logo

|

Home >

saiva-siddhanta >

pandara-sathiram-arulthiru-peruru-velappa-desigar-arulicheitha-panchakkara-patrodai

பண்டார சாத்திரம் அருள்திரு பேரூர் வேலப்ப தேசிகர் அருளிச் செய்த பஞ்சாக்கரப் பஃறொடை

பஞ்சாக்கரப் பஃறொடை


		கலிவெண்பா

பொன்னாட ரிந்திரனும் பூமகனு மாதவனும்
எந்நாடு மெந்நாளு மேநாடித் - துன்னாத
வேத முடிவின் விளங்கு மொளியுயிரின்
போத முடிவில் பொருந்துமொளி - நாதம்
முதலாக நின்று முகிழ்த்த வுலகின் 
விதமான வெல்லாம் விரித்தும் - திரமாக
ஊர்பே ருருவமிவை யொன்றுமில - னென்றாலும்
காரார் மலையின் கழைமுத்தம் - ஏராரு
நாக மணியகலி னன்குறடு சந்தமஞ்ஞைத்
தோகை முதல் கொண்டு சுவேதநதி - வேகமா				(௧0)

வந்து வணங்கு மதில்சூழ் பெருந்துறையே
அந்தநாள் வந்திருந்த ஆட்சியால் - பந்தமகல்
ஊரென்று நாடி யுலவாத வின்பமருள்
சீரொன்று வேலப்ப தேவனெனப் - பேர்கொண்
டறியாமை யானீங்கி யன்புருவ மாகப்
பிறியாதே நிற்கும் பெரிய - அறிவே
உருவா யமர்ந்திருந்த வுண்மை யுள்த்துள்
மருவா வகையான் மகிழ்ந்து - பொருள்வேட்கை
உள்ளத்தில் வைத்தே யுகந்தவர்போல் யான்வணங்கும்
கள்ளத்தை மெய்வணக்க மார்க்கண்டு - வள்ளலவன்			(௨0)

ஆதலினா லென்னை யருட்கடைக்கண் வைத்தருளித்
தீதகலும் உண்மைச் செயல்கேளென் - றோதுகின்ற
பெத்தமுத்தி யாகப் பிறங்குமுயிர்க் கஞ்செழுத்தும்
ஒத்த சிவாய நமவோதின் - சுத்தப்
பரிதியொளி கண்விளக்குப் பாங்கிலிருள் போல
மருவுசிவஞ் சத்தியுயிர் மாயை - விரவுமல
மாகு மிருளின் அலர்விழிபோ லாணவத்தின்
ஏகமாய் வல்வினையின் ஈட்டத்தால் - மோகமாய்
நின்று நிலைமகரம் நீடும் இருள்விளக்கில்
சென்ற விழிக்கொருவர் சேர்த்துதல்போல் - ஒன்ற			(௩0)

வருநகரம் வந்த வழிமருவி மூன்றும்
இருவினையின் போகவித மெல்லா - முருவுடனின்
றாருயிர்கள் தாமருந்த வைந்துமுத லீறிடையாய்ச் 
சேரும் வகைபலவாய்ச் சேர்ந்தவைகள் - ஓரும்
சகலநிலை யாமிவைகள் தாம்பெத்தம் நீயிவ்
வகலமுறை தேறாய் அகல்வாய் - புகலுமிதில்
வந்தபெரும் புண்ணியத்தால் வாய்த்தமல பாகத்தால்
தந்தசத்தி சேரவினை தாமொப்ப - இந்த
அவதரத்தி லண்ணல் அருளுருவாய்த் தோன்றிப்
பவமகற்று நன்னெறிபா ரித்தே - அவமிகுந்த				(௪0)

காயத்தை காட்டியதிற் காணாமை காட்டியபின்
மாயத்தை நீக்கும் வகையினால் - தீய
இருள்விளக்கா தித்தன் எழிற்கிரணத் துள்ளே
மருள் விளக்கா காக்கன்று மாளத் - தெருள்விழிபோல்
ஆமா நமக்க ளருள் சிவத்தான் மாறவுயிர்
தாமா முறை மூன்றூஞ் சாக்கிராமம் - நாமே
அறிவாமோ கண்ணருக்ஸ்க னாரொளியை விட்டுப்
பிறியா நிலைத்தேறப் பேசிச் - செறியருளைக்
கண்டடிமை யாகக் கருதி முறைமாறித்
தொண்டுபடுஞ் சொப்பனத்தைச் சொல்லியே - கொண்ட			(௫0)

ஓளியதனால் கண்ணுணறு முன்மைபோல் யானும்
அருள்யதனால் யாவு மறியத் - தெளிவாம்
அருள்கருவி யாமென் றகத்தையுற முன்னே
மருண் மறுவத் தானடுவே யாகும் - இருள்சூழுத்தி
என்றொளியின் செய்கையின்றி எங்கேனுங் கட்செயல்தான்
ஒன்றுமே தேறிநீ யுன்னென்ன - அன்றேதான்
பேரறிவா யாதாரம் பேச நிறைபொருளோ
டோறிவாய்த் தானொழித லொண்துரியம் - பரரென்
றொளிகுண மேயல்லா லொண்பொருளொன் றன்று
தெளிபரிதி சேர்விழிபோல் சேர்ந்தே - ஒளியென்ன			(௬0)

நில்லென்றா னானந்த நேயநிலை யாக்கியெனை
இல்லென்றே யின்புருவி லேகமாய்ச் - சொல்லத்
பிறியாத வைந்தவத்தைப் பேற்றின் - சரியாய்த்
தெச காயமேழாய்ச் சேரு முவமை
வசமாங் கரும்பின் வகைகேள் நிசமான
சத்தவத்தை யாங்கரும்பிற் றொல்கணுவைந் தாகுமுறை
முத்தி வருசாக் கிரமுதலாம் - பத்து
முழங்கா ரியமவற்றின் மூன்றடக்கிப் பங்கேழ்
வழங்க முறையை வகுக்கில் - ஒழுங்கான
தத்துவ ரூபமுடந் தற்காட்சி சித்தியுயிர்				(௭0)

ஒத்த வுருவ முயர்காட்சி - சுத்தி
இலாபமிவை யேழில் இலங்கினுயிர்க் காட்சி
நிலாவு சிவரூப நேராம் - குலாவுசுத்தி
தன்னில் தரிசனமுஞ் சார்யோக மாமிரண்டும்
மன்னு மிவையேழம் வருமுறையில் - துன்னுகின்ற
சாக்கிரத்தி னான்கு தகுஞ்சொப் பனம்மொன்று
நீக்குஞ் சுழத்தி நிறைதுரியத் - தக்கியிடும்
ஒன்றா மதிதத்தே உற்றிடுமொன் றாகுமெனத்
தந்தாளின் பூசை அனுட்டானம் - நன்றான
சுத்தநெறி யாமெனவே சொல்லிய மெய்கண்டான்			(௮0)

வைத்தநெறி நூலும் வகுத்துரைத்துப் - பத்தர்
குருலிங்க முண்மையெனக் கூறிநீ டின்பம்
தருமன்பை யென்சொல்வேன் தான்
பொன்னாடர் இந்திரனும் பூமகனும் மாதவனும்
எந்நாடும் எந்நாளு மேநாடித் - துன்னாத
வேத முடிவின் விளங்கும் ஒளிஉயிரின்
போத முடிவில் பொருந்துமொளி
முதலாக நின்று முகிழ்த்த உலகின்
விதமான எல்லாம் விரித்தும் - திரமாக
ஊர்பேர் உருவமிவை ஒன்றுமிலன் என்றாலும்				(௯0)

காரார் மலையின் கழைமுத்தம் - ஏராரும்
நாக மணி அகிலன் நன்குறடு சந்தமஞ்ஞைத்
தோகை முதல்கொண்டு சுவேதநதி - வேகமா
வந்து வணங்கும் மதில்சூழ் பெருந்துறையே
அந்தநள் வந்திருந்த ஆட்சியால் - பந்தமகல்
ஊரென்று நாடி உலவாத இன்பமருள்
சீரொன்று வேலப்ப தேவனெனப் - பேர்கொண்டு
அறியாமை யான் நீங்கி அன்புருவ மாகப்
பிறியாதே நிற்கும் பெரிய - அறிவே
உருவாய் அமர்ந்திருந்த உண்மை உளத்துள்				(௧00)

மருவா வகையான் மகிழ்ந்து - பொருள் வேட்கை
உள்ளத்தில் வைத்தே உகந்தவர்போல் யான்வணங்கும்
கள்ளத்தை மெய்வணக்க மாக்கண்டு - வள்ளலவன்
ஆதலினால் என்னை அருட்கடைக்கண் வைத்தருளித்
தீகதலும் உண்மைச் செயல்கேளென்று
பெத்தமுத்தி யாகப் பிறங்குமுயிர்க்கு அஞ்செழுத்தும்
ஒத்த சிவாய நமவோதின் - சுத்தப்
பரிதியொளி கண்விளக்குப் பாங்கிலிருள் போல
மருவுசிவஞ் சத்திஉயிர்யை விரவுமலம்
ஆகும் இருளின் அலர்விழிபோல் ஆணவத்தின்				(௧௧0)

ஏகமாய் வல்வினையின் ஈட்டத்தால் - மோகமாய்
நின்ற நிலைமகரம்
முன்னெழுத்துப்  பாநு முதல்வி எழுத்தொளியாம்
பின்னெழுத்துக் கண்ணாப் பிறங்குமே - தன்னைஉன்னை
மூடுமெழுத் துத்தீபம் மூலைஎழுத் தேஇருளாம்
நாடிஅறி வாய்மனனே நன்கு
சென்ற விழிக்கொருவர் சேர்த்துதல் போல் - ஒன்ற
வரும் நகரம் வந்த வழிமருவி மூன்றும் 
இருவினையின் போகவிதம் எல்லாம் - உருவுடனின்று
ஆருயிர்கள் தாமருந்த ஐந்துமுதல் ஈறிடையாய்ச்			(௧௨0)

சேரும் வகைபலவாய்ச் சேர்ந்தவைகள் - ஓரும்
சகலநிலை யாமிவைகள் தாம்பெத்தம்
வகலமுறை தேறாய் அகல்வாய் - புகலுமிதில்
வந்தபெரும் புண்ணியத்தால் வாய்த்தமல பாகத்தால்
தந்தசத்தி சேரவினை தாமொப்ப - இந்த
அவதரத்தில் அண்ணல் அருளுருவாய்த் தோன்றிப்
பவமகற்றும் நன்னெறிபா ரித்தே
ஆயத்தை கட்டிஅதில்  காணாமை காட்டியபின்
மயத்தை நீக்கும் வகையினால் - தீய
இருள்விளக்கு ஆதித்தன் எழிற்கிரணத் துள்ளே				(௧௩0)

மருள்விளக்கா காக்கன்று மாளத் - தெருள்விழிபோல்
ஆமாம் நமக்கள் அருள்சிவத்தான் மாற உயிர்
தாமாம் முறைமூன்றுஞ் சாக்கிரமாம்
அறிவாமோ கண் அருக்க னாரொளியை விட்டுப்
பிறியா நிலைதேறப் பேசிச் - செறியருளைக்
கண்ட்டிமை யாகக் கருதி முறைமாறித்
தொண்டுபடுஞ் சொப்பனத்தைச் சொல்லியே - கொண்ட
ஒளியதனால் கண்ணுணரும் உண்மைபோல் யானும்
அளியதனால் யாவும் அறியத் - தெளிவாம்
அருள்கருவி யாமென்று அகத்தையுற முன்னம்				(௧௪0)

அருள்மருவத் தானடுவே ஆகும் - இருள்சுழுத்தி
என்று ஒளியின் செய்கையின்றி எங்கேனும்கட்செயல்தான்
ஒன்றுமே தேறிநீ உன்னென்ன - அன்றேதான்
பேரறிவாய் ஆதாரம் பேச நிறைபொருளோடு
ஒரறிவாய்த் தானொழிதல் ஒண்துரியம் - பாரென்று
ஒளிகுண மேயல்லால் ஒன்பொருளொன் றன்று
தெளிபரிதி சேர்விழிபோல் சேர்ந்தே - ஒளியென்ன
நில்லென்றான் ஆனந்த நேயநிலை ஆக்கி எனை
இல்லென்றே இன்புருவில் ஏகமாய்ச் - செல்லத்
துரியாதீ தப்பெருமை சொல்லாமற் சொல்லிப்				(௧௫0)

சுத்தவத்தை யாம் கரும்பில் தொல்கணுஐந் தாகுமுறை
முத்தி வருசாக் கிரமுதலாம் - பத்து
முழங்கா ரியமவற்றின் மூன்றடக்கிப் பங்கேழ்
வழங்க முறையை வகுக்கில் - ஒழுங்காண
தத்துவ ரூப முடன் தற்காட்சி சுத்திஉயிர்
ஒத்த உருவம் உயிர்காத்சி - சுத்தி
இலாபமிவை ஏழில் இலங்குமுயிர்க் காட்சி
நிலாவு சிவரூபம் நேராம் - குலாவுசுத்தி
தன்னில் தரிசனமுஞ் சார்யோக மாமிரண்டும் மன்னும்
இவைஏழும் வரும் முறையில் - துன்னுகின்ற				(௧௬0)

சாக்கிரத்தில் நான்கு தகுஞ்சொப் பனமொன்று
நீக்கம் சுழுத்தி நிறைதுரிது ஆக்கியிடும்
ஒன்றாம் அதீதத்தே உற்றிடுமொன்றாகுமெனத்
தன்தளின் பூசை அனுட்டானம் - நன்றான
சுத்தநெறி யாமெனவே சொல்லியே மெய்கண்டான்
வைத்தநெறி நூலும் வகுத்துரைத்துப் - பத்தர்
குருலிங்கம் உண்மையெனக் கூறிநீ டின்பம்
தருமன்பை என்சொல்வேன் தான்.						(௧௬௮)

		பேரூர் அருள்திரு வேலப்ப தேசிகர் அருளிய
		- பஞ்சாக்கரப் பஃறொடை முற்றியது -

 


See Also:
1. சித்தாந்த சாத்திரம் - 14

 

Related Content

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த

Pandara sattiram arultiru ampalavaana tesikar arulis seyta -

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த

Pandara-sattiram arultiru-ampalavaana-desigar-arulisseyta-na

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த