தசகாரியம் அளவிலா அண்ட மாயை ஆனகன் மமாண வத்தோ(டு) அளவிலாச் சீவன் உற்ற அபக்குவம் அறிந்த சீவன் அளவிலாப் பிறவி நீத்தே அளவிலா அருளைச் சார்ந்தே அளவிலா அரனைப் பெற்றே அளவிலாச் சுகமா ரும்மே (௧) பூறுவ வினையே கன்மம் புகழான பஞ்ச சத்தி பேறுகொள் நவபே தங்கள் பிறவிலா அக்கரங்கள் மாறுகொள் ஆன்ம ஞானம் வகைவகை தத்து வங்கள் ஈறிலாத் தனுக்க ளாதி இவை இன்பத் துன்ப மூலம். (௨) பக்குவம் தன்ம மூலம் பரிபாகம் பாதம் ஒப்புச் சற்குணக் குறவன் சாற்றும் சத்தியச் சத்த மெல்லாம் இக்கிர மத்தினாலே இடரிலா(து) அறிந்த சீவன் அக்கணம் பிரவி நீத்தே அளவிலாச் சுகமா ரும்மே. (௩) அழிபொருளும் பொய்ப்பொருளும் அளவிலவே ஆதலினால் கழிபொருளாஉக் கைவிடுவாய் ஒருக்காலும் கருத்தே அழிபொருளில் அடங்காத ஐந்து பெரும் பொருள்களையே கழிபொருளாய்க் கருதாமல் எப்பொழுதுங் கருதாயே. (௪) மாயையால் அறிவதெல்லாம் மட்டிடாப் பாச ஞானம் ஓய்விலா மலங்க ளெல்லாம் ஒழித்தறி வோடி ருத்த லேயிருட் பசுஞானந்தான் இடர்ப்படும் உயிரி ருட்டே போயிட இரக்கம் வைத்த பொருள்சிவ ஞான மாமே. (௫) அபுத்தியால் புத்தி தன்னால் அகச்சரி யாதி நான்கால் சுபுத்தியோ(டு) அந்த நான்கால் தோன்றுமே சிவதன் மங்கள் உபத்திர மின்றிப் பத்தும் ஒன்றன்பின் ஒன்று தோன்றும் சுபத்தினான் மலங்க ளெல்லாம் துடைத்துயிர் தோன்று மன்றே. (௬) மெய்ப் பொருளிற் பொய்ப் பொருளின் மேவாத அழிபொருளில் விருப்ப மற்றால் அப்பொழுதே உயிருண்டாம் அதன்பின்னே குருவுண்டாம் ஆன பின்னே ஒப்பரிய நூலுண்டாம் உபதேசம் பலவுண்டாம் உபதேசத்துள் செப்பரிய தசகாரி யங்களென்னும் அஞ்சவத்தை தெளிவுண் டாமே. (௭) செயிரறு சீவன் உண்டேல் தெளிந்தமுப் பொருளுந் தேரும் உயிர்மலங் கன்மங் கர்த்தா உபாதானம் ஐந்தும் மெய்யே பெயருள முயற்கொம் பாதி பெயர்ப்பொருள் இல்லாப் பொய்யே துயருறு சரீர மாதி தோன்றிநின் றழிந்து போமே. (௮) ஒப்பிலா நிருவி காரம் ஒருவழி குணங்க லப்புச் செப்பிய சுதந்தி ரஞ்சிற் சீர்முதல் சமானஞ் சேரா தப்பிலா விபுவி நாசம் சமர்த்ததை அனாதி சத்தி அப்பிர மேயம் மற்றும் ஐந்திற்குஞ் சமான மாமே. (௯) ஆரிருள் ஆண வத்தோ(டு) அருங்கன்மம் ஆன மாயை ஆரிருள் கேவ லாதி ஆரொளி ஞானம் மூன்றே சாருயிர் சார்ப தார்த்தஞ் சார்ந்தமுத் தொழில்கள் எல்லாம் சாருயிர் தனக்குக் கேடு சாரவே பண்ணுஞ் சார்பே. (௧0) அறிபவன் அறிப்பானே அவர்களின் அறிவுத் தாமே அறிபொருட் பகுதி தாமே அறிதராப் பொருள் தாமே அறிபொருட் கருவி தாமே அறிபய னாதி தம்மை அறிவதே அறிவு செய்தி அதற்க்கும் இவ் வாற தாமே. (௧௧) தெருளிரவி தெருளுடைய சிறிதேனும் சிலகாணாச் சிறுமைக் கண்ணே குருடிர வோ(டு) இருள்விளக்கீர் கொளலின்மை கொடையின்மை கொடைமாற் றாமை மருளிவைபோற் பலவுளவே மருண்டாலும் இருண்டுருவை வலியக் காணும் இருளிலதுக் காகுமிதே இருளுளதுக்(கு) ஆகாதென் றியம்பும் நூலே. (௧௨) குருடிரா இருட்டுத் தம்மால் கோலினால் தீர்த்த மூன்றால் மருடரா விழ்ப்புத் தன்னால் மருடரும் இமைப்புத் தன்னால் இருடரா இரவி தன்னால் எழுந்ததம் ஒளியால் வேறால் தெருடராப் பருதி தன்னைத் தேடியுங் கண்கா ணாதே. (௧௩) - முற்றும் -
See Also:
1. சித்தாந்த சாத்திரம் - 14