உபதேசப் பஃறொடை தேனார் கமலம் திருந்தியபூ ஆயிரங்கொண்டு ஆனாத அன்பால் அருச்சிகும் - மேனாளில் ஆங்கதனில் தெய்வீக மாயொன்று அகன்றிடவே ஏங்கி உயிர்த்தங்கு இரங்கியே - ஒங்கியதோர் பத்தி விசேடப் பருவால் படிமீதில் சித்ர கமலவிழிச் சீருவமை - ஒத்தலுணர்ந்து அற்சனைக்குத் தாழ்வுபெறாது அம்மா இசைந்ததென நச்சம் விழியை நயந்திட்டு - மெச்சுவித்தன்று ஆழியது பெற்றோனும் ஆமுலகம் அத்தனையும் தாழ்வறவே செய்யுந் தலைமையது - தாழ்வுவரக் (௫) கண்டு கலங்கிப் கருணைபெறத் தன்னுதலில் பண்டுதியா னித்த்ப் படைப்பதனை - அண்டர்தொழப் பெற்றோனும் கீழ்மேல் பெரும்பன்றி அன்னமெனும் மற்றோ ருருவம் மருவியே - இற்றைவரை காணா துழல அவர் கண்ணகலாது உள்நின்றோன் தோணாது உலகோடு உயிரனைத்தும் - வீணாகாது எள்ளுள்குள் எண்ணெயென எங்கும் நிறைந்தகலாது எள்ளப் படாஇயல்பாம் இன்பநிலைக் - கொள்ளும் (௧0) தனுவாதி நான்கும் தருவநிலை யாகில் உனுமார் உயிர்கள் ஒருகால் - தனுமருள் தான் பேராமல் நின்று பிரியாத - ஆருயிர்க்காய் ஐந்தொழில்யாம் செய்துமென அன்றே நியமித்துத் தந்ததனால் ஐந்தொழிலும் தானகலா - எந்தையென நின்றோன்; ஒடுக்கம் நிகழ்த்தியிடுங் கேவலத்தின் ஒன்றும் அனுபவத்தீர்வு உன்னவே - குன்றாத தன்னருளோர் ஐந்தாய்த் தயங்குதல்கண்(டு) ஆங்கதனை மன்னுருவ மாக மருவியே பின்னமுறும் (௧௫) காரண‘க்கள் மேவிக் கருதரிய எவ்வுயிரும் எரகல(து) எய்தத் தனுவாதி - சீருடனே தோற்றுவித்துத் சத்திநி பாதமும்பார்த்(து) உற்றளவின் மோக முடனே அனுக்ரகித்துச் - சோகமுறும் துன்பப் பிறவி துடைத்துத் தொலையாப்பே ரின்பத்(து) இருத்தியிடும் எங்கோமான்; தன்னை ஒருகால் தடுமா றியும் நினையா என்னனைப் பிறப்பறுக்க எண்ணியே - துன்பவினை (௨0) ஏல்நாம சாதிக் குணக்கிரியை ஊனமறக் கொள்ள நினைந்து குலவுதமிழ்ச் சம்பந்தர் உள்ளம் கிழியருள ஓங்குந் தனது தலமாய் இலகுபுகழ் தாங்கும் - நலமிகவும் ஈட்டும் திருவா வடுதுறையில் எவ்வுலகும் நாட்டம் பெறவருளால் நல்லுருவம் - காட்டியே சொல்லும் அளவில் சுகப்பே(று) உதவ அருள் புல்லும் திருவெழுத்துப் பொற்புடன் - பல்லாரும் (௨௫) நண்போ(டு) உரைத்திடவே நல் நமச்சி வாயனெனப் பண்போ(டு) உயர்நாமம் பற்றியே - உண்பதனோ(டு) ஆனகுணம் நான்கும் அடைந்தகலா ஆருயிருள் தானுமொறுன்று போல் நடிக்கத் தாங்கியே - ஞானகுரு தேசிகன்நாம் என்று தெளிய இயற்றியிருள் பாசம் அறுக்கும் பரஞ்சோதி - நேசமுடன் ஈன்றமுட்டைக் கெய்தும் இரும்பருவம் கண்டுகடல் தோன்றிக் கமடங் குடக்குரம்பை - கீன்றுருவாய்த் தன்னை அடையத் தழைத்தருளால் கூவுதல் போல் என்னைப் பருவம் இசைவது பார்த்(து) - எந்நலமும் (௩0) ஒங்கும் பதியின் உயர்ந்ததவத் தோர்பணிய வீங்குகிரு பைமேரு வீற்றிருந்து - பாங்கறியா நீசனெனப் பாச நிகளமறத் தன்நாமம் பேச அருள் தூதுட் பெருக்கியே - ஒசைபெறும் காந்தச் செயலாய்க் கடுகும் பசாசமது சேர்ந்ததுபோல் என்றன் செயலனைத்தும் - ஓய்ந்துமிகந் ஒன்றும் படிகண்(டு) உளமகிழ்ந்தே; - ஒன்றாகா(து) எஞ்சும் பிறப்பும் இருண்மலமும் எண்ணரிய சஞ்சிதமும் நாட்டமெழத் தான்விழித்து - வஞ்சவினைக்(கு) ஈடான மாயை எழிலான நால்வகையும் கோடா மயக்குங் தனதுதிருக் கைத்தலத்தைத் தன்னைநினை என்சிரத்தில் தானமைத்துப் - பன்னரிய மிக்க உயிர்த்தொகையும் மேம்பட்ட எப்பொருளும் ஒக்க உடனாயுமல்லா(து) ஒங்குநிலை - எக்கண்ணும் நீங்காத தள்ளத் தலைப்பட்டுத் - தீங்ககலாப் பாவி செவிவழியாய்ப் பாதலனென் உட்புகுத மேவிஉப தேசம் விளம்பியே; - தேவான (௪0) தன்னையான் என்று தருக்கினல்லால் தீயவிருள் என்னை அணுகாது இராதென்று - முன்னிஎனைத் தானாகப் பாவித்துத் தானின்ற யானெனவே மானமுறக் கண்டருளால் மன்னியிட - ஞானமுதல் தீரவருள் யோகந் திண்ண மிற இயற்றிப் பாரம் அதுவாய்ப் பரந்துவரும் - சீரான ஆறத்து வாஅகல ஆன தொழிலருளான் மாறற் றிடவே மதித்தியற்றி - வேறற்ற தானேயான் ஆகித் தழைத்தென் னதுந்தானாய்த் தானே தலைநின்ற தம்பிரான்; -ஈனமறப் (௪௫) பெத்தத்தும் முத்தியினும் பேரா(து) இலக்கணங்கள் நித்தத் துவமாய் நிகழ்த்தமிகும் - உத்தமமாய் நாட்டுகின்ற முப்பொருட்கும் நாசமுறா தேஉணர்த்த வீட்டுகின்ற சற்கா ரியமென்று - தீட்டுமதால் ஞானா கமநூல் நயந்துனக்கு நாமனைத்தும் ஈனாய மில்லா(து) எடுத்துரைக்தும் - ஆனதனில் ஐயமுற்ற தெல்லாம் அகலவினா(வு) என்றருளி மெய்யனரு ளால் உருவம் மேவியே - செய்யௌல(கு) உண்டாக்கி ஆக்கி உடைத்திருளோ டே யடங்கக் கண்டிடுவ தென்றுபதி காணுங்கால் - கண்ட (௫0) அருவம் உருவம் அருவுருவம் மற்றும் மருவுங் கணங்குறியாம் மற்ற(து) - ஒருவியே நிற்பதுவாய் எவ்வுயிர்க்கும் நீங்கா அறிவாகிச் சொற்பொருளால் உன்னரிய சோதியாய் - அற்பகலும் இல்லா வெளியாய் இருட்பகையாய் இன்பமதாய்ப் புல்லறிவால் சுட்டாப் புனிதமதாய் - வல்லதொரு தானே எவர்க்குந் தனை உணர்த்துந் தத்துவமாய் ஞான முதற்சிவமாய் ஆக்கி அழிப்ப னென்றாய் இன்பனே முன்புருவாய் பேசினாய் - என்பதனால் (௫௫) எய்துந் துடக்கோ(டு0 இயலாம் விகாரமது எய்துமென நன்று வீனா என்று; - பைதலேய் காலமது ஒன்றாகிக் காரியமூன் றாயுமற்(கு) ஏகும் விகராம் இலாததுபோல் - சீலம் சிதையான் கனவுகண்டோன் செய்யநன வாக நினையான் கனவுதனை நீங்கக் - கனவதுவும் தான்துடக்கங் காகத் தகுதியது போலினியக் கோன்துடக்கத் தேயிருக்குங் கொள்கையென - ஊன்றி நின்ற ஐயம் ஒழிகென்(று) அகற்றியபின் ஐயனே செய்ய உயிர்த்தொகையாய் அல்லவாய் - மைஉயிர்கட்(கு) (௬0) ஏற்ற தனுவில் இசைவித்(து) இருங்கன்மம் தீற்றிப் பிறந்தும் இறந்துமவா - ஊற்றமுறும் ஆணையது காட்டி அகலான் அவையென்ன வீணகற்றும் ஞான விமலனே - வீணான உற்பவத்தின் நீங்கா(து) உறிலுனக்கும் உண்டெனும்தீச் சொற்பெறுமென் றோதநன்றே சொற்றவினா - விற்பனனே நிற்கின்ற வானகத்தில் நிற்கும் சராங்கள் நிற்பழிந்து பின்னுமுண்டாய் நீங்குகின்ற - கற்பனையில் தோயாத வான்போல் திணையான நல்லுணர்வும் தோயாத் உண்மை துணிகென்று - மாயமறக் (௬௫) காட்டியபின் நன்றே கருதும் உயிர் அறிவு நாட்டும் பிறவி நவையென்றும் - தீட்டுகின்ற வீடின்பம் என்றும் வினைப்பயத்தால் தீநிரயம் கூடுங்கொல் என்றும் குலவுமுயிர் - விடடைய உண்டென்றும் பேரா(து) உயிர்க்குயிராய் நிற்குமிறை உண்டென்றும் தோற்றா(து) உறபிணித்துக் - கொண்டுநிற்கும் தன்னௌயுங் காட்டாத் தலைமைபெற நின்றனந்தம் தன்னுடைய சத்தியதாய்த் தானொன்றாய் - மன்னுகின்ற(து) ஆணவமாம் ஆங்கதனை ஆருயிர்க்கா யேஇரங்கிப் பேணி நடத்தல் திரோதமாம் - காணியா (௭0) ஆணிகொண்டு நிற்குமலம் அற்பமகற் றாதுதொழில் பூண உறல் மாயை பொசிப்பதற்குக் - காணுலுற நன்றுதீ(து) என்றவினை நாட்டுகின்ற நான்கானும் ஒன்றி வரும் அவத்தை ஓர்மூன்றாம் - இன்றதனை ஓதியிடின் கேவலமொன்(று) உற்ற சகலமொன்று சோதிவிடு கின்றசுத்தம் ஒன்றென்ன - நாதனே என்னைப் பிறியா(து) இருள் இருக்க என்னறிவாய் உன்னைப் பிறிவறநீ ஓதுதலால் - அன்னதிஉனக்(கு) உண்டாம் எனநன்(று) உயர்ந்த வினாநீயும் கண்டோ தினைஎன்று கண்ணருளால் - கண்டறியும் காட்சியற்ற நாட்டம் கதிரோன் அகத்துழலக் காட்சி ஒழித்த கரும்படலக் - கோட்பாடு செங்கதிரோற்(கு) இல்லா(து) இருள்விழியிற் சென்றதுபோல் அங்கரனுக்(கு) இன்றி உயிர்க்காகும் - இங்கறியென்று ஓதிய பின்னர்; உடலிந் தியங்கரணம் மேதகுக்க லாதிஉயிர் என்பதனில் - தீதறவே பேதமற நின்றுகண்டு பற்றி அறிந்துழன்றிங்(கு) ஏதமுற எல்லாம் இயற்றியே - போதவரும் காணாது காண்கின்ற காட்சிவிட ஐந்தவத்தை நாணாமல் எய்தும் உயிரெனக்கங் - காணியே (௮0) நிற்கும் இவைஅறிவன்(று) என்பதெவன் நின்றன்ன நிற்கும் துயிலில் துரிசினிமை - வற்கமுறில் அஞ்சி விரும்பாத லானுமைந்தும் வேறறியப் பொஞ்சுதிலி னாலும் புகும்விடயம் - எஞ்சா(து) எழுந்து பற்றிச் சிந்தித்து நிச்சயித்துட் கொள்ள வழுங்குமத னாலுமிவை மன்னி - விளங்கவே உச்சாயத் தோடறிந்தங்(கு) இச்சித்(து) இதாகிதத்தில் பட்ச முடனுவர்ப்புப் பற்றியே - பிச்சதாய்த் தானழுந்த லானும் தயங்கும் உயிரியங்கல் ஆன துயிலின் அறிவற்ற - ஈனத்தி (௮௫) னானும் சடமனைத்தும் தன்னறிவால் ஆன்மாவே ஊனமென நீங்கும் உணர்கென்ன; - கோனே அறிவொன்(று) அறிவால் அறிவதொன்ற(து) என்னும் குறியென்னை என்னவினாக் கொண்ட - நெறிநன்று பானு மதிவிளக்குப் பண்புடைய கண்படிகம் ஆன அதன் சோதி அதுவன்றி - ஆனதுபோல் நின்ற உயிர்க்(கு) அன்றி நிகழ்த்தும் இருபொருட்கும் குன்றாத ஞானமதற்(கு) உள்ளதென - நன்றோதி என்னை தெருட்டியபின் நின்னருளால் கீழ்மேலாய் உன்னுஞ்சாக் ராதி உடற்கணுறும் - அன்னதனை ஆக்கும் பொருள்கள் சடமென்று அறிந்தருளால் (௯0) நீக்கம் பெற ஆஃது நீங்குமெனை - ஆட்கொண்ட ஐயா இரண்டவத்தை ஈங்ககன்ற தாங்கொன்று பொய்யோ எனவிளங்க உன்றன்னைச் - செய்வதுதான் தந்ததருள் என்னத் தலைவனே ஓதுமருள் வந்த(து) இல(து) இன்(று) இருளற்றும் - நந்தாது நிற்கின்ற யானே நிறைந்த பிரமமெனக் கற்கொண்ட நெஞ்சர் கரையவே - சொற்கள் அமையா இருள்கொண்(டு) அகன்றிடும்நீ எங்ஙன் எமையாளும் அப்பொருளோ(டு) என்ன; - இமையாதோர் (௯௫) கண்டறியாக் கண்ணே கருதரிய பொய்யனைத்தும் கண்டறிந்தேன் என் அறிவால் யான் அதனால் - பண்டைப் பொருளென்ன உன் அறிவு பொய் ஒன்றொன் றாக மருள் என்று யாமுணர்த்த வந்துஇன்று - இருள் அற்ற ஏதுஅத னாலும் இறைவர் அறி(வு) உனைப்போல் ஓதி உணரா அதனாலும் - பேதித்த தீப்பிணிக்கின்(று) அஞ்சும் திறத்தாலும் தீவனைமுன் வாய்ப்ப(து) அறியா வழக்காலும்- கோப்புடைய அப்பொருள்நீ அன்றுஇங்(கு) அருளால் உனக்குள்தாம் எப்பொருளுந் தானே அறிந்தியற்றும் - மெய்ப்பொருளைத் (௧00) தேறென்(று) உறுத்தித் திருந்த உனைக்கண்ட வாறெங்ஙக் கொண்டே உணர்ந்தேன் எனதறிவால் என்னை என இன்(று) இயம்புதலும் - மன்னவன் நீ காணா அருளதனால் கண்டதெங்ஙன் கண்டினும் வீணாங் கருவிகள்போல் மேவிடா நாணுகின்ற பொய்யறிவும் சுட்டறிவால் பொய்யகன்ற போதனுனைச் செய்ய அரி(து) என் அவையா செப்புகென - உய்யும் தவத்தாய் உனதறிவைத் தானறிந்த(து) என்றுஇங்(கு) எவ்ற்றாலும் இன்றி இயல்பாய் - உவப்புடனே கண்டது போலுமின்னும் கட்டுரைப்ப(து) ஒன்றுனங்கிங்(கு) உண்டது கேள். நன்றிங்(கு) உகந்திருவர் - மண்டுபெருங் காதலினால் கூடிக் கலந்தழிவ வான இன்பம் போதமதால் சுட்டிப் பொருளாக ஓத உரிமை யுடனே உகந்த பிரிவுடனே தானறிந்து கொண்டனைநீ தானருளாய் நின்றென்று ஞான முதலாய் நடிக்கின்ற - கோனருளிச் செய்துபின்னும் உன்றன் செயலறநீ தானுனையே ஐயமறக் காணும் உணர்வதனைச் - செய்தல்சிவ (௧௧0) ஞானமென; நண்ணும் நவைகண்(டு) அறியாத ஊனமுடை யேனை உகந்துருவம் - தானான என் அரசே என்னை எனதறிவாற் சுட்டாமல் மன்னருளால் யானும் மதியாமல் - நன்னிலைநீ தந்ததுவும் அற்புதமே தான் எனக்கு மெய்ஞ்ஞானம் தந்த(து) உணர்(வு) இங்ங(ன்) எனச் சாற்றியதில் - சிந்தைமிக ஐயுற்ற(து) என்றும் அறிவுக்(கு) அறிவென்ற மெய் அற்ற தென்னவினா மிக்கதே - பொய்யாம் உலகும் உயிர்ப்பொருளும் உற்றகலா(து) ஒன்றாய் இலகு பதியுமிக லாமல் - அலகில் (௧௧௫) பிறப்பிறப்பும் பேரா நிராயப் பிணியும் மறப்பும் நினைப்புமென மன்னும் - திறத்தனவாம் இத்தனையும் காட்டா இருளும் உனக்குணர்த்த மெய்த்து வினைஒப்பு மேவவே - துய்ப்பதனுக்(கு) ஆன அறிவருள அன்று திரோதமதாய்த் தானின்று நன்றாந் தனிச்சிரிதை - ஊனமற ஒங்குகிரி யாயோகம் முற்றியற்றி முற்றியபின் தூங்கும் அவர்விழித்த தோற்றம்போல் - நீங்காத தீய இருளும் திரண்டகரு மாளவே - துயகதிர்த் தோற்றம்போல் ஞானமும்நீ மாளவே - தூயகதிர்த் (௧௨0) தோற்றம்போல் ஞானமும்நீ தானெனத்தா னேஒளியாம் தேற்றம் இதனைத் தெளிகென்ன; - ஆற்றரிய நல்ல அருளால் நயந்துபிற விப்பகையைக் கொல்லான்றோ என்னுருவம் கொண்டதெனச் - சொல்லவிழப் போற்றும் பொழிதில் புரிந்தருளின் நீஅடங்கத் தோற்றும் பொருள்நீ துணிஎன்ன - ஆற்றாமல் அந்தோ எத்ற்குமுத லாம் பொருளுண் டோஎன்ன நாந்தாப் பொருளின்றி நல்லொளிதான் - வந்த(து) இலதுலகில் என்று வழக்குரைத்து நாட்டி நலமுடைய நாதனருள் தன்னால் - நிலவுகின்ற (௧௨௫) எல்லாம் அறிந்திறைவற்கு எத்தொழிலும் செய்கின்ற சொல்லார்ந்த ஞானமின்று சோர்வறவே - புல்ல இன்று பொற்றதனால் இங்குப் பிறன்குமுணர்(வு) ஏதென்னர் மற்றதனால் யாதும் மதித்தெவையும் - குற்றமறச் செய்திடுவ(து) இன்றென்க்குச் சோர்ந்ததொனச் சொப்புதலும் மெய்யறிவாய் உன்னை விளக்கியதும் - துய்ய நனாப்போலக் கண்டணைந்த நல்ல அருளும் கனாப்பொருள்போல் இன்றாய்க் கழியும் - வினாச்சொற்ற மிண்டறிவால் என்ன மிகுகுறைகள் உண்டாகில் அண்டர்பொரு மானே அருள் என்ன ; - உண்டாய (௧௩0) உன்னுணர்வு சிற்றுணர்விங்(கு) உற்றதுவோ பேருணர்வாம் அன்னதனால் குற்றமென ஐயனே - மன்னிவரும் சிற்றுணர்வு பேருணர்வைச் சேர்ந்தால் அதுவன்றி மற்றுளதோ என்ன மதியுளாய் - உற்றிடினும் ஒன்றாவ தில்லையென உண்மையனே சொற்றதனுக்(கு) ஒன்றாம் உவமை உரையென்ன - நன்றான சீரார் கதிரொளியில் சென்றடங்கும் கண்ணொளிதான் நேராம் ஒளியாய் இறந்ததோ - பரரென்ன நின்ற ஒளியாய் இறந்ததோ - பாரென்ன நின்ற ஒளியாய் நிரூபிக்கின் கண்ணொளிவே(று) இன்றெனவே நன்றென்(று) இரங்கியே - பொன்றாத (௧௩௫) செய்ய கதிருஞ் சிறந்த பொரு ளுங்கதிர்சேர் துய்யவிழிக் கோகதிர்க்கோ தோன்றிடுவ(து) - ஐயமறச் சொல் என்றிடலும். விழிக்கரம்தான் அற்றவரே புல்லும் பிறிவி பொடிப்பரென - வல்லோர்கள் சொற்ற பனுவல் துணி(வு)என் என இறுதி பற்றிய தன்று பரமாகி - மற்றுலகம் காணும் அறிவற்ற கருத்தென்(று) அறிஎனவே பூண உரைக்கப் புனிதனே - தாணுவைப்போல் கண்டெவையுஞ் செய்யாக் கருத்தறிய வாம் உவமை திண்டிறலோய் செப்பென்னச் செய்யவிழி - பண்டிலரை (௧௪0) நாட்டமதற் குண்டாக நாட்டுமோ - வாட்டமறச் செய்ய பசாசுபற்றின் மேம்பட்ட - கையால் தொழில்செய்யக் கூடிடுமோ தூயமறை அற்றதுன்பாய் அழிகின்றார் துன்பொருவற் காகப் - பழியுன்றிச் செய்வரோ ஈங்கிவைபோல் சேர அறிந்தியற்றா உய்யுமறி(வு) ஓ(வு)என் றுணர்த்தியிட ; - மெய்யனே நன்முத்தி ஈதோ நவிலென்ன உன்பதைப்பை வன்மத் துடன் வாங்கி வைத்தலிது - கன்மமற்ற சுத்தியிது வாகும் சுகப்பேறு முத்தியென வித்தகனே என்கேட(து) இன்றியே - சுத்த அதீதத்தும் உண்டாஞ் சுகமென்னில் தீய அதீதத்தும் உண்டாக வேண்டும் - விதியென்ன அன்றைந் தொழிலின் ஒடுக்க(ம்)இளைப் பாற்றலென நன்றங்(கு) அமலன் நவிற்றலறி - இன்றிங்குத் தூய்தாய்த் துயின்றோர் துயிலெழுந்த பின் உறக்கம் ஒதா விதமென்(று) உரைத்திடலும் - சுதன்றி உள்ளதுபோல் இன்பாம் இனிய சுகமுமுனைக் கொள்ளுதல்போல் உன்பதைப்புங் கூறரிய - தெள்ளறிவா (௧௫0) நீயுமற நின்றழுந்தும் நேர்மைகண்டு கொள்ளென்ன நேய முதலே நினையாதேன் - மாயமெலாம் பற்றிப் பறித்த பரனே பதைப்பற யான் உற்றடங்கல் யானறியா(து) ஓங்கியிடின் - முற்றும் உவமை உண்ர்த்(து) என்ன உயர்ந்த இன்பா னோனே சிவம்மறைந்த நாள்பதைத்த செய்கை - அவமதுதான் நீ அறியாய் யாமுணர்த்தக் கண்டதுபோல் ஈங்கிவையும் நீ அறியாய் தாமிவையும் யாமுணர்த்த - ஆயதெனச் செப்புதலும் என் உயிரே செய்யவிழி யேமணியே ஒப்புடனே யான் இகழா(து) ஓங்கிநின்ற - அற்புதத்துக்(கு) (௧௫௫) இன்றுவமை தாஎன்ன இன்னே வினாயதுநன்(று) என்று மகிழ்ந்துகிரு பைக்கடல்தான் - ஒன்றாக யானே பரமென்(று) அயரா(து) உரைத்தநிலை தானே உவமையெனத் தந்ததற்பின் - ஞானக் கடலமுதே யானழியாது என்னை இழந்த திடமருள வந்த அருள் தீரா - உடல்விருத்தி ஆர்ந்திடுவ(து) எங்ஙனெனத் தானலகை ஆனவர்தாம் சோர்ந்துண்டல் போலுடற்காம் துப்புமெனப் போந்துனையான் நீங்கா உவமைதந்த நித்தியஞா னக்கதிரே தூங்கா ஒளியே துரிசற்றிங்(கு) - ஒங்குமிகும் (௧௬0) பூகரும்பின் உள்ளிருந்து போதுவரக் கண்டினிமை யாங்கனியே என்ன ; அருளாளன் - பாங்குடனே நீயாகி நிற்கின்ற நின்மலபோ தன்நேய மேயாம் எனஎன் இறைவனே - நேயமுற ஆம்பரம முத்தி அறியும் உருவழிந்து போம்பொழுதில் தானே புகுமென்றும் - தீம்பாம் இருள்சற்(று) அகலாத தால்சீவன் முத்தி மருவியதிங் கென்ன மதித்தும் - வருமிதனில் ஐயப்பா டெய்தல் அகல அருள் என்ன மையுற்ற கண்டம் மறைந்துளோன் - உய்யமுன்னோர் (௧௬௫) சொற்ற சிவாகமத்தில் சோர்வறநே யத்தழுந்த பற்ற உரைத்ததுவும் பற்றுரைக்குச் சுத்திசெயல் ஆயிடுமோ எல்லிருளாய்த் தோன்றுமிருங் கூகைதனக்(கு) - எல்லென்று காட்டியிடல் ஆயிடுமோ காட்ட அரிதாமதுபோல் தீட்டு(ம்)அருள் அற்றவர்க்குத் தேற்றரிதாம் - ஆட்டமிகச் சீவிக்கும் போதம் அருளால் செயலறவே ஆவிக்குச் சுத்தி என அறிந்து - நாவதனால் சீவகந்தீ ராஅதனால் சேர்ந்ததுயிர் முத்தியெனும் பாவ வலியைமிகப் பார்த்திரங்கல் - ஆவதனால் நாளைப் புதுமணம் நாளரும்பை இன்றெமக்கிவ் வேளைக்(கு) இருங்கந்தம் மேவிடெனக் - கோளறவே நன்னீர் சொரிந்திடினும் நாடி வெகுண்டுகையால் பன்னிர் படிறு படுத்திடினும் - துன்னுமணம் காட்டும் பருவமுற்றுக் காதலுறுங் கந்தமதும் காட்ட மலராக் கணக்கேபோல் - நாட்டுமலம் விட்டகலோம் என்பவரை வேண்டிஅருள் நேயமுமை எட்டுணையும் நீங்கா இயல்பதனை - உட்டெளிவீர் (௧௭௫) என்றால் அவரால் இசைந்தறியல் ஆகாவாம் ஒன்றாலும் என்றே உரைத்ததற்பின் - நின்றோங்கும் நேயத்திற் சீவன் செயலறுதல் சீவன்முத்தி யாய் உற்(று) அறையுநன்னூதல் ஆங்கதுவே - மேயமுத்தி யாவைக்கும் மேலாத லாற்பரம முத்தியெனக் கூவப் படும் இரண்டாய்க் கூறியிடா - வாம் என்(று) அயர்வகற்றிப் பின்னர் அருளாற் பொருளாய் உயர்பவர்தம் நேர்மை உணரென்று - அயலான யாவும் அறிந்(து) அகன்ற தான அறிவோடுதமை ஆவலுடன்கண்(டு) அருல் உணர்ந்தே - தாமவ் (௧௮0) வருளில் அடங்க அகலாத நேயப் பொருளதனால் நிற்கின்ற பொற்பும் - மருளறியும் தம்மறிவால் சுட்டாமல் தாமும் தமதறிவும் அம்ம இழவா(து) இழந்துணர்வார் - செம்மை மனவாக்குக் காயத்தின் மன்னு(ம்) அறி(வு) எல்லாம் மனவாக்குக் காயத்தான் மன்னா(து) - அனுபவமாய் நிற்கின்ற நேய முதலே அறிவதென நற்கண் ணுதல்மறைத்தோன் நன்குரைப்ப(க்); - கற்கண்டின் மிக்கசுவை தானாய் விளங்கும் மொழிதந்தாய் தக்கமல மாயத் தருக்கிடும்நாள் - தொக்க (௧௮௫) அறுவு மலமோ அறிவதென நன்றாம் குறியொடு நீ கொண்டவினா என்றும் - அறிவான பொய்யறிவு முன்னறூவு பொற்போ(டு) இழந்திருப்ப மையறிவாய் நின்று வழங்கிடும்நாள் - பைய உறுவதெல்லாம் மாயமன்றி உண்டோ அதுபோல் பெறுவதெல்லாம் பேரருளின் பேறென்(று) - அறிவாளன் தேற்றியபின் அஞ்செழுத்தில் தேறும் பொருளதுமுன் ஊற்றமுறக் கண்டொன்(று) ஒருவியே - போற்றும் அருள்கண்(டு) அதுவழியாய் ஈதும் - தெருளின்(று) (௧௯0) அருள் ஆகமத்தின் அடை(வு) என்(று) அருள; அருளாளா அன்பர்க்(கு) அமுதே - இருளற்ற முத்தே முதுவயிரக் குன்றேஎம் மாணிக்க வித்தே வெளியில் விளைகின்ற - பத்திப் பவளமே பாதி மரகதமே முத்தர் கவளமே காதற் கனியே - தவளமா நீற்றொளியே நீத நிலையேபார் நீர்தீயோ(டு) ஆற்றரிய காற்றே அகல்விசும்பே - கூற்றம் மடியக் குறியில்வரும் வள்ளலே தாளைத் தடியப் புகுந்த தவமே - அடிமைக்(கு) (௧௯௫) அவாஅகலா(து) ஒங்கும் அரசே பருவம் தவாது மலரில் தயங்கும் - உரிய மதுமணம்போல் என்னை மருவும் பருவம் எதுவெண்றென் உள்ளத்(து) இருந்து - பதுமெனநீ தானே அறீந்ததுபோல் தானொழியாது எவ்விடத்தும் யானாக இன்று வெளிநின்ற - ஞானகுரு தேசிகனே உன்னைநினைந்(து) இன்னைமறந்(து) உள்ளுருகும் ஆசைமிகத் தந்தாண்(டு) அருள் (௧௯௯) அருளால் உனைத்துதிக்கும் அன்பரைப் போல் தீய இருளால் உயர்தேனும் இன்றிங்(கு) - அருளான சுத்தாபுன் சொல்லால் தொடுத்ததொடை நீபுனைந்தான் அத்தா நமச்சிவா யா. அருள்திரு தட்சணாமூர்த்தி தேசிகர் அருளிய - உபதேசப்பஃறொடை முற்றியது -
See Also:
1. சித்தாந்த சாத்திரம் - 14