logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

puranam-iraivan-amaiyottai-anithal

புராணம் - இறைவன் ஆமையோட்டை அணிதல்

(கூர்மஸம்ஹார மூர்த்தி)

    முன்பு  தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறும் பொருட்டுப் பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது மத்தாகிய மந்தரமலை கவிழ ,விஷ்ணு உடனே ஆமை வடிவம் கொண்டு, கடலின் அடியில் சென்று, மந்தரமலையைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார். பின்னர் கடைந்த போது அமிர்தம் வந்தது. அதனைக் கண்ட தேவர்களும் அசுரர்களும் 'இது எமக்கே''இது எமக்கே' என்று போரிட்டார்கள். ஆனால் ஆமையாகவிருந்த திருமாலோவெனில், 'மந்தர மலையை நானே தாங்கிக் காத்தேன்' எனப் பெரிதும் கர்வம் கொண்டு கடல்களில் சென்று அவைகளைக் கலக்கித் திரிந்தார். அப்போது சிவபெருமான் அங்கு வந்து, ஆமையுருவிலிருந்த திருமாலைக் கோபத்தோடு நோக்கி, தமது திருக்கைகளால் பற்றி விஷ்ணுவின் கர்வத்தையும், ஆற்றலையும் அடக்கினார். உடனே விஷ்ணு சிவபெருமானைப் பலவாறாகப் போற்றித் துதித்தார். பெருமான் "அசுரரை அழித்து, அமுதத்தை தேவர்கட்குக் கொடுப்பாயாக!" என்றருளி மறைந்தார். உடனே திருமால் மோகினி வடிவெடுத்தார்; அசுரரை அழித்தார்; அமுதத்தைத் தேவர்கட்குக் கொடுத்தார். திருமாலாகிய ஆமையின் ஓட்டைச் சிவபிரானார் எடுத்து அணிந்து கொண்டார்.
 

Related Content

கூர்மஸம்ஹார மூர்த்தி