logo

|

Home >

saiva-siddhanta >

siva-boga-saram

சிவபோகசாரம்

CIVA BHOGA CARAM (THE ESSENCE OF BLISSFUL EXPERIENCE)

civa boga saram PDF format

 

ஆசிரியர்

தருமபுர ஆதின ஸ்தாபகர்

ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்


English Translation by

Thiru P.M. Somasundaram Pillai, Avl., M.A., L.T.,

 

உ

சிவபோகசாரம்

SIVA – BHOGA – SARAM

THE ESSENCE OF BLISSFUL EXPERIENCE

 
1. அடிகள் வணக்கம்


சித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன்
பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை
தருநாதன் நம்குருநா தன்.                                       1

1. SALUTATIONS TO THE GURU.

The Lord that giveth attainment
The Lord that liveth in the south Kamalai
The Lord that inspireth love
The Lord that is supreme
The Great Lord of Freedom, Jnanaprakas,
The Lord that revealeth truth
He is our master.                                                                                  1

அருவும் உருவும் அருவுருவும் அல்லா
ஒருவ னுயிர்க்குயிரா யோங்கித் – திருவார்
கமலைவரு ஞானப்ர காசனென வந்தே
அமலபதந் தந்தெனையாண் டான்.                                          2

The one that is neither the formless
Nor the form nor the formless form
Sprang as the life of all life and came
Hailing from holy Kamalai, Jnanaprakas,
He gave me His immaculate feet
And admitted me into His Grace.                                                          2

ஆரறிவார் நீதிவழி யாரறிவார் சித்திமுத்தி
ஆரறிவார் நற்றவங்கள் அன்பனைத்தும் – பாரெவர்க்கும்
கத்தன் கமலையில்வாழ் ஞானப்ர காசனெனும்
அத்தனென்போல் வந்திலனா னால்.                                    3

Who could know the path of justice
Who could know Siddhi and Mukthi
Who could know the good austerities
And fullness of love,
If the Lord of all men on Earth
The Father, Jnanaprakas of Kamalai
Had not come in a form like mine?                                                        3

அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாச னாகி
இருக்கின்றா னாரூரில் இன்று.                                          4

The Great One Himself whose crown and feet
Could not be seen by Aja and Hari
Hath come, hath been born. He increaseth Turiya
The estate of men, the highest serenest calm,
In Arur He hath his abode this day
As Jnanaprakas.                                                                                   4

கண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்
துண்டேன் சுகானந்தத் துள்ளிருந்தேன் – வண்டிமிர்காத்
தேனைப் பொழிகமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ர காசனையே நான்.                                             5

I saw Him. My bonds slipped off.
Nectar I scooped and drank.
I was in blissful ecstasy
I saw Jnanaprakas, Him of Kamalai,
Whose gardens pour honey to the murmuring bees
Him with golden feet like lotus red.                                                        5
 
உள்ளிருந்தே யென்று முணர்ந்துகினும் கண்டிலரென்(று)
உள்ளும் புறம்புமா வோமென்று – மெள்ள
நரருருவாய் ஆரூரில் வந்தான் நமையாண்
டருள்புரிஞா னப்பிரகா சன்.                                            6
 
We dwell within and ever prompt them
Still they have not found us out;
Now let us be within, without as well,
Thought Jnanaprakas.
And soft in human form He came
In Arur; into His Grace accepted us.                                                     6

இருளுதய நீங்கும் இரவியைப்போல் என்னுள்
அருளுதய நன்றா யருளி – மருளுதய
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்
சாற்றியஞா னப்பிரகா சன்.                                              7
        
Like the sun that driveth the enshrouding darkness
With the dawn of His Grace, well bestowed in me
The appearance of ignorance He drove
He of Arur, that uttered the Vedas
And Agamas great, Jnanaprakas.                                                          7

ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்
விழியா திருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற் கருள்.                                                 8
 
Merged in great unending joy
To remain unawakened to the world,
Thou Perfect One, Everlasting,
Thou with golden feet like lotus red,
Thou of Kamalai of the South
Lord of the Vedas, help Thou me,
Me as lowly as a dog.                                                                           8

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன்.                                             9

The treasure that is sought,
The knowledge imperfect,
The desire that clingeth,
All these are lies, - In Grace
He made known to us, Jnanaprakas
That dwelleth in the great city,
Kamalai, noble and fair,
The King hard to approach,
Adorned with the crescent moon.                                                          9

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய்.                                          10

Whatever be seen is lie, whatever be heard is lie,
Whatever be taken up as wholesome work is lie,
Whatever be enjoyed whithersoever is lie. But this,
That Sambandha cometh in sublimity,
Closeth as a flood of joy and hath His abode in me,
This alone is true.                                                                                  10


2. பெறுதற் கருமை

ஒருமையுடன் ஈச ன ருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே.                                                 11

2. THINGS HARD OF ACHIEVEMENT.

Hard, hard, hard it is to be lapped
In single-minded communion with the growing grace of God,
When conceit, cruelty, egotism, anger
Attachment and actions born of desire
When these are not eschewed.                                                  11
 
தன்பெருமை யெண்ணாமை தற்போத மேயிறத்தல்
மின்பெருமை யாஞ்சகத்தை வேண்டாமை – தன்பால்
உடலைத் தினம்பழித்தல் ஒங்குசிவத் தோன்றல்
நடலைப் பிறப்பொழியு நாள்.                                           12

Thinking not of one’s own glory, losing self-conceit,
Discarding the world whose glory is that of the lightning flash, so fleeting
Despising one’s own body, day in, day out,
Holding holy communion with the exalted Lord – 
The day when these do happen is the day
When painful birth doth cease.                                                  12

உரையிறந்தால் உன்னும் உணர்விறந்தால் மாயைத்
திரையிறந்தால் காண்கின்ற தேவை – வரைபெருக
வாசிப் பதுநாவால் வாழ்த்துவது நாடகமாய்ப்
பூசிப்ப தும்சுத்தப் பொய்.                                               13

It is wholly wide of the mark, feigning and farcical,
To read the sacred lore in ever-extending bounds,
To praise with tongue and worship God, -
The God who is only seen
When word hath ceased, and thought hath died
And the screen of Maya hath been torn asunder.                                   13

 
பரம  ரகசியத்தை பாழான வாயால்
இரவுபகல் எந்நேர மின்றிக் – குரல்நெரியக்
கூப்பிட்டுங் காணுமோ கோழைமட நெஞ்சேமால்
பூப்பிட்டுங் காணாப் பொருள்.                                          14

Can it be found the Secret so supreme
Even though thou callest out, night and day,
Unceasingly, till thy voice cracketh hoarse – 
O feeble foolish heart! – the Thing
That could not be found even though Vishnu did seek
Cleaving through the solid earth?                                                           15

ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்
பெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால்
வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச்
சித்த சல னம்மாந் தினம்.                                              15

Even though they master a million scriptures
Practice stern austerities and powers mysterious gain,
To the men that cannot be stradfast
Where the Guru’s grace hath placed them
There will be mental perturbations
Ever and aye.                                                                                       15

அன்புமிக உண்டாய் அதிலே விவேகமுண்டாய்த்
துன்ப வினையைத் துடைப்பதுண்டாய் – இன்பம்
தரும்பூ ரணத்துக்கே தாகமுண்டாய் ஒடி
வருங்கா ரணர்க்குண்மை வை.                                          16

Keep the truth apart for those
Whose love doth grow from more to more
Whose knowledge growth from out that love
Who wipe out Karma, the cause of pain,
Who go running thirsting after
The Perfection that yieldeth Joy.                                                            16

3. அறியும் பகுதி

உருவை அருவை ஒளியை வெளியை
இருளைச் சிவமென் றிராதே – மருளைப்
பிறிந்தறிவிற் கண்டதனைப் பின்னமற எங்குஞ்
செறிந்தபொருள் தானே சிவம்.                                          17

3. THINGS TO BE KNOWN.

Mistake thou not as Sivam anything
That hath form or that is formless
Or light or space or darkness.
That thing is Sivam Which filleth
Indistinguishably, through and through,
That which hath been realized
In Knowledge when purged of ignorance.                                              17

அகமாதி கண்ட அறிவாகி எங்குஞ்
சுகமாகி இன்ப சுகமாய்ச் – சுகாதீதத்
தானந்த வெள்ள மதுவாய்ச் சுகத்தைஅகன்
றானந்தம் ஆதியிலா தான்.                                             18

He who is the knowledge realized
Within, without
Who is all-pervading joy, delightful happiness
Who is the flood of ecstasy transcending joy,
Who is yet, apart from joy
He is the One
That neither end nor beginning hath.                                                       18

 
இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்
அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை.                                              19

Just as fire in wood, water in fire,
Taste in honey, fragrance in flower,
Ether in air and light in the eye
Are distinct and yet not two
Even so do the soul and the Lord
Stand related in liberation.                                                                     19

ஆறாறு தத்துவமும் ஆணவமும் நீங்கிஉயிர்
வேறாக நின்றஇடஞ் சொல்லின் – மாறா
இருளாய பாவனையிற் றெங்குமாய் நின்ற
பொருளேகாண் நீயே புணர்.                                            20

Wouldst thou know the place
Where the soul doth stand alone
With tatvas thirty six and Anava cast off,
Beyond the darkness of ceaseless thought?
Behold the Thing that standeth everywhere;
Unite thyself with It.                                                                              20
 
நனவாதி அந்தத்தில் நாடுசுகந் தன்னைக்
கனவாதி அந்தத்தில் கண்டு – நனவாதி
தோற்றிடும்போ தந்தச் சுகரூபங் கண்டவர்கள்
மாற்றிடுவர் என்றும் மலம்.                                             21

The joy they seek in wakeful states
They find in states of dream;
They see that form of joy again
When wakeful states come on;
Verily, such as they
Shall smite impurity.                                                                              21

தத்துவங்கள் எண்ணித் தலையடித்துக் கொள்ளாதே
தத்துவங்கள் ஏதென்னின் சாற்றக்கேள் – மெத்துஞ்
சுகாரம்ப மாஞ்சிவத்தில் தோயாத மாயா
விகாரங்கள் தத்துவமா மே.                                             22

Why knock thy head in counting the tatvas?
Harken what thy are,
They are but Maya’s mutations
That cannot touch, in whatever way
Sivam, the source of joy.                                                                       22
 
ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
நிறாக முத்திநிலை நிற்போர்க்குப் – பேறாகப்
பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே
ஒர்விருத்தப் பாதிபோ தும்.                                             23

As guide to those who stand for bliss
With tatvas six times six
Anava and actions hard
All to ashes turned,
If one doth search through all the books
That are spread on earth,
Just one half of a single verse
In Siddhiyar will do.                                                                              23

4. உபதேச விளக்கம்

பரவிமனம் போகாப் பரத்தடைய நாளும்
இரவுபகல் அற்ற இடத்தே – திரமாக
நில்என்றான் கண்டஎல்லாம் நேதிபண்ணி மும்மலமும்
கொல்என்றான் ஞான குரு.                                             24
 
12. THE LIGHT OF SPIRITUAL INSTRUCTION.

The Supreme that the mind cannot approach
If thou wouldst like to reach,
Stand firm always at the place
Wherein is neither night nor day;
Know that whatever thou seest is not thou,
Quell down the Malas Three – 
The teacher of wisdom said.                                                                  24

காயம் கரணமுதல் நான்கிற்குங் காரணந்தான்
ஆ யஇருள் மாயை அதுஎன்றால் – தூயபொருட்
போதனே ! செங்கமலப் பொற்பாத னே ! எனைநீ
ஏதேன்று சொல்லாய் இனி.                                              25
 
If dark Maya be the cause of the four,
Body, karana, world, enjoyment,
Thou that teachest the truth so pure,
Thou with golden feet like lotus red
Say, what am I?                                                                                    25
 
என்னை அறிவென்றான் என் அறிவில் ஆனந்தந்
தன்னைச் சிவமென்றான் சந்ததமும் – என்னைஉன்னிப்
பாரா மறைத்ததுவெ பாசமென்றான் இம்மூன்றும்
ஆராயந் தவர்முத்த ராம்.                                                       26
 
Intelligence, He called me.
The joy within my intelligence, He called Sivam.
What constantly hid Thee from me, He called Pasam.
Whoever have understood these three
They are the liberated.                                                                          26

எங்கும் இருக்கும் அறிவுநீ ஏகமாய்
அங்கங் குணர்த்தும் அறிவுநாம் – பொங்கு
மலமறைத்தல் மாயை மயக்கல் விகாரப்
பலமனைத்தும் கன்மமலம் பார்.                                        27
 
Thou art the intelligence that is everywhere
We are the One Intelligence instructing everywhere
Puffed-up mala hideth, Maya doth confound.
Lo ! it is karma that yieldeth all the diverse fruits.                                   27
 
செங்கமலப் பொற்பாதன் சீர்பாத வல்லவங்கள்
நங்கமலை வாழ்கிளியே ! நாடிக்கேள் – சங்கையிலாத்
தத்துவத்தைக் காட்டியதின் தத்துவத்தைக் காட்டிஅருள்
தத்துவத்தைக் காட்டியது தான்.                                         28

O, Parrot that hath the home in our Kamalai,
Lend thy willing ears to hear the powers
Of His noble golden feet like lotus red.
They showed the nature of countless tatvas
The Tatva of the soul therein
And the tatva of the loving grace.                                                          28
 
தேசு செறிகமலைச் செங்கமலப் பொற்பாதன்
பேசுதமிழ் ஞானப் பிரகாசன் – பாசவினை
வாட்டினான் மீட்டுநான் வாரா வகையருளைக்
காட்டினான் கூட்டினான் காண்.                                         29
 
He with golden feet like lotus red
Coming of Kamalai full of splendour
Jnanaprakas, whose Tamil is of great repute,
He made the Pasam of Karma wither
Showed His Grace and united me to it,
Lest I should be born again.                                                                  29
 
நானிங்காய் நீயங்காய் நாட்டமற வைத்ததற்பின்
நானெங்கே நீயெங்கே நாதனே ! – வானெங்கும்
ஒன்றாகி நின்ற உணர்வுநீ உன்னறிவில்
நன்றாகத் தோன்றுசுகம் நாம்.                                           30
 
“When the perception that I am here and Thou art there
Hath been brought to an end,
Where would I be and where wouldst Thou, O, Lord?
“Thou art the Intelligence standing united
Through all the Universe, and We the joy
Appearing clear in Thine Intelligence.”                                       30
 
அலைவற் றிருந்த அறிவுநீ ஆங்கே
நிலைபெற் றிருந்தசுக ஞேயம் – மலைவற்
றிருந்ததுகண் டாயே இருந்தபடி அத்தோ(டு)
இருந்துவிடெப் போதும் இனி.                                          31
 
Thou art the Intellignece standing unagitated.
Perceivest thou therein the joy
That endureth without agitation as well.
Remain true and fast in that realization
United with it for ever hereafter.                                                            31
 
அகத்தை இழந்தருளாய் அவ்விடத்தே தோன்றுஞ்
சுகத்தில் அழுந்திவிடச் சொன்னான் – மகத்தான
சிற்பரனா ரூர்தனில்வாழ் செங்கமலப் பொற்பாத
தற்பரஞா னப்பிரகா சன்.                                                       32
 
He bade me cast off the ego from me
Sink in the joy that riseth in grace
The Magnificent one transcending all knowledge,
He with golden feet like lotus red, residing in Arur
He that is highest, Jnanaprakas.                                                 32
 
கிட்டாத ஈசனுனைக் கிட்டி அருள்புரிந்த
நிட்டாநு பூதி நிலையிலே – முட்டா
திருவன்னி சேர்ந்துமாற் றேறியபொன் போல
வரும்இன்ப பூரணமா வை.                                             33
 
Stand unhindered in the state
Of realization of holy union
Which the Lord, Unapproachable
Drawing near, in grace vouchsafed to thee.
As gold put in fire enhanceth in quality
Even so shalt thou become
The perfection of joy that cometh to thee.                                              33
 
அநாதிசுக ரூபி அரனடிக்கீழ் என்றும்
அநாதி சுகரூபி ஆன்மா – அநாதி
இருந்தமலம் போக்கி இறைஅருளி னாலே
இருந்தபடி யேகண் டிரு.                                                        34
 
Eternal Bliss is the form of Hara
Also eternal Bliss in form is the soul
While beneath His feet, with eternal malam removed.
Remain thou perceiving that state
By the grace of God.                                                                            34
 
இற்றை வரைக்கர ணத்தோ டிணங்கினையே
இற்றைவரைச் சென்மம் எடுத்தனையே – இற்றைவரைத்
துன்பவெள்ளத் துள்ளே துளைந்தனையே யீதறநல்
இன்பவெள்ளத் துள்ளே இரு.                                           35
 
Till now thou hast been in union with karana
Till now thous hast been taking births
Till now thou hast been immersed in a flood of pain.
That this may end, abide in the goodly flood of joy.                                35
 
தேகாதி நானல்ல என்றறிந்தால் சித்தமயல்
போகாத தென்னையோ புண்ணியா – தேகாதி
தன்னளவே அம்மயக்கம் சத்தியமாய் எப்பொழுதும்
உன்னளவே இல்லை உணர்.                                            36
 
“Even when it hath been understood
That body and such things are not I
The confusion of the mind goeth not
Why, O, Virtuous one?”
“That confusion extendeth as far as body and such things only.
Know this, verily it never doth reach as far as thee.”                              36
 
ஆறாறு தத்துவநீ அன்றென் றறிந்தனையே
ஆறாறும் கண்டறிவன் ஆயினையே – மாறாமல்
உன்னறிவில் ஆனந்தத் தோங்கினையே ஒராமல்
நின்னறிவை விட்டதுவாய் நில்.                                         37
 
Surely hast thou learnt that six and thirty tatvas are not thou,
Surely hast thou seen six and thirty tatvas and grown wise,
Surely hast thou constantly increased in the joy
That springeth in thine intelligence.
Leave perceiving with thy knowledge and stand at one with that.            37
 
மாதா பிதாச்சுற்றம் என்று மயங்கினையே
நீதான் தனுவாகி நின்றனையே – ஈதெல்லாம்
பொய்யென் றறிந்தனையே பூரணா னந்தவெள்ளம்
மெய்யென் றறிந்தனையே மெய்.                                                38
 
Thou wert surely perplexed with thoughts of mother, father and kin,
Thou thyself surely stood with thy body identified.
All these were lies, thou hast understood
Thou hast understood that the flood of perfect joy is true.
Verily, true this is.                                                                                 38
 
மனையில்வரு போகத்தின் மாதர்மக்கள் பாச
வினையில் அழுந்திவிடாதே – உனைஇழந்து
காணாமற் கண்டானைக் காட்சி யறக்கலந்து
பூணாமல் எப்பொழுதும் பூண்.                                          39
 
Immerse not thyself in pleasures of the home
In bonds of spouse and children
Lose thyself and unite, losing perception
With Him who is not seen but revealeth Himself
Wear him, without thyself wearing Him, ever and aye.                39
 
சுத்தவத்தை நாடியிடுஞ் சுத்த இராப்பகலா
மெத்தவத்தை நாடி விடுவையேல் – சுத்தவத்தை
தானாய் இரண்டுந் தவிர்த்த சிவானந்த
வானாவை நீயே மதி.                                                  40
 
If thou seekest the suddha state with its suddha night and day,
Thou shalt realize that state and note this
Thou shalt become the Akas of Sivanand
Where both night and day are not.                                                         40
 
சுத்தநிலம் உன்றனக்குச் சொல்லக்கேள் தொல்லைவினைத்
தத்துவங்கள் ஆறாறுந் தாம்பெருக் – கத்திடுவர்
எல்லாம் இழந்த இடமே அதுவாக
நில்லாய் அதுவே நிலை.                                                        41
 
I shall tell you of the land of the pure –
Men prattle till their old timeless karma and contact with tatvas increase:-
It is the spot beyond all these.
Stand there: - That is the proper place.                                      41

நெருப்பென்றால் வாய்சுடுமோ நெய்பால்தேன் கட்டி
கருப்பென்றால் தித்தியா காணீ – விருப்பமுடன்
நீபிரமம் என்றக்கால் நீபிரமம் ஆயினையோ
நீபிரமம் சற்குருவால் நில்.                                              42
 
Would it burn thy mouth if thou said ‘fire’?
It wouldn’t taste sweet if thou said ‘ghee’,
Milk, honey, candy, jaggery,
Shalt thou become Brahman
If thou sayest thou art Brahman ever so eagerly?
Stand thou as Brahman by the good Guru made.                                   42
 
ஆர்க்குந் தெரியாத ஆனந்த இன்பவெள்ளம்
மேற்கொண்டு கொண்டு விடுகுதில்லை – யார்க்கும்
தெரியாப் பரப்பிரமஞ் சேர்த்தாய் உனக்குச்
சரியார் சிதம்பரநா தா.                                                 43
 
The flood of sweet joy that none doth know
Floweth over, carrieth away, and leaveth me not.
Thou hast united me to the supreme Brahman
That none doth know.
Who is Thy equal, Chidambaranatha?                                       43
 
 
5. அநுபூதி நிலை
 
உள்ளங் கரைய உடல்கரைய ஆனந்த
வெள்ளங் கரைபுரண்டு மேலாகக் – கள்ளமலம்
பொய்யாக என்னுட் புகுந்தவா றென்கொலோ
ஐயா தியாகவினோ தா.                                                        44
 
 
5. THE STATE OF REALISATION.
 
How didst Thou enter me, Sire, that sportest in bounties
So that the flood of joy doth overflow the banks and rise
Consuming my heart, consuming my body
And that the roguish impurity hath become a falsehood.             44
 
எதேது செய்தாலும் எதேது சொன்னாலும்
எதேது சிந்தித் திருந்தாலும் – மாதேவா
நின்செயலே என்று நினதருளா லேஉணரில்
என்செயலே காண்கிலே னே.                                           45
 
Whatever I do, whatever I say
Whatever I remain thinking, Mahadev !
If I but realize, by Thy Grace, all that action to be Thine.
I do not perceive mine.                                                             45
 
மாயைமலம் எங்கே மறைந்ததோ ! மாயைதனில்
ஆயசகம் எங்கே அழிந்ததோ ! – காயமதில்
தங்கும் புருடனெங்கோ ! சச்சிதா னந்தவெள்ள்ம்
எங்கு மிகக்கோத்த தே.                                                46
 
Where hath the maya-mala hidden
Where hath the maya-made world perished
Where is the purusha that resideth in the body?
Lo ! the flood of truth, intelligence and joy
Hath in profusion entered everywhere.                                       46
 
நானுஞ் சுகவடிவாய் நண்ணினேன் நின்னருளால்
வானுஞ் சுகவடிவாய் மன்னிற்றே – வானுஞ்
சுகரூப மன்றுமணந் தோற்றநிலம் போலுன்
அகரூப மட்டே அது.                                                   47
 
I have become the form of joy, by Thy grace
Akas also hath stood as form of joy
But even akas is not the form of joy.
Like the earth that hath lost its smell.
The Akas is merely an inner form of Thine.                                            47
 
ஈசன் அடியில் இருக்கையிலே எங்கெங்கும்
ஈசனடி தேடி இளைத்தேனே – பேசரிய
பொற்பதத்தன் செங்கமலப் பொற்பாதன் தன்னுடைய
நற்பதத்தைக் காணாமுன் நான்.                                         48
 
Abiding though I was, under the feet of the Lord,
Weary I had grown, seeking His very feet everywhere,
Before I saw His holy feet, His pretty, ineffable feet,
His golden feet like lotus red.                                                                48
 
நற்பதஞ்சேர் ஆரூரின் ஞானப்ர காசனெந்தை
தற்பரனோர் ஞானவாள் தந்தானே – சொற்பனத்தும்
காரார் மறலிஅயன் கண்ணனுக்கும் அஞ்சேனை
யாராலும் என்செய்ய லாம்.                                             49
 
Jnanaprakas in Arur of sacred standing,
My Father, the Highest, gave me a sword of wisdom
Who dare do anything to me who feareth not
Dark Death, Brahma or Vishnu even in my dreams?                              49
 
வெறும்பாழிற் பேரின்ப வெட்டவெளி தன்னில்
குறும்பாளர் காணாக் குடிலின் – உறும்பாசம்
ஒட்டிஎனை வைத்தனனே உற்றபிர பஞ்சமெலாம்
ஆட்டியஞா னப்பிரகா சன்.                                             50
 
In the perfect void, in the utter expanse of great joy,
In the hovel the mischievous thieves can’t find
He placed me having driven the pasam,
Jnanaprakas that moveth all universe.                                        50
 
என்றுஞ் சிவத்தோ டிணைபிரியா தேயறிவாய்
நின்றபடி தன்னை நிகழ்த்தினான் – மன்றில்
நடமாடும் ஆரூரன் ஞானப்ர காசன்
திடமாக என்னுள்ளத் தில்.                                              51
 
He showed it in my heart assuredly
The manner of my existence as intelligence
Ever united with Sivam without severance
He of Arur, that danceth in the Hall, Jnanaprakas.                                  51
 
நாதனார் தென்கமலை நாயனார் எவ்வுயிர்க்கும்
போதனார் செங்கமலப் பொற்பாதர் – பேதமற
ஒன்றிரண்டு தானறவே உண்மையிலே கூட்டிஎனை
இன்றறவே வைத்துவிட்டா ரே.                                         52
 
The Lord, the Chief of Kamalai of the South
That granteth wisdom to all living things
He with golden feet like lotus red
Hath, this day united me with truth
And placed me securely
With all differences gone,
With the thought, that we are one or two, also gone.                              52
 
நன்னெஞ்சே நீகேட்ட நன்மையெல்லாஞ் சொல்லுதற்குக்
கன்னெஞ்ச மாலயனுங் காணாதோன் – வன்னெஞ்சர்
இன்னகுறை உண்டென்னா ஈசன் எதிர்வந்தான்
என்னகுறை சொல்லாய் இனி.                                           53
 
The Lord whom the stone-hearted Vishnu and Brahma have not seen,
Of whom even the hard-hearted cannot say,
‘Lo, He is wanting in this’- He hath come before thee
To tell thee of all the good things thou hast desired.
My good heart, what else dost thou want?                                             53
 
இட்டசனம் எங்கே இதமகிதந் தானெங்கே
துட்டசனம் எங்கே தொழிலெங்கே – சிட்டருடன்
கூடி யிருந்ததெங்கே குன்றாச் சிவானந்தம்
நாடியது வாயிருந்த நாள்.                                              54
 
Where are the friends, where the things of pleasure and pain,
Where are the wicked, the actions where are they,
Where is the communion with the good,
The day thou hast desired Siva’s joy that diminisheth not
The day thou hast stood as that?                                                           54
 
வாக்குமனக் காயத்தான் வந்தபொருள் அத்தனையும்
வாக்குமனக் காயமுடன் மாயுமே – வாக்குமனக்
காயம் உடனிழந்து காண்ஞா திருஞான
ஞேயம் இழந்த நிலை.                                                  55
 
All the things that come with speech or mind or body
They shall cease to be with speech or mind or body.
Lose thy speech and mind and body. Perceive the state
Wherein perceiver, perception and the perceived are lost.                      55
 
புசிப்போம் சிவபோகம் பூரணாமாய் எங்கும்
வசிப்போம் உலகில் வசியோம் – முசிப்பின்றி
வாழ்வோஞ் சிவத்தையுணர் மாதவர்தம் பொன்னடிக்கீழ்த்
தாழ்வோம் எமக்கார் சரி.                                               56
 
We enjoy Sivabhoga, we live in perfection everywhere
We are not of the world. We live without end.
We bow down to the golden feet
Of the great tapasvins who have realized Sivam.
Who then are our equal?                                                                       56
 
 
6. உபாய நிலை
 
அறிவுநீ என்ன அறிந்தறிந்து மாயைச்
செறிவுநான் என்றென்று சேர்ந்தால் – அறிவு
தெரிந்திடுமோ இன்பசுகஞ் சேர்ந்திடுமோ நின்னைப்
பிரிந்திடுமோ சென்மப் பிணி.                                           57
 
 
6. THE MEANS TO REALISATION.
 
Thou knowest full well thou art intelligence.
Still if thou join with Maya saying that thou art
Filled with it, would wisdom be found,
Would blissful joy come to thee,
Would the disease of birth leave thee?                                       57
 
அரணங்கள் தாம்எரித்த அத்தரே என்னுள்
கரணங்கள் ஒட்டும்வகை காட்டீர் – கரணங்கள்
நீஅதுவாய் நில்லாமல் நின்னறிவைக் கண்டருளிற்
போயதுவாய் நின்றுவிடப் போம்.                                               58
 
‘Father, that hath burnt the fortresses,
Show me the way to drive my karanas away!’
‘If thou shalt not identify thyself with karanas
But perceive thou art intelligence,
Unite thyself with grace and abide as that
They shall depart from thee.’                                                                 58
 
தானல்லா தத்தனைய்ந் தானென் றுழலாமல்
தானெல்லா மாயதனுள் தாக்காமல் – தானெல்லாம்
ஆனோம் எனும்போதந் தாக்காமல் ஈசனிடத்(து)
ஆனோனே ஆயினவ னாம்.                                           59
 
He doth not confuse all that is not he to be himself,
He is not affected by Maya that hath become all,
He is not touched with the thought that he hath become all,
He hath his being in the Lord : such alone liveth really.                60
 
தேகநாம் என்றென்றூ செஉபுவீர் ஈதில்வரும்
போகநாம் என்று புலம்புவீர் – நோக
வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம்
பொருந்துவீர் எப்படிநீர் போய்.                                         60
 
Ye that say that your bodies  are yourselves.
Ye that lament that experience therein.
Ye that suffer pain because of with deeds,
How could Ye go and unite with changeless joy?                                   60
 
தன்னை இழந்திடத்தே தானே சுகவடிவாய்
இன்னபடி என்றறியா எங்கோனுட் – பின்னமற
நின்றநிலை தானுந் தெரியாதே நின்றவர்கட்(கு)
அன்றோ பிறப்பறுக்க லாம்.                                             61
 
Those who lose themselves and become the form of joy,
Who stand united, with not a mark to make them out,
With my Sovereign whose nature defieth definition,
Who perceive not the state wherein they do stand,
Such, such alone can sever the bonds of birth.                           61
 
உன்னாதே பற்றா துரையாதே யொன்றி அதில்
நின்னாமம் இல்லை நிகழாதே – பன்னாட்
பரையிறந்து நிற்கும் பயனணைந்தார் நெஞ்சில்
திரையிறந்து நிற்கும் சிவம்.                                             62
 
In whatever thou standest united
Without thinking, without grasping, without speaking aught
Thy name, thyself of name and form and act
Shall not be found.
In the hearts of those that have realized
The Benefit beyond the urging Para shakti
Sivam will stand with the screen riven through.                           62
 
அருளறிந்து தானாம் அறிவறிந்தே ஆங்குட்
பொருளறிந்து தானடங்கிப் போத – இருளகல
விம்மா திருந்து விகற்பமற ஒன்றாகிச்
சும்மா இருக்கை சுகம்.                                                  63
 
Having realized the grace,
Having realized the intelligence that is oneself,
Having realized the truth abiding therein,
Having subdued the self,
With the dark cognizance of self dispelled,
With conceit gone, with distinction lost,
Remaining unified,
To rest in peace is Joy supreme.                                                            63
 
செறியுந் தனுவாதி சேர்ந்தறிந்து நின்ற
அறிவை அறிவால் அறிந்தே – அறிவிழந்து
நின்றால் சுகானந்த நீடு நிலைவேறு
சென்றால் சுகங்கிடையா தே.                                            64
 
Having perceived by the Supreme Intelligence
That intelligence which stood perceiving,
Joined to gross body and other parts,
If one doth stand with finite perception lost;
The blissful joy shall stand with one forever;
But if one doth go other ways
Verily no joy shall one find.                                                                   64
 
தத்துவத்தை விட்டருளிற் றான்கலந்து தன்னிழப்பின்
மெத்துஞ் சுகத்தின் மிகஅழுந்திச் – சுத்தமாய்
ஒன்றாகி நின்ற உணர்வும் ஒழிந்தக்கால்
அன்றோ சிவபோக மாம்.                                              65
 
Leaving the tatvas, mingling in the grace,
Losing the self and sinking well in joy
That then doth spring in plenty,
Becoming purified, standing unified,
If one loseth perception of that state of union,
Then, then alone shall be Sivabhogam.                                       65
 
சுட்டறிவு கெட்ட சுகாதீத உண்மையிலே
விட்டகலா தென்றும் விரவுவோர் – இட்டமுடன்
யோக சமாதிகளும் உட்புறம்பாம் பூசைகளும்
ஆக நினையார் அவர்.                                                 66
 
Those that have lost perception of their senses,
And have inseparably interfused for ever
With the Truth beyond bliss
Never shall they wish for yogic trance,
Outward adoration or worship within.                                       66
 
நின்னறிவில் யானொளித்து நீயாகி நின்றதுபோல்
என்னறிவில் நீயொளித்தே யானாகி – எந்நாளும்
நிற்கவல்லை யாமாகில் நின்சனனம் போக்குதற்குக்
கற்கவல்ல தேதுமில்லை காண்.                                          67
 
Just as I hid Myself in thine intelligence
And stood as thou,        
If thou canst hide thyself in Mine intelligence
And stand as I, always,
Lo, there is nothing more to learn
To end thy round of births.                                                                    67
 
இன்பசுகத் துள்ளே இருக்கலாம் எப்போதும்
துன்பவினை உன்னைத் தொடராது – வன்பா
மருட்டேக மாயடங்கி மாயாமல் நெஞ்சே
அருட்டேக மாயடங்கு வாய்.                                           68
 
Thou canst dwell in blissful joy;
Never shall painful karma pursue thee, - only
Perish not in identity with the body, the seat of hardy confusion,
Calmly abide, my heart, embodied in grace.                                           68
 
தேக மறந்து திருவருளாய் நின்றுசிவ
போகம் விளையப் புணர்நெஞ்சே – நோக
வருந்தாமல் தீவினையின் வாடாமல் துன்பம்
அருந்தாமல் நீபிறவா மல்.                                              69
 
Forgetting the body, standing as holy grace,
Commune oh ! my heart, to grow Sivabhoga,
That thou may be without suffering pain,
Without withering in wicked deeds,
Without eating the fruits of pain, without taking birth again.                     69
 
பூதாதி பாசமன்றோ பூரணா னந்தமன்றோ
பேதமற நம்முட் பிரானன்றோ – வாதனைகள்
விட்டால் சுகமன்றோ என்றுணர்வில் வேண்டுவதுங்
கெட்டால் பிறப்பும் கெடும்.                                             70
 
Are not the elements and the like bonds?
Is not perfect joy the end?
Does not the Lord dwell in us without distinction?
Is not it joy if experience is left behind? – 
If even such hankering queries do not rise in our thoughts,
Then there shall be an end of birth.                                                        70
 
அழுந்தாதே பாசத் தனுதினமும் ஐயோ
விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் – செழும்பாகை
மீறித் தருமிரத வீட்டின்ப மாமலைமேல்
ஏறித் திரும்பலா மே.                                                   71
 
Sink not in bonds, alas, daily;
If thou fallest, thou willst have to rise.
Can one turn back having climbed up
The great mount of heavenly bliss,
Sweeter by for than rich syrup?                                                 71
 
என்றுஞ் சனனத் திடர்க்கடலி லேமூழ்கிப்
பொன்றுமன மேஉனக்கோர் புத்திகேள் – நன்று
தனிச்சங்கஞ் சேராமல் தற்பரனைச் சேரில்
இனிச்சங்கஞ் சேரா திரு.                                                        72
 
Listen, O mind, that perisheth sinking
In the troublous sea of birth forever;
If thou wouldst join the Supreme One
Without sojourning desolate in the body,
Mix thou not in worldly gatherings.                                                        72
 
 
7. பணியறுத்தல்
 
அவரவருக் குள்ளபடி ஈசனரு ளாலே
அவரவரைக் கொண்டியற்று மானால் – அவரவரை
நல்லார்பொல் லாரென்று நாடுவதென் நெஞ்சமே
எல்லாம் சிவன்செயலென் றெண்.                                                73
 
 
7. SEVERANCE OF ACTION.
 
 
When it is the Lord that doeth all the deeds
Through each as each deserves,
Why judgest than, my heart, the men as good or bad?
Consider all the deeds to be Siva’s own.                                               73
 
எங்கே நடத்துமோ எங்கே கிடத்துமோ
எங்கே இருத்துமோ என்றறியேன் – கங்கைமதி
சூடினான் தில்லையிலே தொந்தொமென நின்றுநடம்
ஆடினான் எங்கோன் அருள்.                                           74
 
Whither it will lead me, whither it will lay me down,
Whither it will place me, I do not know
The Grace of Him, my Sovereign
Who weareth the Ganga and the Moon
Who danceth in Tillai with rhythmic jingle.                                              74
 
போகம் புவனம் பொருந்துமிடம் எங்கெங்கும்
தேகம் கரணந் திரியுமே – யாகிலது
தன்னைநீ யென்று தவியாதே நெஞ்சமே
நின்னையே கண்டருளில் நில்.                                          75
 
Wherever worlds and enjoyment be
There will the body and karanas roam;
It being so, take them not to be thyself and suffer
O heart, perceive thyself and stand in grace.                                          75
 
எதேது செய்திடினும் எதேது பேசிடினும்
எதேது சிந்தித் திருந்திடினும் – மாதேவன்
காட்டிடுவ தானவருட் கண்ணைவிட்டு நீங்காது
நாட்டம் அதுவாய் நட.                                                 76
 
Whatever thou dost, whatever thou speakest,
Whatever thou thinkest about,
Never wander from the eye of grace
Which the great God doth show;
Fix that as thine aim and proceed.                                                         76
 
எடுத்தஉடற் கேய்ந்தகன்மம் எப்போதும் ஊட்டும்
விடுத்துவிட்டோம் என்பர் விழலர் – விடுத்த
ததுவன்றோ ஐந்துமலம் ஆறாறும் நீத்த
இதுவன்றோ யாம் துறவென் பேம்.                                     77
 
Karma proper to the body taken will always be fulfilled
“We have given up deeds,” declare the vain.
Giving up all actions is no renunciation.
We call this renunciation: freedom
From malas five and tatvas thirty-six.                                                     77
 
எவ்வுயிருங் காக்கவோர் ஈசனுண்டோ இல்லையோ
அவ்வுயிரில் நாமொருவர் அல்லவோ – வவ்விப்
பொருகுவதும் நெஞ்சே புழுங்குவதும் வேண்டாம்
வருகுவதும் தானே வரும்.                                             78
 
Is there or not a Lord to protect all beings?
Are we too not of them?
Why covet and wrangle and worry? O heart?
Whatever must come, of itself will come.                                               78
 
முப்பதுஞ்சென் றால்விடியும் முப்பதுசென் றாலிருளும்
அப்படியே ஏதும் அறிநெஞ்சே – எப்பொழுதும்
ஆங்காலம் எவ்வினையும் ஆகும் அதுதொலைந்து
போங்காலம் எவ்வினையும் போம்.                                     79


It will be dawn when thirty naligais have passed;
It will be dark when thirty more have passed.
It is so with everything, know thou, my heart.
In propitious times all deeds will come to fruit,
In unpropitious times all deeds will come to naught.                    79
 
ஆவலுற்றி டுஞ்சகலத் தாவதுவும் ஆங்கவரே
கேவலத்தின் மூழ்கிக் கிடப்பதுவும் – நாஅரற்றல்
இல்லாத சுத்தத் திருப்பதுவும் இம்மூன்றும்
இல்லான் செயலென் றிரு.                                              80

Our being in the sakala state wherein we feel desires,
Lying immersed in the kevala state,
And remaining in the suddha state,
Wherein the tongue knoweth no blabbering
All is the work of Him who is beyond these three states.                        80
 
பாசஞ் சடமுயிரோ தானாகப் பற்றறியா
ஈசன் இரண்டும் இணைத்தாட்டிப் – பூசலென்றுஞ்
செய்பவனே தானே திரும்பிஅருள் செய்யாமல்
உய்பவர்கள் உண்டோ உரை.                                           81


The bond is insentient and the soul
Knoweth not to cling of itself to the bond.
It is the Lord that linketh and moveth the two
And causeth strife always.
If He Himself bestow not His Grace again,
Say, who is there who can attain salvation?                                            81
 
முற்றின்ப மாமருளின் மூழ்குவதும் மோகமிகு
சிற்றின்ப மாமருளிற் சேர்குவதும் – உற்றிங்(கு)
அறிந்தானன் நெஞ்சே அகிலாண்ட மெங்குஞ்
செறிந்தான் செயலே தெளி.                                             82
 
My good heart, know this;
Plunging in the grace that is perfect joy
And mingling in the grace of worldly joy that stupefies
Are both the work of Him who knoweth all,
Who is immanent in all the universe.                                                       82
 
என்னிடத்தில் நின்செயலே இல்லையென்றால் யாதுறினும்
நின்னிடத்தில் யான்வேண்டல் நிச்சயமே – என்னிடத்தில்
இன்மை உயிர்க்குயிர்நீ யின்மை இருந்தியற்றின்
நன்மைதின்மைக் கேதுவோ நான்.                                              83
 
If in me there were no deed of Thine
Whatever befall, I must pray of thee, forsooth.
When it is not but that Thou dwellest in me
And workest as the life of my life
Am I the cause of acts, good or bad?                                                    83
 
நாம்பெரியர் என்னுமதை நாடா தடக்குமவர்
தாம்பெரியர் என்றுமறை சாற்றியிடும் – நாம்பெரியர்
என்பார் சிறியர் இவரலா லிவ்வுலகில்
துன்பார் சுமப்பார்கள் சொல்.                                            84
 
They are really great who seek not the name of greatness
Who restrain themselves in modesty, the Vedas proclaim
They are really small who boast that they are great;
Say, who in this world have to bear suffering
If these have not?                                                                                  84
 
கட்டமாங் காயம் கலையனைத்தும் கற்றாலும்
அட்டமா சித்தி அடைந்தாலும் – இட்டம்
பரம சுகமே பதியாத போது
திரம சுகமே தெளி.                                                     85
 
Though one doth learn all the sastras
And achieve the eight great siddhis
While still in the body, the seat of troubles,
If one’s desire be not set on the Supreme Bliss
One’s lot will certainly be unhappiness, understand.                               85
 
மனவாக்குக் காயமுயிர் மன்னியசைப் பானும்
அனமாதி போகமளிப் பானும் – நனவாதி
கூட்டிவிடு வானுமுத்தி கூட்டிடுவா னும்பிறப்பில்
ஆட்டிவிடு வானும் அரன்.                                             86
 
It is Hara who dwelleth in the mind
Speech and body and soul and moveth them
Who giveth enjoyment of food and like things
Who uniteth the soul in states like wakefulness
Who giveth deliverance to it,
Or maketh it travail in births.                                                                 86
 
முன்னைவினைக் கீடா முதல்வன் அருள்நமைக்கொண்
டென்னவினை செய்ய இயற்றுமோ – இன்னவினை
செய்வோம் தவிர்போம் திரிவோம் இருப்போம்இங்(கு)
உய்வோம் எனும்வகையே து.                                           87


hatever the deeds will be that the grace of the Supreme
Shall arrange to be done through us
In accordance with our karma in the past; who knows?
What scope have we to say,
“We’ll do this work, We’ll not do that
We’ll roam about or remain here
We will save ourselves” and so on?                                                       87
 
ஊட்டும் வினையிருந்தால் உன்னொணை உன்பதத்தைப்
பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும் – கேட்டுத்
திரியாதே வந்துதில்லைத் தெய்வமே என்றென்(று)
எரியாதே நெஞ்சே இரு.                                                        88


If there be the karma to be undergone, as sure as you are
It will bind your feet down to your suffering.
Neither wander about questioning
Nor burn in anguish repeating “God of Tillai, oh !”
Peace, be still, my heart.                                                                       88
 
என்னதன்று நிசெயலே என்றறிந்தால் யான்விரும்பி
என்னவென்று வாய்திறப்பேன் ஈசனே – இன்னம்இன்னம்
எப்படியோ நாயேனை ஈடேற்ற வேண்டும்உனக்(கு)
அப்படியே செய்தருளு வாய்.                                           89
 
When I come to know nothing is mine but all Thy work,
What desire shall I have or what speak forth, O Lord,
Howsoever thou plannest further and further
To redeem me, a dog, so may Thy Will be done.                                   89
 
வன்மைபுரி காய மரப்பாவை தன்னைஅரன்
கன்மமெனுஞ் சூத்திரத்தால் கட்டியே – நன்மைதின்மை
ஆட்டுவது நாட தறிவிலார் தஞ்செயலாய்
நாட்டுதல்போல் உண்டோ நகை.                                                                         

Related Content

சிவபோகசாரம் - Satgurunatha Desikar