்கள் வாழ்வுக்கும், சாகுபடிக்கும் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதனால் ஒரே நதியெனல் பொருந்தும் 
என்பர் சிலர். தஞ்சாவூர் முதல் திருவையாறு முடிய இருக்கும் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, 
காவிரி என்னும் ஐந்து ஆறுகளை உடையது. ஆகையால் ஐயாறு என்று பெயர் பெற்றது என்பார் சிற்சிலர். 
சூரியபுட்கரணி சந்திரபுட்கரணி, கங்கை, பாலாறு, நந்திதீர்த்தம் (நந்திவாய்நுரை) என்னும் ஐந்து தெய்வீக 
நதிகள் தம்முள் கலப்பதால் ஐயாறு என்று பெயர் பெற்றது என்பர் சிற்சிலர். பஞ்சநதம் என்பது, ஐயாறு
என்னும் தமிழுக்கு ஒத்த வடசொல். இக்கோயில் தருமபுர ஆதீன அருளாட்சியில் விளங்குவதாகும். 

    திருவையாறு தஞ்சாவூருக்கு வடக்கே 10 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தஞ்சை, கும்பகோணம் 
திருக்காட்டுப்பள்ளி முதலிய நகர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. இறைவரின் திருப்பெயர் ஐயாறப்பர்; 
வடமொழியில் பஞ்சநதீசுவரர்; பிரணதார்த்திஹரர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் அறம் வளர்த்த நாயகி; 
வடமொழியில் தர்மசம்வர்த்தினி என்பர். தீர்த்தம் காவிரி, சூரியபுட்கரணி என்பன.

    இது சமயக்குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்றது. 'நந்தி அருள்பெற்ற நன்னகர்' என்று சேக்கிழார் 
இப்பதியைச் சிறப்பித்துள்ளார். சிலாதமுனிவர்க்குத் திருமகனாய் அவதரித்த திருநந்திதேவர், சுயசாதேவியை 
மணந்து, ஐயாறப்பரைப் பூசித்து சிவசாரூபம் பெற்றமையை உட்கொண்டு சேக்கிழார் இவ்வாறு கூறலானார். 
கடலரசன் இங்கு வந்து ஐயாறப்பரைப் பூசித்துப் பேறு பெற்றான். 'ஆழிவலவனின்றேத்தும்' என்னும் இவ்வூர்த் 
தேவாரப்பகுதி இதற்குச் சான்றாகும். இலக்குமியால் பூசிக்கப் பெற்றது. இலக்குமிக்கு இரண்டாம் பிரகாரத்தில் 
தனிக்கோயில் இருக்கின்றது. வெள்ளிக்கிழமை தோறும் இலக்குமி புறப்பாடு இத்தலத்தில் நடைபெற்று வருகின்றது.
வடகயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை அப்பர் பெருமானுக்குக் காட்டியருளிய காட்சியை 
உணர்த்தும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய  கற்கோயில், பெரியபுறத் திருச்சுற்றாலையின் தென்பால் 
(மூன்றாம் தெற்குப் பிரகாரத்தில்) இருக்கின்றது. அங்கு இறைவர் மணவாளக் கோலத்தோடு, சக்தியும் சிவமுமாக 
வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றார். அப்பர் பெருமானின் அழகு திகழும் பிரதிமையும் அங்கு இருக்கின்றது.

    சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கண்டியூரை வணங்கிய 
பொழுது எதிரே தோன்றிய திருவையாற்றையும் வணங்க விரும்பினர். அப்பொழுது காவிரியில் 
வெள்ளப்பெருக்கு மிகுதியாக இருந்தமையால் அக்கரையிலிருந்த சுந்தர மூர்த்தி நாயனார் 
'ஐயாறுடைய அடிகளோ' என்று திருப்பதிகம் பாடிய அளவில், வந்து மீளுமளவும் காவிரியை 
வழிவிடச் செய்த பெருமையை உடையது இத்தலம். தம்மை வழிபட்டு வந்த ஒரு அந்தணச் 
சிறுவனைத் தொடர்ந்து வந்த யமனைத் தண்டித்து, அச்சிறுவனைச் சோதி வடிவமாக ஆட்கொண்ட 
காரணம்பற்றி ஆட்கொண்டார் என்னும் பெயருடையாரது திருமேனி தெற்குக் கோபுர வாயிலின் 
மேல்பால் இருக்கின்றது. அவருக்கு அருகில் தென்மேற்கு மூலையில் இருப்பவர் ஓலம் இட்ட பிள்ளையார் 
ஆவர். ஆட்கொண்டார்க்கு எதிரில் குங்கிலியக்குழி ஒன்று இருக்கிறது. அதில் மக்கள் குங்கிலியத்தை 
இட்டு வழிபடுகின்றனர். இத்தலத்தே இந்திரன், வாலி முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றார்கள். 
இச்செய்தியை 'எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட' எனச் சம்பந்தரும், 'வாலியார் வணங்கி 
ஏத்தும் திருவையாறு அமர்ந்ததேன்' என அப்பர் பெருந்தகையும் அருளிச் செய்துள்ளதை இத்தலத்துத் 
தேவாரப் பகுதிகளால் அறியலாம்.

    இறைவரைப் பூசித்த சைவர் ஒருவர் காசிக்குச் சென்று, குறிப்பிட்ட காலத்தில் வாராமையால் 
பூசைமுறை தவறியது. அதுபொழுது இறைவர் அச்சைவருடைய வடிவோடு இருந்து  தம்மைத்தாமே பூசித்த 
சிறப்புடையது. இதைத்தான் 'ஐயாறதனில் சைவனாகியும்' என்பார் திருவாசகத்தில். இப்பதிக்குப் 
பதினெட்டுத் தேவாரப் பதிகங்கள் இருக்கின்றன. திருவடிப் பெருமைகளை அப்பர் பெருமான் இருபது 
திருப்பாடல்களால் இத்தலத்தில் உணர்த்தியதுபோல் வேறு எப்பதியிலும் உணர்த்தாத அவ்வளவு 
பெருமையை உடையது. 

    இத்தலத்தில் நிகழும் விழாக்களுள் நந்திதேவர் திருமணத் திருவிழா. 'சித்திரைப் பெருந்திருவிழா' 
என்பவை மிகச் சிறந்தனவாகும். இவைகளுள் நந்திதேவர் திருமணத் திருவிழா,  பங்குனி மாதத்தில் நிகழ்வதாகும். 
அதுபொழுது அம்மையப்பர் ஒரு தனி வெட்டிவேர் பல்லக்கிலும் நந்திதேவர் வேறு ஒரு வெட்டிவேர் பல்லக்கிலும் 
எழுந்தருளி, திருமழபாடிக்குச் செல்வர். அங்கே நந்திதேவர்க்குத் திருமணத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே 
ஐயாற்றுக்கு எழுந்தருளும் விழா இதுவாகும்.

சித்திரைப் பெருந்திருவிழா

    இது சித்திரை மாதத்தில் நிகழ்வது. இதைப் பிரமோற்சவம் என்றும் வழங்குவர். இதில் 
ஐந்தாம் நாள் விழா தன்னைத்தான் பூசிப்பதாகும். இவ்விழாவின் முடிவில் ஐயாறப்பர் வளர்த்த 
நாயகியாருடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப் பல்லக்கிலும், நந்திதேவர் தனியொரு 
வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளித் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, 
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் தலங்களுக்கு எழுந்தருள, அந்தந்த 
ஊர்களின் இறைவரும் தனித்தனி வெட்டிவேர்ப் பல்லக்குகளில் எதிர்கொண்டு அழைத்து 
உடன்தொடர மறுநாட்காலை ஐயாற்றுக்கு எழுந்தருளுவார். இதை ஏழூர் விழா அல்லது 
சப்தஸ்தானத் திருவிழா என்பர். தென்னாட்டில் இதைப் போன்றதொரு விழாவைக் காண முடியாது. 
இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் குழுமி ஏழ் ஊர்களையும் சுற்றிவரும் காட்சி போற்றத்தக்கதாகும்.

    இத்திருக்கோயில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்து அருளாட்சியில் உள்ளது.
 இப்பொழுது ஆதீனத்தில் இருப்பத்தாறாவது பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி புரியும் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் 
அவர்கள், பழங்காலத்துச் சோழ மன்னர்களுடைய ஆட்சிக் காலங்களில்  நடைபெற்ற சிறப்புக்களைப் போலவே 
இத்திருக்கோயிலின் நித்திய நைமித்திகங்கள் எல்லாவற்றையும் மிக்க சிறப்புறச் செய்வித்தருளுகின்றார்கள்.

    இத்திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் பெரியபுறத் திருச்சுற்றாலை என்று கல்வெட்டுக்களில் 
கூறப்பெற்றுள்ளது. இப்பிரகாரத்தின் வடபால் ஒலோகமாதேவீச்சரம் என்னும் பெயருள்ள ஒருகற்கோயில் 
இருக்கின்றது. அது முதலாம் இராசராச சோழனுடைய மனைவியாராகிய ஒலோகமாதேவியால் கட்டப்பெற்றதாகும்.

    அம்மன்கோயில் புதிய திருப்பணியை உடையது. புலவர்கள் செய்யுளை அலங்கரிப்பதுபோல், 
தேவகோட்டை உ. ராம. மெசுப. சேவு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் அழகுறத் திருப்பணி செய்திருக்கின்றனர். 
ஆடி அமாவாசை நாள் அப்பருக்குக் காட்சி கொடுத்த நாளாகும். அன்றும் திரளான மக்கள் வந்து கூடுவர். 
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஒரு வெண்பாவால் திருவையாற்றைப் பாடியுள்ளார்கள். அது சேத்திரத் 
திருவெண்பாவில் சேர்க்கப் பெற்றுள்ளது. அப்பாடல் வருமாறு:

    குந்தி நடந்து குனிந்தொருகைக் கோலூன்றி 
    நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி 
    ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே 
    ஐயாறு வாயால் அழை.

    இத்தல புராணம் ஞானக்கூத்தரால் இயற்றப் பெற்றது. தருமை ஆதீனத்தார் அச்சிட்டுள்ளனர். 
இத்திருக்கோயிலுள் அமைந்த ஐயாறப்பர் கோயில், தென்கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் 
ஆகிய மூன்று கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

பதிக வரலாறு

    திருஞானசம்பந்தப் பெருமான் தொண்டர் எதிர்கொள்ள, முத்துப்பல்லக்கில் சென்று திருவையாற்றை 
அடைந்து அந்நன்னகரை முன்னிறைஞ்சி, புந்திநிறை செந்தமிழின் சந்த இசையில், 'புலனைந்தும் பொறிகலங்கி 
நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென்று அருள்செய்வார் அமருங்கோயிலை' 
அணுகி, நீடுகோபுரத்தைத் தொழுது, உள்ளே புகுந்து வலங்கொண்டு தாழ்ந்து, 'கோடல் கோங்கம்' என்னும் 
இத்திருப்பதிகக் குலவுமாலையை, 'நீடு பெருந் திருக்கூத்து நிறைந்த திருவுள்ளத்து நிலைமை தோன்ற' 
ஆடுமாற்றைப் பாடியாடினார்.

            திருச்சிற்றம்பலம்

1524.    கோடல்கோங்கங்குளிர்கூவிளமாலைகுலாயசீர் 
    ஓடுகங்கைஒளிவெண்பிறைசூடுமொருவனார் 
    பாடல்வீணைமுழவங்குழல்மொந்தைபண்ணாகவே
    ஆடுமாறுவல்லானுமையாறுடையையனே.            1

    கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர் 
    ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார் 
    பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண்ஆகவே 
    ஆடும்ஆறு வல்லானும் - ஐயாறு உடை ஐயனே.

    kOTal, kOgkam, kuLir kUviLamAlai, kulAya cIr 
    OTu kagkai, oLi veNpiRai, cUTum oruvanAr- 
    pATal vINai, muzavam, kuzal, montai, paN AkavE 
    ATum ARu vallAnum-aiyARu uTai aiyanE.

பொருள்:     இந்தப் பதிகத்தில் முதல் இரண்டடிகளில் சிவபெருமான் சூடுவனவற்றுள் ஐந்தும்
பின் இரண்டடியில் அவனது திருக்கூத்து வன்மையும் இசைக்கருவிகளும் கூறப்பட்டுள்ளன.
சிவபெருமான் திருவையாற்றில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறார். அவருடைய திருமுடியில் 
வெண்மையான காந்தள் மலரும், கோங்கு மரத்தின் தளிர்களும், வில்வத்தின் மூன்று இலைகளைக் 
கொண்ட தளிர்களும், பாய்ந்து ஓடுகின்ற கங்கை நதியும் , ஒளி பொருந்திய வெண்மையான தோயாத
 பிறைச் சந்திரன் ஆகியன கண்டு வணங்கி வாழ்த்தி அவனுடைய பெருமைகளை அடியார்கள் 
பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    சிவபெருமான் வீற்றிருக்கின்ற எல்லாத் திருக்கோயில்களிலும் அவனது நடனம் வணங்கப் பெறும் 
உண்மை சாத்திரம் உணர்ந்தோர்க்கே விளங்கும். திருநாவுக்கரசர் அருளிச் செய்தபடி 'ஆடல் அமர்ந்துறைகின்ற 
ஐயாறு' - இங்குள்ள திருக்கோவில் ஐயாறப்பர் நீடு பெருந்திருக்கூத்தை ஆடிக்கொண்டுள்ளார். அடியார்கள் 
இசைப்பாட்டும் பண்ணோடு பாடிக் கொண்டிருக்கிறார்கள். பாடுகின்ற பாட்டுக்களுக்கு இணையாக வீணை, 
மத்தளம் குடமுழா, வேய்ங்குழல், மொந்தை முதலியனவும் பண்ணோடு இசைத்து ஒலியைக் கிளப்பி உள்ளத்தைப் 
பரவசமாக்கிக் கொண்டிருக்கின்றன.

குறிப்புரை:     கோடல்-  வெண்காந்தள். பாடல் - இசைப்பாட்டு. முழவம்- தண்ணுமை, மத்தளம்,குடமுழா. 
குழல் -வேய்ங்குழல். மொந்தை-   ஒருகட் பறை வகை.   பண்ணாக ஆடல்- இவ்விசைக்கருவிகளின் ஒலி ஆடலுக்கேற்ற
 பண்ணிசையாக அமைய ஆடுதல். ஐயாறு - பஞ்சநதம் என்பது வடமொழிப் பெயர். 

    The history of the city Thiruvaiyaaru gives all details about this very big temple owned 
and well maintained by Dharmapuram Mutt. All the temple festivals are well celebrated in a very 
grand manner.

    Five rivers such as Vadavaaru (வடவாறு), Vennaaru (வெண்ணாறு), Vettaaru (வெட்டாறு), Kudamurutti 
(குடமுருட்டி) and Cauvery (காவேரி) flow through this city. That is why the city itself is called 
(Thiru-Iyyaaru - five rivers running along the city) five rivers. Lord Civan is called here Iyyaarappar 
(ஐயாறப்பர் and in Sanskrit He is called Panchanadeeswarar (பஞ்சநதீஸ்வரர்).

    Oh Behold! Civa is the Lord of Thiruvaiyaaru, His head is adorned beautifully with
flowers such as glory lily (வெண்காந்தள் கோடல்), Cochleosperns (கோங்கம்), bael leaves (வில்வம்). 
The descending Ganges and the white crescent moon also find a place on His head along with the 
flowers. He does His cosmic dance to the accompaniment of Veena, and other percussions such as 
drum, flute and a drum with one face, played in conformity to the music.

1525.    தன்மையாருமறிவாரில்லைதாம்பிறரெள்கவே 
    பின்னுமுன்னுஞ்சிலபேய்க்கணஞ்சூழத்திரிதர்வர் 
    துன்னவாடையுடுப்பர்சுடலைப்பொடிப்பூசுவர் 
    அன்னமாலுந்துறையானுமையாறுடையையனே.        2

    தன்மை யாரும் அறிவார் இலை; தாம் பிறர் எள்கவே,
    பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்; 
    துன்னஆடை உடுப்பர்; சுடலைப்பொடி(ப்) பூசுவர்; 
    அன்னம் ஆலும் துறையானும் - ஐயாறு உடை ஐயனே.

    tanmai yArum aRivAr ilai; tAm piRar eLkavE, 
    pinnum munnum cilapEykkaNam cUzat tiritarvar; 
    tunna ATai uTuppar; cuTalaip poTi(p) pUcuvar; 
    annam Alum tuRaiyAnum--aiyARu uTai aiyanE.

பொருள்:     அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை. 
அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத் திரிவார். கந்தலான 
ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார்.

குறிப்புரை:     எள்க - இகழ. திரிதர்வர்- திரிதருவார், திரிவார். துன்னம் - துளைத்தல். தைத்தல்.
துன்னவாடை - கந்தை. 'துன்னங் கொண்ட உடையான்' (தி. 2 ப. 76 பா 2) 'துன்னிலினாடை யுடுத்து
(தி.1. ப. 41 பா.3) எனப் பிற பதிகங்களிலும் காணலாம். சிவபிரானியல்பை அறிபவர் எவரும் இல்லை.         
அவர் பின்னும் முன்னும் சில பேய்க்கூட்டம் சூழத் திரிவதைக் கண்டு பிறர் இகழ்தலுங்கூடும். 
கந்தலணிவார்.  சுடுகாட்டுப் பொடி பூசுவார். அவற்றால் அவனை அளந்தறியலாகாது. அன்னப்புட்கள் 
ஆலும் ('ஒலிக்கும் ஆடும்') துறை.

    Oh! Behold! Lord Civa is seated in Thiruvaiyaaru temple. Swans congregate in large 
numbers on the banks of the rivers. No one knows His divinity and some mock at His way of life,
because He wanders on the burial ground and dances, surrounded by ghosts at front and back. 
He wears rugs of torn cloth. He smears His body with the white ashes of the burial ground.

1526.     கூறுபெண்ணுடைகோவணமுண்பதும்வெண்டலை 
    மாறிலாருங்கொள்வாரில்லைமார்பிலணிகலம் 
    ஏறுமேறித்திரிவரிமையோர்தொழுதேத்தவே 
    ஆறுநான்குஞ்சொன்னானுமையாறுடையையனே.        3

    கூறு பெண்; உடை கோவணம்; உண்பது வெண்தலை; 
    மாறில், ஆரும் கொள்வார் இலை, மார்பில் அணிகலம்; 
    ஏறும் ஏறித் திரிவர்; இமையோர் தொழுது ஏத்தவே 
    ஆறும் நான்கும் சொன்னானும் - ஐயாறு உடை ஐயனே.

    kURu peN; uTai kOvaNam; uNpatu veNtalai; 
    mARil, Arum koLvAr ilai, mArpil aNikalam;                     
    ERum ERit tirivar; imaiyOr tozutu EttavE 
    ARum nAnkum connAnum--aiyARu uTai aiyanE.

பொருள்:     ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர். கோவண ஆடை 
உடுத்தவர். வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ 
பண்டமாற்றாகப் பிறர் கொள்பவர் இல்லாத ஆமையோடு பன்றிக்கொம்பு, பாம்பு முதலானவை. 
இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர்.

குறிப்புரை:     கூறு - இடப்பால், பெண் - உமாதேவியார், உடை கோவணம், உண்பதும் வெண்டலையில். 
மார்பிலணிந்தன முற்றலாமை யிளநாகமொடு ஏனமுளைக் கொம்பு, பரிவர்த்தனஞ் செய்து கொள்ளு முறையில், 
ஏனைப் பொற்கலம் மணிக்கலம் போலக் கொள்வார் எவருமில்லை. மாறில் - பரிவர்த்தனஞ் செய்ய வேண்டின். 
இப்பொருளில் உலக வழக்குமுண்டு. ஏறு - எருது. ஆறும் - சிக்கை, கற்ப சூத்திரம், வியாகரணம், நிருத்தம், 
சந்தோவிசிதி, சோதிடம் என்னும் அங்கம் ஆறும்; நான்கும்- வேதம் நான்கும், (தி.2.ப.84, பா.11) 
சொன்னான் - சிவபிரான். 'மிக்க வேத மெய்ந்நூல் சொன்னவனே' திருவாசகம் 147.

    Oh! Behold! It is Civa who is the Lord of Thiruvaiyaaru city. His body is half male 
and half female (In Tamil He is called Arthanaareeswarar - அர்த்தநாரிசுவரர்). His dress is only 
a loin cloth (கோவணம்). He carries in His hand the skull of Brahma as a bowl for alms. He wears 
on his chest horn, turtle and snake. He wanders all over the cosmos on the bull. He is the author 
of the four Vedas, Aagamaas and six Angas. Above all these, understand that He is worshipped 
by one and all in the world including the Devas and other celestials.

1527.     பண்ணினல்லமொழியார்பவளத்துவர்வாயினார் 
    எண்ணினல்லகுணத்தாரிணைவேல்வென்றகண்ணினார் 
    வண்ணம்பாடிவலிபாடித்தம்வாய்மொழிபாடவே 
    அண்ணல்கேட்டுகந்தானுமையாறுடையையனே.        4

    பண்ணின் நல்ல மொழியார், பவளத் துவர் வாயினார், 
    எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற கண்ணினார்,
    வண்ணம் பாடி வலிபாடி, தம் வாய்மொழி பாடவே, 
    அண்ணல் கேட்டு உகந்தானும்-ஐயாறு உடை ஐயனே.

    paNNin nalla moziyAr, pavaLattuvar vAyinAr, 
    eN il nalla kuNattAr, iNaivEl venRa kaNNinAr, 
    vaNNam pATi, vali pATi, tam vAymozi pATavE, 
    aNNal kETTu ukantAnum--aiyARu uTai aiyanE.

பொருள்:     திருவையாற்றில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்புரிந்து வரும் ஐயாறப்பர் 
அத்தலத்தில் பண்ணிசையிலும் இனிய பாடல்களை அவர்திருமுன்பு சேயிழையார்கள் பாடுவதனைக் 
கேட்டு உவந்தார். அவர்களை ஆசீர்வதிக்கிறார். அந்தச் சேயிழையார்கள் பவளம் போன்ற செந்நிற 
வாயை உடையவர்கள். அவர்கள் பண் கலந்து பாடும் தமிழிசையில் வல்லவர்களாகவும் நற்குணத்தவராகவும் 
விளங்குகிறார்கள். அவர்கள் வேலினை வென்ற கூர்மையான கண்களை உடையவர்களாக உள்ளனர். 
அவன் அருளைத் தங்கள் கண்களால் காணும் தன்மை உடையவர்கள். மந்திரமும், தந்திரமும் மருந்துமாகித்
தீரா நோய் தீர்த்தருள்வானாகிய அவனது வலியையும் பாடுகிறார்கள். அவர்கள் வாய்மொழி எப்பொழுதும் 
சிவநாமத்தையே பாடும் தோத்திரங்களாக அமைகின்றன. இவ்வாறு காரிகையர்கள் பண்பாடலைக் கேட்டு 
ஐயாறப்பர் மிகவும் உகந்து அவர்களை ஆசீர்வதித்து ஆட்சி புரிந்து வருகிறார்.

குறிப்புரை:     பண்ணின்- பண்ணிசைபோல, பண்ணிசையிலும், நல்ல- இனிய, பவளம் போன்ற 
துவர்வாயினார்; துவர் - செந்நிறம்.  எண் இல் - கணக்கில்லாத, எண்ணில் என்பது வினையெச்சமாக் 
கோடலமையாது.கண் இரண்டாதலின், இணை வேலில் (இரண்டு) ஒப்பாக்கப்பட்டன. வண்ணம்- அவனருளே 
கண்ணாகக் காணும் வண்ணம். தன்மை. வலி- மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருளும் 
வன்மை. தம் வாய்மொழி - சிவநாமமே பாடும் நல்ல வாயின் மொழியுந் தோத்திரங்களை. மொழி - ஆகு பெயர். 
அண்ணல் - சிவபெருமான். அக்காலத்தில் திருவையாற்றில்  இளமகளிர் சிவபத்தியிற் சிறந்திருந்தனர் 
என்று கருத இடமுண்டு. 'காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாட... சேயிழையார் நடமாடுந் 
திருவையாறு' என்று வருந்தேவாரமும் (தி.1. ப 130 . பா 6) ஈண்டுக் கருதுக.

    Numerous girls in the city of Thiruvaiyaaru used to sing poems on Lord Civa 
about His glory and might. Their beautiful and melodious voices denote their talent 
in music. Their mouths resemble coral in colour. They have pairs of spear like eyes. 
Of course they are embodiments of many virtues. Oh! Behold! Civa, the Lord of 
Thiruvaiyaaru is well pleased with these beautiful songs of these young damsels and
He bestows His grace on them and reigns supreme. 

1528.     வேனலானைவெருவவுரிபோர்த்துமையஞ்சவே 
    வானையூடறுக்கும்மதிசூடியமைந்தனார் 
    தேனெய்பால்தயிர்தெங்கிளநீர்கரும்பின்றெளி 
    ஆனஞ்சாடுமுடியானுமையாறுடையையனே.        5

    வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே, 
    வானை ஊடுஅறுக்கும் மதி சூடிய மைந்தனார் - 
    தேன், நெய், பால், தயிர், தெங்குஇளநீர், கரும்பின் தெளி 
    ஆன்அஞ்சு,ஆடு முடியானும் - ஐயாறு உடை ஐயனே.

    vEnal Anai veruva uri pOrttu umai anjcavE, 
    vAnai UTu aRukkum mati cUTiya maintanAr- 
    tEn, ney, pAl, tayir, tegku iLanIr, karumpin teLi, 
    Ananjcu, ATu muTiyAnum--aiyARu uTai aiyanE.

பொருள்:     திருவையாற்றில் உள்ள திருக்கோவிலில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்புரிந்து 
வரும் ஐயாறப்பர் விண்ணை அறுத்துச் செல்லும் பிறை மதியைத் தன் சடையில் சூடியுள்ளார். இவருக்கு 
அபிடேகம் செய்வதற்கு ஏழுவிதமான தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் தெளிந்த சாறு முதலியன 
உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. நெய், பால், தயிர், பசுவின் கோமியம், கோசலம் ஆகியவைகளை 
ஆனைந்து என்றும் வழங்கும் பெயராலும் அபிடேகம் செய்வர். அவனுடைய சக்தியாகிய உமாதேவியாரும் 
அவனை விட்டுப் பிரியாது அவன் அருகிலேயே இருப்பவள். ஒரு சமயம் கெடிலக்கரை நதிப் பக்கம் இருந்து 
ஒரு மதம் பிடித்த வெம்மையோடு விளங்கும் யானை ஒன்று இவர்கள் இருவரையும் நோக்கி வேகமாகச் 
சீற்றத்துடன் வந்தது. அதனைக் கண்டவுடன் உமையம்மை சிறிது அஞ்சினாள். மறுகணத்தில் ஐயாறப்பராகிய 
சிவபிரான் அந்த யானையை நோக்கிச் சென்று, அதனைக் கொன்று அதன் தோலை உரித்துத் தனது உடலில் 
போர்த்துக் கொண்டார். அம்மையின் அச்சம் அகன்றது.

குறிப்புரை:     வேனல்- வெம்மை. 'கெடிலக்கரை வேனலானையுரித்த வீரட்டர்' (தி.5 ப.54 பா.5). வானையூடறுக்கும் 
மதி -விண்ணூடு அறுத்துச் செல்லும் பிறை. தேன் முதலிய ஏழும் அபிடேகத்  திரவியங்கள். நெய், பால், தயிர் 
என்னும் மூன்றும் தனித்தனி ஆட்டற்குரியன. இம்மூன்றையும் 'ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்' என்று 
தனித்தும், 'ஆனிலங்கிளரைந்தும் அவிர் முடியாடி' என்று ஐந்தாகச் சேர்த்தும் கூறுதல் திருமுறை வழக்கு. 
'ஆனஞ்சு' பஞ்ச கௌவியம். (ஞானபூசாவிதி. 14. உரை பார்க்க) தெளி - தெளிந்த சாறு (ஆகுபெயர்). 
தெங்கு - தென்னை, தென்கு என்பதன் மரூஉ.

    Oh! Behold! It is Civa who is the Lord of Thiruvaiyaaru He has adorned His head with 
the moon, which crosses the sky. Once goddess Uma Devi shuddered to see the fierce elephant 
rushing amok towards her. Immediately Lord Civa chased the elephant, killed it and covered 
His body with its hide. He is in the temple and is daily given the sacred bath with honey, 
ghee, milk, curd, tender coconut water and sugarcane juice along with five holy things 
obtained from the cow.

1529.     எங்குமாகிநின்றானுமியல்பறியப்படா
    மங்கைபாகங்கொண்டானுமதிசூடுமைந்தனும் 
    பங்கமில்பதினெட்டொடுநான்குக்குணர்வுமாய் 
    அங்கமாறுஞ்சொன்னானுமையாறுடையையனே.        6

    எங்கும்ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா 
    மங்கை பாகம் கொண்டானும், மதி சூடும் மைந்தனும், 
    பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும்ஆய் 
    அங்கம் ஆறும் சொன்னானும் - ஐயாறு உடை ஐயனே.

    egkum Aki ninRAnum, iyalpu aRiyappaTA 
    magkai pAkam koNTAnum, mati cUTu maintanum, 
    pagkam il patineTToTu nAnkukku uNarvum Ay 
    agkam ARum connAnum--aiyARu uTai aiyanE.

பொருள்:     திருவையாற்றில் வீற்றிருக்கும் ஐயாறப்பராகிய சிவபிரான் அண்டசராசரங்கள்
 யாவற்றிலும் வியாபித்து விளங்குபவன். இந்தப் பேரியல்பை ஆன்மாக்களால் அறியப்படாதவனாயும் 
விளங்குகிறான். உமாதேவியைச் சிவபிரான்தன்  உடம்பின் இடப்பக்கத்தில் ஒரு பாகமாக வைத்துக் 
காட்சி அளிக்கிறான். அவன் தன் சடாமுடியில் வெண்நிறமுள்ள பிறைச் சந்திரனைச் சூடியுள்ளான். 
இந்தச் சிவபிரானால் சொல்லப்பட்டது பதினெட்டுப் புராணங்கள். அவை மச்சபுராணம், கூர்மபுராணம்,
வராக புராணம்,  வாமனபுராணம், சிவமகாபுராணம், இலிங்கபுராணம், பவிடிய புராணம், காந்தபுராணம்,
 மார்க்கண்டேய புராணம், பிரம்மாண்ட புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், கருடபுராணம், 
நாரதீய புராணம், பிரமபுராணம், பதுமபுராணம், ஆக்கினேய புராணம்,  பிரமவைவர்த்த புராணம் 
ஆகியனவாகும். ருக், யசூர், சாம மற்றும் அதர்வண வேதம் என வேதங்கள் நான்காகும். மலம் அகற்றற் 
பொருட்டு உயிரினிடத்து நிலைபெற்றுள்ள  பர (சிவ) ஞானமாகிய திருவருளும், அத்திருவருளைத் 
தெளிய ஓதுகின்ற அபரஞானமாகிய சிவாகமங்களும். சிட்சை, வியாகரணம்,சந்தம், நிருத்தம், 
சோதிடம்,கற்பம் என வேதாங்கங்கள் ஆறும் ஆக இந்த 30 கலைகளையும் சொன்னவர் சிவபிரானாகிய 
திருவையாற்றில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஐயாறப்பர் ஆவார். 

குறிப்புரை:     எங்குமாகி நின்றான்- அகண்ட வியாபகன். இயல்பு அறியப்படாமங்கை. சிவனுக்கும்
 ஏற்றிக்கூறலாம். பங்கம் - இழிவு. பதினெட்டு - பதினெண் புராணம் 'சூதன் ஒலிமாலை' (தி.3. ப.54 பா.8 )
பெரிய புராணம், திருஞான.840) நான்கு - நாலு வேதம். உணர்வு - மலம் அகற்றற் பொருட்டு 
உயிரினிடத்து நிலை பெற்றுள்ள பர (சிவ) ஞானமாகிய திருவருளும், அத்திருவருளைத் தெளியவோதுகின்ற 
அபர ஞானமாகிய சிவாகமங்களும், அங்கம் - வேதாங்கங்கள் (பா. 3 உரை).

    Oh! Behold! It is Civa, the Lord of Thiruvaiyaaru who expliccated the eighteen 
Puranaas, four Vedas and Six Angaas for the benefit of mankind. He is omnipresent. 
His attributes are not known. He has on the left portion of His body goddess Uma.
He has adorned His head with the crescent moon. Oh! Ye devotees go to His temple 
and worship Him.

1530.     ஓதியாருமறிவாரில்லையோதியுலகெலாம் 
    சோதியாய்நிறைந்தான்சுடர்ச்சோதியுட்சோதியான் 
    வேதியாகிவிண்ணாகிமண்ணோடெரிகாற்றுமாய் 
    ஆதியாகிநின்றானுமையாறுடையையனே.        7

    ஓதி யாரும் அறிவார் இலை;ஓதி உலகுஎலாம் 
    சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்; 
    வேதிஆகி, விண்ஆகி, மண்ணோடு எரி காற்றும்ஆய், 
    ஆதிஆகி,நின்றானும் - ஐயாறு உடை ஐயனே.

    Oti yArum aRivAr ilai; Oti ulaku elAm
    cOti Ay niRaintAn; cuTarc cOtiyuL cOtiyAn; 
    vEti Aki, viN Aki, maNNOTu eri kARRum Ay, 
    Ati Aki, ninRAnum--aiyARu uTai aiyanE.

பொருள்:     திருவையாற்றிலுள்ள திருக்கோவிலில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்புரிந்து 
வருகின்ற சிவபிரான் ஆகிய ஐயாறப்பரை நூல்கள் ஓதுவதனால் அறிபவர் ஒருவரும் இலர். எல்லா 
உயிர்களுக்கும் ஓதி அறிவிப்பவர் அவரே. எல்லா உயிர்களையும் தானாகவே அறிபவர் அவரேயாவார். 
எல்லா உலகங்களிலும் அவர் சோதியாய் நிறைந்துள்ளார். சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய 
சுடர்களுக்கெல்லாம் ஒளி தருபவர் அவரே. நான்கு வேதங்களையும் உலகுக்கு அளித்தவர் அவரே. 
அவர்தான் விண்ணாகவும், மண்ணோடு நெருப்பும் காற்றுமாகவும், யாவற்றுக்கும் ஆதியாக 
நின்றவரும் திருவையாற்றில் உள்ள ஐயாறப்பரே ஆவார்.

குறிப்புரை:     வேதி - வேதசொரூபன். விண்- ஆகாயம், எரி- தீக்கடவுள். ஆதி- முதற்பொருள்.         
 ஓதியறிவார் யாரும் இல்லை. உயிர்கள் ஓதியறிதலில்லையேனும், சிவபிரான் தானே தன்னை 
உயிர்க்கு ஓதுவித்தும் உணர்வித்தும், சேதனாசேதனப் பிரபஞ்சம் எல்லாம் சோதி (ஒளி) யாய் 
நிறைந்துள்ளான். சுடரையுடைய சோதிகளாகிய சூரிய சந்திராக்கினிக்குள் சோதியாய் உறைபவன் 
(திருவிசைப்பா 2)  வேதியாகி - சேதன சொரூபியாகி, விண்... ஆகி - அசேதனரூபமாகி, (தடத்த வடிவத்தைச் 
சார்ந்தது) பழம் பதிப்பில் உள்ள 'எரிகாற்றுமாய்' என்ற பாடமே சிறந்தது. எரி- தீ. எறியுங்காற்று எனின் 
காற்று என்பதில் உள்ள பொருளே எறிதலுமாதலின் சிறப்பில்லை.

    Lord Civa, residing in Thiruvaiyaaru, need not be preached by anybody to know 
about life in the universe. He is the preacher and the activating force for all. He  is the 
divine light, pervading all the worlds. He is the inner flame of the light in the sun, the moon 
and fire. He is the origin of all and appears as the five elements, air, earth, water , fire 
and the sky. He is the material and the immaterial. The three aspects of the Lord omniscience,
omnipotence and omnipresence - are stressed in this hymn.

1531.    குரவநாண்மலர்கொண்டடியார்வழிபாடுசெய் 
    விரவிநீறணிவார்சிலதொண்டர்வியப்பவே 
    பரவிநாள்தொறும்பாடநம்பாவம்பறைதலால் 
    அரவமார்த்துகந்தானுமையாறுடையையனே.        8

    குரவநாள்மலர்கொண்டு அடியார் வழிபாடுசெய், 
    விரவி நீறு அணிவார் சிலதொண்டர் வியப்பவே, 
    பரவி நாள்தொறும் பாட, நம் பாவம் பறைதலால், 
    அரவம் ஆர்த்து உகந்தானும் - ஐயாறு உடை ஐயனே.

    kurava nAL malar koNTu aTiyAr vazipATu cey,
    viravi nIRu aNivAr cilar toNTar viyappavE            
    paravi nALtoRum pATa, nam pAvam paRaitalAl, 
    aravam Arttu ukantAnum--aiyARu uTai aiyanE.

பொருள்:     திருவையாற்றுத் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஐயாரப்பரை அடியார்கள் பலரும் 
பலவிதமாக  வழிபாடு செய்து வருகிறார்கள். அடியார்களில் ஒருசிலர் குரா மரத்தின் அன்றலர்ந்த 
பூக்களைப் பறித்து ஐயாரப்பரின் திருவடிகளில் சொரிந்து வழிபாடு செய்கிறார்கள். இவர் உடம்பு 
முழுவதும் நீறணிந்து இறைவன் திருமுன்பு நின்று வழிபாடு செய்கிறார்கள். மற்றும் சிலர் அவன்திரு 
முன்பு நின்று அவன் புகழைப் பாடுவதையே  கடமையாகக் கொண்டு நீண்ட நேரம் நாள்தோறும் 
பாடிக் கொண்டே இருப்பார்கள்.  இந்த அடியார்களுடைய பாவத்தை எல்லாம் அறவே நீக்கி அருள்பாலித்து 
வருகிறார் ஐயாறப்பர்.  அவர் பாம்பை அணிந்து உயர்ந்தவர்.

குறிப்புரை:     குரவம்- குராமரம். நாள் மலர்- காலையிற் பூத்த பூ. வியப்ப- புகழ்ந்துரைக்க. பரவி- வாழ்த்தி. 
பறைதல் - நீங்குதல். அரவம் - பாம்பு. ஆர்த்து - கட்டி (அணிந்து). உகந்தான் - உயர்ந்தவன். 'விரவி' என்றது 
புதிய பாடம்.

    Oh! Behold! Civa who is the Lord of Thiruvaiyaaru is worshipped in different ways. 
Devotees go daily in the morning to His temple carrying fresh bright flowers and offer them 
to Him, they recite prayers and sing His glory. These devotees have smeared their body 
with holy ashes. Lord Civa hearing all these recitations, is well pleased to bestow 
boons on all the devotees and absolves them of all their sins. Ayyarappan is elevated, 
wearing a snake on His body.

1532.    உரைசெய்தொல்வழிசெய்தறியாவிலங்கைக்குமன் 
    வரைசெய்தோளடர்த்தும்மதிசூடியமைந்தனார் 
    கரைசெய்காவிரியின்வடபாலதுகாதலான் 
    அரைசெய்மேகலையானுமையாறுடையையனே.        9

    உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் 
    வரை செய் தோள் அடர்த்து(ம்) மதி சூடிய மைந்தனார்; 
    கரைசெய் காவிரியின் வடபாலது காதலான்; 
    அரை செய் மேகலையானும் - ஐயாறு உடை ஐயனே.

    uraicey tol vazi ceytu aRiyA ilagkaikku man 
    varai cey tOL aTarttu(m) mati cUTiya maintanAr; 
    karai cey kAviriyin vaTapAlatu kAtalAn; 
    arai cey mEkalaiyAnum-aiyARu uTai aiyanE.

பொருள்:     இலங்காபுரியின் முடிஅரசனாகிய தசக்கிரீவன், மிக்க சிவபக்தனாகிப் பூமி, 
அந்தரம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் அதிபதி (திரிலோகாதிபதி). அதற்குரிய 
தொன்மையான வேத ஆகம வழிகளையெல்லாம் அறிந்து அதன்வழி நின்று நடந்தவன். 
அவனுக்கு இந்த வழிகள் எல்லாம் புது வழியன்று. மிகத் தொன்மையான பழைய வழிகளே 
ஆகும். இத்தனை சிறந்த அறிவுகளை உடைய தசக்கிரீவனுக்கு அறியாமை மேலிட்டது. 
மேலிட்ட காலத்தில் இந்தத் தொன்மையான வழிகளையெல்லாம் மறந்து விட்டான். ஒரு 
சமயம் விண்வழியே அவன் தன் ஊர்தியில் செல்லும்போது, சிவபிரானும் அம்மையும் 
தங்கியிருக்கும் திருக்கயிலை மலைவழியே அவன் ஊர்தி பறக்க முடியவில்லை. 

    அவன் உடனே கீழே இறங்கி கயிலை மலையைத் தூக்கி நகர்த்தி வைக்க முயற்சி செய்தான்.
முயற்சியில் தோற்றான். தனது இருபது தோள்களுடன் கயிலை மலையின்கீழ் அகப்பட்டு நசுங்கிப் 
போனான். அழுதான்; அறியாமை நீங்கிற்று. சிவபிரான்மீது சாமகீதம் பாடினான்.  மன்னிப்புக் கிடைத்தது. 
இராவணன் என்ற திருநாமத்தையும் மேலும் பலவரங்களையும்  பெற்றான். இந்த உதவிகளைச் செய்த 
வீரனாகிய சிவபிரானாகிய ஐயாறப்பர், தனது இடுப்பில் பொன்னாலாகிய மேகலை என்ற ஆபரணத்தை 
அணிந்து கொண்டு காவிரியின்  வடகரையில் அமைந்துள்ள திருக்கோவிலில் வீற்றிருந்து 
அடியார்களுக்கெல்லாம் அருள்புரிந்து வருகின்றார்.

குறிப்புரை:     இராவணன் மிக்க சிவபக்தனாகித் திரிலோகாதி பத்தியம் முதலிய பெருவரங்களைப்
பெற்றவன். அதற்குரிய வேதாகமவழி அவனுக்குப் புதுவழியன்று. தொல் (பழைய) வழியே. அறியாமை
 மேலிட்டபோது, அத்தொல்வழி மறந்து திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயன்றான். அதனால்
 அவனுடைய மலைகளைப் போன்ற தோள்களை நசுக்கப் பெருவிரல் நுனியை மட்டும் ஊன்றி அருளினார்.
 சந்திர சேகரரான வீரனார். மதி - வளராததும் தேயாததும் ஆன திங்கட்பிறை. மைந்தனார் - வீரனார்.
 திருவையாறு காவிரியின் வடகரைக் கண் உள்ளது. காதல்- அத்தலத்தில் எழுந்தருளியிருக்க விரும்புதல். 
அரைசெய் மேகலையான் - மேகலாபரணம் இடுப்பிற் கொண்டவன். மேகலை- பொன்னாடை விசேடம். 
'எண்கோவை மேகலை'.   

    Oh! Behold! It is Civa, the Lord of Thiruvaiyaaru. He adorns His head with the 
moon which neither wanes not waxes. In His loin He wears the golden ornament. He  stays 
in the temple, which is situated north of the river Cauvery. Once the king of SriLanka 
Raavana found his flight was obstructed by mount Kailash, forgot the holy ancient traditions 
and went to lift the abode of Civa - Mount Kailash. Lord Civa very slightly pressed the top 
of the mountain with His toe. Raavanaa's mighty mountain like shoulders got crushed under 
the mountain. Later when he prayed and sang Saama Geetham he was forgiven and got boons 
and the name Raavanan.

1533.     மாலுஞ்சோதிமலரானுமறிகிலாவாய்மையான் 
    காலங்காம்புவயிரங்கடிகையன்பொற்கழல் 
    கோலமாய்க்கொழுந்தீன்றுபவளந்திரண்டதோர் 
    ஆலநீழலுளானுமையாறுடையையனே.        10

    மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்; 
    காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்; 
    கோலம்ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர் 
    ஆலநீழல் உளானும் - ஐயாறு உடை ஐயனே.

    mAlum, cOti malarAnum, aRikilA vAymaiyAn; 
    kAlam kAmpu vayiram kaTikaiyan ponkazal; 
    kOlam Ayk kozuntu InRu pavaLam tiraNTatu Or 
    AlanIzal uLAnum--aiyARu uTai aiyanE.

பொருள்:     திருவையாற்றின் திருக்கோவில் வீற்றிருக்கும் சிவபிரானாகிய ஐயாறப்பர் திருமாலும், 
பிரமனும் அடிமுடி தேடியும் அறிய முடியாத பெருமை உடையவர். சிறப்பான ஆடையை அணிந்தவன். 
அவனுடைய திருவடிகளில் பொன்னால் ஆய அணிகலன்களை அணிந்தவன். பவள நிறத்தை ஒத்த சிவந்த 
ஒளியை வீசிக் கொண்டிருக்கின்றான். கல்லால மரத்தின் நிழலில் இருந்து நான்கு முனிவர்களுக்கு அவர்கள் 
கேட்ட சந்தேகங்களை மௌனமாக இருந்து கைமுத்திரைகளினால் பதில் அளித்து அவர்களுக்குத் திருப்தி 
அளித்தவன். இத்தகைய பெருமான்தான் திருவையாற்றுத் திருக்கோவிலை இடமாகக் கொண்டு 
அடியார்களுக்கு அருள்புரிந்து வருகின்றான். 

குறிப்புரை:     மால்- (மயக்கம்) விண்டு. சோதிமலர் - தாமரைப்பூ. வாய்மையான்- சத்திய சொரூபி. 
காலம் காம்பு வயிரம் கடிகையன் என்பதன் பொருள் புலப்பட்டிலது. ஆயினும் ஒருவாறு எழுதலாம். 
கால் - திருவடி. அம் காம்பு - அழகிய காண்பு. வயிரம்- வைரரத்னம், கடிகை - துண்டு. கால்போலக் காம்பு. 
கழல்போலக் கொழுந்து. கடிகையம் பொற்கழல் என்றிருந்தது போலும். ஆலமரம் இறைவனது பொற்கழல் 
போலப் பொன்மையும் மென்மையும் ஒளியும் அழகும் உடைய கோலமாய்க் கொழுந்தீன்று என்க. 
ஈன்று- தோன்றி. ஆலம்பழம் செந்நிறமுடையது ஆதலின், பவளம் திரண்டதோர் ஆலம் என்றார். 
பவளம் போன்ற செந்நிறம் உடைய பழங்களைப் பவளமென்றது உவமையாகு பெயர். கல்லாலுக்குச் 
சாதியடை.

    Oh! Behold! Civa is the Lord of Thiruvaiyaaru. His truth and greatness were 
incomprehensible even to Lord Vishnu and Brahma. He wears excellent coat on His body. 
His divine legs are magnificent with beautiful golden anklets. Sitting under the
banyan tree with coral like fruits and buds, He dispelled the ignorance of the four sages
and transmitted His wisdom to them with particular mudras of His fingers.

1534.    கையிலுண்டுழல்வாருங்கமழ்துவராடையால் 
    மெய்யைப்போர்த்துழல்வாருமுரைப்பனமெய்யல 
    மைகொள்கண்டத்தெண்டோள்முக்கணான்கழல்வாழ்த்தவே 
    ஐயந்தேர்ந்தளிப்பானுமையாறுடையையனே.        11

    கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால் 
    மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல; 
    மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே,
     ஐயம் தேர்ந்து அளிப்பானும் - ஐயாறு உடை ஐயனே.

    kaiyil uNTu uzalvArum, kamaz tuvar ATaiyAl 
    meyyaip pOrttu uzalvArum, uraippana mey ala; 
    mai koL kaNTattu eNtOL mukkaNAn kazal vAzttavE,
    aiyam tErntu aLippAnum--aiyARu uTai aiyanE.

பொருள்:     சமணர்கள் தங்கள் கைகளில் உணவை ஏந்தி உண்ணும் தன்மை உடையவர்கள்.
 புத்தர்கள் பவளம் போன்ற நாற்றம் வீசும் பழுப்பேறிய ஆடையால் உடல் முழுவதையும் போர்த்திக் 
கொண்டுள்ளவர்கள். இவர்கள் வேற்று நெறியினர். இவர்கள் உரைப்பன எல்லாம் பொய்யென்று 
கருதிச் சிவனடியார்கள் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள். சிவபிரான் மைபோன்ற கரிய கண்டத்தைக் 
கொண்டவன். அவனே திருநீலகண்டனாக விளங்குகின்றான். அவன் எட்டுத் தோள்களை உடையவன். 
மூன்று கண்களைக் கொண்டுள்ளவன். அவனுடைய திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்யும் 
அடியார்களின் ஐயங்களைத் தீர்த்துத் தெளிவு செய்பவன் அவனே. அத்தகைய சிறப்புடைய சிவபெருமான்
 திருவையாறு என்று கூறப்படும் ஊரைத் தனது இடமாகக் கொண்டுள்ள தலைவனாவான்.

குறிப்புரை:     கையில் உண்டு உழல்வார் - கையில்உணவை ஏந்தி உண்டு திரியுஞ் சமணர். கமழ்....
உழல்வார்- நாற்றம் வீசும் பழுப்பேறிய ஆடையால் உடம்பைப் போர்த்துத் திரியும் புத்தர்.மைகொள்  கண்டம் - 
நீலகண்டம். முக்கண் - சோமசூரியாக்கினி. ஐயம் - பிச்சை.

    The Jains who eat their food from their hands and the Buddhists who cover their body with 
ochre robes of foul smell do not speak the truth. Ye devotees! do not follow these two races. 
Lord Civa of Thiruvaiyaaru whose neck is black and who has eight shoulders and three eyes 
is always ready to help you. Go to Him and pray at His holy feet. He will dispel all your doubts.

1535.     பலிதிரிந்துழல்பண்டங்கன்மேயஐயாற்றினைக் 
    கலிகடந்தகையான்கடற்காழியர்காவலன் 
    ஒலிகொள்சம்பந்தனொண்தமிழ்பத்துமவல்லார்கள்போய் 
    மலிகொள்விண்ணிடைமன்னியசீர்பெறுவார்களே.        12

    பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை, 
    கலி கடந்த கையான் - கடல்காழியர் காவலன், 
    ஒலி கொள் சம்பந்தன் - ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள், போய் 
    மலி கொள் விண்இடை மன்னிய சீர் பெறுவார்களே.

    pali tirintu uzal paNTagkan mEya aiyARRinai, 
    kali kaTanta kaiyAn--kaTalkAziyar kAvalan,                 
    oli koL campantan--oNtamizpattum vallArkaL, pOy 
    mali koL viN iTai manniya cIr peRuvArkaLE.

பொருள்:     திருவையாற்றில் உள்ள திருக்கோவிலில் இருந்து அருளாட்சி செய்துவரும் 
சிவபிரான் ஆகிய திருவையாறப்பர் பண்டரங்கம் என்று சொல்லப்படும் திருக்கூத்தை ஆடிக் 
கொண்டு அண்டசராசரங்களில் எல்லாம் சென்று பலி ஏற்று வருகிறார். சீகாழிப்பதியில் வாழும் 
அந்தணர்கள் தங்கள் இன்னல்கள் யாவும் நீங்குவதற்காக வேதம் ஓதிக் கொண்டும், யாகம் வளர்த்துக் 
கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வூரின்கண் தோன்றிய ஞானசம்பந்தன் இப்பதியின் 
அறக்காவலனாகிய சிவபிரான் நாமத்தைச் சந்தம் மல்க ஒலிக்கப் பாடுகின்றான். அவன் இந்த ஒளி 
மிக்க சிவஞானத் தமிழ்த் திருப்பதிகத்தை ஐயாறப்பர்மீது வாழ்த்திப் பாடியுள்ளான். இத்திருப்பதிகத்தை 
ஓத வல்லவர்கள் வளம் மிக்க விண்ணவர் உலகத்தில் சிறப்பான புகழைப் பெறுவார்கள்.

குறிப்புரை:     பண்டங்கள்- பாண்டரங்கம் என்னுந் திருக்கூத்தை ஆடுபவன். கலி- வறுமை. 
கலிகடிந்தகையான் என்றது திருஞான சம்பந்தர் எரி ஓம்பும் திருக்கையால் அளவற்றோர் வறுமை நீக்கிய 
உண்மையை உணர்த்தி நின்றது. கடிந்த - நீக்கிய, 'உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளுங் 
கரவாவண்கைக் கற்றவர் சேருங் கலிக்காழி' (தி. 1 ப.102 பா.1)யில், திருஞானவேந்தர் திருக்கைகளை 
உலகவர் கலி (வறுமை) முதலிய துன்பங்களைக் கடிதலில் ஐயமின்று. கடந்த என்றது புதியது. 
கடந்த என்பதே பாடம்.

    காழியர் காவலன் என்றதால், பாலறாவாயரான காரணம் பற்றி, அக்காழியில் இருந்த அந்தணர்
எல்லோரும் அப்பெருமான் திருவடித் தொண்டர் ஆயினர் என்பதும், காழி வேந்தர் தலைவரானார் என்பதும், 
சிவனருள் பெற்றவரையே, நல்லோர், தமக்குக் காவலராக் கொள்ளும் வழக்கம் உடையவராயிருந்தனர் 
என்பதும் புலப்படும். 'ஒலிகொள் சம்பந்தன்' - பரநாதத்தைக் கொண்டு பாட்டாக அருளும் சிவஞான சம்பந்தர் 
கொள் தமிழ் எனலுமாம்.

    Oh! Ye devotees listen. If you are capable of reciting these ten sanctified Tamil verses
of Mantras uttered by Gnanasambandan on the Lord of Thiruvaiyaaru all your sufferings will be 
dispelled. Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi. He sang these songs on the Lord of 
Thiruvaiyaaru who performed the Panduranga dance while going out for alms. Those who recite 
these ten illustrious verses will reach the celestial world and attain great heights.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            6ஆம் பதிகம் முற்றிற்று
            End of 6th Hymn


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 143                    பதிக எண்: 7

7. திருவாஞ்சியம்                        7. THIRU-VAANJIYAM
பண் : இந்தளம்                        Pann: Indhalam

திருத்தல வரலாறு

    இலக்குமியை வாஞ்சித்து (விரும்பி),திருமால் பூசித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. 
மயிலாடுதுறை- பேரளம் தொடர்வண்டிப் பாதையில் நன்னிலம் தொடர்வண்டி நிலையத்திற்கு 
மேற்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரித் தென்கரைத் தலங்களுள் 70ஆவது தலம் ஆகும். 
நன்னிலத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

    இறைவர் திருப்பெயர் வாஞ்சியநாதர். இறைவியார் திருப்பெயர் வாழவந்த நாயகி. 
தீர்த்தம் குப்த கங்கை. இது கோயிலுக்கு வடபால் இருக்கிறது. கார்த்திகை ஞாயிறு நாள்களில் மக்கள் 
விசேடமாக நீராடுகின்றனர். தலவிருட்சம் சந்தனமரம். இது பிரகாரத்தில் இருக்கின்றது. இயமன் 
பூசித்துப் பேறு பெற்றான். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு இயமவாதனை இல்லை. இயமனுக்குத் 
தனிக் கோயிலும் இருக்கின்றது. இது முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்றாகும். இது மூவராலும் 
பாடப்பெற்றது. மூன்று பதிகங்கள் இருக்கின்றன.

பதிக வரலாறு

    காழிவேந்தர், தவமுனிவரான சொல்வேந்தரோடும் கூடச் சிவதலங்கள் வணங்கப் போவாராய், 
தென்திருவாஞ்சியமூதூர் சென்று சேர்ந்து அங்கு எழுந்தருளிய முக்கண் நீலமிடற்றரு மணியை வணங்கிப் 
போற்றி, வன்னி கொன்றை எனும் இத்திருப்பதிகத்தைப் பாடி அத்திருவாஞ்சியத்து என்றும் நின்ற 
இறையானை உணர்ந்து அடியேத்தினார்.

                திருச்சிற்றம்பலம்

1536.     வன்னிகொன்றைமதமத்தமெருக்கொடுகூவிளம் 
    பொன்னியன்றசடையிற்பொலிவித்தபுராணனார் 
    தென்னவென்றுவரிவண்டிசைசெய்திருவாஞ்சியம் 
    என்னையாளுடையானிடமாகவுகந்ததே.        1

    வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் 
    பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார், 
    தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம் 
    என்னை ஆள்உடையான், இடம்ஆக உகந்ததே.

    vanni konRai matamattam erukkoTu kUviLam 
    pon iyanRa caTaiyil polivitta purANanAr,
    tenna enRu varivaNTu icai cey tiru vAnjciyam, 
    ennai AL uTaiyAn, iTam Aka ukantatE.

பொருள்:     வன்னி இலை, கொன்றை மலர், ஊமத்த மலர், எருக்கம்பூ, வில்வ இலை
 ஆகியவற்றைத் தன் செஞ்சடையில் தாங்கி அவற்றினுக்கு ஏற்றம் தந்தவர் பழம்பொருளான
 பரமசிவனார் என்க. அவர் திருவாஞ்சியம் என்னும் திருத்தலத்தில், வண்டுகள் தென்னதென்ன 
என்று பாட கோயில் கொண்டவர் ஆவார். என்னை ஆட்கொண்டருளும் எம்பெருமான் உகந்து 
வீற்றிருக்கும் திருவாஞ்சியத்தை நானும் விரும்பிப் போற்றுவேனாக !

விளக்க உரை:     இலை, மலர் எல்லாம் இறைவனுக்கு ஒரே தன்மையுடையனவே. அவனது வேண்டுதல் 
வேண்டாமை இல்லா நிலையை இலையும் மலரும் விளக்குகின்றன.  இறைவனை அடைந்தால் எப்பொருளும் 
மேன்மையுறும் என்க. வண்டுகள் தென்னதென்ன என முழங்குகின்றன. நாம் தென்னா என்னாமுன் 
தீசேர் மெழுகாக உருகி வழிபடுவோமாக.  என்னை ஆளும் இறைவன் விரும்பி உறையும் இடம் திருவாஞ்சியம். 
என்னை ஆளுடைய நாயகி சிவனாரின் இடப்பாகத்தில் விரும்பிப் பொருந்தியுள்ளாள் என்க.

குறிப்புரை:     வன்னி- வன்னிமரத்திலை. கொன்றைப்பூ, ஊமத்தம் மலர். எருக்கம்பூ. கூவிளம்- வில்வம். 
பொன் இயன்ற- பொன் போன்ற. சடையில் வன்னி முதலியவற்றைப் பொலிவு பெறச் சூடிய புராணனார். 
புராணன்- முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாயுள்ளவன். தென்ன என்று இசை 
செய்வன வரிவண்டுகள். உகந்தது விரும்பியது (வினையாலணையும் பெயர்). மேலும் இவ்வாறாதல் அறிக. 

    Oh! Behold! It is this holy place Thiru-vaanjiyam where my Lord the oldest of the old 
is manifest; He has taken me as His slave. He has adorned His matted locks of golden hair with 
colaphyllum and cassia flowers, and calotropis flowers and bilwa leaves rendering them beautiful. 
Here the striped bees gather in large numbers creating musical notes reverberating everywhere 
in the city. The ancient Lord is pleased to abide in Thiru-vaanjiyam with His devi on His left.

1537.     காலகாலர்கரிகானிடைமாநடமாடுவர்
    மேலர்வேலைவிடமுண்டிருள்கின்றமிடற்றினர் 
    மாலைகோலமதிமாடமன்னுந்திருவாஞ்சியம் 
    ஞாலம்வந்துபணியப்பொலிகோயில்நயந்ததே.        2

    காலகாலர், கரிகான்இடை மாநடம் ஆடுவர் 
    மேலர், வேலைவிடம்உண்டு இருள்கின்ற மிடற்றினர்
    மாலை கோல மதி மாடம் மன்னும் திருவாஞ்சியம் 
    ஞாலம் வந்து பணியப் பொலி கோயில் நயந்ததே.

    kAlakAlar, karikAn iTai mAnaTam ATuvar, 
    mElar, vElaiviTam uNTu iruLkinRa miTaRRinar, 
    mAlai kOla mati mATam mannum tiru vAnjciyam 
    njAlam vantu paNiyap poli kOyil nayantatE.

பொருள்:     உலகெலாம் வந்து பணியுமாறு மதி (சந்திரன்) தோயும் மாடங்கள் நிறைந்த திருவாஞ்சியம் என்னும்                 
திருத்தலத்தில் எம்பெருமான் கோயில் கொண்டுள்ளார். அவரே காலனுக்கும் காலன் ஆவார். அவரே சுடுகாட்டில் 
சிறப்பாக நடனமாடுபவர். அவரே எப்பொருளுக்கும் மேலானவர் ஆவார். அவரே கடலில் தோன்றிய விடத்தை 
உண்டதால் நீலகண்டரானார். 

விளக்கவுரை:     காலன் உடலில் பொருந்திய உயிர்தனை நீக்குபவன். அவனையும் அழிக்கும் பெரும் சிறப்பிற்கு
உரியவரே சிவனார் ஆவார். உயிர்களுக்கு அச்சம் தரும் சுடுகாட்டில் நடனமாடுவதன் மூலம் அச்ச நீக்கத்தை 
அருளுபவரும் அவரே! விடத்தைத் தான் உண்டு தேவர்களுக்கு அமுதை வழங்கியவரும் அவரே! மதியினைத் 
தலையில் சூடியுள்ள அவரே, மதி தோய்கின்ற மாடங்கள் நிறைந்த திருவாஞ்சியத்தில் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     காலகாலர்- இயமனுக்குங் காலமுடிவைச் செய்பவர். இயமனுக்கியமன் என்பாருமுளர். 
கரிகான் - கரிந்தகாடு. மேலர் - எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் எத்தேவர்க்கும் மேலாயுள்ள முழுமுதல்வர். 
வேலை- கடல். மிடறு- கழுத்து. நஞ்சுண்டிருண்ட கண்டத்தர். 'இருள்கின்ற' என நிகழ்வாற் கூறியதால், 
இன்னும் இருளும்படி செய்யுங் கொடிய நஞ்சையுண்டு வாழ்வித்த கருணைத் திறத்தை அறியலாம். 
திருவாஞ்சியத்து மாடங்கள் சந்திரமண்டலத்தின் அளவும் ஓங்கியவை என்று உயர்த்துக் கூறினார். 
மதிமண்டலத்தை அளாவிய மாடம். மாலைமதி, கோலமதி, மாலைப்பொழுதும் அழகும் மதிக்கு அடை, 
ஞாலம்- உலகத்துயிர்கள், இடவாகு பெயர், ஞாலம் - தொங்குவது என்னுங் காரணப் பொருளதாய், 
முன்னோரது பூகோள ககோள ஞானத்தை உணர்த்துவது அறிக. நயந்தது - விரும்பியது.

    Oh! Behold! It is Civa who resides in Thiru-vaanjiyam who is the Master and 
Supreme God also for the attendant of death called Yama. He does the great cosmic dance 
on the burning ghat. He is the super mundane in the world. His neck is dark because he 
drank the deadly poison that rose from the sea of milk. In the evening the beautiful 
moon laps over the big mansions of Thiru-vaanjiyam to take some rest. It is He who 
draws the whole world to bow at His feet in the temple in Thiru-vaanjiyam.

1538.     மேவிலொன்றர்விரிவுற்றஇரண்டினர்மூன்றுமாய் 
    நாவின்நாலருடலஞ்சினராறரேழோசையர் 
    தேவிலெட்டர்திருவாஞ்சியம்மேவியசெல்வனார் 
    பாவந்தீர்ப்பர்பழிபோக்குவர்தம்மடியார்கட்கே.        3

    மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும்ஆய் 
    நாவில் நாலர், உடல் அஞ்சினர், ஆறர்,ஏழ்ஓசையர்,
    தேவில் எட்டர் -திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்; 
    பாவம் தீர்ப்பர், பழி போக்குவர், தம் அடியார்கட்கே.

    mEvil onRar, virivu uRRa iraNTinar, mUnRum Ay 
    nAvil nAlar, uTal anjcinar, ARar, Ez Ocaiyar, 
    tEvil eTTar-tiru vAnjciyam mEviya celvanAr; 
    pAvam tIrppar, pazi pOkkuvar, tam aTiyArkaTkE.

பொருள்:     ஒப்பற்ற ஒருவனாகிய சிவனாரே, சிவன் சக்தி என இரண்டாகவும், படைத்தல், காத்தல், 
அழித்தல் எனும் முத்தொழிலும் முத்தி உடையவராகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவராகவும், 
பஞ்சபூதங்களாகவும், வேதத்தின் ஆறு அங்கங்களாகவும், ஏழிசையாகவும் எண்குணத்தவராகவும் 
உள்ளார். அவரே திருவாஞ்சியம் என்னும் திருத்தலத்திலும் பொருந்தியுள்ளார். அடியவர்களின் 
பாவத்தைத் தீர்ப்பவரும் அவரே! பழி போக்குபவரும்  அவரே என்க.

விளக்கவுரை:     இறைவனின் தன்மைகள் எண்ணலங்கார முறையில் (ஒன்று முதல் எட்டு வரையில்) 
இத்திருப்பாட்டில் கூறப்பெற்றுள்ளன. ஏகன், அனேகன், இறைவன் என்பது இத்திருப்பாட்டில் விளக்கம் பெறுகிறது. 
எங்கும் நிறைந்த அவர் இங்கும் உள்ளார் என்க. உலகில் உள்ள எல்லாப் பொருள்களுள்ளும் இரண்டறக் கலந்து 
அருவமாய் விளங்குபவர் அவரே! ஒன்று இரட்டித்தலும், அவ்விரண்டு இரட்டித்தலும் அவ்விரண்டு மேலும் 
இரட்டித்து நான்காதலும், அந்நான்கும் இரட்டித்து எட்டாதலும், இவ்வாறு விரிந்து செல்லக்கூடிய இறைவனின் 
திறம் இத்திருப்பாட்டில் சிறப்பாகப் பேசப்படுகிறது. ஐம்பெரும் பூதங்களாகவும் ஐம்பெரும் சக்திகளாகவும் 
(ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி) அவரே எங்கும் நிறைந்துள்ளார் என்க. நிலம், நீர், 
நெருப்பு, காற்று, வான் என்ற பூதங்களாகவும், சூரியன், சந்திரன் என்ற இரு சுடர்களாகவும், ஆன்மா என்ற 
தன்மையும் கொண்டு அவன் எட்டாக விளங்குகிறான் என்க. தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், 
இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, 
வரம்பில் இன்பமுடைமை, முடிவில் ஆற்றலுடைமை என்ற எண்குணங்களும் பொருந்தியவன் இறைவன் என்க. 
எண்குணத்தான்  தாளை வணங்காத் தலையால் பயனில்லை என்பது குறள் தரும் கருத்து என்க. தன் செயலால்
விளைவது பாபம்! பிறர் சொல்லால் விளைவது பழி! அவ்விரண்டையும் நீக்கியருள்பவன் இறைவனே என்க.

குறிப்புரை:     இதனுள் ஒன்று முதல் எட்டீறாகிய எண்ணுப்பெயர் அமைந்த அழகு உணரத் தக்கது. 79,380-ஆம் 
(திருக்கழுமலம், திருவோமமாம்புலியூர்த்) திருப்பதிகங்களுள் வரும் 'எண்ணிடை யொன்றினர்' 'மணந்திகழ்         
திசைகளெட்டும்' எனத் தொடங்குந் திருப்பாடல்களை இங்கு நோக்கின், இவ்வாசிரியர்க்கு இவ்வாறு பாடியருளும் 
எளிமை இனிது விளங்கும். மேவில் ஒன்றர்- விரும்பி  வழிபட்டால் அநந்நியமாதலை உடையவர், 'அறிபவன் 
அருளினாலே அநந்நியமாகக் காண்பன்' என்பதும் 'அறிய வல்லான் ஒருவனுக்கு அச்சிவப்பொருள் அவனோடு 
ஒற்றித்து நின்று அவ்வருளானே அறியற் பாலதாம்' என்னும் அதன் உரையும் (சித்தியார் 245). சைவ 
உபநிடதங்களினும் சைவாகமங்களினும் அந்நியமின்றி நின்றுணரும் அநுபவ மாத்திரையிற் கோசரிப்பது 
என்று ஓதப்படுஞ் சிவனருளாம் மெய்ப் பொருள் என்னும் சிவஞான பாடிய வசனமும் (சூ. 6). ஈண்டுணரத் தக்கன. 

    ஒன்றர்- ஒருபொருளாயிருப்பவர் எனலுமாம். விரிவுற்ற இரண்டினர்- விரிதலடைந்த ஞானமும் 
கிரியையும் உடையவர். சிவமும் சத்தியுமானவர் எனலுமாம். சிவசத்தி மூன்றனுள் யாண்டும் ஒரு 
பெற்றித்தாய் வியாபரிக்கும் இச்சையை ஒழித்து, ஒழிந்த ஞானக் கிரியைகள் இரண்டும் தனித்தனி 
வியாபரித்தலானும் ஒத்து வியாபரித் தலானும் தம்முள் ஏறிக் குறைந்து வியாபரித்தலானும் (சித்தியார்
 உரை - 85) விரிவுற்றன. இரண்டு- சொரூபம் தடத்தம் எனலுமாம். விரிவுற்ற இரண்டு - போகமும் முத்தியும் 
ஆதலும் பொருந்தும். மூன்றுமாய்-  இச்சா ஞானக் கிரியையாய். ஒன்றதாய் இச்சா ஞானக் கிரியை என்று ஒரு 
மூன்றாகி (சித்தியார் 83). அவை முறையே உயிர்கட்கு மலந்தீர்த்துச் சிவங்கொடுக்கும், கருணையும், அதற்கான
 உபாயங்களை அறியும் அறிவும், அவற்றை அவ்வாறே கொண்டு செய்யும் சங்கற்பமும் ஆகும். இலயம் போகம் 
அதிகாரமாய், ஒன்றாய் வேறாய் உடனாய், மூன்று தீயுமாய் முச்சுடருமாய் எனினும் பொருந்தும். 

    மூன்றும்ஆய் நாவின் நாலர் என்று கொண்டு பதி, பசு, பாசம் என்னும் மூன்று பொருளையும் 
ஆய்ந்துணர்த்தும் நான்மறை நாவர் எனலுமாம். உடல் அஞ்சினர் - பரை, ஆதி, இச்சை,ஞானம்,கிரியை 
என்னும் ஐவகைச் சத்தியாகிய திருமேனியை உடையவர். பஞ்சப் பிரம மந்திர தேகமும் ஆம். அருவம் இரண்டு, 
அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்து உடலும் சொரூபமல்லவாயினும் உபசாரத் திருமேனியாகும். 
அநாதிமுத்த சித்துருவாகிய முதல்வனுக்குத்  தன்னுருவமாகிய உலகத்தைத் தொழிற்படுத்தற் பொருட்டும் 
வேறொருருவம் வேண்டப்படுவதன்றாயினும்.... உயிர் வர்க்கங்கள் பொருளியல்பு உணர்ந்து வீடுபெறுமாறு 
வேதாகமங்களைக் கோவைப்படச் செய்தற் பொருட்டும் அதனைக் குருபரம்பரையின்கண் வைத்தற்பொருட்டும் 
திருமேனி ஒருதலையான் வேண்டப்படும் (சித்தியார் 66 உரை). 

    ஆறர்- அறுகுணத்தர், (ஷாட்குண்யர்) முற்றறிவு முதலியவை.  பகவர் எனலுமாம். உடலஞ்சினர். 
ஆறர் - பிறவியையஞ்சிய நல்லோர் வழியில் விளங்குபவர். உடலஞ்சு- பஞ்சகோசம். ஆறர் - கங்கையாற்றினர் 
எனினுமாம். ' நன்மூவிருதொன்னூலர்’ 'முத்தீயர்" நால்வேதத்தர்' 'வீழிமிழலையார்' (தி. 3 ப. 9. பா. 7) என்றதில் 
வருமாறுங் கொள்ளலாம். 'திருவெழுகூற்றிருக்கை'யும் நோக்குக. ஏழ் ஓசையர்- ஏழிசையாய் (இசைப்பயனாய்) 
இருப்பவர். தேவில்- தெய்வத்தன்மையில் ,  எட்டர் - அட்டமூர்த்தி, எண்குணத்தர் எனின் ஆறர் என்பதற்கு 
ஷாட்குண்யர் என்னாது வேறுரைக்க.  பாவம் - தீவினை. பழி - தீச்சொல். முறையே செயலும் மொழியுமாய்த் 
தன் திரிகரணத்தாலும் பிறர் வாயாலும் நிகழ்வன. அடியார்கட்கே பாவந்தீர்ப்பர் பழி போக்குவர் எனவே 
அல்லார்க்கு இல்லை என்றதாம்.

    Oh! Behold! It is Civa the Supreme who is the Lord at Thiru-vaanjiyam. He is unique 
and the single entity in the entire universe. Yet He appears dual as Lord Civa and Sakthi, 
His consort. He is also three in number i.e., the sun, moon and fire. He is four having 
produced the four vedas. He is five because He is the makes of all the five elements 
the earth, the water, the fire, the wind and the sky. He is the six angangas of vedas 
such as Chitchai, Viyakaranam, Santhus, Nirutham, Jothidam, and Karpam. He also represents 
the seven kinds of sound such as Sanchamam, Rishapam, Kaanthaaram, Mathymam, Panchamam, 
Thaivatham, Nishaatham, SA-RI-KA-MA-PA-THA-NI (சரிகமபதநி ). He has eight divine attributes 
of virtues, such as Than Vayathanaathal, Thooya Udambinan Aathal, Iyarkai Unarvinan Aathal, 
Mutrunarthal, Iyalbaaka Paasangalil Irunthu Neenguthal, Perarul Udamai, Mudivillatha Aatral 
Udaimai, Varambillatha Inbam Udamai. This perfect one is seated in Thiru-vaanjiyam. He shows
His grace to His devotees and absolves them of all their sins and chases their woes.

1539.     சூலமேந்திவளர்கையினர்மெய்சுவண்டாகவே 
    சாலநல்லபொடிப்பூசுவர்பேசுவர்மாமறை 
    சீலமேவுபுகழாற்பெருகுந்திருவாஞ்சியம் 
    ஆலமுண்டஅடிகள்ளிடமாக அமர்ந்ததே.        4

    சூலம் ஏந்தி வளர் கையினர்; மெய் சுவண்டுஆகவே 
    சால நல்ல பொடி(ப்) பூசுவர்; பேசுவர் மாமறை; 
    சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம் 
    ஆலம் உண்ட அடிகள்(ள்) இடம்ஆக அமர்ந்ததே.

    cUlam Enti vaLar kaiyinar; mey cuvaNTu AkavE 
    cAla nalla poTi(p) pUcuvar; pEcuvar, mAmaRai; 
    cIlam mEvu pukazAl perukum tiru vAnjciyam, 
    Alam uNTa aTikaL(L) iTam Aka amarntatE.

பொருள்:     ஈசன், சூலப்படையைத் திருக்கரத்தின்கண் ஏந்தியவர். அருள் வழங்கும் திருக்கரத்தினர். 
மணமிக்க திருநீற்றைத் திருமேனியில் தாங்கியவர். வேதங்களை விரித்துரைப்பவர். சீலம் மிக்க புகழுடை 
திருவாஞ்சியத்தில் விளங்குபவர். ஆலம் அருந்தி தேவர்களைத் தன்னருளால் காத்தவர்.

விளக்கவுரை:     விபூதியானது கற்பம், அநுகற்பம், உபகற்பம் என்று மூன்று வகையானது. சகல 
செல்வங்களையும் வழங்குவது. ஆன்மாக்களுக்குக் கவசம் போன்று துணையாக விளங்குவது. 
சிவத்துவத்தைப் பெருக்க வல்லது. பாவங்களை நீக்குவது. உயிர்களை மலநீக்கம் பெறச் செய்வது. 
இதனை நல்லபொடி என்றும் கூறுவர். திருநீற்றுப் பெருமை கூறும் பதிகத்தை ஓதி உணர்க. (மந்திரமாவது நீறு).

குறிப்புரை:     சுவண்டு - பொருத்தம். சால- மிக. பொடி - திருநீறு. மறைபேசுவர் என மாற்றுக. சீலம் -
பெருந்தகைமையுள் ஒன்று. ஒழுக்கமுமாம். ஆலம் - நஞ்சு. ஒற்று(ள்) மிகை.

    Oh! Behold! It is Civan who is the Lord of Thiru-vaanjiyam. He holds a trident in
His blessing hand. He has smeared the holy fragrant powder on His body. He speaks all the 
four Vedas. He drank the poison that came out of sea of milk. Since the people pursue all 
the prescribed sacred rites and rules regarding moralities Thiru-vaanjiyam  , where our 
Lord resides is well-renowned for virtuosity.

1540.     கையிலங்குமறியேந்துவர்காந்தளம்மெல்விரல் 
    தையல்பாகமுடையாரடையார்புரஞ்செற்றவர் 
    செய்யமேனிக்கரியம்மிடற்றார்திருவாஞ்சியத் 
    தையர்பாதமடைவார்க்கடையாஅருநோய்களே.        5

    கை இலங்கு மறி ஏந்துவர், காந்தளஅம்மெல்விரல் 
    தையல் பாகம் உடையார், அடையார் புரம் செற்றவர், 
    செய்யமேனிக் கரிய(ம்) மிடற்றார் - திரு வாஞ்சியத்து 
    ஐயர்; பாதம் அடைவார்க்கு அடையா, அருநோய்களே.

    kai ilagku maRi Entuvar, kAntal ammelviral 
    taiyal pAkam uTaiyAr, aTaiyAr puram ceRRavar, 
    ceyyamEnik kariya(m) miTaRRAr--tiru vAnjciyattu 
    aiyar; pAtam aTaivArkku aTaiyA, arunOykaLE.

பொருள்:     ஈசனார், கையில் மான் ஏந்துபவர். காந்தள் மலர் போன்ற விரல்களை உடைய சக்தியை 
இடப்பாகத்தில் கொண்டவர். முப்புரங்களைச் சிரித்தே அழித்தவர். கரிய கண்டத்தைக் கொண்டவர்.             
திருவாஞ்சியம் என்ற திருத்தலத்தில் உறைபவர். அந்தத் தலைவரின் திருவடிகளை அடைந்தவர்களுக்குப் 
பிறவி நோய் சாராது.

விளக்கவுரை:     துள்ளிப்பாயும் மான் ஈசனாரின் விரல்களில் கட்டுண்டு நிற்பது போல துள்ளித் துள்ளி             
வரும் நம்மனமும் அவர் திரு முன்பு கட்டுண்டு அமைதியுறும். தாயினுடைய விரல்களின் மென்மையை 
அடியார்களைத் தவிர வேறு யார் உணர்ந்து அனுபவிக்க முடியும். அரத்த மேனியாய் அருள் செய் 
அன்பரும் நீயும் ஆங்கே எழுந்தருளி இங்கு எனை இருத்தினாய் முறையோ? என மணிவாசகர் கூறுவதன் மூலம் 
சிவனார் செம்மேனி கொண்டவர் என உணரலாம். செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்ற நாம் 
சாகாநிலை - பிறவா நிலை அடைய இறைவனின் திருவடிகளைச் சேர்தலே வழியாம் என்க.

குறிப்புரை:     மறி -மான்கன்று. காந்தட்பூ கைவிரல்கட்குவமை. தையல் -கட்டழகுடைமையாற் பெண்ணைக் 
குறிக்கும் பெயர். இங்குப் பார்வதி தேவியாரை உணர்த்திற்று. தையல் எல்லார்க்கும் நாயகியாதலின். 
அடையார்- பகைவர். புரம் செற்றவர் - திரிபுரதகனம் செய்தவர். 'முப்புரமாவது மும்மலகாரியம்' என்பது 
திருமந்திரம். மிடறு- கழுத்து. செய்ய, கரிய முரண். ஐயர்- முதல்வர். அருநோய் அடையா - நீங்கற்கரிய பிறவி 
நோய் முதலிய யாவும், திருவடியடையும் அன்பர்க்கு இல்லை.

    Oh! Behold! It is Civa who is the Lord of Thiru-vaanjiyam, holding a deer in His hand.
He shares His body on the left with His consort Uma. Uma's fingers are very soft like the 
glorious flower. Once He destroyed the three flying forts of asuraas and killed them all 
except three. His body is reddish with the graceful appearance, whereas his neck is black 
because of the poison He drank. The devotees who approach the Lord's holy feet and worship 
Him will not suffer the disease of birth any more.

1541.     அரவம்பூண்பரணியுஞ்சிலம்பார்க்க அகந்தொறும் 
    இரவில்நல்லபலிபேணுவர்நாணிலர்நாமமே 
    பரவுவார்வினைதீர்க்கநின்றார்திருவாஞ்சியம்
     மருவியேத்தமடமாதொடுநின்றவெம்மைந்தரே.        6

    அரவம் பூண்பர்: அணியும் சிலம்பு ஆர்க்க அகம்தொறும் 
    இரவில் நல்ல பலி பேணுவர்; நாண்இலர்; நாமமே 
    பரவுவார் வினை தீர்க்க நின்றார் - திரு வாஞ்சியம் 
    மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே.

    aravam pUNpar; aNiyum cilampu Arkka akamtoRum 
    iravil nalla pali pENuvar nAN ilar; nAmamE                 
    paravuvAr vinai tIrkka ninRAr--tiru vAnjciyam 
    maruvi Etta maTamAtoTu ninRa em maintarE.

பொருள்:     ஈசர், நாகத்தை ஆபரணமாகப் பூண்டு இருப்பார். திருப்பாதத்தில் சிலம்பணிந்து அது 
ஆர்த்து ஒலிக்க விரும்பிப் பிச்சை ஏற்பார். அதற்காக நாணமாட்டார். தேவியுடன் வீற்றிருக்கும் அவர் தன் 
நாமத்தைக் கூறி வழிபடுபவர்க்கு அருளவே திருவாஞ்சியத்தில் கோயில் கொண்டுள்ளார்.

விளக்கவுரை:     இல்லங்கள்தோறும் எழுந்தருளும் பெருங்கருணையாளனே இறைவன். அவன் பிச்சையாக 
ஏற்க இருப்பதும், நம் நல்உள்ளங்களையே என்க. மானிட உடல்பெற்ற நம் ஆன்மா நிறைவடைவதும் குறைவுறுவதும் 
உள்ளத்தாலேயேயாம். நாகத்தைக் கண்டு உயிர்கள் அஞ்சி நடுங்கும். ஆனால் அந்த நாகமோ அவரிடத்தில் கொஞ்சி
 ஆடும். நம் வினை தீர்க்க அவர் கால்கடுக்க நடந்து வருகிறாரே! நாம் சிந்திக்க வேண்டாவோ?

குறிப்புரை:     அரவம் -பாம்பு. பூண்பர்- சூடுவர். அணியுஞ்சிலம்பு - அலங்காரமாகப் பூணும் 
வேதச்சிலம்பு, ஆர்க்க - ஒலிக்க. அகம் - வீடு. பேணுவர்- விரும்புவர். நாமமே பரவுவார் - திருநாம
 ஜபமே செய்பவர். வினை - கர்மம். மடமாது - உமாதேவியார். மைந்தர்-வீரர். 

    Civa, the Lord of Thiru-vaanjiyam has adorned His body with snakes. He moves about         
the entire cosmos at night for alms to all houses with the sound of His anklets. His begging 
appears shameless, but this is begging for our hearts, for our sake. This Lord who is seated 
with His devi resides in Thiru-vaanjiyam in order to bless and dispel the karma of those 
devotees who always chant His name.

1542.    விண்ணிலானபிறைசூடுவர்தாழ்ந்துவிளங்கவே 
    கண்ணினாலநங்கன்னுடலம்பொடியாக்கினார் 
    பண்ணிலானஇசைபாடல்மல்குந்திருவாஞ்சியத் 
    தண்ணலார்தம்மடிபோற்றவல்லார்க்கில்லையல்லலே.        7

    விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து விளங்கவே; 
    கண்ணினால் அநங்கன்(ன்) உடலம் பொடிஆக்கினார்; 
    பண்ணில் ஆன இசைபாடல் மல்கும் திரு வாஞ்சியத்து 
    அண்ணலார்தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை, அல்லலே.

    viNNil Ana piRai cUTuvar, tAzntu viLagkavE;
    kaNNinAl anagkan(n) uTalam poTi AkkinAr;
    paNNil Ana icaipATal malkum tiru vAnjciyattu
    aNNalAr tam aTi pORRa vallArkku illai, allalE.

பொருள்:     ஈசர், தம் தலையில் பிறையைச் சூடிக் கொள்வார். தம் கண்களால் மன்மதனை எரித்துச் 
சாம்பலாக்கினார். பண்ணுடன் பொருந்திய பாடல்கள் முழங்கப் பெறும் திருவாஞ்சியத்தில் அடியார்களுக்கு 
அருள எழுந்தருளுவார். இனி அடியார்களுக்கு அல்லல் இல்லை.

விளக்கவுரை:     விண்ணில் விளங்கி ஒளி தந்த சந்திரன் இறைவனருள் பெற்ற பின்பே குறை 
நீங்கப் பெற்றான். மகிழ்ந்து உலா வரப்பெற்றான். பிறரால் பெற்ற பழி நீங்கப் பெற்றான். மன்மதன் 
புல்லறிவினனாய் - தனக்கே எல்லாம் தெரியும், எல்லாம் செய்ய முடியும் என்று  தன்முனைப்புடன் 
செயல்பட்டதால் எரிந்து சாம்பலாயினான். அவனுக்கும் அருட்கண் கொண்டு அருள் செய்தவர் 
எம்பிரானார். பண்ணும் பாடலும் போல் விளங்கும் இறைவனார் திருவாஞ்சியத் திருத்தலத்துள் 
எழுந்தருளி உள்ளார். அவரது தாளில் நம் தலை பொருந்த (தாடலை) வணங்குவோமாக.

குறிப்புரை:     பிறை- பிறத்தலுடையது என்னுங் காரணப் பொருட்டான பெயர். திங்கள் துண்டம். 
அநங்கன் -அங்கமில்லான். உருவிலி, மன்மதன். பண்ணும் இசையும் முறையே ஆதாரமும் ஆதேயமுமாதலின் 
பண்ணில் ஆன இசை என்றார். போற்ற வல்லார்- போற்றுதலில் வேதாகம ஞானவல்லபம் உடையவர், 
நிஷ்டாநுபூதிமான்கள். அல்லல் - துன்பம். 

    Civan who occupies the temple in Thiru-vaanjiyam has adorned His matted hair with the 
floating crescent moon in the low horizon. He once destroyed the body of cupid - the god of love - 
called Anangan or Manmathan by opening the third eye in His forehead. Many devotees gather in 
His temple in large numbers and sing all kinds of songs in prayer with melodious notes. 
Their voices are echoed all around. Those who praise His holy feet will never suffer.

1543.     மாடநீடுகொடிமன்னியதென்னிலங்கைக்குமன் 
    வாடியூடவரையாலடர்த்தன்றருள்செய்தவர் 
    வேடவேடர்திருவாஞ்சியமேவியவேந்தரைப் 
    பாடநீடுமனத்தார்வினைபற்றறுப்பார்களே.        8

    மாடம் நீடு கொடி மன்னிய தென்இலங்கைக்கு மன் 
    வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள் செய்தவர், 
    வேடவேடர், திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப் 
    பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே.

    mATam nITu koTi manniya ten ilagkaikku man 
    vATi UTa varaiyAl aTarttu anRu aruL ceytavar, 
    vETavETar, tiru vAnjciyam mEviya vEntaraip 
    pATa nITu manattAr vinai paRRu aRuppArkaLE.

பொருள்:     கொடி நிறைந்த மாடங்கள் பொருந்திய இலங்கை நகருக்கு மன்னன் இராவணன். 
அவன் தெளிவின்றிச் சினத்தினால் மலை எடுத்து வாட்டம் உற்றான். பின்பு தெளிவு பெற்றுப் பாடிப் 
பரவினான். அவனுக்கு நீண்ட ஆயுளும், வாட்படையும் வழங்கினார் சிவனார். வேட்டுவ வடிவம் கொண்டு 
அர்ச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை அருளியவரும் அவரே ஆவார். திருவாஞ்சியம் என்னும் 
திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள அவரை வணங்கும் பக்தர்கள் பற்று அறுக்கப் பெறுவார்கள் என்க.

விளக்கவுரை:     முற்பிறவியில் செய்த வினையே இப்பிறவிக்கும் இப்பிறவில் அடையும் துன்பத்திற்கும் 
காரணமாகும். பிறவி அடைதல் வினையின் காரணமாகவே அமையும். வினை நீக்கம் பெற, பற்றுக்கள் 
(உலக ஆசைகள்) நீங்கப் பெற வேண்டும். ஈசனோடு ஆயினும் ஆசை நீங்கப் பெறுதல் வேண்டும்.

        ''பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
        பற்றுக பற்று விடற்கு"

என்ற குறள் நுட்பம் உணர்ந்து மகிழ்க.

குறிப்புரை:     மாடம் - உயரிய வீடுகள். கொடி - துகிற்கொடிகள். மன்னிய - நிலைத்த. மன்-அரசன். இராவணன். 
வரை - கைலாசகிரி. வேடவேடர் - வேட்டுவக் கோலத்தர். வினைபற்று உம்மைத் தொகை. வினை - கர்மம். 
பற்று - மூலகர்மம். "இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள்" 
(பெரிய. அப்பர் 129) என்புழியறிக.

    Oh! Behold! It is Civan who is the Lord of Thiru-vaanjiyam. He subdued the
mighty king of Sri Lanka. Sri Lanka's capital and all the cities are very famous for their
tall palaces, victorious flags and long cords hung with garlands. The king Raavanan was a 
very famous devotee of Lord Civa and a mighty warrior. However at one stage he forgot his 
virtue and tried to move the Himalayas, the abode of Lord Civa and His consort. He failed 
in his attempt and got crushed under the mountains. He later realised his fault and prayed 
to Lord Civa to forgive him and to bless him. Lord Civa pardoned him and also gave long life, 
a divine sword and some boons and the name 'Raavanan'. This Lord of Thiru-vaanjiyam once took 
the form of a hunter to meet Arjuna who prayed Him in the forest to get a divine weapon called 
Paasupathasthiram. He met him and gave him the divine arrow. Those who sing His glorious name 
will certainly be relieved of all their karma, the present, the past and also all the worldly            
desires. 

1544.    செடிகொள்நோயின்னடையார்திறம்பார்செறுதீவினை 
    கடியகூற்றமுங்கண்டகலும்புகல்தான்வரும் 
    நெடியமாலொடயனேத்தநின்றார்திருவாஞ்சியத் 
    தடிகள்பாதமடைந்தாரடியாரடியார்கட்கே.        9

    செடி கொள் நோயின் அடையார்; திறம்பார், செறு தீவினை; 
    கடிய கூற்றமும் கண்டு அகலும்; புகல்தான் வரும் - 
    நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார், திரு வாஞ்சியத்து 
     அடிகள், பாதம் அடைந்தார் அடியார், அடியார்கட்கே.

    ceTi koL nOyin aTaiyAr, tiRampAr, ceRu tIvinai; 
    kaTiya kURRamum kaNTu akalum; pukaltAn varum- 
    neTiya mAloTu ayan Etta ninRAr, tiru vAnjciyattu 
    aTikaL, pAtam aTaintAr aTiyAr, aTiyArkaTkE.

பொருள்:     திருமாலும், பிரமனும் போற்றித் துதித்து வணங்குமாறு இறைவன் திருவாஞ்சியத் தலத்துள் 
கோவில் கொண்டுள்ளார். அவ்விறைவரின் திருவடிகளைப் போற்றி வணங்கும் அடியவர்களுக்கு நோய்கள் வாரா. 
உள்ளத்தில் உறுதி நிலை பெறும். எம பயம் நீங்கப் பெறும் என்க.

விளக்கவுரை:     உடலுக்கு வருவன நோய்கள். உள்ளத்தில் பொருந்தி இருப்பன அழுக்காறு, அவா, வெகுளி 
போன்ற தீய பண்புகள். உயிருக்கு வருவது பிறவித் துயர். இம்மூன்றும் வாஞ்சியப்பெருமானை வணங்க நீங்கப் 
பெறும். பெருமானைத் திரிகரண சுத்தியுடன் (மனம், மொழி, மெய்) வணங்குதல் வேண்டும்.

குறிப்புரை:     செடி - துன்பம். பாவமுமாம். திருவாஞ்சியத்துப் பெருமான் திருவடியை அடைந்தவருடைய 
அடியார்க்கு அடியார் ஆனவர்க்கு நோயின்மையும், தீவினை நீக்கமும், இறவாமையும், சிவகதியும் உண்டு என்றது. 
இத்திருப்பதிகத்துள் (3, 5, 6, 7, 8, 10, 11) அடியார் சிறப்புணர்த்திய உண்மையை உணர்க. கூற்றம்  - இயமன். 
புகல் - சிவகதி. "தன்னைச் சரணென்று தாளடை (தி.4 ப. 105 பா. 1) வதே புகலாகும்.

    Devotees bow at the holy feet of the Lord of Thiru-vaanjiyam. Those who pray at the
feet of these devotees also will get the grace of the Lord of Thiru-vaanjiyam. They will not 
get dreadful diseases of body, mind and soul. Evils will disappear from them. Even the cruel 
death will shun them and salvation by Civan will be assured to them. Thirumaal and Brahma 
also prayed and worshipped the Supreme Lord at Thiru vaanjiyam.

1545.     பிண்டமுண்டுதிரிவார்பிரியுந்துவராடையார் 
    மிண்டர்மிண்டும்மொழிமெய்யலபொய்யிலையெம்மிறை 
    வண்டுகெண்டிமருவும்பொழில்சூழ்திருவாஞ்சியத் 
    தண்டவாணனடிகைதொழுவார்க்கில்லையல்லலே.        10

    பிண்டம் உண்டு திரிவார், பிரியும் துவர் ஆடையார், 
    மிண்டர் மிண்டு(ம்) மொழி மெய் அல; பொய் இலை,எம் இறை; 
    வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து 
    அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லலே.

    piNTam uNTu tirivAr, piriyum tuvar ATaiyAr, 
    miNTar miNTu(m) mozi mey ala; poy ilai, em iRai; 
    vaNTu keNTi maruvum pozil cUz tiru vAnjciyattu 
    aNTavANan aTi kaitozuvArkku illai, allalE.

பொருள்:     பேருணவு உண்டு, எங்கும் திரிந்து, தருக்கம் புரியும் மிண்டர்களின் உரைகள் 
மெய்ம்மையில்லாதனவாம். ஈசனார் என்றும் மெய்யாய் உள்ளவர். அவர் வண்டுகள் மொய்க்கும் 
சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.  உலக நாயகனாகிய 
இறைவரின் திருவடிகளை வணங்குவார்க்குத் துன்பமே இல்லையாம். 

விளக்கவுரை:     உணவு சுருங்கிடின் இறைநினைவு பெருகும். மெல்லுணவே நல்லுணர்வைப் பெருக்கும். 
''ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கி" என்ற திருவாசக உரையினை எண்ணுக.  இறைவன் உண்மைப் பொருள் 
என்றும், உண்மை உணவே இறைவன் ஆன்மாக்களுக்கு தனுவினை (உடலினை - மெய்யினை) வழங்கியுள்ளார் என்க.

குறிப்புரை:     பிண்டம் - பிண்டித்த சோறு, மிண்டர் - வலியர். கெண்டி - கிளறி, பொழில் - சோலை, 
அண்டவாணன்-  அண்டமுழுதும் வாழ்நன். வாணன் மரூஉமொழி, பாவாணன், அம்பலவாணன், மன்ற வாணன், 
அண்டவாணன் என்னும் வழக்கால் இறைவனியல்பு உணர்தல் கூடும்.

    The words of those Jains who eat their food from their hands and of those of the
Buddhists who wear ochre robes - are not really good. The Supreme God of Thiru-vaanjiyam is 
free from falsehood. The holy place of Thiru-vaanjiyam is surrounded by groves where the bees 
in large number gather humming forever. Those devotees who pray to the Lord of Thiru-vaanjiyam, 
who is the Lord of the whole universe, will get no sufferings at all.

1546.     தென்றல்துன்றும்பொழில்சென்றணையுந்திருவாஞ்சியத் 
    தென்றுநின்றஇறையானையுணர்ந்தடியேத்தலால் 
    நன்றுகாழிமறைஞானசம்பந்தனசெந்தமிழ் 
    ஒன்றுமுள்ளமுடையாரடைவாருயர்வானமே.        11

    தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து 
    என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால், 
    நன்று காழி மறைஞானசம்பந்தன செந்தமிழ் 
    ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார், உயர்வானமே.

    tenRal tunRu pozil cenRu aNaiyum tiru vAnjciyattu 
    enRum ninRa iRaiyAnai uNarntu aTi EttalAl, 
    nanRu kAzi maRai njAnacampantana centamiz 
    onRum uLLam uTaiyAr aTaivAr, uyarvAnamE.

பொருள்:     இனிய தென்றல் காற்று மருவி விளங்கும் பொழில்கள் நிறைந்த திருவாஞ்சியத்தில் 
பொருந்திய, இறைவனைச் சீர்காழிப் பெருமானாகிய ஞானசம்பந்தர் பாடிப் பரவுகின்றார். அப்பாடல்களை 
உள்ளம் பொருந்தப் பாடிப் பரவுபவர்கள் வீடு பேற்றைப் பெறுவார்கள் என்க.

விளக்கவுரை:     ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பாடல்கள் செவிக்கு இனிமையும், சிந்ததைக்கு நிறைவும் ,
அறிவிற்குத் தெளிவும், ஆன்மாவிற்கு அமைதியும் அளிக்க வல்லன. ஞானப்பால் உண்ட அருளாளர் வழங்கிய 
பாடல்கள் நம் உள்ளத்துள் இன்பத் தேனாய் இனிக்கட்டும். 

குறிப்புரை:     என்றும் நின்ற இறையான் - நித்தியகர்த்தா. செந்தமிழ் - திருப்பதிகம். ஒன்றும் உள்ளம் - 
ஒன்றியிருந்து நினைக்கும் உள்ளம். இப்பதிகம் ஒன்றும் மனம் என்பதே ஆசிரியர் உட்கோள். வானம்-வீடு.

    A pleasant southern wind blows through the rich groves of Thiru-vaanjiyam rendering 
it attractive. Civan, the Lord Supreme, known as Vaanchi-Naatheswarar, resides in this temple 
forever. Saint Thiru-gnana-Sambandar who hails from Seerkaazhi is an expert in Vedas. He sang 
the ten pure Tamil verses on the omnipresent Lord at Thiru-vaanjiyam. Those scholars who sing 
these ten pure Tamil verses, identifying their emotions fully with its meaning, will reach 
the high celestial world.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            7ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 7th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 144                        பதிக எண் : 8

8.திருச்சிக்கல்                            8. THIRU-CH-CHIKKAL
பண் : இந்தளம்                            Pann: Indhalam

திருத்தல வரலாறு

    வசிட்டர், காமதேனுவின் வெண்ணெயினால் சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளுவித்துப் பூசித்தார். 
பூசைமுடிவில் அதை எடுக்க முயன்றபோது, எடுக்கக் கூடாமல் சிக்கிய காரணத்தால் இப்பெயர் பெற்றது. 
இத்திருத்தலம் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 8 கி.மீ தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் 
தலங்களுள் 83ஆவது தலமாகும். திருவாரூர் -நாகப்பட்டினம் பேருந்து வழியில் செல்லும் பேருந்துகளில் 
சிக்கல் செல்லலாம். இறைவரின் திருப்பெயர் வெண்ணெய்ப்பிரான். இறைவியாரின் திருப்பெயர் 
வேல்நெடுங்கண்ணி. “சிக்கலுள் வேலவொண் கண்ணியினாளையோர் பாகன் வெண்ணெய்ப்பிரான் 
பாலவண்ணன் கழலேத்த நம்பாவம் பறையுமே" என இவ்வூர்ப்பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருந்தகையார் 
அம்மை, அப்பர் திருப்பெயர்களை எடுத்து ஆண்டிருப்பது பெருமகிழ்ச்சிக்கு உரியதாகும். தீர்த்தம் க்ஷீரபுஷ்கரணி.
 தலவிருட்சம் மல்லிகை. திருக்கோயில் கட்டுமலையின்மேல் இருக்கின்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் 
முருகப்பெருமானுக்குச் சிங்காரவேலவர் என்று பெயர். இங்குச் சூரசம்ஹார விழா மிகச் சிறப்பாகக் 
கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தலத்திற்குப் பதிகம் ஒன்றாகும்.

பதிக வரலாறு

    ஞானசம்பந்தர் கடல்நாகைக் காரோணத்தை வணங்கி நீங்கிப் பரவிய பதிகள் பல. அவற்றுள் 
திருச்சிக்கல், திருக்கீழ்வேளூர் முதலியனவும் ஆம். அவற்றைப் பணிந்து பாடிய திருப்பதிகங்களுள் 
'வானுலாவுமதி' என்னும் இதுவும் ஒன்று.

                திருச்சிற்றம்பலம்

1547.    வானுலாவும் மதிவந்துலாவும்மதில்மாளிகை 
    தேனுலாவும்மலர்ச்சோலைமல்குந்திகழ்சிக்கலுள் 
    வேனல்வேளைவிழித்திட்டவெண்ணெய்ப்பெருமானடி 
    ஞானமாகந்நினைவார்வினையாயினநையுமே.        1

    வான் உலாவும் மதி வந்து உலாவும் மதில் மாளிகை, 
    தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள் 
    வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப் பெருமான் அடி 
    ஞானம்ஆக நினைவார் வினை ஆயின நையுமே.

    vAn ulAvum mati vantu ulavum matil mALikai, 
    tEn ulAvum malarccOlai, malkum tikaz cikkaluL 
    vEnal vELai vizittiTTa veNNeypperumAn aTi             
    njAnam Aka ninaivAr vinai Ayina naiyumE.

பொருள்:     வானில் மகிழ்ந்து உலாவுகின்ற சந்திரன், வந்து உலாவுகின்ற திருச்சிக்கல் என்ற 
திருத்தலத்துள் கோயில் கொண்டுள்ள வெண்ணெய்ப் பெருமானே! நீ, அகன்ற உயர்ந்த மாளிகைகளும் 
சோலைகளும் நிறைந்த திருச்சிக்கலுள் பொருந்தியுள்ளாய். தன்முனைப்புடன் உன்மீது மலர்களைத் 
தூவிய மன்மதனை நீ அழித்தாய். உண்மையான அன்பு கொண்டு உன்னை நினைத்து வழிபடுவோர்க்கு 
அருளுவாய். வழிபடும் எங்களின் வினைகளும் நீங்கப் பெறும்.

குறிப்புரை:     வான் உலாவும் மதி - தன்மேல் வந்துலாவும் அளவு உயரிய மாளிகை. 'வண்கொண்டல் 
விட்டு மதி முட்டுவன மாடம்' என்றார் கம்பர். வேனல்- சினம். வேள்- மன்மதன். விழித்திட்ட- நெற்றிக் கண்ணைத் 
திறந்து எரித்த. எரித்தவன் வெண்ணெய்ப் பெருமான் என்ற நயம் உணர்க. ஞானமாக நினைவார் - 'பாச 
ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப் 
பாதநீழற்கீழ் நீங்காதே' (சித்தியார் 292) நினைந்து நிற்பவர். நையும் - நைந்தொழியும்.

    It is Civan the Lord residing in the place called Thiru-ch-chikkal, known as 
Vennaip-piraan. The moon strolls in Thiru-ch-chikkal's sky over the broad, tall and 
beautiful mansions. The city abounds in gardens that are full of honey filled flowers. 
In this city the Lord opened His third eye and destroyed the god of love cupid (மன்மதன்). 
Those devotees who worship You with great wisdom will get Your blessings and their 
karma will languish.

1548.     மடங்கொள்வாளைகுதிகொள்ளும்மணமலர்ப்பொய்கைசூழ் 
    திடங்கொள்மாமறையோரவர்மல்கியசிக்கலுள் 
    விடங்கொள்கண்டத்துவெண்ணெய்ப்பெருமானடிமேவியே 
    அடைந்துவாழும்மடியாரவரல்லலறுப்பரே.

    மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப்பொய்கை சூழ், 
    திடம் கொள் மா மறையோர் அவர் மல்கிய சிக்கலுள் 
    விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமான் அடி மேவியே 
    அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே.

    maTam koL vALai kutikoLLum maNamalarp poykai cUz, 
    tiTam koL mA maRaiyOr avar malkiya cikkaluL 
    viTam koL kaNTattu veNNeyp perumAn aTi mEviyE 
    aTaintu vAzum(m) aTiyAr avar allal aRupparE.

பொருள்:     நீலகண்டனாகிய வெண்ணெய்ப் பெருமானே! நீர், துள்ளிக் குதிக்கும் மீன்கள்
 நிறைந்து வாழும் பொய்கைகளும் மன அமைதியோடு வழிபாடு செய்யும் மாமறையோர்களும் 
வாழ்கின்ற திருச்சிக்கல் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளீர்.   உமது திருவடிகளைப் 
பொருந்தும் அடியார்களுக்கு என்றும் அல்லல் இல்லையாம்.

குறிப்புரை:     மடம் - மடப்பம். குதி - குதித்தல். முதனிலைத் தொழிற்பெயர். பொய்கை- இயற்கை
 நீர்நிலை. திடம் - சிவபெருமானே மெய்ப்பொருட் கடவுள் என்னும் வேதாகம பரத்துவ நிச்சயம். மல்கிய -
நிறைந்த. மேவி - விரும்பி. அல்லல் அறுத்தல் - பிறவித் துன்பந் தீர்த்தல்.

    It is Civan the Lord who stays in Thiru-ch-chikkal known as Butter Lord. This city 
is surrounded by ponds of fragrant flowers and the scabbard fish leaping about for food. 
Here the learned men of Vedas are always of one strong faith on the Lord of this place 
whose neck is black. The Lord will certainly snap the ties of birth of those devotees 
who reach His feet.

1549.     நீலநெய்தல்நிலவிம்மலருஞ்சுனைநீடிய 
    சேலுமாலுங்கழனிவ்வளமல்கியசிக்கலுள்
    வேலொண்கண்ணியினாளையொர்பாகன்வெண்ணெய்ப்பிரான்
    பாலவண்ணன்கழலேத்தநம்பாவம்பறையுமே.            3

    நீலம் நெய்தல் நிலவி(ம்) மலரும் சுனை நீடிய
    சேலும் ஆலும் கழனி(வ்) வளம் மல்கிய சிக்கலுள் 
    வேல்ஒண்கண்ணியினாளை ஒர்பாகன், வெண்ணெய்ப்பிரான் 
    பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.

    nIlam neytal nilavi(m) malarum cunai nITiya 
    cElum Alum kazani(v) vaLam malkiya cikkaluL 
    vEl oNkaNNiyinALai orpAkan, veNNeyppirAn, 
    pAlavaNNan, kazal Etta, nam pAvam paRaiyumE.

பொருள்:     வேல்விழி கொண்ட இறைவியோடு பொருந்திய பெருமானே! நீலநிற மலர்கள் 
பொய்கைகளில் நிறைந்துள்ளன. அந்த நெய்தல் நிலத்தில் உள்ள வயல்வெளிகளில் மீன்கள் 
துள்ளிக் குதிக்கின்றன. இத்தகைய வளம் பொருந்திய இந்தத் திருச்சிக்கல் தலத்தில் கோவில் 
கொண்டுள்ள வெண்ணெய்ப் பெருமானே! உன் திருவடிகளைத் தொழுது, எங்கள் பாவங்கள் 
நீங்கப் பெறுவோமாக!

குறிப்புரை:     நெய்தல் - நெய்தல் மலர். நிலவி - விளங்கி. ஆலும் - அசையும், துள்ளும், மாலும் 
என்று கொண்டு மயங்குமெனலுமாம். வேல்- வேல்போன்ற, வேலவொண் கண்ணியினாள் என்றது 
புதியது. வேல் நெடுங்கண்ணி என்னும் அத்தலத்தின் திருநாமத்தைக் குறித்தது. இவ்வாறு பல 
திருப்பதிகங்களுட் காணலாம். பிற்காலத்தில் வடமொழிப் பெயராக மாறிய காரணத்தால் 
சிற்சில பதிகங்களுள் அம்முறை விளங்கவில்லை. பாலவண்ணன் - பால்போலும் வெண்ணிறத்தன். 
பாலனாந் தன்மையனுமாம். பறையும்-நீங்கும்.

    It is Civan the Lord of Thiru-ch-chikkal. This city is surrounded by ponds which 
contain the nilumboo flowers of blue in large numbers. They incense the ponds. This city 
also contains plenty of fields, which are filled with leaping fish known as Trichiurus 
lepturus. In such a fertile landscape of Thiru-ch-chikkal, the white coloured Lord of 
Butter shares half of His body with the lancer-eyed goddess, Umaa, His consort. 
If we worship His graceful feet our sins will vanish.

1550.    கந்தமுந்தக்கைதைபூத்துக்கமழ்ந்துசேரும்பொழிற் 
    செந்துவண்டின்னிசைபாடல்மல்குந்திகழ்சிக்கலுள் 
    வெந்தவெண்ணீற்றண்ணல்வெண்ணெய்ப்பிரான்விரையார்கழல் 
    சிந்தைசெய்வார்வினையாயினதேய்வதுதிண்ணமே.            4

    கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில் 
    செந்து வண்டு இன்இசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் 
    வெந்தவெண்நீற்று அண்ணல், வெண்ணெய்ப்பிரான், விரை ஆர் கழல் 
    சிந்தைசெய்வார் வினைஆயின தேய்வது திண்ணமே.

    kantam untak kaitai pUttuk kamazntu cErum pozil 
    centu vaNTu in icai pATal malkum tikaz cikkaluL 
    venta veN nIRRu aNNal, veNNeyppirAn, virai Ar kazal 
    cintai ceyvAr vinai Ayina tEyvatu tiNNamE.                

பொருள்:     வெண்ணெய்ப் பெருமானே! நீவிர் கோயில் கொண்டுள்ள திருச்சிக்கல் என்னும்
 திருத்தலத்தில், எப்பொழுதும் தாழை மணம் கமழ்கிறது. வண்டுகள் இன்னிசை பாடுகின்றன. 
 அடியார்களாகிய நாங்கள் மனநிறைவுடன் உன் புகழைப் பாடிப்பரவி மகிழ்வோம்.  எங்களது 
வினைகள் தேய்ந்து மறைந்துவிடும்.

குறிப்புரை:     கந்தம் - மணம். முந்த - முற்பட்டுச் சென்று வீசிப்பரவ. கைதை - தாழை. 
கமழ்ந்து- மணந்து. செந்து - ஒரு பெரும் பண். தி.2. பா. 3. ப. 10 குறிப்பைப் பார்க்க. இசை ஐந்து 
என்பது சந்து  என்றாகிச் செந்து என்று மருவிற்று எனலுமாம். ஜயம் - சயம். செயம். கஜம் - (கசம்) 
கெசம் என்பன போலப் பலவுள. வெந்த வெண்ணீறு - விதிப்படி கற்பஞ்செய்யப் பெற்ற 
திருவெண்பொடி. திண்ணம்- உறுதி.

    Civan the Lord of Butter stays in Thiru-ch-chikkal. This city is full of seashore
groves where the screw pine plants (Pandanus oderatissma) are in plenty. The flowers of
this plant spread their sweet fragrance all over the area. Here the beetles' humming
is similar to the attractive musical note called Chendu. Our Lord of Butter, the Lord of 
white ashes resides in this holy city. Those sincere devotees who always ponder over
the graceful feet of our Lord of Butter will certainly be relieved of all their sins.

1551.     மங்குல்தங்கும்மறையோர்கள்மாடத்தயலேமிகு 
    தெங்குதுங்கப்பொழிற்செல்வமல்குந்திகழ்சிக்கலுள் 
    வெங்கண்வெள்ளேறுடைவெண்ணெய்ப்பிரானடிமேவவே 
    தங்குமேற்சரதந்திருநாளுந்தகையுமே.            5

    மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு 
    தெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் 
    வெங்கண் வெள்ஏறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி மேவவே 
    தங்கும் மேன்மை; சரதம் திருநாளும், தகையுமே.

    magkul tagkum maRaiyOrkaL mATattu ayalE miku 
    tegku tugkap pozil celvam malkum tikaz cikkaluL 
    veg kan veL ERu uTai veNNeyppirAn aTi mEvavE, 
    tagkum,    mEnmai; caratam tiru nALum, takaiyumE.

பொருள்:     வெண்ணெய்ப் பெருமானே! நீவிர் கோயில் கொண்டுள்ள திருச்சிக்கல் தலத்தில் 
உயர்ந்த மாடங்கள் நிறைந்துள்ளன. அம்மாடங்களில் தென்னை மரச் சோலைகள் பொருந்தியுள்ளன. 
மறையோர்கள் ஏறுடைப் பிரானாகிய உம்மையே புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  எனவே, 
உன் அருட்செல்வம் என்றும் எங்களிடம் பொருந்தும் என்க.

குறிப்புரை:     மங்குல் - மேகம். தங்கும் மாடம் என்று சேர்க்க. மறையோர்களது மாடம் என்க. 
தெங்கு- தென்கு தென்னை என்பதால் அதன் தொல்லுரு விளங்கும். துங்கம் - உயர்ச்சி. ஏறு - விடை. 
மேல் - மேலானகதி. சரதம்- உண்மை. திரு- இலக்குமி. தகையும் -பொருந்தும். அழகு பெற்றிருக்கும்,
 வீற்றிருக்கும். 'பூவீற்றிருந்த திருமாமகள்' (சிந்தாமணி 30) 'மேன்மை' புதியது. மேற்கதி என்றிருந்ததோ?

    It is Civan the Lord of Butter who stays in Thiru-ch-chikkal. Here the men of Vedas
live in their tall palaces where the clouds embrace the top of these buildings. The tall 
coconut trees, which are dense in this area represent the wealth of the people. Here our 
Lord of Butter mounts the wild eyed white bull to roam about the cosmos. His holy
feet are worshipped daily by all the people of this place. Therefore, this place is blessed 
by goddess Lakshmi, and it will always be known for its prosperity and propriety and 
gracefulness.

1552.     வண்டிரைத்தும்மதுவிம்மியமாமலர்ப்பொய்கைசூழ்
    தெண்டிரைக்கொள்புனல்வந்தொழுகும்வயற்சிக்கலுள் 
    விண்டிரைத்தம்மலராற்றிகழ்வெண்ணெய்ப்பிரானடி 
    கண்டிரைத்தும்மனமேமதியாய்கதியாகவே.            6

    வண்டு இரைத்து(ம்) மது விம்மிய மா மலர்ப்பொய்கை சூழ், 
    தெண்திரைக் கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் 
    விண்டு இரைத்த(ம்) மலரால் - திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி 
    கண்டு இரைத்து(ம்) மனமே! மதியாய், கதி ஆகவே!

    vaNTu iraittu(m) matu vimmiya mA malarppoykai cUz, 
    teNtiraik koL punal vantu ozukum vayal cikkaluL 
    viNTu iraitta(m) malarAl-tikaz veNNeyppirAn aTi 
    kaNTu iraittu(m), manamE! matiyAy, kati AkavE!

பொருள்:     வெண்ணெய்ப் பெருமானே! நீவிர் கோயில் கொண்டுள்ள திருச்சிக்கல் தலத்தில் 
உள்ள பொய்கைகளில் மலர்கள் நிறைந்துள்ளன. வண்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 
மலர்களில் உள்ள தேன் பெருகிப் பொய்கைகளிலும் வயல் வெளிகளிலும் நிறைந்து விளங்குகின்றது. 
 அதுபோல் நாங்களும் எங்கள் பிறவிப் பயனைப் பெற்றுச்  சிறப்புறுகிறோம் என்க.

குறிப்புரை:     இரைத்து- ஒலித்து. விம்மிய- மிக்குச் சொரிந்த. மாமலர்- தாமரைப்பூ. திரை-அலை,
 விண்டு இரைத்து மலர்- திருமால் அருச்சனை செய்த (பத்திர புட்பங்கள்). இரைத்து-துதி செய்து,
 மதியாய்- தியானிப்பாய். கதி- சிவகதி. ஆக- எய்தலாக ஆக மதியாய் என்க.

    Civan, known as Lord of Butter stays Thiru-ch-chikkal, which is surrounded by 
groves and ponds. Here the beetles' humming is always heard in its high pitch. Honey 
spills from fragrant flowers and all the groves are filled with its profuse flow. 
Here the crystal like pure water flows into the paddy fields. In such a rich and holy 
place Vishnu worshipped Lord Butter's holy feet with 1000 flowers. Oh! You my mind ! 
worship and meditate on the holy feet of our Lord of Butter to get salvation from Him.

1553.     முன்னுமாடம்மதில்மூன்றுடனேயெரியாய்விழத் 
    துன்னுவார்வெங்கணையொன்றுசெலுத்தியசோதியான் 
    செந்நெலாரும்வயற்சிக்கல்வெண்ணெய்ப்பெருமானடி 
    உன்னிநீடம்மனமேநினையாய்வினைஓயவே.            7

    முன்னு மாடம் மதில்மூன்று உடனே எரிஆய் விழத் 
    துன்னு வார்வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான், 
    செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி 
    உன்னி நீட(ம்), மனமே! நினையாய், வினைஓயவே!

    munnu mATam matil mUnRu uTanE eri Ay vizat 
    tunnu vArvegkaNai onRu celuttiya cOtiyAn, 
    cennel Arum vayal cikkal veNNeypperumAn aTi 
    unni nITa(m), manamE! ninaiyAy, vinai OyavE!

பொருள்:     வெண்ணெய்ப் பெருமானே! நீவிர், உயர்ந்த மதில்களைக் கொண்ட முப்புரங்களைச் 
சிரித்தே அழித்த பேராற்றல் பொருந்தியவர். நீவிர் கோயில் கொண்டுள்ள திருச்சிக்கல் தலத்தில் 
செந்நெல் வயல்கள் பொருந்தியுள்ளன. உம்மையே நாங்கள் எங்கள் மனம் பொருந்த ஓதுவோம். 
வினை நீங்கப் பெறுவோமாக!

குறிப்புரை:     துன்னுகணை, வார்கணை, வெங்கணை என்க. உன்னிநீட - தியானித்து அழியாது வாழ. 
ஓய்தல் - தேய்ந்தொழிதல்.

    Civan, the Lord of Thiru-ch-chikkal is known as Butter Perumaan. Once the 
Devaas requested Him to protect them from the onslaught of the Asuraas. To save the 
Devaas, He directed a powerful arrow which burnt completely all the three flying forts 
of the Asuraas around their high palaces and ramparts. This Lord resides in Thiru-ch-chikkal
surrounded by rich, paddy fields. Oh! You mind! If you want to be relieved of previous 
birth effects think of the Lord Butter, pray well and worship Him.

1554.     தெற்றலாகியதென்னிலங்கைக்கிறைவன்மலை 
    பற்றினான்முடிபத்தொடுதோள்கள்நெரியவே 
    செற்றதேவன்நஞ்சிக்கல்வெண்ணெய்ப்பெருமானடி 
    உற்றுநீநினையாய்வினையாயின ஓயவே.        8

    தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன், மலை 
    பற்றினான், முடிபத்தொடு தோள்கள் நெரியவே 
    செற்ற தேவன், நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி 
    உற்று,நீ நினையாய், வினைஆயின ஓயவே!

    teRRal Akiya ten ilagkaikku iRaivan, malai 
    paRRinAn, muTipattoTu tOLkaL neriyavE, 
    ceRRa tEvan, nam cikkal veNNeyp perumAn aTi 
    uRRu, nI ninaiyAy, vinai Ayina OyavE!                

பொருள்:     வெண்ணெய்ப் பெருமானே! சிவபக்தனான இலங்கை வேந்தன் இராவணன் 
தன்முனைப்பால் தவறிழைத்தான். உமது திருக்கயிலாய மலையினைத் தூக்க நினைந்து துன்புற்றான். 
அவனையும் இறுதியில் ஆட்கொண்டருளிய சிக்கல் பெருமானே! உம்மை எங்கள் மனம் பொருந்த 
வழிபட்டு வினைகள் நீங்கப் பெறுவோமாக!

குறிப்புரை:     தெற்றல் - அறிவில் தெள்ளியவன். நடைகற்ற தெற்றல் (திவ். பெரியதி.11.4.9.) 
மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறிய புதுப்பொருள். அதற்கு ஆதாரமில்லை. இராவணன் 
ஒழுக்கத்திற் பிழைத்தவனேயாயினும் அறிவிற் சிறந்தவன். செற்ற - (வலியை) அழித்த.

    The great Civa devotee of Sri Lanka king Dasakreevan once got frustrated while 
travelling in his airplane since the Himalayan mountain obstructed his journey. Despite
his knowledge he tried to move the mountain where Lord Civan and His consort resided, 
a little aside to enable him to proceed on his way. Our Lord Butter of Thiru-ch-chikkal     
slightly pressed with His toe the top of the mountain. Alas! Dasakreevan got crushed 
with his ten heads and strong shoulders. He prayed to our Lord to forgive his wrongdoing.
He was pardoned by our Lord. Oh! you my mind, if you want to get relieved of evils, 
always think of our Lord Butter and pray.

1555.     மாலினோடருமாமறைவல்லமுனிவனும் 
    கோலினார்குறுகச்சிவன்சேவடிகோலியும் 
    சீலந்தாமறியார்திகழ்சிக்கல்வெண்ணெய்ப்பிரான்
     பாலும்பன்மலர்தூவப்பறையுநம்பாவமே.        9

    மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும் 
    கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும் 
    சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
    பாலும் பல்மலர் தூவ,பறையும், நம் பாவமே.

    mAlinOTu arumAmaRai valla munivanum 
    kOlinAr kuRuka, civan cEvaTi kOliyum 
    cIlam tAm aRiyAr; tikaz cikkal veNNeyp pirAn
    pAlum palmalar tUva, paRaiyum, nam pAvamE.

பொருள்:     வெண்ணெய்ப் பெருமானே! உம்மை உணராமல் திருமாலும், மறை ஓதும் 
பிரமனும் உம்மைக் காண முயன்றனர். முடியாமல் தோற்றனர். நீரோ எல்லோருக்கும் அருள் 
திருச்சிக்கல் தலத்துள் எழுந்தருளி உள்ளீர்! உம்மை அன்பால் பால் அபிடேகம் செய்து பூசித்தும் 
மலரிட்டுப் போற்றிப் பூசனை செய்யும் நாங்கள் எங்களின் பாவங்கள் நீங்கப் பெறுவோமாக! 

குறிப்புரை:     மால்- திருமால். முனிவன்- பிரமன். சிவன் சேவடி குறுகக் கோலினார்.  கோலியும் 
அறியார் என்க. கோலுதல்- வழி வகுத்தல். அடிமுடிதேட மாறிமுயலுதல். இங்குக் கோலுதலாம். 
சீலம்- பரமசிவன் மெய்த்தன்மை. பால்- பக்கம்- பசும்பாலும், மலரும் என்று உம்மைக் கூட்டிப் 
பாலும் மலரும் என்க. பாலபிடேகம் புரிய. பறையும்- நீங்கும்.

    Maha Vishnu and Brahma did their best pursue to see the holy feet and head of 
Civa, but failed. But He is there in Thiru-ch-chikkal as Lord of Butter. If we worship
Him by giving Him a sacred bath with milk and offer at His holy feet various good flowers 
our sins will vanish.

1556.    பட்டைநற்றுவராடையினாரொடும்பாங்கிலாக் 
    கட்டமண்கழுக்கள்சொல்லினைக்கருதாதுநீர் 
    சிட்டன்சிக்கல்வெண்ணெய்ப்பெருமான்செழுமாமறைப் 
    பட்டன் சேவடியேபணிமின்பிணிபோகவே.        10

    பட்டை நல்-துவர்ஆடையினாரொடும் பாங்கு இலாக் 
    கட்டு அமண்கழுக்கள் சொல்லினைக் கருதாது,நீர், 
    சிட்டன், சிக்கல், வெண்ணெய்ப்பெருமான், செழுமாமறைப் 
    பட்டன், சேவடியே பணிமின், பிணி போகவே!

    paTTai nal-tuvar ATaiyinAroTum pAgku ilAk 
    kaTTu amaNkazukkaL collinaik karutAtu, nIr, 
    ciTTan, cikkal veNNeypperumAn, cezumAmaRaip 
    paTTan, cEvaTiyE paNimin, piNi pOkavE!

பொருள்:     வெண்ணெய்ப் பெருமானே! துவராடை கொண்ட சமணர்களும், சாக்கியர்களும் 
உம்மை உணராமல் தேவையற்ற சொற்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் இன்னாத மொழிகளை நாங்கள் ஏற்க மாட்டோம். திருச்சிக்கல் தலத்தில் கோயில் 
கொண்டுள்ள உமது திருவடிகளை இனிய மொழி கூறியே வழிபாடு செய்வோம். எங்களது 
பிறவிப் பிணிகள் நீங்கப் பெறுவோமாக.

குறிப்புரை:     பட்டை நற்றுவராடையினார் - சாக்கியர். துவர் - செந்நிறம். காவியேறியது. 
பட்டை என்பது துவர்ப்பட்டை. நிறம் துணிக்கு ஊட்டும் வழக்கம் நினைவூட்டும். பாங்கிலாமை - 
முறையற்ற பண்பு. கட்டு -உடற்கட்டு. கழுக்கள், கழுவேறுதற்குற்ற அபசாரம் செய்தவர்கள். 
அமண் - சமண், க்ஷமண் என்பதன் திரிபு. சிட்டன் - வேதாகமம் வல்ல பெருமான். சிட்டர் 
வாழ்தில்லைச் சிற்றம்பலம் (தி. 1 ப. 80 பா 10) பட்டன் - புலவன். தன்னைத்தானே அருச்சித்தானாதலின் 
அருச்சகன் எனினும் பொருந்தும். 'ஆலநிழற் பட்டன்' (திருப்பல்லாண்டு) என்றதால் ஆசாரியனுமாம். 
ஏகாரம் - பிரிநிலை. பிணி - பிறவிப் பெரும் பிணி முதலிய பலவுமாம்.

    Oh! you staunch devotees, do not pay heed to the words of Buddhists who wear 
ochre robes on their body and to those of the Jains who receive and eat their food from 
their hands. You may come here to Thiru-ch-chikkal where our Lord of Butter, the 
embodiment of the Vedas rules. Worship His holy feet with all sincerity and be rid of 
the affliction of birth.

1557.     கந்தமார்பொழிற்காழியுள்ஞானசம்பந்தனல் 
    செந்தண்பூம்பொழிற்சிக்கல்வெண்ணெய்ப்பெருமானடிச் 
    சந்தமாச்சொன்னசெந்தமிழ்வல்லவர்வானிடை 
    வெந்தநீறணியும்பெருமானடிமேவரே.        11

    கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன், நல் 
    செந் தண்பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடிச் 
    சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வான்இடை 
    வெந்தநீறு அணியும் பெருமான் அடி மேவரே.

    kantam Ar pozil kAziyuL njAnacampantan, nal 
    cen taNpUmpozil cikkal veNNeypperumAn aTic 
    cantamAc conna centamiz vallavar, vAn iTai 
    venta nIRu aNiyum perumAn aTi mEvarE.

பொருள்:     வெண்ணெய்ப் பெருமானே! நறுமணம் மிக்க பொழில்களால் நிறைந்து விளங்கும்
சீர்காழிப் பதியில் அவதரித்த திருஞானசம்பந்தப் பெருமான், பொழில் சூழ்ந்த திருச்சிக்கல் தலத்தில் 
கோவில் கொண்டுள்ள உம்மைச் செந்தமிழ் மணம் பொருந்தப் பாடியுள்ளார். அதனை நாங்கள் மனம் 
பொருந்த இசையுடன் பாடி, உமது திருவடிகளை அடைவோமாக.

குறிப்புரை:     சந்தம் - இசை. செந்தமிழ் - இத்திருப்பதிகத்தை உணர்த்திற்று. வான் - பேரின்ப வீட்டுலகு.
தேவாரத்தில் 'வான்' என்று வரும் இடங்களிற் பெரும்பாலும் இப்பொருளே கொள்ளல் வேண்டும். 
'வானிடை அடிமேவர்' என்றதால் துறக்கம் ஈண்டுப் பொருந்தாமை அறிக. 'கேடிலா வானுலகம்' 
'தூயவிண்' 'வானசம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே' என்ற திருமுறை வசனங்களை நோக்குக .

    Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi which is surrounded by many big gardens 
of sweet smelling flowers. He ably recited these melodious blessed Tamil verses on Lord of Butter.
He stays in Thiru-ch-chikkal temple which is encircled by cool flowery gardens. Oh my mind! 
concentrate on His holy feet and repeat the song of Thiru-gnana-Sambandar, you will then 
reach the holy feet of our Lord of Butter smeared with white ashes, in heaven.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            8ஆம் பதிகம் முற்றிற்று
            End of 8th Hymn


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 145                        பதிக எண்: 9

9.திருமழபாடி                            9. THIRU-MAZHA-PAADI
பண் : இந்தளம்                            Pann: Indhalam

திருத்தல வரலாறு

    சேரர் கிளையினராகிய மழவர் பாடி செய்து கொண்டிருந்தமையால் இப்பெயர் பெற்றது. 
பாடி- தங்குமிடம். பாடி எனினும் பாசறை எனினும் ஒக்கும். சிவபெருமான் மழுநிர்த்தஞ் செய்த 
தலமாதலால் மழுவாடி ஆயிற்று என்பர்.

    இது திருவையாற்றிற்கு வடமேற்கே சுமார் 6 கி. மீ. தூரத்தில் கொள்ளிடப் பேராற்றின் 
வடகரையில் இருக்கின்றது. அரியலூர், திருவையாறு, திருச்சியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 
இது காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்று. இறைவரின் திருப்பெயர் வயிரத்தூண் நாதர். 
இத்திருப்பெயரை, இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான், "மலையடுத்த மழபாடி வயிரத்தூணே", 
"மறை கலந்த மழபாடி வயிரத் தூணே" முதலான தொடர்களில் எடுத்து ஆண்டுள்ளனர். இதை வடமொழியில் 
வஜ்ரஸ்தம்பேசுவரர் என்று கூறுவர். பிரமனுலகத்திருந்த சிவலிங்கத்தைப் புருஷாமிருகம் இங்குக் கொண்டு 
வந்து எழுந்தருளுவித்தது. அதை மீளவும் கொண்டு போதற்காகப் பிரமதேவர் அதைப் பெயர்த்து எடுக்க முயன்றார். 
அதை எடுக்க முடியாத பிரமன், 'இது வயிரத் தூணோ' என்று வியந்தமையால் இப்பெயர் பெற்றது. 
இறைவியாரின் திருப்பெயர் அழகம்மை. தீர்த்தம் கொள்ளிடப் பேராறு. தலவிருட்சம் பனை.

    இந்திரன், திருமால் இவர்கள் வழிபட்டுப் பேறு எய்தினர். திருநந்தி தேவர் திருவையாற்றிலிருந்து 
எழுந்தருளி- சுயசை அம்மையாரை மணஞ்செய்து கொண்ட தலம். சுந்தரமூர்த்தி நாயனார், திருவாலம்பொழிலில் 
எழுந்தருளியிருக்க, மழபாடி இறைவன், அவரது கனவில் தோன்றி, 'மழபாடிக்கு வர மறந்தனையோ' என்று கூற, 
உடனே சுந்தரர், 'பொன்னார் மேனியனே' என்று தொடங்கும் பதிகம் பாடி வழிபட்ட பதி. திருஞான சம்பந்தர் 
பதிகம் மூன்று, திருநாவுக்கரசு நாயனார் திருத்தாண்டகப் பதிகம் இரண்டு, சுந்தர மூர்த்தி நாயனார் 
பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்களைக் கொண்ட பெருமை உடையது. இத்தலத்திற்கு ஸ்ரீ கமலை ஞானப் 
பிரகாச தேசிகர் அவர்களால் இயற்றப்பட்ட தலபுராணம் ஒன்று இருக்கின்றது. அது இனிய எளிய தமிழ் நூல். 
அச்சில் வெளிவந்துள்ளது. நந்தியெம்பெருமானின் திருமணத் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி 
மாதத்தில் நடைபெறுகின்றது.

பதிக வரலாறு

    கைத்தாளம் பெற்ற கவுணியர் பெருமான் நெய்த்தானப் பதியினின்று, திருமழபாடியைச் சேர்ந்து, 
'மங்கைவாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள் பொங்கு மாதவமுடையார்' எனத் 
தொழுது போற்றிசைத்துக் கோயிலுட் புக்கு வலங்கொண்டு வழிபட்டு வயிரமணித் தூணைக் 
கும்பிட்டுப் பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1558.    களையும்வல்வினையஞ்சல்நெஞ்சேகருதார்புரம் 
    உளையும்பூசல்செய்தானுயர்மால்வரைநல்விலா 
    வளையவெஞ்சரம்வாங்கியெய்தான்மதுத்தும்பிவண்
     டளையுங்கொன்றையந்தார்மழபாடியுளண்ணலே.        1

    களையும், வல்வினை: அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம் 
    உளையும் பூசல் செய்தான்; உயர்மால்வரை நல் விலா 
    வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் - மதுத் தும்பிவண்டு 
    அளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.

    kaLaiyum, valvinai; anjcal, nenjcE! karutAr puram 
    uLaiyum pUcal ceytAn; uyarmAlvarai nal vilA 
    vaLaiyA venjcaram vAgki eytAn--matut tumpivaNTu 
    aLaiyum konRai amtAr mazapATiyuL aNNalE.

பொருள்:     மழபாடியுள் அண்ணலே! நீவிர் உம்மை வணங்காமல் பகைமை கொண்ட முப்புரத்து 
அசுரர்களை மேருமலையை வில்லாக வளைத்து, சரமும் தொடுக்க முயன்று  முடிவில் சிரித்தே அதனை 
அழித்தருளிய பெருமைக்கு உரியவர் ஆவீர்! முப்புரம் அழித்தல் என்பது மும்மல அழிவுதானே! எனவே 
நாங்கள் எங்கள் வினை நீக்குதல் பற்றி  அஞ்சமாட்டோம். வண்டுகள் நிறைந்த கொன்றை மாலை 
அணிந்த உம் திருவடிகளையே வணங்கி வினை நீங்கப் பெறுவோமாக! 

குறிப்புரை:     நெஞ்சே, அஞ்சல், வல்வினையை மழபாடி அண்ணல் களைவான் என்க. விற்பூட்டுப்
பொருள்கோள். கருதார் - பகைவர் (திரிபுரத்து அசுரர்). உளையும் - வருந்தும். பூசல் - போர். 
வரை- மேரு மலையாகிய வில். விலா-  வில்லாக. சரம் - பாணம் (திருமாலாகிய கணை). மது-கள், 
தும்பி வண்டு -  வண்டினங்கள். அளையும் - துழாவும். தார் -மாலை. மழபாடி-மழுவாடி என்பதன் மரூஉ
என்பர். அண்ணல் -பெருமான்.  

    Oh! My heart; you need not be afraid of the evils of the previous karma. Why should you? 
Here is our great Lord of Thiru-mazha-paadi. Do not you know His ability? He bent the high Meru 
mountain as a bow and shot an arrow and destroyed the three great forts of Asuraas. He is garlanded 
with the nectarfilled cassia flowers with bees meddling inside. He is our saviour. Therefore 
worship Him without fear of karma.

1559.    காச்சிலாதபொன்னோக்குங்கனவயிரத்திரள் 
    ஆச்சிலாதபளிங்கினனஞ்சுமுன்னாடினான் 
    பேச்சினாலுமக்காவதென்பேதைகாள்பேணுமின் 
    வாச்சமாளிகைசூழ்மழபாடியைவாழ்த்துமே.            2

    காச்சிலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள் 
    ஆச்சிலாத பளிங்கினன்; அஞ்சும் முன் ஆடினான்; 
    பேச்சினால் உமக்கு ஆவது என்? - பேதைகாள்; பேணுமின்! 
    வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே:

    kAccilAta pon nOkkum kana vayirattiraL 
    AccilAta paLigkinan; anjcum mun ATinAn; 
    pEccinAl umakku Avatu en?--pEtaikAL, pENumin! 
    vAcca mALikai cUz mazapATiyai vAzttumE!

பொருள்:     மழபாடி அண்ணலே! நீவிர் ஒளிமிக்க பொன்னும், உறுதியான வைரமும், தெளிந்த 
பளிங்கும் போன்று விளங்குகின்றீர்! பஞ்ச கவ்வியத்தை விரும்பி ஆடுகின்றீர்! வாசனைமிக்க மழபாடித் 
திருத்தலத்தில் உறைகின்றீர்! உம்மை வாழ்த்துவது ஒன்றே எம் வாழ்வின் பயனாம் என்க.

குறிப்புரை:     பேதைகாள்  - அறிவிலிகளே. பேச்சினால் - சிவசம்பந்தமில்லாத அவப்பேச்சால். உமக்கு -
ஆவதென்- உமக்கு ஆவது யாது? மழபாடியைப் பேணுங்கள். வாழ்த்துங்கள் என்க. காய்ச்சு- தீயிலிட்டுச் சுடல். 
காய்ச்சிலாத- காய்த்தல் இல்லாத. காய்ச்சு -  காச்சு. முதனிலைத் தொழிற்பெயர். பிள்ளைத்தாய்ச்சி - பிள்ளைத்தாச்சி 
என்பது போல மருவிற்று. காய்ச்சப் பெறாத இயற்கையில் ஒளிரும் பொன் என்றபடி. பொன்- தேவியார். 
நோக்கும்- பார்க்கும். கன வயிரத்திரள் - இறைவன் திருத்தோள்களைக் குறித்த உவமையாகுபெயர். 
இறைவன் திருநாமம் வச்சிரத்தம்ப நாதர் என்பதாகும். மகளிர்க்கு ஆடவர் தோள் நோக்கலும், ஆடவர்க்கு 
மகளிர் கொங்கை நோக்கலும் இயல்பு (பார்க்க: கம்பர், மிதிலைக் காட்சிப் பா.36). ஆய்தல் - நுணுக்கம். 
ஆய்த்தல் - நுணுக்கம் புரிதல். பளிங்கு - தன்பாற் பட்டதை நுணுக்கஞ் செய்யாது புறத்தே விளங்கச் செய்வது. 
அதனால் ஆச்சிலாத பளிங்கு என்றனர்.  சிவபெருமானைத் 'தெளிவளர் பளிங்கின் திரள்மணிக்குன்றே' என்றார் 
திருமாளிகைத் தேவர். அஞ்சு- ஆனைந்து. ஆடினானது மழபாடியை என்க. வாச்ச - (இலக்கணமெல்லாம்) வாய்க்க.

    Oh! You the ignorant devotees! what is the use of mere chatting? Come and praise our Lord 
at Mazhapadi temple surrounded by palaces. He is like unmelted pure gold. He is also like hard 
diamond heap. Also He is like a huge crystal devoid of impurity. He is pleased to be bathed 
with the five things collected from the cow such as milk, curd, ghee, cow's urine and cow dung.
You devotees always praise His name. 

1560.    உரங்கெடுப்பவனும்பர்களாயவர்தங்களைப் 
    பரங்கெடுப்பவன்நஞ்சையுண்டுபகலோன்றனை 
    முரண்கெடுப்பவன்முப்புரந்தீயெழச்செற்றுமுன் 
    வரங்கொடுப்பவன்மாமழபாடியுள்வள்ளலே.        3

    உரம் கெடுப்பவன், உம்பர்கள் ஆயவர் தங்களை; 
    பரம் கெடுப்பவன், நஞ்சை உண்டு; பகலோன் தனை 
    முரண் கெடுப்பவன்: முப்புரம் தீ எழச் செற்று, முன், 
    வரம் கொடுப்பவன் - மா மழபாடியுள் வள்ளலே.

    uram keTuppavan, umparkaL Ayavar tagkaLai; 
    param keTuppavan, nanjcai uNTu pakalOntanai             
    muraN keTuppavan, muppuram tI ezac ceRRu, mun, 
    varam koTuppavan--mA mazapATiyuL vaLLalE.

 பொருள்:     மழபாடி வள்ளலே! நீவிர் பகைமை கொண்டவர்களை அழிப்பவர் ஆவீர். ! வணங்கியவர்களுக்கு 
உரம் கொடுப்பவர் ஆவீர்! சூரியனின் பற்களை உடைத்து முப்புரங்களையும் எரித்தவர் ஆவீர்! நஞ்சை உண்டு 
உலகைக் காத்தவர் ஆவீர்.  மழபாடி வள்ளலே! உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம்.

குறிப்புரை:     உரம் - வலிமை. உம்பர்கள் - தக்கன் வேள்வியிற் கலந்த தேவர்கள். பரம் - தேவத்தன்மை. திவ்வியம். 
பகலோன் முரண் கெடுப்பவன் - சூரியன் பல்லைத் தகர்த்தவன். வரம் - மூவர்க்குத் தந்த வரம். வள்ளல்- எவ்வுயிர்க்கும் 
எப்பொருளும் எப்பொழுதும் அருள்வோன். மழபாடிப் பெருமானது திருநாமம் வள்ளல் என்பதும் (தி. 2 ப. 9 பா. 4, 8, 11) 
வயிரத்திரள் (தி. 2 ப. 9 பா. 2) என்பதும் ஆதலறிக.

    Civan, residing in the temple at Thiru-mazha-paadi, is called Vaidianaathar. He destroyed 
the three flying fortresses of the Asuraas by holding the big majestic Meru mountain on His head 
as His bow and shot at the fortresses and destroyed everyone of them along with their palaces. 
However He saved the three Asuraas who worshipped Him always. They were known as

        1. Thaarakashan (Sudarman)

        2. Kamalakshan (Suneethi)

        3. Vidyunmaali (Subuththi)

    Lord Vaidyanathar gave the three their second names and kept them in His temple as entrance 
bodyguards and the third one as a drum musician for Him. Civan eliminated all demons and others 
during Thakkan's ablations in his sacrificing hall through Veerabadran His guard. It is He who 
drank the poison from sea of milk and saved the Devaas and the whole humanity. He subdued the 
brightness of the sun god. Ye! He blesses all who bow at His feet and pray forever.

1561.     பள்ளமார்சடையிற்புடையேயடையப்புனல் 
    வெள்ளமாதரித்தான்விடையேறியவேதியன் 
    வள்ளல்மாமழபாடியுள்மேயமருந்தினை
    உள்ளமாதரிமின்வினையாயினஓயவே.         4

    பள்ளம் ஆர் சடையில் புடையே அடையப் புனல் 
    வெள்ளம் ஆதரித்தான், விடை ஏறிய வேதியன், 
    வள்ளல், மழபாடியுள் மேய மருந்தினை 
    உள்ளம் ஆதரிமின்  வினை ஆயின ஓயவே!

    paLLam Ar caTaiyin puTaiyE aTaiyap punal 
    veLLam AtarittAn, viTai eRiya vEtiyan, 
    vaLLal, mA mazapATiyuL mEya maruntinai 
    uLLam Atarimin, vinai Ayina OyavE!

பொருள்:     மழபாடி வள்ளலே! நீவிர் விடையின்மீது அமர்ந்து அருளுவீர். சடையில் கங்கையைத் 
தாங்கி அதற்கும் சிறப்பு அருளுவீர்! திருமழபாடியுள் அமர்ந்த அண்ணலாகிய உமது திருவடிகளை 
நாங்கள் வணங்கி எங்கள் வினை நீங்கப் பெறுவோமாக!

குறிப்புரை:     பள்ளம்- சடைமுடி நடுவிற்பொருந்திய குழிவு. பள்ள மார்புனல் வெள்ளம் (கங்கைப் பெருக்கம்) 
எனலுமாம்.  மேய- மேவிய . விரும்பிய. மருந்து - பிறவிப் பிணிக்கொரு பெருமருந்து. உள்ளம் - மனம்.
ஆதரிமின் - விரும்புங்கள். வாயாலுண்ணும் மருந்தன்று."உன்னுமுள  தையமிலதுணர்வாய் ஓவாது மன்னுபவம் 
தீர்க்கும் மருந்து" (திருவருட்பயன் 10) என்றபடி நினைக்கும் மருந்து.

    Oh Lord of Thiru-mazha-paadi! You ride on Your bull and roam all over the cosmos blessing 
one and all. You have kept the lady of powerful water, the Ganges on Your matted hair. He is the 
embodiment of Vedic knowledge. He is the most benevolent, the great medicine - for sufferings of 
humanity, as His name Vaidyanaathar suggests. Oh! You devotees if you want to be relieved of all 
evils you may meditate the holy feet of the Lord of Thiru-mazha-paadi.

1562.     தேனுலாமலர்கொண்டுமெய்த்தேவர்கள்சித்தர்கள் 
    பால்நெயஞ்சுடனாட்டமுன்னாடியபால்வணன் 
    வானநாடர்கள்கைதொழுமாமழபாடியெங் 
    கோனைநாள்தொறுங்கும்பிடவேகுறிகூடுமே.        5

    தேன்உலா மலர் கொண்டு, மெய்த்தேவர்கள், சித்தர்கள், 
    பால்நெய்அஞ்சு உடன்ஆட்ட, முன் ஆடிய பால்வணன் 
    வானநாடர்கள் கைதொழு மா மழபாடி எம் 
    கோனை நாள்தொறும் கும்பிடவே, குறி கூடுமே.

    tEn ulAm malar koNTu, meyt tEvarkaL, cittarkaL, 
    pAl ney anjcu uTan ATTa, mun ATiya pAlvaNan- 
    vAna nATarkaL kaitozu--mA mazapATi em 
    kOnai nALtoRum kumpiTavE, kuRi kUTumE.

பொருள்:     மழபாடி அண்ணலே! தேன்நிறைந்த மலர் கொண்டு உம்மைத் தேவர்களும் சித்தர்களும் 
வணங்குகிறார்கள். பால், நெய் முதலிய பஞ்சகவ்வியம் கொண்டு அபிஷேகம் செய்து, போற்றி வழிபடுகிறார்கள். 
நாங்களும் அவர்களைப் போன்று, உம்மைப் போற்றி வணங்கி உம் திருவடிப் பேற்றை அடைவோமாக!

குறிப்புரை:     மெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன்செரியும் பூக்களைக் கொண்டு பாலும் நெய்யும் 
தயிருமாகிய ஆனைந்தும் அபிடேகிக்க ஆடிய பால்வண்ணன். ஆடிய - அபிடேகிக்கப் பெற்ற. நடனமாடிய
வானநாடர்கள்- துறக்கத்தில் வாழ்பவர்கள். அம்மெய்த் தேவர் வேறு இவர் வேறு. கோன் - தேவாதி தேவேசன். 
குறிகூடல்- 'அறிவதொரு குறி குருவினருளினா லறிந்து மன்னு சிவன்றனை யடைந்து நிற்றலும், 
'குறியொடு தாம் அழியும் நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுத'லும் பின்பு வாய்ப்பன.'குறியதனால் 
இதயத்தே அரனைக்கூடு'தலே ஈண்டுக் குறித்தது. ''அருள் ஞானக்குறியில் நின்று கும்பிட்டுத் தட்டம் 
இட்டுக் கூத்தாடித் திரி” என்று விதித்தமை உணர்க.

    Behold! It is Civan the Lord of Thiru-mazha-paadi who is given His sacred bath by 
angels and sages with milk and ghee and other things five collected from the cow. They bring 
nectarfilled of flowers also and offer them at His holy feet. All the celestials raise their 
hands and offer their prayers. Ye devotees! if you also do so it is certain that you will 
get salvation.

1563.     தெரிந்தவன் புரமூன்றுடன்மாட்டியசேவகன் 
    பரிந்துகைதொழுவாரவர்தம்மனம்பாவினான் 
    வரிந்தவெஞ்சிலையொன்றுடையான்மழபாடியைப் 
    புரிந்துகைதொழுமின்வினையாயினபோகுமே.    6

    தெரிந்தவன்,புரம்மூன்று உடன்மாட்டிய சேவகன், 
    பரிந்து கைதொழுவார் அவர்தம் மனம் பாவினான், 
    வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான், மழபாடியைப் 
    புரிந்து கைதொழுமின்! வினை ஆயின போகுமே.

    terintavan, puram mUnRu uTanmATTiya cEvakan, 
    parintu kaitozuvAr avartam manam pAvinAn, 
    varinta venjcilai onRu uTaiyAn, mazapATiyaip             
    purintu kaitozumin! vinai Ayina pOkumE.

பொருள்:     மழபாடி அண்ணலே! நீவிர் முப்புரங்கள் மூன்றையும் ஒன்றாக அழித்தவர். அன்பு கொண்ட 
அடியவர்களின் உள்ளங்களில் பொருந்தியவர். மேரு மலையை வில்லாக வளைத்த பேராற்றலை உடையவர். 
மழபாடியுள் பொருந்தியுள்ள உம்மைத் தொழுது நாங்கள் எங்களுடைய வினைகள் நீங்கப் பெறுவோமாக!

குறிப்புரை:     தெரிந்தவன்-  சருவஞ்ஞன். முற்றுணர்வுடையவன். தெரிந்த வன்மை,  புரம் என்றல் அமையாது. 
மாட்டிய - மாள்வித்த, தீயை மாட்டிய எனலுமாம். சேவகன் - வீரன், பரிந்து- அன்பு கொண்டு.  பாவினான் -  பரவியவன். 
வரிந்த - கட்டிய. சிலை-  மேருவில். புரிந்து - விரும்பி  வினையாயின- பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்னும்
 மூன்றும், அவற்றின் உட்பட்ட பல்வகையும் ஆகிய கர்மங்கள்.

    Behold! It is Civan the Lord of Thiru-mazha-paadi who like a valiant soldier had
a mountain bow in His hand and burnt the three flying fortresses of the Asuraas and 
destroyed them and helped devaas to be saved from the onslaught of Asuraas,  He 
abides in the hearts of His devotees who pray to Him with all sincerity. You the 
devotees - if you want to be relieved of all the three sorts of karma bow at His feet 
with all earnestness.

1564.     சந்தவார்குழலாளுமைதன்னொருகூறுடை 
    எந்தையானிமையாதமுக்கண்ணினனெம்பிரான் 
    மைந்தன் வார்பொழில்சூழ்மழபாடிமருந்தினை 
    சிந்தியாவெழுவார்வினையாயின தேயுமே.        7

    சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு உடை 
    எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான், 
    மைந்தன், வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை 
    சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே.

    canta vArkuzalAL umai tan oru kURu uTai 
    entaiyAn, imaiyAta mukkaNNinan, empirAn,
    maintan, vAr pozil cUz mazapATi maruntinaic 
    cintiyA ezuvAr vinai Ayina tEyumE.

பொருள்:     மழபாடி அண்ணலே! நீவிர் மணமிக்க கூந்தலைக் கொண்ட உமையாளை உடம்பின் 
ஒருபாகமாகக் கொண்டவர் ஆவீர்!  எங்களுக்குத் தந்தை ஆவீர்!  மூன்று திருக்கண்களைக் கொண்டவர் ஆவீர்! 
சோலைகள் நிறைந்த திருமழபாடித் தலத்துள் பொருந்தி இருப்பவர் ஆவீர்! வைத்திய நாதராகிய 
உம்மை,மனமொழி மெய்கள் பொருந்தத் தொழுது எங்களது வினைகள் நீங்கப் பெறுவோமாக. 

குறிப்புரை:     சந்தம் - அழகு. வார் - நீளம், ஒழுகுதல். கூறு - இடப்பால். எந்தையான் - எம் அப்பன்.
முக்கண்ணினன் - சோம சூரியாக்கினி நேத்திரங்களை உடையவன். மழபாடி மருந்து - திருமழபாடியில்
உள்ள பவரோக வைத்தியநாதன். இம்மருந்து உடற்கின்றி உயிர்க்காதலின், உண்ணலின்றி  உன்ன
நினைத்தலுக்குரியதால் எழுவார் என்றார். சிந்தியா -சிந்தித்து, நினைத்து, செய்யா என்னும்
வாய்பாட்டிறந்தகால வினையெச்சம். வடசொற் பகுதியடியாகப் பிறந்தது.

    It is Civa, the Lord of Thiru-mazha-paadi. Our Lord shares His body with His consort 
Umaa of fragrant hair. He is our Father. He has three winkless eyes. The third one is in His 
forehead. He is the great God of, medicine of sinlessness. Those who contemplate on His 
greatness and pray to Him will shed off the evil effects of karma.

1565.     இரக்கமொன்றுமிலானிறையான்திருமாமலை 
    உரக்கையாலெடுத்தான்றனதொண்முடிபத்திற 
    விரற்றலைந்நிறுவியுமையாளொடுமேயவன் 
    வரத்தையே கொடுக்கும்மழபாடியுள் வள்ளலே.        8

    இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலை 
    உரக்கையால் எடுத்தான் தனது ஒண் முடிபத்து இற 
    விரல்-தலை(ந்) நிறுவி, உமையாளொடு மேயவன் - 
    வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே.

    irakkam onRum ilAn, iRaiyAn tirumAmalai 
    urak kaiyAl eTuttAn tanatu oN muTipattu iRa 
    viral-talai(n) niRuvi, umaiyALoTu mEyavan 
    varattaiye koTukkum mazapATiyuL vaLLalE.

பொருள்:     மழபாடி வள்ளலே! இரக்கமற்ற இராவணன் உமது கயிலை மலையைத் தனது 
ஆற்றலால் எடுக்க முயன்றான். அவனது பத்துத் தலைகளும் துன்பம் அடைய நீவிர் உமது 
திருவிரலை ஊன்றினீர்! இறுதியில் அருளும் புரிந்து உமையாளோடு பொருந்தி விளங்கினீர். 
அருளும் உம்மை நாங்கள் வணங்கி மகிழ்வோமாக.

குறிப்புரை:     இரக்கம் - பக்தி. இறையான்- சிவபிரான். மலை - கயிலாயம். உரம் - வலிமை. 
இலான், எடுத்தான், மேயவன் மூன்றும் வினையாலணையும் பெயர்கள். ஒள்முடி - ஒளியுடைய முடிகள். 
இற- இற்றொழிய. விரல்- ஈண்டு. காற்பெருவிரல் மட்டும். நிறுவி- ஊன்றி, ஊன்றியதும் கருணைப் 
பொருட்டாதலை வரத்தையே கொடுக்கும் என்றதாலறிக (தி.2. ப.9.பா.3, 4, 8, 11) வள்ளல் என்றதும் 
'வரங்கொடுப்பவன்' 'வரத்தையே கொடுப்பான்' என்றதும் அறியின், சிவதலயாத்திரைக் கருத்தும்
 பயனும் விளங்கும்.

    Behold! It is Civan who is in the temple at Thiru-mazha-paadi. The king of Sri Lanka, 
great devotee of Lord Civan, once became merciless and demonish in habits. He tried to lift 
mount Kailash without minding Lord Civan and His consort who stayed on the mountain top.
Lord Vaidyanaathar pressed His toe slightly on the hill. The ten heads and shoulders of 
Raavanaa got crushed. He realised his fault and cried. Then he prayed to our Lord who 
bestowed His mercy on him along with goddess Uma. He is our Lord at Thiru-mazha-paadi, 
who always gives boons along with His consort to His devotees.

1566.     ஆலமுண்டமுதம்மரர்க்கருளண்ணலார் 
    காலனாருயிர்வீட்டியமாமணிகண்டனார்                 
    சாலநல்லடியார் தவத்தார்களுஞ்சார்விடம் 
    மாலயன் வணங்கும்மழபாடியெம்மைந்தனே.        9

    ஆலம் உண்டு அமுதம்(ம்) அமரர்க்கு அருள் அண்ணலார், 
    காலன் ஆர்உயிர் வீட்டிய மா மணிகண்டனார் -
    சால நல் அடியார் தவத்தார்களும் சார்வுஇடம் 
    மால் அயன் வணங்கும், மழபாடி எம் மைந்தனே.

    Alam uNTu amutam(m) amararkku aruL aNNalAr, 
    kAlan Ar uyir vITTiya mA maNikaNTanAr- 
    cAla nal aTiyAr tavattArkaLum cArvu iTam, 
    mAl ayan vaNagkum, mazapATi em maintanE.

பொருள்:     மழபாடி மாமணியே! நீவிர் ஆலத்தை உண்டு அமுதத்தை வழங்கியவர்!. 
 காலனைக் காலால் உதைத்து அருளியவர்! விடத்தைக் கண்டத்தில் அடக்கிய நீலகண்டர்!.
 அன்புடை அடியார்களாலும் தவத்தோர்களாலும் வணங்கப் பெற்றவர். திருமாலும் பிரமனும் 
தேவர்களும் போற்றும் உம்மை நாங்களும் போற்றி வணங்குவோமாக.

குறிப்புரை:     தான் உண்டது நஞ்சு. அமரர் (தேவர்)க்கு அருளியது அமுதம். ஆயினும் நஞ்சின் 
பயனாம் இறப்புத் தனக்கில்லை. அமுதத்தின் பயனாம் வாழ்வு அத்தேவர்க்கு இருக்கின்றது. இதனால் 
உயிர்களின் வாழ் முதல் இறைவன் என்னும் சிவபரத்துவம் இனிது விளங்கும். தன்னைப் புகலடைந்தவர்க்கு
 மரணபயம் போக்கும் ஆற்றல் உடையவன் என்னும் வாய்மைக்குக் காலகாலன்' 'நீலகண்டன்'  என்ற 
திருநாமமே சான்றாம் என்பார். ‘காலனாருயிர் வீட்டிய மாமணி கண்டனார்' என்றார். அடியவர்க்குளதாகும் 
நலத்தை அளவிடலரிதென்பதை, 'சால நல்லடியார்' என்று விளக்கினார். தவத்தார்களும் என்றதால் 
அடியார்களும் என்க. சார்விடம்- புகலிடம் (சரணாகதி ஸ்தானம்). மைந்தனே- சிவபெருமானே. 
அடியார் - திருவடி அடைந்தவர். தவத்தார் அடி அடையத் தவஞ்செய்பவர். தவம்- சரியை, கிரியை, 
யோகம், அடி - ஞானம். மால் - திருமால். அயன் - பிரமன். 

    Behold! It is Civan the Lord of Thiru-mazha-paadi who drank the dreaded poison, 
but gave the nectar to the celestials. His neck is beautiful with the bluish poison. 
He gave death to the god of death. His holy feet are worshipped by staunch devotees 
and men of penance. Vishnu and Brahma also worshipped Him. He is our Lord of Thiru-mazha-paadi.

1567.     கலியின்வல்லமணுங்கருஞ்சாக்கியப்பேய்களும் 
    நலியுநாள்கெடுத்தாண்ட என் நாதனார் வாழ்பதி
    பலியும்பாட்டொடுபண்முழவும்பலவோசையும் 
    மலியுமாமழப்பாடியைவாழ்த்திவணங்குமே.        10

    கலியின் வல்அமணும், கருஞ்சாக்கியப்பேய்களும், 
    நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ்பதி
    பலியும் பாட்டொடு பண் முழவும், பலஓசையும், 
    மலியும் மழபாடியை வாழ்த்தி வணங்குமே.

    kaliyin val amaNum, karunjcAkkiyappEykaLum, 
    naliyum naL keTuttu ANTa en nAtanAr vaz pati- 
    paliyum pATToTu paN muzavum, palaOcaiyum, 
    maliyum-mA mazapATiyai vAztti vaNagkumE!

பொருள்:     மழபாடி அண்ணலே! நீவிர் வலிமை பொருந்திய சமணர்களும் சாக்கியர்களும் 
அடியவர்களுக்குக் கொடுமை புரிந்த காலத்தில் அருள்புரிந்து காத்தீர்! பண்ணும் பாட்டும் பொருந்திட 
உம் புகழை நாங்கள் பாடி எங்களையே அர்ப்பணிப்போம். அருள்புரிவீராக!

குறிப்புரை:     கலி - துன்பம். இங்குத் துன்பஞ் செய்தலைக் குறித்தது. அமண் - சமணர். நலியும் நாள் - 
தமிழ் நாட்டு மக்களை வருத்திய காலத்தில். கெடுத்து - அவ்வருத்தத்தைப் போக்கி, ஆண்ட - சைவத்தை 
நிலைநாட்டிப் பரவச் செய்து சிவநெறியிற் புகுத்திய, 'என்நாதனார்' என்றது இங்கு மிக்க பொருத்தமாகி 
இவர் திருவருளை முன்னிட்டுப் பரசமய நிராகரணம் புரிந்த உண்மையை விளக்குகின்றது. திருமழபாடியில் 
பலி, பாட்டு, பண், முழவு, பலவோசை எல்லாம் மலிந்திருந்தன என்பதால் அக்காலத்துச் சிவாலய பரிபாலன 
மகிமையை அறியலாம். வாழ்த்தி வணங்கும் என்றது முன்னிலைப் பன்மை ஏவல்வினை 
(பார்க்க. திரு. 2 ப 9. பா.2,4,6).

    Behold! It is Civan the Lord of Thiru-mazha-paadi who protected this world and the 
people when these Jains and Buddhists tortured His followers. He is our Supreme, chased the 
alien elements and established the saivite code. He is in the temple at Thiru mazha-paadi, 
which is a very holy place. Here the prayer song, musical rhythms, percussion sounds typical 
of saivism are all incessant. Let us pray to the Lord, praise Him and bow at His holy feet.

1568.     மலியுமாளிகைசூழ்மழபாடியுள்வள்ளலைக் 
    கலிசெய்மாமதில்சூழ்கடற்காழிக்கவுணியன்
    ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்
    ..................................................................உலகத்திலே            11

    மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக் 
    கலிசெய் மா மதில் சூழ் கடல் காழிக் கவுணியன், 
    ஒலிசெய் பாடல்கள் பத்துஇவை வல்லார் 
    .....................................................................உலகத்திலே

    maliyum mALikai cUz mazapATiyuL vaLLalaik 
    kalicey mA matil cUz kaTal kAzik kavuNiyan, 
    olicey pATalkaL pattu ivai vallAr.......
    ................................ulakattilE.

பொருள்:     மழபாடி அண்ணலே! நீவிர் மாடங்கள் நிறைந்த மழபாடியுள் கோயில் கொண்டுள்ளீர்.
 உம்மை மதில் சூழ்ந்த சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் பாடியுள்ளார். 
அவரது திருப்பாடல்களை நாங்கள் மகிழ்ந்து பாடுவோம். எங்களது வினைகள் திண்ணமாக நீங்கும் என்க.

குறிப்புரை:     மழபாடி, மாளிகைச் சிறப்புடையதென்று இரண்டாவது திருப்பாடலிலும் கூறினார். 
கலி- வலிமை. எழுச்சி. கவுணியன் - கௌண்டின்ய கோத்திரத்தான்.

    These verses were sung by Thiru-gnana-Sambandar who hails from Seerkaazhi a city with 
seashore and strong fortress. The Vaidyanaathar temple in Thiru-mazha paadi is surrounded 
by tall palaces. Thiru-gnana-Sambandar born in gothra sect sang on Vaidyanaathar of the palace. 
We will be rid of our sins when we sing these hymns with joy.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            9ஆம் பதிகம் முற்றிற்று
            End of 9th Hymn


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 146                பதிக எண்: 10

10. திருமங்கலக்குடி                10. THIRU-MANGALAK-KUDI
பண் : இந்தளம்                    Pann: Indhalam

திருத்தல வரலாறு

    திருமங்கலக்குடி என்னும் இத்திருத்தலம் மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப் 
பாதையில், ஆடுதுறைத் தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே சுமார் 4.5 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
ஆடுதுறையிலிருந்து - திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகளில் இவ்வூரை அடையலாம். காவிரி 
வடகரைத் தலங்களுள் ஒன்று. இறைவரது திருப்பெயர் புராணேசுவரர். இத்திருப்பெயர், இவ்வூர்ப் 
பதிகம் முதல் திருப்பாட்டில்,

    'நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப் 
    பூரித்தாட்டி யர்ச்சிக்க விருந்த புராணனே'

என ஞானசம்பந்தரால் எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலுள்ள வரலாறு குறிப்புரையில் உணர்த்தப் பட்டது. 
இறைவியாரது திருப்பெயர் மங்கள நாயகி. தீர்த்தம் காவிரி. காளி, சூரியன், திருமால்,பிரமன், 
அகத்தியர் இவர்களால் அர்ச்சிக்கப் பெற்றது. இச்செய்தி,

    'மங்க லக்குடி யீசனை மாகாளி
    வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணுநேர்
    சங்கு சக்கர தாரி சதுமுகன்
    அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே'

என்னும் இவ்வூர்க்கு உரிய அப்பர் பெருமானின் குறுந்தொகைப் பாடலால் தெரிகின்றது. இத்தலத்திற்கு 
ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் உள்ளன.

பதிக வரலாறு

    திருக்கஞ்சனூர், திருமாந்துறை இரண்டையும் வழிபட்டு மீண்டும் திருமங்கலக்குடியை அடைந்து 
பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1569.    சீரினார்மணியும்மகில்சந்துஞ்செறிவரை 
    வாரிநீர்வருபொன்னிவடமங்கலக்குடி 
    நீரின்மாமுனிவன்நெடுங்கைகொடுநீர்தனைப் 
    பூரித்தாட்டியர்ச்சிக்கவிருந்தபுராணனே.            1

    சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை 
    வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி 
    நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப் 
    பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.

    cIrin Ar maNiyum(m) akil cantum ceRi varai 
    vAri nIr varu ponni vaTamagkalakkuTi, 
    nIrin mA munivan neTugkaikoTu nIr tanaip 
    pUrittu ATTi arccikka irunta purANanE.

பொருள்:     வடமங்கலக்குடி எம்பெருமானே! ஒளி மிக்க மணி, அகில், சந்தனம் ஆகியவற்றை மலையிலிருந்து 
உருட்டிக் கொண்டு வரும் காவிரியாற்றின் கரையில் உள்ள பதியே திருமங்கலக்குடியாகும். அவ்வூரில் முன்னொரு 
காலத்தில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அக்காவிரி நீற்றைக் கங்கை பொருந்திய உமது தலையில் ஊற்றிப் பூசித்துச் 
சிறந்தார் என்பர். எந்த நீரையும் ஏற்றருளும் பெருமானே நீரே எம் தலைவர் ஆவீர்!

குறிப்புரை:     சீர் - கனம், புகழ், மணியும் அகிலும் சந்தனமும் மிக்குள்ள மலை. சந்து - சந்தனம் . வரை-மலை. 
வாரி - வெள்ளம். பொன்னி - காவிரி. பொன்னி வடமங்கலக்குடி - ஆற்றின் வடகரையிலுள்ள தலம். இத்தலத்தில் 
வாழ்ந்த முனிவர் ஒருவர் சிவபூசைக்குரிய திருமஞ்சனநீரை அமர்ந்த வண்ணமே திருக்கைகளை நீட்டி, 
ஆற்று நீரை முகந்து அபிடேகம் புரிந்தார் என்பது வரலாறு. அவ்வுண்மையை முதற்றிருப் பாட்டில் 
உணர்த்தியருளியதால் ஆசிரியர் திருவுள்ளக் கிடக்கையில் அது முந்தி  நின்றவாறறியலாம். ஆற்றினளவும் 
நீண்டதால் 'நெடுங்கை' என்றார். பூரித்து - நிறைத்து. ஆட்டி- அபிடேகித்து. அர்ச்சிக்க- அருச்சனைபுரிய. 
புராணன்- முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் 
அப்பெற்றியன் என்னும் இருபொருளும் தருமாறு பிரிக்கப்படும் வடசொல். 

    It is Civan, the Lord of Vada-mangalak-kudi who is on the northern bank of the river Cauvery. 
This is a holy place where the river Ponni (Cauvery) brings in abundance bright rich gems, eaglewood 
and sandalwood from rich mountains. Civan, the Lord of this temple is called Purana-varatheswarar. 
In olden days a great sage brought the Cauvery water in his palm by stretching his hand to the river 
and gave the sacred bath daily to the Lord of this place. Our Lord was very pleased by the bath given 
by the old sage and blessed him.

1570.     பணங்கொளாடரவல்குல்நல்லார்பயின்றேத்தவே 
    மணங்கொள்மாமயிலாலும்பொழில்மங்கலக்குடி 
    இணங்கிலாமறையோரிமையோர்தொழுதேத்திட 
    அணங்கினோடிருந்தானடியேசரணாகுமே.        2

    பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே, 
    மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி, 
    இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட, 
    அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே.

    paNam koL ATu aravu alkul nallAr payinRu EttavE, 
    maNam koL mA mayil Alum pozil magkalakkuTi, 
    iNagku ilA maRaiyOr imaiyOr tozutu EttiTa, 
    aNagkinOTu iruntAn aTiyE caraN AkumE.

பொருள்:     வடமங்கலக்குடி எம்பெருமானே! அழகுமிக்க பெண்கள் நாள்தோறும் திருக்கோவில் 
வந்து உம்மை வழிபடுகிறார்கள். திருக்கோயிலைச் சுற்றி மயில்கள் ஆடும் மங்கலக்குடியில் கோயில் 
கொண்டுள்ளீர். திருமாலும் பிரமனும் தேடியும் காண முடியாத உம்மை இந்த நகரில் வாழும் மறையோதும் 
அந்தணர்களும் தேவர்களும் நெருங்கி நாளும் வணங்குகின்றனர். உமாதேவியுடன் பொருந்தி விளங்கும் 
உம்மை நாங்களும் வணங்கி உமது அடியைச் சரணடைவோமாக.

குறிப்புரை:     பணம் - அரவின் படம். நல்லார் - பெண்டிர். மணம் கொள் பொழில் - வாசனை கொண்ட 
சோலை. ஆலும் - ஆடும். இணங்கிலா மறையோர் என்பதிலும், இணங்கிலாமை மறைகட்குரிய அடைமொழியே 
ஆகும். மறைகள் மெய்ப்பொருளை அறிந்து இணங்காதன. ஆரணம் அறியா அரும்பெருங்கடவுள் பரமசிவன் 
என்பதும் அவன் 'இணங்கிலி' (திருவாசகம் 389) என்பதும் பிரசித்தம். இமையோர் - இமைகொட்டாத வானோர். 
 விழித்தகண் குருடாய்த் திரிவீரராகிய யோகியருமாம். அணங்கு - உமையம்மையார். சரண் - கதி, புகல்.

     Civan the Lord of Vada-mangalak-kudi known as Piranavaratheswarar is in the temple 
along with His consort Umaa Devi. To this holy place of groves with dancing peacock, 
beautiful damsels came daily and worship Him for the betterment of their life. The Lord 
could not be searched and seen by Thirumaal and Brahma. However,the Vedic scholars of this 
place as well the celestials could see Him and worship Him here. Ye devotees bow at His 
holy feet.

1571.    கருங்கையானையினீருரிபோர்த்திடுகள்வனார் 
    மருங்கெலாமணமார்பொழில்சூழ்மங்கலக்குடி 
    அரும்புசேர்மலர்க்கொன்றையினானடியன்பொடு 
    விரும்பியேத்தவல்லார்வினையாயினவீடுமே.        3

    கருங்கையானையின் ஈர்உரி போர்த்திடு கள்வனார், 
    மருங்குஎலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி, 
    அரும்பு சேர் மலர்க்கொன்றையினான் அடி அன்பொடு 
    விரும்பி ஏத்த வல்லார் வினைஆயின வீடுமே.

    karugkaiyAnaiyin Ir uri pOrttiTu kaLvanAr, 
    marugku elAm maNam Ar pozil cUz magkalakkuTi, 
    arumpu cEr malarkkonRaiyinAn aTi anpoTu 
    virumpi Etta vallAr vinai Ayina vITumE.

பொருள்:     மங்கலக்குடி எம்பெருமானே! நீவிர் கரிய யானையின் தோலை உரித்துப்         
போர்த்திக் கொண்டு எம் உள்ளம் கவரும் கள்வராவீர்! மணம் மிக்க பொழில்கள் நிறைந்த
 மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர்! கொன்றை மலரை விரும்பிச் சூடும் உமது திருவடிகளை
 நாங்கள் விரும்பிப் போற்றுவோம். எங்கள் வினைகள் நீங்கப் பெறுவோம்

குறிப்புரை:     கருங்கை- பெரிய துதிக்கை. கருமையை யானைக்குச் சேர்த்து நிறத்தைக் கொள்ளலும் ஆம். 
ஈர்உரி - ஈர்ந்த தோல். வினைத்தொகை. இத்தொடரின் உண்மைக் கருத்து ஆணவ மலத்துட்படும் உயிரின் 
உள்ளொளி வடிவுடையன் மெய்ப்பொருள் என்பதாம். 'ஒளிக்கும் இருட்கும் ஒன்றே இடம்' எனத் தொடங்கும் 
கொடிப் பாட்டின் உட்கிடக்கையை இங்கு உணர்க. மருங்கு- பக்கம். அன்பு -பக்தி, விருப்பம்-ஆர்வம். வீடும் - அழியும். 

    It is Civan the Lord of Vada-mangalak-kudi who once upon a time killed a male elephant 
with large trunk and covered His body with its thick skin. He has captivated our hearts. He 
crowns His head with cassia flowers and beads. His temple is surrounded by fragrant flower gardens. 
Those devotees who worship Him with deep desires will be freed of all evils.

1572.     பறையினோடொலிபாடலுமாடலும்பாரிடம் 
    மறையினோடியல்மல்கிடுவார்மங்கலக்குடிக் 
    குறைவிலாநிறைவேகுணமில்குணமேயென்று 
    முறையினால் வணங்கும்மவர்முன்னெறிகாண்பரே.        4

    ''பறையினோடு ஒலிபாடலும் ஆடலும் பாரிடம், 
    மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடிக் 
    குறைவு இலா நிறைவே! குணம் இல் குணமே!" என்று 
    முறையினால் வணங்கு(ம்) அவர் முன்நெறி காண்பரே.

    "paRaiyinOTu olipATalum ATalum pAriTam, 
    maRaiyinOTu iyal malkiTuvAr magkalakkuTik 
    kuRaivu ilA niRaivE! kuNam il kuNamE!" enRu 
    muRaiyinAl vaNagku(m)mavar munneRi kANparE.

பொருள்:     மங்கலக்குடியில் அருள்புரியும் எம்பெருமானே! நீர், இன்னிசை வாத்தியங்கள் முழங்க, 
பூதகணங்கள் பாடியாட, அந்தணர்கள் வேதங்களை ஓத மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர்! உம்மை 
குறைவில்லா நிறைவு என்றும் குணமில் குணம் என்றும் உணர்ந்து வணங்கும் அடியார்கள் உயர் நெறியை 
உணர்ந்து அதனை அடைவார்கள் என்க.

குறிப்புரை:     பறை - வாத்தியம். பாரிடம் - பூதகணம். மறையினோடு இயல் மல்கிடுவார் - வேதஞானமும் 
வேதவொழுக்கமும் மிக்கவர் அந்தணர். குறைவிலா நிறைவே என்றது பரிபூரணன் பரசிவனன்றி வேறில்லாமை 
உணர்த்திற்று. ஏனைய நிறைவெல்லாம் அதனிற் பெரிய பிறிதொரு நிறைவை நோக்கின் குறைவுடையதாகும். 
ஏரி நீர் நிறைவை நோக்கி வாவி நீர் நிறைவு குறைவுடையதாதல் போல; பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற 
நிறைகின்ற பரிபூரணானந்தம் ஒன்றே குறைவிலா நிறைவு என்க. 'குறைவிலா நிறைவே கோதிலா அமுதே' 
'குறைவிலா நிறைவே குணக்குன்றே' என்ற ஆசிரிய வசனங்களும் அறிக. குணம் இல் குணம் - எண் குணத்தவன். 
முறை- சிவாகம விதிமுறை. முன்னெறி- சமயநெறி எல்லாவற்றிற்கும் முதன்மையுடைய சிவநெறி.                      
நெறி என்பது  அந்நெறியொழுகிப் பெறும் பேரின்பப் பயனை உணர்த்தும் ஆகுபெயர்.

    It is Civan who is the Lord of Vada-mangalak-kudi. This city is a holy place where the 
Lord is glorified with percussion music, devotional songs, and graceful dances by good looking 
damsels. Vedic scholars gather, chanting Vedas in many places. There if the devotees pray in the
relevant way saying "Oh! Lord! You are perfection devoid of imperfections! Oh Lord! Your attributes 
are par supreme devoid of attributes", they will reach the pinnacle of glory, and joy, following 
the perfect saivite code (of conduct). 

1573.    ஆனிலங்கிளரைந்துமவிர்முடியாடியோர் 
    மானிலங்கையினான்மணமார்மங்கலக்குடி 
    ஊனில்வெண்டலைக்கையுடையானுயர்பாதமே 
    ஞானமாகநின்றேத்தவல்லார்வினைநாசமே.        5

    ஆனில்அம்கிளர்ஐந்தும் அவிர் முடி ஆடி,ஓர் 
    மான் நில் அம் கையினான், மணம் ஆர் மங்கலக்குடி, 
    ஊன்இல் வெண்தலைக் கை உடையான் உயர் பாதமே 
    ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே.

    Anil amkiLar aintum avir muTi ATi, Or 
    mAn nil am kaiyinAn, maNam Ar magkalakkuTi, 
    Un il veNtalaik kai uTaiyAn uyar pAtamE 
    njAnam Aka ninRu Etta vallAr vinai nAcamE.

பொருள்:     மங்கலக்குடியில் அருள்புரியும் எம்பெருமானே! நீவிர் பசுவின்பால், தயிர், நெய்,
கோமயம், கோசலம் என்னும் பஞ்சகவ்வியத்தை ஏற்றருள்வீர்! கையில் மானை அடக்கி நிற்பதுபோல 
அடியவர்களின் அலையும் மனத்தை அடக்கி நிற்பீர்! கையில் கபாலத்தை ஏந்தி நிற்பீர். உமது 
திருவடிகளை ஞானத்தால் உணர்ந்து ஏத்துபவர்களின் வினைகள் நிச்சயம் நாசமடையும்!

குறிப்புரை:     ஆனில் அம் கிளர் ஐந்தும் - கோ (பசு) வினிடத்து உண்டாகிய பால், தயிர், நெய், 
கோமயம், கோமூத்திரம் என்னும் ஐந்தும்; ஆயினும் முதன் மூன்றே சைவாசாரியர் கொண்டாடியன. 
'ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்' மான் நில்அம்கை - மான் நிற்கும் அழகிய கை. மான் இலம் கை 
என்பதில்  நடுமொழி யீறு குறைந்ததெனினும் பொருந்தும். மானுக்கு இல்லமாகிய கையுமாம். 
ஊன் இல் வெள்தலை - தசையற்ற வெள்ளைத்தலை, பிரம்ம கபாலம். உயர்பாதம் - திருவடி. 
இதில் திருவடிஞானம் ஒன்றே வீடு பேறளிக்கும் உண்மை  உணர்த்தினார். முன்னர் 'வெண்ணெய்ப் 
பெருமானடி ஞானமாக நினைவார் வினையாயின நையுமே ' என்றதும் அறிக. 'அவனடி அவ்வொளி 
ஞானம்'  ' அடிஞானம் ஆன்மாவிற்றோன்றும்' , ' இறைவனடி ஞானமே ஞானம் என்பர்' 'ஆசான் அருளால் 
அடிசேர் ஞானம் வந்திடும் மற்றொன்றாலும் வாராதாகும்' (சித்தியார்). 

    It is Civan, the Lord of Vada-mangalak-kudi known as Pirana-varatheswarar. 
The temple in which He abides is surrounded by sweet flower gardens. He is pleased 
with a sacred  bath in the fine sacred elements of cow such as milk, curd, cow dung 
and cow's urine. He clasps in one of His hands the young deer.  In His other hand 
He holds the fleshless white human skull. Ye devotees! go to the temple and worship 
our Lord who is the embodiment of wisdom. The effects of your evil will be wiped out 
when you glorify His feet with perfect realisation of His greatness.

1574.     தேனுமாயமுதாகிநின்றான்தெளிசிந்தையுள் 
    வானுமாய்மதிசூடவல்லான்மங்கலக்குடி 
    கோனைநாள்தொறுமேத்திக்குணங்கொடுகூறுவார் 
    ஊனமானவைபோயறுமுய்யும்வகையதே.        6

    தேனும்ஆய் அமுதுஆகி நின்றான், தெளிசிந்தையுள்; 
    வானும்ஆய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக் 
    கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார் 
    ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும்வகை, அதே. 

    tEnum Ay amutu Aki ninRAn, teLi cintaiyuL; 
    vAnum Ay mati cUTa vallAn; magkalakkuTik 
    kOnai nALtoRum Ettik kuNamkoTu kURuvAr 
    Unam Anavai pOy aRum; uyyum vakai, atE.

பொருள்:     மங்கலக்குடி இறையவனே! நீவிர் தெளிந்த உள்ளம் கொண்ட அடியவர்களுக்குத் 
தேனாகவும் அமுதாகவும் விளங்குகின்றீர்! மதிசூட வல்ல நீவிர் வான் வெளியாகவும் விளங்குகின்றீர்! 
மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ள உம்மை அடியவர்களாகிய நாங்கள் நாளும் ஏத்தி உமது 
குணங்களை மனத்திற்கொண்டு வணங்குவோம். எங்களுக்கு உய்யும் திறம் அதுவே. எங்களது 
குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி அருளுவீர்!

குறிப்புரை:     தேனுமானான். அமுதும் ஆனான். தெளிந்த சிந்தை என இறந்த காலப் பெயரெச்சமாக
விரிக்க. தெளியாத சிந்தையுள் ஞானாகாசம் எய்தாது. வான்- ஞானவெளி. மதி - பிறை. கோன்- முதல்வன். 
கூறுவார் - தோத்திரஞ் செய்வார். ஊனமானவை - பிறவிக் கேதுவான மும்மல காரியங்கள்.  உய்யும்வகை - 
பாசம் நீங்கிச் சிவம் பிரகாசிக்கும் திறம். இஃது ஆன்மாக்கள் உய்யுமாறு அருளிச் செய்தது. இந்த உய்வினை 
நாடாதிருப்பது... ஊனம்.

    It is Civan, the Lord of Vada-mangalak-kudi. To your devotees of perfect realisation 
you are like honey and ambrosia. The moon mounts on your head and hence You appear also as the 
space. Those devotees who worship this Lord of Vada mangalak-kudi every day, praising His 
divine virtues, will certainly be cured of their defects in body and mind and the three excesses 
in human nature. This is the only for salvation.

1575.     வேள்படுத்திடுகண்ணினன்மேருவில்லாகவே 
    வாளரக்கர்புரமெரித்தான்மங்கலக்குடி 
    ஆளுமாதிப்பிரானடிகள்ளடைந்தேத்தவே 
    கோளுநாளவைபோயறுங்குற்றமில்லார்களே.        7

    வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில்ஆகவே 
    வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி 
    ஆளும் ஆதிப்பிரான், அடிகள்(ள்) அடைந்து ஏத்தவே, 
    கோளும் நாள்அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே.

    vEL paTuttiTu kaNNinan, mEru vil AkavE 
    vAL arakkar puram erittAn, magkalakkuTi 
    ALum AtippirAn, aTikaL(L) aTaintu EttavE, 
    kOLum nAL avai pOy aRum; kuRRam illArkaLE.

பொருள்:     மங்கலக்குடி எம்பெருமானே! நீர் மன்மதனை நெற்றிக்கண்ணால் 
சாம்பலாக்கினீர் !  கொடிய அரக்கர்களுக்கு உரித்தாய முப்புரங்களையும் சிரித்தே அழித்தீர்! 
மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர்! உமது திருவடிகளை ஏத்தி வணங்கிட எங்களுக்கு 
கிரகங்களாலும் விண்மீன்களாலும் உண்டாகும் தீமைகள் நிச்சயம் நீங்கப் பெறும். நாங்கள்  
குற்றம் இல்லாதவர்களாய் விளங்கிடுவோமாக! 

குறிப்புரை:     வேள் - கருவேள், மன்மதன், படுத்திடுகண்-  அழித்த நெற்றித் தீவிழி. கண்ணினன் - 
கண்ணுடையவன். வாள்-கொடுமை, வாட்படையுமாம். அரக்கர் - பிறர் தீமை செய்யாதிருப்பவும் 
தீங்கிழைப்பவர். (அசுரர் - தீங்கிழைத்தவர்க்கு அது செய்பவர்). ஆளும் - ஆட்கொள்ளும் ஆதிப்பிரான் - 
முதற்கடவுள். அடிகள்- பாசநீக்கமும் சிவப்பேறுமாகிய இரண்டு திருவடிகள். 'யான்' 'எனது' என்னும் 
இருசெருக்கும் அறுதலாகிய இரண்டெனலும் சாத்திர சம்மதம், 'பரை உயிரில் யான் எனதென்றற 
நின்றதடியாம்' (உண்மை நெறி விளக்கம்) 'யான் எனதென்றற்ற இடமே திருவடி' (ஏத்த -வழிபட. துதிக்க. 
எடுத்தல் என்பதன் மரூஉ. ஏத்தல்- இறைவன் புகழை எடுத்தோதுதல். எடுத்தலோசையே தோத்திரங்கட்கு 
உரியது. கோள் - கிரகங்கள். நாள் - மீன்கள். குற்றம் - ஆணவம் முதலிய முக்குற்றம்.

    It is Civan, the Lord of Vada-mangalak-kudi who burnt cupid with His eyes. He also 
burnt the three flying fortresses of the wicked demons using mount Meru as His bow. It is 
He the Lord of Vada-mangalak-kudi, the ancient one. Those devotees who reach and bow at His 
holy feet will not be affected by the evil effects of planets and stars. These devotees 
will be blemishless.

1576.     பொலியுமால்வரைபுக்கெடுத்தான்புகழ்ந்தேத்திட 
    வலியும்வாளொடுநாள்கொடுத்தான்மங்கலக்குடிப் 
    புலியினாடையினானடியேத்திடும்புண்ணியர் 
    மலியும்வானுலகம்புகவல்லவர்காண்மினே.        8

    பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட 
    வலியும் வாளொடு நாள் கொடுத்தான்; மங்கலக்குடிப் 
    புலியின் ஆடையினான்; அடி ஏத்திடும் புண்ணியர் 
    மலியும் வான்உலகம் புக வல்லவர்; காண்மினே!

    poliyum mAlvarai pukku eTuttAn pukazntu EttiTa, 
    valiyum vALoTu nAL koTuttAn; magkalakkuTip 
    puliyin ATaiyinAn; aTi EttiTum puNNiyar 
    maliyum vAn ulakam puka vallavar; kANminE!

பொருள்:     மங்கலக்குடி எம்பெருமானே! உமது கயிலாய மலையினைப் பெயர்த்து எடுக்க 
முயன்றான் இராவணன். முதலில் துன்புற்றுப் பிறகு தெளிந்து உம்மைப் புகழ்ந்து பாடினான். 
அதனால் வலிமைமிக்க வாளையும் நீண்ட வாழ்நாளையும் பெற்றான். புலித்தோல் ஆடை 
அணிந்த உமது திருவடிகளை வணங்கிடும் புண்ணியர்கள் உயர்ந்த முத்திப் பேற்றை எளிதாகப் 
பெறுவர் அன்றோ!

குறிப்புரை:     பொலியும் - விளங்கும். வரை- கயிலைமலை.  வலி-பலம், வாளும் நாளும்- வாட்படையும் 
ஆயுளும் அருளிய இவ்உண்மை பயின்று வருதல் காணலாம். புலியினாடையினான்-  புலித்தோலுடை தரித்தவன். 
புண்ணியர் - சிவபுண்ணியத்தவர். மலியும் - இன்பம் மிகும். வானுலகம்- வீட்டுலகு. வல்லவர்-   வன்மையுடையவர். 
காண்மின் என்றது ஆசிரியர் திருமுன் அந்நாளில் இருந்தவரை நோக்கி.

    Civan, the Lord of Vada-mangalak-kudi wears tiger's skin as His dress.  The Lord of 
Vada-mangalak-kudi once blessed the king of Sri Lanka - Dasakreevan and offered a mighty sword. 
He was forgiven despite his misguided attempt to lift mount Kailash. Those devotees who worship 
the Lord's holy feet are themselves holy and they will very easily enter the celestial world.

1577.     ஞாலமுன்படைத்தான்நளிர்மாமலர்மேலயன்                 
    மாலுங்காணவொணாவெரியான்மங்கலக்குடி 
    ஏலவார்குழலாளொருபாகமிடங்கொடு
    கோலமாகிநின்றான் குணங்கூறுங்குணமதே.        9

    ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன்,                 
    மாலும் காண ஒணா எரியான்: மங்கலக்குடி 
    ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு 
    கோலம்ஆகி நின்றான்; குணம் கூறும் குணம் அதே.

    njAlam mun paTaittAn naLir mAmalarmEl ayan,                
    mAlum, kANa oNA eriyAn; magkalakkuTi 
    Ela vArkuzalAL oru pAkam iTamkoTu 
    kOlam Aki ninRAn; kuNam kURum! kuNam atE.

பொருள்:     மங்கலக்குடி பெருமானே! நீர் தாமரை மலர்மேல் இருந்து உலகைப் படைக்கும்
பிரமனாலும் திருமாலாலும் காண முடியாத ஒளி உருவினர் ஆவீர்! மங்கலக்குடியில் மணமிக்க கூந்தலைக் 
கொண்ட உமாதேவியோடு பொருந்தி அழகுற நிற்கும் உம்மைப் போற்றிப் புகழ வல்லவர்கள் 
நற்பண்புமிக்க சிறப்புறுவர் என்க.

குறிப்புரை:     ஞாலம் - பூமி. நளிர் - குளிர்ச்சி. படைத்தானாகிய அயன் (பிரமன்) மாமலர் -  தாமரை,
எரியான் - தீப்பிழம்பானவன். ஏலம்- மயிர்ச்சாந்து. 'ஏலவார் குழலாள்' என்பது அம்பிகையின்
திருநாமங்களுள் ஒன்று. இது திருமுறையுட் பயின்றது. கோலம் - அழகு. குணத்தைக் கூறுங்கள். 
அதுவே குணமாகும். மற்றவை குணமாகா.

    Brahma who resides in cool lotus flower is the creator of the world. He and Vishnu 
explored the unvierse to find the holy head and feet of our Lord but failed. Then our Lord 
had stood as an endless column of bright light. Lord Civa sharing His body with His consort 
Umaa of fragrant hair stands in a graceful posture at Vada-mangalak kudi. Ye devotees
whenever you go to this temple to worship Him speak of His divine virtues and this is the 
only way to get salvation.

1578.     மெய்யின்மாசினர்மேனிவிரிதுவராடையர் 
    பொய்யைவிட்டிடும்புண்ணியர்சேர்மங்கலக்குடிச் 
    செய்யமேனிச்செழும்புனற்கங்கைசெறிசடை 
    ஐயன்சேவடியேத்தவல்லார்க்கழகாகுமே.        10

    மெய்யில் மாசினர், மேனி விரி துவர் ஆடையர்,
    பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச் 
    செய்யமேனிச் செழும் புனல்கங்கை செறி சடை 
    ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

    meyyil mAcinar, mEni viri tuvar ATaiyar, 
    poyyai viTTiTum puNNiyar cEr magkalakkuTic 
    ceyyamEnic cezum punalkagkai ceRi caTai 
    aiyan cEvaTi Etta vallArkku azaku AkumE.

பொருள்:     மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானே! மெய்மாசு கொண்டும் 
துவராடை உடுத்தியும் விளங்கும் சமணரும் சாக்கியரும் உம்மைப் பற்றி உணராமல் பொய் வார்த்தை 
கூறித் திரிவர். ஆனால் மெய்யன்பர்கள் (சிவனடியார்கள்) அதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். 
சிவந்த மேனியையும், தலையில் கங்கையாற்றையும், சடாமுடிகளையும் கொண்ட உம்மையே ஏத்தி 
வழிபாடு செய்வார்கள். அதுவே அடியவர்க்குரிய அழகாகும்.

குறிப்புரை:     மெய்யின் மாசு - உடலழுக்கு. சமணர் சாக்கியர் ஆகிய பரசமயத்தவர் பொய்யுரைகளை 
விட்டுச் சைவ உண்மையை உணர்ந்தொழுகுவோர் புண்ணியர். அத்தகையவர் சேர்ந்துறையும் புகழ்         
மங்கலக்குடிக்குள்ளது. செய்ய மேனி- சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான். 
புனல்- வெள்ளம். ஐயன் - பரத்துவக் கடவுள். சேவடி - சிவந்த திருவடி. சிவஞானப் பிரகாசம். 
அழகு - பேரின்ப வாழ்வு.

    The city of Vada-mangalak-kudi where our Lord Pirana-varatheswarar resides is a very 
blessed place. Since the holy men of Lord Civa assemble here and shower their adulations 
on Him. They never listen to the false preaching of the impure bodied Jains and the ochre 
robed Buddhists. They adore only our Lord of Vada-mangalak-kudi whose fair body is golden 
coloured. He has adorned His matted hair with the gushing waters of the Ganges. Praising 
and praying to this Lord is a beautiful action and His devotees do nothing but that.

1579.     மந்தமாம்பொழில்சூழ்மங்கலக்குடிமன்னிய 
    எந்தையையெழிலார்பொழிற்காழியர்காவலன் 
    சிந்தைசெய்தடிசேர்த்திடுஞானசம்பந்தன்சொல் 
    முந்தியேத்தவல்லாரிமையோர்முதலாவரே.             11

    மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய 
    எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்காவலன் 
    சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன்-சொல் 
    முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே.

    manta mAmpozil cUz magkalakkuTi manniya 
    entaiyai, ezil Ar pozil kAziyarkAvalan- 
    cintai ceytu aTi cErttiTu njAnacampantan-col 
    munti Etta vallAr, imaiyOrmutal AvarE.

பொருள்:     மங்கலக்குடி பெருமானே! எழில் மிக்க சோலைகளால் நிறைந்த சீர்காழிப் பதியில்
 அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் எப்பொழுதும் சிந்தை செய்வது மங்கலக்குடியில் கோயில் 
கொண்டுள்ள உம்மைத்தான். அவர் உம்மைப் புகழ்ந்து பாடிய பாடல்களை அடியார்களாகிய 
நாங்களும் பாடிப் பரவுவோம். தேவர் முதல்வர் ஆவோமாக!

குறிப்புரை:     மந்தம் - தென்றல் (வீசுதல்). மன்னிய- நிலைபெற்ற. எழில்- அழகு. இத்திருப்பதிகம் 
திருவடியிற் சேர்க்க வல்லது. சிந்தை செய்தல் சேர்த்திடற்கும் ஏத்தற்கும் பொருந்துதலறிக. 
இமையோர் முதல்- தேவர் கோமகன்.

    Seerkaazhi is a very ancient city and holy place, surrounded by beautiful gardens. 
Here was born Thiru-gnana-Sambandar who always thinks of the divine ruler of Seerkaazhi who 
is also the Lord at Vada-mangalak-kudi. This city also is surrounded by gardens of beautiful 
flowers and a fine breeze. Thiru-gnana-Sambandar prayed to Lord of Vada-mangalak-kudi, 
composing these verses on Him. Those devotees who come forward to recite these verses of 
Thiru-gnana-Sambandar with emotional involvement will be the leaders of the celestials.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            10ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 10th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 147                     பதிக எண்:11

11. சீகாழி                         11. SEERKAAZHI
பண் : இந்தளம் -வினாஉரை                pann: Indhalamn - Vinaa Urai

திருத்தல வரலாறு

பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

                திருச்சிற்றம்பலம்

1580.     நல்லானைநான்மறையோடியலாறங்கம் 
    வல்லானைவல்லவர்பால்மலிந்தோங்கிய 
    சொல்லானைத்தொன்மதிற்காழியேகோயிலாம் 
    இல்லானையேத்தநின்றார்க்குளதின்பமே.         1

    நல்லானை, நான்மறையோடு இயல் ஆறு அங்கம் 
    வல்லானை வல்லவர்பால் மலிந்து ஓங்கிய
    சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம் 
    இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.

    nallAnai, nAlmaRaiyOTu iyal ARuagkam 
    vallAnai, vallavarpAl malintu Ogkiya 
    collAnai, tol matil kAziye kOyil Am 
    illAnai, Etta ninRArkku uLatu, inpamE.

பொருள்:     சீகாழிச் சிவனை நல்லான் என்றும், நான்மறை ஆறங்கம் வல்லான் என்றும்
 அடியவர்களின் உள்ளத்தில் பொருந்திய சொல்லான் என்றும் மதில் சூழ்ந்த சீர்காழியில் கோயில் 
கொண்டுள்ளான் என்றும் ஏத்தி நின்று வழிபடுவோர்க்கு எக்காலத்தும் இன்பமேயாம்!

குறிப்புரை:     நல்லான் - மங்களவடிவினன், சிவன். நான்மறை - சைவத்திற்கு உரியனவாயிருந்த 
பழைய நான்கு மறைகள். 'தத்துவாதீதமெனச் சாற்றுங்காண் சைவமறை அத்துவா எல்லாம் அற' 
(துகளறுபோதம்- 20). ஆறு அங்கம் -சிக்ஷை. வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கற்பம் என்பன.
இவை சைவமறைக்கும் உரியன. 'மறைகள் - வேதம்' (தி. 2 ப. 12 பா 7). வல்லான் -வன்மையுடைய சிவபிரான். 
வல்லவர்- வன்மையுடைய அந்தணர்.  பால் - ஏழனுருபு. மலிந்து- நிறைந்து. சொல்லான்-துதிவடிவானவன். 
கோயிலாம் இல்லான் - கோயில் என்னும் பெயரினதாய வீட்டினன். நின்றார்- நிலைத்தவர். இன்பம் உளது. 
உளது - அழியாது என்றும் இருப்பது.

    Behold! It is Civan the Lord of Seerkaazhi who is the embodiment of good conduct 
in the world. He exhibited to the world all the four Vedas along with the rules and the 
six angaas, needed for comprehending such sciences, considered as dependant on the four Vedas. 
He also manifested Himself as words of the learned ones who enrich Seerkaazhi of ancient 
ramparts by dwelling in that divine abode. Those devotees who pray at the feet of our Lord 
are sure to experience the joy of liberation.

1581.     நம்மானமாற்றிநமக்கருளாய்நின்ற 
    பெம்மானைப்பேயுடனாடல்புரிந்தானை
    அம்மானையந்தணர்சேருமணிகாழி
    எம்மானையேத்தவல்லார்க்கிடரில்லையே.        2

    நம் மானம் மாற்றி நமக்கு அருள் ஆய் நின்ற 
    பெம்மானை, பேய்உடன் ஆடல் புரிந்தானை, 
    அம்மானை, அந்தணர் சேரும் அணி காழி 
    எம்மானை, ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே.

    nam mAnam mARRi namakku aruL Ay ninRa 
    pemmAnai, pEy uTan ATal purintAnai, 
    ammAnai, antaNar cErum aNi kazi 
    emmAnai, Etta vallArkku iTar illaiyE.                

பொருள்:     சீகாழிச் சிவனை, பிறவின் வழி எம்மோடு பொருந்திய ஆணவம், கன்மம், மாயை 
ஆகியவற்றை நீக்கி எமக்கருளும் பெருமானை, பேயுடன் காட்டில் ஆடல் புரிபவனை, வேதம் ஓதும் 
அந்தணர்கள் வாழும் சீர்காழியில் கோயில் கொண்டுள்ள எம்மானை, உணர்ந்து ஏத்த வல்லார்க்கு 
இடர் இல்லையாம் என்க.

குறிப்புரை:     நம் மானம் - நம் குற்றங்களாகிய ஆணவம், மாயை, கன்மம் (மூன்றும்). மாற்றி -தீர்த்து. 
மாறச்செய்து, வீடுற்ற உயிர்களின் நீங்கி ஏனையுயிர்களையுற்று. அருளாய் - சிவஞானமாகி, 'மருமகன்' 
மருமான் என்றானதுபோலப் 'பெருமகன்' பெருமான் என மருவிற்று. பேயோடு கூத்தாடிய வரலாறு.
புரிதல் - செய்தல். அருமகன் என்பது அம்மான் என்று மருவி அருமைக் கடவுள் என்றதாம். எம்மான்-
எம் கடவுள். மகன், மைந்தன் என்பவை வீரன், ஆடவன், கடவுள் என்னும் பொருளில் ஆளப்பட்டன.
இடர் - கேவலாவத்தையும் சகலாவத்தையும் அவற்றுட்பட்ட துயரும். 

    Behold! It is He the Lord of Seerkaazhi who cleanses us of our three evils or
passions of the soul, such as aanavam, kanmam and maayaa. He is a great one who bestows 
His grace to His devotees. He performs the cosmic dance with devils on the burial ground. 
He is the rarest god of the rare and the Lord of Seerkaazhi which is also the abode for 
Brahmins. Those who pray feelingfully at His feet will have no obstacles.

1582.     அருந்தானையன்புசெய்தேத்தகில்லார்பாற் 
    பொருந்தானைப்பொய்யடிமைத்தொழில்செய்வாருள் 
    விருந்தானைவேதியரோதிமிடைகாழி 
    இருந்தானையேத்துமின்நும்வினையேகவே.        3

    அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார் பால்; 
    பொருந்தானை,பொய் அடிமைத் தொழில் செய்வாருள்; 
    விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி 
    இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!

    aruntAnai, anpu ceytu EttakillArpAl; 
    poruntAnai, poy aTimait tozil ceyvAruL; 
    viruntAnai; vEtiyar Oti miTai kazi 
    iruntAnai; Ettumin, num vinai EkavE!

பொருள்:     சீகாழிச் சிவன் தனக்கென்று உண்ணும் பொருள் ஏதும் இல்லாதவனாய், தன்மீது 
அன்பு கொண்டு வழிபடாதவரிடத்துப் பொருந்தாமலும், பொய்யடிமைத் தொழில் புரிவருக்குப்
 புரியாதவனாய் விளங்குவார். வேதம் ஓதும் அந்தணர்கள் நிறைந்த சீர்காழியில் கோயில் கொண்டுள்ளார். 
அவரை மெய்யாய் வணங்குபவர்களின் வினைகள் நிச்சயம் நீங்கும் என்க.

குறிப்புரை:     அருந்தானை- உண்ணலாகாதென்ற நோன்பியை. 'தன் உடம்பின் ஊன்கெடினும்
 உண்ணார் கைத்து உண்ணற்க' (நாலடி 80). அன்பு - பக்தி. ஏத்தகில்லார் - ஏத்தமாட்டாதவர். அன்பு செய்து 
ஏத்தமாட்டாதவரிடத்தில் யாதும் அருந்தாத (உண்ணாத)வனை. பொய்யடிமைத் தொழில் செய்பவருள் 
பொருந்தாதவனை. விருந்தானை - புதியனை. வேதியர் - மறையோர். ஓதி - வேதம் ஓதி.
 நும் வினைபோக ஏத்துமின்.

    Behold! It is He the Lord of Seerkaazhi who takes no food from those loveless 
people who do not pray. He will not abide in the minds of those false devotees. He resides 
in Seerkaazhi amidst the chanting of Vedas by scholars. Ye devotees, recite His glory 
always sincerely, then your evil effects will vanish.

1583.     புற்றானைப்புற்றரவம்மரையின்மிசைச் 
    சுற்றானைத்தொண்டுசெய்வாரவர்தம்மொடும் 
    அற்றானையந்தணர்காழியமர்கோயில் 
    பற்றானைப்பற்றிநின்றார்க்கில்லைபாவமே.        4

    புற்றானை, புற்று அரவம்(ம்) அரையின்மிசைச் 
    சுற்றானை, தொண்டு செய்வார் அவர் தம்மொடும் 
    அற்றானை, அந்தணர் காழி அமர் கோயில் 
    பற்றானை,பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

    puRRAnai, puRRu aravam(m) araiyin micaic            
    cuRRAnai, toNTu ceyvAr avar tammoTum 
    aRRAnai, antaNar kAzi amar kOyil 
    paRRAnai, paRRi ninRArkku illai, pAvamE.

பொருள்:     சீகாழிச் சிவன் புற்றாகவும் புற்றில் வாழும் அரவத்தை அரையில் சுற்றியவராகவும் 
விளங்குகின்றார். தொண்டு செய்யும் அடியவர்பால் பொருந்துகின்றார். தன்முனைப்பு அற்றவர்பால் 
உறைகின்றார். வேதம் ஓதும் அந்தணர்கள் நிறைந்த சீர்காழியில் கோயில் கொண்டுள்ளார். அவரைப் 
பற்றி நின்றவர்களைப் பாவங்கள் பற்றாது என்க.

குறிப்புரை:     புற்றான்- புற்றானவன் (வன்மீக நாதன், புற்றிடங்கொண்டான் என்பன திருவாரூர்ப் 
பெருமான் திருநாமங்கள். பந்தணை நல்லூர் முதலிய வேறு தலங்களிலும் புற்றிடத்தில் இறைவன் 
எழுந்தருளிய உண்மையை அறியலாம்). புற்று அரவம் - புற்றில் வாழும் பாம்பு. அரை - இடை. 
சுற்றான்- சுற்றுதலை உடையவன். பாம்பை இடுப்பிற் சுற்றியவன். தொண்டு செய்வார் அவர் தம்மொடும் -
தொண்டுகளைச் செய்பவராகிய அவரொடும். அற்றானை- அற்றவர்க்கு அற்ற சிவனை. 
'அற்றவர்க்கு அற்ற சிவன்' என்பதன் தாற்பரியம் ஆராய்ந்து உணரத்தக்கது. எல்லாப்பற்றும் 
அற்றவர்க்கே சிவபிரான் 'பற்றற்றான்' எனல் விளங்கும். 

    'புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன், 
    கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி 
    மற்றும் ஓர் தெய்வந்  தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு 
    அற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே' 

என்னுந் திருவாசகத்தின் கருத்தே ஈண்டுக் கொள்ளல் வேண்டும். 

    'அற்றவர்கள் நற்றுணைவன்' (சம்பந்தர் திருக்கயிலாயம்  2) 'பாவம் அற்றவர் நாளும் ஏத்த
 அயவந்தி அமர்ந்தவனே' (திருச்சாத்த மங்கை 6). 'நெஞ்சு அற்றவர் அருவினையிலரே' (திருச்சிறுகுடி 5).
'உறவும் ஆகி அற்றவர்களுக்கு மாநெதிகொடுத்து நீள்புவி இலங்கு சீர்ப்புறவ மாநகர்க் கிறைவனே 
எனத் தெறகிலாவினையே’ (திருப்பிரமபுரம் 8). 'உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு அற்றவர்க்கு உற்ற 
சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே' (2). 'தம் வினையான எலாம் அற அற்றவர் ஆரூர் அரனெறி' 
(அப்பர் 5). 'அற்றவர்க்கு அன்பர்' அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு உற்ற நற்றுணை யாவான் 
(திருவாஞ்சியம் 6). அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி, அற்றார்க் கருள்செய்யும் ஐயாறன்னே, 
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய், அற்றவர்க்கு அருள் செய்பாச்சிலாச் சிராமத்து அடிகள், 
அற்றவனார் அடியார் தமக்கு....நின்றியூரே, பங்கயச் சேவடிக்கே செல்ல அற்றனன் அற்றனன், சோற்றுத்துறையுள் ... 
முதல்வன் பாதத்து அற்றார் அடியார் அடிநாயூரன் ஒன்றுமிலாதவரைக் கழற்போதிறைஞ்சி (திருவாசகம் 524), 
அற்றவர்க்கு அற்ற சிவன் (பொன் வண்ணத்தந்தாதி 74, இருபா இருபஃது 20) எனத் தோத்திரமும் சாத்திரமும் 
இதனைப் பலமுறைக் குறித்தல் அறிதற்பாலது. 'ஒருபற்றிலாமையும் கண்டிரங்காய்' என்றதாலும் இதனை 
இனிதுணரலாம்.  இன்னும் பல இடங்களில் இதனைத் திருமுறைகள் வற்புறுத்துகின்றன. பற்றான் - பற்று உடையவன்.

    Behold! It is He the Lord of Seerkaazhi. He represents snake pit while He wears 
the snake on His waist, which beautifies His appearance. He never parts with those devotees 
of staunch service. He resides in the hearts of those devotees who shed all their desires. 
He abides in Seerkaazhi temple where the Vedic pandits are many. Those devotees who grip 
His holy feet firmly will have no sins at all. 

1584.    நெதியானைநெஞ்சிடங்கொள்ளநினைவார்தம் 
    விதியானைவிண்ணவர்தாம்வியந்தேத்திய 
    கதியானைக்காருலவும்பொழியற்காழியாம் 
    பதியானைப்பாடுமின்நும்வினைபாறவே.        5

    நெதியானை, நெஞ்சுஇடம் கொள்ள நினைவார்தம் 
    விதியானை, விண்ணவர் தாம் வியந்து ஏத்திய 
    கதியானை, கார் உலவும் பொழில் காழி ஆம் 
    பதியானை,பாடுமின், நும் வினை பாறவே!

    netiyAnai, nenjcu iTam koLLa ninaivArtam 
    vitiyAnai, viNNavartAm viyantu Ettiya 
    katiyAnai, kAr ulavum pozil kAzi Am 
    patiyAnai, pATumin, num vinai pARavE!

பொருள்:     சீகாழிச் சிவன் அரிய செல்வமும், தியானம் செய்யும் அடியவர் உள்ளத்தில் பொருந்தி 
இருப்பவரும், விண்ணவர்கள் வியக்கும் நெறியும் ஆவார். சோலைகள் சூழ்ந்த சீர்காழிப் பதியில் 
உறைபவரும் அவரே. அவரைப் பாடும் நம் வினைகளை நீக்கி அருள்பவரும் அவர்தாம்.

குறிப்புரை:     நெதி - நிதி என்பதன் மரூஉ. இவ்வாறாள்வது பயின்றுள்ளது. விதி - கட்டளை. கதி -நெறி.
கார்-மேகம். பொழில்-சோலை. பதி - நகர். பாற-அழிய.

    Behold! It is He the Lord of Seerkaazhi who is all wealth to have. He is the guide 
to those who think of Him wholeheartedly. When the celestials worship Him with awe and wonder, 
He shows the path to get salvation. His abode is there in Seerkaazhi, a holy place of gardens, 
where clouds always move. Ye devotees, sing His glory and He will chase all evils.

1585.    செப்பானமென்முலையாளைத்திகழ்மேனி 
    வைப்பானைவார்கழலேத்திநினைவார்தம் 
    ஒப்பானையோதமுலாவுகடற்காழி 
    மெய்ப்பானைமேவியமாந்தர்வியந்தாரே.        6

    செப்பு ஆன மென்முலையாளைத் திகழ் மேனி 
    வைப்பானை,வார் கழல் ஏத்தி நினைவார்தம் 
    ஒப்பானை,ஓதம் உலாவு கடல் காழி 
    மெய்ப்பானை,மேவிய மாந்தர் வியந்தாரே.

    ceppu Ana menmulaiyALait tikaz mEni 
    vaippAnai, vAr kazal Etti ninaivArtam 
    oppAnai, Otam ulAvu kaTal kAzi 
    meyppAnai, mEviya mAntar viyantArE.

பொருள்:     சீகாழிச் சிவன் உமாதேவியை இடபாகத்தில் கொண்டு ஒளித்திருமேனியோடு 
காட்சியளிப்பவர். தம்முடைய திருவடிகளை நினைந்து வழிபடும் அடியார்களுக்கு அருள் செய்பவர். 
கடல் அலைகள் உலாவி வரும் சீர்காழிப் பதியில் மெய்யாய் மேவுபவர். தம்மை வணங்கும் அடியார்கள் 
பெரும் பேறு பெற்றவர்கள் ஆவார்கள்.

குறிப்புரை:     செப்பு ஆன- செப்பை ஒத்த. மேனி- திருமேனியின் இடப்பாதியில் வைப்பானை- 
வைத்தலுடையவனை, வைப்பவனை எனின் முக்காலத்தும் ஒத்தியல்வதாகாது. தொல்காப்பியம் செய்யும்            
என்னும் வாய்பாட்டு நிகழ்காலத்து வினையாற் சொல்க என்றது (வினையியல் 43). முந்நிலைக் காலமும்
தோன்றும் இயற்கை எம் முறைச் சொல்லும் நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல்
வேண்டும் (பெயரியல் 19). ‘நிகழூஉ நின்ற பால் வரை கிளவி' (வினையியல் 30) பல்லோர் படர்க்கை
 முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங்காலத்துச் செய்யும் என்னுங் கிளவியோடு கொள்ளா
 என்பவற்றை நோக்குக. ஒப்பானை -ஒப்புதலுடையவனை. பராவுசிவர் (தி. 3 ப. 67 பா. 6, சித்தியார் 287)
 என்ற உண்மையை நோக்குக. ஓதம் - கடலின் அலை. குளிர்ச்சி. மெய்ப்பான் - மெய்யாதலை உடையவன். 
அவனே மெய்ப்பொருள். மேவிய- விரும்பி வழிபட்ட. மாந்தர்- மனிதரிற் சிறந்தவர்.  வியந்தார்- பிறரால் 
பேசப்படும் புகழ்க்குரியவர். பிறரை ஏவியாட்கொள்ளும் மேன்மையர் எனலும் பொருந்தும். 
மெய்ப்பானை வியந்தாரெனலும் ஆம். 

    Behold! It is He the Lord of Seerkaazhi. He shares left portion of His body with the 
tender casket-like breasted Umaa, He gives His majestic appearance in this posture with Umaa.
He gives His grace equally to all those devotees of constant prayer at His holy feet. 
He alone is the embodiment of truth forever. His abode is in Seerkaazhi, a holy place 
where cool sea breeze always blows. Those who worship Him pleasingly are always gazed 
by others with awe and wonder.

1586.    துன்பானைத்துன்பமழித்தருளாக்கிய 
    இன்பானையேழிசையின்னிலைபேணுவார் 
    அன்பானையணிபொழிற்காழிநகர்மேய 
    நம்பானைநண்ணவல்லார்வினைநாசமே.        7

    துன்பானை, துன்பம் அழித்து அருள் ஆக்கிய 
    இன்பானை, ஏழ்இசையின் நிலை பேணுவார் 
    அன்பானை, அணி பொழில் காழிநகர் மேய 
    நம்பானை, நண்ண வல்லார் வினை நாசமே.

    tunpAnai, tunpam azittu aruL Akkiya 
    inpAnai, Ez icaiyin nilai pENuvAr 
    anpAnai, aNi pozil kAzinakar mEya 
    nampAnai, naNNa vallAr vinai nAcamE.

பொருள்:     சீகாழிச் சிவன், அடியவர்களை ஆட்கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் துன்பம் 
தருபவரும், இறுதியில் துன்பத்தை நீக்கி அருளின்பத்தைத் தருபவரும், ஏழிசையின் இன்பமாய் 
உறைபவரும் ஆவார். அழகிய சீர்காழி நகரில் உறைபவரை விரும்பி வணங்கும் அடியார்களின் 
வினைகள் உறுதியாக நாசமடையும் என்க.

குறிப்புரை:     துன்பானை- துன்ப வடிவாயிருப்பவனை. அருள் ஆகிய இன்பானை - சிவஞானந் 
தந்த பேரின்ப வடிவினனை. 'இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே', பந்தமுமாய் வீடும் ஆயினார், 
அருள் நிதிதர வரும் ஆனந்தமலையே என்ற திருவாசகக் கருத்து இங்குக் கொள்ளற்பாலது. இன்பமும் நீயே 
துன்பமும் நீயே (பெருந்தேவபாணி 59).  ஏழிசையின் நிலை பேணுவார் - ஏழிசையின் 
நிலையை  விரும்புவார். ஏழிசையாய் இசைப்பயனாய், இன்னிசை வீணையில் இசைந்தோன், 
ஏழிசையோன் கொச்சையை மெச்சினை, எழுவகையோசையும்....  ஆகிய பரமனை, ஏழிலின்னரம் 
பிசைத்தனை. அன்பான்- அன்பு வடிவானவன். அன்பே சிவம் ஆவது. அணி- அழகு. நம்பான் -உயிர்களால் 
விரும்பப்படுபவன். நம்பும் மேவும் நசையாகும்மே (தொல்காப்பியம்). நண்ண - விரும்ப; அடைய; செறிய. 
நாசம் - அழிவு.

    Behold! It is He the Lord of Seerkaazhi. He represents both sorrow and joy. 
He is responsible for suffering in the beginning, later He destroys that suffering 
and gives blessings with His grace. He loves music and also those expert musicians 
who play the seven notes. His abode is in Seerkaazhi, the holy place of beautiful 
gardens. He is our beloved Lord. Those who desire to reach His holy feet will certainly 
get all their sins wiped out.

1587.    குன்றானைக்குன்றெடுத்தான்புயநாலைந்தும் 
    வென்றானைமென்மலரானொடுமால்தேட 
    நின்றானை நேரிழையாளொடுங்காழியுள் 
    நன்றானைநம்பெருமானைநணுகுமே.        8

    குன்றானை,குன்று எடுத்தான் புயம் நால்-ஐந்தும் 
    வென்றானை, மென்மலரானொடு மால் தேட
    நின்றானை, நேரிழையாளொடும் காழியுள் 
    நன்றானை, நம்பெருமானை, நணுகுமே!

    kunRAnai, kunRu eTuttAn puyamnAl-aintum 
    venRAnai, menmalarAnoTu mAl tETa
    ninRAnai, nErizaiyALoTum kAziyuL
    nanRAnai, namperumAnai, naNukumE!

பொருள்:     சீகாழிச் சிவன் குறைவற்ற நிறைவானவன். கயிலாய மலையைத் தூக்க முயன்ற 
இராவணனின் இருபது கைகளின் வலிமையினை அழித்தவன். பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிட 
ஒளிமயமாய் நின்றவன். உமாதேவியுடன் சீர்காழிப் பதியில் உறையும் நம்பெருமானை வணங்கி 
மகிழ்வோமாக! 

குறிப்புரை:     குன்றான் - கயிலை முதலிய குன்றுகளை உடையவன். குன்றெடுத்தான் - கயிலையைத்
 தூக்கிய இராவணன். வென்றான்- நொறுக்கியவன். மலரான்-  பிரமன். மால் - விண்டு . நேர் இழையாள் - 
திருநிலைநாயகி. இழை - ஆபரணம். நன்றான்-  பெரியவன். நல்லதுடையான். சிவன்- குறைவிலா 
மங்கலக் குணத்தன். நணுகும் முன்னிலை ஏவல் வினை.

    Behold! It is He the Lord of Seerkaazhi. He has His abode on the Kailash mountain. 
He is changeless as a mountain. He very easily crushed the king of Sri Lanka with twenty hands, 
when he tried to lift His mountain. He is unknown to Brahma who resides in Lotus flower 
as well as to Vishnu. He abides in Seerkaazhi along with His consort, the bejewelled goddess 
Umaa. He is the Supreme God of perfection. Ye devotees reach our Lord in this sacred place 
and be happy.

1588.    சாவாயும்வாதுசெய்சாவகர்சாக்கியர் 
    மேவாதசொல்லவைகேட்டுவெகுளேன்மின் 
    பூவாயகொன்றையினானைப்புனற்காழிக் 
    கோவாயகொள்கையினானடி கூறுமே.        9

    சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர் 
    மேவாத சொல் அவை கேட்டு வெகுளேன்மின்! 
    பூஆய கொன்றையினானைப் புனல் காழிக் 
    கோஆய கொள்கையினான் அடி கூறுமே!

    cAvAyum vAtu cey cAvakar cAkkiyar 
    mEvAta col avai kETTu vekuLEnmin ! 
    pU Aya konRaiyinAnaip punal kAzik 
    kO Aya koLkaiyinAn aTi kURumE!

பொருள்:     சமணரும் சாக்கியரும் எப்பொழுதும் விதண்டா வாதம் செய்யக்கூடியவர்கள். 
அவர்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவர்கள் சொல்லைக் கேட்டு அவர்கள்மீது 
சினம் கொள்ளவும் மாட்டோம். கொன்றை மலர்சூடி சீர்காழிப் பதியில் கோயில் கொண்டுள்ள 
எங்கள் தலைவனைப் பாடிப் பரவுவோம்.

குறிப்புரை:     சாவாயும் வாது செய்தல் - நம்கட்சி அழிந்தபோதும் வாதம் புரிதல். சாவு ஆயும் 
எனலுமாம். மேவாத- செல்லாத. வெகுளேன்மின்- கோபிக்காதீர்கள். (ஏவல்வினை) பகைவனை 
வெறுத்தல் வேண்டா என்றேனும் பகைவர் தீயுரை கேட்டுச் சைவத்தை வெறுத்தல் வேண்டா 
என்றேனும் கருத்துக் கொள்ளலாம். அடிகூறும் - திருவடியைத் துதி செய்யுங்கள் - கோ ஆய 
கொள்கையினான்- பரத்துவக் கடவுளாகிய கொள்கைக்கு உரியவன், பரமசிவன்.

    You people of Seerkaazhi, don't be disturbed by the harsh words of denial, 
uttered by the Jains and the Buddhists. They will go on arguing even after defeat. 
Forget them and forbid anger. You may come and bow at the holy feet of Lord of Seerkaazhi,
which is a seashore city. Our Lord always wears garlands made of cassia flowers. 
Praise His glory always.

பாட்டு - 10

    பத்தாவது பாட்டு கிடைக்கப்பெறவில்லை.

1589.     கழியார்சீரோதமல்குங்கடற்காழியுள் 
    ஒழியாதுகோயில்கொண்டானையுகந்துள்கித்
    தழியார்சொல்ஞானசம்பந்தன்தமிழரா 
    மொழிவார்கள் மூவுலகும்பெறுவார்களே.        11

    கழிஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள் 
    ஒழியாது கோயில் கொண்டானை, உகந்து உள்கித் 
    தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர 
    மொழிவார்கள்,மூஉலகும் பெறுவார்களே.

    kazi Ar cIr Otam malkum kaTal kAziyuL 
    oziyAtu kOyil koNTAnai, ukantu uLkit 
    tazi Ar col njAnacampantan tamiz Ara 
    mozivArkaL, mUulakum peRuvArkaLE.

பொருள்:     சீகாழிச் சிவன், உப்பங்கழிகள் நிறைந்த கடற்காழியுள் கோயில் கொண்டுள்ளவரை 
மனமொழி மெய் பொருந்த ஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் பாடியுள்ளார். அவர் பாடிய ஞானத் 
தமிழ்ப் பாடல்களைப் பாடுபவர்கள் மூவுலகினாலும் போற்றப்படுவார்கள்.

குறிப்புரை:     கழி - கழிகள். ஆர் - பொருந்திய. சீர் ஓதம் - மிக்க கடல் நீர். உகந்து - விரும்பி. உள்கி-
 நினைந்து. தழி- தழுவி. ஆர - நிறைய. மொழிவார் - பாடுவார். கள் விகுதி பிற்கால வழக்கில் வழங்குவது. 
மூவுலகும் - மண், விண், பாதலம் மூன்றும். தழியார் - தழுவிய சிவஞானியர். சொல்- புகழ்ந்து போற்றுகின்ற 
எனலும் பொருந்தும்.

    Behold! It is He the Lord of Seerkaazhi who resides in the temple of this town.
This is a holy place in the seacoast. The backwater of the sea brings dampness and coolness 
to the entire area. Those devotees, who with earnestness, recite these Tamil verses sung 
by Thiru-gnana-Sambandar on the Lord eternal of Seerkaazhi, embracing His divinity in their 
hearts, will be blessed and praised in all the three worlds.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            11ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 11th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 148                    பதிக எண்: 12

12. திருக்கச்சியேகம்பம்                    12. KACH-CHITH-THIRUVEGAMBAM
பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    திருக்கச்சியேகம்பம் என்னும் இத்திருத்தலமானது தற்போது காஞ்சிபுரம் என்னும் பெயருடன் 
விளங்குகின்றது. மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப்பெயர் பெற்றது. ஆமரம் என்பது 
வடசொல். அது தமிழில் வழங்கும்போது தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய 
பகரத்தைப் பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் 
என்பது ஏகமென்னும் சொல்லோடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப்படி) ஆயிற்று. 
ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. கள்ளக்கம்பனை, நல்லகம்பனை 
என்பவைகளில் காண்க.

    இத்திருத்தலம் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே சுமார் 2-5 கி.மீ. தூரத்தில்             
இருக்கின்றது. சென்னை, செங்கற்பட்டு, திண்டிவனம், அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்தும் 
காஞ்சிபுரம் வரப் பேருந்துகள் உள்ளன. இறைவரின் திருப்பெயர் தழுவக்குழைந்த நாதர், உலகம் உய்ய 
ஆகமவழியின்படி இறைவரைப் பூசிக்க இறைவியார் கயிலையினின்று காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். 
அங்கே கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். 
அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்         
கொண்டார். அது பொழுது இறைவர் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத்தழும்பும் தோன்றக் 
காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் தழுவக்குழைந்த நாதர் என்னும் திருப்பெயர் உண்டாயிற்று. 
திருவேகம்பர் என்ற வேறு பெயரும் உண்டு. இறைவியாரின் திருப்பெயர் ஏலவார்குழலி, காமாட்சியம்மை 
ஆகியனவாம். இத்திருத்தலத்தில் உள்ள விநாயகரின் திருப்பெயர் விகடசக்கர விநாயகர். இவர் 
தெற்குத் திருவாசலில், ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புறத்தில் எழுந்தருளி இருக்கின்றார்.

    தீர்த்தம் கம்பை மாநதி மற்றும் சிவகங்கை என்பன. தலப்பெருமையாவது, இத்திருத்தலம்
முத்திதரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத் திருவொற்றியூர் 
எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு 
இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம். க்ஷேத்திர வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் 
காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், இவர்கள் அருள்பெற்ற பதி. 
இதில் பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவை முறையே 
வெள்ளக்கம்பம், கள்ளக்கம்பம், நல்லகம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. இக்கச்சியேகம்பத்திற்கு 
மாத்திரம் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை மூவராலும் பாடப்பெற்றவை.

    இவ்வூரில் (காஞ்சிபுரத்தில்) கச்சியேகம்பத்துடன் கச்சிமேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி,
 கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும்
 கச்சிமயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள்
 கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடிமரத்தின் முன்னுள்ளது.

    இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.
அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாம் சேர்ந்துவிட்டன. இச்சிலையில் 
சிலபகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச்
 சின்னங்கள் (வராகமும், கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை கரிகாலன் 
உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கின்றது. சுவாமி சந்நிதி கிழக்கு. ஆனால் கோபுரவாயில் 
தெற்கே இருக்கின்றது. திருவாடுவதுறை ஆதீனத்து மாதவச்சிவஞான யோகிகள் அருளிய 
காஞ்சிப்புராணமும், கச்சியப்ப முனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டம் என்று 
சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்ப முனிவர் இயற்றிய கச்சி ஆனந்தருத்திரேசர் 
வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய 
திருவேகம்பமுடையார் திருவந்தாதியும், மாதவச் சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் 
பதிகம், திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, திருஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்திருத்தலத்தைப் 
பற்றிய நூல்கள் ஆகும்.

பதிக வரலாறு

    வேதமோடு சைவநீதி விளங்கவந்த கவுணியனார் காஞ்சியை அணைந்து, மதிற்புறத்தே சென்று 
சேர்ந்து வணங்கினார். அளவற்ற தொண்டர்கள் அஞ்சலித்து வாழ்த்திய ஒலி வானளாவப் பெருகிற்று. 
பூமாரியும், பொற்சுண்ணமும் புயல்போல் பொழிந்தன. காமக்கண்ணி தழுவக் குழைந்த கச்சியேகம்பரை, 
உருகிய அன்பு உள்ளலைப்பப் பருகிய மெய்யுணர்வினோடும் பாடியருளிய பதிகம் இது.

            திருச்சிற்றம்பலம்

1590.    மறையானைமாசிலாப்புன்சடைமல்குவெண் 
    பிறையானைப்பெண்ணொடாணாகியபெம்மானை 
    இறையானையேர்கொள்கச்சித்திருஏகம்பத் 
    துறைவானையல்லதுள்காதெனதுள்ளமே.        1

    மறையானை,மாசு இலாப் புன்சடை மல்கு வெண் 
    பிறையானை,பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை, 
    இறையானை,ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து 
    உறைவானை, அல்லது உள்காது எனது உள்ளமே.

    maRaiyAnai, mAcu ilAp puncaTai malku veN 
    piRaiyAnai, peNNoTu ANAkiya pemmAnai, 
    iRaiyAnai, Er koL kaccit tiru Ekampattu 
    uRaivAnai, allatu uLkAtu, enatu uLLamE.

பொருள்:     ஏகம்பத்துறை இறைவா! வேத வடிவானவனே! தலையில் பிறையைத் தாங்கியவனே! 
பெண்ணோடு ஆணாகிய பெம்மானே! இறைவனே! உன்னை அல்லாது வேறு எதையும் என் உள்ளம் நினையாது.

குறிப்புரை:     மறையான் - வேதசொரூபன், வேதங்களை அருளியவன் எனலுமாம். மாசு- குற்றம். 
புன்சடை- மென்மையை உடைய சடை. புன்மை, பொன்மையுமாம். பிறையான் -  பிறையை அணிந்தவன். 
பெண்ணும் ஆணும் ஆகிய பெருமான். இறையான் - எப்பொருளினும் உறைவான். ஏர் - எழுச்சி. அழகும் ஆம். 
கச்சி - சிவதலம், காஞ்சிபுரம். திருவேகம்பம் - அங்குள்ள பெரிய சிவாலயம். திருவேகம்பத்து உறைவான் - 
திருவேகம்பம் எனப் பெயரிய திருக்கோயிலுள் வாழ்பவன். உள்காது - எண்ணாது. ஏகம்பம் -ஏகாமரம், 
ஏகாம்பரம். ஏகம் - ஒன்று. ஆமரம்-மாமரம்.

    It is Civan the Lord who has His abode at that beautiful temple called  
Ekaambaranaathar temple in the city of Kanchi commonly known as Kaanjipuram. He 
is the embodiment of all the four Vedas. His long matted hair has been beautified 
with that white crescent moon. He is both a male and female called Arthanaareeswaran. 
He resides in every thing. My mind will not think a god, other than the god at 
Kach-chith-thiruvegambam.

1591.     நொச்சியேவன்னிகொன்றைமதிகூவிளம் 
    உச்சியே புனைதல்வேடம்விடையூர்தியான் 
    கச்சியேகம்பம்மேயகறைக்கண்டனை
     நச்சியேதொழுமின்நும்மேல்வினைநையுமே.        2

    நொச்சியே, வன்னி, கொன்றை, மதி,கூவிளம், 
    உச்சியே புனைதல் வேடம்; விடைஊர்தியான்; 
    கச்சி ஏகம்பம் மேய கறைக்கண்டனை 
    நச்சியே தொழுமின்! நும்மேல் வினை நையுமே.

    nocciyE, vanni, konRai, mati, kUviLam,
    ucciye punaital vETam; viTai UrtiyAn; 
    kacci Ekampam mEya kaRaikkaNTanai 
    nacciyE tozumin! nummEl vinai naiyumE.

பொருள்:     ஏகம்பத்துறை இறைவனே! நொச்சி இலை, வன்னி இலை, வில்வ இலை, கொன்றை மலர், 
சந்திரன் ஆகிய ஐந்தினையும் தலையில் தாங்கி அழகுறக் காட்சி அளிப்பவனே! கச்சிப்பதியில் உறைபவனே! 
இடப வாகனத்தில் காட்சி தரும் நீலகண்டனே!  உம்மை அன்புடன் விரும்பித் தொழும் அடியவர்களுக்கு
அவர்களது வினைகள் அழிந்தே  போகும் என்க.

குறிப்புரை:     நொச்சியிலை, வன்னிபத்திரம், கொன்றைப்பூ, பிறை, கூவிளம் (வில்வம்) 
 ஆகியவற்றைச் சிவபெருமான் முடியிற் புனைவது அவனது திருவேடமாகும். ஊர்தி-வாகனம்,         
எருது வாகனத்தன், கறை- (நஞ்சுண்டதன் காரணமாகப் பொருந்திய அதன்) கறுப்புக் கண்டன் -
திருக்கழுத்தினன். நச்சி-விரும்பி. பக்தி கொண்டு. தொழுமின் - வழிபடுங்கள். நையும் - அழியும். 

    It is Civan, the Lord at Ekambaram temple called Ekaambaranaathar. He has 
adorned His long matted hair with vitex, mesquit and cassia flowers with bael leaves
besides the white moon. He mounts on the bull to roam around the cosmos. His neck is 
black because He drank poison from the sea of milk. Ye devotees! do come to pray 
that Lord at Kanchipuram. If you do so, the bad effects of your karma will vanish.

1592.     பாராருமுழவமொந்தைகுழல்யாழொலி
    சீராலேபாடலாடல்சிதைவில்லதோர் 
    ஏரார்பூங்கச்சியேகம்பனையெம்மானைச்
    சேராதாரின்பயமாயந்நெறிசேராரே.        3

    பார் ஆரும் முழவம், மொந்தை, குழல்,யாழ்,ஒலி 
    சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் 
    ஏர் ஆர் பூங் கச்சி ஏகம்பனை, எம்மானை, 
    சேராதார் இன்பம் ஆய(ந்) நெறி சேராரே.

    pAr Arum muzavam, montai, kuzal, yAz, oli 
    cIrAlE pATal ATal citaivu illatu Or 
    Er Ar pUg kacci Ekampanai, emmAnai, 
    cErAtAr inpam Aya(n) neRi cErArE.

பொருள்:     ஏகம்பத்துறை இறைவனை, அடியார்கள் சிறந்த முழவு, மொந்தை, குழல், யாழ் 
போன்றவைகளை முழக்கி அன்புடன் பாடிப் பரவுவர். அதுபோல அன்புடன் பாடிப் பரவாதவர்கள்         
அவர் அருள் இன்ப வழியை அடையாதவர்களே ஆவார்கள் என்க.

குறிப்புரை:     பார்- நிலம். ஆரும் - நிறைந்து முழங்கும். முழவம், மொந்தை, குழல், யாழ் என்னும் 
இசைக்கருவிகளின் ஒலியும், சீரும், பாடலும், ஆடலும் கச்சியுள் அக்காலத்தில் மிக்கிருந்த உண்மை 
புலனாகும். சிதைவு - கேடு. ஏர் - எழுச்சி, அழகு. சேராதார் - இடைவிடாது நினையாதவர். இன்பமாய் நெறி - 
பேரின்பத்தை எய்துவதற்குரிய நன்னெறியை (சன்மார்க்கத்தை). நகரமெய் விரித்தல். சேரார்- அடையார்.

    It is Civan who abides in Kach-chith-thiruvegambam, a holy place which is very 
beautiful with a lot of flowers. In this temple, the scholar devotees sing the divine 
hymns amid dancing for rhythmic sounds of percussion drums like monthai and muzhavu 
along with the melodies of flute. These beautiful sounds are always echoed all around.

1593.    குன்றேய்க்குநெடுவெண்மாடக்கொடிகூடிப்போய் 
    மின்றேய்க்குமுகில்கள்தோயும்வியன்கச்சியுள் 
    மன்றேய்க்குமல்குசீரான்மலியேகம்பம் 
    சென்றேய்க்கும்சிந்தையார்மேல்வினைசேராவே.        4

    குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப் போய் 
    மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன்கச்சியுள், 
    மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் 
    சென்று ஏய்க்கும் சிந்தையார்மேல் வினை சேராவே.

    kunRu Eykkum neTuveNmATak koTi kUTip pOy                 
    min tEykkum mukilkaL tOyum viyankacciyuL,
    manRu Eykkum malku cIrAl mali Ekampam 
    cenRu Eykkum cintaiyArmEl vinai cErAvE.                    

பொருள்:     ஏகம்பத்துறை இறைவா! நீவிர் கோயில் கொண்டுள்ள கச்சியம்பதியில் உயர்ந்த
 மாடங்கள் பொருந்தியுள்ளன. அம்மாடங்களில் உள்ள கொடிகள் மேகத்தைத் தடவும் நிலையில் 
உயர்ந்து விளங்குகின்றன. அத்தகைய கச்சியில் உறையும் இறைவனை நினைந்து நினைந்து 
வணங்கும் அடியவர்களுக்கு என்றும் வினை பொருந்தாது என்க.

குறிப்புரை:     குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடம்- நெடிய (உயரிய)  சுதையால் தீற்றப்பட்ட மாடங்கள் 
மலைகளைப்போல் விளங்குகின்றன.  கொடிகூடிப்போய் மின்தேய்க்கும் முகில்கள் தோயும் அம்மாடங்களின்
மேல் கட்டிப் பறக்கவிட்ட துணிக்கொடிகள் எல்லாம் ஒருங்குசேர்ந்து சென்று மின்னல்கள்  ஒன்றோடென்று 
உராயும் மேகமண்டலத்தை அளாவிப் படியும். மன்று - பிருதிவியம்பலத்தை, மிகுதியாய்ப் பரவித் 
தேய்க்கும் சீரால் எனலுமாம். மல்குசீரான் - மிக்க சிறப்புடைய சிவபிரான். ஏய்க்கும் - பொருந்தச் செய்யும். 

    It is Civan, the Lord of Ekambam temple which is situated in the city of Kachchi.
The entire world knows the fame of this city. Here very beautiful mansions are hill-like
strong and tall. The flags on the top of these mansions, waving in air, touch the clouds
where lightning glitters every now and then. In this famous city of Kachchi, the admirable 
beauty of the temple of Civan is very well known. The devotees of the city, deeply 
concentrating on the Lord of Ekambam temple, worship Him. They will not get any sufferings 
on account of their karma.

1594.     சடையானைத்தலைகையேந்திப்பலிதருவார்தம் 
    கடையேபோய்மூன்றுங்கொண்டான்கலிக்கச்சியுள் 
    புடையேபொன்மலருங்கம்பைக்கரையேகம்பம் 
    உடையானையல்லதுள்காதெனதுள்ளமே.        5

    சடையானை, தலை கை ஏந்திப் பலி தருவார்தம் 
    கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள், 
    புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம் 
    உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

    caTaiyAnai, talai kai Entip pali taruvArtam 
    kaTaiyE pOy mUnRum koNTAn kalik kacciyuL, 
    puTaiyE pon malarum kampaikkarai Ekampam             
    uTaiyAnai, allatu uLkAtu, enatu uLLamE.

பொருள்:     ஏகம்பத்துறை இறைவா! நீவிர் அழகிய சடாமுடியினைக் கொண்டவர் ஆவீர். 
நீர் பிரம கபாலத்தைக் கையில் ஏந்திக் கொண்டு தாருகாவனத்துச் சென்று முனிபத்தினிகளின் 
உடல்,பொருள், ஆவி மூன்றையும் கவர்ந்தருளினீர். கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும் கம்பை 
நதிக்கரையில் விளங்கும் ஏகம்பத் திருக்கோவில் வீற்றிருப்பவரே. உமது திருவடிகளைத் தவிர 
என் உள்ளம் வேறு எதையும் நாடாது என்க. 

குறிப்புரை:     தலை ஏந்தி - தலையை (பிரமகபாலத்தை)க் கையில் தாங்கி, தருவார் - தாருகாவனத்துப் 
பெண்டிர். கடை-  வாயிற்கடை. மூன்றும் -உடல் பொருள் ஆவி எல்லாம். உயிர்,நாண்,கற்பு என்றலுமாம். 
புடை- நகரின் பக்கங்களில்.  பொன் மலரும் - பொன் (போற்கொன்றைகள்) பூக்கும். பொன் விளையும் 
எனல் பொருந்தாது. கம்பை - கம்பாநதி. உடையான் - சுவாமி. உள்காது - நினையாது.

    It is Civan, the Lord of Kach-chith-thiruvegambam temple has matted locks of hair.
He carried a human skull on His hand and went to the entrance of the holy Daaruga Vanam 
to meet the ladies of the sages at the entrance. He then coveted all the three alms such 
as their body, soul and wealth from those ladies. Such a Supreme Lord resides in the 
Ekambam temple at Kachchi city on the bank of the river abounding in cassia flowers. 
My mind will never brood on any god other than our Lord at this temple.

1595.     மழுவாளோடெழில்கொள்சூலப்படைவல்லார்தம் 
    கெழுவாளோரிமையாருச்சியுமையாள்கங்கை 
    வழுவாமேமல்குசீரால்வளரேகம்பம்
    தொழுவாரேவிழுமியார்மேல்வினைதுன்னாவே.        6

    மழுவாளோடு எழில் கொள் சூலப்படைவல்லார்தம் 
    கெழு வாளோர் இமையார், உச்சி உமையாள் கங்கை 
    வழுவாமே மல்கு சீரால் வளர் - ஏகம்பம் 
    தொழுவாரே விழுமியார்; மேல்வினை துன்னாவே.

    mazuvALOTu ezil koL cUlappaTai vallArtam- 
    kezu vALOr, imaiyAr, ucci umaiyAL kagkai 
    vazuvAmE malku cIrAl vaLar--Ekampam 
    tozuvArE vizumiyAr; mElvinai tunnAvE.

பொருள்:     ஏகம்பத்துறை இறைவா! நீவிர் மழு, வாள், அழகிய திரிசூலம் இவற்றைக் கையில்
தாங்கியுள்ளீர்! உமையவளை இடப்பாகத்தும் கங்கையாளைத் தலையிலும் கொண்டு அழகுறக்             
காட்சி அருளுகின்றீர். திருஏகம்பத்துள் உறைகின்ற உம்மை அன்புடன் வணங்கும் அடியார்களை 
வினைகள் சேராவாம் என்க.

குறிப்புரை:     மழு, வாள், சூலம் என்னும் படைகள் ஏந்த வல்லவர். வாள்-கட்கம், எழில்-அழகு,
 வல்லார்தம் ஏகம்பம், கெழுவாள், உமையாள், வாளோர் இமையர் (இமயமலையார்). வாளோர்-
ஒளியுடையவர். உச்சி, பொது, உமையாளும் கங்கையும் மல்குசீர். வழுவாமே - தவறாமல். 
தொழுவாரே- வணங்குவாரே. விழுமியார் - சிறந்தவர். துன்னா - நெருங்கா. 

    It is Civan who resides in the Thiru-Ekambam temple in the holy city of Kachchi.
He clasps in His hands axe, sword and beautiful trident. His consort Umaa Devi, daughter
of the famous and glittering king of Himalayas, is with Him. Also the lady of river 
Ganges adorns His head. In this holy temple full of virtues abides our Lord with a
majestic appearance as above. The devotees who always pray to Him without fail are
really the best ones. They will not be approached by any evil.

1596.     விண்ணுளார்மறைகள்வேதம்விரித்தோதுவார் 
    கண்ணுளார்கழலின்வெல்வார்கரிகாலனை 
    நண்ணுவாரெழில்கொள்கச்சிநகரேகம்பத் 
    தண்ணலாராடுகின்றஅலங்காரம்மே.        7

    விண் உளார்; மறைகள் வேதம் விரித்து ஓதுவார்
     கண் உளார்; கழலின் வெல்வார், கரி காலனை; 
    நண்ணுவார் எழில் கொள் கச்சிநகர் ஏகம்பத்து 
    அண்ணலார்; ஆடுகின்ற அலங்கார(ம்)மே!

    viN uLAr; maRaikaL vEtam virittu OtuvAr 
    kaN uLAr; kazalin velvAr, kari kAlanai; 
    naNNuvAr ezil koL kaccinakar Ekampattu             
    aNNalAr; ATukinRa alagkAra(m)mE!

பொருள்:     ஏகம்பத்துறை இறைவா! நீவிர் உயர்ந்த வேதத்துள்ளும், அவ்வேதத்தை விரித்து 
ஓதும் அந்தணர் உள்ளத்துள்ளும் நிறைந்துள்ளீர். காலனை கழலணிந்த காலால் உதைத்து அருளினீர்! 
ஏகம்பத்துள் கோயில் கொண்டுள்ளீர். அடியார் தரும் பூசனைப் பொருட்களை ஏற்று நீர் ஆடிடும் 
அழகே அழகாம் என்க.

குறிப்புரை:     விண்ணிலும் வேதங்களை விரித்துப் பொருள்கூறும் அறிஞர் கண்ணிலும் இருப்பவர். 
கரி(ந்த) காலன் – யமதர்மன். கழல் - திருவடிக்கு ஆகுபெயர். யமனைக் காலால் உதைத்து வென்றவர். 
வெல்வார். நண்ணுவார் - அடைவார், விரும்புவார். எழில் கொள்ளல்- வண்ணம் பெறல். நண்ணுவாரெழில் 
கொள்ளல்- இறைவன் தன்னைச் சேர்ந்தவர் வண்ணத்தைத் தான் கொள்ளுதல். 'பொன்னிறம் கட்டியினும் 
பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும்' (திருக்களிறு 79) என்றும், 'ஈறாகி ....
முதலொன்றாய்..... எண் வகையாய்...... வேறாய்..... உருவுடைமை ....இருக்கின்றான்' (மேற்படி 86) 
என்றும் உள்ள சிவாகம வசனத்தை நோக்குக. 'தந்தது உன்றன்னைக் கொண்டது என்றன்னை '
என்றதும் உணர்க.  நண்ணுவார் எழில்கொள்ள நகர் கொடுக்கும் என்ற கருத்தும் பொருந்தும். 
எழில் - சிவப்பொலிவு.

    Oh! Ye devotees! Have you seen the magnificent cosmic dance of our Lord Ekambaranaathar? 
It is a beauty at its best played by our Lord at Ekambaram temple in Kachchi city. Our Lord 
is in the celestial world as well as the scholars who explicate the four Vedas. He kicked 
the god of death to die. This Lord has His abode in the most sacred temple Ekambam which 
lies in the beautiful city of Kachchi.

1597.     தூயானைத்தூயவாயம்மறையோதிய 
    வாயானைவாளரக்கன்வலிவாட்டிய 
    தீயானைத்தீதில்கச்சித்திருவேகம்பம் 
    மேயானைமேவுவாரென்தலைமேலாரே.        8

    தூயானை,தூயஆய(ம்) மறை ஓதிய 
    வாயானை,வாள் அரக்கன் வலி வாட்டிய 
    தீயானை, தீது இல் கச்சித் திரு ஏகம்பம் 
    மேயானை, மேவுவார் என் தலைமேலாரே.

    tUyAnai, tUya Aya(m) maRai Otiya 
    vAyAnai, vAL arakkan vali vATTiya 
    tIyAnai, tItu il kaccit tiru Ekampam 
    mEyAnai, mEvuvAr en talaimElArE.

பொருள்:     ஏகம்பத்துறை இறைவா! நீரே தூயவர். தூய்மை பொருந்திய மறையை ஓதிய வாயினர். 
கொடிய இராவணனின் வலிமையைக் குறைத்தவர். தீயினைக் கரத்தில் ஏந்தியவர். கச்சியில் கோயில் 
கொண்டவர்.  உம்மை வணங்கும்  அடியார்களே எம்மால் வணங்கத் தக்கவர்கள் ஆவார்கள். 

குறிப்புரை:     தூயவனும், தூயனவாகிய மறைகளை ஓதியருளிய வாயவனும், வாளேந்திய அரக்கனாகிய
இராவணனது வலியை வாடச் செய்த தீயவனும், தீயது இல்லாத திருக்கச்சியேகம்பத்தில் மேவியவனும்
ஆகிய சிவபெருமானை விரும்பித்தொழுவார் என்தலைமேல் இருப்பவர். இத்திருப்பாட்டின் ஈற்றடிப் 
பொருளால், திருஞானசம்பந்தர்க்குச் சிவனடியாரிடத்தில் உள்ள பத்திச் சிறப்பு விளங்குகின்றது.

    The Lord of Kachchi is the purest of the pure. He is the foremost to have exhibited 
the valued and celebrated four Vedas through His utterances. He holds fire in one of His hands.
He subdued the mightiness of Raavanan. He is the Supreme in the city of Kachchi which destroys 
all the evil disposition that is prevalent in the city. The fact is those devotees who always 
pray the Lord of Kach-chith-thiruvegambam deserve always to be worshipped by us.

1598.     நாகம்பூணேறதேறல்நறுங்கொன்றைதார்
    பாகம்பெண்பலியுமேற்பர்மறைபாடுவர் 
    ஏகம்பமேவியாடுமிறையிருவர்க்கும் 
    மாகம்பமறியும் வண்ணத்தவனல்லனே.        9

    நாகம் பூண்; ஏறுஅது ஏறல்; நறுங்கொன்றை, தார்; 
    பாகம் பெண்; பலியும் ஏற்பர்; மறை பாடுவர்; 
    ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் 
    மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே!

    nAkam pUN; ERu atu ERal; naRugkonRai, tAr; 
    pAkam peN; paliyum ERpar; maRai pATuvar; 
    Ekampam mEvi ATum iRai iruvarkkum 
    mA kampam aRiyum vaNNattavan allanE!

பொருள்:     ஏகம்பத்துறை இறைவா! நீரே நாகத்தை அணிகலன்களாகக் கொண்டவர். இடப 
வாகனத்தில் அமர்ந்து அருளுபவர். நறுங்கொன்றை மலரைச் சூடியவர்.  உமையாளை இடப்பாகத்தில்         
கொண்டவர். கபாலம் ஏந்திப் பலி கொள்பவர். வேதம் அருளியவர். ஏகம்பத்தில் உறைபவர். பிரமன், 
திருமால் இருவரும் அறிய முடியாமல் பெரிய தீப்பிழம்பு தூண் போன்று நெடிது விளங்குபவர் ஆவீர். 
உம்மை வணங்கி மகிழ்வோம்.

குறிப்புரை:     பூண்நாகம், ஏறல்ஏறது. நார் நறுங்கொன்றை, பாகம் பெண் என்று இயைத்து 
சர்ப்பாபரணம், இடப வாகனம், கொன்றை மாலை. மாதியலும் பாதியைக் கொண்டுரைக்க. பலியும் ஏற்பர்-
பிச்சை கொள்வர். உம்மை பலியின் இழிவை மிகுந்து நின்றது. மறை - வேதம். ஏகம்பம் மேவி ஆடும் இறை-
திருவேகம்பத்தில் (பிருதிவியம்பலத்தில்) எழுந்தருளிய கடவுள். ஆட்டம்- காமாட்சியம்மையாரைத் 
தன்பால் ஒடுக்கிய இடமாதலின், வகாரத்தைத் தன்பால் அடக்கிய சிகாரத்தின் நிலையாகிய 
சிவாநந்தத் தாண்டவம். இருவர் - பிரமவிட்டுணு. மாகம்பம் - அறியும் வண்ணத்தவன் அல்லன்.

    Our Lord Ekambaranaathar places on His body the ornament of snake. He uses 
the bull as His vehicle. He wears the garland of sweet smelling cassia flowers. 
He shares His body with our goddess Umaa. Yet He goes out for alms. He utters the four 
Vedas in a musical tone. He could not be seen by Vishnu and Brahma in spite of their 
strenuous efforts. But He stood as a huge tall fire pillar, with no beginning and no end. 
He is the Lord who abides in the Ekambaram temple in the city of Kachchi.

1599.     போதியார்பிண்டியாரென்றிவர்பொய்ந்நூலை 
    வாதியாவம்மினம்மாவெனுங்கச்சியுள்
    ஆதியார்மேவியாடுந்திருவேகம்பம் 
    நீதியாற்றொழுமின்நும்மேல்வினைநில்லாவே.        10

    போதியார், பிண்டியார், என்று இவர் பொய்ந்நூலை
    வாதியா வம்மின்! அம் மா எனும் கச்சியுள் 
    ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம் 
    நீதியால் - தொழுமின்! நும்மேல் வினை நில்லாவே.

    pOtiyAr, piNTiyAr, enRu ivar poynnUlai 
    vAtiyA vammin! am mA enum kacciyuL 
    AtiyAr mEvi ATum tiru Ekampam 
    nItiyAl-tozumin! nummEl vinai nillAvE.

பொருள்:     ஏகம்பத்துறை இறைவா! பௌத்தர்களும் சமணர்களும் பொய்நூலை 
அடிப்படையாகக் கொண்டு வாதம் செய்வார்கள். ஏகம்பத்துறை இறைவனை உணராமல்
பேசும் அவர்கள் கூற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். கச்சியுள் பொருந்தி விளங்கும் இறைவனையே             
நாங்கள் முறைப்படி தொழுவோம். எங்கள் வினை நில்லாது ஓடிவிடும் என்க.

குறிப்புரை:     போதியார் - போதிமரத்தின் கீழமர்ந்த புத்தனை வணங்குவோர். 
பிண்டியார் - பிண்டி (அசோக) மரத்தின் கீழமர்ந்த அருகனை வணங்குவோர். 
பொய்ந்நூல் - மெய்ப் பொருளை அறிந்தெழுதப் படாத புத்தகம். வாதியா - வாதிக்காமல். 
வம்மின் - வாருங்கள். அம்-அழகிய. மா - மாமரம். ஏகாம்பரம் . மா எனும் கச்சி - திருவேகம்பம் 
எனப்படும் கச்சி. ஆதியார் - முதல்வர். நீதியால் - சிவாகம முறைப்படி , தொழுமின் - வழிபடுங்கள். 
நும்மேல் - உங்கள்பால். வினைநில்லா - காமம் பற்றா. 

    Oh! You citizens of Kachchi come here to me. You need not argue with the jains 
and the Buddhists over their false scriptures. They sit under Asoka and Ficus trees and 
propagate ideas without realising our Lord. Here is our Lord Supreme, performing cosmic 
dance in the Ekambaram temple of Kachchi which is a sacred and rich city. He is the first
and the foremost in the entire universe. Oh! You people bow at His feet with devotion 
at heart. Then you will not be affected by evils.

1600.     அந்தண்பூங்கச்சியேகம்பனையம்மானைக் 
    கந்தண்பூங்காழியூரன்கவிக்கோவையால் 
    சந்தமேபாடவல்லதமிழ்ஞானசம் 
    பந்தன்சொற்பாடியாடக்கெடும்பாவமே.        11

    அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை, 
    கந்து அண் பூங்காழிஊரன் கவிக்கோவையால் 
    சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம் 
    பந்தன் சொல் பாடி ஆட, கெடும்,பாவமே.

    am taN pUgkacci Ekampanai, ammAnai, 
    kantu aN pUgkAzi Uran kavikkOvaiyAl             
    cantamE pATa valla tamiz njAnacam - 
    pantan col pATi ATa, keTum, pAvamE.

பொருள்:     ஏகம்பத்துறை இறைவா! அழகிய பூக்களால் குளிர்ந்து விளங்கும் கச்சியம்பதியில் 
கோயில் கொண்ட இறைவா! சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பாடிய சந்த நயமிக்க 
தமிழ்ப்பாடல்களை நாங்கள் பாடி உம்மை வணங்குவோம். அன்பர்களாகிய எங்கள் பாவமும் நீங்கும் அன்றே!

குறிப்புரை:     அம்தண்பூ- அழகும் குளிர்ச்சியும் பொலிவும் பொருந்திய. கந்தண்பூங்காழியூர்-நீரும்
குளிர்ச்சியும் அழகும் உடைய சீகாழிப்பதி. கலிக்கோவை - ஒலிமாலை. 'பூத முதல்வன் முதலே முதலாகப் 
பொலிந்த சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே' (தி. 3. ப.54 பா 8) என்று திருப்பாசுரத்தில் 
அருளியது அறிக. சந்தம்- இசைப்பாடல். சொல் - சொல்மாலை. பாடி ஆடப்பாவம் கெடும். காழியூரனாகிய 
தமிழ் ஞானசம்பந்தன். கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல ஞானசம்பந்தன். 'ஒண்கலியைப் பொன்றும் 
கவுணியன்' அருளிய கோவை ஆதலின், கலியைத் தீர்க்கும் கோவை எனலும் ஆம். கலியுகத்துக் கோவை, 
கலிவிருத்தக் கோவை எனல் பொருந்துமேற்கொள்க.

    These are the musical verses in Tamil sung by Thiru-gnana-Sambandar. He hails from 
Kazhiyur, a place of fragrant flower gardens. He sang these songs on Ekambaranaathar at 
Thiru-Ekambam temple in the city of Kachchi. Here the beautiful flowers in the gardens 
add to the grace and coolness of the entire city. Those people who can recite these verses 
with fervour and dance will find their sins perish.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            12ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 12th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 149                பதிக எண்:  13

13. திருக்கோழம்பம்                 13. THIRU-K-KOZHAMBAM
பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai


திருத்தல வரலாறு

    திருக்கோழம்பம் என்னும் இத்திருத்தலமானது மயிலாடுதுறை- கும்பகோணம் தொடர்வண்டிப் 
பாதையில், நரசிங்கன் பேட்டை தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் 
இருக்கின்றது. திருவாவடுதுறையிலிருந்தும் செல்லலாம். அங்கிருந்து தெற்கே  சுமார் 2.5 கி.மீ 
தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் முப்பத்தைந்தாவது தலம் ஆகும். 
இறைவரது திருப்பெயர்-- கோகிலேசுவரர். இறைவியாரது திருப்பெயர் - சௌந்தரநாயகி. 
இந்திரனால் குயிலுருவமாகுமாறு சபிக்கப் பெற்ற சந்தன் என்னும் வித்தியாதரன் இங்குவந்து 
இறைவனை வழிபட்டுப் பழைய உருவம் எய்தினன். இது திருஞானசம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் 
பாடப்பெற்ற பெருமை வாய்ந்தது. இதற்கு இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

பதிக வரலாறு

    ஆளுடையபிள்ளையார், 'திருவாவடுதுறை அமர்ந்தாரைப் பணிந்து உறைந்து போந்து
 திருக்கோழம்பம் சேர்ந்தார். அங்குக் 'கொன்றைவார் சடைமுடியாரை இறைஞ்சி என்றும் நீடிய
 இன்னிசைப் பதிகம்' ஆகிய இதனைப் பாடினார்.

            திருச்சிற்றம்பலம்

1601.    நீற்றானைநீள்சடைமேல்நிறைவுள்ளதோர் 
    ஆற்றானையழகமர்மென்முலையாளையோர் 
    கூற்றானைக்குளிர்பொழிற்கோழம்பமேவிய 
    ஏற்றானையேத்துமினும்மிடரேகவே.        1

    நீற்றானை,நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர் 
    ஆற்றானை,அழகு அமர் மென்முலையாளை ஓர் - 
    கூற்றானை,குளிர் பொழில் கோழம்பம் மேவிய 
    ஏற்றானை,ஏத்துமின், நும் இடர் ஏகவே!

    nIRRAnai, nILcaTaimEl niRaivu uLLatu Or 
    ARRAnai, azaku amar menmulaiyALai Or 
    kURRAnai, kuLir pozil kOzampam mEviya 
    ERRAnai, Ettumin, num iTar EkavE!

பொருள்:     திருவெண்ணீறு பூசிய பெருமானை, நீண்ட சடையின்மீது கங்கையைத் 
தரித்தவனை, உமையவளை உடம்பின் பாகத்தில் உடையவனை, குளிர்ச்சியான சோலைகளால் 
சூழப்பெற்ற கோழம்பம் என்னும் திருத்தலத்தில் உறைவானை, இடப வாகனனை வழிபடுங்கள்.
அடியவர்களே உங்கள் இடர் தீரும்.

குறிப்புரை:     நீற்றானை - திருநீற்றை அணிந்தவனை. நிறைவு - பூரணம். ஆற்றானை - 
கங்கையாற்றை அணிந்தவனை, மென்முலையாள் - உமாதேவியார். ஓர் கூற்றானை ஒரு (வாம) 
பாகத்தை உடையவனை. பொழில் - சோலை. ஏற்றான்- எருது வாகனத்தன். இடர் ஏக ஏத்துமின் - 
துன்பம் தொலையத் தொழுங்கள்.

    Behold! It is Civan the Lord of Kozhambam who has smeared white ashes all over 
His body. His long matted hair is beautified brimful with the Ganges. He shares His body 
with the tender breasted beautiful goddess, He has His abode in Kozhambam, a holy place of 
cool gardens. He rides on the bull to go round the cosmos. He is our God Supreme, pray Him; 
there will be no more karma and you will be free.

1602.    மையானைகண்டனைமான்மறியேந்திய 
    கையானைக்கடிபொழிற்கோழம்பமேவிய 
    செய்யானைத்தேனெய்பாலுந்திகழ்ந்தாடிய 
    மெய்யானைமேவுவார்மேல்வினைமேவாவே.        2

    மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய 
    கையானை, கடிபொழில் கோழம்பம் மேவிய
    செய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
    மெய்யானை, மேவுவார்மேல் வினை மேவாவே.

    mai Ana kaNTanai, mAn maRi Entiya 
    kaiyAnai, kaTipozil kOzampam mEviya 
    ceyyAnai, tEn ney pAlum tikazntu ATiya 
    meyyAnai, mEvuvArmEl vinai mEvAvE.

பொருள்:     நீல கண்டத்தை உடையவனை, மானை ஏந்திய கையானை, சோலைகள் சூழ்ந்த 
திருக்கோழம்பத் தலத்தில் கோயில் கொண்டவனை, தேன், நெய், பால் இவற்றால், சூடப்பெறுபவனை, 
மெய்யானவனை நினைந்து பாடுபவர்களை வினைகள் சென்று பொருந்தாவாம் என்க.

குறிப்புரை:     மை- கருமை. மேகமும் ஆம். ஆன- ஆகிய, ஒத்த. கண்டனை - திருக்கழுத்து உடையவனை. 
மறி -கன்று. கடி- மணம். பொழில் -சோலை.செய்யான் - செந்நிறமுடையவன். செம்மை உடையவன் 
(தி.195, ப.59, பா.5) 'திருநின்ற செம்மை' 'செம்மையுள் நின்றவன்' (சுந்தரர்) 'செம்பொருள்' தேன், நெய், 
பால் என்பன அபிடேகப் பொருள்களுள் அடங்கியவை, திகழ்ந்து - விளங்கி, ஆடிய - அபிடேகிக்கப்பெற்ற. 
மெய் - திருமேனி, சத்தியமுமாம். மேவுவார் - இடைவிடாது தியானிப்பவர். மேவா- அடைய மாட்டா. 

    Behold! It is Civan the Lord of Kozhambam whose neck is black in colour. He holds 
in one of His hands the young deer. He is golden red in colour. He has His abode in Kozhambam, 
a place of fragrant gardens. He is bathed with honey, ghee and milk. He is our Lord Supreme. 
Evils will not infect those who meditate on His Holy Feet.

1603.     ஏதனையேதமிலாவிமையோர்தொழும் 
    வேதனைவெண்குழைதோடுவிளங்கிய 
    காதனைக்கடிபொழிற்கோழம்பமேவிய 
    நாதனையேத்துமினும்வினைநையவே.        3

    ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும் 
    வேதனை, வெண்குழை தோடு விளங்கிய 
    காதனை,கடிபொழில் கோழம்பம் மேவிய 
    நாதனை,ஏத்துமின், நும் வினை நையவே!

    Etanai, Etam ilA imaiyOr tozum 
    vEtanai, veNkuzai tOTu viLagkiya 
    kAtanai, kaTipozil kOzampam mEviya
    nAtanai, Ettumin, num vinai naiyavE!

பொருள்:     எல்லாவற்றுக்கும் காரணமானவனை, தங்களது குற்றங்கள் நீங்க தேவர்களால் 
தொழப்பெறும் வேதமுதல்வனை, ஆணும் பெண்ணுமாய் குழையும் தோடும் கொண்டவனை, 
சோலைகள் சூழ்ந்த திருக்கோழம்பத்தில் கோயில் கொண்டவனை நம் தலைவனாகிய சிவபெருமானை, 
அடியவர்களே துதி செய்யுங்கள். வினைகள் நீங்கும்.

குறிப்புரை:     ஏதன் - குற்றமுடையவன். 'குற்றம்நீ குணங்கள்நீ கூடலால வாயிலாய்' (தி.3. ப.52 பா.3) 
என்று இவ்வாசிரியர் திருவாக்கேயிருத்தல் அறிக. ஏதம்- குற்றம். காரணனுமாம். இமையோர் என்பதற்குத் 
தேவர் என்று பொருள்கூறுவர். இது சைவநூல்கட்கு ஒவ்வாது. இமைத்தலில்லாதவர்- இமையோர் என்னும் 
சாமான்யம் பற்றி இவ்வாறு கூறுவர். 'இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த் தோன்றாத் 
துணையாயிருந்தனன்' என்பதில் தேவர்க்கு அன்பன் எனல் பொருந்துமோ? கண்ணிமைத்துக் காணாத 
யோகியர், விழித்தகண் குருடாத் திரி வீரர் என்பதே உண்மைப் பொருள். வேதன் - மறைகளை அருளியவன். 
வெண்குழை தோடு -  சங்கத்தோடுங் குழையும். நைய - வருந்த (நீங்க).

    Behold! It is Civan the Lord of Kozhambam who is the cause and effect for 
evils too. The flawless celestials worship the Lord who is the embodiment of the Vedas. 
He has adorned His ear with white coloured kuzhai and also stud since He is man 
as well as woman. He has His abode in Kozhambam, a serene place of fragrant gardens. 
He is our Lord Supreme. Ye devotees! Reach His temple and bow at His holy feet; 
your evils will be wiped out.

1604.     சடையானைத்தண்மலரான்சிரமேந்திய 
    விடையானைவேதமும்வேள்வியுமாயநன் 
    குடையானைக்குளிர்பொழில்சூழ்திருக்கோழம்பம்
    உடையானையுள்குமினுள்ளங்குளிரவே.        4

    சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய 
    விடையானை, வேதமும் வேள்வியும் ஆய நன்கு 
    உடையானை, குளிர்பொழில் சூழ் திருக் கோழம்பம் 
    உடையானை, உள்குமின், உள்ளம் குளிரவே!

    caTaiyAnai, taNmalarAn ciram Entiya 
    viTaiyAnai, vEtamum vELviyum Aya nanku 
    uTaiyAnai, kuLirpozil cUz tiruk kOzampam 
    uTaiyAnai, uLkumin, uLLam kuLiravE!

பொருள்:     செஞ்சடையவனை, பிரமனின் கபாலத்தைக் கையில் ஏந்தியவனை, இடப
வாகனனை, வேதமாகவும் வேள்வியாகவும் விளங்குபவனை, சோலைகள் நிறைந்த
 திருக்கோழம்பத்தில் மேவியவனை நினைத்தாலே நம் உள்ளம் குளிரும் என்க.

குறிப்புரை:     தண்மலரான்சிரம் - பிரமகபாலம். 'வேத வேள்வியை’ (நிந்தனை செய்துழல் 
ஆதமில்லி) (தி.3. ப.108 பா.1) என்றதறிக. நன்கு - நன்மை. உடையான்-  உடையவன். சுவாமியும் ஆம். 
உள்குமின் -தியானம் புரியுங்கள்.

    Behold! It is Civan the Lord of Kozhambam who has matted hair He holds the
skull of Brahma (seated in lotus flower) in His hand for alms and rides on His bull .
He is pleased with the Vedic prayers and adulations by scholars. He has His abode in
Kozhambam, a sacred place surrounded by cool gardens. He is our Lord Supreme.
Ye devotees! Think of His holy feet always, your mind will be serene and cool.

1605.    காரானைக்கடிகமழ்கொன்றையம்போதணி 
    தாரானைத்தையலோர்பால்மகிழ்ந்தோங்கிய 
    சீரானைச்செறிபொழிற்கோழம்பமேவிய 
    ஊரானையேத்துமினும்மிடரொல்கவே.        5

    காரானை, கடி கமழ் கொன்றை அம்போது அணி 
    தாரானை, தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய 
    சீரானை, செறி பொழில் கோழம்பம் மேவிய 
    ஊரானை,ஏத்துமின், நும் இடர் ஒல்கவே!

    kArAnai, kaTi kamaz konRai ampOtu aNi 
    tArAnai, taiyal OrpAl makizntu Ogkiya 
    cIrAnai, ceRi pozil kOzampam mEviya 
    UrAnai, Ettumin, num iTar olkavE!

பொருள்:     மேகம் போன்று குளிர்ந்து அருள்பவனை, மணமிக்க கொன்றை மாலையை
அணிபவனை, உமாதேவியை திருமேனியின் ஒருபாகத்தில் கொண்டுள்ளவனை சோலைகள் 
நிறைந்த கோழம்பத்தலத்தில் உறைபவனை வழிபடின் நம் துன்பங்கள் நீங்கும் என்க.

குறிப்புரை:     காரான் - மேகமாயிருப்பவன். 'கனத்தகத்தான் கயிலாயத்துச்சியுள்ளான்' 
போது-பூ . தார்- (மாலை, கண்ணி) தார். தையல் - பாலாம்பிகை. சீரான் - கனவான். ஒல்க - சுருங்க. 
கோழம்பம் மேவிய ஊர் என்றதால் திருக்கோயிலின் திருநாமம் கோழம்பம் என்க. 
'கோழம்பங்கோயிலாக் கொண்டான்' என மேல்வருதலும் காண்க. 

    Behold! It is Civan the Lord of Kozhambam, who like cold clouds loaded with water, 
showers His grace. He wears the garland of fragrant cassia flowers. He has the virtue of 
sharing His body with our goddess. He has His abode in Kozhambam which is a place of 
thick gardens. He is our Lord Supreme. Ye devotees! Bow at His holy feet, your sufferings 
will be gone forever.

1606.    பண்டாலின்நீழலானைப்பரஞ்சோதியை 
    விண்டார்கள்தம்புரம்மூன்றுடனேவேவக் 
    கண்டானைக்கடிகமழ்கோழம்பங்கோயிலாக் 
    கொண்டானைக்கூறுமினுள்ளங்குளிரவே.        6

    பண்டு ஆலின் நீழலானை, பரஞ்சோதியை, 
    விண்டார்கள் தம் புரம்மூன்று உடனேவேவக் 
    கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக் 
    கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே!

    paNTu Alin nIzalAnai, paranjcOtiyai, 
    viNTArkaL tam purammUnRu uTanE vEvak 
    kaNTAnai, kaTi kamaz kOzampam kOyilAk 
    koNTAnai, kURumin, uLLam kuLiravE!

பொருள்:     முன்னொரு காலத்தில் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு 
அருள் செய்தவனை, மாறுபட்ட முப்புர அசுரர்களை சிரித்தே அழித்தவனை, திருக்கோழம்பத்தில் 
கோயில் கொண்டவனை வழிபடின் நம் உள்ளம் குளிரும், அமைதி பெறும் என்க.

குறிப்புரை:     ஆல்- கல்லாலமரம். பரஞ்சோதி - மெய்யொளி. விண்டார்கள் - பகைவராகிய 
திரிபுரத்தசுரர்கள். புரம் மூன்று - முப்புரம். கண்டான் - கண்டவன். வினையாலணையும் பெயர்.         
கூறுமின் -புகழுங்கள். கடவுள் புகழை வாயாரக் கூறுதல் உள்ளக் குளிர்ச்சிக்குக் காரணம் என்றவாறு.    

    Behold! It is Civan the Lord of Kozhambam, who as a preacher sat under the 
huge banyan tree as Dakshinaamoorthy facing south and cleared the doubts of the four saints. 
He is the greatest effulgence of all lights. He destroyed the three fortresses of the 
evil minded Asuraas. He has His abode in Kozhambam which is a blessed temple of fragrance. 
He is our Supreme Lord. Ye devotees, speak loudly about the glories of our Lord; then your 
mind will be serene and cool. 

1607.     சொல்லானைச்சுடுகணையாற்புரமூன்றெய்த 
    வில்லானைவேதமும்வேள்வியுமானானைக் 
    கொல்லானையுரியானைக்கோழம்பமேவிய 
    நல்லானையேத்துமினும்மிடர்நையவே.        7

    சொல்லானை,சுடுகணையால் புரம்மூன்று எய்த 
    வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை, 
    கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவிய 
    நல்லானை,ஏத்துமின், நும் இடர் நையவே!

    collAnai, cuTu kaNaiyAl puram mUnRu eyta 
    villAnai, vEtamum vELviyum AnAnai, 
    kol Anai uriyAnai, kOzampam mEviya 
    nallAnai, Ettumin, num iTar naiyavE!

பொருள்:     மந்திர மொழியாக விளங்குபவனை நெருப்புக் கணையால் முப்புரங்களை 
எரிவிக்க மேருமலை என்னும் தேரில் ஏறி நின்றவனை, வேதமும் வேள்வியும் ஆனவனை கரிய 
யானையைக் கொன்று அதன் தோலை உரித்து ஆடையாகக் கொண்டவனை திருக்கோழம்பத்து 
உறைவானை, நல்லவனை வழிபடின் நம் துயரெல்லாம் நீங்கும் என்க. 

குறிப்புரை:     சொல்லான் -  சொல்வடிவாகிய அம்பிகையை உடையவன். சொல்லாயிருப்பவன் 
எனலும் பொருந்தும். கணை –திருமாலாகிய அம்பு. வில்- மேருவில். வேதவேள்வி, (தி.2 . ப 13. பா 4)
கொல்லானை - கொல்லும் யானை வினைத்தொகை. (உரி - தோல்) உரியான் - தோலைப் போர்த்துக்
கொண்டவன். நல்லான் - சிவன், மங்கல வடிவன்.

    Behold! It is Civan the Lord of Kozhambam who is the embodiment of all 
mantras and its resultant sound. He holds the bow that burnt the three forts with a 
sharp arrow. He is the personification of all Vedas and religious rites. He killed the
ferocious elephant and peeled its skin and covered His body. He has His abode in
Kozhambam. He is the manifestation of benevolence and perfection. He is our Lord Supreme. 
Ye devotees! Praise His glory to be relieved of your woes.

1608.    விற்றானைவல்லரக்கர்விறல்வேந்தனைக் 
    குற்றானைத்திருவிரலாற்கொடுங்காலனைச் 
    செற்றானைச்சீர்திகழுந்திருக்கோழம்பம்
    பற்றானைப்பற்றுவார்மேல்வினைபற்றாவே.        8

    வில்-தானை வல்அரக்கர் விறல் வேந்தனைக் 
    குற்றானை,திருவிரலால்; கொடுங்காலனைச் 
    செற்றானை; சீர் திகழும் திருக் கோழம்பம்
     பற்றானை; பற்றுவார்மேல் வினை பற்றாவே.

    vil-tAnai val arakkar viRal vEntanaik 
    kuRRAnai, tiruviralAl; koTugkAlanaic 
    ceRRAnai; cIr tikazum tiruk kOzampam 
    paRRAnai; paRRuvArmEl vinai paRRAvE.

பொருள்:     மேருமலையை வில்லாக வளைத்தவனை, அரக்கர் வேந்தன் இராவணனின் 
அகந்தையை தன் கால்விரல் கொண்டு அடக்கியவனை, காலனைக் காலால் காய்ந்தவனை,         
திருக்கோழம்பத்து உறைவானைப் பற்றினால் நம்மை வினைகள் பற்றாவாம்.            

குறிப்புரை:     வில்தானை - விற்படை. வல் அரக்கர்- வலிய இராக்கதர். அசுரர் காரணம் பற்றி 
வருந்துபவர். இராக்கதர். ஒரு காரணமும் பற்றாது வருந்துபவன். அரக்கர் வேந்தன்- இராவணன். 
குற்றான் - சிறுமைப்படுத்தியவன், நசுக்கியவன் விரலாற் குற்றான் என்று கொள்க. காலனைச் 
செற்றான் -காலசங்காரக் கடவுள். பற்றான் - பற்றுதலை உடையவன். பற்றுவார் - அடியர். 
பற்றா - தொடரா.

    Behold! Civan the Lord of Kozhambam is our God Supreme. Raavanan, the king of
Sri Lanka was the supreme head of all his race of Raakshasas. His might and loftiness 
were subdued by our Lord of Kozhambam. He once kicked and killed the god of death. 
Our Lord has His abode at glorified Thiru-k-Kozhambam. Those devotees who grip His 
holy feet with great love will never be gripped by evils.

1609.     நெடியானோடயனறியாவகைநின்றதோர் 
    படியானைப்பண்டங்கவேடம்பயின்றானைக் 
    கடியாருங்கோழம்பமேவியவெள்ளேற்றின் 
    கொடியானைக்கூறுமினுள்ளங்குளிரவே.        9

    நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் 
    படியானை, பண்டங்கவேடம் பயின்றானை,
    கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள்ஏற்றின் 
    கொடியானை, கூறுமின் உள்ளம் குளிரவே!

    neTiyAnOTu ayan aRiyA vakai ninRatu Or
    paTiyAnai, paNTagkavETam payinRAnai,
    kaTi Arum kOzampam mEviya veL ERRin 
    koTiyAnai, kURumin, uLLam kuLiravE!

பொருள்:     திருமாலும், பிரமனும் அடிமுடி தேடி அறியா வகையில் நெருப்பு வடிவாய்
நின்றவனை, பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடிட, அதற்குரிய வேடத்தைக் கொண்டவனை, 
சோலைகள் நிறைந்த கோழம்பப் பதியில் உறைபவனை பாடிப்பரவுவாரின் உள்ளங்கள் குளிர்வு பெறும்.

குறிப்புரை:     நெடியான்- விக்கிரமன், திருமால். அயன்- அஜன், பிரமன். படியான் - உருவத்தை 
உடையவன் (படியனார். தி.2 ப.79 பா.10) பண்டங்க வேடம்- பாண்டரங்கம் என்னும் கூத்துக்காகக்
கொண்ட திருவேடம். வெள்ளேற்றின் கொடி - இடபத்துவசம். எருதின்கொடி. 

    Behold! It is Civan the Lord of Kozhambam who plays the dance called Pandaranga. 
Once Lord Vishnu and Brahma attempted to see the holy head and holy feet of our Lord in vain. 
Then He stood in an irrecognizable form. He mounts with His flag the white bull on which 
He rides. Our Lord has His abode at fragrant Kozhambam. He is our God Supreme. Ye devotees! 
speak of His glory to one and all and be happy with your mind, serene and cool.

1610.     புத்தருந்தோகையம்பீலிகொள்பொய்ம்மொழிப் 
    பித்தரும்பேசுவபேச்சல்லபீடுடைக் 
    கொத்தலர்தண்பொழிற்கோழம்பமேவிய 
    அத்தனையேத்துமினல்லலறுக்கவே.        10

    புத்தரும்,தோகை அம்பீலி கொள் பொய்ம்மொழிப் 
    பித்தரும், பேசுவ பேச்சு அல்ல பீடு உடைக் 
    கொத்து அலர் தண்பொழில் கோழம்பம் மேவிய 
    அத்தனை ஏத்துமின், அல்லல் அறுக்கவே!

    puttarum, tOkai ampIli koL poymmozip 
    pittarum, pEcuva pEccu alla; pITu uTaik 
    kottu alar taNpozil kOzampam mEviya 
    attanai Ettumin, allal aRukkavE!

பொருள்:     புத்தரும், மயிற்பீலியைக் கையில் கொண்ட சமணரும் பொய்மொழிகளையே 
எப்பொழுதும் பேசித் திரிவர். அவர்களுடைய சொற்கள் மெய்யானவை அல்லவாம். எனவே, 
அடியவர்களே நீங்கள் மலர்கள் நிறைந்த சோலையில் உறையும் மெய்ம்மையாம் சிவனையே 
வழிபாடு செய்யுங்கள். உங்களது துன்பம் எல்லாம் நீங்கப் பெறும் என்க.

குறிப்புரை:     தோகையம் பீலி - மயிற்பீலியாகிய வார்கோல். பொய்மொழிப்பித்தர்- மெய்யுரையாத 
மயக்கவுணர்வினராய சமணர். பீடு -பெருமை. அத்தன்-  பிதா. அல்லல் - பிறவிப் பிணி முதலிய 
துன்பங்கள். அறுக்க - அறச்செய்ய.

    The speeches of the Buddhists and the Jains who have peacock feathers in their 
hands are not true. Ye! the citizens of Kozhambam praise your Lord who resides in the 
temple which is surrounded by cool gardens of flower bunches. Your sufferings will be 
severed at once.

1611.    தண்புனலோங்குதண்ணந்தராய்மாநகர் 
    நண்புடைஞானசம்பந்தன்நம்பானுறை 
    விண்பொழிற்கோழம்பமேவியபத்திவை
    பண்கொளப்பாடவல்லார்க்கில்லைபாவமே..        11

    தண்புனல் ஓங்கு தண்அம் தராய் மா நகர் 
    நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை 
    விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை 
    பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

    taNpunal Ogku taN am tarAy mA nakar 
    naNpu uTai njAnacampantan, nampAn uRai 
    viN pozil kOzampam mEviya pattu ivai 
    paN koLap pATa vallArkku illai, pAvamE.

பொருள்:     குளிர்ந்த நீர் வளம் கொண்ட திருத்தலம் சீர்காழி. அப்பதியில் அவதரித்தவரே
திருஞானசம்பந்தர். அவர் உயர்ந்த சோலைகள் சூழ்ந்த கோழம்பரை பக்தியுடன் பாடி அருளியுள்ளார். 
அதனை நாமும் பாடி நம் பாவங்கள் நீங்கப் பெறுவோமாக.

குறிப்புரை:     தராய் - சீகாழியின் பெயர். நம்பான் - சிவபிரான். விண்பொழில்-வானை அளாவிய
சோலை. பத்தும் இவை -இப்பதிகத்தை. பண்கொளப் பாடவல்லார்-  பண்ணிசையுடன் பாடும் வன்மை 
உடையவர்.

    It is Civan the Lord of Kozhambam who resides in the temple which is  surrounded by 
sky kissing gardens. Thiru-gnana-Sambandar hails from Thannantharai surrounded by cool 
waters everywhere. Those devotees who are capable of reciting in proper musical note 
these ten hymns sung by Thiru-gnana-Sambandar on our Lord of Kozhambam with much devotion 
and fervour, will have no sins; If they have any it will be wiped out.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            13ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 13th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 150                பதிக எண்: 14

14.திருவெண்ணியூர்                14.THIRU-VENNIOOR

பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    திருவெண்ணியூர் என்னும் இத்திருத்தலமானது தஞ்சாவூர் - திருவாரூர் தொடர் வண்டிப் 
பாதையில், கோயில் வெண்ணி என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு 2.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. 
தஞ்சை - நீடாமங்கலம், தஞ்சை - திருவாரூர் பேருந்துகளில் கோயில் வெண்ணி என வழங்கும் 
இவ்வூரை அடையலாம். இது காவிரித் தென்கரையிலுள்ள நூற்றிரண்டாவது தலம் ஆகும். 
இறைவரது திருப்பெயர் வெண்ணிக் கரும்பர். இறைவியாரது திருப்பெயர் அழகியநாயகி. 
இறைவர் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்று சேர்த்து வைத்தாற்போல் இருக்கின்றது.

பதிக வரலாறு

    பாலறாவாயர் வேதிகுடியினில் தமிழ் வேதத்தின் ஓங்கிசையை ஓதி, முதல்வரைப் போற்றித் 
தொழுது வந்து, திருவெண்ணிப் பதியினிற் கோயிலை நண்ணிக் காதலின் வணங்கி, 'சடையானை' 
எனும் இப்பதிகத்தைப் பாடினார்.

            திருச்சிற்றம்பலம்

1612.    சடையானைச்சந்திரனோடுசெங்கண்ணரா 
    உடையானையுடைதலையிற்பலிகொண்டூரும் 
    விடையானைவிண்ணவர்தாந்தொழும்வெண்ணியை 
    உடையானையல்லதுள்காதெனதுள்ளமே.            1

    சடையானை, சந்திரனோடு செங்கண் அரா 
    உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும் 
    விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை 
    உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

    caTaiyAnai, cantiranOTu cegkaN arA 
    uTaiyAnai, uTaitalaiyil pali koNTu Urum 
    viTaiyAnai, viNNavartAm tozum veNNiyai 
    uTaiyAnai, allatu uLkAtu, enatu uLLamE.

பொருள்:     சடைமுடி உடையவனை, சந்திரனையும் பாம்பையும் அணிந்தவனை, 
பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி தேர்பவனை, தேவர்களும் தொழும்  வெண்ணிப்
பதியானை,நான் எப்பொழுதும் நினைவேன். அவனைத் தவிர என் உள்ளம் வேறு 
எவரையும்  நினைக்காது.

குறிப்புரை:     சடையானை என்றதன் பின் கூறியதால், சந்திரனையும் சிவந்த கண்களை
உடைய  பாம்பையும் அச்சடைமேல் உடையான் என்க. அரா - பாம்பு. உடைதலை - உடைந்த தலை, 
பிரமகபாலம்.  ஊரும்விடை - ஏறிச்செலுத்தப்படும் எருது. விண்ணவர் - தேவர். வெண்ணி - வென்றி 
என்பதன் மரூஉ.  நன்றி - நண்ணி. பன்றி - பண்ணி. மன்று - மண்ணு. கன்று - கண்ணு என்பனவற்றில் 
உள்ள னகரமும் றகரமும் உற்ற திரிபை நோக்குக. உள்காது - நினையாது.

    It is Civan, the Lord of Venni called Venni-naathar who resides in Vennioor with 
matted hair. He has adorned His head with the moon and the red eyed snake. He mounts 
His bull and goes round the cosmos for alms carrying a skull on His hand. He is in Venni, 
a holy place and is prayed by the celestials. I will always contemplate on Him, I cannot 
entertain anybody else in my heart.

1613.     சோதியைச்சுண்ணவெண்ணீறணிந்திட்டவெம் 
    ஆதியையாதியுமந்தமுமில்லாத 
    வேதியை வேதியர்தாந்தொழும்வெண்ணியில் 
    நீதியைநினையவல்லார்வினைநில்லாவே.        2

    சோதியை, சுண்ணவெண்நீறு அணிந்திட்ட எம் 
    ஆதியை, ஆதியும் அந்தமும் இல்லாத 
    வேதியை, வேதியர்தாம் தொழும் வெண்ணியில் 
    நீதியை, நினைய வல்லார் வினை நில்லாவே.

    cOtiyai, cuNNaveNnIRu aNintiTTa em 
    Atiyai, Atiyum antamum illAta 
    vEtiyai,vEtiyartAm tozum veNNiyil 
    nItiyai, ninaiya vallAr vinai nillAvE.

பொருள்:     ஒளி மயமானவனை, வெண்ணீறு அணிந்திட்ட எம் ஆதியனை, ஆதியும் அந்தமும்
 இல்லாத வேதியனை, அந்தணர்களால் விரும்பி வணங்கப் பெறுபவனை, வெண்ணிப் பதியில் 
உறைபவனை, நினைப்பவர்கள் வினை நீக்கப் பெறுவார்கள் என்க.

குறிப்புரை:     சுண்ணம் - பொடி. ஆதியும் அந்தமும் இல்லாத வேதியை- முதலும் முடிவும் இல்லாத 
மறையோனை. வேதத்தை அருளியதால் வேதியானான். நீதியை-தரும சொரூபியை. நினைதல்  எளிதன்று. 
அரிதாகப் பெறத்தக்கது ஆதலின் வல்லார் என்றார். 

    It is Civan the Lord of Venni who is light Himself. He has smeared His body with 
white sacred powder. He is the origin and the absolute. He is an embodiment of the Vedas 
and the Infinite. He is the personification of the virtue of dharma. He resides in Venni. 
Those devotees who can always think of His holy feet and pray will never find any evil 
lingering in their lives.

1614.     கனிதனைக்கனிந்தவரைக்கலந்தாட்கொள்ளும் 
    முனிதனைமூவுலகுக்கொருமூர்த்தியை 
    நனிதனைநல்லவர்தாந்தொழும்வெண்ணியில் 
    இனிதனையேத்துவரேதமிலாதாரே.        3

    கனிதனை, கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும் 
    முனிதனை, மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை, 
    நனிதனை, நல்லவர்தாம் தொழும் வெண்ணியில் 
    இனிதனை,ஏத்துவர் ஏதம் இலாதாரே.

    kanitanai, kanintavaraik kalantu ATkoLLum 
    munitanai, mUulakukku oru mUrttiyai,
    nanitanai, nallavartAm tozum veNNiyil 
    initanai, Ettuvar Etam ilAtArE.

பொருள்:     நற்கனி போன்றவனை, உள்ளம் கனிந்தவரை ஆட்கொள்ளும் அண்ணலை, 
மூவுலகுக்கும் ஒப்பற்ற தலைவனாக விளங்கும் இறைவனை, நல்லவர்களால் வணங்கப் படுபவனை, 
திருவெண்ணிப் பதியில் கோயில் கொண்டுள்ளவனை, ஏத்தி வழிபடும் அடியவர்கள் குற்றமற்றவராய் 
துன்பமின்றி விளங்குவர்.

குறிப்புரை:     கனிதனை- பழத்தை. கனிந்தவர்- மனங் கனிந்துருகி வழிபடுபவர். முனிதனை-
மனனசீலனை, நனிதனை - மேம்பட்டவனை. நனி - மிகுதி. உரிச் சொல்லடியாக நின்ற பெயர். நல்லவர்-
சரியை,கிரியை,யோகங்களில் முதிர்ந்த ஞானிகள், சைவ நலமுடையவரெனப் பொதுப் பெயருமாம். 
இனிதனை - (இனிது + அன் + ஐ) இன்புருவானவனை. ஏதம் - இருவினைக் குற்றம்.

    It is Civan the Lord of Venni who is the fruit of absolute wisdom. He is a sage
activating those with mature emotions that melt out of love. He is the Supreme God,
unique in all the three worlds. He is superior to all and everything in the universe. He
bestows His grace with sweetness on all those good people who pray at Venni. Those who 
praise His holy feet and pray to Him, who embodies joy, will be free of the two evils - 
sorrows and flaws. 

1615.    மூத்தானைமூவுலகுக்கொருமூர்த்தியாய்க் 
    காத்தானைக்கனிந்தவரைக்கலந்தாளாக 
    ஆர்த்தானையழகமர்வெண்ணியம்மான்றன்னை 
    ஏத்தாதாரென்செய்வாரேழையப்பேய்களே.        4

    மூத்தானை,மூஉலகுக்கு ஒரு மூர்த்திஆய்க் 
    காத்தானை,கனிந்தவரைக் கலந்து ஆள்ஆக 
    ஆர்த்தானை, அழகு அமர் வெண்ணி அம்மான் தன்னை, 
    ஏத்தாதார் என் செய்வார்? ஏழை, அப் பேய்களே!

    mUttAnai, mU ulakukku oru mUrtti Ayk
    kAttAnai, kanintavaraik kalantu AL Aka 
    ArttAnai, azaku amar veNNi ammAn tannai, 
    EttAtAr en ceyvAr? Ezai, ap pEykaLE!

பொருள்:     முன்னைப் பழம் பொருளாய் உள்ளவனை, மூவுலகிற்கும் தலைவனை, உயிர்களைக் 
காத்து அருள்பவனை, உள்ளம் கனிந்தவர்களின் உள்ளத்தில் பொருந்தி இருப்பவனை, அழகான 
வெண்ணிப் பதியில் உறைபவனை ஏத்தி வணங்காதவர்கள் கீழ்மைத்தனம் கொண்டவர்களாய் 
பேய் போன்றவர்கள் என்க.

குறிப்புரை:     மூத்தான் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாயிருப்பவன். 
மூவுலகுக்கு ஒரு மூர்த்தி: -சிவபரத்துவம் கூறியவாறு, முற்பாட்டினிலும் காண்க. காத்தான்- மூவுலகையும்
காத்தவன், காக்கின்றவன், காப்பவன். கனிந்தவரைக் கலந்தாட் கொள்ளல் மேலும் கூறப்பட்டது . 
அழகமர் வெண்ணி என்றதால் தவச்சிறப்பு விளங்கும். அம்மான் - அரிய மகன். மகன் - கடவுள். 
மகள்-திருமகள், நாமகள். ஏத்தாதார்- துதித்து வணங்காதார். ஏத்துதல்- தோத்திரத்தால் வழிபடல்.
சிவபிரானை ஏத்தாதவர் மக்கட் பிறப்பினராயினும் பேய் போன்றவரேயாவர். "மனத்துன்னை
நினைப்பின்றிப் பேயாய்த் திரிந்தெய்த்தேன்' என்னும் அருள்மொழிப் பகுதியைக் காண்க. 
திருவள்ளுவரும் 'வையத்தலகை' என்றார். 

    It is Civan the Lord of Venni who is the foremost and the primordial. He is the 
only one Supreme God of all the three worlds who protects one and all. There are true 
and mature people, who with wisdom and melting emotions, pray on the Lord. Our Lord 
mixes in the minds of such people happiness and grace. He abides in His beautiful city 
of Venni. There might be some people who do not pray to our Lord. They will be abject 
and mean, become very low like devils and wander in the world in future.

1616.    நீரானைநிறைபுனல்சூழ்தருநீள்கொன்றைத் 
    தாரானைத்தையலொர்பாகமுடையானைச் 
    சீரானைத்திகழ்தருவெண்ணியமர்ந்துறை 
    ஊரானையுள்கவல்லார்வினையோயுமே.        5

    நீரானை, நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றைத் 
    தாரானை, தையல் ஒர்பாகம் உடையானை, 
    சீரானை, திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை 
    ஊரானை, உள்க வல்லார் வினை ஓயுமே.

    nIrAnai, niRai punal cUztaru nIL konRait 
    tArAnai, taiyal OrpAkam uTaiyAnai, 
    cIrAnai, tikaztaru veNNi amarntu uRai 
    UrAnai, uLka vallAr vinai OyumE.

பொருள்:     ஒளிமயமானவனை, நிறை புனலாகிய கங்கையைத் தன் தலையில் கொண்டவனை, 
கொன்றை மலர் மாலை அணிந்தவனை, உமாதேவியை இடப்பாகத்தில்  கொண்டவனை, 
சிறப்பு மிக்கவனை, வெண்ணிப் பதியில் கோயில் கொண்டவனை, அன்புடன் நினைப்பவர்களின் 
வினை எல்லாம் நீங்கப் பெறும்.

குறிப்புரை:     நிறைபுனல்- கங்கைநீர். தலையிற் கங்கையைச் சூழக் கொன்றை மாலை அணிந்தான். 
திருவெண்ணியூர் அமர்ந்து உறைவான் என்று இயைத்துக் கொள்க. தோத்திரம் புறப் பூசையினும் சிறந்தது. 
அகத்தில் செய்யும் தியானம் அவ்விரண்டினும் பெரும்பயன் அளிப்பது. திரிகரணங்களாலும் ஆகும் 
வினைகளை அத்திரிகரணங்களாலும் தீர்க்கும் வழிகள் தியானம், தோத்திரம், நமஸ்காரம், பூஜை 
முதலியவை. அவற்றுள் தியானமே உத்தமம் ஆதலின், உள்க வல்லார் வினை ஓயும் என்று அருளினார்.

    Civan, the Lord of Venni is the purest and brightest light. He has the profuse
river Ganges on His head. He is cool and serene as water itself. He has beautified His 
matted hair with the garland of cassia flowers. He shares His body with our goddess Uma. 
He is the embodiment of all virtues. He abides in Venni. Those who always meditate on 
His holy feet will not suffer bad karma in their life. 

1617.     முத்தினைமுழுவயிரத்திரள்மாணிக்கத் 
    தொத்தினைத்துளக்கமிலாதவிளக்காய 
    வித்தினைவிண்ணவர்தாந்தொழும்வெண்ணியில் 
    அத்தனையடையவல்லார்க்கில்லையல்லலே.        6

    முத்தினை,முழுவயிரத்திரள் மாணிக்கத் 
    தொத்தினை, துளக்கம் இலாத விளக்குஆய 
    வித்தினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் 
    அத்தனை,அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

    muttinai, muzuvayirattiraL mANikkat 
    tottinai, tuLakkam ilAta viLakku Aya 
    vittinai, viNNavar tAm tozum veNNiyil 
    attanai, aTaiya vallArkku illai, allalE.

பொருள்:     முத்தாகவும், வயிரமாகவும், மாணிக்க மணியாகவும் விளங்குகின்ற ஈசனை 
அணையா விளக்காக விளங்குபவனை, எல்லாப் பொருள்களுக்கும் வித்தானவனை விண்ணவர்களால் 
வணங்கப் பெறுபவனை, வெண்ணித்தலத்தின் நாதனை அன்புடன் அடைய வல்லார்களுக்கு 
அல்லல் என்பதே இல்லையாம் என்க.

குறிப்புரை:     முத்து, முழு வயிரத் திரள், மாணிக்கத் தொத்து முதலியவை, ஒப்பில்லாத கடவுளுக்கு        
அன்பின் மேலீட்டால், ஒப்புறுத்திச் சொல்லும் உபசார வழக்கு, 'பொருள்சேர் புகழ்' என்ற வள்ளுவர் 
கருத்தும் ஈண்டு நினைக்கத் தக்கது. தொத்து -கொத்து. துளக்கம்- அசைவு. இங்கு அணைதலைக் 
குறித்தது. அணையா விளக்கு என்க. நமக்கு அல்லல் இல்லையாம்படி சிவனை அடையும் வன்மையைப் 
பெறத் தவஞ்செய்தல் வேண்டும்.

    Civan the Lord of Venni is a perfect pearl, a wholesome well-developed diamond, 
as well as a bunch of valuable ruby. He is the seed of all and everything from which 
inextinguishable lights emerge. He is worshipped at Venni by all the celestials.
He is our Supreme Master. Those devotees who aspire and succeed in reaching and 
worshipping Him will be free of all trouble in life.

1618.     காய்ந்தானைக்காமனையுஞ்செறுகாலனைப் 
    பாய்ந்தானைப்பரியகைமாவுரித்தோல்மெய்யில் 
    மேய்ந்தானைவிண்ணவர்தாந்தொழும்வெண்ணியில் 
    நீந்தானைநினையவல்லார்வினைநில்லாவே.        7

    காய்ந்தானைக் காமனையும் செறு காலனைப் 
    பாய்ந்தானை, பரிய கைம்மாஉரித்-தோல் மெய்யில் 
    மேய்ந்தானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் 
    நீந்தானை,நினைய வல்லார் வினை நில்லாவே.

    kAyntAnaik kAmanaiyum, ceRu kAlanaip 
    pAyntAnai, pariya kaimmA urit-tol meyyil
    mEyntAnai, viNNavartAm tozum veNNiyil 
    nIntAnai, ninaiya vallAr vinai nillAvE.

பொருள்:     மன்மதனைக் காய்ந்து பொடிப்பொடியாக்கியவனை, காலனைக் காலால் 
உதைத்து அருளியவனை, கரியின் தோலை உரித்து ஆடையாகக் கொண்டவனை, 
விண்ணவர்களால் தொழப் பெறுபவனை, வெண்ணியில் உறைபவனை நினைய 
வல்லார்களின் வினைகள் நில்லாவாம்.

குறிப்புரை:     காமன் - பெண்ணாசையை வளர்ப்பவன், மன்மதன், காமத்திற்கு அதிதேவதை. 
காமன்- இயமன். காய்ந்தான் - கோபித்து எரித்தான். பாய்ந்தான் - பாய்ந்து உதைத்தான். பரிய - 
பருமையுடைய, பருத்த. கை- துதிக்கை. மா-யானை. உரி - உரித்த தோல். உரித்தோல் - உரியாகிய தோல்.
உரி - முதனிலைத் தொழிற்பெயர். அஃது ஆகுபெயராய்த் தோலை உணர்த்துமிடமும் உண்டு. இங்குத் 
தோல் என்று அடுத்திருப்பதால் தொழிற்பெயராய் மட்டும் கொள்ளப்பட்டது. மெய் - திருமேனி. 
மேய்ந்தான் - வேய்ந்தான், அணிந்தான். நீந்தான் - கடவுள்.

    It is Civan the Lord of Venni who once got wild with cupid, the god of love 
and killed him with the fire from His third eye. On another occasion He kicked the 
god of death, Kaalan, to death. Once He skinned the huge elephant, killed it and 
covered His body with its skin. He is always worshipped by the celestials. He abides 
always in Venni. Those devotees who approach Him, and contemplate on Him will not 
suffer the evil effects of their karma.

1619.     மறுத்தானைமாமலையைமதியாதோடிச் 
    செறுத்தானைத்தேசழியத்திகழ்தோள் முடி 
    இறுத்தானையெழிலமர்வெண்ணியெம்மானெனப் 
    பொறுத்தானைப்போற்றுவாராற்றலுடையாரே.        8

    மறுத்தானை,மாமலையை மதியாது ஓடிச் 
    செறுத்தானைத் தேசு அழியத் திகழ் தோள்முடி 
    இறுத்தானை, “எழில் அமர் வெண்ணி எம்மான்" எனப் 
    பொறுத்தானை, போற்றுவார் ஆற்றல் உடையாரே.

    maRuttAnai, mAmalaiyai matiyAtu OTic 
    ceRuttAnait tEcu aziyat tikaz tOLmuTi 
    iRuttAnai, "ezil amar veNNi emmAn!" enap
    poRuttAnai, pORRuvAr ARRal uTaiyArE.

பொருள்:     இறைவனை மறந்து கயிலாய மலையைத் தூக்கிட நினைத்த இராவணனின்
வலிமையை அழித்தவனை, அவனது தோள்களையும் முடிகளையும் நெறித்தவனை, அழகு 
பொருந்திய வெண்ணிப் பதியில் உறைபவனை, போற்றும் அடியார்கள் எல்லாவிதமான
ஆற்றலையும் பெற்றவர்கள் ஆவார்கள்.

குறிப்புரை:     மறுத்தானை- பகைவனை. ஒன்றார்- பொருந்தாதார் மறுத்தார் என்பவைப்  போலப் 
பகைவரைக் குறித்தற்கு ஆளும் பெயர்களை அறிந்து கொள்ளலாம். மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்
கறுத்தவன் (தி.1 ப. 109 பா. 8) செறுத்தான்- கோபித்தவனை. மறுத்தல், செறுத்தல் இரண்டும் இராவணன் 
தொழில். இறுத்தல் - முரித்தல். இறுத்தவனும் பொறுத்தவனும் சிவபிரான். ஆற்றல்- ஞானபலம் 
முதலிய யாவும்.

    Civan, the Lord of Venni, is our Lord Supreme. The king of Sri Lanka was a very
great devotee of Lord Civa. At one stage due to his ego and arrogance, he tried to lift
the great mountain Kailash defying Lord Civan and His consort Umaa who resided there. 
Our Lord of Venni subdued him with his twenty strong shoulders. The king realised 
his mistake, begged for pardon and sang very beautiful songs about the glory of our 
Lord in Saama tune. Our Lord pardoned and blessed him. Those devotees who hail His
virtues will become mighty in all respects.

1620.    மண்ணினைவானவரொடுமனிதர்க்கும் 
    கண்ணினைக்கண்ணனுநான்முகனுங்காணா 
    விண்ணினைவிண்ணவர்தாந்தொழும் வெண்ணியில் 
    அண்ணலையடையவல்லார்க்கில்லையல்லலே.        9

    மண்ணினை,வானவரொடு மனிதர்க்கும் 
    கண்ணினை, கண்ணனும் நான்முகனும் காணா 
    விண்ணினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் 
    அண்ணலை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

    maNNinai, vAnavaroTu manitarkkum             
    kaNNinai, kaNNanum nAnmukanum kANA 
    viNNinai, viNNavar tAm tozum veNNiyil 
    aNNalai, aTaiya vallArkku illai, allalE.

பொருள்:     மண்ணாகவும் விளங்கும் இறைவனை, தேவர்க்கும் மனிதர்க்கும் கண்ணாக 
இருப்பவனை, கண்ணனும் நான்முகனும் அறிய முடியாப் பெருமானை, தேவர்களால்
வணங்கப் பெறும் சிறப்புடையவனை, வெண்ணியின் அண்ணலை அடைய வல்லவர்களுக்கு 
அல்லல் இல்லை என்க.

குறிப்புரை:     மண்ணினை - அஷ்டமூர்த்தத்துள் பிருதுவி ரூபமாக இருக்கின்ற சிவனை. 
உலகுக்கெல்லாம் ஒருகண், உயிர்க்கெல்லாம் கண் என்பதனால், வானவர்க்கும் மனிதர்க்கும் 
கண்ணினை என்றார். பெண்ணவன்காண்.... எல்லாம் காணும் கண்ணவன்காண் (தி. 6 ப. 48 பா. 7) 
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான்கண்டாய் (தி. 6 ப. 73 பா.2) விண்- திருச்சிற்றம்பலம். 
அண்ணல் -முன்னைப்  பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள். அல்லல் - பிறவித் துன்பம்,
 இம்மையில் உறும் துயரம் எல்லாம்.

    It is Civan, Lord of Venni is our Supreme. He is the embodiment of eight 
denominations such as air, earth, water, fire, sky, sun, moon and soul. Here He is 
represented as earth and the divine eye to both the celestials and the earthly people. 
Once Vishnu and Brahma attempted to apprehend our Lord, but in vain. He is worshipped 
by the celestials. He is our Lord of Venni; those who can reach His holy feet will have
no evils in life.

1621.    குண்டருங்குணமிலாதசமண்சாக்கிய 
    மிண்டர்கள்மிண்டவைகேட்டுவெகுளேன்மின் 
    விண்டவர்தம்புரமெய்தவன்வெண்ணியில் 
    தொண்டராயேத்தவல்லார்துயர்தோன்றாவே.        10

    குண்டரும் குணம் இலாத சமண்சாக்கிய 
    மிண்டர்கள் மிண்டு அவை கேட்டு வெகுளேன்மின்! 
    விண்டவர்தம் புரம் எய்தவன் வெண்ணியில் 
    தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே.

    kuNTarum kuNam ilAta camaNcAkkiya 
    miNTarkaL miNTu avai kETTu vekuLEnmin!             
    viNTavartam puram eytavan veNNiyil 
    toNTarAy Etta vallAr tuyar tOnRAvE.

பொருள்:     சமணரும், சாக்கியரும் நற்குணமற்றவர்கள்.  முரட்டுத்தனம் கொண்டவர்கள்
ஆவார்கள்.  அவர்கள் கூறும் பொய்யுரை கேட்டு கோபம் கொள்ள வேண்டாம். நம் பெருமான் 
முப்புரங்களை சிரித்தே எரித்தவர் ஆவார். அவர் கோயில் கொண்டுள்ள வெண்ணிப் பதியில் 
வாழ்கின்ற மெய்த்தொண்டர்களே நீங்கள் எம்பெருமானையே ஏத்தி வழிபாடு செய்யுங்கள். 
உங்களைத் துன்பமே வந்து அடையாது என்க.

குறிப்புரை:     குண்டர் - கற்குண்டு போலக் கட்டமைந்த உடம்பினர். சமணர், சாக்கியர். 
மிண்டர்- மிடுக்குடையவர். மிண்டவை - அதிக பிரசங்கம். வெகுளேல்மின் - சைவாகமப் பொருள் 
உண்மைகளைக் கோபித்து அலட்சியம் செய்யாதீர்கள். எதிர்மறைப் பன்மையேவல். மின் பன்மை விகுதி. 
அது நீங்கின்  ஒருமையாதல் தெரியும். விண்டவர்- பகைவர்.

    You people of Venni, need not be angry while hearing the boisterous words of 
those stout bellied Jains and the Buddhists lacking in character. Ye devotees! come here
to Venni where our Lord who destroyed the enemies of three forts resides, bow at His 
holy feet and find no sufferings.

1622.     மருவாருமல்குகாழித்திகழ்சம்பந்தன் 
    திருவாருந்திகழ்தருவெண்ணியமர்ந்தானை 
    உருவாருமொண்தமிழ்மாலையிவைவல்லார் 
    பொருவாகப்புக்கிருப்பார்புவலோகத்தே.        11

    மரு ஆரும் மல்கு காழித் திகழ் சம்பந்தன், 
    திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை, 
    உரு ஆரும் ஒண்தமிழ்மாலைஇவை வல்லார் 
    பொருஆகப் புக்கு இருப்பார், புவலோகத்தே.

    maru Arum malku kAzit tikaz campantan, 
    tiru Arum tikaztaru veNNi amarntAnai, 
    uru Arum oN tamizmAlai ivai vallAr 
    poru Akap pukku iruppAr, puvalOkattE.


பொருள்:     மணம் நிறைந்த சீர்காழிப்பதியில் அவதரித்தவரே திருஞான சம்பந்தர் ஆவார். 
அவர் அழகு பொருந்திய வெண்ணிப் பதியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானை நினைத்து 
தமிழ்மாலை செய்துள்ளார். அதனை விரும்பிப் பாடும் அடியார்கள் சிவலோகத்தை அடைந்து 
சிறப்புறுவார்கள் என்க. 

குறிப்புரை:     மருவாரும் - மணம் நிறையும். பொருந்தாதவரும் காழியைப் பொருந்தி வழிபடு 
சிறப்புணர்த்தியதுமாம். மல்கு - நிறையும். திரு - நீர்வளம் முதலிய எல்லாச் செல்வங்களும். ஆரும் - 
நிறைந்துள்ள. திகழ்தரு-விளங்குகின்ற. (பிரசித்தி குறித்தது) அமர்ந்தான்- திருக்கோயில் 
கொண்டிருக்கின்றவன். உரு ஆரும் - ஞானவடிவம் பூரணமாயிருக்கும். பொரு -(உறழ்பொரு) சிறப்பு. 
பூலோகத்தினும் மேலானது புவலோகம். அஃது இங்குச் சிவலோகத்தை உணர்த்திற்று.

    Saint Thiru-gnana-Sambandar hails from fragrant Kaazhi. He sang these ten verses 
of pure beautiful Tamil as a garland of music on the Lord of Venni. This Venni is a very 
rich place of all sorts of wealth. Those who can repeat these ten verses from memory will 
live happily in the Civa Loka, the brightest place in the cosmos.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            14ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 14th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 151                பதிக எண்: 15

15. திருக்காறாயில்                     15. THIRU-K-KAARAAYIL
பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam-Vinaa Urai

திருத்தல வரலாறு

    திருக்காறாயில் என்னும் இத்திருத்தலமானது திருவாரூர்க்குத் தெற்கே சுமார் 12 கி.மீ
தூரத்தில் அமைந்திருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் நூற்றுப் பத்தொன்பதாவது 
ஆகும். திருவாரூரிலிருந்து கச்சனம், திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளில் செல்லலாம். 
இறைவரது திருப்பெயர் கண்ணாயிர நாதர். இறைவியாரது திருப்பெயர் கைலாச நாயகி. 
சப்தவிடங்கத் தலங்களில் இத்திருத்தலமும் ஒன்று. தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது கோயிலுக்கு 
வடபுறத்தில் உள்ளது.

    இத்தீர்த்தத்தின் வடகரையில் கடுக்காய்ப் பிள்ளையார் கோயில் இருக்கின்றது. ஒரு 
வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகளைக் கடுக்காய் மூட்டைகள் எனக்கூற, இப்பிள்ளையாருடைய
திருவிளையாடலால் அவைகள் கடுக்காய் மூட்டைகள் ஆயின. பின் வணிகனின் வேண்டுகோளின்படி 
அவைகள் முன்போலவே ஜாதிக்காய்கள் ஆயின. ஆதலால் அப்பிள்ளையாருக்கு அப்பெயர் வந்தது என்பர்.

    இது முசுகுந்த சக்கரவர்த்தி தேவேந்திரனிடம் பெற்றுக் கொண்டு வந்த தியாகேசர்
திருமேனிகள் ஏழனுள் ஒன்றை எழுந்தருளுவித்த சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். தேவேந்திரன் 
மற்றும் முசுகுந்த சக்கரவர்த்தி பூசித்த பதி. புரட்டாசி மாதம் பௌர்ணமியே தேவேந்திரன் பூசித்த 
நாளாகும் என்பர். இன்றும் அப்பூசையை மக்கள் நடத்தி வருகின்றனர். இது ஞானசம்பந்தரால் 
பாடப்பெற்றது. அவருடைய பதிகம் ஒன்றை உடையது. இக்கோயிலின் அருகே வெள்ளையாறு 
ஓடுகின்றது. கோயிலின் பரப்பளவு 115-172 ஆகும்.

பதிக வரலாறு

    திருவைந்தெழுத்தின் மெய்ம்மையை உணர்ந்த பிள்ளையார், திருவாரூர்ப் புற்றிடங்
கொண்டாரைப் போற்றிப் பணிந்து வைகுங்காலத்தில், 'வலிவலம் கோளிலி முதலாம்' பதி
 பலவற்றுள் ஒன்றான இத்திருக்காறாயிலை வணங்கிப் பாடியது இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

1623.    நீரானேநீள்சடைமேலொருநிரைகொன்றைத் 
    தாரானேதாமரைமேலயதான்தொழும் 
    சீரானேசீர்திகழுந்திருக்காறாயில் 
    ஊரானேயென்பவரூனமிலாதாரே.        1

    "நீரானே! நீள்சடைமேல் ஒரு நிரை கொன்றைத் 
    தாரானே! தாமரைமேல் அயன் தான் தொழும் 
    சீரானே! சீர் திகழும் திருக் காறாயில்
    ஊரானே!" என்பவர் ஊனம் இலாதாரே.

    nIrAnE!nILcaTaimEl oru nirai konRait             
    tArAnE! tAmarai mEl ayantAn tozum 
    cIrAnE! cIr tikazum tiruk kARAyil 
    UrAnE!" enpavar Unam ilAtArE.

பொருள்:     கங்கையைத் தலையில் தரித்தவனை, நீண்ட சடையில் கொன்றை மலர் மாலையை
அணிந்தவனை, தாமரை மலர்மீது விளங்கும் பிரமனால் தொழப்பட்டவனை, சிறப்புமிக்க திருக்காறாயில் 
தலத்தில் பொருந்தியவனை வழிபடுபவர் குறைபாடு அற்றவர் ஆவர்.

குறிப்புரை:     நீள்சடைமேல் நீரான்- நீண்ட சடையின்மேல் கங்கை நீரை உடையவன். நிரை- வரிசை.
தார்- மாலை. தாமரைமேல்அயன் - செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமன். அயன் அஜன்,தோன்றாதவன் 
என்பது அடிச்சொற்பொருள். சீரான் - மேன்மையை உடையவன்.   ஊனம்- பிறவி முதலிய குறைகள்.

    Behold! Civan, the Lord of Thiru-k-kaaraayil has adorned His long matted hair 
with Ganges river, and garland of cassia flowers. He is worshipped by the deity Brahma 
who resides in lotus flower and His abode is Thiru-k-kaaraayil. This city is a holy 
place of virtues. Those who recite His glories thus will be free of all troubles 
including rebirth.

1624.     மதியானேவரியரவோடுடன்மத்தஞ்சேர் 
    விதியானேவிதியுடைவேதியர்தாந்தொழும் 
    நெதியானேநீர்வயல்சூழ்திருக்காறாயிற் 
    பதியானேயென்பவர்பாவமிலாதாரே.        2

    "மதியானே! வரிஅரவோடு உடன் மத்தம் சேர் 
    விதியானே! விதி உடை வேதியர் தாம் தொழும் 
    நெதியானே! நீர் வயல் சூழ் திருக் காறாயில் 
    பதியானே!" என்பவர் பாவம் இலாதாரே.

    "matiyAnE! vari aravOTu uTan mattam cEr 
    vitiyAnE! viti uTai vEtiyartAm tozum 
    netiyAnE! nIr vayal cUz tiruk kARAyil 
    patiyAnE!" enpavar pAvam ilAtArE.

பொருள்:     பிறைமதியைத் தலையில் சூடிய இறைவன் என்றும் பாம்பையும் ஊமத்த மலரையும் 
அணிந்தவன் என்றும் வேதவிதிப்படி அந்தணர்களால் தொழப்படுபவன் என்றும் வயல்கள் சூழ்ந்த 
காறாயில் பதியில் உறைபவன் என்றும் உளம் மகிழ்ந்து கூறும் அடியார்கள் பாவமில்லாதவர் ஆவர் என்க.

குறிப்புரை:     மதி - பிறைச்சந்திரன். அரவு - பாம்பு. மத்தம் - ஊமத்தம்பூ. விதியான் - ஊழானவன்,
பாக்கியமானவன், விதிக்குங்கர்த்தா. விதித்தலை உடையவன். விதி உடை வேதியர் - வேதத்தில் விதித்தவை 
செய்தலும் விலக்கியவை செய்யாமையுமாகிய விதியை உடைய மறையவர். நெதி - நிதி, செல்வம்.

    Behold! It is Civan the Lord of Thiru-k-kaaraayil. He has adorned His head with
the moon, striped snake and datura flowers. He is the destiny maker for all the souls as 
per their fate. He is the personification of wealth. He is worshipped by the Vedic scholars 
as per the Vedic rules and His abode in Thiru-k-kaaraayil is a holy place surrounded by 
plenty of ponds and paddy fields. Devotees who offer worship and pray, citing these details, 
will be sinless. They would not be in the grip of their bad karma.

1625.    விண்ணானேவிண்ணவரேத்திவிரும்புஞ்சீர் 
    மண்ணானேமண்ணிடைவாழுமுயிர்க்கெல்லாம்
    கண்ணானேகடிபொழில்சூழ்திருக்காறாயில் 
    எண்ணானேயென்பவரேதமிலாதாரே.        3

    "விண்ணானே! விண்ணவர் ஏத்தி விரும்பும் சீர் 
    மண்ணானே! மண் இடை வாழும் உயிர்க்கு எல்லாம் 
    கண்ணானே! கடிபொழில் சூழ் திருக் காறாயில் 
    எண்ணானே!" என்பவர் ஏதம் இலாதாரே.

    "viNNAnE! viNNavar Etti virumpum cIr 
    maNNAnE! maN iTai vAzum uyirkku ellAm         
    kaNNAnE! kaTipozil cUz tiruk kARAyil 
    eNNAnE!" enpavar Etam ilAtArE.

பொருள்:     ஆகாயம் போல் அனைத்தையும் தன்னுள் அடக்கியவன் என்றும், தேவர்களால் 
வழிபடப்படுபவன் என்றும், மண்ணில் பொருந்தியவன் என்றும், மண்ணில் வாழும் உயிர்களுக்குக் 
கண் போன்றவன் என்றும், மணமிக்க சோலைகள் நிறைந்த திருக்காறாயில் என்ற திருத்தலத்தில் 
கோயில் கொண்டவன் என்றும் ஈசனே என்றும் போற்றுபவர்கள் குற்றம் நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.

குறிப்புரை:     விண்-  வீட்டுலகம், உயிர்க்கெல்லாம் கண். (தி. 2 ப. 14 பா. 9) எண்- எண்ணம். எண்ணான்- 
உள்ளத்தில் இருப்பவன். எண்ணப்படாதவன், எண்ணுதற்குப் பொருளாய் இருப்பவன், அளக்கும் அளவாய் 
உள்ளவன். ஏதம் - குற்றம், கேடு, துன்பம் (எல்லாம்).

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kaaraayil. He is the celestial world itself. 
Though He is part and parcel of this world, He is also the earth and is worshipped by the 
celestials. He is the vital vision of the souls on the earth. He abides in the hearts of 
the people of Thiru-k-kaaraayil surrounded by fragrant gardens. The devotees praying 
to the Lord of this place, quoting these details, will be free of blemishes and sorrows.


1626.    தாயானேதந்தையுமாகியதன்மைகள் 
    ஆயானேயாயநல்லன்பர்க்கணியானே 
    சேயானேசீர்திகழுந்திருக்காறாயில் 
    மேயானேயென்பவர்மேல்வினைமேவாவே.        4

    "தாயானே! தந்தையும் ஆகிய தன்மைகள்
     ஆயானே! ஆய நல் அன்பர்க்கு அணியானே! 
    சேயானே! சீர் திகழும் திருக் காறாயில் 
    மேயானே!" என்பவர் மேல் வினை மேவாவே.

    "tAyAnE! tantaiyum Akiya tanmaikaL 
    AyAnE! Aya nal anparkku aNiyAnE! 
    cEyAnE! cIr tikazum tiruk kARAyil 
    mEyAnE!" enpavarmEl vinai mEvAvE.

பொருள்:     தாயாக விளங்குபவனே! தந்தையாய் விளங்கி அருள்புரியும் நாதனே! 
நல்லடியார்களுக்கு அருகிருந்து உதவுபவனே! அல்லாதவர்களையும் சேய்மையில் இருந்து 
காப்பவனே! சீர் திகழும் திருக்காறாயில் தலத்தில் உறைபவனே என்றெல்லாம் இறைவனை 
போற்றி வணங்குபவர்களை வினைகள் சென்று அடையாவாம்.

குறிப்புரை:     தாயான் + தந்தை.... ஆயான்- அம்மையப்பர். மெய்யுணர்வும் அன்பும் உடைய
 இருநிறத்தாரையும் நல்லன்பர் என்பது வழக்கம். கண்ணப்பர் நல்லன்பர், மெய்கண்டார் மெய்யுணர்வினர்.
 இருவரும் அன்பிற் சிறிதும் வேறுபடார். சேயான் - செந்நிறத்தன் எனப் பொருள் கூறலாம்.  ஆயினும் 
முன் அணியான் என்றதனால் சேய்மை (தூரம்) இடத்தினன் என்பதே பொருத்தம். மேயான் - மேவியவன்,
மேவா-பொருந்தா.

    Behold! It is Civan the Lord of Thiru-k-kaaraayil. He is Mother Supreme, Father Supreme, 
and the paternal embodiment for one and all. He is very near to all His sincere devotees.         
Yet He is a distant one for other people. He has His abode at Thiru-k-kaaraayil, 
a place of virtues. Those devotees who recite His greatness and adore Him thus will never 
suffer the evil effects of karma.

1627.     கலையானேகலைமலிசெம்பொற்கயிலாய 
    மலையானேமலைபவர்மும்மதில்மாய்வித்த 
    சிலையானேசீர்திகழுந்திருக்காறாயில் 
    நிலையானேயென்பவர்மேல்வினைநில்லாவே.        5

    ''கலையானே! கலை மலி செம்பொன் கயிலாய 
    மலையானே! மலைபவர் மும்மதில் மாய்வித்த 
    சிலையானே சீர் திகழும் திருக் காறாயில் 
    நிலையானே!" என்பவர் மேல் வினை நில்லாவே.

    "kalaiyAnE! kalai mali cempon kayilAya 
    malaiyAnE! malaipavar mummatil mAyvitta 
    cilaiyAnE! cIr tikazum tiruk kARAyil 
    nilaiyAnE!" enpavarmEl vinai nillAvE.

பொருள்:     வேத சாத்திரப் பொருளானே! வேதம் முழங்கும் கயிலாய மலையில் 
பொருந்தியவனே! முப்புரங்களை அழித்த பெருமானே! சீர்திகழ் காறாயில் தலத்தில் 
 உறைபவனே என்று போற்றி வணங்குபவரிடத்து வினைகள் சென்று சேராவாம்.

குறிப்புரை:     கலையான்- கலைகளாயும் அவற்றின் ஞானமாயும் உள்ளவன். 
செம்பொற் கயிலாயமலை- வெண்மைநிறமுடையது. வெண்கயிலை என்றதற்கு முரணன்று. 
இமயத்தை மேரு என்றும் மேருவை இமயம் என்றும் நூல்களிற் கூறுவதுபோல் கூறப்பட்டது. 
பனிமலையில் தவளகிரியும் காஞ்சனசிருங்கமும் உண்டு. மலைபவர் - போர்செய்பவர், 
திரிபுரத்தசுரர். சிலை- மேருவில். நிலை- உறையுள்; திருக்கோயில், நிலையானவனுமாம். 

    Behold! It is Civan the Lord of Thiru-k-kaaraayil. He is the founder of all 
arts and scriptures. He has that bow in His hand with which He destroyed all the three 
forts of the enemies. He is the occupant of the beautiful golden mount Kailash. He has 
His abode in Thiru-k-kaaraayil. It is a place of sanctity. Those devotees who praise 
His glories and worship Him with such words will have trouble-free life forever.

1628.     ஆற்றானேயாறணிசெஞ்சடையாடர                
    வேற்றானேயேழுலகும்மிமையோர்களும் 
    போற்றானேபொழில்திகழுந்திருக்காறாயில் 
    நீற்றானேயென்பவர்மேல்வினைநில்லாவே.        6

    "ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு 
    ஏற்றானே! ஏழ்உலகும்(ம்) இமையோர்களும் 
    போற்றானே! பொழில் திகழும் திருக் காறாயில் 
    நீற்றானே!" என்பவர் மேல் வினை நில்லாவே.

    "ARRAnE! ARu aNi cenjcaTai ATu aravu 
    ERRAnE! Ez ulakum(m) imaiyOrkaLum 
    pORRAnE! pozil tikazum tiruk kARAyil 
    nIRRAnE!" enpavarmEl vinai nillAvE.

பொருள்:     யாவையுமாகி இருப்பவனே! கங்கை நதியை அணிந்த சடையில் அரவையும் 
ஏற்றவனே! ஏழுலக உயிர்களாலும் இமையவர்களாலும் தொழப் பெறுபவனே! பொழில்கள் நிறைந்த
திருக்காறாயில் தலத்தில் கோயில் கொண்டவனே! திருநீற்றை அணிந்தவனே! என்று போற்றித் 
துதிப்பவர்களிடத்து வினைகள் நிலை பெறாவாம் என்க.

குறிப்புரை:     ஆற்றான்- ஆறுடையவன். வேதாகம வழியினன். ஆடரவு - ஆடும் பாம்பு. 
ஏற்றான்- தாங்கியவன். போற்று - துதி. பொழில் - சோலை. நீற்றான் - திருநீற்றை அணிந்தவன்.

    Behold! It is Civan the Lord of Thiru-k-kaaraayil. He is the embodiment of 
everything in the world. He has the river Ganges on His matted red hair. He beautifies 
His matted hair with the dancing snake. People in all the upper seven worlds and in 
the lower seven worlds and the devaas, celestials and all others worship Him. 
The upper seven worlds are: (1) Boolokam, (2) Buvar Lokam, (3) Suvar Lokam, (4)Sana Lokam, 
(5) Dhabo Lokam, (6) Mahaa Lokam and (7) Sathya Lokam. The lower seven worlds are: 
(1) Adhalam, (2) Vidhalam, (3) Sudhalam, (4) Tharaadhalam (5) Mahaadhalam, (6) Rasaadhalam
and (7) Paadhalam. His body is smeared with white ashes. He has His abode in Thiru-k-kaaraayil.
Those devotees who praise His virtues and worship the Lord will get no bad karma.

1629.     சேர்த்தானேதீவினைதேய்ந்தறத்தேவர்கள் 
    ஏத்தானையேத்துநன்மாமுனிவர்க்கிடர் 
    காத்தானேகார்வயல்சூழ்திருக்காறாயில் 
    ஆர்த்தானேயென்பவர்மேல்வினையடராவே.        7

    "சேர்த்தானே! தீவினை தேய்ந்து அறத் தேவர்கள் 
    ஏத்தானை! ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர் 
    காத்தானே! கார் வயல் சூழ் திருக் காறாயில் 
    ஆர்த்தானே!" என்பவர் மேல் வினை அடராவே.

    "cErttAnE! tIvinai tEyntu aRat tEvarkaL 
    EttAnE! Ettum nal mA munivarkku iTar 
    kAttAnE! kAr vayal cUz tiruk kARAyil 
    ArttAnE!" enpavarmEl iTar vinai aTarAvE.

பொருள்:     பல பிறவிகள் வாயிலாகச் சேர்ந்த தீயவினைகள் அற்று நீங்கும்படி செய்த பெருமானே! 
தேவர்களால் வழிபடப்படுபவனே! வழிபடும் முனிவர்களின் துன்பங்களை நீக்குபவனே! வயல்கள் சூழ்ந்த 
திருக்காறாயில் தலத்தில் பொருந்தியவனே! எனத் துதி செய்து வணங்குபவர்களிடத்து தீவினைகள் 
சென்று சேராவாம்.

குறிப்புரை:     ஏத்தான் - புகழ்களை எடுத்துச் சொல்லுதலைப் பெற்றவன். காத்தான் - தடுத்தவன்.
கார்- மேகம். வானோர்க்கும் பயிர்க்கிடம் ஆதலின் கார்வயல் என்றார். விளைபயிர் தோற்றம் பற்றியதுமாம்.
ஆர்த்தான் - நிறைந்தவன். ஊட்டியவன். ஆடா - வெல்லா. ஆடராவே என்பது பின்னோர் பதிப்பின் பாடம். 
அடரா - தாக்கா.

    Oh Civa! He is the Lord of Thiru-k-kaaraayil. He destroyed all our bad karmas which we 
accumulated in all our previous births. He is worshipped by all devaas. He is the great saviour 
of those worshipping sages against obstacles. He has His abode in Thiru-k-kaaraayil which is 
surrounded by dark green paddy fields. Those devotees who in this way cite His glories will get     
all benefits from Him. They will not be affected by their bad karma, since it will be inoperative.

1630.     கடுத்தானேகாலனைக்காலாற்கயிலாயம் 
    எடுத்தானையேதமாகம்முனிவர்க்கிடர் 
    கெடுத்தானே கேழ்கிளருந்திருக்காறாயில் 
    அடுத்தானேயென்பவர்மேல்வினையடராவே.        8

    "கடுத்தானே காலனைக் காலால் கயிலாயம் 
    எடுத்தானை ஏதம் ஆக(ம்) முனிவர்க்கு இடர் 
    கெடுத்தானே ! கேழ் கிளரும் திருக் காறாயில் 
    அடுத்தானே!" என்பவர் மேல் வினை அடராவே.

    "kaTuttAnE, kAlanaik kAlAl! kayilAyam 
    eTuttAnai Etam Aka(m), munivarkku iTar
    keTuttAnE! kEz kiLarum tiruk kARAyil
    aTuttAnE!" enpavarmEl vinai aTarAvE.

பொருள்:     காலனைக் காலால் காய்ந்தவனே! கயிலாயத்தை எடுத்த இராவணனின் 
வலிமையைக் கெடுத்தவனே! முனிவர்களின் துன்பத்தை நீக்கியவனே! ஒளிதிகழ் திருக்காறாயில் 
தலத்துள் உறைபவனே! என இவ்வாறு போற்றி வழிபடும் அடியவர்களிடத்து வினைகள் சென்று 
பொருந்தாவாம்.

குறிப்புரை:     கடுத்தான் - கோபித்(து உதைத்)தான். ஆக+முனிவர் என்புழி மகரம் இசைபற்றி 
நின்றது. இராவணனுக்கு - ஏதம் (துன்பம்) ஆகுமாறும் முனிவர்களுக்கு இடர்கெடுமாறும் செய்தவன். 
கேழ் (ஒளிரும்) நிறம்.

    Oh Civa! He is the Lord of Thiru-k-kaaraayil. He kicked Kaalan, the god of death, 
with His legs when he was about to take away the life of Maarkandeyar. He subdued the 
mightiness of Raavanan by crushing his head and shoulders when he attempted to lift 
His abode, mount Kailash. He chased the sufferings of the sages. He has His abode in 
Thiru-k-kaaraayil, a very bright place. The devotees who praise His virtues will not 
have cruel fate in their life. Bad karma will become ineffective in their lives.

1631.     பிறையானேபேணியபாடலொடின்னிசை 
    மறையானேமாலொடுநான்முகன்காணாத 
    இறையானேயெழில்திகழுந்திருக்காறாயில் 
    உறைவானேயென்பவர்மேல்வினையோடுமே.        9

    "பிறையானே! பேணிய பாடலொடு இன்இசை 
    மறையானே! மாலொடு நான்முகன் காணாத 
    இறையானே! எழில் திகழும் திருக் காறாயில்
     உறைவானே!'' என்பவர் மேல் வினை ஓடுமே.

    "piRaiyAnE! pENiya pATaloTu inicai 
    maRaiyAnE! mAloTu nAnmukan kANAta 
    iRaiyAnE! ezil tikazum tiruk kARAyil 
    uRaivAnE!" enpavarmEl vinai OTumE.

பொருள்:     பிறை நிலவைத் தலையில் அணிந்தவனே! பண்ணும் பாடலும் பொருந்தியதைப்
 போல் வேதமும் பயனுமாய் பொருந்தி நிற்பவனே! திருமால், பிரமன் இவர்களால் அறிய முடியா 
ஒளியாய் விளங்குபவனே! அழகுமிக்க திருக்காறாயில் தலத்தில் உறைபவனே !  எனப் போற்றித் 
துதிப்பவர்களை வினைகள் சென்று சேராவாம்.

குறிப்புரை:     இசை மறையான் - சாமவேதத்தவன். இறையான் - இறைவன். எங்கும் தங்கியவன், 
எழில்-அழகு. உறைவான் - திருக்கோயில் கொண்டவன்.

    Civa is the Lord of Thiru-k-kaaraayil, handsome with the crescent moon. He has 
merged with the Vedas like music with hymns. He is the absolute Lord, who could not be 
perceived by the deities Vishnu and Brahma. He has His abode in Thiru-k-kaaraayil 
which is a holy place of blessed beauty. Those devotees of this place who worship Him
with such glorifying words will not be affected by their bad karma, since it will 
become ineffective.

1632.     செடியாரும்புன்சமண்சீவரத்தார்களும் 
    படியாரும்பாவிகள்பேச்சுப்பயனில்லை 
    கடியாரும்பூம்பொழில்சூழ்திருக்காறாயில் 
    குடியாருங்கொள்கையினார்க்கில்லைகுற்றமே.        10

    செடி ஆரும் புன்சமண் சீவரத்தார்களும் 
    படி ஆரும் பாவிகள் பேச்சுப் பயன் இல்லை; 
    கடி ஆரும் பூம்பொழில் சூழ் திருக் காறாயில்
    குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை, குற்றமே.

    ceTi Arum pun camaN cIvarattArkaLum 
    paTi Arum pAvikaL pEccup payan illai; 
    kaTi Arum pUmpozil cUz tiruk kARAyil 
    kuTi Arum koLkaiyinArkku illai, kuRRamE.

பொருள்:     கொடிய சமணர்களும் சாக்கியர்களும் பயனற்ற சொற்களையே பேசித் திரிவர். 
அவர்களது பேச்சினைக் கேட்பதில் பயன் ஏதும் இல்லை. எனவே அடியவர்களே! பொழில் சூழ்ந்த 
காறாயில் இறைவனின் புகழையே எப்போதும் பேசும் அடியார்களைக் குற்றங்கள் வந்து பொருந்தா!

குறிப்புரை:     செடி - தீநாற்றம். சீவரத்தார்கள் - அழுக்குடையதும், பிறர்பால் காணாததும், அவர்க்கே
வழக்கத்தால் உரியதுமான துவரூட்டிய உடையினை உடுத்தவர்கள் (சமணர் முதலோர்) படி - நிலம். 
கடி - மணம். குடியாருங் கொள்கை- தலவாசம் புரியும் விரதம். அடியார் குடியாவர் (தி.6 ப. 17 பா.6) 
அடியார்கள் குடியாக (தி. 2 ப. 43 பா. 5) என்புழிப்படும் பொருளை உணர்க. குற்றம்- ஆணவம் முதலியன.

    The Jains and Buddhists living in Thiru-k-kaaraayil preach false and sinful sayings. 
Oh devotees! never listen to them; only avoid them. Those who go to Thiru-k- kaaraayil temple 
which is surrounded by fragrant gardens, pray to the Lord and remain consistently 
as His devotees always blemishless.

1633.     ஏய்ந்தசீரெழில்திகழுந்திருக்காறாயில் 
    ஆய்ந்தசீரானடியேத்தியருள்பெற்ற 
    பாய்ந்தநீர்க்காழியுண்ஞானசம்பந்தன்சொல் 
    வாய்ந்தவாறேத்துவார்வானுலகாள்வாரே.        11

    ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக் காறாயில் 
    ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற 
    பாய்ந்த நீர்க் காழியுண் ஞானசம்பந்தன் சொல் 
    வாய்ந்தஆறு ஏத்துவார் வான்உலகு ஆள்வாரே.

    Eynta cIr ezil tikazum tiruk kARAyil 
    Aynta cIrAn aTi Etti aruL peRRa 
    pAynta nIrk kAziyuL njAnacampantan col 
    vAynta ARu EttuvAr vAn ulaku ALvArE.

பொருள்:     நீர்வளம் நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்தவர் திருஞானசம்பந்தர் ஆவார்.
அவர், எழில் மிக்க திருக்காறாயில் தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் புகழ்ந்து 
பாடியுள்ளார். இறைவனருளையும் பெற்றுள்ளார். அவர் பாடியருளிய  பாடல்களை அடியவர்கள் 
பாடி இறையருள் பெற்று வானுலகு ஆளும் சிறப்பைப் பெறுவர்.

குறிப்புரை:     ஏய்ந்த - பொருந்திய. ஆய்ந்தசீர் -வேதாகமங்களுள் ஆராயப்பட்ட (பொருள் சேர்) புகழ். 
பாய்ந்த நீர்க்காழி - வெள்ளப் பெருக்கில் அழியாத உண்மை குறித்ததும் வளமுரைத்ததுமாம். 
வந்தவணம் ஏத்துமவர் வானமடைவாரே என்றது காண்க.

    Our famous saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi, surrounded by
cool water ways and ponds. He received the blessings of our Lord in Thiru-k-kaaraayil 
and also got inspiration from Him. Thereafter he sang these sacred ten hymns on Him. 
The devotees of this place who recite these hymns of Thiru-gnana-Sambandar with fervour 
and offer worship to our Lord of this place will certainly reach the celestial
world and rule there.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            15ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 15th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 152                    பதிக எண்: 16

16. திருமணஞ்சேரி                     16. THIRU-MANANCH-CHERI
பண்: இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam - Vinaa Urai


திருத்தல வரலாறு

    திருமணஞ்சேரி என்னும் இத்திருத்தலமானது மயிலாடுதுறை-கும்பகோணம் 
தொடர்வண்டிப் பாதையில், குத்தாலம் தொடர் வண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே 
சுமார் 5.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து இத்தலத்துக்கு நகரப் 
பேருந்துகள் உள்ளன. இது காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று. இறைவர் திருப்பெயர் 
அருள்வள்ளல்நாதர். இறைவியார் திருப்பெயர் யாழினும் மென்மொழியம்மை. மன்மதன் 
பூசித்துப் பேறுபெற்றான். ஆமை பூசித்து மனித உருப்பெற்றது. இதற்கு ஞானசம்பந்தர் 
அருளிய பதிகம் ஒன்று, அப்பர் அருளிய பதிகம் ஒன்று ஆக இரு பதிகங்கள் இருக்கின்றன.

பதிக வரலாறு

    வேதந்தமிழால் விரித்த வித்தகர், பந்தணைநல்லூரைப் பணிந்து, திருமணஞ்சேரியில் 
தொண்டரோடும் சென்று தொழுது இசைபாடியபோது, 'அயிலாரும் அம்பு' எனத் தொடங்கிப் 
பாடியருளியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1634.     அயிலாருமம்பதனாற்புரமூன்றெய்து
    குயிலாருமென்மொழியாளொருகூறாகி 
    மயிலாருமல்கியசோலைமணஞ்சேரிப் 
    பயில்வானைப்பற்றிநின்றார்க்கில்லைபாவமே.        1

    அயில் ஆரும் அம்பு அதனால் புரம் மூன்று எய்து, 
    குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி, 
    மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் 
    பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

    ayil Arum ampu atanAl puram mUnRu eytu, 
    kuyil Arum menmoziyAL oru kURu Aki, 
    mayil Arum malkiya cOlai maNanjcErip 
    payilvAnaip paRRi ninRArkku illai, pAvamE.

பொருள்:     கூர்மையான அம்பினால் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான்.  அவர்
உமாதேவியை திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர். மயில்கள் விளையாடும் சோலைகள் 
நிறைந்த மணஞ்சேரி என்னும் இத்திருத்தலத்தில்  உறைகின்றவர். அவரைப்பற்றி நின்றார்க்குப் 
பாவம் இல்லை என்க. 

குறிப்புரை:     அயில்- கூர்மை. அம்பு- திருமாலாகிய கணை.  'குயில் வாய்மொழியம்மை' 
என்பது அம்பிகை திருநாமம். பயில்வான்- கோயில் கொண்டு பயில்பவன். பற்றி நிற்றல் - 
பற்று விடுமாறு  வழிபடல்.

    It is Civan, our Lord in Thiru-mananch-cheri, which is a holy place where
peacocks dance in evergreen gardens. He burnt the three forts with a sharp arrow. 
He has shared His body with our goddess Umaa, whose voice is musical like the cuckoo's.
He has His abode in Thiru-mananch-cheri. The holy people of this city clasping His
holy feet are blessed by our Lord; their sin will vanish.

1635.     விதியானைவிண்ணவர்தாந்தொழுதேத்திய 
    நெதியானைநீள்சடைமேல்நிகழ்வித்தவான் 
    மதியானைவண்பொழில்சூழ்ந்தமணஞ்சேரிப் 
    பதியானைப்பாடவல்லார்வினைபாறுமே.        2

    விதியானை,விண்ணவர்தாம் தொழுது ஏத்திய 
    நெதியானை,நீள்சடைமேல் நிகழ்வித்த வான் 
    மதியானை,வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் 
    பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.

    vitiyAnai, viNNavartAm tozutu Ettiya 
    netiyAnai, nILcaTaimEl nikazvitta vAn 
    matiyAnai, vaNpozil cUznta maNanjcErip 
    patiyAnai, pATa vallAr vinai pARumE.

பொருள்:     எல்லாவற்றிற்கும் காரணம் ஆனவனை, விண்ணவர் தொழுது ஏத்தும் 
செல்வனை,  நீண்ட சடையில் நிலவினை வைத்தவனை, பொழில் சூழ்ந்த திருமணஞ்சேரியில் 
கோயில் கொண்டவனைப் புகழ்ந்து பாடவல்லவர்களின் வினைகள் நீங்கப் பெறும்.

குறிப்புரை:     விதியானை - வேதாகம விதியானவனை, படைப்பவனாகியவனை; 
'கரியானை நான்முகனை' (தி.6, ப.1, பா.1) 'நாரணன் காண்' 'நான்முகன் காண்' (தி. 6, ப.8, பா.3) 
நெதி- செல்வம். நிதியின் மருஉ. மொழி முதல் இகாரம் எகாரமாயொலிக்கும். விலை - வெலை போல. 
வான்மதி - வெண்பிறை. வானூர்மதியுமாம். பாறும் - அழியும்.

    It is Civan, our Lord of Thiru-mananch-cheri. He is the personification of law 
Himself. He is the Lord of indiminishable wealth itself. All the celestials pray and 
worship Him always. He beautifies His long matted hair with the crescent moon, which 
always moves from one end to the other end of the sky. He has His abode in 
Thiru-mananch-cheri, which is a sacred place with fragrant gardens. Those people of 
this city who recite His glory always will be relieved of the bad karma of their 
previous life.

1636.     எய்ப்பானார்க்கின்புறுதேனளித்தூறிய 
    இப்பாலாயெனையுமாளவுரியானை 
    வைப்பானமாடங்கள்சூழ்ந்தமணஞ்சேரி 
    மெய்ப்பானைமேவிநின்றார்வினைவீடுமே.        3

    எய்ப்பு ஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய 
    இப்பால்ஆய் எனையும் ஆள உரியானை, 
    வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி 
    மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.

    eyppu AnArkku inpu uRu tEn aLittu URiya 
    ippAl Ay enaiyum ALa uriyAnai,
    vaippu Ana mATagkaL cUznta maNanjcEri 
    meyppAnai, mEvi ninRAr vinai vITumE.

பொருள்:     விரதம் பூண்டு இளைத்த மேனியராய் எய்த்துப் போனவர்களுக்குத் தேன் 
போன்றவனை, என்னையும் ஆட்கொண்டருளும் எம்பெருமானை, உறுதியான மாடங்கள் 
நிறைந்த திருமணஞ்சேரி என்னும் இத்திருத்தலத்தில் மெய்ப்பொருளாய் விளங்குபவனை 
மேவி ஏத்தும் அடியார்களின் வினைகள் நீங்கிடும் என்க.

குறிப்புரை:     எய்ப்பு - இளைப்பு. மெய்ப்பான் - பொய்யாதல் இல்லாதவன். உண்மைப் பொருள். 
வீடும்- அழியும்.

    It is Civan, our Lord in personification. The servitors do not pay attention to
their food; they care more to divert their attention to praise the glory of our Lord by
singing His hymns. By so doing without proper food they become bodily very weak. But 
during this state of their life, our Lord graces them like nectar. The servitors
become happy with our Lord's timely help. He has His abode in Thiru-mananch- cheri,
which is surrounded by well-built palaces. Those devotees, who always think of His
holy feet and pray, will be relieved of their bad karma. 

1637.    விடையானைமேலுலகேழுமிப்பாரெல்லாம் 
    உடையானையூழிதோறூழியுளதாய 
    படையானைப்பண்ணிசைபாடுமணஞ்சேரி 
    அடைவானையடையவல்லார்க்கில்லையல்லலே.        4

    விடையானை,மேல்உலகு ஏழும் இப் பார்எல்லாம் 
    உடையானை, ஊழிதோறுஊழி உளது ஆய 
    படையானை, பண்இசை பாடு மணஞ்சேரி 
    அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.

    viTaiyAnai, mEl ulaku Ezum ip pAr ellAm         
    uTaiyAnai, UzitORu Uzi uLatu Aya             
    paTaiyAnai, paN icai pATu maNanjcEri 
    aTaivAnai, aTaiya vallArkku illai, allalE.

பொருள்:     இடப வாகனத்தை உடையவனை, ஈரேழு உலகங்களையும் உடையவனை
 ஊழிதோறும் தனது எண்ணத்தின்படியே படைத்து அருள்பவனை, பண்ணிசை பாடப்பெறும் 
திருமணஞ்சேரியில் உறைபவனை அடைய வல்ல அடியார்களுக்கு துன்பங்களே இல்லையாம் என்க.  

குறிப்புரை:     விடையான்- எருதேறி. படையான் - படைகளை உடையவன். ஊழிதோறும் உள்ள 
படை ஞானவாட்படை, 'ஞான வாளேந்தும் ஐயர்' (திருவாசகம் 613). மணஞ்சேரியில், ஆசிரியர் 
சென்றருளிய காலத்தில் பண்ணிசை பாடுதல் சிறந்திருந்தது.

    It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who rides on His bull to go round
the cosmos. His Supreme rule prevails all over the seven top worlds as well as in this 
earthly world. He is the only one present everywhere forever after deluges that  come 
one after the other for every millennium and He then exhibits Himself as the embodiment 
of true wisdom (Gnosis), which is a part and parcel of His being. He has His abode in 
Thiru-mananch-cheri, a place of sweet songs. Those devotees who reach His holy feet, 
pray and worship will never experience the state of suffering in their lifetime.

1638.    எறியார்பூங்கொன்றையினோடுமிளமத்தம் 
    வெறியாருஞ்செஞ்சடையாரமிலைந்தானை
     மறியாருங்கையுடையானைமணஞ்சேரிச் 
    செறிவானைச்செப்பவல்லார்க்கிடர்சேராவே.        5

    எறி ஆர் பூங்கொன்றையினோடு இள மத்தம் 
    வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை 
    மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச் 
    செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.

    eRi Ar pUgkonRaiyinOTum iLa mattam 
    veRi Arum cenjcaTai Ara milaintAnai, 
    maRi Arum kai uTaiyAnai, maNanjcEric 
    ceRivAnai, ceppa vallArkku iTar cErAvE.


பொருள்:     ஒளிமிக்க கொன்றை மலர்களையும் ஊமத்தம் பூக்களையும் நீண்ட மணங்கமழும் 
சடையில் கொண்டவனை, ஆடுகின்ற மானை அடக்கிக் கையில் தாங்கியவனை, மணஞ்சேரித் தலத்தில் 
கோயில் கொண்டவனைப் புகழ்ந்து பாடவல்லார்க்கு இடர் சேராதாம் என்க.

குறிப்புரை:     எறிஆர் - ஒளிபொருந்திய (எறித்தல் - ஒளிவிடல்). வெறி - மணம். ஆர்-நிறைய, 
மிலைத்தான் - சூடினான். மறி- மான் கன்று. கொன்றையினோடும் மத்தம், சடை ஆரமிவைத்தானும் 
மறிக்கையுடையானும் செறிவானும் ஆகிய சிவனைச் செப்பவல்லார் என முடிக்க.

    It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who has beautified His sweet smelling 
matted hair with large quantities of bright golden fragrant cassia flowers and tender 
datura flowers. He has in one of His hands that young deer controlling it's running. 
Lord Kalyana Sundarar has His abode at Thiru-mananch-cheri. Those servitors who sing 
and praise all His glories will have a trouble-free life. 

1639.     மொழியானைமுன்னொருநான்மறையாறங்கம் 
    பழியாமைப்பண்ணிசையானபகர்வானை
     வழியானைவானவரேத்துமணஞ்சேரி 
    இழியாமையேத்தவல்லார்க்கெய்துமின்பமே.        6

    மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம்; 
    பழியாமைப் பண் இசைஆன பகர்வானை: 
    வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி 
    இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.

    moziyAnai, mun oru nAlmaRai ARuagkam 
    paziyAmaip paN icai Ana pakarvAnai; 
    vaziyAnai; vAnavar Ettum maNanjcEri 
    iziyAmai Etta vallArkku eytum, inpamE.

பொருள்:     மணஞ்சேரி இறைவனாகிய சிவபெருமான் ஆதியிலிருந்தே 'ஓம்' என்ற அடிப்படை 
மந்திரமாக விளங்குபவன். நான்கு மறைகளையும் அருளியவனை, ஆறு அங்கங்களையும் அளித்தவனை, 
பண்ணிசையாய்ப் பொருந்தியவனை, நன்னெறியால் விளங்குபவனை, வானவர்கள் வணங்கும் 
திருமணஞ்சேரி ஆகிய இத்திருத்தலத்தில் கோயில் கொண்டவனை மனத்தில் குற்றமின்றிப் பாடிடும் 
அடியார்களுக்கு இன்பமே கிட்டும் என்க.

குறிப்புரை:     'எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும் ஈசன் என்னத்தக்க 
முதல் பரப்பிரம்மம்  சதாசிவன் ஓம் என வேதம் சாற்றும்' (காஞ்சிப். குமர. 16). 'சொல்லும் 
பொருளெலாம்  ஆனாய் நீயே' (தி.6 . ப.78, பா.5) 'இமையோர் ஏத்தும் சொல்தான்காண்’ (தி.6, ப.8. பா.4) 
என்பன வேதவுண்மையாதலின் மொழியான் என்றார். 'சொல்லானை' (தி.2, ப.16, பா.9) எனப் 
பின் வருதலும் அறிக. நான்மறையும்  அம்மறைப் பொருளுணர்ச்சிக்குக் கருவியாகிய ஆறு 
அங்கங்களும் மொழிந்தவன் சிவனே ஆதலால், அவற்றைப் பழியாதவாறு காத்தல் அவன் கடமையாகும். 
'தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன்', 'விரித்தவன் அருமறை' (தி.3, ப.23, பா.6, 7). 
'மருவினிய மறைப்பொருளை', 'விரித்தானை  நான்மறையோடங்கம் ஆறும்' (தி.6, ப.80, பா. 6, 10) 
'வேதத்தை வேதவித்தை (தி.6, ப.79, பா.3) அது பற்றிப் பண்ணிசைகளையும் அளித்தருளினான். 
அஸ்யமஹதோ பூதஸ்ய நிஸ்வஸித மேத த்ருக் வேதோ யஜூர் வேதஸ் ஸாம வேத: இருக்குவேதம், 
யஜுர் வேதம், சாமவேதம் (முதலியவை) இம்மெய்ப்பொருளின் உயிர்ப்பு  என்று பிருகதாரண் யோபநிடதம் 
(4, 4, 10, 6, 5, 11) கூறுகின்றது. பகர்தல் - சொல்லுதல், ஆன- ஆனவை. வினையாலணையும் பெயர். 
வழியான் - வேதாகம வழி. திருவருள்நெறி. ஒளிசேர்நெறி.  இழியாமை-இகழாமல்.

    It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who is the primordial mantra 
sound 'Ohm'. He is the four Vedas Himself; He elucidates the inner hidden meanings 
of it as well as the resultant six Angaas with niceties and ease. He is all the 
virtuous one Himself. No one can defame His exhibits. He is a part of all musical 
tones and the intricacies. He is righteousness itself. He has His abode in 
Thiru-mananch-cheri. Those who always praise His virtues will have bliss forever.

1640.    எண்ணானையெண்ணமர்சீரிமையோர்கட்குக் 
    கண்ணானைக்கண்ணொருமூன்றுமுடையானை 
    மண்ணானைமாவயல்சூழ்ந்தமணஞ்சேரி 
    பெண்ணானைப்பேசநின்றார்பெரியோர்களே.        7

    எண்ணானை,எண் அமர் சீர் இமையோர்கட்குக் 
    கண்ணானை,கண் ஒருமூன்றும் உடையானை, 
    மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி 
    பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.

    eNNAnai, eN amar cIr imaiyOrkaTkuk 
    kaNNAnai, kaN oru mUnRum uTaiyAnai,
    maNNAnai, mA vayal cUznta maNanjcErip 
    peNNAnai, pEca ninRAr periyOrkaLE.


பொருள்:     நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனை, உள்ளத்தில் பொருந்தி வழிபடும் 
அடியவர்களுக்கு ஞானக்கண்ணாக விளங்குபவனை, சூரியன், சந்திரன், அக்கினி என்னும் 
மூன்று கண்களைக் கொண்டவனை, நிலமாக விளங்குபவனை, வயல் சூழ்ந்த மணஞ்சேரித் 
தலத்தில் உமாதேவியோடு உறைபவனைப் புகழ்ந்து பேசுபவர்கள் என்றும் பெரியோர்களாய் 
போற்றப்படுவர்.

குறிப்புரை:     எண்ணானை - யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவனை, 
மனாதீதனை. எண்- அளவு. பெண்ணான்- மங்கைபங்கன், கங்கைச்சடையன். பெரியோர்க்கு 
உரிய இலக்கணத்துள், சிவகீர்த்தனம் பாடுதலும் ஒன்று .

    Civan, the Lord of Thiru-mananch-cheri, could not be comprehended by anyone. 
He is beyond the thoughts of all human beings. He is the eye-like divine wisdom 
for the scholarly celestials. He is our three-eyed Lord. He shares His body with 
goddess Umaa. He has His abode in Thiru-mananch-cheri, which is surrounded by 
broad paddy fields. Those servitors who speak of this Lord here praising His 
greatness will themselves be considered great. 

1641.     எடுத்தானையெழில்முடியெட்டுமிரண்டுந்தோள் 
    கெடுத்தானைக்கேடிலாச்செம்மையுடையானை 
    மடுத்தாரவண்டிசைபாடுமணஞ்சேரி 
    பிடித்தாரப்பேணவல்லார்பெரியோர்களே.        8

    எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள் 
    கெடுத்தானை,கேடு இலாச் செம்மை உடையானை, 
    மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி 
    பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே.

    eTuttAnai ezil muTi eTTum iraNTum tOL 
    keTuttAnai, kETu ilAc cemmai uTaiyAnai,
    maTuttu Ara vaNTu icai pATum maNanjcEri 
    piTittu Arap pENa vallAr periyOrkaLE.

பொருள்:     கயிலாய மலையைத் தூக்கி நகர்த்த முற்பட்ட இராவணனின் தோள்களை 
வலியிழக்கச் செய்தவனை, கேடற்ற சிறப்புக்கள் பொருந்தியவனை, வண்டுகள் ஒலிக்கும் 
மணஞ்சேரித் தலத்தில் உறைபவனைப் பற்றிப்பிடித்தவர்கள் பெரியோர்களாய்த் திகழ்வார்கள் என்க.  

குறிப்புரை:     இராவணன் முடிபத்தும் தோள் (இருபதும்) கெடுத்த சிவனை, கேடிலாச் செம்மை-
அழிவில்லாத ‘திருநின்ற செம்மை' எனப்படும் பேரின்பம். வண்டுகள் மடுத்து (உண்டு) ஆர - நிறைய.
பிடித்துஆர - சிக்கெனப்பற்றிப் பூரணமாக, பேண - பத்திசெய்ய, பெரியோர்க்கு இதுவும் இலக்கணம்.

    It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who subdued the mightines of Raavanan, 
the king of Sri Lanka when he tried to lift mount Kailash, where Lord Civan resided. 
He crushed his ten heads and powerful shoulders. He is the embodiment of  blemishless 
virtues. He has His abode in Thiru-mananch-cheri, where the pleasant musical humming of 
bees is heard always. Those devotees who cling to our Lord's golden feet will always be 
brilliant and great.

1642.     சொல்லானைத்தோற்றங்கண்டானுநெடுமாலும் 
    கல்லானைக்கற்றனசொல்லித்தொழுதோங்க 
    வல்லார்நன்மாதவரேத்துமணஞ்சேரி 
    எல்லாமாமெம்பெருமான்கழலேத்துமே.        9

    சொல்லானை; தோற்றம் கண்டானும்,நெடுமாலும், 
    கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க 
    வல்லார், நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி 
    எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!

    collAnai; tORRam kaNTAnum, neTumAlum, 
    kallAnai; kaRRana collit tozutu Ogka 
    vallAr, nal mAtavar, Ettu maNanjcEri
    ellAm Am emperumAn; kazal EttumE!

பொருள்:    வேதமொழியாக விளங்கும் பெருமானை, படைக்கும் பிரமனும், காக்கும் திருமாலும்
 காணமுடியா வகையில் நின்றானை, தாம் கற்ற முறையில் திருந்தச் சொல்லி வணங்கும் 
அடியவர்களிடத்தும் மாதவர்களிடத்தும் பொருந்தி உள்ளவனை, மணஞ்சேரியில் கோயில் 
கொண்டவனை, எம்பெருமானை வாழ்த்தி வணங்குவோமாக.

குறிப்புரை:     சொல்லானை (பார்க்க: தி. 2, ப.2, பா.6) தோற்றம் - படைப்பு. சிருட்டி, 
கண்டான் - பிரமன். கல்லானை-  கற்றுணரப்படாத பெருமை உடைய சிவனை, கற்றன - 
கற்றறிந்த சிவகீர்த்தனங்களை, ஓங்க வல்லார்- திருவருளுயர்ச்சியை அடையவல்லார். 
'ஓங்குணர்வு' (திருவருட்பயன். 91) 'எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி' 'ஒருவனே 
எல்லாம் ஆகி அல்லானாயுடனுமாவன்' (சித்தியார். 47) ஏத்தும் - ஏத்துங்கள்.

    It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who is the Supreme Author of 
the divine wisdom of every term in the Vedas. Brahma, the deity of creation and the 
great Vishnu were unable to see our Lord who is non-comprehensible to them. He has 
His abode in Thiru-mananch-cheri. This is a very holy place. Learned sages and 
scholars live in large numbers in this city and He is with them too. They always 
recite His holy hymns and worship Him. Like these noble men let us worship 
His golden feet.

1643.     சற்றேயுந்தாமறிவில்சமண்சாக்கியர் 
    சொற்றேயும்வண்ணமொர்செம்மையுடையானை 
    வற்றாதவாவிகள்சூழ்ந்தமணஞ்சேரி 
    பற்றாகவாழ்பவர்மேல்வினைபற்றாவே.        10

    சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர் 
    சொல்-தேயும் வண்ண மொர் செம்மை உடையானை, 
    வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி 
    பற்று ஆக வாழ்பவர் மேல் வினை பற்றாவே.

    caRREyum tAm aRivu il camaNcAkkiyar 
    col-tEyum vaNNam or cemmai uTaiyAnai,            
    vaRRAta vAvikaL cUznta maNanjcEri 
    paRRu Aka vAzpavar mEl vinai paRRAvE.            

பொருள்:     சமணர்களும், சாக்கியர்களும் கொஞ்சம்கூட பொருந்தாமல் உரையாற்றுவார்கள் .
அவர்களது சொற்கள் தேயுமாறு செம்மையாய் விளங்குபவர் நம் பெருமான் ஆவார். அவர் நீர்வற்றாத 
குளங்கள் நிறைந்த திருமணஞ்சேரியில் கோயில் கொண்டுள்ளார். அவரிடம் பற்றுக்கொண்டு வாழும் 
அடியவர்களை வினைகள் பற்றா என்க.

குறிப்புரை:     சற்று - சிறிது. சொல்தேயும் வண்ணம் - பிதற்றுரைகள் பொருளுறாதனவாய் ஒழியும்
வகை . 'செம்மை உடையானை' (பா. 8). வாவி - குளம். பற்று ஆக - உண்மையன்பிற்குரிய தலமாக. 

    It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who bestows salvation on His devotees 
after wiping out the useless, sinful words of the Jains and the Buddhists of dark ignorance. 
Our Lord has His abode in Thiru-mananch-cheri, where the perennial ponds flourish. Those 
devotees who have attachment to our Lord will have no other attachment and the resulting 
karma in their life forever. 

1644.    கண்ணாருங்காழியர்கோன்கருத்தார்வித்த 
    தண்ணார்சீர்ஞானசம்பந்தன்தமிழ்மாலை 
    மண்ணாருமாவயல்சூழ்ந்தமணஞ்சேரி 
    பண்ணாரப்பாடவல்லார்க்கில்லைபாவமே.        11

    கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த 
    தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை, 
    மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி 
    பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

    kaN Arum kAziyarkOn karuttu Arvitta 
    taN Ar cIr njAnacampantan tamizmAlai, 
    maN Arum mA vayal cUznta maNanjcEri, 
    paN Arap pATa vallArkku illai, pAvamE.

பொருள்:     எம்பெருமான் சீர்காழிப்பதியில் நம் கண்ணுக்கினிய காட்சிதரும் வகையில் 
கோயில் கொண்டுள்ளார். அச்சீர்காழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் 
திருமணஞ்சேரியில் இறைவன் உறைவதைப் புகழ்ந்து பாடியுள்ளார். அதனை நாமும் பாடிப் 
பரவுவோம், நம் பாவங்கள் நீங்கப் பெறுவோமாக.

குறிப்புரை:     காழியர்கோன்- தோணியப்பர். கருத்து- திருவுள்ளம். ஆர்வித்த- நிறைவித்த. 
ஒவ்வொரு திருப்பதிகமும் ஒவ்வொரு தமிழ்மாலை என்னும் உண்மையை இதில் அறியலாம். 
பண்ணாரப்பாடுதல் வல்லார்க்குப் பாவம் இல்லை. ‘கண்..... சீர்' என்றது ஆசிரியர் சிறப்பை 
உணர்த்துகின்றது. கண் - வேணு வனம், கண் - மூங்கில். 'கண்ணார் கமழ்காழியர்' 
(தி.2, ப.23, பா.11) என்றது காண்க.

    Our saint Thiru-gnana-Sambandar was born in Seerkaazhi, where our Lord resides 
as a beautiful sight for our eyes. Thiru-gnana-Sambandar's sweet meaningful Tamil verses 
with musical tone made on the Lord of Thiru-mananch-cheri are meant to guide us for 
purposeful way of good life. Those who recite this garland of Tamil verses, on the Lord of 
Thiru-mananch-cheri, a city of pilgrimage amidst broad paddy fields, will be sinless 
and boonful.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            16ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 16th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 153                    பதிக   எண்: 17                            

17. திருவேணுபுரம்                    17. THIRU-VENU-PURAM

பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

            திருச்சிற்றம்பலம்

1645.    நிலவும்புனலுந்நிறைவாளரவும் 
    இலகுஞ்சடையார்க்கிடமாமெழிலார் 
    உலவும்வயலுக்கொளியார்முத்தம் 
    விலகுங்கடலார்வேணுபுரமே.            1

     நிலவும்,புனலும், நிறை வாள்அரவும், 
    இலகும் சடையார்க்கு இடம்ஆம்- எழிலார் 
    உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் 
    விலகும் கடல்ஆர் வேணுபுரமே.

    nilavum, punalum, niRai vAL aravum, 
    ilakum caTaiyArkku iTam Am--ezilAr 
    ulavum vayalukku oLi Ar muttam 
    vilakum kaTal Ar vENupuramE.

பொருள்:     அழகுமிக்க உழத்தியர் வேணுபுர வயல்வெளிகளில் மகிழ்ந்து உழுதொழில் புரிவர். 
அவர்களது ஒளிமிக்க பற்களோடு போட்டியிடுவதுபோல் கடலில் உள்ள முத்துக்களும் வேணுபுர 
வயல்களில் வந்து சிதறுகின்றன. எல்லாம் ஒன்றுபட்டு விளங்குவதற்குக் காரணம் வேணுபுரப் 
பெருமான் தலையில் மாறுபட்ட பொருள்களாகிய பிறைநிலவும், கங்கை நதியும், கொடிய பாம்பும் 
ஒன்றுபட்டிருப்பதைக் காணமுடிந்த பாக்கியம்தான் என்க.

குறிப்புரை:     நிலவு - பிறை, ஆகுபெயர். புனல் - கங்கை. நிறைவாள் - நிறைந்த கொடுமையை உடைய, 
சாதி அடை. இலகும் - விளங்கும். எழிலார் - அழகுடைய மகளிர். எழுச்சி உடைய உழத்தியருமாம்.
கடல் முத்துக்கள் வயலை அடைகின்றன.  வெள்ளத்தில் மிதந்த வரலாறுபற்றி, கடலார் வேணுபுரம் என்றார்.

    Behold! It is Civan who is the Lord of Thiru-venu-puram, and this is one of the 
twelve names of Seerkaazhi. The Lord of this place has beautified His matted hair with the 
crescent moon, the Ganges and the glistening snake thereby bringing unity among diverse 
elements. In the paddy fields adjoining the sea coast, the women of ploughmen of surpassing 
beauty work, the sea waves bring and scatter their pearls in these paddy fields and these 
seem to complete with the bright teeth of the ploughing ladies. Our Lord resides in this 
blessed place, a seaside town of greatness, which once escaped destruction by the sea.

1646.    அரவார்கரவன்னமையார்திரள்தோள்
    குரவார்குழலாளொருகூறனிடங் 
    கரவாதகொடைக்கலந்தாரவர்க்கு 
    விரவாகவல்லார்வேணுபுரமே.

    அரவு ஆர் கரவன்(ன்), அமை ஆர் திரள்தோள் 
    குரவு ஆர் குழலாள் ஒருகூறன், இடம் - 
    கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு 
    விரவுஆக வல்லார் வேணுபுரமே.

    aravu Ar karavan(n), amai Ar tiraLtOL 
    kuravu Ar kuzalAL oru kURan, iTam- 
    karavAta koTaikku alantAr avarkku 
    viravu Aka vallAr vENupuramE.                

பொருள்:     தன்னிடத்தில் உள்ள பொருளை மறைக்காமல் பிறருக்குக் கொடுத்து உதவும் 
வள்ளல்கள் நிறைந்து வாழுமிடமே வேணுபுரமாகும். அங்குதான் பாம்பைக் கங்கணமாகக் கொண்டவனும்
மூங்கில் போன்ற தோளும் குராமலர் நிகர்த்த மணம் கமழும் கூந்தலை உடைய உமையாளை ஒருபாகமாகக் 
கொண்டவனுமாகிய பெருவள்ளல் சிவபெருமான் கோயில் கொண்டு உள்ளார் என்க.

குறிப்புரை:     அரவு ஆர்கரவன்- பாம்பைக் கங்கணமாக அணிந்த கையினன்.  அமை- 
மூங்கிற்கணுக்களின் இடைப்பகுதியை. ஆர் -ஒத்த. திரள் - திரண்ட. குரவு-  குராமலர்மாலை. 
'கரவாது உவந் தீயுங்கண் அன்னார்' (குறள் 1061).  குழலாள்-  கூந்தலை உடைய அம்பிகை, கூறன்- 
பாகத்தை உடையவன். கரவாத -  மறைக்காத. கலந்தார் அவர்க்கு - கூடியவராகிய அவர்க்கு . 
விரவு ஆகவல்லார் - நட்பாக.  வல்லவர்கள்  (வல்லவர்கள் வாழும் வேணுபுரம் என்க).

    Behold! It is Civan, the Lord of Thiru-venu-puram. He wears around His arm the snakes. 
He shares His body with our goddess Umaa. Her shoulders are beautiful, bamboo like. She beautifies 
her hair with sweet smelling bottle flowers. Our Lord has His abode in this glorious town. 
In this place a large number of good people live who donate their wealth to one and all 
without concealing it. Such people are all closely associated with each other, even though 
the Lord of this place graces His devotees with whatever they need.

1647.     ஆகம்மழகாயவள்தான்வெருவ 
    நாகமுரிபோர்த்தவனண்ணுமிடம் 
    போகந்தருசீர்வயல்சூழ்பொழில்கண்
    மேகந்தவழும்வேணுபுரமே.        3

    ஆகம்(ம்) அழகு ஆயவள்தான் வெருவ, 
    நாக(ம்) உரி போர்த்தவன் நண்ணும் இடம் - 
    போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கண் 
    மேகம் தவழும் வேணுபுரமே.

    Akam(m) azaku AyavaLtAn veruva,
    nAkam(m) uri pOrttavan naNNum iTam- 
    boham taru seer vayal chool pozhilkaN         
    mEham tavazhum vENu puramE.            

பொருள்:     செழிப்பான வளம் மிக்க வயல்களாலும் சோலைகளாலும் சூழப்பெற்றது 
வேணுபுரம் ஆகும். அங்கு எப்பொழுதும் மழை மேகங்கள் சூழ்ந்து மழையைப் பொழிந்து மூன்று 
போகங்களும் விளையும். அவ்வேணுபுரத்தில்தான் அழகான உமையவளும் அஞ்சுமாறு, 
கரிய யானையின் தோலினை உரித்துத் தன் உடம்பில் போர்த்திய  சிவனும் கோயில் 
கொண்டுள்ளான் என்க.

குறிப்புரை:     ஆகம் அழகு ஆயவள்- அழகிய திருமேனியை உடைய அம்பிகை. ஆகம்- உடம்பு,
வெருவ - அஞ்ச. நாகம் - யானை. உரி - தோல். இரண்டடியிலும் வந்த மகர ஒற்றுக்கள் இசை பற்றி 
வந்த விகாரம். போகம் -  வயல்விளைவாகக் கிடைக்கும் உணவுப் பொருள்கள். முதல் போகம் 
இரண்டாம் போகம் என்னும் வழக்கு உணர்க.  பொழில்கண் மேகம் என்பதில் கண் உருபும்,
கள் விகுதியும் ஆகப் பிரித்துப் பொருள் கூறலாம்.

    Behold! It is Civan, the Lord of Thiru-venu-puram. Our beautiful goddess Umaa 
was once seated by the side of our Lord. Suddenly a fierce wild elephant rushed towards 
her.She shuddered to see it. However our Lord faced the elephant, killed it, and skinned it. 
Then He wore the skin as His coat. Umaa's fear subsided. Our Lord has His abode in this 
sanctified town, which is surrounded by gardens and rich paddy fields. Clouds move over 
the tall trees in the dense gardens. All the fields are very rich and they yield three 
harvests every year.

1648.    காசக்கடலில்விடமுண்டகண்டத் 
    தீசர்க்கிடமாவதுஇன்நறவ 
    வாசக்கமலத்தனம்வன்றிரைகள் 
    வீசத்துயிலும் வேணுபுரமே.        4

    காசு அக் கடலில் விடம் உண்ட கண்டத்து 
    ஈசர்க்கு இடம் ஆவது - இன் நறவ 
    வாசக்கமலத்து அனம், வன் திரைகள் 
    வீச, துயிலும் வேணுபுரமே.

    kAcu ak kaTalil viTam uNTa kaNTattu             
    Icarkku iTam Avatu-in naRava 
    vAcakkamalattu anam, van tiraikaL 
    vIca, tuyilum vENupuramE.                

பொருள்:     மணமிக்க தாமரை மலரில் உள்ள அன்னங்கள் துயில் கொள்ளும் வகையில் கடல் 
அலைகள் வீசும். அத்தகைய வளமிக்க வேணுபுரத்தில் பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்ட 
நீலகண்டராகிய சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார் என்க.

குறிப்புரை:     காசு அக்கடல் - மணிகளையுடைய அழகிய பாற்கடல். இன் நறவவாசக் கமலம்- 
இனிய தேனையும் மணத்தையும் உடைய கமலம். அனம் - அன்னப்பறவை. இடைக்குறை. 
அன்னம் கமலத்தில் வலிய அலைகள் வீசுதலால் சிறுதுயில் கொள்ளும்.

    Behold! It is Civan, Lord of Thiru-venu-puram. The ocean of milk contains gold,gems 
amrit and so many other good things as well as dreadful poison. The devaas and asuraas churned 
the sea to get amrit, for longivity of life. However deadly poison came out of the churned sea 
of milk, which was about to destroy the whole universe. Our Lord Civan of Thiru-venu-puram drank 
the venom, as a result His neck turned out black in colour. Our Lord has His abode in this 
Thiru-venu-puram, a place of serenity. Here swans in groups reach the lotus pond and drink the 
honey in the lotus flowers and take rest in the flowers. These flowers get tossed by the waves 
of the sea and the swans enjoy their nap.

1649.     அரையார்கலைசேரனமென்னடையை 
    உரையாவுகந்தானுறையுமிடமாம் 
    நிரையார்கமுகின்னிகழ்பாளையுடை 
    விரையார்பொழில்சூழ்வேணுபுரமே.        5

    அரை ஆர் கலை சேர் அனமென்னடையை 
    உரையா உகந்தான் உறையும் இடம்ஆம் 
    நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை 
    விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே.

    arai Ar kalai cEr anamennaTaiyai 
    uraiyA ukantAn uRaiyum iTam Am- 
    nirai Ar kamukin nikaz pALai uTai 
    virai Ar pozil cUz vENupuramE.

பொருள்:     சிறந்த பாளைகளைக் கொண்ட பாக்கு மரங்களும் மணமிக்க சோலைகளும் நிறைந்ததே 
வேணுபுரமாகும். அப்பதியில்தான் அரையில் மேகலாபரணத்தையும் நடையில் அன்னத்தையும் கொண்ட 
உமையவளுக்கு எம்பெருமான் ஈசன் வேத  சாத்திர உண்மைகளை உரைத்தருளினார் என்க. 

குறிப்புரை:     அரை ஆர் கலைசேர் அனம் மெல் நடையை - திருவிடையில் உடுத்தல் பொருந்திய மேகலை 
முதலிய திருப்புடைவை சேர்ந்த அன்னத்தினது மெல் நடைபோலும் நடை உடைய திருநிலை நாயகியை.
உரையா - (புகழ்ந்து) உரைத்து. உகந்தான் - உயர்ந்தவன். மகிழ்ந்தவன் எனலுமாம். நிரை-வரிசை,
 நிகழ் - விளங்கிய; உடை விரை - உடைதலால் பரவும் மணம் உடைய பொழில் என்றும் இயையும்.

    Our goddess Umaa wears the most beautiful golden waist belt. She walks like the swans. 
Our Lord of Thiru-venu-puram explained the philosophical, deep meanings of the Vedas, the Puraanas, 
the Aagamaas and the Pranavas etc., to His consort, whenever she was available after finishing her 
daily sacred rituals. Our Lord has His abode in Thiru-venu-puram, a place where the high grown 
arecanut trees spread the sweet fragrance through their spade-like leaves. This is Thiru-venu-puram, 
a town of numerous gardens.

1650.    ஒளிரும்பிறையும்முறுகூவிளவின் 
    தளிருஞ்சடைமேலுடையானிடமாம் 
    நளிரும்புனலின்நலசெங்கயல்கள் 
    மிளிரும்வயல்சூழ்வேணுபுரமே.        6

    ஒளிரும் பிறையும்(ம்) உறு கூவிள இன் 
    தளிரும் சடைமேல் உடையான் இடம்ஆம் 
    நளிரும் புனலின் நல செங்கயல்கள் 
    மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே.

    oLirum piRaiyum(m) uRu kUviLa in
    taLirum caTaimEl uTaiyAn iTam Am- 
    naLirum punalin nala cegkayalkaL             
    miLirum vayal cUz vENupuramE.

பொருள்:     குளிர்ந்த நீரில் வளமிக்க செங்கயல்கள் பெருகி வாழும் வயல்கள் சூழ்ந்த வளமிக்க 
பதியே வேணுபுரமாகும். அப்பதியில்தான் ஒளிரும் பிறைச் சந்திரனையும் வில்வ இதழ்களையும் தன் 
 தலையில் கொண்ட செஞ்சடைச் சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார் என்க.

குறிப்புரை:     பிறையும் தளிரும் உடையான். கூவிளம்- வில்வம். நளிரும் - குளிரும். மிளிரும் -
விட்டு விட்டு விளங்கும். கண் மிளிரும் - கண்போல் விளங்கும் என்பதுமாம்.

    Behold! It is Civan, our Lord of Thiru-venu-puram. He has beautified His matted hair 
with the bright moon and the tender bael leaves. This city is surrounded by many water ponds 
and paddy fields always full of water. Here, plenty of rich carp fish flourish. Thiru-venu-puram 
is such a town of rich fields and wealth, and our Lord with reddish hair abides here.

7. பாடல் கிடைக்கப்பெறவில்லை.

1651.    ஏவும்படைவேந்தனிராவணனை 
    ஆவென்றலற அடர்த்தானிடமாந் 
    தாவும்மறிமானொடுதண்மதியம் 
    மேவும்பொழில்சூழ்வேணுபுரமே.        8

    ஏவும் படை வேந்தன் இராவணனை, 
    "ஆ" என்று அலற அடர்த்தான் இடம்ஆம் 
    தாவும் மறிமானொடு தண்மதியம் 
    மேவும் பொழில் சூழ் வேணுபுரமே.

    Evum paTai vEntan irAvaNanai, 
    "A" enRu alaRa, aTarttAn iTam Am- 
    tAvum maRimAnoTu taNmatiyam 
    mEvum pozil cUz vENupuramE.

பொருள்:     துள்ளித்தாவும் இளமானும், குளிர்ந்த சந்திரனைத் தடவும் சோலைகளும் நிறைந்த
 ஊரே வேணுபுரமாகும். அவ்வேணுபுரத்தில்தான், பகைவர்களைத் தான் இருந்த இடத்திலிருந்தே 
படைகளை ஏவி அழித்திட வல்ல இராவணனை, எம்பெருமான் வலிமை குன்றிடச் செய்தார் என்க. 

குறிப்புரை:     ஏவும்படை - குறிதவறாது வினையாற்றும் ஆயுதம். ஆ என்று அலற - அலறுவோர்
 ஒலிக்குறிப்புக்களுள்  'ஆ' என்பது தலைமையானது. அஃது ஆஆ என அடுக்கியும் பின் "ஆவா" என்று
உடம்படுமெய் பெற்றும் வரும். அதனைத் திருமுறைகளில் பல இடங்களில் காணலாம். அடர்த்தான்- 
தாக்கியவன். மறிமான் - மான்கன்று. மறிகளும்  மான்களும் ஆம். பொழிலின் உள்ளே மானும் மேலே 
மதியமும் மேவும் என்க. மதியின் களங்கமுமாம். 

    The king of Sri Lanka, Raavanan, was the greatest warrior of his time. Without
moving from his place, he destroyed completely the armies of his enemies with his remote command. 
This is the place where our Lord of Thiru-venu-puram subdued such a mighty warrior Raavanan 
to cry 'Aaa Aaa' by crushing him under His Mount Kailash when he tried to lift and move it 
with his ten heads and shoulders. He has His abode in Thiru-venu-puram, a place of 
beautiful gardens where deer in large numbers leap and play all around. Here clouds 
embrace the tall trees in the dense gardens around the city. The Lord of this great 
sacred place is to be praised.

1652.     கண்ணன்கடிமாமலரிற்றிகழும் 
    அண்ணல்லிருவரறியாவிறையூர் 
    வண்ணச்சுதைமாளிகைமேற்கொடிகள் 
    விண்ணிற்றிகழும்வேணுபுரமே.        9

    கண்ணன்,கடிமாமலரில்-திகழும்
     அண்ணல், இருவர் அறியா இறை ஊர் - 
    வண்ணச் சுதை மாளிகைமேல் கொடிகள் 
    விண்ணில் திகழும் வேணுபுரமே.

    kaNNan, kaTimAmalaril-tikazum 
    aNNal, iruvar aRiyA iRai Ur- 
    vaNNac cutai mALikaimEl koTikaL 
    viNNil-tikazum vENupuramE.

பொருள்:     வண்ணங்கள் பூசப்பட்ட மாளிகைகள் சூழ இருப்பதே வேணுபுரம். அங்கு கொடிகள், 
வளர்ந்து மாளிகையின் மேற்பகுதியைத் தாண்டி விண்ணிலும் படர்ந்திடத் துடிக்கும். அவ்வூரில்தான்
 பிரமன் திருமால் என்ற இருவராலும் தேடிக் காணமுடியாத சிவபெருமான் பொருந்தியுள்ளார் என்க.

குறிப்புரை:     கண்ணன்- (திருமால்) கரியவன். கடி - மணம். மலர் - தாமரை. அண்ணல்- பிரமன்.
இறை - இறைவன் (சிவன்). வண்ணம்- அழகு. சுதை- சுண்ணம். 

    Behold! It is Civan, the Lord of Thiru-venu-puram which is a place for pilgrimage 
and it is the abode of our Lord. Our Lord could not be comprehended by Lord Vishnu and by 
Lord Brahma who normally resides in the fragrant lotus flower. The city of Thiru-venu-puram 
has beautiful palaces constructed with carved crystals. Flags fly on the top of these palaces. 
The beauty of these tall palaces, with flags flying in the sky, resembles that of city 
in Deva Loka.

1653.     போகம்மறியார்துவர்போர்த்துழல்வார் 
    ஆகம்மறியாவடியாரிறையூர்
    மூகம்மறிவார்கலைமுத்தமிழ்நூல்
    மீகம்மறிவார்வேணுபுரமே.        10

    போகம்(ம்) அறியார், துவர் போர்த்து உழல்வார்
    ஆகம் அறியா அடியார் இறைஊர் - 
    மூகம்(ம்) அறிவார் கலை முத்தமிழ் நூல் 
    மீகம் அறிவார் வேணுபுரமே.

    pOkam(m) aRiyAr, tuvar pOrttu uzalvAr, 
    Akam(m) aRiyA aTiyAr iRai Ur-
    mUkam(m) aRivAr, kalai muttamiz nUl 
    mIkam aRivAr, vENupuramE.

பொருள்:     வேணுபுரத்தில், இறைவனை மௌனமாக வீற்றிருந்து தியானம் செய்யும்
முனிவர்களும் பொருந்தியிருப்பர். முத்தமிழைக் கற்றுணர்ந்த சான்றோர்களும் பொருந்தியிருப்பர். 
வேதம் அறிந்தவர்களும் பொருந்தியிருப்பர். அங்குதான் சிவயோகம் பற்றி அறியாத 
சமணர்களும் சாக்கியர்களும் உறைந்திருப்பர். இறை உண்மை பற்றி உணர்ந்த அடியவர்களும் அங்கு 
பொருந்தியிருப்பர் என்க.  

குறிப்புரை:     போகம் - சிவானந்த போகத்தை. துவர் - பழுப்பு ஏறிய ஆடைக்கு ஆகுபெயர். 
உழல்வார்- திரிவார் (சமணர் சாக்கியர்) ஆகம் அறியா அடியார் - சிவநிந்தை செய்யும் பிற மதத்தரை ஏறெடுத்தும் 
பார்க்காத சிவனடியார். ஆகம் - உடம்பு. மூகம் - மௌனம். மீகம் - வானோர்க்குயர்ந்த உலகம் (கம்-
வான். மீ - மேல்). முகம் அறிவாரும் கலை முத்தமிழ் நூலால் மீகம் அறிவாரும் வாழ்கின்ற  வேணுபுரம்
அறிவார்- ஞானியர்.

    Thiru-venu-puram has people, varied in their behaviour. The jains and Buddhists join together 
in this city and preach without knowing true bliss. They wear ochre robes and suffer a lot. 
Our devotees do not care for these people and never face them. They segregate themselves and 
congregate in large numbers in Thiru-venu-puram. In this city learned scholars of Tamil read 
and sing the scriptures and teach others. Here sages also live and carry on their penance and 
meditation in solitude. Thiru-venu-puram is such a great sacred city of serenity. In one and the 
same city people of ignorance and men with true realisation of God live. 

1654.    கலமார்கடல்போல்வளமார்தருநற் 
    புலமார்தருவேணுபுரத்திறையை 
    நலமார்தருஞானசம்பந்தன்சொன்ன 
    குலமார்தமிழ்கூறுவர்கூர்மையரே.        11

    கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு,நல் 
    புலம் ஆர்தரு, வேணுபுரத்து இறையை, 
    நலம் ஆர்தரு ஞானசம்பந்தன், சொன்ன 
    குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே.

    kalam Ar kaTal pOl vaLam Artaru, nal 
    pulam Artaru, vENupurattu iRaiyai, 
    nalam Artaru njAnacampantan, conna 
    kulam Ar tamiz kURuvar kUrmaiyarE.

பொருள்:     வேணுபுரத்தில் கடல் போன்று பெரும் நல்வளம் தரும் வயல்கள் நிறைந்திருக்கும். 
அங்குதான் வேணுபுரத்து ஈசனும் பொருந்தியிருப்பார். ஈசனைப்பற்றி ஞானசம்பந்தப் பெருமான் நலமாகப் 
பல பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பதிகத்தைப் பாடவல்லவர்கள் சிறப்புற்று வாழ்வார்கள் என்க. 

குறிப்புரை:     கலம் - மரக்கலம். ஆர்தல் - நிறைதல், பொருந்துதல். நற்புலம் -(நல் புலம்) நன்செய். 
நலம்- சிவம், சிவத்தைச் சார்வித்தற்குரிய ஞானத்தின் தொடர்பு.  குலம்- மேன்மை. தமிழ்-இத்திருப்பதிகத்தை. 
கூறுவர் -  அன்பொடு பாராயணம் செய்வோர். கூர்மையர் - திருவருட் பெருக்கம் அடைபவர். 

    Behold! It is Civan the Lord of Thiru-venu-puram. This city is surrounded by very large 
and rich paddy fields that look like vast sea. Our saint Thiru-gnana Sambandar hailing from 
Seerkaazhi is an embodiment of divine virtues. He has sung on the Lord of Thiru-venu-puram,
His glories in pure Tamil. The wealth brought by ships from other countries is equal to the 
wealth brought by the local people from their paddy fields. The people who recite these verses 
of greatness sung by Thiru-gnana Sambandar will be graceful always and will attain true 
greatness and bliss.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            17ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 17th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 154                பதிக எண்: 18

18.திருமருகல்                    18. THIRU-MARUKAL

பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    திருமருகல் என்னும் இத்திருத்தலமானது, மருகல் என்னும் ஒருவகை வாழையைத் தலமரமாகக் 
கொண்டுள்ளமையால் இப்பெயர் பெற்றது. இது, மயிலாடுதுறை - பேரளம் தொடர் வண்டிப் பாதையில் 
நன்னிலம் தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 10.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவாரூரிலிருந்து 
திருமருகல் செல்ல நகரப் பேருந்துகள் உள்ளன. இறைவரின் திருப்பெயர் மாணிக்கவண்ணர். 
இறைவியாரின் திருப்பெயர் வண்டுவார்குழலி. தலவிருட்சம் வாழை.

    திருமருகலுக்கு அருகிலுள்ள வைப்பூர் என்னும் ஊரில் தாமன் என்னும் வணிகன் ஒருவன் 
இருந்தான். அவனுக்கு ஏழு பெண்கள். ஆனால் மூத்த மகளை அவ்வணிகன் தன் மருமகனுக்குக் 
கொடுப்பதாக வாக்களித்தான். பணம் பெற்று வேறு ஒருவனுக்குக் கொடுத்துவிட்டான்.
இங்ஙனமே ஏனைய ஐந்து பெண்களையும் மணஞ்செய்து கொடுத்துவிட்டான். 
ஏழாவது பெண் உளம் தளர்ந்து தாய் தந்தையருக்குத் தெரியாமல் மருமகனோடு உடன் வந்துவிட்டாள். 
வந்தவர்கள் மருகல் பெருமான் கோயிலின் பக்கத்தில் ஒரு மடத்தில் தூங்கினார்கள்.

    அதுபொழுது அம்மருமகன் அரவு தீண்டப்பெற்று ஆவி நீங்கும் தன்மையைக் கண்ட அப்பெண் அயர்ந்து 
சிவனருளையே சிந்தித்துப் புலம்பினாள். அப்புலம்பலைக் கேட்டு அங்கு முன்னரே எழுந்தருளியிருந்த 
ஞானசம்பந்தப் பெருந்தகையார் செய்தியை அறிந்து ' சடையாயெனுமால்' என்று தொடங்கும் இத்திருப்பதிகத்தைப் 
பாடி அம்மருமகனை உயிர்ப்பித்து அவ்விருவர்க்கும் மணத்தை முடித்து வைத்தருளினார். இத்தலத்திற்குத் 
திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் 
உள்ளன. இப்பதிக்குரிய ஞானசம்பந்தர் பதிகங்கள் இரண்டனுள் 'அங்கமும் வேதமும்' என்று தொடங்கும் 
பதிகம் திருமருகலையும் திருச்செங்காட்டங் குடியையும் சேர்த்துப் பாடியதாகும்.

பதிக வரலாறு

    கணபதீச்சரத்தை வழிபட்டு மீண்ட கவுணியர்கோன், அருகிலுள்ள திருமருகலில் எழுந்தருளிய         
மாணிக்கவண்ணர் கழலினை வணங்கி, 'உருகிய அன்புறுகாதல் உள்ளலைப்பத் தெள்ளுமிசையுடன் 
பெருகும் தமிழ்த்தொடை சார்த்தி' அங்கிருந்தார். அவை இப்பொழுது கிடைத்தில. அந்நகரில், 
அந்நாளில் வணிகன் மகள் ஒருத்தி, தன்னை மணக்க இருந்தவன் மடத்தில், இரவில் துயிலும்போது 
பாம்பு கடித்து இறக்க, அழுது புலம்பும் ஒலி கேட்டது. அங்குச் சென்ற புகலிவேந்தர் 'பயப்படேல் நீ' 
என்று அபயம் தந்து, வரலாறுணர்ந்து, அவன் விடம் தீர்ந்து எழுந்து நிற்கச் செய்தற்பொருட்டு 
அருளியது இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

1655.     சடையாயெனுமால்சரண்நீயெனுமால் 
    விடையாயெனுமால்வெருவாவிழுமால் 
    மடையார்குவளைமலரும்மருகல் 
    உடையாய்தகுமோஇவளுண்மெலிவே.        1

    “சடையாய்!" எனுமால்; “சரண்நீ!" எனுமால்; 
    "விடையாய்!'' எனுமால்; வெருவா விழுமால்; 
    மடை ஆர் குவளை மலரும் மருகல் 
    உடையாய்! - தகுமோ, இவள் உண் மெலிவே?

    "caTaiyAy!" enumAl; "caraN nI!" enumAl; 
    "viTaiyAy!" enumAl; veruvA vizumAl;
     maTai Ar kuvaLai malarum marukal 
     uTaiyAy! takumO, ivaL uN melivE?

பொருள்:     நீர் நிறைந்த மடைகளில் குவளைப் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும் அழகிய திருமருகல் 
என்னும் தலத்தில் உறைகின்ற இறைவனே! கணவனாக வரப்போகும் தலைவனைப் பிரிந்த இப்பெண், 
இறைவா உன்னையே சரணடைந்து சடையாய் என்று அலறுகிறாள். நீயே சரண் எனப் புலம்புகிறாள். 
விடையாய் என்ற பலவிதமாக அழுது புலம்புகிறாள். மயங்கி விழுகிறாள். இவளது துன்பத்தை நீவிர் 
போக்கி அருளுவீராக.

குறிப்புரை:     'எனும்' 'விழும்' செய்யுமென்னும் வாய்ப்பாட்டு முற்றுவினை; ஈண்டுப் பெண்பாற்கு 
வந்தது. 'ஆல்' என்பன அசைகள். சரண் நீ - நீயே அடைக்கலம். வெருவா -வெருவி. 'அஞ்சி வெருவி ஓடித் 
தழுவ வெளிப்பட்ட கள்ளக்கம்பனை' (சுந்தரர், கச்சியேகம்பம்) அஞ்சுதல் உள்ள நிகழ்ச்சி. வெருவுதல்
வாயொலி, மடை - நீர் மடையில். மருகல் - ஒருவகை வாழை மரத்தாற்பெற்ற தலப்பெயர். 
உடையாய்- சுவாமீ. உள் மெலிவு - மனநோய் (வருத்தம்).

    Oh Lord! You reside in Thiru-marukal, where blue nelumbium flowers blossom
in plenty in the cool ponds. In Your city a woman suffers and screams on seeing her life partner 
dead due to snake bite; he is lying in the yard where they both were staying from previous night. 
She laments “Oh! my god of matted hair! Oh my god mounting the bull! Your holy feet are my asylum". 
Thus she shudders, falls down rolling. Oh Lord! Is it right for You to keep the lady suffering 
like this?

1656.    சிந்தாயெனுமால்சிவனேயெனுமால் 
    முந்தாயெனுமால்முதல்வாஎனுமால் 
    கொந்தார்குவளைகுலவும்மருகல் 
    எந்தாய்தகுமோ இவளேசறவே.        2

    ''சிந்தாய்!" எனுமால்; "சிவனே!" எனுமால்; '
    'முந்தாய்!"எனுமால்; "முதல்வா!" எனுமால்; - 
    கொந்து ஆர் குவளை குலவும் மருகல் 
    எந்தாய்!-தகுமோ, இவள் ஏசறவே?

    "cintAy!" enumAl; "civanE!" enumAl; 
    "muntAy!" enumAl; "mutalvA!" enumAl;
     kontu Ar kuvaLai kulavum marukal 
     entAy!--takumO, ivaL EcaRavE?

 பொருள்:     குவளை மலர்கள் நிறைந்து விளங்கும் மருகல் தலத்துறை இறைவனே! இவள்
 "சிந்தையில் உறையும் இறைவனே! சிவபெருமானே!  எல்லாவற்றிற்கும் முந்தியவனே ! முதல்வனே!” 
என்றெல்லாம் உன்னை அழைத்துப் புலம்புகிறாள்.  இவளது துன்பத்தை நீக்கி அருள்வீராக! 

குறிப்புரை:     சிந்தாய் - சிந்தையே. அழியாதவனே எனலுமாம். முந்தாய் - முன்னைப் பழம்பொருட்கும் 
முன்னைப் பழம்பொருளே. முதல்வா - ஆதியனே. கொந்து - பூங்கொத்து. எந்தாய் - எம் அப்பனே. 
எம் அன்னையே. ஏசறவு -மெய்மறத்தல்.

    Oh my Father! Your abode is Thiru-marukal where the blue nelumbium flowers
blossom in bunches shedding fragrance all around. Is it proper that You let this damsel
suffer like this crying "Oh my god Civa! You are the first and You are the foremost! 
You are the Lord of everything in the universe". Like this, she forgets herself, her 
mind melts and she seeks solution (The poet's intention was that the Lord should grace 
her and relieve her from suffering).

1657.     அறையார்கழலும்மழல்வாயரவும் 
    பிறையார்சடையும்முடையாய்பெரிய 
    மறையார்மருகல்மகிழ்வாயிவளை 
    இறையார்வளைகொண்டெழில்வவ்வினையே.        3

    அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும், 
    பிறை ஆர் சடையும்(ம்), உடையாய்! பெரிய 
    மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை 
    இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?

    aRai Ar kazalum, azal vAy aravum, 
    piRai Ar caTaiyum(m), uTaiyAy! periya 
    maRaiyAr marukal makizvAy! ivaLai 
    iRai Ar vaLai koNTu, ezil vavvinaiyE?

பொருள்:     மருகல் திருத்தலத்தில் உறைபவன் நீயே! ஆர்த்து ஒலிக்கும் கழலையும், நஞ்சுடைய 
பாம்பையும், பிறைச் சந்திரனையும் அணிந்தவன் நீயே! பெரும் மறையாம் அருமறையை அருளிய நீ 
இவளுக்கு அருள வேண்டாவோ. இவள் இப்போது தன் கையில் உள்ள வளையல்கள் தானாக நெகிழ்ந்து 
தரையில் கிடக்க தன் அழகையும் இழந்து துடிக்கின்றாளே! இவளது துயரைத் துடைக்க வேண்டாமோ!

குறிப்புரை:     அறை -ஒலி. அழல்வாய் அரவு - (நஞ்சு) வெப்பம் பொருந்திய வாயுடைய பாம்பு. 
மறையார் மருகல் - வேதங்களை உணர்ந்தவர் வாழ்கின்ற திருமருகல். இறை - கைச்சந்து. எழில் - அழகு.

    Oh Lord of Thiru-marukal! You are pleased to hear the Vedic recitations of the 
learned scholars of this town. You wear ringing anklets on Your holy feet. You wear snakes 
with heat emitting mouth all over Your body. You wear the moon on Your head. Is it fit for her 
to be deprived of her virgin beauty? Also her bangles drop down her hands without her noticing. 
Will You not chase her agony?

1658.    ஒலிநீர்சடையிற்கரந்தாயுலகம் 
    பலிநீதிரிவாய்பழியில்புகழாய்
    மலிநீர்மருகல்மகிழ்வாயிவளை 
    மெலிநீர்மையளாக்கவும்வேண்டினையே.        4

    ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம் 
    பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்! 
    மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை 
    மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?

    olinIr caTaiyil karantAy! ulakam 
    pali nI tirivAy! pazi il pukazAy!
    mali nIr marukal makizvAy! ivaLai 
    meli nIrmaiyaL Akkavum vENTinaiyE?

பொருள்:     ஓடிவரும் கங்கையைத் தலையில் தாங்கியவன் நீ! பிரம்ம கபாலம் ஏந்தி
பலிதேர்ந்து வருபவன் நீ! குற்றமற்ற புகழுக்கு உரியவன் நீ! திருமருகல் தலத்தில் கோயில்
கொண்டுள்ளவன் நீ!  நீயே துன்புறும் இப்பெண்ணிற்குத் தக்கவாறு உதவாமல் இருக்கலாமோ?

குறிப்புரை:     ஒலிநீர் - முழங்குங் கங்கை. கரந்தாய் - மறைத்தாய். பலி -  பிச்சை. 
நீர்மலி மருகல் என்றும் மாற்றலாம்.

    Oh my Lord of Thiru-marukal! You have hidden the torrential river Ganges in Your 
matted hair. You go over all the worlds begging for alms. You have flawless fame. You feel 
happy to stay in the cool watered Thiru-marukal. Is it just for You , to make this damsel 
languish and lament and to become lean?

1659.     துணிநீலவண்ணம்முகில்தோன்றியன்ன 
    மணிநீலகண்டமுடையாய்மருகல் 
    கணிநீலவண்டார்குழலாளிவள்தன் 
    அணிநீலவெண்கண்ணயர்வாக்கினையே.        5

    துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன 
    மணிநீலகண்டம்(ம்) உடையாய், மருகல்! 
    கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள் தன் 
    அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?

    tuNi nIlavaNNam mukil tOnRiyanna 
    maNi nIlakaNTam(m) uTaiyAy, marukal! 
    kaNi nIlavaNTu Ar kuzalAL ivaLtan 
    aNi nIla oNkaN ayarvu AkkinaiyE?

பொருள்:     கரிய நிறமுடன் மழைமேகம் காட்சியளிப்பது போல, இறைவா நீ, நீலகண்டனாகக் 
காட்சியளிக்கின்றாய். கரிய வண்டுகள் ஒலிக்கும் குவளை மலர்கள் நிறைந்த மருகல் தலத்தில் கோயில் 
கொண்டுள்ளாய். அழகான நீலமலர் போன்ற கண்களைக் கொண்ட இப்பெண் துன்புற நீ பார்த்துக் 
கொண்டிருக்கலாமோ?

குறிப்புரை:     துணி நீல ... கண்டம் - தெளிந்த நீலநிறம் உடைய மேகம் தோன்றினாற்போன்ற 
அழகிய நஞ்சாற் கறுத்த திருக்கழுத்தை. கணி - கருதுகின்ற. அயர்வு - சோர்வு. மறதி.

    Oh Lord! You resemble the black clouds that bring rain, with Your bluish neck. 
Thiru-marukal abounds in nelumbium flowers around which bees keep on humming. You reside 
in the temple at Thiru-marukal. Around the hair of this damsel also bees used to hum. 
But now she is exhausted, devoid of her mirth. Watching her agony You do not seem to 
feel for her. Why do you remain so?

1660.    பலரும்பரவப்படுவாய்சடைமேல் 
    மலரும்பிறையொன்றுடையாய்மருகல் 
    புலருந்தனையுந்துயிலாள்புடைபோந் 
    தலரும்படுமோ அடியாளிவளே.        6

    பலரும் பரவப்படுவாய்! சடைமேல் 
    மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்! 
    புலரும் தனையும் துயிலாள், புடை போந்து 
    அலரும் படுமோ, அடியாள் இவளே?

    palarum paravappaTuvAy! caTaimEl 
    malarum piRai onRu uTaiyAy, marukal! 
    pularum tanaiyum tuyilAL, puTai pOntu 
    alarum paTumO, aTiyAL ivaLE?

பொருள்:     அடியவர்கள் பலராலும் போற்றி வணங்கப் பெறும் இறையவனே! சடைமேல் 
பிறைநிலவைத் தாங்கி அருட்காட்சி கொடுப்பவனே! மருகல் தலத்து உறைபவனே! இப்பெண் 
இரவு முழுவதும் துயிலாமல் உன் திருவடிகளையே சார்ந்து நின்று கொண்டிருக்கிறாளே. 
 இவளுக்கு அருள வேண்டாமா?  உலகம் இவளைப் பழிக்கும் நிலையிலிருந்து காக்க வேண்டாமா?

குறிப்புரை:     பரவ - துதிக்க. மலரும் - பரவும். புலரும்தனை - விடியுமளவும். துயிலாள் - தூங்காதவள் 
புடை - பக்கம், வெளி. அலர் - பழிச்சொல்.

    Oh my Lord of Thiru-marukal! You are worshipped by all devotees in this town daily. 
You have the bright moon on Your matted hair. Is it not a pity to the servitors to see this damsel 
staying in the temple whole night without sleep and coming out of the inner vista of the temple to 
wail and lament loudly? Oh Lord! save her from the adverse criticism of the world.

1661.     வழுவாள்பெருமான்கழல்வாழ்கவெனா 
    எழுவாள்நினைவாளிரவும்பகலும் 
    மழுவாளுடையாய்மருகற்பெருமான் 
    தொழுவாளிவளைத்துயராக்கினையே.        7

    வழுவாள்; "பெருமான்கழல் வாழ்க!" எனா 
    எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்; 
    மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்! 
    தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?

    vazuvAL; "perumAnkazal vAzka!" enA 
    ezuvAL; ninaivAL, iravum pakalum;-- 
    mazuvAL uTaiyAy! marukal perumAn!-- 
    tozuvAL ivaLait tuyar AkkinaiyE?

பொருள்:     மழுவினையும் வாளினையும் தாங்கியபடியே மருகல் தலத்துள் கோயில் கொண்ட 
எம்பெருமானே! இப்பெண் உன்னை வணங்கும் நிலையிலிருந்து ஒருபோதும் தவிராள்.  தூக்கத்திலிருந்து 
எழும்போதும் உன் நாமத்தைக் கூறிக்கொண்டே எழுவாள். எப்பொழுதும் உன்னையே தொழும் 
இத்தலத்தில் அடியவள் துன்பமடைய நீ பார்த்துக் கொண்டிருக்கலாமோ? 

குறிப்புரை:     பெருமான் கழல் வாழ்க எனா வழுவாள் எழுவாள் என மாற்றுக. எனா - என்று. 
வழுவாள் - தவறாதவளாய். எழுவாள் - உறங்கிவிழித் தெழுவாள். இரவும் பகலும் நினைவாள்.      
மழுவாள்- மழுவாகிய படை.

    This damsel as and when she hears the voice of devotees going to the temple 
in the early morning singing "The holy feet of our Lord be hallowed forever", gets up 
from her bed, brings to her mind our Lord and prays. This lady never turned away from 
her saiva faith. She used to pray day and night to You without any short fall saying 
"Praise to Thee". Oh Lord of Thiru-marukal! It gives me much pain, indescribable, 
to see this damsel in the sea of sorrow. Oh Lord! You have the small axe on Your hand. 
How could You punish Your worshipper in this way?

1662.     இலங்கைக்கிறைவன்விலங்கல்லெடுப்பத் 
    துலங்கல்விரலூன்றலுந்தோன்றலனாய் 
    வலங்கொள்மதில்சூழ்மருகற்பெருமான்
    அலங்கல்லிவளையலராக்கினையே.        8

    இலங்கைக்கு இறைவன் விலங்கல்(ல்) எடுப்ப, 
    துலங்கல் விரல் ஊன்றலும், தோன்றலனாய்; 
    வலம்கொள் மதில் சூழ் மருகல்பெருமான்! 
    அலங்கல்(ல்) இவளை அலர் ஆக்கினையே?

    ilagkaikku iRaivan vilagkal(l) eTuppa, 
    tulagkal viral UnRalum, tOnRalanAy; 
    valamkoL matil cUz marukal perumAn! 
    alagkal(l) ivaLai alar AkkinaiyE?

பொருள்:     மதில்கள் சூழ்ந்த மருகல் தலத்தில் உறைபவனே! இலங்கை வேந்தன் இராவணன் 
தன்முனைப்பால் நீ இருக்கும் கயிலாய மலையை எடுக்க முயன்றான். நீ அவனை முதலில் அடர்த்துப் 
பின்பு அருள் செய்தாய். ஆனால் பூவினும் மென்மையான இப்பெண் துன்பப்படுகின்றபோதும் 
அருளாது இருக்கின்றாயே! இது முறையோ?

குறிப்புரை:     இறைவன் - அரசன் (இராவணன்). விலங்கல் - மலை (கயிலை) துலங்கு - விளங்கிய. 
ஊன்றலும்-அழுத்தியதும். தோன்றவனாய் - செய்வது இன்னதென்று தோன்றப் பெறாதவனாய். 
வலம் கொள் - வலமாக வந்து பணிந்து வேண்டி வரம் கொண்ட. தோன்றலனாய் என்பது. 
வலங்கொள் என்பதொடு இயையும். இன்றேல். முடிபில்லாதொழியும். அலங்கல் - மாலை. 
அசைந்திடுதலும் ஆம்.

    Oh Lord of Thiru-marukal! You subdued the mighty king of Sri Lanka when he 
tried to lift Your abode of mount Kailash. You pressed the top of the mountain with 
Your single toe slightly.The king got crushed with all his heads and shoulders under 
the mountain. He could not escape. He cried and prayed to You and sang songs on Your 
glory. You forgave him and granted him Your grace. Oh Lord! You reside in the city of 
Thiru-marukal which is surrounded by strong walls of the city. Now, it is cruelty 
that You could not grace, this damsel who looked like a garland previously, but 
now is pathetic like a flower.

1663.     எரியார்சடையும்மடியும்மிருவர் 
    தெரியாததொர்தீத்திரளாயவனே 
    மரியார்பிரியாமருகற்பெருமான் 
    அரியாளிவளையயர்வாக்கினையே.        9

    எரி ஆர் சடையும்(ம்), அடியும்(ம்), இருவர் 
    தெரியாதது ஓர் தீத்திரள் ஆயவனே! 
    மரியார் பிரியா மருகல் பெருமான்! 
    அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?

    eri Ar caTaiyum(m), aTiyum(m), iruvar 
    teriyAtatu Or tIttiraL AyavanE! 
    mariyAr piriyA marukal perumAn! 
    ariyAL ivaLai ayarvu AkkinaiyE?

பொருள்:     ஒளிமிக்க சடையினை உடையவனே! பிரமன், திருமால் ஆகிய இருவராலும் 
அறிய முடியாத ஒளிப்பிளம்பாக நின்றவனே! அடியார்களைவிட்டு நீங்காமல் திருமருகல் தலத்தில்
கோயில் கொண்டவனே!  உன் அடியவளாக விளங்கும் இப்பெண்ணிற்கு நீ துன்பத்தைத் தரலாமோ? 
விரைவில் இவளது துயரத்தை நீக்கி அருள்வாயாக!

குறிப்புரை:     எரிஆர் சடை - நெருப்பைப் போலும் சிவந்த சடை. தீத்திரள் - ஒளிப்பிழம்பு. 
இலிங்க புராண வரலாறு. மரியார் - திருவடி வழிபாட்டால் பிறவி நீங்கியவர் (ஜீவன் முக்தர்) 
அரியாள் - அரியவள்.

    Oh Lord of Thiru-marukal! You were the cluster of all fires when Vishnu and Brahma 
tried to see Your holy head and feet; they failed finally since they could not see Your matted 
hair and ankleted feet. You are the Lord residing in Thiru-marukal where the celebrated devotees 
of deathlessness do not part from You. I feel very sorry to know that you made this damsel, 
a rare devotee of Yours, to wail and suffer.

1664.     அறிவில்சமணும்மலர்சாக்கியரும் 
    நெறியல்லனசெய்தனர்நின்றுழல்வார் 
    மறியேந்துகையாய்மருகற்பெருமான் 
    நெறியார்குழலிநிறைநீக்கினையே.        10

    அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும் 
    நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்; 
    மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்! 
    நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?

    aRivu il camaNum(m) alar cAkkiyarum 
    neRi allana ceytanar, ninRu uzalvAr; 
    maRi Entu kaiyAy! marukal perumAn! 
    neRi Ar kuzali niRai nIkkinaiyE?

பொருள்:     நல்அறிவில்லாத சமணர்களும் சாக்கியர்களும் நெறியற்ற செயல்களைச் செய்து 
துன்புறுவர். மானைக் கையில் ஏந்திய எம்பெருமானே! இப்பெண் முறையான நெறியில் வாழ்பவள் 
அன்றோ? இவளுக்கு நீ துன்பம் தரலாமோ? இவளது துன்பத்தை நீக்கி அருள்வாயாக.

குறிப்புரை:     அறிவு இல் சமண்-  மெய்ப்பொருள் உணர்வில்லாத சமணர். அலர் - பலராகப் பரவிய. 
நெறி அல்லன- சைவநெறி அல்லாத புன்னெறிகள். மறி - மான்கன்று. நெறி- நெறித்தல், அடர்ந்திருத்தல். 
நிறை - நெஞ்சைக் கற்புநெறியில் நிறுத்தல் (குறள்-  57 உரை) நிறை எனப்படுவது மறை பிறரறியாமை 
(கலித்தொகை 136) என்றதன் கருத்தும் அறிக. 
  
    The senseless and ignorant Jains and Buddhists deviate from the right path of our 
Lord of Thiru-marukal. Let them suffer for their ignorance. You hold a deer in one of 
Your hands. It is a pity to see this damsel suffer. She is a woman of strong conviction 
and devotion. You have shattered her integrity. Let her be relieved of her sorrow.

1665.     வயஞானம்வல்லார்மருகற்பெருமான் 
    உயர்ஞானமுணர்ந்தடியுள்குதலால்
    இயன்ஞானசம்பந்தனபாடல்வல்லார் 
    வியன்ஞாலமெல்லாம்விளங்கும்புகழே.        11

    வயஞானம் வல்லார் மருகல் பெருமான் 
    உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால், 
    இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார், 
    வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.

    vayanjAnam vallAr marukal perumAn 
    uyar njAnam uNarntu, aTi uLkutalAl, 
    iyal njAnacampantana pATal vallAr, 
    viyan njAlam ellAm viLagkum, pukazE.

பொருள்:     தன் வயத்தினராகிய மருகல் பெருமானுடைய திருக்குறிப்பின் வழிமேவும் ஞானசம்பந்தன் 
அப்பெருமானின் திருவடிகளை நினைந்து பத்துப் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அவற்றையே பக்தியுடன் 
பாட வல்லவர்கள் புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்கும்.

குறிப்புரை:     வயஞானம் - தன்வயமாக்கிய திருவருண் ஞானம். அருள்வயமான நல்லோர் வாழும் 
மருகல் என்க.

    Civan, our Lord resides in Thiru-marukal, where persons of fine attributes live.
Thiru-gnana-Sambandar of Seerkaazhi with our Lord's inspiration sang these hymns on our Lord, 
keeping in mind the greatness of the divine wisdom. Those devotees who worship His golden feet, 
purely singing these songs will have their fame and greatness spread all over the vast earth.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            18ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 18th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 155                    பதிக எண்: 19

19. திருநெல்லிக்கா                    19. THIRU-NELLIKKAA

பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    திருநெல்லிக்கா என்னும் இத்திருத்தலமானது நெல்லிமரத்தைத் தலமரமாகக் கொண்டதால் 
இப்பெயர் பெற்றது. நெல்லிமரம் பிரகாரத்தில் இருக்கின்றது. திருநெல்லிக்கா தொடர்வண்டி நிலையத்திலிருந்து 
மேற்கே அரை கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள நூற்றுப்பதினேழாவது 
தலமாகும். திருவாரூரிலிருந்து இவ்வூருக்கு நகரப் பேருந்துகள் உள்ளன. இறைவர் திருப்பெயர் நெல்லிவனநாதர். 
இறைவி திருப்பெயர் மங்களநாயகி. தீர்த்தம் பிரமதீர்த்தம், சூரிய தீர்த்தம் என்பன. தலமரம் நெல்லி. 
ஞாயிறும் பிரமனும் வழிபட்ட தலம். ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும் மாசிமாதம் 
18ஆம் தேதி ஏழுநாளும் அஸ்தமன சமயத்தில் சூரியனுடைய கிரணங்கள் இறைவனது திருமேனியில் 
விழுகின்றன. இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

பதிக வரலாறு

    தேவூர் அணைந்து போற்றிய திருஞானசம்பந்தர், திருநெல்லிக்காவைப் பணிந்து பாடியது 
இத்திருப்பதிகம் ஆகும்.

                திருச்சிற்றம்பலம்

1666.     அறத்தாலுயிர்காவலமர்ந்தருளி 
    மறத்தான்மதில்மூன்றுடன்மாண்பழித்த 
    திறத்தாற்றெரிவெய்தியதீவெண்டிங்கள் 
    நிறத்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே.        1

    அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருளி, 
    மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த 
    திறத்தால் தெரிவு எய்திய தீ, வெண்திங்கள், 
    நிறத்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.

    aRattAl uyir kAval amarntu aruLi, 
    maRattAl matil mUnRu uTan mANpu azitta 
    tiRattAl,-terivu eytiya tI, veNtigkaL, 
    niRattAn--nellikAvuL nilAyavanE.

பொருள்:     எம்பெருமான் அறக்கருணை கொண்டு உயிர்களைக் காத்தருளுகிறான்.
மறக்கருணை கொண்டு முப்புரங்களை அழித்தருளுகிறான். அறக்கருணையும் மறக்கருணையும் 
பொருந்தி இருப்பதை விளக்குவதைப் போன்றே அவன் வெண்ணீறு அணிந்து செம்மேனியனாய் 
திருநெல்லிக்கா என்ற தலத்தில்  காட்சியளிக்கின்றான். 
 
குறிப்புரை:     அறத்தால் - தருமத்தை நிலை நிறுத்த வேண்டி. உயிர் காவல்- உயிர்களைக் காத்தல். 
மறம் - அதர்மம். மாண்பு - மாட்சி. தெரிவு - விளக்கம். தீ நிறத்தான் - அழல் வண்ணன். 
வெண்டிங்கள் நிறத்தான் - பவளம் போன்ற திருமேனியில் பால்போலும் திருவெண்ணீற்றைப் பூசிய 
திருக்கோலத்தால், வெண்டிங்கள் போலும் தண்ணொளி உடையவனான பரமசிவன். நிலாயவன்- 
நிலவி நின்றவன், நிலாயவனே நிறத்தான் என்றும் இயையும். 'தான்' அசையுமாம். மேலும் இவ்வாறே 
அசையாதலாம் 

    See there! He is Civan, our Lord of Thiru-nellikkaa. The divine grace of 
our Lord of Thiru-nellikkaa has two folds. One is: He is the protector of virtue (அறக்கருணை)
Another is: The valorous divine grace that chastises (மறக்கருணை). Our Lord of  Thiru-
nellikkaa has both the graces:

1. He drank the poison from the sea of milk and saved the entire humanity in the cosmos. 
This behaviour is as protector of virtue (அறக்கருணை).

2. He destroyed the three flying forts of the asuraas and protected the devaas. This 
is valorous grace that chastised (மறக்கருணை).

    Our Lord of Thiru-nellikkaa with His excellence, exhibited His body with 
reddish fire;  He exhibits His body also in the contrasting white, rubbing the 
holy ashes all over His body.

1667.     பதிதானிடுகாடுபைங்கொன்றைத்தொங்கல் 
    மதிதானதுசூடியமைந்தனுந்தான் 
    விதிதான்வினைதான்விழுப்பம்பயக்கும் 
    நெதிதான்நெல்லிக்காவுள்நிலாயவனே.        2

    பதிதான் இடுகாடு; பைங்கொன்றை தொங்கல்; 
    மதிதான் அது சூடிய மைந்தனும் தான்; 
    விதி தான்; வினை தான்; விழுப்பம் பயக்கும் 
    நெதி தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.

    patitAn iTukATu; paigkonRai togkal;
    matitAn atu cUTiya maintanum tAn; 
    viti tAn; vinai tAn; vizuppam payakkum 
    neti tAn--nellikkAvuL nilAyavanE.

பொருள்:     எம்பெருமான் நெருப்பு நிறைந்துள்ள சுடுகாட்டில் இருக்கிறான். அவனே குளிர்ந்த 
கொன்றை மலர் மாலையையும் நிலவையும் தலையில் அணிந்துள்ளான். அழிக்கும் விதியாகவும் 
விதிக்குக் காரணமான வினையாகவும் மாறுபட்ட நிலையில் (சூடும் குளிர்ச்சியும் போல்) 
திருநெல்லிக்காவுள் மேவியுள்ளான்.

குறிப்புரை:     பதி- இடுகாடு. தொங்கல் - (மாலை) கொன்றை. மதி - பிறை. மைந்தன் - வலியன், வீரன். 
விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை என்றபடி. விழுப்பம் - மேன்மை. திருவருளே 
தனக்கு மேலொன்றில்லாச் செல்வமாதலின் 'விழுப்பம் பயக்கும் நெதி' எனப்பட்டது. 'செல்வன் கழல் 
ஏத்தும் செல்வம் செல்வமே' 'சிவமேபெறும் திரு' 'சென்றடையாத திரு' 'சென்றடையாச் செல்வன்' 
என்பன காண்க. நிலாயவன் பதி இடுகாடு. தொங்கல் கொன்றை என்றும் நிலாயவனே மைந்தனும் 
விதியும் வினையும் நெதியும் என்றும் கொள்க.

    Lord Civan is full of contrasts. He dances on the burial ground of fire; but He 
wears only cool flowers and the cool crescent moon on His matted hair. Destructive destiny 
and the actions which decide and bring the destiny are two different factors. Yet our Lord 
is both. He is in fact all in all; He is the destiny of the souls; the action that begets 
the destiny and also all the wealth in the universe which is bestowed by Him differently 
on different people. On the whole He is the divinity that formulates our destiny, deeds,
wealth and greatness. Our Lord of such power and contrasts, Nelli vaneswarar resides 
in Thiru-nellikkaa.

1668.     நலந்தானவன்நான்முகன்றன்தலையைக் 
    கலந்தானதுகொண்டகபாலியுந்தான் 
    புலந்தான்புகழாலெரிவிண்புகழும் 
    நிலந்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே.        3

    நலம்தான் அவன்; நான்முகன் தன் தலையைக் 
    கலம் தான் அது கொண்ட கபாலியும் தான்; 
    புலம் தான்; புகழால் எரி விண் புகழும் 
    நிலம் தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.

    nalamtAn avan; nAnmukan tan talaiyaik 
    kalamtAn atu koNTa kapAliyum tAn; 
    pulam tAn; pukazAl eri viN pukazum 
    nilam tAn-nellikkAvuL nilAyavanE.

பொருள்:     உயிர்களுக்கு நன்மை செய்யும் எம்பெருமானே! உயிர்களுக்காக உலகைப் படைத்த 
பிரமனின் தலையைக் கொய்தான். அதனை பிச்சைப் பாத்திரமாக ஏந்தி பலிதேர்ந்து வருகிறான். 
பலிதேர்ந்து வரும் அவனே தேவர்களின் மிகுபுகழுக்கும் உரியவனாய்த் திருநெல்லிக்காவுள் 
கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     நலம் தான் அவன் -அவனே நலம். மங்கலம். சிவம் அல்லாது வேறு நலம் 
உயிர்கட்கு இல்லை. 'குறைவிலாமங்கல குணத்தன்' (காஞ்சிப்புராணம் திருநெறிக் 23). நகராநலம் 
(தி.2, ப.19. பா11) பிரமனது தலையைக் கிள்ளிக் கையிற் கொண்ட வரலாறு முற்பகுதியிற் கூறப்பட்டது. 
கபாலி- பிரமகபாலத்தைத் தாங்கியவன். புலம் - சிவஞான சொரூபம். புகழால் எரிவிண்- கீர்த்தியால் 
விளங்கும் வானம். விண்புகழும் நிலம் - வானோர் துதிக்கும் சிவதலம் (திருநெல்லிக்கா). நலம்தான் 
கபாலியும் தான், புலம்தான், நிலம்தான் என்று கொள்ளின். நிலம் என்பது மிசை நிலம், வீட்டுலகு ஆம். 
'நிலமிசை  நீடுவாழ்வார்' (குறள் 3) 'மீதானம்' (திருக்களிறு). 

    Civan, seems to be a bundle of contradictions in his actions. He is the Lord of 
Thiru-nellikkaa. He is the personification of virtue; however He controls the virtue and 
performs beneficial actions for the sake of all life in the universe. Yet, He plucked one
head of Brahma for his wrong doing and after it was cleaned, used it as His begging bowl. 
Despite this humiliating action, it is He who is praised by the celestials for His divine 
wisdom.He stands for the earth and also for the celestial world. This Lord of immense fame 
resides in Thiru-nellikkaa.

1669.     தலைதானதுஏந்தியதம்மடிகள் 
    கலைதான்திரிகாடிடம்நாடிடமா 
    மலைதானெடுத்தான்மதில்மூன்றுடைய 
    நிலைதான்நெல்லிக்காவுள்நிலாயவனே.        4

    தலைதான் அது ஏந்திய தம் அடிகள்; 
    கலைதான் திரி காடுஇடம் நாடுஇடம் ஆம்; 
    மலைதான் எடுத்தான், மதில்மூன்று உடைய; 
    நிலை தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.

    talaitAn atu Entiya tam aTikaL; 
    kalaitAn tiri kATu iTam nATu iTam Am; 
    malaitAn eTuttAn, matilmUnRu uTaiya; 
    nilaitAn--nellikkAvuL nilAyavanE.

பொருள்:     பிரமனின் தலையைக் கையில் ஏந்தி எம்பெருமான் நாட்டிலும் காட்டிலும் 
ஓடி ஆடித் திரிகிறான். முப்புரத்தையுடை அசுரர்களை அழிப்பதற்காக மேருமலையை 
வில்லாக வளைத்தான். அப்பெருமான் திருநெல்லிக்காவுள் கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     தலை- பிரமகபாலம். கலை - மான். ஏந்தியது தலை, காடிடம் நாடிடமாம். 
காடாகிய இடம் நாடுகின்ற இடம், நாடாகிய இடமுமாம். மதில் மூன்றுடைய மலைதான் எடுத்தான்- 
முப்புரமும் உடைந்தழிய மேருமலை வில்லை எடுத்தவன். நிலை - உறையுள்.

    See there! It is Civan, the Lord of Thiru-nellikkaa, which is the holy of the holy. 
He holds in His hand the dried skull of Brahma for begging alms. He seeks the forest where 
the deer leaps at its dwelling place. He keeps it in one of His hands and prevents it from 
running out of His hand. Once He bent the big Meru mountain as His bow and burnt the three 
flying forts of the asuraas and helped the devaas to escape the asuraas' misdeed. He is our 
Lord who for ever stays there in Thiru-nellikkaa.

1670.     தவந்தான்கதிதான்மதிவார்சடைமேல் 
    உவந்தான்சுறவேந்தனுருவழியச் 
    சிவந்தான்செயச்செய்துசெறுத்துலகில் 
    நிவந்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே.        5

    தவம் தான்; கதி தான்; மதி வார்சடைமேல் 
    உவந்தான்; சுறவேந்தன் உரு அழியச் 
    சிவந்தான்; செயச்செய்து செறுத்து உலகில் 
    நிவந்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.

    tavamtAn; kati tAn; mati vArcaTaimEl 
    uvantAn; cuRavEntan uru aziyac 
    civantAn; ceyacceytu ceRuttu ulakil 
    nivantAn--nellikkAvuL nilAyavanE.

பொருள்:     சிவபெருமானே தவம் செய்பவன் ஆவான். தவத்தின் முடிவும் அவனே ஆவான். 
சந்திரனைத் தலையில் தரித்தவனும் அவனே. மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவனும் அவனே. 
பூவுலகில் ஏற்படுகின்ற மாறுபட்ட செயல்களுக்கு உரியவனும் அவனே, விரும்பி திருநெல்லிக்காவுள் 
மேவியுள்ளான்.

குறிப்புரை:     தவமும் அத்தவத்தின் பயனாக எய்தும் கதியும் தானே (சிவனே) ஆவான். 
வார்சடைமேல்  மதியை உவந்தான். உவத்தல் - மகிழ்தல். சுறவேந்தன் - மீனக்கொடி உடைய                 
மன்மதன். உருஅழிய- (உருவிலியாக) வடிவம் எரிந்து சாம்பலாக சிவந்தான். கோபித்தான். 
சிவந்தான் (ஆகச்) செய்யச் செய்து. செறுத்து - அழித்து. நிவந்தான் - ஓங்கினான். செயற்செய்து 
என்னும் பாடத்திற்குச் சிவந்தானது  செயலைச் செய்து என்று கொள்க. செய (ஜெய) - வெற்றி 
எனலுமாம். செயம் என்றதன் விகாரமாகக் கொள்க. 

    See there! It is Civan, our Lord of Thiru-nellikkaa. He is the personification of 'penance'. 
Also He is the resulting salvation which arises out of penance. He is happy with the cool moon 
on His long matted hair. His body turned to be red-hot with anger when he burnt cupid, the god of love, 
for his misbehaviour. Thus, He exhibits His destroying power in the entire universe thereby proving
his ultimate greatness. He is our Lord, ever stays in Thiru-nellikkaa.

1671.     வெறியார்மலர்க்கொன்றையந்தார்விரும்பி 
    மறியார்மலைமங்கைமகிழ்ந்தவன்றான் 
    குறியாற்குறிகொண்டவர்போய்க்குறுகும் 
    நெறியான்நெல்லிக்காவுள்நிலாயவனே.        6

    வெறி ஆர் மலர்க்கொன்றைஅம்தார் விரும்பி; 
    மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்; 
    குறியால் குறி கொண்டவர் போய்க் குறுகும் 
    நெறியான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.

    veRi Ar malarkkonRai am tAr virumpi; 
    maRi Ar malaimagkai makizntavan tAn; 
    kuRiyAl kuRi koNTavar pOyk kuRukum 
    neRiyAn--nellikkAvuL nilAyavanE.

பொருள்:     எம்பெருமான், மணமிக்க கொன்றை மாலையை விரும்பி அணிந்துள்ளான். 
அவனே மலைமகளை விரும்பி மணந்துள்ளான். சூரியன், சந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் 
தாம் நற்பேறு பெற வேண்டும் என்னும் பெருநோக்கத்தால், நம் இறைவனிடம் வந்து சேரவிரும்பியதால், 
நம் இறைவன் தன்னை அடையாளம் காட்டும் நிலையில் அவனே திருநெல்லிக்கா தலத்துள் 
கோயில் கொண்டு அருள் வழங்கி வருகின்றான்.

குறிப்புரை:     வெறி -மணம். தார்-மாலை. மறி-மான்.  மலைமங்கை இமாசலகுமாரி. குறியால் 
குறிகொண்டவர் போய்க் குறுகும் நெறியான் - குரு உபதேசித்த குறியினால் தியானித்துணர்ந்து கொண்டவர் 
சென்று அடையும் ஒளி நெறி உடையவன். 'அறிவதொருகுறி குருவினருளினால் அறிந்து மன்னு 
சிவன்றனையடைந்து நின்று' அருள் ஞானக் குறியில் நின்று கும்பிட்டுத் தட்டம் இட்டுக் கூத்தாடித்திரி 
(சித்தியார் 286, 323) 'குறியொடுதாம் அழியும் நெறி' (சித்தியார் 324) அதனின் மேலாயது.

    See there! It is Civan who is our Lord in Thiru-nellikkaa. He has adorned 
Himself with fragrant cassia flowers. The king's mountain is the Himalayaas, 
where deer in large numbers live and enjoy their life. The king's daughter Umaa 
observed penance in order to marry Lord Civa. Our Lord agreed to her wish and 
married her. He is the ultimate destination for those devotees who follow the 
well-guided path established by the sacred scholars of the past. He is our Lord
in Thiru-nellikkaa. He has identified Himself as the ultimate goal for all souls.

1672.     பிறைதான்சடைச்சேர்த்தியஎந்தைபெம்மான் 
    இறைதானிறவாக்கயிலைமலையான் 
    மறைதான்புனலொண்மதிமல்குசென்னி 
    நிறைதான்நெல்லிக்காவுள்நிலாயவனே.        7

    பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்; 
    இறை தான்; இறவாக் கயிலைமலையான்; 
    மறை தான்; புனல், ஒண்மதி, மல்கு, சென்னி 
    நிறை தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.

    piRaitAn caTaic cErttiya entaipemmAn; 
    iRai tAn; iRavAk kayilaimalaiyAn;
    maRai tAn; punal, oNmati, malku cenni 
    niRai tAn-nellikkAvuL nilAyavanE.

பொருள்:     தலையில் பிறையைத் தாங்கி நிற்கும் எம்பெருமானே, கயிலாய மலையின் உச்சியில் 
அமர்ந்துள்ளான். மறைகளுக்கும் மேலானவன் அவனே; கங்கை, சந்திரன் முதலியவைகளைத் தன் தலையில் 
அணிந்து மக்களுக்கு வெளிப்படுமாறு செய்துள்ளான். அவனே, துவர்ப்பும் இனிப்பும் நிறைந்த நெல்லிக்கா 
போல நெல்லிக்காவுள் உறைந்துள்ளான் என்க. 

குறிப்புரை:     சடைச்சேர்த்திய - சடைமேல் சேரச் செய்த. ஏழன்தொகை. இறவாக் கயிலைமலை-
 என்றதால் அழிவில்லாத சிறப்புணர்க. புனல் - கங்கை. முதலடியிற் பிறையும் சடையும். மூன்றாவதடியில்
 மதியும், சென்னியும் என ஓரிடமும் நோக்கின் இப்பதிகத்தைப்பற்றி ஒரு சிந்தனை தோன்றும்.

    See there! It is Civan our Lord of Thiru-nellikkaa. He, my father has adorned His
matted hair with the crescent moon. He is the Almighty; He is the Eternal; the Supreme God of 
mount Kailash. He is the venerable Vedas. He has on His head the Ganges  along with the 
bright moon. He is an epitome of perfection in everything. He is our Lord ever abiding 
in Thiru-nellikkaa.

1673.     மறைத்தான்பிணிமாதொருபாகந்தன்னை 
    மிறைத்தான்வரையாலரக்கன்மிகையைக் 
    குறைத்தான்சடைமேற்குளிர்கோல்வளையை 
    நிறைத்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே.        8

    மறைத்தான், பிணி மாது ஒருபாகம் தன்னை; 
    மிறைத்தான், வரையால் அரக்கன் மிகையைக் 
    குறைத்தான்; சடைமேல் குளிர் கோல்வளையை 
    நிறைத்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.

    maRaittAn, piNi mAtu orupAkam tannai; 
    miRaittAn, varaiyAl, arakkan mikaiyaik 
    kuRaittAn, caTaimEl kuLir kOlvaLaiyai 
    niRaittAn--nellikkAvuL nilAyavanE.

பொருள்:     எம்பெருமான் உமாதேவியைப் பிணித்து இருக்கிறான். அவனே பிணித்ததைப் 
பிறர் அறியாவண்ணம் அர்த்தநாரியாய் ஒன்றுபட்டும் காட்சியளிக்கிறான். கயிலாய மலையைத் தூக்க 
முயன்ற அரக்கனை அடர்த்தும் அருளியுள்ளான். கங்கையைத் தலையில் தாங்கி மறைத்து வைத்தலையும் 
புரிகிறான். அவனே நெல்லிக்காவுள் உள்ளான் என்க.

குறிப்புரை:     ஒரு பாகத்தில் மாதினைப் பிணித்து மறைத்தான். பிணி மறைத்தான்- 
வரிப்புனைபந்து என்புழிப்போலும். மிறைத்தான்-   வருத்தினான். மிகை - மீச்செலவை, 
குறைத்தான் - அடக்கினான். கோல்வளையை- கங்கையை - அன்மொழித் தொகை. 
கோல்- திரட்சி. வளை- வளையலை உடையவள். நிறைத்தான் - நிறைய அடக்கிக் கொண்டான். 

    See there! It is Civan, our Lord of Thiru-nellikkaa. He keeps His consort 
on the left side of His body, concealing her true form. He subdued the valour of 
Raavanan by pressing the top of mount Kailash with His toe, when Raavanan tried to 
lift the mountain and keep it aside. He keeps the cool river Ganges with her broad 
bangles on His matted hair in Thiru-nellikkaa. He is our Lord there forever.

1674.     தழல்தாமரையான்வையந்தாயவனும் 
    கழல்தான் முடிகாணியநாணொளிரும் 
    அழல்தானடியார்க்கருளாய்ப்பயக்கும் 
    நிழல்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே.        9

    தழல் தாமரையான், வையம் தாயவனும், 
    கழல்தான் முடி காணிய, நாண் ஒளிரும் 
    அழல்தான்; அடியார்க்கு அருள் ஆய்ப் பயக்கும் 
    நிழல் தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.

    tazal tAmaraiyAn, vaiyam tAyavanum, 
    kazaltAn muTi kANiya, nAN oLirum 
    azaltAn; aTiyArkku aruL Ayp payakkum 
    nizaltAn--nellikkAvuL nilAyavanE.

பொருள்:     குளிர்ந்த செந்தாமரை மலரில் இருக்கும் பிரமனுக்கும் நெடிய வடிவு எடுத்து உலகை அளந்த 
திருமாலுக்கும் எம்பெருமான் ஒளிர்ந்து ஓங்கும் நெருப்பு வடிவு கொண்டே காட்சி கொடுத்து அருளினான். 
அவனே சிவனடியார் பொருட்டு குளிர்ந்த நிலையில் நெல்லிக்காவுள் கோயில் கொண்டுள்ளான் என்க.

குறிப்புரை:     தழல் தாமரையான் - தீயைப் போன்ற செந்தாமரையில் வாழும் பிரமன். வையம் தாயவன்-
 உலகம் அளந்த திருமால். கழல் முடி- காலும் தலையும். காணிய- காண்பதற்கு. அழல் - தீப்பிழம்பு, அடியாருக்கு – 
யான் எனது என்னும் செருக்கற்றுத் திருவடிஞானம் பெற்றார்க்கு. அருளாய்ப் பரக்கும் நிழல் - திருஞானமாய்ப் 
பரவியுள்ள பேரொளி.

    See there! It is Civan, our Lord of Thiru-nellikkaa. Brahma is seated in red lotus flower.
Vishnu measured the entire earth with one step of his legs. Both these Lords were unable to see 
the origin or end of our Lord. He rose in the indescribable bright form. He has changed His image 
from the fiery column into a divine shade for bestowing grace on His sincere devotees who have 
shed their ego and gained divine wisdom. This Lord of shelter resides permanently in Thiru-nellikkaa.

1675.     கனத்தார்திரைமாண்டழற்கான்றநஞ்சை 
    எனத்தாவெனவாங்கியதுண்டகண்டன் 
    மனத்தாற்சமண்சாக்கியர்மாண்பழிய 
    நினைத்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே.        10

    கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை, 
    "என் அத்தா!" என, வாங்கி அது உண்ட கண்டன்; 
    மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய 
    நினைத்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.

    kanattu Ar tirai mANTu azal kAnRa nanjcai, 
    "en attA!" ena, vAgki atu uNTa kaNTan;
    manattAl camaNcAkkiyar mANpu aziya 
    ninaittAn--nellikkAvuL nilAyavanE.

பொருள்:     பாற்கடலில் தோன்றிய நஞ்சைக் கொண்டுவந்த தேவர்கள், அத்தனே! காவாய் என 
முறையிட்டு இறைஞ்சியபோது நஞ்சை உண்டு காத்தருளியவன் எம்பெருமான்! அவனே இப்போது 
சமணரும் சாக்கியரும் மனம் திருந்தாமல் கொடுமை செய்வதைத் தடுக்க திருநெல்லிக்காவுள் 
கோயில் கொண்டுள்ளான் என்க.

குறிப்புரை:     கனத்து ஆர் திரை - மேகத்தால் உண்ணப்படுங் கடல், ஈண்டுப் பாற்கடல் என்க. 
திரை - அலை. ஆகுபெயர். மாண்டு- பெருகி. அழல் - வெப்பம். கான்ற - வீசிய. உமிழ்ந்த. 'என் அத்தா’ 
என்று தேவர் வேண்ட. வாங்கி அது உண்ட கண்டன் என்க. மாண்பு - மாட்சி.

    See there! It is Civan our Lord in Thiru-nellikkaa. The devaas and the asuraas were 
churning the sea of milk to get amirtham and to consume it for longivity. But a dreadful 
poison came out of the sea of milk. The devaas cried "Oh Lord! Our Father! Kindly save us 
from death that spreads from the severe odour of the poison, thus they worshipped our Lord.
He then drank the poison and saved the entire humanity. However, His neck turned black 
because of the poison He drank and thereafter He is called 'Neelakandan'. The Jains and 
Buddhists carry on propaganda against our Lord. The so called greatness of these races 
has to be destroyed. Therefore, our Lord ever stays in Thiru-nellikkaa.

1676.     புகரேதுமிலாதபுத்தேளுலகில் 
    நிகராநெல்லிக்காவுள்நிலாயவனை 
    நகராநலஞானசம்பந்தன்சொன்ன 
    பகர்வாரவர்பாவமிலாதவரே.        11

    புகர்ஏதும் இலாத புத்தேள் உலகின் 
    நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை, 
    நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன, 
    பகர்வார் அவர் பாவம் இலாதவரே.

    pukar Etum ilAta puttEL ulakin 
    nikar Am nellikkAvuL nilAyavanai, 
    nakarA nala njAnacampantan conna, 
    pakarvAr avar pAvam ilAtavarE.

பொருள்:     திருநெல்லிக்கா திருத்தலம் குற்றமற்ற திருத்தலம். தேவர் உலகிற்கு நிகரான சிறப்பு
பொருந்திய திருத்தலம். அத்திருத்தலத்தில் மேவியுள்ள எம்பெருமானை நன்நகராகிய சீர்காழி தலத்தில் 
அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார், அவர் பாடிய பாடல்களை மனமுருகி 
பாடவல்லார்கள் பாவம் இல்லாதவர்கள் - புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள் என்க.

குறிப்புரை:     புகர் - குற்றம். புத்தேள் உலகு - தேவருலகம். நிகரா - ஒப்பாகாத. நகராநலம் - அழியாத நன்மை.
சிவம், சொன்ன- சொல்லிய. இப்பாமாலையை. பகர்வார் - பாடித் தொழுவார்.

    See there! He is our Lord of Thiru-nellikkaa. This town Thiru-nellikkaa is a very 
holy, flawless place having no equal even in the celestial world. Our Thiru-gnana- Sambandar 
hails from the town called Seerkaazhi which has never had any destrution through all the ages. 
This virtuous Thiru-gnana-Sambandar sang these Tamil verses on our Lord of Thiru-nellikkaa. 
Those devotees who can recite these holy verses sung by him will be always considered 
holy and sinless.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            19ஆம் பதிகம் முற்றிற்று
            End of 19th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 156                பதிக எண்: 20

20. திருஅழுந்தூர்                    20. THIRU-ALUNDOOR

பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    திருஅழுந்தூர் என்னும் இத்திருத்தலமானது சோழநாட்டுக் காவிரித் தென்கரைத் தலம் ஆகும். 
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து 
பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள 
தேரழுந்தூர் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி தெற்கே 3 கி.மீ. சென்றால் ஊரை அடையலாம். இது 
தென்கரைத் தலங்களுள் முப்பத்தெட்டாவது தலம் ஆகும்.

    அகத்திய முனிவர் கீழே இறைவரைப் பூசித்திருந்ததை அறியாது ஊர்த்துவ ரதன் என்னும் 
அரசன் ஆகாயத்தில் செலுத்திய தேர் செல்லாது அழுந்தியதால் இப்பெயர் பெற்றது என்பர். இது இக்காலம் 
தேரழுந்தூர் என்று வழங்கப்பெறுகின்ற பெயருக்கேற்றபடி இவ்வரலாறு தோற்றப்பெற்றது போலும். 
கம்பர் பிறந்த கம்பன் மேடு உள்ள இடம். இறைவரின் திருப்பெயர் வேதபுரீசுவரர். இறைவியாரின் 
திருப்பெயர் சௌந்தரியாம்பிகை. வேததீர்த்தம். இது சந்நிதிக்குத் தென்பால் இருக்கின்றது. 
வேதங்கள், தேவர்கள், திக்குப்பாலகர்கள், முனிவர்கள் இவர்கள் பூசித்துப் பேறு எய்தினர்.

    இது திருஞானசம்பந்தருடைய ஒரே பதிகத்தைப் பெற்றது. இக்கோயில் 'மாமடம்' எனப்படும் 
சிறப்பு இவ்வூர்த் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் அழுந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்         
பெறுவதுண்டு. இவ்வழக்கம் திருஞானசம்பந்தப் பெருந்தகையார் காலத்தே வழக்கில் இருந்தது என்பது 
அவர் தேவாரத்தால் அறியக் கிடக்கின்றது. இவ்வூர் மறையோர் இறைவனைத் தொழுது வழிபடுதலில் வல்லவர்.

பதிக வரலாறு

    ஞானப்பாலுண்டவர் திருநல்லம் முதலிய திருப்பதிகளைப் பணிந்து திருவழுந்தூர் மாடக்கோயிலை 
அடைந்தார். அம் மாமடம் மகிழ்ந்த வான்பொருளினை வணங்கிப் பாடிய  பதிகம்  இது.

            திருச்சிற்றம்பலம்

1677.     தொழுமாறுவல்லார்துயர்தீரநினைந் 
    தெழுமாறுவல்லாரிசைபாடவிம்மி 
    அழுமாறுவல்லாரழுந்தைமறையோர் 
    வழிபாடுசெய்மாமடமன்னினையே.        1

    தொழும்ஆறு வல்லார், துயர் தீர நினைந்து
    எழும்ஆறு வல்லார், இசை பாட விம்மி 
    அழும்ஆறு வல்லார், அழுந்தை மறையோர் 
    வழிபாடுசெய் மா மடம் மன்னினையே.

    tozum ARu vallAr, tuyar tIra ninaintu, 
    ezum ARu vallAr, icai pATa vimmi 
    azum ARu vallAr, azuntai maRaiyOr 
    vazipATu cey mA maTam manninaiyE.

பொருள்:     எப்பொருளையும் விரும்பாமல் உன்னைத் தொழுபவர்கள்; தங்கள் துயர்தீர வேண்டி 
உன்னைத் தொழுபவர்கள்; பக்தியினால் பாடிவிம்மி அரற்றும் அடியவர்கள் : ஆகம முறைப்படி வழிபடும் 
மறையவர்கள் ஆகிய அனைவருக்கும் அருள, திருவழுந்தூரில் கோயில் கொள்ள திருவுள்ளம் கொண்டனையே.

குறிப்புரை:     திருவழுந்தூரிலுள்ள வேதியர் (கட்டி) வழிபாடு செய்யும் பெரிய மடத்தில் (பா.3) 
சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அவ்வேதியர்கள் சிவபிரானைத் தொழும் வகையிலும், 
பிறவித் துன்பம் போயொழிய நினைந்தெழும் வகையிலும், இசை பாடிட விம்மி அழும் வகையிலும் 
வன்மையுற்ற பயிற்சியுடையவர்கள், அழுந்தை என்பது அழுந்தூர் என்பதன் மரூஉ. இது புலவர் செய்து 
கொள்ளும் மரூஉச் சொற்களுள் ஒன்று. புலியூர் -புலிசை, மறைக்காடு- மறைசை, ஆவடுதுறை - 
துறைசை முதலிய அறிக. தொட்டிக்கலை - கலைசை, திருவோத்தூர் (வேதபுரி, மறைநகர்) - மறைசை 
என்பவை வழங்கி மருவாதன ஆயினும் புலவர் வழக்கில் உள. 

    Oh Civa! You are the Lord of Alundur. You have Your abode in this town, 
which has a good number of big palaces. Here Vedic scholars performing daily religious 
rites with fervour worship You. There are people in this town who pray without making 
any request for their selfish desires. There is a second type of people who offer worship 
to you bearing in their minds that their suffering should vanish soon. There is another 
type of servitors who out of strong devotion sing Your praise and weep with pious emotions. 
Oh Lord! You stay in Thiru-alundoor so as to bless all the above devotees.

1678.     கடலேறியநஞ்சமுதுண்டவனே 
    உடலேயுயிரேயுணர்வேயெழிலே 
    அடலேறுடையாயழுந்தைமறையோர் 
    விடலேதொழமாமடமேவினையே.        2

    கடல் ஏறிய நஞ்சு அமுது உண்டவனே! 
    உடலே! உயிரே! உணர்வே! எழிலே! 
    அடல் ஏறு உடையாய்! அழுந்தை மறையோர் 
    விடலே! தொழ, மா மடம் மேவினையே.

    kaTal ERiya nanjcu amutu uNTavanE! 
    uTalE! uyirE! uNarvE! ezilE! 
    aTal ERu uTaiyAy! azuntai maRaiyOr 
    viTalE! toza, mA maTam mEvinaiyE.

பொருள்:     கடலில் தோன்றிய விடத்தை அமுதாக உண்டருளியவனே! எனது உடலாகவும், உயிராகவும், 
உணர்வாகவும் உள்ளவனே! அழகானவனே! இடப வாகனத்தை உடையவனே! மறையோர்களால் 
வணங்கப்படுபவனே! திருவழுந்தூரில் கோயில் கொண்டு அருள் வழங்க திருவுள்ளம் கொண்டனையே.

குறிப்புரை:     பாற்கடல், உடலும், உயிரும், உணர்வும், எழிலும் ஆக இருப்பவன் சிவபிரான், 
அடல்- வலிமை. கொலையுமாம். 'கொல்லேறு'. விடலே - தலைவனே.

    Oh Civa! You are my Lord of Thiru-alundoor. You drank the poison that came out of 
the sea of milk. By drinking the poison, You saved all lives in the universe thereby 
becoming one with all the body and the life of the whole universe. You are the
origin of their emotional content and their comeliness. You ride on Your bull to go
round the cosmos. You are the Almighty worshipped by the Vedic scholars of Thiru-alundoor, 
a place with a raised temple for Your abode.

1679.    கழிகாடலனேகனலாடலினாய் 
    பழிபாடிலனேயவையேபயிலும் 
    அழிபாடிலராயழுந்தைமறையோர் 
    வழிபாடுசெய்மாமடமன்னினையே.        3

    கழிகாடலனே! கனல்ஆடலினாய்! 
    பழிபாடு இலனே! அவையே பயிலும் 
    அழிபாடு இலராய், அழுந்தை மறையோர் 
    வழிபாடு செய் மா மடம் மன்னினையே.

    kazikATalanE! kanal ATalinAy! 
    pazipATu ilanE! avaiyE payilum 
    azipATu ilarAy, azuntai maRaiyOr 
    vazipATu cey mA maTam manninaiyE.

பொருள்:     சுடுகாட்டில், நெருப்பைக் கையில் ஏந்தி ஆடிக்கொண்டிருப்பவனே !  
குற்றமற்றவனே! நல்லதையே பயின்று அழிபாடு இன்றி வழிபாடு செய்யும் மறையவர்கள்  
நிறைந்த அழுந்தூர்தன்னில் அமர்ந்தவனே!

குறிப்புரை:     கழிகாடலனே- சுடுகாட்டில் (இரவில்) ஆடுபவனே, கரிகாடலினாய் (தி.2,ப21,பா8)
சுடலையாடி, கனல் ஆடலினாய் - தீயில் ஆடுதலை உடையவனே. பழிபாடு இலனே - பழிக்கப் படுதல்
இல்லாதவனே. அழிபாடு -அழிவுபடுதல்.

    Oh Civa! You are my Lord of Thiru-alundoor. You visit the burial ground now and 
then and dance there holding fire on your hand followed by Your ghosts. You are the most 
blemishless that nobody could disgrace You. Just as You are blemishless, the Vedic scholars 
of this place also are blameless and therefore without any defeat in their life. They protect 
the virtues of one and all. They worship You, our Lord of Thiru-alundoor whose abode is 
a raised temple here.

1680.     வானேமலையேயெனமன்னுயிரே 
    தானேதொழுவார்தொழுதாள்மணியே 
    ஆனேசிவனேயழுந்தையவரெம் 
    மானேயெனமாமடமன்னினையே.        4

    வானே! மலையே! என மன்உயிரே! 
    தானே தொழுவார் தொழு தாள் மணியே! 
    ஆனே! சிவனே! அழுந்தையவர், “எம் 
    மானே!" என, மா மடம் மன்னினையே.

    vAnE! malaiyE! ena man uyirE! 
    tAnE tozuvAr tozu tAL maNiyE! 
    AnE! civanE! azuntaiyavar, "em 
    mAnE!" ena, mA maTam manninaiyE.

பொருள்:     வானாக விளங்குபவனே! மலையாகத் திகழ்பவனே! உயிராக உறைபவனே! 
தானே விரும்பித் தொழும் அடியார்களுக்குத் திருவடிப்பேற்றை அருள்பவனே! சிவன் ஆனவனே! 
அழுந்தை நகரில் கோயில் கொண்டனையே. 

குறிப்புரை:     வான் - வானம். வானம் மலை என்று தொழமன்னிய உயிரே. வானே என மலையே 
என மன்னும் உயிர். தொழுவார் தொழு - வணங்குவார் வணங்குதற்குரிய. தாள் - திருவடி. ஆனே - பசுபதி 
என்னும் பொருட்டு. ஆன் - பசு.  அழுந்தையவர்- திருவழுந்தூர் மறையோர். எம்மானே- எம்பெருமானே. 
என - என்று கூவித்தொழ.

    Oh Civa! You are my Lord of Thiru-alundoor. All the sentient souls of the universe 
pray and declare "Oh You are the sky! You are the Kailash mountain; You are my life". 
You are the Gem worshipped by devotees; these devotees are all worshipped by others. 
You are our Lord Civan, Lord of Thiru-alundoor. You have Your abode in the raised 
temple in Thiru-alundoor.

1681.     அலையார்புனல்சூழழுந்தைப்பெருமான் 
    நிலையார்மறியுந்நிறைவெண்மழுவும் 
    இலையார்படையும்மிவையேந்துசெல்வ 
    நிலையாவதுகொள்கெனநீநினையே.        5

    அலை ஆர் புனல் சூழ் அழுந்தைப் பெருமான்! 
    நிலை ஆர் மறியும், நிறை வெண்மழுவும், 
    இலை ஆர் படையும்(ம்), இவை ஏந்து செல்வ! 
    நிலையா அது கொள்க என, நீ நினையே!

    alai Ar punal cUz azuntaip perumAn! 
    nilai Ar maRiyum, niRai veNmazuvum, 
    ilai Ar paTaiyum(m), ivai Entu celva! 
    nilaiyA atu koLka ena, nI ninaiyE!

பொருள்:     அலைகள் விளங்கும் நீர்நிலைகள் சூழ்ந்த அழுந்தை நகரில் எழுந்தருளிய 
சிவனே !  நீ அலையும் மானை அசையாமல் உன் கையில் அடக்கியுள்ளாய். ஒளிமிக்க மழுவையும் 
சூலப்படையையும் எப்பொழுதும் ஏந்தி உள்ளாய். இயக்கத்தையும் இயக்கமின்மையையும்                  
உன்னிடத்தில் பொருத்திக் காட்டும் உன்னை நானும் வணங்குகிறேன்.

குறிப்புரை:     இலையார் படை-  திரிசூலாயுதம். இவையே நிலையான செல்வம். ஏனைய 
அழியும் என்றவாறு.

    Oh my mind! Always think of Him, who is our Lord of Thiru-alundoor which is surrounded 
by ponds of surging waves. He holds in one of His hands a deer. In another hand He holds a bright axe. 
In the third hand, You hold a three-leaved trident. Oh my mind! think of these always for they are 
real wealth. Oh Lord! I think of You as one who represents both action and inaction.

1682.     நறவார்தலையின்நயவாவுலகில் 
    பிறவாதவனேபிணியில்லவனே 
    அறையார்கழலாயழுந்தைமறையோர் 
    மறவாதெழமாமடமன்னினையே.        6

    நறவு ஆர் தலையின் நயவா! உலகில் 
    பிறவாதவனே! பிணி இல்லவனே! 
    அறை ஆர் கழலாய்! அழுந்தை மறையோர் 
    மறவாது எழ, மா மடம் மன்னினையே.

    naRavu Ar talaiyin nayavA! ulakil 
    piRavAtavanE! piNi illavanE! 
    aRai Ar kazalAy! azuntai maRaiyOr 
    maRavAtu eza, mA maTam manninaiyE.            

பொருள்:     தலையில் தலைமாலை அணிந்தவனே!  பிறவா யாக்கைப் பெரியோனே ! 
பிணிக்கப்படும் வினையால்  பிணைக்கப்படாதவனே! பிணிக்கப்படும்  வினை முதலானவற்றால் ஆட்படாத 
நின்மலனே! ஒலிக்கின்ற கழலினை அணிந்தவனே!  அழுந்தை நகரில் வாழும் மறையோர்களால் 
மறவாது வணங்கப்படுபவனே! உன்னை நானும் மறவாமல் வணங்கிடுவேன்.

குறிப்புரை:     நறவு -  தேன், நயவா- நயமுடையவன். நயம் - மகிழ்ச்சி, இன்பம், 
நன்மை, நீதி, உலகியல்  பிறவாதவன்- பிறவா யாக்கைப் பெரியோன். பிறப்பிலி இறப்பிலி (பாரதம்). 
பிணி இல்லவன்- நோயில்லான். அறை -ஒலி.

    Oh Civa! You are my Lord residing in Thiru-alundoor. You have beautified 
Your hair with nectared flowers. You are birthless in all the worlds. You are beyond 
and free from all effects of karma. Your holy feet wear the golden ringing anklets. 
You have Your abode in Thiru-alundoor, where the Vedic scholars pray with clubbed hands 
holding Your holy feet at that raised temple.

1683.     தடுமாறுவல்லாய்தலைவாமதியம் 
    சுடுமாறுவல்லாய்சுடரார்சடையில் 
    அடுமாறுவல்லாயழுந்தைமறையோர் 
    நெடுமாநகர்கைதொழநின்றனையே.        7

    தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம் 
    சுடும் ஆறு வல்லாய்! சுடர்ஆர் சடையில்
    அடும்ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர் 
    நெடு மா நகர் கைதொழ, நின்றனையே.

    taTumARu vallAy! talaivA! matiyam 
    cuTum ARu vallAy! cuTar Ar caTaiyil 
    aTum ARu vallAy! azuntai maRaiyOr 
    neTu mA nakar kaitoza, ninRanaiyE.

பொருள்:     தடுமாற்றம் இல்லாச் சிவபெருமானே! உன்னை நாடிவரும் எங்களை முதலில் 
நீ தடுமாறச் செய்வாய். உன் காலில் விழுந்த சந்திரனை நீ தலையில் வைத்துள்ளாய். ஓடிவரும் 
கங்கையை நீ உன் தலையில் நிலைபெறச் செய்தாய். அழுந்தை நகரில் கோயில் கொண்டு 
மறையவர்களுக்கு அருளும் நீ எனக்கும் அருள்வாயாக!

குறிப்புரை:     தடுமாறுவல்லாய் - உயிர்கள் உன்னை உணர்வதில் தடுமாறுதலைச் செய்ய வல்லவனே. 
உணர்ந்தார்க்கு உணர்வரியோன் என்றது இத்தடுமாற்றத்தை வலியுறுத்தும். தடுமாறுதல் - தட்டுமாறுதல் 
என்பதன் மரூஉ வாகக் கொண்டு அஃது ஈண்டுத் திருக்கூத்தைக் குறித்து நின்றது எனலுமாம்.
ஆடவல்லாய் ஆடுமாறு வல்லானும் ஐயாறுடை ஐயனே எனவரும் தேவாரங்களால் உணர்க. 
மதியம் சுடும் ஆறு -பிறையால் (காதல் கொண்ட) மகளிரைச் சுடும் வகை. சூடுமாறு என்பதன் 
முதற்குறுக்கமுமாம். அடும் ஆறு - கங்கைப் பெருக்கு. நெடுமாநகர் - நீள்பெருங்கோயில்.

    Oh Civa! You are my Lord residing in Thiru-alundoor. You have no confusion, 
but You are capable of hiding Yourself and confusing the minds of those, who shedding 
their ego, seek You.                                         

You are our Master. You have beautified Your head with that  bright and beautiful 
crescent moon. You have stationed the gushing turbulent river Ganges on Your matted hair. 
You have Your abode in Thiru-alundoor where the Vedic scholars pray holding Your holy 
feet with their clubbed hands.You are seated suitably in the raised temple.

1684.     பெரியாய்சிறியாய்பிறையாய்மிடறும் 
    கரியாய்கரிகாடுயர்வீடுடையாய் 
    அரியாயெளியாயழுந்தைமறையோர் 
    வெரியார்தொழமாமடமேவினையே.        8

    பெரியாய்! சிறியாய்! பிறையாய்! மிடறும் 
    கரியாய்! கரிகாடு உயர்வீடு உடையாய்! 
    அரியாய்! எளியாய்! அழுந்தை மறையோர் 
    வெரியார் தொழ மா மடம் மேவினையே.

    periyAy! ciRiyAy! piRaiyAy! miTaRum 
    kariyAy! karikATu uyarvITu uTaiyAy! 
    ariyAy! eLiyAy! azuntai maRaiyOr             
    veriyAr toza, mA maTam mEvinaiyE.

பொருள்:     சிவபெருமானே! பெரியவனும் நீயே! மிகமிகச் சிறியவனும் நீயே! ஒளிமிக்க பிறையைத் 
தலையில் கொண்டவனும் நீயே! கரிய விடத்தைக் கண்டத்தில் அடக்கியவனும் நீயே! சுடுகாட்டில் 
உறைபவனும் நீயே! நாட்டில் கோயில் கொண்டு அருள்பவனும் நீயே! திருவழுந்தையில் மறையவர்களால் 
வேதமுறைப்படி வணங்கப்பெறுபவனும் நீயே! அடியவர்களில் அன்புக்குரியவனும் நீயே! உன்னை நானும் 
வணங்குகின்றேன்.

குறிப்புரை:     கரியமிடறாய்- நீலகண்டனே. சர்வசங்கார காலத்தில் எல்லாம் அழியுமாதலின் 
கரிகாடு என்றும் அதுவே முதல்வனுக்குக் கோயிலாதலின் உயர்வீடு என்றும் அருளினார். கோயில்
சுடுகாடு, பெருமை, சிறுமை, அருமை, எளிமை எல்லாம் ஆண்டவனுக்குள. வெரியார்- பழிபாவங்களை
அஞ்சுதலுடைய அம்மறையோர்.  வேரியார் (தேன்போலும் இனியர்) என்பதன் முதற்குறுக்கம் 
எனல் அமைவுடையதன்று. 

    Oh Civa! You are my Lord of Thiru-alundoor. You have things of high contrast. 
You are the greatest one of the earliest and You are the smallest atom of everything 
in the universe. You have the bright moon on Your head and a black neck, because of 
the poison You drank, and because of this You are called Neelakandan. You visit the 
burning burial ground and dance there treating it as Your temple. You are incomprehensible 
to some; but You are so easy and accessible to some others. Your abode is in the raised 
temple in Thiru-alundoor. In this place Vedic scholars who shun all sins, gather together 
and pray for Your grace.

1685.     மணிநீள்முடியான்மலையையரக்கன் 
    தணியாதெடுத்தானுடலந்நெரித்த 
    அணியார்விரலாயழுந்தைமறையோர்
    பணிமாமடமன்னியிருந்தனையே.        9

    மணி நீள் முடியால் மலையை அரக்கன் 
    தணியாது எடுத்தான் உடலம் நெரித்த 
    அணி ஆர் விரலாய்! அழுந்தை மறையோர் 
    பணி மா மடம் மன்னி இருந்தனையே.

    maNI nIL muTiyAl malaiyai arakkan 
    taNiyAtu eTuttAn uTalam neritta 
    aNi Ar viralAy! azuntai maRaiyOr
    maNi mA maTam manni iruntanaiyE.

பொருள்:     மணிகள் பதித்த அழகிய தலைமுடியைக் கொண்ட இராவணன், தன்முனைப்பு 
கொண்டு நீயிருக்கும் கயிலாய மலையை எடுக்க முயன்றான். அப்பொழுது உன் கால்விரலால் 
அவனை அடர்த்த, அவன் அழுது புலம்பித் தொழுத பின்னர், அவனுக்கு அருளினாய். திருவழுந்தையூரில் 
மறையவர்களுக்கு உன் அடியினால் அருளிக் கொண்டு இருக்கிறாய். என்னே உன் திருவடி அருள்!

குறிப்புரை:     மணிமுடி - ரத்னகிரீடம். அரக்கன் - இராவணன். நெரித்த - நொறுங்கிய. அணி - அழகு.        
பணி - பணிகின்ற.

    Oh Civa! My Lord of Thiru-alundoor. When the mighty king of Sri Lanka audaciously tried to 
lift Your abode mount Kailash, You pressed the top of Your abode with Your toe. Raavanan got crushed, 
wept and prayed. Then You graced him. You are there in the raised temple of many ornaments in 
Thiru-alundoor, where all the Vedic scholars gather and worship You. You bless them too.

1686.     முடியார்சடையாய்முனநாளிருவர் 
    நெடியான்மலரான்நிகழ்வாலிவர்கள் 
    அடிமேலறியாரழுந்தைமறையோர் 
    படியாற்றொழமாமடம்பற்றினையே.        10

    முடி ஆர் சடையாய்! முனம்நாள், இருவர் - 
    நெடியான்,மலரான் - நிகழ்வால் இவர்கள் 
    அடி மேல் அறியார்; அழுந்தை மறையோர் 
    படியால்-தொழ மா மடம் பற்றினையே.

    muTi Ar caTaiyAy! munamnAL, iruvar- 
    neTiyAn, malarAn--nikazvAl ivarkaL 
    aTi mEl aRiyAr; azuntai maRaiyOr
    paTiyAl-toza, mA maTam paRRinaiyE.

பொருள்:     நீண்ட சடாமுடியினைக் கொண்ட எம்பெருமானே! திருமாலும் பிரமனும் 
உன் அடிமுடி தேடியும் அவர்களால் காண முடியாமல் அயர்வுறுமாறு செய்தவனே! ஆனால்  
திருவழுந்தைத் தலத்தில் உன்முடிபோல் உயர்ந்த கோபுரத் தரிசனத்தையும் அருளுகின்றாய்.  
உன் திருவடித் தரிசனத்தையும் மறையவர்களுக்கு அருளுகின்றாய்.

குறிப்புரை:     முடியார் சடையாய்-  சடைமுடியுடையாய், நெடியான் திரிவிக்கிரமனாகிய  
மாயோன், அடிமேல்-அடிமுடி. படியால் - விதிப்படி. பற்றினை - பற்றாகக் கொண்டாய்.

    Oh Civa! My Lord of Thiru-alundoor. You have Your beautified matted hair. Once 
Brahma and Vishnu decided to see Your holy head and feet, but they were exhausted and 
failed. Then You appeared as a measureless form of fire. Oh my Lord residing in the 
raised temple in Thiru-alundoor! You draw the Vedic scholars of that place around You, 
they worship You, and recite the Vedas as per the customary rules.You grace them.

1687.     அருஞானம்வல்லாரழுந்தைமறையோர் 
    பெருஞானமுடைப்பெருமானவனைத் 
    திருஞானசம்பந்தனசெந்தமிழ்கள் 
    உருஞானமுண்டாமுணர்ந்தார்தமக்கே.        11

    அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர் 
    பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத் 
    திருஞானசம்பந்தன செந்தமிழ்கள், 
    உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.

    aru njAnam vallAr azuntai maRaiyOr 
    peru njAnam uTaip perumAn avanait 
    tirunjAnacampantana centamizkaL, 
    urunjAnam uNTu Am, uNarntAr tamakkE.

பொருள்:     அருமையான மறையோதும் மறையோர்கள் தொழும் திருவழுந்தைத் 
திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானை, திருஞானசம்பந்தப் பெருமான் 
அருளிய தமிழ் மாலைகளைக் (பாடல்கள்) கொண்டு வழிபாடு செய்பவர்கள் உண்மையான 
திருவருள் ஞானம் பெற்றுச் சிறப்புறுவார்கள் என்க.

குறிப்புரை:     அருஞானம்- எய்தற்கு அரிய திருவருண்ஞானம். திருஞானசம்பந்தன்- 
திருஞானசம்பந்தனுடைய. அ - ஆறனுருபு, பன்மை, செந்தமிழ்கள் - செந்தமிழ்ப்பாக்கள், 
உருஞானம் - சொரூப ஞானம், உண்மையுணர்வு.

    Our saint Thiru-gnana-Sambandar sang before our Lord in Thiru-alundoor 
ten pure Tamil hymns;In this temple our Lord of pure wisdom, is worshipped by 
knowledgeable Vedic scholars of Thiru-alundoor. Those who sing these ten songs 
to worship the Lord of Thiru-alundoor will certainly be blessed with true knowledge.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            20ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 20th Hymm

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 157                    பதிக எண்-21

21. திருக்கழிப்பாலை                    21. THIRUK-KALIP-PAALAI                    

பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam - Vinaa Urai                

திருத்தல வரலாறு

    இத்திருத்தலம் சிவபுரி என வழங்கப்பெறுகிறது. இது முன்பு கொள்ளிடப்  பேராற்றின் வடகரையில் 
காரைமேடு என்னும் இடத்தில் இருந்தது. அங்கிருந்த பொழுது கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கு, 
திருக்கோயிலை முற்றிலும் பாழ்படுத்திவிட்டது. படுகை முதலியார் குடும்பத்தில் திரு. பழநியப்ப முதலியார் 
என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோயில்கட்டி அதில் கழிப்பாலை இறைவரையும், இறைவியாரையும், 
 ஏனைய பரிவார தேவதைகளையும் எழுந்தருளுவித்துள்ளார்.

    இது சிதம்பரத்திற்குத் தென்கிழக்கே சுமார் 10 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது சோழநாட்டு 
வடகரைத் தலங்களுள் நான்காவது, சிதம்பரத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. வான்மீகி முனிவர் பூசித்துப் 
பேறு எய்தினர். இத்தலத்திற்கு ஞானசம்பந்தரது பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசரது பதிகங்கள் ஐந்து, 
சுந்தரரது பதிகம் ஒன்று ஆக எட்டுத் திருப்பதிகங்கள் இருக்கின்றன. இவற்றுள் திருநாவுக்கரசர் திருவாய் 
மலர்ந்துள்ள 'வனபவள வாய்திறந்து’ என்று தொடங்கும் அகப்பொருள்துறைகள் அமைந்த பாடல்கள் 
படித்து இன்புறத்தக்கன. சுவாமியின் பெயர் பால்வண்ண நாதர். இறைவியின் பெயர் வேதநாயகி.

பதிக வரலாறு

    பாலறாவாயர் மன்றாடும் ஐயன் திருக்கூத்துக் கும்பிட்டு அணைவுறும் நாளில் கைம்மான் மறியார் 
கழிப்பாலையுள் அணைந்து இம்மெய்ம்மாலைச் சொற்பதிகம் பாடினார்.

            திருச்சிற்றம்பலம்


1688.    புனலாடியபுன்சடையாயரணம் 
    அனலாகவிழித்தவனேயழகார் 
    கனலாடலினாய்கழிப்பாலையுளாய் 
    உனவார்கழல்கைதொழுதுள்குதுமே.        1

    புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் 
    அனல்ஆக விழித்தவனே! அழகு ஆர் 
    கனல் ஆடலினாய்! கழிப்பாலை உளாய்! 
    உன வார் கழல் கைதொழுது உள்குதுமே.

    punal ATiya puncaTaiyAy! araNam 
    anal Aka vizittavanE! azaku Ar 
    kanal ATalinAy! kazippAlai uLAy! 
    una vAr kazal kaitozutu uLkutumE.

பொருள்:     கங்கையைத் தலையில் தரித்த எம்பெருமானே! முப்புரங்கள் சாம்பலாகுமாறு 
விழித்து எரித்தவனே! நெருப்பினைக் கையில் ஏந்தி அழகுற ஆடியவனே! கழிப்பாலைக் கடவுளே! 
உன் நீழ்கழலடிகளைத் தொழுது போற்றி வணங்குகின்றேன்.

குறிப்புரை:     புன்சடையாய் - பொன்போலும் சடையுடையாய். அரணம்- திரிபுரக்கோட்டை. 
திரிபுரத்தை விழித்தெரித்தான் என்றும் வரலாறுண்டு. கனல் - தீ. உனவார்கழல் - உன்னுடைய 
நீள்கழலடிகள். உள்குதும் - தியானம் செய்வோம்.

    Oh Civan! You are the Lord of Thiruk-kalip-paalai. You have that golden coloured 
matted hair, washed by the water of the holy Ganges. You opened Your forehead eye and 
immediately a fierce fire came out of Your eye and completely destroyed the three flying 
forts and all the asuraas who lived there, except the three who were Your followers, 
worshipping You all along their life. You used to visit the burial ground and dance 
there holding fire in one of Your hands. We will survive by worshipping Your 
ankleted golden feet.

1689.    துணையாகவொர்தூவளமாதினையும் 
    இணையாகவுகந்தவனேயிறைவா 
    கணையாலெயிலெய்கழிப்பாலையுளாய் 
    இணையார்கழலேத்தஇடர்கெடுமே.        2

    துணை ஆக ஒர் தூ வள மாதினையும் 
    இணை ஆக உகந்தவனே! இறைவா! 
    கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய்! 
    இணை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.

    tuNai Aka or tU vaLa mAtinaiyum 
    iNai Aka ukantavanE! iRaivA! 
    kaNaiyAl eyil ey kazippAlai uLAy! 
    iNai Ar kazal Etta, iTar keTumE.

பொருள்:     தூயவளாம் உமையவளைத் துணையாக ஒரு பாகத்தில் கொண்ட 
சிவபெருமானே! அவளுக்கும் தனக்கு இணையான சிறப்பினைக் கொடுத்தவனே! 
இறைவனே ! கணைகளைக் கையில் கொண்டு முப்புரங்களை அழித்தவனே! 
கழிப்பாலையுள் உள்ள உனது திருவடிகளைத் தொழுது எங்களது இடர் நீங்கப் 
பெறுவோமாக!

குறிப்புரை:     இறைவா! கழிப்பாலை உள்ளாய்! (உன்) கழல் ஏத்த (எம்) இடர்கெடும் 
என்று இயைத்துக் கொள்க. தூ - தூய்மை. எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடு. பெண்ணுரு 
ஒருதிறன்  ஆகின்றது. அவ்வுறுத் தன்னுள் அடக்கிக் கரக்கினுங்கரக்கும் (புறம் -கடவுள் வாழ்த்து) 
என்றதன் உரையைக் காண்க. துணை - துணைவி. இணை - இருவரென்னாதவாறு இணைதல். 
எயில் - திரிபுரம், எய்-எய்த. எய்கழிப்பாலை உள்ளாய் - வினைத்தொகை. கழிப்பாலையுள்ளாய் 
என்பது சிவனென்னும் பொருட்டாய் எய்யென்னும் பகுதியோடு தொக்கு வினைத்தொகை ஆயிற்று.

    Oh Civa! You are my Lord residing in Thiruk-kalip-paalai. You are so pleased as 
to have that young, pure and beautiful goddess Umaa as Your life partner. You keep her on 
the left side of Your holy body and so You are called Artha-naareeswarar. Using Your bow 
and arrow You burnt the three flying forts of asuraas and helped the devaas to be freed 
from their distress. You are our God; You are in Thiruk-kalip-paalai,We will be relieved 
of our evil praying to Your ankleted feet.

1690.     நெடியாய்குறியாய்நிமிர்புன்சடையின் 
    முடியாய்சுடுவெண்பொடிமுற்றணிவாய் 
    கடியார்பொழில்சூழ்கழிப்பாலையுளாய் 
    அடியார்க்கடையா அவலம்மவையே.        3

    நெடியாய்! குறியாய்! நிமிர் புன்சடையின் 
    முடியாய்! சுடுவெண்பொடி முற்று அணிவாய்! 
    கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்! 
    அடியார்க்கு அடையா அவலம்(ம்) அவையே.

    neTiyAy! kuRiyAy! nimirpuncaTaiyin 
    muTiyAy! cuTuveNpoTi muRRu aNivAy! 
    kaTi Ar pozil cUz kazippAlai uLAy! 
    aTiyArkku aTaiyA, avalam(m) avaiyE.

பொருள்:     பேரண்டமாக விளங்கும் இறைவனே! அணுவுக்குள் அணுவாய் மிகச் சிறிய நிலையிலும் 
பொருந்தியவனே! சடைமுடி உடைய சிவனே! வெண்ணீறு அணிந்தவனே! மணம் மிகும் சோலைகள் 
நிறைந்த கழிப்பாலைத் திருத்தலத்துள் உறைபவனே! உன்னை வணங்கும் அடியார்களுக்கு அவலங்கள் 
வந்து பொருந்தாவாம் என்க.

குறிப்புரை:     நெடியாய்- நீண்டவனே. குறியாய்- குறியவனே. புன்சடைமுடி- பொன்போலும்
செஞ்சடைமுடி. சுடுவெண் பொடி -திருநீறு. முற்று அணிவாய்-  முழுதும் அணிவாய். கடி - மணம்.
அடியார் - யான் எனதென்னும் செருக்கற்றவர். அவலம் அடையா.
  
    Oh Civa! You are my Lord in Thiruk-kalip-paalai. You are not only the tallest, 
but also the largest, You cover the entire universe. You are the smallest of all small 
atoms everywhere. You have the crown of matted hair on Your head. You beautify Your 
holy body with that white ash. Oh Lord! You are there in Thiruk-kalip-paalai, 
a blessed place, where fragrant gardens are plenty. The devotees who worship You 
there always, will have no suffering in their life.

1691.    எளியாயரியாய்நிலநீரொடுதீ 
    வளிகாயமெனவெளிமன்னியதூ 
    ஒளியாயுனையேதொழுதுன்னுமவர்க் 
    களியாய்கழிப்பாலையமர்ந்தவனே.        4

    எளியாய்! அரியாய்! நிலம், நீரொடு, தீ, 
    வளி, காயம்,என வெளி மன்னிய தூ 
    ஒளியாய்! உனையே தொழுது உன்னுமவர்க்கு 
    அளியாய்! கழிப்பாலை அமர்ந்தவனே.

    eLiyAy! ariyAy! nilam, nIroTu, tI, 
    vaLi, kAyam, ena veLi manniya tU 
    oLiyAy! unaiyE tozutu unnumavarkku 
    aLiyAy! kazippAlai amarntavanE!

பொருள்:     கழிப்பாலைத் தலத்துள் அமர்ந்தவனே! நீயே அன்பர்களுக்கு எளியோனாகவும் 
அல்லாதவர்களுக்கு அரியனாகவும் விளங்குகிறாய். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் 
பஞ்சபூதங்களாகவும் உள்ளாய். தூய ஒளியாகவும் உள்ளாய், உன்னைத் தொழுது தியானிப்பவர்க்கு 
திருவருட்பேறு எய்தும்.

குறிப்புரை:     அன்பர்க்கு எளியாய். அல்லாதார்க்கு அரியாய். காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்.
கருதுவார்க்கு ஆற்ற எளியான்  கண்டாய் (தி.6 ப.23 பா.1) நிலம்.... காயம் - மண் முதலிய ஐம்பெரும் 
பூதங்கள், இறைவன் அட்ட மூர்த்தியாய் விளங்குதல் பற்றி நிலம்.... வெளிமன்னிய தூ ஒளியாய்
என்றருளினார். உனையே தொழுது உன்னுமவர்க்கு அளியாய்  -   ஆமாத்தூ ரம்மான்றன், 
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே-  (தி.2 ப.44 பா.3) என்றருளியவாறு சிவனையே 
தொழுது தியானிப்பவர்க்கு திருவருட்பேறு எய்தும்  என்பது தாற்பரியம்.

     Oh Civa! You are my Lord in Thiruk-kalip-paalai. You cannot be comprehended 
easily by those who are not Your servitors. However You are gentle and approachable to Your 
devotees. You constitute the five elements such as earth, water, fire, air and the sky. 
You are pure and absolute light brightening all the space and the galaxy. You are very simple 
to be approached for the devotees who always think and worship only You in Thiruk-kalip-paalai, 
they are sure to get salvation.

1692.     நடம்நண்ணியொர்நாகமசைத்தவனே 
    விடம்நண்ணியதூமிடறாவிகிர்தா 
    கடல்நண்ணுகழிப்பதிகாவலனே 
    உடன்நண்ணிவணங்குவனுன்னடியே.        5

    நடம் நண்ணி,ஒர் நாகம் அசைத்தவனே! 
    விடம் நண்ணிய தூ மிடறா! விகிர்தா! 
    கடல் நண்ணு கழிப்பதி காவலனே! 
    உடல் நண்ணி வணங்குவன், உன் அடியே.

    naTam naNNi, or nAkam acaittavanE! 
    viTam naNNiya tU miTaRA! vikirtA! 
    kaTal naNNu kazippati kAvalanE! 
    uTal naNNi vaNagkuvan, un aTiyE.

பொருள்:     நடனம் ஆடுதலை விரும்புபவனே! பாம்பை ஆபரணமாக அணிந்தவனே! விடத்தை 
மிடற்றில் அடக்கி அருளியவனே! அன்பு நிறைந்தவனே! கடல் சூழ்ந்த கழிப்பாலைத் தலத்தில் உறைபவனே! 
உன் திருவடிகளை நிலம் வீழ்ந்து வணங்குகின்றேன்.

குறிப்புரை:     அசைத்தவன் - கட்டியவன். நண்ணி அசைத்தவன் என்க. நடம் - திருக்கூத்து. விடம் .… 
மிடறா- திருநீலகண்டனே. விகிர்தன் -விரூபாக்கன் முதலிய நிலைமையன. விளையாடவல்ல விகிர்தத்துருக் 
கொள் விமலன் (தி. 2 ப. 83 பா. 10) கடல் நண்ணு கழிப்பதி - கடற்கரைக் கழியிலுள்ள தலம். உடல் நண்ணி 
வணங்குவன்- அஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன். உன் அடியே-  ஏகாரம் பிரிநிலை. தோற்றிய திதியே என்புழி. 
ஏகாரம் இயைபின்மை நீக்குதற்கும், பிறிதினியைபு நீக்குதற்கும்  பொதுவாய் நின்ற பிரிநிலை 
என்ற சிவஞான போதச் சிற்றுரைப் பகுதியைக் காண்க. உடன் எனப்பிரித்தல் பொருந்தாது. நண்ணுதற்குச் 
செய்யப்படுபொருள் நிலமும் திருவடியும்.

    Oh Civa! You are my Lord in Thiruk-kalip-paalai. You wear the snake around Your waist. 
Whenever You did Your cosmic dance, the snake also danced to the music. You have that pure 
and beautiful neck blackened by poison You drank out of the sea of milk when it was churned. 
You are the protector of the scholars in Thiruk-kalip-paalai, which is surrounded by the sea.
I will approach Your holy feet with devotion and prostrate wholeheartedly before 
You with my heart and soul.

1693.     பிறையார்சடையாய்பெரியாய்பெரியம் 
    மறையார்தருவாய்மையினாயுலகிற் 
    கறையார்பொழில்சூழ்கழிப்பாலையுளாய் 
    இறையார்கழலேத்தஇடர்கெடுமே.        6

    பிறை ஆர் சடையாய்! பெரியாய்! பெரிய(ம்) 
    மறை ஆர் தரு வாய்மையினாய்! உலகில் 
    கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்! 
    இறை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.

    piRai Ar cATaiyAy! periyAy! periya(m) 
    maRai Artaru vAymaiyinAy! ulakil 
    kaRai Ar pozil cUz kazippAlai uLAy! 
    iRai Ar kazal Etta, iTar keTumE.

பொருள்:     பிறைச் சந்திரனைத் தலையில் தரித்தவனே! முதற்பொருளாய் விளங்கும் பெரியவனே! 
நான்மறையினை அருளிச் செய்த திருவாயினை உடையவனே! குளிர்ந்த சோலைகள் நிறைந்த திருக்கழிப்பாலைத் 
தலத்துள் கோயில் கொண்டு விளங்குபவனே !  உன்னுடைய திருவடிகளையே போற்றி வணங்குபவர்களின் 
இடர்கள் எல்லாம் நீங்கும்.

குறிப்புரை:     ஆர் - பொருந்திய. பெரியாய்- முழு முதல்வனே. பெருமை - பரத்துவம். பெரிய மறை ஆர்தரு 
வாய்மையினாய் - வேதத்திற் சொல்லப்பட்ட உண்மைப் பொருளானவனே. மகர மெய் விரித்தல்  விகாரம். 
இறை ஆர் கழல் - (எங்கும்) தங்குதலை உடைய திருவருளாகிய கழல். இறை - இறைமையும் ஆம்.

    Oh Civa! You are my Lord of Thiruk-kalip-paalai. You have adorned your matted hair
with the crescent moon. You are the greatest and the first and foremost in  the universe. 
You are the ultimate truth spoken of in the sacred Vedas.. You are there in Thiruk-kalip-paalai, 
a sacred place surrounded by cloud floating gardens. The sufferings of those servitors will vanish
from their life when they worship Your holy feet of grace, present everywhere.

1694.     முதிருஞ்சடையின்முடிமேல்விளங்குங் 
    கதிர்வெண்பிறையாய்கழிப்பாலையுளாய் 
    எதிர்கொள்மொழியாலிரந்தேத்துமவர்க் 
    கதிரும்வினையாயின ஆசறுமே.        7

    முதிரும் சடையின்முடிமேல் விளங்கும் 
    கதிர் வெண்பிறையாய்! கழிப்பாலை உளாய்! 
    எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு 
    அதிரும் வினை ஆயின ஆசு அறுமே.

    mutirum caTaiyin muTimEl viLagkum 
    katir veNpiRaiyAy! kazippAlai uLAy! 
    etirkoL moziyAl irantu Ettumavarkku 
    atirum vinai Ayina Acu aRumE.

பொருள்:     நீண்ட சடாமுடியின் மேல் அழகிய பிறைச் சந்திரனை அணிந்து அருள்பவனே! 
திருக்கழிப்பாலைத் தலத்துள் கோயில் கொண்டவனே! உன்னை வணங்கிப் போற்றும் அடியார் 
பெருமக்களின் வினைகள் எல்லாம் தானாகவே நீங்கிவிடும்.

குறிப்புரை:     கதிர் வெண்பிறை - வெண்மை கதிர்க்கும் பிறைக்கும் உரியது. எதிர்கொள்மொழி -
முன்னிலை மொழியாகிய துதிகள். அதிரும்- நடுக்கத்தை விளைவிக்கும். ஆயின ஆசு - ஆனவையாகிய 
குற்றங்கள், பெயரெச்சமும் ஆம். அரன்பணியில் நின்றிடவும் அகலுங்குற்றம். ஆசுபடுமல மாயை 
அருங்கன்மம் அனைத்தும் அகலும் (சித்தியார் பா.304 291) 

    Oh Civa! You are my Lord of Thiruk-kalip-paalai. You have adorned Your long matted 
hair with the radiating white crescent moon. The sufferings of Your devotees who beg and pray 
before You reciting the sacred hymns glorifying Your holy feet, will be snapped immediately and 
throughout their life they will be free of shocking sorrows.

1695.    எரியார்கணையாலெயிலெய்தவனே 
    விரியார்தருவீழ்சடையாயிரவிற் 
    கரிகடலினாய்கழிப்பாலையுளாய் 
    உரிதாகிவணங்குவனுன்னடியே.        8

    எரி ஆர் கணையால் எயில் எய்தவனே! 
    விரி ஆர் தரு வீழ்சடையாய்! இரவில் 
    கரி கடலினாய்! கழிப்பாலை உளாய்! 
    உரிது ஆகி வணங்குவன், உன் அடியே.

    eri Ar kaNaiyAl eyil eytavanE! 
    viri Artaru vIzcaTaiyAy! iravil 
    kari kATalinAy! kazippAlai uLAy! 
    uritu Aki vaNagkuvan, un aTiyE.

பொருள்:     அக்கினித் தேவனைக் கூர்மையான அம்பாகக் கொண்டு அசுரர்களின் 
முப்புரங்களையும் எரித்து அழித்தவனே! நாற்புரமும் விரிந்த சடையினைக் கொண்டவனே !
இரவில் சுடுகாட்டில் ஆடுவதில் மகிழ்பவனே! திருக்கழிப்பாலையுள் கோயில் கொண்டுள்ள
உனது திருவடிகளை எப்போதும் நான் வணங்குவேன். 

குறிப்புரை:     எரிஆர்கணை - அக்கினியை நுனியிற் பெற்ற திருமாலாகிய பாணம். 
எயில் - (முப்புரம்) மும்மதில். கரிகாடல் - கரிந்த காடு. காழிகாடலனே (பதி. 156 பா. 3) கழிகாடு 
ஆடவனே என்பதன்  விகாரம் என்றாருமுளர். உரிது - உரியது.

    Oh Civa! You are my Lord in Thiruk-kalip-paalai. You fixed the God of fire at 
the tip of Your arrow and shot it at the three flying fortresses of asuraas and burnt 
them into ashes. Your matted hair widely spreads on all the sides. During night hours 
You proceed to the burial ground and enjoy dancing there. You have Your abode in the 
temple in the city of Thiruk-kalip-paalai. I, Your servitor, will pray, write Your 
hymns and worship Your holy feet always.

1696.     நலநாரணன்நான்முகன்நண்ணலுறக் 
    கனலானவனேகழிப்பாலையுளாய் 
    உனவார்கழலேதொழுதுன்னுமவர்க் 
    கிலதாம்வினைதானெயிலெய்தவனே.        9

    நல நாரணன், நான்முகன், நண்ணல்உற, 
    கனல் ஆனவனே! கழிப்பாலை உளாய்! 
    உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு 
    இலதுஆம் வினைதான்; எயில் எய்தவனே!

    nala nAraNan, nAnmukan, naNNal uRa, 
    kanal AnavanE! kazippAlai uLAy! 
    una vAr kazalE tozutu unnumavarkku 
    ilatu Am, vinaitAn; eyil eytavanE!

பொருள்:     காத்தல் தொழிலைச் செய்யும் நாராயணனும் படைத்தல் தொழிலைச் செய்யும் பிரமனும் 
உனது அடிமுடி தேடிய பொழுது, அவர்கள் காண முடியாமல் ஒளி உருவாய் நின்றவனே! மதில்கள் 
மூன்றையும் அழித்தவனே! கழிப்பாலையுள் உறைபவனே! உன்னுடைய திருவடிகளையே நினைந்து 
தொழும் அடியவர்களுக்கு வினை இல்லை, துன்பம் இல்லையாம்.

குறிப்புரை:     நலம்- காத்தற்றொழிலாகிய நன்மை. அழகும் ஆம். உள- உன்னுடைய (ஆறனுருபு  பன்மை 
பார்க்க. தி. 2 ப. 2 பா. 1).உன்னுமவர்- தியானம் புரிபவர். எயில் எய்தவன்- திரிபுராரி. முப்புரமெரித்த முதல்வன். 
வினைதான் இலதாம் என்க.

    Oh Civa! You are my Lord residing in Thiruk-kalip-paalai. Vishnu is the sole benefactor 
of all souls in the universe while his counterpart Brahma is fully responsible for creation
of all the souls. These two great deities once wrangled between themselves for their superiority 
over each other, and finally decided whoever saw first Lord Civa's holy head and feet, would be 
deemed greater. They failed in spite of years of rummage  by both. At this stage, You, my Lord 
You grew as a huge and tall inferno when those two got bewildered and prayed to You. 
Then You changed Your form and graced them. You destroyed the three fortress by Your mighty 
arrow. Oh my Lord! You are there in the temple in Thiruk-kalip-paalai. Devotees who worship You, 
recite hymns and meditate on You will not get the evil effects of karma and they will have no 
sufferings in their life forever.

1697.     தவர்கொண்டதொழிற்சமண்வேடரொடுந் 
    துவர்கொண்டனநுண்துகிலாடையரும் 
    அவர்கொண்டனவிட்டடிகளுறையும் 
    உவர்கொண்டகழிப்பதியுள்குதுமே.        10

    தவர் கொண்ட தொழில் சமண்வேடரொடும் 
    துவர் கொண்டன நுண்துகில் ஆடையரும், 
    அவர் கொண்டன விட்டு, அடிகள் உறையும்         (திருத்: விட்டடு/விட்டு)
    உவர் கொண்ட - கழிப்பதி உள்குதுமே.

    tavar koNTa tozil camaN vETaroTum,
    tuvar koNTana nuNtukil ATaiyarum, 
    avar koNTana viTTU, aTikaL uRaiyum- 
    uvar koNTa-kazippati uLkutumE.

பொருள்:     சமணர்களும் சாக்கியர்களும் தவவேடம் கொண்டவர்கள். துவராடையை 
அணிந்தவர்கள். நல்லாடையை நீக்கிய அவர்களது சொற்களை நாங்கள் ஏற்கமாட்டோம்.
தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையுள் கோயில் கொண்டுள்ள இறைவனாகிய 
உன்னை நாங்கள் வணங்குவோமாக. 

குறிப்புரை:     சமண் வேடர்க்குரிய தொழிலன்று. தவர் (தவத்தோர்)க்குரிய தொழிலைப்
(போலியா)க் கொண்டவர். துவர்- பழுப்பு நிறம். நுண்துகில்  - மெல்லிய துகில். துகில்-ஆடை; ஈண்டு 
 இருபெயரொட்டு.  அவர்- அப்புறச் சமயத்தார்.  கொண்டன- கொண்ட கொள்கைகள், 
வினையாலணையும் பெயர். அடிகள் - பரமேசுவரன். உவர் கொண்ட கழிப்பதி - உவர் நீர் கொண்ட 
 கடற்கழியிலுள்ள பாலைப்பதி. உள்குதும் என முதற்பாட்டிற் கூறியதே முடிவிலுங் கூறியதால் 
சிறப்பாகத்  தியானம் புரிதற்குரிய நலமென்றுணர்க. மூவர் திருப்பதிகங்களும் இத்தலத்தின் 
தனிச் சிறப்பை விளக்குகின்றன.

    The Jains and the Buddhists preach penance. The Buddhists wear ochre robes.
We do not listen to the preachings of these false saints and we shun their presence. 
Let us think always about this temple of sanctity, a holy place on the seashore which 
is the abode of our Lord and worship Him.

1698.     கழியார்பதிகாவலனைப்புகலிப்
    பழியாமறைஞானசம்பந்தனசொல் 
    வழிபாடிவைகொண்டடிவாழ்த்தவல்லார் 
    கெழியாரிமையோரொடுகேடிலரே.        11

    கழி ஆர் பதி காவலனைப் புகலிப் 
    பழியா மறை ஞானசம்பந்தன சொல்
    வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார், 
    கெழியார், இமையோரொடு; கேடு இலரே.

    kazi Ar pati kAvalanaip pukalip 
    paziyA maRai njAnacampantana col 
    vazipATu ivai koNTu, aTi vAztta vallAr, 
    keziyAr, imaiyOroTu; kETu ilarE.

பொருள்:     உப்பங்கழிகள் நிறைந்திருக்கும் திருக்கழிப்பாலைத் திருத்தலத்தில் கோயில் கொண்ட 
எம்பெருமானே! உன்னை உன் பெருமையை ஞானசம்பந்தப் பெருமான் உள்ளவாறு சொல்லிப் பாடிப் 
பாராட்டியுள்ளார். நாங்களும் அவர் பாடிய பாடல்களைப் பாடி உன்னை வணங்கித் தொழுவோர்கள் 
உன் அருளை நிறைவாகப் பெற்று தேவர்களோடு இணைந்து கேடிலராய் என்றும் வாழ்ந்திருப்பார்கள்.

குறிப்புரை:     காவலன் - சிவபிரான். மறைஞானசம்பந்தன் என்ற திருப்பெயர். வேதநெறி 
தழைத்தோங்கப் புனிதவாய் மலர்ந்தழுத சிறப்பிற் பெற்றது. அகரம் ஆறனுருபு பன்மை. 
வழிபாடு இவை - இத்திருப்பதிகப் பாடல் வழிபாடு. இமையோரொடு கெழியார் - வானோரொடு 
பொருந்தி விளங்குவார். கேடு இலர்-பிறவி முதலாய கேடு இல்லாதவராவர்.

    Oh Civa! You are the Lord residing in the temple near the salt pans situated 
along the seashore of Thiruk-kalip-paalai. Our saint Thiru-gnana-Sambandar hails from 
Seerkaazhi, he is an expert in Vedas. He sang these ten sacred hymns on our Lord in 
Thiruk-kalip-paalai. Those devotees who worship You and recite these hymns before our 
Lord will become angels and join the celestials. They will have no evil effects of 
karma in their life forever.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            21ஆம் பதிகம் முற்றிற்று
            End of 21st Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

பதிகத் தொடர் எண்: 158                பதிக எண்- 22

22. திருக்குடவாயில்                22. THIRUK-KUDA-VAAYIL
பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    திருணபிந்து முனிவர்க்குச் சிவபெருமான் குடத்தின் வாயில் வெளிப்பட்டுக் குட்டநோய்
தீர்த்தருளிய காரணம்பற்றி, இப்பெயர் பெற்றது என்பர். கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில்
15 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. தஞ்சாவூர் - திருவாரூர் தொடர்வண்டிப் பாதையிலுள்ள 
கொரடாச்சேரி தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடக்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது . 
இது காவிரித் தென்கரையில் தொண்ணூற்று நான்காவது தலமாகும். திருவாரூர் மற்றும் 
கும்பகோணம்  ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

    இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். இறைவியாரது திருப்பெயர் பெரிய நாயகி.
திருணபிந்து முனிவர் பூசித்து அமுதம் பெற்றுத் தானும் தன் தாயும் சாபம் நீங்கப் பெற்ற தலம். அது 
காரணமாகவே திருமதிலின்மேல் கருடன் உருவங்கள் வைக்கப் பெற்றுள்ளன. இத்தலத்தை ஞானசம்பந்தர் 
மட்டும் இரண்டு பதிகங்களில் பாடியுள்ளார். இங்குள்ள கோயில் பெருங்கோயில் (மாடக் கோயில்) 
அமைப்பு உடையது.

        மகிழும் பெருமான் குடவாயின் மன்னி
        நிகழும் பெங்கோயினி லாயவனே

என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியால் அறியலாம்.

பதிக வரலாறு

    தமிழ் விரகர் அரதைப் பெரும்பாழி, திருச்சேறை, திருநாலூர் என்னும் தலங்களை வழிபட்ட பின், 
குடவாயிலை அடைந்து பெருங்கோயிலை வணங்கிப் பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்


1699.     திகழுந்திருமாலொடுநான்முகனும் 
    புகழும்பெருமானடியார்புகல
    மகிழும்பெருமான்குடவாயில்மன்னி 
    நிகழும்பெருங்கோயில்நிலாயவனே.        1

    திகழும் திருமாலொடு நான்முகனும் 
    புகழும் பெருமான்; அடியார் புகல, 
    மகிழும் பெருமான் - குடவாயில் மன்னி 
    நிகழும் பெருங்கோயில் நிலாயவனே.

    tikazum tirumAloTu nAnmukanum 
    pukazum perumAn; aTiyAr pukala, 
    makizum perumAn-kuTavAyil manni 
    nikazum perugkOyil nilAyavanE.

பொருள்:     பெருமைமிக்க திருமாலும் நான்முகனும் புகழ்ந்து போற்றும் எம்பெருமான்; அன்புடன் 
அடியவர்கள் புகழ்ந்து பாடிட மகிழும் எம் பெருமான்; குடவாயில் என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ள 
பெருங்கோயிலில் நிலையாகக் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     திகழும் - அவர் அவர்க்குள்ள புவனங்களில் விளக்கம் பெறும். புகல - விரும்பித் துதிக்க. 
நிகழும் - பிரசித்தி பெற்றுள்ள. (பா.11இல்) 'பெருங்கோயில்' என்று உணர்த்தியதால் ஆசிரியர் திருவுள்ளம்
 அதனது பெருமையில் ஈடுபட்டமை புலனாகும். வேறு சில தலங்களிலும் கோயிலின் பெருமை கூறப்பட்டுள்ளது.

    Our deity Maha Vishnu who takes rest on the five-headed snake bed in the ocean, His 
counterpart the four-faced Brahma - these two deities themselves praise our Lord in 
Thiruk-kuda-vaayil. Our Lord is pleased to hear the recitations of the ardent devotees 
of this place. Our Lord has His abode in the great temple of tall towers called 
Perunth-thiru-koil in Thiruk-kuda-vaayil.

1700.     ஓடுந்நதியும்மதியோடுரகம் 
    சூடுஞ்சடையன்விடைதொல்கொடிமேல் 
    கூடுங்குழகன்குடவாயில்தனில் 
    நீடும்பெருங்கோயில்நிலாயவனே.        2

    ஓடும் நதியும், மதியோடு, உரகம், 
    சூடும் சடையன்; விடை தொல்கொடிமேல் 
    கூடும் குழகன் - குடவாயில் தனில் 
    நீடும் பெருங்கோயில் நிலாயவனே.

    OTum natiyum, matiyOTu, urakam,
    cUTum caTaiyan; viTai tol koTimEl 
    kUTum kuzakan -kuTavAyil tanil 
    nITum perugkOyil nilAyavanE.

பொருள்:     பாய்ந்து ஓடிவரும் நதியையும் ஊர்ந்து செல்லும் நிலாவையும் சீறும் பாம்பையும் 
சடையில் தரித்தவர்; இடபத்தைக் கொடியாக ஏந்தியும் இடபத்தின் மீது (அமர்ந்தும்) ஏறியும்        
காட்சி தருபவர்; எம்பெருமான்  குடவாயில் திருத்தலத்தில் நிலைபெற்று இருப்பவரே.

குறிப்புரை:     நதி - கங்கை. மதி - பிறை. உரகம் - பாம்பு. மார்பால் நகர்வது. உரம் - மார்பு .
கம்- செலவு.  தொல்கொடி- பழங்கொடி. கொடிமேல் விடைகூடும் என்றியைக்க. குடவாயில்தனில்
நீடும் பெருங்கோயில் என்றதால், அதன் பழமையும் பெருமையும் விளங்கும்.

    Behold! It is Civan, Lord of Thiruk-kuda-vaayil. He has adorned His head with the 
flowing river Ganges, the cool moon, and the dancing snake. He has inscribed the sign of His 
bull on His great old flag. He looks young and handsome in His manifestation. He is the 
inhabitant of the great temple of tall towers situated in Thiruk-kuda-vaayil.

1701.     கலையான்மறையான்கனலேந்துகையான் 
    மலையாளவள்பாகமகிழ்ந்தபிரான் 
    கொலையார்சிலையான்குடவாயில்தனில் 
    நிலையார்பெருங்கோயில்நிலாயவனே.        3

    கலையான்; மறையான்; கனல் ஏந்து கையான்; 
    மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்; 
    கொலை ஆர் சிலையான் - குடவாயில் தனில் 
    நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.

    kalaiyAn; maRaiyAn; kanal Entu kaiyAn; 
    malaiyAL avaL pAkam makiznta pirAn; 
    kolai Ar cilaiyAn--kuTavAyil tanil 
    nilai Ar perugkOyil nilAyavanE.

பொருள்:     பீதாம்பரதாரியாகிய திருமாலாகவும், மறைகள் ஓதிய பிரம்மாவாகவும்            
விளங்கும் எம்பெருமானே! கனலைக் கையில் ஏந்திய எம்பெருமானே! உமையாளை இடப்பாகத்தில்
கொண்டு மகிழ்ந்து காட்சி தருபவரே! முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்த எம்பிரானே! 
குடவாயில் தன்னில் மன்னும் பெருங்கோயிலில் நிலையாகக் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     கலையான் - பீதாம்பரதாரி, திருமால். மறையான் - வேதா ஆன பிரமன். 
கனல் - நெருப்பு. மலையாள் - இமாசல குமாரி. கொலை ஆர்சிலை - மேருமலையாகிய 
வில்லுக்குக் கொலை திரிபுரசங்கார கிருத்தியம்.  நிலை - திருக்கோபுர நிலை.

    Behold! Civan is the Supreme Divinity in Thiruk-kuda-vaayil. Our Lord called
'Biruganaathar' manifests Himself as the Supreme Divinity in the renowned temple called 
Perunth-thiru-koil situated in the city of Thiruk-kuda-vaayil (God is one; we attribute 
to Him thousand names; we have in our mind that He has many assistants to help Him. 
Thiru-gnana-Sambandar in this poem describes the Lord of Biruganaathar representing 
Himself as under:)

1. Creator: As Brahma who recites the Vedas.

2. Protector: As Vishnu who wears very rich golden dress.

3. Destroyer: As Rudra holding fire in His hand.

4. Protector of Virtues: He shares half of His body with Uma, His consort to show grace.

5. Chastising action first and then grant of benign grace: Carries Meru Mountain 
    (as bow) to destroy evil and to grant grace to non-evil doers.

1702.     சுலவுஞ்சடையான்சுடுகாடிடமா 
    நலமென்முலையாள்நகைசெய்யநடம் 
    குலவுங்குழகன்குடவாயில்தனில் 
    நிலவும்பெருங்கோயில்நிலாயவனே.        4

    சுலவும் சடையான்; சுடுகாடு இடமா, 
    நல மென்முலையாள் நகைசெய்ய,நடம் 
    குலவும் குழகன் - குடவாயில் தனில் 
    நிலவும் பெருங்கோயில் நிலாயவனே.

    culavum caTaiyAn; cuTukATu iTamA, 
    nala menmulaiyAL nakaiceyya, naTam 
    kulavum kuzakan--kuTavAyil tanil 
    nilavum perugkOyil nilAyavanE.

பொருள்:     விரிந்து பரந்து விளங்கும் செஞ்சடையான்; சுடுகாட்டை இடமாகக் கொண்டு 
ஆடல் புரிபவர்; உமாதேவி மகிழுமாறு நடனம் புரிபவர்; குடவாயில் தலத்தில் அமைந்திருக்கும் 
பெருங்கோயிலில் நிலையாகக் கோவில் கொண்டவர்.

குறிப்புரை:     சுலவும் - சுற்றும். நலம் -அழகு. நகைசெய்ய - மகிழ. சிரிக்க என்றுமாம். 
குழகன்- இளைஞன். நிலவும் - ஒளிவிடும். நிலா, நிலவு என்பன வெள்ளொளியைக் குறித்தல் அறிக.

    Behold! It is Civan, the Lord of Thiruk-kuda-vaayil. His matted hair expands on 
all four sides. Now and then He goes to burial ground and dances there. His consort 
Uma with her soft breasts is pleased to see His dance. He likes dancing. He is young 
and handsome. He has His abode in the great temple of tall towers, in the city of 
Thiruk-kuda-vaayil.

1703.     என்றன்னுளமேவியிருந்தபிரான் 
    கன்றன்மணிபோல்மிடறன்கயிலைக்
    குன்றன் குழகன்குடவாயில்தனில் 
    நின்றபெருங்கோயில்நிலாயவனே.        5

    என்தன் உளம் மேவி இருந்த பிரான்; 
    கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக் 
    குன்றன்; குழகன் - குடவாயில் தனில் 
    நின்ற பெருங்கோயில் நிலாயவனே.

    entan uLam mEvi irunta pirAn; 
    kanRan; maNi pOl miTaRan; kayilaik 
    kunRan; kuzakan--kuTavAyil tanil 
    ninRa perugkOyil nilAyavanE.

பொருள்:     என்னுடைய உள்ளத்தில் விரும்பி இருப்பவர்; நீலமணி போன்ற கரிய கண்டத்தைக் 
கொண்டு அருள்பவர்; கயிலை மலையை இடமாகக் கொண்ட அழகானவர்; அன்புடையவர்; குடவாயில் 
தலத்தில் அமைந்த பெருங்கோயிலில் கோயில் கொண்டவர்.

குறிப்புரை:     என்றன் உளம் மேவி இருந்த பிரான் என்று சிவஞான முண்டார் அன்றி மற்று எவர் 
சொல்லத்தக்கார்? கன்றல்மணி - கன்றிய நீலமணி. கன்றன் - இளைஞன். மான் கன்றுடையவன் 
எனலுமாம். மிடறன் - திருக்கழுத்தினன். மிடற்றன் என்னற்பாலது ஒற்றிரட்டாது நின்றது.                                     
எயிறன், வயிறன், கயிறன் எனல்போல் (தி. 2 பா. 23 ப. 1) பார்க்க.

    Behold! It is Civan, Lord of Thiruk-kuda-vaayil. He is pleased to be all 
pervasive in my heart holding a young deer in His hands; His neck portion shows 
negritude in appearance like a glistening gem; He rules over mount Kailash as 
Supreme God. He is youthful and attractive. He manifests Himself as the Supreme 
Divinity in the Perunth thiru-koil of tall towers in the city of Thiruk-kuda-vaayil.

1704.     அலைசேர்புனலன்னனலன்னமலன் 
    தலைசேர்பலியன் சதுரன்விதிரும் 
    கொலைசேர்படையன்குடவாயில்தனில் 
    நிலைசேர்பெருங்கோயில்நிலாயவனே.        6

    அலை சேர் புனலன்(ன்); அனலன்(ன்); அமலன்; 
    தலை சேர் பலியன்; சதுரன்; விதிரும் 
    கொலை சேர் படையன் - குடவாயில் தனில் 
    நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே.

    alai cEr punalan(n); analan(n); amalan
    talai cEr paliyan; caturan; vitirum 
    kolai cEr paTaiyan--kuTavAyil tanil 
    nilai cEr perugkOyil nilAyavanE.

பொருள்:     அலைகள் பொருந்திய கங்கை நதியைச் சடையில் தாங்கி அருள் செய்யும் 
எம்பெருமான்; நெருப்பைக் கையில் ஏந்திய ஈசன்; மும்மலம் அற்ற அமலன்; கபாலத்தைக் 
கையில் ஏந்தி பலிதேர்ந்து வருபவன்; ஆற்றல் நிறைந்தவன்; சூலப்படையை ஏந்திய 
எம்பெருமான்; குடவாயில் தன்னில் உள்ள பெருங்கோயிலில் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     புனல் - கங்கை. அனல் - தீ. அமலன் - மும்மல மில்லாதவன். (எண் குணத்துள் ஒன்று) 
தலைசேர் பலியன் - பிரம கபாலத்திற் பலி பெறுபவன். சதுரன்- மூவர்க்கும் முதல்வன். விதிரும்- நடுங்கும். 
படை - திரிசூலம், மழுவாயுதம் முதலியன.

    Behold! It is Civan, who is the Lord in Thiruk-kuda-vaayil. He keeps on His head 
the surging river Ganges. He holds a smoulder in one of His hands. He is completely 
detached from the effects of the three inherent evil passions of the soul. He
begs for alms in the skull held in His hand. He is the primordial God absolute. 
He holds in His hand the killing weapons of terror such as the three-leaved trident 
and the axe. He is manifested as the Supreme Divinity in the Perunth-thiru-koil of 
tall towers in the city of Thiruk-kuda-vaayil. 

1705.    அறையார்கழலன்னழலன்னியலின் 
    பறையாழ்முழவும்மறைபாடநடம் 
    குறையாவழகன்குடவாயில்தனில் 
    நிறையார்பெருங்கோயில்நிலாயவனே.        7

    அறை ஆர் கழலன்(ன்); அழலன்(ன்); இயலின் 
    பறை யாழ் முழவும் மறை பாட,நடம் 
    குறையா அழகன் - குடவாயில் தனில் 
    நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.

    aRai Ar kazalan(n); azalan(n);     iyalin 
    paRai yAz muzavum maRai pATa, naTam 
    kuRaiyA azakan--kuTavAyil tanil 
    niRai Ar perugkOyil nilAyavanE.

பொருள்:     ஒலிக்கின்ற கழலைக் காலில் அணிந்தவன்; நெருப்பைக் கையில் ஏந்தியவன்;
 பறை, யாழ், முழவு போன்ற இன்னிசைக் கருவிகள் முழங்க, மறைபாட நடனமிடும்  அடிகளாகிய 
எம்பெருமான் குடவாயில் தலத்தில்  உள்ள பெருங்கோயிலில் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     அறை- ஒலி. இயலின் பறை - இசையியலின் கண் அமைந்த வாத்தியம்.  நடம்- திருக்கூத்து. 
குறையா அழகன் - பூரணாலங்காரன்.

    Behold! It is Civan, the Lord of Thiruk-kuda-vaayil. His anklets make musical sound 
whenever He dances. He holds a smoulder in one of His hands. His cosmic dance matches the 
musical tone of the recitation of Vedas as well as the sound of  percussion instruments such as 
the drum with one sided instrument, the lute and the tabret. He is youthful, decorates Himself 
with ornaments and appears very attractive. He manifests Himself as the Supreme Divinity in the 
Perunth-thiru-koil of tall towers, in the city of Thiruk-kuda-vaayil.

1706.     வரையார்திரள்தோளரக்கன்மடியவ் 
    வரையாரவொர்கால்விரல்வைத்தபிரான் 
    வரையார்மதில்சூழ்குடவாயில்மன்னும் 
    வரையார்பெருங்கோயில்மகிழ்ந்தவனே.        8

    வரை ஆர் திரள்தோள் அரக்கன் மடிய(வ்) 
    வரை ஆர் ஒர் கால்விரல் வைத்த பிரான் 
    வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் 
    வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.

    varai Ar tiraLtOL arakkan maTiya(v) 
    varai Ar orkAlviral vaitta pirAn- 
    varai Ar matil cUz kuTavAyil mannum 
    varai Ar perugkOyil makizntavanE.

பொருள்:     மலை போன்ற வலிய தோள்களைக் கொண்ட அரக்கனாகிய இராவணன் வருந்த 
உலகிலேயே பெரிய மலையாகிய கயிலாய மலையைத் தன் கால் விரலால் ஊன்றி அழுத்தியவர்; 
மலைபோன்ற உயர்ந்த மதில்கள் சூழ்ந்த குடவாயில் தலத்தில் என்றும் நிலையாக அமைந்த 
பெருங்கோயிலில் கோயில் கொண்டவர்.

குறிப்புரை:     வரைஆர்- மலையை ஒத்த. வரை- கயிலை. ஆர்- சுமை (யாக அழுந்திப்) பொருந்த. 
வகரமெய்விரித்தல் விகாரம். வரை ஆர்மதில் -  மலைகளைப் போல உயரிய மதில்கள். பெருங்கோயிலும் 
அத்தகையதே. வரையார் -  வழிபாட்டை ஒழியாத அடியார் என்றும் உரைத்தல் கூடும். அரக்கன்-இராவணன். 

    Behold! It is Civan, the Lord of Thiruk-kuda-vaayil. With his mountain like big 
and mighty shoulders and heads the king of Sri Lanka tried to lift mountain Kailash and keep 
it aside. Our Lord residing there pressed the top of this mountain with His toe and crushed 
Raavanan. Mountain-like very tall walls around all the big palaces were the fortifications 
of the city of Thiruk-kuda-vaayil. The mountain like big temple called Perunth-thiru-koil 
is the abode of our Lord in the big city of Thiruk-kuda-vaayil where He happily manifests 
Himself as the Supreme Divinity (Our boy saint Thiru gnana-Sambandar uses the same word 
mountain in the beginning of the four lines of this verse and this is to be noted).

1707.     பொன்னொப்பவனும்புயலொப்பவனும்                 
    தன்னொப்பறியாத்தழலாய்நிமிர்ந்தான்.                 
    கொன்னற்படையான்குடவாயில்தனில் 
    மன்னும்பெருங்கோயில்மகிழ்ந்தானே.        9

    பொன் ஒப்பவனும், புயல் ஒப்பவனும், 
    தன் ஒப்பு அறியாத் தழல்ஆய் நிமிர்ந்தான்; 
    கொல்-நல் படையான் - குடவாயில் தனில் 
    மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தானே.

    pon oppavanum, puyal oppavanum, 
    tan oppu aRiyAt tazal Ay nimirntAn;
    kol-nal paTaiyAn-kuTavAyil tanil 
    mannum perugkOyil makizntAnE.                    

பொருள்:     பொன் போன்ற நிறமுடைய பிரமனும், மழை மேகம் போன்ற நிறமுடையவனும்
அறியமுடியாதவாறு செந்தழல் பிழம்பாய் ஓங்கி உயர்ந்து நின்ற எம்பெருமான்; தீமைகளை அழிக்கும் 
கொடிய படைக்கலங்களைக் கையில் ஏந்தியவன்; குடவாயில் தலத்தில் மன்னும் பெருங்கோயிலில் 
கோயில் கொண்டவன்.

குறிப்புரை:     பொன் ஒப்பவன் - பிரமன். புயல் ஒப்பவன் - கார்வண்ணன். மால், தன் ஒப்பு அறியாத் தழல்
ஆய் நிமிர்ந்தான்- தனக்குவமை இல்லாதவனாகிச் சோதிப் பிழம்பாய் ஓங்கிப் பெருகிய  பரசிவன்.
கொல்நல்படை - பா. 6ஐப் பார்க்க.

    Behold! It is Civan, the Lord of Thiruk-kuda-vaayil. Vishnu coloured like strong clouds 
and the golden coloured Brahma were wrangling over their superiority over each other. They decided 
whosoever saw first the holy head and feet of Civan would be superior to the other. They both 
departed and made their search for years and failed. Then our Lord Biruganaathar rose like a huge 
and tall pillar-like flame without any beginning or end and non-comparable. These two secondary 
gods got bewildered and prayed to our Lord. Our Lord holds in His hand deadly, but benevolent 
war weapons. He manifests Himself as the Supreme Divinity in the Perunth-thiru-koil of tall 
towers in the city of Thiruk-kuda-vaayil.

1708.     வெயிலின்நிலையார்விரிபோர்வையினார் 
    பயிலும்முரையேபகர்பாவிகள்பால் 
    குயிலன்குழகன்குடவாயில்தனில் 
    உயரும்பெருங்கோயிலுயர்ந்தவனே.        10

    வெயிலின் நிலையார், விரி போர்வையினார், 
    பயிலும்(ம்) உரையே பகர் பாவிகள்பால் 
    குயிலன்; குழகன் - குடவாயில் தனில் 
    உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே.

    veyilin nilaiyAr, viri pOrvaiyinAr, 
    payilum(m) uraiyE pakar pAvikaLpAl 
    kuyilan; kuzakan-kuTavAyiltanil 
    uyarum perugkOyil uyarntavanE.

பொருள்:     வெயிலின் நிறம் போன்ற தூய காவி உடையினை அணிந்து கொண்டே சமணர்கள்
 செந்தழல் மேனியனாகிய சிவனைப் பழித்து உரைப்பர். அந்தப் பாவியரின் சொற்களில் பொருந்தி 
அமையாத குழகனே ஈசன் ஆவான். அவன் குடவாயில் தலத்தில் அமைந்த பெருங்கோயிலில் 
கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     நிலையார் – நிற்றலை உடையவர். வெயில் காய்பவர் என்றபடி. உரை - பிறமத போதனை. 
குயிலன்- குயிலாதவன். பதியாதவன். குயிலல் -  பதிதல். செய்தல், சொல்லல் எனல் இங்குப் பொருந்தாது. 

    Behold! It is Civan, the Lord of Thiruk-kuda-vaayil. The Jains cover their body 
with dress bright and shining during all the day. The Buddhists cover their body with
 fully spread ochre robes. They always preach their false philosophy to others. Our Lord 
is beyond all their sinful sayings as He is an embodiment of true wisdom. Our Lord is 
youthful and very attractive. He manifests Himself as the Supreme Divinity in the 
Perunth-thiru-koil of tall towers in the city of Thiruk-kuda-vaayil.

1709.     கடுவாய்மலிநீர்குடவாயில்தனில் 
    நெடுமாபெருங்கோயில்நிலாயவனைத் 
    தடமார்புகலித்தமிழார்விரகன் 
    வடமார்தமிழ்வல்லவர்நல்லவரே..        11

    கடுவாய் மலி நீர் குடவாயில் தனில் 
    நெடு மா பெருங்கோயில் நிலாயவனை, 
    தடம் ஆர் புகலித் தமிழ் ஆர் விரகன், 
    வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே.

    kaTuvAy mali nIr kuTavAyil tanil 
    neTu mA perugkOyil nilAyavanai, 
    taTam Ar pukalit tamiz Ar virakan, 
    vaTam Ar tamiz vallavar nallavarE.

பொருள்:     நீர்வளம் மிகுந்த குடவாயில் தலத்தில் உள்ள பெருங்கோயிலில் உறைகின்ற எம்பெருமானை, 
தோண்டிய இடமெல்லாம் நீர் ஊறுகின்ற தன்மைபோல, நினைத்த போதெல்லாம் தமிழ்பாடும் திருஞான 
சம்பந்தப் பெருமான் அன்புடன் பல பாக்கள் பாடி அருளியுள்ளார். அத்தமிழ்ப் பாடல்களைப் பாடவல்லார்கள் 
நல்லவர்களாவார்கள் என்க. 

குறிப்புரை:     கடுவாய்- வேகம் வாய்ந்த, நீர்மலி குடவாயில் என்று அதன் வளம் உணர்த்தியபடி.
நெடுமாபெருங்கோயில் என்றது இப்பதிகம் முழுதும் கூறியவற்றால் உறுதிப்படுகின்றது. திருமுறைகளுள் 
பெருங்கோயிலையும் சிறுகோயிலையும் பிரித்துணர்த்துங் குறிப்பு மிகுதியாயுள்ளது. அதிகை மாநகர் 
என்பது முதலியவற்றை உணர்க. மாநகர் - பெருங்கோயில். 

    Our boy saint Thiru-gnana-Sambandar is a very skilful exponent in Tamil language. He sang 
ten superb sacred songs in the reputed Tamil language on our Lord, who is manifested in the 
Perunth-thiru-koil of supreme grandeur. This temple is situated in Thiruk-kuda-vaayil which is a 
fertile and wealthy city with abundance of  water everywhere. Those devotees who are capable of 
reciting these hymns of sacred Tamil are definitely good and respectable.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            22ஆம் பதிகம் முற்றிற்று
            End of 22nd Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 159                    பதிக எண்: 23

23. திருவானைக்கா                    23. THIRU-VAA-NAIKKAA
பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    திருவானைக்கா என்னும் இத்திருத்தலமானது யானை பூசித்துப் பேறு எய்தியதால் இப்பெயர் 
பெற்றது. இத்தலம் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரி வடகரையில் விளங்கும் தலமாகும். 
திருச்சிராப்பள்ளியிலிருந்து நகரப் பேருந்துகள் பல உள்ளன. இறைவரின் திருப்பெயர் நீர்த்திரள்நாதர். 
இத்திருப்பெயரை இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருந்தகையார், 'செழுநீர்த்திரளைச் சென்று 
ஆடினேனே' என எடுத்து ஆண்டுள்ளார். இதுவன்றி ஜம்புகேசுவரர் என்று வேறு திருப்பெயரும் உண்டு. 
வெண்ணாவல் மரத்தின் அருகில் எழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஜம்பு - நாவல்) 
இறைவியாரின் திருப்பெயர்- அகிலாண்ட நாயகி. தலவிருட்சம்- வெண்ணாவல். தீர்த்தங்கள் காவிரி, 
இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம் என்பன.

    கோயில் ஐந்து பிரகாரம் கொண்ட பெரிய கோவில், ஆயிரங்கால் மண்டபம் உண்டு. 
முதல் மண்டபம் மிகச் சிறந்தது. சுவாமி சந்நிதி மேற்கு, அம்மன் சந்நிதி கிழக்கு. சுவாமி பிரகார 
மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி நிஷ்டாதேவி உருவம் இருக்கிறது. இதனை சனீஸ்வரர் என்று தவறாக 
எழுதி இருந்தார்கள். நான்காவது மதில் (திருநீற்று மதில்) மிகப் பெரியது. இது பஞ்சபூதத் தலங்களுள் 
அப்புத்தலம் ஆகும். (அப்பு- தண்ணீர்) சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்தில் நீர் ஊறி வருவது 
இன்றும் காணத்தக்கது. முற்பிறப்பில் சிலந்தியாய் இருந்து சிவபெருமானை வழிபட்ட புண்ணியத்தின் 
பயனாய் அரசனாய்ப் பிறந்த கோச்செங்கட்சோழனால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. 
வெளிப்புறத்து மதிலுக்கு திருநீறு இட்டான் திருமதில் என்று பெயர்.

    இறைவர் சித்தராய் எழுந்தருளித் திருநீற்றைக் கூலியாகக் கொடுத்து எடுப்பித்த காரணத்தால் 
அம்மதில் அப்பெயர் பெற்றது. திருக்கயிலையிலிருந்து எழுந்தருளி இறைவி இங்குத் தவஞ்செய்து 
ஞானோபதேசம் பெற்ற காரணத்தால் ஞானஸ்தலம் எனவும் இது வழங்கப்படும். உறையூர்ச் சோழர் 
மணியாரம் தரித்துக் கொண்டு காவிரியில் நீராடினார். அது ஆற்றில் விழுந்துவிட்டது. உடனே அவர் 
'சிவபெருமானே கொண்டருளும்' என வேண்டினார். அந்த மணியாரம் திருமஞ்சனக்குடத்தில் புக 
அதனை இறைவருக்கு அபிடேகிக்கும்போது அவர் அதனை  ஆரமாக ஏற்றுக் கொண்டு சோழனுக்கு 
அருள் புரிந்ததும் இப்பதியேயாகும்.  இச்செய்தியை, சுந்தரமூர்த்தி நாயனார், இவ்வூர்ப் பதிகத்தில், 

    'தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
    நீரினின்றடி போற்றி நின்மலர்க் கொள்ளென் வாங்கே
    ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையா தியைநாளும்'

எனவும், திருஞானசம்பந்தப் பெருமான்,

    'ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே'

எனவும், சேக்கிழார் பெருமான், ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்தில்,

    'வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக் 
    கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற 
    அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி 
    தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்'

எனவும் போற்றுவாராயினர்.

    தலத்தின் பெருமையை உணர்த்தும் புராணப்பாடல் ஒன்று பின்வருமாறு:

    'மேதகைய பயன்விழையோர் ஞானதலத்
        துறைகுவது மேவாதாயின்
    ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே
        காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங்
    காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங்
        கடந்துமேலாம்
    போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை
        பொலங்கொம்பன்னாய்'

            -திருவானைக்கா புராணம் - தலவிசேடப் படலம்.

பதிக வரலாறு

    திருச்சிராப்பள்ளியினின்றும் புறப்பட்டுத் திருவானைக்காவை அடைந்த பெருமானார், 
அங்கு வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை வணங்கி, யானை வழிபட்டதையும் கோச்செங்கட்சோழ 
நாயனார் செய்த அடிமையையும் அமைத்துப் பாடிய பண்ணுறு செந்தமிழ் மாலை இது.

            திருச்சிற்றம்பலம்

1710.    மழையார்மிடறாமழுவாளுடையாய் 
    உழையார்கரவாஉமையாள்கணவா 
    விழவாரும்வெண்நாவலின்மேவியஎம் 
    அழகாஎனுமாயிழையாளவளே.        1

    "மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்! 
    உழை ஆர் கரவா! உமையாள் கணவா! 
    விழவு ஆரும் வெண்நாவலின் மேவிய எம் 
    அழகா!" எனும் -ஆயிழையாள் அவளே.

    "mazai Ar miTaRA! mazuvAL uTaiyAy! 
    uzai Ar karavA! umaiyALkaNavA! 
    vizavu Arum veNnAvalin mEviya em 
    azakA!" enum--AyizaiyAL avaLE.

பொருள்:     மழை மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவனே! மழுப்படையை ஏந்திய 
நாதனே! மானைக் கையில் ஏந்தியவனே! திருவானைக்கா திருத்தலத்தில் வெண்ணாவல் 
மரத்தடியில் அமர்ந்திருப்பவனே!  உமையவளால் அழகன் என்று போற்றப்படும் பெருமானே! 
உம்மை வணங்குகிறேன்.

குறிப்புரை:     மழை ஆர் மிடறா- மேகம்போலக் கறுத்த திருக்கழுத்தை உடையவனே! உழை- மான், 
புல்வாய், மரை,கவரிவேறு, உழை வேறு. கரவா- திருக்கையினை உடையவனே! விழவு - திருவிழாக்கள். 
வெண்நாவல் - ஜம்புகேச்சுரம். எம் அழகா என்னும் ஆயிழையாள் என்க. எனும் - என்று அழைப்பாள். 
ஆய் இழையாள்- நுண்ணிய வேலைப்பாடமைந்த ஆபரணத்தை அணிந்தவள். ஆராய்ந்திழைத்த 
இழையாள் எனலுமாம்.

    Behold! It is Umaa, the goddess of Civan in the name of Akila-anda-easwari 
who came to this temple called Jambu-kech-charam in the town called Thiru-vaa-naikkaa.
She came from Mount Kailash, manifested herself here and worshipped Civan for the betterment 
of all the souls in the universe. The king of the Himalayan mountain called 'Parvatha Raajan'
pronounces 'My daughter who wears golden jewellery, made with intricate workmanship worships 
Lord Civan and praises Him by saying "Oh Lord Your neck looks like dark coloured clouds 
in the sky! You have the weapon axe in one of Your hands! In another hand You are holding 
a deer! You are my Lord - But people refer to you as the husband of Umaa! You are the most 
attractive one. You are manifest in the temple called Jambu-kech-charam where many religious 
festivals take place all through the year. Oh my Lord! I occupy half of Your physical stature
and will be with You wherever You are. Occasionally on Your demand and permission  I live elsewhere 
as a fully independent entity. As such I am now manifested in Jambu-kech-charam. Here I am 
now worshipping You and doing the rituals on my imaginary sand Lingam made by me. I do this 
all times during day and night, enjoying Your grace. 

    There is no dearth of Your grace for me ever. Likewise, I now appeal to You to kindly 
bestow Your grace on all the souls in the universe, imparting the ways and  means for their 
virtuous life. This will enable them to get rid of the evil effects of their bad karma and 
aanava in their life, and also to get rid of the cycle of birth and death once forever. 
Thus my daughter recited these above words in Jambu-kech-charam and  praised her Lord 
contemplating on Him always in her mind.

1711.     கொலையார்கரியின்னுரிமூடியனே 
    மலையார்சிலையாவளைவித்தவனே 
    விலையாலெனையாளும்வெண்நாவலுளாய் 
    நிலையா அருளாயெனுநேரிழையே.        2

    "கொலை ஆர் கரியின்(ன்) உரி மூடியனே! 
    மலை ஆர் சிலையா வளைவித்தவனே! 
    விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்! 
    நிலையா அருளாய்!" எனும் - நேரிழையே.

    "kolai Ar kariyin(n) uri mUTiyanE! 
    malai Ar cilaiyA vaLaivittavanE! 
    vilaiyAl enai ALum veNnAval uLAy! 
    nilaiyA aruLAy!" enum--nErizaiyE.

பொருள்:     கொலைத்தன்மை மிக்க யானையைக் கொன்று அதன் தோலை ஆடையாக 
அணிந்தவனே! மேருமலையை வில்லாக வளைத்தவனே! என்னை ஆண்டு கொண்டவனே! 
வெண்ணாவல் தலத்துள் பொருந்தியவனே! உமையவளால் எப்பொழுதும் 'அருள்பவன்’ 
என்று போற்றப்படுபவனே உன்னை நான் வணங்குகின்றேன்.

குறிப்புரை:     கரி - யானை, கரத்தை உடையது என்னுங் காரணத்தால் பெற்ற பெயர். 
உரி - தோல். மூடியன்- போர்வையன். மலை - மேரு கிரி. சிலை - வில். விலையால்- விலைக்குப் 
பெறும் அடிமைத்தன்மையால் (பா. 8) நேரிழை - அன்மொழித் தொகை.

    Our goddess Uma, seriously performing the rituals and worshipping the Lord of 
Thiru-vaa-naikkaa who is known there as Jambu-naathar, praised her Lord as under:

    "Oh Lord! You killed the mighty and fearceful elephant and covered Your body 
with its hide which You tore away from its body! You bent the big mountain Meru and
You hold it in Your hand as whenever You need it. You condescend to grace me; but I
humbly request you to grace the entire humanity of this universe in order to make 
them realise what they should do to be relieved of their bad karma in their life.

    Oh my Lord! You are manifested in the Jambu-kech-charam temple a holy place 
in Thiru-vaa-naikkaa. Here a white Jambalonum tree exists. You grace Your devotees.
Kindly grace the entire humanity also in the cosmos". 

1712.    காலாலுயிர்காலனைவீடுசெய்தாய் 
    பாலோடுநெய்யாடியபால்வணனே 
    வேலோடுகையாயெம்வெண்நாவலுளாய் 
    ஆலார்நிழலாயெனுமாயிழையே.        3

    "காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்! 
    பாலோடு நெய் ஆடிய பால்வணனே! 
    வேல் ஆடு கையாய்! எம் வெண்நாவல் உளாய்! 
    ஆல் ஆர் நிழலாய்!" எனும் -ஆயிழையே.

    "kAlAl uyir kAlanai vITu ceytAy! 
    pAlOTu ney ATiya pAlvaNanE!
    vEl ATu kaiyAy! em veN nAval uLAy! 
    Al Ar nizalAy!" enum AyizaiyE.

பொருள்:     உயிர்களைக் கவர்ந்து செல்லும் காலனைக் காலால் காய்ந்தவனே! பால் நெய் 
இவற்றால் நீராடப் பெற்றவனே! சூலப்படையினைக் கையில் ஏந்தியவனே! வெண்ணாவல் தலத்துள் 
மேவியவனே! உமையவளால் கல்லால மரத்தடியில் அறம் உரைத்தவன் என்று போற்றப்படுபவனே! 
உன்னை நான் போற்றுகின்றேன். 

குறிப்புரை:     காலனைக் காலால் உயிர்வீடு செய்தாய்- யமனைத் திருவடியால் உதைத்து உயிரைப் 
போக்கியவனே. பால், நெய், தயிர் மூன்றும் சொல்லி நிறுத்தி. 'ஆனைந்து' என்பது சைவ சம்பிரதாயம்.
கோமயம், கோசலம் இரண்டும் திருமுறையுட் கூறப்படாமை அறிக. பால்வண்ணன் - இறைவனுக்கு 
இத்தலத்தில் வழங்கிய திருப்பெயர். வேல் -  திரிசூலம். ஆர்ஆர்நிழலாய் - கல்லால மரத்தின் நிழலின்கண் 
வீற்றிருந்து அறம் உரைத்தவனே. ஆயிழை - அன்மொழித் தொகை. 

    The king of Himalayan mountain Parvatha Raajan said "My daughter while doing her daily 
religious sacred rituals, recites the glory of her Lord" as under:

    "Oh my Lord! You killed the god of death 'Kaalan' by kicking him down with Your 
right leg! You enjoy Your bath given to You by Your servitors who use a mixture of milk, 
ghee and other things. Your body is already pure white in colour. It now brightens further 
with the use of milk. You hold the trident in one of Your hands! You manifested Yourself 
in the shade of the stone banyan tree and cleared the doubts of the four saints with the 
signs of Your hand.

    Oh my Lord! You bless me and I am grateful to You. I request You to inspire all  the 
souls to lead a virtuous life which will enable them to get rid of their aanavam and bad karma".

1713.     சுறவக்கொடிகொண்டவனீறதுவாய் 
    உறநெற்றிவிழித்தவெமுத்தமனே 
    விறல்மிக்ககரிக்கருள்செய்தவனே 
    அறமிக்கதுவென்னுமெனாயிழையே.        4

    "சுறவக் கொடி கொண்டவன் நீறுஅதுஆய் 
    உற, நெற்றி விழித்த எம் உத்தமனே! 
    விறல் மிக்க கரிக்கு அருள் செய்தவனே! 
    அறம் மிக்கது" எனும் -ஆயிழையே.

    "cuRavak koTi koNTavan nIRu atu Ay 
    uRa, neRRi vizitta em uttamanE! 
    viral mikka karikku aruL ceytavanE! 
    aRam mikkatu" enum--AyizaiyE.

பொருள்:     மீன்கொடி ஏந்திவந்த மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் 
விழித்தவனே! பக்தி கொண்டு வழிபட்ட யானைக்கு அருளியவனே! என்னால் அறமிக்க 
செயல்களைச் செய்பவன் நீதான் என்று பாராட்டப் பெறுபவனே! உன்னை நான் வணங்குகிறேன்.

குறிப்புரை:     சுறவக்கொடி கொண்டவன்- மீன்கொடி உடைய மன்மதன். நீறு - சாம்பல். அது-        
பகுதிப்பொருள் அன்றி வேறு குறியாது, விகுதிபோல் நிற்பது. அவர் முதலியன அங்ஙனம் நில்லா 
என்பது  தமிழ் மரபு. நீராய் உறவிழித்த உத்தமன் என்க. நெற்றி விழித்த - நெற்றிக்கண்ணால் 
விழித்த. நெற்றி- நெற்றிக்கண், இடவாகு பெயர். உத்தமன் - மேலவர்க்கும் மேலானவன். 
விறல் - வலிமை. கரி - யானை.

    My daughter praises her Lord during her daily rituals as under:

    "Oh Lord! You opened Your third eye in Your forehead and the fire that emitted 
from that eye darted towards Manmathan (cupid) and instantly burnt him into ashes. 
You graced the elephant that daily worshipped You and bathed You pouring water on 
Your head, through its trunk. A spider was spreading its web over Your head to
prevent the dried leaves falling on Your head. The elephant was destroying the 
spider's web daily by pouring water over Your head through the spider's web. 
The spider became hot tempered over the action of the elephant and therefore 
entered into its trunk and started biting it fiercely.The elephant could not bear 
the pain and dashed its trunk again and again on the ground and died.

    Oh Lord! You understood the sincerity of both. Therefore You graced the elephant. 
Of course You graced the spider also to become the king in its next birth in chola country. 
You are the holy of the holy. You are the embodiment of virtue. People speak of Your 
virtuous grace to all souls through me. You are the cleverest one!

    Oh my Lord! You are manifested in the Jambu-kech-charam temple a holy place 
in Thiru-vaa-naikkaa. Here a white Jambalonum tree exists. You grace Your devotees. 
Kindly grace the entire humanity also in the cosmos".

1714.     செங்கட்பெயர்கொண்டவன்செம்பியர்கோன் 
    அங்கட்கருணைபெரிதாயவனே 
    வெங்கண்விடையாயெம்வெண்நாவலுளாய் 
    அங்கத்தயர்வாயினளாயிழையே.        5

    செங்கண் பெயர் கொண்டவன் - செம்பியர்கோன்
     அம் கண் கருணை பெரிதுஆயவனே! 
    வெங் கண் விடையாய்! எம் வெண்நாவல் உளாய்! 
    அங்கத்து அயர்வு ஆயினள், ஆயிழையே.

    cegkaN peyar koNTavan--cempiyarkOn- 
    am kaN karuNai peritu AyavanE! 
    vegkaN viTaiyAy! em veN nAval uLAy! 
    agkattu ayarvu AyinaL, AyizaiyE.

பொருள்:     முற்பிறப்பில் சிலந்தியாய் இருந்து வழிபட்ட உயிர் மறுபிறப்பில் செம்பியான்  என்ற 
கோசோழனாய் அரச கோச்செங்கட்சோழன் என்ற திருப்பெயரோடு விளங்கிடப் பேரருள் புரிந்தவனே! 
இடப வாகனனே! வெண்ணாவல் கோயிலில் உறைபவனே! என்று பலவாறு  மலைமகள் நைந்து கூவி 
உடல் சோர்வுற்றாள். உன்னை நான் வணங்குகின்றேன்.

குறிப்புரை:     செங்கட் பெயர் - கோச்செங்கட்சோழன் என்னும் திருப்பெயர். செம்பியர்கோன் - சோழன்.
அம்கண் கருணை பெரிது ஆயவன்- கண்ணிற்கு அழகாகிய கருணையில் மிக்குள்ளவன் என்றவாறு. வெம்கண் - 
கண்ணில் விளங்கும் சினக்குறிப்பை உணர்த்துவது. சாதியிடை அங்கம் - உடம்பு : அவயவம் எனலுமாம். 
அயர்வு - சோர்வு. காதலால் நேர்ந்தது.

    The Himalayan king Parvatha Raajan said "My daughter selected the best jewellery 
among the many and wore it and started her daily religious rituals and said, "Oh my Lord! 
You blessed the chola king Chembian, other wise called "Koch- cheng- kann-aan' by giving him 
the most beautiful and bright reddish eyes at the time of his birth. For ever he was Your
celebrated devotee and built big granite temples with entrance doors very small in order to 
prevent the elephants from entering into the temple. You have the bull with very fierce eyes 
for Your ride! You are manifested in the temple in Thiru-vaa-naikkaa". "Thus she praised Him 
in many ways and became enervated", said Parvatha Raajan.

1715.     குன்றேயமர்வாய்கொலையார்புலியின் 
    தன்தோலுடையாய்சடையாய்பிறையாய் 
    வென்றாய்புரமூன்றைவெண்நாவலுளே 
    நின்றாயருளாயெனுநேரிழையே.        6

    "குன்றே அமர்வாய் ! கொலை ஆர் புலியின் 
    தன் தோல் உடையாய்! சடையாய்! பிறையாய்! 
    வென்றாய்,புரம் மூன்றை! வெண்நாவலுளே 
    நின்றாய், அருளாய்!" எனும் - நேரிழையே.

    "kunRE amarvAy! kolai Ar puliyin 
    tan tOl uTaiyAy! caTaiyAy! piRaiyAy! 
    venRAy, puram mUnRai! veN nAvaluLE 
    ninRAy, aruLAy!" enum--nErizaiyE.

பொருள்:     கயிலாய மலையில் வீற்றிருப்பவனே! கொடிய புலியின் தோலை உடுத்தியவனே! 
நீண்ட சடாமுடியினைக் கொண்டவனே! பிறைநிலவைத் தலையில் தாங்கியவனே! முப்புரங்களையும் 
அழித்தவனே! வெண்ணாவல் தலத்துள் இருப்பவனே! அருள்வாயாக என்று உமாதேவி வேண்டுகின்றாள்.

குறிப்புரை:     குன்று - கயிலை. புலியின்தன் தோல் என்றும் புரம்மூன்றையும் வென்றாய் என்றும்         
கொள்க. நின்றாய் - திருக்கோயில் கொண்டு வீற்றிருப்பவனே என்று எதிர்காலத்திற் கொள்க.

    The Himalayan king Parvatha Raajan said, Oh! my daughter wears jewellery that 
befits her status and starts her daily rituals and worships her Lord riciting thus:

    "Oh Lord! You are manifested on Mount Kailash! You wear the hide of the tiger 
which is a killer animal! You have decorated Your matted hair; the holy moon brightens 
Your head and hair. You destroyed the three forts of asuraas and killed those who lived there.

    Thus my daughter recites these above words in Jambu-kech-charam praising her Lord and 
contemplates on Him always.

பாட்டு - 7:     கிடைக்கப்பெறவில்லை

1716.     மலையன்றெடுத்தவ்வரக்கன்முடிதோள்             
    தொலையவ்விரலூன்றியதூமழுவா 
    விலையாலெனையாளும்வெணாவலுளாய் 
    அலசாமனல்காயெனுமாயிழையே.        8

    "மலை அன்று எடுத்த(வ்) அரக்கன் முடிதோள் 
    தொலைய(வ்) விரல் ஊன்றிய தூ மழுவா! 
    விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்! 
    அலசாமல் நல்காய்!" எனும் - ஆயிழையே.

    "malai anRu eTutta(v) arakkan muTitOL 
    tolaiya(v) viral UnRiya tU mazuvA! 
    vilaiyAl enai ALum veNnAval uLAy! 
    alacAmal nalkAy!" enum--AyizaiyE.

பொருள்:     கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் முடியையும்
 தோள்களையும் கால்விரலால் அழுத்தி முடிவில் அருள் செய்தவனே! தூய மழு என்ற 
ஆயுதத்தைக் கையில் ஏந்தியவனே! என்னை ஆட்கொள்ள வெண்ணாவல் மரத்தடியில்
 அமர்ந்தவனே! என்று உமாதேவியால் வணங்கப் பெறுபவனே! காத்தருள்வாயாக.

குறிப்புரை:     அரக்கன் - இராவணன். தொலைய -நொறுங்க என்னும் பொருட்டாய் நின்றது. 
வகரமெய் விரித்தல் விகாரம் (பார்க்க பா. 2) அலசாமல் - அலைக்காமல். வருத்தாமல். நல்காய் - வந்து 
அணைந்து இன்பங்கொடுப்பாய். எனும் - என்பாள்.

    Raavanan tried to move aside the Kailash hill where our Lord is manifested. Oh Lord! 
with Your toe, You pressed the top of the mountain and Raavanan's head and shoulders got 
crushed under the mountain! You hold the axe in one of Your hands! Oh Lord! to make me 
Your devotee, You have manifested Yourself under the Jambulonum tree, and grace me to 
become free from all trouble!

    Thus my daughter recites these above words in Jambu-kech-charam and praises 
her Lord and contemplates on Him always.

1717.    திருவார்தருநாரணன்நான்முகனு 
    மருவாவெருவா அழலாய்நிமிர்ந்தாய் 
    விரையாரும்வெணாவலுள்மேவியஎம்             
    அரவா எனுமாயிழையாளவளே.        9

    "திரு ஆர்தரு நாரணன், நான்முகனும், 
    அருவா, வெருவா, அழல்ஆய் நிமிர்ந்தாய்! 
    விரை ஆரும் வெண்நாவலுள் மேவிய எம் 
    அரவா!" எனும் -ஆயிழையாள் அவளே.

    "tiru Artaru, nAraNan, nAnmukanum, 
    aruvA, veruvA, azal Ay nimirntAy! 
    virai Arum veNnAvaluL mEviya em 
    aravA!" enum--AyizaiyAL avaLE.

பொருள்:     திருமகளைப் பெற்ற திருமாலும் பிரமனும் நெருங்காநிலையில் அவர்கள் அஞ்சிட 
அழலாய் நின்றவனே! மணமிக்க வெண்ணாவல் மரத்தடியில் கோயில் கொண்டவனே! உமாதேவியால் 
அரனே என்று அழைக்கப்படும் எம்பெருமானே! உன்னை நானும் இறைஞ்சுகின்றேன்.

குறிப்புரை:     திரு - இலக்குமி. மருவா - மருவி. வெருவா - அச்சத்தால் வாயால் அரற்றி (நிற்க) என்று 
ஒரு சொல் வருவித்து முடிக்க. வெருவி (நிற்க) அழலாய் நிமிர்ந்தாய் என்றபடி. விரை - மணம். 
அரவா - பாம்பணிந்தவனே. ஹர! வா எனலும் பொருந்தும். எம் அரனேயோ என்றென்று.

    The king of the Himalayas Parvatha Raajan says "My daughter Umaa wears the choice 
ornaments and prays to her Lord as under:"

    "Oh Lord! when the prosperous Vishnu came along with the god of Vedas near 
You to worship You, You turned Yourself into a tall and big immeasurable fiery column. 
They were confused and got afraid. Oh Lord! You are now manifested in Thiru-vaa-naikkaa 
in the temple, a holy place of white Jambulonum, god of serpents". Thus my daughter 
praises You, You are the Supreme Lord!

1718.     புத்தர்பலரோடமண்பொய்த்தவர்கள் 
    ஒத்தவ்வுரைசொல்லிவையோரகிலார் 
    மெய்த்தேவர்வணங்கும்வெணாவலுளாய் 
    அத்தாஅருளாயெனுமாயிழையே.        10

    'புத்தர் பலரோடு அமண்பொய்த்தவர்கள் 
    ஒத்த(வ்) உரை சொல் இவை ஓரகிலார்; 
    மெய்த் தேவர் வணங்கும் வெண்நாவல்உளாய்! 
    அத்தா அருளாய்!” எனும் - ஆயிழையே.

    "puttarpalarOTu amaNpoyttavarkaL 
    otta(v) urai col ivai OrakilAr; 
    meyt tEvar vaNagkum veNnAval uLAy! 
    attA! aruLAy!" enum--AyizaiyE.

பொருள்:     புத்தர்களும் சமணர்களும் பொய்த்தவம் புரிபவர்கள். ஒன்றுபட்டு அவர்கள் சொல்லும் 
வார்த்தைகளை நம்ப வேண்டாம். மெய்த்தவர்களான தேவர்கள் புத்தரும்  சமணரும் கூறுவனவற்றை 
ஏற்காமல் வெண்ணாவல் தலத்துள் கோயில் கொண்ட எம்பெருமானைப் புகழ்ந்து பாடுவார்கள். 
உமையவளால் அன்புடைய இறைவன் என்று போற்றப்படும் எம்பெருமானே! உன்னை வணங்கும் 
எனக்கு அருள்வாயாக!

குறிப்புரை:     அமண்- சமணர். பொய்த்தவர்கள் - மெய்த்தவரல்லாதவர்கள். பொய்த்தவத்தை 
உடையவர்கள் என்று ஒரு மொழியும் தொடர்மொழியுமாக் கொள்ளலாம். ஒத்தவ்வுரை - வகரம் விரித்தல் 
விகாரம். ஓரகிலார் -உணரமாட்டார்.

    Oh my Lord! the Buddhists, many in number and the Jains of false penance speak untruth. 
The true celestials do not heed to them. But pray to Your holy feet. My Lord at Thiru-vaa-naikkaa! 
My Master Supreme! shower Your grace on me and on all the good souls in the Universe". 
Thus my daughter Umaa, wearing carved jewellery prays to her Lord daily.

1719.     வெணாவலமர்ந்துறைவேதியனைக் 
    கண்ணார்கமழ்காழியர்தந்தலைவன் 
    பண்ணோடிவைபாடியபத்தும்வல்லார் 
    விண்ணோரவரேத்தவிரும்புவரே.        11

    வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனைக், 
    கண் ஆர் கமழ் காழியர்தம் தலைவன், 
    பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் 
    விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.

    veNnAval amarntu uRai vEtiyanai, 
    kaN Ar kamaz kAziyartam talaivan, 
    paNNOTu ivai pATiya pattum vallAr 
    viNNOr avar Etta virumpuvarE.

பொருள்:     வெண்ணாவல் திருத்தலத்தில் கோயில் கொண்டு அமர்ந்துள்ள எம்பெருமானை, 
ஞானம் கைவரப் பெற்ற ஞானசம்பந்தப் பெருமான் பண்ணோடு பத்துப் பாடல்களைப் பாடியருளி உள்ளார். 
அப்பத்துப் பாடல்களையும் உணர்ந்து அன்புடன் பாட வல்லவர்கள் தேவர்களாலும் விரும்பிப் புகழப்படுவார்கள்.

குறிப்புரை:     வேதியன்- வேதத்தைப் படைத்த பரசிவன். வல்லவரை விண்ணோர் ஏத்த விரும்புவர் 
என்றபடி. கண்ணாருங்காழியர் (தி. 2 ப. 16 பா 11) என்றது காண்க. கண்- மூங்கில். வேணுவனம் ஞானக்கண் 
என்று கொண்டு அதையுடையார்க்கு ஆகுபெயராக்கலுமாகும். திருஞானசம்பந்த சுவாமிகள் பண்ணோடு 
பாடிய உண்மை ஈண்டும் புலனாகின்றது.

    These ten hymns of melody have been sung by our divine saint Thiru-gnana- Sambandar
hailing from Seerkaazhi, a holy place surrounded by bamboo forests on the Lord of Thiru-vaa-naikkaa. 
Those who recite these hymns with deep love of our Lord will be praised by the celestials.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            23ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 23rd Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

 
பதிகத் தொடர் எண்: 160                    பதிக எண் 24.

24. திருநாகேச்சுரம்                    24. THIRU-NAAKECH-CHURAM
பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    ஐந்தலை அரவால் பூசிக்கப் பெற்ற கோயிலை உடையது ஆதலின் இப்பெயர் பெற்றது.
 இச்செய்தி  இக்கோயிலுக்குரிய நாவுக்கரசரது திருக்குறுந்தொகையிலுள்ள (திருப்பாட்டு 4)

    "ஐந்தலை யரவின் பணி கொண்டருள்
    மைந்தர் போன்மணி நாகேச் சுவரரே"

என்ற தேவாரப் பகுதியால் அறியலாகும்.

    மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில் திருநாகேச்சுரம் தொடர்வண்டி
நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள 
29ஆவது தலமாகும். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    இறைவர் திருப்பெயர் சண்பகாரணியர். இறைவி திருப்பெயர் குன்றமுலைநாயகி . தீர்த்தம்
சூர்யபுஷ்கரிணி. ஐந்தலை நாகமன்றி, சந்திர சூரியர்களால் பூசிக்கப்பெற்றது. தெய்வப் பாக்கிழாராகிய 
சேக்கிழார் தமது ஊராகிய குன்றத்தூரில் ஒரு கோயில் எடுப்பித்து அதற்குத் திருநாகேச்சுரம் என்று பெயர் 
வைத்துள்ளமை இதை நன்கு புலப்படுத்தும்.

    திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனாரது பதிகம்  மூன்று. சுந்தரமூர்த்தி 
நாயனாரது பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்களைப் பெற்ற பெருமை உடையது. நாளும் வணங்குவார் 
பிணி தீர்க்கும் பெற்றியுடையது.

    "நாளு நாதனமர் கின்ற நாகேச்சுர நண்ணுவார் 
    கோளு நாளுந் தீயவேனு நன்காங் குளிக்கொண்மினே" 

என்னும், இக்கோயில் சம்பந்தர் தேவாரப்பகுதி சிந்திக்கற்பாலது.

பதிக வரலாறு

    ஆதிசேடன், சிவராத்திரியொன்றில், நான்கு யாமங்களிலும் முறையே திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், 
திருப்பாம்புரம், திருநாகைக்காரோணம் என்னும் நான்கு திருத்தலங்களையும் அடைந்து பூசித்த வரலாறு 
'மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி' என்பதிற் குறித்தருளினார் அருண்மொழித்தேவர். 
அவற்றுள் ஒன்றான திருநாகேச்சுரத்தில் காழிப்புரவலனார் சென்று பரவுவார் பிணிதீர்க்கும் தலம் 
போற்றிப் பாடியது இது.

            திருச்சிற்றம்பலம்

1720.     பொன்நேர்தருமேனியனேபுரியும் 
    மின்நேர்சடையாய்விரைகாவிரியின் 
    நன்நீர்வயல்நாகேச்சுரநகரின்                 
    மன்னேயெனவல்வினைமாய்ந்தறுமே.        1

    "பொன் ஏர்தரு மேனியனே புரியும் 
    மின் நேர் சடையாய்! விரை காவிரியின் 
    நன்நீர் வயல் நாகேச்சு ரநகரின் 
    மன்னே!' என, வல்வினை மாய்ந்து அறுமே.

    "pon Ertaru mEniyanE! puriyum 
    min nEr caTaiyAy! virai kAviriyin 
    nan nIr vayal nAkEccuranakarin 
    mannE!" ena, valvinai mAyntu aRumE.

பொருள்:     பொன் போன்ற அழகிய மேனியை உடையவன் என்றும், மின்னல் போன்ற ஒளியுடைச் 
சடையன் என்றும், காவிரி பாயும் நன்னிலமாகிய திருநாகேச்சுர நகரில் கோயில் கொண்டவன் என்றும், 
என்றும் நிலையானவன் என்றும் எம்பெருமானைப் போற்றி வணங்குபவர்களின் வினைகள் நீங்கப்பெறும் என்க.

குறிப்புரை:     பொன் ஏர் தரு மேனியன்- பொன்னைப்போல ஒளிரும் திருமேனியுடையவன். 
ஏர்- உவமவுருபு,விரை (காவிரி) நீர் - விரைந்தோடும் (காவிரி) நீர். நீர்வயல் - நீர் நிலவளம் உணர்த்தியவாறு. 
மன்னே- இறைவனே. வல்வினை மாய்ந்து அறும் என்றதுபோல இத்திருப்பதிகம் முழுதும் பாடி அருளியதால் 
இத்தலவழிபாடு நம் பழவினைப் பற்றறுக்கும் என்பது உறுதியாதலறிக. என- என்று துதிக்க. 
மேலும் இவ்வாறே கொள்க. 

    Oh my Lord! You have the golden coloured attractive body. You have the 
shining, matted, red coloured beautiful hair. The river Cauvery, full of sweet 
smelling water, overflows the paddy fields. The city is surrounded by plenty of 
rich fields with  profuse water. Oh Lord! You are manifested in this holy city 
and grace Your servitors. I worship Your holy feet. I know for certain that the 
evil effects of my bad karma will definitely be snapped and my sufferings will vanish.

1721.     சிறவார்புரமூன்றெரியச்சிலையில் 
    உறவார்கணையுய்த்தவனேயுயரும் 
    நறவார்பொழில்நாகேச்சுரநகருள் 
    அறவாஎனவல்வினையாசறுமே.        2

    "சிறவார் புரம்மூன்று எரியச் சிலையில் 
    உற வார்கணை உய்த்தவனே! உயரும் 
    நறவு ஆர் பொழில் நாகேச்சுர நகருள் 
    அறவா!" என, வல்வினை ஆசு அறுமே.

    "ciRavAr puram mUnRu eriyac cilaiyil 
    uRa vArkaNai uyttavanE! uyarum 
    naRavu Ar pozil nAkEccura nakaruL 
    aRavA!" ena, valvinai Acu aRumE.

பொருள்:     முப்புரங்களை ஆண்ட அசுரர்களை அழிக்க, மேருமலையை வில்லாகவும் ,
திருமாலை நீண்ட அம்பாகவும் கொண்டு செலுத்தியவனே, தேன்பொழியும்  உயர்ந்த மரங்கள் 
நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற திருநாகேச்சுர நகருள் கோயில் கொண்டவனை, 
தருமசொரூபியானவனைத் துதிப்பவர்களின் வினைகள் நீங்கும் என்க.

குறிப்புரை:     சிறவார் - சிறக்காதவர் (திரிபுரத்தசுரர்). சிலையில் உற - மேருவில்லிற் பொருந்த.                     
வார்கணை – நீண்ட அம்பு. உய்த்தவன் - செலுத்தியவன். உயரும் பொழில். நறவு ஆர் பொழில். நறவு.     
கள், தேன்.  நகர் - திருக்கோயில். அறவா - தருமசொரூபி. ஆசு - குற்றம்.

    The three asuraas called Thiri-puraththu-asurar who had no good conduct lived in the 
three flying forts with their followers. Our Lord of Thiru-naakech-churam used the Meru mountain 
as His bow and deputed Thirumaal to become the long arrow of His bow and shot at the three forts 
and completely destroyed them along with the people. Oh Lord! You are now manifested in the 
holy temple in Thiru-naakech-churam. This city is surrounded by big gardens of nectarined 
flowers. You are the embodiment of all virtuous dispositions. Those devotees who worship 
Your holy feet will get rid of all the evil effects of their bad karma.

1722.    கல்லால்நிழல்மேயவனேகரும்பின் 
    வில்லானெழில்வேவவிழித்தவனே 
    நல்லார்தொழுநாகேச்சுரநகரில்                 
    செல்வாவெனவல்வினைதேய்ந்தறுமே.        3

    "கல்லால்நிழல் மேயவனே! கரும்பின் 
    வில்லான் எழில் வேவ, விழித்தவனே! 
    நல்லார் தொழும் நாகேச்சுர நகரில் 
    செல்வா!" என, வல்வினை தேய்ந்து அறுமே.

    "kallAl nizal mEyavanE! karumpin 
    villAn ezil vEva, vizittavanE! 
    nallAr tozum nAkEccuranakaril 
    celvA!" ena, valvinai tEyntu aRumE.

பொருள்:     கல்லால மரத்தின் அடியில் எழுந்தருளியவன் என்றும், கரும்பு வில்லைக் 
கொண்ட மன்மதனை எரித்தவன் என்றும், நன்னெறியாகிய சிவஞானத்தையும் நற்பண்புகளையும் 
உடைய நல்லவர்கள் தொழுகின்ற திருநாகேச்சுர நகரில் கோயில் கொண்டருள்பவன் என்றும்,
எல்லாச் செல்வங்களும் பொருந்தப் பெற்றவன் என்றும், ஈசனைத் தொழுபவர்களின் வினைகள் 
தேய்ந்து நீங்கிவிடும் என்க. 


குறிப்புரை:     கல் ஆல் நிழல் மேயவன் - கல்லாலின் நிழலில் வீற்றிருந்தவன். கரும்பின் வில்லான் - 
கரும்பை வில்லாகவுடைய மன்மதன். எழில் - அழகு. ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது. 
விழித்தவன் - தீ விழி திறந்து எரித்தவன். நல்லார் நன்னெறியாகிய சிவஞானத்தை உடையார்.
நற்பண்புடையாருமாம். செல்வா - சென்றடையாத திருவுடையானே. 

    Oh Lord! You taught all the unknown wisdom to four of Your servitors by manifesting 
Yourself under a stone banyan tree. You opened Your third eye and burnt the good looking god of love, 
Manmathan, who carried the sugarcane as his bow. The devotees with good manners and thorough 
knowledge of Saiva Neri worship Your holy feet at Thiru-naakech-churam. You are the abode 
of all wealth. Those who worship You, citing these details, will get rid of the evil effects of 
their bad karma, for karma fades and dissolves completely when we worship Civa wholeheartedly.

1723.     நகுவான்மதியோடரவும்புனலும் 
    தகுவார்சடையின்முடியாய்தளவம் 
    நகுவார்பொழில்நாகேச்சுரநகருள்             
    பகவாஎனவல்வினைபற்றறுமே.        4

    "நகு வான்மதியோடு அரவும் புனலும் 
    தகு வார்சடையின் முடியாய்! தளவம் 
    நகு வார் பொழில் நாகேச்சுர நகருள் 
    பகவா!" என, வல்வினை பற்று அறுமே.

    "naku vAnmatiyOTu aravum punalum 
    taku vArcaTaiyin muTiyAy! taLavam 
    naku vAr pozil nAkEccura nakaruL 
    pakavA!" ena, valvinai paRRu aRumE.

பொருள்:     ஒளிமிக்க சந்திரனையும், சீறும் பாம்பையும், வேகமாக ஓடிவரும் கங்கை 
நதியையும் தன்சடையில் பொருந்துமாறு இருக்கச் செய்தவனே! செம்முல்லை மலர்கள் 
நிறைந்து விளங்கும் திருநாகேச்சுரத் தலத்துள் கோயில் கொண்ட இறைவனே! என  உன்னை 
அன்புடன் தொழுபவர்களின் வினையினால் வரும் பற்றுக்கள் நீங்கப்பெறும் என்க. 

குறிப்புரை:     நகு - விளங்குகின்ற. வான்மதி - விண்ணிலூரும் திங்கள். வெண்டிங்களுமாம். அரவு-
பாம்பு. புனல் - கங்கை. தகு - தக்க. வார் - நீண்ட. தளவம் - முல்லை. நகுவார் – பல்லைக் காட்டிச் சிரிப்பார் 
(போலப்பூக்கும் பொழில்) தளவம் நகும்வார் பொழில் எனல் வெளிப்படை. பகவா - கடவுளே, ஷாட்குண்யனே.

    The fascinating crescent moon creeping in the sky, the snake and the Ganges river 
have adorned Your matted long hair. With all these three You are very attractive. This city 
is surrounded by long-stretching gardens full of aralian jasmine flowers in their bloom; 
it appears as though the flowers show their teeth and laugh. My Lord ,You are now manifested 
in Thiru-naakech-churam, You are my absolute; I bow at Your holy feet; I am sure my evils 
are stripped off.

1724.    கலைமான்மறியுங்கனலும்மழுவும் 
    நிலையாகியகையினனேநிகழும் 
    நலமாகியநாகேச்சுரநகருள்             
    தலைவாஎனவல்வினைதானறுமே.        5

    "கலைமான்மறியும் கனலும் மழுவும் 
    நிலைஆகிய கையினனே! நிகழும் 
    நலம் ஆகிய நாகேச்சுர நகருள் 
    தலைவா!” என, வல்வினைதான் அறுமே.

    "kalaimAn maRiyum kanalum mazuvum 
    nilai Akiya kaiyinanE! nikazum             
    nalam Akiya nAkEccura nakaruL 
    talaivA!" ena, valvinaitAn aRumE.        

பொருள்:     துள்ளிக் குதித்தோடும் மான்மறியையும், நெருப்பையும், மழுவாயுதத்தையும், 
நிலையாகக் கையில் ஏந்தியவனே! நலம் நிறைந்த திருநாகேச்சுர தலத்துள் விளங்கும் தலைவனே! 
என அன்புடன் வணங்குபவர்களின் வல்வினைகள் தாமே நீங்கப் பெறும்.

குறிப்புரை:     கலைமான்மறி - ஆண் மான்கன்று. கனல் - தீ. மழு - மழுவாயுதம். நிலை - நிற்றல். - 
நிகழும் நலம் - உலகப் பிரசித்தி பெற்ற வினை தீர்தலாகிய நன்மை. நகர் - திருக்கோயில்.

    Oh Lord of Thiru-naakech-churam! You hold in one of Your hands the male deer, 
in another hand a ball of fire and in the third hand an axe permanently. You are manifested 
in Thiru-naakech-churam, a place renowned for blessings, gracing the devotees for their 
welfare. My God! I bow at Your holy feet saying all these. I know that my evils are snapped off.

1725.     குரையார்கழலாடநடங்குலவி 
    வரையான்மகள்காணமகிழ்ந்தவனே 
    நரையார்விடையேறுநாகேச்சுரத்தெம்         
    அரைசேயெனநீங்குமருந்துயரே.        6

    "குரை ஆர் கழல் ஆட நடம் குலவி, 
    வரையான்மகள் காண, மகிழ்ந்தவனே! 
    நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம் 
    அரைசே!" என, நீங்கும், அருந்துயரே.

    "kurai Ar kazal ATa naTam kulavi, 
    varaiyAn makaL kANa, makizntavanE! 
    narai Ar viTai ERum nAkEccurattu em 
    araicE!" ena, nIgkum, aruntuyarE.

பொருள்:     மலையரசன் மகளாகிய பார்வதிதேவி கண்டு மகிழ ஒலிக்கின்ற வீரக்கழல்கள் அணிந்து, 
நடனம் ஆடி மகிழ்ந்தவனே! வெண்மை நிறம் கொண்ட இடப வாகனத்தில் ஏறி இருந்து அருள்பவனே! திருநாகேச்சுர 
நகரத்தில் கோயில் கொண்ட அரசே! என்றெல்லாம்  போற்றி வணங்கும் தொண்டர்களின் அருந்துயரங்கள் 
நீங்கும் என்க. 

குறிப்புரை:     குரை - ஒலி, நடம் - நிருத்தம். வரையான் - இமாசலராசன். நரை -வெண்மை : 
ஆர்- பொருந்திய. விடையேறு (தொல்காப்பியம், மரபியல் சூ. 37,38). அரைசு - மொழியிடை நின்ற 
ஐகாரம் போலி. அரசனே என்று விளித்தது. நீங்குதற்கு அரிய துயரமும் நீங்கும் என்றவாறு.

    Oh my God of Thiru-naakech-churam! You were delighted to please our goddess
Paarvathi Devi, daughter of the Himalayan mountains, making her witness Your celestial 
cosmic dance, with ringing anklets and the accompanying music supreme. You mount on the 
white bull whenever you want to move about. Oh King of Thiru- naakech-churam! Those 
devotees who address You in this prayerful way will find their bitter sufferings 
gone forever.

1726.     முடையார்தருவெண்டலைகொண்டுலகில் 
    கடையார்பலிகொண்டுழல்காரணனே 
    நடையார்தருநாகேச்சுரநகருள்             
    சடையாஎனவல்வினைதானறுமே.        7

    "முடை ஆர்தரு வெண்தலை கொண்டு, உலகில் 
    கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே! 
    நடை ஆர் தரு நாகேச்சுர நகருள் 
    சடையா!" என, வல்வினைதான் அறுமே.

    "muTai Artaru veNtalai koNTu, ulakil 
    kaTai Ar pali koNTu uzal kAraNanE! 
    naTai Ar taru nAkEccura nakaruL 
    caTaiyA!" ena, valvinaitAn aRumE.

பொருள்:     பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி, தாருகாவனத்து முனிவர்களின் வீட்டு வாசல்களின்முன் 
பலி தேர்ந்து நிற்பவனே! எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக விளங்கும் ஈசனே! ஒழுக்கம் 
நிறைந்தவர்கள் வாழும் திருநாகேச்சுர தலத்துள் கோயில் கொண்டிருப்பவனே!  என்றெல்லாம் உன்னைப் 
போற்றி வணங்குபவர்களின் வினைப் பயன்கள் தாமே நீங்கப் பெறும்.

குறிப்புரை:     முடை - புலால், நாற்றமுமாம். கடை - கடை வாயில். காரணம்- முதல்வன். 
நடை- ஒழுக்கம். சடையா-  (ஞானமான) சடையனே. நுண்சிகை ஞானமாம்.

    Oh my Lord of Thiru-naakech-churam! You are the prime cause of all thoughts, 
words and deeds; but You carry in Your hands the skull of Brahma and roam all over 
the world, particularly around the residence of the rishis of Daaruga forest, 
begging for alms. We are unable to understand Your above action. You the Lord of 
matted hair! You have manifested Yourself in Thiru-naakech-churam where people of 
good morality and discipline abide. Those devotees who pray to our Lord saying 
these words will be free of all their evils.

1727.     ஓயாத அரக்கனொடிந்தலற 
    நீயாரருள்செய்துநிகழ்ந்தவனே 
    வாயாரவழுத்துவர்நாகேச்சுரத்             
    தாயேயெனவல்வினைதானறுமே.        8

    "ஓயாத அரக்கன் ஒடிந்து அலற, 
    நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே! 
    வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுரத் 
    தாயே!'' என, வல்வினைதான் அறுமே.

    "OyAta arakkan oTintu alaRa, 
    nI Ar aruL ceytu nikazntavanE!         
    vAy Ara vazuttuvar nAkEccurat                 
    tAyE!" ena, valvinaitAn aRumE.

பொருள்:     ஆணவ மலம் மிகப் பெற்ற அரக்கனாகிய இராவணனை ஆற்றல் இழந்து 
அலறச் செய்தவனே! உன்னை அன்புடன் விளங்கும் அடியார்களுக்கு அருள்புரிபவனே! 
நாகேச்சுர நகருள் கோயில் கொண்ட தாயானவனே! என உன்னை வணங்குபவர்களின் 
வினைகள் தாமே நீங்கும் என்க.

குறிப்புரை:     ஓயாத (தான் செய்யும் குற்றத்தை உணர்தற்கு உணர்வில்) நுணுகாத, இடைவிடாத 
என்றலுமாம். நீ - தேவரீர். ஆரருள் - பூரணகருணை . வாயார வழுத்துவர் - வாயாரப் பாடுந்தொண்டர். 
தாயே - தாயாய் முலையைத் தருவானே (முத்தி நிச்சயப் பேருரை பக்கம் 78-9, 192-3இல் உள்ள விளக்கம்
பார்க்க) (தி.2 ப. 86 பா. 4 குறிப்புரை காண்க).

    Raavanan, the king of Sri Lanka, out of arrogance, fought ceaselessly against his 
enemies. He committed wrong actions also against You. Therefore, You punished him severely, 
crushing his heads and shoulders. When he screamed and prayed for mercy, You showed him 
compassion with the kind heart of a mother. Mentioning this incident, devotees will refer 
to You as the 'Mother templed at Thiru-naakech-churam!'  Such devotees who worship You in 
this way will be freed of their bad karma.

1728.     நெடியானொடுநான்முகன்நேடலுறச் 
    சுடுமாலெரியாய்நிமிர்சோதியனே 
    நடுமாவயல்நாகேச்சுரநகரே             
    இடமாவுறைவாயெனஇன்புறுமே.        9

    "நெடியானொடு நான்முகன் நேடல் உற, 
    சுடு மால் எரிஆய் நிமிர் சோதியனே! 
    நடு மா வயல் நாகேச்சுர நகரே 
    இடமா உறைவாய்!" என, இன்பு உறுமே.

    "neTiyAnoTu nAnmukan nETal uRa, 
    cuTu mAl eri Ay nimir cOtiyanE! 
    naTu mA vayal nAkEccura nakarE 
    iTamA uRaivAy!" ena, inpu uRumE.

பொருள்:     திருமாலும், நான்முகனும் அடிமுடி தேடிட பெருநெருப்பாய் நிமிர்ந்து ஓங்கிய 
சிவபெருமானே! வயல் வளம் நிறைந்த திருநாகேச்சுரத் தலத்துள் கோயில் கொண்டு அருள்பவனே! 
என்றெல்லாம் உன்னைப் புகழ்ந்து கூறிடும் அடியவர்கள் என்றும் இன்புறுவார்கள்.

குறிப்புரை:     நெடியான் - விக்கிரமன்; திருமால். நேடல் - அடிமுடி தேடுதல். மால் - பெரிய. சோதியன்- 
தீப்பிழம்பானவன். நடு- நாற்று நடுகின்ற. மாவயல்- நீள் கழனி. நகரே இடமா உறைவாய்- திருக்கோயிலே 
உறையுளாக எழுந்தருளியவனே. இன்பு - இம்மை மறுமை வீட்டின்பம்.

    Lord Vishnu and the four faced Brahma were roaming all over the cosmos 
to see Your head and feet. Then You rose as an immeasurable light with full brightness. 
Those two were bewildered. Oh my Lord! You have chosen to be always manifested in the 
temple in Thiru-naakech-churam where the many rich paddy fields bring all the fertility. 
The devotees who say this will be in bliss always.

1729.     மலம்பாவியகையொடுமண்டையதுண் 
    கலம்பாவியர்கட்டுரைவிட்டுலகில் 
    நலம்பாவியநாகேச்சுரநகருள்             
    சிலம்பாஎனத்தீவினைதேய்ந்தறுமே.        10

    மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் - 
    கலம்பாவியர் கட்டுரை விட்டு, "உலகில் 
    நலம் பாவிய நாகேச்சுர நகருள் 
    சிலம்பா!" என, தீவினை தேய்ந்து அறுமே.

    malam pAviya kaiyoTu maNTai atu uN 
    kalampAviyar kaTTurai viTTu, "ulakil 
    nalam pAviya nAkEccura nakaruL 
    cilampA!" ena, tIvinai tEyntu aRumE.

பொருள்:     சமணர்கள் குற்றம் நிறைந்தவர்கள். மனிதர்களின் மண்டை ஓட்டில் ஊன் ஏற்று 
உண்டு வாழ்பவர்கள். அவர்கள் கூறும் தப்பான உரைகளை அடியவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். 
நலம் நிறைந்த நாகேச்சுர நகரத்துள் கோயில் கொண்டுள்ள சிலம்பணிந்த சிவபெருமானே எனப் 
போற்றி வணங்குவோரின் தீவினைகள் எல்லாம் நீங்கப் பெறும்.

குறிப்புரை:     மலம் - அழுக்கு. பாவிய - பரவிய. மண்டை - உணவு கொள்ளும் பொருட்டு. விரிந்த 
பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்டது. உண்கலம்- உண்ணும் பாத்திரம். பாவியர்- தீவினை 
உடையவர். கட்டுரை-  கட்டிச் சொல்லும் பொய்ம்மொழி. சிலம்பா- சிலம்பு அணிந்தவனே.          
கயிலை மலையானே.                                                 

    The Jains utter words which cannot be relied upon; they eat their food with 
impure hands using mud vessels. Oh Lord of Thiru-naakech-churam! Your devotees of this 
place neglect the words of those evil men. You are manifested in Thiru-naakech churam 
where all goodness prevails for ever. The ankleted Lord of Mount Kailash!
residing at Thiru-naakech-churam, a place abounding in bliss and goodness- those
who glorify You in such words will find their bad karma fading and fleeing.

1730.     கலமார்கடல்சூழ்தருகாழியர்கோன் 
    தலமார்தருசெந்தமிழின்விரகன் 
    நலமார்தருநாகேச்சுரத்தரனைச்             
    சொலமாலைகள்சொல்லநிலாவினையே.        11

    கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்கோன் - 
    தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன் 
    நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனைச் 
    சொலல் மாலைகள் சொல்ல நிலா,வினையே.

    kalam Ar kaTal cUztaru kAziyarkOn- 
    talam Artaru centamizin virakan- 
    nalam Artaru nAkEccurattu aranaic 
    colal mAlaikaL colla, nilA, vinaiyE.

பொருள்:     மரக்கலன்கள் நிறைந்த கடல் சூழ்ந்த சீர்காழிப் பதியில் அவதரித்த செந்தமிழ்
விரகராகிய ஞானசம்பந்தப் பெருமான், நாகேச்சுர நகரில் கோயில் கொண்ட சிவபெருமானைப் 
புகழ்ந்து போற்றி பத்துப் பாடல்கள்  அருளி உள்ளார். அப்பாடல்களை உணர்ந்து அன்புடன் பாட 
வல்லவர்களின் வினைகள் தாமே நீங்கும் என்க. 

குறிப்புரை:     கலம் - மரக்கலம். தலம்- சிவதலம். விரகன் - வல்லவன், அறிஞன். சொலல்-
சொல்லுதலை உடைய, புகழுடைய. சொல் - புகழ். சொல்ல - இசையுடன் பாட, வினை நில்லா என்க.

    The town Seerkaazhi is on the bank of the seashore where a number of ships float and 
ply about. Our skilful Thiru-gnana-Sambandar hails from this place. He is a great exponent 
of pure classical Tamil songs. These garlands of pure words were sung on the Lord of 
Thiru-naakech-churam where goodness overflows. Those devotees who recite these ten 
verses in chaste musical note before our Lord of Thiru-naakech-churam will be
relieved of all evils instantly.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            24ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 24th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 161                பதிக எண்: 25

25. திருப்புகலி                    25. THIRUP-PUKALI

பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

                திருச்சிற்றம்பலம்

1731.     உகலியாழ்கடலோங்குபாருளீர் 
    அகலியாவினையல்லல்போயறும் 
    இகலியார்புரமெய்தவன்னுறை 
    புகலியாநகர்போற்றிவாழ்மினே.        1

    உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்! 
    அகலியா வினை அல்லல் போய் அறும் 
    இகலியார் புரம் எய்தவன்(ன்) உறை 
    புகலியா நகர் போற்றி வாழ்மினே!

    ukali AzkaTal Ogku pAruLIr!-- 
    akaliyA vinai allal pOy aRum- 
    ikaliyAr puram eytavan(n) uRai 
    pukali yA nakar pORRi vAzminE!            

பொருள்:     பகைமை உணர்வு மிகக்கொண்டு திரிபுரங்களை ஆண்டு வந்த கொடிய அசுரர்களை 
அழித்த புண்ணியன் சிவபெருமான் ஆவர். அவர் புகலி என்று சொல்லப்படும் சீர்காழித் தலத்தில் 
கோயில் கொண்டுள்ளார்.  கடல் சூழ்ந்த உயர்ந்த உலகில் வாழும் அடியவர்களாகிய நீங்கள்  ஈசனையே 
போற்றி வாழுங்கள், உங்கள் வினைகளும் துன்பங்களும் நீங்கிவிடும்.

குறிப்புரை:     உகலி - தாவி (உகளி என்பதன் போலி) உகுதலை உடைய எனலுமாம். ஆழ் - ஆழ்ந்த. 
பார் -பூமி. உளீர் - உள்ளவர்களே. வினை அகலியா - வினைகள் பெருகாமல் ஒழியும். அல்லல் போய் அறும். 
இகலியார் - பகைவர். புகலியாம் நகர் - சீகாழித் திருக்கோயிலை.போற்றி - வழிபட்டு. வாழ்மின் - இன்ப 
வாழ்க்கை எய்துங்கள்.

    People living in this world Thirup-pukali which is surrounded by roaring deep
sea with waves dashing the shores may listen. Our Supreme Lord Civan destroyed the 
three flying fortresses of the asuraas who were opposed to Him. All of you come here
to this city of Thirup-pukali where our Lord is manifested. Praise this great city 
called Thirup-pukali which is generally known as Seerkaazhi and offer worship and pray
at His holy feet, your evils and sufferings will be wiped out. 

1732.    பண்ணியாள்வதோரேற்றர்பால்மதிக் 
    கண்ணியார்கமழ்கொன்றைசேர்முடிப் 
    புண்ணியன்னுறையும்புகலியை 
    நண்ணுமின்நலமானவேண்டிலே.        2

    பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர், பால்மதிக் - 
    கண்ணியார், கமழ் கொன்றை சேர்முடிப் 
    புண்ணியன்(ன்),உறையும் புகலியை 
    நண்ணுமின்,நலம் ஆன வேண்டிலே!

    paNNi ALvatu Or ERRar, pAlmatik 
    kaNNiyAr, kamaz konRai cEr muTip 
    puNNiyan(n), uRaiyum pukaliyai 
    naNNumin, nalam Ana vENTilE!

பொருள்:     இடப வாகனத்தில் அமர்ந்து அருள்பவரும், வெண்ணிற நிலவைத் தலையில் அணிந்தவரும், 
கொன்றை மாலையைத் தலையில்  அணிந்தவரும் , புண்ணியம் பொருந்தியவருமாகிய சிவபெருமான் 
புகலித் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். அடியவர்களே! அவரை  அன்புடன் வழிபட்டு உங்களுக்கு 
வேண்டியவற்றை அடைவீர்களாக. 

குறிப்புரை:     பண்ணி - அலங்காரம் செய்து. ஏறி ஊர்வது இங்கு ஆள்வதாயிற்று. ஏற்றா- எருதுடையவர். 
மதிக்கண்ணி - பிறையாகிய கண்ணி தலையிற் சூடுவதும் காம்புகளை ஒருபால் வைத்துக் கட்டுவதுமாகிய 
பூங்கண்ணியாகப் பிறையைக் கொண்டவன் சிவன். நலம் ஆன-  நலங்களானவை. வேண்டில் - விரும்பினால். 

    Those who are really interested in getting all the desirable things needed in your life
and also the blessings of our Supreme Lord Civan, may come to the city of  Pukali at
the earliest. Our Lord Civan is manifested in this city. He rides on His vehicle, the bull, 
decorated with many attractive things which carries Him all over the cosmos. He has adorned 
His head with the white crescent moon. He wears on His head the garland made of cassia flowers. 
If You worship the Lord of Pukali with great love You will be blessed by Him with all that 
you require for a good life.

1733.     வீசுமின்புரைகாதன்மேதகு 
    பாசவல்வினைதீர்த்தபண்பினன் 
    பூசுநீற்றினன்பூம்புகலியைப் 
    பேசுமின்பெரிதின்பமாகவே.        3

    வீசும் மின் புரை காதல் மேதகு 
    பாச வல்வினை தீர்த்த பண்பினன், 
    பூசும் நீற்றினன், பூம் புகலியைப் 
    பேசுமின், பெரிது இன்பம் ஆகவே!

    vIcum min purai kAtal mEtaku 
    pAca valvinai tIrtta paNpinan, 
    pUcum nIRRinan, pum pukaliyaip 
    pEcumin, peritu inpam AkavE!

பொருள்:     அடியவர்களே! உங்களது தீர்க்க முடியாத வினைகளை எல்லாம், எம்பெருமான் மின்னல் 
வீசுவது போன்று கண நேரத்தில் நீக்கி அருளுவான். திருநீறு பூசியவனாகிய அவன் புகலியூரில் கோயில் 
கொண்டுள்ளான். நீங்கள் அந்தப் புகலியூர் எம் பெருமானையே போற்றி வழிபட்டு பேரின்பம் பெறுவீர்களாக.

குறிப்புரை:     வீசும் மின் புரை -  வீசுகின்ற மின்னலை ஒத்த. பெரிது ஆகப் பேசுமின் என்க. 
பெரிது  இன்பம் - பேரின்பம் எனலுமாம். 
    
    People of this world may understand that our Supreme Lord Civan is manifested
in the holy city of Poompukali, a very sacred place. He has smeared white ashes all over 
His body. He wears on His ears brilliant lightning-like jewellery. He is the embodiment of 
great virtues that could destroy the evil effects of our karma in a second. Therefore, 
understand these factors of our Lord Civan, praise the city of Pukali and His greatness, 
and worship His holy feet, You will attain great bliss.

1734.     கடிகொள்கூவிளமத்தம்வைத்தவன் 
    படிகொள்பாரிடம்பேசும்பான்மையன் 
    பொடிகொள்மேனியன்பூம்புகலியுள் 
    அடிகளையடைந்தன்புசெய்யுமே.        4

    கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன், 
    படி கொள் பாரிடம் பேசும் பான்மையன், 
    பொடி கொள் மேனியன், பூம் புகலியுள் 
    அடிகளை அடைந்து அன்பு செய்யுமே!

    kaTi koL kUviLam mattam vaittavan, 
    paTi koL pAriTam pEcum pAnmaiyan, 
    poTi koL mEniyan, pUm pukaliyuL 
    aTikaLai aTaintu anpu ceyyumE!

பொருள்:     எம்பெருமான், சிறப்புமிக்க வில்வ இலை, ஊமத்தமலர் இவற்றைத் தன் தலையில் 
கொண்டவன். அன்பு கொண்ட அடியவர்களிடம் பேசும் தன்மையன். திருநீற்றை மேனியில் பூசியவன். 
பூம்புகலியுள் கோயில் கொண்டவன். அடியவர்களே! அவன்மீது அன்பு கொண்டு அவனது 
திருவடிகளை வணங்குவீர்களாக. 

குறிப்புரை:     கடி- மணம். கூவிளம் - வில்வம், மத்தம் - ஊமத்தம் பூ. படி - உருவம் (நாற்றம் உடைமை ஆகிய) 
பண்புமாம். பாரிடம்- பூமி. படிகொள் பாரிடம் - பெரிய உருவங்கொண்ட பூதகணங்கள் என்பதும் பொருந்தும். 
பொடி - திருநீற்றுப் பொடி. அன்பு - பக்தி. 

    All of you should know that our Lord Civan manifests Himself in Poompukali. He has adorned 
His head with fragrant Indian Bael leaves and Datura flowers. He has smeared His body with white 
ashes. He is approachable to His bhutas as well as to His disciples, who are attached to Him, 
and He would talk to them. Therefore, you devotees all over this universe! go to the admirable 
holy city of Pukali and show your deep devotion to Him.

1735.     பாதத்தாரொலிபல்சிலம்பினன் 
    ஓதத்தார்விடமுண்டவன்படைப் 
    பூதத்தான்புகலிந்நகர்தொழ 
    ஏதத்தார்க்கிடமில்லையென்பரே.        5

    பாதத்து ஆர் ஒலி பல்சிலம்பினன், 
    ஓதத்து ஆர் விடம் உண்டவன், படைப் 
    பூதத்தான், புகலி(ந்) நகர் தொழ 
    ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே.

    pAtattu Ar oli palcilampinan, 
    Otattu Ar viTam uNTavan, paTaip 
    pUtattAn, pukali(n)nakar toza, 
    EtattArkku iTam illai enparE.

பொருள்:     எம்பெருமான், தன் திருவடிகளில் சிலம்புகளைப் பொருத்தமுற அணிந்தவன். 
பாற்கடலில் தோன்றிய விடத்தினை அருந்தி அருளியவன். பூத கணங்களைப் படையாகக் கொண்டவன். 
புகலியூரில் பொருந்தி இருப்பவன். அவனை அன்போடு தொழுவார்க்கு துன்பமே இல்லை.

குறிப்புரை:   பாதத்து- திருவடிகளில்.  ஆர்- பொருந்திய, ஒலி- ஒலிக்கின்ற.  ஓதத்து- பாற்கடலில். 
படைப்பூதத்தான் - பூதப்படை உடையவன். ஏதத்தார்க்கு- துன்பத்திற்கு. ஏதம்-துன்பம், இங்கு ஆர் 
விகுதி இழிவு பற்றியது. பசியார் என்பது போன்றதொரு வழக்கு.

    People of this universe may realise for their good that our Lord Civan manifests
Himself in this holy city of Pukali. He wears suitable anklets on His legs. He drank the
poison, which came out of the ocean of milk. He owns big army of bhutas, dwarfish goblins 
to obey and carry out His orders. Those who go to this holy city of Thirup-pukali, reach His 
temple and pray to Him with sincere devotion will find that there is no room in their lives 
for sins and the resulting afflictions.  

1736.     மறையினானொலிமல்குவீணையன் 
    நிறையினார்நிமிர்புன்சடையனெம் 
    பொறையினானுறையும்புகலியை 
    நிறையினாற்றொழநேசமாகுமே.        6

    மறையினான் ஒலி மல்கு வீணையன், 
    நிறையின் ஆர் நிமிர் புன்சடையன், எம் 
    பொறையினான், உறையும் புகலியை 
    நிறையினால் - தொழ, நேசம் ஆகுமே.

    maRaiyinAn oli malku vINaiyan, 
    niRaiyin Ar nimirpun caTaiyan, em
    poRaiyinAn, uRaiyum pukaliyai 
    niRaiyinAl-toza, nEcam AkumE.

பொருள்:     ஈசன், நான்மறைகளை அருளியவன்! இனிய ஒலி எழும் வீணையைத் தடவிப் பாடுபவன். 
நிமிர்ந்த சடையினைக் கொண்டவன்! எம் பூஜைக்கு என்றும் உரியவன்.  திருப்புகலியூரில் கோயில் 
கொண்டவன்! சிவனையன்றி வேறு ஒருவரையும் வழிபாட்டிற்குக் கொள்ளாத அன்பினால் மனநிறைவுடன் 
தொழும் அடியவர்களுக்கு நேசன் ஆவான்.

குறிப்புரை:     மறையினான்  - வேதகர்த்தா. வீணையன்- மிக நல்ல வீணை தடவி. நிறை-நிறைவு ,
பொறை-பொறுமை. எட்டுப் பூக்களுள் ஒன்று. ஞானபூஜைக்குரியது. நிறை - சிவனையன்றி வேறு 
ஒன்றும் வழிபாட்டிற்குக் குறிக்கோளாகக் கொள்ளாத கற்பு. நேசம் - அன்பு. 

    People of this world may listen. Our Lord Civan, manifested in this holy city of 
Thirup-pukali,is the embodiment of the Vedas. He plays on the Indian lute which gives out 
melodious music; He has adorned His red matted hair by keeping it firm and straight. 
He considers our patience as the flower we offer to Him at His holy feet. If  you hold 
in your mind Civan as the only object of your deep devotion He will become your ardent lover.

1737.     கரவிடைமனத்தாரைக்காண்கிலான் 
    இரவிடைப்பலிகொள்ளுமெம்மிறை 
    பொருவிடையுயர்த்தான்புகலியைப் 
    பரவிடப்பயில்பாவம்பாறுமே.        7

    கரவுஇடை மனத்தாரைக் காண்கிலான் 
    இரவுஇடைப் பலி கொள்ளும் எம் இறை, 
    பொரு விடை உயர்த்தான், புகலியைப் 
    பரவிட, பயில் பாவம் பாறுமே.

    karavu iTai manattAraik kANkilAn,
    iravu iTaip pali koLLum em iRai, 
    poru viTai uyarttAn, pukaliyaip 
    paraviTa, payil pAvam pARumE.

பொருள்:     சிவபெருமான், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை விரும்பான். 
அன்புடையவர்களை நாடிச் சென்று இரவிலும் பலி தேர்வான். இடப வாகனத்தில் அமர்ந்திருப்பான். 
திருப்புகலியிலும் கோயில் கொண்டு உள்ளான். அவனைப் புகழ்ந்து போற்றிட நம் பாவங்கள் நீங்கும்.

குறிப்புரை:     கரவு - வஞ்சகம். பொருவிடை - இடபக்கொடி உயர்த்தவன் - எடுத்துப் பிடித்தவன். 
பரவிட- வாழ்த்த. பாறும் - அழியும்.

    People of this world should know that our Supreme Lord Civan is manifested in the 
temple at Thirup-pukali. He does not care to look at those false devotees, who are fraudulent 
and hypocritic. He goes out at night for begging alms from his devotees. He is our Supreme God.
His flag contains the figure of a bull beautifully inscribed. Come to Pukali to pray our Lord 
in the temple praise His virtues and worship Him, your tormenting sins will disappear.

1738.     அருப்பினார்முலைமங்கைபங்கினன் 
    விருப்பினானரக்கன்னுரஞ்செகும்
    பொருப்பினான்பொழிலார்புகலியூர்
    இருப்பினானடியேத்திவாழ்த்துமே.        8

    அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன், 
    விருப்பினான் அரக்கன்(ன்) உரம் செகும் 
    பொருப்பினான்,பொழில் ஆர் புகலிஊர் 
    இருப்பினான், அடி ஏத்தி வாழ்த்துமே!

    aruppin Ar mulai magkai pagkinan, 
    viruppinAn arakkan(n) uram cekum 
    poruppinAn, pozil Ar pukali Ur 
    iruppinAn, aTi Etti vAzttumE!

பொருள்:     அன்புடைய உமையவளைத் தன் இடபாகத்தில் கொண்டவனே எம்பெருமான்.
மலையை எடுத்த அரக்கன் இராவணனின் செருக்கை அடக்கியவன் எம்பெருமான். சோலைகள் 
நிறைந்த புகலியூரில் கோயில் கொண்டவன் சிவபெருமான். அவனது திருவடிகளை வணங்கிப் 
போற்றுவோமாக!

குறிப்புரை:     அருப்பு - அரும்பு. ஆர் - ஒத்த. விருப்பினான்- பக்தன். உரம்-வலிமை.செகும்- அழிக்கும். 
பொருப்பு - மலை.  இருப்பு - வாசம். விருப்பு, பொருப்பு இருப்பு மூன்றும் இன்சாரியையும் ஆன் விகுதியும் 
பெற்றுப் பெயரடியாகப்  பிறந்த பெயராயின. விருப்பும் இருப்பும் தொழிற்பெயர். 

    People of this world, may make a vow to come to Pukali, where our Lord Civan is manifested. 
He forms a corporate body with His consort Umaa on the left side of His body and is called 
Arthanaareeswarar. Her breast is attractive resembling the lotus bud. Raavanan was a deeply devoted 
servitor of our Lord Civan, yet he developed haughtiness in his mind and indulged in misdeeds. 
Therefore our Lord Civan manifested in the Himalayas, reduced his misused strength. Our Lord 
manifests Himself also in Pukali, a sacred place surrounded by gardens. Ye people! come and
bow at His feet.

1739.     மாலுநான்முகன்றானும்வார்கழற் 
    சீலமும்முடிதேட நீண்டெரி 
    போலுமேனியன்பூம்புகலியுள் 
    பாலதாடியபண்பனல்லனே.        9

    மாலும், நான்முகன்தானும், வார் கழல் 
    சீலமும் முடி தேட,நீண்டு எரி 
    போலும் மேனியன் - பூம் புகலியுள் 
    பால்அதுஆடிய பண்பன் - அல்லனே?

    mAlum, nAnmukantAnum, vAr kazal 
    cIlamum muTi tETa, nINTu eri 
    pOlum mEniyan--pUm pukaliyuL 
    pAl atu ATiya paNpan--allanE?

பொருள்:     திருமாலும் நான்முகனும் அறியாமையால் செருக்குடன் அடிமுடி தேடிய பொழுது 
நீண்ட நெருப்பாய்த் தோன்றி அருளியவன் சிவபெருமான். நெருப்பு போன்ற சிவந்த மேனியன் 
சிவபெருமான். திருப்புகலியூரில் பொருந்தியவன் சிவபெருமான். பால் அபிடேகத்தை விரும்பி 
ஏற்கும் புண்ணியன் (பண்பு நிறைந்தவனே)சிவபெருமான். அவனைப் போற்றி வணங்குவோமாக.

குறிப்புரை:     கழல்சீலம்- திருவடிப்பான்மை. சீலமோ உலகம் போலத் தெரிப்பரிது (சித்தியார் 50). முடியும்
என்று உம்மைக் கூட்டிக் கொள்க. எரிபோலும் மேனியன் -தீ வண்ணன். பாலது ஆடிய- பாலால் அபிடேகம் 
செய்யப் பெற்ற. நல்லன்-சிவன்.  அல்லனே என வினாவாக் கொள்ளலும் அமையும். புகலி  உட்பாலது 
ஆடிய என்பதற்குத் திருப்புகலியின் உட்பக்கத்திலுள்ள திருக்கோயிலில் திருக்கூத்தியற்றிய எனலுமாம்.

    Thirumaal and the four faced Brahma left their place and went out to reach and 
worship our Lord's sacred head and holy feet. They tried their best for years and failed 
in their attempts. At that time our Lord Civan rose as an infinite column of big fire 
and stood before these two. They were bewildered. He feels happy to reside in the fascinating 
town of Pukali and to have a sacred bath with milk and other related materials. Come and 
bow at His feet. He will do all good to you.

1740.     நின்றுதுய்ப்பவர்நீசர்தேரர்சொல் 
    ஒன்றதாகவையாவுணர்வினுள் 
    நின்றவன்நிகழும்புகலியைச் 
    சென்றுகைதொழச்செல்வமாகுமே.        10

    நின்று துய்ப்பவர், நீசர் தேரர், சொல் 
    ஒன்றுஅதுஆக வையா உணர்வினுள் 
    நின்றவன் நிகழும் புகலியைச் 
    சென்று கைதொழ, செல்வம் ஆகுமே.

    ninRu tuyppavar, nIcar tErar, col 
    onRu atu Aka vaiyA uNarvinuL 
    ninRavan nikazum pukaliyaic 
    cenRu kaitoza, celvam AkumE.

பொருள்:      சமணர்களும், சாக்கியர்களும் தவறான நெறியில் நின்று சிவனைப் பழித்துக் 
கொண்டிருப்பர். அவர்களது சொற்கள் தவறானவை. அதனைச் சிவனடியார்கள் ஏற்க மாட்டார்கள். 
அடியவர்கள் தம் உணர்வினுள் பொருந்தி நிற்கும் பூம்புகலியூர் உறையும் சிவனையே ஏத்தி 
வழிபடுவார்கள். அதுவே நற்செல்வமாம் என்க. 

குறிப்புரை:     துய்ப்பவர்- உண்பவர். நின்றுண்போர் எனப்பிற இடங்களில் வருதலும் காண்க .
(பதிகம் 38.95). நின்றுண் சமணர் இருந்துண் தேரர் (பதிகம் 71). ஒன்று -ஒருபொருள். வையா - வைத்து 
மதிக்காத. செல்வம் - இம்மை, மறுமை. வீட்டுக்குரிய செல்வங்கள். 

    The people of this world may come to Pukali. This city is the abode of our 
Lord Civan. The Jains eat food they beg from others. The Buddhists also behave like the Jains.
These two races could not comprehend our Lord Civan. Their false statements will not be 
listened to by our devotees and they do not care about these two races. They who pray only 
at the holy feet of our Lord Civan who resides at Thirup-pukali will get all real wealth 
for the present life and for future life in heaven.

1741.    புல்லமேறிதன்பூம்புகலியை 
    நல்லஞானசம்பந்தன்நாவினாற் 
    சொல்லும்மாலையீரைந்தும்வல்லவர்க் 
    கில்லையாம்வினையிருநிலத்துளே.        11

    புல்லம்ஏறிதன் பூம் புகலியை, 
    நல்ல ஞானசம்பந்தன் நாவினால் 
    சொல்லும் மாலை ஈர்ஐந்தும் வல்லவர்க்கு 
    இல்லைஆம் வினை, இரு நிலத்துளே.

    pullam ERitan pUm pukaliyai, 
    nalla njAnacampantan nAvinAl 
    collum mAlai Ir aintum vallavarkku, 
    illai Am vinai, iru nilattuLE.

பொருள்:     சிவபெருமான் இடப வாகனத்தில் ஏறியிருந்து அருள்புரிபவன் ஆவான். பூம்புகலித் தலத்துள் 
கோயில் கொண்டுள்ள அச்சிவனைப் புகழ்ந்து ஞான சம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்கள் பாடி அருளியுள்ளார். 
அதனை ஓத வல்லவர்க்கு வினைகள் இல்லையாம் என்க.

குறிப்புரை:     புல்லம்- எருது. புல்வாய் போன்றதொரு காரணப் பெயர். ஏறி- ஏறுகின்றவன். இகர 
விகுதியுடைய பெயர்ச்சொல் மாலை ஈர் ஐந்து - இப்பத்துப் பாக்களாலாகிய மாலையை. 
இருநிலம்- மாநிலம், பெரும்பூமி.

    Our Lord Civan rides on His bull to go round the cosmos. He is manifested in this graceful, 
ideal city of Thirup-pukali. Our holy saint Thiru-gnana-Sambandar, blessed by our Lord Civan sang 
on the Lord who is manifested in Pukali, these ten garlands of Tamil verses with his divine tongue. 
Those who are capable of reciting these ten verses properly will have no evil effects of karma 
during their lifetime on this great earth.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            25ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 25th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 162                    பதிக எண்: 26.

26. திருநெல்வாயில்                    26. THIRU-NEL-VAAYIL
பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam-Vinaa Urai


திருத்தல வரலாறு

    திருநெல்வாயில் என்னும் இத்திருத்தலமானது தென் ஆற்காடு மாவட்டம் சிதம்பரம்
வட்டத்தில் சிதம்பரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து தென்கிழக்கே 13.5 கி.மீ. தூரத்தில் 
அண்ணாமலை நகருக்குத் தெற்கே 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது. தற்போது சிவபுரி என்று வழங்கப்பெறுகிறது.
 புதுப்பிக்கப்பெற்ற தலமாகும். சிவபுரி மான்மியம் என்ற தலவரலாறும் இதற்கு உண்டு. சுவாமியின் பெயர் 
உச்சிநாதேசுவரர். தேவியின் பெயர் கனகாம்பிகை. உச்சியார் என்பது தேவாரப் பெயர்.

பதிக வரலாறு

    ஞானப்பாலுண்ட பெருமான் மன்றாடும் ஐயன் திருக்கூத்துக் கும்பிட்டு, திருக்கழிப்பாலையைப் 
பணிந்து பாடி, கொன்றைச் செம்மாலைவேணித் திருவுச்சி மேவியுறை அம்மானைப் பாடிய 
அருந்தமிழ்ப் பதிகம் இது.

                திருச்சிற்றம்பலம்

1742.     புடையினாற்புள்ளிகால்பொருந்திய 
    மடையினார்மணிநீர் நெல்வாயிலார் 
    நடையினால்விரற்கோவணந்நயந் 
    துடையினாரெமதுச்சியாரே.        1

    புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய 
    மடையின் ஆர் மணிநீர் நெல்வாயிலார், 
    நடையின் நால்விரல்கோவணம் நயந்த 
    உடையினார், எமது உச்சியாரே.

    puTaiyin Ar puLLi kAl poruntiya 
    maTaiyin Ar maNi nIr nelvAyilAr, 
    naTaiyin nAlviral kOvaNam nayanta 
    uTaiyinAr, ematu ucciyArE.

பொருள்:     நெல்லி மரங்களுக்கு மத்தியில் கோவில் கொண்டவர் ஈசன். அவர் சிறு பறவைகள் 
பொருந்தி வாழும் மடைகள் சூழ்ந்த நெல்வாயில் என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். 
உயர் பண்புகள் அனைத்தும் நிறைந்த அவர், மறைநான்கையும் நால்விரற்  கோவண ஆடையாகக் 
கொண்டுள்ளார். உச்சியார் என்னும் திருப்பெயர் கொண்ட அவரே எனது தலைஉச்சியிலும்         
பொருந்திய மாண்பினர்.

குறிப்புரை:     புடையின்-வயற்பக்கத்தில். ஆர்-   பொருந்திய ,புள்ளி-நண்டு கால் - வாய்க்கால்,
மடையின்- நீர் மடையில். ஊர்ப்பெயர்க்கேற்ப  வளம் கூறப்பட்டிருக்கின்றது. நடை- ஒழுக்கம். 
நால்விரற்கோவணம் ஐவிரற்கோவணம் உடைதனில் நால்விரற்கோவண வாடை (தி. 1. ப 39, பா2 )
 ஐவிரற் கோவணவாடை பாறருமேனியர் (தி.1 ப.44 பா.6) இரண்டும் இவர் திருமுறையுட் கூறப்பட்டன. 
நயந்து -விரும்பி. உடையினார் - உடை உடுத்தவர். உச்சியார் என்பது இத்தலத்து இறைவர் திருப்பெயர். 
நெல் வாயிலார், உடையினார் என்பன இறைவரைக் குறிப்பன.

    Behold! It is Civan the Lord of Thiru-nel-vaayil carrying the name as Uch-chi-yaar.
In this City, a number of birds  move about along the sides of paddy fields. On one side of 
the canal the sluices carry water to the fields, which is very crystal clear like 
the blue coloured gem. In such a fertile lush city our Lord manifests Himself as the 
supreme disciplinarian of self-control.He wears His loin cloth of four fingers width only. 
He is an epitome of virtue. I think of Him and He is my inner being, as well as 
the crown of my head.

1743.    வாங்கினார் மதில்மேற்கணைவெள்ளந் 
    தாங்கினார்தலையாயதன்மையர் 
    நீங்குநீரநெல்வாயிலார்தொழ 
    ஓங்கினாரெமதுச்சியாரே.        2

    வாங்கினார் மதில்மேல் கணை, வெள்ளம் 
    தாங்கினார், தலைஆய தன்மையர் 
    நீங்கு நீர நெல்வாயிலார்; தொழ 
    ஓங்கினார், எமது உச்சியாரே.

    vAgkinAr matilmEl kaNai, veLLam 
    tAgkinAr, talai Aya tanmaiyar- 
    nIgku nIra nelvAyilAr; toza 
    OgkinAr, ematu ucciyArE.

பொருள்:     முப்புரங்களையும் அழித்தவர் எம்பெருமான். பெருகி வந்த கங்கையினைத் 
தலையில் தாங்கியவர் அவரே. அடியவர்கள் தொழ நீர்வயல்கள் நிறைந்த நெல்வாயிலில்
கோயில் கொண்டுள்ளார். எனது தலை உச்சியிலும் பொருந்தியுள்ளார்.

குறிப்புரை:     மதில்மேல் - திரிபுரத்து மதிலின்மீது. கணை - பாணம். வாங்கினார் – (வில்லை) 
வளைத் (துஎய்) தார். வெள்ளம்- கங்கைப் பெருக்கு. தலையாயதன்மையர்- முன்னைப் பழம்பொருட்கும்
முன்னைப் பழம் பொருளாந்  தன்மை முதலிய ஆறும் உடையவர். ஷாட்குண்யர், எண்குணமுமாம். 
நீங்கும்  நீர - ஓடும் நீர்ப் பெருக்காகிய வளமுடைய நீள்கு என்பதன் மரூஉவே நீங்கு என்பது. நீங்கிற்றெறூஉம்
குறுகுங்கால் தண் என்னுந் தீ (குறள் 1104) என்னுங்  குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையை 
நுணுகி நோக்கின் இது விளங்கும். 

    Behold! It is Civan our Lord of Thiru-nel-vaayil. He bent the bow and shot the arrow at 
the flying three forts and destroyed them. He gives protection to the Ganges river on His head 
around the matted hair. He is the embodiment of all that is the best. He manifests Himself in 
Thiru-nel-vaayil where the water flows in the canals and brooks perennially. He manifests 
Himself with all fame in the Arath-thurai temple to enable the devotees to come and worship 
Him there. I think of Him always and therefore He is the crown of my head and thoughts. 

1744.     நிச்சலேத்துநெல்வாயிலார்தொழ 
    இச்சையாலுறைவாரெம்மீசனார் 
    கச்சையாவதோர்பாம்பினார்கவின் 
    இச்சையாரெமதுச்சியாரே.        3

    நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார், தொழ 
    இச்சையால் உறைவார்; எம் ஈசனார்; 
    கச்சை ஆவது ஓர் பாம்பினார்; கவின் 
    இச்சையார்; எமது உச்சியாரே.

    niccal Ettum nelvAyilAr, toza 
    iccaiyAl uRaivAr; em IcanAr; 
    kaccai Avatu Or pAmpinAr; kavin 
    iccaiyAr; ematu ucciyArE.

பொருள்:     தினமும் அடியவர்கள் அன்புடன் தொழுது வணங்கிட அருள்புரியும் இச்சையுடன் 
உறைவார் எம்பெருமான். அவர் பாம்பினைத் தனது அரைக்கச்சையாக அணிந்து காட்சி தருவார். 
திருநெல்வாயிலில் கோயில் கொண்டுள்ள அவரே எமது தலைமேலும் பொருந்தி உள்ளார்.

குறிப்புரை:     நிச்சல்- நித்தல். நாடோறும். கச்சை- அரையிற் கட்டும் கயிறு. வடம். அரவக்கச்சு. 
கவின்- அழகு. இச்சையார் - உயிரின் இச்சைக்குக் காரணமான இச்சா சக்தியை உடையவர். 
இச்சை உயிர்க்கு அருள்நேசம் ஆகும் (சிவஞானசித்தியார் 83).

    Behold! It is Civan our Lord of Thiru-nel-vaayil called Uch-chi-yaar. 
He is our Supreme God. He wears the dreadful snake as belt around His waist. 
The devotees every day worship Him with affection. He is the embodiment of all 
desires. Therefore He fulfils His devotees' desires along with His goddess. 
I think of Him and He is always on the crown of my head.

1745.     மறையினார்மழுவாளினார்மல்கு 
    பிறையினார்பிறையோடிலங்கிய 
    நிறையினாரநெல்வாயிலார்தொழும் 
    இறைவனாரெமதுச்சியாரே.        4

    மறையினார், மழுவாளினார், மல்கு 
    பிறையினார் பிறையோடு இலங்கிய 
    நிறையினார் அ(ம்) நெல்வாயிலார்; தொழும் 
    இறைவனார், எமது உச்சியாரே.

    maRaiyinAr, mazuvALinAr, malku 
    piRaiyinAr, piRaiyOTu ilagkiya 
    niRaiyinAr--a(m) nelvAyilAr; tozum 
    iRaivanAr, ematu ucciyArE.

பொருள்:     நான்கு வேதங்களாக விளங்குபவர் எம்பெருமான். மழுப்படையை உடையவர் 
எம்பெருமான். பிறைச்சந்திரனைத் தலையில் தாங்கியவர் எம்பெருமான். அவர் நெஞ்ச நிறைவுடன்
வழிபடும் அடியவர்களுக்கு அருள நெல்வாயிலில் கோயில் கொண்டுள்ளார். அவரே எமது தலைமேலும்
பொருந்தியுள்ளார்.

குறிப்புரை:     மறையினார் -வேதகர்த்தா, மழுவாளினார் - மழுப்படையுடையவர். பிறையோடு 
இலங்கிய நிறையின் ஆர் அம் நெல் என்பது வானளாவ வளர்ந்து நிறைய விளங்கிய அழகிய நெற்பயிர் 
என்று குறித்தது. விண்தயங்கு நெல் என (பா. 10) வருதல் காண்க. நிறையினார் - கற்புடைய கங்காதேவியை 
உடையவர் எனலுமாம்.

    Behold! It is Civan, the Lord of Thiru-nel-vaayil. He is the Vedas themselves. He 
grasps the battle axe in one of His hands. He adorns His head with the attractive baby moon.
He is complete perfection. In the paddy fields plenty of rich plants grow closely and tall 
enough to reach the sky and they are rich and dense at the entrance of the city. Therefore, 
the city is called Nel-vaayil. In such a fertile and rich place our Lord Uch- chi-yaar 
manifests Himself. We worship Him as our God. I think of Him and He is always on the 
crown of my head.

1746.    விருத்தனாகிவெண்ணீறுபூசிய
    கருத்தனார்கனலாட்டுகந்தவர் 
    நிருத்தனாரநெல்வாயில்மேவிய 
    ஒருத்தனாரெமதுச்சியாரே.        5

    விருத்தன் ஆகி வெண்நீறு பூசிய 
    கருத்தனார், கனல்ஆட்டு உகந்தவர், 
    நிருத்தனார் - அ(ம்) நெல்வாயில் மேவிய 
    ஒருத்தனார், எமது உச்சியாரே.

    viruttan Aki veN nIRu pUciya 
    karuttanAr, kanal ATTu ukantavar, 
    niruttanAr--a(m) nelvAyil mEviya 
    oruttanAr, ematu ucciyArE.

பொருள்:     வயது முதிர்ந்தவர் போலத் தோற்றத்துடன் திருவெண்ணீறு பூசிக் கொண்டு 
காட்சி கொடுப்பவர் எம்பெருமான். நெருப்பைக் கையில் ஏந்தி விளங்குபவர் எம்பெருமான். எப்பொழுதும் 
திருநடனம் புரிதலை விரும்பியவர் எம்பெருமான். அன்பர்களுக்காகத் திருநெல்வாயில் தலத்துள் 
பொருந்திய அவரே எனது உச்சிமேலும் பொருந்தியுள்ளார்.

குறிப்புரை:     விருத்தன் - முதியவன். கருத்தன் - தலைவன். கனலாட்டு - தீயில் ஆடல். உகந்தவர்-
விரும்பியவர். நிருத்தனார் -கூத்தர். ஒருத்தனார் - தனிமுதல்வர்.

    Behold! It is Civan our Lord of Thiru-nel-vaayil. He changes His appearance into an 
old man's. He smears His body with white ashes. He is our Supreme Head. He is pleased to do 
cosmic dance, holding smouldering fire in His hand. He is the Master of all and 
everything. He is the only God who manifests Himself in Thiru-nel-vaayil. I think of Him 
and He is always on top of my head.

1747.     காரினார்கொன்றைக்கண்ணியார்மல்கு 
    பேரினார்பிறையோடிலங்கிய 
    நீரினாரநெல்வாயிலார்தொழும்                 
    ஏரினாரெமதுச்சியாரே.        6

    காரின் ஆர் கொன்றைக்கண்ணியார், மல்கு 
    பேரினார் பிறையோடு இலங்கிய 
    நீரினார் - அ(ம்) நெல்வாயிலார் தொழும் 
    ஏரினார், எமது உச்சியாரே.

    kArin Ar konRaikkaNNiyAr, malku 
    pErinAr, piRaiyOTu ilagkiya 
    nIrinAr--a(m) nelvAyilAr; tozum 
    ErinAr, ematu ucciyArE.

பொருள்:     கார்காலத்தில் மலரும் கொன்றை மலர்களைத் தலையில் சூடுபவர் எம்பெருமான். 
பல (நாமங்களை) திருப்பெயர்களைக் கொண்டவர் எம்பெருமான். பிறைநிலவையும் கங்கை நதியையும் 
தலையில் அணிந்தவர் எம்பெருமான். அடியார்கள் வழிபாடு செய்ய திருநெல்வாயில் தலத்துள் பொருந்தி 
இருப்பவர் எம்பெருமான். அவரே எமது உச்சித் தலையிலும் பொருந்தியுள்ளார்.

குறிப்புரை:     காரின் ஆர் கொன்றை - கார்காலத்தில் மலரும் கொன்றை மலர். கார்நறுங் கொன்றை 
(புறம் - கடவுள் வாழ்த்து) மல்குபேசினார் – நிறைந்த பெயர் (புகழ்) உடையார். நீரினார் - கங்கை (சடை)யர். 
இலங்கிய - விளங்கிய. பிறைக்கும், நீர்க்கும் பொது அடைமொழியாகக் கொள்ளலும் ஆம், ஏரினார் - அழகர்.

    Behold! It is Civan who is our Lord in Thiru-nel-vaayil called Uch-chi-yaar. He is 
very happy with the adornment of His head with garlands of cassia flowers blooming in spring 
season. He is all attributes of praise and fame. He has beautified His head with the crescent 
moon and the Ganges. He is beauty Himself in Thiru-nel-vaayil. He is great for our worship. 
I think of Him and He is always the Lord on my head.

1748.     ஆதியாரந்தமாயினார்வினை 
    கோதியார்மதில்கூட்டழித்தவர் 
    நீதியாரநெல்வாயிலார்மறை 
    ஓதியாரெமதுச்சியாரே.            7

    ஆதியார், அந்தம் ஆயினார், வினை 
    கோதியார், மதில் கூட்டு அழித்தவர், 
    நீதியார் - அ(ம்) நெல்வாயிலார்; மறை 
    ஓதியார் - எமது உச்சியாரே.

    AtiyAr, antam AyinAr, vinai 
    kOtiyAr, matil kUTTu azittavar, 
    nItiyAr--a(m) nelvAyilAr; maRai 
    OtiyAr, ematu ucciyArE.

பொருள்:     முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் எம்பெருமான்.
 பின்னைப் புதுமைக்கும் புதுமை எம்பெருமான். தீவினை மிக்க அசுரர்களின் முப்புரங்களை 
அழித்தவர் எம்பெருமான். ஆசார ஒழுக்கம் நிறைந்த அடியவர்கள் வாழும் நெல்வாயில் உறைபவர் 
எம்பெருமான். அவரே எமது தலைமேலும் உறைகின்றார்.

குறிப்புரை:     ஆதியார் - முதல்வர், அந்தமாயினார் - (சங்கார காரணர்) முடிவுமானார், 
வினை கோதியார்- குரோத வினையுடையார். திரிபுரத்தசுரர். குரோதி என்பதன் திரிபு கோதி என்பது. 
கோதித்த நெஞ்சன் (பாரதம்) மறையோதியார் - வேதங்களை ஓதி அருளியவர்.

    Behold! It is Civan our Lord of Thiru-nel-vaayil. He explicits all Vedas. 
He is the beginning and end of everything. He destroyed all the three flying fortresses of the 
wicked minded asuraas. He is embodiment of justice. He is manifest in Thiru-nel-vaayil. 
I think of Him as though He is always on my head.

1749.     பற்றினானரக்கன்கயிலையை 
    ஒற்றினாரொருகால்விரலுற 
    நெற்றியாரநெல்வாயிலார்தொழும் 
    பெற்றியாரெமதுச்சியாரே.        8

    பற்றினான் அரக்கன் கயிலையை
    ஒற்றினார், ஒரு கால்விரல் உற, 
    நெற்றி ஆர-நெல்வாயிலார்; தொழும் 
    பெற்றியார், எமது உச்சியாரே.

    paRRinAn arakkan kayilaiyai 
    oRRinAr, orukAl viral uRa, 
    neRRi Ara--nelvAyilAr; tozum 
    peRRiyAr, ematu ucciyArE.

பொருள்:     அரக்கனாகிய இராவணன் கயிலாய மலையினைப் பெயர்த்து எடுக்க முயன்றபோது,
 தன்கால் விரலினை ஊன்றி அவனது செருக்கை அடக்கியவர் சிவபெருமான். அவரே அடியவர்கள்
 அடி பணிந்து வணங்கும் வகையில் திருநெல்வாயிலில் குடிகொண்டுள்ளார். அவரே எமது தலைமேலும் 
பொருந்தி உள்ளார். 

குறிப்புரை:     நெற்றி - இராவணனது உச்சி. ஆர் - பொருந்த. பெற்றியார் - தன்மையை உடையவர். 
ஒரு கால் விரல் உறநெற்றி ஆர ஒற்றினார் என்று இயைக்க. திருவொற்றாடை.

    Behold! It is Civan who is our Lord of Thiru-nel-vaayil. The king of Sri Lanka, 
Raavanan once, with extreme egoism tried his best to lift mount Kailash, the abode of our 
Supreme Lord from its original place. Then our Lord Uch-chi-yaar slightly pressed the top 
of the mountain with His toe. Instantly Raavanan's head and shoulders got crushed beneath
the mountain. Our Lord is manifested in Thiru-nel-vaayil. We worship Him as our Supreme.
I think of Him the Lord on my head.

1750.     நாடினார்மணிவண்ணன்நான்முகன் 
    கூடினார்குறுகாதகொள்கையர் 
    நீடினாரநெல்வாயிலார்தலை 
    ஓடினாரெமதுச்சியாரே.        9

    நாடினார் மணிவண்ணன், நான்முகன், 
    கூடினார் குறுகாத கொள்கையர் 
    நீடினார் - அ(ம்) நெல்வாயிலார்; தலை 
    ஓடினார்,எமது உச்சியாரே.

    nATinAr maNivaNNan, nAnmukan, 
    kUTinAr kuRukAta koLkaiyar 
    nITinAr--a(m) nelvAyilAr; talai 
    OTinAr, ematu ucciyArE.

பொருள்:     கருநிறமுடைய திருமாலும் பிரமனும் கூடி எம்பெருமானின் அடிமுடி தேட முயன்றனர்.
 அவர்கள் கண்டு கொள்ள முடியாத நிலையில் விளங்கியவரே எம்பெருமான்.நெல்வாயில் தலத்தில் 
கோயில் கொண்டுள்ளவரும் அவரே. பிரமகபாலத்தை ஏந்தி பலிதேர்ந்து வருபவரும் அவரே. 
அவரே எமது தலைமேலும் பொருந்தியுள்ளார் என்க .

குறிப்புரை:     நாடினார்- விரும்பினவர், தேடினவர். மணிவண்ணன்- திருமால். கூடினார்-கூடி 
முற்றெச்சம், குறுகாத - (கண்டு) நெருங்காத. நீடினார் - சோதிப்பிழம்பாக நீண்டார். தலை ஓடினார்-  
பிரமகபாலத்தை உடையவர்.

    Behold! It is Civan, the Lord of Thiru-nel-vaayil. He carries in His hand the human 
skull and goes out to beg alms. Thirumall is very colourful like blue gem. He and his colleague,
the four headed Brahma left their place and roamed all over the cosmos, above in the sky and 
below the earth - all in vain. At that time our Lord of  Thiru-nel-vaayil, Uch-chiyaar stood 
as an immeasurable column of tall fire with no beginning or end. The two junior gods were 
bewildered. This Lord Civan manifests  Himself in Thiru-nel-vaayil. I think of Him as the Lord 
on my head.

1751.     குண்டமண்துவர்க்கூறைமூடர்சொல் 
    பண்டமாகவையாதபண்பினர் 
    விண்டயங்குநெல்வாயிலார்நஞ்சை 
    உண்டகண்டரெம்முச்சியாரே.        10

    குண்டுஅமண், துவர்க்கூறை மூடர், சொல் 
    பண்டம் ஆக வையாத பண்பினர் 
    விண் தயங்கு நெல்வாயிலார்; நஞ்சை 
    உண்ட கண்டர் எம் உச்சியாரே.

    kuNTu amaN, tuvarkkURai mUTar, col 
    paNTam Aka vaiyAta paNpinar- 
    viN tayagku nelvAyilAr; nanjcai 
    uNTa kaNTar, em ucciyArE.

பொருள்:     குண்டர்களாகிய சமணர்களும் துவராடை அணிந்த மூடர்களாகிய புத்தர்களும்
அறியாமை உடையவர்கள். நற்சொற்களைப் பேசாதவர்கள். அவர்களது பண்பற்ற சொற்களை 
ஏற்க வேண்டாம். நீடு உயர்ந்த நெல்வயல்கள் நிறைந்த திருநெல்வாயில்  தலத்தில் கோயில் 
கொண்டுள்ள நீலகண்டரின் திருவடிகளையே தலைமேல் கொண்டு போற்றி வாழுங்கள்.

குறிப்புரை:     குண்டு அமண் - குண்டராகிய அமணர். துவர்க்கூறை - துவர்ப்பேறிய ஆடை.
 பண்டம் - பொருள். விண் தயங்கு - வான் (அளாவி) விளங்கிய. நஞ்சு -விடம்.

    Behold! It is Civan our Lord of Thiru-nel-vaayil. He drank the poison out of 
the ocean of milk and saved humanity; His neck became dark blue because of the poison. 
He is therefore called Neelakandar. The big bellied Jains and the ochre robed Buddhists 
vocalized the base principles of their religion. Our Supreme Lord is too above these 
religionists' words. He manifests Himself in Thiru-nel-vaayil where the paddy plants 
grow to the sky level and He bestows grace on His devotees. I think of Him as the 
Lord always on my head.

1752.     நெண்பயங்குநெல்வாயிலீசனைச் 
    சண்பைஞானசம்பந்தன்சொல்லிவை 
    பண்பயன்கொளப்பாடவல்லவர் 
    விண்பயன்கொளும்வேட்கையாளரே.        11

    நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச் 
    சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை 
    பண் பயன்கொளப் பாட வல்லவர், 
    விண் பயன்கொளும் வேட்கையாளரே.

    neNpu ayagku nelvAyil Icanaic 
    caNpai njAnacampantan col ivai, 
    paN payan koLap pATa vallavar, 
    viN payankoLum vETkaiyALarE.

பொருள்:     அன்புடன், அடியவர்கள் போற்றி வணங்கிட எம்பெருமான் திருநெல்வாயில் 
தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அந்த ஈசனைப் போற்றி சீகாழிப்பதியில் அவதரித்த 
ஞானசம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அப்பாடல்களை விரும்பிப் 
பாடும் அடியவர்களின் நல்விருப்பங்கள் அனைத்தும் ஈடேறும்.

குறிப்புரை:     நெண்பு - நண்பு. அயங்கு - அசங்கிய (பதி 140). சண்பை- சீகாழி. பண்பயன்கொளப் 
பாடவல்லவர் என்றதால் தேவாரம் பாடும் முறையை அறியும் இன்றியமையாமை புலனாகின்றது. 
விண் - வீட்டுலகம். பயன் - பேரின்பம். இம்மை மறுமைப் பயனுமாம். வேட்கையாளர் - விருப்பத்தை ஆள்பவர்.

    Our Lord Uch-chiyaar of Thiru-nel-vaayil is manifested in the temple called Arath-thurai 
in this city. He is very merciful and graces all His devotees. Our divine saint Thiru-gnana-
Sambandar who was born in Seerkaazhi sang ten sacred verses on the Lord of Thiru-nel-vaayil 
where the paddy plants grow to the sky level. Those experts who can sing this garland of ten 
verses in the same musical note and worship  our Lord of Thiru-nel-vaayil will enjoy the bliss 
in heaven if they are earnest in their aim. 

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            26ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 26th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

பதிகத் தொடர் எண்: 163                பதிக எண்: 27

27. திருஇந்திரநீலப் பருப்பதம்             27. THIRU-INDIRA-NEELA-PARUP-PATHAM
பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    இந்திரன் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. மேகங்கள் மேலே கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால் 
நீலபர்ப்பதம் எனப் பெயர் பெற்றது போலும் என்பார் திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள். 
இது வடநாட்டுப்பதிகள் ஐந்தனுள் ஒன்று.

    இந்திரன் பூசித்த செய்தி இவ்வூர்த் திருஞானசம்பந்தர் தேவாரத்தின் திருக்கடைக் காப்பிலுள்ள 
இந்திரன் தொழு நீலபர்ப்பதம் என்னும் பகுதியால் அறியக் கிடக்கின்றது. இதற்குத் திருஞான சம்பந்தரது 
பதிகம் ஒன்றுள்ளது.

    இது நார்க்கட்டியகன்ஜ் - பிக்னதொரி இருப்புப்பாதையில் பிக்னதொரி தொடர் வண்டி நிலையத்தில் 
இருந்து 52 மணிநேர பயணத் தொலைவில் உள்ளது. இறைவரின் திருப்பெயர் நீலாசலநாதர். இறைவியாரின் 
திருப்பெயர் நீலாம்பிகை. இமயத் தலமாகிய பத்ரிநாத்திலிருந்து விடியற்காலம் 4.30 மணி அளவில் இம்மலைச் 
சிகரத்தைத் தரிசிக்கலாம்.

பதிக வரலாறு

    சண்பை வேந்தர் திருக்காளத்தியிலிருந்து அம்மலைத் தேனை அறிவால் நுகர்ந்த நாளில், அருந்தமிழ் 
வழக்கில்லாத வடக்கிலும் குடக்கிலும் உள்ள சிவதலங்களை நினைந்து பாடினார். அவை வடகயிலை, திருக்கேதாரம், 
கோகர்ணம், திருப்பருப்பதம், திருஇந்திரநீலப் பருப்பதம் என்பவை. அதனால் 'உள்க நல்கும்' என்று அருளியதை 
இதன் முதற்பாட்டிறுதியிற் காண்க.

HISTORY

    This is not any peopled village or town. It is an area near mount Kailash in the Himalayan 
region. It is supposed Indiran came to this area and worshipped Lord Civan, who manifests Himself
here and walks around. Our divine saint Thiru-gnana Sambandar saw in his imagination holy places
in the north and west and sang these verses. So, it is described as Vaipputh-thalam; it refers 
to places not visited by our four saints but contains the description of these places. 
Thiru-gnana-Sambandar sings the verses about these places in the north and west as he saw them 
in his mind.This place Thiru-indira-neela-parup-patham is one among the five holy places in the 
north . They are Kailash, Badrinath, Kedarnath, Thiru-indira-neela-parup-patham and Amarnath.

            திருச்சிற்றம்பலம்

1753.     குலவுபாரிடம்போற்றவீற்றிருந் 
    திலகுமான்மழுவேந்துமங்கையன் 
    நிலவுமிந்திரநீலப்பர்ப்பதத் 
    துலவினானடியுள்கநல்குமே.        1

    குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து 
    இலகு மான் மழு ஏந்தும் அம் கையன் 
    நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து 
    உலவினான், அடி உள்க, நல்குமே.

    kulavu pAriTam pORRA vIRRiruntu 
    ilaku mAn mazu Entum am kaiyan, 
    nilavum intira nIlapparppatattu 
    ulavinAn, aTi uLka, nalkumE.

 பொருள்:     பூதகணங்கள் மகிழ்ந்து போற்ற வீற்றிருப்பவர் எம்பெருமான்! மானையும் 
சூலப்படையையும் ஏந்துபவர் எம்பெருமான்! கரிய நீலநிறம் பொருந்திய மலை மேல்
வீற்றிருப்பவர் எம்பெருமான்! அவருடைய திருவடிகளை விரும்பித் துதிக்கும் 
அடியவர்கள்  எண்ணியவை எல்லாவற்றையும் எய்துவர். 

குறிப்புரை:     பாரிடம் - பூதகணம். அங்கையன்- அகங்கையுடையவன். பர்ப்பதத்து - மலை மேல்
உலவினான் - உலாவியவன். உள்க - தியானம் செய்ய. நல்கும் - அருள் செய்யும்.

    You devotees of our Supreme Lord Civan! think these following, He holds a deer
in one of his hands. In another hand He holds the battle-axe. Bhutas - goblins of Civan 
move in this area of the mountain where dark blue clouds always hang all over the area, 
and offer worship to their chief Lord Civan who occasionally exhibits Himself in that area 
and gives Darshan to His followers. Devotees who worship Lord Civan of this area will 
definitely get all their wishes fulfilled.

1754.     குறைவிலார்மதிசூடியாடல்வண் 
    டறையுமாமலர்க்கொன்றைசென்னிசேர் 
    இறைவனிந்திரநீலப்பர்ப்பதத் 
    துறைவினான்றனையோதியுய்ம்மினே.        2

    குறைவு இல் ஆர் மதி சூடி, ஆடல் வண்டு 
    அறையும் மா மலர்க்கொன்றை சென்னி சேர் 
    இறைவன் இந்திரநீலப்பர்ப்பதத்து 
    உறைவினான் தனை ஓதி உய்ம்மினே!

    kuRaivu il Ar mati cUTI, ATal vaNTu 
    aRaiyum mA malarkkonRai cenni cEr 
    iRaivan, intiranIlapparppatattu 
    uRaivinAntanai Oti uymminE!

பொருள்:     குறைதல் இன்றி என்றும் ஒரு கலையாய் நிறைவு பெறும் பிறையைச் சென்னியில் 
வைத்துள்ளார். வண்டுகள் மொய்க்கும் கொன்றைமலர் மாலையைச் சூடியுள்ளார். இறைவனாகிய 
அவர் இந்திர நீல மலையில் கோயில் கொண்டுள்ளார். அப்பெருமானைப் போற்றி நற்கதி அடைவீராக.

குறிப்புரை:     குறைவு இல் ஆர் மதி - குறைதல் இன்றி நிறைவு பொருந்திய பிறை. கடவுள் சடைமேல் 
உள்ள பிறைக்குக் குறைவும் அழிவும் இல்லை. உறைவினான் - வாழ்தலை உடையவன்.

    You the devotees should know that our Lord Civan manifests Himself in the mountain 
area known as Thiru-indira-neela-parup-patham. The baby moon which adorns our Lord's head 
will never diminish in size. The moon will always be the same sized, as against the other 
moon in the sky, which waxes and wanes every fortnight. He wears garlands made of cassia 
flowers in which the bees hum always. He manifests Himself on the mountain of 
Thiru-indira-neela-parup-patham. Praise Him. You will get salvation.

1755.     என்பொனென்மணியென்னஏத்துவார் 
    நம்பனான்மறைபாடுநாவினான் 
    இன்பனிந்திரநீலப்பர்ப்பதத் 
    தன்பன்பாதமேயடைந்துவாழ்மினே.        3

    "என் பொன்! என் மணி!” என்ன ஏத்துவார் 
    நம்பன், நால்மறை பாடு நாவினான், 
    இன்பன், இந்திரநீலப்பர்ப்பதத்து 
    அன்பன், பாதமே அடைந்து வாழ்மினே!

    "en pon! en maNi!" enna EttuvAr 
    nampan, nAlmaRai pATu nAvinAn, 
    inpan, intiranIlapparppatattu 
    anpan, pAtamE aTaintu vAzminE!

பொருள்:     அடியவர்களால் என் பொன்னே, என் மணியே என்று போற்றப் பெறுபவன்
எம்பெருமான் ஆவார். அவர் எப்போதும் நான்கு மறைகளைப் பாடிக் கொண்டே இருப்பார். 
இந்திரநீலப் பருப்பதத்தில் குடியிருக்கும் இறைவனும் அவனே ஆவார். அவரது 
திருவடிகளையே சரணாகதி அடைந்து வாழ்வீராக.

குறிப்புரை:     என்பொன், என்மணி என்ன ஏத்துவார் நம்பன்- என் பொன்னே 
என் மணியே என்று எடுத்துப் புகழ்ந்து போற்றுவாரை விரும்பியருள்பவன். 
நம்பும் மேவும் நசையா கும்மே என்றார் தொல்காப்பியர். பாதமே என்றதில் ஏகாரம் பிரிநிலை.  

    You the devotees should realise that our Lord Civan exhibits Himself in the  
Himalayan mountain area called the Thiru-indira-neela-parup-patham. He is very dear 
and near as kith and kin to those who pray to Him by saying "Oh Lord! You are my gold; 
You are my gem". He is agreeable and pleasant always. He chants the four Vedas 
incessantly. He develops attachment to Thiru-indira-neela-parup-patham. He manifests 
Himself on that mountain; you pray to His holy feet which will be your asylum so that
you may live happily. 
 
1756.     நாசமாம்வினைநன்மைதான்வரும் 
    தேசமார்புகழாயசெம்மையெம் 
    ஈசனிந்திரநீலப்பர்ப்பதம் 
    கூசிவாழ்த்துதுங்குணமதாகவே.        4

    நாசம் ஆம், வினை; நன்மைதான் வரும்; 
    தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் 
    ஈசன், இந்திரநீலப்பர்ப்பதம்                 
    கூசி வாழ்த்துதும், குணம் அது ஆகவே.

    nAcam Am, vinai; nanmaitAn varum; 
    tEcam Ar pukaz Aya cemmai em 
    Ican, intiranIlapparppatam 
    kUci vAzttutum, kuNam atu AkavE.

பொருள்:     ஈசன், நம்முடைய வினைகளை நாசம் செய்வார். நமக்கு நன்மைகளை 
அருளுபவர். செம்மை நிறமும் புகழும் பொருந்திய அவர் இந்திரநீல மலையில் உறைபவர். 
அவரைப் பணிந்து வாழ்த்தும் அடியவர்கள் நற்குணம் ஓங்கப் பெறுவார்கள்.

குறிப்புரை:     வினைநாசம் ஆம் என்க. நன்மைவரும் கூசிவாழ்த்துதலும் - இறைவன் 
பெருமையையும் நம் சிறுமையையும் எண்ணிக்கூசி, வாழ்த்துவோம். நேசம் தண்பால் இல்லாத 
நெஞ்சத்து நீசர்தம்மைக் கூசன் காண் கூசாதார் நெஞ்சுதஞ்சே குடிகொண்ட குழகன்காண் என்ற 
அப்பர் திருவாக்கில் வந்த கூசுதல் வேறு. இது வேறு. தேசம் ஆர் - தேசம் (முழுதும்) நிறைந்த.

    You the devotees! to enable your evil karma to vanish from you and all 
benefactions to come to you, our Lord of nation-wide fame and uprightness, manifested in 
Thiru-indira-neela-parup-patham, may be praised. Speak out your diminutiveness in your 
mind feeling ashamed of it, you need not expose it to others. Think of His fame and 
good qualities and exhibit them. Praise all His benevolent deeds and worship Him in 
your mind. You will have all benevolent good qualities as well as all that is needed 
in your lifetime.

1757.     மருவுமான்மடமாதொர்பாகமாய்ப்
     பரவுவார்வினைதீர்த்தபண்பினான் 
    இரவனிந்திரநீலப்பர்ப்பதத் 
    தருவிசூடிடுமடிகள்வண்ணமே.        5

    மருவு மான் மடமாது ஒர் பாகம் ஆய்ப் 
    பரவுவார் வினை தீர்த்த பண்பினான், 
    இரவன், இந்திரநீலப்பர்ப்பதத்து 
    அருவி சூடிடும் அடிகள் வண்ணமே!

    maruvu mAn maTamAtu orpAkam Ayp
    paravuvAr vinai tIrtta paNpinAn, 
    iravan, intira nIlapparppatattu 
    aruvi cUTiTum aTikaL vaNNamE!

பொருள்:     எம்பெருமான் மானைக் கையில் ஏந்தியவர். உமையவளை இடபாகத்தில் கொண்டு
அருள்செய்பவர். வணங்கும் அடியார்கள் வினைகளை தீர்க்கும் உயர்பண்பு நிறைந்தவர்.  இந்திரநீல 
மலையில் பொருந்தி இருப்பவர். பலி தேர்ந்து வருபவர். கங்கையைத் தலையில் அணிந்தவர். 
இவையே அவரது வண்ணமாம் என்க.

குறிப்புரை:     மருவு ....பண்பினான் - அம்மையப்பராகத் தொழுத அன்பர். கன்மத்தைத் தீர்த்த 
குணமுடையவன். இரவன் - இரத்தலைச் செய்தவன். இரவாகியவன். அன்பர் இரத்தற்குரிய வள்ளல்.
 அருவி - மலையருவி, கங்கையுமாம். வண்ணம் - இயல்பு. 

    Behold! It is our Supreme Lord Civan who has manifested Himself in Thiru- 
indira-neela-parup-patham. He happily enjoys utilising the various waterfalls 
in His area as garlands along with the Ganges on His hair. Umaa, daughter of the 
king of Himalayas, with eyes like deer's, wanted to be united with our Lord. 
He accepted her and corporated her on the left side of His body. This Lord with the 
begging bowl deserves to be praised for His patronage to the devotees. 
Those who praise Him will find their evil karma fleeing them.

1758.     வெண்ணிலாமதிசூடும்வேணியன் 
    எண்ணிலார்மதிலெய்தவில்லினன் 
    அண்ணலிந்திரநீலப்பர்ப்பதத் 
    துண்ணிலாவுறுமொருவன்நல்லனே.        6

    வெண் நிலாமதி சூடும் வேணியன், 
    எண்ணிலார் மதில் எய்த வில்லினன், 
    அண்ணல், இந்திரநீலப்பர்ப்பதத்து 
    உள்-நிலாவுறும் ஒருவன் நல்லனே.

    veN nilAmati cUTum vENiyan, 
    eNNilAr matil eyta villinan, 
    aNNal, intira nIlapparpatattu 
    uL-nilAvuRum oruvan nallanE.

பொருள்:     எம்பெருமான் வெண்ணிலவைத் தன்தலையில் சூடி மகிழ்பவர். பகையைக் கொண்ட 
அரக்கர்களின் முப்புரங்களை அழிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவர். இந்திரநீல மலையில் 
வீற்றிருக்கும் அண்ணல் அவரே. நம் மனத்தில் பொருந்தி இருக்கக் கூடிய நல்லவர் அவரே ஆவார்.

குறிப்புரை:     வேணி - சடை. எண்ணிலார்- நினையாத பகைவர். வில் - மேருவில். 
அல்லனே ஏகாரம் வினா.

    Behold! Civan is one incomparable Lord of the universe. He has beautified His 
matted hair with the glistening white moon. He used mount Meru as the bow and used it 
with an arrow and destroyed the three flying forts of the enemies. He is our Lord Supreme
who manifests Himself in Thiru-indira-neela-parup-patham in the Himalayan area.

1759.     கொடிகொளேற்றினர்கூற்றுதைத்தவர் 
    பொடிகொள்மேனியிற்பூண்டபாம்பினர் 
    அடிகளிந்திரநீலப்பர்ப்பதம் 
    உடையவாணருகந்தகொள்கையே.        7

    கொடி கொள் ஏற்றினர், கூற்று உதைத்தவர், 
    பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர், 
    அடிகள் இந்திரநீலப்பர்ப்பதம் 
    உடைய வாணர், உகந்த கொள்கையே!

    koTi koL ERRinar, kURRu utaittavar, 
    poTi koL mEniyil pUNTa pAmpinar, 
    aTikal, intira nIlapparppatam
    uTaiya vANar, ukanta koLkaiyE!

பொருள்:     எம்பெருமான் இடபக் கொடியைக் கையில் ஏந்தியவர். எமனைக் காலால் உதைத்தவர். 
திருநீறு பூசிய மேனியர். பாம்பினை அணிகலனாகப் பூண்டவர். இந்திர நீல மலையில் கோயில் 
கொண்டவர். அவரையே விரும்பி வழிபடுவோமாக. 

குறிப்புரை:     ஏற்றினர்- விடையுடையவர். கூற்று- யமன். உயிர் வேறு உடல் வேறாகக்
 கூறுபடுத்துவோன் கூற்றுவன். பொடி - திருநீறு. வாணன் - வாழ்நன். உகந்த - உயர்ந்த, விரும்பிய.

    Behold! He is Civan the Lord of Thiru-indira-neela-parup-patham. He has on His flag 
the bull's picture, the significant imprint of His sign. He kicked off with His right leg the 
god of death, Kaalan, to fall down dead. He has smeared His body with the holy ashes. Also He 
wears the snakes over His body as His ornaments. He is our God Supreme and these are His 
natural qualities.

1760.     எடுத்தவல்லரக்கன்கரம்புயம்
    அடர்த்ததோர்விரலானவனையாட் 
    படுத்தனிந்திரநீலப்பர்ப்பதம் 
    முடித்தலம்முறமுயலுமின்பமே.        8

    எடுத்த வல்அரக்கன் கரம்புயம் 
    அடர்த்தது ஓர் விரலான், அவனை ஆட் 
    படுத்தன், இந்திரநீலப்பர்ப்பதம் 
    முடித்தலம்(ம்) உற,முயலும், இன்பமே!

    eTutta val arakkan karampuyam 
    aTarttatu Or viralAn, avanai AT 
    paTuttan, intira nIlapparppatam 
    muTittalam(m) uRa, muyalum, inpamE!

பொருள்:     கயிலாய மலையை எடுத்த அரக்கன் இராவணனின் கைகளையும் தோள்களையும் 
தன் கால் கட்டைவிரலால் அடர்த்தவர் எம்பெருமான். பிறகு இராவணனுக்கு அருள் செய்தவரும் அவரே 
ஆவார். இந்திர நீல மலையில் அவரை அன்புடன் மனத்தால் அடைந்து வழிபாடு செய்திட நமக்கு 
பேரின்பம் கையுறும்.

குறிப்புரை:     கரம்- கை. புயம் - தோள். அடர்த்து - நெருங்கியது. விரலான் - விரலால். படுத்தன்-
படுத்தியவன். முடித்தலம் - உச்சியிடம். உச்சியிலுள்ள ஸ்தலமுமாம். உற - அடைந்து வழிபட முயலும். 
இன்பம்- நாம் அடைய முயலும் இன்பமே எளிதின் வாய்க்கும் என்றபடி.  

    Behold! He is Civan who manifests Himself in Thiru-indira-neela-parup-patham. 
Raavanan, the king of Sri Lanka is a staunch devotee of Lord Civan. However, due to 
arrogance about his mightiness as the greatest warrior, he tried to lift the mountain 
of our Lord. Our Lord in meditation pressed the top of His mountain with His toe very 
slightly. Raavanan's heads and shoulders got crushed under the mountain. However, 
Raavanan repented and begged for pardon and praised and worshipped our Lord. 
Lord Civan forgave and graced him. Think well of Lord Civan and the mountain 
Thiru-indira-neela-parup-patham, the place of His manifestation and pray to the 
holy place; you will be in bliss forever.

1761.     பூவினானொடுமாலும்போற்றுறும் 
    தேவனிந்திரநீலப்பர்ப்பதம் 
    பாவியாதெழுவாரைத்தம்வினை
    கோவியாவருங்கொல்லுங்கூற்றமே.        9

    பூவினானொடு மாலும் போற்றுஉறும் 
    தேவன் இந்திரநீலப்பர்ப்பதம் 
    பாவியாது எழுவாரைத் தம் வினை 
    கோவியா வரும்; கொல்லும், கூற்றமே.

    pUvinAnoTu mAlum pORRu uRum 
    tEvan intira nIlapparppatam 
    pAviyAtu ezuvArait tam vinai 
    kOviyA varum; kollum, kURRamE.

பொருள்:     திருமாலும் நான்முகனும் போற்றி வணங்கும் தலைவனே எம்பெருமான். 
அவர் இந்திரநீல மலையில் கோயில் கொண்டுள்ளார். அவரை உணராமல் வாழுபவர்கள் 
வினைகள் நீங்காமல் பற்றிக் கொள்ளும். மேலும் அத்தகையோரை எமனும் சினந்து
துன்புறுத்துவான் என்க.

குறிப்புரை:     பூவினான்- செந்தாமரை மலரிலுள்ள பிரமன். போற்று-  துதி. உறும்- அடையும். 
பாவியாது - தியானம் பண்ணாமல். கோவியா - கோபித்து. கூற்றம் வரும் என்க. 

    Behold! He is Civan the Lord who is manifested in Thiru-indira-neela-parup-patham. 
The junior god Brahma who is seated in the lotus flower and Thirumaal- both offer their 
prayers and worship our Lord Civan belonging to Thiru-indira-neela-parup-patham in the 
Himalayan region. If there are people who do not think and hear about the greatness of our 
Lord Civan on the mountain Thiru-indira-neela-parup-patham and  pray, they will suffer 
all evils and the god of death will kill them.

1762.     கட்டர்குண்டமண்தேரர்சீரிலர் 
    விட்டரிந்திரநீலப்பர்ப்பதம் 
    எட்டனைநினையாததென்கொலோ 
    சிட்டதாயுறையாதிசீர்களே.        10

    கட்டர் குண்டு அமண், தேரர், சீர் இலர், 
    விட்டர், இந்திரநீலப்பர்ப்பதம் 
    எள்-தனை நினையாதது என்கொலோ, 
    சிட்டு அதுஆய்உறை ஆதி சீர்களே?

    kaTTar kuNTu amaN, tErar, cIr ilar, 
    viTTar intira nIlapparppatam, 
    eL-tanai ninaiyAtatu enkolO,             
    ciTTu atu Ay uRai Ati cIrkaLE?            

பொருள்:     சமணர்களும் பௌத்தர்களும் நற்பண்பு இல்லாதவர்கள் ஆவார்கள்.
எம்பெருமான் கோயில் கொண்டிருக்கும் இந்திரநீல மலையின் சிறப்பை எள் அளவும்
 நினையாது வாழ்வார்கள். அவர்களுக்கு எந்தச் சிறப்பும் இவ்வுலகில் வந்து பொருந்தாது என்க. 

குறிப்புரை:     கட்டர்- உடற்கட்டுடையவர். சீர் - சிறப்பு. விட்டர்- விட்டொழிய நின்றவர். 
விட்டல் - வீடுதல். திருவிளையாடல். எள்தனை - எள்ளளவும். சிட்டதாய் - நல்லறிவுமயமாய். 
உறை - வாழும்.  ஆதி - முதல்வன்.

    The Jains are not perfect, big-bellied people. The Buddhists also are 
of the same character. They are both men of lowliness. We must banish them even from 
our mind. Why do not they remember Him the Lord of Thiru-indira-neela-parup-patham, 
even for a moment, about His never ending and ever present position and all 
about His virtues? Without thinking of Him they will never attain greatness.

1763.    கந்தமார்பொழில்சூழ்ந்தகாழியான் 
    இந்திரன்தொழுநீலப்பர்ப்பதத் 
    தந்தமில்லியையேத்துஞானசம் 
    பந்தன்பாடல்கொண்டோதிவாழ்மினே.        11

    கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான், 
    இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத் (து)
    அந்தம் இ(ல்)லியை ஏத்து ஞானசம் 
    பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்மினே!

    kantam Ar pozil cUznta kAziyAn, 
    intiran tozum nIlapparpatattu 
    antam i(l)liyai Ettu njAnacam 
    pantan pATal koNTu Oti vAzminE!

பொருள்:     மணமிக்க சோலைகள் நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்தவரே திருஞான 
சம்பந்தர் ஆவார். அவர் இந்திரன் வணங்கும் இந்திரநீல மலையில் விளங்கும் சிவபெருமானைப் 
புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். அப்பாடல்களை அடியவர்கள் ஓதி வழிபட்டு 
நன்நிலையில் வாழ்வார்களாக. 

குறிப்புரை:     கந்தம் - மணம். அந்தம் இல்லி - முடிவில்லாதவன் - அநந்தன்.

    Our divine saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi, a holy place 
surrounded by fragrant gardens. He sang on the Lord of Thiru-indira-neela-parup-patham 
where Indiran, head of the Devas worshipped our Lord Civan who has no end and manifests 
Himself in the holy place. You devotees! recite these verses of Thiru gnana-Sambandar 
and worship our Supreme Lord Civan and live happily.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            27ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 27th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

பதிகத் தொடர் எண்: 164                 பதிக எண்:  28. 

28. திருக்கருவூரானிலை                 28.THIRUK-KARUVOOR-AANILAI
பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    ஊரின் பெயர் கருவூராயினும் இங்குள்ள கோயிலுக்குத் திருவானிலை என்று பெயர்.
காமதேனு பூசித்த காரணம்பற்றி இப்பெயர் பெற்றது. திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 52  கி.மீ
தூரத்தில் உள்ளது. திருச்சிராப்பள்ளி - கரூர் இரயில் வசதியும் உள்ளது. இது கொங்கு 
நாட்டுத் தலங்கள் ஏழனுள் ஒன்று.

    தொழில் வளர்ச்சி பெருகிய பெரு நகர்களில் ஒன்றான இவ்வூருக்குத் திருச்சி, 
கோவை,  ஈரோடு முதலான பல நகரங்களில் இருந்தும் பேருந்துகளில் செல்லலாம். இறைவரின்         
திருப்பெயர் பசுபதீசுவரர். இறைவியாரின் திருப்பெயர் கிருபாநாயகி. தீர்த்தம் ஆம்பிராவதி 
ஆறு. இது சோழ மன்னர் முடிசூட்டிக் கொள்ளும் பதிகள் ஐந்தனுள் ஒன்று. புகழ்ச்சோழர் ஆட்சி 
செலுத்திய இடம். எறிபத்த நாயனார் சிவகாமியாண்டார் இவர்கள் இருந்தபதி. திருவிசைப் 
பாக்களைப் பாடிய கருவூர்த் தேவரும் இவ்வூரினரே. இது ஞானசம்பந்தரால் பாடப்பெற்றது. 
அவருடைய ஒரே பதிகத்தைப் பெற்றது. இருபத்தொரு சருக்கங்களையும் ஆயிரத்து நூற்றிருபத்தொன்பது 
திருவிருத்தங்களையும் கொண்ட புராணம் ஒன்று உள்ளது. அதை ஆக்கியோர் இன்னாரென்று
புலப்படவில்லை. கோயமுத்தூர் வித்துவான் திரு. கந்தசாமி முதலியார் அவர்கள்  பல
ஆண்டுகளுக்குமுன் அச்சிட்டு வெளியிட்டார்.

பதிக வரலாறு

    பாண்டிக் கொடுமுடியை அடைந்து வணங்கித் தமிழ்மாலை மகிழ்ந்து சாத்தி, 
வெஞ்சமாக்கூடல் விடையவர் தானம் பல போற்றிக் கிழக்கில் போந்து, திருவானிலைக்         
கோயிலை உடைய கருவூரை மருவி அடைந்து அக்கோயிலுட் புகுந்து இறைஞ்சிப் பாடிய 
நல்லிசை வண்டமிழ்ச் சொற்றொடை இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1764.    தொண்டெலாமலர்தூவியேத்தநஞ் 
    சுண்டலாருயிராயதன்மையர் 
    கண்டனார்கருவூருளானிலை 
    அண்டனாரருளீயுமன்பரே.        1

    தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு 
    உண்ட ஆர் உயிர்ஆய தன்மையர்; 
    கண்டு அனார் - கருவூருள் ஆன்நிலை 
    அண்டனார், அருள் ஈயும் அன்பரே.

    toNTu elAm malar tUvi Etta, nanjcu 
    uNTa Ar uyir Aya tanmaiyar; 
    kaNTu anAr-karuvUruL An nilai
    aNTanAr, aruL Iyum anparE.

பொருள்:     திருத்தொண்டர்கள் மலர் தூவி சிவபெருமானை வழிபடுவர். அவர் நஞ்சுண்டு 
கருத்த கண்டத்தினைக் கொண்டவராய் கருவூரானிலை திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார். 
அண்டங்களுக்கெல்லாம் தலைவராகிய அவரை நாமும் அன்புடன் வழிபடுவோம். அவர் உறுதியாக 
அருள்புரிவார்.

குறிப்புரை:     தொண்டு எலாம் - தொண்டர்கள் எல்லாரும். உண்டல்- உண்ணல், உண்டலாருமாம். 
ஆருயிர் - அரிய உயிர், உயிர்க்குயிர். கண்டுஅனார் - கண்டு போலினிப்பவர். திருக்கருவூரில் உள்ள 
திருக்கோயில் ஆநிலை, ஆன்நிலை எனப்படும். பசுபதி என்னுந் திருப்பெயருண்மை உணர்க. 
அண்டனார் - தேவர். அன்பர் - அன்பை உடையவர்.

    Behold! It is Civan, the Lord of Karuvoor. In this city the temple is called Aanilai. 
The Lord drank the dreadful poison, yet He was not affected by it. The cows worshipped the 
deity here. The devotees strew the flowers at His holy feet and pray. He is the life giving 
grace, a very pleasing deity like sugar candy. He has manifested Himself in the Aanilai temple 
in Karuvoor. He bestows His blessings on angels and others. You devotees! worship Him, the Lord 
of the whole universe, and be blessed by Him.

1765.     நீதியார்நினைந்தாயநான்மறை 
    ஓதியாரொடுங்கூடிலார்குழைக் 
    காதினார்கருவூருளானிலை 
    ஆதியாரடியார்தமன்பரே.        2

    நீதியார், நினைந்து ஆய நால்மறை 
    ஓதியாரொடும் கூடிலார், குழைக் 
    காதினார் - கருவூருள் ஆன்நிலை 
    ஆதியார், அடியார்தம் அன்பரே.

    nItiyAr, ninaintu Aya nAlmaRai 
    OtiyAroTum kUTilAr, kuzaik         
    kAtinAr--karuvUruL An nilai 
    AtiyAr, aTiyArtam anparE.

பொருள்:     ஆகம முறைப்படி நினைந்து வேதங்களை ஓதும் அடியார்களோடு எம்பெருமான் 
எப்போதும் கூடியிருப்பான். குழை என்னும் ஆபரணத்தை அணிந்த எம்பெருமான் கருவூரானிலைத் 
தலத்தில் பொருந்தியுள்ளார். அவர் சிவனடியார்களைத் தம் அன்பர்களாகக் கொண்டு அருள்புரிவார். 

குறிப்புரை:     நீதியார் - நீதியே வடிவான சிவபெருமான். நினைந்து ஆய நான்மறை ஓதியார் - எண்ணி
ஆராய்ந்த நான்கு மறைகளை ஓதுவார்.  கூடலார்- கூடுவார். குழைக்காதினார் - குழையணிந்த 
திருச்செவியை உடையவர். குழை தோட்டின் வேறானது. இதனைக் குழையும் சுருள்தோடும் என்ற 
திருவாசகத்தானறிக. ஆதியார் - முதல்வர். அடியார்தம் அன்பர் - அடியார்களுக்கு அன்பராயிருப்பர்.

    Behold! It is Civan, the Lord of Karuvoor Aanilai. He is the embodiment of justice. 
He mingles with those devotees who recite the enlightening and ever expanding Vedas with earnest 
righteousness. He wears in one of His ears the Kuzhai, an ear-jewel. He is the first and the
ultimate God. He is a friend in need to the devotees and blesses them always.

1766.     விண்ணுலாமதிசூடிவேதமே 
    பண்ணுளார்பரமாயபண்பினர் 
    கண்ணுளார்கருவூருளானிலை 
    அண்ணலாரடியார்க்குநல்லவரே.        3

    விண் உலாம் மதி சூடி, வேதமே 
    பண் உளார், பரம் ஆய பண்பினர், 
    கண் உளார் - கருவூருள் ஆன்நிலை 
    அண்ணலார், அடியார்க்கு நல்லவரே.

    viN ulAm mati cUTi, vEtamE 
    paN uLAr, param Aya paNpinar, 
    kaN uLAr--karuvUruL An nilai 
    aNNalAr, aTiyArkku nallavarE.

பொருள்:     சிவபெருமான், விண்ணில் உலாவும் சந்திரனைத் தன் தலையில் சூடி இருப்பார். 
வேதம் ஓதும் அந்தணர்கள் நிறைந்த இடங்களில் பொருந்தியிருப்பார். திருக்கருவூரானிலைத் தலத்தில் 
கோயில் கொண்டுள்ளார். அவர் என்றும் அடியார்களுக்கு நல்லவராய் அருள்புரிவார்.

குறிப்புரை:     விண்- ஆகாயம். சூடி- வினையெச்சம்.வேதமே பண் உளார் -வேதத்தில் சரரூபமாக  
இருப்பவர். பரம் ஆய பண்பினர் - மேலாகிய பண்பை உடையவர்.  பண்பு-  எண் குணம். கண்ணுள் -        
கூத்து. கண்ணுளார் - கூத்தர். கண்  உளார்- உயிர்களுக்குக் கண்ணாய் இருப்பவர். பண்பினர்கண் 
உளாருமாம். அண்ணலார் - தலைவர், பெரியர். அடியார்க்கு நல்லார் என்பது இறைவன் 
திருப்பெயர்களுள் ஒன்று.

    Behold! It is Civan, the Lord of Karuvoor Aanilai. He used to sing Vedas in rhythmic 
musical tone. He has adorned His head with the sky-traversing moon. His attributes are too 
great to be comprehended. He is eye-like to the devotees. He manifests Himself in the Aanilai 
temple in Karuvoor city. He is the greatest and the ultimate, always good to His worshippers.

1767.     முடியர்மும்மதயானையீருரி 
    பொடியர்பூங்கணைவேளைச்செற்றவர் 
    கடியுளார்கருவூருளானிலை 
    அடிகள்யாவையுமாயஈசரே.        4

    முடியர், மும்மதயானை ஈர்உரி; 
    பொடியர்; பூங்கணை வேளைச் செற்றவர்; 
    கடிஉளார் - கருவூருள் ஆன்நிலை 
    அடிகள், யாவையும் ஆய ஈசரே.

    muTiyar, mummatayAnai Ir uri; 
    poTiyar; pUgkaNai vELaic ceRRavar 
    kaTiuLAr-karuvUruL An nilai 
    aTikaL, yAvaiyum Aya IcarE.

பொருள்:     சிவபெருமான், மதங்கொண்ட யானையின் தோலை உரித்து ஆடையாக அணிந்தவர். 
திருநீறு பூசியவர். மலரம்புகளைக் கொண்ட மன்மதனை எரித்து அழித்தவர்.  மணமிக்க மலர்கள் பொருந்திய 
சோலைகள் நிறைந்த கருவூரானிலைத் தலத்தில் பொருந்தி இருப்பவர். எல்லாவற்றையும் தமதாகக் கொள்ளும் 
அவரே எமது ஈசர் ஆவார்.

குறிப்புரை:     முடியர் - சடைமுடி உடையவர். வணங்குவோர் உச்சியருமாம் (பதி 162 உச்சியார்) மும்மதம்- 
கன்னம், கோசம், கை என்னும் மூன்றிடத்தும் ஒழுகும் மதநீர், கன்னமும் கோசமும் கையும் என்னும் இன்னமுத்தானத்து 
இழிவன மும்மதம் - (பொருட்டொகைநிகண்டு) ஈர்தல் - உரித்தல். ஈர்உரி - உரித்த தோல். உரியென்பது முதனிலைத் 
தொழிலாகு பெயர். பொடியர்- திருவெண்பொடியை உடையவர்.  உரியை அணிந்த பொடியர். வேளை - மன்மதனை. 
கருவேளை. செற்றவர் - அழித்தவர். கடி - சிறப்பு, அதிசயம், யாவையும் ஆய ஈசர்- ஒருவனே எல்லாமாகி அல்லனாய் 
உடனுமாவான் (சித்தி 46.) முழுதுமாகிய மூர்த்தி (பா.9).

    Behold! Civan, the Lord of Karuvoor has matted hair. He killed the rutted elephant and 
peeled of its hide. He has smeared His body with white ashes. He opened His third eye in the forehead. 
Fierce smoulder came out of His eye and darted against Manmathan, god of love who was carrying the bow 
of flowers. Instantaneously he fell down dead. Civan is manifested in the Aanilai temple in Karuvoor 
surrounded by gardens. He is our Lord; He is in each and everything and is all embracive.

1768.     பங்கயம்மலர்ப்பாதர்பாதியோர் 
    மங்கையர்மணிநீலகண்டர்வான் 
    கங்கையர்கருவூருளானிலை 
    அங்கையாடரவத்தெம்மண்ணலே.        5

    பங்கயம் மலர்ப்பாதர், பாதி ஓர் 
    மங்கையர்,மணிநீலகண்டர், வான் 
    கங்கையர் - கருவூருள் ஆன்நிலை 
    அம் கை ஆடுஅரவத்து எம் அண்ணலே.

    pagkayam malarppAtar, pAti Or 
    magkaiyar, maNi nIlakaNTar, vAn 
    kagkaiyar--karuvUruL An nilai, 
    am kai ATu aravattu em aNNalE.

பொருள்:     ஈசனார், தாமரை மலர் போன்ற மென்மையான பாதங்களைக் கொண்டவர். 
உமையவளைத் தன் உடம்பில் இடபாகத்தில் கொண்டவர். நீலமணி போன்ற கண்டத்தினைக் 
கொண்டவர். கங்கை நதியைத் தலையில் தாங்கியவர். கருவூரானிலைத் தலத்துள் இருப்பவர். 
அங்கையில் ஆடும் அரவத்துடன் காட்சி அளிக்கும் அண்ணல் அவரே ஆவார்.

குறிப்புரை:     பங்கயம்- (சேற்றில் முளைப்பது) தாமரை. மலர்ப்பாதர்-மலர் போன்ற திருவடியை
உடையவர். பாதி ஓர் மங்கையர்- அர்த்தநாரீச்சுரர். மணி - அழகிய. வான் கங்கையர் -ஆகாச
கங்கையை அணிந்தவர். அம் - அழகு. ஆடு அரவத்து - ஆடுகின்ற பாம்பை உடைய. 

    Behold! It is Civan, the Lord of Karuvoor. His holy feet are soft like the 
lotus flower. He has shared the left side of His body with our goddess Umaa. His neck 
looks like the dark blue gem. The celestial river Ganges flows through His head. He is 
our Supreme Master. He does the cosmic dance by holding the dancing snake in His hand. 
He has manifested Himself in the Aanilai temple in Karuvoor.

1769.     தேவர்திங்களும்பாம்புஞ்சென்னியில் 
    மேவர்மும்மதிலெய்தவில்லியர் 
    காவலர்கருவூருளானிலை 
    மூவராகியமொய்ம்பரல்லரே.        6

    தேவர், திங்களும் பாம்பும் சென்னியில் 
    மேவர், மும்மதில் எய்த வில்லியர், 
    காவலர் - கருவூருள் ஆன்நிலை 
    மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே!

    tEvar, tigkaLum pAmpum cenniyil 
    mEvar, mummatil eyta villiyar, 
    kAvalar--karuvUruL An nilai,             
    mUvar Akiya moympar allarE!

பொருள்:     ஈசனார், தேவர்கள் போற்றுமாறு சந்திரனையும் பாம்பையும் தலையில்
கொண்டவர். முப்புரங்களை அழிக்க அம்பினைக் கையில் கொண்டவர். கருவூரானிலைத்
தலத்துள் கோயில் கொண்டு அன்பர்களுக்கு அருள்புரிபவர். மும்மூர்த்திகளுள்
ஒருவராகவும் விளங்கும் ஆற்றலைக் கொண்டவர் அவரே ஆவார். 

குறிப்புரை:     சென்னி- தலை. மேவர் - பொருந்துதலை உடையவர். வில்லியர்-  மேருவாகிய 
வில்லை உடையவர். மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே - அயன் முதலிய மூவருமாகிய சக்தியை 
உடையவர் அல்லரோ.  மொய்ம்பு - சக்தி. 

    Behold! It is Civan, the Lord of Karuvoor. He is God of the whole cosmos. His
head is adorned with the moon and the snake. He used the Meru Mountain as His bow 
and sent an arrow and destroyed all the three forts of the asuraas. He is the protector
of all. He has manifested Himself in the Aanilai temple, who is the Supreme of all the 
three viz., Brahma, Vishnu and Rudran.Is He not the Supreme, who gave energy 
to all the three above?

1770.     பண்ணினார்படியேற்றநீற்றர்மெய்ப் 
    பெண்ணினார்பிறைதாங்குநெற்றியர் 
    கண்ணினார்கருவூருளானிலை 
    நண்ணினார்நமையாளுநாதரே.        7

    பண்ணினார், படி ஏற்றர்,நீற்றர், மெய்ப் 
    பெண்ணினார், பிறை தாங்கும் நெற்றியர், 
    கண்ணினார் - கருவூருள் ஆன்நிலை 
    நண்ணினார், நமை ஆளும் நாதரே.

    paNNinAr, paTi ERRar, nIRRar, meyp 
    peNNinAr, piRai tAgkum neRRiyar, 
    kaNNinAr, karuvUruL An nilai 
    naNNinAr, namai ALum nAtarE.

பொருள்:     ஈசனார், பண்ணின் இசையாக விளங்குபவர். இடப வாகனத்தின் மீதேறி இருப்பவர். 
உமையவளைப் பாகமாகக் கொண்டவர். பிறைநிலவைத் தலையில் தாங்கி இருப்பவர். நெற்றிக்கண்
கொண்டவர். கருவூரானிலைத் தலத்தில் கோயில் கொண்டிருப்பவர். வழிபடும் அடியார்களுக்கு 
என்றும் அருள்புரிபவர் அவரே.

 குறிப்புரை:     பண்ணினார் -பண்ணாயிருப்பவர். படி ஏற்றார் - படி (ந்து அமர்) தற்குரிய 
விடையை  உடையவர். மெய்ப்பெண்ணினார்  - பெண்ணை ஒருபாற் கொண்ட மெய்யார். 
மெய் - உடம்பு. நெற்றியர்-உச்சியர். கண்ணினார்- உலகுக்கொரு கண்ணாயிருப்பவர். ஞானக் 
கண்ணருமாம். நண்ணினார் - சேர்ந்தார். நமை - தம்மை. நாதர் - தலைவர். உடையவர்.

    Behold! It is Civan, the Lord of Karuvoor. He is the embodiment of divine music. 
He uses the bull as His vehicle for His ride. He has smeared His body with white ashes. 
He has shared the left portion of His body with His consort Umaa Devi. He holds the moon 
in His head. He has a third eye in His forehead. He is manifested in the Aanilai temple 
in Karuvoor. He is our Lord ruling over all of us.

1771.     கடுத்தவாளரக்கன்கயிலையை 
    எடுத்தவன்தலைதோளுந்தாளினால் 
    அடர்த்தவன்கருவூருளானிலை 
    கொடுத்தவன்னருள்கூத்தனல்லனே.        8

    கடுத்த வாள் அரக்கன், கயிலையை 
    எடுத்தவன், தலை தோளும் தாளினால் 
    அடர்த்தவன் - கருவூருள் ஆன்நிலை 
    கொடுத்தவன், அருள் கூத்தன் அல்லனே!

    kaTutta vAL arakkan, kayilaiyai 
    eTuttavan, talai tOLum tALinAl                 
    aTarttavan--karuvUruL An nilai,
    koTuttavan(n), aruL; kUttan allanE!

பொருள்:     இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்றபோது, ஈசனார் சினம் கொண்டு 
அவனது தலைகளையும் தோள்களையும் நெரித்து அவனது ஆற்றலை அடக்கியவர்.  கருவூரானிலைத் 
தலத்துள் கோயில் கொண்டுள்ளவர். அடியவர்களுக்கு என்றும்  அருள்புரியும் கூத்தன் அவரே ஆவார். 

குறிப்புரை:     கடுத்த-கோபித்த.  தலைதோளும்- தலைகளும் தோள்களும். தாள்- திருவடி. 
அருள்கொடுத்தவன் என்க.

    Behold! It is Civan, the Lord of Karuvoor. Raavanan, the mighty king of SriLanka 
once was proceeding in the sky in his air vehicle called Pushpaga Vimaanam. He could not 
proceed to his desired place in the same route, as the mount Himalaya was situated directly 
on his pathway. The angry king tried to lift the mountain and keep it aside from his pathway. 
He used his mightiness to lift the hill. Our Lord Civan pressed the top of the mountain 
very slightly with His toe. Raavanan's head and shoulders got crushed under the mountain. 
He repented and prayed to our Lord. Pasupatheswarar exonerated him, and granted boons to him. 
He is the cosmic dancer. He was worshipped by the cows of Karuvoor city. He is our God of 
gracefulness manifesting Himself in Aanilai temple as the Supreme.

1772.     உழுதுமாநிலத்தேனமாகிமால் 
    தொழுதுமாமலரோனுங்காண்கிலார் 
    கழுதினான்கருவூருளானிலை
     முழுதுமாகிய மூர்த்திபாதமே.        9

    உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால், 
    தொழுது மா மலரோனும், காண்கிலார் - 
    கழுதினான்,கருவூருள் ஆன்நிலை 
    முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே.

    uzutu mA nilattu Enam Aki mAl, 
    tozutu mA malarOnum, kANkilAr- 
    kazutinAn, karuvUruL An nilai 
    muzutum Akiya mUrtti pAtamE.

பொருள்:     பன்றி வடிவில் பூமியைத் தோண்டிச் சென்ற திருமாலும், அன்னத்தின்மீது பறந்து 
சென்ற பிரமனும் காணமுடியாத சிறப்புக் கொண்டவரே சிவபெருமான் ஆவார். பேய்க்கூட்டத்தோடு 
ஆடல் புரியும் அவரே, கருவூரானிலைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரது திருவடிகளே எங்கும் 
நிறைந்த முழுமை நிலையாம் என்க. 

குறிப்புரை:     ஏனம் - பன்றி. கழுதினான் - பேயன். முழுதும் ஆகிய மூர்த்தி - யாவையும் 
ஆய ஈசர் (பா.4)

    Behold! It is Civan, the Lord of Aanilai. He is all pervasive. Vishnu took the 
form of a huge pig, tilled the big earth and went in search of our Lord's holy feet. 
Similarly, Brahma of lotus flower also went in search of our Lord's head in the sky. 
Both failed to see our Lord's head and feet. However, our Lord Pasupatheswarar who 
dances with His bhutas is manifested in the Aanilai temple. He is easily available 
to be worshipped by devotees, who are aware of His holy feet pervading and blessing
everywhere.

1773.     புத்தர்புன்சமணாதர்பொய்யுரைப் 
    பித்தர்பேசியபேச்சைவிட்டுமெய்ப் 
    பத்தர்சேர்கருவூருளானிலை
    அத்தர்பாதமடைந்துவாழ்மினே.        10

    புத்தர் புன் சமண்ஆதர், பொய்உரைப் 
    பித்தர், பேசிய பேச்சை விட்டு மெய்ப் 
    பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை 
    அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே!

    puttar pun camaN Atar, poy uraip 
    pittar, pEciya pEccai viTTu, meyp 
    pattar cEr karuvUruL An nilai 
    attar pAtam aTaintu vAzminE!

பொருள்:     புத்தர்களும், சமணர்களும் கூறுகின்ற வார்த்தைகள் பொய்மை நிறைந்தவை. 
அப்பித்தர்கள் கூறுகின்ற சொற்களை ஏற்க வேண்டாம். மெய்ப்பக்தர்கள் என்றும் வழிபாடு செய்யும் 
கருவூரானிலை ஈசனையே அடைந்து வழிபட்டு உய்வு பெறுவீர்களாக.

குறிப்புரை:     ஆதர் - அறிவிலார். மெய்ப்பத்தர் - உண்மை அன்பர். அத்தர் - இறைவர், உயர்ந்தவர்.

    If you want to be redeemed please do not listen to the ingenuine preaching of the 
Jains and Buddhists. Instead, you may reach the Aanilai temple of Karuvoor, where sincere 
devotees always worship the Lord. You may assemble in that holy temple and pray at His feet 
so that you may live happily and be redeemed ultimately.

1774.     கந்தமார்பொழில்காழிஞானசம் 
    பந்தன்சேர்கருவூருளானிலை 
    எந்தையைச்சொன்னபத்தும்வல்லவர் 
    சிந்தையிற்றுயராயதீர்வரே.        11

    கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம் 
    பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை 
    எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர் 
    சிந்தையில்-துயர்ஆய தீர்வரே.

    kantam Ar pozil kAzi njAnacam 
    pantan cEr karuvUruL An nilai 
    entaiyaic conna pattum vallavar, 
    cintaiyil-tuyar Aya tIrvarE.

பொருள்:     மணம் நிறைந்த சோலைகள் பொருந்திய சீர்காழிப் பதியில் அவதரித்தவரே 
ஞானசம்பந்தப் பெருமான் ஆவார். அவர் கருவூரானிலையில் கோயில் கொண்டுள்ள எந்தையாகிய 
ஈசனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். அதனைச் சிந்தையில் கொண்டு பாடியவர்களின் 
துயரமெல்லாம் நீங்கும் என்க.

குறிப்புரை:     கந்தம் - வாசனை. துயர் ஆய் - துன்பமானவை.

    Our divine saint Thiru-gnana-Sambandar was born in Seerkaazhi surrounded by 
fragrant flower gardens. He reached our Aanilai temple and sang on the Supreme God 
Pasupatheswarar in Thiru-k-karuvoor, ten sacred verses in Tamil. Those people who can
recite these ten verses with sincere devotion will have no agonizing experience in 
their life. Their minds will be serene and peaceful.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            28ஆம் பதிகம் முற்றிற்று
            End of 28th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 165                பதிக எண் 29. 

29.திருப்புகலி                    29. THIRU-PUKALI

பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

137ஆவது பதிகத்தைக் காண்க.

பதிக வரலாறு

137ஆவது பதிகத்தைக் காண்க.

            திருச்சிற்றம்பலம்

1775.     முன்னியகலைப்பொருளும்மூவுலகில்வாழ்வும் 
    பன்னியவொருத்தர்பழவூர்வினவின்ஞாலந் 
    துன்னியிமையோர்கள்துதிசெய்துமுன்வணங்குஞ் 
    சென்னியர்விருப்புறுதிருப்புகலியாமே.        1

    முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், 
    பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் - ஞாலம் 
    துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும் 
    சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.

    munniya kalaipporuLum, mUulakil vAzvum, 
    panniya oruttar paza Ur vinavin--njAlam 
    tunni imaiyOrkaL tuticeytu mun vaNagkum 
    cenniyar viruppu uRu tirup pukali AmE.

பொருள்:     ஆய கலைகள் அனைத்தையும் அவற்றோடு பொருந்தி வாழும் வாழ்வையும் 
நமக்குக் கொடுக்கும் தலைவர் சிவபெருமான் ஒருவரே ஆவார். அவர் தேவர்களால் வணங்கப் 
பெறும் சிறப்பினை உடையவர். அவர் விருப்பமுடன் வீற்றிருந்து அருளும் இடம் திருப்புகலி ஆகும்.

குறிப்புரை:     முன்னிய- பொருந்திய, முந்திய, நினைக்க. கலை- அறுபத்து நான்கு கலைகள்.
உவமையிலாக் கலைஞானம் எனலுமாம். மூவுலக வாழ்வு-  மூன்று உலகத்திலும் வாழும் வாழ்க்கை.
பன்னிய - ஆராய்ந்த. ஒருத்தர்- தனிமுதல்வர். வினவின் - கேட்டால். ஞாலம்  - பூமி. துன்னி -நெருங்கி. 
இமையோர்கள்- தேவர்கள். துதி - தோத்திரம். சென்னியர் ஆரம்போல் மேம்பட்டவர்.
சென்னியிலுள்ளவர் என்றுமாம். 

    Our Supreme Lord Civan during the time of creation of this universe, 
brought into existence the three worlds (1) Swarkkam, (2) Math-thi-yam, and (3) Paa-thaa-lam.
Of course, all the three worlds were His. Later He thought of humanity that could live in 
all these three worlds. He therefore exhibited the art of living, temporal prosperity, 
morality, virtuous life etc., and established these morals for humanity to follow.

    After this, He decided about the art of erudition - learning for the humanity.
He, therefore, authored a treatise containing 64 arts and science and enumerated them 
in detail. The sixty-four arts and science are called:

    1. அக்கர இலக்கணம் i.e., the knowledge of spelling and reading. It is called 
    'orthography', i.e., the science of reading.

    2. இலிசிதம்  'Caliography' means Penmanship, the materials required for writing 
    such as எழுத்தாணி -'  A style', பனை ஓலை - Palmyrah leaf etc.

    3.கணிதம்: The art of computation - arithmetic - the science of numbers. 
    Please refer to page 258 in the book "Tamil - English Dictionary by M. Winslow 
    for the remaining 61 arts and science.

    Our Lord Civan, the Supreme of the entire universe (cosmos) is the originator,
founder and embodiment of everything such as the three worlds and learning. Then you might 
ask a question, which is the oldest place He selected for His manifestation in this earth. 
The answer is "It is the place where all devaas and celestials arrive, and worship by placing 
their head on the holy feet of our Lord Civan. This sacred and oldest place is called 
'Thirup-pukali'. Only here our Lord Civan manifested Himself at the time of the creation of 
the universe. This name of the city is one of the twelve names of Seerkaazhi.

1776.     வண்டிரைமதிச்சடைமிலைத்தபுனல்சூடிப் 
    பண்டெரிகையாடுபரமன்பதியதென்பர் 
    புண்டரிகவாசமதுவீசமலர்சோலைத் 
    தெண்டிரைகடற்பொலிதிருப்புகலியாமே.        2

    வண்டு இரை மதிச் சடை மிலைத்த புனல் சூடிப் 
    பண்டு எரி கை ஆடு பரமன் பதிஅது என்பர் 
    புண்டரிக வாசம்அது வீச, மலர்சோலைத் 
    தெண்திரை கடல் பொலி திருப் புகலிஆமே.

    vaNTu irai matic caTai milaitta punal cUTip 
    paNTu eri kai ATu paraman pati atu enpar 
    puNTarika vAcam atu vIca, malarccOlait 
    teNtirai kaTal poli tirup pukali AmE.

பொருள்:     கங்கை ஆற்றையும் பிறை நிலவையும் தலையில் அணிந்தவர் சிவபெருமான். 
நெருப்பைக் கையில் ஏந்திய பரமன் அவரே. அவர் தாமரை மலர் மணம் கமழும் சோலைகளும், 
அலைகள் பொருந்திய கடலும் சூழ்ந்த திருப்புகலித் தலத்தில்   பொருந்தியுள்ளார்.

குறிப்புரை:     வண்டு இரை என்றால் புனலில் உள்ள மணம் பற்றியதாகும். வண்திரை என்றால் 
புனல் (நீர்)  அலையின் வளம் உரைத்ததாகும். மதிச்சடை - பிறைசூடிய சடைமேல். மிலைத்த - சூடிய புனல் -
கங்கை நீர். எரி-தீ. ஆடுபரமன் - ஆடும் கடவுள். தீயில் ஆடும். தீ ஏந்தி ஆடும் என்றிரண்டும் ஆகும். 
பதியது-தலம். அது - பகுதிப் பொருள் விகுதி. புண்டரிகம் - தாமரை. வாசம்-மணம். கடல்பொலி - 
கடலில் மிதந்து விளங்கிய காழி.  

    It is the sacred and holy place Thirup-pukali where our Lord Civan has manifested 
Himself. In this city, the fragrant smell of lotus flower spreads all around His temple 
as well as around the city. The city is surrounded by gardens of flowers . In the seashore, 
the waves carry clear water dashing against the shore. Here a good number of boats always 
land and others depart giving a grand appearance. Our Lord has adorned His matted hair 
with the Ganges river which has its rich waves. He holds in one of His hands the age-old 
smouldering fire and dances.

1777.     பாவணவுசிந்தையவர்பத்தரொடுகூடி                 
    நாவணவுமந்தணன் விருப்பிடமதென்பர் 
    பூவணவுசோலையிருள்மாலையெதிர்கூரத் 
    தேவணவிழாவளர்திருப்புகலியாமே.        3

    பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி                
    நா அணவும் அந்தணன் விருப்பு இடம் அது என்பர் - 
    பூ அணவு சோலை, இருள் மாலை எதிர் கூர, 
    தேவண விழா வளர் திருப் புகலிஆமே.

    pA aNavu cintaiyavar pattaroTu kUTi, 
    nA aNavum antaNan viruppu iTam atu enpar- 
    pU aNavu cOlai, iruL mAlai etir kUra, 
    tE vaNa vizA vaLar tirup pukali AmE.

பொருள்:     ஈசன், பக்திப்பாடல்களைப் பாடும் பக்தர்களின் சிந்தையில் விளங்குவார். பக்தர்கள் 
பாடும் பாடல்களிலும் பொருந்தித் தோன்றுவார். பூக்கள் நிறைந்த சோலைகளிலும் விளங்குவார். 
பெரிய மாலைகளைச் சூடிக் கொண்டு தெய்வ வழிபாடு செய்யும் திருவிழாக்களிலும் விளங்குவார். 
அவரே திருப்புகலித் திருத்தலத்திலும் கோயில் கொண்டுள்ளார். எங்கும் எதிலும் பொருந்தியவரே 
ஈசன் என்க.

குறிப்புரை:     பா- பாடல். அணவு - கிட்டும். சிந்தையவர் - சித்தத்தை உடையவர். பத்தர் - அன்பர். 
நா அணவும் - நாக்கில் (புகழ் வடிவாகப்) பொருந்திய. அந்தணன் - சிவன், அம்+தண்+அன் - அழகும் 
குளிர்ச்சியும் உடையவன். அந்தத்தை அண்ணுதலை, உடையவன் என்றாருமுளர் 'அந்தத்தை அணவுவார்' 
என்றார் நச்சினார்க்கினியர். கூர - மிக. தேவணவிழா - தெய்வ வடிவான திருவிழா.

    Our Lord lives in the minds of the devotees who sing sacred songs about His fame. 
He gets merged into these songs as well as with these men. He dwells on their tongues. 
He is a part of the flower abounding gardens. He is present at the religious festivals 
celebrated in this city when darkness sets in. Our Lord lives also at the temple of 
Thirup-pukali. He is a part and parcel of everything and participates everywhere.

1778.     மைதவழுமாமிடறன்மாநடமதாடி 
     கைவளையினாளொடு கலந்தபதியென்பர் 
    செய்பணிபெருத்தெழுமுருத்திரர்கள்கூடித் 
    தெய்வமதிணக்குறுதிருப்புகலியாமே.        4

    மை தவழும் மா மிடறன்,மாநடம்அது ஆடி, 
    கை வளையினாளொடு கலந்த பதி என்பர் 
    செய் பணி பெருத்து எழும்  உருத்திரர்கள் கூடி, 
    தெய்வம் அது இணக்கு உறு திருப் புகலிஆமே.

    mai tavazum mA miTaRan, mAnaTam atu ATi, 
    kai vaLaiyinALoTu kalanta pati enpar- 
    cey paNi peruttu ezum uruttirarkaL kUTi,                    
    teyvam atu iNakku uRu tirup pukali AmE.

பொருள்:     கருமை நிறம் பொருந்திய மை கொண்ட கண்டத்தை உடையவரே சிவபெருமான்.    (திருத்: கொண்ட/மை கொண்ட)
எப்பொழுதும் திருநடனம் புரிபவரே சிவபெருமான். அவர் உமாதேவியுடன் உடனாகி உறையும் 
தலம் எது என்று கேட்பின், உருத்திரர்கள் (சிவகணத்தவர்) கூடி நின்று பணி செய்யும் 
திருப்புகலித் தலமே அது என்க.

குறிப்புரை:     மை - நஞ்சின் கறுப்பு. மை தவழும் - மேகம் போலும் கருநிறம் பரவிய. 
மா - கரிய,  , மிடறன் - திருக்கழுத்தை உடையவன். மாநடம் - மகாதாண்டவம்.  பணி -தொண்டு, 
இணக்கு உறு- இணங்குதல் உற்ற.

    The city of Thirup-pukali is the place of our Lord Civan. The colour of His neck is 
dark blue signifying the colour of dark clouds. He happily performs the cosmic dance, which 
goes on forever. He manifests Himself along with His consort Umaa Devi who wears rich bangles 
around her hands in this holy place. The Rudraas perform elaborate divine services keeping 
company with our Lord. All these attractions take place in Thirup-pukali.

1779.     முன்னமிருமூன்றுசமயங்களவையாகிப் 
    பின்னையருள்செய்தபிறையாளனுறைகோயில் 
    புன்னையமலர்ப்பொழில்களக்கினொளிகாட்டச் 
    செந்நெல்வயலார்தருதிருப்புகலியாமே.        5

    முன்னம் இரு-மூன்றுசமயங்கள் அவை ஆகி, 
    பின்னை அருள்செய்த பிறையாளன் உறைகோயில் - 
    புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின் ஒளி காட்ட, 
    செந்நெல் வயல் ஆர் தரு திருப் புகலி ஆமே.

    munnam iru-mUnRu camayagkaL avai Aki, 
    pinnai aruLceyta piRaiyALan uRai kOyil- 
    punnaiya malarppozilkaL akkin oLi kATTa, 
    cennel vayal Artaru tirup pukali AmE.

பொருள்:     ஆறு சமயங்களாக பிரிந்து நிற்பவன் சிவபெருமான். பின்னர் அவை 
அனைத்தையும் ஏற்று அருள்பவனும் அவனே ஆவான். பிறைநிலவைத் தலையில் தாங்கிய 
அச்சிவபிரான் புன்னை மலர்கள் சங்கினைப் போல் ஒளியுடன் விளங்கித் தோன்றும் வயல் 
நிறைந்த திருப்புகலித் தலத்துள் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     இரு மூன்று சமயங்கள், 'அறுவகைச் சமயம்’ அறுவகைச் சமயத்தோர்க்கும் 
அவ்வவர் பொருளாய் (சித்தியார் 2) அக்கு - உருத்திராக்க மாலை, சங்குமணியுமாம்.

    Our Lord Civan has manifested Himself in Thirup-pukali. In the first instance 
He is the origin behind the existence of all the six religions with different beliefs 
according to the individual sects, and He guards all of them. The temple in which our 
Lord is manifested is surrounded by groves with alexandrian laurel flowers bright like 
conches. Fertile, red paddy fields also exist around this city where our Lord resides.

1780.     வங்கமலியுங்கடல்விடத்தினைநுகர்ந்த 
    அங்கணனருத்திசெய்திருக்குமிடமென்பர் 
    கொங்கணவியன்பொழிலின்மாசுபனிமூசத் 
    தெங்கணவுதேன்மலிதிருப்புகலியாமே.        6

    வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த 
    அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் - 
    கொங்கு அண வியன்பொழிலின் மாசு பனி மூச, 
    தெங்கு அணவு தேன் மலி திருப் புகலிஆமே.

    vagkam maliyum kaTal viTattinai nukarnta 
    agkaNan arutti ceytu irukkum iTam enpar- 
    kogku aNa viyan pozilin mAcu paNi mUca, 
    tegku aNavu tEn mali tirup pukali AmE.

பொருள்:     பாற்கடலில் தோன்றிய விடத்தினை அமுதமாக உண்டு அருள் செய்த  எம்பெருமான், 
விருப்பமுடன் பொருந்தியிருக்கும் திருத்தலம் திருப்புகலியே ஆகும். அங்கு தேன் நிறைந்த சோலைகளில் 
எப்பொழுதும் பனி நிறைந்திருக்கும். தென்னை மரங்களிலிருந்து தேன் பெருகிக் கொண்டே இருக்கும். 
அத்தகைய வளம் நிறைந்த பதியில்தான் எம்பெருமான் கோயில் கொண்டுள்ளார். 

குறிப்புரை:     வங்கம் - மரக்கலம். கடலுக்குச் சாதியடை. அங்கணன் - கருணைக் கண்ணன். 
அருத்தி -விருப்பம். கொங்கு - மணம், தேன், பூந்தாது. அண- அண்ண, வியன் (வியல்) - அகலம். 
தெங்கு - தென்னை.

    Our Lord Civan is very much desirous of staying in Thirup-pukali. He is our graceful Lord 
who drank the poison that arose from the ocean of milk. Here ships and boats in large numbers arrive 
and move back. The city is surrounded by gardens of fragrant flowers, which add to the flow 
of honey in the groves. The dewdrops falling on garden trees further enhance this flow. The city 
is surrounded by sweet coconut trees also. In this fertile city our Lord resides.

1781.     நல்குரவுமின்பமுநலங்களவையாகி 
    வல்வினைகள்தீர்த்தருளுமைந்தனிடமென்பர் 
    மல்குமடியார்கள்படியார இசைபாடிச் 
    செல்வமறையோருறைத்திருப்புகலியாமே.        7

    நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி, 
    வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர் 
    மல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி, 
    செல்வ மறையோர் உறை திருப் புகலிஆமே.

    nalkuravum inpamum nalagkaL avai Aki, 
    valvinaikaL tIrttu aruLum maintan iTam enpar- 
    malkum aTiyArkaL paTi Ara icai pATi, 
    celva maRaiyOr uRai tirup pukali AmE.

பொருள்:     அடியவர்களுக்கு வறுமையையும் இன்ப நலன்களையும் கொடுப்பவன் சிவபெருமானே. 
அவனே நம் வினைகளையும் நீக்கி அருளுவான். அவனே அடியார்கள் விருப்புடன் பாடி ஆடல் புரிகின்றதும் 
செல்வ மறையோர்கள் உறைகின்றதுமாகிய திருப்புகலித் தலத்தில் கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     நல்குரவு - வறுமை. நல்க ஊர்தல் என்னுந் தொடர் நல்கூர்தல் என்று மருவிற்று. 
பிறர் நல்க- வீடு வீடாக ஊர்ந்து சென்று வேண்டி நிற்றல் பற்றிய காரணப் பெயர். இன்பம் - இன்பந்தரும் 
பொருள். மைந்தன்- வலிமை உடைய வீரன். படி - நிலம்.

    Our Lord Civan is very mighty. It is He who gives us the two extreme forms of fortune, 
poverty and blissful plenty (all that is good). He Himself chases our bad karma when we worship 
His holy feet. He is manifested in Thirup-pukali, a holy place, consisting of devotees who sing 
and dance, praising His name. This holy place is known also for Vedic scholars who reside 
there in large number.

1782.     பரப்புறுப்புகழ்ப்பெருமையாளன்வரைதன்னால் 
    அரக்கனையடர்த்தருளுமண்ணலிடமென்பர் 
    நெருக்குறுகடற்றிரைகள் முத்தமணிசிந்தச் 
    செருக்குறுபொழிற்பொலிதிருப்புகலியாமே.            8

    பரப்புஉறு புகழ்ப் பெருமையாளன், வரை தன்னால் 
    அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல், இடம் என்பர் - 
    நெருக்குஉறு கடல்-திரைகள் முத்தம்மணி சிந்த, 
    செருக்கு உறு பொழில் பொலி திருப் புகலிஆமே.

    parappu uRu pukazp perumaiyALan, varaitannAl 
    arakkanai aTarttu aruLum aNNal, iTam enpar- 
    nerukku uRu kaTal-tiraikaL muttammaNi cinta,         
    cerukku uRu pozil poli tirup pukali AmE.

பொருள்:     விரிந்த புகழுக்கு உரியவன் சிவபெருமான். கயிலாய மலையைத் தூக்கிட முயன்ற 
இராவணனின் செருக்கை அடக்கி அருளியவர் அவரே. அவர், கடல் அலைகள், முத்துக்களையும் 
மணிகளையும் அள்ளிக் கொண்டு வந்து ஒதுக்கும் சோலைகள் நிறைந்த திருப்புகலித் திருத்தலத்துள் 
கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     பரப்பு -பரவுதல். பெருமை புகழ் ஆளன்- பெரும் புகழை ஆள்பவன். புகழினது 
பெருமையை ஆள்பவன் எனக் கிடந்தவாறுங் கொள்ளலாம். வரை - கயிலை மலை. திரை- அலை.
முத்தம்மணி-  முத்துக்களையும் மணிகளையும்.

    Our Lord Civan's fame dissiminates all over the world. He pressed the top of the
Himalayan mountain with His toe and suppressed the mightiness of Raavanan. Later when Raavanan 
repented, our Lord forgave him. He is our Supreme God. He has displayed His greatness in 
Thirup-pukali. The waves of the surging sea in the city, dashing against the shore, bring and 
scatter pearls and gems of all kinds. The city becomes rich because of the gems in plenty, 
the tall and big trees abound in the towering gardens of Thirup-pukali.

1783.    கோடலொடுகூன்மதிகுலாயசடைதன்மேல் 
    ஆடரவம்வைத்தருளுமப்பனிருவர்க்கும் 
    நேடஎரியாகியிருபாலுமடிபேணித் 
    தேடவுறையுந்நகர்திருப்புகலியாமே.        9

    கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல் 
    ஆடுஅரவம் வைத்து அருளும் அப்பன், இருவர்க்கும் 
    நேட எரி ஆகி, இருபாலும் அடி பேணித் 
    தேட,உறையும் நகர் - திருப் புகலிஆமே.

    kOTaloTu kUnmati kulAya caTaitanmEl 
    ATu aravam vaittu aruLum appan, iruvarkkum 
    neTa eri Aki, irupAlum aTi peNit             
    tETa, uRaiyum nakar-tiru pukali Ame.            

பொருள்:     கோட்டுப் பூவாகிய காந்தள் மலரையும், வளைந்த பிறைநிலவையும் தலையில்
அணிந்தவரே சிவபெருமான். பாம்பைத் தன் தலையில் வைத்திருக்கும் அப்பனும் அவரே ஆவார். 
பிரமன், திருமால் ஆகிய இருவராலும் கண்டறியப்பட முடியாத அவரே திருப்புகலித் தலத்துள் 
கோயில் கொண்டுள்ளார். அவரது திருவடிகளை வணங்கி அடியார்கள் உய்வு பெறுவார்கள் என்க.

குறிப்புரை:     கோடல் - வெண்காந்தள். குலாய - குலவிய. நேட - தேட. பேணி - விரும்பி.

    It is Lord Civa of Thirup-pukali. He has beautified His matted hair with glory flowers 
and also the curved crescent moon. He has adorned His head with the dancing snake also along 
with the above. Vishnu and Brahma went out to reach our Lord's head and feet, but in vain. 
At that moment our Lord stood before them as an immeasurable, tall flame of fire. This Lord 
Civan displays His greatness in the holy temple in the city of Thirup-pukali.

1784.     கற்றமணருற்றுலவுதேரருரைசெய்த
    குற்றமொழிகொள்கையதிலாதபெருமானூர் 
    பொற்றொடிமடந்தையருமைந்தர்புலனைந்துஞ் 
    செற்றவர்விருப்புறுதிருப்புகலியாமே.        10

    கற்ற(அ)மணர்,உற்று உலவு தேரர், உரை செய்த 
    குற்றம் மொழி கொள்கைஅது இலாத பெருமான் ஊர் - 
    பொன்-தொடி மடந்தையரும், மைந்தர், புலன்ஐந்தும் 
    செற்றவர், விருப்புஉறு திருப் புகலிஆமே.

    kaRRa (a)maNar, urru ulavu tErar, urai ceyta             
    kuRRam mozi koLkai atu ilAta perumAn Ur             
    pon-toTi matantaiarum, maintar, pulan aintum, 
    ceRRavar, viruppu uRu tirup pukali AmE.

பொருள்:     மெய்நூற்களைக் கற்று உணராத சமணர்களும் சாக்கியர்களும் கூறும் மொழிகள் 
குற்றமுடைய மொழிகளேயாகும். அவர் மொழிகளை எம்பெருமான் ஏற்றருளார். அவர் ஆடவரும் 
மகளிரும் ஐம்புலன் அடக்கி வாழும் திருப்புகலித் தலத்திலேயே கோயில் கொண்டுள்ளார் என்க.

குறிப்புரை:     கற்ற அமணர்- அவைதிக நூல்களைப் படித்த சமணர். குற்றம் மொழி -குற்றங்களை 
உடைய வார்த்தைகளை. கொள்கையது - கொள்ளுவது. தொடி- வளையல். மடந்தையர்- மகளிர். 
மைந்தர் - ஆடவர். புலன் ஐந்தும். செற்றவர் - ஐம்புலத்தாசையையும் அகற்றிய ஞானியர். 

    The Jains study the non-religious books. Buddhists also learn unholy books. 
These two sects without any knowledge of the divine being, preach baseless principles 
and false hopes. Our Lord never cares a jot for these people's sayings. This lord happily
has manifested Himself in Thirup-pukali where damsels of gold bangled hands
and men, sincere devotees of our Lord, who have subdued their five senses live 
like holy saints.

1785.     செந்தமிழ்பரப்புறுதிருப்புகலிதன்மேல் 
    அந்தமுதலாகிநடுவாயபெருமானைப் 
    பந்தனுரைசெந்தமிழ்கள்பத்துமிசைகூர 
    வந்தவணமேத்துமவர்வானமுடையாரே.        11

    செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலி தன்மேல், 
    அந்தம் முதல் ஆகி நடுவுஆய பெருமானைப் 
    பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர 
    வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

    centamiz parappu uRu tirup pukali tanmEl,             
    antam mutal Aki naTuvu Aya perumAnaip                 
    pantan urai centamizkaL pattum icai kUra 
    vanta vaNam Ettumavar vAnam utaiyArE.                


பொருள்:     முதல், நடு, ஈறு என்ற மூன்றிடத்தும் பொருந்தியவரே எம் பெருமான். 
அவர் செந்தமிழ்ப் பாடல் நிறைந்த திருப்புகலித் தலத்தும் உறைகின்றார். அவரைப் புகழ்ந்து 
ஞான சம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அப்பாடல்களை 
அன்புடன் ஓதுபவர்கள் இங்கேயே வானச் சிறப்பினை அடைவர். 

குறிப்புரை:     செந்தமிழ் பரப்பு உறு திருப்புகலி என்றதால், பண்டு சீர்காழியின் கண் 
இருந்த தமிழ் வளர்ச்சி புலனாகும். முதல் அந்தம் ஆகி என மாற்றுக. பந்தன் - சம்பந்தர். தமிழ்கள் - 
தமிழ்ப்பாடல்கள். இசைகூர - பண்ணிசைமிக. வந்தவணம்-வந்தவாறு (பார்க்க 170:112). 

    Our divine saint Thiru-gnana-Sambandar has sung in chaste Tamil language these ten 
verses on our Lord of Thirup-pukali. Our Lord exhibits Himself in three ways such as He is 
the origin, He is the middle and He is the end of everything. Those people who sing in a 
delightful musical tone these ten verses of Thiru-gnana-Sambandar will be eligible to 
reach the celestial world.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            29ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 29th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 166                        பதிக எண்: 30

30. திருப்புறம்பயம்                        30. THIRUP-PURAM-BAYAM

பண்: இந்தளம் - வினாஉரை                    Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    புறம்பயம் என்பது பக்கத்தே தண்ணீரை உடையது என்று பொருள்படும். இதற்கு ஏற்ப 
திருக்கோயிலின் மேல்புறத்தில் மதிலை ஒட்டி நீர்நிலை இன்றும் இருக்கின்றது. ஒரு காலத்தில் 
பிரளயம் வந்தபொழுது அது ஊரினுள் புகாதவாறு தடைபட்டு புறத்தே நின்றமையால் இப்பெயர் 
பெற்றது என்பர். அதற்கு ஏற்ப இவ்வூர்த் தல விநாயகர்க்குப் பிரளயங்காத்த விநாயகர் என்ற 
பெயர் இருக்கின்றது.

    கும்பகோணத்திற்கு வடமேற்கே 9 கி.மீ. தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையில்
 இருக்கின்றது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. இறைவரது திருப்பெயர் 
புறம்பய நாதர், சாட்சிநாதர். ஒரு வணிகப் பெண்ணின் நிமித்தம் இவ்வூர்ச் சிவபெருமான் 
மதுரை சென்று சாட்சி கூறினமையால் சாட்சிநாதர் எனப் பெயர் பெற்றார். இறைவியாரது 
திருப்பெயர் கரும்படுசொல்லி. இத்திருப்பெயரை (தி. 2 ப. 196 பா. 5) ஞானசம்பந்தப் 
பெருந்தகையார் 'ஓர் பாகம் கரும்பொடுபடு சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்' என்று 
எடுத்தாண்டுள்ளது பெருமகிழ்ச்சியைத் தருவதாகும். கரும்படு சொல்லி என்பதற்குக் 
கரும்பை வென்ற சொல்லை உடையவள் என்பது பொருள்.

    தீர்த்தம் பிரம தீர்த்தம், இது இராஜகோபுரத்திற்கு வடகிழக்கில் இருக்கின்றது. 
சத்தசாகர தீர்த்தம், இது பிரமதீர்த்தத்திற்கு கிழக்கில் நந்த வனத்தில் இருக்கிறது. 
பிரளய காலத்தில் அழிக்க வந்த ஏழுகடல்களும் இதனுள் அடங்கி இருக்கின்றது என்று 
புராணம் கூறுகின்றது. மண்ணியாறு, இது ஊரின் கிழக்கே இருக்கிறது. கொள்ளிடப் பேராறு, 
இது ஊருக்கு வடபால் 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தல விருட்சம், புன்னை. இது முதல் 
பிரகாரத்தில் வடமேற்கில் இருக்கின்றது.

    சனகர் முதலிய நால்வர்களுக்குச் சிவபெருமான் இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார். 
இச்செய்தியை இவ்வூர் பதிகத்திலுள்ள 'நால்வர்க் கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய்' 
என்னும் முதலாவது திருப்பாட்டிலிருந்து அறியலாம். இத்தலத்தில், தன் தங்கை மகளுடன் வந்தடைந்த 
காவிரிப் பூம்பட்டினத்து வணிகன் அரவு கடித்து இறந்து போக, சிவபெருமான் அவனுக்கு உயிர்
அளித்ததோடு அவனுக்கு அப்பெண்ணைத் திருமணம் புரிவித்தார். அப்பெண் மதுரையில், 
அவளது கணவனின் முதல் மனைவியால் பழிக்கப் பெற்றபோது, வன்னி, கிணறு,மடைப்பள்ளி 
இவைகளோடு சென்று சாட்சி பகர்ந்தார். திருக்கோயிலுக்கு நாளும் விறகு கொண்டு வந்த 
ஒரு ஆதிதிராவிடற்கு வீடு பேற்றை அருளினார். துரோணர் இறைவனை வழிபட்டு அசுவத்தாமா 
என்ற புதல்வனைப் பெற்றார்.  விசுவாமித்திரர், சுக்ரீவன் வழிபட்டும் பேறு பெற்றார்கள். 

    இத்தலத்திற்கு தமிழில் ஒரு புராணம் இருக்கின்றது. அது இதுவரை அச்சிடப் பெறவில்லை.
 அதை ஆக்கியோரும் இன்னாரென்று புலப்படவில்லை. இத்தலத்திற்கு உலா ஒன்று இருந்தது. அதில் சில 
கண்ணிகள்தான் கிடைக்கப்பெற்றுள்ளன. இத்தலத்திற்கு புறம்பயமாலை என்ற நூலும் உண்டு. 
அதில் பத்துப் பாடல்களே கிடைத்துள்ளன. எஞ்சியவைகள் கிடைத்தில. அவைகளைத் திருவையாறு, 
வித்துவான் திரு வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள் அச்சிட்டு உள்ளார்.

    இத்தல விநாயகருக்குப் பிரளயங் காத்த விநாயகர் என்று பெயர். இவருடைய திருமேனி 
கடல்படு பொருள்களாகிய இப்பி, சங்கு இவைகளால் ஆக்கப் பெற்றுள்ளது. இவர்க்கு ஆண்டுதோறும் 
ஆவணி மாதத்துச் சதுர்த்தியில் ஒரு ஆடம்தேன் அபிடேகம் நடைபெற்று வருகின்றது. அவ்வளவு தேனும் 
அவர் திருமேனியில் சுவறி விடுகின்றது.

    இங்கு தட்சிணாமூர்த்திக்குத் தனிக்கோயில் சந்நிதியில் இருக்கின்றது. வணிகப் பெண்ணின் 
பொருட்டுச் சிவபெருமான் மதுரை சென்று சாட்சி பகர்ந்ததை உணர்த்தும் நாடகம் ஒன்று இவ்வூரில் 
வைகாசி மாதத்தில் நடைபெறுகின்றது. அதை மக்கள் ‘வன்னி நாடகம்' என்று கூறுகின்றனர்.  

    இக்கோயில் பணிமகளராகிய ஒரு அம்மையார் ஆதனூரில் உள்ள தம் காதல் கிழவனுடன் ஒரு நாள் 
மாலைப்பொழுதில் செல்லும்பொழுது மண்ணியாற்றில் ஓடம் விட்டவன், யாரும் இல்லாத நிலையை உணர்ந்து 
அவ்வம்மையாருடைய அணிகலன்கள், கூறைகள் முதலியவைகளைப் பறித்துக்கொண்டு அவளைக் கொன்று 
ஆற்றில் தள்ளிவிட்டான். ஆற்றைக் கடப்பதற்குள் அவனும் தவறி ஆற்றில் விழுந்து இறந்துவிட்டான். 
இவ்வரலாற்றை உட்கொண்டுதான், நிறைமொழி மாந்தராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

        ''குற்றொ ருவரைக் கூறை கொண்டு
            கொலைகள் சூழ்ந்த களவெலாஞ் 
        செற்றொ ருவரைச் செய்த தீமைக
            இம்மை யேவருந் திண்ணமே" என (தி.7 ப.35 பா. 4) அருளியுள்ளார்கள் என்பார்கள்.

    இவ்வூர்ச் சிவபெருமான், மதுரை சென்று சாட்சி பகர்ந்த வரலாற்றுக் குறிப்பு,சிலப்பதிகாரத்தில்,

    "வன்னிமரமும் மடைப்பளியும் சான்றாக 
    முன்னிறுத்துக் காட்டிய மொய்குழலாள்"

எனக் குறிக்கப்பட்டுள்ளது.

    இவ்வூர்க்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, சுந்தரமூர்த்தி 
சுவாமிகள் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. மாணிக்கவாசகர், 'புறம் பயம்தனில் 
அறம்பல அருளியும்' என இவ்வூரைப் பாடியுள்ளார். இக்கோயில் மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் 
ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.

பதிக வரலாறு

    திருவிசய மங்கையினின்றும் போந்த ஆளுடை பிள்ளையார், திருவைகாலில் அணைந்து 
பாடி வழிபட்டு, இத்திருப்புறம்பயத்தைக் கண்டு மேன்மேல் விருப்புறப் பெற்று, செந்தமிழ் நிறம்பயில் 
இசையுடன் பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1786.     மறம்பயமலைந்தவர்மதிற்பரிசறுத்தனை 
    நிறம்பசுமை செம்மையொடிசைந்துனதுநீர்மை 
    திறம்பயனுறும்பொருள்தெரிந்துணருநால்வர்க் 
    கறம்பயனுரைத்தனைபுறம்பயமமர்ந்தோய்.        1

    மறம் பயம் மலைந்தவர் மதில் பரிசு அறுத்தனை; 
    நிறம் பசுமை செம்மையொடு இசைந்து, உனது நீர்மை 
    திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு 
    அறம்பயன் உரைத்தனை - புறம்பயம் அமர்ந்தோய்!

    maRam payam malaintavar matil paricu aRuttanai;     
    niRam pacumai cemmaiyotu icaintu, unatu nIrmai         
    tiRam payan uRum poruL terintu uNarum nAlvarkku     
    aRam payan uraittanai-puRampayam amarntOy!        

பொருள்:     திருப்புறம்பயம் திருத்தலத்தில் கோயில் கொண்டவர் சிவபெருமான்! உயிர்களைத் 
துன்புறுத்தும் அரக்கர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர் சிவபெருமான்! பசுமையும் 
செம்மையும் கலந்தது போல் உமாதேவியுடன் கலந்து காட்சி அளிப்பவர் சிவபெருமான்! அறங்களை 
சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தவரும் அவரே ஆவார்!

குறிப்புரை:     மறம் - வீரம், பாவமுமாம். பயம் - அச்சம். மறத்தையும் அச்சம் விளைவிப்பதையும்  உடைய
 மலைந்தவர்- (பகைவர்) போராடியவர், திரிபுரத்தசுரர். பரிசு - (பெயர்ந்து சென்று அழிக்குந்) தன்மை. 
அறுத்தனை- அறுத்தாய். செம்மை நிறம் அப்பனது, பசுமை நிறம் அம்மையினது. அம்மையப்பர் நிறம் 
இரண்டும் கூறப்பட்டன. பயன் உறும் பொருள் - உயிர்க்குறுதியை அடைவிக்கும் ஆகமாந்தப் பொருள்.
 நால்வர்க்கு - சநகாதியர்க்கு. அறம்பயன் - அறமாகிய பயன். அமர்ந்தோய் -வீற்றிருந்தருளியவனே.
 அறுத்தனை உரைத்தனை என்க. 

    Oh Lord Civa! I bow to You. You completely destroyed the three flying fortresses of the 
haughty asuraas who with courage, but with fear, misbehaved and did outrageous acts against the
devaas and ruined them. The four celebrated sages, spiritual sons of Brahma - Sanakar, Sananthanar,
Sanaathanar and Sanarkumarar came to our Lord to improve their knowledge i.e., particularly about 
the effect and inner meanings of the aagamaas that are explained therein. Our Lord enriched 
their knowledge with His signs, to guide them to Supreme Virtue. The complexion of His body 
is both green (colour of goddess Umaa) and redness (golden of our Lord Civan).
This Lord has manifested Himself in Thirup-puram-bayam.

1787.     விரித்தனைதிருச்சடையரித்தொழுகுவெள்ளம் 
    தரித்தனையதன்றியும்மிகப்பெரியகாலன் 
    எருத்திறவுதைத்தனையிலங்கிழையொர்பாகம் 
    பொருத்துதல்கருத்தினைபுறம்பயமமர்ந்தோய்.        2

    விரித்தனை, திருச்சடை; அரித்து ஒழுகு வெள்ளம் 
    தரித்தனை; அது அன்றியும், மிகப் பெரிய காலன் 
    எருத்து இற உதைத்தனை; இலங்கிழை ஒர் பாகம் 
    பொருத்துதல் கருத்தினை - புறம்பயம் அமர்ந்தோய்!

    virittanai, tiruccaTai; arittu ozuku veLLam         
    tarittanai; atu anRiyum, mikap periya kAlan         
    eruttu iRa utaittanai; ilagkizai orpAkam         
    poruttutal karuttinai-puRampayam amarntOy!

பொருள்:     விரிந்த சடாமுடியினை உடையவனே! விரைந்து வரும் கங்கை வெள்ளத்தைத் தன் 
தலையில் தரித்தவனே! காலனின் வலிமை கெடுமாறு அவன் கழுத்தில் உதைத்தவனே! உமையவளை 
ஒரு பாகத்தில் கொண்டவனே! திருப்புறம்பயத் தலத்தில் கோயில் கொண்ட நாதனே! உன்னை 
வணங்குகின்றேன்.

குறிப்புரை:     சடை விரித்தனை; வெள்ளம் தரித்தனை. எருத்து - கழுத்து, பிடர். இலங்கிழை - 
விளங்கிய பூண் உடைய உமாதேவியார். கருத்தினை - கருத்தை உடையாய்.

    Oh Lord Civa! You unfolded your matted hair and have adorned it with the fast 
descending Ganges. You have gone beyond these activities by causing death to the god of death. 
The god of death fell down dead when You kicked his neck, though his figure was very bulky. 
You have shared the left side of Your body with goddess Umaa Devi. You have manifested Yourself 
in Thirup-puram-bayam where all of us worship You.

1788.     விரிந்தனைகுவிந்தனைவிழுங்குயி ருமிழ்ந்தனை 
    திரிந்தனைகுருந்தொசிபெருந்தகையுநீயும் 
    பிரிந்தனைபுணர்ந்தனைபிணம்புகுமயானம் 
    புரிந்தனைமகிழ்ந்தனைபுறம்பயமமர்ந்தோய்.        3

    விரிந்தனை; குவிந்தனை; விழுங்கு உயிர் உமிழ்ந்தனை; 
    திரிந்தனை; குருந்து ஒசி பெருந்தகையும் நீயும் 
    பிரிந்தனை; புணர்ந்தனை; பிணம் புகு மயானம்
    புரிந்தனை; மகிழ்ந்தனை - புறம்பயம் அமர்ந்தோய்!

    virintanai; kuvintanai; vizugku uyir umizntanai;     
    tirintanai; kuruntu oci peruntakaiyum nIyum 
    pirintanai; puNarntanai; piNam puku mayAnam         
    purintanai; makizntanai-purampayam amarntOy!

பொருள்:     எல்லாமாக விரிந்தவனே! எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டவனே! 
உயிர்களின் வினைகளை - வினைப்பயன்களை அவ்வுயிர்களோடு பொருத்தி செம்மை  செய்பவனே! 
குருந்த மரத்தை ஒடித்த திருமால் பெண்ணாக விளங்க உடன் திரிந்த அன்பனே! மயானத்தில் நடனம் 
புரிபவனே! திருப்புறம்பயத்துள் கோயில் கொண்டவனே! உன்னை வணங்குகின்றேன்.

குறிப்புரை:     விழுங்கு உயிர் உமிழ்ந்தனை- இளைப்பாற்றற் பொருட்டு உடலினின்றும் பிரிக்கப்பட்ட 
உயிர்களை மீண்டும் அவற்றின் வினைகளைக் கழித்தற்பொருட்டு உடம்பிற் புகுத்தினாய். குருந்து ஒசி 
பெருந்தகை - குருந்த மரத்தை வளைத்த பெரிய தகைமையை உடைய மாயன்; திருமால் மோகினி வடிவம் 
கொண்டு மனைவியாகிய வரலாறு காண்க. மயானம் புரிந்தனை - சுடுகாட்டை விரும்பினாய். 
'கள்ளி முதுகாட்டிலாடி', 'கோயில் சுடுகாடு'.

    Oh Lord Civa! You expanded Yourself into the many and big things of the world. 
You contracted Yourself as an atom. At the time of universal deluge and destruction of 
all things, all souls took refuge under You. After the end of the deluge You guided maaya 
to allow all the souls to be born again in all forms in the universe such as from man to 
other living beings. You changed Your stature and took many more shapes according to the 
need and moved all over the cosmos. Thirumaal once felled the kuruntha tree. As per Your 
instructions Thirumaal took the form of the most beautiful lady, mohini. She came and You 
moved along with her to attract people. You feel pleased to enter the burial ground where 
the dead bodies of humans are brought to be burnt and happily dance there. You have 
manifested Yourself in Thirup-puram-bayam.

1789.     வளங்கெழுகடும்புனலொடுஞ்சடையொடுங்கத் 
    துளங்கமரிளம்பிறைசுமந்ததுவிளங்க
    உளங்கொளவளைந்தவர்சுடுஞ்சுடலைநீறு
    புளங்கொளவிளங்கினைபுறம்பயமமர்ந்தோய்.        4

    வளம் கெழு கடும்புனலொடும் சடை ஒடுங்க
    துளங்கு அமர் இளம்பிறை சுமந்தது விளங்க 
    உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு
    புளம் கொள விளங்கினை - புறம்பயம் அமர்ந்தோய்!

    vaLam kezu katumpunaloTum caTai oTugka,         
    tuLagku amar iLampiRai cumantatu viLagka,
    uLam koLa aLaintavar cuTum cuTalai nIru 
    puLam koLa viLagkinai-puRampayam amarntOy!        

பொருள்:     பெருகி வரும் கங்கையைத் தன் தலையில் ஒடுங்குமாறு செய்தவனே! அச்சடையில் 
பிறை நிலவை உலவச் செய்தவனே! இறந்தவர்களின் உடலைச் சுடுகின்ற மயானத்தில் உள்ள சுடலை 
நீற்றைப் பூசி உள்ளவனே! திருப்புறம்பயத் தலத்தில் கோயில் கொண்டவனே! உன்னை 
வணங்குகின்றேன்.

குறிப்புரை:     புனல் - கங்கை. துளங்கு- அசைவு. முதனிலைத் தொழிற்பெயர். அளைந்தவர்- 
கலந்தவர், குழந்ததவருமாம். புலம் - புளம். லகர ளகரப்போலி. அனமரு - அலமரு என்பது போல.        
மெய்யினிடம் என்றபடி.

    Oh Lord Civa! You have received and arrested the fast flow of the profuse 
water of the Ganges river and concealed it in Your matted hair. Your holy head bears 
that beautiful shining baby moon along with the Ganges river. You have smeared all over 
Your body the hot white ashes collected from the burning ghat. You exhibit this stature 
to your devotees who worship You feeling oneness with You, shedding tears from their eyes, 
and showing their love in their minds. Oh Lord! You are there in Thirup-puram-bayam.

1790.     பெரும்பிணிபிறப்பினொடிறப்பிலையொர்பாகம் 
    கரும்பொடுபடுஞ்சொலின்மடந்தையைமகிழ்ந்தோய் 
    சுரும்புண அரும்பவிழ்திருந்தியெழுகொன்றை 
    விரும்பினைபுறம்பயமமர்ந்தஇறையோனே.        5

    பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை; ஒர் பாகம். 
    கரும்பொடுபடும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்; 
    சுரும்புஉண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை 
    விரும்பினை - புறம்பயம் அமர்ந்த இறையோனே!

    perum piNi pirappinotu iRappu ilai; or pAkam, 
    karumpoTu paTumcolin maTantaiyai makizntOy;                     
    curumpu uNa arumpu aviz tirunti ezu konRai 
    virumpinai-puRampayam amarnta iRaiyOnE!

பொருள்:     வினைத் தொடர்பும், பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமானே! கரும்பினும் 
இனிய சொல்லினை உடைய உமையவளை ஒரு பாகத்தில் கொண்டவனே! வண்டுகளின்             
ரீங்காரம் கேட்டு     மலரும் கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனே! திருப்புறம்பயத்துள் 
கோயில் கொண்டவனே!  உன்னை வணங்குகின்றேன்.

குறிப்புரை:     பிணியும் பிறப்பும் இறப்பும் இல்லாய் என்றபடி. கரும்பொடு படுஞ்சொலின் மடந்தை -
கரும்பன்ன சொல்லம்மை என்னும் அம்பிகையின் திருப்பெயர். பல திருப்பதிகங்களுள் இறைவனுக்கும் 
இறைவிக்கும் அக்காலத்தில் வழங்கிய திருப்பெயர்களைக் குறித்தல் மூவர் இடத்தும் உண்டு. 
கரும்பு - வண்டு.

    Oh Lord Civa! You are not to suffer the killing disease of karma. You have no birth,
You have no death, You have only eternity. You are pleased to bear on one half of Your body 
goddess Umaa whose words are sweeter than sugarcane. You have adorned Your hair with cassia flowers 
which bloom on hearing the humming of bees around them. You have manifested Yourself in 
Thirup-puram-bayam.

1791.     அனற்படுதடைக்கையவரெத்தொழிலரேனும் 
    நினைப்புடைமனத்தவர்வினைப்பகையுநீயே 
    தனற்படுசுடர்ச்சடைதனிப்பிறையொடொன்றப் 
    புனற்படுகிடைக்கையைபுறம்பயமமர்ந்தோய்.        6

    அனல் படு தடைக்கையவர், எத்தொழிலரேனும், 
    நினைப்பு உடை மனத்தவர் வினைப்பகையும் நீயே; 
    தனல் படு சுடர்ச் சடை தனிப் பிறையொடு ஒன்றப் 
    புனல் படு கிடைக்கையை - புறம்பயம் அமர்ந்தோய்!

    anal paTu taTaikkaiyavar, et tozilarEnum, 
    ninaippu uTai manattavar vinaippakaiyum nIyE; 
    tanal paTu cuTarc caTai tanip piRaiyoTu onRap 
    punal paTu kiTaikkaiyai-puRampayam amarntOy!

பொருள்:     தீ வளர்க்கும் நீண்ட கையை உடைய அந்தணர்கள் உன்னையே என்றும் 
நினைப்பவர்கள் ஆவார்கள். அவர் எத்தொழிலை மேற்கொண்டவர் ஆயினும் அவர்தம்  
தீவினைகட்குப் பகையாய் இருந்து தீர்ப்பன் நீயே. தீக்கொழுந்து போன்ற ஒலி பொருந்திய 
சடையில் தனித்த பிறைச் சந்திரனோடு பொருந்தக் கங்கையை கிடக்குமாறு செய்துள்ளவர் 
சிவபெருமான். திருப்புறம்பயத்தலத்துள் உறைபவரும் அவரே ஆவார்.

குறிப்புரை:     அனல்படு தடக்கையர் - செந்தீ வளர்க்கும் கையுடைய அந்தணர். எரியோம்புஞ் 
சிறப்பர் (தி.1 ப.80 பா.2) வினைப்பகை - வினைக்குப் பகைவன். தனல் - தணல். புனல் - கங்கை. 
கிடக்கையை--கிடத்தலை உடையாய்.

    Oh Lord Civa! The scholars do their daily ritual of augmenting a sacred fire 
as one of the duties of the Brahminical householder. Their hands are very long. 
They always think of You in their mind and praise You. You are the enemy of the evil 
effects of previous births of those devotees and You sustain them, whatever their 
occupation might be. You have that beautiful sparkling fire like red matted hair on which 
that incomparable crescent moon lies merging with the Ganges. You are there in 
Thirup-puram-bayam.

1792.     மறத்துறைமறுத்தவர்தவத்தடியருள்ளம் 
    அறத்துறையொறுத்துனதருட்கிழமைபெற்றோர் 
    திறத்துளதிறத்தினைமதித்தகலநின்றும் ' 
    புறத்துளதிறத்தினைபுறம்பயமமர்ந்தோய்.        7

    மறத்துறை மறுத்தவர், தவத்து அடியர், உள்ளம் 
    அறத்துறை ஒறுத்து உனது அருள்கிழமை பெற்றோர், 
    திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும், 
    புறத்து உள திறத்தினை - புறம்பயம் அமர்ந்தோய்!

    maRattuRai maRuttavar, tavattu aTiyar, uLLam 
    aRattuRai oRuttu unatu aruLkizamai peRROr, 
    tiRattu uLa tiRattinai matittu akala ninRum, 
    puRattu uLa tiRattinai--puRampayam amarntOy!

பொருள்:     சத்துவ குணம் நிறைந்த அடியவர் உள்ளத்துள் பொருந்தியவன் சிவபெருமான்! 
அருளைத் தவிர அறப்பயன்களும் வேண்டாவாம் என வாழும் உரிமை பெற்றோர்  உள்ளத்துள் 
பொருந்தியவனும் நீயே. சிவஞானியர்களின் திறத்திற்குத் தக்கபடி பொருந்தியும் வேறாகியும் 
விளங்குபவனும் நீயே. திருப்புறம்பயம் தலத்தில் உறைபவனும் அவனே ஆவான்.

குறிப்புரை:     மறத்துறை - பாபமார்க்கம். மறுத்தவர் - வேண்டாதார். தவத்து அடியர் - தவத்தை 
உடைய அடியவர். அறத்துறை -  ஒறுத்து- புண்ணிய மார்க்கத்தையும் கடிந்து.  இருவினை யொப்புடைமை 
குறித்தபடி. அருட்கிழமை -  சிவஞானத்திற்கு உரியராந்தன்மை. திறம்- சரியை முதலிய நான்கு திறங்கள். 
சரியையாளர் திறத்திற்குத் தக்கவாறு அருள் செய்யும் இறைவனது திறத்தைக் குறித்தபடி. மதித்து அகல 
நின்றும் புறத்து உள நிறத்தினை என்பது இறைவனது ஒன்றாய் வேறாய் உடனாயிருக்கும் மூன்று 
இயல்புகளுள் வேறாய் நிற்பதைக் குறித்தது.

    Oh Lord Civa! You dwell in the hearts of devotees who with balanced minds, 
follow the life of penance, defying sinful ways. You dwell also in the hearts of those 
who defy even the blessed state of penance and virtue since they believe in Your grace 
for a blanaced life. Based on the capacity of Your devotees You become one with them or 
appear different from them. You are the one who resides in Thirup-puram-bayam.

1793.     இலங்கையரிறைஞ்சிறைவிலங்கலின்முழங்க 
    உலங்கெழுதடக்கைகளடர்த்திடலுமஞ்சி 
    வலங்கொளஎழுந்தவன்நலங்கவினஅஞ்சு 
    புலங்களைவிலங்கினைபுறம்பயமமர்ந்தோய்.        8

    இலங்கையர் இறைஞ்சு இறை, விலங்கலில் முழங்க 
    உலம் கெழு தடக்கைகள் அடர்த்திடலும், அஞ்சி, 
    வலம் கொள எழுந்தவன் நலம் கவின, அஞ்சு 
    புலங்களை விலங்கினை - புறம்பயம் அமர்ந்தோய்!

    ilagkaiyar iRainjcu iRai, vilagkalil muzagka 
    ulam kezu taTakkaikaL aTarttiTalum, anjci, 
    valamkoLa ezuntavan nalam kavina, anjcu 
    pulagkaLai vilagkinai--puRampayam amarntOy!

பொருள்:     இலங்கை வேந்தனாகிய இராவணன் கயிலை மலையை எடுத்தபோது கதறச்
செய்தவர் சிவபெருமான். அவனது வலிமை மிக்க கைகளை நெரித்தவர் சிவபெருமான்.
அஞ்சா உளங்கொண்ட அவனையும் அஞ்சுமாறு செய்தவர் சிவபெருமான். இறுதியில் அவனது 
ஆணவத்தை அடக்கி வழிபடச் செய்தவர் சிவபெருமான். திருப்புறம்பயத்துள் கோயில் கொண்டு 
இருப்பவரும் அவரே.

குறிப்புரை:     இலங்கையர்- இலங்கையில் வாழ்ந்தவர்.  இறைஞ்சு இறை- வணங்கும் அரசனாகிய
 இராவணன். விலங்கலில்- கயிலையை எடுக்குந் திறத்தில். உலம் -திரண்ட கல்லை.கெழு - ஒத்த. 
கவின்- அழகு செய்ய. அஞ்சு - அஞ்சுகின்ற. ஐம்புலன் எனலுமாம். 

    Raavanan, the king of Sri Lanka was worshipped by all its citizens. He was the 
greatest and the mightiest warrior in the world and a staunch follower of Lord Civan. 
This famous king, due to egoism, once tried to lift mount Kailash with his broad and 
strong shoulders and hands. Oh Civa! You subdued his strength. He then cried and prayed 
for clemency. You suppressed him and his vanity. Thereafter You graced him and gave him 
a sacred sword and longevity. Oh Civa! You subdued and kept his five senses of threatening 
nature under Your control. You are there in Thirup-puram-bayam.

1794.     வடங்கெடநுடங்குணஇடந்தவிடையல்லிக் 
    கிடந்தவனிருந்தவனளந்துணரலாகார் 
    தொடர்ந்தவருடம்பொடுநிமிர்ந்துடன்வணங்கப் 
    புடங்கருள்செய்தொன்றினைபுறம்பயமமர்ந்தோய்.        9

    வடம் கெட நுடங்குண இடந்த இடை அல்லிக் 
    கிடந்தவன், இருந்தவன், அளந்து உணரல் ஆகார் 
    தொடர்ந்தவர்,உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க, 
    புள் தங்கு அருள்செய்து ஒன்றினை - புறம்பயம் அமர்ந்தோய்!

    vaTam keTa nuTagkuNa iTanta iTai allik 
    kiTantavan, iruntavan, aLantu uNaral AkAr 
    toTarntavar, uTampoTu nimirntu, uTan vaNagka, 
    puL tagku aruLceytu onRinai--puRampayam amarntOy!

பொருள்:     ஆலிலையில் கிடந்த திருமாலும் தாமரை மலரில் இருந்த பிரமனும் ஆணவத்தால்     
அடிமுடி தேடிய பொழுது இருவரும் அறிய முடியாநிலையில் ஒளிவுருவாய் நின்றவர் சிவபெருமான். 
இருவரும் ஆணவம் அடங்கப் பெற்று வணங்கியபோது அருள்புரிந்தவர் சிவபெருமான். திருப்புறம்பயத்துள் 
கோயில் கொண்டு இருப்பவரும் அவரே ஆவார்.

குறிப்புரை:     வடம் -ஆலமரம், இங்கு ஆலிலையை உணர்த்திற்று. துடங்கு உள - அசைவுள்ள. தூங்க
என்றபடி. இடந்த -பெயர்ந்த. இடை அல்லி - கொப்பூழிடையில். பூத்த -  (அகவிதழையுடைய) தாமரையோடு, 
கிடந்தவன் - திருமால். இருந்தவன்- அம்மலர்மேல் இருந்த பிரமன். புடம் -மறைப்பு. கருள் - இருள். 
இருள் மறைக்கப் பட்டாற்போல (ஒளிப்பிழம்பாய் இருந்தும் இருவரும் அடிமுடி காணாது) அறியாமையான் 
மறைக்கப்பட்டார்கள். 'கருள்தரு கண்டத்து எம் கயிலையார்' (தி. 3 ப. 109 பா.4). புடங்கருள் செய்து - புள்தங்க 
அருள் செய்து எனப்பிரித்துக் கருடப்புள், அன்னப்புள் இரண்டின் மேலும் தங்க அருள் செய்து எனலும் ஆம். 
பெயரெச்சத்து அகரம் தொக்கது. புள்தங்கு- புட்டங்கு என  இரட்டிக்காதது. எதுகை நோக்கிற்றாம். 
தி. 2 ப. 92 பா 1 காண்க. 'புட்டன் பேடையொடாடும் பூம்புகலூர்த் தொண்டர் போற்றி வட்டஞ்சூழ்ந்தடி 
பரவும் வர்த்த மானீச்சரத்தாரே' (தி. 2 ப. 92 பா. 21) என்பதில் புள் + தன்= புட்டன் என்று புணர்ந்தமையால். 
இங்கும் புள் தங்கு என்பனவற்றின் புணர்ச்சி எனக் கொள்வதில் தடை இராது.

    Vishnu the demigod who takes his rest on a banyan leaf, Brahma, another demigod 
who had his birth in the lotus of Vishnu's navel, they both did not realise Your greatness. 
They both tried to see Your supreme head and holy feet, by displaying the form of a swine 
and swan. They failed. Later they worshipped You with their original posture. You then 
graced them and gave them garuda and the swan as their conveyance birds of vehicles. 
He also commanded them gracefully to do the duty of creation and sustentation to Brahma 
and Vishnu respectively.

1795.     விடக்கொருவர்நன்றெனவிடக்கொருவர்தீதென 
    உடற்குடைகளைந்தவருடம்பினைமறைக்கும் 
    படக்கர்கள்பிடக்குரைபடுத்துமையொர்பாகம் 
    அடக்கினைபுறம்பயமமர்ந்தவுரவோனே.        10

    விடக்கு ஒருவர் நன்றுஎன, விடக்கு ஒருவர் தீது என,
     உடற்கு உடை களைந்தவர், உடம்பினை மறைக்கும் 
    படக்கர்கள்,பிடக்குஉரை படுத்து, உமை ஒர்பாகம் 
    அடக்கினை - புறம்பயம் அமர்ந்த உரவோனே.

    viTakku oruvar nanRu ena, viTakku oruvar tItu ena, 
    uTaRku uTai kaLaintavar, uTampinai maRaikkum 
    paTakkarkaL, piTakku urai paTuttu, umai orpAkam 
    aTakkinai-puRampayam amarnta uravOnE!

பொருள்:     சமணரும் சாக்கியரும் தமக்குள்ளேயே மாறுபாடு கொண்டு ஊன் நல்லது எனவும் 
தீயது எனவும் கூறிக் கொள்வர். உடம்பினை மறைக்கும் உடையும் வேண்டா எனத் திரியும் திகம்பரர்கள். 
அவர்களின் தீமொழிகளை ஏற்றுக் கொள்ளாதீர். உமையவளை உடம்பின் ஒரு பாகமாகக் கொண்டு 
திருப்புறம்பயத்துள் அமர்ந்த இறைவனையே வணங்குங்கள்.

குறிப்புரை:     விடக்கு- ஊன். ஒருவர் நன்றென்றும்- தேரையும். தீதென்னும் சமணரையும் 
குறித்ததாகும். (உடற்கு உடைகளைந்தவர், திகம்பர சைனர்) படக்கர்கள்-  உடையுடுத்தோர். படக்கு- உடை. 
பிடக்கு உரை - பிடக நூல்மொழி 'பிடக்கே உரைசெய்வார்’ (தி. 1 ப. 13 பா. 19). புத்தர்களுடைய திரிபிடகம்.

    Oh Lord Civa! You shared half of Your body with our goddess Umaa. You never 
cared for the false words of the Jains and the Buddhists. Some of them say meat eating 
is good. Others say it is bad. A group called Digambaras, prefer to be nudes; others 
cover their body with dress. Thus there is contradiction among themselves.  Oh Lord! 
You have manifested Yourself in Thirup-puram-bayam. 

1796.     கருங்கழிபொருந்திரைகரைக்குலவுமுத்தம் 
    தருங்கழுமலத்திறைதமிழ்க்கிழமைஞானன் 
    கரும்பவிழ்புறம்பயமமர்ந்ததமிழ்வல்லார் 
    பெரும்பிணிமருங்கறஒருங்குவர் பிறப்பே.        11

    கருங்கழி பொரும் திரை கரைக் குலவு முத்தம் 
    தரும் கழுமலத்து இறை - தமிழ்க் கிழமை ஞானன் - 
    சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார், 
    பெரும் பிணி மருங்கு அற, ஒருங்குவர், பிறப்பே.

    karugkazi porum tirai karaik kulavu muttam 
    tarum kazumalattu iRai-tamizk kizamai njAnan- 
    curumpu aviz puRampayam amarnta tamiz vallAr, 
    perum piNi marugku aRa, orugkuvar, piRappE.

பொருள்:     உப்பங்கழிகள் நிறைந்ததும் பேரலைகளால் முத்துக்கள் ஒதுங்கப் பெறுவதுமாகிய 
தலமே கழுமலமாம். அங்கு அவதாரம் செய்தவரே தமிழுக்கு உரிமை பூண்ட ஞானசம்பந்தப் பெருமான் 
ஆவார். அவர் திருப்புறம்பயத்திறைவனைப் போற்றி, பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். அந்தப் பாடல்களை
 அன்புடன் பாடுபவர்கள் பிணிநீங்கப் பெறுவர். பிறவா நிலையும் உறுவர்.

குறிப்புரை:     கழி - உப்பளம். கரைக்குலவு முத்தம்- கரைமேல் விளங்கும் முத்து. கழுமலத்து இறை -
காழிவேந்தர். அமர்ந்த தமிழ் - விரும்பிப் பாடிய இப்பதிகம். மருங்கு அற - இருந்த இடமும் தெரியாது ஒழிய. 
பிறப்பு ஒருங்குவர் - பிறப்பு ஒழியப் பெறுவர். ஒருங்குவது பிறப்பில் வினை. பிறவி ஒருங்கப் பெறுவது 
இத்தமிழ் வல்லார் வினை. அப்பிறப்பு ஒருங்கப் பெறுவர் எனற்பாலது பிறவி ஒருங்குவர் எனப்பட்டது. 
நோயொழிவர், காலொடிவர் என்பவை போல்வது.

    Our saint Thiru-gnana-Sambandar hails from Kazhumalam. He is the prime head of the 
citizens of this place. Here the saltpans contain a good number of pearls brought by the big 
waves of the sea nearby. Thiru-gnana-Sambandar has great respect for and heritage of Tamil
language. He sang sacred songs on the god who has manifested Himself in Thirup-puram-bayam 
where the bees hum music always. Those devotees who are well versed in these Tamil songs of 
Thiru-gnana-Sambandar will have no inflicting diseases. And more than that they will have 
no rebirth at all.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            30ஆம் பதிகம் முற்றிற்று
            End of 30th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

பதிகத் தொடர் எண்: 167                பதிக எண்: 31

31. திருக்கருப்பறியலூர்                31. THIRUK-KARUP-PARIYALOOR

பண் : இந்தளம் -வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    திருக்கருப்பறியலூர் என்னும் இத்திருத்தலமானது வைத்தீசுவரன்கோயில் தொடர் வண்டி
 நிலையத்திற்கு வடமேற்கே 7.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தலைஞாயிறு என வழங்கப்பெறுகிறது.
மயிலாடுதுறையிலிருந்தும்  பந்தணைநல்லூர், வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்தும் செல்லப் பேருந்து
வசதிகள் உள்ளன.

    ஊரின்பெயர் கருப்பறியலூராக இருப்பினும், கோயிலுக்குக் கொகுடிக்கோயில் என்று பெயர். 
முல்லைக் கொடியைத் தலக்கொடியாக உடைமையால் இப்பெயர் பெற்றது என்பர் ஒரு சிலர். கோயில் 
அமைப்புப்பற்றி இப்பெயர் பெற்றது என்பது வேறுசிலர்.

    இறைவரது திருப்பெயர் குற்றம்பொறுத்தநாதர். ஒரு காலத்தில் இந்திரன் இறுமாப்புடன் 
கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். அவன் அதை 
அறிந்துகொள்ளாது வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து 
தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். அதைப் பொறுத்த காரணம்பற்றி இப்பெயர் பெற்றார். 
இறைவியாரது திருப்பெயர் கோல்வளைநாயகி. தீர்த்தம் இந்திரதீர்த்தம், 

    இக்கோயில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமானது. இவ்வூர் அந்தணர்களை இவ்வூர்த் தேவாரத்தில்,

    "பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப் போற்றிசைத்துப் பூசை செய்து 
    கையினா லெரியோம்பி மறைவளர்க்கு மந்தணர்தங் கருப்பறியலூர்" 

எனச் சிறப்பித்துக் கூறியுள்ளது, அம்பலவாணர் இயற்றிய புராணம் அச்சில் வந்துள்ளது.

பதிக வரலாறு

    திருநாரையூரை அருந்தமிழ் புனைந்து வழிபட்ட நாயனார், அடியார்களை வானுலகம் ஏற்றக் 
கற்றவனாகிய சிவபிரான் வீற்றிருக்குங் கருப்பறியலூர் அடைந்த பொழுது, பாடிப் பரவிய அடியவர் 
வினையை எளிதில் ஒழித்திடுமாறு பாடியருளியது இத்தமிழ்க் கிளவி.

            திருச்சிற்றம்பலம்

1797.     சுற்றமொடுபற்றவைதுயக்கறஅறுத்துக் 
    குற்றமில்குணங்களொடுகூடுமடியார்கள் 
    மற்றவரைவானவர்தம்வானுலகமேற்றக் 
    கற்றவனிருப்பதுகருப்பறியலூரே.        1

    சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து, 
    குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள் 
    மற்று அவரை வானவர் தம் வானுலகம் ஏற்றக் 
    கற்றவன் இருப்பது - கருப்பறியலூரே.

    cuRRamoTu paRRu avai tuyakku aRa aRuttu, 
    kuRRam il kuNagkaLoTu kUTum aTiyArkaL 
    maRRu avarai vAnavar tam vAn ulakam ERRak 
    kaRRavan iruppatu--karuppaRiyalUrE.

பொருள்:     நம்முடைய அகப்பற்று புறப்பற்றுக்களை நீக்க உதவுபவன் சிவபெருமான்! தூய 
அடியவர்களுக்கு வானுலக வாழ்வை அருள்பவன் சிவபெருமான். கருணை உடைய அவனே 
கருப்பறியலூர் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளான். 

குறிப்புரை:     சுற்றமொடு பற்று அவை -  (துணையும்) சுற்றமும் பற்றும் ஆகியவற்றை. இவ்வாறு 
கருமூலத்தைப் பறிப்பதால் கருப்பறியலூர் என்றாயிற்று. கலந்தவர் கருப்பறியல் என ஆசிரியரே 
இப்பதிக முடிவில் ஊர்ப்பெயர்ப் பொருளை உணர்த்தியது உணர்க. துயக்கு - அறிவு வேறுபடல். 
சிவபிரானையே அறியும் அறிவு வேறுபடாதவாறு சுற்றம் முதலியவற்றை அறுத்த என்றபடி. 
மற்று அசை - அடியார்களாகிய அவரை என்க. வானுலகம் - வீட்டுலகு. கற்றவன் - இயல்பாகவே 
உணர்ந்த சிவன்.

    Behold! It is Civan, the Lord of Thiruk-karup-pariyaloor. In this city, 
sincere devotees are many in number. They have snapped their ties of attachments 
with their kith and kin and have shed their life desires entirely. They are 
faultless people, full of virtues, are bent upon comprehending the Lord in the 
widest way without any wordly deviation. They all join, go to the temple, and 
worship on our Lord's holy feet. Kutram-poruth-tha-naathar, our Lord who is gratified 
and naturally knows to arrange to lift these devotees to heaven, the world of devaas, 
is manifested in Thiruk-karup-pariyaloor.

1798.     வண்டணைசெய்கொன்றையதுவார்சடைகள்மேலே 
    கொண்டணைசெய்கோலமதுகோளரவினோடும் 
    விண்டணைசெய்மும்மதிலும்வீழ்தரவொரம்பால் 
    கண்டவனிருப்பதுகருப்பறியலூரே.        2

    வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே 
    கொண்டு; அணைசெய் கோலம்அது, கோள் அரவினோடும்; 
    விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர,ஒர் அம்பால்; 
    கண்டவன் இருப்பது - கருப்பறியலூரே.

    vaNTu aNaicey konRai atu vAr caTaikaL mElE 
    koNTu; aNaicey kOlam atu, kOL aravinOTum; 
    viNTu aNai cey mummatilum vIztara, or ampAl;             
    kaNTavan iruppatu-karuppaRiyalUrE.

பொருள்:     வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் மாலையைத் தன் தலையில் 
சூடிக்கொள்பவன் சிவபெருமான்! வலிமைமிக்க பாம்பினை அணிந்து கொள்பவன் 
சிவபெருமான்! முப்புரங்களை அழிக்க ஓரம்பினைத் தொடுத்தவன் சிவபெருமான்! 
அவன் கோயில் கொண்டிருப்பது திருக்கருப்பறியலூர் திருத்தலமே என்க. 

குறிப்புரை:     வண்டு அணைசெய்- வண்டுகள் அணைதலைச் செய்கின்ற. கோலம்- திருக்கோலம்.
அழகு. கோள் - துன்பம், வலிமையுமாம். விண்டு - (இடம்) விண்டு. நீங்கி, விள்ளல் உற்று. 

    Behold! It is Civan, the Lord of Thiruk-karup-pariyaloor. He has beautified His
long matted hair with cassia flowers, embraced by bees inside. Along with this He allows 
the venomous snake also on His matted hair. With a single shot He felled down the three 
flying fortresses of the asuraas which fell down on the earth. This our Lord manifests 
Himself in Thiruk-karup-pariyaloor.

1799.     வேதமொடுவேதியர்கள்வேள்விமுதலாகப் 
    போதினொடுபோதுமலர்கொண்டுபுனைகின்ற 
    நாதனெனநள்ளிருண்முனாடுகுழைதாழும் 
    காதவனிருப்பதுகருப்பறியலூரே.        3

    "வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆகப் 
    போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற 
    நாதன்' என, நள்இருள் முன்ஆடு, குழை தாழும் 
    காதவன் இருப்பது கருப்பறியலூரே.

    "vEtamoTu vEtiyarkaL vELvi mutal Akap 
    pOtinoTu pOtu, malar, koNTu punaikinRa 
    nAtan" ena, naL iruL mun ATu, kuzai tAzum 
    kAtavan iruppatu--karuppaRiyalUrE.

பொருள்:     மறையவர்கள் ஓதும் மறைகளில் பொருந்தியவர் சிவபெருமான்! அவர்கள் செய்யும் 
வேதச் சடங்குகளிலும் உறைபவன் சிவபெருமான்! அவர்கள் மலர் தூவிச் செய்யும் வழிப்பாட்டில் 
நிறைந்திருப்பவன் சிவபெருமான்! அடியவர்களால் நாதன் என்று போற்றப் பெறுபவன் சிவபெருமான்! 
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் சிவபெருமான், அசையும் காதணியை குழைக்காதில் 
அணிந்தவன் சிவபெருமான். கருப்பறியலூரிலும் கோயில் கொண்டிருப்பவன் அவனே என்க.

குறிப்புரை:     முதலாக- முதலிய பல நற்செயல்களிலும். போதினொடு - (காலம்பெறப்) பொழுதொடு. 
போது - மலரும் பருவத்து. மலர்- பூ. குழைதாழும் காதவன் - குழைக்காதன் என்னும் திருப்பெயரைக் குறித்தது.

    Behold! It is Civan, the Lord of Thiruk-karup-pariyaloor for whom the Vedic scholars 
recite the Vedas and light the sacrificial fire almost daily. Then in the early hours of the day, 
they collect the buds and flowers of fine quality and strew them on our Lord and worship Him. 
He is our God and Master whose earing suspends from His tender ear and is visible even in 
midnight darkness. This Lord, manifested in Thiruk-karup-pariyaloor, is the same Civan.

1800.     மடம்படுமலைக்கிறைவன்மங்கையொருபங்கன் 
    உடம்பினைவிடக்கருதிநின்றமறையோனைத் 
    தொடர்ந்தணவுகாலனுயிர்காலவொருகாலால் 
    கடந்தவனிருப்பதுகருப்பறியலூரே.        4

    மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒரு பங்கன், 
    உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத் 
    தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் 
    கடந்தவன், இருப்பது - கருப்பறியலூரே.

    maTam paTu malaikku iRaivan magkai orupagkan, 
    uTampinai viTak karuti ninRa maRaiyOnait 
    toTarntu aNavu kAlan uyir kAla oru kAlAl         
    kaTantavan, iruppatu--karuppaRiyalUrE.

பொருள்:     முனிவர்கள் உறையும் மடங்கள் நிறைந்த மலை அரசனின் மகளாகிய அழகிய
உமையவளை இடபாகத்தில் கொண்டவன் எம்பெருமான்! மார்க்கண்டேயனைக் காக்க எமனைக் 
காலில் உதைத்தவன் எம்பெருமான்! அப்பெருமான் பொருந்தி இருக்கும் இடம் கருப்பறியலூர் ஆகும்.

குறிப்புரை:     மடம்- அழகு. துறவிகள் உறையும் இடம். பல உடையதால் மடம் படு மலை என்று 
இமயத்தினைக் குறித்தல் பொருந்தும். இறைவன் - அரசன். மறையோன் - மார்க்கண்டேய முனிவன்,
அணவு - கிட்டிய. காலன் - யமன். கால் - கக்க. கடந்தவன் - கடக்க வுதைத்தவன்.

    Behold! It is Civan, the Lord of Thiruk-karup-pariyaloor. He shares His left side body 
with beautiful Umaa, daughter of the king of the Himalayan mountain range, a place of scenic beauty 
and a dwelling place for holy saints. Maarkandeyan, the boy of sixteen years, realised the fact 
that his soul would leave his body on a particular day. On that day, He worshipped our Lord 
fervently embracing Him in the temple. At that moment, the god of death, Kaalan went near 
Maarkandeyan to capture his soul. Instantly, our Lord kicked Kaalan to death with His right leg. 
This Lord has manifested Himself in Thiruk-karup-pariyaloor. 

1801.     ஒருத்தியுமையோடுமொருபாகமதுவாய
    நிருத்தனவன்நீதியவன்நித்தன்நெறியாய 
    விருத்தனவன்வேதமெனஅங்கமவையோதும் 
    கருத்தவனிருப்பதுகருப்பறியலூரே.        5

    ஒருத்தி உமையோடும் ஒரு பாகம்அதுஆய 
    நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய 
    விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஒதும் 
    கருத்தவன், இருப்பது - கருப்பறியலூரே.

    orutti umaiyOTum orupAkam atu Aya 
    niruttan avan, nIti avan, nittan, neRi Aya 
    viruttan avan, vEtam ena agkam avai Otum 
    karuttavan, iruppatu--karuppaRiyalUrE.

பொருள்:     உமையவளை உடம்பின் ஒரு பாகமாகக் கொண்டு திருநடனம் புரிபவன் எம்பெருமான்! 
நீதியாக விளங்குபவன் எம்பெருமான்! நித்தியமானவன் எம்பெருமான்! பழம்பொருளாக விளங்குபவன் 
எம்பெருமான்! வேதமாகவும் அதன் அங்கங்களாகவும் விளங்குபவன் எம்பெருமான்! அவனே,கருப்பறியலூரில் 
கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     நிருத்தன் - கூத்தன். நித்தன் - அழியாதவன். விருத்தன் - முதியோன். வேதம் அங்கம் - 
நான்மறையும் ஆறங்கமும், கருத்தவன் - தலைவன். கருத்துள் இருப்பவன் (தி. 6 ப.83 பா.5).

    Behold! It is Civan, the Lord of Thiruk-karup-pariyaloor. He shares half of His body 
with our incomparable goddess Umaa. He performs the cosmic dance along with her. He is the 
embodiment of justice. He is eternal. He is the epitome of virtue and the most ancient. 
He is the author of the four Vedas and the six sub-items of the Vedas; He also recites 
them whenever He likes them. This Lord has manifested Himself in Thiruk karup-pariyaloor.

1802.     விண்ணவர்கள்வெற்பரசுபெற்றமகள்மெய்த்தேன் 
    பண்ணமருமென்மொழியினாளையணைவிப்பான் 
    எண்ணிவருகாமனுடல்வேவஎரிகாலும் 
    கண்ணவனிருப்பதுகருப்பறியலூரே.        6

    விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்ற மகள், மெய்த் தேன் 
    பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான் 
    எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும் 
    கண்ணவன் இருப்பது - கருப்பறியலூரே.

    viNNavarkaL veRpu aracu peRRa makaL, meyt tEn 
    paN amarum menmoziyinALai, aNaivippAn 
    eNNi varu kAman uTal vEva, eri kAlum 
    kaNNavan iruppatu--karuppaRiyalUrE.

பொருள்:     மலையரசன் பெற்ற மகளே உமையவள் அவள் பண் போலும் இன்மொழி பேசுபவள். 
அவளை இறைவனுக்கு மணம் செய்து கொடுக்க தேவர்கள் விரும்பினார்கள். தேவர்கள் பொருட்டு 
எம்பெருமானின் யோகநிலையைக் கலைக்க முயன்றான் மன்மதன்.  அவன் ஆணவம் கொண்டு 
செயல்பட்டதால், அவனை எம்பெருமான் நெற்றிக்கண்ணால் எரித்து அருளினான். அவர் கோயில் 
கொண்டிருப்பது திருக்கருப்பறியலூரில் என்க.

குறிப்புரை:     விண்ணவர்களுக்கு, வெற்புக்கு அரசு எனக் கூட்டுக. எரிகாலும் கண் - நெருப்பைக் 
கக்கும் கண். இது பெருமானது வெகுண்ட நிலையைக் குறித்தது. அணைதல் அம்பிகையது. அணைவித்தல் 
ஆண்டவனது. தேன்மொழி பண்மொழி என்றவாறு.

    Behold! It is Civan, our Lord of Thiruk-karup-pariyaloor. The devaas and all 
celestials desired that our Lord should be united with the daughter of the king of the 
Himalayas who talks pleasing words like mystic. He opened His third eye, which emitted         
fire to kill the god of love, Manmathan, for his misdeed and arrogance. This Lord has 
manifested Himself in Thiruk-karup-pariyaloor.

1803.     ஆதியடியைப்பணியஅப்பொடுமலர்ச்சேர் 
    சோதியொளிநற்புகைவளர்க்குவடுபுக்குத் 
    தீதுசெயவந்தணையுமந்தகனரங்கக் 
    காதினனிருப்பதுகருப்பறியலூரே.        7

    ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர் 
    சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத் 
    தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக் 
    காதினன் இருப்பது - கருப்பறியலூரே.

    Ati aTiyaip paNiya, appoTu, malarc cEr 
    cOtioLi, nal pukai, vaLark kuvaTu pukkut 
    tItu ceya vantu aNaiyum antakan aragkak 
    kAtinan iruppatu--karuppaRiyalUrE.

பொருள்:     இறைவனே ஆதி நாயகன் ஆவான். அவனது திருவடியைப் புனித நீரால் அபிடேகம் 
செய்து, மலர் தூவி தூப தீபம் காட்டி வணங்கினான் மார்க்கண்டேயன்! அவனைக் கொல்ல வந்தான் 
காலன். அக்காலனைக் காலால் உதைத்தவர் எம்பெருமான். அவர் கோயில் கொண்டிருப்பது 
திருக்கருப்பறியலூரே ஆகும்.

குறிப்புரை:     அப்பு - சலம். சோதி ஒளி - தூபம். நற்புகை - தூமம். வளர்க் குவடு புக்கு - வளர்தலை 
உடைய கருப்பறியலூர்க் கோயில் கட்டுமலை மேலுள்ளதாதலின் அதனுள் புகுந்து. அரங்க - புடை பெயர். 
அழியவுமாம். காதினன் - ஈண்டு உதைத்தவன் என்னும் பொருட்டு.

    Behold! It is Civan, Lord of Thiruk-karup-pariyaloor. Maarkandeyan knew that our 
Lord Civan is the supreme deity and the source of all beings. He, therefore, took water, 
flowers, the lamp for light, incense for pleasant smoke and reached the temple Kokudik-kovil 
on the hard and tall mountain top and started his worship embracing our Lord's image of 
Civalingam. At that moment Kaalan, the god responsible for the final separation of souls, 
came near Maarkandeyan to capture his soul from his body. Our Lord instantly kicked,
with His right leg, Kaalan to die. This Lord is manifested in Thiruk-karup-pariyaloor.

1804.     வாய்ந்தபுகழ்விண்ணவரும்மண்ணவருமஞ்சப் 
    பாய்ந்தமர்செயுந்தொழிலிலங்கைநகர்வேந்தற் 
    கேய்ந்தபுயமத்தனையுமிற்றுவிழமேனாள்
    காய்ந்தவனிருப்பதுகருப்பறியலூரே.        8

    வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் 
    பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு 
    ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள் 
    காய்ந்தவன் இருப்பது - கருப்பறியலூரே.

    vAynta pukaz viNNavarum maNNavarum anjcap 
    pAyntu amar ceyum tozil ilagkai nakar vEntaRku
    Eynta puyam attanaiyum iRRu viza, mElnAL 
    kAyntavan iruppatu--karuppaRiyalUrE.

பொருள்:     புகழ்மிக்க விண்ணவர்களும் மண்ணவர்களும் அஞ்சுமாறு போர் 
புரிந்தவன்  இராவணன். இலங்கை அரசனாகிய அவன் கயிலாய மலையை எடுக்க முயன்றான்.
அப்போது அரக்கனது தோள் ஆற்றல் அழிய இறுத்தவரே எம்பெருமான். அவர் கோயில்
கொண்டிருப்பது திருக்கருப்பறியலூரில் என்க.

குறிப்புரை:     வாய்ந்த புகழை உடைய விண்ணவர் என்றும் மாறிக் கூட்டிப் புகழ் வாய்ந்த 
என்றும் கொள்ளலாம். இற்றுவிழ - ஒடிந்துவிழ. காய்ந்தவன் - சினந்தவன். ஏய்ந்த - பொருந்திய.

    Behold! It is Civan, Lord of Thiruk-karup-pariyaloor. Raavanan, the king of SriLanka 
was the mightiest warrior. He used to declare war and defeat all his enemies. The famous 
celestials as well the people on the earth shuddered to hear the name of Raavanan. However, 
our Lord Civan got wild and crushed Raavanan under the bottom of His mountain, and this 
resulted in the breakage of all his broad shoulders. This Lord manifests Himself in 
Thiruk-karup-pariyaloor.

1805.     பரந்ததுநிரந்துவருபாய்திரையகங்கை
    கரந்தொர்சடைமேன்மிசையுகந்தவளைவைத்து 
    நிரந்தரநிரந்திருவர்நேடியறியாமல் 
    கரந்தவனிருப்பதுகருப்பறியலூரே.             9

    பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை 
    கரந்து, ஒர் சடைமேல்-மிசை உகந்து அவளை வைத்து, 
    நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் 
    கரந்தவன் இருப்பது - கருப்பறியலூரே.

    parantatu nirantu varu pAy tiraiya kagkai 
    karantu, or caTaimEl-micai ukantu avaLai vaittu, 
    nirantaram nirantu iruvar nETi aRiyAmal
    karantavan iruppatu--karuppaRiyalUrE.

பொருள்:     விரிந்து பரந்து பெருகிவரும் கங்கையைத் தலையில் தாங்கி நிற்பவர் எம்பெருமான். 
பிரமனும் திருமாலும் மாறுகொண்டு நின்றபோது ஒளி உருவில் அடிமுடி அறிய முடியா நிலையில் நின்றவரே 
எம் பெருமான்! அவர் கோயில் கொண்டிருக்கும் தலமே கருப்பறியலூர் என்க.

குறிப்புரை:     நிரந்து - வரிசையாக. பரந்து -பரவி. சடைமேல் மிசை-  சடையினது. மேலிடத்தில்.
நிரந்தரம் - எப்போதும். நேடி - தேடி.  கரந்தவன் - ஒளித்தவன். 

    Behold! It is Civan, the Lord of Thiruk-karup-pariyaloor. He controlled the surging 
Ganges river which rushed with tumultuous waves and concealed it in His matted hair. He happily 
welcomed the goodess of the river, Ganga Devi and has kept her on His head. He concealed Himself 
too from Thirumaal and Brahma, the demigods, who were searching for Him for years. This Lord 
manifests Himself in Thiruk-karup pariyaloor.

1806.     அற்றமறையாவமணராதமிலிபுத்தர் 
    சொற்றமறியாதவர்கள்சொன்னசொலைவிட்டுக் 
    குற்றமறியாதபெருமான்கொகுடிக்கோயில் 
    கற்றெனவிருப்பதுகருப்பறியலூரே.        10

    அற்றம் மறையா அமணர், ஆதம்இலி புத்தர், 
    சொற்றம் அறியாதவர்கள் - சொன்ன சொலை விட்டு, 
    குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில் 
    கற்றென விருப்பது - கருப்பறியலூரே.

    aRRam maRaiyA amaNar, Atam ili puttar,-- 
    coRRam aRiyAtavarkaL-conna colai viTTu, 
    kuRRam aRiyAta perumAn kokuTik koyil 
    kaRRena iruppatu--karuppaRiyalUrE.

பொருள்:     உடையால், உடலை மறைக்காமல் உலவுபவர்களே சமணர்கள், புத்தர்கள். அவர்கள் கூறும் 
குற்றம் நிறைந்த சொற்களைக் கேட்டு நடக்காதீர். குற்றமற்ற எம்பெருமான் திருக்கருப்பறியலூரில் கோயில் 
கொண்டுள்ளார். அவனது திருவடிகளை வணங்கி உய்வு பெறுங்கள்.

குறிப்புரை:     அற்றம் மறையா அமணர் - மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைக்காத சமணர் 
‘அற்றம் மறைப்பதுமுன் பணியே' என்றதுணர்க. சொற்றம் - சொல்லும் சொற்கள். சொல்+து+அம். 
கொகுடி- ஒருவகை முல்லை. குற்றமறியாத பெருமான்- இத்தலத்துப் பெருமான் திருப்பெயர். 
கற்றென்- நிலையாக. கல்+து +கற்று கல்லைப் போன்று உறுதியானது.

    Behold! It is Civan, the Lord of Thiruk-karup-pariyaloor. The Jain monks roam 
about the city without properly covering their body. The Buddhists have no regard for 
ultimate knowledge and do not try to acquire it. Oh! Ye devotees, do not listen to them. 
Get away from them. Follow our Lord who is the only God of blemishlessness. He is
manifested in Kokudi temple in Thiruk-karup-pariyaloor. Go to His temple and worship Him.

1807.     நலந்தருபுனற்புகலிஞானசம்பந்தன் 
    கலந்தவர்கருப்பறியல்மேயகடவுள்ளைப் 
    பலந்தருதமிழ்க்கிளவிபத்துமிவைகற்று 
    வலந்தருமவர்க்குவினைவாடலெளிதாமே.        11

    நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன், 
    கலந்தவர் கருப்பறியல் மேய கடவு(ள்)ளைப் 
    பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும்இவை கற்று, 
    வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.

    nalam taru punal pukali njAnacampantan, 
    kalantavar karuppaRiyal mEya kaTavu(L)Laip 
    palam taru tamizkkiLavi pattum ivai kaRRu, 
    valam tarumavarkku vinai vATal eLitu AmE.

பொருள்:     நலன் தரும் நீர்வளம் மிக்க சீர்காழிப் பதியில் அவதரித்தவரே ஞானசம்பந்தப் 
பெருமான் ஆவார். அவர் கருப்பறியலூரில் கோயில் கொண்டுள்ள எம்பெருமான்மீது பத்து 
தமிழ்ப்பாடல்களைப் பாடி அருளியுள்ளார்.  அப்பாடல்களை அன்புடன் பாடிடும் அடியவர்களின்               
வினைகள் எளிதாக நீங்கும் என்க. 

குறிப்புரை:     கடவுள்ளை - கடவுளை (விரித்தல் விகாரம்).  பலம் -  பலன். வலந்தருதல்- 
உயிர்க்கு-  வன்மையை அளித்தல். திருக்கோயிலை வலம் வருதலுமாம். வினை வாடல் - கருப்பறிதல். 
'கலந்தவர் கருப்பறிதல்' என்ற தொடர் இத்திருத்தலத்தின் பெயர்ப் பொருளைக் குறித்தது. 
பறியல்மேய - பறியலில் மேவிய. 

    Our holy saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi, a holy place of pure and 
profuse water, providing richness to one and all. He sang on the Lord of Thiruk-karup-pariyaloor 
in chaste Tamil language, ten beneficial verses. Those who learn these ten songs and strengthen 
off their mind and repeat them often will easily see their evils of karma wiped off.

            திருச்சிற்றம்பலம்     
            THIRU-CH-CHITRAM-BALAM

            31ஆம் பதிகம் முற்றிற்று
            End of 31st Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 168                பதிக எண் : 32

32. திருவையாறு                    32.THIRU-VAI-YAARU

பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

பதிகத் தொடர் எண் 142ஐப் பார்க்க.

பதிக வரலாறு

பதிகத் தொடர் எண் 142ஐப் பார்க்க.

            திருச்சிற்றம்பலம்

1808.     திருத்திகழ்மலைச்சிறுமியோடுமிகுதேசர் 
    உருத்திகழெழிற்கயிலைவெற்பிலுறைதற்கே
    விருப்புடையஅற்புதரிருக்குமிடமேரார் 
    மருத்திகழ்பொழிற்குலவுவண்திருவையாறே.

    திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர், 
    உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே 
    விருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் - ஏர்ஆர் 
    மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே.

    tirut tikaz malaicciRumiyOTu miku tEcar, 
    urut tikaz ezil kayilaiveRpil uRaitaRkE 
    viruppu uTaiya aRputar, irukkum iTam--Er Ar 
    marut tikaz pozil kulavu vaN tiru aiyARE.

பொருள்:     செல்வம் பொருந்திய மலையரசனின் மகளே பார்வதி தேவியார். அவளை விரும்பி 
மணம் கொண்டவரே சிவபெருமான். அவர் கயிலாய மலையில் ஒளியுடன் வீற்றிருப்பார். அற்புதராகிய 
அவர் மணமிக்க சோலைகள் நிறைந்த திருவையாறு தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     திரு- அழகு. திகழ் - விளங்குகின்ற. மலைச்சிறுமி - இமாசல குமாரியாகிய பார்வதி 
தேவியார். தேசர் -ஒளிவடிவினர். உரு -வெண்மை உருவம். எழில் - அழகு. வெற்பு- மலை.
உயர்ச்சியிற்பிற எல்லாவற்றையும் வெல்லுங்காரணத்தாற் பெற்ற பெயர். ஏர்-அழகு. மரு -மணம்,
அற்புதர் இருக்குமிடம் திருவையாறு எனக்கூட்டுக. 7, 8 பாக்களில் கூறியபடி, வண்மை - கொடையாளர்,
ஈகையை உணர்த்துக.

    Behold! It is Civan, Lord of Thiru-vai-yaaru. His body is very bright 
and glowy. He is happily united with the most beautiful daughter of the Himalayan 
mountain who is called Paarvathi Devi. He dwells on the most beautiful white peaks 
of the Hiamalayan mountain. However, He is manifest also in the holy place of            
fertile fields called Thiru-vai-yaaru where sweet smelling flowers are plenty all over 
the fields. Here good philanthropists do live and worship our Lord, Iyaarappar. 
A good number of  Vedic scholars also live in this city. All of them are highly 
philanthropic and perform  daily spiritual rituals without fail. Thereafter, 
they go to the temple,praise our Lord Civan and worship His holy feet.

1809.     கந்தமரவுந்துபுகையுந்தலில்விளக்கேர் 
    இந்திரனுணர்ந்துபணியெந்தையிடமெங்கும் 
    சந்தமலியுந்தருமிடைந்தபொழில்சார 
    வந்தவளிநந்தணவுவண்திருவையாறே.        2

    கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர் 
    இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் - எங்கும் 
    சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார, 
    வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே.

    kantu amara untu pukai untal il viLakku Er 
    intiran uNarntu paNi entai iTam--egkum 
    cantam maliyum taru miTainta pozil cAra, 
    vanta vaLi nantu aNavu vaN tiru aiyARE.

பொருள்:     நறுமணமும் நறும்புகையும் சூழ்ந்த இடத்தில் ஒளிமயமாய் விளங்குபவர் சிவபெருமான். 
இந்திரன் அவரை உணர்ந்து பணி செய்த இடமே திருவையாறு திருத்தலம் ஆகும். அத்தலத்தில் சந்தன 
மரங்கள் நிறைந்த சோலைகள் நிறைந்துள்ளன. அவற்றில் பொருந்தி வந்த காற்றும் நன்மணத்தோடு 
வீசும் என்க.

குறிப்புரை:     கந்து - பற்றுக்கோடு. அமர- பொருந்த. உந்தல் - தூண்டல், செலுத்துதல். இல்- இல்லாத, 
விளக்கு ஏர் - விளக்கினது அழகை. பணி - பணிகின்ற. இந்திரனுணர்ந்தது செம்பொற் சோதியைப் போலும். 
இதன் முதலடியிற் குறித்த 'விளக்கேர்' என்பதன் உண்மை புலப்பட்டிலது. திருவையாற்றுப் புராணம் - 
பஞ்சநதிச் சருக்கம். பா. 15ல் உணர்த்தும் வரலாறு காண்க. சந்தம் - அழகு. சந்தனமுமாம். தரு - மரங்கள். 
வளி - காற்று. நந்து - நந்தவனம். அணவு - கிட்டும். பொருந்தும். எந்தையிடம் திருவையாறு எனக்கூட்டுக.

    Civan, the Lord of Thiru-vai-yaaru was realised as the Supreme Lord by Indiran 
and this king of the devaas and swargam served our Lord and worshipped Him. Our Lord has 
the complexion of the purest golden red. He has manifested Himself in the temple of 
Thiru-vai-yaaru, encircled by pleasant smoke and fragrance from the incense. The city is 
full of gorgeous gardens where sandal trees are many. The wind blowing along these gardens 
becomes pleasant, fragrant breeze because of the sandal trees. The city consists of many 
philanthropists who worship our Lord. The Vedic scholars of this place are also highly 
philanthropic. These scholars perform their spiritual rituals daily without fail. 
Our Lord's place is filled with pleasant breeze and pleasing people.

1810.     கட்டுவடமெட்டுமுறுவட்டமுழவத்தில் 
    கொட்டுகரமிட்டவொலிதட்டுவகைநந்திக் 
    கிட்டமிகநட்டமவையிட்டவரிடஞ்சீர் 
    வட்டமதிலுள்திகழும்வண்திருவையாறே.        3

    கட்டு வடம்எட்டும் உறு வட்டமுழவத்தில் 
    கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு 
    இட்டம் மிக, நட்டம் அவை இட்டவர் இடம் - சீர்
    வட்டமதிலுள்-திகழும் வண் திரு ஐயாறே.

    kaTTu vaTam eTTum uRu vaTTa muzavattil 
    koTTu karam iTTa oli taTTum vakai nantikku 
    iTTam mika, naTTam avai iTTavar iTam--cIr 
    vaTTamatiluL--tikazum vaN tiru aiyARE.

பொருள்:     வட்டமான முழவினை எட்டு வார்களால் கட்டியிருப்பர். அதனைத் தன் கரம் கொண்டு 
தட்டி இனிய ஓசையை எழுப்பி இசைப்பவர் நந்திதேவர் ஆவார். அம்முழவொலியின் தாளசதிக்கு ஏற்ப 
அவருக்கு பெருவிருப்பம் உண்டாகி நடனமாடுபவர் சிவபெருமான். அவர் விரும்பி உறையும் இடமே 
வட்டமான மதில்களால் சூழப்பெற்றதும் ,வன்றண்மையோர் வாழும் அழகிய திருவையாறு திருத்தலம் ஆகும்.

குறிப்புரை:     முழவம்- எட்டு வடத்தைக் கொண்டு கட்டப்பட்டது. வட்டமானது, நந்திதேவரால்
கொட்டப்படுவது. கரம்- கை. இடம் - விருப்பம். நட்டம் அவை இட்டவர் - திருக்கூத்து வகைகளை
 ஆடியவர் (சிவபெருமான்) இட்டவர் இடம் திருவையாறு என்க. சீர் வட்டம் இரண்டும் மதிலை 
விசேடித்தன. மதிலுள் திகழும் திருவையாறு.  வண்மை - வளத்தைக் குறித்தது. 

    Behold! It is Civan, Lord of Thiru-vai-yaaru. Nandi Devar creates pleasant music 
in his circular percussion instrument, with eight strings by beating it with his hands.
This musical sound and the cymbal harmony urge and inspire Lord Civa who is highly happy 
then to dance to its rhythm. Thiru-vai-yaaru which has fortifying walls all around the city 
is our Lord's place. Also here lives a large number of philanthropists who offer worship 
to our Lord Civan. A good number of Vedic scholars, highly philanthropic do a lot of 
charities to those people who are in need of help. All these scholars perform their 
daily spiritual rituals without fail. Thereafter, they go to the temple, praise our 
Lord Civan and worship His holy feet.

1811.     நண்ணியொர்வடத்தின்நிழல்நால்வர்முனிவர்க்கன் 
    றெண்ணிலிமறைப்பொருள்விரித்தவரிடஞ்சீர்த் 
    தண்ணின்மலிசந்தகிலொடுந்திவருபொன்னி 
    மண்ணின்மிசைவந்தணவுவண்திருவையாறே.        4

    நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர்முனிவர்க்கு, அன்று 
    எண்இலி மறைப்பொருள் விரித்தவர் இடம்-சீர்த் 
    தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி 
    மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே.

    naNNi or vaTattin nizal nAlvar munivarkku, anRu, 
    eN ili maRaipporuL virittavar iTam--cIrt 
    taNNin mali cantu akiloTu unti varu ponni 
    maNNin micai vantu aNavu vaN tiru aiyARE.

பொருள்:     கல்லால மரத்து அடியில் வீற்றிருந்து, சனகாதியர் முனிவர்கள் நால்வர்க்கும் 
நான்மறைப் பொருளைச் சொல்லாமல் விரித்து தெளிவுபடுத்தியவர் சிவபெருமான்.
அப்பெருமானே குளிர்ச்சி நிறைந்த சந்தனம், அகில் போன்ற மரங்களை அடித்து வருகின்ற 
பொன்னி நதிக்கரையில்  உள்ள அழகிய திருவையாறு திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார் என்க. 

குறிப்புரை:     வடத்தின்  நிழல்- கல்லால மரத்தின் நிழல். நால்வர்- சனகாதியர். விரித்தவர் - 
விரித்துரைத்தவர், (சின்முத்திரைக் குறிப்பால்) சீர்-சிறப்பு. கனமுமாம். தண்ணின்  மலி- குளிர்ச்சியில் 
மிக்க. சந்து அகில் -  சந்தனமும் அகிலுமாகிய மரங்கள். பொன்னி- காவிரி. விரித்தவர் இடம் 
திருவையாறு என்க.

    Behold! it is Civan, Lord of Thiru-vai-yaaru. Once seated under the stone banyan tree, 
He made the four famous saints known as Janakaathiyar understand their doubts on the countless 
intricate details of divine knowledge contained in Vedas by simply making mudras in His hands. 
The city of Thiru-vai-yaaru has plenty of glories. It is a celebrated fertile place. 
Here the river Ponni brings with its dashing water-current, sandalwood  and akil wood. 
The bank of the river abounds in these logs of wood. This is the place where our Lord Civan 
is manifest. A good number of Vedic scholars do live in this city.They and the philanthropic 
people of the city do a lot of charities to those people who are in need of help. All these 
scholars perform their daily spiritual rituals without fail. They praise our Lord Civan and 
worship His holy feet at Thiru-vai-yaaru. 

1812.     வென்றிமிகுதாருகனதாருயிர்மடங்கக்                     
    கன்றிவருகோபமிகுகாளிகதமோவ 
    நின்றுநடமாடியிடநீடுமலர்மேலால் 
    மன்றல்மலியும்பொழில்கொள்வண்திருவையாறே.        5

    வென்றி மிகு தாருகனது ஆர்உயிர் மடங்க, 
    கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ, 
    நின்று நடம் ஆடி இடம் - நீடு மலர் மேலால் 
    மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே.

    venRi miku tArukanatu Ar uyir maTagka, 
    kanRi varu kOpam miku kALi katam Ova, 
    ninRu naTam ATi iTam--nITu malarmElAl 
    manRal maliyum pozil koL vaN tiru aiyARE.

பொருள்:     வரபலம் கொண்ட தாரகாசுரன் உலகத்தைத் துன்புறுத்தி வந்தான். அவனது வெற்றியை 
அடக்க காளி விரும்பினாள். சினங்கொண்டு போரிட்டு அசுரனை அழித்தாள். அப்போது நடனம் புரிந்து 
அவளது சினத்தைத் தணித்தவரே சிவபெருமான். அவர் மலர் மணம் நிறைந்து விளங்கும் திருவையாறு 
தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     வென்றி – வெற்றி. தாருகன் - ஓர் அசுரன். ஆருயிர் மடங்க - அரியவுயிர் மடிய, 
 கன்றி- மனங்கன்றி. கதம் - கோபாவேசம். ஓவ - நீங்க. நடமாடி - பெயர்ச்சொல். நடராசப் பெருமான் .
மன்றல்- மணம். மேலால் பொலியும் பொழில் என்றும் நடமாடி இடம் திருவையாறு என்றும் கூட்டுக.

    Behold! It is Civan, the Lord of Thiru-vai-yaaru. Daarukan, otherwise called 
Daarakaasuran, was an asuraa, i.e., an evil demigod. He did a lot of penance for many 
years.At last the Supreme Being appeared before him and gave him a lot of boons he asked for. 
Daarakan became the mightiest warrior in the world with many capacities. He started torturing 
the devaas who were his enemies causing havoc to their life. He won in many battles. 
At the request of the devaas, our goddess decided to wage war against him and kill him. 

    Our goddess Paarvathi Devi took the special form of a dreadful combatant 
called Kaali, wife of Veerabadran or Civan. With her fierce appearance and divine 
ire she fought against him and finally killed him. Even after his death, her rage 
became aggravated as a disease. Lord Civan decided to tranquilize her. He told her to 
participate with Him in a dance competition. She agreed. Civa danced several postures and 
she repeated it equally. At last, Lord Civan danced the very special pose called 
'Oorth-thuva-thaandavam'. Paththirakaali could not do this dance. She calmed down. 

    She bowed before Him and accepted His superiority and took the original status 
of His wife as Paarvathi Devi. The status of Pathi-thira-kaali disappeared. This Lord Civan 
has manifested Himself in Thiru-vai-yaaru where many rich gardens flourish. These gardens 
have sweet smelling flowers. A good number of Vedic scholars do live in this city along 
with many philanthropic people who are charitable to those people in need of help. 
All these scholars do their daily spirtual rituals without fail. Such is the greatness of 
Thiru-vai-yaaru where our Lord is worshipped.

1813.    பூதமொடுபேய்கள்பலபாட நடமாடிப் 
    பாதமுதல்பையரவுகொண்டணிபெறுத்திக் 
    கோதையரிடும்பலிகொளும்பரனிடம்பூ 
    மாதவிமணங்கமழும்வண்திருவையாறே.        6

    பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி, 
    பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி, 
    கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் - பூ 
    மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே.

    pUtamoTu pEykaL pala pATa naTam ATi, 
    pAta mutal pai aravu koNTu aNi peRutti,             
    kOtaiyar iTum pali koLum paran iTam--pU 
    mAtavi maNam kamazum vaN tiru aiyARE.

பொருள்:     பூதகணங்களுடன் பேய்க்கணங்களும் பாடிட அதற்கு ஏற்ற வகையில் நடனம் 
ஆடுபவரே சிவபெருமான். அவர் தமது அடிமுதல் முடிவரை பாம்புகளையே அணிகலன்களாகக் 
கொண்டவர். தாருகா வனத்து முனிதேவியர்கள் இடும் பிச்சைப் பொருளை ஏற்க வந்தவரும் அவரே. 
அவரே மாதவிப் பூக்களின் மணம் நிறைந்து விளங்கும் திருவையாறு திருத்தலத்திலும் பொருந்தியுள்ளார்.

குறிப்புரை:     பூதமொடு பேய்கள் பல பாட இறைவன் நடமாடினான். பை - படம். சர்ப்பாபரணத்தைப் 
பாதாதிகேசாந்தம் அழகு பெறக் கொண்டவன். கோதையர் - தாருகாவனத்து ரிஷிபத்தினிகள். 
பரன்- மேலானவன். மாதவி - குருக்கத்தி. பரன் இடம் திருவையாறு என்க.

    Behold! It is Civan, the Lord of Thiru-vai-yaaru. He dances to the tunes of ghosts 
and goblins who are His followers. He wears the snakes on His body from head to foot and 
adorns Himself with these. He goes out for alms carrying in His hand the human skull 
as the begging bowl and accepts the alms from the chaste and faithful wives of the sages 
of Daaruka forest. This city is full of glories. There are many gardens around the city 
where sweet, fragrant jasmine flowers flourish. A good number of Vedic scholars do live 
in this city and also many highly philanthropic people. They do a lot of charities
to those people who are in need of help. All these scholars perform their daily spiritual 
rituals without fail. Thereafter, they go to the temple, praise our Lord Civan 
and worship His holy feet.  

1814.     துன்னுகுழல்மங்கையுமைநங்கைசுளிவெய்தப் 
    பின்னொருதவஞ்செய்துழல்பிஞ்ஞகனுமங்கே 
    என்னசதியென்றுரைசெயங்கணனிடஞ்சீர் 
    மன்னுகொடையாளர்பயில்வண்திருவையாறே.        7

    துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு எய்த, 
    பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும், அங்கே, 
    "என்ன சதி?" என்று உரைசெய் அங்கணன் இடம்-சீர் 
    மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே.

    tunnu kuzal magkai umainagkai cuLivu eyta, 
    pin oru tavam ceytu uzal pinjnjakanum, agkE, 
    "enna cati?" enRu uraicey agkaNan iTam--cIr 
    mannu koTaiyALar payil vaN tiru aiyARE.

பொருள்:     நீண்டு அடர்ந்த கூந்தலை உடைய உமாதேவி மகிழுமாறு அவளுடன் பொருந்தி 
இருப்பவர் சிவபெருமான். உமாதேவியின் தவத்தைச் சிறப்புறச் செய்து, அவளை எல்லோரும் 
காண மணம் புரிந்தவரே சிவபெருமான். அந்த அங்கணராகிய சிவபெருமான் ,கொடையாளர் 
நிறைந்த திருவையாறு தலத்தில் கோயில் கொண்டுள்ளார். 

குறிப்புரை:     துன்னு - நெருங்கிய. குழல் - கூந்தல். மங்கையுமை நங்கை - உமாதேவியார். 
களிவு எய்த-  கோபம் அடைய. பின் ஒரு தவம் செய்து - பின்னரும் ஒரு தவத்தைச் செய்து. 
உழல் - உழலுதற்குக் காரணமான. பிஞ்ஞகன் - சடைமுடி உடையவன். அங்கே - தவஞ்செய்த 
இமய மலைச்சாரலில் என்ன சதி என்று உரை செய் அங்கணன் - சதி என்ன காரணத்தால் நீ தவம் 
செய்கின்றாய் என்று வினாவியன். சதி - பதிவிரதை. அங்கணன் - கருணைக் கண்ணன். 
சீர் மன்னு கொடையாளர் - சிறப்பு நிலை பெற்ற கொடையை ஆள்பவர்.

    Behold! It is Civan, Lord of Thiru-vai-yaaru. Our goddess Umaa with long, dense, 
sweet smelling hair once became ill tempered and went to do penance for a second time. 
Then our Lord approached her and asked her the reason for her animosity. She pacified Him. 
After that our Lord married her because He had great graceful eyes. A good number of 
Vedic scholars do live in this city along with many philanthropic people. They do a lot of 
charities to those people who are in need of help. All these scholars perform their 
daily spiritual rituals without fail. They praise our Lord Civan and worship His 
holy feet at Thiru-vai-yaaru.

1815.     இரக்கமில்குணத்தொடுலகெங்குநலிவெம்போர் 
    அரக்கன்முடியத்தலைபுயத்தொடுமடங்கத் 
    துரக்கவிரலிற்சிறிதுவைத்தவரிடஞ்சீர் 
    வரக்கருணையாளர்பயில்வண்திருவையாறே.        8

    இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம்போர் 
    அரக்கன் முடிபத்து அலை புயத்தொடும் அடங்கத் 
    துரக்க, விரலின் சிறிது வைத்தவர் இடம்-சீர் 
    வரக் கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே.

    irakkam il kuNattoTu ulaku egkum nali vempOr 
    arakkan mutipattu alai puyattoTum aTagkat 
    turakka, viralin ciRitu vaittavar iTam--cIr 
    varak karuNaiyALar payil vaN tiru aiyARE.

பொருள்:     இராவணன் இரக்கமற்றவன். உலகத்தை எல்லாம் துன்புறுத்தியவன். கொடிய 
போரினை விரும்பிச் செய்தான். அவனது முடிகளும் தோள்களும் நலிவடையத் தன் திருப்பாத 
விரல்களை ஊன்றி அடர்த்துப் பின்னர் அருளியவரே சிவபெருமான். அவர் சிறப்புமிக்க கருணைக் 
குணம் நிறைந்தவர்கள் வாழ்கின்ற திருவையாறு திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     இல் - இல்லாத. நலி - வருந்துகின்ற. அரக்கன் - இராவணன். முடியத்தலை 
புயத்தொடும் அடங்க- இருபது தோள்களோடும் பத்துத் தலைகளும் நெரிந்தழிய. துரக்க- செலுத்த 
(அழுத்த என்றவாறு) சீரும் வரமும் கருணையும் ஆள்பவர்.

    Raavanan, the king of Sri Lanka was a very great warrior. He was merciless 
and waged reckless wars. He tortured all the people in all the worlds and inflicted 
several woes on them. Our Lord Civan just pressed the top of the mountain where he was 
resting with Umaa with His toe. Raavanan's head and shoulders got crushed under the 
mountain. The same Lord resides at Thiru-vai-yaaru where Vedic scholars and highly
philanthropic people extend alms to those people who are in need of help. All these 
scholars perform their daily spiritual rituals without fail. They go to the temple 
and worship His holy feet in this city.

1816.     பருத்துருவதாகிவிண்ணடைந்தவனொர்பன்றிப் 
    பெருத்துருவதாயுலகிடந்தவனுமென்றும் 
    கருத்துருவொணாவகைநிமிர்ந்தவனிடங்கார் 
    வருத்துவகைதீர்கொள்பொழில்வண்திருவையாறே.        9

    பருத்து உரு அதுஆகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப் 
    பெருத்து உருஅதுஆய் உலகு இடந்தவனும், என்றும் 
    கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் - கார் 
    வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே.

    paruttu uru atu Aki viN aTaintavan, or panRip             
    peruttu uru atu Ay ulaku iTantavanum, enRum             
    karuttu uru oNA vakai nimirntavan iTam-kAr 
    varuttu vakai nIr koL pozil vaN tiru aiyARE.

பொருள்:     பறவை உருக்கொண்டு விண்ணில் ஏறி பிரமன் இறைவனின் திருமுடியைக்  காண
முயன்றான். பன்றி உருக்கொண்டு உலகைத் தோண்டிச் சென்று இறைவனின் திருவடியைக் காண 
முயன்றான் திருமால். இருவரும் காணும் வகையில் ஒளி உருவாய் விளங்கிய தேவரே சிவபெருமான். 
அவர் மழை மேகம் பொருந்தும் உயர்ந்த மரங்கள் சூழ்ந்த திருவையாறு திருத்தலத்தில் கோயில் 
கொண்டுள்ளார்.

குறிப்புரை:     பருத்து உரு அது - பருந்து உருவம். வலித்தல் விகாரம். விண்ணடைந்தவன்- 
பிரமதேவன். பெருத்த பன்றி உருவதாய் - பெரிய பன்றி வடிவமாய். பெயரெச்சத்து அகரம், தொக்கது.
உலகிடந்தவன் - உலகங்களைப் பேர்த்தவன். திருமால், பிரமன் ஒரு கற்பத்தில் கழுகாகி முடிதேடினான்
என்னும் உண்மை இதில் குறிக்கப்பட்டது. பூவார் பொற்றவிசின் மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த
மாலும், ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணாத், தேவாரும் திருவுருவன்
(தி.1 ப.131 பா.9) என்று  முன்னும் அருளியது உணர்க. ஏனங்கழுகானவருன்னை முனென்கொல்
வானந்தலமண்டியும் கண்டிலாவாறே என்றது காண்க. (தி.2 ப.37 பா.9) "புண்டரிகத்துள்ளிருந்த, புத்தேள்
கழுகுருவாய், அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் பண்டொருநாள், காணான் இழியக் கனக முடிகவித்துக் 
கோணாது நின்ற குறி போற்றி" (தி.11, நக்கீரர் போற்றித்திருக்கலி வெண்பா 4,  5 கண்ணிகள்) கருத்து உரு 
ஒணாவகை - அவர்கள் கருத்தில் இறைவன் உருவம் (அடிமுடி) ஒன்றா வகை,  ஒன்றாமை - ஒண்ணாமை மரூஉ.     
கார்வருத்து வகை. தீர்கொள் பொழில் - வானோங்கி வளர்தலால் ஆங்குச் செல்லும் முகிலைத் தடுத்து 
வருத்தும் வகையால், வெயிலால் காய்ந்த வெப்பத்தை மழையால் தீர்தலைக் கொள்ளும் சோலை. காரை 
வருவித்தலால் எனலுமாம். வருத்தல் (வருவித்தல்) என்பது வழக்கிலும் உண்டு. நிமிர்ந்தவன் இடம் 
திருவையாறு எனக்கூட்டுக.

    Brahma, the demigod, the creator of the world took the form of a swan, went upwards 
in the sky to reach our Lord's holy head. Vishnu, the demigod who looks after the sustenance 
of all the souls in the universe took the form of huge hog and went down into the earth to 
reach our Lord's holy feet. They both failed in their attempts for our Lord became the 
tallest column of light beyond the imagination of these two demigods. The city of 
Thiru-vai-yaaru has many rich gardens full of trees tall enough to dash against clouds, 
which reduce the heat of the place. A good number of Vedic scholars do live in this city 
and also philanthropic people. They do a lot of charities to those people who are in need 
of help. All these scholars perform their daily spiritual rituals without fail. 
They go to the temple too, pray there and worship His holy feet.

1817.     பாக்கியமதொன்றுமில்சமண்பதகர்புத்தர் 
    சாக்கியர்களென்றுடல்பொதிந்துதிரிவார்தாம் 
    நோக்கரியதத்துவனிடம்படியின்மேலால் 
    மாக்கமுறநீடுபொழில்வண்திருவையாறே.        10

    பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர், புத்தர் 
    சாக்கியர்கள் என்று உடல் பொதிந்து திரிவார்தாம் 
    நோக்க(அ)ரிய தத்துவன் இடம் - படியின்மேலால் 
    மா(க்)கம் உற நீடு பொழில் வண் திரு ஐயாறே.

    pAkkiyam atu onRum il camaNpatakar, puttar 
    cAkkiyarkaL enRu uTal potintu tirivArtAm,                         
    nOkka(a)riya tattuvan iTam--paTiyin mElAl 
    mA(k)kam uRa nITu pozil vaN tiru aiyARE.                        

பொருள்:     சிவபெருமானை வணங்கும் புண்ணியம் பொருந்தாதவர்களே சமணர்கள், 
புத்தர்கள், சாக்கியர்கள், பயனற்ற நிலையில் பிறவி கொண்டு திரியும் அவர்களால் உணரப்பட                     
முடியாதவனே  சிவபெருமான். அவர் உயர்ந்த சோலைகள் நிறைந்த திருவையாற்றில் 
கோயில் கொண்டுள்ளார். 

குறிப்புரை:     பாக்கியம் - நல்வினை. இல் - இல்லாத. ஒன்றும் - சிறிதும். பதகர் - பாதகர், 
பொதிந்து-மறைந்து. மூடி.நோக்கு அரிய தத்துவன் - நோக்கிற்கு அரிய மெய்ப்பொருளானவன். 
படி - பூமி . நீடு - வளர்ந்த. மாக்கம் - விண். மாகம் மாக்கமென விரித்தல் விகாரம். தத்துவனிடம் 
திருவையாறு என்க.

    The Jains lack good conduct and the Buddhists cover their body with big cloth 
and roam in the streets. Our Lord is beyond the perception of these two races for 
even to know about Him and worship Him we need His benediction and blessings. These 
two races are unable to comprehend and follow His faith since they lack His will and 
blessings. He is the really divine, Supreme Being who evades the perception of these 
two races; therefore their births are useless. Thiru-vai-yaaru is a city known for 
Vedic scholars and philanthropic people who perform religious rites and charitable 
work regularly, without fail. In this beautiful city, full of groves with tall trees 
our Civan resides and is worshipped by all its people.

1818.     வாசமலியும்பொழில்கொள்வண்திருவையாற்றுள் 
    ஈசனையெழிற்புகலிமன்னவன்மெய்ஞ்ஞானப் 
    பூசுரனுரைத்ததமிழ்பத்துமிவைவல்லார் 
    நேசமலிபத்தரவர்நின்மலனடிக்கே.        11

    வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள் 
    ஈசனை, எழில் புகலி மன்னவன் - மெய்ஞ்ஞானப் 
    பூசுரன்-உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார், 
    நேசம் மலி பத்தர் அவர், நின்மலன் அடிக்கே.

    vAcam maliyum pozil koL vaN tiru aiyARRuL 
    Icanai, ezil pukali mannavan--meynjnjAnap
    pUcuran--uraitta tamiz pattum ivai vallAr, 
    nEcam mali pattar avar, ninmalan aTikkE.

பொருள்:     மணமிக்க சோலைகளால் சூழப்பெற்ற திருத்தலமே திருவையாறு  ஆகும். 
அத்தலத்தினைப் பொருந்தி வாழும் சிவபெருமானைப் புகழ்ந்து போற்றியுள்ளார் சீர்காழிப்பதியில் 
அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான். திருநீறு பூசிய ஞானசம்பந்தர் உரைத்த தமிழ்ப்பாடல்கள் 
பத்தினையும் பாட வல்லவர்களே சிவனடியார்கள் ஆவார்கள். 

குறிப்புரை:     வாசம்-மணம்.   புகலி மன்னவன்- காழி வேந்தன். மெய்ஞ்ஞானப் பூசுரன்- 
திருஞானசம்பந்தன்.  பூசுரர்-   பூ தேவர். நேசம் -  அன்பு. பத்தர் - பக்தர். நின்மலன்-
அழுக்கில்லாதவன். மலரகிதன். 

    Our holy saint Thiru-gnana-Sambandar is the head of beautiful city of Pukali. 
He is a man of par excellence in perfect divine knowledge. He sang on the Lord of 
Thiru-vai-yaaru,the holiest city fully surrounded by rich gardens of sweet smelling 
flowers, ten holy hymns.Those who are capable of reciting these ten hymns are the 
true devotees at the holy feet of God Supreme who is manifest in this glorious city.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            32ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 32nd Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 169                பதிக எண்: 33

33. திருநள்ளாறு                    33. THIRU-NALLAARU

பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    இது நளன் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது என்பர். பேரளம் - காரைக்கால் 
தொடர்வண்டிப் பாதையில் திருநள்ளாறு தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் இருக்கின்றது. 
இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள ஐம்பத்திரண்டாவது திருத்தலமாகும். காரைக்கால், 
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் நகரங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

    இறைவரின் திருப்பெயர் தர்ப்பாரண்யேசுரர். தேவாரத்தில் நம் பெருமான் எனக் 
கூறப்பட்டுள்ளது. இறைவியாரின் திருப்பெயர் போகமார்த்த பூண்முலையாள். இத்திருப்பெயரை
இவ்வூர்ப் பதிகத்தில் ஞானசம்பந்தர் எடுத்து ஆண்டுள்ளார். தீர்த்தம் நளதீர்த்தம், சிவகங்கை
முதலியன. தலவிருட்சம் தர்ப்பை.

    நளன் பூசித்துக் கலி நீங்கப் பெற்றான். இத்தலத்தே திருமால், பிரமதேவர், திக்குப் பாலகர், 
வசுக்கள், அகத்தியர், அர்ச்சுனன், போசன் முதலியோரும் வழிபட்டனர். முசுகுந்தச் சோழர் 
எழுந்தருளுவித்த விடங்கர் தலங்கள் ஏழனுள் இது ஒன்று. திருஞானசம்பந்தர், மதுரையில்
சமணர்களோடு அனல்வாதம் நடத்தியபோது அனலில் இடுவதற்கு தாம் பாடிய பதிகங்களில் 
கயிறு சாத்தியபோது, 'போகமார்த்த பூண்முலையாள்' என்று தொடங்கும் இப்பதிக்குரிய பதிகம் 
கிடைத்தது. அதை அனலில் இட அது வேகாது இருந்து சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டியது. 
இதைப் பச்சைத் திருப்பதிகம் என்றும் கூறுவர். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகங்கள் நான்கு, 
அப்பர் பதிகம் இரண்டு, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஏழு பதிகங்கள் இருக்கின்றன.
 நளன் பூசித்து வழிபட்ட செய்தி, 

        "வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
        நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய் நள்ளாறே"

என்னும் இவ்வூர் ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியால் உறுதி எய்துகின்றது. இத்தலத்தில் சனிபகவான் 
சந்நிதி மிகவும் சிறப்புப் பெற்றது. சனிப்பெயர்ச்சி விழாக்களில் பல்லாயிர மக்கள் நளதீர்த்தத்தில் 
எண்ணெய் முழுக்காடி எள்முடிச்சுக் கட்டி எண்ணெய் விளக்கேற்றி சனிபகவானை வழிபடுவர். 
தங்கக் காக வாகனவிழா நடைபெறும். இவ்வூருக்குக் கிழக்கே ஒருமைல் தூரத்தில் தக்களூர் 
என்னும் வைப்புத்தலம் இருக்கிறது. இதற்குத் தலபுராணம் ஒன்று இருக்கிறது. இது சுப்பிரமணியக் 
கவிராயரால் எழுதப்பெற்று அச்சில் வெளிவந்துள்ளது. இத்திருக்கோவில் தருமை ஆதீன 
ஆளுகைக்கு உட்பட்டது.

பதிக வரலாறு

    போகமார்த்த பூண்முலையாள் எனத் தொடங்கும் திருப்பதிகத்தோடு பாடப்பட்டதாக இருக்கலாம் 
என்று கருதப்படுகிறது.

            திருச்சிற்றம்பலம்

1819.     ஏடுமலிகொன்றையரவிந்துவிளவன்னி 
    மாடவல செஞ்சடையெம்மைந்தனிடமென்பர் 
    கோடுமலிஞாழல்குரவேறுசுரபுன்னை 
    நாடுமலிவாசமதுவீசியநள்ளாறே.             1

    ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி, 
    மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர் - 
    கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை, 
    நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே.

    ETu mali konRai, aravu, intu, iLa vanni,
    mATu avala cenjcaTai em maintan iTam enpar- 
    kOTu mali njAzal, kuravu, ERu curapunnai, 
    nATu mali vAcam atu vIciya naLLARE.

பொருள்:     இதழ்களால் சிவந்த கொன்றை மலர், அரவு, சந்திரன், வன்னி இலை ஆகியவற்றைத் 
தலையில் அணிந்தவர் சிவபெருமான். அவர் திருநள்ளாறு தலத்தில் பொருந்தியுள்ளார். அத்தலத்தில் 
கோங்கு,குரவம்,சுரபுன்னை ஆகிய மலர்களின் மணம் நிறைந்திருக்கும்.

குறிப்புரை:     ஏடு - இதழ். இந்து -பிறை. வன்னி - வன்னிப் பத்திரம். மாடு அவல செஞ்சடை- பொன்னை 
ஒவ்வாதென்று அவலம் உறுத்தும் செஞ்சடை. கோடு- கொம்புகள். ஞாழல்- புலிநகக் கொன்றை. கோங்கு 
எனலுமாம். குரவு - குராமரம். வாசம் - மணம். நள்ளாறே மைந்தனிடம் என்பர். இவ்வாறே ஏனையவும் ஒட்டுக.

    It is Civan who is the Lord of Thiru-nallaaru. His reddish matted hair constitutes 
the colour of weak gold. He has adorned His matted hair with multi-petalled cassia flowers, 
the snake, the moon and the tender laburnum leaves. Here in the gardens  many branched wagaty 
bottle flowers and caulophy trees shed and spread sweet fragrance all around the city. 
This is the holy place where our Lord has manifested  Himself. Our Lord's matted red hair 
claims superiority over gold for its redness, gold may feel sorry for its weakness.

1820.     விண்ணியல்பிறைப்பிளவறைப்புனல்முடித்த 
    புண்ணியனிருக்குமிடமென்பர்புவிதன்மேல் 
    பண்ணியநடத்தொடிசைபாடுமடியார்கள் 
    நண்ணியமனத்தின்வழிபாடுசெய்நள்ளாறே.        2

    விண் இயல் பிறைப்பிளவு, அறைப்புனல், முடித்த 
    புண்ணியன் இருக்கும் இடம் என்பர்-புவிதன்மேல் 
    பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் 
    நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே.

    viN iyal piRaippiLavu, aRaippunal, muTitta 
    puNNiyan irukkum iTam enpar--puvitanmEl 
    paNNiya naTattoTu icai pATum aTiyArkaL 
    naNNiya manattin vazipATucey naLLARE.

பொருள்:     எம்பெருமான், பிறைநிலவையும், பாய்ந்து வரும் கங்கையையும் தலையில் சூடியவர். 
அவர், பண்ணுடன் பாடி ஆடி வழிபாடு செய்யும் அடியவர்கள் நிறைந்த திருநள்ளாறு திருத்தலத்துள் 
கோயில் கொண்டுள்ளார். நாமும் உளம் பொருந்த எம்பெருமானை வழிபாடு செய்வோமாக. 

குறிப்புரை:     விண் இயல் பிறை பிளவு - வானூர் பிறைத்துண்டம். அறைப்புனல்- ஒலிநீர்கங்கை.     
புவி- பூமி. பண்ணிய - செய்த. பண்ணோடு கூடிய எனலுமாம். நண்ணிய - விரும்பிய. வழிபாடு - 
அருள்வழி உயிர்க்குப் படுதல்.

    The people of this city say that it is the holy place of their Lord who is the 
holiest of the holy. He has adorned His head with the split crescent moon which traverses 
in the sky. Along with it, He keeps the gushing Ganges river also on His head. Our Lord
is manifest in Nallaaru where sincere devotees sing hymns in musical tones and 
wholeheartedly and fervently worship Him always.

1821.     விளங்கிழைமடந்தைமலைமங்கையொருபாகத் 
    துளங்கொளஇருத்தியவொருத்தனிடமென்பர் 
    வளங்கெழுவுதீபமொடுதூபமலர்தூவி 
    நளன்கெழுவிநாளும்வழிபாடுசெய்நள்ளாறே.        3

    விளங்கு இழை மடந்தை மலை மங்கை ஒருபாகத்து 
    உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் - 
    வளம் கெழுவு தீபமொடு, தூபம், மலர் தூவி, 
    நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே.

    viLagku izai maTantai malaimagkai orupAkattu 
    uLam koLa iruttiya oruttan iTam enpar- 
    vaLam kezuvu tIpamoTu, tUpam, malar tUvi, 
    naLan kezuvi nALum vazipATu cey naLLARE.        

பொருள்:     அன்பு கொண்டு குழைந்துவரும் இயல்பினளே மலைமகள் ஆவார். அவளைத் தன் 
உடம்பின் ஒருபாகத்தில் வைத்துக் கொண்டுள்ளவரே சிவபெருமான். அவர் விரும்பி கோயில் கொண்டுள்ள 
திருநள்ளாற்று தலத்தில், நளன் தீபமோடு தூபம் காட்டி, மலர் தூவி நாள்தோறும் வழிபாடு செய்து 
கலிநீங்கப் பெற்றான்.

குறிப்புரை:     இழை - ஆபரணம், முதல்நிலைத் தொழிலாகு பெயர். உளங்கொள- திருஉள்ளங்கொள்ள. 
- விரும்ப. இருந்திய- பிறவினை. ஒருத்தன்- தனி முதல்வன். நளன் வழிபட்ட வரலாறு உணர்த்தப்பட்டது. 
பூசிக்கும் முறையும் கூறப்பட்டது.

    Nallaaru is the most sacred place for only in this city, King Nalan was completely 
relieved of his misery. Nalan worshipped the Lord of this place daily with bright lamp, 
incense powder and strewed fragrant flowers on His feet. He is our Lord who has shared 
the left portion of His body with the Himalayan king's daughter, wearing bright jewels.

1822.     கொக்கரவர்கூன்மதியர்கோபர்திருமேனிச் 
    செக்கரவர்சேருமிடமென்பர்தடமூழ்கிப் 
    புக்கரவர்விஞ்சையரும்விண்ணவருநண்ணி 
    நக்கரவர்நாமநினைவெய்தியநள்ளாறே.        6

    கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச் 
    செக்கர் அவர், சேரும் இடம் என்பர் - தடம் மூழ்கிப் 
    புக்கு, அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி, 
    நக்கர் அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே.

    kokku, aravar, kUnmatiyar, kOpar, tirumEnic 
    cekkar avar, cErum iTam enpar--taTam mUzkip 
    pukku aravar vinjcaiyarum viNNavarum naNNi, 
    nakkar avar nAmam ninaivu eytiya naLLARE.

பொருள்:     ஈசனார், கொக்கின் நிறம் போன்ற வெண்ணிற பாம்பையும், வெண்ணிறப் 
பிறையையும், தலையில் சூடியவர். அவர் உயிர்களுக்கு அருள் செய்யவே நெற்றிக் கண்ணைக் 
கொண்டுள்ளார். அவர் சிவந்த மேனியை உடையவர். அவர் பொருந்தி வாழும் இடம் திருநள்ளாறு 
திருத்தலம் ஆகும். அவரைப் பாதாளத்தாரும் விண்ணவரும் வந்து துதிப்பர். நள்ளிரவில் 
அடியவர்களும் அவரை வழிபாடு செய்வர்.

குறிப்புரை:     கொக்கு- கொக்கிறகு. கொக்கிற்கு சென்னி உடையான் கண்டாய் (தி. 6 ப. 39 பா 2) 
அரவர் - பாம்பணிந்தவர். கூன் மதியர் - இளம் பிறைசூடி. கோபர் - கோபத்தை உடையவர். 
செக்கர்- திருமேனியர் செவ்வானம் போலும் வண்ணத்தை உடைய திருமேனியர், அந்தி வண்ணர். 
புக்கு- புகுந்து. அரவர் - நாகலோகத்தவர். விஞ்சையர் -வித்யாதரர். நக்கர் -நக்நர், திகம்பரர். 
நாமம்-  திருப்பெயர். திருவைந்தெழுத்துமாம்.

    It is Civan, Lord of Nallaaru. He wears on His head crane's feathers along with the broken
ark-like crescent moon and the serpent. He is wrathful on certain occasions. His divine body is 
red like the evening sky. People from nether worlds such as Nagalanders, vidyaadarars, a type of 
demigods and devaas arrive here in Nallaaru. They take bath in the tanks and then worship our Lord 
Supreme, who is also called Digambaram. Then they repeat the five lettered mantraas and worship
His holy feet. Our Lord is manifest in this holy city Thiru-nallaaru.

1823.     நெஞ்சமிதுகண்டுகொளுனக்கெனநினைந்தார் 
    வஞ்சமதறுத்தருளுமற்றவனைவானோர் 
    அஞ்சமுதுகாகியவர்கைதொழஎழுந்த 
    நஞ்சமுதுசெய்தவனிருப்பிடநள்ளாறே.        5

    "நெஞ்சம் இது கண்டுகொள், உனக்கு!'" என நினைந்தார் 
    வஞ்சம்அது அறுத்து அருளும் மற்றவனை; வானோர் 
    அஞ்ச, முதுகு ஆகியவர் கைதொழ,எழுந்த 
    நஞ்சு அமுது செய்தவன்; இருப்புஇடம் - நள்ளாறே.

    "nenjcam itu kaNTukoL, unakku!" ena ninaintAr 
    vanjcam atu aRuttu aruLum maRRavanai; vAnOr 
    anjca, mutuku Akiyavar kaitoza, ezunta 
    nanjcu amutu ceytavan; iruppu iTam--naLLARE.        

பொருள்:     நெஞ்சே! கண்டு கொள்வாயாக! உனக்கென எதையும் கருதாதே! நம்முடைய கண்ணுக்குத் 
தெரியாத கொடிய வினைகளை நீக்கி நம்மை ஆள்பவன் சிவனே ஆவான். அவன்தான் வானோர்கள் 
விடத்தைக் கண்டு அஞ்சி ஓடிய போது, அவ்விடத்தை அமுதாக்கி அருந்தி அவர்களைக் காத்தவன் 
ஆவான். அவன் கோயில் கொண்டுள்ள இடமே திருநள்ளாறு திருத்தலமாகும் என்க. 

குறிப்புரை:     நினைந்தார்- நினைந்தவரது. வஞ்சம் அது- வஞ்சத்தை, பொய்யை, பாற்கடலினின்றெழுந்த 
விஷத்தை அஞ்சிப் புறங்காட்டி ஓடிய வானவர் கைதொழ, அந்நஞ்சை அமுதாகக் கொண்டு அவர்களைக் 
காத்த சிவபெருமான்.

    It is Civan, Lord of Thiru-nallaaru. Sincere devotees think of Him always saying 
"See our hearts are Yours". They also advise their minds to believe that the divine way 
and the only way to clear their sins is to pray and worship our Lord at Nallaaru. Our Lord 
will wipeout their sins and grace them. Once the devaas saw the deadly poison that came out 
of the ocean of milk and ran away. Then they reached our Lord and worshipped Him and begged 
to save them from the poison which started spreading in the whole universe. Our Lord took 
the poison entirely and saved them. This Lord is manifest in Thiru-nallaaru.

1824.     பாலனடிபேணவவனாருயிர்குறைக்குங் 
    காலனுடன்மாளமுனுதைத்தஅரனூராம் 
    கோலமலர்நீர்க்குடமெடுத்துமறையாளர் 
    நாலின் வழிநின்று தொழில்பேணியநள்ளாறே.        6

    பாலன் அடி பேண, அவன் ஆர்உயிர் குறைக்கும் 
    காலன் உடன்மாள முன் உதைத்த அரன் ஊர்ஆம் - 
    கோல மலர், நீர்க்குடம், எடுத்து மறையாளர் 
    நாலின்வழி நின்று, தொழில் பேணிய நள்ளாறே.

    pAlan aTi pENa, avan Ar uyir kuRaikkum
    kAlan uTanmALa mun utaitta aran Ur Am 
    kOla malar, nIrk kuTam, eTuttu maRaiyALar 
    nAlinvazi ninRu, tozil pENiya naLLARE.

பொருள்:     பாலனாகிய மார்க்கண்டேயனின் உடலிலிருந்து உயிரைக் கவர வந்த காலனைத் 
தன் காலால் உதைத்து, மார்க்கண்டனுக்கு அருள்புரிந்தவர் சிவபெருமான். அவர் உறையும் தலமே 
திருநள்ளாறு. அத்தலத்தில் மறையவர்கள், பூவும் நீரும் எடுத்து வந்து நான்மறை முறைப்படி 
வழிபாடு செய்வார்கள்.

குறிப்புரை:     பாலன் - மார்க்கண்டேய முனிவர். பேண - விரும்பித்தொழ. காலன் உடல் - 
எமனுடைய தேகம். உடன்மாள - உடனே அழிய என்றுமாம். அரன் - சிவபெருமான். கோலமலர் - 
அழகிய பூக்கள்.  நீர்க்குடம் - அபிஷேக ஜலபாத்திரம். நாலின்வழி - நால்வேதநெறி. தொழில் - 
அருச்சனைத் தொழில்.

    It is Civan, Lord of Thiru-nallaaru. The young Brahmin boy, Maarkandeyan of sixteen 
years worshipped Him sincerely and strictly according to the divine ways. At that moment Kaalan,
the god of death reached him to take his soul from his body and threw his spread noose over 
the Civalinga and the body of Maarkandeyan who was then embracing the Lingam. Our Lord 
instantaneously kicked with His right leg the god of death. He fell down dead. In this city,
the scholars of the four Vedas, worship Him with fine flowers and pure water. In this holy 
city our Lord is manifested.

1825.     நீதியர்நெடுந்தகையர்நீள்மலையர்பாவை 
    பாதியர்பராபரர்பரம்பரரிருக்கை
    வேதியர்கள்வேள்வியொழியாதுமறைநாளும் 
    ஓதியரன்நாமமுமுணர்த்திடுநள்ளாறே.        7

    நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவை 
    பாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை - 
    வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும் 
    ஓதி, அரன் நாமமும் உணர்த்திடும் நள்ளாறே.

    nItiyar, neTuntakaiyar, nILmalaiyar, pAvai 
    pAtiyar, parAparar, paramparar, irukkai- 
    vEtiyarkaL, vELvi oziyAtu, maRai nALum 
    Oti, aran nAmamum uNarttiTum naLLARE.

பொருள்:     இறைவன் நீதியாய் விளங்குபவர். உயர் பண்புகள் நிறைந்தவர். நீண்ட கயிலாயத்தைப் 
பொருந்தியவர். உமையவளை ஒரு பாகத்தில் கொண்டவர். பரஞானமும் அபரஞானமுமாகத் திகழ்பவர். 
மகாதேவர். எங்கும் நிறைந்தவர். திருநள்ளாறு தலத்துள் உறைபவர். அவரை மறைப்படி வேள்விகள் செய்தும், 
சிவநாமத்தை ஓதியும் அந்தணர் வழிபடுவர்.

குறிப்புரை:     நீதியர்- நீதிவடிவாய் விளங்குபவர். நெடுந்தகையர்- பெருங்குணங்களுக்கு உறைவிடமானவர். 
நீள்மலையார் -  நீண்ட திருக்கயிலை மலையை உடையவர். பாவை பாதியர்-அர்த்தநாரீசுரர். பராபரர்-  
மேலவர்க்கும் மேலவர். பராபரன் என்பது தமது பேராக்கொண்டார் (அப்பர். ப.310 பா.11)  பரமும் அபரமும் 
ஆயவர் எனலும் பொருந்தும். பின்தானும் முன்தானும் ஆனான் (தி 6 ப.11 பா.2). முன்னவன்காண் பின்னவன்காண் 
(தி.6 ப.48 பா.8). முன்பனை உலகுக்கெல்லாம் (தி.4 ப.74 பா.2). முன்னவன் உலகுக்கு. (தி.5 ப.60 பா.8). முன்பாகி 
நின்ற முதலே போற்றி (தி.4 ப.56 பா.2). முன்பின் முதல்வன் (தி.4 ப.90 பா.3) முன்னியா நின்ற முதல்வா போற்றி 
(தி.6 ப.57 பா.5)  முன்னையார் .....பின்னையார் (தி.5 ப.16 பா.7). வேள்வி - யாகம். நாளும் - நாள்தோறும். 
காலைதோறும் எனலுமாம்.

    It is Civan, Lord of Thiru-nallaaru. He is embodiment of justice, He is embodiment of 
great virtues. He has shared half of His left side with our goddess, daughter of the tall and 
long mountain. He is manifest on Mount Kailash as He Himself owns the mountain. In the city of 
Thiru-nallaaru, Vedic scholars perform the divine rituals of adulation everyday, recite the 
Vedic mystic words along with the names of our Lord. This Nallaaru is the place where our Lord 
manifests Himself.

1826.     கடுத்துவல்லரக்கன்முன்நெருக்கிவரைதன்னை 
    எடுத்தவன் முடித்தலைகள்பத்துமிகுதோளும் 
    அடர்த்தவர்தமக்கிடமதென்பரளிபாட 
    நடத்தகலவைத்திரள்கள்வைகியநள்ளாறே.        8

    கடுத்து, வல்அரக்கன், முன் நெருக்கி வரைதன்னை 
    எடுத்தவன், முடித் தலைகள்பத்தும் மிகு தோளும் 
    அடர்த்தவர்தமக்கு இடம்அது என்பர் - அளி பாட, 
    நடத்த கலவைத்திரள்கள் வைகிய நள்ளாறே.

    kaTuttu, val arakkan, mun nerukki varaitannai 
    eTuttavan, muTit talaikaL pattum miku tOLum 
    aTarttavar tamakku iTam atu enpar--aLi pATa, 
    naTatta kalavaittiraLkaL vaikiya naLLARE.        

பொருள்:     அரக்கனாகிய இராவணன் சினம் கொண்டு கயிலாய மலையைத் தூக்கிட 
முயன்றான். அவனது முடியினையும் தோள்களையும் இறுத்தவர் சிவபெருமான். அவர் திருநள்ளாறு 
தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அங்குள்ள சோலைகளில் வண்டுகள் ஒலித்துக் கொண்டேயிருக்க, 
மக்கள் நடைமுறையில் பயன்படுத்தும் மணப்பொருள்களின் நறுமணம் எங்கும் நிறைந்திருக்கும் 
தலம் திருநள்ளாறு ஆகும். 

குறிப்புரை:     வரை - மலை. அளி - வண்டு. கலவைத்திரள்கள்- வாசனைக் கலப்புடைய பொருள்களின்         
கூட்டம். கலவத் திரள் - ஆண் மயில் கூட்டம் எனினும் ஆம். நடத்த - பெயரெச்சம்.

    King Raavanan with severe rage tried to lift mount Kailash and place it aside.           
Our Lord of Nallaru pressed the mountain with His toe on its top. Due to the oppression, 
Raavanan's jewelled ten heads and the twenty shoulders got crushed. The bees hum musical tones 
in this city. The articles needed by people for their daily use in marriage celebrations spread 
their sweet smell all around the city. This is the place, Nallaaru where our Lord has manifested 
Himself. He is the mighty Lord who crushed Raavanan. He resides in this city filled with music 
and auspicious articles.

1827.     உயர்ந்தவனுருக்கொடுதிரிந்துலகமெல்லாம் 
    பயந்தவன்நினைப்பரியபண்பனிடமென்பர் 
    வியந்தமரர்மெச்சமலர்மல்குபொழிலெங்கும் 
    நயந்தருமவேதவொலியார்திருநள்ளாறே.        9

    உயர்ந்தவன்,-உருக்கொடு திரிந்து, - உலகம் எல்லாம் 
    பயந்தவன்,நினைப்ப(அ)ரிய பண்பன் இடம் என்பர் - 
    வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் 
    நயம் தரும் அ(வ்) வேதஒலி ஆர் திரு நள்ளாறே.

    uyarntavan,--urukkoTu tirintu, --ulakam ellAm 
    payantavan, ninaippa(a)riya paNpan iTam enpar 
    viyantu amarar mecca malar malku pozil egkum
    nayam tarum a(v) vEta oli Ar tiru naLLARE.

பொருள்:     உலகத்தை அளக்க உரு எடுத்தவர் திருமால். உலகத்தைப் படைத்தவர் பிரமன். 
இருவராலும் அடிமுடி தேடிக் காண முடியாத நிலையில் உள்ளவரே சிவபெருமான். அவர் கோயில் 
கொண்டுள்ள இடமே திருநள்ளாறு திருத்தலம் ஆகும். அங்கு மலர்களின் மணமும், வேத ஒலியின் 
ஓசையும் எப்போதும் நிறைந்திருக்கும்.

குறிப்புரை:     உயர்ந்தவன் - திருவிக்கிரமன், திருமால். பயந்தவன் - பெற்றவன். பிரமன், அமரர் 
வியந்து மெச்ச. நயம் தருமம் - நயத்தை உடைய தருமம். தரும வேதம் - வேதத்தை விட்ட அறமில்லை 
(திருமந்திரம்) நயம் தரும் அவ்வேதவொலி எனலுமாம். ஆர் - நிறைந்த. நயந்தமரு என்றது பிழை.

    It is Civan, our Lord of Nallaaru. Thirumaal, a very tall figure roamed all 
over the earth, Brahma the creator of the world, flew in the sky. They both could not 
trace the where abouts of our Lord. He was imperceptible and incomprehensible to these two. 
This holy city is full of well-grown trees and flowers appreciable even to the devaas. 
The fragrant air fills the city. In all the surrounding areas the voice chanting Vedas 
gets reverberated. This city Thiru-nallaaru filled with Vedic mantras and fragrance, 
belongs to our Lord. The whole world is also His and He is full of rare virtues.

1828.     சிந்தைதிருகற்சமணர்தேரர்தவமென்னும் 
    பந்தனையறுத்தருளுகின்றபரமன்னூர்
    மந்தமுழவந்தருவிழாவொலியும்வேதச் 
    சந்தம்விரவிப்பொழில்முழங்கியநள்ளாறே.        10

    சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும் 
    பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன்(ன்) ஊர் - 
    மந்த முழவம் தரு விழா ஒலியும், வேதச் 
    சந்தம் விரவி, பொழில் முழங்கிய நள்ளாறே.

    cintai tirukal camaNar, tErar, tavam ennum 
    pantanai aRuttu aruLukinRa paraman(n) Ur 
    manta muzavam taru vizA oliyum, vEtac 
    cantam viravi, pozil muzagkiya naLLARE.

பொருள்:     மாறுபட்ட சிந்தையுடையவராய் சமணர்களும் புத்தர்களும் திரிவர். 
அவர்களுடைய தொடர்பினைச் சிவனடியார்கள் அறுத்துக் கொள்ளும் வண்ணம் சிவபெருமான் 
திருநள்ளாற்றுத் தலத்துள்  கோயில் கொண்டுள்ளார். அங்கு இன்னிசைக்  கருவிகளின் ஒலியும், 
விழா ஒலியும் வேத ஒலியும் எப்பொழுதும் நிறைந்திருக்கும். 

குறிப்புரை:     திருகல் - மாறுபாடு. வேதச்சந்தம் - வேதத்தை ஓதும் சந்தையொலி. பொழிலில் 
விரவி முழங்கிய நள்ளாறு.

    It is Civan, the Lord of Nallaaru who has blessed us to snap our ties with the Jains 
who are perverted and the Buddhists of false penance. Our Lord has manifested Himself in 
Thiru-nallaaru. In this city the music of percussion instruments and the overwhelming noise of 
several festivals are always heard. In addition, the voices of  scholars chanting the Vedas are 
also heard. The gardens surrounding the temple with sweet and fragrant flowers not only spread 
their fragrance, but also reverberate the Vedic chanting in the city. Such is the greatness of 
Thiru-nallaaru where our Lord resides.

1829.     ஆடலரவார்சடையனாயிழைதன்னோடும் 
    நாடுமலிவெய்திட இருந்தவன்நள்ளாற்றை 
    மாடமலிகாழிவளர்பந்தனதுசெஞ்சொல்
    பாடலுடையாரையடையாபழிகள் நோயே.        11

    ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதன்னோடும் 
    நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை 
    மாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல் 
    பாடல் உடையாரை அடையா,பழிகள் நோயே.

    ATal aravu Ar caTaiyan Ayizai tannOTum             
    nATu malivu eytiTa iruntavan naLLARRai, 
    mATam mali kAzi vaLar pantanatu cenjcol 
    pATal uTaiyArai aTaiyA, pazikaL nOyE.

பொருள்:     ஆடுகின்ற பாம்பைத் தன் தலையில் சூடியவன் சிவபெருமான், அவன் நாடு செழிக்க 
திருநள்ளாறு திருத்தலத்துள் கோயில் கொண்டுள்ளான். அப்பெருமானைப் புகழ்ந்து சீர்காழித் தலத்துள் 
அவதரித்த ஞானசம்பந்தர் தமிழ்ப்பாடல்கள் பாடியுள்ளார். அப்பாடல்களைப் பாடுபவர்களைப் பழிசெயல் 
பொருந்தாது; பிறவிப் பிணியும் நீங்கப் பெறும். 

குறிப்புரை:     ஆர் -பொருந்திய.  ஆய் இழை- உமாதேவியார் போகமார்த்த பூண் முலையாள் 
தன்னோடும் பொன் அகலம்பாகம் ஆர்த்த....அண்ணல் என்றதை நினைப்பிக்கும் இடம் இது. 
காழிச் சிறப்புணர்த்திற்று. பந்தன் - திருப்பெயர்ச் சுருக்கம். பாடலுடையாரைப் பழிகளும் 
நோய்களும் அடையா என்க.

    Our godly saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi, a holy place full of 
storeyed palaces. Our Lord Civan of Thiru-nallaaru wears the dancing serpent on His matted hair. 
He is manifest in Nallaaru along with our goddess Umaa, with the sole aim of granting welfare 
to people and also happiness to the whole universe. Our Thiru-gnana-Sambandar sang on the Lord 
of Thiru-nallaaru these hymns of ten verses in sacred, divine words. Those devotees who recite 
these sacred hymns before our Lord and worship Him will have no evil effects and diseases 
in their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            33ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 33rd Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 170                பதிக எண்: 34

34.திருப்பழுவூர்                     34. KEELAP-PAZHU-VOOR
பண் : இந்தளம் - வினாஉரை             Pann: Indhalam-Vinaa Urai

திருத்தல வரலாறு

    ஆலமரத்தைத் தலமரமாக உடைமையால் இத்திருத்தலம் திருப்பழுவூர் என்னும் பெயர்         
பெற்றது.  பழு - ஆலமரம். பழுவூர் மேலப்பழுவூர், கீழப்பழுவூர் என்னும் இரு பகுதிகளாக இருக்கின்றது. 
இவற்றுள் மேலப்பழுவூர் மறவனீச்சரம் என்னும் கோயிலைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவது. 
கீழப்பழுவூரே தேவாரம் பெற்ற தலம்.

    திருவையாற்றிலிருந்து அரியலூருக்குப் போகும் பேருந்துப் பெருவழியில் இருக்கின்றது.
காவிரிக்கு வடகரையில் ஐம்பத்தைந்தாவது தலம். இறைவர் திருப்பெயர் வடமூலநாதர். இறைவி
திருப்பெயர் அருந்தவ நாயகி. இதற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.  பரசுராமர் 
தம் தாயைக் கொன்ற பழிநீங்கப் பூசித்த தலம்.

    சோழ சம்பந்திகளாகிய சேரர் கிளையினரைப் பற்றிய கல்வெட்டுக்கள் மேலப்பழுவூரில் காணக் 
கிடைக்கின்றன. அவர்கள் இங்கு வந்த காலத்திலேயே இக்கோயில் பூசனைக்கு மலையாள அந்தணர்களை 
உடன் கொண்டுவந்தார்கள். அது காரணம் பற்றியே,

    'அந்தணர்க ளான மலையாள ரவரேத்தும் 
    பந்த மலிகின்ற பழுவூ ரரனை'

என ஞானசம்பந்தர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பதிக வரலாறு

    திருநெல்வெண்ணெய் முதலிய சிவ தலங்களை மெய்யன்பர் பலரொடுந் தொழுது அருள்பெற்று 
மீளும்பொழுது, ஞானப்பாலூட்டிய தேவியாரோடு தோணியப்பர் திருக்காட்சி, காழிக்கோமானார் திருவுள்ளங் 
கொள்ளப் புகுந்து, அவரது உணர்வில் வெளிப்பட்டது. பாடலால் உருகினார். புகலியை நண்ண மனம் வைத்தார். 
திருவரத்துறை அடிகளை வணங்கிப் பேரருள் விடைகொண்டு போனார். உள்ளே நடங்கொண்டு நிறைந்த 
பூங்கழலிணையை உச்சிமேற் கொண்டே முத்துச் சிவிகை மேற்கொண்டார். மறையும் தமிழும் வயிலும் 
வளையும் காளமும் முரசும் பிறவும் முழங்க, அன்பர்சூழ, பூரணகும்பங்களொடு நகரினர் எதிர்கொள்ளத் 
தலம்பல வழிபட்டு மாதியலும் பாதியர் மகிழ பெரும்பழுவூர் சேர்ந்து அங்கு மலை நாட்டந்தணர் புரிந்த
பணிகளையும் பாராட்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.


            திருச்சிற்றம்பலம்

1830.     முத்தன்மிகுமூவிலைநல்வேலன்விரிநூலன் 
    அத்தனெமையாளுடையஅண்ணலிடமென்பர் 
    மைத்தழைபெரும்பொழிலின்வாசமதுவீசப் 
    பத்தரொடுசித்தர்பயில்கின்றபழுவூரே.        1

    முத்தன், மிகு மூஇலை நல்வேலன், விரி நூலன், 
    அத்தன், எமை ஆள்உடைய அண்ணல், இடம் என்பர் 
    மைத் தழை பெரும் பொழிலின் வாசம்அது வீச, 
    பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.

    muttan, miku mU ilai nalvElan, viri nUlan, 
    attan, emai AL uTaiya aNNal, iTam enpar- 
    mait tazai perum pozilin vAcam atu vIca, 
    pattaroTu cittar payilkinRa pazuvUrE.

பொருள்:     ஈசன் மலமற்றவர். மூன்று பிரிவுகளைக் கொண்ட சூலப்படையை உடையவர். 
உயர்ந்த நூலாகிய வேதத்தை அருளியவர். அன்புடையவர். எம்மை ஆள்பவர். அப்பெருமான் 
பசுமை நிறைந்த பொழில்களால் சூழப்பெற்ற பழுவூரில் கோயில் கொண்டுள்ளார். அங்கு 
பக்தர்களும் சித்தர்களும் நிறைந்து விளங்குகின்றனர்.

 குறிப்புரை:     முத்தன்- இயல்பாகவே பாசம் இல்லாதவன். நல்மூவிலை வேலன் - அழகிய 
திரிசூலப்படையினன். விரிநூலன் - விரிந்து பெருகிய மறை (நூல்களை அருளிய) முதல்வன். 
அத்தன் -  தலைவன். மை -மேகம்.  தழை - தழைக்கின்ற (பொழில்). வாசம் - மணம். பத்தர் - 
பத்துடையர். பத்து  - பற்று.  அன்பு, பக்தி என்னும் வடசொற்றிரிபுமாம். சித்தர் - சித்துடையர். 
சித்தத்தார் என்பது சித்தம் அடியாகத் தோன்றும் பெயர். பயில்கின்ற பழுவூர் என்றதால், 
நம் ஆசிரியர் காலத்து இருந்த அத்திருத்தலத்தின்  சிறப்பு விளங்குகின்றது. பழுவூரே இடமென்பர் 
என்று பாடல்தோறும் இயைத்துக் கொள்க.

    Our Lord Civan by His nature is the Supreme Being, unattached to any desire and 
bondage. He holds in His hand the trident as spear. He is the author of the four Vedas,
He is our Lord and ruler. In this city of Keelap-pazhu-voor, devotees are very
religious and kind hearted to one and all. The siddars who have acquired super human 
powers perform miracles. Such people do live in this city and worship our Lord's holy 
feet. Here in this city of Keelap-pazhu-voor our Lord is manifest where sweet fragrance
from the big gardens of dense flora spreads over all the places. 

1831.     கோடலொடுகோங்கவைகுலாவுமுடிதன்மேல் 
    ஆடரவம்வைத்தபெருமானதிடமென்பர் 
    மாடமலிசூளிகையிலேறிமடவார்கள் 
    பாடலொலிசெய்யமலிகின்றபழுவூரே.        2

    கோடலொடு கோங்குஅவை குலாவு முடிதன்மேல் 
    ஆடுஅரவம் வைத்த பெருமானது இடம் என்பர் -        
    மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள் 
    பாடல் ஒலி செய்ய, மலிகின்ற பழுவூரே.

    kOTaloTu kOgku avai kulAvu muTitanmEl 
    ATu aravam vaitta perumAnatu iTam enpar-
    mATam mali cULikaiyil ERi, maTavArkaL 
    pATal oli ceyya, malikinRa pazuvUrE.

பொருள்:     வெண்காந்தள், கோங்கு ஆகிய மலர்களைத் தலையில் சூடியவரே எம்பெருமான்.
ஆடுகின்ற அரவத்தையும் சூடி நடனம் ஆடுபவரே எம்பெருமான். அவர் கோயில் கொண்டுள்ள பழுவூர்த் 
திருத்தலத்தில் மாடங்கள் மிகுந்துள்ளன. அம்மாடங்களின் மேல் ஏறி பெண்கள் ஈசனைப் 
புகழ்ந்து பாடி ஆடி மகிழ்வார்கள். 

குறிப்புரை:     கோடல் - வெண்காந்தள் மலர். கோங்கு- கோங்க மலர். மாடம் - உயரிய வீடு, 
சூளிகை- வீட்டின் உச்சி. மலிதல் இரண்டும் தலத்தின் செல்வச் சிறப்பைக் குறித்தன.                

    It is Civan, Lord of Keelap-pazhu-voor. He has adorned in His head with flowers
of gloria and ironwood. He keeps the dancing cobra also along with flowers on His head. 
In this city beautiful girls sing in melodious voice songs of praise of our Lord, climbing 
the terraces of attractive palaces. This sound is reverberated all over the city. In such a 
holy city, our Lord has manifested Himself happily. The buildings are palatial and the city 
displays plenty and prosperity.

1832     வாலியபுரத்திலவர்வேவவிழிசெய்த 
    போலியவொருத்தர்புரிநூலரிடமென்பர் 
    வேலியின்விரைக்கமலமன்னமுகமாதர் 
    பாலெனமிழற்றிநடமாடுபழுவூரே.        3

    வாலிய புரத்திலவர் வேவ விழி செய்த 
    போலிய ஒருத்தர்,புரிநூலர், இடம் என்பர் - 
    வேலியின் விரைக்கமலம் அன்ன முக மாதர், 
    பால் என மிழற்றி நடம்ஆடு பழுவூரே.

    vAliya purattilavar vEva viziceyta 
    pOliya oruttar, purinUlar, iTam enpar- 
    vEliyin viraikkamalam anna muka mAtar, 
    pAl ena mizaRRi naTam ATu pazuvUrE.

பொருள்:     வலிமை மிக்க முப்புரங்களை நெற்றிக் கண்ணால் சாம்பலாக்கியவர் சிவபெருமான். 
அவர் முப்புரி நூலை அணிந்திருப்பார். அவர் பழுவூர் திருத்தலத்தில் பொருந்தி உள்ளார். அத்தலத்தில் 
தாமரை மலர் போன்ற முகத்தையும் அன்னம் போன்ற நடையையும் பால்போன்ற இனிய சொல்லையும் 
உடைய மாதர்கள் ஈசனைப் புகழ்ந்து பாடி, ஆடிக் கொண்டிருப்பர்.

குறிப்புரை:     வாலிய-  பெரிய. புரத்திலவர் முப்புரத்தை இல்லமாக உடையவர். 
புரத்தில் அவர் எனலுமாம். அவர்- பண்டறிகட்டு. வேவவிழிசெய்த-  திரிபுரத்தைச் சிரித்து 
எரித்ததுமன்றி விழித் தெரித்ததும் ஒருகற்பத்தில் நிகழ்ந்தது என்பர்.  'அரணம் அனலாக 
விழித்தவனே' (பதி.157 பா.1) 'பார்த்ததுவும் அரணம் படர் எரிமூழ்கவே' (பதி.212 பா.5) 
' கடை நவில் மும்மதிலும் எரி ஊட்டிய கண்ணுதலான்' (பதி.319 பா.3) 'முதுமதிள் வெவ்வழல் 
கொளநனி முனிபவர்' (பதி.342 பா.4) 'நெடுமதில் ஒருமூன்றும் கொலையிடைச் 
செந்தீவெந்நறக்கண்ட குழகனார்' (பதி.376 பா.7) என்று பிறாண்டும் ஆசிரியர் அருளியவாற்றறிக. 
'மதில் மூன்றுடைய அறவைத் தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத் தேர்ப் பறவைப்புரம்' 
(தி.4 பதி.111 பா.7) என்னும் திரிபுரத்தின் இயல்பை உணர்க. போலிய -போன்ற. தடத்தமென்றபடி. 
வேலி - வயலிலுள்ள. விரை - மணம். கமலம்- தாமரை. அன்ன- போன்ன. பால் என - பால்போல 
இனியது என்ன. மிழற்றி - பாடி(க் கொண்டு) பாடி ஆடும் (வளமுடைய) பழுவூர்.

    It is Civan, Lord of Keelap-pazhu-voor. He burnt the three flying fortresses of 
the asuraas with a wink of His eye. He wears the sacred thread of three strings on His
chest. In this city, good looking damsels with lotus like faces, swan's way of walking 
and sweet words sing in melodious voices, songs in praise of our Lord and dance His glory. 
In such a holy city of Keelap-pazhu-voor, our Lord is manifest and graces the devotees.

1833.     எண்ணுமொரெழுத்துமிசையின்கிளவிதேர்வார் 
    கண்ணுமுதலாயகடவுட்கிடமதென்பர் 
    மண்ணின்மிசையாடிமலையாளர்தொழுதேத்திப் 
    பண்ணினொலிகொண்டுபயில்கின்றபழுவூரே.        4

    எண்ணும்,ஒர் எழுத்தும், இசையின் கிளவி, தேர்வார் 
    கண்ணும் முதல்ஆய கடவுட்கு இடம்அது என்பர் 
    மண்ணின்மிசை ஆடி, மலையாளர் தொழுது ஏத்தி, 
    பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.

    eNNum, or ezuttum, icaiyin kiLavi, tErvAr 
    kaNNum mutal Aya kaTavuTku iTam atu enpar- 
    maNNinmicai ATi, malaiyALar tozutu Etti,
    paNNin oli koNTu payilkinRa pazuvUrE.

பொருள்:     எண்ணாகவும், எழுத்தாகவும் எழுத்தின் பொருளாகவும் விளங்குபவரே 
எம்பெருமான். உயிர்களின்  கண்ணாகவும் விளங்குபவர் சிவபெருமான். அவர்
பழுவூர் தலத்தினுள் கோயில் கொண்டுள்ளார். அவரை மலை நாட்டிலிருந்து வந்த அந்தணர்கள்
பண்ணுடன் பொருந்திய பாடல்களைப் பாடி ஆடித் தொழுது ஏத்திப் பாடி வழிபடும் பழுவூர் என்க. 

குறிப்புரை:     எண்ணும் எழுத்தும் இசையின் கிளவி (யும்) தேர்வார் கண்ணும் முதல் ஆய கடவுள்- 
எண்ணையும் எழுத்தையும் இசையொடு கூடிய இனிய கிளவியையும் ஆராய்வார் கருதும் 
முதற்பொருளாகிய  கடவுள், 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப'
என்பதைப் போல ஈண்டும் இருப்பொருள் கொள்ளல் பொருந்தும். 'எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர்
 தாமொழியப் பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம் பணிவார் திண்ணென் வினைகளைத் 
தீர்க்கும் பிரான்'  (தி.4 ப.90 பா.6). மலையாளர் ஆடியும் தொழுதும் ஏத்தியும் பாடியும் பயில்கின்ற 
பழுவூர் என்றதால், அத்தலத்தில் அந்தணர்களான மலையாளர் வந்து செய்யும் திருத்தொண்டு, 
ஆசிரியர் கண்கூடாக் கண்டவுண்மையாதல் விளங்கும். இப்பதிகத்தின் திருக்கடைக் காப்பிற் காண்க.

    It is Civan, the Lord of Keelap-pazhu-voor, He is our Lord, who is all letters 
all the numbers. He is the means of music, also like eye to the body. The Malayali
Brahmins of western land reach this city and go to the temple to worship Him. There 
they sing His glories on the earth, dance together in all happiness and worship His 
holy feet. Those scholars have rendered the place holy and Lord Civan has chosen to 
reside in this Keelap-pazhu-voor.

1834.     சாதல்புரிவார்சுடலைதன்னில்நடமாடும் 
    நாதன்நமையாளுடையநம்பனிடமென்பர் 
    வேதமொழிசொல்லிமறையாளரிறைவன்றன் 
    பாதமவையேத்தநிகழ்கின்றபழுவூரே.        5

    சாதல்புரிவார் சுடலைதன்னில் நடம் ஆடும் 
    நாதன், நமை ஆள்உடைய நம்பன், இடம் என்பர் 
    வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன்தன் 
    பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே.

    cAtal purivAr cuTalai tannil naTam ATum 
    nAtan, namai AL uTaiya nampan, iTam enpar 
    vEtamozi colli maRaiyALar iRaivantan 
    pAtam avai Etta nikazkinRa pazuvUrE.

பொருள்:     இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் சுடலையில் நடனமாடுபவரே எம்பெருமான். 
நம்மை ஆள்பவரும் அவரே ஆவார். அவரே பழுவூர் திருத்தலத்திலும் பொருந்தியுள்ளார். 
அவ்விறைவரை வேதமொழிகளைக் கூறி, மறையாளர், திருமுடிகளைப் போற்றி வணங்கி
மகிழ்வர்.

குறிப்புரை:     கோயில் சுடுகாடு என்றது, திருவாசகம். மறையாளர்- (மலையாளத்து) வேதியர். 
'ஏத்த' பின்னோர் பாடம்.

    It is Civan, our Lord of Keelap-pazhu-voor. He dances on the burial ground now 
and then where dead bodies of human beings are burnt to ashes. He is our Lord Supreme. 
We are His servitors. From the place, now called Kerala, Vedic scholars arrive in this 
city and go to the temple. There they recite the Vedas and sing sacred songs in praise 
of the holy feet of our Lord. In this holy city of Keelap-pazhu-voor, our Lord abides.

1835.     மேவயருமும்மதிலும்வெந்தழல்விளைத்து 
    மாவயரவன்றுரிசெய்மைந்தனிடமென்பர் 
    பூவையைமடந்தையர்கள்கொண்டுபுகழ்சொல்லிப் 
    பாவையர்கள்கற்பொடுபொலிந்தபழுவூரே.        6

    மேவு அயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து, 
    மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர் 
    பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி, 
    பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே.

    mEvu ayarum mummatilum ventazal viLaittu, 
    mA ayara anRu uricey maintan iTam enpar- 
    pUvaiyai maTantaiyarkaL koNTu pukaz colli, 
    pAvaiyarkaL kaRpoTu polinta pazuvUrE.

பொருள்:     முப்புரங்கள் இடம் பெயர்ந்து சென்று அழிவைத் தரவல்லன. மாயையும் வஞ்சனையும்
 பொருந்திய அரக்கர்களின் முப்புரங்களை அழித்துச் சாம்பலாக்கியவர் எம்பெருமான். கோபம் கொண்டு 
வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர் எம்பெருமான். அவர் உறையும்
 இடமே பழுவூர்த் தலமாம்.  அத்தலத்தில் வாழும் கற்புடைய பெண்கள் நாகணவாயப் பறவைகளை வளர்த்துப் 
பழக்கி இறைவனின் புகழைப் பேசச் செய்து கேட்டு மகிழ்வர்.

குறிப்புரை:     மேவு அயரும் - பொருந்துவதால் துயர் உறுத்தும், மேவ அயரும் எனலுமாம். 
தழல்-தீ, விளைத்து - தோற்றி, மா - யானை. உரிசெய் - உரித்தலைச் செய்த. மைந்தன் - வீரன். 
பூவை- நாகணவாய்ப் பறவை. 'பொற்பில் நின்றன பொலிவு'' அப்பொற்பு. கற்பால் நீடுநிற்கும். 
கற்பிலார் பொற்புக்  கடிதில் அழிவது கண்கூடு.

    It is Civan, the Lord of Keelap-pazhu-voor. The asuraas fly in the air in their 
flying fortresses and dash against the devaas causing havoc to them. Therefore at the 
request of the devaas, our Lord Supreme burnt the three forts with sparkling fire from 
His third eye. Once He killed the fierce elephant which came to attack Him. He removed 
the hide of the elephant and covered His body with it. He is such a mighty God. In this 
Keelap-pazhu-voor city, ladies of conjugal fidelity train the special species of mina 
called Naakanavaai to chant the name of our Lord. The birds speak it very
correctly and our ladies enjoy the birds' chanting of the name of our Lord. 
In the holy city of Keelap-pazhu-voor, our Lord is manifest and graces these devotees.

1836.     மந்தணமிருந்துபுரிமாமடிதன்வேள்வி 
    சிந்தவிளையாடுசிவலோகனிடமென்பர் 
    அந்தணர்களாகுதியிலிட்டஅகில்மட்டார் 
    பைந்தொடிநன்மாதர்சுவடொற்றுபழுவூரே.        7

    மந்தணம் இருந்து புரி மா மடி தன் வேள்வி 
    சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர் - 
    அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில், மட்டு ஆர் 
    பைந்தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே.

    mantaNam iruntu puri mA maTitan vELvi 
    cinta viLaiyATu civalOkan iTam enpar- 
    antaNarkaL Akutiyil iTTa akil, maTTu Ar 
    paintoTi nal mAtar cuvaTu oRRu pazuvUrE.            

பொருள்:     முறையாக அறிவிக்காமல், ஈசனை நிந்தனை செய்யும் வகையில் தக்கன் 
வேள்வி செய்தான். எம்பெருமான் வீரபத்திரரை ஏவிட, அவர் சென்று தக்கனின் வேள்வியை
அழித்தார். அச்சிவலோகர், பழுவூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். அங்கு வேள்வி  
செய்யும் அந்தணர்கள் ஆகுதியாக அகில், தேன் முதலிய மணமிக்க பொருள்களை வேள்வியில் 
இட்டு வணங்குவர். நல்ல மாதர்கள் அங்குவந்து தொண்டுசெய்து வணங்கி மகிழ்ந்து செல்லும்போது 
உண்டாகும் காலடிச்சுவடுகள் உடையது பழுவூர் தலம்.

குறிப்புரை:     மந்தணம்- இரகசியம். மாமடி -மாமன்; தக்கன். வேள்வி - யாகம். சிந்த- அழிய. 
விளையாடு - வீரபத்திரராய்ச் சென்று போர்விளையாட்டைச் செய்த யாகத்தைப் போராக்கொள்ளாது 
விளையாட்டாக் கொண்டழித்த என்றபடி. 'சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் 
முன் இயங்கு பரிதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்' (தி. 3 ப. 376 பா. 5) என்று பின்னும், 
ஆசிரியர் அவ்விளையாட்டைக் குறித்தருளுமாறறிக. ஆர் - பொருந்துகின்ற (மாதர்) சுவடு - அடிச்சுவடு. 
அகில் தூபவர்க்கங்களுள் ஒன்று. மட்டு -தேன். ஆர்-ஆர்கின்ற. உண்ணுகின்ற- கருப்பு மட்டு  வாய்மடுத்து 
திருவாசகம் (பதி. 80 பா.5).

    It is Civan, our Lord of Keelap-pazhu-voor. His father-in-law i.e., Dakshayini's 
father, Dakshan, secretly without the knowledge of Civan, his son-in-law, arranged a great 
sacrificial fire and did not invite Him. Our Lord Civan commanded, His form Veerabadran 
to go there to destroy the sacrifice. He destroyed it completely and punished Dakshan 
and all other invitees. In this city, the Vedic scholars light the daily sacrificial fire 
and drop in it akil, honey and other materials. The sweet smoke arising out of the 
sacrificial fire adds to the softness of the girls who served to prepare the sacrificial 
fire. These girls' foot print is seen all over the city. In such a holy city our Lord 
is manifest and graces His devotees. 

1837.     உரக்கடல்விடத்தினைமிடற்றிலுறவைத்தன் 
    றரக்கனையடர்த்தருளுமப்பனிடமென்பர் 
    குரக்கினம்விரைப்பொழிலின்மீதுகனியுண்டு
    பரக்குறுபுனற்செய்விளையாடுபழுவூரே.        8

    உரக் கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து, அன்று 
    அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர் - 
    குரக்கு இனம் விரைப் பொழிலின்மீது கனி உண்டு, 
    பரக்குஉறு புனல் செய் விளையாடு பழுவூரே.

    urak kaTal viTattinai miTaRRil uRa vaittu, anRu 
    arakkanai aTarttu aruLum appan iTam enpar- 
    kurakku inam viraip pozilin mItu kani uNTu, 
    parakku uRu punal cey vilaiyATu pazuvUrE.

பொருள்:     பாற்கடலில் தோன்றிய விடத்தினைத் தன் கண்டத்தில் அடக்கி அருள் செய்தவர் 
சிவபெருமான். அரக்கன் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்றபோது அவனை அடர்த்தவர் 
எம்பெருமான். அவர் பழுவூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். அத்தலத்தைச் சுற்றிலும் 
சோலைகள் சூழ்ந்துள்ளன. அங்குள்ள கனிகளைக் குரங்குகள் உண்டு, நீர் நிறைந்த வயல்களில் 
விளையாடி மகிழும்.

குறிப்புரை:     உரம் - வலிமை. மிடற்றில் - கழுத்தில். குரங்கு இனம் - குரக்கினம் (வலித்தல் விகாரம்)
விரை- மணம். பரக்கு - பரத்தல். புனல் செய் - நீர்வளமிக்க வயல். குரங்கினம் கனியுண்டு செய்யில் 
விளையாடும் ஊர் என்க. 'புணர் செய்' என்ற பழைய பாடத்திற்குக் கலவி பொருளாகும். 
புணர்தலைச் செய்யும் விளையாட்டு.

    It is Civan, the Lord of Keelap-pazhu-voor. Once upon a time He drank the 
killing poison that came out of the ocean of milk and retained it at His throat. 
On another occasion, He punished Raavana for his misdeeds, but later when he repented 
and begged for pardon our Lord graced him. In this city of Keelap-pazhu-voor, monkeys 
in groups enter the big gardens and eat all the fruits available there. Then they move 
to the fertile fields full of water and play there. In such a holy rich city our 
Lord is manifest.

1838.    நின்றநெடுமாலுமொருநான்முகனுநேட 
    அன்றுதழலாய்நிமிருமாதியிடமென்பர் 
    ஒன்றுமிருமூன்றுமொருநாலுமுணர்வார்கள் 
    மன்றினிலிருந்துடன்மகிழ்ந்தபழுவூரே.        9

    நின்ற நெடுமாலும் ஒரு நான்முகனும் நேட, 
    அன்று தழல்ஆய் நிமிரும் ஆதி இடம் என்பர் - 
    ஒன்றும் இரு-மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் 
    மன்றினில் இருந்து உடன்மகிழ்ந்த பழுவூரே.

    ninRa neTumAlum oru nAnmukanum nETa,                 
    anRu tazal Ay nimirum Ati iTam enpar- 
    onRum iru-mUnRum orunAlum uNarvArkaL 
    manRinil iruntu uTan makiznta pazuvUrE.

பொருள்:     அடிமுடி தேட முயன்ற மாலும் பிரமனும் காண முடியா நிலையில் ஒளி உருவாய் 
நின்றவர் எம்பெருமான். அவர் பழுவூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். ஏகப் பொருளாய் விளங்குபவர் 
ஈசனாரே. நான்கு வேதமாய் விளங்குபவர் அவர். வேதத்தின் ஆறு  அங்கங்களாக விளங்குபவரும் 
அவரே. இவற்றை எல்லாம் உணர்ந்த அந்தணர்கள் பொது இடங்களில் பேசி மகிழ்ந்து உறையும் 
பழுவூர் என்க.

குறிப்புரை:     ஒன்றும் - தனிமுதலாகிய சிவபெருமானையும், இருமூன்றும் -ஆறு அங்கங்களாய்
வேதார்த்த  சாதகமாயுள்ளவற்றையும். ஒருநாலும் -  நாலு வேதங்களையும், உணர்வார்கள் -
உணரும் அந்தணர். மன்று - அம்பலம், சபை. (பெரிய, திருநீல கண்ட) 'அருமறையோடாறங்கம் 
ஆய்ந்து கொண்டு பாடினார் நால்வேதம்' (தி. 6 ப. 83 பா. 5) என்பதில் மறையும் வேதமும் 
வெவ்வேறு ஆதல் அறிக.

    It is Civan, Lord of Keelap-pazhu-voor. The tall Vishnu and the four faced Brahma 
were in search of our Lord's head and feet in vain. Then our Lord who is the origin of all 
rose above the sky as an immeasurable, infinite fire. In the Keelap-pazhu-voor city 
scholars who have mastered the knowledge about the only one and the Absolute, the six 
useful substitute parts of vedanta and the four Vedas, assemble in the big hall and 
happily discuss the various aspects of these religious articles as explained to them. 
In this holy city such big hall exists. In this holy place our Lord is manifest.

1839.     மொட்டையமணாதர்துகில்மூடுவிரிதேரர் 
    முட்டைகண்மொழிந்தமுனிவான்றனிடமென்பர் 
    மட்டைமலிதாழையிளநீரதிசைபூகம் 
    பட்டையொடுதாறுவிரிகின்றபழுவூரே.        10

    மொட்டை அமண் ஆதர், துகில் மூடு விரி தேரர், 
    முட்டைகள் மொழிந்த முனிவான்தன் இடம் என்பர் 
    மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம், 
    பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே.

    moTTai amaN Atar, tukil mUTu viri tErar, 
    muTTaikaL mozinta munivAn tan iTam enpar-             
    maTTai mali tAzai iLanIr atu icai pUkam, 
    paTTaiyoTu tARu virikinRa pazuvUrE.

பொருள்:     தலைமயிரை நீக்கிய சமணர்களும், புத்தர்களும் சாக்கியர்களும் கூறும் மொழிகள் 
பொருந்தா மொழிகளே. அம்மொழிகளை விரும்பாதவனே எம்பெருமான். அவர் விரும்பி உறையும் இடமே 
பழுவூர் தலமாம். அவ்வூரில் தாழை, தென்னை, பாக்கு ஆகியன செழித்து ஓங்கியிருக்கும்.

 குறிப்புரை:     அமணர் ஆதர் - சமணராகிய அறிவிலிகள். ஆதம் - அறிவின்மை. மொட்டை - 
தலைமயிர் பறித்தலால் ஆனது. முட்டைகள்- வழுவினர், குறைவினர், வறியர், பதர்கள் எனப் 
பல பொருளும் பொருந்தும். மொழிந்த - சொல்லியவை. முனிவான் - வெறுப்பவன். 
இளநீரது என்க. இசை - இசைந்த. பூகம் - பாக்குமரம். தாறு-குலை. 

    The Jains who remove the hair and have baldheads and the Buddhists who cover their 
body with ochre robes, utter falsehood hated by our Lord. Our Lord desires to live in 
Keelap-pazhu-voor. In the city Keelap-pazhu-voor, the long sheathed pandanus,
rich and tall coconuts are in plenty. Similarly, the arecanut trees also have 
long sheaths, out of which the areca bunches protrude and develop. These trees 
are in plenty, in and around the city of Keelap-pazhu-voor. In such an attractive 
city, our Lord is manifest.

1840.     அந்தணர்களானமலையாளரவரேத்தும் 
    பந்தமலிகின்றபழுவூரரனையாரச் 
    சந்தமிகுஞானமுணர்பந்தனுரைபேணி 
    வந்தவணமேத்துமவர்வானமுடையாரே.        11

    அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும் 
    பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச் 
    சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி, 
    வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

    antaNarkaL Ana malaiyALar avar Ettum 
    pantam malikinRa pazuvUr aranai, Arac 
    cantam miku njAnam uNar pantan urai pENi, 
    vanta vaNam Ettumavar vAnam uTaiyArE.

பொருள்:     மலைநாட்டு அந்தணர்கள் போற்றிப் புகழ்ந்து பாடும் பழுவூர் நாதனை 
ஞானசம்பந்தப் பெருமான் புகழ்ந்து பத்து பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அத்தமிழ்ப் 
பாடல்களை அன்புடன் பாடிப் பரவும் அடியார்கள் சிவலோகம் பெறுவார்கள்.

குறிப்புரை:     முன் உள்ள பாக்கள் 4, 5, 7, 9 காண்க. ஏத்தும் பந்தம் - வழிபட்டு நிற்கும் 
அருளுறவு. ஆர- நிறைய. ஞானம் உணர்பந்தன் என்று திருப்பெயர் பொருள் விளங்குமாறுணர்க. 
பேணி - விரும்பி. பதிகம் 165 முடிவிலும் இவ்வடி அமைந்தமை காண்க. 

    Vedic Brahmin scholars from western region called Malayalees come to Keelap-pazhu-voor, 
go to the temple and praise our Lord's divinity. There is a graceful bond between the Lord and 
His devotees. Our wise saint Thiru-gnana-Sambandar sang in devotional musical tone ten verses
on our Lord in Keelap-pazhu-voor. Those devotees who recite these hymns on our Lord in proper 
musical tone and worship Him will reach heaven.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            34ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 34th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 171                      பதிக எண் 35. 
35. திருத்தென்குரங்காடுதுறை                35. THIRUTH-THEN-KURANGU-AADUTHURAI
பண் : இந்தளம் - வினாஉரை                Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    திருத்தென்குரங்காடுதுறை என்னும் திருத்தலமானது மயிலாடுதுறை- கும்பகோணம்
தொடர்வண்டிப் பாதையில் ஆடுதுறை தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே 3/4 கி.மீ. தூரத்தில்
இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களில் முப்பத்தோராவது தலமாகும்.
மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து வழியில் உள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய
ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன.

    இறைவரது திருப்பெயர் ஆபத்சகாயர் (ஆபத்சகாயேசர்). இறைவியாரது திருப்பெயர்
(பவளக்கொடியம்மை)  வண்டார் கருமென்குழல் மங்கை. இப்பெயரை இவ்வூர்ப் பதிகத்தின்
 இரண்டாம் திருப்பாட்டில் திருஞானசம்பந்தப் பெருந்தகையார் எடுத்துரைக்கின்றார். 
வாலி, அநுமன் ஆகியோர்களால் பூசிக்கப்பெற்றது.

    திருவையாற்றிற்குக் கிழக்கே 9 கி.மீ. தூரத்தில் காவிரியின் வடகரையில் குரங்காடுதுறை
என்னும் ஊர் ஒன்று இருக்கிறது. அது வட குரங்காடுதுறை ஆகும். இது காவிரிக்குத் தென்கரையில் 
இருப்பதால் தென்குரங்காடுதுறை என்னும் பெயர் பெற்றது. இவ்வூரை மக்கள் ஆடுதுறை என்றே 
அழைக்கின்றனர். இது உத்தமசோழ தேவரது தாயாராகிய செம்பியன் மாதேவியாரால் 
கட்டப்பெற்ற கற்றளியை உடையது. 

பதிக வரலாறு

    திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவிடைமருதூரை வழிபட்டுப்  பாடித் 
திருநாகேச்சுரத்தையும் பணிந்து மற்றும் நற்பதிபல நண்ணிப் போற்றிக் குரங்காடுதுறையை
அணைந்து, குழகனார் குரைகழல்களைப் பெருங்காதலால் பேணிய இன்னிசை பெருக
அருள்செய்தது இந்த அருங்கலை நூற்றிருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1841     பரவக்கெடும்வல்வினைபாரிடஞ்சூழ 
    இரவிற்புறங்காட்டிடைநின்றெரியாடி 
    அரவச்சடையந்தணன்மேயஅழகார் 
    குரவப்பொழில்சூழ்குரங்காடுதுறையே.        1

    பரவக் கெடும், வல்வினை - பாரிடம் சூழ, 
    இரவில் புறங்காட்டுஇடை நின்று எரி ஆடி; 
    அரவச் சடை அந்தணன்; மேய அழகு ஆர் 
    குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.

    paravak keTum, valvinai--pAriTam cUza, 
    iravil puRagkATTu iTai ninRu eri ATi; 
    aravac caTai antaNan; mEya, azaku Ar 
    kuravappozil cUz, kuragkATutuRaiyE.

பொருள்:     பூதகணங்கள் சூழ, இரவில் மயானத்தில் நெருப்பைக் கையில் ஏந்தித் திருநடனம் 
புரிபவரே சிவபெருமான். தலையில் அரவத்தை அணிந்தவரே சிவபெருமான். அவரே குரவ மலர்கள் 
நிறைந்து விளங்கும் குரங்காடுதுறை தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரைப் பரவித் தொழும் 
அடியவர்களின் வல்வினைகள் கெட்டு அழியும்.

 குறிப்புரை:     குரங்காடுதுறை பரவ வல்வினை கெடும் என்றியைக்க. பாரிடம்- பூதகணம். 
ஆடி – பெயர்ச்சொல், அந்தணன் - அறவாழியந்தணன். மேய - எழுந்தருளிய (மேவிய - விரும்பிய) 
குரவம் - குராமரம், பரவுதல் - முன் நின்று துதித்தல். 

    See! It is Civan, Lord of Thiruth-then-kurangu-aaduthurai. He dances on the 
burial ground at midnight surrounded by ghosts carrying fire in His hand. He has a 
serpent on His matted hair. He is the Supreme God called 'Anthanan' (This word has 
been used by Thiru-valluvar also in the first chapter 8th verse). He is the embodiment 
of all virtues. He manifests Himself in Thiruth-then-kurangu-aaduthurai an attractive
 place, surrounded by a number of gardens of bottle flower trees.

1842.     விண்டார்புரமூன்றுமெரித்தவிமலன்
    இண்டார்புறங்காட்டிடைநின்றெரியாடி 
    வண்டார்கருமென்குழல்மங்கையொர்பாகம் 
    கொண்டான்நகர்போல்குரங்காடுதுறையே.        2

    விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன், 
    இண்டு ஆர் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி 
    வண்டு ஆர் கருமென் குழல் மங்கை ஒர் பாகம் 
    கொண்டான்,நகர்போல் - குரங்காடுதுறையே.

    viNTAr puram mUnRum eritta vimalan, 
    iNTu Ar puRagkATTu iTai ninRu eri ATi, 
    vaNTu Ar karumenkuzal magkai orpAkam 
    koNTAn, nakarpOl--kuragkATu tuRaiyE.

பொருள்:     பகைமை கொண்ட அசுரர்களின் முப்புரத்தை எரித்த விமலனாரே எம்பெருமான். 
இண்டுச் செடிகள் நிறைந்த புறங்காட்டில் நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவரே எம்பெருமான். 
வண்டுகள் மொய்க்கும் மணமிக்க கூந்தலைக் கொண்ட மங்கையைத் தன் இடபாகத்தில் 
கொண்டவரே எம்பெருமான். அவர் கோயில் கொண்டிருக்கும் தலமே தென்குரங்காடுதுறை என்க.

குறிப்புரை:     விண்டார்- பகைவர். விமலன்- மலமில்லாதவன். இண்டு -புலிதொடக்கிக் கொடி. 
மென்குழல் மங்கை - இத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயராயிருக்கலாம். கொண்டான் - 
கொண்ட சிவபிரான். வினையாலணையும் பெயர். கொண்டானது நகர் போலும் என்க.

    It is Civan, Lord of Thiruth-then-kurangu-aaduthurai. He is the purest Supreme 
Being. The asuraas had enmity with our Lord. He therefore destroyed their three flying 
forts. He is free from impurities. He dances on the cremation ground carrying fire in His 
hand, where accacur climber grows. He shares the left half of His body with our goddess 
Umaa. The bees hum around the black, fragrant hair of Umaa. Our Lord has manifested 
Himself in the holy place of Thiruth-then-kurangu-aaduthurai.

1843.     நிறைவில்புறங்காட்டிடைநேரிழையோடும் 
    இறைவில்லெரியான்மழுவேந்திநின்றாடி 
    மறையின்னொலிவானவர்தானவரேத்தும் 
    குறைவில்லவனூர்குரங்காடுதுறையே.        3

    நிறைவு இல் புறங்காட்டு இடை, நேரிழையோடும் 
    இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி; 
    மறையின்(ன்) ஒலி வானவர் தானவர் ஏத்தும் 
    குறைவுஇல்லவன்; ஊர் - குரங்காடுதுறையே.

    niRaivu il puRagkATTu iTai, nErizaiyOTum 
    iRaivu il eriyAn, mazu Enti ninRu ATi; 
    maRaiyin(n) oli vAnavar tAnavar Ettum 
    kuRaivu illavan; Ur--kuragkATu tuRaiyE.

பொருள்:     என்றும் நிறைவற்ற இடமே சுடுகாடு என்க. அக்காட்டில் உமையாளோடு 
நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவனே சிவபெருமான். கையில் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி 
நிற்பவனே சிவபெருமான். குரங்காடுதுறையில் பொருந்தி இருப்பவனே சிவபெருமான். 
அத்தலத்தில் மறைஒலி முழங்கிக் கொண்டே இருக்கும். வானவர்களும் தானவர்களும் 
இறைவனை வழிபாடு செய்து கொண்டே இருப்பர். குறைவற்ற இறைவன் அவனே ஆவான்.

குறிப்புரை:     நிறைவு இல்புறங்காடு -எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து மன்பதைக் 
கெல்லாம் தானாய்த் தன்புறங்காண்போர்க் காண்பறியாது (புறம் - 356) என்று கூறப்பட்ட புறங்காடு 
'இனிவரும் பிணத்திற்கு இங்கு இடமில்லை' என்று நிறைதல் என்றும் இல்லாதது. இறைவு- இறைதல் 
(அழிதல்). இல் - இல்லாத. எரியான் - தீயுடையவன். சிவபிரான் ஏந்திய தீக்கு என்றும் அழிவில்லை. 
ஆடி- பெயர்ச்சொல். தானவர் - அசுரர். குறைவு இல்லான் - குறைவிலா நிறைவினன்.

    It is Civan, Lord of Thiruth-then-kurangu-aaduthurai. The cremation ground 
is a place never satiated in receiving the dead body. In this place, our Lord dances 
with our goddess Umaa who wears selected jewels. He holds on His hand the never ending 
fire. He holds an axe in another hand. He is such a Supreme Being of perfection devoid
of flaws. On hearing the Vedic chanting by scholars Devaas, Asuraas and all other 
celestials arrive and worship our Lord in this place. In such a holy place, our flawless
Lord has manifested Himself.

1844.     விழிக்குந்நுதன்மேலொருவெண்பிறைசூடித் 
    தெழிக்கும்புறங்காட்டிடைச்சேர்ந்தெரியாடிப் 
    பழிக்கும்பரிசேபலிதேர்ந்தவனூர்பொன் 
    கொழிக்கும்புனல்சூழ்குரங்காடுதுறையே.        4

    விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி, 
    தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி,
     பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் - பொன் 
    கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே.

    vizikkum nutalmEl oru veNpiRai cUTi, 
    tezikkum puRagkATTu iTaic cErntu eri ATi, 
    pazikkum paricE pali tErntavan, Ur--pon 
    kozikkum punal cUz kuragkATu tuRaiyE.

பொருள்:     நெற்றிக் கண்ணை உடையவனே எம்பெருமான். தலையில் வெண்பிறையைச்
சூடியவனே எம்பெருமான். புறங்காட்டில் நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவனே எம்பெருமான். 
பிறர் அறியாமல் பழித்துக் கூறும் நிலையில் பிச்சை ஏற்றுத் திரிபவனே எம்பெருமான். 
பொற்றுகளைச் சுமந்து வரும் பொன்னி ஆற்றங்கரையில் உள்ள குரங்காடுதுறை தலத்துள் 
கோயில் கொண்டவனே எம்பெருமான் என்க.

குறிப்புரை:     விழிக்கும் நுதல் மேல்- தீக்கண் திறக்கும் திருநுதலின் மேலிடத்தில் (சென்னியின் 
முற்பக்கத்தில் என்றபடி). பிறைநுதல் வண்ணம் ஆகின்று (புறம் - கடவுள்) சூடி, ஆடித் தேர்ந்தவன் 
ஊர் குரங்காடுதுறை என்க. தெழிக்கும்- ஒலிக்கும். பழிக்கும் பரிசே- பலியேற்கின்றானென்று பழிக்குந் 
தன்மையிலே. பொன் கொழிக்கும் புனல் - பொன்னியாகிய காவிரி நீர்.

    It is Civan, Lord of Thiruth-then-kurangu-aaduthurai. He has a third eye in his 
forehead. At the top portion of His head, above the third eye, He allows the baby moon 
to rest. He dances on the cremation ground, a place of terrible sounds. He wanders in the 
entire cosmos carrying a begging bowl and accepts the oblations given by ladies.
The world despises such behaviour of His. The river Cauvery brings gold dashing against 
the banks of the city. In such a glorious city our Lord is manifest.

1845.     நீறார்தருமேனியன்நெற்றியொர்கண்ணன் 
    ஏறார்கொடியெம்மிறையீண்டெரியாடி 
    ஆறார்சடையந்தணனாயிழையாளோர் 
    கூறான்நகர்போல்குரங்காடுதுறையே.        5

    நீறு ஆர் தரு மேனியன், நெற்றி ஒர் கண்ணன், 
    ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரி ஆடி, 
    ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர் -
    கூறான், நகர்போல் - குரங்காடுதுறையே.

    nIRu Artaru mEniyan, neRRi or kaNNan,             
    ERu Ar koTi em iRai, INTu eri ATi,
    ARu Ar caTai antaNan, AyizaiyAL Or 
    kURAn, nakarpOl-kuragkATu tuRaiyE.

பொருள்:     ஈசன், திருநீற்றை மேனியில் பூசி உள்ளான். நெற்றிக் கண்ணைக் கொண்டு 
அருள்புரிவான். இடபக் கொடியை ஏந்தி நிற்பான். நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுவான்.
கங்கை ஆற்றைத் தலையில் அணிந்துள்ளான். உமாதேவியைத் தன்உடம்பின் பாகமாகக் 
கொண்டிருப்பான். அவன் கோயில் கொண்டுள்ள தலமே தென்குரங்காடு துறையாம் என்க.

குறிப்புரை:     நீறு ஆர்தரு மேனியன்-  திருவெண்ணீற்றினை நிறையப் பூசிய திருமேனியன்; 
ஏறுஆர்  கொடி (பா.9) - விடைக்கொடி. (ஆர்தல் - பொருந்துதல்) ஈண்டு எரி- வினைத்தொகை. திரண்டதீ. - 
ஆறு-கங்கை. ஆயிழையாள் ஓர் கூறான் - மங்கை பங்கன்.

    It is Civan, our Lord of Thiruth-then-kurangu-aaduthurai. He has smeared His 
body with sacred ashes. He has a third eye in His forehead. He is our Master. 
His flag has the figure of a bull as His insignia. He dances over plentiful fires. 
He has accommodated the river Ganges on His matted hair. He is a very graceful 
Supreme Being. He shares His left side body with our goddess Umaa. In such a holy 
city, our Lord is manifest.

1846.     நளிரும்மலர்க்கொன்றையுநாறுகரந்தைத் 
    துளிருஞ்சுலவிச்சுடுகாட்டெரியாடி 
    மிளிரும்மரவார்த்தவன்மேவியகோயில் 
    குளிரும்புனல்சூழ்குரங்காடுதுறையே.        6

    நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத் 
    துளிரும் சுலவி, சுடுகாட்டு எரிஆடி, 
    மிளிரும்(ம்) அரவு ஆர்த்தவன் மேவிய கோயில் - 
    குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே.

    naLirum malarkkonRaiyum nARu karantait 
    tuLirum culavi, cuTukATTu eri ATi, 
    miLirum(m) aravu Arttavan mEviya kOyil- 
    kuLirum punal cUz kuragkATu tuRaiyE.

பொருள்:     எம்பெருமான் கொன்றை மலர்மாலையை அணிந்திருப்பான். மணமிக்க 
திருநீற்றையும் பூசியிருப்பான். நெருப்பைக் கையில் ஏந்திச் சுடுகாட்டில் ஆடுவான். ஒளிமிக்க 
பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பான். அவன் குளிர்ந்த புனல் சூழ்ந்த குரங்காடுதுறை 
தலத்தில் கோயில் கொண்டிருப்பான்.

குறிப்புரை:     நளிரும் - குளிரும். கரந்தைத் துளிர் - கரந்தை என்னும் மரத்தின் தளிர். 
சுலவி - சுற்றி. மிளிரும் - விளங்கும். கீழ் மேலாகும் எனலுமாம்.

    See! It is the place of Thiruth-then-kurangu-aaduthurai. Our Lord Civan dances 
on the cremation ground wearing cool cassia flowers along with the sweet smelling  tender 
leaves of Siva Kaantham tree around the hair. He is the most handsome Supreme Being. 
He has pacified the dreadful snake, using it as His belt on His loins. Our Lord is 
manifest in the temple in Thiruth-then-kurangu-aaduthurai, a place surrounded by 
cool pools.

1847.     பழகும்வினைதீர்ப்பவன்பார்ப்பதியோடும் 
    முழவங்குழல்மொந்தைமுழங்கெரியாடும் 
    அழகன்னயில்மூவிலைவேல்வலனேந்தும் 
    குழகன்நகர்போல்குரங்காடுதுறையே.        7

    பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும், 
    முழவம் குழல் மொந்தை முழங்க, எரிஆடும் 
    அழகன்(ன்); அயில்மூஇலைவேல் வலன் ஏந்தும் 
    குழகன்; நகர்போல் - குரங்காடுதுறையே.

    pazakum vinai tIrppavan; pArppatiyOTum,
    muzavam kuzal montai muzagka, eri ATum 
    azakan(n); ayil mU ilaivEl valan Entum 
    kuzakan; nakarpOl-kuragkATu tuRaiyE.

பொருள்:     உயிரைத் தொடர்ந்துபற்றித் துன்பம் தரும் வினைகளைத் தீர்ப்பவனே எம்பெருமான். 
பார்வதிதேவியோடு பொருந்தி இருப்பவனே சிவபெருமான். முழவம், குழல், மொந்தை போன்ற 
இசைக்கருவிகள் முழங்க, நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவனே சிவபெருமான். மூவிலைச் சூலத்தை 
ஏந்தியிருப்பவனே சிவபெருமான். அவனே குரங்காடுதுறை தலத்துள் கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     பழகும் வினை- பிறவிதொறும் உயிரை இடைவிடாது தொடர்ந்து பழகும் பழவினை, 
 பார்ப்பதி - பார்வதி தேவியார். முழவம். குழல், மொந்தை என்னும் இசைக் கருவிகள் முழங்க எரியில் 
ஆடும் அழகன் என்க. முழங்கு எரி -வினைத்தொகையுமாம். அயில்- கூர்மை. மூவிலைவேல் -திரிசூலம்.         
வலன் - வலக்கையில். குழகன் - இளைஞன். 

    See! It is the sacred place, Thiruth-then-kurangu-aaduthurai. Raavanan, king of 
Sri Lanka made a frightful roaring sound and tried to lift Mount Kailash and keep it aside. 
Our Lord pressed the mountain with His toe. Raavanan got crushed and his mightiness was 
suppressed. In this city on both the banks of the Cauvery, an ever flowing perennial river, 
are beautiful gardens with variety of tall trees in good numbers. This is the holy city,
where our Lord Civan has manifested Himself.

1848.    வரையார்த்தெடுத்தவ்வரக்கன்வலியொல்க 
    நிரையார்விரலானெரித்திட்டவனூராம் 
    கரையார்ந்திழிகாவிரிக்கோலக்கரைமேல் 
    குரையார்பொழில்சூழ்குரங்காடுதுறையே.        8

    வரை ஆர்த்து எடுத்த(வ்) அரக்கன் வலி ஒல்க, 
    நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் - 
    கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல், 
    குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே.

    varai Arttu eTutta(v) arakkan vali olka, 
    nirai Ar viralAl nerittiTTavan Ur Am- 
    karai Arntu izi kAvirik kOlak karaimEl, 
    kurai Ar pozil cUz, kuragkATu tuRaiyE.

பொருள்:     கயிலாய மலையை எடுக்க முயன்ற அரக்கன் இராவணனின் வலிமையைத் தன் 
கால்விரலை ஊன்றி அழித்தவனே சிவபெருமான். அவன் விரைந்து வரும் காவிரி நதியின் கரையில் 
ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்துள்ள குரங்காடு துறை தலத்துள் கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     ஒல்க - தளர, சுருங்க. கோலம்- அழகு. நெரித்திட்டவன் - நெரியச் செய்தவன். குரை-ஒலி

    See! It is the sacred place of Thiruth-then-kurangu-aaduthurai where our Lord Civan 
resides. He dispels all the sufferings of birth. Carrying fire in one hand, He dances with 
our goddess Paarvathi Devi on the cremation ground for the music of tabret, drum open at one 
end and flute. He is the most handsome Supreme Being, dancing on fire. He looks youthful 
holding a trident to represent His victory. This our Lord is manifest in 
Thiruth-then-kurangu-aaduthurai.

1849.     நெடியானொடுநான்முகனுந்நினைவொண்ணாப் 
    படியாகியபண்டங்கனின்றெரியாடி 
    செடியார்தலையேந்தியசெங்கண்வெள்ளேற்றின் 
    கொடியான்நகர்போல்குரங்காடுதுறையே.        9

    நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப்         
    படிஆகிய பண்டங்கன், நின்று எரி ஆடி
    செடி ஆர் தலை ஏந்திய செங்கண் வெள்ஏற்றின் 
    கொடியான்,நகர்போல் - குரங்காடுதுறையே.

    neTiyAnoTu nAnmukanum ninaivu oNNAp 
    paTi Akiya paNTagkan, ninRu eri ATi, 
    ceTi Ar talai Entiya cekgaN veL ERRin 
    koTiyAn, nakarpOl--kuragkATu tuRaiyE.

பொருள்:     திருமாலும் நான்முகனும் அடிமுடி காணாதவாறு நெருப்புருவாய் 
ஓங்கி நின்றவன் சிவபெருமான். கையில் நெருப்பை ஏந்தி ஆடுபவன் சிவபெருமான். 
பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலிதேர்பவன் சிவபெருமான். சிவந்த கண்களைக் 
கொண்ட இடபத்தைக் கொடியாகக் கொண்டவன் சிவபெருமான். அவனே குரங்காடுதுறை 
தலத்துள் கோயில் கொண்டுள்ளான் என்க.

குறிப்புரை:     படி - தன்மை. உருவம். பண்டங்கன் - பாண்டரங்கம் என்னும் கூத்தை              
ஆடுபவன். பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே (தி. 6 பதி. 37 பா. 63) செடியார்தலை -
பிரமகபாலம். செங்கண் வெள்ளேற்றின் கொடியான் - சினக்குறிப்பை உணர்த்தும் சிவந்த 
கண்ணை உடைய வெள்ளை விடையை எழுதிய கொடியை உடையவன் (பா.5). 

    It is Civan, the Lord of Thiruth-then-kurangu-aaduthurai. Once, He assumed the 
form of endless illumination. He could not be comprehended by the tall Vishnu, demigod, 
and the four faced Brahma, also a demigod. He performs the Panduranga dance whenever 
He wants to. He also dances over the fire in the cremation ground. He holds in His hand 
the stinking, fleshy skull for begging alms. The insignia of His flag is the figure of 
the red eyed white bull, which is none other than Thirumal. Our Lord is manifest in 
Thiruth-then-kurangu-aaduthurai.

1850.     துவராடையர்வேடமலாச்சமண்கையர் 
    கவர்வாய்மொழிகாதல் செய்யாதவனூராம்
    நவையார்மணிபொன்னகில்சந்தனமுந்திக் 
    குவையார்கரைசேர்குரங்காடுதுறையே.        10

    துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர், 
    கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர்ஆம் - 
    நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக் 
    குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே.

    tuvar ATaiyar, vETam alAc camaNkaiyar, 
    kavar vAymozi kAtal ceyyAtavan Ur Am- 
    navai Ar maNi, pon, akil, cantanam, untik 
    kuvai Ar karai cEr kuragkATu tuRaiyE.

பொருள்:     துவராடை அணிந்த பௌத்தர் மற்றும் சமணர் எப்பொழுதும் முரண்பட்ட 
மொழிகளையே பேசித் திரிவார்கள். அம்மொழிகளை விரும்பாதவனே சிவபெருமான். நவமணிகளையும் 
பொன்னையும் சந்தனத்தையும் உருட்டிவரும் பொன்னி ஆற்றங்கரையில் உள்ள குரங்காடுதுறை 
தலத்தில் நம் சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     கையர் -கீழ்மக்கள். கவர்வாய்மொழி- கவர்த்த (ஐயத்தை விளைவிக்கும்) வாய்ப்பேச்சு. 
நவை - சிதைவு என்னும் பொருட்டாய் நின்றது. குவை - குவியல்.

    It is Civan, the Lord of Thiruth-then-kurangu-aaduthurai. He slights the words of 
the Buddhists who wear ochre robes as well as those of the Jains who wear robes which are 
not suitable to their way of life. In the city of Thiruth-then-kurangu- aaduthurai, 
the water of river Cauvery falling from the mountain carries gems, gold, akil, and 
sandalwood logs. Plenty of all these materials are found on the banks of the river in 
Thiruth-then-kurangu-aaduthurai. Our Lord is manifest in such a fertile place.

1851.     நல்லார்பயில்காழியுள்ஞானசம்பந்தன் 
    கொல்லேறுடையான்குரங்காடுதுறைமேல் 
    சொல்லார்தமிழ்மாலைபத்துந்தொழுதேத்த 
    வல்லாரவர்வானவரோடுறைவாரே.        11

    நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன், 
    கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல் 
    சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த 
    வல்லார் அவர், வானவரோடு உறைவாரே.

    nallAr payil kAziyuL njAnacampantan, 
    kol ERu uTaiyAn kuragkATu tuRaimEl 
    col Ar tamiz mAlaipattum, tozutu Etta 
    vallAr avar, vAnavarOTu uRaivArE.

பொருள்:     நல்ல பண்பாளர்கள் நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்தவர் ஞானசம்பந்தப்
பெருமான். அவர் இடப வாகனத்தில் அமர்ந்து அருளும் குரங்காடுதுறை இறைவனைப் போற்றி 
தமிழ்ப்பாடல்கள் பாடியுள்ளார். அத்தமிழ்ப்பாடல்களைப் பாடிப் பரவ வல்லவர்கள் வானுலக 
வாழ்வை அடைந்து அடியார்களுடன் கூடி மகிழ்ந்திருக்கப் பெறுவார்கள்.

குறிப்புரை:     நல்லார்- ஞானியர். கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள்ளீசன்றன் 
கழல் மேல் நல்லோர் நற்றுணையாம் பெருந்தன்மை (129-11). வானவர்- வீட்டுலகடைந்தோர். 
உறைவார்- வாழ்வார்.

    Our godly saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi where good people do 
live in large numbers. He sang on our Lord Thiruth-then-kurangu-aaduthurai ten Tamil hymns 
of divinity. Those devotees who are capable of reciting these ten Tamil hymns in good musical 
tone will live along with the devaas in the celestial world.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            35ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 35th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 172                பதிக எண்: 36

36. திருவிரும்பூளை                36. THIRU-IRUM-POOLAI

பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai


திருத்தல வரலாறு

    பூளை என்ற செடியைத் தலத்துக்குறியாக உடைமையால் இது இப்பெயர் பெற்றது. 
இது இப்பொழுது ஆலங்குடி என்று வழங்கப் பெறுகின்றது. இது தஞ்சாவூர்- கும்பகோணம் -
நீடாமங்கலம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். பேருந்து வசதிகள் உள்ளன. இது காவிரியின் 
தென்கரையில் உள்ள தொண்ணூற்றெட்டாவது பதி. இறைவரின் திருப்பெயர் காசியாரணியர். 
வடமொழியில் ஆபத்சகாயர். இறைவியாரின்  திருப்பெயர் ஏலவார்குழலி.

    விசுவாமித்திரர் பூசித்துப் பேறுபெற்ற பதி. இதற்குத் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற 
பதிகம் ஒன்று இருக்கிறது. கோயிலில் தெற்குக் கோபுரம் பெரியது. கிழக்குக் கோபுரம் சிறியது. 
முப்புறமும் அகழி போன்ற திருக்குளம் சூழ்ந்து வெகு அழகாக இருக்கிறது. குருஸ்தலம். 
தட்சிணாமூர்த்தி விழா சிறப்பானது. அவருக்கு உற்சவரும் மூலவரும் உண்டு. அம்மன் 
கோயில் தனி. இரண்டிற்கும் இடையில் ஒரு மண்டபமும் உண்டு. புராணம் உண்டு.

பதிக வரலாறு

    ஆளுடைய பிள்ளையார் திருவாறை வடதளியினின்றும் எப்பொருளுமாய் நின்ற 
இறைவரது இரும்பூளை என்னும் தலத்தை எய்தித் தொண்டர் தொழ, அண்டர்பிரான் கோயிலை 
அடைந்து, இறைஞ்சி, அடியார்களை வினவியவாற்றால் அருமறையின் பொருள் விரியப் 
பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1852.     சீரார்கழலேதொழுவீரிதுசெப்பீர் 
    வாரார்முலைமங்கையொடும்முடனாகி 
    ஏராரிரும்பூளையிடங்கொண்டஈசன் 
    காரார்கடல்நஞ்சமுதுண்டகருத்தே.        1

    சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர் - 
    வார் ஆர் முலை மங்கையொடும்(ம்) உடன்ஆகி, 
    ஏர் ஆர் இரும்பூளை இடம் கொண்ட ஈசன் 
    கார் ஆர் கடல்நஞ்சு அமுது உண்ட கருத்தே?

    cIr Ar kazalE tozuvIr! itu ceppIr- 
    vAr Ar mulai magkaiyoTum(m) uTan Aki, 
    Er Ar irumpULai iTam koNTa Ican 
    kAr Ar kaTal nanjcu amutu uNTa karuttE?

பொருள்:     உமையவளை உடம்பின் ஒருபாகமாகக் கொண்டவன் சிவபெருமான். 
அவன் இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். அவனது திருவடிகளை அன்புடன்
தொழும் அடியவர்களே, அவன் கரிய கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்பது ஏன்
என்பதை அறிவீர்கள். அறிந்தால் சொல்லுங்கள்.

குறிப்புரை:     சீர்ஆர் கழலே - எல்லா உலகங்களையும் அளித்த சீர் நிறைந்த திருவருளையே. 
தொழுவீர்- தொழுகின்றவரே! கருத்தாகிய இது செப்பீர் என்க. மேலும் இவ்வாறே இயைத்துப் 
பொருள் கொள்க. ஏர்- அழகு. கார்- கருமை, மேகமுமாம். கடல்- பாற்கடல். நஞ்சு அமுது - நஞ்சமாகிய 
அமுதம்.  நஞ்சத்தை அமுதாக என்று ஆக்கச் சொல் வருவித்தும் முடிக்கலாம்.

    Devotees worship the opulent holy feet of Lord Civa, whose grace rescued the 
whole world.You devotees! tell me why Lord Civa who is manifest in Thiru-irum-poolai, 
along with Umaa, whose breast is covered well, consumed the poison which came out of 
the black sea, treating it as Ambrosia. Tell me details about the Lord's eating of 
the dreadful poison.

1853.     தொழலார்கழலேதொழுதொண்டர்கள்சொல்லீர் 
    குழலார்மொழிக்கோல்வளையோடுடனாகி 
    எழிலாரிரும்பூளையிடங்கொண்டஈசன் 
    கழல்தான்கரிகானிடையாடுகருத்தே.        2

    தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் - 
    குழல் ஆர் மொழிக் கோல்வளையோடு உடன்ஆகி, 
    எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் 
    கழல்தான் கரிகான் இடை ஆடு கருத்தே?

    tozal Ar kazalE tozu toNTarkaL collIr- 
    kuzal Ar mozik kOl vaLaiyOTu uTan Aki, 
    ezil Ar irumpULai iTam koNTa Ican 
    kazaltAn karikAn iTai ATu karuttE?

பொருள்:     தொழுவதற்குரிய சிவபெருமானின் திருவடிகளைத் தினமும் தொழுது போற்றும் 
திருத்தொண்டர்களே! ஈசன், இன்மொழியை உடைய, திரண்ட வளையலையும் அணிந்த உமாதேவியை 
உடனாகக் கொண்டு அழகிய இரும்பூளைப்பதியில் கோயில் கொண்டு உள்ளான். அவன் மயானத்திலும் 
நடனம் ஆடுகிறானே. யாதோ? சொல்லுவீராக.

குறிப்புரை:     தொழல் ஆர் கழலே- தொழுதற்குப் பொருந்திய திருவடி. தலைவைத்தது திருவடியை 
வணங்கற்கேயாதலின், அத்தலை தாழ்த்துதல் முதலிய தொழிலுக்குப் பொருந்தியதும் திருவடி 
அல்லாது வேறில்லை. தொழு தொண்டர்கள்- வினைத்தொகை. குழல் ஆர்-மொழி நமக்கு வேய்ங்குழலிசை 
இன்பம் போல இறைவனது செவிக்கு இன்பஞ் செய்யும் மொழி. 'குழல்வாய்மொழியம்மை' என்பது 
அம்பிகையின் திருப்பெயர்களுள் ஒன்று. கோல்- திரட்சி. வளை- வளையல். மொழியும் வளையும் 
உடையாள் என்க. எழில் - அழகு. கழல் - திருவடிக்கு ஆகு பெயர். தொண்டர்கள் (விளி) கருத்து 
சொல்லீர் என்க.

    People of servitude who worship the holy feet of our Lord Civan, you may kindly 
answer me. Our Lord is manifest in the glorious city of Thiru-irum-poolai along with our 
goddess Umaa. She wears white bright bangles in Her hands. Her words resemble flute's music. 
Why does our Lord then dance in the cremation ground with His anklet clinking around 
His feet? Please tell me.

1854.     அன்பாலடிகைதொழுவீரறியீரே 
    மின்போல்மருங்குல்மடவாளொடுமேவி 
    இன்பாயிரும்பூளையிடங்கொண்டஈசன் 
    பொன்போற்சடையிற்புனல்வைத்தபொருளே.        3

    அன்பால் அடி கைதொழுவீர்! அறியீரே 
    மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி, 
    இன்புஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் 
    பொன் போல் சடையில் புனல் வைத்த பொருளே?

    anpAl aTi kaitozuvIr! aRiyIrE-                 
    min pOl marugkul maTavALoTu mEvi, 
    inpu Ay irumpULai iTam koNTa Ican 
    pon pOl caTaiyil punal vaitta poruLE?

பொருள்:     அன்புடன் ஈசனாரின் திருவடிகளைத் தொழுது வணங்கும் அடியவர்களே! அவன்
 மின்னல் போன்ற இடைகொண்ட உமையோடு திருஇரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். 
அவன் தன் தலையில் கங்கை நதி என்னும் பெண்ணைத் தூக்கி வைத்துள்ள காரணம் என்ன 
என்று அறிந்தால் கூறுவீர்கள்.

குறிப்புரை:     அன்பு - பத்தி. அடி - திருவடி. தொழுவீர் - விளி. அறியீரே - அறிவீர்களோ? அறிவீர் என்று 
முன்பின் உள்ளவாறுங் கொள்ளலாம். மின்போல் மருங்கும் - மின்னிடை. புனல் - கங்கைநீர்

    You who worship the holy feet of our Lord Civan sincerely, you may answer my question. 
Our Lord has manifested Himself in the temple of the attractive city of Thiru-irum-poolai. 
Here He exhibits Himself with our goddess Umaa, whose beauty has no parallel in the world 
as her hip is thin like lightning. However, He has adorned in His golden matted hair with 
the lady of Ganges river too. Please tell me why.

1855.     நச்சித்தொழுவீர்கள்நமக்கிதுசொல்லீர் 
    கச்சிப்பொலிகாமக்கொடியுடன்கூடி
    இச்சித்திரும்பூளையிடங்கொண்டஈசன் 
    உச்சித்தலையிற்பலிகொண்டுழலூணே.        4

    நச்சித் தொழுவீர்கள்! நமக்கு இது சொல்லீர் - 
    கச்சிப் பொலி காமக்கொடிஉடன் கூடி, 
    இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன் 
    உச்சித்தலையில் பலி கொண்டு உழல் ஊணே?

    naccit tozuvIrkaL! namakku itu collIr- 
    kaccip poli kAmakkoTi uTan kUTi, 
    iccittu, irumpULai iTamkoNTa Ican 
    uccittalaiyil pali koNTu uzal UNE?

பொருள்:     காஞ்சிப்பதியில் பொலிவுடன் அறங்களைச் செய்பவள் காமாட்சியான உமையாள். 
அவளை இச்சித்து இறைவன் தன்னுடன் கொண்டு இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். 
அவன் பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி ஊர்தோறும் பலிதேர்ந்து திரிகிறானே. ஏன்? அவனது 
திருவடிகளை விரும்பித் தொழும் அடியவர்களே! கூறுங்கள். 

குறிப்புரை:     நச்சி- விரும்பி. தொழுவீர்கள் (விளி) கச்சி - காஞ்சிபுரம். திருக்கச்சி. 
பொலி - திருக்கோயில்கொண்டு விளங்குகின்ற. காமக்கொடி-காமாட்சி தேவியாராகிய வல்லி. 
இச்சித்து- விரும்பி. ஊண்பொருட்டுப் பலிகொண்டு உழல்வது ஏன் சொல்லீர் என்றபடி.

    You wise people! worship the holy feet of Lord Civan very sincerely with 
your kith and kin. Kindly answer my doubt. Our Lord shares His left side body with 
our goddess Umaa who has the most attractive glistening hair. Then why should He 
carry the skull of Brahma and beg for alms, roaming around? Kindly tell me the answer.

1856.    சுற்றார்ந்தடியேதொழுவீரிதுசொல்லீர் 
    நற்றாழ்குழல்நங்கையொடுமுடனாகி 
    எற்றேயிரும்பூளையிடங்கொண்டஈசன் 
    புற்றாடரவோடென்புபூண்டபொருளே.        5

    சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர்! இது சொல்லீர் -  
    நல்-தாழ்குழல் நங்கையொடும்(ம்) உடன் ஆகி, 
    எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன் 
    புற்று ஆடுஅரவோடு என்பு பூண்ட பொருளே?

    cuRRu Arntu aTiyE tozuvIr! itu collIr- 
    nal-tAzkuzal nagkaiyoTum(m) uTan Aki, 
    eRRE irumpULai iTamkoNTa Ican 
    puRRu ATu aravOTu pUNTa poruLE?

பொருள்:     நீண்ட கூந்தலைக் கொண்ட உமாதேவியுடன் உடனாகிய ஈசன் இரும்பூளைத் 
தலத்தில் கோயில் கொண்டுள்ளான். அவன் புற்றில் பொருந்தி வாழும் பாம்பினை ஆபரணமாக 
அணிந்து உள்ளானே. ஏன்? அடியார்களாகிய சுற்றத்தாருடன் கூடியிருந்து அவனையே போற்றும் 
அன்பர்களே! கூறுங்கள்.

குறிப்புரை:     சுற்று ஆர்ந்து - சூழ்ந்து நிறைந்து. அடியார் சுற்றம் நிறைந்து என்றுமாம்.
நல்தாழ்குழல்- அழகிய தொங்குகின்ற கூந்தலை உடைய. நங்கை - தேவியார்க்கெல்லாந் 
தலைவி. புற்று ஆடு அரவு- புற்றில் உறைவதும் ஆடுவதும் ஆகிய பாம்பு என்றவாறு முறையே 
இடமும் தொழிலும் பற்றிய அடைமொழிகள். என்பு - எலும்புமாலை. பொருள்- பயன். பொருள் 
என்றே சொல்லீர்  என்று இயைத்துரைக்க. எற்றே - எத்தன்மையதோ? எல் (இகழ்ச்சி) தேய - தேய்ந்த. 
இல்லாத எனலும் ஆம். எல்து - ஒளியுடையது. ஏய் - பொருந்திய எனலும் அமையும்.

    You holy people! You worship our Lord Civan with ardent devotion. Then
answer my point.Our Lord selected the city, Thiru-irum-poolai, as His abode as per
His desires. Goddess Umaa Devi with her long, beautiful hair abides with Him on this
temple. Why does our Lord wear as an ornament the snake, a dreadful creature? The
devotees of our Lord, who worship Him with your kith and kin, may explain this
strange behaviour of our Lord.

1857.     தோடார்மலர்தூய்த்தொழுதொண்டர்கள்சொல்லீர் 
    சேடார்குழற்சேயிழையோடுடனாகி 
    ஈடாஇரும்பூளையிடங்கொண்டஈசன் 
    காடார்கடுவேடுவனானகருத்தே.        6

    தோடு ஆர் மலர் தூய்த் தொழு தொண்டர்கள்! சொல்லீர் - 
    சேடு ஆர் குழல் சேயிழையோடு உடன் ஆகி, 
    ஈடுஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் 
    காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?

    tOTu Ar malar tUyt tozu toNTarkaL! collIr- 
    cETu Ar kuzal cEyizaiyOTu uTan Aki,
    ITu Ay irumpULai iTam koNTa Ican 
    kATu Ar kaTu vETuvan Ana karuttE?

பொருள்:     அடர்ந்த கூந்தலைக் கொண்ட உமாதேவியுடன் உடனாகிய ஈசன் இரும்பூளைத் 
தலத்துள் கோயில் கொண்டுள்ளான். அவனே காட்டில் வேட்டுவன் உருவில் வந்தான். ஏன் என்பது 
பற்றி ஈசனை மலர்தூவி வணங்கிடும் பக்தர்களே கூறுங்கள்.

குறிப்புரை:     தோடு- இதழ், தொகுதியுமாம். தூய்- தூவி. சேடு - திரட்சி. சேயிழை - செய்ய 
பூண்களை உடைய அம்பிகை. (அன்மொழித் தொகை) ஈடு - பெருமை. சமமுமாம். காடு ஆர் - காட்டில்
பொருந்திய வேடுவன். (அருச்சுனனோடு போர் செய்த) வேடன். ஏவார்சிலை எயினன் உருவாகி 
எழில்விசயற்கு ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவன் (தி. 1 பதி. 12 பா.6). 

    You scholarly men! You are devotees of purity. You carry fineflowers whenever 
you go to the temple to worship our Lord who is manifest in the temple in Thiru-irum poolai 
along with His consort Umaa. Of course, He shares His left body with Umaa, our goddess. 
Her hair is very thick and glossy with a very sweet smell. Then why should our Lord wander 
all over the surroundings as a cruel hunter? Kindly give me the answer.

7ஆவது பாட்டு கிடைக்கப்பெறவில்லை.

1858.     ஒருக்கும்மனத்தன்பருள்ளீரிதுசொல்லீர் 
    பருக்கைம்மதவேழமுரித்துமையோடும் 
    இருக்கையிரும்பூளையிடங்கொண்டஈசன் 
    அரக்கன்னுரந்தீர்த்தருளாக்கியவாறே.        8

    ஒருக்கும் மனத்து அன்பர்உள்ளீர்! இது சொல்லீர் - 
    பருக் கை மதவேழம் உரித்து, உமையோடும் 
    இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் 
    அரக்கன்(ன்) உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே?

    orukkum manattu anpar uLLIr! itu collIr- 
    paruk kai mata vEzam urittu, umaiyOTum 
    irukkai irumpULai iTam koNTa Ican 
    arakkan(n) uram tIrttu aruL Akkiya ARE?

பொருள்:     வலிமைமிக்க யானையின் தோலை உரித்து அதனைப் போர்வையாக அணிந்தவன் 
சிவபெருமான். அவனே உமையாளுடன் உடனாகி இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். 
மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் காத்து, அன்பர்களுடன் கூடி வாழும் பக்தர்களே! ஈசன் அரக்கனாகிய 
இராவணனின் வலிமையைக் கெடுத்துப் பிறகு ஆட்கொண்டது ஏன்? என்பது பற்றித் தெரிந்தால் கூறுங்கள்.

குறிப்புரை:     ஒருக்கும் மனத்து- இறைவன் திருவடியே, ஒன்றியிருந்து உணர்ந்து உணர்ந்து. 
மற்றெல்லாப் பற்றுக்களும் ஒருங்கச் செய்த மனத்தினை உடைய அன்பர் உள்ளீர் - அன்பர் கூட்டத்தைச்
சார்ந்தவரே. பருக்கை - பரியதாகிய துதிக்கையை உடைய. உமையோடும் இருக்கையை உடைய  என்க.
உரம் - வலிமை. அருள் - நாளும் வாளும் பிறவும் நல்கிய கருணை.

    You the devotees of our Lord Civan! good at controlling your senses, worship
the Lord with sincere devotion. I have a question. The fierce elephant with long tusk
came rushing towards our Lord. He immediately killed it. Then He removed the hide 
of the elephant and covered His body with it. He exhibits Himself in the temple in
Thiru-irum-poolai along with His consort. In another instance, He crushed the head 
and shoulders of Raavanan for his fault and quelled his mightiness. However Raavanan 
begged for pardon. Then our Lord graced him and blessed him with longevity and also 
gave him a holy sword. Why did He do this?

1859.     துயராயினநீங்கித்தொழுந்தொண்டர்சொல்லீர் 
    கயலார்கருங்கண்ணியொடும்முடனாகி 
    இயல்பாயிரும்பூளையிடங்கொண்டஈசன்
    முயல்வாரிருவர்க்கெரியாகியமொய்ம்பே.            9

    துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர்! சொல்லீர் - 
    கயல் ஆர் கருங்கண்ணியொடும்(ம்) உடன்ஆகி, 
    இயல்பு ஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் 
    முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே?

    tuyar Ayina nIgkit tozum toNTar! collIr- 
    kayal Ar karugkaNNiyoTum(m) uTan Aki, 
    iyalpu Ay irumpULai iTamkoNTa Ican 
    muyalvAr iruvarkku eri Akiya moympE?

பொருள்:     கயல் போன்ற அழகிய கண்களைக் கொண்ட உமாதேவியுடன் உடனாகியவன்
 ஈசன். அவனே இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். எளிமையாகக் காட்சியருளும் 
அவன் திருமாலும் நான்முகனும் காண முடியாப் பேருருவை எடுத்த காரணம் பற்றித் 
தொண்டர்களே! கூறுங்கள்.

குறிப்புரை:     ஆயின -வினையாலணையும் பெயர். துயர்- பிறவி, மறதி முதலியவை. 
கயல்-மீன் விசேடம், அங்கயற்கண்ணியார். இருவர் - அரிய அயன். மொய்ம்பு - வன்மை, ஆற்றல்.

    You people, have no suffering in your life, you who worship our Lord Civan. 
I have a doubt. Our Lord is manifest in the temple in Thiru-irum-poolai with His consort, 
our goddess Umaa. He shares half of His body with Umaa who has fishlike black eyes, which 
add to Her beauty. Our demigods Vishnu and Brahma tried their best in vain to comprehend 
and meet our Lord. Then He rose before them as an infinite column of light and fire. 
Why should He do so? Kindly answer.

1860.     துணைநன்மலர்தூய்த்தொழுந்தொண்டர்கள்சொல்லீர் 
    பணைமென்முலைப்பார்ப்பதியோடுடனாகி 
    இணையில்லிரும்பூளையிடங்கொண்டஈசன் 
    அணைவில்சமண்சாக்கியமாக்கியவாறே.        10

    துணை நல்மலர் தூய்த் தொழும் தொண்டர்கள்! சொல்லீர் 
    பணைமென்முலைப் பார்ப்பதியோடு உடன்ஆகி, 
    இணை இல்(ல்) இரும்பூளை இடம்கொண்ட ஈசன் 
    அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கியஆறே?

    tuNai nal malar tUyt tozum toNTarkaL! collIr- 
    paNai men mulaip pArppatiyOTu uTan Aki, 
    iNai il(l) irumpULai iTamkoNTa Ican
    aNaivu il camaN cAkkiyam Akkiya ARE?

பொருள்:     பார்வதி தேவியை உடனாகக் கொண்டவன் சிவபெருமான். அவன் இரும்பூளைத் 
தலத்துள் கோயில் கொண்டுள்ளான். அவனது இணையான திருவடிகளைத் தொழுது போற்றும் 
தொண்டர்களே! சமணர், சாக்கியர், என்றும் முரண்பட்டவர்களையும் அவன் படைத்தது ஏன் 
என்பது பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள்.

குறிப்புரை:     துணை- ஒப்பு. பணை-பருமை.     இணை - ஈடு, ஒப்பு அணைவு இல் 
அணை (ந்து வழிபடு) தல் இல்லாத. சமண் சாக்கியம் - சமணரும் சாக்கியரும் 
(ஆகிய புறப்புறச் சமயம்) உம்மைத் தொகை.

    You devotees, all of you pray to our Lord Civan offering peerless flowers. 
I would like to know one thing about our Lord. Our Lord exhibits Himself in the temple at 
Thiru-irum-poolai. He shares His left body with Umaa. Our goddess Paarvathi Devi 
with soft breasts is praised by one and all in the universe. Why did our Lord create 
the Jains and Buddhists, people of unacceptable religious faith? Kindly tell me the reason.

1861.     எந்தையிரும்பூளையிடங்கொண்டஈசன் 
    சந்தம்பயில்சண்பையுண்ஞானசம்பந்தன் 
    செந்தண்தமிழ்செப்பியபத்திவைவல்லார் 
    பந்தம்மறுத்தோங்குவர்பான்மையினாலே.        11

    எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன், 
    சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன் 
    செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் 
    பந்தம்(ம்) அறுத்து ஓங்குவர், பான்மையினாலே.

    entai irumpULai iTamkoNTa Ican, 
    cantam payil caNpaiyuL njAnacampantan 
    centaN tamiz ceppiya pattu ivai vallAr, 
    pantam(m) aRuttu Ogkuvar, pAnmaiyinAlE.

பொருள்:     எந்தையும், இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்ட இறைவனுமாகிய ஈசனைப் 
போற்றி சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்களைப் பாடியருளியுள்ளார். 
செந்தமிழில் பாடப் பெற்ற அப்பாடல்களைப் பக்தியுடன் பாட வல்லவர்கள் பந்தம் அறுக்கப் பெறுவர். 
உயர் சிறப்பை உறுவர் என்க.

குறிப்புரை:     சந்தம் பயில் - வேதம் ஓதாது ஓதியுணர்ந்து. சந்தக்கவி பாடிப் பயின்ற எனலும் ஆம். 
பந்தம்- (மும்மலக்) கட்டு. ஈசனது சண்பையை உள்குகின்ற ஞானசம்பந்தன். செப்பிய -பாடிய. 
பான்மை-தன்மை.

    Our saint Thiru-gnana-Sambandar hails from Sanbai (Seerkaazhi), a holy city full of 
divine music, heard all over, always. Thiru-gnana-Sambandar sang on our Lord at Thiru-irum-poolai 
ten pure chaste Tamil verses. Those scholars who are capable of singing these ten Tamil verses 
in good musical tone will snap the ties of their life will reach great height.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            36ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 36th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 173                பதிக எண்: 37

37. திருமறைக்காடு                37. THIRU-MARAIK-KAADU

பண்: இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    மறைகள் பூசித்த காரணம் பற்றி இப்பெயர் பெற்றது. இச்செய்தி 'சதுரம் மறைதான் 
துதி செய்து வணங்கு மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா' என்னும் திருஞான சம்பந்தரது 
இத்தலத் தேவாரப் பகுதியால் (பண்- இந்தளம். திருப்பாட்டு 1)விளங்குகின்றது. திருத்துறைப்பூண்டி, 
வேதாரணியம் தொடர்வண்டிப் பாதையில் வேதாரணியம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 
முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய ஊர்களிலிருந்து 
பேருந்து வசதிகள் உள்ளன.

    இறைவரின் திருப்பெயர் மறைக்காட்டுமணாளர். இத்திருப்பெயர், இவ்வூர்க்குரிய அப்பர் 
பெருமானின் 'மறைக்காட்டுறையும் மணாளன்றானே' என்னும் திருத்தாண்டகத்தால் அறியக்
கிடக்கிறது. வேதாரண்யேசுவரர் என்னும் பெயரும் உண்டு. இறைவியாரின் திருப்பெயர் 
யாழைப்பழித்த மொழியம்மை. இத்திருப்பெயரைச் சுந்தரமூர்த்தி நாயனார், இவ்வூர்ப் பதிகத்தில் 
முதலாம் திருப்பாட்டில் 'யாழைப் பழித்தன்ன மொழி மங்கையொரு பங்கன்' என எடுத்தாண்டு 
உள்ளார். தீர்த்தம்- வேததீர்த்தம், கடல்துறை, மணிகர்ணிகை, தேவபூடணம் என்பன.
தலவிருட்சம் - வன்னி

    பார்வதி தேவியாரின் திருமணத்தின் பொருட்டுத் தேவரும் பிறரும் கூடிய கூட்டத்தின் 
காரணமாக வடதிசை உயர்ந்து, தென்திசை தாழ்ந்தது. அதைச் சமண் செய்யச் சிவபெருமான் 
அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்பினார். பெருமானது மணக் கோலத்தைக் காண முடியாது 
போவது பற்றி அகத்தியர் வருந்தினார். அப்பொழுது சிவபெருமான் மணக்கோலத்தைத் 
திருமறைக்காட்டில் காட்டியருள்வதாகத் திருவாய் மலர்ந்து அதன்படி அக்கோலத்தைக் 
காட்டியருளினார். மணவாளக்கோலம் மூலத்தானத்தில் சிவலிங்கப் பெருமானுக்குப் 
பின்பக்கத்தில் இருக்கின்றது. இராமர் இராவணனைக் கொன்ற பழி நீங்கப் பூசித்த தலமாதல் 
பற்றி இது கோடிக்கரை என்றும் பேசப்படும். இங்குள்ள மணிகர்ணிகைத் தீர்த்தத்தில் மூழ்கி, 
கங்கை புனிதமானாள். இங்கு உள்ள தேவபூடணத் தீர்த்தத்தில் மூழ்கி, காவிரி பரிசுத்தத் தன்மை 
எய்தனள். பிரமதேவர் முதலானோர் பூசித்துப் பேறு பெற்றனர்.

    வேதங்களால் பூசிக்கப் பெற்றுத் திருக்காப்பிடப் பட்டிருந்த திருக்கதவை திருஞானசம்பந்தர் 
கட்டளைப்படி திருநாவுக்கரசர் 'பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ'  என்று தொடங்கிய 
பத்துப் பாடல்களைப் பாடிக் கதவைத் திறப்பித்தார். ஞானசம்பந்தர் தேவாரம் பாடி அதை 
அடைப்பித்தார். முசுகுந்தச் சக்கரவர்த்தி தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த
 ஏழுவிடங்கத் தலங்களுள் ஒன்று, தியாகர் புவனவிடங்கர் . நடனம் ஹம்ச நடனம். சுந்தரமூர்த்தி
 நாயனாருடன், சேரமான் பெருமான் நாயனாரும் இங்கே வழிபட்டனர். 
இதற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் நான்கு, திருநாவுக்கரர் பதிகம் ஐந்து, சுந்தரர் பதிகம் ஒன்று 
ஆகப் பத்துப் பதிகங்கள்  இருக்கின்றன. 
    
    இத்திருக்கோயிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுதற்கு வந்த எலி, அணையும் 
நிலையில் இருந்த திரியைத் தூண்டி, அதன் விளைவாய் மறுபிறப்பில் மாவலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. 
இச்செய்தியை அப்பர் சுவாமிகள் திருக்குறுக்கைத் திருநேரிசையில் எட்டாம் திருப்பாட்டில்,

    நிறைமறைக் காடு தன்னி ணீண்டெரி தீபந்த தன்னைக் 
    கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட 
    நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலக மெல்லாங் 
    குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே 

என அருளியுள்ளார்கள்.

    தலபுராணம், இவ்வூரில் தோன்றி அருளியவரும் திருவிளையாடற்புராணம் 
எழுதியவருமாகிய பரஞ்சோதி முனிவரால் எழுதப் பெற்றது.  அச்சில் வெளிவந்துள்ளது.
 மறைசையந்தாதி இது யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் புலவரால் எழுதப்பெற்றது. 
புலவர் பெருமக்கள் பெரிதும் பாராட்டும் நூல் இவை.

பதிக வரலாறு

    மேதினிமேற் பொய்மிகுந்து, ஆதி அருமறை வழக்கமும் அரனடியார்பாற் பூதிசாதன 
விளக்கமும் முறையே அருகிப் போற்றல் பெறாது ஒழியக் கண்டு, இடர் உழந்த சிவபாத இருதயர் 
புரிந்த தவப்பயனாகப், பரசமயம் நிராகரித்து நீறாக்கும் பொருட்டுத் திருவவதாரஞ் செய்த 
முதல்மறைப் பிள்ளையார், திருமறைக்காட்டை அடைந்தார். அங்கு, முன்பே சென்ற திருநாவுக்கரசு 
நாயனாரைக் கூடினார். திறப்பும் அடைப்பும் இல்லாதிருந்த திருக்கோயிற் கதவங்களைத் 
திறக்கவும் மூடவும் முறையே இருவரும் பாடி அருளினர். அவதார காரணங்களிரண்டனுள் 
ஒன்றான வேதநெறி தழைத்தோங்குதலை வேதாரணியத்துள் தொடங்கி நிறுவியருளிய 
உண்மையை உணர்த்துவது இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

1862.     சதுரம்மறைதான்துதிசெய்துவணங்கும் 
    மதுரம்பொழில்சூழ்மறைக்காட்டுறைமைந்தா 
    இதுநன்கிறைவைத்தருள்செய்கவெனக்குன் 
    கதவந்திருக்காப்புக்கொள்ளுங்கருத்தாலே.        1

    சதுரம்(ம்) மறைதான் துதிசெய்து வணங்கும் - 
    மதுரம் பொழில்சூழ் - மறைக்காட்டு உறை மைந்தா! 
    இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன் 
    கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!

    catura(m) maRaitAn tuticeytu vaNagkum- 
    maturam pozil cUz maRaikkATTu uRai maintA! 
    itu nanku iRai vaittu aruLceyka, enakku un 
    katavam tirukkAppuk koLLum karuttAlE!

பொருள்:     நான்கு மறைகளும் துதிசெய்து வணங்கிய இடமே திருமறைக்காடாம். அழகிய 
சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானே! கோயில் 
திருக்கதவங்கள் காப்பிடுமாறு அருள்புரிவீராக! இதுவே எனது வேண்டுகோளாகும்.

குறிப்புரை:     சதுரம் மறை – நால்வேதம் (மகரவொற்று விரித்தல்). மதுரம் - தேனினிமை. 
இறை - விடை. மறை துதிசெய்து   வணங்கும் காரணத்தால்  மறைக்காடு என்றான உண்மையை 
உணர்த்தியருளியவாறறிக. பின்வருவன வினாக்களாதலின், அவற்றிற்குச் 'செவ்வனிறையோ     
இறைபயத்தாலோ செய்க' என்பார். 'இறைவைத்தருள் செய்க' என்றருளினார். எனக்கு அருள்                              
செய்க என்று இவ்வாறு வேண்டுவது ஆசிரியர் திருவாக்கில் வேறு எங்கும் காண்டல் அரிதாகும். 
இதற்குப் பிறர் உரைத்தது பொருந்துமோ?

    Behold! It is Civan, the Lord of Thiru-maraik-kaadu. This city is surrounded 
by gardens spreading fragrance all around. The four Vedas came to this temple in the
good old days and worshipped You, Oh the mighty one! The doors of this temple as in the 
previous days should be easy to close just as it was opened just now. You may
grace my request with Your answer.

1863.     சங்கந்தரளமவைதான்கரைக்கெற்றும் 
    வங்கக்கடல்சூழ்மறைக்காட்டுறைமைந்தா 
    மங்கையுமைபாகமுமாகவிதென்கொல் 
    கங்கைசடைமேலடைவித்தகருத்தே.        2

    சங்கம், தரளம்(ம்)அவை, தான் கரைக்கு எற்றும் 
    வங்கக் கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா! 
    மங்கைஉமை பாகமும் ஆக, இது என்கொல், 
    கங்கை சடைமேல் அடைவித்த கருத்தே?

    cagkam, taraLam(m)avai, tAn karaikku eRRum 
    vagkak kaTal cUz maRaikkATTu uRai maintA! 
    magkai umai pAkamum Aka, itu enkol, 
    kagkai caTai mEl aTaivitta karuttE?

பொருள்:     சங்கு, முத்து இவைகளைக் கரையில் உந்தித்தள்ளும் கடல்சூழ்ந்த மறைக்காட்டுத்
திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானே! உமாதேவியை உடம்பின்  ஒருபாகத்தில் 
கொண்டுள்ள நீவிர் கங்கைப் பெண்ணாளையும் தலையில் வைத்துக் கொண்டுள்ள கருத்து என்சொல்?

குறிப்புரை:     சங்கம் - சங்குகள். தரளம்-   முத்துக்கள். எற்றும்- (அலைகள்) எறியும். 
வங்கம் -மரக்கலம். உமையோடு கூடியிருந்தும் கங்கையைச் சடைமேல் அடையச் செய்ததன்
கருத்தை வினாவியது.

    Oh my Lord of Thiru-maraik-kaadu. The sea called the Bay of Bengal is on the eastern 
side of this city. Here the ships arrive and move away. The waves reaching the seashore bring 
along with the water conches and pearls and deposit them on the seashore. You have accommodated 
Your consort Umaa on the left side of Your body; we appreciate, but I fail to understand why You 
have accommodated the body of the Ganges river also on Your matted hair.

1864.    குரவங்குருக்கத்திகள்புன்னைகள்ஞாழல் 
    மருவும்பொழில்சூழ்மறைக்காட்டுறைமைந்தா 
    சிரமும்மலருந்திகழ் செஞ்சடைதன்மேல் 
    அரவம்மதியோடடைவித்தவழகே.        3

    குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல், 
    மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா! 
    சிரமும் மலரும் திகழ் செஞ்சடைதன்மேல் 
    அரவம் மதியோடு அடைவித்தல் அழகே?

    kuravam, kurukkattikaL, punnaikaL, njAzal 
    maruvum pozil cUz maRaikkATTu uRai maintA! 
    ciramum malarum tikaz cenjcaTai tan mEl 
    aravam matiyOTu aTaivittal azakE?

பொருள்:     குராமரம், குருக்கத்தி, புன்னை, புலிநகக் கொன்றை ஆகியவை ஓங்கி வளர்ந்துள்ள 
மறைக்காட்டில் கோயில் கொண்டுள்ள ஈசனே! தலைமாலை அணிந்தும் மலர்சூடியும் திகழும் 
செஞ்சடைமீது அரவமும் சந்திரனும் பொருந்தி இருக்குமாறு செய்த கருத்தின் காரணம் யாதோ?

குறிப்புரை:     குரவம் - குராமரம். குருக்கத்தி - மாதவி. ஞாழல் - புலிநகக்கொன்றை, கோங்குமாம். 
சிரம் - தலை, தலைமாலை. 'தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந்தலைவன்' இது 
பாம்பைப் பிறையொடு சூடிய அழகை வினாவியது. வினாச் சொல்லை வருவித்துரைக்க. திங்களை 
விழுங்கும் பகைமை கருதி 'அழகு' என்று குறித்தருளினார்.

    Oh my Lord of Thiru-maraik-kaadu! Your abode in this city is surrounded by 
fragrant gardens. Here jasmine, bottle flowers, caulophyllum and wagaty trees are 
in plenty. You have adorned Your matted hair with the head garland and all other 
flowers. To beautify it more should You allow the baby moon and its enemical snake?


1865.     படர்செம்பவளத்தொடுபன்மலர்முத்தம் 
    மடலம்பொழில்சூழ்மறைக்காட்டுறைமைந்தா 
    உடலம்முமைபங்கமதாகியுமென்கொல் 
    கடல்நஞ்சமுதாவதுண்டகருத்தே.        4

    படர் செம்பவளத்தொடு,பல்மலர், முத்தம், 
    மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா! 
    உடலம்(ம்) உமை பங்கம் அது ஆகியும், என்கொல், 
    கடல்நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே?

    paTar cempavaLattoTu, palmalar, muttam, 
    maTal am pozil cUz maRaikkATTu uRai maintA! 
    uTalam(m) umai pagkam atu Akiyum, enkol, 
    kaTal nanjcu amutA atu uNTa karuttE?

பொருள்:     திருமறைக்காடு என்ற திருத்தலத்தில் செம்பவளங்களும், பல மலர்களும் 
முத்துக்களும் அகன்ற மடல்களைக் கொண்ட தாழை மலர்களும் நிறைந்து விளங்குகின்றன.
அத்தலத்துள் கோயில் கொண்டுள்ள ஈசனே! நீ அமுதாகிய உமையவளை உடலின் ஓர்
பாகமாகக் கொண்டுள்ளாய். (அது ஏற்புடைத்து) ஆனால் கடலில்  தோன்றிய நஞ்சையும் 
அமுதாக உண்டாயே! அது ஏன்?

குறிப்புரை:     மடல்- மரத்தில் உள்ள மடல்கள். பூவிதழுமாம். பங்கமது- பாகத்தை உடையது.
 பாற்கடலினின்று எழுந்த நஞ்சினை உண்ட கருத்தை வினாவியது. 

    Oh my Lord of Thiru-maraik-kaadu. The city is surrounded by beautiful gardens 
of all variety of flowers. The people in the city collect red corals and white coloured 
pearls and beautify themselves. You have accommodated Your consort Umaa on the left half 
of Your body.We are all happy with this arrangement. But You dared to drink the sea 
venom as though it was elixir. What was Your aim?

1866.     வானோர்மறைமாதவத்தோர்வழிபட்ட 
    தேனார்பொழில்சூழ்மறைக்காட்டுறைமைந்தா 
    ஏனோர்தொழுதேத்தஇருந்தநீயென்கொல் 
    கானார்கடுவேடுவனானகருத்தே.        5

    வானோர், மறை மா தவத்தோர், வழிபட்ட 
    தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா! 
    ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ, என்கொல், 
    கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?

    vAnOr, maRai mA tavattOr, vazipaTTa- 
    tEn Ar pozil cUz--maRaikkATTu uRai maintA! 
    EnOr tozutu Etta irunta nI, enkol, 
    kAn Ar kaTu vETuvan Ana karuttE?

பொருள்:     தேவர்களும், நான்மறைகளும், மாதவத்தோர்களும் வழிபாடு செய்யும் தலமே 
திருமறைக்காடாம். தேன் நிறைந்த மலர்களால் நிறைந்த திருமறைக்காட்டில் கோயில்
கொண்ட ஈசனே! எல்லோரும் வணங்க சிறப்புடன் காட்சியளிக்கும் நீ, காட்டில் வேடன் 
உருவத்தை ஏற்றுத் திரிந்தது ஏன்?

குறிப்புரை:     வானோர் - தேவர்கள். மறை மா தவத்தோர் - வேதியரும் பெருந்தவத்தருமாகிய 
பெரியோர். ஏனோர் -தானல்லாத பிறர். தன்னையேதான் பூசித்த உண்மையும் அறிக. கான் -காடு. 
ஆர்- பொருந்துகின்ற. கடு வேடுவன் - கொடிய வேடன் (தி. 2 ப. 3 பா. 1) 'குழலியோடு வேடுவனாய்.... 
விசயன் போரில் மிகு பொறை யளந்து பாசுபதம் அளித்த” கருத்தை வினாவியது (தி. 1 ப. 131 பா.2).

    Behold! Oh my Lord of Thiru-maraik-kaadu. The gardens around the city are full of 
flowers. They bring forth large quantities of honey. The devaas and sages who were great 
scholars of Vedas used to visit this city, go to the temple, and worship our Lord. Oh! 
Lord of all wealth, You are manifest in such a glorious city. All the devotees worship 
You alone. You are such a great graceful Supreme Being. Then why did You become a cruel 
hunter in the forest when all the people wait to worship You?

1867.     பலகாலங்கள் வேதங்கள்பாதங்கள்போற்றி 
    மலரால்வழிபாடுசெய்மாமறைக்காடா
    உலகேழுடையாய்கடைதோறும்முன்னென்கொல் 
    தலைசேர்பலிகொண்டதிலுண்டதுதானே.        6

    பலகாலங்கள், வேதங்கள் பாதங்கள் போற்றி, 
    மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா! 
    உலகுஏழ் உடையாய்! கடைதோறும் முன், என்கொல், 
    தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே?

    palakAlagkaL, vEtagkaL pAtagkaL pORRi, 
    malarAl vazipATu cey mA maRaikkATA! 
    ulaku Ez uTaiyAy! kaTaitORum mun, enkol, 
    talai cEr pali koNTu atil uNTatu tAnE?

பொருள்:     ஈசனே! உன்னை வேதங்கள் போற்றி உன் திருவடிகளை வணங்கி பல காலம் 
வழிபாடு செய்த தலமே திருமறைக்காடு. அத்தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவனே! எல்லா 
உலகங்களையும் உடையவனே! எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்ட நீ ஏன்
பிரமகபாலத்தை ஏந்தியபடியே பலிதேர்ந்து அதை உண்டு களிப்பதற்குக் காரணம் யாதோ?
சொல்வாயாக.

குறிப்புரை:     இத்தலத்தில் நான்கு வேதங்களும் பலகாலம் பூசித்த உண்மையை 
முதல் இரண்டடியிலும் உணர்த்தியருளினார். உலகு ஏழ் உடையாய்- ஏழுலகுக்கும் சுவாமியே,
ஜகதீசா! முன் கடைதோறும் தலைசேர் பலிகொண்டு அதில் உண்டதுதான் ஏன்? என்று 
இறைவன் பலியேற்ற வரலாற்றின் கருத்தை  வினாவியது.

    Behold! Oh Civa of Thiru-maraik-kaadu! You are the Supreme Ruler of all the seven 
worlds. You are manifest in the city of Thiru-maraik-kaadu. This place of Yours Vedas 
visited for many ages and worshipped Your holy feet strewing flowers. I fail to understand 
how and why You can go for alms carrying the human skull as Your begging bowl in Your hand. 
You own the whole universe, but You visit the residences of many people in the cosmos, 
collect food from them and eat it from the bowl. What is the reason for such a behaviour 
of Yours? Kindly tell me.

1868.     வேலாவலயத்தயலேமிளிர்வெய்தும் 
    சேலார்திருமாமறைக்காட்டுறைசெல்வா 
    மாலோடயனிந்திரனஞ்சமுனென்கொல் 
    காலார்சிலைக்காமனைக்காய்ந்தகருத்தே.        7

    வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும் - 
    சேல் ஆர் திரு மா-மறைக்காட்டு உறை செல்வா! 
    மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன், என்கொல், 
    கால் ஆர் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே?

    vElAvalayattu ayalE miLirvu eytum- 
    cEl Ar tiru mA--maRaikkATTu uRai celvA! 
    mAlOTu ayan intiran anjca mun, enkol, 
    kAl Ar cilaik kAmanaik kAynta karuttE?

பொருள்:     வேல் போன்ற வடிவத்தையும், ஒளிரும் தன்மையையும் கொண்ட சேல்கள் (மீன்கள்) 
நிறைந்து விளங்கும் திருமறைக்காடு என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்ட சிவனே! நீ திருமாலும், 
பிரமனும், இந்திரனும் அஞ்ச, மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியது ஏன்?

குறிப்புரை:     வேலாவலயத்து அயல் - கடலின் பக்கத்தில். மிளிர்வு - விளங்குதல். சேல் - மீன். 
முன் மாலும் அயனும் இந்திரனும் அஞ்சும்படி மன்மதனை எரித்ததன் கருத்து என்னை என்று வினாவியது.
கால் ஆர் சிலை- வலக்காலால் மிதித்தல் பொருந்திய வில். 'அறனிலாதான் வெஞ்சின்கோலின் 
நோன்றாள் மிதித்து மெய்குழைய வாங்கிச் செஞ்சிலை நெடுநாண்பூட்டித் திருவிரல் தெறித்துத்தாக்கி' 
(திருவிளையாடல் - கூடற் - யானை எய்த. 29) சிலை எனப்படும் மரத்தாற் செய்யப்படுதலின். 'சிலை' 
(கலி. 15-1. உரை) எனப்பட்டது. 'சிலைவிற்கானவன்' (குறுந். 385).

    Oh my Lord of Thiru-maraik-kaadu! You are the embodiment of all wealth; You are at 
Thiru-maraik-kaadu. In this city, the seawater brings to its coast the glistening carp fish 
in plenty and makes people rich. I fail to understand the truth behind Your angry action, 
of burning the god of love (Manmathan). He was bearing the bow bent at his leg when he was
burnt. Vishnu, Brahma and Indran - all shuddered to see the sudden death of Manmathan who 
had obliged these three demigods and acted to please them.

1869.    கலங்கொள்கடலோதமுலாவுங்கரைமேல் 
    வலங்கொள்பவர்வாழ்த்திசைக்கும்மறைக்காடா 
    இலங்கையுடையானடர்ப்பட்டிடரெய்த 
    அலங்கல்விரலூன்றியருள்செய்தவாறே.        8

    கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரைமேல் -
    வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் - மறைக்காடா! 
    இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த 
    அலங்கல் விரல் ஊன்றி அருள்செய்தஆறே?

    kalam koL kaTal Otam ulAvum karaimEl- 
    valam koLpavar vAzttu icaikkum maRaikkATA! 
    ilagkai uTaiyAn aTarppaTTu iTar eyta, 
    alagkal viral UnRi, aruL ceyta ARE?

பொருள்:     மரக்கலங்கள் நிறைந்து விளங்கும் கடலின் கரையில் பொருந்திய தலமே திருமறைக்காடு 
ஆகும். அத்தலத்தில் கோயில் கொண்ட சிவனே! உன் திருக்கோயிலை அடியவர்கள் வலம் வந்து 
வழிபாடு செய்வார்கள். ஆனால் இலங்கை வேந்தன் இராவணன் உம்மை வணங்காமல் கயிலை 
மலையைத் தூக்க முயன்று முதலில் இடர்ப்பட்டான். பின்பு அவனுக்கும் நீரே அருள் செய்தீர். அது ஏன்?

குறிப்புரை:     கலம் - மரக்கலம். ஓதம் - நீர். கரைமேல் வலங்கொள்பவர் - திருமறைக்காட்டில் 
வலம் வரும் முறைமை ஏனைய சிவதலங்களில் வலம் வருதலினும் விசேடம் உடையது. 
திருக்கோயில் வலம் மட்டும் பிறதலங்களில் நிகழும். இங்குத் திருமறைக்காட்டையே வலம் வருதல் 
வேண்டும். இதனை  ஆளுடைய அரசரும் 'மண்ணினார் வலம்செய்  மறைக்காடார்' என்று 
குறித்தருளியது உணர்க.  உடையான்-இராவணன். அடர் - முதல் நிலைத் தொழிற்பெயர். 
அலங்கல் -அசைதல். அன்பர்கள் திருவடிக்கண் சார்த்திய மாலையுமாம். 'ஆர்மின் ஆர்மின் 
நாண்மலர்ப் பிணையலில், தாள் தளையிடுமின்' (திருவாசகம் திருவண்டப்பகுதி 142-143). 
இராவணன் கயிலையை எடுத்தபோது அடர்த்து அருள்செய்ததன் கருத்தை வினாவியது. 
வினாச்சொல் வருவித்துரைக்க.

    Oh my Lord Civan of Thiru-maraik-kaadu! In this city many ships get anchored
and stay there long for loading and unloading. The devotees in this city circumvent 
the whole city and the temple together and enter into the temple and worship strewing
flowers at His holy feet. In such a sacred temple of this holy city, oh Lord! 
You are manifested. Here the cool sea breeze brings peace to one and all. Here, 
I do pray and worship You; but I fail to comprehend how You subdued the mighty Raavanan, 
King of Sri Lanka and made him suffer the maximum by pressing Your toe on the top of the 
mountain. Yet, when he begged pardon, You showed Your mercy to Him. Please tell me 
the reason for such a peculiar behaviour. 

1870.     கோனென்றுபல்கோடியுருத்திரர்போற்றும் 
    தேனம்பொழில்சூழ்மறைக்காட்டுறைசெல்வா 
    ஏனங்கழுகானவருன்னைமுனென்கொல் 
    வானந்தலமண்டியுங்கண்டிலாவாறே.        9

    “கோன்" என்று பல்கோடி உருத்திரர் போற்றும் - 
    தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா! 
    ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன், என்கொல், 
    வானம் தலம் மண்டியும் கண்டிலாஆறே?

    "kOn" enRu palkOTi uruttirar pORRum- 
    tEn am pozil cUz--maRaikkATTu uRai celvA!             
    Enam kazuku Anavar, unnai mun, enkol, 
    vAnam talam maNTiyum kaNTilA ARE?

பொருள்:     பலகோடி உருத்திரர்களால் தலைவன் என்று போற்றப்படும் ஈசனே!  தேன் நிறைந்த 
மலர்கள் நிறைந்து விளங்கும் திருமறைக்காடு என்ற திருத்தலத்தில் கோயில்  கொண்டுள்ள ஈசனே! 
பலருக்கும் காட்சி அளிக்கும் உன்னை பன்றி உருவாகி திருமாலும் பறவைமீது பிரமனும் தேடினர். 
 அவர்கள் அடிமுடி அறியமுடியாதவாறு உன்னை நீ மறைத்துக் கொண்டது ஏன்?

குறிப்புரை:     பல்கோடி உருத்திரர்கோன் என்று போற்றும் செல்வா என்று இயைக்க. 'நீலத்தார் 
கரியமிடற்றார் நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார் பற்று, சூலத்தார் சுடலைப்பொடி நீறணிவார் 
சடையார், சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம்' (தி.3 ப. 1 பா. 3) எனத் தில்லையிற்கண்ட உருத்திரகண 
தரிசனத்தை உணர்த்தியவாறறிக. ஏனம் - பன்றி. கழுகானவர் - பிரமனார். (தி.2 ப. 168 பா. 9) வானத்தில் 
கழுகும் தலத்தில் ஏனமும் என இயைக்க. எதிர்நிரல்நிறை. அரியும் அயனும் அடிமுடி தேடியதன் 
கருத்தை வினாவியது.

    Oh my Lord Civa of Thiru-maraik-kaadu! The city of Thiru-maraik-kaadu is surrounded 
by big gardens full of nectar yielding flowers. You are hailed by several crores of Rudras 
(demigods inferior manifestations of Civan being eleven in number) daily come to this city 
to worship You, as their Supreme Ruler. Then how is it Lord Vishnu took the form of a wild 
hog and Brahma the form of a swan, yet could not comprehend You, despite their thorough 
search on the earth and in the heaven?

1871.    வேதம்பலவோமம்வியந்தடிபோற்ற 
    ஓதம்முலவும்மறைக்காட்டிலுறைவாய் 
    ஏதில்சமண்சாக்கியர்வாக்கிவையென்கொல் 
    ஆதரொடுதாமலர்தூற்றியவாறே.        10

    வேதம்பல ஓமம் வியந்து அடி போற்ற, 
    ஓதம்(ம்) உலவும் மறைக்காட்டில் உறைவாய்! 
    ஏதில் சமண்சாக்கியர் வாக்கு இவை, என்கொல், 
    ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே?

    vEtam pala Omam viyantu aTi pORRa, 
    Otam(m) ulavum, maRaikkATTil uRaivAy! 
    Etil camaN cAkkiyar vAkku ivai, enkol, 
    AtaroTu tAm alar tURRiya ARE?

பொருள்:     ஈசனே! வேதமுறைப்படி வேள்விகள் புரிந்து அந்தணர் உன்னை வணங்குவர்.
கடல் அலைகள் மோதும் கரையில் அமைந்த திருமறைக்காடு தலத்தில் பொருந்தியவனே ! 
பக்தர்கள் எல்லோரும் உன் திருவடிகளில் மலர்தூவி வணங்குவர்.  ஆனால் சமணரும் சாக்கியரும்
பழிச்சொற்களைக் கூறி உன்னை வணங்காமல் தூற்றுவது ஏன்? 
 
குறிப்புரை:     ஓமம் - யாகம். மறைக்காடு என்றதன் பெயர்க்காரணம் ஈண்டும் விளக்கி 
அருளினார். ஓதம்-கடல். ஏதில்- அயல். 'ஏதிலார் குற்றம்' 'ஏதிலார் ஆர' (திருக்குறள்) ஈண்டுச் 
சமயத்தால் அயலவராயினார். ஆதர் - அறிவின்மை உடையவர். அலர் - பழிச் சொல். 
அவைதிக மதத்தினர் அழியாத வைதிக சைவ சமயத்தைப்  பழித்துரைத்ததன் கருத்தை வினாவியது.

    Oh my Lord of Thiru-maraik-kaadu! In this city, the holy sacrificial fire is always 
lighted by Vedic scholars chanting Vedas. The Vedic gods come to this city, hail You with 
awe and praise You. But the ignorant Jains and the Buddhists who are without any real 
spiritual knowledge revile You! What is the reason for this?

1872.     காழிந்நகரான்கலைஞானசம்பந்தன் 
    வாழிம்மறைக்காடனைவாய்ந்தறிவித்த 
    ஏழின்னிசைமாலையீரைந்திவைவல்லார் 
    வாழியுலகோர்தொழவானடைவாரே.        11

    காழி(ந்) நகரான் கலை ஞானசம்பந்தன் 
    வாழி(ம்) மறைக்காடனை வாய்ந்து அறிவித்த 
    ஏழ்இன் இசைமாலை ஈர்-ஐந்துஇவை வல்லார், 
    வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே.

    kAzi(n) nakarAn kalai njAnacampantan 
    vAzi(m) maRaikkATanai vAyntu aRivitta 
    Ez in icaimAlai Ir-aintu ivai vallAr, 
    vAzi ulakOr toza, vAn aTaivArE.

பொருள்:     சீர்காழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான், திருமறைக்காடு 
என்ற திருத்தலத்துள் கோயில் கொண்டுள்ள ஈசனைப் போற்றி, பத்துப்பாடல்களைப் பண்ணோடு 
பாடி அருளியுள்ளார். அப்பத்துப் பாடல்களையும் அன்புடன் பாட வல்லவர்கள்  உலகோரால் 
தொழப்படுவார்கள். வானுலகப் பேற்றையும் பெறுவார்கள்.

குறிப்புரை:     காழிந்நகரான்- விரித்தல் விகாரம். கலை - சிவனடியே  சிந்திக்கும் திருப்பெருகு
சிவஞானமாகிய உவமையிலாக் கலைஞானம். ஞானம்- பவமதனை அறமாற்றும் பாங்கினிலோங்கிய
ஞானமாகிய உணர்வரிய மெய்ஞ்ஞானம்.  சம்பந்தன்   அவ்விரண்டு ஞானங்களின் சம்பந்தத்தை 
உடையவன். வாழி -வாழ்ச்சியை உடைய. வாய்ந்து - திறக்கப்படாத கதவு திறக்கப் பெற்றுத் தரிசிக்க 
வாய்ந்து என்றவாறு. அறிவித்த இது நன்கு இறை வைத்தருள் செய்க (பா. 1) என்று பல வினாக்களை 
அறிவித்த. இம்மாலை வல்லார் உலகோர் தொழ வான் அடைவார் என்க.

    Those devotees, who are capable of reciting these ten melodious verses of music 
with seven notes, sung on Lord of Thiru-maraik-kaadu by Thiru-gnana-Sambandar, a wise sage, 
hailing from Seerkaazhi will live long and reach heaven and also people here hail them.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            37ஆம் பதிகம் முற்றிற்று
            End of 37th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 174                பதிக எண் : 38

38. திருச்சாய்க்காடு                 38. THIRUCH-CHAAYK-KAADU

பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

திருத்தல வரலாறு

    ஆதிசேடனது நாகமணி ஒளி வீசியதால் இப்பெயர் பெற்றது என்பது. இவ்வொளிக்குச்
சாய்ஒளி என்பர். இது சாயாவனம் எனவும் வழங்கப்பெறும். இது சீகாழிக்குத் தென்கிழக்கே
11.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.  இது காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்பதாவது ஆகும். 
சீகாழி ,மயிலாடுதுறை ஆகிய நகரங்களிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

    இறைவரது திருப்பெயர்- அமுதேசுவரர், சாயாவனேசுவரர். இறைவியாரது திருப்பெயர்
குயிலினும் நன்மொழியம்மை. தீர்த்தம் - காவிரி, ஐராவத தீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில்
இருக்கின்றது. உபமன்யு முனிவர் பூசித்துப் பேறு பெற்றார். இந்திரனது தாயார் நாளும் வந்து
 இத்தலத்தைப் பூசித்து வந்தார். அவரது கஷ்டத்தைப் போக்க, இந்திரன் சிவலிங்கத்  திருமேனியைத் 
தேவ உலகிற்கு கொண்டுபோக எண்ணித் தோண்டிப் பார்த்தான். பாதாள லோகம் வரை 
அவருடைய திருமேனி சென்றிருந்தமையால் அவரை மீளவும்  அங்கேயே  எழுந்தருளச் 
செய்வித்தான் என்பர். இதற்குச் சம்பந்தர் பதிகங்கள் இரண்டு, அப்பர் பதிகங்கள் இரண்டு ஆக  
நான்கு இருக்கின்றன. இத்தலத்தை ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாடியுள்ளனர். 
அப்பாடல் பின்வருமாறு:

    அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பமதாய்க் 
    குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே 
    போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச் 
    சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.

தலத்தைப் பற்றிய சிறுகுறிப்பு

    'சாய்' என்பதற்குத் தமிழில் கோரை என்று பொருள். கோரைக் காடு செறிந்த இப்பகுதி
சாய்க்காடு என்று பெயர் பெற்றது. சாய் என்னும் வழக்கு, கோரை என்ற பொருளில் பழந்தமிழ்
 நூல்களில் உள்ளது. 'அயத்து வளர்பசாய்' என்பது காண்க.

பதிக வரலாறு

    'அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட நம்பெருந்தகையார்’ தலைச்சங்காடு 
பணிந்து, திருச்சாய்க்காட்டைச் சேர்ந்து போற்றி 'மண்புகார் வான் புகுவார்' என்ற திருப்பதிகம் பாடித் 
திருவெண்காட்டை அடைந்து வழிபட்டு மீண்டும் போந்து இத்திருப்பதிகம் பாடியருளியது போலும்.

            திருச்சிற்றம்பலம்

1873.     நித்தலுந்நியமஞ்செய்துநீர்மலர்தூவிச் 
    சித்தமொன்றவல்லார்க்கருளுஞ்சிவன்கோயில் 
    மத்தயானையின்கோடும்வண்பீலியும்வாரித் 
    தத்துநீர்ப்பொன்னிசாகரமேவுசாய்க்காடே.        1

    நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி, 
    சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் 
    மத்தயானையின் கோடும் வண்பீலியும் வாரி, 
    தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.

    nittalum niyamam ceytu, nIrmalar tUvi, 
    cittam onRa vallArkku aruLum civan kOyil- 
    matta yAnaiyin kOTum vaN pIliyum vAri, 
    tattu nIrp ponni, cAkaram mEvu cAykkATE.

பொருள்:     தினந்தோறும் முறைப்படி மனம் ஒன்றுபட்டு வழிபாடு செய்யும் அடியவர்களுக்கு 
அருள் செய்பவனே சிவபெருமான்! அவர் யானையின் வெண்ணிறத் தந்தங்களையும் மயிற்
தோகைகளையும் உருட்டி வரும் பொன்னி நதிக் கரையில் பொருந்திய சாய்க்காடு தலத்தில் 
கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     நித்தலும் - நாள்தோறும். நியமம்- தின நியமம் ஆகக் கொண்டொழுகும் 
வழிபாடுகள் (ஆன்மார்த்தம்) கடன்களுமாம். நீர் மலர் தூவல் - புறப்பூசை. சித்த மொன்றல் - 
அகப்பூசை, தியானம் முதலியன. பீலி - மயிற்பீலி. சாகரம் - கடல். சிவன்கோயில் சாய்க்காடே 
என்க. மேலும் இவ்வாறே கொள்க. காவிரி நீர் நாட்டு வளத்திற்கே பெரிதும் பயன்பட்டுக் கடலில் 
சேர்வது மிகச் சிறிதேயாதலின், பாயும் என்னாது 'மேவும்' என்றார். (விடையின் மேல் வருவார் 
அமுது செய அஞ்சாதே விடம் அளித்ததெனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே கடல் வயிறு 
நிறையாத காவிரி) என்றருளினார் சேக்கிழார்.

    Behold! It is Civan, the Lord of Thiruch-chaayk-kaadu. The river Cauvery joins 
the sea here. It brings along with its water the tusks of rutted elephants and the 
rich peacock feathers. Our God is manifest in this temple. He bestows His grace on those 
devotees of staunch concentration worshipping Him everyday in a regular sacred manner 
with water and flowers. In this city of Thiruch-chaayk-kaadu, our God manifests Himself.

1874.     பண்டலைக்கொண்டுபூதங்கள்பாடநின்றாடும் 
    வெண்டலைக்கருங்காடுறைவேதியன்கோயில் 
    கொண்டலைத்திகழ்பேரிமுழங்கக்குலாவித் 
    தண்டலைத்தடமாமயிலாடுசாய்க்காடே.        2

    பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும்
    வெண்டலைக் கருங்காடு உறை, வேதியன் கோயில் - 
    கொண்டலைத் திகழ் பேரி முழங்க, குலாவித் 
    தண்டலைத்தடம் மா மயில் ஆடு சாய்க்காடே.

    paN talaikkoNTu pUtagkaL pATa ninRu ATum, 
    veNtalaik karugkATu uRai, vEtiyan kOyil- 
    koNTalait tikaz pEri muzagka, kulAvit 
    taNTalait taTam mA mayil ATu cAykkATE.

பொருள்:     பண்ணோடு பொருந்த பூதகணங்கள் பாடல்களைப் பாடி ஆடி மகிழும். மண்டை 
ஓடுகள் நிறைந்த சுடுகாட்டில் எம்பெருமானும் பூதகணங்களுடன் ஆடுவார். அவர் கோயில் கொண்டுள்ள 
இடமே திருச்சாய்க்காடாம். அங்கு மழை மேகங்கள் நிறைந்து விளங்கும். பேரிகைகள் முழங்கும்.
 மயில்கள் நின்று ஆடும்.

குறிப்புரை:     பண்- பண்ணிசை. தலைக்கொண்டு - மேற்கொண்டு பண்பாட ஆடும் வேதியன் என்க. 
காட்டின் கருமையும் அங்குள்ள தலைகளின் வெண்மையும் முரண்டொடை அமைய நின்றன. கொண்டல்- 
(குணக்கிலிருந்து வீசுங்காற்றால் உந்தப்பட்ட)மேகம். ஏனை முத்திசைக் காற்றும் முறையே தென்றல் - 
கோடை வாடை எனப்படும். பேரி - பேரிகை. தண் தலைதடம் - குளிர்ந்த இடப்பரப்பையுடைய சோலை 
(க்குக் காரண)ப் பெயர். தட - வளைவு எனலுமாம். 'தட வென்கிளவி கோட்டமும் செய்யும்' (தொல் உரி)

    Behold! It is Civan, our Lord of Thiruch-chaayk-kaadu. He is the embodiment of all 
the Vedas. He does that cosmic dance in cremation forests. Here the ghosts sing
about His praise, the various white skulls are to be found here and there. In the cool 
gardens near the temple the peacocks dance, seeing the clouds above in the sky and 
hearing the sound of trumpets as thunder. This city is known as Thiruch-chaayk-kaadu 
where our Lord manifests Himself.

1875.     நாறுகூவிளநாகிளவெண்மதியத்தோ 
    டாறுசூடும்மமரர்பிரானுறைகோயில் 
    ஊறுதேங்கனிமாங்கனியோங்கியசோலைத் 
    தாறுதண்கதலிப்புதல்மேவுசாய்க்காடே.        3

    நாறு கூவிளம், நாகு இளவெண்மதியத்தோடு, 
    ஆறு, சூடும் அமரர்பிரான் உறை கோயில் - 
    ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை, 
    தாறு தண் கதலிப் புதல், மேவு சாய்க்காடே.

    nARu kUviLam, nAku iLa veNmatiyattOTu, 
    ARu, cUTum amararpirAn uRai kOyil- 
    URu tEgkani mAgkani Ogkiya cOlai, 
    tARu taN katalip putal, mEvu cAykkATE.

பொருள்:     ஈசனார் மணங்கமழும் வில்வ இலைகளைத் தலையில் சூடியிருப்பார்.
 இளம்பிறையையும் கங்கையையும் தலையில் அணிந்திருப்பார். அவர் கோயில் கொண்டுள்ள 
தலமே  திருச்சாய்க்காடாம். அத்தலத்தில் தென்னை மரங்களும்,  மாமரங்களும், வாழை 
மரங்களும் நிறைந்திருக்கும். 
  
குறிப்புரை:     நாறு - மணம் வீசும். கூவிளம் - வில்வம். நாகு இளமதியம் - மிக்க இளையதாகிய பிறை. 
அமரர் பிரான் - தேவர்கட்குப் பிரியத்தைச் செய்பவன். ஊறு - (சுவை) ஊறுகின்ற. தேங்கனி- 'தெங்கங்காய்', 
'தெங்கம்பழம்' என்பவைபோல் இதுவும் அரியதொரு பிரயோகம். தாறு - குலை. கதலி - வாழை விசேடம். 
புதல் - புதர். திருச்சாய்க்காட்டின் இயற்கைவளம் உணர்த்தப்பட்டது.

    Behold! It is Civan, our Lord of Thiruch-chaayk-kaadu. He is the Supreme Lord of 
the celestials. He has adorned His head with fragrant bael leaves, the baby moon and the 
lady of river Ganges. In the gardens near the temple a lot of coconut fruits hang from 
the trees. The mango fruits also are in plenty in the trees; long bunches of plantain 
also hang from banana trees. All these spread their tasty flavour all around the area. In
such an attractive city our Lord manifests Himself in the temple in Thiruch-chaayk-kaadu.

1876.     வரங்கள்வண்புகழ்மன்னியஎந்தைமருவார் 
    புரங்கள்மூன்றும்பொடிபட எய்தவன்கோயில் 
    இரங்கலோசையுமீட்டியசரத்தொடுமீண்டித் 
    தரங்கநீள்கழித்தண்கரைவைகுசாய்க்காடே.        4

    வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார் 
    புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன், கோயில் - 
    இரங்கல் ஓசையும் ஈட்டிய சரத்தொடும் ஈண்டி, 
    தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே.

    varagkaL vaNpukaz manniya entai, maruvAr 
    puragkaL mUnRum poTipaTa eytavan, kOyil- 
    iragkal Ocaiyum ITTiya cAratoTum INTi, 
    taragkam nILkazit taN karai vaiku cAykkATE.

பொருள்:     எம்பெருமான், பெரும்புகழுக்கு உரியவர். நம் தந்தையாகிய அவர் நமக்கு 
நல்வரங்களை அருளுவார். அவரே பொருந்தாதவர்களின் முப்புரங்களையும் எரித்தவர். அவர் 
கோயில் கொண்டுள்ள இடமே திருச்சாய்க்காடாம். அத்தலம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. 
எனவே, அங்கு கலன்களில் பொருள்களைக் கொண்டு வந்து இறக்கி வைக்கும் ஓசையும் விளைந்த 
பொருள்களைக் கலன்களில் ஏற்றி வைக்கும் ஓசையும் எப்பொழுதும் (அடியவர்களின் வழிபாட்டு 
ஓசை எப்பொழுதும் ஒலிப்பது போல ) ஒலித்துக் கொண்டே இருக்கும்.

குறிப்புரை:     வரங்களை அருளும் வண்மையால் எய்தும் புகழ் அழியாமல் நிலைபெற்ற என் 
அப்பன். மருவார்- பகைவர். இரங்கல் ஓசை - நெற்தற்றிணையுரிப் பொருளை நினைவூட்டுவது. 
சரக்கொடும் என்னும் பாடமே சிறந்தது. ஈட்டிய -(பொருள் தேடிச்) சேர்த்த (சரக்கு). ஈண்டி- கூடி, நெருங்கி, 
தரங்கம் - அலைகள். நீள்தண் கழிக்கரை என்க.

    Behold! It is Civan, our Lord of great fame in Thiruch-chaayk-kaadu, He is our 
father, the Supreme Being. He bestows grace with boons on all His devotees. He is the 
embodiment of all wealth. He destroyed the three flying forts of the asuraas who were 
traitors to the devaas and others. This city is situated in the maritime tract near the 
seashore. Here the peculiar sound related to the maritime area is heard always. In
addition the mixed noise of merchants bringing their products for loading into the ship 
also is heard. In such an area cool breeze always blows from the saltpans and here our 
Lord has manifested Himself in the temple in Thiruch-chaayk-kaadu.

1877.     ஏழைமார்கடைதோறுமிடுபலிக்கென்று 
    கூழைவாளரவாட்டும்பிரானுறைகோயில்  
    மாழையொண்கண்வளைக்கைநுளைச்சியர்வண்பூந் 
    தாழைவெண்மடற்கொய்துகொண்டாடுசாய்க்காடே.        5

    ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று, 
    கூழைவாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் - 
    மாழைஒண்கண் வளைக்கை நுளைச்சியர், வண் பூந் 
    தாழை வெண்மடல் கொய்து, கொண்டாடு சாய்க்காடே.

    EzaimAr kaTaitORum, iTu palikku enRu, 
    kUzaivAL aravu ATTum pirAn uRai kOyil- 
    mAzai oNkaN vaLaikkai nuLaicciyar, vaN pUn 
    tAzai veNmaTal koytu, koNTATu cAykkATE.

பொருள்:     மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் பலிதேர்ந்து திரிபவரே சிவபெருமான். 
அவர்கள் இடும் பலிக்காக கூழைபண் ஒளி பொருந்திய பாம்பை ஆடச் செய்து மகிழ்விக்கும்
பரமன் உறையும் கோயில் சாய்க்காடாம். அத்தலத்தில் மான்விழி கொண்ட வளைக்கை 
பொருந்திய செம்படவப் பெண்கள் தாழை மடலைக் கொய்து அணிந்து கொண்டு 
இறைவனை வணங்கி மகிழ்வர். 

குறிப்புரை:     ஏழைமார்- மகளிர். 'ஏழைப் பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்' என்னுந் 
திருவாசகத்திற்கு வறியர் பங்கை ஆள்பவன் என்று பொருள் கூறுதல் மாபாதகம். கடை- கடைவாயில்.
கூழை - கடை குறைந்தது (தோற்றம்) மாழை - பொன். மேலும் இவ்வாறு நெய்தற்றிணைக்                      
கருப்பொருள் சில கூறல் அறிக. கண்ணையும் கையையும் உடைய நுளைச்சியர் கொய்து 
கொண்டாடும் சாய்க்காடு எம்மான் உறையும் கோயில் என்க. பாம்பின் உருவத்தைத் தலை 
முதலாக நோக்கின், கடைகுறைந்திருத்தல் ஆகிய கூழைமை புலப்படும். 

    Behold! It is Civan, our Lord of Thiruch-chaayk-kaadu. Whenever, He goes to the 
doorsteps of the womenfolk for begging alm, He swirls the cruel white snakes around His 
head, thereby makes the womenfolk enjoy the way in which He plays with the snakes. 
The fisher women have very beautiful golden coloured eyes. They wear plenty of bangles 
in their hands. They pluck and gather the white fertile spadices of pandanus plants 
and wear them happily. In such a glorious city, our Lord is manifest in the temple of 
Thiruch-chaayk-kaadu.

1878.     துங்கவானவர்சூழ்கடல்தாம்கடைபோதில் 
    அங்கொர்நீழலளித்தஎம்மானுறைகோயில் 
    வங்கமங்கொளிரிப்பியுமுத்துமணியுஞ் 
    சங்கும்வாரித்தடங்கடலுந்துசாய்க்காடே        6

    துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில், 
    அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் - 
    வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும் 
    சங்கும் வாரி, தடங்கடல் உந்து சாய்க்காடே.

    tugka vAnavar cUz kaTal tAm kaTaipOtil, 
    agku or nIzal aLitta emmAn uRai kOyil- 
    vagkam agku oLir ippiyum muttum maNiyum 
    cagkum vAri, taTagkaTal untu cAykkATE.

பொருள்:     வானவர்கள் கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சை உண்டு அவர்களுக்கு 
அபயம் கொடுத்த அண்ணலே சிவபெருமான்! அவர் திருச்சாய்க்காடு தலத்துள் கோயில் 
கொண்டுள்ளார். கடற்கரைப் பகுதியில் அமைந்த அத்தலத்தில் கடல் அலைகள் ஒளிமிக்க 
சிப்பி, முத்து, மணி,சங்கு இவைகளை வாரிவந்து கரையில் ஒதுக்கிக் கொண்டே இருக்கும் என்க.

குறிப்புரை:     துங்கம் - உயர்ச்சி. கடல் தாம் கடை(யும்) போதில் என்க. பொழுது - போழ்து - 
போது என மருவிற்று. நீழல் - நஞ்சின் வெப்பம் தணித்தற்கு அளித்த அருணிழல். வங்கம் -மரக்கலம். 
இப்பி -சிப்பி. கடல் வங்கத்தையும் அங்கு ஒளிர்கின்ற இப்பியையும் முத்தினையும் மணியினையும் 
சங்கினையும்  வாரி உந்தும் என்க. அங்கு வங்கம் வாரி உந்துமெனல் பொருந்தாது. ஒளிர்தல் முத்து 
முதலியவற்றிற்கும் உரியது. சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி, வங்கங்களும் 
உயர்கூம்பொடு வணங்கும் மறைக்காடே (சுந்தரர் - 721).

    Behold! It is Civan, our Lord of Thiruch-chaayk-kaadu. The eminent devaas 
churned the ocean of milk which surrounded the earth (to get nectar but instead came
venom). The celestials noticed the venom coming out of the ocean of milk. All of them 
got shuddered and ran out of fear and finally reached our Lord and prostrated at His 
feet and begged to save their life from the killing venom. Our Lord poured the venom 
into His mouth and stopped it from going down His throat. Thus He graced the devaas 
and all others and gave them complete protection. This our Lord is manifest in the 
temple in Thiruch-chaayk-kaadu. The wide seashore near His temple is dashed by big 
waves always. There ships, big boats are all anchored. Oysters, pearls, gems and 
conches etc., dash against the boats and they glitter. Such a glorious city is 
Thiruch-chaayk-kaadu.

1879.     வேதநாவினர்வெண்பளிங்கின்குழைக்காதர் 
    ஓதநஞ்சணிகண்டருகந்துறைகோயில் 
    மாதர்வண்டுதன்காதல்வண்டோடியபுன்னைத் 
    தாதுகண்டுபொழில்மறைந்தூடுசாய்க்காடே.        7

    வேத நாவினர், வெண்பளிங்கின் குழைக் காதர், 
    ஓதநஞ்சு அணி கண்டர், உகந்து உறை கோயில் - 
    மாதர் வண்டு, தன் காதல்வண்டு ஆடிய புன்னைத் 
    தாது கண்டு, பொழில் மறைந்து, ஊடு சாய்க்காடே.

    vEta nAvinar, veNpaLigkin kuzaik kAtar, 
    Ota nanjcu aNi kaNTar, ukantu uRai kOyil- 
    mAtar vaNTu, tan kAtalvaNTu ATiya punnait 
    tAtu kaNTu, pozil maRaintu, UTu cAykkATE.

பொருள்:     ஈசன், வேதத்தை ஒலிக்கும் நாவினர்! வெண் பளிங்கு போன்ற குழையினைக் 
காதில் அணிந்துள்ளவர். கடலில் தோன்றிய நஞ்சை உண்ட கண்டத்தவர். அவர் விரும்பி உறையும் 
திருத்தலமே திருச்சாய்க்காடாம். அத்தலத்துள் காதல் கொண்ட பெண் வண்டுகள் தம் காதல் 
வண்டுகள் வாய்வைத்து ஊதிய புன்னை மலர்களில் உள்ள தாதுக்களில் பொருந்தி இருந்து 
ஊடல் செய்யும்.

குறிப்புரை:     சிவபிரான் வேதத்தை முதன் முதலாகச் சொல்லியருளிய திருநாவுடையார். 
பளிங்காலான குழை அணிந்த திருச்செவியார். ஓதம் நஞ்சு பாற்கடலில் எழுந்த விடம். அணி கண்டர் 
-அழகு செய்யும் திருநீல கண்டர். அணிந்த எனலுமாம். உகந்து - உயர்ந்து, விரும்பி. மாதர்- அழகு, 
இச்சையுமாம். மாதர் வண்டு -  பெண். காதல் வண்டு- ஆண். ஆடுதலும் ஊடுதலும் 
உணர்த்தப்பட்டமை அறிக.

    Behold! It is Civan, our Lord of Thiruch-chaayk-kaadu. His tongue was the first 
to pronounce the four Vedas. His neck looks dark blue in colour, because He devoured 
the poison of the sea. He wears the superior kind of white globular lead in an earring 
called kuzhai. Our Lord Civan with such properties manifests Himself in the temple in 
Thiruch-chaayk-kaadu. Near the temple in the grove the female beetles join their loving 
male beetles and dance in the pollen dust of Caulophylium flowers and enjoy their life. 
Thereafter they indulge in feigned quarrels with their male partners and hide 
themselves in the grove and thereafter enjoy their life.

1880.     இருக்குநீள்வரைபற்றியடர்த்தன்றெடுத்த 
    அரக்கனாகநெரித்தருள்செய்தவன்கோயில் 
    மருக்குலாவியமல்லிகைசண்பகம்வண்பூந் 
    தருக்குலாவியதண்பொழில்நீடுசாய்க்காடே.        8

    இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த 
    அரக்கன் ஆகம் நெரித்து அருள்செய்தவன் கோயில் - 
    மருக் குலாவிய மல்லிகை, சண்பகம், வண் பூந் 
    தரு, குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே.

    irukkum nILvarai paRRi aTarttu, anRu eTutta 
    arakkan Akam nerittu, aruLceytavan kOyil- 
    maruk kulAviya mallikai, caNpakam vaN pUn 
    taru, kulAviya taNpozil nITu cAykkATE.

பொருள்:     எம்பெருமான் ஆட்சி செய்யும் கயிலாய மலையைப்பற்றி எடுக்க முயன்றான் 
அரக்கன் இராவணன். அவனை நெரித்து பின்பு அருள் செய்தவரே சிவபெருமான். அவர் கோயில் 
கொண்டிருக்கும் இடமே திருச்சாய்க்காடாம். அங்குள்ள சோலைகளில் மணமிக்க மல்லிகை 
மலர்களும் சண்பக மலர்களும் நிறைந்திருக்கும்.

குறிப்புரை:     இருக்கும் நீள்வரை - வீற்றிருக்கும் உயர்ந்த கயிலை மலையை. ஆகம் - உடம்பு. 
மரு- மணம். தரு- மரம். நீடுதல்- ஓங்கிப் பரந்து அழியாமை குறித்தது. இருக்கும் வரையை எடுத்த அரக்கன். 
தூண் துரும்பாகும் இழிநிலையை எய்தி, அஞ்சி இறைவனை இன்புறுத்த இன்னிசை பாடி 
மகிழ்வித்து, நாளும் பெற்றான் வாளும் பெற்றான் என்பது குறித்தே, 'நெரித்து' என்பதை அடுத்து
'அருள் செய்தவன்' என்றருளினார் ஆசிரியர்.

    Behold! It is Civan, our Lord of Thiruch-chaayk-kaadu. His permanent abode 
is the long and high and old Himalayan mountain. Raavanan, the king of Sri Lanka due 
to his egoism, tried to lift our Lord's mountain and keep it aside. Our Lord pressed 
the mountain. Raavanan got crushed. He begged for pardon. Our Lord pardoned him and 
graced him and gave boons. This Lord is manifest in temple in Thiruch-chaayk-kaadu. 
Near the temple big groves are plenty, full of tall trees. The flower yielding trees 
are many. Jasmine and champaka flowers shed fragrance all over the area.

1881.     மாலினோடயன்காண்டற்கரியவர்வாய்ந்த 
    வேலையார்விடமுண்டவர்மேவியகோயில் 
    சேலின்நேர்விழியார்மயிலாலச்செருந்தி 
    காலையேகனகம்மலர்கின்றசாய்க்காடே.        9

    மாலினோடு அயன் காண்டற்கு அரியவர்,வாய்ந்த 
    வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில் - 
    சேலின் நேர் விழியார் மயில்ஆல, செருந்தி 
    காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே.

    mAlinOTu ayan kANTaRku ariyavar, vAynta 
    vElai Ar viTam uNTavar, mEviya kOyil- 
    cElin nEr viziyAr mayil Ala, cerunti 
    kAlaiyE kanakam malarkinRa cAykkATE.

பொருள்:     ஈசன், திருமால், பிரமன் முதலானோர்க்குக் காண்பதற்கு அரியவர். கடலில் 
தோன்றிய நஞ்சை உண்டருளியவர். அவர் கோயில் கொண்டுள்ள தலமே திருச்சாய்க்காடாம். 
அத்தலத்தில் சேல்விழி கொண்ட மாதர்கள் மயில் போல ஆடித் திரிவர்.  செருந்தி மலர்களும் 
பொன்னிறம் கொண்ட பிற மலர்களும் எப்பொழுதும் பொருந்தி இருக்கும் இடமே 
திருச்சாய்க்காடாம் என்க.

குறிப்புரை:     வேலை- கடல். நேர் - ஒத்த. செருந்தி. கனகம்- (பொன்) போலப் பூப்பது. 
ஆறு சாமத்திலும் பூக்கும் வெவ்வேறு இனங்களுள் காலையிற் பூப்பது செருந்தி. நாண்மலர் 
(நாள்+காலை) என்னும் தொல் வழக்குணர்க. 'அல்லி' அல்லிற்பூப்பது பற்றிய காரணப்பெயர்.

    Behold! It is Civan, our Lord of Thiruch-chaayk-kaadu. He could not be 
comprehended by Vishnu and Brahma. He once drank the poison that came out of the sea. 
This Lord Civa is manifested in the temple in Thiruch-chaayk-kaadu. In this city
young damsels with fish-like eyes live in large numbers. The peacocks unfold 
their feathers and dance all around the city. Here chrysanthamum flowers blossom 
like gold in the morning hours and spread the fragrance all around the area. 
This is the holy city of our Lord.

1882.    ஊத்தைவாய்ச்சமண்கையர்கள்சாக்கியர்க்கென்றும் 
    ஆத்தமாக அறிவரிதாயவன்கோயில் 
    வாய்த்தமாளிகைசூழ்தருவண்புகார்மாடே 
    பூத்தவாவிகள்சூழ்ந்துபொலிந்தசாய்க்காடே.        10

    ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும் 
    ஆத்தம்ஆக அறிவு அரிதுஆயவன் கோயில் 
    வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே, 
    பூத்த வாவிகள் சூழ்ந்து, பொலிந்த சாய்க்காடே.

    UttaivAyc camaNkaiyarkaL cAkkiyarkku enRum 
    Attam Aka aRivu aritu Ayavan kOyil-
    vAytta mALikai cUztaru vaN pukAr mATE, 
    pUtta vAvikaL cUzntu, polinta cAykkATE.

பொருள்:     பொய்யுரை புகலும் சமணர்களும் சாக்கியர்களும் என்றும் அறிய 
அரியவனே சிவன். அவனே திருச்சாய்க்காடு தலத்தில் கோயில் கொண்டுள்ளான். அத்தலத்தில் 
மாட மாளிகைகள் நிறைந்திருக்கும். வாவிகளில் மலர்கள் பூத்துப் பொலிந்திருக்கும். 

குறிப்புரை:     ஆத்தம் - ஆப்தம், உண்மை. அறிவு அரிது ஆயவன்- அறிவதற்கு அரிய உண்மைப்
பொருளாயுள்ளவன். புகார்க்கு அருகில் சாய்க்காடு இருத்தல் கூறப்பட்டதறிக. புகார்க்கு மாளிகையும்
காட்டுக்கு வாவிகளும் விசேடம். புகா ஆறு என்றதன் மரூஉவே புகார் என்பது. இதன் முதற்பாட்டில்
 'பொன்னி சாகரம் மேவு' என்றதற்கு எழுதிய குறிப்பைக் காண்க.

    Behold! It is Civan, our Lord of Thiruch-chaayk-kaadu. Our Lord is the embodiment 
of truth. He is beyond the comprehension of those ill tongued and dull witted Jains and 
the unreliable Buddhists. However, our Lord had affection for them; but they could not 
have awareness of our Lord; He is a rarity for them. Our Lord has manifested Himself in 
the temple in Thiruch-chaayk-kaadu, where flower ponds all around the area are in plenty. 
The city of Poom-pukar, near this place, is filled with such ponds and beautiful 
palatial buildings.

1883.     ஏனையோர்புகழ்ந்தேத்தியஎந்தைசாய்க்காட்டை 
    ஞானசம்பந்தன்காழியர்கோன்நவில்பத்தும் 
    ஊனமின்றியுரைசெயவல்லவர்தாம்போய் 
    வானநாடினிதாள்வரிம்மாநிலத்தோரே.        11

    ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை
    ஞானசம்பந்தன் - காழியர்கோன்-நவில் பத்தும் 
    ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய் 
    வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.

    EnaiyOr pukazntu Ettiya entai cAykkATTai, 
    njAnacampantan--kAziyarkOn-navil pattum 
    Unam inRi uraiceya vallavartAm, pOy, 
    vAnanATu initu ALvar, im mAnilattOrE.

பொருள்:     ஏனையோர் பலராலும் போற்றப்படுபவரே எந்தை ஈசன் ஆவார். அவர் 
திருச்சாய்க்காடு தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரைப் புகழ்ந்து சீர்காழித் தலத்துள் 
அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்கள் பாடி அருளியுள்ளார். அப்பாடல்களைப் 
பாட வல்லவர்கள் இப்பூவுலகில் புகழுடன் விளங்குவர்.

 குறிப்புரை:     ஏனையோர் - உபமன்யு முனிவர், இயற்பகை நாயனார், ஆதிசேடன் முதலியோர் 
(தி.4 பதி.56 பா.5) ஊனம்- சொற்குற்றம், பொருட்குற்றம். அநாசாரம், அன்பின்மை முதலியவை 
பாராயணத்துக்கு ஊனங்கள்.

    The people on the earth may note this. Our saint Thiru-gnana-Sambandar, 
the ruler of Kaazhi had sung on the Lord of Thiruch-chaayk-kaadu ten divine songs 
in chaste Tamil. Those devotees other than the Jains and Buddhists, praise our father, 
who is the Supreme Lord of Thiruch-chaayk-kaadu. Those who can recite these verses or 
sing these ten verses in praise of our Lord without mistakes will definitely reach and
rule the celestial world.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            38ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 38th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 175                பதிக எண் : 39

39. திருக்ஷேத்திரக் கோவை            39. THIRU-SHETRAK-KOVAI

பண் : இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam - Vinaa Urai

1884.     ஆரூர்தில்லையம்பலம்வல்லம்நல்லம் 
        வடகச்சியுமச்சிறுபாக்கம்நல்ல
    கூரூர்குடவாயில்குடந்தைவெண்ணி 
        கடல்சூழ்கழிப்பாலைதென்கோடிபீடார் 
    நீரூர்வயல்நின்றியூர்குன்றியூருங்
        குருகாவையூர்நாரையூர்நீடுகானப் 
    பேரூர்நன்னீள்வயல்நெய்த்தானமும்
        பிதற்றாய்பிறைசூடிதன்பேரிடமே.        1

    ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம், 
        வடகச்சியும், அச்சிறுபாக்கம், நல்ல
    கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி,
        கடல்சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடுஆர்
     நீர்ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும்,
        குருகாவையூர், நாரையூர், நீடு கானப் 
    பேரூர்,நல்-நீள் வயல் நெய்த்தானமும்,
        பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே!

    ArUr, tillai ampalam, vallam, nallam, vaTakacciyum, acciRupAkkam, nalla 
    kUrUr, kuTavAyil, kuTantai, veNNi, kaTal cUz kazippAlai, ten kOTi, pITu Ar 
    nIr Ur vayal ninRiyUr, kunRiyUrum, kurukAvaiyUr, nAraiyUr, nITu kAnap
    pErUr, nal-nIL vayal neyttAnamum, pitaRRAy, piRaicUTitan pEr iTamE!

பொருள்:     திருவாரூர், தில்லையம்பலம், வல்லம், நல்லம், திருக்கச்சி, அச்சிறுபாக்கம், கூரூர்,
குடவாயில், குடந்தை, வெண்ணியூர், திருக்கழிப்பாலை, திருநின்றியூர், குன்றியூர், குருகாவூர், நாரையூர், 
திருக்கானப் பேரூர், திருநெய்த்தானம் ஆகிய தலங்களில் கோயில் கொண்டுள்ள பிறைசூடிய 
பெம்மானாகிய சிவனைத் தொழுவாயாக.

குறிப்புரை:     பீடு- பெருமை. நீர் ஊர் வயல்- நீர் பரவிய கழனி. பிதற்றாய் - இத்தலங்களின் 
திருநாமங்களை மீண்டும் மீண்டும் பிதற்றிக் கொண்டிருப்பாய். பிதற்றுதலாலேயே பெரும்பயன் 
எய்துவாய் என்றபடி. பிறைசூடி - சந்திரசேகரன். பேரிடம் - பெருந்தலங்கள். குடந்தை, குடந்தைக் 
கீழ்க்கோட்டம், குடமூக்கு, குடந்தைக் காரோணம் நான்கும் இப்போது கும்பகோணம் என்னும் 
நகரில் உள்ள வெவ்வேறு சிவத்தலங்கள். இதில் குடவாயில் குடந்தை என்றும், பா.9-இல் 
குடமூக்கென்றும் வெவ்வேறு கூறப்படுதல் காண்க. இப்பதிகத்துள் அடங்கிய வைப்புத் தலங்கள் 
தனியாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

    Oh my mind! babble always these places, which are blessed to have abodes for our 
Lord with the crescent decorated head; Aarur, Thillaiambalam, Vallam, Nallam, Kachchi, 
Achiruppakkam, Kazhippalai surrounded by the sea, nearer the south, Ninriyur of paddy 
fields, Kundriyur, Kurugavaiyur, Naraiyur, Needukanapperur and Neythaanam with fertile 
fields, worship the Lord of these places.

1885.    அண்ணாமலையீங்கோயும் அத்திமுத்தா 
        றகலாமுதுகுன்றங்கொடுங்குன்றமுங் 
    கண்ணார்கழுக்குன்றங்கயிலைகோணம் 
        பயில்கற்குடிகாளத்திவாட்போக்கியும் 
    பண்ணார்மொழிமங்கையோர்பங்குடையான் 
        பரங்குன்றம்பருப்பதம்பேணிநின்றே 
    எண்ணாய் இரவும்பகலும் 
        இடும்பைக்கடல் நீந்தலாங்காரணமே.        2

    அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு 
        அகலா முதுகுன்றம், கொடுங்குன்றமும், 
    கண் ஆர் கழுக்குன்றம், கயிலை, கோணம்
         பயில் கற்குடி காளத்தி, வாட்போக்கியும், 
    பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் 
        பரங்குன்றம்,பருப்பதம், பேணி நின்றே 
    எண்ணாய், இரவும் பகலும் 
        இடும்பைக்கடல் நீந்தல் ஆம், காரணமே.

    aNNAmalai, IgkOyum, atti muttARu akalA mutukunRam, koTugkunRamum 
    kaN Ar kazukkunRam, kayilai, kONam payil kaRkuTi, kALatti, vATpOkkiyum, 
    paN Ar mozi magkai Orpagku uTaiyAn paragkunRam, paruppatam, pENi ninRE, 
    eNNAy, iravum pakalum iTumpaikkaTal nIntal Am, kAraNamE.

பொருள்:     திருவண்ணாமலை, ஈங்கோய்மலை, திருமுதுகுன்றம், கொடுங்குன்றம், திருக்கண்ணார்
கோயில், திருக்கழுக்குன்றம், திருக்கயிலை, திரிகோணமலை, திருக்கற்குடி, திருக்காளத்தி, திருவாட்போக்கி, 
திருப்பரங்குன்றம், திருப்பருப்பதம் ஆகிய தலங்களில் எம்பெருமான் தேவியோடு கோயில் கொண்டுள்ளான். 
 அவனை வணங்கி நீ துன்பக் கடலிலிருந்து கரை ஏறுவாயாக.

குறிப்புரை:     முத்தாறு - விருத்தாசலத்தின் அருகே ஓடும் ஆற்றின் பெயர். வாட்போக்கி - ரத்தகிரி,
வாள் - ஒளி. போக்கி - போகச் செய்வது. ஒளிவீசும் அரதனகிரி என்க. ஈற்றடி கிடைத்திலது.

    Oh my mind! think always both night and day, these glorious pilgrimage centres by 
visiting which we can swim off the sea of sorrows - Annamalai, Eengoi, Aththi
Mutharu, Muthukundram, Kodungundram,Thiru-k-Kazhukundram, Kayilai-k-Konam,
Karkudi, Kalathi, Vatpokki, Thirupparangundram and Thiruparuppatham where our
Lord with our goddess of musical words resides. 

1886.     அட்டானமென்றோதியநாலிரண்டும் 
        மழகன்னுறைகாவனைத்துந்துறைகள் 
    எட்டாந்திருமூர்த்தியின்காடொன்பதுங் 
        குளமூன்றுங்களமஞ்சும்பாடிநான்கும் 
    மட்டார்குழலாள்மலைமங்கைபங்கன் 
        மதிக்கும் இடமாகியபாழிமூன்றும் 
    சிட்டானவன்பாசூரென்றேவிரும்பாய் 
        அரும்பாவங்களாயினதேய்ந்தறவே.        3

    அட்டானம் என்று ஓதிய நால்-இரண்டும், 
        அழகன்(ன்) உறை காஅனைத்தும், துறைகள் 
    எட்டுஆம், திருமூர்த்தியின் காடுஒன்பதும், 
        குளம்மூன்றும், களம்அஞ்சும், பாடிநான்கும் 
    மட்டு ஆர் குழலாள் மலைமங்கைபங்கன் 
        மதிக்கும்(ம்) இடம் ஆகிய பாழிமூன்றும்
     சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய், 
        அரும்பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே!

    aTTAnam enRu Otiya nAl-iraNTum, azakan(n) uRai kA anaittum, tuRaikaL 
    eTTu Am, tirumUrtiyin kATu onpatum, kuLam mUnRum, kaLam anjcum, pATi nAnkum
    maTTu Ar kuzalAL malaimagkai pagkan matikkum(m) iTam Akiya pAzimUnRum, 
    ciTTAnavan pAcUr enRE virumpAy, arumpAvagkaL Ayina tEyntu aRavE!

பொருள்:     இறைவன், வீரட்டானம் என்றழைக்கப் பெறும் திருக்கண்டியூர், திருக்கடவூர், 
திருப்பறியலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி, திருவதிகை, திருக்கோவலூர், திருவழுவை என்ற 
எட்டுத் தலங்களிலும், திருக்கோலக்கா, திருக்குரக்குக்கா, திருக்கோடிக்கா, திருவானைக்கா,                   
திருநெல்லிக்கா என்றழைக்கப்பெறும் தலங்களிலும், ஆலந்துறை, திருமாந்துறை, திருப்பாற்றுறை, 
கடம்பந்துறை, பராய்த்துறை, பெருந்துறை, வெண்டுறை, அரற்றுறை என்ற எட்டுத் துறைகளிலும்,            
திருச்சாய்க்காடு, திருவெண்காடு, தலைச்சங்காடு, கொள்ளிக்காடு, திருமறைக்காடு, 
திருநெறிக்கரைக்காடு, திருவாலங்காடு, திருவேற்காடு, தலையாலங்காடு என்ற ஒன்பது 
காடுகளிலும், மூன்று குளத்தலங்களிலும், திருவேட்களம், நெடுங்களம் போன்ற ஐந்து களங்களிலும்               
பாடிகள் நான்கினும் பாழி மூன்றினும் பொருந்தியவன் திருப்பாய்ச்சூர் இறைவன் என்றே தொழுவீராக. 
 பாவங்கள் நீங்கப் பெறுவீராக!

குறிப்புரை:     அட்டானம் என்று ஓதிய நாலிரண்டும் - எட்டு வீரட்டங்களும். அட்டானம் - அஷ்டஸ்தாநம் 
என்பதன் திரிபு. கா, துறை, காடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அவற்றுள் கா 
அல்லாதவற்றின் தொகையையும் குறித்தமை காண்க. சிட்டன்- சிஷ்டன். காடொன்பது- திருமறைக்காடு, 
தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு, 
வேற்காடு, கோட்டுக்காடு, நிறைக்காடு, மிறைக்காடு, இறைக்காடு என்பவும் உள. (சுந்தரர் ஊர்த்தொகை.3) 
குளமூன்றும் களம் அஞ்சும் - திருக்குளம், இடைக்குளம், பாற்குளம், வளைகுளம். கடிக்குளம், தஞ்சைத் 
தளிக்குளம் என்பவற்றுள் எம்மூன்றோ? 'வளைகுளமும் தளிக்குளமும் நல்லிடைக் குளமும் திருக்குளத்தோடு 
அஞ்சைக்களம் விள்ளாத நெடுங்களம் வேட்களம்' (அப்பர், அடைவு திருத்.), வேறு இரண்டு களம் யாவையோ? 
பாடி நான்கு - எதிர்கொள்பாடி, மழபாடி; பிற எவையோ? வலிதாயம் (பாடி) சேரின் மூன்றாம். பாழி மூன்று - 
திருவரதைப் பெரும்பாழி, களப்பாழி பிறிதொன்று யாதோ?

    Oh my mind! to be relieved of cruel sins, you may visit these holy places where
our Lord dwells, sharing His body with the daughter of the mountain, a damsel of long hair, 
beautified with honey filled flowers - eight attanams, the places, the names of end in Ka, 
Thurai, Kadu, Kulam etc., the nine places bearing the names of the forests, three places of 
tanks, fields five and padi four, and the three sites ending in Paazhi, our Lord likes most 
Paasur, He may be called Lord of Thiruppaasur.

1887.     அறப்பள்ளிஅகத்தியான்பள்ளிவெள்ளைப் 
        பொடிப்பூசியாறணிவானமர்காட்டுப்பள்ளி             
    சிறப்பள்ளிசிராப்பள்ளிசெம்பொன்பள்ளி 
        திருநனிபள்ளிசீர்மகேந்திரத்துப் 
    பிறப்பில்லவன்பள்ளிவெள்ளச்சடையான் 
        விரும்பும்மிடைப்பள்ளிவண்சக்கரமால் 
    உறைப்பாலடிபோற்றக்கொடுத்தபள்ளி 
        உணராய்மடநெஞ்சமேஉன்னிநின்றே.        4

    அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, வெள்ளைப் 
        பொடிப் பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி 
    சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி,
        திரு நனிபள்ளி, சீர்மகேந்திரத்துப் 
    பிறப்பு இல்லவன் பள்ளி, வெள்ளச் சடையான் 
        விரும்பும்(ம்) இடைப்பள்ளி வண் சக்கரம் மால் 
    உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி 
        உணராய் மட நெஞ்சமே, உன்னி நின்றே!

    aRappaLLi, akatiyAnpaLLi, veLLaip poTi pUci ARu aNivAn amar kATTuppaLLi 
    ciRappaLLi, cirAppaLLi, cemponpaLLi,tiru nanipaLLi, cIr makEntirattup 
    piRappu illavan paLLi, veLLac caTaiyAn virumpum(m) iTaippaLLi, vaN cakkaram mAl 
    uRaippAl aTi pORRak koTutta paLLi, uNarAy, maTa nenjcamE, unni ninRE!

பொருள்:     ஈசன், அறப்பள்ளித் தலத்தில் திருநீறு அணிந்து தோன்றுவான். திருக்காட்டுப் பள்ளியில் 
கங்கையைத் தலையில் தாங்கி நின்று அருளுவான். அவன் சிறப்புடன் சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி,
 திருநனிபள்ளி, மயேந்திரப்பள்ளியிலும் தோன்றுவான். பிறப்பு இறப்பு இல்லாத அவன், கங்கையைத் 
தலையில் தாங்கியபடியே பிற தலங்களிலும் காட்சி கொடுப்பான். அவன் கோயில் கொண்டுள்ள 
தலங்களுக்கெல்லாம் சென்று அவனைப் போற்றுவீராக. நலன்களைப் பெறுவீராக.

குறிப்புரை:     பிறப்பில்லாதவன் - பிஞ்ஞகா பிறப்பிலி பிறப்பிற்குக் காரணமாகிய பேதைமை 
இயல்பாகவே இல்லாதவன். உறைப்பு - திருவருள் உறைப்பு, அன்பின் அழுத்தம்.

    You, foolish mind, worship at your heart these blessed places Arappalli,
Agathianpalli,Kattuppalli, the abode of our Lord, who has smeared His body with the
white powder and who beautifies His head with the river - Cirappalli, Cemponpalli,
Thirunanipalli, Mahendrapalli, where our birthless God abides. Idaippalai is liked
by the God of matted hair with the Ganges flood and also Chakramaalpalli, where 
Lord bestowed His grace on Lord Vishnu, when he worshipped Him.

1888.     ஆறைவடமாகறல்அம்பர்ஐயா 
        றணியார்பெருவேளூர்விளமர்தெங்கூர் 
    சேறைதுலைபுகலூர்கலா 
        திவைகாதலித்தானவன்சேர்பதியே
    --------------------------------------------
        -----------------------------------
    --------------------------------------------
        -------------------------------------        5

    ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு, 
        'அணி ஆர் பெருவேளூர், விளமர், தெங்கூர், 
    சேறை, துலை புகலூர், அகலாது 
        இவை காதலித்தான் அவன் சேர் பதியே
    ------------------------------------------------
        -----------------------------------------
    ------------------------------------------------
        -----------------------------------------

    aRai, vaTamAkaRal, ampar, aiyARu, aNi Ar peruvELUr, viLamar, tegkUr, 
    cERai, tulai pukalUr, akalAtu ivai kAtalittAn avan cEr patiyE
    -----------------------------------------------------------------
    -----------------------------------------------------------------

பொருள்:     ஈசன், திருமாகறல், அம்பர்மாகாளம், திருவையாறு, பெருவேளூர், இமைத் 
திருத்தென்கூர், திருச்சேறை புகலூர் ஆகிய தலங்களை விரும்பி அங்கெல்லாம் கோயில் 
கொண்டுள்ளார் என்க.

குறிப்புரை:     மாகறல், அம்பர், ஐயாறு, அணி - அழகு. துலைபுகலூர் - என்ற குறிப்பால். 
பெயர்க்காரணம் ஒருவாறு ஊகிக்கப்படுகின்றது.

    These are the holy places loved by our God, not leaving Aarai, Makaral north,
 Ambarmaakaalam, Iyaaru; beautiful Peruvelur, Vilamar, Thengur, Cherai, Pukaloor...

1889.     மனவஞ்சர்மற்றோடமுன்மாதரரு                 
        மதிகூர்திருக்கூடலில் ஆலவாயும் 
    இனவஞ்சொலிலாஇடைமாமருதும் 
        இரும்பைப்பதிமாகாளம்வெற்றியூரும் 
    கனமஞ்சினமால்விடையான்விரும்புங் 
        கருகாவூர்நல்லூர்பெரும்புலியூர் 
    தனமென்சொலிற்றஞ்சமென்றேநினைமின் 
        தவமாமலமாயினதானறுமே.        6

    மன வஞ்சர் மற்று ஓட, முன் மாதர் ஆரும்             
        மதி கூர் திருக் கூடலில் ஆலவாயும்,
    இன வஞ்சொல் இலா இடைமாமருதும்,
        இரும்பைப்பதிமாகாளம், வெற்றியூரும், 
    கனம் அம் சின மால்விடையான் விரும்பும் 
        கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர், 
    தன மென்சொலில்-தஞ்சம் என்றே நினைமின்! 
        தவம் ஆம்; மலம்ஆயினதான் அறுமே.

    manavanchar maRROTa mun mAtha rArum mathikUr thirukkUTalil AlavAyum 
    inavanj cholilA iTaimA maruthum irumpaip pathi mAkALam veRRiyUrum         
    kanam am china mAl viTaiyAn virumpum karukAvUr nallUr perum puliyUr 
    thanamen cholil tancham enRE ninaimin thavamAm malam Ayina thAn aRumE.        

பொருள்:     வஞ்சமனம் உடையோர் அஞ்சி ஓடிடவும், நன்மாதர்கள் பொருந்தி வணங்கவும் 
ஈசன் கூடல்மாநகரில் ஆலவாய்த் திருக்கோயிலில் கோயில் கொண்டுள்ளான். கொடுஞ்சொல் 
போந்த அடியவர் நிறைந்த இடைமருதூரிலும் நிறைந்துள்ளான். திருக்கருகாவூர், நல்லூர்,
பெரும்புலியூரிலும் உள்ளான். எங்கும் நிறைந்த அவனையே தஞ்சம் எனக் கொண்டு வழிபாடு 
செய்யுமின். உங்களது வினைகள் எல்லாம் நீங்கப் பெறும்.

குறிப்புரை:     மனவஞ்சர்- வஞ்சமனத்தர். மற்றோட என்பது இங்குப் பொருந்துமாறு 
புலப்பட்டிலது. திருக்கூடலில் ஆலவாய் - திருக்கூடலில் உள்ள ஆலவாயென்னும் திருக்கோயில். 
இனவஞ்சொல்  இலா- வண்சொல் இனம் இல்லாத. கனம் அம்சினம் மால்விடை- மேன்மையும் 
அழகும் கோபமும் உடைய  திருமாலாகிய விடை தஞ்சம் - அடைக்கலம் (தண்+து+அம்). 
தவமாம் - தவமாகும். மலம் ஆயினதான் அறுமே - மும்மலமும் தானே அற்றொழியும்.

    Oh my mind! think of these sacred places as sanctuaries of salvation, all our 
flaws will be snapped off, Thirukkoodal Alavaay, where the cunning fellows run away ,
where the womenfolk worship always; Idaimamarudu, a place which knows no cunning words, 
Irumpaipathi Maakalam, Verriyur, Karukavur liked most by God Vishnu, the grand and 
handsome, and angry bull and also Nallur Perumpuliyur.  Pray there with soft words 
and surrender Yourself at His feet; this is penance enough and therefore Your karma 
will be snapped off.

1890.     மாட்டூர்மடப்பாச்சிலாச்சிராமம் 
        முண்டீச்சரம்வாதவூர்வாரணாசி 
    காட்டூர்கடம்பூர்படம்பக்கங்கொட்டுங் 
        கடலொற்றியூர்மற்றுறையூரவையும் 
    கோட்டூர்திருவாமாத்தூர்கோழம்பமுங் 
        கொடுங்கோவலூர்திருக்குணவாயில்
    -------------------------------------
        -----------------------------            7

    மாட்டூர், மடப் பாச்சிலாச்சிராமம்
         முண்டீச்சரம், வாதவூர், வாரணாசி, 
    காட்டூர், கடம்பூர், படம்பக்கம் கொட்டும் 
        கடல் ஒற்றியூர், மற்று உறையூர் அவையும், 
    கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பமும், 
        கொடுங்கோவலூர், திருக் குணவாயில்,
    --------------------------------------------------
        -----------------------------------------

    mATTUr maTappAch chilAchchi rAmam muNTIchcharam vAthavUr vAraNachi 
    kATTUr kaTampUr paTampakkaN^ koTTuN^ kaTaloRRiyUr maRRuRaiyUr avaiyuN^ 
    kOTTUr thiruvAmAththUr kOzampamuN^ koTuN^kOvalUr thirukkuNavAyil
    ---------------------------------------------------------------

பொருள்:     மாட்டூர், பாச்சிலாச்சிராமம், முண்டீச்சரம், வாதவூர், வாரணாசி,காட்டூர்,               
கடம்பூர், திருவொற்றியூர், உறையூர், கோட்டூர், திருவாமாத்தூர், கோழம்பம், கொடுங்கோவலூர், 
திருக்குணவாயில் முதலான தலங்களில் கோயில் கொண்டுள்ள முதல்வனை வணங்கி         
உய்வு பெறுங்கள்

குறிப்புரை:     மற்று உறையூர். இப்பாவின் முழுப்பகுதி கிடைத்திலது.

    Mattur, Matappaaccilaciraamam, Munteechuram, Vathavur, Varanasi, Kattur, Katambur, 
Orriyur in the eastern coast where the sounds of percussions are heard, other nearby places, 
Kottur, Thiruvamathur, Kolambam, Kotungovalur and Thirukkunavayil.

1891.        .................................................................
    ..........................................குலாவுதிங்கட் 
        சடையான்குளிரும்பரிதிநியமம்
    போற்றூரடியார்வழிபாடொழியாத்தென் 
        புறம்பயம்பூவணம்பூழியூரும் 
    காற்றூர்வரையன்றெடுத்தான்முடிதோள் 
        நெரித்தானுறைகோயிலென்றென்றுநீகருதே.        8

    ..........................................................
    ..............................................................குலாவு திங்கள் 
        சடையான் குளிரும் பரிதிநியமம்,
    போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியாத் தென் 
        புறம்பயம், பூவணம், பூழியூரும்,
    காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடிதோள் 
        நெரித்தான் உறை கோயில் என்றுஎன்று நீ கருதே!

    ................kulAvu tigkaL caTaiyAn kuLirum pariti niyamam, 
    pORRu Ur aTiyAr vazipATu oziyAt ten puRampayam, pUvaNam, pUziyUrum 
    kARRu Ur varai anRu eTuttAn muTitOL nerittAn uRai kOyil enRu enRu nI karutE!

பொருள்:     ஈசன், திங்களைச் சடையில் தரித்துள்ளான். தன்னை அன்புடன் வணங்கும்
அடியார்களின் வழிபாட்டை ஏற்க புறம்பயம்,பூவணம், பூழியூர் போன்ற திருத்தலங்களில்        
கோயில் கொண்டுள்ளான். ஆணவத்துடன்  கயிலையைத் தூக்க முயன்ற இராவணனை
நெரித்தான். அவனே எங்கும் நிறைந்தவன் ஆவான். அவனை வணங்குவோமாக. 

குறிப்புரை:     என்று- என்றும் நீ கருது என்க. இதன் முழுப் பகுதியும் கிடைத்திலது. பருத்தி
நியமத்துறைவாய் (சுந்தரர் ஊர்த்தொகை 8) என்று வேறொன்றுமுண்டு. அதனை வைப்புத் 
தலத்தில் அடக்கினர்.

    Oh my mind! think again and again of these temples of glory, where our Lord,
who destroyed the heads and shoulders of that demon when he tried to lift the mountain, 
resides - Parithiniyamam where God of matted hair decorated by the moon dwells, 
South Purambayam, where the worship with prayer of the devotees is endless, Poovanam, 
Poozhiyur - worship the Lord of these places.

1892.     நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்                 
        நெடுவாயில் குறும்பலா நீடுதிரு
    நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் 
        நளிர்சோலையுஞ் சேனைமாகாளம் வாய்மூர்
    கற்குன்ற மொன்றேந்தி மழைதடுத்த 
        கடல்வண்ணனும் மாமலரோனுங் காணாச் 
    சொற்கென்றுந் தொலைவிலாதா 
        னுறையுங் குடமூக்கென்று சொல்லிக்குலாவுமினே.        9

    நெற்குன்றம், ஓத்தூர், நிறைநீர் மருகல்,                 
        நெடுவாயில், குறும்பலா, நீடு திரு 
    நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம்,
        நளிர்சோலை உஞ்சேனைமாகாளம், வாய்மூர்,
    கற்குன்றன் ஒன்று ஏந்தி மழை தடுத்த 
        கடல்வண்ணனும் மா மலரோனும் காணாச் 
    சொற்கு என்றும் தொலைவு இலாதான் 
        உறையும் குடமூக்கு, என்று சொல்லிக் குலாவுமினே!

    neRkunRam, OttUr, niRai nIr marukal, neTuvAyil, kuRumpalA, nITu tiru 
    naRkunRam, valampuram, nAkEccuram, naLircOlai unjcEnaimAkALam, vAymUr, 
    KalkunRam onRu Enti mazai taTutta kaTalvaNNanum mA malarOnum kANAc 
    coRku enRum tolaivu ilAtAn uRaiyum kuTamUkku, enRu collik kulAvuminE!

பொருள்:     நெற்குன்றம், திருவோத்தூர், திருமருகல், நெடுவாயில், திருக்குற்றாலம், 
வலம்புரம், திருநாகேச்சுரம், மாகாளம், திருவாய்மூர் என்ற தலங்களில் கோயில் கொண்டுள்ளான் 
ஈசன். மலையை ஏந்தி மழையைத் தடுத்த திருமாலும், மாமறையோனாகிய பிரமனும் அறிய 
முடியா நிலையில் விளங்கிய  ஈசனே அடியார்களுக்காக குடமூக்கு என்னும் தலத்தில்                  
கோயில் கொண்டுள்ளான். அவனைப் புகழ்ந்து பாடித் தொழுவோமாக.

குறிப்புரை:     குறும்பலா - திருக்குற்றாலத் தலவிருட்சம். கற்குன்றம் - கோவர்த்தனகிரி. 
காணாச்சொற்கு - காணாத புகழுக்கு. தொலைவு - அழிவு.                           

    Oh my mind! Be joyful and praise always these holy centres of divinity, 
where our Lord dwells who is beyond the reach of all words, who could not be 
comprehended by Lord Vishnu,the sea-coloured god, who stopped the rain with an 
umbrella of a mountain and Brahma in the big lotus - Nerkundram, Othur, Marukal 
of running waters, Neduvayil, Kurumbala, Narkundram of rich people, Valampuram, 
Nageswaram, Makalam of cool gardens and Vaymur and Kudamookku.These are the         
holy places where the Infinite resides.

1893.     குத்தங்குடிவேதிகுடிபுனல்சூழ் 
        குருந்தங்குடிதேவன்குடிமருவும்
     அத்தங்குடிதண்டிருவண்குடியும் 
        அலம்புஞ்சலந்தன்சடைவைத்துகந்த 
    நித்தன்நிமலன்உமையோடுங் கூட
        நெடுங்காலம்உறைவிடமென்றுசொல்லாப் 
    புத்தர் புறங்கூறியபுன்சமணர் 
        நெடும்பொய்களைவிட்டுநினைந்துய்ம்மினே.        10

    "குத்தங்குடி,வேதிகுடி, புனல்சூழ் 
        குருந்தங்குடி, தேவன்குடி,மருவும் 
    அத்தங்குடி, தண் திரு வண்குடியும் 
        அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த 
    நித்தன், நிமலன்,உமையோடும் கூட
         நெடுங் காலம் உறைவு இடம்" என்று சொல்லாப் 
    புத்தர், புறம்கூறிய புன் சமணர் 
        நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்மினே!

    "kuttagkuTi, vEtikuTi, punal cUz kuruntagkuTi, tEvankuTi, maruvum 
    attagkuTi, taN tiru vaNkuTiyum alampum calam tan caTai vaittu ukanta 
    nittan, nimalan, umaiyOTum kUTa neTug kAlam uRaivu iTam" enRu collAp 
    puttar, puRamkURiya pun camaNar, neTum poykaLai viTTu, ninaintu uymminE!

பொருள்:     ஈசன், குத்தங்குடி. வேதிகுடி, குருந்தங்குடி, தேவன்குடி, அத்தன்குடி, வண்குடி 
போன்ற தலங்களில் கோயில் கொண்டுள்ளான். அவன் தன் தலையில் கங்கையை அணிந்துள்ளான். 
நித்தன் நிமலன் என்று போற்றப்பெறும் அவனே உமாதேவியாருடன் எல்லாத் தலங்களிலும் கோயில் 
கொண்டுள்ளான். அதனை அறியாமல் புத்தர்களும் சமணர்களும் பொய்யுரை கூறித் திரிவர். அவர் 
உரைகளை விட்டுவிட்டு நீங்கள் ஈசனையே வழிபட்டு உய்வு பெறுவீர்களாக.

குறிப்புரை:     அலம்பும் சலம் - அலையாய்ப் பெருகுங் கங்கைநீர். சொல்லா - புகழ்ந்து போற்றாத.

    Oh my mind! Get your salvation by thinking of these holy places, ignoring 
the utter lies of the Jains and the Buddhists. Our Lord is here, the Holy one, who 
has on His matted hair, the Ganges; who is purity itself; who shares His body with 
Umaa,- Kuththangudi, Vedikudi, Kurunthangudi surrounded by water, Devankudi, Athangudi
and Thiruvangudi of cool water.

1894.     அம்மானையருந்தவமாகிநின்ற 
        அமரர்பெருமான்பதியானவுன்னிக் 
    கொய்ம்மாமலர்ச்சோலைகுலாவுகொச்சைக்
        கிறைவன்சிவஞானசம்பந்தன்சொன்ன 
    இம்மாலையீரைந்தும்இருநிலத்தில் 
        இரவும்பகலுந்நினைந்தேத்திநின்று 
    விம்மாவெருவாவிரும்பும்அடியார் 
        விதியார்பிரியார்சிவன்சேவடிக்கே.        11

    அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற 
        அமரர்பெருமான், பதிஆன உன்னி, 
    கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு 
        இறைவன் - சிவ ஞானசம்பந்தன் - சொன்ன 
    இம் மாலைஈர்-ஐந்தும் இரு நிலத்தில் 
        இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று, 
    விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார்,
        விதியார் பிரியார், சிவன் சேவடிக்கே.

    ammAnai, aruntavam AkininRa amararperumAn, pati Ana unni, 
    koym mA malarccOlai kulAvu koccaikku iRaivan-civa njAnacampantan-conna 
    im mAlai Ir-aintum iru nilattil iravum pakalum ninaintu Etti ninRu, 
    vimmA, veruvA, virumpum(m) aTiyAr, vitiyAr piriyAr, civan cEvaTikkE.

பொருள்:     ஈசன் அன்பு வடிவானவன். அருந்தவமானவன். அமரர் தலைவன். அவன் 
மலர்நிறைந்த சோலைகள் சூழ்ந்த கொச்சைவயம் பதியில் கோயில் கொண்டுள்ளான்.  அத்தலத்தில் 
அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் இறைவனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடி அருளியுள்ளார். 
அப்பாடல்களை இரவும் பகலும் இடைவிடாமல் நினைந்து ஏத்தி விம்மாமல் வெருவாமல் விரும்பிப் 
பாடும் அடியவர்கள் சிவன் சேவடியைச் சேர்ந்து பேரின்பம் பெறுவர்.

குறிப்புரை:     பதியான- தலமானவற்றை. விம்மா- விம்மி. வெருவா - வெருவி. விதியார் -
செல்வமுடையவர். சேவடிக்குப் பிரியார்.

    Those devotees, who on this vast earth, night and day, think and recite these ten 
verses, with weeping and sobbing. will be very rich. Sivagnanasambandan, the Lord of Kochai, 
a place of flower gardens, sang on the Lord, these ten verses, the embodiment of rare penance. 
Those who sing it, feeling and praising our Lord fervently, will be the celestials forever 
under the lotus feet of Lord Civa.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            39ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 39th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

 
பதிகத் தொடர் எண்: 176                பதிக எண்: 40.

40.திருப்பிரமபுரம்                40. THIRU-BRAHMA-PURAM

பண் : சீகாமரம்                    Pann: Seekaamaram

திருத்தல வரலாறு

    பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

தல வரலாறு

    பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.


            திருச்சிற்றம்பலம்

1895.     எம்பிரான்எனக்கமுதமாவானுந்தன்னடைந்தார் 
    தம்பிரான் ஆவானுந்தழலேந்துகையானுங் 
    கம்பமாகரியுரித்தகாபாலிகறைக்கண்டன் 
    வம்புலாம்பொழிற்பிரமபுரத்துறையும்வானவனே.        1

    எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார் 
    தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும், 
    கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன் - 
    வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.

    empirAn, enakku amutam AvAnum, tan aTaintAr 
    tampirAn AvAnum, tazal Entu kaiyAnum, 
    kampa mA kari uritta kApAli, kaRaikkaNTan-
    vampu ulAm pozil piramapurattu uRaiyum vAnavanE.

பொருள்:     எம்பிரான், எனக்கு அமுதமாக விளங்குபவர். தன்னை வணங்கி 
அடைந்தவர்களுக்குத் தலைவர் ஆவார். அவர் நெருப்பைக் கையில் ஏந்தியிருப்பார்.
யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டிருப்பவர். கண்டம் கறுத்தவர். 
மணம் கமழும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ளார்.
 அவரை வணங்குவோமாக.

குறிப்புரை:     எம்பிரான் ஆவானும், தன்னை அடைந்தவர் தம்பிரான் ஆவானும், தழல் ஏந்திய 
கையானும், காபாலியும், கறைக்கண்டனும் வானவனே என்று முடிக்க. தம் - ஆன்மாக்கட்கு. பிரமன் -
 இனியன். பிரியமானவன் என்றும் ஆன்மாக்கள் அநேகமாதலின் 'தம்' என்றும், ஆண்டவன் 
ஏகனாதலின் தன் என்றும்  குறித்தனர் முன்னோர். தன்னானந்தக் கொடி- 'சிவகாமவல்லி' 
என்புழிக்காண்க. கம்பம் -  அசைவு. கட்டுந்தூண். கரி-  கரத்தை உடையது. யானை, காபாலி-
பிரம கபாலத்தை ஏந்தியவன். கறை - நஞ்சு. வம்பு - மணம்.

    Behold! It is Civan, Lord of Thiru-brahma-puram. He is our Master, sweet like 
elixir. He is the Thambiran - God and Supreme Being of those who worship His holy feet. 
He holds fire in His hand. He removed the hide of the big rutted elephant and covered 
His body with that hide. His neck is dark blue in colour. Such a great Supreme Being 
is manifest in Thiru-brahma-puram where fragrance spreads all over the city from the 
multiple flowers of the groves. He is the Supreme Being of the firmament.

1896.     தாமென்றுமனந்தளராத்தகுதியராயுலகத்துக் 
    காமென்றுசரண்புகுந்தார்தமைக்காக்குங்கருணையினான் 
    ஓமென்றுமறைபயில்வார்பிரமபுரத்துறைகின்ற 
    காமன்றனுடலெரியக்கனல்சேர்ந்தகண்ணானே.        2

    தா என்றும் மனம் தளராத் தகுதியராய், உலகத்துக் 
    "காம்!" என்று சரண் புகுந்தார்தமைக் காக்கும் கருணையினான் 
    "ஓம்!" என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற 
    காமன்தன்(ன்) உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.

    tAm enRum manam taLarAt takutiyarAy, ulakattuk 
    "kAm!" enRu caraN pukuntAr tamaik kAkkum karuNaiyinAn- 
    "Om" enRu maRai payilvAr piramapurattu uRaikinRa 
    kAman tan(n) uTal eriyak kanal cErnta kaNNAnE.

பொருள்:     அடியவர்கள் தமக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் தளர மாட்டார்கள். 
எல்லாம் இறைவன் அருளே என்று கொண்டு அவனையே சரணடைவார்கள். அவர்களைக் காக்கும் 
கருணை நிறைந்தவனே ஈசன். மறையவர்கள் ஈசனையே ஓம் என்று கூறி ஓதி மகிழ்வர். அவனே 
பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ளான். அவனே தேவர்கள் சொல்லக் கேட்டு நடந்து கொண்ட 
காமனை எரித்த கண்ணை உடையவனும் ஆவான்.

குறிப்புரை:     உலகத்துக்கு அடைக்கலம் சருவேசுவரன் ஒருவனே ஆவான் என்று, 
என்றும் மனம் தளராத தகுதியை உடையவராகி, அச்சிவபிரானையே சரணம் அடைந்தவர்களைக் 
காக்கும் கிருபாகரன். ஓம் என்று- ஓம் என்று பிரணவ மந்திரத்தை ஓதி. உறைகின்ற கண்ணான்; 
எரியச்சேர்ந்த கண் என்க. மன்மத தகனம்.

    Behold! It is Civan, Lord of Thiru-brahma-puram. He is merciful to protect 
those devotees who do not give up their will power. They have crystal clear faith 
in their minds and submit themselves at His lotus feet. They accept everything 
as the grace of  God. In the city of Thiru-brahma-puram, Vedic scholars recite 
the absolute sacred mantra 'Ohm' always and forever. Our Lord burnt the god of love 
for his misdeed with His fire-filled, forehead eye. He is our Supreme God who is 
manifest in Thiru-brahma-puram.

1897.     நன்னெஞ்சேயுனையிரந்தேன்நம்பெருமான்திருவடியே 
    உன்னஞ்செய்திருகண்டாயுய்வதனைவேண்டுதியேல் 
    அன்னஞ்சேர்பிரமபுரத்தாரமுதையெப்போதும் 
    பன்னஞ்சீர்வாயதுவேபார்கண்ணேபரிந்திடவே.         3        

    நன்னெஞ்சே! உனை இரந்தேன்; நம்பெருமான் திருவடியே 
    உன்னம்செய்து இருகண்டாய்! உய்வதனை வேண்டுதியேல், 
    அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை, எப்போதும் 
    பன், அம் சீர் வாய்அதுவே! பார், கண்ணே, பரிந்திடவே!

    nan nenjcE! unai irantEn; namperumAn tiruvaTiyE 
    unnam ceytu iru kaNTAy! uyvatanai vENTutiyEl, 
    annam cEr piramapurattu Aramutai, eppOtum 
    pan, am cIr vAy atuvE! pAr, kaNNE, parintiTavE!

பொருள்:     நன்னெஞ்சே! உன்னை வேண்டுகிறேன்! நீ எப்பொழுதும் நம்பெருமானின் 
திருவடிகளையே நினைத்துக் கொண்டிரு. நீ நற்கதி அடைய பிரமபுரத்துள் கோயில் கொண்டு 
விளங்கும் நம்பெருமானின் சிறப்புக்களையே பேசிக் கொண்டிரு. அவனது திருக்கோலத்தையே 
உன் கண்ணால் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பாயாக.

குறிப்புரை:     நல்ல நெஞ்சமே! நீ உய்தி வேண்டுவாயானால் உன்னை இரந்தேன். இரந்தது 
என்ன என்றால், நம்பெருமான் திருவடிகளையே சதாகாலமும் நினைவுசெய்திரு. அன்னம் ஆசிரியர் 
காலத்திலிருந்தமை புலப்பட்டது. வாயதுவே - வாயே! எப்போதும் ஆரமுதைப் பன். அம்சீர்பன் -
அழகிய கீர்த்தியைப் பன்னுக. கண்ணே! பரிந்திடப்பார். பரிந்திட -சிவபிரான் இரங்கி அருள்செய்ய. 
பார்- கேசாதிபாதம் + பாதாதிகேசம் தரிசித்துக் குளிர்வாய்.

    Behold! It is Civan, our Lord at Thiru-brahma-puram. Oh my blessed mind! I beg you, 
listen. If you want really to get salvation, you should always ponder over the holy lotus 
feet of our Lord at Thiru-brahma-puram. In this city you see groups of swans float together. 
They move round the temple of our Lord and pray. He is a very rare Supreme Being like nectar
and is manifest in Thiru-brahma-puram. Oh my mind! Praise His glory ever with your mouth. 
Oh my eyes! always see Him and enjoy His beauty. He will shower benign compassion on you. 
Let us, with out heart and soul, and tongue and eyes, praise Him and speak of Him.

1898.     சாநாளின்றிம்மனமேசங்கைதனைத்தவிர்ப்பிக்குங் 
    கோனாளுந்திருவடிக்கேகொழுமலர்தூவெத்தனையுந் 
    தேனாளும்பொழிற்பிரமபுரத்துறையுந்தீவணனை
     நாநாளும்நல்நியமஞ்செய்தவன்சீர்நவின்றேத்தே.        4

    சாம் நாள் இன்றி(ம்), மனமே! சங்கைதனைத் தவிர்ப்பிக்கும் 
    கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு! எத்தனையும் 
    தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீவணனை, 
    நா, நாளும் நன்நியமம் செய்தவன், சீர் நவின்று ஏத்தே!

    cAm nAL inRi(m), manamE! cagkaitanait tavirppikkum 
    kOn ALum tiruvaTikkE kozumalar tUvu! ettanaiyum 
    tEn ALum pozil piramapurattu uRaiyum tIvaNanai, 
    nA, nALum nan niyamam ceytavan, cIr navinRu EttE!            

பொருள்:     மனமே! சாவைப்பற்றி நினையாதே! சாகும் நாள் வரை உன்னை ஈசன் காப்பான்! 
ஐயம் வேண்டாம். அவனது திருவடிகளில் மலர் தூவி வணங்கு. தேன்நிறைந்த பூக்கள் உள்ள 
சோலைகள் சூழ்ந்த பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ள ஈசனை நீ எந்நாளும் போற்று. 
அத்தீவண்ணனை நாளும் வழிபடு. அதுவே நீ செய்ய வேண்டுவனவாம்.

குறிப்புரை:     சாம்நாள் இன்றி, இகரத்தைச் சுட்டாக்குதல் பொருந்தாது. சங்கை - சாகும் நாள் 
உண்டோ இன்றோ என்னும் சந்தேகம். தவிர்ப்பிக்கும் - தவிரப்போக்கும். கோன்- தலைவன் (சிவபிரான்) 
மேல் 'திருவடியே' என்றும் இங்கு, 'திருவடிக்கே' என்றும் அருளியதை உணர்ந்து, மறந்து மற்றொன்றை
எண்ணாமை வேண்டும். தீவணன் - அழல் வண்ணத்தவன். நா - நாவே! நல்ல நியமம் செய்து அவன் 
சீரை நவின்று ஏத்து. நல்நியமம் - தோத்திரம் புரிதற்கு முன் செய்யற்பாலன ஆகிய பூஜாங்கங்களைத் 
 தவறாமல் செய்யும் நியமம்.

    Oh my mind! As long as you live you should live happily until your death.
He will dispel all the doubts and fears from your mind. Everyday, you should go to 
the temple and strew sweet smelling flowers at His holy feet as much as you can. 
Oh my tongue! Have a disciplined way of spiritual life and praise our Lord's 
glory and  worship Him, the Lord of fire. He is manifest in Thiru-brahma-puram, 
which is surrounded by groves full of trees and flowers with profuse honey. 
Do this you can live happily.

1899.     கண்ணுதலான்வெண்ணீற்றான்கமழ்சடையான்விடையேறி 
    பெண்ணிதமாமுருவத்தான்பிஞ்ஞகன்பேர்பலவுடையான் 
    விண்ணுதலாத்தோன்றியசீர்பிரமபுரந்தொழவிரும்பி 
    எண்ணுதலாஞ்செல்வத்தையியல்பாக அறிந்தோமே.        5

    கண்நுதலான், வெண்ணீற்றான், கமழ் சடையான், விடைஏறி, 
    பெண் இதம்ஆம் உருவத்தான், பிஞ்ஞகன், பேர்பல உடையான், 
    விண் நுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரம் தொழ விரும்பி 
    எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்புஆக அறிந்தோமே.

    kaN nutalAn, veN nIRRAn, kamaz caTaiyAn, viTai ERi, 
    peN itam Am uruvattAn, pinjnjakan, pErpala uTaiyAn, 
    viN nutalAt tOnRiya cIrp piramapuram toza virumpi 
    eNNutal Am celvattai iyalpu Aka aRintOmE.

பொருள்:     ஈசன், நெற்றிக் கண்ணை உடையவன். திருநீற்றை அணிந்தவன். நீண்ட
சடையினை உடையவன். இடப வாகனத்தில் ஏறி அமர்ந்தவன். அர்த்தநாரீஸ்வரன், உயர் 
புகழ் கொண்ட பிரமபுரத்துள் கோயில் கொண்டவன். உயர் செல்வமாக விளங்கும் அவனைத் 
தொழும் புண்ணியத்தை இயல்பாகவே  நாம் பெற்றுள்ளோம்.

குறிப்புரை:     கண்நுதலான் - நுதலிற் கண்ணை உடையவன். கண்ணை உடைய நுதலினன். 
நுதலும் (கருதும்) இடமாதலின், 'நுதல்' எனப்பட்டது; கண்ணுதல் என்றதும் அதுபற்றியே. செந்தீயான் 
(கண்ணுதலான்) என்று கருதின் வெண்ணீற்றான் முரண்டொடையாம். ஏறி- பெயர்ச்சொல். 
இதம்- நன்மை. பிஞ்ஞகன் - தலைக்கோலத்தன். பேர்பல - 'பேராயிரம் (பரவிவானோர் ஏத்தும் 
பெம்மான்') விண்- விண்ணோர்க்கு இடவாகுபெயர். நுதலா - கருதுதலாக. எண்ணுதலாம் செல்வத்தை -
- தியானிக்கும் ஐசுவரியத்தை, இயல்பாக - உள்ளவாறு.

    Oh devotees! All of us naturally understand and know that the Supreme Being at 
Thiru-brahma-puram is alone our Lord. He has one more eye at the center of His forehead. 
He has smeared His body with white ashes. He keeps His matted hair always fragrant. 
He has a bull for His transport. He shares the left side of His body with His consort 
Umaa. He takes different forms according to the need of time. He has many names to 
identify Him. He is manifest in the temple at Thiru-brahma-puram, as glories and wealth. 
We pray at His holy feet and this prayerful nature is ours. We will attain salvation, 
you may believe.

1900.     எங்கேனும்யாதாகிப்பிறந்திடினுந்தன்னடியார்க் 
    கிங்கேயென்றருள்புரியுமெம்பெருமானெருதேறிக் 
    கொங்கேயுமலர்ச்சோலைக்குளிர்பிரமபுரத்துறையுஞ் 
    சங்கேயொத்தொளிர்மேனிச்சங்கரன்றன்றன்மைகளே.        6

    எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும்; தன் அடியார்க்கு 
    "இங்கே” என்று அருள்புரியும் - எம்பெருமான், எருது ஏறி, 
    கொங்கு ஏயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும் 
    சங்கே ஒத்து ஒளிர் மேனிச் சங்கரன், தன் தன்மைகளே!

    egkEnum yAtu Akip piRantiTinum, tan aTiyArkku 
    "igkE" enRu aruLpuriyum--emperumAn, erutu ERi, 
    kogku Eyum malarccOlaik kuLir piramapurattu uRaiyum 
    cagkE ottu oLir mEnic cagkaran, tan tanmaikaLE!

பொருள்:     எந்த இடத்திலும் மற்றும் எவ்வகையிலும் பிறந்த அடியவர்களுக்கும் 
அருள்பவனே ஈசன் ஆவான். அவன் அடியவர்களுக்கு எளிதில் அருள்புரியவே, சோலைகள் 
சூழ்ந்த பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ளான். சங்கு போன்ற வெண்ணிறமுடைய 
அச்சங்கரனை அத்தலத்துள் கண்டு இன்புறுவோமாக.

குறிப்புரை:     எங்கு யாது பிறந்திடினும் என்பதும், எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் 
என்பதும் பொருள் வேறுபாடுடையன, இடமும் பிறப்பும் வேறுபட்டாலும் அடியார்க்கு 
ஆண்டவனருள் கிடைப்பது திண்ணம். 'எங்கேனும் இருந்து, எங்கே போவேனாயிடினும், 
எங்கேனும் போகினும்' என்னுந் தொடக்கத்துத் திருப்பாட்டுக்களை (திருமுறை 7) அறிக. 
இங்கே என்றது பிறந்த இடத்தையும் அப்பிறவியையும் குறித்து நின்றது.  கொங்கு- மணம். 
ஏயும்- பொருந்தும். பவளம் போலும் மேனியிற்பால் வெண்ணீறு சண்ணித்த. திருமேனிக்குச் 
சங்கு ஒப்பு. எம்பெருமான் சங்கரன்றன் தன்மைகள் இங்கே என்று அருள்புரியும் என்றியைக்க.

    Behold! It is Civan, our Lord at Thiru-brahma-puram. All around this city of
Thiru-brahma-puram, there are many gardens full of tall trees and a number of flowering 
plants. They yield good honey. Our Lord is graceful to all - wherever they were born 
and whichever birth, they might have had. He tells us to go to Thiru-brahma-puram, 
where He is manifested. He waits for His devotees to grace them. He rides on the 
bull wherever He wants to reach. His body is pure white like conch. These are the 
virtues of our Lord Sankaran who is manifest in Thiru-brahma-puram along with His 
consort Umaa. Let us go to the temple and worship His holy feet and be happy.

1901.     சிலையதுவெஞ்சிலையாகத்திரிபுரமூன்றெரிசெய்த 
    இலைநுனைவேல்தடக்கையனேந்திழையாளொருகூறன் 
    அலைபுனல்சூழ்பிரமபுரத்தருமணியையடிபணிந்தால் 
    நிலையுடையபெருஞ்செல்வம்நீடுலகிற்பெறலாமே.        7

    சிலை அதுவே சிலைஆகத் திரிபுரம் மூன்று எரிசெய்த 
    இலைநுனை வேல்-தடக்கையன், ஏந்திழையாள் ஒருகூறன், 
    அலை புனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடி பணிந்தால், 
    நிலை உடைய பெருஞ்செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே.

    cilai atuvE cilai Akat tiri puram mUnRu ericeyta 
    ilai nunai vEl-taTakkaiyan, EntizaiyAL orukURan, 
    alai punal cUz piramapurattu arumaNiyai aTi paNintAl, 
    nilai uTaiya perunjcelvam nITu ulakil peRal AmE.

பொருள்:     ஈசன், மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தான். அவனே 
சூலப்படையினைக் கையில் கொண்டுள்ளான். உமையவளைத் தன் உடம்பின் இடபாகத்தில் 
கொண்டுள்ளான். கடல் சூழ்ந்த பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ள அருமணியாகிய அவனைத் 
தொழுது நிலையான செல்வத்தை நாம் பெறுவோமாக.

குறிப்புரை:      சிலை அது - மேரு மலையானது. (அது; பகுதிப் பொருள் விகுதி) சிலை - வில் 
(பதிகம் 173, பா. 7, குறிப்புணர்க) திரிபுரம்- வினைத்தொகை. 'திரிதருபுரம் எரிசெய்த சேவகன்' 
(தி.3 ப.23 பா.9). 'திரியும் மூவெயில்' (தி.4 ப.20 பா.7, தி.5 ப.25 பா.4) 'திரியும் மும்மதில்' (தி.5 பதி.36 பா.10). 
'திரியும் முப்புரம்’ (சுந்தரர் பா. 626,685, 809) இலை- உவமை. நிலையுடைய பெருஞ் செல்வம்-
சிவாநந்தாநுபவம். நீடுலகு - வானோர்க்குயர்ந்த  உலகம். 

    Behold! It is Civan, our Lord of Thiru-brahma-puram. He bent mount Meru as a bow 
and shot an arrow on the three flying forts of the adversary, the asuraas. The forts were 
burnt and completely destroyed. He holds in His long hand the three leaf pointed long lancer. 
He shares half of His left body with His consort Umaa. This our Lord is manifest in 
Thiru-brahma-puram which is surrounded by the sea, He exhibits Himself as a rare gem. 
Those devotees who worship the holy feet of our Lord in Thiru-brahma puram, can get 
the immense, permanent wealth of salvation in the celestial world of the devaas.

1902.     எரித்தமயிர்வாளரக்கன்வெற்பெடுக்கத்தோளொடுதாள் 
    நெரித்தருளுஞ்சிவமூர்த்திநீறணிந்தமேனியினான்' 
    உரித்தவரித்தோலுடையானுறைபிரமபுரந்தன்னைத் 
    தரித்தமனமெப்போதும்பெறுவார்தாந்தக்காரே.        8

    எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க, தோளொடு தாள் 
    நெரித்து அருளும் சிவமூர்த்தி, நீறு அணிந்த மேனியினான், 
    உரித்த வரித்தோல் உடையான், உறை பிரமபுரம் தன்னைத் 
    தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே.

    eritta mayir vAL arakkan veRpu eTukka, tOLoTu tAL 
    nerittu aruLum civamUrtti, nIRu aNinta mEniyinAn, 
    uritta varittol uTaiyAn, uRai piramapuram tannait 
    taritta manam eppOtum peRuvAr tAm takkArE.

பொருள்:     ஈசன், கயிலை மலையைத் தூக்க முயன்ற இராவணனின் தோளையும் தாளையும் 
நெரித்தார். அவரே பின்பு அவனுக்கு அருளினார். நீறணிந்த மேனியராகிய அவரே, யானையைக் 
கொன்று அதன் தோலை உரித்து ஆடையாகப் போர்த்தி உள்ளார். அவரே பிரமபுரத் தலத்துள் 
கோயில் கொண்டுள்ளார். அவரை மனமார வணங்கியவர்கள் எப்போதும் பெருந்தகை 
உடையாராக வாழ்வார்கள். 

குறிப்புரை:     சிவமூர்த்தி - சிவமாகிய மூர்த்தி. தக்கார்- பெருந்தகையுடையார். 
மாண்டி சேர்தல் தக்காரிலக்கணம் எனப்பட்டது. கற்றதனாலாய பயன் அதுவே. பார்க்க. 
பா. 10. 'தோளொடு  தாள்' என்புழித் தோளொடு தாளையும் தாளொடு தோளையும் சேர்த்து
நெரித்து என்று கொள்ளலாகாது. தோளையும் தாளையும் நெரித்து எனல் வேண்டும். 
சிவமூர்த்தி என்பதில், மூர்த்தியும் மூர்த்திமானும் ஆக வெவ்வேறாகக் கொள்ளாமல் 
அபேதபுத்தியொடு தியானம் பண்ணுக.

    Behold! It is Civan, our Lord in Thiru-brahma-puram. He has smeared His body
with holy ashes. A fierce rutted elephant came running towards Him. Our Lord killed 
the elephant and covered His body with its hide. Raavanan, the king of Sri Lanka had
hair like burning fire. Holding a dagger in his hand, he tried to lift the mount
Himalayas, the abode of our Lord Civan. Instantaneously our Lord crushed his shoulders 
and heads.Later when Raavanan begged pardon our Lord graced him. This Lord manifests 
Himself in the temple in Thiru-brahma-puram. Those devotees who wholeheartedly 
and always think about the holy place Thiru-brahma-puram in their minds will be 
noble-minded forever. Let Him dwell forever in our minds.

1903.     கரியானும்நான்முகனுங்காணாமைக்கனலுருவாய் 
    அரியானாம்பரமேட்டி அரவஞ்சேரகலத்தான் 
    தெரியாதானிருந்துறையுந்திகழ்பிரமபுரஞ்சேர 
    உரியார்தாமேழுலகுமுடனாளவுரியாரே.        9

    கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உருஆய் 
    அரியான்ஆம் பரமேட்டி, அரவம் சேர் அகலத்தான், 
    தெரியாதான், இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர 
    உரியார் தாம் ஏழ்உலகும் உடன் ஆள உரியாரே.

    kariyAnum nAnmukanum kANAmaik kanal uru Ay 
    ariyAn Am paramETTi, aravam cEr akalattAn, 
    teriyAtAn, iruntu uRaiyum tikaz piramapuram cEra 
    uriyArtAm Ez ulakum uTan ALa uriyArE.

பொருள்:     கரிய நிறமுடைய திருமாலும் பிரமனும் ஈசனைக் காண முயன்றனர். அவர்கள் 
அடிமுடி தேடிக் காணமுடியா நிலையில் நெருப்பு வடிவில் விளங்கியவரே ஈசன். அவனே பாம்பினை 
அணிந்துள்ளான். யார்க்கும் எளிதில் அறிய முடியாத தத்துவனும் அவனே. பிரமபுரத்துள் கோயில் 
கொண்டுள்ள அவனை வணங்குபவர்களே, ஏழுலகத்தையும் ஆளும் உரிமை உடையவர்கள் ஆவார்கள்.

குறிப்புரை:     பரமேட்டி - தன்னின் மேலதில்லாத. உயரிய நிலையினை. அரவம் - பாம்பு. 
அகலம் - மார்பு. தெரியாதவன் - சிந்தையும் மொழியுஞ் சென்று தெரிதற்கு அரியவன். 
போய்க்காடே மறைத் துறைதல் புரிந்தானும் (ப.177 பா.2) ஆம். பிரமபுரத்தை இடைவிடாது 
சேர்ந்து தியானம் புரியும் உரிமையடைவார்க்கு ஏழுலகாட்சியுரிமை உண்டு. உலகாட்சி 
ஆண்டவனை வழிபட்டால்தான் எய்தும்.

    Behold! It is Civan, Lord of Thiru-brahma-puram. The demigods Thirumaal and the 
four-faced Brahma did their best to see our Lord's head and foot for years in vain. 
Then our Lord rose as an infinite column of fire. Our Lord could not be comprehended by 
these two demigods. He is God Supreme. He has adorned His chest with snake. He is invisible 
to human's naked eye. This our Lord manifests Himself in the temple in Thiru-brahma-puram. 
Those good people who can reach the temple in Thiru-brahma-puram and worship our Lord, 
will be really blessed by Him to deserve to rule all the seven worlds.

1904.    உடையிலார்சீவரத்தார்தன்பெருமையுணர்வரியான் 
    முடையிலார்வெண்டலைக்கைமூர்த்தியந்திருவுருவன் 
    பெடையிலார்வண்டாடும்பொழிற்பிரமபுரத்துறையுஞ் 
    சடையிலார்வெண்பிறையான்தாள்பணிவார்தக்காரே.        10

    உடைஇலார், சீவரத்தார், தன் பெருமை உணர்வு அரியான்; 
    முடையில் ஆர் வெண் தலைக் கை மூர்த்திஆம் திருஉருவன்; 
    பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும்
     சடையில் ஆர் வெண்பிறையான்; தாள் பணிவார் தக்காரே.

    uTai ilAr, cIvarattAr, tan perumai uNarvu ariyAn;             
    muTaiyil Ar veNtalaik kai mUrtti Am tiru uruvan; 
    peTaiyil Ar vaNTU ATum pozil piramapurattu uRaiyum 
    caTaiyil Ar veNpiRaiyAn; tAL paNivAr takkArE.

பொருள்:     ஈசன் பிரம கபாலத்தை ஏந்திய மூர்த்தி ஆவான். அழகிய உருவினன் ஆவான்.
வண்டுகள் மொய்க்கும் சோலைகள் நிறைந்த பிரமபுரத்துள் கோயில் கொண்டவன் ஆவான்.
பிறை நிலவைத் தன் தலையில் கொண்டவன் ஆவான். அவனது பெருமைகளைச்  சமணர்களும் 
சாக்கியர்களும் உணரமாட்டார்கள். இறைவனின் திருவடிகளைப் பணிபவர்களே உணரும் 
தகுதியுடைய சிறந்தோர் ஆவர். 

குறிப்புரை:     உடையிலார் - திகம்பரர். சீவரத்தார்- புத்தர். முடையில்- சுடுநாற்றத்தில், 
ஆர்- பொருந்திய. மூர்த்தியாந் திருவுருவு - ஞானமூர்த்தி, மந்திரமூர்த்தி, அத்துவாமூர்த்தி முதலியன. 
உருவன் - மூர்த்திமான், உருவை உடையவன் தக்காரிலக்கணம் (பார்க்க. பா.8).  

    Behold! It is Civan, our Lord in Thiru-brahma-puram. The Jains who are often naked 
and the Buddhists who cover their body with white robes are unable to comprehend our Lord. 
For obvious reasons our Lord occasionally carries human skull for alms, which emits fleshy 
odour. He has adorned His head with the white baby moon. Our Lord is manifest in the temple
in Thiru-brahma-puram. In this city, there are many gardens around the temple and other 
areas, where the male beetles with their females make humming music and play together. 
Those servitors are really great and virtuous who worship the holy feet of our Lord. 
They will be blessed by our Lord.

1905.     தன்னடைந்தார்க்கின்பங்கள்தருவானைத்தத்துவனைக் 
    கன்னடைந்தமதிற்பிரமபுரத்துறையுங்காவலனை 
    முன்னடைந்தான்சம்பந்தன்மொழிபத்துமிவைவல்லார் 
    பொன்னடைந்தார்போகங்கள்பலவடைந்தார்புண்ணியரே.        11

    தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை, 
    கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை, 
    முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் 
    பொன் அடைந்தார்; போகங்கள் பல அடைந்தார்; புண்ணியரே.

    tan aTaintArkku inpagkaL taruvAnai, tattuvanai, 
    kan aTainta matil piramapurattu uRaiyum kAvalanai, 
    mun aTaintAn campantan mozi pattum ivai vallAr 
    pon aTaintAr; pOkagkaL pala aTaintAr; puNNiyarE.

பொருள்:     ஈசன், தன்னை அடைந்த பக்தர்களுக்கு இன்பம் தருபவன் ஆவான். அவன் மதில் 
சூழ்ந்த பிரமபுரத்துள் மேவிய காவலன் ஆவான். அவனைப் புகழ்ந்து அன்புடன் அடைந்த 
ஞானசம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அப்பாடல்களைப் பாடிட 
வல்லவர்கள் இவ்வுலகில் இன்பங்களை அடைவர். மறுமைக்குரிய நற்பேற்றையும் பெறுவர்.

குறிப்புரை:     தன் அடைந்தார்க்கு- தன்னை அடைந்த அன்பர்க்கும் அறிவர்க்கும் இன்பங்கள் -
பெத்தத்திலுள்ள சிற்றின்பங்களும் முத்திப் பேரின்பமும். தத்துவன்- மெய்ப்பொருள். கன்- கல் 
(அடைந்த மதில்) முன் - முற்பிறப்பு, இளமை, சந்நிதி, தந்தை முதலியோர் எதிர் என்ற பொருளும் 
குறித்து நிற்றலறிக. வல்லார் எழுவாய் அடைந்தார் இரண்டும் வினைப்பயனிலை, புண்ணியர் 
பெயர்ப்பயனிலை உம்மை கொடுத்து ஆக்கம் (ஆவர்) வருவித்து முடித்தலுமாம்.

    Our saint Thiru-gnana-Sambandar hails from Thiru-brahma-puram. This city of
Thiru-brahma-puram is surrounded by blue granite stone compound walls. Our Lord who 
is the embodiment of philosophy blesses all devotees who pray at His holy feet. 
Our saint Thiru-gnana-Sambandar was specially blessed and graced with serene knowledge 
when he was three years old by our Lord of Thiru-brahma-puram. With his divine knowledge 
he sang these ten divine songs on our Lord of Thiru-brahma-puram. Those scholars and holy 
men who can recite in good musical tone these ten divine songs on our Lord of 
Thiru-brahma-puram will be blessed by our Lord. They will be blessed with gold 
and prosperity, needed in this world, and with benediction and bliss in the 
immaterial world.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            40ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 40th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 177                பதிக எண் : 41

41. திருச்சாய்க்காடு                41. THIRUCH-CHAAYK-KAADU

பண்: இந்தளம் - வினாஉரை            Pann: Indhalam-Vinaa Urai

திருத்தல வரலாறு

    பதிகத் தொடர் எண்: 174-ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    திருவலம்புரத்தை வழிபட்ட திருஞானசம்பந்தப் பெருமானார், நீர்வளம் நிறைந்த 
சீர்வளர்  சாய்க்காட்டைத் தொழுதற்கு நினைந்து சென்று, திருப்பல்லவனீச்சரத்தைச் சொல்லழகும்
பொருளழகும் பேரின்புற்றும் அமையப் பாடிப்பரவி, பொன்னிசூழ் புகாரில் நீடிய புனிதரது 
திருச்சாய்க்காட்டை, திருத்தொண்டர் பலரும் எதிர்கொள்ளச் சென்று, வானளாவி உயர்ந்த
திருவாயினுள் வலங்கொண்டு, புகுந்து பணிந்து போற்றியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1906.     மண்புகார்வான்புகுவர்மனமிளையார்பசியாலுங் 
    கண்புகார்பிணியறியார்கற்றாருங்கேட்டாரும் 
    விண்புகாரெனவேண்டாவெண்மாடநெடுவீதித் 
    தண்புகார்ச்சாய்க்காட்டெந்தலைவன்தாள்சார்ந்தாரே.        1

    மண் புகார், வான் புகுவர், மனம் இளையார்; பசியாலும் 
    கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும் 
    விண் புகார் என வேண்டா - வெண் மாட நெடுவீதித் 
    தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.

    maN pukAr, vAnpukuvar; manam iLaiyAr; paciyAlum 
    kaN pukAr; piNi aRiyAr; kaRRArum kETTArum 
    viN pukAr ena vENTA--veN mATa neTuvItit 
    taN pukArc cAykkATTu em talaivan tAL cArntArE.

பொருள்:     மாடங்கள் பொருந்திய பெரிய வீதிகளைக் கொண்டது சாய்க்காடு 
என்னும் தலம்.  அத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஈசனைச் சார்ந்த அன்பர்கள் மண்ணில் 
பிறந்து உளைந்து வருந்தார். விண்ணுலக இன்பத்தை இங்கேயே உறுவர். மனம் வருந்தார். 
பசித்துன்பம் அடையார். பிணி அடையார். இறைவனை எப்போதும் வழிபட்டு இன்புறுவர். 

குறிப்புரை:     மண் புகார் - பிறவார் என்றவாறு. வான்புகுவார் - பேரின்பம் அடைவார் என்றவாறு. 
மனம் இளையார் முதலிய மூன்றும் இம்மை நலம் குறித்தவை. கண்புகார் - இடுக்கண் உறார் (இடுங்குகன்) 
கற்றவரும் கேட்டவரும் என்பது இடைநிலை விளக்கா நின்று முன்னும் பின்னும் உள்ள பயனிலைகட்கு 
எழுவாயாயின. விண்ணிற் புகமாட்டார் எனல் வேண்டா, அதனினும் உயர்ந்த சிவலோகம் சேர்ந்து, 
திருவடியைச் சார்ந்தாரே. வீதிக்கு வெண்மாடம் விசேடம். புகார் - காவிரிப்பூம்பட்டினம் (பா. 4).

    Behold! It is Civan, our Lord in Thiruch-chaayk-kaadu. The city is full of 
white palaces and long bazaars. Those blessed people who pray at the lotus feet of 
the Lord at Thiruch-chaayk-kaadu situated near Poompukar, will not suffer on this 
earth. Those who study and recite the glory of our Lord and those who hear these 
divine glories,will not be born again in this world; they will reach heaven. 
They will never be depressed in their minds. They will be free from the pangs 
of hunger. No disease will inflict them. Those who learn or hear His glories 
need not go to the celestial world. They will have all bliss on this earth itself.

1907.     போய்க்காடேமறைந்துறைதல்புரிந்தானும்பூம்புகார்ச் 
    சாய்க்காடேபதியாகவுடையானும்விடையானும் 
    வாய்க்காடுமுதுமரமேயிடமாகவந்தடைந்த 
    பேய்க்காடல்புரிந்தானும்பெரியோர்கள்பெருமானே.        2

    போய்க் காடே மறைந்து உறைதல் புரிந்தானும், பூம் புகார்ச் 
    சாய்க்காடே பதிஆக உடையானும், விடையானும், 
    வாய்க் காடு முதுமரமே இடம்ஆக வந்து அடைந்த 
    பேய்க்கு ஆடல் புரிந்தானும், பெரியோர்கள் பெருமானே.

    pOyk kATE maRaintu uRaital purintAnum, pum pukArc 
    cAykkATE pati Aka uTaiyAnum, viTaiyAnum, 
    vAyk kATu mutumaramE iTam Aka vantu aTainta 
    pEykku ATal purintAnum, periyOrkaL perumAnE.

பொருள்:     ஈசனே! காட்டில் மறைந்து உறைதலை விரும்புபவன். திருச்சாய்க்காட்டைத் 
தலமாகக் கொண்டு உறைபவன். இடப வாகனத்தைக் கொண்டவன். பேய்கள் விரும்பி
ஆடும் ஆலமரங்கள் நிறைந்த சுடுகாட்டில் ஆடல் புரிபவன். பெரியோர்களால்  பெரிதும்
போற்றப்படும் பெருமான் அவனே ஆவான்.

குறிப்புரை:     காடே போய் மறைந்து உறைதல் புரிந்தான் - காட்டிலே சென்று ஒளிந்து வாழ்தலை 
விரும்பினவன். புகாரும் சாய்க்காடும் நெருங்கியிருத்தலால் புகார்ச்சாய்க்காடு என்றார். 
பதி- வாழுமிடம். வாய்க்காடு, காட்டுவாய் என மாற்றிக் காட்டின்கண் என்று உரைத்துக் கொள்க. 
வாய்- இடம் (அகன்ற) காடு என்றுமாம். முது மரம்- ஆல மரம். பேய்க்கு ஆடல் - பேயின் பாடலுக்குத் தக 
ஆடுதலை. 'பேயடைந்த காடிடமாப் பேணுவது' 'பேயாயினபாடப் பெரு நடமாடிய பெருமான்'
 (தி. 1. பதி. 48.  பா. 5; தி. 1 பதி. 15 பா. 3). புரிந்தாலும் முதலிய நான்கும் கூட்டிப் பெருமானே 
என்பதொடு முடிக்க.

    Behold! It is Civan, our Lord at Thiruch-chaayk-kaadu near Poompukar.He 
desires to reside secluded and hidden at the thick forest. He owns a bull for His 
transport. In the forest area there is an age old banyan tree. Under this tree 
devils sing the songs of glory of our Lord. He dances there according to their music. 
He is the Supreme Lord glorified by great men.

1908.     நீநாளும்நன்னெஞ்சேநினைகண்டாய்யாரறிவார் 
    சாநாளும்வாழ்நாளுஞ்சாய்க்காட்டெம்பெருமாற்கே 
    பூநாளுந்தலைசுமப்பப்புகழ்நாமஞ்செவிகேட்ப 
    நாநாளும்நவின்றேத்தப்பெறலாமேநல்வினையே.        3

    நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்! ஆர் அறிவார், 
    சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே 
    பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப, 
    நா நாளும் நவின்று ஏத்த, பெறல் ஆமே, நல்வினையே.

    nI nALum, nannenjcE, ninaikaNTAy! Ar aRivAr, 
    cAnALum vAznALum? cAykkATTu emperumARkE 
    pU nALum talai cumappa, pukaz nAmam cevi kETpa, 
    nA nALum navinRu Etta, peRal AmE, nalvinaiyE.

பொருள்:     நல்நெஞ்சமே! சாநாளும், வாழ்நாளும் யாருக்கும் தெரியாது. எனவே நீ தினந்தோறும் 
திருச்சாய்க்காடு ஈசன்மீது அன்பு கொண்டு, நல்ல மலர்களைப் பறித்து வந்து இறைவனின் நாமங்களைச் 
சொல்லியும் கேட்டும் வழிபாடு செய்வாயாக. அவ்வாறு செய்தால் நீ நல்வினைப் பயன்களைப் பெறலாம். 

குறிப்புரை:     நல்நெஞ்சே! நீ நாளும் நினை. சாம்நாளும் வாழ்நாளும் அறிவார் ஆர்? எம்பெருமானுக்கே 
நாளும் தலை பூக்களைச் சுமக்கவும் செவிகள் அவன் திருப்புகழ்களையும் அவற்றைக் குறிக்கும்
திருப்பெயர்களையும் கேட்கவும், நாக்கு அவற்றை நாளும் நவின்று ஏத்தவும் (செய்யும்) நல்வினையைப் 
பெறலாம். நல்வினையாற் பெறலாம் என்றுமாம். நவின்று- நாவால் சொல்லி அடிபட்டு, மறைநவில் 
அந்தணர் நுவலவும் படுமே (புறம், கடவுள் வாழ்த்து) இறப்பும் இருப்பும் அறியாமையால், இருக்கும்போதே 
முன்னை நல்வினைப் பயனாக நாடோறும் திருவடி நினைவு, பூச்சுமை, புகழ்க்கேள்வி, நாநவிற்சி ஆகிய 
சிவபுண்ணியங்களைத் தேடிக் கொள்க.

    Oh my good mind! You think every day of our Lord of Thiruch-chaayk-kaadu who knows
our day of birth and death. No one knows about it. Therefore, you collect flowers every day 
in the morning and carry them on your head to the temple where our Lord resides. Use your ears 
to hear the sacred words of His praise spoken by the sacred people of the temple - Archakars. 
Use your tongue everyday to pronounce His holy name sincerely with devotion. If you act daily 
according to this, you will get salvation and there is no doubt about it.

1909.     கட்டலர்த்தமலர்தூவிக்கைதொழுமின்பொன்னியன்ற 
    தட்டலர்த்தபூஞ்செருந்திகோங்கமருந்தாழ்பொழில்வாய் 
    மொட்டலர்த்ததடந்தாழைமுருகுயிர்க்குங்காவிரிப்பூம் 
    பட்டினத்துச்சாய்க்காட்டெம்பரமேட்டிபாதமே.        4

    கட்டு அலர்த்த மலர் தூவிக் கைதொழுமின் - பொன் இயன்ற 
    தட்டு அலர்த்த பூஞ்செருந்தி கோங்கு அமரும் தாழ்பொழில்வாய், 
    மொட்டு அலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம் 
    பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே!

    kaTTu alartta malar tUvik kaitozumin--pon iyanRa             
    taTTu alartta pUnjceruntti kOgku amarum tAzpozilvAy,             
    moTTu alartta taTantAzai muruku uyirkkum kAvirippUm 
    paTTinattuc cAykkATTu em paramETTi pAtamE!

பொருள்:     நல்ல மணமிக்க மலர்களைக் கொண்டு ஈசனை வழிபடுங்கள். நல்ல 
பொன்னிறமிக்க செருந்தி, கோங்கு முதலிய அழகிய மலர்களைத் தூவியும் வழிபடுங்கள்.  
மொட்டவிழ்க்கும் தாழைமலர் போன்ற மணமிக்க சாய்க்காடு இறைவனின் திருவடிகளை 
வழிபடுங்கள்.

குறிப்புரை:     கட்டு - (கள்+து) கள்ளுடைய அரும்புகளின் உறுதி நிலை; பிணிப்புமாம். 
அலர்ந்த- அலரச் செய்த. பிறவினை. சிவபூஜை செய்க என்று ஏவியருளியவாறு, பொன் இயன்ற 
தட்டு அலர்த்த பூ- பொன்னால் ஆகிய தட்டுப்போலும் பூத்த பூ, கோங்கு அமரும் பொழில், 
மொட்டு - அரும்புகள். முருகு- மணம். உயிர்க்கும்- (வெளி) விடும். பரமேட்டி - தனக்கு மேலில்லாத 
உயர்ந்த இடத்தினை உடையவன். பாதமே கைதொழுமின் என்று விற்பூட்டாக் கொள்க. 

    You the devotees! Collect fragrant and sweet flowers, go to the temple where
our Lord has manifested Himself, strew the flowers and pray with both the hands to our
Lord of Thiruch-chaayk-kaadu, a holy place near Kaaveri-poom-pattinam. There are
many good gardens around the temple and city, with bending branches. The kongu plants 
blossom with honey. There the Pandanus plants shed the nectar from their blossomed spadix. 
These flowers are beautiful, like golden plates, strew such flowers at His feet, 
close your two hands, praise His name, and raise your joined hands in worship.

1910.     கோங்கன்னகுவிமுலையாள்கொழும்பணைத்தோட்கொடியிடையைப் 
    பாங்கென்னவைத்துகந்தான்படர்சடைமேற்பால்மதியந் 
    தாங்கினான்பூம்புகார்ச்சாய்க்காட்டான்தாள்நிழற்கீழ் 
    ஓங்கினாரோங்கினாரெனவுரைக்குமுலகமே.        5

    "கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள் கொடியிடையைப் 
    பாங்கு என்ன வைத்து உகந்தான், படர்சடைமேல் பால்மதியம் 
    தாங்கினான் - பூம் புகார்ச் சாய்க்காட்டான்; தாள்நிழல்கீழ் 
    ஓங்கினார், ஓங்கினார்" என உரைக்கும், உலகமே.

    "kOgku anna kuvimulaiyAL, kozum paNaittOL koTiyiTaiyaip 
    pAgku enna vaittu ukantAn, paTarcaTaimEl pAlmatiyam 
    tAgkinAn--pUm pukArc cAykkATTAn; tAL nizal kIz 
    OgkinAr, OgkinAr" ena uraikkum, ulakamE.

பொருள்:     கோங்கு போன்றும், மூங்கில் போன்றும் பூங்கொடி போன்றும் 
விளங்குபவளாம் உமாதேவியைத் தன் இடபாகமாகக் கொண்டவரே ஈசன் ஆவார்.                   
அவர் தனது தலையில் சந்திரனைத் தாங்கியுள்ளார். அவர் பூம்புகாருக்கு அருகில் 
அமைந்த திருச்சாய்க்காட்டில் கோயில் கொண்டுள்ளார். அவ்விறைவனை 
வணங்குபவர்களையே இவ்வுலகம் பெரிதும் போற்றிக் கொண்டாடும்.

குறிப்புரை:     கோங்கு – கோங்கினரும்பு. அன்ன- ஒத்த. பனை- மூங்கில். 
பாங்கு - (பால்+கு)  இடப்பால். பால் மதியம் -பால்போலும் வெண்டிங்கள். தாள்நிழல் 
கீழ் ஓங்கினார் - ஓங்குணர்வின் உள் அடங்கி உள்ளத்துள் இன்பு ஒடுங்கத் தூங்குவர் 
(திருவருட்பயன் 91) திருவடிக்கீழ் ஓங்கினவரே ஓங்கினவர், மற்று எங்கு ஓங்கினும் 
அஃது ஓங்குதலாகாது; தாழ்தலேயாகும்  என உலகம் உரைக்கும் என்று மாற்றுக.

    Behold! It is Civan, the Lord of Thiruch-chaayk-kaadu. He was very 
pleased to share half of His body with His consort Umaa. Her breasts are convexed 
like the bud of kongu flower; Her shoulders are as luxurious as a bamboo tree. 
Her waist is like tender creepers. His head He has adorned with the milk white 
baby moon. He has manifested Himself in the Thiruch-chaayk-kaadu temple near 
Poompukar. Those devotees who stand before His holy feet, raise their hands and 
worship Him will become praiseworthy persons on this earth.

1911.    சாந்தாகநீறணிந்தான்சாய்க்காட்டான்காமனைமுன் 
    தீந்தாகமெரிகொளுவச்செற்றுகந்தான்திருமுடிமேல் 
    ஓய்ந்தாரமதிசூடியொளிதிகழும்மலைமகள்தோள் 
    தோய்ந்தாகம்பாகமாவுடையானும்விடையோனே.        6

    சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான், காமனை முன் 
    தீந்து ஆக எரி கொளுவச் செற்று உகந்தான், திருமுடி மேல் 
    ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் 
    தோய்ந்து ஆகம் பாகமா உடையானும், விடையோனே.

    cAntu Aka nIRu aNintAn, cAykkATTAn, kAmanai mun 
    tIntu Akam eri koLuvac ceRRu ukantAn, tirumuTimEl 
    Oyntu Ara mati cUTi, oLi tikazum malaimakaL tOL 
    tOyntu Akam pAkamA uTaiyAnum, viTaiyOnE.            

பொருள்:     ஈசன், திருநீற்றை அணிந்தவன். சாய்க்காட்டில் கோயில் 
கொண்டுள்ளவன். காமனை நெற்றிக்கண்ணால் எரித்துச் சாம்பலாக்கியவன். 
தனது தலையில் மதியைச் சூடியவன். மலைமகளைத் தன் உடம்பில் ஒருபாகமாகக் 
கொண்டவன். இடப வாகனத்தைக் கொண்டவனும் அவனே. 

குறிப்புரை:     சாந்து - சந்தனம். சாந்தாக நீறணிந்தான் - சாந்தம் ஈது என்று எம்பெருமான் 
அணிந்த நீறு (தி.1 பதி.52 பா.7). தீந்து - தீய்ந்து, எரிந்து. ஆகம் - உடம்பு. ஆகத்தைத் தீய்ந்து 
எரிகொளுவச் செற்று உகந்தான் என்க. கொள்ள - தன்வினை. கொளுவ - பிறவினை. 
கொளுத்த; பொருத்த, ஓய்ந்து ஆர - நுணுகிப் பொருந்த, ஓய்தலுற்றுத் தங்க எனலுமாம். 
மலைமகள் (உமாதேவி) தோய்ந்து - தழுவி.

    Behold! It is Civan, the Lord of Thiruch-chaayk-kaadu. He has smeared His 
body with holy ashes. He burnt with the eye of His forehead, the god of love for his 
misdeed. Later He blessed him. He has adorned His graceful head with the baby moon 
in perfection. He enjoyed the tender shoulder of our goddess Umaa and gave her His 
left portion to share. He is our god who mounts on the bull whenever He moves about.

1912.     மங்குல்தோய்மணிமாடம்மதிதவழும்நெடுவீதிச் 
    சங்கெலாங்கரைபொருதுதிரைபுலம்புஞ்சாய்க்காட்டான் 
    கொங்குலாவரிவண்டின்இசைபாடுமலர்க்கொன்றைத் 
    தொங்கலானடியார்க்குச்சுவர்க்கங்கள்பொருளலவே.        7

    மங்குல் தோய் மணிமாடம் மதி தவழும் நெடுவீதி, 
    சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் - 
    கொங்கு உலா வரிவண்டு இன்இசை பாடும் அலர்க்கொன்றைத் 
    தொங்கலான்-அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள் அலவே.

    magkul tOy maNi mATam tavazum neTuvIti, 
    cagku elAm karai porutu tirai pulampum cAykkATTAn- 
    kogku ulA varivaNTu in icai pATum alarkkonRait 
    togkalAn--aTiyArkkuc cuvarkkagkaL poruL alavE.

பொருள்:     மேகங்கள் தோய்கின்ற உயர்ந்த மாடங்கள் நிறைந்த வீதிகளில் சங்குகள் 
அலைகளால் கொண்டு வந்து ஒதுக்கப்பட்டு நிறைந்து விளங்கும். அத்தகைய வளம் நிறைந்த 
திருச்சாய்க்காட்டுத் தலத்தில் வண்டுகள் கொன்றை மலர்களில் நிறைந்து விளங்கும். வண்டுகள் 
மொய்க்காத கொன்றை மலர் மாலைகளை அணிந்த சிவபெருமானின் அடியவர்கள் சொர்க்கப் 
பதியையும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்.

குறிப்புரை:     மங்குல் - மேகம். புலம்பும் - ஒலிக்கும். கொங்கு - மணம். தேன் உலாமலர். 
கொங்கிற்கு உலா வண்டு எனலுமாம். தொங்கலான்- மாலையினன். சுவர்க்கங்கள் - 
தேவ லோகங்கள். வானோர்க்கும் உயர்ந்த உலகத்தை அடையத்தக்க சிவனடியார்க்கு 
வானோருலகம் பொருளாகா. 

    Behold! It is Civan, the Lord of Thiruch-chaayk-kaadu. He has manifested 
Himself in the temple in Thiruch-chaayk-kaadu. In this city towering palaces are 
many in number; the clouds lap over them. They are in the long clear roads, 
which also are many in numbers. The white moon splashes its brightness all 
along the roads. In the seashore the waves bring a large number of conches,
embracing the shores with their murmur. In such an attractive city, our Lord 
has manifested Himself wearing the garland of cassia flowers in which the bees 
and beetles make music. This Lord's devotees who praise the Lord with such 
garlands do not bother about the celestial world since they find heaven 
on the earth wherever Civan resides.

1913.    தொடலரியதொருகணையாற்புரமூன்றுமெரியுண்ணப் 
    படஅரவத்தெழிலாரம்பூண்டான்பண்டரக்கனையுந் 
    தடவரையாற்றடவரைத்தோளூன்றினான்சாய்க்காட்டை 
    இடவகையாடைவோமென்றெண்ணுவார்க்கிடரிலையே.        8    

    "தொடல் அரியது ஒரு கணையால் புரம்மூன்றும் எரியுண்ண
     படஅரவத்து எழில் ஆரம் பூண்டான், பண்டு அரக்கனையும் 
    தடவரையால்-தடவரைத்தோள் ஊன்றினான், சாய்க்காட்டை 
    இட வகையா அடைவோம்” என்று எண்ணுவார்க்கு இடர் இலையே.        

    "toTal ariyatu oru kaNaiyAl puram mUnRum eriyuNNa, 
    paTa aravattu ezil Aram pUNTAn, paNTu arakkanaiyum 
    taTavaraiyAl-taTa varaittOL UnRinAn, cAykkATTai 
    iTa vakaiyA aTaivOm" enRu eNNuvArkku iTar ilaiyE.

பொருள்:     ஒப்பற்ற கணையைக் கொண்டு மூன்று புரங்களையும் நெருப்புப் பற்றச் 
செய்தவரே ஈசன். படம் கொண்ட அரவத்தை அணிகலனாகக் கொண்டவரே ஈசன். 
கயிலாயத்தைத் தூக்க முயன்ற இராவணன் என்ற அரக்கனின் தோளை நெரித்தவரே 
ஈசன். அவர் கோயில் கொண்டுள்ள திருச்சாய்க்காடு தலத்தை அடைய நினைப்பவர்களுக்குத் 
துன்பம் இல்லை.

குறிப்புரை:     தொடல் (தொடு + அல்) தொடுத்தல், தொடுதல் என்னும் இருபொருளும் 
அமையும்; தீக்கணையாதலின் படஅரவத்து எழில் ஆரம்- படத்தை உடைய அழகிய மாலை. 
தடவரை... ஊன்றினான். இராவணனது பெரிய மலைபோலும் தோள்களை விசாலமான 
கயிலை மலையால் அழுத்திய பரமசிவன். இடர் - பிறவித் துன்பம் முதலிய எல்லாம்.

    Behold! It is Civan, the Lord of Thiruch-chaayk-kaadu. He shot a burning 
arrow on the three flying forts of the asuraas for their misbehaviour and destroyed 
them completely. The arrow was too terribly hot at the tip to be touched by anybody.
He has put on His body the snakes as His jewellery. In the olden days our Lord pressed 
His mountain with His toe and crushed the shoulders of Raavanan for his egoism and
subdued him. This Lord has manifested Himself in the temple in Thiruch- chaayk-kaadu. 
This is a very holy place. Those devotees who consider this city as a very holy place 
and worship our Lord will have no suffering in their life. 

1914.     வையநீரேற்றானும்மலருறையுநான்முகனும் 
    ஐயன்மாரிருவர்க்குமளப்பரிதாலவன்பெருமை 
    தையலார்பாட்டோவாச்சாய்க்காட்டெம்பெருமானைத் 
    தெய்வமாப்பேணாதார்தெளிவுடைமைதேறோமே.        9

    வையம் நீர் ஏற்றானும்,மலர் உறையும் நான்முகனும், 
    ஐயன்மார்இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை; 
    தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத் 
    தெய்வமாப் பேணாதார் தெளிவுஉடைமை தேறோமே.

    vaiyam nIr ERRAnum, malar uRaiyum nAnmukanum, 
    aiyanmAr iruvarkkum aLappu aritAl, avan perumai; 
    taiyalAr pATTu OvAc cAykkATTu emperumAnait 
    teyvamAp pENAtAr teLivu uTaimai tEROmE.

பொருள்:     கடலில் படுத்திருக்கும் திருமால், மலரில் உறையும் பிரமன் ஆகிய 
இருவராலும் அளப்பதற்கு அரியவனே சிவபெருமான். அவரது பெருமைகளைத் 
திருச்சாய்க்காட்டில்  வாழும் பெண்டிர் பாடல்களாகப் பாடி மகிழ்வர். அவரை 
வழிபடாதவர்கள் தெளிவுடைமை  இல்லாதவர்களே ஆவார்கள்.

குறிப்புரை:     வையம்- பூமி, மூவடிமண். நீர் - தத்தஞ் செய்நீர். ஏற்றான் - மாவலிபால் இரந்த 
திருமால். ஐயன்மார் இருவர் - அயனும் அரியுமாகிய துவி கர்த்தர்கள். அளப்பு - அளவிடுதல். தையலார்- 
பெண்டிர்.ஓவா - இடைவிடாத. பேணாதார் - விரும்பி வழிபடாதவர். தௌவி - ஞானத்தேற்றம்,

    சீலத்தால் ஞானத்தால் தேற்றத்தால் சென்றகன்ற 
    காலத்தால் ஆராத காதலால்-ஞாலத்தார் 
    இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாம் 
    கச்சிக்கச் சாலைக்கனி.

எனப் பின்வந்த ஞானப்பாடலை அறிக. தேறோம் - அதை ஒரு தெளிவாகக் கொள்ளோம். 
மதியோம் என்றபடி.

    Behold! It is Civan, the Lord of Thiruch-chaayk-kaadu. Thirumaal, the demigod of 
sustenance forced king Maavali to give him the earth by pouring water on his head as 
sacrifice. He and the four-faced demigod who rests in the lotus flower, were unable to
understand the glory of our Lord and also unable to see the physical body of our Lord. 
Our Lord has manifested Himself in the temple in Thiruch-chaayk-kaadu. He enjoys hearing 
the endless music of the damsels of Thiruch-chaayk-kaadu. We will not respect those people 
who do not worship our Lord of Thiruch-chaayk-kaadu for they lack in right thinking.

1915.    குறங்காட்டுநால்விரலிற்கோவணத்துக்கோலோவிப்போய் 
    அறங்காட்டுஞ்சமணருஞ்சாக்கியருமலர்தூற்றுந் 
    திறங்காட்டல்கேளாதேதெளிவுடையீர்சென்றடைமின் 
    புறங்காட்டிலாடலான்பூம்புகார்ச்சாய்க்காடே.        10

    குறங்கு ஆட்டும் நால்விரலில்கோவணத்துக்கு உலோவிப் போய் 
    அறம் காட்டும் சமணரும், சாக்கியரும், அலர் தூற்றும் 
    திறம் காட்டல் கேளாதே, தெளிவு உடையீர்! சென்று அடைமின், 
    புறங்காட்டில் ஆடலான் பூம் புகார்ச் சாய்க்காடே!

    kuRagku ATTum nAlviralil kOvaNattukku ulOvip pOy             
    aRam kATTum camaNarum, cAkkiyarum, alar tURRum                 
    tiRam kATTal kELAtE, teLivu uTaiyIr! cenRu aTaimin, 
    puRagkATTil ATalAn pUm pukArc cAykkATE!

பொருள்:     சமணரும், சாக்கியரும் குறைந்த ஆடையினை அணிந்து எங்கும் உலவித் திரிவர். 
அடியவர்களே, நீவிர் அவர்கள் கூறும் பொய்யுரைகளைக் கேளாது தெளிவுடைய மதியினராய் 
திருச்சாய்க்காட்டைச் சென்றடைமின். சிவஞானத் தெளிவுடைய நீவிர் புறங்காட்டில் ஆடும்     
இறைவனே சாய்க்காட்டிலும் கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து வழிபாடு 
செய்யுங்கள். எல்லாப் பேறுகளையும் பெற்றுச் சிறப்படையுங்கள்.                

குறிப்புரை:     முதலீரடியும் புறப்புறச்சமயத்தார் நிலையும் செயலும் உணர்த்துகின்றன. 
குறங்கு ஆட்டும் - துடையில் அசைக்கும். உலோவி- சிக்கனம். கொண்டாடி. மெய்யொழுக்கத்தால் 
உண்டெனத் தோற்றுதல் இன்றித் தம் பொய்யொழுக்கத்தை நூலாலும் பேச்சாலும் மறைத்து, 
தம்மிடத்தில் அறம் உள்ளது போலக் காட்டுதலால். அறம் காட்டும் என்றார். அலர் - பழி.         
காட்டல் - காட்டுவதை. கேளாதே- பொருட்படுத்தாமல் தம்மிற்புணராமை கேளாம்புறன் 
(சிவஞானபோத வெண்பா 1. உரை) தெளிவுடையீர் கேளாதே  சாய்க்காடே சென்று 
அடைமின் என்க.

    Oh! people of Thiruch-chaayk-kaadu, do not listen to the untrue words of the 
Jains and the Buddhists who roam in the street wearing four finger wide loin cloth.
Neglect them and their insincere words. With wisdom and clear thinking, you may go
to the temple, and worship our Lord who is manifested in Thiruch-chaayk-kaadu. 
You may realise that the Lord who dances on the burial ground is the one who 
resides at this temple.

1916.     நொம்பைந்துபுடைத்தொல்குநூபுரஞ்சேர்மெல்லடியார் 
    அம்பந்தும்வரிக்கழலுமரவஞ்செய்பூங்காழிச் 
    சம்பந்தன்தமிழ்பகர்ந்தசாய்க்காட்டுப்பத்தினையும் 
    எம்பந்தமெனக்கருதியேத்துவார்க்கிடர்கெடுமே.        11

    நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்அடியார் 
    அம் பந்தும் வரிக்கழலும் அரவம் செய் பூங் காழிச் 
    சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்,
    “எம்பந்தம்” எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே.

    noym pantu puTaittu olku nUpuram cEr mel aTiyAr 
    am pantum varik kazalum aravam cey pUg kAzic 
    campantan tamiz pakarnta cAykkATTup pattinaiyum 
    "em pantam" enak karuti, EttuvArkku iTar keTumE.

பொருள்:     சிலம்பணிந்த மகளிர் பந்தடித்து ஆடுவர். அவர்களின் மென்மையான 
பாதங்கள் குதித்து ஆடும் ஒலியும், பந்துகள் அடிக்கப்படும் ஒலியும் நிறைந்து காணப்படும் 
தலமே சீர்காழித் தலமாம். அத்தலத்தில் அவதரித்த சம்பந்தப் பெருமான், சாய்க்காட்டு
இறைவனைப்  புகழ்ந்து, பத்துப்பாடல்கள் பாடி அருளியுள்ளார். அப்பத்துப் பாடல்களையும் 
விரும்பி ஏத்துவார்க்கு இடர் இல்லை என்க. 

குறிப்புரை:     நொம் - நோகும். பைந்து - பந்து. தண்மலர் நறும்பைந்து ஊழ் அறிந்து உருட்டா 
(பெருங். மகத 8 - 64). புடைத்து - (பந்து) அடித்து. ஒல்கு - தளரும். நூபுரம் - (பாதக்) கிண்கிணி.
சிலம்பு. அம்பந்து-   அழகிய பந்து, கழல் - பெண்கள் விளையாடும் கழற்காய். அரவம் - ஓசை. 
எம்பந்தம்- எம்முடைய பற்று(க்கோடு). ஏத்துவார் - பாராயணம் புரிபவர். 

    Our holy saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi. This city is 
surrounded by gardens full of many different flowers. Here young damsels used to play 
all kinds of games and dance together with other children of their age. While playing 
they have in their hands balls, Kazharkaai - The first of circles - Guilandina Bonducella. 
The damsels wear on their feet, 'tinkling ankle rings'. These rings make good sound while 
the girls dance, jump and play. The sound created by the tinkling ankle rings is louder 
than the noise produced by the balls, which therefore, feel shy and get reduced (repentance) 
for a lesser sound than the tinkling sound of the ankle rings. The dance and play bring 
joviality to one and all. Such a holy and beautiful city is Seerkaazhi. Thiru-gnana-Sambandar 
who hailed from this city went to Thiruch-chaayk- kaadu temple and prayed before our Lord and 
sang in chaste Tamil, in good musical tone ten verses containing the glory of our Lord Civan.
The devotees who think that reciting these ten verses will create a good relationship with 
our Lord of Thiruch-chaayk-kaadu sing these ten songs, these devotees will be fully relieved 
of their sufferings by our Lord Civan. 

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            41.ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 41 Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 178                    பதிக எண்- 42

42.திருஆக்கூர் (தான்தோன்றி மாடம்)            42. THIRU-AAKKOOR

பண் : சீகாமரம்                        Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    திருஆக்கூர்த் தான்தோன்றி மாடம் என்னும் திருத்தலமானது சோழ நாட்டுக் காவிரித்
தென்கரைத் தலம் ஆகும். மயிலாடுதுறை - பொறையாறு பேருந்து வழியில் ஆக்கூர் உள்ளது. 
மயிலாடுதுறை சீர்காழி ஆகிய ஊர்களிலிருந்து நகரப் பேருந்துகளும் உள்ளன. பேருந்து
நிலையத்திற்கு அருகில் ஆலயம் உள்ளது.

    ஊரின் பெயர் ஆக்கூர் ஆயினும் அங்குள்ள கோயிலுக்குத் தான்தோன்றிமாடம் என்று 
பெயர். அதாவது தான்தோன்றியப்பர் (சுயம்பு மூர்த்தியாகிய இறைவர்) எழுந்தருளியிருக்கும் 
மாடக்கோயில் என்று பொருள்படும். மாடக்கோயில் என்பது யானை ஏற முடியாதபடி படிக்கட்டுகள்
வைத்துக் கட்டப்பெற்றதாகும். இத்தகைய கோயில்கள் கோச்செங்கணான் என்னும் சோழ
மன்னனால் கட்டப் பெற்றன என்பர்.

    இறைவரின் திருப்பெயர் தான்தோன்றியப்பர்.  வடமொழியில் சுயம்புநாதர்  என்பர்.
இறைவியாரின் திருப்பெயர் வாணெடுங்கண்ணியம்மை.  வடமொழியில் கட்கநேத்திரி. 
அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சிறப்புலி நாயனார் வாழ்ந்த பதி. இத்தலத்து
வேளாளர்களைத் திருஞானசம்பந்தப் பெருந்தகையார் இவ்வூர்ப் பதிகத்தில், 

    'வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
    தாளாள ராக்கூரிற் றான்றோன்றி மாடமே' 

எனச் சிறப்பித்திருப்பது பெருமகிழ்ச்சியைத் தருவதாகும்.

பதிக வரலாறு

    காழியர் வாழவந்தருளிய மறைவேந்தர், மொழி வேந்தரொடு திருக்கடவூர் தொழுது, 
விரவு நண்புடைய குங்கிலியப் பெருங்கலயர் திருமனை விருந்துண்டருளித் திருமயானம் பணிந்து, 
சிலநாள் அமர்ந்து, மறைப்பெருந் திருக்கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வுடன் அறப்பெரும்
பயன்போன்ற தொண்டர்சூழ இத், திருவாக்கூர்த் தான்றோன்றி மாடத்தை அணைந்து, 
அண்ணலைப் போற்றிப் பாடிய செந்தமிழ்த் தொடை இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1917.    அக்கிருந்த ஆரமுமாடரவுமாமையும்
    தொக்கிருந்தமார்பினான்தோலுடையான்வெண்ணீற்றான் 
    புக்கிருந்ததொல்கோயில்பொய்யிலாமெய்ந்நெறிக்கே 
    தக்கிருந்தாராக்கூரில்தான்தோன்றிமாடமே.        1

    அக்கு இருந்த ஆரமும், ஆடுஅரவும், ஆமையும், 
    தொக்கு இருந்த மார்பினான்; தோல்உடையான்; வெண்நீற்றான்; 
    புக்கு இருந்த தொல் கோயில் - பொய் இலா மெய்ந்நெறிக்கே 
    தக்கிருந்தார் ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

    akku irunta Aramum, ATu aravum, Amaiyum, 
    tokku irunta mArpinAn; tOl uTaiyAn; veN nIRRAn; 
    pukku irunta tol kOyil--poy ilA meynneRikkE 
    takkiruntAr AkkUril-tAn tOnRi mATamE.

பொருள்:     எலும்பு மாலையும், ஆடுகின்ற பாம்பும், ஆமைஓடும் பொருந்திய மார்பினை 
உடையவன் ஈசனே! யானைத்தோலையும் புலித்தோலையும் ஆடையாகக் கொண்டவன் ஈசன். 
திருநீற்றைப் பூசிய அப்பெருமான் பொய்யற்ற மெய்ந்நெறியாளர் பொருந்தியிருக்கும் ஆக்கூர் 
தான் தோன்றி மாடத்தில் விளங்குகின்றான்.

குறிப்புரை:     அக்கு- உருத்திராக்கம். எலும்பும் ஆம். ஆரம் -மாலை, என்புமாலை, தலைமாலை, 
கொன்றைமாலை, உருத்திராக்க மாலை முதலியவற்றுள் முதலும் முடிவும் இங்குப் பொருந்தும். 
அரவு - பாம்பு: முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பவை பூண்டு (ப. 1, பா. 2) 
தோலுடையான்- யானைத்தோலும் புலித்தோலுமாகிய உடையினன். உடையவனுமாம். சைவநெறி 
பசுபாசக் கலப்பாகிய பொய்யில்லாதது மட்டுமன்று, சிவத்துவமாகிய மெய்யேயாய் நிற்பது, 
கேவலம் சகலம் - பொய். சுத்தம்- மெய், அந்நெறிக்கே தக்கிருந்தார் - ஆக்கூர்ச் சைவர்கள் 
(பா. 3, வேளாளராகிய தாளாளர் முதலியோர் ) இப்பதிகத்துள் முதற்பத்திலும் ஆக்கூர் சைவர் 
சிறப்பு உணர்த்துதல் அறிக. இது தொல்கோயில் என ஆசிரியர் காலத்தே விளங்கியது. 
அவ்வாறே இன்றும் எண்ணக் கிடக்கின்றது. தான்தோன்றி மாடமே வெண்ணீற்றான் புக்கு 
இருந்த தொல்கோயில் என்று கூட்டுக. பூங்கோயில் (4) என்றும் சொல்லப்படும் இதைத் தரிசித்தவரே 
இதன் பெருமை, தொன்மை முதலியவற்றை நன்கு உணர்வர்.

    Behold! It is Civa; self-emerged Lingam in the sanctum sanctorum of Thiru aakkoor 
temple. He is our Lord. He has beautified His chest with garlands of  rudraaksha, dancing 
cobra, and the bone of turtle - all joined together. He wears the hides of elephant and the 
tiger. He has smeared His whole body with white ashes. Our Lord has manifested Himself in
the very old temple called Thaan-thontri-maadam in the city of Thiru-aakkoor. In this city, 
a good number of people do live who never know any falsehood. They lead a life of divine 
knowledge known as Saiva religion. They follow the rules and regulations as prescribed in 
the aagamaas. This famous very old city is known as Thaan-thontri-maadam, where our 
Lord abides.

1918.     நீராரவார்சடையான்நீறுடையானேறுடையான் 
    காரார்பூங்கொன்றையினான்காதலித்ததொல்கோயில் 
    கூராரல்வாய்நிறையக்கொண்டயலேகோட்டகத்தில் 
    தாராமல்காக்கூரில்தான்தோன்றிமாடமே.            2

    நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான் 
    கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில் 
    கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே கோட்டகத்தில் 
    தாரா மல்கு ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

    nIr Ara vArcaTaiyAn, nIRu uTaiyAn, ERu uTaiyAn, 
    kAr Ar pUgkonRaiyinAn, kAtalitta tol kOyil- 
    kUr Aral vAy niraiyak koNtu ayalE kOttakattil 
    tArA malku AkkUril-tAn tOnRi mATamE.

பொருள்:     ஈசன், கங்கையைத் தலையில் தரித்துள்ளான். திருநீற்றைப் பூசியுள்ளான். 
இடப வாகனத்தில் அமர்ந்துள்ளான். கொன்றை மலர் மாலையினை அணிந்துள்ளான். அப்பெருமான் 
விரும்பிய தொன்மையான கோயில் ஆக்கூர் தான்தோன்றி மாடம்  ஆகும். அங்கு மீன்களை மிகுதியாக 
அலகில் எடுத்துக் கொண்ட நாரைகள் பறக்கும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றி மாடம் ஆகும்.

குறிப்புரை:     நீர் - கங்கை. ஆர - பொருந்த, நிறைய. வார் - நீண்ட கார்ஆர் பூங்கொன்றை - 
'கண்ணி கார்நறுங் கொன்றை'. ஆரல் - ஆரல்மீன்களை. தாரா - நாரையினம். வாய்நிறைய 
ஆரலைக் கொண்டு அயலே கோட்டகத்தில் தாராமல்கும் ஆக்கூர் என்று இயைக்க. 
கோடகம் - நீர்நிலை, நீர்க்கரை, தான்தோன்றி - சுயம்பு. ஊர்க்கும் திருக்கோயிற்கும் வெவ்வேறு 
பெயர் வழங்கிய பழைய மரபை ஈண்டும்  காணலாம்.

    Behold! It is self-emerged Siva Lingam at the temple in Thiru-aakkoor. 
He is our Lord. He has adorned His long matted hair with the lady of river Ganges. 
He has beautified His body with holy ashes. He owns a bull for His conveyance. 
He wears on His head the cassia flowers which blossom in the rainy season. 
In this city the flock of cranes collects in their mouths aaral fishes and 
fly to water banks and live there in abundance. Here our Lord is manifested
in the Thaan-thontri-maadam temple in the city of Thiru-aakkoor.

1919.    வாளார்கண்செந்துவர்வாய்மாமலையான்றன்மடந்தை 
    தோளாகம்பாகமாப்புல்கினான்தொல்கோயில் 
    வேளாளரென்றவர்கள்வள்ளன்மையான்மிக்கிருக்கும் 
    தாளாளராக்கூரில்தான்தோன்றிமாடமே.        3

    வாள்ஆர்கண், செந்துவர்வாய், மாமலையான் தன்மடந்தை 
    தோள் ஆகம் பாகமாப் புல்கினான் தொல் கோயில் - 
    வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கு இருக்கும் 
    தாளாளர் ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

    vAL Ar kaN, centuvarvAy, mAmalaiyAn tan maTantai 
    tOL Akam pAkamAp pulkinAn tol kOyil- 
    vELALar enRavarkaL vaLLaNmaiyAl mikku irukkum             
    tALALar AkkUril--tAn tOnRi mATamE.

பொருள்:     ஒளிமிக்க கண்களையும், பவளம் போன்ற சிவந்த வாயினையும் 
உடையவளே  மலையரசனின் மகளாகிய உமாதேவி. அவளைத்தன் உடம்பின் 
ஒருபாகமாகக் கொண்டவரே உமாதேவன். அப்பெருமான் வள்ளன்மை மிக்க 
வேளாளர்கள் நிறைந்து  விளங்கும் ஆக்கூர் தான் தோன்றி மாடத்தில் விரும்பிக் 
கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     வாள்ஆர் - வாள்போன்ற ஒளிபொருந்திய. துவர் - பவளம். துவர்வாய் - 
உவமைத்தொகை. மடந்தை - உமாதேவியார். தோள்ஆகம்பாகமா (பார்க்க. ப. 177 பா. 6). 
புல்கினான்- புணர்ந்தான்.  வள்ளன்மை- வள்ளலாந்தன்மை, கொடைமை. தாள் - முயற்சி. 
தாளாளர் - ஆக்கம் அதர் வினாய்ச்  சாரத்தக்க ஊக்கமுடையர். வேளாளர் - அவ்வாக்கத்தைப் 
பிறர்க்கு உபகரிக்கும் வண்மையாளர். வேள் - மண் என்று கொண்டு உழவர் எனலும் உண்டு. 
வேளாண்மை-உபகாரம். வேளாண்சிறுபதம் (புறம் 74 உரை). கொன்றையினான் காதலித்த 
கோயில் என்றதனால், வேண்டுதல் வேண்டாமை இல்லாத கடவுளுக்குக் காதல் உண்டென்ற 
குற்றம் தோன்றும் எனலாம். ஆயினும் அது பொருந்தாது. அன்பர்க்கு அன்பன், அல்லாதார்க்கு 
அல்லன் என்புழிப் பக்குவா பக்குவங்களைக்  காரணமாக் கொள்ளல் போற்கொள்க. 
ஆண்டவனுக்கு வேறுபாடில்லை.

    Behold! It is self-emerged Siva Lingam in the sanctum santorum. Our goddess
Paarvathi Devi is the daughter of the Himalayan mountain king. Her eyes are very 
brilliant. Her lips are in coral colour. Our Lord shares half of His body with her 
and receives her warmly with affection. In this city of Thiru-aakkoor many Vellaalar 
do live. All of them are good helpers to one and all with a highly charitable mind, 
i.e. they are known for their philanthropic attitude in their life. Here exists the 
very famous age old temple called Thaan-thontri-maadam.

1920.     கொங்குசேர்தண்கொன்றைமாலையினான்கூற்றடரப் 
    பொங்கினான்பொங்கொளிசேர்வெண்ணீற்றான்பூங்கோயில் 
    அங்கம்ஆறோடுமருமறைகளைவேள்வி 
    தங்கினாராக்கூரில்தான்தோன்றிமாடமே.        4

    கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று அடரப் 
    பொங்கினான், பொங்கு ஒளி சேர் வெண்நீற்றான், பூங்கோயில் 
    அங்கம்ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி 
    தங்கினார் ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

    kogku cEr taNkonRai mAlaiyinAn, kURRu aTarap
    pogkinAn, pogku oLi cEr veN nIRRAn, pUgkOyil- 
    agkam AROTum arumaRaikaL aivELvi                 
    tagkinAr AkkUril-tAn tOnRi mATamE.

பொருள்:     ஈசன், தேன் நிறைந்த குளிர்ந்த கொன்றை மலர்களால் ஆகிய 
மாலையை அணிந்துள்ளான். அவன் எமனையும் வருத்தச் சினத்தவனும் ஆவான். 
அவன் திருநீற்றைப் பூசியுள்ளான். அவன் வேதத்தின் ஆறு அங்கங்களும் அருமறைகள்
நான்கும் வேள்விகள் ஐந்தும் நிறைந்து விளங்கும் ஆக்கூர் தான்தோன்றி மாடத்தின்கண் 
விரும்பிப் பொருந்தியுள்ளான். 

குறிப்புரை:     கொங்கு - தேன், மணம், தாது. கூற்று அடர - இயமனை வருத்த. 
பொங்கினான்-கோபம் மிகுந்தான். ஆறு அங்கம் - வேதாங்கம் ஆறும். ஐவேள்வி 
தாங்கினார்- பஞ்ச மகாயக்ஞம் புரிவோர். வேள்வி - யாகம். பூஜை. தேவயாகம். 
பூத யாகம் முதலியன. (பா.7 பார்க்க). 

    Behold! It is self-emerged Siva Lingam. He is our Supreme Being. 
He wears the garland of cool and honey filled cassia flowers. Our Lord 
showed fury for the misdeed of Yama, the god of death and kicked him to suffer. 
He has smeared His body with the pure holy ashes. In this city Aakkoor there 
lived the learned scholars who have mastered the rare four Vedas and the 
six vedaangaas known as angangals. They observe the rituals of five different 
sacrificial fires. In such a holy city there exists the temple of Thaan-thontri-
maadam where our Lord is manifested.

1921.     வீக்கினானாடரவம்வீழ்ந்தழிந்தார்வெண்டலையென் 
    பாக்கினான்பலகலன்களாதரித்துப்பாகம்பெண் 
    ஆக்கினான்தொல்கோயிலாம்பலம்பூம்பொய்கைபுடை 
    தாக்கினாராக்கூரில்தான் தோன்றி மாடமே.        5

    வீக்கினான், ஆடுஅரவம்; வீழ்ந்து அழிந்தார் வெண்தலை என்பு 
    ஆக்கினான், பல்கலன்கள்; ஆதரித்துப் பாகம் பெண் 
    ஆக்கினான்; தொல் கோயில்-ஆம்பல்அம்பூம் பொய்கை புடை 
    தாக்கினார் ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

    vIkkinAn, ATu aravam; vIzntu azintAr veN talai enpu 
    AkkinAn, palkalankaL; Atarittup pAkam peN 
    AkkinAn; tol kOyil Ampal ampUm poykai puTai 
    tAkkinAr AkkUril-tAn tOnRi mATamE.

பொருள்:     ஈசன், ஆடுகின்ற பாம்பினை அரையில் கச்சையாகக் கட்டியுள்ளான். 
இறந்தவர்களின் எலும்பையும் தலையோட்டினையும் மாலையாகக் கொண்டுள்ளான். 
உமாதேவியை உடம்பின் ஒருபாகமாகக் கொண்டுள்ளான். அவன் ஆம்பல் போன்ற 
அழகிய மலர்கள் நிறைந்து விளங்கும் பொய்கைகளால் சூழப்பெற்ற ஆக்கூர் தான்தோன்றி
மாடத்தில் கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     வீக்கினான்- (அரவக்கச்சு) கட்டினான். வீந்து - மாண்டு. அழிந்தார் -அழிந்தவரது. 
தலை என்பு - தலையும் எலும்பும். கலன்கள் -ஆபரணங்கள். ஆதரித்து - விரும்பி. பாகம் - இடப்பால்.
பெண்-உமாதேவியார். ஆம்பல் அம்பூம் பொய்கை - ஆம்பல் மலரும் அழகிய பூங்குளம்,பூ-பொலிவு.
 ஆம்பற்பூவுமாம். பொய் கையைப் புடையில் (எதிர்ப்பக்கத்தில்) தாக்கினார் (வெட்டினார்) 
வாழும் ஆக்கூர் என்க. ஆதரித்து ஆக்கினான் என முன்னும் பின்னும் கூட்டுக.

    Behold! It is self-emerged Siva Lingam in Thaan-thontri-maadam. 
He is our Lord. He puts on the dancing cobra around His waist as belt. 
He wears the bones and skulls of dead persons as jewels around His body. 
He is pleased to share half of His body with His consort Uma. In this city 
of Aakkoor, there are good and beautiful ponds full of lily flowers. 
To strengthen the ponds, the cultivators have raised the banks and done 
their job very carefully. Such ploughmen live in plenty in this city of 
Aakkoor, where the temple Thaan-thontri-maadam exists.

1922.     பண்ணொளிசேர்நான்மறையான்பாடலினோடாடலினான் 
    கண்ணொளிசேர்நெற்றியினான்காதலித்ததொல்கோயில் 
    விண்ணொளிசேர்மாமதியந்தீண்டியக்கால்வெண்மாடம் 
    தண்ணொளிசேராக்கூரில்தான்தோன்றிமாடமே.        6

    பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு ஆடலினான் 
    கண் ஒளி சேர் நெற்றியினான், காதலித்த தொல் கோயில் 
    விண் ஒளி சேர் மா மதியம் தீண்டியக்கால் வெண் மாடம் 
    தண் ஒளி சேர் ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

    paN oLi cEr nAlmaRaiyAn, pATalinOTu ATalinAn, 
    kaN oLi cEr neRRiyinAn, kAtalitta tol kOyil- 
    viN oLi cEr mA matiyam tINTiyakkAl veN mATam
    taN oLi cEr AkkUril-tAn tOnRi mATamE.

பொருள்:     ஈசன், பண் நிறைந்த நான்மறைப் பாடல்களுக்கு ஏற்ப ஆடும் திறத்தினன். 
நெற்றிக் கண்ணை உடையவன். அவன் விண்ணில் தவழும் நிலவின் ஒளியால் சிறந்து விளங்கும் 
மாடங்கள் நிறைந்த ஆக்கூர் தான்தோன்றி மாடத்தின்கண் விரும்பிப் பொருந்தி உள்ளான்.

குறிப்புரை:     ஒளி- அறிவினொளி. கண்ணொளி – நெருப்புக் கண்ணொளி. 
தண் ஒளி - குளிர்ச்சி ஆக்கும் ஒளி. 

    Behold! It is Civan, our Lord of Aakkoor. He is the genuine authority of the 
four Vedas which are in musical mode and convey divine knowledge. He is the embodiment
of all the songs and dances. He has a very bright third eye in His forehead. In this 
city of Thiru-aakkoor, very tall palaces are many in number. The brightening rays 
of the moon,moving in the sky, fall on the palaces; the white palaces become very 
cool and bright.Our Lord was highly attracted by the age-old temple Thaan-thontri-
maadam and He is manifested there.

1923.     வீங்கினார்மும்மதிலும்வில்வரையால்வெந்தவிய 
    வாங்கினார்வானவர்கள்வந்திறைஞ்சுந்தொல்கோயில் 
    பாங்கினார்நான்மறையோடாறங்கம்பலகலைகள் 
    தாங்கினாராக்கூரில்தான்தோன்றிமாடமே.        7

    வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்து அவிய 
    வாங்கினார், வானவர்கள் வந்து இறைஞ்சும், தொல் கோயில் 
    பாங்கின் ஆர் நால்மறையோடு ஆறுஅங்கம் பல்கலைகள்
    தாங்கினார் ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

    vIgkinAr mummatilum vilvaraiyAl ventu aviya 
    vAgkinAr,vAnavarkaL vantu iRainjcum, tol kOyil- 
    pAgkin Ar nAlmaRaiyOTu ARu agkam palkalaikaL 
    tAgkinAr AkkUril-tAn tOnRi mATamE.

பொருள்:     ஈசன், ஆணவ மலத்தால் செருக்குற்ற திரிபுரத்தவர்களின் முப்புரங்களை
மேருமலையை வில்லாகக் கொண்டு எரித்துச் சாம்பலாக்கியவர். வானவர்களால் என்றும் 
தொழப் பெறுபவர். அவர், நான்மறைகளும் ஆறு அங்கங்களும் பலகலைகளும் நிறைந்து 
விளங்கும் ஆக்கூர் தான்தோன்றி மாடத்தில் விரும்பி அமர்ந்துள்ளார்.

குறிப்புரை:     வீங்கினார் - பெருமையுடைய சிவபிரான், திரிபுரத்தசுரரையுங் குறிக்கும். 
செலவில் மிக்கார் - மீச்செலவினார். (பகைவர்) வில்வரை- மேருவில். வில்லாகிய வரை. 
மறை+அங்கம்+பல கலைகள். தாங்கினார் - கற்றுணர்ந்து கொண்டவர். அந்தணர் (பா.4 பார்க்க).

    Behold! It is self-emerged Siva Lingam. He is the eminent Supreme Lord. 
He burnt the three flying forts of the egocentric asuraas by bending the mount Meru 
as a bow. All the devaas and celestials come to Thiru-aakkoor and worship here.
In this city, learned scholar Brahmins are many in number. They are masters of the four
Vedas, the six subsidiaries of Vedas and all other connected scriptures. This is the 
place of Thaan-thontri-maadam where our Lord has manifested Himself.

1924.    கன்னெடியகுன்றெடுத்தான்தோளடரக்காலூன்றி 
    இன்னருளாலாட்கொண்டஎம்பெருமான்தொல்கோயில் 
    பொன்னடிக்கே நாள்தோறும்பூவோடுநீர்சுமக்கும் 
    தன்னடியாராக்கூரில்தான்தோன்றிமாடமே.        8

    கல்-நெடிய குன்று எடுத்தான் தோள் அடரக் கால் ஊன்றி, 
    இன்அருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் 
    பொன்அடிக்கே நாள்தோறும் பூவோடு நீர் சுமக்கும் 
    தன் அடியார் ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

    kal-neTiya kunRu eTuttAn tOL aTarak kAl UnRi, 
    in aruLAl ATkoNTa emperumAn tol kOyil- 
    pon aTikkE nALtORum pUvOTu nIr cumakkum 
    tan aTiyAr AkkUril-tAn tOnRi mATamE.

பொருள்:     மிக உயர்ந்த வலிய கயிலாய மலையைத் தூக்கிட முயன்றவன் 
இராவணன். அவனது தோள் நெரியுமாறு திருப்பாதம் ஊன்றி இறுதியில் அருளால் 
ஆட்கொண்டவர் எம்பெருமான். அவர், நாள்தோறும் பூவும் நீரும் கொண்டு வழிபாடு 
செய்யும் அடியவர்கள் நிறைந்த ஆக்கூர் தான்தோன்றி மாடத்தில் விரும்பிப் 
பொருந்தியுள்ளார்.

குறிப்புரை:     கல்நெடிய குன்று - திருக்கயிலை மலை. பொன் ... அடியார் - 'பொன்னடியே 
பரவி  நாளும் பூவொடு நீர்சுமக்கும் நின் அடியார்' (தி. 1 பதி. 52 பா.3).

    Behold! It is self-emerged Siva Lingam at the temple in Thiru-aakkoor. 
Our Lord Civan's abode is the long range of mount Kailash. Raavanan, the king of 
Sri Lanka due to egoism tried to lift mount Kailash and replace it aside in vain. 
Our Lord pressed the top of the mountain with His toe.Raavanan got crushed under 
the mountain. He realised his fault and begged for pardon. Our Lord excused him 
and graced him with boons. In this city of Thiru-aakkoor a good number of devotees 
of our Lord Civan do live. They collect flowers daily and go to the temple together
with pure water and worship the golden feet of our Lord. This Lord is manifested in 
Thaan-thontri-maadam temple in Thiru-aakkoor. 
  
1925.     நன்மையராம்நாரணனும்நான்முகனுங்காண்பரிய 
    தொன்மையான்தோற்றங்கேடில்லாதான்தொல்கோயில் 
    இன்மையார்சென்றிரந்தார்க்கில்லையென்னாதீந்துவக்குந் 
    தன்மையாராக்கூரில்தான்தோன்றிமாடமே.        9

    நன்மையராம் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய 
    தொன்மையான், தோற்றம் கேடு இல்லாதான், தொல் கோயில் - 
    இன்மையால் சென்று இரந்தார்க்கு “இல்லை” என்னாது, ஈந்து உவக்கும் 
    தன்மையார் ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

    nanmaiyarAm nAraNanum nAnmukanum kANpu ariya             
    tonmaiyAn, tORRam kETu illAtAn, tol kOyil- 
    inmaiyAl cenRu irantArkku, "illai" ennAtu, Intu uvakkum 
    tanmaiyAr AkkUril-tAn tOnRi mATamE.

பொருள்:     காத்தல் தொழில் புரியும் திருமாலும், படைத்தல் தொழில் புரியும் பிரமனும் 
காணமுடியாத பழைமையான வடிவுடையவனே ஈசன். தோற்றம் கேடு இல்லாதவனே ஈசன். 
அவன், நாடி வந்து இரந்தவர்க்கு இல்லை என்று கூறாமல் கொடுக்கும் வள்ளல்கள் நிறைந்த
ஆக்கூர் தான்தோன்றி மாடத்தின்கண் பொருந்தியுள்ளான்.

குறிப்புரை:     தொன்மையான்-  'தொல்லோன்' தோற்றம் கேடு - பிறப்பும் இறப்பும். 
இன்மை - வறுமை. ஈந்துவக்கும் தன்மையார் - 'ஈத்துவக்கும் இன்பம்' அறிந்தவராய், 
தம் உடைமை வைத்திழவாத தண்ணளியர், (சிறப்புலி நாயனார் புராணம் 1).

    Behold! It is Civan, the Lord of Thiru-aakkoor. The demigod Vishnu is the god of 
sustenance; Brahma is the god of creation. They both were unable to see our Lord in spite of
their best efforts for years. Our Lord is too ancient to be comprehended. He has no beginning
or end. He manifests Himself in the very ancient temple Thaan thontri-maadam in Thiru-aakkoor. 
In this sacred city many philanthropic people live who are very charitable and never refuse 
to help the needy. Hence, our Lord has chosen to reside here.

1926.     நாமருவுபுன்மைநவிற்றச்சமண்தேரர் 
    பூமருவுகொன்றையினான்புக்கமருந்தொல்கோயில் 
    சேல்மருவுபைங்கயத்துச்செங்கழுநீர்பைங்குவளை 
    தாமருவுமாக்கூரில்தான்தோன்றிமாடமே.        10

    நா மருவு புன்மை நவிற்ற, சமண்தேரர்,
    பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் 
    சேல் மருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை 
    தாம் மருவும் ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

    nA maruvu punmai naviRRa, camaN tErar, 
    pU maruvu konRaiyinAn pukku amarum tol kOyil-
    cEl maruvu paigkayattuc cegkazu nIr paigkuvaLai 
    tAm maruvum AkkUril-tAn tOnRi mATamE.

பொருள்:     புல்லிய சொற்களையே நாவினால் எப்பொழுதும் கூறி வருபவரே சமணரும்
தேரரும் ஆவர். (அவர் சொற்களைக் கேட்க வேண்டாம்). கொன்றை மலர்மாலைகளை அணிந்த 
சிவபெருமான் ஆக்கூர் தான்தோன்றி மாடத்தின்கண் விரும்பி அமர்ந்துள்ளான். அங்கு 
பொய்கைகள் நிறைந்திருக்கும் . அதில் மீன்களும், செங்கழுநீர் மலர்களும் குவளை
மலர்களும் நிறைந்து விளங்கும்.

குறிப்புரை:     புன்மை - அற்பக் கொள்கைகள் 'புன்பேச்சு' (ப. 182 பா. 10)ம் ஆம். 
நவிற்ற- பிதற்ற . சமண்தேரர்- சமணரும் தேரரும். சேல்-மீன்.  - மீன். பைங்கயம் -
பசிய நீர்நிலை. தாம்- கழுநீர் .  குவளைகளைக் குறித்த பன்மைப் பெயர். 

    Behold! It is Civan, Lord of Thiru-aakkoor. The Jains and the Buddhists 
are of mean habits and they speak pseudo words. Ignore them. Our Lord who has 
adorned  His head with cassia flowers has manifested Himself in the Thaan-thontri-
maadam temple in Thiru-aakkoor. Here in the fields and ponds plenty of carp fish 
play and move about. The city Thiru-aakkoor is very fertile and has pleasant scenery. 
Here lily and nelumbia flowers are in plenty and the temple of Thaan-thontri-maadam 
is situated here. Our Lord has manifested Himself in this holy city.

1927.     ஆடலமர்ந்தானை ஆக்கூரில்தான்தோன்றி 
    மாடமமர்ந்தானைமாடஞ்சேர்தண்காழி 
    நாடற்கரியசீர்ஞானசம்பந்தன்சொல் 
    பாடலிவைவல்லார்க்கில்லையாம்பாவமே.        11

    ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில்-தான்தோன்றி 
    மாடம் அமர்ந்தானை, மாடம் சேர் தண் காழி, 
    நாடற்கு அரிய சீர், ஞானசம்பந்தன் சொல் 
    பாடல் இவை வல்லார்க்கு இல்லைஆம், பாவமே.

    ATal amarntAnai, AkkUril-tAn tOnRi 
    mATam amarntAnai, mATam cEr taN kAzi, 
    nATaRku ariya cIr, njAnacampantan col 
    pATal ivai vallArkku illai Am, pAvamE.

பொருள்:     மாடங்கள் நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்தவரே ஞானசம்பந்தர் பெருமான் 
ஆவார். அவர் திருநடனம் புரியும் ஆக்கூர் தான்தோன்றி மாடத்தில் உறையும் ஈசனைப் புகழ்ந்து 
பத்துப்பாடல்கள் பாடியுள்ளார். அதை விரும்பிப் பாடும் அடியவர்களுக்குப் பாவமே பற்றாதாம்.

குறிப்புரை:     ஆடலமர்ந்தான் -  திருக்கூத்தை விரும்பியாடியவனை. அமர்ந்தான்- விரும்பியவன்,
 தங்கியவன். நாடற்கு - ஆராய்தற்கு.

    Our saint Thiru-gnana-Sambandar, a great knowledgeable man hails from prestigious 
cool Kaazhi full of palaces. He went to the temple Thaan-thontri-maadam and prayed to our 
Lord who always desires to dance. There he sang ten verses in praise of our Lord. Those 
devotees who can recite these verses will find no room for sins in their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            42ஆம் பதிகம் முற்றிற்று
            End of 42nd Hymn
 


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 179                பதிகஎண்: 43.

43. திருப்புள்ளிருக்கு வேளூர்            43. THIRUP-PULLIRUKKU-VELOOR

பண்: சீகாமரம்                    Pann: Seekaamaram

திருத்தல வரலாறு

    சம்பாதி, சடாயு என்ற கழுகரசர் இருவர்களும், வேதங்களும், முருகக் கடவுளும், பூசித்துப் 
பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது. இது வைத்தீசுவரன்கோயில் என்று வழங்கப் 
பெறுகின்றது. இது மயிலாடுதுறை - சிதம்பரம் தொடர்வண்டிப் பாதையில், வைத்தீசுவரன் 
கோயில் தொடர் வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. 
மயிலாடுதுறையிலிருந்து சீகாழி செல்லும் பேருந்துகளில் வைத்தீசுவரன் கோயில் என 
வழங்கும் இத்தலத்தை அடையலாம்.  இது காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று.

    இறைவரின் திருப்பெயர் வைத்தியநாதர். இறைவியாரின் திருப்பெயர் தையல் நாயகி.
முருகன் - செல்வமுத்துக் குமாரர். தீர்த்தம்- சித்தாமிர்தத் தீர்த்தம். இது திருக்கோயிலின் உள்ளே
இருக்கின்றது. இது மிகப் பெருமை வாய்ந்தது. இதில் நீராடியவர் நோய் நீங்கப் பெறுவர். 

    சூரியன், செவ்வாய், இராமலக்குமணர், அநுமார் முதலானோர் வழிபட்டுப் பேறு  எய்தினர்.
இங்கு எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுள் முத்துக்குமார சுவாமி என்னும் திருப்பெயருடன் 
விளங்கி, அன்பர்களுக்கு வேண்டும் வரங்களை அளித்து வருகிறார். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் 
பதிகம் ஒன்று, நாவுக்கரசர் பதிகம் இரண்டு ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.

    வடுகநாத தேசிகர் எழுதிய தலபுராணமும், குமரகுருபரர் அருளிய முத்துக்குமாரசுவாமி
பிள்ளைத் தமிழும் அச்சில் வெளிவந்துள்ளன. இவைகளன்றி மூவர் அம்மானை முதலான பல 
நூல்களில் இத்தலத்துச் சிவபெருமானைப் பற்றிய புகழ்ப் பாக்கள் இருக்கின்றன.

    சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்தி,

    தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
    புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே 

என்னும் ஞானசம்பந்தரின் தேவாரப் பகுதியால் அறியக் கிடக்கின்றது.

    சம்பாதி, புள்ளிருக்கு வேளூர் இறைவனை வழிபடற்குக் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து
நாளும் பூக்கொண்டு வந்த செய்தி,

    யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளுமொழியாமே 
    பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே 

என்னும் அவரது தேவாரப் பகுதியில் குறிக்கப் பட்டுள்ளது. இச்சம்பாதி வனம் மணிமேகலையுள்ளும் 
கூறப்பட்டுள்ளது. 

     சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனோடு பொருது, சடாயு உயிரிழந்த செய்தி,

    மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப்
    பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே 

என்னும் அவரது தேவாரப் பகுதியிலும் சொல்லப்பட்டு உள்ளது. 

    'மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்' 

என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதி, இறைவன் வைத்தியநாதர் என்னும் பெயர் பூண்ட 
காரணத்தைப் புலப்படுத்துவதாகும். இங்ஙனம், இவ்வூர்த் தேவாரப் பகுதிகளில் பல சரித்திர 
சம்பந்தமான உயர்ந்த செய்திகள் காணப்படுகின்றன. 

    இக்கோயில், திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது. 
இதுபொழுது இருபத்தாறாம் பட்டத்தில், தருமை ஆதீனத்தில் அருளாட்சி நடத்தி வரும் மகாசந்நிதானம் 
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஒவ்வொரு வாரத்தில் 
செவ்வாய்க் கிழமையிலும், ஒவ்வொரு மாதத்தில் கிருத்திகை நாளிலும் வைத்தீசுவரன் கோயிலுக்கு
எழுந்தருளி வழிபாடு செய்தருளுகின்றார்கள். இக்காலங்களிலன்றி, நிர்வாகத் துறையில் திடீரென்று 
எழுந்தருளி நித்திய நைமித்திகங்கள் உரிய காலங்களில் நன்கு நடைபெறுகின்றனவா எனவும் 
கவனித்தருளுகின்றார்கள்.

பதிக வரலாறு

    திருமறைச் சண்பையராளி திருக்கண்ணார் கோயிலை ஏத்தினார், பிற கோயிலும் 
இறைஞ்சினார். காவிரி வடபால் குடதிசை நோக்கி வருவாராய்க், காதல் பெருகப் புள்ளிருக்கு 
வேளூர்க் கோயிலை நண்ணினார். ஏற்ற அன்பு எய்த வணங்கினார். இருவர் புள்வேந்தர் இறைஞ்சி 
ஆற்றிய பூசையைச் சாற்றி இந்த நன்சொற்பதிகத்தை அணிவித்தார்.

            திருச்சிற்றம்பலம்

1928.     கள்ளார்ந்தபூங்கொன்றைமதமத்தங்கதிர்மதியம் 
    உள்ளார்ந்தசடைமுடியெம்பெருமானாருறையுமிடந் 
    தள்ளாயசம்பாதிசடாயென்பர்தாமிருவர் 
    புள்ளானார்க்கரையனிடம்புள்ளிருக்குவேளூரே.        1

    கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம் 
    உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம் 
    தள்ளாய சம்பாதி, சடாயு, என்பர்தாம் இருவர் - 
    புள்ஆனார்க்கு அரையன் இடம் - புள்ளிருக்குவேளூரே.

    kaL Arnta pUgkonRai, matamattam, katir matiyam, 
    uL Arnta caTaimuTi emperumAnAr uRaiyum iTam- 
    taLLAya campAti, caTAyu, enpartAm iruvar                 
    puL AnArkku araiyan iTam--puLLirukku vELUrE.

பொருள்:     ஈசன், தேன் நிறைந்த கொன்றை மலர்களையும் ஊமத்தம் பூவினையும் 
சந்திரனையும் தன் தலையில் கொண்டவர். அவர் சம்பாதி சடாயு என்னும் பறவைப்
பிறப்புடைய தேவர்கள் வழிபட்ட புள்ளிருக்கு வேளூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     கள் - தேன். ஆர்ந்த- நிறைந்த. மதமத்தம் -  சுடுநாற்றத்தையுடைய 
ஊமத்தம் முடியையுடைய பெருமானார் என்க. தள்ளா - தாழ்ந்த பறவைகள் எனக் கருதித் 
தள்ளிவிடத் தகாத உயிர்களாகிய சம்பாதி சடாயு என்பர்தாம். இருவர் புள் ஆனார். 
சம்பாதியும் சடாயுவும் பறவைப் பிறப்பை அடைந்து வழிபட்ட வரலாறு. அரையன் - 
வைத்தியநாதர். இதில் இருவரையும் உணர்த்தினார். 'மேல்' 2, 4,6,8,9,10., சடாயுவையும் 
3, 5, 7 சம்பாதியையும் ஒருமையாகக் குறித்தனர் எனலாம். புள்ளிருக்கு வேளூர் 
என்றதன் பெயர்க் காரணத்துள் ஒருபகுதி கூறப்பட்டது. சேக்கிழார் பெருமான் 
'புள்ளிருக்கும் திருவேளூர்' எனப்பாடுதலால்.

    Behold! It is Civan, our Lord who has manifested Himself in Thirup-
pullirukku-veloor also called Vytheeswaran-kovil. Our Lord has beautified 
His matted hair with nectar filled cassia flowers along with datura flowers, 
which smell bad. Along with this He allows the bright baby moon also to stay
on His head. Our Lord blessed the two eagle birds to be king of birds, which 
were then born with noble status. These two eagle birds daily used to bring 
fresh flowers from Kaveri-poom-pattinam and strew them over the Lord of this 
place Thirup-pullirukku-veloor and worshipped with sincere devotion. Our Lord 
has manifested Himself in the temple in Thirup-pullirukku-veloor.

1929.     தையலாளொருபாகஞ்சடைமேலாளவளோடும் 
    ஐயந்தேர்ந்துழல்வாரோரந்தணனாருறையுமிடம் 
    மெய்சொல்லாஇராவணனைமேலோடியீடழித்துப் 
    பொய்சொல்லாதுயிர்போனான்புள்ளிருக்குவேளூரே.        2

    தையலாள் ஒருபாகம், சடைமேலாள் அவளோடும் 
    ஐயம் தேர்ந்து உழல்வார், ஓர் அந்தணனார், உறையும் இடம் - 
    மெய் சொல்லா இராவணனை மேல்ஓடி ஈடு அழித்து, 
    பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே.

    taiyalAL orupAkam, caTaimElAL avaLOTum 
    aiyam tErntu uzalvAr, Or antaNanAr, uRaiyum iTam- 
    mey collA irAvaNanai mElOTi ITu azittu, 
    poy collAtu uyirpOnAn puLLirukku vELUrE.

பொருள்:     தையல்நாயகி என்ற நாமத்தை உடைய உமாதேவியைத் தன் உடம்பின் 
பாகமாகக் கொண்டவரே ஈசர். அவர் கங்கையைத் தலையில் தரித்துள்ளார். பிரம கபாலத்தை 
ஏந்தியபடியே பலிதேர்வார். அவர், இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது எதிர்த்துப் 
போரிட்டு, கீழே விழுந்து, பின்பு இராமனிடம் உண்மையைக் கூறி உயிர் துறந்த, சடாயு வழிபட்ட 
புள்ளிருக்குவேளூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     தையலாள்  - தலத்தின் அம்பிகை திருநாமம். சடை மேலாள் - கங்காதேவி. 
மேல் ஓடி -  வானிற்பறந்து. ஈடு - (இராவணனது) வலியை. இராவணன் மெய்சொல்லாதவன்; 
சடாயு பொய் சொல்லாதவன் என்று குறித்த திறம் உணர்க. 

    Behold! It is Civan, the Lord of Thirup-pullirukku-veloor. He shares 
half portion on the left side of His body with His consort Thyal-Nayagi, our 
goddess. He supports the lady of the river Ganges in His matted hair. He goes 
out for alms like a Brahmin saint and behaves like a gracious Supreme Being.
The bird king Jadaayu flew in the air and attacked Raavanan, the king of 
Sri Lanka who never spoke truth while he was carrying Sita in his air conveyance,
and subdued his mightiness. However, Raavanan forcibly attacked Jadaayu and he 
fell down losing his wings. Yet, Jadaayu was able to meet Lord Rama who was on 
His way searching for Sita. Jadaayu, who spoke only truth told Rama the encounter 
events he had with Raavanan and died thereafter. That Jadaayu used to worship
our Lord in Thirup-pullirukku-veloor where He is manifested. 

1930.     வாசநலஞ்செய்திமையோர்நாள்தோறும்மலர்தூவ 
    ஈசனெம்பெருமானாரினிதாகவுறையுமிடம் 
    யோசனைபோய்ப்பூக்கொணர்ந்தங்கொருநாளுமொழியாமே 
    பூசனை செய்தினிதிருந்தான்புள்ளிருக்குவேளூரே.        3

    வாசநலம் செய்து இமையோர் நாள்தோறும் மலர் தூவ, 
    ஈசன், எம்பெருமானார், இனிது ஆக உறையும் இடம் - 
    யோசனை போய்ப் பூக் கொணர்ந்து, அங்கு ஒருநாளும் ஒழியாமே, 
    பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே.

    vAca nalam ceytu imaiyOr nALtORum malar tUva, 
    Ican, emperumAnAr, initu Aka uRaiyum iTam- 
    yOcanai pOyp pUk koNarntu, agku orunALum oziyAmE, 
    pUcanai ceytu initu iruntAn puLLirukku vELUrE.

பொருள்:     நாள்தோறும் ஒரு யோசனை தூரம் உள்ள காவிரிப்பூம்பட்டினம் சென்று 
அங்குள்ள நல்ல மணமுள்ள பூக்களைப் பறித்து வந்து வழிபாடு செய்யும் பறவையே
சடாயுவாம். அச்சடாயு இருக்கும் இடமே புள்ளிருக்கு வேளூர். அவ்வூரையே தம் கோயிலாகக் 
கொண்டவர் சிவபெருமான்.  அவரைத் தேவர்கள் நாடோறும் மலர்தூவி வணங்கி மகிழ்வர். 

குறிப்புரை:     வாசம் - தலவாசம். நலம் - தீர்த்தஸ்நானம். மூர்த்தி தரிசனம் முதலியன. 
இமையோர்-  தேவர், சூரியன், செவ்வாய் முதலோர். மலர் தூவ - அர்ச்சித்து வழிபட. 
யோசனை - நான்கு கூப்பீடு. கொணர்ந்து - கொண்டு வந்து. ஒழியாமே - தவறாமல். பூசனை-
சிவார்ச்சனை. இருந்தான் - சம்பாதி.  இவன் காவிரிப் பூம்பட்டினத்தில் பூங்கா வைத்து நாள்தோறும்
அங்கிருந்து மலர் கொண்டு வந்து வழிபட்ட  வரலாற்றைக் குறித்தது.

    Behold! It is Civan, the Lord of Thirup-pullirukku-veloor. The devaas and 
other celestials used to visit and stay daily for long in Thirup-pullirukku-veloor. 
Then they take bath in the sacred water, collect fragrant flowers, strew them over 
our Lord and offer worship. He is our Supreme Pre-eminent Being. The two eagle king 
birds used to fly daily 13 miles without any break and reach Kaverip-poom-pattinam. 
They collected fine flowers and strewed them over our Lord of this place and worshipped 
Him. In such a holy place our Lord Civan agreeably has manifested Himself and this 
is called Thirup-pullirukku-veloor.

1931.     மாகாயம்பெரியதொருமானுரிதோலுடையாடை 
    ஏகாயமிட்டுகந்தஎரியாடியுறையுமிடம் 
    ஆகாயந்தேரோடும்இராவணனையமரின்கண் 
    போகாமேபொருதழித்தான்புள்ளிருக்குவேளூரே.        4

    மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடைஆடை 
    ஏகாயம் இட்டு உகந்த எரிஆடி உறையும் இடம் 
    ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்கண் 
    போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.

    mA kAyam periyatu oru mAn uri tOl uTai ATai
    EkAyam iTTu ukanta eri ATi uRaiyum iTam-
    AkAyam tEr OTum irAvaNanai amarinkaN 
    pOkAmE porutu azittAn puLLirukku vELUrE.

பொருள்:     பேருடலைக் கொண்டவரே எம்பெருமான். சிறிய மான்தோலை உடையாகக் 
கொண்டவரும் அவரே. நெருப்பைக் கையில் ஏந்தி சுடுகாட்டில் ஆடுபவரும் அவரே. அவர்,
ஆகாய வழியாக இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது எதிர்த்துப் போரிட்டு        
மடிந்த கழுகாசனர் சடாயு வழிபாடு செய்த புள்ளிருக்கு வேளூரில் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     காயம்- திருமேனி. ஏகாயம்- (ஏகாசம்) உத்தரீயம். ஆகாயத்தில் ஓடுந்தேர், 
புட்பக விமானம். அமர் - போர். பொருது - தாக்கி. அழித்தான் - சடாயு.

    Behold! It is Civan, the Lord of Thirup-pullirukku-veloor. His body becomes 
big boulder-like whenever He wants so. But His dress is small, only the deer's skin. 
He killed the big fierce rutted elephant and used its hide as His overcoat. He dances 
over fire in the cremation ground. He is worshipped by the eagle king Jadaayu, who flew 
in the sky and attacked Raavanan, while he was carrying Sita in his flying chariot. 
The bird dashed against the king and inflicted many wounds on his body and did his best 
to prevent him from carrying Sita; but finally his wings were cut off and he fell down. 
However, he was able to meet Rama on his way and narrated all the events with
Raavanan and then died. Our Lord in Thirup-pullirukku-veloor is worshipped daily by
this king bird and in this holy place our Lord has manifested Himself and this place 
is called Thirup-pullirukku-veloor.

1932.     கீதத்தைமிகப்பாடுமடியார்கள்குடியாகப் 
    பாதத்தைத்தொழநின்றபரஞ்சோதிபயிலுமிடம் 
    வேதத்தின்மந்திரத்தால்வெண்மணலேசிவமாகப் 
    போதத்தால் வழிபட்டான்புள்ளிருக்குவேளூரே.        5

    கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடிஆகப் 
    பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் 
    வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவம்ஆக
    போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே.

    kItattai mikap pATum aTiyArkaL kuTi Akap 
    pAtattait toza ninRa paranjcOti payilum iTam- 
    vEtattin mantirattAl, veNmaNalE civam Aka, 
    pOtattAl vazipaTTAn puLLirukku vELUrE.

பொருள்:     வேத மந்திரமொழிகளைக் கூறி, மணலையே சிவலிங்கமாகப் பாவித்து 
சம்பாதி ஈசனை வழிபட்டான். அவ்விடமே புள்ளிருக்கு வேளூர் ஆகும். அவ்வூரில் பக்திப் பாடல்களைப் 
பண்ணோடு பாடி அடியவர்கள் ஈசனின் திருவடிகளை வணங்கி மகிழ்வர். ஒளிமயமான ஈசனார் 
கோயில் கொண்டுள்ள இடமே புள்ளிருக்கு வேளூராம்.

குறிப்புரை:     கீதம் - பாட்டு. மணம் ஒன்றி உரை. ஆர்கீதம் பாட நல்ல உவப்பு இல் அருள் 
செய்தார்( தி.1.  ப.71 பா.8) அடியார்கட்குப் பாதமே குடி. குடியாகத் தொழ நின்ற சோதி என்க. 
பரஞ்சோதி - மெய்யொளி.  மணலைச் சிவமாகப் போதத்தால் பாவித்து வேத மந்திரத்தால் 
வழிபட்டவன் சம்பாதி. போதம் - ஞானம்.

    Behold! It is Civan, the Lord of Thirup-pullirukku-veloor. This is the place 
where many scholars jointly assemble before our Lord and recite the Vedic songs and 
worship the holy feet of our Lord daily. He is the Lord of ultimate truth. The two big
eagle birds Jadaayu and Sampaathi created in white sand, the Siva Lingam for their 
daily rituals. Then they recited the mystical words of the Vedas in the presence 
of the Siva Lingam and worshipped our Lord with divine knowledge. Our Lord Civa attracted 
to such a holy place has manifested Himself in Thirup-pullirukku-veloor.

1933.     திறங்கொண்டஅடியார்மேல்தீவினைநோய்வாராமே 
    அறங்கொண்ட சிவதன்மமுரைத்தபிரானமருமிடம் 
    மறங்கொண்டங்கிராவணன்றன்வலிகருதிவந்தானைப் 
    புறங்கண்டசடாயென்பான்புள்ளிருக்குவேளூரே.        6

    திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
    அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் 
    மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப் 
    புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே.

    tiRam koNTa aTiyArmEl--tIvinai nOy vArAmE, 
    aRam koNTu civatanmam uraitta pirAn amarum iTam- 
    maRam koNTu agku irAvaNan tan vali karuti vantAnaip 
    puRam kaNTa caTAy enpAn puLLirukku vELUrE.

பொருள்:     பக்தியுடன் வணங்கும் அடியவர்களுக்குத் தீவினை நோய் வராமல் காப்பவரே 
எம்பெருமான். சனகாதி முனிவர்களுக்கு அறத்தை உபதேசித்தவரும் அவரே ஆவார். வலிமைமிக்க 
இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது எதிர்த்துப் போரிட்ட சடாயு வழிபாடு செய்த தவமே 
புள்ளிருக்கு வேளூராம். அவ்விடத்தில் கோயில் கொண்டவரே எம்பெருமான் ஆவார்.

குறிப்புரை:     திறம்-சைவத்திறம். அறம் - அன்று ஆலின்கீழ் இருந்து உரைத்த அறம். சிவதன்மம் -
சரியையும், கிரியையும் சிவதன்மம் என்பது சைவ சம்பிரதாயம் ஆயினும். இங்கு நான்கிற்கும் 
பொதுவாய் நின்றது. (இது தலவரலாற்றுக் குறிப்பு) மறம் -வீரம். தன்வலி-  தனது பலத்தை.  
வந்தானை - வந்த (இரா) வ (ண) னை. புறம் கண்ட -முதுகு பார்த்த. வென்ற என்றபடி. 

    Behold! It is Civan, our Lord at Thirup-pullirukku-veloor. The devotees who are 
very sincere in Saiva culture and follow its principles and worship our Lord at Thirup- 
pullirukku-veloor are protected always by our Lord. He graces them and prevents
sufferings from reaching His devotees. The divine virtues attached to Saiva culture 
were explained by our Lord to the four sages sitting under the stone banyan tree. 
Raavanan, the king of Sri Lanka was dependent on his own mightiness rather than virtues.
He carried away Sita in his flying chariot from the forest to Sri Lanka. On his way the 
eagle king Jadaayu saw him and inflicted several injuries on him. This eagle 
king worshipped our Lord Civan in Thirup-pullirukku-veloor where He has manifested Himself.

1934.    அத்தியினீருரிமூடியழகாக அனலேந்திப் 
    பித்தரைப்போற்பலிதிரியும்பெருமானார்பேணுமிடம் 
    பத்தியினால் வழிபட்டுப்பலகாலந்தவஞ்செய்து 
    புத்தியொன்றவைத்துகந்தான்புள்ளிருக்குவேளூரே.        7

    அத்தியின்ஈர்உரிமூடி, அழகுஆக அனல் ஏந்தி, 
    பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் - 
    பத்தியினால் வழிபட்டு, பலகாலம் தவம் செய்து, 
    புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே.

    attiyin Ir uri mUTi, azaku Aka anal Enti, 
    pittaraip pOl pali tiriyum perumAnAr pENum iTam- 
    pattiyinAl vazipaTTu, palakAlam tavam ceytu, 
    putti onRa vaittu ukantAn puLLirukku vELUrE.

பொருள்:     ஈசன், யானையின் தோலை உரித்துப் போர்வையாகச் சூடியுள்ளான். 
அவன் அனலை ஏந்தி ஆடுவான். பித்தரைப்போல் விரும்பி, கோயில் கொண்டுள்ள இடமே
புள்ளிருக்கு வேளூராம். அவ்விடத்தில்தான் சடாயு பக்தியோடு பலகாலம் ஈசனை நோக்கித்
தவம் செய்து சிறப்புற்ற இடம் புள்ளிருக்கு வேளூர். இது சிவபெருமான் விரும்பி உறையும்
இடமாகும்.

குறிப்புரை:     அத்தி- யானை. மூடி- போர்த்து. பித்தரைப் போல் என்றதால். இறைவனைப்
பித்தனெனல் ஏலாது. பத்தி - பக்தி.  திருவடிக்கு அன்பு. புத்தி- ஞானம். ஒன்ற- சிவத்தொடு பொருந்த. 
ஒன்றி இருந்து நினைமின்கள். உகந்தான் - விரும்பினான், உயர்ந்தவன் (சம்பாதி).

    Behold! It is Civa who is manifested in Thirup-pullirukku-veloor. He once killed 
the rutted elephant and covered His body with its hide. He carries fire in His hand 
and moves all over the cosmos, begging for alms. The eagle king Jadaayu worshipped our Lord 
with sincere devotion for many years, did penance by concentrating on the Supremacy of 
our Lord and happily for many years visited our Lord in Thirup-pullirukku-veloor. 
This city is very much desired as His abode by our Lord Siva Perumaan.

1935.    பண்ணொன்றஇசைபாடுமடியார்கள் குடியாக 
    மண்ணின்றிவிண்கொடுக்கும்மணிகண்டன்மருவுமிடம் 
    எண்ணின்றிமுக்கோடிவாழ்நாளதுடையானைப் 
    புண்ணொன்றப்பொருதழித்தான்புள்ளிருக்குவேளூரே.        8

    பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடிஆக 
    மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம் - 
    எண் இன்றி முக்கோடி வாழ்நாள் அது உடையானைப் 
    புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.

    paN onRa icai pATum aTiyArkaL kuTi Aka 
    maN inRi viN koTukkum maNikaNTan maruvum iTam 
    eN inRi mukkOTivANAL atu uTaiyAnaip 
    puN onRap porutu azittAn puLLirukku vELUrE.

பொருள்:     எண்ணிக்கையில் மிகுந்த முக்கோடி வாழ்நாளைத் தவத்தால் பெற்றவன் 
இராவணன். அவனது மார்பில் புண் உண்டாகும்படி போரிட்டு மடிந்தான் சடாயு. 
அச்சடாயு என்ற பறவை வழிபட்ட இடமே புள்ளிருக்கு வேளூர் ஆகும். அத்தலத்தில் 
அடியவர்கள் பண்ணோடு பாடி இறைவனை வணங்குவர். அவர்களுக்கு விண்ணுலக 
வாழ்வைக் கொடுப்பவன் ஈசன். அம்மணிகண்டன் விரும்பி உறைவது புள்ளிருக்கு 
வேளூர் தலமே ஆகும்.

குறிப்புரை:     ஒன்ற - பொருந்த. 'பண்பொருந்த இசைபாடும் பழனம் சேர் அப்பன்' 
(தி.4 ப.12 பா.5) குடியாகக் கொடுக்கும் மணிகண்டன் என்க. மண் இன்றி என்றது. 
பிறவாமைக்கும், விண் கொடுக்கும் என்றது, வீடு பேற்றிற்கும் எனக் கொள்க. 
எண்-  கணக்கு. வாணாள்- வாழ்நாள் என்பதன் மரூஉ.  அழித்தான் - சடாயு.            

    Behold! It is Thirup-pullirukku-veloor, the abode of our Lord Civa. 
His sincere devotees who sing devotional songs in suitable musical tone on our 
Lord live permanently in this city. Our Lord blesses these people with good life 
of virtue on the earth and also in heaven. He is Neelakandan since His neck is blue. 
It was in this place where king Jadaayu attacked Raavanan who had been blessed with 
longevity of life for more than three crores of years. Jadaayu fought with Raavanan 
to prevent him from carrying Sita to Sri Lanka and finally inflicted wounds on him. 
The eagle king worshipped Lord Civan in this place for many years. Our Lord loved 
to be manifested here.

1936.     வேதித்தார்புரமூன்றும்வெங்கணையால்வெந்தவியச் 
    சாதித்தவில்லாளிகண்ணாளன்சாருமிடம் 
    ஆதித்தன்மகனென்னஅகன்ஞாலத்தவரோடும் 
    போதித்தசடாயென்பான்புள்ளிருக்குவேளூரே.        9

    வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து அவியச் 
    சாதித்த வில்லாளி, கண்ணாளன், சாரும் இடம் - 
    ஆதித்தன்மகன் என்ன, அகன் ஞாலத்தவரோடும் 
    போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே.

    vEtittAr puram mUnRum vegkaNaiyAl ventu aviyac 
    cAtitta villALi, kaNNALan, cArum iTam- 
    Atittan makan enna, akan njAlattavarOTum 
    pOtitta caTAyu enpAn puLLirukkuvELUrE.

பொருள்:     பகை கொண்ட முப்புர அசுரர்களின் கோட்டைகளை வலிமையான கணை
தொடுத்து அழித்தவர் சிவபெருமான். மேரு மலையை வில்லாக வளைத்தவன் சிவபெருமான். 
நெற்றிக்கண் கொண்டவர் சிவபெருமான். அவர், ஆதித்தனின் மக்களாகத் தோன்றிய சம்பாதி, 
சடாயு என்ற இரு பறவைகளும் வழிபட்ட புள்ளிருக்கு வேளூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார் 
சிவபிரான்.

குறிப்புரை:     வேதித்தார்- பேதித்தவர், பகைவர். சாதித்த -கொன்ற. வில்லாளி - (மேரு) வில்லை 
ஆள்பவன். கண் ஆளன் - ஞானக் கண்ணாயிருந்து. எல்லாவுயிர்களையும் ஆள்பவன், அடையாதார்க்கு
செய்யும் மறக்கருணையின் வேறாய், அடைந்தார்க்கு நல்கும் அறக்கருணையைக் காட்டுங் கண்ணை
ஆள்பவன் எனலும் பொருந்தும். ஆதித்தன் - சூரியன். இதிற் குறித்த வரலாறு: சூரியனுக்குச் சம்பாதி,
சடாயு இருவரும் மக்கள் என்றும், ஞாயிற்று மண்டலம் வரை பறந்து சென்று சிறகுகள் கரிந்து தலத்தில்
வீழ்ந்து வழிபட்டுச் சிறகும் வரமும் பெற்றனரென்றும் புராணம் உள்ளது. இச்செய்தி இராமாயணத்தில்
முறையே ஆரண்ய காண்டத்திலும், கிஷ்கிந்தா காண்டத்திலும் கூறப்பெற்றுள்ளன. அகல் - அகலிய, பரந்த. 
ஞாலத்தவர்-உலகத்தவர். 

    Behold! It is Thirup-pullirukku-veloor, the abode of our Lord Civan. 
He has a third eye at the centre of His forehead. He performs two different 
duties with the same third eye-protecting virtue and chastising vice. He is 
the Supreme Bowman, using mount Meru as His bow He destroyed the three flying 
forts of the asuraas who deviated from god. The two eagle birds Jadaayu and 
Sampaathi were the sons of Aathithan- the Sun god. They both were born on 
this earth as birds. However they were very virtuous in their life. They 
recited the divine knowledge about our Lord and worshipped our Lord in 
Thirup-pullirukku-veloor. Our Lord Civa was pleased and has manifested 
Himself in this holy city of Thirup-pullirukku-veloor.

1937.    கடுத்துவருங்கங்கைதனைக்கமழ்சடையொன்றாடாமே 
    தடுத்தவரெம்பெருமானார்தாமினிதாயுறையுமிடம் 
    விடைத்துவருமிலங்கைக்கோன்மலங்கச்சென்றிராமற்காய்ப் 
    புடைத்தவனைப்பொருதழித்தான்புள்ளிருக்குவேளூரே.        10

    கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே 
    தடுத்தவர் எம்பெருமானார், தாம்இனிதுஆய் உறையும் இடம் - 
    விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று, இராமற்காய்ப் 
    புடைத்து அவனைப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.

    kaTuttu varum kagkaitanaik kamaz caTai onRu ATAmE 
    taTuttavar, emperumAnAr, tAm initu Ay uRaiyum iTam- 
    viTaittu varum ilagkaik kOn malagkac cenRu, irAmaRkAyp         
    puTaittu avanaip porutu azittAn puLLirukkuvELUrE.

பொருள்:     சீறிப்பாய்ந்து வந்த கங்கையை மணமிக்க தன் தலையில் தழும்பிச் செல்லாதவாறு 
தாங்கியவரே சிவபெருமான். இராவணனை இராமனுக்காக எதிர்த்துப் போரிட்டு இறந்த சடாயு 
வழிபட்ட புள்ளிருக்கு வேளூர் தலத்தில் எம்பெருமான் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     கடுத்து - கோபித்து. சடைமேல் கங்கையைத் தடுத்தவர். ஒன்று - சிறிதும். 
ஆடாமே -முழுகாமல். விடைத்து - சீறி, வேறுபடுத்து. மலங்க-  அலைய. இராமற்கு - இராமபிரானுக்கு. 
புடைத்து-அடித்து. அலைத்து. அவனை- அவ்விராவணனை. பொருது -அழித்து. அழித்தான்; 
சடாயு, அழிக்கப்பட்டது வலி (கம்பர். சடாயுவுயிர் நீத்த 118) அவனைப் புடைத்து அழித்தான் 
என்று கூட்டுக.
    
    எறிந்தான் அதுநோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல் 
    அறிந்தான் முனிந்து ஆண்டதோர் ஆடகத்தண்டு வாங்கிப் 
    பொறிந்தாங் கெரியின் சிகை பொங்கியெழப் புடைத்தான் 
    மறிந்தான் எருவைக்கிறை மால்வரை போல மண்மேல்

(பா. 121), என்றதை நோக்கிப் புடைத்தவன் என்று கொண்டே இராவணன் என்று கூறலும் நன்றாகும்.

    Behold! It is Civan, our Lord of Thirup-pullirukku-veloor. He blocked with His 
matted hair the fast descending flood of the river Ganges. He is our God. The eagle bird 
king Jadaayu, out of love of Lord Rama, attacked with his powerful wings and inflicted 
wounds on the body of Raavanan and reduced his mightiness by fighting against him. 
This eagle king used to worship daily our Lord in Thirup-pullirukku-veloor. This 
holy city is the abode of our Lord Civan.

1938.     செடியாயவுடல்தீர்ப்பான்தீவினைக்கோர்மருந்தாவான் 
    பொடியாடிக்கடிமைசெய்தபுள்ளிருக்குவேளூரைக் 
    கடியார்ந்தபொழிற்காழிக்கவுணியன்சம்பந்தன்சொல் 
    மடியாதுசொல்லவல்லார்க்கில்லையாம்மறுபிறப்பே.        11

    செடிஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து ஆவான்
    பொடிஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை, 
    கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன்-சம்பந்தன்-சொல் 
    மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லைஆம், மறுபிறப்பே.

    ceTi Aya uTal tIrppAn, tIvinaikku Or maruntu AvAn, 
    poTi ATikku aTimai ceyta puLLirukkuvELUrai, 
    kaTi Arnta pozil kAzik kavuNiyan--campantan--col 
    maTiyAtu colla vallArkku illai Am, maRupiRappE.

பொருள்:     மணமிக்க சோலைகள் சூழ்ந்த சீர்காழிப்பதியில் அவதரித்தவர் ஞானசம்பந்தப் 
பெருமான். சிவன், செடிபோல் உயிரைப்பற்றி வரும் உடலை  அழிப்பவர். தீவினைகளுக்கு மருந்தாக 
விளங்குபவரும் அவரே ஆவார். அப்புள்ளிருக்கு வேளூர் இறைவனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடி 
அருளியுள்ளார் ஞானசம்பந்தர், அதனைக் குறைவின்றி சொல்ல வல்லவர்களுக்கு மறுபிறப்பே 
இல்லையாம் என்க.

குறிப்புரை:     செடி - குணமில்லாமை. ஆய- ஆகிய. உடல் தீர்ப்பான் - பிறப்பில்லாமல் அருள்பவன்.
‘தீவினைக்கு ஓர்மருந்து ஆவான்'. 'வரும் பிறவி நோய் தீர்ப்பான்காண் வானவர்க்கும் தானவர்க்கும் 
மண்ணுளோர்க்கும்' (தி.6 ப.64 பா.4) 'உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று மெள்ள உள்க வினை கெடும் 
மெய்ம்மையே' (தி.5 ப.79 ப.8-9) 'மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்' 
(தி.6. ப.54 பா.8). இத்தலத்தில் நோய் நீங்கும் பொருட்டு மக்கள் திரள் திரளாக வந்து வழிபடுதலை இன்றும் 
காணலாம். பொடியாடிக்கு - திருநீற்றில் மூழ்கிய சிவபிரானுக்கு. அடிமை- அடித்தொண்டு. கடி-மணம், 
காவல். மடியாது - சோம்பியிராமல், வாளாபிறந்திறவாது எனலுமாம். இத்தலத்தை வழிபட்டவர்க்கு 
மேற்கூறியவாறு. தீராத பிறவி நோயையும் தீர்த்தருள் வான் சர்வலோகங்கட்கும் ஏகவைத்தியனான 
நாதன் என்னும் உண்மையை விளக்க. 'இல்லையாம் மறு பிறப்பே' என்றருளினார். இத்திருப்பதிகத்தை 
மட்டும் நாடோறும் பாராயணஞ் செய்வோர்க்குப் பிறவி ஒழியும் என்பது உறுதி.

    Our saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi which is surrounded by big 
and rich gardens. Here the flowers bloom in large numbers and spread fragrance all over the city. 
Thiru-gnana-Sambandar became the servitor of our Lord and sang ten verses praising the glory of 
our Lord Civan who is manifested in the city of Thirup-pullirukku-veloor. Our Lord Civan destroys 
our body, which like a coil, encircles our soul, dispels all the evils of birth of His devotees.
Those devotees who can recite these ten verses sung by Thiru-gnana-Sambandar without any 
slackening will have no rebirth in this world.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            43ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 43rd Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 180                    பதிக எண் : 44

44. திருஆமாத்தூர்                    44. THIRU-AAMAATH-THOOR
பண் : சீகாமரம்                        Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    பசுக்களுக்குத் தாயாக இறைவன் இருந்து அருளும் தலம். இங்கே பசு  என்றது உயிர்த்தொகுதியை. 
விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 6 கி.மீ. தூரத்தில்  பம்பையாற்றின் வடகரையில் 
உள்ளது இத்திருத்தலம். விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சூரப்பட்டு நகரப் பேருந்தில் 
திருவாமாத்தூர் செல்லலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. 

    இறைவரின் திருப்பெயர் அழகிய நாதர். இத்திருப்பெயரைத் திருக்குறுந்தொகையில் 
அப்பர் பெருமான் எடுத்தாண்டிருப்பது மகிழ்தற்கு உரியதாகும். இறைவியாரின் திருப்பெயர் முத்தாம்பிகை. 
முத்தை வென்ற முறுவலாள். முத்தார் நகை அழகுடையார் என்பர் அருணகிரி நாதர். தீர்த்தம் பம்பை ஆறு. 
தலவிருட்சம் வன்னிமரம்.

    பிருங்கி முனிவர் சிவபெருமானையே வழிபடுபவர். அம்மையாரை வழிபடாதவர்.அம்மையார் 
ஒரு பாகத்தைப் பெற்றபோதும் வண்டு உருவெடுத்துத் துளைத்துச் சிவனையே வழிபட்டார். அதனால் 
அவரை அம்மையார் வன்னிமரம் ஆகுமாறு சபித்தார். பின்னர்  முனிவர் அம்மையாரை வழிபட்டு
அவர் அருளால் சாபநீக்கம் பெற்றார். இத்தலம் மூவராலும் பாடப்பெற்றது .

    திருக்கோயில் பாதைக்கு இருபுறமாகக் கட்டப்பெற்றுள்ளது. மேல்புறம் சுவாமி, கீழ்புறம் அம்பாள் 
சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்கின்றன. சுவாமியின் முன்கோபுரம் 
பூர்த்தியாகவில்லை. சுவாமி கோயிலுக்கு நேர்வழியில்லை. தெற்குவாயில் வழியே சென்று பிறகு 
மேற்கே திரும்ப வேண்டும். எதிரில் இராமர் கோயில் இருக்கின்றது. இராமன் வழிபட்டதனால் 
அபிராமேசர் என்று பெயர் வந்தது.

    அர்த்த மண்டபத்தில் நிலவறை உண்டு. அச்சுதராயர் உருவம் செதுக்கப்பட்டு இருக்கிறது.                    
அவர் திருப்பணி செய்ததாக வரலாறு. அம்மன் கோயில் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. அதற்குத்தான் 
பிரகாரமும் கோபுரமும் உண்டு. இரட்டைப் புலவர்கள் இவ்வூர் இறைவன் மீது கலம்பகம் பாடியுள்ளனர். 
புலவர் புராணம் பாடிய தண்டபாணி சுவாமிகள் இவ்வூரினர். அவருடைய சமாதி ஊரின்புறத்தே 
இருக்கின்றது. இவ்வூருக்கு, சம்பந்தர் பதிகங்கள் இரண்டு. அப்பர் பதிகங்கள் இரண்டு. சுந்தரர் பதிகம் 
ஒன்று .ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.

பதிக வரலாறு

    திருவதிகை வீரட்டத்தை வழிபட்ட திருஞானசம்பந்தப் பெருமானார் திருவாமாத்தூர் 
அணைந்து பாடியவற்றுள் இத்திருப்பதிகமும் ஒன்று.

            திருச்சிற்றம்பலம்

1939.     துன்னம்பெய்கோவணமுந்தோலுமுடையாடை 
    பின்னஞ்சடைமேலோர்பிள்ளைமதிசூடி 
    அன்னஞ்சேர்தண்கானலாமாத்தூரம்மான்றன் 
    பொன்னங்கழல்பரவாப்பொக்கமும்பொக்கமே.        1

    துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை, 
    பின் அம் சடை மேல் ஓர் பிள்ளைமதி சூடி, 
    அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன் 
    பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே.

    tunnam pey kOvaNamum tOlum uTai ATai, 
    pin am caTaimEl Or piLLaimati cUTi,
    annam cEr taN kAnal AmAttUr ammAntan 
    pon am kazal paravAp pokkamum pokkamE?

பொருள்:     சிவபெருமான் வேதங்களைக் கோவணமாகவும் புலித்தோலை ஆடையாகவும் 
கொண்டுள்ளார். தனது பின்னிய சடைமேல் பிறைநிலவைச் சூடி உள்ளார். அன்னப் பறவைகள் 
நிறைந்த ஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ளார். அவரது திருவடிகளைத் தொழுதலே நம் கடனாகும். 
வணங்காதிருத்தல் பெருங்குற்றமாகும்.

குறிப்புரை:     துன்னம் - தைத்தல். பெய் - செறிந்த; இட்ட பெய் கோவணம்; வினைத்தொகை. 
பின் - பின்னிய. அம் - அழகிய. பொக்கம் - பொலிவு. பொலிவும் ஒரு பொலிவோ? பொலிவு அன்று 
என்க. பா. 5,9,10 பார்க்க.

    Behold! it is Civan, Lord of Thiru-aamaath-thoor. He wears on His loins a 
stitched small piece of cloth. He killed an elephant and removed its hide and used 
it as His mantle. He accommodates the young baby moon on His plaited hair. He has 
manifested Himself in Thiru-aamaath-thoor surrounded by cool gardens where many swans 
join together and stay there. Those people who do not worship and pray to the beautiful 
golden feet of our Lord of Thiru-aamaath-thoor will never get prosperity.They will lack 
beauty and prosperity in their life.

1940.     கைம்மாவின்தோல்போர்த்தகாபாலிவானுலகில் 
    மும்மாமதிலெய்தான்முக்கணான்பேர்பாடி 
    அம்மாமலர்ச்சோலையாமாத்தூரம்மானெம் 
    பெம்மானென்றேத்தாதார்பேயரிற்பேயரே.        2

    கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான்உலகில் 
    மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி 
    "அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம் 
    பெம்மான்" என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.

    kaimmAvin tOl pOrtta kApAli, vAn ulakil 
    mum mA matil eytAn, mukkaNAn, pEr pATi, 
    "am mA malarccOlai AmAttUr ammAn! em 
    pemmAn!" enRu EttAtAr pEyarin pEyarE.

பொருள்:     யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவரே சிவபெருமான். 
அவர் பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி பலிதேர்ந்து வருவார். மும்மதில்களை எரித்தவர்.,         
மூன்று திருக்கண்களைக் கொண்ட அவரைத் தலைவர் என்று கருதி வணங்காதவர்கள் 
பேய்த்தன்மை உடைய கீழோர்கள் ஆவர். 

குறிப்புரை:     கைம்மா- துதிக்கையை உடைய யானை. மும்மா மதில்- மூன்று 
பெரிய புரம். பேர்- திருநாமம். அம்மான், பெம்மான் என்பவை, அருமகன் பெருமகன் 
என்பவற்றின் மரூஉ. கோமகன் என்பது  கோமான் என்று மருவியது போல (பா.81). 
ஏத்தாதார் -(உயர்த்துப்) புகழாதார். பேயரிற் பேயர்- கடவுளைப் புகழ்ந்து போற்றி 
வழிபடாதவர் மக்கள் வடிவினராயினும் பேயரே என்பது பெரியோர் முடிவு . 'நாயேன் 
பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் பேயாய்த்   திரிந்தெய்த்தேன்'             
என்பது நம்பியாரூரர் திருவாக்கு. 'வையத் தவகை' என்றார் நாத்திகரை வள்ளுவர்.

    Behold! It is Civan, Lord of Thiru-aamaath-thoor. He killed a rutted elephant
and used its hide as His mantle and is called Kaabaali. He shot an arrow and completely 
destroyed the three flying forts of the asuraas who flew in the air and caused havoc 
to the celestials. He has a third eye at the center of His forehead. Our Lord is 
manifested in the temple in Thiru-aamaath-thoor, which is surrounded by very big 
rich gardens of flowers. Those people who do not praise our Lord by saying "Oh You
are the Supreme Head of the Universe and the Ultimate Lord and our Mother" are none 
but real devils though they bear human body; good people will slight them in this way.

1941.    பாம்பரைச்சாத்தியோர்பண்டரங்கன்விண்டதோர் 
    தேம்பலிளமதியஞ்சூடியசென்னியான் 
    ஆம்பலபூம்பொய்கையாமாத்தூரம்மான்றன் 
    சாம்பலகலத்தார்சார்பல்லாற்சார்பிலமே.        3

    பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர் 
    தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்,
    ஆம்பல்அம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன் 
    சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே.

    pAmpu araic cAtti Or paNTaragkan, viNTatu Or 
    tEmpal iLamatiyam cUTiya cenniyAn,
    Ampal AmpUm poykai AmAttUr ammAn tan 
    cAmpal akalattAr cArpu allAl cArpu ilamE.

பொருள்:     சிவபெருமான் பாம்பைத் தன் அரையில் அணிகலனாக அணிந்துள்ளார். 
பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவரும் அவரே ஆவார். அவர் தன் தலையில் 
இளம்பிறையை அணிந்துள்ளார். அவர் ஆம்பல் மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழப்பெற்ற 
திருஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ளார். அவர் தம் மார்பில் திருநீற்றைப் பூசியுள்ளார். 
 அத்திருநீற்றின்மீது பற்றில்லாதவர்கள் மெய்ச்சார்பு இல்லாதவர்கள் ஆவார்கள்.

குறிப்புரை:     அரை- இடுப்பில். பண்டரங்கன்- பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவன். 
விண்டது - பிளந்தது. தேம்பல் - மெலிதல், வாடுதல். 'மதிப்பிளவு' 'தேய்பிறை' என்னும் வழக்குணர்க. 
சென்னியான் - தலையன். சாம்பல் - திருநீறு அகலத்தார் - மார்பினர் (அடியார்) திருஞானசம்பந்தர்க்குச் 
சிவனடியாரின் இணக்கத்திலுள்ள பேரன்பும் உறுதியும் விளங்கும். 'நக்கனாரவர் சார்வலானல்கு 
சார்விலோம் நாங்களே' 'சைவனாரவர் சார்வலால் யாதுஞ் சார்விலோம் நாங்களே' (தி.2 ப.77 பா.8)
'சாதுக்கண் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே' (தி.3 ப.54 பா.5) கங்கை தரித்தானைச் சாராதார் 
சார்வென்னே'  (தி. 7 பா. 872) சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் (தி.6 ப. 98 பா.5).

    Behold! It is Civan, Lord of Thiru-aamaath-thoor. He wears the snake around His waist. 
He used to dance the very famous play called Paandurangam. He has adorned His head with the axe 
shaped baby moon. He is manifested in the temple situated in the city of Thiru-aamaath-thoor, 
which is surrounded by water tanks full of blossomed lily flowers. He has smeared His body with 
the holy ashes. Those who have no close association with His devotees will have no connection 
with any good in their life.

1942.     கோணாகப்பேரல்குல்கோல்வளைக்கைமாதராள் 
    பூணாகம்பாகமாப்புல்கியவளோடும் 
    ஆணாகங்காதல்செய்ஆமாத்தூரம்மானைக் 
    காணாதகண்ணெல்லாங்காணாதகண்களே.        4        

    கோள் நாகப் பேர்அல்குல் கோல்வளைக்கை மாதராள் 
    பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும் 
    ஆண்ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக் 
    காணாத கண்எல்லாம் காணாத கண்களே.                    

    kOL nAkap pEr alkul kOlvaLaikkai mAtarAL 
    pUN Akam pAkamAp pulki, avaLOTum 
    AN Akam kAtal cey AmAttUr ammAnaik 
    kANAta kaN ellAm kANAta kaNkaLE!

பொருள்:     வளைந்த படம் கொண்ட நாகத்தைப் போன்ற அல்குலையும் கையில் வளையல்களையும் 
கொண்ட மாதரசியே உமாதேவி ஆவாள். உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாகமாகவும், பாம்பினை 
அணிகலன்களாகவும் கொண்டவரே சிவபெருமான். அவர் திருஆமாத்தூர் தலத்துள் அழகுறக் கோயில் 
கொண்டுள்ளார். அவரைக் காணாத கண்கள் பயனற்ற கண்களேயாம்.

குறிப்புரை:     கோலி - வலிமை. கொலையுமாம். நாகம் - பாம்பு 'பையரவல்குல்'. கோல் - திரட்சி
 ஆகம்- உடம்பு மார்புமாம். புல்கி - தழுவி. புல்கியவள் என்றுமாம். ஆண் ஆகம் - ஆண் உடம்பு. ஆள் நாகம்-
ஆளுகின்ற (மலைபோன்ற) கொங்கை எனலுமாம். நாகம் - உவமையாகுபெயர். காணாத கண்களே - 
குருட்டுக் கண்களே.

    Behold! It is Civan, Lord of Thiru-aamaath-thoor. Our goddess Paarvathi Devi wears 
around her hip a cobra like hood, she wears also rich and big bangles. She wears many jewels 
all over her body. Our Lord shares the left side of His body with our goddess Paarvathi Devi. 
However, He exhibits Himself in the temple only as a male. He graces His consort and is 
manifested happily in the temple. Those people who do not visit this temple and see the 
beautiful form of our Lord have no real eyes, their eyes are blind.

1943.     பாடல்நெறிநின்றான்பைங்கொன்றைத்தண்தாரே 
    சூடல்நெறிநின்றான்சூலஞ்சேர்கையினான் 
    ஆடல்நெறிநின்றானாமாத்தூரம்மான்றன் 
    வேடநெறிநில்லாவேடமும்வேடமே.        5

    பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண்தாரே 
    சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான்,
    ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன் 
    வேடநெறி நில்லா வேடமும் வேடமே?

    pATal neRi ninRAn, paigkonRaittaN tArE 
    cUTal neRi ninRAn, cUlam cEr kaiyinAn,
    ATal neRi ninRAn, AmAttUr ammAntan 
    vETa neRi nillA vETamum vETamE?

பொருள்:     சிவபெருமான், வேதம் போற்றி வழிபட நிற்பவன். கொன்றை மலர் மாலைகளை 
அணிந்தவன். சூலப்படையினைக் கையில் ஏந்தி நிற்பவன். திருநடனம் புரிபவன். ஆமாத்தூரில் 
கோயில் கொண்டுள்ளவன். திருநீறு அணிந்த அவனது வேடத்தைப் போற்றிப் புகழாமல் இருப்பதும் 
அடியவர்களுக்குப் பொருந்துமோ? பொருந்தாதாம்.

குறிப்புரை:     பாடல் நெறி- பாடுதலாகிய வழியில். சூடுதல்- அணிதல். வேடநெறி- உணர்ந்தறிந்தோர்க்கு 
உய்வேடமாகும்படி பயன் செய்யும் மெய்வேட மார்க்கம் திருமந்திரம் 1660). வேடமும்- மெய்வேடம் போலவே 
பூண்ட பொய் வேடமும், வேடமே, ஒரு வேடமாக மதிக்கப்படுமோ? படாது. 'வேடநெறி நில்லார் வேடம்
பூண்டு என்ன பயன்?' (திருமந்திரம் 240) சிவவேடமே மெய்ப்பொருள் எனத்தொழுது கொண்டொழுகுதலே 
வேடநெறி. 'மாலறநேய மலிந்தவர் வேடமும்.......அரன்' என்பது  சிவஞானபோதம் (சூ.12).

    Behold! It is Civan, Lord of Thiru-aamaath-thoor. He is the embodiment of all
Vedic songs in the best musical tone. He wears on His head the cool fresh cassia flowers. 
He holds in one of His hands the trident. He likes to perform the cosmic dance whenever 
He can. He has manifested Himself in the temple in Thiru-aamaath-thoor and exhibits His 
beauty in the best sacred form. Those people who do not follow the divine knowledge of 
our Lord and who do not worship His form smeared with holy ashes in the temple are people 
of falsehood in their life. Let us worship and glorify His appearance as it is.

1944.    சாமவரைவில்லாகச்சந்தித்தவெங்கணையால் 
    காவல்மதிலெய்தான்கண்ணுடைநெற்றியான்
    யாவருஞ்சென்றேத்தும்ஆமாத்தூரம்மானத் 
    தேவர்தலைவணங்குந்தேவர்க்குந்தேவனே.        6

    சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால் 
    காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான், 
    யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான், அத் 
    தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.

    cAmavarai vil Akac cantitta vegkaNaiyAl 
    kAval matil eytAn, kaN uTai neRRiyAn, 
    yAvarum cenRu Ettum AmAttUr ammAn,at 
    tEvar talaivaNagkum tEvarkkum tEvanE.

பொருள்:     மேருமலையை வில்லாக வளைத்தவன் சிவன். கொடிய காளையைக் 
கொண்டு முப்புரங்களை எரித்து அழித்தவர் சிவபெருமான். அவர் நெற்றிக் கண்ணை உடையவர் 
ஆவார். யாவராலும் வணங்கப் பெறும் நிலையில் அவர் திருஆமாத்தூர் தலத்தில் கோயில் 
கொண்டுள்ளார். தேவாதி தேவனாக விளங்கும் அவரை நாளும் பிற தேவர்களும் வணங்கி மகிழ்வர்.

குறிப்புரை:     சாமவரை என்பது மதில்; திரிபுரம். யாவரும் -சாவாதவர், பிறவாதவர், 
தவமே மிக உடையார்  மூவாதபல் முனிவர் எல்லோரும் (தி.1 ப.12. பா.6). அகரச்சுட்டு - உலகறிகட்டு, 
பண்டறிகட்டுமாம். தேவர் தலைவணங்கும் தேவர்-  இந்திரன், பிரமன், மால் முதலியோர். 
தேவர்க்கும் தேவன்-தேவதேவேசனாகிய சிவபிரான். 'தேவர்கோ அறியாத தேவதேவன் செழும் 
பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை மூவர்கோனாய் நின்ற முதல்வன்' (திருவாசகம்) 
அம்மான் - தேவனே என்று முடிக்க.

    Behold! It is Civan, the Lord of Thiru-aamaath-thoor. Our Lord held the golden 
mount Meru as His bow and shot an arrow which had a fiery tip and destroyed the three 
flying forts the asuraas which had a strong defence arrangement. Our Lord has a third 
eye at the center of His forehead. He deserves to be prayed and worshipped by one 
and all in the universe including the devaas and Indra because He is the Chief and 
Supreme of all devaas. He is manifested in the temple at Thiru-aamaath-thoor.

1945.    மாறாதவெங்கூற்றைமாற்றிமலைமகளை 
    வேறாகநில்லாதவேடமேகாட்டினான் 
    ஆறாததீயாடியாமாத்தூரம்மானைக் 
    கூறாதநாவெல்லாங்கூறாதநாக்களே.        7

    மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை 
    வேறாக நில்லாத வேடமே காட்டினான் 
    ஆறாத தீஆடி,ஆமாத்தூர் அம்மானைக் 
    கூறாத நாஎல்லாம் கூறாத நாக்களே!

    mARAta veg kURRai mARRi, malaimakaLai 
    vERAka nillAta vETamE kATTinAn, 
    ARAta tI ATi, AmAttUr ammAnaik 
    kURAta nA ellAm kURAta nAkkaLE!

பொருள்:     தன் கருத்தில் மாற்றமின்றி மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்ந்து செல்ல 
வந்தவனே எமன். அவனை வதைத்தவரே சிவபெருமான். அவர் தம் உடம்பின் ஒரு பாகத்தில் 
உமாதேவியைக் கொண்டுள்ளார். நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவரும் அவரே ஆவார். 
அவர் திருஆமாத்தூர் தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரது பெருமைகளைப் புகழ்ந்து கூறாத 
நாக்கள் பயனற்ற நாக்குகளேயாம். 

குறிப்புரை:     மாறாத கூற்றை மாற்றி - ஒழியாத இயமனை ஒழித்து. மலைமகள்- இமாசல குமாரி 
(அம்பிகை) வேறாக நில்லாத வேடம் - அர்த்தநாரீசுவர வடிவம். ஆறாத - தணியாத. கூறாத - புகழ்ந்து 
வாழ்த்தாத கூறாத நாக்களே; ஊமைகளே என்றபடி.

    Behold! It is Civan, Lord of Thiru-aamaath-thoor. He has the graceful form of oneness 
with goddess Umaa since He has given the left portion of His body to His consort, daughter of 
mount Himalayas. He dances in the eternal fire whenever He wants to. He subdued the all powerful 
god of death. Those people who do not recite the holy name of our Lord might have tongues in the 
mouth, but they are tongues in vain.

1946.     தாளாலரக்கன்றோள்சாய்த்ததலைமகன்றன் 
    நாளாதிரையென்றேநம்பன்றன்நாமத்தால் 
    ஆளானார்சென்றேத்துமாமாத்தூரம்மானைக் 
    கேளாச்செவியெல்லாங்கேளாச்செவிகளே.        8

    "தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன் 
    நாள் ஆதிரை" என்றே, நம்பன்தன் நாமத்தால், 
    ஆள்ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக் 
    கேளாச் செவிஎல்லாம் கேளாச் செவிகளே!

    "tALAl arakkan tOL cAytta talaimakantan 
    nAL Atirai" enRE, nampantan nAmattAl, 
    AL AnAr cenRu Ettum AmAttUr ammAnaik 
    kELAc cevi ellAm kELAc cevikaLE!

பொருள்:     கயிலாய மலையை ஆணவத்தால் தூக்க முயன்ற இராவணனின் ஆற்றலைத் 
தன் காலால் அழித்தவரே சிவபெருமான்.  அவருக்கு உரிய நாள் ஆதிரைத் திருநாள்.  அடியவர்கள் 
ஆதிரையான் என்று அன்போடு கூறி அவரை வழிபடுவர். அவர் திருஆமாத்தூர் தலத்துள் கோயில் 
கொண்டுள்ளார். அவரைப் பற்றிய புகழ்மொழிகளைக் கேளாத செவிகள் கேளாச் செவிகளே
(செவிட்டுச் செவிகளேயாம்).

குறிப்புரை:     தாள் - திருவடி. தலைமகன்- கோமகன் (பா.2) நாள் ஆதிரை - திருவாதிரை  நாள்.
நம்பன்- விருப்பிற்குரியவன் (சிவன்) ஆள் -அடிமை. நாமத்தால்-திருவைந்தெழுத்தால்;
திருப்பெயர்களாலுமாம். நாமத்தால் ஏத்தும் ஊர் என்க. கேளாச் செவிகளே-  செவிட்டுக் காதுகளே
என்றபடி. கேளாமை - சிவபுராணம். சிவகீர்த்தி, சிவநாமம் முதலியவற்றைக் கேட்டல் இல்லாமை.

    Behold! It is Civan, Lord of Thiru-aamaath-thoor. Raavanan, the king of Sri 
Lanka never faced defeat in any war in his life. Our Lord subdued the mightiness of
Raavana's shoulders by pressing the mountain top with His toe. The most auspicious day 
for our Lord is Aathirai day. Those devotees who realise this fact about the
Aathirai day, go to the temple on this day and recite sacred songs, worship Him 
and hear His glory. Those ears which fail to hear the glory of our Lord are merely 
deaf ears.

1947.     புள்ளுங்கமலமுங்கைக்கொண்டார்தாமிருவர் 
    உள்ளுமவன்பெருமைஒப்பளக்குந்தன்மையதே 
    அள்ளல்விளைகழனியாமாத்தூரம்மானெம் 
    வள்ளல்கழல்பரவாவாழ்க்கையும்வாழ்க்கையே.        9

    புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம் இருவர் 
    உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும்தன்மையதே? 
    அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான், எம் 
    வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.

    puLLum kamalamum kaikkoNTArtAm iruvar 
    uLLumavan perumai oppu aLakkum tanmaiyatE? 
    aLLal viLaikazani AmAttUr ammAn, em 
    vaLLal, kazal paravA vAzkkaiyum vAzkkaiyE?

பொருள்:     கருட வாகனத்தைக் கொண்ட திருமாலும், தாமரை மலர்மீது வீற்றிருக்கும் 
பிரமனும் போற்றும் சிவனின் பெருமை நம்மால் அளந்தறியக் கூடியதோ? வளமான வயல்கள் 
நிறைந்த திருஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் திருவடிகளைப் பரவாத 
வாழ்க்கையும் நல்வாழ்க்கை ஆகுமோ? ஆகாதாம் என்க.

 குறிப்புரை:     புள் - கருடப் பறவை. கமலம் - தாமரை. கைக்கொண்டார்- ஊர்தியாக் கொண்ட 
மால், ஆசனமாகக் கொண்ட அயன், உள்ளும் அவன் -தியானிக்கப்படும் அப்பரமசிவனது. ஒப்பு அளக்கும் 
தன்மையதே - ஒப்பாக அளவிடப்பெறும் தன்மையை உடையதோ! இல்லை என்றபடி. அள்ளல் -சேறு. 
வள்ளல்- எல்லாம் அருளும் பரம்பொருளினும் வேறு வள்ளல் உண்டோ? கழல் - (தானியாகு பெயர்) 
திருவடி. பரவா -  வாழ்த்தாத. வாழ்க்கையோ - ஒரு வாழ்வாகு(மதிக்கப்படு)மோ? வாழ்வன்று என்றபடி. 

    Behold! It is Civan, our Lord who is manifested in Thiru-aamaath-thoor. The demigod 
Vishnu has the eagle for his transport. The other creator god Brahma is seated in the lotus 
flower. They both pray and worship our Lord Civan whose abode is Thiru aamaath-thoor.
Is the glory of our Lord worshipped by these two, measurable to our small minds? No. 
In Thiru-aamaath-thoor our Lord's temple is surrounded by paddy fields, very fertile 
and the ground, muddy and full of water. Is it a life worthy to be noted, if it does 
not praise our God Supreme of Thiru-aamaath-thoor?

1948.     பிச்சைபிறர்பெய்யப்பின்சாரக்கோசாரக் 
    கொச்சைபுலால் நாறஈருரிவைபோர்த்துகந்தான் 
    அச்சந்தன்மாதேவிக்கீந்தான்றனாமாத்தூர் 
    நிச்சல்நினையாதார்நெஞ்சமேநெஞ்சமே.        10

    பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோ சார, 
    கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான்     (திருத்: ஈ/ஈர்)
    அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான்தன் - ஆமாத்தூர் 
    நிச்சல் நினையாதார் நெஞ்சமே நெஞ்சமே?

    piccai piRar peyya, pin cAra, kO cAra, 
    koccai pulAl nARa, Ir urivai pOrttu ukantAn- 
    accam tan mA tEvikku IntAn tan--AmAttUr 
    niccal ninaiyAtAr nenjcamE nenjcamE?            

பொருள்:     சிவபெருமான் பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி பிறர் இடும் பிச்சையை 
விரும்பி  வருவார். புலால் நாறும் யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவரும் 
அவரே ஆவார். அவரது செயல் கண்டு அச்சமுற்று நின்றாள் உமாதேவி. அவளைத் தன் உடம்பின்
ஒரு பாகமாகக்  கொண்டு அருளியவரும் அவரே. அவர் ஆமாத்தூர் தலத்துள் கோயில் 
கொண்டுள்ளார். அவரைத் தினமும் நினைந்து போற்றாதார் நெஞ்சம், நெஞ்சாகுமோ?
ஆகாதாம் என்க.

குறிப்புரை:     கோ - தலைமை. சார- (தன்னையே) பொருந்த. கொச்சை-இகழ்வு. உரிவை தோல்-
யானைத்தோல்  போர்த்தும். மாயாதிருத்தல் பற்றிக் 'கோசார' என்றார் (சிந்தாமணி 2787 உரை 
பார்க்க) 'யானையின்  பசுந்தோல் பிறர் உடம்பிற்பட்டால் கொல்லும் என்று உணர்க' என்றார் 
நச்சினார்க்கினியர். பின்சாரப் போர்த்துகந்தான், கோசாரப் போர்த்துகந்தான் என்றியைத்துப் 
பொருள் உணர்க.  'கோசாரங்' என்று பாடபேதம் உண்டு என்று காட்டியுள்ளார் மதுரை 
ஞானசம்பந்தப்பிள்ளை. கோ - மலை, யானைக்கு உவமை ஆகுபெயராகக் கொண்டு. 
யானை சார எனவும் பொருந்தும். தன்மாதேவிக்கு அச்சம் ஈந்தான்  என்றது யானையை 
உரித்த வரலாறு பற்றியது.  (பார்க்க தி. 1 ப. 75 பா. 7). 'மலைக்கு மகள் அஞ்ச மதகரியை 
உரித்தீர்' (தி.7 ப.9 பா.1). 

    Our Lord moves into the cosmos and begs for alms. The young ladies give alms
to Him and follow Him. Once, He faced an elephant, killed it and removed its hide, which had 
the bad smell of the dead elephant's flesh. He made it His overcoat and happily appeared 
before Umaa and dispelled her fear. The hearts of those who do not think, praise and 
worship our Lord of Thiru-aamaath-thoor daily do not deserve to be called hearts at all.

1949.     ஆடலரவசைத்த ஆமாத்தூரம்மானைக்
    கோடலிரும்புறவிற்கொச்சைவயத்தலைவன் 
    நாடலரியசீர்ஞானசம்பந்தன்றன் 
    பாடலிவைவல்லார்க்கில்லையாம்பாவமே.        11

    ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை, 
    கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன் - 
    நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன்தன் 
    பாடல்இவை வல்லார்க்கு இல்லைஆம், பாவமே.

    ATal aravu acaitta AmAttUr ammAnai, 
    kOTal irum puRavin koccaivayat talaivan- 
    nATal ariya cIr njAnacampantan tan- 
    pATal ivai vallArkku illai Am, pAvamE.

பொருள்:     ஆடும் அரவத்தை அரையில் அணிந்த ஆமாத்தூர் அண்ணலே சிவபெருமான் 
ஆவார். அவரைப் புகழ்ந்து கொச்சை வயம் என்றழைக்கப் பெறும் சீர்காழிப்பதியில் அவதரித்த         
ஞானசம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்கள் பாடியருளியுள்ளார். அப்பாடல்களைப் பாட 
வல்லவர்க்கு பாவம்  இல்லையாம். 

குறிப்புரை:     ஆடல் அரவம்- படம் விரித்து ஆடுதலை உடைய பாம்பு. அசைத்த- கச்சாகக் கட்டிய. 
கோடல்-வெண்காந்தள். இரும்புறவு - பெரியகாடு. முல்லை நிலம். புறவு, கொச்சைவயம் காழியின் 
வேறு பெயர்கள் - பாவம் இல்லை ஆகும் என்க.

    Our saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi. This city, forest oriented, 
is a very fertile place. Thiru-gnana-Sambandar has attained high glory. He came to 
Thiru-aamaath-thoor and praised our Lord, worshipped Him and sang ten Tamil verses 
containing the supreme glory of our Lord. Our Lord wears the serpent around His waist. 
Those devotees who can recite these hymns of Thiru-gnana Sambandar will have no sins 
at all in their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            44ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 44th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 181                பதிக எண்:  45.

45. திருக்கைச்சினம்                45. THIRUK-KAICH-CHINAM

பண்: சீகாமரம்                    Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    திருவாரூருக்குத் தெற்கிலுள்ள திருநெல்லிக்கா என்னும் தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 
3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது காவிரிக்குத் தென்கரைத் தலங்களுள் 122ஆவது ஆகும். திருவாரூர் 
திருத்துறைப்பூண்டி பேருந்து வழியிலுள்ளது.

    இந்திரன் இங்கு மணலால் சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளுவித்துப் பூசித்தான். 
முடிவில் அதைக் கையினால் எடுக்க முயன்றபோது அது எடுக்க வாராமல் அவனது கை
அடையாளம் அவரது திருமேனியில் பதிந்துவிட்டது. ஆதலின் இப்பெயர் பெற்றது என்பது. 
(சின்னம் - அடையாளம். கைச்சின்னம் - என்பது கைச்சினம் என்று ஆயிற்று).

     இறைவரது திருப்பெயர் - கைச்சினநாதர். இறைவியாரது திருப்பெயர் - வெள்ளை நாயகி. 
 தீர்த்தம்- இந்திர தீர்த்தம். வச்சிரதீர்த்தம் என்பன. தலமரம்- கோங்கிலவு. தேவேந்திரன் திருணபிந்து 
இவர்கள் பூசித்துப் பேறு பெற்றனர். இது ஞானசம்பந்தப் பெருந்தகையாரால் பாடப்பெற்றது. 
அவருடைய பதிகம் ஒன்று இருக்கின்றது. மதுரை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்ட கோயில் இது.

பதிக வரலாறு

    சண்பை நகர் வேந்தர் சொல்வேந்தரொடு திருவாஞ்சியத்தில் திருநீலகண்டப் பெருமானை
வணங்கினார். தலையாலங்காடு முதலிய தலங்களையும் பணிந்தார். திருவாரூர் சென்றார். 
திருக்காறாயில், தேவூர், திருநெல்லிக்கா என்னும் தலங்களை வழிபட்டுத் திருக்கைச்சினத்தைப் 
பரவிப் பாடிய திருப்பதிகம் இது.

            திருச்சிற்றம்பலம்

1950.     தையலோர்கூறுடையான்தண்மதிசேர்செஞ்சடையான் 
    மையுலாமணிமிடற்றான்மறைவிளங்குபாடலான் 
    நெய்யுலா மூவிலைவேலேந்திநிவந்தொளிசேர் 
    கையுடையான்மேவியுறைகோயில்கைச்சினமே.        1

    தையல் ஓர் கூறு உடையான், தண்மதி சேர் செஞ்சடையான், 
    மை உலாம் மணிமிடற்றான், மறை விளங்கு பாடலான், 
    நெய் உலாம் மூஇலைவேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் 
    கை உடையான், மேவி உறை கோயில் - கைச்சினமே.

    taiyal Or kURu utaiyAn, taNmati cEr cenjcataiyAn, 
    mai ulAm maNimiTaRRAn, maRai vilagku paTalAn,             
    ney ulAm mU ilaivEl Enti nivantu oLi cEr 
    kai utaiyAn, mEvi uRai kOyil-kaiccinamE.

பொருள்:     சிவன் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்டவன். பிறைச்சந்திரனைச் 
சூடிய சிவந்த சடையினன். நீலகண்டத்தினைக் கொண்டவன். மறைகளை விரித்து 
இசைப்பவன். நெய் பூசப்பெற்ற மூவிலைச் சூலத்தைக் கையில் ஏந்தியவன். ஒளிதிகழும் 
தேவேந்திரனின் கைரேகை பதியப் பெற்றவன். அவன் விரும்பி உறைகின்ற திருத்தலமே 
கைச்சினம் ஆகும்.

குறிப்புரை:     தையல் -உமாதேவியார். கூறு - இடப்பாகம். மை - மேகம். உலாம் - ஒத்த. 
நிவந்து - மேலோங்கி. ஒளி - தீ. கைச்சினம் - இந்திரனது கைச்சின்னம் (குறி). சிவபிரான்         
திருமேனியில் பட்டது பற்றிய காரணப்பெயர். 1, 2, 3, 6 ஆம் பாடல்களில் உணர்த்திய 
மறைப்பாடல் இத்தலத்தின் விசேடமாதல் அறியலாம்.

    Oh! It is Civan, the Lord of Thiruk-kaich-chinam. He shared His left side body 
with His consort Umaa. He retains the cool baby moon in His red matted hair. His neck 
is dark blue in colour. He sings the four Vedas whenever He wants to. He holds in one 
of His hands the trident to which the ghee is applied for its maintenance. The impression 
of Indra's hand is glistening in the Siva Lingam. Indira tried his best to remove the Siva 
Lingam, he created in sand for his worship, to be taken to his Indira Loka; he could not 
lift it; he could not even move it. That impression of his palm could be seen forever 
in the Siva Lingam with his fingerprint. This Lord desired to manifest Himself in the 
temple in Thiruk-kaich-chinam.

1951.    விடமல்குகண்டத்தான்வெள்வளையோர்கூறுடையான் 
    படமல்குபாம்பரையான்பற்றாதார்புரமெரித்தான் 
    நடமல்குமாடலினான்நான்மறையோர்பாடலினான் 
    கடமல்குமாவுரியானுறைகோயில்கைச்சினமே.        2

    விடம் மல்கு கண்டத்தான், வெள்வளை ஓர்கூறு உடையான், 
    படம் மல்கு பாம்பு அரையான், பற்றாதார் புரம் எரித்தான், 
    நடம் மல்கும் ஆடலினான், நான்மறையோர் பாடலினான், 
    கடம் மல்கு மா உரியான், உறை கோயில் - கைச்சினமே.

    viTam malku kaNTattAn, veLvaLai Or kURu uTaiyAn, 
    paTam malku pAmpu araiyAn, paRRAtAr puram erittAn, 
    naTam malkum ATalinAn, nAnmaRaiyOr paTalinAn,            
    kaTam malku mA uriyAn, uRai kOyil-kaiccinamE.

பொருள்:     சிவன், கண்டத்தில் விடத்தினை உடையவன். உமாதேவியை ஒரு பாகமாகக் 
கொண்டவன். படமுடைய பாம்பினை அணிந்தவன். பற்றற்ற அசுரர்களின் முப்புரங்களை
எரித்து அழித்தவன். நடனமிடுபவன். நான்மறைகளில் பொருந்தியவன். யானையின்
தோலைப் போர்த்திக் கொண்டவன். அவனே கைச்சினம் என்ற தலத்தில் கோயில்
 கொண்டுள்ளான்.

குறிப்புரை:     விடம்- நஞ்சு. மல்கு - நிறைந்த. கண்டத்தான்- கழுத்தினன். பற்றாதார்-பகைவர். 
(தாரகாட்சன் முதலிய மூவர்). நடம் - தாண்டவத்தின் வகை. ஆடல் -ஆடுதல். நள்ளிருளில் நட்டம்
பயின்றாடும் நாதன் (திருவாசகம்). கடம் - மதநீர், காடுமாம். உரியான் - தோலுடையான்.

    Oh! It is Civan, our Lord at Thiruk-kaich-chinam. His neck is dark blue 
in colour because He consumed the poison of the ocean. On His left side, His consort 
Umaa Devi is embedded, she wears white bangles. He has admitted on His waist the 
dancing snake. He burnt the three flying forts of the repugnant asuraas. His vocation 
is the cosmic dance, whenever He wants He performs it. He chants the songs of the four 
Vedas. He killed the rutted elephant, removed its skin and covered His body with its hide. 
This Lord Civan desired to be manifested in Thiruk-kaich-chinam.

1952.     பாடலார்நான்மறையான்பைங்கொன்றைபாம்பினொடும் 
    சூடலான்வெண்மதியந்துன்றுகரந்தையொடும் 
    ஆடலானங்கையனலேந்தியாடரவக்
    காடலான்மேவியுறைகோயில்கைச்சினமே.        3

    பாடல் ஆர் நால்மறையான்; பைங்கொன்றை பாம்பினொடும் 
    சூடலான், வெண்மதியம் துன்று கரந்தையொடும்; 
    ஆடலான், அங்கை அனல் ஏந்தி; ஆடுஅரவக் 
    காடலான்; மேவி உறை கோயில்-கைச்சினமே.

    pATal Ar nAlmaraiyAn; paigkonRai pAmpinoTum         
    cUTalAn, veNmatiyam tunRu karantaiyoTum;           
    ATalAn agkai anal Enti; Atu aravak             
    kAtalAn; mEvi uRai kOyil-kaicinamE.                

பொருள்:     ஈசன், நான்மறைகளாக விளங்குபவன். கொன்றை மலர் மாலைகளை அணிந்தவன். 
பாம்பினை அரையில் அணிந்தவன். வெண்ணிலவையும், திருநீற்றுப் பச்சையும் தரித்து நெருப்பை 
ஏந்தி ஆடுபவன். சுடுகாட்டில் மேவி உறையும் அவனே கைச்சினம் என்ற தலத்திலும் கோயில் 
கொண்டுள்ளான்.

குறிப்புரை:     சூடல் - சூடுதல். துன்று - நெருங்கிய. கரந்தை- பூ. காடலான்- காட்டினன். 
அரவக்காடலான் - சடைக்காடு, தாமரைக்காடு. வெள்ளக்காடு போல மிகுதியை உணர்த்தியது. 

    Oh! It is Civan, Lord of Thiruk-kaich-chinam. He is the author of the four Vedas, 
which contain musical songs. He has adorned His head with fresh cassia flowers. He has 
kept also the serpent on His matted hair. He retains on His head the young baby moon 
along with the well-grown tender leaves of the bael plant. His main vocation is to dance 
whenever He desires to do it. He holds in His good-looking hands fire. He dances in the 
cremation ground and wears dancing snakes around His waist. This Lord Civa has desired 
to be manifested in the temple in Thiruk-kaich-chinam.

1953.     பண்டமரர்கூடிக்கடைந்தபடுகடல்நஞ்
    சுண்டபிரானென்றிறைஞ்சியும்பர்தொழுதேத்த 
    விண்டவர்கள்தொல்நகரம்மூன்றுடனேவெந்தவியக் 
    கண்டபிரான்மேவியுறைகோயில்கைச்சினமே.        4

    "பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு 
    உண்ட பிரான்" என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த, 
    விண்டவர்கள் தொல்-நகரம்மூன்று உடனேவெந்து அவியக் 
    கண்ட பிரான் மேவி உறை கோயில் - கைச்சினமே.

    "paNTu amarar kUtik kaTainta patu kaTal nanjcu         
    uNTa pirAn' enRu iRainjci umpar tozutu Etta, 
    viNTavarkaL tol-nakaram mUnRu utanE ventu aviyak     
    kaNTa pirAn mEvi uRai kOyil-kaiccinamE.            

பொருள்:     முன்பு ஒருகாலத்தில் தேவர்களும் அசுரர்களும் ஒன்றுசேர்த்து பாற்கடலைக் 
கடைந்தனர். அப்போது அதிலிருந்து நஞ்சு தோன்றியது. அதனைச் சிவன் உண்டருளினார்.  அவரை 
அமரர் தொழுது போற்றினர். பகைமை உணர்வு கொண்டதால் திரிபுரத்தசுரர் என்ற அசுரர்களின்
 முப்புரங்களையும் எரித்து அழித்தவரும் சிவனே. அவரே விரும்பி கைச்சினம்  என்ற தலத்தில் 
கோயில் கொண்டுள்ளார் என்க.

குறிப்புரை:     பண்டு - முன்பு. அமரர் - தேவர். படுகடல் - ஆழ்கடல். விண்டவர்கள்        
தொல்நகரம்- பகைவர்களின் பழைய திரிபுரம். 

    Oh! It is Civan, Lord of Thiruk-kaich-chinam. In the olden days, 
the devaas and the asuraas jointly churned the ocean of milk. A very severe 
poison came out of the sea which was about to destroy the whole universe. 
Then our Lord swallowed the poison and kept it at His throat and prevented it 
from going down to the stomach. All the devaas and all the celestials worshipped 
our Lord for saving their life.Our Lord helped the devaas by relieving them of 
their intolerable sufferings inflicted on them by the asuraas, by destroying 
their three flying fortresses and killing them completely. Thus Lord Civan 
desired to be manifested in Thiruk-kaich-chinam.

1954.     தேய்ந்துமலிவெண்பிறையான்செய்யதிருமேனியினான் 
    வாய்ந்திலங்குவெண்ணீற்றான்மாதினையோர்கூறுடையான் 
    சாய்ந்தமரர்வேண்டத்தடங்கடல்நஞ்சுண்டனங்கைக் 
    காய்ந்தபிரான்மேவியுறைகோயில்கைச்சினமே.        5

    தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான், 
    வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர் கூறு உடையான், 
    சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சு உண்டு அநங்கைக் 
    காய்ந்த பிரான், மேவி உறை கோயில் - கைச்சினமே.

    tEyntu mali veNpiRaiyAn, ceyya tirumEniyinAn,         
    vAyntu ilagku veNnIRRAn, mAtinaiOr kURu uTaiyAn,     
    cAyntu amarar vENTat taTagkaTal nanjcu uNTu anagkaik    
    kAynta pirAn, mEvi uRai kOyil-kaiccinamE.        

பொருள்:     சிவபெருமான் தேய்ந்து மெலிந்த சந்திரனுக்கு அபயம் அளித்து அதனைத் 
தலையில் சூடிக் கொண்டுள்ளார். அவர் சிவந்த மேனியினைக் கொண்டவர் ஆவார். அவர் 
வெண்ணீற்றை அணிந்திருப்பார். மங்கையை ஒரு பாகமாகக் கொண்டு காட்சியளிப்பார். 
அமரர் வேண்ட கடல் நஞ்சை உண்டவர் அவரே. காமனைக் காய்ந்தவரும் அவரே. அவர் 
கைச்சினம் என்ற தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     தேய்ந்து மலி - குறைந்து வளரும். திங்களுக்கு இயல்பு அடைமொழி. இது 
சிவபெருமான் திருமுடிமேற் பிறைக்கு அன்று. இலங்கு- விளங்கும். மாது - உமாதேவியார். 
காய்ந்து - மெலிந்து, ஓடியெனலுமாம். அநங்கை -அநங்கனை, உருவிலியாகிய மன்மதனை. 
பெருந்திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் (ப.349, பா.9).
மாய்ந்தன தீவினை ... அநங்கைக் காய்ந்தபிரான் கண்டியூர் எம்பிரான் (தி.4 பா.93 ப.9). 
அநங்கனை என்பது அநங்கை எனக் குறைந்தது போலும்.

    Oh! It is Civan, Lord of Thiruk-kaich-chinam. Our Lord retains the moon which 
fades and grows. His entire body is bright red. He has embedded His consort on the 
left side of His body. He consumed the poison emitted out of the ocean. He burnt 
the formless god of love for his misdeed. This Lord Civa desired to be manifested 
in Thiruk-kaich-chinam.

1955.    மங்கையோர்கூறுடையான்மன்னுமறைபயின்றான் 
    அங்கையோர்வெண்டலையானாடரவம்பூண்டுகந்தான் 
    திங்களொடுபாம்பணிந்தசீரார்திருமுடிமேல் 
    கங்கையினான்மேவியுறைகோயில்கைச்சினமே.        6

    மங்கை ஓர் கூறு உடையான், மன்னும் மறை பயின்றான், 
    அங்கை ஓர் வெண்தலையான், ஆடுஅரவம் பூண்டு உகந்தான், 
    திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திருமுடிமேல் 
    கங்கையினான், மேவி உறை கோயில் - கைச்சினமே.

    magkai Or kURu uTaiyAn, mannum maRai payinRAn,             
    agkai Or veNtalaiyAn,Atu aravam pUNtu ukantAn,    
    tigkaLotu pAmpu aNinta cIr Ar tirumutimEl     
    kagkaiyinAn, mEviuRai kOyil-kaiccinamE.        

பொருள்:     சிவன், மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவன். மறைகளை ஓதுபவன். 
கையில் பிரம கபாலத்தை ஏந்தியவன். ஆடும் பாம்பினை அரையில் அணிந்திருப்பவன். 
திங்களையும் பாம்பையும் தலைமேல் கொண்டவன். தலையில் கங்கை நதியையும் தாங்கியவன். 
அவனே கைச்சினம் என்ற தலத்தில் கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     அங்கையோர் வெண்டலையான்- பிரமகபாலத்தை ஏந்திய கையன். 
பூண்ட  அரவம்-அணிந்த பாம்பு. முறையே திருமேனியிலும் திருமுடியிலும் இருத்தல்பற்றி 
ஆதலின் கூறியது கூறலன்று. (ப.155 பா.7 பார்க்க).

    Oh! It is Civan, our Lord at Thiruk-kaich-chinam. His consort is embedded on
the left side of His body. He used to chant the songs of the four Vedas. He carries in 
His hand the white human skull. He wears the dancing serpent on His body and feels happy. 
He has adorned His head with the moon, the snake and the lady of Ganges. This Lord Civan 
desired to be manifested in Thiruk-kaich-chinam.

1956.    வரியரவேநாணாகமால்வரையேவில்லாக
    எரிகணையால்முப்புரங்களெய்துகந்தஎம்பெருமான் 
    பொருசுடலையீமப்புறங்காட்டான்போர்த்ததோர் 
    கரியுரியான்மேவியுறைகோயில்கைச்சினமே.        7

    வரிஅரவே நாண்ஆக, மால்வரையே வில் ஆக, 
    எரிகணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான், 
    பொரி சுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்தது ஓர் 
    கரிஉரியான், மேவி உறை கோயில் - கைச்சினமே.

    variaravE nAN Aka mAlvaraiyE vil Aka             
    erikaNaiyAl muppuragkaL eytu ukanta emperumAn         
    pori cuTalai Emap puragkATAn, pOrttatu Or         
    kariuriyAn, mEviuRai kOyil-kaiccinamE.            

பொருள்:     வாசுகி என்ற பாம்பினை நாணாகவும், பெருமைமிக்க மேருமலையை 
வில்லாகவும் , அக்கினியை நெருப்பாகவும் கொண்டு, சிவபெருமான் முப்புரங்களை 
எரித்து அழித்தார்.  அவரே சுடுகாட்டில் உறைபவர். யானையின் தோலை உரித்துப் 
போர்த்துக் கொள்பவர்.  அவரே கைச்சினம் என்ற தலத்தினுள்ளும் கோயில் கொண்டுள்ளார்.

குறிப்புரை:     வரி அரவு - வாசுகியென்னும் பாம்பு. நாண் - வில்லின் நாண் (கயிறு). 
மால்வரை - பெரிய மேருமலை. எரி கணை - அக்கினியை நுனியிலுடைய பாணம். சுடலை-
சுடுதலைக் கொண்ட ஈமப்புறங்காடு-புறத்தேயுள்ள ஈமக்காடு. கரிஉரி-   யானைத்தோல். 
போது - மலரும் பருவத்து. நீதியினால் ஏத்த - முறைப்படித் துதிக்க.

    Oh! It is Civan, our Lord at the Thiruk-kaich-chinam. Our Lord bent mount Meru 
as His bow, used the striped snake as the rope, at the tip of the arrow He fixed a 
fireball and then shot the arrow and completely destroyed the three flying forts and 
its people who lived there. His vocation is to dance in the cremation ground where people 
strew fried rice. He killed the rutted elephant and covered His body using its hide as 
His coat. This Lord Civan desired to be manifested Himself in Thiruk-kaich-chinam.

1957.     போதுலவுகொன்றைபுனைந்தான்திருமுடிமேல் 
    மாதுமையாளஞ்சமலையெடுத்தவாளரக்கன் 
    நீதியினாலேத்தநிகழ்வித்துநின்றாடும் 
    காதலினான்மேவியுறைகோயில்கைச்சினமே.        8

    போது உலவு கொன்றை புனைந்தான், திருமுடிமேல்; 
    மாதுஉமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் 
    நீதியினால் ஏத்த நிகழ்வித்து, நின்று ஆடும் 
    காதலினான்; மேவி உறை கோயில் - கைச்சினமே.

    pOtu ulavu konRai punaintAn tirumuTimEl;        
    mAtu umaiyAL anjca malai eTutta vAL arakkan         
    nItiyinAl Etta nikazvittu, ninRu ATum             
    kAtalinAn; mEvi uRai kOyil-kaiccinamE.            

பொருள்:     சிவபெருமான், கொன்றை மலர்மாலைகளை அணிந்தவர். இராவணன் 
கயிலாயத்தில் இருந்த உமாதேவி அஞ்சுமாறு அம்மலையைத் தூக்க முயன்றான். அவனை  
முறைப்படி அடர்த்துப் பின் அருள் செய்தவரே சிவபெருமான்.  அவர் எப்போதும் திருநடனம் 
புரிபவர். அவர் விரும்பி கோயில் கொண்டுள்ள தலமே கைச்சினம் ஆகும்.  

குறிப்புரை:     திருமுடிமேல் கொன்றை மாலையை அணிந்தான். முடிபோதுகள் பொருந்திய 
கொன்றை. உலவு கொன்றை - வினைத்தொகை. உமையாள் அஞ்ச மலையை எடுத்தான் அரக்கன். 
நிகழ்வித்து- (பண்டுபோல் ) விளங்கச்செய்து. புனைந்தானும் காதலினானும் ஆகிய சிவபெருமான் 
கைச்சினம் என்றியைக்க.

    Oh! It is Civan, Lord of Thiruk-kaich-chinam. When Raavanan, king of Sri Lanka 
tried to lift mount Himalayas, our goddess shuddered. However, Raavanan was driven by our 
Lord to regret and with sincere devotion, finally he praised and worshipped our Lord. 
Our Lord showed mercy to him, graced him and restored his previous position to
him. Our Lord beautifies Himself on His head with budding cassia flowers. He loves 
to dance on the cremation ground. Our Lord Civan desired to be manifested in the 
temple in Thiruk-kaich-chinam.

1958.     மண்ணினைமுன்சென்றிரந்தமாலும்மறையவனும் 
    எண்ணறியாவண்ணமெரியுருவமாயபிரான் 
    பண்ணிசையாலேத்தப்படுவான்றன்நெற்றியின்மேல் 
    கண்ணுடையான்மேவியுறைகோயில்கைச்சினமே.        9

    மண்ணினை முன் சென்று இரந்த மாலும், மறையவனும், 
    எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்;  
    பண் இசையால் ஏத்தப்படுவான்; தன் நெற்றியின்மேல் 
    கண் உடையான், மேவி உறை கோயில்-கைச்சினமே.

    maNNinai mun cenRu iranta mAlum, maRaiyavanum,         
    eN ariyA vaNNam eriuruvam Aya pirAn; 
    paN icaiyAl EttappaTuvAn; tan neRRiyin mEl         
    kaN uTaiyAn; mEvi uRai kOyil-kaiccinamE.        

பொருள்:     மாபலிச் சக்கரவர்த்தியின்பால் குறள் வடிவில் சென்று யாசித்தவனே 
திருமால். மலரின்மீது வீற்றிருப்பவனே பிரமன். அவ்விருவரும் காண முடியா நிலையில் 
நெருப்பு வடிவமாக விளங்கியவரே சிவபெருமான் ஆவார். அவரை அடியவர்கள் பக்தியால் 
பாடிப் பரவுவர். நெற்றிக் கண்ணை  உடைய அவரே கைச்சினம் என்ற தலத்தில் கோயில்
கொண்டுள்ளார்.

குறிப்புரை:     இரந்த - மாவலியினிடத்து யாசித்த. எண் - எண்ணம். பண்ணிசையால் 
ஏத்தப்படுவான், ஏழிசையாய் இசைப்பயனாய் விளங்குதல் பற்றியது.

    Oh! It is Civan, our Lord in Thiruk-kaich-chinam. The demigod Vishnu who requested 
Maavali King to give him three feet of earth and Brahma who is seated in lotus flower - they
both could not even guess the form of our Lord Civa. Our Lord then appeared before them as 
unlimited light. Our Lord has a third eye at the center of His forehead. The devotees with 
proper musical mode pray before our Lord and worship Him. This Lord Civan desired to be 
manifested in Thiruk-kaich-chinam.

10 ஆவது பதிகம் கிடைக்கப்பெறவில்லை.

1959.     தண்வயல்சூழ்காழித்தமிழ்ஞானசம்பந்தன் 
    கண்ணுதலான்மேவியுறைகோயில்கைச்சினத்தைப் 
    பண்ணிசையாலேத்திப்பயின்றஇவைவல்லார் 
    விண்ணவராயோங்கிவியனுலகமாள்வாரே.        11

    தண்வயல் சூழ் காழித் தமிழ் ஞானசம்பந்தன், 
    கண்நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை,
    பண்இசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார், 
    விண்ணவராய் ஓங்கி வியன்உலகம் ஆள்வாரே.

    taNvayal cUz kAzit tamiz njAnacampantan,         
    kaNnutalAn mEvi uRai kOyil kaiccinattai,         
    paN icaiyAl Ettip payinRa ivai vallAr, 
    viNNavarAy Ogki, viyan ulakam ALvArE.

பொருள்:     வயல்களால் சூழப்பெற்ற சீர்காழிப் பதியில் அவதரித்தவரே ஞானசம்பந்தப் 
பெருமான் ஆவார். அவர், கண்ணுதலான் விரும்பி உறையும் கைச்சினத் தலத்தையும், 
இறைவனையும் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். அதனை விரும்பி ஓதும் பக்தர்கள் 
விண்ணவராய் ஓங்கி வியனுலகை ஆளும் சிறப்பினை அடைவார்கள்.

குறிப்புரை:     பண்ணிசையால் ஏத்திப் பயின்ற இவை என்றதால் ஆசிரியருடைய இசை 
உணர்வின் மிகுதியையும் இப்பதிகத்தைப் பலமுறைபாடி மகிழ்ந்ததையும் உணரலாகும். 
வியனுலகம் - சொர்க்கம். வீடுமாம்.வியல் (வியன்) அகலம். 

    Our saint Thiru-gnana-Sambandar hails from Kaazhi, surrounded by cool paddy 
fields. He sang ten musical verses praising our Lord who has a third eye on His 
forehead and Thiruk-kaich-chinam, the city where Lord Civan resides. Those devotees 
who can worship our Lord with these ten musical verses sung by our saint 
Thiru- gnana-Sambandar will rise above as angels and rule the celestial world.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            45ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 45th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 182                பதிக எண் - 46

46.திருநாலூர்மயானம்                46. THIRU-NAALOOR-MAYAANAM
பண் : சீகாமரம்                    Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    திருநாலூர்மயானம் என்னும் இத்திருத்தலமானது கும்பகோணத்திற்கு தென்கிழக்கே 16 
கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இது காவிரிக்குத் தென்கரையில் தொண்ணூற்றாறாவது திருத்தலம் ஆகும்.
கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.  நான்கு வேதங்களும் 
வணங்கிய பதியாகும். ஆபத்தம்பஇருடியால் பூசிக்கப் பெற்றது. இதற்கு  ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று 
இருக்கின்றது. இவ்வூரார் அடிக்கடி சிவபெருமான் திருமேனி மேல் பாம்பு ஊர்வதாகக்கூறி, அதற்குப் 
'பாலூருமலைப் பாம்பும் பனிமதியுமத்தமும் மேலூரும் செஞ்சடையான்' என்னும் இவ்வூர்த் தேவாரப் 
பகுதியைக் காட்டுவர். இறைவர் திருப்பெயர் பலாசவனநாதர். இறைவி திருப்பெயர் பெரியநாயகி.

பதிக வரலாறு

    செம்பொன்மலை வல்லியார் அருள்ஞானப்பாலுண்ட சம்பந்தப் பெருமான் திருஅரதைப் 
பெரும்பாழி முதலாகிய திருத்தலம் பல அடைந்து வழிபட்ட பின்னர்த் திருநாலூர் மயானம் அடைந்து
நயந்து இறைஞ்சிப்பாடிய நீடுதமிழ்த் தொடை இது.

            திருச்சிற்றம்பலம்

1960.     பாலூருமலைப்பாம்பும்பனிமதியும்மத்தமும்
    மேலூருஞ்செஞ்சடையான்வெண்ணூல்சேர்மார்பினான் 
    நாலூர்மயானத்துநம்பான்றனடிநினைந்து 
    மாலூருஞ்சிந்தையர்பால்வந்தூராமறுபிறப்பே.        1

    பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் 
    மேல் ஊரும் செஞ்சடையான், வெண்நூல் சேர் மார்பினான், 
    நாலூர் மயானத்து நம்பான்தன் அடி நினைந்து, 
    மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா, மறுபிறப்பே.

    pAl Urum malaippAmpum panimatiyum mattamum     
    mEl Urum cenjcataiyAn veNnUl cEr mArpinAn,     
    nAlUr mayAnattu nampAn tan aTi ninaintu,    
    mAl Urum cintaiyar pAl vantu UrA, maRupirappE.    

பொருள்:     ஈசன், ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பையும், குளிர்ந்த சந்திரனையும் ஊமத்த 
மலரையும் தன் தலையில் கொண்டவன்! முப்புரிநூல் அணிந்த மார்பினன், நாலூர் மயானத்துள் 
கோயில் கொண்டவன்; அவனது திருவடிகளையே நினைந்து உருகும் அடியவர்களுக்கு மறுபிறப்பு 
வந்து பொருந்தாது.

குறிப்புரை:     பால் - பக்கத்தில். ஊரும் - ஊர்ந்து செல்லும். மத்தம்- ஊமத்தை. நம்பான் -சிவன். 
மால் -அன்பு சிவபத்தி. (பதி -191,பா.6) 'மாலுங்காட்டி வழிகாட்டி வாராவுலக நெறியேறக் 
கோலங்காட்டியாண்டான்' (திருவாசகம் ஆனந்த மாலை 3) 'மால் கொடுத்து ஆவி வைத்தார் 
மாமறைக் காடனாரே' (தி.4 ப. 33 பா.4) 'மாலொடுந் தொழுவார் வினை வாடுமே' (தி.5 ப. 34 பா.9) 
'என்னிடைமாலும் உண்டு இறை என்றன் மனத்துளே' (தி. 5 ப. 35 பா. 5) மறுபிறப்பு வந்து ஊரா - 
மறு பிறவிகள் வந்து பரவாவாம். ஊரா - செலுத்தா எனலுமாம்.

    See! It is Civan, our Lord in Thiru-naaloor-mayaanam. Our Lord wears the snake,
which creeps over His matted hair. Along with this our Lord retains the cool moon. 
In the red matted hair, all above these, datura flowers are to be found. He has put on 
the white sacred thread over His chest. Those devotees who pray in their minds to the 
holy feet of our Lord at Thiru-naaloor-mayaanam and are allured by their piety to Him
will never suffer the cycle of rebirth.

1961.    சூடும்பிறைச்சென்னிச்சூழ்காடிடமாக 
    ஆடும்பறைசங்கொலியோடழகாக 
    நாடுஞ்சிறப்போவாநாலூர்மயானத்தைப் 
    பாடுஞ்சிறப்போர்பாற்பற்றாவாம்பாவமே.        2

    சூடும், பிறை சென்னி; சூழ்காடு இடம் ஆக 
    ஆடும் பறைசங்கு ஒலியோடு அழகு ஆக; 
    நாடும் சிறப்பு ஓவா நாலூர் மயானத்தைப் 
    பாடும் சிறப்போர்பால் பற்றாஆம்,பாவமே.

    cUTum, piRai cenni;cUzkATu iTam Aka     
    ATum paRaicagku oliyOTu azaku Aka;     
    nATum ciRappu Ova nAlUr mayAnattaip     
    pATum ciRappOrpAl paRRa Am, pAvamE.    


பொருள்:     ஈசன், இளம்பிறையைத் தலையில் சூடியவன்; சுடுகாட்டினை இடமாகக் கொண்டவன்; 
பறை, சங்கு போன்ற இன்னிசைக் கருவிகள் ஒலிக்க ஆடுபவன்; சிறப்புக்கள் பொருந்திய நாலூர் 
மயானத்தைப் போற்றிப் புகழும் சிறப்புடையவர்களைப் பாவங்கள் சென்று சேராவாம்.

குறிப்புரை:     அழகாக ஆடும் என்க. ஓவா - ஒழியாத. சிறப்போர் பால் - சிறப்புடையோரிடத்தில் .
பாவம் பற்றாவாம் - பாவங்கள் பற்ற மாட்டாதொழிவனவாம்.

    Oh! It is Civan, our Lord in Thiru-naaloor-mayaanam. Our Lord retains the moon 
on His head. His avocation is to dance perfectly on the cremation ground near the forest. 
He dances beautifully to the sound of the drum and conches. Sins will not chase those who 
sing the glories of our Lord in Thiru-naaloor-mayaanam, a sacred place of virtues where our 
Lord is manifested and where devotees in large number are drawn.

1962.     கல்லால்நிழல்மேவிக்காமுறுசீர்நால்வர்க்கன் 
    றெல்லாஅறனுரையுமின்னருளாற்சொல்லினான் 
    நல்லார்தொழுதேத்துநாலூர்மயானத்தைச் 
    சொல்லாதவரெல்லாஞ்சொல்லாதார்தொன்னெறிக்கே.        3

    கல்லால்நிழல் மேவி, காமுறு சீர் நால்வர்க்கு, அன்று, 
    எல்லா அறன்உரையும் இன்அருளால் சொல்லினான் 
    நல்லார் தொழுது ஏத்தும் - நாலூர்மயானத்தைச் 
    சொல்லாதவர் எல்லாம் சொல்லாதார், தொல்-நெறிக்கே.

    kallAl nizal mEvi, kAmuRu cIr nAlvarkku, anRu,         
    ellA aRan uraiyum in aruLAl collinAn 
    nallAr tozutu Etum-nAlUr mayAnattaic             
    collAtavar ellAm collAtAr tol-neRikkE

பொருள்:     கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து, தன்னை வணங்கிய சனகாதி முனிவர்களுக்கு 
எல்லா அறங்களையும் தெரிய உரைத்தவன் சிவபெருமான்! நல்லவர்களால் தொழுது போற்றப்பெறும் 
நாலூர் மயானத்தைப் புகழ்ந்து சொல்லாதவர்கள் தொன்மையான நன்னெறியில் நில்லாதவர்களே 
ஆவார்கள்.

குறிப்புரை:     காம் உறு -காமம் (அன்பு) உற்ற. எல்லா அறன் உரையும் - சகல தர்மோபதேசங்களும். 
சொல்லாதவர் - துதிக்காதவர். தொல்நெறி - அனாதியான சைவ மார்க்கம்.

    Our Lord Civan of Thiru-naaloor-mayaanam, once sitting under the shade of banyan 
tree, made the four sages, to understand their doubts with all the intricacies of the 
Vedic virtues. He is manifest in Thiru-naaloor-mayaanam and is worshipped by good people.
Those who do not recite the sacred name of the Lord of Thiru-naaloor mayaanam are those
who are unable to follow the ancient, right path of saiva divinity.

1963.    கோலத்தார்கொன்றையான்கொல்புலித் தோலாடையான் 
    நீலத்தார்கண்டத்தான்நெற்றியோர்கண்ணினான் 
    ஞாலத்தார்சென்றேத்துநாலூர்மயானத்தில் 
    சூலத்தானென்பார்பாற்சூழாவாந்தொல்வினையே.        4

    "கோலத்து ஆர் கொன்றையான், கொல் புலித் தோல்ஆடையான் 
    நீலத்து ஆர் கண்டத்தான், நெற்றி ஓர் கண்ணினான் - 
    ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர்மயானத்தில் 
    சூலத்தான்” என்பார்பால், சூழாஆம், தொல்வினையே.

    "kOlattu aR konRaiyAn, kol pulit tOl ATaiyAn, 
    nIlattu Ar kaNTattAn, neRRi Or kaNNinAn 
    njAlattAr cenRu Ettum nAlUr mayAnattil         
    cUlattAn" enpAr pAl, cUzA Am, tolvinaiyE.    

பொருள்:     ஈசன், கொன்றைமலர் மாலைகளை அணிந்தவன். புலித்தோல் ஆடையை 
உடுத்தியவன்; கரிய கண்டத்தை உடையவன்; நெற்றிக் கண்ணை உடையவன்; உலகத்தார் 
புகழ்ந்து போற்றும் நாலூர் மயானத்தில் கோயில் கொண்டவன். சூலப்படை உடைய அவனைப் 
போற்றுபவர்களுக்குத் தொல்வினைகள் சூழாவாம்.

குறிப்புரை:     கோலத்து ஆர் - அழகால் நிறைந்த. நீலத்து ஆர் - நீலத்தைப் பொருந்திய. 
தொல்வினை- சஞ்சிதம். வினை சூழாவாம் என்க.

    See! It is our Lord Civan of Thiru-naaloor-mayaanam. He is the embodiment of
beauty itself, who has adorned Himself with a garland of cassia flowers. He wears the tiger's 
skin as His dress. His neck is dark blue in colour. He has a third eye at the  center of His 
forehead. Our Lord is manifest in Thiru-naaloor-mayaanam where all people on the earth 
worship Him. Those who praise Him residing at Thiru-naaloor- mayaanam, "Oh God of trident" 
will be relieved of all past karma (sanchitham).

1964.     கறையார்மணிமிடற்றான்காபாலிகட்டங்கன் 
    பிறையார்வளர்சடையான்பெண்பாகன்நண்பாய 
    நறையார்பொழில்புடைசூழ்நாலூர்மயானத்தெம் 
    இறையானென்றேத்துவார்க்கெய்துமாமின்பமே.        5

    "கறை ஆர் மணிமிடற்றான். காபாலி, கட்டங்கன், 
    பிறை ஆர் வளர்சடையான், பெண்பாகன் - நண்புஆய 
    நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம் 
    இறையான்" என்று ஏத்துவார்க்கு எய்தும்ஆம், இன்பமே.

    "kaRai Ar maNimiTaRRAn, kApAli kattangan,         
    piRai Ar vaLarcataiyAn, peNpAkan - naNpuAya         
    naRai Ar pozil putai cUz nAlUrmayAnattu em         
    iRaiyAn enRu EttuvArkku eitum Am, inpamE.        

பொருள்:     ஈசன், கறை தோய்ந்த மிடற்றினைக் கொண்டவன். பிரமகபாலத்தை ஏந்தியவன்;
இளம்பிறையைச் சடையில் கொண்டவன்; உமாதேவியை உடம்பில் ஒருபாகமாகக் கொண்டவன்.  
மலர்கள் பொருந்திய சோலைகளால் சூழப்பெற்ற நாலூர் மயானத்தில் பொருந்தி இருப்பவன். 
அவனைத் தொழுபவர்க்கு இன்பமே ஏற்படும். 

குறிப்புரை:     கறை - விஷக்கறை. மணி - நீலமணியை ஒக்கும். மிடறு - திருக்கழுத்து. 
கட்டங்கன்- மழுவேந்தியவர். பெண்பாகன்- மங்கை பாகன். 'ஏழைபங்காளன்' (திருவெம்பாவை) 
நறை - தேன். இறையான் - இறைவன். இன்பம் எய்துமாமென்க.

    Oh! See. It is Civan, our Lord of Thiru-naaloor-mayaanam. Our Lord Civa is azure 
necked Supreme Being. He carries in His hand the skull of Brahma. In another hand He holds 
the axe. He retains the moon on His matted hair. His consort who is very much attached to 
Him is embedded on His body. Our Lord is manifest in Thiru-naaloor-mayaanam, surrounded 
by gardens full of flowers, yielding honey. Those devotees who worship our Lord of 
Thiru-naaloor-mayaanam as "Our God" will attain divine joy.

1965.     கண்ணார்நுதலான்கனலாடிடமாகப் 
    பண்ணார்மறைபாடியாடும்பரஞ்சோதி 
    நண்ணார்புரமெய்தான்நாலூர்மயானத்தை 
    நண்ணாதவரெல்லாம்நண்ணாதார்நன்னெறியே.        6

    கண் ஆர் நுதலான், கனல் ஆடுஇடம் ஆகப் 
    பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி, 
    நண்ணார் புரம் எய்தான், நாலூர் மயானத்தை 
    நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நன்நெறியே.

    kaN Ar nutalAn, kanal Atu iTam Akap         
    paN Ar maRai pAti ATum paranjcOti,         
    naNNAr puram eytAn, nAlUr mayAnattai         
    naNNAtavar ellAm naNNAtAr nan neRiyE.         

பொருள்:     ஈசன், நெற்றிக் கண்ணை உடையவன்; நெருப்பைக் கையில் ஏந்தி         
ஆடுபவன்;  மறைகளால் பாடப் பெறுபவன்; ஆடும் பரஞ்சோதி ஆவான். பொருந்தா 
அரக்கர்களின் முப்புரங்களை எரித்தவன். அவன் பொருந்தியிருக்கும் நாலூர்மயானத்தை
 விரும்பிப் போற்றாதவர்கள் நன்னெறியை அடையமாட்டார்கள்.

குறிப்புரை:     ஆடு இடம் கனல் ஆக- ஆடுகின்ற இடம் நெருப்பாக. 'தீயாடி', அனலாடி; இறைவன் 
ஆடலுக்குப் பாடல் பண்ணார் மறை. நண்ணார் - பகைவர். நண்ணாதவர் - அடையாதவர், அணுகாதவர். 
நன்னெறி- சரியை. கிரியை யோகமென்னும் அழிவில்லாத தவத்தால் வரும் ஞானம் (சிவஞான-சூ-8  - உரை).

    Oh! Civan, He is our Lord of Thiru-naaloor-mayaanam. Our Lord Civan has a third eye 
at the center of His forehead. His vocation is to dance in the fire pit. He chants the songs 
of the four Vedas in musical tone. He is the Supreme light, divine and dancer. He shot an 
arrow and destroyed the three flying forts of the antagonistic asuraas. Those who do not 
worship His holy feet will not reach the righteous path.

1966.     கண்பாவுவேகத்தாற்காமனைமுன்காய்ந்துகந்தான் 
    பெண்பாவுபாகத்தான்நாகத்தோலாகத்தான் 
    நண்பாவுகுணத்தோர்கள்நாலூர்மயானத்தை 
    எண்பாவுசிந்தையார்க்கேலாஇடர்தானே.        7

    கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான்
    பெண் பாவு பாகத்தான், நாகத்தோல் ஆகத்தான் 
    நண்பு ஆர் குணத்தோர்கள் - நாலூர்மயானத்தை 
    எண் பாவு சிந்தையார்க்கு ஏலா, இடர்தானே.

    kaN pAvu vEkattAl kAmanai mun kAyntu ukantAn,        
    peN pAvu pAkattAn, nAkattOl AkattAn         
    naNpu Ar kuNattOrkaL-nAlUr mayAnattai         
    eN pAvu cintaiyArkku ElA, itartAnE.        

பொருள்:     சிவன், நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியின் 
வேகத்தால் மன்மதனை எரித்தவன். உமாதேவியை உடம்பின் பாகத்தில் கொண்டவன். யானையின் 
தோலை அணிந்தவன். நற்பண்புகளை உடையோர் விளங்கும் நாலூர் மயானத்தில் பொருந்தியவன். 
அவனை எண்ணும் மனமுடையவர்களுக்குத் துன்பமே வாரா என்க.

குறிப்புரை:     பாவுதல் - பரவுதல். நாகம் - யானை. நண் - (நள்) நண்ணுதல், நள்ளுதலுமாகும். 
எண்- தியானம். இடர் ஏலா.

    See! Our Lord at Thiru-naaloor-mayaanam. He opened His third eye on His forehead 
and by the heat the god of love was consumed. Our Lord was satisfied to have embedded 
on His body,His consort. He has covered His chest with the hide of the elephant. 
Good friendly people live in Thiru-naaloor-mayaanam and worship our Lord who is 
manifest there. Those devotees who contemplate our Lord of Thiru-naaloor-mayaanam 
will be free of suffering for ever. 

1967.     பத்துத்தலையோனைப்பாதத்தொருவிரலால் 
    வைத்துமலையடர்த்துவாளோடுநாள்கொடுத்தான் 
    நத்தினொலியோவாநாலூர்மயானத்தென் 
    அத்தனடி நினைவார்க்கல்லலடையாவே.        8

    பத்துத்தலையோனைப் பாதத்து ஒருவிரலால் 
    வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் 
    நத்தின் ஒலி ஓவா நாலூர்மயானத்து என் 
    அத்தன்;அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.

    pattut talaiyOnaip pAtattu oruviralAl         
    vaittu malai aTarttu vALOTu nAL koTuttAn     
    nattin oli Ova nAlUr mayAnattu en         
    attan; aTi ninaivArkku allal aTaiyAvE.        

பொருள்:     பத்துத் தலைகளைக் கொண்ட இராவணனின் தோளைத் தன் 
கால்விரலால் அடர்த்து இறுதியில் அவனுக்கு சந்திரகாசம் என்ற வாளைக் கொடுத்து            
அருளியவன் சிவபெருமான். அவன், சங்கின் ஒலி எப்பொழுதும் நிறைந்திருக்கும், 
நாலூர் மயானத்தில் பொருந்தியிருப்பான். அவனது திருவடிகளை எப்போதும் 
நினைப்பவர்களுக்கு அல்லலே அடையாவாம்.

    வாளோடு நாள்- வாளும் ஆயுளும், நத்து- சங்கு, அத்தன்- பிதா. அத்தன்- அத்தை, 
ஆத்தன்- ஆத்தான் என்பவை தந்தை தாயரைக் குறித்த பழை வழக்கு. 'ஆத்தானை அடியேன் 
தனக்கு என்றும் ( தி.7.  பா.680) 'அத்தை' என்பது தாயைக் குறித்து இன்றும் வழங்குகிறது. 
அல்லல்- துன்பங்கள்.

    See ! It is our Lord in Thiru-naaloor-mayaanam. When Raavanan with his 
ten heads tried to lift mount Kailash, our Lord pressed the mountain with His toe 
and subdued him. Later Raavanan realised his mistake and begged for pardon. 
Our Lord excused him and blessed him with Mandrakasa sword and longevity in life. 
This Lord is manifest in Thiru-naaloor-mayaanam where echo of the sound of conches
is heard  ceaselessly . Those devotees who think always of this Lord will have 
no suffering in their life ever.

1968.     மாலோடுநான்முகனும்நேடவளரெரியாய் 
    மேலோடுகீழ்காணாமேன்மையான்வேதங்கள் 
    நாலோடுமாறங்கநாலூர்மயானத்தெம் 
    பாலோடுநெய்யாடிபாதம்பணிவோமே.        9

    மாலோடு நான்முகனும் நேட, வளர் எரிஆய், 
    மேலோடு கீழ் காணா மேன்மையான் - வேதங்கள் - 
    நாலோடும் ஆறுஅங்கம் நாலூர்மயானத்து எம் 
    பாலோடு நெய்ஆடி; பாதம் பணிவோமே.

    mAlOTu nAn mukanum nETa vaLar eri Ay,     
    mElOTu kIz kANA mEnmaiyAn-vEtagkaL    
    nAlOTum ARu agkam nAlUr mayAnattu em     
    pAlOTu ney Ati; pAtam paNivOmE.        

பொருள்:     திருமாலும் பிரமனும் தேட, அவர்கள் அடிமுடி காணமுடியாதவாறு
நெருப்புருவாய் விளங்கியவன் சிவபெருமான். வேதங்கள் நான்காகவும் அதன் அங்கங்கள்
ஆறாகவும் விளங்குபவன் சிவபெருமான். அவன் நாலூர் மயானத்துள் கோயில் 
கொண்டுள்ளான். அவனைப் பாலும் நெய்யும் கொண்டு வழிபாடு செய்து மகிழ்வோமாக

குறிப்புரை:     நேட -தேட. நாலுவேதம் ஆறு அங்கம். பாலோடு நெய் - பாலும் நெய்யும்.

    See! He is our Lord Civan in Thiru-naaloor-mayaanam. Our demigod Vishnu
and Brahma went out to search the head and feet of our Lord. But our unequal Lord 
rose as an immeasurable effulgence the origin and end of which could not be comprehended. 
Our Lord is the embodiment of four Vedas and its six subsidiaries (A division of 
learning considered as dependent on the Vedas, hence called  Aarangam). He is the 
benevolent Supreme. Our Lord loves ablutions with milk and ghee . He manifests 
Himself in Thiru-naaloor-mayaanam. Let us bow at His golden feet. 

1969.     துன்பாயமாசார்துவராயபோர்வையார் 
    புன்பேச்சுக்கேளாதேபுண்ணியனைநண்ணுமின்கள் 
    நண்பாற்சிவாயவெனாநாலூர்மயானத்தே 
    இன்பாயிருந்தானையேத்துவார்க்கின்பமே.        10

    துன்புஆய மாசார், துவர்ஆய போர்வையார், 
    புன் பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்! 
    நண்பால்"சிவாய!'' எனா,நாலூர்மயானத்தே 
    இன்புஆய் இருந்தானை, ஏத்துவார்க்கு இன்பமே.

    tunpu Aya mAcAr, tuvar Aya pOrvaiyAr, 
    pun pEccuk kELAtE puNNiyanai naNNuminkaL! 
    naNpAl civAya!" enA nAlUr mayAnattE 
    inpu Ay iruntAnai, EttuvArkku inpamE.        

பொருள்:     மாசு உடையவராய் புன்மையான சொற்களையே கூறுபவர்கள் சமண் சாக்கியர் 
ஆவார்கள். அவர்களது சொற்களை ஏற்க வேண்டாம். புண்ணியமாக விளங்கும் ஈசனையே வணங்கி 
மகிழுங்கள். ஒன்றிய மனத்தோடு சிவாயநம என்று மொழியுங்கள். நாலூர் மயானத்தில் இன்ப 
வடிவினனாய் விளங்கும் ஈசனை ஏத்திப்பாடி இன்புறுங்கள்.

குறிப்புரை:     துன்பு ஆய - துன்பமாகிய. மாசு -அழுக்கு. ஆர் - நிறைந்த. துவர் ஆய - பழுப்பாகிய. 
புன்பேச்சு - பொருளின்மையால் புல்லிய பிதற்றுரைகள். புண்ணியனை- சிவபுண்ணிய சொரூபனை,
' புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே' (சிவஞானசித்தியார் சூ 8) நண்பு - செறிவு. யோகம் - 
நட்பும் ஆம். இதிற்குறித்த திருவைந்தெழுத்து அதிசூக்கும (காரண) பஞ்சாட்சரம். 'விண்ணினார் 
பணிந்தேத்த வியப்புறும், மண்ணினார் மறவாது சிவாயவென்று, எண்ணினார்க்கு இடமா எழில் 
வானகம், பண்ணினாரவர் பாலைத் துறையாரே' (தி. 5 ப. 51 பா. 6) இன்பு - பேரின்பம்.          

    See! It is Civan, our Lord in Thiru-naaloor-mayaanam. The Jains suffer because 
of their misdeeds and the Buddhists are ochre-robed. You need not heed to the evil words 
of these two races. Our Lord is the embodiment of virtues. You may approach Him repeating 
the recitation of the sacred magical mantra 'Sivaaya'. Those who recite the above sacred 
word 'Sivaaya' with devotion on our Lord, who Himself is the embodiment of grace, 
will get bliss from Him.

1970.     ஞாலம்புகழ்காழிஞானசம்பந்தன்றான் 
    நாலுமறையோதுநாலூர்மயானத்தைச் 
    சீலம்புகழாற்சிறந்தேத்தவல்லாருக் 
    கேலும்புகழ்வானத்தின்பாயிருப்பாரே.        11

    ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன் தான் 
    நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தைச் 
    சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு 
    ஏலும்,புகழ்;வானத்து இன்புஆய் இருப்பாரே.

    njAlam pukaz kAzi njAnacampantan tAn             
    nAlumaRai Otum nAlUr mayAnattaic 
    cIlam pukazAl ciRantu Etta vallArukku 
    Elum, pukaz; vAnattu inpu Ay iruppArE.

பொருள்:     ஞாலம் போற்றும் சீகாழிப்பதியில் அவதரித்தவர் ஞானசம்பந்தர். 
அவர் நான்கு வேதங்களும் போற்றும் நாலூர் மயான இறைவனைப்  புகழ்ந்து பாடல்கள் 
பாடி அருளியுள்ளார்.   அதனைப் பக்தியுடன் பாடிட வல்லவர்கள் வானுலகில்  இன்புற்று
வாழ்வார்கள் என்க.

குறிப்புரை:     ஞாலம் - உலகம். சீலம் - சிவபெருமானுடைய சீலத்தை. ஒழுக்கத்தாலும் 
புகழாலும் எனலும் பொருந்தும். ஏலும் - இயலும். ஏற்குமெனலுமாம்.

    Our saint Thiru-gnana-Sambandar who originated from the world famous city of 
Kaazhi came to Thiru-naaloor-mayaanam. Here the Vedic scholars recite the four Vedas 
daily with devotion and do their rituals without fail. In this holy city of Thiru- 
naaloor-mayaanam, our Lord is manifest. Those devotees who can recite in the best 
possible manner the ten verses which our Thiru-gnana-Sambandar chanted on our Lord's 
virtues and fame will get the highest fame. They are sure to win celestial happiness 
and be free of woes.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            46ஆம் பதிகம் முற்றிற்று
            End of 46th Hymn


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 183                    பதிக எண்: 47

47. திருமயிலாப்பூர்                    47. THIRU-MY-LAAP-POOR

பண்: சீகாமரம்                        Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    உமாதேவியார் மயில் உருவமாய் இறைவனைப் பூசித்த காரணம் பற்றி இப்பெயர் 
பெற்றது. இது மயிலாப்பு என்றும் தேவாரத்தில் கூறப்பெற்றுள்ளது. மயிலார்ப்பூரோ ? 
மயில் யாப்பூரோ ? சென்னையின் தென்பகுதியில் விளங்குவது இத்திருத்தலம். சென்னைக்குத் 
தெற்கே 6 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. சென்னையின் நகரப் பேருந்துகளில் அனைத்து 
இடங்களிலிருந்தும் மயிலாப்பூர் செல்லலாம். 

    இறைவரது திருப்பெயர் கபாலீசுவரர். இறைவியார் திருப்பெயர் கற்பகவல்லியம்மை. 
தலவிருட்சம் புன்னை மரம். வடக்குப் பிரகாரத்தில் இருக்கிறது. இது வாயிலார் நாயனார் அவதாரம் 
செய்த திருப்பதி. சிவநேசச் செட்டியாருடைய மகளாகிய பூம்பாவை அரவு கடித்து இறந்தபோது, 
அவர் தந்தையார் அம்மையாரது உடலை எரித்து எலும்பையும் சாம்பலையும் புது மட்பாண்டத்தில் 
வைத்திருந்தார். அங்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர், 'மட்டிட்ட புன்னையங் கானல்' என்று 
தொடங்கும் பதிகம் பாடி, அவரது எலும்பைப் பெண்ணுருவாக்கி அருளினார். இராமபிரான் 
வழிபட்டு, ஐப்பசி ஓணநாளில் பிரமோற்சவம் நடத்துவித்தார்.

     பங்குனி மாதத்தில் அறுபாம்மும்மை நாயன்மார்களுடைய திருவிழா சிறப்பாக 
நடைபெற்று வருகின்றது. ஊரின் பெயர் மயிலாப்பூர். அங்குள்ள கோயிலுக்கே 
கபாலீச்சரம் என்று பெயர். மயிலாப்பூர், மயிலாப்பு என்று வழங்கப் பெற்றிருப்பது, அப்பர் 
சுவாமிகளது திருஒற்றியூர்த்  திருத்தாண்டகம் ஆறாம் திருப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. அப்பகுதி,

    "வடிவுடைய மங்கையுந் தாமுமெல்லாம்
    வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப்புள்ளே" என்பதாகும். 

இதையே,

    "மங்குல் மதிதவழும் மாடவீதி
    மயிலாப்பி லுள்ளார் மருகலுள்ளார்” 

எனக் கோயில்புக்க திருத்தாண்டகத்திலும் காணலாம்.

பதிக வரலாறு

    திருவொற்றியூரை வழிபட்டு மயிலாபுரித் திருநகரை அணைந்து, கபாலீச்சரத்தமுதைப்
பரவிப் போற்றிய திருஞானசம்பந்தர், 'சித்தம் இன்புறு சிவநேசர்' பால் திருவருள் செலுத்தி, 
'திருமதிற் புறவாய்தலிற் கொண்டு வரச் செய்து மங்கையென்புசேர் குடத்தினை வைத்து 
வணங்க' நோக்கி, மண்ணோரும் விண்ணோரும் காணப், 'பூம்பாவை பேர்செப்பி', 
'மண்ணினிற் பிறந்தார்  பெறும் உண்மைப்பயன்' உணர்த்தி, இறைவனை உலகவர் முன் 
'வருக' என்று உரைத்து, 'மட்டிட்ட புன்னை' எனத் தொடங்கும் இந்நற்பதிகத்தைப் 
பாடினார். அக்குடத்துள் இருந்த எலும்பு பெண்ணுருவாயிற்று. ஆதலின், இத்திருப்பதிகம் 
'பூம்பாவைப் பாட்டு'  எனப் பெற்றது.

            திருச்சிற்றம்பலம்        


1971.     மட்டிட்டபுன்னையங்கானல்மடமயிலைக் 
    கட்டிட்டங்கொண்டான்கபாலீச்சரமமர்ந்தான் 
    ஒட்டிட்டபண்பினுருத்திரபல்கணத்தார்க் 
    கட்டிட்டல்காணாதேபோதியோபூம்பாவாய்.        1    

    மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக் 
    கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சுரம் அமர்ந்தான், 
    ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு 
    அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!

    maTTu iTTa punnai amkAnal maTa mayilaik 
    kaTTu iTTam koNTAn, kapAlIccuram amarntAn, 
    oTTiTTa paNpin uruttira pal kaNattArkku 
    aTTu iTTal kANAtE pOtiyO? pUmpAvAy!

பொருள்:     தேன் நிறைந்த புன்னை மலர்ச்சோலைகள் நிறைந்த பதியே மயிலையம்பதியாம். 
அப்பதியினை விரும்பி கோயில் கொண்டு அமர்ந்தவனே சிவபெருமான். அவன் தன்னுடைய 
சிவகணத்தார்க்கு உணவளித்துப் புரக்கும் சிறப்பினைக் காணாது பூம்பாவையே நீ போவாயோ? 
மாட்டாய். எழுந்து வருவாயாக! 

குறிப்புரை:     மட்டு - கள். கானல்- கடற்கரைச் சோலை. மடமயிலைக் கட்டு - இளமயில்கள் 
 ஆர்ப்பு மிக்க ஊரில் உள்ள திருக்கோயில். மயிலார்ப்பூர் என்பதன் மரூஉ மயிலாப்பூர். இட்டம் - 
திருவுள்ளத்தன்பு  (இஷ்டம்). ஊர் மயிலை, மயிலாப்பூர், கோயில் கபாலீச்சரம். ஒட்டிட்ட பண்பு - 
அத்துவிதக் கலப்பு.  'உணரப்படுவாரோடு  ஒட்டிவாழ்தி' 'ஒட்டியவனுளமாகில்லான்'. உருத்திர
பல்கணத்தார் -  மாகேசுரர்;  அடியவர். மதிசூடும் அண்ணலாரடியார்தமை அமுது செய்வித்தல். 
கண்ணினால் அவர் 'நல்விழாப்பொலிவு கண்டார்தல்'. அட்டு - திருவமுது அமைத்து. 
இட்டல் - இடுதல். (நட்டல் - நடுதல் போல) இதிற்குறித்த திருவிழா. பூரட்டாதியில் நிகழ்வது. 
இது திங்கள் முதலாக ஒவ்வொன்றிலும் நிகழ்த்தும் திருவிழாச்  சிறப்பு மேல் வரும் பாக்களிற் 
குறிக்கப்பட்டமை உணர்க. போதியோ - போவாயோ? வருவாய் என்றவாறு.

    See! It is Mayilai, a sacred place, full of palaces, surrounded by 
honey-filled caulophyllum, a coastal area of natural forests. Our Lord Civan 
called here Kabaaleeswarar, desires to manifest Himself in the temple called 
Kabaaleech-charam. In this city mainly round the temple young peacocks move 
about making sounds. In this temple festivals take place in particular periods. 
Here very close devotees and sacred scholars gather to do their rituals, 
and worship. The servitors happily serve food for those devotees who have 
gathered in the temple. Oh! Young girl Poombaavai! Is it your fate (destiny) 
to leave this world without witnessing the above grand functions in the temple?

1972.    மைப்பயந்தஒண்கண்மடநல்லார்மாமயிலைக் 
    கைப்பயந்தநீற்றான்கபாலீச்சரமமர்ந்தான் 
    ஐப்பசிஓணவிழாவுமருந்தவர்கள் 
    துய்ப்பனவுங்காணாதே போதியோ பூம்பாவாய்.        2

    மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மா மயிலைக் 
    கைப் பயந்த நீற்றான், கபாலீச்சுரம் அமர்ந்தான், 
    ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் 
    துய்ப்பனவும் காணாதே போதியோ? பூம்பாவாய்!

    maip payanta oNkaN maTanallAr mA mayilaik 
    kaip payanta nIRRAn, kapAlIccuram amarntAn, 
    aippaci ONa vizAvum aruntavarkaL 
    tuyppanavum kANAtE pOtiyO? pUmpAvAy!

பொருள்:     மை திகழும் அழகிய கண்களைக் கொண்ட பெண்டிர் வாழும் மயிலைப் 
பதியில் திருநீறு அணிந்து சிவபெருமான் கோயில் கொண்டுள்ளான். அங்கு நடைபெறும் 
திருவோண விழாவையும் அடியவர்கள் மகிழ்ந்து போற்றுவதையும் பூம்பாவையே! 
நீ காணாமல் செல்வாயோ? மாட்டாய்.

குறிப்புரை:     மை - கண்ணிற்கிடும் மை. கைப்பயந்த நீறு - கைமேற் பயன்தந்த திருநீறு. 
வழிபடுவார் கையில் அர்ச்சகர் வடிவாயிருந்து கொடுத்த திருநீற்றினன். திருநீறு 
வடிவாயுள்ளானெனலும் சிறந்ததே. 'கைப்பூசு நீற்றான்' (பா. 5). ஐப்பசித் திருவோண 
விழாச் சிறப்பும் அரியதவத்தோர்களாகிய  அடியார்கள் திருவமுது செய்த காட்சியும் 
குறிக்கப்பட்டன. ஓணத்திற் கொடியேற்றம். கிருத்திகையில்  தீர்த்தவாரி. 
 தலவரலாறு காண்க. இராமர் வழிபாடு, ஓணம் திருமாலின் நாள்.

    See Mayilai! It is a very sacred place. In this city, very young attractive 
damsels  live in large numbers. They all wear eyetex in their bows and their sparkling 
eyes brighten their faces. In this city our Lord Civan is manifest in the holy temple of 
Kabaleechcharam. He has beautified His forehead with the holy ashes. Those devotees 
who receive the holy ashes from the priests apply it to their forehead. This 
holy ashes gives good, immediate effect to those who apply it on their forehead with 
sincere devotion. For this Lord there is a famous festival in the month of Iaippasi 
called  Onam festival. On such a festive occasion very sacred saints gather in the 
temple, pray and do the daily sacred rituals. They are fed by servitors very happily 
with rich food. Oh  young girl poombaavai! Is it your destiny to leave this world 
without seeing and participating in these ceremonies? No! You must come back in 
your original physical form!!

1973.     வளைக்கைமடநல்லார்மாமயிலைவண்மறுகில் 
    துளக்கில்கபாலீச்சரத்தான்தொல்கார்த்திகைநாள் 
    தளத்தேந்திளமுலையார்தையலார்கொண்டாடும் 
    விளக்கீடுகாணாதே போதியோபூம்பாவாய்.        3

    வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் 
    துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகைநாள் - 
    தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் 
    விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்!

    vaLaikkai maTanallAr mA mayilai vaN maRukil 
    tuLakku il kapAlIccurattAn tol kArttikainAL- 
    taLattu Entu iLamulaiyAr taiyalAr koNTATum- 
    viLakkITu kANAtE pOtiyO? pUmpAvAy!

பொருள்:     வளையல் அணிந்த கற்புடைய பெண்டிர் வாழும் மயிலை கபாலீச்சரத்தில் 
சிவபெருமான் கோயில் கொண்டுள்ளான். அத்திருக்கோயிலில் கார்த்திகைத் திருநாள் அன்று 
சிறுமிகளும் மாதர்களும் விளக்குகளை வரிசையாக ஏந்திநின்று  வழிபாடு செய்வார்கள்.  
அந்த விளக்கீடு விழாவைக் காணாமல் பூம்பாவையே நீ செல்வாயோ? மாட்டாய்.                     

குறிப்புரை:     வளை -வளையல். மறுகு - தெரு. வண்மை -தெருவினர் கொடைவளம். 
துளக்கு - அசைவு, தளர்வு, வருத்தம். இல் - இல்லாத. இறைவனைக் குறித்தால் வருத்தமில்லாதவன் 
என்க. கபாலீச்சரத்தைக் குறித்தால் அசைவில்லாத, தளர்வில்லாத என்க. தளத்து - சாந்தினை. 
கார்த்திகை விளக்கீடு இளமகளிர் கொண்டாடும் திருவிழா. கார்த்திகைத் திருவிளக்கீட்டு 
விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும் சிவாகம புராணங்களிலும் உணர்க.

    See! It is Civan, our Lord in Thiru-my-laap-poor, a sacred place. 
In the city of Thiru-my-laap-poor lovely young damsels who wear bangles in 
their hands live in large numbers. They live in streets of riches and stead 
fastness. Here our Lord Civan is manifest in the temple of Kabaleechcharam, 
which is a very happy place. In the Tamil month of Kaarthikai there takes 
place a famous festival of lights. During this festival many young girls, 
well breasted and decorated with sandal paste participate very joyfully. 
They hold in their hands beautifully lighted lamps and go round the interior
premises of the temple, singing on our Lord songs of praise. Oh! Young girl 
poombaavai! Is it your destiny that you must leave this place without witnessing 
and participating in all these temple rituals and festivals?

1974.     ஊர்திரைவேலையுலாவுமுயர்மயிலைக் 
    கூர்தருவேல்வல்லார்கொற்றங்கொள்சேரிதனில் 
    கார்தருசோலைக்கபாலீச்சரமமர்ந்தான் 
    ஆதிரைநாள்காணாதே போதியோபூம்பாவாய்.        4

    ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக் 
    கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில், 
    கார் தரு சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
    ஆர்திரை நாள் காணாதே போதியோ? பூம்பாவாய்!

    Ur tirai vElai ulAvum uyar mayilaik 
    kUrtaru vEl vallAr koRRam koL cEritanil, 
    kAr taru cOlaik kapAlIccuram amarntAn 
    Ar tirai nAL kANAtE pOtiyO? pUmpAvAy!

பொருள்:     கடலலைகள் நிறைந்து உலவும் மயிலையில் வாழும் நெய்தல் நிலமக்கள் 
கூர்மையான வேலால் மீன்களைக் குத்திப் பிடித்து வாழ்வார்கள். சோலைகள் நிறைந்த மயிலைக் 
கபாலீச்சரத்தில் சிவபெருமான் கோயில் கொண்டுள்ளான். அங்கு நடைபெறும் ஆதிரைத் திருநாள் 
விழாவினைப் பூம்பாவையே நீ காணாது செல்வாயோ? மாட்டாய் என்க.

குறிப்புரை:     ஊர் திரை வேலை -ஊருந்திரையுடைய கடல். ஊர்தல் - மேற்படுதல். பரத்தல், 
வல்லார்- (நெய்தல் நிலமாக்கள்) வேலால் கடல் மீன்களைக் கொல்லவல்லவர்கள். கொற்றம் -           
கொன்று அடையும் வெற்றி. கார்- மேகம். ஆர்திரைநாள் - திருவாதிரை என்னும் மீன். எதுகை 
நோக்கின், 'ஆர் திரை' என்றதே உண்மைப் பாடம் ஆகும். 'ஆர்திரையான், ஆர்திரையான் 
என்றென் றயருமால் ஊர்திரை வேலியுலகு' என்னும் முத்தொள்ளாயிர முதற் செய்யுளமைதியை 
உணர்க. இது மார்கழித்  திருவாதிரை விழாச் சிறப்புணர்த்திற்று.

    See! It is Civan, our Lord in Thiru-my-laap-poor. This city Thiru-my-laap-poor 
is adjoining the sea, where the creeping waves go on dashing against the banks and wash
the temple walls permanently. In the nearby places of the temple in Thiru-my-laap- poor 
tall buildings are many. The fishermen living near the seashore carry spears to kill fish. 
Owing to heavy rains all round the city very tall and thick trees have grown in the fertile 
groves; the Kabaleechcharam temple is very near the groves. In this temple our Lord Civan 
has manifested Himself. For Him the festival on Thiru-vaathirai day takes place in a very 
grand manner. This festival attracts a very huge crowd on this occasion. Oh! My dear young 
girl poombaavai! Is it your fate to leave this world without worshipping Him and 
participating in the important and happy festival? No! You should come back to life 
with your earlier physical body!

1975.     மைப்பூசுமொண்கண்மடநல்லார்மாமயிலைக் 
    கைப்பூசுநீற்றான்கபாலீச்சரமமர்ந்தான் 
    நெய்ப்பூசுமொண்புழுக்கல்நேரிழையார்கொண்டாடும் 
    தைப்பூசங்காணாதே போதியோபூம்பாவாய்.        5

    மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக் 
    கைப் பூசு நீற்றான், கபாலீச்சுரம் அமர்ந்தான் 
    நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் - 
    தைப்பூசம் காணாதே போதியோ? பூம்பாவாய்!

    maip pUcum oNkaN maTanallAr mA mayilaik 
    kaip pUcu nIRRAn, kapAlIccuram amarntAn- 
    neyp pUcum oN puzukkal nErizaiyAr koNTATum- 
    taippUcam kANAtE pOtiyO? pUmpAvAy!            

பொருள்:     மை பூசிய கண்களைக் கொண்ட கற்புடைய மகளிர் நிறைந்த தலமே 
மயிலாப்பூர். இங்குள்ள கபாலீசுரத்துள் சிவபெருமான் திருநீறு அணிந்த மேனியனாய்க் 
கோயில் கொண்டுள்ளான். தைப்பூச விழாவன்று நெய் கலந்த சோற்றினை சிவனுக்குப்                
படைத்து மகளிர் வழிபடுவர். அவ்விழாவினைக் காணாது பூம்பாவையே நீ செல்வாயோ? 
மாட்டாய்.

குறிப்புரை:     மைப்பயந்த வொண்கண் கைப்பயந்தநீற்றான் (பா.2) நெய்ப்பூசும் 
ஒண்புழுக்கல் - நெய்யால் மறைக்கப்பட்ட ஒள்ளிய சோறு.

    Oh! It is Civan our Lord in Thiru-my-laap-poor. In this city young damsels of 
bright eyes with eyetex live in large numbers. Here the temple Kabaaleechcharam is 
situated near the seashore. Our Lord has smeared on His hands holy ashes. Ladies 
wearing fine jewellery visit the temple on the festival day of Thai-poosam. They 
bring well boiled rice fully mixed with plenty of ghee and coarse sugar candy. 
The food is served to our Lord first, it is later distributed to all the devotees 
and to all the poor people who have gathered in the temple on the happy festival day. 
Oh! My young girl poombaavai! Is it your fate to leave this place in this world without 
involving yourself in this grand Thai-poosam function and the festivals? No! You should 
come back to life to the same earlier young physical body!!

1976.     மடலார்ந்ததெங்கின்மயிலையார்மாசிக் 
    கடலாட்டுக்கண்டான்கபாலீச்சரமமர்ந்தான் 
    அடலானேறூரும்மடிகளடி பரவி 
    நடமாடல்காணாதே போதியோபூம்பாவாய்.        6

    மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் 
    கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சுரம் அமர்ந்தான், 
    அடல் ஆன்ஏறு ஊரும் அடிகள், அடிபரவி, 
    நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்!

    maTal Arnta tegkin mayilaiyAr mAcik 
    kaTal ATTuk kaNTAn, kapAlIccuram amarntAn, 
    aTal An ERu Urum aTikaL, aTi paravi, 
    naTam ATal kANAtE pOtiyO? pUmpAvAy!

பொருள்:     அகன்ற மடல்கள் கொண்ட தென்னை மரங்கள் நிறைந்த மயிலையில்  உள்ள 
கபாலீச்சரத்துள் சிவபெருமான் கோயில் கொண்டுள்ளான். அங்கு மாசித் திங்களில்
கடலாடுவிழா சிறப்பாகக் கொண்டாடப்பெறும். சிவனும் ஆனேற்றின்மேல் வீற்றிருந்து
காட்சி அருளுவார். பெண்கள் அதனைக் கண்டு ஆடிப்பரவி ஏத்துவர். அவ்விழாவினைக்
காணாமல் பூம்பாவையே நீ செல்வாயோ? மாட்டாய்.

குறிப்புரை:     தென்னையின் மடல் நீட்சியுடைமை பற்றி, 'மடல் ஆர்ந்த தெங்கு' எனப்பட்டது.
மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்ந்தவுண்மை குறிக்கப்பட்டது. அடல்-வலிமை. ஆனேறு- விடை. 
நடம் ஆடல்- கூத்தாடுதல்; உலாவுதலுமாம். பரவி - வாழ்த்தி, மாசிக் கடலாட்டுச் சிறப்புணர்த்தியது. 
'சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறு'. பண்ணினேர் மொழிமங்கைமார் பலர் பாடியாடிய வோசை .. 
பொலியும்...  காழி. 'பாலினேர் மொழி மங்கைமார் நடமாடி இன்னிசை பாட'  எனப்பின் வருதல் 
அறிக (ப.185-186).  

    See! It is Civan, our Lord in Thiru-my-laap-poor. In the city of 
Thiru-my-laap-poor coconut gardens with spike-like leaves are many. In the 
temple Kabaaleech-charam the festival of sea bath for our Lord takes place on 
the day of the star of Maham in a very grand manner. He has a bull for His
transport. Our Lord goes to the sea and after bath dances in several ways. 
Millions of people gather on the seashore and all of them take bath along 
with the Lord in the sea. They then worship our Lord. Oh young girl poombaavai! 
Is it your fate not to witness this very great festival and the dance of Civan? 
Should your soul leave this place in such a way? No.

1977.     மலிவிழாவீதிமடநல்லார்மாமயிலைக் 
    கலிவிழாக்கண்டான் கபாலீச்சரமமர்ந்தான்
    பலிவிழாப்பாடல்செய்பங்குனியுத்திரநாள் 
    ஒலிவிழாக்காணாதே போதியோபூம்பாவாய்.        7

    மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக் 
    கலி விழாக் கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
    பலி விழாப் பாடல்செய்-பங்குனி உத்திரநாள் 
    ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்!

    mali vizA vIti maTanallAr mA mayilaik 
    kali vizAk kaNTAn, kapAlIccuram amarntAn- 
    pali vizAp pATalcey--pagkuni uttira nAL         
    oli vizAk kANAtE pOtiyO? pUmpAvAy!

பொருள்:     மயிலை வீதிகளில் நாள்தோறும் விழாக்கள் நடைபெறும். பெண்டிர் 
விழாவினைச் சிறப்பாக சிவனது கபாலீச்சுரக் கோயிலில் கொண்டாடி மகிழ்வர். அங்கு 
பங்குனி உத்திர நாளில் ஆடல் பாடல்கள் மிகுந்து விளங்கும் அத்திருவிழாவைக் காணாது 
பூம்பாவையே நீ செல்வாயோ? மாட்டாய்.

குறிப்புரை:     மலிவிழா வீதி-   விழாக்கள் இடையறாது. நிகழ் விளங்கும் வீதி. 
'வீதிகள் விழலின் ஆர்ப்பும். கலிவிழா-திருவருள் எழுச்சியை விளைக்கும் திருக்கோயில் 
விழாக்கள். முன்னவை பல்வகைக்களி விழாக்கள். பலி - உருத்திரபலி, திசைதோறும் 
இடுவது. ஒலி- விழாவின் ஆரவாரம். பங்குனி உத்தர விழாச் சிறப்புணர்த்திற்று. 

    See! It is Civan, our Lord of Thiru-my-laap-poor. In this city long streets with 
many palatial buildings exist. In these streets many young damsels also live and enjoy 
all the festivals. There is no break for festivals in the temple. Our Lord goes around 
the city during every festival in the highly decorated palanquin to enable old people 
and others who can not visit the temple to worship Him. He blesses all the devotees who 
worship Him in the streets. Another important festival falls on the Uththiram star day 
in the Tamil month of Panguni when big crowds visit the temple, and sing songs on our
Lord's virtues and fame. Oh! My dear young girl poombaavai! Is it your fate to leave 
this city without witnessing this very pompous festival of 'Panguni Uththiram' and  
participating in it? No! You should come back to life and witness all the festivals 
of our Lord in the temple!

1978.     தண்ணாவரக்கன்றோள்சாய்த்துகந்ததாளினான் 
    கண்ணார்மயிலைக்கபாலீச்சரமமர்ந்தான் 
    பண்ணார்பதினென்கணங்கள்தம் அட்டமிநாள் 
    கண்ணாரக்காணாதே போதியோபூம்பாவாய்.        8

    தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்து தாளினான், 
    கண் ஆர் மயிலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான். 
    பண் ஆர் பதினென்கணங்கள் தம்(ம்) அட்டமிநாள் 
    கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்!

    taN Ar arakkan tOL cAyttu ukanta tALinAn, 
    kaN Ar mayilaik kapAlIccuram amarntAn, 
    paN Ar patineNkaNagkaL tam(m) aTTami nAL 
    kaN Arak kANAtE pOtiyO? pUmpAvAy!

பொருள்:     பணிவற்ற அரக்கன் இராவணனின் தோள்களை நெரித்த தாளினை 
உடையவன் சிவன். அவன் மயிலை கபாலீச்சுரத்தில் கோயில் கொண்டுள்ளான். சிவனை, 
அட்டமி நாள் விழாவில் பதினெண்கணங்களும் கூடி, ஆடிப்பாடி மகிழ்ந்து போற்றுவர். 
அவ்விழாவினைக் காணாது பூம்பாவையே நீ செல்வாயோ? மாட்டாய்.

குறிப்புரை:     தண்ணா- வெம்மையைச் செய்யும் என்ற குறிப்பு. சாய்தல்; தோள்கட்கும் 
உகத்தல்; (உயர்தல்) தாள்கட்கும் கூறிய திறம் கருதத்தக்கது. இது சித்திரையில் நிகழ்ந்தது 
எனக்கொள்ள இடனுண்டு. அட்டமி நாள்விழா முற்காலத்தது. இக்காலத்தார் சித்திரைப் 
பௌர்ணமி கொண்டனர். பதினெண்கணங்களுக்கும் அட்டமிநாள் விழாவிற்கும் உள்ள 
தொடர்பு புலப்பட்டிலது.

    Oh! It is Civan, our Lord in Thiru-my-laap-poor. Raavanan the king of Sri Lanka 
by nature was furious and ill tempered. Due to his misdeed our Lord suppressed his
shoulders with His holy feet. Later He graced him. The Kabaaleechcharam temple is 
extremely pleasing to our eyes and here our Lord of Thiru-my-laap-poor is manifest. 
In this temple in the Tamil month of Chiththirai on the eighth day a great festival 
called Attami Carnival takes place. For this festival the eighteen attendants of 
Lord Civan known as Pathi-nen-gnanath-thinar visit this temple and sing in melodious 
tone the songs in praise of His virtues and fame, and worship Him. Oh my dear 
young damsel Poombaavai! Is it your fate that you should leave your body and soul 
in this city without worshipping our Lord on this very happy grand festival of 
Attami Carnival? No! certainly not! You should come back to life and join all the 
festivals in the city and enjoy life!

1979     நற்றாமரைமலர்மேல்நான்முகனும்நாரணனு 
    முற்றங்குணர்கிலாமூர்த்திதிருவடியைக் 
    கற்றார்களேத்துங்கபாலீச்சரமமர்ந்தான் 
    பொற்றாப்புக்காணாதே போதியோபூம்பாவாய்.        9

    நல்-தாமரைமலர்மேல் நான்முகனும் நாரணனும் 
    முற்றங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக் 
    கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான், 
    பொன்-தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்

    nal-tAmarai malar mEl nAnmukanum nAraNanum 
    muRRAgku uNarkilA mUrtti, tiruvaTiyaik 
    kaRRArkaL Ettum kapAlIccuram amarntAn, 
    pon-tAppuk kANAtE pOtiyO? pUmpAvAy!

பொருள்:     தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரம்மனாலும் அவனை ஈன்ற 
நாராயணனாலும் தேடிக் காணமுடியாத சிவபெருமான் மயிலைக் கபாலீச்சுரத்துள் 
கோயில் கொண்டுள்ளான். அந்தணர்கள் சிவனது திருவடிகளைப் போற்றி வணங்குவர். 
அப்பெருமானுக்கு நடைபெறும் பொன்னூஞ்சல் திருவிழாவினைக் காணாமல் 
பூம்பாவையே நீ செல்வாயோ? மாட்டாய்.

குறிப்புரை:     நல்+தாமரை. முற்றாங்கு - முழுதும் உள்ளபடி. இது பட்டாங்கு, நல்லாங்கு, 
பொல்லாங்கு என்பன போல்வது. கற்றார்கள்- 'கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்' (தி. 3 ப. 40 பா. 3) 
என்று மேல் ஆசிரியர் அருள்வதுணர்க. 'கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன்' 
(தி. 1 ப. 129 பா. 11). 'கற்றல் கேட்டல் உடையார்' என்றதால் நிட்டை முடிய உடையாரை 
உபலட்சணத்தாற் கொள்க. பொன்தாம்பு (பொற்றாப்பு) பொன்னூசல் (நன். 411.சங்கர). 
தாம்பு - கயிறு. ஊஞ்சலுக்குத் தாம்பு கருவி. தாப்பிசை. வைகாசியில் ஊஞ்சலாடுந் திருவிழாக் 
குறித்தவாறு. இப்பாட்டில் 'உற்றாங்கு' எனப் பிரித்தது பொருந்தாது.

     Oh! It is Civan, our Lord in Thiru-my-laap-poor. The demigod Brahma, who
rests in the fine lotus flower and the protector-god of Vishnu could not comprehend
fully our Lord. He then took the form of a huge effulgence with no beginning and end .
The two demigods got freightened to see the dazzling fiery column. Our Lord however
is manifest in Kabaaleechcharam temple to give darshan to the learned, divine scholars
who prostrate before His feet. For this Lord,in the Tamil month of Vaikaasi a festival 
takes place called swing-festival when our god and goddess are placed in a golden swing. 
The swing moves forward and backward while scholarly songsters sing songs in praise of 
our God and Goddess in a particular melodious musical tone called ' Oonjal Paattu'. 
Oh! My dear young damsel poombaavai! Is it your destiny that you should not be alive to 
participate in the grand carnival and enjoy and worship our Lord? No, certainly not! 
You should come back to life in your earlier form and do your divine service. 

1980.     உரிஞ்சாயவாழ்க்கை அமணுடையைப்போர்க்கும் 
    இருஞ்சாக்கியர்களெடுத்துரைப்பநாட்டில் 
    கருஞ்சோலைசூழ்ந்தகபாலீச்சரமமர்ந்தான் 
    பெருஞ்சாந்திகாணாதே போதியோபூம்பாவாய்.        10

    உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும் 
    இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில் 
    கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான் 
    பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்!

    urinjcu Aya vAzkkai amaN, uTaiyaip pOrkkum 
    irunj cAkkiyarkaL, eTuttu uraippa, nATTil 
    karunj cOlai cUznta kapAlIccuram amarntAn 
    perunj cAnti kANAtE pOtiyO? pUmpAvAy!

பொருள்:     சமணர்கள் உடை உடுத்தாத வாழ்க்கையர். சாக்கியர் உடை உடுத்தும் 
வாழ்க்கையர். இருவரும் தத்தம் வாய்க்கு வந்தவாறு பிதற்றித்திரிவர். அவர்கள் திரியும் 
மண்ணிலேயே மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரத்துள் சிவன் கோயில் கொண்டுள்ளான். 
அங்கு நிகழும் பெருஞ்சாந்தி விழாவைக் காணாது பூம்பாவையே நீ செல்வது முறையோ? 
காண வருவாயாக.

குறிப்புரை:     உரிஞ்சு ஆயவாழ்க்கை அமண்- உடை ஒழிந்த காரணத்தால் உரிந்தது 
போன்று ஆகிய  திகம்பர  வாழ்வுடைய சமணர். உடையைப் போர்க்கும் சாக்கியர் என்றதால், 
சமணர்க்கு அஃதின்மை குறித்தாரெனல் பொருந்துமாறறிக. கருஞ்சோலை- பெரிய சோலை. 
இருளால்கரிய எனலுமாம். எடுத்து உரைப்ப- (தூற்றுமாறு) கொண்டாட. பெருஞ்சாந்தி -
பவித்திரோற்சவம். கும்பாபிடேகம் என்பாருமுளர்.  ஆண்டுதோறும் கும்பாபிடேகம் புரிவது 
எளிதன்று. அதற்கீடாக பவித்திரோற்சவமே  நிகழ்த்துவதுண்டு.  இவ்விழா ஆனி முதலிய 
மூன்று திங்களிலும் நிகழும். நிகழவே ஆண்டு முழுதும் மயிலைக் கபாலீச்சரத்தில் திருவிழா 
உண்டு என்றவாறு. பவித்திரோற்சவம் ஆடி முற்பக்கத்துச் சதுர்த்தசியிலும், ஆவணி புரட்டாதிகளில் 
இருபக்கத்திலும் வரும் எட்டு பன்னான்கிரண்டு நாள்களிலும் பவித்திரம் சாத்தல் 
வேண்டும். (சோமசம்புபத்ததி)

    It is Civan, our Lord in Thiru-my-laap-poor. In this city, the Jains roam 
in the  streets without any dress and as a contrast, Buddhists cover themselves 
fully with ochre robes.These two races denouncing others virtues, prattle 
nonsense. Oh dear people !  Do not listen to them. The temple Kabaaleechcharam 
in the city of Thiru-my-laap-poor is surrounded by very thick groves which cannot 
be pierced through by the sun's rays and hence are very dark. In this temple  a 
special festival called Pavithra festival or yearly festival takes place. 
Normally it takes place in any one of the months - say Aadi or Aavani or Purattaci. 
This is also called good Perunchanthi festival. Oh! My dear young damsel Poompaavai! 
Is it your fate that you should die at this young age abandoning your life without 
enjoying such festivals like 'Perunchanthi' of our Lord in the very famous temple 
of Kabaaleechcharam in the city of Thiru-my-laap-poor where you were born? No. 
Definitely not. You should come back to life with your early physical body and 
live long to worship our Lord in all the festivals.

1981.    கானமர்சோலைக்கபாலீச்சரமமர்ந்தான் 
    தேனமர்பூம்பாவைப்பாட்டாகச்செந்தமிழான் 
    ஞானசம்பந்தன்நலம்புகழ்ந்தபத்தும்வலார் 
    வானசம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.        11

    கான் அமர் சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
    தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான் 
    ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார், 
    வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.

    kAn amar cOlaik kapAlIccuram amarntAn 
    tEn amar pUmpAvaip pATTu Akac centamizAn 
    njAnacampantan nalam pukaznta pattum valAr, 
    vAna campantattavarOTum vAzvArE.

பொருள்:     சோலைகள் சூழ்ந்த மயிலைக் கபாலீச்சுரத்துள் சிவன் கோயில் கொண்டுள்ளான். 
அவனிடம் இனிய பூம்பாவையின் நலம் வேண்டி ஞானசம்பந்தப் பெருமான் பத்துப்பாடல்களைப் பாடி
 அருளியுள்ளார். அப்பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர், வீடுபெற்ற பக்தர்கணத்தோடு கூடி வாழும் 
பேற்றினைப் பெற்றவர் ஆவர்.

குறிப்புரை:     ‘தேன் அமர் பூம்பாவைப் பாட்டு' என்பதிலுள்ள பூவிற்குத் 'தேன்அமர்' என்று 
அடை இயல்பாம். வானசம்பந்தத்தவர் - வீடு பெற்ற வித்தகர்.

    Our saint Thiru-gnana-Sambandar sang on our Lord of the temple at Kabaaleechcharam 
in the city of Thiru-my-laap-poor in chaste Tamil language ten verses. These sacred verses 
are an indirect form of appeal to our Lord to bring back to life the young girl Poombaavai 
in the same physical body as before, though she died and her body was burnt to ashes and was 
kept in the temple. Our saint Thiru-gnana-Sambandar came before the pot in which the ashes 
were kept and recited these ten verses. As usual this best verse is completed in this way 
those devotees who are capable of reciting these ten glorious verses of Thiru-gnana-Sambandar, 
who sang on our Lord of the temple of Kabaaleechcharam in the city of Thiru-my-laap-poor, 
will have divine relationship with the celestial world and will live there forever with 
Civa's followers. 


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            47ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 47th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 184                பதிக எண்: 48

48.திருவெண்காடு                48. THIRU-VEN-KAADU

பண்: சீகாமரம்                    Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    ஆக்கூரிலிருந்து சீகாழி செல்லும் பெருவழியில் பேருந்து மூலம் அல்லி விளாகத்தில் இறங்கிக் 
கிழக்கே 4.5 கி.மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். இது காவிரி வடகரைத் தலங்களுள் 
பதினொன்றாவது ஆகும். மயிலாடுதுறை, சீகாழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து
பேருந்துகளில் செல்லலாம்.

    இறைவர் திருப்பெயர் திருவெண்காட்டீசர், சுவேதாரண்யேசர். இறைவி திருப்பெயர் 
பிரமவித்யாநாயகி. தீர்த்தம் - முக்குளங்கள் - சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சந்திர தீர்த்தம். 
இக்குளங்களில் நீராடி வழிபடுகிறவர்கள் பிள்ளைப் பேற்றை அடைவார்கள். அவர்களைத் 
தீவினைகள் அடையா. இச்செய்திகளை இத்தலத்துக்குரிய,

    'பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
    வேயன தோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே'

என்னும் திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் (பண் - சீகாமரம், பாட்டு 2) இனிது தெளிவு படுத்தும்.

    திருப்பெண்ணாகடத்தில் அச்சுதகளப்பாளர் என்பார் ஒருவர் புத்திரப்பேறின்றி இருந்தார். 
அவர் தமது ஆசாரியர் அருணந்தி சிவாசாரியார் அருளியபடி, திருமுறையில் கயிறுசாத்தினர். 
சாத்தியபொழுதும் ஞானசம்பந்த சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய 'பேயடையா பிரிவெய்தும்' 
என்னும் மேற்குறித்த திருப்பாடல் தோன்றிற்று. அதிலுள்ள, 'வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் 
பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம்பெறுவர்... ஒன்றும் ஐயுறவேண்டாம்' என்னும் பொருளை
அறிந்து மகிழ்ந்து, திருவெண்காட்டிற்குத் தம் மனைவியாரோடு சென்று, முக்குளத்தில் நீராடி 
இறைவனை வழிபட்டார்.

    இங்ஙனம் வழிபட்டுவரும் நாள்களில் ஒருநாள் இறைவன் அவரது கனவில் 
தோன்றிச் சைவ சித்தாந்தத்தை நிலைபெறச் செய்யக்கூடிய ஒரு புத்திரனை நீ அடைவாய் 
என்று சொல்லி மறைந்தருளினார். அவ்வாறே அவர் புத்திரப்பேற்றை அடைந்தார். 
இக்குழந்தையே சைவசித்தாந்த  பரமாசாரியராக விளங்கிய மெய்கண்ட தேவர் ஆவார்.

    தலவிருட்சம் ஆலமரம்; கொன்றை மரம். உள்பிரகாரத்தில் அகோரமூர்த்தி கையில் 
சூலத்துடன்  எழுந்தருளியிருக்கின்றார்.   அவருக்கு எதிரில் காளியின் சந்நிதி உள்ளது. 
சிதம்பரத்தில்  இருப்பது போலவே இங்கு நடராஜர் பெருமையுடன் விளங்குகின்றார். 
இப்பதியில் வெள்ளானை பூசித்துப் பேறு பெற்றது. இதை,

    'வெள்ளானை வேண்டும்வரம் கொடுப்பர் 
        வெண்காடு மேவிய விகிர்தனாரே'

என்னும் அப்பர் பெருமானின் இத்தலத் தேவாரப் பகுதியாலும், 
    
    'அயிரா வதம்பணிய மிக்கதனுக் 
    கருள்சுரக்கும் வெண்காடு'

என்னும், ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியாலும் அறியலாம். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர்
பதிகம் மூன்று, அப்பர் பதிகம் இரண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள்
இருக்கின்றன. சைவ எல்லப்ப நாவலர் தலபுராணத்தை இயற்றியுள்ளார், அது அச்சில் வந்துள்ளது.

பதிக வரலாறு

    முத்தமிழ் விரகர் அடியார்சூழத் திருக்கோபுரத்தை வணங்கித் திருக்கோயிலை வலம் வந்து
வீழ்ந்து தொழுது மெய்ப்பொருள் ஆயினாரை முக்குளமும் சேர்த்துப் பாடியருளியது சொல்லுதற்கு
அரிய இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

1982.     கண்காட்டுநுதலானுங்கனல்காட்டுங்கையானும் 
    பெண்காட்டுமுருவானும்பிறைகாட்டுஞ்சடையானும் 
    பண்காட்டுமிசையானும்பயிர்காட்டும்புயலானும் 
    வெண்காட்டிலுறைவானும்விடைகாட்டுங்கொடியானே.        1

    கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும், 
    பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும், 
    பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும், 
    வெண் காட்டில் உறைவானும் - விடை காட்டும் கொடியானே.

    kaN kATTum nutalAnum, kanal kATTum kaiyAnum, 
    peN kATTum uruvAnum, piRai kATTum caTaiyAnum, 
    paN kATTum icaiyAnum, payir kATTum puyalAnum, 
    veN kATTil uRaivAnum--viTai kATTum koTiyAnE.

பொருள்:     சிவபெருமான், நெற்றிக் கண்ணுடையவன்; கையில் நெருப்பை ஏந்தியவன்; 
உடம்பின் ஒருபாகத்தில் உமாதேவியைக் கொண்டு விளங்குபவன்; சடையில் பிறைநிலவைத் 
தாங்கியவன்; பண்ணோடு இசையாய் விளங்குபவன்; பயிருக்கு உதவும் மழையாக இருப்பவன்; 
திருவெண்காட்டில் கோயில் கொண்டவன்; இடப வாகனத்தான் என்க.

குறிப்புரை:     கண்காட்டும்- நெருப்புக்கண்ணைக் காட்டும், இவ்வாறே காட்டும் 
என்பதற்கு முன்னே இரண்டனுருபு (ஐ) விரித்துக் கொள்க. நுதலான், கையான், உருவான், 
சடையான், உறைவான் என்பன நுதல் முதலியவற்றை முறையே உடைமையால் வந்தது. 
உறைவானென்பது வினையாலணையும் பெயருமாம். இசையான், புயலான் என்பவற்று             
இசைவடிவாயும் புயல் (மேகம்) வடிவாயும் விளங்குகின்றான் என்று கொள்க. 
'ஏழிசையாய் இசைப்பயனாய்', 'ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்பவை காண்க. 
விடை - எருது. கொடியான்- கொடியை உடையான். உம்மை ஏற்ற  பெயர்கள் எழுவாய். 
கொடியான் என்பது பெயர்ப்பயனிலை (அற்புதத் திருவந்தாதி 98).

    Behold! It is Civan, our Lord of Thiru-ven-kaadu. Our Lord has got a third eye 
at the center of His forehead. He holds fire in one of His hands. His holy body is 
half feminine. He retains the moon on His matted hair. He is God in the form of music 
and all sounds. He is like the rainy clouds and storm for growing crops. His flag shows 
the symbol of the bull, He has for His transport. He is manifest in the temple in 
Thiru-ven-kaadu city.

1983.    பேயடையாபிரிவெய்தும்பிள்ளையினோடுள்ளநினை 
    வாயினவேவரம்பெறுவர்ஐயுறவேண்டாவொன்றும் 
    வேயனதோளுமைபங்கன்வெண்காட்டுமுக்குளநீர் 
    தோய்வினையாரவர்தம்மைத்தோயாவாந்தீவினையே.        2

    பேய் அடையா, பிரிவு எய்தும்; பிள்ளையினோடு உள்ளம் நினைவு 
    ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்; 
    வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குளநீர் 
    தோய் வினையார் அவர் தம்மைத் தோயாஆம், தீவினையே.

    pEy aTaiyA, pirivu eytum, piLLaiyinOTu uLLam ninaivu-         
    AyinavE varam peRuvar; aiyuRa vENTA, onRum; 
    vEy ana tOL umai pagkan veNkATTu mukkuLa nIr 
    tOy vinaiyAr avartammait tOyA Am, tIvinaiyE.

பொருள்:     மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட உமாதேவியைப் பாகமாகக் 
கொண்டு  திருவெண்காட்டில் விளங்குபவரே சிவபெருமான். வெண்காட்டில் உள்ள முக்குளநீரில் 
தோய்ந்து நீராடியவர்களைத் தீவினைகள் சாராது நல்வரம் பெறுவர். பேயும் நாடாது. அஞ்ஞானம் 
நீங்கும். புத்திரப்பேறு கிட்டும். இதில் ஐயமே வேண்டா.

குறிப்புரை:     பேய்-பேய்கள். அடையா -சாரா.பிரிவு எய்தும் - சார்ந்த பேய்களும் 
இத்தலத்தை வழிபட்டால் நீக்கமுறும். பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே 
வரம் பெறுவர்- பிள்ளைவரம்      கேட்டலோடு மற்றைய வரங்களையும் மனத்தில்              
 நினைத்தவாறே அடைவர். ஆயின - வினையாலணையும் பெயர்.  ஒன்றும் - சிறிதும்.              
ஐயுற- ஐயம் அடைய. வேய்-மூங்கில். அன்ன - ஒத்த, இடைக்குறை.    முக்குளம்- சோம 
சூரிய அக்கினி தீர்த்தங்கள். தோய் வினையார்-முழுகும் செயலுடைய அடியார் முதலியோர். 
தீவினை தோயாவாம் என்க. தோய்தல்- பீடித்தல். மெய்கண்ட தேவ நாயனார் தோற்றத்துக்கு 
இத்திருப்பாடல் திருவருட்குறிப்பாயிருந்தது.

    This second verse in this 48th pathigam indicates the birth of our greatest
philosophical saint Sri Mei-kanda-theva-naayanaar. He was bestowed with the sagacious     
supernal effulgence called Siva-gnaana-botham of the philosophical world at the 
age of less than three, He was blessed and graced by the divine saint Paran-jothi 
who gave him the divine name also Mei-kandaar (For full details see the history of 
the place. His original name is Thiru-ven-kaadar).

    Behold! It is our Lord Civan of Thiru-ven-kaadu. He has embedded His 
consort Uma Devi whose shoulders are strong and smooth like bamboo polls and He 
is manifest in the temple at Thiru-ven-kaadu city. Those who suffer the evil 
effects of fiends should visit the temple, take bath in the three tanks - viz., 
Soma, Soorya and Agni. Thereafter if they worship our Lord they will be freed 
of all their sufferings. The fiends will leave them. Children will be born of 
those who need them. All desires will be granted by our Lord to those who pray. 
Oh! you people you need not have any doubt about these good effects.

1984.    மண்ணொடுநீரனல்காலோடாகாயம்மதியிரவி 
    எண்ணில்வருமியமானனிகபரமுமெண்டிசையும் 
    பெண்ணினொடாண்பெருமையொடுசிறுமையுமாம்பேராளன் 
    விண்ணவர்கோன்வழிபடவெண்காடிடமாவிரும்பினனே.        3

    மண்ணொடு,நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி,இரவி 
    எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும், 
    பெண்ணினொடு,ஆண்,பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன் - 
    விண்ணவர்கோன் வழிபட - வெண்காடு இடமா விரும்பினனே.

    maNNoTu, nIr, anal, kAlOTu, AkAyam, mati, iravi, 
    eNNil varum iyamAnan, ikaparamum, eNticaiyum, 
    peNNinoTu, AN, perumaiyoTu, ciRumaiyum, Am pErALan- 
    viNNavarkOn vazipaTa--veNkATu iTamA virumpinanE.

பொருள்:     நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய 
அட்டமூர்த்தியாய் விளங்குபவனே இறைவன். அவனே, இம்மை, மறுமை, எண்திசை, 
பெண், ஆண், பேருரு, சிற்றுரு ஆகிய அனைத்துமாய் உள்ளான். அவனே இந்திரன் 
தன்னை வழிபாடு செய்ய வெண்காட்டில் கோயில் கொண்டுள்ளான்.

குறிப்புரை:     'மண் ... இயமானன்' - எட்டுருவர் (அஷ்டமூர்த்தி) 'எட்டுக்கொண்டார்'. 
(திருவுந்தியார்) இகபரம் - இம்மை மறுமை. விண்ணவர்கோன்- இந்திரன். அவனும் 
வெள்ளானையும் வழிபட்டமை தலபுராணத்திற் காண்க (பா 7.9). இதில் சிவபிரான் 
உலகினை இறந்து நின்றது அரன் உரு... மூடரெல்லாம் - (சிவஞான சித்தியார்) என்பதில் 
குறித்த விஸ்வரூபி விஸ்வாந்தர்யாமி என்னும் இரண்டு நிலைகளை உணர்த்தியவாறு.

    Behold! It is Civan, our Lord of Thiru-ven-kaadu. Our Lord is earth, 
water, fire, wind, sky, moon, the sun and numberless souls; like this. He has 
eight dispositions. He is in this world birth, and life in the next one; 
eight directions; male and female; He is the greatest in all other great things; 
He is the smallest in all the small ones. He is the most famous of all these 
dispositions. Lord Indra came to Thiru-ven-kaadu to worship our Lord in this place. 
Thus our Lord desired to be manifest in Thiru-ven-kaadu and here He graces 
one and all.

1985.     விடமுண்டமிடற்றண்ணல்வெண்காட்டின்தண்புறவின் 
    மடல்விண்டமுடத்தாழைமலர்நிழலைக்குருகென்று 
    தடமண்டுதுறைக்கெண்டைதாமரையின்பூமறையக் 
    கடல்விண்டகதிர்முத்தநகைகாட்டுங்காட்சியதே.        4

    விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில், 
    மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று, 
    தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின் பூ மறையக் 
    கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.

    viTam uNTa miTaRRu aNNal veNkATTin taNpuRavil, 
    maTal viNTa muTat tAzai malar nizalaik kuruku enRu, 
    taTam maNTu tuRaik keNTai, tAmaraiyin pU maRaiya, 
    kaTal viNTa katir muttam nakai kATTum kATciyatE.

பொருள்:     விடத்தை அமுதாக உண்ட சிவன் கோயில் கொண்டுள்ள தலமே 
திருவெண்காடாம். அங்கு வளர்ந்த தாழைகளின் மடல் நடுவே தாழம்பூ மலர்ந்திருக்கும் .
அதனை மீன்கள் தங்களைக் கொத்தவரும்  கொக்கென்று கருதி நடுங்கி, தாமரை மலர்கள்
 நடுவே சென்று ஒளிந்து கொள்ளும். அதன் அறியாமையைக் கண்டு நகைப்பது போல்
 முத்துக்கள் சிதறிக் காட்சியளிக்கும் என்க. 

குறிப்புரை:     மிடற்று அண்ணல் - திருநீலகண்டப் பெருமான். தண்புறவில் - குளிர்ந்த 
முல்லை நிலத்தில். குருகு- குருகு என்னும் புள். தடம் - குளம். கெண்டை - மீன். பூ - பூவின்பால். 
விண்ட - விள்ளுதல் உற்ற. முத்தம் - முத்துக்கள். நகை - பல், சிரிப்புமாம். கெண்டையின் 
அறியாமைச் செயலைக் கண்டு கடல் நகைத்தது என்றது தற்குறிப்பேற்றம்.

    Behold! It is our Civan, the Lord in Thiru-ven-kaadu. Our Lord once consumed 
the poison that came out of the ocean which was churned by the devas and the asuras and 
stopped it in His throat which became dark blue in colour forever. He is manifest in the 
temple in Thiru-ven-kaadu. Near this temple a cool forest exists in which a cool brook 
flows. On the banks of this brook luxurious pandanus flower plants grow. The sun's rays 
falling over their spikes, create shadow in the water below. The carp fish in the running 
water, mistaking the shadow to be cranes flying for food, hide themselves under the shade 
of the lotus flower. The pearls, which are very bright and white in colour on the banks 
of the seashore twinkle in the sunlight. This scenery made our saint Thiru-gnana-Sambandar 
to imagine as though the pearls were laughing on seeing the carp fish misunderstanding the 
shadow of the spikes to be cranes and hiding themselves under the lotus flower for protection. 
The pearls laugh at the foolishness of the carp fish, this is the poetic fancy of the saint.

1986.     வேலைமலிதண்கானல்வெண்காட்டான்திருவடிக்கீழ் 
    மாலைமலிவண்சாந்தால்வழிபடுநன்மறையவன்றன் 
    மேலடர்வெங்காலனுயிர்விண்டபினைநமன்தூதர் 
    ஆலமிடற்றானடியாரென்றடரஅஞ்சுவரே.        5

    வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் 
    மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன் 
    மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர், 
    ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.

    vElai mali taNkAnal veNkATTAn tiruvaTikkIz 
    mAlai mali vaN cAntAl vazipaTu nal maRaiyavan tan 
    mEl aTar vegkAlan uyir viNTa pinai, naman tUtar, 
    AlamiTaRRAn aTiyAr enRu, aTara anjcuvarE.

பொருள்:     சோலைகள் நிறைந்த கடற்கரைப் பகுதியே திருவெண்காட்டுத் தலமாகும். 
அங்கு கோயில் கொண்டுள்ள சிவனை மலர்களாலும், மணமிக்க சந்தனத்தாலும், அலங்கரித்து 
வழிபாடு செய்தவனே அந்தணச் சிறுவனாகிய மார்க்கண்டேயன் ஆவான். அவனது உயிரைக் 
கவர வந்தவனே இயமன் ஆவான். இயமனைச் சிவன் தன் காலால் உதைத்து அருளினான். 
அதிலிருந்து எமதூதர்கள் சிவனடியார்களின் உயிரைக் கவர பெரிதும் அஞ்சி நிற்பர் என்க.

குறிப்புரை:     வேலை- கடல். கானல்- கடற்கரைச்சோலை. காலன் மாய்ந்ததால்,
தூதர் சிவனடியாரிடத்தில் அச்சமுற்றனர். இதிற்குறித்தது திருவெண்காட்டுத் தலத்தில் 
நிகழ்ந்த சுவேத கேது முனிவர் வரலாறு  (தி. 2 ப. 61 பா. 7) இதனை மார்க்கண்டேய 
முனிவர் வரலாறு என்றும் கூறுகின்றனர். 

    Behold! It is Civan, our Lord in Thiru-ven-kaadu. Our Lord manifests 
Himself in the temple in Thiru-ven-kaadu. Around the temple cool groves are in 
plenty along the seashore.Our Lord with garlands and sandal paste over His holy 
feet was worshipped by the Saint Swethakethu. At this moment our Lord kicked and 
killed the god of death who came to this city to covet the life of saint Swethakethu. 
This scenery encouraged  Civa's devotees to believe that hereafter the messengers 
of god of death will never come near them to covet their life, out of fear of our God.

1987.     தண்மதியும்வெய்யரவுந்தாங்கினான்சடையினுடன் 
    ஒண்மதியநுதலுமையோர்கூறுகந்தானுறைகோயில் 
    பண்மொழியாலவன்நாமம்பலவோதப்பசுங்கிள்ளை 
    வெண்முகில்சேர்கரும்பெணைமேல்வீற்றிருக்கும்வெண்காடே.        6

    தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின்உடன்; 
    ஒண்மதியநுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில் 
    பண் மொழியால் அவன் நாமம்பல ஓத, பசுங்கிள்ளை 
    வெண் முகில் சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

    taNmatiyum veyya (a)ravum tAgkinAn, caTaiyin uTan; 
    oNmatiya nutal umai OrkURu ukantAn; uRai kOyil- 
    paN moziyAl avan nAmam pala Ota, pacugkiLLai 
    veN mukil cEr karumpeNai mEl vIRRirukkum veNkATE.

பொருள்:     குளிர்ந்த நிலவையும், கொடிய பாம்பையும் தன் தலையில் கொண்ட
சிவபெருமான், மதிபோலும் நுதலுடைய உமையவளைத் தன் உடம்பின் பாகமாகக்
கொண்டுள்ளான். அவன் கோயில்  கொண்டுள்ள தலமே திருவெண்காடாம். அங்குள்ள
கிளிகள் உயர்ந்த பனைமரம் மீதிருந்து சிவனின்  நாமத்தைக் கூறிக்கொண்டே இருக்கும்.

குறிப்புரை:     தண்மை; வெம்மை இரண்டும் முறையே மதியின் நிலவும் பாம்பின் 
நஞ்சும்  குறித்தன.  ஒள்மதியம் நுதல் உமை - -ஒளி பொருந்திய பிறை போன்ற நெற்றியை
உடைய உமாதேவியார்.  கூறு- இடப்பால். பெணை- பெண்ணை. பனை, கிள்ளை நாமம் ஓத 
வீற்றிருக்கும் காடு என்க. பாரிசையும் பண்டிதர்கள் பல்நாளும் பயின்றோதும் ஓசை கேட்டு 
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் - பாரூட் சொல்லும் மிழலையாமே (தி.1 ப.132 பா.1). 
வேதத்தொலியாற் கிளி சொற்பயிலும் வெண்காடே  (ப.197  பா.2)

    Behold! It is Civan, our Lord in Thiru-ven-kaadu. Our Lord retains the 
cool moon on His matted locks of hair and bears the venomous snake also along 
with the moon. His consort, our goddess Uma, whose forehead is bright like the 
moon, is seated on the left side of His body. In the nearby places of the temple 
young parrots, with multicoloured feathers, alight on the leaves of the tall black 
palmyrah trees where the white clouds gather on the top. Sitting on the tree they 
repeat with sweet syllables the great name of our God.

1988.     சக்கரமாற்கீந்தானுஞ்சலந்தரனைப்பிளந்தானும் 
    அக்கரைமேலசைத்தானுமடைந்தயிராவதம்பணிய 
    மிக்கதனுக்கருள்சுரக்கும்வெண்காடும்வினைதுரக்கு 
    முக்குளநன்குடையானுமுக்கணுடையிறையவனே.        7

    சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்; 
    அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்த அயிராவதம் பணிய, 
    மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும் 
    முக்குளம், நன்கு உடையானும் - முக்கண் உடை இறையவனே.

    cakkaram mARku IntAnum; calantaranaip piLantAnum; 
    akku araimEl acaittAnum; aTainta ayirAvatam paNiya, 
    mikku atanukku aruL curakkum veNkATum, vinai turakkum 
    mukkuLam, nanku uTaiyAnum--mukkaN uTai iRaiyavanE.

பொருள்:     சிவன் சக்கரப் படையைத் திருமாலுக்கு அருளியவன். சலந்தராசுரனை வதம் 
செய்தவன். எலும்பு மாலையை அணிந்தவன். தன்னை வணங்கிய ஐராவதம் என்ற யானைக்கு 
அருள் செய்தவன். வெண்காட்டில் கோயில் கொண்டவன். வழிபடும் அடியவர்களின் வினைகளை 
நீக்கும் முக்குள நீருக்கும் உரியவன். முக்கண்ணனும் அவனே ஆவான்.

குறிப்புரை:     மாற்கு -விஷ்ணுவுக்கு, அக்கு - எலும்புமாலை. அயிராவதம் -வெள்ளானை (பா. 9). 
அதனுக்கு - அவ்வெள்ளானைக்கு அருள்மிக்குச்சுரக்கும் என்க. காடும் குளமும் உடையான் என்றும்,
காடும் முக்குளம் உடையானும் இறையவன்; பிளந்தானும் அசைத்தானும் உடையானும் இறையவனே
என்றும் கொள்ளலாம். 'வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே' (பா. 19. 6)

    Behold! It is Civan, our Lord in Thiru-ven-kaadu. Our Lord has a third eye
at the center of His forehead. He gracefully gave the sacred weapon of the wheel to
Thirumaal.He split into two the body of Chalandra asuran and killed him. He wears the 
garland made of bones on His waist. The great Iravatha elephant belonging to Indra 
came near our Lord and prostrated before Him and worshipped Him. Our Lord was highly 
pleased with the elephant's behaviour and gave a lot of boons and blessed the elephant. 
In the temple ground three tanks exist. Those who take bath in all the three tanks 
will find, their sins disappear. This Lord is manifest in Thiru-ven-kaadu.

1989.     பண்மொய்த்தஇன்மொழியாள்பயமெய்தமலையெடுத்த 
    உன்மத்தனுரம்நெரித்தன்றருள்செய்தானுறைகோயில் 
    கண்மொய்த்தகருமஞ்ஞைநடமாடக்கடல் முழங்க 
    விண்மொய்த்தபொழில்வரிவண்டிசைமுரலும்வெண்காடே.        8

    பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த 
    உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில் 
    கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம்ஆட, கடல் முழங்க
    விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.

    paN moytta inmoziyAL payam eyta malai eTutta 
    unmattan uram nerittu, anRu aruL ceytAn uRai kOyil- 
    kaN moytta karu manjnjai naTam ATa, kaTal muzagka, 
    viN moytta pozil varivaNTu icai muralum veNkATE.

பொருள்:     பண் நிறைந்த பாடல்போலும் இனியமொழி பேசும் உமாதேவி அஞ்ச 
கயிலாய மலையைப் பெயர்த்து எடுத்தவன் இராவணன். அந்த ஆணவம் மிக்க அரக்கனின் 
வலிமையைக் கெடுத்துப்பின் அருளியவன் சிவனே! அவன் திருவெண்காட்டில் கோயில் 
கொண்டுள்ளான். அங்கு தோகையுடைய மயில்கள் நடனமாடும். கடல்கள் முழங்கும்.
வண்டுகள் இசைபாடிக் கொண்டிருக்கும்.

குறிப்புரை:     மொழியாள் - சொல்லியள் (தேவியார்). பயம் - அச்சம். உன்மத்தன் - 
பித்துக்கொளி, உரம் -மார்பு, கண் - தோகைக்கண்கள். கருமஞ்ஞை-  நீலமயில். 
மயில் ஆட்டத்திற்கு முடிவு. கடல், இசைவண்டினொலி. 'விண்மொய்த்த பொழில்' 
என்ற தலத்தின் சோலைவளம் இன்றும் உளது. 

    Behold! It is Civan, the Lord of Thiru-ven-kaadu. Our Lord's consort, our 
goddess Paarvathi Devi was with Him on the mount Himalayas. She always speaks very 
delightful words similar to the musical tone of sacred songs. At one moment she got 
frightened by the movement of the mountain over which she was resting with her Lord. 
Our Lord pressed the mountain with His toe. Raavanan got crushed under the mountain. 
He realised his mistake, wept and begged our Lord for pardon. Our Lord exonerated 
him and graced him with several boons. Our Lord of this disposition is manifest in 
the temple in Thiru-ven-kaadu. All around the temple blue coloured peacocks unfold 
their very attractive feathers, with eye-like designs all over the feathers and dance. 
The seashore nearby makes ever-roaring noise. Near the temple thick groves with 
sky-high tall trees exist. There striped beetles make humming noise. It is heard 
as though they sing musical notes. In such a holy place called Thiru-ven-kaadu 
our Lord is manifest and graces all the devotees.

1990.     கள்ளார்செங்கமலத்தான்கடல்கிடந்தானெனவிவர்கள் 
    ஒள்ளாண்மைகொளற்கோடியுயர்ந்தாழ்ந்துமுணர்வரியான் 
    வெள்ளானைதவஞ்செய்யும்மேதகுவெண்காட்டானென் 
    றுள்ளாடியுருகாதாருணர்வுடைமையுணரோமே.        9

    "கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள் 
    ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் - 
    வெள்ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான்'' என்று
    உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே. 

    "kaL Ar cegkamalattAn, kaTal kiTantAn, ena ivarkaL 
    oL ANmai koLaRku OTi, uyarntu Azntum, uNarvu ariyAn- 
    veL Anai tavam ceyyum mEtaku veNkATTAn" enRu 
    uL ATi urukAtAr uNarvu, uTaimai, uNarOmE.

பொருள்:     தேன் நிறைந்த செந்தாமரைமலர் மேல் உள்ள பிரமனும் பாற்கடலில் கிடந்த 
திருமாலும் சிவனின் அடிமுடி தேட முயன்று தோற்றார்கள். உணர்வதற்கு அரியவனாகிய
சிவனை வெள்ளையானை அன்பால் வழிபட்டுச் சிறந்தது. அச்சிவன் கோயில் கொண்ட தலமே 
திருவெண்காடாம். அச்சிவனை உள்ளம் உருகி வழிபாடு செய்தவர்கள் நல் உணர்வு உடையவர் ஆவர்.

குறிப்புரை:     கள் - தேன். கமலத்தான்-   தாமரை மேலுள்ள பிரமன். கடல் - பாற்கடலில் 
கிடந்தான்- அறிதுயில் செய்யும் திருமால். "தேசங்கள் தொழநின்ற திருமால்' (தி.4 ப.7 பா.6). 
ஆண்மை- ஆளாந்தன்மை, அடிமைத் திறம். கொளற்கு- கொள்ள வேண்டி. உயர்ந்து - மேல் பறந்தும் 
ஆழ்ந்தும், கீழ்தோண்டிச் சென்றும். உணர்வு அரியான் - உணர்வதற்கு அரியவன். 
'வெள்ளானை ... வெண்காடு'  (பா. 7) வெள்ளானைக்காடு என்பது வெண்காடு என்று சுருங்கிற்று 
எனக்கருத இடமுண்டு. உள் ஆடி-  உள்ளம் கசிந்து,  உள்ளம் நடுங்கி உருகாதவரது ஞானப்பேற்றை. 
உணரோம் - மதியோம். உருக்கம்- சிவஞானத்தை எய்துவிக்கும். உருகாமை தற்போதத்தை ஒழிக்காது.

    Behold! It is Civan our Lord of Thiru-ven-kaadu. Demigod Brahma rests in the 
honeyed red lotus flower. Whereas Lord Vishnu sleeps over the snake in the ocean.
They both wished to discontinue their egoism. Therefore, one flew high in the sky 
and the other went deep into the earth, but could not comprehend anything about our 
Lord. This Lord is manifest in the temple in Thiru-ven-kaadu, He graced the white 
elephant of Indra, which came to prostrate before and worship our Lord. We cannot 
understand those people who do not weep and shed tears with melting emotions even 
after coming to know about the virtues and fame of our Lord in the temple. 
We do not respect the life of such people for they will never be able to 
shed their ego. 

1991.     போதியர்கள்பிண்டியர்கள்மிண்டுமொழிபொருளென்னும் 
    பேதையர்களவர்பிரிமினறிவுடையீரிதுகேண்மின் 
    வேதியர்கள்விரும்பியசீர்வியன்திருவெண்காட்டானென் 
    றோதியவர்யாதுமொருதீதிலரென்றுணருமினே.        10

    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும் 
    பேதையர்கள் அவர்; பிரிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்; 
    "வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான்" என்று 
    ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!

    pOtiyarkaL piNTiyarkaL miNTumozi poruL ennum             
    pEtaiyarkaL avar; pirimin! aRivu uTaiyIr! itu kENmin; 
    "vEtiyarkaL virumpiya cIr viyantiru veNkATTAn" enRu 
    Otiyavar yAtum oru tItu ilar enRu uNaruminE!

பொருள்:     பௌத்தர்களும் சமணர்களும் குதர்க்கமாகப் பொருள் கொண்டு பேசுபவர்கள். 
எனவே, அவர்களின் உரைகளை ஏற்க வேண்டாம். மெய்ஞ்ஞானத்தை உடையவர்களே! நீங்கள் நான் 
கூறுவதைக் கேளுங்கள். வேதியர் விரும்பும் சிவன் திருவெண்காட்டில் கோயில் கொண்டுள்ளான். 
அவனையே போற்றி வழிபாடு செய்து தீதற்ற நிலையை அடைவீர்களாக.  

குறிப்புரை:     போதியர்கள்- சாக்கியர்கள். போதி- அரசமரம். புத்தன் போதி விருட்சத்தின் 
கீழினன். போதி வேந்தன், பிண்டியர்கள் - சமணர்கள். பிண்டி - அசோகமரம். 'பூமலி அசோகின் 
புனை நிழலமர்ந்த நான்முகன்' மிண்டு மொழி- வன்புரை. பேதையர்களாகிய அவரைப் பிரிந்து 
சென்மின். அறிவுடையீர் இதைக் கேண்மின். 'மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் 
விரைந்து வம்மின்' (திருப்பல்லாண்டு) எனல் போல அவர் 'சென்மின்' எனலுமாம். ஓதினவர் 
ஒருதீதும் இலர் என்று உணருமின் என்க.

    Oh! People of Thiru-ven-kaadu. Do not listen to the sinful, false words of the 
Buddhists who do penance under the peepal tree, and the Jains who do their penance under 
Uvaria longifolia tree. Shun their presence and always avoid them. Oh learned people! 
Listen to these words. The Vedic scholars of this place, very passionately attached 
to our Lord, manifest in the temple in Thiru-ven-kaadu, recite the name of our Lord 
with sincere devotion and they will never get any slander in their life. This conviction 
is good enough to promote our piety to our Lord.

1992.     தண்பொழில்சூழ்சண்பையர்கோன்தமிழ்ஞானசம்பந்தன் 
    விண்பொலிவெண்பிறைச்சென்னிவிகிர்தனுறைவெண்காட்டைப் 
    பண்பொலிசெந்தமிழ்மாலைபாடியபத்திவைவல்லார் 
    மண்பொலியவாழ்ந்தவர்போய்வான்பொலியப்புகுவாரே.        11

    தண்பொழில் சூழ் சண்பையர்கோன் - தமிழ் ஞானசம்பந்தன் 
    விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப் 
    பண் பொலி செந்தமிழ்மாலை பாடிய பத்துஇவை வல்லார், 
    மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.

    taNpozil cUz caNpaiyarkOn--tamiz njAnacampantan- 
    viN poli veNpiRaic cenni vikirtan uRai veNkATTaip 
    paN poli centamiz mAlai pATiya pattu ivai vallAr,
    maN poliya vAzntavar, pOy vAn poliyap pukuvArE.

பொருள்:     குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த சீர்காழிப் பதியில் அவதரித்தவரே 
திருஞானசம்பந்தர் ஆவார். அவர் விண்ணில் தவழும் பிறைநிலவைத் தன்தலையில் 
சூடிக் கொண்ட திருவெண்காட்டுத் தலைவனை - சிவனைப் -புகழ்ந்து பத்துப்பாடல்கள் 
பாடியருளி உள்ளார். அப்பத்துப் பாடல்களையும் அன்புடன் பாடிட வல்லவர்கள் 
மண்ணிலும் விண்ணிலும் சிறப்புறுவர் என்க.

குறிப்புரை:     விண்பொலி வெண்பிறை- ஆகாயத்தில் விளங்குகின்ற வெள்ளைப்பிறை, 
பண்பொலி செந்தமிழ்மாலை மண் பொலிய வாழ்ந்தவர் விண் பொலியப் புகுவர் என்க. 
வாழ்ந்தவர் எழுவாய்.  புகுவார்- பயனிலை.

    Our saint Thiru-gnana-Sambandar hails from the sacred place Sanbai (Seerkaazhi's 
another name). This city is surrounded by cool gardens. Our Thiru-gnana-Sambandar 
is the chief of this place. He came to Thiru-ven-kaadu and sang in melodious musical 
tone these ten pure Tamil verses on the Lord of this place who has adorned His head 
with the baby moon, which traverses in the sky. Those devotees who are capable of 
reciting these ten rhythmic verses in the best musical tone will live not only 
in this world very happily, but also in the celestial world very gracefully.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            48ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 48th Hymn


            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண் : 185            பதிக எண்: 49

49.சீகாழி                49. SEERKAAZHI

பண்: சீகாமரம்                Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    137ஆவது பதிகம் காண்க.

பதிக வரலாறு

    137ஆவது பதிகம் காண்க.

            திருச்சிற்றம்பலம்

1993.    பண்ணினேர்மொழிமங்கைமார்பலர் 
        பாடியாடியவோசைநாள்தொறுங் 
    கண்ணினேரயலேபொலியுங்கடற்காழிப் 
    பெண்ணினேரொருபங்குடைப்பெரு
        மானையெம்பெருமானென்றென்றுன்னும் 
    அண்ணலாரடியாரருளாலுங்குறைவிலரே.        1

    பண்ணின் நேர் மொழி மங்கைமார்பலர்
        பாடி ஆடிய ஓசை நாள்தொறும் 
    கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி, 
    பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை 
        "எம்பெருமான்!" என்று என்று உன்னும் 
    அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே.

    paNNin nEr mozi magkaimAr palar pATi ATiya Ocai nALtoRum
    kaNNin nEr ayalE poliyum kaTal kAzi, 
    peNNin nEr orupagku uTaip perumAnai, "emperumAn!" enRu enRu unnum 
    aNNal Ar aTiyAr aruLAlum kuRaivu ilarE.

பொருள்:     கடலால் சூழப்பெற்ற அழகிய நகரமே சீகாழிபதி. அங்கு பண்ணின் இசை போன்று 
இனிய மொழி பேசும் பெண்கள் பலரும் கூடி பாடியாடி சிவனைப் பரவுவர். உமாதேவியை உடம்பின் 
ஒருபாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமானை வணங்கி அடியவர் போற்றுவர். சிவனின் 
அருளால் அடியவர்கள் குறைவின்றி வாழ்ந்து வருவர்.

குறிப்புரை:     பண்ணின் - பண்ணிசையின்பத்தை. நேர் -ஒத்த. கண்ணின் நேர் - 
கண்ணெதிரில், பெண்... பங்கு- மாதியலும்பாதி. உன்னும்- தியானம் புரியும். 
'அருளாலும்'  என்ற உம்மை இம்மைக்குரிய பொருளாலும் அன்றி என்று இறந்தது 
தழீஇயிற்று. 

    Behold! It is our Lord Civan in Seerkaazhi. Our saint Thiru-gnana-
Sambandar hails from Seerkaazhi. On the eastern side of the city the deep big 
ocean, the Bay of Bengal's seashore enhances the beauty of the city. Next to 
the seashore in the  big street as well in the dance hall a good number of 
attractive damsels,who always speak in  musical tone, sing and dance and make 
all the people happy. In this city, our Lord who is manifest in the temple is 
in the half female form, having embedded His consort on the left half of His body. 
The devotees always recite and establish that our Lord is the only Chief Supreme 
Being in the universe.Our Lord always bestows grace along with richness on 
these devotees.

1994.     மொண்டலம்பியவார்திரைக்கடல் 
        மோதிமீதேறிசங்கம்வங்கமுங் 
    கண்டலம்புடைசூழ்வயல்சேர்கலிக்காழி 
    வண்டலம்பியகொன்றையானடி 
        வாழ்த்தியேத்தியமாந்தர்தம்வினை 
    விண்டலங்கெளிதாமதுநல்விதியாமே.        2

    மொண்டு அலம்பிய வார் திரைக்கடல் 
        மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் 
    கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலிக் காழி 
    வண்டு அலம்பிய கொன்றையான் அடி 
        வாழ்த்தி ஏத்திய மாந்தர்தம் வினை 
    விண்டல் அங்கு எளிதுஆம்; அது நல்விதி ஆமே.

    moNTu alampiya vArtiraikkaTal mOti mItu ERi cagkam vagkamum 
    kaNTal am puTai cUz vayal cEr kalik kAzi, 
    vaNTu alampiya konRaiyAn aTi vAztti Ettiya mAntartam vinai 
    viNTal agku eLitu Am; atu nalviti AmE.

பொருள்:     கடலலைகள் மோதி எறியப்பட்ட சங்குகள் வயல்வெளிகளில் நிறைந்து
காணப்பெறும்  பதியே சீகாழி. அங்கு கோயில் கொண்டுள்ளவனே சிவபெருமான். கொன்றை 
மலர்மாலை சூடிய சிவனது அடிகளை வாழ்த்திப்பாடும் அடியவர்களின் வினைகள் அனைத்தும் 
எளிதாக நீங்கப்பெறும் என்க.

குறிப்புரை:     திரை -அலை. வங்கம் - மரக்கலம். கண்டல் - தாழை. புடை - பக்கம். அலம்பிய-
ஒலித்த. விண்டல் - நீங்குதல். விதி - பாக்கியம். 

    In the Bay of Bengal, the wind blows and rolls the seawater as waves which 
dash against the ships anchored in the beaches. The waves reach the shores carrying 
with them the conches of the sea. These conches finally reach the paddy fields of 
pandanus plants along with the backwater. This place of Seerkaazhi is a very famous 
city for its name. In the temple, our Lord is manifest. He wears a garland of cassia 
flowers wherein beetles always hum. The servitors and devotees go to the temple, 
recite His fame and worship our Lord's holy feet with all sincerity. Therefore, 
very easily, their sins disappear from their life; also our Lord will grace them 
with good virtues.

1995.     நாடெலாமொளியெய்தநல்லவர் 
        நன்றுமேத்திவணங்குவார்பொழிற் 
    காடெலாமலர்தேன்துளிக்குங்கடற்காழித் 
    தோடுலாவியகாதுளாய்சுரி 
        சங்கவெண்குழையாயென்றென்றுன்னும் 
    வேடங்கொண்டவர்கள்வினைநீங்கலுற்றாரே.        3

    நாடுஎலாம் ஒளி எய்த நல்லவர் 
        நன்றும் ஏத்தி வணங்கு - வார்பொழில் 
    காடுஎலாம் மலர் தேன் துளிக்கும் - கடல் காழி, 
    "தோடு உலாவிய காது உளாய்! சுரி 
        சங்கவெண்குழையாய்!" என்றுஎன்று உன்னும் 
    வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றாரே.

    nATu elAm oLi eyta nallavar nanRum Etti vaNagku--vAr pozil 
    kATu elAm malar tEn tuLikkum--kaTal kAzi,
    "tOTu ulAviya kAtu uLAy! curicagka veNkuzaiyAy!" enRu enRu unnum 
    vETam koNTavarkaL vinai nIgkal uRRArE.

பொருள்:     சோலைகளால் சூழப்பெற்று மலர்மணம் நிறைந்து விளங்கும் தலமே சீகாழி. 
அங்கு தோடும் குழையும் அணிந்த சிவன் கோயில் கொண்டுள்ளான். அவனை நாடெலாம் புகழ்
ஒளி பரவ நல்லடியார்கள் போற்றி வழிபடுவர். சிவவேடம் கொண்ட அடியார்கள் அனைவரும் 
வினைநீங்கப் பெற்றவரே ஆவர். 

குறிப்புரை:     ஒளி - புகழ், விளக்கமுமாம். பொழிற்காடு - சோலைக்காடு. தேனை மலர் 
துளிக்கும் காடு. அக்காட்டையுடைய கடற்காழி. சங்கக்குழை - சங்கினாலாகிய குண்டலம். 
வேடம் - சிவவேடம்.

    Behold! It is Civan, Lord of Seerkaazhi. In this city, a large number of
good people with philanthropic attitude live and pray for the flourishing of the 
entire country. They all pray and praise our Lord. Near the city very big and 
large groves flourish with plentiful flowers yielding plenty of honey. The devotees 
who are in  Civa's disguise always think in their minds of the fame and disguise 
of our Lord and recite His disguise as the one wearing earring in His left ear 
and the conch shell on His right ear. They will easily get rid of all their sins, 
if any in their life.

1996.     மையினார்பொழில்சூழநீழலில் 
        வாசமார்மதுமல்கநாள்தொறுங் 
    கையினார்மலர்கொண்டெழுவார்கலிக்காழி 
    ஐயனேயரனேயென்றாதரித்
        தோதிநீதியுளேநினைப்பவர் 
    உய்யுமாறுலகில்லுயர்ந்தாரினுள்ளாரே.        4

    மையின் ஆர் பொழில் சூழ,நீழலில் 
        வாசம் ஆர் மது மல்க, நாள் தொறும் 
    கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலிக் காழி 
    "ஐயனே! அரனே!" என்று ஆதரித்து 
        ஓதி, நீதி உளே நினைப்பவர்,
    உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே.

    maiyin Ar pozil cUza, nIzalil vAcam Ar matu malka, nALtoRum 
    kaiyin Ar malar koNTu ezuvAr kalik kAzi, 
    "aiyanE! aranE!" enRu Atarittu Oti, nIti uLE ninaipavar,         
    uyyum ARu ulakil uyarntArin uLLArE.

பொருள்:     பசுமை நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற பதியே சீகாழி. அங்கு 
நறுமணம் நிறைந்து விளங்கும் அடியவர்கள் மலர்கொண்டு சிவனை, ஐயனே! அரனே! 
என்று அர்ச்சனை செய்து மகிழ்வர். பிறவிப் பயனைப் பெறும் நிலையில் உயர்ந்தோருடன் 
கூடி அடியவர்கள் இன்புற்று இருப்பர்.

குறிப்புரை:     மை- மேகம். வாசம் - மணம். ஆர் - நிறைந்த, மது - தேன். மல்க - நிறைய. 
எழுவார் -எழுந்து. பூசனை செய்யும் சிவபத்தர்கள். கலி- ஓசை. ஆதரித்து- விரும்பி. உய்யும் 
ஆறு- பிறவித்துன்புறாது தப்பும் வழி. உயர்ந்தாரின் - உயர்ந்த ஞானியரினத்துள். 
உள்ளார் - இருப்பவராவர்.

    Behold! It is Civan, Lord of Seerkaazhi. The city always has dark black 
clouds over the sky. In such a shaded area very large groves with tall trees exist 
along with sweet smelling flower plants which yield large quantities of honey. 
The servitors collect large quantity of flowers and strew them on the holy feet 
of Lord Civan. While praying they recite 'Oh Father! Oh Supreme Being' with all 
sincerity and devotion and with regularity. All of them will be the Chief of 
humanity in the universe.

1997.     மலிகடுந்திரைமேல்நிமிர்ந்தெதிர் 
        வந்துவந்தொளிர்நித்திலம்விழக் 
    கலிகடிந்தகையார்மருவுங்கலிக்காழி 
    வலியகாலனை வீட்டிமாணிதன் 
        இன்னுயிரளித்தானைவாழ்த்திட 
    மெலியுந்தீவினைநோயவைமேவுவர்வீடே.        5

    மலி கடுந்திரை மேல் நிமிர்ந்து எதிர் 
        வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ, 
    கலி கடிந்த கையார் மருவும் கலிக் காழி, 
    வலிய காலனை வீட்டி மாணி தன் 
        இன்உயிர் அளித்தானை வாழ்த்திட 
    மெலியும் தீவினை நோய் அவை; மேவுவர், வீடே.

    mali kaTun tiraimEl nimirntu etir vantu vantu oLir nittilam viza, 
    kali kaTinta kaiyAr maruvum kalik kAzi,
    valiya kAlanai vITTi mANitan in uyir aLittAnai vAzttiTa,
    meliyum, tIvinai nOy avai; mEvuvar, vITE.

பொருள்:     வேகத்திரைகள் கரையில் வந்து மோதிக் கொண்டிருக்கும் பதியே 
சீகாழி. அங்கு முத்துக்கள் எங்கும் நிறைந்திருக்கும். காலனைக் காலால் காய்ந்தழித்து 
மார்க்கண்டேயனுக்கு அருளிய சிவன் அங்கு கோயில் கொண்டுள்ளார். அச்சிவனை 
வழிபாடு செய்வோரின் தீவினைகள், நோய்கள் நீங்கப்பெறும். அவர்கள் வீடு 
பேற்றையும் பெறுவர்.

குறிப்புரை:     மலி - மிக்க. கடு - விரையும். நித்திலம் - முத்துக்கள். அலைமேல் நிமிர்ந்து 
எதிர்வந்து வந்து ஒளிரும். கலி - வறுமையை. கடிந்த - நீக்கிய. கையார் - கொடைக்கையினர். 
மருவும்-பொருந்தி வாழும். மாணி - பிரமசாரி. மார்க்கண்டேய முனிவர். தீவினை நோயவை 
மெலியும். வீடு மேவுவர். நோய்கட்குக் காரணம் தீவினை. 'நோய் எல்லாம் நோய் செய்தார் 
மேலவாம். நோய் செய்யார்  நோயின்மை வேண்டுபவர்' (குறள்).

    Behold! It is Civan, our Lord of Seerkaazhi. In this city very huge 
and roaring waves rush to the seashore splashing bright pearls in plenty. 
A good number of  philanthropic people do live here. They offer to the poor 
people plenty of money needed to wipe out their poverty. Our Lord saved the 
young boy Maarkandeyan from  death by kicking to death the brave god of death, 
Kaalan. Those devotees who are sincere in their devotion to this Lord and 
worship Him will find their bad karma disappearing, and divine happiness 
will be ensured to them.

1998.     மற்றுமிவ்வுலகத்துளோர்களும் 
        வானுளோர்களும்வந்துவைகலுங் 
    கற்றசிந்தையராய்க்கருதுங்கலிக்காழி 
    நெற்றிமேலமர்கண்ணினானை 
        நினைந்திருந்திசைபாடுவார்வினை 
    செற்றமாந்தரெனத்தெளிமின்கள்சிந்தையுளே.        6

    மற்றும் இவ் உலகத்துஉளோர்களும் 
        வான்உளோர்களும் வந்து, வைகலும், 
    கற்ற சிந்தையராய்க் கருதும் கலிக் காழி 
    நெற்றிமேல் அமர் கண்ணினானை 
        நினைந்து இருந்து இசை பாடுவார், “வினை 
    செற்ற மாந்தர்" எனத் தெளிமின்கள், சிந்தையுளே!

    maRRum iv ulakattu uLOrkaLum vAn uLOrkaLum vantu, vaikalum, 
    kaRRa cintaiyarAyk karutum kalik kAzi, 
    neRRimEl amar kaNNinAnai ninaintu iruntu icai pATuvAr, "vinai
    ceRRa mAntar" enat teLiminkaL, cintaiyuLE!

பொருள்:     இவ்வுலகில் உள்ளோர்களும், வானில் உள்ளோர்களும் நாள்தோறும் 
வந்து நற்சிந்தை கொண்டு சிவனை வணங்கும் பதியே சீகாழி. நெற்றிக்கண்ணுடைய 
சிவனை நினைந்து இன்னிசைபாடும் அடியவர்கள் வினைகள் நீங்கப்பெறும். இதனைக்  
கண்டு தேர்ந்து மனத்தால் கொள்ளுமின்.

குறிப்புரை:     கற்ற- சிவபிரான் திருவடியை வழிபடக் கற்றறிந்த. இசைபாடுவாரை 
வினையைத் தீர்த்தமாந்தர் (ஞானியர்) என்று சிந்தையுள்ளே தெளிந்துகொள்மின்கள்.

    Behold! It is Civan, our Lord in Seerkaazhi. Our Lord in this city has a 
third eye at the center of His forehead. People of this world and the celestials 
who visit this place are all highly learned about the divine knowledge, particularly 
the knowledge about worshipping His holy feet. These people come to Seerkaazhi, 
think about our Lord, and sing His glory in musical notes. Those people destroyed 
the evil effects of their bad karma. Our people may keep this in their mind.

1999.     தானலம்புரைவேதியரொடு 
        தக்கமாதவர்தாந்தொழப்பயில் 
    கானலின்விரைசேரவிம்முங்கலிக்காழி 
    ஊனுளாருயிர்வாழ்க்கையாயுற
        வாகிநின்றவொருவனேயென்றன் 
    றானலங்கொடுய்ப்பாரருள்வேந்தராவாரே.        7

    தான் நலம் புரை வேதியரொடு 
        தக்க மா தவர் தாம் தொழ,பயில் 
    கானலின் விரை சேர விம்மும் கலிக் காழி, 
    "ஊனுள் ஆர்உயிர் வாழ்க்கையாய்! உறவு
        ஆகி நின்ற ஒருவனே!" என்றுஎன்று 
    ஆனலம் கொடுப்பார், அருள் வேந்தர் ஆவாரே.

    tAn nalam purai vEtiyaroTu takka mA tavartAm toza, payil 
    kAnalin virai cEra vimmum kalik kAzi, 
    "UnuL Ar uyir vAzkkaiyAy! uRavu Aki ninRa oruvanE!" enRu enRu 
    Analam koTuppAr, aruL vEntar AvArE.

பொருள்:     சோலைகளால் மணம் நிறைந்து விளங்கும் சீகாழித் தலத்தில் கோயில் 
கொண்டுள்ளவன் சிவபெருமான். அவனை நலமும் பெருமையும் உடைய அந்தணர்களும் 
மாதவம் உடையவர்களும் நாளும் தொழுது கொண்டிருப்பர். ஊனாகவும் உயிராகவும் 
எங்கும் நிறைந்த ஈசனை உணர்ந்து அவனைப் பஞ்சகவ்யங்களால் வழிபடுவோர், 
அருள்வேந்தராய் விளங்குவார்கள்.

குறிப்புரை:     தான் தொழ என்று கூட்டித் தானே தொழ என்க. பாட்டின் முதலில் 
அசையாக்குதல் பொருந்தாது. நலம்- நன்மை. புரை- பெருமை. வேதியர்க்கு அடை. 
வேதியரோடு மாதவர்- மறையுணர்ந்தவரும் பெருந்தவத்தோரும். விரை -மணம். 
ஊனுள் - உடம்பினுள். ஆர் - பொருந்திய. ஆருயிர் எனலுமாம். உயிர்வாழ்க்கையாய் -
உடம்பில் உயிர்வாழ்வது போல. உயிருள் வாழ்கின்ற பெற்றியாகி. 'இருள் அடராது
 உள் உயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துள்ளது' (கொடிக்கவி).
ஆன்நலம் - ஆக்கள் (பசுக்கள்) இடத்திலிருந்து பெறும் பால், தயிர், நெய் ஆகிய 
நலங்களை. கொடு- கொண்டு உய்ப்பார் - அபிடேகம் புரியப் பயன்படுத்தும் அன்பர். 
அருள் வேந்தர் - ஞானநாயகர்.

    Behold! It is Civan, our Lord in Seerkaazhi. Well-learned famous Vedic 
scholars and the pandits and wisemen of penance - these two groups come to 
Seerkaazhi , go to the temple, pray and praise His fame. They live in Seerkaazhi 
with their body and life.  They praise Him talking that He is the real relation, 
the unequal one, the link between life giving soul and this physical body. 
They give ablutions to our Lord with the fine holy things obtained from the cow 
with all sincerity. Our Lord is pleased to hear words of love from those servitors. 
He, therefore, graces them and gives them all benefits in their life. All those 
will become really the stalwarts of gracefulness.

2000.     மைத்தவண்டெழுசோலையாலைகள் 
        சாலிசேர்வயலாரவைகலுங் 
    கத்துவார்கடல்சென்றுலவுங்கலிக்காழி 
    அத்தனேயரனேயரக்கனை 
        யன்றடர்த்துகந்தாயுனகழல் 
    பத்தராய்ப்பரவும்பயனீங்குநல்காயே.         8

    மைத்த வண்டு எழு சோலை ஆலைகள், 
        சாலி சேர் வயல், ஆர, வைகலும்
    கத்து வார்கடல் சென்று உலவும் கலிக் காழி 
    அத்தனே! அரனே! அரக்கனை 
        அன்று அடர்த்து உகந்தாய்! உன கழல் 
    பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே!

    maitta vaNTu ezu cOlai AlaikaL, cAli cEr vayal, Ara, vaikalum 
    kattu vArkaTal cenRu ulavum kalik kAzi 
    attanE! aranE! arakkanai anRu aTarttu ukantAy! una kazal! 
    pattarAyp paravum payan Igku nalkAyE!

பொருள்:     சீகாழிப்பதியில் வண்டுகளின் ஒலி சோலைகளிலும் கரும்பாலைகளிலும் 
நெல்வயல்களிலும் நிறைந்திருக்கும். அதற்கு ஈடாக கடல் ஒலியும் முழங்கும். அங்கு பக்தர்கள், 
அத்தனே! அரனே! அரக்கனாகிய இராவணனை அடர்த்தவனே! என்றெல்லாம் கூறி சிவனடியினை 
வணங்குவர். இறைவனே! உமது திருவடிகளை வணங்கும் நிலையை எனக்கும் இப்பிறவியில் 
அருள்வீராக.

குறிப்புரை:     மைத்த - கருமையுடைய. ஆலைகள் - கரும்பாலைகள் கரும்புகளுமாம். 
சாலி - நெல். ஆர- நிறைய. வைகலும்-  நாள்தோறும். கத்து-  ஒலிக்கின்ற. அரக்கன்- இராவணன். 
அடர்த்து - நெருக்கி. உன - உன்னுடைய. கழல்பரவும் பயன் - பத்தராய்ப் பரவும் பயன். 
ஈங்கு - இம்மையிலேயே. நல்காய் - அருள்வாய்.

    Behold! It is Civan, our Lord in Seerkaazhi. He is manifest in Seerkaazhi. 
In this holy city very dense groves which are very dark exist in large numbers. 
Here black coloured beetles always hum and fly for honey. The sugarcane crushers 
make noise with their machine. Here paddy fields abound in rich paddy. The sea 
waves with roaring sound are heard always. The sacred devotees and the scholars
praise our Lord daily with devotion and declare "Oh! Our Lord Chief Hara! You 
afflicted first the king of Sri Lanka - Raavanan - and later graced him with all 
boons. We, the servitors with sincere devotion pray and extol Your fame. Kindly 
shower divine grace on us in this life itself".

2001.     பருமராமொடுதெங்குபைங்கத
        லிப்பருங்கனியுண்ணமந்திகள் 
    கருவராலுகளும்வயல்சூழ்கலிக்காழித் 
    திருவின்நாயகனாயமாலொடு
        செய்யமாமலர்ச்செல்வனாகிய 
    இருவர்காண்பரியனெனஏத்துதலின்பமே.        9

    பரு மராமொடு, தெங்கு, பைங்கதலிப் 
        பருங்கனி உண்ண, மந்திகள்
    கருவரால் உகளும் வயல், சூழ் கலிக் காழி, 
    "திருவின் நாயகன் ஆய மாலொடு 
        செய்யமாமலர்ச் செல்வன் ஆகிய 
    இருவர் காண்பு அரியான்” என ஏத்துதல் இன்பமே.

    paru marAmoTu, tegku,paigkatalip parugkani uNNa, mantikaL- 
    karuvarAl ukaLum vayal, cUz kalik kAzi,
    "tiruvin nAyakan Aya mAloTu ceyya mA malarc celvan Akiya 
    iruvar kANpu ariyAn" ena Ettutal inpamE.

பொருள்:     சீகாழிப்பதியில் பருத்த பெரிய மரங்களும், உயர்ந்த தென்னைகளும், 
வாழைமரங்களும் நிறைந்து விளங்கும். அங்கு, குரங்குகள் மரங்களில் வீற்றிருந்து 
கனிகளை உண்ணும். வயல்வெளிகளில் விரால் மீன்கள் நிறைந்து விளங்கும். அங்கு 
கோயில் கொண்டுள்ள சிவனை அடியவர்கள், 'திருமகளின் நாயகனான திருமாலாலும் 
செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனாலும் அடிமுடி தேடி அறிய முடியாதவனே'  
என்று கூறி வழிபடுவர். இன்புறுவர்.

குறிப்புரை:     பரு- பருத்த. மராம் - வெண்கடம்பு. கதலி- வாழை. திரு- இலக்குமி. 
ஆய-ஆகிய ,செய்ய மாமலர்ச் செல்வன் -  செந்தாமரையில் வீற்றிருக்கும் 
மறையவன் (பிரமன்). காண்பு அரியான்-காண்பதற்கு அருமையுடையவன்.

    Behold! It is Civan, our Lord in Seerkaazhi. This holy city is surrounded by 
groves of bulky, seed, producing Kadappa tree. Coconut groves also are alongside of
the groves yielding very big coconut fruits. Rich gardens also exist. Here the monkeys
enter these gardens and eat all the bulky ripe fruits. In the rich paddy fields the 
black fish - Varaal - Ophicephalus striatus, jump and play in the water filled fields. 
In such an attractive city our Lord is manifest. Thirumaal the junior god and husband 
of goddess Lakshmi and Brahma who is seated in red lotus flower - both could not 
comprehend our Lord. Those devotees who praise our Lord by chanting the famous
exhibit of our Lord to these two gods will get all happiness in their life.

2002.     பிண்டமுண்டுழல்வார்களும்பிரி
        யாதுவண்துகிலாடைபோர்த்தவர் 
    கண்டுசேரகிலாரழகார்கலிக்காழித் 
    தொண்டைவாயுமையோடுகூடிய 
        வேடனேசுடலைப்பொடியணி 
    அண்டவாணனென்பார்க்கடையாஅல்லல்தானே.        10

    பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரியாது 
        வண் துகில் ஆடை போர்த்தவர், 
    கண்டு சேரகிலார்; அழகுஆர் கலிக் காழி, 
    "தொண்டைவாய் உமையோடு கூடிய 
        வேடனே! சுடலைப் பொடி அணி
    அண்டவாணன்!" என்பார்க்கு அடையா, அல்லல் தானே.

    piNTam uNTu uzalvArkaLum, piriyAtu vaN tukil ATai pOrttavar, 
    kaNTu cErakilAr; azaku Ar kalik kAzi,
    "toNTaivAy umaiyOTu kUTiya vETanE cuTalaip poTi aNi         
    aNTavANan!" enpArkku aTaiyA, allal tAnE.

பொருள்:     அழகுமிக்க  சீகாழிப்பதியில் சிவன் உமையாருடன்  கூடிக் கோயில் 
கொண்டுள்ளான். அவனை, பிண்ட உணவை உண்டு வாழும் சமணர்களும், நீண்ட துவராடை 
அணிந்த சாக்கியர்களும் கண்டு வணங்கார். ஆனால் அடியவர்கள், 'உமையுடன் கூடியவனே, 
சுடலைப்பொடி பூசியவனே, அண்டவாணனே' என்றெல்லாம் போற்றிப் பரவுவர். அத்தகைய 
அடியவர்களை அல்லல் சேராதாம் என்க.

குறிப்புரை:     பிண்டம் - சோற்றுத்திரளை. (நின்றுண்போர்) 'நின்று கவளம்பல 
கொள்கையரொடு மெய்யிலிடு போர்வை யவரும்' (தி.3 ப.69 பா.10). சேரகிலார்- சேரும் 
அறிவாற்றல் இல்லாதவர். தொண்டை- கோவை (ப்பழம்போற் சிவந்த). வேடன்- வேடுவனான 
சிவபிரான். அண்டவாணன்- அண்டங்களில் வாழ்பவன். (வாழ்நன்- வாணன்) 'மன்றவாணன்' 
'அம்பலவாணன்'. அல்லல்தான்  அடையா என்க.

    Behold! It is Civan, our Lord of Seerkaazhi. In this holy city, the Jains 
who eat food from their hands and the bald headed Buddhists possess no good karma 
in their life. You devotees do not approach them who belong to other religions. 
The servitors pray our Lord of Kaazhi saying "Oh! You the hunter! You manifest 
Yourself in the temple along with our goddess with coral like red mouth; You are 
the Lord of the celestials; You have smeared Your body with the holy ashes; 
You are manifested in the entire cosmos" and worship the holy feet of our Lord. 
These devotees will have no suffering at all in their life.

2003.     பெயரெனும்மிவைபன்னிரண்டினும்             
        உண்டெனப்பெயர்பெற்றவூர்திகழ் 
    கயலுலாம்வயல்சூழ்ந்தழகார்கலிக்காழி 
    நயனடன்கழலேத்திவாழ்த்திய 
        ஞானசம்பந்தன் செந்தமிழுரை 
    உயருமாமொழிவாருலகத்துயர்ந்தாரே.        11

    பெயர் எனும்(ம்) இவை பன்னிரண்டினும்             
        உண்டு எனப் பெயர் பெற்ற ஊர், திகழ் 
    கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலிக் காழி, 
    நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய 
        ஞானசம்பந்தன் செந்தமிழ்உரை 
    உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே.

    peyar enum(m) ivai panniraNTinum uNTu enap peyar peRRa Ur, tikaz 
    kayal ulAm vayal cUzntu azaku Ar kalik kazi, 
    nayan naTan kazal Etti vAzttiya njAnacampantan centamiz urai 
    uyarumA mozivAr ulakattu uyarntArE.

பொருள்:     பன்னிரண்டு பெயர்களைப் பெற்ற ஊரே சீகாழிப்பதி.  கயல்கள்
நிறைந்த வயல்களால் சூழப்பெற்ற அழகிய பதியே சீகாழி. அங்கு கோயில் கொண்டுள்ள 
நடனம் புரியும் சிவபெருமானைப் புகழ்ந்து ஞானசம்பந்தப் பெருமான் பத்துப்பாடல்களை 
அருளிச் செய்துள்ளார். அச்செந்தமிழ்ப் பாடல்களை உணர்ந்து பாடவல்லவர்கள், 
உயர்ந்த பெருமக்களாகத் திகழ்வார்கள் என்க.

குறிப்புரை:     பன்னிருபெயர்களையுடைய (சீகாழிச்) சிறப்புணர்த்திற்று. பெயர் - புகழ். 
நயன்- நீதி சொரூபன். நயன் - அருள் (கலி. 8). நடன் - கூத்தன், அருட்கூத்தன். 'ஞானக்கூத்தன்' 
(சிவப். பொது. 37) 'நம்பனே நடனே' (ப. 188 பா. 4). உயருமா - உயர்ந்து அடையும் முறைமையில்

    These pure Tamil verses of our saint Thiru-gnana-Sambandar were written for 
hailing the golden feet of our Lord of Seerkaazhi. This city of Seerkaazhi is 
a very attractive and sacred city with twelve holy names. This is surrounded by 
paddy fields with leaping black fish. The devotees who recite these songs with 
a view to raise themselves above will soar to a great status on the earth.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM 

            49.ஆம் பதிகம் முற்றிற்று
            End of 49th Hymn


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 186                பதிக எண்: 50

50.திருஆமாத்தூர்                    50. THIRU-AAMAATH-THOOR

பண்: சீகாமரம்                    Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    பதிகத் தொடர் 180ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    திருமறைச் சிறுவர், பாம்பும் நீரும் பொற்கொன்றையும் வன்னியும் புனைந்த அங்கணரைப் 
போற்றிக் குலவிய இசையொடு பேரின்புறப் பாடியது இது.

            திருச்சிற்றம்பலம்

2004.    குன்றவார்சிலைநாணராவரி 
        வாளிகூரெரிகாற்றின்மும்மதில் 
    வென்றவாறெங்கனேவிடையேறும்வேதியனே 
    தென்றலார்மணிமாடமாளிகை
        சூளிகைக்கெதிர்நீண்டபெண்ணைமேல் 
    அன்றில்வந்தணையுமாமாத்தூரம்மானே.        1

    குன்ற வார்சிலை, நாண் அரா, அரி 
        வாளி,கூர் எரி,காற்றின், மும்மதில் 
    வென்றஆறு எங்கனே? - விடை ஏறும் வேதியனே! 
    தென்றல் ஆர் மணி மாட மாளிகை 
        சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணைமேல் 
    அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே!

    kunRa vArcilai, nAN arA, ari vALi, kUr eri, kARRin, mummatil 
    venRa ARu egganE?--viTai ERum vEtiyanE! 
    tenRal Ar maNi mATa mALikai cULikaikku etir nINTa peNNaimEl 
    anRil vantu aNaiyum AmAttUr ammAnE!

பொருள்:     விடைஏறும் வேதியனாகிய சிவனே! தென்றல் காற்று மாடமாளிகைமீது வீச, 
அதன் எதிரே உள்ள பனைமரத்தில் வீற்றிருந்து அன்றில் பறவைகள் மகிழும் திருஆமாத்தூரில் 
கோயில் கொண்டவனே! மேருமலையே வில்; பாம்பே நாண்; நெருப்பும் காற்றும் அம்புகள்
என்று கொண்டு முப்புரங்களை நீவீர் அழித்தது எவ்வாறு? வியப்பாக உள்ளதே!

குறிப்புரை:     குன்றம் - மேருமலை. சிலை - வில். அரா - பாம்பு. அரி - திருமால். வாளி- 
அம்பு. கூர்- நுனி, எரி- அக்கினிதேவன். காற்று - ஈர்க்காகிய வாயுதேவன். காற்று ஈர்க்கு , 
( தி.1. ப 11, பா 6) இவற்றின் உதவியால் மும்மதிலை வென்றவாறு எவ்வாறு? தென்றல் 
ஆர்கின்ற மாடம் என்க.  குளிகை-  வீட்டினுச்சி. பெண்ணை - பனை. அன்றில் - ஒரு பறவை. 
அம்மான் - அருமகன்.

    Oh Civa! You are the Lord of Thiru-aamaath-thoor. You ride on Your bull;
You are the creator of the Vedas; You used the Meru mountain as Your long bow, 
used the lined snake as Your bow-string; the most severely burning fire You used as 
the arrow; the speedy wind You used as the feather of the arrow. By using all these
things how did You destroy the three flying forts of the asuras? Oh Lord! You are
manifest in the city of Thiru-aamaath-thoor. In this city very ornamental palaces 
of great heights exist in large numbers. Here the south wind blows always. Behind 
the top most portion of these palaces palmyrah trees are seen, taller than these 
palaces, in large numbers. Here the nightingales come and rest in the trees very 
comfortable and enjoy the good south wind blowing over the trees. In such an 
attractive city our Lord manifests Himself.

2005.    பரவிவானவர்தானவர்பல 
        ருங்கலங்கிடவந்தகார்விடம் 
    வெருவவுண்டுகந்த அருளென்கொல்விண்ணவனே 
    கரவின்மாமணிபொன்கொழித்திழி 
        சந்துகாரகில்தந்துபம்பைநீர் 
    அருவிவந்தலைக்குமாமாத்தூரம்மானே.        2

    பரவி வானவர் தானவர் பலரும் 
        கலங்கிட வந்த கார்விடம்,
    வெருவ, உண்டு உகந்த அருள் என்கொல்? - விண்ணவனே! 
    கரவு இல் மா மணி பொன் கொழித்து, இழி
        சந்து கார் அகில் தந்து, பம்பை நீர்
    அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே!

    paravi vAnavar tAnavar palarum kalagkiTa vanta kArviTam, 
    veruva, uNTu ukanta aruL enkol?--viNNavanE! 
    karavu il mA maNi pon kozittu, izi cantu kAr akil tantu, pampai nIr
    aruvi vantu alaikkum AmAttUr ammAnE!

பொருள்:     சிறந்த மணிகளையும், தங்கத்தையும், சந்தனம் அகில் போன்ற மரங்களையும் 
கொண்டு வரும் பம்பை நதிக்கரையில் திருஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ள சிவனே! 
வானவர்களும் தானவர்களும் அஞ்சி நடுங்கிட எழுந்த நஞ்சினை நீவீர் அமுதாக உண்டு 
அருளியது எவ்வாறு? வியப்பாக உள்ளதே!

குறிப்புரை:     தானவர் - அசுரர். வெருவ - (அஞ்சி) அலறிப்பிதற்ற. விடம் உண்டு உகந்த 
அருள் என்? கரவு இல் - மறைவில்லா. சந்து - சந்தன மரம். கார் அகில் - கரிய அகில் மரம். 
தந்து - அடித்து வந்து. பம்பை. திருக்கோவலூரின் கிழக்கில், அண்மையில், 
பெண்ணையாற்றினின்றும் பிரியும் ஆறு.

    Oh Civa! You are Lord of Thiru-aamaath-thoor. In this holy city the river
Pambai flows along the temple. The river water in the stream brings a number of 
multicoloured gems without hiding their natural colour. Along with these gems, 
the stream water also brings sandal wood logs and the black fragrant eaglewood 
(the smoke of this wood is used for perfuming ladies' hair). In such an attractive 
city, oh Lord! You are manifest where the Pambai water flows near the city of 
Thiru-aamaath-thoor. You are the sole celestial Supreme Being! You are the Lord 
of the celestials. The devas and asuras trembled on seeing the black poison that 
came out of the sea and rushed towards You. At that moment You consumed the poison 
and felt happy. What is the reason for such a grace of Yours?

2006.     நீண்டவார்சடைதாழநேரிழை 
        பாடநீறுமெய்பூசிமாலயன் 
    மாண்டவார்சுடலைநடமாடுமாண்பதுஎன் 
    பூண்டகேழல்மருப்பராவிரி 
        கொன்றைவாள்வரியாமைபூணென 
    ஆண்டநாயகனேயாமாத்தூரம்மானே.        3

    நீண்ட வார்சடை தாழ, நேரிழை
        பாட, நீறு மெய் பூசி மால் அயன்
    மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்புஅது என்? - 
    பூண்ட கேழல் மருப்பு, அரா, விரி 
        கொன்றை,வாள் வரிஆமை, பூண் என 
    ஆண்ட நாயகனே! ஆமாத்தூர் அம்மானே!

    nINTa vArcaTai tAza, nErizai pATa, nIRu mey pUci, mAl ayan 
    mANTa vAr cuTalai naTam ATum mANpu atu en?-- 
    pUNTa kEzal maruppu, arA, virikonRai, vAL vari Amai, pUN ena         
    ANTa nAyakanE! AmAttUr ammAnE!                        

பொருள்:     பன்றியின் கொம்பு, பாம்பு, விரிந்த கொன்றைமலர், ஆமையின் ஓடு 
இவற்றை ஆபரணமாகக் கொண்ட சிவனே! நீவீர், சடாமுடி தாழவும், உமாதேவி பாடவும், 
நீறு பூசிய மேனியுடன் மாலும் அயனும் மாண்ட மயானத்தில் ஆடும் திறம்தான் என்னே! என்னே!

குறிப்புரை:     நேரிழை- உமாதேவியார். தளரிளவளரெனவுமை பாடத்தாளமிட’ (பதி. 247) 
மால் அயன்மாண்டவார் சுடலை - ஆறுகோடி நாராயணரும் நூறுகோடி பிரமர்களும் இறந்த நீண்ட 
சுடுகாட்டில். மாண்பு- மாட்சி. என்? கேழல் மருப்பு - பன்றிக்கொம்பு. அரா – பாம்பு. 'முற்றலாமை 
இளநாகமொடு ஏனமுளைக் கொம்பவை பூண்டு' (தி. 1 ப. 1 பா.2).

    Oh our Lord Civan at Thiru-aamaath-thoor! Our Lord has adorned His body with the 
horn of the pig, the snake, the shell of bright and lined turtles, fully blossomed cassia 
flowers and many other things. You are our Chief Supreme Being: You are manifest in the 
temple in Thiru-aamaath-thoor. Your long matted hair descends further. Your consort 
Uma Devi sings melodious songs and You listen to the music; You have beautified Your 
body smearing holy ashes. In this attire You perform Your cosmic dance on the cremation 
ground of Thirumaal, Brahma and many others. What is the reason behind this attitude?

2007.     சேலின்நேரனகண்ணிவெண்ணகை 
        மான்விழித்திருமாதைப்பாகம்வைத் 
    தேலமாதவநீமுயல்கின்றவேடமிதென் 
    பாலின்நேர்மொழிமங்கைமார்நட
        மாடியின்னிசைபாடநீள்பதி 
    ஆலைசூழ்கழனியாமாத்தூரம்மானே.        4

    சேலின் நேரன கண்ணி வெண்நகை 
        மான்விழித் திருமாதைப் பாகம் வைத்து, 
    ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என்? - 
    பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் 
        ஆடி, இன்இசை பாட, நீள் பதி 
    ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே!

    cElin nErana kaNNi veN nakai mAnvizit tirumAtaip pAkam vaittu,
    Ela mA tavam nI muyalkinRa vETam itu en?--
    pAlin nEr mozi magkaimAr naTam ATi, in icai pATa, nIL pati
    Alai cUz kazani AmAttUr ammAnE!

பொருள்:     பால் போன்ற இனிய மொழி பேசும் பெண்கள் ஆடிப்பாடி மகிழும் 
ஆமாத்தூரில் கோயில் கொண்ட சிவனே! சேல்விழி, வெண்ணிற பற்கள், மானின்  
பார்வை கொண்ட உமையவளுடன் கூடிய நீவீர், தவக்கோலம் கொண்டு விளங்குவது 
எவ்வாறு? வியப்பாக உள்ளதே!

குறிப்புரை:     நேர்அன - நேரொத்த, கண்ணி- கண்ணையுடையவள். வெள்நகை-
வெண்மையுடையவாகிய பற்களையும். மான் விழி-  மான்களைப்போல மருண்ட 
கண்களையும் உடைய. திருமாதை - அழகிய உமாதேவியாரை. ஏல- பொருந்த. 
தவம் புரிவார்க்கு, மங்கை பங்குடைமை முரண்பட்ட செயல் என்றவாறு. '
'பால்இன்நேர்மொழி' - பால்போலும் இன்சொல்லையுடைய. ஆலை- 
கரும்பாலை. கரும்புமாம்.

    Oh! Our Lord Civa is at Thiru-aamaath-thoor. In this holy city, young 
lovely damsels speak very pleasing words like milk. They sing harmoniously in 
chaste musical tone and dance. In the far off places the crusher in the sugarcane 
fields creates noise. Around the city paddy fields are many with good yield. 
Oh God! You are manifest in this big and long city of Thiru-aamaath-thoor. 
You have embedded Your consort Uma on the left half of Your body. Her eyes 
look like carp fish; Her teeth are bright white; She has fluttering eyes 
like the eyes of a deer. With goddess Umaa on Your body You have accomplished 
very great penance. Is this appearance the right posture for penance?

2008.     தொண்டர்வந்துவணங்கிமாமலர் 
        தூவிநின்கழலேத்துவாரவர் 
    உண்டியால்வருந்தஇரங்காததென்னைகொலாம் 
    வண்டலார்கழனிக்கலந்து
        மலர்ந்ததாமரைமாதர்வாண்முகம் 
    அண்டவாணர்தொழுமாமாத்தூரம்மானே.        5

    தொண்டர் வந்து வணங்கி, மா மலர் 
        தூவி, நின் கழல் ஏத்துவார் அவர்
    உண்டியால், வருந்த, இரங்காதது என்னைகொல்ஆம்? 
    வண்டல் ஆர் கழனிக் கலந்து 
        மலர்ந்த தாமரை மாதர் வாள்முகம் 
    அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே!

    toNTar vantu vaNagki, mA malar tUvi nin kazal EttuvAr avar 
    uNTiyAl varunta, iragkAtatu ennai kol Am?
    vaNTal Ar kazanik kalantu malarnta tAmarai mAtar vALmukam 
    aNTavANar tozum AmAttUr ammAnE!

பொருள்:     வண்டல் மண் நிறைந்த வயல்களில் தாமரை மலர்கள் நிறைந்திருக்கும் 
பதியே திருஆமாத்தூர் ஆகும். அங்கு தாமரை மலர் போன்ற முகமுடைய மகளிர் சிவனை  
வணங்கி மகிழ்வர். தொண்டர்களும் மாமலர் தூவி திருவடிகளை வணங்கி நிற்பர். அவர்கள் 
பசியுற்று வருந்திய நிலையிலும் நீவீர் அருளாது இருப்பது வியப்பாக உள்ளதே !

குறிப்புரை:     தொண்டர் பூசித்தும் உணவின்றி வருந்துகின்றனர். அது கண்டு இரங்காதது
ஏன்? ஆமாத்தூரில் அன்றிருந்த இந்நிலைமையை ஆசிரியர் அறிந்து பாடியருளினார். வண்டல்-
நீர் ஒதுக்கிவிட்டமண். ஆர் - நிறைந்த. கழனி - கழனியில் கலந்து மலர்ந்த தாமரைப் பூக்கள் 
ஆமாத்தூரில் உள்ள மாதர்களுடைய ஒளி பொருந்திய முகம்போல இருக்கின்றன. தாமரைகள் 
முகம்போலப் பூக்கும் ஆமாத்தூர் என்று பொருத்திக் கொள்க. அண்டவாணர் - அண்டங்களில் 
வாழும் தேவர்கள் முதலியோர் . (பதி.185 பா.10 இல் உள்ள 'அண்டவாணன்' என்பதன் பொருள் வேறு). 

    Oh! It is Civa, our Lord at Thiru-aamaath-thoor. In this holy city paddy 
fields are many. Here sediments are found at the bottom of the fields. Because of 
sediments, along with paddy a good number of lotus flowers also grows appearing 
like damsels who have bright attractive faces.The devas and other celestials 
come down to this city and worship Your holy feet. The true devotees strew 
flowers at Your holy feet and worship You, but they suffer for want of food.
Oh God! Why don't You have compassion for these hungry people? 

2009.     ஓதியாரணமாயநுண்பொருள் 
        அன்றுநால்வர்முன்கேட்கநன்னெறி 
    நீதியாலநீழலுரைக்கின்றநீர்மையதென் 
    சோதியேசுடரேசுரும்பமர் 
        கொன்றையாய்திருநின்றியூருறை 
    ஆதியே அரனேயாமாத்தூரம்மானே.        6

    ஓதி,ஆரணம்ஆய நுண்பொருள்,
        அன்று நால்வர் முன்கேட்க நன்னெறி 
    நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையது என்? 
    சோதியே! சுடரே! சுரும்பு அமர் 
        கொன்றையாய்! திருநின்றியூர் உறை 
    ஆதியே! அரனே! ஆமாத்தூர் அம்மானே!

    Oti, AraNam Aya nuNporuL, anRu nAlvar mun kETka nanneRi 
    nIti AlanIzal uraikkinRa nIrmaiyatu en?-- 
    cOtiyE! cuTarE! curumpu amar konRaiyAy! tiru ninRiyUr uRai 
    AtiyE! aranE! AmAttUr ammAnE!

பொருள்:     சோதியே! சுடரே! வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் மாலையாய்த் 
திருநின்றி ஊரில் உறைபவனே! அரனே! திருஆமாத்தூர் அம்மானே! வேதத்தின் நுண்பொருளை 
அன்று முனிவர் நால்வருக்கும் கல்லால மரத்தடியில் இருந்து உபதேசித்த உமது திறம் தான் என்னே!

குறிப்புரை:     ஆரணம் - வேதம். நால்வர்- சநகாதி முனிவர். நன்னெறி - ஞானமார்க்கம். 
ஆலநிழல் - கல்லால் நிழல். சுரும்பு - வண்டு. ஆதி - முதல்வன். அரன் - பிறப்பிறப்பை அழிப்பவன்.                 

    Oh Lord Civa! You are the light! You are the flame. You wear garlands 
made of cassia flowers swarmed by bees. You are manifest in Thiru-nindra-oor 
as the chief of the place. Oh Supreme God! Oh the Supreme Being of Thiru-aamaath-
thoor. Once upon a time the four saints reciting the Vedas were unable to understand 
the inner meanings. They came to our Lord and requested Him to explain. Our Lord 
revealed the divine meanings in the Vedas to them. You were seated under the stone 
banyan tree to impart wisdom to those saints.What is the reason behind such propriety?

2010.     மங்கைவாணுதன்மான்மனத்திடை
         வாடியூடமணங்கமழ்சடைக்
    கங்கையாளிருந்தகருத்தாவதென்னைகொலாம் 
    பங்கயமதுவுண்டுவண்டிசை 
        பாடமாமயிலாடவிண்முழ 
    வங்கையாலதிர்க்குமாமாத்தூரம்மானே.        7

    மங்கை வாள்நுதல் மான் மனத்து இடை 
        வாடி ஊட, மணம் கமழ் சடைக்
    கங்கையாள் இருந்த கருத்துஆவது என்னைகொல்ஆம்? 
    பங்கயமது உண்டு வண்டு இசை 
        பாட, மா மயில் ஆட, விண் முழவு 
    அம் கையால் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே!

    magkai vAL nutal mAn manattu iTai vATi UTa, maNam kamaz caTaik 
    kagkaiyAL irunta karuttu Avatu ennai kol Am? 
    pagkayamatu uNTu vaNTu icai pATa, mA mayil ATa, viN muzavu 
    am kaiyAl atirkkum AmAttUr ammAnE!

பொருள்:     தாமரை மலர்த்தேனை வண்டுகள் அருந்தி இசைபாடும்; மயில்கள் ஆடும்;
மேகங்கள் முழவுபோல் முழங்கும். இத்தகைய அழகு நிறை ஆமாத்தூரில் கோயில்  கொண்ட 
சிவனே! அழகிய நெற்றியினைக் கொண்ட உமையவள் ஊடல் கொள்ள, உமது நீண்ட சடையில் 
கங்கை நல்லாளை மறைத்திருந்த திறம்தான் என்னே! என்னே!

குறிப்புரை:     வாள் - ஒளி. நுதல் - நெற்றி. மங்கையாகிய வாணுதன் மான் என்பது 
உமாதேவியாரைக் குறித்தது. வாடி ஊடுதற்கு ஏது. சடைமேல் கங்கையாள் இருப்பது. பங்கயம் - 
தாமரை. மது-தேன்.  விண் முழவு- விண்ணிலுள்ள மேகமாகிய மத்தளத்தை. அம் -அழகிய .
அதிர்க்கும்-ஒலிக்கும். கையால் அதிர்க்கும் என்றது பொருந்துமாறு புலப்பட்டிலது. 

    Oh! It is Civan, our Lord at Thiru-aamaath-thoor. In the holy city of Thiru- 
aamaath-thoor the beetles hum musical notes, sucking honey from lotus flowers. The 
big peacocks dance in the parks. The dark clouds dash one against the other making a 
very big noise as though they are beautiful hands of the winds. Oh! Father at Thiru-
aamaath-thoor, You are manifest in the temple of this sacred city with natural 
beauty. Our goddess Parvathi Devi with bright forehead and attractive looks of a deer 
feels depressed due to the presence of the lady of Ganges river on Your sweet fragrant
matted hair. What is the reason for You to keep her in Your matted hair?
 

2011.     நின்றடர்த்திடுமைம்புலன்நிலை
        யாதவண்ணம்நினைந்துளத்திடை
    வென்றடர்த்தொருபால்மடமாதைவிரும்புதலென் 
    குன்றெடுத்தநிசாசரன்திரள்
        தோளிருபதுதான்நெரிதர 
    அன்றடர்த்துகந்தாயாமாத்தூரம்மானே.        8

    நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத
        வண்ணம் நினைந்து உளத்துஇடை
    வென்று அடர்த்து, ஒருபால் மடமாதை விரும்புதல் என்? 
    குன்று எடுத்த நிசாசரன் திரள்
        தோள் இருபதுதான் நெரிதர 
    அன்று அடர்த்து உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

    ninRu aTarttiTum aimpulan nilaiyAta vaNNam ninaintu uLattu iTai
    venRu aTarttu, orupAl maTamAtai virumputal en?--
    kunRu eTutta nicAcaran tiraL tOL irupatu tAn neritara 
    anRu aTarttu ukantAy! AmAttUr ammAnE!

பொருள்: ஆமாத்தூர் அம்மானே! அன்று கயிலாய மலையைத் தூக்க முயன்ற அரக்கனின் 
இருபது தோள்களின் வலிமையைக் குறைத்தவனே! ஐம்புலன்களையும் வென்று அடக்கிய 
நீவீர் உம்முடைய ஒரு பாகத்தில் மாதினை விரும்பி வைத்தல் என்சொல். வியப்பாக உள்ளது.

குறிப்புரை:     அடர்த்திடும்- வருத்திடும். நின்று..... அடர்ந்து என்ற பகுதி. சிவபிரானது யோக 
நிலையைக் குறிப்பது. அதற்கு ஒவ்வாதபடி இடப்பாடல் அம்பிகையை விரும்பிக் கொண்டது 
ஏன் என்று வினவினார். நிசாசரன் - இரவில் சஞ்சரிப்பவன், இராவணன்.

    Oh our Lord at Thiru-aamaath-thoor! Once Raavanan tried to lift mount Kailash 
and to keep it aside. Then Lord, You crushed Raavanan's twenty strong shoulders. 
However, You later forgave him and bestowed grace on him. Oh! God of Thiru aamaath-thoor. 
With Your supreme controlling energy You brought under Your mind's control the eluding 
five senses to become inactive. However You have embedded Your young consort and have 
kept her willingly on the left half of Your body. What is the reason for this 
activity of Yours?

2012.     செய்யதாமரைமேலிருந்தவ
        னோடுமாலடிதேடநீள் முடி 
    வெய்யவாரழலாய்நிமிர்கின்றவெற்றிமையென் 
    தையலாளொடுபிச்சைக்கிச்சை
        தயங்குதோலரையார்த்தவேடங்கொண் 
    டையமேற்றுகந்தாயாமாத்தூரம்மானே.        9

    செய்யதாமரைமேல் இருந்தவனோடு
        மால் அடி,-தேட,நீள் முடி; 
    வெய்ய ஆர் அழல்ஆய் நிமிர்கின்ற வெற்றிமை என்? - 
    தையலாளொடு பிச்சைக்கு இச்சை,
        தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு, 
    ஐயம் ஏற்று உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

    ceyya tAmarai mEl iruntavanOTu mAl aTi,tETa,nIL muTi;         
    veyya Ar azal Ay nimirkinRa veRRimai en?-- 
    taiyalALoTu piccaikku iccai, tayagku tOl arai Artta vETam koNTu, 
    aiyam ERRu ukantAy! AmAttUr ammAnE!                    

பொருள்:     உமாதேவியுடன், தோலை ஆடையாக உடுத்திக்கொண்டு பலிதேர்வதற்காக 
ஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ள சிவனே! தாமரை மலரில் உறையும் பிரமனும் திருமாலும் 
அடிமுடி தேடியும் காண   முடியாதபடி பேரழலாய் ஓங்கிய வெற்றித் தன்மைதான் என்னே! என்னே! 

குறிப்புரை:     வெற்றிமை -வென்ற தன்மை. (பதி. 188 பா. 8). (ஐயம்) தையலாள் - உமாதேவியார் 
இச்சை தயங்கு - விருப்பம் விளங்குகின்ற. தயங்குதோல்-  அசைகின்ற தோலுமாம். அரை- திருவரையில். 
ஆர்த்த - கட்டிய. ஐயம் - பிச்சையுண்டி. 

    Oh! Our Lord in Thiru-aamaath-thoor. You wear on Your waist the animal skin 
and get charmed to move about in the cosmos along with Your consort Uma Devi. In this 
disguise You reach the residences of ladies and accept with pleasure the alms given
by them. You are the God Supreme, manifest in Thiru-aamaath-thoor. The four-faced
Brahma who rests in the red lotus flower along with Thirumaal went out in search of
our Lord's head and feet in vain. Concealng Yourself from their sight, You took the 
great form of supernal effulgence. They both got frightened and later worshipped 
our Lord. For the victorious disguise of Youself, what is the reason?

2013.     புத்தர்புன்சமணாதர்பொய்ம்மொழி 
        நூல்பிடித்தலர்தூற்றநின்னடி
    பத்தர்பேணநின்றபரமாயபான்மையதென் 
    முத்தைவென்றமுறுவலாளுமை
        பங்கனென்றிமையோர்பரவிடும் 
    அத்தனேயரியாயாமாத்தூரம்மானே.        10

    புத்தர் புன் சமண்ஆதர் பொய்ம்மொழி
        நூல் பிடித்து அலர் தூற்ற, நின் அடி 
    பத்தர் பேண நின்ற பரம்ஆய பான்மைஅது என்? - 
    "முத்தை வென்ற முறுவலாள் உமை
        பங்கன்!" என்று இமையோர் பரவிடும் 
    அத்தனே! அரியாய்! ஆமாத்தூர் அம்மானே!

    puttar pun camaN Atar poymmozi nUl piTittu alar tURRa, nin aTi 
    pattar pENa, ninRa param Aya pAnmai atu en?-- 
    "muttai venRa muRuvalAL umai pagkan!" enRu imaiyOr paraviTum
    attanE! ariyAy! AmAttUr ammAnE!

பொருள்:     முத்தினும் சிறந்த பற்களைக் கொண்ட உமாதேவியை உடம்பின் 
பாகமாகக் கொண்ட சிவனே! இமையோர் பரவும் அத்தனே! அரியே! ஆமாத்தூரில் உறைபவனே! 
புத்தர், சமணர் போன்ற பொய் நூலறிந்தவர் உம்மைத் தூற்றவும், பக்தர்கள் உன்னடியைப்  
போற்றவும் வேண்டுதல் வேண்டாமை அற்று நீ விளங்கும் திறம்தான் என்னே! என்னே!

குறிப்புரை:     நூல் - பிடகம் முதலியன. அலர் - பழி. பத்தர் - அன்பர். பேண- விரும்ப. பரம் ஆய 
பான்மையது - மேலவர்க்கும் மேலாந் தன்மையுடையது. (முழு முதன்மை). முறுவல் - பல். அரியாய் - 
அரியவனே (எளியானல்லன் அன்பர் அல்லார்க்கு). அரியதில் அரிய அரியோன் (திருவாசகம் 3-47).

    Oh! Our Lord in Thiru-aamaath-thoor. The devas praise and worship You. Oh our 
Chief God! You are concomitantly attached to Uma Devi. You are beyond comprehension; 
You are the Chief Lord of Thiru-aamaath-thoor. The beautiful smile of our goddess 
denounces the brightness of pearls. Your devotees always hail Your greatness in spite of 
the evil preaching of the Jains and the Buddhists, full of scorn and hatred to You.
You never care for those words. Your devotees have greatest desire for Your Supreme 
Nature. What is the reason for this?

2014.     வாடல்வெண்டலைமாலையார்த்தும
        யங்கிருள்ளெரியேந்திமாநடம்
    ஆடல்மேயதென்னென்றாமாத்தூரம்மானைக் 
    கோடல்நாகமரும்புபைம்பொழிற்
        கொச்சையாரிறைஞானசம்பந்தன் 
    பாடல்பத்தும்வல்லார்பரலோகஞ்சேர்வாரே.        11

    "வாடல் வெண்தலைமாலை ஆர்த்து,
        மயங்கு இருள்(ள்), எரி ஏந்தி, மா நடம் 
    ஆடல் மேயது என்?” என்று ஆமாத்தூர் அம்மானை, 
    கோடல் நாகம் அரும்பு பைம்பொழில்
        கொச்சையார் இறை -ஞானசம்பந்தன் 
    பாடல்பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே.

    "vATal veN talaimAlai Arttu, mayagku iruL(L), eri Enti, mAnaTam 
    ATal mEyatu en?" enRu AmAttUr ammAnai, 
    kOTal nAkam arumpu paimpozil koccaiyAr iRai njAnacampantan- 
    pATal pattum vallAr paralOkam cErvArE.

பொருள்:     தலைமாலை கொண்டு சுடுகாட்டில் நெருப்பை ஏந்தி நடனமாடுபவன் சிவபிரான்!
திருஆமாத்தூரில் கோயில் கொண்ட அவனைப் புகழ்ந்து காந்தள், நாகம் போன்ற மலர்கள் நிறைந்து 
விளங்கும் சீகாழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் பத்துப்பாடல்களைப் பாடி அருளியுள்ளார்.
அப்பாடல்களைப் பாட வல்லவர்கள் மேலுலகத்தை அடைந்து இன்புறுவர் என்க.

குறிப்புரை:     வாடல் - வாடுதலையடைந்த (பதி 196-5 பார்க்க). ஆர்த்து - கட்டி. ஆடல் - கூத்து.
மேயது - விரும்பியது. கோடல் - வெண்காந்தள். நாகம் அரும்பு - பாம்புபோல அரும்புகின்ற. 
நாகம், புன்னை மரமுமாம். கொச்சையார் இறை - காழியர்கோன்.

    Our saint Thiru-gnana-Sambandar hails from Kochaivayam (one of the tweleve
names of Seerkaazhi) surrounded by groves where the flowers look like snakes in 
appearance. He praised our Lord's greatness and sang these ten sacred verses. 
Those devotees who are capable of reciting these ten verses of Thiru-gnana-Sambandar
will reach the blessed world above.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            50ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 50th Hymn.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 187                பதிக எண்: 51

51. திருக்களர்                    51. THIRUK-KALAR

பண்:சீகாமரம்                    Pann: Seekamaram


திருத்தல வரலாறு

    களர் நிலத்தில் அமைந்த கோயிலை உடைய ஊராதலின் திருக்களர் என்னும் 
பெயர் எய்திற்று. திருத்துறைப் பூண்டியிலிருந்து களப்பாள் செல்லப் பேருந்துகள் உள்ளன. 
இது காவிரிக்கு வடகரையிலுள்ள நூற்றைந்தாவது தலமாகும். இறைவரின் திருப்பெயர் 
களர்முளைநாதர்; அடைந்தார்க்கு அருள்நாதர். இறைவியாரின் திருப்பெயர் இளங்கொம்பன்னாள். 
தலவிருட்சம் பாரிசாதம். தீர்த்தம் துர்வாச தீர்த்தம். துர்வாச முனிவருக்கு இறைவர் திருக்கூத்துக் 
காட்டியருளினார். பராசரர் முதலிய முனிவர்களும் வழிபட்டுப் பேறு எய்தினர். இதற்குத் 
திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்று உள்ளது. இதற்கு ஆதியப்பனாரால் எழுதப்பெற்ற புராணம்
ஒன்று உண்டு. அஃது அச்சில் வெளிவந்துள்ளது.

பதிக வரலாறு

    சிரபுரத்துச் செல்வர், பிரிவாற்றாது சாலமிகத் தளர்ந்த மங்கையர்க்கரசியாரையும் 
குலச்சிறைநாயனாரையும் 'சிவநெறி போற்றி இருப்பீர்' என்று, தகுவன அருளி, பாண்டிய
நாட்டையகன்று, சோழநாட்டை அணைந்து, தொண்டரினத்தொடும் பலதலம் பணிந்து, 
கன்னிமதில் திருக்களரைப் போற்றிப் பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2015.     நீருளார்கயல்வாவிசூழ்பொழில் நீண்டமாவயலீண்டுமாமதில் 
    தேரினார்மறுகில்விழாமல்குதிருக்களருள் 
    ஊருளாரிடுபிச்சைபேணும் ஒருவனேயொளிர்செஞ்சடைம்மதி 
    ஆரநின்றவனேயடைந்தார்க்கருளாயே.        1

    நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில், நீண்ட மா வயல், ஈண்டு மா மதில், 
    தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திருக் களருள்,
    ஊர்உளார் இடு பிச்சை பேணும் ஒருவனே! ஒளிர் செஞ்சடை(ம்) மதி 
    ஆர நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!

    nIruL Ar kayal vAvi cUz pozil, nINTa mA vayal, INTu mA matil,
    tErin Ar maRukil vizA malku tiruk kaLaruL, 
    UruLAr iTu piccai pENum oruvanE! oLir cenjcaTai(m) mati 
    Ara ninRavanE! aTaintArkku aruLAyE!

பொருள்:     நீர் மிகுந்ததும், கயல்மீன்கள் பெருகி வாழ்வதுமாகிய வாவிகள் பொழில்கள்
சூழ்ந்ததும், நீண்ட பெரிய வயல்கள் நெருங்கியதும், மதிற்சுற்றுகளை உடைய தேரோடும்
வீதிகளில் விழாக்கள் நிறைந்ததுமாகிய திருக்களர் என்னும் இத்திருத்தலத்தில், ஊர் மக்கள்
இடுகின்ற பிச்சையை விரும்பும் ஒருவனே! செஞ்சடையில் பிறை பொருந்த நின்றவனே!
 நின்னை அடைந்த அன்பர்களுக்கு அருள் புரிவாய்.

குறிப்புரை:     நீருள் ஆர் கயல் வாவி- என்பது குளங்களின் நீர்மிகுதியையும் அதிலுள்ள         
மீன்களின் பெருக்கத்தையும் குறித்தது. திருக்களர் நீர்வளம், சோலைச்சூழல், வயல் வயம், 
மதிற்சுற்று, தேர்வீதி, விழாமலிவும் உடையது. சடையில் மதி ஆர் (-நிறைய, பொருந்த) 
நின்றவனே, அடைந்த அன்பர்க்கு அருள்வாய் என்க.

    Oh! It is Civan, our God of Thiruk-kalar. In this city nature is at its 
maximum beauty. The city has a number of ponds where water always overflows. 
The leaping fish leave the ponds along with the water which over flows to the 
lakes nearby. The forest areas, adjoining these ponds are full of tall, big trees.
Long paddy fields are many around the city. Inside the city the ramparts are very 
close to each other. The streets and the palaces inside the city are tall enough 
to touch the sky. In these big, long streets, the temple chariot is drawn by people 
and sacred festivals of the temple also take place there. Oh Lord! You are the 
absolute one, beautifying Your reddish matted hair with the bright crescent moon.
In the streets You move about for alms quite willingly. We beg You to be graceful 
to those who reach Your golden feet for worshipping.

2016.     தோளின்மேலொளிநீறுதாங்கிய தொண்டர்வந்தடிபோற்றமிண்டிய 
    தாளினார்வளருந்தவமல்குதிருக்களருள் 
    வேளின்நேர்விசயற்கருள்புரி வித்தகாவிரும்பும்மடியாரை 
    ஆளுகந்தவனேயடைந்தார்க்கருளாயே.        2

    தோளின்மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற, மிண்டிய 
    தாளினார் வளரும் தவம் மல்கு திருக் களருள், 
    வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா! விரும்பும் அடியாரை 
    ஆள்உகந்தவனே! அடைந்தார்க்கு அருளாயே!

    tOLinmEl oLi nIRu tAgkiya toNTar vantu aTi pORRa, miNTiya, 
    tALinAr vaLarum tavam malku tiruk kaLaruL, 
    vELin nEr vicayaRku aruLpuri vittakA! virumpum aTiyArai 
    AL ukantavanE! aTaintArkku aruLAyE!

பொருள்:     தோளின் மீது ஒளி வீசும் திருநீறு அணிந்த தொண்டர்கள் வந்து அடி வணங்க, 
வலிமையுடைய தாளினார் தங்கும் தவமுடைய திருக்களர் ஊரில், மன்மதனுக்குச் சமமான
அழகுடைய அருச்சுனனுக்கு அருள்புரிந்த வித்தகனே! உன்னை விரும்பும் அடியவர்களை
அடிமையாக விரும்புபவனே! நின்னை அடைந்த அன்பர்களுக்கு அருள் புரிவாய்.

குறிப்புரை:     தோளின்... நீறு -'திரள் தோள்மேல் நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை’ 
(திருவாசகம், திருச்சதகம் 33) அங்குச் சிவபிரான் தோள், இங்குச் சிவத்தொண்டர் தோள், 'சாந்தம் 
ஈதென்று எம்பெருமான் அணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களமேயவனே' என்றதால், 
உடையானுக்கு ஏற்றது அடியார்க்கும் ஆதல் அறிக. மிண்டிய - நெருங்கிய. தாளினார் -  திருவடியுடைய 
சிவபிரான். வேளிர் நேர் -முருகனைப் போன்ற. விசயன்- அருச்சுனன்.   சிவவேடனிடம் 
தோற்றுச் சயம்  நீங்கியவன். விசயன்- மேலான வெற்றியன் என்பது. அவன்பெற்ற பிறவெற்றிகளைக் 
குறித்தது. வித்தகா - ஞான வடிவா! ஆள் - அடிமையாக. உகந்தவனே - விரும்பிக் கொண்ட (ஆண்ட)வனே!

    Oh! It is Civan, our Lord in Thiruk-kalar. In this city, people of sacred 
servitude smear their shoulders with pure holy ashes and go to the temple to worship
the feet of our Lord. Their praise adds to the eminence of Your holy feet and Your 
pleasure too. You are manifest in Thiruk-kalar. You graced Arjunan who is equal to 
Lord Murugan and became great. You are pleased to accept Your devotees as Your 
servitors. Oh Lord! We pray that you may grace such honest people.

2017.     பாடவல்லநன்மைந்தரோடு பனிமலர்பலகொண்டுபோற்றிசெய் 
    சேடர்வாழ்பொழில்சூழ்செழுமாடத்திருக்களருள்
    நீடவல்லநிமலனேயடி நிரைகழல்சிலம்பார்க்கமாநடம் 
    ஆடவல்லவனேயடைந்தார்க்கருளாயே.        3

    பாட வல்ல நல் மைந்தரோடு பனிமலர்பல கொண்டு போற்றிசெய் 
    சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாடத் திருக் களருள்,
    நீட வல்ல நிமலனே! அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் - 
    ஆட வல்லவனே! அடைந்தார்க்கு அருளாயே!

    pATa valla nal maintarOTu panimalar pala koNTu pORRi cey 
    cETar vAz pozil cUz cezu mATat tiruk kaLaruL,
    nITa valla nimalanE! aTi nirai kazal cilampu Arkka mAnaTam 
    ATa vallavanE! aTaintArkku aruLAyE!

பொருள்:     இசையுடன் பாடும் ஆற்றல் வல்ல நல்ல மக்களுடன், குளிர்ந்த மலர்களைக்
 கொண்டு நின்னை போற்றி வழிபாடு செய்யும் பெரியோர்கள் வாழ்வதும், மலர்ப்பொழில்கள் 
சூழ்ந்த அழகுடையதுமாய திருக்களர் என்னும் திருத்தலத்தில், நிலையாக இருந்து மலத்தை 
நீக்குவோனே! வரிசையாக கழலும் சிலம்பும் ஒலிக்க நடம் புரிய வல்லவனே! நின்னை
அடைந்த அன்பர்களுக்கு அருள்புரிவாய்.

குறிப்புரை:     மைந்தர் - மக்கள். சேடர் - பெரியோர். நிமலன் -மலமில்லாதவன். 
அடிநிரைகழல் சிலம்பு  ஆர்க்க மாநடம் ஆட வல்லவனே - திருவடிகளில் வரிசையாகக் 
கழலும் சிலம்பும் ஒலிக்க மகாதாண்டவம்  ஆடவல்ல பெருமானே!

    Oh! Our God in Thiruk-kalar! In the city tall, rich palaces are many. 
They are surrounded by fertile gardens and groves. Sacred singing scholars and 
virtuous people strewing flowers are many in this city. Our Lord of Thiruk-kalar 
has been manifest in the temple all these years. You dance with anklets which 
clink on Your feet. We beg Your grace for these servitors, who surrender 
themselves at Your feet.

2018.     அம்பின்நேர்தடங்கண்ணினாருடன் ஆடவர்பயில்மாடமாளிகை 
    செம்பொனார்பொழில்சூழ்ந்தழகாயதிருக்களருள் 
    என்புபூண்டதோர்மேனியெம்மிறை வரஇணையடிபோற்றிநின்றவர்க் 
    கன்புசெய்தவனேயடைந்தார்க்கருளாயே.        4

    அம்பின் நேர் தடங்கண்ணினார்உடன் ஆடவர் பயில் மாட மாளிகை 
    செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திருக் களருள், 
    என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா! இணைஅடி போற்றி நின்றவர்க்கு 
    அன்பு செய்தவனே! அடைந்தார்க்கு அருளாயே!

    ampin nEr taTagkaNNinAr uTan ATavar payil mATa mALikai 
    cempon Ar pozil cUzntu azaku Ayat tiruk kaLaruL, 
    enpu pUNTatu Or mEni em iRaivA! iNai aTi pORRi ninRavarkku 
    anpu ceytavanE! aTaintArkku aruLAyE!

பொருள்:     அம்பினுக்கு நேரான கூர்மையுடையதும், விசாலமானதுமான கண்களை உடைய
மகளிருடன் ஆடவர்கள் வாழ்கின்ற மாடமாளிகைகளைக் கொண்டதும் செம்மையானதும் 
அழகுடையதுமான மலர்ச்சோலைகள் சூழ்ந்து அழகியதாகிய திருக்களர் என்னும் திருத்தலத்தில், 
எலும்பு மாலையைப் பூண்ட ஒப்பற்ற எம்முடைய இறைவனே! நின் இணையடியைப் போற்றி 
நின்று வணங்கியவர்க்கு அன்பு செய்தவனே! நின்னை அடைந்த அன்பர்களுக்கு அருள்புரிவாய்.

குறிப்புரை:     அம்பு - வாள். தடங்கண்- விசாலாட்சம். திருக்களரிலுள்ள ஆடவர் மகளிர் 
பன்மையும், மாளிகைச் சிறப்பும், செல்வப்பெருக்கும், வளமிகுதியும் குறித்தார். 'எம் இறைவா' 
என்று வாயாரப் பாடி இணையடி போற்றி நின்றவர்கண் இறைவன் அன்பு செய்தருள்வான் 
என்ற உண்மையை அறிவித்தவாறு.

    Oh! It is Civan, the Lord of Thiruk-kalar. This city is very appealing and 
pleasing. It is surrounded by a good number of flowery gardens. This city contains 
many tall and attractive palatial buildings. In these buildings the couples do live 
and enjoy their lives. The ladies in these palaces have arrow like broad eyes 
which add to their beautiful appearance. "Oh Lord! You are manifested in such a 
divine city wearing garland of human bones. You bestowed Your grace on those who 
praise Your holy feet. We beg the same grace may be showered on those devotees 
also who physically take pains to reach Your holy feet and worship".

2019.     கொங்குலாமலர்ச்சோலைவண்டினங் கிண்டமாமதுவுண்டிசைசெயத்
    தெங்குபைங்கமுகம்புடைசூழ்ந்ததிருக்களருள் 
    மங்கைதன்னொடுங்கூடியமண வாளனேபிணைகொண்டொர்கைத்தலத் 
    தங்கையிற்படையாயடைந்தார்க்கருளாயே.        5

    கொங்கு உலாம் மலர்ச்சோலை வண்டுஇனம் கெண்டி மா மது உண்டு இசைசெய 
    தெங்கு பைங்கமுகம் புடை சூழ்ந்த திருக் களருள்,
     மங்கை தன்னொடும் கூடிய மணவாளனே! பிணை கொண்டு, ஓர் கைத்தலத்து 
    அம்கையில் படையாய்! அடைந்தார்க்கு அருளாயே!

    kogku ulAm malarccOlai vaNTu inam keNTi mA matu uNTu icai ceya, 
    tegku paigkamukam puTai cUznta tiruk kaLaruL, 
    magkai tannoTum kUTiya maNavALanE! piNai koNTu, Or kaittalattu, 
    am kaiyil paTaiyAy! aTaintArkku aruLAyE!

பொருள்:     மணம் வீசும் மலர்ச்சோலைகளில் வண்டுகள் கூட்டம் குடைந்து மிக்க 
தேனினை உண்டு இசைபாடும், தெங்கும் பைங்கமுகும் பக்கங்களில் சூழ்ந்த திருக்களருள் 
உமையுடன் கூடிய மணவாளனே, மான் பிணையை ஒரு கையிலும் மழுவினை ஓர் கையிலும் 
தாங்கியவனே! நின்னை அடைந்த அன்பர்களுக்கு அருள்புரிவாய்.

குறிப்புரை:     கொங்கு - மணம். பூந்தாதுக்களுமாம். கெண்டி - கிளறி. மாமது - மிக்க தேன். 
கமுகம்-பாக்கு. மங்கை ....மணவாளனே - பார்வதி மணாளனே! ஒருகைத் தலத்தில் பிணை (மான்) 
கொண்டு அழகிய (மற்றொரு) கையில் (மழுப்) படை உடையவனே! 

    Oh! It is Civan, Lord of Thiruk-kalar. This city is surrounded by gardens 
full of honey filled flowers. Also we see many coconut groves around this area. 
In addition young green arecanut groves also exist. The beetles in large numbers 
make humming noise and reach the flowers. They kindle the pollen in the flowers 
and get into contact with the honey and suck it. Then making the humming noise go 
from one flower to another and drink honey to their stomach full. "Oh Lord of 
(husband of) Parvathi Devi ! . You have manifested Yourself in Thiruk-kalar along 
with Your consort, holding in one of Your hands the young beautiful deer and in 
another hand the battle axe. We beg Your grace to those devotees who reach Your 
holy feet, to worship".

2020.     கோலமாமயிலாலக்கொண்டல்கள் சேர்பொழிற்குலவும்வயலிடைச் 
    சேலிளங்கயலார்புனல்சூழ்ந்ததிருக்களருள் 
    நீலமேவியகண்டனேநிமிர் புன்சடைப்பெருமானெனப்பொலி 
    ஆலநீழலுளாயடைந்தார்க்கருளாயே.        6

    கோல மா மயில் ஆலக் கொண்டல்கள் சேர் பொழில் குலவும் - வயல் இடைச் 
    சேல், இளங்கயல், ஆர் புனல் சூழ்ந்த - திருக் களருள், 
    நீலம் மேவிய கண்டனே! நிமிர்புன்சடைப் பெருமான் எனப் பொலி 
    ஆலநீழல் உளாய்! அடைந்தார்க்கு அருளாயே!

    kOla mA mayil Alak koNTalkaL cEr pozil kulavum--vayal iTaic 
    cEl, iLag kayal, Ar punal cUznta--tiruk kaLaruL, 
    nIlam mEviya kaNTanE! nimirpuncaTaip perumAn enap poli 
    Ala nIzal uLAy! aTaintArkku aruLAyE!

பொருள்:     அழகிய நீலமயில்கள் தோகையை விரித்து ஆட, கரிய மேகங்கள் அடைகின்ற 
பொழில்களுடன், நெருங்கிய வயல்களிடையே சேல் மீன்களும் கயல்மீன்களும் நிறைந்த நீர்நிலைகள் 
சூழ்ந்த திருக்களர் என்னும் திருத்தலத்தில், நீலகண்டனே! நிமிர்புன்சடைப் பெருமான் எனப் பொலிகின்ற 
ஆலமரத்தின் நீழலில் உள்ளாய்! நின்னை அடைந்த அன்பர்களுக்கு அருள்புரிவாய்.

குறிப்புரை:     கோலம்- அழகு. ஆல- தோகைவிரித்து ஆடி அசைய. கொண்டல்கள் - மேகங்கள். 
சேயல், கயல் இரண்டும் மீன்வகை. நீலம்- நீலநிறத்தை. மேவிய- பொருந்திய. நஞ்சாலானநிறம். 
பொலி - விளங்குகின்ற. ஆலநீழலுளாய் - தட்சிணாமூர்த்தியாகிய குருநாதரை விளித்தது.

    It is Civan, the Lord of Thiruk-kalar. This city is surrounded by forest 
gardens full of tall trees where the clouds stay over the trees while they travel 
in the sky. Seeing the clouds the male peacocks, very good looking, spread their 
feathers and dance. In the paddy fields, full of water, the two kinds of common 
fish swim in the water. "Oh Lord! You are manifested in such an attractive city. 
You have the dark blue coloured neck. Your matted hair stands erect. The devotees 
say these praises and You, seated under stone banyan tree, explained the secret of 
divine knowledge to the saints. We beg You to grace those devotees who reach Your 
holy feet, and worship".

2021.     தம்பலம்மறியாதவர்மதில் தாங்குமால்வரையாலழலெழத் 
    திண்பலங்கெடுத்தாய்திகழ்கின்றதிருக்களருள் 
    வம்பலர்மலர்தூவிநின்னடி வானவர்தொழக்கூத்துகந்துபேர்
     அம்பலத்துறைவாயடைந்தார்க்கருளாயே.        7

    தம் பலம்(ம்) அறியாதவர் மதில், தாங்கு மால்வரையால் அழல் எழத் 
    திண்பலம் கெடுத்தாய்! திகழ்கின்ற திருக் களருள், 
    வம்புஅலர் மலர் தூவி, நின் அடி வானவர் தொழ, கூத்து உகந்து 
    பேரம்பலத்து உறைவாய்! அடைந்தார்க்கு அருளாயே!

    tam palam(m) aRiyAtavar matil tAgku mAlvaraiyAl azal ezat 
    tiNpalam keTuttAy! tikazkinRa tiruk kaLaruL, 
    vampu alar malar tUvi, nin aTi vAnavar toza, kUttu ukantu pE 
    rampalattu uRaivAy! aTaintArkku aruLAyE!

பொருள்:     தங்கள் வலிமையின் அளவினை அறியாத அசுரர்களின் கோட்டையைத் 
தாக்கும் மேருமலை வரை நெருப்பு எழச்செய்து, அவர்களுடைய திண்ணிய வலிமையைக் 
கெடுத்தவனே! விளங்குகின்ற திருக்களருள் அப்பொழுது மலர்ந்த மலர்களைத் தூவி 
நின்னுடைய திருவடிகளைத் தேவர்கள் தொழ, பேரம்பலத்தில் கூத்தாடுதலை விரும்பியவனே! 
நின்னை அடைந்த அன்பர்களுக்கு அருள்புரிவாய். 

குறிப்புரை:     தம் பலம் - தமது வலிமையை. அறியாதவர் - தெரிந்துணராத அசுரர். தாங்கும் 
மால்வரை- உலகத்தை அச்சாக நின்று தாங்கும் பெரிய மேருமலை. திண்பலம்- திண்ணிதாகிய
வலிமையை. பலம்- பயனுமாம். வம்பு - மணம். அலர் - பரந்த. பேரம்பலத்து உறைவாய் - 
பேரம்பலத்தில் (கூத்து உகந்து) உறைபவரே! சிற்றம்பலம் பேரம்பலம் என்பவை இரண்டும் 
சித்சபையே ஆகும். சிதம்பரம், சிதாகாசம் என்பவற்றின் பொருள் ஞானவெளி என்பது. 
ஞானவெளி, ஞானசபை இரண்டும் பொருளால் ஒன்றே. அம்பலத்தின் அடைமொழியாகிய 
சிறுமை பெருமைகளை நோக்கின், சிற்றம்பலம் என்பது வடசொற்றொடரின் திரிபாகாது 
எனல் புலப்படும்.  

    It is Civan, the Lord of Thiruk-kalar. Oh Lord! holding the Meru mountain 
which holds up the world as Your bow, You destroyed with fire the three flying 
fortresses of the asuras who over-estimated their own strength. You destroyed 
their three forts. The celestials collect fresh, sweet-flowers in Thiruk-kalar 
and strew them at the holy feet of our Lord manifested here. You perform the 
cosmic dance in 'Perambalam', the great golden hall at Chidambaram. We beg Your 
grace for those who reach Your holy feet and pray. Perambalam is the whole universe.

2022     குன்றடுத்தநன்மாளிகைக்கொடி மாடநீடுயர்கோபுரங்கள்மேல் 
    சென்றடுத்துயர்வான்மதிதோயுந்திருக்களருள் 
    நின்றடுத்துயர்மால்வரைத்திரள் தோளினாலெடுத்தான்றன்நீள்முடி 
    அன்றடர்த்துகந்தாயடைந்தார்க்கருளாயே.        8

    குன்று அடுத்த நல் மாளிகைக் கொடி, மாட நீடு உயர் கோபுரங்கள்மேல் 
    சென்று அடுத்து, உயர் வான்மதி தோயும் திருக் களருள், 
    நின்று அடுத்து உயர்மால்வரை திரள்தோளினால் எடுத்தான்தன் நீள் முடி 
    அன்று அடர்த்து உகந்தாய்! அடைந்தார்க்கு அருளாயே!

    kunRu aTutta nal mALikaik koTi, mATam niTu uyar kOpuragkaL mEl
    cenRu aTuttu, uyar vAnmati tOyum tirukkaLaruL,
    ninRu aTuttu uyarmAlvarai tiraLtOLinAl eTuttAn tan nIL muTi
    anRu aTarttu ukantAy! aTaintArkku aruLAyE!

பொருள்:     குன்றுபோல் உயர்ந்த நல்ல மாளிகைகளின்மேல் கொடிகள் பறக்கும் மாடங்கள், 
வானில் செல்லும் மதி தோயும் நீண்டு உயர்ந்த கோபுரங்கள், அத்தகைய செல்வவளமிக்க
திருக்களர் என்னும் திருத்தலத்தில், உயர்ந்த கயிலை மலையைத் தன்னுடைய திரண்ட 
தோள்களினால் எடுத்தவனாகிய இராவணனின் உயர்ந்த முடிகளை அன்று நசுக்கியவனே! 
நின்னை அடைந்த அன்பர்களுக்கு அருள்புரிவாய்.

குறிப்புரை:     தம்மேலுள்ள கொடிகள், கோபுரங்களின் மேற்போய். சந்திரனைத் தோயும் அளவு, 
மாளிகைகள் உயர்ந்துள்ளன. 'வண்கொண்டல் விட்டு மதிமுட்டு வனமாடம்'. வரை- கயிலை மலையை.
எடுத்தான்தன் - எடுத்த இராவணனுடைய. அன்று - எடுத்த அந்நாளில். 

    It is Civan, the Lord of Thiruk-kalar. The palaces in the city are very 
tall buildings. The temple towers also are equally tall. But the flags fixed on 
the top of the palaces flutter, looking taller than the temple towers, reach the 
sky and come in close contact with the moon trailing in the sky. The Himalayan 
mountain was very firm, tall and big. Raavanan, the king of Sri Lanka tried to 
lift this mount Kailash and move it aside but failed in his attempt. Our Lord 
subdued the mightiness of Raavanan; yet later our Lord blessed him and showered 
His grace. "We beg Your grace for those who reach Your holy feet, and worship".

2023.     பண்ணியாழ்பயில்கின்றமங்கையர் பாடலாடலொடாரவாழ்பதி 
    தெண்ணிலாமதியம்பொழில்சேருந்திருக்களருள் 
    உண்ணிலாவியவொருவனேயிரு வர்க்குநின்கழல்காட்சியாரழல் 
    அண்ணலாயஎம்மானடைந்தார்க்கருளாயே.        9

    பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி, 
    தெண்நிலாமதியம் பொழில் சேரும் திருக் களருள், 
    உள்-நிலாவிய ஒருவனே! இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர்அழல் 
    அண்ணல்ஆய எம்மான்! அடைந்தார்க்கு அருளாயே!

    paNNi yAz payilkinRa magkaiyar pATal ATaloTu Ara vAz pati,
    teN nilAmatiyam pozil cErum tiruk kaLaruL,
    uL-nilAviya oruvanE! iruvarkku nin kazal kATci Ar azal 
    aNNal Aya emmAn! aTaintArkku aruLAyE!

பொருள்:     பண்ணுடன் யாழ் பயில்கின்ற மங்கையரின் பாடலொடு ஆடலும் நிறைய 
அமைந்த பதியும் தெளிந்த நிலவொளி பரப்பும் மதி தங்கும் பொழில்களும் சேர்ந்த திருக்களர் 
என்னும் திருத்தலத்தில், திருக்கோயிலின் உள் நிலாவும் ஒப்பற்றவனே! உன் அடியும் முடியும் 
தேடிய இருவர்க்கு அழலாகக் காட்சியளித்த அண்ணலாய எம்மானே! நின்னை அடைந்த
அன்பர்களுக்கு அருள்புரிவாய். 

குறிப்புரை:     பண்+யாழ்-பண்ணியாழ். யாழைத் திருந்திய சுரம் அமையப்பண்ணி 
எனலுமாம். ஆர- நிறைய. பதியாகிய திருக்களருள். உள் திருக்கோயிலின் மூலத்தானத்தில். 
அன்பர் உள்ளத்தில் கழல் காட்சி - சீபாதசேவையை (அருளாய்).

    Oh Lord Civa of Thiruk-kalar! In this city attractive damsels, well versed 
in music, play on the harp producing melodious tune to the dance that goes on in the 
hall and enjoy their life. The moon showers its clear, bright light on the groves 
where the trees are tall enough to touch the moon. "Oh Lord! You are there in this 
city of Thiruk kalar as incomparable. Once You rose as that illimitable effulgence 
of which the origin and end could not be comprehended by Thirumaal and Brahma. 
Oh Lord! we beg Your grace for those who reach Your holy feet to worship".

2024.     பாக்கியம்பலசெய்தபத்தர்கள் பாட்டொடும்பலபணிகள்பேணிய 
    தீக்கியல்குணத்தார்சிறந்தாருந்திருக்களருள் 
    வாக்கின்நான்மறையோதினாயமண் தேரர்சொல்லியசொற்களானபொய் 
    ஆக்கிநின்றவனேயடைந்தார்க்கருளாயே.        10

    பாக்கியம்பல செய்த பத்தர்கள், பாட்டொடும் பலபணிகள் பேணிய 
    தீக்கு இயல் குணத்தார், சிறந்து ஆரும் திருக் களருள், 
    வாக்கினால் மறை ஓதினாய்! அமண்தேரர் சொல்லிய சொற்கள் ஆன பொய்            
    ஆக்கி நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே! 

    pakkiyampala ceyta pattarkaL, pATToTum palapaNikaL pENiya 
    tIkku iyal kuNattAr, ciRantu Arum tiruk kaLaruL,
    vAkkinAl maRai OtinAy! amaN tErar colliya coRkaL Ana poy 
    Akki ninRavanE! aTaintArkku aruLAyE!

பொருள்:     சிவபுண்ணியமுடைய பத்தர்களின் பாட்டுக்களுடன், திருப்பணிகள் செய்ய 
விரும்பும் அக்கினி காரியம் செய்வதில் சிறந்தவர்களும் வாழும் திருக்களர் என்னும் திருத்தலத்தில், 
சொற்களால் வேதத்தை ஓதி அருளியவனே! அமணர்களும் தேரர்களும் மெய்யென்று சொல்லிய
சொற்களைப் பொய்யாக்கி நின்றவனே! நின்னை அடைந்த அன்பர்களுக்கு அருள்வாய்.

குறிப்புரை:     பாக்கியம்- நல்வினைகள். பத்தர்கள் -அன்பர்கள். பணிகள்- திருப்பணிகள். தீக்கு
இயல் - அக்கினி காரியத்துக்கு. 

    It is Civan, the Lord of Thiruk-kalar. In this city, there are many devotees 
who have performed virtuous deeds. They do good service to the temple as well as to 
the public. They always pray and sing the praise of our Lord. The scholar Brahmins 
living here are the best, they perform their daily rituals and light the sacrificial 
fire every day. In this city Oh our Lord! You are manifested, You pronounced the 
Vedas with Your sweet and sacred voice. You have established that the words uttered 
by the Buddhists and the Jains are false and a contrast to Your sacred words. 
We beg Your grace for those who reach You to worship".

2025.     இந்துவந்தெழுமாடவீதியெ ழில்கொள்காழிந்நகர்க்கவுணியன் 
    செந்துநேர்மொழியாரவர்சேருந்திருக்களருள்
    அந்தியன்னதொர்மேனியானை அமரர்தம்பெருமானைஞானசம் 
    பந்தன்சொல்லிவைபத்தும்பாடத்தவமாமே.        11

    இந்து வந்து எழும் மாடவீதி எழில் கொள் காழி(ந்)நகர்க் கவுணியன், 
    செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக் களருள், 
    அந்தி அன்னது ஓர் மேனியானை, அமரர்தம் பெருமானை, ஞானசம் 
    பந்தன் சொல் இவை பத்தும் பாட, தவம் ஆமே.

    intu vantu ezum mATa vIti ezil koL kAzi(n) nakark kavuNiyan, 
    centu nEr moziyAr avar cErum tiruk kaLaruL, 
    anti annatu Or mEniyAnai, amarar tam perumAnai, njAnacam 
    pantan col ivaipattum pATa, tavam AmE.

பொருள்:     இனிய மொழி பேசும் பண்புடைய மங்கையர் சேரும் திருக்களருள் அந்தி வானம்
போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமானை, தேவர்கள் தம் பெருமானை, சந்திரன் வந்து மேல் 
எழும் மாட மாளிகைகளை உடைய வீதிகளால் எழில் கொள்ளும் சீகாழி நகர்க் கவுணியன் 
ஞானசம்பந்தன் பாடிய பாடல்கள் பத்தான இவற்றைப் பாட அது தவம் ஆகும்.

குறிப்புரை:     இந்து - சந்திரன். எழில் -அழகு. செந்து - முன்பதிகம். மூன்றில் உள்ள விளக்கம்
காண்க. 'அந்தி வண்ணன்'.

    Our saint Thiru-gnana-Sambandar hails from the beautiful Seerkaazhi, a holy
city of long streets with tall palaces and halls. The palaces are all very tall; 
the moon embraces the palaces while moving in the sky. He came to Thiruk-kalar 
where ladies who live in this city speak chaste Tamil resembling 'Chendu' music.
In this city, our Lord is reddish as the evening sun. He is the Chief of Devas. 
Our saint Thiru-gnana- Sambandar sang on this Lord these famous ten Tamil songs. 
Those who can sing these ten songs will have the good effect of penance.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            51ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 51st Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 188                பதிக எண்: 52

52. திருக்கோட்டாறு                52.THIRU-K-KOTTAARU

பண்: சீகாமரம்                    Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    இத்திருத்தலமானது பேரளம்- காரைக்கால் தொடர்வண்டிப் பாதையில் அம்பகரத்தூர் 
தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இஃது இக்காலத்தே 
கொட்டாரம் என்று வழங்கப் பெறுகின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 53ஆவது ஆகும். 
மயிலாடுதுறையை அடுத்த கொல்லுமாங்குடி - காரைக்கால் பேருந்து வழியில் கொட்டாரம் 
கைகாட்டியில் இறங்கி இவ்வூரை அடையலாம். இறைவரின் திருப்பெயர் ஐராவதேசுவரர். 
இறைவியாரின் திருப்பெயர் வண்டமர் பூங்குழலி. வெள்ளை யானை பூசித்துப் பேறு 
பெற்றது இச்செய்தி.

    'நின்று மேய்ந்து நினைந்துமாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழை 
    குன்றினேர்ந்து குத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள் '

என்னும் இவ்வூர் திருஞானசம்பந்தத் தேவாரப் பகுதியால் அறியக் கிடக்கின்றது. இதற்கு 
ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.

பதிக வரலாறு

    முத்தமிழ் விரகர் திருநள்ளாற்றை வழிபட்டபோது, திருக்கோட்டாறு சென்று போற்றிப் 
பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2026.     கருந்தடங்கணின்மாதராரிசை செய்யக்காரதிர்கின்றபூம்பொழிற் 
    குருந்தமாதவியின்விரைமல்குகோட்டாற்றில் 
    இருந்தஎம்பெருமானையுள்கி இணையடிதொழுதேத்துமாந்தர்கள் 
    வருந்துமாறறியார்நெறிசேர்வர்வானூடே.        1

    கருந்தடங்கணின் மாதரார் இசைசெய்ய, கார் அதிர்கின்ற பூம்பொழில் 
    குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில் 
    இருந்த எம்பெருமானை உள்கி, இணைஅடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் 
    வருந்தும் ஆறு அறியார்; நெறி சேர்வர், வான்ஊடே.

    karunta TagkaNin mAtarAr icai ceyya, kAr atirkinRa pUmpozil 
    kuruntam mAtaviyin virai malku kOTTARRil 
    irunta emperumAnai, uLki, iNai aTi tozutu Ettum mAntarkaL 
    varuntum ARu aRiyAr; neRi cErvar, vAn UTE.

பொருள்:     கரிய, பெரிய கண்ணை உடைய மகளிர் இசைபாடி ஆட, கார் மேகங்கள் 
முழக்கம் செய்கின்ற மலர் பொழில்களில் குருந்தமரத்திற்படர்ந்த மாதவிக் கொடிகளின் நறுமணம்
 நிறைந்த திருக்கோட்டாற்றில் இருக்கும் எம்பெருமானை நினைந்து அவருடைய திருவடிகளைத் 
தொழுது ஏத்தும் மாந்தர்கள் துன்பத்தை அறிய மாட்டார்கள். மாறாக விண் வழியாகச் செல்லும் 
வீட்டு நெறியை அடைவர். 

குறிப்புரை:     கண்ணின் - கண்ணையுடைய.  இசைசெய்ய - (இனிய)   இசைப் (பாக்களைப் 
பாடலும்  ஆடலும்) செய்ய. கார்-  மேகம். அதிர்கின்ற- முழங்குகின்ற. குருந்தம்- மரம். மாதவி- 
குருக்கத்திக்கொடி. 'மாடுலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் ஊடுலவு 
புன்னை விரைதாதுமலி சேருதவி மாணிகுழியே' (தி. 3 ப. 77 பா. 9). விரை- மணம். மல்கு - 
நிறைந்த. உள்கி- நினைந்து. வருந்தும் ஆறு - துன்பம் அடையும் வழியை. வான்ஊடு - 
விண்வழியாகச் செல்லும். நெறி-வீட்டு நெறியை. 

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kottaaru. The city is a very 
sacred place where the black clouds make thundering noise and pass through the 
flowery gardens. Here the tall 'Kuruntha' trees grow in large numbers. The jasmine 
vine creeps near the kuruntha trees and their flowers spread their fragrance in the 
surrounding areas. Inside the city, in the music hall young, good looking damsels 
with broad black-eyes make sweet music praising our Lord. Along with the sweet music 
of the girls all around the area, people hear the thundering noise of the black clouds 
resembling the tone of the tabret. Those devotees who pray at the holy feet of 
our Lord will have no sufferings in their life. They will reach God's abode through
the sky.

2027.     நின்றுமேய்ந்துநினைந்துமாகரி நீரொடும்மலர்வேண்டிவான்மழை 
    குன்றின் நேர்ந்துகுத்திப்பணிசெய்யுங்கோட்டாற்றுள் 
    என்றுமன்னிய எம்பிரான்கழல் ஏத்திவானரசாளவல்லவர் 
    பொன்றுமாறறியார்புகழார்ந்தபுண்ணியரே.        2

    நின்று மேய்ந்து, நினைந்து, மா கரி, நீரொடும் மலர் வேண்டி, வான் மழை 
     குன்றில் நேர்ந்து குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள் 
    என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி, வான்அரசு ஆள வல்லவர் 
    பொன்றும் ஆறு அறியார்; புகழ் ஆர்ந்த புண்ணியரே.

    ninRu mEyntu, ninaintu, mA kari, nIroTum malar vENTi, vAn mazai
    kunRil nErntu kuttip paNiceyyum kOTTARRuL 
    enRum manniya empirAn kazal Etti, vAn aracu ALa vallavar 
    ponRum ARu aRiyAr; pukaz Arnta puNNiyarE.

பொருள்:     ஓரிடத்தில் நின்று மேய்ந்த பெரிய யானை இறைவனை வழிபட நினைந்து 
நீரோடு மலர் வேண்டி வானில் குன்று போலிருந்த கரிய மேகத்தை உகுத்து மழை பொழிவித்துத் 
திருமஞ்சனம் செய்விக்கும் கோட்டாற்றுள், என்றும் தங்கிடும் எம்பிரானின் திருவடிகளை
ஏத்தித் தேவருலகம் எய்தி அரசாள வல்லவர் மீண்டும் பிறப்பெடுத்து சாகார். வீட்டுலகத்தை
அடைந்து புகழுடைப் புண்ணியர் ஆவார்.

குறிப்புரை:     மாகரி - பெரிய யானை. கரத்தை உடையது கரி. வான் மழை - மேகத்திலுள்ள 
மழைநீரை. நேர்ந்து - நேர்பட்டு. உகுத்தி - உகச்செய்து (அபிடேகித்து). ஏர்ந்து - எழுந்து. குத்தி 
எனலுமாம். பணி- தொண்டு. மன்னிய- நிலைபெற்றுள்ள. வான் - தேவருலகம். பொன்றும் ஆறு -
சாமாறு. ( பிறந்திறந்துழலும் துன்பவழி). 'சாமாறே விரைகின்றேன்' (திருவாசகம், திருச்சதகம் 14).
ஆர்ந்த- நிறைந்த.

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kottaaru. It is a blessed place where 
the big horned huge elephant, after grazing steadily in the grass field brings to its 
memory to worship our Lord in order to get good rains for the land. The elephant 
climbs the hill, pierces the cloud with its tusks, collects the water and the flowers 
available in the mountain and showers it over our Lord and strews the flowers and
worships Him. In this Thiru-k-kottaaru, our Lord is manifest. Those devotees who hail
His golden feet and worship Him will rule the celestial world. They are deathless; 
to be praised; are pure and blessed.

2028.     விரவிநாளும்விழாவிடைப்பொலி தொண்டர்வந்துவியந்துபண்செயக் 
    குரவமாருநீழற்பொழில்மல்குகோட்டாற்றில்
    அரவநீள்சடையானையுள்கிநின் றாதரித்துமுனன்புசெய்தடி 
    பரவுமாறுவல்லார்பழிபற்றறுப்பாரே.        3

    விரவி நாளும் விழாஇடைப் பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய, 
    குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில், 
    அரவம் நீள்சடையானை உள்கி நின்று, ஆதரித்து, முன் அன்பு செய்து, அடி 
    பரவும்ஆறு வல்லார் பழி பற்றுஅறுப்பாரே.

    viravi nALum vizA iTaip poli toNTar vantu viyantu paNceya, 
    kuravam Arum nIzal pozil malku kOTTARRil, 
    aravam nILcaTaiyAnai uLki ninRu, Atarittu, mun anpu ceytu, aTi 
    paravum ARu vallAr pazi paRRu aRuppArE.

பொருள்:     குரவ மரங்கள் நிழல் தரும் பொழில்கள் நிறைந்த கோட்டாற்றில் நாள்தோறும்
 நிகழ்கின்ற விழாக்களில் பொலிவுடன் தொண்டர்கள் வந்து கலந்து பண்ணுடன் புகழ்ந்து பாட, 
பாம்பு ஆடுகின்ற சடையுடைய பிரானை நினைந்து விரும்பி அன்பு செய்து 
திருவடியை வாழ்த்தும் முறைமையை அறிந்தவர்கள் பழியும் பற்றும் அறுப்பார்கள்.

குறிப்புரை:     வியந்து - நன்குமதித்து, புகழ்ந்து. குரவம் - குராமரம். 'நிழல்' என்ற பாடமே 
சந்தத்திற்குப் பொருந்துவது.(பதி. 186 பா. 6) அரவம் - பாம்பு. பரவும் ஆறு - வாழ்த்து முறைமை. 
பழி பற்று - பழியும்  பற்றும். பழிக்கும் பற்று எனலுமாம்.

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kottaaru. In this city, the temple 
festivals take place almost daily. The devotees swarm amidst sweet music during the 
festival processions and become prosperous. In the city gardens large and big datura 
trees giving cool shade are many. Our Lord is manifest in this temple with His matted 
hair adorned with snake. The devotees who think of our Lord with big matted hair, 
and worship Him with commitment, serious concentration and deep love will be able to 
sever the link with all their evils and attachments and they will be pure and 
free forever.

2029.     அம்பின் நேர்விழிமங்கைமார்பலர் ஆடகம்பெறுமாடமாளிகைக் 
    கொம்பினேர்துகிலின்கொடியாடுகோட்டாற்றில் 
    நம்பனேநடனேநலந்திகழ் நாதனேயென்றுகாதல்செய்தவர் 
    தம்பின்நேர்ந்தறியார்தடுமாற்றவல்வினையே.        4

    அம்பின் நேர் விழி மங்கைமார்பலர் ஆடகம் பெறு மாடமாளிகைக் 
    கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில், 
    "நம்பனே! நடனே! நலந்திகழ் நாதனே!'' என்று காதல் செய்தவர் 
    தம் பின் நேர்ந்து அறியார், தடுமாற்ற வல்வினையே.

    ampin nEr vizi magkaimAr palar ATakam peRu mATa mALikaik 
    kompin nEr tukilin koTi ATu kOTTARRil,                     
    "nampanE! naTanE! nalam tikaz nAtanE!" enRu kAtal ceytavar 
    tam pin nErntu aRiyAr, taTumARRa valvinaiyE.

பொருள்:     கொம்பின்மேல் துகிற்கொடிகள் ஆடும் காட்சியுடைய திருக்கோட்டாற்றில் 
பொன் போல் ஒளிர்கின்ற மாளிகைகளில் அம்பினைப் போன்ற கூர்மையான விழிகளை 
உடைய மங்கையர்கள் பலர், 'நம்பனே, கூத்தனே, பேரின்பமளிக்கும் தலைவனே' என்று 
பத்தி செய்யவே, தமக்கு தடுமாற்றத்தைச் செய்யும் வலிய வினை நேர்ந்தறியார்.

குறிப்புரை:     அம்பு - வேல். (முற்பதிகம் பா. 4) ஆடு அகம் - ஆடுகின்ற இடம். கொம்பின் ஏர் 
துகிலின் கொடி - கொம்பிற் கோத்து எழுகின்ற துணிக்கொடி. நேர் என்றும் பிரிக்கலாம். 
நடனே- கூத்தனே. (பதி. 185 பா. 11. நயன் நடன்') நலம்-  பேரின்பம். தம்பின் தடுமாற்ற 
வல்வினையே நேர்ந்து அறியார் என்றியைக்க. செய்தவர் எழுவாய். அறியார் பயனிலை. 
நேர்தல் வினையின் செயலாகும்.

    Behold! It is Civan who is manifest in Thiru-k-kottaaru as the Lord of this 
place. In this city, there are a good number of dancing halls in big palatial buildings.
In the towered palaces the flags flutter on the tall posts. Inside the dancing halls a 
good number of arrow-eyed damsels dance and enjoy life, singing songs on our Lord. 
Our Lord happily manifested in the temple, graces all the devotees and the maidens. 
Those who hail Him with loving servitude as "Oh! Our God of Kottaaru, God of cosmic 
dance, God of all Supreme" will have no confusion in their thoughts, nor will have 
any karma following them.

2030.     பழையதம்மடியார்துதிசெயப் பாருளோர்களும்விண்ணுளோர்தொழக்         
    குழலுமொந்தைவிழாவொலிசெய்யுங்கோட்டாற்றில் 
    கழலும்வண்சிலம்பும்மொலிசெயக் கானிடைக்கணமேத்தஆடிய 
    அழகனென்றெழுவாரணியாவர்வானவர்க்கே.        5

    “பழைய தம் அடியார் துதிசெய, பார்உளோர்களும் விண்உளோர் தொழ, 
    குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில், 
    கழலும் வண் சிலம்பும்(ம்) ஒலி செய, கான்இடைக் கணம் ஏத்த ஆடிய 
    அழகன்” என்று எழுவார், அணி ஆவர், வானவர்க்கே.

    "pazaiya tam aTiyAr tuticeya, pAr uLOrkaLum viN uLOr toza, 
    kuzalum montai vizA oli ceyyum kOTTARRil, 
    kazalum vaN cilampum(m) oli ceya, kAn iTaik kaNam Etta ATiya 
    azakan" enRu ezuvAr, aNi Avar, vAnavarkkE.

பொருள்:     பழைய அடியவர்கள் தம்மை துதி செய்ய, மண்ணுலகத்து மக்களும்
விண்ணுலகத்து தேவர்களும் தொழுமாறு, குழல், மொந்தை முதலிய கருவிகள் இசையொலி
செய்ய, திருக்கோட்டாற்றில் கழல்களும் வளமையான சிலம்பும் ஒலி செய, காட்டினில்
பேய்க்கணம் துதிக்க, கூத்தாடிய அழகன் என்று வணங்குவார், தேவர்களுக்கு அணியாவர்.

குறிப்புரை:     பழைய அடியார் 'பழவடியீர்' 'பண்டைப் பரிசே பழவடியார்க்கு ஈந்தருளும் 
அண்டம்'.  பழவடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன். 'பழிப்பு இல் நின்பாதப் 
பழந்தொழும்பு' (திருவாசகம்  157,183,424,151) பார் - மண். குழல் - வேய்ங்குழல். மொந்தை-
 இசைக்கருவியுள் ஒன்று. கழலும்  சிலம்பும் ஒலி செய்ய என்க. கான் - காடு. கணம் - பூதகணம், 
பேய்க்கணம். எழுவார் - நடுநாடியில், சிவபீஜத்தொடும் சிந்தித்து எழுகின்ற யோகியர். 
'சித்தம் ஆரத் திருவடியே நினைந்து உள்கி எழுவார்  உள்ளம் ஏயவன் காண்' (தி. 6 பதி 64 பா. 4). 
இவ்வுண்மையை ஒட்டித் 'தொழுதெழுவார்' தொழுதெழுவாள்' என்னும் தொடர்களுக்குப் 
பொருள் கொள்ளல் நன்று. 'கொழுநற்றொழு தெழுவாள்'-  படுக்கையின் நின்று தொழுது 
கொண்டே எழுதல் செய்வாள். தொழுதல் என்றதற்கு விழுந்து வணங்குதல் என்னும் பொருளே 
உரியது என்பார். பிறவாறெல்லாம் உரைப்பர். வானவர்க்கு அணி (பூஷணம்) ஆவர். 

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kottaaru. Our Lord is worshipped 
by His ancient devotees hailing from old generations. People on the earth and 
also angels in heaven worship His holy feet. In this city, people play on flute, 
making melodies. These notes accompany the beautiful music of the percussion 
instruments (drum open at one end) played by experts in the city. Our handsome 
Lord performs that cosmic dance on the burial ground where the bhutas worship Him. 
While dancing, our Lord's anklets tinkle and make good music. Those devotees who 
pray Him mentioning these pleasing details will be celebrated by angels, and will 
be ornaments to them.

2031.     பஞ்சின்மெல்லடிமாதராடவர் பத்தர்சித்தர்கள்பண்புவைகலும் 
    கொஞ்சியின்மொழியால்தொழில்மல்குகோட்டாற்றில் 
    மஞ்சனேமணியேமணிமிடற் றண்ணலேயெனவுள்நெகிழ்ந்தவர் 
    துஞ்சுமாறறியார்பிறவாரித்தொல்நிலத்தே.        6

    "பஞ்சின் மெல்அடி மாதர், ஆடவர்,பத்தர், சித்தர்கள், பண்பு வைகலும் 
    கொஞ்சி இன்மொழியால் - தொழில் மல்கு கோட்டாற்றில், 
    மஞ்சனே! மணியே! மணிமிடற்று அண்ணலே!" என உள்-நெகிழ்ந்தவர், 
    துஞ்சும் ஆறு அறியார்; பிறவார், இத்தொல்-நிலத்தே.

    "panjcin mel aTi mAtar, ATavar, pattar, cittarkaL, paNpu vaikalum
     konjci inmoziyAl-tozil malku kOTTARRil, 
     manjcanE! maNiyE! maNimiTaRRu aNNalE!" ena uL-nekizntavar, 
     tunjcum ARu aRiyAr; piRavAr, ittol-nilattE.

பொருள்:     பஞ்சு போன்ற மென்மையான பாதத்தையுடைய மகளிர்களும் ஆடவர்களும், 
அன்பர்களும் சித்தர்களும் தன்னுடைய பண்புகளை, நாள்தோறும் கொஞ்சும் இனிய மொழியால் 
போற்றித் தொழும் தொழில் மல்கிய திருக்கோட்டாற்றில், 'மைந்தனே, மணியே, நீலகண்டனே' 
என உள்ளம் நெகிழ்ந்து துதிப்பவர் இத்தொல் உலகில் இறத்தலும் இலர், பிறத்தலும் இலர்.

குறிப்புரை:     பஞ்சின் - பஞ்சுபோல. இன் - ஐந்தாவதனுருபு உவமப் பொருள். பன்+து என்றதன் 
மரூஉ. பனுவல் என்பதற்கும் அதுவே பகுதி. பஞ்சினைப் பன்னுதல் இன்றும் உண்டு. 'பஞ்சி தன் 
சொல்லே பனுவல் இழையாக' (நன்னூற்பாயிரம்) 'பருத்திப் பெண்டின் பனுவலன்ன' (புறம் 125).'
'நுணங்கு-நுன்பனுவல்' (நற்றிணை -353). (தொல் -எழுத்து - நச்சர்; இறை -சூ 1 -உரை). பத்தர் -அன்பர். 
சித்தர் - அட்டமாசித்து வல்லவர். வைகலும் - நாள்தோறும். பண்பு - அவர்களுடைய குணங்களை. 
இன்மொழியால் கொஞ்சித் தொழுதல் நிறைந்த கோட்டாறு. தொழில் - தொழுதல். மஞ்சன்-
 மைந்தன் என்பதன் மரூஉ. 'கிஞ்சுகவாயஞ்சுகமே கேடில் பெருந்துறைக் கோன்மஞ்சன்' 
(திருவாசகம் 362). 'மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்பதொன்றேயன்றோ' (கம்பர்- பால-
கோலங் - 19). மணிமிடற்றண்ணலே - திருநீலகண்டப் பெருமானே. துஞ்சும் ஆறு அறியார் - 
இனி இறக்கும் வகையை அறியார். இத்தொல் நிலத்தே பிறவார் என்பதும். துஞ்சு மாற்றியாமை 
வலியுறுத்தி வீடுபெறுவரென்று  விளக்கிற்று. நெகிழ்ந்தவர் - எழுவாய். அறியார் பிறவார் இரண்டும் 
பயனிலை.

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kottaaru. In the city of Thiru-k-kottaaru
young ladies are very beautiful with feet soft as cotton. These ladies, young men, devotees 
and mystics worship our Lord, daily reciting His greatness with their sweet voice. Our Lord 
is manifest in Thiru-k-kottaaru. Those devotees who worship Him praising Him "Oh! You the 
valiant one; Oh! You are the perfect gem; Oh! You are the Lord with beautiful gem like neck"; 
they who speak such words with melting hearts will have no birth hereafter, and no death 
either on this ancient earth.

2032.     கலவமாமயிலாளொர்பங்கனைக் கண்டுகண்மிசைநீர்நெகிழ்த்திசை 
    குலவுமாறுவல்லார்குடிகொண்டகோட்டாற்றில் 
    நிலவமாமதிசேர்சடையுடை நின்மலாவெனவுன்னுவாரவர் 
    உலவுவானவரினுயர்வாகுவதுண்மையதே.        7

    “கலவமாமயிலாள் ஒர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர் நெகிழ்த்து, இசை 
    குலவும்ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில், 
    நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா!" என உன்னுவார் அவர் 
    உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே.

    "kalava mA mayilAL or pagkanaik kaNTu, kaNmicai nIr nekizttu, icai 
    kulavum ARu vallAr kuTikoNTa kOTTARRil, 
    nilava mA mati cEr caTai uTai ninmalA!" ena unnuvAr avar 
    ulavu vAnavarin uyarvu Akuvatu uNmaiyatE.

பொருள்:     தோகை மயில் போன்ற சாயல் உடையளாகிய உமையாளைத் தன் இடப்பாகத்தில் 
உடையவனைக் கண்டு, கண்களில் நீர் பெருக்கி, அவன் புகழைப் போற்றி இசைக்க வல்லவர் வாழும்
திருக்கோட்டாற்றில், பிறையணிப் பெருமானே! மலமற்ற தூயோனே! எனத் தியானிப்பவர்கள் 
விண்ணில் உலவும் தேவர்களுக்கு மேலானவராகுவர். இது உண்மை.

குறிப்புரை:     கலவம் - தோகை. மயிலாள் - மயில்போலும் சாயலுடைய உமாதேவியார். கண்மிசை 
நீர் நெகிழ்ந்து- கண்ணீர் உகுத்து. நிலவம்- நிலாவைத்தரும். உன்னுவார் - தியானம் செய்பவர்.
வானவரின் - தேவரினும். உண்மையது - சத்தியமானது. ஆசிரியர் ஆணையிட்டுக் கூறுதலை நோக்கின் - 
உயிர்களைச் சிவவழிபாட்டில் ஈடுபடுத்தக் கொண்டிருக்கும் பேரன்பு விளங்கும் (பதி 220 பா. 11 பதி 221 
பா 11 தி. 3 பதி 118 பா 11).

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kottaaru. He is the consort of our 
goddess Paarvathi Devi whose beauty is like the feathered peacock's. He manifests 
Himself in Thiru-k-kottaaru. His long matted hair is like the pure white rays of the 
moon. Those devotees who go to the temple, see Him, shed tears and praise His fame 
in sweet musical tone saying "Oh! You are immaculate! give us Your grace" will 
certainly be higher in status than the angels. This is the truth.

2033.     வண்டலார்வயற்சாலியாலைவ ளம்பொலிந்திடவார்புனற்றிரை     
    கொண்டலார்கொணர்ந்தங்குலவுந்திகழ்கோட்டாற்றில் 
    தொண்டெலாந்துதிசெய்யநின்ற தொழிலனேகழலாலரக்கனை 
    மிண்டெலாந்தவிர்த்தென்னுகந்திட்ட வெற்றிமையே.        8

    வண்டல் ஆர் வயல் சாலி ஆலை வளம் பொலிந்திட, வார் புனல்-திரை 
    கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில், 
    தொண்டுஎலாம் துதி செய்ய நின்ற தொழிலனே! கழலால் அரக்கனை 
    மிண்டு எலாம் தவிர்த்து, என் உகந்திட்ட வெற்றிமையே?

    vaNTal Ar vayal cAli Alai vaLam polintiTa, vAr punal-tirai 
    koNTalAr koNarntu agku ulavum tikaz kOTTARRil
    toNTu elAm tuticeyya ninRa tozilanE! kazalAl arakkanai 
    miNTu elAm tavirttu, en, ukantiTTa veRRimaiyE?

பொருள்:     மிக்க வண்டலினைச் சாலி, கரும்பு முதலியன வளமாக விளையுமாறு வயலில் 
கார்காலத்துப் பெருகிய ஆறு கொண்டு வந்து கொட்டி உலவும் திருக்கோட்டாற்றில், தொண்டர்கள் 
துதி செய்ய அருள் செய்து நின்றவனே' கழலணிந்த திருவடியால், இராவணனை, அவனுடைய 
செருக்கெல்லாம் ஒழியச் செய்து, பின் அவனுக்கு உகந்து அருள்செய்திட்ட வெற்றி என் கருதி?

குறிப்புரை:     வண்டல் - நீர் ஒதுக்கிய மண். சாலி - நொல். ஆலை - கரும்பாலை கரும்பு.         
கொண்டலார் -'தென்றலார்' போல். 'தென்றலார் புகுந்துலவும் திருத்தோணிபுரத்து' (தி. 1 ப. 60 பா. 7) 
தொண்டு- தொண்டர்கள். சொல்லால் அஃறிணை; பொருளால் உயர்திணை; வேந்து அரசு ஒற்று 
முதலியனபோல ஆகுபெயருமாம். துதி - தோத்திரம். மிண்டு - திண்மை. 'மிண்டனுக்கு இரண்டாள்' 
என்பது வழக்கு. தவிர்த்து - நீங்குதல். வெற்றிமை - வென்ற தன்மை. (பதி. 186 பா.9).

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kottaaru, a sacred rich city. The city is
full of rich paddy fields with loamy soil giving rich yields of rice. Sugarcane crushers
are many in number. The land is very fertile because of the heavy rain brought by dark
clouds in this city, which make the soil rich. "Oh! our God! You are manifestsd in
Thiru-k-kottaaru! You are worshipped by devotees reciting Your name. You are the Lord 
performing the five divine operations. With your holy feet You subdued the mighty 
king Raavanan; but later You excused him and bestowed grace! Why did you show Your 
victorious grace like that?"

2034.     கருதிவந்தடியார்தொழுதெழுக் கண்ணனோடயன்தேடஆனையின் 
    குருதிமெய்கலப்பவுரிகொண்டுகோட்டாற்றில் 
    விருதினான்மடமாதும்நீயும்வி யப்பொடும்முயர்கோயில்மேவிவெள்
    எருதுகந்தவனேயிரங்காயுனதின்னருளே.         9

    கருதி வந்து அடியார் தொழுது எழ, கண்ணனோடு அயன் தேட, ஆனையின் 
    குருதி மெய் கலப்ப உரி கொண்டு, கோட்டாற்றில், 
    விருதினால் மடமாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி, வெள்
     எருது உகந்தவனே! இரங்காய், உனது இன்அருளே!                    

    karuti vantu aTiyAr tozutu eza, kaNNanOTu ayan tETa, Anaiyin 
    kuruti mey kalappa uri koNTu, kOTTARRil,
    virutinAl maTamAtum nIyum viyappoTum uyar kOyil mEvi, veL 
    erutu ukantavanE! iragkAy, unatu in aruLE!

பொருள்:     அடியார் கருதி வந்து அடி தொழத், திருமாலோடு பிரமனும் தேட, ஆனையின் 
தோலை இரத்தம் திருமேனியில் பட உரித்துப் போர்த்துக் கொண்டு, திருக்கோட்டாற்றில் அந்த 
வெற்றியால் வந்த விருதுடன் உமையம்மையும் நீயும் பாராட்டொடும் திருக்கோயிலில் 
இருப்பவனே! வெண்ணிறக் காளையினை விரும்பியவனே! உனது இனிய அருளை என் மாட்டு 
இரங்கி அருள்வாயாக.

குறிப்புரை:     அடியார் கருதி வந்து தொழுது எழ என மாற்றுக. கண்ணன்-  கிருஷ்ணன் என்னும்
வடசொல்லின் திரிபாக் கொள்ளின் கறுப்பன் என்னும் பொருளாம்.  தமிழாக் கொள்ளின்
சினைப்பெயரடியாய்ப் பிறந்த பெயராம். கருதுபவனுமாம் ஆனையின்... கொண்டு - யானை உரித்த 
வரலாறு. குருதி -இரத்தம். விருதினான்- விருதுகளால். மடமாது-  உமாதேவி. வெள்எருது - 
நரைவெள்ளேறு. உகந்தவன் - விரும்பியவன்.  

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kottaaru. The devotees come to the 
temple where our Lord is manifest; they prostrate and get up and praise You. Kannan 
(Thirumaal) and Brahma were searching to meet You and worship; You killed the fierce 
elephant and covered Your body with its hide with blood dripping. You are manifest 
with Your consort Uma Devi in the sacred temple, with all honour You have selected 
the pure white bull as Your vehicle for Your transport. With compassionate feelings 
You may shower Your kind and sweet grace on Your devotees.

2035.     உடையிலாதுழல்கின்றகுண்டரும் ஊணருந்தவத்தாயசாக்கியர் 
    கொடையிலாமனத்தார்குறையாருங்கோட்டாற்றில் 
    படையிலார்மழுவேந்தியாடிய பண்பனேயிவரென்கொலோநுனை 
    அடைகிலாதவண்ணமருளாயுனடியவர்க்கே.         10

    உடை இலாது உழல்கின்ற குண்டரும், ஊண் அருந்தவத்து ஆய சாக்கியர், 
    கொடைஇலா மனத்தார்; குறை ஆரும் கோட்டாற்றில்,
    படை இலார் மழு ஏந்தி ஆடிய பண்பனே! இவர் என்கொலோ, நுனை 
    அடைகிலாத வண்ணம் அருளாய், உன் அடியவர்க்கே!

    uTai ilAtu ulazkinRa kuNTarum, UN aruntavattu Aya cAkkiyar, 
    koTai ilA manattAr; kuRai Arum kOTTARRil,                 
    paTaiyil Ar mazu Enti ATiya paNpanE! ivar enkolO, nunai 
    aTaikilAta vaNNam aruLAy, un aTiyavarkkE!

பொருள்:     உடை அணியாது அலைந்து திரியும் சமணர்களும், பிச்சை வாங்கி 
உண்ணுவதையே தவமாகக் கொண்ட சாக்கியர்களும் பிறருக்குக் கொடுத்து அறியாத 
மனத்தவர்கள். பிச்சை கேட்டு அலையும் திருக்கோட்டாற்றில், பிறர் மேல் செலுத்தாத 
மழுவினை ஏந்திக் கூத்தாடிய இயல்பினை உடையவனே! இவர்கள் (சமணரும் பவுத்தரும்) 
உன் துணையைப் பெறாத காரணம் என்ன என்று உன் அடியவர்களாகிய (எமக்குத்) 
தெரிவித்து அருள்வாயாக.

குறிப்புரை:     குண்டர்- சமணர். ஊணருந்தவம்- உண்ணுதலில்லாத தவம். 
அருமை - இன்மை 'அருங்கேடன்' (குறள்) குறை - குறை கூறுதல். இவர்-குண்டர் முதலிய 
இவர்கள். நுனை - உன்னை, அடைகிலாத வண்ணம் என்கொலோ- அடைந்து தொழுது
உய்யாதவாறு என்னோ? உன் அடியவர்க்கு அருளாய் - உன்னடியவர்களுக்கு அக்காரணத்தை 
உணர்த்தியருளாய். ஆசிரியரும் தம்மை அப்படர்க்கையில் அடக்கிக் கொண்டார். 

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kottaaru. In this city, Your 
devotees are confused over the preaching of the naked Jains and the Buddhists who 
observe penance without food. You hold in one of Your hands, the strongest 
war weapon, the axe and perform the cosmic dance. You are God endowed with the 
highest quality. Why do these men, the Jains and the Buddhists avoid praying 
to You? Kindly clarify their bad behaviour and speak out the implication 
to Your devotees.

2036.     காலனைக்கழலாலுதைத்தொரு காமனைக்கனலாகச்சீறிமெய் 
    கோலவார்குழலாள்குடிகொண்டகோட்டாற்றில் 
    மூலனைம்முடிவொன்றிலாதஎம் முத்தனைப்பயில்பந்தன்சொல்லிய 
    மாலைபத்தும்வல்லார்க்கெளிதாகும்வானகமே.        11

    காலனைக் கழலால் உதைத்து, ஒரு காமனைக் கனல்ஆகச் சீறி, மெய் 
    கோல வார்குழலாள் குடிகொண்ட, கோட்டாற்றில் 
    மூலனை(ம்), முடிவு ஒன்று இலாத எம் முத்தனை, பயில் பந்தன் சொல்லிய 
    மாலைபத்தும் வல்லார்க்கு எளிதுஆகும், வானகமே.

    kAlanaik kazalAl utaittu, oru kAmanaik kanal Akac cIRi, mey 
    kOla vArkuzalAL kuTikoNTa, kOTTARRil,
    mUlanai(m), muTivu onRu ilAta em muttanai, payil pantan colliya
    mAlaipattum vallArkku eLitu Akum, vAnakamE.

பொருள்:     எமனைக் கழலணிந்த திருவடியால் உதைத்து, மன்மதனைக் கண்ணில் 
தோன்றிய நெருப்பால் எரித்து, உடலில் உமையம்மையினைப் பாகமாகக் கொண்டு வாழும் 
திருக்கோட்டாற்றில், அநாதிகாரனை அந்தம் ஒன்றிலாத எம்முடைய முத்தனைப் போற்றி 
ஞானசம்பந்தன் சொல்லிய இத்தமிழ்மாலையில் உள்ள பாடல்கள் பத்தினையும் வல்லவர்களுக்கு 
வானுலகம் எளிதாக அடையத் தக்கதாகும். 

குறிப்புரை:     கழலால்- கழலணிந்த திருவடியால். தானியாகுபெயர். கனலாகச்சீறி - 
தீயாகி வேவக் கோபித்து. கோலவார் குழலாள் மெய்குடிகொண்ட என்று கூட்டி மாதியலும் 
பாதியன் என்க. (ப. 189 பா.11)  மெய் - பெருமான் திருமேனி. மூலன் - அநாதிகாரணன். '
'படைப்போற் படைக்கும் பழையோன்'.  முத்தன் - இயல்பாகவே பாசங்களில்லாதவன். 
வானகம் - வீடு.

    Behold! It is Civan, the Lord of Thiru-k-kottaaru. Oh Lord! You kicked 
the god of death with Your ankleted feet; You burnt the god of love with a wink 
of Your third eye. You manifest Yourself in the temple with Your consort Uma Devi 
who has long beautiful and sweet smelling hair, keeping her on the left side of 
Your body. You are the prime root of everything in the world. You are the Supreme 
Being without any end. Those devotees who can recite these ten verses of tribute 
to our Lord sung by our saint Thiru-gnana -Sambandar, can reach heaven very easily.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            52ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 52nd Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

பதிகத் தொடர் எண்: 189                பதிக எண்: 53.

53. திருப்புறவார்பனங்காட்டூர்            53. THIRU-P-PURAVAAR - PANANG-KAATTOOR

பண் : சீகாமரம்                    Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    பனை மரத்தைத் தலவிருட்சமாக உடைமையால் பனங்காட்டூர் என்றும், புறாவின் 
பொருட்டுத் தன் தசையை அரிந்திட்ட சிபிச் சக்கரவர்த்திக்கு அருள்செய்த பதியாதலின் புறவார் 
பனங்காட்டூர் என்னும் பெயர் பெற்றது என்றும் கூறுவர். புறவு என்பது பற்றிய புனைந்துரையோ! 
விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கேயுள்ள முண்டியம்பாக்கம் தொடர்வண்டி
 நிலையத்திற்கு வடகிழக்கே 1.5 கி.மீ. தூரத்திலுள்ளது. விழுப்புரம் (திருக்கனூர் வழி) பாண்டிச்சேரி
 செல்லும் பேருந்துகளில் கோயிலை அடையலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. இறைவரது 
திருப்பெயர் பனங்காட்டீசுவரர். இறைவியார் திருப்பெயர் புறவம்மை. தலவிருட்சம் பனை. 
சூரியன் பூசித்துப் பேறுபெற்றான். இத்தலத்தில் சித்திரை முதல் தேதி முதல் ஏழாந்தேதி வரை 
ஒவ்வொரு நாளும் சூரியன் தோன்றும்பொழுது, சுவாமிமேலும் அம்மன்மேலும் கிரணங்கள் 
விழுகின்றன.

பதிக வரலாறு

    ஆளுடைய பிள்ளையார் திருவரசிலியில் பரமசிவனை வணங்கிப் பரவி, திருப்புறவார்
 பனங்காட்டூரை அணைந்து நறவார் கொன்றைச் சடைமுடியன் அடிமலரைப் போற்றிப் பாடி 
அருளியது இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2037.     விண்ணமர்ந்தனமும்மதில்களை வீழவெங்கணையாலெய்தாய்விரி 
    பண்ணமர்ந்தொலிசேர்புறவார்பனங்காட்டூர்ப்
    பெண்ணமர்ந்தொருபாகமாகிய பிஞ்ஞகாபிறைசேர்நுதலிடைக்
    கண்ணமர்ந்தவனேகலந்தார்க்கருளாயே.        1

    விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்! விரி 
    பண் அமர்ந்து ஒலி சேர் புறவுஆர் பனங்காட்டூர்,
    பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா! பிறை சேர் நுதல்இடைக் 
    கண் அமர்ந்தவனே! கலந்தார்க்கு அருளாயே!

    viN amarntana mummatilkaLai vIza vegkaNaiyAl eytAy! viri 
    paN amarntu oli cEr puRavu Ar panagkATTUr,
    peN amarntu oru pAkam Akiya pinjnjakA! piRai cEr nutal iTaik 
    kaN amarntavanE! kalantArkku aruLAyE!

பொருள்:     ஆகாயத்தில் இருந்த மூன்று கோட்டைகளும் அழியக் கொடிய அம்பால் 
எய்தாய். பண் இசை தங்கிய புறவார் பனங்காட்டூரில் பெண் ஒரு பாகமாகிய திருவுருவுடைய 
பிஞ்ஞகனே! பிறை சேர்ந்த நெற்றியில் ஒரு கண்ணை உடையவனே! உன்னைப் புகலாக
அடைந்தாருக்கு அருள்வாயாக.

குறிப்புரை:     விண் அமர்ந்தன- ஆகாயத்தில் பொருந்தியனவாகிய. பிஞ்ஞகா- சடைமுடியனே. 
பிறைசேர் நுதலிடைக்கண் - 'பிறைநுதல் வண்ணம் ஆகின்று' (புறம், கடவுள் வாழ்த்து). நுதல்; 
நெற்றி + சென்னி இரண்டையும் குறித்து ஆளப்படும். யோகமார்க்கத்தில் பிறை விளங்கும் 
இடம் நுதல் ஆதலைக் குறித்ததுமாம்.

    Oh God! It is Civan of Thiru-p-puravaar - Panang-kaattoor. It is a holy 
place where songsters sing harmonious songs on our Lord in the most pleasing way. This
music is heard everywhere in the city along with its echo. Oh! our God of red 
matted hair with different beautification! Oh! our God sharing Your body with our goddess! 
Oh! our God with a third eye in the forehead near the crescent moon! Oh! our God, You 
shot an arrow of terror on the three flying forts of the asuras who inflicted intolerable 
misery on the devas. You destroyed them completely. We beg You to shower Your grace on 
those servitors who worship You with great love.

2038.    நீடல்கோடலலரவெண்முல்லை நீர்மலர்நிரைத்தாதளஞ்செயப் 
    பாடல்வண்டறையும்புறவார்பனங்காட்டூர்த் 
    தோடிலங்கியகாதயல்மின் துளங்கவெண்குழைதுள்ளநள்ளிருள் 
    ஆடுஞ்சங்கரனேயடைந்தார்க்கருளாயே.        2

    நீடல் கோடல் அலர, வெண்முல்லை நீர் மலர்நிரைத் தாது அளம்செய, 
    பாடல் வண்டு அறையும் புறவுஆர் பனங்காட்டூர், 
    தோடு இலங்கிய காது அயல் மின்துளங்க, வெண்குழை துள்ள, நள் இருள்
    ஆடும் சங்கரனே! அடைந்தார்க்கு அருளாயே!

    nITal kOTal alara, veNmullai nIr malarnirait tAtu aLamceya,
    pATal vaNTu aRaiyum puRavu Ar panagkATTUr, 
    tOTu ilagkiya kAtu ayal min tuLagka, veNkuzai tuLLa, naL iruL 
    ATum cagkaranE! aTaintArkku aruLAyE!

பொருள்:     நீண்ட இதழ்களையுடைய வெண் காந்தள், அலர்ந்த வெண்ணிற முல்லை 
மலர்கள், நீரில் பூக்கும் மலர்கள் முதலியன வரிசையாக உகுத்த வெண்மையான தாதுக்கள்  
உப்பளத்தைப் போல அழகு செய்ய, பண்ணிசை போல் வண்டுகள் முரலும் புறவார் பனங்காட்டூரில், 
தோடு விளங்கும் காதின் பக்கத்தில் மின்னொளி தோன்ற அசையும் வெண்குழை துள்ள, 
நள்ளிரவில் கூத்தாடும் சங்கரனே! உன்னைப் புகலாக அடைந்தாருக்கு அருள்வாயாக.

குறிப்புரை:     நீடல் - (நீள் + தல்), நீட்சியை உடைய. கோடல் - வெண்காந்தள். நிரை - வரிசை. 
தாது - முல்லைப் பூந்தாதுக்கள். அளம்செய -உப்பளம்போலக் குவிக்க. இலங்கிய - விளங்கிய. 
அயல்-பக்கத்தில். மின் - ஒளி. நள்இருள் - செறிந்த இருளில். 'நள்ளிருளில் நட்டம் பயின்றாடும்'. 
சங்கரன்- சுகத்தைச் செய்பவன். 

    Oh God! It is Civan of Thiru-p-puravaar - Panang-kaattoor. In this sacred 
city long grown white gloria flowers are in large numbers along with the glistening 
white jasmine and other water flowers. The beetles fly from flower to flower to 
drink honey. While flying they make a humming noise, the pollen in those flowers 
sticks to the body of the beetles and gathers to form a big heap. In such a city, 
oh Lord! You wear a stud on one ear; and on the other, a white ear ring glistening 
and spreading bright light everywhere. But oh Sankara (God of eternal bliss)! 
You perform the cosmic dance in the dead of night. You may shower Your grace 
on those devotees who reach Your holy feet.

2039.     வாளையுங்கயலும்மிளிர்பொய்கை வார்புனற்கரையருகெலாம்வயற் 
    பாளையொண்கமுகம்புறவார்பனங்காட்டூர்ப் 
    பூளையுந்நறுங்கொன்றையும்மத மத்தமும்புனைவாய்கழலிணைத் 
    தாளையேபரவுந்தவத்தார்க்கருளாயே.        3

    வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல் 
    பாளை ஒண் கமுகம் புறவுஆர்பனங்காட்டூர்,
     பூளையும் நறுங்கொன்றையும் மதமத்தமும் புனைவாய்! கழல்இணைத் 
    தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே!

    vALaiyum kayalum miLir poykai vAr punal karai aruku elAm vayal 
    pALai oN kamukam puRavu Ar panagkATTUr, 
    pULaiyum naRug konRaiyum matamattamum punaivAr! kazal iNait 
    tALaiyE paravum tavattArkku aruLAyE!

பொருள்:     வாளை மீன்களும் கயல்மீன்களும் பிறழும் நீர் நிறைந்த பொய்கைக் கரையின் 
அருகெலாம் வயலும், பாளைகள் ஒளிரும் கமுகுகள் காட்சியளிக்கும் புறவார் பனங்காட்டூரில், 
பூளைப் பூவும் நறுமணமுடைய கொன்றை மலரும், பித்தமளிக்கும் ஊமத்தம்பூவும் திருமேனியில் 
புனைவோனே! உன் கழலிணைகளையே துதிக்கும் தவத்தை உடையவருக்கு அருள்வாயே.

குறிப்புரை:     மிளிர்தல் - ஒளிர்தல். கமுகம் - பாக்கு. பூளை - ஒரு செடி. இது சிறுமை 
பெருமையால் இருவகைப்படும். இரும்பூளை’ (பதிகம் 172) 'மாருதம் அறைந்த பூளைப்பூ’ 
என்று உவமை கூறலாவதும் இதனையே. மதமத்தம் - உக்கிரகந்தத்தையுடைய ஊமத்தை. 
புனைவாய்- அணிபவனே. கழல்- கழல்களை அணிந்த. இணைத்தாள் - இரண்டு திருவடிகள். 
ஏகாரம் பிரிநிலை, 'சாம்பகல் அகலத்தார்  சார்பல்லாற் சார்பிலமே' (ப.180 பா.3).

    Oh God! It is Civan, Lord of Thiru-p-puravaar - Panang-kaattoor. In this city, 
water ponds are full of water. There, the scabbard and carp fish swim and play splashing
the clear water all around the shores of these ponds and fields. The spikes of the rich 
tall grown arecanut trees are to be seen in large numbers adding beauty to the city. 
In such a city You are manifested in the temple adorning Yourself with the silk plant, 
the fragrant cassia and datura flowers. We enjoy the sight of Your stature in this city. 
We beg Your grace for those devotees who worship Your holy feet of anklets.

2040.     மேய்ந்திளஞ்செந்நெல்மென்கதிர்கவ்வி மேற்படுதலின்மேதிவைகறை             
    பாய்ந்ததண்பழனப்புறவார்பனங்காட்டூர்
    ஆய்ந்தநான்மறைபாடியாடும் அடிகளென்றென்றரற்றிநன்மலர்
    சாய்ந்தடிபரவுந்தவத்தார்க்கருளாயே.        4

    மேய்ந்து இளஞ் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுதலில் மேதி வைகறை         
    பாய்ந்த தண்பழனப் புறவுஆர்பனங்காட்டூர்,
    "ஆய்ந்த நால்மறை பாடிஆடும் அடிகள்!" என்றுஎன்று அரற்றி, நல் மலர் 
    சாய்ந்து, அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே!

    mEyntu iLanj cennel men katir kavvi mElpaTutalil, mEti vaikaRai 
    pAynta taNpazanap puRavu Ar panagkATTUr,
    "Aynta nAlmaRai pATi ATum aTikaL!" enRu enRu araRRi, nal malar,
    cAyntu, aTi paravum tavatttArkku aruLAyE!

பொருள்:     எருமைகள் விடியற்காலைப் பொழுதில் இளஞ்செந்நெல் கதிர்களைக் கவ்வி
 மேய்ந்து, பின் படுகரில் பாயும் குளிர்ந்த வயல்களை உடைய புறவார் பனங்காட்டில், ஆராய்ந்த 
நான்கு வேதங்களையும் பாடி ஆடும் அடிகள் என்று அரற்றி நன்மலர்களைச் சாய்த்து அடி பரவும் 
தவம் உடையாருக்கு அருள்வாயே.

குறிப்புரை:     மேதி - எருமை. வைகறை - விடியற்பொழுது. பழனம் - வயல். அடிகள் - சுவாமி, கடவுள்.
 சிவபெருமானை 'அடி' என்றும். கள்விகுதி சேர்த்து உயர்வு குறித்து 'அடிகள்’ என்றும் வழங்குதல் மரபு.
 திருவடி சேர்ந்தார், அடிசேர் ஞானம் என்பவற்றால் அவ்வுண்மை புலப்படும். இறைவனடி அடைவிக்கும் 
எழில் ஞானபூசை என்பது முதலிய இடங்களில் சிவஞானத்தைக் குறித்தல் உணர்க. சிவனையும்             
சிவஞானத்தையும் அடைந்தவர் அடியார் என்பார். எல்லாவற்றிற்கும் அடி (மூலம்) சிவஞானமும், 
சிவமும் அன்றி வேறில்லை. 'அடியார் சிவஞானமானது பெற்றோர்' (திருமந்திரம் 1672). ‘முதல்வனது 
திருவடியாகிய சிவானந்தத்தை' (சிவஞான பாடியம் சூ. 10 அதி 1. ஏது வின் விளக்கம்) 'முதல்வன் 
திருவடியாகிய சிவானந்தாநுபூதி' (மேற்படி 11 உரை) 'முதல்வனொருவனே ஞாயிறும் ஒளியும் போலச்
சிவனும் சத்தியும் எனத் தாதான்மியத்தான் இருதிறப்பட்டுச் சருவவியாபியாய்ப் பொதுமையில் நிற்பன்' 
(மேற்படி சூ.2, அதி. 4) ஆதலின், 'அடி' என்று சிவத்தையும் சிவஞானத்தையும் உணர்த்தலாயிற்று. 
உயிர்கள் அதை அடையுங்காலம். யான் எனப்படும் ஞாதாகவும், எனதெனப்படும் ஞானமும், அதற்கு 
விடயமாய் எனதெனப்படும் ஞேயமும் எனப் பகுத்துக்காணும் மயக்கவுணர்விற்கு ஏதுவாகிய 
மலவாசனை' நீங்குங்காலம் ஆதலின், 'பரை உயிரில் யான் எனது என்று அற நின்றது அடியாம்' 
என்றது உண்மை நெறிவிளக்கம்.  பின் வந்த குமரகுருபர முனிவரரும் 'யான் எனது 
என்பது அற்ற இடமே திருவடி'  என்றருளினார்.

    கடவுளைச் சிவாகம விதிப்படி உருவுடையவராகக் கற்பித்துக் கொண்டு வழிபடுவார் 
அதன்  திருவடிகளைக் குறிக்கும் உண்மையும் ஆய்ந்துணர்க, 'உருவினதடிமுடி' (தி.1 ப.126 பா.9). 
'ஆரொருவருள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்' (தி.6 பா.18 ப.11). 
'யேன யேன ஹி ருபேண ஸாதக: ஸம்ஸ் மரேந ததாதஸ்ய தந்மயதாம் யாதி சிந்தாமணி. இவ ஈஸ்வர:' 
என்ற சர்வசுரோத சங்கிரகம் கூறும் ஆற்றாலும் உருவ வழிபாட்டின் சிறப்பை உணர்க. என்று என்று - 
அடுக்கு. பலகாலும் அரற்றல் வேண்டுமென்றது குறித்து நின்றது. மலர் சாய்ந்த அடி- பூக்கள் வீழ்ந்த 
திருப்பாதங்களை.  தாமரை தோற்றதிருத்தாள் எனலுமாம். சாய்ந்த - அகரம் தொகுத்தல். மலரால். 
அடிகளைச் சாய்ந்து (விழுந்து) பரவும் (வாழ்த்தும்) எனலுமாம்.

    Behold! It is Civan, the Lord of Thiru-p-puravaar - Panang-kaattoor. In this city, 
the paddy fields are in plenty. The red paddy fields yield paddy of fine quality. The ear 
of grain (spear of grass) is known to be very tender and highly tasty also to the buffalos. 
They, therefore, reach such of these fields in the very early morning hours, and graze
the tender spear of the grass to their stomach full. Then they go to deep water 
ponds and take bath to digest the grass they ate. In this city, the Vedic scholars make 
good research of the four Vedas and understand them. Then they all recite the four Vedas 
before God, praise the Lord's fame and dance before Him. They repeat this several times, 
spread fine flowers on His holy feet and prostrate before Him. Oh God! Shower Your kind 
grace on these good people. It is good to repeat His name and fame.

2041.     செங்கயல்லொடுசேல்செருச்செயச் சீறியாழ்முரல்தேனினத்தொடு
    பங்கயம்மலரும்புறவார்பனங்காட்டூர்க் 
    கங்கையும்மதியுங்கமழ்சடைக் கேண்மையாளொடுங்கூடிமான்மறி 
    அங்கையாடலனே அடியார்க்கருளாயே.        5

    செங்கய(ல்)லொடு சேல் செருச் செய, சீறியாழ்முரல் தேன்இனத்தொடு 
    பங்கயம் மலரும் புறவுஆர்பனங்காட்டூர், 
    கங்கையும் மதியும் கமழ் சடைக் கேண்மையாளொடும் கூடி, மான்மறி 
    அம் கை ஆடலனே! அடியார்க்கு அருளாயே!

    cegkaya(l)loTu cEl ceruc ceya, cIRiyAz mural tEn inattoTu 
    pagkayam malarum puRavu Ar panagkATTUr,                 
    kagkaiyum matiyum kamaz caTaik kENmaiyALoTum kUTi, mAnmaRi 
    am kai ATalanE! aTiyArkku aruLAyE!

பொருள்:     செங்கயல்மீன் சேல் மீன் இரண்டும் போர் செய்ய, சீறி யாழ் போல வண்டுகள் 
கூட்டம் முரல தாமரைப் பூக்கள் மலரும் நீர்வளம் உடைய புறவார் பனங்காட்டூரில் , கங்கையும் 
மதியும் விளங்கும் சடைக் கேண்மையாளுடன் கூடி, மான்மறியை அங்கையில் கொண்டு ஆடல் 
புரிபவனே! நின் அடியார்களுக்கு அருள்வாயே.

குறிப்புரை:     செங்கயல் சேல் இரண்டும் போர் செய்ய மலரும், தேனினத்தோடு மலரும் 
என்றியைக்க.  சிறுமை + யாழ் - சீறியாழ். பேரியாழ் வேறுண்டு. இப்பிரிவால் பாணரும் 
சிறுபாணர் பெரும்பாணர் என்றிரு வகைப்படுவர். தேன்- வண்டு. யாழ்முரல்- யாழின் ஒலி போல 
முரலு (ஒலித்)தல்.   கேண்மையாள் - உமாதேவியார். கேள்+மை- கேளாத்தன்மை. உரிமை, 
'உன் பெருந்தேவி என்னும் உரிமை'. மறி- கன்று. ஆடல் (ஆள்+தல்) ஆளுதல். ஆடவன்- ஆளுதலை 
உடையவனே. மான் கன்றேந்திய அழகிய கையன் என்றவாறு. அகங்கையுமாம். 
'அங்கையிற்படையாய் ' (ப.187, பா.5).

    Oh God! It is Civan, the Lord of Thiru-p-puravaar - Panang-kaattoor. In the city 
cool ponds are many full of water. In this pond, the carp and the cyprines fish have 
tussles between them. The bees fly with the humming noise, sounding like music from
the lute, the bees fly round the lotus. In the temple of this city, our Lord is manifest. 
He keeps in His fragrant hair the lady of the Ganges and the beautiful moon. Of course 
He is one with His consort Uma Devi. Also He keeps in one of His beautiful hands a young
deer. With all these He performs His cosmic dance. The devotees who pray and recite
all these famous acts may get all Your grace.

2042.     நீரினார்வரைகோலிமால்கடல் நீடியபொழில்சூழ்ந்துவைகலும் 
    பாரினார்பிரியாப்புறவார்பனங்காட்டூர்க் 
    காரினார்மலர்க்கொன்றைதாங்கு கடவுளென்றுகைகூப்பிநாள்தொறும் 
    சீரினால்வணங்குந்திறத்தார்க்கருளாயே.         6

    நீரின் ஆர் வரை கோலி, மால்கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் 
    பாரினார் பிரியாப் புறவுஆர்பனங்காட்டூர், 
    "காரின் ஆர் மலர்க்கொன்றை தாங்கு கடவுள்!" என்று கை கூப்பி, நாள்தொறும் 
    சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே!

    nIrin Ar varai kOli, mAl kaTal nITiya pozil cUzntu vaikalum 
    pArinAr piriyAp puRavu Ar panagkATTUr, 
    "kArin Ar malarkkonRai tAgku kaTavuL!" enRu kaikUppi, nALtoRum
    cIrinAl vaNagkum tiRattArkku aruLAyE!

பொருள்:     நீர் அரணாகப் பொருந்திய எல்லையை அமைத்துக் கடல்போல் நீண்ட 
சோலைகளால் சூழப் பெற்றுப் பாருலகத்தவர்கள் நாள்தோறும் பிரியாத புறவார் பனங்காட்டூரில் 
கார்காலத்தில் மலரும் கொன்றை மலரை அணியும் கடவுளே என்று கைகூப்பி நாள்தோறும் 
புகழுடன் வணங்கும் திறமுடையவர்களுக்கு அருள்வாயே.

குறிப்புரை:     நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில்- நீரால் (அரணாகப்) பொருந்திய 
எல்லையை வகுத்துப், பெரிய கடல் நெடுகப் பரவிய சோலை. சூழ்ந்து பிரியா ஊர் என்க. சூழ்தல் 
சோலையின் வினை. பிரியாமை பாரினாரது. பாரினார் -மண்ணுலகத்தார். வைகலும் பிரியா -
நாடோறும் நீங்காது வழிபடும். காரின் ஆர்மலர்க் கொன்றை - 'கண்ணிகார்நறுங் கொன்றை' 
என்றவாறு. கார்காலத்தில் கொன்றை மிகுதியாகப் பூப்பதுணர்த்திற்று. கூப்பி - குவித்து. 
கூம்பி - தன்வினை, கூப்பி- பிறவினை.

    Oh God! It is Civan, the Lord of Thiru-p-puravaar - Panang-kaattoor. Its earth 
keeps as its border very long seashores. All along the shores many groves with very 
big trees flourish. People living in this world everyday go to the temple and worship the
Lord without any break. In this Thiru-p-puravaar Panang-kaattoor, during the autumn season 
cassia flowers bloom in large numbers. Our God is decorated fully with these cassia flowers. 
The devotees while praying before our Lord say "Oh God! You wear cassia flowers which 
blossom in the autumn season in large quantity". With folded hands they pray to the 
Lord everyday in the most pious manner. Oh God! Kindly shower Your grace on these 
devotees. 

2043.     கையரிவையர்மெல்விரல்லவை காட்டியம்மலர்க்காந்தளங்குறி 
    பையராவிரியும்புறவார்பனங்காட்டூர்
    மெய்யரிவையொர்பாகமாகவும் மேவினாய்கழலேத்திநாள்தொறும் 
    பொய்யிலா அடிமைபுரிந்தார்க்கருளாயே.        7

    கை அரிவையர் மெல்விரல்(ல்) அவை காட்டி, - அம்மலர்க்காந்தள்,-அம் குறி 
    பை அராவிரியும் புறவுஆர்பனங்காட்டூர்,
    மெய் அரிவை ஒர்பாகம்ஆகவும் மேவினாய்! கழல் ஏத்தி நாள்தொறும் 
    பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே!

    kai arivaiyar melviral(l) avai kATTi,--ammalarkkAntaL,--am kuRi 
    pai arAviriyum puRavu ArpanagkATTUr,                    
    mey arivai orpAkam Akavum mEvinAy! kazal Etti nALtoRum             
    poy ilA aTimai purintArkku aruLAyE!

பொருள்:     மகளிரின் கையில் அமைந்துள்ள மெல்லிய விரல்களைப் போல அரும்பிப் பாம்பின் 
படம் போலக் காந்தள் விரியும் புறவார் பனங்காட்டூரில், உமையம்மை, ஒரு பாகமாகத் திருமேனியில் 
மேவினாய்! உம்முடைய கழலணிந்த திருவடிகளைப் புகழ்ந்து  நாள்தோறும் பொய்யிலா அடிமை 
புரிந்தாருக்கு அருள்வாயே.

குறிப்புரை:     அரிவையர் - மகளிர். கைமெல்விரலவை - கையிலுள்ள மெல்லிய விரல்கள். 
அவை  ஈண்டுச் சுட்டல்ல, நிலமது பொருளது என்பவற்றில் அது என்னும் ஒருமை கட்டாதவாறு போல 
இதிற்பன்மை  சுட்டாது நின்றது. நிலம் பொருள் என்றல்லாத வேறு பொருளில்லை, ஈண்டு விரலல்லாத 
வேறு பொருள் ‘அவை' என்றதற்கு இல்லை. பை - படம். அரா - பாம்பு. அராவிரியும் - அராவைப்போல 
மலரும், காட்டி விரியும். அரிவை - உமாதேவியார். மெய் - திருமேனியில். ஓர் பாகமாகவும் மேவியவனே! 
(ப.188 பா.11)  பொய்யிலா அடிமை - மெய்யடிமை.

    Oh God! It is Civan, Lord of Thiru-p-puravaar - Panang-kaattoor. In this city, 
many gardens flourish. In these gardens the gloria flowers open their petals as if a snake 
opens its hood; also the petals in these flowers symbolize the tender fingers of young 
girls. Oh God! You are manifest in the temple with Your consort Uma Devi on half of Your 
body and grace the people who gather here. We beg Your grace on behalf of those sincere 
devotees who are very true without any falsehood. They prostrate at Your holy feet everyday
reciting Your fame as "Oh Lord Civa! You keep Your consort our goddess Uma Devi on the left 
half of Your body and You are the concomitant God!".

2044.     தூவியஞ்சிறைமெல்நடையன மல்கியொல்கியதூமலர்ப்பொய்கைப் 
    பாவில்வண்டறையும்புறவார்பனங்காட்டூர் 
    மேவியந்நிலையாயரக்கன தோளடர்த்தவன்பாடல்கேட்டருள் 
    ஏவியெம்பெருமானென்பவர்க்கருளாயே.         8

    'தூவி அம்சிறை மெல்நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர்ப் பொய்கை, 
    பாவில் வண்டு அறையும் புறவுஆர்பனங்காட்டூர், 
    மேவி, அந்நிலைஆய் அரக்கன தோள் அடர்த்து, அவன் பாடல் கேட்டு, அருள் 
    ஏவிய எம்பெருமான்!" என்பவர்க்கு அருளாயே!

    "tUvi am ciRai men naTai anam malki olkiya tU malarp poykai, 
    pAvil vaNTu aRaiyum puRavu Ar panagkATTUr 
    mEvi, annilai Ay arakkana tOL aTarttu, avan pATal kETTu, aruL 
    Eviya em perumAn!" enpavarkku aruLAyE!                        

பொருள்:     மெல்லிய பூஞ்சிறகுகளையுடைய அன்னப் பறவைகள் நிறைந்து தங்குதலால் 
நுடங்கும் தாமரை மலர்களுடைய பொய்கைப் பரப்பில் வண்டுகள் ஒலிக்கும் திருவார் பனங்காட்டூரில் 
மேவி இருப்பவரே! அரக்கனாகிய இராவணன் வலிமையை அடர்த்துப் பின் அவன் பாடல் கேட்டு 
அருள் செய்தாய். நின் பணி செய்ய ஆணை தருக என்னும் அடியவருக்கு அருள்வாயே.

குறிப்புரை:     தூவி - இறகினடிப்பாகம். அனம் - அன்னப்பறவை. பாவில் - பரப்பில்.  
ஏவிய- ஏவல் செய்ய. ஆக்ஞை செய்த. 

    Oh God! It is Civan, Lord of Thiru-p-puravaar - Panang-kaattoor. Flowery gardens 
are in large numbers in this city near the ponds. Here the bees make a humming noise like 
sweet music while they fly near the flowers to suck honey. In the ponds nearby a convoy 
of swans with feathers soft walk in slow motion which is a beautiful scene. Oh God! You 
subdued the mightiness of king Raavanan suppressing his shoulders. Later when he recited 
songs on Your fame, You excused him and bestowed mercy on him. When the devotees praise 
You quoting these details You may bestow Your grace on them.

2045.     அந்தண்மாதவிபுன்னைநல்ல அசோகமும்மரவிந்தமல்லிகை 
    பைந்தண்ஞாழல்கள்சூழ்புறவார்பனங்காட்டூர் 
    எந்திளம்முகில்வண்ணன்நான்முகன் என்றிவர்க்கரிதாய்நிமிர்ந்ததொர் 
    சந்தமாயவனேதவத்தார்க்கருளாயே.        9

    அம் தண் மாதவி, புன்னை, நல்ல அசோகமும்(ம்), அரவிந்தம், மல்லிகை, 
    பைந் தண் நாழல்கள், சூழ் புறவுஆர்பனங்காட்டூர், 
    எந்து இள(ம்) முகில்வண்ணன், நான்முகன், என்று இவர்க்கு அரிதுஆய் நிமிர்ந்தது  ஒர்
    சந்தம் ஆயவனே! தவத்தார்க்கு அருளாயே!

    am taN mAtavi, punnai, nalla acOkamum(m), aravintam, mallikai, 
    pain taN nAzalkaL, cUz puRavu Ar panagkATTUr,
    entu iLa(m) mukilvaNNan, nAnmukan, enRu ivarkku aritu Ay nimirntatu or 
    cantam AyavanE! tavattArkku aruLAyE!

பொருள்:     அழகும் குளிர்ச்சியும் வாய்ந்த மாதவி, புன்னை, நல்ல அசோகு,தாமரை, 
மல்லிகை பசிய குளிர்ச்சியுடைய ஞாழல்கள் சூழ்ந்த திருவார் பனங்காட்டூரில், மேக வண்ணனாகிய 
திருமால், நான்முகன் என்னும் இத்தேவர்களின் காட்சிக்கு அரிதாக உயர்ந்தவனே!
தவமுடையவருக்கு அருள்வாயே.

குறிப்புரை:     அம்தண்- அழகும் குளிர்ச்சியும் உடைய. அரவிந்தம்- தாமரை. தண் +ஞாழல்கள்-
தணாழல்கள். ஞாழல் மரம். எந்து - எமது! முகில் - மேகம் என்ற இவர்க்கு அகரம் தொகுத்தல், 
சந்தம்- அழகு. கருத்து. ஆயவன் - ஆனவன்.

    Oh God! It is Civan, Lord of Thiru-p-puravaar - Panang-kaattoor. This city has 
many flower gardens all around the city. Here various kinds of flowers are grown such 
as cool maatthirai - a large creeper gaertinora racemosa, caulophyllum, well grown poly 
olthira (asoka), lotus, sacred basil and soft and cool cragaty tree. These flowers 
with the best look spread their fragrance all around. Oh Lord! We beg Your grace for 
those men of penance who hail You as "Oh! the beautiful effulgence supreme! You 
could not be comprehended by Lord Vishnu, the god, coloured like the young cloud and 
the four-faced Brahma". You kindly grace these devotees.

2046.     நீணமார்முருகுண்டுவண்டினம் நீலமாமலர்கவ்விநேரிசை 
    பாணில்யாழ்முரலும்புறவார்பனங்காட்டூர் 
    நாணழிந்துழல்வார்சமணரும் நண்பில்சாக்கியரும்நகத்தலை 
    ஊணுரியவனேயுகப்பார்க்கருளாயே.        10

    நீணம் ஆர் முருகு உண்டு, வண்டுஇனம், நீலமாமலர் கவ்வி, நேரிசை 
    பாணி யாழ்முரலும் புறவுஆர்பனங்காட்டூர், 
    நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக, தலை 
    ஊண் உரியவனே! உகப்பார்க்கு அருளாயே!

    nINam Ar muruku uNTu, vaNTu inam, nIla mA malar kavvi, nEricai 
    pANi yAzmuralum puRavu ArpanagkATTUr, 
    nAN azintu uzalvAr camaNarum naNpu il cAkkiyarum naka, talai 
    UN uriyavanE! ukappArkku aruLAyE!

பொருள்:     வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு பெரிய நீல மலர்களில் தங்கி நேரிசை 
என்னும் பண்ணை யாழில் மிழற்றுவது போல முரலும் திருவார் பனங்காட்டூரனே! 
ஆடையின்றி நாணம் அழிந்து திரியும் சமணரும் நட்புச் செய்யத் தகுதியில்லாத சாக்கியரும் 
சிரிக்க, மண்டையோட்டில் பிச்சை ஏற்று உணவு கொள்ளுதற்கு உரியவனே!
உன்னை விரும்பும் அடியவர்களுக்கு அருள்வாயே.

'குறிப்புரை:     நீணம் - நீளம், நீணுதல்' (தி. 1 ப. 1 பா. 9) முருகு -தேன். பாண்-  பாட்டு. நக-சிரிக்க. 
தலையூண்  உரியவனே - பிரம கபாலத்தில் வாங்கி உணவு கொள்ளுதற்கு உரியவனே. 

    Oh God! It is Civan, Lord of Thiru-p-puravaar - Panang-kaattoor. In this city, 
flowers are many in the water ponds with honey brimful. The bees in swarms suck the 
nectar in the large blue flowers. Thereafter they fly over the flowers humming some 
notes, melodious like that of a lute. You, the God in the temple of this city, are 
mocked at by the Jains who lack dignity and the friendless Buddhists, for begging 
alms in the skull You carry. We beg You to shower Your grace on those devotees who 
admire Your actions and are pleased with You.

2047.     மையினார்மணிபோல்மிடற்றனை மாசில்வெண்பொடிப்பூசுமார்பனைப்     
    பையதேன்பொழில்சூழ்புறவார்பனங்காட்டூர் 
    ஐயனைப்புகழானகாழியுள் ஆய்ந்தநான்மறைஞானசம்பந்தன் 
    செய்யுள்பாடவல்லார்சிவலோகஞ்சேர்வாரே.    11

    மையின் ஆர் மணிபோல் மிடற்றனை மாசு இல் வெண்பொடிப் பூசும் மார்பனை 
    பைய தேன் பொழில் சூழ் புறவுஆர்பனங்காட்டூர், 
    ஐயனை, புகழ்ஆன காழியுள் ஆய்ந்த நால்மறை ஞானசம்பந்தன் 
    செய்யுள் பாட வல்லார், சிவலோகம் சேர்வாரே.

    maiyin Ar maNi pOl miTaRRanai, mAcu il veNpoTip pUcum mArpanai, 
    paiya tEn pozil cUz puRavu Ar panagkATTUr, 
    aiyanai, pukaz Ana kAziyuL Aynta nAlmaRai njAnacampantan 
    ceyyuL pATa vallAr, civalOkam cErvArE.

பொருள்:     நீலமணி போன்ற கண்டத்தை உடையவனை, குற்றம் நீக்கும் திருநீறு பூசும் 
மார்பனை, பசிய தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட புறவார் பனங்காட்டூரின் தலைவனை, 
புகழ் நிறைந்த சீகாழியுள் நான்கு வேதங்களுள் ஆராய்ச்சி மிக்க ஞானசம்பந்தன் பாடிய 
இத்திருப்பதிகச் செய்யுளைப் பாடவல்லவர்கள் சிவலோகம் சேர்வர்களே.

குறிப்புரை:     மையின்- மேகத்தைப்போல. மாசு- குற்றம். பைய- பசுமையுடைய . 
ஆய்ந்த- (முற்பிறவியில்) ஆராய்ந்த. செய்யுள் - இத்திருப்பதிகத்தை.

    Oh God Civa! You are the Lord of Thiru-p-puravaar - Panang-kaattoor. The city 
is full of flowery gardens full of nectar. Your neck looks dark blue in colour. You have
smeared Your chest with pure white sacred ashes. Our saint Thiru-gnana-Sambandar hailing 
from the sacred city of Seerkaazhi, is very well-versed with the four Vedas. He sang on 
our Lord in Thiru-p-puravaar- Panang-kaattoor these sacred ten verses in Tamil. Those 
devotees who can recite these ten songs will reach the blessed world of Civa.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            53ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 53rd Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 190                    பதிக எண்: 54

54. திருப்புகலி                        54. THIRU-P-PUKALI

பண்: சீகாமரம்                        Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    137ஆவது பதிகம் காண்க.

பதிக வரலாறு

    137ஆவது பதிகம் காண்க.

                திருச்சிற்றம்பலம்

2048.    உருவார்ந்தமெல்லியலோர்பாகமுடையீரடைவோர்க்குக் 
    கருவார்ந்தவானுலகங்காட்டிக்கொடுத்தல்கருத்தானீர் 
    பொருவார்ந்ததெண்கடலொண்சங்கந்திளைக்கும்பூம்புகலித் 
    திருவார்ந்தகோயிலேகோயிலாகத்திகழ்ந்தீரே.        1

    உரு ஆர்ந்த மெல்லியல் ஓர் பாகம் உடையீர்! அடைவோர்க்குக் 
    கரு ஆர்ந்த வான்உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்துஆனீர்! 
    பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி, 
    திரு ஆர்ந்த கோயிலே கோயில்ஆகத் திகழ்ந்தீரே.

    uru Arnta melliyal OrpAkam uTaiyIr! aTaivOrkkuk 
    karu Arnta vAn ulakam kATTik koTuttal karuttu AnIr! 
    poru Arnta teNkaTal oNcagkam tiLaikkum pUm pukali, 
    tiru Arnta kOyilE kOyil Akat tikazntIrE.                

பொருள்:     திருமேனிப் பொலிவுடைய மெல்லியளை, உம் திருமேனியில் பாகமாக 
உடையவரே!  உம்மை அடைந்தவருக்கு அருள் வாய்ந்த வானுலகத்தைக் காட்டிக் கொடுத்தலில் 
கருத்தாக உடையவரே! கரையில் மோதுகின்ற தெளிந்த கடலில் ஒளியுடைய சங்குகள் 
திளைக்கும் திருப்புகலியுள் செல்வமுடைய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் 
கொண்டு விளங்கினீரே!

குறிப்புரை:     உரு - திருமேனிப் பொலிவு. மெல்லியல் - உமாதேவியார். கரு - உருவமைந்த 
மாநகர்க்குக் கருவமைந்த மாடம்போல என்றதில் உள்ள பொருளே ஈண்டுங் கொள்ளப்படினும். 
அங்குப் பொருட்கருவும் இங்கு அருட்கருவும் என்று வேறுபட்டு நிற்கும். பொருஆர்ந்த - 
மோதுதல் நிறைந்த. புகலி - சீகாழி. கோயிலாக- தலைமையில்லமாக. கோ - தலைவன்,             
தலைமை தலைவனில்லம் இரண்டன் வேறுபாடு உணர்க.

    It is Civan, the Lord of Poom-Pukali. Oh God! You have retained the most beautiful 
and tender goddess on the left side of Your body. Poom-Pukali is the most sacred city 
and beautiful too, with the bright sea conches dashing against the shore and splashing 
the water happily. You have chosen this beautiful temple as Your abode; it  might be because 
You are prompted by Your desires to bestow the heavenly abode on Your followers who 
constantly worship You. Oh God! with goddess Umaa Devi as a  part of Your body, You 
reside in this holy temple (Note: Pukali or Poom-Pukali is one of the twelve names 
of Seerkaazhi).

2049.     நீரார்ந்தசெஞ்சடையீர்நிறையார்கழல்சேர்பாதத்தீர் 
    ஊரார்ந்தசில்பலியீருழைமானுரிதோலாடையீர் 
    போரார்ந்ததெண்டிரைசென்றணையுங்கானற்பூம்புகலிச் 
    சீரார்ந்தகோயிலேகோயிலாகச்சேர்ந்தீரே.        2

    நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நிறை ஆர் கழல் சேர் பாதத்தீர்! 
    ஊர் ஆர்ந்த சில்பலியீர்! உழைமான்உரி-தோல்ஆடையீர் !
    போர் ஆர்ந்த தெண்திரை சென்று அணையும் கானல் பூம் புகலி, 
    சீர் ஆர்ந்த கோயிலே கோயில்ஆகச் சேர்ந்தீரே.

    nIr Arnta cenjcaTaiyIr! nirai Ar kazal cEr pAtattIr! 
    Ur Arnta cilpaliyIr! uzaimAn uri-tOl ATaiyIr 
    pOr Arnta teNtirai cenRu aNaiyum kAnal pUm pukali, 
    cIr Arnta kOyilE kOyil Akac cErntIrE.

பொருள்:     கங்கையாற்றைத் தாங்கிய சிவந்த சடையை உடையீர்! வரிசையான கழல்கள் 
சேர்ந்த திருவடியினீர்! ஊரில் சிறு பிச்சை கொள்வீர்! உழையாகிய மானின் தோலை ஆடையாக 
உடையீர்! மோதுகின்ற அலைகள் சென்று அணையும் கடற்காகங்கள் கொண்ட அழகிய 
திருப்புகலியில் அழகுடைய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு விளங்கினீரே!

குறிப்புரை:     நீர் - கங்கை நீர். உழைமான் - உழையாகியம்மான் 'புல்வாய் (புலி) உழை மரையே 
கவரி', 'நவ்வியும் உழையும்' என்னும் மரபியற் சூத்திரப்பகுதிகளால் மானின் பேதம் புலப்படும்.

    It is Civan, the Lord of Poom-Pukali. You have permitted on Your matted red 
hair the gushing Ganges river. You have ankleted feet. You are our God going all over 
the cosmos for alms and accept the alms given by the ladies. You wear the deer skin on 
Your waist. You have manifested Yourself to grace the devotees who reach this temple; 
this is a blessed city because of Your presence. The rising tides of the sea dash 
against the shores and the groves and finally stay in the groves as backwaters. 
In the temple of this beautiful city surrounded by sea groves, in this celebrated 
temple You reside gracefully.

2050.     அழிமல்குபூம்புனலுமரவுஞ்சடைமேலடைவெய்த 
    மொழிமல்குமாமறையீர்கறையார்கண்டத்தெண்டோளீர் 
    பொழில்மல்குவண்டினங்களறையுங்கானற்பூம்புகலி 
    எழில்மல்குகோயிலேகோயிலாக இருந்தீரே.        3

    அழி மல்கு பூம் புனலும், அரவும், சடை மேல் அடைவு எய்த, 
    மொழி மல்கு மா மறையீர்! கறை ஆர் கண்டத்து எண்தோளீர்! 
    பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி, 
    எழில் மல்கு கோயிலே கோயில்ஆக இருந்தீரே.

    azi malku pUm punalum, aravum, caTaimEl aTaivu eyta, 
    mozi malku mAmaRaiyIr! kaRai Ar kaNTattu eNtOLIr! 
    pozil malku vaNTu inagkaL aRaiyum kAnal pUm pukali, 
    ezil malku kOyilE kOyil Aka iruntIrE.

பொருள்:     அழித்தல் வல்ல கங்கையின் அழகிய நீரும் பாம்பும் சடைமேல் தங்க, 
வாய்மொழியால் நிலைபெற்ற பெரிய வேதங்களை உடையீர்! நீலகண்டத்தையும் எட்டுத் 
தோள்களையும் உடையீர்!  பூஞ்சோலைகளில் நிறைந்த வண்டினங்கள் ஒலிக்கும்  கானங்களை 
உடைய அழகிய திருப்புகலியுள் எழில் நிறைந்த திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் 
கொண்டு விளங்கினீரே!

குறிப்புரை:     அழி - மிகுதி. 'அற்றார் அழிபசி'. அடைவு - சார்வு. இறை - நஞ்சின் கறுப்பு. எழில்-அழகு

    Oh! It is Civan, our God of Poom-Pukali. You, our God! You have adorned Your 
matted hair with the surging waters of the river Ganges. Also You have kept the snakes 
in the matted hair. You, our Lord, are the embodiment of the four Vedas abounding in rich,
sacred words. You, our Lord with dark blue coloured neck! You, our God with eight shoulders! 
You grace the devotees who visit Your holy feet in Your temple. In the groves of the city 
beetles in large numbers fly all over, singing sweet music in that area.  Here in Poom-Pukali, 
You have selected the beautiful temple as Your living place.

2051.     கையிலார்ந்தவெண்மழுவொன்றுடையீர்கடியகரியின்தோல் 
    மயிலார்ந்தசாயல்மடமங்கைவெருவமெய்போர்த்தீர் 
    பயிலார்ந்தவேதியர்கள்பதியாய்விளங்கும்பைம்புகலி 
    எயிலார்ந்தகோயிலேகோயிலாக இசைந்தீரே.        4

    கையில் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர்! கடிய கரியின்தோல் 
    மயில் ஆர்ந்த சாயல் மடமங்கை வெருவ, மெய் போர்த்தீர்! 
    பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம்புகலி, 
    எயில் ஆர்ந்த கோயிலே கோயில்ஆக இசைந்தீரே.

    kaiyil Arnta veNmazu onRu uTaiyIr! kaTiya kariyintOl,             
    mayil Arnta cAyal maTamagkai veruva, mey pOrttIr! 
    payil Arnta vEtiyarkaL patiAy viLagkum paimpukali, 
    eyil Arnta kOyilE kOyil Aka icaintIrE.

பொருள்:     கையில் ஏந்திய மழுவாயுதத்தை உடையீர்! மயில் போன்ற சாயலினை 
உடைய உமையம்மை அஞ்சத் திருமேனியின்மேல் சினமிக்க யானையின் தோலினைப் 
போர்த்தீர் ! மறை பயிலும் வேதியர்களின் பதியாக விளங்கும் திருப்புகலியுள் மதிலை உடைய 
திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு விளங்கினீரே! 

குறிப்புரை:     கையில் என்பதில் ஐகாரம் ஒரு மாத்திரை ஒலிப்பது 'சங்கக் கயனும்’ 
(தி. ப. 36 பா. 9). கரி- யானை. ஆர்ந்த - ஒத்த. வெருவ - (அஞ்சிவாய்) வெருவுதலடைய. 
தோல் போர்த்தீர் என்க. பயில்- (மறைப்)  பயிற்சி. முதனிலைத் தொழிற்பெயர். எயில் - மதில்.

    Oh! It is Civan, the Lord of Poom-Pukali. You, our God, hold the white 
battle axe in one of Your hands. You, our Lord have covered Your body with the 
hide of the rutted elephant after killing it even when our goddess, the peacock-
like young damsel shuddered to see that fierce action. In the city of Poom-Pukali, 
scholars of the four Vedas live in large numbers. In this beautiful city, the 
blessed place of all that is good. You have manifested Yourself in the sacred 
temple which has tall well-built walls all around.

2052.     நாவார்ந்தபாடலீராடலரவமரைக்கார்த்தீர் 
    பாவார்ந்தபல்பொருளின்பயன்களானீரயன்பேணும்
    பூவார்ந்தபொய்கைகளும்வயலுஞ்சூழ்ந்தபொழிற்புகலித் 
    தேவார்ந்தகோயிலேகோயிலாகத்திகழ்ந்தீரே.        5

    நா ஆர்ந்த பாடலீர்! ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர்! 
    பா ஆர்ந்த பல்பொருளின் பயன்கள் ஆனீர்! அயன் பேணும் 
    பூஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி, 
    தே ஆர்ந்த கோயிலே கோயில்ஆகத் திகழ்ந்தீரே.

    nA Arnta pATalIr! ATal aravam araikku ArttIr! 
    pA Arnta palporuLin payankaL AnIr! ayan pENum 
    pU Arnta poykaikaLum vayalum cUznta pozil pukali, 
    tE Arnta kOyilE kOyil Akat tikazntIrE.

பொருள்:     நாவில் நிறைந்த வேதப் பாடல் உடையீர். படமெடுத்து ஆடுகின்ற பாம்பினை 
இடுப்பில் கச்சாகக் கட்டினீர். பாட்டும் அதன் பொருளும் பயனும் ஆனீர். பிரமன் விரும்பும், 
பூவார்ந்த பொய்கைகளும் வயலும் பொழில்களும் சூழ்ந்த திருப்புகலியுள் தெய்வீகம் வாய்ந்த 
திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு விளங்கினீரே!

 குறிப்புரை:     பாடல்-வேதகீதம். அரைக்கு-  திருவிடையில். ஆர்த்தீர்- கட்டினீர். பாவும் அதன் 
பொருளும் அதன் பயனும் ஆயினீர். அயன் பேணும்  புகலி - பிரமன் பூசித்த சீகாழி, 
பிரமபுரம். பூ -  தாமரைமலர் 'பூவினுக்கருங்கலம்', 'பொங்கு தாமரை' பூவிற்குத் தாமரையே. 
தே - பிரளய காலத்திலும் அழியாத  தெய்வத்தன்மை. 

    Oh! It is Civan, the Lord of Poom-Pukali. You, our God, You are the best 
musician singing the sacred songs that suit Your tongue. You, our God, have the 
dancing snake around Your waist as an ornament. You are the effect and also the 
causes which various scriptures highlight in their hymns. The sacred city of Poom- 
Pukali has many tanks full of lotus flowers, rich paddy fields and gardens with 
different kinds of sweet flowers. This is liked most by the four-faced Brahma 
who once worshipped our Lord in this divine temple in the city. You have selected 
the same temple as Your best place and have manifested Yourself here and grace 
the devotees who come and worship You in the temple.

2053.     மண்ணார்ந்தமண்முழவந்ததும்பமலையான்மகளென்னும் 
    பெண்ணார்ந்தமெய்மகிழப்பேணியெரிகொண்டாடினீர் 
    விண்ணார்ந்தமதியமிடைமாடத்தாரும்வியன்புகலிக் 
    கண்ணார்ந்தகோயிலேகோயிலாகக்கலந்தீரே.        6

    மண் ஆர்ந்த மண்முழவம் ததும்ப, மலையான்மகள் என்னும் 
    பெண் ஆர்ந்த மெய் மகிழப் பேணி, எரி கொண்டு ஆடினீர்! 
    விண் ஆர்ந்த மதியம் இடை மாடத்து ஆரும் வியன்புகலி, 
    கண் ஆர்ந்த கோயிலே கோயில்ஆகக் கலந்தீரே.

    maN Arnta maN muzavam tatumpa, malaiyAnmakaL ennum             
    peN Arnta mey makizap pENi, eri koNTu ATinIr! 
    viN Arnta matiyam iTai mATattu Arum viyanpukali, 
    kaN Arnta kOyilE kOyil Akak kalantIrE.

பொருள்:     மண் பொருந்திய மத்தளம் ஒலிக்க, மலையான் மகளாகிய பார்வதி எனும் 
பெண் பொருந்திய பாகம் மகிழ, விரும்பி எரி ஏந்திக் கூத்தாடினீர். ஆகாயத்தில் பொருந்திய 
மதியம் தன் ஊடு செல்ல உயர்ந்த மாடங்களை உடைய அகன்ற திருப்புகலியின்கண் பொருந்திய 
திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு தங்கினீர்.

குறிப்புரை:     மண்- மார்ச்சனை. முழவம்- மத்தளம் (மிருதங்கம்) ததும்ப மகிழ ஆடினீர் என்க .
மலையான் மகள் என்னும் பெண் - இமாசலராசன் குமாரி எனப்படும் உமாதேவியார். நாமகள், 
திருமகள்,  மலைமகள், மலைப்பெண் என்புழிப் போலத் தேவி என்ற பொருளைக் குறித்தலறிக. 
மெய் - திருமேனி. மகிழ - பூரிக்க. மெய் மகிழ என்றது அரிய பிரயோகம். மிடை - நெருங்கிய. 
சந்திர மண்டலம் அளவும் ஓங்கிய மாடம் என்றவாறு. வண்கொண்டல் விட்டு மதி முட்டுவன 
மாடம். வியன் - அகலம். புகலிக்கண் ஆர்ந்த சீகாழியில் பொருந்திய.

    Oh! It is Civan, the Lord of Poom-Pukali. You, our God did that cosmic dance 
amidst the music of percussion drums, smeared with a black substance to increase and 
regulate the sound of the drum. Our goddess, the daughter of the mountain was very 
much pleased to see Your dance. You are manifest in this temple. The temple in 
Poom-Pukali pleases the people with its beautiful structure and its sacredness. 
You have manifested Yourself in this holy temple at Pukali. With Your presence, 
the place becomes the most celebrated one with all glories. The city is full of 
many broad palaces where the moon, while traversing the sky, touches the high 
towers of the palaces.

2054.          களிபுல்குவல்லவுணரூர்மூன்றெரியக்கணைதொட்டீர் 
     அளிபுல்குபூமுடியீரமரரேத்தஅருள்செய்தீர் 
    தெளிபுல்குதேனினமுமலருள்விரைசேர்திண்புகலி 
    ஒளிபுல்குகோயிலேகோயிலாகவுகந்தீரே.        7

    களி புல்கு வல் அவுணர் ஊர்மூன்று எரியக் கணை தொட்டீர்! 
    அளி புல்கு பூ முடியீர்! அமரர் ஏத்த அருள்செய்தீர்! 
    தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி, 
    ஒளி புல்கு கோயிலே கோயில்ஆக உகந்தீரே.

    kaLi pulku val avuNar Ur mUnRu eriyak kaNai toTTIr!
    aLi pulku pU muTiyIr! amarar Etta, aruL ceytIr! 
    teLi pulku tEn inamum alaruL virai cEr tiN pukali, 
    oLi pulku kOyilE kOyil Aka ukantIrE.

பொருள்:     மதம் கொண்ட வலிய அவுணர்களுடைய கோட்டைகள் மூன்றும் எரிந்து 
விழக் கணை எய்தீர். வண்டுகள் தங்கும் பூக்களை முடியில் அணிந்தீர். தேவர்கள் ஏத்த அருள் 
புரிந்தீர். தெளிவு கொண்ட தேனும் தேன் வண்டுகளின் கூட்டமும் மலரின் மணமும் சேரும் 
திருப்புகலியுள் ஒளி பொருந்திய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு 
மகிழ்ந்தீரே.

குறிப்புரை:     களி - களிப்பு. முதனிலைத் தொழிற்பெயர். புல்கு - பொருந்திய. மூன்று ஊர் - 
முப்புரம்.  அளி- வண்டுகள். அமரர் - தேவர். மரணமில்லாதவர்-  நெடிது வாழ்பவர். ஏத்த - துதிக்க. 
தெளி -தெளிவு. கலங்கலின்மை - கலங்கல் நீக்கம். விரை- மணம்.  ஒளி - சிவப்பிரகாசம். 
சுடரொளியுமாம்.  உகந்தீர் - -விரும்பினீர்.                                 

    Oh! It is Civan, the Lord of Poom-Pukali. The exhilarated asuras inflicted 
intolerable misery on the devas due to their mightiness. Our Lord with a single arrow,
burnt the three flying fortresses of the asuras along with the people who lived there. 
Your matted hair with its fragrant flowers attracts bees that make noise like music. 
You blessed the angels, hearing their heartfelt prayers. You are happily manifested 
in the holy temple of Pukali. Because of Your presence the celebrated place is full of 
lights and fragrance from the flowers, full of honey that attracts bees all around.
You are manifest in this holy temple, gracing the devotees who worship You.

2055.     பரந்தோங்குபல்புகழ்சேரரக்கர்கோனைவரைக்கீழிட் 
    டுரந்தோன்றும்பாடல்கேட்டுகவையளித்தீருகவாதார் 
    புரந்தோன்றுமும்மதிலுமெரியச்செற்றீர்பூம்புகலி 
    வரந்தோன்றுகோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        8

    பரந்து ஓங்கு பல்புகழ் சேர் அரக்கர்கோனை வரைக்கீழ் இட்டு. 
    உரம் தோன்றும் பாடல் கேட்டு, உகவை அளித்தீர்! உகவாதார் 
    புரம் தோன்று மும்மதிலும் எரியச் செற்றீர்! பூம் புகலி, 
    வரம் தோன்று கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    parantu Ogku palpukaz cEr arakkar kOnai varaikkIz iTTU, 
    uram tOnRum pATal kETTu, ukavai aLittIr! ukavAtAr
    puram tOnRu mummatilum eriyac ceRRIr! pUm pukali, 
    varam tOnRu kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     உலகெங்கும் பரவி ஓங்கிய புகழ் சேர்ந்த அரக்கர் கோன் இராவணனைக் 
கயிலை மலையின் கீழ் நசுக்கி, அவன் அறிவு சார்ந்த பாடல்களைப் பாடக் கேட்டு அவன் 
விரும்பியவற்றை அளித்தீர். உம்மை விரும்பாத அரக்கரின் நகரம் தோன்றும் மூன்று 
கோட்டைகளையும் எரித்து ஒழித்தீர். அழகிய திருப்புகலியில் வரந்தரும் திருக்கோயிலையே 
உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே.

குறிப்புரை:     பரந்து ஓங்குபல் புகழ் - உலகம் எங்கும் பரவி ஓங்கிய பெருங்கீர்த்தி, 
இராவணன் திரிலோக சஞ்சாரியாதலின் அத்தகு புகழ் பெற்றனன். உரம் - அறிவு. 
கைத்தலங்கள்......பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணன் 
என்று ஈந்த நாமதத்துவனை...ச் சாராதே  சாலநாள்  போக்கினேனே (தி.6 ப.79 பா.10). 
'எறியுமா கடல் இலங்கையர்கோனை...அடர்ந்திட்டுக் குறிகொள்'  பாடலின் இன்னிசை 
கேட்டுக் கோலவாளொடு நாளது கொடுத்த செறிவு கண்டு நின் திருவடியடைந்தேன் செழும் 
பொழிற்றிருப்புன் கூருளானே (தி.7 ப.55 பா.9). 'அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாட்டுக்கு. 
அன்று இரங்கிய வென்றியினானை' (தி.7 ப.62 பா.9). (ஸாம்பி: விவிதை: ஸ்தோத்ரை ப்ரணம்யஸ 
தஸாநந:) என்று வான்மீகி ராமாயணம் உணர்த்து மாற்றால் அச்சாமவேதத்தையே உணரத் 
தோன்றும் பாடல் என்றார். புரம்... மும்மதில் - முப்புரமாகத் தோன்றிய மதில். வரம் தோன்று 
கோவில் -  வரபுரம் ஒன்றுணர் சிரபுரத்துறைந்தனை (தி. 1 ப. 128 அடி 31). 

    Oh! It is Civan, the Lord of Poom-Pukali. The king of Sri Lanka, Raavanan, 
despite his fame over the multiworlds for his virtuous devotion to Lord Civa, once 
suffered under the Himalayan mountain, pressed by our Lord. Later he sang ,melodious songs 
of Saama Geetham. On hearing his song our Lord blissfully excused him and granted 
Raavanan longevity. Those asuras, who were antagonists of our Lord, were burnt along 
with their three flying fortresses. In the beautiful city of Pukali You have happily 
manifested Yourself and graced the holy temple as the temple of boons to
those devotees who worship Your holy feet.

2056.     சலந்தாங்குதாமரைமேலயனுந்தரணியளந்தானுங் 
    கலந்தோங்கிவந்திழிந்துங்காணாவண்ணங்கனலானீர் 
    புலந்தாங்கிஐம்புலனுஞ்செற்றார்வாழும்பூம்புகலி 
    நலந்தாங்குகோயிலேகோயிலாகநயந்தீரே.        9

    சலம் தாங்கு தாமரைமேல் அயனும் தரணி அளந்தானும், 
    கலந்தோங்கி வந்து இழிந்தும், காணா வண்ணம் கனல் ஆனீர்! 
    புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி, 
    நலம் தாங்கு கோயிலே கோயில்ஆக நயந்தீரே.

    calam tAgku tAmarai mEl ayanum, taraNi aLantAnum, 
    kalantu Ogki vantu izintum, kANA vaNNam kanal AnIr! 
    pulam tAgki aimpulanum ceRRAr vAzum pUm pukali, 
    nalam tAgku kOyilE kOyil Aka nayantIrE.

பொருள்:     நீர் தாங்குகின்ற தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும் உலகை மூவடியால் 
அளந்த திருமாலும் தம்மில்கூடி ஒருவன் அன்னமாக ஆகாயத்தில் பறந்து ஓங்கியும், மற்றவன் 
ஏனமாய்ப் பூமியைக் குடைந்து இழிந்தும் காணமுடியாதவாறு நெருப்பாக நின்றீர். ஐம்புலனையும் 
வென்று மெய்யுணர்வு கொண்டவர்கள் வாழும் பொலிவுடைய திருப்புகலியில் அழகிய 
திருக்கோயிலையே உம்முடைய கோயிலாக விரும்பினீரே.

குறிப்புரை:     சலம் - நீர். அயன் - பிரமன். தரணி - பூமி. அளந்தான் - திருமால். மாவலியிடம் 
மூவடி மண் பெற்ற வரலாறு. ஓங்கியவன் அயன், இழிந்தவன் அரி. கனல் - தீ. புலம் - மெய்யுணர்வு. 
செற்றார் -அழித்த ஞானியார். அடியார். நலம் - அழகு, நன்மை. நயந்தீர் - விரும்பினீர்.

    Oh! It is Civan, the Lord of Poom-Pukali. The creator Brahma who is seated 
in the lotus flower and Lord Vishnu who measured the earth and cheated the king Maavali -
they both went out into the sky and deep into the earth to see and worship the holy 
head and feet of Civan. They failed and could not comprehend. At this stage,
our God rose as an effulgence of indescribable nature. In this city, the scholars 
who are well-versed in divine knowledge and control their five senses live in large numbers. 
They visit the temple, and worship our Lord. Oh God! You have selected and
manifested Yourself in such a holy temple.

2057.     நெடிதாயவன்சமணும்நிறைவொன்றில்லாச்சாக்கியருங் 
    கடிதாயகட்டுரையாற்கழறமேலோர்பொருளானீர் 
    பொடியாருமேனியினீர்புகலிமறையோர்புரிந்தேத்த 
    வடிவாருங்கோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        10

    நெடிது ஆய வன்சமணும், நிறைவு ஒன்று இல்லாச் சாக்கியரும், 
    கடிதுஆய கட்டுரையால் கழற, மேல் ஓர் பொருள்ஆனீர்! 
    பொடி ஆரும் மேனியினீர்! புகலி மறையோர் புரிந்து ஏத்த, 
    வடிவு ஆரும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    neTitu Aya van camaNum, niRaivu onRu illAc cAkkiyarum, 
    kaTitu Aya kaTTuraiyAl kazaRa, mEl Or poruL AnIr! 
    poTi Arum mEniyinIr! pukali maRaiyOr purintu Etta, 
    vaTivu Arum kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     மிக வலிய சமணரும் சமயக் கொள்கையில் நிறைவில்லாத பவுத்தரும் 
நீண்ட மொழிகளால் உம்மைப் பழித்துப் பேச, அவர்களால் எய்த முடியாத  மேலான மெய்ப்பொருளானீர். 
திருநீறு பூசிய மேனியினீர். திருப்புகலியில் வாழும் மறையோர்கள் போற்ற அழகிய திருக்கோயிலையே 
உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே. 

குறிப்புரை:     நிறைவு - சமயக் கொள்கையின் நிறைவு அறிவின் நிறைவுமாம். கடிது - 
கடுமையுடையது . கழற- பழித்துப் பேச. மேல்ஓர் பொருள் - மேலாக ஒரு மெய்ப்பொருள்.             
பொடி - திருநீறு. புரிந்து- இடைவிடாது நினைந்து. வடிவு ஆகும் - அழகு நிறைந்த தோற்றமும் ஆம்.

    Oh! It is Civan, the Lord of Poom-Pukali. You, our God became the absolute 
one beyond the reach of the false preachers, the well grown Jains and the imperfect 
Buddhists. You have beautified Your whole body with holy ashes. You have manifested 
Yourself in the holy temple of Pukali, the blessed place of beauty. The Vedic scholars 
of this place admire and praise the famous, sacred temple and pray You with
recitations. The same temple You have chosen as Your own and happily manifest
Yourself there.

2058.    ஒப்பரியபூம்புகலிஓங்குகோயில்மேயானை 
    அப்பரிசிற்பதியான அணிகொள்ஞானசம்பந்தன் 
    செப்பரியதண்டமிழால்தெரிந்தபாடலிவைவல்லார் 
    எப்பரிசிலிடர்நீங்கியிமையோருலகத்திருப்பாரே.        11

    ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை, 
    அப் பரிசில் பதிஆன அணி கொள் ஞானசம்பந்தன், 
    செப்ப(அ)ரிய தண்தமிழால் - தெரிந்த பாடல்இவை வல்லார், 
    எப்பரிசில் இடர் நீங்கி, இமையோர் உலகத்து இருப்பாரே.

    oppu ariya pUm pukali Ogku kOyil mEyAnai, 
    ap paricil pati Ana aNi koL njAnacampantan, 
    ceppa(a)riya taNtamizAl-terinta pATal ivai vallAr,
    epparicil iTar nIgki, imaiyOr ulakattu iruppArE.

பொருள் :     தனக்கு ஒப்பில்லாத பொலிவுடைய திருப்புகலியுள் ஓங்கி உயர்ந்த கோயிலில் 
இருப்பவனை, அத்தகைய இயல்புடைய தலைவன் ஞானசம்பந்தன் அருள் பெறாதவர்கள் 
சொல்லுதற்கு அரிய குளிர்ந்த தமிழால் ஆராய்ந்து பாடிய பாடல்களாகிய இவற்றைப் பாட 
வல்லவர்கள் எல்லா வகையான இடர்களினின்றும் நீங்கி வானவருலகத்தில் இருப்பார்கள்.

குறிப்புரை:     மேயான் - மேவியவன். பரிசு - தகைமை. செப்ப அரிய - அருள்பெறாதவர் 
சொல்லுதற்கு அருமையாகிய.  தெரிந்த - ஆராய்ந்த.

    Oh! It is Civan, the Lord of Poom-Pukali. Our saint Thiru-gnana-Sambandar 
hailing from Kaazhi as its king, with all ornamental virtues, sang on the Lord 
manifested in the incomparable temple on the earth, in beautiful choicest Tamil, 
these ten verses. Those devotees who can recite these ten songs will be relieved 
of all sufferings and will be blessed to reach and stay forever in the celestial 
world.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            54ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 54th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 191            பதிக எண்: 55

55. திருத்தலைச்சங்காடு            55.THIRU-TH-THALAICH-CHANGAADU

பண் : சீகாமரம்                Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    திருத்தலைச்சங்காடு என்னும் இத்திருத்தலமானது சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருப்பதால்
 மிகப் பழமைவாய்ந்ததாகும். இவ்வூர் தலைசை என மரூஉமொழியாக வழங்கப்பெறும். காவிரித் 
தென்கரையில் உள்ள தலங்களுள் நாற்பத்தைந்தாவது ஆகும். மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர்
 முக்கூட்டு சென்று அங்கிருந்து சீகாழி-பூம்புகார் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். இறைவரது
 திருப்பெயர் சங்கருணாதேசுவரர். இறைவியாரது திருப்பெயர் சௌந்தரநாயகி. தீர்த்தம் காவிரியாறு. 
திருமால் சிவபெருமானைப் பூசித்துப் பாஞ்சசந்யம் என்னும் சங்கைப் பெற்ற தலம்.  இதற்கு 
ஞானசம்பந்தரால்  பாடப்பெற்ற பதிகம் ஒன்று உண்டு.

பதிக வரலாறு

    தலைசையந்தணர்கள் எல்லாம் பெருவிருப்பால் வந்து உம்பரும் வணங்கும் மெய்ம்மை 
உயர்தவத்தொண்டரோடும் ஆளுடைய பெருந்தகையாரை எதிர்கொண்டு வணங்கி அழைத்துச் சென்றனர். 
அங்குற்று, பெருந்திருமாடக்கோயிலை எய்தி, அருமறைப் பொருளானாரைப் பணிந்து அழகிய 
நல்ல வலம்புரிச்சங்கின் வடிவில் ஓங்கார ரூபமாக ஒளிரும் இறைவன் சார்ந்து விளங்குமாற்றைப் 
பாடியருளியது இத்திருப்பதிகம். 

            திருச்சிற்றம்பலம்

2059.     நலச்சங்கவெண்குழையுந்தோடும்பெய்தோர்நால்வேதம் 
    சொலச்சங்கையில்லாதீர்சுடுகாடல்லாற்கருதாதீர் 
    குலைச்செங்காய்ப்பைங்கமுகின்குளிர்கொள்சோலைக்குயிலாலும் 
    தலைச்சங்கைக்கோயிலேகோயிலாகத்தாழ்ந்தீரே.        1

    நலச் சங்கவெண்குழையும் தோடும் பெய்து,ஓர் நால்வேதம் 
    சொலச் சங்கை இல்லாதீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்! 
    குலைச் செங்காய்ப் பைங்கமுகின் குளிர் கொள் சோலைக் குயில் ஆலும் 
    தலைச்சங்கைக் கோயிலே கோயில்ஆகத் தாழ்ந்தீரே.

    nalac cagka veNkuzaiyum toTum peytu, Or nAlvEtam 
    colac cagkai illAtIr! cuTukATu allAl karutAtIr! 
    kulaic cegkAyp paig kamukin kuLir koL cOlaik kuyil Alum 
    talaiccagkaik kOyilE kOyil Akat tAzntIrE.                    

பொருள்:     வெண்சங்கினால் ஆன அழகிய குழையும் தோடும் காதில் பெய்து, ஒப்பற்ற 
நால்வேதங்களை ஐயமின்றிச் சொன்னவரே. சுடுகாட்டினில் விருப்பம் உடையவரே! குலையாகச் 
சிவந்த காய்களை உடைய பசிய கமுகஞ்சோலைகளில் குயில்கள் கூவும் தலைச்சங்காட்டில் 
 உள்ள திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீரே.

குறிப்புரை:     நலம்- அழகையுடைய. சங்கவெண்குழை- சங்காலான வெளிய குண்டலம். 
சங்கை-ஐயம். கமுகின் குலைக்காய் செந்நிறத்தாதல் கூறப்பட்டது. தாழ்ந்தீர் - எழுந்தருளியுள்ளீர். 
தலைச்சங்கை -தலைச்சங்காடு என்பதன் மரூஉப்போலும்.

    Oh! Our Lord Civan of Thiru-th-thalaich-changaadu, Your holy presence in 
Thiru-th-thalaich-changaadu temple has sanctified it. You have adorned both Your 
ears with different ornamental rings. In one ear Your ear ring is made up of well
grown white conch shell. In another ear, the ring is made of tender palmyrah leaf. 
You have elucidated and epitomized the four Vedas beyond any doubtful reasoning. 
You do not prefer any place to the burial ground for Your dancing activities. 
The city is full of many groves especially areca palm groves. Here the cuckoos 
abide and sing sweet melodies. The trees are full of red fruits in bunches making 
the groves pleasing and fertile. In such an attractive and good looking city, oh God! 
You have selected the temple of Thalaich-changaadu as Your abode and are manifested happily.

2060.     துணிமல்குகோவணமுந்தோலுங்காட்டித்தொண்டாண்டீர் 
    மணிமல்குகண்டத்தீரண்டர்க்கெல்லாமாண்பானீர் 
    பிணிமல்குநூல்மார்பர்பெரியோர்வாழுந்தலைச்சங்கை 
    அணிமல்குகோயிலேகோயிலாகஅமர்ந்தீரே.        2

    துணி மல்கு கோவணமும் தோலும் காட்டித் தொண்டு ஆண்டீர்! 
    மணி மல்கு கண்டத்தீர்! அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர்! 
    பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை, 
    அணி மல்கு கோயிலே கோயில்ஆக அமர்ந்தீரே.

    tuNi malku kOvaNamum tOlum kATTit toNTu ANTIr! 
    maNi malku kaNTattIr! aNTarkku ellAm mANpu AnIr! 
    piNi malku nUl mArpar periyOr vAzum talaiccagkai, 
    aNi malku kOyilE kOyil Aka amarntIrE.

பொருள்:     துணியால் ஆன கோவணமும் உடுத்த தோலுங் காட்டி அன்பர்களைத் தொண்டாண்டு 
கொண்டீர்! நீலமணி போலும் கண்டத்தை உடையீர்! தேவர்களுக்கு  எல்லாம் பெருமை உடையவரானீர்! 
பூணூல் பிணித்த மார்பினை உடையீர்! பத்தியால் பெரியோர் வாழும் திருத்தலைச்சங்காட்டில் 
அழகு  நிறைந்த திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு அங்கு அமர்ந்தீரே. 

குறிப்புரை:     மணி- நீலமணிபோலும் நிறம். அண்டர் -தேவர். மாண்பு - மாட்சி, பெருமை. 
பிணி- பிணித்தல். அணி- அழகு. நான்கு அடியிலும் மல்குதல் என்றதற்கு. நிறைதல் என்ற பொருளுறப் 
பொருத்திக் கூறிக்கொள்க.

    Oh! It is Civan, our God of Thiru-th-thalaich-changaadu. You have adorned 
Yourself with the dress made out of ordinary cloth, as loin-cloth. You have worn 
around Your waist the dress made out of the hide of animals. Poor clothing, yet You
rule over Your devotees. Your neck looks beautiful like the dark blue gem. You are the
greatest Supreme Being among all the angels in the celestial world. In this city, 
great Brahmin scholars do live in large numbers wearing twisted sacred thread on their 
chest. This most beautiful temple of this city has been selected by You as Your abode
and there You are manifested.

2061.     சீர்கொண்டபாடலீர்செங்கண்வெள்ளேறூர்தியீர் 
    நீர்கொண்டும்பூக்கொண்டுநீங்காத்தொண்டர்நின்றேத்தத் 
    தார்கொண்டநூல்மார்பர்தக்கோர்வாழுந்தலைச்சங்கை 
    ஏர்கொண்டகோயிலேகோயிலாகஇருந்தீரே.        3

    சீர் கொண்ட பாடலீர்! செங்கண் வெள்ஏற்று ஊர்தியீர்! 
    நீர் கொண்டும் பூக் கொண்டும் நீங்காத் தொண்டர் நின்று ஏத்த, 
    தார் கொண்ட நூல்மார்பர் தக்கோர் வாழும் தலைச்சங்கை, 
    ஏர் கொண்ட கோயிலே கோயில்ஆக இருந்தீரே.

    sIr koNTa pATalIr! cegkaN veL ERRu UrtiyIr! 
    nIr koNTum pUk koNTum nIgkAt toNTar ninRu Etta, 
    tAr koNTa nUl mArpar takkOr vAzum talaiccagkai, 
    Er koNTa kOyilE kOyil Aka iruntIrE.

பொருள்:     பெருமையான பாடல்களை உடையீர்! சிவந்த சினமிக்க கண்களை உடைய 
வெண்ணிறக் காளையை வாகனமாக உடையீர்! நீர், பூ ஆகியன கொண்டு உன்னை விட்டுப் 
பிரியாத தொண்டர்கள் நின்னை வழிபட, மாலையும் பூணூலும் அணைந்த மார்பினர்களும் 
அந்தணர்களும் ஆகிய பெரியோர் வாழும் திருத்தலைச்சங்காட்டில் அழகு வாய்ந்த 
திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு இருந்தீரே.

குறிப்புரை:    சீர் - கனம், மேன்மை. பாடல் - வேதப்பாடல், சாமகானம். ஏறு - எருது. 
ஊர்தி - வாகனம். சிவபூசை செய்வார்க்கு இன்றியமையாத பொருள் நீரும் பூவும் என்பது 
குறிக்கப்பட்டது. தார் -மாலை. தார்கொண்ட மார்பர், நூல் (பூணு நூல்) அணிந்த மார்பர் 
என்க. தக்கோர் - 'அந்தணாளர்' (பா. 8). ஏர் - அழகு.

    Oh God! It is Civan of Thiru-th-thalaich-changaadu. You sing the most 
distinctive, divine songs. You own for Your ride the red eyed white bull, Thirumaal 
himself has become Your vehicle. You wear good garlands and the sacred thread on 
Your chest, giving Dharshan to devotees who carry pure water and fine flowers and 
worship You incessantly. In this city of Thiru-th-thalaich-changaadu the sacred 
Brahmins live in large numbers. This attractive temple of Thiru-th-thalaich-changaadu 
You have selected as Your abode and manifested Yourself there.

2062.     வேடஞ்சூழ்கொள்கையீர்வேண்டிநீண்டவெண்டிங்கள் 
    ஓடஞ்சூழ்கங்கையுமுச்சிவைத்தீர்தலைச்சங்கைக் 
    கூடஞ்சூழ்மண்டபமுங்குலாயவாசற்கொடித்தோன்றும் 
    மாடஞ்சூழ்கோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        4

    வேடம் சூழ் கொள்கையீர்! வேண்டி நீண்ட வெண்திங்கள் 
    ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச்சங்கை,                 
    கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடித் தோன்றும் 
    மாடம் சூழ் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    vETam cUz koLkaiyIr! vENTi nINTa veNtigkaL 
    OTam cUz kagkaiyum ucci vaittIr! talaiccagkai, 
    kUTam cUz maNTapamum kulAya vAcal koTit tOnRum 
    mATam cUz kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     அடியார்கள் உம்மைக் காண விரும்பும் வேடத்தில் தோன்றும் கொள்கையினை 
உடையீர்! பிறையாகிய ஓடம் தங்கிய கங்கையை உம்சிரசில் வைத்தீர். திருத்தலைச்சங்காட்டில் 
கூடமும் மண்டபமும் கூடிய வாசலில் கொடி தோன்றும் மாடங்கள் சூழ்ந்த திருக்கோயிலை 
கோயிலாக மகிழ்ந்தீரே!

குறிப்புரை:     வேடம்- 'பலப்பல வேடம் ஆகும் பரன்', உச்சியிலுள்ள கங்கையில் திங்கள் ஓடம் 
போல் உளது. கூடம், மண்டபம், மாடம் என்பன இட விசேடங்கள். வாசலில் கொடி தோன்றும் மாடம் என்க.

    Oh! It is Civan, our Lord of Thiru-th-thalaich-changaadu.Oh our God of 
Thiru-th-thalaich-changaadu! You wish to take different forms in Your manifestations 
and do so. You have mounted on Your matted hair the long curved moon, and the Ganges
river where the moon floats like a boat. The city has many tall palaces all around the
temple, where the flags flutter on the top of the palaces. Thiru-th-thalaich-changaadu 
has very attractive temple towers, pavilion surrounding the temple etc. Oh God! 
You have selected this temple as Your abode and are manifested there.

2063.     சூலஞ்சேர்கையினீர்சுண்ணவெண்ணீறாடலீர் 
    நீலஞ்சேர்கண்டத்தீர்நீண்டசடைமேல்நீரேற்றீர் 
    ஆலஞ்சேர்தண்கானலன்னமன்னுந்தலைச்சங்கைக் 
    கோலஞ்சேர்கோயிலேகோயிலாகக்கொண்டீரே.        5

    சூலம் சேர் கையினீர்! சுண்ண வெண்நீறுஆடலீர்! 
    நீலம் சேர் கண்டத்தீர்! நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர்! 
    ஆலம் சேர் தண்கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை, 
    கோலம் சேர் கோயிலே கோயில்ஆகக் கொண்டீரே.

    cUlam cEr kaiyinIr! cuNNa veN nIRu ATalIr! 
    nIlam cEr kaNTattIr! nINTa caTaimEl nIr ERRIr! 
    Alam cEr taNkAnal annam mannum talaiccagkai
    kOlam cEr kOyilE kOyil Akak koNTIrE.

பொருள்:     சூலப்படையை ஏந்திய கையினீர்! திருநீறாகிய பொடியில் மூழ்குவீர்! 
நீலநிறமான கறை உடைய கண்டத்தீர்! பரந்த சடைமேல் கங்கையாற்றை ஏற்றீர்! நீர் நிறைந்த 
குளிர்ந்த கானலில் அன்னப்பறவைகள் தங்கும் திருத்தலைச்சங்காட்டில் அழகு சேர்ந்த
திருக்கோயிலையே  உம்முடைய கோயிலாக மகிழ்ந்தீரே! 

குறிப்புரை:     சூலம் - 'மூவிலைவேல்'. சுண்ணம் - பொடியாகிய. ஆடலீர் - மூழ்குதலுடையீர்.         
நீராடல் போல் நீறாடல். நீர் - கங்கை. ஆலம் - நீர். மன்னும் - பொருந்தும். கோலம் - அழகு,வடிவமுமாம்.

    Oh! It is Civan, the Lord of Thiru-th-thalaich-changaadu. Oh God! You have 
the trident in one of Your hands. Oh God! You have smeared Your body with the holy 
ashes as if to bathe. Oh God! Your neck is dark blue in colour. Oh God! You have the 
river Ganges on Your long grown matted hair. In the city of Thiru-th-thalaich changaadu 
swans in large numbers flourish in the cool waters of the groves. In such an attractive 
city, the beautiful temple is situated. Oh God! You have selected this temple as 
Your temple to manifest.

2064.     நிலநீரொடாகாசமனல்காலாகிநின்றைந்து 
    புலநீர்மைபுறங்கண்டார்பொக்கஞ்செய்யார்போற்றோவார் 
    சலநீதரல்லாதார்தக்கோர்வாழுந்தலைச்சங்கை 
    நலநீரகோயிலேகோயிலாகநயந்தீரே.        6

    நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகிநின்று ஐந்து 
    புல நீர்மை புறம் கண்டார் பொக்கம் செய்யார், போற்று ஓவார் 
    சல நீதர் அல்லாதார், தக்கோர், வாழும், - தலைச்சங்கை, 
    நல நீர கோயிலே கோயில்ஆக நயந்தீரே.

    nilam nIroTu AkAcam anal kAl Aki ninRu,aintu 
    pula nIrmai puRam kaNTAr, pokkam ceyyAr, pORRu OvAr,
    cala nItar allAtAr, takkOr, vAzum--talaiccagkai 
    Nala nIra kOyilE kOyil Aka nayantIrE.

பொருள்:     நிலம் நீரோடு ஆகாசம், அனல், காற்றும் எனும் ஐம்பூதங்களுமாக அவற்றுள் 
நிறைந்திருந்தும் ஐம்புலன்களையும் வென்றவர். அடியவர்களுக்குப் பொய்யார். அவர்களைக் 
காப்பாற்றுதலில் ஓயுதல் செய்யார். வஞ்சம் முதலிய இழிதகைமை இல்லாதவர்களும் 
தக்கவர்களுமாகிய பெருந்தகையாளர்கள் வாழும் திருத்தலைச் சங்காட்டில் அழகிய 
தன்மையுடைய  திருக்கோயிலையே உம்முடைய கோயிலாக விரும்பினீரே! 

குறிப்புரை:     நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களாகி நின்றவன் இறைவன். அட்டமூர்த்தங்களுள் 
முதலைந்தும் இவையே, ஐந்து புல நீர்மைபுறம் கண்டார் - ஐம்புலன்களை வென்றவர். 
பொக்கம் - பொய். போற்று - துதி. ஓவார் - நீங்கார். சலம் - மாறுபாடு. வஞ்சகம். நீதம் - இழிஞர். 
'தக்கார்' (ப.176  பா 10 ) நலநீர - அழகிய தன்மையுடைய.

    Oh! It is Civan, the Lord of Thiru-th-thalaich-changaadu. Oh God! You are 
the embodiment of the five elements such as land, water, fire, sky and air. And You 
have fully controlled the five senses and You have sanctified the temple. You accept
the worship of those devotees who have no falsehood in their life and You grace 
them. This city consists of great Brahmins who are not impostors or cheats, they 
never do any slander. The city is known for people of flawless nature. Therefore 
You have chosen to reside in this temple and bless Your devotees.

2065.     அடிபுல்குபைங்கழல்களார்ப்பப்பேர்ந்தோரனலேந்திக் 
    கொடிபுல்குமென்சாயலுமையோர்பாகங்கூடினீர் 
    பொடிபுல்குநூல்மார்பர்புரிநூலாளர்தலைச்சங்கைக் 
    கடிபுல்குகோயிலேகோயிலாகக்கலந்தீரே.        7

    அடி புல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப் பேர்ந்து ஓர் அனல் ஏந்தி, 
    கொடி புல்கு மென்சாயல் உமை ஓர் பாகம் கூடினீர்! 
    பொடி புல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கை
     கடி புல்கு கோயிலே கோயில்ஆகக் கலந்தீரே.

    aTi pulku paigkazalkaL Arppap pErntu, Or anal Enti, 
    koTi pulku mencAyal umai OrpAkam kUTinIr! 
    poTi pulku nUl mArpar puri nUlALar talaiccagkai,
    kaTi pulku kOyilE kOyil Akak kalantIrE.

பொருள்:     அழகிய பாதத்தில் பொருந்திய கழல்கள் ஒலிக்க அடி பெயர்த்து, அனலேந்தி 
கொடி போன்ற உருவமும் மென்மையான சாயலும் உடைய உமையம்மையை ஒரு பாகத்தில் 
கூடினீர்! திருநீறு மிகப்பூசிய பூணூலணிந்தவர், மறையோர் வாழும் திருத்தலைச்சங்காட்டுள் 
காவல் மிக்க திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டீரே.
 
குறிப்புரை:     புல்கு - சார்ந்த, கூடிய. ஆர்ப்ப -ஒலிக்க. பேர்ந்து - நட்டம் ஆடி. 'கொடிபுல்கு 
மென்சாயல் உமை' என்றது தேவியார் திருநாமம் ஆகிய சௌந்தரியம்மை என்பதைத் தோற்றியது. 
பொடி - திருநீறு. புரிநூல் ஆளர்- விரும்புகின்ற வேத நூல்களை ஆள்பவர். 'நூன்மார்பர்' என்று முன் 
உள்ளதன் பொருளே கூறல் நன்றன்று. 'மறையாளர்' (பா.9).கடி - காவல்.

    It is Civan, our Lord of Thiru-th-thalaich-changaadu. Oh God! You wear the 
anklets on Your holy feet which ring according to Your steps, while You perform the 
cosmic dance carrying fire in one of Your hands. You have embedded on Your body Your 
consort Uma Devi who has a creeper like tender body. You have smeared Your body with
holy ashes and wear the sacred thread on Your chest. In this city sacred Brahmins do 
live wearing the sacred thread in large numbers. The temple in this city is always 
fragrant with flowers all around. You have manifested Yourself in this temple and 
grace the devotees.

2066.     திரையார்ந்தமாகடல்சூழ்தென்னிலங்கைக்கோமானை 
    வரையார்ந்ததோளடரவிரலாலூன்றுமாண்பினீர் 
    அரையார்ந்தமேகலையீரந்தணாளர்தலைச்சங்கை 
    நிரையார்ந்தகோயிலேகோயிலாகநினைந்தீரே.        8

    திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென் இலங்கைக் கோமானை,
    வரை ஆர்ந்த தோள் அடர, விரலால் ஊன்றும் மாண்பினீர்! 
    அரை ஆர்ந்தமேகலையீர்! அந்தணாளர் தலைச்சங்கை,
     நிரை ஆர்ந்த கோயிலே கோயில்ஆக நினைந்தீரே.

    tirai Arnta mA kaTal cUz ten ilagkaik kOmAnai, 
    varai Arnta tOL aTara, viralAl UnRum mANpinIr! 
    arai Arnta mEkalaiyIr! antaNALar talaiccagkai, 
    nirai Arnta kOyilE kOyil Aka ninaintIrE.

பொருள்:     அலைகள் நிறைந்த கரிய கடல் சூழ்ந்த தென் திசையில் உள்ள இலங்கைக்கு 
அரசன் இராவணனின் மலை போன்ற தோள்களை, உம்முடைய திருவிரலால் ஊன்றி நசுக்கிய 
பெருமையுடையீர்! இடையில் கட்டிய மேகலையை உடையீர்! அந்தணாளர்கள் வாழும் 
திருத்தலைச்சங்காட்டில் வரிசையாக அமைந்த திருக்கோயிலையே உம்முடைய
கோயிலாக விரும்பினீரே!

குறிப்புரை:     திரை - அலை. மா - பெரியது. வரை -மலை. அரை- இடை. நிரை - வரிசை. 
மேகலை-அணிவிசேடம்.  அரை ஆர்ந்த மேகலையீர், என்பது, பாதி மாதை உடையீர் என்றவாறு. 
'ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர்' (பதி. 192 பா.2)

    Oh! It is Civan, the Lord of Thiru-th-thalaich-changaadu. The country Sri Lanka 
surrounded by big sea with roaring waves, was ruled by Raavanan, a big gigantic king, 
with mountain like shoulders. Our valiant God pressed the mountain where He was staying, 
with His toe and it resulted in the crushing of Raavanan's mighty shoulders. You have 
embedded Your consort Uma Devi wearing the girdle on her waist on the left side of 
Your body. In this city, scholar Brahmins do live in large numbers. In this city, 
our Lord's temple is well built according to aagamaas and there You have 
manifested Yourself.

2067.     பாயோங்குபாம்பணைமேலானும்பைந்தாமரையானும் 
    போயோங்கிக்காண்கிலார்புறம்நின்றோரார்போற்றோவார் 
    தீயோங்குமறையாளர்திகழுஞ்செல்வத்தலைச்சங்கைச் 
    சேயோங்குகோயிலேகோயிலாகச்சேர்ந்தீரே.        9

    பாய் ஓங்கு பாம்புஅணை மேலானும், பைந்தாமரையானும், 
    போய் ஓங்கிக் காண்கிலார்; புறம் நின்று ஓரார், போற்று ஓவார்; 
    தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வத் தலைச்சங்கை, 
    சேய் ஓங்கு கோயிலே கோயில்ஆகச் சேர்ந்தீரே.

    pAy Ogku pAmpu aNai mElAnum, paintAmaraiyAnum, 
    pOy Ogkik kANkilAr; puRam ninRu OrAr, pORRu OvAr; 
    tI Ogku maRaiyALar tikazum celvat talaiccagkai, 
    cEy Ogku kOyilE kOyil Akac cErntIrE.

பொருள்:     விரிந்த பாம்பாகிய படுக்கையின்மேல் இருப்பவனாகிய திருமாலும், பசிய 
தாமரை மலர்மேல் இருப்பவனாகிய பிரமனும் கீழ் இடந்துபோயும் மேற்பறந்து போயும் 
காணாதவராயினர். புறச்சமயம் நில்லாது அகச்சமயத்தில் நிற்பார் போற்றுதலை நீங்கார் .
வேள்வித்தீ வளர்க்கும் வேதியர்கள் திகழும் ஆன்மீகச் செல்வம் நிறைந்த திருத்தலைச்சங்காட்டில் 
உயர்ந்தோங்கும் திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகச் சேர்ந்தீரே!

குறிப்புரை:     பாய் - பரந்து. போய்- கீழிடந்துபோய். ஓங்கி - மேற்பறந்துயர்ந்து. 
புறம் நின்று ஓரார்- புறச்சமயக் கொள்கைகளில் நின்று ஆராயாதவர். அகச்சமயக் 
கொள்கை வழி ஆராய்பவர் என்றவாறு. புறம் வெளியுமாம். போற்று - துதி. ஓவார் - 
நீங்காதவர். தீ - வேள்வித்தீ. சேய் - உயர்வின் நீட்சி.

    Oh! It is Civan, Lord of Thiru-th-thalaich-changaadu. Thirumaal who 
takes rest on the mat of the five-headed snake 'Aadhiseshan' (later he was 
born as Patanjali Muni, author of Yoga Sutra, Viyakarana Maha Bashyam and 
one medical book) and Brahma who rests in the fresh lotus flower - both 
failed in their attempt to trace our Lord's head and foot. You are worshipped 
by the devotees who are stead fast in their own religion and never listen to 
other religious preaching. In the city of Thiru-th-thalaich-changaadu, the 
Brahmin scholars, well-versed in the four Vedas, live in large numbers and 
light thrice the sacred fire, yaaga. They worship You in the rich tall temple, 
chosen by You for Your manifestation.

2068.     அலையாரும்புனல்துறந்த அமணர்குண்டர்சாக்கீயர் 
    தொலையாதங்கலர்தூற்றத்தோற்றங்காட்டியாட்கொண்டீர் 
    தலையானநால்வேதந்தரித்தார்வாழுந்தலைச்சங்கை 
    நிலையார்ந்தகோயிலேகோயிலாகநின்றீரே.        10

    அலை ஆரும் புனல் துறந்த அமணர், குண்டர்சாக்கீயர், 
    தொலையாது அங்கு அலர் தூற்ற, தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்! 
    தலைஆன நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை, 
    நிலை ஆர்ந்த கோயிலே கோயில்ஆக நின்றீரே.

    alai Arum punal tuRanta amaNar, kuNTar cAkkIyar, 
    tolaiyAtu agku alar tURRa, tORRam kATTi ATkoNTIr! 
    talai Ana nAlvEtam tarittAr vAzum talaiccagkai, 
    nilai Arnta kOyilE kOyil Aka ninRIrE.

பொருள்:     நீராடுதல் இல்லாத சமணக் குண்டர்களும் சாக்கியர்களும் இடைவிடாது 
பழிதூற்ற அடியார்களுக்கு உம்முடைய திருக்கோலத்தைக் காட்டி ஆட்கொண்டீர்! மேலான 
நான்கு வேதங்களையும் மேற்கொண்டாராகிய மறையாளர் வாழும் திருத்தலைச்சங்காட்டில் 
நிலையுள்ள திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு அங்கு நிலையாக நின்றீரே!

குறிப்புரை:     புனல் துறந்த- குளித்தல் இல்லாத என்றவாறு. சாக்கியர் என்பது புதிய பாடம்.
தொலையாது - இடையில் ஒழியாமல்.  அலர் - பழி.  நிலை - கோபுரநிலை. 

    Oh! It is Civan, the Lord of Thiru-th-thalaich-changaadu. The Jains and Buddhists 
who live in this city never take bath in the running water available there in the city. 
They speak ill of our Lord. But oh Lord! You ignore their words. You give  darshan to the 
devotees who come and worship You in the temple. The Brahmin scholars who are well versed 
in the four Vedas live in this city and worship You consistently in the grand temple 
of this place. You have taken this temple as Your abode and are manifested there.

2069.     நளிரும்புனற்காழிநல்லஞானசம்பந்தன் 
    குளிருந்தலைச்சங்கையோங்குகோயில்மேயானை 
    ஒளிரும்பிறையானையுரைத்தபாடலிவைவல்லார் 
    மிளிருந்திரைசூழ்ந்தவையத்தார்க்குமேலாரே.     11

    நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன், 
    குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை, 
    ஒளிரும் பிறையானை உரைத்த பாடல்இவை வல்லார் 
    மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

    naLirum punal kAzi nalla njAnacampantan
    kuLirum talaiccagkai Ogku kOyil mEyAnai, 
    oLirum piRaiyAnai, uraitta pATal ivai vallAr 
    miLirum tirai cUznta vaiyattArkku mElArE.

பொருள்:     குளிர்ந்த நீர்வளம் உள்ள சீகாழியில் அன்புடைத் திருஞானசம்பந்தன் 
அருளுடைய திருத்தலைச்சங்காட்டில், ஓங்கு கோயிலில் மேவியவனை, ஒளிவீசும் பிறை
 சூடியவனைப் போற்றி உரைத்த பாடல்களாகிய இவற்றை ஓத வல்லார், புரளும் அலைகளை
 வீசும் கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் வாழ்பவருக்கு மேல் நிலையை உறுதியாக அடைவர்; 
அஃதாவது, வானுலகோராவர் என்க.

குறிப்புரை:     நளிரும் -குளிரும். மேயானை- மேவிய பெருமானை. மிளிரும் திரை - 
விளங்கும் கடல். வையத்தார் - மண்ணுலகோர். மேலார்-வானுலகோராவர்.            

    Oh! It is Civan, the Lord of Thiru-th-thalaich-changaadu. Our virtuous saint 
Thiru-gnana-Sambandar hails from the seashore city of Kaazhi, which is benefited by 
the cool waters running all around the city. Our Lord is manifest in the cool and big 
temple of the city. He retains the bright dazzling moon on His head. Our saint has 
praised our Lord of Thiru-th-thalaich-changaadu temple in these ten verses in Tamil 
language. Those devotees who can recite these verses will be blessed to be greater 
than the people of this earth, surrounded by sea on all four sides, they will 
enter the world of the sky.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            55ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 55th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 192            பதிக எண்:  56. 
56. திருஇடைமருதூர்            56. THIRU-IDAI-MARUTHOOR
பண் : சீகாமரம்                Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட பாடல் பெற்ற பதிகள் மூன்றாகும். 
அவை வடநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனம் என்ற சீபர்ப்பதம். பாண்டி நாட்டில் உள்ள 
திருப்புடைமருதூர். சோழநாட்டில் உள்ள திருவிடைமருதூர் ஆகும். இவற்றுள் சீபர்ப்பதத்துக்கும் 
திருப்புடை மருதூர்க்கும் இடையில் மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டிருப்பதால் 
இது திருஇடைமருதூர் என்னும் பெயர் பெற்றது. மயிலாடுதுறை-கும்பகோணம் தொடர்வண்டிப்
 பாதையில், திருவிடைமருதூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் இருக்கின்றது.
 மயிலாடுதுறை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஆடுதுறையை அடுத்துள்ளது இவ்வூர். 
பேருந்து வசதி மிகுதியும் உண்டு. இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள 30ஆவது தலமாகும்.

    இறைவரின் திருப்பெயர் மருதவாணர், மகாலிங்கேசுவரர். இப்பதியைச் சுற்றி இருக்கும்
சிவதலங்களின் அமைப்பை ஒட்டி நடேசமூர்த்தி - தில்லையாகவும், தட்சிணாமூர்த்தி சந்நிதி- 
ஆலங்குடியாகவும், நவக்கிரக கோயில்- சூரியனார் கோயிலாகவும் விநாயகர் சந்நிதி- 
திருவலஞ்சுழியாகவும், முருகர் சந்நிதி - சுவாமி மலையாகவும், வைரவர் சந்நிதி - 
சீகாழியாகவும்,  சண்டேசுவரர் சந்நிதி - திருச்சேய்ஞலூராகவும் விளங்குகின்றன. 
ஆதலால், இது மகாலிங்கத்தலம் என்றும் இறைவர்க்கு மகாலிங்கேசுவரர் என்றும் 
திருப்பெயர்கள் ஏற்பட்டன. இறைவியாரின் திருப்பெயர் - நன்முலைநாயகி. 
தீர்த்தம் - காவிரி அயிராவணத்துறை. பூச நாளில் இத்துறையில் இறைவர் தீர்த்தம் 
கொடுத்தருளுவர். இப்பூசநாளில் நீராடலைப்பற்றி அப்பர் பெருந்தகையார் இத்தலத்துத் 
திருக்குறுந்தொகையில், 

        'ஈச னெம்பெரு மான்இடை மருதினில் 
        பூச நாம்புகு தும்புன லாடவே'

எனவும், திருஞானசம்பந்தப் பெருந்தகையார்,

        'பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய 
        ஈச னுறைகின்ற விடைமருதீதோ'

எனவும் சிறப்பித்து அருளினர்.

    உமாதேவியார், உருத்திரர், மூத்தபிள்ளையார், முருகர், பிரமன், விஷ்ணு 
முதலியோர் பூசித்துப் பேறு பெற்றனர். பெரிய அன்பினையுடைய வரகுணபாண்டியதேவரின்
 கொலைப்பழியைப் போக்கியருளிய தலம் இதுவாகும். பத்திரகிரியார், பட்டினத்துப் 
பிள்ளையார் இவர்கள் இப்பதியில் பலநாட்கள் தங்கித் தவம்புரிந்து அருள் பெற்றனர். 
இவர்களுள் பட்டினத்தடிகள் பிரதிமை கீழைக்கோபுர வாசலிலும், பத்திரகிரியார் 
பிரதிமை மேலைக்கோபுர வாசலிலும் இருக்கின்றன. வரகுணதேவரைப் பிடித்து 
நீங்கிய பிரமகத்தியின் உருவம் கீழைக்கோபுர வாசலில் உள்ளது.

    'பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல் ஆகும் துறக்கை 
அரிது அரிது' என்று தாயுமானவரால் பெரிதும் பாராட்டப்பெற்ற பட்டினத்து அடிகளார் 
இத்தலத்திற்கு மும்மணிக்கோவை ஒன்றை இயற்றியுள்ளார். அது பதினொராந் 
திருமுறையில் சேர்க்கப் பெற்றுள்ளது. கோடீச்சுரக் கோவையைப் பாடிய கொட்டையூர் 
சிவக்கொழுந்து தேசிகர் இத்தலத்திற்குப் புராணம் இயற்றியுள்ளார். மகாவித்துவான் 
மீனாட்சி சுந்தரம்பிள்ளை உலா பாடியுள்ளார். இவைகளேயன்றி, மகாமகோபாத்தியாய 
டாக்டர் உ. வே. சாமிநாதையர் இத்தலமான்மியத்தை உரைநடையில் எழுதியிருக்கிறார்கள்.

    'திருவிடை மருதூர்த் தெருவழகு' என்னும் உலகவழக்கு இவ்வூர்த் திருவீதிகளின் 
சிறப்பைப் புலப்படுத்துவதாகும். இப்பதிக்குத் திருஞானசம்பந்தரது பதிகங்கள் ஆறும், 
திருநாவுக்கரசரது பதிகங்கள் ஐந்தும், சுந்தரமூர்த்தி நாயனாரது பதிகம் ஒன்றும் ஆகப் 
பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. 

பதிக வரலாறு

    பரவுவார் பிணி தீர்க்கும் நலத்தை உடைய திருவிடைமருதூர் மகாலிங்கேசரை 
வணங்கிப் பாடிய பலபதிகங்களுள் இதுவும் ஒன்று. (திருஞான – புராணம் - 412)

            திருச்சிற்றம்பலம்

2070.     பொங்குநூல்மார்பினீர்பூதப்படையீர்பூங்கங்கை 
    தங்குசெஞ்சடையினீர்சாமவேதம்ஓதினீர்
    எங்குமெழிலார்மறையோர்கள்முறையாலேத்தஇடைமருதில் 
    மங்குல்தோய்கோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        1

    பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையீர்! பூங் கங்கை 
    தங்கு செஞ்சடையினீர்! சாமவேதம் ஓதினீர்!
    எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த, இடைமருதில், 
    மங்குல் தோய் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    pogku nUl mArpinIr! pUtappaTaiyIr! pUg kagkai         
    tagku cenjcaTaiyinIr! cAmavEtam OtinIr!
    egkum ezil Ar maRaiyOrkaL muRaiyAl Etta, iTaimarutil, 
    magkul tOy kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     தவழும் பூணூல் அணிந்த மார்பினை உடையீர்! கணங்களாகிய 
படையினை உடையீர்! அழகிய கங்கை தங்கும் செந்நிறமான சடையினை உடையீர்! 
சாம வேதத்தை ஓதியருளினீர்! எங்கும் அழகாக மறையோர்கள் வேதாகம முறைப்படி 
வழிபடத் திருவிடைமருதூரில் மேகக்கூட்டம் வந்து தோயும் திருக்கோயிலையே 
உம்முடைய கோயிலாக மகிழ்ந்தீரே. 

குறிப்புரை:     படை - கணம். எழில் - அழகு. எங்கும் ஏத்த மகிழ்ந்தீர் என்க. மேலும் 
இவ்வாறே கூட்டுக.  முறையால் - வேதாகம விதிப்படி. மங்குல் - மேகம்.

    It is Civan, the Lord of Thiru-idai-maruthoor. Oh God! You have adorned 
Your bright chest with the sacred thread. You have the big army of bhoothas. You 
support the enticing Ganges river on Your red matted hair. You used to chant the 
Saama Veda in that particular musical tone. Those learned Brahmin scholars who have 
mastered the opulent Vedas praise You observing all the rituals in all the places 
in the city. You have selected the temple as Your abode and manifested Yourself 
in the temple with all happiness. The clouds embrace the tall towers of this temple.

2071.     நீரார்ந்தசெஞ்சடையீர்நெற்றித்திருக்கணிணிகழ்வித்தீர் 
    போரார்ந்தவெண்மழுவொன்றுடையீர்பூதம்பாடலீர் 
    ஏரார்ந்தமேகலையாள்பாகங்கொண்டீரிடைமருதில் 
    சீரார்ந்தகோயிலேகோயிலாகச்சேர்ந்தீரே.        2

    நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்! 
    போர் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர்! பூதம் பாடலீர்! 
    ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர்! இடைமருதில், 
    சீர் ஆர்ந்த கோயிலே கோயில்ஆகச் சேர்ந்தீரே.

    nIr Arnta cenjcaTaiyIr! neRRit tirukkaN nikazvittIr! 
    pOr Arnta veN mazu onRu uTaiyIr! pUtam pATalIr! 
    Er Arnta mEkalaiyAL pAkam koNTIr! iTaimarutil, 
    cIr Arnta kOyilE kOyil Akac cErntIrE.

பொருள்:     கங்கை நீர் தங்கிய சிவந்த சடையினை உடையீர்! நெற்றியில் அழகிய 
கண்ணை விளங்கச் செய்தீர்! போருக்குரிய ஒளி வாய்ந்த மழுப்படை ஒன்றினை உடையீர்! 
கணங்கள் பாடுதலை உடையீர்! அழகிய மேகலை அணிந்தவளைப் பாகமாகக் கொண்டீர்! 
திருவிடைமருதூரில் மேன்மையுடைய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகச் சேர்ந்தீரே! 

குறிப்புரை:     நிகழ்வித்தீர் -விளங்கச் செய்தீர். பூதம் பாடலீர் - பூதங்கள் பாடுதலை உடையீர். 
ஏர் - ஆழகு. சீர் சிறப்பு, மேன்மை.

    It is Civan, our Lord in Thiru-idai-maruthoor. Oh God! You support the 
river Ganges on Your red matted hair. You have on Your forehead a very attractive 
third eye. You carry a white battleaxe of terror in one of Your hands. Your bhoothas 
used to sing songs on Your praise. You have embedded Your consort Paarvathi Devi, 
on the left side of Your body, wearing the most brilliant waist ornament. You have 
selected the sacred temple in Thiru-idai-maruthoor as Your abode and manifested 
Yourself in the temple very happily.

2072.     அழல்மல்குமங்கையிலேந்திப்பூதமவைபாடச்  
    சுழல்மல்குமாடலீர்சுடுகாடல்லாற்கருதாதீர் 
    எழில்மல்குநான்மறையோர்முறையாலேத்தஇடைமருதில் 
    பொழில்மல்குகோயிலேகோயிலாகப்பொலிந்தீரே.        3

    அழல் மல்கும் அங்கையில் ஏந்தி, பூதம்அவை பாட, 
    சுழல் மல்கும் ஆடலீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்! 
    எழில் மல்கும் நால்மறையோர் முறையால் ஏத்த, இடைமருதில், 
    பொழில் மல்கு கோயிலே கோயில்ஆகப் பொலிந்தீரே.

    azal malkum agkaiyil Enti, pUtam avai pATa, 
    cuzal malkum ATalIr! cuTukATu allAl karutAtIr! 
    ezil malkum nAl maRaiyOr muRaiyAl Etta, iTaimarutil,
    pozil malku kOyilE kOyil Akap polintIrE.

பொருள்:     நெருப்பினை உள்ளங்கையில் நிறைய ஏந்திப் பூதகணங்கள் பாடச் சுழலுதல் 
மிக்க ஆடலினை உடையீர்! சுடுகாட்டில் ஆடுதலை விரும்பினீர்! அழகுடைய நான்கு
மறைகளையும் கற்றோர் முறைமையால் வழிபடத் திருவிடைமருதூரில் பூஞ்சோலைகளை
உடைய திருக்கோவிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு விளங்கினீர்.

குறிப்புரை:     அழல் - தீ. கழல் மல்கும் ஆடலீர் - சூழ்தல் நிறைந்த திருக்கூத்தை உடையீர்,
பொழில்- பூஞ்சோலை. பொலிந்தீர் - பொன்போல் விளங்கினீர். 

    It is Civan, the Lord of Thiru-idai-maruthoor. Oh God! You are the cosmic
dancer with fire in Your braced hands. The bhoothas sing Your glory and You dance 
swirling according to their musical tone. You never think of any other place than
the burial ground for Your dancing. In this city, learned Brahmin scholars, 
well-versed in the four Vedas, perform the rituals as per aagamaas in the temple 
and worship. You are manifested there. You have selected the temple for Your abode 
and thereby the temple is blessed for ever.

2073.     பொல்லாப்படுதலையொன்றேந்திப்புறங்காட்டாடலீர் 
    வில்லாற்புரமூன்றுமெரித்தீர்விடையார்கொடியினீர் 
    எல்லாக்கணங்களும்முறையாலேத்தஇடைமருதில் 
    செல்வாயகோயிலேகோயிலாகச்சேர்ந்தீரே.        4

    பொல்லாப் படுதலை ஒன்று ஏந்திப் புறங்காட்டு ஆடலீர்! 
    வில்லால் புரம்மூன்றும் எரித்தீர்! விடை ஆர் கொடியினீர்: 
    எல்லாக்கணங்களும் முறையால் ஏத்த, இடைமருதில் 
    செல்வாய கோயிலே கோயில்ஆகச் சேர்ந்தீரே.

    pollAp paTutalai onRu Entip puRagkATTu ATalIr! 
    villAl puram mUnRum erittIr! viTai Ar koTiyinIr! 
    ellAkkaNagkaLum muRaiyAl Etta, iTaimarutil, 
    celvAya kOyilE kOyil Akac cErntIrE.

பொருள்:     பொலிவில்லாத கபாலம் ஒன்றை ஏந்தி இடுகாட்டில் ஆடலையுடையீர்!
 வில்லினால் திரிபுரம் மூன்றையும் நெருப்பில் எரித்தீர்! எருது வடிவினை எழுதிய 
கொடியை உடையீர்! சிவகணங்கள் எல்லாம் முறைமையால் ஏத்தத் திருவிடைமருதூரில் 
செல்வமாகிய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகச் சேர்ந்தீரே!

குறிப்புரை:     பொல்லா - பொலிவில்லாத. விடையார் கொடி- எருதுருவெழுதிய 
கொடி. " ஏர்காட்டும் கோதிலா ஏறாங்கொடி' (திருவா- திருத்தசா- 10). எல்லாக் கணங்களும் 
சிவகணம் முதலிய எல்லாமும். செலவு ஆய - செல்வமாகிய. அம்விகுதி கெட்டது. 'செல்வாய 
செல்வம் தருவாய் போற்றி', (அப்பர்) 'செல்வாய்த் திருவாணாய் நீயே' (அப்பர் பதி. 255 பா.3).

    It is Civan, the Lord of Thiru-idai-maruthoor. Oh God! You perform the 
cosmic dance on the burial ground carrying the human skull with dry flesh and a 
messy look. You shot and burnt the three flying forts of the asuras who inflicted 
intolerable misery on the devas. You have in Your flag the figure of the bull 
drawn as Your emblem to identify Yourself. Your entire army of bhootha ganas 
(globular) sings songs in praise of You as per the rules of rituals prescribed 
for singing and dancing. You have selected the very famous temple in Thiru-idai-
maruthoor as Your abode and are manifested there.

2074.     வருந்தியமாதவத்தோர்வானோரேனோர்வந்தீண்டிப் 
    பொருந்தியதைப்பூசமாடியுலகம்பொலிவெய்தத் 
    திருந்தியநான்மறையோர்சீராலேத்தஇடைமருதில் 
    பொருந்தியகோயிலேகோயிலாகப்புக்கீரே        5

    வருந்திய  மா தவத்தோர், வானோர், ஏனோர், வந்து ஈண்டி, 
    பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த, 
    திருந்திய நால்மறையோர் சீரால் ஏத்த, இடைமருதில், 
    பொருந்திய கோயிலே கோயில்ஆகப் புக்கீரே.

    varuntiya mA tavattOr, vAnOr, EnOr, vantu INTi, 
    poruntiya taippUcam ATi ulakam polivu eyta, 
    tiruntiya nAlmaRaiyOr cIrAl Etta, iTaimarutil, 
    poruntiya kOyilE kOyil Akap pukkIrE.

பொருள்:     தவத்தினால் உடல் வாடிய சிறந்த தவத்தைச் செய்தவர்கள், 
வானுலகத்தவர்கள், மண்ணுலகத்தவர், பாதாள லோகத்தவர் முதலியோர் அனைவரும் 
வந்து திரண்டுத் தைப்பூசத்தில் தீர்த்தமாடி, அனைத்துலகத்தவரும் சிவப்பொலிவு 
எய்தத் திருவிடைமருதூரில் பொருந்திய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகப் 
புகுந்தீரே.

குறிப்புரை:     வருந்திய - தவத்தால் மெய் வருந்திய. ஏனோர்- மண்ணோர், பாதலத்தோர் 
முதலியோர். ஈண்டி - கூடி. இத்தலத்தில் தைப்பூசத்தில் தீர்த்தமாடி வழிபடுதல் தொன்று 
தொட்டு நிகழும் வழக்கு.

    'தேசம் புகுந்தீண்டி ஓர் செம்மை உடைத்தாய், பூசம் புகுந்தாடி' 
    'பூசம் நாம் புகுதும் புனலாடவே' (அப்பர்)

பொலிவு- சிவப்பொலிவு.

    Oh! It is Civan, Lord of Thiru-idai-maruthoor. The celebrated angels and 
all other devas who observe great penance, come to Thiru-idai-maruthoor on this earth 
on the Thai Poosam day to take sacred bath in the river Cauvery. Of course, all people 
on this earth also gather in the very same place to take bath in the river Cauvery on 
the Thai Poosam day (which falls on the full moon day of February). The well versed Vedic
scholar Brahmins also observe the rituals on this day and recite the glory of our 
Lord. Oh God! You are pleased to enter the temple in this city, the temple of 
virtues. Oh Lord! You are there in the temple in Thiru-idai-maruthoor and grace the 
whole world to become blessed.

2075.     சலமல்குசெஞ்சடையீர்சாந்தநீறுபூசினீர் 
    வலமல்குவெண்மழுவொன்றேந்திமயானத்தாடலீர் 
    இலமல்குநான்மறையோரினிதாயேத்தஇடைமருதில் 
    புலமல்குகோயிலேகோயிலாகப்பொலிந்தீரே.        6

    சலம் மல்கு செஞ்சடையீர்! சாந்தம்நீறு பூசினீர்! 
    வலம் மல்கு வெண்மழு ஒன்று ஏந்தி, மயானத்து ஆடலீர்! 
    இலம் மல்கு நால்மறையோர் இனிதா ஏத்த, இடைமருதில், 
    புலம் மல்கு கோயிலே கோயில்ஆகப் பொலிந்தீரே.

    calam malku cenjcaTaiyIr! cAntam nIRu pUcinIr! 
    valam malku veNmazu onRu Enti, mayAnattu ATalIr! 
    ilam malku nAlmaRaiyOr initA Etta, iTaimarutil, 
    pulam malku kOyilE kOyil Akap polintIrE.

பொருள்:     நீர் (கங்கையாறு) நிறைந்த சிவந்த சடைமுடியினை உடையீர்! உடல்மேல் 
மணமுள்ள திருநீற்றைப் பூசினீர்! வெற்றி கொள்ளும் மழுப்படையை ஏந்தி மயானத்தில் 
ஆடுவீர்! சிவப்பற்றின்றி வேறு பற்றில்லாத நான்மறையோர் மகிழ்ச்சியுடன் வழிபடத் 
திருவிடைமருதூரில் ஞானம் நிறைந்த திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் 
கொண்டு விளங்கினீரே!

 குறிப்புரை:      சலம்-கங்கை. நீர் வலம்-   வெற்றி.  வலப்பக்கமும் ஆம்.  இலம்- இல்லம். வீடு. 
பற்றின்மையும் ஆகும். புலம் - அறிவு. இடமுமாம். 

    Oh! It is Civan, our Lord in Thiru-idai-maruthoor. Oh God! You support 
the river Ganges on Your red matted hair. You have smeared Your body with holy 
ashes and sandal paste. You dance in the burial ground holding a mighty white 
axe in Your hand. In this city, the Brahmin scholars of four Vedas on religious 
festival days gather in the temple in Thiru-idai-maruthoor and praise Your grace 
and worship You alone. You have selected this temple of high divinity as Your 
abode and You have manifested Yourself there.

2076.     புனமல்குகொன்றையீர்புலியினதளீர்பொலிவார்ந்த 
    சினமல்குமால்விடையீர்செய்யீர்கரியகண்டத்தீர் 
    இனமல்குநான்மறையோரேத்துஞ்சீர்கொளிடைமருதில் 
    கனமல்குகோயிலேகோயிலாகக்கலந்தீரே.         7

    புனம் மல்கு கொன்றையீர்! புலியின் அதளீர்! பொலிவு ஆர்ந்த 
    சினம் மல்கு மால்விடையீர்! செய்யீர்! கரிய கண்டத்தீர்! 
    இனம் மல்கு நால்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில், 
    கனம் மல்கு கோயிலே கோயில்ஆகக் கலந்தீரே.

    punam malku konRaiyIr! puliyin ataLir! polivu Arnta 
    cinam malku mAlviTaiyIr! ceyyIr! kariya kaNTattIr! 
    inam malku nAlmaRaiyOr Ettum cIr koL iTaimarutil, 
    kanam malku kOyilE kOyil Akak kalantIrE.

பொருள்:     முல்லை நிலத்தில் பூக்கும் கொன்றை மாலையை நிறைய அணிந்தீர்! 
புலியின் தோலினை உடுத்தீர்! தோற்றப் பொலிவுடையதும் சினம்  மிக்கதுமாகிய எருதினை  
வாகனமாக உடையீர்!  சிவந்த மேனியினீர்! கரிய மிடற்றினை உடையீர்! திருவிடை
மருதூரில் நான்மறையோர் திரண்டு வழிபடும் பெருமையுடையதும் மேகம் தங்கும் 
உயர்ச்சியுடையதுமாகிய திருக்கோயிலையே கோயிலாகக் கொண்டு சேர்ந்தீரே!

குறிப்புரை:     புனம் - கொல்லை. அதள்- தோல். மால்விடை- திருமாலாகிய எருது. அறவிடை.         
உயிர்விடை என்பவை வேறு. இம்மூன்றும் சிவபிரானுக்கு ஊர்தி. செய்யீர் - செந்நிறத்தை உடையீர்.
செம்மேனியெம்மான் . இனம்- கூட்டம். மறைக்கும். மறையோர்க்கும் பொது.  கனம்-மேகம். 
கோயிலின் உயர்ச்சி குறித்தது.

    Oh! It is Civan, our Lord in Thiru-idai-maruthoor. Oh God! You wear on 
Your head the strings of cassia flowers growing in plenty in the forest area.
You wear on Your waist the tiger's hide. For the comfort of Your conveyance You 
use the white, good looking, but angry bull (Lord Civa has three bulls for His 
vehicle as conveyance, One is Thirumaal, the second is God of Virtue, and the 
third is the nature of souls). Your body is fully red in colour but Your neck 
is dark blue in colour. In this city, water is in plenty, everywhere. The 
Brahmin scholars who are well-versed in the four Vedas do live in large 
numbers in this place. They all gather in the temple of this Thiru-idai-maruthoor 
city and pray our Lord. This famous big temple where black clouds gather and 
crawl over the towers, You have selected, for Your abode and are manifested there.

2077.     சிலையுய்த்தவெங்கணையாற்புரமூன்றெரித்தீர்திறலரக்கன்     
    தலைபத்துந்திண்டோளும்நெரித்தீர்தையல்பாகத்தீர்     
    இலைமொய்த்ததண்பொழிலும்வயலுஞ்சூழ்ந்தஇடைமருதில்
    நலமொய்த்தகோயிலேகோயிலாகநயந்தீரே.        8

    சிலை உய்த்த வெங்கணையால் புரம்மூன்று எரித்தீர்! திறல் அரக்கன் 
    தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர்! தையல்பாகத்தீர்! 
    இலை மொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில், 
    நலம் மொய்த்த கோயிலே கோயில்ஆக நயந்தீரே.

    cilai uytta vegkaNaiyAl puram mUnRu erittIr! tiRal arakkan
    talaipattum tiNtOLum nerittIr! taiyal pAkattIr! 
    ilai moytta taNpozilum vayalum cUznta iTaimarutil,             
    nalam moytta kOyilE kOyil Aka nayantIrE.

பொருள்:     வில்லிலிருந்து எய்த கொடிய அம்பினால் மூன்று மதில்களையும் 
எரித்தீர். ஆற்றலுடைய அரக்கன் இராவணனின் தலைபத்தும் திண்ணிய தோள்களை 
நசுக்கினீர்!. உமையொரு பாகத்தீர்! தழைத்த குளிர்ச்சியுடைய சோலைகளும் வயல்களும் 
சூழ்ந்த திருவிடைமருதூரில் அழகு மிக்க திருக்கோயிலையே கோயிலாக விரும்பினீரே!

குறிப்புரை:     உய்த்த - செலுத்திய. திறல் - வலிமை. தையல் - உமாதேவியார். 
நலம் - அழகு. நயந்தீர் - விரும்பினீர்.

    Oh! It is Civan, the Lord of Thiru-idai-maruthoor. Oh God! You destroyed 
completely the three flying forts of Your adversaries, the asuras, by fixing a 
dreadful arrow in the bow of Meru mountain. You crushed the ten heads and shoulders 
of the valiant king of Sri Lanka - Raavanan. You carry Your consort on the left half 
of Your body. You have selected the attractive temple in the Thiru-idai-maruthoor 
city which is surrounded by forests of all kinds of leaves and rich paddy fields 
as Your abode and You are manifested there.

2078.     மறைமல்குநான்முகனும்மாலுமறியாவண்ணத்தீர் 
    கறைமல்குகண்டத்தீர்கபாலமேந்துகையினீர் 
    அறைமல்குவண்டினங்களாலுஞ்சோலையிடைமருதில் 
    நிறைமல்குகோயிலேகோயிலாகநிகழ்ந்தீரே.        9

    மறை மல்கு நான்முகனும், மாலும் அறியா வண்ணத்தீர்! 
    கறை மல்கு கண்டத்தீர்! கபாலம் ஏந்து கையினீர்! 
    அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில், 
    நிறை மல்கு கோயிலே கோயில்ஆக நிகழ்ந்தீரே.

    maRai malku nAnmukanum, mAlum aRiyA vaNNattIr! 
    kaRai malku kaNTattIr! kapAlam Entum kaiyinIr! 
    aRai malku vaNTu inagkaL Alum cOlai iTaimarutil, 
    niRai malku kOyilE kOyil Aka nikazntIrE.

பொருள்:     வேதம் வல்ல பிரமனும் திருமாலும் அறியமுடியாத இயல்பினீர்! 
கறையுடைய கண்டமுடையீர்! மண்டையோட்டினை ஏந்திய கரம் உடையீர்! ஒலிக்கின்ற 
வண்டுக் கூட்டங்கள் ஆரவாரிக்கும்  சோலைகளையுடைய  திருவிடைமருதூர் 
கோயிலையே கோயிலாக விளங்கினீரே!

குறிப்புரை:     கறை - நஞ்சின் கறுப்பு. அறை - ஓசை. கபாலம்-பிரம்ம கபாலம். ஆலும் - ஒலிக்கும்.
 நிறை- 'நிறையால் நினைபவர்'.  நிகழ்ந்தீர் - விளங்கினீர். 

    Oh! It is Civan, Lord of Thiru-idai-maruthoor. Lord Brahma who chants the 
Vedas and Lord Thirumaal could not comprehend our Lord. Thereafter He rose as that
incomprehensive, great light and gave darshan to both. Your neck is dark blue in colour. 
You have in Your hand the skull for getting alms. This city is surrounded by groves with 
humming bees in large numbers. You have selected this sacred temple as Your abode; 
and You are manifested there.

2079.     சின்போர்வைச்சாக்கியரும்மாசுசேருஞ்சமணரும் 
    துன்பாயகட்டுரைகள்சொல்லியல்லல்தூற்றவே 
    இன்பாய அந்தணர்களேத்துமேர்கொளிடைமருதில் 
    அன்பாயகோயிலேகோயிலாக அமர்ந்தீரே.        10

    சின் போர்வைச் சாக்கியரும், மாசு சேரும் சமணரும், 
    துன்புஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே, 
    இன்புஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில், 
    அன்புஆய கோயிலே கோயில்ஆக அமர்ந்தீரே.

    cin pOrvaic cAkkiyarum, mAcu cErum camaNarum, 
    tunpu Aya kaTTuraikaL colli allal tURRavE, 
    inpu Aya antaNarkaL Ettum Er koL iTaimarutil, 
    anpu Aya kOyilE kOyil Aka amarntIrE.

பொருள்:     மேனியில் சிறிய போர்வை போர்த்த சாக்கியரும் மாசு சேர்ந்த மேனியுடைய 
சமணரும் துன்பம் தருவனவாகியவற்றைச் சொல்லிப் பழி தூற்ற, இன்பவடிவாகிய அந்தணர்கள் 
வழிபடும் அழகுடைய திருவிடைமருதூரில் அன்பிற்குரிய திருக்கோயிலையே கோயிலாக 
விரும்பித் தங்கினீரே!

குறிப்புரை:     சின் (போர்வை) - சின்மை, அற்பம், திரிபு. 'நன்பொருள்' என்பதிற் போல லகரம் 
னகரமாகத் திரிந்தது. துன்பு ஆய கட்டுரைகள்- துன்பந்தருவனவாய கட்டிச் சொல்லியவை. அல்லல் - 
துன்பம் .இன்பு - இன்பம். அன்பு ஆயகோ 'அன்பே சிவம்' அன்பிற்குரியதாகிய கோயிலுமாம். 
அமர்தல்- விரும்பியிருத்தல்.

    Oh! It is Civan, Lord of Thiru-idai-maruthoor. In this city, the Buddhists in 
mean dress and the dust covered Jains utter slander on Your devotees. But the Brahmins 
brush it aside; they who care for spiritual joy, go to the big beautiful temple and 
recite all songs in praise of You. Thus, it becomes the temple of supreme love. Such a
beautiful abode is in Thiru-idai-maruthoor.

2080.     கல்லின்மணிமாடக்கழுமலத்தார்காவலவன் 
    நல்ல அருமறையான்நற்றமிழ்ஞானசம்பந்தன் 
    எல்லியிடைமருதிலேத்துபாடலிவைபத்தும் 
    சொல்லுவார்க்குங்கேட்பார்க்குந்துயரமில்லையே.        11

    கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன் 
    நல்ல அருமறையான், நல்-தமிழ் ஞானசம்பந்தன் 
    எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் 
    சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே.

    kallin maNi mATak kazumalattAr kAvalavan- 
    nalla arumaRaiyAn, nal-tamiz njAnacampantan- 
    elli iTaimarutil Ettu pATal ivai pattum 
    colluvArkkum kETpArkkum tuyaram illaiyE.

பொருள்:     கற்களினால் சமைக்கப்பட்ட மணிமாடங்களை உடைய கழுமலத்தில் 
வாழ்பவரின் காவலனும் நல்ல மறையவனும் நற்றமிழ் வல்லவனுமாகிய திருஞானசம்பந்தன் 
இரவு நேரத்தில் திருவிடைமருதூரில் வழிபட்டுப் பாடிய பாடல்களாகிய இவை பத்தினையும் 
கூறுபவர்க்கும் கூறியதைக் கேட்பவருக்கும் துயரம் இல்லை.

 குறிப்புரை:     கல்லின் மணிமாடம்- கல்லாற் கட்டப்பட்ட அழகிய மாடங்களையுடைய 
(கழுமலம்) கழுமலத்தார் -சீகாழியில் உறையும் சிவமறையோர். காவலவன் - அரசன். வேந்தன். 
'சண்பையர்வேந்தன்'  எல்லி - இரவு. துயரம் - பிறப்பு இறப்புக்கள். 

    Oh! It is Civan, Lord of Thiru-idai-maruthoor. Our saint Thiru-gnana-Sambandar 
hailed from Kazhumalam as its king. This city has got a number of very attractive 
palaces of many storeys, all built of blue granite. Thiru-gnana-Sambandar, a scholar 
in Vedas went to the temple in Thiru-idai-maruthoor at night and sang these famous 
ten songs in praise of our Lord in rich Tamil language. Those devotees who recite 
these ten verses and those who hear these songs sung by others will have no suffering 
or sorrow in their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            56ஆம் பதிகம் முற்றிற்று
            End of 56th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 193                பதிக எண்: 57

57. திருநல்லூர்                    57. THIRU-NALLOOR

பண்: சீகாமரம்                    Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    கும்பகோணம்- தஞ்சாவூர் தொடர்வண்டிப் பாதையில், சுந்தரப்பெருமாள் கோயில் 
தொடர்வண்டி நிலையத்திற்குத் தெற்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் 
தென்கரையில் உள்ள இருபதாவது தலமாகும். இறைவர் திருப்பெயர் கல்யாணசுந்தரேசுவர். 
இறைவி திருப்பெயர் கல்யாணசுந்தரி. தீர்த்தம் சப்தசாகரதீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில்
உள்ளது.

    திருச்சத்தி முற்றத்தில் எழுந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தை அப்பர் பெருமான் 
வழிபட்டு அவரது திருவடியைத் தன் தலைமேல் வைத்தருள வேண்டுமென்று வேண்ட, அவர் 
'நல்லூருக்கு வா ஆங்கே நின் நினைப்பதனை முடிக்கின்றோம்' என்று கூறியருள அவ்வாறே 
அப்பர் பெருமான் அங்குவர, நல்லூர்ப் பெருமான் தன் திருவடியை அப்பர் தலைமேல் வைத்துத் 
திருவடி தீட்சை செய்த பதியாகும் இது.

    இச்செய்தி, 'நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் 
நல்லவாறே' (திருத்தாண்டகம் திருப்பாடல் 4) என்னும் தேவாரப் பகுதியால் அறியலாகும். 
சிவனடியார்களுக்குக் கந்தை, கீளுடை கோவணம் இவைகளைக் கருத்தறிந்து உதவிவந்த 
அமர்நீதி நாயனார்க்கும் அவரது குடும்பத்தாருக்கும் முத்தியளித்த தலம். இச்செய்தியைத் 
திருநாவுக்கரசு நாயனார், இவ்வூர்த் திருவிருத்தம் ஏழாம் திருப்பாட்டில்,

    'நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே 
    கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடந்தான் 
    வாட்கொண்ட நோக்கி மனைவியொடு மங்கோர் வாணிகனை 
    ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே'

எனச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

    அகத்திய முனிவருக்குக் கல்யாணக் கோலத்தை இப்பதியில் சிவபெருமான் காட்டியருளினார்.
 இவ்வூர்க்கு ஞானசம்பந்தர் பதிகங்கள் மூன்று. திருநாவுக்கரசு நாயனார் பதிகங்கள் இரண்டு ஆக 
ஐந்து பதிகங்கள் இருக்கின்றன. இக்கோயில் மாடக்கோயில் அமைப்பு வாய்ந்தது. இத்தலத்தில் 
வைகாசி மாதத்தில் ஏழூர் விழா நடந்து வருகின்றது. இலிங்கத் திருமேனியில் துவாரங்கள் 
காணப்படுகின்றன.

    அமர்நீதி நாயனார், அவருடைய மனைவியார் இவர்களின் பிரதிமைகள் கற்சிலையிலும் 
செப்புசிலையிலும் இருக்கின்றன.

பதிக வரலாறு

    முதல் திருமுறை பதிகம் 86இன் பதிக வரலாறு காண்க.

                திருச்சிற்றம்பலம்

2081     பெண்ணமருந்திருமேனியுடையீர்பிறங்குசடைதாழப் 
    பண்ணமரும்நான்மறையேபாடியாடல்பயில்கின்றீர் 
    திண்ணமரும்பைம்பொழிலும்வயலுஞ்சூழ்ந்ததிருநல்லூர் 
    மண்ணமருங்கோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        1

    பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு சடை தாழப் 
    பண் அமரும் நால்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்! 
    திண் அமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் 
    மண் அமரும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    peN amarum tirumEni uTaiyIr! piRagku caTai tAzap 
    paN amarum nAlmaRaiyE pATi ATal payilkinRIr! 
    tiN amarum paimpozilum vayalum cUznta tiru nallur, 
    maN amarum kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     பெண்ணை ஒரு பாகத்தில் கொண்ட திருமேனியை உடையவரே! விளங்குகின்ற 
சடைமுடி தாழ, நான்கு மறைகளையும் இசையுடன் பாடிக் கொண்டு கூத்தாடுதலை இடைவிடாது 
செய்கின்றீர்! நெருங்கிய பசிய பொழிலும் வயலும் சூழ்ந்த திருநல்லூரில், மண்ணுலகத்தவர் 
விரும்பும் திருக்கோயிலையே உம்முடைய கோயிலாக மகிழ்ந்தீரே!

குறிப்புரை:     பெண்ணமருந் திருமேனி உடையீர்- மங்கை பங்கரே. பிறங்கு - விளங்குகின்ற. 
பண்- இசை. திண் - உறுதி. மண் அமரு- மண்ணோர் விரும்பும். நிலத்தில் பொருந்தும் என்பது 
சிறந்ததன்று. 'வானமருங்கோயில்' (பா.4) 'வான்தோயுங்கோயில்' (பா.7).

    Oh! Our God Civan is the Lord of Thiru-nalloor. Oh God! You have embedded 
Your consort Uma Devi on the left half of Your body. Your bright matted locks hang 
down Your head. You chant the songs of the four Vedas in melodious musical tone and
dance according to Your music. The temple in this city of Thiru-nalloor is surrounded
by ever green gardens full of exuberant lush trees as well rich paddy fields. The 
people on this earth desire to visit this temple and worship You there. Oh God! You have 
selected this temple as Your abode and are manifested in this sacred temple. 

2082.     அலைமல்குதண்புனலும்பிறையுஞ்சூடிஅங்கையில் 
    கொலைமல்குவெண்மழுவுமனலுமேந்துங்கொள்கையீர் 
    சிலைமல்குவெங்கணையாற்புரமூன்றெரித்தீர்திருநல்லூர் 
    மலைமல்குகோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        2

    அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி, அங்கையில் 
    கொலை மல்கு வெண்மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர்! 
    சிலை மல்கு வெங்கணையால் புரம்மூன்றும் எரித்தீர்! திரு நல்லூர், 
    மலை மல்கு கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    alai malku taNpunalum piRaiyum cUTi, agkaiyil 
    kolai malku veN mazuvum analum Entum koLkaiyIr! 
    cilai malku vegkaNaiyAl puram mUnRum erittIr! tiru nallUr, 
    malai malku kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     அலைகள் மிகவீசும் கங்கையாற்றினையும் பிறையையும் சிரசில் சூடி ,அகங்கையில் 
கொலைத் தொழில் உடைய வெண்மையான ஒளிவீசும் மழுப்படையையும் நெருப்பையும் ஏந்துவீர்! 
மேரு மலையாகிய வில்லில் எய்தப் பெற்ற திருமாலாகிய கொடிய கணையினால் திரிபுரம் மூன்றையும் 
எரியச் செய்தீர்!  திருநல்லூரில் மலைபோலும் தோற்றம் உடைய திருக்கோயிலையே உம்முடைய 
கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே! 

குறிப்புரை:     தண்புனல்- குளிர்நீர்; கங்கை. அனல் -தீ. கொள்கை - விரதம்.  மேற்கோளும் ஆம். 
சிலை - மேருமலையாகிய வில்.  வெங்கணை - திருமாலாகிய அம்பில் தீயாகியமுனை உடைமையால் 
வெம்மை கூறப்பட்டது. கணையின் கொடுமை குறித்தலுமாம். மலைமல்கு கோயில்- மலை போலத் 
தோற்றம் நிறைந்த கோயில். 'வெள்ளிமால் வரையை - நேர் விரிசுடர்க் கோயில்'  
(பெரி. திருஞா. 368 பா . 10 பார்க்க).  

    Oh! Our God Civan is the Lord of Thiru-nalloor. Oh God! You adorn Your head 
with the baby moon and the river Ganges of surging, cool waves. You have that killer, 
white axe, and blazing fire on Your attractive hands. You bent the mount Meru and
shot the dreadful arrow and burnt the three flying forts of the asuras. You have 
happily manifested Yourself in the big mountain-like temple in Thiru-nalloor which 
You have selected as Your abode.

2083.     குறைநிரம்பாவெண்மதியஞ்சூடிக்குளிர்புன்சடைதாழப் 
    பறைநவின்றபாடலோடாடல்பேணிப்பயில்கின்றீர்' 
    சிறைநவின்றதண்புனலும்வயலுஞ்சூழ்ந்ததிருநல்லூர் 
    மறைநவின்றகோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        3

    குறை நிரம்பா வெண்மதியம் சூடிக் குளிர்புன்சடை தாழ, 
    பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணிப் பயில்கின்றீர்! 
    சிறை நவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர், 
    மறை நவின்ற கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    kuRai nirampA veNmatiyam cUTik kuLirpuncaTai tAza, 
    paRai navinRa pATalOTu ATal pENip payilkinRIr! 
    ciRai navinRa taNpunalum vayalum cUznta tiru nallUr, 
    maRai navinRa kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     பிறைமதியைச் சடையிற்சூடி, கங்கையாற்றால் குளிர்ந்த சடை தாழ, பறை 
ஒலிக்கப் பாடலோடு கூத்தாடலையும் விரும்பிப் பயில்கின்றீர்! அணைகளால் தடை செய்யப்பட்ட
 குளிர்ந்த புனலும் வயலும் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் மிக்கொலிக்கும் திருக்கோயிலையே 
உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே!

குறிப்புரை:     குறைமதியம்; நிரம்பாமதியம்; வெண்மதியம் என்க. குறை நிரம்பாத மதியமென்று 
கொளின் இறைவன் திருமுடி மேற்பிறை என்றும் பிறையாகவே இருப்பதாம். தேய்தலுங் 
குறைதலுமில்லை என்று கொள்ளலும் ஆம். பறை - வாத்தியங்கள். நவின்ற - மிக்கொலித்த. 
சிறை - அணை. நவின்ற - செய்த. மறை நவின்ற - வேதங்களைப் பயிலுதற்கு இடமான.

    Oh Civa! You are the Lord of Thiru-nalloor. You adorned Your head with the 
baby moon which never waxes or wanes on your soft matted hair, cooled with cold 
water lapping on Your body. You are pleased to sing melodious, divine songs and 
dance according to the tone of the musical drums. Thiru-nalloor is surrounded by 
paddy fields, full of cool water flowing from the dams. In the temple of 
Thiru-nalloor, Vedic scholars always chant the Vedas inside the temple. 
Oh God! You had joyfully selected this temple as Your abode. You, therefore, 
are manifested there in the temple very happily.

2084.     கூனமரும்வெண்பிறையும்புனலுஞ்சூடுங்கொள்கையீர் 
    மானமரும்மென்விழியாள்பாகமாகுமாண்பினீர் 
    தேனமரும்பைம்பொழிலின்வண்டுபாடுந்திருநல்லூர் 
    வானமருங்கோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        4

    கூன் அமரும் வெண்பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்: 
    மான் அமரும் மென்விழியாள் பாகம்ஆகும் மாண்பினீர்! 
    தேன் அமரும் பைம்பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் 
    வான் அமரும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    kUn amarum veNpiRaiyum punalum cUTum koLkaiyIr! 
    mAn amarum menviziyAL pAkam Akum mANpinIr! 
    tEn amarum paim pozilin vaNTu pATum tiru nallUr, 
    vAn amarum kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     வளைவான வெண்பிறையையும், கங்கையையும் சூடுவீர்! மான் பிணையின் மருண்ட
 கண் போலும் மருட்சியை உடைய மென்விழியாளாகிய உமையைத் திருமேனியில் பாகமாகக் கொள்ளும் 
பெருமை உடையீர்! தேன் உடைய பைம்பொழிலில் வண்டுகள் பாடும் திருநல்லூரில் வானளாவிய 
திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே!

குறிப்புரை:     கூன்- வளைவு. மான் அமரும் விழி- மான் மருண்டு நோக்குவது போல நோக்கும் 
விழிகள். கண் வேறு விழிவேறு ஆயினும் இரண்டும் ஒன்றாகக் கொண்டு இருவகை வழக்கிலும் ஆள்வர். 
மாண்பு- பெருமை. வான்- வானோர். அமரும் - விரும்பித் தொழும். வானளாவிய எனலுமாம்.
'மண்ணமருங் கோயில்' (பா.1) ' வான்தோயுங்கோயில்' (பா.7). 

    Oh! It is Civan, the Lord of Thiru-nalloor. Oh God! You wear the curved baby
moon on Your head along with the river Ganges. You have embedded Your consort Uma Devi, 
with delicate fluttering eyes like a deer, on the left half of Your body. You have such 
virtues in Your action. In the city of Thiru-nalloor, green, fertile groves overflowing 
with honey are many. In these areas bees hum while flying to suck honey. The temple of 
this city is very tall touching the sky. You have desired to have this temple as Your 
abode and are manifested there with much happiness.

2085.     நிணங்கவரும்மூவிலையுமனலுமேந்திநெறிகுழலாள் 
    அணங்கமரும்பாடலோடாடல்மேவுமழகினீர் 
    திணங்கவருமாடரவும்பிறையுஞ்சூடித்திருநல்லூர் 
    மணங்கமழுங்கோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        5

    நிணம் கவரும் மூவிலையும் அனலும் ஏந்தி, நெறிகுழலாள் 
    அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்: 
    திணம் கவரும் ஆடுஅரவும் பிறையும் சூடி, திரு நல்லூர், 
    மணம் கமழும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    niNam kavarum mUvilaiyum analum Enti, neRikuzalAL 
    aNagku amarum pATalOTu ATal mEvum azakinIr! 
    tiNam kavarum ATu aravum piRaiyum cUTi, tiru nallUr, 
    maNam kamazum kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     மூன்று இலைகள் போன்ற வடிவமுடைய கொழுப்புப் பூசிய சூலத்தையும், 
அனலையும் ஏந்தி, நெறித்த குழலாளாகிய உமாதேவியார் விரும்பும் பாடலொடு ஆடலையும் 
விரும்பும் அழகினை உடையீர்! (நஞ்சால்) உயிரைக் கவரும் திண்மையுடைய படமெடுத்து 
ஆடுகின்ற பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் சிவமணங்கமழும் திருக்கோயிலையே 
உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே! 

குறிப்புரை:     நிணம் - கொழுப்பு. நெறிகுழலாள் - நெறித்த கூந்தலை உடைய உமாதேவியார். 
அணங்கு- தெய்வம். குழலாளாகிய அணங்கு என்றேனும் தெய்வத்தன்மை பொருந்திய பாடல் 
என்றேனும் கொள்ளலாம். திணம் (திண்ணம்) - உறுதியாக. கவரும் - (நஞ்சால் உயிரைக்) கவரும். 
அரவு - பாம்பு பிறையைத் திண்ணங் கவரும் அரவு எனலும் பொருந்தும். ‘சொலீர் ... செஞ்சடையிற் 
பிறை பாம்புடன் வைத்ததே' (பதி. 137 பா. 1) மணம் - சிவமணம். கமழும் - மணக்கும்.

    Oh! It is Civan, Lord of Thiru-nalloor. Oh God! You hold in Your hand a 
trident battle axe which is kept always smeared in lard; a glowing flame in another 
hand. You are the most handsome and beautiful Lord, desirous of dancing and singing 
along with Your consort Uma Devi with dense sweet smelling hair. You have accommodated 
the snake, which covets and kills other living creatures scrupulously. Also You have
retained the moon contrasting on Your head along with the snake. The temple in the city 
of Thiru-nalloor, is always fragrant (Civa's fragrance) owing to the spiritual activities 
in the temple. You have selected this temple as Your abode and are manifested there happily.

2086.     கார்மருவுபூங்கொன்றைசூடிக்கமழ்புன்சடைதாழ 
    வார்மருவுமென்முலையாள்பாகமாகுமாண்பினீர் 
    தேர்மருவுநெடுவீதிக்கொடிகளாடுந்திருநல்லூர் 
    ஏர்மருவுகோயிலேகோயிலாகஇருந்தீரே.        6

    கார் மருவு பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை தாழ, 
    வார் மருவு மென்முலையாள் பாகம்ஆகும் மாண்பினீர்! 
    தேர் மருவு நெடுவீதிக் கொடிகள் ஆடும் திரு நல்லூர், 
    ஏர் மருவு கோயிலே கோயில்ஆக இருந்தீரே.

    kAr maruvu pUgkonRai cUTik kamaz puncaTai tAza, 
    vAr maruvu menmulaiyAL pAkam Akum mANpinIr! 
    tEr maruvu neTuvItik koTikaL ATum tiru nallUr,
    Er maruvu kOyilE kOyil Aka iruntIrE.                    

பொருள்:     கார் காலத்தில் மலரும் அழகிய கொன்றைப் பூக்களைச் சூடி, மணம் கமழும் 
சடை தாழ, கச்சணிந்த மென்முலையாளைப் பாகமாகக் கொண்ட பெருமையினை உடையீர்! 
தேரோடும் நீண்ட பெரிய வீதிகளையும் கொடிகள் ஆடும் மாளிகைகளையும் உடைய 
திருநல்லூரில் அழகிய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே !

குறிப்புரை:     கார் - கார்காலம். 'காரார்கொன்றை’ (தி.1 ப.56 பா.1). 'கார்மலி கொன்றை' 
(தி.3 ப.60 பா.6) 'காரினார் மலர்க்கொன்றை தாங்கு கடவுள்' (பதி. 186 பா. 6). 'கார்க்கொன்றை 
மாலை கலந்ததுண்டோ'  'காரினார் கொன்றைக் கண்ணியார்' (தி.2 ப.162 பா.6).வார் - கச்சு. 
'தேர்மருவு நெடுவீதிக் கொடிகள் ஆடும்' என்றதால், திருநல்லூரின் பிரமோற்சவமும் 
மாடவீதிகளின் சிறப்பும் குறித்தவாறு. ஏர் - ஆழகு

    Oh! It is Civan, our Lord in Thiru-nalloor. Oh God! You have adorned Your 
head with strings of cassia flowers which blossom in large numbers in the rainy 
season. Your long sweet smelling hair descends. You have embedded Your consort on 
the left half of Your body with her tender breasts, covered well. Your greatness 
has no equal. In this temple of this city car festivals take place according 
to the seasons. The temple chariot plies in the broad long streets where 
the flags placed on top floors of tall palaces beautifully flutter. Oh God! 
You have chosen the temple in this beautiful city and with Your presence 
glorified it.

2087.     ஊன்தோயும்வெண்மழுவுமனலுமேந்தியுமைகாண 
    மீன்தோயுந்திசைநிறையவோங்கியாடும்வேடத்தீர் 
    தேன்தோயும்பைம்பொழிலின்வண்டுபாடுந்திருநல்லூர் 
    வான்தோயுங்கோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        7

    ஊன் தோயும் வெண்மழுவும் அனலும் ஏந்தி, உமை காண, 
    மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்! 
    தேன் தோயும் பைம்பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர், 
    வான் தோயும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    Un tOyum veN mazuvum analum Enti, umai kANa, 
    mIn tOyum ticai niRaiya Ogki ATum vETattIr! 
    tEn tOyum paimpozilin vaNTu pATum tiru nallUr, 
    vAn tOyum kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     தலை தோய்ந்த வெண்ணிற ஒளி வீசும் மழுவாயுதமும், நெருப்பும் ஏந்தி 
உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானவெளி நிறையுமாறு விளங்கி ஆடும் 
திருவேடம் உடையீர்! தேன் நிறைந்த பசிய பொழிலில் வண்டுகள் முரலுகின்ற திருநல்லூரில் 
விண்முட்டும் திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே!

குறிப்புரை:     ஊன்- தசை. மீன் தோயும் திசை- நட்சத்திரங்கள் பொருந்திய வானம். இது 
பத்துத் திக்குகளுள் மேலிடம். வேடம் - நடனக்கோலம். வான் தோயும் கோயில் - 'வான் அமரும் 
கோயில்' (பா. 4) 

    Oh! It is Civan, the Lord of Thiru-nalloor. Oh God! You hold in one of Your 
hands the white battleaxe with sticky flesh of the dead. In another hand You hold 
blazing flame. You perform the cosmic dance with Your whole divine body enveloping 
the vast cosmos and touching the sky with the twinkling stars and filling all the 
directions with its forceful vibration. Our goddess Uma Devi, is a spectator of 
Your magnificent dance. In the city of Thiru-nalloor, flower gardens with profuse 
honey are quite common. Here the bees gather making a humming noise and sucking 
honey from the flowers. Oh God! You are happily manifested in this temple where 
the towers are tall, touching the sky.

2088.     காதமரும்வெண்குழையீர்கறுத்த அரக்கன்மலையெடுப்ப 
    மாதமரும்மென்மொழியாள்மறுகும்வண்ணங்கண்டுகந்தீர் 
    தீதமராஅந்தணர்கள்பரவியேத்துந்திருநல்லூர் 
    மாதமருங்கோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        8

    காது அமரும் வெண்குழையீர்! கறுத்த அரக்கன் மலை எடுப்ப, 
    மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர்! 
    தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர், 
    மாது அமரும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    kAtu amarum veNkuzaiyIr! kaRutta arakkan malai eTuppa,
    mAtu amarum menmoziyAL maRukum vaNNam kaNTu ukantIr!
    tItu amarA antaNarkaL paravi Ettum tiru nallUr,
    mAtu amarum kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     திருச்செவியில் வெண்ணிறத்த குழையை உடையீர்! சினங்கொண்ட அரக்கன்
 இராவணன் உம்முடைய கயிலைமலையை எடுக்கவே, காதல் நிறைந்த உமையாள் அஞ்ச,  அவனை 
அடரும் விளையாட்டினை விரும்பினீர்! தீவினைகள் வெறுத்த நல் அந்தணர்கள்  பரவி வழிபடும் 
திருநல்லூரில் பெருமை உடைய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு 
மகிழ்ந்தீரே! 

குறிப்புரை:     காது- காதில். கறுத்த - கோபித்த. கருநிறமுடைய 'நீலமாமணி நிறத்து 
அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க வாலினால் கட்டிய வாலியார்’ (தி.3 ப.91 பா.8). 
மாது - காதல், மறுகும் வண்ணம் - கலங்கும்படி கண்டு உகத்தல் - மகிழ் விளையாட்டு. 
தீது அமரா - தீ வினையை வெறுத்த.  மாது - பெருமை.

    Oh! It is Civan, our Lord in Thiru-nalloor. Oh God! You have fixed 
the white ear-ring of tender green leaf in Your right ear. The king of Sri Lanka, 
Raavanan, in an angry mood, due to egoism, tried his best to lift the mount Himalayas 
and place it aside. At that moment our goddess Uma Devi, who usually speaks tender 
words inspiring love, shuddered and You laughed at it. In the city of Thiru-nalloor, 
Brahmin scholars who never indulge in bad actions live in large numbers. They go to 
the temple prostrate and recite Your praise and worship You. Oh God! You have happily 
selected the same temple and are manifested there.

2089.     போதின்மேலயன்திருமால்போற்றியும்மைக்காணாது 
    நாதனேயிவனென்றுநயந்தேத்தமகிழ்ந்தளித்தீர் 
    தீதிலா அந்தணர்கள்தீமுன்றோம்புந்திருநல்லூர் 
    மாதராளவளோடுமன்னுகோயில்மகிழ்ந்தீரே.        9

    போதின்மேல் அயன், திருமால், போற்றி உம்மைக் காணாது, 
    “நாதனே இவன்” என்று நயந்து ஏத்த, மகிழ்ந்து அளித்தீர்! 
    தீது இலா அந்தணர்கள் தீமூன்று ஓம்பும் திரு நல்லூர், 
    மாதராள் அவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே.

    pOtin mEl ayan, tirumAl, pORRi ummaik kANAtu,
    "nAtanE ivan" enRu nayantu Etta, makizntu aLittIr! 
    tItu ilA antaNarkaL tI mUnRu Ompum tiru nallUr, 
    mAtarAL avaLOTum mannu kOyil makizntIrE.

பொருள்:     தாமரை மலர் மேலிருக்கும் பிரமனும் திருமாலும் உம்மைக் காண முயன்று 
இயலாமல், பின் உம்மைப் போற்றி 'நாதனே இவன்' என்று அன்புடன் வழிபட, மகிழ்ந்து அருள் 
செய்தீர். குற்றமற்ற அந்தணர்கள் தீ மூட்டும் திருநல்லூரில், அழகுடையளாகிய உமையம்மையோடு 
நிலையாகவுள்ள திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே! 

குறிப்புரை:     போது - செந்தாமரைப்பூ. அயன்- பிரமன். 'நாதனே இவன்' 
என்று ஏத்த மகிழ்ந்து அளித்தீர். நயந்து -விரும்பி. பக்தி கொண்டுமாம். தீ மூன்று- ஆகவநீயம். 
காருக பத்தியம். தாட்சிணாக்கினி. மாதராள் - அழகுடையாராகிய உமாதேவியார். 
மன்னு - நிலையுற்ற.

    Oh! It is Civan, our Lord in Thiru-nalloor. Lord Brahma who rests in 
lotus flower and Lord Thirumaal accepted their defeat over their inability to 
comprehend the great light form of Yours. Thereafter they realised and prayed 
"He is our Lord". Then You accepted their prayer and graced them. In the city 
of Thiru-nalloor blemishless Brahmins live in large numbers. All of them do 
their daily rituals regularly, ignite the three fires and complete their prayers. 
Thereafter they go to the local temple and worship You and our goddess there. 
Oh God! You are happily manifested in that temple with Your consort Uma Devi.

2090.     பொல்லாதசமணரொடுபுறங்கூறுஞ்சாக்கியரொன் 
    றல்லாதாரறவுரைவிட்டடியார்கள்போற்றோவா             
    நல்லார்களந்தணர்கள்நாளுமேத்துந்திருநல்லூர் 
    மல்லார்ந்தகோயிலேகோயிலாகமகிழ்ந்தீரே.        10

    பொல்லாத சமணரொடு புறம்கூறும் சாக்கியர் - ஒன்று
     அல்லாதார் - அறஉரை விட்டு, அடியார்கள் போற்று ஓவா 
    நல்லார்கள், அந்தணர்கள், நாளும் ஏத்தும் திரு நல்லூர்
    மல் ஆர்ந்த கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

    pollAta camaNaroTu puRam kURum cAkkiyar-onRu 
    allAtAr--aRa urai viTTu, aTiyArkaL pORRu OvA-
    nallArkaL, antaNarkaL, nALum Ettum-tiru nallUr,         
    mal Arnta kOyilE kOyil Aka makizntIrE.

பொருள்:     தீயராகிய சமணருடன் பழிமொழி பேசும் சாக்கியரும் ஆகியரையும் பொருட்படுத்தத் 
தகாத இவர்கள் அறவுரைகள் போலக் கூறுவனவற்றை விலக்கி அடியவர்கள் போற்றுதலை 
விட்டு நீங்கா நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும் ஏத்தி வழிபடும் திருநல்லூரில் 
மலைபோன்று திண்ணிய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே!

குறிப்புரை:     பொல்லாத - தீய. அறவுரை - இகழ்ச்சிக் குறிப்பு. போற்று - துதி. ஓவா - நீங்காத. 
மல்- மலை. 'மற்பகமலர்ந்த திண்டோள் வானவர் (கம்பர், பால உரைக்காட்சிப் 52). 'மல்லினும் 
உயர்தோளாய் மலரடிப் பிரியாதேன்' (மேற்படி. கங்கைப். 66).

    Oh! It is Civan, our Lord in Thiru-nalloor. In this city of Thiru-nalloor 
there do live many good people who never listen to the words of the evil Jains 
and the slandering words of the Buddhists. These people who never deviate from 
the righteous path go to the temple and worship daily our Lord. Also the good 
natured Brahmins go to the temple daily, pray our Lord. Oh God! You have selected 
the same temple on the hillock of Thiru-nalloor and are happily manifested there.

2091     கொந்தணவும்பொழில்புடைசூழ்கொச்சைமேவுகுலவேந்தன் 
    செந்தமிழின்சம்பந்தன்சிறைவண்புனல்சூழ்திருநல்லூர் 
    பந்தணவுமெல்விரலாள்பங்கன்றன்னைப்பயில்பாடல் 
    சிந்தனையாலுரைசெய்வார்சிவலோகஞ்சேர்ந்திருப்பாரே.        11

    கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு குலவேந்தன் - 
    செந்தமிழின் சம்பந்தன் - சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர், 
    பந்து அணவும் மெல்விரலாள் பங்கன் தன்னைப் பயில் பாடல் 
    சிந்தனையால் உரைசெய்வார், சிவலோகம் சேர்ந்துஇருப்பாரே.

    kontu aNavum pozil puTai cUz koccai mEvu kulavEntan- 
    centamizin campantan-ciRai vaN punal cUz tiru nallUr, 
    pantu aNavum melviralAL pagkantannaip payil pATal 
    cintanaiyAl urai ceyvAr, civalOkam cErntu iruppArE.

பொருள்:     பூங்கொத்துக்கள் மலிந்த சோலைகள் பக்கங்களில் சூழ்ந்த சீகாழியிலிருக்கும் 
மக்களின் தலைவர், செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் அணைகளால் சிறை செய்யப்பட்டிருக்கும் 
நீர்த்திரள் சூழ்ந்த திருநல்லூரில் பந்தணை மெல்விரலி பங்கனை பாடிய பாடல்களை 
மனஒருமையோடு பாடுவார் சிவலோகம் சேர்ந்து சிவனுடன் இருப்பரே.

குறிப்புரை:     கொந்து - பூங்கொத்து. புடை - பக்கம். கொச்சை - சீகாழி. செந்தமிழில் 
மறைப்பொருளை அருளியதால் 'செந்தமிழின் சம்பந்தன்' என்னும் உரிமை உண்டாயிற்று. 
சிறை - அணை. 'பந்தார் விரலி' என்னும் அம்பிகையின் திருப்பெயரை நினைக்க. 
சிந்தனையால் - தியானத்தோடு.

    It is Civan, our Lord in Thiru-nalloor. Our saint Thiru-gnana-Sambandar 
is king of Kochchai (another name of Seerkaazhi). This city is full of gardens 
with bunches of flowers all over the area. The city is surrounded also by fertile 
paddy fields of cool water. In the temple of this place our Lord is manifested 
with our goddess Uma Devi whose tender fingers play with the beads. Our saint 
praised the Lord of the temple in these ten verses in pure Tamil language. 
Those devotees who can recite these ten verses of Thiru-gnana-Sambandar 
with great concentration in their minds, will reach the world of Civa 
and live there happily.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            57ஆம் பதிகம் முற்றிற்று
            End of 57th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 194                பதிக எண்:58

58. திருக்குடவாயில்                58.THIRU-K-KUDA-VAAYIL

பண் : சீகாமரம்                    Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    ‘திருணபிந்து முனிவர்க்குச் சிவபெருமான் குடத்தின் வாயில் வெளிப்பட்டுக் 
குட்டநோய் தீர்த்தருளிய' காரணம்பற்றி இப்பெயர் பெற்றது என்பர். கும்பகோணத்திலிருந்து 
தென்கிழக்கில் 15 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. தஞ்சாவூர்- திருவாரூர் தொடர்வண்டிப் 
பாதையிலுள்ள கொரடாச்சேரி தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடக்கே 9 கி.மீ. தூரத்தில் 
இருக்கின்றது. இது காவிரித் தென்கரையில் தொண்ணூற்று நாலாவது தலமாகும். 
திருவாரூர் மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

    இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். இறைவியாரது திருப்பெயர் பெரிய நாயகி.
 திருணபிந்து முனிவர் பூசித்துப் பேறுபெற்றார். கருடன் பூசித்து அமுதம் பெற்றுத் தானும் தன்
 தாயும் சாபம் நீங்கப்பெற்ற தலம். அது காரணமாகவே, திருமதிலின்மேல் கருடன் உருவங்கள்
 வைக்கப் பெற்றுள்ளன. இத்தலத்தை ஞானசம்பந்தர் மாத்திரம் பாடியுள்ளார். அவர் பதிகங்கள்
 இரண்டாகும். இங்குள்ள கோயில் பெருங்கோயில் (மாடக் கோயில்) அமைப்பு உடையது.

    'மகிழும் பெருமான் குடவாயின் மன்னி 
    நிகழும் பெருங் கோயிலி னிலாயவனே'

என்னும் இவ்வூர்த் தேவாரப்பகுதியால் அறியலாம்.

பதிக வரலாறு

    தமிழ்விரகர் திருவிரும்பூளை, திருஅரதைப்பெரும்பாழி, திருச்சேறை, திருநாலூர் 
என்னும் தலங்களை வழிபட்டுத் திருக்குடவாயிலை அடைந்தார். அங்கு அருளிய 
திருப்பதிகங்களுள் இதுவும் ஒன்று.

            திருச்சிற்றம்பலம்

2092.     கலைவாழும்அங்கையீர்கொங்கையாருங்கருங்கூந்தல் 
    அலைவாழுஞ்செஞ்சடையிலரவும்பிறையுமமர்வித்தீர் 
    குலைவாழைகமுகம்பொன்பவளம்பழுக்குங்குடவாயில் 
    நிலைவாழுங்கோயிலேகோயிலாகநின்றீரே.        1

    கலை வாழும் அம்கையீர்! கொங்கை ஆரும் கருங்கூந்தல் 
    அலை வாழும் செஞ்சடையில், அரவும் பிறையும் அமர்வித்தீர்! 
    குலைவாழை கமுகம் பொன்பவளம்பழுக்கும் குடவாயில், 
    நிலை வாழும் கோயிலே கோயில்ஆக நின்றீரே.

    kalai vAzum am kaiyIr! kogkai Arum karugkUntal 
    alai vAzum cenjcaTaiyil, aravum piRaiyum amarvittIr! 
    kulaivAzai kamukam ponpavaLam pazukkum kuTavAyil,
    nilai vAzum kOyilE kOyil Aka ninRIrE.

பொருள்:     ஆண்மான் தங்கும் அழகிய கையினை உடையீர்! நறுமணம் வீசும் கரிய, 
கூந்தலாகிய அலைகளை உடைய கங்கை வாழும் செஞ்சடையில் பாம்பையும் பிறையையும் 
ஒருங்கே இருக்கச் செய்தீர்! வாழை பொன் போலக் குலையீனும், கமுகம் செம்பவளம் போலப்        
பழுக்கும் திருக்குடவாயிலாகிய நிலையில் உள்ள திருக்கோயிலையே கோயிலாகக் 
கொண்டு நின்றீரே!

குறிப்புரை:     கலை - ஆண் மான். புல்வாய்க்கே அன்றிக் 'கலையென் காட்சி உழைக்கும் 
உரித்து' (தொல். ...மரபியல் 42-3). கொங்கு - மணம், பூந்தாது, தேன். கூந்தல் அலை - கூந்தலை 
உடைய அலைமகளாகிய கங்கை. கமுகம் - பாக்கு. பொன் பவளம் பழுக்கும் - பொன்னையும்
பவளத்தையும் போலப் பழுக்கும். நிலை - குடவாயில் நிலை. குடவாயிலாகிய நிலையில்.

    Oh! It is Civan, our Lord in Kuda-vaayil. Oh God! You hold a living deer 
in Your hand. You support the lady of the Ganges with her long black hair of 
fragrance on Your red matted hair. You retain the moon and also the serpent - 
both together along with the Ganges on Your hair. In the city of Kuda-vaayil, 
banana gardens yielding big plantain bunches are many. Also there are areca 
gardens, which yield fully ripe nuts looking like gold and pearl. The yield 
of both these fruits renders the city very rich. In this city, the permanent, 
sacred temple also exists and our Lord desired to make it Your abode and 
are manifested there.

2093.     அடியார்ந்தபைங்கழலுஞ்சிலம்புமார்ப்பஅங்கையில் 
    செடியார்ந்தவெண்டலையொன்றேந்தியுலகம்பலிதேர்வீர் 
    குடியார்ந்தமாமறையோர்குலாவியேத்துங்குடவாயில் 
    படியார்ந்தகோயிலேகோயிலாகப்பயின்றீரே.        2

    அடி ஆர்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப, அங்கையில் 
    செடி ஆர்ந்த வெண்தலை ஒன்று ஏந்தி, உலகம் பலி தேர்வீர்! 
    குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில், 
    படி ஆர்ந்த கோயிலே கோயில்ஆகப் பயின்றீரே.

    aTi Arnta paigkazalum cilampum Arppa, agkaiyil 
    ceTi Arnta veNtalai onRu Enti, ulakam pali tErvIr! 
    kuTi Arnta mA maRaiyOr kulAvi Ettum kuTavAyil,
    paTi Arnta kOyilE kOyil Akap payinRIrE.                

பொருள்:     திருவடியிற் சேர்ந்த பசிய பொன்னாலான கழலும் சிலம்பும் ஒலிக்க, அகங்கையில் 
நாற்றமுடைய வெளிறிய மண்டையோட்டை ஏந்தி உலகெங்கும் பிச்சை ஏற்பீர். பெருமையுடைய 
மறையோர்கள் குடியாக அமர்ந்து மகிழ்ந்து கொண்டாடும் குடவாயில் மண்ணில் அமைந்த 
திருக்கோவிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டீரே!

குறிப்புரை:     கழலும் சிலம்பும் காலணி விசேடம். செடி - குணமின்மை, நாற்றமுமாம். 
தேர்வீர் - தெரிவீர்.  குலாவி - கொண்டாடி.

    Oh! It is Civan, our Lord in Kuda-vaayil. You have tied round Your sacred feet 
the new anklets and hollow rings, which clink whenever You go out into the world for 
alms. You carry in Your hand the fleshy white skull which emits bad smell. In this 
city of Kuda-vaayil eminent Brahmins live in large numbers. They worship You and 
recite Your praise in the temple of the city. The temple has many large steps built 
on mounds leading to the tall temple on the hill. Oh God! You take delight in 
selecting the temple for Your manifestation.

2094.         கழலார்பூம்பாதத்தீரோதக்கடலில்விடமுண்டன் 
    றழலாருங்கண்டத்தீரண்டர்போற்றுமளவினீர் 
    குழலாரவண்டினங்கள்கீதத்தொலிசெய்குடவாயில் 
    நிழலார்ந்தகோயிலேகோயிலாகநிகழ்ந்தீரே.        3

    கழல் ஆர் பூம்பாதத்தீர்! ஓதக்கடலில் விடம் உண்டு, அன்று, 
    அழல் ஆரும் கண்டத்தீர்! அண்டர் போற்றும் அளவினீர்! 
    குழல் ஆர் வண்டுஇனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில், 
    நிழல் ஆர்ந்த கோயிலே கோயில்ஆக நிகழ்ந்தீரே.

    kazal Ar pUmpAtattIr! OtakkaTalil viTam uNTu, anRu, 
    azal Arum kaNTattIr! aNTar pORRum aLavinIr!
    kuzal Ar vaNTu inagkaL kItattu olicey kuTavAyil, 
    nizal Arnta kOyilE kOyil Aka nikazntIrE.

பொருள்:     கழல் கட்டிய அழகிய பாதத்தை உடையீர்! அலை கடலில் தோன்றிய 
நஞ்சினை உண்டு வெப்பமான கண்டத்தை உடையீர்! தேவர்கள் போற்றி வழிபடும் 
அளவுக்கு அருள் செய்வீர்! மகளிர் கூந்தலில் மொய்க்கும் வண்டினங்கள் பாட்டொலி 
செய்யும் குடவாசலில் அருளார்ந்த திருக்கோவிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டீரே!

 குறிப்புரை:     ஓதம் - அலையை உடைய. விடம் உண்டு அன்று அழல் ஆரும் கண்டத்தீர் என்க. 
அழல் - நஞ்சினது வெப்பம். அண்டர் - தேவர். போற்றும் அளவினீர் - வழிபடும் அளவிற்கேற்ற 
அருள்வீர். குழல் - மகளிர் கூந்தல், குழலில் உள்ள மாலையிற் படிந்த வண்டு எனலுமாம். ஆர - 
நிறைய. குழலார-வேய்ங்  குழலொலி நிறைய எனலும் பொருந்தும். நிழல் - ஒளி, அருள். 

    Oh! It is Civan, our Lord in Kuda-vaayil. Oh God! You have fixed on Your holy 
feet the ringing anklets. In the very old days You supped the fire-like poison that 
came out of the ocean of milk. Before the poison moved down into Your throat, our 
goddess vigorously compressed the neck and prevented the poison going down into 
the throat. From that day onwards Your neck had been dark blue in colour. 
Thereafter You were called Neelakandar. The devas praise and worship You. 
The damsels wear flowers full of honey. Therefore, bees always move around 
their hair humming musical noise. In this city of Kuda-vaayil filled with bees'
music, our God has delightfully selected this dazzling temple as His place 
for manifestation.

2095.     மறியாருங்கைத்தலத்தீர்மங்கைபாகமாகச்சேர்ந் 
    தெறியாருமாமழுவுமெரியுமேந்துங்கொள்கையீர் 
    குறியாரவண்டினங்கள்தேன்மிழற்றுங்குடவாயில் 
    நெறியாருங்கோயிலேகோயிலாகநிகழ்ந்தீரே.        4

    மறி ஆரும் கைத்தலத்தீர்! மங்கைபாகம்ஆகச் சேர்ந்து, 
    எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர்! 
    குறி ஆர வண்டுஇனங்கள் தேன் மிழற்றும் குடவாயில், 
    நெறி ஆரும் கோயிலே கோயில்ஆக நிகழ்ந்தீரே.

    maRi Arum kaittalattIr! magkai pAkam Akac cErntu,
    eRi Arum mA mazuvum eriyum Entum koLkaiyIr! 
    kuRi Ara vaNTu inagkaL tEn mizaRRum kuTavAyil, 
    neRi Arum kOyilE kOyil Aka nikazntIrE.

பொருள்:     மான் கன்று தங்கும் கைத்தலம் உடையீர்! உமையம்மையைப் பாகமாகச் 
சேர்ந்து எறியப்படுகின்ற பெருமையுடைய மழுவும் நெருப்பும் கரங்களில் ஏந்தும் இயல்புடையீர்! 
போதுகளை மலர்த்தும் குறிப்புடைய வண்டுக் கூட்டங்கள் தேன் போல இனிமையாக மிழற்றும் 
குடவாயிலில், வேதாகம நெறி பொருந்திய திருக்கோவிலையே உம்முடைய கோவிலாகக் 
கொண்டீரே!

குறிப்புரை:     மறி - மான்கன்று. 'யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட
 மறியே' (தொல். மரபியல் சூ. 12). கைத்தலத்தீர் - கையிடத்தையுடையவரே! எறி (எறிதல்) - வீசுதல். 
எரி -  தீ. குறி - போதுகளை மலர்த்தும் குறிப்பு. ஆர - பொருந்த. தேன் உண்ணும் பொருட்டு. மிழற்றும் -
பாடும்.  நெறி - வேதாகம வழி. ஆரும் - பொருந்தும்.

    Oh! It is Civan, our Lord of Kuda-vaayil. Oh God! You hold a young deer in 
Your hand. You have embedded Your consort Uma Devi on the left half of Your body.
You hold a hot battle axe in one of Your hands and a blazing fire in the other hand, 
in this city, many flower gardens exist, where the bees in large numbers fly to suck 
honey from the flowers, making music with their wings. In this city, the temple has 
been built according to aagama rules. Oh God! You have selected this temple as Yours
and are manifested there.

2096.     இழையார்ந்தகோவணமுங்கீளுமெழிலாருடையாகப் 
    பிழையாதசூலம்பெய்தாடல்பாடல்பேணினீர்
    குழையாரும்பைம்பொழிலும்வயலுஞ்சூழ்ந்தகுடவாயில் 
    விழவார்ந்தகோயிலேகோயிலாகமிக்கீரே.        5

    இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடைஆக, 
    பிழையாத சூலம் பெய்து ஆடல்பாடல் பேணினீர்! 
    குழை ஆரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில், 
    விழவு ஆர்ந்த கோயிலே கோயில்ஆக மிக்கீரே.

    izai Arnta kOvaNamum kILum ezil Ar uTai Aka, 
    pizaiyAta cUlam peytu, ATal pATal pENinIr! 
    kuzai Arum paimpozilum vayalum cUznta kuTavAyil, 
    vizavu Arnta kOyilE kOyil Aka mikkIrE.

பொருள்:     நூலிழையினால் தைக்கப்பட்ட கோவணமும் கீளும் எழில் நிறைந்த உடையாக, 
குறி பிழையாத சூலம் வீசிப் பாடலுடன் ஆடல் விரும்பினீர்! தளிர்கள் தழைத்த பூஞ்சோலைகளின் 
நறுவாசம் வீசுங் குடவாயிலில் விழாக்கள் நிறைந்த திருக்கோவிலையே உம்முடைய கோயிலாகக் 
கொண்டீரே!

குறிப்புரை:     இழை - நூலிழை. கீள் - கிழி, கீழ், கீள் என மருவிற்று. 'மடையில்.. சாம்பற்பூச்சும் 
கீள் உடையும் கொண்ட உருவம்" (ப.23 பா.1). 'கீளார் கோவணமும் திருநீறும் மெய்ப்பூசி’ 
(தி.7 ப.240) 'கீளலால் உடையுமில்லை" (தி.4 ப.40 பா.7). குழை -தளிர்.விழவு - திருவிழாக்கள்.

    Oh! It is Civan, our Lord in Kuda-vaayil. Oh God! You wear the forelap 
made of cotton yarn and also a loin cloth. You hold an undefeatable trident 
in one of Your hands and take delight to sing and dance. In this city, there are 
many gardens full of tender leaved trees. Paddy fields also are many around the 
city temple. In the temple of this city of Kuda-vaayil, many festivals take place 
on occasions. You have selected this temple as Your abode and are happily 
manifested there.

2097.     அரவார்ந்ததிருமேனியானவெண்ணீறாடினீர் 
    இரவார்ந்தபெய்பலிகொண்டிமையோரேத்தநஞ்சுண்டீர் 
    குரவார்ந்தபூஞ்சோலைவாசம்வீசுங்குடவாயில் 
    திருவார்ந்தகோயிலேகோயிலாகத்திகழ்ந்தீரே.        6

    அரவு ஆர்ந்த திருமேனி ஆன வெண்நீறு ஆடினீர்! 
    இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு, இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர்! 
    குரவு ஆர்ந்த பூஞ்சோலை வாசம் வீசும் குடவாயில், 
    திரு ஆர்ந்த கோயிலே கோயில்ஆகத் திகழ்ந்தீரே.

    aravu Arnta tirumEni Ana veN nIRu ATinIr! 
    iravu Arnta pey pali koNTu imaiyOr Etta nanjcu uNTIr! 
    kuravu Arnta pUnjcOlai vAcam vIcum kuTavAyil 
    tiru Arnta kOyilE kOyil Akat tikazntIrE.

பொருள்:     பாம்பினைக் கச்சாகக் கட்டிய திருமேனி திருவெண்ணீற்றில் மூழ்குதலுடையீர் !
இரந்து பெய்த பிச்சையைக் கொண்டு பின்னும் தேவர்கள் போற்ற நஞ்சுண்டீர்! குரவ மரங்கள் 
நிறைந்த பூஞ்சோலையின் வாசம் வீசும் குடவாயிலில் மங்கலமிக்க திருக்கோவிலையே உம்முடைய 
கோயிலாகக் கொண்டீரே! 

குறிப்புரை:     அரவு- பாம்பு. வெண்ணீறாடினீர்- திருவெண்ணீற்றில் மூழ்குதலுடையீர். இரவு- இரத்தல். 
குரவு - குராமரம். வாசம் - மணம். திரு - அழகு. 'சென்றடையாத்திரு'

    Oh! It is Civan, our Lord in Kuda-vaayil. Oh God! You have that holy body adorned
with snakes. You love the ablution with holy ashes on Your body. You undertake to get 
alms from all over the world and accept happily the alms given by willing ladies. The 
devas prayed for Your help to destroy the poison they got from the ocean of milk. 
You graced them and supped the poison. In the city of Kuda-vaayil, full of flowery gardens
the bottle flower trees shed their fragrance all over the temple area. Oh God! 
You desired to occupy the temple as Your abode and are manifested there.

2098.      பாடலார்வாய்மொழியீர்பைங்கண்வெள்ளேறூர்தியீர் 
    ஆடலார்மாநடத்தீரரிவைபோற்றுமாற்றலீர் 
    கோடலார்தும்பிமுரன்றிசைமிழற்றுங்குடவாயில் 
    நீடலார்கோயிலேகோயிலாகநிகழ்ந்தீரே.        7

    பாடல் ஆர் வாய்மொழியீர்! பைங்கண் வெள்ஏறு ஊர்தியீர்! 
    ஆடல் ஆர் மா நடத்தீர்! அரிவை போற்றும் ஆற்றலீர்!' 
    கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில், 
    நீடல் ஆர் கோயிலே கோயில்ஆக நிகழ்ந்தீரே.

    pATal Ar vAymoziyIr! paigkaN veL ERu UrtiyIr! 
    ATal Ar mA naTattIr! arivai pORRum ARRalIr! 
    kOTal Ar tumpi muranRu icai mizaRRum kuTavAyil, 
    nITal Ar kOyilE kOyil Aka nikazntIrE.

பொருள்:     வேதப்பாடல் மிக்க வாயினை உடையீர்! பசிய கண்ணை உடைய வெள்ளேற்றினை 
ஊர்தியாக உடையீர்! மகா தாண்டவம் ஆடுதலைப் புரிந்தீர்! பெண் (உமை) போற்றும் வலிமை உடையீர்! 
காந்தளில் மொய்த்த வண்டு இசை மிழற்றும் குடவாயிலில் நீண்ட திருக்கோவிலையே உம்முடைய 
கோயிலாகக் கொண்டீரே!

குறிப்புரை:     பாடல்-வேதப்பாடலில். ஆர்- பொருந்திய. வாய் மொழியீர்- சத்தியவார்த்தையாக 
விளங்குபவரே. வேதப்பாடல் பொருந்திய திருவாய்ச்சொல் உடையீர் எனலுமாம். ஏறு - ரிஷபம். 
ஊர்தி -  வாகனம். மாநடத்தீர் - மகா தாண்டவம் செய்தீர். அரிவை - உமாதேவியார். ஆற்றல் -வலிமை.
கோடல் - வெண்காந்தள். தும்பி - வண்டு. முரன்று - ஒலித்து. மிழற்றும்-இசைபாடும். நீடல் - நீளுதல்.

    Oh! It is Civan, the Lord of Kuda-vaayil. Oh God! You are the embodiment of 
true divine knowledge in the four sacred Vedas. You own a young and fresh white eyed 
bull as Your vehicle for conveyance. You are the embodiment of the famous cosmic dance 
and perform it whenever You take interest in the dance. Our goddess Uma Devi always 
praises Your might. In this city, the bees gather around glory lily flowers and flap 
making music. The temple in this city is big and very tall. You have selected this 
temple as Your abode and are manifested there happily.

2099.     கொங்கார்ந்தபைங்கமலத்தயனுங்குறளாய்நிமிர்ந்தானும் 
    அங்காந்துதள்ளாட அழலாய்நிமிர்ந்தீரிலங்கைக்கோன் 
    தங்காதல்மாமுடியுந்தாளுமடர்த்தீர்குடவாயில் 
    பங்கார்ந்தகோயிலேகோயிலாகப்பரிந்தீரே.        8

    கொங்கு ஆர்ந்த பைங்கமலத்து அயனும், குறள்ஆய் நிமிர்ந்தானும், 
    அங்காந்து தள்ளாட, அழல்ஆய் நிமிர்ந்தீர்! இலங்கைக் கோன் 
    தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர்! குடவாயில், 
    பங்கு ஆர்ந்த கோயிலே கோயில்ஆகப் பரிந்தீரே.

    kogku Arnta paigkamalattu ayanum, kuRaL Ay nimirntAnum, 
    agkAttu taLLATa, azal Ay nimirntIr! ilagkaik kOn
    tam kAtal mA muTiyum tALum aTarttIr! kuTavAyil, 
    pagku Arnta kOyilE kOyil Aka parintIrE.

பொருள்:     தேனும் மணமும் உள்ள அழகிய தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமனும் 
குறளாகி இருந்து விண்முட்ட நீண்டவனும் வாய் திறந்து தடுமாற தீப்பிழம்பாக நிமிர்ந்தீர் ! 
இலங்கைக்கு அரசனான இராவணனின் பெருமை கொண்ட பெரிய முடிகளையும் 
வீரத்தையும் அழித்தீர்! குடவாயிலின் கூறாக அமைந்த திருக்கோவிலையே உம்முடைய
கோயிலாகக் கொண்டீரே!

குறிப்புரை:     கொங்கு- தேன், மணம். கமலத்து அயனும், தாமரை மீதுள்ள பிரமனும். 
குறளாய்- வாமனமூர்த்தியாய். நிமிர்ந்தானும் - விக்கிரமனும். அங்காந்து - வாய்திறந்து. 
தள்ளாட - அசைய. தம்  காதல் - தம்முடைய காதலை விளக்கக்கூடிய. மா - பெரிய. 
தாளும் - அடியும். பங்கு - கூறு.

    Oh! It is Civan, Lord of Kuda-vaayil. Lord Brahma rests in the fresh lotus 
flower which yields honey. Lord Thirumaal went to the palace of king Maavali in the 
likeness of a very short man and asked for 3 feet of land. After getting his grant 
Thirumaal rose and took the shape of the tallest man of the world. These two gods 
went round the world, into the sky, and under the earth to see the head and foot 
of our Lord, but failed in their efforts. Then both became exhausted, accepted 
their failure and prayed to our Lord. Our Lord then appeared before them as the 
biggest and tallest blazing column of fire. You crushed king Raavanan with his 
big heads and feet. The temple forms a part of Kuda-vaayil city. You selected 
this temple in Kuda-vaayil as Your abode. You are manifested there and impart 
to the devotees divine knowledge.

9.ஆம் பாட்டு கிடைக்கப்பெறவில்லை.

2100.     தூசார்ந்தசாக்கியருந்தூய்மையில்லாச்சமணரும் 
    ஏசார்ந்தபுன்மொழிநீத்தெழில்கொள்மாடக்குடவாயில் 
    ஆசாரஞ்செய்மறையோர்அளவிற்குன்றாதடிபோற்றத் 
    தேசார்ந்தகோயிலேகோயிலாகச்சேர்ந்தீரே.'        10

    தூசு ஆர்ந்த சாக்கியரும், தூய்மை இல்லாச் சமணரும், 
    ஏசு ஆர்ந்த புன்மொழி நீத்து, எழில் கொள் மாடக் குடவாயில், 
    ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற
     தேசு ஆர்ந்த கோயிலே கோயில்ஆகச் சேர்ந்தீரே.

    tUcu Arnta cAkkiyarum, tUymai illAc camaNarum, 
    Ecu Arnta punmozi nIttu, ezil koL mATak kuTavAyil,
    AcAram cey maRaiyOr aLavin kunRAtu aTi pORRa, 
    tEcu Arnta kOyilE kOyil Akac cErntIrE.

பொருள்:     தூசு படிந்த உடையுடுத்த சாக்கியரும், சுத்தமில்லாத சமணரும் கூறும் இகழ்ச்சி 
நிறைந்த புல்லிய சொற்களை நீத்து, அழகிய மாட மாளிகைகளைக் கொண்ட திருக்குடவாசலில் 
நல்லொழுக்கம் மிக்க மறையோர்கள் அளவில் குறையாது உம் திருவடியைப் போற்ற, ஒளி நிறைந்த 
திருக்கோவிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டீரே!

குறிப்புரை :     தூசு- துரிசு ஏறிய உடை. தூய்மை - பரிசுத்தம். ஏசு- இகழ்ச்சி. புன்மொழி - புல்லிய 
சொற்கள். நீத்து - நீக்கி. எழில் -அழகு. மாடம் -மாடக்கோயில், மாடங்களை உடைய எனினுமாம்.  
ஆசாரம் - நல்லொழுக்கம் (வைதிக மார்க்கம்). குன்றாது - குறையாது. தேசு-ஒளி.

    Oh! It is Civan, Lord of Kuda-vaayil. In this city of Kuda-vaayil, Vedic scholars 
with strict discipline live in large numbers. They always visit Your temple and worship 
Your holy feet there with deep fervour. All of them neglect the evil words of the lowly 
Buddhists and Jains, who are impure. The temple in the city of Kuda-vaayil is of very 
bright appearance. Oh God! You have selected that temple as Your place and manifest 
yourself there gracefully.

2101.     நளிர்பூந்திரைமல்குகாழிஞானசம்பந்தன்
    குளிர்பூங்குடவாயிற்கோயில்மேயகோமானை 
    ஒளிர்பூந்தமிழ்மாலையுரைத்தபாடலிவைவல்லார் 
    தளர்வானதானொழியத்தகுசீர்வானத்திருப்பாரே.        11

    நளிர் பூந் திரை மல்கு காழி ஞானசம்பந்தன்,
    குளிர் பூங் குடவாயில் கோயில் மேய கோமானை, 
    ஒளிர்பூந்தமிழ்மாலை உரைத்த பாடல்இவை வல்லார், 
    தளர்வுஆனதாம் ஒழிய,தகு சீர் வானத்து இருப்பாரே.

    naLir pUn tirai malku kAzi njAnacampantan, 
    kuLir pUg kuTavAyil kOyil mEya kOmAnai, 
    oLirpUntamiz mAlai uraitta pATal ivai vallAr, 
    taLarvu AnatAm oziya, taku cIr vAnattu iruppArE.

பொருள்:     குளிர்ந்த அலைகள் மிகுதியாக வீசும் சீகாழியில் ஞானசம்பந்தன் 
குளிர்ச்சியுடைய  அழகிய குடவாயிற் கோயிலில் இருக்கும் தலைவனை ஒளிரும் தமிழால் 
பாடிய சொன்மாலைப்  பாடல்கள் இவை வல்லார் தளர்ச்சி தரும் துன்பங்கள் ஒழிய, தகுந்த
பெருமையுடன் வானுலகத்தில் இருப்பாரே!

குறிப்புரை:     நளிர் - குளிர். திரை - அலை. மல்கு - மிக்க. மேய - மேவிய. கோமானை - கோமகனை.
ஒளிர்- விளங்கும். தமிழ்ப்பூமாலை என மாற்றுக. தளர்வு ஆன - தளர்வாகிய துன்பங்கள். 
தான்- தானே. தகுசீர் - தக்கசீர் (வினைத்தொகை). 

    Oh! It is Civan, our Lord of Kuda-vaayil. Our saint Thiru-gnana-Sambandar 
hails from Kaazhi. This city is encircled by the cool water of the nearby sea. 
He visited the temple in Kuda-vaayil, very attractive and always cool with cold waves. 
Our Thiru gnana-Sambandar went to this temple, worshipped the Lord and sang in praise
of our Lord ten verses as a garland of flowers of Tamil language. Those devotees who 
are capable of reciting these ten verses will reach the famous celestial world and 
will live there permanently, devoid of all sufferings.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            58ஆம் பதிகம் முற்றிற்று
            End of 58th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 195                பதிக எண்: 59

59.சீகாழி                    59. SEERKAAZHI

பண்:சீகாமரம்                    Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    137 ஆவது பதிகத்தைக் காண்க.

பதிக வரலாறு

    137 ஆவது பதிகத்தைக் காண்க.

            திருச்சிற்றம்பலம்

2102     நலங்கொள்முத்துமணியுமணியுந்திரளோதங் 
    கலங்கள்தன்னிற்கொண்டுகரைசேர்கலிக்காழி
    வலங்கொள்மழுவொன்றுடையாய்விடையாயெனஏத்தி 
    அலங்கல்சூட்டவல்லார்க்கடையாவருநோயே.        1

    நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம் 
    கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி 
    "வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்!" என ஏத்தி,
    அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அருநோயே.

    nalam koL muttum maNiyum aNiyum tiraL Otam 
    kalagkaL tannil koNTu karai cEr kalik kAzi, 
    "valam koL mazu onRu uTaiyAy! viTaiyAy!" ena Etti, 
    alagkal cUTTa vallArkku aTaiyA, arunOyE.

பொருள்:     அழகிய முத்தையும் மணியையும் அணியுடை கடலலைகள் மரக்கலன்களில் 
கொண்டு வந்து சேர்க்கும் செழிப்புள்ள காழி நகரில் வெற்றிக்குரிய வலிமை கொண்ட ஒப்பற்ற
 மழுவினை உடையாய்! விடை ஊர்தியாய்! எனத் துதித்து மாலை சூட்ட வல்லவர்களை, நீக்குதற்கு 
அரிய பிறவி முதலிய நோய்கள் வந்து அடையா.

குறிப்புரை:     நலம் - அழகு. முத்தும் மணியும் அணியும் தலங்களில் ஓதம் கொண்டு சேர்காழி 
என்க. ஓதம் - அலைகளையுடைய கடல். கலங்கள்- மரக்கப்பல். தன் - சாரியை. கலி- ஓசையையுடைய,
 செழிப்புமாம். வலம் - வெற்றிக்குரிய வலிமை. விடையாய்- எருது வாகனனே! அலங்கல் - பூமாலை.
அருநோய் -தீர்தற்கு அருமையதான பிறவி நோய் முதலியவை. ஏத்திச் சூட்டவல்லார்க்கு நோய்         
அடையா என்க. 

    Oh! It is only Civan with various names in the Kaazhi temple of various 
sanctum sanctorum. The long seaport exists in the eastern side of the city. 
Huge boats built of strong wood are called usually Naavai. These wooden boats 
move into the sea and purchase valuables for cash or for barter. They purchase 
very attractive big sized pearls, various kinds of gems, and jewellery, and unload 
them in the beach of Seerkaazhi city, busy with the bustle of all those movements 
of loading and unloading. By the import of such valuables the city becomes richer 
and richer. In the city, our Lord holds the trident of victory in one of His hands. 
He uses the bull for His conveyance to travel round the world. The devotees who pray 
"You have the trident of victory in Your hand! You God on the bull!" etc., and adore
Him with flower garlands, will be freed of rebirth and other diseases in their life.

2103.     ஊராருவரிச்சங்கம்வங்கங்கொடுவந்து 
    காராரோதங்கரைமேலுயர்த்துங்கலிக்காழி 
    நீரார்சடையாய்நெற்றிக்கண்ணாஎன்றென்று 
    பேராயிரமும்பிதற்றத்தீரும்பிணிதானே.        2

    ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து 
    கார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி,
    “நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா!" என்று என்று 
    பேர்ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.

    Ur Ar uvaric cagkam vagkam koTuvantu 
    kAr Ar Otam karaimEl uyarttum kalik kAzi,
    "nIr Ar caTaiyAy! neRRikkaNNA!" enRu enRu 
    pEr Ayiramum pitaRRa, tIrum, piNitAnE.

பொருள்:     உப்புடைய கடலில் வாழும் ஊர்தலை உடைய சங்குகளை அலைகள் அடித்துக் 
கொண்டு வந்து கரைமேல் உயர்த்தும்; வளமுள்ள காழியில் கங்கையாறு நிறைந்த சடையினை 
உடையவனே! நெற்றிக் கண்ணனே! என்றென்று பேராயிரமும் பலமுறை சொல்லப் பிணி தீரும்.

குறிப்புரை:     ஊர் ஆர் சங்கம்- ஊர்தல் பொருந்திய சங்குகளையும். உவரி - உப்பையுடைய 
கடலில்( உள்ள சங்குகளை). வங்கம் - கப்பல். கொடு - கொண்டு. கார் ஆர் ஓதம் - மேகம் உண்ணும்
 கடலின் அலைகள். வங்கம் கரைமேல் உயர்த்தப்படல் இல்லையாதலின், வங்கம் செயப்படு
பொருளாகாது. வங்கம் சங்கத்தைக் கொண்டு வந்த ஓதம். கரைமேல் உயர்த்தும் என்க. 
கொடுவரல் வங்கத்தின் வினை. உயர்த்துதல் ஓதத்தின் வினை. என்று என்று-  அடுக்கு இடைவிடாது 
சொல்லற் பொருட்டாய் நின்ற குறிப்பு: ஆயிரம் பேரும் - அநேக நாமங்களையும். பிணிதீரும்.

    Oh! It is Lord Civa who is manifest in Seerkaazhi. There are several
varieties of sea creatures called conches. At times they get stuck to the huge boats 
and reach the shore and float about the shore. The city Seerkaazhi holds huge stock 
of these conches for sale. You have a third eye in Your forehead. Devotees who go to 
the temple and recite His praise as "Lord with matted hair! Lord with the third eye!",
and repeat again and again prattling His thousand names will be relieved of all ailments.

2104.     வடிகொள்பொழிவின்மழலைவரிவண்டிசைசெய்யக் 
    கடிகொள்போதில்தென்றலணையுங்கலிக்காழி 
    முடிகொள்சடையாய்முதல்வாஎன்றுமுயன்றேத்தி 
    அடிகைதொழுவார்க்கில்லையல்லலவலமே.        3

    வடிகொள் பொழிவில் மழலை வரிவண்டு இசைசெய்ய, 
    கடி கொள் போதில்-தென்றல் அணையும் கலிக் காழி, 
    "முடி கொள் சடையாய்: முதல்வா!" என்று முயன்று ஏத்தி, 
    அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லல் அவலமே.

    vaTi koL pozilil mizalai varivaNTu icaiceyya, 
    kaTi koL pOtil-tenRal aNaiyum kalik kAzi, 
    "muTi koL caTaiyAy! mutalvA!" enRu muyanRu Etti,
    aTi kaitozuvArkku illai, allal avalamE.

பொருள்:     திருத்தமாக அமைந்த பூம்பொழிலில் மழலை போல் இனிமையாக வரி வண்டுகள் 
இசைக்க, மணமுடைய மலர்களில் தென்றல் அணையும் கலிக்காழியில் சடை முடியாய்! முதல்வா! 
என்று தவம் முயன்று ஏத்தி, திருவடியை அடிதொழுவார்க்கு, அவலமாகிய அல்லல் இல்லையாம்.

குறிப்புரை:     வடி- திருத்தம். 'வடிநீள்மதில்' (புறம் 18).மாம்பிஞ்சு என்றுமாம். மழலை- நிரம்பா
 மொழிபோலும்  இனிமை செய்யும் வண்டின் ஓசை. கடி-  மணம். போதின் தென்றல்- மலரும் 
பருவத்தையுடைய போதுகளிற்பட்டு அவற்றின் மணத்தைக் கொண்டு எறியும் (மந்தமாருதம்) 
தென் காற்று. சடைமுடி. முயன்று - 'தவமுயன்று'. அடி - திருவடிகளை. கைதொழுவார்க்கு அல்லலும் 
அவலமும் இல்லை என்க. அல்லலால் வரும் அவலம் எனலுமாம். அல்லல் - துன்பம். அவலம் - அழுகை, 
சோர்வு- வறுமை.

    Oh! It is Civan, our Lord in Seerkaazhi. In the city of Seerkaazhi, 
there are many cultivated groves abounding in fragrant flowers. The young striped 
beetles make lisping melodies while sucking the honey. The southern wind kissing
the flowers carries the fragrance in the air and reaches the streets in this city 
and the palatial buildings. People enjoy the delightful fragrant breeze. "Oh Lord of 
matted locks manifested in the temple of this city! Oh Lord Absolute!". Those who 
recite this observing penance and worship His divine feet by stretching their 
hands will have no sufferings, will have no resulting agony and no poverty of 
any sort in their life.

2105.     மனைக்கேயேறவளஞ்செய்பவளம்வளர்முத்தங் 
    கனைக்குங்கடலுளோதமேறுங்கலிக்காழிப் 
    பனைக்கைப்பகட்டீருரியாய்பெரியாயெனப்பேணி 
    நினைக்கவல்ல அடியார்நெஞ்சினல்லாரே.        4

    மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் 
    கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக் காழி, 
    "பனைக்கைப் பகட்டு ஈர்உரியாய்! பெரியாய்!" எனப் பேணி, 
    நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.

    manaikkE ERa vaLam cey pavaLam vaLar muttam 
    kanaikkum kaTaluL Otam ERum kalik kAzi, 
    "panaikkaip pakaTTu Ir uriyAy! periyAy!" enap pENi,             
    ninaikka valla aTiyAr nenjcil nallArE.

பொருள்:     செழிப்பான பவளம், வளர்ந்த முத்துக்கள் ஆகியன மனைக்கு ஏற, ஒலிக்கும் 
கடலுள் அலை ஏறும் காழியில், யானையின் ஈரமான தோலைப் போர்த்தீர்! பெரியாய்! 
என விரும்பி நினைக்க வல்ல அடியார் நல்ல நெஞ்சத்தவர் ஆவர்.

குறிப்புரை:     மனை- வீடு. கனைக்கும் - ஒலிக்கும். ஓதம் -அலை. பனைகைபகடு ஈர் உரியாய்- 
பனைமரம் போலும் பருத்த துதிக்கையையுடைய யானையின் ஈர்த்த தோலைப் போர்த்தவரே! ஈர் -
ஈர்த்த. உரித்த. ஈர் உரி - (ஈர்மை - குளிர்ச்சி) ஈரியதாய உரி எனப் பண்புத் தொகையுமாம். 
பேணி- விரும்பி. நெஞ்சின் நல்லார் - நெஞ்சின் நன்மையை உடையார், நல்ல நெஞ்சத்தார். 

    Oh! It is Civan, our Lord in Seerkaazhi. The city of Seerkaazhi receives heavy
rain from the clouds, resulting in the yields of sea creatures and gems like red coral 
and pearls etc. Using these gems the people of the land become richer. "Oh Lord ! You 
killed the rutted elephant with long trunk and removed its hide and covered Your hody. 
You have manifested Yourself in the temple in Seerkaazhi. You are the greatest". 
Those good hearted devotees are really good at hearts, who showering their love 
on our Lord, hail Him in this way and are blessed.

2106.     பரிதியியங்கும்பாரிற்சீரார்பணியாலே
    கருதிவிண்ணோர்மண்ணோர்விரும்புங்கலிக்காழிச் 
    சுருதிமறைநான்கானசெம்மைதருவானைக் 
    கருதியெழுமின் வழுவாவண்ணந்துயர்போமே.        5

    பரிதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே 
    கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலிக் காழி,
    சுருதி மறைநான்கு ஆன செம்மை தருவானைக் 
    கருதி எழுமின், வழுவா வண்ணம்! துயர் போமே.

    pariti iyagkum pAril cIr Ar paNiyAlE                 
    karuti viNNOr maNNOr virumpum kalik kAzi, 
    curuti maRai nAnku Ana cemmai taruvAnaik 
    karuti ezumin, vazuvA vaNNam! tuyar pOmE.

பொருள்:     ஞாயிறு இயங்குகின்ற உலகினில் பெருமை உடைய திருத்தொண்டுகள் 
செய்யும் விருப்பத்துடன் விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் விரும்பி வரும் காழியில் 
கேள்வியால் பயிலப்படும் நான்மறைகளான செம்மையைத் தருவானை நினைந்து எழுமின்! 
உங்கள் துயர் போகும்.

குறிப்புரை:     பரிதி - சூரியன். இதைப் பருதி என்றெழுதுவது குரிசில் என்பதைக் குருசில் 
என்றெழுதுவது போலும் பிழை. (இலக்கியச் சொல்லகராதியின் உபக்கிரமணிகையில் பக்கம் 
15 பார்க்க). அடிசில். பரிசில் முதலியவற்றுள் இரண்டாவதெழுத்து உகரமாய் நிற்றலில்லாமையே 
அதற்குச் சான்று. 'பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில் வலியவாகும் நின்தாள்தோய் தடக்கை' 
(புறம் 14). 'பரிசில் நல்குவையாயிற் குரிசில் நீ' (புறம் 146) 'பரிசில் மன்னும் குரிசில் கொண்டதுவே' 
(புறம் 333) என எதுகையில் நின்றதறிக.

    ஏனையிடங்களுள், குருசில் என்றிருத்தல் பொருந்தாமை. இவ்விரண்டு காரணங்களால் 
புலப்படும். சுருதி- வேள்வி. நான்மறைக் கேள்வியான செம்மை தருவானை வழுவா வண்ணம் கருதி 
எழுமின் துயர்போம் என்க. ஆசிரியர், நான்மறைகளையும் ஆறங்கங்களையும் நினைவூட்டும் 
இடங்களை நோக்கின் 'வேதநெறி தழைத்தோங்க ... அழுத' உண்மை தெளிவாகும்.  

    Oh! It is Civan, our Lord in Seerkaazhi. The sun moves round the world. 
The people in this world and the devas and other celestials are all well learned 
in the four sacred Vedas which was passed on from generation to generation through 
word of mouth by scholars (originally the Vedas were not written by hand). Of course 
our Lord Civa is the embodiment of all the Vedas and only from Him for humanity's 
well-being it originated. Those who think of our Lord, as the Giver of the Vedas 
as the Giver of this wealth and worship Him daily without any break will find their 
sufferings vanish. Consistently remembering and worshipping Lord Civa is the 
source of true joy.

2107.     மந்தமருவும்பொழிலிலெழிலார்மதுவுண்டு 
    கந்தமருவவரிவண்டிசை செய்கலிக்காழிப் 
    பந்தநீங்க அருளும்பரனேயெனஏத்திச் 
    சிந்தைசெய்வார்செம்மைநீங்காதிருப்பாரே.        6

    மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு, 
    கந்தம் மருவ, வரிவண்டு இசைசெய் கலிக் காழி 
    "பந்தம் நீங்க அருளும் பரனே!" என ஏத்திச் 
    சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.

    mantam maruvum pozilil ezil Ar matu uNTu, 
    kantam maruva, varivaNTu icai cey kalik kAzi, 
    "pantam nIgka aruLum paranE!" ena Ettic 
    cintai ceyvAr cemmai nIgkAtu iruppArE.

பொருள்:     தென்றல் பொருந்தும் சோலையில் எழும் தேனை இனிது உண்டு மணம் பொருந்த 
அழகிய வண்டுகள் இசை முரலும் காழியில் பாசபந்தங்கள் நீங்க அருளுகின்ற தலைவனே! எனத் 
துதித்துத் தியானம் செய்வார் திருநின்ற செம்மை நீங்காதிருப்பார்.

குறிப்புரை:     மந்தம் - தென்றல் காற்று. மருவும் - பொருந்தும். எழில் - எழுச்சி. மது - தேன். 
கந்தம்- மணம். பந்தம் பசு - பாசப்பற்று. 'பற்றற பற்றற என்பதெல்லாம் பசுபாசம் விடல் மற்றொரு 
பற்றறல் இல்லை' என்றான். மன்னும் வெங்கலியைச் செற்றருள் சிற்றம்பலநாடி வண்மைச் 
சிரபுரத்தோன் உற்றதபோதனரே ஒழிந்தே இரும் உம்மையுமே' எனும் சிற்றம்பலநாடிகள் 
சாத்திரக்கொத்துள்வரும் கட்டளைக் கலித்துறையை அறிக.  பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் 
பார்ப்பரிய பரம்பரனை' அப்பசு, பாசம் ஆகிய பந்தம் நீங்காமல் பார்த்தல் கூடாது. 'பந்தம் நீங்க 
அருளும் பரனே என ஏத்திச் சிந்தை செய்வார் செம்மை நீங்காது  இருப்பார்' என்பதை இனிது 
விளக்கிற்று. செம்மை 'திருநின்ற செம்மை' (தி.4 ப.8 பா.1; தி.7 ப.396).

    Oh! It is Civan, our Lord in Seerkaazhi. In the city of Kaazhi, a place of 
all songs, the southern wind blows in the forest areas, full of tall trees and flower 
plants. The striped beetles in large numbers fly sucking honey and giving out music,
with the flapping of their wings. They spread good fragrance besides melodies. 
In such an attractive city of Kaazhi our Lord is manifested in the temple. Those 
people who think with devotion about our Lord as one who graces humanity to shed 
their attachments to worldly matters will not have to face sufferings in their life, 
will be blessed with permanent wealth.

2108     புயலார்பூமிநாமமோதிப்புகழ்மல்கக் 
    கயலார்கண்ணார்பண்ணாரொலிசெய்கலிக்காழிப்
    பயில்வான்றன்னைப்பத்தியாரத்தொழுதேத்த 
    முயல்வார்தம்மேல்வெம்மைக்கூற்றம்முடுகாதே.        7

    புயல் ஆர் பூமி நாமம் ஓதி, புகழ் மல்க, 
    கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலிக் காழிப் 
    பயில்வான் தன்னைப் பத்தி ஆரத் தொழுது ஏத்த 
    முயல்வார் தம்மேல், வெம்மைக் கூற்றம் முடுகாதே.

    puyal Ar pUmi nAmam Oti, pukaz malka, 
    kayal Ar kaNNAr paN Ar olicey kalik kAzip 
    payilvAn tannaip patti Arat tozutu Etta 
    muyalvAr tammEl, vemmaik kURRam muTukAtE.

பொருள்:     நீர் நிறைந்த பூமியிலுள்ளோர் திருநாமங்களைப் பலகாலும் ஓதிப் புகழ் பெருக, 
கயல்மீன் போன்ற கண்களை உடைய மகளிர் பண் நிறைந்த இசை இசைக்கும் காழியுள் என்றும் 
உள்ளவன்தன்னைப் பத்தி நிறையத் தொழுது ஏத்த முயற்சி செய்வார்மீது கொடுங்
கூற்றனின் கொடமை செல்லாது.

குறிப்புரை:     புயல் - மேகம். பெருங்காற்று எப்போதும் உள்ள தன்மையின்மையின் 
பொருந்தாது. பூமி-மண்ணிடத்துள்ளோர். நாமம் - சிவனென்னும் நாமம், 'நந்தி நாமம் நமச்சிவாயவே', 
'நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன்' 'நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் உரைக்கத் தருதி' 
'திருநாமம்  அஞ்செழுத்தும் செப்பாராகில்' 'பராபரன் என்பது பேராக் கொண்டார்' (அப்பர் 310. 
பொது 11). கயல் ஆர் கண்ணார் – மீனோக்கியர். கயற்கண்ணியர். பண் ஆர் ஒலி - பண்ணொடு 
பொருந்திய இசை. பயில்வான்தன்னை - பயின்ற தொல்லோனை (சிவபிரானை) பழையோன். 
பத்தி - பக்தி. அன்பு ஆர நிறைய. முயல்வார்மீதே முடுகாது கூற்று என்றால், முயன்றார் மீது 
முடுகாமை கூறல்வேண்டா. விண்ணிடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்? 
பண்ணிடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும். கண்ணிடை மணியர் போலும் கடவூர் 
வீரட்டனாரே (பதி. 31 பா. 2) கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு (தி.7 ப.281).

    It is Civan, our Lord in Seerkaazhi. The city is rich in the soil because 
of heavy rains brought by clouds and the fields and gardens here are plenty. Young damsels 
with fish-like eyes in large numbers go to the temple and sing in good grace His holy 
names in a melodious tone. Our Lord's holy name scatters divine knowledge all over 
the area. In such an attractive city our Lord manifests Himself in the temple. 
Those who worship Him with sincere devotion and speak words of tribute will never 
be in the grip of the god of death and will have no rebirth at all.

2109.     அரக்கன்முடிதோள்நெரிய அடர்த்தானடியார்க்குக் 
    கரக்ககில்லாதருள்செய்பெருமான்கலிக்காழிப் 
    பரக்கும்புகழான்றன்னையேத்திப்பணிவார்மேற் 
    பெருக்குமின்பந்துன்பமானபிணிபோமே.        8

    அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக் 
    கரக்ககில்லாது அருள்செய் பெருமான், கலிக் காழிப் 
    பரக்கும் புகழான் தன்னை ஏத்திப் பணிவார்மேல், 
    பெருக்கும், இன்பம் துன்பம்ஆன பிணி போமே.

    arakkan muTitOL neriya aTarttAn, aTiyArkkuk 
    karakkakillAtu aruLcey perumAn, kalik kAzip 
    parakkum, pukazAn tannai Ettip paNivArmEl, 
    perukkum, inpam; tunpam Ana piNi pOmE.

பொருள்:     அரக்கன் இராவணனின் முடிகளும் தோள்களும் நசுங்க அடர்த்தவனும், 
அடியவர்களுக்குத் தன் அருளை மறைக்காமல் அருள்பவனுமாகிய பெருமான், விழாக்கள்
மலிந்த காழிப்பதியில் விரிந்த புகழை உடையவன், தன்னை ஏத்தி வழிபடுவார்மேல் 
இன்பத்தைப் பெருக்கும்; அவர்கள்மேல் வருந்துன்பமாகிய பிணி தாமே நீங்கும்.

 குறிப்புரை:     அரக்கன்- இராவணன் , அடியார்க்குக் கரக்ககில்லாது -அடியவர்க்கு (அருளை) 
மறைக்கமாட்டாமல். கில்- ஆற்றலை உணர்த்துவது. சிவபெருமான் தன் அடியவர்க்கு அருளை 
மறைக்கும் ஆற்றல் இல்லாதவன் என்பதுணர்க. குறைவிலா நிறைவு எனப்படும் 
பரமேச்சுவரனுக்கும் தன் அடியார்க்கு இன்பங்கள் தருவதை மறைத்துக் கொள்ளும் 
ஆற்றல் இல்லாத ஒரு குறை உண்டு என்று உணர்த்திய நயம் போற்றத்தக்கது. 
பணிவார் மேல் இன்பம் பெருக்கும். துன்பமான பிணிபோம். கில்லாமை - கிற்றிலேன். 
கிற்பன் உண்ணவே .(திருவாசகம் 45). 

    Oh! It is Civan, our Lord in Seerkaazhi. Our Lord crushed the shoulders 
and the heads of Raavanan for his misdeed; but later graced him after he begged 
pardon and sang good music. Therefore our Lord is sure to bless one and all
without concealing His grace. He is manifest in the temple in Kaazhi. 
People should go to this temple and praise our Lord whose fame is known all 
over the world. Those who worship Him with sincere humility will find their 
sufferings vanish and joys increase.

2110.     மாணாயுலகங்கொண்டமாலும்மலரோனுங் 
    காணாவண்ண மெரியாய்நிமிர்ந்தான்கலிக்காழிப் 
    பூணார்முலையாள்பங்கத்தானைப்புகழ்ந்தேத்திக் 
    கோணாநெஞ்சமுடையார்க்கில்லைக்குற்றமே.        9

    மாண்ஆய் உலகம் கொண்ட மாலும் மலரோனும் 
    காணா வண்ணம் எரிஆய் நிமிர்ந்தான், கலிக் காழிப் 
    பூண் ஆர் முலையாள் பங்கத்தானை, புகழ்ந்து ஏத்தி, 
    கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை, குற்றமே.

    mAN Ay ulakam koNTa mAlum malarOnum 
    kANA vaNNam eri Ay nimirntAn, kalik kAzip 
    pUN Ar mulaiyAL pagkattAnai, pukazntu Etti, 
    kONA nenjcam uTaiyArkku illai, kuRRamE.

பொருள்:     பிரமச்சாரியாய் உலகத்தை அளந்த மாலும் பிரமனும் காண முடியாதபடி 
நெருப்பாக நிமிர்ந்தானின் காழியில் பூணார் முலை உமையாள்பங்கனைப் புகழ்ந்து ஏத்திக் 
கொண்டாடும் சிந்தைத் திருகல் இல்லாதவர்களுக்குப் பிறவிக்குக் காரணமான குற்றமில்லை.

குறிப்புரை:     மாணாய் - பிரமசாரியாய். மாண் - மாணி. 'குறுமாண் உருவன் தற்குறியாக' 
(தி.1.ப.101.பா.5) 'மாணாகி வையம் அளந்ததுவும்' என்று திருமங்கை மன்னன் பாடியதிலும் 
மாண் என்பது இப்பொருளில் வந்திருத்தல் அறிக. பூண்- ஆபரணம். பங்கத்தானை- 
(வாம) பாகத்தையுடைய சிவபெருமானை. கோணா நெஞ்சம் - திருகலில்லாத உள்ளத்தை. 
கோணல் - 'சிந்தைத் திருகு'  'மலக்கோண்' ‘யான் செய் தேன் பிறர்செய்தார் என்னது யான்' என்னும் 
இக்கோணை ஞான வெரியால் வெதுப்பி நிமிர்த்துத் தான் செவ்வே நின்றிட (சிவஞான சித்தியார். 
கடவுள் வாழ்த்துரை+சூ 10. திருவிருத்தம் 2). லுடை யார்க்குக் குற்றம் இல்லை என்க. 'இல்லைக்குற்றம்' 
என்று மிக்குப் புணர்ந்ததற்கு ‘இல் என் கிளவி இன்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலும் 
ஐயிடை வருதலும்.. ஆகிடன் உடைத்தே' என்ற தொல்காப்பியச் சூத்திர (372) விதி காண்க.  

    Oh! It is Civan, our Lord of Seerkaazhi. Our Chief of sustenance, lord Thirumaal 
who took the form of a dwarfish bachelor and measured the world and cheated the king 
of Maavali and the four faced Brahma could not comprehend our Lord in spite of their 
best efforts. At that time our Lord rose as an infinite fire of greatness. Our Lord 
has embedded our goddess on the left half of His body, who with ornaments, has covered 
her breasts. Those devotees who are straight forward in their hearts, pray our 
Lord in Kaazhi, praising His fame, will have no fault in their mind and their life.

2111.     அஞ்சியல்லல்மொழிந்துதிரிவாரமண்ஆதர் 
    கஞ்சிகாலையுண்பார்க்கரியான்கலிக்காழித் 
    தஞ்சமாயதலைவன்றன்னைநினைவார்கள் 
    துஞ்சலில்லாநல்லவுலகம்பெறுவாரே.        10

    அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர், 
    கஞ்சி காலை உண்பார்க்கு, அரியான்; கலிக் காழித் 
    தஞ்சம்ஆய தலைவன்; தன்னை நினைவார்கள், 
    துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே.

    anjci allal mozizntu tirivAr amaN Atar, 
    kanjci kAlai uNpArkku, ariyAn; kalik kAzit 
    tanjam Aya talaivan; tannai ninaivArkaL, 
    tunjcal illA nalla ulakam peRuvArE.

பொருள்:     வினைக்கு அஞ்சி அல்லல் தரும் மொழிகளைப் பேசித்திரியும் சமணர்களாகிய 
அறிவில்லார்; கஞ்சியினைக் காலையில் உண்ணும் தேரர்கள் ஆகியவர் அறிவதற்கு அரியவன். 
விழவு மலிந்த காழியில் தன்னைத் தஞ்சம் அடைந்த அன்பர்களுக்குத் தஞ்சமாகிய தலைவன். 
அவனை நினைபவர்கள் சாதல் பிறப்பில்லாத நல்ல வீட்டுலகத்தைப்  பெறுவரே.

குறிப்புரை:     அல்லல் - துன்பம் தரும் பேச்சுக்களை. ஆதர் - அறிவில்லார். காலையிற் கஞ்சி 
உண்ணும் தேரர் என்று கொள்க. அமணரை முற்கூறியதால், உண்பார் என்றது தேரரை என்க. 
தஞ்சம் - அடைக்கலம். தஞ்சம் (தி.3 ப.76 பா.10) 'தஞ்சம் என்று உள் சரண் புகுந்தேன்' (தி.3 ப.51 பா.6) 
(தண்+து+அம்) துன்ப வெம்மையால் வந்து அடைந்தவர்க்குத் தண்மையுடையவரே, 
அடைக்கலமென்ற போது அபயம் அளிப்பர். அதனால் தஞ்சம் அடைதல் எனப்பட்டது. 
'தஞ்சேகண்டேன' (தி.5 ப.50 பா.3) என்று (தண் + து) அம்முப்பெறாது வருதலும் அறிக. 
'தஞ்ச வண்ணத்தர்' (தி.4 ப.17 பா.3) 'அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத... உன் திருவடி 
அடைந்தேன்' (தி. 7). 'தஞ்சமென்று தன் தாளது அடைந்த பாலன்மேல் வந்த காலனை உருள 
நெஞ்சில் ஓர் உதை கொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை' (தி.7 ப.96 பா.1).
 துஞ்சல் - சாதல். நல்லவுலகம் - பேரின்பவுலகு.

    Oh! It is Civan, our Lord in Seerkaazhi. Our Lord is beyond the comprehension 
of the Jains who speak fearful and painful words and also beyond that of, the Buddhists 
drinking only porridge. Our Lord is manifest in the temple in Kaazhi. The devotees who 
think of our Lord as their refuge for their sorrows and worship Him with sincere 
devotion will reach the celestial world, a world of no death and no rebirth and, 
will enjoy eternal bliss.

2112.     ஊழியாயபாரிலோங்குமுயர்செல்வக் 
    காழியீசன்கழலேபேணுஞ்சம்பந்தன் 
    தாழுமனத்தாலுரைத்ததமிழ்களிவைவல்லார் 
    வாழிநீங்காவானோருலகில்மகிழ்வாரே.        11

    ஊழிஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக் 
    காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன், 
    தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார், 
    வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

    Uzi Aya pAril Ogkum uyar celvak
    kAzi Ican kazalE pENum campantan, 
    tAzum manattAl, uraitta tamizkaL ivai vallAr, 
    vAzi nIgkA vAnOr ulakil makizvArE.

பொருள்:     பிரளய காலத்திலும் அழியாத செல்வத்தை உடைய காழியீசன் திருவடிகளையே 
விரும்பும் சம்பந்தன் பணிந்தேத்தும் மனத்தால் உரைத்த தமிழ்ப்பாடல்கள் இவற்றைப் பாட
 வல்லவர்கள் வானோர் உலகில் நீங்காமல் மகிழ்வார்.

குறிப்புரை:     ஊழி ஆய பாரில் - உக முடிவு ஆன மண்ணுலகில் ஓங்கும் காழி - பிரளய 
வெள்ளத்தால் அழியாமல் மேல் மிதந்த தோணிபுரம். உயர் செல்வம் - அழியாமல் உயர்ந்த 
செல்வத்தை உடைய. 'கழலே பேணும் சம்பந்தன்' என்ற பிரிநிலை ஏகாரம், உண்மைச் சைவர்க்குச் 
சிவபக்தியில் ஓர் உறைப்பை  விளைக்கும். தாழும் மனத்தால்- பணியும் உள்ளத்தால். 'வேற்காடு 
தாழ்வுடை மனத்தால் மனமுடையவரே', 'கோழம்பத்துறை கூத்தன் குரைகழல் தாழும் 
பத்தர்கள்' ஆவர். 'தாழ்வெனுந் தன்மைவிட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து வாழ்வதே 
கருதித் தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயக்கில்லார்' (தி.7 ப. 79). 'வாழ்வெனும் மையல் விட்டு 
வறுமையாம் சிறுமை தப்பித் தாழ் வெனுந் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ் 
பெறலரிது' (சிவஞான சித்தியார், 181). வாழி - வாழ்ச்சி, இகரம் தொழிற்பெயர் விகுதி.

    Oh! It is Civan, our Lord in Seerkaazhi. The city of Kaazhi is the most 
sacred place in the world that survived in the deluge on the earth. Kaazhi with 
all its wealth floated and did not vanish during the end of this world. Our saint 
Thiru-gnana Sambandar with sincere devotion came to the temple, worshipped our 
Lord and prayed at His feet. Then he sang with all humility these ten Tamil 
verses of garland.Those people who can recite all these ten verses will reach 
the celestial world and lead a blissful life.  

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            59ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 59th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 196                பதிக எண்: 60

60.திருப்பாசூர்                    60. THIRU-P-PAASOOR

பண்:சீகாமரம்                    Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    பசுமை + ஊர்- பாசூர். நீர்வளத்தால் நிலம் பசுமையாய் விளங்குவதால் இப்பெயர் 
பெற்றதாதல் வேண்டும். தலமரம் மூங்கில் ஆதலாலும், இறைவர் மூங்கிலடியில் தோன்றியவர் 
ஆதலாலும் இப்பெயர் பெற்றனர் என்பர் (பாசு - மூங்கில்). இது திருவள்ளூருக்கு வடக்கில் 
5 கி.மீ. தூத்தில் இருக்கின்றது. திருவள்ளூர் - பேரம்பாக்கம் நகரப் பேருந்திலோ                 
காஞ்சிபுரத்திலிருந்து கடம்பத்தூர் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பேருந்திலோ 
பாசூர் செல்லலாம்.

    இறைவர் திருப்பெயர் பாசூர் நாதர். இறைவி திருப்பெயர் - பசுபதி நாயகி. குறும்பர் 
அரசனுக்குச் சார்பாகச் சமணர்கள் கரிகால்சோழன்மீது ஏவிய பாம்பைச் சிவபெருமான் 
எழுந்தருளித் தடுத்து ஆட்டினார் என்பது தலமான்மியம். இச்செய்தி, 'படவரவொன்றது 
ஆட்டிப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே' என்னும் இத்தலத்துக்குரிய 
திருத்தாண்டகப் பகுதியாலும் இது உறுதி எய்துகின்றது. சந்திரன் பூசித்துப் பேறு பெற்றான். 
இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, நாவுக்கரசர் பதிகங்கள் இரண்டு ஆக மூன்று 
பதிகங்கள் இருக்கின்றன. இது தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

பதிக வரலாறு

    பாரெல்லாம் உய்ய வந்த பாலறாவாயர், எம்மையாளும் அம்மை திருத்தலையாலே 
நடந்து போற்றும் அம்மையப்பர் திருவாலங்காடு ஆம் என்று, அம்மூதூர் மிதிக்க அஞ்சி அணுகச் 
சென்று, செம்மை நெறிவழுவாத பதியின் பக்கத்தில் உள்ள ஓரிடத்தில் இரவில் தங்கினார். 
இடை யாமத்தில் கனவில் 'நம்மைப் பாடுவதற்கு மறந்தனையோ' என்று ஆலங்காட்டப்பர்
 அருளினார். அவர் கருணை போற்றி மெய்யுருகித் 'துஞ்ச வருவார்' எனத் தொடங்கும் 
சுருதிமுறை வழுவாத திருப்பதிகம் பாடிப் பழயனூர் வரலாற்றைச் சிறப்பித்துச் சொல்லி 
திருவருளை உணர்த்தி அங்கிருந்து திருப்பாசூர் அணைந்து அருட்கருணைத் திருவாளன் 
நாமம் 'சிந்தையிடையார்' என்று அருளிய இசைப்பதிகம் இது.

            திருச்சிற்றம்பலம்

2113.     சிந்தையிடையார்தலையின்மிசையார்செஞ்சொல்லார் 
    வந்துமாலைவைகும்போழ்தென்மனத்துள்ளார் 
    மைந்தர்மணாளரென்னமகிழ்வாரூர்போலும் 
    பைந்தண்மாதவிசோலைசூழ்ந்தபாசூரே.        1

    "சிந்தைஇடையார், தலையின்மிசையார், செஞ்சொல்லார், 
    வந்து மாலை வைகும்போழ்து என்மனத்து உள்ளார், 
    மைந்தர், மணாளர்” என்ன, மகிழ்வார் ஊர் போலும் 
    பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

    "cintai iTaiyAr, talaiyin micaiyAr, cenjcollAr, 
    vantu mAlai vaikumpOztu en manattu uLLAr, 
    maintar, maNALar" enna, makizvAr UrpOlum- 
    pain taN mAtavi cOlai cUznta pAcUrE.

பொருள்:     என் மனத்தில் உள்ளார்; தலையின் மேல் இருக்கிறார்; செம்மையான 
சொல்லில் நிறைந்துள்ளார்; மாலைக்காலம் வந்து தங்கும்போது 'என் மனத்துள் நிறைந்துள்ள
மைந்தனே, மணாளா' என்று துதிக்க மகிழ்வாரின் ஊர் (எதுவெனில்), பசிய குளிர்ந்த 
மாதவிக் கொடிகளைக் கொண்ட சோலைகள் சூழ்ந்த பாசூரே.

குறிப்புரை:     சிந்தை, தலை, சொல் என மனம், காயம், வாக்கு ஆகிய திரிகரணங்களையும் 
உணர்த்தி  அம்மூன்றிலும் சிவபெருமான் இருத்தலை மூவேறு சிறு வாக்கியங்களாக அருளிய 
திறம் அன்பரெல்லாராலும் அறியத்தக்கது. சிவபூஜையில் அந்தரியாகத்தாலும், தோத்திரத்தாலும் 
இந்நிலையை அனுபவித்து உணர்ந்து போற்றுதல் இன்றியமையாதது (பதி. 61 பா. 6). 'சிந்தையுள்ளும் 
நாவின் மேலும் சென்னியும் மன்னினான்' (தி. 1 ப. 73 பா. 9) சிந்தையிடார் - 'மனத்தகத்தான்' . 
தலையீயன் மிசையார் 'தலைமேலான்', செஞ்சொல்லார்- ‘வாக்கினுள்ளான்’. 'மூவாத 
சிந்தையே மனமே வாக்கே தன் ஆனையாப் பண்ணியேறினான்' (அப்பர் - 227). 
‘வாயானை - மனத்தானை' என்பது இதனின் வேறு மாலை- மாலைப்பொழுது. (வந்து) 
வைகும்போழ்து- தங்கும் வேளையில். மைந்தரென்றும் மணவாளரென்றும் துதிக்க மகிழ்பவர் 
(சிவபெருமான்). பாசூர் மகிழ்வார் ஊர்போலுமென்று கூட்டுக. பைந்தண் மாதவி- பசுமையும்
 தண்மையுமுடைய குருக்கத்தி. பாசூர்-(பசுமை +ஊர்) இன்றும் பசுமை மிக்கதாகவே விளங்குகிறது.

    Behold! It is Paasoor. Oh God! You are in my thoughts, You are on my head.
You are in my divine words. In the evening of my life You come to my mind as my
anchor. Then I praise You and recite "Oh! You are ever in my mind. Oh my Lord! 
You are delighted to hear such praising words from me". You get delighted to be 
manifested in the temple in Thiru-p-paasoor. The temple is surrounded by many 
flower gardens, particularly the 'Maadavi' spine which is a common delight
of the woods. This is also known as 'Kurukatthi (Hippage madablota).

2114.     பேரும்பொழுதும்பெயரும்பொழுதும்பெம்மானென் 
    றாருந்தனையுமடியாரேத்த அருள்செய்வார் 
    ஊருமரவமுடையார்வாழுமூர்போலும்
    பாரின்மிசையார்பாடலோவாப்பாசூரே.        2

    பேரும்பொழுதும் பெயரும்பொழுதும் “பெம்மான்” என்று 
    ஆரும்தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார் 
    ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர் போலும் 
    பாரின்மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.

    pErum pozutum peyarum pozutum, "pemmAn" enRu 
    Arum tanaiyum aTiyAr Etta aruL ceyvAr, 
    Urum aravam uTaiyAr, vAzum UrpOlum-
    pArin micaiyAr pATal OvAp pAcUrE.

பொருள்:     இடம் விட்டுப் பெயரும் போதும் மீண்டும் வரும்போதும் இவ்விரண்டு 
பொழுதும் இறைவனை மனத்தில் நினைந்து அனுபவிக்கும் அடியார் 'பெம்மான்' என்று 
ஏத்த அருள் செய்வார்; ஊர்ந்து செல்கின்ற அரவத்தைப் பூணாக உடையவர்  அவருடைய ஊர்
(எதுவெனில்), மண்ணுலகத்தவரின் தோத்திரப்பாடல்களின் ஒலி ஒழியாத பாசூரே. 

குறிப்புரை:     பெயர்தல்- போதல் என மருவும். ஆயினும் இங்கு இரண்டும் வேறுபட்டனவாகத்
 தோற்றுதலால் பொருளிலும் ஏதேனுமொரு வேறுபாட்டைக் கொள்ளுதல் வேண்டும். 
போதல் முதன்முதலாக இடம் விட்டு அசைதல். பெயர்தல் - மீண்டும் வருதல். இவ்விரண்டு 
காலத்தும் இறைவனை மனம் நிறைவுறுமளவும் அடியார் ஏத்த அருள் செய்வான். 
தனை- அளவு. ஊரும் அரவம் - - நகரும் பாம்பு. பாரின்மிசையார்- மண்ணுலகத்தார். 
பாடல் - தோத்திரப் பாடல்கள். ஓவா- ஒழியாத. பாசூரே அருள் செய்வார் ஊர் போலும். 
'பண்ணின் மொழியார் பாடல் ஓவாப்பாசூரே' (பா.7). இவ்வாறே மேலும் கொள்க.

    Behold! It is Paasoor. The devotees come to Your temple and worship 
Your holy feet. As and when they leave Your temple and as and when they come back 
to Your temple they recollect their divine thought and worship You saying "You 
are my Lord and You are in my mind for ever". Our Lord bestows His grace on 
those devotees. You wear the moving snake on Your holy body. Oh God! You are 
manifested in the temple in Thiru-p-paasoor city. In this city songsters 
live in large numbers. They always sing divine music, which is heard 
all over the city.

2115.     கையால்தொழுதுதலைசாய்த்துள்ளங்கசிவார்கண் 
    மெய்யார்குறையுந்துயருந்தீர்க்கும்விமலனார் 
    நெய்யாடுதலஞ்சுடையார்நிலாவுமூர்போலும் 
    பைவாய்நாகங்கோடலீனும்பாசூரே.        3

    கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கண் 
    மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார், 
    நெய் ஆடுதல் அஞ்சு உடையார், நிலாவும் ஊர் போலும் 
    பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.

    kaiyAl-tozutu talai cAyttu uLLam kacivArkaN 
    mey Ar kuRaiyum tuyarum tIrkkum vimalanAr 
    ney ATutal anjcu uTaiyAr, nilAvum UrpOlum
    paivAy nAkam kOTal Inum pAcUrE.

பொருள்:     கைகளைப் பெற்றதன் பயனாகத் தொழுது, தலை பெற்றதன் பயனாக வணங்கி
உள்ளம் வாய்ந்ததன் பயனாகக் கசிந்துருகி வழிபடுவோரின் உடலிற் பொருந்திய குறைகளையும் 
துயர்களையும் தீர்க்கும் விகிர்தனார், நெய் முதலிய ஆனஞ்சும் விரும்பி ஆடுதல் உடையார்             
தங்குகின்ற ஊர் (எதுவெனில்), படம் வாய்ந்த நாகத்தின் தோற்றம் போலக் காந்தள் 
மலரும் பாசூரே. 

குறிப்புரை:     கைகளைப் பெற்றதன் பயனாகப் பாசூரீசன் பைங்கழலைத் தொழுதும், 
தலை உடையதன் பயனாக வணங்கியும், உள்ளம் வாய்ந்ததன் பயனாக உருகியும் வழிபடும் 
அடியார்களுடைய மெய்யிற் பொருந்திய குறைகளையும் துயரங்களையும் ஒழிக்கும் அநாதி 
மலமுத்தர். நெய் முதலிய அஞ்சும் (ஆனைந்தும்) ஆடுதலுடையார். திருமுறைகளுள் 'ஆனைந்து' 
எனப்படினும் ஜலமும் மயமும் விட்டுப் பால் முதலிய மூன்றுமே கூறப்படும் உண்மையை 
ஆங்காங்குணர்க. 'ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்'  பால் நறு நெய் தயிர் ஐந்தாடு 
பரம்பரன் (தி.7 ப.84 பா.9). நிலாவுதல் - நிலவுதல். பை வாய் நாகம் - படம் வாய்ந்த நாகம். 
படத்தோடு கூடியவாய் எனினும் ஆம். நாகம் கோடல் ஈனும்- -பாம்பைப் போல  
வெண்காந்தள் மலரைத் தோற்றும். 

    Behold! The devotees of Lord Civan worship Him by folding their two hands. 
Then they prostrate on the ground before You. They become tender in their mind and 
heart and melt. He is our God who wipes out all their physical ailments, sufferings 
and sorrows and graces them. You love the ablution with the five sacred things 
of cow such as milk, curd, ghee, cow's urine and cow dung. You are manifest in the
temple in Thiru-p-paasoor. Around the temple flower gardens are plenty where 
gloria flowers blossom giving the appearance of cobra's hood.

2116.     பொங்காடரவும்புனலுஞ்சடைமேற்பொலிவெய்தக் 
    கொங்கார்கொன்றைசூடியென்னுள்ளங்குளிர்வித்தார் 
    தங்காதலியுந்தாமும்வாழுமூர்போலும் 
    பைங்கான்முல்லைபல்லரும்பீனும்பாசூரே.         4

    பொங்கு ஆடுஅரவும் புனலும் சடைமேல் பொலிவு எய்த, 
    கொங்கு ஆர் கொன்றை சூடி, என் உள்ளம் குளிர்வித்தார் 
    தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும் 
    பைங்கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே.

    pogku ATu aravum punalum caTaimEl polivu eyta, 
    kogku Ar konRai cUTi, en uLLam kuLirvittAr, 
    tam kAtaliyum tAmum vAzum Urpolum- 
    paigkAl mullai pal arumpu Inum pAcUrE.

பொருள்:     சீறி ஆடும் பாம்பும் புனலும் தம் சடைமீது பொலிவாக விளங்க, மணமுள்ள 
கொன்றை சூடி என்னுடைய உள்ளத்தைக் குளிர்வித்தவர், தம்முடைய காதலியாகிய 
உமையம்மையும் தாமும் வாழும் ஊர் (எதுவென்னில்), பசிய காம்புகளை உடைய
முல்லைக்கொடி பற்களைப் போல அரும்புகளை ஈனும் பாசூரே. 

குறிப்புரை:     'கொன்றை சூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோமே' என்று 
அருளிய உண்மையை உணர்ந்து நம்பி யாரூரரும், 'வம்பறாவரிவண்டு மணம் நாற மலரும் 
மது மலர் நற்கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தனடியார்க்கு மடியேன்' 
என்றருளினார். அதனை ஈண்டும் உணர்வாம். 'கொன்றை மாலை கொண்டடியேன் நானிட்டுக் 
கூறி நின்று பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே' என்று 
ஆளுடைய அரசரும் அருளியதை நினைக்க  (தி.6 ப.99 பா.8). சிவபூஜை செய்வோருக்குக் கொன்றைப் 
பூக்களால் வழிபடும் பேரன்பு உண்டு. பொலிவு -விளக்கம். எய்த - அடைய. கொங்கு - மணம். 
குளிர்வித்தாராகிய தாமும் தம் காதலியும் வாழும் ஊர் என்க. காதலி - உமாதேவியார். 
பைங்கான் - பசிய மணம். கால் கொடியையும் காட்டையும் கொடியேற  நட்ட காலையும் 
குறித்ததாகக் கோடலும் பொருந்தும். பல்லரும்பு - பல்போலும் அரும்பு; பல அரும்பு.

    Behold! It is Paasoor. The city of Thiru-p-paasoor is surrounded by 
forests and gardens, where the green stemmed (vines) creeping plant jasmine 
abounds. They yield fragrant buds in bunches. These buds look like the teeth 
of young damsels. Oh God! You have adorned Your matted hair with the snake
which gets angry at times, raises its head, expands its hood and dances; 
You also support the Ganges river on Your matted hair. You have adorned 
Your body with garlands of cassia flowers full of oozing honey. When I see 
such a form of yours my mind becomes cool and happy. You are manifested in the 
temple in Thiru-p-paasoor along with Your consort and grace Your devotees
who gather there in the temple and worship You.

2117.     ஆடற்புரியும்ஐவாயரவொன்றரைச்சாத்தும் 
    சேடச்செல்வர்சிந்தையுளென்றும்பிரியாதார் 
    வாடற்றலையிற்பலிதேர்கையாரூர்போலும் 
    பாடற்குயில்கள்பயில்பூஞ்சோலைப்பாசூரே.        5

    ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று அரைச் சாத்தும் 
    சேடச் செல்வர், சிந்தையுள் என்றும் பிரியாதார், 
    வாடல்-தலையில் பலி தேர் கையார் ஊர்போலும் 
    பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

    ATal puriyum aivAy aravu onRu araic cAttum 
    cETac celvar, cintaiyuL enRum piriyAtAr, 
    vATal-talaiyil pali tEr kaiyAr, UrpOlum- 
    pATal kuyilkaL payil pUnjcOlaip pAcUrE.

பொருள்:     படமெடுத்து ஆடுதலைச் செய்யும் ஐந்தலைப் பாம்பொன்றை அரையில் 
கட்டும் சேடராகிய செல்வர், என் சிந்தையை விட்டு என்றும் அகலாதவர்; ஈரம் இல்லாத  
மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் கையுடையார் வாழும் ஊர் (எதுவென்னில்), பாடுகின்ற 
குயில்கள் தங்கும் பூஞ்சோலைகளை உடைய பாசூரே.

குறிப்புரை:     ஆடல் புரியும் - (படமெடுத்து) ஆடுதலைச் செய்யும்; ஐவாய் அரவு - ஐந்தலைப் 
பாம்பு. அரை - திருவரை, சாத்தும் - சார்த்தும். சேடச் செல்வர் - சேடராகிய செல்வர் (தி.1 ப.5 பா.2) 
உடையவர். 'சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன்'. 'சேடர் விண்ணோர்கட்குத் தேவர்' (தி.3 ப.9 பா.7). '
'சேடர் தேவன் குடித்தேவர் தேவர்' (தி.1 ப.52 பா.11). வாடல் தலை - வாடுதலை அடைந்த பிரமகபாலம் -
 பாடல் வெண்தலை சூடினர் (தி.1 ப.56 பா.7). வாடல் வெண்டலை மாலை (தி.2 ப.50 பா.11). 'வாடற்றலை 
மாலை' (தி.2. ப. 71 பா.3). 'வாடல் வெண்தலை' (தி.2 ப.112 பா.2). பாடல் குயில்கள் - பாடுதலையுடைய 
குயில்கள். பயில்-  பயின்ற, பூஞ்சோலை.

    Behold! It is Paasoor. Our Lord is the wealthiest with true and staunch devotees. 
He accommodates and uses the five-headed snake around His waist like a belt to keep the 
dresses in position. He never leaves the minds of His devotees who always remember Him, 
praise and worship Him. He goes round the world for alms by stretching His hand, which 
carries the skull with the dried flesh emitting bad smell. He is manifest in the temple 
of Thiru-p-paasoor where the cuckoos sing melodies in the flowery gardens situated 
all around the sacred temple.

2118.     கானின்றதிரக்கனல்வாய்நாகங்கச்சாகத்
    தோலொன்றுடையார்விடையார்தம்மைத்தொழுவார்கள்
    மால்கொண்டோடமையல்தீர்ப்பாரூர்போலும் 
    பால்வெண்மதிதோய்மாடஞ்சூழ்ந்தபாசூரே.        6

    கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சுஆக, 
    தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத் தொழுவார்கள் 
    மால் கொண்டுஓட மையல் தீர்ப்பார்; ஊர் போலும் 
    பால்வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.

    kAl ninRu atira, kanal vAy nAkam kaccu Aka, 
    tOl onRu uTaiyAr; viTaiyAr; tammait tozuvArkaL 
    mAl koNTu OTa maiyal tIrppAr; UrpOlum- 
    pAl veNmati tOy mATam cUznta pAcUrE.

பொருள்:     கால் ஊன்றி நிலம் அதிர நடஞ்செய்ய, கொடிய நஞ்சினை உமிழும் 
வாய் உடைய நாகத்தைத் தம் கச்சாகவும், தோலை ஆடையாகவும் கொண்டவர்; 
இடப வாகனத்தார், அன்புடனே தம்மைத் தொழுவார்களின் அறிவு மயக்கம் ஓடத் 
தீர்ப்பார் ஊர் (எதுவெனில் ), பால் போல் வெண்மையான ஒளி வீசும் மதி அளாவும் 
உயரிய மாடங்களை உடைய பாசூரே. 

குறிப்புரை:     கால் நின்று அதிர- திருவடி ஊன்றி நடஞ்செய்ய. கனல் - நஞ்சின் வெம்மை 
கச்சு- அரைக்கு அசைக்கும் கச்சு. விடையார் - இடபவாகனத்தார். மால் - அன்பு. (ப. 182 பா. 1). 
மையல்- மயக்கம். மதி தோய் மாடம்-  சந்திர மண்டலத்தை அளாவிய உயரிய மாடம். பால் வெண் 
மதி- பால்போலும் வெண்ணிறத்தை உடைய திங்கள்.

    Behold! It is Paasoor. This city and the temple are sacred as our Lord 
has selected it for His abode. He performs that cosmic dance, stamping His foot with 
force and beauty, to the music of the cymbal as per rules, and using the snake as a 
broad strap on His waist. He wears different hides as His dress. He sustains the white
bull for His conveyance to travel all around the world. He enables His devotees who
worship Him with sincere devotion, to get rid of their bewilderment completely. 
He is manifest in the temple in Thiru-p-paasoor city with tall palatial buildings 
on the top of  which the white milk-like baby moon laps over while passing through 
the sky.

2119.     கண்ணினயலேகண்ணொன்றுடையார்கழலுன்னி 
    எண்ணுந்தனையுமடியாரேத்த அருள்செய்வார் 
    உண்ணின்றுருகஉவகைதருவாரூர்போலும் 
    பண்ணின்மொழியார்பாடலோவாப்பாசூரே.        7

    கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னி 
    எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார், 
    உள்-நின்று உருக உவகை தருவார், ஊர்போலும் 
    பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.

    kaNNin ayalE kaN onRu uTaiyAr, kazal unni 
    eNNum tanaiyum aTiyAr Etta aruL ceyvAr, 
    uL-ninRu uruka uvakai taruvAr, UrpOlum- 
    paNNin moziyAr pATal OvAp pAcUrE.

பொருள்:     வலக்கண்ணும் இடக்கண்ணும் அயலாகும் மேற்பக்கத்திலே நெற்றிக் கண் 
ஒன்றை உடையவர்; அவருடைய கழலணிந்த திருவடியை நினைந்து, அத்திருவடிச் சிறப்பினைக் 
கருதும் அடியவர்களுக்கு அருள் செய்வார்; உள்ளத்தில் நினைக்க உவகை தருவார்.
அவருடைய ஊர் (எதுவெனில்), பண்ணைப் போல இனிமையாகப் பேசும் மகளிரின் 
பாடல் ஒழியாத பாசூரே.

குறிப்புரை:     கண்ணின் அயலே- வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் அயலாகும் 
மேற்பக்கத்தில். கண் ஒன்று - நெற்றிக் (தீக்) கண்ணொன்றை. கழல் - திருவடி. உன்னி- நினைந்து. 
எண்ணும் தனையும் - அத்திருவடிச் சிறப்பைக் கருதுமளவும். உவகை - உவப்பிற்குரிய வரங்களும் 
முத்தி இன்பமும். 'உகவை' என்று கழகப்பதிப்பில் இருப்பது 'தான் நினைத்தைம் புலனும் அழிந்த 
சிந்தையந்தணாளர்' (தி.1 . ப. 53 பா.6) என்பதில் புலனும் என்று புள்ளி மாறியது போல் இதிலும் புள்ளி 
மாறி நின்றவாறறிக. (பார்க்க. பதி. 19. பா 3). உவகை தருவான்- மதுரை ஞானசம்பந்தப்பிள்ளை 
பதிப்பில் 'உவகை' என்றே உளது. அடங்கன்முறைப் பதிப்புகளில் அப்பதிப்பே மிக மேலானது 
என்பது அறிஞர் முடிபு. 'உரந்தோன்றும் பாடல் கேட்டு உகவையளித்தீர்', 'உகவாதார் புரந்தோன்றும் 
மும்மதிலும் எரியச் செய்தீர்' (தி.2 ப.54 பா.8). பண்ணின் - பண்ணைப்போன்ற. மொழியார் - 
மொழிகளை உடைய மகளிர். ஓவா- ஒழியாத. பாரின் மிசையார் பாடல் ஓவா (பா.2)

    Behold! It is Paasoor. Our Lord has a third eye between the two, slightly 
above in the forehead. He bestows grace on the devotees who worship Him with pure 
thoughts of His holy feet. On seeing those servitors whose hearts melt while 
singing our Lord's fame, He confers delightful boons and blessings on them. 
Our Lord manifests Himself in the temple in Thiru-p-paasoor. In this city,
young damsels whose normal speech itself is musical, carry on their divine sweet 
music ceaselessly forever.

2120.     தேசுகுன்றாத்தெண்ணீரிலங்கைக்கோமானைக் 
    கூசஅடர்த்துக்கூர்வாள்கொடுப்பார்தம்மையே 
    பேசிப்பிதற்றப்பெருமைதருவாரூர்போலும் 
    பாசித்தடமும்வயலுஞ்சூழ்ந்தபாசூரே.        8

    தேசு குன்றாத் தெண்நீர் இலங்கைக் கோமானைக் 
    கூசஅடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே 
    பேசிப் பிதற்றப் பெருமை தருவார், ஊர்போலும் - 
    பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.

    tEcu kunRAt teN nIr ilagkaik kOmAnaik 
    kUca aTarttuk kUrvAL koTuppAr, tammaiyE 
    pEcip pitaRRap perumai taruvAr, UrpOlum- 
    pAcit taTamum vayalum cUznta pAcUrE.

பொருள்:     ஒளி குன்றாத, கடல் நடுவிலே உள்ள, இலங்கைக்கு அரசனாகிய இராவணன்
 நாணிக் கூசும்படி அடர்த்துப் பின் அவன் வணங்கக் கூர்வாள் கொடுத்தருளியவர்; தம்முடைய 
பெருமையைப் பேசிப் பிதற்றுவோருக்கு இம்மை நலங்களும் வீட்டின்பமும் தருபவரின் ஊர் 
(எதுவெனில்), நீர்ப்பாசியுடைய தடாகங்களும் வயலும் சூழ்ந்த பாசூரே'

குறிப்புரை:     தேசு - சூரியன் தன்மேல் செல்லாதிருப்பினும் சிவ பக்தியின் முதிர்ச்சியை 
உடைய அரசனது ஆட்சியாதலின் வையங்காக்கும் ஒளி. குன்றா - குறையாத. தெள்நீர் இலங்கை - 
தெளிந்த நீரை உடைய  கடல் நடுவிலே உள்ள இலங்கை. கூச - மனம் கூசுதலடைய. வீரத்தால் நாண் 
என்பதும் பொருந்தும். வாள் கொடுத்த வரலாறு முன்னும் பின்னும் பலமுறை கூறப்பெற்றுள்ளது. 
'கொடுப்பார் தம்மையே பேசி'  என்ற ஏகாரத்தை ஊன்றி நோக்குதல் நன்று. பெருமை - இம்மை 
மறுமை நலங்களும் வீட்டின்பமும். பாசி- நீர்ப்பாசி. தடமும் வயலும் நீர்வளத்தால் பசுமை 
உடையவாதலை உணர்த்தியது. இதனால் ஈண்டுப் பாசூரென்ற பெயர்க்காரணமும் நன்கு 
விளங்குகின்றது.

    Behold! It is Paasoor. Sri Lanka is surrounded by never diminishing bright 
waters of the ocean.Our Lord subdued the mightiness of the king of Sri Lanka who
had excessive egoism.The king felt ashamed of himself and begged for pardon. Our
Lord blessed him and gave a terribly sharp mystic sword. He gives greatness to those
people who chatter about and praise His fame. Our Lord is manifest in the temple 
in Thiru-p-paasoor.This city is surrounded by green paddy fields and mosses covered 
with water pools. 

2121.     நகுவாய்மலர்மேலயனும்நாகத்தணையானும் 
    புகுவாயறியார்புறநின்றோரார்போற்றோவார் 
    செகுவாயுகுபல்தலைசேர்கையாரூர்போலும் 
    பகுவாய்நாரையாரல்வாரும்பாசூரே.        9

    நகு வாய் மலர்மேல் அயனும், நாகத்துஅணையானும், 
    புகு வாய் அறியார், புறம் நின்று ஓரார், போற்று ஓவார்; 
    செகு வாய் உகு பல்-தலை சேர் கையார் ஊர்போலும் 
    பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.

    naku vAy malarmEl ayanum, nAkattu aNaiyAnum, 
    puku vAy aRiyAr, puRam ninRu OrAr, pORRu OvAr; 
    ceku vAy uku pal-talai cEr kaiyAr UrpOlum- 
    pakuvAy nArai Aral vArum pAcUrE.                

பொருள்:     விரிந்த தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும், பாம்பணைமேல் உறங்கும் 
திருமாலும் இறைவனைக் காணப் புகும் இடம் அறியாராகிப் புறத்தே நின்று துதித்தலை ஒழியார்; 
அழிந்த வாயிலிருந்து பற்கள் உதிர்ந்த பிரம கபாலம் சேரும் கை உடையவரின் ஊர் (எதுவெனில்), 
பிளந்த வாயை உடைய நாரை ஆரல் மீன்களை வாரிக் கொண்டு விழுங்கும் பாசூரே.

குறிப்புரை:     நகு வாய் மலர்- திறந்த வாயையுடைய தாமரை. நாகத்து அணையான் - 
பாம்பணை மேலுறங்குபவன். புகுவாய் - சிவபெருமானைக் காணப்புகும் இடம். ஓரார் - உணரார். 
போற்று - துதி. ஓவார் - ஒழியார். செகு - அழிந்த. வாய் - வாயிலிருந்து. பல் உக்க தலை - 
பல் சிந்திய தலை. 'பல்இல் ஓடு கையேந்தி' (தி.1 ப.51 பா.4) (தி.2 ப.91 பா.6) (தி.3 ப.45 பா.4) 
'பல்லார் தலைசேர் மாலை' (தி.2 ப.63 . பா. 3). 'வெண் பற்றலை கலனா' (தி.7 பா.506). 
'பல் இல் வெள்ளைத்தலையன்' (தி.7 பா.831). பகு வாய் நாரை - பிளந்த வாயையுடைய நாரை. 
ஆரல் மீன்களை வாரும் பாசூர். வாரும் - வெளவும்.                        

    Behold! It is Paasoor. The divine master Brahma who rests in the lotus 
flower and the divine chief, Vishnu resting on the serpent - they both could not 
comprehend our Lord. They did not know the correct path of salvation. They did not 
realise that salvation was possible only through our Lord's glory. 
Our Lord, whenever needed, holds in His hand the dead human skull without 
teeth to get alms. Our Lord is manifest in the temple in Thiru-p-paasoor. 
In this city, the cleft billed storks move about to pick the eel fish inside 
the water pools.

2122.     தூயவெயில்நின்றுழல்வார்துவர்தோயாடையார் 
    நாவில்வெய்யசொல்லித்திரிவார்நயமில்லார் 
    காவல்வேவக்கணையொன்றெய்தாரூர்போலும் 
    பாவைக்குரவம்பயில்பூஞ்சோலைப்பாசூரே.        10

    தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார்,
    நாவில் வெய்ய சொல்லித் திரிவார் - நயம் இல்லார்; 
    காவல் வேவக் கணைஒன்று எய்தார் ஊர்போலும் - 
    பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

    tUya veyil ninRu uzalvAr, tuvar tOy ATaiyAr,            
    nAvil veyya collit tirivAr--nayam illAr; 
    kAval vEvak kaNai onRu eytAr UrpOlum- 
    pAvaik kuravam payil pUnj cOlaip pAcUrE.

பொருள்:     கடுமையான வெயிலில் நின்று துன்பப்படுவோராகிய சமணர், துவராடை 
உடுத்த பவுத்தர் ஆகிய இவர்கள் நாவினில் கொடுமையான சொற்களைச் சொல்லித் திரிவர்.
பேச்சில் நயம் இல்லாதவர்கள்; காவலைக் கொண்ட முப்புரம் எரியில் மூழ்க அம்பொன்று
எய்தவருடைய ஊர் (எதுவெனில்), பாவை போல மலர்களை ஈனும் குரவமரங்கள் நிறைந்த
 பூஞ்சோலைகளை உடைய பாசூரே.

குறிப்புரை:     தூய வெயில் - நல்ல வெயில். தூய்மை - கலப்பின்மை உணர்த்திற்று.         
'சுத்தப்  பொய்' என்பது போல. வெய்ய - கொடிய சொற்களை.  நயம்-நீதி.  காவல் - மும்மதில். 
திரிபுரம்- தொழிலாகுபெயர். பாவைக்குரவம் - பாவை போலும் பூத்தலையுடைய குரவ மரம். 
'அரவின்வாயின் முள்ளெயிறு ஏய்ப்ப அரும்பு ஈன்று குரவம்பாவை முருகமர் சோலைக் 
குற்றாலம்' (தி.1 ப.99 பா.9).

    Behold! It is Paasoor. In this city, the Jains do live and they roam all 
around the city in hot sun. The Buddhists wearing ochre-robes also roam. They both 
speak ill words. Our Lord burnt the three flying forts of the asuras who illegally 
guarded their forts. Our Lord shot an arrow to destroy the forts. In the forests 
bottle flower trees grow, their blossoms look like damsels. In this city, our Lord 
is manifest in the temple in the city of Thiru-p-paasoor.

2123.    ஞானமுணர்வான்காழிஞானசம்பந்தன் 
    தேனும்வண்டுமின்னிசைபாடுந்திருப்பாசூர்க் 
    கானம்முறைவார்கழல்சேர்பாடலிவைவல்லார் 
    ஊனமிலராயும்பர்வானத்துறைவாரே.        11

    ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன், 
    தேனும் வண்டும் இன்னிசை பாடும் திருப் பாசூர்க் 
    கானம் உறைவார் கழல் சேர் பாடல்இவை வல்லார், 
    ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.

    njAnam uNarvAn kAzi njAnacampantan 
    tEnum vaNTum inicai pATum tirup pAcUrk 
    kAnam uRaivAr kazal cEr pATal ivai vallAr,
    Unam ilarAy, umpar vAnattu uRaivArE.

பொருள்:     உவமையிலாக் கலை ஞானமும் பவமதனை அறமாற்றும் உணர்வரிய 
மெய்ஞ்ஞானமும் உணர்ந்த காழி ஞானசம்பந்தன், தேனியும் வண்டும் இன்னிசை பாடும்
திருப்பாசூர் கானம் உறைவார் திருவடிகளைப் பாடிய இப்பாடல்களை வல்லவர்கள் 
பிறப்பிறப்பாகிய குறைகள் இலராகி வானோர்க்கு உயர்ந்த உலகத்தில் வாழ்வார்கள்.

குறிப்புரை:     ஞானம்- சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாக் 
கலை ஞானமும். பவமதனை அறமாற்றும் பாங்கினிலோங்கிய ஞானமாகிய உணர்வரிய 
மெய்ஞ்ஞானமும். உணர்வான்- திருவருண் ஞானம் குழைத்து அளித்த அம்பிகையின் 
திருமுலைப்பால் குடித்த அந்நிலையில் (ஓதாது) உணர்ந்தவர். தேன்- நால்வகை வண்டுள் 
ஒன்று. திருப்பாசூர்க் கானம் -என்பதை நோக்கின் 'பைங்கான்' (பா. 4) என்புழிக் காடென்னும் 
பொருள் ஏற்றதாதலறிக. ஊனம்- பிறப்பிறப்பாகிய குறைகள். உம்பர் வானத்து - 
வானோர்க்குயர்ந்த உலகத்தில்.

    Behold! It is Paasoor. In this city, huge forest areas, full of big 
trees and flower plants and vines, exist. Here the beetles and bees flock 
together in large numbers in the forest to suck honey. While flying their 
humming sound resembles sweet music and is heard all over the city. Our saint 
Thiru-gnana-Sambandar is highly knowledgeable both in the universal information 
of philosophy and literature and in divine knowledge. He came to Thiru-p-paasoor, 
went to the temple, worshipped our Lord manifested there and sang divine songs 
on the holy feet of Lord of Paasoor, these ten verses. Those devotees who are 
capable of reciting these ten verses will be flawless and will have their 
abode in the celestial world.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            60ஆம் பதிகம் முற்றிற்று
            End of 60th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 197                பதிக எண். 61

61.திருவெண்காடு                61.THIRU-VENN-KAADU

பண் : காந்தாரம்                    Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    184 ஆவது பதிகத்தைக் காண்க.

பதிக வரலாறு

    184 ஆவது பதிகத்தைக் காண்க.

            திருச்சிற்றம்பலம்

2124.     உண்டாய்நஞ்சையுமையோர்பங்காஎன்றுள்கித் 
    தொண்டாய்த்திரியுமடியார்தங்கள்துயரங்கள் 
    அண்டாவண்ணமறுப்பானெந்தையூர்போலும் 
    வெண்டாமரைமேற்கருவண்டியாழ்செய்வெண்காடே.        1

    "உண்டாய், நஞ்சை! உமை ஓர் பங்கா!" என்று உள்கித் 
    தொண்டுஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள் 
    அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை, ஊர்போலும் 
    வெண்தாமரை மேல் கருவண்டு யாழ்செய் வெண்காடே.

    "uNTAy, nanjcai! umai Or pagkA!" enRu uLkit 
    toNTu Ayt tiriyum aTiyAr tagkaL tuyaragkaL
    aNTA vaNNam aRuppAn, entai, UrpOlum- 
    veN tAmarai mEl karuvaNTu yAz cey veNkATE.

பொருள்:     தேவர் முதலியோரைக் காக்க நஞ்சை அமுதமாக உண்டாய்! உமையை ஒரு 
பாகமாகக் கொண்ட அம்மையப்பரே! என்று பயபக்தியுடன் தொண்டராகிப் பணி செய்து திரியும் 
அடியார்களுடைய துயரங்கள் அவர்களை அண்டாத வண்ணம் நீக்குவானாகிய எம் தந்தை 
உறையும் ஊர் எதுவெனில், வெண்ணிறத் தாமரை மலர்மேல் கருநிற வண்டு யாழ் போல 
முரலும் திருவெண்காடே. 

குறிப்புரை:     நஞ்சை உண்டாய் உமையோர் பாங்கா என்று உள்கி - நஞ்சினை அமுதாக 
உண்டு தேவர் முதலியோரைக் காத்த தலைவரே! அம்மையப்பரே! என்று உள்ளத்தில் தியானம் 
புரிந்து. தொண்டராய்த் திரியும் அடியார் தங்கள் - தொண்டராகி உலவும் அடியவர்களுடைய. 
அண்டாவண்ணம் அறுப்பான்- மீண்டும் அண்டாதவாறு அறத் தீர்த்தருள்பவன். வெண்டாமரை 
மலர்மேல் கருவண்டுகள் யாழ் (ஒலியைச்) செய்யும் வளத்தையுடைய திருவெண்காடு எந்தை 
ஊர் போலும். மேலும் இவ்வாறே கொள்க (பா. 2, 4, 5, 6, 8, 9 நோக்குக).

    Oh! It is Civan, our Lord of Thiru-venn-kaadu. In this city of Thiru-venn-kaadu, 
white lotus flowers blossom in large numbers. The black bees attracted by these flowers 
with a good yield of honey approach these flowers, flapping their wings with musical 
tone of lute. Such is the beauty and prosperity of the city. The devotees who gather 
in the temple of this city, worship our Lord reciting with devotion "Oh God! You 
imbibed the poison that came out of the ocean of milk when devas and asuras churned 
the milk; You have embedded Your consort Uma Devi on the left half of Your body". 
Those who meditate on the Lord in this way and become His consistent servitors 
will not get afflictions at all. You cut off the sufferings of those devotees 
and see that torture never agonizes them in future in their life. This, our Father 
is manifest in the temple in Thiru-venn-kaadu considering it as His own abode.

2125.     நாதன்நம்மையாள்வானென்றுநவின்றேத்திப் 
    பாதம்பன்னாள்பணியுமடியார்தங்கள்மேல் 
    ஏதந்தீரஇருந்தான்வாழுமூர்போலும் 
    வேதத்தொலியாற்கிளிசொற்பயிலும்வெண்காடே.        2

    "நாதன் நம்மை ஆள்வான்!" என்று நவின்று ஏத்திப் 
    பாதம் பல-நாள் பணியும் அடியார் தங்கள்மேல் 
    ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும் 
    வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.

    nAtan! nammai ALvAn!" enRu navinRu Etti, 
    pAtam pal-nAL paNiyum aTiyAr tagkaL mEl 
    Etam tIra iruntAn vAzum UrpOlum- 
    vEtattu oliyAl kiLi col payilum veNkATE.

பொருள்:     தலைவன் நம்மை ஆளாகக் கொண்டு காப்பான் என்று பலமுறையும் துதித்து 
ஏத்திப் பலநாளும் வணங்குகின்ற அடியார்களிடத்தில் அணுகும் துன்பங்கள் தீர்ப்பதற்குப் 
பெருமான் எழுந்தருளியிருக்கும் ஊர், வேதத்து ஒலியைக் கேட்டுக் கிளி பேசிப் பயிலும் 
திருவெண்காடே.

குறிப்புரை:     நம்மை நாதன் ஆள்வான் என்று நவின்று ஏத்திப் பல்நாள் பாதம் பணியும் 
அடியார் தங்கள்மேல் ஏதம் தீர இருந்தான் - நம்மை நம்பெருமான் ஆளாக் கொண்டு காப்பான் 
என்று  கருத்திற் கொண்டு, வாயால் பயின்று துதித்துப் பல நாளும் வணங்குகின்ற அடியவர்களிடத்தில் 
(அணுகும்) துன்பங்கள் தீர்ந்தொழியும் பொருட்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான். 'பாரிசையும் 
பண்டிதர்கள்  பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் 
பொருட்சொல்லும் மிழலை' (தி.1 ப.132 பா.1) கிளிகள் வேதத்தின் ஒலியாற் சொற்பயிலும், 
பண்மொழியால் அவன் நாமம் பலவோதப்  பசுங்கிள்ளை வெண்முகில்சேர் கரும்பெணைமேல் 
வீற்றிருக்கும் வெண்காடே.

    It is Civan, our Supreme Being, the Lord of Thiru-venn-kaadu. The devotees go 
to the temple daily and worship Him. There they recite His name repeatedly and praise 
Him with firm devotion and belief. The Supreme Being, their Lord will definitely 
grace them and take them under His protection. For many days they recite like this 
and worship His holy feet. Firm conviction in His grace helps for finally our Lord 
wipes out, the moral or physical blemishes of these devotees. He is manifest in the 
temple of Thiru-venn-kaadu. In this city, Vedic scholars repeat several times the Vedic 
mantras. The parrots living here as domestic birds hear the voice for long days 
and succeed in repeating some words of the Vedas, almost in the same tone. 
Thiru-venn-kaadu is such a sacred city.

2126.     தண்முத்தரும்பத்தடமூன்றுடையான்றனையுன்னிக் 
    கண்முத்தரும்பக்கழற்சேவடிகைதொழுவார்கள் 
    உண்முத்தரும்பவுவகைதருவானூர்போலும் 
    வெண்முத்தருவிப்புனல்வந்தலைக்கும்வெண்காடே.        3

    தண்முத்து அரும்பத் தடம்மூன்று உடையான்தனை உன்னி, 
    கண் முத்து அரும்பக் கழல்சேவடி கைதொழுவார்கள், 
    உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர்போலும் 
    வெண்முத்து அருவிப் புனல் வந்து அலைக்கும் வெண்காடே.

    taN muttu arumpat taTam mUnRu uTaiyAn tanai unni, 
    kaN muttu arumpak kazal cEvaTi kaitozuvArkaL,
    uL muttu arumpa, uvakai taruvAn UrpOlum- 
    veN muttu aruvip punal vantu alaikkum veN kATE.

பொருள்:     தண்ணிய முத்துக்கள் அரும்பு போல் தோன்றத் தடங்கள் மூன்று உடையானை 
நினைத்துக் கண்ணில் முத்துப்போல் கண்ணீர் சொட்டக் கழலணிந்த செய்ய திருவடிகளைக் 
கைதொழுவார்களது உள்ளத்தே முத்துப்போல் உவகை தருவானுடைய  ஊர் எதுவெனில், 
வெண் முத்தினைப் போன்று அருவிப் புனல் வந்து அலை வீசும் திருவெண்காடே.

குறிப்புரை:     தண் முத்து - தண்ணிதாகிய முத்துக்கள். அரும்ப - அரும்பு போலத் தோன்ற, 
தடம் மூன்று - மூன்று திருக்குளங்களை; 'முக்குளம்' உன்னி- தியாநம் புரிந்து. கண்முத்து அரும்ப -
கண்களில் ஆனந்த பாஷ்பம் முத்துக்களைப் போலச் சொட்ட. கழல் சே அடி - கழலைப் பூண்ட 
செய்ய திருவடிகளை. உள் - உள்ளத்தே. முத்து அரும்ப - முத்துப் போலும் வெளிதான நிலை
 (அகளங்கம் ஆன தூய தன்மை) தோன்ற. உவகை தருவான் - இம்மை மறுமை இன்பங்களும்
 பேரின்பமும் அருள்பவர். வெண்முத்து அருவி - வெளிய முத்தினை ஒத்த அருவி. புனல் -நீர்.

    Oh! It is Civan, our Lord of Thiru-venn-kaadu. This city of Thiru-venn-kaadu 
has three tanks as their sacred temple tanks. They are called (1) Solar Tank, (2) 
Tank of Sacred Fire, and (3) Moon Tank. The sacred temple near these three tanks 
is the abode of our Lord Thiru-venn-kaattu-Eesar or Suvethaaraneesar. The devotees 
think of the Lord of Thiru-venn-kaadu and discharge droplets from their eyes. 
These droplets resemble pearls. They worship the ankleted holy feet with folded hands. 
At this moment they get delighted in their hearts and feel the grace of our Lord that 
resembles pearls. Our Lord manifests Himself in the temple in Thiru-venn-kaadu. In this 
city water particles looking like pearls are found when the waterfalls dash into the 
pools below. Devotees with heart-felt teardrops looking like pearls 
are sure to be blessed by the Lord with His pearl like grace.

2127.     நரையார்வந்துநாளுங்குறுகிநணுகாமுன் 
    உரையால்வேறாவுள்குவார்களுள்ளத்தே 
    கரையாவண்ணங்கண்டான்மேவுமூர்போலும் 
    விரையார்கமலத்தன்னமருவும்வெண்காடே.        4

    நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன் 
    உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே, 
    கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர்போலும் - 
    விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே.

    naraiyAr vantu nALum kuRuki naNukAmun,
    uraiyAl vERA uLkuvArkaL uLLattE, 
    karaiyA vaNNam kaNTAn mEvum UrpOlum- 
    virai Ar kamalattu annam maruvum veNkATE.

பொருள்:     மூப்பு வந்து, உடம்பை விட்டு உயிர் நீங்கும் நாள் நெருங்கி அடையும் முன்
வாயுரையோடு பொது நீக்கித் தன்னை நினைப்பவர்களின் உள்ளத்தே, அவர்கள் கரையா 
வண்ணம் அருள்பவன் மேவும் ஊர், மணங்கமழும் தாமரை மலர்மேல் அன்னம் பொருந்தும் 
திருவெண்காடே.

குறிப்புரை:     நரையார்- வெளுத்த மயிர். 'தென்றலால் புகுந்துலவும் திருத்தோணி 
புரத்துறையுங் கொன்றைவார் சடையார்' (தி.1 ப.60 பா.7) 'கொண்டலார் கொணர்ந்து அங்கு 
உலவுந் திகழ கோட்டாற்றில் தொண்டெலாம் துதிசெய்ய' (ப.188 பா.8). நரையார் (தி.1 ப.7 பா.91) 
நாளும் குறுகி - உயிர் உடம்பின் நீங்கும் நாளும் நெருங்கி, இனி வாழ்நாளும் சுருங்கி எனலுமாம். 
நணுகுதல் - நாளின் வினை. உரையால் வேறா -வாயுரையால் வேறுபடாதபடி உள்குவார்கள் - 
தியானிப்பவர்களது. கரையாவண்ணம் - கரைந்து ஒழியாதவாறு நிலைத்து நிற்கும் வகை. 
இறக்கும் முன் இறைவனை அகத்தில் நினைந்தும், வாயால் வாழ்த்தியும் வழிபடுவார் உள்ளத்தில் 
அவனது திருவருளுருவம் கரையாது நிற்கும் என்றவாறு, விரை- மணம். கமலத்து - தாமரை 
மலரில். அன்னம் - அன்னப்பறவை. மருவும் - பொருந்தி வாழும்.

    Oh! It is Civan, Lord of Thiru-venn-kaadu. Our Lord bestows His agility 
on His devotees, who never forget their sincere prayerful words without allowing 
their thoughts for any straying. They follow their daily ritual without fail before 
they become old, their hair becomes grey and the physical body becomes stunted. 
At this stage our Lord's grace and Holy Form get engraved in their hearts and our 
Lord's shrine is Thiru-venn-kaadu, where swans live peacefully in fragrant lotuses.

2128.     பிள்ளைப்பிறையும்புனலுஞ்சூடும்பெம்மானென் 
    றுள்ளத்துள்ளித்தொழுவார்தங்களுறுநோய்கள் 
    தள்ளிப்போக அருளுந்தலைவனூர்போலும் 
    வெள்ளைச்சுரிசங்குலவித்திரியும்வெண்காடே.        5

    "பிள்ளைப்பிறையும் புனலும் சூடும் பெம்மான்" என்று 
    உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள் 
    தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர்போலும் 
    வெள்ளைச்சுரிசங்கு உலவித் திரியும் வெண்காடே.

    "piLLaippiRaiyum punalum cUTum pemmAn" enRu 
    uLLattu uLLit tozuvAr tagkaL uRu nOykaL 
    taLLip pOka aruLum talaivan UrpOlum-
    veLLaiccuri cagku ulavit tiriyum veNkATE.

பொருள்:     இளம் பிறையையும் கங்கையாற்றையும் தலையில் சூடும் பெருமான் என்று 
உள்ளத்தில் நினைந்து தொழுபவர்களின் மேல் உறவரும் நோய்கள் அணுகாமல் விலகிப் 
போயொழிய அருள் செய்யும் தலைவனின் ஊர், வெள்ளை நிறமுள்ள கரிந்த சங்குகள் 
உலவித் திரியும் திருவெண்காடே.

குறிப்புரை:     பிள்ளைப்பிறை - இளம்பிறை. புனல் - கங்கை நீர். பெம்மான் - பெருமகனென்பதன்
மரூஉ. உள்ளத்து உள்ளி தொழுவார் தங்கள் - மனத்தில் நினைந்து வழிபடும் அடியார்களுடைய 
உறுநோய்கள் - மிக்க நோய்கள். தள்ளி - உந்தி. போக-போயொழிய. போகத்தள்ளியருளும் 
எனலுமாம். வெள்ளைக்கரிச் சங்கு உலவித் திரியும் - வெண்ணிறமுடைய கரிந்த சங்குகள் 
உலாவித் திரியும்.

    It is Civan, our Lord of Thiru-venn-kaadu. The devotees of this place go to 
the temple, worship our Lord and pray in their mind as under: "Oh Lord! You retain 
the baby moon and the river Ganges in Your matted hair". Our Lord graces those devotees
and wipes out the disease of birth and death from their life for ever. This Lord is 
manifested in the temple in Thiru-venn-kaadu city. In this city, the conches looking 
black worms with white lines inside the body move along the seashore and all other
places in the forest.

2129.     ஒளிகொள்மேனியுடையாயும்பராளீயென் 
    றளியராகியழுதுற்றூறுமடியார்கட் 
    கெளியானமரர்க்கரியான்வாழுமூர்போலும் 
    வெளியவுருவத்தானைவணங்கும்வெண்காடே.        6

    "ஒளி கொள் மேனி உடையாய்! உம்பர் ஆளீ!" என்று 
    அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு 
    எளியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும் 
    வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.

    "oLi koL mEni uTaiyAy! umpar ALI!" enRu 
    aLiyar Aki azutu URRu URum aTiyArkaTku 
    eLiyAn, amararkku ariyAn, vAzum UrpOlum
    veLiya uruvattu Anai vaNagkum veNkATE.

பொருள்:     'ஒளிகொள் மேனி உடையாய்! உம்பராளி' என்று அன்பில் முதியராகி 
நெகிழ்ந்து அழுது கண்ணீர் ஊற்று ஊறும் அடியார்களுக்கு எளியவன்; அமரர்களுக்கு 
அரியவனான  இறைவன் வாழும்  ஊர் எதுவெனில், வெள்ளானை தவஞ்செய்து 
வணங்கும் திருவெண்காடே.

குறிப்புரை:     ஒளி கொள்மேனி உடையாய்! உம்பராளீ என்று - ஞானப்பிரகாசத்தைக் 
கொண்ட திருமேனி உடையவரே. தேவர்களை ஆள்பவரே என்று துதித்து. அளியர் ஆகி- அன்பின் 
முதிர்ச்சியை உடையராகி. அழுது உற்று ஊறும் அடியார்கட்கு எளியான்-  உள்ளுருகியும், 
கண்ணீர் சொரிந்தும் (மெய்யன்பு) மிக்குத் திருவருளில் ஊறிய அடியவர்கட்கு எளியவன். 
அமரர்க்கு அரியான் - அழியும் இன்பத்தை விரும்பும் தேவர்கட்கு அரியவன். வெளிய உருவத்து 
ஆனை - வெண்ணிறத்தைப் பெற்ற வடிவத்தை உடைய யானை. 'அடைந்து அயிராவதம் 
பணிய மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடு'  'வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு 
வெண்காட்டான்' (தி.2 ப.184 பா.7,9).

    Oh! It is Civan, the Lord of Thiru-venn-kaadu. "Oh Lord! the Ruler, the King of 
the celestials! Your body shines brightly with divinity!" The devotees with great 
love of Him, weep and worship His holy feet. He is easily approachable to mature 
and melting devotees, but unapproachable to devas who seek fleeting joys. Such a great 
Lord has selected and manifested Himself in the temple in Thiru-venn-kaadu. To this 
sacred temple the white elephant of Indra known as Iravatham came and worshipped our 
Lord and was graced by Him.

2130.     கோள்வித்தனையகூற்றந்தன்னைக்குறிப்பினால் 
    மாள்வித்தவனைமகிழ்ந்தங்கேத்தமாணிக்காய் 
    ஆள்வித்தமரருலகமளிப்பானூர்போலும் 
    வேள்விப்புகையால்வானமிருள்கூர்வெண்காடே.        7

    கோள் வித்து அனைய கூற்றம்தன்னைக் குறிப்பினால் 
    மாள்வித்து, அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்கு ஆய் 
    ஆள்வித்து அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும் 
    வேள்விப்புகையால் வானம் இருள் கூர் வெண்காடே.

    kOL vittu anaiya kURRam tannaik kuRippinAl
    mALvittu, avanai makizntu agku Ettu mANikku Ay 
    ALvittu, amarar ulakam aLippAn UrpOlum- 
    vELvip pukaiyAl vAnam iruL kUr veNkATE.

பொருள்:     கொலைக்கு வித்துப் போன்ற கூற்றுவனைச் சிவத்தியானத்தினால் மாள்வித்து, 
அச்சிவபெருமானை மகிழ்ந்து ஏத்த அந்த பிரமச்சாரியை தேவலோகத்தை ஆளச்செய்து 
அருள்செய்வார் ஊர் எதுவெனில், வேள்விப் புகையால் வானம் இருள்கூரும் திருவெண்காடே. 

குறிப்புரை:     கோள் - கொலை. கோள் வித்து- கொலைக்கு விதை. அனைய- போன்ற . கூற்றம் 
தன்னை- கூற்றுவனை, எமனை. குறிப்பினால் -சிவத்தியானத்தால்.  'மறிதிகழ் கையினன் 
வானவர்கோனை மனமகிழ்ந்து குறித்தெழு மாணி' (தி.4 ப.107 பா.4). மாள் வித்து - மாளச்செய்து. 
அவனை - அச்சிவபெருமானை. மாணி- பிரமசாரி. சுவேதகேது முனிவர் (தி.2 ப.48 பா.5). அமரர் உலகம் 
ஆள்வித்து அளிப்பான் - தேவ லோகத்தை ஆளச்செய்து அருள் செய்வான். அளித்தல் அன்பின் 
முதிர்தல். வேள்விப்புகை- யாகத்தீயிலிருந்து எழும் புகை. இருள் கூர்- இருள்மிகும். 'முனிவர்கள் - 
தொக்குமிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவிக் குனிமதி மூடி நீடும் உயர்வான் 
மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே' (தி.2 ப.83 பா.5).

    It is Civan, our Lord of Thiru-venn-kaadu. The chief of death known as Yaman,
 is similar to a seed of death (He is the seed for killing action; Thiru-gnana-Sambandar 
calls him seed for murder). One saint called 'Swethakethu' was a great devotee of our 
Lord. Our Lord, therefore, killed the chief of death who approached the saint to take 
away his life; and lifted Swethakethu to heaven (This incident is also related to saint 
Maarkandeyan). Our Lord selected Thiru-venn-kaadu city for His abode and is manifested 
in the temple of this city. The city's sky is covered by smoke arising out of sacrificial 
fire carried out by scholarly Brahmins of the city as their daily rituals.

2131.     வளையார்முன்கைமலையாள்வெருவவரையூன்றி 
    முளையார்மதியஞ்சூடியென்றுமுப்போதும் 
    இளையாதேத்தஇருந்தானென்தையூர்போலும் 
    விளையார்கழனிப்பழனஞ்சூழ்ந்தவெண்காடே.        8

    வளை ஆர் முன்கை மலையாள் வெருவ, வரை ஊன்றி, 
    முளை ஆர் மதியம் சூடி, என்றும் முப்போதும் 
    இளையாது ஏத்த இருந்தான்; எந்தை; ஊர்போலும் - 
    விளை ஆர் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே.

    vaLai Ar munkai malaiyAL veruva, varai UnRi, 
    muLai Ar matiyam cUTi, enRum muppOtum
    iLaiyAtu Etta iruntAn; entai; UrpOlum- 
    viLai Ar kazanip pazanam cUznta veNkATE.

 பொருள்:       வளையல் பொருந்திய முன்கையை உடைய இமாசல குமாரி அஞ்சுமாறு கயிலை
மலையைப் பெயர்க்க இயலாதவாறு ஊன்றி, முளைத்தல் பொருந்திய பிறை சூடிய பெருமானே 
என்று முப்போதும் ஏத்த இளைப்புறாமல் இருந்த எம் தந்தையின் ஊர் எதுவெனில், மிகுந்த விளைச்சல் 
கொண்ட கழனி, பழனம் சூழ்ந்த திருவெண்காடே.

 குறிப்புரை:     வளைஆர் முன்கை-  வளையல் பொருந்திய முன் கையை உடைய. 
மலையாள் - இமாசலகுமாரி. வெருவ-  அலற. வரை –கயிலைமலை. முளையார் மதியம் - முளைத்தல் 
பொருந்திய இளம்பிறை. முப்போது - காலை, பகல், மாலை. 'வானோர்கள் முப்போது முடிசாய்த்துத் 
தொழ நின்ற முதல்வனை' (தி.4 ப.7 பா.3). இளையாது - (மனம்) இளைப்புறாமல். விளை- விளைவு. 
ஆர் - நிறைந்த. கழனி - வயல். பழனம் - நீர் நிலம். 'செந்நெலங் கழனிப்பழனத்து அயல்' (தி.2 ப.1 பா.1). 

    Oh! It is Civan, Lord of Thiru-venn-kaadu. Our Lord has manifested Himself in 
the temple in Thiru-venn-kaadu. His devotees visit the temple three times daily- 
morning, midday and in the evening, with devotion. They worship His holy feet uttering 
His fame as under: "Oh my Lord! When Raavanan tried to lift and move Your abode 
mount Himalayas, our goddess Paarvathi Devi got shuddered due to the swaying of the 
mountain. You immediately pressed the top of the mountain with Your toe and crushed 
the shoulders and head of Raavanan. You have adorned Your head with the baby moon 
in Your matted hair". These devotees never hesitate to praise the Lord. This Lord is 
manifest in the temple in Thiru-venn-kaadu which is surrounded by rich paddy 
fields all around.

2132.     கரியானோடுகமலமலரான்காணாமை 
    எரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமானென்பார்கட் 
    குரியானமரர்க்கரியான்வாழுமூர்போலும் 
    விரியார்பொழிலின்வண்டுபாடும்வெண்காடே.        9

    "கரியானோடு,கமலமலரான், காணாமை 
    எரிஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்!" என்பார்கட்கு 
    உரியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும் 
    விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

    "kAriyAnOTu, kamalamalarAn, kANAmai 
    eriAy nimirnta egkaL perumAn!" enpArkaTku 
    uriyAn, amararkku ariyAn, vAzum UrpOlum- 
    viri Ar pozilin vaNTu pATum veNkATE.

பொருள்:     திருமாலோடு பிரமனும் காணவியலாதவாறு நெருப்பாக நிமிர்ந்த எங்கள் 
பெருமானே! என்பார்கட்கு உரியவன்; அமரர்களுக்கு அரியவன் வாழும் ஊர் எதுவெனில், விரிந்த 
பொழிலில் வண்டு பாடும் திருவெண்காடே.

குறிப்புரை:     கரியான் - மாயன். கமல மலரான்- தாமரையில் வாழும் பிரமன். காணாமை -
காணமாட்டாத வகை. எரி - தீப்பிழம்பு. என்பார்கட்கு - என்று துதிக்கும். அடியவர்களுக்கு. 
உரியான் - அருளும் உரிமை உடையவன். 'அமரர்க்கு அரியான்' (பா. 6) விரி - விரிவு. 
பொழிலின் - சோலைக்கண்.

    Oh! It is Civan, Lord of Thiru-venn-kaadu. The devotees in the city of 
Thiru venn-kaadu go to the temple, worship the holy feet of our Lord, pray and 
appraise Him saying "Oh! Our Supreme Being! When the black deity Vishnu and the 
four faced deity who rests in the lotus flower tried their best to see Your 
head and feet they failed and got exhausted. At that hour, oh Lord! you rose 
like an illimitable fiery column of a huge height before them and they became 
bewildered. He is easily approachable to such devotees, gives His darshan, 
and graces them. But He is a very rare Supreme Being to the devas. This Lord 
selected the temple in Thiru-venn-kaadu city and has manifested Himself there, 
surrounded by several large gardens full of flowers, yielding honey, for which
bees gather and move with pleasing music.

2133.     பாடுமடியார்பலருங்கூடிப்பரிந்தேத்த 
    ஆடுமரவமசைத்தபெருமானறிவின்றி
     மூடமுடையசமண்சாக்கியர்களுணராத 
    வேடமுடையபெருமான்பதியாம்வெண்காடே.        10

    பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த, 
    ஆடும் அரவம் அசைத்த பெருமான்; அறிவு இன்றி 
    மூடம் உடைய சமண்சாக்கியர்கள் உணராத 
    வேடம் உடைய பெருமான்; பதி ஆம் வெண்காடே.

    pATum aTiyAr palarum kUTip parintu Etta, 
    ATum aravam acaitta perumAn; aRivu inRi 
    mUTam uTaiya camaN cAkkiyarkaL uNarAta 
    vETam uTaiya perumAn; pati Am-veNkATE.

பொருள்:     பண்ணுடன் பாடும் அடியார்கள் பலரும் கூடி அன்புடன் துதிக்க, படமெடுத்து ஆடும் 
பாம்பினை அரையில் கச்சாகக் கட்டிய பெருமான், அறிவில்லாத மவுட்டிகம் உடைய சமணர்களும் 
சாக்கியர்களும் உணரவியலாத சிவஞானவேடம் கொண்ட பெருமான் அவருடைய ஊர் திருவெண்காடே.

குறிப்புரை:     பாடும் அடியார் - பண்ணொன்ற இசை பாடும் அடியார்கள். அரவம் - பாம்பு .
அசைத்த- கட்டிய.  உணராத வேடம் - உணரமாட்டாத சிவஞான வேடம்.

    Oh! It is Civan, Lord of Thiru-venn-kaadu. In the city Thiru-venn-kaadu, servitors 
- male and female, young damsels - all people gather together at the temple,  worship His
holy feet, sing and praise His greatness. This Lord wears on His waist the hissing snake 
as His belt. However, He is not realised with His Supreme Nature by the senseless and 
downtrodden Jains and the Buddhists. He is such in His great manifestation and beyond 
comprehension. This Lord is manifest in the temple in Thiru-venn-kaadu.

2134.     விடையார்கொடியான்மேவியுறையும்வெண்காட்டைக் 
    கடையார்மாடங்கலந்துதோன்றுங்காழியான் 
    நடையாரின் சொல்ஞானசம்பந்தன்தமிழ்வல்லார்க் 
    கடையாவினைகளமரலோகமாள்வாரே.        11

    விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண்காட்டை, 
    கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான் - 
    நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் - தமிழ்வல்லார்க்கு 
    அடையா வினைகள்: அமரலோகம் ஆள்வாரே.

    viTai Ar koTiyAn mEvi uRaiyum veN kATTai, 
    kaTai Ar mATam kalantu tOnRum kAziyAn-
    naTai Ar incol njAnacampantan--tamiz vallArkku 
    aTaiyA, vinaikaL; amaralOkam ALvArE.

பொருள்:     எருது எழுதிய கொடியுடையவன் விரும்பி வாழும் திருவெண்காட்டைக் 
கடைவாயில் பொருந்திய மாடம் கலந்து தோன்றும் சீகாழியான், ஒழுக்க நெறியான 
இனியவற்றைக் கூறும் ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப் பாடல்கள் இவை வல்லவர்களை
 வினைகள் அடையா; அவர்கள் தேவலோகத்தை ஆள்வார்கள்.

குறிப்புரை:     விடை ஆர்க்கொடியான்-  எருது எழுதிய கொடியை உடையவன். மேவி -விரும்பி. 
உறையும்-  எழுந்தருளியிருக்கும். கடை ஆர் மாடம் - கடைவாயில் பொருந்திய மாடம். இது காழிக்கு 
அடை.  நடை- ஒழுக்கம். ஞானசம்பந்தன் வெண்காட்டைத் தொழுத தமிழ் என்று ஒரு சொல்வரு 
வித்தியைக்க. வல்லார்க்கு வினைகள் அடையா. வல்லால் அமரலோகம் ஆள்வார்.

    Oh! It is Civan, Lord of Thiru-venn-kaadu. Our saint Thiru-gnana-Sambandar 
hails from Kaazhi, a city of many palatial buildings with broad entrances for 
various uses. He sang over our Lord, the famous songs full of divine way of life 
with pleasing words of the Tamil language. Those servitors who can recite these 
ten songs with devotion will have no sufferings and will reach heaven and 
lead good life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            61ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 61st Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 198                    பதிக எண் 62.

62. திருமீயச்சூர்                        62. THIRU-MEEYACH-CHOOR

பண்: காந்தாரம்                        pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருமீயச்சூர் என்னும் திருத்தலமானது மயிலாடுதுறை பேரளம் தொடர்வண்டிப் 
பாதையில் பேரளம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 2.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. 
மயிலாடுதுறையிலிருந்து பேரளம் செல்லப் பல பேருந்துகள் உள்ளன. இது காவிரித் தென்கரையில்
உள்ள ஐம்பத்து மூன்றாவது தலமாகும். இறைவர் திருப்பெயர் முயற்சிநாதர். இறைவி திருப்பெயர் 
சுந்தரநாயகி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் சூர்யபுட்கரணி. சூரியன் வழிபட்டுப் பேறு எய்திய தலம். 
இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. இத்திருத்தலத்தின் கோயில் மூலவிமானம் 
கஜப்பிரஷ்ட விமானமாகும். இக்கோயிலிலே மீயச்சூர் இளங்கோயில் என்னும் வேறு கோயில் 
ஒன்று வடக்குப் பிரகாரத்தில் இருக்கிறது. இங்குள்ள இறைவர் சகல புவனேச்சுவரர். 
இறைவியார் மின்னுமேகலாம்பாள். இது காளியால் பூசிக்கப்பட்டது. இதற்குத் திருநாவுக்கரசர்
பாடிய பதிகம் ஒன்று இருக்கிறது.

பதிக வரலாறு

    மண்ணெலாம் உய்யவந்த பண்ணவராகிய சண்பை வேந்தர், திருநல்லத்தில் 
எழுந்தருளிய  மாமணியின் சேவடியை இன்றமிழால் வழிபட்டுத் திருவழுந்தூர்க்குச் 
செல்லுமிடையில் இத்திருப்பதியை எய்திப் பாடிப் பணிந்தது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2135.     காயச்செவ்விக்காமற்காய்ந்துகங்கையைப் 
    பாயப்படர்புன்சடையிற்பதித்தபரமேட்டி 
    மாயச்சூரன்றறுத்தமைந்தன்தாதைதன் 
    மீயச்சூரேதொழுதுவினையைவீட்டுமே.        1

    காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப் 
    பாயப் படர்புன்சடையில் பதித்த பரமேட்டி; 
    மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன் 
    மீயச்சூரே தொழுது, வினையை வீட்டுமே!

    kAyac cevvik kAmaR kAyntu, kagkaiyaip 
    pAyap paTar pun caTaiyil patitta paramETTi,
    mAya cUr anRu aRutta maintan tAtai; tan
    mIyac cUrE tozutu, vinaiyai vITTumE'

பொருள்:     உடலழகுடைய மன்மதனைச் சினந்து, பாயும் கங்கையைப் பொன்போலும் 
சடையிற் பதியச் செய்த பரமேட்டி, வஞ்சகமுடைய சூரனை அன்று அழித்த மைந்தனின் தந்தை 
தன்னுடைய திருமீயச்சூரைத் தொழுது பிறவிக்கு ஏதுவாகிய வினையைத் தீர்த்தொழிவீர்களாக.

குறிப்புரை:     காயம்- உடம்பு. செவ்வி - அழகு. காமன் - மன்மதன் (உடலழகுடைய மன்மதன்). 
காமற்காய்ந்து - காமனைக் கோபித்து இரண்டன தொகை. படர்புன்சடையில் பாயக்கங்கையைப் 
பதித்த பரமேட்டி - படர்ந்த பொன்போலுஞ் செஞ்சடைமேல் விரைந்து பாயும் வண்ணம் 
கங்கையாற்றைப் பதியச் செய்த பரமேட்டி. பரமேட்டி- தனக்குமேல் ஒன்றில்லாத உயர்ந்த 
இடத்திலிருப்பவன். மாயச்சூர்- வஞ்சத்தையுடைய சூரபதுமனை. சூர்மாய என்று மாற்றிச் 
சூரபத்மன் மாயும்படி என்றலும் பொருந்தும். மைந்தன் - முருகப்பிரான். தாதை - தந்தை 
(சிவபிரான்). வீட்டும் - அழியின். சிவபிரானுடைய மீயச்சூர் எனும் சிவத்தலத்தை வழிபட்டுப் 
பிறவிக்கு ஏதுவாகிய வினையைத் தீர்த்தொழியுங்கள் என்று உபதேசித்து அருளியவாறு.

    Oh! It is Civan, the Lord of Thiru-meeyach-choor. A spark of terrible heat 
came out of His third eye and fell on Manmathan's body and he was completely burnt. 
Our God has no  equal to Him in any aspect; He has supported the dashing 
torrential river Ganges in His golden matted hair. He is the father of Lord Murugan who 
conquered and destroyed the physical body of Soorapanman and brought under His 
control his two different appearances as peacock and cock. The devotees who worship 
the Lord of Thiru-meeyach-choor will be freed of their karma forever.

2136.     பூவார்சடையின் முடிமேற்புனலரனல்கொள்வர் 
    நாவார்மறையர்பிறையர்நறவெண்டலையேந்தி 
    ஏவார்மலையேசிலையாக்கழியம்பெரிவாங்கி 
    மேவார்புரமூன்றெரித்தார்மீயச்சூராரே.        2

    பூ ஆர் சடையின்முடிமேல் புனலர்: அனல் கொள்வர்; 
    நா ஆர் மறையர்: பிறையர்; நற வெண்தலை ஏந்தி, 
    ஏ ஆர் மலையே சிலையா, கழி அம்பு எரி வாங்கி, 
    மேவார் புரம்மூன்று எரித்தார் - மீயச்சூராரே.

    pU Ar caTaiyin muTimEl punalar; anal koLvar; 
    nA Ar maRaiyar; piRaiyar; naRa veNtalai Enti,                 
    E Ar malaiyE cilaiyA, kazi ampu eri vAgki, 
    mEvAr puram mUnRu erittAr--mIyaccUrArE.

பொருள்:     கொன்றை மலர்கள் நிறைந்த சடையின் முடிமேல் கங்கையாறாகிய நீரை
 உடையவர்; அங்கையில் அனலைக் கொள்வர்; வேதங்களை அருளிய நாவினர்; பிறை சூடியவர்; 
நாற்றத்தை உடைய வெண்டலை ஏந்தியவர்; பெரிய மேருமலையையே வில்லாகக் கொண்டு 
கோலாகிய அம்பில் எரியை எய்து பகைவரது புரம் மூன்றையும் எரித்தார்; அவர் யாரெனில் 
மீயச்சூரரே.

குறிப்புரை:     பூ - கொன்றைப்பூ. அன்பர் அர்ச்சிக்கும் பல்வேறு மலர்களும் ஆம். 
புனலர் -  கங்கையை அணிந்தவர். அனல் கொள்வர் - தீயேந்துபவர். நாஆர் மறையார் -
வேதங்களை அருளிய நாவினர்; பிறையர்- பிறைசூடியவர். நற வெண்தலை - 
நாற்றத்தையுடைய வெளிய பிரமகபாலத்தை. ஏ - பெருமை. மலை- மேருமலை. சிலையா - 
வில்லாக. கழியம்பு - கோல் அம்பு. எரி - அக்கினி.  திருமால் அம்பாகவும் அக்கினி அவ்வம்பின் 
நுனியாகவும் கொண்ட வரலாற்றை நினைக்க.  'எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண 
கல்வில்' (தி.1 )  மேவார் - பகைவரது. புரம்மூன்று - திரிபுரத்தை. புனலரும், கொள்வரும். மறையரும், 
பிறையரும், ஏந்தி வாங்கி எரித்தாரும் ஆகிய சிவபிரானார். மீயச்சூரில் திருக்கோயில்
கொண்டு எழுந்தருளியுள்ளார். 

    It is Civan, the Lord of Thiru-meeyach-choor. He supports the Ganges 
river in His matted hair, which is adorned fully with sweet fresh flowers. 
He holds flame, ablaze in one of His hands. He used to chant the four Vedas 
with His sacred tongue in musical tone. He has retained the moon on His head. 
He holds in one of His hands the white skull of Brahma, as His begging bowl, 
emitting bad smell. He holds the famous strong Mount Meru as His bow in His 
hand; and the arrow is Thirumaal himself; and the tip of the arrow is the 
glowing hot flame. With all these He shot at the three flying fortresses 
of the asuraas who inflicted intolerable misery on the devaas and all other 
celestials. They were all completely destroyed. He is such a great Supreme 
Being. He is manifest in the temple in Thiru-meeyach-choor.

2137.    பொன்னேர்கொன்றைமாலைபுரளுமகலத்தான் 
    மின்னேர்சடைகளுடையான்மீயச்சூரானைத் 
    தன்னேர்பிறரில்லானைத்தலையால்வணங்குவார் 
    அந்நேரிமையோருலகமெய்தலரிதன்றே.        3

    பொன் நேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான், 
    மின் நேர் சடைகள் உடையான், மீயச்சூரானை, 
    தன் நேர் பிறர் இல்லானை, தலையால் வணங்குவார் 
    அந் நேர் இமையோர் உலகம் எய்தர் அரிது அன்றே.

    pon nEr konRai mAlai puraLum akalattAn, 
    min nEr caTaikaL uTaiyAn, mIyaccUrAnai, 
    tan nEr piRar illAnai, talaiyAl vaNagkuvAr 
    an nEr imaiyOr ulakam eytar aritu anRE.

பொருள்:     பொன்னைப் போல ஒளியுடைய கொன்றை மாலை புரளும் மார்பினனும் 
மின்னல் போல் ஒளிர்கின்ற சடைகள் உடையானும் ஆகிய திருமீயச்சூரனை, தனக்கு நிகராகச் 
சொல்லப் பிறர் ஒருவர் இல்லாத பெரியோனைத் தலையால் வணங்குவார்க்கு அந்த 
நேர்மையுடைய தேவருலகத்தை அடைதல் அரிதன்று; எளிதே.

குறிப்புரை:     பொன் ஏர் கொன்றை - பொன்போலும் அழகிய கொன்றை. கொன்றையைப் 
பலபட அருளிய வகையெல்லாம் ஆசிரியரது திருமுறையுள் ஆங்காங்கு நோக்கி உணர்தல் 
நன்று. 'வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலால் 
பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்' என்றதில் கொன்றையான் என்று 
சிவபிரானைக் குறித்ததன் கருத்து அறியத்தக்கது. அதற்கு ஆதாரமானது இத்திருப்பாடல்: 
'கொன்றை சூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோம்'. - இதனை ஆசிரியரே 
அருளியதால் அவரது குறிக்கோளை நன்கு அறிந்து கொள்ளலாம். அகலத்தான் -
திருமார்புடையவன். மின் ஏர் சடைகள் - மின்போலும் ஒளிர்கின்ற சடைகளை. தன் நேர் 
பிறர் இல்லானை- தனக்குவமையாகப் பிறர் இல்லாத தலைவனை. அவனுக்கு அவனே 
ஒப்பாம் என்று. அநந்நிய உவமை உணர்த்தியவாறு. தலையால் வணங்குவார்(க்கு) 
இமையோருலகம் எய்தல் (ஆனது) அரிதன்று . மிக எளிது என்றவாறு. அ+நேர் +இமையோர். 
உலகம்- அந்த நேர்மையுடைய தேவருலகத்தை 'எய்தலரிதன்றே' என்ற பாடமும் உண்டு. 

    It is Civan, our Lord of Thiru-meeyach-choor. It is the garland made up of 
golden, yellow cassia flowers trailing on His chest and His beauty shines. 
It is also due to His matted hair, which always looks like the bright lightning and 
blazing light. Our Lord has no other person in the world equal to His Supremacy. 
He is manifest in this temple. Those devotees who gather in the temple and worship 
our Lord by prostrating before Him and placing their head on His holy feet will 
reach the beautiful and virtuous world of the devaas without any need for strenuous 
efforts.

2138.     வேகமதநல்லியானைவெருவுரிபோர்த்துப் 
    பாகமுமையோடாகப்படிதம்பலபாட 
    நாகமரைமேலசைத்துநடமாடியநம்பன் 
    மேகமுரிஞ்சும்பொழில்சூழ்மீயச்சூரானே.        4

    வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து, 
    பாகம் உமையோடு ஆக, படிதம்பல பாட 
    நாகம் அரைமேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் - 
    மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.

    vEka mata nal yAnai veruva uri pOrttu, 
    pAkam umaiyOTu Aka, paTitam pala pATa, 
    nAkam araimEl acaittu, naTam ATiya nampan- 
    mEkam urinjcum pozil cUz mIyaccUrAnE.

பொருள்:     மத வேகம் உடைய கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்து 
இடப்பாகத்தில் உமை துதி பல பாட, பாம்பினை அரையில் கட்டி, நடனம் ஆடிய நம்பன் 
யாரெனில், மேகம் உராயும் பொழில்கள் சூழ்ந்த திருமீயச்சூரனே.

குறிப்புரை:     வேகம் - விரைவுடைய நடை. மதவேகமுமாம். நல்லியானை (நன்மை+யானை)- 
உயர்திணை அஃறிணை ஆயிருமருங்கின். ஐம்பால் அறியும் பண்புதொரு மொழியும். மருவின்         
பாத்திய புணரியல் நிலையிடை உணரத்தோன்றா (தொல்.482) என்றவாறு. நல்லதாகிய யானை 
என்று விரித்துரைத்தற்பாலது. நன்னூற் சூத்திரப்படி. பண்பை விளக்கும் மொழி தொக்கதாகக் 
கொண்டு விரித்துரைத்தல் குணகுணிபேதம் அறியாக் குற்றமுடையதாகும். உரி - தோல். 
பாகம் - இடப்பாகம் . படிதம் - வல்லபை. துதி என்றாரும் உளர். அவர், சந்தர்ப்பத்திற்கேற்பத் தாமே 
கருதி எழுதியது அப்பொருள் என்று தோன்றுகின்றது. நாகம் - பாம்பு. அரை - திருஅரை. 
அசைத்து - கட்டி. நடம்- திருக்கூத்து. நம்பன் - சிவபிரான். நம்பு - நகை. எல்லா உயிர்களும்         
விரும்புதற்குரியவன்.

    Oh! It is Civan, our Lord in Thiru-meeyach-choor. On one occasion a rutted 
elephant was rushing swiftly towards our Lord and our Goddess got frightened. 
At that moment our Lord steered towards the elephant, killed it and peeled off its 
hide and covered His body with it. Our Lord wearing the dancing snake on His waist 
started dancing according to His wish. Our goddess instantaneously commenced singing 
in the melodious tone to suit His dance. Our God is the Lord of the temple in the 
city of Thiru-meeyach-choor where the dark clouds gather always in the forest nearby.

2139.     விடையார்கொடியார்சடைமேல்விளங்கும்பிறைவேடம் 
    படையார்பூதஞ்சூழப்பாடலாடலார்
    பெடையார்வரிவண்டணையும்பிணைசேர்கொன்றையார் 
    விடையார்நடையொன்றுடையார்மீயச்சூராரே.        5

    விடை ஆர் கொடியார், சடைமேல் விளங்கும் பிறை வேடம், 
    படை ஆர் பூதம் சூழப் பாடல்ஆடலார், 
    பெடை ஆர் வரிவண்டு அணையும் பிணை சேர் கொன்றையார், 
    விடை ஆர் நடை ஒன்று உடையார் - மீயச்சூராரே.

    viTai Ar koTiyar, caTaimEl viLagkum piRai vETam, 
    paTai Ar pUtam cUzap pATal ATalAr,
    peTai Ar varivaNTu aNaiyum piNai cEr konRaiyAr, 
    viTai Ar naTai onRu uTaiyAr-mIyaccUrArE.

பொருள்:     இடபம் எழுதிய கொடியை உடையவர்; சடையின் மேல் விளங்கும் பிறையை 
உடைய திருவேடத்தார்; பூதப்படை சூழப் பாடுதலோடு ஆடுதலும் உடையார்; பெடையுடன் 
அழகிய வண்டுகள் அணையும் கொன்றை மாலை அணிந்தவர்; நடை வல்ல காளை வாகனம்
ஒன்றுடையவர்; அவருடைய ஊர் திருமீயச்சூரே.

குறிப்புரை:     விடை ஆர் கொடியார் (ப.197 பா.11). பிறை வேடம் - பிறையை அணிந்த வேடம். 
சடைமேல் பிறைவேடம் விளங்கும். படை ஆர் பூதம் படையாகப் பொருந்திய பூதங்கள். பாடல் ஆடலார்-
பாடுதலும் ஆடுதலும் உடையார். பெடை- பெண் வண்டு. பிணை- மாலை. பிணையல்- கொன்றைப்பிணை. 
விடைஆர் நடை - ஏறுபோல் பீடுநடை (குறள்). 

    Oh! It is Civan, our Lord in Thiru-meeyach-choor. Our Lord has the figure of the  
bull embossed on His flag to enable His worshippers to recognise His identity.  In His
matted hair, He retains the moon and has disguised His appearance. His followers 
the bhuthaas in large number join, sing together in praise of our Lord and dance round Him. 
Our Lord relishes their dance and music and feels happy. He wears the garland of cassia 
flowers in which the male and female beetles gather round with flying noise. Though He 
uses the bull for His ride, He Himself walks majestically better than the bull itself.

2140.     குளிருஞ்சடைகொள்முடிமேற்கோலமார்கொன்றை 
    ஒளிரும்பிறையொன்றுடையானொருவன்கைகோடி 
    நளிரும்மணிசூழ்மாலைநட்டநவில்நம்பன் 
    மிளிருமரவமுடையான்மீயச்சூரானே.        6

    குளிரும் சடை கொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை 
    ஒளிரும் பிறை ஒன்று உடையான் ஒருவன், கை கோடி 
    நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன், 
    மிளிரும் அரவம் உடையான் - மீயச்சூரானே.

    kuLirum caTai koL muTimEl kOlam Ar konRai 
    oLirum piRai onRu uTaiyAn, oruvan, kai kOTi 
    naLirum maNi cUz mAlai naTTam navil nampan, 
    miLirum(m) aravam uTaiyAn-mIyaccUrAnE.

பொருள்:     குளிர்ச்சி கொண்ட திருச்சடைமேல் அழகாக நிறைந்த கொன்றை  மலர்கள் 
விளங்கும்; அச்சடையில் பிறையொன்று உடையான்; ஒப்பற்றவன்; கையினை வளைத்துக் குளிரும் 
கருமையான இருள் சூழும் மாலைக் காலத்தில் திருக்கூத்து ஆடும் நம் பெருமான்; பிரளும் 
பாம்பினைக் கச்சாக உடையவன்; அவன் திருமீயச்சூரனே.

குறிப்புரை:     கோலம் - அழகு. ஒளிரும் - விளங்கும். சடைமுடி மேல் கொன்றையும் பிறையும் 
உடையான் என்க. கைகோடி - கையை வளைத்து நட்டம் நவில் நம்பன் - திருக்கூத்தாடும் சிவபெருமான். 
நளிரும்- குளிரும். மிளிரும் - விளங்கும். அரவம் - பாம்பு.

    It is Civan, Lord of Thiru-meeyach-choor. On His cool matted hair, He wears a 
wreath of delightful cassia flowers. In addition, He retains the bright baby moon 
also on His head. He has no parallel in the world. He wears a string of gems around 
His forearms. While He dances He bends and twists His arm according to the dance pose, 
to make it attractive. Of course, He keeps on His waist the dancing snake as His belt. 
That God is manifested in the temple of Thiru-meeyach-choor and graces the devotees.

2141.     நீலவடிவர்மிடறுநெடியர்நிகரில்லார் 
    கோலவடிவுதமதாங்கொள்கையறிவொண்ணார் 
    காலர்கழலர்கரியினுரியர்மழுவாளர் 
    மேலர்மதியர்விதியர்மீயச்சூராரே.        7

    நீலவடிவர் மிடறு, நெடியர், நிகர்இல்லார்
    கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார், 
    காலர், கழலர், கரியின்உரியர், மழுவாளர், 
    மேலர், மதியர், விதியர் - மீயச்சூராரே.

    nIla vaTivar miTaRu, neTiyar, nikar illAr, 
    kOla vaTivu tamatu Am koLkai aRivu oNNAr,
    kAlar, kazalar, kariyin uriyar, mazuvALar, 
    mElar, matiyar, vitiyar mIyaccUrArE.

பொருள்:     கண்டம் கரியவர்; நீண்டவர்; தனக்கொப்பார் இல்லாதவர்; அவரது 
அழகிய வடிவு இதுதான் என வரையறுக்க முடியாதவர்; காலனைச் செற்ற காலர்; காலில் கழலை 
அணிந்தவர்; யானையின் தோலைத் தன் மேல் போர்த்தியவர்; மழுப்படை ஏந்தியவர்; 
மேலானவரும் ஞானசொரூபமும் ஆவர்; அவர் திருமீயச்சூரரே.

குறிப்புரை:     நீலவடிவர் மிடறு - திருநீலகண்டர். நெடியர் - நீண்டவர் (உயர்ந்தோங்கிய 
நிலையின் எல்லை இல்லாதவர்). 'உம்பராலும் உலகின்னவராலும் தம்பெருமை அளத்தற்கரியான்' 
(தி.1 ப.29 பா.5). 'நுண்ணியான் மிகப்பெரியான்' (தி.1 ப.61 பா.6). நிகரில்லார் - (அதுலர்).
 ஒப்பிலியப்பன் கோலவடிவு நமது ஆம் கொள்கை. அறிவு ஒண்ணார் பல உருவன் (தி.1 ப.13 பா.2). 
'நானாவித உருவாய் நமையாள்வான்' பலபல  வேடமாகும் பரன் தன்மை யாரும் அறிவாரில்லை 
(தி.2 ப.6 பா.2). ஓதி யாரும் அறிவார் இல்லை - ஆர்க்கும் அறிவரியான். காலர் கழலர் - கழலணிந்த 
திருவடி உடையார். காலர்- காலரூபர், வாயுரூபர் எனலும். கூற்றை உதைத்தவரெனலும் ஆம். 
கரியின் உரியர் - யானைத் தோல் உடையவர். 

    மழுவாளர் -மழுவை ஆள்பவர். மழுவாளை உடையவர். மேலர் மதியர் - பிறையைச் 
சடைமேல் அணிந்தவர். மேலானவரும் ஞான சொரூபமும் ஆம். காலர் கழலர் மேலர் மதியர்-
வடநூலார் மதம் பற்றி அடைமொழிக்கும் அடைகொளியின்   விகுதி கொடுத்துக் கூறியனவாக் 
கொள்ளலும் ஆம்.  'நுண்ணறிவால் வழிபாடு செய்யுங் காலுடையான்' (தி.1 ப.5 பா.4). 'காலனுயிர் 
செற்றகாலன்' (தி1. ப 45.  பா.4) எனலும் அமையும். பவமலி தொழிலது நினை விதியர்-  
படைப்பவரானவர். 'அரியனை.....கரியானை நான்முகனை ...  பிறவா நாளே' (தி.6 ப.1 பா.1). '
'படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை' (தி.1 ப.128 பா.4). 'அயனவனாய்' (தி.1 ப.13 பா.5). 
'வேதவிதியானை' (தி.1 ப.128 பா.4). ' எனதுள்ளம் விடகிலா விதியே' (தி.7 பா.385). 'பவமலி 
தொழிலது நினைவொடு பதுமன் நன் மலரது மருவிய சிவன்' (தி.1 ப.2 பா.1) என்பதில், பிரமனது 
இதய கமலத்திலிருந்து சிவபிரான் படைப்பித்தருள்வதாகக் குறித்த உண்மை உணர்க.

    Oh! It is Civan, the Lord of Thiru-meeyach-choor. In this verse various 
manifestations of our Lord given in many other poems are mentioned in concise form.
Here they have been condensed and ten manifestations have been sung by our saint
briefly. Our Lord is dark blue in colour in the neck area. He is the tallest; 
He is sublime  with no equals; He takes various different elegant figures 
on several occasions. Therefore, He is too rare to be identified. He wears ringing 
anklets around His legs.He covers His body with the hide of the elephant. He carries 
a battle axe in one of His hands. He is the highest; He retains the moon on His head. 
He is the creator of the entire cosmos.

2142.     புலியினுரிதோலாடைபூசும்பொடிநீற்றர் 
    ஒலிகொள்புனலோர்சடைமேற்கரந்தாருமையஞ்ச 
    வலியதிரள்தோள்வன்கணரக்கர்கோன்றன்னை 
    மெலியவரைக்கீழடர்த்தார்மீயச்சூராரே.        8

    புலியின்உரி-தோல் ஆடை, பூசும் பொடி-நீற்றர், 
    ஒலி கொள் புனல் ஓர் சடைமேல் கரந்தார், உமை அஞ்ச 
    வலிய திரள்தோள் வன்கண் அரக்கர்கோன் தன்னை 
    மெலிய வரைக்கீழ் அடர்த்தார் - மீயச்சூராரே.

    puliyin uri-tOl ATai, pUcum poTi-nIRRar, 
    oli koL punal Or caTaimEl karantAr, umai anjca 
    valiya tiraL tOL van kaN arakkar kOn tannai 
    meliya varaikkIz aTarttAr--mIyaccUrArE.

பொருள்:     உரித்த புலியின் தோல் ஆடை; அவர் பூசும்பொடி திருநீறு; முழங்கும் 
ஓசையுடைய கங்கையாற்றை ஒப்பற்ற சடையில் மறைத்தவர்; உமையம்மை அச்சம் கொள்ள 
வலிமையான திரண்ட தோள்களை உடைய வன்கண் அரக்கர் அரசனாகிய இராவணனை 
அவன் மெலிய கயிலை மலைக்கீழ் நசுக்கினார்; அவருடைய ஊர் திருமீயச்சூர்.

குறிப்புரை:     உரிதோலாடை நீற்றார் - உரித்த தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் 
பொடியையும் உடையவர். ஒலிகொள்புனல் - முழக்கத்தைக் கொண்ட கங்கை வெள்ளத்தை. 
ஓர் சடை - ஒப்பற்ற சடை, ஓர்தற்குரிய ஞானமாகிய சடை எனலுமாம். 'பொன்றயங் கிலங்கொளிந் 
நலங்குளிர்ந்த புன்சடை பிறையங்க ஆடுவாய்' (ப.310 பா.6). 'நுண்சிகை ஞானமாம்' (திருமந்திரம்). 
கரந்தார் - மறைத்தவர். உமை - உமாதேவியார். திரள் தோள்- திரண்ட புயங்களையும். வன்கண்- 
அகத்திலுள்ள வலிமையைப் புறத்தே காட்டும் கண்களையும் உடைய. அரக்கர் கோன் - 
அரக்கர்க்குக் கோமகன். அவனை அடர்த்தார் - வரையின்கீழ் மெலிய அடர்த்தார். அடைத்தவர்
மீயச்சூரிலுள்ளார்.

    It is Civan, the Lord of Thiru-meeyach-choor. Our Lord is manifest in 
the temple in Thiru-meeyach-choor. He uses the hide of a tiger for His dress. 
He smears His body with the holy ashes, which is specially used for applying 
on the forehead. He supports on His head the forcefully rushing Ganges river 
with heavy noise, concealing it in His matted hair. When Umaa was in panic,
with the slight tilting of Her abode, mount Himalayas, our Lord crushed the 
king of Sri Lanka under the mountain. He is the Lord who is manifested in 
the temple in Thiru-meeyach-choor.

2143.     காதின்மிளிருங்குழையர்கரியகண்டத்தார் 
    போதிலவனும்மாலுந்தொழப்பொங்கெரியானார் 
    கோதிவரிவண்டறைபூம்பொய்கைப்புனல்மூழ்கி 
    மேதிபடியும்வயல்சூழ்மீயச்சூராரே.        9

    காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார்
    போதிலவனும்,மாலும் தொழப் பொங்கு எரி ஆனார் -
    கோதி வரிவண்டு அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி 
    மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே.

    kAtil miLirum kuzaiyar, kariya kaNTattAr, 
    pOtilavanum mAlum tozap pogku eri AnAr-
    kOti varivaNTu aRai pUm poykaip punal mUzki 
    mEti paTiyum vayal cUz mIyaccUrArE.

பொருள்:     காதில் விளங்கும் குழையை உடையவர்; நீலகண்டர்; பிரமனும் திருமாலும் 
தன்னைத் தொழப் பொங்கி எழும் நெருப்பானார்; அவர் யாரெனில், வரிகளை உடைய 
வண்டுகள் மலர்களைக் கோதி முரலும் அழகிய மலர்களையுடைய பொய்கையில்  எருமைகள் 
மூழ்கிப் படியும் வயல் சூழ்ந்த திருமீயச்சூரரே.

குறிப்புரை:     மிளிரும் - விளங்கும். குழையார்- குழையை அணிந்தவர். குழை - தழை.
 ஓலை  ,குழை என்பன பண்டைய வழக்கத்திற்கு காரணப்பெயராயிருந்தன; 'மரக்கால் போல', 
பொற்கலனான பின்னும் குழை என்ற பெயராலே வழங்கப்படுகின்றது. இருப்புத் தகட்டாலான 
பின்னும் 'மரக்கால்'  என வழங்கப்படுவதுபோல. 'பத்திரம் எழுதினான்' என்பது முதலியவற்றையும் 
நோக்குக. கரியகண்டத்தார்- திருநீலகண்டர். போது- பூ போது இ(ல்)லவனும்- தாமரைப் பூவை 
இல்லமாக உடைய பிரமனும், பொங்கும் எரி - மிக்க தீ. வண்டு கோதி அறைபூ என்க. 
பொய்கை - குளம். மேதி - எருமை.

    Oh! It is Civan, the Lord of Thiru-meeyach-choor. In this city, the lined 
beetles make noise, while they fly and disentangle the flowers to suck honey. The flowers 
are in plenty in the cool waters of the pond. Here the buffaloes, enter and dive into the
water and take bath to their full satisfaction. Then they come out and take rest on the 
banks of paddy fields. In such a rich city, our Lord has manifested Himself in the temple 
in Thiru-meeyach-choor. He wears the bright pendant in one of His ears. His neck is dark 
blue in colour. Brahma, who always rests in lotus flower, and Vishnu went out into the 
cosmos to worship our Lord, but in vain.When our Lord rose as a great tall flame of fire
before them, they both recognized and worshipped our Lord. 

2144.    கண்டார்நாணும்படியார்கலிங்கமுடைபட்டைக் 
    கொண்டார்சொல்லைக்குறுகாருயர்ந்தகொள்கையார் 
    பெண்டான்பாகமுடையார்பெரியவரைவில்லால் 
    விண்டார்புரமூன்றெரித்தார்மீயச்சூராரே.        10

    கண்டார் நாணும் படியார், கலிங்கம் முடை பட்டை 
    கொண்டார் சொல்லைக் குறுகார், உயர்ந்த கொள்கையார், 
    பெண்தான் பாகம் உடையார், பெரிய வரை வில்லால் 
     விண்டார்,புரம்மூன்று எரித்தார், மீயச்சூராரே.

    kaNTAr nANum paTiyAr, kaligkam muTai paTTai 
    koNTAr, collaik kuRukAr, uyarnta koLkaiyAr; 
    peNtAn pAkam uTaiyAr, periya varai villAl 
    viNTAr puram mUnRu erittAr, mIyaccUrArE.

பொருள்:     காண்பவர்கள் நாணம், வெட்கம் கொள்ளும்படியாக ஆடையின்றித் திரியும் 
சமணர்கள்; கலிங்கம் எனும் பட்டைத்துவர் தோய்ந்த ஆடையை உடுத்த பவுத்தர்கள் ஆகியோர் 
கூறும் பொய்யான சொற்களை உயர்ந்த கொள்கையார் நெருங்கார்; பெண்ணைப் பாகமாக 
உடையவர்; பெரிய மேருமலையை வில்லாக வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தார்; 
அவருடைய ஊர் திருமீயச்சூரே. 

குறிப்புரை:     கண்டார் நாணும்படியார் - திகம்பர சைனர். ஆடையில்லாதவர். கலிங்கம் ... 
கொண்டார்- ஆடை உடைய தேரர். முடை என்று கொண்டு நாற்றம் எனலுமாம். கலிங்கமாகிய 
பட்டுடையை என்றலே பொருத்தம். உயர்ந்த கொள்கையார் (சைவர்) அவ்விருதிறத்தவர் 
சொல்லைக் குறுகார் என்க. பெண்தான்பாகம் - மங்கைபங்கு. விண்டார் - பகைவர்.

    Oh It is Civan, the Lord of Thiru-meeyach-choor. In this city, the Digambarar 
Jains roam all over the places, almost naked embarassing others who witness. The Buddhists     
wear cloth, which is full of bad smell. These two groups' false propaganda will not be 
listened to by the devotees of our Lord who are virtuous people with divine knowledge 
about Civan. Our Lord has embedded His consort on the left half of His body. Our Lord 
used the huge mountain Meru as His bow and burnt the three flying forts of His 
antagonists - the asuraas.

2145.     வேடமுடையபெருமானுறையுமீயச்சூர் 
    நாடும்புகழார்புகலிஞானசம்பந்தன் 
    பாடலாயதமிழீரைந்துமொழிந்துள்கி 
    ஆடுமடியாரகல்வானுலகமடைவாரே.        11

    வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்
    நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன் 
    பாடல் ஆய தமிழ்ஈர்-ஐந்தும் மொழிந்து, உள்கி, 
    ஆடும் அடியார், அகல் வான்உலகம் அடைவாரே.

    vETam uTaiya perumAn uRaiyum mIyaccUr, 
    nATum pukaz Ar pukali njAnacampantan 
    pATal Aya tamiz Ir-aintum mozintu, uLki, 
    ATum aTiyAr, akal vAn ulakam aTaivArE.

பொருள்:     பலப்பல வேடம் உடைய பெருமான்; அவர் உறையும் திருமீயச்சூரை 
விரும்பி, புகழ் நிறைந்த சீகாழி ஞானசம்பந்தன் பாடிய பாடலாகிய இப்பத்தினையும் பாடி. 
உள்ளத்தில் நினைந்து மகிழ்ந்து ஆடும் அடியார்கள் விரிந்த தேவலோகத்தை அடைவார்.
 இது திண்ணமே.

குறிப்புரை:     வேடம்- ‘பலபலவேடம்' 'ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர்' (தி.1 ப.68 பா.5) 
 (ஞானவேடம்). மீயச்சூர் நாடும் புகழ் ஆர் - திருமீயச்சூரை விரும்பும் புகழ் நிறைந்த 
(ஞானசம்பந்தர்)  'புகழார்' சிவபிரானாகக் கொண்டு. அவரது புகலி எனலும் பொருந்தும். 
பாடல் ஆய தமிழ் ஈரைந்தும் என்றது இத்தமிழ்த் திருப்பதிகத்தை உணர்த்திற்று. உள்கி - 
நினைத்து. அடியவர், உரை, உள்ளம், உடல் மூன்றாலும் முறையே முறையே மொழிந்தும்                    
உள்கியும்  ஆடியும் இத்தமிழால் சிவபிரானை வழிபட்டால் வீடு பெறுதல் திண்ணம் என்றவாறு.

    Oh! It is Civan, the Lord of Thiru-meeyach-choor. Our Lord stays in the 
temple in Thiru-meeyach-choor, takes different manifestations whenever needed to suit 
the occasions. Our saint Thiru-gnana-Sambandar hailing from the famous city of Pukali had 
a desire to worship the Lord in the temple in Thiru-meeyach-choor. He, therefore, reached 
this temple and sang these ten Tamil songs praising our Lord therein. Those devotees 
who memorise all these ten verses and sing and dance before our Lord and worship Him will
reach the vast delightful heaven.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            62ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 62nd Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 199            பதிக எண்: 63

63. திருஅரிசிற்கரைப்புத்தூர்        63. THIRU-ARISIRKARAI-P-PUTH-THOOR

பண்: சீகாமரம்                Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    திருஅரிசிற்கரைப்புத்தூர் என்னும் இத்திருத்தலமானது சோழநாட்டுக் காவிரித்
தென்கரைத் தலம் ஆகும். கும்பகோணம் - நாச்சியார் கோயில் பேருந்தில் சென்றால் இவ்வூரை 
அடையலாம். இத்தலம் அழகாபுத்தூர் என வழங்கப்பெறுகிறது. சுவாமி படிக்காசு வைத்த பரமர். 
தேவி சிவாம்பிகை, சௌந்தர நாயகி அழகம்மை. இந்தவூர் அழகார் புத்தூர் திருப்புத்தூர் என்றும் 
வழங்கப்படுகிறது. அரிசில் நதி ஓடுகிறது. கோச்செங்கட்சோழன் திருப்பணி செய்த தலமாகும். 
சொர்ணபுரீஸ்வர சுவாமி மேற்குப் பார்த்த சந்நிதி, சந்நிதித் தெரு அழகாக அமையப் பெற்றுள்ளது.
தென்னை மரங்களின் வரிசை கொண்டது.

பதிக வரலாறு

    காழி வேந்தர் அரதைப் பெரும்பாழி முதலாகத் திருச்சேறை, திருநாலூர், திருக்குடவாயில், 
திருநறையூர் என்னும் தலங்களை வழிபட்டு வந்தபோது இத்திருப்புத்தூரை நயந்து இறைஞ்சிப் 
புனைந்து இறைவன் திருவடிக்குச் சாத்திய நீடுதமிழ்த் தொடையாகும் இத்திருப்பதிகம். 

            திருச்சிற்றம்பலம்

2146.     மின்னுஞ்சடைமேலிளவெண்டிங்கள்விளங்கவே 
    துன்னுங்கடல்நஞ்சிருள்தோய்கண்டர்தொன்மூதூர் 
    அன்னம்படியும்புனலாரரிசில்லைகொண்டு 
    பொன்னும்மணியும்பொருதென்கரைமேற்புத்தூரே.        1

    மின்னும் சடைமேல் இளவெண்திங்கள் விளங்கவே, 
    துன்னும் கடல்நஞ்சுஇருள் தோய் கண்டர் தொல்-மூதூர் 
    அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு, 
    பொன்னும் மணியும் பொரு தென்கரைமேல் புத்தூரே.

    minnum caTaimEl iLaveN tigkaL viLagkavE, 
    tunnum kaTal nanjcu iruL tOy kaNTar tol-mUtUr- 
    annam paTiyum punal Ar aricil alai koNTu, 
    ponnum maNiyum poru ten karaimEl puttUrE.

பொருள்:     பொன்னிற சடைமேல் இளமையும் வெண்ணிறமும் உடைய திங்கள் விளங்க, கடலில் 
துள்ளிய நஞ்சு இருளாகத் தோய்ந்த கண்டத்தை உடையவரின் தொன்மையும் முதுமையும் உடைய ஊர் 
(எதுவென்னில்), அன்னம் தங்கும் புனல் நிறைந்த அரிசிலாறு தன் அலையால் பொன்னையும் 
மணியையும் வீசிப் பொரும் தென் கரைமேல் உள்ள புத்தூரே.

குறிப்புரை:     சடைமேல் திங்கள் விளங்க (இருள்) தோய்கண்டர் என்று இயைக்க. சடைமேல் 
வெள்ளொளியும் கழுத்தில் காரிருளும் ஆக உள்ள முரணும் புலப்படக்கூறியவாறு. விளங்கத்துன்னும் 
என்றியையாது. துன்னுதல் - (நெருங்குதல்) கடலின் வினை. தோய்தல் - இருளின் வினை. 
திங்கள்  விளங்க இருள் தோய்ந்தது. திங்கள் பகலின் விளங்காததன்றோ? இருளின் தோய்வு 
திங்களின் விளக்கத்திற்கு இன்றியமையாதது. கழுத்திலுள்ள காரிருள் சடைமேலுள்ள திங்கள்
விளக்கம் நன்கு தோன்றத் துணையாயிற்று. கடல் நஞ்சு இருள் - பாற்கடலின் எழுந்த நஞ்சினாலான
 கறுப்பு. அன்னம்- பறவை. ஆர் - நிறைந்த. அரிசில் - அரிசிலாறு. பொரு - மோதுகின்ற. 
தென்கரைமேல் உள்ள புத்தூர். தொள்மூதூர் புத்தூர் என்க. தொன்மை, முதுமை இரண்டும் 
ஒருங்குவரல் அறியத்தக்கது. 

    தொன்மை காலத்தைப் பற்றியது. முதுமை அக்காலத்தோடு அதில் நிகழும் வளர்ச்சியையும் 
பற்றியது. தோன்றி நெடிது நிலை பெற்றுவருவது தொன்மைக்கும் முதுமைக்கும் உரியதாகும். 
முன்னொருகால் தோன்றியிருந்து அழிந்த பொருளை நெடுங்காலங் கழித்த பின்னர் தொல்பொருள் 
எனலாம். முதுபொருள் எனலாகாது. காலத்தின் நெடுமையும் இடத்தின் நீட்சியும் தொன்மை எனும் 
வழக்கிற்கொவ்வும். தொல்லோன், தொலைந்தான், 'ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் 
புதுவதன்று.  இவ்வுலகத்தியற்கை' (புறம்.86). தொலைவு, தோல்வி, தொல்லை என்பவற்றை ஆராய்க. 
முன்னொருகால்  தோன்றியிருந்த குழந்தையைப் பின்னொரு கால் தொல்குழந்தை எனலாம். 
முதுகுழந்தை எனலாகாது.  கிழவனேல் 'தொல்லோன்' 'முதியோன்' எனலாம். 'பல நீர்மை குன்றிச் செவி ... 
நரை தோன்றும் காலம்' (தி.1 ப.59 பா.6) என்றதிற் குறித்த முதுமை. நெடுங்காலமாக உள்ளனவும் காலம் 
அல்லாதனவும்  ஆன பிற  பொருள் இடம் முதலியவற்றில் இல்லை. அவற்றில் தொன்மையே உண்டு. 

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தொல்லோர் ஆவரேயன்றி, முதியோராகார். 
திருநாவுக்கரசரே தொல்லோருமாவர்; முதியோருமாவர். தொன்மையைப் புராதனம், புராணம் 
முதலியவற்றாலும் முதுமையை வார்தக்யம், விருத்தாப்பியம் முதலியவற்றாலும் வடமொழியிற் 
குறிப்பர். புராதனமும் விருத்தாப்பியமும் ஒன்றாகா. 'தொன்மூதாலத்துப் பொதியில்' என்ற 
குறுந்தொகை 15உம் 'தொன் மூதாலம்' என்ற நெடுந்தொகை 70, 251உம் இக்கருத்தில் 
உரைக்கப்பட்டனவோ? அவற்றின் உரைகளைக் காண்க. யாண்டு முதுமை ஆண்டுத் தொன்மை 
எனலாம். யாண்டுத்தொன்மை ஆண்டு முதுமை எனில் ஒவ்வாது. 

    இப்பாட்டில் 'தொன்மூதூர் .... புத்தூரே' என்று முரண்டொடையாய் அமைந்த 
நயம் அறிந்து மகிழற்பாலது. புதுமையும் தொன் (பழ)மையும் ஒன்றற்கு ஒன்று மறுதலை.         
இளமையும் முதுமையும் ஒன்றற்கொன்று மறுதலை.  தொன்மைக்கு இளமையும் முதுமைக்குப் 
புதுமையும் மறுதலையாகா. நெடுங்காலமாக உள்ள வெற்றிடத்தைத் தொன்மையது எனலாம். 
அங்குத் தோன்றி நெடுங்காலமாகவே இருக்கும் ஒன்றனை முதுமையதெனலுமாம். ஆகவே, 
தொல்மூதூர் என்றதற்கு மிகப் பழைய ஊர் என்று பொருள் கோடல் குற்றமாம்.

    Oh! It is Civan, our Lord in Thiru-p-puth-thoor. Our Lord is very conspicuous 
due to the baby moon retained by Him on His bright dazzling matted hair like lightning. 
His throat developed into shining dark blue in colour due to the severe poison that came 
out of the ocean of milk imbibed by Him. His long standing city is Thiru-p-puth-thoor. 
He is manifest in the temple of this city. Here the river Arisilaru flows along the city. 
The swans in large numbers reach the river, plunge into the water and enjoy their bath. 
This river brings gold and gems along with its water and splashes them on the southern 
banks of the river. This city is known as Thiru-p-puth-thoor.

2147.     மேவாஅசுரர்மேவெயில்வேவமலைவில்லால் 
    ஏவாரெரிவெங்கணையாலெய்தானெய்துமூர் 
    நாவால்நாதன்நாமமோதிநாள்தோறும் 
    பூவால்நீராற்பூசுரர்போற்றும்புத்தூரே.        2

    மேவா அசுரர் மேவு எயில் வேவ, மலைவில்லால், 
    ஏ ஆர் எரி வெங்கணையால் எய்தான் எய்தும் ஊர் - 
    நாவால் நாதன் நாமம் ஓதி,நாள்தோறும், 
    பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே.

    mEvA acurar mEvu eyil vEva, malaivillAl, 
    E Ar eri vegkaNaiyAl, eytAn eytum Ur- 
    nAvAl nAtan nAmam Oti, nALtORum, 
    pUvAl nIrAl pUcurar pORRum puttUrE.

பொருள்:     பகைமையுடைய அசுரர்கள் மேவிய திரிபுரம் எரியால் வேவ மேருமலையாகிய 
வில்லால் ஏவப்படுகின்ற எரியுடைய கொடிய கணையினால் எய்தான் அடையும் ஊர்
எதுவென்னில், நாவால் நாதன் நாமம் ஓதி நாள்தோறும் பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே. 

குறிப்புரை:     மேவா அசுரர் - விரும்பாத (பகைமையுடைய) திரிபுரத்தசுரர். மேவு எயில் - 
மேவிய மதில். வேவ- தீய. மலைவில்- மேருவில். ஏ- உணர்ச்சி. கணை எனப்பின் உள்ளதால் அம்பு எனப் 
பொருள்படாது. எரிகணை - அக்கினியை முனையிலுடையது. வெம்மை - தீ, வெப்பம். எய்தான் - 
எய்த சிவபிரான். எய்தும் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும். ஊர் - புத்தூர் என்க. நாவால்
நாதன் நாமம் ஓதி நாள்தோறும் பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூர் என்றது ஆசிரியர் அங்கு 
அடைந்த காலத்தில், அவ்வூர்ச் சிவ வேதியர்கள் ஒரு நாளும் தவறாமல் சிவ நாமங்களை நாவாரச் 
சொல்லி நீரால் ஆட்டிப் பூவால் போற்றி வழிபட்ட உண்மை உணர்த்தியவாறு. 'நல்லவாறே உன்றன்
 நாமம் நாவில் நவின்று  ஏத்த வல்லவாறே வந்து நல்காய்' (தி.1 ப.50 பா.1). 'உன்றன் நாமம் நாளும் 
நவிற்றுகின்றேன்' (மேற்படி.2)

    Oh! It is Civan, our Lord in Thiru-p-puth-thoor, The antagonist, i.e., demigods 
were living in three flying fortresses and were afflicting the devas. Our Lord handled 
the big mountain Meru as His bow, fixed the arrow in it and placed the fire at the 
tip of the arrow and shot at the forts. They were all burnt and completely destroyed. 
He is manifest in the temple of the city of Thiru-p-puth-thoor. In this city, 
illustrious saiva Vedic scholars do live in large numbers. They recite the Lord's 
name many times a day. They carry water and flower to the temple and give ablutions 
to our Lord and worship Him. This city is called Thiru-p-puth-thoor.

2148.     பல்லார்தலைசேர்மாலைசூடிப்பாம்பும்பூண் 
    டெல்லாவிடமும்வெண்ணீறணிந்தோரேறேறிக் 
    கல்லார்மங்கைபங்கரேனுங்காணுங்கால் 
    பொல்லாரல்லரழகியர்புத்தூர்ப்புனிதரே.        3

    பல்ஆர்தலை சேர் மாலை சூடி, பாம்பும் பூண்டு
    எல்லா இடமும் வெண்நீறு அணிந்து, ஓர் ஏறு ஏறி, 
    கல் ஆர் மங்கை பங்கரேனும், காணுங்கால், 
    பொல்லார் அல்லர்; அழகியர் - புத்தூர்ப் புனிதரே.

    pal Ar talai cEr mAlai cUTi, pAmpum pUNTu, 
    ellA iTamum veN nIRu aNintu, Or ERu ERi, 
    kal Ar magkai pagkarEnum, kANugkAl, 
    pollAr allar; azakiyar--puttUrp punitarE.

பொருள்:     பல்வரிசை கெடாது இருக்கின்ற தலைசேர் மாலை அணிந்து, பாம்பினை 
அணியாகப் பூண்டு, மெய்யெல்லாம் வெண்ணீறு பூசி, ஒப்பற்ற காளை வாகனத்தின் மேல் ஏறி 
வரும் மலைமங்கை பாகரேனும் காணுங்கால் பொலிவில்லாதவரல்லர், புத்தூர் புனிதர்
அழகியரே.

குறிப்புரை:     தலைமாலையைத் தலையிற் சூடியுள்ளார் இறைவர். அத்தலைகளில் பற்களின் 
வரிசை கெடாது இருக்கின்றன என்பார் 'பல் ஆர்தலை' என்றார். 'தலைமாலை தலைக்கணிந்து 
தலையாலே பலி தேருந்தலைவன்' எல்லா இடமும் வெண்ணீறு அணிந்து -மெய்யெலாம் வெண்ணீறு 
சண்ணித்த மேனியன் (தி.4 ப.5 பா.1). 'நீற்றினை நிறையப்பூசி' (தி.4 ப.49 பா.2, தி.4 ப.64 பா.8). 
'நீரலைத்த திருஉரு' (தி.6 ப.75 பா.3). ஓர் ஏறு ஏறிக்கல்லார் மங்கை பங்கர்- ஒப்பற்ற எருதேறியூர்ந்து 
அம்பிகையை இடப்பங்கில் உடையவர். ஏறி என்னும் வினையெச்சம். 'பங்கர்' என்னும் வினைக் 
குறிப்பைக் கொண்டது. பொல்லார் - பொலிவில்லாதவர். அழகியவர். கல்லார் மங்கை - கல் - 
இமயமலை. செழுங்கல் வேந்தன் செல்வி (தி.1 ப.53 பா.5). இமாசலகுமாரி. மங்கையென்பது 
இத்தலத்தின் அம்பிகைக்குரிய திருப்பெயராகிய ‘அழகம்மை' என்பதைக் குறித்ததுமாம்.

    Oh! It is Civan, our Lord in Thiru-p-puth-thoor. Lord Civan wears a garland 
of human skulls full of teeth. He keeps a number of snakes all over His body. 
He has smeared His entire body with white holy ashes. He sustains the matchless 
bull for His ride. He has embedded His consort Paarvathi Devi on His left half 
of His body. If we make a research about all His avocations like this He is not 
a vicious Lord. But He is a very great handsome Supreme Being.

2149.    வரியேர்வளையாளரிவையஞ்சவருகின்ற 
    கரியேருரிவைபோர்த்தகடவுள்கருதுமூர் 
    அரியேர்கழனிப்பழனஞ்சூழ்ந்தங்கழகாய 
    பொரியேர்புன்குசொரிபூஞ்சோலைப்புத்தூரே.        4

    வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச, வருகின்ற 
    கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் - 
    அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து, அங்குஅழகுஆய 
    பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே.

    vari Er vaLaiyAL arivai anjca, varukinRa,
    kari Er urivai pOrtta kaTavuL karutum Ur- 
    ari Er kazanip pazanam cUzntu, agku azaku Aya 
    pori Er punku cori pUnjcOlaip puttUrE.                

பொருள்:     அழகிய நிறமுடைய வளையல்களை அணிந்த பெண் அஞ்சும்படியாக வருகின்ற 
யானையின் தோலை உரித்துப் போர்த்த கடவுள் விரும்பும் ஊர் எதுவென்னில், நெல்லரி மிக்க 
பழனங்கள் சூழ்ந்து, பொரி போன்ற புங்கம் பூக்களைச் சொரிகின்ற அழகாய பூஞ்சோலைகளை 
உடைய புத்தூரே.

குறிப்புரை:     வரி - நிறம். எர் - எழுச்சி(யை உடைய). வளையாள்- வளையலை அணிந்த         
அம்பிகை . கரி- கரத்தையுடைய யானை. ஏர் - அழகு. உரிவை - தோல். அரி - தவளை, வண்டு. 
நெல்லரி எனலுமாம்.  பழனம் - மருதநிலம். புன்கு சொரி பொரி ஏர் பூஞ்சோலை - புன்க மரங்கள் 
சொரிகின்ற பொரி போன்ற அழகிய பூக்களை உடைய சோலை. சோலை சூழ்ந்த புத்தூர்.

    Oh! It is Civan, our Lord of Thiru-p-puth-thoor. Our goddess wearing different 
coloured, brilliant and elegant bangles, suddenly saw a rutted and ferocious elephant rushing 
towards her, she got frightened. Our Lord immediately killed it and peeled its hide and used 
it to cover His body. This Lord had a good thought to select this city for His abode. 
This city has many gardens of flower trees and plants all over the city. The flowers from 
dalbergia trees fall on the ground, giving an appearance of baked rice. In  this gorgeous city, 
our Lord is manifested in the temple of Thiru-p-puth-thoor city.

2150.     என்போடரவமேனத்தெயிறோடெழிலாமை 
    மின்போற்புரிநூல்விரவிப்பூண்டமணிமார்பர் 
    அன்போடுருகுமடியார்க்கன்பரமருமூர் 
    பொன்போதலர்கோங்கோங்குசோலைபுத்தூரே.        5

    என்போடு,அரவம், ஏனத்துஎயிறோடு, எழில் ஆமை, 
    மின் போல் புரிநூல், விரவிப் பூண்ட மணிமார்பர்: 
    அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்; அமரும் ஊர் 
    பொன்போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே.

    enpOTu, aravam, Enattu eyiROTu, ezil Amai, 
    min pOl puri nUl, viravip pUNTa maNimArpar;                 
    anpOTu urukum aTiyArkku anpar; amarum Ur; 
    ponpOtu alar kOgku Ogku cOlaip puttUrE.

பொருள்:     எலும்புடன் பாம்பு, பன்றியின் பல்லுடன் அழகிய ஆமையின் ஓடு, மின்னலைப் 
போல் புரிநூல், கலந்து பூண்ட அழகிய மார்பினை உடையவர்; அன்புடன் உள்ளம் உருகும் 
அடியவர்களுக்கு அன்பர்; இவர் விரும்பித் தங்கும் ஊர் எதுவெனில், பொன்னைப் போலப் 
பூக்கும் கோங்க மரச்சோலைகள் ஓங்கும் புத்தூரே. 

குறிப்புரை:     என்பு- எலும்பு. அரவம்- பாம்பு.  ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு. எழில் - அழகு. 
மின்னைப் போலும் முப்புரி நூல். விரவி - கலந்து. மணி - அழகிய ரத்னமாலை எனலுமாம். 
சிவபிரானை, அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் என்றது. எல்லாருள்ளத்திலும் பதியத்தக்கது. 
'தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி' (திருவாசகம் - திருச்சதகம் 73). 
'நேசன் காண் நேசர்க்கு’ (தி.6  ப.65 பா.2). 'அன்பின் நிலையே அது' (திருவருட்பயன் 8.10). 
'அன்பே சிவம்' (திருமந்திரம்). பொன் போது- பொன்னைப் போல அலரும் பூக்கள். 
அலர்கோங்கு- பூக்கும் கோங்கமரம். கோங்கு ஓங்கு சோலைகளை உடைய புத்தூர். 

    Oh! It is Civan, our Lord of Thiru-p-puth-thoor. Our Lord wears on His chest
all sorts of bones, snakes, pig teeth, elegant tortoise shell, etc., all those along 
with the sacred thread dazzling like lightning and all looking like a garland of 
multistrings. He is cordial with the devotees who, with love and devotion, 
worship and become tender. He is manifest in the temple in Thiru-p-puth-thoor. 
The temple is surrounded by gardens full of flower trees and plants 
such as red cotton etc., all tall trees yielding flowers in golden colour.

2151.     வள்ளிமுலைதோய்குமரன்தாதைவான்தோயும் 
    வெள்ளிமலைபோல்விடையொன்றுடையான்மேவுமூர் 
    தெள்ளிவருநீரரிசில்தென்பாற்சிறைவண்டும்
     புள்ளும்மலிபூம்பொய்கைசூழ்ந்தபுத்தூரே.        6

    வள்ளி முலை தோய் குமரன் தாதை, வான் தோயும் 
    வெள்ளிமலை போல் விடை ஒன்று உடையான், மேவும் ஊர் - 
    தெள்ளி வருநீர் அரிசில்-தென்பால், சிறைவண்டும் 
    புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.

    vaLLi mulai tOy kumaran tAtai, vAn tOyum 
    veLLimalai pOl viTai onRu uTaiyAn, mEvum Ur- 
    teLLi varu nIr aricil-tenpAl, ciRaivaNTum 
    puLLum mali pUm poykai cUznta puttUrE.

பொருள்:     வள்ளியைத் தழுவும் குமரனின் தந்தை, வானளாவும் மலை போன்ற பெரிய 
விடையை வாகனமாக உடையவன் மேவும் ஊர் எதுவென்னில், தெளிந்து  வரும் நீரையுடைய 
அரிசிலாற்றின் தென்பால் சிறகுகளையுடைய வண்டும் புள்ளும் மலிந்த அழகிய பொய்கை 
சூழ்ந்த புத்தூரே. 

குறிப்புரை:     வள்ளி முலை தோய் குமரன் - 'குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள்' 
(தி.4 ப.60. பா 3) 'வள்ளி வளைத்தோள் முதல்வன்' (தி.6 ப.3 பா.2). 'நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத் 
தாதை' (தி.6 ப.23 பா.4). வான் - விண்ணிடம். வான்றோயும் மலை. விடை - எருது. வெண்ணிறத்தால் 
ஒப்புணர்த்த வெள்ளிமலை எனப்பட்டது. தெள்ளி- தெளிந்து. தென்கரை (பா. 1). 'வண்டும் புள்ளும் 
மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூர்' (பா. 6) என்று வளங்கூறிய சிறப்புணர்க.

    Oh! It is Civa, Lord of Thiru-p-puth-thoor. Our Lord is the Creator, the Father 
of Lord Murugan who is the consort of goddess Valli. He owns the white bull which dazzles 
like the mount Kailash glittering like pure white silver. He has selected the city of 
Thiru-p-puth-thoor as His abode. This city is situated on the southern bank of the
river Arisilaaru with clear crystal like waters. All around the city of Thiru-p-puth-thoor, 
the exquisite tanks full of water are many. In these ponds beetles and many birds 
flank together and enjoy themselves in these ponds.

2152.     நிலந்தண்ணீரோடனல்கால்விசும்பின்நீர்மையான் 
    சிலந்திசெங்கட்சோழனாகச்செய்தானூர் 
    அலந்த அடியானற்றைக்கன்றோர்காசெய்திப் 
    புலர்ந்தகாலைமாலைபோற்றும்புத்தூரே.        7

    நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்,
    சிலந்தி செங்கண்சோழன்ஆகச் செய்தான், ஊர் 
    அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி, 
    புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.

    nilam taNNIrOTu anal kAl vicumpin nIrmaiyAn, 
    cilanti cegkaN cOzan Akac ceytAn, Ur- 
    alanta aTiyAn aRRaikku anRu Or kAcu eyti,
    pularnta kAlai mAlai pORRum puttUrE.

பொருள்:     நிலம், தண்ணீர், அனல், காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் காரண பூதங்களின் 
இயல்புடையான்; சிலந்தியைச் சோழன் கோச்செங்கணானாகப் பிறக்கச் செய்தவனின் ஊர் 
எதுவெனில், சிவபூசைக்குப் பொருள் தட்டுப்பாடு வரத் துயரெய்திய அடியார் நாள்தோறும் 
ஒரு காசு பெற்றுப் பொழுது புலர்ந்த காலையிலும் மாலையிலும் வழிபாடு செய்யும் புத்தூரே. 

அழிப்புரை:     நிலம், தண் (குளிர்ந்த) நீர். அனல் (-தீ). கால் (-காற்று) விசும்பு (-ஆகாயம்) என்னும் 
ஐம்பெருங் காரண பூதங்களின் இயல்பை உடையவன். நீர்மை - இயல்பு. சிலந்திப் பூச்சி. சிவபூஜைப்     (திருத்: புச்சி/பூச்சி)
பயனாகக் கோச்செங்கட் சோழநாயனாராகிய வரலாறு உணர்க. அலந்த- சிவபூஜை முட்டுப்படத்  
துயருற்ற. அன்றைக்கு - அன்று. அந்நாட்கு - அந்நாள். அன்றாடம் ஒருகாசு எய்தி. பொழுது புலர்ந்த 
காலையிலும் மாலையிலும் போற்றும் புத்தூர். செய்தான் ஊர் புத்தூர் என்க. 'அடியாள்' என்றது 
'செருவில்லி புத்தூர் மன்னுஞ் சிவமறை யோராகிய.. நிகரில்லா(ப்) புகழ் நீடு புகழ்த்துணையார்' 
(பெரிய புராணம் மேற்படி நாயனார் 1).

    Oh! It is Civan, our Lord of Thiru-p-puth-thoor. Our Lord is the embodiment 
of the five elements and has all the natural properties of the earth, air, fire, 
water and sky. Once a spider was doing ablation to Lord Civa in His 
Sivalinga form and covered the Lingam with string from its mouth. An elephant came and 
destroyed the string of the spider. The spider pushed itself into the trunk of the elephant 
and killed it. The elephant also killed the spider. The spider in the next birth was 
born as Cholan King named 'Ko-ch-chengat-cholan'. Only our Lord blessed him to take 
his rebirth as chola king. This graceful Lord is manifest here. A Brahmin Vedic 
scholar named as 'Pugazhth-thunaiyaar' once became a destitute. However, he collected 
one penny per day and never failed to go to the temple, both in the morning and in the 
evening. There he hailed and worshipped our Lord in the temple. This sacred city is 
Thiru-p-puththoor.

2153.     இத்தேரேகஇம்மலைபேர்ப்பனென்றேந்தும் 
    பத்தோர்வாயான்வரைக்கீழலறப்பாதந்தான் 
    வைத்தாரருள்செய்வரதன்மருவுமூரான 
    புத்தூர்காணப்புகுவார்வினைகள்போகுமே.        8

    "இத்தேர் ஏக இம் மலை பேர்ப்பன்" என்று ஏந்தும் 
    பத்துஓர்வாயான் வரைக்கீழ் அலற, பாதம்தான் 
    வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும்(ம்) ஊர்ஆன 
    புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.

    "it tEr Eka, im malai pErppan" enRu Entum 
    pattu OrvAyAn varaikkIz alaRa, pAtamtAn 
    vaittu, Ar aruL cey varatan maruvum(m) Ur Ana 
    puttUr kANap pukuvAr vinaikaL pOkumE.

பொருள்:     என்னுடைய தேர் செல்ல இடையூறாக உள்ள இந்த மலையைப் பெயர்ப்பன்        
என்று அதனை ஏந்தும் இராவணன் தன் பத்து வாயாலும் அலறப் பாதத்தை அழுத்தி  வைத்தான்; 
பின் ஆரருள் செய்தான். அவ்வரதன் எழுந்தருளியுள்ள ஊரான அரிசிற்கரைப் புத்தூரைக் காண, 
தரிசனம் செய்ய நுழையும் அடியார்களுடைய வினைகள் நீங்கிப் போகும்.

குறிப்புரை:     தேர் ஏக- தேர் தடையின்றிச் செல்லற்பொருட்டு. இம்மலை - இக்கயிலை மலையை.
பேர்ப்பன் - பெயர்த்திடுவேன். ஓர் பத்து வாயான் -ஒரு பத்து வாயுடையவன். அக்கயிலை 
மலையின் கீழ். பத்து வாயாலும் அலறினான். அதனால் இரங்கி முன் வைத்த பாதம் 
வாங்கியருளினான். வரதன்- வரத்தைக் கொடுப்பவன். நாளும் வாளும் பெருந்தேரும் கொடுத்த வரம் 
ஆங்காங்குணர்க. மருவும் ஊர் ஆனபுத்தூர் - எழுந்தருளிய நகராகிய புத்தூர். புத்தூர் காணப் புகுவார் 
வினை-தல தரிசனம் செய்ய நுழையும் அடியார்களுடைய வினைகள் (ஆகாமியம்). 

    Oh! It is Civan, our Lord of Thiru-p-puth-thoor. The king of Sri Lanka, 
Raavanan once asserted that he will raise the mount Himalayas of our Lord and keep 
it aside and remove the hindrance for his chariot to pass through. He tried, failed 
and got crushed under the mountain when our Lord pressed with His toe the top of 
the mountain. He got vexed and distressed. This Lord is manifest in Thiru-p-puth-thoor. 
Those devotees who visit the temple to worship our Lord will easily get rid of their 
sufferings.
 
2154.     முள்ளார்கமலத்தயன்மால்முடியோடடிதேட 
    ஒள்ளாரெரியாயுணர்தற்கரியானூர்போலும் 
    கள்ளார் நெய்தல்கழுநீராம்பல்கமலங்கள்' 
    புள்ளார்பொய்கைப்பூப்பலதோன்றும்புத்தூரே.        9

    முள் ஆர் கமலத்து அயன், மால், முடியோடு அடி தேட, 
    ஒள்ஆர்எரிஆய் உணர்தற்கு அரியான் ஊர்போலும் - 
    கள் ஆர் நெய்தல், கழுநீர்,ஆம்பல்,கமலங்கள், 
    புள் ஆர் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.

    muL Ar kamalattu ayan, mAl, muTiyOTu aTi tETa, 
    oL Ar eri Ay uNartaRku ariyAn UrpOlum- 
    kaL Ar neytal, kazunIr, Ampal, kamalagkaL, 
    puL Ar poykaip pUppala tOnRum puttUrE.

பொருள்:     முட்கள் நிறைந்த தண்டில் பூத்த தாமரை மலரில் வாழும் அயன், திருமால்         
இருவரும் முடியுடன் அடி தேட, ஒளியுடைய தீப்பிழம்பாய் எழுந்து, அவர்கள் உணர்தற்கு 
அரியனாக நின்றவன் ஊர் எதுவெனில், தேன் நிறைந்த நெய்தல் பூ, கழுநீர்ப்பூ,ஆம்பல்பூ, 
தாமரைப்பூ ஆகிய நீர்ப்பூக்களும் நீர்ப்பறவைகளும் நிறைந்த பொய்கைகள் பல 
தோன்றும் புத்தூரே.

குறிப்புரை:     முன் ஆர் கமலத்து - (முட்டாட்டாமரை ) முட்கள் நிறைந்த தாமரையில் 
வாழும். அயன்மால்  முடி அடி ; முறை நிரல் நிறை. ஒள்- ஒண்மை. ஒளி,எரி - தீப்பிழம்பு. அயன்மால் 
உணர்தற்கு அரியான். உணர்தற்கே அரியவன் என்றால் ஓதற்கும் எளியன் அல்லன் என்பது
சொல்லல் வேண்டா. 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' (பெரிய புராணம், மங்கலம்). 
'அன்பராகி மற்றருந்தவ முயல்வார் அயனுமாலும் மற்றழலுருமெழுகாம் என்பராய் நினைவார்' 
(திருவாசகம் செத்திலாப்பத்து 4). கள் - தேன். நெய்தல், ஆம்பல். கழுநீர், கமலங்கள், புள் - 
பறவைகள். பூக்களும் புட்களும் பொருந்திய பொய்கை (குளம்)

    Oh! It is Civan, our Lord of Thiru-p-puth-thoor. Our demigod, the four faced, 
Naanmugan - Brahma who rests in the lotus flower supported by the thorny stalk in the
pond-along with Thirumaal, went out to search and reach the head and feet of Lord Civa. 
They searched for many years and both failed to reach the head and feet and came back to 
their original places, getting exhausted. At this stage, our Lord Civa stood before both 
as a big column of fire touching the sky and the underworld with the brightest light 
and they got bewildered. This Lord Civa is manifest in the city of Thiru-p-puth-thoor. 
The city is surrounded by maritime purple flower trees and plants full of honey. There are 
tanks full of copious water. There are water lily and lotus flowers in plenty and the birds 
flock in large numbers. Such is the beauty and prosperity of the city .

2155.    கையார்சோறுகவர்குண்டர்களுந்துவருண்ட 
    மெய்யார்போர்வைமண்டையர்சொல்லுமெய்யல்ல 
    பொய்யாமொழியாலந்தணர்போற்றும்புத்தூரில் 
    ஐயாஎன்பார்க்கையுறவின்றியழகாமே.        10

    கை ஆர் சோறு கவர் குண்டர்களும், துவருண்ட 
    மெய் ஆர் போர்வை மண்டையர், சொல்லு மெய் அல்ல; 
    "பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில் 
    ஐயா!" என்பார்க்கு, ஐயுறவு இன்றி அழகு ஆமே.

    kai Ar cORu kavar kuNTarkaLum, tuvaruNTa 
    mey Ar pOrvai maNTaiyar, collu mey alla; 
    "poyyA moziyAl antaNar pORRum puttUril 
    aiyA!" enpArkku, aiyuRavu inRi azaku AmE.

பொருள்:     கையில் நிறைந்த சோற்றினைக் கவர்ந்து உண்ணும் அமண் குண்டர்கள் 
துவருண்ட ஆடையால் உடலைப் போர்த்த மண்டையர் (தேரர்) ஆகியோர் கூறுவன மெய்யல; 
பொய். பொய்யா மொழியாகிய வேதத்தினால் அந்தணர் போற்றும் புத்தூரில் ஐயா என்பாருக்குச் 
சந்தேகமின்றிச் சிவப்பொலிவு உண்டாகும்.

குறிப்புரை:     கைஆர் சோறு- கையில் நிறைந்த சோறு. 'கையிலுண்ணுங்கையர்' (தி.3 ப.53 பா.1)
 மெய் ஆர் போர்வை- உடம்பைப் பொருந்தப் போர்த்த போர்வை. துவர் உண்ட போர்வை. மண்டையர்- 
பனங்குடையில் உண்ணுமவர். சொல்லு- சொற்கள். மெய்யல்ல - பொய். பொய்யாமொழியால்- 
மெய்யாகிய வேதவாக்குகளால். ஐயா:- 'வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே' 
(திருவாசகம் சிவபுராணம் அடி 35). ஐயுறவு - சந்தேகம். அழகு- சிவப்பொலிவு. இம்மை மறுமைக்கான
 அழகுகளும் கொள்ளலாம். சொல்+து+சோறு. சொல் - நெல். 'சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் 
தோற்றம் போல் மெல்லவே கரு விருந்தீன்று மேலவார் செல்வமே போல் தலைநிறுவித் தேர்ந்த நூற் 
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே' என்னும் (சிந்தாமணி 53) செய்யுளில், சொல் என்றது 
நெல் என்று நச்சினார்க்கினியர் எழுதிய பொருளையும் அறிக. சோறு என்பதன் பொருள் 
சொல்லால் ஆனது என்பதாம்.

    Oh! It is Civan, our Lord of Thiru-p-puth-thoor. In this city, the stout 
Jains collect alms in their hands and eat them. The Buddhists cover their body with 
ochre coloured cloth and collect food and eat. They preach all false words that have 
no meaning. The devotee Brahmin scholars pray in the temple and recite divine songs. 
Those who say "Oh our Lord!" will live without any fear in this city with the 
wholehearted blessings of Lord Civa.

2156.     நறவங்கமழ்பூங்காழிஞானசம்பந்தன்
    பொறிகொளரவம்பூண்டானாண்டபுத்தூர்மேல் 
    செறிவண்டமிழ்செய்மாலைசெப்பவல்லார்கள் 
    அறவன்கழல்சேர்ந்தன்போடின்பமடைவாரே.        11

    நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன், 
    பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல், 
    செறி வண்தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள், 
    அறவன்கழல் சேர்ந்து, அன்போடு இன்பம் அடைவாரே.

    naRavam kamaz pUg kAzi njAnacampantan, 
    poRi koL aravam pUNTAn ANTa puttUrmEl, 
    ceRi vaNtamiz cey mAlai ceppa vallArkaL, 
    aRavan kazal cErntu, anpoTu inpam aTaivArE.

பொருள் :     தேன்மணம் கமழும் சீகாழி ஞானசம்பந்தன் பாம்பினைப் பூண்ட சிவபிரான் 
ஆண்ட புத்தூரின் மேல் சொல்லும் பொருளும் செறிந்த வளமான தமிழாற்செய்த மாலையைச்         
சொல்ல வல்லார்கள், அறவனாகிய சிவனின் திருவடி சேர்ந்து அன்புடன் இன்பம் அடைவார்கள்.

குறிப்புரை:     நறவம் - தேன், மணம். பொறி - புள்ளிகள். பூண்டான் - பூண்ட சிவபிரான். 
செறி - சொல்லும் பொருளும் செறிந்த. வண்தமிழ் செய்மாலை- வளவிய தமிழாற் செய்த             
இப்பாமாலையை. அறவன் - 'அறவாழியந்தணன்' 'அறத்தானை அறவோனை' (தி.6 ப.80 பா.7). 
'தருமா போற்றி' (தி.6 ப.5 . பா 10) ' தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று... நலம் கொடுக்கும் 
நம்பி', 'தயா மூலதன்மவழி எனக்கு நல்கி' (தி.6 ப.20 பா.6). அன்போடு இன்பம் - அன்பும் இன்பும். 
'அன்பெனும் பாசம் -வைத்தார்' (தி.4 ப.30 பா.3). 'அன்பலால் பொருளும் இல்லை’ (தி.4 ப.40 பா.6). 
'அன்பினில் விளைந்த ஆரமுது' 'அன்பினால் இன்பம் ஆர்வர்' 'இன்ப அன்பு'.

    Oh! It is Civan, our Lord of Thiru-p-puth-thoor. Our saint Thiru-gnana-Sambandar 
hails from the most beautiful city where the sweet smell of honey spreads all over the area. 
He reached the Lord in the temple at Thiru-p-puth-thoor city where He wears the dotted snake 
as His garland on His chest. He worshipped the Lord and recited in rich Tamil language songs 
praising the Lord and His fame. This garland of Tamil songs repeated by scholars from their 
memory, will enable them to reach the holy feet of Lord Civa who is the embodiment of virtues. 
They will be graced by the Lord with love and happiness.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            63ஆம் பதிகம் முற்றிற்று
            End of 63rd Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 200                    பதிக எண்: 64

64.திருமுதுகுன்றம்                    64.THIRU-MUTHU-KUNDRAM

பண்:சீகாமரம்                        Pann: Seekamaram

திருத்தல வரலாறு

    திருமுதுகுன்றம்  என்னும் இத்திருத்தலமானது சிவபெருமானால் முதலில் 
படைக்கப்பெற்றது ஆதலின் இப்பெயர் எய்திற்று. இது விருத்தாசலம் என்றும் வழங்கப்
பெறுகின்றது. இத்திருத்தலம் விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி தொடர் வண்டிக் குறுக்கு 
வழியில் விருத்தாசலம் தொடர்வண்டி நிலையத்திற்குச் சுமார் 1.5 கி.மீ. தூரத்தில் 
இருக்கின்றது. சிதம்பரத்திலிருந்தும் சேலத்திலிருந்தும் விருத்தாசலம் செல்லப் பேருந்துகள் 
உள்ளன. இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று ஆகும். இறைவர் திருப்பெயர் பழமலைநாதர். 
இறைவி திருப்பெயர் பெரிய நாயகி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் மணிமுத்தாறு. 
திருஞானசம்பந்தப் பெருந்தகையார் இத்தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், 
வழிபட்ட போதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளிய பெருமையை உடையது. இங்கு 
இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, 
சிவபெருமான் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத் தமது உருவமாக்கும் திருப்பதி 
ஆதலால் இது காசியினும் மேம்பட்டதாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனைப் பாடி 
பன்னீராயிரம் பொன்பெற்று அவைகளை மணிமுத்தாறு நதியில் இட்டுத் திருவாரூர்க் 
கமலாலயத்தில் பெற்றார். இதற்குத் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் ஏழு, 
திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் ஒன்று, சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய பதிகங்கள் 
மூன்று ஆக பதினொரு பதிகங்கள் இருக்கின்றன. துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், 
பழமலை அந்தாதி, பிட்சாட நல்மணிமாலை, கொச்சகக்கலிப்பா, பெரிய நாயகியம்மை 
நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம், பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை என்னும் 
நூல்களை இயற்றியுள்ளார். அவைகளெல்லாம் அச்சில் வெளிவந்துள.  தலபுராணம்             
ஞானக்கூத்தச் சிவப்பிரகாசரால் எழுதப்பெற்றது அச்சில் வெளிவந்துள்ளது.

பதிக வரலாறு

    வெங்குரு வேந்தர், செங்கண் விடையவர் திருமுதுகுன்றினைத் தொழுது சென்று அணைந்து, 
'முதுகுன்றடைவோம்' என்று சொன்மலர்மாலை இசையொடும் புனைந்து ஏத்தி, அடைந்து வலங்கொண்டு, 
தமிழ்ச்சொல்லிருக்குக் குறள் மொழிந்து, திருக்கோயிலின் உள்புகுந்து  கொன்றையார் சேவடியில் தாழ்ந்து 
எழுந்து, தமிழ்த்தொடை சாத்தியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2157.     தேவாசிறியோம்பிழையைப்பொறுப்பாய்பெரியோனே 
    ஆவாவென்றங்கடியார்தங்கட்கருள்செய்வாய் 
    ஓவாவுவரிகொள்ளவுயர்ந்தாயென்றேத்தி 
    மூவாமுனிவர்வணங்குங்கோயில்முதுகுன்றே.        1

    'தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே! 
    "ஆவா!' என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்! 
    ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்!' என்று ஏத்தி, 
    மூவா முனிவர் வணங்கும் கோயில் - முதுகுன்றே.

    tEvA! ciRiyOm pizaiyaip poRuppAy! periyOnE! 
    "AvA!" enRu, agku aTiyAr tagkaTku aruL ceyvAy! 
    OvA uvari koLLa uyarntAy! enRu Etti,
    mUvA munivar vaNagkum kOyil--mutukunRE.

பொருள்:     தேவா! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையைப் பொறுத்து அருள்வாய்! 
அடியார்களுக்கு ஆ! ஆ!! என்று அங்கு அருள்செய்வாய்! ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி 
முனிவர்கள் வணங்கும் முதுகுன்றே.                                

குறிப்புரை:     தேவா! பெரியோனே! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! அடியார் தங்கட்கு 
ஆ! ஆ!! என்று அங்கு அருள் செய்வாய்! ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி வணங்கும் கோயில் 
முதுகுன்றே என முடிக்க. தேவா- சிவமாந்தன்மைப் பெருவாழ்வினனே. 'அயன் திருமால் செல்வமும் 
ஒன்றோ என்னைத் தேவு செய்யும்' எனக் கொண்டு கூட்டி, தேவு என்பதற்கு ஆசிரியர் மாதவச் சிவஞான 
யோகிகள், 'சிவமாந்தன்மைப் பெருவாழ்வு' எனப் பொருள் உரைத்தருளியதறிக. சிறியோம் என்று 
மூவா முனிவர்கள் சொல்லிக் கொள்வாராயின், அடியோம் அதனினும் இழிந்த சொல் பெற வழியில்லை. 
‘நின்னையான் அகன்று ஆற்றுவனோ' (திருக்கோவையார் 12) என்புழி. அதன் உரையாசிரியர் 
கூறிய  கருத்து ஈண்டுச் சிறுமை பெருமைகட்குங் கொள்க. ஆவா என்று- 'ஆவா என அரக்கன் அலற
அடர்த்திட்டுத் தேவா என அருளார் செல்வம் கொடுத்திட்ட கோவே' (தி. 1 ப.89 பா.8). 'ஆவா' என்றதன்பின், 
'என்' எனும் பகுதியடியாத் தோன்றிய வினைச்சொல் வருதல் உண்டு. ' "ஆவா என்று எனக்கு அருள்வாய்' என்ற 
பொருளது கொம்பொடிந்து பிழைத்தது (திருவாசகம் போற்றித் திருவகவல் 99) 'ஆ ஆ  செத்தேன்' 
(மேற்படி 3:165) என்பது போலும் இடத்தில் அவ்வினைச் சொல் தொடர்தல் வேண்டா. 
'ஆவா என்ன ஆசைப்பட்டேன்' (திருவாசகம் 420). 'ஆவா என்ற நீர்மையெல்லாம்' (மேற்படி 605). 'ஆவ என்றருளி' 
(மேற்படி 407). ஓவா உவரி- ஒழியாத கடல். தலவரலாறு காண்க. மூவா - மூத்தலில்லாத. (அழியாத என்றவாறு). 
'மூவாமுதலா' என்றதறிக. 'கோயில் முதுகுன்று' என்றதால், மலையே சிவபிரான் என்றுணர்க. 
திருவண்ணாமலையே சிவபிரானாகும். அச்சிறப்பு இத்தலத்துக்கும் உண்டு.

    Oh! It is Civan, our Lord in Thiru-muthu-kundram. The hermits here have no birth 
and death in their life, prostrate before our Lord and worship Him with words like -Oh our 
Supreme Lord! Oh Chief of Devas! We are your humble servitors! Kindly pardon us for our 
mistakes and shower your grace on us. When the asura devotees cried " Aaa! Aaa!" and begged 
pardon; you excused them and graced them by giving boons. Once a deluge, seemed to devour the 
entire world. You then behaved as the top most Supreme Being and floated in the ocean by 
sitting in a boat". With such prayerful boons utterances the hermits prostrate at the holy 
feet of our Lord manifested in the temple of Thiru-muthu-kundram.

2158.     எந்தையிவனென்றிரவிமுதலாஇறைஞ்சுவார் 
    சிந்தையுள்ளேகோயிலாகத்திகழ்வானை 
    மந்தியேறியினமாமலர்கள்பலகொண்டு 
    முந்தித்தொழுதுவணங்குங்கோயில்முதுகுன்றே.        2

    "எந்தை இவன்” என்று இரவி முதலா இறைஞ்சுவார் 
    சிந்தை உள்ளே கோயில்ஆகத் திகழ்வானை, 
    மந்தி ஏறி, இனம் ஆம் மலர்கள்பல கொண்டு, 
    முந்தித் தொழுது வணங்கும் கோயில் - முதுகுன்றே.

    "entai ivan" enRu iravi mutalA iRainjcuvAr 
    cintaiyuLLE kOyil Akat tikazvAnai, 
    manti ERi, inam Am malarkaL pala koNTu,
    muntit tozutu vaNagkum kOyil--mutukunRE.

பொருள்:     என்னுடைய தந்தை இவன் என்று சூரியன் முதலாய தேவர்கள் வணங்குவார்கள். 
அவர்களுடைய உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குவோனை, குரங்கு மரத்தின்  மேலேறி 
பலரினமலர் கொண்டு வந்து மக்கள் தொழுவதற்கு முன் வழிபடும் முதுகுன்றே.

குறிப்புரை:     எந்தை - என் அப்பன். தந்தை - தன் அப்பன். நுந்தை - நுன் அப்பன் என்பது பழைய
 வழக்கு. இவன் எந்தை - இவனே (சிவபிரானே) என் அப்பன், என்று இறைஞ்சுவார் சிந்தையுள்ளே 
திகழ்வானை மந்தி மலர் கொண்டு வணங்குங்கோயில் என்க. கிரியா விதிப்படி சிவபூஜை செய்வோர்
 முதலில் சூரிய பூஜை செய்வாராதலின் 'இரவி முதலா இறைஞ்சுவார்' என்றார். இறைஞ்சுவார்- 
வினையாலணையும் பெயர். இரவி - சூரியன். திகழ்வான் - ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் 
மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி. மந்தி - குரங்கு. ஈண்டு இனத்தைக் 
குறித்தது.  குரங்குகளும் மலரினம் பல கொண்டு மக்கள் தொழுவதற்கு முந்தி வழிபடும் சிறப்பு 
உணர்த்தப்பட்டது. இது சிவபூஜை செய்யாத மாக்களை நாணுறுத்தும்.

    All the Civan devotees before commencing their daily early morning religious 
austerities hail "Oh Father! You are my Lord". Then they do the rites first commencing 
the worship to sun god. Then they further proceed to do the rituals called "Siva Pooja" 
with sincere devotion when our Lord Civan dwells in the temple of their minds. In the 
Thiru-muthu-kundram city, the monkeys unite in large numbers and climb flora trees and 
plants and collect different sweet smelling flowers. Then they go to the temple and 
strew the flowers over the holy feet of our Lord with all sincerity. Then they pay 
homage to our Lord before the arrival of other people at the temple. This sacred temple 
is located in Thiru-muthu-kundram.

2159.     நீடுமலரும்புனலுங்கொண்டுநிரந்தரம் 
    தேடுமடியார்சிந்தையுள்ளேதிகழ்வானைப் 
    பாடுங்குயிலினயலேகிள்ளைபயின்றேத்த 
    மூடுஞ்சோலைமுகில்தோய்கோயில்முதுகுன்றே.        3

    நீடும் அலரும் புனலும் கொண்டு, நிரந்தரம், 
    தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானை, 
    பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த, 
    மூடும் சோலை முகில் தோய் கோயில் - முதுகுன்றே.

    niTum alarum punalum koNTu, nirantaram, 
    tETum aTiyAr cintaiyuLLE tikazvAnai,
    pATum kuyilin ayalE kiLLai payinRu Etta, 
    mUTum cOlai mukil toy kOyil--mutukunRE.

பொருள்:     மலரும் பூவும் மிகுதியாகக் கொண்டு எப்பொழுதும் வழிபடும் அடியவர்களின் சிந்தையுள் 
விளங்குபவனை, பாடுகின்ற குயிலின் அருகில் கிளி நாமத்தைப் பேசிப் பயின்று ஏத்த, தோயும் முகிலும் 
சோலையும் மூடியிருக்கும் திருக்கோயில் முதுகுன்றே.

குறிப்புரை:     நீடு - மிகுதி. நிரந்தரம் - எப்பொழுதும். தேடும்-ஆராயும். 'தேடிக்கண்டு கொண்டேன்' 
(தி.4 ப.20 பா.10). 'திருமாலொடு நான்முகனும் தேடித்தேடொணாத் தேவனை என்னுள்ளேத் தேடிக் கண்டு 
கொண்டேன்' (தி.4 ப.5 பா.12). 'ஓட்டற்று நின்ற உணர்வு பதி முட்டித் தேட்டற்று நின்ற இடம் சிவமாம்' 
நாட்டற்று நாடும் பொருளனைத்தும் நானாவிதமாகத் தேடுமிடமன்று சிவம் (திருக்களிற்றுப்படியார் 5.29).
கிள்ளை- கிளி. பயின்று - பழகி. மூடும்.... குன்று - மலையைச் சோலையும் முகிலும் மூடியிருக்கின்றன. 
மூடுதல் - பொதுவினை. தோய்தல் - முகிலின் (சிறப்பு) வினை.

    Oh! It is Civan, Lord of Thiru-muthu-kundram. The devotees in this city in large
numbers pluck and gather a very large quantity of flowers in different colours and smell 
from flowering trees and plants. They also collect pure water. Then they observe the daily 
austerities without any fail and think in their mind only of our Lord. Therefore the minds 
of these devotees become His temple. The cuckoos and the parrots sing in praise of our Lord. 
The forest area is full of birds in plenty. The dark clouds move over these forests and 
mountains and cover them completely. This sacred city is Thiru-muthu-kundram.

2160.     தெரிந்த அடியார்சிவனேயென்றுதிசைதோறுங் 
    குருந்தமலருங்குரவினலருங்கொண்டேந்தி 
    இருந்துநின்றுமிரவும்பகலுமேத்துஞ்சீர் 
    முரிந்துமேகந்தவழுஞ்சோலைமுதுகுன்றே.        4

    தெரிந்த அடியார் "சிவனே!" என்று திசைதோறும், 
    குருந்தமலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி, 
    இருந்தும் நின்றும், இரவும் பகலும், ஏத்தும் சீர், 
    முரிந்து மேகம் தவழும் சோலை -முதுகுன்றே.

    terinta aTiyAr, "civanE!" enRu ticaitORum, 
    kuruntamalarum kuravin alarum koNTu Enti,
    iruntum ninRum, iravum pakalum, Ettum cIr,
    murintu mEkam tavazum cOlai-mutukunRE.

பொருள்:     ஆராய்ந்து தெளிந்த அடியவர்கள் 'சிவனே' என்று இடந்தோறும் குருந்த மலரும் 
குராமரத்தின் மலரும் கொண்டு கையிலேந்தி, அமர்ந்திருந்தும் நின்றிருந்தும் இரவும் பகலும் 
ஏத்தும் பெருமையுடையது எதுவெனில், மேகம் முரிந்து தவழும் சோலைகளை உடையது முதுகுன்றே.

குறிப்புரை:     தெரிந்த - சிவபிரானே வழிபாட்டிற்கரியவனாகி வீடு பேறளிக்க வல்லவன் 
என்று ஆராய்ந்து அறிந்த. குருந்தம் என்னும் மரங்களின் மலர்களைக் கொண்டு நின்றும் இருந்தும் 
இரவும் பகலும் ஏத்தி வழிபடும் சீரையுடைய முதுகுன்று. முரிந்து- மேகங்கள் வளைந்து. மேகம் 
முரிந்து தவழும் சோலையையுடைய முதுகுன்று. 

    Oh! It is Civan our Lord in Thiru-muthu-kundram. The scholars in this city make a 
research about divine knowledge and come to a conclusion that our Lord Civan is the only 
Supreme Being for reverence and for obtaining heaven for devotees like us. These great, 
upright people collect sweet smelling flowers from Kuruntha tree, the foliage too is like 
sweet smelling flowers and bottle flowers and offer prayers both by sitting and standing 
day and night to our Lord with sincere devotion in the sacred temple in Thiru-muthu-kundram. 
The dark clouds bend and break and creep and crawl over the thick forest trees in this 
Thiru-muthu-kundram city. In such an attractive city our Lord is manifest in the temple 
located here.

2161.     வைத்தநிதியேமணியேயென்றுவருந்தித்தம் 
    சித்தநைந்துசிவனேயென்பார்சிந்தையார் 
    கொத்தார்சந்துங்குரவும்வாரிக்கொணர்ந்துந்தும்
     முத்தாறுடைய முதல்வர்கோயில்முதுகுன்றே.        5

    "வைத்தநிதியே! மணியே!" என்று வருந்தித் தம் 
    சித்தம் நைந்து "சிவனே!" என்பார் சிந்தையார்; 
    கொத்து ஆர் சந்தும்,குரவும், வாரிக் கொணர்ந்து உந்தும் 
    முத்தாறு உடைய முதல்வர்; கோயில் -முதுகுன்றே.

    "vaitta nitiyE! maNiyE!" enRu varuntit tam
    cittam naintu, "civanE!" enpAr cintaiyAr;             
    kottu Ar cantum, kuravum, vArik koNarntu untum 
    muttARu uTaiya mutalvar; kOyil--mutukunRE.

பொருள்:     சேம வைப்பாக வைக்கப் பெற்ற நிதியமே! மணியே! என்று கூவி, வழிபடாது வீணே கழித்த 
காலத்தை நினைந்து வருந்தி, உள்ளம் கசிந்து 'சிவனே' என்பவருடைய சிந்தையிலிருப்பவர், சந்தனமரக் 
கொத்துக்களையும் குரவக் கொத்துக்களையும் வாரிக் கொணர்ந்து உந்தித்தள்ளும் மணிமுத்தாறுடைய 
முதல்வர் வீற்றிருக்கும் கோயில் முதுகுன்றே. 

குறிப்புரை:     வைத்த நிதி -சேமவைப்பாக வைக்கப்பெற்ற செல்வம். 'வைச்ச பொருள் நமக்கு ஆகும் 
என்று எண்ணி நமசிவாய அச்சம் ஒழிந்தேன்' (தி.1 ப.80 பா.4). 'வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி 
மனத்து அடைத்துச் சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்றிருக்கின்... அத்தன் அருள் பெறலாம்... நெஞ்சே' 
(தி.1 ப.94 பா.5). 'வைத்த மாடு' (தி.2 ப.72 பா.1, ப.77 பா.7). மணி- மாணிக்கம். வருந்தி -வழிபடாது கழிந்த 
காலத்தை எண்ணி வருந்தி. கட்டு வீடு இரண்டிலும் உபகரித்து வரும் பரசிவனை மறவாது வழிபட 
முயன்று. சித்தம் - சிந்திக்கும் மனம். நைந்து -மெலிந்து. சிவனே என்பார் சிந்தையார் -சிவசிவா 
என்று திரி கரண சுத்தியுடன் அழைத்திடும் அடியவர் சித்தத்தில் வாழ்பவர். சந்து -சந்தனமரம். 
குரவு – குராமரம். உந்தும் முத்தாறு- தள்ளுகின்ற (மணி) முத்த நதி. மணியாலும் முத்தாலும் கலந்து 
ஓடும் ஆறு மணி முத்தாறு. திருமுதுகுன்றத்தருகில் ஓடும் ஆற்றின் பெயர் குறிக்கப்பட்டது.         
 
    Oh! It is our Lord of Thiru-muthu-kundram. Oh Lord! I wasted many days without 
realising that You are the only One with whom we should deposit all our wealth and assets 
for safety so that it will be useful to us at the time needed. You are the only Being, 
the unique precious gem. Now with agonized hearts I regret over my failure to glorify 
in the past Your greatness. Now when I address You "Oh Civa! Oh Civa!" many times, You 
are generous enough to grace me. In such people's mind our Lord Civan glimmers. He resides 
in the temple of Thiru-muthu-kundram where the profuse water of Manimuthaaru deposits 
on its bank sandal wood and bottle flower bunches.

2162.     வம்பார்கொன்றைவன்னிமத்தமலர்தூவி 
    நம்பாவென்னநல்கும்பெருமானுறைகோயில் 
    கொம்பார்குரவுகொகுடிமுல்லைகுவிந்தெங்கும் 
    மொய்ம்பார்சோலைவண்டுபாடுமுதுகுன்றே.        6

    வம்பு ஆர் கொன்றை, வன்னி, மத்தமலர்,தூவி, 
    "நம்பா!" என்ன, நல்கும் பெருமான் உறை கோயில் 
    கொம்பு ஆர் குரவு, கொகுடி, முல்லை, குவிந்து எங்கும் 
    மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.

    vampu Ar konRai, vanni, mattamalar, tUvi, 
    "nampA!" enna, nalkum perumAn uRai kOyil- 
    kompu Ar kuravu, kokuTi, mullai, kuvintu egkum 
    moympu Ar cOlai vaNTu pATum mutukunRE.

பொருள்:     மணம் நிறைந்த கொன்றை, வன்னி, ஊமத்தை மலர் தழை தூவி, 'நம்பனே' என்று வழிபட, 
வேண்டுவார் வேண்டுவதே நல்கும் பெருமான் உறைகின்ற திருக்கோயில் எதுவெனில், கொம்புகள்
மிகுதியாக உடைய குரவு, கொகுடி முல்லை மலர்களைக் குவித்து எங்கும் செறிந்த மலர்ச்சோலைகளில் 
வண்டு பண்பாடும் திருமுதுகுன்றே.

குறிப்புரை:     வம்பு - மணம். வன்னி - சிறந்த பத்திரம் ஆகக் கொள்ளப்பட்ட வன்னிமரத்திலை .
மத்தம்- ஊமத்தை. தூவி - அருச்சித்து. நம்பா என்று - நம்பனே என்று பூரண பக்தியுடன் அழைக்க, 
நல்கும்- வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும். கொகுடிமுல்லை என்பது விசேடம். 'கொய்ம்மாவின் 
மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக்கோயில்’ (தி.7 ப.30 பா.1) எனத் திருக்கருப்பறியலூர் 
திருப்பதிகத்தில், நம்பியாரூரார் அருளியது உணர்க. மொய்ம்பு - வன்மை. மரச்செறிவு, உயர்ச்சி, 
உறுதி முதலியவற்றால் சோலைக்கு வன்மை கொள்ளப்படும். மொய்ப்பு- நெருக்கம் என்றதன் 
மெலித்தல் எனல் சிறந்ததன்று. 

    Oh! It is Civan, our Lord of Thiru-muthu-kundram. The truly devoted servitors collect 
the sweet smelling cassia flowers, the leaves of laburnum plant and the datura flowers and 
scatter these on the holy feet of our Lord and cry "Oh God! You are the most desirable person" 
and prostrate before our Lord. The Lord of Thiru-muthu-kundram showers His grace on such 
servitors. He is manifest in the temple of Thiru- muthu-kundram. This city is full of 
various trees in the dense forests.

7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை. 
7th Hymn Not Found

2163.     வாசங்கமழும்பொழில்சூழிலங்கைவாழ்வேந்தை 
    நாசஞ்செய்தநங்கள்பெருமானமர்கோயில் 
    பூசைசெய்த அடியார்நின்றுபுகழ்ந்தேத்த 
    மூசிவண்டுபாடுஞ்சோலைமுதுகுன்றே.        8

    வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை 
    நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில் -' 
    பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த, 
    மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே.

    vAcam kamazum pozil cUz ilagkai vAz vEntai 
    nAcam ceyta nagkaL perumAn amar kOyil-
    pUcai ceyta aTiyAr ninRu pukazntu Etta, 
    mUci vaNTu pATum cOlai mutukunRE.

பொருள்:     மணங்கமழும் சோலைகள் சூழ்ந்த இலங்கையில் வாழ்கின்ற வேந்தனாகிய இராவணனை 
அழித்த நம்முடைய பெருமான் விரும்பி அமர்ந்திருக்கும் கோயில் எதுவெனில், சிவபெருமானைப் பூசித்து 
அடியவர்கள் துதிபாடி ஏத்த, வண்டுகள் மூசிப் பாடும் சோலைகளையுடைய திருமுதுகுன்றே.

 குறிப்புரை:     வாசம்- மணம். வேந்தை - அரசனாகிய இராவணனை. வேந்து - சொல்லால் அஃறிணை, 
பொருளால் உயர்திணை ஒற்று முதலியனவும் அன்னவையே. பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த 
வண்டுமூசிப் பாடுஞ் சோலையை உடைய முதுகுன்று என்க. செய்த அடியார் என்று இறந்த காலத்தாற் 
கூறியதால், செய்யாதிருந்த காலமும் உண்டோ என்று ஐயுறலாகாது. அடியவர்கள் சிவபெருமானைப் 
பூசை செய்ததும் எழுந்து நின்று திருமுன் மலர்களைத் தூவி, துதிபாடியேத்தி, வேர்த்தும் புரண்டும் 
விழுந்தும் எழுந்து வழிபடும் கடமையுடையவர்கள். 

    Oh! It is Civan, our Lord of Thiru-muthu-kundram. Sri Lanka is surrounded by natural 
forests with many sweet smelling flowers and trees. Raavanan was the king of this great country, 
was the greatest warrior, a mighty and dexterous king. Our Lord who ruined his mightiness 
is manifest in the temple in Thiru-muthu-kundram. The devotees of this city perform daily 
religious rituals in this temple to our Lord and sing His praise. The beetles in large 
numbers fly in the forest gardens making music.

2164.     அல்லிமலர்மேலயனுமரவினணையானும் 
    சொல்லிப்பரவித்தொடரவொண்ணாச்சோதியூர் 
    கொல்லைவேடர்கூடிநின்றுகும்பிட 
    முல்லையயலேமுறுவல்செய்யுமுதுகுன்றே.        9

    அல்லி மலர்மேல் அயனும் அரவின்அணையானும், 
    சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர் - 
    கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட, 
    முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.

    alli malarmEl ayanum, aravin aNaiyAnum, 
    collip paravit toTara oNNAc cOti Ur-
    kollai vETar kUTi ninRu kumpiTa, 
    mullai ayalE muRuval ceyyum mutukunRE.

பொருள்:     அகவிதழ்களையுடைய தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும் பாம்பணையின்மேல்                
துயிலும் திருமாலும் தோத்திரம் சொல்லி வழிபட்டுத் தொடரும் புண்ணியம் இல்லாதவர்களாயினர்; 
அவர்களால் தொடர முடியாத சோதியாக நின்றவனுடைய ஊர் எதுவெனில், முல்லை நிலத்து வேடர்கள் 
குழுமி நின்று வழிபட அயலே உள்ள முல்லைப் பூக்கள் முறுவல் செய்து நகைகாட்டும் முதுகுன்றே. 

குறிப்புரை:     அல்லி- அகவிதழ்கள். அரவின் அணை- பாம்பாகிய படுக்கை. பிரமனும் விண்டுவும் 
என்றவாறு. சொல்லி - தோத்திரம் புரிந்து. பரவி -வாழ்த்தி. தொழ -வழிபட. ஒண்ணா -ஒன்றாத.
பொருந்தப் புண்ணியஞ் செய்யாதவராயினர் என்றவாறு. சோதி - தீப்பிழம்பாய்த் தோற்றிய சிவபிரான்
சோதியினது ஊர் முதுகுன்று என்க. முல்லை - குறிஞ்சியை அடுத்த முல்லைத்திணை. அயல் - பக்கம்.
முறுவல்- புன்னகை. முதுகுன்று - குறிஞ்சி, அதனை அடுத்துள்ள முல்லை. தன்பால் பூத்த முல்லைப் பூக்கள் 
ஆகிய பற்களைக் காட்டிப் புன்சிரிப்புச் செய்யுந் தோற்றத்தை உடையது.

    It is Civan, our Lord in Thiru-muthu-kundram. Lord Brahma is seated in 
lotus flower, which has a lot of internal petals. Lord Vishnu rests on the 
five-headed snake.They both praised our Lord, and wandered in search of His head 
and foot in vain. Our Lord stood before them as a great and tall effulgence. His 
abode is Thiru-muthu-kundram where He rests in the temple. In the woodland country 
the flowers look at the hunters who jointly gather and worship our Lord. The jasmine 
vines near the foresters unfold their buds and it appears smiling at the hunters. 
This place is called Thiru-muthu-kundram where our Lord is manifested in the temple.

2165.     கருகுமுடலார்கஞ்சியுண்டுகடுவேதின் 
    றுருகுசிந்தையில்லார்க்கயலானுறைகோயில் 
    திருகல்வேய்கள்சிறிதேவளையச்சிறுமந்தி 
    முருகின்பணை மேலிருந்துநடஞ்செய்முதுகுன்றே.        10

    கருகும் உடலார், கஞ்சி உண்டு கடுவே தின்று 
    உருகு சிந்தை இல்லார்க்கு, அயலான் உறை கோயில் - 
    திருகல் வேய்கள் சிறிதே வளைய, சிறு மந்தி 
    முருகின் பணைமேல் இருந்து நடம்செய் முதுகுன்றே.

    karukum uTalAr, kanjci uNTu kaTuvE tinRu 
    uruku cintai illArkku, ayalAn uRai kOyil-
    tirukal vEykaL ciRitE vaLaiya, ciRu manti 
    murukin paNaimEl iruntu naTam cey mutukunRE.

பொருள்:     கரிய உடம்பினர், கஞ்சி உண்டு கடுக்காயைத் தின்பவர், உருகும்                          
சிந்தையில்லாதவராகிய சமணர், தேரர் ஆகியோருக்கு எட்டாதவனாகிய சிவபிரான் 
உறையும் திருக்கோயில் எதுவென்னில், கோணலாய் மூங்கில் சிறிதே வளையச் சிறு 
மந்திகள் அகில் மரக்கிளையின் மேலிருந்து தாவி நடனஞ் செய்யும் முதுகுன்றே.

குறிப்புரை:     கருகும் உடலார் - கரிய உடம்பினர். 'காரமண் கலிங்கத்துவராடையர்' 
(தி.1 ப.54 பா.10). கடு- கடுக்காய். உருகு சிந்தை இல்லார் - இரங்கும் உள்ளம் வாய்க்காதவர், 
வன்னெஞ்சரென்றபடி. அஃது இல்லார்க்கு அயலான் என்றது அக்கனியும் மனம் இல்லாத             
சமணர் கொள்கைகளுக்கு எட்டாமல் வேறாய் வேதாகமக் கொள்கைக்கு எட்டுமவன் 
பரமேச்சுவரன் என்றவாறு. திருகல்- கோணல். வேய்கள்- மூங்கில்கள். முருகு - அகில் மரம். 
பணை - கிளை. சிறிய மந்திகள் அகில் மரக்கிளை மேலிருந்து சிறிது வளைந்த 
வேய்களில் தாவிக் குதித்து ஆடும் என்க.

    It is Civan, our Lord in Thiru-muthu-kundram. The black coloured Jains 
wander in the city without any compassionate feelings for other people. The Buddhists 
wear the ochre robe and move about without any mercy for others. Our Lord is the 
Penultimate Being for these two merciless people in the Thiru-muthu-kundram city. 
Our Lord is manifest in the temple in Thiru-muthu-kundram. The monkeys in this city 
climb the eaglewood trees and jump over the bent bamboo trees and dance and enjoy 
their life.

2166.     அறையார்கடல்சூழந்தண்காழிச்சம்பந்தன் 
    முறையால்முனிவர்வணங்குங்கோயில்முதுகுன்றைக் 
    குறையாப்பனுவல்கூடிப்பாடவல்லார்கள் 
    பிறையார்சடையெம்பெருமான்கழல்கள்பிரியாரே.        11

    அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழிச் சம்பந்தன்,
    முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக் 
    குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்,
    பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே.

    aRai Ar kaTal cUz am taN kAzic campantan, 
    muRaiyAl munivar vaNagkum kOyil mutukunRaik 
    kuRaiyAp panuval kUTip pATa vallArkaL, 
    piRai Ar caTai emperumAn kazalkaL piriyArE.

பொருள்:     ஒலிக்கும் கடல் சூழ்ந்த அழகிய, குளிர்ந்த காழி நகரின் ஞானசம்பந்தன் வேதாகம 
முறைப்படி முனிவர்கள் வணங்கும் திருக்கோயில் முதுகுன்றை நிறைவுபடப் பாடிய இப்பதிகத்தைக் 
குழாமாகக் கூடிப்பாட வல்லார்கள் பிறைசூடிய பெருமானின் திருவடிகளைப் பிரியார்.

குறிப்புரை:     அறை - முழக்கம். அம்தண்காழி -அழகும் குளிர்ச்சியுமுடைய சீகாழி. முறையான்- 
வேதாகம முறைப்படி. குறையாப் பனுவல் - நிறைவுறப்பாடிய இத்திருப்பதிகத்தை கூடிப்பாட வல்லவர்கள் 
சந்திரசேகரனாகிய எம்பெருமானுடைய திருவடி நிழலைப் பிரியாதிருந்து பேரின்பம் நுகர்வர் என்றவாறு.
அப்பேரின்பமே கொடுத்தலால், உலகின்பம் வேண்டுவார்க்கும் அதைக் கொடுத்தல் இப்பனுவலுக்கு 
மிக எளிதின் இயலுவதொன்று எனக் கொள்க. 

    It is Civan, our Lord in Thiru-muthu-kundram. Our young saint Thiru-gnana-Sambandar 
hails from Seerkaazhi which is surrounded by the noisy sea. Of course it is an attractive city 
with all coolness. Thiru-gnana-Sambandar reached the temple in Thiru-muthu-kundram where the 
sages and saints offer their prayers and worship our Lord according to the Vedic and Aaggama 
rites. Here Thiru-gnana-Sambandar Sang, with fine perfection these ten sacred songs on our 
Lord. Those devotees who can jointly sing these verses before our Lord with sincere devotion 
will never part from the holy feet of our Lord who retains the baby moon on His matted hair.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            64ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 64th Hymn.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 201                பதிக எண்: 65

65. திருப்பிரமபுரம்                65. THIRU-P-PIRAMAPURAM

பண்: காந்தாரம்                    Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    137ஆவது பதிகத்தைக் காண்க.

பதிக வரலாறு

    இப்பதிகம் முழுவதும் அவந்தியணி. அதாவது, சிவபெருமானின் தடத்த நிலையின் 
உண்மையை மறுத்துச் சொரூப நிலையை வற்புறுத்தியது. இலர் போலும் என்பது உள்ளவர் 
என்ற கருத்தை உணர்த்துவதாம். உயிர்களுக்காகத் தடத்த நிலையில் இவை உள்ளவர்; சொரூப 
நிலையில் இவை இல்லாதவர். தடத்தை நிலையில் இவை உள்ளவராக வழிபடுதல் நலம் பயக்கும். 
எனவே, ' இலர் போலும்' எனப் பிள்ளையார் பாடியருளினார்.

                திருச்சிற்றம்பலம்

2167.     கறையணிவேலிலர்போலுங்கபாலந்தரித்திலர்போலும் 
    மறையுநவின்றிலர்போலும்மாசுணமார்த்திலர்போலும் 
    பறையுங்கரத்திலர்போலும்பாசம்பிடித்திலர்போலும் 
    பிறையுஞ்சடைக்கிலர்போலும்பிரமபுரமமர்ந்தாரே.        1

    கறை அணி வேல் இலர்போலும்; கபாலம் தரித்திலர் போலும்; 
    மறையும் நவின்றிலர் போலும்; மாசுணம் ஆர்த்திலர் போலும்; 
    பறையும் கரத்து இலர்போலும்; பாசம் பிடித்திலர்போலும்; 
    பிறையும் சடைக்கு இலர்போலும் - பிரமபுரம் அமர்ந்தாரே.

    kaRai aNi vEl ilarpOlum; kapAlam tarittilar pOlum; 
    maRaiyum navinRilar pOlum; mAcuNam Arttilar pOlum; 
    paRaiyum karattu ilarpOlum; pAcam piTittilar pOlum;
    piRaiyum caTaikku ilarpOlum--piramapuram amarntArE.

பொருள்:     பிரமபுரம் அமர்ந்த பெருமான் இரத்தக் கறைபடிந்த வேல் இலர் போலும். 
பிரம கபாலத்தைத் தரித்திலர் போலும்; வேதத்தைக் கூறவில்லை போலும்; பாம்பை அரையில் 
கட்டிலர் போலும்; உடுக்கையைக் கையில் கொண்டிலர் போலும்; பாசக் கயிற்றினைப் பிடித்திலர் 
போலும்; பிறையும் சடையில் இலர் போலும்.

குறிப்புரை:     கறை- குருதி பட்டுலர்ந்த கறுப்பு, வேல்; பகைவர் உடம்பிற் பாய்ந்து 
உற்ற ரத்தம் உலர்ந்து கறுப்பாகும். வேலுக்குச் சாதியடை. கபாலம் - பிரமகபாலம். 
தரித்திலர் -தாங்கிலர். மறை - வேதம். மாசுணம் - பாம்பு. பறை -உடுக்கை. (டமருகம்). பாசம்-        
கயிறு. முதற்பத்துப் பாக்களிலும்  வரும் இலர்போலும் என்பது ஈற்றுப்பாட்டில் 'அண்ணல் 
செய்யாதன எல்லாம் அறிந்து வகை வகையாலே.... நவின்றன' என்ற கருத்திற்கேற்றவாறு 
பொருள் கொளற்பாலது பரமசிவன் உண்மை (சொரூபநிலை)யில்  இவை ஒன்றும் இல்லாத 
சச்சிதாநந்த சொரூபியாதலின் 'செய்யாதன' என்று எதிர்மறையில் கூறப்பட்டன. 

     தடத்த நிலையாகிய பொதுவில், உயிர்களுக்கு ஐந்தொழிலும், அருட்டொழிலேயாகச் 
செய்யும் பொருட்டு,  இவையெல்லாம் இறைவனுக்கு உள்ளன ஆதலின் 'இலர்' என உடையான் 
வினையாக்கியும் 'போலும் என ஐயப்பொருட்டாக்கியும் உரைத்தருளினார். 'இலர் போலும்' என்பது 
உள்ளவர் என்னும் குறிப்புணர்த்துவது. இஃது இன்றும் உலக வழக்கில் இருக்கின்றது. செல்வரை, 
'வறியர்போலும்' எனக்  குறிப்புப் பொருள் உணர்த்தக் கூறுதல் முதலியன 'வேலிலர்' 'தரித்திலர்' '
'சடைக்கிலர்' என்ற மூன்று வகை வாய்ப்பாட்டில் அடங்குமாறும் அறிக. சிவபிரான் செய்தனவாக 
உள்ள அத்தனையும் உண்மை ஞானம் பெற்றார்க்குச் செய்யாதனவாய்த் தோன்றும். அவற்றைச் 
செய்தனவாகக் கொண்டு வழிபடுவார்க்கே உண்மை ஞானம் உண்டாகும். ஆதலின் அவற்றைப் 
பொய்யெனலாகாது.

    It is Civan, our Lord in Piramapuram. The Lord who resides in Piramapuram 
has no form or shape but His very shape is decided as grace. But the other aspect of 
god causing five poses (Panaa Kiruttigam) is called Thadatha Nilai. In this verse in 
various other verses also His Thadathaa Nilai is mentioned. He takes various forms
depending upon His need. These two aspects must be made clear in our mind. Our Lord 
holds the battleaxe where the black stains of dry blood appears. He carries the skull 
of Brahma. His gracious divine command is the four Vedas. He wears the snake on His 
loins. In one of His hands He holds the small drum tapering in the middle. He holds 
in one of His hands the noose. He retains the baby moon in His matted hair.
With such aspects our Lord is manifest in Thiru-p-piramapuram. 

2168.      கூரம்பதுவிலர்போலுங்கொக்கினிறகிலர்போலும் 
    ஆரமும்பூண்டிலர்போலுமாமையணிந்திலர்போலுந் 
    தாருஞ்சடைக்கிலர்போலுஞ்சண்டிக்கருளிலர்போலும் 
    பேரும்பலவிலர்போலும்பிரமபுரமமர்ந்தாரே.        2

    கூர்அம்புஅது இலர்போலும்; கொக்கின் இறகு இலர்போலும்; 
    ஆரமும் பூண்டிலர்போலும்; ஆமை அணிந்திலர் போலும்; 
    தாரும் சடைக்கு இலர்போலும்; சண்டிக்கு அருளிலர்போலும்; 
    பேரும் பல இலர்போலும்; பிரமபுரம் அமர்ந்தாரே.

    kUr ampu atu ilarpOlum; kokkin iRaku ilar pOlum; 
    Aramum pUNTilar pOlum; Amai aNintilar pOlum; 
    tArum caTaikku ilarpOlum; caNTikku aruLilarpOlum; 
    pErum pala ilarpOlum--piramApuram amarntArE.

பொருள்:     பிரமபுரம் அமர்ந்த பெருமான் கூரிய அம்பு இலர் போலும். கொக்கினது இறகு 
இலர்  போலும்; மணிமாலை பூண்டிலர் போலும்; ஆமை ஓட்டை அணிந்திலர் போலும்; கொன்றை 
மாலை  சடையில் இலர் போலும்; சண்டிகேசுரருக்கு அருள் செய்திலர் போலும்; பல பெயர்கள் 
இவருக்கு இலர் போலும்.

குறிப்புரை:     கூர் அம்பு - கூரியபாணம். கொக்கினது இறகு, ஆரம் - மணிமாலை. ஆமை - 
முற்றலாமை (தி.1.ப.1 பா.2) தார் - கொன்றை மாலை. சண்டி - சண்டேசுரர். பேர் - திருநாமம்; 
பெயர் என்பதன் மரூஉ.

    Oh! It is Civan, our Lord of Thiru-p-piramapuram. Our Lord who is manifest in 
Thiru-p-piramapuram is addressed by devotees with many names. Such names are: 
(1) He is the One who carries a very sharp battleaxe. 
(2) He wears the feather of a crane. 
(3) He wears many garlands on His body. 
(4) He wears the shell of tortoise.
(5) He wears festoons in His matted hair. 
(6) He graced the cowboy Chandeeswarar.

2169.     சித்தவடிவிலர்போலுந்தேசந்திரிந்திலர்போலுங் 
    கத்திவருங்கடுங்காளிகதங்கள்தவிர்த்திலர்போலும் 
    மெய்த்தநயனமிடந்தார்க்காழியளித்திலர்போலும் 
    பித்தவடிவிலர்போலும்பிரமபுரமமர்ந்தாரே.        3

    சித்த வடிவு இலர்போலும்; தேசம் திரிந்திலர்போலும்; 
    கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர்போலும்; 
    மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர்போலும்; 
    பித்தவடிவு இலர்போலும் - பிரமபுரம் அமர்ந்தாரே.

    citta vaTivu ilarpOlum; tEcam tirintilarpOlum; 
    katti varum kaTugkALi katagkaL tavirttilar pOlum;             
    meytta nayanam iTantArkku Azi aLittilar pOlum; 
    pittavaTivu ilarpOlum-piramapuram amarntArE.

பொருள்:     பிரமபுரம் அமர்ந்த பெருமான் சித்துக்களில் வல்லவர் உருவம் இலர் போலும். 
தேசாந்திரியாகத் திரிந்திலர் போலும்; கூக்குரலிட்டு வேகமாக வரும் காளியின் கோபாவேசத்தை 
நீக்கிலர் போலும்; எய்த்த நயனம் இடந்த திருமாலுக்குச் சக்கரம் ஈந்திலர் போலும்; பித்தர் வடிவு 
போலும் வடிவு இலர் போலும். 

குறிப்புரை:     சித்தவடிவு - சித்தருருவம் போலும் உருவம். சித்துகளில் வல்லவரென்பதை 
உணர்த்தும் திருமேனி. தேசம் - நாடு. கதங்கள் - கோப(வேச)ம். தவிர்த்திலர் - நீக்கிலர். 
மெய்த்த - மெய்யில் (உடம்பி) லுள்ள. எய்த்த எனப் பிரித்துப் பொருள் கொள்ளல் சிறந்தது. 
நயனம் - கண். இடந்தார்க்கு- போர்த்(து ஆயிரம் பூவெனநிறைத்)த திருமாலுக்கு. 
ஆழி - சக்கராயுதம். பித்தர் வடிவுபோலும் வடிவாம்.

    Oh! It is Civan, our Lord in Thiru-p-piramapuram. Our Lord who is manifest 
Thiru-p-piramapuram is described by devotees with His many aspects such as:

(1) He takes the form of supernals.
(2) He has gone round various countries in the world. 
(3) Kaazhi was aggressive with thundering noise and He succeeded in appeasing her.
(4) He gave a sharp circular missile to Lord Vishnu when he plucked one of his eyes 
    from his body and offered it at our Lord's holy feet.
(5) At times He behaves and looks like a crazy man.

2170.     நச்சரவாட்டிலர்போலும்நஞ்சமிடற்றிலர்போலுங் 
    கச்சுத்தரித்திலர்போலுங்கங்கைதரித்திலர்போலும் 
    மொய்ச்சவன்பேயிலர்போலும்முப்புரமெய்திலர்போலும் 
    பிச்சையிரந்திலர்போலும்பிரமபுரமமர்ந்தாரே.        4

    நச்சுஅரவு ஆட்டிலர்போலும்; நஞ்சம் மிடற்று இலர்போலும்;             
    கச்சுத் தரித்திலர்போலும்; கங்கை தரித்திலர்போலும்; 
    மொய்ச்ச வன்பேய் இலர்போலும்; முப்புரம் எய்திலர்போலும்; 
    பிச்சை இரந்திலர்போலும் - பிரமபுரம் அமர்ந்தாரே.
 
    naccu aravu ATTilar pOlum; nanjcam miTaRRu ilarpOlum; 
    kaccut tarittilarpOlum; kagkai tarittilarpOlum; 
    moycca vanpEy ilarpOlum; muppuram eytilarpOlum; 
    piccai irantilarpOlum--piramapuram amarntArE.

பொருள்:     பிரமபுரம் அமர்ந்த பெருமான் நஞ்சுடைய பாம்பினை ஆட்டுவது இலர் போலும்; 
மிடற்றில் நஞ்சிலர் போலும்; அரையில் கச்சு தரித்திலர் போலும்; சடையில் கங்கையைத் தரித்திலர் 
போலும்; மொய்த்த வலிய பேய்கள் சூழ்ந்திலர் போலும்; திரிபுரங்களை அழித்திலர் போலும்; 
பிச்சையை யாசித்திலர் போலும்.

குறிப்புரை:     நச்சு அரவு - நஞ்சமுடைய பாம்பு (நஞ்சு -நச்சு,விஷம்). கச்சு - அரையிற்கட்டும் 
கச்சு, மொய்ச்ச - மொய்த்த. வன்பேய் - வலியபேய்கள். பிச்சை இரத்தல் - பிச்சையிடுக என்று யாசித்தல்.

    Oh! It is Civan, our Lord in Thiru-p-piramapuram. The devotees describe His 
achievements as under:

(1) Our Lord holding in His hand the poisonous snake lets it dance.
(2) He imbibed the sea poison and kept it at His throat.
(3) He wears the snake as a strap on His loins.
(4) He supports the river Ganges in His hair.
(5) He keeps a company of mighty goblins around Him. 
(6) He shot an arrow and burnt the three flying fortresses of the asuras. 
(7) He used to beg alms now and then.

2171.     தோடுசெவிக்கிலர்போலுஞ்சூலம்பிடித்திலர்போலும் 
    ஆடுதடக்கைவலிய ஆனையுரித்திலர்போலும் 
    ஓடுகரத்திலர்போலுமொள்ளழல்கையிலர்போலும் 
    பீடுமிகுத்தெழுசெல்வப்பிரமபுரமமர்ந்தாரே.        5

    தோடு செவிக்கு இலர்போலும்; சூலம் பிடித்திலர்போலும்; 
    ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர்போலும்; 
    ஓடு கரத்து இலர்போலும்; ஒள்அழல் கை இலர்போலும் 
    பீடு மிகுத்து எழு செல்வப் பிரமபுரம் அமர்ந்தாரே.

    tOTu cevikku ilarpOlum; cUlam piTittilarpOlum; 
    ATu taTakkai valiya Anai urittilarpOlum; 
    OTu karattu ilarpOlum; oL azal kai ilarpOlum- 
    pITu mikuttu ezu celvap piramapuram amarntArE.

பொருள்:     பிரமபுரம் அமர்ந்த பெருமான் செவிக்குத் தோடு இலர் போலும் சூலத்தைக் கையிற் 
பிடித்திலர் போலும்; ஆடுகின்ற பெரிய கையை உடைய வலிய யானையைத் தோல் உரித்திலர் போலும்; 
கரத்தில் மண்டையோடு இலர் போலும்; ஒளி வீசுகின்ற நெருப்பு கையில் இலர் போலும்.

குறிப்புரை:     செவிக்குத் தோடு இலர்போலும் என்க. ஆடுகை. தடக்கை. துதிக்கை ஆடுதலும் 
பரியதாதலும் வெளிப்படை. வலிய ஆனையை உரித்தல் செய்யாதவர் போலும்.

    Oh! It is Civan, Lord in Thiru-p-piramapuram. The devotees describe His various 
aspects and His attire as under:

(1) Our Lord is manifest in the temple in the sacred and rich Thinu-p-piramapuram wearing 
on one of His ears a role made of palm leaf.
(2) He holds in one of His hands the trident.
(3) He peeled the hide of the elephant and used its hide as His mantle. 
(4) He holds the human skull in His hand.
(5) He holds in one of His hands the bright flame.

2172.     விண்ணவர்கண்டிலர்போலும்வேள்வியழித்திலர்போலும் 
    அண்ணலயன்தலைவீழஅன்றுமறுத்திலர்போலும் 
    வண்ணஎலும்பினொடக்குவடங்கள்தரித்திலர்போலும் 
    பெண்ணின்மொய்த்தெழுசெல்வப்பிரமபுரமமர்ந்தாரே.        6

    விண்ணவர் கண்டிலர்போலும்; வேள்வி அழித்திலர்போலும்; 
    அண்ணல் அயன்தலை வீழ, அன்றும் அறுத்திலர்போலும்; 
    வண்ண எலும்பினொடு அக்குவடங்கள் தரித்திலர்போலும் - 
    பெண் இனம் மொய்த்து எழு செல்வப் பிரமபுரம் அமர்ந்தாரே.

    viNNavar kaNTilarpOlum; vELvi azittilarpOlum; 
    aNNal ayantalai vIza, anRum aRuttilarpOlum; 
    vaNNa elumpinoTu akku vaTagkaL tarittilarpOlum- 
    peN inam moyttu ezu celvap piramapuram amarntArE.

பொருள்:     பெண்டிர் நெருங்கி எழும் செல்வப் பிரமபுரத்து அமர்ந்த பெருமான் விண்ணிடத்திலுள்ள 
தேவர்கள் இவரைக் கண்டிலர் போலும்; தக்கனின் வேள்வியை அழித்திலர் போலும்; படைத்தற் கடவுளாகிய 
அயன் தலைவீழ அன்று அறுத்திலர் போலும்; அழகிய எலும்பினொடு உருத்திராக்க வடங்கள் தரித்திலர் போலும்.

குறிப்புரை:     விண்ணவர்- விண்ணிடத்திலுள்ள தேவர். வேள்வி- தக்கன் யாகம். அண்ணல் -
படைத்தற் கடவுள், பெருமையுமாம். அயன்-  பிரமன். வண்ணம் -  அழகு. அக்கு -உருத்திராக்கம். 
பெண்ணினம் - மகளிர்கூட்டம்.  ஈண்டுப் பெண்ணென்னும் அஃறிணைப் பெயர் பெண்டிர்             
என்னும் உயர்திணைப் பொருட்டாய் நின்றது. பெண்கள், ஆண்கள் என்னும் பிழை வழக்குப்         
பயிற்சியை நோக்குக. 'சோர்விலாள் பெண்' என்ற வள்ளுவர் காலத்துக்கு முன்னேயே இவ்வாறு 
வழங்கியது போலும். மொய்த்து -(கூடி) நெருங்கி.

    Oh! It is Civa, our Lord in Thiru-p-piramapuram. In Thiru-p-piramapuram, female 
devotees in large numbers jointly pray and worship our Lord whose actions and appearances 
are as under:

(1) The devas are ignorant people and do not know anything about our Lord's divine knowledge.
(2) He commanded His bhuthaas to destroy the yaga of Thakkan. 
(3) Our Lord removed one of Brahma's heads who is the chief of creation. 
(4) He wears the rudraksha mani on His chest along with attractive bones.

2173.     பன்றியின் கொம்பிலர்போலும்பார்த்தற்கருளிலர்போலுங் 
    கன்றியகாலனைவீழக்கால்கொடுபாய்ந்திலர்போலுந் 
    துன்றுபிணஞ்சுடுகாட்டிலாடித்துதைந்திலர்போலும் 
    பின்றியும்பீடும் பெருகும்பிரமபுரமமர்ந்தாரே.        7

    பன்றியின் கொம்பு இலர்போலும்; பார்த்தற்கு அருளிலர்போலும்; 
    கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர்போலும்; 
    துன்று பிணம் சுடுகாட்டில் ஆடித் துதைந்திலர் போலும் 
    பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.

    panRiyin kompu ilarpOlum; pArttaRku aruLilarpOlum; 
    kanRiya kAlanai vIzak kAlkoTu pAyntilarpOlum; 
    tunRu piNam cuTukATTil ATit tutaintilar pOlum- 
    pinRiyum pITum perukum piramapuram amarntArE.

பொருள்:     புகழும் பெருமையும் பெருகும் பிரமபுரத்தில் அமர்ந்த பெருமான் பன்றியின் 
கொம்பினை  அணிந்திலர் போலும்; அருச்சுனனுக்கு அருள் செய்திலர் போலும், கோபித்து வந்த 
எமனைக் கொல்ல கால்கொடு பாய்ந்திலர் போலும்; நெருங்கிய பிணங்களைச் சுடும் காட்டில் 
கூத்தாடி நெருங்கிலர் போலும்.

குறிப்புரை:     பன்றியின் கொம்பு - ஏனக்கொம்பு. 'ஏனமுளைக் கொம்பு' (தி. 1 ப. 1 பா. 2). 
பார்த்தற்கு- அருச்சுனனுக்கு. கன்றிய- கோபித்த. காலன்- எமன். காலனைக் கால்கொடு பாய்ந்திலர். 
வீழப் பாய்ந்திலர் என்க. துன்று - நெருங்கிய. துதைந்திலர் -நெருங்கிலர். பின்றி - பிந்தி. 'பின்றா 
நேசத்தால்' (திருவாசகம்). பீடு -பெருமை.

    Oh! It is Civan, our Lord of Thiru-p-piramapuram. Our Lord of Thiru-p-piramapuram's 
fame kept on increasing even after many centuries. He wears the tusk of the hog. He graced 
Arjuna and gave him a divine arrow called Paasupathasthiram When Yama reached near Civa 
in an angry mood to take the life of His devotee, our Lord kicked him down. He dances around 
the burning ghat when corpses are burnt.

2174.     பரசுதரித்திலர்போலும்படுதலை பூண்டிலர்போலும் 
    அரசனிலங்கையர்கோனையன்றுமடர்த்திலர்போலும் 
    புரைசெய்புனத்திளமானும்புலியினதளிலர்போலும் 
    பிரசமலர்ப்பொழில்சூழ்ந்தபிரமபுரமமர்ந்தாரே.        8

    பரசு தரித்திலர்போலும்; படுதலை பூண்டிலர்போலும்; 
    அரசன் இலங்கையர்கோனை அன்றும் அடர்த்திலர்போலும்; 
    புரை செய் புனத்து இளமானும் புலியின்அதள் இலர்போலும் 
    பிரசமலர்ப்பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே.

    paracu tarittilarpOlum; paTutalai pUNTilar pOlum; 
    aracan ilagkaiyar kOnai anRum aTarttilarpOlum; 
    purai cey punattu iLamAnum, puliyin ataL, ilarpOlum-
    piracamalarppozil cUznta piramapuram amarntArE.

பொருள்:     தேன் மலர்ப்பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்த பெருமான் மழுப்படையைத்
தரித்திலர் போலும்; கபால மாலையைப் பூண்டிலர் போலும்; இலங்கை அரசனான  இராவணனை 
அன்று அடர்த்திலர் போலும்; உயர்ந்த புனத்து இளமானும் புலியின் தோலும் இலர் போலும்.

குறிப்புரை:     பரசு- மழு. படுதலை - கபாலம். கோன் - இராவணன். அடர்த்திலர் - தாக்கிலர். 
புரை – பன்னசாலை. அதன் - தோல். பிரசம் - தேன்.

    Oh! It is Civan, our Lord in Thiru-p-piramapuram. The sacred city of 
Thiru-p-piramapuram, where our Lord is manifest is surrounded by forests, full of trees
and plants with flowers with profuse honey from them. He holds in one of His hands the 
battleaxe. He carries the skull of Brahma in His hand when He cut it off. Raavanan, 
the king of Sri Lanka was the most skilled and the mightiest king. Our Lord subdued 
his power. In the forest area the hunters sit at the watchtower and look out for 
animals such as deer, tiger and other animals. Our Lord wears on His loins the hide 
of the young deer and tiger.

2175.     அடிமுடிமாலயன்றேடஅன்றுமளப்பிலர்போலுங் 
    கடிமலரைங்கணைவேளைக்கனலவிழித்திலர்போலும் 
    படிமலர்ப்பாலனுக்காகப்பாற்கடலீந்திலர்போலும் 
    பிடிநடைமாதர்பெருகும்பிரமபுரமமர்ந்தாரே.     9

    அடி முடிமால் அயன் தேட அன்றும் அளப்பிலர்போலும்; 
    கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர்போலும்; 
    படி மலர்ப்பாலனுக்குஆகப் பாற்கடல் ஈந்திலர்போலும் 
    பிடிநடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.

    aTi muTi mAl ayan tETa, anRum aLappilarpOlum; 
    kaTimalar aigkaNai vELaik kanala vizittilarpOlum; 
    paTi malarppAlanukku Akap pARkaTal IntilarpOlum- 
    piTi naTai mAtar perukum piramapuram amarntArE.

பொருள்:     பெண் யானையின் நடை உடைய அழகிய பெண்கள் நிறைந்துள்ள பிரமபுரத்தமர்ந்த 
பெருமான் அடியையும் முடியையும் மாலும் அயனும் தேட அளப்பிலர் போலும்; மணமுடைய மலரம்புகள் 
ஐந்து உடைய மன்மதனை தீப்பொறி பறக்க விழித்திலர் போலும்; பூமியிற் பிறந்த பாலனுக்காகப்         
பாற்கடல் ஈந்திலர் போலும்.

குறிப்புரை:     கடி- மணம். மலர் ஐங்கணை - ஐந்து பூங்கணை. வேள் - (கரு) வேள், மன்மதன். 
கனல - தீப்பொறி பறக்க. பாலன்- உபமன்யு முனிவர். 'பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் 
பாற்கடலீந்த பிரான்',  பிடி - பெண் யானை.

    Oh! It is Civan, our Lord of Thiru-p-piramapuram. Our Lord is manifest in Thiru-p-piramapuram 
where good looking women who walk like female elephant do live in vast numbers. He took a divine 
development like a huge supernal flame before Brahma and Vishnu who went round the cosmos and into 
underworld to see our Lord's head and feet, and failed in their attempt. The god of love Manmathan 
used a special arrow which consisted of five different sweet smelling flowers. Our Lord opened 
His third eye and burnt him for his misdeed against our Lord. The boy child of sage Vyakrapaathar
was born and brought up in heaven with the milk of Kamadhenu, a divine cow. When this child was 
brought to earth it started weeping over the bad taste of earthly milk and refused to drink it. 
Our Lord, to help the sweet and tender flower like child, brought the milky ocean from heaven 
to earth to enable the child to drink heavenly milk.

2176.     வெற்றரைச்சீவரத்தார்க்குவெளிப்படநின்றிலர்போலும் 
    அற்றவரால்நிழல்நால்வர்க்கறங்களுரைத்திலர்போலும் 
    உற்றவரென்றிலர்போலுமோடுமுடிக்கிலர்போலும் 
    பெற்றமுமூர்ந்திலர்போலும்பிரமபுரமமர்ந்தாரே.        10

    வெற்றுஅரைச் சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர்போலும்; 
    அற்றவர்,ஆல்நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர்போலும்; 
    உற்றவர் ஒன்று இலர்போலும்; ஓடு முடிக்கு இலர்போலும்; 
    பெற்றமும் ஊர்ந்திலர்போலும் - பிரமபுரம் அமர்ந்தாரே.

    veRRu araic cIvarattArkku veLippaTa ninRilarpOlum; 
    aRRavar, Alnizal, nAlvarkku aRagkaL uraittilarpOlum; 
    uRRavar onRu ilarpOlum; OTu muTikku ilarpOlum; 
    peRRamum UrntilarpOlum--piramapuram amarntArE.

பொருள்:     பிரமபுரம் அமர்ந்த பெருமான் உடலில் ஆடையில்லாச் சமணருக்கு வெளிப்படத் 
தோன்றிலர் போலும்; பற்றற்றவர், ஆலமர நீழலில் முனிவர்கள் நால்வருக்கும் அறங்கள் உரைத்திலர் 
போலும்; மண்டையோடு தலையில் முடித்திலர் போலும்; காளையை வாகனமாக ஊர்ந்திலர் போலும்.

குறிப்புரை:     வெறுமை அரைசீவரத்தார் -ஆடையில்லாச் சமணர். சீவரம் - பழுப்பேறிய ஆடை 
' துவர் ஊட்டின சீலை'யும் ஆம். 'சீவரம் போர்த்தல் மத்திம தேசத்தார் ஆசாரம் அன்றோ மூத்தோர் முன் 
இளையார் போர்வை வாங்குவது போல' (நீலகேசி 3.13 உரை). அற்றவர்- பற்று ஒன்றுமில்லாதவர். 
'அற்றவர்க்கு அற்று சிவன்' பெம்மாற்கு அற்றில்லாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே (திருவா- 514). 
நால்வர் - சனகாதியர். அலர் - பழி. முடிக்கு - சடைமுடிக்கு. ஓடு - தலையோடு. 'தலைமாலை 
 தலைக்கணிந்து'. பெற்றம் - எருது.

    It is Civa, our Lord of Thiru-p-piramapuram. Our Lord could not be seen by the naked 
eye or through the senses of the Jains who roam in the city naked; and also by the Buddhists 
wearing ochre coloured robes. He taught divine knowledge and virtue to saint Janakar and 
others who had no desires in their life. Our Lord taught them, sitting under a banyan tree. 
He is always free and unaffected by anything. He looks as though He owns nothing. He wears a 
skull over His head. He rides on a bull and moves gently all over the universe.

2177.     பெண்ணுரு ஆணுருவல்லாப்பிரமபுரநகர்மேய 
    அண்ணல்செய்யாதனவெல்லாமறிந்துவகைவகையாலே 
    நண்ணியஞானசம்பந்தன்நவின்றனபத்தும்வல்லார்கள் 
    விண்ணவரோடினிதாகவீற்றிருப்பாரவர்தாமே.        11

    பெண்உரு ஆண்உரு அல்லாப் பிரமபுரநகர் மேய 
    அண்ணல் செய்யா தனஎல்லாம் அறிந்து, வகைவகையாலே, 
    நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றனபத்தும் வல்லார்கள்,
     விண்ணவரோடு இனிதாக வீற்றிருப்பார், அவர் தாமே.

    peN uru AN uru allAp piramapura nakar mEya 
    aNNal ceyyAtana ellAm aRintu, vakaivakaiyAlE, 
    naNNiya njAnacampantan navinRanapattum vallArkaL,             
    viNNavarOTu initu Aka vIRRiruppAr, avartAmE.                

பொருள்:     பெண்ணுருவமும் ஆண் உருவமும் அல்லாத, பிரமபுரத்து அண்ணல் செய்யாதவை 
எல்லாம் அறிந்து அவற்றை வகையாக வகுத்து ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லவர்களாகிய 
அவர்கள் தேவர்களோடு இனிதாக வீற்றிருப்பர். 

குறிப்புரை:     'பெண்ணுரு.... அண்ணல்' பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத அண்ணல். 
‘ஆனலார் பெண்ணும் அல்லார் அதிகை வீரட்டனாரே' (தி. 4 ப. 27 பா. 8). 'பெண் அல்லை ஆண் அல்லை 
பேடும் அல்லை ' (தி.6 ப. 45 பா.9). பிரமபுரநகர் மேய அண்ணல் - பிரமபுரத்தில் எழுந்தருளிய தலைவர். 
'செய்யாதன எல்லாம்' என்றதால் முற்பாக்களில் உரைத்தவை சிவபிரான் செய்யாதவை என்றும், 
பொருள்சேர் புகழ் என்றும் உணர்த்தினார். வல்லவர்களாகிய அவர் வீற்றிருப்பார் என்று இயைக்க.
நண்ணிய - விரும்பிய.

    Oh Lord! It is Civan in Thiru-p-piramapuram. Our Lord has neither any female body 
nor any male body. But He is concomitant with both the male and female body in one form. 
In Tamil, He is described, with such a stature, as Arthanaareeswarar. This our Lord is 
manifest in Thiru-p-piramapuram,takes delight in this form and is the Chief of everything 
in this universe. Our saint comprehended all this instinct of Lord Civan as though it all 
happened though these did not actually happen. The saint has declared delightfully 
everything in an orderly manner, one by one in these ten verses.Those divine scholars 
who can recite these ten verses from memory and repeat it again and again will reach 
the company of the devas and will stay with them very happily throughout their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            65ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 65th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்:202                பதிக எண்: 66

66. திருஆலவாய்- திருநீற்றுப்பதிகம்        66.THIRU-AALA-VAAI-THIRU-NEETTRU-P-PATHIGAM

பண்: காந்தாரம்                    Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருஆலவாய் என்பது மதுரைக்கு உரிய வேறு பெயராகும். வம்மிசசேகர பாண்டியன் ஆட்சி 
செய்துவரும் காலத்தில் மக்கள் வசிப்பதற்கு இடம் போதாமையால், ஆதியில் இந்நகரத்திற்கு ஏற்பட்ட 
எல்லையைக் காட்டியருளுமாறு அவன் சிவபெருமானை வேண்டினான். பெருமானும் தனது திருக்கையில் 
கங்கணமாயுள்ள பாம்பை அளந்து காட்டுமாறு பணிக்க, அது வாலும் வாயும் ஒன்றுபடும்படி வட்டமாக 
வளைத்துக் காட்டியமையால் இப்பெயர்பெற்றது.

    இதற்குரிய வேறுபெயர்கள் நான்மாடக்கூடல், மதுரை, கடம்பவனம், பூலோக கயிலாயம், 
சிவராசதானி, துவாதசாந்தத் தலம் என்பன. மதுரை தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே முக்கால் 
கிலோமீட்டர் தூரத்தில், வையையாற்றின் தென்கரையில் இருக்கிறது. தமிழகத்துப் பெருநகர்கள் 
பலவற்றிலிருந்தும் பேருந்துகளில் மதுரை செல்லலாம். பாண்டிய நாட்டுத் தேவாரம் பெற்ற தலங்கள்
பதினான்கில் முதன்மை பெற்றது.

    இறைவரின் திருப்பெயர் சொக்கலிங்கப் பெருமான். இறைவியாரின் திருப்பெயர் அங்கயற்கண்ணி. 
இத்திருப்பெயரை இவ்வூர்ப் பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருந்தகையார் 'அங்கயற் கண்ணி தன்னொடு 
மமர்ந்த ஆலவாயாவது மிதுவே' என எடுத்தாண்டிருப்பது மகிழ்தற்குரியது. வடமொழியில் மீனாட்சிதேவி 
என்பர். தலவிருட்சம் கடம்பு. தீர்த்தம் பொற்றாமரை. வையை ஆறு, எழுகடல். 

    பாண்டி நாடே பழம்பதி என்று சிறப்பித்து ஓதப்பெறும் மதுரை, பாண்டிய நாட்டில் பாண்டிய 
மன்னர்களுக்குத் தலைநகராக விளங்குவது மதுரை. புலமைமிக்க புலவர் பெருமக்கள் பலர் இருந்து 
தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்ய நிலைக்களமானது. சங்கப்பனுவலாகிய பரிபாடலில், மதுரைக்கும் 
வையைக்கும் முப்பது பாடல்களைக் காணலாம். இங்குச் சிவபெருமான் செய்தருளிய
அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப்போல் வேறு எங்கும் நிகழ்ந்திலது. திருஞானசம்பந்தர் 
திருநாவுக்கரசர் இவர்களுடைய பதினொரு பதிகங்களைக் கொண்டது.

    திருஞானசம்பந்தப் பெருந்தகையார் அனல்வாதம், புனல்வாதம் செய்து சைவத்தைப் 
பாண்டிய நாட்டில் நிலைபெறச் செய்த பதி. முத்திதரும் தலங்கள் ஏழனுள் ஒன்றாய் விளங்குவது.
ஐந்து சபைகளுள் வெள்ளியம்பலத்தைக் கொண்டது. மூர்த்தி நாயனார் அவதரித்த திருப்பதி.
மாணிக்கவாசகரது பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு அறிவுறுத்தி அவனை உய்விக்கச் 
செய்வதற்காக, நரியை பரி ஆக்கியது, பரியை நரியாக்கியது முதலான திருவிளையாடல்களைச் 
செய்தருளிய தலம்.

1.     திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். இது வேம்பத்தூரார் திருவிளையாடல்
எனவும், பழைய திருவிளையாடல் எனவும் வழங்கப்பெறும். இது ஆராய்ச்சிக்கு சிறந்த நூல். 
இதை ஆக்கியோர் செல்விநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியாவர்.

2.     கடம்பவன புராணம்: இது தொண்டை நாட்டிலுள்ள இலம்பூரிலிருந்த வீமநாத பண்டிதரால்
 இயற்றப்பெற்றது.

3.     சுந்தரபாண்டியம்:  இது தொண்டை நாட்டிலுள்ள வாயிற்பதியிலிருந்த அனதாரியப்பரால்
எழுதப்பெற்றது.

4.     திருவிளையாடற்புராணம்: இது திருமறைக்காட்டிலிருந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்
 பெற்றது. இது சமய வளர்ச்சிக்கும் தமிழ்வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுவது. இது தோன்றிய
 பின்னர், இத்தலத்திற்குரிய வேறு புராணங்களை மக்கள் விரும்பிப் படிக்காததே இதன் பெருமையை 
உணர்த்துவதாகும். சங்கநூல் அறிவு சான்ற திரு. ந. மு. வேங்கட சாமி நாட்டாரவர்கள் இதற்குச் 
சிறந்த உரையெழுதி உள்ளார்கள்.

5.     திருவிளையாடல் போற்றிக்கலி வெண்பா. 

6.     மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி. இவ்விரு நூல்களும் மேற்குறித்த பரஞ்சோதி முனிவரால் 
இயற்றப் பெற்றனவாகும்.

7.     மதுரைக் கலம்பகம். 

8.     மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இவ்விரு நூல்களும் குமரகுருபர அடிகளாரால் இயற்றியருளப் 
பெற்றன. இவைகளின்றி மதுரைக் கோவை, மதுரைச் சொக்கநாதர் உலா, தமிழ்விடு தூது முதலிய 
பல பிரபந்தங்களும் இறையனார் அருளிய களவியலும் (அகப்பொருள் இலக்கணம்) இத்தலத்தின் 
சிறப்பிற்கு உரியன.

    திருஞானசம்பந்தப் பெருந்தகையார் அம்பிகை சிவஞானம் குழைத்து அருளிய இன்னமுதை 
உண்டவர். அவர் கடவுளைத் தவிர வேறு யாரையும் பாடாதவர். அவர், இப்பதியில், மங்கையர்க்கரசியாரை 
நோக்கி, 'உமைக் காண வந்தனம்' என்றதோடு அவரைத் திருப்பதிகத்துள் வைத்துப் பாடியருளியுள்ளார்கள். 
ஆதலால், மங்கையர்க்கரசியார் பெருஞ்சிறப்பு வாய்ந்தவர் என்பது தெரியவருகின்றது. 
மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் பதிகத்தில் வைத்துப் பாடும்பொழுது, 
மங்கையர்க்கரசியாரைக் குறிக்குங்கால் சிவன், உமை இவர்களோடு தொடர்பு படுத்திக் கூறியுள்ளார். 
குலச்சிறையாரைக் குறிக்கும்பொழுது சிவபெருமானோடு மட்டும் தொடர்பு படுத்திக் கூறியுள்ளார். 
இவற்றால் மங்கையர்க்கரசியார் தம் கணவரோடு வாழ வேண்டுமென்று, ஞானசம்பந்தர் திருவுளங் 
கொண்டதாகத் தோன்றுகின்றது. இக்கருத்தைத்தான், 'பையவே சென்று பாண்டியற்காகவே' என்ற 
அவரது தேவாரப் பகுதியும் தெரிவிக்கின்றது.

    மங்கையர்க்கரசியார் திருநீறு அணிந்திருந்த செய்தி, 'முத்தின் தாழ்வடமுஞ் சந்தனக் குழம்பும் 
நீறுத்தன் மார்பினின் முயங்கப் பத்தியார்கின்ற பாண்டிமாதேவி' என்னும் ஞானசம்பந்தரது தேவாரப் 
பகுதியால் அறியமுடிகின்றது. நுணுகி ஆராயின் இவைபோன்ற பல உயரிய செய்திகளை இத்தலத்துத் 
தேவாரப் பதிகங்களால் அறியலாம்.

பதிக வரலாறு

    மதுரையில், அருகர்கூடி, தம் திருமடத்தில் இட்ட தீயை புகலிவேந்தர், இனி அரசன் எய்தும் 
வெப்பு அகலற்பொருட்டு தீண்டி, வெண்ணீறு இடுதற்குரிய பேறு உடையன் ஆதலின், பேரருளினால் '
'பையவே செல்க' என்று ஏவிய வெப்பு நோய் தென்னனை மேவிற்று. முயன்ற பலராலும் தீர்க்க 
முடியாதிருந்தது. 'திருஞானசம்பந்தப் பிள்ளையார் கடைக்கண்ணோக்கம் பெற்றால் பிறவி 
நோயே ஒழியும் எனின், இந்நோய் ஒழிவதில் ஐயமில்லை' என்று குலச்சிறையார் கூறினார். 
ஞானசம்பந்தர் என்ற திருப்பெயரைக் கேட்டதே பாண்டியனுக்கு ஓரளவு இன்பம் உண்டாயிற்று. 
அதனால், அவரை அழைத்துவர அவன் வேண்டினான். சென்று வணங்கி வேண்டி அழைத்தனர் 
அமைச்சர் முதலோர். திருவுளம்பற்றிப் பிள்ளையார் எழுந்தருளினார். நோக்கும் புண்ணியனானான் 
காக்கும் பாண்டியன். அவன் வெப்பு நோயை விலக்கப் பாடியருளியது இத்திருநீற்றுப் பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2178.     மந்திரமாவதுநீறுவானவர்மேலதுநீறு 
    சுந்தரமாவதுநீறுதுதிக்கப்படுவதுநீறு 
    தந்திரமாவதுநீறுசமயத்திலுள்ளது நீறு 
    செந்துவர்வாயுமைபங்கன்திருஆலவாயான்திருநீறே.        1

    மந்திரம் ஆவது நீறு; வானவர்மேலது நீறு; 
    சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
    தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
    செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

    mantiram Avatu nIRu; vAnavar mElatu nIRu; 
    cuntaram Avatu nIRu; tutikkap paTuvatu nIRu; 
    tantiram Avatu nIRu; camayattil uLLatu nIRu;
    centuvarvAy umai pagkan tiru AlavAyAn tirunIRE.

பொருள்:     கூறுபவரைக் காக்கும் மந்திரம் போலப் பூசுவோரைக் காப்பது திருநீறு; ஆதலின்
 திருநீறு, மந்திரம் ஆகும். மேலோர்களாகிய சிவனடியார்கள் திருமேனியில் பூசப்பட்டது திருநீறு. 
அழகினைத் தருவது திருநீறு. போற்றுதலுக்கு உரியது திருநீறு. சிவாகமங்களில் பேசப்படுவது 
திருநீறு. சைவ சமயத்தில் 'உள்ளது' எனப்படும் சிவமே திருநீறு. பவளம் போன்ற சிவந்த வாயுடைய 
உமையம்மையைப் பங்கில் உடையானாகிய திருவாலவாயான் திருநீறே சிவகதி தரும்.

குறிப்புரை:     திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும். 
வானவர்- சிவலோகத்திலுள்ளவர், சிவமானவர். மேலது- திருமேனியில் பூசப்பட்டது. சுந்தரம்-அழகு ,
சிவப்பொலிவு. துதிக்கப்படுவது என்பதற்கு இத்திருப்பதிகமே சான்று. தந்திரம்- ஆகமம். சிவாகமத்தில், 
சிறப்பாகச் சொல்லப்படுவது. சமயத்திலுள்ளது - சிவ சமயத்தில் அழியாத பொருளாவது பதி, பசு, பாசம் 
என்னும் முப்பொருள். பாசம் - பசுவின் கண் இருந்து பதியால் நீறாக்கப்பட்ட உண்மையை உணர்த்துவது.
 உள்ளது -சிவம். 'ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்' - (திருக்குறள்) திருநீறே சிவம். துவர் - பவளம்.
 பங்கன்- பாகன். திருஆலவாயான்- மதுரைத்தலத்தில் திருவாலவாய்க் கோவிலினுள் எழுந்தருளி
 இருப்பவன். திருவாலவாயான் திருநீறு என்பது ஆறன்தொகையாதல் அறிவார்க்குத் திருநீறே 
சிவகதி தரும் என்னும் உண்மை இனிது புலப்படும். 'கங்காளன் பூசும் கவசத்திருநீற்றை... பூசி 
மகிழ்வாரே யாமாகில்... சாரும் சிவகதி..' (திருமந்திரம்).

    It is Civan, Lord of Thiru-aala-vaai. Our goddess Uma Devi is the consort of Lord Civa 
who is manifest in Thiru-aala-vaai. Her mouth is very attractive with the colour of
red coral. Our Lord has smeared the holy ashes on His body and forehead. This holy ashes is 
equal to the magical formula (spell). This magical formula or the mantra will protect those 
who apply and utilize the sacred ashes. The devas smear their body with this sacred ashes, 
this is pretty fair like Civan's. All the divine knowledgeable books praise this holy ash. 
The aagamaas also praise this holy ashes. In the Saiva religion the indestructible substances 
are souls, god and matter. The matter is produced from cowdung as the holy ashes. This could be 
never destroyed. The holy ashes produce immediate effect like mantra, it is beautiful and it is 
the right material mentioned in the aagamaas.

2179.     வேதத்திலுள்ளதுநீறுவெந்துயர்தீர்ப்பதுநீறு 
    போதந்தருவதுநீறுபுன்மைதவிர்ப்பதுநீறு 
    ஓதத்தகுவதுநீறு உண்மையிலுள்ளதுநீறு 
    சீதப்புனல்வயல்சூழ்ந்ததிருஆலவாயான்திருநீறே.        2

    வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு; 
    போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு; 
    ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு; 
    சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

    vEtattil uLLatu nIRu; ventuyar tIrppatu nIRu;
    pOtam taruvatu nIRu; punmai tavirppatu nIRu;
    Otat takuvatu nIRu; uNmaiyil uLLatu nIRu;
    cItappunal vayal cUznta tiru AlavAyAn tirunIRE.

பொருள்:     வேதத்தில் சிறப்பாகத் திருநீறு ஓதப்பெற்றுள்ளது. கொடிய பிறவித் துயரைத் தீர்ப்பது 
திருநீறு. சிவஞானத்தைத் தருவது திருநீறு. அறியாமை முதலிய புன்மைகளை நீக்குவது திருநீறு. 
நூல்களை ஓதும்போது மனத்தூய்மை பெற அணியத் தகுவது திருநீறு. சிவத்தைப் போல என்றும் 
உள்ள பொருள் திருநீறு. குளிர்ந்த நீர் பாயும் வயல்கள் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே சிவகதி தரும்.

குறிப்புரை:     திருநீறு வேதத்தில் சிறக்க எடுத்தோதப் பெற்றது. கொடிய பிறவித் துயரம் 
முதலியவற்றைத் தீர்ப்பது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலிய புன்மைகளை நீக்குவது. 
ஆசிரியர் மாணாக்கர்க்கு ஓதத்தகும் அளவு பெருமை உடையது. ஓதும்போது அணியத் தகுதியுடையது. 
உண்மையில் நிலைபெற்றிருப்பது. உண்மை - மெய்ப்பொருளுமாம். சீதம் - குளிர்ச்சி. புனல் - நீர்.

    The city Thiru-aala-vaai is surrounded by paddy fields always filled with cool
water. Here our Lord Civan is manifest in the temple. The holy ash is very brightly seen 
on His body. The Vedas praise and recite about the holy ashes. This sacred ashes will 
chase bitter sufferings from our life. This will give us Civan's divine knowledge.This 
will remove all our ignorance. This deserves to be praised and worshipped by eminent 
scholars, it is glorified in the Vedas.This is truth eternal, a permanent material.

2180.     முத்திதருவதுநீறுமுனிவரணிவதுநீறு 
    சத்தியமாவதுநீறுதக்கோர்புகழ்வதுநீறு 
    பத்திதருவதுநீறுபரவஇனியதுநீறு 
    சித்திதருவதுநீறுதிருஆலவாயான்திருநீறே.        3

    முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு; 
    சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு; 
    பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு; 
    சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

    mutti taruvatu nIRu; munivar aNivatu nIRu; 
    cattiyam Avatu nIRu; takkOr pukazvatu nIRu; 
    patti taruvatu nIRu; parava iniyatu nIRu; 
    citti taruvatu nIRu; tiru AlavAyAn tirunIRE.

பொருள்:     மீண்டும் பிறந்து இறந்து உழலாத முத்தியைத் தருவது நீறு. எல்லாச் செல்வங்களையும் 
வெறுத்தொதுக்கிய முனிவர்கள் விரும்பி அணிவது நீறு. உள்பொருளாவது நீறு. சிவனடியார் அணிவது நீறு. 
எண்வகைச் சித்தி அளிப்பது நீறு. திருவாலவாயான் திருநீறே சிவகதி ஆகும். 

குறிப்புரை:     வீட்டை அளிப்பது, எல்லாச் செல்வங்களையும் வெறுத்தவர் முனிவர். முனிவு - 
வெறுப்பு.  கோபம் - முனிவர் (முநிவர்) - மனைசீலர் எனலுமாம். அணிவது - அழகு செய்வது, பூண்பதுமாம். 
சத்திய -எப்பொழுதும் உள்ளது. தக்கோர் - சிவனடியார். பத்தி - திருவடிக்கன்பு. பரவ - வாழ்த்த, 
சித்தி- எண்வகைச் சித்தி, அணிமா முதலியன.                                

    The holy ashes of Civan in Thiru-aala-vaai will help you to go to heaven. 
The sages and saints always wear the holy ashes. This is reality and remains permanently
forever. The scholars ever praise the holy ashes. Using this holy ashes enhances our
piety and divine religious observance and our faith in Saiva religion. To praise it is
perfect. It helps to achieve the eight chithies and perform supernatural powers.

2181.     காணஇனியதுநீறுகவினைத்தருவதுநீறு 
    பேணியணிபவர்க்கெல்லாம்பெருமைகொடுப்பதுநீறு 
    மாணந்தகைவது நீறுமதியைத்தருவதுநீறு 
    சேணந்தருவதுநீறுதிருஆலவாயான் திருநீறே.        4

    காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு; 
    பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு; 
    மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு; 
    சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

    kANa iniyatu nIRu; kavinait taruvatu nIRu; 
    pENi aNipavarkku ellAm perumai koTuppatu nIRu; 
    mANam takaivatu nIRu; matiyait taruvatu nIRu; 
    cENam taruvatu nIRu; tiru AlavAyAn tirunIRE.

பொருள்:     தன்னை அணிந்தாரை அழகராக்கிக் காண்பவருக்கு இனிமை தருவது நீறு. 
அணிவோருக்குச் சிவப்பொலிவு தருவது நீறு. விரும்பி அணிபவர்க்கெல்லாம் பெருமையைத் 
தருவது நீறு. மரணத்தைத் தடுப்பது நீறு. அறிவு நுட்பத்தைத் தருவது திருநீறு. பாசத்தில் 
உழன்று வருந்தும் சேய்மையில் உள்ளவருக்குத் திருவாலவாயான் திருநீறே சிவகதி தரும்.

குறிப்புரை:     பால் வெண்ணீறாய், தன்னை அணிந்தோரைப் பிறர் கண்ணுக்கு அழகராயளித்துக் 
கருத்திற்கு இனிமை விளைப்பது. கவினைத்தருவது - அணிவோர்க்குச் சிவப்பொலிவு தருவது. 
பேணி- விரும்பி. பெருமை - திருவருட்சிறப்பு. மாணம் -இறப்பு. நீள் என்னும் பகுதி அம் என்னும் 
விகுதியோடு சேர்த்து நீளம் என்று ஆகின்றது. நிகள் என்பதன் முதல் நீட்சியே நீள் என்பது. 
துகள் தூள் என்பது போல. அதுபோல, மாள்+அம் - மாளம். ளகரம் ணகரமாதல் இயல்பு. 
'நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான்' (தி.1 ப.1 பா.9) என்பதில் னகரம் ணகரமானதைக் 
காண்க. பெள் - பெண். எள்- எண். தகைவது - தடுப்பது. மதி- இயல்பான அறிவு. 'மதிநுட்பம் 
நூலோடு உடையார்' (திருக்குறள் 636). சேணம் - உயர்வு. பாசத்தார்க்குத் துரத்ததாகிய வீடுமாம்.

    It is Civan who manifests Himself in Thiru-aala-vaai. The holy ashes used by 
our Lord in Thiru-aala-vaai is beautiful to sight. Those who use it get graceful
appearance. Those who delightfully use it will get great dignity. It gives longevity. 
It increases your divine knowledge. It gives great fame and improvement by lifting
us to Civa's world from the mire of worldly love.

2182.     பூசஇனியதுநீறுபுண்ணியமாவதுநீறு 
    பேசஇனியதுநீறுபெருந்தவத்தோர்களுக்கெல்லாம்
     ஆசைகெடுப்பதுநீறு அந்தமதாவதுநீறு 
    தேசம்புகழ்வதுநீறுதிருஆலவாயான்திருநீறே.        5

    பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு; 
    பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம் 
    ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு; 
    தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

    pUca iniyatu nIRu; puNNiyam Avatu nIRu; 
    pEca iniyatu nIRu; perun tavattOrkaLukku ellAm 
    Acai keTuppatu nIRu; antam atu Avatu nIRu; 
    tEcam pukazvatu nIRu; tiru AlavAyAn tirunIRE.

பொருள்:     பூசப் பூச இனிமையைத் தருவது நீறு. பூசப்பூச சிவபுண்ணியத்தை 
வளர்ப்பது நீறு. (சிவத்தின் பெருமை பேச இனிதாதல் போல) பெருமையைப்  பேசப்பேச இனிமை
உண்டாக்குவது நீறு. பெரிய தவத்தினருக்கெல்லாம் பற்றினை ஒழிப்பது நீறு. அந்தமிலா ஆனந்தத்தை 
அளிப்பது நீறு. தேசங்கள் எல்லாவற்றாலும் புகழப்படுவது  நீறு. திருவாலவாயான் திருநீறே 
சிவகதி தரும்.

குறிப்புரை:     பூசப்பூச இனிமையாக்குவது, சிவபுண்ணியத்தை வளர்ப்பது பெருமையைப் பேசப்பேச
 இனிமை உண்டாக்குவது. பெரிய தவத்தோரெல்லாம் பற்றொழிப்பது. முடிவான பேரின்ப நிலையைத் 
தருவது. அந்தம் - அழகுமாம். தேசங்களெல்லாம் புகழப் பெறுவது.

    It is Civan, who is manifest in Thiru-aala-vaai. Those who use the holy ashes of 
our Lord in Thiru-aala-vaai will get delight. It increases our virtue and the merit of 
our actions. It pleases us to speak of it. It severs desires from sages. It gives eternal 
bliss. The people in the whole world praise it.

2183.     அருத்தமதாவதுநீறுஅவலமறுப்பதுநீறு 
    வருத்தந்தணிப்பதுநீறுவானமளிப்பதுநீறு 
    பொருத்தமதாவதுநீறுபுண்ணியர்பூசும்வெண்ணீறு 
    திருத்தகுமாளிகைசூழ்ந்ததிரு ஆலவாயான்திருநீறே.        6

    அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு; 
    வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு; 
    பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண்நீறு; 
    திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

    aruttam atu Avatu nIRu; avalam aRuppatu nIRu; 
    varuttam taNippatu nIRu; vAnam aLippatu nIRu; 
    poruttam atu Avatu nIRu; puNNiyar pUcum veN nIRu; 
    tirut taku mALikai cUznta tiru AlavAyAn tirunIRE.

பொருள்:     செல்வமாவது நீறு. துன்பத்தைப் போக்குவது நீறு. வருத்தத்தை ஒழிப்பது நீறு. 
துறக்கத்தைத் தருவது நீறு. பொதுவாக எல்லாச் சமயத்தவருக்கும், சிறப்பாகச் சைவ சமயத்தவருக்கும் 
பொருத்தமாயிருப்பது திருநீறு. சிவபுண்ணியத்தவரும் பசு புண்ணியத்தவரும் பூசுவது வெண்ணீறு. 
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே சிவகதி தரும். 

குறிப்புரை:     செல்வமாவது, துன்பம் போக்குவது, வருத்தம் ஒழிப்பது. வானம் - துறக்கம், 
சிவலோகம். அளிப்பது- கொடுப்பது. திருத்தகு மாளிகை - அழகு தக்க மாளிகைகள்.

    It is Civan, the Lord of Thiru-aala-vaai. The city of Thiru-aala-vaai has many 
attractive palaces all around the city. Our Lord who is manifested here uses the holy 
ashes on His forehead and body. Those who use it will become rich in their life.        
It removes the sufferings and reduces mental agony. It gives celestial delight. 
It is common to all, as it represents death and impermanence, the common factors 
of life. It is used by sincere devotees and men of virtue.

2184.     எயிலதுஅட்டதுநீறு இருமைக்குமுள்ளதுநீறு 
    பயிலப்படுவதுநீறுபாக்கியமாவதுநீறு
    துயிலைத்தடுப்பதுநீறுசுத்தமதாவதுநீறு 
    அயிலைப்பொலிதருசூலத்தாலவாயான்திருநீறே.        7

    எயில் அது அட்டது நீறு: இருமைக்கும் உள்ளது நீறு; 
    பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு: 
    துயிலைத் தடுப்பது நீறு: சுத்தம் அது ஆவது நீறு; 
    அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

    eyil atu aTTatu nIRu; irumaikkum uLLatu nIRu; 
    payilap paTuvatu nIRu; pAkkiyam Avatu nIRu; 
    tuyilait taTuppatu nIRu; cuttam atu Avatu nIRu; 
    ayilaip politaru cUlattu AlavAyAn tirunIRE.

பொருள்:     திரிபுரத்தை எரித்தது நீறு. இம்மை மறுமை இரண்டற்கும் துணையாக உள்ளது நீறு. 
அணிந்து பழகுவதற்கு உரியது நீறு. செல்வமாவது நீறு. அறியாமையாகிய கேவலத்தையும் மயக்கமாகிய 
சகலத்தையும் தடுப்பது நீறு. சுத்தாவத்தையாய் விளங்குவது நீறு. கூர்மையால் பொலியும் சூலத்தை 
ஏந்திய திருவாலவாயான் திருநீறே சிவகதி தரும்.

குறிப்புரை:     எயில் - திரிபுரம். அட்டது - எரித்தது. அது என்பது பகுதிப் பொருள் விகுதி. இருமை- 
இம்மை மறுமை. பயிலப்படுவது -திருநீற்றை அணிந்து அணிந்து பழகினாலன்றி அதன் பயனை 
எய்துவதரிது. பாக்கியம்- செல்வம், அருள். துயிலை - கேவலத்தையும் சகலத்தையும். சுத்தமதாவது- 
சுத்தாவத்தையாய் விளங்குவது. அயில் - கூர்மை. பொலிதரு - விளக்கம் செய்கின்ற.

    Oh! It is Civan, our Lord in Thiru-aala-vaai. Our Lord in Thiru-aala-vaai
carries in one of His hands the trident which helps with its sharpness. He wears on 
His forehead and body the holy ashes. It helped to destroy with fire the three flying 
fortresses of the asuras. It gives utmost happiness both in this life and in the next
life. It gives the advantage of close association with great scholars of divinity. 
It gives all wealth.It stops our knowledge in 'kevalathaivatham' and directs us to 
learn 'suddhanandham'. It gives purity, cleanliness and holiness.

2185.     இராவணன்மேலதுநீறுஎண்ணத்தகுவதுநீறு 
    பராவணமாவது நீறுபாவமறுப்பதுநீறு 
    தராவணமாவதுநீறுதத்துவமாவதுநீறு 
    அராவணங்குந்திருமேனிஆலவாயான்திருநீறே.        8

    இராவணன்மேலது நீறு: எண்ணத் தகுவது நீறு;
     பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு; 
    தராவணம் ஆவது நீறு;தத்துவம் ஆவது நீறு; 
    அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

    irAvaNan mElatu nIRu; eNNat takuvatu nIRu; 
    parAvaNam Avatu nIRu; pAvam aRuppatu nIRu; 
    tarAvaNam Avatu nIRu; tattuvam Avatu nIRu; 
    arA vaNagkum tirumEni AlavAyAn tirunIRE.        

பொருள்:     இராவணன் சிவனருள் பெறப் பூசியது நீறு. திருநீறு பேறளிக்கும் என்னும் 
உண்மை எண்ணத் தக்கது. பராசத்தியின் சொரூபமாவது நீறு. பாவத்தை ஒழிப்பது திருநீறு. 
மெய்ப்பொருளாவது நீறு. தத்துவமாவது நீறு. பாம்புகள் தாழ்ந்து அழகு செய்யும் 
திருமேனியனாகிய திருவாலவாயான் திருநீறே சிவகதி தரும்.

குறிப்புரை:     இராவணன் மேலது -திரிலோக சஞ்சாரியாகிய இராவணன் தனக்கு வாய்த்த 
செல்வப்பெருக்கத்தை மதித்துத் திருநீற்றை அவமதிக்காமல் அணிந்து சிவபிரானருளைப் பெற்றான் 
என்னும் உண்மை எல்லா நன்மக்களாலும் எண்ணத்தக்கது. திருநீறே வீடு பேறளிக்கும் என்னும்
 உண்மை எண்ணத்தக்கது. பராவண்ணம் ஆவது- பராசக்தி சொரூபமானது. அதனால் உயிர்களின் 
பாவம் போக்குவதாகின்றது. தராவண்ணம் - தத்துவம், மெய்ப்பொருள். அரா - பாம்பு. 
வணங்கும் - வளையும். தாழும். அணங்கும் எனின் அழகு செய்யும் என்க.

    Oh! It is Civan, our Lord of Thiru-aala-vaai. The snakes on our Lord's body bend 
and move around His body which is fully smeared with holy ashes. This holy ash was used by 
Raavanan, the king of Sri Lanka with full devotion for Civa and he received full
grace from our Lord Civan. It deserves to be remembered for its fame by the divine scholars. 
It has the grace of Civa's consort called Parasakthi. It is powerful enough to remove all 
our sins. It is truth and reality, Lord Civan is the only reality. It explains the divine 
knowledge with all its truth.

2186.     மாலொடயனறியாதவண்ணமுமுள்ளதுநீறு 
    மேலுறைதேவர்கள்தங்கள்மெய்யதுவெண்பொடிநீறு 
    ஏலஉடம்பிடர்தீர்க்குமின்பந்தருவதுநீறு 
    ஆலமதுண்டமிடற்றெம்ஆலவாயான்திருநீறே.            9

    மாலொடு அயன் அறியாத வண்ணம் உள்ளது நீறு; 
    மேல்உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி-நீறு; 
    ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு; 
    ஆலம்அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

    mAloTu ayan aRiyAta vaNNamum uLLatu nIRu; 
    mEl uRai tEvarkaL tagkaL meyyatu veNpoTi-nIRu; 
    Ela uTampu iTar tIrkkum inpam taruvatu nIRu; 
    Alam atu uNTa miTaRRu em AlavAyAn tirunIRE.

பொருள்:     திருமாலோடு பிரமனுமறிய முடியாத வண்ணம் உள்ளது நீறு. 
வானுலகத்தவர்களான தேவர்களுடைய உடம்பில் பூசப்படுவது நீறு. உடம்பெடுக்கும்
 துன்பத்தைப் போக்கி இன்பத்தைத்  தருவது நீறு. நஞ்சுண்ட கண்டனாகிய
திருவாலவாயான் திருநீறே சிவகதி தரும்.  

குறிப்புரை:     மேல் - விண்ணுலகம். உறை -வாழ்கின்ற தேவர்கள். தங்கள் மெய்யது - 
தேவர்களுடைய  உடம்பிற் பூசப்பட்டது. பொடி- நீறு. ஒரு பொருட் பல்பெயர். உடம்பு இடர் 
ஏலத்தீர்க்கும் இன்பம்- உடம்பெடுக்கும் துன்பத்தைப் பொருந்தப் போக்கும் இன்பம். 
உடம்பிலுள்ள இடருமாம். ஆலமது - நஞ்சு. மிடறு - திருக்கழுத்து.

    Oh! It is Civan, our Lord in Thiru-aala-vaai. Our Lord Civan imbibed the poison
that came out of the ocean and saved the entire universe. This Lord, addressed as
Neelakandar,smears His body with the holy ashes. This ash could not be comprehended by 
Vishnu and Brahma with its peculiar skill. The celestials who live in the upper world 
smear their body with this holy ashes. This stops our rebirth again and again with 
its power to bring permanent, divine joy,it chases also physical ailments.

2187.     குண்டிகைக்கையர்களோடுசாக்கியர்கூட்டமுங்கூடக் 
    கண்டிகைப்பிப்பதுநீறுகருதஇனியதுநீறு 
    எண்டிசைப்பட்டபொருளாரேத்துந்தகையதுநீறு 
    அண்டத்தவர்பணிந்தேத்துமாலவாயான்திருநீறே.        10

    குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட, 
    கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு; 
    எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு; 
    அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

    kuNTikaik kaiyarkaLOTu cAkkiyar kUTTamum kUTa, 
    kaN tikaippippatu nIRu; karuta iniyatu nIRu; 
    eNticaippaTTa poruLAr Ettum takaiyatu nIRu; 
    aNTattavar paNintu Ettum AlavAyAn tirunIRE.

பொருள்:     கமண்டலத்தை ஏந்திய கையராகிய கீழ்மக்கள் சமணருடன் சாக்கியர் 
கூட்டத்தினரைத் திகைக்கச் செய்தது நீறு. தியானிக்க இனிமையைத் தருவது நீறு. எட்டுத் 
திசையிலும் சிவமாகிய மெய்ப்பொருளை  அடைந்தவரும் விரும்பினவரும் வழிபடுவோருமாகிய 
சைவர் ஏத்தும் தகைமை உடையது நீறு. மேலுலகத்தவர் பணிந்து வழிபடும் திருவாலவாயான் 
திருநீறே சிவகதி தரும்.

குறிப்புரை:     குண்டிகை - கமண்டலத்தை ஏந்திய. கையர்கள் - கீழ் மக்கள். கண் திகைப்பிப்பது- 
கண் திகைக்கச் செய்வது. கருத - தியானிக்க. எண் திசைப்பட்ட பொருளார்- எட்டுத் திசைகளிலும் 
பொருந்திய சிவமாகிய மெய்ப்பொருளை அடைந்தவரும். விரும்பினவரும். வழிபடுபவருமாகிய 
சைவர். அவர் ஏத்தும் தன்மையுடையது. அண்டத்தவர் - மேலுலகத்தவர்.

    The devas and all other celestials who live in the upper world prostrate before 
our Lord and praise the holy ashes. The Jains who hold the water pot and the Buddhists - 
get stunned with bewildered eyes at the sight of this ashes. To pray it is easily pleasant. 
Those scholars with divine knowledge and conscious of Civan as God who has merged with the
eight directions of the universe, praise the quality of the holy ashes.

2188.     ஆற்றலடல்விடையேறுமாலவாயான் திருநீற்றைப் 
    போற்றிபுகலிநிலாவும்பூசுரன்ஞானசம்பந்தன் 
    தேற்றித்தென்னனுடலுற்றதீப்பிணியாயினதீரச் 
    சாற்றியபாடல்கள்பத்தும்வல்லவர்நல்லவர்தாமே.         11

    ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் 
    போற்றி, புகலி நிலாவும் பூசுரன்ஞானசம்பந்தன், 
    தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் 
    சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

    ARRal aTal viTai ERum AlavAyAn tirunIRRaip
    pORRi, pukali nilAvum pUcuran njAnacampantan, 
    tERRi, tennan uTal uRRa tIppiNi Ayina tIrac 
    cARRiya pATalkaL pattum vallavar nallavar tAmE.

பொருள்:     ஆற்றலும் கொல்லும் வலிமையும் உடைய விடையை ஊர்தியாக உடையவனாகிய 
ஆலவாயான் திருநீற்றைப் போற்றி, சீகாழிப் பூசுரன் (பூமியில் வாழும் தேவன்) ஞானசம்பந்தன் 
சிவத்தின் மாண்பினைத் தெளிவித்துப் பாண்டியனுடைய உடற்பிணி, உயிர்ப்பிணி ஆகிய தீய 
பிணிகள் தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர்கள் நல்லவர்கள்.

குறிப்புரை:     ஆற்றல்- வலிமை. அடல்- கொலை. இரண்டும் உடையது. விடை - ஆலவாயான் 
திருநீற்றைப் போற்றி - முதற் பத்துப் பாக்களால் திருவாலவாய் சிவனுடைய திருநீற்றைத் துதித்து. 
புகலி –சீகாழி. பூசுரன் - பூமியிலுள்ள தேவர். தேற்றி- சைவத்தின் மாண்பைத் தெரிவித்து. 
தென்னன்- கூன்பாண்டியன். தீ பிணி - தீமையை விளைவிக்கும் நோய்கள். வல்லவர் எழுவாய். 
நல்லவர் பயனிலை. 

    Oh! It is Civan, our Lord of Thiru-aala-vaai. Our Lord Civan of Thiru-aala-vaai
uses His bull for wandering, it is a very mighty animal and has the power to kill anybody, 
and He uses the holy ashes on His forehead and body. Our saint Thiru-gnana-Sambandar 
praises our Lord's holy ash used on His body. He also explained the divine fame of Saiva 
religion. And He fully cured the king Koonpandyan of the ailment  he had in his body, 
because of the heat that was transferred to his body, from the mutt where our Thiru-gnana-
Sambandar stayed. The suffering of the king was completely wiped out by the child saint 
with these ten verses. Those scholars who can repeat these ten verses will become good 
people in their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            66ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 66th Hymn


 

இரண்டாம் திருமுறையில் தொடர்ச்சி 

Related Content

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - தமிழ் உரை Eng

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை Engli

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை Engli

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை Engli

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை Engli