(Copyright Courtasy: Socio Religious Guild, Thirunelveli)
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையார் THIRU-P-PERUM-PULIYOOR - maNNum Or pAkam uTaiyAr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும் THIRU-K-KADAMBOOR - vAn amar tigkaLum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும் THIRU-P-PAANDI-K-KODUMUDI - peN amar mEniyinArum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி THIRU-K-KAZHU-MALAM - piraman Ur, vENupuram, pukali
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித் THIRU-K-KUTRALAM - tirunta mati cUTi, teN nIr caTaik karantu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள் THIRU-NANAA - pantu Ar viral maTavAL
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர் THIRU-P-PIRAMAPURAM - viLagkiya cIrp piraman Ur
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக் THIRU-P-PIRAMAPURAM - pUmakan Ur
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக் SEERKAAZHI - viN iyagkum matikkaNNiyAn
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை THIRU-AGATH-THIAAN-PALLI - vATiya veNtalai mAlai cUTi
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும் THIRU-ARAI-ANI-NALLOOR - pITinAl periyOrkaLum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல் THIRU-VILA-NAGAR - oLir iLampiRai cennimEl uTaiyar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய் THIRU-AAROOR - pavanam Ay, cOTai Ay
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார் THIRUK-KADA-OOR-MAYAANAM - variya maRaiyAr, piRaiyAr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர் THIRU-VENU-PURAM - pUtattin paTaiyinIr! pUgkonRait tArinIr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி THIRU-THEVOOR - paN nilAviya
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன் THIRU-KOCH-CHAI-VAYAM - nIla nal mAmiTaRRan
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை THIRU-NANI-PALLI - kAraikaL, kUkai, mullai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன் KOLARU-THIRU-P-PATHIGAM - vEy uRu tOLi pagkan
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம் THIRU-NAARAIYOOR - uraiyinil vanta pAvam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு THIRU-NARAIYOOR CHITH-THEECHARAM - nEriyan Akum; allan
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு THEN-THIRU-MULLAI-VAYIL - tuLi maNTi uNTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும் THIRU-K-KOCHAI-VAYAM - aRaiyum pUmpunalOTum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான் THIRU-NEL-VOYIL-ARA-TH-THURAI - entai Ican emperumAn
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற் THIRU-MARAI-K-KAADU - pogku veNmaNal kAnal
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம் THIRU-P-PUGALOOR - VARTHA-MAANEECH-CHARAM - paTTam, pAlniRa matiyam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும் THIRU-TH-THENKOOR - purai cey valvinai tIrkkum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார் THIRU-VAAZH-KOZHI-PUTH-OOR - cAkai Ayiram uTaiyAr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை THIRU-ARACILI - pATal vaNTu aRai konRai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும் SEERKAAZHI - pogku veNpuri vaLarum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று SEERKAAZHI - nam poruL nam makkaL enRu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ THIRU-TH-THURUTHI - varaittalaip pacum ponOTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை THIRU-K-KODIKA - inRu nanRu nALai nanRu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம் THIRU-K-KOVALOOR-VEERATTAM - paTai koL kURRam vantu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத் THIRU-AAROOR - paruk kai yAnai mattakattu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை THIRU-CH-CHIRAPURAM - anna men naTai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை THIRU-AMBAR-MAAKAALAM - pulku pon niRam puri caTai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி THIRU-K-KADIK-KULAM - poTi koL mEni
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய THIRU-K-KEEZH-VELOOR - min ulAviya caTaiyinar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ் THIRU-VALAM-CHUZHI - enna puNNiyam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில் THIRU-K-KETHEE-CHURAM - virutu kunRa mAmEru vil
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர் THIRU VIRKUDI VEERATTAM - vaTi koL mEniyar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே THIRU-K-KOTTUR - nIlam Artaru kaNTanE
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு THIRU-MAANTH-THURAI - cempon Artaru
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென THIRU-VAAI-MOOR - taLir iLa vaLar ena
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற THIRU-AADAANAI - mAtu Or kURu ukantu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி SEER-KAAZHI - poTi ilagkum tirumEniyALar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு THIRU-K-KETHARAM - toNTar anjcukaLiRum (m) aTakki
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய THIRU-P-PUGALOOR - vegkaL vimmu kuzal iLaiyar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி THIRU-NAAGAI-K-KAARONAM - kUnal-tigkaL kuRugkaNNi
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற் THIRU-IRUMBAI-MAAGAALAM - maNTu kagkai caTaiyil
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப் THIRU-TH-THILATHAIP-PATHI - poTikaL pUcip
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி THIRU-NAAKECH-CHURAM - tazai koL cantum(m), akilum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி THIRU-MUKKEECH-CHURAM - cAntam veNnIRu enap pUci
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால் THIRU-P-PAATHIRI-P-PULIYOOR - munnam ninRa muTakkAl
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி THIRU-P-PUKALI - viTai atu ERi
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 203 பதிக எண்: 67
67. திருபெரும்புலியூர் 67. THIRU-P-PERUM-PULIYOOR
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருப்பெரும்புலியூர் என்னும் இத்திருத்தலமானது புலிக்கால் முனிவரால் பூசிக்கப்
பெற்றமையால் இப்பெயர் பெற்றது. சிதம்பரம் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர் பெறும்.
அதனின்று இது வேறு ஆகும். திருவையாற்றிற்கு வடமேற்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது.
இது காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றாகும். இறைவரது திருப்பெயர் வியாக்ரபுரீசுவரர்.
இறைவியாரது திருப்பெயர் சௌந்தரிய நாயகி. இதற்கு திருஞானசம்பந்தர் அருளிய
திருப்பதிகம் ஒன்று உள்ளது.
பதிக வரலாறு
திருவையாற்றை நண்ணி வழிபடும் திருஞானசம்பந்தர் திருத்தொண்டர்களோடு
அடைந்து பணிந்த தலங்களுள் முதலாவது இத்திருப்பெரும்புலியூர். அங்குள்ள திருக்கோயிலை
அணைந்து போற்றிப் புனைந்த தமிழ்த்தொடை இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
2189. மண்ணுமோர்பாகமுடையார்மாலுமோர்பாகமுடையார்
விண்ணுமோர்பாகமுடையார்வேதமுடையவிமலர்
கண்ணுமோர்பாகமுடையார்கங்கைசடையிற்கரந்தார்
பெண்ணுமோர்பாகமுடையார்பெரும்புலியூர்பிரியாரே. 1
மண்ணும் ஓர் பாகம் உடையார்; மாலும் ஓர் பாகம் உடையார்;
விண்ணும் ஓர் பாகம் உடையார்; வேதம் உடைய விமலர்;
கண்ணும் ஓர் பாகம் உடையார்; கங்கை சடையில் கரந்தார்;
பெண்ணும் ஓர் பாகம் உடையார் - பெரும்புலியூர் பிரியாரே.
maNNum Or pAkam uTaiyAr; mAlum OrpAkam uTaiyAr;
viNNum Or pAkam uTaiyAr; vEtam uTaiya vimalar;
kaNNum Or pAkam uTaiyAr; kagkai caTaiyil karantAr;
peNNum Or pAkam uTaiyAr--perumpuliyUr piriyArE.
பொருள்: பெண்ணை ஓர் பாகமாக உடையார்; திருமாலையும் ஓர் பாகமாக உடையவர்;
மண்ணையும் தன்மேனியில் ஒருபாகமாக உடையவர்; விண்ணையும் ஓர் பாகமாக உடையவர்;
வேதத்தையும் உடைய விமலர்; கண்ணும் ஓர் பாகமாக உடையவர்; அவர் கங்கையைச் சடையில்
கரந்தார்; அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார். (தனது விசுவரூபத்தில் சிவபெருமான்
மண்ணையும் மண்ணைப் படைக்கும் பிரமனையும், மண்ணைக் காக்கும் திருமாலையும்,
விண்ணையும் விண்ணில் கண்ணாக ஒளிரும் ஞாயிறையும் பாகமாக உடையவர். கபிலர் பாடிய
பாடலைக் கபிலரது பாடல் என 6ஆம் வேற்றுமைச் செய்யுட் கிழமைபடக் கூறுதல் மரபு. அதுபோலச்
சிவன் வேதத்தைச் செய்யுட் கிழமையாக உடையவர்.)
குறிப்புரை: சிவபெருமானது விசுவரூபத்தில் ஒவ்வொரு பாகம் மண்ணும், அம்மண்ணைப்
படைக்கும் பிரமனும், காக்கும் மாலும், விண்ணும், கண்ணும், பெண்ணும் உடையவர். வேதத்தை
(ச் செய்யுட் கிழமையாக) உடைய நிமலர். கங்கையைச் சடையில் ஒளித்தவர். உடையாரும், விமலரும்,
கரந்தாருமாகிய சிவபெருமான் புலியூர் பிரியார் என்க. உடையார் எழுவாய். பிரியார் பயனிலை.
பெரும்புலியூர்- செயப்படுபொருள். மேலும் இங்ஙனமே கொள்க.
Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. The famous big temple is
called Perum-pattrap-puliyoor. Our Lord in Thiru-p-perum-puliyoor called Vyakrapureeswarar
is manifest in Thiru-p-perum-puliyoor. He has taken the special form known as Viswaroopam.
He is the Supreme Being as manifested in the whole universe- animate and inanimate in Himself.
In this form our Lord is manifested as earth and sky. He is manifest in various forms.
He manifests Himself as Thirumaal giving a portion in His viswaroopam to him. He has embedded
His consort Uma Devi on the left side of His body. He is the creator of the four Vedas as Vimalan.
He is a spotless holy being. Since He gave one half of His body to His consort, He has got
one eye only. He supports the river Ganges in His matted hair.
2190. துன்னுகடற்பவளஞ்சேர்தூயனநீண்டதிண்டோள்கள்
மின்னுசுடர்க்கொடிபோலும்மேனியினாளொருகங்கைக்
கன்னிகளின்புனையோடுகலைமதிமாலைகலந்த
பின்னுசடைப்பெருமானார்பெரும்புலியூர்பிரியாரே. 2
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண்தோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினார்; ஒரு கங்கைக்
கன்னிகளின் புனையோடு கலைமதிமாலை கலந்த
பின்னுசடைப் பெருமானார் - பெரும்புலியூர் பிரியாரே.
tunnu kaTal pavaLam cEr tUyana nINTa tiNtOLkaL
minnu cuTarkkoTi pOlum mEniyinAr; oru kagkaik
kannikaLin punaiyOTu kalaimatimAlai kalanta
pinnucaTaip perumAnAr--perumpuliyUr piriyArE.
பொருள்: கடலில் நெருங்கித் தோன்றும் பவளத்தைப் போலத் தூயவும் நீண்டவுமாகிய
திண்ணிய தோள்கள் சுடர்க்கொடி போலும் திருமேனியுடைய கங்கை எனும் கன்னிகளின்
நீரோடு பிறைமதி, கலந்த பின்னிய சடையை உடைய பெருமானார் அவர் திருப்பெரும்புலியூரை
விட்டுப் பிரியார்.
குறிப்புரை: துன்னு -நெருங்கிய. பவளம் சேர் தோள்கள் - கடலிலுள்ள. பவளத்தை ஒத்த
தோள்கள். தூயன தோள்கள். நீண்ட தோள்கள். திண்மை - உறுதி. சுடர்க்கொடி போலும் மேனியினாள் -
சோதிக்கொடி போன்ற திருமேனி உடையவள். கங்கைக் கன்னிகள் புனையோடு - கங்கை நதியின்
கிளைகளின் நீரொடு. நதிகளைப் பெண் பாலாகக் கொள்ளுதல் மரபு. நதிபதி எனக் கடலைக்
கொள்ளுதலால் கன்னி என்பது பெண்ணென்னும் பொருட்டு. புனை - நீர். ' அனைவரும்ஷ கானகத்து
அமுதளாவிய புனை வர உயிர்வரும் உலவை' (கம்பர். அகத்தியப் - 4 ) கலைமதிமாலை- பதினாறு
கலைகளுடைய திங்கட்கன்னி. சிவபெருமான் சடைமேலுள்ளது. பிறையேயாயினும் மதிக்குரிய
அடை கொடுத்துக் கூறுதல் உண்டு. சாதியடை. திருமுறையுள் ஆண்டாண்டுக் காண்க. புனையோடு
மாலை கலந்த சடை. பின்னுசடை. சடையையுடைய பெருமானார்.
Oh! It is Civan, Lord of Thiru-p-perum-puliyoor. The river Ganges is personified
as goddess of that river. Her shoulders are long and attractive, looking like the coral.
Her body is bright like lightning; she looks like a vine with lean body. Other small
branches of the river come and join the main big river Ganges. The baby moon with 16
phases also adorns our Lord along with the Ganges river and other minor rivers – all
bound in the matted hair looking like a garland. The Lord in Thiru-p-perum-puliyoor ,
adorned with these is manifested here as one who never leaves the place.
2191. கள்ளமதித்தகபாலங்கைதனிலேமிகஏந்தித்
துள்ளமிதித்துநின்றாடுந்தொழிலரெழில்மிகுசெல்வர்
வெள்ளநகுதலைமாலைவிரிசடைமேல்மிளிர்கின்ற
பிள்ளைமதிப்பெருமானார்பெரும்புலியூர்பிரியாரே. 3
கள்ளம் மதித்த கபாலம் கைதனிலே மிக ஏந்தி,
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர்; எழில் மிகு செல்வர்;
வெள்ள, நகுதலைமாலை, விரிசடை மேல் மிளிர்கின்ற
பிள்ளைமதிப் பெருமானார் - பெரும்புலியூர் பிரியாரே.
kaLLam matitta kapAlam kaitanilE mika Enti,
tuLLa mitittu ninRu ATum tozilar; ezil miku celvar;
veLLam, nakutalaimAlai, viricaTai mEl miLirkinRa
piLLai matip perumAnAr--perum puliyUr piriyArE.
பொருள்: கள்ளத்தைப் பொருளாகக் கொண்ட பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தித்
துள்ளி மிதித்து நின்று ஆடும் தொழிலை உடையவர்; அழகிய ஞானச் செல்வர்; கங்கை வெள்ளம்
நகுதலை மாலை, இளம்பிறை ஆகியன விரிந்த சடைமேல் ஒளிர்கின்ற பெருமான் அவர்
திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.
குறிப்புரை: கள்ள மதித்த சுபாவம் -கள்ளத்தைக் கருதிய பிரமனது கபாலம். முதல் வினை
சினை மேல் ஏற்றப்பட்டது. அதைக் கையில் ஏந்தித் துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலை
உடையவர் என்று சிவபெருமான் நடனமாடுங்காலத்துக் கபாலத்தைத் தாங்கியிருந்த உண்மை
கூறப்பட்டது. எழில் மிகு செல்வர்- சென்று அடையாமையாகிய அழகுமிக்க செல்வத்தை
உடையவர். வெள்ளம் - கங்கை . நகுதலை மாலை - சிரிக்கின்ற தலைகளின் வரிசை.
பிள்ளைமதி - இளம்பிறை.
Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. Our Lord Civan carries
in His hand one of the skulls of Brahma. He performs His vocation of the cosmic dance
by carrying the skull in His hand, jumping and treading. He is the most attractive
Supreme Being, wearing the Ganges river and a garland of smiling skulls. They look
very bright on His matted hair. Here our Lord has kept the baby moon also on the
matted hair. This Lord is manifest in Thiru-p-perum-puliyoor without leaving this
place.
2192. ஆடலிலையமுடையாரருமறைதாங்கியாறங்கம்
பாடலிலையமுடையார்பன்மையொருமைசெய்தஞ்சும்
ஊடலிலையமுடையார்யோகெனும்பேரொளிதாங்கிப்
பீடலிலையமுடையார்பெரும்புலியூர்பிரியாரே. 4
ஆடல் இலையம் உடையார்; அருமறை தாங்கி ஆறுஅங்கம்
பாடல் இலையம் உடையார்; பன்மை ஒருமை செய்து, அஞ்சும்
ஊடு அலில் ஐயம் உடையார்; யோகு எனும் பேர்ஒளி தாங்கி,
பீடு அல் இலையம் உடையார் - பெரும்புலியூர் பிரியாரே.
ATal ilaiyam uTaiyAr; arumaRai tAgki ARu agkam
pATal ilaiyam uTaiyAr; panmai orumai ceytu, anjcum
UTu alil aiyam uTaiyAr; yOku enum pEr oLi tAgki,
pITu al ilaiyam uTaiyAr--perumpuliyUr piriyArE.
பொருள்: ஆடுதலில் தாள கதி உடையவர்; அரிய மறைகளோடு ஆறங்கங்களையும் பாடும்
சங்கீத லயம் உடையார். பன்மையை ஒருமை செய்தும் ஐந்தும் ஊடல் இல்லையாகச் செய்தவர்;
யோகம் என்னும் ஒளியைத் தாங்கி பெருமையுடைய நள்ளிரவில் லயம் (ஆடுதல்) உடையார்.
அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.
குறிப்புரை: ஆடல் இலையம் - நடன லயம். ஆறு அங்கம் - சிக்கை. கற்ப சூத்திரம். வியாகரணம்,
நிருத்தம், சந்தோவிசிநி, சோதிடம் என்பன. பாடல் இலயம் - சங்கீத லயம். பன்மை ஒருமை செய்து -
அநேகம் ஏகம் என்னும் நிலைகளைத் தோற்றி. அஞ்சும் - ஐம் பொறிகளும். ஊடலில்- ஊடுதலாலே
(ஐம்பொறி அடக்கம் இல்லாதமையால்). ஐயம் உடையார்- மெய்ப்பொருள் நிச்சயமின்றி.
ஐயப்படுதலுக்குரியார். யோகு-யோகம், யோக நெறி, ஒளிநெறியாதலின் யோகெனும்
பேரொளி என்றார். பீடு அல் - பெருமையுடைய நள்ளிரவில். இலயமுடையார் - நட்டம் பயிலுதலுடையார்,
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும். ஆற்றல் யோகெனும் பேரொளி தாங்கியிருத்தல் கொண்டே
'உறைந்ததோர் ஒளியதாக்கி ஒடுங்கிடின் யோகபூசை' (ஞானபூசாகாரணம் 14) என்பதும், ஞானி யோகி
கிரியா வான்முறையே அறிவிற்கறிவாகவும் அறிவில் ஒளியாகவும் அறிவில் மூர்த்தியாகவும் தியானிப்பர்
என்பதும், 'மூன்றும் பெறின்புறப் பூசையாமே' (ஞான. 14) என்பதும். 'மூன்றும் உணர்வும் ஒளியும் மூர்த்தியும்'
என்பதும் தருமையாதீனத்து முனிவருள் ஒருவராகிய ஸ்ரீமத் சட்டைநாதத் தம்பிரான் சுவாமிகள்
குறிப்புரையால் உணரத்தக்கன. இதனால் யோகியர் யோகெனும் பேரொளி தாங்கும் உண்மை புலப்படும்.
Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. Our Lord of
Thiru-p-perum-puliyoor's vocation is to dance, whenever He decides to. He
used to chant the songs of the six angaas. These six angaas praise the four
Vedas. He sings them with full propriety in musical tone. He takes the shape
of a single being as well as multifarious appropriate forms. He needs no
control of the five senses. We, therefore, observe Him with fear. He does
His dance in the dark midnight, with the bright light of His yogic power.
This Lord of Thiru-p-perum-puliyoor is manifest in the temple in Thiru-p-perum -
puliyoor without leaving this place.
2193. தோடுடையார்குழைக்காதிற்சுடுபொடியாரனலாடக்
காடுடையாரெரிவீசுங்கையுடையார்கடல்சூழ்ந்த
நாடுடையார்பொருளின்பநல்லவைநாளுநயந்த
பீடுடையார்பெருமானார்பெரும்புலியூர்பிரியாரே. 5
தோடு உடையார், குழைக்காதில்; சுடுபொடியார்; அனல்ஆடக்
காடு உடையார்; எரி வீசும் கை உடையார்; கடல் சூழ்ந்த
நாடு உடையார்; பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த
பீடு உடையார்; பெருமானார் - பெரும்புலியூர் பிரியாரே.
tOTu uTaiyAr, kuzaik kAtil; cuTupoTiyAr; anal ATak
kATu uTaiyAr; eri vIcum kai uTaiyAr; kaTal cUznta
nATu uTaiyAr; poruL inpam nallavai nALum nayanta
pITu uTaiyAr; perumAnAr--perumpuliyUr piriyArE.
பொருள்: குழையணிந்ததொரு காதில், தோடணிந்ததொரு காதில், இருகாதிலும்
திருநீறணிந்து, காட்டில் எரியுடன் ஆடுபவர்; கையில் எரி ஏந்தியவர்; கடல் சூழ்ந்த நாட்டினை
உடையவர்; அறம் பொருள் இன்பமான நல்லவைகளை விரும்பும் பெருமை உடையவர்
பெருமானார் அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.
குறிப்புரை: குழையணிந்ததொரு காதில். தோடணிந்ததொரு காதில். காதில் திருநீறணிதல்
உணர்த்தப்பட்டது. காட்டில் தீயில் ஆடுபவர். கையில் எரி ஏந்தியவர். கடல் சூழ்ந்த நாடெல்லாம் உடையவர்.
பொருள் இன்பம் ஆகிய நல்லவற்றை நாள்தோறும் விரும்பி, அடியவர்க்கருளும் பெருமை உடையார்.
Oh! it is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. Our Lord who never leaves the
city in Thiru-p-perum-puliyoor wears in one of His ears the earring made of palm leaf.
In the other ear He wears the earring made up of tender leaves. He applies the holy ashes
all over His body. He desires to perform His avocation of dance on the burning ghat over
fire during midnight. He holds in one of His hands the ball of fire. He is the Lord of
the entire cosmos, which is surrounded by the oceans. He takes delight always in bestowing
happiness and wealth. He is Lord of all the people, all the places and He resides
permanently in Thiru-p-perum-puliyoor.
2194. கற்றதுறப்பணிசெய்துகாண்டுமென்பாரவர்தங்கள்
முற்றிதறிதுமென்பார்கள்முதலியர்வேதபுராணர்
மற்றிதறிதுமென்பார்கள்மனத்திடையார்பணிசெய்யப்
பெற்றிபெரிதுமுகப்பார்பெரும்புலியூர்பிரியாரே. 6
"கற்றது உறப்பணி செய்து காண்டும்" என்பார் அவர்தம் கண்;
'முற்று இது அறிதும்" என்பார்கள் முதலியர் வேதபுராணர்;
"மற்று இது அறிதும்" என்பார்கள் மனத்து இடையார்; பணி செய்ய,
பெற்றி பெரிதும் உகப்பார் - பெரும்புலியூர் பிரியாரே.
"kaRRatu uRap paNi ceytu kANTum" enpAr avartam kaN;
"muRRu itu aRitum" enpArkaL mutaliyar; vEtapurANar;
"maRRu itu aRitum" enpArkaL manattu iTaiyAr; paNi ceyya,
peRRi peritum ukappAr--perumpuliyUr piriyArE.
பொருள்: 'கற்றதனாலாய பயன் வாலறிவான் நற்றாள் தொழல்' என்று அறிந்து, தம்மை
அடையத் திருப்பணி செய்வோருக்குக் கண்ணாகவும், இதனை முற்றும் அறிவோம் என்பார்க்கு
முதல்வராகவும், வேதமும் புராணமுமாயிருப்பவர் (பழையோர்), இவை கூறும் பொருளை
அறிவோம் என்பவர்களுடைய மனத்தில் இருப்பவர் ஆகிய இவர்கள் பணி செய்ய, அப்பணியின்
தன்மையினைப் பெரிதும் மகிழ்ந்து அவர்களுக்கு அருள் செய்வர்; அவர் திருப்பெரும்புலியூரை
விட்டுப் பிரியார்.
குறிப்புரை: கற்றது உறப்பணி செய்து காண்டும் என்பார் அவர் தம் கண் - கற்றதனாலாய
பயன் தம்மைப் பொருந்தத் திருப்பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்கு அவர்தம்
கண்ணாயுள்ளார். முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் - இதனை முற்றும் அறிவோம்
என்பவர்களுக்கு முதல்வராயிருப்பவர். வேதபுராணர் - வேதமும் புராணமுமாயிருப்பவர்.
வேதத்தால் உணர்த்தப்படும் பழையோர். மற்று இது அறிதும் என்பார்கண் மனத்திடையார்
-இதைப் பின்னே அறிவோம் என்பாருடைய மனத்தில் இருப்பவர், பணி செய்யப் பெற்றி
பெரிதும் உகப்பார் - திருத்தொண்டு செய்துவரின் அத்தொண்டின் தன்மையையும்
தொண்டர் தன்மையையும் மிக விரும்பி அருள் செய்வார்.
Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. Great scholars with divine
knowledge study deeply and do service to Lord with firm faith that they will see God.
For such people our Lord delights them in their mind being their eyes. Those
people who have firm faith that they have full knowledge about divinity are graced
by Him as the first and as creator of Vedas and Puranaas. There are certain people
who do have in their mind that they will learn this at a later stage. For such people
also He delights them in their mind. He takes special care of His devotees and takes
delight in all of them. This Lord is manifest in Thiru-p-perum-puliyoor without
leaving this place forever.
2195. மறையுடையாரொலிபாடல்மாமலர்ச்சேவடிசேர்வார்
குறையுடையார்குறைதீர்ப்பார்குழகரழகர்நம்செல்வர்
கறையுடையார்திகழ்கண்டங்கங்கைசடையிற்கரந்தார்
பிறையுடையார்சென்னிதன்மேற்பெரும்புலியூர்பிரியாரே. 7
மறை உடையார், ஒலிபாடல்; மா மலர்ச்சேவடி சேர்வார்,
குறை உடையார், குறை தீர்ப்பார்; குழகர்; அழகர்; நம் செல்வர்;
கறை உடையார், திகழ் கண்டம்; கங்கை சடையில் கரந்தார்;
பிறை உடையார், சென்னிதன்மேல்;- பெரும்புலியூர் பிரியாரே.
maRai uTaiyAr, olipATal; mA malarccEvaTi cErvAr,
kuRai uTaiyAr, kuRai tIrppAr; kuzakar, azakar; nam celvar;
kaRai uTaiyAr, tikaz kaNTam; kagkai caTaiyil karantAr;
piRai uTaiyAr, cennitanmEl;--perum puliyUr piriyArE.
பொருள்: வேதாகமங்களை உடையவரும், ஒலிக்கின்ற பாடல்களாலே அழகிய தாமரை மலர்
போலும் சிவந்த திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களும், மனக்குறை உடையவர்களும்
ஆகிய அனைவரது குறையையும் தீர்ப்பர். இளைஞர், அழகர், நம்முடைய செல்வர், கண்டக் கறையுடையார்,
கங்கையைச் சடையில் கரந்தார், சென்னியின் மேல் பிறையுடையார்; அவர் திருப்பெரும்புலியூரை
விட்டுப் பிரியார்.
குறிப்புரை: வேதங்களுடையவரும், ஒலிக்கின்ற பாடல்களாலே அழகிய தாமரை மலர்போலும்
சிவந்த திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களும், மனக்குறை உடையவர்களும் ஆகிய
எத்திறத்தாருடைய குறைகளையும் தீர்ப்பார். இளைஞர், சொக்கர், நம் செல்வர், நீலகண்டர்,
கங்கைச் சடையர், சந்திரசேகரர்.
Oh! It is Civan, our Lord of Thiru-p-perum-puliyoor. These Vedic scholars on hearing
their songs, think of the holy feet of our Lord without any break. If people have any mental
suffering our Lord will drive it out of their life. Our Lord is always young. He is the most
attractive being. He is our real asset. He imbibed the poison and keeps it at His throat.
He retains the moon on His matted hair. He supports the Ganges on His head without any
visibility to others. This Lord of Thiru-p-perum-puliyoor never leaves the city of
Thiru-p-perum-puliyoor.
2196. உறவியுமின்புறுசீருமோங்குதல்வீடெளிதாகித்
துறவியுங்கூட்டமுங்காட்டித்துன்பமுமின்பமுந்தோற்றி
மறவியன்சிந்தனைமாற்றிவாழவல்லார்தமக்கென்றும்
பிறவியறுக்கும்பிரானார்பெரும்புலியூர்பிரியாரே. 8
உறவியும் இன்புஉறு சீரும் ஓங்குதல், வீடு எளிதுஆகி,
துறவியும் கூட்டமும் காட்டி, துன்பமும் இன்பமும் தோற்றி
மறவி அம் சிந்தனை மாற்றி, வாழ வல்லார் தமக்கு என்றும்
பிறவி அறுக்கும் பிரானார் - பெரும்புலியூர் பிரியாரே.
uRaviyum inpu uRu cIrum Ogkutal, vITu eLitu Aki,
tuRaviyum kUTTamum kATTi, tunpamum inpamum tORRi,
maRavi amcintanai mARRi, vAza vallAr tamakku enRum
piRavi aRukkum pirAnAr--perumpuliyUr piriyArE.
பொருள்: உறவும் இன்பமும் ஓங்கும் சிறப்பும், வீடு அடைதலும் எளிதாகி முத்தியும் பந்தமும்
காட்டி, துன்பமும் இன்பமும் தோன்றச் செய்து, மறக்கும் மனத்தினை மாற்றி, வாழ வல்லவர்களுடைய
பிறப்பினை அறுக்கும் பிரானார்; அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.
குறிப்புரை: உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் - உறவும் இன்பம் மிக்க சிறப்பும். உயர்தல் - எளிதாகி -
வீடு எளிதாகி. பற்றற்றொழிதல் எளிதாகி. துறவியும் கூட்டமும் காட்டி - முத்தியும் பந்தமும் காட்டி.
துன்பமும் இன்பமும் தோற்றி - துக்கமும் சுகமும் ஆக்கி. மறவி அம்சிந்தனை மாற்றி - மறத்தல் உடைய
கருத்தை ஒழித்து. வாழ வல்லவர் தமக்குப் பிறத்தல் என்றும் இல்லாமல் போக்கும் பிரானார்.
இத்திருப்பாடல் எல்லாருள்ளத்தும் என்றும் நிற்கத்தக்கது.
Oh! It is Civan, our Lord of Thiru-p-perum-puliyoor. Our Lord Civan who is called
Vyakrapureeswarar in this city helps the human souls in many ways and stops rebirth of
such souls and gives eternal bliss finally. He shows all extremes - life of detachment
and life of attachment, and happiness and sufferings due to the above. Then He makes
the change in thoughts and attitude in the worldly matters showing austerity against
materialism. He finally makes the souls to think of Him always without forgetting and
increases the happiness of the souls. He also graces and gives them the eternal bliss
forever. He finally makes them not to forget Him forever. This Lord is manifest in the
temple in the city Thiru-p-perum-puliyoor and will never leave this place.
2197. சீருடையாரடியார்கள்சேடரொப்பார்சடைசேரும்
நீருடையார்பொடிப்பூசும்நினைப்புடையார்விரிகொன்றைத்
தாருடையார்விடையூர்வார்தலைவரைந்நூற்றுப்பத்தாய
பேருடையார்பெருமானார்பெரும்புலியூர்பிரியாரே. 9
சீர் உடையார்; அடியார்கள்சேடர்; ஒப்பார்; சடை சேரும்
நீர் உடையார்; பொடிப் பூசும் நினைப்பு உடையார்; விரிகொன்றைத்
தார் உடையார்; விடை ஊர்வார்; தலைவர்; ஐந் நூற்றுப் பத்துஆய -
பேர் உடையார்; பெருமானார் - பெரும்புலியூர் பிரியாரே.
cIr uTaiyAr; aTiyArkaL cETar; oppAr; caTai cErum
nIr uTaiyAr; poTip pUcum ninaippu uTaiyAr; virikonRait
tAr uTariyAr; viTai UrvAr; talaivar; ain nURRup-pattu Aya
pEr uTaiyAr; perumAnAr--perumpuliyUr piriyArE.
பொருள்: பெருமையுடையார்; அடியவர்களின் உடையான் (சுவாமி); சடைமேல் சேரும் கங்கையை
உடையார்; திருநீறு பூசும் திருவுள்ளமுடையார்; விரிந்த கொன்றைப் பூமாலையை உடையவர்; இடபத்தை
ஊர்வர்; எவ்வுயிர்க்கும் உலகிற்கும் தலைவர்; அவர்தம் அடியார் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.
குறிப்புரை: சீர் - கனம். உடையார்- சுவாமி. அடியார்கள் சேடர் ஒப்பார்- அடியார்களுக்கெல்லாம்
பெரியோரைப் போல்வார். சடைசேரும் கங்கை உடையார். திருநீறு பூசும் திருவுள்ளம் உடையார். விரிந்த
கொன்றைமாலை அணிந்தவர். எருது ஊர்வார். எவ்வுலகிற்கும் எவ்வுயிர்க்கும் தலைவர்.
ஐயாயிரம் பேர் உடையார்.
Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. To the devotees who are
very famous people, our Lord is the greatest. He supports the river Ganges in His
matted hair. Always He remembers to smear His body with holy ashes. He wears the bright
garland of cassia flowers on His head. He sustains the white bull for conveyance
to move around the cosmos. He is the Chief of everything. He is named with 100
good names. He is manifest as the Supreme Being in Thiru-p-perum-puliyoor.
This Lord never leaves the city of Thiru-p-perum-puliyoor and stays there happily.
2198. உரிமையுடையடியார்களுள்ளுறவுள்கவல்லார்கட்
கருமையுடையனகாட்டியருள்செயுமாதிமுதல்வர்
கருமையுடைநெடுமாலுங்கடிமலரண்ணலுங்காணாப்
பெருமையுடைப்பெருமானார்பெரும்புலியூர்பிரியாரே. 10
உரிமை உடைய அடியார்கள் உள்உற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டி, அருள்செயும் ஆதிமுதல்வர்;
கருமை உடை நெடுமாலும், கடிமலர் அண்ணலும், காணாப்
பெருமை உடைப் பெருமானார் - பெரும்புலியூர் பிரியாரே.
urimai uTaiya aTiyArkaL uL uRa uLka vallArkaTku
arumai uTaiyana kATTi, aruL ceyum Atimutalvar,
karumai uTai neTumAlum, kaTimalar aNNalum, kANAp
perumai uTaip perumAnAr--perumpuliyUr piriyArE.
பொருள்: திருவருள் பெறுவதற்கு உரிமை உடைய அடியார்கள் உள்ளத்தில் நினைக்க
வல்லார்களுக்கு, அவர்கள் காண்பதற்கு அரியனவற்றையெல்லாம் காட்டி அருள் செய்யும்
அநாதி முதல்வன். கரிய நிறமுடை நெடுமாலும் தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும்
காண முடியாத பெருமை உடைய பெருமானார்; அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.
குறிப்புரை: உரிமை உடைய .... முதல்வர் - திருவருள் உரிமை உடைய அடியவர்களின்
உள்ளத்தில் மிக நினைக்க வல்லவர்கட்குக் காண்டற்கருமையுடையனவற்றைக் காட்டி அருள்
செய்யும் அநாதி முதல்வன். ஆதி முதல்வன் என்பது ஆதிக்கும் ஆதியாய அநாதி முதல்வரை
உணர்த்திற்று. மாயோனும் மலரவனும் காணாத தீப்பிழம்பாகிய பெருமை உடைய பெருமான்.
Oh! It is Civan, our Lord of Thiru-p-perum-puliyoor. To those devotees who
claim kinship and respectful friendship with our Lord and to those who concentrate
on their mind on our Lord's holy feet, our Lord shows everything which they cannot
see normally and graces them. He is the Chief and the origin of all the commencement
and the cosmos. The black coloured Thirumaal and Brahma, the four-headed creator who is
seated in the sweet smelling lotus flower, could not see our Lord. This Lord is manifest
in the temple in Thiru-p-perum-puliyoor and never will leave this place.
2199. பிறைவளரும்முடிச்சென்னிப்பெரும்புலியூர்ப்பெருமானை
நறைவளரும்பொழிற்காழிநற்றமிழ்ஞானசம்பந்தன்
மறைவளருந்தமிழ்மாலைவல்லவர்தந்துயர்நீங்கி
நிறைவளர் நெஞ்சினராகிநீடுலகத்திருப்பாரே. 11
பிறை வளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை,
நறை வளரும் பொழில் காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
மறை வளரும் தமிழ்மாலை வல்லவர், தம் துயர் நீங்கி,
நிறை வளர் நெஞ்சினர் ஆகி, நீடு உலகத்து இருப்பாரே.
piRai vaLarum muTic cennip perumpuliyUrp perumAnai,
naRai vaLarum pozil kAzi nal-tamiz njAnacampantan,
maRai vaLarum tamizmAlai vallavar, tam tuyar nIgki,
niRai vaLar nenjcinar Aki, nITu ulakattu iruppArE.
பொருள்: பிறை தேய்தலின்றி வளரும் முடியைக் கொண்ட சிரமுடைப் பெரும்புலியூர்ப்
பெருமானை, தேன் வளரும் மலர்ச்சோலைகள் சூழ்ந்த காழிநகர் நற்றமிழ் பாடும் ஞானசம்பந்தன்
பாடிய வேதப்பொருள் வளரும் தமிழ்மாலையாகிய இந்தப் பதிகத்தை வல்லவர், தம்முடைய
துயர் நீங்கி, திருத்தி மிக்க உளத்தினராகி இருப்பர்.
குறிப்புரை: பிறை தளர்தலின்றி வளர்ந்து கொண்டேயிருக்கும். சடைமுடியைக் கொண்ட
தலையை உடைய பெருமான். நறை - தேன். பொழில் - சோலை. நற்றமிழ் - திருப்பதிகங்கள்.
மறை வளரும் தமிழ் மாலை- இத்திருப்பதிகம். வல்லவர் எழுவாய். இருப்பார் - பயனிலை. அவர்க்குத்
துயர் நீக்கமும், நெஞ்சுவளர் நிறையும் உளவாகும்.
Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. The baby moon in the matted
hair of our Lord grows on gradually and becomes larger and larger day by day. Our saint
Thiru-gnana-Sambandar hails from the city of Seerkaazhi. In this city, forest areas are
plenty with plants and trees with fine flowers dripping honey. He came to the temple
and prostrated before our Lord, and then started singing Tamil verses, which developed
like Vedas. Those who study and memorise and sing these ten Tamil verses will find their
suffering disappear and will experience heartfelt joy. Also they will live in the
celestial world forever.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
67ஆம் பதிகம் முற்றிற்று
End of 67th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 204 பதிக எண் 68.
68. திருக்கடம்பூர் 68. THIRU-K-KADAMBOOR
பண் : காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருக்கடம்பூர் என்னும் இத்திருத்தலமானது சிதம்பரம் வட்டம் காட்டுமன்னார் கோயிலுக்கு
5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரி வடகரைத் தலங்களுள் முப்பத்து நான்காவது தலமாகும்.
சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் பேருந்தில் கடம்பூர் செல்லலாம்.
தேவாரப்பாடல் பெற்ற கோயில் மேலக்கடம்பூரில் உள்ளது.
ஊரின் பெயர் கடம்பூர் ஆயினும் இங்குள்ள கோயிலுக்குக் கரக்கோயில் என்று பெயர்.
இது 'தென்கடம்பைத் திருக்கரக்கோயிலான்' என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியால் அறியக்
கிடக்கின்றது. இதன் உண்மைக் காரணத்தை ஆராய்ச்சியாளர் இன்னும் ஆராய்ந்து கொண்டு
இருக்கின்றார்கள். புலப்படவில்லை. இத்தலத்தை வணங்கிய இந்திரன் இதனைத் தன் உலகத்திற்குக்
கொண்டுபோக நினைத்துப் பாதாளம்வரை தோண்டியும் அஃது அப்பாலும் ஊடுருவிப் போவது கண்டு
அஞ்சி, முன்போல் அமைத்துப் பூசித்து அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றனன் என்ற வரலாறு
கருதிக் கரக்கோயில் எனப்படும் என்பர் என்று திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தாம்
அருமையாக எழுதிய பெரியபுராண உரையில் குறித்திருக்கின்றார்கள்.
(திருத்தொண்டர் புராணம் பகுதி - 4. பக்கம் 287).
இறைவர் திருப்பெயர் அமிர்தகடேசர். இறைவியார் திருப்பெயர் சோதிமின்னம்மை.
தேவேந்திரன் பூசித்துப் பேறு பெற்றான். இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று
திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. கோயில் கர்ப்ப இல்லின்
அடிப்பாகம் இரத வடிவில் குதிரைகள் பூட்டிய நிலையில் இருக்கின்றது. இக்கடம்பூர்க்கும்
கிழக்கே 1.5 கி.மீ. தூரத்தில் கடம்பூர் இளங்கோயில் இருக்கின்றது. இது முற்றிலும் இடிந்து
போய் உள்ளது.
பதிக வரலாறு
வாழ்கொளிபுத்தூரில் வழிபட்டு வந்த திருஞானசம்பந்தர் பார்புகழ் பதிகங்கள்
பாடி வார்பொழிற் கடம்பையும் வணங்கி மகிழ்ந்தபொழுது அருளியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
2200. வானமர்திங்களும்நீரும்மருவியவார்சடையானைத்
தேனமர்கொன்றையினானைத்தேவர்தொழப்படுவானைக்
கானமரும்பிணைபுல்கிக்கலைபயிலுங்கடம்பூரில்
தானமர்கொள்கையினானைத்தாள்தொழவீடெளிதாமே. 1
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார்சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில் -
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ வீடு எளிது ஆமே.
vAn amar tigkaLum nIrum maruviya vAr caTaiyAnai,
tEn amar konRaiyinAnai, tEvar tozappaTuvAnai,
kAn amarum piNai pulkik kalai payilum kaTampUril
tAn amar koLkaiyinAnai, tAL toza, vITu eLitu AmE.
பொருள்: ஆகாயத்தில் பொருந்திய பிறையும் கங்கையாகிய நீரும் மருவிய நீண்ட சடையுடையானை,
தேன் பொருந்திய கொன்றைப்பூ மாலையனை, தேவர்களால் தொழப்படும் தேவனை, முல்லைக்காட்டில் வாழும்
பெண்மானுடன் கலைமான் பயிலும் திருக்கடம்பூரில் விரும்பித் தங்கும் கருத்துடையவனை, அவனுடைய
தாள்களைத் தொழ, வீடுபேறு எளிதாகும்.
குறிப்புரை: வான்- ஆகாயத்தில். அமர் - பொருந்திய. திங்களும் - பிறையும். நீரும் - கங்கையும்.
மருவிய- கலந்த. வார் - நீண்ட. தேவர் தொழப்படுவானை- 'தொழப்படுந் தேவர் தொழப்படுவானைத்
தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே' (தி. 4 ப.112 பா.5)
என்றவாறு. தன் அடியாரையும் தேவர் தொழுவர் எனின், தன் (பரமசிவ)னைத் தொழுதலில்
ஐயமுண்டோ?. கான் -காடு. பிணை- பெண் மான். கலை- ஆண்மான். கடம்பூர் - கடம்பு மரம் உள்ள ஊர்.
தலவிருட்சம். 'கானமரும் பிணைபுல்கிக் கலைபயிலுங் கடம்பூர்' என்றதால் கடம்பங்காடும் ஆகும்.
The Lord's long matted hair is decorated with the moon and the Ganges - all are
in a way adornment to our Lord. He wears the garland of cassia flowers with honey in them.
He is worshipped by all the devas. The city is surrounded by forest areas, where the male
deer embraces the female one joyfully in the forest. In such a rich and attractive city
our Lord is manifest in the temple in the city. Those devotees who worship His holy feet
will reach heaven easily.
2201. அரவினொடாமையும்பூண்டுஅந்துகில்வேங்கையதளும்
விரவுந்திருமுடிதன்மேல்வெண்டிங்கள்சூடிவிரும்பிப்
பரவுந்தனிக்கடம்பூரிற்பைங்கண்வெள்ளேற்றண்ணல்பாதம்
இரவும்பகலும்பணியஇன்பநமக்கதுவாமே. 2
அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை அதளும்
விரவும் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி, விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே.
aravinoTu Amaiyum pUNTu, am tukil vEgkai ataLum,
viravum tiru muTi tan mEl veNtigkaL cUTi, virumpip
paravum tanik kaTampUril paigkaN veL ERRu aNNal pAtam
iravum pakalum paNiya, inpam namakku atu AmE.
பொருள்: பாம்பினொடு ஆமை ஓட்டினையும் பூண்டு அழகிய துகிலும் வேங்கைப் புலியின்
தோலும் கலக்கும். அழகிய சென்னிமேல் வெண்பிறை சூடி பரவப்படும் திருக்கடம்பூரில் பசிய
கண்களையுடைய வெள்ளேற்று அண்ணலின் பாதத்தை இரவும் பகலும் பணிய நமக்கு
அது இன்பம் ஆகும்.
குறிப்புரை: அரவு - பாம்பு. ஆமை- முற்றலாமை இளநாகமோடு ஏனமுளைக் கொம்பவை
பூண்டு, அம்துகில் வேங்கை அதள் - அழகிய புலித்தோலாகிய ஆடை. முடிமேல் திங்கள். சூடி விரும்பிப்
பரவுங் கடம்பூர் என்க. அம்பிகைக்குரிய துகிலும், அரனுக்குரிய அதளும் விரவும் (-கலக்கும்) எனலுமாம்.
பரவும்- எழுந்தருளிய. சூடி விரும்பி எழுந்தருளிய கடம்பூர் என்று கொள்ளாக்கால், வினைமுடிபு பொருந்தாது.
பரவுதல் - வாழ்த்துதல். துதித்தல் என்று பொருள் படுதல் ஈண்டு பொருந்தாது. இதில், சூடுதலும்,
விரும்புதலும், பரவுதலும் இறைவன் வினையாதல் வேண்டும். சூடி என்பதைப் பெயராகக் கொண்டு
கூறலாம் எனினும், பூண்டு சூடி விரும்பிப் பரவும் என்று தொடர்தலால் இடையில் ஒரு வினையெச்சத்தை
மட்டும் பெயராக் கோடல் யாங்ஙனம்? அதளும் விரவும் முடி எனல் விளங்கிற்றிலது. பைங்கண்
வெள்ளேறு- பசிய கண்களையுடைய வெள் விடை. ஏற்றண்ணல்- எருதூரும் பெருமானார். இரவும் பகலும்
பாதம் பணிய நமக்கு இன்பமது ஆம் என்க. விரும்பிச்சூடி- அதளும் விரும்பி என்று பொருத்தினும்
பொருந்தல் இல்லை. அதளும் விரவும் திருமுடி என்று கொண்டு அரையில் உடுத்த புலித்தோல்
முடியையும் மறைத்துச் சுற்றியிருந்ததோ என்று எண்ணுவாரும் உளர்.
Our Lord Civan is manifest in Thiru-k-kadamboor. He dons His body with snakes
and tortoise shells. He wears the good-looking tiger's hide as His dress. In His attractive
head He retains the white moon. He uses the white bull for His conveyance. The eyes of the
bull are like fire. Those devotees who prostrate before the holy feet of our Lord day
and night and worship Him with devotion will have happiness throughout their life.
2202. இளிபடுமின்சொலினார்களிருங்குழல்மேலிசைந்தேறத்
தெளிபடுகொள்கைகலந்ததீத்தொழிலார்கடம்பூரில்
ஒளிதருவெண்பிறைசூடியொண்ணுதலோடுடனாகிப்
புலியதளாடைபுனைந்தான்பொற்கழல்போற்றுதுநாமே. 3
இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து ஏற
தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில் -
ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன்ஆகி,
புலிஅதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,நாமே.
iLi paTum incolinArkaL irugkuzalmEl icaintu ERa,
teLipaTu koLkai kalanta tIt tozilAr kaTampUril-
oLitaru veNpiRai cUTi, oNNUtalOTu uTan Aki,
puli ataL ATai punaintAn ponkazal pORRutum, nAmE.
பொருள்: இளி என்னும் இசையினிமையுடைய சொல் பேசும் மகளிருடைய கரிய கூந்தலுக்கு
இசைந்து, ஏறத் தெளிந்த வேதக் கோட்பாட்டுடன் வேள்வித் தொழில் புரியும் மறையோர்கள் வாழும்
திருக்கடம்பூரில் ஒளியதாகிய நெற்றியையுடைய உமாதேவியாருடன் ஒளிவீசும் வெண்பிறை சூடி,
புலித்தோலாடை அணிந்த சிவபெருமானின் பொற்கழலினைப் போற்றுவோம் நாம்.
குறிப்புரை: இளி - (யாழின் நரம்புகளுள் ஒன்று). ஏழிசையுள் ஒன்று. சொல்லினிமையும் இளி
என்னும் இசையினிமையும் வேறுபடாது இருக்கும் என்றபடி. (சொல்லினிமைக்கு ஒவ்வாது இளியும்
படும் எனலும் ஆம்). குழல் - கூந்தல். குழல்மேல் புகை இசைந்து ஏறத் தீத்தொழில் ஆர் கடம்பூர்
எனலுமாம். ஏற என்னும் வினையெச்சம். ஆர் என்னும் வினைப்பகுதியொடு முடிந்தது. கலந்த
என்பதனொடு முடித்தலும் கூடும். ஏறக் கொள்(ளும்) கை எனல் வலிந்து பொருள் கொள்வதாகும்.
ஏறத் தெளி(த்தல்) என்று பொருத்தலுங்கூடும். யாகத்தில் இருபத்தேழு நட்சத்திரப் பெண்டிர்க்கும்
தீவழி உதவும் வேதவுண்மை குறிக்கப்பட்டது. தெளிபடு கொள்கை - தெளிவு பொருந்திய கோட்பாடு.
வேதக்கொள்கை. தீத்தொழில் -வேள்வி. ஆர் - பொருந்தி. தீத்தொழிலார் - வேள்வியாளர் எனலுமாம்.
ஒளி தருபிறை - வெண்பிறை.
ஒள் நுதல்- ஒளியதாகிய நெற்றியை உடைய உமாதேவியார். பண்புத்தொகை நிலைக்களத்துப்
பிறந்த அன்மொழித் தொகை. 'பண்பு தொகவரூஉம் கிளவியானும் . . . ஈற்று நின்றி யலும் அன்மொழித்
தொகையே' (தொல். சொல். 902). ‘பண்புத் தொகை படவும் ... அச்சொற்றொக்கபின் அத்தொகை
அன்மொழித் தொகையாகாமையின், தொகுவதன்முன் அவற்றிற்கு நிலைக்களமாகிய சொற்பற்றி
வரும்' (பிரயோக விவேகம் - 24 உரை). ஓடு உடன் இரண்ட பற்றிவரும் (பிரயோக விவேகம் - 24 உரை),
ஓடு உடன் இரண்டனுள் ஒன்று மூன்றனுருபின் நீட்சி (தொல்காப்பியர் 'ஓடு' என்றே கூறினார்).
மற்றொன்று உடனாதல் (ஒருசேர இருத்தல்) குறித்தது. 'எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை
நினைந்தால் அங்கே வந்து என்னோடும் உடனாகி நின்றருளி' (தி.7 பா.230) என்புழிக் காண்க.
ஓடுடன் கூடி என்றலும் உண்டு. சூடி உடனாகிப் புனைந்தான் என்றியைக்க. புலி அதன் ஆடை -
புலித்தோலுடையை. புனைந்தான் - அணிந்த சிவபிரான். பொன் கழல் - பொன் போலுஞ் சேவடி.
கழல் - ஆகுபெயர். நாம் கழலைப் போற்றுதும் (போற்றுவோம்). 'கள்' வண்டு என்பாருமுளர்.
இதன் பொருளமைதி புலப்பட்டிலது.
In the city of Thiru-k-kadamboor, scholarly Brahmins offer oblations in the
consecrated fire everyday. The girls who speak tender words in musical tone gather
round the oblation and hold their hair in the smoke of the holy fire get it dried.
In such a sacred city of Thiru-k-kadamboor very bright dazzling white moon
dons our Lord's matted hair. He is manifest in the temple along with His consort
Uma Devi wearing on His loins the tiger skin. Let us all with sincere devotion
prostrate before Him and praise Him and worship Him.
2203. பறையோடுசங்கமியம்பப்பல்கொடிசேர்நெடுமாடம்
கறையுடைவேல்வரிக்கண்ணார்கலையொலிசேர்கடம்பூரில்
மறையொலிகூடியபாடல்மருவிநின்றாடல்மகிழும்
பிறையுடைவார்சடையானைப்பேணவல்லார்பெரியாரே. 4
பறையோடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம்
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் -
மறையொலி கூடிய பாடல் மருவி நின்று,ஆடல் மகிழும்
பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார் பெரியாரே.
paRaiyOTu cagkam iyampa, palkoTi cEr neTumATam
kaRai uTai vEl varikkaNNAr kalai oli cEr kaTampUril-
maRaiyoli kUTiya pATal maruvi ninRu, ATal makizum-
piRai uTai vArcaTaiyAnaip pENa vallAr periyArE.
பொருள்: பறை முதலிய இசைக்கருவிகளும் சங்கும் ஒலிக்க, கொடிகள் பல சேர்ந்த நெடிய
மாடங்களில் குருதிக் கறை படிந்த வேல்போலச் செவ்வரி படர்ந்த கண்களையுடைய இளமகளிரின்
ஆடல்பாடல்களாகிய கலைகளின் ஒலி கூடிய திருக்கடம்பூரில் வேத ஒலியுடன் ஆடலை
மகிழும் பிறையணிவார் சடையானைப் பேண வல்லவர்களே பெரியவர்கள்.
குறிப்புரை: பறை - வாத்தியம். சங்கம் - சங்குகள். இயம்ப - ஒலிக்க. கறை – குருதிக் கறை, கறுப்பு,
வேல், பிறருடம்பிற்பட்டு, இரத்தம் தோய்ந்து உலர்ந்து கறுப்புறுதல் கூறப்பட்டது. சாதியடை. கண்ணுக்குச்
செவ்வேல். அதன் கொடுமையும் கூர்மையும் செம்மையும் பற்றி ஒப்பாகும். கலை-மேகலை. மாடங்களில்
மகளிர் ஆடுதலால் உண்டாகும் ஒலி. மறை ஒலி - வேத முழக்கம். பாடல் - வேதகீதம். ஆடல் மகிழும்
சடையான். வார்- நீண்ட. பேணவல்லார் விரும்பி வழிபடவல்லார் -பெரியார் - திருவருட்பெருமை
உடையோர். பேணவல்லார் - வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம். வித்தும்
அதன் அங்குரமும் மெய் உணரில் -வித்ததனிற் காணாமையால், அதனைக் கைவிடுவர். கண்டவர்கள்,
பேணாமையால் அற்றால் பேறு (திருக்களிற்றுப்படியார் 57) என்னும் உண்மை நூலின் கண்
பேணாமையாலாம். பெறாமை கூறுமுகத்தான் பேண வல்லார் பெருமை உணர்த்தப்பட்டமை விளங்கும்.
The city is full of all sorts of noises from all places of devotion. The noise of
the drum and the blowing sound of the conch are heard everywhere. There are many palatial
buildings with many staircases. At the top of the building the flags in many colours always
swing in the air. Many young girls join together and dance and sing. The musical instruments
make music. All such sounds are plentifully heard all around the city. The Vedic scholars
chant the Vedas and sing songs also. They then dance and the Lord accepts it merrily.
Our Lord with long matted hair with the crescent is manifested in this city. Those who
sing in praise of our Lord will be great scholars.
2204. தீவிரியக்கழலார்ப்பச்சேயெரிகொண்டிடுகாட்டில்
நாவிரிகூந்தனற்பேய்கள்நகைசெயநட்டம்நவின்றோன்
காவிரிகொன்றைகலந்தகண்ணுதலான்கடம்பூரில்
பாவிரிபாடல்பயில்வார்பழியொடுபாவமிலாரே. 5
தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேள்எரி கொண்டு, இடுகாட்டில்,
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம் நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் - கடம்பூரில்
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.
tI viriya, kazal Arppa, cEyeri koNTu, iTukATTil,
nA viri kUntal nal pEykaL nakaiceyya, naTTam navinROn-
kA viri konRai kalanta kaNnutalAn-kaTampUril,
pA viri pATal payilvAr paziyoTu pAvam ilArE.
பொருள்: தீப்போலும் செஞ்சடை விரியவும் கழல் ஆர்க்கவும் செந்தீயைக் கையில் கொண்டு
இடுகாட்டில் (உலகனைத்தும் அழியும் சர்வ சங்கார காலத்தில்) நீட்டிய நாவினையும் பரந்த
தலைமயிரினையும் உடைய நல்ல பேய்கள் மகிழ்ச்சியால் சிரித்தலைச் செய்ய நடனம் ஆடினவன்,
சோலைகளில் மலர்ந்த கொன்றை மலர்களை அணிந்த நெற்றிக் கண்ணினன், அவனுடைய
திருக்கடம்பூரில் பண்களால் இசை கூட்டப்பெற்ற பாடல்களைப் பயின்று பாடுவார் பழியும் பாவமும்
இல்லாதவராவர்; மாறாகப் புண்ணியமும் புகழும் உடையோராவர்.
குறிப்புரை: தீவிரியக் கழல் ஆர்ப்பச் சேய் எரி கொண்டு இடுகாட்டில் நட்டம் நவின்றோன் -
தீப்போலும் சடை விரியவும் கழல் ஒலிக்கவும் செந்தீயைக் கையில் கொண்டு, உலகனைத்தும்
கற்பொடியென அழியுஞ் சருவசங்கார காலத்தில், அகண்டாகாரப் பெருவெளியில், தான் தனியனாகி
இலங்கித், திருநடம் பயிலுஞ் சிவபெருமான், நாவிரி கூந்தல் நல்பேய்கள் நகைசெய்ய - நீட்டிய
நாக்கையும் பரந்த கூந்தலையும் உடைய நல்ல பேய்கள் நகுதலைச் செய்ய (நட்டம் நவின்றோன்).
காவிரி கொன்றை - சோலைகளில் மலர்ந்த கொன்றை மலர்கள். கண்ணுதலான்- நெற்றிக்கண்ணன்.
பாவிரி பாடல் - ஓசை (யின்பம்) பெருகிய பாட்டு. பா - பரந்து செல்வதோரோசை (தொல்.).
பயில்வார் - பயிற்சி செய்வார். பழியோடு பாவம் இலார் -(புகழும் புண்ணியமும் உள்ளவராய்ப்)
பழியும் பாவமும் இல்லாதவராவர்.
Our Lord Civan performs His vocation whenever He wants to do. Then His
matted hair expands like fire. On His legs, the anklet clinks while dancing.
He carries fire in one of His hands. On the burial ground the devils laugh
seeing our Lord dancing. He wears garlands of cassia flowers. He has a third
eye on His forehead. Those devotees who reach the temple in Thiru-k-kadamboor
and sing the divine songs in pleasing musical tone and worship Him will be
people of no sins and flaws.
2205. தண்புனல்நீள்வயல்தோறுந்தாமரைமேலனம்வைகக்
கண்புணர்காவில்வண்டேறக்கள்ளவிழுங்கடம்பூரில்
பெண்புனைகூறுடையானைப்பின்னுசடைப்பெருமானைப்
பண்புனைபாடல்பயில்வார்பாவமிலாதவர்தாமே. 6
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப் பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.
taNpunal nIL vayaltORum tAmaraimEl anam vaika,
kaN puNar kAvil vaNTu ERa, kaL avizum kaTampUril,
peN punai kURu uTaiyAnai, pinnucaTaip perumAnai,
paN punai pAtal payilvAr pAvam ilAtavar tAmE.
பொருள்: குளிர்ந்த நீர் பரந்த வயல்கள் தோறும், தாமரை மலர்களின்மேல் அன்னப்
பறவைகள் தங்கும். கண்ணைக் கவரும் மலர்ச்சோலைகளில் வண்டு ஏறுதலால் தேன் பாயும்
திருக்கடம்பூரில், திருமேனியில் பெண்ணைப் புனைந்த கூறுடையானை, பண்ணோடு பாட
வல்லவர்கள் பாவமிலாதவராவர்; மாறாகப் புண்ணியராவர்.
குறிப்புரை: தண் புனல் - குளிர்ந்ததாகிய நீர். அனம் - அன்னப்புள். கண் புணர்கா –
கண்கள் தாமே சென்று புணர்தற்குத் தக்க அழகுமிக்க சோலை. கள் - தேன். அவிழும் -அலரும்.
வண்டுகள் ஏறுதலால் மலர்கள் தேன்நெகிழ அலரும் என்றபடி. பெண் புனை கூறு உடையான் -
'மாதியலும் பாதியன்' அர்த்தநாரீச்சுவரன். பின்னுசடை - பின்னிய சடை. பண்புனை பாடல் -
பண்களால் அழகு செய்யப்பெற்ற பாடல்கள். 'பண்ணின் பயனாம் நல்லிசை' (பெரிய. சண்டேசுர. 9).
கலந்த பாடல் என்றவாறு 'பாவம் இல்லாதவர்' - என்றதற்கு மேற்பாட்டில் உரைத்தாங்கு
உரைத்துக் கொள்க.
In the city of Thiru-k-kadamboor, there are many tanks full of cold water
and many lotus flowers. The swans in large numbers stay over the lotus flowers and
enjoy. There are many gardens full of flowering plants with dripping honey from
the petals.In such a sacred city, our Lord is in concomitant form with matted hair.
Those who sing songs in harmonious sound and worship Him will have no sins
in their life.
2206. பலிகெழுசெம்மலர்சாரப்பாடலொடாடலறாத
கலிகெழுவீதிகலந்தகார்வயல்சூழ்கடம்பூரில்
ஒலிதிகழ்கங்கைகரந்தானொண்ணுதலாளுமைகேள்வன்
புலியதளாடையினான்றன்புனைகழல்போற்றல்பொருளே. 7
பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத,
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில்,
ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண்நுதலாள் உமை கேள்வன்,
புலிஅதள் ஆடையினான்தன் புனை கழல் போற்றல் பொருளே.
pali kezu cemmalar cAra, pATaloTu ATal aRAta,
kali kezu vIti kalanta, kAr vayal cUz kaTampUril,
oli tikaz kagkai karantAn, oN nutalAL umai kELvan,
puli ataL ATaiyinAn tan punaikazal pORRal poruLE.
பொருள்: பூசைக்குப் பொருந்திய செம்மலர்கள் அடைய, பாடுதலும் ஆடுதலும் ஒழியாத
ஆரவாரம் மிக்க தெருக்கள் கலந்த, கரிய நிறமுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கடம்பூரில்
ஒலிக்கின்ற கங்கையாற்றினைச் சடையிற் கரந்தான் ஒளிதிகழ் நெற்றியுடையானாகிய
உமையின் கணவன், புலித்தோலாடையினானுடைய கழலணிந்த திருவடிகளைப் போற்றுதல்
பிறந்ததன் பயனாகும்.
குறிப்புரை: பலி -பூஜை (சேது புராணம்). செம்மலர் - செய்ய பூக்கள். பலிகெழுமலர் - பூஜைக்குப்
பொருந்திய பூக்கள். சார - அடைய. பாடலொடு ஆடல் - பாட்டும் ஆட்டும். அறாத - நீங்காத. கலி- ஒலி.
கடம்பூர். வீதியிலுள்ளார் சிவபூஜைக்குப் பொருந்திய பூக்கள் கொண்டு வந்து பூசித்துப் பாடுதலும்
ஆடுதலும் செய்பவர் என்றவாறு. செம்மலர் என்பதற்குப் பெருமையிற் சிறந்தோர் எனலுமாம் .
பாடலாடலறாத கலிகெழு வீதி கலந்த கடம்பூர், வயல்சூழ்கடம்பூர். செம்மலர் என்று பொருள்
கொள்ளின் பலி என்பது (அம்மல்லரது மெய்வலிமை குறிக்க). மாமிசம் என்றாகும். புலி அதள் ஆடை -
(பா. 3). புனை -அழகுறுத்தப்பட்ட. கழல் - கழலணிந்த திருவடிகளை. போற்றல் - துதித்தல்.
பொருள் -உடம்பின் பயன். போற்றாமை - உடம்பெடுத்ததன் பயனின்மை என்றவாறு. பிறவிப் பயன்
ஆகமங்களை உணர்ந்து சிவபிரான் திருவடி மலர்களை எப்பொழுதும் இடைவிடாமல்
போற்றுதலேயன்றிப் பிறிதில்லை. எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.
In this sacred city of Thiru-k-kadamboor, there are broad streets where
the Saiva devotees who do the Siva poojas collect very fine flowers and perform
their rituals. They sing the ritual songs and dance very happily and in the streets,
the Vedic noise is heard all over. The paddy fields are full of water always.
In such a sacred city, our Lord is manifest in the temple in Thiru-k-kadamboor.
He supports the river Ganges in His matted hair, invisible to others. He is the
consort of our goddess Uma Devi. He wears on His loins the hide of the tiger.
For those devotees praising the fame of our Lord is the only meaningful act
in their life.
2207. பூம்படுகிற்கயல்பாயப்புள்ளிரியப்புறங்காட்டில்
காம்படுதோளியர்நாளுங்கண்கவருங்கடம்பூரில்
மேம்படுதேவியொர்பாகமேவியெம்மானெனவாழ்த்தித்
தேம்படுமாமலர்தூவித்திசைதொழத்தீயகெடுமே. 8
பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்,
"மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்!" என வாழ்த்தி,
தேம் படு மா மலர் தூவித் திசை தொழ, தீய கெடுமே.
pUm paTukil kayal pAya, puL iriya, puRagkATTil
kAmpu aTu tOLiyar nALum kaN kavarum kaTampUril,
"mEmpaTu tEvi OrpAkam mEvi! emmAn!" ena vAztti,
tEm paTu mA malar tUvi, ticai toza, tIya keTumE.
பொருள்: மூங்கிலை வென்ற தோளியர் கண்ணுக்குத் தோற்ற கயல் மீன்கள் மலர்கள்
நிறைந்த படுகரில் பாயவே பறவைகள் விலகிப் பறக்கும் திருக்கடம்பூரில், புறங்காட்டில்,
சிறந்த உமாதேவியாரை ஒரு பாகத்தில் கொண்ட எம்மான் என வாழ்த்தி, தேனுள்ள பெரிய
மலர்களைத் தூவித் (திருக்கடம்பூரில் இருக்கும்) திசை நோக்கித் தொழ தீயன கெடும்.
குறிப்புரை: படுகு - படுகர், நீர்நிலை. வண்டு -வண்டர்.சிறகு - சிறகர். கரும்பு - கரும்பர்
எனவருதல் போல்வது இது. பூம்படுகரில் கயல்மீன்கள் பாயவும் புட் (பறவை)கள் இரிய (ஓட)வும்
புறங்காட்டில் தோளிர் கண் கவரும் என்க. காம்பு அடுதோள்- மூங்கிலை நீ எனக்கு ஒப்பாகாய்
என்று கொல்லும் தோள். அடுதல் - கொல்லுதல். கண்களை ஒவ்வாது தோற்றோடிக் கயல் படுகரிற்
பாய்தலும் புள் (வண்டு) இரிதலும் கூறப்பட்டன. 'கயலஞ்சப் பிறழ் கண்ணாள்' (கம்பர் மிதிலைக். 26).
'புள்ளுறை கமலவாவிப் பொருகயல் வெருவியோட வள்ளுறை கழிந்த வாள்போல் வரியுற வயங்கு
கண்ணாள்' (மேற்படி உண்டாட்டு 20). 'நறைபாய் வளமலர்வாய் அளிபடரச் சேல்பாய்வனகயல்
பாய்வன செங்கால் மடவன்னம் போல்பாய் புனல் மடவார் படிநெடுநாடு' (மேற்படி கங்கைப் 8).
இதன் பொருளமைதி புலப்பட்டிலது.
In the city of Thiru-k-kadamboor, very rich and attractive ponds are many
Inside the ponds birds of many kinds gather and live here. When the carp fish fall
into the pond in large numbers and jump, the birds fly away. In this city, very young
damsels are pretty with shoulders like bamboo's tender poles. Our Lord in this temple
is manifest very attractively, to these girls. He dances on the burial ground. When
the devotees go to Thiru-k-kadamboor and praise Him "Oh! You Lord! concomitantly one
with Your consort Umaa! Oh my Lord!" and scatter the flowers and worship Him,
their sins will vanish.
2208. திருமருமார்பிலவனுந்திகழ்தருமாமலரோனும்
இருவருமாயறிவொண்ணாஎரியுருவாகியஈசன்
கருவரைகாலிலடர்த்தகண்ணுதலான்கடம்பூரில்
மருவியபாடல்பயில்வார்வானுலகம்பெறுவாரே. 9
திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும்,
இருவரும்ஆய் அறிவு ஒண்ணா எரிஉரு ஆகிய ஈசன் -
கருவரை காலில் அடர்த்த கண்நுதலான் - கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வான்உலகம் பெறுவாரே.
tiru maru mArpil avanum, tikaztaru mA malarOnum,
iruvarum Ay, aRivu oNNA eri uru Akiya Ican-
karuvarai kAlil aTartta kaN nutalAn--kaTampUril
maruviya pATal payilvAr vAn ulakam peRuvArE.
பொருள்: திருமகள் மருவிய மார்பினை உடைய திருமாலும் பெரிய தாமரை மலர்மேல்
விளங்கும் பிரமனும் ஆகிய இருவருங்கூடி முயன்றும் அறிவதற்கு இயலாதவாறு நெருப்புப் பிழம்பாக
நின்ற ஈசன், கரியமலை போன்ற உடலைக் கொண்ட இராவணனைக் கால் விரலால் அடர்த்த நெற்றிக்
கண்ணனின், கடம்பூரில் பொருந்திய திருப்பதிகங்களைப் பயில்வோர் வானுலகத்தைப் பெறுவர்.
குறிப்புரை: திருமார்பிலவனும் -திருமகள் மருவிய மார்பினை உடைய திருமாலும், திருமறுமார்பன்
என்பது வேறு. அதில் ஸ்ரீவத்ஸம் என்பது திருமறு எனப்பட்டது. மாமலரோன் - செந்தாமரை மலரில்
வாழ்கின்ற பிரமன் ஆகிய இருவரும் என்று ஒரு சொல் வருவிக்க. அறிவொண்ணா - அறிதற்கு ஒன்றாத.
எரி உரு -தீப்பிழம்பு வடிவம். கருவரை- கரிய மலை போலும் இராவணனை. காலில் அடர்த்த
கயிலையை எடுத்தபோது திருவடிப் பெருவிரலூன்றி நெருக்கிய. காலனைக் காலாற் கடிந்த கண்ணுதலான்
எனலுமாம். பிற திருப்பதிகங்களுள், ஒன்பதாவது பாட்டில், அடிமுடி தேடிய வரலாற்றை யொட்டி
இராவணன் கயிலை எடுத்த வரலாற்றைக் கூறக்காணோம். சில பதிகங்களுள் இரண்டுங்கூறிப்பட்டில
ஆயினும், இவ்வாறு வரலாற்றை முன்பின் ஆகக் கூறவில்லை.
Our Lord in Thiru-k-kadamboor was incomprehensible to these two - Thirumaal
with goddess Lakshmi residing on his chest, and Brahma, the four-faced god Naanmugan -
both failed in their attempt to see our God. Then our Lord stood before them as a
superb tall flame of fire. Our Lord crushed Raavanan, king of Sri Lanka whose appearance
was like a black mountain. Our Lord pressed the top of the mountain with His right toe
and brought him under complete control. Our Lord of this temple resides in Thiru-k-kadamboor.
The devotees who reach this temple and sing songs on our Lord, praising Him will reach heaven.
2209. ஆடைதவிர்த்தறங்காட்டுமவர்களுமந்துவராடைச்
சோடைகள்நன்னெறிசொல்லார்சொல்லினுஞ்சொல்லகண்டீர்
வேடம்பலபலகாட்டும்விகிர்தன்நம்வேதமுதல்வன்
காடதனில்நடமாடுங்கண்ணுதலான்கடம்பூரே. 10
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல் அலகண்டீர்!
வேடம்பலபல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண்நுதலான், கடம்பூரே.
ATai tavirttu aRam kATTumavarkaLum, am tuvar ATaic
cOTaikaL, nanneRi collAr; collinum, col alakaNTIr!
vETam pala pala kATTum vikirtan, nam vEtamutalvan,
kATu atanil naTam ATum kaN nutalAn, kaTampUrE.
பொருள்: ஆடை உடுத்தலைத் தவிர்த்து தருமோபதேச வேடிக்கை காட்டும் சமணர்களும்
துவர் ஊட்டிய ஆடை போர்த்தும் சோடைகளும் நல்ல நெறி காட்டார். காட்டினாலும் அவை
மெய்ந்நெறி அல்ல. திருக்கடம்பூரில் கண்ணுதலான், 'பலப்பல வேடமாகும் பரன் நாரிபாகன்'
விகிர்தன், வேதமுதல்வன்; காட்டில் கூத்தாடுபவன்.
குறிப்புரை: ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும்- ஆடை உடுக்காமல் தர்மோபதேசம்
செய்யும் அமணர்களும் அம்துவர் ஆடைச்சோடைகள் -சிவப்பு ஊட்டிய உடைகளைத் தரித்த
வறட்சியர் (பொருளில்லாத பேச்சுடையார் என்றவாறு). நல்நெறி - நல்லவழி (ஞான மார்க்கம்).
சொல்லினும் சொல் அல - சொல்லினாலும் அவை மெய்ச்சொற்கள் அல்ல. வேடம் பலபல காட்டும்
விகிர்தன் - பலவேடமாகும். பரன் நம் வேத முதல்வன். காடதனில் - காட்டில். கள்ளி முதுகாட்டில்
ஆடிகண்டாய் (தி. 6 ப. 23 பா.4)
In this city of Thiru-k-kadamboor, the Jains, who preach their virtues, wearing no
dress and the Buddhists who preach divine knowledge speak untrue words. Our Lord took many
forms whenever needed. He is the creator of the Vedas. He dances on the burial ground.
He has a third eye on His forehead. This Lord is manifest in the temple in
Thiru-k-kadamboor city.
2210. விடைநவிலுங்கொடியானைவெண்கொடிசேர்நெடுமாடம்
கடைநவிலுங்கடம்பூரிற்காதலனைக்கடற்காழி
நடைநவில்ஞானசம்பந்தன்நன்மையாலேத்தியபத்தும்
படைநவில்பாடல்பயில்வார்பழியொடுபாவமிலாரே. 11
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர் நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.
viTai navilum koTiyAnai, veNkoTi cEr neTumATam
kaTai navilum kaTampUril kAtalanai, kaTal kAzi
naTai navil njAnacampantan nanmaiyAl Ettiya pattum,
paTai navil pATal, payilvAr paziyoTu pAvam ilArE.
பொருள்: விடை தங்கும் கொடியுடையானை, வெண்கொடிகள் கட்டப்பட்டிருக்கும் உயர்ந்த
மாடங்கள், நீண்ட வாயில்கள் கூடிய திருக்கடம்பூரில் அன்புருவானவனைக் கடலை அடுத்த
காழிமாநகரில் ஞானநெறி கூறும் ஞானசம்பந்தன் ஆக்கமாக ஏத்திப் பாடிய இப்பத்துத்
திருப்பாடல்களையும் பயில்வார் பழியொடு பாவம் இல்லாதவராவர்; மாறாகப் புகழும்
புண்ணியமும் உடையோராவர்.
குறிப்புரை: விடை நவிலும் கொடியானை -எருது பயின்ற கொடியை உடையவனை. வெண்கொடி-
வெள்ளைத் துணிக்கொடி. கடை - வாயில். இடமும், அங்காடியுமாம். காதலன் - உயிர்கட்கு அருட்காதல்
விளைப்பவன். அன்புருவானவன் எனலுமாம். அன்பே சிவம். நடை - ஞானாசாரம் நன்மை - மங்களம்.
படைநவில் பாடல். திருவருட்சாதனமாக நவின்ற பாடல்கள். படை- சாதனம். அல்லற்பட்டு
செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555). படை - நிவேதனமுமாம். இறைவன் புகழொடு படைக்கும்
பாடல் என்றார், கோவை சிவக்கவிமணி முதலியாரவர்கள், பழியொடு பாவம் இலர் (பா. 5ல்)
உரைத்தாங்கு உரைத்துக் கொள்க.
Our Lord manifested in the temple in Thiru-k-kadamboor has a flag of a bull's
picture, which represents His aspect. In this city, there are many great palaces with
tall gates and many staircases. Here the white flags always float on the flagpole.
Our Lord has an eagerness to stay in this city. Our saint Thiru-gnana-Sambandar from
Seerkaazhi, a city on the seashore, was a man of great character. He approached the
temple in Thiru-k-kadamboor, prostrated before Lord and worshipped Him. He then sang,
requesting our Lord His grace, for one and all. Those songsters who can memorise
these songs of virtue and recite them before our Lord, will get rid of all their
sins and evils in their life.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
68ஆம் பதிகம் முற்றிற்று
End of 68th Hymm
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 205 பதிக எண் 69.
69. திருப்பாண்டிக்கொடுமுடி 69. THIRU-P-PAANDI-K-KODUMUDI
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் இத்திருத்தலமானது கொடுமுடி புகைவண்டி நிலையத்திற்கு
வடக்கே 1 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி -
கரூர் -கொடுமுடி என்ற பேருந்து வழியில் பேருந்தின் மூலம் இத்தலத்தை அடையலாம். இறைவர் திருப்பெயர்
கொடுமுடி நாதர். இறைவி திருப்பெயர் பண்மொழி நாயகி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் காவிரி.
மூவர்களாலும் பாடப்பெற்ற பெருமை வாய்ந்தது. இத்தலத்திற்கு மூன்று பதிகங்கள் இருக்கின்றன.
இத்தலத்துச் சுந்தர மூர்த்தி நாயனாரது திருப்பதிகம் நெஞ்சை உருக்கும் தன்மை வாய்ந்தது.
கோயமுத்தூர் வித்துவான் கந்தசாமி முதலியாராலும் வேங்கட்ரமண தாசர் என்பவராலும் இயற்றப்பெற்ற
தலபுராணம் அச்சில் வெளிவந்துள்ளது.
பதிக வரலாறு
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருக்கொடிமாடச் செங்குன்றூரில் தங்கி வழிபட்ட
காலத்தில், அக்கொங்கு நாட்டில், 'பயின்றதனால் பனித்த குளிர் முன்னான பிணி வந்து மூள்வது
போல் முடுகுதலும்’ பரிசனங்கள் அதை அவர்க்கு அறிவித்து இறைஞ்சினர். திருவருளைத் தொழுது,
திருநீலகண்டத்தின் தியானவுறைப்பால் அக்குளிர்நோய் அடியாரை வருத்தாமல், ‘அவ்வினைக்கு
இவ்வினை ஆம்' எனத் தொடங்குந் திருப்பதிகம் பாடியருளித் தடுத்தார். அந்நாட்டினர் எல்லோர்க்கும்
அந்நோய் பற்றாது நீங்கிற்று. பின் பல தலங்களைப் பணிந்து சென்று திருப்பாண்டிக் கொடுமுடியை
அடைந்து வழிபட்டுப் பாடி மகிழ்ந்து சாத்தியது இவ்வளத் தமிழ்மாலை.
திருச்சிற்றம்பலம்
2211 பெண்ணமர்மேனியினாரும்பிறைபுல்குசெஞ்சடையாருங்
கண்ணமர்நெற்றியினாருங்காதமருங்குழையாரும்
எண்ணமருங்குணத்தாருமிமையவரேத்தநின்றாரும்
பண்ணமர்பாடலினாரும்பாண்டிக்கொடுமுடியாரே. 1
பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு செஞ்சடையாரும்,
கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,
எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,
பண் அமர் பாடலினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.
peN amar mEniyinArum, piRai pulku cenjcaTaiyArum,
kaN amar neRRiyinArum, kAtu amarum kuzaiyArum,
eN amarum kuNattArum, imaiyavar Etta ninRArum,
paN amar pATalinArum--pANTikkoTu muTiyArE.
பொருள்: மாதினை ஒருபாகம் கொண்ட திருமேனியாரும், பிறை பொருந்திய சிவந்த
சடையுடையவரும், கண் பொருந்திய நெற்றியை உடையவரும், காதில் பொருந்திய குழை உடையவரும்,
எட்டு என்னும் குணத்தை உடையவரும் தேவர்களும் வணங்கிப் பணிந்து துதிக்க நின்றவரும்,
பண் பொருந்திய திருப்பாடல்களாகி நின்றாரும் (யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.
குறிப்புரை: பெண் அமர் மேனியினார் - அர்த்தநாரீச்சுவரர். பிறைபுல்கு செஞ்சடையார் -
சந்திரசேகரர். கண்ணமர் நெற்றியினார்- -பால நேத்திரர். காது அமரும் குழையார் - குழைக்காதனார்.
எண் அமரும் குணத்தார் -எண் குணத்தார். இமையவர் ஏத்த நின்றார் - தேவர் தொழப்படுவார்.
பண் அமர் பாடலினார் -பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி (தி.6 ப.5 பா.57). 'பண் துளு'கப்
பாடல் பயின்றாய் போற்றி' (தி.6 ப.5 பா.7). 'பண்ணினார் பாடலாகிப் பழத்தினில் இரதமாகி ...
அனைத்தும் ஆகி' (தி.4 ப.70 பா.4). இத்தலத்தின் தேவியார் திருநாமம் 'பண்மொழியம்மை'.
'வேதமே பண்ணுளார்' என (தி.2 ப.28 பா.3). முற்போந்ததும் ஈண்டறியத்தக்கது.
Our Lord Civan shares His left half of His body with the consort here. He is
therefore called Arthanaareeswarar. He is also in the concomitance form. On His matted
hair He retains the moon. In His forehead He has a third eye. He wears in one of His
ears a special earring made out of tender leaf and called Kuzhai. He is the Supreme
Being with eight attributes. The devas praise and worship Him. He used to chant
various divine songs in musical tone.
2212. தனைக்கணிமாமலர்கொண்டுதாள்தொழுவாரவர்தங்கள்
வினைப்பகையாயினதீர்க்கும்விண்ணவர்விஞ்சையர்நெஞ்சில்
நினைத்தெழுவார்துயர்தீர்ப்பார்நிரைவளைமங்கைநடுங்கப்
பனைக்கைப்பகட்டுரிபோர்த்தார்பாண்டிக்கொடுமுடியாரே. 2
தனைக் கணி மா மலர் கொண்டு தாள் தொழுவார் அவர் தங்கள்
வினைப்பகை ஆயின தீர்க்கும் விண்ணவர்; விஞ்சையர்; நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார்; நிரை வளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டு உரி போர்த்தார் - பாண்டிக்கொடுமுடியாரே.
tanaik kaNi mA malar koNTu tAL tozuvAr avar tagkaL
vinaippakai Ayina tIrkkum viNNavar; vinjcaiyar; nenjcil
ninaittu ezuvAr tuyar tIrppAr; nirai vaLai magkai naTugkap
panaikkaip pakaTTu uri pOrttAr-pANTikkoTu muTiyArE.
பொருள்: கொன்றையின் அழகிய மலர் கொண்டு தன் தாள் தொழுவார்களின்
தீவினைகளாகிய பகையினை முழுதும் தீர்க்கும் மேலானவன்; தேவர்கள், வித்தியாதரர்கள்
மற்றும் நெஞ்சில் நினைப்பவர்கள் மனத்துயர் தீர்ப்பவர்; வரிசையாக வளையல்கள்
அணிந்த உமையம்மை அஞ்சப் பனை மரம் போன்ற நீண்ட கரத்தையுடைய யானையின்
தோலினை உரித்துத் திருமேனியின் மேற்போர்த்தார். அவர் யாரெனில் திருப்பாண்டிக்
கொடுமுடியாரே.
குறிப்புரை: கணி- கொன்றை. விண்ணவர்- சிவபெருமான். தன்னைக் கொன்றையின்
சிறந்த அழகிய மலர் கொண்டு திருவடிப் பூஜை புரிவார்களுடைய வினையாகிய (வீட்டுப்)
பகையைத் தீர்க்கும் விண்ணவன் என்றவாறு. விண்ணவர் என்றதற்கு ஏற்பத் தமை என்று
இருத்தல் வேண்டுமாயினும், ஒருமைக்கும் பன்மைக்கும் உரிய கடவுளைக் கூறலின் குற்றமாகாது.
'கொன்றைசூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோம்' என்ற ஆசிரியர். நமக்கும்
அதையே உபதேசித்தருள்வதுணர்க. விஞ்சையர் -நெஞ்சில் நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார்.
விஞ்சையர் -வித்தியாதரர். சிவபெருமானைக் குறித்ததாகக் கொண்டு ஞானசொரூபர் எனலும் ஆம்.
விஞ்சை - வித்தை. ஞானம், நிரைவளை மங்கை - வரிசையுற்ற வளையல் அணிந்த உமாதேவியார்.
பனை, கை, பகடு - பனை போலும் துதிக்கையை உடைய யானை. உரி - தோல்.
Our Lord in Thiru-p-paandi-k-kodumudi chases the adverse, bitter grief and
sufferings of those devotees who worship Him with cassia flowers. He is such a Chief
Supreme Being. He is the embodiment of divine knowledge. Those servitors who
remember our Lord in their mind and rise to worship Him, by the grace of our Lord,
will completely be free of their distress. Our goddess Umaa feared when she saw
a fierce elephant with trunk like a palmyrah tree rushing towards her. Our Lord
killed the elephant and removed its hide and covered His body with that hide.
2213. சடையமர்கொன்றையினாருஞ்சாந்த வெண்ணீறணிந்தாரும்
புடையமர்பூதத்தினாரும்பொறிகிளர்பாம்பசைத்தாரும்
விடையமருங்கொடியாரும்வெண்மழுமூவிலைச்சூலப்
படையமர்கொள்கையினாரும்பாண்டிக்கொடுமுடியாரே. 3
சடை அமர் கொன்றையினாரும், சாந்த வெண்நீறு அணிந்தாரும்,
புடை அமர் பூதத்தினாரும், பொறி கிளர் பாம்பு அசைத்தாரும்
விடை அமரும் கொடியாரும், வெண்மழு மூஇலைச்சூலப்
படை அமர் கொள்கையினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.
caTai amar konRaiyinArum, cAnta veN nIRu aNintArum,
puTai amar pUtattinArum, poRi kiLar pAmpu acaittArum
viTai amarum koTiyArum, veNmazu mU ilaiccUlap
paTai amar koLkaiyinArum--pANTikkoTu muTiyArE.
பொருள்: சடையில் கொன்றையைச் சூடியவரும், மணமுள்ள வெண்ணீற்றினை
அணிந்தவரும் பக்கத்தில் பூத கணங்களை உடையவரும், புள்ளிகள் விளங்குகின்ற பாம்பினை
அரையிற் கட்டியவரும், எருது எழுதிய கொடியுடையவரும், வெண்ணிற மழுவினையும்
மூவிலைச் சூலத்தினையும் படையாகக் கொள்வதில் விருப்பம் உடையவரும் ஆகிய
(அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.
குறிப்புரை: சாந்தம் வெண்நீறு - சாந்தமென நீறணிந்த சைவர் (தி. 2 ப. 71 பா. 8). புடை - பக்கம்.
பூதத்தினார் - பூதகணங்களை உடையவர். பொறி - புள்ளிகள். கிளர் - விளங்குகின்ற. அசைத்தார் -
கட்டியவர். விடை - எருது. கொடியார்- துவசம் ஏந்தியவர், இடபத் துவசம் உயர்த்தியவர். மழுவும்
மூவிலைச் சூலப்படையும். அமர் கொள்கையினார் - விரும்புங் கோட்பாடுடையவர்.
Our Lord who is manifest in the temple in Thiru-p-paandi-k-kodumudi adorns
His matted hair with strings of cassia flowers. He smears His body with holy ashes
as sandal paste. He maintains an army of ghosts. He wears on His loin the dotted
snake and uses it as a belt. He keeps a flag with a signal of the bull. He uses
the trident and white axe as His weapons of war.
2214. நறைவளர்கொன்றையினாரும்ஞாலமெல்லாந்தொழுதேத்தக்
கறைவளர்மாமிடற்றாருங்காடரங்காக்கனலேந்தி
மறைவளர்பாடலினோடுமண்முழவங்குழல்மொந்தை
பறைவளர்பாடலினாரும்பாண்டிக்கொடுமுடியாரே. 4
நறை வளர் கொன்றையினாரும்; ஞாலம்எல்லாம் தொழுது ஏத்த
கறை வளர் மா மிடற்றாரும்; காடு அரங்கா, கனல் ஏந்தி,
மறை வளர் பாடலினோடு, மண்முழவம், குழல், மொந்தை
பறை வளர் பாடலினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.
naRai vaLar konRaiyinArum; njAlam ellAm tozutu Etta,
kaRai vaLar mA miTaRRArum; kATu aragkA, kanal Enti,
maRai vaLar pATalinOTu, maNmuzavam, kuzal, montai
paRai, vaLar pATalinArum--pANTikkoTumuTiyArE.
பொருள்: தேன் மிகுந்த கொன்றை மலரை அணிந்தவரும், உலகமெல்லாம் தொழுது வழிபடும்
கறையுடைய கரிய மிடற்றினை உடையவரும், இடுகாடே ஆடும் அரங்காக, அனலினை ஏந்திக்
கொண்டு வேதப் பாடலினொடு மார்ச்சனையுடைய முழவம் குழல் மொந்தை பறை ஒலிக்கப்
பாடலினாரும் ஆகிய (அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.
குறிப்புரை: நறை - தேன். ஞாலம் - பூமி. கறை - நச்சுக்கறுப்பு. மா- கரிய, அழகுமாம்.
மிடற்றார் - கண்டத்தையுடையவர். அரங்கு ஆ- நாடகசபையாக. கனல் - தீ. மறைவளர் பாடல் -
வேதப்பாடல். மண் முழவம்- மார்ச்சனையையுடைய முழா. குழல்-வேய்ங்குழல். மொந்தை -
ஒரு கட்பறை. பறை- வாத்தியம். சொல் எனலுமாம்.
Our Lord is manifest in the temple in Thiru-p-paandi-k-kodumudi. He has adorned
His body with garlands of flowers. The entire people in the cosmos worshipped Him as He
imbibed the poison and saved the entire universe, hence His throat is dark blue in colour.
Our Lord's avocation is to dance on the burial ground using it as a platform for dance;
while dancing He holds fire in one of His hands. And He chants the song of the four
Vedas along with the music created by tabla, flute and drum. He sings to match the
drum voices and dances well.
2215. போகமுமின்பமுமாகிப்போற்றியென்பாரவர்தங்கள்
ஆகமுறைவிடமாக அமர்ந்தவர்கொன்றையினோடும்
நாகமுந்திங்களுஞ்சூடிநன்னுதல்மங்கைதன்மேனிப்
பாகமுகந்தவர்தாமும்பாண்டிக்கொடுமுடியாரே. 5
போகமும் இன்பமும் ஆகி, "போற்றி!" என்பார் அவர்தங்கள்
ஆகம் உறைவுஇடம் ஆக அமர்ந்தவர் - கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி, நன்நுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே.
pOkamum inpamum Aki, "pORRi!" enpAr avar tagkaL
Akam uRaivu iTam Aka amarntavar--konRaiyinOTum
nAkamum tigkaLum cUTi, nannutal magkaitan mEnip
pAkam ukantavar tAmum--pANTikkoTumuTiyArE.
பொருள்: (கட்டுண்ட) உயிருக்குச் சிற்றின்பமும், (முத்தியில்) வீட்டின்பமாகிய சிவபோகமுமாகி,
'போற்றி' என வணங்குவோரின் உடல் இடமாகக் கொண்டு அமர்ந்தவர், கொன்றையினுடன் பாம்பையும்
பிறையையும் சூடி அழகிய நெற்றியுடைய உமை நங்கையைப் பாகமாக விரும்பியவர்தாம், ஆகிய
(அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.
குறிப்புரை: போகமும் இன்பமும் ஆகி -பெத்தத்தில், தநுகரண புவனங்களொடு சேர்த்து நான்காவதாக
எண்ணப்படும் போகமும், அப்போகாநுபவம் பற்றி உயிர்க்கு எய்தும் சிற்றின்பமும், முத்தியில் சிவபோகமாம்
சிவாநந்தமும் ஆகி. ஆகம் - சுத்தியால் ஓங்கிய தேகம். உறைவு இடம் - வாழ்தலையுடைய இடம், கோயில்.
'ஊன் உடம்பு ஆலயம் (திருமந்திரம்). 'ஓங்குடலம் திருக்கோயில்' (ஞான பூஜா விதி 9). நாகம் - பாம்பு.
நல்நுதல் மங்கை- அழகிய நெற்றியையுடைய உமாதேவியார். மேனிப்பாகம்- திருமேனியிற்பாதி.
உகந்தவர் -விரும்பியவர்.
Our Lord Civan who manifests Himself in Thiru-p-paandi-k-kodumudi has eight stages
of happiness as well as the final joy that arises out of these. Those devotees who pray
to our Lord and adore Him will enjoy the state of our Lord staying in their body. He wears
cassia flowers, snakes and the moon - all in His matted hair. He feels veryhappy to share
half of His body with His consort Uma Devi and be a concomitant Supreme Being.
2216. கடிபடுகூவிளமத்தங்கமழ்சடைமேலுடையாரும்
பொடிபடமுப்புரஞ்செற்றபொருசிலையொன்றுடையாரும்
வடிவுடைமங்கைதன்னோடுமணம்படுகொள்கையினாரும்
படிபடுகோலத்தினாரும்பாண்டிக்கொடுமுடியாரே. 6
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும்
பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும்
வடிவு உடை மங்கைதன்னோடு மணம் படு கொள்கையினாரும்,
படிபடு கோலத்தினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.
kaTi paTu kUviLam mattam kamaz caTaimEl uTaiyArum,
poTipaTa muppuram ceRRa porucilai onRuTaiyArum,
vativu uTai magkai tannOTu maNam paTu koLkaiyinArum,
paTi paTu kOlattinArum--pANTikkoTu muTiyArE.
பொருள்: மணமுள்ள வில்வம் ஊமத்தை ஆகிய பூக்களின் மணம் கமழுகின்ற சடையைச்
சிரசின்மேல் உடையவரும், திரிபுரம் மூன்றும் சாம்பலாக எரித்து அழித்த போர்வில்லொன்று உடையாரும்,
அழகிய மங்கை தன்னோடு கூடிய கொள்கையினை உடையவரும் எல்லா உருவங்களுக்கும் காரணமான
வடிவத்தை உடையவரும் ஆகிய (அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.
குறிப்புரை: கடி- மணம். கூவிளம்- வில்வம். மத்தம் - ஊமத்தை. கமழ்-மணக்கின்ற. செற்ற- அழித்த.
பொருசிலை -போர்வில். 'வடிவுடை மங்கை'. படிபடு கோலத்தினார் - படியாகப் பொருந்திய கோலம்.
எல்லா உருவங்களுக்கும் காரணவுருவம் இறைவனுடையதே. ‘யாதேனும் காரணத்தால் எவ்வுலகில்
எத்திறமும் மாதேயும் பாகம் இலச்சினையே ஆதலினால்' (திருக்களிறு 82), காரியமான எல்லாப்
படிக்கும் இறைவனது கோலமே காரணப் படியாயிற்று. படி - ஒப்பு. பிரதிசத்தம்.
Our Lord Civan who is manifest in Thiru-p-paandi-k-kodumudi temple wears bael leaves
and datura flowers on His matted hair. He held the Meru mountain as His bow and destroyed the
three flying forts. He married the most beautiful Paarvathi Devi. The souls before taking
the shape of a body originate from His form.
2217. ஊனமர்வெண்டலையேந்தியுண்பலிக்கென்றுழல்வாரும்
தேனமரும்மொழிமாதுசேர்திருமேனியினாரும்
கானமர்மஞ்ஞைகளாலுங்காவிரிக்கோலக்கரைமேல்
பானலநீறணிவாரும்பாண்டிக்கொடுமுடியாரே. 7
ஊன் அமர் வெண்தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும்,
தேன் அமரும்மொழிமாது சேர் திருமேனியினாரும்,
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக் கரைமேல்
பால்நலநீறு அணிவாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.
Un amar veNtalai Enti uN palikku enRu uzalvArum,
tEn amarum mozimAtu cEr tirumEniyinArum,
kAn amar manjnjaikaL Alum kAvirik kOlak karaimEl-
pAl nala nIRu aNivArum--pANTikkoTu muTiyArE.
பொருள்: மாமிசம் பொருந்திய வெள்ளை மண்டையோட்டை ஏந்தி உண்ணுகின்ற
பிச்சைக்கென்று திரிவாரும், தேன்போல இனிமை பயக்கும் மொழிபேசும் பண்ணார் மொழியம்மை
கலந்த திருமேனியுடையாரும் முல்லை நிலத்தில் பொருந்திய மயில்கள் ஆடும் காவிரியின்
அழகிய கரைமேல் பால் போன்ற வெண்ணீறு அணிவாரும் ஆகிய (அவர் யாரெனில்)
திருப்பாண்டிக் கொடுமுடியாரே.
குறிப்புரை: ஊன் - மாமிசம். தலை- பிரமகபாலம். பலி - பிச்சை. உழல்வார் - திரிவார்.
தேன் அமரும் மொழி மாது- பண்மொழியம்மை, இத்தலத்து தேவியின் திருநாமம். தேன்... திருமேனியினார் -
அர்த்தநாரீச்சுர வடிவுடையவர். கான் - காடு. மஞ்ஞைகள் - மயில்கள். கோலம் - அழகு. பால்நலம் நீறு
- பால்போலும் நன்மைகளையுடைய நீறு.
Our Lord Civan who has manifested Himself in Thiru-p-paandi-k-kodumudi goes
round the cosmos to accept alms in the bowl. He carries a skull which smells bad.
He is the concomitant Supreme Being sharing half of His body with His consort
Paarvathi Devi whose words are as sweet as honey. He smears His body with holy
ashes, which is as white as milk. He is manifested on the bed of Cauvery river
where peacocks dance in the forest area of the river bed.
2218. புரந்தரன்தன்னொடுவானோர்போற்றியென்றேத்தநின்றாரும்
பெருந்திறல்வாளரக்கன்னைப்பேரிடர்செய்துகந்தாரும்
கருந்திரைமாமிடற்றாருங்காரகில்பன்மணியுந்திப்
பரந்திழிகாவிரிப்பாங்கர்ப்பாண்டிக்கொடுமுடியாரே. 8
புரந்தரன்தன்னொடு வானோர் "போற்றி!” என்று ஏத்த நின்றாரும்,
பெருந்திறல் வாள் அரக்க(ன்)னைப் பேர் இடர் செய்து உகந்தாரும்,
கருந்திரை மா மிடற்றாரும் - கார் அகில் பல்மணி உந்திப்
பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக்கொடுமுடியாரே.
purantaran tannoTu vAnOr, "pORRi!" enRu Etta ninRArum,
peruntiRal vAL arakkan(n)naip pEr iTar ceytu ukantArum,
karuntirai mA miTaRRArum--kAr akil palmaNi untip
parantu izi kAvirip pAgkarp pANTikkoTu muTiyArE.
பொருள்: இந்திரன் தன்னோடு வானவர்கள் 'போற்றி' என்று வழிபட நின்றவரும், பேராற்றல்
வாய்ந்த வாளை ஏந்திய அரக்கனைப் பெருந்துன்பப்படச் செய்து பின் விரும்பி அருளியவரும்,
கருங்கடல் நஞ்சினை உண்ட கரிய மிடற்றை உடையவரும், (யாரெனில்) கரிய அகில், பன்மணிகள்
முதலியவற்றை அடித்துக் கொண்டு பரந்து பாயும் காவிரியின் பாங்கரில் திருப்பாண்டிக் கொடுமுடியாரே.
குறிப்புரை: புரந்தரன் - இந்திரன். வானோர் - தேவர். இந்திரனோடு தேவர்கள் சிவபிரானைப்
போற்றி போற்றி என்று ஏத்தும் முதன்மை உணர்த்தப்பட்டது. பெருந்திறல் -மிக்க வலிமை. வாள் - கொடுமை.
வாளை ஏந்திய அரக்கன் (இராவணன்) எனலுமாம். பேர் இடர்- மலையைப் பேர்க்கும் துன்பம். பெரிய துன்பம்.
கருந்திரை - கரிய கடல் நஞ்சு. திரை என்பது கடலுக்கு சினையாகு பெயர். கடல் என்பது நஞ்சுக்கு இடவாகு
பெயர். திரை இருமடியாகு பெயர். மா - கரிய, அழகிய. மிடற்றார் - கண்டத்தினார். கார் அகில்-கரிய அகில்
மரத்தினையும். பல்மணி- பலமணிகளையும். உந்தி - செலுத்தி. பரந்து -- பரவி. இழி-ஒழுகும். பாங்கர் - பக்கம்.
The demigod Indra and all other celestials pray before our Lord and say 'glory to Thee'.
Raavanan was the greatest warrior. Our Lord smashed his heads and shoulders and annihilated his
mightiness. Later when Raavanan begged pardon our Lord excused him and graced him. He imbibed
the black poison and kept it permanently inside His throat. The river Cauvery brings along with
its water the black eaglewood and all kinds of gems in the fast and gushing water. By the side
of the river our Lord is manifested.
2219. திருமகள்காதலினானுந்திகழ்தருமாமலர்மேலைப்
பெருமகனும்மவர்காணாப்பேரழலாகியபெம்மான்
மருமலிமென்மலர்ச்சந்துவந்திழிகாவிரிமாடே
பருமணிநீர்த்துறையாரும்பாண்டிக்கொடுமுடியாரே. 9
திருமகள்காதலினானும், திகழ்தரு மா மலர்மேலைப்
பெருமகனும்(ம்), அவர் காணாப் பேர்அழல் ஆகிய பெம்மான்
மரு மலி மென்மலர்ச் சந்து வந்து இழி காவிரிமாடே
பரு மணி நீர்த்துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே.
tirumakaL kAtalinAnum, tikaztaru mA malar mElaip
perumakanum(m), avar kANAp pEr azal Akiya pemmAn-
maru mali menmalarc cantu vantu izi kAviri mATE
paru maNi nIrttuRai Arum pANTikkoTu muTiyArE.
பொருள்: திருமகளின் காதலரான திருமாலும் தாமரை மலர் மேல் இருக்கும் பிதாமகனான
பிரமனும் காண இயலாதவாறு பேரழலாக நின்ற பெருமான் (யாரெனில்) மணம் மலிந்த மென்
மலர்களும் சந்தனமும் கொண்டு வந்து பாய்கின்ற காவிரியின் பக்கத்தில் பெரிய நீர்த்துறை
பொருந்திய பாண்டிக் கொடுமுடியாரே.
குறிப்புரை: திருமகள் காதலினான்- இலக்குமி காதலரான திருமால். திகழ்தரு- விளங்குகின்ற.
மாமலர் - தாமரைப்பூ. மேலை -- மேலிருத்தலையுடைய. பெருமகன் - பிதாமகன் (பிரமன்). அழல் - தீ.
மரு - மணம். மலி - மிக்க. சந்து - சந்தனமரம். மாடு- பக்கம். பரு - பருத்த. மணித்துறை- நீர்த்துறை.
துறைமணி உம் என்றும் துறை ஆரும் என்றும் கொள்ளலாம். பெம்மான் கொடுமுடியாரே என்க.
துறை ஆரும் பாண்டிக்கொடுமுடி.
The demigod Thirumaal, husband of goddess Lakshmi, and Brahma who stays in the
lotus flower - both failed in their attempt to see our Lord's feet and head. At that
moment our Lord stood before these two as a very big and tall superb column of fire.
This Lord is manifested on the banks of the Cauvery river which brings along with its
water, sweet smelling soft flowers, sandalwood logs etc. He stays in Thiru-p-paandi-k -
kodumudi as the Chief Lord.
2220. புத்தரும்புந்தியிலாதசமணரும்பொய்ம்மொழியல்லால்
மெய்த்தவம்பேசிடமாட்டார்வேடம்பலபலவற்றால்
சித்தருந்தேவருங்கூடிச்செழுமலர்நல்லனகொண்டு
பத்தர்கள்தாம்பணிந்தேத்தும்பாண்டிக்கொடுமுடியாரே. 10
புத்தரும், புந்தி இலாத சமணரும், பொய்ம்மொழிஅல்லால்
மெய்த்தவம் பேசிடமாட்டார்; வேடம்பலபலவற்றால்
சித்தரும் தேவரும் கூடி, செழு மலர் நல்லன கொண்டு,
பத்தர்கள் தாம் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே.
puttarum, punti ilAta camaNarum, poymmozi allAl
meyttavam pEciTamATTAr; vETam pala palavaRRAl
cittarum tEvarum kUTi, cezu malar nallana koNTu,
pattarkaL tAm paNintu Ettum pANTikkoTu muTiyArE.
பொருள்: புத்தர்களும் அறிவிலாத சமணரும் பொய்ம்மொழியல்லால் மெய்ம்மைத் தவம் பற்றி
எதுவும் பேசமாட்டார்கள். திருவேடம் பலபலவற்றால் சித்தர்களும் தேவர்களும் கூடிச் செழுமையான
மலர்களில் நல்லன கொண்டு பத்தர்களாகப் பணிந்தேத்தும் பாண்டிக் கொடுமுடியாரே.
குறிப்புரை: புந்தி - அறிவு. மாட்டார்- வன்மையில்லாதவர். வேடம்பலபலவற்றால் - சிவமூர்த்தம்
மகேசுரமூர்த்தம் எனப் பற்பலவற்றால். சித்தர்- சித்துக்களில் வல்லவர். செழுமையுடைய நல்ல
மலர்களைக் கொண்டு பத்தர் (அன்பர்). சித்தர், தேவர் எல்லோரும் ஏத்தும் தலம்.
The Jains and Buddhists always speak falsehood. They never speak the true divine
words. Our Lord will have several forms. Siddhars, devas, devotees and all other servitors
bring fresh flowers in large quantities and strew them on the holy feet of our Lord and
prostrate before Him. This Lord is our Thiru-p-paandi-k-kodumudi Supreme Being.
2221. கலமல்குதண்கடல்சூழ்ந்தகாழியுள்ஞானசம்பந்தன்
பலமல்குவெண்டலையேந்திப்பாண்டிக்கொடுமுடிதன்னைச்
சொலமல்குபாடல்கள்பத்துஞ்சொல்லவல்லார்துயர்தீர்ந்து
நலமல்குசிந்தையராகிநன்னெறியெய்துவர்தாமே. 11
கலம் மல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
பலம் மல்கு வெண்தலைஏந்தி பாண்டிக்கொடுமுடி தன்னைச்
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து,
நலம் மல்கு சிந்தையர் ஆகி, நன்னெறி எய்துவர் தாமே.
kalam malku taN kaTal cUznta kAziyuL njAnacampantan,
palam malku veNtalai Enti pANTikkoTu muTitannaic
cola malku pATalkaL pattum colla vallAr, tuyar tIrntu,
nalam malku cintaiyar Aki, nanneRi eytuvar tAmE.
பொருள்: மரக்கலங்கள் மிகுந்த கடலால் சூழப்பெற்ற காழிநகருள் திருஞானசம்பந்தன்
பயன் நிறைந்த வெண்டலை ஏந்தியும் பாண்டிக் கொடுமுடியாகிய தன்னைப் பாடிய சொல்லச்
சொல்ல இன்பம் மல்கும் திருப்பாடல்கள் பத்தினையும் சொல்ல வல்லார் துயர்கள் நீங்கிப்
பேரின்பம் நிறைந்த சிந்தையராகி நன்னெறியாகிய ஞானமார்க்கத்தை எய்துவர்.
குறிப்புரை: கலம் - மரக்கலம். கடலில் தோணியாக மிதந்த காழியாதலின் 'கடல் சூழ்ந்த
காழி' என்றார். பலம் - பயன். வலிமையுமாம். தலை - பிரமகபாலம். சொல- சொல்ல, பாட.
சொல்லச்சொல்ல மல்கும் பாடல்கள் - நலம் - பேரின்பம். நன்னெறி - ஞானமார்க்கம்.
Our saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi city which is bordered
with cool sea full of boats and ships anchored therein. Our Lord of Thiru-p-paandi-k-
kodumudi carries in His hand white human skull for the benefit of the souls on the earth,
and is manifested in the temple. Our saint went to this temple, worshipped Him and sang
these sacred songs on His praise. Those scholars who can memorise these songs and recite
them before our Lord will get rid of their sufferings, will become virtuous and will
attain divine life.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
69ஆம் பதிகம் முற்றிற்று
End of 69th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 206 பதிக எண்- 70
70. திருக்கழுமலம்-திருச்சக்கரமாற்று 70. THIRU-K-KAZHU-MALAM
பண் : காந்தாரம் Pam: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருக்கழுமலம் என்னும் தலமானது சீகாழி என்னும் தலமாகும். காளி, சிதம்பரத்தில்
நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, இத்தலத்தில் இலிங்கமொன்றை எழுந்தருளுவித்து
வழிபட்டுப் பேறுபெற்றமையால் இது காளிபுரம் என்னும் பெயர் எய்திற்று. ஸ்ரீகாளி என்னும் பெயரே
சீகாழி என மருவியது. ஸ்ரீபாதம் - சீபாதம். ஸ்ரீமாந் - சீமான். சென்னைப் பட்டினம், மயிலாப்பூர்,
திருவல்லிக்கேணி, திருவேட்டீசுவரன்பேட்டை, இராயப்பேட்டை, கோமளேசுவரன் பேட்டை, இராயபுரம்,
எழும்பூர் முதலான பல ஊர்களையும் சேர்த்து இக்காலம் சென்னை என வழங்குவதுபோல, பிரமபுரம்,
வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம்,
கழுமலம் என்னும் பன்னிரண்டு திருப்பெயர்களைத் தனித்தனியே கொண்ட பன்னிரண்டு தலங்களும்
வெவ்வேறாய் இருந்து வழங்கிவரப் பெற்ற பதிகளைச் சீகாழி என ஒரு தலத்தின் பெயரைச்
சொல்லுதலாலே ஏனையப் பதினொன்றையும் உணர்த்தும் வழக்கம் நேர்ந்தது.
இரண்டாவது திருமுறையுள் காழி, கொச்சைவயம், சிரபுரம், பிரமபுரம், புகலி, பூந்தராய்
என்னும் ஆறு மட்டும் உள்ளன. இவற்றுள் பிரமபுரம் (பிரம்மாவால் பூசிக்கப்பெற்றது) சீகாழி பெரிய
கோயிலுள் பிரமேசர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை உடைய பகுதியாகும் . தோணிபுரம்
என்பது பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணம் பற்றியதாகும். இது சீகாழி பெரிய
கோயிலில் தோணியப்பர் பெரிய நாயகியுடன் எழுந்தருளியிருக்கும் தோணி வடிவாய் அமைந்த
திருக்கோயில் உள்ள பகுதியாகும்.
மயிலாடுதுறை- சிதம்பரம் பாதையில் சீகாழி தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே
சுமார் 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. மயிலாடுதுறை- சிதம்பரம் பேருந்துச் சாலையில் உள்ளது.
இது காவிரிக்கு வடகரையில் பதினான்காவது தலமாகும். பிரமபுரத்தில் இறைவரது திருப்பெயர்
பிரமபுரீசுவரர். இறைவியாரது திருப்பெயர் திருநிலைநாயகி. தோணிபுரத்தில் இறைவரது
திருப்பெயர் தோணியப்பர். இறைவியாரது திருப்பெயர் பெரிய நாயகி. தீர்த்தம் பிரமதீர்த்தம்.
இது வடக்குக் கோபுர வாயிலுக்குத் தென்கிழக்கில், திருநிலை அம்மையார் கோயில் திருமுன்புள்ளது.
திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு ஞானப்பால் ஊட்டப் பெற்றது இத்தீர்த்தக் கரையில்தான்.
இதுவன்றி, சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காளிதீர்த்தம், வைணவ தீர்த்தம், இராகு தீர்த்தம்,
ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிரதீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கெளதம தீர்த்தம்,
வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம்,
பதினெண்புராண தீர்த்தம், புறவநதி, கழுமலநதி, விநாயகநதி என்னும் தீர்த்தங்கள் இருக்கின்றன.
திருஞானசம்பந்தப் பெருந்தகையார் திருஅவதாரஞ் செய்தருளப் பெற்ற பதி இது. அவர் மூன்றாம்
ஆண்டில் நீராடத் தந்தையாருடன் சென்று, பிரமதீர்த்தக் கரையில் பசித்திருக்க, அம்மையப்பரால்
ஞானப்பால் ஊட்டப்பெற்ற பெருமை வாய்ந்தது. ஞானசம்பந்தப் பெருந்தகையாருடைய பெருமையைக்
கேள்வியுற்ற திருநாவுக்கரசு நாயனார் சீகாழிக்கு எழுந்தருளிவந்து, அவரை வணங்கி, அவருடைய
நட்பைப் பெற்றதோடு அவரால் அப்பர் என்னும் திருநாமத்தைப் பெற்ற சிறப்புடைய பதி இது.
சுந்தரமூர்த்தி நாயனார் சீகாழிக்கு எழுந்தருளியபோது, இது ஞானசம்பந்தப் பெருந்தகையார்
அவதரித்த திருப்பதி என்று மிதித்தற்கு அஞ்சி நகர்ப்புறத்து நின்று பாட இறைவர் அங்குக் காட்சி
தரக்கண்ட பெருமை வாய்ந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணர் எழுந்தருளி ஆளுடைய பிள்ளையாரை
வணங்கி அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து அவருடன் இருக்கும் பெருமை பெற்றது.
கணநாத நாயனார் அவதரித்த திருப்பதியும் இதுவே.
இத்தலத்தில் திருத்தோணியப்பர் பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து சிவஞானச்
செல்வத்தை அளிப்பதற்குக் குரு வடிவமாய் அமர்ந்திருக்கின்றார். பஞ்சகிருத்தியங்களைச்
செய்தருளுதற்குப் பிரமபுரீசுவரர் மூலலிங்கமாய் எழுந்தருளியிருக்கிறார். திருத்தோணிக்குத்
தென்பால் சட்டைநாதர் பேரின்ப சித்திகளை அருளுதற்பொருட்டுச் சங்கம வடிவாய்
விளங்குகின்றார். ஆதலால் இது குருலிங்கசங்கம பதியாய்ச் சிறந்து விளங்குவது.
சந்திரன், முருகவேள், ஆதிசேடன் முதலானவர்களும் பூசித்துப் பேறு பெற்ற சிறப்பினை
உடையது. மூவர் முதலிகள் பாடிய எழுபத்தொரு பதிகங்களை உடைய தனிச்சிறப்பு
இப்பதிக்கு உரியதாகும்.
இக்காழியில் முக்கிய தெய்வமாக விளங்குகிறவர் சட்டை நாத சுவாமி. இவரது மூர்த்தம்
சிவமூர்த்தங்களுள் ஒன்று. இரணியனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து அதன் தோலை
சட்டையாகப் போர்த்துக் கொண்ட காரணத்தால் இவர் இப்பெயர் பெற்றார். ஒவ்வொரு
வெள்ளிக்கிழமை தோறும் அர்த்த சாமத்தில் இவருக்கு சிறந்த வழிபாடு நடைபெற்று வருகின்றது.
இங்கு வடுகநாதருக்கு நித்தியபூசையும், வெள்ளிக்கிழமைதோறும் நைமித்திக பூசையும் ,
சித்திரை மாதத்துப் பரணியில் விசேட பூசைகளும் நடைபெற்று வருகின்றன. சிவபெருமான்
உமாதேவியாரோடு எழுந்தருளி, திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்குக் காட்சி தந்தருளிய
அருள் வெளிக்கு ஞாயிறு காணி என்று பெயர். இங்குள்ள நந்தவனத்திற்கு இந்திர நந்தவனம்
என்னும் பெயர் இன்றும் வழக்கில் இருக்கிறது. இது சிவபூசைக்காக முற்காலத்தில் இந்திரன்
அமைத்ததாகும். வலம்புரி மண்டபத்தில் பல சித்திரங்கள் பழங்காலத்தில் எழுதப் பெற்றிருக்கின்றன.
அவற்றுள் கிள்ளி வளவனைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
பட்டினத்து அடிகள் இத்தலத்திற்கு மும்மணிக்கோவை இயற்றியுள்ளார்கள். அது திருக்கழுமல
மும்மணிக்கோவை என்னும் பெயருடையது. இது பதினொன்றாந் திருமுறையில் சேர்க்கப்பெற்றுள்ளது.
இத்தலபுராணம் சீகாழி அருணாசலக் கவிராயரால் எழுதப்பெற்றது, திரிசிரபுரம் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை சீகாழிக்கோவை என்னும் நூலை இயற்றியுள்ளார்கள். அது வலம்புரி
மண்டபத்தில் அரங்கேற்றப் பெற்றது. இப்புராணமும் கோவையும் அச்சில் வெளிவந்துள்ளன.
1937இல் வெளிவந்துள்ள சீகாழித் தலபுராணத்தில் வசனமும் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது.
அதை எழுதியவர் வித்துவ சிகாமணி திரு. ப. அ. முத்துத் தாண்டவராய பிள்ளை ஆவர்.
இத்தலம் தருமை ஆதீனத்துக்குச் சொந்தமானது. கோயில் மிகத் தூய்மையாக இருக்கின்றது.
இருபத்தாறாம் பட்டத்து எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் பிற்காலத்துச்
சோழமன்னர்கள் செய்தது போல திடீரென்று ஆலயத்திற்கு எழுந்தருளி நித்திய நைமித்திகங்கள்
எல்லாம் குறைவற நடக்கின்றனவா எனக் கவனித்து அருளுகின்றார்கள்.
இங்கு சித்திரையில் நடைபெறும் பிரமோற்சவத்தின் இரண்டாம் நாள் விழாவே
திருமுலைப்பால் விழாவாகும். இவ்விழா நாட்களில் கூடும் பெருந்திரளான மக்கள் பயனுறும்
பொருட்டுத் திருமுறை மாநாடுகளை ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் ஆண்டுதோறும்
கூட்டுவித்தருளுகின்றார்கள். திருமுறை இசைவாணர் ஒருவருக்குத் திருமுறைக் கலாநிதி
பட்டமும் ரூ.1000/- அடங்கிய பணமுடிப்பும் அளித்தருளுகின்றார்கள்.
பதிக வரலாறு
இந்தத் திருப்பதிகம் மதுரையில் அருளப் பெற்றது. திருஞானசம்பந்தப் பெருமானின்
அருட்பார்வை கூன்பாண்டியன் மேற்படவும் அவன் உடற்பிணி சற்றே ஒழியவும், அவன்
ஞானப்பிள்ளையாரை நோக்கித் தங்கள் திருப்பதி யாது என வினவினான். அதற்கு
மறுமொழியாகப் பிள்ளையார் 'அங்கு ஆதியாய பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலம்
நாம் பரவும் ஊரே' என்று இப்பதிகத்தை அருளினார். அப்பன்னிரு பெயர்களையும்
உணர்த்துவது இத்திருப்பதிகம். பதிகம் முழுவதும் இப்பன்னிரு பெயர்களைக் கூறுவதாகவே
அமைந்துள்ளது. அப்பன்னிரண்டு பெயர்களாவன: (1) பிரமபுரம்; (2) வேணுபுரம்; (3) புகலி;
(4) வெங்குரு; (5) தோணிபுரம்; (6) பூந்தராய்; (7) சிரபுரம்; (8) புறவம்; (9) சண்பை; (10) காழி;
(11) கொச்சைவயம்; (12) கழுமலம்.
‘பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலம் நாம் பரவு மூரே' என்று பிள்ளையார்
கூறுவதால் ஊர் பன்னிரண்டு என்று அறிதல் வேண்டும். ஊர் பன்னிரண்டேயன்றி ஓரூருக்குப்
பன்னிரண்டு பெயர்கள் அல்ல. மன்னுநிலை பெற்ற, பொன் அம் சிரபுரம்- பொன்னாகிய
செல்வத்தையும் அழகையும் உடைய சிரபுரம். அரன் மன்னு தண் காழி -சிவபிரான்
எழுந்தருளியிருக்கும் குளிர்ந்த காழிநகர். வெள்ளத்து ஓங்கும் தோணிபுரம் - பிரளயகாலத்தில்
இந்நகரம் தோணியாக மிதந்ததனால் தோணிபுரம் எனப் பெயர் பெற்றது. தூநீர்ச் சிரபுரம் -
தூய நீரை உடைய சிரபுரம். கோனிய - வளைந்த. கோட்டாற்று - கோட்டாறு சூழ்ந்த. கூரும்-
மிகுதியான. காணிய - செய்யிய என்னும் வாய்ப்பாடு, பொருட்டுப் பொருளில் வந்தது.
காணும் பொருட்டு, காண, வையகம் - உலகத்தவர்.
திருச்சிற்றம்பலம்
2222. பிரமனூர்வேணுபுரம்புகலிவெங்குருப்பெருநீர்த்தோணி
புரமன்னுபூந்தராய்பொன்னஞ்சிரபுரம்புறவஞ்சண்பை
அரன்மன்னுதண்காழிகொச்சைவயமுள்ளிட்டங்காதியாய
பரமனூர்பன்னிரண்டாய்நின்றதிருக்கழுமலநாம்பரவுமூரே. 1
பிரமன்ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த் தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம், சண்பை,
அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்ட அங்கு ஆதிஆய
பரமன் ஊர் பன்னிரண்டுஆய் நின்ற திருக்கழுமலம் - நாம் பரவும் ஊரே.
piraman Ur, vENupuram, pukali, vegkuru, perunIrt tONi
puram, mannu pUntarAy, pon am cirapuram, puRavam, caNpai,
aran mannu taN kAzi, koccaivayam, uLLiTTa agku Ati Aya
paraman Ur panniraNTu Ay ninRa tiruk kazumalam--nAm paravum UrE.
பொருள்: நிகர் இல் பிரமபுரம் - ஒப்பு இல்லாத பிரமபுரம். நீர் மேல் நின்ற மூதூர் - கடல் மேல்
மிதந்த தொன்மையான ஊர், தோணிபுரம். அகலிய வெங்குரு- அகன்ற நிலப்பரப்பையுடைய வெங்குரு.
அந்தண் தராய் - குளிர்ந்த பூந்தராய். அமரர் பெருமான் -தேவதேவன், மகாதேவன். இறைவனைப் பாடும்
பொழுதும் நாம் கைதொழுதல் வேண்டும் என்பது இத்திருப்பாடலால் பெறப்படும் ஒழுக்கம்.
குறிப்புரை: 1. பிரமபுரம், 2. வேணுபுரம், 3. புகலி, 4. வெங்குரு, 5. தோணிபுரம், 6. பூந்தராய்,
7. சிரபுரம் 8. புறவம், 9. சண்பை, 10. காழி, 11. கொச்சைவயம், 12. கழுமலம் ஆகிய திருப்பெயர்களை
இம்முறையே தனித்தனி முதலிற்கொண்டு தொடங்கும் திருப்பாடல் இப்பதிகத்திற் காணப்படுகின்றன.
ஈற்றுப்பாடல் மட்டும். 'கழுமலத்தின் பெயரை' என்றுரைக்கும் காரணம் பற்றியும் ஒவ்வொரு பாட்டிலும்
'கழுமலம்' என்று வருதல் பற்றியும் கழுமலம் என்று தொடங்கிற்றிலது. இம்முறையே, சேக்கிழார் சுவாமிகளும்,
'பிரமபுரம் வேணுபுரம் பெருபுகலி வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் '
(பெரிய. திருஞான. 14) என அருளியிருக்கின்றார். (பார்க்க. தி. 2 பா. 109, 110). மன்னு - நிலைபெற்ற.
பொன்அம் -பொன்னையும் அழகையும் உடைய. அரன் மன்னு தண்காழி - சிவபிரான் எழுந்தருளிய
குளிர்ந்த காளீச்சரம். உள்ளிட்டு - உட்பட்டு. அங்கு ஆதி ஆய பரமன் ஊர். பன்னிரண்டாய் நின்ற
திருக்கழுமலம் நாம் பரவும் ஊர். ஊர் பன்னிரண்டே அன்றி ஒரு ஊர்க்குப் பேர் பன்னிரண்டல்ல.
இவ்வுண்மை அறியாதார் ஒரே ஊர்க்குப் பன்னிரண்டு பெயர் உள்ளன என்று எழுதியும் பேசியும்
தொன்மையை அழித்தனர். தலபுராணத்திலும் தொன்மை மாறாத உண்மை உணர்த்தப்பட்டது.
Our Lord Civan manifests Himself in the cool city called Kaaleechcharam. This city
is different from the other eleven cities. The twelve names mentioned here relate to eleven
other villages all around this. This name relates to the main city Kaaleechcharam. This
verse describes the twelve names of the twelve hamlets comprising Seerkaazhi.
The Madurai king Koon Pandyan asked Thiru-gnana- Sambandar "Oh Lord! which is your
sacred city?". For this question Thiru-gnana- Sambandar replied in twelve poems.
This verse carries the twelve names of Seerkaazhi separately and then totally
he sang 12 poems. The word Kazhumalam alone comes in almost all the poems. "The
place where I live begins from Piramanoor and is completed in Kochchaivayam;
it includes the twelve names and is called Kazhumalam”.
2223. வேணுபுரம்பிரமனூர்புகலிபெருவெங்குருவெள்ளத்தோங்குந்
தோணிபுரம்பூந்தராய்தூநீர்ச்சிரபுரம்புறவங்காழி
கோணியகோட்டாற்றுக்கொச்சைவயஞ்சண்பைகூருஞ்செல்வங்
காணியவையகத்தாரேத்துங்கழுமலநாங்கருதுமூரே. 2
வேணுபுரம், பிரமன்ஊர், புகலி, பெரு வெங்குரு, வெள்ளத்துஓங்கும்
தோணிபுரம்,பூந்தராய், தூ நீர்ச் சிரபுரம், புறவம், காழி,
கோணிய கோட்டாற்றுக் கொச்சைவயம், சண்பை, கூரும் செல்வங்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் - நாம் கருதும் ஊரே.
vENupuram, piraman Ur, pukali, peru vegkuru, veLLattu Ogkum
tONipuram, pUntarAy, tU nIrc cirapuram, puRavam, kazi,
kONiya kOTTARRuk koccaivayam, caNpai, kUrum celvam
kANiya vaiyakattAr Ettum kazumalam--nAm karutum UrE.
பொருள்: தண் புகலி - குளிர்ச்சியான புகலி. வெள்ளங் கொள்ளத் தொங்கிய -
தொங்குதல் தோணி. தொகு -கூடிய. தொல் - பழைய. தலை பண்டு ஆண்ட மூதூர் -
தலை - சிரம்; சிரபுரம். எற்றான் - ஏற்ற சிவபிரான்.
குறிப்புரை: வெள்ளத்து ஓங்கும் தோணிபுரம்- பிரளய வெள்ளத்துள் மேல் ஓங்கி மிதந்து
விளங்கிய தோணிபுரம். தூநீர் - பரிசுத்த ஜலத்தையுடைய. கோணிய - வளைந்த. கோட்டாறு -
இன்றும் உளது. 'கோட்டாறு சூழ் கொச்சை' (தி. 3 ப. 89 பா. 1). கூரும் - மிகும். காணிய - காண.
This place where I come from begins with the name Venupuram and carries twelve
names including Shanbai. This place is praised by philanthropic people as Kazhumalam.
2224. புகலிசிரபுரம்வேணுபுரஞ்சண்பைபுறவங்காழி
நிகரில்பிரமபுரங்கொச்சைவயநீர்மேல்நின்றமூதூர்
அகலியவெங்குருவோடந்தண்டராயமரர்பெருமாற்கின்பம்
பகருநகர்நல்லகழுமலநாங்கைதொழுதுபாடுமூரே. 3
புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை,புறவம்,காழி,
நிகர் இல் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற மூதூர்,
அகலிய வெங்குருவோடு, அம் தண் தராய், அமரர்பெருமாற்கு இன்பம்
பகரும் நகர் நல்ல கழுமலம் - நாம் கைதொழுது பாடும் ஊரே.
pukali, cirapuram, vENupuram, caNpai, puRavam, kAzi,
nikar il piramapuram, koccaivayam, nIrmEl ninRa mUtUr,
akaliya vegkuruvOTu, am taN tarAy, amarar perumARku inpam
pakarum nakar nalla kazumalam--nAm kaitozutu pATum UrE.
பொருள்: தொல் நீரில் தோணிபுரம் - பழைய வெள்ளத்தில் மிதந்த தோணிபுரம்.
துயர் தீர் காழி- பிறவிக்குக் காரணமான துயர்களை நீக்கும் காழி. இன்தீர வேணுபுரம் -
இனிய நீரினை உடைய வேணுபுரம். சிலம்பன் நகர் -சிரபுரம். பொன் நீர புன் சடையான் -
பொன் நிறமுடைய அழகிய சடை உடையவன்.
குறிப்புரை: நிகர் - ஒப்பு. இல் - இல்லாத. நீர்மேல் நின்ற மூதூர் - தோணிபுரம். அகலிய - அகன்ற
இடத்தையுடைய. அம்தண்தராய் - பூந்தருவராய். அமரர் பெருமாற்கு - தேவர் பிரானுக்கு. பகரும்-
கூறும். 'நாம் கைதொழுது பாடும் ஊர்' என்றதால். நாம் பாடும்போதும் கைதொழுதல்
இன்றியமையாதது என்பது விளங்கும். இத்தமிழ் மறையைப் போற்றும் அருளொழுக்கம்
புலப்படும் பா. 6 குறிப்புரை பார்க்க.
The city where I worship our Lord Civan and recite sacred songs consists of
towns Pugali to Poontharai and includes twelve sacred town's names. Here our Lord
Civan relishes the maximum joy and this is known as Kazhumalam.
2225. வெங்குருத்தண்புகலிவேணுபுரஞ்சண்பைவெள்ளங்கொள்ளத்
தொங்கியதோணிபுரம்பூந்தராய்தொகுபிரமபுரந்தொல்காழி
தங்குபொழிற்புறவங்கொச்சைவயந்தலைபண்டாண்டமூதூர்
கங்கைசடைமுடிமேலேற்றான்கழுமலநாங்கருதுமூரே. 4
வெங்குரு, தண் புகலி, வேணுபுரம், சண்பை, வெள்ளம் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம், பூந்தராய், தொகு பிரமபுரம்,தொல் காழி,
தங்கு பொழில் புறவம், கொச்சைவயம், தலை பண்டு ஆண்ட மூதூர்,
கங்கை சடைமுடிமேல் ஏற்றான் கழுமலம் -நாம் கருதும் ஊரே.
vegkuru, thaNpukali, vENupuram, chaNpai veLLam koLLath
thogkiya thONipuram pUntharAy thoku pirama puram thol kAzi
thagku poziRpuRavam kochchai vayam thalaipaNTu ANTa mUthUr
kagkai caTaimuTimEl ERRAn kazumalam nAm karuthum UrE.
பொருள்: தண்ணந்தராய்- குளிர்ந்த பூந்தராய். தாமரையானூர்- தாமரையான் பிரமன்;
பிரமபுரம், தலை முன் ஆண்ட அண்ணல் நகர்- தலை - சிரம்; சிரபுரம். தண் புறவம்- குளிர்ந்த புறவம்.
சீர் அணியார் காழி -சீர் -பெருமை,கனம். விண்ணியல் சீர் வெங்குரு- விண்ணுலகத்துக்கு
நிகரான வெண்குரு. நல் வேணுபுரம் - நல்ல - அழகிய வேணுபுரம். மேலார் ஏத்தும் கண்ணுதலான்
மேவிய நற்கழுமலம் - மேலார் - ஞானியர், பத்தர், சித்தர் முதலியோர்; ஏத்தும்- வழிபடும்; கண்ணுதலான்
-நெற்றிக்கண்ணினனாகிய சிவபிரான். மேவிய -இருக்கின்ற கழுமலம். கருதுதல்- தியானித்தல்.
கைதொழுது கருதுமூரே -கைதொழுத வண்ணம் தியானிக்கும் ஊர் கழுமலமே.
குறிப்புரை: தண் - குளிர்ந்ததாகிய. வெள்ளம் கொள்ளத் தொங்கிய தோணிபுரம் என்றதால்.
தோணி தொங்குதல் உணர்த்தப்பட்டது. தொகு -கூடிய. தொல் -பழைய. பொழில்- சோலை.
தலைபண்டு ஆண்ட மூதூர் - சிரபுரம். ஏற்றான் - ஏற்ற சிவபிரான்.
Our Lord Civan who supports the river Ganges in His matted hair is manifest
in this place called Kazhumalam. I was born in this place, which is the last of the
twelve names of the esteemed towns. Venguru and Sirapuram are among these names.
2226. தொன்னீரிற்றோணிபுரம்புகலிவெங்குருத்துயர்தீர்காழி
இன்னீரவேணுபுரம்பூந்தராய்பிரமனூரெழிலார்சண்பை
நன்னீரபூம்புறவங்கொச்சைவயஞ்சிலம்பனகராநல்ல
பொன்னீரபுன்சடையான்பூந்தண்கழுமலநாம்புகழுமூரே. 5
தொல்-நீரில்-தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர் தீர் காழி
இன் நீர வேணுபுரம், பூந்தராய், பிரமன்ஊர், எழில் ஆர் சண்பை,
நன்நீர பூம் புறவம், கொச்சைவயம், சிலம்பன்நகர், ஆம் நல்ல
பொன்நீர புன்சடையான் பூந் தண் கழுமலம் - நாம் புகழும் ஊரே.
tol-nIril-tONipuram, pukali, vegkuru, tuyar tIr kAzi,
in nIra vENupuram pUntarAy, piraman Ur, ezil Ar caNpai,
nannIra pUm puRavam, koccaivayam, cilampannakar, Am nalla
pon nIra puncaTaiyAn pUn taN kazumalam--nAm pukazum UrE.
பொருள்: சீரார் சிரபுரம் - புகழ் நிறைந்த சிரபுரம். நல்ல ஆராத் தராய் - நல்ல காணுந்தோறுந்
தெவிட்டாத பூந்தராய். ஏரார் கழுமலம் - மிக்க அழகுடைய கழுமலம். என்று என்று உள்கி - இடைவிடாது
தியானித்து. பேரான் நெடியவனும் நான்முகனும்- பெயரான் நீண்ட திருமாலும், பெயரான் நான்முகனாகிய
பிரமனும். பெயர்தல் - அகலுதல், நீங்குதல். காண்பு அரிய- காணுதற்கு அரிய. காண இயலாத.
அருமை இன்மையை உணர்த்திற்று.
குறிப்புரை: தொல்நீர்- பழைய பிரளய வெள்ளம். துயர்- பிறவித் துயர் (பிறதுயர்கள் இதனுள் அடக்கம்).
இன்நீர் - இனிய நீரினையுடைய. எழில் - அழகு. நல்நீர - நல்ல நீரினையுடைய. சிலம்பன் நகர் - சிரபுரம்.
The town I praise is called Thonipuram, which floated in the sea at the time of the
universal deluge and destruction of all things (end of the world). Beginning from this town
and ending in the twelfth town called Sirapuram is my place. Our Lord Civan's matted hair
glitters like gold. He is manifest in this precious town called Kazhumalam.
2227. தண்ணந்தராய்புகலிதாமரையானூர்சண்பைதலைமுனாண்ட
அண்ணல்நகர்கொச்சைவயந்தண்புறவஞ்சீரணியார்காழி
விண்ணியல்சீர்வெங்குருநல்வேணுபுரந்தோணிபுரமேலாரேத்து
கண்ணுதலான்மேவியநற்கழுமலநாங்கைதொழுதுகருதுமூரே. 6
தண் அம் தராய், புகலி, தாமரையான்ஊர், சண்பை, தலை முன் ஆண்ட
அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம் சீர்அணி ஆர் காழி,
விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம், மேலார் ஏத்து
கண்நுதலான் மேவிய நல் கழுமலம் - நாம் கைதொழுது கருதும் ஊரே.
taN am tarAy, pukali, tAmaraiyAn Ur, caNpai, talai mun ANTa
aNNal nakar, koccaivayam, taN puRavam, cIr aNi Ar kAzi,
viN iyal cIr vegkuru, nal vENupuram, tONipuram, mElAr Ettu
kaN nutalAn mEviya nal kazumalam--nAm kaitozutu karutum UrE.
பொருள்: நறவம் மிகு சோலைக் கொச்சை- தேன் கமழும் சோலைகளை உடைய கொச்சைவயம்.
தராய் - பூந்தராய். நான்முகன்றன் ஊர் - பிரமபுரம். விறலாய வெங்குரு- பெருமையுடைய வெங்குரு.
விசயன் - அருச்சுனன். அரக்கன் - இராவணன். செற்றான்- அழித்தான்.
குறிப்புரை: தண் அம்தராய் - பூந்தராய். தாமரையான் ஊர் - பிரமபுரம். தலைமுன் ஆண்ட அண்ணல்
நகர்- சிரபுரம். விண்- ஆகாயம். இயல் -செல்லும். சீர்- கனம். புகழ். மேலார் - தேவர். மேன்மையுடைய
ஞானியர் முதலோர்.மேவிய- விரும்பி எழுந்தருளியுள்ள. தியானம் புரியும்போது கைதொழுத வண்ணம்
இருத்தல் வேண்டும். 'அஞ்சலி செய்திருந்து' (ஞானபூசா விதி - 8). பா. 3 குறிப்புரை பார்க்க.
The town where I offer worship with both hands and praise our Lord Civan
includes the town known as Poontharai, altogether twelve along with the town
Thonipuram. Our Lord Civan who has a third eye in His forehead is manifest
in this city called Kazhumalam.
2228. சீரார்சிரபுரமுங்கொச்சைவயஞ்சண்பையொடுபுறவநல்ல
ஆராத்தராய்பிரமனூர்புகலிவெங்குருவோடந்தண்காழி
ஏரார்கழுமலமும்வேணுபுரந்தோணிபுரமென்றென்றுள்கிப்
பேராலநெடியவனுநான்முகனுங்காண்பரியபெருமானூரே. 7
சீர்ஆர் சிரபுரமும், கொச்சைவயம், சண்பையொடு, புறவம், நல்ல
ஆராத் தராய், பிரமன்ஊர், புகலி, வெங்குருவோடு, அம்தண் காழி
ஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்றுஎன்று உள்கி,
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே.
cIr Ar cirapuramum, koccai vayam, caNpaiyoTu, puRavam, nalla
ArAt tarAy, piraman Ur, pukali, vegkuruvoTu, am taN kAzi
Er Ar kazumalamum, vENupuram, tONipuram, enRu enRu uLki
pErAl neTiyavanum nAnmukanum kANpu ariya perumAn UrE
பொருள்: சாயாப் பண்பார் சிரபுரம்- அழியாக் குணமுடையார், வருத்தமிலார் வாழும் சிரபுரம்.
தராய் -பூந்தராய். நண்பு - நட்பு. விருப்பம். வியப்பு - அழித்த. அகந்தையை அழித்த. வியத்தலுக்குக்
காரணமானது அகந்தை. அதை அழித்த. விமலன் - தூயவன்.
குறிப்புரை: சீர்ஆர் - புகழ் நிறைந்த. கனம் மிக்க எனலுமாம். நல்ல ஆராத்தராய் - நல்ல தெவிட்டாத
பூந்தராய். ஏர் - அழகு. என்று என்று - அடுக்கு இடைவிடாமை மேலது. உள்கி - நினைத்து. பேரான் -
பெயராதவனாய், பேரான் என்பது இருவர்க்கும் பொதுவாய்த் தனித்தனி அமையும். பேரானாய்க்
காண்பு என்க.
The town to which I am connected in many ways begins from the sacred city of
Sirapuram and ends in the twelfth town of Thonipuram. The demigod Thirumaal and Brahma
had in their minds the sacredness of all these twelve towns. They went to this temple
to worship our Lord Civan and prostrated before Him and prayed. Even then our Lord Civan
was invisible to both these demigods. This is such a sacred place for Lord Civan to be
manifested and this is Kazhumalam.
2229. புறவஞ்சிரபுரமுந்தோணிபுரஞ்சண்பைமிகுபுகலிகாழி
நறவமிகுசோலைக்கொச்சைவயந்தராய்நான்முகன்றனூர்
விறலாயவெங்குருவும்வேணுபுரம்விசயன்மேலம்பெய்து
திறலாலரக்கனைச்செற்றான்றன்கழுமலநாஞ்சேருமூரே. 8
புறவம் சிரபுரமும், தோணிபுரம், சண்பை, மிகு புகலி, காழி,
நறவம், மிகு சோலைக் கொச்சைவயம், தராய், நான்முகன் தன்ஊர்,
விறல்ஆய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல் அம்பு எய்து
திறலால் அரக்கனைச் செற்றான்தன் கழுமலம் - நாம் சேரும் ஊரே.
puRavam, cirapuramum, tONipuram, caNpai, miku pukali, kAzi,
naRavam miku cOlaik koccaivayam, tarAy, nAnmukan tan Ur,
viRal Aya vegkuruvum, vENupuram, vicayan mEl ampu eytu
tiRalAl arakkanaic ceRRAn tan kazumalam--nAm cErum UrE.
பொருள்: செழு மலிய பூங்காழி -செழிப்பு மலிதல் உடைய அழகிய காழி. செய்ய கொழு
மலரான் நன்னகர்- செழுமையும் கொழுமையும் உடைய மலர் தாமரை. அதன் மேலான் பிரமன்.
விழுமிய சீர் -மிக்க புகழுடைய 'இன்னபெயர் பன்னிரண்டும் கண்ணுதலான் கருதும் ஊரே',
என்றதால் இவை பன்னிரண்டு ஊர்களின் பெயர் என்பதும் ஒரு ஊருக்கே கூறப்பட்ட
பன்னிரண்டு பெயர்கள் அல்ல என்பதும் பெறப்படும்.
குறிப்புரை: நறவம்- தேன். நான்முகன்றன் ஊர் -பிரமபுரம். விறல் - பெருமை. விசயன்-
அருச்சுனன். திறல் - திறன். அரக்கன் - இராவணன். செற்றான் - அழித்தான்.
The town to which I am connected in my life begins with the name Puravam and
ends with twelve names including Venupuram. This sacred place is connected with Lord
Civan and is called Kazhumalam. This Lord Civan once waged a playful fight with
Arjunan and suppressed the mightiness of Raavanan the king of Sri Lanka.
2230. சண்பைபிரமபுரந்தண்புகலிவெங்குருநற்காழிசாயாப்
பண்பார்சிரபுரமுங்கொச்சைவயந்தராய்புறவம்பார்மேல்
நண்பார்கழுமலஞ்சீர்வேணுபுரந்தோணிபுரநாணிலாத
வெண்பற்சமணரொடுசாக்கியரைவியப்பழித்தவிமலனூரே. 9
சண்பை,பிரமபுரம், தண் புகலி, வெங்குரு, நல் காழி, சாயாப்
பண்பு ஆர் சிரபுரமும், கொச்சைவயம், தராய், புறவம்,பார் மேல்
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம், தோணிபுரம் - நாண்இலாத
வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே.
caNpai, piramapuram, taN pukali, vegkuru, nal kAzi, cAyAp
paNpu Ar cirapuramum, koccaivayam, tarAy, puRavam, pArmEl
naNpu Ar kazumalam, cIr vENupuram, tONipuram--nAN ilAta
veNpal camaNaroTu cAkkiyarai viyappu azitta vimalan UrE.
பொருள்: நிச்சல் விழவு ஓவா நீடார் சிரபுரம் - நாள்தோறும் விழாக்கள் ஒழியாத காலத்தாலும்
இடத்தாலும் நெடுமை பொருந்திய சிரபுரம். நச்ச + இனிய = நச்சினிய - விரும்புதற்கு இனிய. அச்சங்கள்
தீர்த்து அருளும் அம்மான் - பிறப்பச்சம் முதலியவற்றை நீக்கும் அம்மான். அம்மான்- அருமகன்.
குறிப்புரை: சாலாப் பண்பு- அழியாக்குணம். பண்பார் - குணத்தார் எனினுமாம். நாண்- நாணம்.
வியப்பு - பெருமை. விமலன் - அநாதி மலமுத்தன்.
The town wherefrom I hailed begins from Shanbai and includes the twelfth last
town called Thonipuram. Our Lord Civan is the Supreme Being who doomed the high dignity
of the Jains and Buddhists in this town called Kazhumalam.
2231. செழுமலியபூங்காழிபுறவஞ்சிரபுரஞ்சீர்ப்புகலிசெய்ய
கொழுமலரான்நன்னகரந்தோணிபுரங்கொச்சைவயஞ்சண்பையாய
விழுமிய சீர் வெங்குருவோடோங்கு தராய் வேணுபுரமிகு நன்மாடக்
கழுமலமென்றின்னபெயர்பன்னிரண்டுகண்ணுதலான்கருதுமூரே. 10
செழு மலிய பூங்காழி புறவம், சிரபுரம், சீர்ப் புகலி, செய்ய
கொழுமலரான் நன்நகரம், தோணிபுரம், கொச்சைவயம், சண்பை, ஆய
விழுமிய சீர் வெங்குருவோடு, ஓங்கு தராய், வேணுபுரம், மிகு நல் மாடக்
கழுமலம், என்று இன்ன பெயர் பன்னிரண்டும் - கண்நுதலான் கருதும் ஊரே.
cezu maliya pUg kAzi, puRavam, cirapuram, cIrp pukali, ceyya
kozumalarAn nannakaram, tONipuram, koccaivayam, caNpai, Aya
vizumiya cIr vegkuruvoTu, Ogku tarAy, vENupuram, miku nal mATak
kazumalam, enRu inna peyar panniraNTum--kaN nutalAn karutum UrE.
பொருள்: காவி - கருங்குவளை மலர். இங்குக் 'கழுமலத்தின் பெயரை நாளும் பாவிய சீர்ப்
பன்னிரண்டு நன்னூலா' என்றமையான், இவை கழுமலத்தைச் சார்ந்த நகரங்கள் எனப் பெறப்படும்.
புரையும் -ஒக்கும். பாவிய - பரவிய. பத்திமை -அன்பு. தலை விருப்பு - தலையாய அன்பு.
குறிப்புரை: செழுமலிய- செழிப்பு மலிதலையுடைய. செய்ய கொழுமலரான் நன்னகரம் -
பிரமபுரம். விழுமிய சீர் - மிக்க புகழ். பன்னிரண்டும் ஊர் என்றது ஈண்டும் காண்க.
The town wherefrom I hailed carries the name Kazhumalam. This is also ,the
same place which our Lord Civan wished to enjoy. This is a sacred, attractive and fertile
town which carries twelve names as already mentioned. Our Lord Civan is called Kannuthalaan
because He has a third eye on His forehead. This Lord is fully manifest in this Kazhumalam.
2232. கொச்சைவயம்பிரமனூர்புகலிவெங்குருப்புறவங்காழி
நிச்சல்விழவோவாநீடார்சிரபுரநீள்சண்பைமூதூர்
நச்சினியபூந்தராய்வேணுபுரந்தோணிபுரமாகிநம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளுமம்மான்கழுமலநாமமருமூரே. 11
கொச்சைவயம், பிரமன்ஊர், புகலி, வெங்குரு, புறவம், காழி,
நிச்சல் விழ ஓவா நீடு ஆர் சிரபுரம், நீள் சண்பைமூதூர்,
நச்சு இனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி நம் மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் - நாம் அமரும் ஊரே.
koccaivayam, piraman Ur, pukali, vegkuru, puRavam, kAzi,
niccal vizavu OvA nITu Ar cirapuram, nIL caNpai mUtUr,
naccu iniya pUntarAy, vENupuram, tONipuram, Aki nam mEl
accagkaL tIrttu aruLum ammAn kazumalam--nAm amarum UrE.
பொருள்: நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு
பெயர்களைக் கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான
கழுமலமாகும்.
குறிப்புரை: நிச்சல் - நாடோறும். விழவு - திருவிழாக்கள். ஓவா - ஒழியாத. நீடு ஆர் - காலத்தாலும்
இடத்தாலும் நெடுமை பொருந்திய. நச்ச இனிய- விரும்புதற்கு இனிய. அச்சங்கள் - பிறப்பச்சம் முதலியவை.
அம்மான் - அருமகன் என்பதன் மரூஉ. பெருமகன் என்பது பெம்மான் என்று வருதல் போல.
I like the town named Kochchaivayam, it carries twelve names including Thonipuram.
Our Lord Civan is manifest in the town Kazhumalam. He eradicates the fate of His devotees
and graces them.
2233. காவிமலர்புரையுங்கண்ணார்கழுமலத்தின்பெயரைநாளும்
பாவியசீர்ப்பன்னிரண்டுநன்னூலாப்பத்திமையாற்பனுவல்மாலை
நாவின்நலம்புகழ்சீர்நான்மறையான்ஞானசம்பந்தன்சொன்ன
மேவியிசைமொழிவார்விண்ணவரிலெண்ணுதலைவிருப்புளாரே. 12
காவிமலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
பாவிய சீர்ப் பன்னிரண்டும் நன்நூலாப் பத்திமையால் பனுவல்மாலை
நாவின் நலம் புகழ் சீர் நால்மறையான் - ஞானசம்பந்தன் - சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புஉளாரே.
kAvi malar puraiyum kaNNAr kazumalattin peyarai nALum
pAviya cIrp panniraNTum nannUlAp pattimaiyAl panuval mAlai
nAvin nalam pukaz cIr nAlmaRaiyAn--njAnacampantan--conna
mEvi icai mozivAr viNNavaril eNNutalai viruppu uLArE.
பொருள்: குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை
நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய
இப்பனுவல் மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும்
மேலான விருப்புடையவர் ஆவர்.
குறிப்புரை: காவி -நீலோற்பவம், கருங்காவி. புரையும் -ஒக்கும். பாவிய - பரவிய. பத்திமை - அன்பு.
மை விகுதி தமிழ் 'பத்திமையாற் பணிந்து' (தி. 6 பதி. 54 பா. 3). தலைவிருப்பு - தலையன்பு.
In this town of Kazhumalam very attractive, young damsels live in large numbers.
Their eyes resemble the blue nilambo flowers and have a very good look. The town carries
twelve names. The scholars who repeat the twelve names, as though the names are twelve
divine books and sing these twelve verses sung by our Thiru-gnana-Sambandar in the best
musical tone, will join the celestials and be among them.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
70ஆம் பதிகம் முற்றிற்று
End of 70th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 207 பதிக எண் 71.
71. திருக்குற்றாலம் 71. THIRU-K-KUTRALAM
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருக்குறும்பலா என்னும் திருத்தலமானது நெல்லை மாவட்டத்தில் விளங்கும் சுற்றுலாத்
தலங்களில் ஒன்றாகும். தென்காசி- செங்கோட்டை பேருந்து வழியில் உள்ளது. மதுரை, திருநெல்வேலி,
தென்காசி, செங்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. இது குற்றாலம்
என்னும் ஒரு வகை ஆலமரத்தைத் தலவிருட்சமாக உடைமையால் இப்பெயர் பெற்றது. 'உயிர்கொண்டு
போம்பொழுது குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யாருளரோ' என்னும் திருவங்கமாலைப்
பகுதியும், 'குற்றாலத்து அமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக
வேண்டுவனே' என்னும் திருவாசகப் பகுதியும் இத்தலச் சிறப்பு உணர்த்துவனவாகும். இங்குள்ள
இறைவர்க்குக் கூத்தர் என்றும், இறைவியாருக்கு சிவகாமி அம்மையார் என்றும் பெயர்கள்
வழங்கப்பெறுகின்றன.
இக்கோயிலைச் சம்பந்தர் முதல் திருமுறையில் பாடியிருக்கின்றார். இக்குற்றாலத்திலே
குறும்பலா என்ற கோயில் இருக்கின்றது. இதைத்தான் சம்பந்தமூர்த்தி சுவாமிகள் இரண்டாம்
திருமுறையில் பாடியிருக்கின்றார்கள். திருக்குறும்பலா தலமானது திருக்குற்றாலத்தில்
அருவியை அடுத்து வடகரையில் இருக்கின்றது. குறும்பலா என்னும் ஒருவகை மரத்தை தலவிருட்சமாக
உடைமையால் அம்மரத்தாலேயே இக்கோயில் குறும்பலா என்னும் பெயர் எய்திற்று.
இறைவரது திருப்பெயர் குறும்பலாநாதர். இறைவியார் திருப்பெயர் குழல்வாய் மொழியம்மை.
இது முதலில் விஷ்ணுதலமாய் இருந்தது. அவ்வூர் வைணவப் பெருமக்கள் சிவநிந்தையும், சிவனடியார்
நிந்தையும் செய்ததோடு அகத்தியரையும் அவ்வூரில் அணுக வொட்டாது தடுத்தமையால்,
அவ்வைணவர்களது அகந்தையை அடக்கும் பொருட்டு அகத்தியர் வைணவ அடியார் வேடம் பூண்டு,
கோயிலுக்குள் சென்று திருமாலின் திருத்தலையில் தம் கை வைத்துச் சிவலிங்க வடிவாக்கினார்
என்றும் அன்று முதல் இது சிவன்கோயிலாயிற்று என்றும் பழைய வரலாறு உண்டு. இத்தலம்
ஞானசம்பந்தரால் மட்டும் பாடப்பெற்றது. இதற்கு அவருடைய பதிகம் ஒன்று இருக்கின்றது.
பதிக வரலாறு
சிரபுரத்து வந்தருளும் செல்வர் சிலநாளிருந்து திருப்புத்தூரை வழிபட்டு, பூவணத்தைப்
போற்றிக் காண்போரைக் கைதொழுது சுழியலை வணங்கிக் குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டு
ஏத்தியது இத்திருப்பதிகம்.
Thiru-k-kurumbala or Thiru-k-kutralam, both are one and the same place in Tirunelveli
District. It is on the way from Tirunelveli to Shencottai.
திருச்சிற்றம்பலம்
2234. திருந்தமதிசூடித்தெண்ணீர்சடைக்கரந்துதேவிபாகம்
பொருந்திப்பொருந்தாதவேடத்தாற்காடுறைதல்புரிந்தசெல்வர்
இருந்தஇடம்வினவில்ஏலங்கமழ்சோலையினவண்டுயாழ்செய்
குருந்தமணநாறுங்குன்றிடஞ்சூழ்தண்சாரற்குறும்பலாவே. 1
திருந்த மதி சூடி, தெண்நீர் சடைக் கரந்து, தேவி பாகம்
பொருந்தி, பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம் வினவில் - ஏலம் கமழ் சோலை இனவண்டு யாழ்செய்,
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண்சாரல், குறும்பலாவே.
tirunta mati cUTi, teN nIr caTaik karantu, tEvi pAkam
porunti, poruntAta vETattAl kATu uRaital purinta celvar
irunta iTam vinavil-Elam kamaz cOlai inavaNTu yAzcey,
kurunta maNam nARum kunRu iTam cUz taNcAral, kuRumpalAvE.
பொருள்: பிறையைச் சடையில் திருத்தமாகச் சூடி, தெளிந்த கங்கை நதியைச் சடையில்
மறைத்து உமையம்மையைத்தன் மேனியில் பொருந்தி, காட்டில் உறைவதற்குப் பொருந்தாத
இக்கோலத்தொடு உழிதருதலைச் செய்த செல்வர், இருக்கும் இடம் யாதென வினவில், ஏலம்
மணக்கும் சோலையில் கூட்டமான வண்டுகள் யாழ்போல முரல, குருந்தம் மணம் நாறும்
குன்றுகள் சூழ்ந்த, குளிர்ந்த சாரல்களையுடைய குறும்பலாவே.
குறிப்புரை: திருந்தச் சூடிக்கரந்து பொருந்திப் பொருந்தாத வேடத்தால் உறைதல் புரிந்த
செல்வர் என்று இயைக்க. மதி - பிறை. தெள்நீர் - தெளிந்த கங்கைநீர். சடைக்கரந்து- சடையில்
மறைந்து. தேவிபாகம் பொருந்தி - தேவியினது பாகத்தைத் தான் பொருந்தி. பொருந்தாத
வேடத்தால் - காட்டில் உறைவதற்கு ஒவ்வாத கோலத்தால். புரிந்த - விரும்பிய. ஏலம் வாசனைப்
பொருள்களுள் ஒன்று. - 'தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் ... கப்பூரம் சாதியோடு ஐந்து'.
யாழ்செய் - யாழோசை போலும் இன்னோசை செய்கின்ற குருந்தம் - குருந்தமரம். குறும்பலா
என்பது பலாவகைகளுள் ஒன்று. குற்றாலம், குறும்பலா இரண்டும் திருக்குற்றால மலையிலுள்ள
தலவிருட்சம். வம்பார் குன்றம்.... குற்றாலம் என்றும், குன்றிடஞ்சூழ் தண்சாரற்குறும்பலா என்றும்
இருவேறு திருப்பதிகம் அருளியவாறு உணர்தற்பாலது.
Behold! It is Civan who resides in the temple called Kurumbala or Kutralam.
Our Lord Civan has decorated His hair and retains the baby moon on His matted hair.
He supports the river Ganges also on His matted hair and keeps it invisible. He embeds
His consort Uma Devi on the left portion of His body. He loves to go and dance and
spend time in the burial ground. If you question regarding the place where our Lord is
manifested the answer is simple. In the entire area where He is manifested the sweet
smell of cardamom is felt everywhere. The bees,always humming in the big gardens around
the temple, make noise like the beautiful music of lute. There are small hillocks
all around the temple wherefrom the sweet smell of Kuruntha tree spreads in the entire
area. Very cool wind always blows all around His temple along with the cool light dazzling.
And this place is called Kurumbala where our Lord Civan is manifest.
2235. நாட்பலவுஞ்சேர்மதியஞ்சூடிப்பொடியணிந்தநம்பான்நம்மை
ஆட்பலவுந்தானுடைய அம்மானிடம்போலுமந்தண்சாரல்
கீட்பலவுங்கீண்டுகிளைகிளையன்மந்திபாய்ந்துண்டுவிண்ட
கோட்பலவின்தீங்கனியைமாக்கடுவனுண்டுகளுங்குறும்பலாவே. 2
நாள்பலவும் சேர் மதியம் சூடிப்பொடி அணிந்த நம்பான், நம்மை
ஆள்பலவும் தான் உடைய அம்மான், இடம்போலும் - அம் தண்சாரல்,
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு, விண்ட
கோள் பலவின் தீம்கனியை மாக் கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே.
nALpalavum cEr matiyam cUTip poTi aNinta nampAn, nammai
ALpalavum tAn uTaiya ammAn, iTampOlum--am taNcAral,
kIL palavum kINTu kiLaikiLaiyan manti pAyntu uNTu, viNTa
kOL palavin tIm kaniyai mAk kaTuvan uNTu ukaLum kuRumpalAvE.
பொருள்: விண்மீன்கள் பலவற்றைச் சேர்கின்ற பிறையைச் சிரசில் சூடி, திருநீற்றுப்
பொடியை அணிந்த சிவபெருமான், நம்மைப் பலவகையாலும் ஆளாகக் கொண்ட அம்மான்
இடம் யாதெனில், அழகிய குளிர்ந்த சாரலிலே வெடித்துப் பிளக்கும் பக்குவத்தில் உள்ள
பலாப்பழத்தினைக் கீறிப் பிளந்து கிளைகள் தோறும் மந்தி பாய்ந்து உண்டு விண்ட அடிப்பலாவின்
இனிய கனியை உண்டு கடுவன் துள்ளும் குறும்பலாவே.
குறிப்புரை: நாள்பலவும் சேர்மதியம் -பூரண சந்திரன், 'பிள்ளைமதியும் புனலும் சூடி'
எனப் (பா.7) பின்வருதலறிக. நம்பான் - சிவபெருமான். 'நம்பான் மேய நன்னகர்' (தி. 1 ப. 99 பா. 1).
'நடம் பயிலும் நம்பானே' 'நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே' (தி. 3 ப. 125 பா. 1). ஆட்பலவும் -
ஆலாகும் பலவகையும், கீள்பல - பிளத்தற்குரிய பலா. கீண்டு - பிளந்து. (கிழி - கீழ் - கீள்,
கிழிந்து - கீழ்ந்து - கீண்டு) கிளை கிளையல் - கிளை கிளையாக. கிளையின் என்றிருந்ததோ?
மந்தி - பெண் குரங்கு. விண்ட-(நீங்கிய) பிளந்த. கோள் - குலை. கடுவன் - ஆண்குரங்கு.
உகளும் - துள்ளும். இது பலாவிற்கேற்ற வருணனை.
Behold! Our Lord Civan manifests Himself in Kurumbala. He retains the moon
on His hair, which grows day by day with sixteen phases. He applies all over His body
the holy ashes. He has affection for us. He approaches us and takes us as His servitors
and graces us. He is manifested in a temple situated in the beautiful cool mountain site.
Here the female monkey selects the fully riped jack fruits, bites them and enjoys eating
along with the other monkeys. Then some fruits fall off from the tree and the male monkeys
wandering on the ground collect these sweet fruits and eat them to their satisfaction.
This is such a place called Kurumbala where our Lord Civan is manifest in the temple.
2236. வாடற்றலைமாலைசூடிப்புலித்தோல்வலித்துவீக்கி
ஆடலரவசைத்த அம்மானிடம்போலுமந்தண்சாரல்
பாடற்பெடைவண்டுபோதலர்த்தத்தாதவிழ்ந்துபசும்பொன்னுந்திக்
கோடன்மணங்கமழுங்குன்றிடஞ்சூழ்தண்சாரற்குறும்பலாவே. 3
வாடல்-தலைமாலை சூடி, புலித்தோல் வலித்து வீக்கி,
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம்போலும் - அம் தண்சாரல்,
பாடல் பெடைவண்டு போது அலர்த்த, தாது அவிழ்ந்து, பசும்பொன் உந்திக்
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண்சாரல் குறும்பலாவே.
vATal-talaimAlai cUTi, pulittOl valittu vIkki,
ATal aravu acaitta ammAn iTampOlum--am taN cAral,
pATal peTaivaNTu pOtu alartta, tAtu avizntu, pacumpon untik
kOTal maNam kamazum kunRu iTam cUz taNcAral kuRumpalAvE.
பொருள்: சதை வற்றி வறண்டுபோன தலைமாலையைச் சூடி, புலியின் தோலினை
அரையில் இறுகக் கட்டி அதன்மேல் கச்சாகப் பாம்பினை அசைத்த அம்மானிடம் யாதெனில்,
குளிர்ந்த சாரலில் இசைபாடும் பெண் வண்டு போதினை அலர்த்தத் தாது அவிழ்ந்து பசும்
பொன்னின் துகள் போலக் கிடத்தும் வெண்காந்தள் மலர் மணம் வீசும் குன்றுகள் சூழ்ந்த
குறும்பலாவே.
குறிப்புரை: வாடல் - வற்றுதல். வலித்து வீக்கி - உறுதியாகக் கட்டி. அசைத்த - கட்டிய,
ஆட்டிய எனலுமாம். போது - மலரும் பருவத்து. அலர்த்த - அலரச்செய்ய. கோடல் - வெண்காந்தள்.
Behold! It is Civan the Lord of Kurumbala. He adorns His body with the garland
made up of human skulls, inside which the flesh is dried up. He wears on His loins the
tiger hide. He has tightened His waist with the dancing snake. Lord Civan in this stature
is manifest in the beautiful and cool hill temple where clouds gather during the monsoon
season. Here the female bees make a humming noise like music, while flying from one flower
to another where the buds start blooming.While the bees disturb the buds the pollen grains
in the flowers fall on the ground like golden powder. In that area the sweet smell of the
flowers - Malabar Glory Lily, red or white species spreads all around the hillock in the
temple where our Lord Civan is manifest and this is called Kurumbala.
2237. பால்வெண்மதிசூடிப்பாகத்தோர்பெண்கலந்துபாடியாடிக்
காலனுடல்கிழியக்காய்ந்தாரிடம்போலுங்கல்சூழ்வெற்பில்
நீலமலர்க்குவளைகண்திறக்கவண்டரற்றுநெடுந்தண்சாரல்
கோலமடமஞ்ஞைபேடையொடாட்டயருங்குறும்பலாவே. 4
பால்வெண்மதிசூடி, பாகத்து ஓர் பெண் கலந்து,பாடி, ஆடி,
காலன் உடல் கிழியக் காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில்,
நீலமலர்க்குவளை கண்திறக்க, வண்டு அரற்றும் நெடுந் தண்சாரல்
கோல மடமஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே.
pAl veNmati cUTi, pAkattu Or peN kalantu, pATi, ATi,
kAlan uTal kiziyak kAyntAr iTampOlum--kal cUz veRpil,
nIlamalarkkuvaLai kaN tiRakka, vaNTu araRRum neTun taNcAral,
kOla maTamanjnjai pETaiyoTu ATTu ayarum kuRumpalAvE.
பொருள்: பால் போன்ற வெண்ணிறமான பிறையைச் சூடியும், உமையம்மையைப்
பாகத்தில் கொண்டும் பாடியும் ஆடியும் எமனை உடல் பிளக்க உதைத்தும் நின்ற சிவபிரானின்
இடம் யாதெனில், பாறைகள் சூழ்ந்த மலைமேல், நீல நிறமான குவளைமலர் கண்போல் திறக்க
வண்டுகள் அரற்றும் நீண்ட குளிர்ந்த சாரலில், அழகிய மயில்கள் பெடையுடன் மகிழ்ந்து ஆடுதலைச்
செய்யும் குறும்பலாவே.
குறிப்புரை: பிறை சூடியும், உமை மங்கையை இடப்பால் கொண்டும் பாடியும் ஆடியும் எமனை
உதைத்தும் நின்ற சிவபெருமான் இடம். கல்ஆம் வெற்பு- கற்கள் சூழ்ந்த மலை . குவளைகள் கண்போல்
திறக்க. அரற்றும்- ஒலிக்கும். கோலம்- அழகு. மடம்- அழகு. மென்மை, மஞ்ஞை- மயில். பேடை-
பெண்மயில். ஆட்டு- ஆட்டம். அயரும் - செய்யும்.
Behold! It is Civan, who is manifest in Kurumbala. He retains the baby moon, which
is white as cow's milk in His matted hair. He dances and sings beautifully to the accompaniment
of music. He has embedded His consort Uma Devi on the left half of His body. While Civan sings
and dances, she also participates and joins with Him. To help and save Markandeya who is the
most sincere devotee of Lord Civan, He became furious and kicked Kaalan (God of Death) and
tore his body. Lord Civan, who acted like this, manifests Himself in the temple surrounded
by cool ponds in the nearby hillocks of big pebbles. In these water tanks purple Indian water
lily and blue neulambo with fully blossomed petals look like the beautiful eyes of young girls.
The bees while flying from one flower to another make good music. This being the range of
mountains drizzling rains always bring coolness all around. Here the peacocks and peahens
in large numbers gather, dance and enjoy their life. This is the place where our Lord Civan
is manifested in the temple called Kurumbala.
2238. தலைவாண்மதியங்கதிர்விரியத்தண்புனலைத்தாங்கித்தேவி
முலைபாகங்காதலித்தமூர்த்தியிடம்போலும்முதுவேய்சூழ்ந்த
மலைவாயசும்புபசும்பொன்கொழித்திழியும்மல்குசாரல்
குலைவாழைத்தீங்கனியும்மாங்கனியுந்தேன்பிலிற்றுங்குறும்பலாவே. 5
தலை வாள்மதியம் கதிர்விரிய, தண்புனலைத் தாங்கி, தேவி
முலை பாகம் காதலித்த மூர்த்தி, இடம்போலும் - முது வேய் சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல்,
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே.
talai vALmatiyam katir viriya, taNpunalait tAgki, tEvi
mulai pAkam kAtalitta mUrtti iTampOlum--mutu vEy cUznta
malaivAy acumpu pacumpon kozittu iziyum malku cAral,
kulaivAzait tImkaniyum mAgkaniyum tEn piliRRum kuRumpalAvE.
பொருள்: தலையில் ஒளியுடைப் பிறை கதிர் விரிக்க, குளிர்ந்த கங்கைப் புனலைத் தாங்கி
உமையம்மையின் பாகத்தை விரும்பிய மூர்த்தியின் இடம், யாதெனில், முற்றிய மூங்கில்கள் சூழ்ந்த
மலைப் பாறைகளின் மேல் பொசியும் நீர் பசும் பொன்னைக் கொழித்து இழியும்; நிறைந்த மலைச்
சாரல்களில் வாழையின் இனிய கனியும் மாங்கனியும் தேன் துளிர்க்கும் குறும்பலாவே.
குறிப்புரை: தலைமதியம், வான்மதியம். வான் - ஒளி. தலையில் மதியம் கதிர்விரிய புனலைத்
தாங்கி, பாகங் காதலித்த மூர்த்தி என்க. முதுவேய் -முதிய மூங்கில். அசும்பு - பொசியுநீர்.
பிலிற்றும்- துளிக்கும்.
Behold! It is Civan our Lord of Kurumbala. Our Lord Civan retains on His head the
bright moon which spreads its white rays all around. Along with that He supports the river
Ganges also on His head. He has embedded His consort Uma Devi with much affection on the
left half of His body. This our Lord Civan is manifest in the most attractive place where
very big and old bamboo grows in clusters. Here in this mountain area, water springs from
all directions, they all join and become a big water fall leading to torrential flow of
golden water from the mountains. Adjoining this area plantain gardens and mango groves are
in plenty - all yielding rich fruits, honey dripping from both the trees. In such a beautiful
atmosphere the famous temple of our Lord of Kurumbala magnificently exists.
2239. நீற்றேதுதைந்திலங்குவெண்ணூலர்தண்மதியர்நெற்றிக்கண்ணர்
கூற்றேர்சிதையக்கடிந்தாரிடம்போலுங்குளிர்சூழ்வெற்பில்
ஏற்றேனமேனமிவையோடவைவிரவியிழிபூஞ்சாரல்
கோற்றேனிசைமுரலக்கேளாக்குயில்பயிலுங்குறும்பலாவே. 6
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண்நூலர், தண்மதியர், நெற்றிக்கண்ணர்,
கூற்று ஏர் சிதையக் கடிந்தார் இடம் போலும் - குளிர் சூழ் வெற்பில்,
ஏற்றுஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூஞ்சாரல்,
கோல்-தேன் இசை முரல, கேளா, குயில் பயிலும் குறும்பலாவே.
nIRRu Er tutaintu ilagku veN nUlar, taNmatiyar, neRRikkaNNar,
kURRu Er citaiyak kaTintAr, iTampOlum--kuLir cUz veRpil,
ERRu Enam Enam ivaiyOTu avai viravi izi pUnjcAral,
kOl-tEn icai murala, kELA, kuyil payilum kuRumpalAvE.
பொருள்: திருநீற்றுடன் நெருங்கிய வெண்மையான பூணூலை உடையவர்; குளிர்ந்த மதியைச்
சூடியவர்; நெற்றிக் கண்ணினை உடையவர்; எமனுடைய ஏற்றம் அழிய ஒறுத்தவர்; அவருடைய இடம்
(யாதெனில்) குளிர்ச்சி சூழ்ந்த மலையில் ஆண் பெண் பன்றிகள் தம் இனத்துடன் கலந்து கீழ் இறங்குகின்ற
அழகிய சாரலில் கொம்புத் தேனி இசை முரல, அதைக் கேட்டுக் குயில் இசை பயிலும் குறும்பலாவே.
குறிப்புரை: நீற்றே - திருநீற்றிலே. வெள்நூல்- வெளிய முப்புரி நூல். கூற்று - எமன். ஏர் - எழுச்சி.
சிதைய - கெட. ஏர் சிதைய - அழகு கெட எனலுமாம். ஏறு + ஏனம். ஏற்றேனம் - ஆண்பன்றி. ஏனம் - (பெண்)
பன்றி. இவையோடு அவை விரவி -இவ்விலங்கு முதலியவற்றினத்தொடு அவ்விலங்கு முதலியவற்றினம்
கலந்து. இழி - கீழிறங்குகின்ற. கோல்தேன் - கொம்புத்தேன். கேளா-கேட்டு.
Behold! It is Civan our Lord of Kurumbala. Our Lord Civan wears the sacred thread
made of three strings, always moving on His body smeared with holy ashes. He also retains
the cool moon on His head. He has a third eye in His forehead. Once He became furious with
Kaalan (God of Death) for his improper behaviour and killed him. This, our Lord, is manifest
in the place, where cool breeze always blows from the mountain range adjoining His temple.
Here, both the male and female pigs join together and come down from the top of the mountain
where dripping always subsists; the special bees found on the plants, on the plains and on
low hill ranges, gather here to suck the pure honey. They make a humming music while flying.
The Indian cuckoos hearing this humming of the bees, start singing in their beautiful voice.
In such awe- inspiring, wondrous area, our Lord Civan is manifest in the temple situated here.
2240. பொன்றொத்தகொன்றையும்பிள்ளைமதியும்புனலுஞ்சூடிப்
பின்றொத்தவார்சடையெம்பெம்மானிடம்போலும்பிலயந்தாங்கி
மன்றத்துமண்முழவமோங்கிமணிகொழித்துவயிரமுந்திக்
குன்றத்தருவியயலேபுனல்ததும்புங்குறும்பலாவே. 7
பொன் தொத்த கொன்றையும் பிள்ளைமதியும் புனலும் சூடி,
பின் தொத்த வார்சடை எம்பெம்மான் இடம்போலும் - பிலயம் தாங்கி,
மன்றத்து மண்முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி,
குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே.
pon totta konRaiyum piLLaimatiyum punalum cUTi,
pin totta vArcaTai empemmAn iTampOlum--pilayam tAgki,
manRattu maNmuzavam Ogki, maNi kozittu, vayiram unti,
kunRattu aruvi ayalE punal tatumpum kuRumpalAvE.
பொருள்: பொன் போன்ற பூங்கொத்துக்களையுடைய கொன்றையும் இளம்பிறையும் கங்கைப்
புனலும் சூடி, பின்னால் கூடிய சடையும் உடைய எம்முடைய பெருமானின் இடம் (யாதெனின்) பிரளய
வெள்ளம் தாங்கி, அயலே குன்றத்து அருவி மணிகளைக் கொழித்து, வயிர மணிகளை உந்தித் தள்ளி
மன்றத்தில் மார்ச்சனையை உடைய முழவு ஒலிப்பது போல முழங்கும் குறும்பலாவே.
குறிப்புரை: பொன் தொத்த - பொன்போலும் பூங்கொத்துக்களை உடைய. பிள்ளைமதி - இளம்பிறை.
புனல் -கங்கை. பின்தொத்த - பின்கூடிய. பிலயம் - பிரளயம். 'கற்பமுறுபிரளயம் வந்து உலக மூன்றையும்
அழிக்குங்காலமேனும் தற்பரரின் திரிகூடம் போல் எனக்கும் அழியாமை தருதல் வேண்டும்'
(திருக்குற்றாலத் தலபுராணம், குறும்பலாச் சருக்கம் 17). திருக்குற்றாலத்தின் வீழும் அருவிகள் பிரளய
வெள்ளம் போல்கின்ற பெருக்கைத் தாங்குவன. மன்றத்தில் (மண்) - மார்ச்சனையை உடைய முழுவம்
போல்கின்ற ஓசை மிக்கன. மணிகளைக் கொழிப்பன. வயிரமணிகளை உந்தி (செலுத்தித்தள்ளி)
வருவன. அவ்வருவிநீர், அயலிலுள்ள குறும்பலாவின்பால் ததும்பும்.
Behold! It is Civan, the Lord of Kurumbala. Lord Civan, beautifies His matted hair
with bunches of golden coloured Indian laburnum flowers. He also retains the baby moon
on His hair. He supports the river Ganges also on His matted hair. His long matted hair
hangs at His back in big bunches. This Lord Civan is manifest in the temple, where heavy
waterfalls, looking like floods that inundated the land at the time of general destruction
of the universe, fall into the pools with heavy noise similar to the tabla in the temple.
The waterfalls carry diamonds and gems along with the water and rushes by the side of the
temple called Kurumbala of our Lord Civan.
2241 ஏந்துதிணிதிண்டோளிராவணனைமால்வரைக்கீழடரவூன்றிச்
சாந்தமெனநீறணிந்தசைவரிடம்போலுஞ்சாரற்சாரல்
பூந்தண்நறுவேங்கைக்கொத்திறுத்துமத்தகத்திற்பொலியஏந்திக்
கூந்தற்பிடியுங்களிறுமுடன்வணங்குங்குறும்பலாவே. 8
ஏந்து திணி திண்தோள் இராவணனை மால்வரைக்கீழ் அடர ஊன்றி
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் - சாரல்சாரல்,
பூந் தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து, மத்தகத்தில் பொலிய ஏந்தி,
கூந்தல்பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே.
Entu tiNi tiNtOL irAvaNanai mAlvaraikkIz aTara UnRi,
cAntam ena nIRu aNinta caivar iTampOlum--cAralcAral,
pUn taN naRu vEgkaik kottu iRuttu, mattakattil poliya Enti,
kUntal piTiyum kaLiRum uTan vaNagkum kuRumpalAvE.
பொருள்: உயர்ந்து நெருங்கிய திண்ணிய தோளுடைய இராவணனை பெரிய கயிலை
மலைக்கீழ் அவன் செருக்கு அழிய ஊன்றி, மணமுள்ள சந்தனம் எனத் திருநீற்றினை அணிந்த
சைவரிடம் (யாதெனில்), தூறல் மழை பெய்யும் சாரலில் குளிர்ந்த பூக்களை உடைய கொத்தினை
ஒடித்துத் தன் மத்தகத்தில் பொன்போல் பொலிய ஏந்திய, கூந்தற்பிடியும் களிறும் உடன்
வணங்கும் குறும்பலாவே.
குறிப்புரை: திணி - நெருங்கிய. திண் - திண்ணிய. உறுதியுடைய. மால்வரை - பெரிய
கயிலைமலை. சாந்தம் எனநீறு அணிந்த - சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு
(தி. 1 ப. 52 பா. 7). சாரல் சாரல் - மழைச்சாரலை உடைய மலைச்சாரலில். சாரல் தோறும் எனல்
சிறவாது. வேங்கைப் பூக்கள் தண்மை (குளிர்ச்சி)யும் நறுமை (நன்மை)யும் உடையன.
(நறுநாற்றம் -நன்னாற்றம்). இறுத்து - முறித்து. பிடி- பெண்யானைக்குக் கூந்தல் உண்டென்பது
மரபு. கூந்தல் மாலைக்குமரி பிடிக்குழாம் (சிந்தா.858). 'கூந்தற்பிடிக்குழாம்' (பா. 11). 'நறைக்கூந்தற்பிடி'
எனக் குமரகுருபர முனிவர் (பா. 45. 464) காலத்திலும் இவ்வழக்கம் இருந்தது. களிறு (ஆண்யானையையும்)
பிடியும் வேங்கைப் பூக்களைப் பறித்து, சிவபூஜைக்குரிய நெறியில் மத்தகத்தில் ஏந்திக் குறும்பலா
நாதரை வழிபடுகின்றன. அவ்விலங்குகட்குள்ள சிவபத்தி மக்கட் பிறப்பெய்தியும் அடியேற்கு
இல்லை. எப்பிறப்பில் உறுமோ?
Behold! It is Civan, our Lord in Kurumbala, who crushed Raavanan, the king of
Sri Lanka, with mighty shoulders for his misbehaviour. He smears His body with sacred white
ashes. This Lord is manifest in the temple situated along the mountain range where the rains
pour all around the year. The male and female elephants break the branches of the east
Indian kino tree with flower bunches. They carry these flora bunches in their trunks and
visit the temple, offer the flowers to our Lord Civan and both worship Him. This is the
place called Kurumbala.
2242. அரவினணையானும்நான்முகனுங்காண்பரியஅண்ணல்சென்னி
விரவிமதியணிந்தவிகிர்தர்க்கிடம்போலும்விரிபூஞ்சாரல்
மரவமிருகரையுமல்லிகையுஞ்சண்பகமுமலர்ந்துமாந்தக்
குரவமுறுவல் செய்யுங்குன்றிடஞ்சூழ்தண்சாரற்குறும்பலாவே. 9
அரவின்அணையானும், நான்முகனும் காண்புஅரிய அண்ணல், சென்னி
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் - விரிபூஞ்சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த,
குரவம் முறுவல் செய்யும் குன்றுஇடம் சூழ் தண்சாரல் குறும்பலாவே.
aravin aNaiyAnum nAnmukanum kANpu ariya aNNal, cenni
viravi mati aNinta vikirtarkku iTampOlum--viri pUnjcAral,
maravam iru karaiyum mallikaiyum caNpakamum malarntu mAnta,
kuravam muRuval ceyyum kunRu iTam cUz taN cAral kuRumpalAvE.
பொருள்: பாம்புப் படுகை உடையவனும் பிரமனும் காணவியலாத அண்ணல், சென்னியில்
பிறையை அணிந்த மாறுபட்டவர்; அவருக்கு இடம் யாதெனில், அகன்ற அழகிய சாரலில் குங்கும
மரமும் மல்லிகையும் சண்பகமும் இருகரையும் மலர்ந்து மாந்தக் குரவம் முறுவலைச் செய்யும்
குன்றுகள் இடந்தோறும் சூழ்ந்த குளிர்ந்த சாரல்களுடைய குறும்பலாவே.
குறிப்புரை: அரவின் அணையான்- பாம்பின் படுக்கையை உடைய திருமால். காண்பு அரிய -
காண்டற்கு அருமையாயுடைய. அண்ணல்- சிவபெருமான். சென்னி - தலை. விரவி - கலந்து.
மரவம் - குங்கும மரம். மாந்த - உண்ண, குடிக்க. குரவம் - குராமரம். முறுவல் செய்ய -பற்களைப்போலப்
பூக்க (சிரிக்க என்ற பொருளும் தொனித்தல் அறிக).
Behold! It is Civan, our Lord of Kurumbala. The demigod Thirumaal who takes
rest over the big snake and the other demigod four-faced Brahma, were both unable to
meet and see our Lord Civan who is the Chief Supreme Being. He retains on His matted
hair the baby moon very firmly. Our Lord Civan is the Supreme and is different from
this world. This Lord Civan is manifest in the temple by the side of the mountain
range where different kinds of flowers of fragrant trees, Arachin jasmine, a very
fragrant large yellow flower, the bottle flower and champaka blossom like the laughing
of young girls of the hillocks. This is the place of our Lord Civan called Kurumbala.
2243. மூடியசீவரத்தர்முன்கூறுண்டேறுதலும்பின்கூறுண்டு
காடிதொடுசமணைக்காய்ந்தாரிடம்போலுங்கல்சூழ்வெற்பில்
நீடுயர்வேய்குனியப்பாய்கடுவன்நீள்கழைமேல்நிருத்தஞ்செய்யக்
கூடிய வேடுவர்கள்கூய்விளியாக்கைமறிக்குங்குறும்பலாவே. 10
மூடிய சீவரத்தர், முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு
காடி தொடு சமணைக் காய்ந்தார் இடம்போலும் - கல் சூழ் வெற்பில்
நீடு உயர் வேய் குனியப் பாய் கடுவன் நீள்கழைமேல் நிருத்தம் செய்ய,
கூடிய வேடுவர்கள் கூய் விளியா, கை மறிக்கும் குறும்பலாவே.
mUTiya cIvarattar, munkURu uNTu ERutalum pinkURu uNTu
kATi toTu camaNaik kAyntAr iTampOlum--kal cUz veRpil
nITu uyar vEy kuniyap pAy kaTuvan nILkazaimEl niruttam ceyya,
kUTiya vEtuvarkaL kUy viLiyA, kai maRikkum kuRumpalAvE.
பொருள்: துவர் ஊட்டிய துணியால் உடலை மூடியவர்; முன்கூறும் பின்கூறும் உண்டதன்
பின்னும் காடி பருகுபவர் ஆகியோரை வெறுத்தவரின் இடம் (யாதெனில்), பாறைகள் சூழ்ந்த
மலைமேல் மிக நெடியதாக உயர்ந்த மூங்கில் வளையப் பாய்கின்ற கடுவன் நீண்ட மூங்கில் மேல்
கழைக்கூத்து செய்ய, அதனைக் காணக் கூடிய வேடுவர்கள் சீழ்க்கை ஒலித்து கை கவிக்கும்
குறும்பலாவே.
குறிப்புரை: சீவரத்தார் - துவர் ஊட்டின சீலையை உடுத்தவர். உண்டு- உட்கொண்டு.
முன்கூறி பின்கூறி - 'அறுசுவையுண்டி, அமர்ந்து இல்லாள் ஊட்ட மறுசிகை நீக்கி உண்டார்'
என்றது சைனர் கூற்று. காடி- காடிநீர். சமண்- சமணர். வேய் - மூங்கில். குனிய-வளைய.
கடுவன் - ஆண்குரங்கு. கழை- மூங்கிலின் கழை. நிருத்தம்- கூத்து. கூவி -அழைத்து.
'குய்விளியாக்' -'கூய்விளியாக்' என்று பாடாந்தரம் உண்டு. (சுவாமிநாத பண்டிதர் தலமுறைப்
பதிப்பு பக். 911 பார்க்க) வேடர்கள் 'குய்' என விளித்தல் உண்டு. கை மறிக்கும் -கைகவிக்கும். '
'தக்கார் போற் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே' (சிந்தா.1227).
Behold! It is Civan, Lord of Kurumbala. The Jains wear a special variety of cloth
known as 'Seevaram' (Ochre Cloth) on their body. They eat earlier six different varieties
of food; later they take sour toddy. Our Lord Civan had abhorrence for these Jains. The
place where He manifests Himself is the mountain range where long bamboo clusters grow
slantingly. The monkeys climb the bent branches and dance jumping from one branch to
another. The forest hunters see the monkeys playing and they also enjoy making noise
as 'Kuil' and drive away the monkeys and clasp their hands.In such a mountainous area
our Lord Civan is manifested in the temple called Kurumbala.
2244. கொம்பார்பூஞ்சோலைக்குறும்பலாமேவியகொல்லேற்றண்ணல்
நம்பானடிபரவும்நான்மறையான்ஞானசம்பந்தன்சொன்ன
இன்பாயபாடலிவைபத்தும்வல்லார்விரும்பிக்கேட்பார்
தம்பாலதீவினைகள்போயகலும்நல்வினைகள்தளராவன்றே. 11
கொம்பு ஆர் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல்,
நம்பான்,அடி பரவும் நான்மறையான் - ஞானசம்பந்தன் - சொன்ன
இன்புஆய பாடல் இவைபத்தும் வல்லார், விரும்பிக் கேட்பார்
தம்பால தீவினைகள் போய் அகலும்; நல்வினைகள் தளரா அன்றே.
kompu Ar pUnjcOlaik kuRumpalA mEviya kol ERRu aNNal,
nampAn, aTi paravum nAlmaRaiyAn--njAnacampantan--conna
inpu Aya pATal ivaipattum vallAr, virumpik kETpAr
tampAla tIvinaikaL pOy akalum; nalvinaikaL taLarA anRE.
பொருள்: பூங்கொம்புகள் நிறைந்த பூஞ்சோலைகள் உடைய குறும்பலாவில் இருக்கும் எருதூரும்
பெருமான், உயிர்களின் தசைக்கு உரியவர். அவருடைய திருவடியைப் பரவும் மறையவன் ஞானசம்பந்தன்
சொன்ன பேரின்பமயமான திருப்பாடல்கள் இவை பத்தையும் வல்லவர், விரும்பிக் கேட்பவர் அனைவருக்கும்
தம்முடைய தீவினைகள் அகன்று போக நல்வினை தளராமல் வளரும்.
குறிப்புரை: 'கொம்பார் சோலை' (திருக்குற்றாலப் பதிகம் 1 பார்க்க). ஏற்றண்ணல்- எருதூரும்
பெருமான். நம்பான்- (பா.2 பார்க்க). நம்பன் -உயிர்களின் நசைக்கு உரியவன். 'நம்பும் மேவும்
நசையாகும்மே' (தொல். சொல். உரிச், 33). இன்பு ஆய பாடல் - பேரின்பமயமான திருப்பாக்கள்.
தம்பால- தம் இடத்திலுள்ள. தளரா - தளராமல் வளரும்.
Behold! It is Civan, our Lord of Kurumbala. Our Lord Civan manifests Himself
in the Kurumbala temple which is surrounded by thick forests and men-made gardens in
plenty. They are all full of young tendrils and many flowery bunches all over the trees.
He is the Supreme Chief of forest hunters and all tribals. He is also loved by one and
all of us, especially by those who live in His area. Our saint Thiru-gnana- Sambandar
who is a great scholar of four Vedas had great delight to worship our Lord's holy feet
and did sacred chant on Him. Those devotees who can recite these ten songs and those
who listen to those when others chant will get rid of their bad karma and will enjoy
the effect of their good deeds.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
71ஆம் பதிகம் முற்றிற்று
End of 71st Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 208 பதிக எண்:72
72. திருநணா 72. THIRU-NANAA
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருநணா என்னும் இத்திருத்தலமானது வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நண்ணாத
பதியாதலின் நணா என்னும் பெயர் பெற்றது. திரு அடைமொழி. இது பவாநி என்றும், காவிரியும்
பவாநியும் கூடுதலால் பவாநிகூடல் என்றும் கூறப்படும். இது கொங்கு நாட்டுத் தேவாரம் பெற்ற
பதிகளில் ஒன்று. இது ஈரோடு தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கே 13.5 கி.மீ. தூரத்தில்
இருக்கின்றது. சேலம், கரூர், ஈரோடு, கோவை முதலிய நகர்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்
படுகின்றன. இறைவரது திருப்பெயர் சங்கமுகநாதர். இறைவியாரது திருப்பெயர் வேதநாயகி .
குபேரன், விசுவாமித்திர முனிவர், பராசர முனிவர் வழிபட்டுப் பேறுபெற்றார்கள். இது பவாநி
முக்கூடல் என்னும் தீர்த்தச் சிறப்பு உடையது. பவாநி, காவிரி, அமுதநதி இவை ஆலயத்திற்குக்
கிழக்கே கூடுகின்றன. இவ்வாலயத்தில் தனியே ஒரு திருமால் கோயில் இருக்கின்றது.
அவர் வழிபட்ட குறிப்பு 'பூமியளந்தானும் போற்ற மன்னி' என்னும் இக்கோயிலுக்குரிய
ஞானசம்பந்தர் பதிகம் ஒன்பதாம் பாடல் பகுதியால் புலப்படுகிறது. இதற்கு ஞானசம்பந்தரது
பதிகம் ஒன்று உண்டு.
பதிக வரலாறு
ஆளுடைய பிள்ளையார் கொங்கிற் குடபுலம் சென்று பல சிவதலங்களை வணங்கித்
கொடிமாடச் செங்குன்றூர்க்கு அடியவரும் ஏனையவரும் சிறப்புற வரவேற்கச் சென்றடைந்து
வழிபட்டு இனிதிருந்தார். அதன் புறத்துள்ள சிவதலங்களை வணங்குங்கால் திருநணாவினை
இறைஞ்சிப் பரவிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
2245. பந்தார்விரன்மடவாள்பாகமாநாகம்பூண்டேறதேறி
அந்தாரரவணிந்த அம்மானிடம்போலுமந்தண்சாரல்
வந்தார்மடமந்திகூத்தாடவார்பொழிலில்வண்டுபாடச்
செந்தேன்தெளியொளிரத்தேமாக்கனியுதிர்க்குந்திருநணாவே. 1
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, ஏறு அதுஏறி,
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம்போலும் - அம் தண்சாரல்
வந்து ஆர் மடமந்தி கூத்துஆட, வார்பொழிலில் வண்டு பாட,
செந்தேன் தெளி ஒளிர, தேமாக்கனி உதிர்க்கும் திரு நணாவே.
pantu Ar viral maTavAL pAkamA, nAkam pUNTu, ERu atu ERi,
am tAr aravu aNinta ammAn iTam pOlum--am taNcAral
vantu Ar maTamanti kUttu ATa, vAr pozilil vaNTu pATa,
centEn teLi oLira, tEmAgkani utirkkum tiru naNAvE.
பொருள்: பந்தினைப் போன்ற மெல்விரல்களையுடைய உமையம்மையைத் தன் இடப்பாகத்தில்
கொண்டு, நாகப்பாம்பினை அணியாகப் பூண்டு, இடப வாகனத்தில் ஏறி, அழகிய மாலைகளாகப்
பாம்புகளை அணிந்த அருமகனின் இடம், (யாதெனில்) அழகிய குளிர்ந்த சாரல் உடையதும்,
காற்று வீச, இளமந்தி கூத்தாட, நீண்ட பொழிலில் வண்டுகள் பாட, செந்நிறத்தேனின் தெளிவு
சொட்டத் தேமா கனியை உதிர்க்கும் திருநணாவே.
குறிப்புரை: பந்து ஆர் விரல் மடவாள்- 'பந்தார் விரலி' 'பந்தமரும் விரல் மங்கை நல்லாள்'
'பந்தார் விரலுமையாள்' 'பந்துலாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவை' 'பந்துசேர் விரலாள்'
எனப்பிற இடத்திலும் அருளியிருத்தலறிக. பாகம் - இடப்பக்கம். நாகம்- பாம்பு. ஏறது - இடபவாகனம்.
அம்தார் அரவு அணிந்த - அழகிய பாம்புகளை மாலைபோல் அணிந்த. அம்மான் - அருமகன்
என்பதன் மரூஉ. அம் மஹாந் என்பதன் திரிபெனல் பிழை. பெம்மான் என்பது பெருமகாந்
என்பதன் திரிபெனல் இல்லை. 'எம்மான்', 'தம்மான்', 'கோமான்' என்பவற்றில் மகன் என்பதே
திரிந்தது. வந்து - காற்று. மந்தி - குரங்கு. தெளி - தெளிவு. தேமா - தித்திக்கும் மா - எழுவாய்.
கனி - செய்யப்படு பொருள். உதிர்க்கும் - பயனிலை.
Lord Civan is the Supreme Being in Thiru-nanaa. He has embedded His consort
Umaa Devi on the left half of His body. Her fingers used to play very often various
types of balls in different ways. He uses the snake as an ornament, it is His brilliant
ornament all over His body. He sustains the white bull for His conveyance. He wears the
snake as His beautiful garland also. This Lord is manifest in the temple very near
the wondrous cool mountain range. In the nearby mountains monkeys in large numbers
join and dance and enjoy life. Near the mountain range thick forests exist with lots
of flower trees. Here, the bees collectively join creating noise, which sounds singing.
The red honey dripping from flowers forms pools and mango fruits get dropped on the
ground from the trees. In such an attractive place our Lord Civan has manifested Himself.
2246. நாட்டம்பொலிந்திலங்குநெற்றியினான்மற்றொருகைவீணையேந்தி
ஈட்டுந்துயரறுக்குமெம்மானிடம்போலுமிலைசூழ்கானில்
ஓட்டந்தருமருவிவீழும்விசைகாட்டமுந்தூழோசைச்
சேட்டார்மணிகளணியுந்திரைசேர்க்குந்திருநணாவே. 2
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை வீணை ஏந்தி,
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் - இலை சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே.
nATTam polintu ilagku neRRiyinAn, maRRoru kai vINai Enti,
ITTum tuyar aRukkum emmAn, iTampOlum--ilai cUz kAnil
OTTam tarum aruvi vIzum vicai kATTa, muntUz Ocaic
cETTAr maNikaL aNiyum tirai cErkkum tiru naNAvE.
பொருள்: கண் அழகாக விளங்கும் நெற்றியை உடையவன், ஒருகையில் வீணையைத்
தழுவி, (மற்றொரு கையில் வீணையை மீட்டி) ஈட்டும் துயர் அனைத்தும் நீக்கும் எம் தலைவன்
இடம் (யாதெனில்), இலைகள் நெருங்கிய காட்டகத்தில் மூங்கில் அசையும் ஓசை, சலசலவென்று
ஓடும் அருவி வீழும் ஓசையைக் காட்ட, மலையின் உயரத்தில் இருக்கும் மணிகளை அருவியின்
அலைகள் கொண்டு வந்து கரை சேர்க்கும் திருநணாவே.
குறிப்புரை: நாட்டம் - கண், தீவிழி. வீணையேந்தி - மிக நல்ல வீணை தடவி (பதி. 221 - 1).
ஈட்டும் துயர்- ஆகாமியகன்மம் (சஞ்சிதமாய்ப் பிராரப்தம்) ஆகுந்துயரம். கான்- காடு. விசை - வேகம்
முந்தூழ் - மூங்கில். சேடு ஆர் - (மலையின்) உயரத்தில் பொருந்திய. திரை - அருவியின் அலைகள்,
Lord Civa is manifest in Thiru-nanaa. He has a beautiful third eye in His forehead,
which brightens His appearance. He holds the Indian Lute (Veena) in one of His hands.
He dispels the karma of His devotees. In this place, the trees with dense leaves are many
in the forest area. Here the waterfalls from the mountains produce musical sounds. The bamboo
trees are too many and in bunches they grow. They dash against one another due to heavy wind
and make noise. The running water in the rivulets and rivers carries all varieties of gems
and they get dropped and gathered on the banks of these water areas. Such a glorious place
is Thiru-nanaa where our Lord Civan is manifested.
2247. நன்றாங்கிசைமொழிந்துநன்னுதலாள்பாகமாய்ஞாலமேத்த
மின்தாங்குசெஞ்சடையெம்விகிர்தர்க்கிடம்போலும்விரைசூழ்வெற்பில்
குன்றோங்கிவன்றிரைகள்மோதமயிலாலுஞ்சாரற்செவ்வி
சென்றோங்கிவானவர்களேத்தியடிபணியுந்திருநணாவே. 3
நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம்ஆய், ஞாலம் ஏத்த
மின் தாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம்போலும் - விரை சூழ் வெற்பில்,
குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல், செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே.
nanRu Agku icai mozintu, nannutalAL pAkam Ay, njAlam Etta,
min tAgku cenjcaTai em vikitarkku iTampOlum--virai cUz veRpil,
kunRu Ogki van tiraikaL mOta, mayil Alum cAral, cevvi
cenRu Ogki vAnavarkaL Etti aTi paNiyum tiru naNAvE.
பொருள்: இசையுடைய மறைகளை நன்றாகப் பாடியருளி, அழகிய நெற்றியுடைய
உமையை இடப்பாகத்தில் கொண்டு, உலக மக்கள் வழிபட மின்னொளி வீசும் சடையைத்
தாங்கிய எம்முடை விகிர்தற்கு இடம் (யாதெனில்) நறுமணம் சூழ்ந்த மலைமேல் ஒலியுடன்
அருவி அலைகள் மோத அவ்வொலிக்கு ஏற்ப மயில்கள் நடமாடும் சாரல்களின் அழகினை
மிக உடையதும் தேவர்கள் சென்று ஏத்தி அடிவணங்குவதுமாகிய திருநணாவே.
குறிப்புரை: நன்று ஆங்கு இசைமொழிந்து- நன்றாக இசையுடைய சாமவேதத்தைப்
பாடியருளி. வேதங்களைத் தோற்றுவித்தருளி எனலும், இசையைத் தோற்றியருளி எனலும் ஆம்.
மொழிந்து ஆய் ஏத்தத் தாங்கு செஞ்சடை விகிர்தர் என்று இயைக்க. நன்னுதலாள் உமாதேவியார்.
ஞாலம்- பூமியிலுள்ளோர், உலகோர் எனலுமாம். மின் - ஒளி. விரை- மணம். வெற்பு - மலை, குன்று
ஓங்கி வல்திரை (அலை)கள் மோத மயில் ஆலும் சாரல். செவ்வி - அழகு.
Lord Civan, the originator of the Vedas sings the Saama Veda in a very pleasant
tone and displayed it to all (He sings other Vedas also). He has embedded His consort
Umaa Devi. His entangled locks of red long hair are very bright like lightning and
very conspicuous. He is manifest in this place and is glorified by the world. Here in
the mountain range waterfalls are many, big and tall. The falls itself looks like small
hills and the torrential flow of water dashes everywhere all around. The peacocks nearby
enjoy the falls and they dance. Here, the Devas arrive near the falls and offer their
worship to Lord Civa. Such a glorious place is Thiru-nanaa.
2248. கையில்மழுவேந்திக்காலிற்சிலம்பணிந்துகரித்தோல்கொண்டு
மெய்யில்முழுதணிந்தவிகிர்தர்க்கிடம்போலுமிடைந்துவானோர்
ஐயஅரனேபெருமானருளென்றென்றாதரிக்கச்
செய்யகமலம்பொழில்தேனளித்தியலுந்திருநணாவே. 4
கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல் கொண்டு,
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் - மிடைந்து வானோர், '
'ஐய! அரனே! பெருமான்! அருள்!" என்று என்று ஆதரிக்க,
செய்யகமலம் பொழில் தேன் அளித்து இயலும் திரு நணாவே.
kaiyil mazu Enti, kAlil cilampu aNintu, karittOl koNTu,
meyyil muzutu aNinta vikirtarkku iTampOlum--miTaintu vAnOr,
"aiya! aranE! perumAn!" aruL enRu enRu Atarikka,
ceyyakamalam pozil tEn aLittu iyalum tiru naNAvE.
பொருள்: கையில் மழுவாயுதத்தை உயர்த்தி, காலில் சிலம்பினை அணிந்து திருமேனியின்மேல்
யானைத்தோல் முழுதுமாக அணிந்த விகிர்தர்க்கு இடம் (யாதெனில்) வானவர்கள் நெருங்கி, 'ஐய! அரனே!
பெருமானே! அருள் செய்வீராக' என்று விரும்பிப் போற்ற, செந்தாமரை மலர்கள் சோலைகள்
தேன்பொழியும் திருநணாவே.
குறிப்புரை: கரி- கரத்தையுடையது. யானை, யானைத்தோலை உடம்பு முழுதும் மறையப்
போர்த்தார் என்றவாறு. கைம்மழு. காற்சிலம்பு. மெய்ப்போர்வை. மிடைந்து - நெருங்கி. 'ஐயனே',
அரனே, பெருமானே அருள் என்று வானோர் விரும்பிப் போற்ற. செய்ய கமலம்- செந்தாமரை.
பொழி- வெளிப்படுத்தும் தேன்தரும் என்றபடி.
Lord Civan holds the battle axe in one of His hands. He wears on His leg
the tinkling anklets. He covers His body with the hide of the elephant. He is the
Supreme (different from the world) Being. Here the Devas gather and offer worship
to Lord Civa chanting "Oh Father! Hara" (one with the supreme power) "Oh! Noble
and eminent with no parallel. Kindly grace us!" They love and pray Him. Here in the
ponds red lotus flowers produce large quantity of honey. Such a glorious place is
Thiru-nanaa where our Lord Civan is manifest.
2249. முத்தேர்நகையாளிடமாகத்தம்மார்பில்வெண்ணூல்பூண்டு
தொத்தேர்மலர்சடையில்வைத்தாரிடம்போலுஞ்சோலைசூழ்ந்த
அத்தேனளியுண்களியாலிசைமுரலவாலத்தும்பி
தெத்தேயெனமுரலக்கேட்டார்வினைகெடுக்குந்திருநணாவே. 5
முத்து ஏர் நகையாள் இடம்ஆக, தம் மார்பில் வெண்நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம்போலும் - சோலை சூழ்ந்த
அத்தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி,
தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.
muttu Er nakaiyAL iTam Aka, tam mArpil veN nUl pUNTu,
tottu Er malar caTaiyil vaittAr iTam pOlum--cOlai cUznta
attEn aLi uN kaLiyAl icai murala; Alat tumpi,
tettE ena; muralak kETTAr vinai keTukkum tiru naNAvE.
பொருள்: முத்துப் போன்ற பற்களையுடைய உமாதேவியாரை இடப்பாகத்தில் கொண்டு,
வெண்ணிறமான முப்புரிநூல் பூண்டு, அழகிய பூங்கொத்தைச் சடையில் வைத்த சிவபிரானின் இடம்
(யாதெனில்), சோலைகளாற் சூழப் பெற்று, தேனுண்ட மகிழ்ச்சியினால் சடையில் வண்டுகள்
இசை முரல, தும்பிகள் 'தெத்தே' என முரல, தன்பெயரைக் கேட்ட மாத்திரத்தே செவிமடுத்த
நல்வினையாளரது தீவினையைப் போக்கும் திருநணாவே.
குறிப்புரை: முத்து ஏர் நகையாள் -முத்தினைப் போலும் பற்களை உடைய உமாதேவியார்.
திருமார்பிற் பூணுநூல் பூண்டிருப்பது முன்னும் பின்னும் சிற்சில பதிகங்களிற் கூறப்படுகின்றது.
தொத்து - (பூங்) கொத்து. ஏர் -அழகு. மலர் கொன்றை (யும்) பிறவும். 'சடையமர் கொன்றையினார்'
(தி.2 ப.205 பா.3). 'கடிபடு கூவிளமத்தங் கமழ்சடை மேலுடையார்' (மேற்படி 6). அளி- வண்டுகள்.
களி- கள்ளுண்ட (மயக்கம்) களிப்பு. ஆல- ஒலிக்க. 'தெத்தே' என்பது அநுகரணம். கேட்டார்
வினைகெடுக்கும் - செவிமடுத்த நல்வினை யாளரது தீவினையைப் போக்கும்.
Lord Civan has embedded His consort Umaa Devi on the left side of His body.
Her teeth resemble pearls, white and uniform in position. He wears on His chest white
coloured sacred thread. He has adorned His locks of hair with bunches of lovely,
flowers. With these, He is manifest in Thiru-nanaa. This place is full of groves
around the city with flowers - most of them with good quantity of honey. The bees
in large numbers gather in the garden in great desire to suck honey, making noise,
which resembles the word 'thetha'. The garden is such a beautiful place. Those people
who hear the very name of the city as Thiru-nanaa will get their sins removed from
their life. In such a great glorious place our Lord Civa is manifest.
2250. வில்லார்வரையாகமாநாகநாணாகவேடங்கொண்டு
புல்லார் புரமூன்றெரித்தார்க்கிடம்போலும்புலியுமானும்
அல்லாதசாதிகளுமங்கழல்மேற்கைகூப்பஅடியார்கூடிச்
செல்லாவருநெறிக்கேவல்லஅருள்புரியுந்திருநணாவே. 6
வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம் கொண்டு
புல்லார் புரம்மூன்று எரித்தார்க்கு இடம்போலும் - புலியும் மானும்
அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார் கூடி,
செல்லா அருநெறிக்கே வல்ல அருள்புரியும் திரு நணாவே.
vil Ar varai Aka, mA nAkam nAN Aka, vETam koNTu,
pullAr puram mUnRu erittArkku iTampOlum--puliyum mAnum
allAta cAtikaLum am kazalmEl kaikUppa, aTiyAr kUTi,
cellA aru neRikke valla aruL puriyum tiru naNAvE.
பொருள்: மேருமலை வில்லாகப் பொருந்த, பெரிய பாம்பு வில்லின் நாணாக, தன்னைக்
கூடாத பகைவர்களின் மும்மதில்களையும் எரித்தவருக்கு இடம் (யாதெனில்), புலியும் மானும்
(இவையிரண்டும் பகை நீங்கி நட்புற்று வழிபடுதல் போல) அவை அல்லாத சாதி விலங்குகளும்
அழகிய கழலணிந்த திருவடிகளைக் கைகுவித்து வழிபட, அடியார்கள் அனைவரும் 'செல்லாத
செந்நெறிக்கே செல்ல' அருள்புரியும் திருநணாவே.
குறிப்புரை: வில் ஆர் வரை ஆக - மேருமலை வில்லாகப் பொருந்த. மாநாகம் நாண் ஆக -
பெரிய பாம்பு விற்கயிறாக. புல்லார் - தழுவாத (பகை)வர். புலி, மான் இரண்டும் பகை நீங்கி
நட்புற்று வழிபடுதல் போல. அவை அல்லாத விலங்கினங்களும் திருவடியைக் கைகுவித்து
வழிபடுகின்றன. அதுவே அன்றி அடியார்கட்கு அச்சம் முதலியன உளவாகா வண்ணம்.
அவர்கள் போகாத வழியிலே போகின்றன. சிவபக்தியும் உடைய விலங்கினங்கட்குள்ள
நல்வினை அடியேனுக்கில்லையே. இவ்வுயரிய மக்கட் பிறப்பை எய்தியும், அவனருளாலே
அவன் தாள் வணங்க, அவனருள் செய்தல் வேண்டும். அதற்கு நாம் பெருந்தவம் புரிதல்
வேண்டும். கழல் - திருவடிக்கு ஆகு பெயர்.
Our Lord Civan handled the Meru mountain as His bow, used the very big snake
called Vasuki as a rope to bend the bow; He dressed Himself as the greatest fighter
and shot an arrow on the three fortresses of Asuras which were flying in the sky and
destroyed them completely along with the people who lived there. This Lord is manifest
in Thiru-nanaa where tiger and deer as well as other animals come to the temple to
worship our Lord. The devotees also gather daily at the temple and offer worship to
our Lord. Our Lord graces all the devotees to reach heaven, which is inaccessible to
the people. Such a glorious city is Thiru-nanaa.
2251. கானார்களிற்றுரிவைமேல்மூடியாடாவொன்றரைமேற்சாத்தி
ஊனார்தலையோட்டிலூணுகந்தான்தானுகந்தகோயிலெங்கு
நானாவிதத்தால்விரதிகள்நன்னாமமேயேத்திவாழ்த்தத்
தேனார்மலர்கொண்டடியாரடிவணங்குந்திருநணாவே. 7
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி, ஆடுஅரவு ஒன்று அரைமேல் சாத்தி,
ஊன் ஆர் தலைஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் - எங்கும்
நானாவிதத்தால் விரதிகள் நன்நாமமே ஏத்தி வாழ்த்த
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே.
kAn Ar kaLiRRu urivai mEl mUTi, ATu aravu onRu araimEl cAtti,
Un Ar talai OTTil UN ukantAn tAn ukanta kOyil-egkum
nAnAvitattAl viratikaL nannAmamE Etti vAztta,
tEn Ar malar koNTu aTiyAr aTi vaNagkum tiru naNAvE.
பொருள்: காட்டில் வாழும் யானையினின்றும் உரித்த தோலை உடம்பின் மேல் போர்த்து,
ஆடுகின்ற பாம்பினை இடையில் கச்சாகக் கட்டி, ஊன் பொருந்திய மண்டையோட்டில் பிச்சை ஏற்று
மகிழ்ந்தவன் வாழும் திருக்கோவில் (யாதெனில்) எல்லா இடங்களிலும், பலவிதங்களிலும் தவத்தவர்கள்,
யோகிகள், பத்தர், சித்தர் முதலியோர் பிறவிப் பிணிக்கு மருந்தாகிய தன்னுடைய திருநாமங்களைக்
கூறி வாழ்த்த, தேனார் மலர் கொண்டு அடியவர்கள் தம்முடைய திருவடிகளை வணங்கும் திருநணாவே.
குறிப்புரை: கான் - காடு. ஆர்- பொருந்திய. நிறைந்த, களிறு உரிவை - யானைத்தோல். .
மேல்மூடி- உடம்பின்மேல் போர்த்து மறைத்து. ஆடு அரவு - ஆடும் பாம்பு. சாத்தி - சார்த்தி (கட்டி).
ஊன் ஆர்தலை ஓட்டில் - மாமிசத்தோடு கூடிய பிரமகபாலத்தில். ஊண்- உண்ணுதலை. உகந்தான் -
விரும்பினவன். உகந்த - விரும்பி எழுந்தருளியுள்ள. நானாவிதத்தால் - பலவகையால். விரதிகள் -
தவத்தோர்கள், யாகத்தோர்கள். நல்நாமமே - பிறவிப்பிணிக்கு மருந்தாகிய திருவைந் தெழுத்தையே.
அடியார் அடி - எழுவாய்த் தொடரும் ஆறன்றொகை நிலைத் தொடரும் ஆம்.
Our Lord Civan covers His body with the hide of the elephant that lives
in the forest. The dancing snake is used as a belt around His waist. He accepts alms
in the skull of Brahma with pieces of flesh sticking to it. He uses the skull happily.
He is very joyfully manifest in the temple of the city. The yogic devotees gather in
the temple and pray repeating His name. Other devotees collect flowers full of honey
and place them at the holy feet of our Lord and sing songs in His praise and prostrate
before His holy feet. Such a glorious place is Thiru-nanaa.
2252. மன்னீரிலங்கையர்தங்கோமான்வலிதொலையவிரலாலூன்றி
முந்நீர்க்கடல்நஞ்சையுண்டார்க்கிடம்போலும்முனைசேர்சீயம்
அன்னீர்மைகுன்றியழலால்விழிகுறையவழியுமுன்றிற்
செந்நீர்பரப்பச்சிறந்துகரியொளிக்குந்திருநணாவே. 8
மன்நீர் இலங்கையர் தம்கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி,
முந்நீர்க் - கடல்நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் - முழை சேர் சீயம்,
அல்-நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில்,
செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.
man nIr ilagkaiyar tam kOmAn vali tolaiya viralAl UnRi,
munnIrk-kaTal nanjcai uNTArkku iTampOlum--muzai cEr cIyam,
al-nIrmai kunRi azalAl vizi kuRaiya aziyum munRil,
cennIr parappac ciRantu kari oLikkum tiru naNAvE.
பொருள்: கடலிலே உள்ள இலங்கைக்கு அரசன், இராவணனின் ஆற்றலைக் கால்
பெருவிரலை ஊன்றி அழித்தவரும் கடலிற் பிறந்த நஞ்சை உண்டவரும் ஆகிய பெருமானுக்கு
இடம் (யாதெனில்) பகை கொண்ட சிங்கம் தன் பகை குன்றி, போரிடில் வலிமை தோற்கும்
முன்றிலில் இரத்தம் பரந்து கிடக்க சண்டையில் வென்ற யானை சிறந்து ஒளிரும் திருநணாவே.
குறிப்புரை: மன்நீர் - மிக்க நீர். நிலைபெற்ற நீர் (கடல்). முனை - பகை. சீயம் - சிங்கம்.
அல் - இரவு. நீர்மை - தன்மை. குன்றி - குறைந்து. அழல் - நெருப்பு. முன்றில் - முற்றம்.
செந்நீர் - இரத்தம். கரி- யானை, சிங்கத்தின் தொலைவும் யானையின் வெற்றியும் குறிக்கப்பட்டன.
Raavanan, the king of Sri Lanka, an island surrounded by great seas, all around
was a great mighty warrior full of unparalleled courage. Our Lord Civan subdued His
physical power by slightly pressing the top of His mountain abode with His toe. He once
imbibed the poison that came out of the ocean of milk. This Lord Civa is manifest in
Thiru-nanaa. The mountain range of this city has many caves. Inside these caves lived
a lion, the king of forests. An elephant had a fierce fight with this lion and destroyed
the fiery eyes of the lion and finally its physical power. On observing the lion's blood
at the cave's entrance, the elephant felt proud of its strength. At times such
events take place in this mountain range. Such is the speciality of the city, Thiru-nanaa.
2253. மையார்மணிமிடறன்மங்கையோர்பங்குடையான்மனைகள்தோறும்
கையார்பலியேற்றகள்வனிடம்போலுங்கழல்கள்நேடிப்
பொய்யாமறையானும் பூமியளந்தானும்போற்றமன்னிச்
செய்யாரெரியா முருவமுறவணங்குந்திருநணாவே. 9
மை ஆர் மணிமிடறன், மங்கை ஓர்பங்கு உடையான், மனைகள்தோறும்
கை ஆர் பலி ஏற்ற கள்வன், இடம்போலும் - கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும், பூமி அளந்தானும் போற்ற, மன்னிச்
செய் ஆர் எரிஆம் உருவம் உற, வணங்கும் திரு நணாவே.
mai Ar maNimiTaRan, magkai Orpagku uTaiyAn, manaikaL tORum
kai Ar pali ERRa kaLvan, iTampOlum--kazalkaL nETip
poyyA maRaiyAnum pUmi aLantAnum pORRa, mannic
cey Ar eri Am uruvam uRa, vaNagkum tiru naNAvE.
பொருள்: கருமணி போலும் கண்டத்தை உடையவன்; உமையைத் தன் மேனியில் ஒரு பாகமாக
உடையவன்; இல்லங்கள் தோறும் கையில் பிச்சை ஏற்கும் கள்வன்; அவனுடைய இடம் (யாதெனில்)
அவனுடைய திருவடிகளைத் தேடி பிரமனும் மூவடியால் உலகை அளந்தவனும் வழிபட அவர்களின்
முன்னிலையில் செந்நிற நெருப்புப் பிழம்பாக உருவமுற வணங்கும் திருநணாவே.
குறிப்புரை: மைஆர் மணிமிடறன் - கருமை நிறைந்த நீலமணி போலும் திருக்கழுத்துடைய
சிவபிரான். மேகத்தைப்போலும் அழகிய கண்டன் எனலுமாம். நேடி-தேடி பொய்யாமறை - வேதம்,
மன்னி- நிலைத்து. செய் - செம்மை. எரியாம் உருவம் - தீப்பிழம்பு வடிவம். விடமுண்ட ஆற்றலுடையவன்
பலியேற்று உண்ணல் வேண்டா. மங்கைபங்கன். தன்பால் இரப்பவர்க்கு ஈதல் வேண்டும். அவன்
மனைகள்தோறும் சென்று இரப்பது, மங்கையுடைமைக்கு ஏவாது, தன் கோலத்திற்கு ஒவ்வாத செயலை
மேற்கொண்டதால் அதற்கு ஓர் ஏது வெளிப்படாதிருத்தலைக் குறிக்கக் கள்வன் என்றார்.
Lord Civan's neck is dark blue in colour, because He imbibed the poison.
Before it moved down the throat, Umaa pressed His neck and stopped its downward movement.
He has embedded His consort on the left side of His body. He goes round the world and
visits many houses and begs for alms. When the household ladies offer Him food, He covets
their hearts. He is therefore called a robber. Thirumaal once upon a time measured the
earth. The four-faced Brahma used to chant the four Vedas. These two went out in search
of our Lord's feet and head and failed. They then prayed. Then our Lord Civan appeared
before them as a tall and endless column of fire when they were terrified. Finally they
worshipped Him and prayed to Him in this city of Thiru-nanaa.
2254. ஆடையொழித்தங்கமணேதிரிந்துண்பரல்லல்பேசி
மூடுருவமுகந்தாருரையகற்றும்மூர்த்திகோயில்
ஓடுநதிசேருநித்திலமும்மொய்த்தகிலுங்கரையிற்சாரச்
சேடர்சிறந்தேத்தத்தோன்றியொளிபெருகுந்திருநணாவே. 10
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார், அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார், உரை அகற்றும் மூர்த்தி கோயில்
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார,
சேடர் சிறந்து ஏத்த, தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே.
ATai ozittu agku amaNE tirintu uNpAr, allal pEci
mUTu uruvam ukantAr, urai akaRRum mUrtti kOyil-
OTum nati cErum nittilamum moytta akilum karaiyil cAra,
cETar ciRantu Etta, tOnRi oLi perukum tiru naNAvE.
பொருள்: ஆடையுடுத்தலை நீத்து அமணமாகத் திரிபவரும் முரட்டுத் தனமாகப்
பேசிக்கொண்டு துணியால் உடலை மூடிக் கொள்வதை உகந்தவர்களும் கூறும் உரைகளை
விலக்கும் மூர்த்தி இருக்கும் திருக்கோயில் (யாதெனில்), ஓடுகின்ற சேருகின்ற முத்தும்
அகிலும் கரையில் அடைய, பெரியோர்கள் சிறப்பாக வழிபட, செங்காந்தள் மலர்ந்து
ஒளிரும் திருநணாவே.
குறிப்புரை: 'ஆடை... உண்பார் என்பது திகம்பர சைனரையும் மூடும் உருவம் உகந்தார்'
என்பது சுவேதாம்பர சைனரையும் தேரரையும் குறித்தன. நித்திலம் - முத்து. அகில் - அகில் மரம்.
சேடர் - பெரியோர். தோன்றி- செங்காந்தள். 'கொய்ம்மலர தோன்றி போற்சூட்டுடைய சேவலும்'
(சீவகசிந்தாமணி 73).
The Jains move around without proper dress and beg for alms. They receive
and eat these from their hands. The Buddhists cover their body with ochre robes.
These two blabber distressing news all around. Our Lord Civa never listens to
those words. Our Lord is manifest in the temple in Thiru-nanaa. Here the river
flows nearby with rushing water. The running water carries pearls, eagle wood etc.
This wood emits fragrant smell when burnt. These are flung on the banks of the river.
Great wisemen visit the temple and worship our Lord daily. The red flowers collected
by devotees are placed over our Lord in plenty. They emit brightness all around the
area. Such a glorious city is Thiru-nanaa.
2255. கல்வித்தகத்தால்திரைசூழ்கடற்காழிக்கவுணிசீரார்
நல்வித்தகத்தாலினிதுணரும்ஞானசம்பந்தனெண்ணும்
சொல்வித்தகத்தாலிறைவன்திருநணாஏத்துபாடல்
வல்வித்தகத்தான்மொழிவார்பழியிலரிம்மண்ணின்மேலே. 11
கல் வித்தகத்தால்-திரை சூழ் கடல் காழிக் கவுணி - சீர் ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் - எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்,
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.
kal vittakattAl-tirai cUz kaTal kAzik kavuNi--cIr Ar
nal vittakattAl initu uNarum njAnacampantan--eNNum
col vittakattAl iRaivan tiru naNA Ettu pATal,
val vittakattAl mozivAr pazi ilar, im maNNin mElE.
பொருள்: (சகரர்கள் தம்முடைய) திறமையால் தோண்டிய கடல் சூழ்ந்த சீகாழியில்
கவுணியர்கள் குலத்தில் தோன்றிய நல்ல ஞானம் உடைய ஞானசம்பந்தன் கருத்தில் எண்ணிப்
பெருமையுடைய திருநணாவை ஏத்திப்பாடிய பாடல்களைக் கற்ற வல்லமையால்
மொழிபவர்கள் இம்மண்ணுலகில் பழியிலாதவர்களாவர்.
குறிப்புரை: கல் வித்தகத்தால்- 'கல்லயங்குதிரை சூழ நீள் கலிக் காழி' ( தி2. ப 211. பா 4)
கற்சாதுரியத்தால் என்பது பொருளாயினும் ஈண்டுப் பொருந்தாது. வித்தகம்- பெருமை.
சிற்பம் முதலிய சிறந்த தொழில், அதிசயம் என்னும் பொருள்களுள் ஏதேனும் பொருந்தும்,
காழிச்சிறப்பாகும். 'திரைசூழ்கடல்' என்பது காழிக்கு அடையாதல் கடலில் மிதந்ததும்
கடல் அருகிலிருந்ததும் பற்றி நல்வித்தகத்தால்- நல்ல ஞானத்தால். எண்ணும் சொல்வித்தகத்தால் -
கருதிய சொற்சாதுரியத்தால் வல்வித்தகத்தால்- இசையில், பொருளில், அன்பில் வலிய
சாதுரியத்தால். இம்மண்மேல் பழி இல்லாதவர் ஆவர்.
The city of Seerkaazhi has seashore on one side. Here the waves of the
sea with regularity and uniformity beautify the shore . Our saint Thiru-gnana-Sambandar
was born in this city with good divinity. He understands everything intuitively. He sang on
the Lord of Thiru-nanaa songs of spiritual wisdom with right choice of words . Those
devotees wha can sing these songs with musical talent, praising our Lord, will have
no blame in them and will not be ridiculed by anybody.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
72ஆம் பதிகம் முற்றிற்று
End of 72nd Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 209 பதிக எண்: 73
73. திருப்பிரமபுரம் 73. THIRU-P-PIRAMAPURAM
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
பதிகம் 137ஐப் பார்க்க.
பதிக வரலாறு
திருநாவுக்கரசு நாயனாரும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் சீகாழியில் மின்னார்சடை
அண்ணலை வணங்கி, சொல்மாலைகள் சாத்தி மகிழ்வெய்தி, சிலநாள் உடனிருந்து திருவருள் வாழ்வை
நடாத்தினர். பின்னர், அரசர் பலபலதலங்களை வழிபடச் சென்றார். கவுணியர் சீகாழியில் உறைகின்ற
நாளில் செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழிமாற்று, மாலைமாற்று, ஏகபாதம் முதலியவற்றைப்
பாடுங்கால் அருளியது திருச்சக்கரமாற்று என்னும் இத்திருப்பதிகம்.
இத்திருப்பதிகம் சீகாழிப்பதிக்குரிய பன்னிரு திருப்பெயர்களையும் போற்றிப் பரவும்
வகையில் அமைந்துள்ளது. இத்திருப்பதிகத்தின் முதற்பாடலில் கூறப்படும் பன்னிரு பெயர்களும்
1 முதல் 12 வரையுள்ள பாடல்களின் முதற்பெயர்களாக நின்று ஒரு வட்டமாக அமையும்படி
அப்பெயர்களை மாற்றினமையின் இது 'சக்கரமாற்று' என்னும் பெயர்த்தாயிற்று. முதல் திருப்பாடலின்
ஈற்றிலுள்ள 'கழுமலம்' என்னும் பெயர் இரண்டாம் திருப்பாடலின் முதற் பெயராயிற்று.
இவ்வாறே இரண்டாம் திருப்பாடலின் ஈற்றிலுள்ள 'தோணிபுரம்' என்னும் பெயர் அடுத்த திருப்பாடலில்
முதலில் அமைகின்றது. இவ்வாறே ஏனைய திருப்பாடல்களிலும் அமைந்து பன்னிரண்டாம் பாடலின்,
இறுதியில் பிரமபுரம் என்னும் பெயர், 'அயனூர்' எனவும் முதற் பாடலின் 'பிரமனூர்' என முதற்பெயராக
நின்றும் ஒரு வட்டமாக அமைகின்றது. பன்னிரண்டு பெயர்களும் ஒரு சக்கரத்தின் ஆரைக்கால் போலச்
சுழன்று வருதல் காண்க. பன்னிரண்டாம் திருப்பாடலில், இச்சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன
தமிழ்தரிப்போர் என வருதலால் இத்திருப் பதிகத்திற்குச் சக்கரமாற்று எனும் பெயர் திருஞானசம்பந்தப்
பிள்ளையாரே இட்டது எனலாம்.
திருச்சிற்றம்பலம்
2256. விளங்கியசீர்ப்பிரமனூர்வேணுபுரம்புகலிவெங்குருமேற்சோலை
வளங்கவருந்தோணிபுரம்பூந்தராய்சிரபுரம்வண்புறவமண்மேல்
களங்கமிலூர்சண்பைகமழ்காழிவயங்கொச்சைகழுமலமென்றின்ன
இளங்குமரன்றன்னைப்பெற்றிமையவர்தம்பகையெறிவித்திறைவனூரே. 1
விளங்கிய சீர்ப் பிரமன்ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண் புறவம், மண் மேல்
களங்கம்இல் ஊர்சண்பை, கமழ் காழி, வயம்கொச்சை, கழுமலம் என்று இன்ன
இளங்குமரன் தன்னைப் பெற்று, இமையவர் தம் பகை எறிவித்த இறைவன் ஊரே,
viLagkiya cIrp piraman Ur, vENupuram, pukali, vegkuru, mEl cOlai
vaLam kavarum tONipuram, pUntarAy, cirapuram, vaN puRavam, maNmEl
kaLagkam il UrcaNpai, kamaz kAzi, vayam koccai, kazumalam, enRu inna
iLagkumaran tannaip peRRu, imaiyavar tam pakai eRivitta iRaivan UrE.
பொருள்: சீர் விளங்கிய பிரமனூர்; சீர் - பெருமை, அழகு. உயர்ந்தோங்கிய சோலைகளின்
வளத்தையெல்லாம் தான் கவர்ந்து உயர்ந்து விளங்குவதால், மேற்சோலை வளம் கவரும் தோணிபுரம்
என்றார். களங்கமில் ஊர் சண்பை- குற்றங்கள் இல்லாத சண்பை நகர். கமழ் காழி- மணங்கமழ்கின்ற காழி.
வயங்கொச்சை- கொச்சைவயம், என்றும் இளையோனாகிய குமரனைப் பெற்று இமையவர்களுடைய
பகையாகிய அசுரர்களை எறிவித்த இறைவனின் ஊர். எறிவித்திறைவனூரே - எறிவித்த என்பதில்
பெயரெச்சத்தகரம் தொக்கு எறிவித்திறைவன் என ஆயிற்று.
குறிப்புரை: இப்பதிகத்திலும் அடுத்த பதிகத்திலும் 206ஆவது பதிகத்தின் முதற்பாட்டிலுள்ள முறையே
பன்னிரு திருப்பெயர்களும் அமைந்திருத்தல் அறிதற்பாலது. மேற்சோலை வளம் கவரும் தோணிபுரம்
என்றது, உயர்ந்தோங்கிய சோலைகளிலும் மேலோங்கி விளங்குவதால், சோலை வளத்தைத் தோணிமலை
கவர்ந்து திகழ்வதாயிற்றென்றபடி. இளங்குமரன் - முருகக் கடவுள், பாலசுப்பிரமணியர். பெற்று - ஐந்து
முகத்தோடு அதோமுகமும் கொண்டு. சேந்தனை முன் பயந்துலகில் தேவர்கள் தம்பகை கெடுத்தோன்
திகழுமூரே (தி.2 ப.210 பா.6). பகை- பகையாய அசுரர்களை. எறிவித்த - எறியச் செய்த. பெயரெச்சத்தகரம்
தொக்கது.
This poem sung by Thiru-gnana-Sambandar mentions the twelve names of Seerkaazhi
in alternate terms. The well renowned names are (1) Piramapuram, (2) Venupuram, (3) Pugali,
(4) Venguru- Venkuru , (5) Thonipuram, (6) Poontharai, (7) Sirapuram, (8) Puravam, (9) Shanbai,
(10) Kaazhi - Seerkaazhi, (11) Kochai - Vayam and (12) Kazhumalam. The young son god Kumaran,
the second son of Lord Civan appeared in this city. The enemies of devas were rooted out by
this god Kumaran in this city where Lord Civan manifests Himself.
2257. திருவளருங்கழுமலமேகொச்சைதேவேந்திரனூரயனூர்தெய்வத்
தருவளரும்பொழிற்புறவஞ்சிலம்பனூர்காழிதகுசண்பையொண்பா
உருவளர்வெங்குருப்புகலியோங்குதராய்தோணிபுரமுயர்ந்ததேவர்
வெருவவளர்கடல்விடமதுண்டணிகொள்கண்டத்தோன்விரும்புமூரே. 2
திரு வளரும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரன்ஊர், அயன்ஊர், தெய்வத்
தரு வளரும் பொழில் புறவம், சிலம்பன்ஊர், காழி, தகு சண்பை, ஒண் பா
உரு வளர் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், தோணிபுரம் - உயர்ந்த தேவர்
வெருவ, வளர் கடல்விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே.
tiru vaLarum kazumalamE, koccai, tEvEntiran Ur, ayan Ur, teyvat
taru vaLarum pozil puRavam, cilampan Ur, kAzi, taku caNpai, oN pA
uru vaLar vegkuru, pukali, Ogku tarAy, tONipuram--uyarnta tEvar
veruva, vaLar kaTalviTam atu uNTu aNi koL kaNTattOn virumpum UrE.
பொருள்: திருவளரும்- திரு - செல்வம்; பொருட்செல்வம், கல்விச்செல்வம், ஞானச் செல்வம்
மூன்றும் வளரும் கழுமலம். தேவேந்திரன் ஊர் -சூரனுக்கு அஞ்சிய இந்திரன் அடைக்கலம் புக்க ஊர்.
தெய்வத்தரு - கற்பகமரம். சிலம்பனூர் - சிரபுரம். நாகநாத சுவாமியைச் சிலம்பன் என்றார். நாகம் -
சிலம்பு- மலை. இவை ஒரு பொருளன. ஒள் பா உரு வளர் வெங்குரு- ஒண்பா -அறிவொளி அருளொளி
உடைய பாடல்கள்; அப்பாடல்களின் உருவில் வளர்கின்ற வெங்குரு. ஓங்கு தராய் - அஞ்சியோட மேலும்
மேலும் வளர்ந்தோங்குகின்ற பூந்தராய். வெருவ- அஞ்சியோட.
குறிப்புரை: அயனூர் - பிரமபுரம். தெய்வத்தரு - கல்பக விருக்ஷாதி. சிலம்பனூர் - சிரபுரம். நாகநாத
சுவாமியைச் சிலம்பன் என்றருளினார் போலும். நாகம் - மலை. ஒள்பா உருவளர் - அறிவொளியுடைய
அருட்பாக்கள் வடிவில் வளர்கின்ற. வெருவ - அஞ்சியலற.
Long long ago, the devas and asuras churned the ocean of milk where deadly poison
came out of the ocean. All the devas and asuras were terrified and ran away to Lord Civan
and requested Him to save them from the deadly poison. Lord Civan then imbibed the poison
when goddess Umaa Devi stopped the poison from going down the throat. His throat therefore
retains the dark blue colour. This Lord Civan wished to manifest Himself in this city.
This city is very famous where goddess Lakshmi also is manifest and this Kazhumalam carries
twelve other names and is commonly known as Seerkaazhi city.
2258. வாய்ந்தபுகழ்மறைவளருந்தோணிபுரம்பூந்தராய்சிலம்பன்வாழூர்
ஏய்ந்தபுறவந்திகழுஞ்சண்பையெழிற்காழியிறைகொச்சையம்பொன்
வேய்ந்தமதிற்கழுமலம்விண்ணோர்பணியமிக்கயனூரமரர்கோனூர்
ஆய்ந்தகலையார்புகலிவெங்குருவதரன்நாளுமமருமூரே. 3
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் வாழ் ஊர்,
ஏய்ந்த புறவம், திகழும் சண்பை, எழில் காழி, இறை கொச்சை, அம் பொன்
வேய்ந்த மதில் கழுமலம், விண்ணோர் பணிய மிக்க(ய)யன்ஊர்,அமரர்கோன்ஊர்,
ஆய்ந்த கலை ஆர் புகலி, வெங்குருஅது, - அரன் நாளும் அமரும் ஊரே.
vAynta pukaz maRai vaLarum tONipuram, pUntarAy, cilampan vAz Ur,
Eynta puRavam, tikazum caNpai, ezil kAzi iRai koccai, am pon
vEynta matil kazumalam, viNNOr paNiya mikka(a)yan Ur, amararkOn Ur,
Aynta kalai Ar pukali, vegkuru atu--aran nALum amarum UrE.
பொருள்: புகழ் வாய்ந்ததும் மறை வளர்வதுமாகிய தோணிபுரம். சிலம்பன் வாழூர் - சிரபுரம்
நாகநாத சுவாமி கோயில். அயன் ஊர் - பிரமபுரம். அமரர்கோன் - இந்திரன். ஆய்ந்த கலையார் புகலி -
கலைகளை ஆராயும் அறிஞர்கள் வாழ்கின்ற புகலி.
குறிப்புரை: மறை-வேதம். சிலம்பன் வாழ் ஊர் - சிரபுரம். நாகநாத சுவாமி கோயில்.
Our Lord Civan every day manifests Himself in this city. This city is very famous
and the Vedas were elicited every day here. This city is called by twelve names such as
Thonipuram etc., but it is commonly known as Seerkaazhi.
2259. மாமலையாள்கணவன்மகிழ்வெங்குருமாப்புகலிதராய்தோணிபுரம்வான்
சேமமதில்புடைதிகழுங்கழுமலமேகொச்சைதேவேந்திரனூர்சீர்ப்
பூமனூர்பொலிவுடையபுறவம்விறற்சிலம்பனூர்காழிசண்பை
பாமருவுகலையெட்டெட்டுணர்ந்தவற்றின்பயன்நுகர்வோர்பரவுமூரே. 4
மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு, மாப்புகலி, தராய், தோணிபுரம், வான்
சேம மதில் புடை திகழும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரன்ஊர்,சீர்ப்
பூமன்ஊர்,பொலிவு : உடைய புறவம், விறல் சிலம்பன்ஊர், காழி, சண்பை,
பா மருவு கலை எட்டு-எட்டு உணர்ந்த, அவற்றின் பயன் நுகர்வோர் பரவும்ஊரே
mAmalaiyAL kaNavan makiz vegkuru, mAp pukali, tarAy, tONipuram, vAn
cEma matil puTai tikazum kazumalamE, koccai, tEvEntiran Ur, cIrp
pUmakan Ur, polivu uTaiya puRavam, viRal cilampan Ur, kAzi, caNpai-
pA maruvu kalai eTTu-eTTu uNarnta, avaRRin payan nukarvOr paravum UrE.
பொருள்: மாமலையாள்- இமயமலையின் புதல்வி. பார்வதி. அவளுடைய கணவன்
விரும்பும் வெங்குரு. மாப்புகலி - பெரிய புகலி. வானத்தை முட்டும் காவல் மதில் சுற்றிலும்
திகழும் கழுமலம். பூமகன் - தாமரை மலர்மேல் இருக்கும் பிரமன். பொலிவு - விளக்கம்,
விறல் - வலிமை, வெற்றி. பா- வேதம் கலை எட்டெட்டு - 64 கலைகள். பயன் நுகர்வோர் -
அனுபவிக்கும் அறிஞர்கள். வேதக் கல்வியுடன் அறுபத்து நான்கு கலைகளையும் ஆய்ந்து
நுகர்வோர் வாழும் சிறப்புடையது காழி.
குறிப்புரை: மாமலையாள் - இமாசல குமாரியான உமாதேவியார். சேமம் - காவல். பூமகனூர் -
பிரமபுரம். பொலிவு - விளக்கம். விறல் - வலிமை. வெற்றி. கலை எட்டெட்டு - அறுபத்து நான்கு
கலைகள். நுகர்வோர் - அநுபவிக்கும் அறிஞர்கள்.
In the ancient days, the Tamil language contained various literature mostly
in political form. They deal with sixty-four arts and sciences such as Puraanam,
Vyakaranam, and Neethi Saastras etc. In those days, in the city of Seerkaazhi lived
very great scholars who mastered all the sixty-four arts and sciences. They devotedly
studied those arts and sciences and benefited by that knowledge. Such scholars adore
our Lord in this city. Lord Civan who is the consort of Umaa, daughter of the mountain
king wished to manifest Himself in Seerkaazhi, which carries twelve names as such
Venguru etc.
2260. தரைத்தேவர்பணிசண்பைதமிழ்க்காழிவயங்கொச்சைதயங்குபூமேல்
விரைச்சேருங்கழுமலமெய்யுணர்ந்தயனூர்விண்ணவர்தங்கோனூர்வென்றித்
திரைச்சேரும்புனற்புகலிவெங்குருச்செல்வம்பெருகுதோணிபுரஞ்சீர்
உரைச்சேர்பூந்தராய்சிலம்பனூர்புறவமுலகத்திலுயர்ந்தவூரே. 5
தரைத்தேவர் பணி சண்பை, தமிழ்க் காழி, வயம்கொச்சை, தயங்கு பூமேல்
விரைச் சேரும் கழுமலம், மெய் உணர்ந்த(அ)யன்ஊர், விண்ணவர்தம் கோன்ஊர், வென்றித்
திரைச் சேரும் புனல் புகலி, வெங்குரு, செல்வம் பெருகு தோணிபுரம் சீர்
உரைச் சேர் பூந்தராய், சிலம்பன்ஊர், புறவம் - உலகத்தில் உயர்ந்த ஊரே.
taraittEvar paNi caNpai, tamizk kAzi, vayam koccai, tayagku pUmEl
viraic cErum kazumalam, mey uNarnta(a)yan Ur, viNNavar tam kOn Ur, venRit
tiraic cErum punal pukali, vegkuru, celvam peruku tONipuram, cIr
urai cEr pUntarAy, cilampan Ur, puRavam--ulakattil uyarnta UrE.
பொருள்: தரைத் தேவர்- பூசுரர். மறையோர். தமிழ்க்காழி- தமிழ் சிறக்கும் காழி நகர்.
வயங்கொச்சை - கொச்சைவயம். மெய்யுணர்ந்தயனூர்- மெய் உணர்ந்த அயனூர் . 'த'கர
பெயரெச்ச விகுதி தொக்கது; பிரமனூர். விண்ணவர் தம் கோனூர்- விண்ணவர் தம் கோன்,
இந்திரன். அவன் சூரபன்மனுக்கு அஞ்சி சீகாழியில் மூங்கில் வடிவத்தில் இருந்தமையால்
இவ்வூர் வேணுபுரமாயிற்று. உரை - புகழ்.
குறிப்புரை: தரைத்தேவர்- பூசுரர். அந்தணர்- தமிழ்க்காழி என்றதால் ஸ்ரீகாளிபுரம் என்றதன்
திரிபென்ற கூற்று ஆராயத்தக்கது. விரை - மணம். மெய் உணர்ந்த அயன் என்க. அயனூர் - பிரமபுரம் .
விண்ணவர்தம் கோன் ஊர் - வேணுபுரம். திரை - அலை. உரை - (புகழ்) மொழி.
The greatest city in the world is Shanbai. This city is called Shanbai also, it is
one of the twelve names, the chief name being Seerkaazhi. The devotees visit the temple here
daily and serve our Lord, they are virtuous Brahmins and the devas of the earth.
2261. புண்டரிகத்தார்வயல்சூழ்புறவமிகுசிரபுரம்பூங்காழிசண்பை
எண்டிசையோரிறைஞ்சியவெங்குருப்புகலிபூந்தராய்த்தோணிபுரஞ்சீர்
வண்டமரும்பொழில்மல்குகழுமலநற்கொச்சைவானவர்தங்கோனூர்
அண்டயனூரிவையென்பரருங்கூற்றையுதைத்துகந்தஅப்பனூரே. 6
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம், மிகு சிரபுரம், பூங் காழி, சண்பை,
எண்டிசையோர் இறைஞ்சிய வெங்குரு, புகலி,பூந்தராய்,தோணிபுரம், சீர்
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம், நல் கொச்சை,வானவர் தம்கோன்ஊர்
அண்டு அயன்ஊர், இவை என்பார் -அருங்கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே
puNTarikattu Ar vayal cUz puRavam, miku cirapuram, pUg kAzi, caNpai,
eN ticaiyOr iRainjciya vegkuru, pukali, pUntarAy, tONipuram, cIr
vaNTu amarum pozil malku kazumalam, nal koccai, vAnavar tam kOn Ur,
aNTu ayan Ur, ivai enpAr--arugkURRai utaittu ukanta appan UrE.
பொருள்: புண்டரிகத்து வயல் சூழ் புறவம் - புண்டரிகம் - தாமரை; ஆர் - நிறைந்த தாமரை
மலர்கள் நிறைந்த கழனி சூழ்ந்த புறவம் எட்டுத் திசையிலுள்ளோரும் வணங்கிய வெங்குரு
குறிப்புரை: புண்டரிகத்து ஆர்வயல் - தாமரை மலர்களால் நிறைந்த கழனி. இறைஞ்சிய - வணங்கிய.
வானவர் கோனூர்- வேணுபுரம். அண்ட அயனூர் - பிரமதேவனூர், பிரமபுரம். காலசங்கார கர்த்தர் என்க.
All around the city of Thiru-p-piramapuram paddy fields were in plenty with lotus
flowers therein. Our Lord Civan once upon a time kicked the demigod of death, Yama, very
brave and mighty. Civan wished to be manifest in this glorious city, which has the name of
Puravam which is one of the twelve names, the chief name being, of course, Seerkaazhi.
2262. வண்மைவளர்வரத்தயனூர்வானவர்தங்கோனூர்வண்புகலியிஞ்சி
வெண்மதிசேர்வெங்குருமிக்கோரிறைஞ்சுசண்பைவியன்காழிகொச்சை
கண்மகிழுங்கழுமலங்கற்றோர்புகழுந்தோணிபுரம்பூந்தராய்சீர்ப்
பண்மலியுஞ்சிரபுரம்பார்புகழ்புறவம்பால்வண்ணன்பயிலுமூரே. 7
வண்மை வளர் வரத்து அயன்ஊர், வானவர் தம் கோன் ஊர், வண் புகலி, இஞ்சி
வெண்மதி சேர் வெங்குரு, மிக்கோர் இறைஞ்சு சண்பை, வியன் காழி, கொச்சை,
கண் மகிழும் கழுமலம், கற்றோர் புகழும் தோணிபுரம், பூந்தராய், சீர்ப்
பண் மலியும் சிரபுரம், பார் புகழ் புறவம் - பால்வண்ணன் பயிலும் ஊரே.
vaNmai vaLar varattu ayan Ur, vAnavar tam- kOn Ur, vaN pukali, injci
veN mati cEr vegkuru, mikkOr iRainjcu caNpai, viyan kAzi, koccai,
kaN makizum kazumalam, kaRROr pukazum tONipuram, pUntarAy, cIrp
paN maliyum cirapuram, pAr pukazum puRavam-pAlvaNNan payilum UrE.
பொருள்: வண்மை - வள்ளன்மை. வரத்து - மேன்மை வண்புகலி. வளமுடைய புகலி. இஞ்சி -
மதில் இஞ்சி வெண்மதி சேர் வெங்குரு - வெண்மதி வந்து சேரும் உயர்ந்த மதில்களை உடைய வெங்குரு.
மிக்கோர் -ஞானத்தில் மிக்கவர்கள். கண்மகிழும் - கண்ணுக்குப் பொலிவான. கற்றோர் புகழுந்
தோணிபுரம் - சிவனை வழிபடக் கற்றோர். வேதாகமங்களைக் கற்றோர் எனலுமாம்.
குறிப்புரை: வண்மை -கொடை. வரத்து - மேன்மையை உடைய. இஞ்சி - மதில். மிக்கோர்-
ஞானம், தவம். தொண்டு, பூஜை முதலியவற்றால் மேம்பட்டவர். கற்றோர்- சிவபிரானை வழிபடும்
நெறியை உணர்ந்தோர். வேதாகமங்களைக் கற்றவர் எனலுமாம். பார் - உலகம்.
The city of Thiru-p-piramapuram has big palaces with walls tall enough to reach
the moon, which passes through the sky. Here great scholars who are well versed in books
of wisdom praise the city. They are high philanthropists. Our Lord Civan has adorned His
body with white sacred ashes. He, therefore, exhibits pure whiteness all around. He
manifests Himself in Thiru-p-piramapuram, which carries twelve names, the most important
being Seerkaazhi.
2263. மோடிபுறங்காக்குமூர்புறவஞ்சீர்ச்சிலம்பனூர்காழிமூதூர்
நீடியலுஞ்சண்பைகழுமலங்கொச்சைவேணுபுரங்கமலநீடு
கூடியயனூர்வளர்வெங்குருப்புகலிதராய்தோணிபுரங்கூடப்போர்
தேடியுழலவுணர்பயில்திரிபுரங்கள்செற்றமலைச்சிலையனூரே. 8
மோடி புறங்காக்கும் ஊர், புறவம், சீர்ச் சிலம்பன்ஊர், காழிமூதூர்
நீடுஇயலும், சண்பை, கழுமலம், கொச்சை, வேணுபுரம், கமலம் நீடு
கூடிய(ய)யன்ஊர், வளர் வெங்குரு, புகலி, தராய், தோணிபுரம் - கூடப் போர்
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலைச்சிலையன் ஊரே..
mOTi puRagkAkkum Ur, puRavam, cIrc cilampan Ur, kAzimUtUr,
nITu iyalum caNpai, kazumalam, koccai, vENupuram, kamalam nITu
kUTiya(a)yan Ur, vaLar vegkuru, pukali, tarAy, tONipuram--kUTap pOr
tETi uzal avuNar payil tiripuragkaL ceRRa malaiccilaiyan UrE.
பொருள்: மோடி புறங்காக்கும் - மோடி - கொற்றவை. காவல் தெய்வம். புறங்காக்கும். நகரைக்
காவல் செய்யும் புறவம். சிலம்பன் ஊர் - சிரபுரம். கமலநீடு கூடியவன். தாமரை மலர் மீது தங்கியவன்
ஊர் - பிரமபுரம். கூடப் போர்தேடி உழல் அவுணர் - போர் கூடத் தேடி அலைகின்ற அவுணர் - போருக்கு
வருவோரைத் தேடி அலைகின்ற அசுரர்கள். செற்றமலைச் சிலையன் - செற்ற. அழித்த. மலைச்சிலை-
மலை வில் மேருமலையாகிய வில்.
குறிப்புரை: மோடி - துர்க்கை. புறங்காக்கும் - காவல் செய்யும். மோடி புறங்காக்கும் ஊராகிய
புறவம் என்க (தி.2 ப.210 பா.8). சீர்ச்சிலம்பன் ஊர் - சிரபுரம். கமல நீடு கூடியவன் ஊர் - பிரமபுரம்
(தாமரையில் வாழ்பவன்). போர், புரங்கள், செற்றமலை சிலையன் - திரிபுரத்தசுரரை அழித்த
மேருவில்லியாகிய சிவபிரான்.
We have already mentioned about the twelve names of Seerkaazhi. Our Thiru-gnana-Sambandar
uses the different names of the city in different poems to start with. Similarly in this verse he
uses the name Puravam and adds some historical truth. Here he says the city Puravam is watched
and safeguarded by a demigoddess called Durga. The asuras roamed all over the sky causing misery
to devas. They waged war with their enemies causing intolerable misery to many. Our Lord Civan,
therefore destroyed their three fortresses and completely eradicated their mightiness and killed
them all. This Civan wishes to be manifested in Thiru-p-piramapuram.
2264. இரக்கமுடையிறையவனூர்தோணிபுரம்பூந்தராய்சிலம்பன்றன்னூர்
நிரக்கவருபுனற்புறவநின்றதவத்தயனூர்சீர்த்தேவர்கோனூர்
வரக்கரவாப்புகலிவெங்குருமாசிலாச்சண்பைகாழிகொச்சை
அரக்கன்விறலழித்தருளிகழுமலமந்தணர்வேதமறாதவூரே. 9
இரக்கம்(ம்) உடை இறையவன் ஊர் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன்தன் ஊர்,
நிரக்க வருபுனல் புறவம், நின்ற தவத்து அயன்ஊர், சீர்த் தேவர்கோன்ஊர்,
வரக் கரவாப் புகலி, வெங்குரு, மாசு இலாச் சண்பை, காழி, கொச்சை,
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் - அந்தணர் வேதம் அறாத ஊரே.
irakkam(m) uTai iRaiyavan Ur tONipuram, pUntarAy, cilampantan Ur,
nirakka varupunal puRavam, ninRa tavattu ayan Ur, cIrt tEvarkOn Ur,
varak karavAp pukali, vegkuru, mAcu ilAc caNpai, kAzi, koccai,
arakkan viRal azittu aruLi kazumalam--antaNar vEtam aRAta UrE.
பொருள்: இரக்கமுடைய இறைவன் ஊர் தோணிபுரம் - தோணிபுரம் கருணையே வடிவான
சிவபெருமானின் ஊர். நிரக்க வரும் புனல் புறவம் -நீர் பெருக்குடன் விரைந்து பாயும் திருப்புறவம்.
தவத்து அயனூர் -தவத்தினையுடைய பிரமனின் ஊர். தேவர்கோன் ஊர்- சிரபுரம். வரக்கரவா புகலி -
புகலாக வந்தவர்களுக்குக் கரவாத திருப்புகலி. அரக்கன்- இராவணன். விறல் - வலிமை. அழித்தருளி -
அழித்து அருளியவன். இகர ஈற்றுப் பெயர், சிவன், கழுமலம் அந்தணர் மறையோதல் அறாத வூரே.
குறிப்புரை: இரக்கம் உடை இறையவன்- கருணையே உருவமாகிய சிவபிரான். நிரக்க வருபுனல்
என்றது நீரின் பெருக்கத்தையும் விரைவையும் உணர்த்தும். தவத்து அயன்- தவத்தையுடைய பிரமன்.
புகல் என்றெண்ணி வரக்கரவாத புகலி. மாசு - குற்றம். அரக்கன் - இராவணன். விறல் - வலி. அருளி-
சிவன்.
Our Lord Civan is the embodiment of grace to His devotees. He is manifest in Thonipuram,
this is one of the twelve names of Seerkaazhi. In this city scholarly Brahmins chant the Vedas
without any break. In such a glorious city, our Lord who subdued the mighty Raavanan has
manifested Himself. The city is well known for streams with profuse and fast flowing water.
2265. மேலோதுங்கழுமலமெய்த்தவம்வளருங்கொச்சையிந்திரனூர்மெய்ம்மை
நூலோதுமயன்றனூர்நுண்ணறிவார்குருப்புகலிதராய்தூநீர்மேல்
சேலோடுதோணிபுரந்திகழ்புறவஞ்சிலம்பனூர்செருச்செய்தன்று
மாலோடுமயனறியான்வண்காழிசண்பைமண்ணோர்வாழ்த்துமூரே. 10
மேல் ஓதும் கழுமலம், மெய்த்தவம் வளரும் கொச்சை, இந்திரன்ஊர், மெய்ம்மை
நூல் ஓதும் அயன் தன்ஊர், நுண் அறிவார் குரு. புகலி, தராய், தூ நீர் மேல்
சேல் ஓடு தோணிபுரம், திகழ் புறவம் சிலம்பன்ஊர், செருச் செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி, சண்பை - மண்ணோர் வாழ்த்தும் ஊரே.
mEl Otum kazumalam, meyttavam vaLarum koccai, intiran Ur, meymmai
nUl Otum ayan tan Ur, nuN aRivAr kuru, pukali, tarAy, tU nIrmEl
cEl OTu tONipuram, tikaz puRavam, cilampan Ur, ceruc ceytu anRu
mAlOTum ayan aRiyAn vaN kAzi, caNpai-maNNOr vAzttum UrE.
பொருள்: மெய்த்தவம் உண்மைச் சரியை கிரியா யோகங்கள், வேதம். நுண்ணறிவு ஆர்குரு -
நுட்பமான அறிவுடையோர் வாழும் வெங்குரு. சேல் - சேல்மீன் இனம். செரு -போர், மண்ணோர் -
மண்ணுலகத்தவர்.
குறிப்புரை: மெய்த்தவம் - உண்மைத் தவம் (தபசு). மெய்ம்மை நூல் - சத்தியமான வேதங்கள்,
நுண் அறிவு ஆர் குரு - நுட்பமான அறிவு பொருந்திய குரு, வெங்குரு. சேல் - மீனினம். செரு - போர்.
People in the entire world praise and felicitate this city of Seerkaazhi. Here
scholars chant always rich wisdom. Our Lord Civan is manifest in this city of Kazhumalam,
which is one of the twelve names of Seerkaazhi. He is the Lord whose greatness was not
known to Thirumaal and Brahma. This is the city where many lakes with variety of fish
are found.
2266. ஆக்கமர்சீரூர்சண்பைகாழியமர்கொச்சைகழுமலமன்பானூர்
ஓக்கமுடைத்தோணிபுரம்பூந்தராய்சிரபுரமொண்புறவநண்பார்
பூக்கமலத்தோன்மகிழூர்புரந்தரனூர்புகலிவெங்குருவுமென்பர்
சாக்கியரோடமண்கையர்தாமறியாவகைநின்றான்தங்குமூரே. 11
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை, காழி, அமர் கொச்சை, கழுமலம், அன்பான் ஊர்
ஓக்கம்(ம்) உடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண் புறவம், நண்பு ஆர்
பூக்கமலத்தோன் மகிழ் ஊர், புரந்தரன் ஊர், புகலி, வெங்குருவும், என்பர் -
சாக்கியரோடு அமண்கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே.
Akku amar cIr Ur caNpai, kAzi, amar koccai, kazumalam, anpAn Ur
Okkam(m) uTait tONipuram, pUntarAy, cirapuram, oN puRavam, naNpu Ar
pUkkamalattOn makiz Ur, purantaran Ur, pukali, vegkuruvum, enpar-
cAkkiyarOTu amaNkaiyar tAm aRiyA vakai ninRAn tagkum UrE.
பொருள்: ஆக்கு- ஆக்கம். ஆக்கமர் சீரூர்- ஆக்கம் மிக்க ஊர். அன்பான் ஊர் - அன்பான்
சிவபெருமான், அவனுடைய ஊர் அன்பான் ஊர். ஓக்கம் - உயர்ச்சி. ஒண் - விளக்கம். புரந்தரன்-இந்திரன்.
கையர் - கீழ்மக்கள் ஒழுக்கமில்லாதவர்கள்.
குறிப்புரை: ஆக்கு - ஆக்கம். 'ஆக்கம்மிக்க ஊர்' (தி.2 பா.210 பா.8). (மன்று மன்றம், இன்பு இன்பம்,
நீட்டு நீட்டம், பாட்டு பாட்டம் என்பவைபோல் அம்முப்பெற்றது). ஆக்கம் அமர் சீர் ஊர் என்க. அன்பான் ஊர் -
அன்புருவான் சிவபிரான் ஊர். அன்பானூராகிய தோணிபுரம். 'அன்பே சிவம்'. கமலத்தோன்- பிரமதேவன்.
புரந்தரன் - இந்திரன். ஓக்கம் - உயர்ச்சி. ஓங்குவது ஓக்கம். நீங்குவது நீக்கம், தேங்குவது தேக்கம், அடங்குவது
அடக்கம், தொடங்குவது தொடக்கம். பழக்கம், பழகு. ஙகரவொற்றில்லை. இறக்கம் -இறங்கு. ஙகர
வொற்றிருக்கின்றது. பகுதியில் அவ்வொற்றிருப்பினும் இன்றாயினும் வல்லொற்றுடைமை காண்க.
Our Lord Civan is an embodiment of affection and love. He is un-understandable to
the Jains and the Buddhists. In this city all are affectionate to each other and praise
our Lord. Our Lord Civan manifests Himself in the city of Shanbai which is full of greatness.
This name is one of the twelve names of Seerkaazhi.
2267. அக்கரஞ்சேர்தருமனூர்புகலிதராய்தோணிபுரமணிநீர்ப்பொய்கை
புக்கரஞ்சேர்புறவஞ்சீர்ச்சிலம்பனூர்புகழ்க்காழிசண்பைதொல்லூர்
மிக்கரஞ்சீர்க்கழுமலமேகொச்சைவயம்வேணுபுரமயனூர்மேலிச்
சக்கரஞ்சீர்த்தமிழ்விரகன்றான்சொன்னதமிழ்தரிப்போர்தவஞ்செய்தாரே. 12
அக்கரம் சேர் தருமன் ஊர், புகலி, தராய், தோணிபுரம், அணி நீர்ப் பொய்கைப்
புக்கரம் சேர் புறவம், சீர்ச் சிலம்பன்ஊர், புகழ்க் காழி, சண்பை, தொல் ஊர்,
மிக்கர் அம் சீர்க் கழுமலமே, கொச்சைவயம், வேணுபுரம், அயன்ஊர், மேல் இச்
சக்கரம் சீர்த் தமிழ்விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தாரே.
akkaram cEr taruman Ur, pukali, tarAy, tONipuram, aNi nIrp poykaip
pukkaram cEr puRavam, cIrc cilampan Ur, pukazk kAzi, caNpai, tol Ur
mikkar am cIrk kazumalamE, koccai vayam, vENupuram, ayanUr, mEl ic
cakkaram cIrt tamizvirakan tAn conna tamiz tarippOr tavam ceytArE.
பொருள்: அக்கரம் -அக்ஷரம்.க்ஷரம் -அழிவு.அக்ஷரம் - அழிவின்மை. தருமன் - இயமன், குரு.
தருமனூர் - வெங்குரு. புக்கரம் -புஷ்கரம், தீர்த்தம். தொல்லூர்- பழமையான ஊர்.
மிக்கரன் சீர் - மிக்க அரன் சீர். அரனின் புகழை மிகவும் கொண்ட. இச்சக்கரம்- இந்தச் சக்கரபந்தம்.
குறிப்புரை: அக்கரம் (அக்ஷரம்) - அழிவின்மை. க்ஷரம் - அழிவு. அழியாத தருமனூர் என்றது
வெங்குருவினை. தருமன் - இயமதருமன் . . பூவை பாகன் - அன்பழுத்தும் அறமகற்கு இவ்வருள் பழுத்து....
பின்பழிச்சி ஒரு தருமன் தன் பதத்தின் இனிதிருக்கப் பெற்றான். (சீகாழித்தலபுராணம்) (தி.7. ப. 38 பா.9).
புக்கரம் - தாமரை. தொல்லூர் - (புராதனபுரி) பழமையதாகிய ஊர், மிக்கரஞ்சீர்- மிக்கு அரன் சீர்
என்றதாகக் கொண்டுரைக்கலாம். நன்கு புலப்பட்டிலது. இச்சக்கரம் எனச்சுட்டியதால் இப்பதிகம்
சித்திரக் கவியுள் ஒன்றான சக்கர பந்தம் என்றறிந்து முன்னோர் தலைப்பிற் குறித்தனர்.
This last poem, the twelfth one is peculiar to this section. All other sections
carry only 11 verses. Thiru-gnana-Sambandar mentions all the twelve names of Seerkaazhi.
Hence, he has composed 12 poems in this section. This section is called Thiru-ch-chakkara-
maatru. Our Thiru-gnana-Sambandar is a very famous Tamil scholar very skilful too.
He got immersed in the grace of our Lord Civan and in these verses he has mentioned
all the twelve names of Seerkaazhi.Those devotees who can praise our Lord and sing
melodiously these twelve verses will be considered the most scholarly people who perform
all the religious penance.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
73.ஆம் பதிகம் முற்றிற்று
End of 73rd Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 210 பதிக எண்: 74
74.திருப்பிரமபுரம் - கோமூத்திரி 74. THIRU-P-PIRAMAPURAM
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
பதிகம் 137ஐப் பார்க்க.
பதிக வரலாறு
இந்தத் திருப்பதிகம் திருக்கோமூத்திரி அந்தாதி என்னும் மிறைக்கவி அமைப்பில் உள்ளது.
ஒரு செய்யுளின் முன்னிரண்டடி மேல்வரியாகவும் பின்னிரண்டடி கீழ்வரியாகவும் எழுதி அவ்விரண்டு
வரியின் எழுத்துக்களையும் கோமூத்திர ரேகை போல் மாறிமாறிப் படிக்க அச்செய்யுளாகும்படி
அமைத்துப் பாடுஞ் சித்திரக்கவி (தண்டி. 95). இந்த விதி இத்திருப்பதிகத்துக்குப் பொருந்துமாறில்லை.
இத்திருப்பதிகமும் திருச்சக்கரமாற்றைப் போல, அந்தாதித் தொடையில் அமைந்துள்ளமை அறியத்தக்கது.
திருச்சிற்றம்பலம்
2268. பூமகனூர்புத்தேளுக்கிறைவனூர்குறைவிலாப்புகலிபூமேல்
மாமகளூர்வெங்குருநற்றோணிபுரம்பூந்தராய்வாய்ந்தஇஞ்சிச்
சேமமிகுசிரபுரஞ்சீர்ப்புறவநிறைபுகழ்ச்சண்பைகாழிகொச்சை
காமனைமுன்காய்ந்தநுதற்கண்ணவனூர்கழுமலநாங்கருதுமூரே. 1
பூமகன்ஊர், புத்தேளுக்கு இறைவன்ஊர், குறைவு இலாப் புகலி, பூமேல்
மாமகள்ஊர், வெங்குரு, நல்-தோணிபுரம், பூந்தராய், வாய்ந்த இஞ்சிச்
சேமம் மிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச் சண்பை, காழி, கொச்சை,
காமனை முன் காய்ந்த நுதல்கண்ணவன் ஊர் கழுமலம் - நாம் கருதும் ஊரே.
pUmakan Ur, puttELukku iRaivan Ur, kuRaivu ilAp pukali, pUmEl
mAmakaL Ur, vegkuru, nal-tONipuram, pUntarAy, vAynta injcic
cEmam miku cirapuram, cIrp puRavam, niRai pukazc caNpai, kAzi, koccai,
kAmanai mun kAynta nutal kaNNavan Ur kazumalam-nAm karutum UrE.
பொருள்: பூமகன்- பிரமன். பூமகனூர்- பிரமனூர். புத்தேளுக் கிறைவன்- இந்திரன்; புத்தேளுக்
கிறைவனூர்-சிரபுரம். பூமேல் மாமகளூர்; பூமேல் மாமகள் - இலக்குமி. பூமேல் மாமகளூர் - திருமகள்
பரவும் ஊராகிய திருவெங்குரு. அவள் வாழும் ஊர் எனலுமாம். இஞ்சி-மதில். இஞ்சிச் சேமமிகும்
சிரபுரம் -மதிற்காவலுடைய சிரபுரம். காமன் - மன்மதன். இவ்வூர்கள் இறைவன் விரும்பும் ஊர்களாகும்.
குறிப்புரை: பூமேல் மாமகளூர் வெங்குரு- திருமகள் பரவும் ஊராகிய வெங்குரு. அவள் வாழும் ஊர்
எனலுமாம். செல்வம் பற்றியது. இஞ்சி - மதில். சேமம்- காவல். காமனை -மன்மதனை. நுதல்-நெற்றி.
In this Chapter also there are twelve verses. Every poem reports most of the twelve
names of Seerkaazhi. However, this chapter is called by a special name "திருக்கோமுத்திரி அந்தாதி"
and it is mentioned in the heading. The last two lines have beautiful rhymes. Goddess Lakshmi
is manifest in this city of Venguru. By her grace the city is very rich. The palaces in this
city have very tall walls, this city is guarded by Kaazhi. Also in this city our Lord Civan
kicked the god of death Yama and he died. Piramapuram is one of the twelve names of Kazhumalam.
2269. கருத்துடையமறையவர்சேர்கழுமலமெய்த்தோணிபுரங்கனகமாட
உருத்திகழ்வெங்குருப்புகலியோங்குதராயுலகாருங்கொச்சைகாழி
திருத்திகழுஞ்சிரபுரந்தேவேந்திரனூர்செங்கமலத்தயனூர்தெய்வத்
தருத்திகழும்பொழிற்புறவஞ்சண்பைசடைமுடியண்ணல்தங்குமூரே. 2
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம், மெய்த் தோணிபுரம், கனக மாட
உருத் திகழ் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், உலகு ஆரும் கொச்சை, காழி,
திருத் திகழும் சிரபுரம், தேவேந்திரன்ஊர், செங்கமலத்து அயன்ஊர், தெய்வத்
தருத் திகழும் பொழில் புறவம், சண்பை - சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே.
karuttu uTaiya maRaiyavar cEr kazumalam, meyt tONipuram, kanaka mATa
urut tikaz vegkuru, pukali, Ogku tarAy, ulaku Arum koccai, kAzi,
tirut tikazum cirapuram, tEvEntiran Ur, cegkamalattu ayan Ur, teyvat
tarut tikazum pozil puRavam, caNpai-caTaimuTi aNNal tagkum UrE.
பொருள்: கருத்துடை மறையவர்- சிவஞானமுடைய மறையவர். கனகமாடம் - பொன் மாடம்.
உருத்திகழ் வெங்குரு - அழகாகத் திகழும் வெங்குரு. ஓங்குதராய் - மேலும் மேலும் உயரும் பூந்தராய்.
உலகாரும் கொச்சை-உலகமக்கள் சேரும் கொச்சைவயம். திருத்திகழும் சிரபுரம் தேவேந்திரனூர் -
செல்வமிக்க சிரபுரம் தேவேந்திரனூர் (புகலி). செங்கமலத்தயனூர்- பிரமனூர். தருத்திகழும் பொழிற்
புறவம் - தரு - மரம். மரங்கள் நிறைந்த சோலைகளால் ' அழகுடன் திகழும் புறவம். இவை இறைவன்
தங்கும் ஊர்களாகும்.
குறிப்புரை: கனகம் - பொன். திரு - இலக்குமி, அழகு. தரு - மரம். கற்பகம் முதலியவை.
Our Lord Civan has a lot of entangled locks of hair. He is manifest in
Kazhumalam which is one of the twelve names of Seerkaazhi. In this city, Vedic
scholars live in large numbers and do their rituals regularly. Goddess Lakshmi
also stays in this city. In such a glorious city our Lord Civan is manifest.
In the forest area, all around the city, Karpagam tree and many other trees
grow in large numbers. Karpagam tree grows usually in the celestial world.
It is supposed to yield whatever one wishes to have.
2270. ஊர்மதியைக்கதுவவுயர்மதிற்சண்பையொளிமருவுகாழிகொச்சை
கார்மலியும்பொழில்புடைசூழ்கழுமலமெய்த்தோணிபுரங்கற்றோரேத்துஞ்
சீர்மருவுபூந்தராய்சிரபுரமெய்ப்புறவமயனூர்பூங்கற்பத்
தார்மருவுமிந்திரனூர்புகலிவெங்குருக்கங்கைதரித்தோனூரே. 3
ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை, ஒளி மருவு காழி, கொச்சை,
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம், மெய்த் தோணிபுரம், கற்றோர் ஏத்தும்
சீர் மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயன்ஊர், பூங் கற்பத்
தார் மருவும் இந்திரன்ஊர், புகலி, வெங்குரு - கங்கை தரித்தோன் ஊரே.
Ur matiyaik katuva uyar matil caNpai, oLi maruvu kAzi, koccai,
kAr maliyum pozil puTai cUz kazumalam, meyt tONipuram, kaRROr Ettum
cIr maruvu pUntarAy, cirapuram, meyp puRavam, ayan Ur, pUg kaRpat
tAr maruvum intiran Ur, pukali, vegkuru--kagkai tarittOn UrE.
பொருள்: ஊர் மதியைக் கதுவ உயர் மதிற் சண்பை - ஊர் மதி - விண்ணில் ஊர்ந்து செல்லும்
சந்திரன். கதுவ -பொருந்த,பற்ற. விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைப் பொருந்துமளவு உயர்ந்த
மதில்களை உடைய சண்பை. ஒளி மருவும் காழி -பிரகாசமான காழிநகர். கார் மலியும் பொழில்
புடைசூழ் கழுமலம்- கார்மேகங்கள் தங்கும் உயர்ச்சியும் குளிர்ச்சியும் கொண்ட சோலைகள்
சூழ்ந்த கழுமலம். மெய்த்தோணிபுரம் - என்றும் உள்ள தோணிபுரம், பிரளய காலத்திலும் நின்று
நிலவுதலைக் குறித்தது. கற்றவர்கள் போற்றும் பூந்தராய். என்றுமுள்ள புறவம். அயனூர் - பிரமபுரம்.
கற்பகத்தார் - தார் - மாலை, கற்பகப்பூ மாலை கற்பகத்தார் மருவும் இந்திரன் ஊர் புகலி - கற்பக
மாலையை அணிந்த இந்திரன் அசுரனுக்கு அஞ்சிப் புகலாக அடைந்த ஊராதலின் புகலி, வெங்குரு
இவை கங்கையைச் சடையில் தரித்தோன் ஊர்களே.
குறிப்புரை: ஊர்மதி - விண் ஊர்ந்து செல்லும் சந்திரன். கதுவ - பற்ற. கற்பத்தார் - கற்பகப்
பூமாலை. தரித்தோன் - தாங்கியவன்.
Our Lord Civan supports the river Ganges in His entangled locks of hair. In the
city of Shanbai, which is one of the twelve names of Seerkaazhi, the moon moves in the
sky above the high walls of the palaces, which look as though they touch the moon. In
such a glorious city our Lord Civan is manifest.
2271. தரித்தமறையாளர்மிகுவெங்குருசீர்த்தோணிபுரந்தரியாரிஞ்சி
எரித்தவன்சேர்கழுமலமேகொச்சைபூந்தராய்புகலியிமையோர்கோனூர்
தெரித்தபுகழ்ச்சிரபுரஞ்சீர்திகழ்காழிசண்பைசெழுமறைகளெல்லாம்
விரித்தபுகழ்ப்புறவம்விரைக்கமலத்தோனூருலகில்விளங்குமூரே. 4
தரித்த மறையாளர் மிகு வெங்குரு,சீர்த் தோணிபுரம், தரியார் இஞ்சி
எரித்தவன் சேர் கழுமலமே, கொச்சை, பூந்தராய், புகலி, இமையோர்கோன்ஊர்,
தெரித்த புகழ்ச் சிரபுரம், சீர் திகழ் காழி, சண்பை, செழுமறைகள் எல்லாம்
விரித்த புகழ்ப் புறவம், விரைக்கமலத்தோன் ஊர் - உலகில் விளங்கும் ஊரே.
taritta maRaiyALar miku vegkuru, cIrt tONipuram, tariyAr injci
erittavan cEr kazumalamE, koccai, pUntarAy, pukali, imaiyOr kOn Ur,
teritta pukazc cirapuram, cIr tikaz kAzi, caNpai, cezumaRaikaL ellAm
viritta pukazp puRavam, viraikkamalattOn Ur-ulakil viLagkum UrE.
பொருள்: (சிவனை சிரசிலும் சிந்தையிலும்) தரித்த மறையவர்கள் மிகுதியாக வாழும்
வெங்குரு, புகழுடைத் தோணிபுரம், தன்னைத் தரியாத பகைவர்களாகிய முப்புராதிகளின்
மும்மதில்களை எரித்தவன் சேரும் கழுமலம். கொச்சைவயம். பூந்தராய். புகலியாகிய
தேவர்களின் தலைவன் ஊர். ஆராய்ந்த புகழுடைய சிரபுரம். பெருமையுடன் விளங்கும் காழி
சண்பை. பொருள் வளமுள்ள மறைகளையெல்லாம் விரித்த பெருமையை உடைய புறவம்.
மணமுடைய தாமரை மலரில் இருப்பவனூர் - பிரமபுரம். இவை உலகில் நின்று விளங்கும் ஊரே.
குறிப்புரை: தரியார் - பகைவர். இஞ்சி - மும்மதில். திரிபுரம். இமையோர்கோன் - இந்திரன்.
விரை- மணம்.
The city Venguru is the most cherished city of the world. In this city, the
Vedic scholars chant the Vedas everyday. Our Lord Civan once upon a time destroyed the
three fortresses of the asuraas while manifesting Himself here. Indiran, the chief of
devas visits the city and offers worship to our Lord. In such a glorious city of
Venguru which carries the twelve names of Seerkaazhi our Lord wishes to manifest
Himself.
2272. விளங்கயனூர்பூந்தராய்மிகுசண்பைவேணுபுரமேகமேய்க்கும்
இளங்கமுகம்பொழிற்றோணிபுரங்காழியெழிற்புகலிபுறவமேரார்
வளங்கவரும்வயற்கொச்சைவெங்குருமாச்சிரபுரம்வன்னஞ்சமுண்டு
களங்கமலிகளத்தவன்சீர்க்கழுமலங்காமன்னுடலங்காய்ந்தோனூரே. 5
விளங்கு அயன்ஊர், பூந்தராய், மிகு சண்பை, வேணுபுரம், மேகம் ஏய்க்கும்
இளங் கமுகம், பொழில் - தோணிபுரம், காழி, எழில் புகலி, புறவம், ஏர் ஆர்
வளம் கவரும் வயல் கொச்சை, வெங்குரு, மாச் சிரபுரம், வன்நஞ்சம் உண்டு
களங்கம் மலி களத்தவன் சீர்க் கழுமலம் - காமன்(ன்) உடலம் காய்ந்தோன் ஊரே.
viLagku ayan Ur, pUntarAy, miku caNpai, vENupuram, mEkam Eykkum
iLag kamukam pozil-tONipuram, kAzi, ezil pukali, puRavam, Er Ar
vaLam kavarum vayal koccai, vegkuru, mAccirapuram, van nanjcam uNTu
kaLagkam mali kaLattavan cIrk kazumalam--kAman(n) uTalam kAyntOn UrE.
பொருள்: விளங்கு அயன் ஊர் - நிலவுகின்ற பிரமபுரம். பூந்தராய். ஏற்றம் மிகு சண்பை. வேணுபுரம்.
மேகமண்டலத்தைப் பொருந்த உயர்ந்த கமுகஞ் சோலைகளை உடைய தோணிபுரம் -காழி. அழகிய புகலி.
புறவம். அழகு நிறைந்த வளமையுடைய வயல்கள் நிறைந்த கொச்சைவயம். வெங்குரு. பெரிய சிரபுரம்.
வலிய நஞ்சத்தை உண்டு கறை மலிந்த கண்டத்தனாகிய திருநீலகண்டனின் பெருமைமிகு கழுமலம்.
இவை மன்மதன் உடலை எரித்தவனின் ஊரே.
குறிப்புரை: மேகம் ஏய்க்கும் - மேக மண்டலத்தை ஒன்ற ஓங்கும். கமுகம் - பாக்குமரம்.
எழில் - அழகு. ஏர் ஆர் வளம் - அழகு நிறைந்த வளமை. வல்நஞ்சம் - வலிய விடம். களங்கம் - குற்றம்.
களத்தவன் - (திருநீல) கண்டன். காமன் - மன்மதன். காய்ந்தோன் - காய விழித்தவன், கோபித்தவன்.
Our Lord Civan, manifest in the city of Thiru-p-piramapuram, burnt the body of
Kaaman, the god of love. His throat is dark blue in colour. He is therefore called
Thiru neela-kandan. In this city, a large number of areca trees are grown in the garden.
The trees are all very tall and look tall enough to touch the moving moon in the sky.
This city is full of rich trees all over the area. This Thiru-p-piramapuram is one of
the names of Seerkaazhi city. In such a glorious city, our Lord Civan is manifest.
2273. காய்ந்துவருகாலனையன்றுதைத்தவனூர்கழுமலமாத்தோணிபுரஞ்சீர்
ஏய்ந்தவெங்குருப்புகலியிந்திரனூரிருங்கமலத்தயனூரின்பம்
வாய்ந்தபுறவந்திகழுஞ்சிரபுரம்பூந்தராய்கொச்சைகாழிசண்பை
சேந்தனைமுன்பயந்துலகில்தேவர்கள்தம்பகைகெடுத்தோன்திகழுமூரே. 6
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம், மாத் தோணிபுரம், சீர்
ஏய்ந்த வெங்குரு, புகலி, இந்திரன்ஊர், இருங் கமலத்து அயன்ஊர், இன்பம்
வாய்ந்த புறவம், திகழும், சிரபுரம், பூந்தராய், கொச்சை, காழி, சண்பை,
சேந்தனை முன் பயந்து உலகில் - தேவர்கள் தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே.
kAyntu varu kAlanai anRu utaittavan Ur kazumalam, mAt tONipuram, cIr
Eynta vegkuru, pukali, intiran Ur, irug kamalattu ayan Ur, inpam
vAynta puRavam, tikazum cirapuram, pUntarAy, koccai, kAzi, caNpai-
cEntanai mun payantu ulakil-tEvarkaL tam pakai keTuttOn tikazum UrE.
பொருள்: சினந்து வருகின்ற எமனை அன்று (மார்க்கண்டேயருக்காக) உதைத்தவன்
ஊர் கழுமலம். பெரிய தோணிபுரம். புகலி பொருந்திய வெங்குரு. புகலி இந்திரனூர். இருங்கமலத்து
அயனூர் - பிரமபுரம். இன்பம் பொருந்திய திருப்புறவம். சிரபுரம். பூந்தராய் கொச்சை,காழி,
சண்பை முருகனை முன் பெற்று உலகில் தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களை அழித்தவன்
திகழ்கின்ற ஊரே.
குறிப்புரை: காய்ந்து - கோபித்து. காலனை -இயமனை. சேந்தனை- முருகப்பிரானை. பயந்து-
பெற்று. பகை- சூரன்படை.(பதி. 209 பா. 1 பார்க்க.)
Our Lord Civan created Lord Muruga, Lord Murugan completely destroyed the
mightiness of Soorapanman and admitted him into his good grace as javelin and
peacock. Kaalan appeared before Lord Civan in an angry mood and our Lord Civan
kicked him and destroyed him. Our Lord is manifest in this city of Kazhumalam and
this is one of the twelve names of this great city of Seerkaazhi.
2274. திகழ்மாடமலிசண்பைபூந்தராய்பிரமனூர்காழிதேசார்
மிகுதோணிபுரந் திகழும்வேணுபுரம்வயங்கொச்சைபுறவம்விண்ணோர்
புகழ் புகலிகழுமலஞ்சீர்ச்சிரபுரம்வெங்குருவெம்போர்மகிடற்செற்று
நிகழ்நீலிநின்மலன்றன்னடியிணைகள்பணிந்துலகில்நின்றவூரே. 7
திகழ் மாடம் மலி சண்பை, பூந்தராய், பிரமன்ஊர், காழி,தேசு ஆர்
மிகு தோணிபுரம், திகழும் வேணுபுரம், வயம்கொச்சை,புறவம், விண்ணோர்
புகழ் புகலி, கழுமலம், சீர்ச் சிரபுரம், வெங்குரு - வெம்போர் மகிடற் செற்று,
நிகழ் நீலி,நின்மலன்தன் அடிஇணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே.
tikaz mATam mali caNpai, pUntarAy, piraman Ur, kAzi, tEcu Ar
miku tONipuram,tikazum vENupuram, vayam koccai, puRavam, viNNOr
pukaz pukali, kazumalam, cIrc cirapuram, vegkuru-vempOr makiTaR ceRRu,
nikaz nIli, ninmalan tan aTi iNaikaL paNintu ulakil ninRa UrE.
பொருள்: விளங்கும் மாட மாளிகைகள் மிக்க சண்பை. பூந்தராய். பிரமனூர், காழி. ஒளிமிகு
தோணிபுரம். திகழும் வேணுபுரம். கொச்சைவயம். புறவம். தேவர்கள் புகழும் புகலி. கழுமலம்.
புகழுடைய சிரபுரம். வெங்குரு. கொடிய போரினைச் செய்யும் மகிஷாசுரனைக் கொன்றழித்து
புகழுடன் விளங்குகின்ற நீலி (கொற்றவை) மலமற்றவனாகிய சிவனின் அடியிணைகளைப்
பணிந்து உலகில் நின்ற ஊரே.
குறிப்புரை: மலி- மலிந்த, மிக்க. தேசு - ஒளி. மகிடற்செற்று - மகிடாசுரனைக் கொன்று.
மகிடம் - எருமைக்கடா. நீலி - மாயோள் (துர்க்கை)கறுப்பாயி.
The demi-goddess called Durga Devi, also called Neeli, fought a severe battle
against a very fierce asura called Mahidasuran and killed him finally. Her anger did not
subside. Also she wanted to wipe out her life's blame for killing an asura. She
She therefore went to the city of Shanbai and prostrated before our Lord Civan
and got His grace and wiped out her sins of killing the asura. Shanbai is one of
the twelve names of the city of Seerkaazhi. This goddess Neeli is none else than
Durga Devi. She is also called Karuppayee. The asura's name is Mahidasuran.
Mahida means buffalo, especially a female. The asura always used to ride on a male
buffalo. He is therefore called Mahidasuran.
2275. நின்றமதில்சூழ்தருவெங்குருத்தோணிபுரநிகழும்வேணுமன்றில்
ஒன்றுகழுமலங்கொச்சையுயர்காழிசண்பைவளர்புறவமோடி
சென்றுபுறங்காக்குமூர்சிரபுரம்பூந்தராய்புகலிதேவர்கோனூர்
வென்றிமலிபிரமபுரம்பூதங்கள்தாங்காக்கமிக்கவூரே. 8
நின்ற மதில் சூழ் தரு வெங்குரு, தோணிபுரம், நிகழும் வேணு, மன்றில்
ஒன்று கழுமலம், கொச்சை, உயர் காழி, சண்பை, வளர் புறவம், மோடி
சென்று புறங்காக்கும் ஊர், சிரபுரம், பூந்தராய், புகலி, தேவர்கோன்ஊர்,
வென்றி மலி பிரமபுரம் - பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே
ninRa matil cUztaru vegkuru, tONipuram, nikazum vENu, manRil
onRu kazumalam, koccai, uyar kAzi, caNpai, vaLar puRavam, mOTi
cenRu puRagkAkkum Ur, cirapuram, pUntarAy, pukali, tEvar kOn Ur,
venRi mali piramapuram--pUtagkaL tAm kAkka mikka UrE.
பொருள்: உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற வெங்குரு, தோணிபுரம், நின்று நிலவும்
தோணிபுரம், கழுமலம், கொச்சைவயம், காழி, சண்பை, வளர்கின்ற திருப்புறவம், மோடி
(கொற்றவை) காக்கும் ஊர் சிரபுரம், பூந்தராய், புகலி, இந்திரனூர் (வேணுபுரம்) வெற்றி மிக்க
பிரமபுரம், பூதங்கள் தாங்கும் ஆக்கம் மிக்க ஊர்.
குறிப்புரை: மன்றில் - பொதியில். புறம் என்னும் பொருளது. மன்றில் ஒன்று எனல்
பொருந்து மேற்கொள்க.
The city Venguru is supported by Siva Bootas on all the eight sides. Here the
fortress of the city is tall and very strong. Venguru is one of the twelve names of
the famous city of Seerkaazhi.
2276. மிக்ககமலத்தயனூர்விளங்குபுறவஞ்சண்பைகாழிகொச்சை
தொக்கபொழிற்கழுமலந்தூத்தோணிபுரம்பூந்தராய்சிலம்பன்சேரூர்
மைக்கொள்பொழில்வேணுபுரமதிற்புகலிவெங்குருவல்லரக்கன்திண்டோள்
ஒக்க இருபதுமுடிகளொருபதுமீடழித்துகந்தஎம்மானூரே. 9
மிக்க கமலத்து அயன்ஊர், விளங்கு புறவம், சண்பை, காழி, கொச்சை,
தொக்க பொழில் கழுமலம், தூத் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன்சேர் ஊர்,
மைக் கொள் பொழில் வேணுபுரம், மதில் புகலி, வெங்குரு, வல் அரக்கன் திண்தோள்
ஒக்க இருபது முடிகள் ஒருபதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே.
mikka kamalattu ayan Ur, viLagku puRavam, caNpai, kAzi, koccai,
tokka pozil kazumalam, tUt tONipuram, pUntarAy, cilampan cEr Ur,
maik koL pozil vENupuram, matil pukali, vegkuru--val arakkan tiNtOL
okka irupatum muTikaL orupatum ITu azittu ukanta emmAn UrE.
பொருள்: தாமரை மலரின் மேலிருப்பவனாகிய அயனுடைய ஊர், பிரமபுரம். விளங்குகின்ற
திருப்புறவம். சண்பை. காழி. கொச்சைவயம். சோலைகள் நெருங்கிய கழுமலம். தூய தோணிபுரம்.
திருப்பூந்தராய். சிலம்பன் சேரூர். சிரபுரம். கரிய மேகம்போல் நிழல்தங்கும் பொழில்கள் உடைய
வேணுபுரம். மதில் உடைய புகலி. வெங்குரு. அரக்கனின் திண்ணிய தோள்கள் இருபதினையும்
முடிகள் ஒரு பத்தினையும் ஒருசேர வலி அழித்த எம்மானுடைய ஊர்.
குறிப்புரை: தூ - தூய்மை உடைய. எல்லாவுயிர்க்கும் பற்றுக் கோடாகிய. மை- மேகம்.
கருமையுமாம். பொழில்-சோலை. அரக்கன் - இராவணன். ஈடு - வலிமை. பெருமையுமாம்.
எம்மான் எம்பெருமான்.
Raavanan, the king of Sri Lanka physically was very powerful, virile and the
mightiest with no equal to him in the world. He had twenty shoulders and ten heads
with rich crowns. Our Lord Civan destroyed his widespread reputation. This Lord Civan
wishes to manifest Himself in the city of Brahma called Thiru-p-piramapuram. Brahma used
to be seated in the most beautiful lotus flower. This city Thiru-p piramapuram is one
of the twelve names of Seerkaazhi.
2277. எம்மான்சேர்வெங்குருச்சீர்ச்சிலம்பனூர்கழுமலநற்புகலியென்றும்
பொய்ம்மாண்பிலோர்புறவங்கொச்சைபுரந்தரனூர்நற்றோணிபுரம்போர்க்
கைம்மாவையுரிசெய்தோன்காழியயனூர்தராய்சண்பைகாரின்
மெய்ம்மால்பூமகனுணராவகைதழலாய்விளங்கியஎம்மிறைவனூரே. 10
எம்மான் சேர் வெங்குரு, சீர்ச் சிலம்பன்ஊர், கழுமலம், நல் புகலி, என்றும்
பொய்ம்மாண்பு இலோர் புறவம், கொச்சை, புரந்தரன்ஊர், நல்-தோணிபுரம், போர்க்
கைம்மாவை உரி செய்தோன் காழி, அயன்ஊர்,தராய், சண்பை - காரின்
மெய்ம் மால், பூ மகன், உணரா வகை தழல்ஆய் விளங்கிய எம் இறைவன் ஊரே.
emmAn cEr vegkuru, cIrc cilampan Ur, kazumalam, nal pukali, enRum
poymmANpu ilOr puRavam, koccai, purantaran Ur, nal-tONipuram, pOrk
kaimmAvai uriceytOn kAzi, ayan Ur, tarAy, caNpai--kArin
meym mAl, pU makan2, uNarA vakai tazal Ay viLagkiya em iRaivan UrE.
பொருள்: எம் தலைவன் சேர்ந்திருக்கும் வெங்குரு. பெருமை உடைய சிலம்பனூர்
கழுமலம். நல்ல திருப்புகலி. என்றும் மெய்ப்புகழுடையோர் சேரும் திருப்புறவம், கொச்சைவயம்,
வேணுபுரம், நல்ல தோணிபுரம், போர் செய்யும் துதிக்கையுடைய களிற்றை உரித்தவனின் காழி,
பிரமனூர், சண்பை, கார்மேகம் போலும் மேனியனாகிய திருமால், பிரமன் அறியவியலா வகை
தழற்பிழம்பாய் நின்ற எம் இறைவன் ஊரே.
குறிப்புரை: பொய்ம்மாண்பிலோர்-மெய்ப்புகழுடையோர். புரந்தரன் -இந்திரன். கைம்மா-
துதிக்கையை உடைய யானை. காரின் மெய்மால்-மேகம்போலும். திருமேனியை உடைய திருமால்.
பூமகன் - பிரமன். தழல் - தீ.
Thirumaal resembles black clouds in his entire frame. The four faced Brahma is
seated in the lotus flower. These two demigods were unable to see the holy head and feet
of our Lord Civan, but He stood before these two as a tall and big effulgence. This our
Lord Civan is manifest in Venguru city which is one of the twelve names of Seerkaazhi.
2278. இறைவனமர்சண்பையெழிற்புறவமயனூரிமையோர்க்கதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப்புகலிவெங்குருத்தோணிபுரங்குணமார்பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற்சிரபுரஞ்சீர்க்காழிவளர்கொச்சைகழுமலந்தேசின்றிப்
பறிதலையோடமண்கையர்சாக்கியர்கள்பரிசறியா அம்மானூரே. 11
இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன்ஊர், இமையோர்க்கு அதிபன் சேர் ஊர்
குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம் ஆர் பூந்தராய், நீர்ச்
சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை, கழுமலம் - தேசு இன்றிப்
பறி தலையோடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா அம்மான் ஊரே.
iRaivan amar caNpai, ezil puRavam, ayan Ur, imaiyOrkku atipan cEr Ur,
kuRaivu il pukazp pukali, vegkuru, tONipuram, kuNam Ar pUntarAy, nIrc
ciRai mali nal cirapuram, cIrk kAzi, vaLar koccai, kazumalam--tEcu inRip
paRi talaiyOTu amaNkaiyar, cAkkiyarkaL, paricu aRiyA ammAn UrE.
பொருள்: இறைவனாகிய சிவபிரான் விரும்பி அமர்கின்ற சண்பை. எழிலுடைய புறவம்.
தேவர்களுக்கு அதிபனாகிய இந்திரன் சேரும் ஊர். குறைவில்லாத புகழுடைய திருப்புகலி. வெங்குரு.
தோணிபுரம். நற்பண்புகள் உடைய பூந்தராய். நீர் அணைகள் மலிந்த நல்ல சிரபுரம். அழகிய காழி.
கொச்சைவயம். கழுமலம். ஒளியின்றி மயிர் பறித்த தலையோடு சமணராகிய கீழ்மக்கள்
சாக்கியர்களால் அறியமுடியாத இயல்புடைய அம்மானுடைய ஊரே.
குறிப்புரை: இறைவன்- சிவபிரான். அமர்- விரும்பியெழுந்தருளிய. எழில்- அழகு.
அதிபன்- இந்திரன். சிறை - அணை. தேசு - ஒளி. கையர் - கீழோர். பரிசு - சிவமாம்பெற்றி.
சிவன் இயல்பு.
The Jains remove their hair from their head and appear dull, these people and the
Buddhists could not understand our Lord Civan. Our Lord Civan with a longing has manifested
Himself in this city of Shanbai, which is one of the twelve names of the city Seerkaazhi.
2279. அம்மான்சேர்கழுமலமாச்சிரபுரம்வெங்குருக்கொச்சைபுறவமஞ்சீர்
மெய்ம்மானத்தொண்புகலிமிகுகாழிதோணிபுரந்தேவர்கோனூர்
அம்மான்மன்னுயர்சண்பைதராயயனூர்வழிமுடக்குமாவின்பாச்சல்
தம்மானொன்றியஞானசம்பந்தன்தமிழ்கற்போர்தக்கோர்தாமே. 12
அம்மான் சேர் கழுமலம், மாச் சிரபுரம், வெங்குரு, கொச்சை, புறவம்,அம் சீர்
மெய்ம் மானத்து ஒண் புகலி, மிகு காழி, தோணிபுரம், தேவர்கோன்ஊர்,
அம் மால் மன் உயர் சண்பை, தராய், அயன்ஊர், வழி முடக்கும் ஆவின்பாச்சல்
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர், தக்கோர் தாமே.
ammAn cEr kazumalam, mAc cirapuram, vegkuru, koccai, puRavam, am cIr
meym mAnattu oN pukali, miku kAzi, tONipuram, tEvar kOn Ur
am mAl man uyar caNpai, tarAy, ayan Ur, vazi muTakkum AvinpAccal
tammAn onRiya njAnacampantan tamiz kaRpOr, takkOr tAmE.
பொருள்: இறைவன் சேர் கழுமலம்; பெருமையுடைய சிரபுரம். வெங்குரு. கொச்சைவயம்.
திருப்புறவம். அழகிய மெய்ம்மையான புகழ் ஒளியுடைய புகலி. காழி. தோணிபுரம். இந்திரனூர்.
உயர் சண்பை. பூந்தராய். பிரமனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சலின் இயல்பில் தம்பிரானை ஒன்றிய,
ஞானசம்பந்தன் பாடிய தமிழைக் கற்போர் பெருமை உடையவராவர்.
குறிப்புரை: மா - பெருமை. இலக்குமியுமாம். மானத்து - பெருமையையுடைய. ஒள் - ஒளி.
அம்மால் - அழகிய திருமால் (கிருட்டிண மூர்த்தி) சிவபிரானுமாம். வழிமுடக்கும் ஆவின் பாச்சல் -
கோமுத்திரி என்னுஞ் சித்திரபந்தத்தினியல்பு கூறப்பட்டது. தம்மான்- தம்பிரான். 'தன்னடைந்தார்
தம்பிரான் ஆவான்' (தி.2 ப.176 பா. 1). தம்மானை ஒன்றிய என்று இரண்டனுருபு விரித்து.
சிவபிரானோடு அத்துவிதமுற்று என்று பொருள் கொள்க. தமிழ் சைவமும் தமிழும் என்ற
தொடர்க்கண் உள்ள தமிழ்மறை.
Our Lord Civan is also known as Ammaan. He is manifest in the city called
Kazhumalam, which is one of the twelve names of Seerkaazhi. In this chapter, all the
twelve verses are made up of a special name called Komuththiri. All the twelve names
of the city are the alternate names in all the twelve verses. Our saint Thiru-gnana-
Sambandar, merged with our Lord Civan of this place, chanted these twelve verses in
chaste Tamil language. Those devotees who can memorise and sing these twelve verses
before our Lord Civan will become great scholars.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
74ஆம் பதிகம் முற்றிற்று
End of 74th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 211 பதிக எண் 75.
75. சீகாழி 75. SEERKAAZHI
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
137ஆவது பதிகத்தைப் பார்க்க.
பதிக வரலாறு
137ஆவது பதிகத்தைப் பார்க்க.
திருச்சிற்றம்பலம்
2280. விண்ணியங்குமதிக்கண்ணியான்விரியுஞ்சடைப்
பெண்ணயங்கொள்திருமேனியான்பெருமானனற்
கண்ணயங்கொள்திருநெற்றியான்கலிக்காழியுள்
மண்ணயங்கொள்மறையாளரேத்துமலர்ப்பாதனே. 1
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் சடைப்
பெண் நயம் கொள் திருமேனியான், பெருமான், அனல்
கண் நயம் கொள் திருநெற்றியான் - கலிக் காழியுள்
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே.
viN iyagkum matikkaNNiyAn, viriyum caTaip
peN nayam koL tirumEniyAn, perumAn, anal
kaN nayam koL tiruneRRiyAn kalik kAziyuL,
maN nayam koL maRaiyALar Ettu malarppAtanE.
பொருள்: ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பிறைமதித் தலைக்கண்ணியை அணிந்தவன்..
பெண்ணைப் பாகத்தில் பொருத்தமாகக் கொண்ட திருமேனியன்; பெருமகன்; அனல் பொருந்திய
கண்ணை நெற்றியில் உடையவன். மகிழ்ச்சி நிறைந்த காழியில், உலகத்தவரின் நன்மையைக்
கருதுகின்ற தாமரை மலர் போன்ற திருப்பாதங்கள் உடையவனாகிய சிவபெருமானே.
குறிப்புரை: விண் இயங்கும் மதிக்கண்ணியான்- ஆகாயத்தில் சஞ்சரிக்கும் திங்களாகிய
தலைமாலையை அணிந்த சிவபிரான். பெண் நயம் கொள் திருமேனியான் - அர்த்தநாரீசுவர வடிவினன்.
அனல் கண் நயம் கொள் திருநெற்றியான்- நெருப்புக் கண்ணைக் கொண்ட அழகிய நெற்றியை
உடையவன். மண் நயம் கொள் - மண்ணோர் நலமாக்கொண்ட.
The city of Seerkaazhi is full of loud noise and pomposity. In this city, Vedic
scholars for the sake of virtue and for the benefit of the world worship the holy and
flowery feet of our Lord in the temple everyday. This Lord Civan retains the crescent
moon of the sky on His head as an ornament. His hair locks are widely spread. He has
embedded His consort Umaa Devi on the left side of His body. He is therefore known as
Arthanaareeswarar. He is the Supreme Being with no parallel. He has a third eye on His
forehead which is fiery.
2281. வலிய காலன் உயிர் வீட்டினான், மடவாளொடும்
பலிவிரும்பியதொர்கையினான்பரமேட்டியான்
கலியைவென்றமறையாளர்தங்கலிக்காழியுள்
நலியவந்தவினைதீர்த்துகந்தஎந்நம்பனே. 2
வலியகாலனுயிர்வீட்டினான்மடவாளொடும்
பலி விரும்பியது ஒர் கையினான், பரமேட்டியான் -
கலியை வென்ற மறையாளர்தம் கலிக் காழியுள்
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே.
valiya kAlan uyir vITTinAn, maTavALoTum
pali virumpiyatu or kaiyinAn, paramETTiyAn
kaliyai venRa maRaiyALar tam kalik kAziyuL,
naliya vanta vinai tIrttu ukanta em nampanE.
பொருள்: ஆற்றல் மிகுந்த எமனுடைய கையை உயிரை வாங்கினான்; உமாதேவியாரை
உடன்கொண்டு பிச்சையேற்ற கையை உடையவன். யாவர்க்கும் மேலான இடத்திலிருப்பவன்.
உயிர்களின் துன்பங்களை விரட்டும் மறையாளர்கள் வாழும் மகிழ்ச்சி நிறைந்த காழியுள்
உயிர்களை வருத்துவதற்கு வந்த வினைகளை ஒழித்து உயர்ந்தவன்; எம் விருப்பாயுள்ள
சிவபெருமானே.
குறிப்புரை: மடவாள்- உமாதேவியார். பரமேட்டியான்- தனக்கு மேலான தொன்றில்லாத
ஸ்தாநத்தையுடைய முழுமுதற் பொருள். ஆன்விகுதி தமிழ். கலியை - வறுமை முதலிய
துன்பங்களை. உகந்த - உயர்ந்த. எம் நம்பன் - எம் விருப்பாயுள்ளவன்.
In the city of Seerkaazhi religious scholarly Brahmins live in large numbers. They
conduct the ritual oblations in the sacrificial pit with an aim to wipeout poverty and
sufferings of people. Our Lord Civan eliminates the bad karma of the devotees and is pleased
to do it. Once He kicked and destroyed Kaalan, the god of death. He has embedded His consort
Uma Devi on His chest. He accepts the alms in His hands. He is the Supreme Being, nonpareil.
2282. சுற்றலாநற்புலித்தோலசைத்தயன்வெண்டலைத்
துற்றலாயதொருகொள்கையான்சுடுநீற்றினான்
கற்றல் கேட்டலுடையார்கள்வாழ்கலிக்காழியுள்
மற்றயங்குதிரள்தோளெம்மைந்தனவனல்லனே. 3
சுற்றல் ஆம் நல் புலித்தோல் அசைத்து, அயன் வெண்தலைத்
துற்றல் ஆயது ஒரு கொள்கையான், சுடுநீற்றினான் -
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக் காழியுள்,
மல்-தயங்கு திரள்தோள் எம் மைந்தன் அவன் அல்லனே!
cuRRal Am nal pulittOl acaittu, ayan veNtalait
tuRRal Ayatu oru koLkaiyAn, cuTu nIRRinAn-
kaRRal kETTal uTaiyArkaL vAz kalik kAziyuL,
mal-tayagku tiraLtOL em maintan avan allanE!
பொருள்: அழகிய புலித்தோலை இடுப்பைச் சுற்றி உடுத்து, பிரமனின் கபாலத்தில்
பிச்சை ஏற்று உண்ணுதலாகிய கொள்கையை உடையவன். சுட்ட சாம்பலாகிய திருநீற்றுப்
பூச்சினான்; நூல்களைக் கற்ற ஞானமும் செவியால் கேட்ட ஞானமும் வாய்ந்த பெரியோர்கள்
மகிழ்ச்சியுடன் வாழும் காழியுள், வலிமையும் திரட்சியும் கொண்ட தோள்களை உடைய
எம் வீரன்; உயிர்கள்பால் கருணை கொண்ட சிவபெருமானே.
குறிப்புரை: சுற்றல் ஆம் புலித்தோல் - சுற்றுதல் - அரையிற் சுற்றி உடுத்தல். அசைத்து - கட்டி.
துற்றல் -உண்ணல். சுடுநீறு (தி.2 ப.214 பா.2) மல்- வலிமை. தயங்கு - விளங்குகின்ற. மைந்தன் -
வலியன். வீரன்.
In the city of Seerkaazhi great scholars well-versed in useful subjects are
many. Also the scholars constituting a learned assembly listening to a new literary work
are many and efficient in this city of Seerkaazhi. Our Lord Civan who is the mightiest with
well developed shoulders, fit for wrestling resides here. He is a virtuous Supreme
Being. He wears the hide of a tiger on His waist. He asks for alms, holding Brahma's
skull. He has all goodness and propriety.
2283. பல்லயங்குதலையேந்தினான்படுகானிடை
மல்லயங்குதிரள்தோள்களாரநடமாடியுங்
கல்லயங்குதிரைசூழநீள்கலிக்காழியுள்
தொல்லயங்குபுகழ்பேணநின்றசுடர்வண்ணனே. 4
பல் அயங்கு தலை ஏந்தினான், படுகான் இடை
மல் அயங்கு திரள்தோள்கள் ஆர நடம் ஆடியும்
கல் அயங்கு திரை சூழ நீள் கலிக் காழியுள்,
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்வண்ணனே.
pal ayagku talai EntinAn, paTukAn iTai
mal ayagku tiraL tOLkaL Ara naTam ATiyum-
kal ayagku tirai cUza nIL kalik kAziyuL,
tol ayagku pukaz pENa ninRa cuTar vaNNanE.
பொருள்: பற்கள் நிலைகுலைந்த மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவன்; பிணங்கள்
நிறைந்த காட்டினிடையில் வலிமை திரண்ட தோள்கள் அசையக் கூத்தாடுபவனும், சகரரால் கல்லித்
தோண்டப் பட்ட கடல் சூழ் கலிக்காழியுள், தொன்று தொட்டு எங்கும் பரவிய புகழை அடியவர்கள்
விரும்பிப் போற்ற நின்ற ஒளி சுடரும் நிறத்தினனாகிய சிவபெருமானே.
குறிப்புரை: அயங்கு - அசங்கிய. நிலைகுலைந்த (தி.2 ப.140 பா.3). மல்.. ..தோள்-
வலிமையால் அசைந்த தோள். 'மற்றயங்கு திரடோள்' என்றதை மேற்பாட்டில் காண்க.
தோள்கள் ஆர நடமாடுதல். 'கல் அயங்குதிரை சூழ' - கற்களில் அசங்கிய அலை.
'கல் வித்தகத்தால் திரைசூழ் கடற்காழி' (தி.2 ப.208 ப.11). 'தொல் புகழ்', 'அயங்குபுகழ்' -
(எங்கும்)பரவிய கீர்த்தி. பேண- அடியவர் விரும்பிப் புகல. 'பொருள்சேர் புகழ் புரிந்தார்',
சுடர் வண்ணன் – ‘அந்தி வண்ணன்’ ‘அழல் வண்ணன்' என்பன அவன் திருநாமங்கள்.
On the seashore in the city of Seerkaazhi, the waves are very huge which
forcibly dash against the shore and toss the stones on the banks. Our Lord Civan
is the Supreme Effulgence. This bright light has spread all over the area for ages
over long years.His fame is widespread because of the effulgence spread everywhere.
This Lord Civan holds the skull with teeth for begging alms. After people die,
their physical body is taken to the burning ghat. Our Lord Civan dances on this
burning ghat moving His very strong and mighty shoulders, which can do wrestling
very easily and successfully.
2284. தூநயங்கொள்திருமேனியிற்பொடிப்பூசிப்போய்
நாநயங்கொள்மறையோதிமாதொருபாகமாக்
கானயங்கொள்புனல்வாசமார்கலிக்காழியுள்
தேனயங்கொள்முடிஆனைந்தாடியசெல்வனே.. 5
தூ நயம் கொள் திருமேனியில் பொடிப் பூசிப் போய்,
நா நயம் கொள் மறைஓதி மாது ஒருபாகமாக்
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலிக் காழியுள்,
தேன் நயம் கொள் முடி ஆன்ஐந்துஆடிய செல்வனே.
tU nayam koL tirumEniyil poTip pUcip pOy,
nA nayam koL maRai Oti, mAtu orupAkamA,
kAn nayam koL punal vAcam Ar kalik kAziyuL,
tEn nayam koL muTi An aintu ATiya celvanE.
பொருள்: தூய்மையான திருமேனிமேல் திருநீற்றுப் பொடி பூசி, நாவின் நற்பயனைக்
கொண்ட வேதத்தினை ஓதி, உமையைத் தன் உடலில் ஒருபாகமாகக் கொண்டு, வாய்க்கால்
வழியோடும் நீர் மணம் நிறைந்த கலிக்காழியுள் தேன்கொண்டு ஆட்டப்படும் முடியுடையான்,
ஆனைந்து ஆடும் செல்வன் சிவபெருமானே.
குறிப்புரை: தூ - பரிசுத்தம். நயம் - நன்மை. நாநயம் கொள்மறை - நாவினது நற்பயனைக்
கொண்ட வேதம். நாவாலுள்ளதாய நயம்- நாநலம். நாவாலுளதாய நலம் (குறள் 641 உரை).
பூசிப் போய்க் கொள்மறையோதி என்றியைக்க. ஓதி- பெயர். தேன் கொள்முடி - தேனாட்டப்படும்
திருமுடி. அம்முடியில் ஆனைந்து ஆடிய செல்வன். ஆனைந்து - பால், தயிர், நெய்,பிற சேரா.
The Seerkaazhi city is surrounded by large forests from which, the wind carries
the sweet smell of all flowers. The forest area also has many ponds, which are filled
with this forest fragrance. Our Lord loves the ablution of the five products of the
cow and also the ablution with honey. He places upon His body the holy ashes. He
used to chant the songs of the Vedas in musical tone, which increases the efficacy
of the tongue.
2285. சுழியிலங்கும்புனற்கங்கையாள்சடையாகவே
மொழியிலங்கும்மடமங்கைபாகமுகந்தவன்
கழியிலங்குங்கடல்சூழுந்தண்கலிக்காழியுள்
பழியிலங்குந்துயரொன்றிலாப்பரமேட்டியே. 6
சுழி இலங்கும் புனல்கங்கையாள் சடை ஆகவே,
மொழி இலங்கும் மடமங்கை பாகம் உகந்தவன் -
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலிக் காழியுள்,
பழி இலங்கும் துயர் ஒன்று இலாப் பரமேட்டியே.
cuzi ilagkum punal kagkaiyAL caTai AkavE,
mozi ilagkum maTamagkai pAkam ukantavan-
kazi ilagkum kaTal cUzum taN kalik kAziyuL,
pazi ilagkum tuyar onRu ilAp paramETTiyE.
பொருள்: நீர்ச்சுழி விளங்கும் ஆறாகிய கங்கையான் சடையனாகவும், புகழ் விளங்கும்
உமையாளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகவும் உகந்தவன், (யாரெனில்) கழி விளங்கும்
கடல் சூழும் கலிக்காழியுள் நிந்தையாகிய பழியால் வரும் துயரம் ஒன்றும் இல்லாத
பரமேட்டியாகிய சிவபெருமானே.
குறிப்புரை: சுழி - நீர்ச்சுழி. 'கொவ்வைத்துவர் வாயார் குடைந்தாடுத் திருச்சுழியல்'
(தி.7 பா.834). மொழி இலங்கும் மடமங்கை. பாகம் உகந்தவன்- 'மாதியலும் பாதியன்'
கங்கையைச் சடையிலும் உமை நங்கையை வாமபாகத்திலும் உடையவன். பழி இலங்கும்
துயர் - நிந்தையால் தோன்றும் துயரம். ஒன்று -சிறிதும் என்னும் பொருட்டு.
The city of Seerkaazhi is surrounded by salt pans which are adjacent to the
seashore. The city is always cool with the sea breeze. Our Lord Civan is the Supreme
Lord, with none equal to Him. Also there are no people to criticise Him and cause Him
suffering. He supports the river Ganges in His hair locks, which is curved and curled
with eddies. In addition He has embedded His consort Uma Devi, who talks with musical
resonance, on one part of His body.
2286. முடியிலங்குமுயர்சிந்தையான்முனிவர்தொழ
அடியிலங்குங்கழலார்க்கவேயனலேந்தியுங்
கடியிலங்கும்பொழில்சூழுந்தண்கலிக்காழியுள்
கொடியிலங்கும்மிடையாளொடுங்குடிகொண்டதே. 7
முடி இலங்கும்(ம்) உயர் சிந்தையால் முனிவர் தொழ,
அடி இலங்கும் கழல் ஆர்க்கவே, அனல் ஏந்தியும்,
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலிக் காழியுள்,
கொடி இலங்கும்(ம்) இடையாளொடும் குடிகொண்டதே!
muTi ilagkum(m) uyar cintaiyAl munivar toza,
aTi ilagkum kazal ArkkavE, anal Entiyum,
kaTi ilagkum pozil cUzum taN kalik kAziyuL,
koti ilagkum(m) iTaiyALoTum kuTi koNTatE!
பொருள்: முனிவர்கள் தங்கள் தியானத்தில் துவாதசாந்தப் பெருவெளியில் வைத்துத்
தொழ விளங்கும் திருவடிகளில் கழல்கள் ஆர்ப்பரிக்க, அனலேந்தி (ஆடும் இறைவன்), மணம் கமழும்
பொழில்சூழும் குளிர்ந்த கலிக்காழியுள் கொடிபோன்ற இடையை உடைய உமையுடன் குடிகொண்டதோ?
குறிப்புரை: முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ அடி இலங்கும் கழல் ஆர்க்க -
துவாதசாந்தத் தலத்தில் விளங்கும் உயர்ந்த தியானத்தால் மனன சீலர்கள் வழிபடத் திருவடியில்
பிரகாசிக்கும் கழல்கள் ஒலிக்க. கொண்டது முடி இலங்கும் என்று இயைத்துப் பொருள் கூறலும் ஆம்.
கொடி இலங்கும் இடையாள்- மின்னல் கொடி போலத் திகழும் மெல்லிடையுடைய உமாதேவியார்.
தொழ ஆர்க்க ஏந்தியும் காழியுட் குடிகொண்டதோ என்று அறிவினாவாக்குக.
In the city of Seerkaazhi, men of noble conduct and character live in large numbers.
They do yoga, while doing yoga they focus their thoughts at the mystic centre which is believed
to be at the crown. While doing such practice they worship the holy feet of our Lord Civan of
this place. Civan wears on His legs perfectly shaped warrior's anklet. They make noise while
the wearer dances. These noblemen can hear the noise of the warrior's anklets on the legs of
Lord Civan. While our Lord Civan dances, He holds in His hands the supernal effulgence. In the
city of Seerkaazhi the forests with the flower trees give out a fresh, pure and fascinating
smell. Our Lord's consort Paarvathi Devi's waist is thin like creepers. He is manifest with
her in this city.
2287. வல்லரக்கன்வரைபேர்க்கவந்தவன்தோள்முடி
கல்லரக்கிவ்விறல்வாட்டினான்கலிக்காழியுள்
நல்லொருக்கியதொர்சிந்தையார்மலர் தூவவே
தொல்லிருக்கும்மறையேத்துகந்துடன்வாழுமே. 8
வல் அரக்கன், வரை பேர்க்க வந்தவன், தோள்முடி
கல் அரக்க(வ்) விறல் வாட்டினான் கலிக் காழியுள்
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே,
தொல்இருக்கும் மறை ஏத்து உகந்து உடன் வாழுமே.
val arakkan, varai pErkka vantavan, tOLmuTi
kal arakka(v) viRal vATTinAn kalik kAziyuL,
nal orukkiyatu or cintaiyAr malar tUvavE,
tol irukkumaRai Ettu ukantu uTan vAzumE.
பொருள்: வலிய அரக்கன் இராவணன், கயிலை மலையைப் பெயர்க்க வந்தவனின் கல்போலும்
தோள்களையும் முடியையும் வருத்தி, அவனுடைய வலிமையை வாட்டிய சிவபெருமான், கலிக்காழியுள்
ஒருமையுடன் (அத்துவிதமாக) நல்ல சிந்தையுடையோர் மலர் தூவி வழிபட பழைய இருக்கு வேதமாகிய
மறை துதி செய்ய, உமையுடன் விரும்பி உறைகிறான்.
குறிப்புரை: நல்சிந்தை, ஒருக்கியதோர் சிந்தை - ஒற்றுமையாக்கியதொரு மனம். சிவனோடொற்றுமை.
அத்துவிதம். மலர்தூவ- பூக்களைத் தூய் வழிபட. தொல் - தொன்மை. இருக்கும் மறை - விரித்தல் விகாரமாகக்
கொண்டு இருக்கு வேதம் எனல் சிறந்தது. இருக்கும் எனில் அழியாது நிலைபெறும் என்க. மறையேத்து -
வேதஸ்துதியை. உடன் - அம்பிகையுடன்.
Raavanan, the mighty king of Sri Lanka came near mount Kailash where our Lord was
seated along with His consort Uma Devi. He tried his best to slightly move the mountain
but failed in his attempt. Then our Lord pressed the top of the same mountain slightly
with His toe. Raavanan's shoulder and head got crushed and his valour was subdued.
The scholars in the city of Seerkaazhi have single mindedness in their spiritual thoughts,
reach the temple and strew flowers at our Lord's holy feet and pray. Also they chant the
very old Rig Veda verses before our Lord, and worship Him.Here our Lord takes delight is
manifesting Himself happily in this city along with His consort Umaa Devi.
2288. மருவுநான்மறையோனுமாமணிவண்ணனும்
இருவர்கூடியிசைந்தேத்தவேயெரியான்றனூர்
வெருவநின்றதிரையோதம்வார்வியன்முத்தவை
கருவையார்வயற்சங்குசேர்கலிக்காழியே. 9
மருவு நால்மறையோனும் மா மணிவண்ணனும்
இருவர் கூடி இசைந்து ஏத்தவே, எரியான்தன் ஊர் -
வெருவ நின்ற திரைஓதம் வார வியல் முத்து அவை
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலிக் காழியே.
maruvu nAlmaRaiyOnum mA maNivaNNanum
iruvar kUTi icaintu EttavE, eriyAn tan Ur-
veruva ninRa tirai Otam vAra viyal muttu avai
karuvai Ar vayal cagku cEr kalik kAziyE.
பொருள்: பொருந்திய நான்மறையவனாகிய பிரமனும் நீலமணி வண்ணனாகிய திருமாலும்
ஆகிய இருவரும் கூடி ஒற்றுமைப்பட்டு வழிபடவே, தீப்பிழம்பாக நின்றவனது ஊர், அச்சம் தோன்ற
உயர்ந்த கடலலைகள் கொண்டு வந்த அகன்று பரவிய முத்துக்கள், கரிய வைக்கோல் கொண்ட
வயல்கள், சங்குகள் ஆகியவை சேர்ந்த கலிக்காழியே.
குறிப்புரை: எரியான்தன் ஊர்- தீப்பிழம்பாக நின்றவனதூர். வியல் முத்தவை - அகன்று பரவிய
முத்துக்கள். கருவை- கரிய வைக்கோல். கருவேல மரமுமாம். முத்தவையும் சங்கும் சேர் காழி என்க.
Brahma who chants the well developed four Vedas and Thirumal with azure coloured body -
both worshipped our Lord who stood before them as a tall supernal effulgence in this city.
Here the fierce sea waves dash and inundate the seawater flinging pearls and conches on
the shore which finally reach the paddy fields where black hay is stored. Such is the
wealth of the city Seerkaazhi.
2289. நன்றியொன்றுமுணராதவன்சமண்சாக்கியர்
அன்றியங்கவர்சொன்னசொல்லவைகொள்கிலான்
கன்றுமேதியிளங்கானல்வாழ்கலிக்காழியுள்
வென்றிசேர்வியன்கோயில்கொண்டவிடையாளனே. 10
நன்றி ஒன்றும் உணராத, வன்சமண், சாக்கியர்,
அன்றி அங்கு அவர் சொன்ன சொல்அவை கொள்கிலான் -
கன்று மேதி இளங் கானல் வாழ் கலிக் காழியுள்,
வென்றி சேர் வியன்கோயில் கொண்ட விடையாளனே.
nanRi onRum uNarAta vancamaN, cAkkiyar,
anRi agku avar conna col avai koLkilAn-
kanRu mEti iLag kAnal vAz kalik kAziyuL,
venRi cEr viyankOyil koNTa viTaiyALanE.
பொருள்: நன்மையானதொன்றும் அறிகிலராகிய வலிய சமணர்களும் சாக்கியர்களும்
பகைத்து அவர்கள் கூறிய புறமொழிகளைப் பொருட்டாகக் கொள்ளாதவன். அவன் இளங்கன்றுடன்
எருமைகள் வாழும் நெய்தலங் கானல்களையுடைய கலிக்காழியுள் வெற்றியுடைய பெரிய கோயிலைக்
கொண்ட எருது வாகனனே (சிவபெருமானே).
குறிப்புரை: நன்றி - நன்மை. ஒன்றும் - சிறிதும். அன்றி - பகைத்து. கானல் - கடற்கரைச் சோலை.
வென்றி- வெற்றி. வியன்கோயில் - பெரிய கோயில். விடை ஆளன் - எருதை (ஊர்தியாக) ஆள்பவன்.
Our Lord Civan is manifest in the famous big temple in Seerkaazhi city. He has
the white bull for His conveyance. On the small gravel soil the buffaloes and their
young ones live happily in this area. Here live the Jains and Buddhists who without
understanding the virtuous knowledge of our Lord speak among themselves controversial
ideas very often. Our Lord never listens to these words of the Jains and Buddhists.
2290. கண்ணுமூன்றுமுடையாதிவாழ்கலிக்காழியுள்
அண்ணலந்தண்ணருள்பேணிஞானசம்பந்தன்சொல்
வண்ணமூன்றுதமிழில்தெரிந்திசைபாடுவார்
விண்ணுமண்ணும்விரிகின்றதொல்புகழாளரே. 11
கண்ணுமூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியுள்
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல்,
வண்ணம் மூன்றும் தமிழில்-தெரிந்து இசை பாடுவார்
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.
kaNNu mUnRum uTai Ati vAz kalik kaziyuL
aNNal am taN aruL pENi njAnacampantan col,
vaNNam mUnRum tamizil-terintu icai pATuvAr
viNNum maNNum virikinRa tolpukazALarE.
பொருள்: மூன்று கண்களை உடைய முதல்வன் வாழும் கலிக்காழியுள் தலைவனான
சிவபெருமானின் குளிர்ந்த அருளைப் போற்றி ஞானசம்பந்தன் தமிழிற் சொன்ன சொல்லை
(பதிகத்தை) வண்ணம் மூன்றினையும் தெரிந்து இசையாகப் பாடுவார் விண்ணுலகிலும்
மண்ணுலகிலும் புகழ் உடையோராவர்.
குறிப்புரை: கண்ணு மூன்றும் - முக்கண்ணும். உடை - உடைய. ஆதி- முதல்வன். உம்மை
இனைத்தென அறிந்த சினைக்கு வினைப்படுதொகுதியின் வேண்டுவது (தொல். சொல். 33).
உடை- குறிப்பு. வினை. வண்ணம் மூன்றும் - மெலிவு. சமன், வலிவு என்பவை. இசைபாடுவார்.
இம்மூன்றும் தெரியாது பாடுவரேல் அவ்விசை, கேட்பவரை எழுப்பும் விசையுடையதாகும்.
Our Lord Civan has three eyes. He is the Supreme Being. He is manifest in Seerkaazhi.
Our saint Thiru-gnana-Sambandar had all praise for our Lord's virtuous deeds and sang these
ten verses. Those devotees capable of singing these verses of eulogy for the graceful Lord,
in proper musical tone, will be praised all over the earth and also in heaven.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
75ஆம் பதிகம் முற்றிற்று
End of 75th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 212 பதிக எண்: 76
76. திருஅகத்தியான்பள்ளி 76. THIRU-AGATH-THIAAN-PALLI
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
வேதாரணியத்திற்குத் தெற்கே 2 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. இது சோழ நாட்டுக் காவிரித்
தென்கரைத் தலங்களுள் 126ஆவது தலம். வேதாரணியத்திலிருந்து கோடியக்கரை செல்லும் பேருந்தில்
சென்றால் இத்தலத்தை அடையலாம். திருக்கயிலையில் வீற்றிருக்கும் அருட்கடலாகிய சிவபெருமானது
திருமணக் கோலக் காட்சியைக் காணும்பொருட்டு அகத்தியர் தங்கித் தவஞ்செய்த பதியாதலின்
அகத்தியான் பள்ளி என்னும் பெயர் பெற்றது என்பர்.
இறைவர் திருப்பெயர் அகத்தீசுவரர், இறைவி திருப்பெயர் பாகம்பிரியாள்நாயகி. சுவாமி சந்நிதி
கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அகத்தியர் கோயில்
மூலத்தானத்திற்கு மேற்கில் உள்ளது. பழைய வேலை செங்கல்லால் புதிய வேலை கருங்கல்லால் இயன்றது.
அம்மன் உருவம் சிறியது. கோயில் முப்பது ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.
1. அகத்திய தீர்த்தம்- இது அகத்தீசுவரர் திருக்கோயிலுக்கு அண்மையில் மேல்புறத்திலுள்ளது.
2. அக்னிதீர்த்தம் - இது அகத்தீசுவரர் சந்நிதிக்கு கிழக்கே சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ள சமுத்திர
தீர்த்தமாகும். 3. அக்னிபுட்கரிணி - இது அகத்தீசுவரர் சந்நிதியில் உள்ள தீர்த்தம். 4. எமதருமதீர்த்தம் - இது
அக்னிபுட்கரிணிக்கு வடக்கே உள்ளது. வன்னி தலவிருட்சம்.
அகத்தியர் பூசித்தது. சிவபெருமானின் திருமணக் கோலத்தை, அண்மையில் உள்ள திருமறைக்
காட்டில் காட்டக் கண்டு வணங்கியது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும்
இயற்றும் பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவரையும் தமக்குப் புதல்வராகப் பெறுதற்குத் தவம்
இயற்றி அவ்வாறே பெற்றது. எமதருமராசன் சீவன் முத்தி பெற்றது. இத்தலத்தை வழிபட்டாலும்
நினைத்தாலும் தீவினை நீங்கும் பெருமை வாய்ந்தது. திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய
பதிகம் ஒன்று பெற்ற பெருமைக்குரியது இத்தலம்.
பதிக வரலாறு
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருமறைக்காட்டினின்றும் சிவிகைமீதேறி, சிவனடியை
முடியிற்கொண்டு வணங்கி அடியவர் கூட்டம் கடலொலிபோல அரகர முழக்கஞ் செய்யவும், மங்கல தூரியம்
தழைக்கவும் மறை முழங்கவும், சங்கபடகம் முதலிய வாத்தியங்கள் எங்கும் இயம்பவும், மலர் மாரி
பொழியவும், மங்கல வாழ்த்திசைக்கவும், பூரண கும்பம் முதலியவை பொலியவும், அடியார் எதிர்கொள்ளவும்
சென்று, பல தலங்களை வணங்கித் தெண்டிரை சூழ்கடற் கானற்றிரு வகத்தியான்பள்ளியில்
அண்டர்பிரான் கழல் வணங்கிப் பாடிய அருந்தமிழ் மாமறை இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
2291. வாடியவெண்டலைமாலைசூடிமயங்கிருள்
நீடுயர்கொள்ளிவிளக்குமாகநிவந்தெரி
ஆடியஎம்பெருமானகத்தியான்பள்ளியைப்
பாடியசிந்தையினார்கட்கில்லையாம்பாவமே. 1
வாடிய வெண்தலைமாலை சூடி, மயங்கு இருள்,
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லைஆம், பாவமே.
vATiya veNtalai mAlai cUTi, mayagku iruL,
nITu uyar koLLi viLakkum Aka, nivantu eri
ATiya emperumAn akattiyAn paLLiyaip
pATiya cintaiyinArkaTku illai Am, pAvamE.
பொருள்: ஊன் வற்றிய வெண்மையான மண்டையோடுகளால் ஆன மாலையைச் சூடி, செறிந்த
இருளில் நீண்டு உயர்ந்த மயானக் கொள்ளிகள் விளக்குகளாக ஒளி செய்ய, ஆகாயம் முட்ட உயர்ந்து
ஆடிய எம்முடைய பெருமானின் அகத்தியான்பள்ளியைப் பாடிய சிந்தையை உடையவர்களுக்குப்
பாவம் இல்லையாகும்.
குறிப்புரை: வாடிய -வற்றிய. தலைமாலை, 'தலைமாலை தலைக்கணிந்து', மயங்கு இருள் -
செறிந்த இருள். கொள்ளி - தீக்கொள்ளி. கொள்ளி விளக்கொளி செய்ய என்றபடி. நிவந்த - உயர்ந்த
வளர்ந்த, அகரம் தொகுத்தல் விகாரம். எரி ஆடிய - தீயில் ஆடிய. 'அனலாடி' 'தீயாடி' என்பவை
சிவநாமங்கள். பாவம் இல்லையாம் என்க.
Our Lord Civan's avocation is to dance on the burning ghat where in deep darkness
the fire from the burning bodies, spreading flames, grows rapidly as tall flames and gives
light all around. There our Lord dances wearing the garland of skulls, which retain dry
flesh portions inside. This Lord is manifest in Thiru-agath-thiaan-palli temple. Those
devotees who can praise and sing songs about the fame of our Lord with concentrated
mind will have no sins in their life.
2292. துன்னங்கொண்டவுடையான்துதைந்தவெண்ணீற்றினான்
மன்னுங்கொன்றைமதமத்தஞ்சூடினான்மாநகர்
அன்னந்தங்கும்பொழில்சூழகத்தியான்பள்ளியை
உன்னஞ்செய்தமனத்தார்கள்தம்வினையோடுமே. 2
துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண் நீற்றினான்,
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர் -
அன்னம் தங்கும் பொழில் சூழ்-அகத்தியான்பள்ளியை
உன்னம் செய்த மனத்தார்கள்தம் வினை ஓடுமே.
tunnam koNTa uTaiyAn, tutainta veN nIRRinAn,
mannum konRai matamattam cUTinAn, mA nakar-
annam tagkum pozil cUz-akattiyAn paLLiyai
unnam ceyta manattArkaL tam vinai OTumE.
பொருள்: தைக்கப்பட்ட உடையை உடையவன்; முழு நீறு பூசியவன்; கொன்றை, ஊமத்தை
மலர்களைச் சூடியவன்; பெரிய நகரில் அன்னப்பறவைகள் தங்கும் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்
பள்ளியை நினைந்த மனத்தவர்களின் வினையெல்லாம் நில்லாமல் ஓடி நீங்கும்.
குறிப்புரை: துன்னம்- தைத்தல். துதைந்த- நெருங்கிய. முற்றப் பூசிய. 'முழுநீறு பூசிய மூர்த்தி
போற்றி' (தி. 6 ப. 5 பா. 3). 'முழுநீறு பூசிய முனிவர்'. உன்னம் - தியானம். மனத்தார்கள். தம் வினை -
மனத்தையுடையவர் வினைகள்.
Our Lord Civan wears well-stitched dress. He has spread on His body the pure
white holy ashes. He has crowned his head with bunches of Indian laburnum (cassia fistula)
and datura flowers. He is manifest in the temple in Thiru-agath-thiaan-palli. In this city,
swans live in plenty in the forest areas. Those devotees who can bring to their
mind the name Thiru-agath-thiaan-palli and chant the Lord's mystic name will get rid
of all their sins.
2293. உடுத்ததுவும்புலிதோல்பலிதிரிந்துண்பதுங்
கடுத்துவந்தகழற்காலன்றன்னையுங்காலினால்
அடர்த்ததுவும்பொழில்சூழகத்தியான்பள்ளியான்
தொடுத்ததுவுஞ்சரமுப்புரந்துகளாகவே. 3
உடுத்ததுவும் புலிதோல்; பலி, திரிந்து உண்பதும்;
கடுத்து வந்த கழல் காலன்தன்னையும், காலினால்
அடர்த்ததுவும்; பொழில்சூழ் அகத்தியான்பள்ளியான்
தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகள்ஆகவே.
uTuttatuvum pulittOl; pali, tirintu uNpatum;
kaTuttu vanta kazal kAlan tannaiyum, kAlinAl
aTarttatuvum; pozil cUz akattiyAn paLLiyAn
toTuttatuvum caram, muppuram tukaL AkavE.
பொருள்: உடுத்ததுவும் புலியின் தோல்; உண்பதுவும் திரிந்து ஏற்ற பிச்சை ஊண்; வென்றதுவும்
காலால், சினந்து வந்த காலன் தன்னை; அகத்தியான்பள்ளியான் சரம் தொடுத்ததுவும் முப்புரங்கள்
துகள் ஆகவே.
குறிப்புரை: உடுத்ததும் தோல், உண்பதும் பலி, காலினால் அடுத்ததும் காலனை, முப்புரம்
துகளாகத் தொடுத்ததும் சரம் என்க. கடுத்து-கோபித்து.
Our Lord Civan has worn on His waist the hide of a tiger. He consumes the food
He receives in the skull. He killed the regent of death by kicking him with anger,
wears the anklets on His legs. This Lord is manifest in the temple in Thiru-agath-thiaan-palli
where the natural forest areas are plenty. He shot an arrow and destroyed the three
fortresses of the asuras in the sky.
2294. காய்ந்ததுவுமன்றுகாமனைநெற்றிக்கண்ணினால்
பாய்ந்ததுவுங்கழற்காலனைப்பண்ணினான்மறை
ஆய்ந்ததுவும்பொழில்சூழகத்தியான்பள்ளியான்
ஏய்ந்ததுவும்மிமவான்மகளொருபாகமே. 4
காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்;
பாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின்; நால்மறை,
ஆய்ந்ததுவும்; பொழில்சூழ் அகத்தியான்பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான் மகள் ஒருபாகமே.
kAyntatuvum anRu kAmanai, neRRikkaNNinAl;
pAyntatuvum kazal kAlanai; paNNin, nAlmaRai,
Ayntatuvum; pozil cUz akattiyAn paLLiyAn
Eyntatuvum imavAn makaL oru pAkamE.
பொருள்: அன்று காய்ந்ததுவும் (எரித்ததுவும்) காமனை நெற்றிக் கண்ணினால்;
பாய்ந்ததுவும் (ஒறுத்ததுவும்) கழற் காலனை; பண்ணினால் ஆய்ந்ததுவும் மறையினை;
அகத்தியான் பள்ளியான் பொருந்தியதும் இமாசலகுமாரியின் பாகத்தை.
குறிப்புரை: அன்று நெற்றிக்கண்ணால் காய்ந்ததும் மன்மதனை, பாய்ந்ததும் இயமனை,
பண்ணினால் ஆராய்ந்ததும் வேதத்தை, பொருந்தியதும் இமாசல குமாரி பாகத்தை.
Our Lord kicked and killed the regent of death, Yaman. He killed the Indian
cupid - Manmathan, angrily opening His third eye in the forehead. He used to chant
the songs of the four Vedas in musical tone. He has embedded His consort, the daughter
of the Himalayan king on His body. In such a glorious place our Lord Civan is manifest.
2295. போர்த்ததுவுங்கரியின்னுரிபுலித்தோலுடை
கூர்த்ததோர்வெண்மழுவேந்திக்கோளரவம்மரைக்
கார்த்ததுவும்பொழில்சூழகத்தியான்பள்ளியான்
பார்த்ததுவும் அரணம்படரெரிமூழ்கவே. 5
போர்த்ததுவும் கரியின்(ன்)உரி; புலித்தோல், உடை;
கூர்த்தது ஓர் வெண்மழு ஏந்தி; கோள் அரவம், அரைக்கு
ஆர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
பார்த்ததுவும்(ம்) அரணம், படர்எரி மூழ்கவே.
pOrttatuvum kariyin(n) uri; pulittOl, uTai;
kUrttatu Or veNmazu Enti; kOL aravam, araikku
Arttatuvum; pozil cUz akattiyAn paLLiyAn
pArttatuvum(m) araNam, paTar eri mUzkavE.
பொருள்: போர்த்ததுவும் யானையின் தோல்; உடை புலித்தோல்; கூரியதோர் வெண்ணிற
மழுவேந்தி அரையில் கட்டியதும் கொல்லும் பாம்பினை; பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் முப்புரம் படரும் எரியில் மூழ்கவே.
குறிப்புரை: போர்த்ததும் யானைத்தோல். உடை - புலித்தோல். உடை என்பது தொழிலாகு பெயர்,
அது (உடுத்தது) வினையாலணையும் பெயர்ப் பொருளில் எழுவாய் நின்று புலித்தோலென்னும்
பெயர்ப்பயனிலை கொண்டது. மழுவை ஏந்தி அரைக்கு ஆர்த்ததும் அரவம் (பாம்பு) என்க.
பார்த்ததும் படர்ந்த எரியில் அரணம் (மும்மதில்) மூழ்க.
Our Lord Civan cloaked His body with the hide of an elephant. He wears on His
waist the hide of the tiger. He holds in His hand the sharp white battle axe. He wears
around His waist the snake. He witnessed the three crumbling fortresses of asuras in fire.
This Lord is manifest in Thiru-agath-thiaan-palli.
2296. தெரிந்ததுவுங்கணையொன்றுமுப்புரஞ்சென்றுடன்
எரிந்ததுவுமுன்னெழிலார்மலருறைவான்றலை
அரிந்ததுவும்பொழில்சூழகத்தியான்பள்ளியான்
புரிந்ததுவுமுமையாளொர்பாகம்புனைதலே. 6
தெரிந்ததுவும் கணை ஒன்று; முப்புரம், சென்று உடன்
எரிந்ததுவும்; முன் எழில் ஆர் மலர்உறைவான் தலை,
அரிந்ததுவும்; பொழில்சூழ் அகத்தியான்பள்ளியான்
புரிந்ததுவும்(ம்) உமையாள் ஒர்பாகம் புனைதலே.
terintatuvum, kaNai onRu; muppuram, cenRu uTan
erintatuvum; mun ezil Ar malar uRaivAn talai,
arintatuvum; pozil cUz akattiyAnpaLLiyAn
purintatuvum(m) umaiyAL OrpAkam punaitalE.
பொருள்: ஆராய்ந்ததுவும் அம்பு ஒன்றினை. ஒன்றையொன்று ஒருசேரச் சென்று எரிந்ததுவும்
திரிபுரத்தை; அரிந்ததுவும் முன் எழிலார் தாமரை மலர் மேலானாகிய பிரமனின் சிரம் ஒன்றினை;
அகத்தியான்பள்ளியான் புரிந்ததுவும் உமையாளை ஒரு பாகம் புனைதலையே.
குறிப்புரை: தெரி (ஆராய்)ந்ததும் கணை (பாணம்). ஒன்றை ஒரு சேரச்சென்று எரித்ததும்
திரிபுரத்தை. முன் அரிந்ததும் அழகு பொருந்திய பூவில் வாழும் பிரமன் தலையை, புரிந்தது
(விரும்பிக் கொண்டது)ம் உமாதேவியார் ஒரு பாகத்தைப் புனைதலை, அப்பனது ஒரு பாகத்தை
அம்மை அழகு செய்ததனாற்றான் உயிர்கட்கு அவ்வழகு உண்டாயிற்று. அவளால் வந்த ஆக்கம்
இவ்வாழ்க்கையெல்லாம் (சித்தியார் சூ-1-69).
Our Lord Civan selected the arrow and shot and burnt the asura's three fortresses
that were flying in the sky. Lord Brahma stays in the good-looking lotus flower. Our Lord
plucked and removed one of his four heads to punish him. He has embedded His consort Uma
Devi on the left portion of His body. Our goddess made Civa look lovely and attractive
because of her concomitance. The people of the world attain beauty because of Uma Devi's
concomitance.
2297. ஓதியெல்லாமுலகுக்கோரொண்பொருளாகிமெய்ச்
சோதியென்றுதொழுவாரவர்துயர்தீர்த்திடும்
ஆதியெங்கள்பெருமானகத்தியான்பள்ளியை
நீதியால்தொழுவாரவர்வினைநீங்குமே. 7
"ஓதி,எல்லாம்! உலகுக்கு ஓர் ஒண் பொருள் ஆகி! மெய்ச்
சோதி!" என்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்
ஆதி, எங்கள் பெருமான், அகத்தியான்பள்ளியை
நீதியால்-தொழுவார் அவர் வினை நீங்குமே.
"Oti, ellAm! ulakukku Or oN poruL Aki ! meyc
cOti!" enRu tozuvAr avar tuyar tIrttiTum
Ati, egkaL perumAn, akattiyAn paLLiyai
nItiyAl-tozuvAr avar vinai nIgkumE.
பொருள்: வேதங்களையெல்லாம் ஓதி அருளியவனே! உலகங்களுக்கெல்லாம் ஒப்பற்ற ஒளிர்
பொருளானவனே! உண்மையொளியே! என்று தொழுபவர் துயர்களைத் தீர்த்திடும் ஆதியாகிய
பெருமானது அகத்தியான் பள்ளியைத் தொழுவார்களின் வினைகள் நீங்கும்.
குறிப்புரை: எல்லாம் ஓதி - வேதங்களையெல்லாம் ஓதியருளியவனே! உலகுக்கு ஓர் ஒண்பொருள்
ஆகி -உலகங்களுக்கு ஒப்பற்ற ஒளிர் பொருளானவனே. மெய்ச்சோதி - உண்மையொளியே என்று கூறித்
தொழுபவர் துயர்களைத் தீர்த்திடும் ஆதியாகிய பெருமானது பள்ளியைத் தொழுவார் வினை நீங்கும் என்க.
Our Lord Civan is one from whom originated all the four Vedas. He is the only Supreme
Being for the entire universe. And He is the only Being who gives the supernal effulgence
to the universe. The devotees who chant His fame by quoting the above two aspects of our Lord
in an order will get rid of all their sufferings. This Lord is the Supreme and is manifest in
Thiru-agath-thiaan-palli.
2298. செறுத்ததுவுந்தக்கன்வேள்வியைத்திருந்தார்புரம்
ஒறுத்தவும்ஒளிமாமலருறைவான்சிரம்
அறுத்ததுவும்பொழில்சூழகத்தியான்பள்ளியான்
இறுத்ததுவுமரக்கன்றன்தோள்களிருபதே. 8
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார் புரம்,
ஒறுத்தவும் ஒளி மா மலர் உறைவான் சிரம்,
அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்தன் தோள்கள் இருபதே.
ceRuttatuvum takkan vELviyai; tiruntAr puram,
oRuttatuvum; oLi mA malar uRaivAn ciram,
aRuttatuvum; pozil cUz akattiyAn paLLiyAn
iRuttatuvum arakkan tan tOLkaL irupatE.
பொருள்: சினந்து அழித்ததுவும் தக்கனது வேள்வியை; தண்டித்து அழித்ததுவும்
பகைவர்களின் திரிபுரத்தை; அறுத்ததுவும் பெரிய மலராகிய தாமரையின்மேல் இருப்பவனாகிய
பிரமனின் சிரத்தை; மலர்ச்சோலைகள் சூழ்ந்த அகத்தியான் பள்ளியான் முறித்ததுவும் அரக்கன்
இராவணனின் இருபது தோள்களையும்.
குறிப்புரை: செறுத்ததும் தக்கன் யாகத்தை. செறுத்தல் - கோபித்தல். அழித்தல். ஒறுத்தல் -
கடிதல், வருத்துதல், ஒறுத்ததும் பகைவர் திரிபுரத்தை. திருந்தார்- பகைவர். திருந்தியவர் நண்பராவர்.
அறுத்ததும் ஒளியை உடைய தாமரைப்பூவில் வாழும் பிரமன் தலையை. இறுத்ததும் (முறித்ததும்)
இராவணனுடைய இருபது தோள்களையும்.
Our Lord Civan arranged the demolition and destruction of Thakshan's huge
sacrificial fire and all the items. He chastised the asuras and burnt the three
fortresses of the enemies of the devas. Lord Brahma stays in bright and attractive
lotus flower. Our Lord plucked one of his heads to punish his egoism. Our Lord
squeezed the twenty shoulders of Raavanan, the king of Sri Lanka. Our Lord of all
this fame is manifest in Thiru-agath-thiaan-palli.
2299. சிரமுநல்லமதிமத்தமுந்திகழ்கொன்றையும்
அரவமல்குஞ்சடையானகத்தியான்பள்ளியைப்
பிரமனோடுதிருமாலுந்தேடியபெற்றிமை
பரவவல்லாரவர்தங்கள்மேல்வினைபாறுமே. 9
சிரமும், நல்ல மதிமத்தமும், திகழ் கொன்றையும்,
அரவும், மல்கும் சடையான் அகத்தியான்பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லார் அவர் தங்கள்மேல் வினை பாறுமே.
ciramum, nalla matimattamum, tikaz konRaiyum,
aravum, malkum caTaiyAn akattiyAn paLLiyaip
piramanOTu tirumAlum tETiya peRRimai
parava vallAr avar tagkaL mEl vinai pARumE.
பொருள்: தலைமாலையும் அழகிய பிறையும் ஊமத்தை மலரும் கொன்றைப் பூவும்
பாம்பும் செறியும் சடையை உடையவனின் அகத்தியான்பள்ளியைப் பிரமனோடு திருமாலும்
தேடிய இயல்பினைப் போற்ற வல்லவர்களின் மேலுள்ள வினைகள் அழியும்.
குறிப்புரை: சிரமும் -தலைமாலையும், நல்லமதி (உம்) - அழகிய பிறையும். மத்தமும்-
ஊமத்தம் பூவும். 'மத்தங்கமழ்சடை' (தி.2 ப. 205 பா.6). அரவும்- பாம்பும். 'அரவம்' என்ற பாடம்
பிழை என்பது முதலடியாலே விளங்கும். பெற்றிமை -தன்மை. பாறும்- ஓடும்.
Our Lord puts on His body the garland of skulls. He retains the young moon;
He wears the datura flowers on His matted hair. Also He wears the Indian laburnum
flower on His hair. He has tied around His waist the snake. He adorns His disheveled
locks with all these.Lord Brahma and Thirumal were unable to meet our Lord in spite
of their best efforts.Those devotees who can praise our Lord's fame as above and
worship will get rid of any sins that may approach them.
2300. செந்துவராடையினாரும்வெற்றரையேதிரி
புந்தியிலார்களும்பேசும்பேச்சவைபொய்ம்மொழி
அந்தணனெங்கள்பிரானகத்தியான்பள்ளியைச்
சிந்திமின்நும்வினையானவைசிதைந்தோடுமே. 10
செந்துவர் ஆடையினாரும், வெற்று அரையே திரி
புந்திஇலார்களும், பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி;
அந்தணன் எங்கள் பிரான், அகத்தியான்பள்ளியைச்
சிந்திமின்! நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே.
centuvar ATaiyinArum, veRRu araiyE tiri
punti ilArkaLum, pEcum pEccu avai poymmozi;
antaNan, egkal pirAn, akattiyAn paLLiyaic
cintimin! num vinai Anavai citaintu OTumE.
பொருள்: செந்துவர் ஊட்டிய ஆடையை உடுத்தவர்களாகிய சாக்கியரும் வெற்று
உடம்பினராகிய சமணரும் ஆகிய அறிவிலாதவர்கள் பிதற்றும் பேச்சாகிய பரசமயக்
கொள்கைகள் பொய்ம்மொழிகளாம். எவ்வுயிர்க்கும் செந்தண்மை கொண்ட அந்தணனின்
அகத்தியான் பள்ளியைச் சிந்தியுங்கள்! உங்களுடைய வினைகள் சிதைந்து ஓடும்.
குறிப்புரை: செந்துவர் ஆடை - செங்காவித்துணி. பேசும் பேச்சவை - சொல்லும்
பரசமயக்கோள்கள். அந்தணன் - சிவன். சிந்திமின் - தியானம் புரியுங்கள். நும்
வினையானவை சிதைந்து ஓடும்.
In this city of Thiru-agath-thiaan-palli, the Jains and the Buddhists live.
The Buddhists wear red ochre robes on their body; the Jains roam about in the city
without any proper dress on their body. They roam about and speak absurdity without
any aim. Oh! You devotees, do not listen to those words and do not think about them.
Concentrate in your mind on our virtuous Lord, the Supreme Being, who is manifest in
Thiru-agath-thiaan-palli, your sins will disappear.
2301. ஞாலமல்குந்தமிழ்ஞானசம்பந்தன்மாமயில்
ஆலுஞ்சோலைபுடைசூழகத்தியான்பள்ளியுள்
சூலநல்லபடையானடிதொழுதேத்திய
மாலைவல்லாரவர்தங்கள்மேல்வினைமாயுமே. 11
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள்,
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர்தங்கள்மேல் வினை மாயுமே.
njAlam malkum tamiz njAnacampantan, mA mayil
Alum cOlai puTai cUz akattiyAn paLLiyuL,
cUlam nalla paTaiyAn aTi tozutu Ettiya
mAlai vallAr avar tagkaL mEl vinai mAyumE.
பொருள்: உலகம் புகழும் திருஞானசம்பந்தன் பெரிய மயில் ஆடும் சோலைகள்
பக்கங்களில் சூழ்ந்த திருஅகத்தியான்பள்ளியுள் சூலப்படையானாகிய நல்லவனின் அடி
தொழுது ஏத்திய இப்பாமாலையை வல்லவர்களின் ஆகாமிய வினைகள் அழியும்.
குறிப்புரை: ஆலும் - ஆடும். புடை - பக்கம். நல்ல சூலப்படையான் என்றும் சூலமாகிய நல்ல
படையான் என்றும் கூறலாம். நல்ல பாம்பு. மாலை - இத்திருப்பதிகம். மேல்வினை - ஆகாமிய கன்மம்
என்றலும் பொருந்தும்.
The good name and fame of our saint Thiru-gnana-Sambandar expand all over the world.
He paid a visit to the temple in Thiru-agath-thiaan-palli and worshipped and praised the
holy feet of our Lord Civan who holds the battle axe in one of his hands. He is manifest
in Thiru-agath-thiaan-palli temple. Our saint chanted this Tamil garland of ten verses.
Those devotees who can memorise and chant these verses will get rid of the bad karma
of their life.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
76ஆம் பதிகம் முற்றிற்று
End of 76th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 213 பதிக எண்.77
77. திருஅறையணிநல்லூர் 77. THIRU-ARAI-ANI-NALLOOR
பண் : காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருவறையணிநல்லூர் என்னும் இத்திருத்தலமானது திருக்கோவலூர் தொடர்வண்டி
நிலையத்திற்குத் தென்கிழக்கே உள்ளது. இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. இக்காலத்தில்
அறகண்டநல்லூர் என்று வழங்குகிறது. திருவண்ணாமலை, பண்ணுருட்டி ஆகிய ஊர்களிலிருந்து
திருக்கோவலூர் வருவதற்குப் பேருந்துகள் பல உள்ளன. அறையணி நல்லூர் பெண்ணையாற்றின்
வடகரையில் உள்ளது. வானளாவிய கோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. திருக்கோவலூரில்
இருந்து வடக்கே 1 கி. மீ. தூரத்தில் ஊர் உள்ளது.
பாறையின்மீது அழகாகக் கட்டப்பெற்ற கோயிலை உடைய ஊர் என்று பொருள்படும். இவ்வூர்ப்
பெயரை, பாண்டவர் வனவாச காலத்தில் தாம் கண்ட ஐந்து அறைகள் அந்த நல்லூர்க்கு அலங்காரஞ்
செய்யும் காரணத்தால் எய்தியது என்றும் கூறுவர். இறைவரின் திருப்பெயர் அறையணிநாதேசுவரர்.
இறைவியாரின் திருப்பெயர் அருள்நாயகி. பாறையில் பல்லவர் குடை மண்டபம் இருக்கிறது.
வழி சரியாக இல்லை. முருகன் கோயில், திரௌபதியம்மன் கோயிலாக மாற்றப்பெற்றதாக
இருக்கலாம். கங்கையம்மன் கோயில் ஒன்று புதிதாகக் கட்டியிருக்கிறார்கள். தீர்த்தம் பெண்ணையாறு.
பிரசண்ட முனிவர் பூசித்துப் பேறு பெற்றார். இது திருஞானசம்பந்தரது ஒரே பதிகத்தைப் பெற்றது.
பதிக வரலாறு
திருஞானசம்பந்தப் பெருமானார் திருஆமாத்தூரையும் திருக்கோவில்வீரட்டத்தையும் வழிபட்டு,
திருஅறையணி நல்லூரை அணைந்து ஏத்தி அடியார் அன்பின் மேன்மையை உலகம் அறிந்துய்யப்
பாவலர்ந்த செந்தமிழ் கொண்டு பரவியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
2302. பீடினாற்பெரியோர்களும்பேதைமைகெடத்தீதிலா
வீடினாலுயர்ந்தார்களும்வீடிலாரிளவெண்மதி
சூடினார்மறைபாடினார்சுடலைநீறணிந்தாரழல்
ஆடினாரறையணிநல்லூரங்கையாற்றொழுவார்களே. 1
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீது இலா
வீடினால் உயர்ந்தார்களும் - வீடு இலார், இளவெண்மதி
சூடினார், மறை பாடினார், சுடலை நீறு அணிந்தார், அழல்
ஆடினார், அறையணிநல்லூர் அம் கையால் - தொழுவார்களே.
pITinAl periyOrkaLum, pEtaimai keTat tItu ilA
vITinAl uyarntArkaLum--vITu ilAr, iLaveNmati
cUTinAr, maRai pATinAr, cuTalai nIRu aNintAr, azal
ATinAr, aRaiyaNi nallUr am kaiyAl-tozuvArkaLE.
பொருள்: அழிவில்லாதவரும், இளமையான வெண்ணிற பிறையைச் சூடியவரும்,
வேதங்களை இசைத்தவரும், சுடுநீறாகிய சாம்பலைப் பூசியவரும், தீயாடினாரும் ஆகிய
சிவபெருமானை அறையணிநல்லூரில் தொழுமவர்கள் பெருமையினால் பெரியோர்களாவர்;
தங்களறியாமை கெட முத்திக்குரிய முற்றிய பற்றற்ற உயர்ந்தவர்களுமாவர்.
குறிப்புரை: பீடு-பெருமை. பேதைமை- அறியாமை. ஈண்டுப் பண்பாகுபெயராய் ஆணவத்தையும்
இனம்பற்றி மாயை கன்மங்களையும் உணர்த்தி நின்றது. தீதிலா வீடு - முற்றத்துறந்து பற்றற்ற நிலை.
'ஒரு பற்றிலாமையும் கண்டிரங்காய்' வீடினால்-விடுதலால். வீடு இலார் - (அழிவில்லாத) நித்தியர்.
இளமதி, வெண்மதி - பிறை. சுடலைநீறு -மகாசங்கார காலத்தில் அனைத்துலகையும் அழித்துப்
பொடித்த பொடி. அழல் - தீயில். பெரியோர்களும் உயர்ந்தார்களும் ஆவார் எவர் என்னில்,
அறையணி நல்லூரைத் தொழுபவர்களே என்று இயைத்துணர்க. வீடிலாரும் சூடினாரும் பாடினாரும்
ஆடினாரும் ஆகிய சிவபெருமானது ஊர் என்க.
Our Lord Civan has no end. He retains the young moon on His matted hair,
He is the author of the four Vedas. He applies all over His body the holy ashes
that arose while the big destruction of the universe happened. His avocation is
to dance near the fire of the burning ghats. Those devotees who worship this Lord
with their clean hands will become great in their lineage. The obstructive factor
of emotional attachment will be shed by them and they will become great people.
2303. இலையினார்சூலமேறுகந்தேறியேயிமையோர் தொழ
நிலையினாலொருகாலுறச்சிலையினால்மதிலெய்தவன்
அலையினார்புனல்சூடியஅண்ணலாரறையணிநல்லூர்
தலையினாற்றொழுதோங்குவார்நீங்குவார்தடுமாற்றமே. 2
இலையின் ஆர் சூலம், ஏறு உகந்து ஏறியே, இமையோர் தொழ,
நிலையினால் ஒரு கால் உறச் சிலையினால் மதில் எய்தவன்,
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார், அறையணிநல்லூர்
தலையினால்-தொழுது ஓங்குவார் நீங்குவார், தடுமாற்றமே.
ilaiyin Ar cUlam, ERu ukantu ERiyE, imaiyOr toza,
nilaiyinAl oru kAl uRac cilaiyinAl matil eytavan,
alaiyin Ar punal cUTiya aNNalAr, aRaiyaNi nallUr
talaiyinAl-tozutu OgkuvAr nIgkuvAr, taTumARRamE.
பொருள்: மூவிலைத் தோற்றம் கொண்ட சூலம் ஏந்தியவர்; எருதினை வாகனமாக விரும்பி
ஏறுவர்; தேவர்கள் தொழும் நிலையில், ஒரு காலால் மலையை வில்லாக வளைத்து பகைவரது
மும்மதில்களை அழித்தவர்; அலைகள் கொண்ட கங்கையாற்றைத் தலையில் சூடிய தலைவர்
ஆகிய சிவபிரானின் அறையணிநல்லூரைத் தலையினால் தொழுதெழுவார் பிறவியில் விழும்
தடுமாற்றத்திலிருந்து நீங்குவார்கள்.
குறிப்புரை: இலையின் ஆர் சூலம் - 'மூவிலைவேல்' 'இலையாருஞ் சூலத்தாய்' (அப்பர்
திருத்தாண்டகம்) 'இலைமலிந்த வேல்நம்பியெறி பத்தர்' (திருத்தொண்டத்தொகை). தடுமாற்றம் -
பிறவிக்குழியில் விழுந்தடுமாற்றம். ஓங்குவார் தடுமாற்றம் நீங்குவார் என்க. 'ஆரூர் தம் கையினால்
தொழுவார் தடுமாற்றறுப்பாரே' (தி. 1 ப. 105 பா.6).
Our Lord Civan holds in one of His hands the three pronged battle axe with the
shape of leaves. He is eager to sustain the white bull for His conveyance. At the request
of the devas He pressed the bow with His foot and shot an arrow on the three fortresses
of the asuras and destroyed them. He supports the Ganges river which has big waves on His
matted hairlocks. This Lord is manifest in the temple in Arai-ani-nalloor. Those devotees
who reach the temple in Arai-ani-nalloor and worship Him with their heads are noble persons,
free from stumbling thoughts.
2304. என்பினார்கனல்சூலத்தாரிலங்குமாமதியுச்சியான்
பின்பினாற்பிறங்குஞ்சடைப்பிஞ்ஞகன்பிறப்பிலியென்று
முன்பினார்மூவர்தாந்தொழுமுக்கண்மூர்த்திதன்தாள்களுக்
கன்பினாரறையணிநல்லூரங்கையாற்றொழுவார்களே. 3
"என்பினார், கனல் சூலத்தார், இலங்கும் மா மதி உச்சியான்,
பின்பினால் பிறங்கும் சடைப் பிஞ்ஞகன் பிறப்புஇலி” என்று
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்திதன் தாள்களுக்கு
அன்பினார்-அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே.
"enpinAr, kanal cUlattAr, ilagkum mA mati ucciyAn,
pinpinAl piRagkum caTaip pinjnjakan, piRappu ili" enRu
munpinAr mUvartAm tozu mukkaN mUrttitan tALkaLukku
anpinAr--aRaiyaNi nallUr am kaiyAl-tozuvArkaLE.
பொருள்: அறையணி நல்லூர் இறைவர் எலும்பணிந்தவர், சூலம் கையேந்தியவர்,
விளங்கும் பிறை தரித்த உச்சியார், பின்புறத்தில் தாழ்ந்த சடையுடையவர், தலைக்கோலம்
அணிந்தவர், பிறப்பில்லாதவர், ஆதிமூர்த்தி என்று கையால் தொழுவாரே மூவரும் வணங்கும்
முக்கண்மூர்த்தி திருவடிக்கு அன்பராவர்.
குறிப்புரை: என்பினார் - எலும்பணிந்தவர். கனல்சூலத்தார் - கனலும் (தீய்க்கும்) சூலப்படை
ஏந்தியவர். மதியுச்சியான் - சந்திரசேகரன். பின்பு இன் ஆல்- பின்பினால். பின்புறத்தில். பின் -
பின்புறத்தில், பின்னால்-பின்னலால் என்னும் பொருந்தும். 'பின்றாழ்சடை' (தி.1 ப.71 பா.4, ப.80 பா.2).
'பின்னு சடைகள் (தி.1 ப.74 பா.6). 'பின்னிய தாழ்சடையார்" (தி.1 ப.8 பா.10). பிறங்கும் - விளங்கும்.
பிஞ்ஞகன் என்பது சடையை அடையாக் கொண்டு நின்றதால் முடியன் என்ற மட்டில் அமைந்தது.
முன்பினார்- வலிமை, பழமையுடையார் நினைத்தலை உடையவர் எனலுமாம். முன்பின் ஆர் என்று
பிரித்துக் காலத்தையும் இடத்தையும் குறித்துக் கூறலுமாம். என்பினார் சூலத்தார் உச்சியான்
பிஞ்ஞகன் பிறப்பிலி என்று கையால் தொழுவாரே மூவரும் தொழும் முக்கண் மூர்த்தி திருவடிக்கு
அன்பராவர்.
Our Lord Civan adorns His body with the garland made up of skulls. He holds the
glowing trident in one of His hands. He retains the bright young moon in His hair locks
on the top of His head. At the back of His head the disheveled matted hair locks hang
low carrying garland of flowers. He has no birth. This Lord is manifest in Arai ani-nalloor
temple. Those celestials - Brahma, Thirumaal and Rudran - all the three high powered
demigods worship our Lord Civan who is three eyed, those who worship the holy feet of
Arai-ani-nalloor Lord are the pious devotees of this three-eyed Lord.
2305. விரவுநீறுபொன்மார்பினில்விளங்கப்பூசியவேதியன்
உரவுநஞ்சமுதாகவுண்டுறுதிபேணுவதன்றியும்
அரவுநீள்சடைக்கண்ணியாரண்ணலாரறையணிநல்லூர்
பரவுவார்பழிநீங்கிடப்பறையுந்தாஞ்செய்தபாவமே. 4
விரவு நீறு பொன்மார்பினில் விளங்கப் பூசிய வேதியன்,
உரவு நஞ்சு அமுதுஆகஉண்டு உறுதி பேணுவது அன்றியும்,
அரவு நீள்சடைக் கண்ணியார், அண்ணலார், அறையணிநல்லூர்
பரவுவார் பழி நீங்கிட, பறையும், தாம் செய்த பாவமே.
viravu nIRu ponmArpinil viLagkap pUciya vEtiyan,
uravu nanjcu amutu Aka uNTu uRuti pENuvatu anRiyum,
aravu nILcaTaik kaNNiyAr, aNNalAr, aRaiyaNi nallUr
paravuvAr pazi nIgkiTa, paRaiyum, tAm ceyta pAvamE.
பொருள்: திருநீற்றினை மார்பில் பூசிய மறையவன், கடல் நஞ்சினை அமுதமாக உண்டு
உயிர்களுக்கு உய்தி அளித்தவன். அஃதல்லாமலும், அரவினை நீண்ட சடையில் தலைமாலையாகக்
கொண்டவரும் தலைவருமாகிய அறையணிநல்லூர் சிவபிரானைப் பரவுவார் தம்மேல் வரும்
பழிநீங்கப் பாவம் ஓடும்.
குறிப்புரை: மார்பில் நீறு பூசிய வேதியன் என்றது சிவபிரானை. உரவு - கடல். அரவு - பாம்பு ,
கண்ணியார் - தலைமாலை உடையார். பரவுவார் - வாழ்த்தி வணங்குபவர். பழிநீங்கப் பாவம் ஓடும்.
Our Lord Civan is one who applies a lot of holy ashes to His attractive chest
and body. He is the author of the four Vedas. He is the Supreme Being who stopped the
universe from complete destruction by imbibing the poison. He has used the long serpent
in His matted hair locks as garland for the hair. This Lord is manifest in the temple
in Arai-ani-nalloor. Those devotees who adore, worship and pay reverence to our Lord
will get rid of their sins in their life.
2306. தீயினார்திகழ்மேனியாய்தேவர்தாந்தொழுதேவன்நீ
ஆயினாய்கொன்றையாயனலங்கையாயறையணிநல்லூர்
மேயினார்தமதொல்வினைவீட்டினாய்வெய்யகாலனைப்
பாயினாயதிர்கழலினாய்பரமனேயடிபணிவனே. 5
தீயின் ஆர் திகழ் மேனியாய்! தேவர் தாம் தொழும் தேவன் நீ
ஆயினாய்! கொன்றையாய்! அனல் அங்கையாய்! அறையணிநல்லூர்,
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்! வெய்ய காலனைப்
பாயினாய்! அதிர் கழலினாய்: பரமனே! அடி பணிவனே.
tIyin Ar tikaz mEniyAy! tEvartAm tozum tEvan nI
AyinAy! konRaiyAy! anal agkaiyAy! aRaiyaNi nallUr,
mEyinAr tama tolvinai vITTinAy! veyya kAlanaip
pAyinAy! atir kazalinAy! paramanE! aTi paNivanE.
பொருள்: தீயைப் போல ஒளிரும் திருமேனியை உடையாய்! தேவர்கள் எல்லோரும்
தொழும் மகாதேவன் நீ ஆயினாய்! கொன்றையினாய்! அங்கையில் அனலேந்தினாய்!
அறையணி நல்லூரை அடைந்தவர்களின் தொன்று தொட்டு வருகின்ற வினைகளை
ஒழித்தாய்! காலன் அழியப் பாய்ந்தாய்! ஒலிக்கும் கழலினாய்! பரமனே! அடி பணிந்தேன்.
குறிப்புரை: தீயின் ஆர் திகழ் மேனியாய் - தீயைப் போலப் பொருந்திய பிரகாசிக்கும்
திருமேனியை உடையாய். தேவர் நாம் தொழுதேவன் நீ ஆயினாய். கொன்றையினாய். அனல்
அங்கையாய், வீட்டினாய், பாயினாய், கழலினாய், பரமனே என மனமுருக வாய்குளிர அழைத்து.
அடிபணிவன் என்றது பக்தி சாகரத்தில் அழுத்துகின்றது. தம் - தம்முடைய. பாயினாய் - பாய்ந்தாய்.
Our Lord Civan looks extremely bright like the red supernal effulgence.
He is the head of all the devas who worship Him. He wears the cassia fistula flowers
on His head. He holds fire in one of His hands. Those devotees who reach the temple
of Arai- ani-nalloor and worship our Lord will get rid of their past sins. He kicked
and destroyed the god of death. He wears the trinket on His legs. Oh! Lord I worship
Your holy feet.
2307. விரையினார்கொன்றைசூடியும்வேகநாகமும்வீக்கிய
அரையினாரறையணிநல்லூரண்ணலாரழகாயதோர்
நரையினார்விடையூர்தியார்நக்கனார்கூறும்போதுசேர்
உரையினாலுயர்ந்தார்களுமுரையினாலுயர்ந்தார்களே. 6
விரையின் ஆர் கொன்றை சூடியும், வேக நாகமும் வீக்கிய
அரையினார், அறையணிநல்லூர் அண்ணலார், அழகுஆயது ஓர்
நரையின் ஆர் விடை ஊர்தியார், நக்கனார், கூறும்போது சேர்
உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே.
viraiyin Ar konRai cUTiyum, vEka nAkamum vIkkiya
araiyinAr, aRaiyaNi nallUr aNNalAr, azaku Ayatu Or
naraiyin Ar viTai UrtiyAr, nakkanAr, kURumpOtu cEr
uraiyinAl uyarntArkaLum uraiyinAl uyarntArkaLE.
பொருள்: மணமுள்ள கொன்றையைச் சூடி, விடவேகமுள்ள நாகத்தை அரையில் கட்டி,
அழகாயதொரு வெள்விடை ஊர்தியை உடையவர்; ஆடையற்றவர்; ஆகிய அறையணிநல்லூரில்
அண்ணலாரை நறிய பூவால் அருச்சித்து தோத்தரித்து உயர்பவர் புகழலால் உயர்வினை அடைவார்.
குறிப்புரை: வேகம் -விடவேகம். பத்துவேகம் 'பத்துக்கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின்
பல்' (தி.4 ப.18 பா.10). நாகம் - பாம்பு. வீக்கிய - கட்டிய. அரையில் நாகம் வீக்கினார் என்க. நரையின்
ஆர் விடை- வெண்ணிறத்தினைப் பொருந்திய எருது. நறும்போது - நறுமணம் கமழும் பூக்கள்.
உரையினால்-1,தோத்திரங்களால் - 2, புகழலால், பூவால் அருச்சித்து வாயால் தோத்திரம் புரிதல்
பற்றிப் 'போதுசேர் உரை' என்றார். 'உரை மாலையெல்லாம் உடைய அடி' (தி.6 ப.6 பா.7).
'உரையாலுணரப்படாத அடி' 'உரையாரும் புகழானே' (தி.6 ப.62 பா.6). 'உரைப்பார் உரை உகந்து
உள்கவல்லார் தங்கள் உச்சியாய்' (தி.7. பா 936) 'உரையார் தமிழ்மாலை' (தி.1 ப.84 பா.11). 'உரைப்பார்
உரைப்பவையெல்லாம் இரப்பார்க் கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்' (குறள்). அர்ச்சனையில் உயர்வது
புகழில் உயர்வதாகும் என்றவாறு. வழிபாட்டால் வரும் புகழேயன்றி மற்றைய வழிகளால் வரும் புகழ்
உயர்வுடையதன்று. 'உரையார் பொருளுக்குப்பிலான்' (தி. 6 ப.11 பா.7) என்பதற்கேற்பப் பொருள்
உரைத்தலுமாம்.
Our Lord Civan wears the garland made up of cassia fistula, which has sweet fragrance.
He wears around His waist the ill-tempered poisonous snake. He is the Supreme Being manifest
in the temple in Arai-ani-nalloor. He uses the handsome white bull for His conveyance. Those
who strew flowers and praise our Lord with pleasing holy words will become famous in their life.
2308. வீரமாகியவேதியர்வேகமாகளியானையின்
ஈரமாகியவுரிவைபோர்த்தரிவைமேற்சென்ற எம்மிறை
ஆரமாகியபாம்பினாரண்ணலாரறையணிநல்லூர்
வாரமாய்நினைப்பார்கள்தம்வல்வினையவைமாயுமே. 7
வீரம் ஆகிய வேதியர் வேக மா களியானையின்
ஈரம் ஆகிய உரிவை போர்த்து, அரிவைமேல் சென்ற எம் இறை;
ஆரம் ஆகிய பாம்பினார்; அண்ணலார்; அறையணிநல்லூர்
வாரம்ஆய் நினைப்பார்கள்தம் வல்வினை அவை மாயுமே.
vIram Akiya vEtiyar; vEka mA kaLiyAnaiyin
Iram Akiya urivai pOrttu, arivaimEl cenRa em iRai;
Aram Akiya pAmpinAr; aNNalAr; aRaiyaNi nallUr
vAram Ay ninaippArkaL tam valvinai avai mAyumE.
பொருள்: ஞானமுடைய வேதியர், வேகமாக மதத்துடன் வந்த பெரிய யானையின் குருதி
ஈரமுடைய தோலினை உரித்துப் போர்த்து உமாதேவி அஞ்ச அவர்பாற் சென்ற எம்முடைய இறைவர்,
மாலையாகப் பாம்பினை உடையவர்; தலைவர். அவருடைய அறையணிநல்லூரை அன்புடன்
நினைப்பவர்கள்தம் வல்வினை ஆயவை மாயும்.
குறிப்புரை: வீரம் - ஞானம், ஞான வேதியர் - சிவபிரான். அட்ட வீரட்டம் (எட்டு வீரத்தலம்)
நோக்கின் சிவபிரானுக்குப் பொருந்தும். (வீரம் ஆகிய வேதியர்) தக்க யாகத்தில் இருந்தவர்களும் ஆம்.
வேகமாகளியானை- அவர்கள் வேகத்துடன் போதர ஏவிய பெரிய மதக்களிப்பை உடைய யானை.
யானையின் ஈரம் ஆகிய உரிவை - அந்த யானை ஈரிய தோல். அரிவை - உமாதேவியார். பாம்பு
மாலை அணிந்தவர். வாரம் - அன்பு நினைப்பார்கள் தம் வல்வினை மாயும் - தியானம்
புரிபவர்களுடைய தீவினை அழியும்.
Our Lord Civan is an embodiment of super intelligence and He is the author of
the four Vedas. He covered His body with the wet hide of an enraged big elephant
and appeared before His consort Uma Devi. He wears the snake as His garland.
He is manifest in the temple in Arai-ani-nalloor as the Supreme Being. Those who
think and repeat His name with sincere devotion will get rid of their strong karma
in their life.
2309. தக்கனார்பெருவேள்வியைத் தகர்த்துகந்தவன்தாழ்சடை
முக்கணான்மறைபாடியமுறைமையான்முனிவர்தொழ
அக்கினோடேழிலாமைபூணண்ணலாரறையணிநல்லூர்
நக்கனாரவர்சார்வலானல்குசார்விலோம்நாங்களே. 8
தக்கனார் பெருவேள்வியைத் தகர்த்து உகந்தவன் தாழ்சடை
முக்கணான், மறை பாடிய முறைமையான், முனிவர் தொழ
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார், அறையணிநல்லூர்
நக்கனார் அவர் சார்வுஅலால் நல்கு சார்வு இலோம் நாங்களே.
takkanAr peru vELviyait takarttu ukantavan, tAzcaTai
mukkaNAn, maRai pATiya muRaimaiyAn, munivar toza
akkinOTu ezil Amai pUN aNNalAr, aRaiyaNi nallUr
nakkanAr avar cArvu alAl nalku cArvu ilOm, nAgkaLE.
பொருள்: தக்கனுடைய பெரிய வேள்வியைத் தகர்த்து மகிழ்ந்தவர்; தாழ்ந்த சடை உடையவர்;
முக்கண்களை உடையவர்; முனிவர்கள் முறைமையால் வழிபட எலும்பினோடு ஆமையோட்டையும்
அழகாகப் பூண்டவர். தலைவர். அறையணி நல்லூர் நக்கனார், யாம் அவருடைய திருவடிச் சார்பினை
அல்லாது பேரின்பம் பயக்கும் வேறுசார்பு இலோம்.
குறிப்புரை: தக்கனார் - தக்ஷன். முக்கணான் - திரிநேத்திரன். அக்கு - எலும்பு, உருத்திராக்கமுமாம்.
ஆமை பூண்ட அண்ணலார். அவர்சார்வு - அச்சிவபிரான்றிருவடிச் சார்பு. நாங்கள் அவர் சார்வு அல்லால்
பேரின்பம் பயக்கும் சார்வு வேறிலோம். அடுத்த பாடலின் ஈற்றடியும் ஈதேயாதல் அறிக (தி.2 ப.44 பா.3.)
Our Lord Civan ordered to demolish the sacrificial fire of Thakkan. His matted
hair hangs very low on His back. He has three eyes. The sages pray Him, He authored
the four Vedas in the proper manner. He is the super intellect wearing the tortoise
shell and the garland made of skulls. He is the mendicant in the temple in Arai-ani-nalloor.
We worship Him alone for ultimate happiness and do not seek anybody else.
2310. வெய்யநோயிலர்தீதிலர்வெறியராய்ப்பிறர்பின்செலார்
செய்வதேயலங்காரமாமிவையிவைதேறியின்புறில்
ஐயமேற்றுணுந்தொழிலராமண்ணலாரறையணிநல்லூர்
சைவனாரவர்சார்வலால்யாதுஞ்சார்விலோம்நாங்களே. 9
வெய்ய நோய் இலர்; தீது இலர்; வெறியராய்ப் பிறர் பின் செலார்;
செய்வதே அலங்காரம் ஆம்; இவைஇவை தேறி இன்புஉறில்,
ஐயம் ஏற்று உணும் தொழிலர்ஆம் அண்ணலார், அறையணிநல்லூர்
சைவனார் அவர், சார்வுஅலால், யாதும் சார்வுஇலோம், நாங்களே.
veyya nOy ilar; tItu ilar; veRiyarAyp piRar pin celAr;
ceyvatE alagkAram Am; ivai ivai tERi inpu uRil,
aiyam ERRu uNum tozilar Am aNNalAr, aRaiyaNi nallUrc
caivanAr avar, cArvu alAl, yAtum cArvu ilOm, nAgkaLE.
பொருள்: பிறப்பிறப்பாகிய கொடிய நோயிலர்; வெறி பிடித்தவர் போலப் பிறர்பின் செல்லார்.
(தற்சுதந்திரம் உடையவர்); அவர் செய்து கொள்வதே அலங்காரம் (தூய உடம்பினர்.) இவ்வியல்புகளை
ஆராய்ந்து தெளிந்தால், பிச்சையேற்று உண்ணும் தொழிலராகிய தலைவர் அறையணி நல்லூர்ச்
சைவனார் (சிவபிரான்) அவருடைய திருவடிச் சார்பினை அல்லாது பேரின்பம் பயக்கும் சார்பு
வேறு நாம் இலோம்.
குறிப்புரை: வெய்ய -வெம்மையுடைய. வெறியராய் - வெறி பிடித்தவர்போல. செய்வதே
அலங்காரம் ஆம் இவை இவை என்பது செய்வனவே அழகாக்கும் பெற்றி போலும். அவர்
'கொண்டதே கோலம்' என்றலும் அமையும். எருக்கு முதலிய அணிதல், பாம்பணிதல் முதலியவை
நோக்கின், சிவபிரானுக்கு அன்றிப் பிறர்க்கு அவை அலங்காரமாதல் இன்மை விளங்கும்.
சைவன் - சிவபிரான். சைவா போற்றி (திருவாசகம்) 'மான்மறிவொன்றேத்துஞ் சைவன்'
(தி. 4 ப. 62 பா. 4). சைவத்தசெல்வவுருவன் திருநீற்றன் (தி.7பா.838).
Our Lord Civan has no disease due to the sun's heat. He never follows others
with violent desires. Whatever He carries to beautify Himself is good enough. We must
understand His actions fully well and accept Him as He is. His behaviour of begging alms
also must be accepted and we must depend on Him for our ultimate happiness, without any
second thought for any other faith. Let us depend only on one Lord, the Lord of
Arai-ani-nalloor.
2311. வாக்கியஞ்சொல்லியாரொடும்வகையலாவகை செய்யன்மின்
சாக்கியஞ்சமணென்றிவைசாரேலும்மரணம்பொடி
ஆக்கியம்மழுவாட்படையண்ணலாரறையணிநல்லூர்ப்
பாக்கியங்குறையுடையீரேற்பறையுமாஞ்செய்தபாவமே. 10
வாக்கியம் சொல்லி, யாரொடும் வகை அலா வகை செய்யன்மின்!
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும்(ம்) அரணம் பொடி
ஆக்கிய(ம்) மழுவாள்படை அண்ணலார் அறையணிநல்லூர்ப்
பாக்கியம் குறை உடையீரேல், பறையும்ஆம், செய்த பாவமே.
vAkkiyam colli, yAroTum vakai alA vakai ceyyanmin!
cAkkiyam camaN enRu ivai cArElum(m) araNam poTi
Akkiya(m) mazuvAL paTai aNNalAr aRaiyaNi nallUrp
pAkkiyam kuRai uTaiyIrEl, paRaiyum Am, ceyta pAvamE.
பொருள்: பழகத் தகுதி அற்றோர் யாவரோடும் பேச்சுக் கொடுத்து செய்யத் தகாதனவற்றைச்
செய்யாதீர்; சாக்கியர், சமணர் என்னும் இவர்களுடன் சாராதீர்; மதில்களைச் சாம்பலாக்கியவர் ஆகிய
அந்த மழுவாள் படைத் தலைவர் அறையணி நல்லூரினை இன்றியமையாப் பொருளாக அடைவீரேல்
செய்த பாவம் பறந்து போகும்.
குறிப்புரை: வாக்கியம்- பொருள் முற்றுப்பெற்ற சொற்றொடர். சாரேலும்- சாராதீர்கள்.
சாராதேயுங்கள். சாரேல் - ஒருமை. அதனொடு 'உம்' சேர்த்து முன்னிலைப் பன்மை யேவலாக்கினர்.
இது திருமுறையில் பல இடத்தில் காணப்படும். (தி.2 ப.119 பா.10; தி.3 ப.91 பா.10) காண்க. அரணம் -
திரிபுரம். ஆக்கிய மழு, மகர மெய் விரித்தல் விகாரம். பாக்கியம் குறை- பாக்கியமாகிய
இன்றிமையாப் பொருள். பாக்கியம் - தெய்வம். (குறள் 1141). எதுவந்தால் முடிவுறும்? அஃது
இல்லாமல் குறையாகி அவாவப்படும். படவே குறை என்பதற்கு முடிக்கப்படும் பொருள்.
இன்றியமையாப் பொருள் என்று பொருளுரைத்தனர் சான்றோர் (குறள் 612).
Oh! people of Arai-ani-nalloor! please do not indulge in long idle talk and
improper actions. Do not listen to the words of the Jains and the Buddhists nor join
those sections.Oh! You devotees! if you have any attachments to fulfil, you may go to
the temple in Arai-ani-nalloor and worship our Lord who burnt the three fortresses
and completely destroyed those. Of course, He carries a battle axe in one of His hands
and is manifest in the temple in Arai-ani-nalloor. If you follow this you will get what
you want and will also get rid of the sins of your past life.
2312. கழியுலாங்கடற்கானல்சூழ்கழுமலமமர்தொல்பதிப்
பழியிலாமறைஞானசம்பந்தன்நல்லதோர்பண்பினார்
மொழியினாலறையணிநல்லூர் முக்கண்மூர்த்திதன்தாள்தொழக்
கெழுவினாரவர்தம்மொடுங்கேடில்வாழ்பதிபெறுவரே. 11
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதிப்
பழி இலா மறை ஞானசம்பந்தன், நல்லது ஓர் பண்பின் ஆர்
மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள் தொழக்
கெழுவினார் அவர், தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே.
kazi ulAm kaTal kAnal cUz kazumalam amar tol patip
pazi ilA maRai njAnacampantan, nallatu Or paNpin Ar
moziyinAl, aRaiyaNi nallUr mukkaN mUrttitan tAL tozak
kezuvinAr avar, tammoTum kETu il vAz pati peRuvarE.
பொருள்: கழிகள் உலாவுகின்ற கடற்கானல் சூழப் பெற்ற சீகாழியாகிய பழைமையான
பதியில், பழியிலாத மறைகள் வல்ல ஞானசம்பந்தன் நன்மை பயக்கும் இயல்பினதாக மொழிந்த
இத்திருப்பதிகத்தைக்கூறி அறையணி நல்லூர் முக்கண் மூர்த்தியினுடைய திருத்தாள்களைத்
தொழப் பொருந்தினர் தம்மையும் பெறுவர்; சிவலோகத்தையும் பெறுவர்.
குறிப்புரை: பழி இல்லாமை மறைக்கு அடை பண்பின் ஆர் மொழியினால் - இத்திருப்பதிகத்தால்.
கெழுவினார் - பொருந்தினவர். கேடு இல்வாழ்பதி - சிவலோகம். தம்மோடும் பதி பெறுவர் என்றதால்,
தம்மையும் பெறுவர். பதியையும் பெறுவர் என்க. தம்மைப் பெறுதல் - தம்மையுணர்ந்து தமையுடைய
தன்னுணர்வார் (சிவஞான அவையடக்கம்) என்றவாறு தம்மையுணர்தல். தன்னுயிர்தானறப்
பெற்றானை ஏனைய மன்னுயிரெல்லாந்தொழும் (குறள் 268), பதி - சிவம்.
In the city of Kazhumalam salt pans are many by the side of the seashore.
Along with the pans there are many thick gardens all around. In this old city of
Kazhumalam our saint Thiru-gnana-Sambandar was born. He is spotless and is an expert
in all the four Vedas. He reached the temple in Arai-ani-nalloor and chanted these
ten verses. Those virtuous scholars with good manners, reaching the temple in
Arai-ani-nalloor, may recite these verses. There they may worship and pray to the
triple eyed Lord at His holy feet. They will reach the Sivaloka where faultless
saints live by attaining Civagnanams.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
77ஆம் பதிகம் முற்றிற்று
End of 77th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 214 பதிக எண். 78.
78. திருவிளநகர் 78. THIRU-VILA-NAGAR
பண் : காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருவிளநகர் என்னும் இத்திருத்தலமானது காவிரித் தென்கரையில் உள்ள நாற்பதாவது
தலம். மயிலாடுதுறைக்குக் கிழக்கே 6 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. மயிலாடுதுறையிலிருந்து
செம்பொனார் கோயில் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். இறைவர் திருப்பெயர் துறை
காட்டும் வள்ளலார். அருள் வித்தகர் என்னும் அந்தணர் பூக்கூடையை எடுத்துக் கொண்டு காவிரியாற்றில்
இறங்கி வந்தபோது, வெள்ளம் அவரை அடித்துக் கொண்டு சென்றது. அவரோ பூக்கூடையை விடாது
சிவபெருமானையே சிந்தித்தார். அவருக்கு இறைவர் ஒரு துறையைக் காட்டிக் கரையேறச் செய்து
ஞான உபதேசம் செய்தருளிய காரணத்தால் இப்பெயரை இத்தலத்து இறைவர் பெற்றார். காவிரித்துறை
காட்டினார் என்று இவ்வூர்த் தேவாரத்திலும் குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறைவி
திருப்பெயர் தோழிநாயகி. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. இது தருமை ஆதீன
அருளாளுகைக்கு உட்பட்ட ஆலயமாகும்.
பதிக வரலாறு
சிரபுரத்து வள்ளலார் திருச்செம்பொன்பள்ளியை வணங்கி மெய்த்த காதலால் விளநகர்
விடையவர் பாதம் பத்தரோடு பணிந்து பாடியருளிய இசைப்பதிகம் ஈதாகும்.
திருச்சிற்றம்பலம்
2313. ஒளிரிளம்பிறைசென்னிமேலுடையர்கோவணஆடையர்
குளிரிளம்மழைதவழ்பொழிற்கோலநீர்மல்குகாவிரி
நளிரிளம்புனல்வார்துறைநங்கைகங்கையைநண்ணினார்
மிளிரிளம்பொறியரவினார்மேயதுவிளநகரதே. 1
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண ஆடையர்,
குளிர் இள(ம்)மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி
நளிர் இளம்புனல் வார் துறை -நங்கைகங்கையை நண்ணினார்,
மிளிர் இளம் பொறிஅரவினார், மேயது - விளநகர் அதே.
oLir iLampiRai cennimEl uTaiyar, kOvaNa ATaiyar,
kuLir iLa(m) mazai tavaz pozil kOla nIr malku kAviri
naLir iLampunal vAr tuRai--nagkai kagkaiyai naNNinAr,
miLir iLam poRi aravinAr, mEyatu-viLanakar atE.
பொருள்: பிரகாசிக்கின்ற சிரசின்மீது பிறையை உடையவர்; கோவணம் ஆகிய ஆடையை
உடுத்தவர்; குளிர்ந்த நீர்த்துறைகளை உடைய கங்கை நங்கையைப் பொருந்தினவர்; மெல்லிய
புள்ளிகளோடு புரள்கின்ற பாம்பினை அணிகலனாக உடையவராகிய இறைவர் மேவியது,
கூதன்மாரி தவழும் பொழில்களூடே வளமான, பெருக்கெடுத்து தெளிந்த நீரோடும் காவிரி
பாயும் திருவிளநகரதே.
குறிப்புரை: ஒளிர்- பிரகாசிக்கின்ற. சென்னிமேல் பிறை உடையர். கோவணம் ஆகிய ஆடை
உடுத்தவர். குளிர் மழைக்கு இளமை. பெய்து வெளிறாமை. நளிர்- குளிர்ச்சி. துறை நதிசாதியடை.
மிளிர் - பிறழ்கின்ற, புரள்கின்ற, விளங்குகின்ற. பொறி - பாம்பின் படத்திலுள்ள புள்ளிகள்.
'பொறியரவம்' (தி.1 ப.132 பா.2). 'பொறிகிளர்அரவம்' (தி.3 ப.92 பா.3). 'பொறிகிளர் பாம்பு'
(தி.3 ப.101 பா.2). 'பொறியரவு' (தி.4 ப.35 பா.6) என்று பயின்ற ஆட்சியாயிருந்தும். ஆகரங்காட்டிய
அகராதியில் அராப்பொறி இராப்பொறியாயிற்று.
Our Lord Civan retains the bright young moon on His head. He wears the fore-
lap cloth on His loins. He supports His beloved lady of the river the Ganges on His
hair. He wears on His waist the bright young snake with dots on its head. Our Lord
desires to manifest Himself in the temple in Thiru-vila-nagar. In this city black
clouds gather to shower cool rains. The city is surrounded by thick natural forests
as well as ponds with cool water. The river is full of fresh water with long banks,
such is the beauty of the city.
2314. அக்கரவ்வணிகலனென அதனொடார்த்ததோராமைபூண்
டுக்கவர்சுடுநீறணிந்தொளிமல்குபுனற்காவிரிப்
புக்கவர்துயர்கெடுகெனப்பூசுவெண்பொடிமேவிய
மிக்கவர்வழிபாடுசெய்விளநகரவர்மேயதே. 2
அக்கு அர(வ்)வு அணிகலன் எனஅதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு,
உக்கவர் சுடுநீறு அணிந்து, ஒளி மல்கு புனல் காவிரிப்
புக்கவர்-"துயர் கெடுக!" எனப் பூசு வெண்பொடி மேவிய
மிக்கவர் வழிபாடு செய் - விளநகர், அவர் மேயதே.
akku ara(v)vu aNikalan ena atanoTu Arttatu Or Amai pUNTu,
ukkavar cuTunIRu aNintu, oLi malku punal kAvirip
pukkavar" tuyar keTuka!" ena pUcu veNpoTi mEviya
mikkavar vazipATu cey-viLanakar, avar mEyatE.
பொருள்: எலும்புடன் பாம்பினையும் அவற்றுடன் ஆமையோட்டினையும் சேர்த்து
அணிகலன் என அணிந்து, இறந்தவரைச் சுட்ட சாம்பலைப் பூசி, இறையவர் மேவியது. தெளிந்த
நீர்ப்பரப்புள்ள காவிரியாற்றில் புக்கு நீராடி 'துயர் கெடுக' எனத் திருநீற்றுப் பொடி தரித்த
மேலோர் வழிபாடு செய்யும் திருவிளநகரதே.
குறிப்புரை: அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது. ஓர் ஆமை பூண்டு - எலும்பும்
பாம்பும் (அழகுற) அணியும் ஆபரணம் என்ன, அவ்வாபரணத்தோடு கட்டியதோராமை அணிந்து,
அணிகலனைச் சுட்டாமல் அக்கரவு - தட்டிற்றெனில் அவற்றொடு எனல் வேண்டும். அக்கர் எனின்,
வலிந்து பொருள் கொள்ளலாம். உக்கவர் - அழிந்தவர். சுடுநீறு - முற்பதிகத்தின் முதற்பாட்டுரையிற்
பார்க்க. (ப. 211 பா.3) 'ஒளிமல்கு புனல் காவிரி' என்றது இன்றும் கண்கூடு. பூண்டு அணிந்து அவர்
மேயது விளநகர் என்க. காவிரிப்புக்கவர் என்பது சிவபிரானைக் குறித்ததாகக் கொள்ளின்,
அணிந்து புக்கவர் என்க.
காவிரிப்புக்கவர்- காவிரி நீரிற் புகுந்து முழுகியவர். இது சிவபிரான் தீர்த்தம் அருளற்பொருட்டு
எழுந்தருளும் உண்மை குறித்தது. 'துயர்கெடுக' எனச் சங்கற்பஞ்செய்து திருநீறு பூசுதல் வேண்டும்.
துயர் - பிறவித் துன்பம். துயர்க்கெடு - பாசநீக்கம். துயர் கெடுக என்றார்க்கு இன்புறுக என்றலும்
உட்கோளாகும். அவ்வின்பாக்கம்- சிவப்பேறு. இவ்விரண்டும் சேர்ந்ததே ஆன்மலாபமாகிய முத்தி.
'பாசவீடும் சிவப்பேறும்' எனப் பயன் இருவகைப்படும். அவ்விரண்டனுள் பாசவீடாகிய பயனைப்
பெறுமாறு உணர்த்து... தல் பயனோத்தின் முதற்பாதமாகிய இப்பத்தாஞ் சூத்திரத்தின் கருத்து என்க.
(சிவஞானபோதம், சூ. 10 மாபாடியம்).
'ஆன்மலாபம் இரண்டனுள் முடிவாய் எஞ்சி நின்ற சிவப்பேறு கூடுமாறுணர்த் ... துதல்
பயனோத்தின் இரண்டாம் பாதமாகிய பதினோராஞ்சூத்திரத்தின் கருத்து என்க. ‘ஆன்மலாபம்
எனப்படும் பயன் இரண்டனுள் பாசநீக்கம் உணர்த்திய பின்னர்ச் சிவப்பேறு உணர்த்துதல்
முறைமை' (மேற்படி சூ. 11). இவ்விரண்டும் 'சிவாயநம' என்று நீறணிந்தேன் என்று,
'திருவருளால்' வந்த தேவாரத்தில் உள்ளன. 'துயர்கெடுப்பன் பூசுவெண்பொடி' என்றதால்,
பூசும்பொழுது திருவைந்து எழுத்தோதாது பூசுவது தகாது. மிக்கவர் -மேலான அடியவர் வழிபாடு -
அருள் வழிபடுஞ் சிவதரிசனம் முதலியவை. 'நிலைநிலையாப் பொருளுணர்ந்து பற்றிகந்து கரணம்
ஒரு நெறியே செல்லப் புலனெறி நீத்து அருள்வழிபோதல்' வழிபாடு (திருவிளையாடற்புராணம்).
Our Lord Civan wears over His body a garland made up of human skulls, snakes
and also tortoise skull. He applies on His body the ashes of dead people. He is manifest
in Thiru-vila-nagar temple. In this city the devotees take bath in the Cauvery river
and apply holy ashes over their body and they worship our Lord. They pray to our Lord
to get rid of their sufferings in their life.
2315. வாளிசேரடங்கார்மதில்தொலைய நூறியவம்பின்வேய்த்
தோளிபாகமமர்ந்தவருயர்ந்ததொல்கடல்நஞ்சுடன்
காளமல்கியகண்டத்தர்கதிர்விரிசுடர்முடியினர்
மீளியேறுகந்தேறினார்மேயதுவிளநகரதே. 3
வாளிசேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய்த்
தோளி பாகம் அமர்ந்தவர், உயர்ந்த தொல்கடல்நஞ்சு உண்ட
காளம் மல்கிய கண்டத்தர், கதிர் விரி சுடர் முடியினர்,
மீளி ஏறு உகந்து ஏறினார், மேயது - விளநகர் அதே.
vALI CEr aTagkAr matil tolaiya nURiya vampin vEyt
tOLi pAkam amarntavar, uyarnta tol kaTal nanjcu uNTa
kALam malkiya kaNTattar, katir viri cuTar muTiyinar,
mILI ERu ukantu ERinAr, mEyatu--viLanakar atE.
பொருள்: படைக்கலன் வலிமை கொண்ட பகைவர்களின் மதில் சாம்பலாகுமாறு அழித்தவர்;
புதிய மூங்கிலை ஒக்கும் தோளினை உடைய இறைவியைத் தன் மேனியின் ஒரு பாகமாக விரும்பியவர்;
உயர்ந்ததும் பழமையானதுமாகிய பாற்கடலில் தோன்றிய நஞ்சுடன் கருமை நிறம் கொண்ட கண்டத்தர்;
செவ்வொளி வீசுகின்ற முடியினை உடையவர்; வலிமை வாய்ந்த எருதினை வாகனமாக ஊர்ந்தவர்
ஆகிய இறைவர் மேவியது திருவிளநகரதே.
குறிப்புரை: வாளி- அம்பு. அடங்கார்- பகைவர். மதில்- மும்மதில். நூறிய- அழித்த. வம்பின்
வேய்த்தோளி- புதிய மூங்கிலை ஒத்த தோள்களை உடைய உமாதேவியார். இரண்டு கணுக்கட்கும்
இடைப்பகுதியே தோளுக்கு ஒப்பு. வம்பு- புதுமை. உயர்ந்த கடல். தொல் கடல் - பாற்கடல்.
நஞ்சு- விஷம். காளம்- கருமை. மல்கிய - நிறைந்த. காளமல்கிய கண்டத்தர் - திருநீலகண்டர்.
கதிர் - செவ்வொளி. விரி -விரியும். சுடர்முடியினர்- நெருப்பைப் போலும் சடைமுடியுடையவர். அலரும்
எரிசெஞ்சடை (பதி. 37). எரிதருசடை (பதி. 122) எரியார் சடை (பதி. 154) அனல்நிகர்சடை (பதி. 123)
கனல் செய்தகமழ்சடை (பதி. 121) தீச்செய்தசடை (பதி. 119) நெருப்பினாற் குவித்தாலொக்கு நீள்சடை
(தி.5 ப. 30. பா.7) நெருப்பராய் நிமிர்ந்தாலொக்கும் நீள்சடை (மேற்படி 9) என்னும் திருமுறைச்சான்று
கொண்டு இப்பொருள் எழுதப்பட்டது. மீளி - வலிமை, பெருமையுமாம். ஏறு -விடை, எருது. உகந்து -
விரும்பி, உயர்ந்து. மேயது - எழுந்தருளியிருப்பது.
Our Lord Civan fitted the bow properly and completely destroyed the three
fortresses of the antagonists, the asuras. He has embedded His consort Uma Devi on
the left side of His body. Her shoulders are very attractive like the tender and new
bamboo poles. He imbibed the poison that came out of the ancient ocean; because of
the poison in side the throat His neck is dark blue in colour. His hair locks are
broad and bright like glowing fire. He is pleased to use the strong white bull for
His conveyance. This Lord is manifest in Thiru-vila-nagar.
2316. கால்விளங்கெரிகழலினார்கையிலங்கியவேலினார்
நூல்விளங்கியமார்பினார்நோயிலார்பிறப்பும்மிலார்
மால்விளங்கொளிமல்கியமாசிலாமணிமிடறினார்
மேல்விளங்குவெண்பிறையினார்மேயதுவிளநகரதே. 4
கால் விளங்கு எரி கழலினார், கை இலங்கிய வேலினார்,
நூல் விளங்கிய மார்பினார், நோய் இலார், பிறப்பும்(ம்) இலார்,
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார்
மேல் விளங்கு வெண்பிறையினார், மேயது - விளநகர் அதே.
kAl viLagku eri kazalinAr, kai iLagkiya vElinAr,
nUl viLagkiya mArpinAr, nOy ilAr, piRappum(m) ilAr,
mAl viLagku oLi malkiya mAcu ilA maNimiTaRinAr,
mEl viLagku veNpiRaiyinAr; mEyatu--viLanakar atE.
பொருள்: காலில் வீரம் தோன்றும் கழலினை உடையவர்; கையில் விளங்கும் வேலினை
உடையவர்; முப்புரி நூல் விளங்கும் மார்பினர்; நோகும் துன்பமிலார்; பிறப்பும் இலார். கருமை
நிறம் மல்கிய, குற்றமற்ற நீலமணி போலும் மிடறினை உடையவர்; சென்னியின்மேல் விளங்கும்
பிறையினை உடையவர்; ஆகிய இறையவர் மேவியது திருவிளநகரதே.
குறிப்புரை: நூல்- பூணுநூல். நோய் (உம்) இலார் பிறப்பும் இலார் - நோகுந்துன்பமும் இல்லார்
பிறத்தலும் இல்லார். மால் - கருமை. மால் விளங்கிய மிடறினார் - திருநீலகண்டர் . விளங்கு ஒளி
மல்கிய மிடறு மாசிலா மணிமிடறு - குற்றம் இல்லாத நீலமணி போலும் மிடறு. அழகிய மிடறுமாம்.
மால் விளங்கு என்பதற்கு - இடமால் தழுவிய பாகம் (தி. 4 ப. 2 பா. 4; ப. 22 பா. 4; ப. 24 பா. 7: ப. 37 பா 7:
ப. 40 ; பா.5; ப62; பா.8; ப. 66 பா 8; ப. 78 பா. 7; தி. 6 ப. 24 பா. 5) என்றும் கூறலாம்.
Our Lord Civan has worn the warrior's trinket on His legs. He holds the trident
in one of His hands. Over His body the sacred thread is conspicuous. He has no birth and
no death and has no illness. His neck is dark blue in colour like the sapphire gem.
It is very bright and conspicuous. He retains the bright white moon of the sky on
His head. This Lord is manifest in the temple in Thiru-vila-nagar.
2317. பன்னினார்மறைபாடினார்பாயசீர்ப்பழங்காவிரித்
துன்னுதண்டுறைமுன்னினார்தூநெறிபெறுவாரெனச்
சென்னிதிங்களைப்பொங்கராக்கங்கையோடுடன்சேர்த்தினார்
மின்னுபொன்புரிநூலினார்மேயதுவிளநகரதே. 5
பன்னினார்,மறை, - பாடினார்; பாய சீர்ப் பழங்காவிரித்
துன்னு தண்துறை முன்னினார், தூ நெறி பெறுவார் என;
சென்னி திங்களைப் பொங்கு அரா, கங்கையோடு, உடன்சேர்த்தினார்;
மின்னு பொன் புரிநூலினார்; மேயது - விளநகர் அதே.
manninAr,-maRai,--pATinAr; pAya cIrp pazagkAvirit
tunnu taNtuRai munninAr, tU neRi peRuvAr ena;
cenni tigkaLaip pogku arA, kagkaiyOTu, uTan cErttinAr;
minnu pon purinUlinAr, mEyatu--viLa nakar atE.
பொருள்: வேதங்களை ஆராய்ந்தவர்; வேதங்களைப் பாடினவர்; பரவிய பழமையான
புண்ணிய காவிரி நதியின் குளிர்ந்த துறையை அணுகினவர்; தூநெறியாகிய சிவகதியைப்
பெறுவாரென்று அறிவித்து, சென்னியில் பிறையையும் சினமிக்க அரவினையும் கங்கையுடன்
சேர்த்தினவர்; பொன்னால் ஆன பூணூல் அணிந்தவராகிய இறைவர் மேவியது திருவிளநகரதே.
குறிப்புரை: பன்னினார் - சொன்னார், ஆராய்ந்தார். மறை இடை நிலை விளக்கு. பாய - பரவிய.
சீர்க்காவிரி, பழங்காவிரி, காவிரித்துறை. முன்னினார் - அணுகினவர். தூநெறி - தூய (சிவ) கதி (பா.11).
திங்களை அராவோடும் கங்கையோடும் உடன் சேர்த்தவர். ஓடு உடன் இரண்டும் ஒரு சேர நின்றதறிக.
Our Lord Civan is the author of the four Vedas; He used to chant the songs
of the Vedas in musical tone. On His head He wears the baby moon, the lady river
Ganges and the snake, which is ferocious. He wears over His body the three-plaited
sacred thread,which is as bright as gold. This Lord is manifest in the temple on the
banks of the river Cauvery in the city of Thiru-vila-nagar. He graces His devotees
who come and worship Him to enable them to become virtuous. The river Cauvery is
widespread and has reputation in all the area and the city of Thiru-vila-nagar
is situated on the bank of the river.
2318. தேவரும்மமரர்களுந்திசைகள்மேலுளதெய்வமும்
யாவரும்மறியாததோரமைதியாற்றழலுருவினார்
மூவரும்மிவரென்னவும்முதல்வரும்மிவரென்னவும்
மேவரும்பொருளாயினார்மேயதுவிளநகரதே. 6
தேவரும்(ம்),அமரர்களும், திசைகள்மேல் உள தெய்வமும்,
யாவரும்(ம்) அறியாதது ஓர் அமைதியால்-தழல் உருவினார்;
மூவரும்(ம்) இவர் என்னவும், முதல்வரும்(ம்) இவர் என்னவும்,
மேவ(அ)ரும் பொருள் ஆயினார்; மேயது - விளநகர் அதே.
tEvarum(m), amararkaLum, ticaikaL mEl uLa teyvamum,
yAvarum(m) aRiyAtatu Or amaitiyAl-tazal uruvinAr;
muvarum(m) ivar ennavum, mutalvarum(m) ivar ennavum,
mEva(a)rum poruL AyinAr; mEyatu--viLanakar atE.
பொருள்: தேவர்கள், அமரர்கள், திசைகளின் மேலுள்ள பிற தெய்வங்கள் யாவராலும்
அறிய ஒண்ணாதவர். அவர்கள் அறிய முடியாதபடி தழற்பிழம்பானவர்; முத்தொழிற்கும் கர்த்தராகிய
மூவரும் இவரே என்னவும், மூவருக்கும் மேலாகிய முதல்வர் இவரே என்னவும் இம்மூவரும் அடைதற்கு
அரிய பொருளாயினாரும் ஆகிய இறைவர் மேயது விளநகரதே.
குறிப்புரை: தேவர் அமரர் என்பர் வெவ்வேறு எனல் காண்க. தேவர்-தெய்வமாவார். அமரர்-
மரணமில்லாதவர். அமரார் என்றிருந்தது. கால் குறைந்தது போலும், மரணமில்லாமையுடையவராய்த்
தெய்வமாகாதவர் அமரர். தெய்வமாகி மரணம் உடையார் தேவர். 'நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்'
(தி.5 ப. 100 பா.3) என நுதலுந் தேவாரத்தால் தேவர்க்கு மரணம் உண்மை வெள்ளிடைமலை. 'செத்துச்
செத்துப் பிறப்பதே வென்று பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ' (தி. 5 ப. 100 பா. 2). திசைகள் மேல் உள
தெய்வமும் - அஷ்டதிக் பாலகர்களும் யாவரும் அறியாதது ஓர் அமைதி - 'ஏனையாவரும் எய்திடல் உற்று
மற்று இன்னது என்று அறியாத தேனை ... சிவனை... குறுகிலேன்' (திருவாசகம், திருச்சதகம்.42)
மூவரும் இவரே எனவும் முதல்வரும் இவரே எனவும் மேவ அரும்பொருள் ஆயினார். இத்திருப்பாடலில்
சிவபரத்துவம் உணர்த்தப்பட்டதறிக. மேவ - அடைய.
The devas who are mortal deities; the amarars - immortal devas, one of the 18
ganangals and the tutelary deities of the eight quarters, or regents of the eight points
of the compass, cannot understand our Lord Civan. He looks like a supernal effulgence.
The three mortal demigods or deities such as Brahma, Thirumaal and Rudran, they declare
that Lord Civan is their chief Supreme Being. Our Lord Civa is such a rare, chief being.
He is manifest in the temple in Thiru-vila-nagar.
2319. சொற்றரும்மறைபாடினார்சுடர்விடுஞ்சடைமுடியினார்
கற்றருவ்வடங்கையினார்காவிரித்துறைகாட்டினார்
மற்றருந்திரள்தோளினார்மாசில்வெண்பொடிப்பூசினார்
விற்றரும்மணிமிடறினார்மேயதுவிளநகரதே. 7
சொல் - தரும் மறை பாடினார், சுடர்விடும் சடைமுடியினார்,
கல்-தரு(வ்) வடம் கையினார், காவிரித் துறை காட்டினார்
மல்-தரும் திரள்தோளினார், மாசு இல் வெண்பொடிப் பூசினார்
வில்-தரும் மணிமிடறினார், மேயது - விளநகர் அதே.
col-tarum maRai pATinAr, cuTarviTum caTaimuTiyinAr,
kal-taru(v) vaTam kaiyinAr, kAvirit tuRai kATTinAr,
mal-tarum tiraL tOLinAr, mAcu il veNpoTip pUcinAr,
vil-tarum maNimiTaRinAr, mEyatu--viLa nakar atE.
பொருள்: எழுதாக் கிளவியாகிய மறையைப் பாடினார்; செஞ்சுடர் வீசும் சடைமுடியினார்;
செபமாலையைக் கொண்ட கையினார்; காவிரித் துறையைக் காட்டினார்; வலிய திரண்ட தோளினார்;
தூய வெண் பொடியான திருநீறினைப் பூசினார்; ஒளி வீசும் நீல மணி மிடற்றினார் ஆகிய இறைவர்
மேயது திருவிளநகரதே.
குறிப்புரை: சொல்தரும் மறை- 'எழுதாக்கிளவி' யாதலின் கண்வழியே காணும் எழுத்தாலன்றிச்,
செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். 'சொற்றருமறை முதல் தொன்மை
நூல் முறை கற்றொளிர் சிவப்பிரகாச நூல்புகல் கொற்றவன் குடிவருகுரவன்' (சிவபுண்ணியத்திரட்டு).
கல்தருவடம்- செபமணி மாலை. தருவ்வடம்- வகரம் விரித்தல் விகாரம். மல்- வலிமை.
திரள்தோளினார் - பொடிப் பூசினார் - திருநீற்றை அணிந்தவர், ஒற்றுமிகை. வில்- ஒளி. தரும்மணி-
நீலரத்நம். முதலடியில் தருதல் துணைவினை யாதலும் கூடும்.
The ancient four Vedas were not written by hand by anybody. Our Lord Civan who
was the author of all the four Vedas used to chant these. Those godly saints who heard His
voice repeated it to other scholars. They used to repeat them to others and it went on
through generations of scholars. That is why originally the Vedas are called "unwritten,
very ancient maxims". His hair lock is bright. He holds in one of His hands the Rosary
for silent recitation of mantras. His shoulders are extremely strong suitable for wrestling.
His body is besmeared with the pure, white holy ashes. His neck is dark blue in colour
like the sapphire gem. This Lord is manifest in the temple in Thiru-vila-nagar.
2320. படர்தருஞ்சடைமுடியினார்பைங்கழலடி பரவுவார்
அடர்தரும்பிணிகெடுகென அருளுவாரரவரையினார்
விடர்தரும்மணிமிடறினார்மின்னுபொன்புரிநூலினார்
மிடறரும்படைமழுவினார்மேயதுவிளநகரதே. 8
படர்தரும் சடைமுடியினார், பைங்கழல்அடி பரவுவார்
அடர்தரும் பிணி கெடுக எனஅருளுவார், அரவு அரையினார்,
விடர் தரும் மணி மிடறினார், மின்னு பொன் புரிநூலினார்,
மிடல் தரும் படைமழுவினார், மேயது -விளநகர் அதே.
paTar tarum caTai muTiyinAr, paigkazal aTi paravuvAr
aTar tarum piNi keTuka ena aruLuvAr, aravu araiyinAr,
viTar tarum maNi miTaRinAr, minnu pon purinUlinAr,
miTal tarum paTaimazuvinAr, mEyatu--viLanakar atE.
பொருள்: படரும் சடை முடியினார்; பசிய கழலை அணிந்த கழலடியைப் பணிவார்களுடைய
வருத்தும் பிணிநோய்கள் கெடுக என அருளுவார்; பாம்பைக் கச்சாகக் கட்டிய அரையினார். விடம்
தங்கிய கண்டத்தினர்; மின்னுகின்ற பொன்னால் ஆன முப்புரி நூலினர்; வெற்றியைத் தரும்
மழுப்படையினர் ஆகிய இறைவர் மேவியது திருவிளநகரதே.
குறிப்புரை: படர்தரும் - படரும். பைங்கழல் அடி- பசிய கழலை அணிந்த திருப்பாதம்.
ஒற்று விரித்தல் விகாரம். அடர்தரும்- தாக்கும். பிணிகெடுக என அருளுவார். 'துயர் கெடுக என' (பா.2)
இவ்வீரிடத்தும் வியங்கோள்வினையின் ஈற்றுயிர் கெட்டது. அரவு அரையினார் - பாம்பைக் கச்சாகக்
கட்டிய திருவரையுடையவர். விடர் - மலைப்பிளப்பு. மலைகளில் மணி கிடைத்தல்பற்றிக் கூறியது.
மின்னுபொன்புரி நூலினார் (பா.5).
Our Lord Civan's disheveled hair locks are very broad and spread all over the body.
These devotees come to the temple and prostrate at the holy feet of our Lord with devotion.
Then our God graces them and destroys the afflictions caused to them. His waist is decorated
with the snake around it. His neck has the luminosity of dark blue gem that comes out of the
cracked rocks of the mountain. He has adorned His body with the three-plaited sacred thread.
He holds in one of His hands the battle axe. That Lord is manifest in the temple in
Thiru-vila-nagar.
2321. கையிலங்கியவேலினார்தோலினார்கரிகாலினார்
பையிலங்கரவல்குலாள்பாகமாகியபரமனார்
மையிலங்கொளிமல்கியமாசிலாமணிமிடறினார்
மெய்யிலங்குவெண்ணீற்றினார்மேயதுவிளநகரதே. 9
கை இலங்கிய வேலினார், தோலினார், கரி காலினார்,
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார்,
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார்
மெய் இலங்கு வெண்நீற்றினார், மேயது - விளநகர் அதே.
kai ilagkiya vElinAr, tOlinAr, kari kAlinAr,
pai ilagku aravu alkulAL pAkam Akiya paramanAr,
mai ilagku oLi malkiya mAcu ilA maNi miTaRinAr,
mey ilagku veN nIRRinAr, mEyatu--viLa nakar atE.
பொருள்: கையில் விளங்கும் வேலினை உடையவர்; யானைத் தோலும் புலித்தோலும்
தரித்தவர்; சர்வசங்கார காலத்தில் எல்லாம் எரிந்து கரியான பின்னும் தாம் ஒருவராக அழியாது
நிற்பவர்; பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையைப் பாகமாக உடையவர்; கரிய ஒளி
நிறைந்த குற்றமிலாத நீலமணி போன்ற கண்டத்தை உடையவர்; திருமேனிமேல் விளங்கும்
வெண்ணீற்றினர்; அவ்விறைவர் மேவியது திருவிளநகரதே.
குறிப்புரை: கை இலங்கிய வேலினார் (பா.4), தோலினார் கரிகாலினார் என்பது காலினார்
கரித்தோலினார் என்றிருந்து பிறழ்ந்தது போலும். தோலினார் - யானைத்தோலும் புலித்தோலும்
தரித்தவர். கரிகாலினார்- எல்லாம் வெந்து கரிந்து போகுஞ் சருவசங்கார காலத்தில் தாம் ஒருவரே
அழியாது நிற்பவர் . கரிதல்- வெந்து கரியான காமன். கால்- காலம். பை - படம். பின்புறத்தில்
இடுப்பிற்கும் புறங்காலிற்கும் இடைப்பகுதி. படம் விரித்த பாம்பின் தோற்றம் இருத்தலால்,
அல்குலுக்கு அரவு ஒப்பாயிற்று. அல்குலைக் குறி எனல் குற்றம். திருமுறையில் அஃது ஒவ்வாது.
மெய் - திருமேனி. உண்மையுமாம். உண்மையிலுள்ளது நீறு, சத்தியமாவது நீறு, தத்துவமாவது
நீறு (பதி. 202).
Our Lord Civan holds in one of His hands the shining battle axe. He wears on His
waist the hide of animals. At the time of the universal deluge and destruction of all things
in the world, our Lord Civan alone will be left over finally. He is the only Supreme Being
not to be destroyed. Lord Civan has His consort Uma Devi on the left side of His body
whose back beauty resembles the widespread hood of the snake. Our Lord's neck resembles
the dark sapphire gem. He has smeared on His body the sacred bright holy ashes. This Lord
is manifest in the temple in Thiru-vila-nagar.
2322. உள்ளதன்றனைக்காண்பன்கீழென்றமாமணிவண்ணனும்
உள்ளதன்றனைக்காண்பன்மேலென்றமாமலரண்ணலும்
உள்ளதன்றனைக்கண்டிலாரொளியார்தருஞ்சடைமுடியின்மேல்
உள்ளதன்றனைக்கண்டிலாவொளியார்விளநகர்மேயதே. 10
"உள்ள தன்தனைக் காண்பன், கீழ்” என்ற மா மணிவண்ணனும்,
"உள்ளதன்தனைக் காண்பன் மேல்" என்ற மா மலர் அண்ணலும்,
உள்ளதன்தனைக் கண்டிலார்; ஒளி ஆர்தரும் சடைமுடியின்மேல்
உள்ளதன்தனைக் கண்டிலா ஒளியார், விளநகர், மேயதே.
"uLLatan tanaik kANpan, kIz" enRa mA maNivaNNanum,
"uLLatan tanaik kANpan, mEl" enRa mA malar aNNalum,
uLLatan tanaik kaNTilAr; oLi Artarum caTaimuTiyinmEl
uLLatan tanaik kaNTilA oLiyAr, viLanakar, mEyatE.
பொருள்: (பாதாளம் ஏழினும்) கீழ் உள்ள பாதத்தைக் காண்பன் என்ற நீலமணி வண்ணனும்
(எல்லாவற்றிற்கும்) மேலுள்ள முடியைக் காண்பன் என்ற தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும்
எங்கும் உள்ள தன்தனை (சிவபிரானை)க் கண்டிலர்; ஒளிதரும் சடைமுடியைச் சிரசின் மேல் உள்ள
தன்தனை (எங்கும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் சிவபெருமானை ) கீழே காண்பன் என்றும், மேலே
காண்பன் என்றும் திருமாலும் பிரமனும் உழன்றும் கண்டிலாத ஒளியராகிய சிவபிரான்
மேயது திருவிளநகரே.
குறிப்புரை: கீழ் உள்ளதைக் காண்பன் என்ற மாமணி வண்ணன்-திருமால். மேல் உள்ளதைக்
காண்பன் என்ற மாமலர் அண்ணல் - பிரமன். இவ்வாறு கொள்ளாமல், எங்கும் உள்ள தன்னைக் கீழ்
காண்பன் மேல் காண்பன் என்றதாக் கொள்ளுதல் சிறப்புடையது. வண்ணனும் அண்ணலும்
கண்டிலார் என்க. உள்ளது + அன் + தன் + ஐ - உள்ளதன்றனை எனக் கொண்டு. சிவபிரானை
என்று பொருளுரைத்தல் மிக்க பொருத்தமுடையதாம். ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்
ஒருதலையாப் பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு என நீதி நூலும், உள்ளது - சத்து. சத்தெனவே
அவிநாபாவமாகிய சிதாநந்தமும் பெறப்படும். சர்வ வியாபகவஸ்துவே உள்ளது எனப்பட்டது.
The black-bodied Thirumaal, a tutelary deity asserted that he would see the
holy feet of Lord Civan in the underworld. The other deity Brahma who stays in lotus
flower asserted that he would see the holy head of Civan in the sky. But, they both
could not see our Lord Civan's head or feet or body, He is the inner reality. None
could see the bright baby moon and other things retained by our Lord Civan on His
head. For He took the form of supernal effulgence unobserved by anyone, inclusive
of these two demigods. He, however, is manifest in the temple in Thiru-vila-nagar
to enable His devotees to come to the temple and worship Him.
2323. மென்சிறைவண்டியாழ்முரல்விளநகர்த்துறைமேவிய
நன்பிறைநுதலண்ணலைச்சண்பைஞானசம்பந்தன்சீர்
இன்புறுந்தமிழாற்சொன்னஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
துன்புறுந்துயரம்மிலாத்தூநெறிபெறுவார்களே. 11
மென்சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த் துறை மேவிய
நன் பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன், சீர்
இன்புஉறும் தமிழால் சொன்ன ஏத்துவார், வினை நீங்கிப் போய்,
துன்புஉறும் துயரம்(ம்) இலாத் தூநெறி பெறுவார்களே.
men ciRaivaNTu yAzmural viLanakart tuRai mEviya
nan piRai nutal aNNalaic caNpai njAnacampantan, cIr
inpu uRum tamizAl conna EttuvAr, vinai nIgkip pOy,
tunpu uRum tuyaram(m) ilAt tUneRi peRuvArkaLE.
பொருள்: மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் யாழ்போல முரலும் திருவிளநகர்த்
துறையில் இருக்கும் அழகிய பிறை அணிந்த நெற்றியை உடைய அண்ணலைச் சண்பை
(சீகாழி) ஞானசம்பந்தன் சீரும் இன்பமும் உடைய தமிழால் சொன்ன திருப்பாடல்களைப் பாடி
வணங்குவார் தம்முடைய வினைகள் நீங்கி அகன்றுபோய், துன்புறுத்தும் துயரம் இலராய்
தூநெறி பெறுவார்கள்.
குறிப்புரை: வண்டுகள் யாழோசையைச் செய்கின்ற துறை என்று வளங்கூறப்பட்டது. சண்பை-
சீகாழிப் பெயர்களுள் ஒன்று. சீர் இன்பு - சீரும் இன்பமும். துன்பு உறும் துயரம் - துன்பமும் அடையும்
துயரமும். அண்ணலைச் சொன்னவற்றை ஏத்துவார் தூநெறி பெறுவார்கள்.
Our Lord Civan is manifest in the temple near Cauvery riverbed. Here the beetles with
tender wings make musical noise. The noise resembles lute's music. Here our Lord retains
the baby moon on His head. Our saint Thiru-gnana-Sambandar was born in Shanbai. He chanted
these ten verses in perfect and meticulous Tamil words. Those devotees who can memorise and
chant these verses will get rid of their bad karma and the resulting agony. They will
also enter the pure celestial world.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
78ஆம் பதிகம் முற்றிற்று
End of 78th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 215 பதிக எண்: 79
79. திருவாரூர் 79. THIRU-AAROOR
பண் : காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருவாரூர் என்னும் இத்திருத்தலமானது மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் -
திருத்துறைப்பூண்டி தொடர்வண்டிப் பாதையில் உள்ள தொடர்வண்டி நிலையம். மயிலாடுதுறை,
தஞ்சை, காரைக்கால் முதலிய பல நகரங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. இது சோழநாட்டுக்
காவிரித் தென்கரைத் தலங்களுள் எண்பத்தேழாவது திருத்தலம் ஆகும்.
இவ்வூர் மிகப் பழமை வாய்ந்தது. இச்செய்தியை, 'திருவினாள் சேர்வதற்கு முன்னோ
பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே' என்னும் அப்பர் சுவாமிகள் தேவாரப் பகுதியால்
அறியலாம். இவ்வூரில் பூங்கோயில், அரநெறி, பரவையுண் மண்டளி என்னும் மூன்று பாடல் பெற்ற
கோயில்கள் இருக்கின்றன. இவற்றுள் புற்றிடங்கொண்டார் (வன்மீக நாதர்) எழுந்தருளியிருக்கும்
திருக்கோயிலே பூங்கோயில் எனப் பெயர் பெறும். இதுவே திருமூலட்டானம் எனவும் வழங்கப்
பெறும். இதற்கு முப்பத்துநான்கு திருப்பதிகங்கள் இருக்கின்றன.
அரநெறி, நமிநந்தி அடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட
திருக்கோயிலாகும். இச்செய்தியைத் திருநாவுக்கரசு பெருந்தகையார் இவ்வூர்த் திருவிருத்தத்தில்
'நம்பி நந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடறியுமன்றே' எனச் சிறப்பித்துள்ளனர். இது, கோயில்
திருவிசைப்பாப் பதிகம் பாடிய கண்டராதித்த சோழ தேவரது மனைவியாராகிய செம்பியன்
மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. இதற்கு அப்பர் அருளிய பதிகங்கள் இரண்டு
உள்ளன. இக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மேற்கு முகமாக இருக்கின்றது.
பரவையுள் மண்டளி, பரவை நாச்சியார் தமது மாளிகையின் ஒரு பகுதியில் மண்ணால்
சிறுகோயில் கட்டி, அதில் இறைவனை எழுந்தருளுவித்து நாளும் வழிபட்ட கோயிலாகும். இது
சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற சிறப்புடையது. இது தெற்குக் கோபுரத்திற்கு அண்மையில்
இருக்கின்றது (ஒரு காலத்து வருணன் இந்நகர்மீது அனுப்பிய கடலை உண்டமைபற்றி இத்தலத்து
பரவையுண் மண்டளி என்னும் பெயரெய்தியது என்றும் கூறுபவர்).
ஆக, இத்தலத்திற்கு முப்பத்தேழு பதிகங்களும் வேறு திருமுறைகளில் பல பாடல்களும்
இருக்கின்றன. இத்தலத்தின் தேரும், திருவிழாவும், திருக்கோயிலும், திருக்குளமும் இவ்வூர்
தேவாரங்களில் வைத்துப் பாடப்பெற்றுள்ளன. திருக்குளமும் திருக்கோயிலும், செங்கழுநீர் ஓடையும்
தனித்தனி ஐந்து வேலிகள் பரப்புடையன. பிறக்க முத்தி தருவது, தியாகேசர் எழுந்தருளிய ஏழுவிடங்கத்
தலங்களுள் முதன்மை பெற்றது. பஞ்ச பூதத் தலங்களில் பிருதிவித் தலமாயுள்ளது. திருமகளால்
பூசிக்கப் பெற்றது. இங்குள்ள தேவாசிரிய மண்டபத்திலிருந்த அடியவர்களைக் கண்டுதான்
சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையை அருளினார். அவர் விருத்தாசலத்தில்
மணிமுத்தா நதியில் இட்ட பொன்னை மிகப்பெரிய கமலாலயம் என்னும் திருக்குளத்திலிருந்து
எடுத்துப் பரவையார்க்குக் கொடுத்த பழம்பதி இதுவேயாகும். அவர் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம்
சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. இச்செய்தியை
'அடியேற்கு எளிவந்த தூதனை' என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். காஞ்சிபுரத்தில்
ஒருகண் பெற்ற அவர், 'மீளா அடிமை' என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு
கண்பார்வையும் பெற்றது இத்தலத்தில்தான். நமிநந்தி அடிகள் செருத்துணை நாயனார்,
தண்டியடிகள் நாயனார், கழற்சிங்க நாயனார், விறன்மிண்ட நாயனார் இவர்கள் முத்தி
பெற்றதும் இப்பதியிலேதான்.
இத்தலம் சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் தலங்கள் ஐந்தனுள் ஒன்றாகும்.
ஒரு குலத்துக்கு ஒரு மகன் உள்ளான் என்பதையும் ஓராது ஓரான்கன்றுக்காகத் தன் மகனது உயிரைப்
போக்கிய மனுநீதிச் சோழன் ஆண்டதும் இப்பதியேதான். 'திருவாரூர்ப் பிறந்தார்கள்
எல்லார்க்கும் அடியேன்' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியிருப்பதால்
இப்பதியின் பெருமையை அளவிடுவார் யார் ? இதை விரிப்பின் அகலும். தொகுப்பின் எஞ்சும்.
பெரியபுராணத்தில் உள்ள திருவாரூர்ச் சிறப்பு என்னும் பகுதி படித்து இன்புறுதற்குரியதாகும்.
திருவாதிரைத் திருவிழா, பழங்காலத்தில் இவ்விழா பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது.
அவ்விழாவை அப்பர் சுவாமிகள் கண்டு களித்து, அதன் சிறப்பை ‘முத்து விதானம்’ என்று தொடங்கும்
ஒரு தனித் திருப்பதிகத்தினால் ஞானசம்பந்தப் பெருந்தகையார்க்குக் கூறி அருளியிருக்கின்றார்கள்.
பங்குனி உத்திரத் திருவிழா இது மாசி மாதம் அத்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி உத்திர
நட்சத்திரத்தில் தீர்த்தம் நடைபெறும் திருவிழாவாகும். இவ்விழா நினைவிற்கு வரவே ஒற்றியூரிலிருந்த
சுந்தரமூர்த்தி நாயனார் சூளுறவையும் மறந்து திருவாரூருக்குப் புறப்பட்டார் என்று பெரியபுராணம்
கூறுகின்றது. அதனால் இவ்விருவிழாக்களும் பழங்கால முதல் நடந்துவரும் சிறப்புடையனவாதலை
நன்கறியலாம்.
பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருப்பெயர்கள் வன்மீகநாதர்,
புற்றிடங்கொண்டார், திருமூலட்டானநாதர். இறைவியாரின் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை அம்மை.
யோகநிலையில் தனிக்கோயிலில் கமலாம்பிகை எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும்
தியாகராசர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப் பெற்றவர். பிறகு அவரால்
இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கர வர்த்திக்கும் அளிக்கப்பெற்றது. அந்த முசுகுந்த
சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப் பெற்றவர். மார்கழி திருவாதிரையும் பங்குனி
உத்திரமும் இவரை வழிபடற்குரிய சிறந்த நாள்கள் என்று அறிஞர்கள் உரைத்துள்ளனர்.
இவர் எழுந்தருளியிருக்கும் இடம் தேவசபை என்றும், இவருக்குத் தென்றல் காற்று வரும்
கல்சன்னல் திருச்சாலகம் என்றும், இவருக்குரிய கொடி தியாகக்கொடி என்றும், இவருடைய தேருக்கு
ஆழித்தேர் என்றும், இவரை எழுந்தருளப்பண்ணும் பிள்ளைத் தண்டுகள் திருவாடுதண்டு, மாணிக்கத்தண்டு
என்றும் பெயர் பெற்றுள்ளன. இவர் சந்நிதியில் நந்திதேவர் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இத்தலத்து
வழிபாட்டுக் காலங்களுள் திருவந்திக் காப்பு மிக்க விசேடமுடையது. இவருடைய நடனம் அஜபா நடனம்,
புயங்க நடனம் எனப் பாராட்டப்படும். ஸ்ரீ கமலை ஞானப்பிரகாச சுவாமிகள் தருமை ஆதீனத்தை நிறுவிய
ஸ்ரீ குருஞான சம்பந்தருக்கு உபதேசம் செய்த அருள்மிகு சித்தீச்சரம் திருக்கோயில் ஆலயத்தின் வடபால்
உள்ளது. தலவிநாயகர் வாதாபி விநாயகர்.
1. திருவாரூர் மும்மணிக்கோவை- இது அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான்
பெருமாள் நாயனாரால் இயற்றப்பெற்றது. பதினோராந் திருமுறையில் உள்ள நூல்களுள் ஒன்றாய்
விளங்கும் சிறப்புடையது.
2. கமலாலயச் சிறப்பு - இது சிதம்பரம் மறைஞான சம்பந்தரால் இயற்றப்பெற்றது.
3. திருவாரூர்ப் புராணம் - நிரம்ப அழகிய தேசிகருடைய மாணாக்கராகிய அளகைச் சம்பந்தர்
என்பவரால் செய்யப்பெற்றது.
4. திருவாரூர் உலா - அந்தகக்கவி வீரராகவ முதலியாரால் இயற்றப்பெற்றது.
5. தியாகராச லீலை -திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால்
இயற்றப்பெற்றது. இது முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.
6. திருவாரூர் நான்மணிமாலை - இதை அருளியவர் குமரகுருபர சுவாமிகள்.
7. தியாகராசப் பள்ளு - இதை ஆக்கியோர் பதினாறாம் நூற்றாண்டில் விளங்கியிருந்த கமலை
ஞானப்பிரகாசர் ஆவர்.
8. திருவாரூர்ப் பன்மணி மாலை- இலக்கண விளக்கம் இயற்றிய திருவாரூர் வைத்தியநாத
தேசிகரால் ஆக்கப்பெற்றது.
9. திருவாரூர் ஒரு துறைக்கோவை- இது வெறிவிலக்கு என்னும் ஒரு துறையை வைத்துக்
கொண்டு நானூறு பாடல்களால் ஆக்கப் பெற்றதொரு நூல். இதன் ஆசிரியர் கீழ்வேளூர்க்
குருசாமி தேசிகர் என்பர்.
10. திருவாரூர்க் கோவை- இது எல்லப்ப நயினார் என்னும் புலவரால் பாடப்பெற்ற சொற்சுவை
பொருட்சுவை நிரம்பிய நூல்.
11.கமலாம்பிகை பிள்ளைத் தமிழ்- தருமை ஆதீனத்து அடியார் கூட்டங்களில் ஒருவராய்
விளங்கியிருந்த சிதம்பர முனிவரால் இயற்றப்பெற்றது.
இவைகளன்றித் திருவாரூர் மாலை, கமலாம்பிகை மாலை முதலான நூல்களும், காளமேகப்
புலவர் முதலானோரின் தனிப்பாடல்களும் இருக்கின்றன. கமலாலயத்தின் வடகிழக்கு மூலையில்
மாற்றுரைத்த பிள்ளையாரின் திருக்கோயில் இருக்கின்றது. 'திருவாரூர்த் தேரழகு' என்னும்
உலக வழக்கு இவ்வூர்த் தேரின் சிறப்பைத் தெரிவிப்பதாகும். தலப்பெருமையை விளக்கும் புராணப்
பாடல் ஒன்று பின்வருமாறு:
'திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ னென்னா
ஒருவனே ழடிந டந்து மீண்டிடின் ஒப்பில் காசி
விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவனென்றால்
இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கு மியம்ப வற்றோ'
-திருவாரூர்ப் புராணம் தலமகிமைச் சுருக்கம்
பதிக வரலாறு
திருவாரூரிற் புற்றிடங்கொண்டருளும் பொற்றியாகராசரைத் திருநீற்றடைவே
மெய்ப்பொருளின்ப வாழ்வு என்று அறிந்து, அநுபவித்து விளங்கும் திருத்தொண்டர்களுடன்
இருந்தருளி, வழிபட்டுவருந் திருஞான சம்பந்த சுவாமிகள், திருப்புகலூரில் எழுந்தருளியிருக்கும்
திருநாவுக்கரசு சுவாமிகளைக் காண விரும்பினார்கள். ஆரூர்ப்புறத்தே போந்தார்கள்.
போந்ததும் ஆரூரையே நோக்கி நின்றார்கள். திருப்புகலூர் வருக என்று அழைக்கின்றது.
திருவாரூர் செல்லவொட்டாது தடுக்கின்றது. பிள்ளையார் உள்ளம், இடையில் ஒன்றும் துணியாது
நிற்கின்றது. அந்நிலையை நோக்கி, அவ்வுள்ளத்தை அறிவுறுத்தும்போது, அவம் இல்லாத
நெஞ்சமே ! நீ அஞ்சாதே. உய்யும்வகையை உணர்வாய் நீ, செம்பொற் புற்றின் மாணிக்கச்
செழுஞ்சோதியை நேர்தொழும் சீலத்தை மறவாதே, தொழுதெழுந்து வழிபடு என்றருளியவராய்ப்
பாடியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
2324. பவனமாய்ச்சோடையாய்நாவெழாப்பஞ்சுதோய்ச்சட்டவுண்டு
சிவனதாள்சிந்தியாப்பேதைமார்போலநீவெள்கினாயே
கவனமாய்ப்பாய்வதோரேறுகந்தேறியகாளகண்டன்
அவனதாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே. 1
பவனம்ஆய், சோடைஆய், நா எழா,பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு.
சிவன தாள் சிந்தியாப் பேதைமார், போல, நீ வெள்கினாயே?
கவனம் ஆய்ப் பாய்வதுஓர் ஏறு உகந்து ஏறிய காளகண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
pavanam Ay, cOTai Ay, nA ezA, panjcu tOyccu aTTa uNTu,
civana tAL cintiyAp pEtaimAr pOla, nI veLkinAyE?
kavanam Ayp pAyvatu Or ERu ukantu ERiya kALa kaNTan
avanatu ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!
பொருள்: நெஞ்சமே! பிராணன் மேல் வாங்கி, நாவற்றி, நீரினையும் உட்கொள நாவெழாது,
பஞ்சில் தோய்த்துப் பிழிந்ததை உண்டு, மரணமுறுங் காலத்தில் சிவனடியைச் சிந்திக்க இயலாத
அறிவிலிகளைப் போல நீ நாணம் கொண்டாயே! கவனமாய்ப் பாய்கின்ற ஏறின்மீது உகந்து ஏறிய
நீலகண்டனது திருவாரூரைத் தொழுது உய்யலாம்; திருவாரூரைத் தொழப் பெறாமல் உயிர்
கழியுமோ என மயக்கம் கொண்டு அஞ்சற்க.
குறிப்புரை: நெஞ்சே! மரணமுறுங்காலத்தில் சிவனடியைச் சிந்திக்கும் பாக்கியமில்லாத
அஞ்ஞானிகளைப்போல நாணினையே. விடையின்மேல் ஏறிவந்தருளும் திருநீலகண்டப்
பெருமானுடைய திருவாரூரைத் தொழுது உய்யலாகும், மையல்கொண்டு அஞ்சாதே. ஆரூரைத்
தொழப்பெறாதே கழியுமோ என்று கருதி மயங்கி அஞ்சாதே மீண்டும் போந்து தொழப்பெறலாம்
என்பது கருத்து. கொண்டு அஞ்சேல் என்பது காரணப் பொருட்டாய் வினையெச்சம். கொண்டு
என்பது அஞ்சு என்னும் முதனிலை கொண்டது. பவனம் - காற்று. இறக்குங்கால், பிராண வாயு
உடலின் நீங்கும் பொருட்டுப் பெருகும். அது மேல்மூச்சு வாங்குகின்றது என்ற வழக்கினாலும்
அறியப்படும். நாக்கு உலர்ந்து போம். சோடை - வறட்சி. நாக்கு உலர்ந்து போதலோடு அதன்கண்
எய்தும் உணவை உட்செலுத்த எழமாட்டாமலும் போம். நா எழாது என்பதில் துவ்விகுதி கெட்டது.
ஒருமையாதலின் வல்லெழுத்து மிக்கது. பன்மையாயின், 'காக்கை கரவா கரைந்துண்ணும்'
(குறள் 527) என்பது போன்று இயல்பாகும். நாவானது பால் முதலியவற்றை உட்செலுத்தமாட்டாது
(வலி குன்றியது) பற்றி, அருகில் இருப்பவர் அப்பாலையோ பிறிதொருணவையோ பஞ்சில்
தோய்த்து உட்புகுமாறு பிழிவர். அப்பிழிவை உயிரை ஓம்புதற்பொருட்டு, இரையை எண்ணிப்
பழகிய பழக்கத்தால் இறையை எண்ணாத பேதையர் தம்மை அறியாதே உட்செலுத்தப் பெறுவர்.
பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு சிந்தியாப்பேதைமார் என்க. தோய்த்து என்பதன் மரூஉ. தோய்ச்சு
என்பது போலி என்பாருமுளர். காய்தல் முதலியவும் இவ்வாறு மருவியுள. சிவன் + அ= சிவன.
ஆறனுருபு. தாளிரண்டாதலின் பன்மையுருபு நின்றது. 'நுனகழலினை’ (திருவிசைப்பா 7).
அட்ட - பிழிந்து ஒழுக்க. கவனம்- விரைவு. கண்டனவன் எனப் பிரிக்காமல் கொள்வதே பொருத்தம்.
பிரித்துச் சுட்டுதல். வேண்டாதது. உய்யலாம் மையல் என்க. மையல் கொண்டஞ்சல் உய்யலாம்
என்பாருமுளர். பேதைமார் போலாமையை 'அவமிலா நெஞ்சமே' (பெரிய புராண. 518) எனச்
சேக்கிழார் சுவாமிகள் விளக்கியது உணர்க.
"There is nothing new in death", this is a line in Pura Naanooru sung by Kaniyan
Poongundranar. Our saint Thiru-gnana-Sambandar explains in detail the moment of death for
human beings. The human body struggles and has long breathing just before death and reaches
a dry stage. The movement of the tongue stops due to dryness in the tongue and around it.
The near and dear ones - the bystanders near the dying man used to squeeze small cotton
balls soaked in milk into the mouth of the dying body. Just at the moment of death the
ignorant person is unable to think in his mind the holy feet of our Lord Civan.
Oh! my dear heart and mind! you are afraid whether this kind of stage will come to you
also at the time of your death. With sincere devotion, you may think of our Lord Civan
who is manifest in Thiru-aaroor and who sustains the bull, which runs galloping, for His
conveyance. You may go to Thiru-aaroor and worship our Lord Neelakandan there. By
worshipping Him at Thiru-aaroor you will never get any doubt or vagueness in your mind.
And you can definitely ensure salvation.
2325. தந்தையார்போயினார்தாயரும்போயினார்தாமும்போவார்
கொந்தவேல்கொண்டொருகூற்றத்தார்பார்க்கின்றார்கொண்டுபோவார்
எந்தநாள்வாழ்வதற்கேமனம்வைத்தியாலேழைநெஞ்சே
அந்தணாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே. 2
தந்தையார் போயினார்; தாயரும் போயினார்; தாமும் போவார்;
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார், கொண்டு போவார்;
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்? ஏழைநெஞ்சே!
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
tantaiyAr pOyinAr; tAyarum pOyinAr; tAmum pOvAr;
konta vEl koNTu oru kURRattAr pArkkinRar, koNTu pOvAr;
enta nAL vAZvataRkE manam vaittiyAl? Ezai nenjcE!
anthaN ArUr thozuthu uyyalAm maiyalkoNtu anchal nenjcE.
பொருள்: நெஞ்சமே! தந்தையரும் தாயரும் இறந்து போயினர்; அனைவரும் ஒருகாலத்தில்
இறந்து போவதற்கு உரியவரே! உயிரைக் கொத்திக் கொண்டு போவதற்கு வேல் கொண்டு
கூற்றுவன் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றான். எந்த நாள் வாழ்வதற்கு நீ மனம்
வைத்துள்ளாய்? ஏழை நெஞ்சே! எவ்வுயிர்க்கும் செந்தண்மை கொண்டுள்ள ஆரூரைத் தொழுது
உய்தி பெறலாம், மையல் கொண்டு அஞ்சற்க.
குறிப்புரை: தந்தையர் தாயர் என்பன பலர்பால். தாமும் போவார் என்னும் பன்மை நோக்கி
நின்றன. கொந்த - குத்த. 'கொந்தி அயில் அகல் அம்பால் குட்டமிட்டுக் கொழுப்பரிந்து' (பெரிய.
கண்ணப்பர். 145). எரிய என்றுமாம். 'கொந்தழல்' (சிந். 1499).கூற்றத்தார் - இயமதூதர். (உடம்பும்
உயிரும் கூறுபடுதலைச் செய்பவர்). கொண்டு போவாராய்ப் பார்க்கின்றனர். வைத்தி - வைப்பாய்?
எந்த நாள் வாழ்வதற்கு மனம் வைத்தி என்று வினாவியருளினார். மனம் வாழாத நெஞ்சம் எனப்படும்.
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே,
சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பலகாலும். வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே
என்பது திருவாசகம். வாழ்க்கை, உரித்தன்று உனக்கு இவ்வுடலின் தன்மை உண்மை உரைத்தேன்
விரதம் எல்லாம் தரித்தும் தவமுயன்றும் வாழாநெஞ்சே (தி. 6 ப. 42 பா. 10) என்றதிற் குறித்தது.
தம்முன்னோர் எல்லாரும் இறந்தவாறே தாமும் இறப்பது திண்ணம். மாய்க்க மறலிதூதர்
சித்தமாயுள்ளனர். இறப்பு அண்மையில் இருக்கிறதென்றால், இறவாமல் என்றும் வாழ்வதற்கு
எந்தநாள் மனம் வைப்பாய்? வாழ்வது-திருவடி நிழலில் அழியாத இன்பத்தைத் துய்த்துக்
கொண்டிருப்பது. ஆரூர் தொழுது உய்யலாம். நெஞ்சே மையல் கொண்டு அஞ்சாதே. முதலாவது
விளி அதன் போக்கை உணர்த்த. இரண்டாவது விளி அதற்கு அபயம் அளிக்க.
Oh my poor mind! My father died. My mother died. I will also one day die. The
servants of Yama (god of death) holding spears wait to plunge them into our body so as to
remove the soul. Like this our life is transitory. Oh my dear mind! when are you going to
choose deathless life? Do not get frightened due to your delusions. Be calm. If you go to
Thiru-aaroor and prostrate before the holy feet of our Lord in Thiru-aaroor known as
Vanmeekanathar, you are sure to get salvation, shed your fear, if you worship our Lord
in Thiru-aaroor you can get deliverance (i.e.) deathlessness with perfect awareness
of our Lord.
2326. நிணங்குடர்தோல்நரம்பென்புசேராக்கைதான்நிலாயதன்றால்
குணங்களார்க்கல்லதுகுற்றநீங்காதெனக்குலுங்கினாயே
வணங்குவார்வானவர்தானவர்வைகலும்மனங்கொடேத்தும்
அணங்கனாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே. 3
நிணம், குடர், தோல், நரம்பு, என்பு, சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால்;
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக் குலுங்கினாயே?
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம்கொடு ஏத்தும்
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
niNam, kuTar, tOl, narampu, enpu, cEr AkkaitAn nilAyatu anRAl;
kuNagkaLArkku allatu kuRRam nIgkAtu enak kulugkinAyE?
vaNagkuvAr vAnavar tAnavar vaikalum manamkoTu Ettum
aNagkan ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!
பொருள்: தசை,குடர், தோல், நரம்பு, எலும்பு ஆகியவற்றால் யாக்கப்பட்ட இவ்வுடம்பு
நிலையிலாதது; நல்ல குணங்கள் உடையவர்களுக்கு அல்லாமல் பிறவியாகிய குற்றம் நீங்காது
என நடுக்கம் கொண்டாயே; வணங்குவாராய் தேவர்கள், அசுரர்கள் முதலியோர் நாள்தோறும்
(உடலால் மட்டுமன்றி) மனத்தாலும் தொழுது ஏத்தும், கடவுளின் ஆரூர் தொழுது உய்யலாம்;
மயக்கம் கொண்டு அஞ்சற்க நெஞ்சே!
குறிப்புரை: யாக்கை (கட்டப்பட்டது, உடம்பு). ஆக்கை என்று ஆயிற்று. யகரமெய்
முதலிற்கொண்ட சொற்கள் அதனை ஊர்ந்த ஆ முதலாய் வழங்கப்படுதல், யாறு - ஆறு.
யாமை - ஆமை. யாய் - ஆய். யாண்டு- ஆண்டு. யானை – ஆனை முதலியவற்றிற் காணப்படும்.
நிலாயது - நிலாவியது. குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்போடுயிரிடை நட்பு
(குறள் 338). நல்ல குணங்களுடையார்க்கே குற்றம் நீங்கும். அல்லாதார்க்கு (தீய குணங்களை
அடைவார்க்கு)க் குற்றம் நீங்காது. குலுங்கினாய்- நடுங்கினாய். சுராசுரர் எல்லாரும் நாடோறும்
வணங்குவராய் மணம் (தூபம் முதலியவற்றைக்) கொண்டு ஏத்தும் கடவுள். மனம் என்ற பாடம்
கழகப் பதிப்பில் உளது. மனம் கொடு - தியானித்து. அணங்கு- தெய்வத்தன்மை. அணங்கன் -
சிவபிரான். குணம், குற்றம் இரண்டும் உடைமை குறிக்கச் சுராசுரரைக் குறித்தார்போலும்.
The human body is made up of fats, intestines, skin, veins, nerves etc.
As and when age advances all these parts get deteriorated gradually. Therefore
one should not think that, one came into existence in this body permanently.
People of good character get rid of all their suffering in their life, whereas
people of bad character cannot get rid of their sins. This thought makes, you shiver.
The devas, asuras and all other celestials come to Thiru-aaroor and prostrate before
our Lord there. With such good devotion they pray and lead good life. If you worship
with sincere devotion the Lord of Thiru aaroor - Vanmeekanathar, you can get salvation.
Do not get frightened by delusions and illusions in your mind.
2327. நீதியால்வாழ்கிலைநாள்செலாநின்றனநித்தநோய்கள்
வாதிய ஆதலால்நாளுநாளின்பமேமருவினாயே
சாதியார்கின்னரர்தருமனும்வருணனுமேத்துமுக்கண்
ஆதியாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே. 4
நீதியால் வாழ்கிலை; நாள் செலாநின்றன. நித்தம் நோய்கள்
வாதிய; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே?
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
nItiyAl vAzkilai; nAL celA ninRana, nittam nOykaL
vAtiya; AtalAl nALum nAL inpamE maruvinAyE?
cAti Ar kinnarar tarumanum varuNanum Ettu mukkaN
Ati ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!
பொருள்: நெஞ்சமே! நீ நீதி வழியே வாழவில்லை; ஆதலால் உன் வாழ்நாட்களும் நோய்கள்
வாதித்து வீணே கழிகின்றன; இன்பத்தை நீ பொருந்தினாயோ? நற்சாதியார், கின்னரர், இயமன்,
வருணன் முதலியோர் தொழுது ஏத்தும் மூன்று கண்களையுடைய முதல்வரின் திருவாரூரைத்
தொழுது உய்யலாம்; மயக்கம் கொண்டு அஞ்சற்க.
குறிப்புரை: நெஞ்சே, நீதிவழியே வாழவில்லை, காலம்பல வீணே கழிகின்றன.
நாளும் நோய்கள் வருத்தா. நோய்கள் வாதியா நாள் செலா நின்றன என்று கொண்டு
கூட்டறிக. வாதியா- வாதித்து. வருத்தி. இதற்கு வாதிப்பனவாயின என்றுரைப்பது
எவ்வாறு? நாளும். நாளும் இன்பத்தையே பொருந்தினாய். சாதி- குலம். ஆர் - பொருந்திய.
கின்னரரும் தருமனும் வருணனும் வழிபட்டனரென்று குறித்தார். ஆதியாரூர் என்றது
காவிரி நாட்டிடைத் தொன்மையில் மிக்கது. திசையெட்டும் தெரிப்பதற்கு முன்னோ
பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே என்ற கருத்தைக் குறித்தது. ஆதியின்
ஆரூர் என்றலுமாம். ஆதி பாதமே ஓதி உய்ம்மினே (தி. 1 ப. 90 பா.3).
My dear mind! You have not led your life as per morality and right conduct.
You have lived sufficiently for long periods. Almost everyday in your life various
diseases troubled you and gave you all kinds of uncomfortableness. You, therefore
everyday very much liked to have sensual enjoyments. One of the demigods who was
a celestial musician, Kinnarar is supposed to have the figure of a man, and the
head of a horse; Dharuman, is the deity of justice and righteousness described
as placing four feet on the earth in golden age, three in the silver, two in the
bronzen and one in the iron age. Varuna is the deity (demigod) of the ocean and
of the maritime tracts, also of rains, these and many others worship and praise
our Lord who is the most ancient Supreme Being in Thiru-aaroor. He has a third
eye in His forehead. If you also worship Him with sincere devotion you can get
atonement and be freed from the pain caused by various diseases. Keep this in mind
and do not get frightened by delusions.
2328. பிறவியால்வருவனகேடுளஆதலாற்பெரியஇன்பத்
துறவியார்க்கல்லதுதுன்பநீங்காதெனத்தூங்கினாயே
மறவல்நீமார்க்கமேநண்ணினாய்தீர்த்தநீர்மல்குசென்னி
அறவனாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே. 5
பிறவியால் வருவன கேடு உள ஆதலால், பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே?
மறவல், நீ மார்க்கமே நண்ணினாய்; தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
piRaviyAl varuvana kETu uLa AtalAl, periya inpat
tuRaviyArkku allatu tunpam nIgkAtu enat tUgkinAyE?
maRaval, nI! mArkkamE naNNinAy; tIrtta nIr malku cenni
aRavan ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!
பொருள்: நெஞ்சமே! பிறப்பினால் இறப்பாகிய கேடும் வரும்; ஆதலால் உலகத்தைத்
துறந்தவர்க்கே துன்பம் நீங்கும்; துறவாதவர்க்குத் துன்பம் தொலையாது, என்று உளம் சோர்ந்தனையே!
நீ ஆரூரை மறவாதே! சன்மார்க்கத்தையே பொருந்தினாய்! கங்கையாகிய தீர்த்தம் நிறைந்த
சென்னியனாகிய அறவனுடைய ஆரூரைத் தொழுது உய்யலாம்; மயக்கங்கொண்டு அஞ்சற்க.
குறிப்புரை: அவமிலா நெஞ்சம் (பெரிய. திருஞா. 518) உயிர்க்குப் பிறத்தலும் இறத்தலும்
பெருந்துன்பங்கள். மற்றையெல்லாத் துன்பங்களும் அவற்றிடை விளைவன. இறத்தலும் பிறத்தலால்
உண்டாவதே. 'தோற்றம் உண்டேல் மரணம் உண்டு' (தி.7 பா. 63). பிறந்தால் பிணிப்பட
வாய்ந்தசைந்துடலம் புகுந்து நின்று இறக்குமாறுளதே இழித்தேன் பிறப்பினை நான்
(தி. 4 ப. 20 பா. 8). கெடுவது இப்பிறவி சீசீ (தி. 4 ப. 76 பா. 10). துறவு வீடு பேரின்பத்தைக்
கொடுப்பது. அத்துறவு பிறவியால் விளையும் கேடுகளை உணர்ந்தவர்க்கே உண்டாகும்.
ஆதலின், பிறவியால் கேடு வருவன உள. ஆதலின் துன்பம் நீங்கும். துறவாதார்க்குத் துன்பம்
நீங்காது என்று சோர்ந்தது நெஞ்சு. தூங்குதல்- சோர்தல். நெஞ்சே! துன்பம் நீங்காது எனச்
சோர்ந்தாய். சோர்வு வேண்டா. நீ ஆரூரை மறவல் (மறவாதே). மார்க்கமே நண்ணினாய் -
சன்மார்க்கத்தினையே சேர்ந்தாய். மார்க்கர்கண்ட நூலோதி வீடு காதலிப்பவர் (சித்தியார்)
என்புழிப்போல் நின்றது. தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பி (தி. 6 ப. 20 பா. 6)யாயிருத்தலாலும் தயாமூலதன்மவழி எனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத்தூண் என்றதில் அடியார்க்கு நல்கும் தயாமூலதன்மவழி
யுடையனாதலாலும் அறவாழி அந்தணன் சிவனே. அறப் பெருஞ்செல்வி சிவையே.
அவன் கல்லாற் கீழிருந்து உரைத்தருளிய அறத்தின் ஏகதேசமே ஏனையோர் பால் இருப்பது.
பிறவி அறுப்பீர்காள், அறவனாரூரை மறவாதேத்துமின் துறவியாகுமே என்றதை (தி. 1 ப. 91 பா.2).
மறவல் நெஞ்சமே (தி.1 ப.90 .பா. 8). என்பதனோடு ஒப்பு நோக்கி உணர்க. மறவன் என்று பிரிப்பது
மறமன்றி அறமாகாது.
My dear mind! Birth in this world brings only harm. You languish in your mind
thinking that ascetic people who wish to have eternal bliss alone will get rid of their
suffering. You should never forget about our Lord Civan. You may follow the footsteps
of great, wise people. Our Lord Civan, the sea of all virtue, supports the river Ganges
in His matted hair. So go to Thiru-aaroor and worship our Lord and praise
Him, you can get redemption. Do not get frightened by your delusions.
2329. செடிகொள்நோயாக்கையம்பாம்பின்வாய்த்தேரையாய்ச்சிறுபறவை
கடிகொள்பூந்தேன்சுவைத்தின்புறலாமென்றுகருதினாயே
முடிகளால்வானவர்முன்பணிந்தன்பராயேத்துமுக்கண்
அடிகளாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே. 6
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின்வாய்த் தேரையாய்ச் சிறுபறவை
கடி கொள் பூந்தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே?
முடிகளால் வானவர் முன் பணிந்து, அன்பராய் ஏத்து முக்கண்
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
ceTi koL nOy Akkai am pAmpin vAyt tEraiyAyc ciRupaRavai
kaTi koL pUntEn cuvaittu inpuRal Am enRu karutinAyE?
muTikaLAl vAnavar mun paNintu, anparAy Ettum mukkaN
aTikaL ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal nenjcE!
பொருள்: பாவத்துக்கும் துன்பத்துக்கும் ஏதுவான துர்நாற்றம் உள்ள உடம்பினால்
இன்பம் அடையலாம் என்பது, பாம்பின் வாயில் உள்ள தேரை, அதன் வாயில் உள்ள வண்டு,
அவ்வண்டின் வாயில் உள்ள தேன்துளியைச் சுவைத்து உண்ணலாம் எனக் கருதுவது ஒக்கும்;
அத்தகைய உடலின்பத்தை விரும்பினாயே! தலை பெற்றதன் பயனாக வானவர்கள் முடி
சாய்த்து அன்பராய்த் தன்முன் பணிந்து வழிபடும் மூன்று கண்களையுடைய சுவாமிகளின்
ஆரூரினைத் தொழுது உய்யலாம். மயக்கங்கொண்டு அஞ்சற்க.
குறிப்புரை: செடி- பாவம், துன்பம், தீ நாற்றமுமாம் (தி. 2 ப. 93 பா. 2) (தி. 6 ப. 82. பா.7 )
(திருவாலவாயுடையார் புராணம் 54-19).நோயையுடைய யாக்கை (பா. 3). ஐம்பாம்பு என்ற பாடமே
மதுரை- ஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் பதிப்பிலுள்ளது. அம்பாம்பு என்ற பாடம் சிறவாது.
பாம்பின்வாய்த் தேரைபோலப் பலபல நினைக்கின்றேனை ஓம்பி நீ உய்யக் கொள்ளாய்
ஒற்றியூருடைய கோவே (தி.4 ப. 47 பா. 1). பாம்பின் வாயில் தேரை, தேரையின் வாயில் சிறு பறவை
(வண்டு) அவ்வண்டின் வாயில் மலர்த்தேன் துளி. அதைச் சுவைத்துக் கொண்டிருக்கும்
அச்சிறுபறவைக்கும். அதை உண்ணும் தேரைக்கும், அதை விழுங்கும் பாம்பிற்கும் அவ்வவ்வுணவால்
எய்தும் இன்பத்தின் சிறுமையும் தாம் உற்ற துன்பத்தின் பெருமையும் உவமை. உயிர்கள் விரும்பும்
உலக இன்பத்தின் சிறுமையும் அதனை விழைந்து முயன்று தேடிப்பெறும் பொருட்டு உயர்ந்த
பிறவியைப் பயன்படுத்தித் திருவருளிற் செலுத்தாமையால், அடையப் பெறாத உண்மை
யின்பத்தின் பெருமையும் உவமேயம். சிறு பறவை முதலிய மூன்றற்கும் உள்ளது போல்வதொரு
பெருங்கேடு யாக்கையின் செடி கொள் நோய். நோய் பாம்பைக் கொல்லும், பாம்பு தேரையைக்
கொல்லும். தேரை வண்டைக் கொல்லும். அந்நிலையில் பாம்பு முதலிய மூன்றும் தேரை, வண்டு,
தேன்றுளியால் முறையாகச் சிறிது இன்புறும் செயலால், பின் உள்ள பெருந்துயரை அறியாதுள்ளன.
இந்நிலைமையை நெஞ்சிற்கு அறிவுறுத்தி. நிலைத்த பொருளை நாடுவித்தலே இதன் உட்கோள்.
‘அடுகரி தொடர வீழ ஐந்தலை நாகங் காண
இடிகிணற் றறுகின் வேரைப் பற்றிநான் றிடஅவ் வேரைக்
கடுகார் எலியும் வந்து கறித்திட அதில்நின் றோனுக்
கிடைதுளி தேன்நக் கின்பம் போலும் இப்பிறவி யின்பம்'
'கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம்
விண்ட நாகத்தின் வாயினில் வெருண்டவன் றேரை
மண்டு தேரையின் வாய்தனில் அகப்படு தும்பி
வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்'
என்னும் தனிப்பாடல்களையும் 'வனப்பாழ்ங்கிணற்றுள் வெம்பாம்பு பற்றும் விடத் தேரை
வாய்வண்டு தேன் வேட்டல் போல் விரித்துக் கொடுபோய்விட்.. கூற்றை எண்ணாது எண்ணும்
வேட்கையெல்லாம் விட... அரங்கன் திருத்தாளில் விழுநெஞ்சமே' (திருவரங்கத் தந்தாதி 93)
என்பதையும் துன்பத்துள் துன்பமான உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே தனக்கு
உடனே வரக்கடவதாகிய துன்பத்தைச் சிறிதும் நினையாமல் இன்பத்தையே மேன்மேல்
அவாவும் பேதைமையியல்புக்கு .... கானகத்தில் நீரற்ற பாழ்ங் கிணற்றிலே பாம்பின்
வாய்ப்பட்டு நஞ்சு தலைக்கு ஏறிய தேரையின் வாயில் அகப்பட்டதொரு வண்டு தேனை
விரும்புதலை உவமை கூறினார் என்றும் அதன் விளக்கத்தையும் நோக்கி உணர்க.
இதற்குப் பிறர் எழுதியது பொருந்துமா என்று ஆய்க.
The human body, a stone house of sins and agony, smells of offensive odour,
the five-headed snake catches the toad with its mouth, the toad catches the beetle
with its mouth. The beetle just before being swallowed by the toad thinks it is going
to enjoy the honey from the sweet smelling flower. In a similar manner man desires
to enjoy worldly pleasures. The devas, as usual, bow their heads piously before our
Lord in Thiru-aaroor, and praise Him who has a third eye in His forehead. Oh my dear
man! (or mind), if you follow the devas and with sincere devotion worship Lord Civan,
you can also get redemption. Do not get frightened by your illusions.
2330. ஏறுமால்யானையேசிவிகையந்தளகமீச்சோப்பிவட்டில்
மாறிவாழுடம்பினார்படுவதோர்நடலைக்குமயங்கினாயே
மாறிலாவனமுலைமங்கையோர்பங்கினர்மதியம்வைத்த
ஆறனாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே. 7
ஏறு மால்யானையே, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி, வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவதுஓர் நடலைக்கு மயங்கினாயே?
மாறு இலா வனமுலை மங்கை ஓர்பங்கினர், மதியம் வைத்த
ஆறன், ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
ERu mAl yAnaiyE, civikai, antaLakam, IccOppi, vaTTin
mARi vAz uTampinAr paTuvatu Or naTalaikku mayagkinAyE?
mARu ilA vanamulai magkai Or pagkinar, matiyam vaitta
ARan, ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal,nenjcE!
பொருள்: நெஞ்சமே! மீதூர்கின்ற பெரிய களிறு, சிவிகை, கவசம், ஈச்சோப்பி முதலிய
ஆரவாரங்களைக் கண்டு, மாற்றுகின்ற சட்டையைப் போன்று மாறுகின்ற உடல் ஆகிய
பொய்க்கு மயக்கம் கொண்டாயே! உமையம்மையைப் பங்கில் கொண்டவர். பிறையையும்
கங்கை ஆற்றையும் உடையவரின் திருவாரூரைத் தொழுது உய்யலாம். மயக்கங்கொண்டு அஞ்சற்க.
குறிப்புரை: ஏகாரம் எண்ணுப் பொருட்டு, சிவிகை- பல்லக்கு. அந்தளகம் - கவசம்
(தமிழ் லெக்ஸிகன் பக். 82). ஈச்சோப்பி - ஈயோட்டி. விருது என்றாருமுளர். வட்டின்மாறி வாழ்
உடம்பு - உடையை மாற்றுவது போல் உடம்பினை மாற்றுவது, அவ்வுடம்பினை எடுக்கச் செய்யும்
வினைப்பயனாக உயிர்க்கு நிகழ்வது. வட்டு - உடை. வட்டின் - வட்டுப்போல. உடம்பில் மாறி
வாழ்தல் ஆவது எடுத்த உடம்பினை விடுத்துப் புதியதோருடம்பிற்புகுதல். யானை, சிவிகை,
அந்தளகம், ஈச்சோப்பி என்பவற்றை உடையவர் அருள் வாழ்வு பெறாராயின், அழியாத பேற்றை
அடைவாரல்லார். மாறி வாழ் உடம்பினாரேயாவர். அவர் அந்நடலையே படுவர். நடலை- பொய்.
அதை நன்று என்று மயங்கிப் பற்றின் பிறவி தொலையாது, அல்லியங் கோதையார் பாகராகிய
தியாகராயரைத் தொழுது பிறவித் துன்பத்தினின்றும் உய்தி அடையலாம். நெஞ்சே மையல்
கொண்டு அஞ்சாதே என்க. செல்வராயிருந்தபோது யானைமீதும் சிவிகை மீதும் சென்றவர்,
வறியரானபோது, ஈயோட்டும் இழி நிலையும் உண்ணும் வட்டில் மாறும் நிலையும் அடைவது
பற்றிக் கூறியதாகக் கொள்ளலும் பொருந்தும்.
Oh my dear heart! The big elephant just before starting for a procession
changes its palanquin, armors (coat of mail), banner and other dresses. Like this
human beings in their various rebirths get different kinds of physical appearance
according to the place of birth, religion, caste etc. In every such birth you always
get perturbed by distress in your life due to ignorance. Our Lord Civan, manifest
in Thiru-aaroor, is concomitant with His consort Uma Devi, the most incomparable
beauty with graceful breasts. Our Lord retains the baby moon and supports the
river Ganges - both on His matted hair. If you worship this Lord with sincere
devotion you can get atonement. Do not get frightened by your mental delusions.
2331. என்பினாற்கழிநிரைத்திறைச்சிமண்சுவரெறிந்திதுநம்மில்லம்
புன்புலால்நாறுதோல்போர்த்துப்பொல்லாமையான்முகடுகொண்டு
முன்பெலாமொன்பதுவாய்தலார்குரம்பையின்மூழ்கிடாதே
அன்பனாரூர்தொழுதுய்யலாம்மையல்கொண்டஞ்சல்நெஞ்சே. 8
என்பினால் கழி நிரைத்து, இறைச்சிமண் சுவர் எறிந்து - இது நம் இல்லம் -
புன் புலால் நாறு தோல் போர்த்து, பொல்லாமையால் முகடு கொண்டு,
முன்புஎலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
enpinAl kazi niraittu, iRaicci maN cuvar eRintu-itu nam illam-
pun pulAl nARu tOl pOrttu, pollAmaiyAl mukaTu koNTu,
munpu elAm onpatu vAytal Ar kurampaiyil mUzkiTAtE,
anpan ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!
பொருள்: நெஞ்சமே! நம்முடைய இவ்வுடல் என்புகளாகிய கழிகளை வரிசையாக வைத்து
நரம்புகளால் கட்டி, மாமிசமாகிய மண்ணைக் குழைத்துச் சுவராக எறிந்து அப்பி, புலால் நாற்றமுடைய
தோலினை மேற்கூரையாகப் பொலிவின்றிப் போர்த்து அமைத்த குடிசையாகும். முன்னால் ஒன்பது
வாயில்களைக் கொண்ட இக்குடிசையில் கவர்ச்சி கொள்ளாதே! அன்பனின் திருவாரூரைத் தொழுது
உய்யலாம். மயக்கங்கொண்டு அஞ்சாதே!
குறிப்புரை: எறிந்து - நீளக்கட்டி. முகடு - மேல்மூடு. ஒன்பது வாய்தல் - நவத்துவாரம். குரம்பை-
உடற்குடில் (தி.4 ப.33 பா.4). அன்பன் - சிவபிரான். அன்பே சிவம், கால்கொடுத்தெலும்பு....கூரை
(தி.4 ப. 67 பா. 13). ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து
தாம் எடுத்த கூரை (தி.6 ப. 12 பா. 1). முகடு என்பது மூடு என மரூஉவாகும். ஒன்பது வாய்தல் -
புழுப்பெய்த பண்டிதன்னைப் புறம் ஒரு தோலான் மூடி ஒழுக்க அறா ஒன்பது வாய் ஒற்றுமை
ஒன்றும் இல்லை. ( தி.4 . ப .5 பா.2). குரம்பை - (தி. 4 ப. 31 பா. 2, 3). புலால் கமழ்பண்டம்
(தி. 4 ப. 67 பா. 8).
Oh my dear mind! Our living place called 'Illam' is our physical body.
This body is made up of pole-like bones; the walls are made of the flesh of the body;
to cover the flesh, the insignificant skin, emitting bad smell, similar to meat is
used; the top of the body is made up of a bad, thatched cover. Our body from the
beginning has had nine openings. Do not involve yourself fully to nurture this body
tenderly. Instead if you worship our Lord in Thiru-aaroor who always graces you, you
will get atonement. Do not get frightened by delusions.
2332. தந்தைதாய்தன்னுடன்தோன்றினார்புத்திரர்தாரமென்னும்
பந்தநீங்காதவர்க்குய்ந்துபோக்கில்லெனப்பற்றினாயே
வெந்தநீறடியாராதியார்சோதியார்வேதகீதர்
எந்தையாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே. 9
தந்தை, தாய்,தன்னுடன் தோன்றினார். புத்திரர், தாரம், என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு, உய்ந்துபோக்கு இல் எனப் பற்றினாயே?
வெந்தநீறுஅடியார், ஆதியார், சோதியார், வேதகீதர்
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
tantai, tAy, tannuTan tOnRinAr, puttirar, tAram, ennum
pantam nIgkAtavarkku, uyntupOkku il enap paRRinAyE?
venta nIru aTiyAr, AtiyAr, cOtiyAr, vEta kItar,
entai ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!
பொருள்: நெஞ்சமே! தந்தை, தாய், உடன்பிறந்தோர், மக்கள், மனைவி என்னும்
பற்றினை விட்டு நீங்காதவர்களுக்கு உய்யும் வழி இல்லை என்று உள்ளத்தில் ஆரூரனின்
திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டாய். சுட்டநீற்றினைப் பூசியவர், முதல்வர்,
சோதியார் மறையைப் பாடியவர், எம்முடைய தந்தையாரின் ஆரூரைத் தொழுது
உய்யலாம். மயங்கி அஞ்சற்க.
குறிப்புரை: நெஞ்சே, நீ அஞ்சாதே, தந்தை, தாய், சகோதரர், புத்திரர், மனைவி என்னும்
பற்று நீங்காதவர்க்குப் பிறவித் துன்பத்தினின்றும் உய்தி அடையும் உபாயம் இல்லை என்று
தெளிந்து திருவாரூர்த் தியாகராசப் பெருமான் திருவடியே கதி எனப் பற்றிக் கொண்டாய்.
ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டாய். தந்தையார் தாயாருடன் பிறந்தார், தாரமார்
புத்திரரார் தாந்தாமாரே. வந்தவாறெங்ஙனே போமாறேதோ மாயமா மிதற்கேது மகிழ வேண்டா.
சிந்தையீருமக்கொன்று சொல்லக் கேண்மின், திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ்சென்னி
யெந்தையார் திருநாம நமச்சிவாய வென்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்கலாமே. உடலைத்
துறந்து உலகேழுங் கடந்து உலவாத துன்பக் கடலைக் கடந்து உய்யப் போயிடலாகும்.
சுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கண் துணி நெஞ்சமே. (தி.6 ப. 93 பா. 10), (தி. 4 ப. 112 பா.2).
Oh my dear mind! One's own father, mother, brethren, one's children, wife,
these are the worldly relationships. Those who are not freed of their bondage and
earthly attachment to these relations will not get atonement. You better understand
this fact. If you worship our Lord Civan who is manifest in Thiru-aaroor with sincere
devotion you can attain salvation. Our Lord has smeared His body with holy ashes;
He is the oldest in the universe. He is the supernal effulgence; He used to chant
the Vedic songs; He is our own Supreme Being. Do not get frightened by delusions
of your mind.
2333. நெடியமால்பிரமனும்நீண்டுமண்ணிடந்தின்னம் நேடிக்காணாப்
படியனார்பவளம்போலுருவனார்பனிவளர்மலையாள்பாக
வடிவனார்மதிபொதிசடையனார்மணியணிகண்டத்தெண்டோள்
அடிகளாரூர்தொழுதுய்யலாம்மையல்கொண்டஞ்சல்நெஞ்சே. 10
நெடிய மால் பிரமனும், நீண்டு மண் இடந்து, இன்னம் நேடிக் காணாப்
படியனார்; பவளம் போல் உருவனார்; பனி வளர் மலையாள் பாக
வடிவனார்; மதி பொதி சடையனார்; மணி அணி கண்டத்து எண்தோள்
அடிகள்; ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
neTiya mAl piramanum, nINTu maN iTantu, innam nETik kANAp
paTiyanAr; pavaLam pOl uruvanAr; pani vaLar malaiyAL pAka
vaTivanAr; mati poti caTaiyanAr; maNi aNi kaNTattu eNtOL
aTikaL; ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!
பொருள்: நெஞ்சே! நெடிய மால் திருவடியைக் காண மண்ணை இடந்தான்; பிரமன்
வானில் திருமுடியைக் காண நீண்டு பறந்தான். இருவரும் காண இயலாத பண்பினர்.
பவளத்தைப் போன்ற சிவந்த நிறத்தவர். இமய மலையில் வளர்ந்த மலையரசன் மகளைப்
பாகமாகக் கொண்ட வடிவினர். பிறை பொலிந்த சடைமுடியினர். நீலமணி போலும் அழகிய
கண்டனார். எட்டுத் தோளினர். இத்தகைய சுவாமிகளது ஆரூர் தொழுது உய்யலாம்.
மயக்கங்கொண்டு அஞ்சற்க.
குறிப்புரை: நெடிய மால் மண் (பூமியை) இடந்தான் - பேர்த்தான் பிரமன் (வானில் உயர)
நீண்டான், பறந்தான், நீண்டு. இடந்து இன்னம் நேடிக் காணப்பாடியனார் என்க. படி - பண்பு.
உருவம் எனில் ஈண்டுந் தீப்பிழம்புருவம் ஆகும். இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே (தி. 6 ப. 97 பா. 10) என்பதில் காட்சிக்குரியது
எனல் உணர்க. பாகவடிவு- அர்த்தநாரீச்சுரரூபம். மணி - நீலரத்நம்.
Oh my dear mind! Do you know that the tutelary deity Thirumaal who took the
shape of the tallest being started digging the earth in pig's form to see the holy
feet of our Lord while Brahma took the shape of a swan and flew over the universe
to see our Lord's holy head. But they both failed in their efforts. Our Lord Civan
is the illustrious Chief Supreme Being; the beauty of His form is like red coral.
His consort Parvathi Devi is on the left side of His body. She is the daughter
of the Himalayan King; He retains the baby moon on His head; His neck is very
charming like sapphire, He has eight shoulders. If you go to Thiru-aaroor and
prostrate at the holy feet of our Lord Civan and worship Him with sincere devotion,
you can have salvation.Do not get frightened by your mental delusions.
2334. பல்லிதழ்மாதவியல்லிவண்டியாழ்செயுங்காழியூரன்
நல்லவேநல்லவேசொல்லியஞானசம்பந்தனாரூர்
எல்லியம்போதெரியாடுமெம்மீசனையேத்துபாடல்
சொல்லவேவல்லார்தீதிலாரோதநீர்வையகத்தே. 11
பல்இதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் -ஆரூர்
எல்லிஅம்போது எரிஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லார், தீது இலார், ஓதநீர் வையகத்தே.
pal itaz mAtavi alli vaNTu yAz ceyum kAzi Uran-
nallavE nallavE colliya njAnacampantan--ArUr
elli ampOtu eri ATum em Icanai Ettu pATal
collavE vallAr, tItu ilAr, Ota nIr vaiyakattE.
பொருள்: பல இதழ்களையுடைய மாதவி, அல்லி முதலிய மலர்களில் மொய்த்து வண்டு
யாழ்போல முரல் செய்யும் சீகாழியூரன், நல்லன நல்லனவே சொல்லும் ஞானசம்பந்தன் ஆரூரில்
இரவுப் போதில் எரியாடும் என ஈசனை ஏத்திப் பாடிய பாடல்களைச் சொல்ல வல்லவர் இந்தக்
கடலால் சூழப்பெற்ற உலகத்தே தீதிலராக வாழ்வர்.
குறிப்புரை: யாழ் - யாழொலியை. நல்லவே நல்லவே என்ற அடுக்கும் ஏகாரமும் ஆசிரியர்
திருவாய் மலர்ச்சியின் எய்தும் ஆன்மலாபத்தை உறுதிப்படுத்தி நின்றன. ஒழுக்கம் உடையவர்க்கு
ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற்சொலல் (குறள். 139) என்றதனுரையில் பரிமேலழகர் எழுதிய
தாற்பரியம் ஈண்டுக் கருதற்பாலது. எல்லியம்போது - இரவு. ஓதம் - கடல் வையகத்தே பாடல்
சொல்ல வல்லவர் தீது இலர் என்க. இத்திருப்பதிகம் நித்திய பாராயணத்திற்கு உரியனவற்றுள்
ஒன்றாகும்.
Our saint Thiru-gnana-Sambandar is a native of Seerkaazhi city. In this city,
the madhavi vine and the delightful bottle flower of the woods are plenty. Among the
petals of this flower, which are many in number, the beetles make noise like lute and
suck honey from the flowers and enjoy it. Thiru-gnana-Sambandar who used to chant
repeatedly virtues in his songs reached the temple in Thiru-aaroor and praised
Lord Civan manifested there. Our Lord used to dance on the burning ghat and this
is His avocation. Our Thiru-gnana-Sambandar chanted these ten songs praising our
Lord Civan. Those devotees who can memorise and chant these ten verses and worship
our Lord are people of great wisdom and they will have no blemishes in their life
in this world.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
79ஆம் பதிகம் முற்றிற்று
End of 79th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 216 பதிக எண் 80.
80.திருக்கடவூர்மயானம் 80.THIRUK-KADA-OOR-MAYAANAM
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருக்கடவூர் மயானம் என்னும் இத்திருத்தலமானது சிவபெருமான் ஒரு கல்பத்தில்
பிரமதேவரை எரித்து, நீறாக்கி அவரை மீளவும் உயிர்ப்பித்துப் படைப்புத் தொழிலை
அருளிய தலமாதலின் மயானம் என்னும் பெயர் எய்திற்று என்பர். இதை இக்காலம்
மெய்ஞ்ஞானம் என்று மக்கள் வழங்குகின்றனர். இது திருக்கடவூர்க்குக் கிழக்கே 2 கி. மீ.
தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் நாற்பத்தெட்டாவது ஆகும்
எமவாதனையைக் கடத்தற்குரிய ஊர் ஆதலின் இப்பெயர் பெற்றது என்பர்.
இவ்வூரில் திருக்கடவூர் - வீரட்டானம், திருக்கடவூர் - மயானம் என்னும் இரு (தேவாரம் பெற்ற)
தலங்கள் இருக்கின்றன. அவற்றுள் திருக்கடவூர் மயானம் என்பது பற்றியது ஈண்டுத்
தரப்பட்டுள்ளது. இறைவரது திருப்பெயர் பெரிய பெருமான் அடிகள், பிரமபுரீசர்.
இறைவியாரது திருப்பெயர் மலர்க்குழல் மின்னம்மை. காசிதீர்த்தம். இதிலிருந்துதான்
திருக்கடவூர் வீரட்டானேசுவரருக்கு நாடோறும் திருமஞ்சனம் கொண்டு வரப்படுகிறது.
பங்குனி மாதம் சுக்கிலபட்சம் அசுவதி நட்சத்திரத்திலே இத்தீர்த்தத்தில்
மக்கள் மிகுதியாக வந்து நீராடுகின்றனர். பிரமதேவர் பூசித்தது. இது மூவர்களாலும்
பாடப்பெற்றது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று. சுந்தரர்
பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.
பதிக வரலாறு
காழியார் வாழவந்தருளிய மறைவேந்தர் திருநாவுக்கரசு நாயனாரொடு திருஅம்பர்
மாகாளம் முதலியவற்றை வழிபட்டுத் தொண்டர்களோடு திருக்கடவூரை அடைந்து, காலனை
உதைத்த கால்மலர் வணங்கிச் 'சடையுடையான்' எனத் தொடங்கிப் பாடிப் பரவி அரிதிற்போந்து
நண்புடைய குங்கிலியக்கலய நாயனார் திருமனையடைந்து விருந்தமர்ந்த நாளில்
திருமயானத்தையும் பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்.
2335. வரியமறையார்பிறையார்மலையோர்சிலையாவணக்கி
எரியமதில்களெய்தாரெறியுமுசலமுடையார்
கரியமிடறுமுடையார்கடவூர்மயானமமர்ந்தார்
பெரியவிடைமேல்வருவாரவரெம்பெருமானடிகளே. 1
வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் - கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
variya maRaiyAr, piRaiyAr, malai Or cilaiyA vaNakki
eriya matilkaL eytAr, eRiyum mucalam uTaiyAr,
kariya miTaRum uTaiyAr-kaTavUr mayAnam amarntAr;
periya viTaimEl varuvAr avar emperumAn aTikaLE.
பொருள்: சிரேட்டமான மறைகளையுடைய வேதியர்; பிறை சூடியவர்; மேருமலையை ஒரு
வில்லாக வளைத்து சாம்பலாகுமாறு மும்மதில்களை எய்து எரித்தவர்; வீசும் உலக்கையை உடையவர்;
நீலகண்டர்; திருக்கடவூர் மயானத்தில் விரும்பித் தங்கினார்; பெரிய எருதின்மேல் வருவார்;
அவர் எம்பெருமான் அடிகளாவார்.
குறிப்புரை: வரிய மறையார் - வரிகளை உடைய வேதியர். வரிய - சிரேட்டமுடைய எனலும்
பொருந்தும். மலையை ஒரு சிலையாக வணக்கி என்க. சிலை - வில். வணக்கி - வளைத்து. மதில்கள்
எரிய எய்தவர். எறியும் முசலம் - வீசும் உலக்கை. மிடறு - கழுத்து.
Our Lord Civan is the author of the ancient four Vedas in musical tone. He
retains the baby moon on His matted hairlocks. Once upon a time He removed the Meru
mountain from its original place and used it as His bow. With this bow He shot an arrow
on the three flying fortresses in the sky belonging to the asuras. These asuras were
afflicting intolerable misery on the devas. The arrow carrying at its tip an extraordinary
strong effulgence burnt the three fortresses completely. Our Lord at times used a big iron
bar shaped as a weapon in ancient warfare. At times He used to keep it in His hand. His neck
is dark blue in colour like the sapphire. He is manifest in the temple of Thiruk-kada-oor-
mayaanam. He used to ride on His big bull and moves around. He is our Chief Lord and Preceptor.
2336. மங்கைமணந்தமார்பர்மழுவாள்வலனொன்றேந்திக்
கங்கைசடையிற்கரந்தார்கடவூர்மயானமமர்ந்தார்
செங்கண்வெள்ளேறேறிச்செல்வஞ்செய்யாவருவார்
அங்கையேறியமறியாரவரெம்பெருமானடிகளே. 2
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக்
கங்கை சடையில் கரந்தார் -கடவூர்மயானம் அமர்ந்தார்;
செங்கண் வெள்ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார்,
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே.
magkai maNanta mArpar, mazuvAL valan onRu Entik
kagkai caTaiyil karantAr--kaTavUr mayAnam amarntAr;
cegkaN veL ERu ERic celvam ceyyA varuvAr,
am kai ERiya maRiyAr avar emperumAn aTikaLE.
பொருள்: உமையம்மையை இடப்பாகத்தில் உடையவர்; மழுவாயுதத்தை வலக்கையில்
ஏந்தியவர்; கங்கையாற்றின் பெருவெள்ளத்தைச் சடையில் மறைத்தவர்; திருக்கடவூர் மயானத்தில்
விரும்பித் தங்கினார்; சிவந்த கண்ணையுடைய வெள்ளேறு ஏறி அடியார்களுக்குத் திருவருட்காட்சி
அளித்து வருவார்; அங்கையில் தங்கிய மான்மறியை உடையவர்; அவர் எம் பெருமான்; அடிகளாவார்.
குறிப்புரை: மங்கை மணந்த மார்பர் - உமாதேவியாரை இடப்பால் உடையவர். மார்பு இடப்பக்கத்து.
‘போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த ... அண்ணல்', வலன்- வலக்கையில்.
கரந்தோர்- மறைத்தார். செல்வம் - அடியார்கட்குத் திருவருட் காட்சி கிடைக்கும் பாக்கியம். செய்யா -
செய்து. மறி - மான்கன்று (பா. 5). அதை ஏந்தியதால் அங்கை ஏறிய மறியார் என்றார்.
Our Lord Civan is manifest in the temple in the city called Thiruk-kada-oor mayaanam.
He has embedded His consort Uma Devi on the left side of His body. He carries a battleaxe
in His right hand. He supports the river Ganges in His matted hairlocks and conceals her.
It is a divine vision, rich too, when He rides on the white and red eyed bull to move about.
He holds in His charming hand a deer. He is our Lord and the Chief Supporter.
2337. ஈடலிடபமிசையஏறிமழுவொன்றேந்திக்
காடதிடமாவுடையார்கடவூர்மயானமமர்ந்தார்
பாடலிசைகொள்கருவிபடுதம்பலவும்பயில்வார்
ஆடலரவமுடையாரவரெம்பெருமானடிகளே. 3
ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி,
காடு அது இடமா உடையார் - கடவூர்மயானம் அமர்ந்தார்:
பாடல் இசை கொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
ITu al iTapam icaiya ERi, mazu onRu Enti,
kATu atu iTamA uTaiyAr-kaTavUr mayAnam amarntAr,
pATal icai koL karuvi paTutam palavum payilvAr,
ATal aravam uTaiyAr avar emperumAn aTikaLE.
பொருள்: தனக்கு நிகர் வேறு இல்லாத இடபத்தின் மேலேறி, மழுவாயுதம் ஒன்றேந்தி,
இடுகாட்டினைத் தன் இடமாகக் கொண்டவர்; திருக்கடவூர் மயானத்தில் விரும்பி அமர்ந்தார்;
இசைகொளப் பாடுவார்; கருவிகள் இசைப்பார்; கூத்துப்பலவும் ஆடுவார்; ஆடுகின்ற அரவத்தை
உடையவர்; அவர் எம் பெருமான்; அடிகளாவர்.
குறிப்புரை: ஈடு + அல்= ஈடல். தன்னொடு பிறிதொன்று ஒப்பு அல்லாத இடபம். காடது இடமாக
உடையவர். பாடல் இசை - பாடுதலில் இசை. படுதம் - கூத்து. 'பாகம் உமையோடாகப் படிதம் பல பாட'
(பதி. 198 பா.4) என்பதில் 'படிதம்' என்றுள்ளதறிக.
Our Lord Civan, known in this place as Brahmapureeswarar is manifest in the
temple in Thiruk-kada-oor-mayaanam. He moves about riding on an incomparable bull.
He carries a battleaxe in one of His hands. He uses the burning ghat as His place
of avocation. He used to chant the songs of Vedas etc., in musical tone with related
instruments and dances. He is our Lord and Chief Supporter.
2338. இறைநின்றிலங்குவளையாளிளையாளொருபாலுடையார்
மறைநின்றிலங்குமொழியார்மலையார்மனத்தின்மிசையார்
கறைநின்றிலங்குபொழில்சூழ்கடவூர்மயானமமர்ந்தார்
பிறைநின்றிலங்குசடையாரவரெம்பெருமானடிகளே. 4
இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்,
மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின்மிசையார் -
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார்;
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
iRai ninRu ilagku vaLaiyAL iLaiyAL orupAl uTaiyAr,
maRai ninRu ilagku moziyAr, malaiyAr, manattin micaiyAr-
kaRai ninRu ilagku pozil cUz kaTavUr mayAnam amarntAr;
piRai ninRu ilagku caTaiyAr avar emperumAn aTikaLE.
பொருள்: முன்கையில் வளையல்கள் உடையவளாகிய இளமங்கை உமையை ஒருபாகமாக
உடையவர்; வேத மொழிக்குப் பொருளாயிருப்பவர்; மயக்கம் இல்லாத அடியவருடைய மனத்தில்
இருப்பவர்; கரிய நிறம் தங்கிய பொழில்கள் சூழ்ந்த திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தவர்; பிறை
தங்கி விளங்கும் சடையை உடையவர். அவர் எம் பெருமான் அடிகளே.
குறிப்புரை: இறை- முன்கை. வளையாள்- வளையலையுடையவள். இளையாள் - தேவியாரைக்
குறித்தவை. மறை....மொழி யார்- வேதவாக்கியப் பொருளாயுள்ளவர். மலையார் - மலைத்தல் இல்லாதவர்.
தெளிந்தவர். அவர் மனத்தின் மிசையார். மனம் ஊர்தி. சிவபிரான் - ஊர்பவர். 'அன்பர் மனமாங்குதிரை'.
கறை - கறுப்பு நிறம். மரச்செறிவால் இருள்மிக்க சோலை.
Our Lord Civan retains His consort Uma Devi on the left of His body. She wears
bangles in her forearms, very bright and prominent. She is a young and tender and
good-looking goddess. He is the author of the four Vedas and used to chant them.
He is manifest in the minds of great saints of good wisdom. His avocation is to be
present at the dark burning ghat surrounded by thick dark forests. On His matted hair
retains the moon. He is our Lord and Chief Supporter.
2339. வெள்ளையெருத்தின்மிசையார்விரிதோடொருகாதிலங்கத்
துள்ளுமிளமான்மறியார்சுடர்பொற்சடைகள் துலங்கக்
கள்ளநகுவெண்டலையார்கடவூர்மயானமமர்ந்தார்
பிள்ளைமதியமுடையாரவரெம்பெருமானடிகளே. 5
வெள்ளை எருத்தின்மிசையார், விரி தோடு ஒரு காது இலங்கத்
துள்ளும் இளமான்மறியார், சுடர் பொன்சடைகள் துலங்கக்
கள்ளம் நகுவெண்தலையார் - கடவூர்மயானம் அமர்ந்தார்;
பிள்ளைமதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
veLLai eruttin micaiyAr, viri tOTu oru kAtu ilagkat
tuLLum iLamAn maRiyAr, cuTar pon caTaikaL tuLagkak
kaLLam naku veNtalaiyAr-kaTavUr mayAnam amarntAr;
piLLai matiyam uTaiyAr avar emperumAn aTikaLE.
பொருள்: வெள்ளை எருதின் மேல் வருவார். ஒளிவிரியும் தோடு ஒரு காதில் விளங்க,
துள்ளுகின்ற மான்மறியினை ஒருகரத்தில் உடையவர்; பொன்னொளி சுடர்விடுகின்ற சடைகள்
அசைய அதன்மீது நகைசெய்யும் வெள்ளைத் தலையை உடையவர்; திருக்கடவூர் மயானத்தில்
அமர்ந்தவர்; இளம் பிறையை உடையவர்; அவர் எம் பெருமான் அடிகளே.
குறிப்புரை: ஒளிவிரியும் தோடு ஒரு காதிலும், குழை ஒரு காதிலும் விளங்க. மான்மறி
(பா. 2) துலங்க - ஒளி செய்ய. பிள்ளை மதியம் - இளம்பிறை.
Our Lord Civan is manifest in the temple city of Thiruk-kada-oor-mayaanam.
He goes round riding on the white bull. In one of His ears a very bright earring
made of tender leaf hangs. In one of His hands He holds the deer, young and jumping
about. His golden coloured matted hair is very bright and prominent. By the side of
the earring He wears the white head gear which makes derision. His avocation is to
visit the burning ghat; He retains the baby moon in His mattress. He is our Lord
and Chief Supporter.
2340. பொன்றாதுதிருமணங்கொள்புனைபூங்கொன்றைபுனைந்தார்
ஒன்றாவெள்ளேறுயர்த்ததுடையாரதுவேயூர்வார்
கன்றாவினஞ்சூழ்புறவிற்கடவூர்மயானமமர்ந்தார்
பின்றாழ்சடையாரொருவரவரெம்பெருமானடிகளே. 6
பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை புனைந்தார்,
ஒன்றா வெள்ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார் -
கன்று ஆஇனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார்;
பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.
pontAtu utirum maNam koL punai pUgkonRai punaintAr,
onRA veL ERu uyarttatu uTaiyAr, atuvE UrvAr-
kanRu A inam cUz puRavin kaTavUr mayAnam amarntAr;
pin tAz caTaiyAr, oruvar avar emperumAn aTikaLE.
பொருள்: பொன்னிறமான தாதுக்கள் உதிரும் மணம் வீசி அழகு செய்யும் கொன்றை மலரைப்
புனைந்தார்; சிறப்புடைய வெள்ளை ஏற்றுக் கொடியினை உயர்த்தார்; அந்த வெள்ளையேற்றினையே
வாகனமாக ஊர்வார்; கன்றுகளை உடைய ஆவினஞ் சூழ்ந்த முல்லைக் காடுடைய திருக்கடவூர் மயானத்தில்
அமர்ந்தார்; பின்னால் தாழ்ந்த சடையை உடைய ஒப்பற்றவர்; அவர் எம்பெருமான் அடிகளே.
குறிப்புரை: பொன்தாது உதிரும் கொன்றை, மணம் கொள் கொன்றை. புனைகொன்றை -
பூங்கொன்றை என்று இயைத்துக் கொள்க. புனை- அழகு செய்யும். புனைந்தார் - அணிந்தார்.
வெள்ளேறு - வெளியவிடை. ஒன்றா - ஒன்றாக. சிறப்புடையதாக. உயர்த்தது - தூக்கியது.
அதுவே- அவ்விடையே. கன்று ஆ இனம் - கன்றுகளை உடைய பசுக்கூட்டம். புறவு -காடு.
Our Lord Civan crowns His head with garlands of cassia fistula flowers that have
golden coloured pollen grains, these flowers are very fragrant. His flag has the figure
of the bull as its insignia. He uses the white bull as His conveyance. The cows and
their calves graze in the forests of the city. Our Lord has manifested Himself in
Thiruk-kada-oor-mayaanam. His long matted hair laps over His back. He is non-pareil;
He is our Lord and Chief Supporter. At the back of His head, His hair hangs upto
a very low level. He has no peers. He is our Lord and Chief Supporter.
2341. பாசமானகளைவார்பரிவார்க்கமுதமனையார்
ஆசைதீரக்கொடுப்பாரலங்கல்விடைமேல்வருவார்
காசைமலர்போல்மிடற்றார்கடவூர்மயானமமர்ந்தார்
பேசவருவாரொருவரவரெம்பெருமானடிகளே. 7
பாசம்ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார்,
ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடைமேல் வருவார்,
காசைமலர் போல் மிடற்றார்-கடவூர்மயானம் அமர்ந்தார்;
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.
pAcam Ana kaLaivAr, parivArkku amutam anaiyAr,
Acai tIrak koTuppAr, alagkal viTai mEl varuvAr;
kAcai malar pOl miTaRRAr--kaTavUr mayAnam amarntAr;
pEca varuvAr, oruvar avar emperumAn aTikaLE.
பொருள்: மும்மலங்களையும் அவற்றின் காரியங்களையும் போக்குவார்; அன்பர்களுக்கு
அமுதம் போன்று இன்பமளிப்பார்; மூவாசைகளும் தீரச் செய்வார்; மாலையணிந்த விடைமீது வருவார்;
காயாம்பூ மலர் போன்ற நிறத்த கண்டத்தர்; திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தார்; அனைவரும்
புகழுமாறு வருவார்; அவர் எம்பெருமான் அடிகளே.
குறிப்புரை: பாசம் ஆன களைவார் - மலம் ஆயின ஐந்தையும் போக்குவார். ஆணவம், மாயை,
கன்மம் என்று மும்மலமும். அவற்றையே மாயேயம். திரோதன சத்தியுடன் கூட்டி ஐம்மலமும் உண்டு என்பர்.
சிவஞானமாபாடியம் சூ. 2 அதி. 2. பார்க்க 'மலங்கள் ஐந்தாற் கழல்வன்' (திருவாசகம் 133). ஆன-
வினைப்பெயர். பரிவார்க்கு - அன்பர்க்கு. பரிவு - அன்பு. அமுதம் அனையார்- அமிர்தத்தைப் போல்பவர்.
ஆசைதீர - மூவாசையும் (மண், பொன், பெண்) ஒழிய. அலங்கல் - மாலை. காசை மலர்- காயாம்பூ; திருநீல
கண்டத்துக்கு ஒப்புரைப்பது மரபு.
Our Lord Civan is manifest in the temple situated in the city of Thiruk-kada-oor-
mayaanam. He annihilates the three evils in the soul of His devotees. For His sincere
devotees He is like amrit. He graces His devotees to chase desires from their mind.
He rides on His bull which wears garland of flowers. His neck is dark blue in colour.
All the people praise His fame and come to the temple and worship Him. He is an
incomparable Supreme Being. He is our Lord and Chief Supporter.
2342. செற்ற அரக்கனலறத்திகழ்சேவடிமெல்விரலாற்
கற்குன்றடர்த்தபெருமான்கடவூர்மயானமமர்ந்தார்
மற்றொன்றிணையில்வலியமாசில்வெள்ளிமலைபோல்
பெற்றொன்றேறிவருவாரவரெம்பெருமானடிகளே. 8
செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால்
கல்குன்று அடர்த்த பெருமான் - கடவூர்மயானம் அமர்ந்தார்;
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளிமலை போல்
பெற்றொன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
ceRRa arakkan alaRat tikaz cEvaTi melviralAl
kal kunRu aTartta perumAn--kaTavUr mayAnam amarntAr;
maRRu onRu iNai il valiya mAcu il veLLimalai pOl
peRRonRu ERi varuvAr avar emperumAn aTikaLE.
பொருள்: சினங்கொண்டு மாறுபட்ட அரக்கன் இராவணன் அலற தன் திருவடியின் திருவிரலால்
அவனைக் கயிலை மலையின்கீழ் நசுக்கிய பெருமான், திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தார்; பிறிதொன்று
இணையில்லாத, வலிய குற்றம் இல்லாத வெள்ளிமலை போலும் எருது ஒன்று ஏறி வருவார்; அவர்
எம் பெருமான் அடிகளே.
குறிப்புரை: செற்ற- கோபத்தையுடைய. கற்குன்று - கயிலைமலை. மற்று ஒன்று இணை இல்லாத
வலிய மாசு (குற்றம்) இல்லாத வெள்ளி மலைபோலும் பெற்று (எருது) ஒன்று ஏறிவருவார் என்க. பெற்றம்-
பெற்று என்று நின்றது.
Raavanan, the king of Sri Lanka was a very angry king; he got vexed when our Lord
crushed him under the mountain. Our Lord Civan pressed His mount Kailash with His toe.
Thus our Lord controlled his wickedness. Our Lord is manifest in the temple in the city
of Thiruk-kada-oor-mayaanam. He rides on His bull which is incomparable. The bull is
blemishless and appears like a silver mountain. He is our Lord and our Chief Supporter.
2343. வருமாகரியினுரியார்வளர்புன்சடையார்விடையார்
கருமானுரிதோலுடையார்கடவூர்மயானமமர்ந்தார்
திருமாலொடுநான்முகனுந்தேர்ந்துங்காணமுன்னெண்ணாப்
பெருமானெனவும்வருவாரவரெம்பெருமானடிகளே. 9
வரு மா கரியின் உரியார், வளர்புன்சடையார், விடையார்,
கருமான் உரி-தோல் உடையார் - கடவூர்மயானம் அமர்ந்தார்;
திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணாப்
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
varu mA kariyin uriyAr, vaLarpun caTaiyAr, viTaiyAr,
karumAn uri-tOl uTaiyAr--kaTavUr mayAnam amarntAr;
tirumAloTu nAn mukanum tErntum kANa mun oNNAp
perumAn enavum varuvAr avar emperumAn aTikaLE.
பொருள்: தன்மேல் அடர்த்து வந்த பெரிய களிற்றின் உரியை உடையவர்; நீண்ட
பொன்னிறமான சடையுடையார்; மானின் உரியாகிய தோல் உடையார்; திருமாலோடு
நான்முகனும் ஆராய்ந்தும் காண ஒண்ணாத பெருமான் என வருவார். அவர் எம் பெருமான்
அடிகளே.
குறிப்புரை: மான் உரிதோல் - மானை உரித்த தோல். மானினது உரியாகிய தோல் எனலுமாம்.
முன்னது வினைத்தொகை. பின்னது பண்புத்தொகையாதல் உரித்தோல் என்று நிற்புழி. ஒண்ணா -
ஒன்றாத .மரூஉ. கன்று - கண்ணு. மூன்று - மூணு முதலியவைபோல.
A huge elephant rushed towards our Lord to kill Him. Our Lord killed the elephant
and stripped off its hide and covered His body with that hide. His tresses are very
long and thin. It dangles behind His head. He uses His bull for His conveyance. He wears
the hide of a deer as His dress for His waist. He is manifest in the temple
situated in the city of Thiruk-kada-oor-mayaanam. Both Thirumaal and the four-faced
Brahma searched long to see our Lord but failed. Everyone speaks His fame to that
extent. He is our Lord and Chief Supporter.
2344. தூயவிடைமேல்வருவார்துன்னாருடையமதில்கள்
காயவேவச்செற்றார்கடவூர்மயானமமர்ந்தார்
தீயகருமஞ்சொல்லுஞ்சிறுபுன்தேரரமணர்
பேய்பேயென்னவருவாரவரெம்பெருமானடிகளே. 10
தூய விடைமேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்
காய வேவச் செற்றார் - கடவூர்மயானம் அமர்ந்தார்;
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர்,அமணர்,
"பேய், பேய்!" என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
tUya viTai mEl varuvAr, tunnAr uTaiya matilkaL
kAya vEvac ceRRAr-- kaTavUr mayAnam amarntAr;
tIya karumam collum ciRu pun tErar, amaNar,
"pEy, pEy!" enna varuvAr avar emperumAn aTikaLE.
பொருள்: புனிதமான விடையின்மேல் வருவார். பகைவருடைய மதில்கள் எரிந்து வேகச்
சினந்தார்; திருக்கடவூர் மயானம் அமர்ந்தார். தீய செயல்களைச் செய்யச் சொல்லும்
சிறுமையுடைய புல்லியதோர் அமணர் இறையைப் பேய் பேய் என்ன வருவார் அவர் எம்
பெருமான் அடிகளே.
குறிப்புரை: துன்னார் - பகைவர். செற்றார் - கோபித்தார். தீய கருமம் - கெட்ட செயல்கள்.
இறையை. பேய் பேய் என்பார் தேரரும் அமணரும், சிறுமை புன்மை இரண்டும் பொது அடை
தீயகருமஞ் செய்தல் சிறுமை. சொல்லுதல் புன்மை சிறுமை யுறுபசெய்பறியலரே (நற்றிணை. 1).
Our Lord moves all over the universe on His bull which is a huge, unblemished
animal. He got angry with His antagonists - the asuras and destroyed them completely
in fire along with their three forts which were flying in the sky. He is manifest
in the temple city of Thiruk-kada-oor-mayaanam. Our Lord is renowned. The mean-minded
Jains and Buddhists in this city preach to the public to do bad actions. They think of
Him as a devil and move away from our Lord. Such a Being is our Lord and our Chief Supporter.
2345. மரவம்பொழில்சூழ்கடவூர்மன்னுமயானமமர்ந்த
அரவமசைத்தபெருமானகலமறியலாகப்
பரவுமுறையேபயிலும்பந்தன்செஞ்சொல்மாலை
இரவும்பகலும்பரவிநினைவார்வினைகளிலரே. 11
மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த,
அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல்ஆகப்
பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல்மாலை,
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.
maravampozil cUz kaTavUr mannu mayAnam amarnta,
aravam acaitta, perumAn akalam aRiyal Akap
paravum muRaiyE payilum pantan cenjcol mAlai,
iravum pakalum paravi ninaivAr, vinaikaL ilarE.
பொருள்: குங்கும மரங்கள் கொண்ட பொழில்கள் சூழ்ந்த கடவூரில் மன்னிய
மயானத்தில் அமர்ந்த, அரவத்தைக் கச்சாக அரையில் கட்டிய பெருமானின் வியாபகத்தை
அறிய இயலாது, அறிந்தபடி பாடிய சம்பந்தனின் செஞ்சொல் மாலையை இரவும் பகலும்
நினைவார் வினைகள் இலராவர்.
குறிப்புரை: மரவம் - குங்கும மரம். அசைத்த - கட்டிய. அகலம் - வியாபகம். அறியல்
ஆக- அறிவது இசையும்படி. பரவுமுறையே பயிலுதல் ஆசிரியர்க்கே இருந்ததெனின்,
நம்மனோர்க்கு அதன் இன்றியமையாமை கூறல் வேண்டுமோ?
In the natural forest area around Thiruk-kada-oor-mayaanam plenty of
saffron plants grow in large number (bulbous rooted plant). Our Lord Civan
is renowned wearing snakes over His waist and His fame is too great, to be
known fully well. Therefore, let the devotees repeat His fame as chanted by
our saint Thiru-gnana-Sambandar by day and night. They may chant these verses
sincerely and worship our Lord. They will be then freed of karma in their life.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
80ஆம் பதிகம் முற்றிற்று
End of 80th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 217 பதிக எண்: 81
81. திருவேணுபுரம் 81. THIRU-VENU-PURAM
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
பதிகம் 137ஐப் பார்க்க.
பதிக வரலாறு
பதிகம் 137ஐப் பார்க்க.
திருச்சிற்றம்பலம்
2346. பூதத்தின்படையினீர்பூங்கொன்றைத்தாரினீர்
ஓதத்தினொலியோடுமும்பர்வானவர்புகுந்து
வேதத்தினிசைபாடிவிரைமலர்கள்சொரிந்தேத்தும்
பாதத்தீர்வேணுபுரம்பதியாகக்கொண்டீரே. 1
பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தின் ஒலியோடு மும்பர் வானவர் புகுந்து
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்து ஏத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
pUtattin paTaiyinIr! pUgkonRait tArinIr!
Otattin oliyOTum umparvAnavar pukuntu,
vEtattin icai pATi, viraimalarkaL corintu, Ettum
pAtattIr!--vENupuram pati Akak koNTIrE.
பொருள்: பூதகணங்களைப் படையாக உடையீர்! கொன்றைப்பூ மாலையினை
அணிந்தீர்! கடலொலி போன்ற முழக்கமொடு உம்பர்களும் வானவர்களும் திருக்கோவிலினுள்
புகுந்து, வேதம் இசைத்து மணமிக்க மலர்களைச் சொரிந்து வழிபடும் திருவடிகளை உடையீர்!
திருவேணுபுரத்தை உம் திருப்பதியாகக் கொண்டீரே!
குறிப்புரை: பூதகணம், கொன்றைப் பூமாலை சிவபிரானுக்குள்ளவை, வேணுபுரம்
கடலிடத்தாகலின் ஓதத்தின் ஒலியோடும் வேதத்தின் இசைபாடி எனப்பட்டது. 'உம்பர், வானவர்'
உம்பரும் வானவரும். உம்மைத்தொகை. 'உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்
செம்பொனைத் தந்தருளி' (தி.7 ப.25. பா.2). 'ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே' (தி.6 ப.1 பா.10). 'அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு
வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்' (தி.5 ப.39 பா.3). 'மண்ணினார் ஏத்த வானுளார் பரச
அந்தரத்து அமரர்கள் போற்றப் பண்ணினார் எல்லாம்' (தி.3 ப.118 பா.4). தாரன்மாலையன்
தண்ணறுங்கண்ணியன் (தி.5 ப.12 பா.7) என்பதால் இருபாலும் ஒவ்வொரு பூவைத்துத் தொடுக்கும்
தார், ஒருபால் காம்பும் ஒருபால் மலரும் அமையத்தொடுக்கும் கண்ணிக்கும், பன்மலர் மாலைக்கும்
வேறுபட்டது எனல் விளங்கும். ஓதம்-கடல்.
Oh! Our Lord Civa! You own large armies of goblins called Bhuta Ganangal.
They are dwarfish with huge pot-bellies and very small legs. You have adorned Your body
with garlands made of cassia fistula flowers. The sea makes heavy noise. Along with
this noise, the celestials and devas come to earth and chant the Vedic songs. They
carry the sweet smelling flowers and scatter them over the holy feet of our Lord
and worship Him. Oh Lord! You have selected Venupuram as Your place to manifest.
2347. சுடுகாடுமேவினீர்துன்னம்பெய்கோவணந்தோல்
உடையாடையதுகொண்டீருமையாளையொருபாகம்
அடையாளமதுகொண்டீரங்கையினிற்பரசுஎனும்
படையாள்வீர்வேணுபுரம்பதியாகக்கொண்டீரே. 2
சுடுகாடு மேவினீர் துன்னம் பெய்கோவணம் தோல்
உடை ஆடையது கொண்டீர் உமையாளை ஒரு பாகம்
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினில் பரசு எனும்
படை ஆள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
cuTukATu mEvinIr! tunnam pey kOvaNam, tOl
uTai ATai atu, koNTIr! umaiyALai orupAkam
aTaiyALam atu koNTIr! am kaiyinil paracu enum
paTai ALvIr!--vENupuram pati Akak koNTIrE.
பொருள்: சர்வ சங்கார காலத்தில் அனைத்தும் எரிந்துபோன சுடுகாட்டினில் இருந்தீர்!
தைக்கப்பட்ட கோவணமும் தோலும் உடுக்கும் ஆடையாகக் கொண்டீர்! உமையாளை உமது ஒரு
பாகத்தில் உமது கருணைக்கு அடையாளமாகக் கொண்டீர்! அழகிய உம் திருக்கையினில் பரசு
எனும் மழுவாயுதத்தைப் படையாகக் கொண்டீர்! திருவேணுபுரத்தை உம் திருப்பதியாகக்
கொண்டீரே!
குறிப்புரை: துன்னம்- துளைத்தல், தைத்தல். கோவணம் தோல் உடையாடை- 'புலியதள்
கோவணங்களுடை ஆடையாக உடையான்' (ப.219 பா.6). அங்கை - அகங்கை, உள்ளங்கை,
அழகிய கையும் ஆம். பரசு எனும் படை - மழு என்னும் ஆயுதம்.
Oh! Lord Civa! Your avocation is to visit the burning ghat to dance. You cover
Your loins with damaged forelap cloth but cover your waist with tiger's hide. You grace
Your devotees. As a symbol of grace You have embedded Your consort Uma Devi on one side
of Your body. In Your attractive hand You hold an axe. Oh Lord! You are manifest in the
city of Venupuram.
2348. கங்கைசேர்சடைமுடியீர்காலனைமுன்செற்றுகந்தீர்
திங்களோடிள அரவந்திகழ்சென்னிவைத்துகந்தீர்
மங்கையோர்கூறுடையீர்மறையோர்கள்நிறைந்தேத்தப்
பங்கயஞ்சேர்வேணுபுரம்பதியாகக்கொண்டீரே. 3
கங்கைசேர் சடைமுடியீர் காலனை முன்செற்று உகந்தீர்
திங்கள் ஓடுஇள அரவம் திகழ்சென்னி வைத்து உகந்தீர்
மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்தப்
பங்கயம் சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
kagkai cEr caTaimuTiyIr! kAlanai mun ceRRu ukantIr!
tigkaLOTu iLa aravam tikaz cenni vaittu ukantIr!.
magkai Or kURu uTaiyIr!--maRaiyOrkaL niRaintu Etta,
pagkayam cEr vENupuram pati Akak koNTIrE.
பொருள்: கங்கையாறு சேர்ந்த சடைமுடியினீரே! எமனை முன் அழித்து மகிழ்ந்தீர்!
உமை மங்கையைப் பாகமாக உடையீர்! மறையவர்கள் திரண்டு நின்று ஏத்தி வழிபடத்
தாமரை மலர்கள் மலரும் தடாகங்கள் சேரும் திருவேணுபுரத்தை உம் திருப்பதியாகக்
கொண்டீரே!
குறிப்புரை: செற்று - அழித்து. அரவம் - பாம்பு. சென்னி - தலை. பங்கயம் - தாமரை.
Oh Lord Civa! You support the river Ganges in Your matted hair. Once upon
a time You kicked Kaalan, the god of death, and thereafter were pleased to grace
him. You are happy to retain the serpent along with the baby moon on Your matted
hair, making these two shed their enmity. You have kept Your consort on one half
of Your body. The Vedic scholars join together and praise Your fame. The city is
full of big pools filled with lotus flowers as well as rich paddy fields. You have
selected such a good looking city of Venupuram as Your place for manifestation.
2349. நீர்கொண்டசடைமுடிமேல்நீள்மதியம்பாம்பினொடும்
ஏர்கொண்டகொன்றையினோடெழில்மத்தமிலங்கவே
சீர்கொண்டமாளிகைமேற்சேயிழையார்வாழ்த்துரைப்பக்
கார்கொண்டவேணுபுரம்பதியாகக்கலந்தீரே. 4
நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோடு எழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேல் சேய் இழையார் வாழ்த்து உரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.
nIr koNTa caTaimuTimEl nIL matiyam pAmpinoTum
Er koNTa konRaiyinOTu ezil mattam ilagkavE,
cIr koNTa mALikaimEl cEyizaiyAr vAzttu uraippa,
kAr koNTa vENupuram pati Akak kalantIrE.
பொருள்: கங்கைநீர் கொண்ட சடைமுடிமேல் ஒளி நீண்ட பிறையைப் பாம்பினோடும்
அழகிய கொன்றையினோடும் எழில் ஊமத்தை மலர் விளங்கவே, பெருமையுடைய மாளிகைகள்
மேல் மகளிர் உம்மைப் போற்றி வாழ்த்துரைப்ப, மேகத்தை அளாவிய திருவேணுபுரத்தை உம்
திருப்பதியாகக் கொண்டீரே!
குறிப்புரை: நீர் - கங்கைநீர், அபிடேக நீரும் ஆம். மதியம் - பிறை. மத்தம் - ஊமத்தை.
மாளிகை- நகரில் உள்ள உயரிய வீடுகளும் தோணியப்பர் மலைக்கோயிலும் ஆம். கார்கொண்ட
வேணுபுரம் என்றதனால் மூங்கிலின் உயர்ச்சி விளங்கும்.
Oh Lord Civa! You support the river Ganges on Your matted hair that is flanked
on both sides by the moon, the snake, the attractive cassia and the fine datura flowers,
everything looks bright. You get upon the palaces from where lovely girls wearing a lot
of jewellery greet You. The clouds traverse and gather on the tall bamboo trees which
are a characteristic part of the city. Oh Lord! You have selected such a city of
Venupuram as Your place for manifestation.
2350. ஆலைசேர்தண்கழனியழகாநறவுண்டு
சோலைசேர்வண்டினங்களிசைபாடத்தூமொழியார்
காலையேபுகுந்திறைஞ்சிக்கைதொழமெய்மாதினொடும்
பாலையாழ்வேணுபுரம்பதியாகக்கொண்டீரே. 5
ஆலைசேர் தண்கழனி அழகா நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ மெய்மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
Alai cEr taNkazani azakA naRavu uNTu,
cOlai cEr vaNTu inagkaL icai pATa, tU moziyAr
kAlaiyE pukuntu iRainjcik kaitoza, mey mAtinoTum
pAlaiyAz vENupuram pati Akak koNTIrE.
பொருள்: கரும்புகள் விளைந்த கழனிகளில் தேனையுண்டு பூஞ்சோலைகளை அழகாகச்
சேர்கின்ற வண்டினங்கள் இசைபாட, தூய்மையான மொழியே பேசும் மகளிர் வைகறைப்
போதிலேயே திருக்கோயிலிற் புகுந்து வழிபட்டுக் கைதொழுமாறு, உமையம்மையினொடும்
பாலையாழ் இசைக்கும் திருவேணுபுரத்தை உம் திருப்பதியாகக் கொண்டீரே!
குறிப்புரை: ஆலை- கரும்பாலை, கரும்பு. நறவு - தேன். தூ - தூய்மை. காலையே ... கைதொழ -
என்றதால் பண்டு மகளிர் நாள்தோறும் காலையில் தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபட்ட
உண்மை புலப்படுகிறது. பாலையாழ்- நாற்பெரும் பண்ணுள் ஒன்று. பாலையாழ், 'அராகம் நோந்திறம்
உறுப்புக் குறுங்கலி ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே' என்பது பிங்கலந்தை - 1381.நோந்திறத்
தின்மறுதலை செந்நிறம். 'கைக்கிளை செந்நிறம் பெருந்திணை நோந்திறம்’ தொல். அகத். 55
உரை இளம்பூரணம்.
The city of Venupuram has a number of cool fields where sugarcane grows in
plenty and the sugarcane plants work. In the well-developed garden area a large number
of flower plants grow. Here the beetles fly and gather and suck honey from the flowers
singing their music and making the people happy. In the early morning hours, lovely girls,
who speak pleasing words, visit the temple and worship our Lord by raising both their
hands. There is good music of 'Paalai Lute' and the entire area is full of happiness.
Oh Lord Civa! You, concomitant with Your consort Uma Devi, are manifest in Venupuram.
2351. மணிமல்குமால்வரைமேல்மாதினொடுமகிழ்ந்திருந்தீர்
துணிமல்குகோவணத்தீர்சுடுகாட்டிலாட்டுகந்தீர்
பணிமல்குமறையோர்கள்பரிந்திறைஞ்சவேணுபுரத்
தணிமல்குகோயிலேகோயிலாகஅமர்ந்தீரே. 6
மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்
தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.
maNi malku mAlvarai mEl mAtinoTu makizntu iruntIr!
tuNi malku kOvaNattIr! cuTukATTil ATTu ukantIr!--
paNi malku maRaiyOrkaL parintu iRainjca, vENupurattu
aNi malku kOyilE kOyil Aka amarntIrE.
பொருள்: மணிகள் நிறைந்த பெரிய மலையின் மேல் உமையம்மையுடன் மகிழ்ந்து
இருந்தீர் ! துணித்த கோவண ஆடையினீர்! சுடுகாட்டினில் கூத்தாடுதலை உகந்தீர்!
சிவத்தொண்டு செய்யும் மறையோர்கள் பத்திகொண்டு வணங்க வேணுபுரத்தில் அழகு
நிறைந்த திருக்கோயிலையே கோயிலாகக் கொண்டீரே!
குறிப்புரை: 'மணி மல்கு ...இருந்தீர்' தோணிபுரம் எனப்படும் மலைக்கோயிலில்
அம்மையப்பராக வீற்றிருந்தீர். அக்கோயில் 'நாலைந்து புள்ளினம் ஏந்தின’ (தி.4 ப.82 பா.1)
அமைப்புடையது. துணி- துண்டு. ஆட்டு - கூத்து. பரிந்து - அன்புகொண்டு.
Oh Lord Civa! You have joyfully manifested Yourself along with Your consort
on the big Thiruth-thoni hillock where a good number of big gems are studded. You wear
on Your loins the worn-out fore-lap cloth. Your avocation is to go gladly to the
burning ghat and dance there. The scholars in this city who are very much engrossed
in service to You come to Your temple and worship You with dedication. You have
conspicuously manifested Yourself in the cool temple city of Venupuram, considering
it as Your much desired temple.
2352. நீலஞ்சேர்மிடற்றினீர்நீண்டசெஞ்சடையினீர்
கோலஞ்சேர்விடையினீர்கொடுங்காலன்றனைச்செற்றீர்
ஆலஞ்சேர்கழனியழகார்வேணுபுரமமருங்
கோலஞ்சேர்கோயிலேகோயிலாக்கொண்டீரே. 7
நீலம்சேர் மிடற்றினீர் நீண்ட செஞ்சடையினீர்
கோலம்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனிஅழகார் வேணுபுரம் அமருங்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாக் கொண்டீரே.
nIlam cEr miTaRRinIr! nINTa cenjcaTaiyinIr!
kOlam cEr viTaiyinIr! koTugkAlan tanaic ceRRIr!--
Alam cEr kazani azaku Ar vENupuram amarum
kOlam cEr kOyilE kOyilAkak koNTIrE.
பொருள்: நீலகண்டத்தினீர்! நீண்ட சிவந்த சடையினை உடையீர்! அழகிய விடையை
உடையீர்! கொடிய எமனை அழித்தீர்! நீர்வளமிக்க கழனிகளுடன் அழகிய திருவேணுபுரத்தில்
உள்ள திருக்கோயிலினையே உமது கோயிலாகக் கொண்டீரே!
குறிப்புரை: நீலஞ்சேர் மிடற்றினீர் - திருநீலகண்டத்தீர். கோலம் - அழகு. ஆலம் - நீர்.
கலப்பையும் ஆம். கோலம் - வளைவு.
Oh Lord Civa! Your throat is dark blue in colour like the sapphire.
You have long reddish matted hair. You have a very attractive bull for Your
conveyance. Once upon a time You destroyed the ferocious Kaalan - the god of
death.You have manifested Yourself in the temple of appealing Venupuram. In this
city, there are many ponds full of cool water. The temple is full of very rich and
admirable workmanship and is shining to look at. You have considered this temple
as Yours and are manifest there.
2353. இரைமண்டிச்சங்கேறுங்கடல்சூழ்தென்னிலங்கையர்கோன்
விரைமண்டுமுடிநெரியவிரல்வைத்தீர்வரைதன்னிற்
கரைமண்டிப்பேரோதங்கலந்தெற்றுங்கடற்கவினார்
விரைமண்டுவேணுபுரமேயமர்ந்துமிக்கீரே. 8
இரை மண்டிச் சங்குஏறும் கடல்சூழ் தென்இலங்கையர் கோன்
விரை மண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரை தன்னிற்
கரை மண்டிப் பேரோதம் கலந்தெற்றும் கடற்கவினார்
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே.
irai maNTic cagku ERum kaTal cUz ten ilagkaiyar kOn
virai maNTu muTi neriya viral vaittIr ! varai tannin
karai maNTip pEr Otam kalantu eRRum kaTal kavinAr
virai maNTu vENupuramE amarntu mikkIrE.
பொருள்: ஒலித்தல் மிகுந்த, சங்குகளேறும் கடல் சூழ்ந்த தென்திசையில் உள்ள
இலங்கையின் அரசன் இராவணனின் மணமுள்ள முடி நெரியுமாறு திருவிரலை வைத்தீர் !
மலை போன்ற அலைகள் நிறைந்து மோதும் நீர் நிறைந்த கடலழகுடன் மணமிக்க
திருவேணுபுரமே அமர்ந்து விளங்கினீரே!
குறிப்புரை: மண்டி - மேற்சென்று. நெருங்கியும் ஆம். விரை - நறுமணம். கவின் - அழகு.
ஓதம் - நீர். எற்றும்-மோதும்.
Many hundreds of conches lie on the seashore, actually these are insects,
big and small. These insects in the conches eat the sea food in large quantities
and take rest on the shore. Such shores of the sea surround Sri Lanka, and the
king of this southern land, Raavanan, was once suppressed with his ten heads
under mount Kailash by Lord Civan. Oh Lord! You subdued him simply by pressing
Your mountain with Your toe, Of course finally he was pardoned and blessed. The
city of Venupuram has a long seashore on the east and the huge waves of the sea
disturb the shore, bringing large quantities of water. Oh Lord! You have chosen
this beautiful and fragrant city as Yours and manifest Yourself as a renowned Lord.
2354. தீயோம்புமறைவாணர்க்காதியாந்திசைமுகன்மால்
போயோங்கியிழிந்தாரும்போற்றரியதிருவடியீர்
பாயோங்குமரக்கலங்கள்படுதிரையால்மொத்துண்டு
சேயோங்குவேணுபுரஞ்செழும்பதியாத்திகழ்ந்தீரே. 9
தீஓம்பு மறைவாணர்க்கு ஆதியாம் திசைமுகன் மால்
போய்ஓங்கி இழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாய்ஓங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
சேய்ஓங்கு வேணுபுரம் செழும்பதியாய் திகழ்ந்தீரே.
tI Ompu maRaivANarkku Ati Am ticai mukan, mAl,
pOy Ogki izintArum-pORRa(a)riya tiruvaTiyIr!
pAy Ogku marak kalagkaL paTu tiraiyAl mottuNTu,
cEy Ogku vENupuram cezum patiyAit tikazntIrE.
பொருள்: வேள்வி செய்யும் மறையவருக்கு முதல்வனாகிய பிரமன் மால் இருவரும்
முறையே மேலோங்கி உயர்ந்தும் கீழ் நோக்கி இழிந்தும் இருவராலும் போற்றுதற்கு அரிய
திருவடியை உடையீர்! உயர்ந்த பாய்களையுடைய மரக்கலங்கள் ஒலிக்கின்ற கடல் அலைகளால்
மொத்துண்டு விண்ணளவு உயர்கின்ற திருவேணுபுரத்தை உம் செழும்பதியாகக் கொண்டு திகழ்ந்தீரே!
குறிப்புரை: தீயோம்பு... முகன்:- பிராமணர்க்கு முதல்வன் பிரமன் என்னும் உண்மை
உணர்த்தப்பட்டது. மால் - திருமால். ஓங்குதல்- பிரமன் செயல். இழிதல்- மால்வினை. போற்ற
அரிய திருவடி எனத் திருவடிச்சிறப்பு உணர்த்தப்பட்டது. பாய் ... வேணுபுரம். பண்டு சீகாழியில்
மரக்கலங்கள் (கடற்றுறையுள்) இருந்தமை தெளிவாகும். சேய்.... புரம் - விண்ணில் ஓங்கிய
உயர்ச்சியைக் குறிப்பது.
In this verse our saint Thiru-gnana-Sambandar establishes that tutelary
god Brahma as the chief god for Brahmins. They daily involve themselves in starting
the three sacrificial fires Kaarugapaththiyam, Aahavaniyam and Thatchinakkini.
Brahmins are guardians of the three sacrificial fires. The chief of brahmins is
Brahma who flew in the sky to see our Lord's head. The second one Thirumaal delved
deep into the earth to see our Lord's holy feet. But they both failed. Oh Lord!
You are the master with imperceptible holy feet and head. The city of Venupuram,
adjoining the sea, has a lot of vessels with mast, anchored near the shore. These
vessels are tossed by the big sea waves. The city's sacred tree is bamboo. These
tall trees are in plenty here. Oh Lord! You desired to have the rich Venupuram
as Your abode and You are renowned in the temple of this wealthy city.
2355. நிலையார்ந்தவுண்டியினர்நெடுங்குண்டர்சாக்கியர்கள்
புலையானாரறவுரையைப்போற்றாதுன்பொன்னடியே
நிலையாகப்பேணிநீசரணென்றார்தமையென்றும்
விலையாகஆட்கொண்டுவேணுபுரம்விரும்பினையே. 10
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலை ஆனாரற உரையைப் போற்றாது உன்பொன்னடியே
நிலையாகப் பேணி நீ சரணென்றார் தமையென்றும்
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.
nilai Arnta uNTiyinar neTug kuNTar, cAkkiyarkaL,
pulai AnAr--aRa uraiyaip pORRAtu, un pon aTiyE
nilai Akap pENi, "nI caraN!" enRAr tamai, enRum
vilai Aka ATkoNTu, vENupuram virumpinaiyE.
பொருள்: நின்று உண்ணும் சமணர், உடல் தடித்த சாக்கியர்கள் புலையரானார்களாகிய இவர்கள்
உரைக்கும் உரையைப் பொருட்படுத்தாது உன் பொன்னடியே நிலையாகப் பேணி நீயே சரண் என்றார்தமை,
என்றும் அதற்கு ஈடாக ஆட்கொண்டு திருவேணுபுரத்தில் இருத்தலை விரும்பினையே!
குறிப்புரை: நிலையார்ந்த உண்டியினர்- நின்று உண்பவர். அடுத்த பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும்
ஈற்றில் அருளிய திறத்தை நோக்கினால் உன் பொன்னடியே நிலையாகப் பேணி நீ(யே) சரண் என்றாரை
என்றும் விலையாக ஆட்கொள்ளும் திறம் வாய்மையாதல் விளங்கும்.
In this city of Venupuram, the Jains and the Buddhists live here in large numbers.
They used to take food in standing posture. They preach deceptive literacy. The Siva
devotees who live in this city never pay heed to the words of the Jains and the Buddhists.
They worship our Lord and eagerly take refuge at the feet of our Lord Civan. He therefore
takes such devotees as His own servitors and graces them substantially. He loves to be
manifested in the temple of Venupuram.
11ஆவது பாடல் கிடைக்கப்பெறவில்லை.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
81ஆம் பதிகம் முற்றிற்று
End of 81st Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 218 பதிக எண்: 82
82.திருத்தேவூர் 82. THIRU-THEVOOR
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
தேவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது. இது கீழ்வேளூர்
தொடர்வண்டி நிலையத்திற்குத் தெற்கே 2.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவாரூரிலிருந்து
வலிவலம் செல்லும் நகரப் பேருந்தில் செல்லலாம். காவிரித் தென்கரையில் உள்ள எண்பத்தைந்தாவது
தலம் ஆகும். இறைவரது திருப்பெயர் தேவகுருநாதர். இறைவியாரது திருப்பெயர் மதுரபாடணியம்மை.
தீர்த்தம் தேவதீர்த்தம். தலமரம் வாழை. இந்திரன், குபேரன், வியாழன் முதலியோர் பூசித்துப் பேறு
பெற்ற தலம். கெளதம முனிவரும் பூசித்தார். மாடக்கோயில் அமைப்புடையது. இதற்கு ஞானசம்பந்தர்
பதிகங்கள் இரண்டு இருக்கின்றன.
பதிக வரலாறு
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரொடும் திருவாரூர் முதலிய தலங்களை வழிபட்ட காலத்து,
இத்திருத்தேவூரை அணைந்து பாடியருளியதும் முற்பதிகத்தின் ஈற்றில் அருளியவாறே தமது சிவபக்தியின்
உறைப்பை இதன்கண் ஒவ்வொரு திருப்பாட்டின் ஈற்றிலும் விளங்கவைத்துப் பாடியருளிச், சைவர் எல்லோரும்
சிவபெருமான் திருவடியே சேரப் பெறுமாறு உணர்த்துவதும் ஆகும் இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
2356. பண்ணிலாவியமொழியுமைபங்கனெம்பெருமான்
விண்ணில்வானவர்கோன்விமலன்விடையூர்தி
தெண்ணிலாமதிதவழ்தருமாளிகைத்தேவூர்
அண்ணல்சேவடியடைந்தனமல்லலொன்றிலமே. 1
பண்ணில் ஆவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன் விமலன் விடை ஊர்தி
தெண்ணில் ஆமதி தவழ் தருமாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தன மல்லலொன்றிலமே.
paN nilAviya mozi umai pagkan, emperumAn,
viNNil vAnavarkOn, vimalan, viTai Urti-
teN nilA mati tavaz taru mALikait tEvUr
aNNal; cEvaTi aTaintanam, allal onRu ilamE.
பொருள்: 'பண் நிலாவிய மொழி உமை'யைத் தன் பாகத்தில் கொண்டவன்; எங்களுடைய
பெருமான்; விண்ணில் வாழும் வானவர்களின் தலைவன்; மலம் அற்றவன்; எருதினை ஊர்பவன்
ஆகிய தெளிந்த நிலவொளியுடைய சந்திரன் தவழும் உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருத்தேவூர்
அண்ணலின் சேவடியை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.
குறிப்புரை: 'பண்ணிலாவிய மொழியுமைபங்கன்' என்றதில், இத்தலத்தின் தேவிக்கு வழங்கிய
திருப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதைப் பின்னோர் 'மதுர பாடணியம்மை' என்று மாற்றினர்.
விண்ணில் வானவர் என்பது தேவகணம் எல்லாவற்றையும் குறித்தது. கோன்- சிவபெருமான்.
விமலன் - மலரகிதன். விடையூர்தி - எருதூர்பவன். தெள்நிலா- தெளிந்த நிலவுடைய. மதி - பூரண
சந்திரன், பிறையுமாம். அண்ணல்- பெரியோன், சிவன், அடைந்தது காரணம். அல்லல் இன்மை காரியம்.
அல்லல் - பிறவித் துன்பம். பிறப்பில் எய்தும் துன்பம் எனலும் பொருந்தும். ஒன்று இலம் - ஒன்றும்
இல்லேம். சிறிதும் இல்லேம் எனலுமாம்.
Our Lord Civan has embedded His consort and therefore is a concomitant Supreme
Being. He is our Chief. He is also the Chief for all the devas and all the other celestials.
He is an immaculate Supreme Being. He uses the bull for His conveyance . He is manifest
in Thiru-thevoor temple in this city. The moon, shedding pure white light creeping over
the sky, seems to lap over the tall palatial buildings of the city: We have prostrated
before the holy feet of our Lord,and worship Him.We,therefore are free of any misfortune.
2357. ஓதிமண்டலத்தோர்முழுதுய்யவெற்பேறு
சோதிவானவன்துதிசெயமகிழ்ந்தவன்தூநீர்த்
தீதில்பங்கயந்தெரிவையர்முகமலர்தேவூர்
ஆதிசேவடியடைந்தனமல்லலொன்றிலமே. 2
ஓதிமண்டலத்தோர் முழுதுய்ய வெற்பேறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடியடைந்தன மல்லலொன்றிலமே.
Oti maNtalattOr muzutu uyya, veRpu ERu
cOti vAnavan tuticeya, makizntavan--tU nIrt
tItu il pagkayam terivaiyar mukammalar tEvUr
Ati; cEvaTi aTaintanam, allal onRu ilamE.
பொருள்: மண்ணுலகத்தவர் தன்னுடைய புகழ்களை ஓதி முழுதும் உய்ய, உதயகிரியில்
ஏறி சூரியன் துதி செய்ய மகிழ்ந்தவன், தூய்மையான நீரில் குற்றமற்ற தாமரை மலர்போல்
மலர்ந்த முகமுடைய மகளிர் வாழும் திருத்தேவூர் முதல்வனுடைய சேவடியை அடைந்தனம்.
அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.
குறிப்புரை: மண்தலத்தோர் ஓதி முழுது உய்ய -மண்ணிடத்து வாழும் மக்கள் திருப்புகழ்களை
ஓதிப்பூரணமான உய்வைப் பெற. வெற்பு ஏறு சோதி வானவன்- உதயகிரியில் ஏறி ஒளிர்கின்ற
சூரியதேவன். துதி செய - வழிபட. மகிழ்ந்தவன் - உவந்து அருள்புரிந்த சிவபிரான். தேவூரில்,
நீரில், குற்றம் இல்லாத தாமரைப் பூக்கள் மகளிருடைய முகம் போலப் பூக்கும் என்பது
நீர் நிலவளம் உணர்த்திற்று. தேவூர் ஆதி - தேவூரில் கோயில் கொண்டெழுந்தருளிய முதல்வன்.
People living on this earth who wish to have good life worship the sun god
which rises in the early morning from behind the mountain called Udayagiri. The sun god,
of course, worships our Lord Civan. Indran who is the chief of devas also worships
our Lord Civan. Our Lord, seeing these two worship Him, feels happy and graces them
immediately. Our Lord Civan is manifest in the temple in Thiru-thevoor city, where
lotus ponds are many. The flawless lotus flowers bloom and resemble the faces of
beautiful girls in this Thiru-thevoor city. We all worship the holy feet of our
Chief Supreme Being. Therefore misfortunes will never enter our life.
2358. மறைகளான்மிகவழிபடுமாணியைக்கொல்வான்
கறுவுகொண்டவக்காலனைக்காய்ந்தவெங்கடவுள்
செறுவில்வாளைகள்சேலவைபொருவயல்தேவூர்
அறவன் சேவடியடைந்தனமல்லலொன்றிலமே. 3
மறைகளால் மிகவழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்த வெங்கடவுள்
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர்
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
maRaikaLAl mika vazipaTu mANiyaik kolvAn
kaRuvu koNTavak kAlanaik kAynta em kaTavuL-
ceRuvil vALaikaL cEl avai poru vayal-tEvUr
aRavan; cEvaTi aTaintanam, allal onRu ilamE.
பொருள்: வேதங்கள் ஓதி மிகவும் வழிபாடு செய்யும் பிரமசாரியாகிய மார்க்கண்டேயனைக்
கொல்லும் பொருட்டுக் கோபித்து வந்த எமனைக் கொன்ற எம் கடவுள்; சேற்றில் வாளைமீன்கள்,
சேல்மீன்கள் ஆகியன பொரும் வயல்கள் கொண்ட திருத்தேவூரில் அறவன் சேவடியை அடைந்தனம்.
அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.
குறிப்புரை: மாணி - பிரமசாரி. மார்க்கண்டேயர். கறுவு- கோபம். எம்கடவுள், செறுவில் -
சேற்றில். பொரு – போர் செய்கின்ற. அறவன் - தருமரூபி, சிவபிரான். அறவாழியந்தணன்' (குறள்).
The young devotee Markandeyan seriously involved himself in the daily rituals
as per Vedic rules. Without adhering to general principles, Kaalan, the god of death
ferociously came to take away the life of the young saint Markandeyan. Our Lord Civan,
indignant at the action of Kaalan, destroyed him by kicking. The carp fish and the saw
fish fight against each other in the paddy fields in the city of Thiru-thevoor. Here our
Lord Civan who is the Lord of charity is manifest in the temple. We have prostrated at
His holy feet. Therefore, we will have no misfortune in our life.
2359. முத்தன்சில்பலிக்கூர்தொறும்முறைமுறைதிரியும்
பித்தன்செஞ்சடைப்பிஞ்ஞகன்றன்னடியார்கள்
சித்தன்மாளிகைசெழுமதிதவழ்பொழில்தேவூர்
அத்தன்சேவடியடைந்தனமல்லலொன்றிலமே. 4
முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறை முறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன் அடியார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ் பொழில் தேவூர்
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
muttan, cil palikku UrtoRum muRai muRai tiriyum
pittan, cenjcaTaip pinjnjakan, tan aTiyArkaL
cittan mALikai cezu mati tavaz pozil-tEvUr
attan; cEvaTi aTaintanam, allal onRu ilamE.
பொருள்: அநாதி முத்தன்; சிறு பிச்சைக்கென ஊர்தோறும் முறைமுறையாகத் திரியும் பித்தன்;
சிவந்த சடைமுடியினன்; தன்னுடைய அடியார்களின் சித்தத்தில் வாழ்பவன்; செழுமையான மதி தவழும்
உயரமுள்ள மாளிகைகள், பொழில்கள் கொண்ட தேவூர்த் தந்தை அடைந்தனம். அடைந்த காரணத்தால்
துன்பம் ஏதும் இலோம்.
குறிப்புரை: முத்தன் - அநாதிமுத்தன். இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன். எண்குணத்துள்
ஒன்று. சடைப்பிஞ்ஞகன் - மயிர் முடியினன். தன் அடியார்கள் சித்தன் - தன் அடியை வழிபடுவோரது
சித்தத்தில் இருப்பவன். சித்தன் - அறிவுக்கறிவாயிருப்பவன் என்றலும் அமையும். 'மதிதவழ்பொழில்'
சோலையின் உயர்ச்சியைக் குறித்தது.
Our Lord Civan has infinite detachment from the three evil passions. He is the most
gracious one. He is a crazy person to collect alms from many people, visiting them in an
orderly manner. His red disheveled locks of hair bears the Ganges river and the new moon.
He is manifest in the divine thoughts of His devotees. In this city many tall palaces exist
and also many forests with tall trees with the moon crawling over them. In such a sacred city
of Thiru-thevoor and Lord is manifest in the temple. We worship Him in the temple and prostrate
at His holy feet. Therefore, we have not even an atom of suffering in our life.
2360. பாடுவாரிசைபல்பொருட்பயனுகந்தன்பால்
கூடுவார்துணைக்கொண்டதம்பற்றறப்பற்றித்
தேடுவார்பொருளானவன்செறிபொழில்தேவூர்
ஆடுவானடியடைந்தனமல்லலொன்றிலமே. 5
பாடுவார் இசை பல்பொருள் பயன் உகந்தன்பால்
கூடுவார் துணைக் கொண்ட தம்பற்றறப் பற்றித்
தேடுவார் பொருள் ஆனவன் செறிபொழில் தேவூர்
ஆடுவான் அடியடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
pATuvAr icai, palporuL payan ukantu anpAl
kUTuvAr, tuNaikkoNTa tam paRRu aRap paRRit
tETuvAr, poruL Anavan ceRi pozil-tEvUr
ATuvAn; aTi aTaintanam, allal onRu ilamE.
பொருள்: அடியவர்களுக்குப் பேறாகவுள்ள பல்பொருள்களின் பயனைவிரும்பிப் பாடுவாருக்கு
அவர்கள் விரும்பிய பொருளானவன்; தன்பால் கூடுமவருக்குக் கொண்ட துணையானவன்; பிற
பற்றுக்கள் எல்லாம் அற்றொழியத் தன்னைப் பற்றித் தேடுவாருக்கு அவர்கள் தேடும் பொருளானவன்;
செறிந்த பொழில்கள் உள்ளத் திருத்தேவூரில் கூத்தாடுவான் ஆகிய சிவபிரான், அவனுடைய அடியைப்
புகலாக அடைந்தனம், அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.
குறிப்புரை: பாடுவாரும் கூடுவாரும் தேடுவாருமான அடியார்கட்குப் பேறாயுள்ள
பொருளானவன்,தேவூர்க்கூத்தன் என்றவாறு. இசைபாடுவார் சிவபிரானைத் துணையாக்
கொண்டவர்கள். தங்கள் பற்றுக்கள் எல்லாம் அற்றொழிய அச்சிவபிரானையே பற்றாகப்
பற்றித் தேடுவார்கள். அவர்களுக்கு அவனன்றி வேறுபொருள் இல்லையாதலின், 'தேடுவார்
பொருளானவன்' என்றார். துணையாகக் கொண்ட தமது பற்று அற எனலுமாம். முன்
துணையெனப் பற்றப்பட்டது பின் பொய்யாய்த் தோன்ற மெய்த்துணை உயிர்த்துணையாகிய
சிவபிரானே எனல் விளங்கும். விளங்கின் அதையே பற்றுதலும் தேடுதலும் நிகழும். 'ஆடுவான்'
என்றது எல்லாத் தலங்களிலும் ஒரு ஞானக்கூத்தனே எழுந்தருளியிருக்கும் உண்மை பற்றியது.
இச்சித்தாந்த உண்மை உணராமல் உரைப்பவை பொருந்தா. (பதி.152 பா.1).
To the devotees who used to chant divine songs in praise of our Lord,
to the devotees who realise that Lord Civan is the only Chief and the activating
force in all matters,and as a result worship Him with love in big gatherings and
to those who,having detached themselves from their kith and kin and all wordly
matters, cling to Him with all seriousness,our Lord Civan alone is the only matter,
is their only kin. We have reached this Lord's feet and He is the Lord who dances
in the temple of Thiru-thevoor surrounded by dense forests. Therefore we are free
from sufferings.
2361. பொங்குபூண்முலைப்புரிகுழல்வரிவளைப்பொருப்பின்
மங்கைபங்கினன்கங்கையைவளர்சடைவைத்தான்
திங்கள்சூடியதீநிறக்கடவுள்தென்தேவூர்
அங்கணன்றனையடைந்தனமல்லலொன்றிலமே. 6
பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கைபங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுள் தென் தேவூர்
அங்கணன் தனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
pogku pUN mulaip purikuzal varivaLaip poruppin
magkai pagkinan, kagkaiyai vaLarcaTai vaittAn,
tigkaL cUTiya tI niRak kaTavuL, ten tEvUr
agkaNan tanai aTaintanam; allal onRu ilamE.
பொருள்: ஆபரணம் அணிந்தவளும் சுழன்ற குழலை உடையவளும் வரிவளைக் கையினளும்
ஆகிய மலையரையன் மங்கை பார்வதியைப் பங்கில் உடையவன்; கங்கையை நீண்ட சடையில்
வைத்தவன்; பிறையைச் சூடிய செந்தீ நிறக் கடவுள்; தென் திருத்தேவூரில் கருணையாளனாகிய
சிவபிரானை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் துன்பமொன்றும் இலோம்.
குறிப்புரை: பூண் - ஆபரணம். குழல் - கூந்தல். பொருப்பின் மங்கை - இமாசலகுமாரி.
தீநிறக் கடவுள் - அழல்வண்ணனாகிய சிவபிரான். அங்கணன் - கருணாக்கடாக்ஷன். கண்ணுக்கு
அழகு கருணை.
Our goddess Parvathi Devi is the daughter of the Himalayan king. Her breasts are
well-developed and are covered with rich jewellery. Her thick tresses and rich lined
bangles enhance her beauty. Our Lord is concomitant with her. Our Lord supports the
river Ganges in His hairlocks. He retains the moon also on His head. He shines like
dark red effulgence. He is manifest in the temple in the attractive city of Thiru-thevoor.
Our Lord is the storehouse of grace. We have reached Him and prostrated before His
holy feet. Therefore, we do not have even a very slight suffering in our life.
2362. வன்புயத்தவத்தானவர்புரங்களையெரியத்
தன்புயத்துறத்தடவரைவளைத்தவன்தக்க
தென்தமிழ்க்கலைதெரிந்தவர்பொருந்தியதேவூர்
அன்பன்சேவடியடைந்தனமல்லலொன்றிலமே. 7
வன் புயத்தவத்தான் அவர் புரங்களை எரியத்
தன் புயத்துறத்தட வரை வளைத்தவன் தக்க
தென் தமிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
van puyatta at tAnavar puragkaLai eriyat
tan puyattu uRat taTavarai vaLaittavan takka
tentamizk kalai terintavar poruntiya tEvUr
anpan; cEvaTi aTaintanam; allal onRu ilamE.
பொருள்: வலிய புயங்களை உடைய அந்த அசுரர்களின் புரங்களை எரியத் தன்
புய வலியால் பெரிய மேருமலையை வில்லாக வளைத்தவன்; பெருமையுடைய செந்தமிழ்களை
ஆராய்ந்தவர் வாழும் திருத்தேவூரின் அன்பனின் சேவடியை அடைந்தனம்; அடைந்த காரணத்தால்
துன்பமொன்றும் இலோம்.
குறிப்புரை: வல்புயத்த அத்தானவர்- வலிய புஜங்களை உடைய அந்த அசுரர். அ- பண்டறிசுட்டும்
உலகறி சுட்டுமாம். புயத்து அவம் எனப் பிரித்துரைத்தலும் அமையும். வரை - மேரு மலை. தேவூரில்
தமிழ்ப்புலவர் இருந்த உண்மை உணர்த்தப்பட்டது. அன்பன் - அன்பே சிவம்.
The asuras were very sturdy with very strong shoulders. They had built the three
fortresses in air. Our Lord Civan with His strong arms took the big Meru mountain and
used it as His bow to destroy them. In the city of Thiru-thevoor many scholars, well learned
in the arts of southern Tamil, live. Our Lord Civan who is the embodiment of love is
manifest in the temple in this city.We have reached His holy feet, and praised Him.
Therefore, we are never affected even by small sufferings.
2363. தருவுயர்ந்தவெற்பெடுத்த அத்தசமுகன்நெரிந்து
வெருவவூன்றியதிருவிரல்நெகிழ்த்துவாள்பணித்தான்
தெருவுதோறுநற்றென்றல்வந்துலவியதேவூர்
அரவுசூடியையடைந்தனமல்லலொன்றிலமே. 8
தரு உயர்ந்த வெற்பெடுத்த அத்தசமுகன் நெரிந்து
வெருவ ஊன்றிய திருவிரல் நெகிழ்த்து வாள்பணித்தான்
தெருவு தோறும் நல்தென்றல் வந்து உலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
taru uyarnta veRpu eTutta at tacamukan nerintu
veruva UnRiya tiruviral nekizttu, vAL paNittAn
teruvu tORum nal-tenRal vantu ulaviya--tEvUr
aravu cUTiyai aTaintanam; allal onRu ilamE.
பொருள்: கற்பக மரங்கள் உயர்ந்த கயிலை வெற்பினை எடுக்க முயன்ற அந்த பத்துத்தலை
இராவணன் அஞ்சி நசுங்க விரலைச் சற்று ஊன்றி, பின் அருள் கொண்டு ஊன்றிய விரலை நெகிழ்த்து
வாள், வாழ்நாள் ஆகியன பணித்தருளினான். தெருக்கள்தோறும் நல்ல தென்றல் வந்து உலவும்
திருத்தேவூரில் பாம்பினைச் சூடிய சிவபிரானாகிய அவனை அடைந்தனம்; அடைந்த காரணத்தால்
துன்பமொன்றும் இலோம்.
குறிப்புரை: தசமுகன்- இராவணன். தேவூர்த் தெருக்களின் நலம் கூறப்பட்டது. சூடி - அணிந்த சிவன்.
Our Lord Civan is manifest along with His consort on the Himalayan mountain.
Here very significant old trees are plenty. Raavanan, the mighty ten-headed king of
Sri Lanka, with egoism, tried his best to lift this Kailash mountain and keep it
aside to make his pathway in the sky while flying. But alas he got his heads crushed
and became terrified because our Lord slightly pressed the top of the mountain with
His toe. Raavanan realised his misdeeds and praised, our Lord by chanting divine
music (Saama Vedic song). On hearing the song, our Lord relented at heart. Then He
graced him and gave a divine sword and more presents to him. In the city of Thiru-thevoor,
filled with the good southern wind, our Lord Civan manifests Himself in the temple
wearing on His body snakes as jewellery. We have reached His holy feet, to take refuge
under Him. Therefore, we have no sufferings in our life.
2364. முந்திக்கண்ணனுநான்முகனும்மவர்காணா
எந்தைதிண்டிறலிருங்களிறுரித்தஎம்பெருமான்
செந்தினத்திசையறுபதமுரல்திருத்தேவூர்
அந்திவண்ணனையடைந்தனமல்லலொன்றிலமே. 9
முந்திக் கண்ணனும் நான்முகனும் அவர்காணா
எந்தை திண்டு இறலிரும் களிறுரித்த எம்பெருமான்
செந்தினத் திசை அறுபதம் முரல் திருத்தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
muntik kaNNanum nAnmukanum(m) avar kANA
entai, tiN tiRal irugkaLiRu uritta emperumAn,
centu inattu icai aRupatam mural tirut tEvUr
anti vaNNanai aTaintanam; allal onRu ilamE.
பொருள்: கண்ணனும் நான்முகனும் அடிமுடிகளைக் காண முந்திக் கொண்டு சென்றும்
காணாத எம்முடைய தந்தை, திண்மையும் திறலும் உடைய பெரிய களிற்றின் தோலை உரித்த எம்
பெருமான்; செந்து என்னும் பண்ணின் இனத்து இசையைத் தேன் வண்டு முரலும் திருத்தேவூர்
அந்திவண்ணனை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் துன்பமொன்றும் இலோம்.
குறிப்புரை: களிற்றிற்குத் திண்மையும் திறலும் இருமையும் அடைகளாயின. செந்து -
பெரும்பண்களுள் ஒன்று. 'செந்து மண்டலி' பிங்கலந்தை. செந்து இனத்து இசை -செந்து என்னும்
பண்வகையைச் சார்ந்த இசையை. 'செந்திலங்கு மொழியவர்' (தி. 2 ப. 3 பா. 10) 'செந்து
நேர்மொழி யார்' (தி. 2 ப. 51 பா.11) , 'செந்திசை பாடல்' (தி. 1 ப. 114 பா. 11). அறுபதம்- வண்டு.
முரல் - ஒலிக்கும். திருத்தேவூர் என்று ஆசிரியரே சிவதலங்களை வழங்குமாறு
உபதேசித்தருளியவாறு உணர்க.
The tutelary two deities Thirumaal and Brahma argued with each other
and decided to see the holy feet or the head of Lord Civan first. They both searched
for years and failed in their efforts. Then they worshipped our father Lord Civan.
Our Lord once peeled the hide of a very big, fat and mighty elephant. He shines like
the red glow of sunset. In the city of Thiru-thevoor, the beetles make soft sound as
of a lute's music known as 'Chendu'. We worship and have taken refuge under His holy
feet. Therefore we have no sufferings in our Life.
2365. பாறுப்புத்தருந்தவமணிசமணரும்பலநாள்
கூறிவைத்ததோர்குறியினைப்பிழையெனக்கொண்டு
தேறிமிக்கநஞ்செஞ்சடைக்கடவுள்தென்தேவூர்
ஆறுசூடியையடைந்தனமல்லலொன்றிலமே. 10
பாறு புத்தரும் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர்
ஆறுசூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
pARu puttarum, tavam aNi camaNarum, palanAL
kURi vaittatu or kuRiyinaip pizai enak koNTu,
tERi, mikka nam cenjcaTaik kaTavuL ten tEvUr
ARu cUTiyai aTaintanam; allal onRu ilamE.
பொருள்: அழிவாராகிய பவுத்தர்களும் தவ வேடம் பூண்ட சமணரும் பலநாட்களாகக்
கூறிவந்த கொள்கையினைப் பிழையெனத் தெளிந்து தேறி நம்முடைய செஞ்சடைக் கடவுளான
சிவபிரானின் தென்தேவூர் கங்கை சூடியை அடைந்தனம். அடைந்த காரணத்தால் துன்பமொன்றும்
இலோம்.
குறிப்புரை: பாறுபுத்தர் - ஓடுகின்ற புத்தர்கள். பாறல் - ஓடுதல். தவம் அணி - தவக்கோலம்
அணிந்த. குறி- குண்டர் சாக்கியர் கூறியதாம் குறியின்மையே சொலீர் (பதி. 137 பா. 10). தேறி - தெளிந்து.
The Buddhists running about, and the Jains who do penance, preach about false
target. We, the devotees, discovered that their utterances were all utterly false and
have recognised that our Lord is the chief one. We have reached Thiru-thevoor where
our Lord is manifest whose fame spreads everywhere in the world. His matted hair is
red and bright. We have taken refuge under Lord Civan who supports the river Ganges
on His head. We, therefore, have no sufferings even in small quantity in our life.
2366. அல்லலின்றிவிண்ணாள்வர்கள்காழியர்க்கதிபன்
நல்லசெந்தமிழ்வல்லவன்ஞானசம்பந்தன்
எல்லையில்புகழ்மல்கியஎழில்வளர்தேவூர்த்
தொல்லைநம்பனைச்சொல்லியபத்தும்வல்லாரே. 11
அல்லல் இன்றி விண்ணாள்வர்கள் காழியர்க்கு அதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன்
எல்லையில் புகழ்மல்கிய எழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.
allal inRi viN ALvarkaL kAziyarkku atipan,
nalla centamiz vallavan, njAnacampantan,
ellai il pukaz malkiya ezil vaLar tEvUrt
tollai nampanaic colliya pattum vallArE.
பொருள்: சீகாழி மக்களுக்குத் தலைவன்; நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன்,
அளவற்ற புகழ் நிறைந்த பழமையான அழகிய திருத்தேவூரில் நம் விருப்பத்திற்கு உரியவனாகிய
சிவபிரானைப் பாடிய திருப்பாடல்கள் பத்தினையும் வல்லவர் அல்லல் இன்றி விண் ஆள்வர்.
குறிப்புரை: அல்லல் இன்றி விண்ணாள்வர்கள் வல்லார் என்க. முற்பாக்களில் யாம்
அல்லல் ஒன்று இலம் என்றருளி, இதில் இப்பத்தும் வல்லார் அல்லல் இலராவர் என்ற உண்மை
உணர்த்தப்பட்டது. இத்திருப்பதிகத்தை நாடோறும் நியமமாகப் பாராயணம் செய்பவர்
அல்லல் அடையார் என்பது திண்ணம். அதிபன் - தலைவன்.
Our young saint Thiru-gnana-Sambandar is the chief of people of Seerkaazhi.
He is a great scholar in pure Tamil language. He praised the originator - Lord who is
manifest in Thiru-thevoor. The city is highly famous all over the universe. These ten
verses are the real praise of our Lord. Those devotees who can chant these ten verses
daily from memory in the presence of our Lord will rule the celestial world without
suffering in their life.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
82ஆம் பதிகம் முற்றிற்று
End of 82nd Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 219 பதிக எண்: 83
83. திருக்கொச்சைவயம் 83. THIRU-KOCH-CHAI-VAYAM
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
பதிகம் 137ஐப் பார்க்க.
பதிக வரலாறு
பதிகம் 137ஐப் பார்க்க.
திருச்சிற்றம்பலம்
2367. நீலநன்மாமிடற்றனிறைவன்சினத்தநெடுமாவுரித்தநிகரில்
சேலனகண்ணிவண்ணமொருகூறுருக்கொள்திகழ்தேவன்மேவுபதிதான்
வேலனகண்ணிமார்கள்விளையாடுமோசைவிழவோசைவேதவொலியின்
சாலநல்வேலையோசைதருமாடவீதிகொடியாடுகொச்சைவயமே. 1
நீல நன்மாமிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகரில்
சேலன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழ ஓசை வேத ஒலியின்
சால நல்வேலை ஓசை தருமாடவீதி கொடி ஆடு கொச்சைவயமே.
nIla nal mAmiTaRRan; iRaivan; cinatta neTumA uritta, nikaril
sElana kaNNi vaNNam oru kURu uruk koL, tikaz tEvan; mEvu patitAn
vElana kaNNimArkaL viLaiyATum Ocai, vizavu Ocai, vEta oliyin,
cAla nal vElai Ocai, taru mATa vIti koTi ATu koccaivayamE.
பொருள்: திருநீலகண்டம் உடைய இறைவன்; கோபத்தை உடைய பெரிய யானையின்
தோலினை உரித்தவன்; தனக்கு நிகரில்லாத சேல் மீன் போன்ற கண்ணியாகிய உமையை
ஒருகூறாகக் கொண்டு திகழ்கின்ற கடவுள், அவர் பொருந்திய பதிதான் ஏதோவெனில், வேல்
போன்ற கூரிய கண்களையுடைய மகளிர் விளையாடும் பண்ணோசையும் விழவினோசையும்,
வேதமுழக்கமும் மிக்க கருங்கடலின் ஓசையும் கலந்து தரும் கொடியாடும் மாடவீதிகளை
உடைய திருக்கொச்சைவயமே.
குறிப்புரை: நீலநன்மாமிடற்றன் - திருநீலகண்டத்தர். சினத்த- கோபத்தை உடைய.
மா- யானை. சேல் அன்ன கண்ணி - சேல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியார்.
கூறு - பாகம். உருகொள் திகழ் தேவன் என்க. கண்ணுக்கு வேல் ஒப்பு. மகளிர்
விளையாட்டோசையும் விழாவினோசையும் வேதமுழக்கமும், கடலோசையும் உடைய வீதிகள்,
பதிதான் கொச்சைவயம் என்க. முதல் 9 பாக்கட்கும் இவ்வாறே கொள்க.
The name of the city Koch-chai-vayam is one of the twelve names of Seerkaazhi.
Our Lord Civan's neck is dark blue in colour. Once He peeled off the hide of a very big ,
sturdy and ferocious elephant. He has embedded His consort Uma Devi on the left side
of His body. Her eyes resemble the carp fish and she is an incomparable goddess.
Our Lord Civan is manifest in the temple in Koch-chai-vayam city. In this city the
noise created by beautiful girls with spear like eyes, playing different games in large
numbers, is always heard. The loud noise of pompous festivals; the noise created by
Vedic scholars chanting the Vedas; the noise created by the waves of the ocean, all
these noises are always heard in the city. Also the flags flying in the streets filled
with big palatial buildings are many. In such a pompous city our Lord Civa
manifests Himself in the temple.
2368. விடையுடையப்பனொப்பில்நடமாடவல்லவிகிர்தத்துருக்கொள்விமலன்
சடையிடைவெள்ளெருக்கமலர்கங்கைதிங்கள்தகவைத்தசோதிபதிதான்
மடையிடையன்னமெங்குநிறையப்பரந்துகமலத்துவைகும்வயல்சூழ்
கொடையுடைவண்கையாளர்மறையோர்களென்றும்வளர்கின்றகொச்சைவயமே. 2
விடை உடையப்பன் ஒப்பில் நடமாட வல்ல விகிர்தத்து உருக்கொள் விமலன்
சடை யிடை வெள் எருக்கமலர் கங்கை திங்கள் தகவைத்த சோதி பதிதான்
மடை இடை அன்னம் எங்கு நிறையப் பரந்து கமலத்து வைகும் வயல்சூழ்
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே
viTai uTai appan; oppu il naTam ATa valla vikirtattu uruk koL vimalan;
caTai iTai veL erukkamalar, kagkai, tigkaL, taka vaitta cOti; patitAn-
maTai iTai annam egkum niRaiyap parantu kamalattu vaikum, vayalcUz,
koTai uTai vaNkaiyALar maRaiyOrkaL enRum vaLarkinRa, koccaivayamE.
பொருள்: எருதினை உடைய எங்கள் அப்பன்; நிகரில்லாத திருக்கூத்து நிகழ்த்த வல்ல
விகிர்த உருக்கொண்ட விமலன்; தன் சடையின் இடையே வெள்ளெருக்கமலரையும், கங்கையையும்,
திங்களையும் பொருந்த வைத்த சோதி; அவருடைய பதிதான் ஏதோவெனில், நீர் பாயும் பள்ள
மடைகளெங்கும் அன்னப் பறவைகள் பரந்து தாமரை மலர்களிலே தங்கும் வயல்கள் சூழ்ந்த,
வள்ளன்மையுடையவர்களும் மறையோர்களும் விருத்தியடைகின்ற திருக்கொச்சைவயமே.
குறிப்புரை: ஒப்புஇல் நடம்- உவமை இல்லாத ஞானத்திருக்கூத்து. விகிர்தம் - மாறுபாடு
(பா.10). சடையிடை, வெள்ளெருக்க மலர்- 'வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பு' (கம்பர்.
யுத்தகாண். இராவணன் வதைப். 237). தக -தகுமாறு, பொருந்த. சோதிபதி - ஆறன்தொகை,
அன்னம்பரந்து கமலத்து வைகும் வயல். கொடையுடைவண்கையாளர்- கொடையில் ஓவார்
குலமும் உயர்ந்த மறையோர்கள் (தி. 2 ப. 122 பா. 1). உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கு
ஒரு நாளும் கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக்காழி (தி.1 ப. 102 பா.1).
Our Lord who is our Father loves to have a bull for His conveyance. His
avocation is to dance in various styles, which are unparalleled. He is our immaculate
Supreme Being used to take various forms. His matted hair is decorated with white
Yarcum flowers, the Ganges river, the baby moon etc. He shines with all these
decorations. Our Lord Civan is manifest in the temple in Koch-chai-vayam. Here the
swans stay in large numbers, resting over the lotus flowers in various fields and ponds.
In this city, Vedic scholars who are good philanthropists do live in large numbers
repeating the Vedic chanting. In such a gorgeous city of Koch-chai-vayam,
our Lord is manifest in the temple of this Koch-chai-vayam city.
2369. படஅரவாடுமுன்கையுடையானிடும்பைகளைவிக்குமெங்கள்பரமன்
இடமுடைவெண்டலைக்கைபலிகொள்ளுமின்பனிடமாயவேர்கொள்பதிதான்
நடமிடமஞ்ஞைவண்டுமதுவுண்டுபாடுநளிர்சோலைகோலுகனகக்
குடமிடுகூடமேறிவளர்பூவைநல்லமறையோதுகொச்சைவயமே. 3
பட அரவாடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்
இட முடை வெண் தலைக் கைபலிகொள்ளும் இன்பனிடம் ஆயவேர் கொள்பதிதான்
நட மிட மஞ்ஞை வண்டு மதுஉண்டு பாடு நளிர் சோலை கோலு கனகக்
குட மிடுகூட ஏறி வளர் பூவை நல்ல மறையோது கொச்சைவயமே.
paTa aravu ATu mun kai uTaiyAn, iTumpai kaLaivikkum egkaL paraman,
iTam uTai veN talaik kai pali koLLum inpan, iTam Aya Er koL patitAn
naTam iTa manjnjai, vaNTu matu uNTu pATu naLir cOlai, kOlu kanakak
kuTam iTu kUTam ERi vaLar pUvai nalla maRai Otu, koccaivayamE.
பொருள்: படமெடுத்து ஆடும் பாம்பினைக் கங்கணமாகக் கொண்ட முன்கையன்;
துன்பங்களைக் களையும் எங்கள் மேலானவன்; வெண்டலையில் பலியேற்றலில் இன்பம்
கொள்பவன் ஆகிய சிவன் அழகாகக் கொள்ளும் பதிதான் ஏதோவெனில், மயில்கள் நடமாட,
வண்டுகள் தேனினை உண்டு பாடும் குளிர்ந்த சோலைகளில் பொற்குடங்கள் நாட்டப் பெற்ற
கூடமேறிக் கூட்டமான நாகணவாய்ப் புள்கள் நன்றாக மறையோதும் திருக்கொச்சைவயமே.
குறிப்புரை: மஞ்ஞை - மயில். மயில் ஆட வண்டு பாடும். நளிர் - குளிர்ச்சி. கூடத்தின் மிசைக் குடம்
இடுதல் முன்பே இருந்தது. பூவை - நாகணவாய்ப்புள். கூடம் ஏறி மறை ஓதும் கொச்சைவயம் என்க.
Our Lord Civan's forearm accommodates the moving snake, which has its hood. He is our
Chief who removes all our misery in life. He loves to beg alms in the broad white skull.
The attractive place Koch-chai-vayam is the place of His stay. In this city peacocks, many in
number, move about and dance. The bees suck honey and make musical noise in the cool
forest area. At the top most floor of palatial buildings a flat area on the top was provided
to fix a golden pot full of water covered with sprays of mango leaves and a coconut atop
of it. Here in the halls, bush myna birds make noise beautifully. In such a beautiful city
of Koch-chai-vayam, our Lord is manifest in the temple.
2370. எண்டிசைபாலரெங்குமிகலிப்புகுந்துமுயல்வித்தசிந்தைமுடுகிப்
பண்டொளிதீபமாலையிடுதூபமோடுபணிவுற்றபாதர்பதிதான்
மண்டியவண்டன் மிண்டிவருநீரபொன்னிவயல்பாயவாளைகுழுமிக்
குண்டகழ்பாயுமோசைபடைநீடதென்னவளர்கின்றகொச்சைவயமே. 4
எண் திசை பாலர் எங்கும் இகலிப் புகுந்து முயல் வித்த சிந்தை முடுகிப்
பண்டு ஒளி தீபமாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன் மிண்டி வருநீர பொன்னி வயல் பாய வாளை குழுமிக்
குண்ட கழ்பாயும் ஓசை படைநீட தென்ன வளர்கின்ற கொச்சைவயமே.
eN ticai pAlar egkum ikalip pukuntu, muyal vitta cintai muTuki,
paNTu, oLi tIpa mAlai, iTu tUpamOTu paNivu uRRa pAtar patitAn-
maNtiya vaNTan miNTi varum nIra ponni vayal pAya, vALai kuzumik
kuNTu akaz pAyum Ocai paTai nITa tenna vaLarkinRa koccaivayamE.
பொருள்: எட்டுத் திசையிலும் உள்ள காவலர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர்
போட்டியிட்டு முந்திக் கொண்டு புகுந்து முன்பு தீபம், தூபம், பூமாலைகளுடன் வழிபட்டுப்
பணிந்த திருவடிகளை உடையவர் பதிதான் ஏதோவெனில், அடித்துக் கொண்டுவரும்
வண்ணடல் நிறைந்து வரும் காவிரியின் நீர், வயலிற்பாய, வாளைமீன்கள் திரண்டு குழிந்த
பள்ளங்களில் வீழும் ஓசை வாளினை ஏந்தி காலாட்படை குழுமிய தொக்கும் திருக்கொச்சைவயமே.
குறிப்புரை: பாலர் - பாலகர். இகலி- பகைத்து. வழிபடு முறையுட் சிறிது உணர்த்திற்று.
ஒளி தீபமாலை -தீபாவளி. பாதர் - திருவடியுடையவர். குண்டு - ஆழம்.
The regents who guard and control the eight cardinal points of the universe
as world protectors, are Indiran, Agni, Yaman, Viruthi, Varunan, Vaayu, Kuberan and
Easan Murthy. They all visit the city of Koch-chai-vayam. They all join together
with mental happiness and pour the oil into the lamps in an orderly manner and light it.
Then, they prostrate at the holy feet of our Lord Civan and worship Him. Our Lord
Civan's holy place is Koch-chai-vayam. In this city the Cauvery river brings sediments
along with sand. The water of the river flows into the fields in plenty. Here the fish
in large numbers join together and play in deep waters creating a loud noise. This noise
is similar to the noise of hostile armies proceeding for a war.
2371. பனிவளர்மாமலைக்குமருகன்குபேரனொடுதோழமைக்கொள்பகவன்
இனியன அல்லவற்றையினிதாகநல்குமிறைவன்னிடங்கொள்பதிதான்
முனிவர்கடொக்குமிக்கமறையோர்களோமம்வளர்தூமமோடியணவிக்
குனிமதிமூடிநீடுமுயர்வான்மறைத்துநிறைகின்றகொச்சைவயமே. 5
பனி வளர் மாமலைக்கு மருகன் குபேரனொடு தோழமைக் கொள் பகவன்
இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான்
முனிவர்கள் ஒக்குமிக்க மறையோர்கள் ஓமம்வளர் தூமம் ஓடி அணவிக்
குனி மதிமூடி நீடும் உயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே.
pani vaLar mAmalaikku marukan, kupEranoTu tOzamaik koL pakavan,
iniyana allavaRRai initu Aka nalkum iRaivan(n), iTamkoL patitAn
munivarkaL okku, mikka maRaiyOrkaL Omam vaLar tUmam OTi aNavi,
kunimati mUTi, nITum uyar vAn maRaittu niRaikinRa koccaivayamE.
பொருள்: இமாசலகுமாரனுக்கு மருமகன்; குபேரனோடு தோழமை கொண்ட பகவன்; இனியன
அல்லாதவற்றையும் இனியனவாக ஆக்கி நல்கும் இறைவன்; அவன் இடங்கொள் பதிதான் யாதெனில்,
முனிவர்கள் கூடியிருக்க, மிகுந்த மறையோர்கள் ஆற்றும் வேள்வியில் எழும் புகை ஆகாயத்தை முட்டி
வளைந்த மதியையும் மூடி உயர்வானையும் மறைத்து நிறைகின்ற திருக்கொச்சைவயமே.
குறிப்புரை: பனி.... மலைக்கு. இமாசலராசனுக்கு. குபேரன் சிவபிரானுக்குத் தோழனாதல்
பிரசித்தம் . இனிக்காதவற்றையும் இனியவாகச் செய்தருளும் பெருமான். பிறப்பு இன்னாதது
என்பது சர்வமத சம்மதம். அதனை இனியதாகப் பலவுயிரும் விரும்புகின்றன. அவ்விருப்பம் மீண்டும்
பிறப்பதற்கு உரிய வினையாகின்றது. இது திருவருட்செயல். அணவி - கிட்டி. 'வேள்விப் புகையால்
வானம் இருள்கூர் வெண்காடே' (பதி. 197 பா. 7).
Our Lord Civan is the son-in-law of the king of snow-capped Himalayan mountain.
Our God mentioned by Thiru-gnana-Sambandar as Bagavan is a close friend of Kuberan,
the god of wealth. He bestows all good grace on His devotees even though they do not
chant pleasing praise. In this city, Vedic scholars create the sacrificial fire
along with the sages. The smoke arising out of the sacrificial fire rushes and spreads
over the sky and makes the baby moon invisible. Also the entire sky becomes invisible .
This gorgeous city is Koch-chai-vayam where our Lord Civan is manifest.
2372. புலியதள்கோவணங்களுடையாடையாகவுடையான்நினைக்குமளவில்
நலிதருமுப்புரங்களெரிசெய்தநாதன்நலமாவிருந்தநகர்தான்
கலிகெடஅந்தணாளர்கலைமேவுசிந்தையுடையார்நிறைந்துவளரப்
பொலிதருமண்டபங்களுயர்மாடநீடுவரைமேவுகொச்சைவயமே. 6
புலியதள் கோவணங்கள் உடைஆடையாக உடையான் நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா விருந்த நகர்தான்
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை உடையார் நிறைந்துவளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடுவரை மேவு கொச்சைவயமே.
puli ataL kOvaNagkaL uTai ATai Aka uTaiyAn, ninaikkum aLavil
nalitaru muppuragkaL ericeyta nAtan, nalamA irunta nakartAn-
kali keTa antaNALar, kalai mEvu cintai uTaiyAr, niRaintu vaLara,
politaru maNTapagkaL uyar mATam nITu varai mEvu koccaivayamE.
பொருள்: புலியின் தோலையும் கோவணத்தையும் உடையாக உடையன்; நினைத்த
மாத்திரத்தில் முப்புரங்களையும் எரித்த தலைவன்; அவன் மகிழ்ந்து இருந்த தலம் யாதெனில்,
வறுமை கெட வேள்விசெய்யும் அந்தணாளர்; வேதம் முதலிய கலைகள் பற்றிய சிந்தனை
உடையவர்கள் நிறைந்து மேலோங்க, பொலிவுடைய மண்டபங்கள், உயர்மாடங்கள்
மலைபோல உயர்ந்து அமைந்துள்ள திருக்கொச்சைவயமே.
குறிப்புரை: அதள் - தோல். உடையாடை (ப.217 பா.2). கலி - வறுமை. அந்தணாளர் – அழகும்
தண்மையும் ஆள்பவர். கலை - வேத முதலிய கலைகள்.
Our Lord Civan wears around His waist tiger's skin as His dress. He uses
the forelap cloth to cover His loins. He is the Hero, who in the fraction of a
second, destroyed the three fortresses of the asuras who inflicted misery on the
devas as well as on the world. In this city, Vedic scholars making sacrificial
fire for chasing kali (suffering and sorrow) from this world and people of
artistic leanings are many. The city contains beautiful halls open on one side
and connected with a temple, and very many palatial buildings and these together
look like a range of mountains, such is the beauty of Koch-chai-vayam. This city
is Koch-chai-vayam where our Lord Civan is manifest.
7ஆவது பாடல் கிடைக்கப்பெறவில்லை.
2373. மழைமுகில்போலுமேனியடல்வாளரக்கன்முடியோடுதோள்கள்நெரியப்
பிழைகெடமாமலர்ப்பொன்னடிவைத்தபேயொடுடனாடிமேயபதிதான்
இழைவளரல்குல்மாதரிசைபாடியாடவிடுமூசலன்னகமுகின்
குழைதருகண்ணிவிண்ணில்வருவார்கள்தங்களடி தேடுகொச்சைவயமே. 8
மழை முகில் போலு மேனியடல் வாளரக்கன் முடியோடு தோள்கள் நெரியப்
பிழை கெட மாமலர்ப் பொன்னடி வைத்த பேயொடு உடனாடி மேய பதிதான்
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடிஆட விடுமூசலன்ன கமுகின்
குழை தருகண்ணி விண்ணில் வருவார்கள் தங்களடி தேடு கொச்சைவயமே.
mazai mukil pOlum mEni aTal vAL arakkan muTiyOTu tOLkaL neriya,
pizai keTa, mA malarppon aTi vaitta pEyoTu uTan ATi mEya patitAn-
izai vaLar alkul mAtar icai pATi ATa, iTum Ucal anna kamukin
kuzai taru kaNNi viNNil varuvArkaL tagkaL aTi tETu koccaivayamE.
பொருள்: கார்மேகம் போன்ற மேனியையும் வெற்றி படைத்த வாளையும் கொண்ட அரக்கன்
இராவணனின் பத்து முடிகளுடன் இருபது தோள்களும் நெரிய, அவன் செய்த பிழை கெட தாமரை
போன்ற பொன்னடியை வைத்த, பேய்க்கணங்களுடன் ஆடுவோன் பொருந்திய பதிதான் யாதெனில்,
மேகலை முதலிய அணிகள் அணிந்த அல்குலை உடைய மாதர்கள் இசைபாடியாட, கமுகாகிய ஊசலில்
கட்டிய கயிறு விண்ணில் வருவார்களின் அடியைத் தடுக்கும் திருக்கொச்சைவயமே.
குறிப்புரை: மழை முகில்- மழையைப் பொழியும் மேகம். அரக்கன் -இராவணன்.
இராவண்ணன் என்றவாறு. பிழை - மதியாது மலையெடுத்த குற்றம். இழை -மேகலை முதலியன.
கண்ணி - வலை. புட்களைப் படுக்கும் முடிப்புக் கயிறுமாம். கமுகின் குழை - (தளிர்) தருக்கண்ணி,
விண்ணில் வருவோர் காலைச்சிக்கச் செய்யும் என்றதால் அதன் உயர்ச்சி கூறிற்று.
The king of Sri Lanka, Raavanan, with his body like black clouds which carry
water in the sky, and a strong sword at his waist, had his ten heads and shoulders
crushed under mount Kailash, the abode of our Lord. Our Lord pressed the top of His
mountain, with His flower like holy feet, very slightly. Raavanan realised his egoism
and begged pardon to our Lord for his misdeed. His avocation is to dance in the company
of fiends.In this city, very attractive girls wearing jeweled girdle of seven or eight
strands over their waist dance and sing in the music halls. In this city, the areca palm
trees in large numbers grow very tall reaching the sky, with their leaf stalks waving
around the legs of the celestials who move about in the sky. Such is the richness
of the city.
2374. வண்டமர்பங்கயத்துவளர்வானும்வையம்முழுதுண்டமாலுமிகலிக்
கண்டிடவொண்ணுமொன்றுகிளறிப்பறந்துமறியாதசோதிபதிதான்
நண்டுணநாரைசெந்நெல்நடுவேயிருந்துவிரைதேரமோதுமதுவிற்
புண்டரிகங்களோடுகுமுதம்மலர்ந்துவயல்மேவு கொச்சைவயமே. 9
வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுதுண்டமாலும் இகலிக்
கண்டிட ஒண்ணு மொன்று கிளறிப் பறந்தும் அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரை செந்நெல் நடுவே இருந்து இரை தேரமோது மதுவிற்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல்மேவு கொச்சைவயமே.
vaNTu amar pagkayattu vaLarvAnum, vaiyam muzutu uNTa mAlum, ikali,
"kaNTiTa oNNum" onRu kiLaRi, paRantum, aRiyAta cOti patitAn
naNTu uNa, nArai cennel naTuvE iruntu; irai tEramOtu maTuvil
puNTarikagkaLOTu kumutam malarntu--vayal mEvu koccaivayamE.
பொருள்: வண்டுகள் அமர்கின்ற தாமரை மலரில் இருக்கும் நான்முகனும் வையமுண்ட
திருமாலும் தம்முள் மாறுபட்டு முறையே முடியும் அடியும் காண முனைந்து வானத்தில் பறந்தும்
பூமியைக் கிளறியும் அறியவியலாத நீதியினது பதிதான் யாதெனில், நண்டினை உண்ண
வேண்டி நாரை செந்நெல் வயலின் நடுவேயிருந்து இரைதேட, போதுகளில் தேனுடன்
தாமரைகளோடு குமுதங்களும் மலரும் வயல்கள் பொருந்திய திருக்கொச்சைவயமே.
குறிப்புரை: வளர்வான் - பிரமன். மால் கிளறி. வளர்வான் பறந்தும். நண்டு உண்ண.
நாரை இரையைத் தேர (ஆராய). புண்டரிகம் - தாமரை. குமுதம் - ஆம்பல்.
The demigod Brahma rests in the lotus flower where long bees swarm in large
numbers. The tutelary god Thirumaal once devoured the entire world. They both had
different ideas about who was superior to the other. Then they decided that they
should see the head and feet of our Lord Civan, and the one who saw them first was
superior. Thirumaal took the form of a swine and Brahma became the swan and one went
deep down the earth and the other over the sky. They both could not see the head
and feet. Then our Lord Civan took the form of supernal effulgence, and He resides
in the city of Koch-chai-vayam. In this city, there are rich fields and ponds always
full of water. The cranes stand in the midst of red paddy fields and search for their
food such as crabs. The lotus flowers are full of honey, blossom in large numbers
in the fields. Along side the lily flowers also blossom in the fields. Such a delightful
city is Koch-chai-vayam where our Lord Civan is manifest.
2375. கையினிலுண்டுமேனியுதிமாசர்குண்டரிடுசீவரத்தினுடையார்
மெய்யுரையாதவண்ணம்விளையாடவல்லவிகிர்தத்துருக்கொள்விமலன்
பையுடைநாகவாயிலெயிறாரமிக்ககுரவம்பயின்றுமலரச்
செய்யினில்நீலமொட்டுவிரியக்கமழ்ந்துமணநாறுகொச்சைவயமே. 10
கையினில் உண்டு மேனியுதிமாசர் குண்டரிடு சீவரத்தின் உடையார்
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து மணநாறு கொச்சைவயமே.
kaiyinil uNTu mEni utir mAcar kuNTar, iTu cIvarattin uTaiyAr,
mey uraiyAta vaNNam viLaiyATa valla vikirtattu uruk koL vimalan-
pai utai nAka vAyil eyiRu Ara mikka kuravam payinRu malara,
ceyyinil nIlam moTTu viriyak kamazntu maNam nARu koccaivayamE.
பொருள்: உணவினைக் கையில் வாங்கி ஏந்து உண்டு, உடலில் உதிரும் அழுக்குடைய
சமணக் குண்டர்கள் துவரூட்டிய உடையராகிய பவுத்தர்கள் ஆகிய புறச் சமயத்தினர் சமயாதீதனான
பரசிவத்தின் உண்மை உணரமாட்டார்; அவர்களுக்கு மெய்ப்புலப்படா வண்ணம் விளையாட
வல்ல விகிர்தத்து உருவினைக் கொள்ளும் மலமற்றவன் வாழும் பதி யாதெனில், நச்சுப்
பையினையுடைய நாகத்தின் வாயில் உள்ள பல்லினை ஒத்த பூக்களைக் குரவம் மிகுதியாக
மலர, வயல்களில் நீலோற்பவம் மொட்டு விரியக் கமழ்ந்து மணம் நாறும் திருக்கொச்சைவயமே.
குறிப்புரை: மாசர் - அழுக்கர். புறப்புறச்சமயத்தார்க்குச் சமயாதீதனான பரசிவத்தின்
மெய் புலப்படாமை கூறிற்று. எயிறு - பல். பயின்று - மிகுதியாய். செய் - கழனி. (மொட்டு - அரும்பு).
கமழ்ந்து - பரந்து. வியலிடம் கமழ் (புறநா.50).
The Jains do live in this city. They accept alms in their hands and eat it
from their hands. Therefore, the dirt and dust from the body falls now and then. Some
are strong and stout people. The Buddhist monks wear salmon coloured dresses. They both
preach undesirable and false wisdom. Our Lord Civan used to take different kinds of
forms according to need. He is manifest in Koch-chai-vayam. In this city, common
bottle flower blossoms. This flower looks like the tooth and gums of the hooded
snake. In the fields blue Indian water lily blossoms in large numbers. Because of
the blossoming of these two flowers sweet smell spreads everywhere in the city
Koch-chai-vayam. In such a gorgeous city our Lord is manifest.
2376. இறைவனையொப்பிலாதஒளிமேனியானையுலகங்களேழுமுடனே
மறைதருவெள்ளமேறிவளர்கோயில்மன்னியினிதாஇருந்தமணியைக்
குறைவிலஞானமேவுகுளிர்பந்தன்வைத்ததமிழ்மாலைபாடுமவர்போய்
அறைகழலீசனாளும்நகர்மேவியென்றுமழகாஇருப்பதறிவே. 11
இறைவனை ஒப்பிலாத ஒளிமேனியானை உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறிவளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த தமிழ்மாலை பாடும் அவர்போய்
அறை கழல் ஈசனாளும் நகர் மேவிஎன்று மழகா இருப்பதறிவே.
iRaivanai, oppu ilAta oLi mEniyAnai, ulakagkaL Ezum uTanE
maRaitaru veLLam ERi vaLar kOyil manni initA irunta maNiyai,
kuRaivu ila njAnam mEvu kuLir pantan vaitta tamizmAlai pATumavar, pOy,
aRai kazal Ican ALum nakar mEvi, enRum azakA iruppatu aRivE.
பொருள்: இறைவனை, ஒப்பு இலாத ஒளிமேனியான் தன்னை, ஏழு உலகங்களும் ஒருசேர
மறையுமாறு ஊழிக்காலப் பெருவெள்ளம் மேவியபோது, அழியாமல் நின்ற திருக்கொச்சைவயம்
திருக்கோயிலில் இனிதாக நிலைத்து இருந்த மணியைக் குறைவிலாத நிறைந்த ஞானம் மேவும்
அருளுடை திருஞானசம்பந்தன் பாடி வைத்த தமிழ்மாலையைப் பாடுமவர் ஒலிக்கும் கழலணிந்த
ஈசன் ஆளும் சிவலோகத்திற்குப் போய் அங்கு என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பர்; இதனை அறியும்
அறிவே அறிவு.
குறிப்புரை: ஒப்பு இலாத ஒளி மேனியான்- உவமையில்லாத பிரகாசத்தையுடைய திருமேனியை
உடையவன். 'அங்கு இங்கு என்னாதபடி எங்கும் பிரகாசமாய்' (தாயுமான.1). விளங்குவது
வேறொன்றில்லாமையால் ஒப்பின்மை தெளிவாம். மறைக்கும் வெள்ளம் ஊழிப்பிரளயம்.
Our Lord Civan is manifest everywhere in all directions in the universe since He
is all pervasive. He shines in supernal effulgence. At the time of the deluge the whole
universe was immersed in water, except the Thiru-th-thoni mountain temple which alone
floated. Our Lord Civan manifesting Himself in this temple enjoyed everything.
Thiru-gnana-Sambandar who is bestowed with divine knowledge chanted these famous
garlands of Tamil, in ten verses. Those devotees who can memorise all these ten
verses, chant them before our Lord will be blessed by Him. They will reach the
Siva Loka, where our Lord Civan wearing the tinkling anklets rules over. There
they will happily stay with divine subtle body.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
83ஆம் பதிகம் முற்றிற்று
End of 83rd Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 220 பதிக எண்:84
84.திருநனிபள்ளி 84.THIRU-NANI-PALLI
பண்: காந்தாரம் Pann: Kaanthaaram
திருத்தல வரலாறு
திருநனிபள்ளி என்னும் இத்திருத்தலமானது திருஞானசம்பந்த சுவாமிகளுடைய
அருமைத் தாயாரின் பிறப்பகம் ஆகும். இது இக்காலம் புஞ்சை கடாரங் கொண்டான் என்று
வழங்கப்பெறுகின்றது. இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள 43ஆவது தலமாகும். மயிலாடு
துறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இறைவரின் திருப்பெயர் நற்றுணையப்பர். இறைவியாரின்
திருப்பெயர் மலையான்மடந்தை. இத்தலம் முன் பாலை நிலமாய் இருந்தது. ஞானசம்பந்தப்
பெருந்தகையார் இதை நெய்தல் நிலமாகுமாறு பாடினார். பின்னர் இதையே கானகமும் வயலுமாக
ஆக்கினர். இச்செய்தி,
'நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே
போதின் மலிவயல் ஆக்கிய கோன்'
என்னும் பதினொன்றாந் திருமுறையிலுள்ள ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் (செய்யுள் 17)
கூறப்பெற்றுள்ளது.
ஞானசம்பந்தர் பாலையை நெய்தலாகப் பாடியதை 'பாலை நெய்தல் பாடியதும்' என்னும்
திருக்களிற்றுப்படியார் பாடலாலும் அறியலாம். இக்கோயிலுக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று,
திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று, சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று ஆக மூன்று
பதிகங்கள் இருக்கின்றன. திருநாவுக்கரசு நாயனார் இக்கோயில் பதிகம் ஐந்தாம் திருப்பாட்டில்
சமணர்கள், தமக்கு நஞ்சு கலந்த சோறு கொடுத்ததை,
'வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலாவமணர் தந்த
நஞ்சமுதாக்கு வித்தார் நனிபள்ளியடிகளாரே'
எனக் குறித்துள்ளார்கள்.
பதிக வரலாறு
திருஞானசம்பந்தர் திருவருள்பெற்றுச் சீகாழியில் எழுந்தருளியுள்ள உண்மையைக்
கேட்டறிந்தனர். உலகோர் பலர் 'தாவில் சராசரங்களெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையாரை
மணிவயிற்றில் உலகுய்ய வைத்து வழங்கிய பகவதியார்' திருஅவதாரம் செய்த தலமாகிய
திருநனிபள்ளியின் மறையவரும் அதைக் கேட்டுணர்ந்தனர். அதன்பின் சீகாழியை அடைந்தனர்.
ஆளுடை பிள்ளையார் அடிமலர் வணங்கினர். தாம் வாழும் திருப்பதிக்கு எழுந்தருளும்படி
வேண்டினர். நாயனாரும் அதற்கு இசைந்து புறப்பட்டுத் திருநனிபள்ளியை அணுகினார்.
அவரை அருளிய சிவபாதவிருதயர் அதுதான் திருநனிபள்ளி என்றனர். அதுகேட்ட ஞானப்
பிள்ளையார் இத்திருப்பதிகத்தைப் பாடி, அத்தலத்தை அடைந்து திருக்கோவிலினுட்புகுந்து
வழிபட்டார். இத்திருப்பதிகமே பாலையாயிருந்த அத்திருநனிபள்ளியை நெய்தலாக்கிற்று'
என்பர் பெரியோர். 'ஒண்கெழுவு ஞானத்தினரறிய மன்னு நனிபள்ளியது, பாலைதனை
நெய்தலாக்கியும்' என நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருஉல மாலையிலும், 'ஓடஞ்
சிவிகை உலவாக்கிழியடைக்கப் பாடல் பனைதானம் பாலை நெய்தல்' எனத் திருக்களிற்றுப்
படியாரிலும் (70) உள்ளமை அறிக.
திருச்சிற்றம்பலம்
2377. காரைகள்கூகைமுல்லைகளவாகையீகைபடர்தொடரிகள்ளிகவினிச்
சூரைகள்பம்மிவிம்முசுடுகாடமர்ந்தசிவன்மேயசோலைநகர்தான்
தேரைகளாரைசாயமிதிகொள்ளவாளைகுதிகொள்ளவள்ளைதுவள
நாரைகளாரவல்வாரிவயன்மேதிவைகுநனிபள்ளிபோலுநமர்காள். 1
காரைகள் கூகை முல்லை களவாகை ஈகை படர்தொடர் இகள்ளி கவினிச்
சூரைகள் பம்மி விம்முசுடு காடமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரைசாய மிதிகொள்ள வாளைகுதி கொள்ள வள்ளை துவள
நாரைகள் ஆரவல் வாரிவயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.
kAraikaL, kUkai, mullai, kaLa, vAkai, Ikai, paTar toTari, kaLLi, kavini;
cUraikaL pammi; vimmu cuTukATu amarnta civan mEya cOlai nakartAn-
tEraikaL Arai cAya mitikoLLa, vALai kutikoLLa, vaLLai tuvaLa,
nAraikaL Araval vAri, vayan mEti vaikum nanipaLLi pOlum; namarkAL!
பொருள்: காரைச் செடிகள், கூகைமுல்லைகள், கனவாகைகள், படர்கின்ற முட்கொடிகள்,
கள்ளிச்செடிகள் முதலிய தாவரங்கள் அழகு செய்ய, சூரைகள் செறிந்துள்ள சுடுகாட்டில் தங்கும்
சிவன் பொருந்திய சோலைநகர்தான் எதுவெனில், தேரைகள் ஆரைப்புற்கள் சாயுமாறு மிதிக்க,
வாளைமீன்கள் குதிக்க,வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல்மீன்களை வாரியுண்ண,
வயல்களில் எருமைகள் தங்கும் நனிபள்ளியாம், நம்மவர்களே!
குறிப்புரை: காரை முதலிய தாவரங்கள் சுடுகாட்டில் மிக்குள்ளன. 'முட்காற்காரை' (புறம். 258).
கள- களா. 'கருவையிலும் சிங்கையிலும் களவாண்டான்' (தனிப்பாடல்). ஈகை - இண்டஞ்செடி. ஈங்கை -
புலி தொடக்கி எனலுமுண்டு. 'இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத்து' . தொடரி - முட்செடி. 'கடுவும் தான்றியும்
கொடுமுள் தொடரியும்'. சூரை - 'கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து ' மணிமேகலை 6-81. பம்மி -
செறிந்து. 'குளத்தினில் ஆரை படர்ந்து' திருமந்திரம் 2911. 'மகளிர் வள்ளை கொய்யும்' பதிற். 29-2.
Oh! My dear relatives and people!! Several vegetations such as Kaarai, Kookai,
Mullai, Kalavaagai, and Eekai spread as creepers, also Thodari and Kalli cause admirable
beauty all around. Here our Lord Civan is manifest in the burning ghat situated in this
area; hedge caper shrub growing all around the burning ghat is plenty, However the city
is surrounded by man-made gardens. Here the Indian toads jump over the common mountain
ebony and press and destroy the creepers. On seeing this, the swordfish jumps over the
frog, catches them and eats them. The creepers get destroyed by the fish. On seeing the
swordfish the herons come near and eat the fish in the watery fields. Here the buffaloes
in large numbers enter into the deep waters and enjoy taking bath here.
2378. சடையிடைபுக்கொடுங்கியுளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணியயலே
இடையிடைவைத்ததொக்குமலர்தொத்துமாலையிறைவன்னிடங்கொள்பதிதான்
மடையிடைவாளைபாயமுகில்வாய்நெரிந்துமணநாறுநீலமலரும்
நடையுடையன்னம்வைகுபுனலம்படப்பைநனிபள்ளிபோலுநமர்காள். 2
சடை இடைபுக்கு ஒடுங்கி உளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணியயலே
இடை இடை வைத்தது ஒக்குமலர் தொத்து மாலை இறைவன் இடங்கொள் பதிதான்
மடை இடை வாளை பாய முகில்வாய் நெரிந்து மண நாறு நீலமலரும்
நடை உடை அன்னம் வைகுபுனலம் படப்பை நனிபள்ளி போலுநமர் காள்.
caTai iTai pukku oTugki uLa tagku veLLam, vaLar tigkaL kaNNi, ayalE
iTai iTai vaittatu okkum malar tottu mAlai, iRaivan(n) iTam koL patitAn-
maTai iTai vALai pAya, mukil vAy nerintu maNam nARu nIla malarum,
naTai utai annam vaiku, punal am paTappai nanipaLLi pOlum; namarkAL!
பொருள்: சடையின் இடையே புகுந்து அங்கே ஒடுங்கித் தங்கும் கங்கைவெள்ளம் வளருகின்ற
பிறைச்சந்திரனெனும் தலைமாலை அதற்குப் பக்கத்தில் வைத்தது போன்ற பல மலர்க்கொத்து மாலைகளை
அணிந்த இறைவன் இடங்கொண்டிருக்கின்ற பதிதான் எதுவெனில், நீர்மடையிடையே வாளைமீன்கள்
பாய நீலமலர் மொட்டு வாய் நெகிழ்ந்து மணம் பரக்க நாற மலருவதும், அழகாக நடக்கும் அன்னப்
பறவைகள் தங்கியிருப்பதுமாகிய வயற் படப்பைகள் உடைய நனிபள்ளியாம்! நம்மவர்களே!
குறிப்புரை: உள்ள + தங்கு + வெள்ளம் எனப் பிரிக்க. படப்பை- தோட்டம். பக்கம் எனலுமாம்.
அன்னத்தின் நடை உவமிக்குஞ் சிறப்புடையது. ஆதலின், நடையுடையன்னம் எனப்பட்டது.
The river Ganges enters the entangled locks of hair of our Lord Civan, stays
there and is supported. Also the baby moon stays along with the river Ganges in the
entangled locks of hair. In between these two are beautiful flower garlands of different
kinds of flowers. This Lord is manifest in Kadaram-kondan. In this city in the water
channels flowing rapidly, the sea fish jumps through the sluices. There the Indian
purple water lily blossoms and the sweet smell spreads all around. Also in this city
gardens are many and ponds are many from which water flows through the sluices.
Here beautiful swans move near the sluices. This gorgeous city is Kadaram-kondan.
2379. பெறுமலர்கொண்டுதொண்டர்வழிபாடுசெய்யலொழிபாடிலாதபெருமான்
கறுமலர்கண்டமாகவிடமுண்டகாளையிடமாயகாதல்நகர்தான்
வெறுமலர்தொட்டுவிட்டவிசைபோனகொம்பின்விடுபோதலர்ந்தவிரைசூழ்
நறுமலரல்லிபுல்லியொலிவண்டுறங்குநனிபள்ளிபோலுநமர்காள். 3
பெறுமலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடிலாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை இடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டு விட்ட விசைபோன கொம்பின் விடுபோது அலர்ந்த விரைசூழ்
நறுமலர் அல்லிபுல்லி ஒலிவண்டு உறங்கு நனிபள்ளி போலுநமர் காள்.
peRu malar koNTu toNTar vazipATu ceyyal ozipATu ilAta perumAn,
kaRumalar kaNTam Aka viTam uNTA kALai, iTam Aya kAtal nakartAn-
veRumalar toTTu viTTa vicai pOna kompin viTu pOtu alarnta virai cUz
naRumalar alli pulli, oli vaNTu uRagkum nanipaLLi pOlum; namarkAL!
பொருள்: நெருங்கிய மலர்கள் கொண்டு தொண்டர்கள் வழிபாடு செய்தலாகிய தொண்டினை
ஒழியாது கொள்ளும் பெருமான்; கருங்குவளை மலரினைக் காட்டும் மிடறாக விடத்தினை உண்ட காளை
ஆகிய சிவனின் காதல் நகர்தான் ஏதோவெனில், தேனை விரும்பிய வண்டுகள் முன்னரே பூத்து மணம்
நீங்கிய வெறும் பூக்களைத் தொட்டுத் தங்கியதால் தாழ்ந்து (அவ்வண்டுகள் தேனின்மை கண்டு
எழுந்துவிட்டதால்) ஓங்கி எழுந்து விசையுடன் சென்ற மலர்க்கொம்புகளில், அவ்வண்டுகள் தொடாது
விடுபோதுகள் பூத்தமையால் மணம் சூழும். பரவும் அந்த மணத்தினால் பூத்த அம்மலர்களின்
அகவிதழ்களைப் பொருந்தி ஒலிக்கின்ற வண்டுகள் தேனை உண்டு உறங்கும் நனிபள்ளியாகும்!
நம்மவர்களே!
குறிப்புரை: தேனை விரும்பிய வண்டுகள் முன்னரே பூத்து மணம் நீங்கிய வெறும்பூக்களைத்
தொட்டுத் தங்கியதால் தாழ்ந்து எழுந்துவிட்டதால் ஓங்கி எழுந்து விசையுடன் சென்ற மலர்க்கொம்புகளில்
அவ்வண்டுகள் தொடாது விட்ட போதுகள் பூத்தமையால் மணம் பரவிற்று. பரவிய அம்மணத்தால்
பூத்த மலர்களின் அகவிதழ்களைப் பொருந்தி வண்டுகள் ஒலி அடங்கித் தேனுண்டு உறங்கின.
இவ்வியற்கையை ஆசிரியர் அருளிய திறத்தை உணர்ந்து மகிழ்க.
The devotees of the city collect the flowers available and carry them to the temple
and strew them over the feet of our Lord. He accepts all the flowers without rejecting any.
He is our Chief. His throat is dark blue and is similar to the purple Indian water lily,
because He, the Hero, imbibed the poison. Civan desired to manifest Himself in the temple
in Kadaram-kondan. Here the honey bees fly near flowers where there is no honey. However,
they make heavy musical noise because of which the buds blossom. Here the bees suck the
sweet honey and take rest and sleep inside the petals. Such manmade gardens are many
in the city.
2380. குளிர்தருகங்கைதங்குசடைமாடிலங்குதலைமாலையோடுகுலவி
ஒளிர்தருதிங்கள்சூடியுமைபாகமாகவுடையானுகந்தநகர்தான்
குளிர்தருகொம்மலோடுகுயில்பாடல்கேட்டபெடைவண்டுதானுமுரல
நளிர்தருசோலைமாலைநரைகுருகுவைகுநனிபள்ளிபோலுநமர்காள். 4
குளிர் தரு கங்கைதங்கு சடைமாடு இலங்கு தலைமாலையோடு குலவி
ஒளிர் தரு திங்கள் சூடி உமைபாகமாக உடையான் உகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டுதானும் முரல
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்.
kuLir taru kagkai tagku caTaimATu, ilagku talaimAlaiyOTu kulavi,
oLir taru tigkaL cUTi, umai pAkam Aka uTaiyAn ukanta nakartAn-
kuLirtaru kommalOTu kuyil paTal kETTa peTaivaNTu tAnum murala,
naLir taru cOlai mAlai narai kuruku vaikum nani paLLipOlum; namarkAL!
பொருள்: குளிர்ந்த கங்கை தங்கும் சடையின் அருகில் விளங்கும் தலைமாலையோடு
கலந்து ஒளிர்கின்ற பிறையை அணிந்து உமையைப் பாகமாக உடையவன் ஆகிய இறைவன்
உகந்த நகர்தான் யாதெனில், குளிர்ச்சியைத்தரும் கொம்பின்மீது குயிலின் பாடலைக் கேட்ட
வண்டு தானும் முரல, குளிர்ச்சி தருகின்ற சோலையில் மாலையில் வெளுத்த குருகு தங்கும்
நனிபள்ளியாகும்! நம்மவர்களே!
குறிப்புரை: மாலையோடு குலவிப் பிரகாசிக்கும் பிறைசூடி, கொம்பில் என்றே மதுரைத்
திருஞானசம்பந்தப்பிள்ளை பதிப்பில் உள்ளது. சுவாமிநாத பண்டிதரும் வேறு சிலரும் பதித்தவற்றுள்,
கொம்மல் என்றுள்ளது. குளிர்ச்சியைத்தரும் கும்மிப் பாடலொடு குயிலின் பாடலைக் கேட்ட வண்டு என்று
கூறுவதினும் கொம்பு என்னும் இசைக்கருவியின் ஒலியொடு குயிலின் பாடலைக் கேட்ட வண்டு
எனக்கூறுவது சிறந்தது.
Our Lord Civan entertains the cool Ganges in His entangled hair along with the head
garland of cassia flowers. He has the ornament of the bright young moon. He has embedded His
consort Uma Devi on the left half of His body. This Lord desires to manifest Himself in the
temple in Kadaram-kondan. Here in the city there are people who can sing beautiful songs
using the special instrument called 'Kombu'. The Indian cuckoo on hearing the sound of
Kombu makes its music. The female bees which hear both the musical notes, start singing
their music too. In the nearby gardens the stork and small herons wait for their food
making lines. Such a city is called Thiru-nani-palli or Kadaram-kondan.
2381. தோடொருகாதனாகியொருகாதிலங்குசுரிசங்குநின்றுபுரளக்
காடிடமாகநின்றுகனலாடுமெந்தையிடமாயகாதல்நகர்தான்
வீடுடனெய்துவார்கள்விதியென்றுசென்றுவெறிநீர்தெளிவிப்பவிரலால்
நாடுடனாடுசெம்மையொலிவெள்ளமாருநனிபள்ளிபோலுநமர்காள். 5
தோடு ஒரு காதனாகி ஒருகாது இலங்கு சுரிசங்கு நின்று புரளக்
காடு இடமாக நின்று கனலாடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிவிப்ப விரலால்
நாடு உடனாடு செம்மை ஒலி வெள்ளம் ஆரு நனிபள்ளி போலும் நமர்காள்.
tOTu oru kAtan Aki, oru kAtu ilagku curicagku ninRu puraLa,
kATu iTam Aka ninRu, kanal ATum entai iTam Aya kAtal nakartAn-
vITu uTan eytuvArkaL viti enRu cenRu veRi nIr teLivippa viralAl,
nATu uTan ATu cemmai oli veLLam Arum nanipaLLi pOlum; namarkAL!
பொருள்: ஒருகாதில் தோடும் மற்றொருகாதில் சுரிந்த சங்கு புரளும் காதினனாகி,
சுடுகாடு இடமாக நின்று நெருப்பில் ஆடும் எந்தையின் காதல் நகர்தான் யாதொவெனில்,
பேரின்ப வீட்டினை விரைந்து எய்தும் சுத்தாத்துவித சைவர்கள் நீராடும் விதிமுறைப்படி
சென்று நீரினை விரலால் தெளிப்ப, நாட்டு மக்கள் திரளாக நீராடும் வெள்ளம் நிறையும்
நனிபள்ளியாகும்! நம்மவர்களே!
குறிப்புரை: ஒரு காதில் சங்கத்தோடும் ஒரு காதில் சங்கக் குழையும் அணிந்தமை குறிக்கப்பட்டது.
கனல் - தீயில். வீடுடன் எய்துவார்கள் பேரின்ப வீட்டை விரைந்து எய்தும் வைதிக சைவர்கள் மனைவியுடன்
நீராடச் சென்று அடையும் வைதிகர்கள் எனலுமாம். விரலால் தெளித்தல்- கை (விரல்)களால் அர்க்கியங்
கொடுத்தல். நாடுடன் நாடு வெள்ளமா ஆரும் குடகு நாட்டில் தோன்றிக் கொங்கு நாட்டில் பாய்ந்து
சோழ நாட்டில் கடலை அடைவது நோக்கின் நாடுடன் நாடு காவிரி வெள்ளம் நிறையும்.
Our Lord Civan has worn the Ola Roll in one of His ears. In another ear, He has worn
a round chunk moving here and there in a low bend. His avocation is to visit the burning ghat
and dance there in the midnight by the side of the burning fire. The devotees of this place
who are desirous to attain salvation go to the river Cauvery and according to the rituals
known to them perfectly, they take bath. Then they hold the sweet smelling water in a
particular vessel and do the rituals, with their fingers sprinkling holy water from the
special vessel over the river Cauvery by doing Arkkiyam - water offered reverentially
to gods. The water thus sprinkled in the river is carried along the flood water and
spreads all over the city. The city Kadaram-kondan is on the bank of the river Cauvery.
2382. மேகமொடோடுதிங்கள்மலராவணிந்துமலையான்மடந்தைமணிபொன்
ஆகமொர்பாகமாக அனலாடுமெந்தைபெருமானமர்ந்தநகர்தான்
ஊகமொடாடுமந்தியுகளுஞ்சிலம்பவகிலுந்தியொண்பொனிடறி
நாகமொடாரம்வாருபுனல்வந்தலைக்குநனிபள்ளிபோலுநமர்காள். 6
மேகமொடு ஓடுதிங்கள் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன்
ஆகம் ஓர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடுமந்தியுகளும் சிலம்ப அகில் உந்தி ஒண்பொன் இடறி
நாகமொடு ஆரம் வாருபுனல் வந்தலைக்கு நனிபள்ளி போலும் நமர்காள்.
mEkamoTu OTu tigkaL malarA aNintu, malaiyAn maTantai maNipon
Akam Or pAkam Aka, anal ATum entai perumAn amarnta nakartAn-
UkamoTu ATu manti ukaLum, cilampa akil unti oNpon iTaRi
nAkamoTu Aram vAru punal vantu alaikkum, nanipaLLipOlum; namarkAL!
பொருள்: விண்ணில் மேகத்துடன் செல்லும் பிறைமதியைச் சடையில் மலரினைப் போல
அணிந்து இமயராசனின் திருமகளின் அழகிய பொன்னுடலைத் தன் ஒருபாகமாகக் கொண்டு
அனலாடும் எந்தை பெருமான் விரும்பி அமர்ந்த நகர்தான் யாதோவெனில், ஆண்குரங்குடன்
மந்தி மகிழ்ந்து குதிக்கும் மலையில் விளையும் அகிலினை உந்தி ஒளிரும் பொன்னினைத்
தள்ளிக் கொண்டு நாகம், சந்தனம் ஆகிய மரங்களை வாரிக் கொணர்ந்து காவிரி வெள்ளம்
வந்து பாயும் நனிபள்ளியாகும்! நம்மவர்களே!
குறிப்புரை: ஊகம்- கருங்குரங்கு, குரங்குமாம். மந்தி - பெண் குரங்கு. உகளும் - பாயும், குதிக்கும்.
இடறி - எற்றி, தள்ளி. நாகம் - நாகமரம். ஆரம் - சந்தனமரம். பாம்பும் (நாகரத்தமும்) முத்தும் ஆம்.
வாருபுனல் - கொழிக்கும் நீர்.
Our Lord Civa concorporates His consort, the daughter of the king of Kailash mountain
on the left half of His frame which is an attractive golden bright body. His avocation is to
dance near fire. This our Lord is manifested in the temple in this city. In this city, the
dark male monkeys play with their female monkeys. Here from the mountain eaglewood trees,
the bright golden particles, jamoon plum trees, sandalwood trees- all these move along with
the river flood which drops them along the river banks. Such a glorious city is Kadaram-kondan.
2383. தகைமலிதண்டுசூலமனலுமிழுநாகங்கொடுகொட்டிவீணைமுரல
வகைமலிவன்னிகொன்றைமதமத்தவைத்தபெருமானுகந்தநகர்தான்
புகைமலிகந்தமாலைபுனைவார்கள்பூசல்பணிவார்கள்பாடல்பெருகி
நகைமலிமுத்திலங்குமணல்சூழ்கிடக்கைநனிபள்ளிபோலுநமர்காள். 7
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடுகொட்டி வீணை முரல
வகை மலி வன்னி கொன்றை மதமத்த வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல்பணிவார்கள் பாடல்பெருகி
நகை மலி முத்து இலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்.
takai mali taNTu, cUlam, anal umizum nAkam, koTu koTTi vINai murala,
vakai mali vanni, konRai, matamattam, vaitta perumAn ukanta nakartAn-
pukai mali kantam mAlai punaivArkaL pUcal, paNivArkaL pATal, peruki,
nakai mali muttu ilagku maNal cUz kiTakkai nanipaLLi pOlum; namarkAL!
பொருள்: பெருமைமிக்க தண்டாயுதம், திரிசூலம், நெருப்பைக் கக்கும் பாம்பு
ஆகியவற்றை ஏந்தி, வீணை முதலிய வாத்தியங்கள் முழங்க கொடுகொட்டிக் கூத்தாடுவார்;
வகை வகையாக நிறைந்த வன்னி, கொன்றை, ஊமத்தை மலர் ஆகியவற்றை அணிந்த
பெருமானார்; அவர் விரும்பும் நகர்தான் யாதோவெனில், வாசனைப் புகை படிந்த
மணமாலை புனைவார்களின் பூசல் ஓசையும், வழிபாடு செய்வார்களின் பாடலோசையும்
பெருகி, ஒளிமிக்க முத்துக்கள் விளங்கும் மணல்சூழ் வெளிகளை உடைய
திருநனிபள்ளியேயாகும்! நம்மவர்களே!
குறிப்புரை: தகை- தடை. தண்டு- தண்டாயுதம். சிவிகையுமாம். கொடுகொட்டி - திரிபுர
தகனகாலத்திற் சிவபிரான் ஆடிய திருக்கூத்து. கந்தம் - மணம். நகை - வெண்மை.
Our Lord Civan is the master with bludgeon, the trident, the snake which spins
out spark of fire. He has adorned Himself in an orderly manner with the summer tree
leaves, Indian laburnum, cassia and datura flowers and others on His head. At the time
of destroying the three fortresses of the asuras which were flying in the sky,
our Lord Civa made a very special dance called 'Kodukotti', this one among the
eleven dances. This Lord desired to manifest Himself in the temple in Kadaram-kondan
city. In this city, while fabricating garlands smoke-like fragrance spreads all around.
The garland makers praise our Lord and start singing. The prostrating devotees also
sing and all this noise spreads all over the domain. The various different coloured gems
smear their brightness all over the sandy landscape. Such a gorgeous city is Thiru-nani-palli.
2384. வலமிகுவாளன்வேலன்வளைவாளெயிற்றுமதியா அரக்கன்வலியோ
டுலமிகுதோள்களொல்கவிரலாலடர்த்தபெருமானுகந்தநகர்தானே
நிலமிகுகீழுமேலும்நிகராதுமில்லையெனநின்றநீதியதனை
நலமிகுதொண்டர்நாளுமடிபரவல்செய்யுநனிபள்ளிபோலுநமர்காள். 8
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு
உலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தானே
நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை
நலமிகு தொண்டர் நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்.
valam miku vALan, vElan, vaLai vAL eyiRRu matiyA arakkan valiyOTu
ulam miku tOLkaL olka viralAl aTartta perumAn ukanta nakartAnE
nilam miku kIzum mElum nikar Atum illai ena ninRa nIti atanai
nalam miku toNTar nALum aTi paraval ceyyum nanipaLLi pOlum; namarkAL!
பொருள்: வெற்றி மிக்க வாளினையும் வேலினையும் வளைந்த கூரிய பற்களையும் உடைய
(இறைவன் இருக்கும் கயிலைமலையை) மதியாத அரக்கன் இராவணனின் ஆற்றலோடு கற்றூண்
போன்ற திண்ணிய தோள்கள் வாடத் தன் திருவிரலால் வென்ற பெருமான் விரும்பும் நகர்தான்
யாதோவெனில், கீழேலுலகம் மேலே ஏழுலகம் ஆகிய நிலங்களில் இதற்கு நிகரானது ஒன்றும்
இல்லை என நின்ற நீதியாகிய இறைவனை அன்புடைய தொண்டர்கள் நாள்தோறும் திருவடி
வழிபாடு செய்யும் திருநனிபள்ளியேயாகும்! நம்மவர்களே!
குறிப்புரை: வாளன்- சிவபிரான் அருளிய வாளை உடையவன் (இராவணன்). வாளன் வேலன்
இரண்டும் சிவபிரானைக் குறித்தவை எனலும் ஆம். உலம் - கற்றூண், திரண்டகல். ஆதும் - யாதும்.
'ஆதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்றபோது' (தி. 4 ப. 3 பா. 1). இதில், பிறபத்தும் நோக்காதார் 'யாதும்'
என்று எழுதிவிட்டனர். 'சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்' (தி. 6 ப. 20 பா.9).
Raavanan, the king of Sri Lanka is a very robust and sturdy person. He has very
firm muscular shoulders like stone pillars. He holds strong sword and trident. His teeth
are all very bright and curved. But he had egoism and never cared for others. Our Lord
made him lose his haughtiness and crushed his sturdy shoulders by just slightly pressing
the top of His abode - the mount Kailash with His toe. Raavanan surrendered. Our Lord
desired to manifest Himself in the temple in Kadaram-kondan immaculate. There is
surfen dity. o Himself in the temple in Kadaram-kondan city. Lord Civan is the Supreme Being of
equity, implacable and immaculate. There is no equal to Him both in the underworld and top
world to be compared to Him. He is the peerless embodiment of justice. Those servitors
of very good character every day go to the temple and prostrate before our Lord's
holy feet and worship Him.
2385. நிறவுருவொன்றுதோன்றியெரியொன்றிநின்றதொருநீர்மைசீர்மைநினையார்
அறவுருவேதநாவனயனோடுமாலுமறியாதஅண்ணல்நகர்தான்
புறவிரிமுல்லைமௌவல்குளிர்பிண்டிபுன்னைபுனைகொன்றைதுன்றுபொதுளி
நறவிரிபோதுதாதுபுதுவாசநாறுநனிபள்ளிபோலுநமர்காள். 9
நிறவுரு ஒன்று தோன்றி எரிஒன்றி நின்றதொரு நீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேத நாவனயனோடு மாலுமறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லை மௌவல் குளிர்பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி
நறவிரி போது தாது புதுவாச நாறு நனிபள்ளி போலும் நமர்காள்.
niRa uru onRu tOnRi eri onRi ninRatu oru nIrmai cIrmai ninaiyAr,
aRa uru vEta nAvan ayanOTu mAlum aRiyAta aNNal, nakartAn-
puRa viri mullai, mauval, kuLir piNTi, punnai, punai konRai, tunRu potuLi
naRa viri pOtu tAtu putuvAcam nARum nanipaLLi pOlum; namarkAL!
பொருள்: செந்நிறப் பிழம்பு ஒன்று தோன்றி நெருப்பு என நின்ற அதன் இயல்பையும்
பெருமையையும் நினையாதவராய், அறங்கூறும் வேத நாவனாகிய அயனும் மாலும் அறியவியலாத
அண்ணலுடைய நகர்தான் யாதோவெனில், புறவில் விரிகின்ற முல்லை , மௌவல் குளிர்ந்த அசோகு,
புன்னை, புனையப்பட்டது போன்ற கொன்றை ஆகிய மலர்கள் நெருங்கித் தழைத்து தேன்கமழும்
போதுக்களின் வாசமும் மகரந்தப் பொடியின் வாசமும் நாறும் திருநனிபள்ளியாகும்! நம்மவர்களே!
குறிப்புரை: முதலீரடியில் அரியும் அயனும் அடிமுடி தேடிய வரலாறு குறிக்கப்பட்டது.
பின்னீரடியில் முல்லை மௌவல் முதலியவற்றின் மணம் வீசும் சிறப்பு நனிபள்ளிக்கு உண்டென்பது
கூறப்பட்டது. புற- புறவம். 'குறியதன்கீழாக்குறுகல்' (நன்னூல்).
Our Chief Lord's city is Thiru-nani-palli. In the surrounding area of the
city big forests full of big trees and flower plants are many. The flowering plants are
Arabian jasmine, jasmine, asoka tree mastwood and Indian laburnum. These flowers spread
their fragrance all over the forest and city area. This is the city of our Lord who
appeared as a bright column of fire, its greatness and perfection were not recognised
by Brahma, whose tongue keeps on chanting mantras, and also by Thirumaal.
2386. அனமிகுசெல்குசோறுகொணர்கென்றுகையிலிடவுண்டுபட்ட அமணும்
மனமிகுகஞ்சிமண்டையதிலுண்டுதொண்டர்குணமின்றிநின்றவடிவும்
வினைமிகுவேதநான்குவிரிவித்தநாவின்விடையானுகந்தநகர்தான்
நனமிகுதொண்டர்நாளுமடிபரவல்செய்யுநனிபள்ளிபோலுநமர்காள். 10
அனமிகு செல்கு சோறு கொணர் கென்று கையிலிட உண்டுபட்ட அமணும்
மனமிகு கஞ்சி மண்டையதில் உண்டு தொண்டர் குணமின்றி நின்றவடிவும்
வினைமிகு வேதநான்கு விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனமிகு தொண்டர் நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்.
anam miku, celku, cORu koNarka!" enRu kaiyil iTa uNTu paTTa amaNum,
manam miku kanjci maNTai atil uNTu toNTar kuNam inRi ninRa vaTivum,
vinai miku vEtam nAnkum virivitta nAvin viTaiyAn ukanta nakartAn-
nanamiku toNTar nALum aTi paraval ceyyum nanipaLLipOlum; namarkAL!
பொருள்: 'செல்க' 'சோறு கொணர்க' என்று கேட்டு அன்னத்தை மிகுதியாகக் கையில் இட
உண்டு பழக்கப்பட்ட அமணர்களும் விருப்பத்துடன் கஞ்சியை மண்டை வட்டிலில் உண்டு
அடியவர்களுக்குரிய குணம் இல்லாத வடிவினராகிய தேரரும் வினை மிகுவோராவர். வேதங்கள்
நான்கினையும் விரித்த நாவினனாகிய எருது வாகனன் விரும்பும் நகர்தான் யாதோவெனில்
திருநனிபள்ளியே! நம்மவர்களே!
குறிப்புரை: செல்கு - செல்லும். செல்குசோறு - வினைத்தொகை. கொணர்க - கொண்டு வருக.
மண்டை- பனைமட்டையாலான உண்கலம். சிவபிரான் வேதங்களை அருளியவன் என்பது இங்கு
உணர்த்தப்பட்டது. நன - நனவு, தெளிவு.
The Jains in the city go round the city and ask for food, they get their food
in their hand, eat, and roam about the city. Some people offer rice gruel in the food
vessel made up of palmyrah leaves to the Buddhist monks. They drink it. Both these
groups of people make false propaganda among the crowd. But the devotees of our Lord
never listen to those words. Our Lord Civan's tongue chants the four Vedas accompanied
by the sacrificial rites. He loves to have His bull for His conveyance. He desires to
manifest Himself in the temple in Thiru-nani-palli. Here the scholar devotees who are
well-versed in divine knowledge go to the temple everyday, prostrate at our Lord's holy
feet and worship Him and praise Him. This city is Kadaram-kondan.
2387. கடல்வரையோதமல்குகழிகானல்பானல்கமழ்காழியென்றுகருதப்
படுபொருளாறுநாலுமுளதாகவைத்தபதியானஞானமுனிவன்
இடுபறையொன்ற அத்தர்பியன்மேலிருந்தினிசையாலுரைத்தபனுவல்
நடுவிருளாடுமெந்தைநனிபள்ளியுள்கவினைகெடுதலாணைநமதே. 11
கடல் வரைஓதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி என்று கருதப்
படு பொருளாறு நாலுமுளதாக வைத்த பதியான ஞானமுனிவன்
இடு பறையொன்ற அத்தர் பியன்மேல் இருந்து இனிசையால் உரைத்த பனுவல்
நடு இருளாடும் எந்தை நனிபள்ளி உள்க வினைகெடுதல் ஆணை நமதே.
kaTal varai Otam malku kazi kAnal pAnal kamaz kAzi enRu karuta,
paTu poruL ARum nAlum uLatu Aka vaitta pati Ana njAnamunivan,
iTu paRai onRa attar piyan mEl iruntu in icaiyAl uraitta panuval,
naTu iruL ATum entai nanipaLLi uLka, vinai keTutal ANai namatE.
பொருள்: கடல்நீரின் ஓதம் மலிந்து கழியும் கானலும் பானலும் மணங்கமழ்கின்ற காழி என்று
தியானிக்கப்படு பெயர்; ஆறங்கம் நால்வேதங்கள் என்றும் உளதாக வைத்த பதி; அதிலான ஞான
முனிவன் (ஞானசம்பந்தன்) பறை ஒலிக்கத் தந்தையின் தோள்மீது அமர்ந்து இசையால் உரைத்த
இத்திருப்பனுவல் வழியே நடுயாமத்தில் கூத்தாடும் என் தந்தையின் நனிபள்ளியைத் தியானிப்பவர்
வினை கெடுக! இஃது நமது ஆணை!
குறிப்புரை: ஆறும் நாலும் - ஆறங்கங்களும் நால்வேதங்களும் (தி. 2 பதி. 6 பா. 3). அத்தர்
பியல்மேல் இருந்து - தந்தையார் திருத்தோள்மிசை அமர்ந்து. ஆணை நமதே (தி. 2 ப. 84 - 85 பா. 11 ;
தி.3 ப 78. பா.11; தி.3 ப. 118 பா.11).
Our saint Thiru-gnana-Sambandar was born in the city of Kaazhi. This city is near the
seashore. On the banks of the sea ponds, and gardens, full of trees flourish. In that area the
fragrance of purple Indian water lily flowers gets dispersed all over the area. Our
Thiru-gnana-Sambandar is well-versed in the six angas and four Vedas. He was travelling
by sitting on his father's shoulders and began singing these ten verses in good music.
The servitors may chant these ten verses in musical voice and approach our Lord dancing
in the dead of night for drum music in Nani-palli. If they think our Lord of Thiru-nani-palli,
their karma will be wiped out.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
84ஆம் பதிகம் முற்றிற்று
End of 84th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 221 பதிக எண்: 85
85. பொது- கோளறுதிருப்பதிகம் 85. KOLARU-THIRU-P-PATHIGAM
பண்: பியந்தைக்காந்தாரம் Pann: Piyanthai Kaanthaaram
பதிக வரலாறு
மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் திருமறைக் காட்டில் பாலறாவாயர்
எழுந்தருளியிருப்பதை அறிந்து விடுத்த ஏவலர் போற்றிச் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு
அவர் இசைந்தார். புகலி மன்னர், மொழிமன்னர்க்குத் தென்னாடுற்ற செயலையும் அதைப்
பாண்டிமா தேவியாரும் அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தையையும் புகன்றருளிக்கன்னி
நாட்டிற்கு எழுந்தருளத் துணிந்தார். அப்பொழுது நாவரசப் பெருந்தகையார் 'பிள்ளாய்' அந்த
அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி (எல்லை) இல்லை, உரைசெய்வது உளது. உறுகோள்
தாமும் தீய. எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்றருளினார். அது கேட்ட புகலி வேந்தர்,
'பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால், பழுது அணையாது' எனப் பகர்ந்து பரமர் தாள்
போற்றி வேயுறு தோளியை விளம்பியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
2388. வேயுறுதோளிபங்கன்விடமுண்டகண்டன்மிகநல்லவீணைதடவி
மாசறுதிங்கள்கங்கை முடிமேலணிந்தெனுளமேபுகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிபாம்பிரண்டுமுடனே
ஆசறுநல்லநல்ல அவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே. 1
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணைதடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
vEy uRu tOLi pagkan, viTam uNTa kaNTan, mika nalla vINai taTavi,
mAcu aRu tigkaL kagkai muTimEl aNintu, en uLamE pukunta atanAl-
njAyiRu, tigkaL, cevvAy, putan viyAzam, veLLi, cani pAmpu iraNTum, uTanE
Acu aRum; nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.
பொருள்: மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய உமையம்மையை இடப்பாகத்தில்
உடையவர்; நஞ்சுண்ட கண்டர்; அவர் நல்ல வீணையை மீட்டு, குற்றமற்ற பிறை, கங்கை ஆகியவற்றைத்
தம் முடிமேல் அணிந்து என்னுடைய உள்ளத்தில் புகுந்தார்; அவ்வாறு என்னுள்ளத்தில் அவர் இருப்பதனால்
ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழு கோள்களும், இராகு கேது ஆகிய இரு பாம்புகளும், எனக்குக் குற்றம்
நீங்கினவாகும்; அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு நல்லனவாக மாறும்; அடியவர்களிடத்து
அன்புள்ளன ஆகும்.
குறிப்புரை: வேயுறு தோளிபங்கன்- மூங்கிலின் இரு கணுக்களுக்கும் இடைப்பட்ட பகுதியைப்
போலும் தோள்களையுடைய உமாதேவியாரை இடப்பால் உடையவர். ஞாயிறு - பாம்பு இரண்டும் சூரியன்
முதலிய ஒன்பது கோள் (கிரகங்)களும் . ஆசு அறு நல்ல நல்ல - குற்றம் அற்ற நலத்தைச் செய்வன.
அவை அடியார்களுக்கு மிக நல்லன நல்லன. பாம்பு இரண்டும் - இராகுவும் கேதுவும்.
Our Lord Civan has embedded His consort Uma Devi on the left side of His body.
Her shoulders are as smooth as the bamboo stems in between the two joints (node). He
imbibed the poison and kept it in His larynx. He retains the moon and supports the
river Ganges - both adorning His head. In this posture happily playing music on His
veena, He has entered my mind and stays there. Because of His stay in my mind the
nine planets (such as sun, moon, chevvai, budhan, guru, sukkiran, sani,raghu and kethu)
will do all good without any evil. They will always do only good deeds to Civa's devotees.
2389. என்பொடுகொம்பொடாமையிவைமார்பிலங்கஎருதேறியேழையுடனே
பொன்பொதிமத்தமாலைபுனல்சூடிவந்தெனுளமேபுகுந்த அதனால்
ஒன்பதொடொன்றொடேழுபதினெட்டொடாறுமுடனாயநாள்களவைதாம்
அன்பொடுநல்லநல்லஅவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே. 2
என்பொடு கொம்பொடு ஆமை இவைமார்பு இலங்க எருது ஏறி ஏழை உடனே
பொன் பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழுபதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
enpoTu kompoTu Amai ivai mArpu ilagka, erutu ERi, Ezai uTanE,
pon poti mattamAlai punal cUTi vantu, en uLamE pukunta atanAl-
onpatoTu, onRoTu, Ezu, patineTToTu, ARum, uTan Aya nALkaL avaitAm,
anpoTu nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.
பொருள்: எலும்பு, பன்றிக் கொம்பு, ஆமையின் ஓடு இவை மார்பில் விளங்கித் தோன்ற
எருதேறி, உமையுடனே பொன்பொதிந்தது போன்ற கொன்றை, ஊமத்தை மலர்மாலை சூடி
வந்து என் உள்ளத்தில் புகுந்தார்; அவ்வாறு என் உள்ளத்தில் அவர் இருப்பதினால், ஒன்பது
ஒன்பதோடு ஒன்று,ஒன்பதோடு ஏழு, பதினெட்டு, ஆறு மற்றும் இவற்றுடன் ஆய ஆகாத நாட்கள்
என்பனவும் எனக்குக் குற்றம் நீங்கினவாகும். அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு
நல்லனவாக மாறும்; அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.
குறிப்புரை: கொம்பு- பன்றிக்கொம்பு. ஆமை - முற்றலாமையோடு. ஏழை - உமாதேவியார்.
'ஏழை பங்காளனையே பாடேலோரெம்பாவாய்'. ஒன்பது- அசுவினி முதலாகக் கொண்டு
எண்ணின் ஒன்பதாவது நட்சத்திரம் ஆயிலியம். ஒன்பதோடொன்று - பத்து - மகம். ஒன்பதொடெழு -
பதினாறு - விசாகம். பதினெட்டு- கேட்டை. ஆறு - திருவாதிரை. உடனாய நாள்கள் மற்றயவை.
அவை - பரணி, கார்த்திகை. பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி, நாள்கள் என்றதால்.
ஆகாத திதிகளும் கிழமைகளும் அடங்கின. இவ்வுண்மையை,
'ஆதிரை பரணி ஆரல் ஆயில்யமுப் பூரம் கேட்டை
தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம்ஈ ராறும்
மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின்வாய்த் தேரைதானே'
என்னுஞ் சோதிடநூற் பாட்டால் உணர்க. கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் அவர்கள் எழுதிய
அகத்தியர் தேவாரத் திரட்டின் உரையில் உள்ளதும், தமிழ்ப்பொழில் - துணர் 7, 8, 9ல் பண்டித
அ. கந்தசாமிப் பிள்ளை அவர்களும் எம்.எஸ். பூரணலிங்கம்பிள்ளை அவர்களும் எழுதிய
கட்டுரைகளால் ஐயந்தீர்த்து முடிவு செய்யப்பட்டதுமான உரையே இதில் குறிக்கப்பட்டதாகும்.
ஆயினும் சிவபெருமானுக்குரிய திருவாதிரையை முதலாக் கொண்டு, அதற்கு ஒன்பது சித்திரை,
அதனொடு ஒன்று சுவாதி. அதிலிருந்து முன் ஏழு ஆயில்யம். அதற்குப் பதினெட்டு பூரட்டாதி.
அதற்கு முன் ஆறு பூராடம் என்றும், உடனாய நாள்கள். பரணி, கார்த்திகை, மகம், பூரம், விசாகம்,
கேட்டை என்றும் உரைப்பாருமுளர்.
Our Lord Civa has adorned His body with bones, hog's husk, shell of the
tortoise. He wears a garland made up of datura flowers which contain golden
coloured granules of pollen grains. He also retains the river Ganges in His
matted hair. In this posture, having mounted on His bull along with His consort
Uma Devi He has entered into my mind and stays there. Because of His presence
in my mind the inauspicious stars such as Aswini, Aayilyam etc., all these eighteen
stars and other stars, will always do good to me with all sincerity. For devotees
of Lord Civa also these stars will do all good.
2390. உருவளர்பவளமேனிஒளிநீறணிந்துவுமையோடும்வெள்ளை விடைமேல்
முருகலர்கொன்றைதிங்கள்முடிமேலணிந்தெனுளமேபுகுந்தஅதனால்
திருமகள்கலையதூர்திசெயமாதுபூமிதிசைதெய்வமானபலவும்
அருநெதிநல்லநல்லஅவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே. 3
உருவளர் பவளமேனி ஒளிநீறணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமிதிசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
uru vaLar pavaLa mEni oLi nIRu aNintu, umaiyOTum, veLLai viTai mEl,
muruku alar konRai tigkaL muTimEl aNintu, en uLamE pukunta atanAl-
tirumakaL, kalai atu Urti, ceyamAtu, pUmi, ticai teyvam Ana palavum,
aru neti nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.
பொருள்: அழகு மேலோங்கும் பவளம் போன்ற செம்மேனியில் ஒளிவீசும் வெண்ணீறணிந்து,
உமையம்மையோடு வெள்ளை எருதின் மீது அமர்ந்து, மணம் நாறும் கொன்றை மாலை சூடி, திங்களை
முடிமேல் அணிந்து என் உள்ளமே புகுந்தார்; அவ்வாறு என் உள்ளத்தில் அவர் இருப்பதனால், திருமகள்,
கலைமானை ஊர்தியாகக் கொண்ட கொற்றவை, நிலமகள், திக்குத் தெய்வங்கள், அரிய திதிகள் ஆயின
பலவும் எனக்குக் குற்றம் நீங்கினவாகும். அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு
நல்லனவாக மாறும்; அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.
குறிப்புரை: உருவளர் பவளமேனி- அழகுவளரும் பவளம் போன்ற செம்மேனியில்.
கலையதூர்தி - துர்க்கை. நேதி -திரவியம்.
Our Lord Civa's brilliant body looks like the brightest coral. Over His body,
He has applied the holy ashes all over. His head is adorned with Indian laburnum along
with the baby moon. In this stature Civa with His consort Uma Devi riding on His white
bull has entered into my mind. In lieu of this grace, goddesses Lakshmi, Durgai, Victory,
Earth, the gods of the eight directions of the earth and others will give all the rare
riches to me as well as to the devotees.
2391. மதிநுதல்மங்கையோடுவடபாலிருந்துமறையோதுமெங்கள்பரமன்
நதியொடுகொன்றைமாலைமுடிமேலணிந்தெனதுளமேபுகுந்த அதனால்
கொதியுறுகாலனங்கிநமனோடுதூதர்கொடுநோய்களானபலவும்
அதிகுணநல்லநல்ல அவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே. 4
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
mati nutal magkaiyOTu, vaTa pAl iruntu maRai Otum egkaL paraman,
natiyoTu konRai mAlai muTimEl aNintu, en uLamE pukunta atanAl-
koti uRu kAlan, agki, namanOTu tUtar, koTu nOykaL Anapalavum,
atikuNam nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.
பொருள்: பிறைமதி போன்ற நெற்றி உடையாளுடன் ஆலமர நீழலில் இருந்து வேதம்
ஆகிய அறத்தை உரைக்கும் எங்கள் பரமன், கங்கை நதி, கொன்றை மாலை ஆகியவற்றைத்
தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்தில் புகுந்தான். அவ்வாறு உள்ளத்தில் அவர் இருப்பதனால்
சினமுடைய காலன்,நெருப்பு, எமன் அவனுடைய தூதர்கள், கொடுநோய்கள் ஆன பலவும்
எனக்குக் குற்றம் நீங்கினவாகும்; அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு நல்லனவாக
மாறும்; அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.
குறிப்புரை: வடபால் -ஆலின்கீழ். வடம் - ஆலமரம். 'கல்லால் நிழற்கீழ் வாடாமுலை
மங்கையும் தானும் மகிழ்ந்து ஈடா உறைகின்ற இடைமருது' (தி.1 ப.32 பா.1). வடபக்கம் என்பாருமுளர்.
கொதி- கோபம். உக்கிரம். காலன் - 'காளமேகந் நிறக்காலனோடு அந்தகன்' (தி.2 ப.119 பா.6). அங்கி -
அக்கினி. நமனொடு தூதர் -இயமனும் இயமதூதரும். 'மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்து நீர் மையல்
எய்தில் விண்ணிடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்?' (தி.4 ப.31 பா.2).
'தரும ராசற்காய் வந்த கூற்றினைக்குமைப்பர்’ (தி.4 ப.49 பா.2) என்பவற்றால், நமன் (தருமராசன்)
வேறு நமனுடைய தூதராகிய கூற்றுவர் வேறு என்றும், 'சூலத்தால் அந்தகனைச் சுருளக்கோத்துத்
தொல்லுலகில் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக் காலத்தால் (-காலால்) உதைசெய்து' (தி.6 ப.83 பா.9)
என்பதில் அந்தகன் வேறு கூற்று வேறு என்றும் உணர்த்தல் அறிக.
Our Lord Civa authored all the Vedas while seated along with His consort Uma Devi
under the stone banyan tree. He wears over His head the flower - Indian laburnum and the
river Ganges. In this stature He has entered my mind. Because of this reason the ferocious
god of death, god of fire, Yaman, Yama's servitors – all will do all good by converting
all the severe ailments into good actions. For His devotees also all good things will happen.
2392. நஞ்சணிகண்டனெந்தைமடவாள்தனோடும்விடையேறுநங்கள்பரமன்
துஞ்சிருள்வன்னிகொன்றைமுடிமேலணிந்தெனுளமேபுகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடுமுருமிடியுமின்னுமிகையானபூதமவையும்
அஞ்சிடும்நல்லநல்லஅவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே. 5
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னுமிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
nanjcu aNi kaNTan, entai, maTavAL tanOTum viTai ERum nagkaL paraman,
tunjcu iruL--vanni, konRai, muTimEl aNintu--en uLamE pukunta atanAl
venjcina avuNarOTum, urum-iTiyum, minnum, mikai Ana pUtam avaiyum,
anjciTum; nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.
பொருள்: நஞ்சினை அணியாகக் கண்டத்திற் கொண்ட எம்முடைய தந்தை, உமையம்மையுடன்
எருதினை ஊர்தியாகக் கொண்ட பரமன், இருள் துஞ்சும் வன்னித்தழை, கொன்றைமலர் ஆகியன சூடி
என் உள்ளத்திற் புகுந்தான். அவன் அவ்வாறு என் உள்ளத்தில் இருப்பதனால், கொடிய சினத்தைக்
கொண்ட அசுரர்களுடன் உரும் இடியும், மின்னலும் வலிமையுடைய பூதங்களும் மற்றும் அச்சம்
விளைவிக்கும் எவையும் எனக்குக் குற்றம் நீங்கினவாகும்; அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு
நல்லனவாக மாறும்; அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.
குறிப்புரை: துஞ்சிருள்வன்னி- வன்னிமரத்தின் இலைகள் மிகுந்தும் அடர்ந்தும் தழைத்திருத்தலால்
இருள் துஞ்சும் நிலையினது உளத்திற்கு ஏற்றினும் அமையும்.
Our Lord Civa is our Father whose throat appears dark blue because He imbibed the
poison and kept it in His larynx. He has entered my heart along with His consort Uma Devi riding
on His white bull, wearing on His head the darkened bunch of summer tree leaves and a garland
made up of Indian laburnum flowers, because of this the ferocious Jains, thunder, lightning,
the haughty bhutas - all will be afraid to meet us but will do only good deeds to us. For all
the devotees also they will always do good.
2393. வாள்வரியதளதாடைவரிகோவணத்தர்மடவாள்தனோடுமுடனாய்
நாண்மலர்வன்னிகொன்றைநதிசூடிவந்தெனுளமேபுகுந்த அதனால்
கோளரியுழுவையோடுகொலையானைகேழல்கொடுநாகமோடுகரடி
ஆளரிநல்லநல்லஅவைநல்லநல்ல அடியாரவர்க்குமிகவே. 6
வாள்வரி அதள தாடைவரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்து என் உளமேபுகுந்த அதனால்
கோள் அரிஉழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
vALvari ataLa tATai vari kOvaNattar maTavAL tanOTum uTan Ay,
nALmalar vanni konRai nati cUTi vantu, en uLamE pukunta atanAl
kOLari, uzuvaiyOTu, kolai yAnai, kEzal, koTu nAkamOTu, karaTi,
ALari, nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.
பொருள்: வாள் போன்ற வரிகளையுடைய புலியின் தோலினை ஆடையாக உடையவர்;
வரித்த கோவணத்தர்; உமையம்மையாகிய மடவாளுடன், அப்போது அலர்ந்த மலர் வன்னி,
கொன்றை கங்கை நதி ஆகியவற்றைச் சூடி வந்து என் உள்ளத்தில் புகுந்தார்; அவர் அவ்வாறு
என் உள்ளத்தில் புகுந்து இருப்பதனால், கொல்லும் வலிமையுடைய புலியுடன் கொலைத்தொழில்
வல்ல யானை, பன்றி, கொடிய நாகப்பாம்பு,கரடி, சிங்கம் முதலிய கொடிய விலங்குகளும்
எனக்குக் குற்றம் நீங்கினவாகும்; அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு நல்லனவாக
மாறும்; அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.
குறிப்புரை: வரி - கீற்றுக்களை உடைய புலியினது. வாள்வரி - அன்மொழித்தொகை.
கோள்-வலிமை. அரி - குரங்கு. கோளு (வலிமை,கொலையு)ம் அரி (பகை)யும் உடைய உழுவை (புலி)
எனலுமாம். ஆளரி - சிங்கம். ஆளரியேறனையான் (பெரிய. திருஞான. 474).
Our Lord wears on His waist tiger's hide which is bright and lined. He also
dons tightly on His forelap the special cloth. He beautifies His head by wearing fresh
flowers, leaves of summer tree, Indian laburnum flowers, along with the river Ganges.
Our Lord along with His consort goddess Uma Devi has entered into my heart, because
of this ferocious monkey, tiger, murderous elephant, hog, poisonous snake, bear,
lion and such others will always do good to us. For the devotees also they only
do good always.
2394. செப்பிளமுலைநன்மங்கையொருபாகமாகவிடையேறுசெல்வனடைவார்
ஒப்பிளமதியுமப்புமுடிமேலணிந்தெனுளமேபுகுந்த அதனால்
வெப்பொடுகுளிரும்வாதமிகையானபித்தும்வினையானவந்துநலியா
அப்படிநல்லநல்ல அவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே. 7
செப்பு இளமுலை நன்மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பு இளமதியும் அப்புமுடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதமிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
ceppu iLamulai nal magkai orupAkam Aka viTai ERu celvan, aTaivu Ar
oppu iLamatiyum appum muTimEl aNintu, en uLamE pukunta atanAl-
veppoTu, kuLirum, vAtam, mikai Ana pittum, vinai Ana, vantu naliyA;
appaTi nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.
பொருள்: செம்பு போன்ற வடிவினதாகிய இளமுலையுடைய உமையம்மையைத் தன்
ஒருபாகமாகக் கொண்டு எருதேறுபவன் தன்னை அடைந்தார்க்குச் செல்வன் ஆகிய பெருமான்,
இளம்பிறையையும் கங்கை நீரையும் முடிமேல் அணிந்து என்னுடைய உள்ளத்தில் புகுந்தான்.
அவ்வாறு அவன் என் உள்ளத்தில் புகுந்து நின்றதனால், வெம்மை நோய், குளிர் வாதம்,
கேடு செய்யும் பித்தம் முதலியன தீவினையின் பயனாக வந்து என்னை துன்புறுத்தல் செய்யா.
அப்படி அவை எனக்குக் குற்றம் நீங்கினவாகும். அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு
நல்லனவாக மாறும். அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.
குறிப்புரை: செப்பு - சிமிழ். அடைவு ஆர் - அடைதலுற்ற. அப்பு - கங்கை. வெப்பு - வெம்மை.
சுரநோய் - சிலேத்துமம். வாதம் - வளி. பித்து - பித்தம். மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று (குறள். 941).
My Lord Civa, riding on His white bull along with His concomitant consort on the
left side of His body, whose young breasts look like the wooden little box, has adorned
His head by retaining the young moon by the side of river Ganges. He has entered into my
mind and is manifested in my body. Since He is within me heat, cold, the severe bile, bad
karma - all will never approach me and will never cause sufferings to me. For the devotees
also they will bring only good.
2395. வேள்படவிழிசெய்தன்றுவிடைமேலிருந்துமடவாள்தனோடுமுடனாய்
வாண்மதிவன்னிகொன்றைமலர்சூடிவந்தெனுளமேபுகுந்த அதனால்
ஏழ்கடல்சூழிலங்கை அரையன்றனோடுமிடரானவந்துநலியா
ஆழ்கடல்நல்லநல்ல அவைநல்லநல்ல அடியாரவர்க்குமிகவே. 8
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
vEL paTa vizi ceytu, anRu, viTaimEl iruntu, maTavAL tanOTum uTanAy,
vANmati vanni konRaimalar cUTi vantu en uLamE pukunta atanAl-
EzkaTal cUz ilagkai araiyan tanOTum iTar Ana vantu naliyA;
Az kaTal nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.
பொருள்: மன்மதன் எரிந்து அழியும்படி நெற்றி விழியால் பார்த்து, உமையம்மையுடனாய்
எருதின் மீதிருந்து, ஒளியுடைய பிறைமதி, வன்னி, கொன்றை மலர் சூடி வந்து என்னுடைய உள்ளமே
புகுந்தான். அவன் அவ்வாறு என் உள்ளத்தில் புகுந்து இருந்ததனால், கடலால் சூழப்பட்டிருந்த
இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தன்னோடும் துன்பமானவைகள் வந்து வருத்தா.
ஆழமான கடல்கள் போன்ற துன்பங்களும் எனக்குக் குற்றம் நீங்கினவாகும். அவை தீயனவேயாயினும்
சிவனடியார்களுக்கு நல்லனவாக மாறும்; அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.
குறிப்புரை: விழிசெய்து - நெற்றிவிழி திறந்து எரித்து. வாள் - ஒளி. அரையன் - அரசன். இராவணன்.
இடர் ஆன - துன்பமானவை, கடல் நல்ல.
Once my father Lord Civa burnt the god of love Manmathan (cupid) by opening
His third eye in the forehead. He, along with His consort Uma Devi, riding on His
bull has entered into my mind. Retaining the bright moon on His head, beautifying
it with leaves of summer tree and Indian laburnum flowers, He resides in me.
Because of this featured manifestation Raavanan, the king of SriLanka surrounded
by the seven seas, and any other factor will not cause any suffering to me. The deep
seas also will do good to me. For our devotees also only good will be done by
these people.
2396. பலபலவேடமாகும்பரனாரிபாகன்பசுவேறுமெங்கள்பரமன்
சலமகளோடெருக்குமுடிமேலணிந்தெனுளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனுமாலும்மறையோடுதேவர்வருகாலமானபலவும்
அலைகடல்மேருநல்ல அவைநல்லநல்ல அடியாரவர்க்குமிகவே. 9
பலபல