(Copyright Courtasy: Socio Religious Guild, Thirunelveli)
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ THIRU-P-POONTHARAAI - cennel am kazanip
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை THIRU-VALAN-CHUZHI - viNTu elAm malara(v) virai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப் THIRU-TH-THELI-CH-CHERI - pU alarntana koNTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி THIRU-VAAN-MIYOOR - karai ulAm kaTalil
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை THIRU-ANEGA-THANGA-VATHAM - nITal mEvu nimirpun caTai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங் THIRU-VAIYAARU - kOTal, kOgkam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை THIRU-VAANJIYAM - vanni konRai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல THIRU-CH-CHIKKAL - vAn ulAvum mati
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை THIRU-MAZHA-PAADI - kaLaiyum, valvinai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில் THIRU-MANGALAK-KUDI - cIrin Ar maNiyum(m)
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை SEERKAAZHI - nallAnai, nAlmaRaiyOTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப் KACH-CHITH-THIRUVEGAMBAM - maRaiyAnai, mAcu ilAp
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை THIRU-K-KOZHAMBAM - nIRRAnai, nILcaTaimEl
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச் THIRU-VENNIOOR - caTaiyAnai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை THIRU-K-KAARAAYIL - nIrAnE, nILcaTaimEl
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பு THIRU-MANANCH-CHERI - ayil Arum ampu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும் THIRU-VENU-PURAM - nilavum, punalum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையாய் எனுமால் THIRU-MARUKAL - caTaiyAy enumAl
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா THIRU-NELLIKKAA - aRattAl uyir kAval
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார் THIRU-ALUNDOOR - tozum ARu vallAr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன் THIRUK-KALIP-PAALAI - punal ATiya puncaTaiyAy
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான் THIRUK-KUDA-VAAYIL - tikazum tirumAloTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா THIRU-VAA-NAIKKAA - mazai Ar miTaRA
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே THIRU-NAAKECH-CHURAM - pon Ertaru mEniyanE
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு THIRUP-PUKALI - ukali AzkaTal Ogku pAruLIr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி THIRU-NEL-VAAYIL - puTaiyin Ar puLLi
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற THIRU-INDIRA-NEELA-PARUP-PATHAM - kulavu pAriTam pORRA
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி THIRUK-KARUVOOR-AANILAI - toNTu elAm malar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும் THIRU-PUKALI - munniya kalaipporuLum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி THIRUP-PURAM-BAYAM - maRam payam malaintavar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை THIRUK-KARUP-PARIYALOOR - cuRRamoTu paRRu avai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி THIRU-VAI-YAARU - tirut tikaz malaicciRumiyOTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர THIRU-NALLAARU - ETu mali konRai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல் KEELAP-PAZHU-VOOR - muttan, miku mU ilai nalvElan
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல் THIRUTH-THEN-KURANGU-AADUTHURAI - paravak keTum, valvinai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ THIRU-IRUM-POOLAI - cIr Ar kazalE tozuvIr!
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான் THIRU-MARAIK-KAADU - catura(m) maRaitAn tuticeytu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து THIRUCH-CHAAYK-KAADU - nittalum niyamam ceytu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம் THIRU-SHETRAK-KOVAI - ArUr, tillai ampalam, vallam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந் THIRU-BRAHMA-PURAM - empirAn, enakku amutam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர் THIRUCH-CHAAYK-KAADU - maN pukAr, vAnpukuvar; manam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும் THIRU-AAKKOOR - akku irunta Aramum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை THIRUP-PULLIRUKKU-VELOOR - kaL Arnta pUgkonRai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந் THIRU-AAMAATH-THOOR - tunnam pey kOvaNamum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான் THIRUK-KAICH-CHINAM - taiyal Or kURu utaiyAn
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும் THIRU-NAALOOR-MAYAANAM - pAl Urum malaippAmpum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னை - THIRU-MAYILAI - maTTiTTa punnai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானும் - THIRU-VENKDU - kaN kATTum nutalAnum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி SEERKAAZHI - paNNin nEr mozi
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை THIRU-AAMAATH-THOOR - kunRa vArcilai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி THIRUK-KALAR - nIruL Ar kayal vAvi
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின் THIRU-K-KOTTAARU - karunta TagkaNin
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன THIRU-P-PURAVAAR - PANANG-KAATTOOR - viN amarntana
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர் THIRU-P-PUKALI - uru Arnta melliyal OrpAkam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந் THIRU-TH-THALAICH-CHANGAADU - nalac cagka veNkuzaiyum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர் THIRU-IDAI-MARUTHOOR - pogku nUl mArpinIr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி THIRU-NALLOOR - peN amarum tirumEni
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர் THIRU-K-KUDA-VAAYIL - kalai vAzum am kaiyIr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும் SEERKAAZHI - nalam koL muttum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார் THIRU-P-PAASOOR - cintai iTaiyAr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை THIRU-VENN-KAADU - uNTAy nanjcai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற் THIRU-MEEYACH-CHOOR - kAyac cevvik kAmaR
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல் THIRU-ARISIRKARAI-P-PUTH-THOOR - minnum caTaimEl
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம் THIRU-MUTHU-KUNDRAM - tEvA! ciRiyOm pizaiyaip poRuppAy
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர் THIRU-P-PIRAMAPURAM - kaRai aNi vEl ilarpOlum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திரமாவது நீறு THIRU-AALA-VAAI-THIRU-NEETTRU-P-PATHIGAM - mantiram Avatu nIRu
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 137 பதிக எண்: 1
1. திருப்பூந்தராய் 1. THIRU-P-POONTHARAAI
பண் : இந்தளம்- வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
இத்திருப்பிரமபுரத் திருத்தலமானது சோழவள நாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள
14ஆவது தலமாகும். நாகை மாவட்டத்தில் சீகாழி கோட்டத்தின் தலைநகர். மயிலாடுதுறை- சிதம்பரம்
இருப்புப்பாதையில் இரயில் நிலையம், பேருந்து வசதிகள் உள்ள பெரிய ஊர். பிரமபுரம், வேணுபுரம்,
புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, சீகாழி, கொச்சைவயம், கழுமலம்
என்ற பன்னிரண்டு திருநாமங்களை உடையது. இவற்றின் பெயர்க்காரணங்களைப் பதிகம் அறுபத்து
மூன்றில் திருஞானசம்பந்தர் சுவாமிகளே எடுத்து விளக்கி உள்ளார்கள். அது 'பல்பெயர்ப்பத்து' என
அமைக்கப் பெற்றுள்ளது. திருக்கழுமல மும்மணிக்கோவையுள் 'வசையில் காட்சி' என்னும் செய்யுளில்
இப்பன்னிரண்டு பெயர்களும் பன்னிருயுகத்தில் வழங்கினவாகப் பட்டினத்தடிகளால் உணர்த்தப்
பெறுகின்றது. இவையன்றி, சங்கநிதிபுரம் முதலாகப் பதினான்கு பெயர்களும் உள்ளனவாகத்
தலபுராணம் சொல்லும்.
புறவாழிக் கடல் பொங்கி எழுந்த பேரூழிக்காலத்தில் இறைவன் அறுபத்துநான்கு கலைகளையும்
ஆடையாக உடுத்திப் பிரணவத்தை தோணியாகக் கொண்டு அம்மையப்பனாக எழுந்தருளி வரும்போது
ஊழியிலும் அழியாத இத்தலத்தில் தங்கினார். இங்கே ஒரு மலை உண்டு. இது இறைவன் ரோமச முனிவருக்காகத்
திருக்கயிலைச் சிகரமொன்றை இந்த இடத்தில் தோற்றுவித்து, தானும் அம்மையுமாக இருந்து காட்சி
வழங்கும் இடம். இதனை 'இருபது பறவைகள் ஏந்திக் கொண்டிருக்கின்றன'. இங்கே குரு, இலிங்க, சங்கமமாகிய
மூன்று திருமேனியையும் வழிபடலாம். குருமூர்த்தம் தோணியப்பர்; இலிங்க மூர்த்தம் பிரமபுரீசர்;
சங்கம மூர்த்தம் சட்டைநாதர். இதுவே திருஞானசம்பந்தப் பெருமானின் அவதார ஸ்தலமாகும்.
சுவாமி பிரமபுரீசர், அம்மை திருநிலைநாயகி. சுவாமி-அம்மன் கோயில்களுக்கு இடையில்
திருஞானசம்பந்தர் ஆலயம் இருப்பது சோமாஸ்கந்தர் நிலையை நினைவூட்டுகிறது. திருத்தோணிச்
சிகரத்துள்ள இறைவர் பெரியநாயகர்; தோணியப்பர் எனவும் வழங்கப் பெறுவர்.
இறைவி பெரியநாயகி; திருஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிவஞானப்பால் அளித்தவர் இவரே.
பிரமதீர்த்தம், காளிதீர்த்தம், கழுமலநதி, விநாயகநதி, புறவநதி முதலிய இருபத்திரண்டு
தீர்த்தங்கள் உள்ளன.
முருகன், காளி, பிரமன், இந்திரன் முதலியோர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்,
மாணிக்கவாசகர், பட்டினத்து அடிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், அருணகிரிநாதர்
முதலியோர் போற்றியுள்ளனர். கணநாத நாயனார் அவதரித்த தலம். திருக்கயிலாய பரம்பரையில்
வந்தருளிய திருநமச்சிவாயர், காழிக்கங்கை மெய்கண்டார், சிற்றம்பலநாடிகள் முதலியோர்
வாழ்ந்த தலம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அர்த்தயாமத்தில் ஸ்ரீசட்டைநாதருக்கு விசேஷ வழிபாடு
நடைபெறும். சித்திரை மாதம் இறைவன் இறைவியர்க்குப் பெருவிழா நடைபெறும். அதில் இரண்டாம்
திருநாள் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை அளித்தருளிய திருமுலைப்பால் திருவிழா.
இவ்விழாக்களில் பெரும்பகுதி திருஞானசம்பந்தர் ஐதீகத்தை ஒட்டியனவேயாம்.
பதிக வரலாறு
இத்திருப்பதிகம் சீகாழிப் பதிகங்களுள் ஒன்று. அவற்றுள் சில பதிகங்களுக்கே வரலாறு காணப்படுகின்றது.
1470. செந்நெலங் கழனிப்பழனத் தயலேசெழும்
புன்னைவெண் கிழியிற்பவ ளம்புரைபூந்தராய்
துன்னிநல் லிமையோர்முடிதேய் கழலீர்சொலீர்
பின்னுசெஞ் சடையிற்பிறைபாம் புடன்வைத்ததே. 1
செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி, நல் இமையோர் முடி தேய் கழலீர்! சொலீர்
பின்னுசெஞ்சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே?
cennel am kazanip pazanattu ayalE cezum
punnai veN kiziyil pavaLam purai pUntarAy
tunni, nal imaiyOr muTi tEy kazalIr! colIr-
pinnucenjca Taiyil piRai pAmpu uTan vaittatE?
பொருள்: திருப்பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் செந்நெல் விளையும் அழகிய வயல்கள் எங்கும்
உள்ளன. வயல்களின் அருகே புன்னை மரச் சோலைகள் உள்ளன. அம்மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள்,
வெண்மையான துணியில் பவளங்கள் பரப்பினாற்போலக் காட்சி அளிக்கின்றன. இவ்வாறு விளங்கும்
திருப்பூந்தராய்ப் பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் திருவடிகளை, நல்ல தேவர்கள் நெருங்கி
வந்து தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்பெறும் திருவடிகளை
உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம்பிறையையும், அதற்குப் பகையாக உள்ள
பாம்பையும் சேர்த்து வைத்துள்ளது ஏனோ? சொல்லுவீராக.
குறிப்புரை: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இத்திருப்பதிகம் முதலாக நான்கு பதிகத்தில்,
சிவபெருமானை முன்னிலையிற் பெற்று, வினாவுதலும், விடை கூறியருள வேண்டுதலும் அமையப்
பாடியிருத்தல்பற்றி, இவற்றை, 'வினாவுரை' என்றனர். இத்தலைப்புடைய பிறமூன்றும் காண்க.
இதன் ஒவ்வொரு திருப்பாடலிலும் வெவ்வேறு பொருளைக் குறித்து வினாவினார். முதல் வினா இறைவன்
திருமுடிச் சார்புடையது. ஈற்றுவினா, திருவடிச் சார்புடையது. இடையிலே எருதேற்றம், மாதுபாகம்,
காமதகனம், கங்கையடக்கம், குழையும் தோடும் குலவும் முகம், இராவணனுக்கு அருளிய ஆக்கம்
என்பவை வினாவிற்குரிய பொருளாயுள்ளன. மூன்றாம் அடிகளிலுள்ள விளிகளால் திருவடிப் பெருமையும்,
அமலமும் (யானையுரித்த வரலாறும்), விருப்பு வெறுப்பில்லாத வித்தகமும் (பிறையும் பாம்பும் சூடிய வரலாறும்),
உயிர்களைத் தாங்கியுதவும் அருளுடைமையும் (மானேந்தியதால் விளங்கும் பசுபதித்துவமும்), திருவெண்ணீற்றுத்
திருமேனிப் பொலிவும், மால்விடையூரும் மாட்சியும், மறை முதலாகும் இறைமையும், அடியாரைக் காக்கும்
அடியும் (காரணமும்) குறிக்கப்பட்டன.
இவ்வாறு பதிகந்தோறும் உய்த்துணர்ந்து போற்றிவரின், சிவபிரான் திருவருள் எளிதின் எய்தும்
திருமுறையைப் பாராயணம் புரிவோர் அதனால் பெறும் பயன் அவரவர் அநுபவத்தால் அன்றி அறிய ஒண்ணாது.
பாக்கள் வெளிப்படையாகத் தோன்றலாம். கருத்து அருள்வெளியைக் கவர்ந்தது. மருளுலகம் இவ்வண்மையை
உணராது, வேதத்தின் இயல்பே இதன் இயல்பு.
முதற்பத்துத் திருப்பாடல்களுள்ளும் 'சொல்வீர்' என்று விடையிறுத்தருள வேண்டுவதுணர்க.
சடையில் பிறையும் பாம்பும் ஒருசேர வைத்ததற்குக் காரணம் சொல்ல வேண்டுகின்றார்; சந்திரனைப் பாம்பு
விழுங்குவதாகக் கொள்ளும் ஐதிகத்தைக் கருத்திற்கொண்டு, பகைப்பொருள்கள் இரண்டும் ஓரிடத்தில்
இருப்பது குற்றம் என்பார்க்கு, 'வேண்டுதல் வேண்டாமை இல்லான்' ஆகிய சிவபிரான் சடையில் பகை
நீங்கி உறவுகொள்ளும் நிலையை அவ்விரண்டும் அடைந்துள்ளன என்றார். பிறையைச்சூடிய வரலாறு
சிவாபராதம் புரிந்தாரும் அதனை உணர்ந்து அந்த இறைவனை வணங்குவராயின், அவர்க்குத் திருவருள்
கிடைப்பது உறுதி என்னும் உண்மையை உணர்த்துவது. ஐந்தலைப் பாம்பணிந்தது. 'பிறவி ஐவாய் அரவம்
பொரும் பெருமான்' (திருவாசகம் 139) என்ற கருத்தினது. "தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறியா
மதியான் என அமைத்தவாறே" (பட்டினத்தார் ஒருபா ஒருபஃது 6).
"சோழ வளநாடு சோறுடைத்து" இதிலுள்ள செந்நெல் அம்கழனிப்பழனம் உடைமை. சீகாழிக்கும்
உரித்தாயிற்று. கிழி- துணி. கிழி (துணியும் அறுவையும்) காரணப்பெயர். புரை- ஒத்த. துன்னி- நெருங்கி.
துன்னித்தோய்கழல் என்க. பழனத்தின் அயலிடங்களில் புன்னைப் பூக்கள் விழுந்துகிடக்கும் தோற்றம்
வெள்ளைத் துணியில் பவளம் கிடக்கும் காட்சியை ஒத்திருந்தது என்க. 'புன்னை பொன்தாது உதிர்மல்கும்
அந்தண்புகலி' (தி. 3. ப. 7. பா. 9) என்றதால் அதன் பூக்கள் செம்பவளம் போல்வன ஆதல் அறியப்படும்.
பாண்பு என்பது பாம்பு என்று திரிந்தது. பாண் - பாட்டு. பாட்டைக் கேட்கும் இயல்புடையது பாண்பு.
இதில், பிறையும் பாம்பும் சடையில் ஒருங்கு வைத்தவற்றை வினாவினார்.
Thirup-poontharai is one of the twelve names of Sirkazhi and Lord Civan is
seated in the Temple here. This city is surrounded by fertile red paddy fields. Along
with these fields thick groves of mastwood trees (Calophyllum) are grown in plenty.
White flowers with coral coloured top petals fall from the trees in the grove. This
scenery looks like corals strewn over a broad white sheet in the entire grove. In such a
rich place, oh Lord Civa! You are seated in the big temple; where the blessed devas
arrive, bow their heads with their hair lapping on the ground and offer their worship.
We wonder why You should adorn Your head both with the young crescent moon and its
enemy the snake. You may tell me.
1471. எற்றுதெண் டிரையேறிய சங்கினொடிப்பிகள்
பொற்றிகழ் கமலப்பழனம் புகுபூந்தராய்ச்
சுற்றிநல்லி மையோர்தொழு பொற்கழலீர் சொலீர்
பெற்றமேறு தல்பெற்றிமை யோபெருமானிரே. 2
எற்று தெண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொன்-திகழ் கமலப் பழனம் புகு பூந்தராய்ச்
சுற்றி, நல் இமையோர் தொழு பொன்கழலீர்! சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ? - பெருமானிரே!
eRRu teN tirai ERiya cagkinoTu ippikaL
pon-tikaz kamalap pazanam puku pUntarAyc
cuRRi, nal imaiyOr tozu ponkazalIr! colIr-
peRRam ERutal peRRimaiyO?--perumAnirE!
பொருள்: பூந்தராய் என்னும் சீகாழிப் பதியின்கண் உள்ள தெளிந்த கடலில் அலைகள் மாறி மாறி
வந்து கரையில் மோதுகின்றன. அந்த அலைகளில் ஏறிவந்த சங்குகளும் சிப்பிகளும் பொன்போல் விளங்கும்
தாமரை மலர்கள் மலர்ந்த வயல்களில் வந்து புகுகின்றன. நல்ல தேவர்கள் சூழ்ந்து தொழும் அழகிய
திருவடிகளை உடைய சீகாழிப்பதி இறைவரே! அயிராவதம் முதலிய ஊர்திகள் இருக்க, விடைஏறி வருதல்
உமக்கு ஏற்றத் தன்மைத்தாகுமோ? சொல்லுவீராக.
குறிப்புரை: எற்று - எறிந்த. திரை - அலை. இப்பி - சங்கினத்துள் முதலாவது. இடம்புரியும் வலம்புரியும்
சலஞ்சலமும் பாஞ்ச சன்னியமும் ஆகிய சங்கினம் நான்கும் முறையே இப்பி முதல் சலஞ்சல முடியக்கூறும்
நான்காலும் ஆயிரம் ஆயிரமாகச் சூழப்பெற்ற பெருமையின. (நிகண்டு, தொகுதி 3 பா. 73) பெற்றம்- எருது.
பெற்றிமை- தன்மை,பேறு,உயர்வுடையது. சிறந்த பாக்கியம் என்னுங் கருத்தில் வந்தது. பெருமகன் என்பது
பெருமான் என்று மருவிற்று. மகன் - தேவன், (மகள் - தேவி, திருமகள் - நாமகள்) பெருமாளிர்- விளி,
ஏகாரம் ஈற்றசை, சீகாழிக் கழனியிற் சங்கும் இப்பியும் பொன்போல் விளங்கும் தாமரைகளும் மிக்குள்ளன.
பெற்றமேறுதல் - 'பசு வேறும் பரமன்' விடையேறுதல்; பசுபதி என்பதைக் குறித்தது. இதில் விடை (பசு) ஏறும்
உண்மையை வினாவினார்.
The city of Poontharaai is enriched with lotus ponds of golden coloured flowers
lending to the place a golden appearance. The seashore is near the city. There, the conches and
oysters are widely mixed with each other and reach the banks and thereafter roll into the
lotus ponds. In such a glorious city, the blessed devas (angels) flock together and offer
worship to Your holy feet bearing golden anklets. Now tell me, You the great Lord! is it fit
for You to mount the bull to go round the world, though You have for Your comforts, the
elephant of Devendra (Iyravadham) and many more vehicles at Your disposal?
1472. சங்குசெம் பவளத்திரள் முத்தவை தாங்கொடு
பொங்குதெண் டிரைவந்தலைக் கும்புனற்பூந்தராய்த்
துங்கமால் களிற்றின்னுரி போர்த்து கந்தீர்சொலீர்
மங்கைபங் கமுமங்கத் தொடொன்றிய மாண்பதே. 3
சங்கு செம்பவளத்திரள் முத்து அவைதாம்கொடு
பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்,
துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர் -
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே?
cagku cempavaLattiraL muttu avaitAm koTu
pogku teNtirai vantu alaikkum punal pUntarAy,
tugka mAlkaLiRRin uri pOrttu ukantIr! colIr-
magkai pagkamum agkattoTu onRiya mANpu atE?
பொருள்: நீர்வளம் மிகுந்த பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் உள்ள தெளிந்த கடலில்
பொங்கி வரும் அலைகள் சங்கு, செம்பவளம், முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து கரைகளில்
வீசுகின்றன. உயரிய பெரிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து மகிழ்ந்து உறையும்
சிவபெருமானே! உமது திருமேனியின் இடப்பாகமாக உமையம்மையை ஓருடம்பில் ஒன்றுவித்துள்ள
மாண்பு யாதோ? சொல்லுவீராக.
குறிப்புரை: பொங்குதல் - உயர்தல், மிகுதல், புனல்- நீர், துங்கம் - உயர்ச்சி. பவளத்தின்
அடைமொழியால் மற்றையிரண்டின் நிறம் வெளிப்படை. திரள்- திரட்சி; தொகுதியுமாம்.
களிறு - மதக்களிப்புடையது (யானையின் ஆண்). மால்- பெருமை, மயக்கமுமாம். உரி- தோல், உகந்தீர்-
உயர்ந்தவரே, பங்கம்-கூறு (பங்கம் +அம்). அங்கம் -உறுப்பு, இங்குத் திருமேனியைக் கொள்க; ஒன்றிய மாண்பு -
அர்த்தநாரீச்சுரவடிவின் சிறப்பு. - , யானையை உரித்தது ஆணவமல நாசம் என்பர், மங்கை பங்கு;
போகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் பற்றியும் உயிர்க்கு இச்சாஞானக் கிரியா
பலத்தை மிக விளைத்தல் பற்றியும் ஆயிற்று. ஆற்றலுக்கு அதுவே ஏது. களிற்றையுரித்த போது தேவியார்
அஞ்சியதாகச் சொல்வது. ஞானமும் அஞ்சத் தக்க அத்துணைக் கொடியது இருண்மலம் என்பதுணர்த்த.
இதில் மெய்ப்பாதியில் மாதிருக்கும் உண்மையை வினாவினார்.
In the city of Poontharaai the surging water of the sea flings conch shells, corals
and beautiful pearls on the shore. Lord Civa! You are seated in the temple of the city
gracefully. You were pleased to wear the skin of the great male elephant removing its
fleece after killing it. Despite this terrific deed and decoration You have accepted the
tender body of Uma Devi on the left side of Your body. These two incongruities may be
explained to me.
1473. சேமவன் மதில்பொன் னணிமாளிகை சேணுயர்
பூமணங் கமழும்பொழில் சூழ்தருபூந்தராய்ச்
சோமனும் மரவுந்தொடர் செஞ்சடையீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக்கடைக் கண்சிவந்ததே. 4
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர்
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய்,
சோமனும் அரவும் தொடர் செஞ்சடையீர்! சொலீர்
காமன் வெண்பொடிஆகக் கடைக்கண் சிவந்ததே?
cEma val matil pon aNi mALikai cEN uyar
pU maNam kamazum pozil cUztaru pUntarAy,
cOmanum aravum to Tar cenjca TaiyIr! colIr-
kAman veN poTi Akak kaTaikkaN civantatE?
பொருள்: பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும்,
பொன்னால் அழகுறுத்தப் பெற்ற அழகிய மாளிகைகளும், மிக உயர்ந்து மலர் மணங்கமழும்
சோலைகளும் சூழ்ந்துள்ளன. இத்துணை வளமுள்ள சீகாழிப்பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!
உமது திருமுடியின் செஞ்சடையில் சந்திரனும், பாம்பும் தங்கியுள்ளன. உயிர்கட்கு போகத்தின்மேல்
அவாவினை விளைவிக்கும் மன்மதன் வெண்பொடி ஆகுமாறு அவனைக் கடைக்கண் சிவந்து
அழித்தது ஏனோ? சொல்லுவீராக.
குறிப்புரை: சேமம் -காவல். சேண் உயர்தல்- விண்ணில் மிக வோங்குதல். பொழில்- சோலை.
சோமன்- பிறை. அரவு- பாம்பு. காமன் - மன்மதன். வெண்பொடி-(எரித்த) சாம்பல். சிவத்தல்- கோபக்குறிப்பு.
''கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்" (தொல், சொல், உரிச்சொல் 76). மன்மத தகனம், யோகியாய்,
யோகமூர்த்தி உதவுதற் பொருட்டு நிகழ்கின்ற இயற்கை (சித்தியார் 70) இதில் காமனை எரித்தவாற்றை
வினாவினார்.
Poontharaai is surrounded by strong ramparts all around. Also the palaces and
mansions are all gold plated. In addition, the city is enriched by the gardens of fragrant
flowers in the trees which rise to touch the high sky. Oh Lord Civa! in Your matted hair of
red beauty the young moon and the snake reside and follow You for salvation. You know well
that kaaman or cupid (the Roman god of Love, the son of Roman goddess Venus and Greek equivalent
god Eros) is the god to be invoked for marital happiness of human beings. In spite of this,
You got angry with him for his petty fault and winked Your lotus eye for a second. In a moment
he was burnt into white ashes. Oh Lord! please tell us why You have destroyed him into ashes.
1474. பள்ளமீனி ரைதேர்ந்துழலும் பகுவாயன
புள்ளுநா டொறுஞ்சேர் பொழில்சூழ் தருபூந்தராய்த்
துள்ளு மான்மறியேந் தியசெங்கை யினீர்சொலீர்
வெள்ள நீரொருசெஞ் சடைவைத்த வியப்பதே. 5
பள்ளம் மீன்இரை தேர்ந்து உழலும் பகுவாயன
புள்ளும் நாள்தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய்,
துள்ளும் மான்மறி ஏந்திய செங்கையினீர்! சொலீர்
வெள்ளநீர் ஒரு செஞ்சடை வைத்த வியப்பு அதே?
paLLam mIn irai tErntu uzalum pakuvAyana
puLLum nAltoRum cEr pozil cUztaru pUntarAy,
tuLLum mAnmaRi Entiya cegkaiyinIr! colIr-
veLLa nIr oru cenjca Tai vaitta viyappu atE?
பொருள்: சோலைகளால் சூழப்பட்ட பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் நீர்நிலைகள்
வளப்பமாக உள்ளன. அவைகளில் இருக்கும் மீன்களை இரையாகக் கொள்ளுவதற்கு பிளந்த வாயை
உடைய நாரைப் பறவைகள் நாள்தோறும் பல இடங்களிலிருந்து வந்து தங்குகின்றன. இவ்வளவு
செழிப்பான சீகாழிப்பதியில் எழுந்தருள்புரிகின்ற சிவபெருமானே! துள்ளுகின்ற மான்கன்றை
செங்கையில் உடையவராய் விளங்குகின்றீர். பெருகிவந்த கங்கைநதியின் வெள்ளத்தைச் சிவந்த
உமது சடையில் தடுத்து நிறுத்தித் தாங்கிய வியத்தகு செயலுக்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக.
குறிப்புரை: நீர்ப்பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து அலையும் நாரைகள்
நாள்தொறும் சோலையில் தங்கும் வளமுடையது சீகாழி. நாரை பகுந்த (பிளந்த) வாய் உடைமையால்
பகுவாயன புள்ளு என்றார். 'வெண் குருகும் பகுவாயன நாரையும் திரைவாய் இரைதேரும் வலஞ்சுழி'
(தி.2. ப.2 பா.2) என்றது காண்க. உணவும் இரையும் ஒன்றல்ல என்பதை "இழிவறிந்துண்பான்கண்
இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்" (குறள் 946). என்றதனால் அறிக. செஞ்சடைமேல்
நீர்ப்பெருக்கை வைத்த வியப்பைச் சொல்வீர் என்று துள்ளுகின்ற மான்கன்றை ஏந்திய செங்கையை
உடைய சிவபெருமானை நோக்கி வேண்டுகின்றார். காட்டில் இருக்கத்தக்க மானைக் கையிலும் கையில்
இருக்கத்தக்க (கமண்டல) நீரைச் சடைக் காட்டிலும் ஏந்தியது வியப்பு. இதில் கங்கையைத் தாங்கிய
ஆற்றலை வினாவினார்.
All sides of Poontharaai city are surrounded by beautiful gardens. The split-billed
herons (storks, water birds) throng in this garden of Poontharaai from all four sides everyday.
They prey on fish in brooks nearby for their food. In such a flourishing city Lord Civa,
You are seated in the great temple holding in Your fair left hand a leaping deer. Oh Lord!
Why have You arrested the Ganges river of gushing water on Your reddish matted hair! You
stopped the flow of the river and kept it on Your head. What is the reason for this great
action? Please tell me!
1475. மாதிலங் கியமங்கை யராடமருங்கெலாம்
போதிலங் கமலம்மது வார்புனற் பூந்தராய்ச்
சோதியஞ் சுடர்மேனி வெண்ணீ றணிவீர்சொலீர்
காதிலங் குழைசங்க வெண்தோடு டன்வைத்ததே. 6
மாது இலங்கிய மங்கையர் ஆட,மருங்குஎலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்,
சோதிஅம்சுடர்மேனி வெண்நீறு அணிவீர்! சொலீர்
காதில் அம் குழை சங்கவெண்தோடு உடன் வைத்ததே?
mAtu ilagkiya magkaiyar ATa, marugku elAm
pOtil am kamalam matu vAr punal pUntarAy,
cOti am cuTar mEni veN nIRu aNivIr! colIr-
kAtil am kuzai cagka veNtOTu uTan vaittatE?
பொருள்: நீர்வளம் மிக்க பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் உள்ள அழகிய பெண்கள் ஆங்காங்கே
நடனம் ஆடுகின்றார்கள். இந்த ஊரின் மருங்கெல்லாம் பூத்துள்ள அழகிய தாமரை மலர்கள் தம்மிடம்
நிறைந்துள்ள தேனை ஒழுக விடுகின்றன. இத்துணை செழிப்பான சீகாழிப்பதியில் எழுந்தருளிய
சிவபெருமானே! உமது ஒளிமிக்க அழகிய திருமேனியில் வெண்ணீறு அணிந்துள்ளீர். உமது காதுகள்
இரண்டனுள் ஒன்றில் குழையையும், மற்றொரு காதில் சங்குத் தோட்டையும் அணிந்துள்ளீர். இவ்வாறு
மாறுபட்ட அணிகலன்கள் அணிவதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
குறிப்புரை: மாது - அழகு. இலங்குதல் - விளங்குதல். மருங்கு- பக்கம். போது- மலரும் பருவத்து அரும்பு.
கமலம் - தாமரை, மது -கள், குழையும் தோடும் காதணிகள். சீகாழியில் அழகிய மங்கையர் ஆடுதற்குப் பரிசாகத்
தாமரை மலர்கள் தேனை ஒழுக்குகின்றன என்று நீர்நிலவளம் உணர்த்தப்பட்டது. செம்மேனியில் வெண்ணீற்றை
அணிவீர் என்று அழைத்து, திருக்காதில் குழையும் தோடும் உடன் வைத்த புதுமையை வினாவினார். 'தோடுடையான்
குழையுடையான்' (தி.1 ப.61. பா.8) 'தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்.... உடைத்தொன்மைக் கோலம்' என்பது
திருவாசகம் (232).
In the city of Poontharaai beautiful damsels dance all over the places. The city is
enriched by plenty of lotus ponds. These flowers pour their honey into the water of the pond,
which is already sweet. Oh Lord Civa! Your divine body, glowing already is adorned with sacred
white powder. Oh Lord! please tell us why You have adorned one of Your ears with thodu (conch)
and the other with beautifully carved ear jewel.
7. ஏழாவது பாட்டு கிடைக்கப் பெறவில்லை.
1476. வருக்கமார் தருவான் கடுவன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலைதருங் கனிமாந்திய பூந்தராய்த்
துரக்குமால் விடைமேல் வருவீரடிகேள் சொலீர்
அரக்கனாற் றலழித்தரு ளாக்கியஆக்கமே. 8
வருக்கம் ஆர்தரு வான் கடுவ(ன்)னொடு மந்திகள்
தருக் கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய்,
துரக்கும் மால்விடைமேல் வருவீர்! அடிகேள்! சொலீர் -
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே?
varukkam Artaru vAn kaTuva(n)noTu mantikaL
taruk koL cOlai tarum kani mAntiya pUntarAy,
turakkum mAlviTaimEl varuvIr! aTikEL! colIr-
arakkan ARRal azittu aruL Akkiya AkkamE?
பொருள்: பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் பழங்கள் தரும் மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள்
பல உள்ளன. அச்சோலைகளில் ஆண் குரங்குகளும், பெண் குரங்குகளும் கூடி மரங்களில் உள்ள கனிகளை
வயிறார உண்டு மகிழ்ந்து வாழ்கின்றன. இப்பதியில் எழுந்தருளி இருக்கின்ற சிவபெருமானே! திருமால்
உமக்கு வாகனமாக வரவேண்டுமென்று விரும்பி காளை உருவம் தாங்கிவர, அதன்மேல் அமர்ந்து காட்சி தரும்
அடிகளே ! இராவணனை உமது கயிலாய மலையின்கீழ் அடர்த்தி அவன் தருக்கினை அழித்தீர். இடையூறு செய்த
அவனுக்கு உடனே அருளும் வழங்கினீர். இந்த ஆக்கச் செயலுக்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக.
குறிப்புரை: வருக்கம் - இனம். கடுவன் - ஆண் குரங்கு. மந்தி - பெண் குரங்கு. தரு - மரம். மாந்திய - தின்ற.
துரக்கும் - துரத்தும் (பிறவினை) துரந்த, துரந்து எனல் தன்வினையாட்சி. அருகிய வழக்கு. வருவீராகிய அடிகேள்
என்று விளித்து. இராவணனது ஆற்றலை அழித்து அருள்கொடுத்த ஆக்கத்தைப் பற்றி இதில் வினாவினார்.
Poontharaai city is surrounded by thick groves full of fruit yielding tall trees.
Male and female monkeys in this area join in groups and enter into the groves. Here they
select the sweet fruits and eat well to their hearts' content and play with each other.
In this Poontharaai, Lord Civan appears riding on the bull of Thirumaal (At the request of
Thirumaal, Lord Civa gave permission to be transformed into a Bull and to be his vehicle).
Oh my Lord Civa! My Supreme! tell me why You punished the all powerful demon king of Sri Lanka;
but immediately blessed him also with divine grace.
1477. வரிகொள்செங் கயல்பாய்புனல் சூழ்ந்தமருங்கெலாம்
புரிசைநீடுயர் மாடநிலா வியபூந்தராய்ச்
சுருதிபாடி யபாணியல்தூ மொழியீர்சொலீர்
கரியமா லயன் நேடியுமைக் கண்டிலாமையே. 9
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய்,
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர்! சொலீர்
கரிய மால் அயன் நேடி உமைக் கண்டிலாமையே?
vari koL cegkayal pAy punal cUznta marugku elAm
puricai nITu uyar mATam nilAviya pUntarAy,
curuti pATiya pAN iyal tU moziyIr! colIr-
kariya mAl, ayan, nETi umaik kaNTilAmaiyE?
பொருள்: பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் மதில்களால் சூழப்பட்ட நீண்டு உயர்ந்த மாட
மாளிகைகள் எங்கும் விளங்குகின்றன. அதன் பக்கங்களில் எல்லாம் நீர்நிலைகள் சூழ்ந்துள்ளன.
இந்த நீர்நிலைகளில் வரிகளைக் கொண்டுள்ள செவ்விய கயல்மீன்கள் பாய்ந்து துள்ளி விளையாடிக்
கொண்டிருக்கின்றன. இப்பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நீர் வேதங்களைப் பாடுவதும்,
இசைப்பாடல் போன்ற இனிய மொழிகளைப் பேசுவதுமாக விளங்குகின்றீர். கரிய திருமாலும், பிரமனும் உம்மைத்
தேடியும் காண இயலாத அனற்பிழம்பாகத் தோன்றினீர். இதற்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக.
குறிப்புரை: சீகாழியில் உள்ள மாட மாளிகைகளின் உயர்வும் நீள்வும், புரிசையும், நீர்வளமும்
அந்நீரிற்பாயும் மீன்களின் செழுமையும் குறிக்கப்பட்டன. வேதாகமங்கள் சிவபெருமான் திருவாக்காதலின்,
சுருதிபாடிய பாண் இயல் தூமொழியீர் என்று விளித்தார். இதில், அரியும் அயனும் அடிமுடி தேடிக்
காணாமையை வினாவினார். பாடிய பாண் (பாட்டு) இயலும் மொழி தூமொழி. சுருதி - கேள்வி,
எழுதாக்கிளவியாதலின் கேள்வியால் தொன்று தொட்டுணர நின்றன. நேடி - தேடி.
In the city of Poontharaai ramparts are so high as to touch the sky. All around
the city brooks run, always with profuse water. In these brooks streaked red carp fish
leap and move all around for their prey. Oh Lord Civa! You are the Originator and the
Author of all the Vedas and aagamaas that are meant for the benefit of human race.
Oh Lord Civa! can You enlighten me how Lord Vishnu and Brahma could not trace Your
holy feet and supreme head when You appeared as an infinite fiery column, even after
tireless search for millions of years?
1478. வண்டலங் கழனிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்டரீக மலர்ந்துமதுத் தருபூந்தராய்த்
தொண்டர் வந்தடிபோற்றி செய்தொல் கழலீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறியதாங் குறியின்மையே. 10
வண்டல் அம் கழனி(ம்) மடை வாளைகள் பாய் புனல்
புண்டரீகம் மலர்ந்து மதுத் தரு பூந்தராய்,
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல்கழலீர்! சொலீர்
குண்டர்சாக்கியர் கூறியது ஆம் குறிஇன்மையே!
vaNTal am kazani(m) maTai vALaikaL pAy punal
puNTarIkam malarntu matut taru pUntarAy,
toNTar vantu aTi pORRicey tol kazalIr! colIr-
kuNTar cAkkiyar kURiyatu Am kuRi inmaiyE?
பொருள்: பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் எங்கும் வயல்கள் சூழ்ந்துள்ளன. அதில் வளம்
மிக்க வண்டல் மண் மிகுதியாக உள்ளன. வயல்களின் மடைகளில் வாளைமீன்கள் பாய்ந்து
கொண்டிருக்கின்றன. எல்லா மருங்கிலும் நீர்நிலைகள் மிகுதியாக உள்ளன. இங்கு தாமரை
மலர்கள் மலர்ந்து தேனைத் தந்து கொண்டிருக்கின்றன. இத்துணை வளம் மிக்க சீகாழிப்பதியில்
எழுந்தருளிய சிவபெருமானே! உமது கழல் அணியப் பெற்ற பழமையான திருவடிகளில் தொண்டர்கள்
வந்து வணங்கும் வண்ணம் உள்ளார்கள். சமணர்களும், சாக்கியர்களும் (புத்த சமயத்தவர்களும்) உம்மைக்
கூறும் பொருளற்ற பழிச் சொல்லுக்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக.
குறிப்புரை: வண்டல் - வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப்பட்ட உரம்மிக்க மணல். மடை - நீர்மடை.
புண்டரிகம்- தாமரை. தொல்கழல் - திருவடியின் தொன்மை. ஆதியும் மத்தியும் அந்தமும் இல்லாதது. கழல் என்பது
எருதினது கொம்பு போல் அமைந்தது. பகைவர் உடம்பில் ஊறுபடுத்த, வலக்காலில் தரிக்கப்படுவது. "தாள்,
களங்கொளக் கழல்பறைந்தன கொலல் லேற்றின் மருப்புப் போன்றன" (புறநானூறு 4.3-4) என்னும் அடிகளால் அறிக.
தேய்ந்த பின் மழமழவென்றாகி எருதின் கொம்பை ஒத்தது. வடிவில் முழுதும் ஒப்பது. குண்டர் - சமணர்.
குறியின்மை - பிழையாத குறி இல்லாமை (தி.2. ப.82.பா.10). இதில் புறப் புறச்சமயத்தார் செய்யும் நிந்தையின்
பொருளின்மையை வினாவினார்.
The city of Poontharaai is encircled by paddy fields of rich sediment soil. Through the water
outlet, the excess water in the field flows out of the fields carrying the Trichiurus lepturus fish
(Vaalai fish) that reach the lotus ponds, which now overflow with the honey dripping in them.
The water in the lotus tank, naturally sweet, now becomes sweeter. In such a plentiful city of
Sirkazhi, also called Poontharaai, devotees in large groups gather in the temple and worship the
ancient holy feet of Lord Civa. Oh Lord Civa! Tell me how You are not affected by the harsh words of
the denying sects - Jains and Buddhists.
1479. மகரவார் கடல்வந் தணவும்மணற் கானல்வாய்ப்
புகலிஞான சம்பந்தனெழில் மிகுபூந்தராய்ப்
பகவனாரைப் பரவுசொன் மாலைபத்தும் வல்லார்
அகல்வர் தீவினைநல் வினையோடுடனாவரே. 11
மகர வார்கடல் வந்து அணவும் மணல் கானல்வாய்ப்
புகலி ஞானசம்பந்தன், எழில் மிகு பூந்தராய்ப்
பகவனாரைப் பரவு சொல்மாலைபத்தும் வல்லார்
அகல்வர், தீவினை; நல்வினையோடு உடன்ஆவரே.
makara vArkaTal vantu aNavum maNal kAnalvAyp
pukali njAnacampantan, ezil miku pUntarAyp
pakavanAraip paravu colmAlaipattum vallAr
akalvar, tIvinai, nalvinaiyOTu uTan AvarE.
பொருள்: வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெற விரும்புவீராயின், விரதங்களை மேற்கொண்டு
உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருப்பூந்தராயை அடைந்து ஞானசம்பந்தர் ஓதியருளிய
செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே
ஞானத்தைத் தருவதாகும்.
குறிப்புரை: மகரம் - சுறாமீன். அணவும் - பொருந்தும். கானல்- கடற்கரைச்சோலை. புகலி - சீகாழி.
எல்லாவுயிர்க்கும் புகலிடமானது. பகவனார்- திரு, ஞானம் முதலிய ஆறு குணங்களும் உடையவர்,
பரவுதல் - வாழ்த்தல். தீவினையை அகல்வர்- நல்வினையை அகலாது உடனாவார். ஓடு உடன் இரண்டும்
இணைந்து வந்தவாறு அறியத்தக்கது.
The seacoast in Pukali (Sirkazhi) is full of white sand. This is bathed by the
waves full of sharks. This city is the birthplace of Gnanasambandar. He sang these ten
songs in praise of Lord Civa of this place. Whoever could recite these ten songs sincerely
and continuously for long, will shed all evils from their life, retaining only good.
They will also be blessed with boons.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
1ஆம் பதிகம் முற்றிற்று
End of 1st Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 138 பதிக எண்: 2
2. திருவலஞ்சுழி 2. THIRU-VALAN-CHUZHI
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
பிலத்தினுள் சென்றுவிட்ட காவிரி வெளிப்படும் பொருட்டு ஏரண்ட முனிவர் பிலத்தினுள் இறங்க,
காவிரி வெளிவந்து வலமாகச் சுழித்துக் கொண்டு சென்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது. இது
கும்பகோணம் - தஞ்சாவூர் தொடர்வண்டிப் பாதையில், சுவாமிமலை தொடர்வண்டி நிலையத்திற்கு
வடக்கே முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 25ஆவது
தலம் ஆகும். கும்பகோணம் - தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. இறைவர் கற்பகநாதேசுரர்.
இறைவியார் பெரியநாயகி. தீர்த்தம் காவிரி. அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக்
கடைந்த பொழுது பூசித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இங்குக் கொண்டு வந்து எழுந்தருளுவித்து
வழிபட்டான். வெள்ளைப் பிள்ளையார் கோயில் மிகவும் வேலைப்பாடுடையது. இக்கோயிலில் ஏரண்ட
முனிவரின் பிரதிமையும், பக்கத்தில் வலஞ்சுழி நாதர் என்னும் சிவலிங்கத் திருமேனியும் இருக்கின்றன.
இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகங்கள் மூன்று, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று
ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.
பதிக வரலாறு
முத்தமிழ் விரகர், மாதவத்து முதிரும் அன்பர்கள் எதிர்கொள, வலஞ்சுழிப் பெருமான் கோயில் வந்து
எய்திக் கோபுரம் இறைஞ்சி, உள்புகுந்து, வலங்கொண்டு, உச்சிமேல் அஞ்சலியினராய்ப் பெருகும் ஆதரவுடன்
பணிந்தெழுந்து ஊனமில் இசையுடன் விளங்கிய இத்திருப்பதிகத்தைப்பாடி வினாவியருளினார்.
திருச்சிற்றம்பலம்
1480. விண்டெலா மலரவ்விரை நாறுதண் தேன்விம்மி
வண்டெலா நசையாலிசை பாடும்வலஞ்சுழித்
தொண்டெலா ம்பரவுஞ்சுடர் போலொளியீர் சொலீர்
பண்டெலாம் பலிதேர்ந்தொலி பாடல் பயின்றதே. 1
விண்டு எலாம் மலர(வ்)விரை நாறு தண் தேன் விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?
viNTu elAm malara(v) virai nARu taN tEn vimmi,
vaNTu elAm nacaiyAl icai pATum valanjcuzi,
toNTu elAm paravum cuTar pOl oLiyIr! colIr-
paNTu elAm pali tErntu olipATal payinRatE?
பொருள்: திருவலஞ்சுழியில் செழிப்பான சோலைகள் எங்கும் சூழ்ந்து விளங்குகின்றன.
அச்சோலைகளில் மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. அம்மலர்களில் குளிர்ச்சியான
தேன் உள்ளன. அத்தேனை உண்ணும் விருப்பினால் வண்டுகள் இசை பாடிக் கொண்டு பூக்களிடம் வந்து
சேருகின்றன. இத்துணை செழிப்பான திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! செஞ்சுடர்
போன்ற ஒளி உமது திருமேனியில் திகழ்கின்றது. தொண்டர்கள் பலர் உம்மைப் பாடிப் பரவுகின்றனர்.
முன்பெல்லாம் நீர் இசையோடு பாடல்களைப் பாடியும் உலகெலாம் சுற்றிக் கொண்டு அங்கு வாழும்
பெண்களிடமிருந்து பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
குறிப்புரை: விண்டு - திறந்து, எல்லாம் - போதுகள் யாவும், விண்டு மலர என்க. விரை - மணம்.
நசை -விருப்பம். தொண்டு - தொண்டர் (ஆகுபெயர்). சுடர் - செஞ்சுடர். ஒலிபாடல் - வினைத்தொகை.
In the city of Thiru-valan-chuzhi many flower gardens exist. The fragrant flowers
in these gardens spread their aroma in the air all around. The flowers are filled with honey.
The bees with a desire to devour the cool honey, hum pleasingly and fly towards the flower
gardens. Their delightful humming reverberates all over the area. In such a glorious city,
inside the Hindu temple, Lord Civa! seated in the sanctum sanctorum You bless the devotees
who sing Your greatness. There, You shed very bright light, which looks like sun's bright
red rays. In those days, Oh Lord Civa! You used to move all around the cosmos, singing very
melodious songs and asking for offerings (பலி-food for gods) from ladies living in those areas.
Oh Lord Civa! kindly tell me the reason why You behaved like this.
1481. பாரல்வெண் குருகும்பகுவா யனநாரையும்
வாரல்வெண் டிரைவாயிரை தேரும்வலஞ்சுழி
மூரல்வெண் முறுவல்நகு மொய்யொளியீர்சொலீர்
ஊரல்வெண் டலைகொண்டு லகொக்க வுழன்றதே. 2
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறுவல் நகு மொய் ஒளியீர்! சொலீர் -
ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே?
pAral veN kurukum pakuvAyana nAraiyum
vAral veN tiraivAy irai tErum valanjcuzi,
mUral veN muRuval naku moy oLiyIr! colIr-
Ural veN talai koNTu ulaku okka uzanRatE?
பொருள்: திருவலஞ்சுழியில் உள்ள காவிரி நதியில் தண்ணீர் வெண்மையான அலைகளோடு
எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கின்றது. நீளமான கழுத்தினை உடைய கொக்குகளும் பிளவுண்ட வாயை
உடைய நாரைகளும், தங்களுடைய இரையை அத்தண்ணீரில் தேடிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு
செழிப்பான திருவலஞ்சுழியில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே! புன்னகை புரியும் வெண்மையான
பற்களோடு ஒளிச்சுடராய் எழுந்தருளியிருக்கிறீர். இத்தகைய சிறப்பான தோற்றத்தை உடைய நீர், மண்டை
ஓட்டை மாலையாக அணிந்து கொண்டு கையில் ஒரு கபாலத்தையும் ஏந்திக் கொண்டு உலகம் முழுவதும்
சுற்றி அங்குள்ள மாதர்களிடமிருந்து பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக!
குறிப்புரை: பாரல் - நீளல், அல்விகுதி. வாரல் - வார்தல், ஒழுகுதல். திரைவாய் இரைதேரும்- அலை
நீரிலுள்ள மீன் உணவு ஆராயும், குருகு - கொக்கு, மூரல் - புன்னகை, முறுவல் - பல், நகு - விளங்கும். ஊரல்- ஊர்தல்.
பாரல்- நீளல், நீண்டவாய், பிளத்தல் - பிளந்தவாய் எனில் 'பகுவாய்' கூறியது கூறலாகும். 'பாரல் வாய்ச்சிறுகுருகு'
(தி. 3. ப. 63. பா.5) பார்க்க.
In the city of Thiru-valan-chuzhi, the river Cauvery flows all around the city with
pure waters, and small waves dashing on both the banks of the river. The long billed white
storks as well as the split-billed herons seek their prey on the shores of the rippling
Cauvery water. In such a nice city Oh Lord Civa! You are seated in the sanctum sanctorum
of the Hindu temple with a smiling face and gleaming white teeth shedding light of greatness
all around. In spite of such a beauteous appearance in the temple, Oh Lord Civa! You wear a garland
of skulls on Your body and hold a skull in Your hand wandering over the cosmos, seeking food
(பலி) everywhere. Kindly tell me the reason for such behaviour.
1482. கிண்ண வண்ணம ருங்கிளர்தா மரைத்தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம்வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவலீர்சொலீர்
விண்ண வர்தொழவெண் டலையிற்பலி கொண்டதே. 3
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத் தாது அளாய்
வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி,
சுண்ணவெண்பொடிக்கொண்டு மெய்பூச வலீர்! சொலீர் -
விண்ணவர் தொழ வெண்தலையில் பலி கொண்டதே?
kiNNa vaNNam malkum kiLar tAmarait tAtu aLAy
vaNNa nuN maNal mEl anam vaikum valanjcuzi,
cuNNa veN poTik koNTu mey pUca valIr! colIr-
viNNavar toza, veNtalaiyil pali koNTatE?
பொருள்: காவேரி நதியின் கரையில் உள்ள பொடி மணலில் அன்னம் (தாமரைப் பூந்தாதுக்கள்
பொருந்திய) தங்கி விளையாடுகின்றன. இவ்வளவு வளமுடைய திருவலஞ்சுழியில் உடம்பெல்லாம்
திருநீற்றைப் பூசியவனாய் ஒளி மிகுந்து விளங்குகின்ற சிவபெருமானே! தேவர்கள் அனைவரும்
உம்மை வந்து வணங்குகிறார்கள். அவர்களுக்கெல்லாம் தலைமைத் தன்மை கொண்ட சிவபெருமானே!
வெள்ளிய தலை ஓட்டை கையில் எடுத்துக்கொண்டு நீர் பலி ஏற்பதற்காக உலகம் முழுவதும் திரிவதற்குக்
காரணம் யாதோ? சொல்லுவீராக!
குறிப்புரை: தாமரைகள் கிண்ணத்தின் உருவம்போல மலர்தலை உணர்த்தினார். கிளர்- விளங்குகின்ற.
அளாய் - அளாவி, கலந்து, வண்ணம் - கிளர் நிறம், அழகு, அன்னம் தாமரைப் பூந்தாதுக்களைப் பொருந்திய
அழகுடன் பொடி மணலில் வைகும் வளத்தது வலஞ்சுழி, பொடிக்கொண்டு பூசுதலின் வன்மை சர்வ சங்கார
கர்த்திருத்துவத்தைக் குறித்தது. வைகல் - தங்குதல்.
In the city of Thiru-valan-chuzhi swans in bevy rest on the fine sand bed of the
Cauvery river, after collecting the pollens of the blooming bowl shaped red lotuses in the
ponds nearby. In such a nice city, Oh Lord Civa! You are seated in the sanctum sanctorum
of the Hindu temple. Holding a skull in Your hand, You wander all over the cosmos seeking
food (பலி) from all. Kindly tell me the reason for such behaviour.
1483. கோடெலா நிறையக்கு வளைம்மலருங்குழி
மாடெலா மலிநீர்மண நாறும்வலஞ்சுழிச்
சேடெலா முடையீர்சிறு மான்மறியீர்சொலீர்
நாடெலா மறியத்தலை யின்னறவேற்றதே. 4
கோடுஎலாம் நிறையக் குவளை(ம்) மலரும் குழி
மாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி,
சேடுஎலாம் உடையீர்! சிறுமான்மறியீர்! சொலீர் -
நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே?
kOTu elAm niRaiyak kuvaLai(m) malarum kuzi
mATu elAm malinIr maNam nARum valanjcuzi,
cETu elAm uTaiyIr! ciRumAn maRiyIr! colIr-
nATu elAm aRiyat talaiyil naRavu ERRatE?
பொருள்: திருவலஞ்சுழியில் கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் விளங்கும்
தாமரை மலர்கள் நிறைந்த தடாகங்கள் உள்ளன. அந்தப் பூக்கள் பொழிகின்ற தேனைக் குடிப்பதற்கு அன்னங்கள்
இத்தடாகத்திற்கு வந்து தாமரை மலர்களைச் சுற்றிச் சுற்றி வந்து தேனைக் குடிக்கின்றன. இவ்வாறு பறந்து
சுற்றும் பொழுது அதன் இறகுகள் பூக்களின் உட்பக்கம் உள்ள தாதுக்களில் உராயப்பட்டு இறகுகள் முழுமையும்
தாதுக்களால் அணியப்பட்டுள்ளன. இந்த அன்னங்கள் நடமாடும் திருவலஞ்சுழியில் உள்ள குழிகளிலும்,
குழிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் குவளை மலர்கள் நிறைந்துள்ள சிறுசிறு குட்டைகளில்
உள்ள தண்ணீரில் வசிக்கின்றன. அதனால் குவளை மலரின் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இத்துணை
வளமிக்கது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நீவீர் சிறிய அழகான மான்குட்டியைக்
கையில் ஏந்திக் கொண்டு யாவரும் வியக்க காட்சி கொடுத்து அருள்வழங்கிக் கொண்டிருக்கிறீர். அவ்வாறு
இருந்தும் தலையோட்டைக் கையில் ஏந்திக் கொண்டு உலகெலாம் சுற்றிவந்து பலிகொள்வது எதற்காக? சொல்லுவீராக.
குறிப்புரை: கோடு- கரைகள், குழி- அக்கரைகளுக்கு நடுவிலுள்ள பள்ளம். மாடு-பக்கம், கரைகளில் பூத்த
குவளை மலரின் மணம் பள்ளத்திலுள்ள நீரில் நாறும். சேடு-பெருமை , தலை- பிரமகபாலம். நறவு - ஈண்டுப்
பிச்சையேற்ற உணவு குறித்து நின்றது.
In the city of Thiru-valan-chuzhi, a good number of pits exist. They are full of water and
nelumbo (குவளைமலர்) flowers in plenty, swans go round the lakes to drink the honey dripping from
the lotus. These flowers dissipate their sweet smell all over the surrounding areas. In such a
beautiful city Oh Lord Civa! You are seated in the city temple with name and fame. You hold a small
beautiful deer in Your hand. But what a contrast, You carry also a skull of human head, and accept
alms in it roaming in the cosmos, while the whole world watches such a disgrace.
1484. கொல்லைவெண் றபுனத்திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லைநுண் மணல்மேலனம் வைகும்வலஞ்சுழி
முல்லைவெண் முறுவல்நகை யாளொளியீர்சொலீர்
சில்லைவெண் டலையிற்பலி கொண்டுழல் செல்வமே. 5
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு போய்,
வல்லை நுண்மணல்மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி,
முல்லை வெண்முறுவல் நகையாள் ஒளியீர்! சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே?
kollai vEnal punattin kuru mA maNi koNTu pOy,
vallai nuN maNal mEl annam vaikum valanjcuzi,
mullai veN muRuval nakaiyAL oLiyIr! colIr-
cillai veN talaiyil pali koNTu uzal celvamE?
பொருள்: முல்லை நிலக்காடுகளில் மணிகள் கிடக்கின்றன. அம்மணிகளை எடுத்து வந்த
அன்னங்கள் திருவலஞ்சுழியிலுள்ள மணல் பரப்பில் வாழுகின்றன. இவ்வளவு வளமுடையது திருவலஞ்சுழி.
முல்லைப் பூப்போன்ற பற்களையும் புன்முறுவலையும் உடைய பார்வதியின் சிவபெருமானே! நீவிர்!
ஒளிபோன்று வெண்மை மயமாக விளங்குகின்ற தலையோட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு உலகெலாம்
சுற்றி வந்து பலிகொண்டு திரிவதை, இந்தச்சிறுமையான செயலைச் செல்வமாக எண்ணுவது ஏனோ?
சொல்லுவீராக
குறிப்புரை: குரு - நிறம், வல்லை - விரைவு. முல்லைப்பூ வெண்முறுவலை உடைய நகை (பற்)களுக்கு
ஒப்பு. சில்லை-சிறுமை. முல்லை வெண்முறுவல் நகை -பார்வதி.
In the wild jasmine forest (முல்லைக்காடு -கொல்லை) gems are available everywhere.
The river Cauvery carries the gems, and scatters them on the bank. The swans pick up those
gems and rest on the sand banks of the river Cauvery. In such a luxurious and flourishing
city, Oh! Lord Civa! You are seated in the Hindu temple enjoying the company of Your consort
Uma Devi who is beautiful with her smile and her pure white teeth resemble the jasmine flower.
Your brightness also combines with hers. Oh Lord Civa! tell me why You carry the skull of dead
people in Your hand and roam everywhere in the cosmos. Why do You regard this mean action
as an act that brings You wealth?
1485. பூசநீர் பொழியும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாசநீர் குடைவாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேசநீர் திருநீர்சிறு மான்மறியீர் சொலீர்
ஏசவெண் டலையிற்பலி கொள்வதிலாமையே. 6
பூசம் நீர் பொழியும் புனல்பொன்னியில் பல்மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
தேசம் நீர்; திரு நீர்; சிறுமான்மறியீர்! சொலீர் -
ஏச,வெண்தலையில் பலி கொள்வது இலாமையே?
pUcam nIr poziyum punal ponniyil palmalar
vAcam nIr kuTaivAr iTar tIrkkum valanjcuzi,
tEcam nIr; tiru nIr; ciRumAnmaRiyIr! colIr-
Eca, veNtalaiyil pali koLvatu ilAmaiyE?
பொருள்: தை முதல் பன்னிரு மாதங்களின் பூச நன்னாளில் மலரோடு நீர் உருகி வரும் மணம்
கமழும் காவிரி நீரில் மூழ்கி நீராடுபவர்களின் துயர்களைத் துடைத்து அருள்பவர் திருவலஞ்சுழியில்
உறையும் சிவபெருமானே! நீவீர் சிறிய மான்குட்டியைக் கையில் ஏந்தியுள்ளீர். சிறப்புடைய தோடும்
திருவும் உடைய சிவபெருமானே! இறந்தவர்களின் தலையோட்டைக் கையில் ஏந்திக்கொண்டு
பலிகொள்வது உமக்கு செல்வமில்லை என்ற வறுமையா என்பதைச் சொல்லுவீராக.
குறிப்புரை: பூசம் - தை முதலிய பன்னிரு திங்களிலும் வரும் நன்னாள், பூச நட்சத்திரம். "பூசம்
புகுந்தாடிப் பொலிந்தழகாய ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ" (தி. 1 ப. 32 பா 5) என்றருளியது
உணர்க. குடைவார் - முழுகுவார். தேசமும் திருவும் நீவிரே. பலி கொள்வதாகிய இல்லாமை என விரிக்க .
இல்லாமை - வறுமை.
The river Cauvery with profuse water flows by the side of Thiru-valan-chuzhi city
carrying different kinds of fragrant flowers. Here on the holy day of Poosam (தைப்பூச நன்னாள்)
people gather in large numbers, take holy bath in the sweet smelling water and pray to Lord
Civan to wash off all their sufferings. Oh Lord Civa! You are the holy place; You are wealth;
You are everything; You are the remover of all distress. You carry a small beautiful deer
in one of Your hands. Oh Lord Civa! in spite of such a glory, You beg with a skull in
Your hand and roam all over the cosmos provoking people to cast aspersions on You.
Does it indicate Your wealth or Your poverty? Tell me.
1486. கந்தமா மலர்ச்சந் தொடுகாரகிலுந் தழீஇ
வந்தநீர் குடைவாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்தநீர் முதல்நீர் நடுவாமடி கேள்சொலீர்
பந்தநீர் கருதாதுல கிற்பலி கொள்வதே. 7
கந்தமாமலர்ச் சந்தொடு கார்அகிலும் தழீஇ,
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
அந்தம் நீர், முதல் நீர்,நடு ஆம் அடிகேள்! சொலீர்
பந்தம் நீர் கருதாது, உலகில் பலி கொள்வதே?
kantamAmalarc cantoTu kAr akilum tazIi,
vanta nIr kuTaivAr iTar tIrkkum valanjcuzi,
antam nIr, mutal nIr, naTu Am aTikEL! colIr
pantam nIr karutAtu, ulakil pali koLvatE?
பொருள்: மணமுள்ள மலர்கள், சந்தன, அகில் மரங்களைத் தாங்கி வருவது காவிரி ஆறு.
காவிரியாற்றில் குளிப்பவர்களின் துன்பங்களைத் துடைப்பவர் திருவலஞ்சுழியில் உறையும்
சிவபெருமானே! முதலும் நடுவும் முடிவுமாய் விளங்கும் சிவபெருமானே! பலிகொள்வது பற்றை
விளைவிப்பது என்று மக்களைப் போல் எண்ணாமல், இறைவரே நீவிர் பலிகொள்வது ஏனோ?
சொல்லுவீராக.
குறிப்புரை: கந்தம் - மணம், சந்து - சந்தனவிருட்சம், கார்அகில் - கரிய அகில், அந்தமும் ஆதியும்
நடுவும் நீவிரே. 'அடிகள்' விளியாங் கால் அடிகேள் என்றும் ஆகும். பந்தம் கருதாமை; பிச்சையேற்றலில்
உயிர்க்கு ஆகும் பந்தம். இறைவனுக்கு இன்மையை உணர்த்தி நின்றது. பந்தமென்று கருதாமல்
என்னும் உரை சிறவாது.
The holy river Cauvery running in Thiru-valan-chuzhi brings multi-coloured fragrant
flowers, sandal branches, and Aloe wood (அகில்). Local people in large numbers go to this river,
take bath very happily and then reach the Civan temple. There the devotees offer prayers to
Lord Civan and request You to dispel all their sufferings. You bless them. Oh Lord Civa!
You are there; You are the beginning; You are the middle; and the end of all; You are different
from ordinary people who are affected by worldly attachment. As our Lord You must be completely
detached. Tell me, why You beg for alms all around the world like a man of wordly attachment.
1487. தேனுற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற்ற நசையாலிசை பாடும் வலஞ்சுழிக்
கானுற்ற களிற்றின்னுரி போர்க்க வல்லீர்சொலீர்
ஊனுற்ற தலைகொண்டு லகொக்கவுழன்றதே. 8
தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
கான் உற்ற களிற்றின்(ன்) உரி போர்க்க வல்லீர்! சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?
tEn uRRa naRu mA malarc cOlaiyil vaNTu inam
vAn uRRa nacaiyAl icai pATum valanjcuzi,
kAn uRRa kaLiRRin(n) uri pOrkka vallIr! colIr-
Un uRRa talai koNTu, ulaku okka uzanRatE?
பொருள்: திருவலஞ்சுழிப்பதி முழுவதும் பெரிய மலர்ச்சோலைகள் செழிப்பாக உள்ளன. அங்கு தேன்
நிறைந்துள்ள மலர்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மலர்களில் உள்ள தேனை உண்ண வேண்டும் என்ற
ஆசையால் வண்டுகள் கூட்டம் கூட்டமாக உயரிய இசையைப் பாடிக் கொண்டே, மலர்ச்சோலைகளில் புகுந்து
பறந்து கொண்டும் பாடிக்கொண்டும் அங்குள்ள மலர்களில் உள்ள தேனைக் குடித்து இசை பாடுவதால்
திருவலஞ்சுழியில் இந்த ஓசை ஊரெங்கும் நிலவுகின்றது. இத்துணை சிறந்த திருவலஞ்சுழியில் எழுந்தருளி
யிருக்கின்ற சிவபெருமானே! உம்மைக் கொல்ல வந்த காட்டு யானையை எதிர்த்து நின்று அதன் தோலை
உரித்து உமது உடலில் போர்த்திக் கொள்ளக் கூடிய அளவிற்கு ஈடுஇணையற்ற மிகுந்த வலிமை உடைய
சிவபெருமானே! இத்தனை வலிமை உடையவராக இருந்தும், நீர் ஊன் பொருந்திய தலையோட்டைக்
கையில் ஏந்திக் கொண்டு உலகெங்கும் சென்று வருவது ஏனோ? சொல்லுவீராக.
குறிப்புரை: நசை - விருப்பம், களிறு - ஆண்யானை, மதக்களிப்பை உடையது என்னுங் காரணப் பொருளது.
கான் - காடு, உலகு ஒக்க - உலகெல்லாம் என்றவாறு.
Thiru-valan-chuzhi city is encircled by very big gardens of blossoms, full of honey.
Bees in large numbers, desirous to devour the nectar in the flowers reach the groves
humming pleasantly and this reverberates in the city creating a pleasant atmosphere.
Oh Lord Civa! You reside in this city. When a male elephant ferociously ran towards
You to kill You, Oh Lord! You had the greatest strength to kill the elephant, You skinned
the elephant's body and covered Your body with that skin. You had such greatness,
which had no parallel. Despite this valorous deed, why do You beg for alms wandering
all over the cosmos, holding a fleshy human skull in Your hand? Tell me.
1488. தீர்த்த நீர்வந்திழி புனற்பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர்தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த்தீர் சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலிகொள் வதுஞ்சீர்மையே. 9
தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில் பல்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே?
tIrttanIr vantu izi punal ponniyil palmalar
vArtta nIr kuTaivAr iTar tIrkkum valanjcuzi,
Arttu vanta arakkanai anRu aTarttIr! colIr-
cIrtta veNtalaiyil pali koLvatum cIrmaiyE?
பொருள்: திருவலஞ்சுழியில் புனிதமான நீர் ஓடிக்கொண்டிருக்கும் காவிரி நதியில் மக்கள்
கூட்டம் கூட்டமாக வந்து பலவிதமான மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்கி அங்கு எழுந்தருளியுள்ள
சிவபெருமானை உள்ளன்போடு வணங்குகிறார்கள். அவர்களுடைய இடர்களைச் சிவபெருமான் போக்கி
அருள்பாலித்து வருகிறார். அக்காலத்தில் இராவணன் தன் வலிமையைப் பெரிது எனக்கருதி ஆரவாரித்துக்
கொண்டு நீவிர் வீற்றிருக்கும் கயிலையங்கிரியை அசைத்து அகற்றுவதற்கு முற்பட்டான். அப்பொழுது
அவனை அடர்த்திய பெருமைமிகக் கொண்டவரே. இத்துணை பெருமை உடையவராய் இருந்தும் நீர்
உமது திருக்கரத்தில் சிறுமை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்று உண்பது உம்பெருமைக்கு
அழகோ? சொல்லுவீராக.
குறிப்புரை: தீர்த்த நீர் - பரிசுத்தம் புரியும் ஆற்றலுடைய நீர், காவிரி முதலிய ஆறுகள் புண்ணிய நதிகள் ஆகும்.
தீர்த்தமாகா நதிகளும் உள. பொன்னி - காவிரி, ஆர்த்து- ஆரவாரம் செய்து, சீர்த்த- சீருடைய.
The river Cauvery which flows along the city of Thiru-valan-chuzhi carrying the sacred
water is beautified on the surface with varied fragrant flowers. The sufferings and woes of
these devotees, who take a dip in the sacred water of the river Cauvery, are wiped out by the
grace of Lord Civan who stays in the temple nearby. Oh Lord Civa! You are there; and once when
the demon king Raavanan arrogantly attempted to move Your abode to make way for his Airplane in
which he was flying, You crushed him by slightly pressing Your mountain abode. He got crushed
under it and could not extricate himself out of it. The whole world knows that You have no
parallel for such great valour. Instead of this good behaviour, is it right for you to beg for
alms in the white human skull roaming all over the cosmos?
1489. உரமனுஞ் சடையீர் விடையீரும தின்னருள்
வரமனும் பெறலாவது மெந்தை வலஞ்சுழிப்
பிரமனுந் திருமாலு மளப்பரியீர் சொலீர்
சிரமெனுங் கலனிற்பலி வேண்டிய செல்வமே. 10
உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது இன்அருள்
வரம் மனும் பெறல்ஆவதும்; எந்தை! வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்ப(அ)ரியீர்! சொலீர் -
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே?
uram manum caTaiyIr! viTaiyIr! umatu in aruL
varam manum peRal Avatum; entai! valanjcuzip
piramanum tirumAlum aLappa(a)riyIr! colIr-
ciram enum kalanil pali vENTiya celvamE?
பொருள்: பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே !
நிலையான வரம் பெறுவதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே ! பிரமன்
திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே,நீர் தலையோடாகிய உண்கலனில் பலியைச்
செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக.
குறிப்புரை: உரம்- பெருமை.(சிவபிரானுக்குச் சடையும் ஞானமாதலின்) அறிவுமாம். பலியேற்கும்
பாத்திரம் பிரம கபாலமாதலின் "சிரமெனுங்கலம்" என்றார். பா. 5.10இல் செல்வம் என்றது குறிப்பு.
வரம்பெறலாவதும் மன்னும் என மாற்றலுமாகும்.
Oh Lord Civa of Thiru-valan-chuzhi! Your matted hair represents not only true wisdom
(the state of the most exalted ascetic) but also Your immense strength. whenever You want to
move anywhere You have the divine bull; You bestow all the boons on those who pray to You
with devotion. And You are the one who could not be easily seen by Lord Vishnu and Brahma
when they tried to see Your holy feet and head. In spite of all this esteem, tell me,
why You beg for wealth, by carrying a human skull in Your hand, and roam all over the cosmos.
1490. வீடுஞான மும்வேண்டு திரேல்விரதங்களால்
வாடிஞான மென்னாவது மெந்தை வலஞ்சுழி
நாடிஞான சம்பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடுஞானம் வல்லாரடி சேர்வது ஞானமே. 11
வீடு ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி
நாடி,ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார், அடிசேர்வது ஞானமே.
vITum njAnamum vENTutirEl, viratagkaLAl
vATin njAnam en Avatum? entai valanjcuzip
nATi, njAnacampantana centamiz koNTu icai
pATu njAnam vallAr, aTi cErvatu njAnamE.
பொருள்: வீடு பெறுதற்கும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெற விரும்புவர்கள், விரதங்களை
மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்து விடாது என்பதை உணருங்கள். எந்தையாகிய
சிவபெருமான் வீற்றிருந்து அருளும் திருவலஞ்சுழியை அடைந்து அல்லது மனத்தால் நாடி,
வாக்கால் திருஞானசம்பந்தப் பெருமான் ஓதி அருளிய செந்தமிழ் பாக்களை இசையோடு பாடும்
ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவது ஒன்றே ஞானத்தைத் தருவதாகும்
என்று உணர்க.
குறிப்புரை: வீடும் அதற்கு ஏதுவான ஞானமும் வேண்டுவீரெனில், விரதங்களால் உடல்மெலிந்தால்
ஞானம் ஆவதும் என்? என்று வினாவுக. விரதங்களால் உடல்வாட்டம் அன்றி உண்மை ஞானப்பேறு
வாயாது என்றவாறு. எந்தையாகிய சிவபிரானது திருவலஞ்சுழியை (மனத்தால்) நாடி, (வாக்கால்)
ஞானசம்பந்தருடைய செந்தமிழ் கொண்டு இசைபாடும் ஞானம் வல்லவர் திருவடி சேர்வது ஒன்றே
ஞானமாகும் என்று பொருள் கொள்க. இத்திருமுறை பாடுவாரடிமலர் சேர்வதே வீடுதரும் ஞானமாகும்
என்பது கருத்து. 'சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்குக' என்று இக்காலத்தில் வழங்கும் தொடரில்,
'தமிழ்' என்றது திருமுறைகளையே குறிக்கும். பழந்தமிழ் நூல்களையும் தமிழ் மொழியையும் குறித்ததன்று.
அவை வேறு பல சமயக் குறிப்புக்களையும் கொண்டிருத்தலாலும், சைவத்தொடு நெருங்கிய
தொடர்பில்லாமையாலும், தமிழில் பிறசமய நூல்கள் பல உள்ளமையாலும் அவற்றை ஈண்டுச்
சைவத்தொடு சேர்த்து வாழ்த்தினார் என்றல் பொருந்தாது. பிற்காலப் பதிப்புக்களில் 'வாடி' என்ற
பாடமே உளது.
Oh! You people of this world! If you are sincerely interested in salvation and holy
wisdom, do not resort to penances, which result in torturing Your body rendering it weak.
Your hopeful actions are totally wrong. To attain salvation think of great saints, who possess
sublime religious knowledge and sing harmoniously the pure Tamil songs of Thiru-gnana-Sambandar
on Lord Civan of Thiru-valan-chuzhi. Then pray in full devotion at their pure feet and repeat
the songs of Thiru-gnana-Sambandar on Lord Civan of Thiru-valan-chuzhi. This is the wise way
to be spiritually wise. In case you can yourself sing harmoniously all these Tamil songs of
Thiru-gnana-Sambandar on Lord Civan of Thiru-valan-chuzhi, you may do so. These are the only
ways to attain salvation and wisdom.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
2ஆம் பதிகம் முற்றிற்று
End of 2nd Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
பதிகத் தொடர் எண்: 139 பதிக எண் :3
3. திருத்தெளிச்சேரி 3. THIRU-TH-THELI-CH-CHERI
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
இத்திருப்பதிகம் கோயில்பத்து என்று வழங்கப் பெறுகின்றது. இத்தலம் காரைக்காலுக்கு வடபால்
உள்ளது. பொறையாறு- காரைக்கால் பேருந்து வழியில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள ஐம்பதாவது தலமாகும்.
இறைவரின் திருப்பெயர் பார்வதீசுவரர். இறைவியாரின் திருப்பெயர் சத்தியம்மை. பங்குனி மாதத்தில்
13ஆம் தேதி முதல் பத்துநாள்களுக்குச் சூரிய பூசை நிகழ்வது. ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
இவ்வூருக்கு அணிமையில் போதிமங்கை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூர், புத்தர்கள் வசிக்கப்
பெற்றது. அதன் வழியாக ஞானசம்பந்தரது அடியார் திருக்கூட்டம், பரசமய கோளரி வந்தார் என்று முத்துச்
சின்னங்களை ஊதிச் சென்றது. அதைப் பொறாத புத்தர்கள் தடுத்தனர். அப்பொழுது தேவாரத் திருமுறை
யெழுதும் சம்பந்த சரணாலயர் 'புத்தர் சமண்கழுக்கையர்' என்று தொடங்கும் பஞ்சாட்சரப் பதிகத்
திருப்பாட்டை ஓத, புத்தர்கள் தலைவனான புத்தநந்தி தலையில் இடி விழுந்தது. உடனே அவன் இறந்து
போனான். மீளவும் புத்தர்கள் சாரிபுத்தனைத் தலைவனாகக் கொண்டு வாது செய்ய வந்தனர்.
சம்பந்த சரணாலயர் ஞானசம்பந்தர் முன்னிலையில் அவர்களை வாதில் வென்று சைவர் ஆக்கினார்.
கோயில் மேற்குச் சந்நிதி. கோயில் முழுதும் செட்டிமார்களால் புதுப்பிக்கப்பட்டது.
பதிக வரலாறு
சண்பை வள்ளலார் திருநள்ளாறு வணங்கிச் சென்று திருத்தெளிச்சேரியினைச் சேர்ந்து
பரவிப் பாடிய பதிகம் இது.
திருச்சிற்றம்பலம்
1491. பூவலர்ந்தன கொண்டு முப்போது மும்பொற்கழல்
தேவர்வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்
மேவருந் தொழிலாளொடு கேழற்பின் வேடனாம்
பாவகங் கொடுநின்றது போலுநும் பான்மையே. 1
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்!
மேவரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன்ஆம்
பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?
pU alarntana koNTu muppOtum um pon kazal
tEvar vantu vaNagkum miku teLiccEriyIr!
mE varum tozilALoTu kEzalpin vETan Am
pAvakamkoTu ninRatu pOlum, num pAnmaiyE?
பொருள்: அலர்ந்தனவான பூக்கள்! அவற்றைக் கொண்டு மூன்று வேளைகளிலும் அருச்சித்துத்
தேவர்கள் வந்து வழிபடுவர். அத்தகு புகழ்மிக்க திருத்தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! யாவராலும்
செய்தற்கரிய செயல்களைப் புரிபவள் உமையம்மை. நீர் பொய்வேடந் தரித்து அம்மையையும் வேடச்சியாக
வேடந்தரிக்கச் செய்து பன்றியின் பின் வேடர்களாகச் சென்றது உம் பெருமைக்கு ஏற்ற செயலாகுமா?
குறிப்புரை: தெளிச்சேரியில் மூன்று வேளையிலும் தேவர்கள் பூக்களைக் கொண்டு வந்து சிவபூசை
செய்த வரலாறு உணர்த்தப்பட்டது. மேவரும்தொழில், சிவசத்தியின் கிருத்தியம் ஏனையோரெவராலும்
அடைதற்கரியவை. கேழல் - பன்றி. சிவனும் உமையும், வேடனும் வேட்டுவிச்சியுமானதை உணர்த்திற்று.
பாவகம் - மெய்யல்லாமை குறித்தது.
In the Civan temple situated in Thiru-th-theli-ch-cheri facing the western direction,
Lord Civan Paarvatheeswarar along with his consort Sathiammai graces the devotees who gather
here to worship Him. The devas (celestials) visit this temple thrice a day and offer their
worship bowing at Lord Civan's golden feet with flowers blooming. In such a famous city
temple, Your consort Sathiammai, who is non-parallel and carries on the entire operations
in the universe which none else can do, is also seated. Oh Lord Civa! What made You consider
Your action of following a pig, along with Your consort Uma Devi, both as hunters, as one that
will bring fame to You?
1492. விளைக்கும்பத்திக்குவிண்ணவர்மண்ணவரேத்தவே
திளைக்குந்தீர்த்தமறாததிகழ்தெளிச்சேரியீர்
வளைக்குந்திண்சிலைமேலைந்துபாணமுந்தானெய்து
களிக்குங்காமனையெங்ஙனநீர்கண்ணிற்காய்ந்ததே. 2
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே,
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்!
வளைக்கும் திண் சிலைமேல் ஐந்துபாணமும் தான் எய்து,
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே?
viLaikkum pattikku viNNavar maNNavar EttavE,
tiLaikkum tIrttam aRAta tikaz teLiccEriyIr!
vaLaikkum tiN cilaimEl aintu pANamum tAn eytu,
kaLikkum kAmanai egganam nIr kaNNin kAyntatE?
பொருள்: பக்தியை விளைத்தீர்! விண்ணவரும் மண்ணவரும் உம்மை வழிபட வருவர். அவர்
திளைத்து மூழ்கும் தீர்த்தம் விளங்கும் திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே !
வளைந்த வரிய வில்லில் ஐந்து மலர்களைப் பாணமாக உம்மீது எய்து களிப்புற்றான் மன்மதன்.
நீர் அவனை நெற்றிக்கண்ணினால் எரித்தது ஏன்?
குறிப்புரை: சிவபத்தியை விளைத்தலால் தெளிச்சேரி தீர்த்தத்தில் விண்ணோரும், மண்ணோரும்
திளைப்பர். அத்தகைய தீர்த்தம் இடையறாத கீர்த்தியை, அத்தலம் உடையது. சிலை - (கரும்பு) வில்,
ஐந்து (மலர்க்)கணை. எய்து களித்த மன்மதனை நெற்றிக் கண் நெருப்பைப் பெய்தெரித்தது
எங்ஙனம் என வினாவினார். காய்தல் - எரித்தல். காம தகனம் புரிந்ததைக் குறித்தது.
In Thiru-th-theli-ch-cheri, there is a tank, which holds pure holy water perennially.
All the celestials and all the men on the earth gather here in large numbers with a firm belief
that they will ward off all their sufferings if they come to Thiru-th- theli-ch-cheri to
worship You, after taking bath in the holy tank. Due to unwanted pressure given by Lord Maha
Vishnu, cupid - god of love shot five flowers using his sugarcane bow at Lord Civa who was
then in yogic stage. His yoga was disturbed . So He got angry and opened his third eye in His
forehead from where very dreadful fire darted forth against cupid and he died instantaneously.
Oh Lord Civa! Why did you burn cupid into ahses?
1493. வம்படுத்தமலர்ப்பொழில்சூழமதிதவழ்
செம்படுத்தசெழும்புரிசைத்தெளிச்சேரியீர்
கொம்படுத்ததொர்கோலவிடைமிசைக்கூர்மையோ
டம்படுத்தகண்ணாளொடுமேவலழகிதே. 3
வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி தவழ்
செம்பு அடுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்!
கொம்பு அடுத்தது ஒர் கோல விடைமிசை, கூர்மையோடு
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே?
vampu aTutta malarppozil cUza, mati tavaz
cempu aTutta cezum puricait teLiccEriyIr!
kompu aTuttatu or kOla viTaimicai, kUrmaiyOTu
ampu aTutta kaNNALoTu mEval azakitE?
பொருள்: மணம் பொருந்திய மலர்களை உடையன பொழில்கள். அவற்றால் சூழப்பெற்றது
திருத்தெளிச்சேரி. மேலும் செம்பினை உருக்கி வார்த்துச் செய்த மதில்கள் சூழ்ந்தும் விளங்குகிறது.
அங்கு எழுந்து அருளிய இறைவரே! கூரிய அம்புகளைப் போன்ற கண்களை உடையவள் பார்வதிதேவியார்.
அவளோடு, கொம்புகளை உடைய அழகிய விடைமீது மேவி வருவது அழகு தரும் செயலாகுமா?
குறிப்புரை: வம்பு - மணம். மதி - சந்திரம். செம்பு - உலோகம். புரிசை - மதில். செம்பு மதில்,
கொம்பு - எருதின்கோடு, கோலம் - அழகு. கண்ணாள்- - பார்வதி தேவியார்,மேவல் எழுந்தருளியிருக்கும்
காட்சி, இடபாரூடரானதை உணர்த்திற்று.
In and around the city of Thiru-th-theli-ch-cheri groves with fragrant flowers are many.
The forts surrounding the city are very high and look as though their tops touch the moon.
The construction of these walls is extraordinary because they are built of a mixture of melted
copper and other materials such as mortar etc. In such an appealing city of Thiru-th-theli-ch-cheri,
Lord Civan is seated in His temple blessing the devotees who gather before Him. Goddess Uma
with her narrowed eyes, which look like sharp arrows, is beauty in divinity. Oh Lord Civa!
You and Uma move about riding the admirable bull, which has very strong horns. Is such an
appearance of Yours an attractive one?
1494. காருலாங்கடலிப்பிகள்முத்தங்கரைப்பெயும்
தேருலாநெடுவீதியதார்தெளிச்சேரியீர்
ஏருலாம்பலிக்கேகிடவைப்பிடமின்றியே
வாருலாமுலையாளையொர்பாகத்துவைத்ததே. 4
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப் பெயும்
தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்!
ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்பு இடம் இன்றியே
வார் உலாம் முலையாளை ஒர்பாகத்து வைத்ததே?
kAr ulAm kaTal ippikaL muttam karaip peyum
tEr ulAm neTuvIti atu Ar teLiccEriyIr!
Er ulAm palikku EkiTa, vaippu iTam inRiyE
vAr ulAm mulaiyALai orpAkattu vaittatE?
பொருள்: நீர் முகந்து செல்லும் மேகங்கள் உலவுவது கடலுக்கு மேல் உள்ள வெளி. முத்துச்
சிப்பிகளையும், முத்துக்களையும் கடல் அலைகள் கரையில் கொண்டு வந்து சேர்க்கின்றன.
தேர் உலாவும் நீண்ட வீதிகளையும் உடையது திருத்தெளிச்சேரி. அங்கு விளங்கும் இறைவரே!
எழுச்சி மிக்கவராய்ப் பலியேற்கச் செல்கின்றீர் நீர். கச்சணிந்த தனபாரங்களை உடையவள்
உமையம்மை. அவளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லுதற்கு வேறு இடமில்லையோ?
உமது திருமேனியில் ஒருபாகமாக வைத்துக் கொண்டு அர்த்தநாரீச்சுவரராகக் காட்சியளிப்பது
அழகாகுமோ?
குறிப்புரை: கார்- மேகம். இப்பி - (முத்துப் பிறக்குமிடங்களுள் ஒன்றாய) சங்கினத்தின் முதற்பிறப்பு.
முதற்பதிகம். இரண்டாவது பாட்டின் குறிப்பிற் காண்க. தேருலாவும் பெருந்தெரு. ஏர் -எழுச்சி,அழகு.
வார் - கச்சு. அர்த்தநாரீச்சுர வடிவமானதை உணர்த்திற்று.
The water bearing clouds gather and drift round the sky over the sea, city of
Thiru-th-theli-ch-cheri. Now and then the clouds pour water into the sea. The waves of
the sea dash against the sea shore along with conches and pearls in large numbers.
Inside the city during the festival of the Hindu temple, the chariots carrying Lord Civan
moves along the long streets making people merry in the festival crowd. Oh Lord Civa !
You move about the cosmos for alms, keeping Your consort Uma Devi, with her brassiere-bound
breasts, on one half of Your body. Is it because You consider that as the safest place for her?
1495. பக்கநுந்தமைப்பார்ப்பதியேத்திமுன்பாவிக்கும்
செக்கர்மாமதிசேர்மதில்சூழ்தெளிச்சேரியீர்
மைக்கொள்கண்ணியர்கைவளைமால்செய்துவௌவவே
நக்கராயுலகெங்கும்பலிக்குநடப்பதே. 5
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்
செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்!
மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து வெளவவே,
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே?
pakkam numtamaip pArppati Etti mun pAvikkum
cekkar mA mati cEr matil cUz teLiccEriyIr!
maik koL kaNNiyar kaivaLai mAl ceytu vauvavE,
nakkarAy ulaku egkum palikku naTappatE?
பொருள்: உம்மை ஒரு பாகமாக உள்ளவள் பார்வதி தேவி. அவள் எக்காலத்திலும் உம்மைத்
துதித்து, தன் உள்ளத்தே பாவித்து வழிபடுகின்றாள். செவ்வானத்தில் தோன்றும் பூரணச் சந்திர ஒளி
மதில்மேல்படும் தலமாகிய இத்திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! ஆடையின்றிப் பல
இடங்களுக்கும் நடந்து சென்று பலி ஏற்றதற்குக் காரணம், தாருகாவனத்தில் வசிக்கும் மைபூசப்பெற்ற
இளம்பெண்களை மயக்கி அவர்களின் கைவளையல்களைக் கவர்வதற்குத் தானோ? சொல்லுவீராக.
குறிப்புரை: முதற்பாட்டிலும் எட்டாவது பாட்டிலும் உள்ளவாறே இதிலும் முன்னிலை ('உம்', 'நும்')
நின்றவாறுணர்க. பார்ப்பதி - பருவதபுத்திரி. செக்கர்- செவ்வானம். மாமதி - பூரணசந்திரன். தேவி பூசித்த
திருத்தலம் ஆதலை ஈரடியில் உணர்த்தினார். கண்ணியர் - தாருகாரணியத்து மாதர். வளை-வளையல்,
மால்- காம மயக்கம். வௌவல்- கவர்தல். நக்கர் (நக்நர்)- ஆடையில்லாதவர். 'இக்கலிங்கம் போனால் என்
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை' என்று நக்நராதலாலும் கூறினார் இரட்டைப் புலவருள்
ஒருவர். பலியேற்றதைச் சொல்லிற்று.
Oh Lord Civa! You are manifest as a great personage in the renowned city of
Thiru-th-theli-ch-cheri, where the high forts around the city touch the moon in the reddish sky.
Here Your consort Paarvathi Devi keeps You always in her mind and worships You. You walk around
the cosmos in nude form. Is it Your intention to fascinate them and then to steal the bangles
from those eye-tex adorned women of Daarukaa forest who come out of their houses to offer
alms to You? Please tell me.
1496. தவளவெண்பிறைதோய்தருதாழ்பொழில்சூழநல்
திவளமாமணிமாடந்திகழ்தெளிச்சேரியீர்
குவளைபோற்கண்ணிதுண்ணெனவந்துகுறுகிய
கவளமால்கரியெங்ஙனநீர்கையிற்காய்ந்ததே. 6
தவள-வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ,நல்
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்!
குவளை போல் கண்ணி துண்ணென, வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙனம் நீர் கையில் காய்ந்ததே?
tavaLa-veNpiRai tOytaru tAzpozil cUza, nal
tivaLa mA maNi mATam tikaz teLiccEriyIr!
kuvaLai pOl kaNNi tuNNena, vantu kuRukiya
kavaLa mAlkari egganam nIr kaiyin kAyntatE?
பொருள்: திருத்தெளிச்சேரி என்ற ஒரு சிறந்த ஊரில் அருள் செய்து வரும் சிவபெருமானே!
உமது ஊரில் விண்ணில் வெண்மையான பவள நிறத்தை ஒத்த அழகிய சந்திரன் உலவிக் கொண்டிருக்கிறான்.
மிக உயரமான மரங்களைக் கொண்ட தோட்டங்களின் உச்சியிலும் அழகிய ஒளியினை வீசுகின்ற
மணிகளால் இழைக்கப்பட்ட மாட மாளிகைகளின் உச்சியிலும் சந்திரன் தவழ்ந்து செல்லுகின்ற காட்சி
மிகவும் அற்புதமானது. இத்துணை சிறந்த நகரில் இருந்து நீர் அடியார்களுக்கு அருள்புரிந்து வருகின்றீர்.
குவளை மலர் போன்ற கண்களை உடைய உம்முடைய தேவியாகிய உமையம்மையும் நீரும் ஒன்றாக
வீற்றிருக்கும் சமயம் கவளம் சாப்பிடுகின்ற ஓர் ஆண் யானை மதமயக்கம் கொண்டு உங்கள் இருவரையும்
நோக்கி விரைவாக வந்தது. அந்த யானையைக் கண்டவுடன் அம்மை நடுக்கலுற்றாள். உடனே நீர்
யானையின் எதிரே சென்று உமது கைகளால் அழித்து அதன் தோலை உரித்து உமது உடலில்
போர்வையாகக் போட்டுக் கொண்டீர். நீர் எவ்வாறு உமது கைகளால் இந்தக் கொடிய வேலையைச்
செய்தீர்? சொல்லுவீராக.
குறிப்புரை: தவளம்- வெண்மை. அழகுமாம். வெண்பிறை என்றது. அடையின் பொருளின்றிப்
பெயரளவாய் நின்றது போலும். திவள் அம் எனப் பிரித்து, திவள்கின்ற அழகிய எனப் பொருள் கொள்க.
திவளல்- அசைதல், திகழ்தல் -விளங்குதல் ‘குவளைக் கண்ணி கூறன் காண்க'. துண்ணெனல்
விரைவுக் குறிப்பு. கவளம் - யானை கொள்ளும் உணவுத் திரட்சி, மால்கரி- மத மயக்கமும் துதிக்கையும்
உடைய யானை. கரத்தை உடையது கரி. யானையுரித்ததை உணர்த்திற்று.
All around the city of Thiru-th-theli-ch-cheri grand tall trees are in plenty.
The white crescent moon traverses over these tall trees of the groves. These gardens surround
the balconies of the palaces studded with all kinds of gems in the city. When Lord Civa,
You and Your consort the lotus eyed Uma, were together a very large frenzied elephant,
rushed towards You to kill. Uma suddenly got frightened at the sight of the elephant
approaching. At this stage, Oh Lord Civa! how You went near the mad elephant, killed it
and covered Your body with its skin is an enigma. Please tell us.
1497. கோடடுத்தபொழிலின்மிசைக்குயில்கூவிடும்
சேடடுத்ததொழிலின்மிகுதெளிச்சேரியீர்
மாடடுத்தமலர்க்கண்ணினாள்கங்கைநங்கையைத்
தோடடுத்தமலர்ச்சடையென்கொல்நீர்சூடிற்றே. 7
கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும்
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்!
மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கைநங்கையைத்
தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே?
kOTu aTutta pozilinmicaik kuyil kUviTum
cETu aTutta tozilin miku teLiccEriyIr!
mATu aTutta malarkkaNNinAL kagkai nagkaiyait
tOTu aTutta malarc caTai enkol nIr cUTiRRE?
பொருள்: மரக்கொம்புகள் நிறைந்துள்ள பொழிலின்கண் இசைபாடும் குயில்கள் இருந்து
கூவுகின்றன. பெருமையான தொழிலின்கண் ஈடுபட்டோர் மிகுதியாக வாழ்கின்றனர். அத்தகைய
திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! செல்வம் நிறைந்தவளும், மலர் போன்று கண்ணினளும்
ஆகியவள் கங்கை நங்கை. இதழ்கள் பொருந்திய கொன்றை மலர்கள் அணிந்த சடையின்கண்
அவளைச் சூடியது ஏனோ? கூறுவீர்.
குறிப்புரை: கோடு- கொம்பு. பொழில்- சோலை. சேடு - பெருமை. மாடு - பொன். செல்வம்.
கண்ணினாளும் கங்கையுமாகிய நங்கை. தோடு - இதழ். கங்கை சூடியதைக் கூறிற்று.
In the outskirts of the city gardens of tall trees are many. Here the cuckoo birds
sing melodiously and their music floats in the air. In this city, a large number of people
are engaged in honourable occupations, deserving Lord Civan's blessings. Oh Lord Civa!
You wear the beautiful petalled cassia flowers on Your matted hair. Tell me why You keep on
the same hair the wealthy and lotus-eyed Ganges, the beautiful damsel.
1498. கொத்திரைத்தமலர்க்குழலாள்குயில்கோலஞ்சேர்
சித்திரக்கொடிமாளிகைசூழ்தெளிச்சேரியீர்
வித்தகப்படைவல்லஅரக்கன்விறற்றலை
பத்திரட்டிக்கரநெரித்திட்டதும்பாதமே. 8
கொத்து இரைத்த மலர்க் குழலாள், குயில்கோலம் சேர்
சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்!
வித்தகப் படை வல்ல அரக்கன் விறல்-தலை,
பத்து,- இரட்டிக் கரம், நெரித்திட்டது, உம் பாதமே?
kottu iraitta malark kuzalAL, kuyilkOlam cEr
cittirak koTi mALikai cUz teLiccEriyIr!
vittakap paTai valla arakkan viRal-talai,
pattu,iraTTik karam, nerittiTTatu, um pAtamE?
பொருள்: வண்டுகள் விரிந்த மலர்க் கொத்துக்களைச் சூடிய கூந்தலினள் பார்வதி தேவி.
குயில் வடிவம் கொண்டு அவள் வழிபட்ட தலம் திருத்தெளிச்சேரி. ஓவியம் எழுதப்பட்டகொடிகள்
கட்டப்பட்ட மாளிகைகள் சூழ்ந்தது அத்தலம். அங்கு வாழும் இறைவரே! தவத்தால் பெற்ற வாள்போரில்
வல்லவன் இராவணன். தலைகள் பத்தும் கைகள் இருபதும் கொண்டவன். அவனைக் கால் விரலால்
நெரித்தது உம்பாதம் அன்றோ? சொல்லுவீராக.
குறிப்புரை: தெளிச்சேரியில், தேவியார் குயிலுருவுற்றிருக்கின்றார் போலும்! மலர்க்கொத்து.
(வண்டுகள்) இரைத்த மலர், குழல் - கூந்தல். அத்தலத்து மாளிகையின் மேலுள்ள கொடியின் சித்திரம்
எனலாம். சித்திரம் - அழகுமாம். வித்தகப்படை - சிவன் தந்த வாள். அரக்கன்- இராவணன். விறல்- வலிமை.
தலைபத்து, கரம்- கை. இரட்டி- இருபது. 'பத்துமோ ரிரட்டி தோளன்' (தி.4. ப.70 பா 10) இராவணனை
அடக்கிய திறம் குறித்தது.
In the city of Thiru-th-theli-ch-cheri, goddess Paarvathi Devi adds beauty to her
appearance by adorning her hair with flower bunches. Once, she took the form of a cuckoo bird
in this city and worshipped Lord Civa. In Thiru-th-theli-ch-cheri, there are many tall palaces
where flags with pictures are tied to the top portion of these buildings. These flags with
pictures are attractive and in this appealing city, Oh Lord Civa! You are manifested.
Once King Raavanan of Sri Lanka, with his strong ten heads and twenty hands, won a sword from
You for the penance he observed and became the most chivalrous warrior of his time. Prompted by
egoism and bravery he attempted to move, a little aside, Your abode on Mount Kailash.
The mountain very slightly got tilted. Lord Civa understood the situation and pressed the mountain
with His toe and crushed him under. Tell me how Your Holy Feet did that action.
1499. காலெடுத்ததிரைக்கைகரைக்கெறிகானல்சூழ்
சேலடுத்தவயற்பழனத்தெளிச்சேரியீர்
மாலடித்தலம்மாமலரான்முடிதேடியே
ஓலமிட்டிட எங்ஙனமோருருக்கொண்டதே. 9
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல் சூழ்
சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்!
மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியே
ஓலம் இட்டிட எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே?
kAl eTutta tiraikkai karaikku eRi kAnal cUz
cEl aTutta vayal pazanat teLiccEriyIr!
mAl aTittalam, mA malarAn muTi, tETiyE
Olam iTTiTa, egganam Or uruk koNTatE?
பொருள்: காற்றால் எடுத்துக் கொணரப் பெறுவது கடலின் திரைகளாகிய கைகள். அவை
கரையின்கண் வீசப்பெறும். கடற்கரையில் சோலைகள் சூழ்ந்து விளங்கும். சேல்மீன்கள் தவழும்
வயல்களை உடைய மருதநிலம் பொருந்தியுள்ளது. அத்தகைய திருத்தெளிச்சேரியில் உறையும்
இறைவனே! திருமால் அடியையும், தாமரை மலரில் உறையும் நான்முகன் முடியையும் தேட முற்பட்டனர்.
காணாது ஓலம் இட்டனர். நீர் எவ்வாறு ஒப்பற்ற பேருருக் கொண்டீர்? உரைப்பீராக.
குறிப்புரை: கால்- காற்று, திரை- அலை. சேல் - மீன்வகையுள் ஒன்று. திருவடியைத் திருமாலும்
திருமுடியைப் பிரமனும் தேடிக் காணாத அருமையைத் தெரிவித்தது.
In the eastern side of Thiru-th-theli-ch-cheri, the Bay of Bengal makes it a seashore,
heavy wind over the sea, creates big waves in the sea. These hands of the sea waves dash against
the coast and backwaters are formed. In the beaches big gardens with rich and tall trees are many.
Here paddy fields filled with water and carp fish are also many. Oh Lord Civa! You are manifested
in such a delightful city of Thiru-th-theli-ch-cheri. Thirumaal (one of the manifestations of
Maha Vishnu) made a very serious effort to search for Lord Civan's holy feet by digging the earth
for many years. Alas! He could not succeed in his efforts. Simultaneously Brahma (Naanmugan)
residing in the lotus flower took the form of a swan and flew over the sky to find Your head.
He flew for many many years, but could not succeed. They both realised their inability to see
Your holy feet and head but wailed in the end. Oh Lord Civa! How did You take this matchless,
biggest holy body of fiery column? Tell us how?
1500. மந்திரந்தருமாமறையோர்கள்தவத்தவர்
செந்திலங்குமொழியவர்சேர்தெளிச்சேரியீர்
வெந்தலாகியசாக்கியரோடுசமணர்கள்
தந்திறத்தனநீக்குவித்தீரோர்சதிரரே. 10
மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர்,
செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்!
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே?
mantiram taru mA maRaiyOrkaL, tavattavar,
centu ilagku moziyavar, cEr teLicEriyIr!
vental Akiya cAkkiyarOTu camaNarkaL
tam tiRattana nIkkuvittIr; Or catirarE?
பொருள்: வேத மந்திரங்கள் ஓதுபவர் மறையோர்கள். பெரும் தவத்தை உடையவர்கள்.
செந்து என்ற பண் போன்ற இனிய மொழி பேசுபவர் மகளிர். அத்தகையோர் வாழும் திருத்தெளிச்சேரியில்
உறையும் ஒப்பற்ற சதுரரே! கருநிறங் கொண்ட சாக்கியர்களும் சமணர்களும் பேசும் சமய சிந்தனைகளை
எவ்வாறு நீக்குவித்தீர்? அந்தச் சாமர்த்தியம் எவ்வாறு உமக்கு வந்தது? சொல்லுவீராக.
குறிப்புரை: மறையோர்கள், தவத்தவர் (தவத்தையுடையவர்) என்று பிரிக்க. செந்து - ஒரு பெரும் பண்.
செந்தினத் திசையறுபதமுரல் (தி.2 ப.82 பா.9) நல்ல செந்திசைப்பாடல் (தி.1 ப.114 பா.11) செந்து நேர் மொழியார்
(தி.2 ப.51 பா.11) மொழியவர் - சொல்லுடைய மகளிர், வெந்தல் - எரிந்தகட்டை. திறம் பற்றிய உவமை.
ஆகிய - உவம உருபு. அது சமணர்க்கும் அடையாகும். 'காரமணர்' என்ற வழக்குணர்க. சினமுமாம்.
திறத்தன - வகையின. நீக்குவித்தீர் - நீங்கச் செய்தீர். சதிரர் - மேம்பட்டவர், சாமர்த்தியர்.
In this famous city of Thiru-th-theli-ch-cheri learned people who are exponents
of vedas live in large numbers. They always utter the sacred mantras in the proper tone.
Several men, good at penance, also live in this city. There are damsels, who are well trained
in musical mode called Chendu (செந்து) and they play it very often. Like this many good people
with different associations live in this city. Oh Lord Civa! You are manifested in such a
great city as an unparalleled sagacious person. There You have proved Your capability in
defeating the red-ochred Jains and the Buddhists. What an omnipotence it is!
1501. திக்குலாம்பொழில்சூழ்தெளிச்சேரியெஞ்செல்வனை
மிக்ககாழியுள்ஞானசம்பந்தன்விளம்பிய
தக்கபாடல்கள்பத்தும்வல்லார்கள்தடமுடித்
தொக்கவானவர்சூழஇருப்பவர்சொல்லிலே. 11
திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி எம் செல்வனை,
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே.
tikku ulAm, pozil cUz, teLiccEri em celvanai,
mikka kAziyuL njAnacampantan viLampiya
takka pATalkaL pattum vallArkaL, taTa muTit
tokka vAnavar cUza iruppavar, collilE.
பொருள்: எட்டுத் திசைகளிலும் பொழில் சூழ்ந்து இலங்கும் திருத்தெளிச்சேரியில் உறையும்
எம் செல்வரே! உம்மீது புகழ்மிக்க காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய
பதிகம் இதுவே. பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் அடையும் பயன் என்ன? பெரிய முடிகளைச்
சூடிய வானவர்கள் சூழ்ந்து இருப்பவர்களைச் சுற்றி ஓதவல்லவர்கள் பாடிக்கொண்டே இருப்பார் ஆவர்.
குறிப்புரை: திக்கு - எட்டு திக்குகளிலும், மிக்க - எல்லா உலகிலும் மேம்பட்ட தட - பெரிய.
தொக்க- ஒன்றுகூடிய. வல்லார்கள்- எழுவாய். இருப்பவர்- பயனிலை. சொல்லில் என்பது சொல்லுங்கால்
என்றவாறு. சொல்லில், பத்தும் வல்லவர் வானவர்சூழ இருப்பவர் ஆவர் என்க.
In all the eight directions of Thiru-th-theli-ch-cheri, gardens are plenty with tall
trees and flowers and beautify the city. Sri Thiru-gnana-Sambandar born in Seerkazhi,
the very famous city in the universe, sang on our Lord Civan of Thiru-th-theli-ch-cheri
who is manifested in the city, ten most appealing songs in appropriate melodious tone.
Those devotees residing in this city who are experts in singing all these ten songs
according to vedic rules in proper tone will be great, i.e., they (their souls) will go
to the devas' world and be respected by them. These devotees will be surrounded by the
congregation of devas who wear flowers and crowns.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
3ஆம் பதிகம் முற்றிற்று
End of 3rd Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 140 பதிக எண்: 4
4. திருவான்மியூர் 4. THIRU-VAAN-MIYOOR
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vina Urai
திருத்தல வரலாறு
சென்னையிலுள்ள தலம். வான்மீக முனிவர் பூசித்த பதியாதலால் இப்பெயர் பெற்றது. இது
மயிலாப்பூருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. இது தொண்டை நாட்டின் இருபத்தைந்தாவது
தலமாகும். இறைவர் திருப்பெயர் பால்வண்ணநாதர். இறைவி திருப்பெயர் சொக்கநாயகி. இலிங்கத் திருமேனி
சற்று வடபக்கமாகச் சாய்ந்திருக்கின்றது. வான்மீகி முனிவர்க்கு இவ்வூரில் தனிக்கோயில் இருக்கின்றது.
இவ்வூர்த் தலபுராணம் பூவை கல்யாண சுந்தர முதலியார் அவர்களால் எழுதப்பெற்றது. அச்சில் வெளிவந்துள்ளது.
பதிக வரலாறு
அழுது உலகை வாழ்வித்த ஆளுடைய பிள்ளையார் திருமயிலைப் பதியில் அமர்ந்தருளிய நாளில்,
பல தலங்களை வணங்கிச் சென்று நிறைகாதலருத்தியொடும் திருவான்மியூரை அணைந்து, திருத்தொண்டர்
எதிர்கொள்ளச் சென்று, திருக்கோபுரத்தை வணங்கி வலங்கொண்டு உள்ளணைந்து, பிறவி மருந்தான
பெருந்தகையை வினாவுரைச் சொன்மாலையாகப் பாடியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
1502. கரையுலாங்கடலிற்பொலிசங்கம்வெள்ளிப்பிவன்
திரையுலாங்கழிமீனுகளுந்திருவான்மியூர்
உரையுலாம்பொருளாயுலகாளுடையீர்சொலீர்
வரையுலாமடமாதுடனாகியமாண்பதே. 1
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்
உரை உலாம் பொருள்ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர் -
வரை உலாம் மடமாது உடன்ஆகிய மாண்புஅதே?
karai ulAm kaTalil poli cagkam veL ippi van
tirai ulAm kazi mIn ukaLum tiru vAnmiyUr;
urai ulAm poruL Ay ulaku AL uTaiyIr! colIr-
varai ulAm maTamAtu uTan Akiya mANpu atE?
பொருள்: கடலின் கண் விளங்குவது சங்குகளும், வெண்ணிறமான சிப்பிகளும் ஆகும். அவை
கரையில் வந்து உலாவுமாறு அலைகள் வீசுகின்றன. அவ்வலைகளை உடைய கழிகளில் மீன்களும் பிறழ்கின்றன.
அத்தகைய தலம் திருவான்மியூர். அங்கே எல்லோராலும் புகழப்படும் பொருளாய் விளங்கும் இறைவரே!
உலகம் அனைத்தையும் ஆட்சி புரிபவரே! மலைமாது எனப்படுபவள் பார்வதி தேவி. அவளை ஓர் உடலில்
உடனாகக் கொண்டுள்ள மாண்பிற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
குறிப்புரை: கடலில் விளங்கும் சங்குகளும் வெள்ளையிப்பிகளும் கரையில் வந்து உலாவும்படி
வலியனவாக அலைகள் வீசுகின்றன. அவ்வலைகளையுடைய கழிகளில் மீன்கள் பிறழ்கின்றன. உகளல்- பிறழ்தல்.
அத்தகைய வளமுடைய திருவான்மியூரில் எழுந்தருளிய சிவபிரானை முன்னிலையாக்கி வினாவியருளினார்.
'சொற்பொருளாயும் எல்லாம் உலகங்களையும் ஆளுபவராயும் இருக்கும் சுவாமீ ! மலைமங்கையுடனாகிய
மாட்சியை மொழிவீர்' என்றார். மாதியலும் பாதியனான உண்மைகளை வினாவிற்று இத்திருப்பாடல்.
சொல் - உமை. பொருள் - சிவம். உரையுலாம் பொருள் - மங்கை பங்கன்; அம்மையப்பன்.
The Bay of Bengal borders on the eastern side of the city of Thiru-vaan-miyoor.
The strong waves of this sea bring along with the sea water glittering conches and the white
coloured oysters in plenty to the shore. Also the waves bring fishes of various types and
they leap into the backwaters. All the people in the world praise You ; Oh Lord Civa! You
are the world and its meaning. You rule over the whole world. You keep Your consort the
daughter of the Himalayan mountain - goddess Uma Devi on half of Your body on the left side
as concordance. Is it for Your virtuous dignity You keep Your consort like this? Please
tell me the reason!
1503. சந்துயர்ந்தெழுகாரகில்தண்புனல்கொண்டுதம்
சிந்தைசெய்தடியார்பரவுந்திருவான்மியூர்ச்
சுந்தரக்கழல்மேற்சிலம்பார்க்கவல்லீர்சொலீர்
அந்தியின்னொளியின்னிறமாக்கியவண்ணமே. 2
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண்புனல் கொண்டு, தம்
சிந்தை செய்த அடியார் பரவும் திருவான்மியூர்,
சுந்தரக்கழல்மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர்! சொலீர் -
அந்தியின்(ன்) ஒளியின் நிறம் ஆக்கிய வண்ணமே?
cantu uyarntu ezu kAr akil taNpunal koNTu, tam
cintai ceytu aTiyAr paravum tiru vAnmiyUr,
cuntarakkazalmEl cilampu Arkka vallIr! colIr-
antiyin(n) oLiyin niRam Akkiya vaNNamE?
பொருள்: திருவான்மியூரில் அடியார்கள் சந்தனமும் உயர்ந்து வளர்ந்த கரிய அகிலும், குளிர்ந்த
அபிடேகத் தீர்த்தம் ஆகியவற்றைக் கொண்டு வந்து தியானம் புரிந்து ஆட்டுவர். தமது சிந்தையில்
இறைவரை நினைந்து பரவுவர். அத்தகைய தலம் திருவான்மியூர். அங்கே வலது திருவடியில் அழகிய
கழல் அணிந்துள்ளீர். இடது திருவடியில் சிலம்பு விளங்குகிறது. இவை ஆரவாரிக்கும் திருவடிகளை
உடையவரே! மாலை அந்தியின் ஒளி போன்ற செவ்வண்ணத்தை உம் நிறமாகக் கொண்ட காரணம்
யாதோ? சொல்வீராக.
குறிப்புரை: திருவான்மியூரில் அடியார், சந்தனமும், அகிலும் அபிடேகத் தீர்த்தமும் கொண்டு, தியானம்
புரிந்து வழிபடுஞ்சிறப்பும், அழகிய திருவடியில் சிலம்பும் கழலும் கட்டவல்லராதலும், அந்தி வண்ணராதலும்
இதிற் குறிக்கப்பட்டன. சந்து - சந்தனம். கார் அகில் - கரிய அகிற்கட்டை, (புகைத்தற்குரியது). கழல்- வெற்றி
குறித்து வலக்காலில் அணிவதொரு படை, எருதின் கொம்பு போன்ற வடிவுங்கூர்மையும் அன்றி அருப்புத்
தொழிலும் அமைந்தது. 'தாள் களங்கொளக் கழல் பறைந்தன', கொல்லேற்றின் மருப்புப் போன்றன.
சுந்தரம் - அழகு. அந்தி - மாலையந்தி, வண்ணம் - அழகு.
The devotees of Thiru-vaan-miyoor collect sandalwood sticks and eaglewood sticks and
cool water, and give You the sacred bath meditating on Your glory. Then they extol Your
greatness. In such an atmosphere Oh Lord Civa! You are manifested wearing on Your right leg
the victorious warrior's bracelet and on the left leg the ringing anklet. Your feet are holy
and are worshipped by one and all. You have turned the colour of Your body into red like that
of the twilight in the evening. What is the purpose, behind the changed colour of Your body?
Kindly tell me.
1504. கானயங்கியதண்கழிசூழ்கடலின்புறம்
தேனயங்கியபைம்பொழில்சூழ்திருவான்மியூர்த்
தோனயங்கமராடையினீரடிகேள்சொலீர்
ஆனையங்கவ்வுரிபோர்த்தனலாடவுகந்ததே. 3
கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்
தேன் அயங்கிய பைம்பொழில் சூழ் திரு வான்மியூர்,
தோல் நயங்கு அமர் ஆடை யினீர்! அடிகேள்! சொலீர் -
ஆனை அங்க(வ்) உரி போர்த்து, அனல் ஆட உகந்ததே?
kAn ayagkiya taNkazi cUz kaTalin puRam
tEn ayagkiya paimpozil cUz tiru vAnmiyUr,
tOl nayagku amar ATaiyinIr! aTikEL! colIr-
Anai agka(v) uri pOrttu, anal ATa ukantatE?
பொருள்: திருவான்மியூரின் கடற்கரைகளில் சோலையும் உப்பங்கழிகளும் சூழ்ந்து விளங்குகின்றன.
அதன் புறத்தே தேன் சொரியும் பசுமையான பொழில்களும் சூழ்ந்து விளங்கும். அங்கு புலித்தோலை
ஆடையாகக் கொண்டு எழுந்தருளிய அடிகளே. நீர் யானையின் தோலை உரித்துப் போர்த்தியும் கையில்
நெருப்பை வைத்துக் கொண்டும் ஆடலை விரும்பியது ஏனோ? சொல்வீராக.
குறிப்புரை: கான்- காட்டில், அயங்கியகழி - பள்ளமானகழி, அசங்குதல் என்பதன்
மரூஉவாக் கொண்டுரைத்தலுமாம். கான், கழி, கடல் ஆம் மூன்றன் வேறுபாடும் ஈண்டு உணர்க.
தேன் அயங்கிய- தேன் சொரிந்த பொழில்- சோலை, தோல்- நயங்கு+அமர் +ஆடை நயங்கு அமர்
தோலாடையினீர் என்றலுமாம். ஆடையினீர் - உடையை அணிந்தவரே, நயங்க- நசங்க முன்னைய
நிலைமை குலைய (ப.162 11: 211:4) அடிகேள்- அடிகளென்பதன் விளியுருவம். அங்கம் உரி என்பது
அங்கவ்வுரி என்று விகாரமாயிற்று. அங்கம் - உடம்பு. உரி - தோல், தீயாடியதை வினாவினார்.
ஆடல் என்றிருந்ததோ? 'தோனயங்கம ராடையினீர்' என்பதற்குச் செம்பொருள் கொள்ளல் எளிதன்று.
தோல் ஆடை இரண்டற்கும் இடையில் உள்ளதைப் பிரித்தல் எவ்வாறு? நயம் கமர் என்னின் 'கமர்'
என்பதன் பொருள் யாது? நயங்கு அமர் என்னின் 'நயங்கு' என்பது தமிழில் இல்லை. தோன் எனப்
பிரித்தல் ஒவ்வாது.
In Thiru-vaan-miyoor by the side of the seashore, there are forest like gardens;
also cool and deep backwaters. In these green gardens nectar filled flower trees are in
large numbers. In such a graceful city of Thiru-vaan-miyoor, Oh Lord Civa ! You are manifested
wearing the tiger skin on Your loins. You cover Your body also with the elephant's skin and
perform that cosmic dance with fire on one hand. Why do You do so? Kindly tell me the reason.
1505. மஞ்சுலாவியமாடமதிற்பொலிமாளிகைச்
செஞ்சொலாளர்கள்தாம்பயிலுந்திருவான்மியூர்த்
துஞ்சுவஞ்சிருளாடலுகக்கவல்லீர்சொலீர்
வஞ்சநஞ்சுண்டுவானவர்க்கின்னருள்வைத்ததே. 4
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகைச்
செஞ்சொலாளர்கள் தாம் பயிலும் திரு வான்மியூர்,
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர்! சொலீர் -
வஞ்ச நஞ்சு உண்டு, வானவர்க்கு இன்அருள் வைத்ததே?
manjcu ulAviya mATa matil poli mALikaic
cenjcolALarkaL tAm payilum tiru vAnmiyUr,
tunjcu anjcu iruL ATal ukakka vallIr! colIr-
vanjca nanjcu uNTu, vAnavarkku in aruL vaittatE?
பொருள்: திருவான்மியூரில் உள்ள மாடமாளிகைகளின் உயர்வு மேகங்கள் தங்கும்
அளவினதாயிருந்தது. மதில்களையும், அழகிய மாளிகைகளையும் கொண்டது. இனிய சொற்களைப்
பேசுவோர் வாழ்வதாய் விளங்குவது. எல்லாரும் உறங்கும் கரிய இருட்போதில் ஆடலை விரும்பி
மேற்கொள்ளுபவரே! வன்மையை உடையவராய் இலங்கும் இறைவனே! கரிய விடத்தை நீர் உண்டு
தேவர்களுக்கு இனிய அருள் வழங்கியது ஏனோ? சொல்வீர்.
குறிப்புரை: பொருண்மொழி வல்லார் வாழ்ந்தவூர். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதர்,
நஞ்சுண்டு வானோரைக் காத்தருளிய திறத்தை வினாவினார். மஞ்சு - மேகம், செஞ்சொல் - பொருள்
பொருந்திய செவ்விய சொல். துஞ்சுதல் - துயிலுதல். இருள் தூங்கும்பொழுது ஆடல். வஞ்சு - வஞ்சம், கறுப்பு.
வஞ்சிருள் - காரிருள். வஞ்சநஞ்சு - கருவிடம். பயிலும் - பெருகியிருக்கும்.
In the city of Thiru-vaan-miyoor, mansions, forts and compound walls - all these
are very tall. Therefore, the clouds traverse over the top portion of these mansions and
other buildings. The devotees living in this town always speak pure words gently and sweetly.
These scholars go to worship Lord Civan in the temple. Oh Lord Civa! You do Your cosmic dance
in the city during dark midnight. Oh Lord Civa! Tell me how you drank the poison that came
out of the sea while the devas and asuras were churning. You know well that it is a highly
destructive poison. Yet You drank it and rescued the devas and the universe from total
destruction. Kindly tell me why You bestowed grace on them!
1506. மண்ணினிற்புகழ்பெற்றவர்மங்கையர்தாம்பயில்
திண்ணெனப்புரிசைத்தொழிலார்திருவான்மியூர்த்
துண்ணெனத்திரியுஞ்சரிதைத்தொழிலீர்சொலீர்
விண்ணினிற்பிறைசெஞ்சடைவைத்தவியப்பதே. 5
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர்திரு வான்மியூர்,
துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர் -
விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே?
maNNinil pukaz peRRavar magkaiyartAm payil
tiNNenap puricait tozil Ar tiru vAnmiyUr,
tuNNenat tiriyum caritait tozilIr! colIr-
viNNinil piRai cenjcaTai vaitta viyappu atE?
பொருள்: திருவான்மியூர் மங்கையர் கற்பு முதலியவற்றாலும் சிவபத்தியாலும் உலகம் புகழப்
பெற்றிருந்தனர். அவ்வூர் மதில் உறுதியும் வேலைப்பாடும் நிறைந்தது. எல்லாரும் வியப்படையும்
வண்ணம் பலியேற்கச் செல்லும் தொழிலை மேற்கொண்டு உறைபவரே! நீர் வானத்தில் விளங்கும்
வெண்பிறையை உம் செஞ்சடைமேல் வைத்துள்ளீர். அவ்வியப்புடைய செயலை ஏன் செய்தீர்? சொல்வீராக.
குறிப்புரை: திண்ணெனல் - உறுதிப்பாடு. புரிசை - மதில். தொழில் -வேலைப்பாடு. ஆர்தல்-நிறைதல்.
துண்ணெனல் - குறிப்புமொழி. திரியுஞ்சரிதைத் தொழில் - பிச்சையேற்கச் செல்லுந்தொழில்
(சிந்தாமணி.3072. 3 உரை) இதில் பா.9 இன் வினாக் காண்க. பிறை - பிறத்தலுடையது. பிறை சூடியதை
வினாவினார். செஞ்சடை என்றதால் வெண்பிறை எனக் கொள்ள வைத்தார். விண்பிறையைச் செஞ்சடையில்
வைத்தது வியப்பாதல் அறிக.
The forts in the city of Thiru-vaan-miyoor built of strong materials with highly skilled
labour, stand very firmly for many many years. In this city beautiful ladies of very fine chastity,
character and discipline live in large numbers. They are praised by all the people in the city.
Oh Lord Civa! You are manifested in this town; but You go round the cosmos begging with a bowl
of human skull. All the people of the town wonder at Your begging. Oh Lord Civa! Tell me why
You retain the white crescent moon of the sky, on Your red entangled hairlock which makes
people wonder at it.
1507. போதுலாவியதண்பொழில்சூழ்புரிசைப்புறம்
தீதிலந்தணரோத்தொழியாத்திருவான்மியூர்ச்
சூதுலாவியகொங்கையொர்பங்குடையீர்சொலீர்
மூதெயில்லொருமூன்றெரியூட்டியமொய்ம்பதே. 6
போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம்
தீதுஇல் அந்தணர் ஓத்து ஒழியாத் திரு வான்மியூர்,
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர்! சொலீர் -
மூதெயில்(ல்) ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே?
pOtu ulAviya taNpozil cUz puricaip puRam
tItu il antaNar Ottu oziyAt tiru vAnmiyUr,
cUtu ulAviya kogkai orpagku uTaiyIr! colIr-
mUteyil(l) orumUnRu eriyUTTiya moympu atE?
பொருள்: மலர்கள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்தது. மதில்களைப் புறத்தே உடையது.
வேதபாடசாலை, வீடு, சத்திரம் முதலியவற்றில், மாசற்ற அந்தணர்கள் வேதங்களை நிறுத்தாமல்
அத்தியாயனம் செய்து வரும் சிறப்புடையது திருவான்மியூர். அத்தகைய திருவான்மியூரில், சூதாடு
கருவி போல வடிவத்தை உடைய தனங்களைக் கொண்ட பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு
எழுந்தருளி இருப்பவரே! பழமையான முப்புரங்களை எரிசெய்து அழித்த உமது வீரச் செயலுக்குக்
காரணம் யாதோ? சொல்வீராக.
குறிப்புரை: போது - பூக்கும் பருவத்தது. பொழில்- சோலை. புரிசைப்புறம் - மதிற்புறத்தில் உள்ள
வேதபாடசாலை, வீடு, சத்திரம் முதலியவற்றில், மாசற்ற அந்தணர் வேதாத்திய நயம் ஒழியாச்
சிறப்புடையது திருவான்மியூர். சூது - சூதாடுதற்கருவியாகிய வல்லுக்கு ஆகுபெயர். கொங்கைக்கு
உவமை. கொங்கை - உமாதேவி. ஆகு பெயர். முதுமை + எயில்= மூதெயில். மொய்ம்பு - வலிமை.
திரிபுர சங்காரத்தை வினாவினார்.
The city of Thiru-vaan-miyoor is surrounded by forest like groves surrounded by
the city fort. In the groves buds just before blooming along with the breeze add to the
coolness of the place. Here blemishless Brahmins recite vedas ceaselessly. Oh Lord Civa!
You have manifested Yourself in this city along with goddess Paarvathi Devi with breasts
looking like gamblers' conical pieces. You burnt and destroyed the three ancient aerial
cities flying in the air. Tell me the reason for such a valorous deed!
1508. வண்டிரைத்தடம்பொழிலின்நிழற்கானல்வாய்த்
தெண்டிரைக்கடலோதமல்குந்திருவான்மியூர்த்
தொண்டிரைத்தெழுந்தேத்தியதொல்கழலீர்சொலீர்
பண்டிருக்கொருநால்வர்க்குநீருரைசெய்ததே. 7
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த்
தெண்திரைக் கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர்,
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல்கழலீர்! சொலீர்
பண்டு இருக்கு ஒருநால்வர்க்கு நீர் உரைசெய்ததே?
vaNTu iraitta taTam pozilin nizal kAnalvAyt
teNtiraik kaTal Otam malkum tiru vAnmiyUr,
toNTu iraittu ezuntu Ettiya tolkazalIr! colIr-
paNTu irukku orunAlvarukku nIr uraiceytatE?
பொருள்: திருவான்மியூரைச் சுற்றி வண்டுகள் ஒலிக்கின்ற பெரிய சோலைகள் உள்ளன.
அதன் நிழலிலும், கானலிலும் தெளிந்த அலைகள் மோதிக் கொண்டிருக்கின்றன. அங்கே அடியவர்கள்
சிவநாமங்களைச் சொல்லித் துதிப்பர். பழமையான கழல்களை அணிந்துள்ள இறைவரே! முற்காலத்தே
நீர் சனகாதியர் நால்வருக்கு (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) மட்டும் சிவஞானத்தை
உபதேசித்தது ஏனோ? கூறுவீர்.
குறிப்புரை: இரைத்தல் -ஒலித்தல். திரை- அலை. ஓதம் - நீர், தொண்டு -தொண்டர், இரைத்து - சிவநாம
தோத்திரஞ்செய்து, பண்டு- கல்லாலின் நிழற்கீழ் உபதேசித்த அன்று. இருக்கு - சிவஞானோபதேசம். வேதமுமாம்.
நால்வர் - சனகாதியர். தட்சிணாமூர்த்தியாய் இருந்து உபதேசித்ததை வினாவினார்.
The bees boom becomes melodies in the fertile big groves in the coastal area of
Thiru-vaan-miyoor. The sea waves, so clear and pure, bring coolness to the shores. Oh Lord Civa!
Your age-old anklets are worshipped loudly by Your devotees of this city repeating Your name
as Om! Sivaaya Namaha:, which is the mystical word (Mantra - மந்திரம்). In ancient days, as
Dakshinamoorthy You sat under the shadow of stone banyan tree and transmitted divine knowledge
(மெய்ஞ்ஞானம்) (Civa Gnaanam and other Vedas) through Your gestures only to the four saints
Sanakar, Sananthanar, Sanathanar and Sanarkumarar. Please tell me why You did so.
1509. தக்கில்வந்ததசக்கிரிவன்றலைபத்திறத்
திக்கில்வந்தலறவ்வடர்த்தீர்திருவான்மியூர்த்
தொக்கமாதொடும்வீற்றிருந்தீரருளென்சொலீர்
பக்கமேபலபாரிடம்பேய்கள்பயின்றதே. 8
தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்து இறத்
திக்கில் வந்து அலற(வ்) அடர்த்தீர்! திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர்! அருள் என்? சொலீர்
பக்கமே பலபாரிடம் பேய்கள் பயின்றதே?
takkil vanta tacakkirivan talaipattu iRat
tikkil vantu alaRa(v) aTarttIr! tiru vAnmiyUrt
tokka mAto Tum vIRRiruntIr! aruL en colIr
pakkamE palapAriTam pEykaL payinRatE?
பொருள்: இலங்கை மன்னனாகிய இராவணன் தகுதியற்ற நெறியில் கயிலை மலையைப்
பெயர்க்க முற்பட்டான். அவன் தலைகள் பத்தும் பல திசைகளிலும் வெளிப்பட்டன. தலைகள் கயிலையின்கீழ்
நசுக்கப்பட்டபோது அவன் அலறுமாறு அவனை அடர்த்தவரே! திருவான்மியூரில் தன் திருமேனியோடு
இணைந்த உமையம்மையாரோடும் வீற்றிருந்து அருளியவரே! பல பூதகணங்களும், பேய்க் கணங்களும்
உம்மைச் சூழ்ந்து பயிலக் காரணம் யாதோ? சொல்வீராக.
குறிப்புரை: தகு இல் - தகுதியில்லாத நெறியினில், தசக்கிரீவன் - பத்துத்தலை இராவணன்.
கிரீவம் - கழுத்து. திருக்கயிலையை எடுத்தபோது அடர்த்த வரலாறு. இதில் இரண்டு முறை விளித்ததை
அறிக. பலபாரிடம் - பூதகணம்.
Oh Lord Civa! You have manifested Yourself in Thiru-vaan-miyoor by keeping
Your consort Uma Devi on the left half of Your body and grace all Your devotees. The
king Raavanan of Sri Lanka impertinently, with excessive egoism came to Your abode-
Mount Kailash and tried his best to shift the mountain a little to the other side. He
failed in his attempt and got crushed under the mountain with his ten heads. He cried
aloud through his ten heads towards all directions. Oh Lord Civa! You slightly pressed
the mountain with Your toe after which he suffered and begged Your pardon. Many aids of
Yours- the dwarf goblins and ghosts come near You to help You in this avocation.
Oh Lord Civa! Please tell me the reason why Your goblins and ghosts wish to follow
Your avocations.
1510. பொருதுவார்கடலெண்டிசையுந்தருவாரியால்
திரிதரும்புகழ்செல்வமல்குந்திருவான்மியூர்ச்
சுருதியாரிருவர்க்குமறிவரியீர்சொலீர்
எருதுமேல்கொடுழன்றுகந்தில்பலியேற்றதே. 9
பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால்
திரிதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர்,
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர்! சொலீர்
எருதுமேற்கொடு உழன்று, உகந்து இல் பலி ஏற்றதே?
porutu vArkaTal eN ticaiyum taru vAriyAl-
tiritarum pukaz celvam malkum tiru vAnmiyUr,
curutiyAr iruvarkkum aRivu ariyIr! colIr-
erutumERkoTu uzanRu, ukantu il pali ERRatE?
பொருள்: பெரிய கடல் எட்டுத் திசைகளில் இருந்தும் முத்து, பவளங்களைக் கொண்டு வந்து தரும்.
அவ்வளங்களால் பரவிய புகழ், செல்வம் ஆகியன நிறைந்தது திருவான்மியூர். அங்கே வேதங்களை ஓதி
திருமாலும் பிரமனும் மகிழ்வர். அந்த இருவர்க்கும் அறிதற்கரியவராய் விளங்கும் இறைவரே! எருதின்மேல்
ஏறி உழன்று பல இடங்கட்கும் செல்வீர். மகிழ்வோடு சென்று பலியேற்றற்குரிய காரணத்தைக் கூறுவீராக.
குறிப்புரை: பொருது- அலைகள் மோதி, வார்- நீளும். வாரி- வருவாய். புகழ் செல்வம்- வினைத்தொகையும்
உம்மைத் தொகையும் ஆக நின்றது அறிக. சுருதியார் - வேதங்களில் கூறப் பட்ட அயனும் அரியும், சிவபரத்துவங்
கேட்டவர் எனலுமாம். ஆனேறிச் சில்பலிக்குத் திரிந்த வரலாறுணர்த்தினார். இதனை, 5இல் விளியாற்
குறித்தது உணர்க.
Very big waves of the sea bring pearls and corals from all directions to the shores
of Thiru-vaan-miyoor. These stones are of all sizes and shapes and become very famous all
over the world and the city abounds in such wealth. Oh Lord Civa! You are unknown to both
Maha Vishnu and Brahma who happily recite the vedas daily; You become a riddle to both.
However, You ride on Your Bull, go round the cosmos and beg for alms from Your devoted
ladies. Please tell me the reason for Your begging like this.
1511. மைதழைத்தெழுசோலையின்மாலைசேர்வண்டினம்
செய்தவத்தொழிலாரிசைசேர்திருவான்மியூர்
மெய்தவப்பொடிபூசியமேனியினீர்சொலீர்
கைதவச்சமண்சாக்கியர்கட்டுரைக்கின்றதே. 10
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டுஇனம்
செய் தவத்தொழிலார் இசை சேர் திரு வான்மியூர்
மெய் தவப் பொடி பூசிய மேனியினீர்! சொலீர் -
கைதவச் சமண்சாக்கியர் கட்டுரைக்கின்றதே?
mai tazaittu ezu cOlaiyil mAlai cEr vaNTu inam
cey tavattozilAr icai cEr tiru vAnmiyUr
mey tavap poTi pUciya mEniyinIr! colIr-
kaitavac camaNcAkkiyar kaTTuraikkinRatE?
பொருள்: திருவான்மியூரில் கரிய மேகங்களால் சூழப்பட்ட சோலைகள் உள்ளன. மாலை
நேரத்தில் இச்சோலைகளை நோக்கி வண்டுகள் கூட்டம் கூட்டமாக ரீங்காரம் செய்து கொண்டு
சோலைப்பூக்களில் உள்ள தேனைக் குடிக்க வருகின்றன. இந்த வண்டுகளின் ரீங்காரம் அந்தணர்கள்
இராகத்தோடு வேதங்களை ஓதிக்கொண்டிருக்கும் ஓசையுடன் கலந்து அவைகளும் இசைபாடுவது
போல் தோன்றுகிறது. மேனிமீது மிகுதியாக வெண்பொடி அணிந்த திருமேனியை உடைய
சிவபெருமானே! வஞ்சனையை உடைய சமணர், சாக்கியர் உம்மீது பொய்யுரை கூறிப் பழித்துரைக்கக்
காரணம் யாதோ? கூறுவீர்.
குறிப்புரை: மை- மேகம். கரியது என்னும் பொருள்தரும் மைப்பு என்ற பெயரின் மரூஉவாகிய
மப்பு என்னும் வழக்குமொழியை உணர்க. மாலை- ஈண்டுப்பொழுது, செய்தவம் ஆகிய தொழிலுடைய
அந்தணர். முனிவர் இசை - வேதாகம முழக்கம். புகழெனல் பொருந்தாது. மெய்தவப் பொடிபூசல்-
பால்வண்ண நாதர் என்னும் பெயர்க்கொப்பத் திருமேனியில் தவக்கோலத்தின் குறியாகிய திருநீற்றைப்
பூசுதல். வழிபடுவார் உடம்பு (பிறவி) ஒழிய வெண்பொடி பூசுதல் எனினுமாம். கைதவம் - வஞ்சகம்.
சமண்- சமணர். கட்டுரைத்தல் - கட்டிச்சொல்லும் பொய்யுரை, புறப்புறச் சமயத்தார் பொருளில்லாத
மொழியைக் குறித்த வினா இது.
The deep dark clouds rise above the tall groves around the city of Thiru-vaan-miyoor.
In the evening hours bees in large numbers gather, humming round the flowers for honey.
This humming resembles the reciting of the vedas in pure note by the Brahmins for penance.
Oh Lord Civa! You appear in this city smearing the holy white ashes all over Your body,
and appear graceful. Oh Lord Civa! Please tell me the reason why the cunning Jains and
Buddhists attribute much falsehood to You.
1512. மாதொர்கூறுடைநற்றவனைத்திருவான்மியூர்
ஆதியெம்பெருமானருள்செய்யவினாவுரை
ஓதியன்றெழுகாழியுள்ஞானசம்பந்தன்சொல்
நீதியால்நினைவார்நெடுவானுலகாள்வரே. 11
மாது ஓர் கூறுஉடை நல்-தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.
mAtu Or kURu uTai nal-tavanait tiru vAnmiyUr
AtiemperumAn aruLceyya, vinAurai
Oti, anRu ezu kAziyuL njAnacampantan col
nItiyAl ninaivAr neTuvAn ulaku ALvarE.
பொருள்: திருவான்மியூரில் உறையும் ஆதியாகிய சிவபிரான் உமையம்மையைத் தமது
உடம்பில் ஒரு கூறாக உடையவர். நல்ல தவத்தின் வடிவானவர். அவர் அருளிச் செய்தற் பொருட்டு
வினாவி இதனை ஓதினார் ஞான சம்பந்தர். ஊழி முடிவாகிய அக்காலத்தே மிதந்து எழுந்தது காழிப்பதி.
அதனுள் தோன்றியவன் ஞான சம்பந்தன். அவன் சொல்லால் எழுந்தது இப்பதிகம். இதனை முறையோடு
ஓதி நினைபவர் நீண்ட வானுலகை ஆள்வர்.
குறிப்புரை: நல்தவன்- நல்ல தவத்தன். செய்ய- செய்யற் பொருட்டு. வினாவுரை - இறந்தகால
வினைத்தொகை. உரையை ஓதி என்க. நீதி- சைவாசாரத்தில் விதித்த ஒழுங்கு. நெடுவானுலகு- திருவடி நீழல்
அருள்செய்த என்ற பாடம் பின்னோர் படைத்தது. அது பொருந்தாது.
Oh Lord Civa! the ancient and the first and foremost, You reside in Thiru-vaan-miyoor
along with Your consort Uma Devi kept on Your left side. To enable Him to shower His grace
on His devotees these ten poems were sung by Thiru-gnana Sambandar. He makes it appear
in this poem as though he questions Lord Civa for his various avocations. Thiru-gnana-Sambandar
was born in the world famous city of Seerkaazhi unique in its history. This city was the only
one floating in water while the entire universe fully went under water. He sang this chapter
of ten verses. Those who can study and sing in the proper musical tone all these eleven
verses of this hymn will rule the great heaven.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
4ஆம் பதிகம் முற்றிற்று
End of 4th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 141 பதிக எண் 5
5. திருஅனேகதங்காவதம் 5. THIRU-ANEGA-THANGA-VATHAM
பண் : இந்தளம் -வினாஉரை Pann: Indhalam - Vina Urai
திருத்தல வரலாறு
இத்திருத்தலம் வடநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. கேதாரம் செல்லும் வழியில் உள்ளது.
இறைவி கௌரி என்னும் திருநாமத்தோடு தவஞ்செய்த பதியாதலின் கௌரிகுண்டம் என்றும் கூறப்பெறும்.
இமயத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இத்தலத்தை திருக்கேதார யாத்திரை செல்வோர் எளிதில் தரிசித்து
இன்புறலாம். ரிஷிகேசத்திலிருந்து கேதாரம் செல்வோர் கௌரி குண்டம் வரை பேருந்துகளில் செல்லலாம்.
கௌரி குண்டத்தில் உள்ள சிறிய வெந்நீர் ஊற்று நீராடற்கேற்றது. இங்குள்ள ஆலயமே அனேகதங்காவதமாகும்.
இதில் சந்திரர் சூரியர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இதற்குத் திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்று உள்ளது.
இறைவரின் திருப்பெயர் அனேகதங்காவதநாதர். இறைவியாரின் திருப்பெயர் மனோன்மணி.
பதிக வரலாறு
பாடிய சமயம் எழுதப்பட்டிலது.
திருச்சிற்றம்பலம்
1513. நீடல்மேவுநிமிர்புன்சடைமேலோர்நிலாமுளை
சூடல்மேவுமறையின்முறையாலொர்சுலாவழல்
ஆடல்மேவுமவர்மேயஅனேகதங்காவதம்
பாடல்மேவுமனத்தார்வினைபற்றறுப்பார்களே. 1
நீடல் மேவு நிமிர்புன்சடை மேல் ஓர் நிலாமுளை
சூடல் மேவு,மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே!
nITal mEvu nimirpun caTaimEl Or nilAmuLai
cUTal mEvu, maRaiyin muRaiyAl or culAvu azal
ATal mEvumavar mEya anEkatagkAvatam
pATal mEvum manattAr vinai paRRu aRuppArkaLE!
பொருள்: சிவபெருமான் தனது நீண்டு உயர்ந்த சடைமுடிமீது பிறைமதியைச் சூடியுள்ளார்.
வேத விதிப்படி வளர்க்கப் பெற்றுச் சுழன்று எரியும் தீயில் அவர் ஆடுதலை விரும்புபவர். அவர்
உறையும் தலம் அனேகதங்காவதம். அத்தலத்தைப் பற்றிப் பாடுதலை விரும்பும் பக்தர்கள்
இசையோடு பாடுகின்றார்கள். இறைவர் அவர்கள் வினைகளையும் அவற்றால் விளையும்
பற்றுக்களையும் அறுத்து அவர்களை ஆசீர்வதிப்பார்.
குறிப்புரை: நீடல்- (நீள் + நல்) நீளல், நீடுமாம். நிமிர்தல்- உயர்தல். புன்மை- மென்மை, பொன்மையுமாம்.
நிலாமுளை - பிறையாகிய முளை. சூடல் - சூடுதல். மறையின்முறை- வேதவிதி. கலாவு அழல் - கழன்றெரியுந்தீ.
அழலாடல் - தீயிலாடுதல். அனேகதங்காபதம் - வடநாட்டிலுள்ளதொரு மலை. பாடல்- பாடுதலை. மேவும் - விரும்பும்.
வினைபற்று - வினையும் அதனால் வரும் பற்றும். உம்மைத்தொகை.
Goddess Uma Devi with another name Gowri did penance in a place called Gowrikundam
in the Himaalayaas where hot water spring exists. This place is on the way from Rishikesh
to Ketharam. The temple in this place is called Thiru-anega thanga-vatham' (திருஅனேகதங்காவதம்).
The God in this place is called Anega-thanga vatha-naathar'. Goddess is called 'Manonmani'.
Lord Civan is manifested in the temple here. He retains the crescent moon on His long matted
hair. He does His delightful dancing in the whirling flames of the sacred fire raised as per
vedic norms. The devotees who take satisfaction in singing the songs of this place in proper
tone will get rid of their past bad deeds and the resultant good effect will be enjoyed by them.
1514. சூலமுண்டுமழுவுண்டவர்தொல்படைசூழ்கடல்
ஆலமுண்டபெருமான்றனனேகதங்காவதம்
நீலமுண்டதடங்கண்ணுமைபாகம்நிலாயதோர்
கோலமுண்டளவில்லைகுலாவியகொள்கையே. 2
சூலம் உண்டு, மழு உண்டு, அவர் தொல் படை; சூழ் கடல்
ஆலம் உண்ட பெருமான்தன் அனேகதங்காவதம்,
நீலம் உண்ட தடங்கண் உமை பாகம் நிலாயது ஓர்
கோலம் உண்டு; அளவு இல்லை, குலாவிய கொள்கையே!
cUlam uNTu, mazu uNTu, avar tol paTai; cUz kaTal
Alam uNTa perumAntan anEkattagkAvatam,
nIlam uNTa taTagkaN umai pAkam nilAyatu Or
kOlam uNTu; aLavu illai, kulAviya koLkaiyE!
பொருள்: அனேகதங்காவதத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிவபெருமான் சூலத்தையும், மழுவையும்,
படைக்கலங்களாகக் கொண்டவர். இறைவன் உலகைச் சூழ்ந்துள்ள ஆழமான கடலில் தோன்றிய விடத்தை உண்டு
உலகைக் காத்தருளிய பெருமான் ஆவார். நீலநிறம் பொருந்திய பெரிய கண்களை உடையவள் உமையம்மை.
அவளை ஒரு பாகமாக விளங்கும் அழகினர். அவ்வம்மையோடு குலாவும் செயல்களுக்கு அளவில்லை.
குறிப்புரை: உண்டு என்னும் இரண்டும் வினைமுற்று. அவர் தொல்படையாகச் சூலமும்
மழுவும் உள என்க. ஆலம் - நஞ்சு. நீலம் - நீலநிறம். நீலோற்பலமுமாம். கோலம் - திருக்கோலம்.
நிலாவுதல்- பிரகாசமாயிருத்தல். குலாவுதல் - பொருந்துதல்.
Lord Civa at Thiru-anega-thanga-vatham owns in His hands a trident and an axe
as His ancient war weapons. He consumed the poison that came out of the deep sea
which surrounded the universe and thus saved the entire humanity in the world. He
appears with His consort Uma Devi, whose eyes are beautifully blue, keeping her on
the left half of His body. His beauty has no bounds and His love is limitless.
1515. செம்பினாருமதில்மூன்றெரியச்சினவாயதோர்
அம்பினாலெய்தருள்வில்லியனேகதங்காவதம்
கொம்பின் நேரிடையாளொடுங்கூடிக்கொல்லேறுடை
நம்பன்நாமனவிலாதனநாவெனலாகுமே. 3
செம்பின் ஆரும் மதில்மூன்று எரிய, சின வாயது ஓர்
அம்பினால் எய்துஅருள் வில்லி, அனேகதங்காவதம்
கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல்ஏறு உடை
நம்பன், நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?
cempin Arum matilmUnRu eriya, cina vAyatu Or
ampinAl eytu aruL villi, anEkatagkAvatam
kompin nEr iTaiyALoTum kUTik kol ERu uTai
nampan, nAmam navilAtana nA enal AkumE?
பொருள்: விண்ணிலே சதா காலமும் பறந்து சென்று கொண்டிருக்கும் திரிபுரம் என்று
சொல்லப்படும் மூன்று கோட்டைகளை செம்பு உலோகத்தால் மிக உறுதியாகக் கட்டி அதில் அசுரர்கள்
சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் சதாவும் தேவர்களுக்கு துன்பங்களைக் கொடுத்து வந்தார்கள்.
தேவர்கள் சிவபெருமானிடம் தங்களின் குறைகளைக் கூறிக் காப்பாற்ற வேண்டினார்கள்.
அனேகதங்காவதத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் அவர்களுக்கு இரங்கி முனையில் அக்கினி உள்ள
பாணத்தை அந்தத் திரிபுரத்தின் மதில்களை நோக்கிச் செலுத்தினார். மூன்று கோட்டைகளும்
அதில் உள்ள அசுரர்கள் அனைவரும் அழிந்தனர். சிவனை சதாவும் வணங்கும் மூவர் உயிர் தப்பினர்.
பூங்கொம்பு போன்ற இடையினை உடையவள் உமையம்மை. அவளோடு கூடிய சிவபெருமான் கொல்லேற்றை
ஊர்தியாகக் கொண்டவர் ஆவார். அப்பெருமான் திருப்பெயரைச் சொல்லிப் பழகாத நாக்கள் நாக்கு ஆகமாட்டா.
குறிப்புரை: மதில் மூன்று - திரிபுரம். சினம் வாயது - எரிதலையுடைய முனையுடையது. விண்டுவாகிய
பாணத்தின் முனையில் அக்கினியிருப்பதுபற்றிச் சினவாய் எனப்பட்டது. கொம்பின் நேர் இடையாள்-
கொம்புபோன்ற இடையினையுடைய அம்பிகை. நம்பன் - எல்லா உயிர்களாலும் விரும்புதற்கு உரியவன்.
சிவநாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகாத நாக்கள் நாவாக. (தி. 3 ப. 4 பா. 6, 9) நவிலல் - நாவாற் சொல்லி
அடிப்படல். 'மறை நவில் அந்தணர்' (புறநானூறு, கடவுள் வாழ்த்து).
The three aerial flying fortresses were mainly built of copper. They were very strong
buildings. The asuras who lived in these fortresses troubled devas always. At the request
of the devas, Lord Civa decided to destroy the three fortresses. Mount Meru was used by Civa
as His bow and He created fire at the tip of the arrow and shot the arrow at these three fortresses.
Instantly all the three fortresses were completely destroyed and all the asuras were killed
except the three who were sincere devotees of Lord Civa. Thus He graced the devas. He is
manifested in Thiru-anega-thanga-vatham and He shares half His body with His consort Uma Devi.
Whenever He moves about on His bull He keeps Uma Devi also on the Bull. Those tongues which
do not recite the great name of our Lord Civa can not be called tongues.
1516. தந்தத்திந்தத்தடமென்றருவித்திரள்பாய்ந்துபோய்ச்
சிந்தவெந்தகதிரோனொடுமாசறுதிங்களார்
அந்தமில்லவளவில்லஅனேகதங்காவதம்
எந்தைவெந்தபொடிநீறணிவார்க்கிடமாவதே. 4
தந்தத்திந்தத்தடம் என்ற அருவித்திரள் பாய்ந்து போய்ச்
சிந்த வெந்த கதிரோனொடு மாசுஅறு திங்கள் ஆர்
அந்தம் இல்ல அளவு இல்ல, அனேகதங்காவதம்
எந்தை வெந்தபொடி-நீறு அணிவார்க்கு இடம்ஆவதே.
tantattintat taTam enRa aruvittiraL pAyntu pOyc
cinta venta katirOnoTu mAcu aRu tigkal Ar
antam illa aLavu illa, anEkatagkAvatam,
entai ventapoTi-nIRu aNivArkku iTam AvatE.
பொருள்: சிவபெருமான் அனேகதங்காவதத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறார்.
இந்த ஊரில் நான்கு பக்கங்களிலும் மிகுந்த உயரத்தில் இருந்து அளவற்ற மழைநீரோடு சதாவும் விழுந்து
ஊர் முழுவதும் நீர் சிந்தி ஓடுகின்றது. இந்த அருவிக்கூட்டம் பாயும் போது தந்தத்திந்தத்தடம் என்ற
ஒலிக்குறிப்போடு பாய்கின்றன. சுடர்ந்த கதிர்களை உடைய சூரியன் தன் வெங்கதிர்களை வீசிக்
கொண்டிருக்கின்றான். சந்திரனும் குற்றமற்ற ஒளியை வீசிக் கொண்டிருக்கின்றான். இந்த இரண்டிற்கும்
நாசமும் இல்லை அளவும் இல்லை. இந்த சிறப்பான இடத்தில் எந்தையாகிய சிவபெருமான் திருநீற்றை
உடல்முழுவதும் பூசிய அடியார்களுக்கு அருள்வழங்கி வருகின்றான்.
குறிப்புரை: அருவிக்கூட்டம் பாயும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு. 'தந்தத் திந்தத் தடம்' என்றுள்ளதாம்.
பாய்தலால் சிந்துகின்றன. வெந்த - சுடர்ந்த. கதிரோன் - கதிர்களையுடைய சூரியன், வெந்தகதிர்-வெங்கதிர்.
மாசு - குற்றம். திங்கள் - சந்திரன். அந்தம் - முடிவு. அளவு - எல்லை, நாசமுமில்லை அளவுமில்லை என்றபடி.
In the city of Thiru-anega-thanga-vatham torrential water falls bring water that
flows all over the city. The water falling from a height makes a heavy noise. It resembles a
musical note 'Thanthath, Thinthath thadam'. The warm sun's rays as well as the flawless rays
of the moon fall on the city. There is no beginning nor any end to these two rays.
In this grand city Lord Civa who has adorned His body with holy ashes, has manifested
Himself here and graces the devotees who pray to Him.
1517. பிறையுமாசில்கதிரோனறியாமைப்பெயர்ந்துபோய்
உறையுங்கோயில்பசும்பொன்னணியாரசும்பார்புனல்
அறையுமோசைபறைபோலுமனேகதங்காவதம்
இறையெம்மீசனெம்மானிடமாகவுகந்ததே. 5
பிறையும் மாசுஇல் கதிரோன் அறியாமைப் பெயர்ந்து போய்
உறையும் கோயில், பசும்பொன் அணியார், அசும்பு ஆர் புனல்
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம்
இறை,எம் ஈசன், எம்மான், இடம்ஆக உகந்ததே.
piRaiyum mAcu il katirOn aRiyAmaip peyarntu pOy
uRaiyum kOyil, pacumpon aNiyAr, acumpu Ar punal
aRaiyum Ocai paRai pOlum anEkatagkAvatam,
iRai, em Ican, emmAn, iTam Aka ukantatE.
பொருள்: அனேகதங்காவதத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோயில் வானளாவியது.
விண்ணில் பாய்ந்து செல்லும் சந்திர சூரியர்கள் இந்தக் கோயிலின் உயரத்தை அறியாமல்
திருக்கோபுரத்தைத் தாண்டுவதற்கு உயர்ந்து செல்ல மாட்டாமல் பக்கத்தில் பெயர்ந்து போவர்.
பசும்பொன் போன்ற நீர்த்துளிகளை உடைய பறை போன்று ஒலித்து ஒழுகும் அருவிகள் ஊரைச்
சுற்றி உள்ளன. அத்தகையது அனேகதங்காவதம். அதுவே நம் ஈசனாகிய இறைவன் தனது இடமாகக்
கொண்டு உகந்து அருளுகிறான்.
குறிப்புரை: பிறையும் - சந்திரனும். மாசு- குற்றம். கதிரோன் - சூரியனும். அறியாமை - அறியாமல்.
கோயிலின் உயர்ச்சியை அறிய மாட்டாமல். பெயர்ந்து - அப்பால் விலகி. சூரிய சந்திரர் திருக்கோபுரத்தைத்
தாண்டற்கு உயர்ந்து செல்ல மாட்டாமல் பக்கத்திற் பெயர்ந்து போவர் என்றது. அசும்பு-நீர்த்துளி.
துளித்தல் பொருந்திய புனல். புனல் - நீர். அறையும் - ஒலிக்கும். பறை - வாத்திய ஓசை.
The temple towers in the city of Thiru-anega-thanga-vatham look tall as the sky.
The moon and the faultless sun while traversing through the sky are unable to traverse
and cross the temple towers due to its tallness. Therefore, they both change their pathway
in the sky and move away from the towers and pass through. The shining waters in the falls
make echoes like drum beating and the bright water flows around the city of Thiru-anega-
thanga-vatham. Lord Civa has selected this town as His commanding abode and graces the
devotees who approach Him in the temple.
1518. தேனையேறுநறுமாமலர்கொண்டடிசேர்த்துவீர்
ஆனையேறுமணிசாரலனேகதங்காவதம்
வானையேறுநெறிசென்றுணருந்தனைவல்லிரேல்
ஆனையேறுமுடியானருள்செய்வதும்வானையே. 6
தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்!
ஆனை ஏறும் அணிசாரல் அனேகதங்காவதம்
வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல்,
ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே.
tEnai ERu naRumAmalar koNTu aTi cErttuvIr!
Anai ERum aNi cAral anEkatagkAvatam
vAnai ERum neRi cenRu uNarum tanai vallirEl,
Anney ERu muTiyAn aruLceyvatum vAnaiyE.
பொருள்: தேனை மிகுதியாகப் பெற்றவை மணம் கமழும் சிறந்த மலர்கள். அவற்றைப்
பறித்து இறைவன் திருவடிகளில் சேர்ப்பிக்கும் அடியவர்களே! வீடுபேறு அடைதற்குப் பின்பற்றுவன
சரியை, கிரியை முதலான நெறிகள். அவற்றில் நின்று அவனை உணர நீவீர் வல்லீரோ? அவ்வாறாயின்
சிவபிரான் உங்கட்கு வானுலகப் பேற்றினை வழங்கி அருளுவான். யானைகள் ஏறி உலாவும் அழகிய
சாரலை உடையது அனேகதங்காவதம். அங்கே விளங்கும் இறைவன், ஆனைந்தாடும் தலைவனாகிய
சிவபெருமான் ஆவான்.
குறிப்புரை: தேனையேறும்-தேனை மிகுதியாகப் பெற்ற. அடி- திருவடியில். சேர்த்துவீர் - (தூவித்)
தொழுபவர்களே என்று விளித்தார். ஆனை - யானை. வானை - பேரின்ப வீட்டு வகை. நெறி-சரியை
முதலிய நான்குநெறி. உணருந்தனை - உணரும் அளவை. ஆன்ஐ - பசுவினிடத்துண்டாகும் பால் தயிர்
நெய் முதலிய ஐந்து ஆனிலங்கிளர் ஐந்தும் அவிர்முடியாடி. வானை ஏறு நெறியுணர வல்லீரேல்
ஆனையேறுமுடியவன் அருள்வதும் வானையே (தி. 2 ப. 10 பா. 5) என்று ஐயந்தீர்த்தருளினார்.
The devotees in the city of Thiru-anega-thanga-vatham collect sweet smelling flowers
full of honey and offer them at the holy feet of Lord Civan. If you are capable of receiving
His grace, do not think of any other place than Thiru-anega-thanga-vatham. To get salvation
you should follow the principles consisting the four fold as explained in the aagamaas,
called 'Carya and Kriya'. Then worship Lord Civan in the temple at Thiru-anega-thanga-vatham
where elephants climb the hill with fine falls, and roam happily. In this renowned place,
Lord Civa rests Himself happily, it is He who delights in His sacred bath of the five items
obtained from the cow. He will grace you with the divine salvation to reach heaven, if you
really aspire for it.
1519. வெருவிவேழமிரியக்கதிர்முத்தொடுவெண்பளிங்
குருவிவீழவயிரங்கொழியாவகிலுந்திவெள்
அருவிபாயுமணிசாரலனேகதங்காவதம்
மருவிவாழும்பெருமான்கழல்சேர்வதுவாய்மையே. 7
வெருவி வேழம் இரிய, கதிர் முத்தொடு வெண்பளிங்கு
உருவி வீழ,வயிரம் கொழியா, அகில் உந்தி, வெள்
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம்
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே.
veruvi vEzam iriya, katir muttoTu veNpaLigku
uruvi vIza, vayiram koziyA, akil unti, veL
aruvi pAyum aNi cAral anEkatagkAvatam
maruvi vAzum perumAn kazal cErvatu vAymaiyE.
பொருள்: அனேகதங்காவதம் என்னும் மலையின் மேலிருந்து பாயும் வெள்ளருவி ஒலியால்
யானைகள் அஞ்சி ஓடும். அவ்வருவி முத்துக்களையும் பளிங்குகளையும் வைரங்களையும் அகில் முதலிய
மரங்களையும் அடித்து வருகின்றது. அத்தகைய அழகிய சாரல் உடைய அம்மலைமேல் எழுந்தருளிய
இறைவன் திருவடி சேர்வது மெய்ந்நெறி. வெருவி அதனை அடைந்து அங்கு வாழும் பெருமான் திருவடிகளை
அடைவதே மெய்ந்நெறியாகும்.
குறிப்புரை: வெருவி - அஞ்சி. வேழம் - யானை. இரிய- ஓட. உருவி - ஊடுருவி. வயிரம்-வச்சிரமணி.
கொழியர் -கொழித்து. அகில் - மணமுள்ளதொருமரம். வாய்மை -மெய்ந்நெறிக்குப் பண்பாகுபெயர்.
The city Thiru-anega-thanga-vatham has very attractive mountains in the vicinity.
Pure silvery waterfalls flow in plenty from clouds gathering on hilltops. The elephants
grazing near the falls, hear the great noise and become panicky without knowing wherefrom
the noise comes, and run hither and thither. The stream brings very bright pearls, white
marbles and diamonds and eaglewood. These rush in the water flow and settle along the brook
banks. Oh! Ye gentlemen! Please go to this enchanting hill country of attractive slopes
where Lord Civan resides. Worship His holy feet and this is only correct path to virtue
and salvation.
1520. ஈரமேதுமிலனாகியெழுந்தஇராவணன்
வீரமேதுமிலனாகவிளைத்தவிலங்கலான்
ஆரம்பாம்பதணிவான்றனனேகதங்காவதம்
வாரமாகிநினைவார்வினையாயினமாயுமே. 8
ஈரம்ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன்
வீரம்ஏதும் இலன்ஆக விளைத்த விலங்கலான்,
ஆரம் பாம்புஅது அணிவான்தன், அனேகதங்காவதம்
வாரம்ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே.
Iram Etum ilan Aki ezunta irAvaNan
vIram Etum ilan Aka viLaitta vilagkalAn,
Aram pAmpu atu aNivAntan, anEkatagkAvatam
vAram Aki ninaivAr vinai Ayina mAyumE.
பொருள்: இலங்கை மன்னனாகிய இராவணன் தன்னிடம் 'அன்பு' என்று ஒரு சிறிதும் இன்றித்
தன் வலிமையைப் பெரிது என்று எண்ணி கயிலை மலையை நகர்த்த எழுந்தான். பக்தியின்றி வீரம்
ஒன்றே கொண்டு கயிலையைத் தூக்கிய இராவணனுக்கு அவ்வீரம் சிறிதும் இல்லாதவனாக்கினார்
சிவபிரான். பாம்பை ஆரமாக அணிபவனாகிய சிவபிரானின் அனேகதங்காவதத்தை அன்போடு
நினைப்பவர் வினைகள் யாவும் மாயும்.
குறிப்புரை: ஈரம் - அன்பு. ஏதும் - யாதும், சிறிதும். விலங்கல்-(கயிலை) மலை. ஆரம் - மாலை.
வாரம் - அன்பு.
King Raavanan of Sri Lanka had egoistic feelings and had pride regarding his
unparalleled physical courage. He forgot his respectful love to Civan, Lord of Thiru-
anega-thanga-vatham. Raavanan, therefore, once tried his best to move Mount Kailash,
the abode of Lord Civan a little to the farther side, but failed, got crushed under the
mountain and cried. Lord Civan who has His abode on Mount Kailash and wears the snake
around his neck totally destroyed the bravery of Raavanan. Those devotees who think deeply
of the greatness of Lord Civan and pray will get their sufferings and evils chased fully.
1521. கண்ணன்வண்ணமலரானொடுங்கூடியோர்க்கையமாய்
எண்ணும்வண்ணமறியாமையெழுந்ததோராரழல்
அண்ணல்நண்ணுமணிசாரலனேகதங்காவதம்
நண்ணும்வண்ணமுடையார்வினையாயினநாசமே. 9
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம்ஆய்
எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர்ஆர்அழல்
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.
kaNNan vaNNa malarAnoTum kUTiyOrkku aiyam Ay
eNNum vaNNam, aRiyAmai ezuntatu Or Ar azal
aNNal naNNum aNi cAral anEkatagkAvatam
naNNum vaNNam uTaiyAr vinai Ayina nAcamE.
பொருள்: திருமாலும் நான்முகனும் கூடி சிவபிரானின் அடிமுடி அறிய முற்பட்டனர். அவர்கள்
அறிய முடியுமா என ஐயுறும் வண்ணம் நிகழ்ந்தது ஒன்று. அவர்கட்கு இடையே எழுந்தது ஓர் அழற்பிழம்பு.
அச்சிவபெருமான் எழுந்தருளிய அழகிய சாரலை உடையது அனேகதங்காவதம். அதனை நண்ணும்
இயல்புடையார் வினைகள் நாசமாகும்.
குறிப்புரை: கண்ணன் – கிருட்டிணனாக அவதரித்த திருமால். வண்ணமலர் - தாமரை.
வண்ணம் – அழகு. ஐயம் - சந்தேகம். அறியாமை - அறியாமல். ஆர் அழல்- நிறைந்த பெரிய தீப்பிழம்பு
(அக்கினிமலை வடிவம்) அண்ணல்- சிவபிரான். நண்ணும் - சேர்ந்து வழிபடும். வண்ணம் - வகை
கூட்டியோர்க்கு ஐயமாய் எனப் பொருள் காண்க. மதுரைத் திருஞானசம்பந்தப்பிள்ளைப்பதியில்
'கையமாய்' என்ற பாடமுளது.
Lord Thirumaal and the four faced Brahma argued about their superiority in the world.
They came to a conclusion that among the two whoever was the first in seeing Lord Civan's
head or feet will be superior to the other. Thirumaal went underground in search of Civan's
holy feet; while Brahma went in search of the Lord's head in the sky. They both failed
in their search. At that moment Lord Civa rose between them boundlessly as a fire of
indescribable appearance which Vishnu and Brahma could not even dream of. That Lord Civan
is in this attractive place of mountains and valleys known as Thiru-anega-thanga-vatham.
The devotees who can approach this place and offer worship to Lord Civan will be relieved
of all their malevolent actions and their effect.
1522. மாபதம்மறியாதவர்சாவகர்சாக்கியர்
ஏபதம்படநின்றிறுமாந்துழல்வார்கள்தாம்
ஆபதம்மறிவீருளிராகிலனேகதங்
காபதம்மமர்ந்தான்கழல்சேர்தல்கருமமே. 10
மா பதம் அறியாதவர் சாவகர் சாக்கியர்,
ஏ பதம் பட நின்றி இறுமாந்து உழல்வார்கள்தாம்
ஆ பதம் அறிவீர்உளிர்ஆகில், அனேகதங்
காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் கருமமே.
mA patam aRiyAtavar cAvakar cAkkiyar,
E patam paTa ninRu iRumAntu uzalvArkaL tAm
A patam aRivIr uLir Akil, anEkatag
kApatam amarntAn kazal cErtal karumamE.
பொருள்: சிறந்த சிவபதத்தை அறியாதவர் சமண, புத்த சமயத்தவர்கள். அவர்கள் பிறரால்
இகழப்படுபவர்கள். இறுமாப்புடையவராய் உழல்பவர்கள் ஆவர். நாம் அடையத் தக்கது சிவபதம்
என்று அறியாதவர்களாயின் அனேகதங்காவதத்துள் எழுந்தருளியுள்ள சிவபிரான் திருவடிகளை
ஆராய்ந்து உணர்தலே நீவீர் செய்யத்தக்க கருமம் ஆகும்.
குறிப்புரை: மாபதம்- பெரிய பதவி. ஏ பதம் - ஏ ஏ என்னும் இகழ்கின்ற சொல்; 'ஏ ஏ இவள் ஒருத்தி
பேடியோ' என்றார் (சீவக சிந்தாமணி. பா.652) அறிவீருளிர் -அறிவீராயிருப்பீர் (ஆகில்). கருமம்-
இன்றியமையாது செயல்பாலதொருகடன்.
Those Jains and Buddhists, also called Savakar and Saakiar, are all ignorant people
and do not understand the Supreme Holiness of Lord Civan and His highest state of achievements.
They are always on the beaten track of ignorance. They are scorners of Saivite philosophy
and are always conceited. You devotees, if you are really interested in reaching the true
abode of eternal bliss, then it is your duty to reach the holy feet of Lord Civan at
Thiru-anega-thanga-vatham.
1523. தொல்லையூழிப்பெயர்தோன்றியதோணிபுரத்திறை
நல்லகேள்வித்தமிழ்ஞானசம்பந்தன்நல்லார்கள்முன்
அல்லல்தீரவுரைசெய்த அனேகதங்காவதம்
சொல்லநல்ல அடையும்மடையாசுடுதுன்பமே. 11
தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் - நல்லார்கள்முன்
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல நல்ல அடையும்; அடையா, சுடுதுன்பமே.
tollai Uzip peyar tOnRiya tONipurattu iRai-
nalla kELvit tamiz njAnacampantan--nallArkaL mun
allal tIra urai ceyta anEkatagkAvatam
colla,nalla aTaiyum; aTaiyA, cuTutunpamE.
பொருள்: பழமையான ஊழிக்காலத்தே தோணியாய் மிதந்த காரணத்தால் தோணிபுரம் என்னும்
பெயர் பெற்றது சீகாழிப்பதி. அதன் தலைவனும், நல்ல நூற்கேள்வியை உடையவனும் ஆகியவன்
தமிழ்ஞானசம்பந்தன். நல்லோர்கள் திருமுன்னர், அல்லல் தீர உரைத்து அவர் அருளியது இப்பதிகம்.
அத்தகு அனேகதங்காவதத்தைப் புகழ்ந்து போற்றின், நல்லன வந்துறும். நம்மைச் சுடும் துன்பங்கள்
நம்மை அடைய மாட்டா.
குறிப்புரை: தோணிபுரம்- சீகாழி. இறை - தலைவர். தமிழ்- சைவத்தமிழ் நூல்களை அருளும். கேள்வி- சுருதி.
ஒவ்வொரு பதிகமும் ஒவ்வொரு நூலாதல் ஆசிரியர் திருவாக்காலறியலாம். 'கழுமலத்தின் பெயரை நாளும்
பரவிய சீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையால் பனுவல்மாலை' (தி.2. ப.70 பா.12). 'வன்றொண்டன்
பன்னு தமிழ் நூல் வல்லார்' (தி. 7 ப. 41 பா. 10) நல்லார்கள்- சிவனடியார்கள். நல்ல - நல்லன. நல்ல அடையும்,
சுடுதுன்பம் அடையா என்க.
Thiru-gnana-Sambandar in this last poem of this chapter gives the name of Seerkaazhi as
Thoni-puram, one of the twelve names of the sacred place from ancient times. Here he was born,
he was an eminent scholar of good inquisitive talent. He was graced by Lord Civan of Thonipuram.
Thiru-gnana-Sambandar sang these songs to dispel the sufferings of the virtuous men. Those people
who recite these verses in proper tune and in the proper mode on Lord of Thiru-anega-thanga-vatham
and praise Him will have all benevolence, malevolence will not strike them.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
5ஆம் பதிகம் முற்றிற்று
End of 5th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 142 பதிக எண்- 6
6. திருவையாறு 6. THIRU-VAIYAARU
பண் : இந்தளம் Pann: Indhalam
திருத்தல வரலாறு
கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி முடியத் திருவையாற்றிலிருந்து
கண்டியூர் வரை காவிரி நதிதான் பரவியிருந்தது. கண்டியூர் திருச்சோற்றுத்துறை இவைகளைப் பாடிய
தேவார ஆசிரியர்கள் இவ்விரு பதிகளையும் காவிரிக்கரையிலுள்ள பதிகளாகவே குறிப்பிட்டுள்ளனர்.
திருவையாற்றுக்கும் கண்டியூருக்கும் இடையிலுள்ள குடமுருட்டியாறு அக்காலத்தில் இல்லை.
அது காவிரியிலிருந்து கும்பகோணத்திற்குக் கிழக்கே பிரிந்து சென்றது. கடுவாய் என்பது குடமுருட்டியாறாகும்.
இக்கடுவாய்க்கரையிலுள்ள புத்தூரை, கடுவாய்க்கரைப்புத்தூர் என்று சிவநெறி காட்டியருளிய குரவர்கள்
குறிப்பிட்டுள்ளதுபோல, அக்காலத்தில் குடமுருட்டியாகிய கடுவாயாறு கண்டியூர்ப் பக்கமாக ஓடியிருக்குமானால்
அதைக் கடுவாய்க்கரைக் கண்டியூர் என்றே கூறியிருக்க வேண்டுமே! அங்ஙனம் குறிப்பிடாததன் காரணத்தையும்
உணரவேண்டும். இதற்குப் பிற்காலத்தேதான், திருக்காட்டுப்பள்ளியைத் தலைப்பாகக் கொண்டு குடமுருட்டியாற்றை
வெட்டி, கும்பகோணத்திற்குக் கிழக்கிலிருந்து செல்லும் கடுவாயாற்றோடு சேர்த்து, காவிரி ஆற்றைக் குறுக்கி,
மக்கள் வாழ்வுக்கும், சாகுபடிக்கும் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதனால் ஒரே நதியெனல் பொருந்தும்
என்பர் சிலர். தஞ்சாவூர் முதல் திருவையாறு முடிய இருக்கும் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி,
காவிரி என்னும் ஐந்து ஆறுகளை உடையது. ஆகையால் ஐயாறு என்று பெயர் பெற்றது என்பார் சிற்சிலர்.
சூரியபுட்கரணி சந்திரபுட்கரணி, கங்கை, பாலாறு, நந்திதீர்த்தம் (நந்திவாய்நுரை) என்னும் ஐந்து தெய்வீக
நதிகள் தம்முள் கலப்பதால் ஐயாறு என்று பெயர் பெற்றது என்பர் சிற்சிலர். பஞ்சநதம் என்பது, ஐயாறு
என்னும் தமிழுக்கு ஒத்த வடசொல். இக்கோயில் தருமபுர ஆதீன அருளாட்சியில் விளங்குவதாகும்.
திருவையாறு தஞ்சாவூருக்கு வடக்கே 10 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தஞ்சை, கும்பகோணம்
திருக்காட்டுப்பள்ளி முதலிய நகர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. இறைவரின் திருப்பெயர் ஐயாறப்பர்;
வடமொழியில் பஞ்சநதீசுவரர்; பிரணதார்த்திஹரர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் அறம் வளர்த்த நாயகி;
வடமொழியில் தர்மசம்வர்த்தினி என்பர். தீர்த்தம் காவிரி, சூரியபுட்கரணி என்பன.
இது சமயக்குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்றது. 'நந்தி அருள்பெற்ற நன்னகர்' என்று சேக்கிழார்
இப்பதியைச் சிறப்பித்துள்ளார். சிலாதமுனிவர்க்குத் திருமகனாய் அவதரித்த திருநந்திதேவர், சுயசாதேவியை
மணந்து, ஐயாறப்பரைப் பூசித்து சிவசாரூபம் பெற்றமையை உட்கொண்டு சேக்கிழார் இவ்வாறு கூறலானார்.
கடலரசன் இங்கு வந்து ஐயாறப்பரைப் பூசித்துப் பேறு பெற்றான். 'ஆழிவலவனின்றேத்தும்' என்னும் இவ்வூர்த்
தேவாரப்பகுதி இதற்குச் சான்றாகும். இலக்குமியால் பூசிக்கப் பெற்றது. இலக்குமிக்கு இரண்டாம் பிரகாரத்தில்
தனிக்கோயில் இருக்கின்றது. வெள்ளிக்கிழமை தோறும் இலக்குமி புறப்பாடு இத்தலத்தில் நடைபெற்று வருகின்றது.
வடகயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை அப்பர் பெருமானுக்குக் காட்டியருளிய காட்சியை
உணர்த்தும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய கற்கோயில், பெரியபுறத் திருச்சுற்றாலையின் தென்பால்
(மூன்றாம் தெற்குப் பிரகாரத்தில்) இருக்கின்றது. அங்கு இறைவர் மணவாளக் கோலத்தோடு, சக்தியும் சிவமுமாக
வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றார். அப்பர் பெருமானின் அழகு திகழும் பிரதிமையும் அங்கு இருக்கின்றது.
சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கண்டியூரை வணங்கிய
பொழுது எதிரே தோன்றிய திருவையாற்றையும் வணங்க விரும்பினர். அப்பொழுது காவிரியில்
வெள்ளப்பெருக்கு மிகுதியாக இருந்தமையால் அக்கரையிலிருந்த சுந்தர மூர்த்தி நாயனார்
'ஐயாறுடைய அடிகளோ' என்று திருப்பதிகம் பாடிய அளவில், வந்து மீளுமளவும் காவிரியை
வழிவிடச் செய்த பெருமையை உடையது இத்தலம். தம்மை வழிபட்டு வந்த ஒரு அந்தணச்
சிறுவனைத் தொடர்ந்து வந்த யமனைத் தண்டித்து, அச்சிறுவனைச் சோதி வடிவமாக ஆட்கொண்ட
காரணம்பற்றி ஆட்கொண்டார் என்னும் பெயருடையாரது திருமேனி தெற்குக் கோபுர வாயிலின்
மேல்பால் இருக்கின்றது. அவருக்கு அருகில் தென்மேற்கு மூலையில் இருப்பவர் ஓலம் இட்ட பிள்ளையார்
ஆவர். ஆட்கொண்டார்க்கு எதிரில் குங்கிலியக்குழி ஒன்று இருக்கிறது. அதில் மக்கள் குங்கிலியத்தை
இட்டு வழிபடுகின்றனர். இத்தலத்தே இந்திரன், வாலி முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றார்கள்.
இச்செய்தியை 'எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட' எனச் சம்பந்தரும், 'வாலியார் வணங்கி
ஏத்தும் திருவையாறு அமர்ந்ததேன்' என அப்பர் பெருந்தகையும் அருளிச் செய்துள்ளதை இத்தலத்துத்
தேவாரப் பகுதிகளால் அறியலாம்.
இறைவரைப் பூசித்த சைவர் ஒருவர் காசிக்குச் சென்று, குறிப்பிட்ட காலத்தில் வாராமையால்
பூசைமுறை தவறியது. அதுபொழுது இறைவர் அச்சைவருடைய வடிவோடு இருந்து தம்மைத்தாமே பூசித்த
சிறப்புடையது. இதைத்தான் 'ஐயாறதனில் சைவனாகியும்' என்பார் திருவாசகத்தில். இப்பதிக்குப்
பதினெட்டுத் தேவாரப் பதிகங்கள் இருக்கின்றன. திருவடிப் பெருமைகளை அப்பர் பெருமான் இருபது
திருப்பாடல்களால் இத்தலத்தில் உணர்த்தியதுபோல் வேறு எப்பதியிலும் உணர்த்தாத அவ்வளவு
பெருமையை உடையது.
இத்தலத்தில் நிகழும் விழாக்களுள் நந்திதேவர் திருமணத் திருவிழா. 'சித்திரைப் பெருந்திருவிழா'
என்பவை மிகச் சிறந்தனவாகும். இவைகளுள் நந்திதேவர் திருமணத் திருவிழா, பங்குனி மாதத்தில் நிகழ்வதாகும்.
அதுபொழுது அம்மையப்பர் ஒரு தனி வெட்டிவேர் பல்லக்கிலும் நந்திதேவர் வேறு ஒரு வெட்டிவேர் பல்லக்கிலும்
எழுந்தருளி, திருமழபாடிக்குச் செல்வர். அங்கே நந்திதேவர்க்குத் திருமணத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே
ஐயாற்றுக்கு எழுந்தருளும் விழா இதுவாகும்.
சித்திரைப் பெருந்திருவிழா
இது சித்திரை மாதத்தில் நிகழ்வது. இதைப் பிரமோற்சவம் என்றும் வழங்குவர். இதில்
ஐந்தாம் நாள் விழா தன்னைத்தான் பூசிப்பதாகும். இவ்விழாவின் முடிவில் ஐயாறப்பர் வளர்த்த
நாயகியாருடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப் பல்லக்கிலும், நந்திதேவர் தனியொரு
வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளித் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் தலங்களுக்கு எழுந்தருள, அந்தந்த
ஊர்களின் இறைவரும் தனித்தனி வெட்டிவேர்ப் பல்லக்குகளில் எதிர்கொண்டு அழைத்து
உடன்தொடர மறுநாட்காலை ஐயாற்றுக்கு எழுந்தருளுவார். இதை ஏழூர் விழா அல்லது
சப்தஸ்தானத் திருவிழா என்பர். தென்னாட்டில் இதைப் போன்றதொரு விழாவைக் காண முடியாது.
இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் குழுமி ஏழ் ஊர்களையும் சுற்றிவரும் காட்சி போற்றத்தக்கதாகும்.
இத்திருக்கோயில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்து அருளாட்சியில் உள்ளது.
இப்பொழுது ஆதீனத்தில் இருப்பத்தாறாவது பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி புரியும் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம்
அவர்கள், பழங்காலத்துச் சோழ மன்னர்களுடைய ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற சிறப்புக்களைப் போலவே
இத்திருக்கோயிலின் நித்திய நைமித்திகங்கள் எல்லாவற்றையும் மிக்க சிறப்புறச் செய்வித்தருளுகின்றார்கள்.
இத்திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் பெரியபுறத் திருச்சுற்றாலை என்று கல்வெட்டுக்களில்
கூறப்பெற்றுள்ளது. இப்பிரகாரத்தின் வடபால் ஒலோகமாதேவீச்சரம் என்னும் பெயருள்ள ஒருகற்கோயில்
இருக்கின்றது. அது முதலாம் இராசராச சோழனுடைய மனைவியாராகிய ஒலோகமாதேவியால் கட்டப்பெற்றதாகும்.
அம்மன்கோயில் புதிய திருப்பணியை உடையது. புலவர்கள் செய்யுளை அலங்கரிப்பதுபோல்,
தேவகோட்டை உ. ராம. மெசுப. சேவு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் அழகுறத் திருப்பணி செய்திருக்கின்றனர்.
ஆடி அமாவாசை நாள் அப்பருக்குக் காட்சி கொடுத்த நாளாகும். அன்றும் திரளான மக்கள் வந்து கூடுவர்.
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஒரு வெண்பாவால் திருவையாற்றைப் பாடியுள்ளார்கள். அது சேத்திரத்
திருவெண்பாவில் சேர்க்கப் பெற்றுள்ளது. அப்பாடல் வருமாறு:
குந்தி நடந்து குனிந்தொருகைக் கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
இத்தல புராணம் ஞானக்கூத்தரால் இயற்றப் பெற்றது. தருமை ஆதீனத்தார் அச்சிட்டுள்ளனர்.
இத்திருக்கோயிலுள் அமைந்த ஐயாறப்பர் கோயில், தென்கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம்
ஆகிய மூன்று கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
பதிக வரலாறு
திருஞானசம்பந்தப் பெருமான் தொண்டர் எதிர்கொள்ள, முத்துப்பல்லக்கில் சென்று திருவையாற்றை
அடைந்து அந்நன்னகரை முன்னிறைஞ்சி, புந்திநிறை செந்தமிழின் சந்த இசையில், 'புலனைந்தும் பொறிகலங்கி
நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென்று அருள்செய்வார் அமருங்கோயிலை'
அணுகி, நீடுகோபுரத்தைத் தொழுது, உள்ளே புகுந்து வலங்கொண்டு தாழ்ந்து, 'கோடல் கோங்கம்' என்னும்
இத்திருப்பதிகக் குலவுமாலையை, 'நீடு பெருந் திருக்கூத்து நிறைந்த திருவுள்ளத்து நிலைமை தோன்ற'
ஆடுமாற்றைப் பாடியாடினார்.
திருச்சிற்றம்பலம்
1524. கோடல்கோங்கங்குளிர்கூவிளமாலைகுலாயசீர்
ஓடுகங்கைஒளிவெண்பிறைசூடுமொருவனார்
பாடல்வீணைமுழவங்குழல்மொந்தைபண்ணாகவே
ஆடுமாறுவல்லானுமையாறுடையையனே. 1
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண்ஆகவே
ஆடும்ஆறு வல்லானும் - ஐயாறு உடை ஐயனே.
kOTal, kOgkam, kuLir kUviLamAlai, kulAya cIr
OTu kagkai, oLi veNpiRai, cUTum oruvanAr-
pATal vINai, muzavam, kuzal, montai, paN AkavE
ATum ARu vallAnum-aiyARu uTai aiyanE.
பொருள்: இந்தப் பதிகத்தில் முதல் இரண்டடிகளில் சிவபெருமான் சூடுவனவற்றுள் ஐந்தும்
பின் இரண்டடியில் அவனது திருக்கூத்து வன்மையும் இசைக்கருவிகளும் கூறப்பட்டுள்ளன.
சிவபெருமான் திருவையாற்றில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறார். அவருடைய திருமுடியில்
வெண்மையான காந்தள் மலரும், கோங்கு மரத்தின் தளிர்களும், வில்வத்தின் மூன்று இலைகளைக்
கொண்ட தளிர்களும், பாய்ந்து ஓடுகின்ற கங்கை நதியும் , ஒளி பொருந்திய வெண்மையான தோயாத
பிறைச் சந்திரன் ஆகியன கண்டு வணங்கி வாழ்த்தி அவனுடைய பெருமைகளை அடியார்கள்
பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
சிவபெருமான் வீற்றிருக்கின்ற எல்லாத் திருக்கோயில்களிலும் அவனது நடனம் வணங்கப் பெறும்
உண்மை சாத்திரம் உணர்ந்தோர்க்கே விளங்கும். திருநாவுக்கரசர் அருளிச் செய்தபடி 'ஆடல் அமர்ந்துறைகின்ற
ஐயாறு' - இங்குள்ள திருக்கோவில் ஐயாறப்பர் நீடு பெருந்திருக்கூத்தை ஆடிக்கொண்டுள்ளார். அடியார்கள்
இசைப்பாட்டும் பண்ணோடு பாடிக் கொண்டிருக்கிறார்கள். பாடுகின்ற பாட்டுக்களுக்கு இணையாக வீணை,
மத்தளம் குடமுழா, வேய்ங்குழல், மொந்தை முதலியனவும் பண்ணோடு இசைத்து ஒலியைக் கிளப்பி உள்ளத்தைப்
பரவசமாக்கிக் கொண்டிருக்கின்றன.
குறிப்புரை: கோடல்- வெண்காந்தள். பாடல் - இசைப்பாட்டு. முழவம்- தண்ணுமை, மத்தளம்,குடமுழா.
குழல் -வேய்ங்குழல். மொந்தை- ஒருகட் பறை வகை. பண்ணாக ஆடல்- இவ்விசைக்கருவிகளின் ஒலி ஆடலுக்கேற்ற
பண்ணிசையாக அமைய ஆடுதல். ஐயாறு - பஞ்சநதம் என்பது வடமொழிப் பெயர்.
The history of the city Thiruvaiyaaru gives all details about this very big temple owned
and well maintained by Dharmapuram Mutt. All the temple festivals are well celebrated in a very
grand manner.
Five rivers such as Vadavaaru (வடவாறு), Vennaaru (வெண்ணாறு), Vettaaru (வெட்டாறு), Kudamurutti
(குடமுருட்டி) and Cauvery (காவேரி) flow through this city. That is why the city itself is called
(Thiru-Iyyaaru - five rivers running along the city) five rivers. Lord Civan is called here Iyyaarappar
(ஐயாறப்பர் and in Sanskrit He is called Panchanadeeswarar (பஞ்சநதீஸ்வரர்).
Oh Behold! Civa is the Lord of Thiruvaiyaaru, His head is adorned beautifully with
flowers such as glory lily (வெண்காந்தள் கோடல்), Cochleosperns (கோங்கம்), bael leaves (வில்வம்).
The descending Ganges and the white crescent moon also find a place on His head along with the
flowers. He does His cosmic dance to the accompaniment of Veena, and other percussions such as
drum, flute and a drum with one face, played in conformity to the music.
1525. தன்மையாருமறிவாரில்லைதாம்பிறரெள்கவே
பின்னுமுன்னுஞ்சிலபேய்க்கணஞ்சூழத்திரிதர்வர்
துன்னவாடையுடுப்பர்சுடலைப்பொடிப்பூசுவர்
அன்னமாலுந்துறையானுமையாறுடையையனே. 2
தன்மை யாரும் அறிவார் இலை; தாம் பிறர் எள்கவே,
பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்;
துன்னஆடை உடுப்பர்; சுடலைப்பொடி(ப்) பூசுவர்;
அன்னம் ஆலும் துறையானும் - ஐயாறு உடை ஐயனே.
tanmai yArum aRivAr ilai; tAm piRar eLkavE,
pinnum munnum cilapEykkaNam cUzat tiritarvar;
tunna ATai uTuppar; cuTalaip poTi(p) pUcuvar;
annam Alum tuRaiyAnum--aiyARu uTai aiyanE.
பொருள்: அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை.
அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத் திரிவார். கந்தலான
ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார்.
குறிப்புரை: எள்க - இகழ. திரிதர்வர்- திரிதருவார், திரிவார். துன்னம் - துளைத்தல். தைத்தல்.
துன்னவாடை - கந்தை. 'துன்னங் கொண்ட உடையான்' (தி. 2 ப. 76 பா 2) 'துன்னிலினாடை யுடுத்து
(தி.1. ப. 41 பா.3) எனப் பிற பதிகங்களிலும் காணலாம். சிவபிரானியல்பை அறிபவர் எவரும் இல்லை.
அவர் பின்னும் முன்னும் சில பேய்க்கூட்டம் சூழத் திரிவதைக் கண்டு பிறர் இகழ்தலுங்கூடும்.
கந்தலணிவார். சுடுகாட்டுப் பொடி பூசுவார். அவற்றால் அவனை அளந்தறியலாகாது. அன்னப்புட்கள்
ஆலும் ('ஒலிக்கும் ஆடும்') துறை.
Oh! Behold! Lord Civa is seated in Thiruvaiyaaru temple. Swans congregate in large
numbers on the banks of the rivers. No one knows His divinity and some mock at His way of life,
because He wanders on the burial ground and dances, surrounded by ghosts at front and back.
He wears rugs of torn cloth. He smears His body with the white ashes of the burial ground.
1526. கூறுபெண்ணுடைகோவணமுண்பதும்வெண்டலை
மாறிலாருங்கொள்வாரில்லைமார்பிலணிகலம்
ஏறுமேறித்திரிவரிமையோர்தொழுதேத்தவே
ஆறுநான்குஞ்சொன்னானுமையாறுடையையனே. 3
கூறு பெண்; உடை கோவணம்; உண்பது வெண்தலை;
மாறில், ஆரும் கொள்வார் இலை, மார்பில் அணிகலம்;
ஏறும் ஏறித் திரிவர்; இமையோர் தொழுது ஏத்தவே
ஆறும் நான்கும் சொன்னானும் - ஐயாறு உடை ஐயனே.
kURu peN; uTai kOvaNam; uNpatu veNtalai;
mARil, Arum koLvAr ilai, mArpil aNikalam;
ERum ERit tirivar; imaiyOr tozutu EttavE
ARum nAnkum connAnum--aiyARu uTai aiyanE.
பொருள்: ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர். கோவண ஆடை
உடுத்தவர். வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ
பண்டமாற்றாகப் பிறர் கொள்பவர் இல்லாத ஆமையோடு பன்றிக்கொம்பு, பாம்பு முதலானவை.
இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர்.
குறிப்புரை: கூறு - இடப்பால், பெண் - உமாதேவியார், உடை கோவணம், உண்பதும் வெண்டலையில்.
மார்பிலணிந்தன முற்றலாமை யிளநாகமொடு ஏனமுளைக் கொம்பு, பரிவர்த்தனஞ் செய்து கொள்ளு முறையில்,
ஏனைப் பொற்கலம் மணிக்கலம் போலக் கொள்வார் எவருமில்லை. மாறில் - பரிவர்த்தனஞ் செய்ய வேண்டின்.
இப்பொருளில் உலக வழக்குமுண்டு. ஏறு - எருது. ஆறும் - சிக்கை, கற்ப சூத்திரம், வியாகரணம், நிருத்தம்,
சந்தோவிசிதி, சோதிடம் என்னும் அங்கம் ஆறும்; நான்கும்- வேதம் நான்கும், (தி.2.ப.84, பா.11)
சொன்னான் - சிவபிரான். 'மிக்க வேத மெய்ந்நூல் சொன்னவனே' திருவாசகம் 147.
Oh! Behold! It is Civa who is the Lord of Thiruvaiyaaru city. His body is half male
and half female (In Tamil He is called Arthanaareeswarar - அர்த்தநாரிசுவரர்). His dress is only
a loin cloth (கோவணம்). He carries in His hand the skull of Brahma as a bowl for alms. He wears
on his chest horn, turtle and snake. He wanders all over the cosmos on the bull. He is the author
of the four Vedas, Aagamaas and six Angas. Above all these, understand that He is worshipped
by one and all in the world including the Devas and other celestials.
1527. பண்ணினல்லமொழியார்பவளத்துவர்வாயினார்
எண்ணினல்லகுணத்தாரிணைவேல்வென்றகண்ணினார்
வண்ணம்பாடிவலிபாடித்தம்வாய்மொழிபாடவே
அண்ணல்கேட்டுகந்தானுமையாறுடையையனே. 4
பண்ணின் நல்ல மொழியார், பவளத் துவர் வாயினார்,
எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற கண்ணினார்,
வண்ணம் பாடி வலிபாடி, தம் வாய்மொழி பாடவே,
அண்ணல் கேட்டு உகந்தானும்-ஐயாறு உடை ஐயனே.
paNNin nalla moziyAr, pavaLattuvar vAyinAr,
eN il nalla kuNattAr, iNaivEl venRa kaNNinAr,
vaNNam pATi, vali pATi, tam vAymozi pATavE,
aNNal kETTu ukantAnum--aiyARu uTai aiyanE.
பொருள்: திருவையாற்றில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்புரிந்து வரும் ஐயாறப்பர்
அத்தலத்தில் பண்ணிசையிலும் இனிய பாடல்களை அவர்திருமுன்பு சேயிழையார்கள் பாடுவதனைக்
கேட்டு உவந்தார். அவர்களை ஆசீர்வதிக்கிறார். அந்தச் சேயிழையார்கள் பவளம் போன்ற செந்நிற
வாயை உடையவர்கள். அவர்கள் பண் கலந்து பாடும் தமிழிசையில் வல்லவர்களாகவும் நற்குணத்தவராகவும்
விளங்குகிறார்கள். அவர்கள் வேலினை வென்ற கூர்மையான கண்களை உடையவர்களாக உள்ளனர்.
அவன் அருளைத் தங்கள் கண்களால் காணும் தன்மை உடையவர்கள். மந்திரமும், தந்திரமும் மருந்துமாகித்
தீரா நோய் தீர்த்தருள்வானாகிய அவனது வலியையும் பாடுகிறார்கள். அவர்கள் வாய்மொழி எப்பொழுதும்
சிவநாமத்தையே பாடும் தோத்திரங்களாக அமைகின்றன. இவ்வாறு காரிகையர்கள் பண்பாடலைக் கேட்டு
ஐயாறப்பர் மிகவும் உகந்து அவர்களை ஆசீர்வதித்து ஆட்சி புரிந்து வருகிறார்.
குறிப்புரை: பண்ணின்- பண்ணிசைபோல, பண்ணிசையிலும், நல்ல- இனிய, பவளம் போன்ற
துவர்வாயினார்; துவர் - செந்நிறம். எண் இல் - கணக்கில்லாத, எண்ணில் என்பது வினையெச்சமாக்
கோடலமையாது.கண் இரண்டாதலின், இணை வேலில் (இரண்டு) ஒப்பாக்கப்பட்டன. வண்ணம்- அவனருளே
கண்ணாகக் காணும் வண்ணம். தன்மை. வலி- மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருளும்
வன்மை. தம் வாய்மொழி - சிவநாமமே பாடும் நல்ல வாயின் மொழியுந் தோத்திரங்களை. மொழி - ஆகு பெயர்.
அண்ணல் - சிவபெருமான். அக்காலத்தில் திருவையாற்றில் இளமகளிர் சிவபத்தியிற் சிறந்திருந்தனர்
என்று கருத இடமுண்டு. 'காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாட... சேயிழையார் நடமாடுந்
திருவையாறு' என்று வருந்தேவாரமும் (தி.1. ப 130 . பா 6) ஈண்டுக் கருதுக.
Numerous girls in the city of Thiruvaiyaaru used to sing poems on Lord Civa
about His glory and might. Their beautiful and melodious voices denote their talent
in music. Their mouths resemble coral in colour. They have pairs of spear like eyes.
Of course they are embodiments of many virtues. Oh! Behold! Civa, the Lord of
Thiruvaiyaaru is well pleased with these beautiful songs of these young damsels and
He bestows His grace on them and reigns supreme.
1528. வேனலானைவெருவவுரிபோர்த்துமையஞ்சவே
வானையூடறுக்கும்மதிசூடியமைந்தனார்
தேனெய்பால்தயிர்தெங்கிளநீர்கரும்பின்றெளி
ஆனஞ்சாடுமுடியானுமையாறுடையையனே. 5
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே,
வானை ஊடுஅறுக்கும் மதி சூடிய மைந்தனார் -
தேன், நெய், பால், தயிர், தெங்குஇளநீர், கரும்பின் தெளி
ஆன்அஞ்சு,ஆடு முடியானும் - ஐயாறு உடை ஐயனே.
vEnal Anai veruva uri pOrttu umai anjcavE,
vAnai UTu aRukkum mati cUTiya maintanAr-
tEn, ney, pAl, tayir, tegku iLanIr, karumpin teLi,
Ananjcu, ATu muTiyAnum--aiyARu uTai aiyanE.
பொருள்: திருவையாற்றில் உள்ள திருக்கோவிலில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்புரிந்து
வரும் ஐயாறப்பர் விண்ணை அறுத்துச் செல்லும் பிறை மதியைத் தன் சடையில் சூடியுள்ளார். இவருக்கு
அபிடேகம் செய்வதற்கு ஏழுவிதமான தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் தெளிந்த சாறு முதலியன
உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. நெய், பால், தயிர், பசுவின் கோமியம், கோசலம் ஆகியவைகளை
ஆனைந்து என்றும் வழங்கும் பெயராலும் அபிடேகம் செய்வர். அவனுடைய சக்தியாகிய உமாதேவியாரும்
அவனை விட்டுப் பிரியாது அவன் அருகிலேயே இருப்பவள். ஒரு சமயம் கெடிலக்கரை நதிப் பக்கம் இருந்து
ஒரு மதம் பிடித்த வெம்மையோடு விளங்கும் யானை ஒன்று இவர்கள் இருவரையும் நோக்கி வேகமாகச்
சீற்றத்துடன் வந்தது. அதனைக் கண்டவுடன் உமையம்மை சிறிது அஞ்சினாள். மறுகணத்தில் ஐயாறப்பராகிய
சிவபிரான் அந்த யானையை நோக்கிச் சென்று, அதனைக் கொன்று அதன் தோலை உரித்துத் தனது உடலில்
போர்த்துக் கொண்டார். அம்மையின் அச்சம் அகன்றது.
குறிப்புரை: வேனல்- வெம்மை. 'கெடிலக்கரை வேனலானையுரித்த வீரட்டர்' (தி.5 ப.54 பா.5). வானையூடறுக்கும்
மதி -விண்ணூடு அறுத்துச் செல்லும் பிறை. தேன் முதலிய ஏழும் அபிடேகத் திரவியங்கள். நெய், பால், தயிர்
என்னும் மூன்றும் தனித்தனி ஆட்டற்குரியன. இம்மூன்றையும் 'ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்' என்று
தனித்தும், 'ஆனிலங்கிளரைந்தும் அவிர் முடியாடி' என்று ஐந்தாகச் சேர்த்தும் கூறுதல் திருமுறை வழக்கு.
'ஆனஞ்சு' பஞ்ச கௌவியம். (ஞானபூசாவிதி. 14. உரை பார்க்க) தெளி - தெளிந்த சாறு (ஆகுபெயர்).
தெங்கு - தென்னை, தென்கு என்பதன் மரூஉ.
Oh! Behold! It is Civa who is the Lord of Thiruvaiyaaru He has adorned His head with
the moon, which crosses the sky. Once goddess Uma Devi shuddered to see the fierce elephant
rushing amok towards her. Immediately Lord Civa chased the elephant, killed it and covered
His body with its hide. He is in the temple and is daily given the sacred bath with honey,
ghee, milk, curd, tender coconut water and sugarcane juice along with five holy things
obtained from the cow.
1529. எங்குமாகிநின்றானுமியல்பறியப்படா
மங்கைபாகங்கொண்டானுமதிசூடுமைந்தனும்
பங்கமில்பதினெட்டொடுநான்குக்குணர்வுமாய்
அங்கமாறுஞ்சொன்னானுமையாறுடையையனே. 6
எங்கும்ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும், மதி சூடும் மைந்தனும்,
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும்ஆய்
அங்கம் ஆறும் சொன்னானும் - ஐயாறு உடை ஐயனே.
egkum Aki ninRAnum, iyalpu aRiyappaTA
magkai pAkam koNTAnum, mati cUTu maintanum,
pagkam il patineTToTu nAnkukku uNarvum Ay
agkam ARum connAnum--aiyARu uTai aiyanE.
பொருள்: திருவையாற்றில் வீற்றிருக்கும் ஐயாறப்பராகிய சிவபிரான் அண்டசராசரங்கள்
யாவற்றிலும் வியாபித்து விளங்குபவன். இந்தப் பேரியல்பை ஆன்மாக்களால் அறியப்படாதவனாயும்
விளங்குகிறான். உமாதேவியைச் சிவபிரான்தன் உடம்பின் இடப்பக்கத்தில் ஒரு பாகமாக வைத்துக்
காட்சி அளிக்கிறான். அவன் தன் சடாமுடியில் வெண்நிறமுள்ள பிறைச் சந்திரனைச் சூடியுள்ளான்.
இந்தச் சிவபிரானால் சொல்லப்பட்டது பதினெட்டுப் புராணங்கள். அவை மச்சபுராணம், கூர்மபுராணம்,
வராக புராணம், வாமனபுராணம், சிவமகாபுராணம், இலிங்கபுராணம், பவிடிய புராணம், காந்தபுராணம்,
மார்க்கண்டேய புராணம், பிரம்மாண்ட புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், கருடபுராணம்,
நாரதீய புராணம், பிரமபுராணம், பதுமபுராணம், ஆக்கினேய புராணம், பிரமவைவர்த்த புராணம்
ஆகியனவாகும். ருக், யசூர், சாம மற்றும் அதர்வண வேதம் என வேதங்கள் நான்காகும். மலம் அகற்றற்
பொருட்டு உயிரினிடத்து நிலைபெற்றுள்ள பர (சிவ) ஞானமாகிய திருவருளும், அத்திருவருளைத்
தெளிய ஓதுகின்ற அபரஞானமாகிய சிவாகமங்களும். சிட்சை, வியாகரணம்,சந்தம், நிருத்தம்,
சோதிடம்,கற்பம் என வேதாங்கங்கள் ஆறும் ஆக இந்த 30 கலைகளையும் சொன்னவர் சிவபிரானாகிய
திருவையாற்றில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஐயாறப்பர் ஆவார்.
குறிப்புரை: எங்குமாகி நின்றான்- அகண்ட வியாபகன். இயல்பு அறியப்படாமங்கை. சிவனுக்கும்
ஏற்றிக்கூறலாம். பங்கம் - இழிவு. பதினெட்டு - பதினெண் புராணம் 'சூதன் ஒலிமாலை' (தி.3. ப.54 பா.8 )
பெரிய புராணம், திருஞான.840) நான்கு - நாலு வேதம். உணர்வு - மலம் அகற்றற் பொருட்டு
உயிரினிடத்து நிலை பெற்றுள்ள பர (சிவ) ஞானமாகிய திருவருளும், அத்திருவருளைத் தெளியவோதுகின்ற
அபர ஞானமாகிய சிவாகமங்களும், அங்கம் - வேதாங்கங்கள் (பா. 3 உரை).
Oh! Behold! It is Civa, the Lord of Thiruvaiyaaru who expliccated the eighteen
Puranaas, four Vedas and Six Angaas for the benefit of mankind. He is omnipresent.
His attributes are not known. He has on the left portion of His body goddess Uma.
He has adorned His head with the crescent moon. Oh! Ye devotees go to His temple
and worship Him.
1530. ஓதியாருமறிவாரில்லையோதியுலகெலாம்
சோதியாய்நிறைந்தான்சுடர்ச்சோதியுட்சோதியான்
வேதியாகிவிண்ணாகிமண்ணோடெரிகாற்றுமாய்
ஆதியாகிநின்றானுமையாறுடையையனே. 7
ஓதி யாரும் அறிவார் இலை;ஓதி உலகுஎலாம்
சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்;
வேதிஆகி, விண்ஆகி, மண்ணோடு எரி காற்றும்ஆய்,
ஆதிஆகி,நின்றானும் - ஐயாறு உடை ஐயனே.
Oti yArum aRivAr ilai; Oti ulaku elAm
cOti Ay niRaintAn; cuTarc cOtiyuL cOtiyAn;
vEti Aki, viN Aki, maNNOTu eri kARRum Ay,
Ati Aki, ninRAnum--aiyARu uTai aiyanE.
பொருள்: திருவையாற்றிலுள்ள திருக்கோவிலில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்புரிந்து
வருகின்ற சிவபிரான் ஆகிய ஐயாறப்பரை நூல்கள் ஓதுவதனால் அறிபவர் ஒருவரும் இலர். எல்லா
உயிர்களுக்கும் ஓதி அறிவிப்பவர் அவரே. எல்லா உயிர்களையும் தானாகவே அறிபவர் அவரேயாவார்.
எல்லா உலகங்களிலும் அவர் சோதியாய் நிறைந்துள்ளார். சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய
சுடர்களுக்கெல்லாம் ஒளி தருபவர் அவரே. நான்கு வேதங்களையும் உலகுக்கு அளித்தவர் அவரே.
அவர்தான் விண்ணாகவும், மண்ணோடு நெருப்பும் காற்றுமாகவும், யாவற்றுக்கும் ஆதியாக
நின்றவரும் திருவையாற்றில் உள்ள ஐயாறப்பரே ஆவார்.
குறிப்புரை: வேதி - வேதசொரூபன். விண்- ஆகாயம், எரி- தீக்கடவுள். ஆதி- முதற்பொருள்.
ஓதியறிவார் யாரும் இல்லை. உயிர்கள் ஓதியறிதலில்லையேனும், சிவபிரான் தானே தன்னை
உயிர்க்கு ஓதுவித்தும் உணர்வித்தும், சேதனாசேதனப் பிரபஞ்சம் எல்லாம் சோதி (ஒளி) யாய்
நிறைந்துள்ளான். சுடரையுடைய சோதிகளாகிய சூரிய சந்திராக்கினிக்குள் சோதியாய் உறைபவன்
(திருவிசைப்பா 2) வேதியாகி - சேதன சொரூபியாகி, விண்... ஆகி - அசேதனரூபமாகி, (தடத்த வடிவத்தைச்
சார்ந்தது) பழம் பதிப்பில் உள்ள 'எரிகாற்றுமாய்' என்ற பாடமே சிறந்தது. எரி- தீ. எறியுங்காற்று எனின்
காற்று என்பதில் உள்ள பொருளே எறிதலுமாதலின் சிறப்பில்லை.
Lord Civa, residing in Thiruvaiyaaru, need not be preached by anybody to know
about life in the universe. He is the preacher and the activating force for all. He is the
divine light, pervading all the worlds. He is the inner flame of the light in the sun, the moon
and fire. He is the origin of all and appears as the five elements, air, earth, water , fire
and the sky. He is the material and the immaterial. The three aspects of the Lord omniscience,
omnipotence and omnipresence - are stressed in this hymn.
1531. குரவநாண்மலர்கொண்டடியார்வழிபாடுசெய்
விரவிநீறணிவார்சிலதொண்டர்வியப்பவே
பரவிநாள்தொறும்பாடநம்பாவம்பறைதலால்
அரவமார்த்துகந்தானுமையாறுடையையனே. 8
குரவநாள்மலர்கொண்டு அடியார் வழிபாடுசெய்,
விரவி நீறு அணிவார் சிலதொண்டர் வியப்பவே,
பரவி நாள்தொறும் பாட, நம் பாவம் பறைதலால்,
அரவம் ஆர்த்து உகந்தானும் - ஐயாறு உடை ஐயனே.
kurava nAL malar koNTu aTiyAr vazipATu cey,
viravi nIRu aNivAr cilar toNTar viyappavE
paravi nALtoRum pATa, nam pAvam paRaitalAl,
aravam Arttu ukantAnum--aiyARu uTai aiyanE.
பொருள்: திருவையாற்றுத் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஐயாரப்பரை அடியார்கள் பலரும்
பலவிதமாக வழிபாடு செய்து வருகிறார்கள். அடியார்களில் ஒருசிலர் குரா மரத்தின் அன்றலர்ந்த
பூக்களைப் பறித்து ஐயாரப்பரின் திருவடிகளில் சொரிந்து வழிபாடு செய்கிறார்கள். இவர் உடம்பு
முழுவதும் நீறணிந்து இறைவன் திருமுன்பு நின்று வழிபாடு செய்கிறார்கள். மற்றும் சிலர் அவன்திரு
முன்பு நின்று அவன் புகழைப் பாடுவதையே கடமையாகக் கொண்டு நீண்ட நேரம் நாள்தோறும்
பாடிக் கொண்டே இருப்பார்கள். இந்த அடியார்களுடைய பாவத்தை எல்லாம் அறவே நீக்கி அருள்பாலித்து
வருகிறார் ஐயாறப்பர். அவர் பாம்பை அணிந்து உயர்ந்தவர்.
குறிப்புரை: குரவம்- குராமரம். நாள் மலர்- காலையிற் பூத்த பூ. வியப்ப- புகழ்ந்துரைக்க. பரவி- வாழ்த்தி.
பறைதல் - நீங்குதல். அரவம் - பாம்பு. ஆர்த்து - கட்டி (அணிந்து). உகந்தான் - உயர்ந்தவன். 'விரவி' என்றது
புதிய பாடம்.
Oh! Behold! Civa who is the Lord of Thiruvaiyaaru is worshipped in different ways.
Devotees go daily in the morning to His temple carrying fresh bright flowers and offer them
to Him, they recite prayers and sing His glory. These devotees have smeared their body
with holy ashes. Lord Civa hearing all these recitations, is well pleased to bestow
boons on all the devotees and absolves them of all their sins. Ayyarappan is elevated,
wearing a snake on His body.
1532. உரைசெய்தொல்வழிசெய்தறியாவிலங்கைக்குமன்
வரைசெய்தோளடர்த்தும்மதிசூடியமைந்தனார்
கரைசெய்காவிரியின்வடபாலதுகாதலான்
அரைசெய்மேகலையானுமையாறுடையையனே. 9
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து(ம்) மதி சூடிய மைந்தனார்;
கரைசெய் காவிரியின் வடபாலது காதலான்;
அரை செய் மேகலையானும் - ஐயாறு உடை ஐயனே.
uraicey tol vazi ceytu aRiyA ilagkaikku man
varai cey tOL aTarttu(m) mati cUTiya maintanAr;
karai cey kAviriyin vaTapAlatu kAtalAn;
arai cey mEkalaiyAnum-aiyARu uTai aiyanE.
பொருள்: இலங்காபுரியின் முடிஅரசனாகிய தசக்கிரீவன், மிக்க சிவபக்தனாகிப் பூமி,
அந்தரம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் அதிபதி (திரிலோகாதிபதி). அதற்குரிய
தொன்மையான வேத ஆகம வழிகளையெல்லாம் அறிந்து அதன்வழி நின்று நடந்தவன்.
அவனுக்கு இந்த வழிகள் எல்லாம் புது வழியன்று. மிகத் தொன்மையான பழைய வழிகளே
ஆகும். இத்தனை சிறந்த அறிவுகளை உடைய தசக்கிரீவனுக்கு அறியாமை மேலிட்டது.
மேலிட்ட காலத்தில் இந்தத் தொன்மையான வழிகளையெல்லாம் மறந்து விட்டான். ஒரு
சமயம் விண்வழியே அவன் தன் ஊர்தியில் செல்லும்போது, சிவபிரானும் அம்மையும்
தங்கியிருக்கும் திருக்கயிலை மலைவழியே அவன் ஊர்தி பறக்க முடியவில்லை.
அவன் உடனே கீழே இறங்கி கயிலை மலையைத் தூக்கி நகர்த்தி வைக்க முயற்சி செய்தான்.
முயற்சியில் தோற்றான். தனது இருபது தோள்களுடன் கயிலை மலையின்கீழ் அகப்பட்டு நசுங்கிப்
போனான். அழுதான்; அறியாமை நீங்கிற்று. சிவபிரான்மீது சாமகீதம் பாடினான். மன்னிப்புக் கிடைத்தது.
இராவணன் என்ற திருநாமத்தையும் மேலும் பலவரங்களையும் பெற்றான். இந்த உதவிகளைச் செய்த
வீரனாகிய சிவபிரானாகிய ஐயாறப்பர், தனது இடுப்பில் பொன்னாலாகிய மேகலை என்ற ஆபரணத்தை
அணிந்து கொண்டு காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருக்கோவிலில் வீற்றிருந்து
அடியார்களுக்கெல்லாம் அருள்புரிந்து வருகின்றார்.
குறிப்புரை: இராவணன் மிக்க சிவபக்தனாகித் திரிலோகாதி பத்தியம் முதலிய பெருவரங்களைப்
பெற்றவன். அதற்குரிய வேதாகமவழி அவனுக்குப் புதுவழியன்று. தொல் (பழைய) வழியே. அறியாமை
மேலிட்டபோது, அத்தொல்வழி மறந்து திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயன்றான். அதனால்
அவனுடைய மலைகளைப் போன்ற தோள்களை நசுக்கப் பெருவிரல் நுனியை மட்டும் ஊன்றி அருளினார்.
சந்திர சேகரரான வீரனார். மதி - வளராததும் தேயாததும் ஆன திங்கட்பிறை. மைந்தனார் - வீரனார்.
திருவையாறு காவிரியின் வடகரைக் கண் உள்ளது. காதல்- அத்தலத்தில் எழுந்தருளியிருக்க விரும்புதல்.
அரைசெய் மேகலையான் - மேகலாபரணம் இடுப்பிற் கொண்டவன். மேகலை- பொன்னாடை விசேடம்.
'எண்கோவை மேகலை'.
Oh! Behold! It is Civa, the Lord of Thiruvaiyaaru. He adorns His head with the
moon which neither wanes not waxes. In His loin He wears the golden ornament. He stays
in the temple, which is situated north of the river Cauvery. Once the king of SriLanka
Raavana found his flight was obstructed by mount Kailash, forgot the holy ancient traditions
and went to lift the abode of Civa - Mount Kailash. Lord Civa very slightly pressed the top
of the mountain with His toe. Raavanaa's mighty mountain like shoulders got crushed under
the mountain. Later when he prayed and sang Saama Geetham he was forgiven and got boons
and the name Raavanan.
1533. மாலுஞ்சோதிமலரானுமறிகிலாவாய்மையான்
காலங்காம்புவயிரங்கடிகையன்பொற்கழல்
கோலமாய்க்கொழுந்தீன்றுபவளந்திரண்டதோர்
ஆலநீழலுளானுமையாறுடையையனே. 10
மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்;
கோலம்ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆலநீழல் உளானும் - ஐயாறு உடை ஐயனே.
mAlum, cOti malarAnum, aRikilA vAymaiyAn;
kAlam kAmpu vayiram kaTikaiyan ponkazal;
kOlam Ayk kozuntu InRu pavaLam tiraNTatu Or
AlanIzal uLAnum--aiyARu uTai aiyanE.
பொருள்: திருவையாற்றின் திருக்கோவில் வீற்றிருக்கும் சிவபிரானாகிய ஐயாறப்பர் திருமாலும்,
பிரமனும் அடிமுடி தேடியும் அறிய முடியாத பெருமை உடையவர். சிறப்பான ஆடையை அணிந்தவன்.
அவனுடைய திருவடிகளில் பொன்னால் ஆய அணிகலன்களை அணிந்தவன். பவள நிறத்தை ஒத்த சிவந்த
ஒளியை வீசிக் கொண்டிருக்கின்றான். கல்லால மரத்தின் நிழலில் இருந்து நான்கு முனிவர்களுக்கு அவர்கள்
கேட்ட சந்தேகங்களை மௌனமாக இருந்து கைமுத்திரைகளினால் பதில் அளித்து அவர்களுக்குத் திருப்தி
அளித்தவன். இத்தகைய பெருமான்தான் திருவையாற்றுத் திருக்கோவிலை இடமாகக் கொண்டு
அடியார்களுக்கு அருள்புரிந்து வருகின்றான்.
குறிப்புரை: மால்- (மயக்கம்) விண்டு. சோதிமலர் - தாமரைப்பூ. வாய்மையான்- சத்திய சொரூபி.
காலம் காம்பு வயிரம் கடிகையன் என்பதன் பொருள் புலப்பட்டிலது. ஆயினும் ஒருவாறு எழுதலாம்.
கால் - திருவடி. அம் காம்பு - அழகிய காண்பு. வயிரம்- வைரரத்னம், கடிகை - துண்டு. கால்போலக் காம்பு.
கழல்போலக் கொழுந்து. கடிகையம் பொற்கழல் என்றிருந்தது போலும். ஆலமரம் இறைவனது பொற்கழல்
போலப் பொன்மையும் மென்மையும் ஒளியும் அழகும் உடைய கோலமாய்க் கொழுந்தீன்று என்க.
ஈன்று- தோன்றி. ஆலம்பழம் செந்நிறமுடையது ஆதலின், பவளம் திரண்டதோர் ஆலம் என்றார்.
பவளம் போன்ற செந்நிறம் உடைய பழங்களைப் பவளமென்றது உவமையாகு பெயர். கல்லாலுக்குச்
சாதியடை.
Oh! Behold! Civa is the Lord of Thiruvaiyaaru. His truth and greatness were
incomprehensible even to Lord Vishnu and Brahma. He wears excellent coat on His body.
His divine legs are magnificent with beautiful golden anklets. Sitting under the
banyan tree with coral like fruits and buds, He dispelled the ignorance of the four sages
and transmitted His wisdom to them with particular mudras of His fingers.
1534. கையிலுண்டுழல்வாருங்கமழ்துவராடையால்
மெய்யைப்போர்த்துழல்வாருமுரைப்பனமெய்யல
மைகொள்கண்டத்தெண்டோள்முக்கணான்கழல்வாழ்த்தவே
ஐயந்தேர்ந்தளிப்பானுமையாறுடையையனே. 11
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;
மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே,
ஐயம் தேர்ந்து அளிப்பானும் - ஐயாறு உடை ஐயனே.
kaiyil uNTu uzalvArum, kamaz tuvar ATaiyAl
meyyaip pOrttu uzalvArum, uraippana mey ala;
mai koL kaNTattu eNtOL mukkaNAn kazal vAzttavE,
aiyam tErntu aLippAnum--aiyARu uTai aiyanE.
பொருள்: சமணர்கள் தங்கள் கைகளில் உணவை ஏந்தி உண்ணும் தன்மை உடையவர்கள்.
புத்தர்கள் பவளம் போன்ற நாற்றம் வீசும் பழுப்பேறிய ஆடையால் உடல் முழுவதையும் போர்த்திக்
கொண்டுள்ளவர்கள். இவர்கள் வேற்று நெறியினர். இவர்கள் உரைப்பன எல்லாம் பொய்யென்று
கருதிச் சிவனடியார்கள் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள். சிவபிரான் மைபோன்ற கரிய கண்டத்தைக்
கொண்டவன். அவனே திருநீலகண்டனாக விளங்குகின்றான். அவன் எட்டுத் தோள்களை உடையவன்.
மூன்று கண்களைக் கொண்டுள்ளவன். அவனுடைய திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்யும்
அடியார்களின் ஐயங்களைத் தீர்த்துத் தெளிவு செய்பவன் அவனே. அத்தகைய சிறப்புடைய சிவபெருமான்
திருவையாறு என்று கூறப்படும் ஊரைத் தனது இடமாகக் கொண்டுள்ள தலைவனாவான்.
குறிப்புரை: கையில் உண்டு உழல்வார் - கையில்உணவை ஏந்தி உண்டு திரியுஞ் சமணர். கமழ்....
உழல்வார்- நாற்றம் வீசும் பழுப்பேறிய ஆடையால் உடம்பைப் போர்த்துத் திரியும் புத்தர்.மைகொள் கண்டம் -
நீலகண்டம். முக்கண் - சோமசூரியாக்கினி. ஐயம் - பிச்சை.
The Jains who eat their food from their hands and the Buddhists who cover their body with
ochre robes of foul smell do not speak the truth. Ye devotees! do not follow these two races.
Lord Civa of Thiruvaiyaaru whose neck is black and who has eight shoulders and three eyes
is always ready to help you. Go to Him and pray at His holy feet. He will dispel all your doubts.
1535. பலிதிரிந்துழல்பண்டங்கன்மேயஐயாற்றினைக்
கலிகடந்தகையான்கடற்காழியர்காவலன்
ஒலிகொள்சம்பந்தனொண்தமிழ்பத்துமவல்லார்கள்போய்
மலிகொள்விண்ணிடைமன்னியசீர்பெறுவார்களே. 12
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை,
கலி கடந்த கையான் - கடல்காழியர் காவலன்,
ஒலி கொள் சம்பந்தன் - ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள், போய்
மலி கொள் விண்இடை மன்னிய சீர் பெறுவார்களே.
pali tirintu uzal paNTagkan mEya aiyARRinai,
kali kaTanta kaiyAn--kaTalkAziyar kAvalan,
oli koL campantan--oNtamizpattum vallArkaL, pOy
mali koL viN iTai manniya cIr peRuvArkaLE.
பொருள்: திருவையாற்றில் உள்ள திருக்கோவிலில் இருந்து அருளாட்சி செய்துவரும்
சிவபிரான் ஆகிய திருவையாறப்பர் பண்டரங்கம் என்று சொல்லப்படும் திருக்கூத்தை ஆடிக்
கொண்டு அண்டசராசரங்களில் எல்லாம் சென்று பலி ஏற்று வருகிறார். சீகாழிப்பதியில் வாழும்
அந்தணர்கள் தங்கள் இன்னல்கள் யாவும் நீங்குவதற்காக வேதம் ஓதிக் கொண்டும், யாகம் வளர்த்துக்
கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வூரின்கண் தோன்றிய ஞானசம்பந்தன் இப்பதியின்
அறக்காவலனாகிய சிவபிரான் நாமத்தைச் சந்தம் மல்க ஒலிக்கப் பாடுகின்றான். அவன் இந்த ஒளி
மிக்க சிவஞானத் தமிழ்த் திருப்பதிகத்தை ஐயாறப்பர்மீது வாழ்த்திப் பாடியுள்ளான். இத்திருப்பதிகத்தை
ஓத வல்லவர்கள் வளம் மிக்க விண்ணவர் உலகத்தில் சிறப்பான புகழைப் பெறுவார்கள்.
குறிப்புரை: பண்டங்கள்- பாண்டரங்கம் என்னுந் திருக்கூத்தை ஆடுபவன். கலி- வறுமை.
கலிகடிந்தகையான் என்றது திருஞான சம்பந்தர் எரி ஓம்பும் திருக்கையால் அளவற்றோர் வறுமை நீக்கிய
உண்மையை உணர்த்தி நின்றது. கடிந்த - நீக்கிய, 'உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர் சேருங் கலிக்காழி' (தி. 1 ப.102 பா.1)யில், திருஞானவேந்தர் திருக்கைகளை
உலகவர் கலி (வறுமை) முதலிய துன்பங்களைக் கடிதலில் ஐயமின்று. கடந்த என்றது புதியது.
கடந்த என்பதே பாடம்.
காழியர் காவலன் என்றதால், பாலறாவாயரான காரணம் பற்றி, அக்காழியில் இருந்த அந்தணர்
எல்லோரும் அப்பெருமான் திருவடித் தொண்டர் ஆயினர் என்பதும், காழி வேந்தர் தலைவரானார் என்பதும்,
சிவனருள் பெற்றவரையே, நல்லோர், தமக்குக் காவலராக் கொள்ளும் வழக்கம் உடையவராயிருந்தனர்
என்பதும் புலப்படும். 'ஒலிகொள் சம்பந்தன்' - பரநாதத்தைக் கொண்டு பாட்டாக அருளும் சிவஞான சம்பந்தர்
கொள் தமிழ் எனலுமாம்.
Oh! Ye devotees listen. If you are capable of reciting these ten sanctified Tamil verses
of Mantras uttered by Gnanasambandan on the Lord of Thiruvaiyaaru all your sufferings will be
dispelled. Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi. He sang these songs on the Lord of
Thiruvaiyaaru who performed the Panduranga dance while going out for alms. Those who recite
these ten illustrious verses will reach the celestial world and attain great heights.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
6ஆம் பதிகம் முற்றிற்று
End of 6th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 143 பதிக எண்: 7
7. திருவாஞ்சியம் 7. THIRU-VAANJIYAM
பண் : இந்தளம் Pann: Indhalam
திருத்தல வரலாறு
இலக்குமியை வாஞ்சித்து (விரும்பி),திருமால் பூசித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது.
மயிலாடுதுறை- பேரளம் தொடர்வண்டிப் பாதையில் நன்னிலம் தொடர்வண்டி நிலையத்திற்கு
மேற்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரித் தென்கரைத் தலங்களுள் 70ஆவது தலம் ஆகும்.
நன்னிலத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
இறைவர் திருப்பெயர் வாஞ்சியநாதர். இறைவியார் திருப்பெயர் வாழவந்த நாயகி.
தீர்த்தம் குப்த கங்கை. இது கோயிலுக்கு வடபால் இருக்கிறது. கார்த்திகை ஞாயிறு நாள்களில் மக்கள்
விசேடமாக நீராடுகின்றனர். தலவிருட்சம் சந்தனமரம். இது பிரகாரத்தில் இருக்கின்றது. இயமன்
பூசித்துப் பேறு பெற்றான். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு இயமவாதனை இல்லை. இயமனுக்குத்
தனிக் கோயிலும் இருக்கின்றது. இது முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்றாகும். இது மூவராலும்
பாடப்பெற்றது. மூன்று பதிகங்கள் இருக்கின்றன.
பதிக வரலாறு
காழிவேந்தர், தவமுனிவரான சொல்வேந்தரோடும் கூடச் சிவதலங்கள் வணங்கப் போவாராய்,
தென்திருவாஞ்சியமூதூர் சென்று சேர்ந்து அங்கு எழுந்தருளிய முக்கண் நீலமிடற்றரு மணியை வணங்கிப்
போற்றி, வன்னி கொன்றை எனும் இத்திருப்பதிகத்தைப் பாடி அத்திருவாஞ்சியத்து என்றும் நின்ற
இறையானை உணர்ந்து அடியேத்தினார்.
திருச்சிற்றம்பலம்
1536. வன்னிகொன்றைமதமத்தமெருக்கொடுகூவிளம்
பொன்னியன்றசடையிற்பொலிவித்தபுராணனார்
தென்னவென்றுவரிவண்டிசைசெய்திருவாஞ்சியம்
என்னையாளுடையானிடமாகவுகந்ததே. 1
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம்
என்னை ஆள்உடையான், இடம்ஆக உகந்ததே.
vanni konRai matamattam erukkoTu kUviLam
pon iyanRa caTaiyil polivitta purANanAr,
tenna enRu varivaNTu icai cey tiru vAnjciyam,
ennai AL uTaiyAn, iTam Aka ukantatE.
பொருள்: வன்னி இலை, கொன்றை மலர், ஊமத்த மலர், எருக்கம்பூ, வில்வ இலை
ஆகியவற்றைத் தன் செஞ்சடையில் தாங்கி அவற்றினுக்கு ஏற்றம் தந்தவர் பழம்பொருளான
பரமசிவனார் என்க. அவர் திருவாஞ்சியம் என்னும் திருத்தலத்தில், வண்டுகள் தென்னதென்ன
என்று பாட கோயில் கொண்டவர் ஆவார். என்னை ஆட்கொண்டருளும் எம்பெருமான் உகந்து
வீற்றிருக்கும் திருவாஞ்சியத்தை நானும் விரும்பிப் போற்றுவேனாக !
விளக்க உரை: இலை, மலர் எல்லாம் இறைவனுக்கு ஒரே தன்மையுடையனவே. அவனது வேண்டுதல்
வேண்டாமை இல்லா நிலையை இலையும் மலரும் விளக்குகின்றன. இறைவனை அடைந்தால் எப்பொருளும்
மேன்மையுறும் என்க. வண்டுகள் தென்னதென்ன என முழங்குகின்றன. நாம் தென்னா என்னாமுன்
தீசேர் மெழுகாக உருகி வழிபடுவோமாக. என்னை ஆளும் இறைவன் விரும்பி உறையும் இடம் திருவாஞ்சியம்.
என்னை ஆளுடைய நாயகி சிவனாரின் இடப்பாகத்தில் விரும்பிப் பொருந்தியுள்ளாள் என்க.
குறிப்புரை: வன்னி- வன்னிமரத்திலை. கொன்றைப்பூ, ஊமத்தம் மலர். எருக்கம்பூ. கூவிளம்- வில்வம்.
பொன் இயன்ற- பொன் போன்ற. சடையில் வன்னி முதலியவற்றைப் பொலிவு பெறச் சூடிய புராணனார்.
புராணன்- முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாயுள்ளவன். தென்ன என்று இசை
செய்வன வரிவண்டுகள். உகந்தது விரும்பியது (வினையாலணையும் பெயர்). மேலும் இவ்வாறாதல் அறிக.
Oh! Behold! It is this holy place Thiru-vaanjiyam where my Lord the oldest of the old
is manifest; He has taken me as His slave. He has adorned His matted locks of golden hair with
colaphyllum and cassia flowers, and calotropis flowers and bilwa leaves rendering them beautiful.
Here the striped bees gather in large numbers creating musical notes reverberating everywhere
in the city. The ancient Lord is pleased to abide in Thiru-vaanjiyam with His devi on His left.
1537. காலகாலர்கரிகானிடைமாநடமாடுவர்
மேலர்வேலைவிடமுண்டிருள்கின்றமிடற்றினர்
மாலைகோலமதிமாடமன்னுந்திருவாஞ்சியம்
ஞாலம்வந்துபணியப்பொலிகோயில்நயந்ததே. 2
காலகாலர், கரிகான்இடை மாநடம் ஆடுவர்
மேலர், வேலைவிடம்உண்டு இருள்கின்ற மிடற்றினர்
மாலை கோல மதி மாடம் மன்னும் திருவாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப் பொலி கோயில் நயந்ததே.
kAlakAlar, karikAn iTai mAnaTam ATuvar,
mElar, vElaiviTam uNTu iruLkinRa miTaRRinar,
mAlai kOla mati mATam mannum tiru vAnjciyam
njAlam vantu paNiyap poli kOyil nayantatE.
பொருள்: உலகெலாம் வந்து பணியுமாறு மதி (சந்திரன்) தோயும் மாடங்கள் நிறைந்த திருவாஞ்சியம் என்னும்
திருத்தலத்தில் எம்பெருமான் கோயில் கொண்டுள்ளார். அவரே காலனுக்கும் காலன் ஆவார். அவரே சுடுகாட்டில்
சிறப்பாக நடனமாடுபவர். அவரே எப்பொருளுக்கும் மேலானவர் ஆவார். அவரே கடலில் தோன்றிய விடத்தை
உண்டதால் நீலகண்டரானார்.
விளக்கவுரை: காலன் உடலில் பொருந்திய உயிர்தனை நீக்குபவன். அவனையும் அழிக்கும் பெரும் சிறப்பிற்கு
உரியவரே சிவனார் ஆவார். உயிர்களுக்கு அச்சம் தரும் சுடுகாட்டில் நடனமாடுவதன் மூலம் அச்ச நீக்கத்தை
அருளுபவரும் அவரே! விடத்தைத் தான் உண்டு தேவர்களுக்கு அமுதை வழங்கியவரும் அவரே! மதியினைத்
தலையில் சூடியுள்ள அவரே, மதி தோய்கின்ற மாடங்கள் நிறைந்த திருவாஞ்சியத்தில் கோயில் கொண்டுள்ளார்.
குறிப்புரை: காலகாலர்- இயமனுக்குங் காலமுடிவைச் செய்பவர். இயமனுக்கியமன் என்பாருமுளர்.
கரிகான் - கரிந்தகாடு. மேலர் - எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் எத்தேவர்க்கும் மேலாயுள்ள முழுமுதல்வர்.
வேலை- கடல். மிடறு- கழுத்து. நஞ்சுண்டிருண்ட கண்டத்தர். 'இருள்கின்ற' என நிகழ்வாற் கூறியதால்,
இன்னும் இருளும்படி செய்யுங் கொடிய நஞ்சையுண்டு வாழ்வித்த கருணைத் திறத்தை அறியலாம்.
திருவாஞ்சியத்து மாடங்கள் சந்திரமண்டலத்தின் அளவும் ஓங்கியவை என்று உயர்த்துக் கூறினார்.
மதிமண்டலத்தை அளாவிய மாடம். மாலைமதி, கோலமதி, மாலைப்பொழுதும் அழகும் மதிக்கு அடை,
ஞாலம்- உலகத்துயிர்கள், இடவாகு பெயர், ஞாலம் - தொங்குவது என்னுங் காரணப் பொருளதாய்,
முன்னோரது பூகோள ககோள ஞானத்தை உணர்த்துவது அறிக. நயந்தது - விரும்பியது.
Oh! Behold! It is Civa who resides in Thiru-vaanjiyam who is the Master and
Supreme God also for the attendant of death called Yama. He does the great cosmic dance
on the burning ghat. He is the super mundane in the world. His neck is dark because he
drank the deadly poison that rose from the sea of milk. In the evening the beautiful
moon laps over the big mansions of Thiru-vaanjiyam to take some rest. It is He who
draws the whole world to bow at His feet in the temple in Thiru-vaanjiyam.
1538. மேவிலொன்றர்விரிவுற்றஇரண்டினர்மூன்றுமாய்
நாவின்நாலருடலஞ்சினராறரேழோசையர்
தேவிலெட்டர்திருவாஞ்சியம்மேவியசெல்வனார்
பாவந்தீர்ப்பர்பழிபோக்குவர்தம்மடியார்கட்கே. 3
மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும்ஆய்
நாவில் நாலர், உடல் அஞ்சினர், ஆறர்,ஏழ்ஓசையர்,
தேவில் எட்டர் -திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்;
பாவம் தீர்ப்பர், பழி போக்குவர், தம் அடியார்கட்கே.
mEvil onRar, virivu uRRa iraNTinar, mUnRum Ay
nAvil nAlar, uTal anjcinar, ARar, Ez Ocaiyar,
tEvil eTTar-tiru vAnjciyam mEviya celvanAr;
pAvam tIrppar, pazi pOkkuvar, tam aTiyArkaTkE.
பொருள்: ஒப்பற்ற ஒருவனாகிய சிவனாரே, சிவன் சக்தி என இரண்டாகவும், படைத்தல், காத்தல்,
அழித்தல் எனும் முத்தொழிலும் முத்தி உடையவராகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவராகவும்,
பஞ்சபூதங்களாகவும், வேதத்தின் ஆறு அங்கங்களாகவும், ஏழிசையாகவும் எண்குணத்தவராகவும்
உள்ளார். அவரே திருவாஞ்சியம் என்னும் திருத்தலத்திலும் பொருந்தியுள்ளார். அடியவர்களின்
பாவத்தைத் தீர்ப்பவரும் அவரே! பழி போக்குபவரும் அவரே என்க.
விளக்கவுரை: இறைவனின் தன்மைகள் எண்ணலங்கார முறையில் (ஒன்று முதல் எட்டு வரையில்)
இத்திருப்பாட்டில் கூறப்பெற்றுள்ளன. ஏகன், அனேகன், இறைவன் என்பது இத்திருப்பாட்டில் விளக்கம் பெறுகிறது.
எங்கும் நிறைந்த அவர் இங்கும் உள்ளார் என்க. உலகில் உள்ள எல்லாப் பொருள்களுள்ளும் இரண்டறக் கலந்து
அருவமாய் விளங்குபவர் அவரே! ஒன்று இரட்டித்தலும், அவ்விரண்டு இரட்டித்தலும் அவ்விரண்டு மேலும்
இரட்டித்து நான்காதலும், அந்நான்கும் இரட்டித்து எட்டாதலும், இவ்வாறு விரிந்து செல்லக்கூடிய இறைவனின்
திறம் இத்திருப்பாட்டில் சிறப்பாகப் பேசப்படுகிறது. ஐம்பெரும் பூதங்களாகவும் ஐம்பெரும் சக்திகளாகவும்
(ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி) அவரே எங்கும் நிறைந்துள்ளார் என்க. நிலம், நீர்,
நெருப்பு, காற்று, வான் என்ற பூதங்களாகவும், சூரியன், சந்திரன் என்ற இரு சுடர்களாகவும், ஆன்மா என்ற
தன்மையும் கொண்டு அவன் எட்டாக விளங்குகிறான் என்க. தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல்,
இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை,
வரம்பில் இன்பமுடைமை, முடிவில் ஆற்றலுடைமை என்ற எண்குணங்களும் பொருந்தியவன் இறைவன் என்க.
எண்குணத்தான் தாளை வணங்காத் தலையால் பயனில்லை என்பது குறள் தரும் கருத்து என்க. தன் செயலால்
விளைவது பாபம்! பிறர் சொல்லால் விளைவது பழி! அவ்விரண்டையும் நீக்கியருள்பவன் இறைவனே என்க.
குறிப்புரை: இதனுள் ஒன்று முதல் எட்டீறாகிய எண்ணுப்பெயர் அமைந்த அழகு உணரத் தக்கது. 79,380-ஆம்
(திருக்கழுமலம், திருவோமமாம்புலியூர்த்) திருப்பதிகங்களுள் வரும் 'எண்ணிடை யொன்றினர்' 'மணந்திகழ்
திசைகளெட்டும்' எனத் தொடங்குந் திருப்பாடல்களை இங்கு நோக்கின், இவ்வாசிரியர்க்கு இவ்வாறு பாடியருளும்
எளிமை இனிது விளங்கும். மேவில் ஒன்றர்- விரும்பி வழிபட்டால் அநந்நியமாதலை உடையவர், 'அறிபவன்
அருளினாலே அநந்நியமாகக் காண்பன்' என்பதும் 'அறிய வல்லான் ஒருவனுக்கு அச்சிவப்பொருள் அவனோடு
ஒற்றித்து நின்று அவ்வருளானே அறியற் பாலதாம்' என்னும் அதன் உரையும் (சித்தியார் 245). சைவ
உபநிடதங்களினும் சைவாகமங்களினும் அந்நியமின்றி நின்றுணரும் அநுபவ மாத்திரையிற் கோசரிப்பது
என்று ஓதப்படுஞ் சிவனருளாம் மெய்ப் பொருள் என்னும் சிவஞான பாடிய வசனமும் (சூ. 6). ஈண்டுணரத் தக்கன.
ஒன்றர்- ஒருபொருளாயிருப்பவர் எனலுமாம். விரிவுற்ற இரண்டினர்- விரிதலடைந்த ஞானமும்
கிரியையும் உடையவர். சிவமும் சத்தியுமானவர் எனலுமாம். சிவசத்தி மூன்றனுள் யாண்டும் ஒரு
பெற்றித்தாய் வியாபரிக்கும் இச்சையை ஒழித்து, ஒழிந்த ஞானக் கிரியைகள் இரண்டும் தனித்தனி
வியாபரித்தலானும் ஒத்து வியாபரித் தலானும் தம்முள் ஏறிக் குறைந்து வியாபரித்தலானும் (சித்தியார்
உரை - 85) விரிவுற்றன. இரண்டு- சொரூபம் தடத்தம் எனலுமாம். விரிவுற்ற இரண்டு - போகமும் முத்தியும்
ஆதலும் பொருந்தும். மூன்றுமாய்- இச்சா ஞானக் கிரியையாய். ஒன்றதாய் இச்சா ஞானக் கிரியை என்று ஒரு
மூன்றாகி (சித்தியார் 83). அவை முறையே உயிர்கட்கு மலந்தீர்த்துச் சிவங்கொடுக்கும், கருணையும், அதற்கான
உபாயங்களை அறியும் அறிவும், அவற்றை அவ்வாறே கொண்டு செய்யும் சங்கற்பமும் ஆகும். இலயம் போகம்
அதிகாரமாய், ஒன்றாய் வேறாய் உடனாய், மூன்று தீயுமாய் முச்சுடருமாய் எனினும் பொருந்தும்.
மூன்றும்ஆய் நாவின் நாலர் என்று கொண்டு பதி, பசு, பாசம் என்னும் மூன்று பொருளையும்
ஆய்ந்துணர்த்தும் நான்மறை நாவர் எனலுமாம். உடல் அஞ்சினர் - பரை, ஆதி, இச்சை,ஞானம்,கிரியை
என்னும் ஐவகைச் சத்தியாகிய திருமேனியை உடையவர். பஞ்சப் பிரம மந்திர தேகமும் ஆம். அருவம் இரண்டு,
அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்து உடலும் சொரூபமல்லவாயினும் உபசாரத் திருமேனியாகும்.
அநாதிமுத்த சித்துருவாகிய முதல்வனுக்குத் தன்னுருவமாகிய உலகத்தைத் தொழிற்படுத்தற் பொருட்டும்
வேறொருருவம் வேண்டப்படுவதன்றாயினும்.... உயிர் வர்க்கங்கள் பொருளியல்பு உணர்ந்து வீடுபெறுமாறு
வேதாகமங்களைக் கோவைப்படச் செய்தற் பொருட்டும் அதனைக் குருபரம்பரையின்கண் வைத்தற்பொருட்டும்
திருமேனி ஒருதலையான் வேண்டப்படும் (சித்தியார் 66 உரை).
ஆறர்- அறுகுணத்தர், (ஷாட்குண்யர்) முற்றறிவு முதலியவை. பகவர் எனலுமாம். உடலஞ்சினர்.
ஆறர் - பிறவியையஞ்சிய நல்லோர் வழியில் விளங்குபவர். உடலஞ்சு- பஞ்சகோசம். ஆறர் - கங்கையாற்றினர்
எனினுமாம். ' நன்மூவிருதொன்னூலர்’ 'முத்தீயர்" நால்வேதத்தர்' 'வீழிமிழலையார்' (தி. 3 ப. 9. பா. 7) என்றதில்
வருமாறுங் கொள்ளலாம். 'திருவெழுகூற்றிருக்கை'யும் நோக்குக. ஏழ் ஓசையர்- ஏழிசையாய் (இசைப்பயனாய்)
இருப்பவர். தேவில்- தெய்வத்தன்மையில் , எட்டர் - அட்டமூர்த்தி, எண்குணத்தர் எனின் ஆறர் என்பதற்கு
ஷாட்குண்யர் என்னாது வேறுரைக்க. பாவம் - தீவினை. பழி - தீச்சொல். முறையே செயலும் மொழியுமாய்த்
தன் திரிகரணத்தாலும் பிறர் வாயாலும் நிகழ்வன. அடியார்கட்கே பாவந்தீர்ப்பர் பழி போக்குவர் எனவே
அல்லார்க்கு இல்லை என்றதாம்.
Oh! Behold! It is Civa the Supreme who is the Lord at Thiru-vaanjiyam. He is unique
and the single entity in the entire universe. Yet He appears dual as Lord Civa and Sakthi,
His consort. He is also three in number i.e., the sun, moon and fire. He is four having
produced the four vedas. He is five because He is the makes of all the five elements
the earth, the water, the fire, the wind and the sky. He is the six angangas of vedas
such as Chitchai, Viyakaranam, Santhus, Nirutham, Jothidam, and Karpam. He also represents
the seven kinds of sound such as Sanchamam, Rishapam, Kaanthaaram, Mathymam, Panchamam,
Thaivatham, Nishaatham, SA-RI-KA-MA-PA-THA-NI (சரிகமபதநி ). He has eight divine attributes
of virtues, such as Than Vayathanaathal, Thooya Udambinan Aathal, Iyarkai Unarvinan Aathal,
Mutrunarthal, Iyalbaaka Paasangalil Irunthu Neenguthal, Perarul Udamai, Mudivillatha Aatral
Udaimai, Varambillatha Inbam Udamai. This perfect one is seated in Thiru-vaanjiyam. He shows
His grace to His devotees and absolves them of all their sins and chases their woes.
1539. சூலமேந்திவளர்கையினர்மெய்சுவண்டாகவே
சாலநல்லபொடிப்பூசுவர்பேசுவர்மாமறை
சீலமேவுபுகழாற்பெருகுந்திருவாஞ்சியம்
ஆலமுண்டஅடிகள்ளிடமாக அமர்ந்ததே. 4
சூலம் ஏந்தி வளர் கையினர்; மெய் சுவண்டுஆகவே
சால நல்ல பொடி(ப்) பூசுவர்; பேசுவர் மாமறை;
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம்
ஆலம் உண்ட அடிகள்(ள்) இடம்ஆக அமர்ந்ததே.
cUlam Enti vaLar kaiyinar; mey cuvaNTu AkavE
cAla nalla poTi(p) pUcuvar; pEcuvar, mAmaRai;
cIlam mEvu pukazAl perukum tiru vAnjciyam,
Alam uNTa aTikaL(L) iTam Aka amarntatE.
பொருள்: ஈசன், சூலப்படையைத் திருக்கரத்தின்கண் ஏந்தியவர். அருள் வழங்கும் திருக்கரத்தினர்.
மணமிக்க திருநீற்றைத் திருமேனியில் தாங்கியவர். வேதங்களை விரித்துரைப்பவர். சீலம் மிக்க புகழுடை
திருவாஞ்சியத்தில் விளங்குபவர். ஆலம் அருந்தி தேவர்களைத் தன்னருளால் காத்தவர்.
விளக்கவுரை: விபூதியானது கற்பம், அநுகற்பம், உபகற்பம் என்று மூன்று வகையானது. சகல
செல்வங்களையும் வழங்குவது. ஆன்மாக்களுக்குக் கவசம் போன்று துணையாக விளங்குவது.
சிவத்துவத்தைப் பெருக்க வல்லது. பாவங்களை நீக்குவது. உயிர்களை மலநீக்கம் பெறச் செய்வது.
இதனை நல்லபொடி என்றும் கூறுவர். திருநீற்றுப் பெருமை கூறும் பதிகத்தை ஓதி உணர்க. (மந்திரமாவது நீறு).
குறிப்புரை: சுவண்டு - பொருத்தம். சால- மிக. பொடி - திருநீறு. மறைபேசுவர் என மாற்றுக. சீலம் -
பெருந்தகைமையுள் ஒன்று. ஒழுக்கமுமாம். ஆலம் - நஞ்சு. ஒற்று(ள்) மிகை.
Oh! Behold! It is Civan who is the Lord of Thiru-vaanjiyam. He holds a trident in
His blessing hand. He has smeared the holy fragrant powder on His body. He speaks all the
four Vedas. He drank the poison that came out of sea of milk. Since the people pursue all
the prescribed sacred rites and rules regarding moralities Thiru-vaanjiyam , where our
Lord resides is well-renowned for virtuosity.
1540. கையிலங்குமறியேந்துவர்காந்தளம்மெல்விரல்
தையல்பாகமுடையாரடையார்புரஞ்செற்றவர்
செய்யமேனிக்கரியம்மிடற்றார்திருவாஞ்சியத்
தையர்பாதமடைவார்க்கடையாஅருநோய்களே. 5
கை இலங்கு மறி ஏந்துவர், காந்தளஅம்மெல்விரல்
தையல் பாகம் உடையார், அடையார் புரம் செற்றவர்,
செய்யமேனிக் கரிய(ம்) மிடற்றார் - திரு வாஞ்சியத்து
ஐயர்; பாதம் அடைவார்க்கு அடையா, அருநோய்களே.
kai ilagku maRi Entuvar, kAntal ammelviral
taiyal pAkam uTaiyAr, aTaiyAr puram ceRRavar,
ceyyamEnik kariya(m) miTaRRAr--tiru vAnjciyattu
aiyar; pAtam aTaivArkku aTaiyA, arunOykaLE.
பொருள்: ஈசனார், கையில் மான் ஏந்துபவர். காந்தள் மலர் போன்ற விரல்களை உடைய சக்தியை
இடப்பாகத்தில் கொண்டவர். முப்புரங்களைச் சிரித்தே அழித்தவர். கரிய கண்டத்தைக் கொண்டவர்.
திருவாஞ்சியம் என்ற திருத்தலத்தில் உறைபவர். அந்தத் தலைவரின் திருவடிகளை அடைந்தவர்களுக்குப்
பிறவி நோய் சாராது.
விளக்கவுரை: துள்ளிப்பாயும் மான் ஈசனாரின் விரல்களில் கட்டுண்டு நிற்பது போல துள்ளித் துள்ளி
வரும் நம்மனமும் அவர் திரு முன்பு கட்டுண்டு அமைதியுறும். தாயினுடைய விரல்களின் மென்மையை
அடியார்களைத் தவிர வேறு யார் உணர்ந்து அனுபவிக்க முடியும். அரத்த மேனியாய் அருள் செய்
அன்பரும் நீயும் ஆங்கே எழுந்தருளி இங்கு எனை இருத்தினாய் முறையோ? என மணிவாசகர் கூறுவதன் மூலம்
சிவனார் செம்மேனி கொண்டவர் என உணரலாம். செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்ற நாம்
சாகாநிலை - பிறவா நிலை அடைய இறைவனின் திருவடிகளைச் சேர்தலே வழியாம் என்க.
குறிப்புரை: மறி -மான்கன்று. காந்தட்பூ கைவிரல்கட்குவமை. தையல் -கட்டழகுடைமையாற் பெண்ணைக்
குறிக்கும் பெயர். இங்குப் பார்வதி தேவியாரை உணர்த்திற்று. தையல் எல்லார்க்கும் நாயகியாதலின்.
அடையார்- பகைவர். புரம் செற்றவர் - திரிபுரதகனம் செய்தவர். 'முப்புரமாவது மும்மலகாரியம்' என்பது
திருமந்திரம். மிடறு- கழுத்து. செய்ய, கரிய முரண். ஐயர்- முதல்வர். அருநோய் அடையா - நீங்கற்கரிய பிறவி
நோய் முதலிய யாவும், திருவடியடையும் அன்பர்க்கு இல்லை.
Oh! Behold! It is Civa who is the Lord of Thiru-vaanjiyam, holding a deer in His hand.
He shares His body on the left with His consort Uma. Uma's fingers are very soft like the
glorious flower. Once He destroyed the three flying forts of asuraas and killed them all
except three. His body is reddish with the graceful appearance, whereas his neck is black
because of the poison He drank. The devotees who approach the Lord's holy feet and worship
Him will not suffer the disease of birth any more.
1541. அரவம்பூண்பரணியுஞ்சிலம்பார்க்க அகந்தொறும்
இரவில்நல்லபலிபேணுவர்நாணிலர்நாமமே
பரவுவார்வினைதீர்க்கநின்றார்திருவாஞ்சியம்
மருவியேத்தமடமாதொடுநின்றவெம்மைந்தரே. 6
அரவம் பூண்பர்: அணியும் சிலம்பு ஆர்க்க அகம்தொறும்
இரவில் நல்ல பலி பேணுவர்; நாண்இலர்; நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார் - திரு வாஞ்சியம்
மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே.
aravam pUNpar; aNiyum cilampu Arkka akamtoRum
iravil nalla pali pENuvar nAN ilar; nAmamE
paravuvAr vinai tIrkka ninRAr--tiru vAnjciyam
maruvi Etta maTamAtoTu ninRa em maintarE.
பொருள்: ஈசர், நாகத்தை ஆபரணமாகப் பூண்டு இருப்பார். திருப்பாதத்தில் சிலம்பணிந்து அது
ஆர்த்து ஒலிக்க விரும்பிப் பிச்சை ஏற்பார். அதற்காக நாணமாட்டார். தேவியுடன் வீற்றிருக்கும் அவர் தன்
நாமத்தைக் கூறி வழிபடுபவர்க்கு அருளவே திருவாஞ்சியத்தில் கோயில் கொண்டுள்ளார்.
விளக்கவுரை: இல்லங்கள்தோறும் எழுந்தருளும் பெருங்கருணையாளனே இறைவன். அவன் பிச்சையாக
ஏற்க இருப்பதும், நம் நல்உள்ளங்களையே என்க. மானிட உடல்பெற்ற நம் ஆன்மா நிறைவடைவதும் குறைவுறுவதும்
உள்ளத்தாலேயேயாம். நாகத்தைக் கண்டு உயிர்கள் அஞ்சி நடுங்கும். ஆனால் அந்த நாகமோ அவரிடத்தில் கொஞ்சி
ஆடும். நம் வினை தீர்க்க அவர் கால்கடுக்க நடந்து வருகிறாரே! நாம் சிந்திக்க வேண்டாவோ?
குறிப்புரை: அரவம் -பாம்பு. பூண்பர்- சூடுவர். அணியுஞ்சிலம்பு - அலங்காரமாகப் பூணும்
வேதச்சிலம்பு, ஆர்க்க - ஒலிக்க. அகம் - வீடு. பேணுவர்- விரும்புவர். நாமமே பரவுவார் - திருநாம
ஜபமே செய்பவர். வினை - கர்மம். மடமாது - உமாதேவியார். மைந்தர்-வீரர்.
Civa, the Lord of Thiru-vaanjiyam has adorned His body with snakes. He moves about
the entire cosmos at night for alms to all houses with the sound of His anklets. His begging
appears shameless, but this is begging for our hearts, for our sake. This Lord who is seated
with His devi resides in Thiru-vaanjiyam in order to bless and dispel the karma of those
devotees who always chant His name.
1542. விண்ணிலானபிறைசூடுவர்தாழ்ந்துவிளங்கவே
கண்ணினாலநங்கன்னுடலம்பொடியாக்கினார்
பண்ணிலானஇசைபாடல்மல்குந்திருவாஞ்சியத்
தண்ணலார்தம்மடிபோற்றவல்லார்க்கில்லையல்லலே. 7
விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து விளங்கவே;
கண்ணினால் அநங்கன்(ன்) உடலம் பொடிஆக்கினார்;
பண்ணில் ஆன இசைபாடல் மல்கும் திரு வாஞ்சியத்து
அண்ணலார்தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை, அல்லலே.
viNNil Ana piRai cUTuvar, tAzntu viLagkavE;
kaNNinAl anagkan(n) uTalam poTi AkkinAr;
paNNil Ana icaipATal malkum tiru vAnjciyattu
aNNalAr tam aTi pORRa vallArkku illai, allalE.
பொருள்: ஈசர், தம் தலையில் பிறையைச் சூடிக் கொள்வார். தம் கண்களால் மன்மதனை எரித்துச்
சாம்பலாக்கினார். பண்ணுடன் பொருந்திய பாடல்கள் முழங்கப் பெறும் திருவாஞ்சியத்தில் அடியார்களுக்கு
அருள எழுந்தருளுவார். இனி அடியார்களுக்கு அல்லல் இல்லை.
விளக்கவுரை: விண்ணில் விளங்கி ஒளி தந்த சந்திரன் இறைவனருள் பெற்ற பின்பே குறை
நீங்கப் பெற்றான். மகிழ்ந்து உலா வரப்பெற்றான். பிறரால் பெற்ற பழி நீங்கப் பெற்றான். மன்மதன்
புல்லறிவினனாய் - தனக்கே எல்லாம் தெரியும், எல்லாம் செய்ய முடியும் என்று தன்முனைப்புடன்
செயல்பட்டதால் எரிந்து சாம்பலாயினான். அவனுக்கும் அருட்கண் கொண்டு அருள் செய்தவர்
எம்பிரானார். பண்ணும் பாடலும் போல் விளங்கும் இறைவனார் திருவாஞ்சியத் திருத்தலத்துள்
எழுந்தருளி உள்ளார். அவரது தாளில் நம் தலை பொருந்த (தாடலை) வணங்குவோமாக.
குறிப்புரை: பிறை- பிறத்தலுடையது என்னுங் காரணப் பொருட்டான பெயர். திங்கள் துண்டம்.
அநங்கன் -அங்கமில்லான். உருவிலி, மன்மதன். பண்ணும் இசையும் முறையே ஆதாரமும் ஆதேயமுமாதலின்
பண்ணில் ஆன இசை என்றார். போற்ற வல்லார்- போற்றுதலில் வேதாகம ஞானவல்லபம் உடையவர்,
நிஷ்டாநுபூதிமான்கள். அல்லல் - துன்பம்.
Civan who occupies the temple in Thiru-vaanjiyam has adorned His matted hair with the
floating crescent moon in the low horizon. He once destroyed the body of cupid - the god of love -
called Anangan or Manmathan by opening the third eye in His forehead. Many devotees gather in
His temple in large numbers and sing all kinds of songs in prayer with melodious notes.
Their voices are echoed all around. Those who praise His holy feet will never suffer.
1543. மாடநீடுகொடிமன்னியதென்னிலங்கைக்குமன்
வாடியூடவரையாலடர்த்தன்றருள்செய்தவர்
வேடவேடர்திருவாஞ்சியமேவியவேந்தரைப்
பாடநீடுமனத்தார்வினைபற்றறுப்பார்களே. 8
மாடம் நீடு கொடி மன்னிய தென்இலங்கைக்கு மன்
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள் செய்தவர்,
வேடவேடர், திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே.
mATam nITu koTi manniya ten ilagkaikku man
vATi UTa varaiyAl aTarttu anRu aruL ceytavar,
vETavETar, tiru vAnjciyam mEviya vEntaraip
pATa nITu manattAr vinai paRRu aRuppArkaLE.
பொருள்: கொடி நிறைந்த மாடங்கள் பொருந்திய இலங்கை நகருக்கு மன்னன் இராவணன்.
அவன் தெளிவின்றிச் சினத்தினால் மலை எடுத்து வாட்டம் உற்றான். பின்பு தெளிவு பெற்றுப் பாடிப்
பரவினான். அவனுக்கு நீண்ட ஆயுளும், வாட்படையும் வழங்கினார் சிவனார். வேட்டுவ வடிவம் கொண்டு
அர்ச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை அருளியவரும் அவரே ஆவார். திருவாஞ்சியம் என்னும்
திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள அவரை வணங்கும் பக்தர்கள் பற்று அறுக்கப் பெறுவார்கள் என்க.
விளக்கவுரை: முற்பிறவியில் செய்த வினையே இப்பிறவிக்கும் இப்பிறவில் அடையும் துன்பத்திற்கும்
காரணமாகும். பிறவி அடைதல் வினையின் காரணமாகவே அமையும். வினை நீக்கம் பெற, பற்றுக்கள்
(உலக ஆசைகள்) நீங்கப் பெற வேண்டும். ஈசனோடு ஆயினும் ஆசை நீங்கப் பெறுதல் வேண்டும்.
''பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
என்ற குறள் நுட்பம் உணர்ந்து மகிழ்க.
குறிப்புரை: மாடம் - உயரிய வீடுகள். கொடி - துகிற்கொடிகள். மன்னிய - நிலைத்த. மன்-அரசன். இராவணன்.
வரை - கைலாசகிரி. வேடவேடர் - வேட்டுவக் கோலத்தர். வினைபற்று உம்மைத் தொகை. வினை - கர்மம்.
பற்று - மூலகர்மம். "இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள்"
(பெரிய. அப்பர் 129) என்புழியறிக.
Oh! Behold! It is Civan who is the Lord of Thiru-vaanjiyam. He subdued the
mighty king of Sri Lanka. Sri Lanka's capital and all the cities are very famous for their
tall palaces, victorious flags and long cords hung with garlands. The king Raavanan was a
very famous devotee of Lord Civa and a mighty warrior. However at one stage he forgot his
virtue and tried to move the Himalayas, the abode of Lord Civa and His consort. He failed
in his attempt and got crushed under the mountains. He later realised his fault and prayed
to Lord Civa to forgive him and to bless him. Lord Civa pardoned him and also gave long life,
a divine sword and some boons and the name 'Raavanan'. This Lord of Thiru-vaanjiyam once took
the form of a hunter to meet Arjuna who prayed Him in the forest to get a divine weapon called
Paasupathasthiram. He met him and gave him the divine arrow. Those who sing His glorious name
will certainly be relieved of all their karma, the present, the past and also all the worldly
desires.
1544. செடிகொள்நோயின்னடையார்திறம்பார்செறுதீவினை
கடியகூற்றமுங்கண்டகலும்புகல்தான்வரும்
நெடியமாலொடயனேத்தநின்றார்திருவாஞ்சியத்
தடிகள்பாதமடைந்தாரடியாரடியார்கட்கே. 9
செடி கொள் நோயின் அடையார்; திறம்பார், செறு தீவினை;
கடிய கூற்றமும் கண்டு அகலும்; புகல்தான் வரும் -
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார், திரு வாஞ்சியத்து
அடிகள், பாதம் அடைந்தார் அடியார், அடியார்கட்கே.
ceTi koL nOyin aTaiyAr, tiRampAr, ceRu tIvinai;
kaTiya kURRamum kaNTu akalum; pukaltAn varum-
neTiya mAloTu ayan Etta ninRAr, tiru vAnjciyattu
aTikaL, pAtam aTaintAr aTiyAr, aTiyArkaTkE.
பொருள்: திருமாலும், பிரமனும் போற்றித் துதித்து வணங்குமாறு இறைவன் திருவாஞ்சியத் தலத்துள்
கோவில் கொண்டுள்ளார். அவ்விறைவரின் திருவடிகளைப் போற்றி வணங்கும் அடியவர்களுக்கு நோய்கள் வாரா.
உள்ளத்தில் உறுதி நிலை பெறும். எம பயம் நீங்கப் பெறும் என்க.
விளக்கவுரை: உடலுக்கு வருவன நோய்கள். உள்ளத்தில் பொருந்தி இருப்பன அழுக்காறு, அவா, வெகுளி
போன்ற தீய பண்புகள். உயிருக்கு வருவது பிறவித் துயர். இம்மூன்றும் வாஞ்சியப்பெருமானை வணங்க நீங்கப்
பெறும். பெருமானைத் திரிகரண சுத்தியுடன் (மனம், மொழி, மெய்) வணங்குதல் வேண்டும்.
குறிப்புரை: செடி - துன்பம். பாவமுமாம். திருவாஞ்சியத்துப் பெருமான் திருவடியை அடைந்தவருடைய
அடியார்க்கு அடியார் ஆனவர்க்கு நோயின்மையும், தீவினை நீக்கமும், இறவாமையும், சிவகதியும் உண்டு என்றது.
இத்திருப்பதிகத்துள் (3, 5, 6, 7, 8, 10, 11) அடியார் சிறப்புணர்த்திய உண்மையை உணர்க. கூற்றம் - இயமன்.
புகல் - சிவகதி. "தன்னைச் சரணென்று தாளடை (தி.4 ப. 105 பா. 1) வதே புகலாகும்.
Devotees bow at the holy feet of the Lord of Thiru-vaanjiyam. Those who pray at the
feet of these devotees also will get the grace of the Lord of Thiru-vaanjiyam. They will not
get dreadful diseases of body, mind and soul. Evils will disappear from them. Even the cruel
death will shun them and salvation by Civan will be assured to them. Thirumaal and Brahma
also prayed and worshipped the Supreme Lord at Thiru vaanjiyam.
1545. பிண்டமுண்டுதிரிவார்பிரியுந்துவராடையார்
மிண்டர்மிண்டும்மொழிமெய்யலபொய்யிலையெம்மிறை
வண்டுகெண்டிமருவும்பொழில்சூழ்திருவாஞ்சியத்
தண்டவாணனடிகைதொழுவார்க்கில்லையல்லலே. 10
பிண்டம் உண்டு திரிவார், பிரியும் துவர் ஆடையார்,
மிண்டர் மிண்டு(ம்) மொழி மெய் அல; பொய் இலை,எம் இறை;
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லலே.
piNTam uNTu tirivAr, piriyum tuvar ATaiyAr,
miNTar miNTu(m) mozi mey ala; poy ilai, em iRai;
vaNTu keNTi maruvum pozil cUz tiru vAnjciyattu
aNTavANan aTi kaitozuvArkku illai, allalE.
பொருள்: பேருணவு உண்டு, எங்கும் திரிந்து, தருக்கம் புரியும் மிண்டர்களின் உரைகள்
மெய்ம்மையில்லாதனவாம். ஈசனார் என்றும் மெய்யாய் உள்ளவர். அவர் வண்டுகள் மொய்க்கும்
சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார். உலக நாயகனாகிய
இறைவரின் திருவடிகளை வணங்குவார்க்குத் துன்பமே இல்லையாம்.
விளக்கவுரை: உணவு சுருங்கிடின் இறைநினைவு பெருகும். மெல்லுணவே நல்லுணர்வைப் பெருக்கும்.
''ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கி" என்ற திருவாசக உரையினை எண்ணுக. இறைவன் உண்மைப் பொருள்
என்றும், உண்மை உணவே இறைவன் ஆன்மாக்களுக்கு தனுவினை (உடலினை - மெய்யினை) வழங்கியுள்ளார் என்க.
குறிப்புரை: பிண்டம் - பிண்டித்த சோறு, மிண்டர் - வலியர். கெண்டி - கிளறி, பொழில் - சோலை,
அண்டவாணன்- அண்டமுழுதும் வாழ்நன். வாணன் மரூஉமொழி, பாவாணன், அம்பலவாணன், மன்ற வாணன்,
அண்டவாணன் என்னும் வழக்கால் இறைவனியல்பு உணர்தல் கூடும்.
The words of those Jains who eat their food from their hands and of those of the
Buddhists who wear ochre robes - are not really good. The Supreme God of Thiru-vaanjiyam is
free from falsehood. The holy place of Thiru-vaanjiyam is surrounded by groves where the bees
in large number gather humming forever. Those devotees who pray to the Lord of Thiru-vaanjiyam,
who is the Lord of the whole universe, will get no sufferings at all.
1546. தென்றல்துன்றும்பொழில்சென்றணையுந்திருவாஞ்சியத்
தென்றுநின்றஇறையானையுணர்ந்தடியேத்தலால்
நன்றுகாழிமறைஞானசம்பந்தனசெந்தமிழ்
ஒன்றுமுள்ளமுடையாரடைவாருயர்வானமே. 11
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால்,
நன்று காழி மறைஞானசம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார், உயர்வானமே.
tenRal tunRu pozil cenRu aNaiyum tiru vAnjciyattu
enRum ninRa iRaiyAnai uNarntu aTi EttalAl,
nanRu kAzi maRai njAnacampantana centamiz
onRum uLLam uTaiyAr aTaivAr, uyarvAnamE.
பொருள்: இனிய தென்றல் காற்று மருவி விளங்கும் பொழில்கள் நிறைந்த திருவாஞ்சியத்தில்
பொருந்திய, இறைவனைச் சீர்காழிப் பெருமானாகிய ஞானசம்பந்தர் பாடிப் பரவுகின்றார். அப்பாடல்களை
உள்ளம் பொருந்தப் பாடிப் பரவுபவர்கள் வீடு பேற்றைப் பெறுவார்கள் என்க.
விளக்கவுரை: ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பாடல்கள் செவிக்கு இனிமையும், சிந்ததைக்கு நிறைவும் ,
அறிவிற்குத் தெளிவும், ஆன்மாவிற்கு அமைதியும் அளிக்க வல்லன. ஞானப்பால் உண்ட அருளாளர் வழங்கிய
பாடல்கள் நம் உள்ளத்துள் இன்பத் தேனாய் இனிக்கட்டும்.
குறிப்புரை: என்றும் நின்ற இறையான் - நித்தியகர்த்தா. செந்தமிழ் - திருப்பதிகம். ஒன்றும் உள்ளம் -
ஒன்றியிருந்து நினைக்கும் உள்ளம். இப்பதிகம் ஒன்றும் மனம் என்பதே ஆசிரியர் உட்கோள். வானம்-வீடு.
A pleasant southern wind blows through the rich groves of Thiru-vaanjiyam rendering
it attractive. Civan, the Lord Supreme, known as Vaanchi-Naatheswarar, resides in this temple
forever. Saint Thiru-gnana-Sambandar who hails from Seerkaazhi is an expert in Vedas. He sang
the ten pure Tamil verses on the omnipresent Lord at Thiru-vaanjiyam. Those scholars who sing
these ten pure Tamil verses, identifying their emotions fully with its meaning, will reach
the high celestial world.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
7ஆம் பதிகம் முற்றிற்று
End of 7th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 144 பதிக எண் : 8
8.திருச்சிக்கல் 8. THIRU-CH-CHIKKAL
பண் : இந்தளம் Pann: Indhalam
திருத்தல வரலாறு
வசிட்டர், காமதேனுவின் வெண்ணெயினால் சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளுவித்துப் பூசித்தார்.
பூசைமுடிவில் அதை எடுக்க முயன்றபோது, எடுக்கக் கூடாமல் சிக்கிய காரணத்தால் இப்பெயர் பெற்றது.
இத்திருத்தலம் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 8 கி.மீ தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத்
தலங்களுள் 83ஆவது தலமாகும். திருவாரூர் -நாகப்பட்டினம் பேருந்து வழியில் செல்லும் பேருந்துகளில்
சிக்கல் செல்லலாம். இறைவரின் திருப்பெயர் வெண்ணெய்ப்பிரான். இறைவியாரின் திருப்பெயர்
வேல்நெடுங்கண்ணி. “சிக்கலுள் வேலவொண் கண்ணியினாளையோர் பாகன் வெண்ணெய்ப்பிரான்
பாலவண்ணன் கழலேத்த நம்பாவம் பறையுமே" என இவ்வூர்ப்பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருந்தகையார்
அம்மை, அப்பர் திருப்பெயர்களை எடுத்து ஆண்டிருப்பது பெருமகிழ்ச்சிக்கு உரியதாகும். தீர்த்தம் க்ஷீரபுஷ்கரணி.
தலவிருட்சம் மல்லிகை. திருக்கோயில் கட்டுமலையின்மேல் இருக்கின்றது. இங்கு எழுந்தருளியிருக்கும்
முருகப்பெருமானுக்குச் சிங்காரவேலவர் என்று பெயர். இங்குச் சூரசம்ஹார விழா மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தலத்திற்குப் பதிகம் ஒன்றாகும்.
பதிக வரலாறு
ஞானசம்பந்தர் கடல்நாகைக் காரோணத்தை வணங்கி நீங்கிப் பரவிய பதிகள் பல. அவற்றுள்
திருச்சிக்கல், திருக்கீழ்வேளூர் முதலியனவும் ஆம். அவற்றைப் பணிந்து பாடிய திருப்பதிகங்களுள்
'வானுலாவுமதி' என்னும் இதுவும் ஒன்று.
திருச்சிற்றம்பலம்
1547. வானுலாவும் மதிவந்துலாவும்மதில்மாளிகை
தேனுலாவும்மலர்ச்சோலைமல்குந்திகழ்சிக்கலுள்
வேனல்வேளைவிழித்திட்டவெண்ணெய்ப்பெருமானடி
ஞானமாகந்நினைவார்வினையாயினநையுமே. 1
வான் உலாவும் மதி வந்து உலாவும் மதில் மாளிகை,
தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப் பெருமான் அடி
ஞானம்ஆக நினைவார் வினை ஆயின நையுமே.
vAn ulAvum mati vantu ulavum matil mALikai,
tEn ulAvum malarccOlai, malkum tikaz cikkaluL
vEnal vELai vizittiTTa veNNeypperumAn aTi
njAnam Aka ninaivAr vinai Ayina naiyumE.
பொருள்: வானில் மகிழ்ந்து உலாவுகின்ற சந்திரன், வந்து உலாவுகின்ற திருச்சிக்கல் என்ற
திருத்தலத்துள் கோயில் கொண்டுள்ள வெண்ணெய்ப் பெருமானே! நீ, அகன்ற உயர்ந்த மாளிகைகளும்
சோலைகளும் நிறைந்த திருச்சிக்கலுள் பொருந்தியுள்ளாய். தன்முனைப்புடன் உன்மீது மலர்களைத்
தூவிய மன்மதனை நீ அழித்தாய். உண்மையான அன்பு கொண்டு உன்னை நினைத்து வழிபடுவோர்க்கு
அருளுவாய். வழிபடும் எங்களின் வினைகளும் நீங்கப் பெறும்.
குறிப்புரை: வான் உலாவும் மதி - தன்மேல் வந்துலாவும் அளவு உயரிய மாளிகை. 'வண்கொண்டல்
விட்டு மதி முட்டுவன மாடம்' என்றார் கம்பர். வேனல்- சினம். வேள்- மன்மதன். விழித்திட்ட- நெற்றிக் கண்ணைத்
திறந்து எரித்த. எரித்தவன் வெண்ணெய்ப் பெருமான் என்ற நயம் உணர்க. ஞானமாக நினைவார் - 'பாச
ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப்
பாதநீழற்கீழ் நீங்காதே' (சித்தியார் 292) நினைந்து நிற்பவர். நையும் - நைந்தொழியும்.
It is Civan the Lord residing in the place called Thiru-ch-chikkal, known as
Vennaip-piraan. The moon strolls in Thiru-ch-chikkal's sky over the broad, tall and
beautiful mansions. The city abounds in gardens that are full of honey filled flowers.
In this city the Lord opened His third eye and destroyed the god of love cupid (மன்மதன்).
Those devotees who worship You with great wisdom will get Your blessings and their
karma will languish.
1548. மடங்கொள்வாளைகுதிகொள்ளும்மணமலர்ப்பொய்கைசூழ்
திடங்கொள்மாமறையோரவர்மல்கியசிக்கலுள்
விடங்கொள்கண்டத்துவெண்ணெய்ப்பெருமானடிமேவியே
அடைந்துவாழும்மடியாரவரல்லலறுப்பரே.
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப்பொய்கை சூழ்,
திடம் கொள் மா மறையோர் அவர் மல்கிய சிக்கலுள்
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமான் அடி மேவியே
அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே.
maTam koL vALai kutikoLLum maNamalarp poykai cUz,
tiTam koL mA maRaiyOr avar malkiya cikkaluL
viTam koL kaNTattu veNNeyp perumAn aTi mEviyE
aTaintu vAzum(m) aTiyAr avar allal aRupparE.
பொருள்: நீலகண்டனாகிய வெண்ணெய்ப் பெருமானே! நீர், துள்ளிக் குதிக்கும் மீன்கள்
நிறைந்து வாழும் பொய்கைகளும் மன அமைதியோடு வழிபாடு செய்யும் மாமறையோர்களும்
வாழ்கின்ற திருச்சிக்கல் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளீர். உமது திருவடிகளைப்
பொருந்தும் அடியார்களுக்கு என்றும் அல்லல் இல்லையாம்.
குறிப்புரை: மடம் - மடப்பம். குதி - குதித்தல். முதனிலைத் தொழிற்பெயர். பொய்கை- இயற்கை
நீர்நிலை. திடம் - சிவபெருமானே மெய்ப்பொருட் கடவுள் என்னும் வேதாகம பரத்துவ நிச்சயம். மல்கிய -
நிறைந்த. மேவி - விரும்பி. அல்லல் அறுத்தல் - பிறவித் துன்பந் தீர்த்தல்.
It is Civan the Lord who stays in Thiru-ch-chikkal known as Butter Lord. This city
is surrounded by ponds of fragrant flowers and the scabbard fish leaping about for food.
Here the learned men of Vedas are always of one strong faith on the Lord of this place
whose neck is black. The Lord will certainly snap the ties of birth of those devotees
who reach His feet.
1549. நீலநெய்தல்நிலவிம்மலருஞ்சுனைநீடிய
சேலுமாலுங்கழனிவ்வளமல்கியசிக்கலுள்
வேலொண்கண்ணியினாளையொர்பாகன்வெண்ணெய்ப்பிரான்
பாலவண்ணன்கழலேத்தநம்பாவம்பறையுமே. 3
நீலம் நெய்தல் நிலவி(ம்) மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி(வ்) வளம் மல்கிய சிக்கலுள்
வேல்ஒண்கண்ணியினாளை ஒர்பாகன், வெண்ணெய்ப்பிரான்
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.
nIlam neytal nilavi(m) malarum cunai nITiya
cElum Alum kazani(v) vaLam malkiya cikkaluL
vEl oNkaNNiyinALai orpAkan, veNNeyppirAn,
pAlavaNNan, kazal Etta, nam pAvam paRaiyumE.
பொருள்: வேல்விழி கொண்ட இறைவியோடு பொருந்திய பெருமானே! நீலநிற மலர்கள்
பொய்கைகளில் நிறைந்துள்ளன. அந்த நெய்தல் நிலத்தில் உள்ள வயல்வெளிகளில் மீன்கள்
துள்ளிக் குதிக்கின்றன. இத்தகைய வளம் பொருந்திய இந்தத் திருச்சிக்கல் தலத்தில் கோவில்
கொண்டுள்ள வெண்ணெய்ப் பெருமானே! உன் திருவடிகளைத் தொழுது, எங்கள் பாவங்கள்
நீங்கப் பெறுவோமாக!
குறிப்புரை: நெய்தல் - நெய்தல் மலர். நிலவி - விளங்கி. ஆலும் - அசையும், துள்ளும், மாலும்
என்று கொண்டு மயங்குமெனலுமாம். வேல்- வேல்போன்ற, வேலவொண் கண்ணியினாள் என்றது
புதியது. வேல் நெடுங்கண்ணி என்னும் அத்தலத்தின் திருநாமத்தைக் குறித்தது. இவ்வாறு பல
திருப்பதிகங்களுட் காணலாம். பிற்காலத்தில் வடமொழிப் பெயராக மாறிய காரணத்தால்
சிற்சில பதிகங்களுள் அம்முறை விளங்கவில்லை. பாலவண்ணன் - பால்போலும் வெண்ணிறத்தன்.
பாலனாந் தன்மையனுமாம். பறையும்-நீங்கும்.
It is Civan the Lord of Thiru-ch-chikkal. This city is surrounded by ponds which
contain the nilumboo flowers of blue in large numbers. They incense the ponds. This city
also contains plenty of fields, which are filled with leaping fish known as Trichiurus
lepturus. In such a fertile landscape of Thiru-ch-chikkal, the white coloured Lord of
Butter shares half of His body with the lancer-eyed goddess, Umaa, His consort.
If we worship His graceful feet our sins will vanish.
1550. கந்தமுந்தக்கைதைபூத்துக்கமழ்ந்துசேரும்பொழிற்
செந்துவண்டின்னிசைபாடல்மல்குந்திகழ்சிக்கலுள்
வெந்தவெண்ணீற்றண்ணல்வெண்ணெய்ப்பிரான்விரையார்கழல்
சிந்தைசெய்வார்வினையாயினதேய்வதுதிண்ணமே. 4
கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்
செந்து வண்டு இன்இசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்தவெண்நீற்று அண்ணல், வெண்ணெய்ப்பிரான், விரை ஆர் கழல்
சிந்தைசெய்வார் வினைஆயின தேய்வது திண்ணமே.
kantam untak kaitai pUttuk kamazntu cErum pozil
centu vaNTu in icai pATal malkum tikaz cikkaluL
venta veN nIRRu aNNal, veNNeyppirAn, virai Ar kazal
cintai ceyvAr vinai Ayina tEyvatu tiNNamE.
பொருள்: வெண்ணெய்ப் பெருமானே! நீவிர் கோயில் கொண்டுள்ள திருச்சிக்கல் என்னும்
திருத்தலத்தில், எப்பொழுதும் தாழை மணம் கமழ்கிறது. வண்டுகள் இன்னிசை பாடுகின்றன.
அடியார்களாகிய நாங்கள் மனநிறைவுடன் உன் புகழைப் பாடிப்பரவி மகிழ்வோம். எங்களது
வினைகள் தேய்ந்து மறைந்துவிடும்.
குறிப்புரை: கந்தம் - மணம். முந்த - முற்பட்டுச் சென்று வீசிப்பரவ. கைதை - தாழை.
கமழ்ந்து- மணந்து. செந்து - ஒரு பெரும் பண். தி.2. பா. 3. ப. 10 குறிப்பைப் பார்க்க. இசை ஐந்து
என்பது சந்து என்றாகிச் செந்து என்று மருவிற்று எனலுமாம். ஜயம் - சயம். செயம். கஜம் - (கசம்)
கெசம் என்பன போலப் பலவுள. வெந்த வெண்ணீறு - விதிப்படி கற்பஞ்செய்யப் பெற்ற
திருவெண்பொடி. திண்ணம்- உறுதி.
Civan the Lord of Butter stays in Thiru-ch-chikkal. This city is full of seashore
groves where the screw pine plants (Pandanus oderatissma) are in plenty. The flowers of
this plant spread their sweet fragrance all over the area. Here the beetles' humming
is similar to the attractive musical note called Chendu. Our Lord of Butter, the Lord of
white ashes resides in this holy city. Those sincere devotees who always ponder over
the graceful feet of our Lord of Butter will certainly be relieved of all their sins.
1551. மங்குல்தங்கும்மறையோர்கள்மாடத்தயலேமிகு
தெங்குதுங்கப்பொழிற்செல்வமல்குந்திகழ்சிக்கலுள்
வெங்கண்வெள்ளேறுடைவெண்ணெய்ப்பிரானடிமேவவே
தங்குமேற்சரதந்திருநாளுந்தகையுமே. 5
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு
தெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள்
வெங்கண் வெள்ஏறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி மேவவே
தங்கும் மேன்மை; சரதம் திருநாளும், தகையுமே.
magkul tagkum maRaiyOrkaL mATattu ayalE miku
tegku tugkap pozil celvam malkum tikaz cikkaluL
veg kan veL ERu uTai veNNeyppirAn aTi mEvavE,
tagkum, mEnmai; caratam tiru nALum, takaiyumE.
பொருள்: வெண்ணெய்ப் பெருமானே! நீவிர் கோயில் கொண்டுள்ள திருச்சிக்கல் தலத்தில்
உயர்ந்த மாடங்கள் நிறைந்துள்ளன. அம்மாடங்களில் தென்னை மரச் சோலைகள் பொருந்தியுள்ளன.
மறையோர்கள் ஏறுடைப் பிரானாகிய உம்மையே புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே,
உன் அருட்செல்வம் என்றும் எங்களிடம் பொருந்தும் என்க.
குறிப்புரை: மங்குல் - மேகம். தங்கும் மாடம் என்று சேர்க்க. மறையோர்களது மாடம் என்க.
தெங்கு- தென்கு தென்னை என்பதால் அதன் தொல்லுரு விளங்கும். துங்கம் - உயர்ச்சி. ஏறு - விடை.
மேல் - மேலானகதி. சரதம்- உண்மை. திரு- இலக்குமி. தகையும் -பொருந்தும். அழகு பெற்றிருக்கும்,
வீற்றிருக்கும். 'பூவீற்றிருந்த திருமாமகள்' (சிந்தாமணி 30) 'மேன்மை' புதியது. மேற்கதி என்றிருந்ததோ?
It is Civan the Lord of Butter who stays in Thiru-ch-chikkal. Here the men of Vedas
live in their tall palaces where the clouds embrace the top of these buildings. The tall
coconut trees, which are dense in this area represent the wealth of the people. Here our
Lord of Butter mounts the wild eyed white bull to roam about the cosmos. His holy
feet are worshipped daily by all the people of this place. Therefore, this place is blessed
by goddess Lakshmi, and it will always be known for its prosperity and propriety and
gracefulness.
1552. வண்டிரைத்தும்மதுவிம்மியமாமலர்ப்பொய்கைசூழ்
தெண்டிரைக்கொள்புனல்வந்தொழுகும்வயற்சிக்கலுள்
விண்டிரைத்தம்மலராற்றிகழ்வெண்ணெய்ப்பிரானடி
கண்டிரைத்தும்மனமேமதியாய்கதியாகவே. 6
வண்டு இரைத்து(ம்) மது விம்மிய மா மலர்ப்பொய்கை சூழ்,
தெண்திரைக் கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள்
விண்டு இரைத்த(ம்) மலரால் - திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி
கண்டு இரைத்து(ம்) மனமே! மதியாய், கதி ஆகவே!
vaNTu iraittu(m) matu vimmiya mA malarppoykai cUz,
teNtiraik koL punal vantu ozukum vayal cikkaluL
viNTu iraitta(m) malarAl-tikaz veNNeyppirAn aTi
kaNTu iraittu(m), manamE! matiyAy, kati AkavE!
பொருள்: வெண்ணெய்ப் பெருமானே! நீவிர் கோயில் கொண்டுள்ள திருச்சிக்கல் தலத்தில்
உள்ள பொய்கைகளில் மலர்கள் நிறைந்துள்ளன. வண்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
மலர்களில் உள்ள தேன் பெருகிப் பொய்கைகளிலும் வயல் வெளிகளிலும் நிறைந்து விளங்குகின்றது.
அதுபோல் நாங்களும் எங்கள் பிறவிப் பயனைப் பெற்றுச் சிறப்புறுகிறோம் என்க.
குறிப்புரை: இரைத்து- ஒலித்து. விம்மிய- மிக்குச் சொரிந்த. மாமலர்- தாமரைப்பூ. திரை-அலை,
விண்டு இரைத்து மலர்- திருமால் அருச்சனை செய்த (பத்திர புட்பங்கள்). இரைத்து-துதி செய்து,
மதியாய்- தியானிப்பாய். கதி- சிவகதி. ஆக- எய்தலாக ஆக மதியாய் என்க.
Civan, known as Lord of Butter stays Thiru-ch-chikkal, which is surrounded by
groves and ponds. Here the beetles' humming is always heard in its high pitch. Honey
spills from fragrant flowers and all the groves are filled with its profuse flow.
Here the crystal like pure water flows into the paddy fields. In such a rich and holy
place Vishnu worshipped Lord Butter's holy feet with 1000 flowers. Oh! You my mind !
worship and meditate on the holy feet of our Lord of Butter to get salvation from Him.
1553. முன்னுமாடம்மதில்மூன்றுடனேயெரியாய்விழத்
துன்னுவார்வெங்கணையொன்றுசெலுத்தியசோதியான்
செந்நெலாரும்வயற்சிக்கல்வெண்ணெய்ப்பெருமானடி
உன்னிநீடம்மனமேநினையாய்வினைஓயவே. 7
முன்னு மாடம் மதில்மூன்று உடனே எரிஆய் விழத்
துன்னு வார்வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான்,
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உன்னி நீட(ம்), மனமே! நினையாய், வினைஓயவே!
munnu mATam matil mUnRu uTanE eri Ay vizat
tunnu vArvegkaNai onRu celuttiya cOtiyAn,
cennel Arum vayal cikkal veNNeypperumAn aTi
unni nITa(m), manamE! ninaiyAy, vinai OyavE!
பொருள்: வெண்ணெய்ப் பெருமானே! நீவிர், உயர்ந்த மதில்களைக் கொண்ட முப்புரங்களைச்
சிரித்தே அழித்த பேராற்றல் பொருந்தியவர். நீவிர் கோயில் கொண்டுள்ள திருச்சிக்கல் தலத்தில்
செந்நெல் வயல்கள் பொருந்தியுள்ளன. உம்மையே நாங்கள் எங்கள் மனம் பொருந்த ஓதுவோம்.
வினை நீங்கப் பெறுவோமாக!
குறிப்புரை: துன்னுகணை, வார்கணை, வெங்கணை என்க. உன்னிநீட - தியானித்து அழியாது வாழ.
ஓய்தல் - தேய்ந்தொழிதல்.
Civan, the Lord of Thiru-ch-chikkal is known as Butter Perumaan. Once the
Devaas requested Him to protect them from the onslaught of the Asuraas. To save the
Devaas, He directed a powerful arrow which burnt completely all the three flying forts
of the Asuraas around their high palaces and ramparts. This Lord resides in Thiru-ch-chikkal
surrounded by rich, paddy fields. Oh! You mind! If you want to be relieved of previous
birth effects think of the Lord Butter, pray well and worship Him.
1554. தெற்றலாகியதென்னிலங்கைக்கிறைவன்மலை
பற்றினான்முடிபத்தொடுதோள்கள்நெரியவே
செற்றதேவன்நஞ்சிக்கல்வெண்ணெய்ப்பெருமானடி
உற்றுநீநினையாய்வினையாயின ஓயவே. 8
தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன், மலை
பற்றினான், முடிபத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன், நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உற்று,நீ நினையாய், வினைஆயின ஓயவே!
teRRal Akiya ten ilagkaikku iRaivan, malai
paRRinAn, muTipattoTu tOLkaL neriyavE,
ceRRa tEvan, nam cikkal veNNeyp perumAn aTi
uRRu, nI ninaiyAy, vinai Ayina OyavE!
பொருள்: வெண்ணெய்ப் பெருமானே! சிவபக்தனான இலங்கை வேந்தன் இராவணன்
தன்முனைப்பால் தவறிழைத்தான். உமது திருக்கயிலாய மலையினைத் தூக்க நினைந்து துன்புற்றான்.
அவனையும் இறுதியில் ஆட்கொண்டருளிய சிக்கல் பெருமானே! உம்மை எங்கள் மனம் பொருந்த
வழிபட்டு வினைகள் நீங்கப் பெறுவோமாக!
குறிப்புரை: தெற்றல் - அறிவில் தெள்ளியவன். நடைகற்ற தெற்றல் (திவ். பெரியதி.11.4.9.)
மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறிய புதுப்பொருள். அதற்கு ஆதாரமில்லை. இராவணன்
ஒழுக்கத்திற் பிழைத்தவனேயாயினும் அறிவிற் சிறந்தவன். செற்ற - (வலியை) அழித்த.
The great Civa devotee of Sri Lanka king Dasakreevan once got frustrated while
travelling in his airplane since the Himalayan mountain obstructed his journey. Despite
his knowledge he tried to move the mountain where Lord Civan and His consort resided,
a little aside to enable him to proceed on his way. Our Lord Butter of Thiru-ch-chikkal
slightly pressed with His toe the top of the mountain. Alas! Dasakreevan got crushed
with his ten heads and strong shoulders. He prayed to our Lord to forgive his wrongdoing.
He was pardoned by our Lord. Oh! you my mind, if you want to get relieved of evils,
always think of our Lord Butter and pray.
1555. மாலினோடருமாமறைவல்லமுனிவனும்
கோலினார்குறுகச்சிவன்சேவடிகோலியும்
சீலந்தாமறியார்திகழ்சிக்கல்வெண்ணெய்ப்பிரான்
பாலும்பன்மலர்தூவப்பறையுநம்பாவமே. 9
மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும்
கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும்
சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
பாலும் பல்மலர் தூவ,பறையும், நம் பாவமே.
mAlinOTu arumAmaRai valla munivanum
kOlinAr kuRuka, civan cEvaTi kOliyum
cIlam tAm aRiyAr; tikaz cikkal veNNeyp pirAn
pAlum palmalar tUva, paRaiyum, nam pAvamE.
பொருள்: வெண்ணெய்ப் பெருமானே! உம்மை உணராமல் திருமாலும், மறை ஓதும்
பிரமனும் உம்மைக் காண முயன்றனர். முடியாமல் தோற்றனர். நீரோ எல்லோருக்கும் அருள்
திருச்சிக்கல் தலத்துள் எழுந்தருளி உள்ளீர்! உம்மை அன்பால் பால் அபிடேகம் செய்து பூசித்தும்
மலரிட்டுப் போற்றிப் பூசனை செய்யும் நாங்கள் எங்களின் பாவங்கள் நீங்கப் பெறுவோமாக!
குறிப்புரை: மால்- திருமால். முனிவன்- பிரமன். சிவன் சேவடி குறுகக் கோலினார். கோலியும்
அறியார் என்க. கோலுதல்- வழி வகுத்தல். அடிமுடிதேட மாறிமுயலுதல். இங்குக் கோலுதலாம்.
சீலம்- பரமசிவன் மெய்த்தன்மை. பால்- பக்கம்- பசும்பாலும், மலரும் என்று உம்மைக் கூட்டிப்
பாலும் மலரும் என்க. பாலபிடேகம் புரிய. பறையும்- நீங்கும்.
Maha Vishnu and Brahma did their best pursue to see the holy feet and head of
Civa, but failed. But He is there in Thiru-ch-chikkal as Lord of Butter. If we worship
Him by giving Him a sacred bath with milk and offer at His holy feet various good flowers
our sins will vanish.
1556. பட்டைநற்றுவராடையினாரொடும்பாங்கிலாக்
கட்டமண்கழுக்கள்சொல்லினைக்கருதாதுநீர்
சிட்டன்சிக்கல்வெண்ணெய்ப்பெருமான்செழுமாமறைப்
பட்டன் சேவடியேபணிமின்பிணிபோகவே. 10
பட்டை நல்-துவர்ஆடையினாரொடும் பாங்கு இலாக்
கட்டு அமண்கழுக்கள் சொல்லினைக் கருதாது,நீர்,
சிட்டன், சிக்கல், வெண்ணெய்ப்பெருமான், செழுமாமறைப்
பட்டன், சேவடியே பணிமின், பிணி போகவே!
paTTai nal-tuvar ATaiyinAroTum pAgku ilAk
kaTTu amaNkazukkaL collinaik karutAtu, nIr,
ciTTan, cikkal veNNeypperumAn, cezumAmaRaip
paTTan, cEvaTiyE paNimin, piNi pOkavE!
பொருள்: வெண்ணெய்ப் பெருமானே! துவராடை கொண்ட சமணர்களும், சாக்கியர்களும்
உம்மை உணராமல் தேவையற்ற சொற்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் இன்னாத மொழிகளை நாங்கள் ஏற்க மாட்டோம். திருச்சிக்கல் தலத்தில் கோயில்
கொண்டுள்ள உமது திருவடிகளை இனிய மொழி கூறியே வழிபாடு செய்வோம். எங்களது
பிறவிப் பிணிகள் நீங்கப் பெறுவோமாக.
குறிப்புரை: பட்டை நற்றுவராடையினார் - சாக்கியர். துவர் - செந்நிறம். காவியேறியது.
பட்டை என்பது துவர்ப்பட்டை. நிறம் துணிக்கு ஊட்டும் வழக்கம் நினைவூட்டும். பாங்கிலாமை -
முறையற்ற பண்பு. கட்டு -உடற்கட்டு. கழுக்கள், கழுவேறுதற்குற்ற அபசாரம் செய்தவர்கள்.
அமண் - சமண், க்ஷமண் என்பதன் திரிபு. சிட்டன் - வேதாகமம் வல்ல பெருமான். சிட்டர்
வாழ்தில்லைச் சிற்றம்பலம் (தி. 1 ப. 80 பா 10) பட்டன் - புலவன். தன்னைத்தானே அருச்சித்தானாதலின்
அருச்சகன் எனினும் பொருந்தும். 'ஆலநிழற் பட்டன்' (திருப்பல்லாண்டு) என்றதால் ஆசாரியனுமாம்.
ஏகாரம் - பிரிநிலை. பிணி - பிறவிப் பெரும் பிணி முதலிய பலவுமாம்.
Oh! you staunch devotees, do not pay heed to the words of Buddhists who wear
ochre robes on their body and to those of the Jains who receive and eat their food from
their hands. You may come here to Thiru-ch-chikkal where our Lord of Butter, the
embodiment of the Vedas rules. Worship His holy feet with all sincerity and be rid of
the affliction of birth.
1557. கந்தமார்பொழிற்காழியுள்ஞானசம்பந்தனல்
செந்தண்பூம்பொழிற்சிக்கல்வெண்ணெய்ப்பெருமானடிச்
சந்தமாச்சொன்னசெந்தமிழ்வல்லவர்வானிடை
வெந்தநீறணியும்பெருமானடிமேவரே. 11
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன், நல்
செந் தண்பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வான்இடை
வெந்தநீறு அணியும் பெருமான் அடி மேவரே.
kantam Ar pozil kAziyuL njAnacampantan, nal
cen taNpUmpozil cikkal veNNeypperumAn aTic
cantamAc conna centamiz vallavar, vAn iTai
venta nIRu aNiyum perumAn aTi mEvarE.
பொருள்: வெண்ணெய்ப் பெருமானே! நறுமணம் மிக்க பொழில்களால் நிறைந்து விளங்கும்
சீர்காழிப் பதியில் அவதரித்த திருஞானசம்பந்தப் பெருமான், பொழில் சூழ்ந்த திருச்சிக்கல் தலத்தில்
கோவில் கொண்டுள்ள உம்மைச் செந்தமிழ் மணம் பொருந்தப் பாடியுள்ளார். அதனை நாங்கள் மனம்
பொருந்த இசையுடன் பாடி, உமது திருவடிகளை அடைவோமாக.
குறிப்புரை: சந்தம் - இசை. செந்தமிழ் - இத்திருப்பதிகத்தை உணர்த்திற்று. வான் - பேரின்ப வீட்டுலகு.
தேவாரத்தில் 'வான்' என்று வரும் இடங்களிற் பெரும்பாலும் இப்பொருளே கொள்ளல் வேண்டும்.
'வானிடை அடிமேவர்' என்றதால் துறக்கம் ஈண்டுப் பொருந்தாமை அறிக. 'கேடிலா வானுலகம்'
'தூயவிண்' 'வானசம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே' என்ற திருமுறை வசனங்களை நோக்குக .
Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi which is surrounded by many big gardens
of sweet smelling flowers. He ably recited these melodious blessed Tamil verses on Lord of Butter.
He stays in Thiru-ch-chikkal temple which is encircled by cool flowery gardens. Oh my mind!
concentrate on His holy feet and repeat the song of Thiru-gnana-Sambandar, you will then
reach the holy feet of our Lord of Butter smeared with white ashes, in heaven.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
8ஆம் பதிகம் முற்றிற்று
End of 8th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 145 பதிக எண்: 9
9.திருமழபாடி 9. THIRU-MAZHA-PAADI
பண் : இந்தளம் Pann: Indhalam
திருத்தல வரலாறு
சேரர் கிளையினராகிய மழவர் பாடி செய்து கொண்டிருந்தமையால் இப்பெயர் பெற்றது.
பாடி- தங்குமிடம். பாடி எனினும் பாசறை எனினும் ஒக்கும். சிவபெருமான் மழுநிர்த்தஞ் செய்த
தலமாதலால் மழுவாடி ஆயிற்று என்பர்.
இது திருவையாற்றிற்கு வடமேற்கே சுமார் 6 கி. மீ. தூரத்தில் கொள்ளிடப் பேராற்றின்
வடகரையில் இருக்கின்றது. அரியலூர், திருவையாறு, திருச்சியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
இது காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்று. இறைவரின் திருப்பெயர் வயிரத்தூண் நாதர்.
இத்திருப்பெயரை, இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான், "மலையடுத்த மழபாடி வயிரத்தூணே",
"மறை கலந்த மழபாடி வயிரத் தூணே" முதலான தொடர்களில் எடுத்து ஆண்டுள்ளனர். இதை வடமொழியில்
வஜ்ரஸ்தம்பேசுவரர் என்று கூறுவர். பிரமனுலகத்திருந்த சிவலிங்கத்தைப் புருஷாமிருகம் இங்குக் கொண்டு
வந்து எழுந்தருளுவித்தது. அதை மீளவும் கொண்டு போதற்காகப் பிரமதேவர் அதைப் பெயர்த்து எடுக்க முயன்றார்.
அதை எடுக்க முடியாத பிரமன், 'இது வயிரத் தூணோ' என்று வியந்தமையால் இப்பெயர் பெற்றது.
இறைவியாரின் திருப்பெயர் அழகம்மை. தீர்த்தம் கொள்ளிடப் பேராறு. தலவிருட்சம் பனை.
இந்திரன், திருமால் இவர்கள் வழிபட்டுப் பேறு எய்தினர். திருநந்தி தேவர் திருவையாற்றிலிருந்து
எழுந்தருளி- சுயசை அம்மையாரை மணஞ்செய்து கொண்ட தலம். சுந்தரமூர்த்தி நாயனார், திருவாலம்பொழிலில்
எழுந்தருளியிருக்க, மழபாடி இறைவன், அவரது கனவில் தோன்றி, 'மழபாடிக்கு வர மறந்தனையோ' என்று கூற,
உடனே சுந்தரர், 'பொன்னார் மேனியனே' என்று தொடங்கும் பதிகம் பாடி வழிபட்ட பதி. திருஞான சம்பந்தர்
பதிகம் மூன்று, திருநாவுக்கரசு நாயனார் திருத்தாண்டகப் பதிகம் இரண்டு, சுந்தர மூர்த்தி நாயனார்
பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்களைக் கொண்ட பெருமை உடையது. இத்தலத்திற்கு ஸ்ரீ கமலை ஞானப்
பிரகாச தேசிகர் அவர்களால் இயற்றப்பட்ட தலபுராணம் ஒன்று இருக்கின்றது. அது இனிய எளிய தமிழ் நூல்.
அச்சில் வெளிவந்துள்ளது. நந்தியெம்பெருமானின் திருமணத் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி
மாதத்தில் நடைபெறுகின்றது.
பதிக வரலாறு
கைத்தாளம் பெற்ற கவுணியர் பெருமான் நெய்த்தானப் பதியினின்று, திருமழபாடியைச் சேர்ந்து,
'மங்கைவாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள் பொங்கு மாதவமுடையார்' எனத்
தொழுது போற்றிசைத்துக் கோயிலுட் புக்கு வலங்கொண்டு வழிபட்டு வயிரமணித் தூணைக்
கும்பிட்டுப் பாடியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
1558. களையும்வல்வினையஞ்சல்நெஞ்சேகருதார்புரம்
உளையும்பூசல்செய்தானுயர்மால்வரைநல்விலா
வளையவெஞ்சரம்வாங்கியெய்தான்மதுத்தும்பிவண்
டளையுங்கொன்றையந்தார்மழபாடியுளண்ணலே. 1
களையும், வல்வினை: அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம்
உளையும் பூசல் செய்தான்; உயர்மால்வரை நல் விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் - மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.
kaLaiyum, valvinai; anjcal, nenjcE! karutAr puram
uLaiyum pUcal ceytAn; uyarmAlvarai nal vilA
vaLaiyA venjcaram vAgki eytAn--matut tumpivaNTu
aLaiyum konRai amtAr mazapATiyuL aNNalE.
பொருள்: மழபாடியுள் அண்ணலே! நீவிர் உம்மை வணங்காமல் பகைமை கொண்ட முப்புரத்து
அசுரர்களை மேருமலையை வில்லாக வளைத்து, சரமும் தொடுக்க முயன்று முடிவில் சிரித்தே அதனை
அழித்தருளிய பெருமைக்கு உரியவர் ஆவீர்! முப்புரம் அழித்தல் என்பது மும்மல அழிவுதானே! எனவே
நாங்கள் எங்கள் வினை நீக்குதல் பற்றி அஞ்சமாட்டோம். வண்டுகள் நிறைந்த கொன்றை மாலை
அணிந்த உம் திருவடிகளையே வணங்கி வினை நீங்கப் பெறுவோமாக!
குறிப்புரை: நெஞ்சே, அஞ்சல், வல்வினையை மழபாடி அண்ணல் களைவான் என்க. விற்பூட்டுப்
பொருள்கோள். கருதார் - பகைவர் (திரிபுரத்து அசுரர்). உளையும் - வருந்தும். பூசல் - போர்.
வரை- மேரு மலையாகிய வில். விலா- வில்லாக. சரம் - பாணம் (திருமாலாகிய கணை). மது-கள்,
தும்பி வண்டு - வண்டினங்கள். அளையும் - துழாவும். தார் -மாலை. மழபாடி-மழுவாடி என்பதன் மரூஉ
என்பர். அண்ணல் -பெருமான்.
Oh! My heart; you need not be afraid of the evils of the previous karma. Why should you?
Here is our great Lord of Thiru-mazha-paadi. Do not you know His ability? He bent the high Meru
mountain as a bow and shot an arrow and destroyed the three great forts of Asuraas. He is garlanded
with the nectarfilled cassia flowers with bees meddling inside. He is our saviour. Therefore
worship Him without fear of karma.
1559. காச்சிலாதபொன்னோக்குங்கனவயிரத்திரள்
ஆச்சிலாதபளிங்கினனஞ்சுமுன்னாடினான்
பேச்சினாலுமக்காவதென்பேதைகாள்பேணுமின்
வாச்சமாளிகைசூழ்மழபாடியைவாழ்த்துமே. 2
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள்
ஆச்சிலாத பளிங்கினன்; அஞ்சும் முன் ஆடினான்;
பேச்சினால் உமக்கு ஆவது என்? - பேதைகாள்; பேணுமின்!
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே:
kAccilAta pon nOkkum kana vayirattiraL
AccilAta paLigkinan; anjcum mun ATinAn;
pEccinAl umakku Avatu en?--pEtaikAL, pENumin!
vAcca mALikai cUz mazapATiyai vAzttumE!
பொருள்: மழபாடி அண்ணலே! நீவிர் ஒளிமிக்க பொன்னும், உறுதியான வைரமும், தெளிந்த
பளிங்கும் போன்று விளங்குகின்றீர்! பஞ்ச கவ்வியத்தை விரும்பி ஆடுகின்றீர்! வாசனைமிக்க மழபாடித்
திருத்தலத்தில் உறைகின்றீர்! உம்மை வாழ்த்துவது ஒன்றே எம் வாழ்வின் பயனாம் என்க.
குறிப்புரை: பேதைகாள் - அறிவிலிகளே. பேச்சினால் - சிவசம்பந்தமில்லாத அவப்பேச்சால். உமக்கு -
ஆவதென்- உமக்கு ஆவது யாது? மழபாடியைப் பேணுங்கள். வாழ்த்துங்கள் என்க. காய்ச்சு- தீயிலிட்டுச் சுடல்.
காய்ச்சிலாத- காய்த்தல் இல்லாத. காய்ச்சு - காச்சு. முதனிலைத் தொழிற்பெயர். பிள்ளைத்தாய்ச்சி - பிள்ளைத்தாச்சி
என்பது போல மருவிற்று. காய்ச்சப் பெறாத இயற்கையில் ஒளிரும் பொன் என்றபடி. பொன்- தேவியார்.
நோக்கும்- பார்க்கும். கன வயிரத்திரள் - இறைவன் திருத்தோள்களைக் குறித்த உவமையாகுபெயர்.
இறைவன் திருநாமம் வச்சிரத்தம்ப நாதர் என்பதாகும். மகளிர்க்கு ஆடவர் தோள் நோக்கலும், ஆடவர்க்கு
மகளிர் கொங்கை நோக்கலும் இயல்பு (பார்க்க: கம்பர், மிதிலைக் காட்சிப் பா.36). ஆய்தல் - நுணுக்கம்.
ஆய்த்தல் - நுணுக்கம் புரிதல். பளிங்கு - தன்பாற் பட்டதை நுணுக்கஞ் செய்யாது புறத்தே விளங்கச் செய்வது.
அதனால் ஆச்சிலாத பளிங்கு என்றனர். சிவபெருமானைத் 'தெளிவளர் பளிங்கின் திரள்மணிக்குன்றே' என்றார்
திருமாளிகைத் தேவர். அஞ்சு- ஆனைந்து. ஆடினானது மழபாடியை என்க. வாச்ச - (இலக்கணமெல்லாம்) வாய்க்க.
Oh! You the ignorant devotees! what is the use of mere chatting? Come and praise our Lord
at Mazhapadi temple surrounded by palaces. He is like unmelted pure gold. He is also like hard
diamond heap. Also He is like a huge crystal devoid of impurity. He is pleased to be bathed
with the five things collected from the cow such as milk, curd, ghee, cow's urine and cow dung.
You devotees always praise His name.
1560. உரங்கெடுப்பவனும்பர்களாயவர்தங்களைப்
பரங்கெடுப்பவன்நஞ்சையுண்டுபகலோன்றனை
முரண்கெடுப்பவன்முப்புரந்தீயெழச்செற்றுமுன்
வரங்கொடுப்பவன்மாமழபாடியுள்வள்ளலே. 3
உரம் கெடுப்பவன், உம்பர்கள் ஆயவர் தங்களை;
பரம் கெடுப்பவன், நஞ்சை உண்டு; பகலோன் தனை
முரண் கெடுப்பவன்: முப்புரம் தீ எழச் செற்று, முன்,
வரம் கொடுப்பவன் - மா மழபாடியுள் வள்ளலே.
uram keTuppavan, umparkaL Ayavar tagkaLai;
param keTuppavan, nanjcai uNTu pakalOntanai
muraN keTuppavan, muppuram tI ezac ceRRu, mun,
varam koTuppavan--mA mazapATiyuL vaLLalE.
பொருள்: மழபாடி வள்ளலே! நீவிர் பகைமை கொண்டவர்களை அழிப்பவர் ஆவீர். ! வணங்கியவர்களுக்கு
உரம் கொடுப்பவர் ஆவீர்! சூரியனின் பற்களை உடைத்து முப்புரங்களையும் எரித்தவர் ஆவீர்! நஞ்சை உண்டு
உலகைக் காத்தவர் ஆவீர். மழபாடி வள்ளலே! உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம்.
குறிப்புரை: உரம் - வலிமை. உம்பர்கள் - தக்கன் வேள்வியிற் கலந்த தேவர்கள். பரம் - தேவத்தன்மை. திவ்வியம்.
பகலோன் முரண் கெடுப்பவன் - சூரியன் பல்லைத் தகர்த்தவன். வரம் - மூவர்க்குத் தந்த வரம். வள்ளல்- எவ்வுயிர்க்கும்
எப்பொருளும் எப்பொழுதும் அருள்வோன். மழபாடிப் பெருமானது திருநாமம் வள்ளல் என்பதும் (தி. 2 ப. 9 பா. 4, 8, 11)
வயிரத்திரள் (தி. 2 ப. 9 பா. 2) என்பதும் ஆதலறிக.
Civan, residing in the temple at Thiru-mazha-paadi, is called Vaidianaathar. He destroyed
the three flying fortresses of the Asuraas by holding the big majestic Meru mountain on His head
as His bow and shot at the fortresses and destroyed everyone of them along with their palaces.
However He saved the three Asuraas who worshipped Him always. They were known as
1. Thaarakashan (Sudarman)
2. Kamalakshan (Suneethi)
3. Vidyunmaali (Subuththi)
Lord Vaidyanathar gave the three their second names and kept them in His temple as entrance
bodyguards and the third one as a drum musician for Him. Civan eliminated all demons and others
during Thakkan's ablations in his sacrificing hall through Veerabadran His guard. It is He who
drank the poison from sea of milk and saved the Devaas and the whole humanity. He subdued the
brightness of the sun god. Ye! He blesses all who bow at His feet and pray forever.
1561. பள்ளமார்சடையிற்புடையேயடையப்புனல்
வெள்ளமாதரித்தான்விடையேறியவேதியன்
வள்ளல்மாமழபாடியுள்மேயமருந்தினை
உள்ளமாதரிமின்வினையாயினஓயவே. 4
பள்ளம் ஆர் சடையில் புடையே அடையப் புனல்
வெள்ளம் ஆதரித்தான், விடை ஏறிய வேதியன்,
வள்ளல், மழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரிமின் வினை ஆயின ஓயவே!
paLLam Ar caTaiyin puTaiyE aTaiyap punal
veLLam AtarittAn, viTai eRiya vEtiyan,
vaLLal, mA mazapATiyuL mEya maruntinai
uLLam Atarimin, vinai Ayina OyavE!
பொருள்: மழபாடி வள்ளலே! நீவிர் விடையின்மீது அமர்ந்து அருளுவீர். சடையில் கங்கையைத்
தாங்கி அதற்கும் சிறப்பு அருளுவீர்! திருமழபாடியுள் அமர்ந்த அண்ணலாகிய உமது திருவடிகளை
நாங்கள் வணங்கி எங்கள் வினை நீங்கப் பெறுவோமாக!
குறிப்புரை: பள்ளம்- சடைமுடி நடுவிற்பொருந்திய குழிவு. பள்ள மார்புனல் வெள்ளம் (கங்கைப் பெருக்கம்)
எனலுமாம். மேய- மேவிய . விரும்பிய. மருந்து - பிறவிப் பிணிக்கொரு பெருமருந்து. உள்ளம் - மனம்.
ஆதரிமின் - விரும்புங்கள். வாயாலுண்ணும் மருந்தன்று."உன்னுமுள தையமிலதுணர்வாய் ஓவாது மன்னுபவம்
தீர்க்கும் மருந்து" (திருவருட்பயன் 10) என்றபடி நினைக்கும் மருந்து.
Oh Lord of Thiru-mazha-paadi! You ride on Your bull and roam all over the cosmos blessing
one and all. You have kept the lady of powerful water, the Ganges on Your matted hair. He is the
embodiment of Vedic knowledge. He is the most benevolent, the great medicine - for sufferings of
humanity, as His name Vaidyanaathar suggests. Oh! You devotees if you want to be relieved of all
evils you may meditate the holy feet of the Lord of Thiru-mazha-paadi.
1562. தேனுலாமலர்கொண்டுமெய்த்தேவர்கள்சித்தர்கள்
பால்நெயஞ்சுடனாட்டமுன்னாடியபால்வணன்
வானநாடர்கள்கைதொழுமாமழபாடியெங்
கோனைநாள்தொறுங்கும்பிடவேகுறிகூடுமே. 5
தேன்உலா மலர் கொண்டு, மெய்த்தேவர்கள், சித்தர்கள்,
பால்நெய்அஞ்சு உடன்ஆட்ட, முன் ஆடிய பால்வணன்
வானநாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே, குறி கூடுமே.
tEn ulAm malar koNTu, meyt tEvarkaL, cittarkaL,
pAl ney anjcu uTan ATTa, mun ATiya pAlvaNan-
vAna nATarkaL kaitozu--mA mazapATi em
kOnai nALtoRum kumpiTavE, kuRi kUTumE.
பொருள்: மழபாடி அண்ணலே! தேன்நிறைந்த மலர் கொண்டு உம்மைத் தேவர்களும் சித்தர்களும்
வணங்குகிறார்கள். பால், நெய் முதலிய பஞ்சகவ்வியம் கொண்டு அபிஷேகம் செய்து, போற்றி வழிபடுகிறார்கள்.
நாங்களும் அவர்களைப் போன்று, உம்மைப் போற்றி வணங்கி உம் திருவடிப் பேற்றை அடைவோமாக!
குறிப்புரை: மெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன்செரியும் பூக்களைக் கொண்டு பாலும் நெய்யும்
தயிருமாகிய ஆனைந்தும் அபிடேகிக்க ஆடிய பால்வண்ணன். ஆடிய - அபிடேகிக்கப் பெற்ற. நடனமாடிய
வானநாடர்கள்- துறக்கத்தில் வாழ்பவர்கள். அம்மெய்த் தேவர் வேறு இவர் வேறு. கோன் - தேவாதி தேவேசன்.
குறிகூடல்- 'அறிவதொரு குறி குருவினருளினா லறிந்து மன்னு சிவன்றனை யடைந்து நிற்றலும்,
'குறியொடு தாம் அழியும் நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுத'லும் பின்பு வாய்ப்பன.'குறியதனால்
இதயத்தே அரனைக்கூடு'தலே ஈண்டுக் குறித்தது. ''அருள் ஞானக்குறியில் நின்று கும்பிட்டுத் தட்டம்
இட்டுக் கூத்தாடித் திரி” என்று விதித்தமை உணர்க.
Behold! It is Civan the Lord of Thiru-mazha-paadi who is given His sacred bath by
angels and sages with milk and ghee and other things five collected from the cow. They bring
nectarfilled of flowers also and offer them at His holy feet. All the celestials raise their
hands and offer their prayers. Ye devotees! if you also do so it is certain that you will
get salvation.
1563. தெரிந்தவன் புரமூன்றுடன்மாட்டியசேவகன்
பரிந்துகைதொழுவாரவர்தம்மனம்பாவினான்
வரிந்தவெஞ்சிலையொன்றுடையான்மழபாடியைப்
புரிந்துகைதொழுமின்வினையாயினபோகுமே. 6
தெரிந்தவன்,புரம்மூன்று உடன்மாட்டிய சேவகன்,
பரிந்து கைதொழுவார் அவர்தம் மனம் பாவினான்,
வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான், மழபாடியைப்
புரிந்து கைதொழுமின்! வினை ஆயின போகுமே.
terintavan, puram mUnRu uTanmATTiya cEvakan,
parintu kaitozuvAr avartam manam pAvinAn,
varinta venjcilai onRu uTaiyAn, mazapATiyaip
purintu kaitozumin! vinai Ayina pOkumE.
பொருள்: மழபாடி அண்ணலே! நீவிர் முப்புரங்கள் மூன்றையும் ஒன்றாக அழித்தவர். அன்பு கொண்ட
அடியவர்களின் உள்ளங்களில் பொருந்தியவர். மேரு மலையை வில்லாக வளைத்த பேராற்றலை உடையவர்.
மழபாடியுள் பொருந்தியுள்ள உம்மைத் தொழுது நாங்கள் எங்களுடைய வினைகள் நீங்கப் பெறுவோமாக!
குறிப்புரை: தெரிந்தவன்- சருவஞ்ஞன். முற்றுணர்வுடையவன். தெரிந்த வன்மை, புரம் என்றல் அமையாது.
மாட்டிய - மாள்வித்த, தீயை மாட்டிய எனலுமாம். சேவகன் - வீரன், பரிந்து- அன்பு கொண்டு. பாவினான் - பரவியவன்.
வரிந்த - கட்டிய. சிலை- மேருவில். புரிந்து - விரும்பி வினையாயின- பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்னும்
மூன்றும், அவற்றின் உட்பட்ட பல்வகையும் ஆகிய கர்மங்கள்.
Behold! It is Civan the Lord of Thiru-mazha-paadi who like a valiant soldier had
a mountain bow in His hand and burnt the three flying fortresses of the Asuraas and
destroyed them and helped devaas to be saved from the onslaught of Asuraas, He
abides in the hearts of His devotees who pray to Him with all sincerity. You the
devotees - if you want to be relieved of all the three sorts of karma bow at His feet
with all earnestness.
1564. சந்தவார்குழலாளுமைதன்னொருகூறுடை
எந்தையானிமையாதமுக்கண்ணினனெம்பிரான்
மைந்தன் வார்பொழில்சூழ்மழபாடிமருந்தினை
சிந்தியாவெழுவார்வினையாயின தேயுமே. 7
சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு உடை
எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான்,
மைந்தன், வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை
சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே.
canta vArkuzalAL umai tan oru kURu uTai
entaiyAn, imaiyAta mukkaNNinan, empirAn,
maintan, vAr pozil cUz mazapATi maruntinaic
cintiyA ezuvAr vinai Ayina tEyumE.
பொருள்: மழபாடி அண்ணலே! நீவிர் மணமிக்க கூந்தலைக் கொண்ட உமையாளை உடம்பின்
ஒருபாகமாகக் கொண்டவர் ஆவீர்! எங்களுக்குத் தந்தை ஆவீர்! மூன்று திருக்கண்களைக் கொண்டவர் ஆவீர்!
சோலைகள் நிறைந்த திருமழபாடித் தலத்துள் பொருந்தி இருப்பவர் ஆவீர்! வைத்திய நாதராகிய
உம்மை,மனமொழி மெய்கள் பொருந்தத் தொழுது எங்களது வினைகள் நீங்கப் பெறுவோமாக.
குறிப்புரை: சந்தம் - அழகு. வார் - நீளம், ஒழுகுதல். கூறு - இடப்பால். எந்தையான் - எம் அப்பன்.
முக்கண்ணினன் - சோம சூரியாக்கினி நேத்திரங்களை உடையவன். மழபாடி மருந்து - திருமழபாடியில்
உள்ள பவரோக வைத்தியநாதன். இம்மருந்து உடற்கின்றி உயிர்க்காதலின், உண்ணலின்றி உன்ன
நினைத்தலுக்குரியதால் எழுவார் என்றார். சிந்தியா -சிந்தித்து, நினைத்து, செய்யா என்னும்
வாய்பாட்டிறந்தகால வினையெச்சம். வடசொற் பகுதியடியாகப் பிறந்தது.
It is Civa, the Lord of Thiru-mazha-paadi. Our Lord shares His body with His consort
Umaa of fragrant hair. He is our Father. He has three winkless eyes. The third one is in His
forehead. He is the great God of, medicine of sinlessness. Those who contemplate on His
greatness and pray to Him will shed off the evil effects of karma.
1565. இரக்கமொன்றுமிலானிறையான்திருமாமலை
உரக்கையாலெடுத்தான்றனதொண்முடிபத்திற
விரற்றலைந்நிறுவியுமையாளொடுமேயவன்
வரத்தையே கொடுக்கும்மழபாடியுள் வள்ளலே. 8
இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலை
உரக்கையால் எடுத்தான் தனது ஒண் முடிபத்து இற
விரல்-தலை(ந்) நிறுவி, உமையாளொடு மேயவன் -
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே.
irakkam onRum ilAn, iRaiyAn tirumAmalai
urak kaiyAl eTuttAn tanatu oN muTipattu iRa
viral-talai(n) niRuvi, umaiyALoTu mEyavan
varattaiye koTukkum mazapATiyuL vaLLalE.
பொருள்: மழபாடி வள்ளலே! இரக்கமற்ற இராவணன் உமது கயிலை மலையைத் தனது
ஆற்றலால் எடுக்க முயன்றான். அவனது பத்துத் தலைகளும் துன்பம் அடைய நீவிர் உமது
திருவிரலை ஊன்றினீர்! இறுதியில் அருளும் புரிந்து உமையாளோடு பொருந்தி விளங்கினீர்.
அருளும் உம்மை நாங்கள் வணங்கி மகிழ்வோமாக.
குறிப்புரை: இரக்கம் - பக்தி. இறையான்- சிவபிரான். மலை - கயிலாயம். உரம் - வலிமை.
இலான், எடுத்தான், மேயவன் மூன்றும் வினையாலணையும் பெயர்கள். ஒள்முடி - ஒளியுடைய முடிகள்.
இற- இற்றொழிய. விரல்- ஈண்டு. காற்பெருவிரல் மட்டும். நிறுவி- ஊன்றி, ஊன்றியதும் கருணைப்
பொருட்டாதலை வரத்தையே கொடுக்கும் என்றதாலறிக (தி.2. ப.9.பா.3, 4, 8, 11) வள்ளல் என்றதும்
'வரங்கொடுப்பவன்' 'வரத்தையே கொடுப்பான்' என்றதும் அறியின், சிவதலயாத்திரைக் கருத்தும்
பயனும் விளங்கும்.
Behold! It is Civan who is in the temple at Thiru-mazha-paadi. The king of Sri Lanka,
great devotee of Lord Civan, once became merciless and demonish in habits. He tried to lift
mount Kailash without minding Lord Civan and His consort who stayed on the mountain top.
Lord Vaidyanaathar pressed His toe slightly on the hill. The ten heads and shoulders of
Raavanaa got crushed. He realised his fault and cried. Then he prayed to our Lord who
bestowed His mercy on him along with goddess Uma. He is our Lord at Thiru-mazha-paadi,
who always gives boons along with His consort to His devotees.
1566. ஆலமுண்டமுதம்மரர்க்கருளண்ணலார்
காலனாருயிர்வீட்டியமாமணிகண்டனார்
சாலநல்லடியார் தவத்தார்களுஞ்சார்விடம்
மாலயன் வணங்கும்மழபாடியெம்மைந்தனே. 9
ஆலம் உண்டு அமுதம்(ம்) அமரர்க்கு அருள் அண்ணலார்,
காலன் ஆர்உயிர் வீட்டிய மா மணிகண்டனார் -
சால நல் அடியார் தவத்தார்களும் சார்வுஇடம்
மால் அயன் வணங்கும், மழபாடி எம் மைந்தனே.
Alam uNTu amutam(m) amararkku aruL aNNalAr,
kAlan Ar uyir vITTiya mA maNikaNTanAr-
cAla nal aTiyAr tavattArkaLum cArvu iTam,
mAl ayan vaNagkum, mazapATi em maintanE.
பொருள்: மழபாடி மாமணியே! நீவிர் ஆலத்தை உண்டு அமுதத்தை வழங்கியவர்!.
காலனைக் காலால் உதைத்து அருளியவர்! விடத்தைக் கண்டத்தில் அடக்கிய நீலகண்டர்!.
அன்புடை அடியார்களாலும் தவத்தோர்களாலும் வணங்கப் பெற்றவர். திருமாலும் பிரமனும்
தேவர்களும் போற்றும் உம்மை நாங்களும் போற்றி வணங்குவோமாக.
குறிப்புரை: தான் உண்டது நஞ்சு. அமரர் (தேவர்)க்கு அருளியது அமுதம். ஆயினும் நஞ்சின்
பயனாம் இறப்புத் தனக்கில்லை. அமுதத்தின் பயனாம் வாழ்வு அத்தேவர்க்கு இருக்கின்றது. இதனால்
உயிர்களின் வாழ் முதல் இறைவன் என்னும் சிவபரத்துவம் இனிது விளங்கும். தன்னைப் புகலடைந்தவர்க்கு
மரணபயம் போக்கும் ஆற்றல் உடையவன் என்னும் வாய்மைக்குக் காலகாலன்' 'நீலகண்டன்' என்ற
திருநாமமே சான்றாம் என்பார். ‘காலனாருயிர் வீட்டிய மாமணி கண்டனார்' என்றார். அடியவர்க்குளதாகும்
நலத்தை அளவிடலரிதென்பதை, 'சால நல்லடியார்' என்று விளக்கினார். தவத்தார்களும் என்றதால்
அடியார்களும் என்க. சார்விடம்- புகலிடம் (சரணாகதி ஸ்தானம்). மைந்தனே- சிவபெருமானே.
அடியார் - திருவடி அடைந்தவர். தவத்தார் அடி அடையத் தவஞ்செய்பவர். தவம்- சரியை, கிரியை,
யோகம், அடி - ஞானம். மால் - திருமால். அயன் - பிரமன்.
Behold! It is Civan the Lord of Thiru-mazha-paadi who drank the dreaded poison,
but gave the nectar to the celestials. His neck is beautiful with the bluish poison.
He gave death to the god of death. His holy feet are worshipped by staunch devotees
and men of penance. Vishnu and Brahma also worshipped Him. He is our Lord of Thiru-mazha-paadi.
1567. கலியின்வல்லமணுங்கருஞ்சாக்கியப்பேய்களும்
நலியுநாள்கெடுத்தாண்ட என் நாதனார் வாழ்பதி
பலியும்பாட்டொடுபண்முழவும்பலவோசையும்
மலியுமாமழப்பாடியைவாழ்த்திவணங்குமே. 10
கலியின் வல்அமணும், கருஞ்சாக்கியப்பேய்களும்,
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண் முழவும், பலஓசையும்,
மலியும் மழபாடியை வாழ்த்தி வணங்குமே.
kaliyin val amaNum, karunjcAkkiyappEykaLum,
naliyum naL keTuttu ANTa en nAtanAr vaz pati-
paliyum pATToTu paN muzavum, palaOcaiyum,
maliyum-mA mazapATiyai vAztti vaNagkumE!
பொருள்: மழபாடி அண்ணலே! நீவிர் வலிமை பொருந்திய சமணர்களும் சாக்கியர்களும்
அடியவர்களுக்குக் கொடுமை புரிந்த காலத்தில் அருள்புரிந்து காத்தீர்! பண்ணும் பாட்டும் பொருந்திட
உம் புகழை நாங்கள் பாடி எங்களையே அர்ப்பணிப்போம். அருள்புரிவீராக!
குறிப்புரை: கலி - துன்பம். இங்குத் துன்பஞ் செய்தலைக் குறித்தது. அமண் - சமணர். நலியும் நாள் -
தமிழ் நாட்டு மக்களை வருத்திய காலத்தில். கெடுத்து - அவ்வருத்தத்தைப் போக்கி, ஆண்ட - சைவத்தை
நிலைநாட்டிப் பரவச் செய்து சிவநெறியிற் புகுத்திய, 'என்நாதனார்' என்றது இங்கு மிக்க பொருத்தமாகி
இவர் திருவருளை முன்னிட்டுப் பரசமய நிராகரணம் புரிந்த உண்மையை விளக்குகின்றது. திருமழபாடியில்
பலி, பாட்டு, பண், முழவு, பலவோசை எல்லாம் மலிந்திருந்தன என்பதால் அக்காலத்துச் சிவாலய பரிபாலன
மகிமையை அறியலாம். வாழ்த்தி வணங்கும் என்றது முன்னிலைப் பன்மை ஏவல்வினை
(பார்க்க. திரு. 2 ப 9. பா.2,4,6).
Behold! It is Civan the Lord of Thiru-mazha-paadi who protected this world and the
people when these Jains and Buddhists tortured His followers. He is our Supreme, chased the
alien elements and established the saivite code. He is in the temple at Thiru mazha-paadi,
which is a very holy place. Here the prayer song, musical rhythms, percussion sounds typical
of saivism are all incessant. Let us pray to the Lord, praise Him and bow at His holy feet.
1568. மலியுமாளிகைசூழ்மழபாடியுள்வள்ளலைக்
கலிசெய்மாமதில்சூழ்கடற்காழிக்கவுணியன்
ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்
..................................................................உலகத்திலே 11
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழிக் கவுணியன்,
ஒலிசெய் பாடல்கள் பத்துஇவை வல்லார்
.....................................................................உலகத்திலே
maliyum mALikai cUz mazapATiyuL vaLLalaik
kalicey mA matil cUz kaTal kAzik kavuNiyan,
olicey pATalkaL pattu ivai vallAr.......
................................ulakattilE.
பொருள்: மழபாடி அண்ணலே! நீவிர் மாடங்கள் நிறைந்த மழபாடியுள் கோயில் கொண்டுள்ளீர்.
உம்மை மதில் சூழ்ந்த சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் பாடியுள்ளார்.
அவரது திருப்பாடல்களை நாங்கள் மகிழ்ந்து பாடுவோம். எங்களது வினைகள் திண்ணமாக நீங்கும் என்க.
குறிப்புரை: மழபாடி, மாளிகைச் சிறப்புடையதென்று இரண்டாவது திருப்பாடலிலும் கூறினார்.
கலி- வலிமை. எழுச்சி. கவுணியன் - கௌண்டின்ய கோத்திரத்தான்.
These verses were sung by Thiru-gnana-Sambandar who hails from Seerkaazhi a city with
seashore and strong fortress. The Vaidyanaathar temple in Thiru-mazha paadi is surrounded
by tall palaces. Thiru-gnana-Sambandar born in gothra sect sang on Vaidyanaathar of the palace.
We will be rid of our sins when we sing these hymns with joy.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
9ஆம் பதிகம் முற்றிற்று
End of 9th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 146 பதிக எண்: 10
10. திருமங்கலக்குடி 10. THIRU-MANGALAK-KUDI
பண் : இந்தளம் Pann: Indhalam
திருத்தல வரலாறு
திருமங்கலக்குடி என்னும் இத்திருத்தலம் மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப்
பாதையில், ஆடுதுறைத் தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே சுமார் 4.5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
ஆடுதுறையிலிருந்து - திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகளில் இவ்வூரை அடையலாம். காவிரி
வடகரைத் தலங்களுள் ஒன்று. இறைவரது திருப்பெயர் புராணேசுவரர். இத்திருப்பெயர், இவ்வூர்ப்
பதிகம் முதல் திருப்பாட்டில்,
'நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித்தாட்டி யர்ச்சிக்க விருந்த புராணனே'
என ஞானசம்பந்தரால் எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலுள்ள வரலாறு குறிப்புரையில் உணர்த்தப் பட்டது.
இறைவியாரது திருப்பெயர் மங்கள நாயகி. தீர்த்தம் காவிரி. காளி, சூரியன், திருமால்,பிரமன்,
அகத்தியர் இவர்களால் அர்ச்சிக்கப் பெற்றது. இச்செய்தி,
'மங்க லக்குடி யீசனை மாகாளி
வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணுநேர்
சங்கு சக்கர தாரி சதுமுகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே'
என்னும் இவ்வூர்க்கு உரிய அப்பர் பெருமானின் குறுந்தொகைப் பாடலால் தெரிகின்றது. இத்தலத்திற்கு
ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் உள்ளன.
பதிக வரலாறு
திருக்கஞ்சனூர், திருமாந்துறை இரண்டையும் வழிபட்டு மீண்டும் திருமங்கலக்குடியை அடைந்து
பாடியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
1569. சீரினார்மணியும்மகில்சந்துஞ்செறிவரை
வாரிநீர்வருபொன்னிவடமங்கலக்குடி
நீரின்மாமுனிவன்நெடுங்கைகொடுநீர்தனைப்
பூரித்தாட்டியர்ச்சிக்கவிருந்தபுராணனே. 1
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.
cIrin Ar maNiyum(m) akil cantum ceRi varai
vAri nIr varu ponni vaTamagkalakkuTi,
nIrin mA munivan neTugkaikoTu nIr tanaip
pUrittu ATTi arccikka irunta purANanE.
பொருள்: வடமங்கலக்குடி எம்பெருமானே! ஒளி மிக்க மணி, அகில், சந்தனம் ஆகியவற்றை மலையிலிருந்து
உருட்டிக் கொண்டு வரும் காவிரியாற்றின் கரையில் உள்ள பதியே திருமங்கலக்குடியாகும். அவ்வூரில் முன்னொரு
காலத்தில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அக்காவிரி நீற்றைக் கங்கை பொருந்திய உமது தலையில் ஊற்றிப் பூசித்துச்
சிறந்தார் என்பர். எந்த நீரையும் ஏற்றருளும் பெருமானே நீரே எம் தலைவர் ஆவீர்!
குறிப்புரை: சீர் - கனம், புகழ், மணியும் அகிலும் சந்தனமும் மிக்குள்ள மலை. சந்து - சந்தனம் . வரை-மலை.
வாரி - வெள்ளம். பொன்னி - காவிரி. பொன்னி வடமங்கலக்குடி - ஆற்றின் வடகரையிலுள்ள தலம். இத்தலத்தில்
வாழ்ந்த முனிவர் ஒருவர் சிவபூசைக்குரிய திருமஞ்சனநீரை அமர்ந்த வண்ணமே திருக்கைகளை நீட்டி,
ஆற்று நீரை முகந்து அபிடேகம் புரிந்தார் என்பது வரலாறு. அவ்வுண்மையை முதற்றிருப் பாட்டில்
உணர்த்தியருளியதால் ஆசிரியர் திருவுள்ளக் கிடக்கையில் அது முந்தி நின்றவாறறியலாம். ஆற்றினளவும்
நீண்டதால் 'நெடுங்கை' என்றார். பூரித்து - நிறைத்து. ஆட்டி- அபிடேகித்து. அர்ச்சிக்க- அருச்சனைபுரிய.
புராணன்- முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்
அப்பெற்றியன் என்னும் இருபொருளும் தருமாறு பிரிக்கப்படும் வடசொல்.
It is Civan, the Lord of Vada-mangalak-kudi who is on the northern bank of the river Cauvery.
This is a holy place where the river Ponni (Cauvery) brings in abundance bright rich gems, eaglewood
and sandalwood from rich mountains. Civan, the Lord of this temple is called Purana-varatheswarar.
In olden days a great sage brought the Cauvery water in his palm by stretching his hand to the river
and gave the sacred bath daily to the Lord of this place. Our Lord was very pleased by the bath given
by the old sage and blessed him.
1570. பணங்கொளாடரவல்குல்நல்லார்பயின்றேத்தவே
மணங்கொள்மாமயிலாலும்பொழில்மங்கலக்குடி
இணங்கிலாமறையோரிமையோர்தொழுதேத்திட
அணங்கினோடிருந்தானடியேசரணாகுமே. 2
பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே,
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி,
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட,
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே.
paNam koL ATu aravu alkul nallAr payinRu EttavE,
maNam koL mA mayil Alum pozil magkalakkuTi,
iNagku ilA maRaiyOr imaiyOr tozutu EttiTa,
aNagkinOTu iruntAn aTiyE caraN AkumE.
பொருள்: வடமங்கலக்குடி எம்பெருமானே! அழகுமிக்க பெண்கள் நாள்தோறும் திருக்கோவில்
வந்து உம்மை வழிபடுகிறார்கள். திருக்கோயிலைச் சுற்றி மயில்கள் ஆடும் மங்கலக்குடியில் கோயில்
கொண்டுள்ளீர். திருமாலும் பிரமனும் தேடியும் காண முடியாத உம்மை இந்த நகரில் வாழும் மறையோதும்
அந்தணர்களும் தேவர்களும் நெருங்கி நாளும் வணங்குகின்றனர். உமாதேவியுடன் பொருந்தி விளங்கும்
உம்மை நாங்களும் வணங்கி உமது அடியைச் சரணடைவோமாக.
குறிப்புரை: பணம் - அரவின் படம். நல்லார் - பெண்டிர். மணம் கொள் பொழில் - வாசனை கொண்ட
சோலை. ஆலும் - ஆடும். இணங்கிலா மறையோர் என்பதிலும், இணங்கிலாமை மறைகட்குரிய அடைமொழியே
ஆகும். மறைகள் மெய்ப்பொருளை அறிந்து இணங்காதன. ஆரணம் அறியா அரும்பெருங்கடவுள் பரமசிவன்
என்பதும் அவன் 'இணங்கிலி' (திருவாசகம் 389) என்பதும் பிரசித்தம். இமையோர் - இமைகொட்டாத வானோர்.
விழித்தகண் குருடாய்த் திரிவீரராகிய யோகியருமாம். அணங்கு - உமையம்மையார். சரண் - கதி, புகல்.
Civan the Lord of Vada-mangalak-kudi known as Piranavaratheswarar is in the temple
along with His consort Umaa Devi. To this holy place of groves with dancing peacock,
beautiful damsels came daily and worship Him for the betterment of their life. The Lord
could not be searched and seen by Thirumaal and Brahma. However,the Vedic scholars of this
place as well the celestials could see Him and worship Him here. Ye devotees bow at His
holy feet.
1571. கருங்கையானையினீருரிபோர்த்திடுகள்வனார்
மருங்கெலாமணமார்பொழில்சூழ்மங்கலக்குடி
அரும்புசேர்மலர்க்கொன்றையினானடியன்பொடு
விரும்பியேத்தவல்லார்வினையாயினவீடுமே. 3
கருங்கையானையின் ஈர்உரி போர்த்திடு கள்வனார்,
மருங்குஎலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி,
அரும்பு சேர் மலர்க்கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பி ஏத்த வல்லார் வினைஆயின வீடுமே.
karugkaiyAnaiyin Ir uri pOrttiTu kaLvanAr,
marugku elAm maNam Ar pozil cUz magkalakkuTi,
arumpu cEr malarkkonRaiyinAn aTi anpoTu
virumpi Etta vallAr vinai Ayina vITumE.
பொருள்: மங்கலக்குடி எம்பெருமானே! நீவிர் கரிய யானையின் தோலை உரித்துப்
போர்த்திக் கொண்டு எம் உள்ளம் கவரும் கள்வராவீர்! மணம் மிக்க பொழில்கள் நிறைந்த
மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர்! கொன்றை மலரை விரும்பிச் சூடும் உமது திருவடிகளை
நாங்கள் விரும்பிப் போற்றுவோம். எங்கள் வினைகள் நீங்கப் பெறுவோம்
குறிப்புரை: கருங்கை- பெரிய துதிக்கை. கருமையை யானைக்குச் சேர்த்து நிறத்தைக் கொள்ளலும் ஆம்.
ஈர்உரி - ஈர்ந்த தோல். வினைத்தொகை. இத்தொடரின் உண்மைக் கருத்து ஆணவ மலத்துட்படும் உயிரின்
உள்ளொளி வடிவுடையன் மெய்ப்பொருள் என்பதாம். 'ஒளிக்கும் இருட்கும் ஒன்றே இடம்' எனத் தொடங்கும்
கொடிப் பாட்டின் உட்கிடக்கையை இங்கு உணர்க. மருங்கு- பக்கம். அன்பு -பக்தி, விருப்பம்-ஆர்வம். வீடும் - அழியும்.
It is Civan the Lord of Vada-mangalak-kudi who once upon a time killed a male elephant
with large trunk and covered His body with its thick skin. He has captivated our hearts. He
crowns His head with cassia flowers and beads. His temple is surrounded by fragrant flower gardens.
Those devotees who worship Him with deep desires will be freed of all evils.
1572. பறையினோடொலிபாடலுமாடலும்பாரிடம்
மறையினோடியல்மல்கிடுவார்மங்கலக்குடிக்
குறைவிலாநிறைவேகுணமில்குணமேயென்று
முறையினால் வணங்கும்மவர்முன்னெறிகாண்பரே. 4
''பறையினோடு ஒலிபாடலும் ஆடலும் பாரிடம்,
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடிக்
குறைவு இலா நிறைவே! குணம் இல் குணமே!" என்று
முறையினால் வணங்கு(ம்) அவர் முன்நெறி காண்பரே.
"paRaiyinOTu olipATalum ATalum pAriTam,
maRaiyinOTu iyal malkiTuvAr magkalakkuTik
kuRaivu ilA niRaivE! kuNam il kuNamE!" enRu
muRaiyinAl vaNagku(m)mavar munneRi kANparE.
பொருள்: மங்கலக்குடியில் அருள்புரியும் எம்பெருமானே! நீர், இன்னிசை வாத்தியங்கள் முழங்க,
பூதகணங்கள் பாடியாட, அந்தணர்கள் வேதங்களை ஓத மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர்! உம்மை
குறைவில்லா நிறைவு என்றும் குணமில் குணம் என்றும் உணர்ந்து வணங்கும் அடியார்கள் உயர் நெறியை
உணர்ந்து அதனை அடைவார்கள் என்க.
குறிப்புரை: பறை - வாத்தியம். பாரிடம் - பூதகணம். மறையினோடு இயல் மல்கிடுவார் - வேதஞானமும்
வேதவொழுக்கமும் மிக்கவர் அந்தணர். குறைவிலா நிறைவே என்றது பரிபூரணன் பரசிவனன்றி வேறில்லாமை
உணர்த்திற்று. ஏனைய நிறைவெல்லாம் அதனிற் பெரிய பிறிதொரு நிறைவை நோக்கின் குறைவுடையதாகும்.
ஏரி நீர் நிறைவை நோக்கி வாவி நீர் நிறைவு குறைவுடையதாதல் போல; பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற
நிறைகின்ற பரிபூரணானந்தம் ஒன்றே குறைவிலா நிறைவு என்க. 'குறைவிலா நிறைவே கோதிலா அமுதே'
'குறைவிலா நிறைவே குணக்குன்றே' என்ற ஆசிரிய வசனங்களும் அறிக. குணம் இல் குணம் - எண் குணத்தவன்.
முறை- சிவாகம விதிமுறை. முன்னெறி- சமயநெறி எல்லாவற்றிற்கும் முதன்மையுடைய சிவநெறி.
நெறி என்பது அந்நெறியொழுகிப் பெறும் பேரின்பப் பயனை உணர்த்தும் ஆகுபெயர்.
It is Civan who is the Lord of Vada-mangalak-kudi. This city is a holy place where the
Lord is glorified with percussion music, devotional songs, and graceful dances by good looking
damsels. Vedic scholars gather, chanting Vedas in many places. There if the devotees pray in the
relevant way saying "Oh! Lord! You are perfection devoid of imperfections! Oh Lord! Your attributes
are par supreme devoid of attributes", they will reach the pinnacle of glory, and joy, following
the perfect saivite code (of conduct).
1573. ஆனிலங்கிளரைந்துமவிர்முடியாடியோர்
மானிலங்கையினான்மணமார்மங்கலக்குடி
ஊனில்வெண்டலைக்கையுடையானுயர்பாதமே
ஞானமாகநின்றேத்தவல்லார்வினைநாசமே. 5
ஆனில்அம்கிளர்ஐந்தும் அவிர் முடி ஆடி,ஓர்
மான் நில் அம் கையினான், மணம் ஆர் மங்கலக்குடி,
ஊன்இல் வெண்தலைக் கை உடையான் உயர் பாதமே
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே.
Anil amkiLar aintum avir muTi ATi, Or
mAn nil am kaiyinAn, maNam Ar magkalakkuTi,
Un il veNtalaik kai uTaiyAn uyar pAtamE
njAnam Aka ninRu Etta vallAr vinai nAcamE.
பொருள்: மங்கலக்குடியில் அருள்புரியும் எம்பெருமானே! நீவிர் பசுவின்பால், தயிர், நெய்,
கோமயம், கோசலம் என்னும் பஞ்சகவ்வியத்தை ஏற்றருள்வீர்! கையில் மானை அடக்கி நிற்பதுபோல
அடியவர்களின் அலையும் மனத்தை அடக்கி நிற்பீர்! கையில் கபாலத்தை ஏந்தி நிற்பீர். உமது
திருவடிகளை ஞானத்தால் உணர்ந்து ஏத்துபவர்களின் வினைகள் நிச்சயம் நாசமடையும்!
குறிப்புரை: ஆனில் அம் கிளர் ஐந்தும் - கோ (பசு) வினிடத்து உண்டாகிய பால், தயிர், நெய்,
கோமயம், கோமூத்திரம் என்னும் ஐந்தும்; ஆயினும் முதன் மூன்றே சைவாசாரியர் கொண்டாடியன.
'ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்' மான் நில்அம்கை - மான் நிற்கும் அழகிய கை. மான் இலம் கை
என்பதில் நடுமொழி யீறு குறைந்ததெனினும் பொருந்தும். மானுக்கு இல்லமாகிய கையுமாம்.
ஊன் இல் வெள்தலை - தசையற்ற வெள்ளைத்தலை, பிரம்ம கபாலம். உயர்பாதம் - திருவடி.
இதில் திருவடிஞானம் ஒன்றே வீடு பேறளிக்கும் உண்மை உணர்த்தினார். முன்னர் 'வெண்ணெய்ப்
பெருமானடி ஞானமாக நினைவார் வினையாயின நையுமே ' என்றதும் அறிக. 'அவனடி அவ்வொளி
ஞானம்' ' அடிஞானம் ஆன்மாவிற்றோன்றும்' , ' இறைவனடி ஞானமே ஞானம் என்பர்' 'ஆசான் அருளால்
அடிசேர் ஞானம் வந்திடும் மற்றொன்றாலும் வாராதாகும்' (சித்தியார்).
It is Civan, the Lord of Vada-mangalak-kudi known as Pirana-varatheswarar.
The temple in which He abides is surrounded by sweet flower gardens. He is pleased
with a sacred bath in the fine sacred elements of cow such as milk, curd, cow dung
and cow's urine. He clasps in one of His hands the young deer. In His other hand
He holds the fleshless white human skull. Ye devotees! go to the temple and worship
our Lord who is the embodiment of wisdom. The effects of your evil will be wiped out
when you glorify His feet with perfect realisation of His greatness.
1574. தேனுமாயமுதாகிநின்றான்தெளிசிந்தையுள்
வானுமாய்மதிசூடவல்லான்மங்கலக்குடி
கோனைநாள்தொறுமேத்திக்குணங்கொடுகூறுவார்
ஊனமானவைபோயறுமுய்யும்வகையதே. 6
தேனும்ஆய் அமுதுஆகி நின்றான், தெளிசிந்தையுள்;
வானும்ஆய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக்
கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும்வகை, அதே.
tEnum Ay amutu Aki ninRAn, teLi cintaiyuL;
vAnum Ay mati cUTa vallAn; magkalakkuTik
kOnai nALtoRum Ettik kuNamkoTu kURuvAr
Unam Anavai pOy aRum; uyyum vakai, atE.
பொருள்: மங்கலக்குடி இறையவனே! நீவிர் தெளிந்த உள்ளம் கொண்ட அடியவர்களுக்குத்
தேனாகவும் அமுதாகவும் விளங்குகின்றீர்! மதிசூட வல்ல நீவிர் வான் வெளியாகவும் விளங்குகின்றீர்!
மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ள உம்மை அடியவர்களாகிய நாங்கள் நாளும் ஏத்தி உமது
குணங்களை மனத்திற்கொண்டு வணங்குவோம். எங்களுக்கு உய்யும் திறம் அதுவே. எங்களது
குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி அருளுவீர்!
குறிப்புரை: தேனுமானான். அமுதும் ஆனான். தெளிந்த சிந்தை என இறந்த காலப் பெயரெச்சமாக
விரிக்க. தெளியாத சிந்தையுள் ஞானாகாசம் எய்தாது. வான்- ஞானவெளி. மதி - பிறை. கோன்- முதல்வன்.
கூறுவார் - தோத்திரஞ் செய்வார். ஊனமானவை - பிறவிக் கேதுவான மும்மல காரியங்கள். உய்யும்வகை -
பாசம் நீங்கிச் சிவம் பிரகாசிக்கும் திறம். இஃது ஆன்மாக்கள் உய்யுமாறு அருளிச் செய்தது. இந்த உய்வினை
நாடாதிருப்பது... ஊனம்.
It is Civan, the Lord of Vada-mangalak-kudi. To your devotees of perfect realisation
you are like honey and ambrosia. The moon mounts on your head and hence You appear also as the
space. Those devotees who worship this Lord of Vada mangalak-kudi every day, praising His
divine virtues, will certainly be cured of their defects in body and mind and the three excesses
in human nature. This is the only for salvation.
1575. வேள்படுத்திடுகண்ணினன்மேருவில்லாகவே
வாளரக்கர்புரமெரித்தான்மங்கலக்குடி
ஆளுமாதிப்பிரானடிகள்ளடைந்தேத்தவே
கோளுநாளவைபோயறுங்குற்றமில்லார்களே. 7
வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில்ஆகவே
வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி
ஆளும் ஆதிப்பிரான், அடிகள்(ள்) அடைந்து ஏத்தவே,
கோளும் நாள்அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே.
vEL paTuttiTu kaNNinan, mEru vil AkavE
vAL arakkar puram erittAn, magkalakkuTi
ALum AtippirAn, aTikaL(L) aTaintu EttavE,
kOLum nAL avai pOy aRum; kuRRam illArkaLE.
பொருள்: மங்கலக்குடி எம்பெருமானே! நீர் மன்மதனை நெற்றிக்கண்ணால்
சாம்பலாக்கினீர் ! கொடிய அரக்கர்களுக்கு உரித்தாய முப்புரங்களையும் சிரித்தே அழித்தீர்!
மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர்! உமது திருவடிகளை ஏத்தி வணங்கிட எங்களுக்கு
கிரகங்களாலும் விண்மீன்களாலும் உண்டாகும் தீமைகள் நிச்சயம் நீங்கப் பெறும். நாங்கள்
குற்றம் இல்லாதவர்களாய் விளங்கிடுவோமாக!
குறிப்புரை: வேள் - கருவேள், மன்மதன், படுத்திடுகண்- அழித்த நெற்றித் தீவிழி. கண்ணினன் -
கண்ணுடையவன். வாள்-கொடுமை, வாட்படையுமாம். அரக்கர் - பிறர் தீமை செய்யாதிருப்பவும்
தீங்கிழைப்பவர். (அசுரர் - தீங்கிழைத்தவர்க்கு அது செய்பவர்). ஆளும் - ஆட்கொள்ளும் ஆதிப்பிரான் -
முதற்கடவுள். அடிகள்- பாசநீக்கமும் சிவப்பேறுமாகிய இரண்டு திருவடிகள். 'யான்' 'எனது' என்னும்
இருசெருக்கும் அறுதலாகிய இரண்டெனலும் சாத்திர சம்மதம், 'பரை உயிரில் யான் எனதென்றற
நின்றதடியாம்' (உண்மை நெறி விளக்கம்) 'யான் எனதென்றற்ற இடமே திருவடி' (ஏத்த -வழிபட. துதிக்க.
எடுத்தல் என்பதன் மரூஉ. ஏத்தல்- இறைவன் புகழை எடுத்தோதுதல். எடுத்தலோசையே தோத்திரங்கட்கு
உரியது. கோள் - கிரகங்கள். நாள் - மீன்கள். குற்றம் - ஆணவம் முதலிய முக்குற்றம்.
It is Civan, the Lord of Vada-mangalak-kudi who burnt cupid with His eyes. He also
burnt the three flying fortresses of the wicked demons using mount Meru as His bow. It is
He the Lord of Vada-mangalak-kudi, the ancient one. Those devotees who reach and bow at His
holy feet will not be affected by the evil effects of planets and stars. These devotees
will be blemishless.
1576. பொலியுமால்வரைபுக்கெடுத்தான்புகழ்ந்தேத்திட
வலியும்வாளொடுநாள்கொடுத்தான்மங்கலக்குடிப்
புலியினாடையினானடியேத்திடும்புண்ணியர்
மலியும்வானுலகம்புகவல்லவர்காண்மினே. 8
பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட
வலியும் வாளொடு நாள் கொடுத்தான்; மங்கலக்குடிப்
புலியின் ஆடையினான்; அடி ஏத்திடும் புண்ணியர்
மலியும் வான்உலகம் புக வல்லவர்; காண்மினே!
poliyum mAlvarai pukku eTuttAn pukazntu EttiTa,
valiyum vALoTu nAL koTuttAn; magkalakkuTip
puliyin ATaiyinAn; aTi EttiTum puNNiyar
maliyum vAn ulakam puka vallavar; kANminE!
பொருள்: மங்கலக்குடி எம்பெருமானே! உமது கயிலாய மலையினைப் பெயர்த்து எடுக்க
முயன்றான் இராவணன். முதலில் துன்புற்றுப் பிறகு தெளிந்து உம்மைப் புகழ்ந்து பாடினான்.
அதனால் வலிமைமிக்க வாளையும் நீண்ட வாழ்நாளையும் பெற்றான். புலித்தோல் ஆடை
அணிந்த உமது திருவடிகளை வணங்கிடும் புண்ணியர்கள் உயர்ந்த முத்திப் பேற்றை எளிதாகப்
பெறுவர் அன்றோ!
குறிப்புரை: பொலியும் - விளங்கும். வரை- கயிலைமலை. வலி-பலம், வாளும் நாளும்- வாட்படையும்
ஆயுளும் அருளிய இவ்உண்மை பயின்று வருதல் காணலாம். புலியினாடையினான்- புலித்தோலுடை தரித்தவன்.
புண்ணியர் - சிவபுண்ணியத்தவர். மலியும் - இன்பம் மிகும். வானுலகம்- வீட்டுலகு. வல்லவர்- வன்மையுடையவர்.
காண்மின் என்றது ஆசிரியர் திருமுன் அந்நாளில் இருந்தவரை நோக்கி.
Civan, the Lord of Vada-mangalak-kudi wears tiger's skin as His dress. The Lord of
Vada-mangalak-kudi once blessed the king of Sri Lanka - Dasakreevan and offered a mighty sword.
He was forgiven despite his misguided attempt to lift mount Kailash. Those devotees who worship
the Lord's holy feet are themselves holy and they will very easily enter the celestial world.
1577. ஞாலமுன்படைத்தான்நளிர்மாமலர்மேலயன்
மாலுங்காணவொணாவெரியான்மங்கலக்குடி
ஏலவார்குழலாளொருபாகமிடங்கொடு
கோலமாகிநின்றான் குணங்கூறுங்குணமதே. 9
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன்,
மாலும் காண ஒணா எரியான்: மங்கலக்குடி
ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு
கோலம்ஆகி நின்றான்; குணம் கூறும் குணம் அதே.
njAlam mun paTaittAn naLir mAmalarmEl ayan,
mAlum, kANa oNA eriyAn; magkalakkuTi
Ela vArkuzalAL oru pAkam iTamkoTu
kOlam Aki ninRAn; kuNam kURum! kuNam atE.
பொருள்: மங்கலக்குடி பெருமானே! நீர் தாமரை மலர்மேல் இருந்து உலகைப் படைக்கும்
பிரமனாலும் திருமாலாலும் காண முடியாத ஒளி உருவினர் ஆவீர்! மங்கலக்குடியில் மணமிக்க கூந்தலைக்
கொண்ட உமாதேவியோடு பொருந்தி அழகுற நிற்கும் உம்மைப் போற்றிப் புகழ வல்லவர்கள்
நற்பண்புமிக்க சிறப்புறுவர் என்க.
குறிப்புரை: ஞாலம் - பூமி. நளிர் - குளிர்ச்சி. படைத்தானாகிய அயன் (பிரமன்) மாமலர் - தாமரை,
எரியான் - தீப்பிழம்பானவன். ஏலம்- மயிர்ச்சாந்து. 'ஏலவார் குழலாள்' என்பது அம்பிகையின்
திருநாமங்களுள் ஒன்று. இது திருமுறையுட் பயின்றது. கோலம் - அழகு. குணத்தைக் கூறுங்கள்.
அதுவே குணமாகும். மற்றவை குணமாகா.
Brahma who resides in cool lotus flower is the creator of the world. He and Vishnu
explored the unvierse to find the holy head and feet of our Lord but failed. Then our Lord
had stood as an endless column of bright light. Lord Civa sharing His body with His consort
Umaa of fragrant hair stands in a graceful posture at Vada-mangalak kudi. Ye devotees
whenever you go to this temple to worship Him speak of His divine virtues and this is the
only way to get salvation.
1578. மெய்யின்மாசினர்மேனிவிரிதுவராடையர்
பொய்யைவிட்டிடும்புண்ணியர்சேர்மங்கலக்குடிச்
செய்யமேனிச்செழும்புனற்கங்கைசெறிசடை
ஐயன்சேவடியேத்தவல்லார்க்கழகாகுமே. 10
மெய்யில் மாசினர், மேனி விரி துவர் ஆடையர்,
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்
செய்யமேனிச் செழும் புனல்கங்கை செறி சடை
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.
meyyil mAcinar, mEni viri tuvar ATaiyar,
poyyai viTTiTum puNNiyar cEr magkalakkuTic
ceyyamEnic cezum punalkagkai ceRi caTai
aiyan cEvaTi Etta vallArkku azaku AkumE.
பொருள்: மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானே! மெய்மாசு கொண்டும்
துவராடை உடுத்தியும் விளங்கும் சமணரும் சாக்கியரும் உம்மைப் பற்றி உணராமல் பொய் வார்த்தை
கூறித் திரிவர். ஆனால் மெய்யன்பர்கள் (சிவனடியார்கள்) அதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.
சிவந்த மேனியையும், தலையில் கங்கையாற்றையும், சடாமுடிகளையும் கொண்ட உம்மையே ஏத்தி
வழிபாடு செய்வார்கள். அதுவே அடியவர்க்குரிய அழகாகும்.
குறிப்புரை: மெய்யின் மாசு - உடலழுக்கு. சமணர் சாக்கியர் ஆகிய பரசமயத்தவர் பொய்யுரைகளை
விட்டுச் சைவ உண்மையை உணர்ந்தொழுகுவோர் புண்ணியர். அத்தகையவர் சேர்ந்துறையும் புகழ்
மங்கலக்குடிக்குள்ளது. செய்ய மேனி- சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்.
புனல்- வெள்ளம். ஐயன் - பரத்துவக் கடவுள். சேவடி - சிவந்த திருவடி. சிவஞானப் பிரகாசம்.
அழகு - பேரின்ப வாழ்வு.
The city of Vada-mangalak-kudi where our Lord Pirana-varatheswarar resides is a very
blessed place. Since the holy men of Lord Civa assemble here and shower their adulations
on Him. They never listen to the false preaching of the impure bodied Jains and the ochre
robed Buddhists. They adore only our Lord of Vada-mangalak-kudi whose fair body is golden
coloured. He has adorned His matted hair with the gushing waters of the Ganges. Praising
and praying to this Lord is a beautiful action and His devotees do nothing but that.
1579. மந்தமாம்பொழில்சூழ்மங்கலக்குடிமன்னிய
எந்தையையெழிலார்பொழிற்காழியர்காவலன்
சிந்தைசெய்தடிசேர்த்திடுஞானசம்பந்தன்சொல்
முந்தியேத்தவல்லாரிமையோர்முதலாவரே. 11
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்காவலன்
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன்-சொல்
முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே.
manta mAmpozil cUz magkalakkuTi manniya
entaiyai, ezil Ar pozil kAziyarkAvalan-
cintai ceytu aTi cErttiTu njAnacampantan-col
munti Etta vallAr, imaiyOrmutal AvarE.
பொருள்: மங்கலக்குடி பெருமானே! எழில் மிக்க சோலைகளால் நிறைந்த சீர்காழிப் பதியில்
அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் எப்பொழுதும் சிந்தை செய்வது மங்கலக்குடியில் கோயில்
கொண்டுள்ள உம்மைத்தான். அவர் உம்மைப் புகழ்ந்து பாடிய பாடல்களை அடியார்களாகிய
நாங்களும் பாடிப் பரவுவோம். தேவர் முதல்வர் ஆவோமாக!
குறிப்புரை: மந்தம் - தென்றல் (வீசுதல்). மன்னிய- நிலைபெற்ற. எழில்- அழகு. இத்திருப்பதிகம்
திருவடியிற் சேர்க்க வல்லது. சிந்தை செய்தல் சேர்த்திடற்கும் ஏத்தற்கும் பொருந்துதலறிக.
இமையோர் முதல்- தேவர் கோமகன்.
Seerkaazhi is a very ancient city and holy place, surrounded by beautiful gardens.
Here was born Thiru-gnana-Sambandar who always thinks of the divine ruler of Seerkaazhi who
is also the Lord at Vada-mangalak-kudi. This city also is surrounded by gardens of beautiful
flowers and a fine breeze. Thiru-gnana-Sambandar prayed to Lord of Vada-mangalak-kudi,
composing these verses on Him. Those devotees who come forward to recite these verses of
Thiru-gnana-Sambandar with emotional involvement will be the leaders of the celestials.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
10ஆம் பதிகம் முற்றிற்று
End of 10th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 147 பதிக எண்:11
11. சீகாழி 11. SEERKAAZHI
பண் : இந்தளம் -வினாஉரை pann: Indhalamn - Vinaa Urai
திருத்தல வரலாறு
பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.
பதிக வரலாறு
பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.
திருச்சிற்றம்பலம்
1580. நல்லானைநான்மறையோடியலாறங்கம்
வல்லானைவல்லவர்பால்மலிந்தோங்கிய
சொல்லானைத்தொன்மதிற்காழியேகோயிலாம்
இல்லானையேத்தநின்றார்க்குளதின்பமே. 1
நல்லானை, நான்மறையோடு இயல் ஆறு அங்கம்
வல்லானை வல்லவர்பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.
nallAnai, nAlmaRaiyOTu iyal ARuagkam
vallAnai, vallavarpAl malintu Ogkiya
collAnai, tol matil kAziye kOyil Am
illAnai, Etta ninRArkku uLatu, inpamE.
பொருள்: சீகாழிச் சிவனை நல்லான் என்றும், நான்மறை ஆறங்கம் வல்லான் என்றும்
அடியவர்களின் உள்ளத்தில் பொருந்திய சொல்லான் என்றும் மதில் சூழ்ந்த சீர்காழியில் கோயில்
கொண்டுள்ளான் என்றும் ஏத்தி நின்று வழிபடுவோர்க்கு எக்காலத்தும் இன்பமேயாம்!
குறிப்புரை: நல்லான் - மங்களவடிவினன், சிவன். நான்மறை - சைவத்திற்கு உரியனவாயிருந்த
பழைய நான்கு மறைகள். 'தத்துவாதீதமெனச் சாற்றுங்காண் சைவமறை அத்துவா எல்லாம் அற'
(துகளறுபோதம்- 20). ஆறு அங்கம் -சிக்ஷை. வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கற்பம் என்பன.
இவை சைவமறைக்கும் உரியன. 'மறைகள் - வேதம்' (தி. 2 ப. 12 பா 7). வல்லான் -வன்மையுடைய சிவபிரான்.
வல்லவர்- வன்மையுடைய அந்தணர். பால் - ஏழனுருபு. மலிந்து- நிறைந்து. சொல்லான்-துதிவடிவானவன்.
கோயிலாம் இல்லான் - கோயில் என்னும் பெயரினதாய வீட்டினன். நின்றார்- நிலைத்தவர். இன்பம் உளது.
உளது - அழியாது என்றும் இருப்பது.
Behold! It is Civan the Lord of Seerkaazhi who is the embodiment of good conduct
in the world. He exhibited to the world all the four Vedas along with the rules and the
six angaas, needed for comprehending such sciences, considered as dependant on the four Vedas.
He also manifested Himself as words of the learned ones who enrich Seerkaazhi of ancient
ramparts by dwelling in that divine abode. Those devotees who pray at the feet of our Lord
are sure to experience the joy of liberation.
1581. நம்மானமாற்றிநமக்கருளாய்நின்ற
பெம்மானைப்பேயுடனாடல்புரிந்தானை
அம்மானையந்தணர்சேருமணிகாழி
எம்மானையேத்தவல்லார்க்கிடரில்லையே. 2
நம் மானம் மாற்றி நமக்கு அருள் ஆய் நின்ற
பெம்மானை, பேய்உடன் ஆடல் புரிந்தானை,
அம்மானை, அந்தணர் சேரும் அணி காழி
எம்மானை, ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே.
nam mAnam mARRi namakku aruL Ay ninRa
pemmAnai, pEy uTan ATal purintAnai,
ammAnai, antaNar cErum aNi kazi
emmAnai, Etta vallArkku iTar illaiyE.
பொருள்: சீகாழிச் சிவனை, பிறவின் வழி எம்மோடு பொருந்திய ஆணவம், கன்மம், மாயை
ஆகியவற்றை நீக்கி எமக்கருளும் பெருமானை, பேயுடன் காட்டில் ஆடல் புரிபவனை, வேதம் ஓதும்
அந்தணர்கள் வாழும் சீர்காழியில் கோயில் கொண்டுள்ள எம்மானை, உணர்ந்து ஏத்த வல்லார்க்கு
இடர் இல்லையாம் என்க.
குறிப்புரை: நம் மானம் - நம் குற்றங்களாகிய ஆணவம், மாயை, கன்மம் (மூன்றும்). மாற்றி -தீர்த்து.
மாறச்செய்து, வீடுற்ற உயிர்களின் நீங்கி ஏனையுயிர்களையுற்று. அருளாய் - சிவஞானமாகி, 'மருமகன்'
மருமான் என்றானதுபோலப் 'பெருமகன்' பெருமான் என மருவிற்று. பேயோடு கூத்தாடிய வரலாறு.
புரிதல் - செய்தல். அருமகன் என்பது அம்மான் என்று மருவி அருமைக் கடவுள் என்றதாம். எம்மான்-
எம் கடவுள். மகன், மைந்தன் என்பவை வீரன், ஆடவன், கடவுள் என்னும் பொருளில் ஆளப்பட்டன.
இடர் - கேவலாவத்தையும் சகலாவத்தையும் அவற்றுட்பட்ட துயரும்.
Behold! It is He the Lord of Seerkaazhi who cleanses us of our three evils or
passions of the soul, such as aanavam, kanmam and maayaa. He is a great one who bestows
His grace to His devotees. He performs the cosmic dance with devils on the burial ground.
He is the rarest god of the rare and the Lord of Seerkaazhi which is also the abode for
Brahmins. Those who pray feelingfully at His feet will have no obstacles.
1582. அருந்தானையன்புசெய்தேத்தகில்லார்பாற்
பொருந்தானைப்பொய்யடிமைத்தொழில்செய்வாருள்
விருந்தானைவேதியரோதிமிடைகாழி
இருந்தானையேத்துமின்நும்வினையேகவே. 3
அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார் பால்;
பொருந்தானை,பொய் அடிமைத் தொழில் செய்வாருள்;
விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி
இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!
aruntAnai, anpu ceytu EttakillArpAl;
poruntAnai, poy aTimait tozil ceyvAruL;
viruntAnai; vEtiyar Oti miTai kazi
iruntAnai; Ettumin, num vinai EkavE!
பொருள்: சீகாழிச் சிவன் தனக்கென்று உண்ணும் பொருள் ஏதும் இல்லாதவனாய், தன்மீது
அன்பு கொண்டு வழிபடாதவரிடத்துப் பொருந்தாமலும், பொய்யடிமைத் தொழில் புரிவருக்குப்
புரியாதவனாய் விளங்குவார். வேதம் ஓதும் அந்தணர்கள் நிறைந்த சீர்காழியில் கோயில் கொண்டுள்ளார்.
அவரை மெய்யாய் வணங்குபவர்களின் வினைகள் நிச்சயம் நீங்கும் என்க.
குறிப்புரை: அருந்தானை- உண்ணலாகாதென்ற நோன்பியை. 'தன் உடம்பின் ஊன்கெடினும்
உண்ணார் கைத்து உண்ணற்க' (நாலடி 80). அன்பு - பக்தி. ஏத்தகில்லார் - ஏத்தமாட்டாதவர். அன்பு செய்து
ஏத்தமாட்டாதவரிடத்தில் யாதும் அருந்தாத (உண்ணாத)வனை. பொய்யடிமைத் தொழில் செய்பவருள்
பொருந்தாதவனை. விருந்தானை - புதியனை. வேதியர் - மறையோர். ஓதி - வேதம் ஓதி.
நும் வினைபோக ஏத்துமின்.
Behold! It is He the Lord of Seerkaazhi who takes no food from those loveless
people who do not pray. He will not abide in the minds of those false devotees. He resides
in Seerkaazhi amidst the chanting of Vedas by scholars. Ye devotees, recite His glory
always sincerely, then your evil effects will vanish.
1583. புற்றானைப்புற்றரவம்மரையின்மிசைச்
சுற்றானைத்தொண்டுசெய்வாரவர்தம்மொடும்
அற்றானையந்தணர்காழியமர்கோயில்
பற்றானைப்பற்றிநின்றார்க்கில்லைபாவமே. 4
புற்றானை, புற்று அரவம்(ம்) அரையின்மிசைச்
சுற்றானை, தொண்டு செய்வார் அவர் தம்மொடும்
அற்றானை, அந்தணர் காழி அமர் கோயில்
பற்றானை,பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.
puRRAnai, puRRu aravam(m) araiyin micaic
cuRRAnai, toNTu ceyvAr avar tammoTum
aRRAnai, antaNar kAzi amar kOyil
paRRAnai, paRRi ninRArkku illai, pAvamE.
பொருள்: சீகாழிச் சிவன் புற்றாகவும் புற்றில் வாழும் அரவத்தை அரையில் சுற்றியவராகவும்
விளங்குகின்றார். தொண்டு செய்யும் அடியவர்பால் பொருந்துகின்றார். தன்முனைப்பு அற்றவர்பால்
உறைகின்றார். வேதம் ஓதும் அந்தணர்கள் நிறைந்த சீர்காழியில் கோயில் கொண்டுள்ளார். அவரைப்
பற்றி நின்றவர்களைப் பாவங்கள் பற்றாது என்க.
குறிப்புரை: புற்றான்- புற்றானவன் (வன்மீக நாதன், புற்றிடங்கொண்டான் என்பன திருவாரூர்ப்
பெருமான் திருநாமங்கள். பந்தணை நல்லூர் முதலிய வேறு தலங்களிலும் புற்றிடத்தில் இறைவன்
எழுந்தருளிய உண்மையை அறியலாம்). புற்று அரவம் - புற்றில் வாழும் பாம்பு. அரை - இடை.
சுற்றான்- சுற்றுதலை உடையவன். பாம்பை இடுப்பிற் சுற்றியவன். தொண்டு செய்வார் அவர் தம்மொடும் -
தொண்டுகளைச் செய்பவராகிய அவரொடும். அற்றானை- அற்றவர்க்கு அற்ற சிவனை.
'அற்றவர்க்கு அற்ற சிவன்' என்பதன் தாற்பரியம் ஆராய்ந்து உணரத்தக்கது. எல்லாப்பற்றும்
அற்றவர்க்கே சிவபிரான் 'பற்றற்றான்' எனல் விளங்கும்.
'புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்,
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும் ஓர் தெய்வந் தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே'
என்னுந் திருவாசகத்தின் கருத்தே ஈண்டுக் கொள்ளல் வேண்டும்.
'அற்றவர்கள் நற்றுணைவன்' (சம்பந்தர் திருக்கயிலாயம் 2) 'பாவம் அற்றவர் நாளும் ஏத்த
அயவந்தி அமர்ந்தவனே' (திருச்சாத்த மங்கை 6). 'நெஞ்சு அற்றவர் அருவினையிலரே' (திருச்சிறுகுடி 5).
'உறவும் ஆகி அற்றவர்களுக்கு மாநெதிகொடுத்து நீள்புவி இலங்கு சீர்ப்புறவ மாநகர்க் கிறைவனே
எனத் தெறகிலாவினையே’ (திருப்பிரமபுரம் 8). 'உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு அற்றவர்க்கு உற்ற
சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே' (2). 'தம் வினையான எலாம் அற அற்றவர் ஆரூர் அரனெறி'
(அப்பர் 5). 'அற்றவர்க்கு அன்பர்' அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு உற்ற நற்றுணை யாவான்
(திருவாஞ்சியம் 6). அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி, அற்றார்க் கருள்செய்யும் ஐயாறன்னே,
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய், அற்றவர்க்கு அருள் செய்பாச்சிலாச் சிராமத்து அடிகள்,
அற்றவனார் அடியார் தமக்கு....நின்றியூரே, பங்கயச் சேவடிக்கே செல்ல அற்றனன் அற்றனன், சோற்றுத்துறையுள் ...
முதல்வன் பாதத்து அற்றார் அடியார் அடிநாயூரன் ஒன்றுமிலாதவரைக் கழற்போதிறைஞ்சி (திருவாசகம் 524),
அற்றவர்க்கு அற்ற சிவன் (பொன் வண்ணத்தந்தாதி 74, இருபா இருபஃது 20) எனத் தோத்திரமும் சாத்திரமும்
இதனைப் பலமுறைக் குறித்தல் அறிதற்பாலது. 'ஒருபற்றிலாமையும் கண்டிரங்காய்' என்றதாலும் இதனை
இனிதுணரலாம். இன்னும் பல இடங்களில் இதனைத் திருமுறைகள் வற்புறுத்துகின்றன. பற்றான் - பற்று உடையவன்.
Behold! It is He the Lord of Seerkaazhi. He represents snake pit while He wears
the snake on His waist, which beautifies His appearance. He never parts with those devotees
of staunch service. He resides in the hearts of those devotees who shed all their desires.
He abides in Seerkaazhi temple where the Vedic pandits are many. Those devotees who grip
His holy feet firmly will have no sins at all.
1584. நெதியானைநெஞ்சிடங்கொள்ளநினைவார்தம்
விதியானைவிண்ணவர்தாம்வியந்தேத்திய
கதியானைக்காருலவும்பொழியற்காழியாம்
பதியானைப்பாடுமின்நும்வினைபாறவே. 5
நெதியானை, நெஞ்சுஇடம் கொள்ள நினைவார்தம்
விதியானை, விண்ணவர் தாம் வியந்து ஏத்திய
கதியானை, கார் உலவும் பொழில் காழி ஆம்
பதியானை,பாடுமின், நும் வினை பாறவே!
netiyAnai, nenjcu iTam koLLa ninaivArtam
vitiyAnai, viNNavartAm viyantu Ettiya
katiyAnai, kAr ulavum pozil kAzi Am
patiyAnai, pATumin, num vinai pARavE!
பொருள்: சீகாழிச் சிவன் அரிய செல்வமும், தியானம் செய்யும் அடியவர் உள்ளத்தில் பொருந்தி
இருப்பவரும், விண்ணவர்கள் வியக்கும் நெறியும் ஆவார். சோலைகள் சூழ்ந்த சீர்காழிப் பதியில்
உறைபவரும் அவரே. அவரைப் பாடும் நம் வினைகளை நீக்கி அருள்பவரும் அவர்தாம்.
குறிப்புரை: நெதி - நிதி என்பதன் மரூஉ. இவ்வாறாள்வது பயின்றுள்ளது. விதி - கட்டளை. கதி -நெறி.
கார்-மேகம். பொழில்-சோலை. பதி - நகர். பாற-அழிய.
Behold! It is He the Lord of Seerkaazhi who is all wealth to have. He is the guide
to those who think of Him wholeheartedly. When the celestials worship Him with awe and wonder,
He shows the path to get salvation. His abode is there in Seerkaazhi, a holy place of gardens,
where clouds always move. Ye devotees, sing His glory and He will chase all evils.
1585. செப்பானமென்முலையாளைத்திகழ்மேனி
வைப்பானைவார்கழலேத்திநினைவார்தம்
ஒப்பானையோதமுலாவுகடற்காழி
மெய்ப்பானைமேவியமாந்தர்வியந்தாரே. 6
செப்பு ஆன மென்முலையாளைத் திகழ் மேனி
வைப்பானை,வார் கழல் ஏத்தி நினைவார்தம்
ஒப்பானை,ஓதம் உலாவு கடல் காழி
மெய்ப்பானை,மேவிய மாந்தர் வியந்தாரே.
ceppu Ana menmulaiyALait tikaz mEni
vaippAnai, vAr kazal Etti ninaivArtam
oppAnai, Otam ulAvu kaTal kAzi
meyppAnai, mEviya mAntar viyantArE.
பொருள்: சீகாழிச் சிவன் உமாதேவியை இடபாகத்தில் கொண்டு ஒளித்திருமேனியோடு
காட்சியளிப்பவர். தம்முடைய திருவடிகளை நினைந்து வழிபடும் அடியார்களுக்கு அருள் செய்பவர்.
கடல் அலைகள் உலாவி வரும் சீர்காழிப் பதியில் மெய்யாய் மேவுபவர். தம்மை வணங்கும் அடியார்கள்
பெரும் பேறு பெற்றவர்கள் ஆவார்கள்.
குறிப்புரை: செப்பு ஆன- செப்பை ஒத்த. மேனி- திருமேனியின் இடப்பாதியில் வைப்பானை-
வைத்தலுடையவனை, வைப்பவனை எனின் முக்காலத்தும் ஒத்தியல்வதாகாது. தொல்காப்பியம் செய்யும்
என்னும் வாய்பாட்டு நிகழ்காலத்து வினையாற் சொல்க என்றது (வினையியல் 43). முந்நிலைக் காலமும்
தோன்றும் இயற்கை எம் முறைச் சொல்லும் நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல்
வேண்டும் (பெயரியல் 19). ‘நிகழூஉ நின்ற பால் வரை கிளவி' (வினையியல் 30) பல்லோர் படர்க்கை
முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங்காலத்துச் செய்யும் என்னுங் கிளவியோடு கொள்ளா
என்பவற்றை நோக்குக. ஒப்பானை -ஒப்புதலுடையவனை. பராவுசிவர் (தி. 3 ப. 67 பா. 6, சித்தியார் 287)
என்ற உண்மையை நோக்குக. ஓதம் - கடலின் அலை. குளிர்ச்சி. மெய்ப்பான் - மெய்யாதலை உடையவன்.
அவனே மெய்ப்பொருள். மேவிய- விரும்பி வழிபட்ட. மாந்தர்- மனிதரிற் சிறந்தவர். வியந்தார்- பிறரால்
பேசப்படும் புகழ்க்குரியவர். பிறரை ஏவியாட்கொள்ளும் மேன்மையர் எனலும் பொருந்தும்.
மெய்ப்பானை வியந்தாரெனலும் ஆம்.
Behold! It is He the Lord of Seerkaazhi. He shares left portion of His body with the
tender casket-like breasted Umaa, He gives His majestic appearance in this posture with Umaa.
He gives His grace equally to all those devotees of constant prayer at His holy feet.
He alone is the embodiment of truth forever. His abode is in Seerkaazhi, a holy place
where cool sea breeze always blows. Those who worship Him pleasingly are always gazed
by others with awe and wonder.
1586. துன்பானைத்துன்பமழித்தருளாக்கிய
இன்பானையேழிசையின்னிலைபேணுவார்
அன்பானையணிபொழிற்காழிநகர்மேய
நம்பானைநண்ணவல்லார்வினைநாசமே. 7
துன்பானை, துன்பம் அழித்து அருள் ஆக்கிய
இன்பானை, ஏழ்இசையின் நிலை பேணுவார்
அன்பானை, அணி பொழில் காழிநகர் மேய
நம்பானை, நண்ண வல்லார் வினை நாசமே.
tunpAnai, tunpam azittu aruL Akkiya
inpAnai, Ez icaiyin nilai pENuvAr
anpAnai, aNi pozil kAzinakar mEya
nampAnai, naNNa vallAr vinai nAcamE.
பொருள்: சீகாழிச் சிவன், அடியவர்களை ஆட்கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் துன்பம்
தருபவரும், இறுதியில் துன்பத்தை நீக்கி அருளின்பத்தைத் தருபவரும், ஏழிசையின் இன்பமாய்
உறைபவரும் ஆவார். அழகிய சீர்காழி நகரில் உறைபவரை விரும்பி வணங்கும் அடியார்களின்
வினைகள் உறுதியாக நாசமடையும் என்க.
குறிப்புரை: துன்பானை- துன்ப வடிவாயிருப்பவனை. அருள் ஆகிய இன்பானை - சிவஞானந்
தந்த பேரின்ப வடிவினனை. 'இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே', பந்தமுமாய் வீடும் ஆயினார்,
அருள் நிதிதர வரும் ஆனந்தமலையே என்ற திருவாசகக் கருத்து இங்குக் கொள்ளற்பாலது. இன்பமும் நீயே
துன்பமும் நீயே (பெருந்தேவபாணி 59). ஏழிசையின் நிலை பேணுவார் - ஏழிசையின்
நிலையை விரும்புவார். ஏழிசையாய் இசைப்பயனாய், இன்னிசை வீணையில் இசைந்தோன்,
ஏழிசையோன் கொச்சையை மெச்சினை, எழுவகையோசையும்.... ஆகிய பரமனை, ஏழிலின்னரம்
பிசைத்தனை. அன்பான்- அன்பு வடிவானவன். அன்பே சிவம் ஆவது. அணி- அழகு. நம்பான் -உயிர்களால்
விரும்பப்படுபவன். நம்பும் மேவும் நசையாகும்மே (தொல்காப்பியம்). நண்ண - விரும்ப; அடைய; செறிய.
நாசம் - அழிவு.
Behold! It is He the Lord of Seerkaazhi. He represents both sorrow and joy.
He is responsible for suffering in the beginning, later He destroys that suffering
and gives blessings with His grace. He loves music and also those expert musicians
who play the seven notes. His abode is in Seerkaazhi, the holy place of beautiful
gardens. He is our beloved Lord. Those who desire to reach His holy feet will certainly
get all their sins wiped out.
1587. குன்றானைக்குன்றெடுத்தான்புயநாலைந்தும்
வென்றானைமென்மலரானொடுமால்தேட
நின்றானை நேரிழையாளொடுங்காழியுள்
நன்றானைநம்பெருமானைநணுகுமே. 8
குன்றானை,குன்று எடுத்தான் புயம் நால்-ஐந்தும்
வென்றானை, மென்மலரானொடு மால் தேட
நின்றானை, நேரிழையாளொடும் காழியுள்
நன்றானை, நம்பெருமானை, நணுகுமே!
kunRAnai, kunRu eTuttAn puyamnAl-aintum
venRAnai, menmalarAnoTu mAl tETa
ninRAnai, nErizaiyALoTum kAziyuL
nanRAnai, namperumAnai, naNukumE!
பொருள்: சீகாழிச் சிவன் குறைவற்ற நிறைவானவன். கயிலாய மலையைத் தூக்க முயன்ற
இராவணனின் இருபது கைகளின் வலிமையினை அழித்தவன். பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிட
ஒளிமயமாய் நின்றவன். உமாதேவியுடன் சீர்காழிப் பதியில் உறையும் நம்பெருமானை வணங்கி
மகிழ்வோமாக!
குறிப்புரை: குன்றான் - கயிலை முதலிய குன்றுகளை உடையவன். குன்றெடுத்தான் - கயிலையைத்
தூக்கிய இராவணன். வென்றான்- நொறுக்கியவன். மலரான்- பிரமன். மால் - விண்டு . நேர் இழையாள் -
திருநிலைநாயகி. இழை - ஆபரணம். நன்றான்- பெரியவன். நல்லதுடையான். சிவன்- குறைவிலா
மங்கலக் குணத்தன். நணுகும் முன்னிலை ஏவல் வினை.
Behold! It is He the Lord of Seerkaazhi. He has His abode on the Kailash mountain.
He is changeless as a mountain. He very easily crushed the king of Sri Lanka with twenty hands,
when he tried to lift His mountain. He is unknown to Brahma who resides in Lotus flower
as well as to Vishnu. He abides in Seerkaazhi along with His consort, the bejewelled goddess
Umaa. He is the Supreme God of perfection. Ye devotees reach our Lord in this sacred place
and be happy.
1588. சாவாயும்வாதுசெய்சாவகர்சாக்கியர்
மேவாதசொல்லவைகேட்டுவெகுளேன்மின்
பூவாயகொன்றையினானைப்புனற்காழிக்
கோவாயகொள்கையினானடி கூறுமே. 9
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல் அவை கேட்டு வெகுளேன்மின்!
பூஆய கொன்றையினானைப் புனல் காழிக்
கோஆய கொள்கையினான் அடி கூறுமே!
cAvAyum vAtu cey cAvakar cAkkiyar
mEvAta col avai kETTu vekuLEnmin !
pU Aya konRaiyinAnaip punal kAzik
kO Aya koLkaiyinAn aTi kURumE!
பொருள்: சமணரும் சாக்கியரும் எப்பொழுதும் விதண்டா வாதம் செய்யக்கூடியவர்கள்.
அவர்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவர்கள் சொல்லைக் கேட்டு அவர்கள்மீது
சினம் கொள்ளவும் மாட்டோம். கொன்றை மலர்சூடி சீர்காழிப் பதியில் கோயில் கொண்டுள்ள
எங்கள் தலைவனைப் பாடிப் பரவுவோம்.
குறிப்புரை: சாவாயும் வாது செய்தல் - நம்கட்சி அழிந்தபோதும் வாதம் புரிதல். சாவு ஆயும்
எனலுமாம். மேவாத- செல்லாத. வெகுளேன்மின்- கோபிக்காதீர்கள். (ஏவல்வினை) பகைவனை
வெறுத்தல் வேண்டா என்றேனும் பகைவர் தீயுரை கேட்டுச் சைவத்தை வெறுத்தல் வேண்டா
என்றேனும் கருத்துக் கொள்ளலாம். அடிகூறும் - திருவடியைத் துதி செய்யுங்கள் - கோ ஆய
கொள்கையினான்- பரத்துவக் கடவுளாகிய கொள்கைக்கு உரியவன், பரமசிவன்.
You people of Seerkaazhi, don't be disturbed by the harsh words of denial,
uttered by the Jains and the Buddhists. They will go on arguing even after defeat.
Forget them and forbid anger. You may come and bow at the holy feet of Lord of Seerkaazhi,
which is a seashore city. Our Lord always wears garlands made of cassia flowers.
Praise His glory always.
பாட்டு - 10
பத்தாவது பாட்டு கிடைக்கப்பெறவில்லை.
1589. கழியார்சீரோதமல்குங்கடற்காழியுள்
ஒழியாதுகோயில்கொண்டானையுகந்துள்கித்
தழியார்சொல்ஞானசம்பந்தன்தமிழரா
மொழிவார்கள் மூவுலகும்பெறுவார்களே. 11
கழிஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள்
ஒழியாது கோயில் கொண்டானை, உகந்து உள்கித்
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர
மொழிவார்கள்,மூஉலகும் பெறுவார்களே.
kazi Ar cIr Otam malkum kaTal kAziyuL
oziyAtu kOyil koNTAnai, ukantu uLkit
tazi Ar col njAnacampantan tamiz Ara
mozivArkaL, mUulakum peRuvArkaLE.
பொருள்: சீகாழிச் சிவன், உப்பங்கழிகள் நிறைந்த கடற்காழியுள் கோயில் கொண்டுள்ளவரை
மனமொழி மெய் பொருந்த ஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் பாடியுள்ளார். அவர் பாடிய ஞானத்
தமிழ்ப் பாடல்களைப் பாடுபவர்கள் மூவுலகினாலும் போற்றப்படுவார்கள்.
குறிப்புரை: கழி - கழிகள். ஆர் - பொருந்திய. சீர் ஓதம் - மிக்க கடல் நீர். உகந்து - விரும்பி. உள்கி-
நினைந்து. தழி- தழுவி. ஆர - நிறைய. மொழிவார் - பாடுவார். கள் விகுதி பிற்கால வழக்கில் வழங்குவது.
மூவுலகும் - மண், விண், பாதலம் மூன்றும். தழியார் - தழுவிய சிவஞானியர். சொல்- புகழ்ந்து போற்றுகின்ற
எனலும் பொருந்தும்.
Behold! It is He the Lord of Seerkaazhi who resides in the temple of this town.
This is a holy place in the seacoast. The backwater of the sea brings dampness and coolness
to the entire area. Those devotees, who with earnestness, recite these Tamil verses sung
by Thiru-gnana-Sambandar on the Lord eternal of Seerkaazhi, embracing His divinity in their
hearts, will be blessed and praised in all the three worlds.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
11ஆம் பதிகம் முற்றிற்று
End of 11th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 148 பதிக எண்: 12
12. திருக்கச்சியேகம்பம் 12. KACH-CHITH-THIRUVEGAMBAM
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
திருக்கச்சியேகம்பம் என்னும் இத்திருத்தலமானது தற்போது காஞ்சிபுரம் என்னும் பெயருடன்
விளங்குகின்றது. மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப்பெயர் பெற்றது. ஆமரம் என்பது
வடசொல். அது தமிழில் வழங்கும்போது தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய
பகரத்தைப் பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம்
என்பது ஏகமென்னும் சொல்லோடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப்படி) ஆயிற்று.
ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. கள்ளக்கம்பனை, நல்லகம்பனை
என்பவைகளில் காண்க.
இத்திருத்தலம் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே சுமார் 2-5 கி.மீ. தூரத்தில்
இருக்கின்றது. சென்னை, செங்கற்பட்டு, திண்டிவனம், அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்தும்
காஞ்சிபுரம் வரப் பேருந்துகள் உள்ளன. இறைவரின் திருப்பெயர் தழுவக்குழைந்த நாதர், உலகம் உய்ய
ஆகமவழியின்படி இறைவரைப் பூசிக்க இறைவியார் கயிலையினின்று காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார்.
அங்கே கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார்.
அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்
கொண்டார். அது பொழுது இறைவர் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத்தழும்பும் தோன்றக்
காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் தழுவக்குழைந்த நாதர் என்னும் திருப்பெயர் உண்டாயிற்று.
திருவேகம்பர் என்ற வேறு பெயரும் உண்டு. இறைவியாரின் திருப்பெயர் ஏலவார்குழலி, காமாட்சியம்மை
ஆகியனவாம். இத்திருத்தலத்தில் உள்ள விநாயகரின் திருப்பெயர் விகடசக்கர விநாயகர். இவர்
தெற்குத் திருவாசலில், ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புறத்தில் எழுந்தருளி இருக்கின்றார்.
தீர்த்தம் கம்பை மாநதி மற்றும் சிவகங்கை என்பன. தலப்பெருமையாவது, இத்திருத்தலம்
முத்திதரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத் திருவொற்றியூர்
எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு
இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம். க்ஷேத்திர வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள்
காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், இவர்கள் அருள்பெற்ற பதி.
இதில் பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவை முறையே
வெள்ளக்கம்பம், கள்ளக்கம்பம், நல்லகம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. இக்கச்சியேகம்பத்திற்கு
மாத்திரம் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை மூவராலும் பாடப்பெற்றவை.
இவ்வூரில் (காஞ்சிபுரத்தில்) கச்சியேகம்பத்துடன் கச்சிமேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி,
கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும்
கச்சிமயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள்
கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடிமரத்தின் முன்னுள்ளது.
இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.
அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாம் சேர்ந்துவிட்டன. இச்சிலையில்
சிலபகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச்
சின்னங்கள் (வராகமும், கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை கரிகாலன்
உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கின்றது. சுவாமி சந்நிதி கிழக்கு. ஆனால் கோபுரவாயில்
தெற்கே இருக்கின்றது. திருவாடுவதுறை ஆதீனத்து மாதவச்சிவஞான யோகிகள் அருளிய
காஞ்சிப்புராணமும், கச்சியப்ப முனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டம் என்று
சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்ப முனிவர் இயற்றிய கச்சி ஆனந்தருத்திரேசர்
வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய
திருவேகம்பமுடையார் திருவந்தாதியும், மாதவச் சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர்
பதிகம், திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, திருஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்திருத்தலத்தைப்
பற்றிய நூல்கள் ஆகும்.
பதிக வரலாறு
வேதமோடு சைவநீதி விளங்கவந்த கவுணியனார் காஞ்சியை அணைந்து, மதிற்புறத்தே சென்று
சேர்ந்து வணங்கினார். அளவற்ற தொண்டர்கள் அஞ்சலித்து வாழ்த்திய ஒலி வானளாவப் பெருகிற்று.
பூமாரியும், பொற்சுண்ணமும் புயல்போல் பொழிந்தன. காமக்கண்ணி தழுவக் குழைந்த கச்சியேகம்பரை,
உருகிய அன்பு உள்ளலைப்பப் பருகிய மெய்யுணர்வினோடும் பாடியருளிய பதிகம் இது.
திருச்சிற்றம்பலம்
1590. மறையானைமாசிலாப்புன்சடைமல்குவெண்
பிறையானைப்பெண்ணொடாணாகியபெம்மானை
இறையானையேர்கொள்கச்சித்திருஏகம்பத்
துறைவானையல்லதுள்காதெனதுள்ளமே. 1
மறையானை,மாசு இலாப் புன்சடை மல்கு வெண்
பிறையானை,பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,
இறையானை,ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லது உள்காது எனது உள்ளமே.
maRaiyAnai, mAcu ilAp puncaTai malku veN
piRaiyAnai, peNNoTu ANAkiya pemmAnai,
iRaiyAnai, Er koL kaccit tiru Ekampattu
uRaivAnai, allatu uLkAtu, enatu uLLamE.
பொருள்: ஏகம்பத்துறை இறைவா! வேத வடிவானவனே! தலையில் பிறையைத் தாங்கியவனே!
பெண்ணோடு ஆணாகிய பெம்மானே! இறைவனே! உன்னை அல்லாது வேறு எதையும் என் உள்ளம் நினையாது.
குறிப்புரை: மறையான் - வேதசொரூபன், வேதங்களை அருளியவன் எனலுமாம். மாசு- குற்றம்.
புன்சடை- மென்மையை உடைய சடை. புன்மை, பொன்மையுமாம். பிறையான் - பிறையை அணிந்தவன்.
பெண்ணும் ஆணும் ஆகிய பெருமான். இறையான் - எப்பொருளினும் உறைவான். ஏர் - எழுச்சி. அழகும் ஆம்.
கச்சி - சிவதலம், காஞ்சிபுரம். திருவேகம்பம் - அங்குள்ள பெரிய சிவாலயம். திருவேகம்பத்து உறைவான் -
திருவேகம்பம் எனப் பெயரிய திருக்கோயிலுள் வாழ்பவன். உள்காது - எண்ணாது. ஏகம்பம் -ஏகாமரம்,
ஏகாம்பரம். ஏகம் - ஒன்று. ஆமரம்-மாமரம்.
It is Civan the Lord who has His abode at that beautiful temple called
Ekaambaranaathar temple in the city of Kanchi commonly known as Kaanjipuram. He
is the embodiment of all the four Vedas. His long matted hair has been beautified
with that white crescent moon. He is both a male and female called Arthanaareeswaran.
He resides in every thing. My mind will not think a god, other than the god at
Kach-chith-thiruvegambam.
1591. நொச்சியேவன்னிகொன்றைமதிகூவிளம்
உச்சியே புனைதல்வேடம்விடையூர்தியான்
கச்சியேகம்பம்மேயகறைக்கண்டனை
நச்சியேதொழுமின்நும்மேல்வினைநையுமே. 2
நொச்சியே, வன்னி, கொன்றை, மதி,கூவிளம்,
உச்சியே புனைதல் வேடம்; விடைஊர்தியான்;
கச்சி ஏகம்பம் மேய கறைக்கண்டனை
நச்சியே தொழுமின்! நும்மேல் வினை நையுமே.
nocciyE, vanni, konRai, mati, kUviLam,
ucciye punaital vETam; viTai UrtiyAn;
kacci Ekampam mEya kaRaikkaNTanai
nacciyE tozumin! nummEl vinai naiyumE.
பொருள்: ஏகம்பத்துறை இறைவனே! நொச்சி இலை, வன்னி இலை, வில்வ இலை, கொன்றை மலர்,
சந்திரன் ஆகிய ஐந்தினையும் தலையில் தாங்கி அழகுறக் காட்சி அளிப்பவனே! கச்சிப்பதியில் உறைபவனே!
இடப வாகனத்தில் காட்சி தரும் நீலகண்டனே! உம்மை அன்புடன் விரும்பித் தொழும் அடியவர்களுக்கு
அவர்களது வினைகள் அழிந்தே போகும் என்க.
குறிப்புரை: நொச்சியிலை, வன்னிபத்திரம், கொன்றைப்பூ, பிறை, கூவிளம் (வில்வம்)
ஆகியவற்றைச் சிவபெருமான் முடியிற் புனைவது அவனது திருவேடமாகும். ஊர்தி-வாகனம்,
எருது வாகனத்தன், கறை- (நஞ்சுண்டதன் காரணமாகப் பொருந்திய அதன்) கறுப்புக் கண்டன் -
திருக்கழுத்தினன். நச்சி-விரும்பி. பக்தி கொண்டு. தொழுமின் - வழிபடுங்கள். நையும் - அழியும்.
It is Civan, the Lord at Ekambaram temple called Ekaambaranaathar. He has
adorned His long matted hair with vitex, mesquit and cassia flowers with bael leaves
besides the white moon. He mounts on the bull to roam around the cosmos. His neck is
black because He drank poison from the sea of milk. Ye devotees! do come to pray
that Lord at Kanchipuram. If you do so, the bad effects of your karma will vanish.
1592. பாராருமுழவமொந்தைகுழல்யாழொலி
சீராலேபாடலாடல்சிதைவில்லதோர்
ஏரார்பூங்கச்சியேகம்பனையெம்மானைச்
சேராதாரின்பயமாயந்நெறிசேராரே. 3
பார் ஆரும் முழவம், மொந்தை, குழல்,யாழ்,ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர்
ஏர் ஆர் பூங் கச்சி ஏகம்பனை, எம்மானை,
சேராதார் இன்பம் ஆய(ந்) நெறி சேராரே.
pAr Arum muzavam, montai, kuzal, yAz, oli
cIrAlE pATal ATal citaivu illatu Or
Er Ar pUg kacci Ekampanai, emmAnai,
cErAtAr inpam Aya(n) neRi cErArE.
பொருள்: ஏகம்பத்துறை இறைவனை, அடியார்கள் சிறந்த முழவு, மொந்தை, குழல், யாழ்
போன்றவைகளை முழக்கி அன்புடன் பாடிப் பரவுவர். அதுபோல அன்புடன் பாடிப் பரவாதவர்கள்
அவர் அருள் இன்ப வழியை அடையாதவர்களே ஆவார்கள் என்க.
குறிப்புரை: பார்- நிலம். ஆரும் - நிறைந்து முழங்கும். முழவம், மொந்தை, குழல், யாழ் என்னும்
இசைக்கருவிகளின் ஒலியும், சீரும், பாடலும், ஆடலும் கச்சியுள் அக்காலத்தில் மிக்கிருந்த உண்மை
புலனாகும். சிதைவு - கேடு. ஏர் - எழுச்சி, அழகு. சேராதார் - இடைவிடாது நினையாதவர். இன்பமாய் நெறி -
பேரின்பத்தை எய்துவதற்குரிய நன்னெறியை (சன்மார்க்கத்தை). நகரமெய் விரித்தல். சேரார்- அடையார்.
It is Civan who abides in Kach-chith-thiruvegambam, a holy place which is very
beautiful with a lot of flowers. In this temple, the scholar devotees sing the divine
hymns amid dancing for rhythmic sounds of percussion drums like monthai and muzhavu
along with the melodies of flute. These beautiful sounds are always echoed all around.
1593. குன்றேய்க்குநெடுவெண்மாடக்கொடிகூடிப்போய்
மின்றேய்க்குமுகில்கள்தோயும்வியன்கச்சியுள்
மன்றேய்க்குமல்குசீரான்மலியேகம்பம்
சென்றேய்க்கும்சிந்தையார்மேல்வினைசேராவே. 4
குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப் போய்
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன்கச்சியுள்,
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம்
சென்று ஏய்க்கும் சிந்தையார்மேல் வினை சேராவே.
kunRu Eykkum neTuveNmATak koTi kUTip pOy
min tEykkum mukilkaL tOyum viyankacciyuL,
manRu Eykkum malku cIrAl mali Ekampam
cenRu Eykkum cintaiyArmEl vinai cErAvE.
பொருள்: ஏகம்பத்துறை இறைவா! நீவிர் கோயில் கொண்டுள்ள கச்சியம்பதியில் உயர்ந்த
மாடங்கள் பொருந்தியுள்ளன. அம்மாடங்களில் உள்ள கொடிகள் மேகத்தைத் தடவும் நிலையில்
உயர்ந்து விளங்குகின்றன. அத்தகைய கச்சியில் உறையும் இறைவனை நினைந்து நினைந்து
வணங்கும் அடியவர்களுக்கு என்றும் வினை பொருந்தாது என்க.
குறிப்புரை: குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடம்- நெடிய (உயரிய) சுதையால் தீற்றப்பட்ட மாடங்கள்
மலைகளைப்போல் விளங்குகின்றன. கொடிகூடிப்போய் மின்தேய்க்கும் முகில்கள் தோயும் அம்மாடங்களின்
மேல் கட்டிப் பறக்கவிட்ட துணிக்கொடிகள் எல்லாம் ஒருங்குசேர்ந்து சென்று மின்னல்கள் ஒன்றோடென்று
உராயும் மேகமண்டலத்தை அளாவிப் படியும். மன்று - பிருதிவியம்பலத்தை, மிகுதியாய்ப் பரவித்
தேய்க்கும் சீரால் எனலுமாம். மல்குசீரான் - மிக்க சிறப்புடைய சிவபிரான். ஏய்க்கும் - பொருந்தச் செய்யும்.
It is Civan, the Lord of Ekambam temple which is situated in the city of Kachchi.
The entire world knows the fame of this city. Here very beautiful mansions are hill-like
strong and tall. The flags on the top of these mansions, waving in air, touch the clouds
where lightning glitters every now and then. In this famous city of Kachchi, the admirable
beauty of the temple of Civan is very well known. The devotees of the city, deeply
concentrating on the Lord of Ekambam temple, worship Him. They will not get any sufferings
on account of their karma.
1594. சடையானைத்தலைகையேந்திப்பலிதருவார்தம்
கடையேபோய்மூன்றுங்கொண்டான்கலிக்கச்சியுள்
புடையேபொன்மலருங்கம்பைக்கரையேகம்பம்
உடையானையல்லதுள்காதெனதுள்ளமே. 5
சடையானை, தலை கை ஏந்திப் பலி தருவார்தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்,
புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம்
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
caTaiyAnai, talai kai Entip pali taruvArtam
kaTaiyE pOy mUnRum koNTAn kalik kacciyuL,
puTaiyE pon malarum kampaikkarai Ekampam
uTaiyAnai, allatu uLkAtu, enatu uLLamE.
பொருள்: ஏகம்பத்துறை இறைவா! நீவிர் அழகிய சடாமுடியினைக் கொண்டவர் ஆவீர்.
நீர் பிரம கபாலத்தைக் கையில் ஏந்திக் கொண்டு தாருகாவனத்துச் சென்று முனிபத்தினிகளின்
உடல்,பொருள், ஆவி மூன்றையும் கவர்ந்தருளினீர். கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும் கம்பை
நதிக்கரையில் விளங்கும் ஏகம்பத் திருக்கோவில் வீற்றிருப்பவரே. உமது திருவடிகளைத் தவிர
என் உள்ளம் வேறு எதையும் நாடாது என்க.
குறிப்புரை: தலை ஏந்தி - தலையை (பிரமகபாலத்தை)க் கையில் தாங்கி, தருவார் - தாருகாவனத்துப்
பெண்டிர். கடை- வாயிற்கடை. மூன்றும் -உடல் பொருள் ஆவி எல்லாம். உயிர்,நாண்,கற்பு என்றலுமாம்.
புடை- நகரின் பக்கங்களில். பொன் மலரும் - பொன் (போற்கொன்றைகள்) பூக்கும். பொன் விளையும்
எனல் பொருந்தாது. கம்பை - கம்பாநதி. உடையான் - சுவாமி. உள்காது - நினையாது.
It is Civan, the Lord of Kach-chith-thiruvegambam temple has matted locks of hair.
He carried a human skull on His hand and went to the entrance of the holy Daaruga Vanam
to meet the ladies of the sages at the entrance. He then coveted all the three alms such
as their body, soul and wealth from those ladies. Such a Supreme Lord resides in the
Ekambam temple at Kachchi city on the bank of the river abounding in cassia flowers.
My mind will never brood on any god other than our Lord at this temple.
1595. மழுவாளோடெழில்கொள்சூலப்படைவல்லார்தம்
கெழுவாளோரிமையாருச்சியுமையாள்கங்கை
வழுவாமேமல்குசீரால்வளரேகம்பம்
தொழுவாரேவிழுமியார்மேல்வினைதுன்னாவே. 6
மழுவாளோடு எழில் கொள் சூலப்படைவல்லார்தம்
கெழு வாளோர் இமையார், உச்சி உமையாள் கங்கை
வழுவாமே மல்கு சீரால் வளர் - ஏகம்பம்
தொழுவாரே விழுமியார்; மேல்வினை துன்னாவே.
mazuvALOTu ezil koL cUlappaTai vallArtam-
kezu vALOr, imaiyAr, ucci umaiyAL kagkai
vazuvAmE malku cIrAl vaLar--Ekampam
tozuvArE vizumiyAr; mElvinai tunnAvE.
பொருள்: ஏகம்பத்துறை இறைவா! நீவிர் மழு, வாள், அழகிய திரிசூலம் இவற்றைக் கையில்
தாங்கியுள்ளீர்! உமையவளை இடப்பாகத்தும் கங்கையாளைத் தலையிலும் கொண்டு அழகுறக்
காட்சி அருளுகின்றீர். திருஏகம்பத்துள் உறைகின்ற உம்மை அன்புடன் வணங்கும் அடியார்களை
வினைகள் சேராவாம் என்க.
குறிப்புரை: மழு, வாள், சூலம் என்னும் படைகள் ஏந்த வல்லவர். வாள்-கட்கம், எழில்-அழகு,
வல்லார்தம் ஏகம்பம், கெழுவாள், உமையாள், வாளோர் இமையர் (இமயமலையார்). வாளோர்-
ஒளியுடையவர். உச்சி, பொது, உமையாளும் கங்கையும் மல்குசீர். வழுவாமே - தவறாமல்.
தொழுவாரே- வணங்குவாரே. விழுமியார் - சிறந்தவர். துன்னா - நெருங்கா.
It is Civan who resides in the Thiru-Ekambam temple in the holy city of Kachchi.
He clasps in His hands axe, sword and beautiful trident. His consort Umaa Devi, daughter
of the famous and glittering king of Himalayas, is with Him. Also the lady of river
Ganges adorns His head. In this holy temple full of virtues abides our Lord with a
majestic appearance as above. The devotees who always pray to Him without fail are
really the best ones. They will not be approached by any evil.
1596. விண்ணுளார்மறைகள்வேதம்விரித்தோதுவார்
கண்ணுளார்கழலின்வெல்வார்கரிகாலனை
நண்ணுவாரெழில்கொள்கச்சிநகரேகம்பத்
தண்ணலாராடுகின்றஅலங்காரம்மே. 7
விண் உளார்; மறைகள் வேதம் விரித்து ஓதுவார்
கண் உளார்; கழலின் வெல்வார், கரி காலனை;
நண்ணுவார் எழில் கொள் கச்சிநகர் ஏகம்பத்து
அண்ணலார்; ஆடுகின்ற அலங்கார(ம்)மே!
viN uLAr; maRaikaL vEtam virittu OtuvAr
kaN uLAr; kazalin velvAr, kari kAlanai;
naNNuvAr ezil koL kaccinakar Ekampattu
aNNalAr; ATukinRa alagkAra(m)mE!
பொருள்: ஏகம்பத்துறை இறைவா! நீவிர் உயர்ந்த வேதத்துள்ளும், அவ்வேதத்தை விரித்து
ஓதும் அந்தணர் உள்ளத்துள்ளும் நிறைந்துள்ளீர். காலனை கழலணிந்த காலால் உதைத்து அருளினீர்!
ஏகம்பத்துள் கோயில் கொண்டுள்ளீர். அடியார் தரும் பூசனைப் பொருட்களை ஏற்று நீர் ஆடிடும்
அழகே அழகாம் என்க.
குறிப்புரை: விண்ணிலும் வேதங்களை விரித்துப் பொருள்கூறும் அறிஞர் கண்ணிலும் இருப்பவர்.
கரி(ந்த) காலன் – யமதர்மன். கழல் - திருவடிக்கு ஆகுபெயர். யமனைக் காலால் உதைத்து வென்றவர்.
வெல்வார். நண்ணுவார் - அடைவார், விரும்புவார். எழில் கொள்ளல்- வண்ணம் பெறல். நண்ணுவாரெழில்
கொள்ளல்- இறைவன் தன்னைச் சேர்ந்தவர் வண்ணத்தைத் தான் கொள்ளுதல். 'பொன்னிறம் கட்டியினும்
பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும்' (திருக்களிறு 79) என்றும், 'ஈறாகி ....
முதலொன்றாய்..... எண் வகையாய்...... வேறாய்..... உருவுடைமை ....இருக்கின்றான்' (மேற்படி 86)
என்றும் உள்ள சிவாகம வசனத்தை நோக்குக. 'தந்தது உன்றன்னைக் கொண்டது என்றன்னை '
என்றதும் உணர்க. நண்ணுவார் எழில்கொள்ள நகர் கொடுக்கும் என்ற கருத்தும் பொருந்தும்.
எழில் - சிவப்பொலிவு.
Oh! Ye devotees! Have you seen the magnificent cosmic dance of our Lord Ekambaranaathar?
It is a beauty at its best played by our Lord at Ekambaram temple in Kachchi city. Our Lord
is in the celestial world as well as the scholars who explicate the four Vedas. He kicked
the god of death to die. This Lord has His abode in the most sacred temple Ekambam which
lies in the beautiful city of Kachchi.
1597. தூயானைத்தூயவாயம்மறையோதிய
வாயானைவாளரக்கன்வலிவாட்டிய
தீயானைத்தீதில்கச்சித்திருவேகம்பம்
மேயானைமேவுவாரென்தலைமேலாரே. 8
தூயானை,தூயஆய(ம்) மறை ஓதிய
வாயானை,வாள் அரக்கன் வலி வாட்டிய
தீயானை, தீது இல் கச்சித் திரு ஏகம்பம்
மேயானை, மேவுவார் என் தலைமேலாரே.
tUyAnai, tUya Aya(m) maRai Otiya
vAyAnai, vAL arakkan vali vATTiya
tIyAnai, tItu il kaccit tiru Ekampam
mEyAnai, mEvuvAr en talaimElArE.
பொருள்: ஏகம்பத்துறை இறைவா! நீரே தூயவர். தூய்மை பொருந்திய மறையை ஓதிய வாயினர்.
கொடிய இராவணனின் வலிமையைக் குறைத்தவர். தீயினைக் கரத்தில் ஏந்தியவர். கச்சியில் கோயில்
கொண்டவர். உம்மை வணங்கும் அடியார்களே எம்மால் வணங்கத் தக்கவர்கள் ஆவார்கள்.
குறிப்புரை: தூயவனும், தூயனவாகிய மறைகளை ஓதியருளிய வாயவனும், வாளேந்திய அரக்கனாகிய
இராவணனது வலியை வாடச் செய்த தீயவனும், தீயது இல்லாத திருக்கச்சியேகம்பத்தில் மேவியவனும்
ஆகிய சிவபெருமானை விரும்பித்தொழுவார் என்தலைமேல் இருப்பவர். இத்திருப்பாட்டின் ஈற்றடிப்
பொருளால், திருஞானசம்பந்தர்க்குச் சிவனடியாரிடத்தில் உள்ள பத்திச் சிறப்பு விளங்குகின்றது.
The Lord of Kachchi is the purest of the pure. He is the foremost to have exhibited
the valued and celebrated four Vedas through His utterances. He holds fire in one of His hands.
He subdued the mightiness of Raavanan. He is the Supreme in the city of Kachchi which destroys
all the evil disposition that is prevalent in the city. The fact is those devotees who always
pray the Lord of Kach-chith-thiruvegambam deserve always to be worshipped by us.
1598. நாகம்பூணேறதேறல்நறுங்கொன்றைதார்
பாகம்பெண்பலியுமேற்பர்மறைபாடுவர்
ஏகம்பமேவியாடுமிறையிருவர்க்கும்
மாகம்பமறியும் வண்ணத்தவனல்லனே. 9
நாகம் பூண்; ஏறுஅது ஏறல்; நறுங்கொன்றை, தார்;
பாகம் பெண்; பலியும் ஏற்பர்; மறை பாடுவர்;
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும்
மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே!
nAkam pUN; ERu atu ERal; naRugkonRai, tAr;
pAkam peN; paliyum ERpar; maRai pATuvar;
Ekampam mEvi ATum iRai iruvarkkum
mA kampam aRiyum vaNNattavan allanE!
பொருள்: ஏகம்பத்துறை இறைவா! நீரே நாகத்தை அணிகலன்களாகக் கொண்டவர். இடப
வாகனத்தில் அமர்ந்து அருளுபவர். நறுங்கொன்றை மலரைச் சூடியவர். உமையாளை இடப்பாகத்தில்
கொண்டவர். கபாலம் ஏந்திப் பலி கொள்பவர். வேதம் அருளியவர். ஏகம்பத்தில் உறைபவர். பிரமன்,
திருமால் இருவரும் அறிய முடியாமல் பெரிய தீப்பிழம்பு தூண் போன்று நெடிது விளங்குபவர் ஆவீர்.
உம்மை வணங்கி மகிழ்வோம்.
குறிப்புரை: பூண்நாகம், ஏறல்ஏறது. நார் நறுங்கொன்றை, பாகம் பெண் என்று இயைத்து
சர்ப்பாபரணம், இடப வாகனம், கொன்றை மாலை. மாதியலும் பாதியைக் கொண்டுரைக்க. பலியும் ஏற்பர்-
பிச்சை கொள்வர். உம்மை பலியின் இழிவை மிகுந்து நின்றது. மறை - வேதம். ஏகம்பம் மேவி ஆடும் இறை-
திருவேகம்பத்தில் (பிருதிவியம்பலத்தில்) எழுந்தருளிய கடவுள். ஆட்டம்- காமாட்சியம்மையாரைத்
தன்பால் ஒடுக்கிய இடமாதலின், வகாரத்தைத் தன்பால் அடக்கிய சிகாரத்தின் நிலையாகிய
சிவாநந்தத் தாண்டவம். இருவர் - பிரமவிட்டுணு. மாகம்பம் - அறியும் வண்ணத்தவன் அல்லன்.
Our Lord Ekambaranaathar places on His body the ornament of snake. He uses
the bull as His vehicle. He wears the garland of sweet smelling cassia flowers.
He shares His body with our goddess Umaa. Yet He goes out for alms. He utters the four
Vedas in a musical tone. He could not be seen by Vishnu and Brahma in spite of their
strenuous efforts. But He stood as a huge tall fire pillar, with no beginning and no end.
He is the Lord who abides in the Ekambaram temple in the city of Kachchi.
1599. போதியார்பிண்டியாரென்றிவர்பொய்ந்நூலை
வாதியாவம்மினம்மாவெனுங்கச்சியுள்
ஆதியார்மேவியாடுந்திருவேகம்பம்
நீதியாற்றொழுமின்நும்மேல்வினைநில்லாவே. 10
போதியார், பிண்டியார், என்று இவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின்! அம் மா எனும் கச்சியுள்
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்
நீதியால் - தொழுமின்! நும்மேல் வினை நில்லாவே.
pOtiyAr, piNTiyAr, enRu ivar poynnUlai
vAtiyA vammin! am mA enum kacciyuL
AtiyAr mEvi ATum tiru Ekampam
nItiyAl-tozumin! nummEl vinai nillAvE.
பொருள்: ஏகம்பத்துறை இறைவா! பௌத்தர்களும் சமணர்களும் பொய்நூலை
அடிப்படையாகக் கொண்டு வாதம் செய்வார்கள். ஏகம்பத்துறை இறைவனை உணராமல்
பேசும் அவர்கள் கூற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். கச்சியுள் பொருந்தி விளங்கும் இறைவனையே
நாங்கள் முறைப்படி தொழுவோம். எங்கள் வினை நில்லாது ஓடிவிடும் என்க.
குறிப்புரை: போதியார் - போதிமரத்தின் கீழமர்ந்த புத்தனை வணங்குவோர்.
பிண்டியார் - பிண்டி (அசோக) மரத்தின் கீழமர்ந்த அருகனை வணங்குவோர்.
பொய்ந்நூல் - மெய்ப் பொருளை அறிந்தெழுதப் படாத புத்தகம். வாதியா - வாதிக்காமல்.
வம்மின் - வாருங்கள். அம்-அழகிய. மா - மாமரம். ஏகாம்பரம் . மா எனும் கச்சி - திருவேகம்பம்
எனப்படும் கச்சி. ஆதியார் - முதல்வர். நீதியால் - சிவாகம முறைப்படி , தொழுமின் - வழிபடுங்கள்.
நும்மேல் - உங்கள்பால். வினைநில்லா - காமம் பற்றா.
Oh! You citizens of Kachchi come here to me. You need not argue with the jains
and the Buddhists over their false scriptures. They sit under Asoka and Ficus trees and
propagate ideas without realising our Lord. Here is our Lord Supreme, performing cosmic
dance in the Ekambaram temple of Kachchi which is a sacred and rich city. He is the first
and the foremost in the entire universe. Oh! You people bow at His feet with devotion
at heart. Then you will not be affected by evils.
1600. அந்தண்பூங்கச்சியேகம்பனையம்மானைக்
கந்தண்பூங்காழியூரன்கவிக்கோவையால்
சந்தமேபாடவல்லதமிழ்ஞானசம்
பந்தன்சொற்பாடியாடக்கெடும்பாவமே. 11
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை,
கந்து அண் பூங்காழிஊரன் கவிக்கோவையால்
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொல் பாடி ஆட, கெடும்,பாவமே.
am taN pUgkacci Ekampanai, ammAnai,
kantu aN pUgkAzi Uran kavikkOvaiyAl
cantamE pATa valla tamiz njAnacam -
pantan col pATi ATa, keTum, pAvamE.
பொருள்: ஏகம்பத்துறை இறைவா! அழகிய பூக்களால் குளிர்ந்து விளங்கும் கச்சியம்பதியில்
கோயில் கொண்ட இறைவா! சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பாடிய சந்த நயமிக்க
தமிழ்ப்பாடல்களை நாங்கள் பாடி உம்மை வணங்குவோம். அன்பர்களாகிய எங்கள் பாவமும் நீங்கும் அன்றே!
குறிப்புரை: அம்தண்பூ- அழகும் குளிர்ச்சியும் பொலிவும் பொருந்திய. கந்தண்பூங்காழியூர்-நீரும்
குளிர்ச்சியும் அழகும் உடைய சீகாழிப்பதி. கலிக்கோவை - ஒலிமாலை. 'பூத முதல்வன் முதலே முதலாகப்
பொலிந்த சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே' (தி. 3. ப.54 பா 8) என்று திருப்பாசுரத்தில்
அருளியது அறிக. சந்தம்- இசைப்பாடல். சொல் - சொல்மாலை. பாடி ஆடப்பாவம் கெடும். காழியூரனாகிய
தமிழ் ஞானசம்பந்தன். கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல ஞானசம்பந்தன். 'ஒண்கலியைப் பொன்றும்
கவுணியன்' அருளிய கோவை ஆதலின், கலியைத் தீர்க்கும் கோவை எனலும் ஆம். கலியுகத்துக் கோவை,
கலிவிருத்தக் கோவை எனல் பொருந்துமேற்கொள்க.
These are the musical verses in Tamil sung by Thiru-gnana-Sambandar. He hails from
Kazhiyur, a place of fragrant flower gardens. He sang these songs on Ekambaranaathar at
Thiru-Ekambam temple in the city of Kachchi. Here the beautiful flowers in the gardens
add to the grace and coolness of the entire city. Those people who can recite these verses
with fervour and dance will find their sins perish.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
12ஆம் பதிகம் முற்றிற்று
End of 12th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 149 பதிக எண்: 13
13. திருக்கோழம்பம் 13. THIRU-K-KOZHAMBAM
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
திருக்கோழம்பம் என்னும் இத்திருத்தலமானது மயிலாடுதுறை- கும்பகோணம் தொடர்வண்டிப்
பாதையில், நரசிங்கன் பேட்டை தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே 5 கி.மீ. தூரத்தில்
இருக்கின்றது. திருவாவடுதுறையிலிருந்தும் செல்லலாம். அங்கிருந்து தெற்கே சுமார் 2.5 கி.மீ
தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் முப்பத்தைந்தாவது தலம் ஆகும்.
இறைவரது திருப்பெயர்-- கோகிலேசுவரர். இறைவியாரது திருப்பெயர் - சௌந்தரநாயகி.
இந்திரனால் குயிலுருவமாகுமாறு சபிக்கப் பெற்ற சந்தன் என்னும் வித்தியாதரன் இங்குவந்து
இறைவனை வழிபட்டுப் பழைய உருவம் எய்தினன். இது திருஞானசம்பந்தராலும் திருநாவுக்கரசராலும்
பாடப்பெற்ற பெருமை வாய்ந்தது. இதற்கு இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.
பதிக வரலாறு
ஆளுடையபிள்ளையார், 'திருவாவடுதுறை அமர்ந்தாரைப் பணிந்து உறைந்து போந்து
திருக்கோழம்பம் சேர்ந்தார். அங்குக் 'கொன்றைவார் சடைமுடியாரை இறைஞ்சி என்றும் நீடிய
இன்னிசைப் பதிகம்' ஆகிய இதனைப் பாடினார்.
திருச்சிற்றம்பலம்
1601. நீற்றானைநீள்சடைமேல்நிறைவுள்ளதோர்
ஆற்றானையழகமர்மென்முலையாளையோர்
கூற்றானைக்குளிர்பொழிற்கோழம்பமேவிய
ஏற்றானையேத்துமினும்மிடரேகவே. 1
நீற்றானை,நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை,அழகு அமர் மென்முலையாளை ஓர் -
கூற்றானை,குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை,ஏத்துமின், நும் இடர் ஏகவே!
nIRRAnai, nILcaTaimEl niRaivu uLLatu Or
ARRAnai, azaku amar menmulaiyALai Or
kURRAnai, kuLir pozil kOzampam mEviya
ERRAnai, Ettumin, num iTar EkavE!
பொருள்: திருவெண்ணீறு பூசிய பெருமானை, நீண்ட சடையின்மீது கங்கையைத்
தரித்தவனை, உமையவளை உடம்பின் பாகத்தில் உடையவனை, குளிர்ச்சியான சோலைகளால்
சூழப்பெற்ற கோழம்பம் என்னும் திருத்தலத்தில் உறைவானை, இடப வாகனனை வழிபடுங்கள்.
அடியவர்களே உங்கள் இடர் தீரும்.
குறிப்புரை: நீற்றானை - திருநீற்றை அணிந்தவனை. நிறைவு - பூரணம். ஆற்றானை -
கங்கையாற்றை அணிந்தவனை, மென்முலையாள் - உமாதேவியார். ஓர் கூற்றானை ஒரு (வாம)
பாகத்தை உடையவனை. பொழில் - சோலை. ஏற்றான்- எருது வாகனத்தன். இடர் ஏக ஏத்துமின் -
துன்பம் தொலையத் தொழுங்கள்.
Behold! It is Civan the Lord of Kozhambam who has smeared white ashes all over
His body. His long matted hair is beautified brimful with the Ganges. He shares His body
with the tender breasted beautiful goddess, He has His abode in Kozhambam, a holy place of
cool gardens. He rides on the bull to go round the cosmos. He is our God Supreme, pray Him;
there will be no more karma and you will be free.
1602. மையானைகண்டனைமான்மறியேந்திய
கையானைக்கடிபொழிற்கோழம்பமேவிய
செய்யானைத்தேனெய்பாலுந்திகழ்ந்தாடிய
மெய்யானைமேவுவார்மேல்வினைமேவாவே. 2
மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய
கையானை, கடிபொழில் கோழம்பம் மேவிய
செய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
மெய்யானை, மேவுவார்மேல் வினை மேவாவே.
mai Ana kaNTanai, mAn maRi Entiya
kaiyAnai, kaTipozil kOzampam mEviya
ceyyAnai, tEn ney pAlum tikazntu ATiya
meyyAnai, mEvuvArmEl vinai mEvAvE.
பொருள்: நீல கண்டத்தை உடையவனை, மானை ஏந்திய கையானை, சோலைகள் சூழ்ந்த
திருக்கோழம்பத் தலத்தில் கோயில் கொண்டவனை, தேன், நெய், பால் இவற்றால், சூடப்பெறுபவனை,
மெய்யானவனை நினைந்து பாடுபவர்களை வினைகள் சென்று பொருந்தாவாம் என்க.
குறிப்புரை: மை- கருமை. மேகமும் ஆம். ஆன- ஆகிய, ஒத்த. கண்டனை - திருக்கழுத்து உடையவனை.
மறி -கன்று. கடி- மணம். பொழில் -சோலை.செய்யான் - செந்நிறமுடையவன். செம்மை உடையவன்
(தி.195, ப.59, பா.5) 'திருநின்ற செம்மை' 'செம்மையுள் நின்றவன்' (சுந்தரர்) 'செம்பொருள்' தேன், நெய்,
பால் என்பன அபிடேகப் பொருள்களுள் அடங்கியவை, திகழ்ந்து - விளங்கி, ஆடிய - அபிடேகிக்கப்பெற்ற.
மெய் - திருமேனி, சத்தியமுமாம். மேவுவார் - இடைவிடாது தியானிப்பவர். மேவா- அடைய மாட்டா.
Behold! It is Civan the Lord of Kozhambam whose neck is black in colour. He holds
in one of His hands the young deer. He is golden red in colour. He has His abode in Kozhambam,
a place of fragrant gardens. He is bathed with honey, ghee and milk. He is our Lord Supreme.
Evils will not infect those who meditate on His Holy Feet.
1603. ஏதனையேதமிலாவிமையோர்தொழும்
வேதனைவெண்குழைதோடுவிளங்கிய
காதனைக்கடிபொழிற்கோழம்பமேவிய
நாதனையேத்துமினும்வினைநையவே. 3
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனை,கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை,ஏத்துமின், நும் வினை நையவே!
Etanai, Etam ilA imaiyOr tozum
vEtanai, veNkuzai tOTu viLagkiya
kAtanai, kaTipozil kOzampam mEviya
nAtanai, Ettumin, num vinai naiyavE!
பொருள்: எல்லாவற்றுக்கும் காரணமானவனை, தங்களது குற்றங்கள் நீங்க தேவர்களால்
தொழப்பெறும் வேதமுதல்வனை, ஆணும் பெண்ணுமாய் குழையும் தோடும் கொண்டவனை,
சோலைகள் சூழ்ந்த திருக்கோழம்பத்தில் கோயில் கொண்டவனை நம் தலைவனாகிய சிவபெருமானை,
அடியவர்களே துதி செய்யுங்கள். வினைகள் நீங்கும்.
குறிப்புரை: ஏதன் - குற்றமுடையவன். 'குற்றம்நீ குணங்கள்நீ கூடலால வாயிலாய்' (தி.3. ப.52 பா.3)
என்று இவ்வாசிரியர் திருவாக்கேயிருத்தல் அறிக. ஏதம்- குற்றம். காரணனுமாம். இமையோர் என்பதற்குத்
தேவர் என்று பொருள்கூறுவர். இது சைவநூல்கட்கு ஒவ்வாது. இமைத்தலில்லாதவர்- இமையோர் என்னும்
சாமான்யம் பற்றி இவ்வாறு கூறுவர். 'இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த் தோன்றாத்
துணையாயிருந்தனன்' என்பதில் தேவர்க்கு அன்பன் எனல் பொருந்துமோ? கண்ணிமைத்துக் காணாத
யோகியர், விழித்தகண் குருடாத் திரி வீரர் என்பதே உண்மைப் பொருள். வேதன் - மறைகளை அருளியவன்.
வெண்குழை தோடு - சங்கத்தோடுங் குழையும். நைய - வருந்த (நீங்க).
Behold! It is Civan the Lord of Kozhambam who is the cause and effect for
evils too. The flawless celestials worship the Lord who is the embodiment of the Vedas.
He has adorned His ear with white coloured kuzhai and also stud since He is man
as well as woman. He has His abode in Kozhambam, a serene place of fragrant gardens.
He is our Lord Supreme. Ye devotees! Reach His temple and bow at His holy feet;
your evils will be wiped out.
1604. சடையானைத்தண்மலரான்சிரமேந்திய
விடையானைவேதமும்வேள்வியுமாயநன்
குடையானைக்குளிர்பொழில்சூழ்திருக்கோழம்பம்
உடையானையுள்குமினுள்ளங்குளிரவே. 4
சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய
விடையானை, வேதமும் வேள்வியும் ஆய நன்கு
உடையானை, குளிர்பொழில் சூழ் திருக் கோழம்பம்
உடையானை, உள்குமின், உள்ளம் குளிரவே!
caTaiyAnai, taNmalarAn ciram Entiya
viTaiyAnai, vEtamum vELviyum Aya nanku
uTaiyAnai, kuLirpozil cUz tiruk kOzampam
uTaiyAnai, uLkumin, uLLam kuLiravE!
பொருள்: செஞ்சடையவனை, பிரமனின் கபாலத்தைக் கையில் ஏந்தியவனை, இடப
வாகனனை, வேதமாகவும் வேள்வியாகவும் விளங்குபவனை, சோலைகள் நிறைந்த
திருக்கோழம்பத்தில் மேவியவனை நினைத்தாலே நம் உள்ளம் குளிரும் என்க.
குறிப்புரை: தண்மலரான்சிரம் - பிரமகபாலம். 'வேத வேள்வியை’ (நிந்தனை செய்துழல்
ஆதமில்லி) (தி.3. ப.108 பா.1) என்றதறிக. நன்கு - நன்மை. உடையான்- உடையவன். சுவாமியும் ஆம்.
உள்குமின் -தியானம் புரியுங்கள்.
Behold! It is Civan the Lord of Kozhambam who has matted hair He holds the
skull of Brahma (seated in lotus flower) in His hand for alms and rides on His bull .
He is pleased with the Vedic prayers and adulations by scholars. He has His abode in
Kozhambam, a sacred place surrounded by cool gardens. He is our Lord Supreme.
Ye devotees! Think of His holy feet always, your mind will be serene and cool.
1605. காரானைக்கடிகமழ்கொன்றையம்போதணி
தாரானைத்தையலோர்பால்மகிழ்ந்தோங்கிய
சீரானைச்செறிபொழிற்கோழம்பமேவிய
ஊரானையேத்துமினும்மிடரொல்கவே. 5
காரானை, கடி கமழ் கொன்றை அம்போது அணி
தாரானை, தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய
சீரானை, செறி பொழில் கோழம்பம் மேவிய
ஊரானை,ஏத்துமின், நும் இடர் ஒல்கவே!
kArAnai, kaTi kamaz konRai ampOtu aNi
tArAnai, taiyal OrpAl makizntu Ogkiya
cIrAnai, ceRi pozil kOzampam mEviya
UrAnai, Ettumin, num iTar olkavE!
பொருள்: மேகம் போன்று குளிர்ந்து அருள்பவனை, மணமிக்க கொன்றை மாலையை
அணிபவனை, உமாதேவியை திருமேனியின் ஒருபாகத்தில் கொண்டுள்ளவனை சோலைகள்
நிறைந்த கோழம்பத்தலத்தில் உறைபவனை வழிபடின் நம் துன்பங்கள் நீங்கும் என்க.
குறிப்புரை: காரான் - மேகமாயிருப்பவன். 'கனத்தகத்தான் கயிலாயத்துச்சியுள்ளான்'
போது-பூ . தார்- (மாலை, கண்ணி) தார். தையல் - பாலாம்பிகை. சீரான் - கனவான். ஒல்க - சுருங்க.
கோழம்பம் மேவிய ஊர் என்றதால் திருக்கோயிலின் திருநாமம் கோழம்பம் என்க.
'கோழம்பங்கோயிலாக் கொண்டான்' என மேல்வருதலும் காண்க.
Behold! It is Civan the Lord of Kozhambam, who like cold clouds loaded with water,
showers His grace. He wears the garland of fragrant cassia flowers. He has the virtue of
sharing His body with our goddess. He has His abode in Kozhambam which is a place of
thick gardens. He is our Lord Supreme. Ye devotees! Bow at His holy feet, your sufferings
will be gone forever.
1606. பண்டாலின்நீழலானைப்பரஞ்சோதியை
விண்டார்கள்தம்புரம்மூன்றுடனேவேவக்
கண்டானைக்கடிகமழ்கோழம்பங்கோயிலாக்
கொண்டானைக்கூறுமினுள்ளங்குளிரவே. 6
பண்டு ஆலின் நீழலானை, பரஞ்சோதியை,
விண்டார்கள் தம் புரம்மூன்று உடனேவேவக்
கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக்
கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே!
paNTu Alin nIzalAnai, paranjcOtiyai,
viNTArkaL tam purammUnRu uTanE vEvak
kaNTAnai, kaTi kamaz kOzampam kOyilAk
koNTAnai, kURumin, uLLam kuLiravE!
பொருள்: முன்னொரு காலத்தில் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு
அருள் செய்தவனை, மாறுபட்ட முப்புர அசுரர்களை சிரித்தே அழித்தவனை, திருக்கோழம்பத்தில்
கோயில் கொண்டவனை வழிபடின் நம் உள்ளம் குளிரும், அமைதி பெறும் என்க.
குறிப்புரை: ஆல்- கல்லாலமரம். பரஞ்சோதி - மெய்யொளி. விண்டார்கள் - பகைவராகிய
திரிபுரத்தசுரர்கள். புரம் மூன்று - முப்புரம். கண்டான் - கண்டவன். வினையாலணையும் பெயர்.
கூறுமின் -புகழுங்கள். கடவுள் புகழை வாயாரக் கூறுதல் உள்ளக் குளிர்ச்சிக்குக் காரணம் என்றவாறு.
Behold! It is Civan the Lord of Kozhambam, who as a preacher sat under the
huge banyan tree as Dakshinaamoorthy facing south and cleared the doubts of the four saints.
He is the greatest effulgence of all lights. He destroyed the three fortresses of the
evil minded Asuraas. He has His abode in Kozhambam which is a blessed temple of fragrance.
He is our Supreme Lord. Ye devotees, speak loudly about the glories of our Lord; then your
mind will be serene and cool.
1607. சொல்லானைச்சுடுகணையாற்புரமூன்றெய்த
வில்லானைவேதமும்வேள்வியுமானானைக்
கொல்லானையுரியானைக்கோழம்பமேவிய
நல்லானையேத்துமினும்மிடர்நையவே. 7
சொல்லானை,சுடுகணையால் புரம்மூன்று எய்த
வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை,
கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவிய
நல்லானை,ஏத்துமின், நும் இடர் நையவே!
collAnai, cuTu kaNaiyAl puram mUnRu eyta
villAnai, vEtamum vELviyum AnAnai,
kol Anai uriyAnai, kOzampam mEviya
nallAnai, Ettumin, num iTar naiyavE!
பொருள்: மந்திர மொழியாக விளங்குபவனை நெருப்புக் கணையால் முப்புரங்களை
எரிவிக்க மேருமலை என்னும் தேரில் ஏறி நின்றவனை, வேதமும் வேள்வியும் ஆனவனை கரிய
யானையைக் கொன்று அதன் தோலை உரித்து ஆடையாகக் கொண்டவனை திருக்கோழம்பத்து
உறைவானை, நல்லவனை வழிபடின் நம் துயரெல்லாம் நீங்கும் என்க.
குறிப்புரை: சொல்லான் - சொல்வடிவாகிய அம்பிகையை உடையவன். சொல்லாயிருப்பவன்
எனலும் பொருந்தும். கணை –திருமாலாகிய அம்பு. வில்- மேருவில். வேதவேள்வி, (தி.2 . ப 13. பா 4)
கொல்லானை - கொல்லும் யானை வினைத்தொகை. (உரி - தோல்) உரியான் - தோலைப் போர்த்துக்
கொண்டவன். நல்லான் - சிவன், மங்கல வடிவன்.
Behold! It is Civan the Lord of Kozhambam who is the embodiment of all
mantras and its resultant sound. He holds the bow that burnt the three forts with a
sharp arrow. He is the personification of all Vedas and religious rites. He killed the
ferocious elephant and peeled its skin and covered His body. He has His abode in
Kozhambam. He is the manifestation of benevolence and perfection. He is our Lord Supreme.
Ye devotees! Praise His glory to be relieved of your woes.
1608. விற்றானைவல்லரக்கர்விறல்வேந்தனைக்
குற்றானைத்திருவிரலாற்கொடுங்காலனைச்
செற்றானைச்சீர்திகழுந்திருக்கோழம்பம்
பற்றானைப்பற்றுவார்மேல்வினைபற்றாவே. 8
வில்-தானை வல்அரக்கர் விறல் வேந்தனைக்
குற்றானை,திருவிரலால்; கொடுங்காலனைச்
செற்றானை; சீர் திகழும் திருக் கோழம்பம்
பற்றானை; பற்றுவார்மேல் வினை பற்றாவே.
vil-tAnai val arakkar viRal vEntanaik
kuRRAnai, tiruviralAl; koTugkAlanaic
ceRRAnai; cIr tikazum tiruk kOzampam
paRRAnai; paRRuvArmEl vinai paRRAvE.
பொருள்: மேருமலையை வில்லாக வளைத்தவனை, அரக்கர் வேந்தன் இராவணனின்
அகந்தையை தன் கால்விரல் கொண்டு அடக்கியவனை, காலனைக் காலால் காய்ந்தவனை,
திருக்கோழம்பத்து உறைவானைப் பற்றினால் நம்மை வினைகள் பற்றாவாம்.
குறிப்புரை: வில்தானை - விற்படை. வல் அரக்கர்- வலிய இராக்கதர். அசுரர் காரணம் பற்றி
வருந்துபவர். இராக்கதர். ஒரு காரணமும் பற்றாது வருந்துபவன். அரக்கர் வேந்தன்- இராவணன்.
குற்றான் - சிறுமைப்படுத்தியவன், நசுக்கியவன் விரலாற் குற்றான் என்று கொள்க. காலனைச்
செற்றான் -காலசங்காரக் கடவுள். பற்றான் - பற்றுதலை உடையவன். பற்றுவார் - அடியர்.
பற்றா - தொடரா.
Behold! Civan the Lord of Kozhambam is our God Supreme. Raavanan, the king of
Sri Lanka was the supreme head of all his race of Raakshasas. His might and loftiness
were subdued by our Lord of Kozhambam. He once kicked and killed the god of death.
Our Lord has His abode at glorified Thiru-k-Kozhambam. Those devotees who grip His
holy feet with great love will never be gripped by evils.
1609. நெடியானோடயனறியாவகைநின்றதோர்
படியானைப்பண்டங்கவேடம்பயின்றானைக்
கடியாருங்கோழம்பமேவியவெள்ளேற்றின்
கொடியானைக்கூறுமினுள்ளங்குளிரவே. 9
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர்
படியானை, பண்டங்கவேடம் பயின்றானை,
கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள்ஏற்றின்
கொடியானை, கூறுமின் உள்ளம் குளிரவே!
neTiyAnOTu ayan aRiyA vakai ninRatu Or
paTiyAnai, paNTagkavETam payinRAnai,
kaTi Arum kOzampam mEviya veL ERRin
koTiyAnai, kURumin, uLLam kuLiravE!
பொருள்: திருமாலும், பிரமனும் அடிமுடி தேடி அறியா வகையில் நெருப்பு வடிவாய்
நின்றவனை, பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடிட, அதற்குரிய வேடத்தைக் கொண்டவனை,
சோலைகள் நிறைந்த கோழம்பப் பதியில் உறைபவனை பாடிப்பரவுவாரின் உள்ளங்கள் குளிர்வு பெறும்.
குறிப்புரை: நெடியான்- விக்கிரமன், திருமால். அயன்- அஜன், பிரமன். படியான் - உருவத்தை
உடையவன் (படியனார். தி.2 ப.79 பா.10) பண்டங்க வேடம்- பாண்டரங்கம் என்னும் கூத்துக்காகக்
கொண்ட திருவேடம். வெள்ளேற்றின் கொடி - இடபத்துவசம். எருதின்கொடி.
Behold! It is Civan the Lord of Kozhambam who plays the dance called Pandaranga.
Once Lord Vishnu and Brahma attempted to see the holy head and holy feet of our Lord in vain.
Then He stood in an irrecognizable form. He mounts with His flag the white bull on which
He rides. Our Lord has His abode at fragrant Kozhambam. He is our God Supreme. Ye devotees!
speak of His glory to one and all and be happy with your mind, serene and cool.
1610. புத்தருந்தோகையம்பீலிகொள்பொய்ம்மொழிப்
பித்தரும்பேசுவபேச்சல்லபீடுடைக்
கொத்தலர்தண்பொழிற்கோழம்பமேவிய
அத்தனையேத்துமினல்லலறுக்கவே. 10
புத்தரும்,தோகை அம்பீலி கொள் பொய்ம்மொழிப்
பித்தரும், பேசுவ பேச்சு அல்ல பீடு உடைக்
கொத்து அலர் தண்பொழில் கோழம்பம் மேவிய
அத்தனை ஏத்துமின், அல்லல் அறுக்கவே!
puttarum, tOkai ampIli koL poymmozip
pittarum, pEcuva pEccu alla; pITu uTaik
kottu alar taNpozil kOzampam mEviya
attanai Ettumin, allal aRukkavE!
பொருள்: புத்தரும், மயிற்பீலியைக் கையில் கொண்ட சமணரும் பொய்மொழிகளையே
எப்பொழுதும் பேசித் திரிவர். அவர்களுடைய சொற்கள் மெய்யானவை அல்லவாம். எனவே,
அடியவர்களே நீங்கள் மலர்கள் நிறைந்த சோலையில் உறையும் மெய்ம்மையாம் சிவனையே
வழிபாடு செய்யுங்கள். உங்களது துன்பம் எல்லாம் நீங்கப் பெறும் என்க.
குறிப்புரை: தோகையம் பீலி - மயிற்பீலியாகிய வார்கோல். பொய்மொழிப்பித்தர்- மெய்யுரையாத
மயக்கவுணர்வினராய சமணர். பீடு -பெருமை. அத்தன்- பிதா. அல்லல் - பிறவிப் பிணி முதலிய
துன்பங்கள். அறுக்க - அறச்செய்ய.
The speeches of the Buddhists and the Jains who have peacock feathers in their
hands are not true. Ye! the citizens of Kozhambam praise your Lord who resides in the
temple which is surrounded by cool gardens of flower bunches. Your sufferings will be
severed at once.
1611. தண்புனலோங்குதண்ணந்தராய்மாநகர்
நண்புடைஞானசம்பந்தன்நம்பானுறை
விண்பொழிற்கோழம்பமேவியபத்திவை
பண்கொளப்பாடவல்லார்க்கில்லைபாவமே.. 11
தண்புனல் ஓங்கு தண்அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை
பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.
taNpunal Ogku taN am tarAy mA nakar
naNpu uTai njAnacampantan, nampAn uRai
viN pozil kOzampam mEviya pattu ivai
paN koLap pATa vallArkku illai, pAvamE.
பொருள்: குளிர்ந்த நீர் வளம் கொண்ட திருத்தலம் சீர்காழி. அப்பதியில் அவதரித்தவரே
திருஞானசம்பந்தர். அவர் உயர்ந்த சோலைகள் சூழ்ந்த கோழம்பரை பக்தியுடன் பாடி அருளியுள்ளார்.
அதனை நாமும் பாடி நம் பாவங்கள் நீங்கப் பெறுவோமாக.
குறிப்புரை: தராய் - சீகாழியின் பெயர். நம்பான் - சிவபிரான். விண்பொழில்-வானை அளாவிய
சோலை. பத்தும் இவை -இப்பதிகத்தை. பண்கொளப் பாடவல்லார்- பண்ணிசையுடன் பாடும் வன்மை
உடையவர்.
It is Civan the Lord of Kozhambam who resides in the temple which is surrounded by
sky kissing gardens. Thiru-gnana-Sambandar hails from Thannantharai surrounded by cool
waters everywhere. Those devotees who are capable of reciting in proper musical note
these ten hymns sung by Thiru-gnana-Sambandar on our Lord of Kozhambam with much devotion
and fervour, will have no sins; If they have any it will be wiped out.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
13ஆம் பதிகம் முற்றிற்று
End of 13th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 150 பதிக எண்: 14
14.திருவெண்ணியூர் 14.THIRU-VENNIOOR
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
திருவெண்ணியூர் என்னும் இத்திருத்தலமானது தஞ்சாவூர் - திருவாரூர் தொடர் வண்டிப்
பாதையில், கோயில் வெண்ணி என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு 2.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது.
தஞ்சை - நீடாமங்கலம், தஞ்சை - திருவாரூர் பேருந்துகளில் கோயில் வெண்ணி என வழங்கும்
இவ்வூரை அடையலாம். இது காவிரித் தென்கரையிலுள்ள நூற்றிரண்டாவது தலம் ஆகும்.
இறைவரது திருப்பெயர் வெண்ணிக் கரும்பர். இறைவியாரது திருப்பெயர் அழகியநாயகி.
இறைவர் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்று சேர்த்து வைத்தாற்போல் இருக்கின்றது.
பதிக வரலாறு
பாலறாவாயர் வேதிகுடியினில் தமிழ் வேதத்தின் ஓங்கிசையை ஓதி, முதல்வரைப் போற்றித்
தொழுது வந்து, திருவெண்ணிப் பதியினிற் கோயிலை நண்ணிக் காதலின் வணங்கி, 'சடையானை'
எனும் இப்பதிகத்தைப் பாடினார்.
திருச்சிற்றம்பலம்
1612. சடையானைச்சந்திரனோடுசெங்கண்ணரா
உடையானையுடைதலையிற்பலிகொண்டூரும்
விடையானைவிண்ணவர்தாந்தொழும்வெண்ணியை
உடையானையல்லதுள்காதெனதுள்ளமே. 1
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
caTaiyAnai, cantiranOTu cegkaN arA
uTaiyAnai, uTaitalaiyil pali koNTu Urum
viTaiyAnai, viNNavartAm tozum veNNiyai
uTaiyAnai, allatu uLkAtu, enatu uLLamE.
பொருள்: சடைமுடி உடையவனை, சந்திரனையும் பாம்பையும் அணிந்தவனை,
பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி தேர்பவனை, தேவர்களும் தொழும் வெண்ணிப்
பதியானை,நான் எப்பொழுதும் நினைவேன். அவனைத் தவிர என் உள்ளம் வேறு
எவரையும் நினைக்காது.
குறிப்புரை: சடையானை என்றதன் பின் கூறியதால், சந்திரனையும் சிவந்த கண்களை
உடைய பாம்பையும் அச்சடைமேல் உடையான் என்க. அரா - பாம்பு. உடைதலை - உடைந்த தலை,
பிரமகபாலம். ஊரும்விடை - ஏறிச்செலுத்தப்படும் எருது. விண்ணவர் - தேவர். வெண்ணி - வென்றி
என்பதன் மரூஉ. நன்றி - நண்ணி. பன்றி - பண்ணி. மன்று - மண்ணு. கன்று - கண்ணு என்பனவற்றில்
உள்ள னகரமும் றகரமும் உற்ற திரிபை நோக்குக. உள்காது - நினையாது.
It is Civan, the Lord of Venni called Venni-naathar who resides in Vennioor with
matted hair. He has adorned His head with the moon and the red eyed snake. He mounts
His bull and goes round the cosmos for alms carrying a skull on His hand. He is in Venni,
a holy place and is prayed by the celestials. I will always contemplate on Him, I cannot
entertain anybody else in my heart.
1613. சோதியைச்சுண்ணவெண்ணீறணிந்திட்டவெம்
ஆதியையாதியுமந்தமுமில்லாத
வேதியை வேதியர்தாந்தொழும்வெண்ணியில்
நீதியைநினையவல்லார்வினைநில்லாவே. 2
சோதியை, சுண்ணவெண்நீறு அணிந்திட்ட எம்
ஆதியை, ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை, வேதியர்தாம் தொழும் வெண்ணியில்
நீதியை, நினைய வல்லார் வினை நில்லாவே.
cOtiyai, cuNNaveNnIRu aNintiTTa em
Atiyai, Atiyum antamum illAta
vEtiyai,vEtiyartAm tozum veNNiyil
nItiyai, ninaiya vallAr vinai nillAvE.
பொருள்: ஒளி மயமானவனை, வெண்ணீறு அணிந்திட்ட எம் ஆதியனை, ஆதியும் அந்தமும்
இல்லாத வேதியனை, அந்தணர்களால் விரும்பி வணங்கப் பெறுபவனை, வெண்ணிப் பதியில்
உறைபவனை, நினைப்பவர்கள் வினை நீக்கப் பெறுவார்கள் என்க.
குறிப்புரை: சுண்ணம் - பொடி. ஆதியும் அந்தமும் இல்லாத வேதியை- முதலும் முடிவும் இல்லாத
மறையோனை. வேதத்தை அருளியதால் வேதியானான். நீதியை-தரும சொரூபியை. நினைதல் எளிதன்று.
அரிதாகப் பெறத்தக்கது ஆதலின் வல்லார் என்றார்.
It is Civan the Lord of Venni who is light Himself. He has smeared His body with
white sacred powder. He is the origin and the absolute. He is an embodiment of the Vedas
and the Infinite. He is the personification of the virtue of dharma. He resides in Venni.
Those devotees who can always think of His holy feet and pray will never find any evil
lingering in their lives.
1614. கனிதனைக்கனிந்தவரைக்கலந்தாட்கொள்ளும்
முனிதனைமூவுலகுக்கொருமூர்த்தியை
நனிதனைநல்லவர்தாந்தொழும்வெண்ணியில்
இனிதனையேத்துவரேதமிலாதாரே. 3
கனிதனை, கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை, மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை,
நனிதனை, நல்லவர்தாம் தொழும் வெண்ணியில்
இனிதனை,ஏத்துவர் ஏதம் இலாதாரே.
kanitanai, kanintavaraik kalantu ATkoLLum
munitanai, mUulakukku oru mUrttiyai,
nanitanai, nallavartAm tozum veNNiyil
initanai, Ettuvar Etam ilAtArE.
பொருள்: நற்கனி போன்றவனை, உள்ளம் கனிந்தவரை ஆட்கொள்ளும் அண்ணலை,
மூவுலகுக்கும் ஒப்பற்ற தலைவனாக விளங்கும் இறைவனை, நல்லவர்களால் வணங்கப் படுபவனை,
திருவெண்ணிப் பதியில் கோயில் கொண்டுள்ளவனை, ஏத்தி வழிபடும் அடியவர்கள் குற்றமற்றவராய்
துன்பமின்றி விளங்குவர்.
குறிப்புரை: கனிதனை- பழத்தை. கனிந்தவர்- மனங் கனிந்துருகி வழிபடுபவர். முனிதனை-
மனனசீலனை, நனிதனை - மேம்பட்டவனை. நனி - மிகுதி. உரிச் சொல்லடியாக நின்ற பெயர். நல்லவர்-
சரியை,கிரியை,யோகங்களில் முதிர்ந்த ஞானிகள், சைவ நலமுடையவரெனப் பொதுப் பெயருமாம்.
இனிதனை - (இனிது + அன் + ஐ) இன்புருவானவனை. ஏதம் - இருவினைக் குற்றம்.
It is Civan the Lord of Venni who is the fruit of absolute wisdom. He is a sage
activating those with mature emotions that melt out of love. He is the Supreme God,
unique in all the three worlds. He is superior to all and everything in the universe. He
bestows His grace with sweetness on all those good people who pray at Venni. Those who
praise His holy feet and pray to Him, who embodies joy, will be free of the two evils -
sorrows and flaws.
1615. மூத்தானைமூவுலகுக்கொருமூர்த்தியாய்க்
காத்தானைக்கனிந்தவரைக்கலந்தாளாக
ஆர்த்தானையழகமர்வெண்ணியம்மான்றன்னை
ஏத்தாதாரென்செய்வாரேழையப்பேய்களே. 4
மூத்தானை,மூஉலகுக்கு ஒரு மூர்த்திஆய்க்
காத்தானை,கனிந்தவரைக் கலந்து ஆள்ஆக
ஆர்த்தானை, அழகு அமர் வெண்ணி அம்மான் தன்னை,
ஏத்தாதார் என் செய்வார்? ஏழை, அப் பேய்களே!
mUttAnai, mU ulakukku oru mUrtti Ayk
kAttAnai, kanintavaraik kalantu AL Aka
ArttAnai, azaku amar veNNi ammAn tannai,
EttAtAr en ceyvAr? Ezai, ap pEykaLE!
பொருள்: முன்னைப் பழம் பொருளாய் உள்ளவனை, மூவுலகிற்கும் தலைவனை, உயிர்களைக்
காத்து அருள்பவனை, உள்ளம் கனிந்தவர்களின் உள்ளத்தில் பொருந்தி இருப்பவனை, அழகான
வெண்ணிப் பதியில் உறைபவனை ஏத்தி வணங்காதவர்கள் கீழ்மைத்தனம் கொண்டவர்களாய்
பேய் போன்றவர்கள் என்க.
குறிப்புரை: மூத்தான் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாயிருப்பவன்.
மூவுலகுக்கு ஒரு மூர்த்தி: -சிவபரத்துவம் கூறியவாறு, முற்பாட்டினிலும் காண்க. காத்தான்- மூவுலகையும்
காத்தவன், காக்கின்றவன், காப்பவன். கனிந்தவரைக் கலந்தாட் கொள்ளல் மேலும் கூறப்பட்டது .
அழகமர் வெண்ணி என்றதால் தவச்சிறப்பு விளங்கும். அம்மான் - அரிய மகன். மகன் - கடவுள்.
மகள்-திருமகள், நாமகள். ஏத்தாதார்- துதித்து வணங்காதார். ஏத்துதல்- தோத்திரத்தால் வழிபடல்.
சிவபிரானை ஏத்தாதவர் மக்கட் பிறப்பினராயினும் பேய் போன்றவரேயாவர். "மனத்துன்னை
நினைப்பின்றிப் பேயாய்த் திரிந்தெய்த்தேன்' என்னும் அருள்மொழிப் பகுதியைக் காண்க.
திருவள்ளுவரும் 'வையத்தலகை' என்றார்.
It is Civan the Lord of Venni who is the foremost and the primordial. He is the
only one Supreme God of all the three worlds who protects one and all. There are true
and mature people, who with wisdom and melting emotions, pray on the Lord. Our Lord
mixes in the minds of such people happiness and grace. He abides in His beautiful city
of Venni. There might be some people who do not pray to our Lord. They will be abject
and mean, become very low like devils and wander in the world in future.
1616. நீரானைநிறைபுனல்சூழ்தருநீள்கொன்றைத்
தாரானைத்தையலொர்பாகமுடையானைச்
சீரானைத்திகழ்தருவெண்ணியமர்ந்துறை
ஊரானையுள்கவல்லார்வினையோயுமே. 5
நீரானை, நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றைத்
தாரானை, தையல் ஒர்பாகம் உடையானை,
சீரானை, திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை
ஊரானை, உள்க வல்லார் வினை ஓயுமே.
nIrAnai, niRai punal cUztaru nIL konRait
tArAnai, taiyal OrpAkam uTaiyAnai,
cIrAnai, tikaztaru veNNi amarntu uRai
UrAnai, uLka vallAr vinai OyumE.
பொருள்: ஒளிமயமானவனை, நிறை புனலாகிய கங்கையைத் தன் தலையில் கொண்டவனை,
கொன்றை மலர் மாலை அணிந்தவனை, உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனை,
சிறப்பு மிக்கவனை, வெண்ணிப் பதியில் கோயில் கொண்டவனை, அன்புடன் நினைப்பவர்களின்
வினை எல்லாம் நீங்கப் பெறும்.
குறிப்புரை: நிறைபுனல்- கங்கைநீர். தலையிற் கங்கையைச் சூழக் கொன்றை மாலை அணிந்தான்.
திருவெண்ணியூர் அமர்ந்து உறைவான் என்று இயைத்துக் கொள்க. தோத்திரம் புறப் பூசையினும் சிறந்தது.
அகத்தில் செய்யும் தியானம் அவ்விரண்டினும் பெரும்பயன் அளிப்பது. திரிகரணங்களாலும் ஆகும்
வினைகளை அத்திரிகரணங்களாலும் தீர்க்கும் வழிகள் தியானம், தோத்திரம், நமஸ்காரம், பூஜை
முதலியவை. அவற்றுள் தியானமே உத்தமம் ஆதலின், உள்க வல்லார் வினை ஓயும் என்று அருளினார்.
Civan, the Lord of Venni is the purest and brightest light. He has the profuse
river Ganges on His head. He is cool and serene as water itself. He has beautified His
matted hair with the garland of cassia flowers. He shares His body with our goddess Uma.
He is the embodiment of all virtues. He abides in Venni. Those who always meditate on
His holy feet will not suffer bad karma in their life.
1617. முத்தினைமுழுவயிரத்திரள்மாணிக்கத்
தொத்தினைத்துளக்கமிலாதவிளக்காய
வித்தினைவிண்ணவர்தாந்தொழும்வெண்ணியில்
அத்தனையடையவல்லார்க்கில்லையல்லலே. 6
முத்தினை,முழுவயிரத்திரள் மாணிக்கத்
தொத்தினை, துளக்கம் இலாத விளக்குஆய
வித்தினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அத்தனை,அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.
muttinai, muzuvayirattiraL mANikkat
tottinai, tuLakkam ilAta viLakku Aya
vittinai, viNNavar tAm tozum veNNiyil
attanai, aTaiya vallArkku illai, allalE.
பொருள்: முத்தாகவும், வயிரமாகவும், மாணிக்க மணியாகவும் விளங்குகின்ற ஈசனை
அணையா விளக்காக விளங்குபவனை, எல்லாப் பொருள்களுக்கும் வித்தானவனை விண்ணவர்களால்
வணங்கப் பெறுபவனை, வெண்ணித்தலத்தின் நாதனை அன்புடன் அடைய வல்லார்களுக்கு
அல்லல் என்பதே இல்லையாம் என்க.
குறிப்புரை: முத்து, முழு வயிரத் திரள், மாணிக்கத் தொத்து முதலியவை, ஒப்பில்லாத கடவுளுக்கு
அன்பின் மேலீட்டால், ஒப்புறுத்திச் சொல்லும் உபசார வழக்கு, 'பொருள்சேர் புகழ்' என்ற வள்ளுவர்
கருத்தும் ஈண்டு நினைக்கத் தக்கது. தொத்து -கொத்து. துளக்கம்- அசைவு. இங்கு அணைதலைக்
குறித்தது. அணையா விளக்கு என்க. நமக்கு அல்லல் இல்லையாம்படி சிவனை அடையும் வன்மையைப்
பெறத் தவஞ்செய்தல் வேண்டும்.
Civan the Lord of Venni is a perfect pearl, a wholesome well-developed diamond,
as well as a bunch of valuable ruby. He is the seed of all and everything from which
inextinguishable lights emerge. He is worshipped at Venni by all the celestials.
He is our Supreme Master. Those devotees who aspire and succeed in reaching and
worshipping Him will be free of all trouble in life.
1618. காய்ந்தானைக்காமனையுஞ்செறுகாலனைப்
பாய்ந்தானைப்பரியகைமாவுரித்தோல்மெய்யில்
மேய்ந்தானைவிண்ணவர்தாந்தொழும்வெண்ணியில்
நீந்தானைநினையவல்லார்வினைநில்லாவே. 7
காய்ந்தானைக் காமனையும் செறு காலனைப்
பாய்ந்தானை, பரிய கைம்மாஉரித்-தோல் மெய்யில்
மேய்ந்தானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
நீந்தானை,நினைய வல்லார் வினை நில்லாவே.
kAyntAnaik kAmanaiyum, ceRu kAlanaip
pAyntAnai, pariya kaimmA urit-tol meyyil
mEyntAnai, viNNavartAm tozum veNNiyil
nIntAnai, ninaiya vallAr vinai nillAvE.
பொருள்: மன்மதனைக் காய்ந்து பொடிப்பொடியாக்கியவனை, காலனைக் காலால்
உதைத்து அருளியவனை, கரியின் தோலை உரித்து ஆடையாகக் கொண்டவனை,
விண்ணவர்களால் தொழப் பெறுபவனை, வெண்ணியில் உறைபவனை நினைய
வல்லார்களின் வினைகள் நில்லாவாம்.
குறிப்புரை: காமன் - பெண்ணாசையை வளர்ப்பவன், மன்மதன், காமத்திற்கு அதிதேவதை.
காமன்- இயமன். காய்ந்தான் - கோபித்து எரித்தான். பாய்ந்தான் - பாய்ந்து உதைத்தான். பரிய -
பருமையுடைய, பருத்த. கை- துதிக்கை. மா-யானை. உரி - உரித்த தோல். உரித்தோல் - உரியாகிய தோல்.
உரி - முதனிலைத் தொழிற்பெயர். அஃது ஆகுபெயராய்த் தோலை உணர்த்துமிடமும் உண்டு. இங்குத்
தோல் என்று அடுத்திருப்பதால் தொழிற்பெயராய் மட்டும் கொள்ளப்பட்டது. மெய் - திருமேனி.
மேய்ந்தான் - வேய்ந்தான், அணிந்தான். நீந்தான் - கடவுள்.
It is Civan the Lord of Venni who once got wild with cupid, the god of love
and killed him with the fire from His third eye. On another occasion He kicked the
god of death, Kaalan, to death. Once He skinned the huge elephant, killed it and
covered His body with its skin. He is always worshipped by the celestials. He abides
always in Venni. Those devotees who approach Him, and contemplate on Him will not
suffer the evil effects of their karma.
1619. மறுத்தானைமாமலையைமதியாதோடிச்
செறுத்தானைத்தேசழியத்திகழ்தோள் முடி
இறுத்தானையெழிலமர்வெண்ணியெம்மானெனப்
பொறுத்தானைப்போற்றுவாராற்றலுடையாரே. 8
மறுத்தானை,மாமலையை மதியாது ஓடிச்
செறுத்தானைத் தேசு அழியத் திகழ் தோள்முடி
இறுத்தானை, “எழில் அமர் வெண்ணி எம்மான்" எனப்
பொறுத்தானை, போற்றுவார் ஆற்றல் உடையாரே.
maRuttAnai, mAmalaiyai matiyAtu OTic
ceRuttAnait tEcu aziyat tikaz tOLmuTi
iRuttAnai, "ezil amar veNNi emmAn!" enap
poRuttAnai, pORRuvAr ARRal uTaiyArE.
பொருள்: இறைவனை மறந்து கயிலாய மலையைத் தூக்கிட நினைத்த இராவணனின்
வலிமையை அழித்தவனை, அவனது தோள்களையும் முடிகளையும் நெறித்தவனை, அழகு
பொருந்திய வெண்ணிப் பதியில் உறைபவனை, போற்றும் அடியார்கள் எல்லாவிதமான
ஆற்றலையும் பெற்றவர்கள் ஆவார்கள்.
குறிப்புரை: மறுத்தானை- பகைவனை. ஒன்றார்- பொருந்தாதார் மறுத்தார் என்பவைப் போலப்
பகைவரைக் குறித்தற்கு ஆளும் பெயர்களை அறிந்து கொள்ளலாம். மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்
கறுத்தவன் (தி.1 ப. 109 பா. 8) செறுத்தான்- கோபித்தவனை. மறுத்தல், செறுத்தல் இரண்டும் இராவணன்
தொழில். இறுத்தல் - முரித்தல். இறுத்தவனும் பொறுத்தவனும் சிவபிரான். ஆற்றல்- ஞானபலம்
முதலிய யாவும்.
Civan, the Lord of Venni, is our Lord Supreme. The king of Sri Lanka was a very
great devotee of Lord Civa. At one stage due to his ego and arrogance, he tried to lift
the great mountain Kailash defying Lord Civan and His consort Umaa who resided there.
Our Lord of Venni subdued him with his twenty strong shoulders. The king realised
his mistake, begged for pardon and sang very beautiful songs about the glory of our
Lord in Saama tune. Our Lord pardoned and blessed him. Those devotees who hail His
virtues will become mighty in all respects.
1620. மண்ணினைவானவரொடுமனிதர்க்கும்
கண்ணினைக்கண்ணனுநான்முகனுங்காணா
விண்ணினைவிண்ணவர்தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலையடையவல்லார்க்கில்லையல்லலே. 9
மண்ணினை,வானவரொடு மனிதர்க்கும்
கண்ணினை, கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அண்ணலை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.
maNNinai, vAnavaroTu manitarkkum
kaNNinai, kaNNanum nAnmukanum kANA
viNNinai, viNNavar tAm tozum veNNiyil
aNNalai, aTaiya vallArkku illai, allalE.
பொருள்: மண்ணாகவும் விளங்கும் இறைவனை, தேவர்க்கும் மனிதர்க்கும் கண்ணாக
இருப்பவனை, கண்ணனும் நான்முகனும் அறிய முடியாப் பெருமானை, தேவர்களால்
வணங்கப் பெறும் சிறப்புடையவனை, வெண்ணியின் அண்ணலை அடைய வல்லவர்களுக்கு
அல்லல் இல்லை என்க.
குறிப்புரை: மண்ணினை - அஷ்டமூர்த்தத்துள் பிருதுவி ரூபமாக இருக்கின்ற சிவனை.
உலகுக்கெல்லாம் ஒருகண், உயிர்க்கெல்லாம் கண் என்பதனால், வானவர்க்கும் மனிதர்க்கும்
கண்ணினை என்றார். பெண்ணவன்காண்.... எல்லாம் காணும் கண்ணவன்காண் (தி. 6 ப. 48 பா. 7)
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான்கண்டாய் (தி. 6 ப. 73 பா.2) விண்- திருச்சிற்றம்பலம்.
அண்ணல் -முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள். அல்லல் - பிறவித் துன்பம்,
இம்மையில் உறும் துயரம் எல்லாம்.
It is Civan, Lord of Venni is our Supreme. He is the embodiment of eight
denominations such as air, earth, water, fire, sky, sun, moon and soul. Here He is
represented as earth and the divine eye to both the celestials and the earthly people.
Once Vishnu and Brahma attempted to apprehend our Lord, but in vain. He is worshipped
by the celestials. He is our Lord of Venni; those who can reach His holy feet will have
no evils in life.
1621. குண்டருங்குணமிலாதசமண்சாக்கிய
மிண்டர்கள்மிண்டவைகேட்டுவெகுளேன்மின்
விண்டவர்தம்புரமெய்தவன்வெண்ணியில்
தொண்டராயேத்தவல்லார்துயர்தோன்றாவே. 10
குண்டரும் குணம் இலாத சமண்சாக்கிய
மிண்டர்கள் மிண்டு அவை கேட்டு வெகுளேன்மின்!
விண்டவர்தம் புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே.
kuNTarum kuNam ilAta camaNcAkkiya
miNTarkaL miNTu avai kETTu vekuLEnmin!
viNTavartam puram eytavan veNNiyil
toNTarAy Etta vallAr tuyar tOnRAvE.
பொருள்: சமணரும், சாக்கியரும் நற்குணமற்றவர்கள். முரட்டுத்தனம் கொண்டவர்கள்
ஆவார்கள். அவர்கள் கூறும் பொய்யுரை கேட்டு கோபம் கொள்ள வேண்டாம். நம் பெருமான்
முப்புரங்களை சிரித்தே எரித்தவர் ஆவார். அவர் கோயில் கொண்டுள்ள வெண்ணிப் பதியில்
வாழ்கின்ற மெய்த்தொண்டர்களே நீங்கள் எம்பெருமானையே ஏத்தி வழிபாடு செய்யுங்கள்.
உங்களைத் துன்பமே வந்து அடையாது என்க.
குறிப்புரை: குண்டர் - கற்குண்டு போலக் கட்டமைந்த உடம்பினர். சமணர், சாக்கியர்.
மிண்டர்- மிடுக்குடையவர். மிண்டவை - அதிக பிரசங்கம். வெகுளேல்மின் - சைவாகமப் பொருள்
உண்மைகளைக் கோபித்து அலட்சியம் செய்யாதீர்கள். எதிர்மறைப் பன்மையேவல். மின் பன்மை விகுதி.
அது நீங்கின் ஒருமையாதல் தெரியும். விண்டவர்- பகைவர்.
You people of Venni, need not be angry while hearing the boisterous words of
those stout bellied Jains and the Buddhists lacking in character. Ye devotees! come here
to Venni where our Lord who destroyed the enemies of three forts resides, bow at His
holy feet and find no sufferings.
1622. மருவாருமல்குகாழித்திகழ்சம்பந்தன்
திருவாருந்திகழ்தருவெண்ணியமர்ந்தானை
உருவாருமொண்தமிழ்மாலையிவைவல்லார்
பொருவாகப்புக்கிருப்பார்புவலோகத்தே. 11
மரு ஆரும் மல்கு காழித் திகழ் சம்பந்தன்,
திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை,
உரு ஆரும் ஒண்தமிழ்மாலைஇவை வல்லார்
பொருஆகப் புக்கு இருப்பார், புவலோகத்தே.
maru Arum malku kAzit tikaz campantan,
tiru Arum tikaztaru veNNi amarntAnai,
uru Arum oN tamizmAlai ivai vallAr
poru Akap pukku iruppAr, puvalOkattE.
பொருள்: மணம் நிறைந்த சீர்காழிப்பதியில் அவதரித்தவரே திருஞான சம்பந்தர் ஆவார்.
அவர் அழகு பொருந்திய வெண்ணிப் பதியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானை நினைத்து
தமிழ்மாலை செய்துள்ளார். அதனை விரும்பிப் பாடும் அடியார்கள் சிவலோகத்தை அடைந்து
சிறப்புறுவார்கள் என்க.
குறிப்புரை: மருவாரும் - மணம் நிறையும். பொருந்தாதவரும் காழியைப் பொருந்தி வழிபடு
சிறப்புணர்த்தியதுமாம். மல்கு - நிறையும். திரு - நீர்வளம் முதலிய எல்லாச் செல்வங்களும். ஆரும் -
நிறைந்துள்ள. திகழ்தரு-விளங்குகின்ற. (பிரசித்தி குறித்தது) அமர்ந்தான்- திருக்கோயில்
கொண்டிருக்கின்றவன். உரு ஆரும் - ஞானவடிவம் பூரணமாயிருக்கும். பொரு -(உறழ்பொரு) சிறப்பு.
பூலோகத்தினும் மேலானது புவலோகம். அஃது இங்குச் சிவலோகத்தை உணர்த்திற்று.
Saint Thiru-gnana-Sambandar hails from fragrant Kaazhi. He sang these ten verses
of pure beautiful Tamil as a garland of music on the Lord of Venni. This Venni is a very
rich place of all sorts of wealth. Those who can repeat these ten verses from memory will
live happily in the Civa Loka, the brightest place in the cosmos.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
14ஆம் பதிகம் முற்றிற்று
End of 14th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 151 பதிக எண்: 15
15. திருக்காறாயில் 15. THIRU-K-KAARAAYIL
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam-Vinaa Urai
திருத்தல வரலாறு
திருக்காறாயில் என்னும் இத்திருத்தலமானது திருவாரூர்க்குத் தெற்கே சுமார் 12 கி.மீ
தூரத்தில் அமைந்திருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் நூற்றுப் பத்தொன்பதாவது
ஆகும். திருவாரூரிலிருந்து கச்சனம், திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.
இறைவரது திருப்பெயர் கண்ணாயிர நாதர். இறைவியாரது திருப்பெயர் கைலாச நாயகி.
சப்தவிடங்கத் தலங்களில் இத்திருத்தலமும் ஒன்று. தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது கோயிலுக்கு
வடபுறத்தில் உள்ளது.
இத்தீர்த்தத்தின் வடகரையில் கடுக்காய்ப் பிள்ளையார் கோயில் இருக்கின்றது. ஒரு
வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகளைக் கடுக்காய் மூட்டைகள் எனக்கூற, இப்பிள்ளையாருடைய
திருவிளையாடலால் அவைகள் கடுக்காய் மூட்டைகள் ஆயின. பின் வணிகனின் வேண்டுகோளின்படி
அவைகள் முன்போலவே ஜாதிக்காய்கள் ஆயின. ஆதலால் அப்பிள்ளையாருக்கு அப்பெயர் வந்தது என்பர்.
இது முசுகுந்த சக்கரவர்த்தி தேவேந்திரனிடம் பெற்றுக் கொண்டு வந்த தியாகேசர்
திருமேனிகள் ஏழனுள் ஒன்றை எழுந்தருளுவித்த சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். தேவேந்திரன்
மற்றும் முசுகுந்த சக்கரவர்த்தி பூசித்த பதி. புரட்டாசி மாதம் பௌர்ணமியே தேவேந்திரன் பூசித்த
நாளாகும் என்பர். இன்றும் அப்பூசையை மக்கள் நடத்தி வருகின்றனர். இது ஞானசம்பந்தரால்
பாடப்பெற்றது. அவருடைய பதிகம் ஒன்றை உடையது. இக்கோயிலின் அருகே வெள்ளையாறு
ஓடுகின்றது. கோயிலின் பரப்பளவு 115-172 ஆகும்.
பதிக வரலாறு
திருவைந்தெழுத்தின் மெய்ம்மையை உணர்ந்த பிள்ளையார், திருவாரூர்ப் புற்றிடங்
கொண்டாரைப் போற்றிப் பணிந்து வைகுங்காலத்தில், 'வலிவலம் கோளிலி முதலாம்' பதி
பலவற்றுள் ஒன்றான இத்திருக்காறாயிலை வணங்கிப் பாடியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
1623. நீரானேநீள்சடைமேலொருநிரைகொன்றைத்
தாரானேதாமரைமேலயதான்தொழும்
சீரானேசீர்திகழுந்திருக்காறாயில்
ஊரானேயென்பவரூனமிலாதாரே. 1
"நீரானே! நீள்சடைமேல் ஒரு நிரை கொன்றைத்
தாரானே! தாமரைமேல் அயன் தான் தொழும்
சீரானே! சீர் திகழும் திருக் காறாயில்
ஊரானே!" என்பவர் ஊனம் இலாதாரே.
nIrAnE!nILcaTaimEl oru nirai konRait
tArAnE! tAmarai mEl ayantAn tozum
cIrAnE! cIr tikazum tiruk kARAyil
UrAnE!" enpavar Unam ilAtArE.
பொருள்: கங்கையைத் தலையில் தரித்தவனை, நீண்ட சடையில் கொன்றை மலர் மாலையை
அணிந்தவனை, தாமரை மலர்மீது விளங்கும் பிரமனால் தொழப்பட்டவனை, சிறப்புமிக்க திருக்காறாயில்
தலத்தில் பொருந்தியவனை வழிபடுபவர் குறைபாடு அற்றவர் ஆவர்.
குறிப்புரை: நீள்சடைமேல் நீரான்- நீண்ட சடையின்மேல் கங்கை நீரை உடையவன். நிரை- வரிசை.
தார்- மாலை. தாமரைமேல்அயன் - செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமன். அயன் அஜன்,தோன்றாதவன்
என்பது அடிச்சொற்பொருள். சீரான் - மேன்மையை உடையவன். ஊனம்- பிறவி முதலிய குறைகள்.
Behold! Civan, the Lord of Thiru-k-kaaraayil has adorned His long matted hair
with Ganges river, and garland of cassia flowers. He is worshipped by the deity Brahma
who resides in lotus flower and His abode is Thiru-k-kaaraayil. This city is a holy
place of virtues. Those who recite His glories thus will be free of all troubles
including rebirth.
1624. மதியானேவரியரவோடுடன்மத்தஞ்சேர்
விதியானேவிதியுடைவேதியர்தாந்தொழும்
நெதியானேநீர்வயல்சூழ்திருக்காறாயிற்
பதியானேயென்பவர்பாவமிலாதாரே. 2
"மதியானே! வரிஅரவோடு உடன் மத்தம் சேர்
விதியானே! விதி உடை வேதியர் தாம் தொழும்
நெதியானே! நீர் வயல் சூழ் திருக் காறாயில்
பதியானே!" என்பவர் பாவம் இலாதாரே.
"matiyAnE! vari aravOTu uTan mattam cEr
vitiyAnE! viti uTai vEtiyartAm tozum
netiyAnE! nIr vayal cUz tiruk kARAyil
patiyAnE!" enpavar pAvam ilAtArE.
பொருள்: பிறைமதியைத் தலையில் சூடிய இறைவன் என்றும் பாம்பையும் ஊமத்த மலரையும்
அணிந்தவன் என்றும் வேதவிதிப்படி அந்தணர்களால் தொழப்படுபவன் என்றும் வயல்கள் சூழ்ந்த
காறாயில் பதியில் உறைபவன் என்றும் உளம் மகிழ்ந்து கூறும் அடியார்கள் பாவமில்லாதவர் ஆவர் என்க.
குறிப்புரை: மதி - பிறைச்சந்திரன். அரவு - பாம்பு. மத்தம் - ஊமத்தம்பூ. விதியான் - ஊழானவன்,
பாக்கியமானவன், விதிக்குங்கர்த்தா. விதித்தலை உடையவன். விதி உடை வேதியர் - வேதத்தில் விதித்தவை
செய்தலும் விலக்கியவை செய்யாமையுமாகிய விதியை உடைய மறையவர். நெதி - நிதி, செல்வம்.
Behold! It is Civan the Lord of Thiru-k-kaaraayil. He has adorned His head with
the moon, striped snake and datura flowers. He is the destiny maker for all the souls as
per their fate. He is the personification of wealth. He is worshipped by the Vedic scholars
as per the Vedic rules and His abode in Thiru-k-kaaraayil is a holy place surrounded by
plenty of ponds and paddy fields. Devotees who offer worship and pray, citing these details,
will be sinless. They would not be in the grip of their bad karma.
1625. விண்ணானேவிண்ணவரேத்திவிரும்புஞ்சீர்
மண்ணானேமண்ணிடைவாழுமுயிர்க்கெல்லாம்
கண்ணானேகடிபொழில்சூழ்திருக்காறாயில்
எண்ணானேயென்பவரேதமிலாதாரே. 3
"விண்ணானே! விண்ணவர் ஏத்தி விரும்பும் சீர்
மண்ணானே! மண் இடை வாழும் உயிர்க்கு எல்லாம்
கண்ணானே! கடிபொழில் சூழ் திருக் காறாயில்
எண்ணானே!" என்பவர் ஏதம் இலாதாரே.
"viNNAnE! viNNavar Etti virumpum cIr
maNNAnE! maN iTai vAzum uyirkku ellAm
kaNNAnE! kaTipozil cUz tiruk kARAyil
eNNAnE!" enpavar Etam ilAtArE.
பொருள்: ஆகாயம் போல் அனைத்தையும் தன்னுள் அடக்கியவன் என்றும், தேவர்களால்
வழிபடப்படுபவன் என்றும், மண்ணில் பொருந்தியவன் என்றும், மண்ணில் வாழும் உயிர்களுக்குக்
கண் போன்றவன் என்றும், மணமிக்க சோலைகள் நிறைந்த திருக்காறாயில் என்ற திருத்தலத்தில்
கோயில் கொண்டவன் என்றும் ஈசனே என்றும் போற்றுபவர்கள் குற்றம் நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.
குறிப்புரை: விண்- வீட்டுலகம், உயிர்க்கெல்லாம் கண். (தி. 2 ப. 14 பா. 9) எண்- எண்ணம். எண்ணான்-
உள்ளத்தில் இருப்பவன். எண்ணப்படாதவன், எண்ணுதற்குப் பொருளாய் இருப்பவன், அளக்கும் அளவாய்
உள்ளவன். ஏதம் - குற்றம், கேடு, துன்பம் (எல்லாம்).
Behold! It is Civan, the Lord of Thiru-k-kaaraayil. He is the celestial world itself.
Though He is part and parcel of this world, He is also the earth and is worshipped by the
celestials. He is the vital vision of the souls on the earth. He abides in the hearts of
the people of Thiru-k-kaaraayil surrounded by fragrant gardens. The devotees praying
to the Lord of this place, quoting these details, will be free of blemishes and sorrows.
1626. தாயானேதந்தையுமாகியதன்மைகள்
ஆயானேயாயநல்லன்பர்க்கணியானே
சேயானேசீர்திகழுந்திருக்காறாயில்
மேயானேயென்பவர்மேல்வினைமேவாவே. 4
"தாயானே! தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே! ஆய நல் அன்பர்க்கு அணியானே!
சேயானே! சீர் திகழும் திருக் காறாயில்
மேயானே!" என்பவர் மேல் வினை மேவாவே.
"tAyAnE! tantaiyum Akiya tanmaikaL
AyAnE! Aya nal anparkku aNiyAnE!
cEyAnE! cIr tikazum tiruk kARAyil
mEyAnE!" enpavarmEl vinai mEvAvE.
பொருள்: தாயாக விளங்குபவனே! தந்தையாய் விளங்கி அருள்புரியும் நாதனே!
நல்லடியார்களுக்கு அருகிருந்து உதவுபவனே! அல்லாதவர்களையும் சேய்மையில் இருந்து
காப்பவனே! சீர் திகழும் திருக்காறாயில் தலத்தில் உறைபவனே என்றெல்லாம் இறைவனை
போற்றி வணங்குபவர்களை வினைகள் சென்று அடையாவாம்.
குறிப்புரை: தாயான் + தந்தை.... ஆயான்- அம்மையப்பர். மெய்யுணர்வும் அன்பும் உடைய
இருநிறத்தாரையும் நல்லன்பர் என்பது வழக்கம். கண்ணப்பர் நல்லன்பர், மெய்கண்டார் மெய்யுணர்வினர்.
இருவரும் அன்பிற் சிறிதும் வேறுபடார். சேயான் - செந்நிறத்தன் எனப் பொருள் கூறலாம். ஆயினும்
முன் அணியான் என்றதனால் சேய்மை (தூரம்) இடத்தினன் என்பதே பொருத்தம். மேயான் - மேவியவன்,
மேவா-பொருந்தா.
Behold! It is Civan the Lord of Thiru-k-kaaraayil. He is Mother Supreme, Father Supreme,
and the paternal embodiment for one and all. He is very near to all His sincere devotees.
Yet He is a distant one for other people. He has His abode at Thiru-k-kaaraayil,
a place of virtues. Those devotees who recite His greatness and adore Him thus will never
suffer the evil effects of karma.
1627. கலையானேகலைமலிசெம்பொற்கயிலாய
மலையானேமலைபவர்மும்மதில்மாய்வித்த
சிலையானேசீர்திகழுந்திருக்காறாயில்
நிலையானேயென்பவர்மேல்வினைநில்லாவே. 5
''கலையானே! கலை மலி செம்பொன் கயிலாய
மலையானே! மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர் திகழும் திருக் காறாயில்
நிலையானே!" என்பவர் மேல் வினை நில்லாவே.
"kalaiyAnE! kalai mali cempon kayilAya
malaiyAnE! malaipavar mummatil mAyvitta
cilaiyAnE! cIr tikazum tiruk kARAyil
nilaiyAnE!" enpavarmEl vinai nillAvE.
பொருள்: வேத சாத்திரப் பொருளானே! வேதம் முழங்கும் கயிலாய மலையில்
பொருந்தியவனே! முப்புரங்களை அழித்த பெருமானே! சீர்திகழ் காறாயில் தலத்தில்
உறைபவனே என்று போற்றி வணங்குபவரிடத்து வினைகள் சென்று சேராவாம்.
குறிப்புரை: கலையான்- கலைகளாயும் அவற்றின் ஞானமாயும் உள்ளவன்.
செம்பொற் கயிலாயமலை- வெண்மைநிறமுடையது. வெண்கயிலை என்றதற்கு முரணன்று.
இமயத்தை மேரு என்றும் மேருவை இமயம் என்றும் நூல்களிற் கூறுவதுபோல் கூறப்பட்டது.
பனிமலையில் தவளகிரியும் காஞ்சனசிருங்கமும் உண்டு. மலைபவர் - போர்செய்பவர்,
திரிபுரத்தசுரர். சிலை- மேருவில். நிலை- உறையுள்; திருக்கோயில், நிலையானவனுமாம்.
Behold! It is Civan the Lord of Thiru-k-kaaraayil. He is the founder of all
arts and scriptures. He has that bow in His hand with which He destroyed all the three
forts of the enemies. He is the occupant of the beautiful golden mount Kailash. He has
His abode in Thiru-k-kaaraayil. It is a place of sanctity. Those devotees who praise
His glories and worship Him with such words will have trouble-free life forever.
1628. ஆற்றானேயாறணிசெஞ்சடையாடர
வேற்றானேயேழுலகும்மிமையோர்களும்
போற்றானேபொழில்திகழுந்திருக்காறாயில்
நீற்றானேயென்பவர்மேல்வினைநில்லாவே. 6
"ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு
ஏற்றானே! ஏழ்உலகும்(ம்) இமையோர்களும்
போற்றானே! பொழில் திகழும் திருக் காறாயில்
நீற்றானே!" என்பவர் மேல் வினை நில்லாவே.
"ARRAnE! ARu aNi cenjcaTai ATu aravu
ERRAnE! Ez ulakum(m) imaiyOrkaLum
pORRAnE! pozil tikazum tiruk kARAyil
nIRRAnE!" enpavarmEl vinai nillAvE.
பொருள்: யாவையுமாகி இருப்பவனே! கங்கை நதியை அணிந்த சடையில் அரவையும்
ஏற்றவனே! ஏழுலக உயிர்களாலும் இமையவர்களாலும் தொழப் பெறுபவனே! பொழில்கள் நிறைந்த
திருக்காறாயில் தலத்தில் கோயில் கொண்டவனே! திருநீற்றை அணிந்தவனே! என்று போற்றித்
துதிப்பவர்களிடத்து வினைகள் நிலை பெறாவாம் என்க.
குறிப்புரை: ஆற்றான்- ஆறுடையவன். வேதாகம வழியினன். ஆடரவு - ஆடும் பாம்பு.
ஏற்றான்- தாங்கியவன். போற்று - துதி. பொழில் - சோலை. நீற்றான் - திருநீற்றை அணிந்தவன்.
Behold! It is Civan the Lord of Thiru-k-kaaraayil. He is the embodiment of
everything in the world. He has the river Ganges on His matted red hair. He beautifies
His matted hair with the dancing snake. People in all the upper seven worlds and in
the lower seven worlds and the devaas, celestials and all others worship Him.
The upper seven worlds are: (1) Boolokam, (2) Buvar Lokam, (3) Suvar Lokam, (4)Sana Lokam,
(5) Dhabo Lokam, (6) Mahaa Lokam and (7) Sathya Lokam. The lower seven worlds are:
(1) Adhalam, (2) Vidhalam, (3) Sudhalam, (4) Tharaadhalam (5) Mahaadhalam, (6) Rasaadhalam
and (7) Paadhalam. His body is smeared with white ashes. He has His abode in Thiru-k-kaaraayil.
Those devotees who praise His virtues and worship the Lord will get no bad karma.
1629. சேர்த்தானேதீவினைதேய்ந்தறத்தேவர்கள்
ஏத்தானையேத்துநன்மாமுனிவர்க்கிடர்
காத்தானேகார்வயல்சூழ்திருக்காறாயில்
ஆர்த்தானேயென்பவர்மேல்வினையடராவே. 7
"சேர்த்தானே! தீவினை தேய்ந்து அறத் தேவர்கள்
ஏத்தானை! ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர்
காத்தானே! கார் வயல் சூழ் திருக் காறாயில்
ஆர்த்தானே!" என்பவர் மேல் வினை அடராவே.
"cErttAnE! tIvinai tEyntu aRat tEvarkaL
EttAnE! Ettum nal mA munivarkku iTar
kAttAnE! kAr vayal cUz tiruk kARAyil
ArttAnE!" enpavarmEl iTar vinai aTarAvE.
பொருள்: பல பிறவிகள் வாயிலாகச் சேர்ந்த தீயவினைகள் அற்று நீங்கும்படி செய்த பெருமானே!
தேவர்களால் வழிபடப்படுபவனே! வழிபடும் முனிவர்களின் துன்பங்களை நீக்குபவனே! வயல்கள் சூழ்ந்த
திருக்காறாயில் தலத்தில் பொருந்தியவனே! எனத் துதி செய்து வணங்குபவர்களிடத்து தீவினைகள்
சென்று சேராவாம்.
குறிப்புரை: ஏத்தான் - புகழ்களை எடுத்துச் சொல்லுதலைப் பெற்றவன். காத்தான் - தடுத்தவன்.
கார்- மேகம். வானோர்க்கும் பயிர்க்கிடம் ஆதலின் கார்வயல் என்றார். விளைபயிர் தோற்றம் பற்றியதுமாம்.
ஆர்த்தான் - நிறைந்தவன். ஊட்டியவன். ஆடா - வெல்லா. ஆடராவே என்பது பின்னோர் பதிப்பின் பாடம்.
அடரா - தாக்கா.
Oh Civa! He is the Lord of Thiru-k-kaaraayil. He destroyed all our bad karmas which we
accumulated in all our previous births. He is worshipped by all devaas. He is the great saviour
of those worshipping sages against obstacles. He has His abode in Thiru-k-kaaraayil which is
surrounded by dark green paddy fields. Those devotees who in this way cite His glories will get
all benefits from Him. They will not be affected by their bad karma, since it will be inoperative.
1630. கடுத்தானேகாலனைக்காலாற்கயிலாயம்
எடுத்தானையேதமாகம்முனிவர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிளருந்திருக்காறாயில்
அடுத்தானேயென்பவர்மேல்வினையடராவே. 8
"கடுத்தானே காலனைக் காலால் கயிலாயம்
எடுத்தானை ஏதம் ஆக(ம்) முனிவர்க்கு இடர்
கெடுத்தானே ! கேழ் கிளரும் திருக் காறாயில்
அடுத்தானே!" என்பவர் மேல் வினை அடராவே.
"kaTuttAnE, kAlanaik kAlAl! kayilAyam
eTuttAnai Etam Aka(m), munivarkku iTar
keTuttAnE! kEz kiLarum tiruk kARAyil
aTuttAnE!" enpavarmEl vinai aTarAvE.
பொருள்: காலனைக் காலால் காய்ந்தவனே! கயிலாயத்தை எடுத்த இராவணனின்
வலிமையைக் கெடுத்தவனே! முனிவர்களின் துன்பத்தை நீக்கியவனே! ஒளிதிகழ் திருக்காறாயில்
தலத்துள் உறைபவனே! என இவ்வாறு போற்றி வழிபடும் அடியவர்களிடத்து வினைகள் சென்று
பொருந்தாவாம்.
குறிப்புரை: கடுத்தான் - கோபித்(து உதைத்)தான். ஆக+முனிவர் என்புழி மகரம் இசைபற்றி
நின்றது. இராவணனுக்கு - ஏதம் (துன்பம்) ஆகுமாறும் முனிவர்களுக்கு இடர்கெடுமாறும் செய்தவன்.
கேழ் (ஒளிரும்) நிறம்.
Oh Civa! He is the Lord of Thiru-k-kaaraayil. He kicked Kaalan, the god of death,
with His legs when he was about to take away the life of Maarkandeyar. He subdued the
mightiness of Raavanan by crushing his head and shoulders when he attempted to lift
His abode, mount Kailash. He chased the sufferings of the sages. He has His abode in
Thiru-k-kaaraayil, a very bright place. The devotees who praise His virtues will not
have cruel fate in their life. Bad karma will become ineffective in their lives.
1631. பிறையானேபேணியபாடலொடின்னிசை
மறையானேமாலொடுநான்முகன்காணாத
இறையானேயெழில்திகழுந்திருக்காறாயில்
உறைவானேயென்பவர்மேல்வினையோடுமே. 9
"பிறையானே! பேணிய பாடலொடு இன்இசை
மறையானே! மாலொடு நான்முகன் காணாத
இறையானே! எழில் திகழும் திருக் காறாயில்
உறைவானே!'' என்பவர் மேல் வினை ஓடுமே.
"piRaiyAnE! pENiya pATaloTu inicai
maRaiyAnE! mAloTu nAnmukan kANAta
iRaiyAnE! ezil tikazum tiruk kARAyil
uRaivAnE!" enpavarmEl vinai OTumE.
பொருள்: பிறை நிலவைத் தலையில் அணிந்தவனே! பண்ணும் பாடலும் பொருந்தியதைப்
போல் வேதமும் பயனுமாய் பொருந்தி நிற்பவனே! திருமால், பிரமன் இவர்களால் அறிய முடியா
ஒளியாய் விளங்குபவனே! அழகுமிக்க திருக்காறாயில் தலத்தில் உறைபவனே ! எனப் போற்றித்
துதிப்பவர்களை வினைகள் சென்று சேராவாம்.
குறிப்புரை: இசை மறையான் - சாமவேதத்தவன். இறையான் - இறைவன். எங்கும் தங்கியவன்,
எழில்-அழகு. உறைவான் - திருக்கோயில் கொண்டவன்.
Civa is the Lord of Thiru-k-kaaraayil, handsome with the crescent moon. He has
merged with the Vedas like music with hymns. He is the absolute Lord, who could not be
perceived by the deities Vishnu and Brahma. He has His abode in Thiru-k-kaaraayil
which is a holy place of blessed beauty. Those devotees of this place who worship Him
with such glorifying words will not be affected by their bad karma, since it will
become ineffective.
1632. செடியாரும்புன்சமண்சீவரத்தார்களும்
படியாரும்பாவிகள்பேச்சுப்பயனில்லை
கடியாரும்பூம்பொழில்சூழ்திருக்காறாயில்
குடியாருங்கொள்கையினார்க்கில்லைகுற்றமே. 10
செடி ஆரும் புன்சமண் சீவரத்தார்களும்
படி ஆரும் பாவிகள் பேச்சுப் பயன் இல்லை;
கடி ஆரும் பூம்பொழில் சூழ் திருக் காறாயில்
குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை, குற்றமே.
ceTi Arum pun camaN cIvarattArkaLum
paTi Arum pAvikaL pEccup payan illai;
kaTi Arum pUmpozil cUz tiruk kARAyil
kuTi Arum koLkaiyinArkku illai, kuRRamE.
பொருள்: கொடிய சமணர்களும் சாக்கியர்களும் பயனற்ற சொற்களையே பேசித் திரிவர்.
அவர்களது பேச்சினைக் கேட்பதில் பயன் ஏதும் இல்லை. எனவே அடியவர்களே! பொழில் சூழ்ந்த
காறாயில் இறைவனின் புகழையே எப்போதும் பேசும் அடியார்களைக் குற்றங்கள் வந்து பொருந்தா!
குறிப்புரை: செடி - தீநாற்றம். சீவரத்தார்கள் - அழுக்குடையதும், பிறர்பால் காணாததும், அவர்க்கே
வழக்கத்தால் உரியதுமான துவரூட்டிய உடையினை உடுத்தவர்கள் (சமணர் முதலோர்) படி - நிலம்.
கடி - மணம். குடியாருங் கொள்கை- தலவாசம் புரியும் விரதம். அடியார் குடியாவர் (தி.6 ப. 17 பா.6)
அடியார்கள் குடியாக (தி. 2 ப. 43 பா. 5) என்புழிப்படும் பொருளை உணர்க. குற்றம்- ஆணவம் முதலியன.
The Jains and Buddhists living in Thiru-k-kaaraayil preach false and sinful sayings.
Oh devotees! never listen to them; only avoid them. Those who go to Thiru-k- kaaraayil temple
which is surrounded by fragrant gardens, pray to the Lord and remain consistently
as His devotees always blemishless.
1633. ஏய்ந்தசீரெழில்திகழுந்திருக்காறாயில்
ஆய்ந்தசீரானடியேத்தியருள்பெற்ற
பாய்ந்தநீர்க்காழியுண்ஞானசம்பந்தன்சொல்
வாய்ந்தவாறேத்துவார்வானுலகாள்வாரே. 11
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக் காறாயில்
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற
பாய்ந்த நீர்க் காழியுண் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்தஆறு ஏத்துவார் வான்உலகு ஆள்வாரே.
Eynta cIr ezil tikazum tiruk kARAyil
Aynta cIrAn aTi Etti aruL peRRa
pAynta nIrk kAziyuL njAnacampantan col
vAynta ARu EttuvAr vAn ulaku ALvArE.
பொருள்: நீர்வளம் நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்தவர் திருஞானசம்பந்தர் ஆவார்.
அவர், எழில் மிக்க திருக்காறாயில் தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் புகழ்ந்து
பாடியுள்ளார். இறைவனருளையும் பெற்றுள்ளார். அவர் பாடியருளிய பாடல்களை அடியவர்கள்
பாடி இறையருள் பெற்று வானுலகு ஆளும் சிறப்பைப் பெறுவர்.
குறிப்புரை: ஏய்ந்த - பொருந்திய. ஆய்ந்தசீர் -வேதாகமங்களுள் ஆராயப்பட்ட (பொருள் சேர்) புகழ்.
பாய்ந்த நீர்க்காழி - வெள்ளப் பெருக்கில் அழியாத உண்மை குறித்ததும் வளமுரைத்ததுமாம்.
வந்தவணம் ஏத்துமவர் வானமடைவாரே என்றது காண்க.
Our famous saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi, surrounded by
cool water ways and ponds. He received the blessings of our Lord in Thiru-k-kaaraayil
and also got inspiration from Him. Thereafter he sang these sacred ten hymns on Him.
The devotees of this place who recite these hymns of Thiru-gnana-Sambandar with fervour
and offer worship to our Lord of this place will certainly reach the celestial
world and rule there.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
15ஆம் பதிகம் முற்றிற்று
End of 15th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 152 பதிக எண்: 16
16. திருமணஞ்சேரி 16. THIRU-MANANCH-CHERI
பண்: இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
திருமணஞ்சேரி என்னும் இத்திருத்தலமானது மயிலாடுதுறை-கும்பகோணம்
தொடர்வண்டிப் பாதையில், குத்தாலம் தொடர் வண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே
சுமார் 5.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து இத்தலத்துக்கு நகரப்
பேருந்துகள் உள்ளன. இது காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று. இறைவர் திருப்பெயர்
அருள்வள்ளல்நாதர். இறைவியார் திருப்பெயர் யாழினும் மென்மொழியம்மை. மன்மதன்
பூசித்துப் பேறுபெற்றான். ஆமை பூசித்து மனித உருப்பெற்றது. இதற்கு ஞானசம்பந்தர்
அருளிய பதிகம் ஒன்று, அப்பர் அருளிய பதிகம் ஒன்று ஆக இரு பதிகங்கள் இருக்கின்றன.
பதிக வரலாறு
வேதந்தமிழால் விரித்த வித்தகர், பந்தணைநல்லூரைப் பணிந்து, திருமணஞ்சேரியில்
தொண்டரோடும் சென்று தொழுது இசைபாடியபோது, 'அயிலாரும் அம்பு' எனத் தொடங்கிப்
பாடியருளியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
1634. அயிலாருமம்பதனாற்புரமூன்றெய்து
குயிலாருமென்மொழியாளொருகூறாகி
மயிலாருமல்கியசோலைமணஞ்சேரிப்
பயில்வானைப்பற்றிநின்றார்க்கில்லைபாவமே. 1
அயில் ஆரும் அம்பு அதனால் புரம் மூன்று எய்து,
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.
ayil Arum ampu atanAl puram mUnRu eytu,
kuyil Arum menmoziyAL oru kURu Aki,
mayil Arum malkiya cOlai maNanjcErip
payilvAnaip paRRi ninRArkku illai, pAvamE.
பொருள்: கூர்மையான அம்பினால் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான். அவர்
உமாதேவியை திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர். மயில்கள் விளையாடும் சோலைகள்
நிறைந்த மணஞ்சேரி என்னும் இத்திருத்தலத்தில் உறைகின்றவர். அவரைப்பற்றி நின்றார்க்குப்
பாவம் இல்லை என்க.
குறிப்புரை: அயில்- கூர்மை. அம்பு- திருமாலாகிய கணை. 'குயில் வாய்மொழியம்மை'
என்பது அம்பிகை திருநாமம். பயில்வான்- கோயில் கொண்டு பயில்பவன். பற்றி நிற்றல் -
பற்று விடுமாறு வழிபடல்.
It is Civan, our Lord in Thiru-mananch-cheri, which is a holy place where
peacocks dance in evergreen gardens. He burnt the three forts with a sharp arrow.
He has shared His body with our goddess Umaa, whose voice is musical like the cuckoo's.
He has His abode in Thiru-mananch-cheri. The holy people of this city clasping His
holy feet are blessed by our Lord; their sin will vanish.
1635. விதியானைவிண்ணவர்தாந்தொழுதேத்திய
நெதியானைநீள்சடைமேல்நிகழ்வித்தவான்
மதியானைவண்பொழில்சூழ்ந்தமணஞ்சேரிப்
பதியானைப்பாடவல்லார்வினைபாறுமே. 2
விதியானை,விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை,நீள்சடைமேல் நிகழ்வித்த வான்
மதியானை,வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.
vitiyAnai, viNNavartAm tozutu Ettiya
netiyAnai, nILcaTaimEl nikazvitta vAn
matiyAnai, vaNpozil cUznta maNanjcErip
patiyAnai, pATa vallAr vinai pARumE.
பொருள்: எல்லாவற்றிற்கும் காரணம் ஆனவனை, விண்ணவர் தொழுது ஏத்தும்
செல்வனை, நீண்ட சடையில் நிலவினை வைத்தவனை, பொழில் சூழ்ந்த திருமணஞ்சேரியில்
கோயில் கொண்டவனைப் புகழ்ந்து பாடவல்லவர்களின் வினைகள் நீங்கப் பெறும்.
குறிப்புரை: விதியானை - வேதாகம விதியானவனை, படைப்பவனாகியவனை;
'கரியானை நான்முகனை' (தி.6, ப.1, பா.1) 'நாரணன் காண்' 'நான்முகன் காண்' (தி. 6, ப.8, பா.3)
நெதி- செல்வம். நிதியின் மருஉ. மொழி முதல் இகாரம் எகாரமாயொலிக்கும். விலை - வெலை போல.
வான்மதி - வெண்பிறை. வானூர்மதியுமாம். பாறும் - அழியும்.
It is Civan, our Lord of Thiru-mananch-cheri. He is the personification of law
Himself. He is the Lord of indiminishable wealth itself. All the celestials pray and
worship Him always. He beautifies His long matted hair with the crescent moon, which
always moves from one end to the other end of the sky. He has His abode in
Thiru-mananch-cheri, which is a sacred place with fragrant gardens. Those people of
this city who recite His glory always will be relieved of the bad karma of their
previous life.
1636. எய்ப்பானார்க்கின்புறுதேனளித்தூறிய
இப்பாலாயெனையுமாளவுரியானை
வைப்பானமாடங்கள்சூழ்ந்தமணஞ்சேரி
மெய்ப்பானைமேவிநின்றார்வினைவீடுமே. 3
எய்ப்பு ஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய
இப்பால்ஆய் எனையும் ஆள உரியானை,
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.
eyppu AnArkku inpu uRu tEn aLittu URiya
ippAl Ay enaiyum ALa uriyAnai,
vaippu Ana mATagkaL cUznta maNanjcEri
meyppAnai, mEvi ninRAr vinai vITumE.
பொருள்: விரதம் பூண்டு இளைத்த மேனியராய் எய்த்துப் போனவர்களுக்குத் தேன்
போன்றவனை, என்னையும் ஆட்கொண்டருளும் எம்பெருமானை, உறுதியான மாடங்கள்
நிறைந்த திருமணஞ்சேரி என்னும் இத்திருத்தலத்தில் மெய்ப்பொருளாய் விளங்குபவனை
மேவி ஏத்தும் அடியார்களின் வினைகள் நீங்கிடும் என்க.
குறிப்புரை: எய்ப்பு - இளைப்பு. மெய்ப்பான் - பொய்யாதல் இல்லாதவன். உண்மைப் பொருள்.
வீடும்- அழியும்.
It is Civan, our Lord in personification. The servitors do not pay attention to
their food; they care more to divert their attention to praise the glory of our Lord by
singing His hymns. By so doing without proper food they become bodily very weak. But
during this state of their life, our Lord graces them like nectar. The servitors
become happy with our Lord's timely help. He has His abode in Thiru-mananch- cheri,
which is surrounded by well-built palaces. Those devotees, who always think of His
holy feet and pray, will be relieved of their bad karma.
1637. விடையானைமேலுலகேழுமிப்பாரெல்லாம்
உடையானையூழிதோறூழியுளதாய
படையானைப்பண்ணிசைபாடுமணஞ்சேரி
அடைவானையடையவல்லார்க்கில்லையல்லலே. 4
விடையானை,மேல்உலகு ஏழும் இப் பார்எல்லாம்
உடையானை, ஊழிதோறுஊழி உளது ஆய
படையானை, பண்இசை பாடு மணஞ்சேரி
அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.
viTaiyAnai, mEl ulaku Ezum ip pAr ellAm
uTaiyAnai, UzitORu Uzi uLatu Aya
paTaiyAnai, paN icai pATu maNanjcEri
aTaivAnai, aTaiya vallArkku illai, allalE.
பொருள்: இடப வாகனத்தை உடையவனை, ஈரேழு உலகங்களையும் உடையவனை
ஊழிதோறும் தனது எண்ணத்தின்படியே படைத்து அருள்பவனை, பண்ணிசை பாடப்பெறும்
திருமணஞ்சேரியில் உறைபவனை அடைய வல்ல அடியார்களுக்கு துன்பங்களே இல்லையாம் என்க.
குறிப்புரை: விடையான்- எருதேறி. படையான் - படைகளை உடையவன். ஊழிதோறும் உள்ள
படை ஞானவாட்படை, 'ஞான வாளேந்தும் ஐயர்' (திருவாசகம் 613). மணஞ்சேரியில், ஆசிரியர்
சென்றருளிய காலத்தில் பண்ணிசை பாடுதல் சிறந்திருந்தது.
It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who rides on His bull to go round
the cosmos. His Supreme rule prevails all over the seven top worlds as well as in this
earthly world. He is the only one present everywhere forever after deluges that come
one after the other for every millennium and He then exhibits Himself as the embodiment
of true wisdom (Gnosis), which is a part and parcel of His being. He has His abode in
Thiru-mananch-cheri, a place of sweet songs. Those devotees who reach His holy feet,
pray and worship will never experience the state of suffering in their lifetime.
1638. எறியார்பூங்கொன்றையினோடுமிளமத்தம்
வெறியாருஞ்செஞ்சடையாரமிலைந்தானை
மறியாருங்கையுடையானைமணஞ்சேரிச்
செறிவானைச்செப்பவல்லார்க்கிடர்சேராவே. 5
எறி ஆர் பூங்கொன்றையினோடு இள மத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை
மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச்
செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.
eRi Ar pUgkonRaiyinOTum iLa mattam
veRi Arum cenjcaTai Ara milaintAnai,
maRi Arum kai uTaiyAnai, maNanjcEric
ceRivAnai, ceppa vallArkku iTar cErAvE.
பொருள்: ஒளிமிக்க கொன்றை மலர்களையும் ஊமத்தம் பூக்களையும் நீண்ட மணங்கமழும்
சடையில் கொண்டவனை, ஆடுகின்ற மானை அடக்கிக் கையில் தாங்கியவனை, மணஞ்சேரித் தலத்தில்
கோயில் கொண்டவனைப் புகழ்ந்து பாடவல்லார்க்கு இடர் சேராதாம் என்க.
குறிப்புரை: எறிஆர் - ஒளிபொருந்திய (எறித்தல் - ஒளிவிடல்). வெறி - மணம். ஆர்-நிறைய,
மிலைத்தான் - சூடினான். மறி- மான் கன்று. கொன்றையினோடும் மத்தம், சடை ஆரமிவைத்தானும்
மறிக்கையுடையானும் செறிவானும் ஆகிய சிவனைச் செப்பவல்லார் என முடிக்க.
It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who has beautified His sweet smelling
matted hair with large quantities of bright golden fragrant cassia flowers and tender
datura flowers. He has in one of His hands that young deer controlling it's running.
Lord Kalyana Sundarar has His abode at Thiru-mananch-cheri. Those servitors who sing
and praise all His glories will have a trouble-free life.
1639. மொழியானைமுன்னொருநான்மறையாறங்கம்
பழியாமைப்பண்ணிசையானபகர்வானை
வழியானைவானவரேத்துமணஞ்சேரி
இழியாமையேத்தவல்லார்க்கெய்துமின்பமே. 6
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம்;
பழியாமைப் பண் இசைஆன பகர்வானை:
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.
moziyAnai, mun oru nAlmaRai ARuagkam
paziyAmaip paN icai Ana pakarvAnai;
vaziyAnai; vAnavar Ettum maNanjcEri
iziyAmai Etta vallArkku eytum, inpamE.
பொருள்: மணஞ்சேரி இறைவனாகிய சிவபெருமான் ஆதியிலிருந்தே 'ஓம்' என்ற அடிப்படை
மந்திரமாக விளங்குபவன். நான்கு மறைகளையும் அருளியவனை, ஆறு அங்கங்களையும் அளித்தவனை,
பண்ணிசையாய்ப் பொருந்தியவனை, நன்னெறியால் விளங்குபவனை, வானவர்கள் வணங்கும்
திருமணஞ்சேரி ஆகிய இத்திருத்தலத்தில் கோயில் கொண்டவனை மனத்தில் குற்றமின்றிப் பாடிடும்
அடியார்களுக்கு இன்பமே கிட்டும் என்க.
குறிப்புரை: 'எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும் ஈசன் என்னத்தக்க
முதல் பரப்பிரம்மம் சதாசிவன் ஓம் என வேதம் சாற்றும்' (காஞ்சிப். குமர. 16). 'சொல்லும்
பொருளெலாம் ஆனாய் நீயே' (தி.6 . ப.78, பா.5) 'இமையோர் ஏத்தும் சொல்தான்காண்’ (தி.6, ப.8. பா.4)
என்பன வேதவுண்மையாதலின் மொழியான் என்றார். 'சொல்லானை' (தி.2, ப.16, பா.9) எனப்
பின் வருதலும் அறிக. நான்மறையும் அம்மறைப் பொருளுணர்ச்சிக்குக் கருவியாகிய ஆறு
அங்கங்களும் மொழிந்தவன் சிவனே ஆதலால், அவற்றைப் பழியாதவாறு காத்தல் அவன் கடமையாகும்.
'தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன்', 'விரித்தவன் அருமறை' (தி.3, ப.23, பா.6, 7).
'மருவினிய மறைப்பொருளை', 'விரித்தானை நான்மறையோடங்கம் ஆறும்' (தி.6, ப.80, பா. 6, 10)
'வேதத்தை வேதவித்தை (தி.6, ப.79, பா.3) அது பற்றிப் பண்ணிசைகளையும் அளித்தருளினான்.
அஸ்யமஹதோ பூதஸ்ய நிஸ்வஸித மேத த்ருக் வேதோ யஜூர் வேதஸ் ஸாம வேத: இருக்குவேதம்,
யஜுர் வேதம், சாமவேதம் (முதலியவை) இம்மெய்ப்பொருளின் உயிர்ப்பு என்று பிருகதாரண் யோபநிடதம்
(4, 4, 10, 6, 5, 11) கூறுகின்றது. பகர்தல் - சொல்லுதல், ஆன- ஆனவை. வினையாலணையும் பெயர்.
வழியான் - வேதாகம வழி. திருவருள்நெறி. ஒளிசேர்நெறி. இழியாமை-இகழாமல்.
It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who is the primordial mantra
sound 'Ohm'. He is the four Vedas Himself; He elucidates the inner hidden meanings
of it as well as the resultant six Angaas with niceties and ease. He is all the
virtuous one Himself. No one can defame His exhibits. He is a part of all musical
tones and the intricacies. He is righteousness itself. He has His abode in
Thiru-mananch-cheri. Those who always praise His virtues will have bliss forever.
1640. எண்ணானையெண்ணமர்சீரிமையோர்கட்குக்
கண்ணானைக்கண்ணொருமூன்றுமுடையானை
மண்ணானைமாவயல்சூழ்ந்தமணஞ்சேரி
பெண்ணானைப்பேசநின்றார்பெரியோர்களே. 7
எண்ணானை,எண் அமர் சீர் இமையோர்கட்குக்
கண்ணானை,கண் ஒருமூன்றும் உடையானை,
மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி
பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.
eNNAnai, eN amar cIr imaiyOrkaTkuk
kaNNAnai, kaN oru mUnRum uTaiyAnai,
maNNAnai, mA vayal cUznta maNanjcErip
peNNAnai, pEca ninRAr periyOrkaLE.
பொருள்: நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனை, உள்ளத்தில் பொருந்தி வழிபடும்
அடியவர்களுக்கு ஞானக்கண்ணாக விளங்குபவனை, சூரியன், சந்திரன், அக்கினி என்னும்
மூன்று கண்களைக் கொண்டவனை, நிலமாக விளங்குபவனை, வயல் சூழ்ந்த மணஞ்சேரித்
தலத்தில் உமாதேவியோடு உறைபவனைப் புகழ்ந்து பேசுபவர்கள் என்றும் பெரியோர்களாய்
போற்றப்படுவர்.
குறிப்புரை: எண்ணானை - யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவனை,
மனாதீதனை. எண்- அளவு. பெண்ணான்- மங்கைபங்கன், கங்கைச்சடையன். பெரியோர்க்கு
உரிய இலக்கணத்துள், சிவகீர்த்தனம் பாடுதலும் ஒன்று .
Civan, the Lord of Thiru-mananch-cheri, could not be comprehended by anyone.
He is beyond the thoughts of all human beings. He is the eye-like divine wisdom
for the scholarly celestials. He is our three-eyed Lord. He shares His body with
goddess Umaa. He has His abode in Thiru-mananch-cheri, which is surrounded by
broad paddy fields. Those servitors who speak of this Lord here praising His
greatness will themselves be considered great.
1641. எடுத்தானையெழில்முடியெட்டுமிரண்டுந்தோள்
கெடுத்தானைக்கேடிலாச்செம்மையுடையானை
மடுத்தாரவண்டிசைபாடுமணஞ்சேரி
பிடித்தாரப்பேணவல்லார்பெரியோர்களே. 8
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள்
கெடுத்தானை,கேடு இலாச் செம்மை உடையானை,
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே.
eTuttAnai ezil muTi eTTum iraNTum tOL
keTuttAnai, kETu ilAc cemmai uTaiyAnai,
maTuttu Ara vaNTu icai pATum maNanjcEri
piTittu Arap pENa vallAr periyOrkaLE.
பொருள்: கயிலாய மலையைத் தூக்கி நகர்த்த முற்பட்ட இராவணனின் தோள்களை
வலியிழக்கச் செய்தவனை, கேடற்ற சிறப்புக்கள் பொருந்தியவனை, வண்டுகள் ஒலிக்கும்
மணஞ்சேரித் தலத்தில் உறைபவனைப் பற்றிப்பிடித்தவர்கள் பெரியோர்களாய்த் திகழ்வார்கள் என்க.
குறிப்புரை: இராவணன் முடிபத்தும் தோள் (இருபதும்) கெடுத்த சிவனை, கேடிலாச் செம்மை-
அழிவில்லாத ‘திருநின்ற செம்மை' எனப்படும் பேரின்பம். வண்டுகள் மடுத்து (உண்டு) ஆர - நிறைய.
பிடித்துஆர - சிக்கெனப்பற்றிப் பூரணமாக, பேண - பத்திசெய்ய, பெரியோர்க்கு இதுவும் இலக்கணம்.
It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who subdued the mightines of Raavanan,
the king of Sri Lanka when he tried to lift mount Kailash, where Lord Civan resided.
He crushed his ten heads and powerful shoulders. He is the embodiment of blemishless
virtues. He has His abode in Thiru-mananch-cheri, where the pleasant musical humming of
bees is heard always. Those devotees who cling to our Lord's golden feet will always be
brilliant and great.
1642. சொல்லானைத்தோற்றங்கண்டானுநெடுமாலும்
கல்லானைக்கற்றனசொல்லித்தொழுதோங்க
வல்லார்நன்மாதவரேத்துமணஞ்சேரி
எல்லாமாமெம்பெருமான்கழலேத்துமே. 9
சொல்லானை; தோற்றம் கண்டானும்,நெடுமாலும்,
கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க
வல்லார், நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!
collAnai; tORRam kaNTAnum, neTumAlum,
kallAnai; kaRRana collit tozutu Ogka
vallAr, nal mAtavar, Ettu maNanjcEri
ellAm Am emperumAn; kazal EttumE!
பொருள்: வேதமொழியாக விளங்கும் பெருமானை, படைக்கும் பிரமனும், காக்கும் திருமாலும்
காணமுடியா வகையில் நின்றானை, தாம் கற்ற முறையில் திருந்தச் சொல்லி வணங்கும்
அடியவர்களிடத்தும் மாதவர்களிடத்தும் பொருந்தி உள்ளவனை, மணஞ்சேரியில் கோயில்
கொண்டவனை, எம்பெருமானை வாழ்த்தி வணங்குவோமாக.
குறிப்புரை: சொல்லானை (பார்க்க: தி. 2, ப.2, பா.6) தோற்றம் - படைப்பு. சிருட்டி,
கண்டான் - பிரமன். கல்லானை- கற்றுணரப்படாத பெருமை உடைய சிவனை, கற்றன -
கற்றறிந்த சிவகீர்த்தனங்களை, ஓங்க வல்லார்- திருவருளுயர்ச்சியை அடையவல்லார்.
'ஓங்குணர்வு' (திருவருட்பயன். 91) 'எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி' 'ஒருவனே
எல்லாம் ஆகி அல்லானாயுடனுமாவன்' (சித்தியார். 47) ஏத்தும் - ஏத்துங்கள்.
It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who is the Supreme Author of
the divine wisdom of every term in the Vedas. Brahma, the deity of creation and the
great Vishnu were unable to see our Lord who is non-comprehensible to them. He has
His abode in Thiru-mananch-cheri. This is a very holy place. Learned sages and
scholars live in large numbers in this city and He is with them too. They always
recite His holy hymns and worship Him. Like these noble men let us worship
His golden feet.
1643. சற்றேயுந்தாமறிவில்சமண்சாக்கியர்
சொற்றேயும்வண்ணமொர்செம்மையுடையானை
வற்றாதவாவிகள்சூழ்ந்தமணஞ்சேரி
பற்றாகவாழ்பவர்மேல்வினைபற்றாவே. 10
சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர்
சொல்-தேயும் வண்ண மொர் செம்மை உடையானை,
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்று ஆக வாழ்பவர் மேல் வினை பற்றாவே.
caRREyum tAm aRivu il camaNcAkkiyar
col-tEyum vaNNam or cemmai uTaiyAnai,
vaRRAta vAvikaL cUznta maNanjcEri
paRRu Aka vAzpavar mEl vinai paRRAvE.
பொருள்: சமணர்களும், சாக்கியர்களும் கொஞ்சம்கூட பொருந்தாமல் உரையாற்றுவார்கள் .
அவர்களது சொற்கள் தேயுமாறு செம்மையாய் விளங்குபவர் நம் பெருமான் ஆவார். அவர் நீர்வற்றாத
குளங்கள் நிறைந்த திருமணஞ்சேரியில் கோயில் கொண்டுள்ளார். அவரிடம் பற்றுக்கொண்டு வாழும்
அடியவர்களை வினைகள் பற்றா என்க.
குறிப்புரை: சற்று - சிறிது. சொல்தேயும் வண்ணம் - பிதற்றுரைகள் பொருளுறாதனவாய் ஒழியும்
வகை . 'செம்மை உடையானை' (பா. 8). வாவி - குளம். பற்று ஆக - உண்மையன்பிற்குரிய தலமாக.
It is Civan, the Lord of Thiru-mananch-cheri, who bestows salvation on His devotees
after wiping out the useless, sinful words of the Jains and the Buddhists of dark ignorance.
Our Lord has His abode in Thiru-mananch-cheri, where the perennial ponds flourish. Those
devotees who have attachment to our Lord will have no other attachment and the resulting
karma in their life forever.
1644. கண்ணாருங்காழியர்கோன்கருத்தார்வித்த
தண்ணார்சீர்ஞானசம்பந்தன்தமிழ்மாலை
மண்ணாருமாவயல்சூழ்ந்தமணஞ்சேரி
பண்ணாரப்பாடவல்லார்க்கில்லைபாவமே. 11
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.
kaN Arum kAziyarkOn karuttu Arvitta
taN Ar cIr njAnacampantan tamizmAlai,
maN Arum mA vayal cUznta maNanjcEri,
paN Arap pATa vallArkku illai, pAvamE.
பொருள்: எம்பெருமான் சீர்காழிப்பதியில் நம் கண்ணுக்கினிய காட்சிதரும் வகையில்
கோயில் கொண்டுள்ளார். அச்சீர்காழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான்
திருமணஞ்சேரியில் இறைவன் உறைவதைப் புகழ்ந்து பாடியுள்ளார். அதனை நாமும் பாடிப்
பரவுவோம், நம் பாவங்கள் நீங்கப் பெறுவோமாக.
குறிப்புரை: காழியர்கோன்- தோணியப்பர். கருத்து- திருவுள்ளம். ஆர்வித்த- நிறைவித்த.
ஒவ்வொரு திருப்பதிகமும் ஒவ்வொரு தமிழ்மாலை என்னும் உண்மையை இதில் அறியலாம்.
பண்ணாரப்பாடுதல் வல்லார்க்குப் பாவம் இல்லை. ‘கண்..... சீர்' என்றது ஆசிரியர் சிறப்பை
உணர்த்துகின்றது. கண் - வேணு வனம், கண் - மூங்கில். 'கண்ணார் கமழ்காழியர்'
(தி.2, ப.23, பா.11) என்றது காண்க.
Our saint Thiru-gnana-Sambandar was born in Seerkaazhi, where our Lord resides
as a beautiful sight for our eyes. Thiru-gnana-Sambandar's sweet meaningful Tamil verses
with musical tone made on the Lord of Thiru-mananch-cheri are meant to guide us for
purposeful way of good life. Those who recite this garland of Tamil verses, on the Lord of
Thiru-mananch-cheri, a city of pilgrimage amidst broad paddy fields, will be sinless
and boonful.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
16ஆம் பதிகம் முற்றிற்று
End of 16th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 153 பதிக எண்: 17
17. திருவேணுபுரம் 17. THIRU-VENU-PURAM
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.
பதிக வரலாறு
பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.
திருச்சிற்றம்பலம்
1645. நிலவும்புனலுந்நிறைவாளரவும்
இலகுஞ்சடையார்க்கிடமாமெழிலார்
உலவும்வயலுக்கொளியார்முத்தம்
விலகுங்கடலார்வேணுபுரமே. 1
நிலவும்,புனலும், நிறை வாள்அரவும்,
இலகும் சடையார்க்கு இடம்ஆம்- எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம்
விலகும் கடல்ஆர் வேணுபுரமே.
nilavum, punalum, niRai vAL aravum,
ilakum caTaiyArkku iTam Am--ezilAr
ulavum vayalukku oLi Ar muttam
vilakum kaTal Ar vENupuramE.
பொருள்: அழகுமிக்க உழத்தியர் வேணுபுர வயல்வெளிகளில் மகிழ்ந்து உழுதொழில் புரிவர்.
அவர்களது ஒளிமிக்க பற்களோடு போட்டியிடுவதுபோல் கடலில் உள்ள முத்துக்களும் வேணுபுர
வயல்களில் வந்து சிதறுகின்றன. எல்லாம் ஒன்றுபட்டு விளங்குவதற்குக் காரணம் வேணுபுரப்
பெருமான் தலையில் மாறுபட்ட பொருள்களாகிய பிறைநிலவும், கங்கை நதியும், கொடிய பாம்பும்
ஒன்றுபட்டிருப்பதைக் காணமுடிந்த பாக்கியம்தான் என்க.
குறிப்புரை: நிலவு - பிறை, ஆகுபெயர். புனல் - கங்கை. நிறைவாள் - நிறைந்த கொடுமையை உடைய,
சாதி அடை. இலகும் - விளங்கும். எழிலார் - அழகுடைய மகளிர். எழுச்சி உடைய உழத்தியருமாம்.
கடல் முத்துக்கள் வயலை அடைகின்றன. வெள்ளத்தில் மிதந்த வரலாறுபற்றி, கடலார் வேணுபுரம் என்றார்.
Behold! It is Civan who is the Lord of Thiru-venu-puram, and this is one of the
twelve names of Seerkaazhi. The Lord of this place has beautified His matted hair with the
crescent moon, the Ganges and the glistening snake thereby bringing unity among diverse
elements. In the paddy fields adjoining the sea coast, the women of ploughmen of surpassing
beauty work, the sea waves bring and scatter their pearls in these paddy fields and these
seem to complete with the bright teeth of the ploughing ladies. Our Lord resides in this
blessed place, a seaside town of greatness, which once escaped destruction by the sea.
1646. அரவார்கரவன்னமையார்திரள்தோள்
குரவார்குழலாளொருகூறனிடங்
கரவாதகொடைக்கலந்தாரவர்க்கு
விரவாகவல்லார்வேணுபுரமே.
அரவு ஆர் கரவன்(ன்), அமை ஆர் திரள்தோள்
குரவு ஆர் குழலாள் ஒருகூறன், இடம் -
கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு
விரவுஆக வல்லார் வேணுபுரமே.
aravu Ar karavan(n), amai Ar tiraLtOL
kuravu Ar kuzalAL oru kURan, iTam-
karavAta koTaikku alantAr avarkku
viravu Aka vallAr vENupuramE.
பொருள்: தன்னிடத்தில் உள்ள பொருளை மறைக்காமல் பிறருக்குக் கொடுத்து உதவும்
வள்ளல்கள் நிறைந்து வாழுமிடமே வேணுபுரமாகும். அங்குதான் பாம்பைக் கங்கணமாகக் கொண்டவனும்
மூங்கில் போன்ற தோளும் குராமலர் நிகர்த்த மணம் கமழும் கூந்தலை உடைய உமையாளை ஒருபாகமாகக்
கொண்டவனுமாகிய பெருவள்ளல் சிவபெருமான் கோயில் கொண்டு உள்ளார் என்க.
குறிப்புரை: அரவு ஆர்கரவன்- பாம்பைக் கங்கணமாக அணிந்த கையினன். அமை-
மூங்கிற்கணுக்களின் இடைப்பகுதியை. ஆர் -ஒத்த. திரள் - திரண்ட. குரவு- குராமலர்மாலை.
'கரவாது உவந் தீயுங்கண் அன்னார்' (குறள் 1061). குழலாள்- கூந்தலை உடைய அம்பிகை, கூறன்-
பாகத்தை உடையவன். கரவாத - மறைக்காத. கலந்தார் அவர்க்கு - கூடியவராகிய அவர்க்கு .
விரவு ஆகவல்லார் - நட்பாக. வல்லவர்கள் (வல்லவர்கள் வாழும் வேணுபுரம் என்க).
Behold! It is Civan, the Lord of Thiru-venu-puram. He wears around His arm the snakes.
He shares His body with our goddess Umaa. Her shoulders are beautiful, bamboo like. She beautifies
her hair with sweet smelling bottle flowers. Our Lord has His abode in this glorious town.
In this place a large number of good people live who donate their wealth to one and all
without concealing it. Such people are all closely associated with each other, even though
the Lord of this place graces His devotees with whatever they need.
1647. ஆகம்மழகாயவள்தான்வெருவ
நாகமுரிபோர்த்தவனண்ணுமிடம்
போகந்தருசீர்வயல்சூழ்பொழில்கண்
மேகந்தவழும்வேணுபுரமே. 3
ஆகம்(ம்) அழகு ஆயவள்தான் வெருவ,
நாக(ம்) உரி போர்த்தவன் நண்ணும் இடம் -
போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கண்
மேகம் தவழும் வேணுபுரமே.
Akam(m) azaku AyavaLtAn veruva,
nAkam(m) uri pOrttavan naNNum iTam-
boham taru seer vayal chool pozhilkaN
mEham tavazhum vENu puramE.
பொருள்: செழிப்பான வளம் மிக்க வயல்களாலும் சோலைகளாலும் சூழப்பெற்றது
வேணுபுரம் ஆகும். அங்கு எப்பொழுதும் மழை மேகங்கள் சூழ்ந்து மழையைப் பொழிந்து மூன்று
போகங்களும் விளையும். அவ்வேணுபுரத்தில்தான் அழகான உமையவளும் அஞ்சுமாறு,
கரிய யானையின் தோலினை உரித்துத் தன் உடம்பில் போர்த்திய சிவனும் கோயில்
கொண்டுள்ளான் என்க.
குறிப்புரை: ஆகம் அழகு ஆயவள்- அழகிய திருமேனியை உடைய அம்பிகை. ஆகம்- உடம்பு,
வெருவ - அஞ்ச. நாகம் - யானை. உரி - தோல். இரண்டடியிலும் வந்த மகர ஒற்றுக்கள் இசை பற்றி
வந்த விகாரம். போகம் - வயல்விளைவாகக் கிடைக்கும் உணவுப் பொருள்கள். முதல் போகம்
இரண்டாம் போகம் என்னும் வழக்கு உணர்க. பொழில்கண் மேகம் என்பதில் கண் உருபும்,
கள் விகுதியும் ஆகப் பிரித்துப் பொருள் கூறலாம்.
Behold! It is Civan, the Lord of Thiru-venu-puram. Our beautiful goddess Umaa
was once seated by the side of our Lord. Suddenly a fierce wild elephant rushed towards
her.She shuddered to see it. However our Lord faced the elephant, killed it, and skinned it.
Then He wore the skin as His coat. Umaa's fear subsided. Our Lord has His abode in this
sanctified town, which is surrounded by gardens and rich paddy fields. Clouds move over
the tall trees in the dense gardens. All the fields are very rich and they yield three
harvests every year.
1648. காசக்கடலில்விடமுண்டகண்டத்
தீசர்க்கிடமாவதுஇன்நறவ
வாசக்கமலத்தனம்வன்றிரைகள்
வீசத்துயிலும் வேணுபுரமே. 4
காசு அக் கடலில் விடம் உண்ட கண்டத்து
ஈசர்க்கு இடம் ஆவது - இன் நறவ
வாசக்கமலத்து அனம், வன் திரைகள்
வீச, துயிலும் வேணுபுரமே.
kAcu ak kaTalil viTam uNTa kaNTattu
Icarkku iTam Avatu-in naRava
vAcakkamalattu anam, van tiraikaL
vIca, tuyilum vENupuramE.
பொருள்: மணமிக்க தாமரை மலரில் உள்ள அன்னங்கள் துயில் கொள்ளும் வகையில் கடல்
அலைகள் வீசும். அத்தகைய வளமிக்க வேணுபுரத்தில் பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்ட
நீலகண்டராகிய சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார் என்க.
குறிப்புரை: காசு அக்கடல் - மணிகளையுடைய அழகிய பாற்கடல். இன் நறவவாசக் கமலம்-
இனிய தேனையும் மணத்தையும் உடைய கமலம். அனம் - அன்னப்பறவை. இடைக்குறை.
அன்னம் கமலத்தில் வலிய அலைகள் வீசுதலால் சிறுதுயில் கொள்ளும்.
Behold! It is Civan, Lord of Thiru-venu-puram. The ocean of milk contains gold,gems
amrit and so many other good things as well as dreadful poison. The devaas and asuraas churned
the sea to get amrit, for longivity of life. However deadly poison came out of the churned sea
of milk, which was about to destroy the whole universe. Our Lord Civan of Thiru-venu-puram drank
the venom, as a result His neck turned out black in colour. Our Lord has His abode in this
Thiru-venu-puram, a place of serenity. Here swans in groups reach the lotus pond and drink the
honey in the lotus flowers and take rest in the flowers. These flowers get tossed by the waves
of the sea and the swans enjoy their nap.
1649. அரையார்கலைசேரனமென்னடையை
உரையாவுகந்தானுறையுமிடமாம்
நிரையார்கமுகின்னிகழ்பாளையுடை
விரையார்பொழில்சூழ்வேணுபுரமே. 5
அரை ஆர் கலை சேர் அனமென்னடையை
உரையா உகந்தான் உறையும் இடம்ஆம்
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே.
arai Ar kalai cEr anamennaTaiyai
uraiyA ukantAn uRaiyum iTam Am-
nirai Ar kamukin nikaz pALai uTai
virai Ar pozil cUz vENupuramE.
பொருள்: சிறந்த பாளைகளைக் கொண்ட பாக்கு மரங்களும் மணமிக்க சோலைகளும் நிறைந்ததே
வேணுபுரமாகும். அப்பதியில்தான் அரையில் மேகலாபரணத்தையும் நடையில் அன்னத்தையும் கொண்ட
உமையவளுக்கு எம்பெருமான் ஈசன் வேத சாத்திர உண்மைகளை உரைத்தருளினார் என்க.
குறிப்புரை: அரை ஆர் கலைசேர் அனம் மெல் நடையை - திருவிடையில் உடுத்தல் பொருந்திய மேகலை
முதலிய திருப்புடைவை சேர்ந்த அன்னத்தினது மெல் நடைபோலும் நடை உடைய திருநிலை நாயகியை.
உரையா - (புகழ்ந்து) உரைத்து. உகந்தான் - உயர்ந்தவன். மகிழ்ந்தவன் எனலுமாம். நிரை-வரிசை,
நிகழ் - விளங்கிய; உடை விரை - உடைதலால் பரவும் மணம் உடைய பொழில் என்றும் இயையும்.
Our goddess Umaa wears the most beautiful golden waist belt. She walks like the swans.
Our Lord of Thiru-venu-puram explained the philosophical, deep meanings of the Vedas, the Puraanas,
the Aagamaas and the Pranavas etc., to His consort, whenever she was available after finishing her
daily sacred rituals. Our Lord has His abode in Thiru-venu-puram, a place where the high grown
arecanut trees spread the sweet fragrance through their spade-like leaves. This is Thiru-venu-puram,
a town of numerous gardens.
1650. ஒளிரும்பிறையும்முறுகூவிளவின்
தளிருஞ்சடைமேலுடையானிடமாம்
நளிரும்புனலின்நலசெங்கயல்கள்
மிளிரும்வயல்சூழ்வேணுபுரமே. 6
ஒளிரும் பிறையும்(ம்) உறு கூவிள இன்
தளிரும் சடைமேல் உடையான் இடம்ஆம்
நளிரும் புனலின் நல செங்கயல்கள்
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே.
oLirum piRaiyum(m) uRu kUviLa in
taLirum caTaimEl uTaiyAn iTam Am-
naLirum punalin nala cegkayalkaL
miLirum vayal cUz vENupuramE.
பொருள்: குளிர்ந்த நீரில் வளமிக்க செங்கயல்கள் பெருகி வாழும் வயல்கள் சூழ்ந்த வளமிக்க
பதியே வேணுபுரமாகும். அப்பதியில்தான் ஒளிரும் பிறைச் சந்திரனையும் வில்வ இதழ்களையும் தன்
தலையில் கொண்ட செஞ்சடைச் சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார் என்க.
குறிப்புரை: பிறையும் தளிரும் உடையான். கூவிளம்- வில்வம். நளிரும் - குளிரும். மிளிரும் -
விட்டு விட்டு விளங்கும். கண் மிளிரும் - கண்போல் விளங்கும் என்பதுமாம்.
Behold! It is Civan, our Lord of Thiru-venu-puram. He has beautified His matted hair
with the bright moon and the tender bael leaves. This city is surrounded by many water ponds
and paddy fields always full of water. Here, plenty of rich carp fish flourish. Thiru-venu-puram
is such a town of rich fields and wealth, and our Lord with reddish hair abides here.
7. பாடல் கிடைக்கப்பெறவில்லை.
1651. ஏவும்படைவேந்தனிராவணனை
ஆவென்றலற அடர்த்தானிடமாந்
தாவும்மறிமானொடுதண்மதியம்
மேவும்பொழில்சூழ்வேணுபுரமே. 8
ஏவும் படை வேந்தன் இராவணனை,
"ஆ" என்று அலற அடர்த்தான் இடம்ஆம்
தாவும் மறிமானொடு தண்மதியம்
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே.
Evum paTai vEntan irAvaNanai,
"A" enRu alaRa, aTarttAn iTam Am-
tAvum maRimAnoTu taNmatiyam
mEvum pozil cUz vENupuramE.
பொருள்: துள்ளித்தாவும் இளமானும், குளிர்ந்த சந்திரனைத் தடவும் சோலைகளும் நிறைந்த
ஊரே வேணுபுரமாகும். அவ்வேணுபுரத்தில்தான், பகைவர்களைத் தான் இருந்த இடத்திலிருந்தே
படைகளை ஏவி அழித்திட வல்ல இராவணனை, எம்பெருமான் வலிமை குன்றிடச் செய்தார் என்க.
குறிப்புரை: ஏவும்படை - குறிதவறாது வினையாற்றும் ஆயுதம். ஆ என்று அலற - அலறுவோர்
ஒலிக்குறிப்புக்களுள் 'ஆ' என்பது தலைமையானது. அஃது ஆஆ என அடுக்கியும் பின் "ஆவா" என்று
உடம்படுமெய் பெற்றும் வரும். அதனைத் திருமுறைகளில் பல இடங்களில் காணலாம். அடர்த்தான்-
தாக்கியவன். மறிமான் - மான்கன்று. மறிகளும் மான்களும் ஆம். பொழிலின் உள்ளே மானும் மேலே
மதியமும் மேவும் என்க. மதியின் களங்கமுமாம்.
The king of Sri Lanka, Raavanan, was the greatest warrior of his time. Without
moving from his place, he destroyed completely the armies of his enemies with his remote command.
This is the place where our Lord of Thiru-venu-puram subdued such a mighty warrior Raavanan
to cry 'Aaa Aaa' by crushing him under His Mount Kailash when he tried to lift and move it
with his ten heads and shoulders. He has His abode in Thiru-venu-puram, a place of
beautiful gardens where deer in large numbers leap and play all around. Here clouds
embrace the tall trees in the dense gardens around the city. The Lord of this great
sacred place is to be praised.
1652. கண்ணன்கடிமாமலரிற்றிகழும்
அண்ணல்லிருவரறியாவிறையூர்
வண்ணச்சுதைமாளிகைமேற்கொடிகள்
விண்ணிற்றிகழும்வேணுபுரமே. 9
கண்ணன்,கடிமாமலரில்-திகழும்
அண்ணல், இருவர் அறியா இறை ஊர் -
வண்ணச் சுதை மாளிகைமேல் கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே.
kaNNan, kaTimAmalaril-tikazum
aNNal, iruvar aRiyA iRai Ur-
vaNNac cutai mALikaimEl koTikaL
viNNil-tikazum vENupuramE.
பொருள்: வண்ணங்கள் பூசப்பட்ட மாளிகைகள் சூழ இருப்பதே வேணுபுரம். அங்கு கொடிகள்,
வளர்ந்து மாளிகையின் மேற்பகுதியைத் தாண்டி விண்ணிலும் படர்ந்திடத் துடிக்கும். அவ்வூரில்தான்
பிரமன் திருமால் என்ற இருவராலும் தேடிக் காணமுடியாத சிவபெருமான் பொருந்தியுள்ளார் என்க.
குறிப்புரை: கண்ணன்- (திருமால்) கரியவன். கடி - மணம். மலர் - தாமரை. அண்ணல்- பிரமன்.
இறை - இறைவன் (சிவன்). வண்ணம்- அழகு. சுதை- சுண்ணம்.
Behold! It is Civan, the Lord of Thiru-venu-puram which is a place for pilgrimage
and it is the abode of our Lord. Our Lord could not be comprehended by Lord Vishnu and by
Lord Brahma who normally resides in the fragrant lotus flower. The city of Thiru-venu-puram
has beautiful palaces constructed with carved crystals. Flags fly on the top of these palaces.
The beauty of these tall palaces, with flags flying in the sky, resembles that of city
in Deva Loka.
1653. போகம்மறியார்துவர்போர்த்துழல்வார்
ஆகம்மறியாவடியாரிறையூர்
மூகம்மறிவார்கலைமுத்தமிழ்நூல்
மீகம்மறிவார்வேணுபுரமே. 10
போகம்(ம்) அறியார், துவர் போர்த்து உழல்வார்
ஆகம் அறியா அடியார் இறைஊர் -
மூகம்(ம்) அறிவார் கலை முத்தமிழ் நூல்
மீகம் அறிவார் வேணுபுரமே.
pOkam(m) aRiyAr, tuvar pOrttu uzalvAr,
Akam(m) aRiyA aTiyAr iRai Ur-
mUkam(m) aRivAr, kalai muttamiz nUl
mIkam aRivAr, vENupuramE.
பொருள்: வேணுபுரத்தில், இறைவனை மௌனமாக வீற்றிருந்து தியானம் செய்யும்
முனிவர்களும் பொருந்தியிருப்பர். முத்தமிழைக் கற்றுணர்ந்த சான்றோர்களும் பொருந்தியிருப்பர்.
வேதம் அறிந்தவர்களும் பொருந்தியிருப்பர். அங்குதான் சிவயோகம் பற்றி அறியாத
சமணர்களும் சாக்கியர்களும் உறைந்திருப்பர். இறை உண்மை பற்றி உணர்ந்த அடியவர்களும் அங்கு
பொருந்தியிருப்பர் என்க.
குறிப்புரை: போகம் - சிவானந்த போகத்தை. துவர் - பழுப்பு ஏறிய ஆடைக்கு ஆகுபெயர்.
உழல்வார்- திரிவார் (சமணர் சாக்கியர்) ஆகம் அறியா அடியார் - சிவநிந்தை செய்யும் பிற மதத்தரை ஏறெடுத்தும்
பார்க்காத சிவனடியார். ஆகம் - உடம்பு. மூகம் - மௌனம். மீகம் - வானோர்க்குயர்ந்த உலகம் (கம்-
வான். மீ - மேல்). முகம் அறிவாரும் கலை முத்தமிழ் நூலால் மீகம் அறிவாரும் வாழ்கின்ற வேணுபுரம்
அறிவார்- ஞானியர்.
Thiru-venu-puram has people, varied in their behaviour. The jains and Buddhists join together
in this city and preach without knowing true bliss. They wear ochre robes and suffer a lot.
Our devotees do not care for these people and never face them. They segregate themselves and
congregate in large numbers in Thiru-venu-puram. In this city learned scholars of Tamil read
and sing the scriptures and teach others. Here sages also live and carry on their penance and
meditation in solitude. Thiru-venu-puram is such a great sacred city of serenity. In one and the
same city people of ignorance and men with true realisation of God live.
1654. கலமார்கடல்போல்வளமார்தருநற்
புலமார்தருவேணுபுரத்திறையை
நலமார்தருஞானசம்பந்தன்சொன்ன
குலமார்தமிழ்கூறுவர்கூர்மையரே. 11
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு,நல்
புலம் ஆர்தரு, வேணுபுரத்து இறையை,
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன், சொன்ன
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே.
kalam Ar kaTal pOl vaLam Artaru, nal
pulam Artaru, vENupurattu iRaiyai,
nalam Artaru njAnacampantan, conna
kulam Ar tamiz kURuvar kUrmaiyarE.
பொருள்: வேணுபுரத்தில் கடல் போன்று பெரும் நல்வளம் தரும் வயல்கள் நிறைந்திருக்கும்.
அங்குதான் வேணுபுரத்து ஈசனும் பொருந்தியிருப்பார். ஈசனைப்பற்றி ஞானசம்பந்தப் பெருமான் நலமாகப்
பல பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பதிகத்தைப் பாடவல்லவர்கள் சிறப்புற்று வாழ்வார்கள் என்க.
குறிப்புரை: கலம் - மரக்கலம். ஆர்தல் - நிறைதல், பொருந்துதல். நற்புலம் -(நல் புலம்) நன்செய்.
நலம்- சிவம், சிவத்தைச் சார்வித்தற்குரிய ஞானத்தின் தொடர்பு. குலம்- மேன்மை. தமிழ்-இத்திருப்பதிகத்தை.
கூறுவர் - அன்பொடு பாராயணம் செய்வோர். கூர்மையர் - திருவருட் பெருக்கம் அடைபவர்.
Behold! It is Civan the Lord of Thiru-venu-puram. This city is surrounded by very large
and rich paddy fields that look like vast sea. Our saint Thiru-gnana Sambandar hailing from
Seerkaazhi is an embodiment of divine virtues. He has sung on the Lord of Thiru-venu-puram,
His glories in pure Tamil. The wealth brought by ships from other countries is equal to the
wealth brought by the local people from their paddy fields. The people who recite these verses
of greatness sung by Thiru-gnana Sambandar will be graceful always and will attain true
greatness and bliss.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
17ஆம் பதிகம் முற்றிற்று
End of 17th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 154 பதிக எண்: 18
18.திருமருகல் 18. THIRU-MARUKAL
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
திருமருகல் என்னும் இத்திருத்தலமானது, மருகல் என்னும் ஒருவகை வாழையைத் தலமரமாகக்
கொண்டுள்ளமையால் இப்பெயர் பெற்றது. இது, மயிலாடுதுறை - பேரளம் தொடர் வண்டிப் பாதையில்
நன்னிலம் தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 10.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவாரூரிலிருந்து
திருமருகல் செல்ல நகரப் பேருந்துகள் உள்ளன. இறைவரின் திருப்பெயர் மாணிக்கவண்ணர்.
இறைவியாரின் திருப்பெயர் வண்டுவார்குழலி. தலவிருட்சம் வாழை.
திருமருகலுக்கு அருகிலுள்ள வைப்பூர் என்னும் ஊரில் தாமன் என்னும் வணிகன் ஒருவன்
இருந்தான். அவனுக்கு ஏழு பெண்கள். ஆனால் மூத்த மகளை அவ்வணிகன் தன் மருமகனுக்குக்
கொடுப்பதாக வாக்களித்தான். பணம் பெற்று வேறு ஒருவனுக்குக் கொடுத்துவிட்டான்.
இங்ஙனமே ஏனைய ஐந்து பெண்களையும் மணஞ்செய்து கொடுத்துவிட்டான்.
ஏழாவது பெண் உளம் தளர்ந்து தாய் தந்தையருக்குத் தெரியாமல் மருமகனோடு உடன் வந்துவிட்டாள்.
வந்தவர்கள் மருகல் பெருமான் கோயிலின் பக்கத்தில் ஒரு மடத்தில் தூங்கினார்கள்.
அதுபொழுது அம்மருமகன் அரவு தீண்டப்பெற்று ஆவி நீங்கும் தன்மையைக் கண்ட அப்பெண் அயர்ந்து
சிவனருளையே சிந்தித்துப் புலம்பினாள். அப்புலம்பலைக் கேட்டு அங்கு முன்னரே எழுந்தருளியிருந்த
ஞானசம்பந்தப் பெருந்தகையார் செய்தியை அறிந்து ' சடையாயெனுமால்' என்று தொடங்கும் இத்திருப்பதிகத்தைப்
பாடி அம்மருமகனை உயிர்ப்பித்து அவ்விருவர்க்கும் மணத்தை முடித்து வைத்தருளினார். இத்தலத்திற்குத்
திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள்
உள்ளன. இப்பதிக்குரிய ஞானசம்பந்தர் பதிகங்கள் இரண்டனுள் 'அங்கமும் வேதமும்' என்று தொடங்கும்
பதிகம் திருமருகலையும் திருச்செங்காட்டங் குடியையும் சேர்த்துப் பாடியதாகும்.
பதிக வரலாறு
கணபதீச்சரத்தை வழிபட்டு மீண்ட கவுணியர்கோன், அருகிலுள்ள திருமருகலில் எழுந்தருளிய
மாணிக்கவண்ணர் கழலினை வணங்கி, 'உருகிய அன்புறுகாதல் உள்ளலைப்பத் தெள்ளுமிசையுடன்
பெருகும் தமிழ்த்தொடை சார்த்தி' அங்கிருந்தார். அவை இப்பொழுது கிடைத்தில. அந்நகரில்,
அந்நாளில் வணிகன் மகள் ஒருத்தி, தன்னை மணக்க இருந்தவன் மடத்தில், இரவில் துயிலும்போது
பாம்பு கடித்து இறக்க, அழுது புலம்பும் ஒலி கேட்டது. அங்குச் சென்ற புகலிவேந்தர் 'பயப்படேல் நீ'
என்று அபயம் தந்து, வரலாறுணர்ந்து, அவன் விடம் தீர்ந்து எழுந்து நிற்கச் செய்தற்பொருட்டு
அருளியது இத்திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
1655. சடையாயெனுமால்சரண்நீயெனுமால்
விடையாயெனுமால்வெருவாவிழுமால்
மடையார்குவளைமலரும்மருகல்
உடையாய்தகுமோஇவளுண்மெலிவே. 1
“சடையாய்!" எனுமால்; “சரண்நீ!" எனுமால்;
"விடையாய்!'' எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! - தகுமோ, இவள் உண் மெலிவே?
"caTaiyAy!" enumAl; "caraN nI!" enumAl;
"viTaiyAy!" enumAl; veruvA vizumAl;
maTai Ar kuvaLai malarum marukal
uTaiyAy! takumO, ivaL uN melivE?
பொருள்: நீர் நிறைந்த மடைகளில் குவளைப் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும் அழகிய திருமருகல்
என்னும் தலத்தில் உறைகின்ற இறைவனே! கணவனாக வரப்போகும் தலைவனைப் பிரிந்த இப்பெண்,
இறைவா உன்னையே சரணடைந்து சடையாய் என்று அலறுகிறாள். நீயே சரண் எனப் புலம்புகிறாள்.
விடையாய் என்ற பலவிதமாக அழுது புலம்புகிறாள். மயங்கி விழுகிறாள். இவளது துன்பத்தை நீவிர்
போக்கி அருளுவீராக.
குறிப்புரை: 'எனும்' 'விழும்' செய்யுமென்னும் வாய்ப்பாட்டு முற்றுவினை; ஈண்டுப் பெண்பாற்கு
வந்தது. 'ஆல்' என்பன அசைகள். சரண் நீ - நீயே அடைக்கலம். வெருவா -வெருவி. 'அஞ்சி வெருவி ஓடித்
தழுவ வெளிப்பட்ட கள்ளக்கம்பனை' (சுந்தரர், கச்சியேகம்பம்) அஞ்சுதல் உள்ள நிகழ்ச்சி. வெருவுதல்
வாயொலி, மடை - நீர் மடையில். மருகல் - ஒருவகை வாழை மரத்தாற்பெற்ற தலப்பெயர்.
உடையாய்- சுவாமீ. உள் மெலிவு - மனநோய் (வருத்தம்).
Oh Lord! You reside in Thiru-marukal, where blue nelumbium flowers blossom
in plenty in the cool ponds. In Your city a woman suffers and screams on seeing her life partner
dead due to snake bite; he is lying in the yard where they both were staying from previous night.
She laments “Oh! my god of matted hair! Oh my god mounting the bull! Your holy feet are my asylum".
Thus she shudders, falls down rolling. Oh Lord! Is it right for You to keep the lady suffering
like this?
1656. சிந்தாயெனுமால்சிவனேயெனுமால்
முந்தாயெனுமால்முதல்வாஎனுமால்
கொந்தார்குவளைகுலவும்மருகல்
எந்தாய்தகுமோ இவளேசறவே. 2
''சிந்தாய்!" எனுமால்; "சிவனே!" எனுமால்; '
'முந்தாய்!"எனுமால்; "முதல்வா!" எனுமால்; -
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்!-தகுமோ, இவள் ஏசறவே?
"cintAy!" enumAl; "civanE!" enumAl;
"muntAy!" enumAl; "mutalvA!" enumAl;
kontu Ar kuvaLai kulavum marukal
entAy!--takumO, ivaL EcaRavE?
பொருள்: குவளை மலர்கள் நிறைந்து விளங்கும் மருகல் தலத்துறை இறைவனே! இவள்
"சிந்தையில் உறையும் இறைவனே! சிவபெருமானே! எல்லாவற்றிற்கும் முந்தியவனே ! முதல்வனே!”
என்றெல்லாம் உன்னை அழைத்துப் புலம்புகிறாள். இவளது துன்பத்தை நீக்கி அருள்வீராக!
குறிப்புரை: சிந்தாய் - சிந்தையே. அழியாதவனே எனலுமாம். முந்தாய் - முன்னைப் பழம்பொருட்கும்
முன்னைப் பழம்பொருளே. முதல்வா - ஆதியனே. கொந்து - பூங்கொத்து. எந்தாய் - எம் அப்பனே.
எம் அன்னையே. ஏசறவு -மெய்மறத்தல்.
Oh my Father! Your abode is Thiru-marukal where the blue nelumbium flowers
blossom in bunches shedding fragrance all around. Is it proper that You let this damsel
suffer like this crying "Oh my god Civa! You are the first and You are the foremost!
You are the Lord of everything in the universe". Like this, she forgets herself, her
mind melts and she seeks solution (The poet's intention was that the Lord should grace
her and relieve her from suffering).
1657. அறையார்கழலும்மழல்வாயரவும்
பிறையார்சடையும்முடையாய்பெரிய
மறையார்மருகல்மகிழ்வாயிவளை
இறையார்வளைகொண்டெழில்வவ்வினையே. 3
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும்(ம்), உடையாய்! பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?
aRai Ar kazalum, azal vAy aravum,
piRai Ar caTaiyum(m), uTaiyAy! periya
maRaiyAr marukal makizvAy! ivaLai
iRai Ar vaLai koNTu, ezil vavvinaiyE?
பொருள்: மருகல் திருத்தலத்தில் உறைபவன் நீயே! ஆர்த்து ஒலிக்கும் கழலையும், நஞ்சுடைய
பாம்பையும், பிறைச் சந்திரனையும் அணிந்தவன் நீயே! பெரும் மறையாம் அருமறையை அருளிய நீ
இவளுக்கு அருள வேண்டாவோ. இவள் இப்போது தன் கையில் உள்ள வளையல்கள் தானாக நெகிழ்ந்து
தரையில் கிடக்க தன் அழகையும் இழந்து துடிக்கின்றாளே! இவளது துயரைத் துடைக்க வேண்டாமோ!
குறிப்புரை: அறை -ஒலி. அழல்வாய் அரவு - (நஞ்சு) வெப்பம் பொருந்திய வாயுடைய பாம்பு.
மறையார் மருகல் - வேதங்களை உணர்ந்தவர் வாழ்கின்ற திருமருகல். இறை - கைச்சந்து. எழில் - அழகு.
Oh Lord of Thiru-marukal! You are pleased to hear the Vedic recitations of the
learned scholars of this town. You wear ringing anklets on Your holy feet. You wear snakes
with heat emitting mouth all over Your body. You wear the moon on Your head. Is it fit for her
to be deprived of her virgin beauty? Also her bangles drop down her hands without her noticing.
Will You not chase her agony?
1658. ஒலிநீர்சடையிற்கரந்தாயுலகம்
பலிநீதிரிவாய்பழியில்புகழாய்
மலிநீர்மருகல்மகிழ்வாயிவளை
மெலிநீர்மையளாக்கவும்வேண்டினையே. 4
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?
olinIr caTaiyil karantAy! ulakam
pali nI tirivAy! pazi il pukazAy!
mali nIr marukal makizvAy! ivaLai
meli nIrmaiyaL Akkavum vENTinaiyE?
பொருள்: ஓடிவரும் கங்கையைத் தலையில் தாங்கியவன் நீ! பிரம்ம கபாலம் ஏந்தி
பலிதேர்ந்து வருபவன் நீ! குற்றமற்ற புகழுக்கு உரியவன் நீ! திருமருகல் தலத்தில் கோயில்
கொண்டுள்ளவன் நீ! நீயே துன்புறும் இப்பெண்ணிற்குத் தக்கவாறு உதவாமல் இருக்கலாமோ?
குறிப்புரை: ஒலிநீர் - முழங்குங் கங்கை. கரந்தாய் - மறைத்தாய். பலி - பிச்சை.
நீர்மலி மருகல் என்றும் மாற்றலாம்.
Oh my Lord of Thiru-marukal! You have hidden the torrential river Ganges in Your
matted hair. You go over all the worlds begging for alms. You have flawless fame. You feel
happy to stay in the cool watered Thiru-marukal. Is it just for You , to make this damsel
languish and lament and to become lean?
1659. துணிநீலவண்ணம்முகில்தோன்றியன்ன
மணிநீலகண்டமுடையாய்மருகல்
கணிநீலவண்டார்குழலாளிவள்தன்
அணிநீலவெண்கண்ணயர்வாக்கினையே. 5
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணிநீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள் தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?
tuNi nIlavaNNam mukil tOnRiyanna
maNi nIlakaNTam(m) uTaiyAy, marukal!
kaNi nIlavaNTu Ar kuzalAL ivaLtan
aNi nIla oNkaN ayarvu AkkinaiyE?
பொருள்: கரிய நிறமுடன் மழைமேகம் காட்சியளிப்பது போல, இறைவா நீ, நீலகண்டனாகக்
காட்சியளிக்கின்றாய். கரிய வண்டுகள் ஒலிக்கும் குவளை மலர்கள் நிறைந்த மருகல் தலத்தில் கோயில்
கொண்டுள்ளாய். அழகான நீலமலர் போன்ற கண்களைக் கொண்ட இப்பெண் துன்புற நீ பார்த்துக்
கொண்டிருக்கலாமோ?
குறிப்புரை: துணி நீல ... கண்டம் - தெளிந்த நீலநிறம் உடைய மேகம் தோன்றினாற்போன்ற
அழகிய நஞ்சாற் கறுத்த திருக்கழுத்தை. கணி - கருதுகின்ற. அயர்வு - சோர்வு. மறதி.
Oh Lord! You resemble the black clouds that bring rain, with Your bluish neck.
Thiru-marukal abounds in nelumbium flowers around which bees keep on humming. You reside
in the temple at Thiru-marukal. Around the hair of this damsel also bees used to hum.
But now she is exhausted, devoid of her mirth. Watching her agony You do not seem to
feel for her. Why do you remain so?
1660. பலரும்பரவப்படுவாய்சடைமேல்
மலரும்பிறையொன்றுடையாய்மருகல்
புலருந்தனையுந்துயிலாள்புடைபோந்
தலரும்படுமோ அடியாளிவளே. 6
பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும் தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே?
palarum paravappaTuvAy! caTaimEl
malarum piRai onRu uTaiyAy, marukal!
pularum tanaiyum tuyilAL, puTai pOntu
alarum paTumO, aTiyAL ivaLE?
பொருள்: அடியவர்கள் பலராலும் போற்றி வணங்கப் பெறும் இறையவனே! சடைமேல்
பிறைநிலவைத் தாங்கி அருட்காட்சி கொடுப்பவனே! மருகல் தலத்து உறைபவனே! இப்பெண்
இரவு முழுவதும் துயிலாமல் உன் திருவடிகளையே சார்ந்து நின்று கொண்டிருக்கிறாளே.
இவளுக்கு அருள வேண்டாமா? உலகம் இவளைப் பழிக்கும் நிலையிலிருந்து காக்க வேண்டாமா?
குறிப்புரை: பரவ - துதிக்க. மலரும் - பரவும். புலரும்தனை - விடியுமளவும். துயிலாள் - தூங்காதவள்
புடை - பக்கம், வெளி. அலர் - பழிச்சொல்.
Oh my Lord of Thiru-marukal! You are worshipped by all devotees in this town daily.
You have the bright moon on Your matted hair. Is it not a pity to the servitors to see this damsel
staying in the temple whole night without sleep and coming out of the inner vista of the temple to
wail and lament loudly? Oh Lord! save her from the adverse criticism of the world.
1661. வழுவாள்பெருமான்கழல்வாழ்கவெனா
எழுவாள்நினைவாளிரவும்பகலும்
மழுவாளுடையாய்மருகற்பெருமான்
தொழுவாளிவளைத்துயராக்கினையே. 7
வழுவாள்; "பெருமான்கழல் வாழ்க!" எனா
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?
vazuvAL; "perumAnkazal vAzka!" enA
ezuvAL; ninaivAL, iravum pakalum;--
mazuvAL uTaiyAy! marukal perumAn!--
tozuvAL ivaLait tuyar AkkinaiyE?
பொருள்: மழுவினையும் வாளினையும் தாங்கியபடியே மருகல் தலத்துள் கோயில் கொண்ட
எம்பெருமானே! இப்பெண் உன்னை வணங்கும் நிலையிலிருந்து ஒருபோதும் தவிராள். தூக்கத்திலிருந்து
எழும்போதும் உன் நாமத்தைக் கூறிக்கொண்டே எழுவாள். எப்பொழுதும் உன்னையே தொழும்
இத்தலத்தில் அடியவள் துன்பமடைய நீ பார்த்துக் கொண்டிருக்கலாமோ?
குறிப்புரை: பெருமான் கழல் வாழ்க எனா வழுவாள் எழுவாள் என மாற்றுக. எனா - என்று.
வழுவாள் - தவறாதவளாய். எழுவாள் - உறங்கிவிழித் தெழுவாள். இரவும் பகலும் நினைவாள்.
மழுவாள்- மழுவாகிய படை.
This damsel as and when she hears the voice of devotees going to the temple
in the early morning singing "The holy feet of our Lord be hallowed forever", gets up
from her bed, brings to her mind our Lord and prays. This lady never turned away from
her saiva faith. She used to pray day and night to You without any short fall saying
"Praise to Thee". Oh Lord of Thiru-marukal! It gives me much pain, indescribable,
to see this damsel in the sea of sorrow. Oh Lord! You have the small axe on Your hand.
How could You punish Your worshipper in this way?
1662. இலங்கைக்கிறைவன்விலங்கல்லெடுப்பத்
துலங்கல்விரலூன்றலுந்தோன்றலனாய்
வலங்கொள்மதில்சூழ்மருகற்பெருமான்
அலங்கல்லிவளையலராக்கினையே. 8
இலங்கைக்கு இறைவன் விலங்கல்(ல்) எடுப்ப,
துலங்கல் விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல்பெருமான்!
அலங்கல்(ல்) இவளை அலர் ஆக்கினையே?
ilagkaikku iRaivan vilagkal(l) eTuppa,
tulagkal viral UnRalum, tOnRalanAy;
valamkoL matil cUz marukal perumAn!
alagkal(l) ivaLai alar AkkinaiyE?
பொருள்: மதில்கள் சூழ்ந்த மருகல் தலத்தில் உறைபவனே! இலங்கை வேந்தன் இராவணன்
தன்முனைப்பால் நீ இருக்கும் கயிலாய மலையை எடுக்க முயன்றான். நீ அவனை முதலில் அடர்த்துப்
பின்பு அருள் செய்தாய். ஆனால் பூவினும் மென்மையான இப்பெண் துன்பப்படுகின்றபோதும்
அருளாது இருக்கின்றாயே! இது முறையோ?
குறிப்புரை: இறைவன் - அரசன் (இராவணன்). விலங்கல் - மலை (கயிலை) துலங்கு - விளங்கிய.
ஊன்றலும்-அழுத்தியதும். தோன்றவனாய் - செய்வது இன்னதென்று தோன்றப் பெறாதவனாய்.
வலம் கொள் - வலமாக வந்து பணிந்து வேண்டி வரம் கொண்ட. தோன்றலனாய் என்பது.
வலங்கொள் என்பதொடு இயையும். இன்றேல். முடிபில்லாதொழியும். அலங்கல் - மாலை.
அசைந்திடுதலும் ஆம்.
Oh Lord of Thiru-marukal! You subdued the mighty king of Sri Lanka when he
tried to lift Your abode of mount Kailash. You pressed the top of the mountain with
Your single toe slightly.The king got crushed with all his heads and shoulders under
the mountain. He could not escape. He cried and prayed to You and sang songs on Your
glory. You forgave him and granted him Your grace. Oh Lord! You reside in the city of
Thiru-marukal which is surrounded by strong walls of the city. Now, it is cruelty
that You could not grace, this damsel who looked like a garland previously, but
now is pathetic like a flower.
1663. எரியார்சடையும்மடியும்மிருவர்
தெரியாததொர்தீத்திரளாயவனே
மரியார்பிரியாமருகற்பெருமான்
அரியாளிவளையயர்வாக்கினையே. 9
எரி ஆர் சடையும்(ம்), அடியும்(ம்), இருவர்
தெரியாதது ஓர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?
eri Ar caTaiyum(m), aTiyum(m), iruvar
teriyAtatu Or tIttiraL AyavanE!
mariyAr piriyA marukal perumAn!
ariyAL ivaLai ayarvu AkkinaiyE?
பொருள்: ஒளிமிக்க சடையினை உடையவனே! பிரமன், திருமால் ஆகிய இருவராலும்
அறிய முடியாத ஒளிப்பிளம்பாக நின்றவனே! அடியார்களைவிட்டு நீங்காமல் திருமருகல் தலத்தில்
கோயில் கொண்டவனே! உன் அடியவளாக விளங்கும் இப்பெண்ணிற்கு நீ துன்பத்தைத் தரலாமோ?
விரைவில் இவளது துயரத்தை நீக்கி அருள்வாயாக!
குறிப்புரை: எரிஆர் சடை - நெருப்பைப் போலும் சிவந்த சடை. தீத்திரள் - ஒளிப்பிழம்பு.
இலிங்க புராண வரலாறு. மரியார் - திருவடி வழிபாட்டால் பிறவி நீங்கியவர் (ஜீவன் முக்தர்)
அரியாள் - அரியவள்.
Oh Lord of Thiru-marukal! You were the cluster of all fires when Vishnu and Brahma
tried to see Your holy head and feet; they failed finally since they could not see Your matted
hair and ankleted feet. You are the Lord residing in Thiru-marukal where the celebrated devotees
of deathlessness do not part from You. I feel very sorry to know that you made this damsel,
a rare devotee of Yours, to wail and suffer.
1664. அறிவில்சமணும்மலர்சாக்கியரும்
நெறியல்லனசெய்தனர்நின்றுழல்வார்
மறியேந்துகையாய்மருகற்பெருமான்
நெறியார்குழலிநிறைநீக்கினையே. 10
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?
aRivu il camaNum(m) alar cAkkiyarum
neRi allana ceytanar, ninRu uzalvAr;
maRi Entu kaiyAy! marukal perumAn!
neRi Ar kuzali niRai nIkkinaiyE?
பொருள்: நல்அறிவில்லாத சமணர்களும் சாக்கியர்களும் நெறியற்ற செயல்களைச் செய்து
துன்புறுவர். மானைக் கையில் ஏந்திய எம்பெருமானே! இப்பெண் முறையான நெறியில் வாழ்பவள்
அன்றோ? இவளுக்கு நீ துன்பம் தரலாமோ? இவளது துன்பத்தை நீக்கி அருள்வாயாக.
குறிப்புரை: அறிவு இல் சமண்- மெய்ப்பொருள் உணர்வில்லாத சமணர். அலர் - பலராகப் பரவிய.
நெறி அல்லன- சைவநெறி அல்லாத புன்னெறிகள். மறி - மான்கன்று. நெறி- நெறித்தல், அடர்ந்திருத்தல்.
நிறை - நெஞ்சைக் கற்புநெறியில் நிறுத்தல் (குறள்- 57 உரை) நிறை எனப்படுவது மறை பிறரறியாமை
(கலித்தொகை 136) என்றதன் கருத்தும் அறிக.
The senseless and ignorant Jains and Buddhists deviate from the right path of our
Lord of Thiru-marukal. Let them suffer for their ignorance. You hold a deer in one of
Your hands. It is a pity to see this damsel suffer. She is a woman of strong conviction
and devotion. You have shattered her integrity. Let her be relieved of her sorrow.
1665. வயஞானம்வல்லார்மருகற்பெருமான்
உயர்ஞானமுணர்ந்தடியுள்குதலால்
இயன்ஞானசம்பந்தனபாடல்வல்லார்
வியன்ஞாலமெல்லாம்விளங்கும்புகழே. 11
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.
vayanjAnam vallAr marukal perumAn
uyar njAnam uNarntu, aTi uLkutalAl,
iyal njAnacampantana pATal vallAr,
viyan njAlam ellAm viLagkum, pukazE.
பொருள்: தன் வயத்தினராகிய மருகல் பெருமானுடைய திருக்குறிப்பின் வழிமேவும் ஞானசம்பந்தன்
அப்பெருமானின் திருவடிகளை நினைந்து பத்துப் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அவற்றையே பக்தியுடன்
பாட வல்லவர்கள் புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்கும்.
குறிப்புரை: வயஞானம் - தன்வயமாக்கிய திருவருண் ஞானம். அருள்வயமான நல்லோர் வாழும்
மருகல் என்க.
Civan, our Lord resides in Thiru-marukal, where persons of fine attributes live.
Thiru-gnana-Sambandar of Seerkaazhi with our Lord's inspiration sang these hymns on our Lord,
keeping in mind the greatness of the divine wisdom. Those devotees who worship His golden feet,
purely singing these songs will have their fame and greatness spread all over the vast earth.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
18ஆம் பதிகம் முற்றிற்று
End of 18th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 155 பதிக எண்: 19
19. திருநெல்லிக்கா 19. THIRU-NELLIKKAA
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
திருநெல்லிக்கா என்னும் இத்திருத்தலமானது நெல்லிமரத்தைத் தலமரமாகக் கொண்டதால்
இப்பெயர் பெற்றது. நெல்லிமரம் பிரகாரத்தில் இருக்கின்றது. திருநெல்லிக்கா தொடர்வண்டி நிலையத்திலிருந்து
மேற்கே அரை கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள நூற்றுப்பதினேழாவது
தலமாகும். திருவாரூரிலிருந்து இவ்வூருக்கு நகரப் பேருந்துகள் உள்ளன. இறைவர் திருப்பெயர் நெல்லிவனநாதர்.
இறைவி திருப்பெயர் மங்களநாயகி. தீர்த்தம் பிரமதீர்த்தம், சூரிய தீர்த்தம் என்பன. தலமரம் நெல்லி.
ஞாயிறும் பிரமனும் வழிபட்ட தலம். ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும் மாசிமாதம்
18ஆம் தேதி ஏழுநாளும் அஸ்தமன சமயத்தில் சூரியனுடைய கிரணங்கள் இறைவனது திருமேனியில்
விழுகின்றன. இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
பதிக வரலாறு
தேவூர் அணைந்து போற்றிய திருஞானசம்பந்தர், திருநெல்லிக்காவைப் பணிந்து பாடியது
இத்திருப்பதிகம் ஆகும்.
திருச்சிற்றம்பலம்
1666. அறத்தாலுயிர்காவலமர்ந்தருளி
மறத்தான்மதில்மூன்றுடன்மாண்பழித்த
திறத்தாற்றெரிவெய்தியதீவெண்டிங்கள்
நிறத்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே. 1
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருளி,
மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த
திறத்தால் தெரிவு எய்திய தீ, வெண்திங்கள்,
நிறத்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
aRattAl uyir kAval amarntu aruLi,
maRattAl matil mUnRu uTan mANpu azitta
tiRattAl,-terivu eytiya tI, veNtigkaL,
niRattAn--nellikAvuL nilAyavanE.
பொருள்: எம்பெருமான் அறக்கருணை கொண்டு உயிர்களைக் காத்தருளுகிறான்.
மறக்கருணை கொண்டு முப்புரங்களை அழித்தருளுகிறான். அறக்கருணையும் மறக்கருணையும்
பொருந்தி இருப்பதை விளக்குவதைப் போன்றே அவன் வெண்ணீறு அணிந்து செம்மேனியனாய்
திருநெல்லிக்கா என்ற தலத்தில் காட்சியளிக்கின்றான்.
குறிப்புரை: அறத்தால் - தருமத்தை நிலை நிறுத்த வேண்டி. உயிர் காவல்- உயிர்களைக் காத்தல்.
மறம் - அதர்மம். மாண்பு - மாட்சி. தெரிவு - விளக்கம். தீ நிறத்தான் - அழல் வண்ணன்.
வெண்டிங்கள் நிறத்தான் - பவளம் போன்ற திருமேனியில் பால்போலும் திருவெண்ணீற்றைப் பூசிய
திருக்கோலத்தால், வெண்டிங்கள் போலும் தண்ணொளி உடையவனான பரமசிவன். நிலாயவன்-
நிலவி நின்றவன், நிலாயவனே நிறத்தான் என்றும் இயையும். 'தான்' அசையுமாம். மேலும் இவ்வாறே
அசையாதலாம்
See there! He is Civan, our Lord of Thiru-nellikkaa. The divine grace of
our Lord of Thiru-nellikkaa has two folds. One is: He is the protector of virtue (அறக்கருணை)
Another is: The valorous divine grace that chastises (மறக்கருணை). Our Lord of Thiru-
nellikkaa has both the graces:
1. He drank the poison from the sea of milk and saved the entire humanity in the cosmos.
This behaviour is as protector of virtue (அறக்கருணை).
2. He destroyed the three flying forts of the asuraas and protected the devaas. This
is valorous grace that chastised (மறக்கருணை).
Our Lord of Thiru-nellikkaa with His excellence, exhibited His body with
reddish fire; He exhibits His body also in the contrasting white, rubbing the
holy ashes all over His body.
1667. பதிதானிடுகாடுபைங்கொன்றைத்தொங்கல்
மதிதானதுசூடியமைந்தனுந்தான்
விதிதான்வினைதான்விழுப்பம்பயக்கும்
நெதிதான்நெல்லிக்காவுள்நிலாயவனே. 2
பதிதான் இடுகாடு; பைங்கொன்றை தொங்கல்;
மதிதான் அது சூடிய மைந்தனும் தான்;
விதி தான்; வினை தான்; விழுப்பம் பயக்கும்
நெதி தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
patitAn iTukATu; paigkonRai togkal;
matitAn atu cUTiya maintanum tAn;
viti tAn; vinai tAn; vizuppam payakkum
neti tAn--nellikkAvuL nilAyavanE.
பொருள்: எம்பெருமான் நெருப்பு நிறைந்துள்ள சுடுகாட்டில் இருக்கிறான். அவனே குளிர்ந்த
கொன்றை மலர் மாலையையும் நிலவையும் தலையில் அணிந்துள்ளான். அழிக்கும் விதியாகவும்
விதிக்குக் காரணமான வினையாகவும் மாறுபட்ட நிலையில் (சூடும் குளிர்ச்சியும் போல்)
திருநெல்லிக்காவுள் மேவியுள்ளான்.
குறிப்புரை: பதி- இடுகாடு. தொங்கல் - (மாலை) கொன்றை. மதி - பிறை. மைந்தன் - வலியன், வீரன்.
விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை என்றபடி. விழுப்பம் - மேன்மை. திருவருளே
தனக்கு மேலொன்றில்லாச் செல்வமாதலின் 'விழுப்பம் பயக்கும் நெதி' எனப்பட்டது. 'செல்வன் கழல்
ஏத்தும் செல்வம் செல்வமே' 'சிவமேபெறும் திரு' 'சென்றடையாத திரு' 'சென்றடையாச் செல்வன்'
என்பன காண்க. நிலாயவன் பதி இடுகாடு. தொங்கல் கொன்றை என்றும் நிலாயவனே மைந்தனும்
விதியும் வினையும் நெதியும் என்றும் கொள்க.
Lord Civan is full of contrasts. He dances on the burial ground of fire; but He
wears only cool flowers and the cool crescent moon on His matted hair. Destructive destiny
and the actions which decide and bring the destiny are two different factors. Yet our Lord
is both. He is in fact all in all; He is the destiny of the souls; the action that begets
the destiny and also all the wealth in the universe which is bestowed by Him differently
on different people. On the whole He is the divinity that formulates our destiny, deeds,
wealth and greatness. Our Lord of such power and contrasts, Nelli vaneswarar resides
in Thiru-nellikkaa.
1668. நலந்தானவன்நான்முகன்றன்தலையைக்
கலந்தானதுகொண்டகபாலியுந்தான்
புலந்தான்புகழாலெரிவிண்புகழும்
நிலந்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே. 3
நலம்தான் அவன்; நான்முகன் தன் தலையைக்
கலம் தான் அது கொண்ட கபாலியும் தான்;
புலம் தான்; புகழால் எரி விண் புகழும்
நிலம் தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
nalamtAn avan; nAnmukan tan talaiyaik
kalamtAn atu koNTa kapAliyum tAn;
pulam tAn; pukazAl eri viN pukazum
nilam tAn-nellikkAvuL nilAyavanE.
பொருள்: உயிர்களுக்கு நன்மை செய்யும் எம்பெருமானே! உயிர்களுக்காக உலகைப் படைத்த
பிரமனின் தலையைக் கொய்தான். அதனை பிச்சைப் பாத்திரமாக ஏந்தி பலிதேர்ந்து வருகிறான்.
பலிதேர்ந்து வரும் அவனே தேவர்களின் மிகுபுகழுக்கும் உரியவனாய்த் திருநெல்லிக்காவுள்
கோயில் கொண்டுள்ளான்.
குறிப்புரை: நலம் தான் அவன் -அவனே நலம். மங்கலம். சிவம் அல்லாது வேறு நலம்
உயிர்கட்கு இல்லை. 'குறைவிலாமங்கல குணத்தன்' (காஞ்சிப்புராணம் திருநெறிக் 23). நகராநலம்
(தி.2, ப.19. பா11) பிரமனது தலையைக் கிள்ளிக் கையிற் கொண்ட வரலாறு முற்பகுதியிற் கூறப்பட்டது.
கபாலி- பிரமகபாலத்தைத் தாங்கியவன். புலம் - சிவஞான சொரூபம். புகழால் எரிவிண்- கீர்த்தியால்
விளங்கும் வானம். விண்புகழும் நிலம் - வானோர் துதிக்கும் சிவதலம் (திருநெல்லிக்கா). நலம்தான்
கபாலியும் தான், புலம்தான், நிலம்தான் என்று கொள்ளின். நிலம் என்பது மிசை நிலம், வீட்டுலகு ஆம்.
'நிலமிசை நீடுவாழ்வார்' (குறள் 3) 'மீதானம்' (திருக்களிறு).
Civan, seems to be a bundle of contradictions in his actions. He is the Lord of
Thiru-nellikkaa. He is the personification of virtue; however He controls the virtue and
performs beneficial actions for the sake of all life in the universe. Yet, He plucked one
head of Brahma for his wrong doing and after it was cleaned, used it as His begging bowl.
Despite this humiliating action, it is He who is praised by the celestials for His divine
wisdom.He stands for the earth and also for the celestial world. This Lord of immense fame
resides in Thiru-nellikkaa.
1669. தலைதானதுஏந்தியதம்மடிகள்
கலைதான்திரிகாடிடம்நாடிடமா
மலைதானெடுத்தான்மதில்மூன்றுடைய
நிலைதான்நெல்லிக்காவுள்நிலாயவனே. 4
தலைதான் அது ஏந்திய தம் அடிகள்;
கலைதான் திரி காடுஇடம் நாடுஇடம் ஆம்;
மலைதான் எடுத்தான், மதில்மூன்று உடைய;
நிலை தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
talaitAn atu Entiya tam aTikaL;
kalaitAn tiri kATu iTam nATu iTam Am;
malaitAn eTuttAn, matilmUnRu uTaiya;
nilaitAn--nellikkAvuL nilAyavanE.
பொருள்: பிரமனின் தலையைக் கையில் ஏந்தி எம்பெருமான் நாட்டிலும் காட்டிலும்
ஓடி ஆடித் திரிகிறான். முப்புரத்தையுடை அசுரர்களை அழிப்பதற்காக மேருமலையை
வில்லாக வளைத்தான். அப்பெருமான் திருநெல்லிக்காவுள் கோயில் கொண்டுள்ளான்.
குறிப்புரை: தலை- பிரமகபாலம். கலை - மான். ஏந்தியது தலை, காடிடம் நாடிடமாம்.
காடாகிய இடம் நாடுகின்ற இடம், நாடாகிய இடமுமாம். மதில் மூன்றுடைய மலைதான் எடுத்தான்-
முப்புரமும் உடைந்தழிய மேருமலை வில்லை எடுத்தவன். நிலை - உறையுள்.
See there! It is Civan, the Lord of Thiru-nellikkaa, which is the holy of the holy.
He holds in His hand the dried skull of Brahma for begging alms. He seeks the forest where
the deer leaps at its dwelling place. He keeps it in one of His hands and prevents it from
running out of His hand. Once He bent the big Meru mountain as His bow and burnt the three
flying forts of the asuraas and helped the devaas to escape the asuraas' misdeed. He is our
Lord who for ever stays there in Thiru-nellikkaa.
1670. தவந்தான்கதிதான்மதிவார்சடைமேல்
உவந்தான்சுறவேந்தனுருவழியச்
சிவந்தான்செயச்செய்துசெறுத்துலகில்
நிவந்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே. 5
தவம் தான்; கதி தான்; மதி வார்சடைமேல்
உவந்தான்; சுறவேந்தன் உரு அழியச்
சிவந்தான்; செயச்செய்து செறுத்து உலகில்
நிவந்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
tavamtAn; kati tAn; mati vArcaTaimEl
uvantAn; cuRavEntan uru aziyac
civantAn; ceyacceytu ceRuttu ulakil
nivantAn--nellikkAvuL nilAyavanE.
பொருள்: சிவபெருமானே தவம் செய்பவன் ஆவான். தவத்தின் முடிவும் அவனே ஆவான்.
சந்திரனைத் தலையில் தரித்தவனும் அவனே. மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவனும் அவனே.
பூவுலகில் ஏற்படுகின்ற மாறுபட்ட செயல்களுக்கு உரியவனும் அவனே, விரும்பி திருநெல்லிக்காவுள்
மேவியுள்ளான்.
குறிப்புரை: தவமும் அத்தவத்தின் பயனாக எய்தும் கதியும் தானே (சிவனே) ஆவான்.
வார்சடைமேல் மதியை உவந்தான். உவத்தல் - மகிழ்தல். சுறவேந்தன் - மீனக்கொடி உடைய
மன்மதன். உருஅழிய- (உருவிலியாக) வடிவம் எரிந்து சாம்பலாக சிவந்தான். கோபித்தான்.
சிவந்தான் (ஆகச்) செய்யச் செய்து. செறுத்து - அழித்து. நிவந்தான் - ஓங்கினான். செயற்செய்து
என்னும் பாடத்திற்குச் சிவந்தானது செயலைச் செய்து என்று கொள்க. செய (ஜெய) - வெற்றி
எனலுமாம். செயம் என்றதன் விகாரமாகக் கொள்க.
See there! It is Civan, our Lord of Thiru-nellikkaa. He is the personification of 'penance'.
Also He is the resulting salvation which arises out of penance. He is happy with the cool moon
on His long matted hair. His body turned to be red-hot with anger when he burnt cupid, the god of love,
for his misbehaviour. Thus, He exhibits His destroying power in the entire universe thereby proving
his ultimate greatness. He is our Lord, ever stays in Thiru-nellikkaa.
1671. வெறியார்மலர்க்கொன்றையந்தார்விரும்பி
மறியார்மலைமங்கைமகிழ்ந்தவன்றான்
குறியாற்குறிகொண்டவர்போய்க்குறுகும்
நெறியான்நெல்லிக்காவுள்நிலாயவனே. 6
வெறி ஆர் மலர்க்கொன்றைஅம்தார் விரும்பி;
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்;
குறியால் குறி கொண்டவர் போய்க் குறுகும்
நெறியான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
veRi Ar malarkkonRai am tAr virumpi;
maRi Ar malaimagkai makizntavan tAn;
kuRiyAl kuRi koNTavar pOyk kuRukum
neRiyAn--nellikkAvuL nilAyavanE.
பொருள்: எம்பெருமான், மணமிக்க கொன்றை மாலையை விரும்பி அணிந்துள்ளான்.
அவனே மலைமகளை விரும்பி மணந்துள்ளான். சூரியன், சந்திரன், திருமால், பிரமன் ஆகியோர்
தாம் நற்பேறு பெற வேண்டும் என்னும் பெருநோக்கத்தால், நம் இறைவனிடம் வந்து சேரவிரும்பியதால்,
நம் இறைவன் தன்னை அடையாளம் காட்டும் நிலையில் அவனே திருநெல்லிக்கா தலத்துள்
கோயில் கொண்டு அருள் வழங்கி வருகின்றான்.
குறிப்புரை: வெறி -மணம். தார்-மாலை. மறி-மான். மலைமங்கை இமாசலகுமாரி. குறியால்
குறிகொண்டவர் போய்க் குறுகும் நெறியான் - குரு உபதேசித்த குறியினால் தியானித்துணர்ந்து கொண்டவர்
சென்று அடையும் ஒளி நெறி உடையவன். 'அறிவதொருகுறி குருவினருளினால் அறிந்து மன்னு
சிவன்றனையடைந்து நின்று' அருள் ஞானக் குறியில் நின்று கும்பிட்டுத் தட்டம் இட்டுக் கூத்தாடித்திரி
(சித்தியார் 286, 323) 'குறியொடுதாம் அழியும் நெறி' (சித்தியார் 324) அதனின் மேலாயது.
See there! It is Civan who is our Lord in Thiru-nellikkaa. He has adorned
Himself with fragrant cassia flowers. The king's mountain is the Himalayaas,
where deer in large numbers live and enjoy their life. The king's daughter Umaa
observed penance in order to marry Lord Civa. Our Lord agreed to her wish and
married her. He is the ultimate destination for those devotees who follow the
well-guided path established by the sacred scholars of the past. He is our Lord
in Thiru-nellikkaa. He has identified Himself as the ultimate goal for all souls.
1672. பிறைதான்சடைச்சேர்த்தியஎந்தைபெம்மான்
இறைதானிறவாக்கயிலைமலையான்
மறைதான்புனலொண்மதிமல்குசென்னி
நிறைதான்நெல்லிக்காவுள்நிலாயவனே. 7
பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்;
இறை தான்; இறவாக் கயிலைமலையான்;
மறை தான்; புனல், ஒண்மதி, மல்கு, சென்னி
நிறை தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
piRaitAn caTaic cErttiya entaipemmAn;
iRai tAn; iRavAk kayilaimalaiyAn;
maRai tAn; punal, oNmati, malku cenni
niRai tAn-nellikkAvuL nilAyavanE.
பொருள்: தலையில் பிறையைத் தாங்கி நிற்கும் எம்பெருமானே, கயிலாய மலையின் உச்சியில்
அமர்ந்துள்ளான். மறைகளுக்கும் மேலானவன் அவனே; கங்கை, சந்திரன் முதலியவைகளைத் தன் தலையில்
அணிந்து மக்களுக்கு வெளிப்படுமாறு செய்துள்ளான். அவனே, துவர்ப்பும் இனிப்பும் நிறைந்த நெல்லிக்கா
போல நெல்லிக்காவுள் உறைந்துள்ளான் என்க.
குறிப்புரை: சடைச்சேர்த்திய - சடைமேல் சேரச் செய்த. ஏழன்தொகை. இறவாக் கயிலைமலை-
என்றதால் அழிவில்லாத சிறப்புணர்க. புனல் - கங்கை. முதலடியிற் பிறையும் சடையும். மூன்றாவதடியில்
மதியும், சென்னியும் என ஓரிடமும் நோக்கின் இப்பதிகத்தைப்பற்றி ஒரு சிந்தனை தோன்றும்.
See there! It is Civan our Lord of Thiru-nellikkaa. He, my father has adorned His
matted hair with the crescent moon. He is the Almighty; He is the Eternal; the Supreme God of
mount Kailash. He is the venerable Vedas. He has on His head the Ganges along with the
bright moon. He is an epitome of perfection in everything. He is our Lord ever abiding
in Thiru-nellikkaa.
1673. மறைத்தான்பிணிமாதொருபாகந்தன்னை
மிறைத்தான்வரையாலரக்கன்மிகையைக்
குறைத்தான்சடைமேற்குளிர்கோல்வளையை
நிறைத்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே. 8
மறைத்தான், பிணி மாது ஒருபாகம் தன்னை;
மிறைத்தான், வரையால் அரக்கன் மிகையைக்
குறைத்தான்; சடைமேல் குளிர் கோல்வளையை
நிறைத்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
maRaittAn, piNi mAtu orupAkam tannai;
miRaittAn, varaiyAl, arakkan mikaiyaik
kuRaittAn, caTaimEl kuLir kOlvaLaiyai
niRaittAn--nellikkAvuL nilAyavanE.
பொருள்: எம்பெருமான் உமாதேவியைப் பிணித்து இருக்கிறான். அவனே பிணித்ததைப்
பிறர் அறியாவண்ணம் அர்த்தநாரியாய் ஒன்றுபட்டும் காட்சியளிக்கிறான். கயிலாய மலையைத் தூக்க
முயன்ற அரக்கனை அடர்த்தும் அருளியுள்ளான். கங்கையைத் தலையில் தாங்கி மறைத்து வைத்தலையும்
புரிகிறான். அவனே நெல்லிக்காவுள் உள்ளான் என்க.
குறிப்புரை: ஒரு பாகத்தில் மாதினைப் பிணித்து மறைத்தான். பிணி மறைத்தான்-
வரிப்புனைபந்து என்புழிப்போலும். மிறைத்தான்- வருத்தினான். மிகை - மீச்செலவை,
குறைத்தான் - அடக்கினான். கோல்வளையை- கங்கையை - அன்மொழித் தொகை.
கோல்- திரட்சி. வளை- வளையலை உடையவள். நிறைத்தான் - நிறைய அடக்கிக் கொண்டான்.
See there! It is Civan, our Lord of Thiru-nellikkaa. He keeps His consort
on the left side of His body, concealing her true form. He subdued the valour of
Raavanan by pressing the top of mount Kailash with His toe, when Raavanan tried to
lift the mountain and keep it aside. He keeps the cool river Ganges with her broad
bangles on His matted hair in Thiru-nellikkaa. He is our Lord there forever.
1674. தழல்தாமரையான்வையந்தாயவனும்
கழல்தான் முடிகாணியநாணொளிரும்
அழல்தானடியார்க்கருளாய்ப்பயக்கும்
நிழல்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே. 9
தழல் தாமரையான், வையம் தாயவனும்,
கழல்தான் முடி காணிய, நாண் ஒளிரும்
அழல்தான்; அடியார்க்கு அருள் ஆய்ப் பயக்கும்
நிழல் தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
tazal tAmaraiyAn, vaiyam tAyavanum,
kazaltAn muTi kANiya, nAN oLirum
azaltAn; aTiyArkku aruL Ayp payakkum
nizaltAn--nellikkAvuL nilAyavanE.
பொருள்: குளிர்ந்த செந்தாமரை மலரில் இருக்கும் பிரமனுக்கும் நெடிய வடிவு எடுத்து உலகை அளந்த
திருமாலுக்கும் எம்பெருமான் ஒளிர்ந்து ஓங்கும் நெருப்பு வடிவு கொண்டே காட்சி கொடுத்து அருளினான்.
அவனே சிவனடியார் பொருட்டு குளிர்ந்த நிலையில் நெல்லிக்காவுள் கோயில் கொண்டுள்ளான் என்க.
குறிப்புரை: தழல் தாமரையான் - தீயைப் போன்ற செந்தாமரையில் வாழும் பிரமன். வையம் தாயவன்-
உலகம் அளந்த திருமால். கழல் முடி- காலும் தலையும். காணிய- காண்பதற்கு. அழல் - தீப்பிழம்பு, அடியாருக்கு –
யான் எனது என்னும் செருக்கற்றுத் திருவடிஞானம் பெற்றார்க்கு. அருளாய்ப் பரக்கும் நிழல் - திருஞானமாய்ப்
பரவியுள்ள பேரொளி.
See there! It is Civan, our Lord of Thiru-nellikkaa. Brahma is seated in red lotus flower.
Vishnu measured the entire earth with one step of his legs. Both these Lords were unable to see
the origin or end of our Lord. He rose in the indescribable bright form. He has changed His image
from the fiery column into a divine shade for bestowing grace on His sincere devotees who have
shed their ego and gained divine wisdom. This Lord of shelter resides permanently in Thiru-nellikkaa.
1675. கனத்தார்திரைமாண்டழற்கான்றநஞ்சை
எனத்தாவெனவாங்கியதுண்டகண்டன்
மனத்தாற்சமண்சாக்கியர்மாண்பழிய
நினைத்தான்நெல்லிக்காவுள்நிலாயவனே. 10
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை,
"என் அத்தா!" என, வாங்கி அது உண்ட கண்டன்;
மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய
நினைத்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
kanattu Ar tirai mANTu azal kAnRa nanjcai,
"en attA!" ena, vAgki atu uNTa kaNTan;
manattAl camaNcAkkiyar mANpu aziya
ninaittAn--nellikkAvuL nilAyavanE.
பொருள்: பாற்கடலில் தோன்றிய நஞ்சைக் கொண்டுவந்த தேவர்கள், அத்தனே! காவாய் என
முறையிட்டு இறைஞ்சியபோது நஞ்சை உண்டு காத்தருளியவன் எம்பெருமான்! அவனே இப்போது
சமணரும் சாக்கியரும் மனம் திருந்தாமல் கொடுமை செய்வதைத் தடுக்க திருநெல்லிக்காவுள்
கோயில் கொண்டுள்ளான் என்க.
குறிப்புரை: கனத்து ஆர் திரை - மேகத்தால் உண்ணப்படுங் கடல், ஈண்டுப் பாற்கடல் என்க.
திரை - அலை. ஆகுபெயர். மாண்டு- பெருகி. அழல் - வெப்பம். கான்ற - வீசிய. உமிழ்ந்த. 'என் அத்தா’
என்று தேவர் வேண்ட. வாங்கி அது உண்ட கண்டன் என்க. மாண்பு - மாட்சி.
See there! It is Civan our Lord in Thiru-nellikkaa. The devaas and the asuraas were
churning the sea of milk to get amirtham and to consume it for longivity. But a dreadful
poison came out of the sea of milk. The devaas cried "Oh Lord! Our Father! Kindly save us
from death that spreads from the severe odour of the poison, thus they worshipped our Lord.
He then drank the poison and saved the entire humanity. However, His neck turned black
because of the poison He drank and thereafter He is called 'Neelakandan'. The Jains and
Buddhists carry on propaganda against our Lord. The so called greatness of these races
has to be destroyed. Therefore, our Lord ever stays in Thiru-nellikkaa.
1676. புகரேதுமிலாதபுத்தேளுலகில்
நிகராநெல்லிக்காவுள்நிலாயவனை
நகராநலஞானசம்பந்தன்சொன்ன
பகர்வாரவர்பாவமிலாதவரே. 11
புகர்ஏதும் இலாத புத்தேள் உலகின்
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை,
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன,
பகர்வார் அவர் பாவம் இலாதவரே.
pukar Etum ilAta puttEL ulakin
nikar Am nellikkAvuL nilAyavanai,
nakarA nala njAnacampantan conna,
pakarvAr avar pAvam ilAtavarE.
பொருள்: திருநெல்லிக்கா திருத்தலம் குற்றமற்ற திருத்தலம். தேவர் உலகிற்கு நிகரான சிறப்பு
பொருந்திய திருத்தலம். அத்திருத்தலத்தில் மேவியுள்ள எம்பெருமானை நன்நகராகிய சீர்காழி தலத்தில்
அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார், அவர் பாடிய பாடல்களை மனமுருகி
பாடவல்லார்கள் பாவம் இல்லாதவர்கள் - புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள் என்க.
குறிப்புரை: புகர் - குற்றம். புத்தேள் உலகு - தேவருலகம். நிகரா - ஒப்பாகாத. நகராநலம் - அழியாத நன்மை.
சிவம், சொன்ன- சொல்லிய. இப்பாமாலையை. பகர்வார் - பாடித் தொழுவார்.
See there! He is our Lord of Thiru-nellikkaa. This town Thiru-nellikkaa is a very
holy, flawless place having no equal even in the celestial world. Our Thiru-gnana- Sambandar
hails from the town called Seerkaazhi which has never had any destrution through all the ages.
This virtuous Thiru-gnana-Sambandar sang these Tamil verses on our Lord of Thiru-nellikkaa.
Those devotees who can recite these holy verses sung by him will be always considered
holy and sinless.
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAM-BALAM
19ஆம் பதிகம் முற்றிற்று
End of 19th Hymn
திருச்சிற்றம்பலம்
THIRU-CH-CHITRAMBALAM
பதிகத் தொடர் எண்: 156 பதிக எண்: 20
20. திருஅழுந்தூர் 20. THIRU-ALUNDOOR
பண் : இந்தளம் - வினாஉரை Pann: Indhalam - Vinaa Urai
திருத்தல வரலாறு
திருஅழுந்தூர் என்னும் இத்திருத்தலமானது சோழநாட்டுக் காவிரித் தென்கரைத் தலம் ஆகும்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து
பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள
தேரழுந்தூர் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி தெற்கே 3 கி.மீ. சென்றால் ஊரை அடையலாம். இது
தென்கரைத் தலங்களுள் முப்பத்தெட்டாவது தலம் ஆகும்.
அகத்திய முனிவர் கீழே இறைவரைப் பூசித்திருந்ததை அறியாது ஊர்த்துவ ரதன் என்னும்
அரசன் ஆகாயத்தில் செலுத்திய தேர் செல்லாது அழுந்தியதால் இப்பெயர் பெற்றது என்பர். இது இக்காலம்
தேரழுந்தூர் என்று வழங்கப்பெறுகின்ற பெயருக்கேற்றபடி இவ்வரலாறு தோற்றப்பெற்றது போலும்.
கம்பர் பிறந்த கம்பன் மேடு உள்ள இடம். இறைவரின் திருப்பெயர் வேதபுரீசுவரர். இறைவியாரின்
திருப்பெயர் சௌந்தரியாம்பிகை. வேததீர்த்தம். இது சந்நிதிக்குத் தென்பால் இருக்கின்றது.
வேதங்கள், தேவர்கள், திக்குப்பாலகர்கள், முனிவர்கள் இவர்கள் பூசித்துப் பேறு எய்தினர்.
இது திருஞானசம்பந்தருடைய ஒரே பதிகத்தைப் பெற்றது. இக்கோயில் 'மாமடம்' எனப்படும்
சிறப்பு இவ்வூர்த் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் அழுந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்
பெறுவதுண்டு. இவ்வழக்கம் திருஞானசம்பந்தப் பெருந்தகையார் காலத்தே வழக்கில் இருந்தது என்பது
அவர் தேவாரத்தால் அறியக் கிடக்கின்றது. இவ்வூர் மறையோர் இறைவனைத் தொழுது வழிபடுதலில் வல்லவர்.
பதிக வரலாறு
ஞானப்பாலுண்டவர் திருநல்லம் முதலிய திருப்பதிகளைப் பணிந்து திருவழுந்தூர் மாடக்கோயிலை
அடைந்தார். அம் மாமடம் மகிழ்ந்த வான்பொருளினை வணங்கிப் பாடிய பதிகம் இது.
திருச்சிற்றம்பலம்
1677. தொழுமாறுவல்லார்துயர்தீரநினைந்
தெழுமாறுவல்லாரிசைபாடவிம்மி
அழுமாறுவல்லாரழுந்தைமறையோர்
வழிபாடுசெய்மாமடமன்னினையே. 1
தொழும்ஆறு வல்லார், துயர் தீர நினைந்து
எழும்ஆறு வல்லார், இசை பாட விம்மி
அழும்ஆறு வல்லார், அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே.
tozum ARu vallAr, tuyar tIra ninaintu,
ezum ARu vallAr, icai pATa vimmi
azum ARu vallAr, azuntai maRaiyOr
vazipATu cey mA maTam manninaiyE.
பொருள்: எப்பொருளையும் விரும்பாமல் உன்னைத் தொழுபவர்கள்; தங்கள் துயர்தீர வேண்டி
உன்னைத் தொழுபவர்கள்; பக்தியினால் பாடிவிம்மி அரற்றும் அடியவர்கள் : ஆகம முறைப்படி வழிபடும்
மறையவர்கள் ஆகிய அனைவருக்கும் அருள, திருவழுந்தூரில் கோயில் கொள்ள திருவுள்ளம் கொண்டனையே.
குறிப்புரை: திருவழுந்தூரிலுள்ள வேதியர் (கட்டி) வழிபாடு செய்யும் பெரிய மடத்தில் (பா.3)
சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அவ்வேதியர்கள் சிவபிரானைத் தொழும் வகையிலும்,
பிறவித் துன்பம் போயொழிய நினைந்தெழும் வகையிலும், இசை பாடிட விம்மி அழும் வகையிலும்
வன்மையுற்ற பயிற்சியுடையவர்கள், அழுந்தை என்பது அழுந்தூர் என்பதன் மரூஉ. இது புலவர் செய்து
கொள்ளும் மரூஉச் சொற்களுள் ஒன்று. புலியூர் -புலிசை, மறைக்காடு- மறைசை, ஆவடுதுறை -
துறைசை முதலிய அறிக. தொட்டிக்கலை - கலைசை, திருவோத்தூர் (வேதபுரி, மறைநகர்) - மறைசை
என்பவை வழங்கி மருவாதன ஆயினும் புலவர் வழக்கில் உள.
Oh Civa! You are the Lord of Alundur. You have Your abode in this town,
which has a good number of big palaces. Here Vedic scholars performing daily religious
rites with fervour worship You. There are people in this town who pray without making
any request for their selfish desires. There is a second type of people who offer worship
to you bearing in their minds that their suffering should vanish soon. There is another
type of servitors who out of strong devotion sing Your praise and weep with pious emotions.
Oh Lord! You stay in Thiru-alundoor so as to bless all the above devotees.
1678. கடலேறியநஞ்சமுதுண்டவனே
உடலேயுயிரேயுணர்வேயெழிலே
அடலேறுடையாயழுந்தைமறையோர்
விடலேதொழமாமடமேவினையே. 2
கடல் ஏறிய நஞ்சு அமுது உண்டவனே!
உடலே! உயிரே! உணர்வே! எழிலே!
அடல் ஏறு உடையாய்! அழுந்தை மறையோர்
விடலே! தொழ, மா மடம் மேவினையே.
kaTal ERiya nanjcu amutu uNTavanE!
uTalE! uyirE! uNarvE! ezilE!
aTal ERu uTaiyAy! azuntai maRaiyOr
viTalE! toza, mA maTam mEvinaiyE.
பொருள்: கடலில் தோன்றிய விடத்தை அமுதாக உண்டருளியவனே! எனது உடலாகவும், உயிராகவும்,
உணர்வாகவும் உள்ளவனே! அழகானவனே! இடப வாகனத்தை உடையவனே! மறையோர்களால்
வணங்கப்படுபவனே! திருவழுந்தூரில் கோயில் கொண்டு அருள் வழங்க திருவுள்ளம் கொண்டனையே.
குறிப்புரை: பாற்கடல், உடலும், உயிரும், உணர்வும், எழிலும் ஆக இருப்பவன் சிவபிரான்,
அடல்- வலிமை. கொலையுமாம். 'கொல்லேறு'. விடலே - தலைவனே.
Oh Civa! You are my Lord of Thiru-alundoor. You drank the poison that came out of
the sea of milk. By drinking the poison, You saved all lives in the universe thereby
becoming one with all the body and the life of the whole universe. You are the
origin of their emotional content and their comeliness. You ride on Your bull to go
round the cosmos. You are the Almighty worshipped by the Vedic scholars of Thiru-alundoor,
a place with a raised temple for Your abode.
1679. கழிகாடலனேகனலாடலினாய்
பழிபாடிலனேயவையேபயிலும்
அழிபாடிலராயழுந்தைமறையோர்
வழிபாடுசெய்மாமடமன்னினையே. 3
கழிகாடலனே! கனல்ஆடலினாய்!
பழிபாடு இலனே! அவையே பயிலும்
அழிபாடு இலராய், அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மா மடம் மன்னினையே.
kazikATalanE! kanal ATalinAy!
pazipATu ilanE! avaiyE payilum
azipATu ilarAy, azuntai maRaiyOr
vazipATu cey mA maTam manninaiyE.
பொருள்: சுடுகாட்டில், நெருப்பைக் கையில் ஏந்தி ஆடிக்கொண்டிருப்பவனே !
குற்றமற்றவனே! நல்லதையே பயின்று அழிபாடு இன்றி வழிபாடு செய்யும் மறையவர்கள்
நிறைந்த அழுந்தூர்தன்னில் அமர்ந்தவனே!
குறிப்புரை: கழிகாடலனே- சுடுகாட்டில் (இரவில்) ஆடுபவனே, கரிகாடலினாய் (தி.2,ப21,பா8)
சுடலையாடி, கனல் ஆடலினாய் - தீயில் ஆடுதலை உடையவனே. பழிபாடு இலனே - பழிக்கப் படுதல்
இல்லாதவனே. அழிபாடு -அழிவுபடுதல்.
Oh Civa! You are my Lord of Thiru-alundoor. You visit the burial ground now and
then and dance there holding fire on your hand followed by Your ghosts. You are the most
blemishless that nobody could disgrace You. Just as You are blemishless, the Vedic scholars
of this place also are blameless and therefore without any defeat in their life. They protect
the virtues of one and all. They worship You, our Lord of Thiru-alundoor whose abode is
a raised temple here.
1680. வானேமலையேயெனமன்னுயிரே
தானேதொழுவார்தொழுதாள்மணியே
ஆனேசிவனேயழுந்தையவரெம்
மானேயெனமாமடமன்னினையே. 4
வானே! மலையே! என மன்உயிரே!
தானே தொழுவார் தொழு தாள் மணியே!
ஆனே! சிவனே! அழுந்தையவர், “எம்
மானே!" என, மா மடம் மன்னினையே.
vAnE! malaiyE! ena man uyirE!
tAnE tozuvAr tozu tAL maNiyE!
AnE! civanE! azuntaiyavar, "em
mAnE!" ena, mA maTam manninaiyE.
பொருள்: வானாக விளங்குபவனே! மலையாகத் திகழ்பவனே! உயிராக உறைபவனே!
தானே விரும்பித் தொழும் அடியார்களுக்குத் திருவடிப்பேற்றை அருள்பவனே! சிவன் ஆனவனே!
அழுந்தை நகரில் கோயில் கொண்டனையே.
குறிப்புரை: வான் - வானம். வானம் மலை என்று தொழமன்னிய உயிரே. வானே என மலையே
என மன்னும் உயிர். தொழுவார் தொழு - வணங்குவார் வணங்குதற்குரிய. தாள் - திருவடி. ஆனே - பசுபதி
என்னும் பொருட்டு. ஆன் - பசு. அழுந்தையவர்- திருவழுந்தூர் மறையோர். எம்மானே- எம்பெருமானே.
என - என்று கூவித்தொழ.
Oh Civa! You are my Lord of Thiru-alundoor. All the sentient souls of the universe
pray and declare "Oh You are the sky! You are the Kailash mountain; You are my life".
You are the Gem worshipped by devotees; these devotees are all worshipped by others.
You are our Lord Civan, Lord of Thiru-alundoor. You have Your abode in the raised
temple in Thiru-alundoor.
1681. அலையார்புனல்சூழழுந்தைப்பெருமான்
நிலையார்மறியுந்நிறைவெண்மழுவும்
இலையார்படையும்மிவையேந்துசெல்வ
நிலையாவதுகொள்கெனநீநினையே. 5
அலை ஆர் புனல் சூழ் அழுந்தைப் பெருமான்!
நிலை ஆர் மறியும், நிறை வெண்மழுவும்,
இலை ஆர் படையும்(ம்), இவை ஏந்து செல்வ!
நிலையா அது கொள்க என, நீ நினையே!
alai Ar punal cUz azuntaip perumAn!
nilai Ar maRiyum, niRai veNmazuvum,
ilai Ar paTaiyum(m), ivai Entu celva!
nilaiyA atu koLka ena, nI ninaiyE!
பொருள்: அலைகள் விளங்கும் நீர்நிலைகள் சூழ்ந்த அழுந்தை நகரில் எழுந்தருளிய
சிவனே ! நீ அலையும் மானை அசையாமல் உன் கையில் அடக்கியுள்ளாய். ஒளிமிக்க மழுவையும்
சூலப்படையையும் எப்பொழுதும் ஏந்தி உள்ளாய். இயக்கத்தையும் இயக்கமின்மையையும்
உன்னிடத்தில் பொருத்திக் காட்டும் உன்னை நானும் வணங்குகிறேன்.
குறிப்புரை: இலையார் படை- திரிசூலாயுதம். இவையே நிலையான செல்வம். ஏனைய
அழியும் என்றவாறு.
Oh my mind! Always think of Him, who is our Lord of Thiru-alundoor which is surrounded
by ponds of surging waves. He holds in one of His hands a deer. In another hand He holds a bright axe.
In the third hand, You hold a three-leaved trident. Oh my mind! think of these always for they are
real wealth. Oh Lord! I think of You as one who represents both action and inaction.
1682. நறவார்தலையின்நயவாவுலகில்
பிறவாதவனேபிணியில்லவனே
அறையார்கழலாயழுந்தைமறையோர்
மறவாதெழமாமடமன்னினையே. 6
நறவு ஆர் தலையின் நயவா! உலகில்
பிறவாதவனே! பிணி இல்லவனே!
அறை ஆர் கழலாய்! அழுந்தை மறையோர்
மறவாது எழ, மா மடம் மன்னினையே.
naRavu Ar talaiyin nayavA! ulakil
piRavAtavanE! piNi illavanE!
aRai Ar kazalAy! azuntai maRaiyOr
maRavAtu eza, mA maTam manninaiyE.
பொருள்: தலையில் தலைமாலை அணிந்தவனே! பிறவா யாக்கைப் பெரியோனே !
பிணிக்கப்படும் வினையால் பிணைக்கப்படாதவனே! பிணிக்கப்படும் வினை முதலானவற்றால் ஆட்படாத
நின்மலனே! ஒலிக்கின்ற கழலினை அணிந்தவனே! அழுந்தை நகரில் வாழும் மறையோர்களால்
மறவாது வணங்கப்படுபவனே! உன்னை நானும் மறவாமல் வணங்கிடுவேன்.
குறிப்புரை: நறவு - தேன், நயவா- நயமுடையவன். நயம் - மகிழ்ச்சி, இன்பம்,
நன்மை, நீதி, உலகியல் பிறவாதவன்- பிறவா யாக்கைப் பெரியோன். பிறப்பிலி இறப்பிலி (பாரதம்).
பிணி இல்லவன்- நோயில்லான். அறை -ஒலி.
Oh Civa! You are my Lord residing in Thiru-alundoor. You have beautified
Your hair with nectared flowers. You are birthless in all the worlds. You are beyond
and free from all effects of karma. Your holy feet wear the golden ringing anklets.
You have Your abode in Thiru-alundoor, where the Vedic scholars pray with clubbed hands
holding Your holy feet at that raised temple.
1683. தடுமாறுவல்லாய்தலைவாமதியம்
சுடுமாறுவல்லாய்சுடரார்சடையில்
அடுமாறுவல்லாயழுந்தைமறையோர்
நெடுமாநகர்கைதொழநின்றனையே. 7
தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம்
சுடும் ஆறு வல்லாய்! சுடர்ஆர் சடையில்
அடும்ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர்
நெடு மா நகர் கைதொழ, நின்றனையே.
taTumARu vallAy! talaivA! matiyam
cuTum ARu vallAy! cuTar Ar caTaiyil
aTum ARu vallAy! azuntai maRaiyOr
neTu mA nakar kaitoza, ninRanaiyE.
பொருள்: தடுமாற்றம் இல்லாச் சிவபெருமானே! உன்னை நாடிவரும் எங்களை முதலில்
நீ தடுமாறச் செய்வாய். உன் காலில் விழுந்த சந்திரனை நீ தலையில் வைத்துள்ளாய். ஓடிவரும்
கங்கையை நீ உன் தலையில் நிலைபெறச் செய்தாய். அழுந்தை நகரில் கோயில் கொண்டு
மறையவர்களுக்கு அருளும் நீ எனக்கும் அருள்வாயாக!
குறிப்புரை: தடுமாறுவல்லாய் - உயிர்கள் உன்னை உணர்வதில் தடுமாறுதலைச் செய்ய வல்லவனே.
உணர்ந்தார்க்கு உணர்வரியோன் என்றது இத்தடுமாற்றத்தை வலியுறுத்தும். தடுமாறுதல் - தட்டுமாறுதல்
என்பதன் மரூஉ வாகக் கொண்டு அஃது ஈண்டுத் திருக்கூத்தைக் குறித்து நின்றது எனலுமாம்.
ஆடவல்லாய் ஆடுமாறு வல்லானும் ஐயாறுடை ஐயனே எனவரும் தேவாரங்களால் உணர்க.
மதியம் சுடும் ஆறு -பிறையால் (காதல் கொண்ட) மகளிரைச் சுடும் வகை. சூடுமாறு என்பதன்
முதற்குறுக்கமுமாம். அடும் ஆறு - கங்கைப் பெருக்கு. நெடுமாநகர் - நீள்பெருங்கோயில்.
Oh Civa! You are my Lord residing in Thiru-alundoor. You have no confusion,
but You are capable of hiding Yourself and confusing the minds of those, who shedding
their ego, seek You.
You are our Master. You have beautified Your head with that bright and beautiful
crescent moon. You have stationed the gushing turbulent river Ganges on Your matted hair.
You have Your abode in Thiru-alundoor where the Vedic scholars pray holding Your holy
feet with their clubbed hands.You are seated suitably in the raised temple.
1684. பெரியாய்சிறியாய்பிறையாய்மிடறும்
கரியாய்கரிகாடுயர்வீடுடையாய்
அரியாயெளியாயழுந்தைமறையோர்