logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

kandha-puranam-of-kachchiyappa-sivachariyar-veeravagu-kanthamathanam-sel-padalam

கந்தபுராணம் - மகேந்திர காண்டம் - வீரவாகு கந்தமாதனஞ்செல் படலம்

Kandapuranam of Kachchiyappa Shivachariyar

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

மகேந்திர காண்டம் - வீரவாகு கந்தமாதனஞ்செல் படலம்


செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

3. மகேந்திர காண்டம்

1. வீரவாகு கந்தமாதனஞ்செல் படலம்

 

விரிஞ்சன்மால் தேவ ராலும் வெலற்கரும் விறலோ னாகிப்

பெருஞ்சுரர் பதமும் வேத வொழுக்கமும் பிறவு மாற்றி

அருஞ்சிறை அவர்க்குச் செய்த அவுணர்கோன் ஆவி கொள்வான்

பரஞ்சுடர் உருவாய் வந்த குமரனைப் பணிதல் செய்வம்.          1

 

இந்திர னாதி யான அமரரும் எனை யோரும்

புந்தியில் உவகை பூப் புடைதனில் ஒழுகிப் போற்றச்

செந்திமா நகரந் தன்னில் சீயமெல் லணைமேல் வைகுங்

கந்தவேள் அருளின் நீரால் இனையன கருத லுற்றான்.            2

 

நான்முக னாதி யான நாகரும் முனிவ ரும்போல்

மேன்முறை அவுண ராகும் வியன்தொகை யவரும் எங்கோன்

கான்முளை நெறிய ரேனுங் கடியரை முடிவு செய்தல்

நூன்முறை இயற்கை யாகும் நுவலரும் அறனும் அ•தே.          3

 

இற்றிது துணிபா மேலும் எண்ணெழிற் சூரன் றன்னை

அற்றமில் சிறப்பின் வைகும் அவன்றமர் தம்மை எல்லாஞ்

செற்றிடல் முறைய தன்றால் தேவர்தஞ் சிறைவிட் டுய்ய

மற்றவன் தனக்கோர் ஒற்றை வல்லையில் விடுத்து மன்னோ.             4

 

தூண்டுநம் மொற்றன் மாற்றஞ் சூரனாம் அவுணன் கேளா

ஈண்டிடு சிறையின் நீக்கி அமரரை விடுப்பன் என்னின்

மாண்டிட லின்றி இன்னும் வாழிய மறுத்து ளானேல்

ஆண்டுசென் றடுதும் ஈதே அறமென அகத்துட் கொண்டான்.       5

 

வடித்தசெங் கதிர்வேல் அண்ணல் மாலயன் மகவா னாதி

அடுத்தபண் ணவரை நோக்கி அவுணர்தங் கிளையை யெல்லாம்

முடித்திடப் பெயர்தும் நாளை முன்னமோர் தூதன் றன்னை

விடுத்தனம் உணர்தல் வேண்டும் வெய்யசூர் கருத்தை என்றான்.   6

 

கடலுடைக் கடுவை உண்டோன் காதலன் இனைய செப்ப

மடலுடைப் பதுமப் போதில் வைகினோன் மாயன் கேளா

அடலுடைப் பெரும்போர் எந்தை ஆற்றுமுன் சூரன் முன்னோர்

மிடலுடைத் தூதன் றன்னை விடுத்தலே அறத்தா றென்றார்.               7

 

என்றலுங் குமர மூர்த்தி இப்பெருந் திறலோர் தம்முள்

வென்றிகொள் சூரன் றன்பால் வீரமா மகேந்திர ரத்துச்

சென்றிட விடுத்தும் யாரைச் செப்புதி ரென்ன லோடு

நன்றென அதனை நாடி நான்முகன் நவிற லுற்றான்.                     8

 

மெல்லென உலவைக் கோனும் வீர மகேந்திர த்திற்

செல்லரி தெனக்கு மற்றே செய்பணி நெறியால் அன்றி

ஒல்லையில் அங்கண் ஏகி ஒன்னலர்க் கடந்து மீள

வல்லவன் இனைய வீர வாகுவே ஆகு மென்றான்.                       9

 

சதுர்முகன் இனைய வாற்றால் சண்முகன் உளத்துக் கேற்பக்

கதுமென உரைத்த லோடுங் கருணைசெய் தழகி தென்னா

மதுமலர்த் தொடையல் வீர வாகுவின் வதனம் நோக்கி

முதிர்தரும் உவகை தன்னால் இத்திறம் மொழிய லுற்றான்.               10

 

மயேந்திர மூதூ ரேகி வல்லைநீ அமலன் நல்குஞ்

சயேந்திர ஞாலத் தேரோன் தனையடுத் தொருநாற் றந்தக்

கயேந்திரன் மதலை வானோர் காப்பைவிட் டறத்தா றுன்னி

நயேந்திர வளத்தி னோடும் உறைகென நவிறி யன்றே.            11

 

அம்மொழி மறுத்து ளானேல் அவுணநின் கிளையை யெல்லாம்

இம்மென முடித்து நின்னை எ•கவேற் கிரையா நல்கத்

தெம்முனை கொண்டு நாளைச் செல்லுதும் யாமே யீது

மெய்ம்மைய தென்று கூறி மீள்கென வீரன் சொல்வான்.           12

 

வெந்திறல் அவுணர் ஈண்டும் வீரமா மகேந்தி ரத்திற்

சுந்தரத் திருவின் வைகுஞ் சூரபன் மாவின் முன்போய்

எந்தைநீ அருளிற் றெல்லாம் இசைத்தவ னுள்ளம் நாடி

வந்திடு கின்றேன் என்னா வணங்கியே தொழுது போனான்.         13

 

கூர்ந்திடு குலிசத் தண்ணல் குமரவேள் ஒற்றன் தன்பின்

பேர்ந்தனன் சென்று வீர பெருந்திறற் சூரன் மூதூர்

சார்ந்தனை சிறையில் வானோர் சயந்தனோ டிருந்தா ரங்கட்

சேர்ந்தனை தேற்றிப் பின்னுன் செயலினை முடித்தி யென்றான்.    14

 

அவ்வழி யமரர் கோமான் அனையன அறைத லோடுஞ்

செவ்விது நிற்றி யற்றே செய்வனென் றவனை நீங்கி

எவ்வமில் துணைவ ராகும் எண்மரும் இலக்கத் தோரும்

மெய்வருந் தொடர்பிற் செல்லக் கண்ணுறீஇ விடலை சொல்வான். 15

 

நீயிர்கள் யாருங் கேண்மின் நெடுந்திரைப் பரவை வாவித்

தீயதோர் மகேந்திரத்திற் சென்றுசூர் முன்போய் நந்தம்

நாயகன் பணித்த மாற்றம் நவிலுவன் மறுத்து ளானேல்

ஆயவன் மூதூர் முற்றும் அட்டபின் மீள்வன் அம்மா.                     16

 

என்றலும் வியந்து பின்னோர் யாவரும் இறைஞ்ச லோடும்

பொன்றிகழ் ஆகத் தூடு பொருந்துறப் புல்லிக் கொண்டு

வன்றிறற் பூதர் தம்முள் மன்னவ ரோடும் அங்கண் 

நின்றிட வருளி வல்லே நெடுங்கடல் வேலை போந்தான்.          17

 

அலங்கலந் திரைகொள் நேமி அகன்கரை மருங்கின் மேரு

விலங்கலின் உயர்ந்த கந்த மாதன வெற்புத் தன்னில்

பொலங்குவ டுச்சி மீது பொள்ளென இவர்த லுற்றான்

கலன்கலன் கலனென் றம்பொற் கழலமா¢ கழல்கள் ஆர்ப்ப.               18

 

புஞ்சமார் தமாலச் சூழல் பொதுளிய பொதும்பர் சுற்றி

மஞ்சுநின் றறாத கந்த மாதனப் பிறங்கல் உம்பர்

விஞ்சுநுண் பொடிதோய் மேனி மேலவன் இருவரும் பான்மை

அஞ்சன வரைமேல் வௌ¢ளி யடுக்கல்சென் றனைய தன்றே.             19

 

கடுங்கலி மான்தேர் வெய்யோன் கையுற நிவந்த செம்பொன்

நெடுங்கிரி மிசைபோய் வீரன் நிற்றலும் பொறையாற் றாது

நடுங்கிய துருமுற் றென்ன நனிபகிர் வுற்ற தங்கள் 

ஒடுங்கிய மாவும் புள்ளும் ஒல்லென இரிந்த வன்றே.                     20

 

உண்ணிறை புள்ளும் மாவும் ஒலிட ஒலிமேல் கொண்டு

துண்ணென அருவி தூங்கத் தோன்றிய குடுமிக் குன்றம்

அண்ணலைத் தரிக்கல் ஆற்றேன் அளியனேன் அந்தோ வென்னாக்

கண்ணிடை வாரி சிந்தக் கலுழுதல் போலு மாதோ.                      21

 

அடல்கெழு திண்டோள் வீரன் அடிகளின் பொறையாற் றாது

விடர்கெழு குடுமி வெற்பு வெருவலும் ஆண்டை வைகும்

படவர வுமிழ்ந்த செய்ய பருமணி சிதறும் பான்மை

உடல்கெழு குருதி துள்ளி உகுக்குமா றொப்ப தன்றே.             22

 

அறைகழல் அண்ணல் நிற்ப அவ்வரை அசைய அங்கண்

உறைதரு  மாக்கள் அஞ்சி ஒருவில வெருவி விண்மேல்

பறவைகள் போய துன்பம் பட்டுழிப் பெரியர் தாமுஞ்

சிறியரும் நட்டோர்க் காற்றுஞ் செயல்முறை கா கின்ற.           23

 

மழையுடைக் கடமால் யானை வல்லியம் மடங்கல் எண்கு

புழையுடைத் தடக்கை யாளி பொருப்பசை வுற்ற காலை 

முழையிடைத் தவறி வீழ்வ முதியகா லெறியப் பட்ட

தழையுடைப் பொதும்பர் பைங்காய் தலைத்தலை உதிர்க்கு மாபோல்.      24

 

நன்றிகொள் பரிதிப் புத்தேள் நகுசிர மாக என்றூழ்

துன்றிருஞ் சடில மாகச் சுரநதி தோயத் திங்கள்

ஒன்றொரு பாங்கர் செல்ல ஓங்கிரும் பிறங்கல் உச்சி

நின்றதோர் விசயத் தோளான் நெற்றியங் கண்ணன் போன்றான்.    25

 

வலமிகு மொய்ம்பின் மேலோன் மலர்க்கழல் உறைப்ப ஆற்றா 

தலமரு குவட்டின் நிற்றல் அன்றுதீ முனிவர் உய்த்த

கொலைகெழு முயல கன்மெய் குலைந்திடப் புறத்துப் பொற்றான்

நிலவணி சடையோன் ஊன்றி நின்றிடு நிலைமை நேரும்.         26

 

மாசிருள் செறியும் தெண்ணீர் மறிதிரை அளக்கர் வேலைப் 

பாசடைப் பொதும்பர் வெற்பிற் பண்ணவன் தூதன் நிற்றல்

காசியில் அரற்றத் தள்ளிக் களிறுடல் பதைப்பக் கம்மேல்

ஈசன்அன் றடிகள் ஊன்றி இருத்திய இயற்கை போலும்.            27

 

தாரகன் படைஞர் பல்லோர் சமரிடை இரிந்து போனார்

பாரிடை யுறாமே அந்தப் பருவரை முழைக்கண் உற்றார்

வீரமொய்ம் புடையோன் அங்கண் மேவலும் அவற்கண் டேங்கி

ஆருயி ருலந்தார் தீயோர்க் காவதோர் அரணம் உண்டோ.         28

 

அனையதோர் சிமையக் குன்றம் அசைதலும் அங்கண் உற்ற

வனைகழல் விஞ்சை வேந்தர் மங்கையர் ஊடல் மாற்றி

இனிதுமுன் கலந்தார் அஞ்சி இன்புறா திடைக்கண் நீத்து

வினைவிளை வுன்னி நொந்து விண்மிசை உயிர்த்துச் சென்றார்.   29

 

வரைமிசை நின்ற அண்ணல் வனைகழல் அவுணர் கோமான்

பொருவரு நகர்மேற் செல்லப் புந்திமேற் கொள்ளா எந்தை

திருவுரு வதனை உன்னிச் செங்கையால் தொழுது மாலும்

பிரமனும் வியந்து நோக்கப் பேருருக் கொண்டு நின்றான்.          30

 

பொன்பொலி அலங்கல் தோளான் பொருப்பின்மேற் பொருவி லாத

கொன்பெரு வடிவங் கொண்டு குலாய்நிமிர் கொள்கை செவ்வேள்

முன்பொரு ஞான்று மேரு முடியில்வந் தமரர்க் கெல்லாந்

தன்பெரு வடிவங் காட்டி நின்றதோர் தன்மை யாமால்.            31

 

ஆண்டகை நெடுந்தோள் வீரன் அண்டமேல் மவுலி தாக்க

நீண்டிடும் எல்லை அன்னான் நின்றிடு குன்ற ஞாலங்

கீண்டது பிலத்திற் சேறல் கேடில்சீர் முனிகை யூன்ற

மீண்டுபா தலத்திற் புக்க விந்தமே போலு மாதோ.                32

 

விண்ணவர் உய்த்த தேர்மேல் மேவலர் புரம்நீ றாக்கும்

பண்ணவன் ஒருதாள் ஊன்றப் பாதலம் புகுந்த வாபோல்

கண்ணகல் வரையும் வீரன் கழல்பட அழுந்திற் றம்மா

அண்ணலந் தாதை வன்மை அருள்புரி மகற்கு றாதோ.            33

 

கன்றிய வரிவிற் செங்கைக் காளைபொற் றாளும் அந்தண்

குன்றொடு பிலத்துட் செல்லக் குறிப்பொடு விழிக்கு றாமே

சென்றிட முடியுஞ் சேண்போய்த் திசைமுகத் தயனும் மாலும்

அன்றடி முடிகா ணாத அசலமும் போல நின்றான்.                       34

 

ஆளரி அன்னோன் தாளும் அடுக்கலும் அழுந்தும் பாரின்

நீளிரு முடிசேர் வானின் நிரந்தமாப் பறவை போதல்

சூளுடை இமையோர் புள்ளும் மாவுமாய்த் தோமில் வீரன்

தாளடு முடியும் நாடிச் சார்தருந் தகைமைத் தாமால்.             35

 

அந்தமில் வலியோன் நிற்ப ஆயிடைத் துஞ்சும் பாந்தள்

தந்தொகை வீழு றாது தழீஇமருங் காகக் கீழ்போய்

முந்துயர் கமடஞ் சேர்ந்து முழங்குதெண் டிரைக்கண் வைகும்

மந்தர மென்னக் கந்த மாதனந் தோன்றிற் றம்மா.                36

 

பதுமநேர் கண்ணன் வேதாப் பலவகை முனிவர் தேவர்

கதிபடர் உவணர் சித்தர் கந்தரு வத்தர் ஒண்கோள்

மதியுடுக் கதிர்கள் ஏனோர் வான்பதம் முற்றும் ஓங்கும்

அதிர்கழல் வீரன் பல்வே றாரமாய் ஔ¤ர நின்றான்.                      37

 

எண்டிசை முழும் நேமி எழுதிறத் தனவும் மற்றைத்

தெண்டிரைக் கடலும் பாருஞ் சேண்கிளர் ஆழி வெற்பும்

அண்டமும் உலகம் யாவும் அகன்விழி பரப்பி நோக்கிக்

கண்டனன் அமலன் வைப்புங் கைதொழு தையன் நின்றான்.               38

 

ஆணமில் சிந்தை வீரன் அச்சுதன் முதலோர் வைகுஞ்

சேணகர் நோக்கிச் சூழுந் திசைநகர் நோக்கிப் பாரின்

மாணகர் நோக்கி வீர மகேந்திரம் நோக்கிச் சூரன்

நீணகர் இதற்கி யாவும் நிகரிலை போது மென்றான்.                      39

 

விண்ணுலாம் புரிசை வெஞ்சூர் வியனகா¢ அதனை நோக்கி

உண்ணிலா வெகுளி கொண்டான் ஒருகரம் அங்கண் ஓச்சி

நண்ணலார் யாருந் துஞ்ச நாமறப் பிசைகோ வென்னா

எண்ணினான் சிறையில் உற்றோர்க் கிரங்கிஅவ் வெண்ணம் மீட்டான்.40

 

விஞ்சையர் இயக்கர் சித்தர் வியன்சிறை உவணர் திங்கள்

செஞ்சுடர்ப் பரிதி நாள்கோள் தெய்வத கணத்தர் யாரும்

வஞ்சினத் தடுதோள் வீரன் மாலுரு நோக்க லாற்றா

தஞ்சினர் வெருவச் செங்கை அமைத்தனன் அழுங்க லென்றே      41

 

கோளியல் கருடர் தாம்வீழ் மாதரை விழைந்து கூடி

வாளுறு நகத்தின் ஊறு மதிக்கிலர் மயங்கித் துஞ்சி

வேளெனும் நெடியோன் ஊன்றும் வெற்பொடும் பிலத்திற் சென்று

கேளுடன் எழுந்து நாகர் கிளைதனக் கணங்கு செய்தார்.            42

 

ஆதியங் குமரன் தூதன் ஆற்றலால் ஊன்றி நிற்பப்

பூதலங் கீண்டு வெற்புப் பொள்ளென ஆழ்ந்து கீழபோய்ப்

பாதலங் குறுக அங்கட் பயிலராத் தொகையை நாகர்

காதலங் கேண்மை நாடிக் கலந்தனர் விருந்து செய்தார்.           43

 

தேன்றிகழ் தெரியல் வாகைச் சேவகன் கழல்கள் வெற்பின்

ஊன்றலும் அனைய பாங்கர் ஒருசிலர் அரக்கர் நோற்றார்

ஆன்றுயர் பதத்தை வே•கி ஆங்கவர் பிலத்துள் வீழ்ந்து

மான்றனர் இரங்க லுற்றார் வன்கணார்க் குய்வு முண்டோ.         44

 

புண்டர நீற்று வள்ளல் புரையுருத் தேவர் நோக்கி

மண்டலம் புகழும் வீர மகேந்திரஞ் சேறற் கன்றால்

கொண்டவிவ் வுருவம் நோக்கிற் குரைகழல் அவுணர் தம்மை

அண்டமும் இடித்துச் சாடும் நினைவுகொல் ஐயற் கென்றார்.              45

 

வீரமா மகேந்தி ரத்தில் அவுணரும் வீற்று வீற்றுச்

சாருறும் அவுணர் தாமுஞ் சயங்கெழு புயத்து வள்ளல்

பேருரு நோக்கி இங்ஙன் பிறந்தசொற் சழக்கே இன்னுந்

தேருவ துண்டு நந்தந் திறல்வரைப் புணர்ப்பி தென்றார்.           46

 

ஒலிகழல் வீர வாகு ஓங்கலை யூன்றி இந்த

நிலைமையின் நிற்ற லோடும் நெடியமால் சுதனும் விண்ணோர்

தலைவனும் பிறரும் அன்னோன் தம்பியர் அளப்பி லோருங்

கலிகெழு பூதர் யாருங் கண்டுவிம் மிதத்தின் ஆர்த்தார்.            47

 

தேவர்கள் முனிவா¢ ஏனைத் திறத்தவர் யாருந் தத்தம்

ஓவரும் பதத்தின் நின்றே ஒல்வதோர் உறுப்பின் மேவக்

காவரு கடிமென் பூத்தூய்க் கைதொழு தைய வெஞ்சூ£¢

மேவரு நகர்சென் றெங்கள் வியன்துயர் அகற்று கென்றார்.        48

 

ஆவதோ£¢ காலை எந்தை ஆறிரு தடந்தோள் வாழ்க

மூவிரு வதனம் வாழ்க முழுதருள் 1விழிகள் வாழ்க

தூவுடை நெடுவேல் வாழ்க தொல்படை பிறவும் வாழ்க

தேவர்கள் தேவன் சேயோன் திருவடி வாழ்க என்றான்.            49

 

( 1 விழிகள் - [பதினெட்டுக்] கண்கள்)

 

ஆண்டகை தொழுத பாணி அணிமுடிக் கொண்டிவ் வாற்றால்

ஈண்டுசீர்க் குமர வேளை ஏத்தலும் அன்பின் கண்ணீர்

வீண்டுதெண் கடலுள் ஏகி வௌ¢ளமிக் குவரை மாற்றப்

பூண்டகண் டிகையை மானத் தோன்றின பொடிப்பின் பொம்மல்.    50

 

மீதுகொள் பொடிப்பு மூடி மெய்ப்புலன் சிந்தை யொன்ற

ஓதுவ தவற என்பும் உருகிய செருக நாட்டங்

கோதில்பே ரருளின் மூழ்கிக் குதூகலித் திடுத லோடு

மூதுல கனைத்தும் ஆவி முழுவதும் மகிழ்ந்த வன்றே.                   51

 

அவ்வகை நிகழச் செவ்வேள் ஆரருள் அதனைப் பெற்று

மொய்வரை மீது நின்றோன் முழுதுல களந்து சேண்போம்

இவ்வுரு வோடு செல்லின் இறந்திடும் உலகம் ஈது

செவ்விதன் றென்னா வேண்டுந் திருவடி வமைந்தான் அன்றே.     52

 

கிரிமிசை நின்ற அண்ணல் கிளர்ந்துவான் எழுந்து சென்னிக்

குருமணி மகுடம் அண்ட கோளகை புடைப்ப வீரன் 

உருகெழு சீற்றச் சிம்புள் உருவுகொண் டேகிற் றென்ன

வரைபுரை மாட வீர மகேந்திரம் முன்னிப் போந்தான்.                    53

 

ஆகத் திருவிருத்தம் - 53

     - - -

 

 

2.  க ட ல் பா ய்  ப ட ல ம்

 

அழுங்கிய கழற்கால் வீரன் அவ்வழி அவனிக் கீழ்போய்

விழுங்கிரி நிலைமை நோக்கி மீண்டுநீ எழுதி யென்னா

வழங்கினன் வழங்கும் எல்லை வல்லையிற் கிளர்ந்து தோன்றி

முழங்கிருங் கடலின் மாடே முந்துபோல் நின்ற தன்றே.           1

 

வீரனங் கெழலும் அன்னோன் விண்படர் விசைப்பின் காலால்

பாருறு வரைகள் யாவும் படர்ந்தன பாங்க ராகச்

சாரதத் தலைவர் ஏனைத் தம்பியர் இலக்கத் தெண்மர்

ஆருமங் கவன்தன் பாலாய் அணிந்துடன் சேற லென்ன.           2

 

விரைந்துவான் வழிக்கொள் வீரன் விசைத்தெழு காலின் அண்டந்

திரிந்தன உயிர்கள் முற்றுந் தெருமரல் உற்ற தெண்ணீர்

சுரந்திடு கொண்டல் யாவுஞ் சுழன்றன வடவை உண்ண

இருந்திடும் ஊழிக் காலும் ஆற்றலா திரியல் போன.                      3

 

பெருமிடல் பூண்ட தோன்றல் பெயர்தலும் விசைப்பின் ஊதை

பரவின வெம்மை மாற்றிப் பரிதியைக் கனலைத் திங்கள்

வருணன தியற்கை யாக்கி வடவையின் முகத்துத் தோன்றித்

திரைகட லிருந்த ஊழித் தீயையும் அவித்துச் சென்ற.                    4

 

விரைசெறி நீபத் தாரோன் விரைந்துசெல் விசைககால் தள்ளத்

திரைகடல் சுழித்துள் வாங்கித் திறன்மகேந் திரத்திற் சேறல்

அரசியல் புரிவெஞ் சூரன் அனிகங்கள் அவன்மேற் சென்று

பொருமுரண் இன்றித் தம்மூர் புகுவன இரிவ போலாம்.           5

 

விடைத்தனி யாற்றல் சான்ற விடலைகால் வெற்பி னோடும்

படித்தலங் கீண்டு முன்னம் பாதலங் காட்டிற் றன்னான்

அடற்படு விசையின் காலும் அளியதோ வலிய தன்றோ

கடற்புவி கீண்டு நாகர் உலகினைக் காட்டிற் றன்றே.                      6

 

பாசிழை அலங்கல் தோளான் படர்தலும் விசையின் காலைக்

காய்சின உயிர்ப்புச் செந்தீக் கலந்துடன் தழீஇக்கொண் டேகி

மாசுறு சூரன் வைகும் வளநகர் சுற்றி யன்னோன்

தூசிய தென்ன முன்னங் கொளுவிய தூமஞ் சூழ.                 7

 

பூஞ்சிலம் பரற்றுந் தாளான் போதுமன் விரைவின் ஓதை

வேய்ஞ்சிலம் படுதோட் சூரன் வீரமா மகேந்திர ரத்தின்

நாஞ்சிலம் புரிசை பொன்செய் நளிர்வரை குளிர்பூங் கிள்ளை

தாஞ்சிலம் புற்ற சோலை அலைத்தன தரையில் தள்ளி.           8

 

உறைபுகு நெடிய வேலான் உயிர்ப்புறு கனன்முன் னோடிசி

செறுநனூர் கொளுவ அன்னான் சென்றிடு விரைவின் கால்போய்

எறிபுனற் கடலைத் தாக்க இடைந்துமற் றதுதான் ஏகி

முறைமுறை திரைக்கை நீட்டி மூண்டிடா தவித்துப் போமால்.             9

 

அண்ணலங் காளை ஏக உயிர்த்தகால் அவன்செல் லோதை

கண்ணழல் துண்டம் ஓச்சுங் சுடுங்கனல் எதிரா தோடும்

உண்ணிறை புணா¤ யாவும் ஒன்னலன் பதிமேற் சென்று

விண்ணிலம் ஒழிந்த பூதம் அடுதலின் விளைத்த பூசல்.           10

 

வௌ¢வரைக் குவவுத் திண்டோள் வெலற்கருந் திறலோன் எண்காற்

புள்விசை கொண்டு செல்லப் புறந்தரப் புணரி அங்கண்

உள்வளைந் துலாய சின்னை ஒண்சுறாப் பனைமீன் நூறை

தௌ¢விளித் திருக்கை தந்தி திமிங்கிலம் இரிந்து பாய்ந்த.         11

 

நாயகன் தூதன் ஏக நளிர்கடல் எதிர்ந்தி டாது

சாய்வது மீன முற்றுந் தரங்கவெண் கரங்கள் தாங்கித்

தீயசூர் மூதூர் உய்த்துச் சென்றது பொன்று வோர்க்கு

மேயின விச்சை யுண்டி மிகத்தமர் வழங்கு மாபோல்.                    12

 

காழ்தரு தடக்கை மொய்ம்பன் கடுமைசொல் செலவின் ஓதை

சூழ்தரு கின்ற காலைத் துண்ணெனத் துளங்கி விண்மீன்

வீழ்தர வேலை தன்னில் வேலையும் மறிந்து செல்ல

வாழ்திரை எறிமீன் முற்றும் அந்தரம் புகுவ மாறாய்.                     13

 

காமரு நயக்குங் காளை கதுமெனச் செல்லப் பாங்கில்

தூமலர்க் கரத்தி லிட்ட சுடர்மணிக் கடக வாள்போய்

நேமியங் குவடு சூழ்ந்து நிமிர்தரு திமிர மோட்டி

ஏமநல் லண்ட வில்லோ டெதிர்ந்து போய் இகல்செய் கின்ற.              14

 

விண்ணவர் யாருந் தேரும் படையுமாய் விரவ மேலோன்

நண்ணலர் புரமே லோச்சு நகையழல் போதல் ஒத்தான் 

கண்ணழற் செலவும் போன்றான் கார்முகம் பூட்டி உய்த்த

மண்ணுல கிடந்த கூர்வாய் வாளியும் என்னச் சென்றான்.          15

 

தரைதனை அலைத்து நோற்குந் தாபதர்க் கலக்கண் செய்து

சுரர்திருக் கவர்ந்து வாட்டுஞ் சூரனை கிளையி னோடும்

விரைவுடன் முடிப்பான் முன்னி வெகுண்டுசெவ் வேளங் குய்த்த

ஒருதனிச் சுடர்வேல் போன்றும் போயினன் உயர்திண் டோளான்.   16

 

இமிழ்தரு தரங்கப் பாலின் எறிகடன் மதித்து வானோர்க்

கமிர்தினை அளிப்பான் வேண்டி அகிலமும் உண்டு தொன்னாள்

உமிழ்தரு திருமா லுன்ன உணர்ந்துமந் தரமாம் ஓங்கல்

நிமிர்தரு புணா¤ செல்லும் நிலைமைபோல் வீரன் போந்தான்.              17

 

சேண்டொடர் உலகும் பாருந் தெருமர அனலம் வீசிக்

காண்டகு விடத்தை ஈசன் களத்திடை அடக்கி வைப்ப

ஈண்டெமை விடுத்தி யென்னா ஏத்தலும் அவனங் குய்ப்ப

மீண்டது கடல்போந் தென்ன வீரருள் வீரன் சென்றான்.            18

 

பொலங்கழல் வீர வாகு புணரிமேல் இவ்வா றேகி

அலங்கலந் திண்டோள் வெஞ்சூர் அணிநகர் வடாது பாலின்

விலங்கலில் வீரன் யாளி வியன்முகத் தவுணன் போற்றும்

இலங்கையந் தொல்லை மூதூர் அணித்தெனும் எல்லை சென்றான். 19

 

ஆகத் திருவிருத்தம் - 72

     - - -

 

 

3.  வீ ர சி ங் க ன்  வ தை ப்  ப ட ல ம்

 

அன்னதோர் வேலை முன்னம் அகன்றலை யாளிப் பேரோன்

துன்னுபல் லனிகத் தோடுஞ் சூரனைக் காண்பான் ஏக

மன்னதி வீரன் என்னும் மதலையா யிரமாம் வௌ¢ளந்

தன்னொடும் இலங்கை வைகித் தணப்பறப் போற்றி யுற்றான்.      1

 

ஆனதோர் மிக்க வீரத் தாண்டகை அவுணர் போற்ற

மாநகர்க் கோயில் நண்ண வடதிசை வாயில் தன்னில்

மேனிமிர் அவுணர் தானை வௌ¢ளமைஞ் ஞூறொ டென்னான்

சேனையந் தலைவன் வீர சிங்கனாந் திறலோன் உற்றான்.         2

 

உற்றதோர் வீர சிங்கன் ஒண்சிறைச் சிம்பு ளேபோல்

வெற்றியந் திண்டோள் ஏந்தல் விரைந்துசென் றிடலுங்காணூஉச்

சற்றுநங் காவல் எண்ணான் தமியன்வந் திடுவான் போலும்

மற்றிவன் யாரை என்னாச் சீறினன் வடவை யேபோல்.           3

 

உண்குவன் இவன்றன் ஆவி ஒல்லையென் றுன்னிக் காலும்

எண்கிளர் மனமும் பின்னர் எய்துமா றெழுந்து நேர்போய்

விண்கிளர் செலவிற் றானை வௌ¢ளமைஞ் ஞூறுஞ் சுற்ற

மண்கிளர் கடல்போல் வீர வாகுவின் முன்னஞ் சென்றான்.        4

 

சென்றிடு வீர சிங்கன் திறல்கெழு புயனைப் பாரா

இன்றள வெமது காப்புள் ஏகினர் இல்லை யார்நீ

ஒன்றொரு தமியன் போந்தாய் உயிர்க்குநண் பில்லாய் நின்னைக்

கொன்றிடு முன்நீ வந்த செயல்முறை கூறு கென்றான்.            5

 

பொன்னியல் திண்டோள் வீரன் புகலுவான் இலங்கை வாவி

மன்னியல் சூரன் வைகும் மகேந்திரஞ் சென்று மீள்வான்

உன்னினன் போந்தன் ஈதென் உறுசெயல் வலியை யென்னின்

இன்னினி வேண்டிற் றொன்றை இயற்றுதி காண்ப னென்றான்.     6

 

திறன்மிகு சிங்கன் அன்னோன் செப்பிய மொழியைக் கேளா

இறையுநம் மவுண ராணை எண்ணலன் வலியன் போலும்

அறிகுதும் மீண்டு சேறல் அழகிதன் றென்னா உன்னிக் 

குறுகிய படைஞர் தம்மை இவனுயிர் கோடி ரென்றான்.           7

 

என்றலும் அரிய தொன்றை எயினா¢கள் வேட்டைக் கானில்

சென்றனர் திரண்டு சுற்றிச் செருவினை இழைப்ப தேபோல்

பொன்றிகழ் விசய வாகுப் புங்கவன் றன்னைச் சீற்றம்

வன்றிறல் அவுணர் யாரும் வளைந்தமர் புரிய லுற்றார்.           8

 

வேலினை விடுப்பர் தண்டம் வீசுவர் முசலந் தூர்ப்பர்

சாலம தெறிவர் ஆலந் தன்னைஓச் சிடுவர் வார்விற்

கோல்வகை தொடுப்பர் நாஞ்சிற் கொடும்படை துரப்பர் வெய்ய

சூலம துய்ப்பர் கொண்ட தோமரஞ் சொரிவா¢ அம்மா.                    9

 

கிளர்ந்தெழு பரிதி தன்னைக் கேழ்கிளர் உருமுக் கொண்மூ

வளைந்தென அவுணர் வீரன் மருங்குசூழ்ந் தாடல் செய்யத்

தளர்ந்திலன் எதிர்ந்து தன்கைத் தாரைவாள் உறையின் நீக்கி

உளந்தனின் முனிந்தன் னோரை ஒல்லைசூழ்ந் தடுத லுற்றான்.     10

 

அரக்குருக் கொண்ட வெற்பின் அடுகனற் கடவு ளெய்தி

உருக்கியே யதனை எல்லாம் ஒல்லையின் உடைக்கு மாபோல்

நெருக்கிய அவுணர் தானை நீத்தம துடைய வீரன்

திருக்கிளர் வாளன் றேந்திச் சென்றுசென் றடுதல் செய்தான்.       11

 

பனிபடர் குழுமல் தன்னைப் பாயிருட் செறிவை அங்கிக்

கனிபடர் பொற்பில் தோன்றுங் காய்கதிர் முடிக்கு மாபோல்

நனிபடர் அவுணர் தானை நைந்திடச் சுடர்வாள் ஒன்றால்

தனிபடர் வீர வாகு தந்தனன் திரித லுற்றான்.                            12

 

உறைந்தன குருதி வாரி ஒல்லையில் உவரித் தெண்ணீர்

மறைந்தன அவுணர் தானை மால்கரி பரிதேர் முற்றுங்

குறைந்தன கரந்தாள் மொய்ம்பு கொடுமுடி துணிந்து வீழந்த

நிறைந்தன அலகை ஈட்டம் நிரந்தன பரந்த பூதம்.                13

 

வௌ¢ளநூ றவுணர் தானை விளிந்திட இனைய பாலால்

வள்ளல்சென் றடுதல் செய்ய மற்றுள அவுணர் யாரும்

உள்ளநொந் திரங்கித் தத்தம் உயிரினை ஓம்பல் செய்து

பொள்ளென நிலனும் வானும் புலந்தொறும் இரியல் போனார்.             14

 

போதலும் வீர சிங்கன் பொள்ளெனச் சினமேற் கொண்டு

மாதிரங் கடந்து மேல்போய் வளர்தரும் வாகை மொய்ம்பன்

மீதொரு சூலந் தன்னை விட்டனன் விட்ட காலை

ஏதியங் கதனால் அன்ன திருதுணி படுத்தி ஆர்த்தான்.             15

 

ஆர்த்தலும் மடங்கற் பேரோன் ஆண்டகை வீரன் மேன்மை

பார்த்தனன் தனது பாணி பற்றிய படைகள் தம்மில்

கூர்த்ததோர் குலிசம் வீசக் குறுகிவாள் அதனான் மாற்றிப்

பேர்த்தொரு படையெ டாமுன்பெயர்ந்தவன் முன்னஞ் சென்றான்.   16

 

சென்றுதன் மணிவாள் ஓச்சிச் செங்கைகள் துமித்துத் தீயோன்

ஒன்றொரு முடியுங் கொய்தே உவர்க்கட லிடையே வீட்டி

நன்றுதன் னுறையுட் செல்ல நாந்தகஞ் செறித்து முன்னோர்

வென்றிகொண் டகன்றான் என்ப வேலவன் விடுத்த தூதன்.                17

 

ஆகத் திருவிருத்தம் - 89

     - - -

 

 

4.  இ ல ங் கை  வீ ழ்  ப ட ல ம்

 

மலங்கொடு சுறவு தூங்கும் மறிகடல் மீது மேரு

விலங்கல்சென் றிட்ட தென்ன விண்ணிடந் தன்னின் நீங்கி

அலங்கலந் திண்டோள் வள்ளல் அவுணர்தம் மிருக்கை யாகும்

இலங்கையங் குவடு மூன்றில் இடைப்படு சிகரம் பாய்ந்தான்.              1

 

நெடுவரை தன்னை வேலான் ஈறுசெய் திட்ட அண்ணல்

விடவரு தமியோன் தொல்லை இலங்கையின் மீது பாய

அடலதி வீரன் ஏனை அவுணர்கள் கலங்கி யேங்கி

இடியுறு புயங்க மென்ன யாருமெய் பனித்து வீழ்ந்தார்.            2

 

வேறு

 

வைப்புறு மகேந்திர வடாது புலமாகி

இப்புறம் இருந்திடும் இலங்கைதனில் ஏந்தல்

குப்புறுத லுங்குலை குலைந்தவுண ரோடும்

உப்புறு கடற்படிதல் கண்டுவகை யுற்றான்.                       3

 

தந்திமுக மாமதலை தன்னடி வணங்கா

தந்தவிண் ணோர்கடல் அலைத்திடலும் அன்னோன்

சிந்தைமுனி வெய்தவிடை சேர்த்தகயி றோடு

மந்தர நெடுங்கிரி மறிந்தபடி மானும்.                            4

 

ஆடல்கெழு மொய்ம்பினன் அடித்தலம் தூன்ற

மூடுதிரை வேலையிடை மூழ்கிய இலங்கை

கூடுமக வண்ணல்குலி சந்தொடர நேமி

ஊடுபுக லுற்றிடுமை நாகவரை யொக்கும்.                5

 

மாமறைகள் தம்மைமுனம் வஞ்சனை புரிந்தே

சோமுகன் மறைந்ததிரை தூங்குகட லூடே

ஏமமுறு பேருரு எடுத்ததொரு மாண்சேல்

போமதென வாழ்ந்தது பொலங்கெழும் இலங்கை.         6

 

தொல்லைதனில் ஓர்விதி துயின்றகடை நாளின் 

எல்லைய திகந்துகடல் ஏழுமெழ அங்கண்

ஒல்லைபில முற்றபுவி உய்ப்பவொரு கேழல்

செல்லுவதின் ஆழ்ந்தது திரைக்கடல் இலங்கை.           7

 

சிந்துவின் அகன்கரையொர் திண்கிரி யழுந்த

அந்தமி லிலங்கையும் அழுந்தியிடு தன்மை

முந்தொரு மடக்கொடி விருப்பின்முனி மூழ்க

இந்திரனும் நேமியி னிடைப்புகுதல் போலும்.                     8

 

உலங்கொள்பு வீரனடி ஊன்றுதலும் முன்னோர்

விலங்கல்பணி தன்னுலக மேவியது கேளா

அலங்கல்பெறு வாகையவன் ஆற்றலது தாங்கி

இலங்கையது காண்பலென ஏகியது போலும்.                     9

 

இலங்கையிது பானமையின் இருங்கடலுள் மூழ்கக்

குலங்களடு வைகிய கொடுந்தகுவர் யாருங்

கலங்கினர் அழுங்கினர் கவன்றனர் துவன்றி

மலங்கினர் புலம்பினர் மருண்டனர் வெருண்டார்.         10

 

அற்றமுறு தானவர்கள் ஆழஅனை யோரைச்

சுற்றிய அளப்பில சுறாவுழுவை மீனம்

பற்றிய வளைந்தன பலப்பல திரண்டே

செற்றிய திமிங்கில திமிங்கில கிலங்கள்.                 11

 

கையதனை ஈர்ப்பசில கால்கள்சில ஈர்ப்ப

வெய்யதலை ஈர்ப்பசில மிக்கவுயர் தோள்கள்

மொய்யுடைய மார்பதனை ஈர்ப்பசில மொய்த்தே

சையமுறழ் யாக்கையுள தானவரை மீனம்.                      12

 

அத்தனொடி யாயையனை அன்பின்முதிர் சேயைக்

கொத்தினொடு கொண்டுசிலர் கூவியெழு கின்றார்

எய்த்தனர்கள் செய்வதென் இரும்படையும் விட்டுத்

தத்தமுயிர் கொண்டுசிலர் தாமும்எழ லுற்றார்.                   13

 

உற்றசில தானவரை ஒய்யென அளாவித்

திற்றிவிழை வான்நனி திரண்டனர்க் ளெல்லாம்

பற்றுழி தனித்தனி பறித்தது பொருட்டாற்

பொற்றைபுரை மீன்கள்பெரும் போர்வினை புரிந்த.        14

 

தானவர்க ளோ£¢சிலவர் தம்முணல் குறித்தே

வானிமிரு மோதையென வந்துதமை எற்றப்

பூநுனைய வாள்சுரிகை போரயில்கள் கொண்டே

மீனமொடு வெஞ்சினம் விளைத்தமர் புரிந்தார்.           15

 

சீர்த்திகொள் இலங்கைகடல் சென்றிடலும் அங்கண் 

ஆர்த்திபெறு மங்கையர்கள் அங்கையவை பற்றி

ஈர்த்தபிறர் இல்லுற இசைந்துகரம் பற்றுந்

தூர்த்தரை நிகர்த்தன சுறாமகர மீனம்.                   16

 

மீனொருகை பற்றியிட வேறொரு கரத்தைத் 

தானவர் வலித்தொரு தடக்கைகொ டிசிப்ப

மானனைய கண்ணியர் வருந்திடுதல் ஓர்ஐந்

தானபுலன் ஈர்ப்பவுள் அழுங்குவது போலும்.                      17

 

திண்டிறல் வலம்படு திருக்கைசுற மீனம்

மண்டிய திமிங்கிலம் வருந்தகுவர் சூழல்

கண்டுமிசை யெற்றிடுத லுங்கடிது வாளால்

துண்டமுற வேயவை துணித்தெழுநர் சில்லோர்.          18

 

கட்டழல் விழிச்சுறவு காரவுணர் தம்மை

அட்டுணல் குறித்துவர அன்னவர்கள் நீவித்

தொட்டனர் பிடித்தகடு தூரும்வகை பேழ்வாய்

இட்டனர் மிசைந்தனர் எழுந்தனர்கள் சில்லோர்.           19

 

ஏற்றபுனல் ஊடுதெரி வின்றியெம ரென்றே

வேற்றொரு மடந்தையர் வியன்கையது பற்றிப்

போற்றியெழ அங்கவர் புறத்தவர்க ளாக

மாற்றினர் இசைந்துசிலர் வாழ்க்கைமனம் வைத்தார்.             20

 

இல்லிவ ரெனப்பிறரை ஏந்தியெழ அன்னோர்

புல்லுதனி அன்பர்புடை போகவொரு சில்லோர்

அல்லலுறு வார்தமை யடைந்ததொரு கன்னி

மெல்லவயல் போந்துழி மெலிந்துழலு வார்போல்.        21

 

தீமைபுரி மால்களிறு திண்புரவி யாவும்

ஏமரு சுறாத்தொகுதி ஈர்த்துவிரைந் தேகித்

தோமறு பிணாமகரந் துய்ப்பவுத வுற்ற

காமர்கெழு பெண்மயல் கடக்கவௌ¤ தன்றே.                    22

 

மாற்றறு சுறாச்சில மடப்பிடிகை பற்றி

ஏற்றபெண் வழிச்செல எதிர்ந்ததனை நோக்கி

வேற்றொர்பெடை ஆயதென வேர்வுறுகை கையர்க்

காற்றுமுப காரவியல் பாகியதை யன்றே.                23

 

சிந்துவதன் மீதிலெழு சில்லவுண ராயோர்

கன்தன்முரு கேசன்விடு காளைசெயல் காணா

நந்தமையும் நின்றிடின் நலிந்திடுவன் யாங்கள்

உய்ந்திடுதும் என்றுகடி தோடியயல் போனார்.                     24

 

பீடுசெறி தங்கணவ ரைப்பிரிகி லாமே

கூடும்வழி ஆழ்ந்தசில கோற்றொடிமின் னார்கள்

ஆடைபுன லூடுபுக அல்குல்தம கையால்

மூடியெழு வார்முலை முகத்தின்முகம் வைத்தே.         25

 

சேண்டொடர் இலங்கைகடல் சென்றுழிய தன்பால்

ஆண்டசில மாதர்கள் அரத்தவுடை கொண்டார்

மீண்டெழலும் நீர்பட வௌ¤ப்படுவ தல்குல்

காண்டகைய செம்மதி களங்கமடைந் தென்ன.            26

 

காரவுணர் மாதர்சிலர் காமர்கடல் வீழவார்

நீரமெழ வேயுடை நெகிழ்ந்தொருவி யேக

மூரல்முக மல்லுருவு முற்றுறம றைத்தே

தேரையென ஒண்புனல் செறிந்துதிரி வுற்றார்.                    27

 

ஆசுறு மரைத்துகில் அகன்றிட எழுந்தே

தேசுறு மடந்தைய ரில்ஓர்சிலவர் சேண்போய்

மாசுறு புயற்குழுவை வலலைகரம் பற்றித்

தூசினியல் பானடுவு சுற்றியுல வுற்றா£¢.                 28

 

ஆகத் திருவிருத்தம் - 117

     - - -

 

 

5.  அ தி வீ ர ன்  வ தை ப்  ப ட ல ம்

 

அன்னதொர் பான்மைக ளாக இலங்கை

முன்னுறு வார்கடல் ஆழ்ந்தது மூழ்க

இந்நகர் போற்றி இருந்திடு கின்ற

மின்னுனை வேல்அதி வீரன் உணர்ந்தான்.                1

 

தனது புரங்கடல் காருதல் காணா

நனிதுயர் எய்தினன் நாணும் அடைந்தான்

சினவி யுயிர்த்தழல் சிந்த நகைத்தான்

அனையவன் இன்னத கத்திடை கொண்டான்.             2

 

சுந்தர மேவரு சூரபன் மாவோ

அந்தமில் தம்பிய ரோவனை யார்தம்

மைந்தர்க ளோமதி யேன்அவ ரல்லால்

இந்த வியற்கையை யார்புரி கிற்பார்.                            3

 

ஆயவா¢ என்னினும் ஆங்கது செய்தற்

கேயதொ ரேதுவும் இன்றுதம் மூர்க்குத்

தீயது செய்கலர் சிந்தைய தன்றால்

மாயையும் ஈது மதிக்கிலள் போலும்.                            4

 

மூவரும் இச்செயல் முன்னலர் பின்னர்த்

தேவர்கள் யாரிது செய்திட வல்லார்

ஏவரும் நஞ்சிறை எய்தினர் வேள்விக்

காவலன் ஆருயிர் காத்து மறைந்தான்.                  5

 

மாதிர மேலவர் வானிடை வைப்பின்

மேதகும் விண்ணவர் விஞ்சையர் சித்தர்

ஆதியர் நம்மிறை ஆணையின் நீங்கார்

ஈது புரிந்திட எண்ணுவர் கொல்லோ.                            6

 

தவ்வற ஈண்டமர் தானவர் ஆற்ற 

மெய்வலி மாயைகள் மேவின ரேனுந்

தெவ்வடு சூர்முதல் தின்படை யஞ்சி

இவ்வியல் தன்னை இழைக்கலர் போலும்.                       7

 

ஆதலின் அன்னவர் ஆற்றலர் என்னின்

ஈதொரு செய்கை இழைத்தவர் யாரோ

தாதை அகன்றுவழி தானவ ரோடுங்

காதலின் இந்நகர் காத்தது நன்றால்.                             8

 

காய மொடுங்கு கனற்சிர மூடு

போயது வல்லை புறஞ்செல நோற்று

மாயை பெரும்படை வன்மைகள் வேதன்

ஈயமுன் வாங்கிய என்செயல் நன்றால்.                  9

 

தந்தை யுறாது தணந்துழி ஆங்கோர் 

மைந்தன் இருந்துதன் மாநக ரோடும்

அந்தி லகன்கடல் ஆழ்ந்தனன் என்றால்

நந்தமர் என்னை நகைப்பா¢கள் அன்றே.                 10

 

மன்னவன் ஈது மதித்திடின் மற்றென்

றன்னை அடும்பெறு தாதையும் அற்றே

பின்னுளர் எள்ளுவர் பெற்றியி தாமேல்

என்னியல் நன்றென எண்ணி இனைந்தான்.                      11

 

இனைந்ததி வீர னெனுந்திறல் மைந்தன்

கனைந்திடு கின்ற கடற்கிடை யாழ்வோன்

அனந்தர மூழ்வினை ஆற்றலின் அன்னான்

மனந்தனில் ஈதொரு தன்மை மதித்தான்.                 12

 

ஒல்லொலி சேரு வரிக்கடல் மீதாய்ச்

செல்லுவன் யாரிது செய்தனர் என்றே

வல்லையில் ஓர்குவன் மற்றவர் தம்மைக்

கொல்லுவன் மெய்ப்படு சோரி குடிப்பன்.                 13

 

என்றதி வீரன் இரும்படை யாவும்

ஒன்றற வாரி உருத்த னிகத்துள்

நின்றுளர் தங்களை நேடுபு கொண்டே

வன்றிரை வேலையின் மீமிசை வந்தான்.                14

 

வேறு

 

விடலைதிரு முன்னமதி வீரன்அனி கங்கள்

புடையில்வர நீரின்மிசை பொள்ளென எழுந்தான்

அடுதொழில் இயற்றியிடும் ஆதிதனை யெய்தக்

கொடியவிடம் வார்கடல் குலாய்நிமிர்வ தேபோல்.         15

 

விழுந்திடும் இலங்கைதனில் மேவும் அதிவீரன்

எழுந்துதன தானையொ டிருங்கட லுளங்கிக்

கொழுந்துமிசை சென்றனைய கோலமொடு நின்ற

செழுந்திறல்கொள் மொய்ம்புடைய செம்மல்நிலை கண்டான்.       16

 

கண்டனன் வெகுண்டிதழ் கறித்துநகை செய்யா

அண்டர்குழு வானிவனொர் ஆண்டகைநம் மூதூர்

தெண்டிரையில் ஆழும்வகை செய்தும்இவண் நின்றான்

எண்டிசை தொழுந்தகுவர் ஆணையினி தென்றான்.               17

 

என்றுமொழி யாவிரைவில் யாளிமுகன் மைந்தன்

கொன்றிவன தாருயிர் குடிப்பனென உன்னிச்

சென்றிடலும் ஆழ்ந்தவர் செயற்கையது காண்பான்

நின்றதொரு பேரறிஞன் நீர்மையது கண்டான்.            18

 

ஆனபொழு தத்தினில் அவன்புடையில் வந்த

தானவர்கள் சூழ்ந்தனர் சமர்த்தொழி லியற்ற

மானவிற லோன்றனது வாளுறை கழித்தே

ஊனொடுயிர் சிந்தியிட ஒல்லையடல் செய்தான்.          19

 

அற்றன சிரத்தொகுதி அற்றன கரங்கள்

அற்றன புயத்தொகுதி அற்றன பதங்கள்

அற்றன பெரும்புறமும் அற்றவுடன் முற்றும்

அற்றனர்கள் யாருமுயிர் அற்றதவர் பூசல்.                       20

 

பங்கிசெறி செந்தலைகள் பாய்குருதி நீர்மேல்

எங்கணும் மிதப்பன இருங்கடலி னூடே

செங்கொடி படர்ந்திடு செழும்பவள வைப்பில்

அங்கமல மானவை அலர்திடுதல் போலும்.                      21

 

அற்றமகல் வீரன்அவு ணப்படை துணிப்பச்

செற்றிய பிணத்தொகை திரைப்புணரி தூர்த்த

மற்றுமிசை போந்துமணி யாலுமொ£¤ லங்கைப்

பொற்றைய தியற்றியது போன்றுளது மாதோ.                    22

 

தன்படை விளிந்துசல திக்கடலுள் வீழ

முன்பன்அதி வீரன்முனி யாவதனை நோக்கி

என்புடையி னோரையெறிந் தாய்கடிதின் நின்னைத்

தின்பனது காண்டியென வேசெருமு யன்றான்.            23

 

சொல்லும்அதி வீரன்வரு தோற்றமது காணா

வல்லைவரு கென்றுதிறல் வள்ளலும் அழைப்ப 

எல்லையத னிற்செருவின் ஏற்றிவனை இன்னே

கொல்லுகென அங்கணொரு குந்தம தெறிந்தான்.          24

 

உய்த்ததொரு கூரயிலு ரத்திலுறு முன்னர்

மத்தகய நேர்விடலை மற்றது தெரிந்தே

கைத்தல மிருந்திடு கனற்புரையும் வாளால்

அத்துணை இரண்டுதுணி யாய்விழ எறிந்தான்.           25

 

கண்டமுற ஞாங்கரது கண்டுதிறன் மைந்தன்

தண்டம்விரைந் தொன்றொரு தடக்கைகொ டெடுத்தே

மண்டமர்செ யுன்னுயிரை வாங்குமி• தென்னா

அண்டர்புகழ் காளைதன தாகமுற விட்டான்.                     26

 

வேறு

 

விட்ட காலையத் தண்டினை வெலற்கருந் திறலோன்

அட்டி டான்தனி வாளினால் ஏற்றனன் அகலம்

பட்டு மற்றது நுண்டுக ளாகஅப் பதகன

மட்டி லாததோர் விம்மிதம் எய்தினன் மறுகி.                     27

 

வேறொர் முத்தலைப் படையது கொண்டதி வீரன்

மாறி லாவிறல் மொய்ம்பினன் தன்மணி மார்பின் 

ஊறு செய்திறம் ஓச்சலுங் கண்டுநம் முரவோன்

சீறி யாங்கது பற்றினன் செங்கையால் இறுத்தான்.         28

 

இறுத்த காலையில் இலங்கையில் யாளிமா முகன்சேன்

செறுத்து மற்றிவன் தனைஅடல் அரிதெனச் சிந்தை

குறித்து மற்றொரு நாந்தகம் ஏந்தினன் குறுகி

வெறித்த கொண்டலுட் கொட்புறு மின்னென விதிர்த்தான்.  29

 

கறங்கி னிற்பெரு வட்டணை புரிந்துதன் கரமேல்

நிறங்கொள் வாளினை இடம்வலந் திரிததனன் நெறியே

பிறங்கும் ஆர்கலித் தெண்டிரை அலைதரப் பெரிது

மறங்கொள் நாந்தக மீனுகண் டலமரும் வகைபோல்.             30

 

ஏதி யிங்கிது நான்முகன் தந்துள தெவர்க்கும்

பேத கஞ்செயல் அரியதால் அன்னது பிடித்தேன்

சாதி திண்ணநீ வருகென மிகைமொழ சாற்றிக்

கோதில் வீரன்முன் அணுகலும் அனையவன் கூறும்.              31

 

நன்று நன்றுநின் னாற்றலும் ஆண்மையும் நம்மை

வென்றி யேயெனின் யாவரும் மேலுனை வியப்பார் 

நின்று நீசில மொழிவதென் கடிது நேருதியால்

வென்றி வீரருந் தமைப்புகழ் கிற்பரோ வென்றான்.        32

 

என்ன ஒன்னலன கிடைத்தனன் வீரனும் எதிர்ந்தான்

அன்ன பான்மையர் வாளம ராடினர் அகல்வான்

மின்னு மாமுகில் தோன்றியே எதிரெதிர் விரிந்து

பின்ன ருள்புகுந் துடனுடன் செறிந்தபெற் றிமைபோல்.    33

 

சென்னி நாடுவர் களத்தினை நாடுவர் செவிதாள்

கன்ன நாடுவர் புயங்களை நாடுவர் கரங்கள்

உன்னி நாடுவர் உரத்தினை நாடுவர் உகளப்

பொன்னின் வார்கழல் நாடுவர் வாளமர் பிரிவார்.         34

 

இணங்கு நீரவர் இருவரும் இனையன உறுப்பில்

அணங்கு செய்திடும் மரபினா லாயிடை உய்ப்பார்

நுணங்கு விஞ்சையின் வன்மையான் நொய்தின்மாற் றிடுவார்

மணங்கொள் செந்நிற வாள்கொடே வட்டணை வருவார்.  35

 

போத மின்னதில் எம்பிரான் தூதுவன் பொருவான்

ஏதி கொண்டுளான் தன்னையான் வலிந்திடல் இயல்போ

ஆத லாலிவன் படைமுறை வெல்வதே அறனென்

றோதி சேருளங் கொண்டனன் இடைதெரிந் துற்றான்.      36

 

இடை புகுந்ததி வீரன தடிகளோ ரிரண்டும்

முடியும் ஆகமுந் தோள்களும் ஆங்கொரு முறையே

சுடர்பி றங்கிய வாளினால் ஆண்டகை துணித்துக்

கடிது வீட்டினன் நடுவன்வந் தவனுயிர் கவர்ந்தான்.               37

 

ஆகத் திருவிருத்தம் - 154

     - - -

 

 

6.  ம கே ந் தி ர ஞ்  செ ல்  ப ட ல ம்

 

வீர வாகுநின் றவ்வதி வீரனை வீட்டித்

தாரை வாளுறை செலுத்தியே வெஞ்சமர் தணித்து

நேரில் வீரமா மகேந்திரம் போவது நினைந்தே

ஏரு லாவரும் இலங்கையின் எல்லைநீத் தெழுந்தான்.             1

 

எழுந்து வான்வழிச் சேறலும் ஆர்கலி யிடையே

விழுந்து கீழுறும் இலங்கைமண் டெழுந்தது விரைவிற்

கழிந்த தொல்பர நீங்கிய காலையிற் கடலூ

டழுந்து கின்றபொன் தோணிமீச் சென்றிடு மதுபோல்.             2

 

வார்த்த யங்கிய கழலவன் வான்வழிக் கொளலும்

ஈர்த்த தெண்கடல் நீத்தமேல் எழுதரும் இலங்கை

சீர்த்த நான்முன் உறங்குழிச் சிந்துவூ டழுந்திப்

பேர்த்து ஞாலம்விட் டெழுதரு மேருவிற் பிறழும்.        3

 

எள்ளு நீரரைப் பற்பகல் ஆற்றலின் இலங்கை

கொள்ளை வெம்பவம் மாசிருள் அடைந்தது குறைதீர்

வள்ளல் தாள்பட நீத்தது பவந்துகள் மாற்றத்

தௌ¢ளு நீர்க்கடல் படிந்தெழுந் தாலெனத் திகழும்.               4

 

கந்த ரந்தவழ் தெண்புனற் கருங்கடல் நடுவட்

சுந்த ரஞ்செறி பொன்சுடர் இலங்கைதோன் றியது

முந்து காலையில் எம்பிரான் அருள்வழி முராரி

உந்தி நின்றெழு பிரமன்மூ தண்டமொத் துளதால்.         5

 

இன்ன தாகிய இலங்கைமா புரத்தைநீத் தெழுந்து

பின்னு மாயிரம் யோசனை வானிடைப் பெயர்ந்து

பொன்னு லாவுறு வாகையம் புயத்தவன் புலவோர்

ஒன்ன லானுறை மகேந்திர வரைப்பின்முன் னுற்றான்.            6

 

நெற்றி நாட்டத்து நந்திதன் கணத்தவன் நேமிப்

பொற்றை யாமெனச் சூழ்ந்துயர் மகேந்திரப் புரிசைச்

சுற்று ஞாயிலும் வாயில்க டொறுந்தொறும் தோன்றுங்

கற்றை மாமணிச் சிகரியும் நுனித்துமுன் கண்டான்.              7

 

சேர லாரமர் மகேந்திர நகர்வட திசையில்

வாரி வாய்தனுட் கோபுரத் தெற்றியின் மாடே

கோர னேயதி கோரனே எனப்படுங் கொடிய

வீரர் தானையோ டிருந்தனர் காவல்கொள் வினையால்.    8

 

கரிக ளாயிரம் வௌ¢ளமே தேருமக் கணிதம்

பரிக ளாங்கதற் கிருதொகை யத்தொகை பதாதி

உரிய வப்பெருந் தானையம் பெருங்கடல் உலவா

விரவி மேவர இருந்தனர் காத்திடும் வீரர்.                       9

 

பகுதி கொண்டிடு தானையஞ் சூழலாம் பரவைத்

தொகுதி கண்டனன் விம்மிதங் கொண்டனன் துன்னார்

மிகுதி கொண்டுறை காவலுங் கண்டனன் வியனூர்

புகுதி கொண்டிடும் உணர்வினான் இனையன புகல்வான்.   10

 

ஈண்டு செல்லினித் தானைசூழ்ந் தமர்செயும் யானும்

மூண்டு நேரினும் முடிப்பவோர் பகலெலா முடியும்

மாண்ட தென்னினும் உலவுமோ மாநக ரிடத்து

மீண்டும் வந்திடுங் கரிபரி பதாதிதேர் வௌ¢ளம்.         11

 

வந்த வந்ததோர் தானவப் படையொடே மலைவுற்

றெந்தை கந்தவேள் அருளினால் யானொரு வேனுஞ்

சிந்தி நிற்பனேல் இந்நகர்த் தானைகள் சிதைய

அந்த மில்பகல் சென்றிடும் அளியரோ அவுணர்.          12

 

எல்லை யில்பகல் செல்லினுஞ் செல்லுக இனைய

மல்லன் மாநகர் அவுணர்மாப் பெருங்கடல் வறப்ப

ஒல்லு நீர்மையால் யான்அடல் செய்வனேல் உருத்துத்

தொல்லை மைந்தரைத் துணைவரை உய்க்குவன் சூரன்.   13

 

உய்த்த மைந்தர்கள் சூழ்ச்சியின் துணைவர்கள் ஒழிந்தோர்

அத்தி றத்துளோர் யாரையும் வெலற்கரி தயில்வேற்

கைத்த லத்தவன் வலிகொடே பற்பகல் காறும்

இத்த லைச்சமர் ஆற்றியே முடிக்குவன் எனினும்.        14

 

ஏவ ரும்வெலற் கா¤யசூர் பின்னர்வந் தெதிர்க்கும்

ஓவில் வெஞ்சமர் பற்பகல் ஆற்றியான் உறினும்

வீவ தில்லையால் அங்கவன் மேலைநாள் தவத்தால்

தேவ தேவன்முன் அருளிய வரங்களின் சீரால்.           15

 

அன்ன வன்றனை மாலயன் றனக்கும்வெல் லரிதால்

இன்னு மாங்கவன் ஆணைக்கும் வெருவியே இருந்தார்

பின்னை யாரவன் தன்னைவென் றிடுவர்கள் பெருநாள்

துன்னி யான்சமர் ஆற்றினுந் தொலைகிலன் சிறிதும்.              16

 

தொலைந்து போகிலன் சூரமர் இயற்றிடில் துன்னிக்

கலந்த யான்விறல் இன்றிமீண் டேகுதல் கடனோ

மலைந்து நிற்கவே வேண்டுமா லாயினும் வறிது

மலைந்த லைப்படுஞ் சுரர்சிறை அகன்றிட வற்றோ.               17

 

மற்றிந் நீர்மையிற் பற்பக லவனொடு மலைந்து

வெற்றி கொண்டிலன் இன்னுமென் றமரினை வீட்டி

ஒற்றின் நீர்மையை உணர்த்துதல் ஒல்லுமோ உலவா

தெற்றை வைகலும் அமர்செய வேண்டுமால் எனக்கே.    18

 

போத நாயகன் பரம்பொருள் நாயகன் பொருவில்

வேத நாயகன் சிவனருள் நாயகன் விண்ணோர்க்

காதி நாயகன் அறுமுக நாயகன் அமலச்

சோதி நாயகன் அன்றியார் சூரனைத் தொலைப்பார்.               19

 

இம்பர் சூரொடு பொருதுநின் றிடுவனே என்னின்

நம்பி ரான்அறு மாமுகன் பின்னரே நண்ணி

வெம்பு சூரனை வேலனால் தடிந்துவெஞ் சிறையில்

உம்பர் யாரையும் மீட்டிட வேண்டுமேல் ஒருநாள்.        20

 

ஆத லால்அம ராற்றுதல் முறையதோ அ•தான்

றீது நம்பெரு மான்றன தருளுமன் றினைய

தூதர் செய்கட னாங்கொலோ அமர்பெறாத் தொடர்பாற்

போத லேகடன் என்றனன் பொருவில்சீர் அறிஞன்.        21

 

வேறு

 

இப்பால் வாய்தலின் எல்லை நீங்கிய

துப்பார் தானைகள் துற்று நின்றவால்

அப்பால் எய்தரி தாம ருங்குபோய்

வைப்பார் கீழ்த்திசை வாயில் நண்ணுவேண்.             22

 

என்னா உன்னி இயன்ற வுத்தரப்

பொன்னார் வேலி புகாது பாங்கர்போய்க்

கொன்னார் கின்ற குணக்கு வாய்தலின்

முனனா ஏகினன் மொய்ம்பின் வீரனே.           23

 

மேதிக் கண்ணவன் வீர பானுவென்

றாதிக் கத்தவு ணர்க்கு நாயகர்

ஏதிக் கையர் இரண்டு வீரரும்

ஆதிக் கன்னதன் வாயில் போற்றினார்.           24

 

திருவுந் தும்வட திக்கு வாய்தலின்

விரவுந் தானையின் வௌ¢ளம் மெய்த்தொகை

பரவுஞ் சூரர் பயிற்று பல்பவத்

துருவஞ் சூழந்தென ஒத்து நின்றவே.                    25

 

வண்டார் செற்றிய வாகை மொய்ம்பினான்

கண்டான் அன்ன கடிக்கொள் காவலும்

தண்டா துற்றிடு தானை நீத்தமும்

அண்டா அற்புத நீரன் ஆயினான்.                26

 

ஆண்டங் குற்றவ ளப்பில் சேனையைக்

காண்டும் மிவ்வுழி காவல் போற்றியே

சேண்டுன் றும்புலி செற்றும் ஆதலால்

ஈண்டுஞ் செல்லரி தென்று முன்னினான்.         27

 

நின்றிப் பாற்படல் நீர்மை அன்றரோ

தென்றிக் கின்வழி சென்று நாடுவன்

என்றுட் கொண்டவண் நீங்கி ஏகினான்

குன்றின் தொன்மிடல் கொண்ட தோளினான்.      28

 

    ஆகத் திருவிருத்தம் - 182

         - - -

 

 

7.  க ய மு க ன்  வ தை ப்  ப ல ட ம்

 

ஏகா நிற்புழி ஏந்தல் கீழ்த்திசை

மாகா வற்கொள் மதங்க மாமுகன்

மீகான் ஒப்ப வியன்க லத்தினுக்

காகா யத்தின் அமர்ந்து போற்றுவான்.                   1

 

நூற்றுப் பத்து நுவன்ற தோன்முகன்

மூற்றைக் கையினன் மொய்ம்பி ராயிரன்

சீற்றத் துப்புறு தீய சிந்தையான்

கூற்றத் துக்கொரு கூற்ற மேயனான்.                    2

 

பொன்னார் ஏம புரத்து வைகலும்

மன்னாய் வாழ்பவன் மாறு கொண்டுதன்

முன்னா வெய்தி முனிந்து போர்செய

ஒன்னார் இன்றி உளங்கு றைந்துளான்.           3

 

கருமே கங்கள் கறித்து வாரியுண்

டுருமே றோடு முரற்ற ஓச்சுவான்

பெருமே தக்க பவஞ்செய் பெற்றியான்

செருமேல் கொண்டிடு சிந்தை பெற்றுளான்.              4

 

மஞ்சார் வேழம் வனத்தில் வல்லுளி

எஞ்சா வெவ்வா¤ யாளி வல்லியம்

அஞ்சா ராயிர மங்கை கொண்டுணாச்

செஞ்சோ ரிப்புனல் சிந்தும் வாயினான்.          5

 

காசைப் போது கடுத்த மெய்யர்தென்

னாசைக் காலரொ ராயிரத் தர்தம்

பாசத் தோடு பயின்று சேர்ந்தென

வீசித் தூங்கும் வியன்று திக்கையான்.                   6

 

வாணாள் அ•கினன் மாயும் எல்லையான்

ஏணால் அத்திசை ஏகும் வீரனைக்

காணா நின்று கனன்று சாலவுஞ்

சேணான் இன்னன செப்பி ஏகுவான்.                     7

 

மிக்கார் காவல் விலங்கி நீயிவட்

புக்காய் மாயை புகன் றுளாய்கொலோ

அக்கால் தானுமெம் மாணை நீங்கியே

எக்கா லத்தினும் ஏக வல்லதோ.                 8

 

வறியா ராகி மயங்கும் வானவச் 

சிறியார் வைகிய சீரில் ஊரெனக்

குறியா வந்தனை கோதில் இந்நகர்

அறியா யோநம தாணை ஆற்றலே.                     9

 

மூண்டே குற்றனென் மொய்சி னத்தினேன்

மாண்டே போயினை வல்லை நீயினி

மீண்டே போந்திறம் இல்லை மேலுனக்

கீண்டே மாயவி ழைத்த எல்லையே.                    10

 

சூராள் கின்றதொர் தொல்லை மாநகர்

சேரா நின்றனை சீறு கேசரி

பேரா எல்லையொர் பீடின் மான்பிணை

ஆராய் தற்குவ ருங்கொல் ஆற்றலால்.           11

 

தொடுநே மிக்கடல் துண்ணெ னக்கடந்

திடைசேர் கின்ற இலங்கை நீங்கியே

கடிதே இந்நகர் காண உன்னியே

அடைவாய் தேவர்க ணத்து ளாரைநீ.                    12

 

திருத்தங் கண்ணகல் தேவர் தம்முளும்

விருத்தன் போலும் மிகத்து ணிந்துநீ

ஒருத்தன் போந்தனை ஒன்றொர் வாளடே

வரத்தென் இவ்விடை மாயை கற்றுளாய்.        13

 

ஆலா லத்தை அயின்ற நம்பனோ

மாலா னோவன சத்தில் அண்ணலோ

பாலார் தந்தி படைத்த கள்வனோ

மேலார் இங்குனை விட்ட தன்மையார்.          14

 

சுற்றா நின்றனை சூழ இந்நகர்

ஒற்றாய் வந்தனை போலும் உன்றனை

மற்றார் உய்த்தனர் வந்த தென்கொலோ

விற்றாய் நின்னுயிர் எங்கண் உய்திநீ.                    15

 

சிறையிற் பட்டுழல் தேவர் செய்கையை

அறிகுற் றிந்திரன் ஆளை யாகியே

நெறியிற் போக நினைந்து ளாய்கொலாங்

குறுகுற் றாயிது வுங்கு றிப்பதோ.                       16

 

விண்டோ யுங்கனல் மேவும் எல்லையின்

மண்டோய் பூளை மருத்தன் உய்த்தெனப்

பண்டே நொய்யை படுந்தி றத்திவட்

கொண்டே வந்தது சொல்லும் வல்வினை.               17

 

முன்னந் நம்பணி முற்று மாற்றியே

கின்னங் கொண்டு கரந்த கீழ்த்திசை

மன்னன் பாலுறு வாருள் அன்றுநீ

இன்னும் மஞ்சலை என்னை யெண்ணலாய்.              18

 

கொல்லா நிற்பதொர் கூற்ற மேயெனச்

செல்லா நின்றிடு திண்ணி யேன்முனம்

நில்லாய் எங்கடா நீங்கு வாயெனா

ஒல்லான் ஓதி உரப்பி யேகினான்.                       19

 

வன்றாள் கொண்ட மதக்க யாசுரன்

சென்றான் இன்னன செப்பி இம்மொழி

நன்றால் என்று நகைத்து நோக்கியே

நின்றான் வாகை நெடும்பு யத்தினான்.            20

 

ஓவா திவ்வகை யோதி முன்வருந்

தீவா யோன்எதிர் சென்று வல்லையிற் 

சாவா யென்னிடை சார்ந்து ளாய்கொலாம்

வாவா என்றனன் வாகை மொய்ம்பினான்.               21

 

வானோர் அஞ்ச வருங்க யாசுரன்

தானோர் குன்று தனைப்ப றித்திடா

ஊனோ டுன்னுயிர் ருண்ணு மீதெனா

வானோன் மைந்தன்முன் னார்த்து வீசினான்.             22

 

வீண்டோய் மேனி வியன்க யாசுரன்

கொண்டோர் கையில் விடுத்த குன்றது

வண்டோ வலம்புரி மாலை மொய்ம்பினான்

திண்தோண் மீமிசை செவ்வ ணுற்றதே.          23

 

வேழத் தோன்முகன் விட்ட பூதரம்

பாழித் தோள்மிசை பட்ட காலையில்

வாழிப் பூதியின் வட்டு விண்டெனப்

பூழித் தாகி உடைந்து போயதே.                 24

 

பொடியும் காலெதிர் புக்க தீயவன்

மிடல்கொண் டுற்றிடு வீரன் ஆற்றல்கண்

டுடலுந் திண்சின முற்றொ ராயிரம்

படருங் குன்று பறித்தன் மேயினான்.                    25

 

பறியா நின்ற பகட்டு மாமுகன்

நெறிவீழ் கின்ற நெடுங்கை சுற்றினான்

இறைசேர் மேரு இருந்த கோடெலாங்

கறைசேர் காலவர் கட்டெ ழுந்தபோல்.           26

 

பத்தாம் நூறு படுத்த வேலையுள்

மத்தா குற்றன வாசு கித்தொகை

மொய்த்தான் வன்றலை முன்பு சூழ்ந்தெனக்

கைத்தா மால்வரைக் காட்சி மிக்கவே.                   27

 

துண்ணென் றேகயா சூரன் நூறுபத்

தெண்ணுந் தொல்கிரி யாவும் எம்பிரான்

கண்ணின் றோன்விடு காமர் காளைமேல்

விண்ணங் கான்றென ஆர்த்து வீசினான்.         28

 

பாடார் பல்கிரி பற்றி வீசலும்

ஈடார் வெம்புலி யாளி கேசரி

கோடார் தந்திகள் கோடி கோடிகள்

வீடா ஆர்ப்பொடு விம்மி வீழ்பவே.                      29

 

கேடாய் மன்னர் கிடப்ப ஆங்கவர்

வீடா ஆக்கமி சைந்து ளாரெனப்

பாடா வண்டு பராரை மால்வரை

ஊடார் தேன்கள் உகுப்ப உண்டவே.                     30

 

வேறா கும்பல வெற்பி டந்தொறும்

ஊறா நின்றுல வுற்ற வான்புனல்

மாறா மல்கவிழ் வுற்று வல்லைபேர்

ஆறா கிக்கட லென்ன ஆர்த்ததே.                31

 

வரைவீழ் பூம்புனல் மாந திக்கணே

இரையா மாக்க ளியாவும் வீழ்தலாற்

திஆசேர் வாரிகள் சென்று சேணெழீஇ

விரைவால் வெய்யவன் வெப்பம் நீக்குமே.               32

 

பேசுஞ் சீரிவை பெற்ற வெற்பெலாம்

ஈசன் தூதுவன் முன்ன ரெய்தின

பாசஞ் சுற்றிய பம்ப ரத்தொகை

வீசுங் காலை சுழன்று வீழ்வபோல்.                     33

 

வேறு

 

சுடர்ப்பெ ருங்கதிர் ஆதவன் துண்ணெனக் கரப்ப

அடுக்கல் ஆயிரம் இன்னவா றொருதலை யாகக்

கடற்பு குங்கண முகிலென வருதலுங் கண்டான்

தடக்கை வேலுடை அண்ணல்தாள் முன்னினன் தமியோன். 34

 

நிற்கு மெல்லையின் வெங்கொலைத் தொழின்முறை நிரம்பக்

கிற்கும் வெய்யவன் விடுத்திடும் ஆயிரங் கிரியும்

பற்கன் மால்வரை காப்பவன் தன்மிசை பழிதீர்

அற்கன் மேல்வரும் எழிலிகள் என அடைந் தனவே.              35

 

வேறு

 

               மறுவரை யாத திங்கள் வார்சடைக் கடவுள் நல்க

அறுவரை அனையாப் பெற்றோன் அருளினால் ஐயன் நிற்ப

உறுவரை பத்து நூறும் ஒருங்குமா யுற்று மற்றோர்

சிறுவரை தன்னில் யாவுஞ் சிதறியே உடைந்த வன்றே.           36

 

தௌ¤தரு வீரன் தன்மேற் செறிந்திடும் அடுக்கல் யாவும்

விளிவொடு மாய்ந்த வன்றி விளைத்தில வேறங் கொன்றும்

வளநனி சுருங்கி வானம் வறந்தநாள் வௌ¤ற்றுக் கொண்மூக்

கிளர்வன பயனின் றாகிக் கேடுபட் டுடையு மாபோல்.                     37

 

மட்பகை வினைஞ ரானோர் வனைதரு கலங்கள் முற்றுந்

திட்பமொ டமர்ந்த கற்றுண் சேர்ந்துழிச் சிதறு மாபோல்

கொட்புறு புழைக்கை வெய்யோன் குறித்தெறி பிறங்கல் யாவும்

ஒட்பம தடைந்த வீரன் மிசைபட உடைந்த அன்றே.                      38

 

விறல்கெழு புயத்தி னான்மேல் விடுத்திடு கிரிகள் யாவும்

வறிதுபட் டிடலுங் காணா மால்கரி முகத்தன் நின்றான்

அறநெறி யொருவி மொய்ம்பால் ஆற்றிய வெறுக்கை யாவும்

பிறர்கொள வுகுத்தி யாதும் ஊதியம் பெறுகி லார்போல்.           39

 

கண்டுவிம் மிதத்த னாகிக் கயாசுரன் முனிந்தோர் தண்டந்

திண்டிறன் மொய்ம்பன் தன்மேற் செலுத்தலும் அதனைக் காணா

ஒண்டழல் புரையும் ஔ¢வாள் உறைகழித் தொல்லை வீழத்

துண்டம தாக்கி யன்னோன் எதிருறத் துன்ன லுற்றாள்.            40

 

மத்தவெங் கயமாந் தீயோன் வாகையந் தடந்தோள் அண்ணல்

மெய்த்தனி ஆற்றல் காணா விழுத்தகு பனைக்கை யோச்சிப்

பத்துநூ றான சாலப் பழுமரம் பறியா ஏந்தி

உய்த்திட ஒருதன் வாளால் ஒய்யெனச் சிந்தி ஆர்த்தான்.          41

 

காயெரி கலுழும் வெங்கட் கயாசுரன் விடுவான் பின்னுஞ்

சேயுயர் வரைபல் வேறு தெரிந்தனன் பறிக்கும் எல்லை

நாயகன் தூதன் காணா நாந்தகங் கொடுபோய் அன்னான்

ஆயிர மாகி யுள்ள புழைக்கையும் அறுத்தான் அன்றே.            42

 

அறுத்தலுங் கவன்று தீயோன் ஆயிரத் திரட்டி கையுஞ்

செறித்திவன் தன்னைப் பற்றித் திற்றியாக் கொள்வ னென்றே

குறித்தனன் வளைப்ப வாளாற் கொம்மென ஆற்றல் வீரன்

தறித்தனன் ஒருசார் வந்த ஆயிரந் தடக்கை முற்றும்.                    43

 

செற்றமால் கரியின் பேரோன் திண்கையா யிரமும் வீட்ட

மற்றையா யிரங்கை யாலும் வாகையஞ் செம்மல் மார்பின்

எற்றினான் எற்றும் எல்லை எல்லையில் வெகுளி யெய்தி

அற்றுவீழ்ந் திடவே வாளால் அவையெலாம் அடுதல் செய்தான்.   44

 

கொலைகெழு தறுகண் நால்வாய்க் குஞ்சர முகத்து வெய்யோன்

நிலைகெழு பாணி முற்றும் நீங்கியீ ரைந்து நூற்றுத் 

தலைகெழு நிலைமைத் தாகித் தண்சினை பலவுமல்கி

அலைகெழு வீழ்போய் உற்ற ஆலமே போல நின்றான்.            45

 

பாணிகள் இழந்து நின்ற பகட்டுடை வதனத் தீயோன்

நாணினன் இவனை அட்டு நம்முயிர் துறத்தும் என்னா

மாணறு மனத்திற் கொண்டு மற்றொழின் முன்னித் தோளால்

தாணுவின் கயிலை காப்போன் தடம்புயந் தாக்கி ஆர்த்தான்.               46

 

ஐயன தொற்றன் காணா ஆற்றலின் றாகி முற்றுங்

கையினை இழந்து நின்றான் கடுங்கதிர் வாளின் வெம்போர்

செய்யலன் இனியான் என்னாச் சிந்தைசெய் துறைவா ளோச்சி

ஒய்யென அவன்றன் மார்பின் உதைத்தனன் ஒருதன் தாளால்.     47

 

உதைத்திடு கின்ற காலை ஒல்லென அரற்றி வீழ்ந்து

மதத்தினை யுறுக போல மால்கரி முகத்து வெய்யோன்

பதைத்தனன் ஆவி சிந்திப் பட்டனன் பகிர்ந்த மார்பிற்

குதித்திடு சோரி நீத்தங் குரைகடற் போய தன்றே.                48

 

அவ்வியல் கண்டு பல்லோர் அவுணர்கள் நமரே ஈண்டு

தெவ்வியல் முறையின் நின்று செருவினை இழைப்பார் போலும்

இவ்விவர் ஆடற் கேது என்கொலோ அறிதும் என்றே

கவ்வையின் நெறிக டோறுங் காண்பது கருதிப் போந்தார்.         49

 

சென்றிடல் வீரன் காணாத் தீயரென் செய்கை நோக்கிற்

கன்றிவெஞ் சினமேற் கொண்டு கடுஞ்சமர் இழைப்பர் யானும்

நின்றமர் புரிதல் வேண்டும் நிலைமையீ தென்றால் அம்மா

இன்றொடு முடியுங் கொல்லோ இயற்றினும் இவர்போரென்றான்.   50

 

ஆரணந் தனக்குங் காணா ஆதியங் கடவுள் சொற்ற

பேரருண் மறந்தே இன்னே பீடிலார் தம்மோ டேற்றுப் 

போரினை யிழைத்து நிற்றல் புல்லிது புலமைத் தன்றால்

சூருறை மூதூர் தன்னில் துன்னுவன் கடிதின் என்றான்.            51

 

எப்பெரு வாயில் சார வேகினும் அங்கண் எல்லாங்

கைப்படை அவுணர் வௌ¢ளங் காவல்கொண் டுற்ற ஆற்றால்

தப்பினன் சேறல் ஒல்லா தமியன்இப் படிவத் தோடு

மெய்ப்பதி இதற்குச் செல்வன் வேற்றுரு வெய்தி யென்றான்.              52

 

கூற்றினை உறழும் வைவேற் குமரவேள் அருளால் ஈண்டோர்

வேற்றுரு வதனைக் கொண்டு வெய்யராம் அவுண வீரர்

போற்றுமிக் குணபால் வாய்தல் பொள்ளெனக் கடந்து பின்னர்

மாற்றலன் ஊரிற் செல்வன் என்றனன் வாகை மொய்ம்பன்.               53

 

நொய்யதோர் அணுவின் ஆற்ற நுணுகியும் மேன்மை தன்னில்

பொய்யில்சீர் பெருமைத் தாயும் பூரண மாகி வைகுஞ்

செய்யதோர் குமரன் பொற்றாள் சிந்தைசெய் தன்பிற் போற்றி

ஒய்யென அருளின் நீரால் ஓரணு வுருவங் கொண்டான்.           54

 

நுணுகுதன் னுணர்வே போல நோக்கருந் திறத்தால் தானோர்

அணுவுருக் கொண்டு வீரன் அடுகளம் அதனை நீங்கி

இணையறு குமரற் போற்றி எழுந்துவிண் படர்ந்து மூதூர்க்

குணதிசை வாய்தல் நின்ற போபுர மிசைக்கண் உற்றான்.          55

 

ஆகத் திருவிருத்தம் - 237

     - - -

 

 

8.  ந க ர் பு கு  ப ட ல ம்

 

அண்டம் யாவையும் எழுவகை யுயிர்த்தொகை யனைத்தும்

பிண்ட மாம்பொருள் முழுவதும் நல்கியெம் பெருமான்

பண்டு பாரித்த திறமென மகேந்திரப் பதியின்

மண்டு தொல்வளம் நோக்கியே இன்னன மதிப்பான்.                      1

 

எந்தை முன்னரே சூரபன் மாவினுக் கீந்த

முந்தும் அண்டங்கள் அலமரும் உவரிகள் முழுதும்

வந்து மொய்த்தன போலுமால் வரைபுரை காட்சிக்

கந்து பற்றியே ஆர்த்திடும் எல்லைதீர் கரிகள்.                            2

 

இயலும் ஐம்பெரு நிறத்தின்அண் டங்களின் இருந்த

புயலி னம்பல ஓ£¢வழித் தொக்கன பொருவ

மயிலி ருஞ்சரம் முயலொடு யூகமற் றொழிலைப்

பயில்ப ரித்தொகை அளப்பில வயின்றொறும பரவும்.                    3

 

அண்டம் ஆயிரத் தெட்டினுள மேதகும் அடல்மாத்

தண்ட மால்கரி  யாயின தடம்பெருந் தேர்கள்

எண்ட ரும்பொரு ளியாவுமீண் டிருந்தன இவற்றைக்

கண்டு தேர்ந்தனர் அல்லரோ அகிலமுங் கண்டோர்.                       4

 

இணையில் இவ்விடைத் தானையின் வௌ¢ளமோர் இலக்க

நணுகும் என்றனன் அந்தணன் நாற்பெரும் படையுங்

கணித மில்லன இருந்தன வௌ¢ளிகண் ணிலன்போல்

உணர்வி லன்கொலாங் கனகனுங் கேட்டசொல் லுரைத்தான்.       5

 

உரையின் மிக்கசூர் பெற்றஅண் டந்தொறும் உளவாம்

வரையின் மிக்கதேர் கடல்களின் மிக்கை மாக்கள்

திரையின் மிக்கவாம் பரித்தொகை ஆயிடைச் செறிந்த

பரவை நுண்மணல் தன்னினும் மிக்கன பதாதி.                   6

 

மணகொள் ஆயிரத் தெட்டெனும் அண்டத்தின் வளமும்

எண்கொள் எண்பதி னாயிரம் யோசனை யெல்லைக்

கண்கொள் பான்மைலு ஈண்டிய தற்புதங் கறைதோய்

புண்கொள் வேலுடைச் சூர்தவத் தடங்கிய போலாம்.                      7

 

உரைசெய் ஆயிரத் தெட்டெனும் அண்டத்தின் உளவாங்

கரையில் சீரெலாந் தொகுத்தனன் ஈண்டவை கண்டாந்

தருமம் மெய்யளி கண்டிலம் அவற்றையுந் தந்து

சுரர்கள் தம்முடன் சிறையிலிட் டான்கொலோ சூரன்.                      8

 

அரண்ட ருங்கழற் சூரன்வாழ் மகேந்திரம் அதனில்

திரண்ட பல்லியத் துழனியேழ் கடலினுந் தெழிப்ப

முரண்டி றத்தவை இயம்புவார் அளவையார் மொழிவார்

இரண்டு பத்துநு றியோசனை யுண்டவர் இடங்கள்.                9

 

கரிகள் சேவகம் ஒருபதி னாயிரம் கடுந்தேர்

விரியும் நீளிடை ஒருபதி னாயிரம் விசயப்

பரியின் எல்லையோர் இருபதி னாயிரம் பையத்

துருவின் இன்னமும் உண்டுகொல் யோசனைத் தொகையே.       10

 

இவுளி வாயினும் மால்கரிக் கரத்தினும் இழிந்து

திவளும் நீர்மைசால் விலாழியுந் தானமுஞ் செறிந்து

குவளை யுண்கணார் நீத்தசாந் தணிமலர் கொண்டே

உவள கந்தரும் அகழிசென் றகன்கடல் உறுமால்.                 11

 

வளமை மேதகும் இப்பெரு மகேந்திரம் வகுத்தன்

முளரி அண்ணலிங் கொருவனான் முடிந்திட வற்றோ

ஔ¤று வாட்படை அவுணர்கோ னுடையவண் டத்தின்

அளவி னான்முகர் யாரும்வந் திழைத்தன ராமால்.                       12

 

புரந்த ரன்றன் துலகமும் ஒழிந்த புத்தேளிர்

இருந்த வானமும் எண்டிசை நகரமும் யாவும்

வருந்தி இந்நகர் சமைத்திட முன்னரே வண்கை

திருந்த வேகொலாம் படைத்தனர் திசைமுகத் தலைவர்.           13

 

பொன்பு லப்படு துறக்கம்வான் மாதிரம் புவிகீழ்

துன்பில் போகமார் உலகென்பர் தொடுகடற் பெருமை

முன்பு காண்கலர் கோட்டகம் புகழ்தரு முறைபோல்

இன்பம் யாவையும் உளநகர் ஈதுபோ லியாதோ.                  14

 

கறைப டைத்ததாட் கரிபரி அவுணர்தேர்க் கணங்கள்

அறைப டைத்திவண் ஈண்டிய அண்டங்க ளனைத்தும்

முறைக டற்றொகை முழுவதுஞ் சூர்கொணர்ந் தொருங்கே

சிறைப டுத்திய போலும்வே றொன்றிலை செப்ப.                 15

 

ஐய பூழியும் ஆரகில் ஆவியும் ஆற்ற

நொய்ய வாகிய அணுக்களும் நுழைவா தென்னிற்

செய்ய இந்நகர் ஆவணம் எங்கணுஞ் செறிந்த

வெய்ய தேர்கரி அவுணர்தம் பெருமையார் விரிப்பார்.                     16

 

அள்ளல் வேலைசூழ் மகேந்திர புரிக்கிணை யாகத்

தௌ¢ளி தாவொரு நகருமின் றுளதெனச் செப்ப

எள்ள லின்றிய அண்டமோ ராயிரத் தெட்டின்

உள்ள சீரெலாம் ஈதுபோல் ஒருபுரத் துளதோ.                            17

 

கழிந்த சீர்த்திகொள் இந்நகர் தன்னிடைக் கஞல

வழிந்து தொல்லுரு மாழையின் மணிநிழ லாகி

இழிந்து ளான்பெறு திருவெனப் பயன்பெறா தெவர்க்கும்

ஒழிந்து வேலைகள் தம்புகழ் கொள்வதில் வுவரி.                 18

 

ஏற்கும் நேமிசூழ் மகேந்திர வெறுக்கை இவ்வுலகோர்

ஆர்க்கும் ஓர்பயன் பெற்றில துயிர்ப்பலி அருந்துங்

கார்க்கு ழாம்புரை அலகைசூழ காளிமந் திரத்திற்

சீர்க்கொள் கற்பகம் பிறர்க்குத வாதமர் செயல்போல்.                     19

 

மறக்கா டுந்தொழில் இரவியம் பகையழல் மடுப்பத்

துறக்க மாண்டது பட்டிமை யாகுமத் தொல்லூர்

சிறக்கும் இந்நகர் நோக்கியே தன்னலந் தேய்ந்து

பொறுக்க ரும்பெரு நாண்சுடக் கரிந்தது போலாம்.                20

 

துங்க மிக்கசூர் படைத்திடும் அண்டமாத் தொகையுட்

செங்க திர்த்தொகை ஆங்கவன் பணியினாற் சென்று

பொங்கு தண்சுடர் நடாத்திநின் றென்னவிப் புரியில்

எங்கு முற்றன செழுமணிச் சிகரம் எண்ணிலவே.                 21

 

மாணி லைப்படும் எழுவகை உலகின் வைப்பென்ன

வேணி லைப்பெருஞ் சிகரிகள் செறிந்தன யாண்டுங்

கோணி லைக்கதிர் உடுப்பிறர் பதங்களிற் குழுமி

நீணி லைத்தலம் பலவுள்ள மாடங்கள் நிரந்த.                           22

 

நூறி யோசனை சேண்படு நீட்சியும் நுவலும்

ஆறி யோசனைப் பரவையும் பெற்றஆ வணங்கள்

ஏறு தேர்பரி களிறுதா னவர்படை ஈண்டிச்

சேற லாயிடை அருமையால் விசும்பினுஞ் செல்லும்.                    23

 

அடல்மி குத்திடு தானவர் அகலிரு விசும்பிற்

கடிதி னிற்செல மத்திகை காட்டுமா றொப்ப

நெடுமு கிற்கணந் தழுவுசூ ளிகைமிசை நிறுவுங்

கொடிகள் எற்றிடப் போவன இரவிகொய் யுளைமா                24

 

மேலு லாவிய படிகமா ளிகைசில மின்னார்

மாலை தாழ்குழற் கிடுமகி லாவியான் மறைவ

சீல நீங்கிய அவுணர்தஞ் சீர்த்திகள் அனைத்தும்

மேல வேயவர் பவத்தினுள் ஒடுங்குமா றென்ன.                  25

 

அணிகு லாயகோ மேதகம் மரகதம் ஆரம்

துணியும் நீலம்வச் சிரம்வயி டூரியந் துப்பு

நணிய பங்கயம் புருடரா கம்மெனும் நவமா

மணிக ளாற்செய்து மிளிர்வன வரம்பில்பொன் மாடம்.                    26

 

இயல்ப டைத்தவெண் படிகத்தின் இயன்றமா ளிகைமேற்

புயல்ப டைத்திடு களிமயில் வதிந்திடப் புடையே

கயல்ப டைத்தகண் ணியர்புரி அகிற்புகை கலப்ப

முயல்ப டைத்திடு மதியினைச் சூழ்தரு முகில்பால்.                      27

 

வளனி யன்றிடு செம்மணிப் பளிங்குமா ளிகைமேல்

ஔ¤று பொற்றலத் தரிவையர் வடிமிசைந் துறுதல்

வெறிய சேயன பங்கயப் பொகுட்டின்மீ மிசையே

அளியி னங்கள்தேன் மாந்தியே வைகுமா றனைய.                       28

 

துய்ய வாலரி புனற்கிறை மண்ணியே தொகுப்பச்

செய்ய தீயவன் ஊன்களோ டவைபதஞ் செய்ய

மையன் மாதரோ டவுணர்கள் அரம்பையர் வழங்க

நெய்யளா வுண்டி உண்குவர் மறுசிகை நீக்கி.                            29

 

துப்பு றுத்த குஞ்சியங் காளையர் தொகையுஞ்

செப்பு றுத்துசீ றடிமினார் பண்ணையுஞ் செறிந்து

மெய்ப்பு றத்தியல் காட்சியுங் கலவியும் வெறுப்பும்

எப்பு றத்தினும் நிகழவன மதனுல கிதுவே.                              30

 

பூணும் ஆரமுங் கலாபமும் இழைகளும பொன்செய்

நாணும் ஒற்றராற் பரத்தையர் பாற்பட நல்கிப்

பேணி மற்றவர் விலக்கின நயந்தன பிறவும்

மாணு மைந்தர்கள் தேறுவான் ஆறுபார்த் தயர்வார்.                      31

 

துன்று தானவர் தெரியலின் மாதர்பூந தொடையின்

மன்றல் மாளிகைச் சோலையின் இலஞ்சியின் மலரிற்

குன்ற மால்கரித் தண்டத்தில் யாழ்முரல் குழுவிற்

சென்று சென்றன துணர்வுபோல் அளிகளுந் திரியும்.                      32

 

மாறி லாதசூர் ஆணையால் வந்திடும் வசந்தன்

ஊறு தெண்கடல் அளவியே தண்டலை யுலவி

வீறு மாளிகை நூழையின் இடந்தொறும் மெல்லத்

தேறல் வாய்மடுத் தோரென அசைந்துசென் றிடுமால்.             33

 

மாட மீதமர் மடந்தையர் தம்முரு வனப்புக்

கூட வேபுனைந் தணிநிழற் காண்பது குறித்துப்

பாடு சேர்கரம் நீட்டியே பகலவற் பற்றி

ஆடி நீர்மையின் நோக்கியே அந்தரத் தெறிவார்.                  34

 

வன்ன மாடமேல் ஆடவர் பரத்தமை மகளிர்

உன்னி யூடியே பங்கியீர்த் தடிகளால் உதைப்பப்

பொன்னின் நாணறத் தமதுகை எழிலியுட் போக்கி

மின்னு வாங்கியே ஆர்த்தனர் குஞ்சியை வீக்கி.                   35

 

முழங்கு வானதி தோய்ந்தசின் மாளிகை முகட்டின்

அழுங்கல் என்பதை உணர்கிலா மாதரார் அகல்வான்

வழங்கு கோளுடன் உருமினைப் பற்றியம் மனையுங்

கழங்கு மாயெறிந் தாடுவர் அலமரக் கண்கள்.                    36

 

ஈண்டை மாளிகை மங்கையர் தஞ்சிறார் இரங்க

ஆண்டு மற்றவர் ஆடுவான் பற்றியா தவன்தேர்

பூண்ட மான்தொகை கொடுத்தலும் ஆங்வன் போந்து

வேண்டி நின்றிட வாங்கியே உதவுவார் மெல்ல.                  37

 

நீடு மாளிகை மிசைவரு மாதர்கை நீட்டி

ஈடு சாலுரும் ஏறுடன் மின்பிடித் திசைத்தே

ஆடு கிங்கிணி மாலையாம் மைந்தருக் கணியா

ஓடு கொண்டலைச் சிறுதுகி லாப்புனைந் துகப்பார்.                38

 

பொங்கு மாமணி மேற்றலத் திரவிபோந் திடலும்

இங்கி தோர்கனி யெனச்சிறார் அவன்றனை யெட்டி

அங்கை பற்றியே கறித்தழல் உறைப்பவிட் டழுங்கக்

கங்கை வாரிநீர் ஊட்டுவார் கண்டநற் றாயர்.                             39

 

கண்டு வந்தனை வரும்புகழ் தஞ்சிறார் கலுழ

விண்டு வந்தனை செய்தெனத் தாழந்தமேல் நிலத்தில்

வண்டு வந்தனைப் படுகதிர்க் கைம்மலர் வலிந்து

கொண்டு வந்தனை மார்இரங் காவகை கொடுப்பார்.                       40

 

அஞ்சி லோதியர் மாளிகை மிசைச்சிலர் அகல்வான்

விஞ்சு தேவரை விளித்தலும் மெய்யுறன் மறுப்ப

வஞ்சர் வஞ்சரென் றரற்றியவ் வானவர் இசைய

நஞ்சி றாருடன் ஆடுதும் என்பர்நண் ணினா¢க்கு.                 41

 

பொருளில் மாளிகைப் படிற்றியர் புணர்வரென் றுன்னி

வரவு மஞ்சுவர் வராமையும் அஞ்சுவர் மடவார்

கரவின் மேவுதல் அவுணர்கள் காண்பர்கொ லென்றும்

வெருவு கின்றனர் என்செய்வார் விண்ணெறிப் படர்வார்.           42

 

மேனி லந்தனின் மங்கையர் சிறார்விடா திரங்க

ஊன மில்கதிர் தேர்வர அவரையாண் டுய்த்து

வான கந்தனிற் சில்லிடை யேகிநம் மகவைப்

பானு வந்துநீ தருகென விடுக்குநர் பலரால்.                             43

 

கலதி யாகிய அவுணர்தம் மாதர்கால் வருடிச்

சிலதி யாரென வணங்கினோர் ஏவல்செய் கிற்பார்

சலதி யார்தரும் உலகமேல் தெரிகுறில் தவமே

அலதி யாவுள வேண்டியாங் குதவநின் றனவே.                  44

 

ஐந்த வாகிய தருக்களும் மணியுநல் லாவும்

நந்தும் அம்புய நிதியமும் பிறவும்இந் நகரின்

மைந்தர் மாதர்கள் இருந்துழி யிருந்துழி வந்து

சிந்தை தன்னிடை வேண்டியாங் குதவியே திரியும்.                      45

 

மீது போகிய மாளிகைக் காப்பினுள் மேவும்

மாதர் வானெறிச் செல்லுவோர் சிலர்தமை வலித்தே

காத லாற்பிடித் தொருசிலர் முறைமுறை கலந்து

போதி ராலென விடுப்பர்பின் அசமுகி போல்வார்.                 46

 

வேறு

 

மேதாவி கொண்டகதிர் வெய்யவனை வெஞ்சூர்

சேய்தான் வலிந்துசிறை செய்திடலின் முன்ன

மேதாமி னங்கொலென எண்ணிஅவன் என்றூழ்

வாதாய னங்கடொறும் வந்துபுக லின்றே.                        47

 

தேசுற்ற மாடமுறை சீப்பவரு காலோன்

வாசப்பு னற்கலவை வார்புணரி கொண்கன்

வீசப்பு லர்த்தியிட விண்படரும் வெய்யோன்

ஆசுற்ற தானவர் அமர்ந்திவண் இருந்தார்.                       48

 

பால்கொண்ட தெண்கடல் மிசைப்பதுமை தன்னை

மால்கொண்டு கண்டுயிலும் வண்ணமிது வென்ன

மேல்கொண்ட நுண்பளித மேனிலம் தன்கட்

சூல்கொண்ட காரெழிலி மின்னினொடு துஞ்சும்.                   49

 

வேறு

 

குழலின் ஓதையும் எழால்களில் ஓதையுங் குறிக்கும்

வழுவில் கோட்டொடு காகள ஓதையும் மற்றை

முழவின் ஓதையும் பாடுநர் ஓதையும் முடிவில்

விழவின் ஓதையுந் தெண்டிரை ஓதையின் மிகுமால்.                     50

 

மதனி ழுக்குறு மைந்தரும் மாதரும் வனமா

மதனி ழுக்கிய வீதியில் வீசும்வண் கலவை

பதனி ழுக்குறச் சேதக மாகுமீன் பலவும்

பதனி ழுக்கிய வாந்தினம் புனைந்தெறி பணிகள்.                  51

 

அளப்பில் வேட்கையங் கொருவர்கண் வைத்துமற் றதனை

வௌ¤ப்ப டுக்கிலர் மெலிதலுங் குறிகளே விளம்ப

ஔ¤ப்ப தென்னுளம் பகரென ஆற்றலா துடைந்து

கிளிப்பெ டைக்கிருந் தொருசில மடந்தையர் கிளப்பார்.            52

 

குருளை மான்பிணித் திளஞ்சிறார் ஊர்ந்திடுங் கொடித்தேர்

உருளை ஒண்பொனை மணித்தலங் கவர்ந்துகொண் டுறுவ

வெருளின் மாக்களை வெறுப்பதென் முனிவரும் விழைவார்

பொருளின் ஆசையை நீங்கினர் யாவரே புவியில்.                53

 

விழைவு மாற்றிய தவத்தின ரேனுமிவ் வெறுக்கை

மொழியி னோரினும் அவுணரா கத்தவம் முயல்வார்

ஒழியும் ஏனையர் செய்கையை யுரைப்பதென் னுலகிற்

கழிபெ ரும்பகல் நோற்றவ ரேயிது காண்பார்.                            54

 

குழவி வான்மதிக் கிம்புரி மருப்புடைக் கொண்மூ

விழுமெ னச்சொரி தானநீ ராறுபோ லேகி

மழலை மென்சிறார் ஆவணத் தாடும்வண் சுண்ணப்

புழுதி ஈண்டலின் வறப்பவான் கங்கையும் புலர.                  55

 

கங்கை யூண்பய னாகவுந் தூயதெண் கடல்நீர்

அங்கண் மாநகர்ப் பரிசனம் ஆடவும் அணைந்து

துங்க மேனிலை மாளிகை ஆவணஞ் சோலை

எங்கும் வாவியும் பொய்கையும் பிறவுமாய் ஈண்டும்.                    56

 

வில்லி யற்றுவோர் வாட்படை இயற்றுவோர் வேறாம்

எல்லை யில்படை உள்ளவும் இயற்றுவோர் இகலான்

மல்லி யற்றுவேரா¢ மாயம தியற்றுவோர் மனுவின்

சொல்லி யற்றுவோர் கண்ணுறு புலந்தொறுந் தொகுமால்.         57

 

நாடி மேலெழத் தசையிலா துலறியே நரையாய்க்

கோடு பற்றிமூத் தசைந்திடு வோரையுங் கூற்றால்

வீடு வோரையும் பிணியுழப் போரையும் மிடியால்

வாடு வோரையுங் கண்டிலம் இதுதவ வலியே.                           58

 

கன்னல் மாண்பயன் வாலளை செய்கடுந் தேறல்

துன்னு தீயபால் அளக்கர்தம் பேருருச் சுருக்கி

மன்னன் ஆணையால் இந்நகர் மனைதொறும் மருவிப்

பன்னெ டுங்குள னாகியே தனித்தனி பயில்வ.                    59

 

அட்ட தேறலும் அடாதமை தேறலும் அருந்திப்

பட்டு வார்துகில் கீறியே தம்மொடு மறைந்து

விட்ட நாணினோர் ஒருசில மடந்தையர் வியன்கை

கொட்டி யாவரும் விழைவுறக் குரவையாட் டயர்வார்.                    60

 

திலக வாணுதல் மாதரா டவர்சிறு வரையின்

அலகி லாமுறை புனைதலின் அணிந்தணிந் தகற்றும்

இலகு பூண்டுகின் மாலைகந் தம்பிற ஈண்டி

உலகில் விண்ணக ரெனச்சிறந் தாவண முறுமே.                 61

 

கொய்த லர்ந்தபூ நித்தில மணியுடன் கொழித்துப்

பொய்த லாடுவார் முற்றிலால் எற்றுபொற் பூழி

எய்த லானதிந் நகரள வோகடல் இகந்து

நெய்த லங்கரைக் கானலை அடைந்துமேல் நிமிரும்.                      62

 

சுந்த ரங்கெழு செய்யவெண் மலர்களால் தொடுத்த

கந்து கங்களைச் சிறுவர்கள் கரங்களின் ஏந்தி

அந்த ரம்புக எறிதலும் ஆங்ஙன மேகி

வந்து வீழுமால் இருகதிர் வழுக்கிவீழ் வனபோல்.                63

 

கழக மீதுமுன் போந்திட முதுகணக் காயர்

குழகு மென்சிறார் தனித்தனி வந்தனர் குறுகிப்

பழகு கற்பினூல் பயின்றனர் மாலையிற் பட்ட 

அழகு சேர்மதிப் பின்னெழு கணங்கள்மொய்த் தனையார்.          64

 

கள்ளின் ஆற்றலாற் களிப்பவர் தேறலைக் கரத்திற்

கிள்ளை ஆணினுக் கூட்டியே காமநோய் கிளர்த்தி

உள்ள மோடிய சேவலும் இரங்க ஓதிமத்துப்

புள்ளின் மென்பெடை மீமிசை கலந்திடப் புணர்ப்பார்.                     65

 

உரத்தின் முன்னரே வௌவிவந் தீட்டிய வும்பர்

சிரத்தின் மாமுடித் திருமணி பறித்தொரு சிலவர்

அரத்த மேயதம் பங்கியிற் பஞ்சிகள் அழுத்தும்

பரத்தை மாரடிப் பாதுகை கணிபெறப் பதிப்பார்.                   66

 

தேவி மார்பலர் வருந்தவும் அனையர்பாற் சேரார்

ஆவி போவது நினைகில ராகியே அயலார்

பாவை மார்தமை வெ•கியே பட்டிமை நெறியான்

மேவு வார்சிலர் காண்பதே இதுவுமென் விழியே.                 67

 

நெருக்கு பூண்முலை இயக்கர்தம் மங்கையர் நெஞ்சம்

உருக்கு மேருடை அமரர்தம் மங்கையர் உளத்தின்

இரக்கம் நீங்கிய அவுணர்தம் மங்கையர் ஏனை

அரக்கர் மங்கையர் கணிகைமங் கையர்களாய் அமர்வார்.          68

 

கந்த மானபல் களபமுஞ் சுண்ணமுங் கமழும்

பந்து மாலையுஞ் சிவிறிநீ ரொடுபரத் தையர்கள்

மைந்த ரோடெறிந் தாடல்யா ருளத்தையும் மயக்கும்

இந்த வீதிகொல் லுருவுகொண் டநங்கன்வீற் றிருத்தல்.            69

 

பொன்னின் அன்னமும் பதுமரா கம்புரை புறவுஞ்

செந்ந லங்கிளர் அஞ்ஞையுஞ் சாரிகைத் திறனும்

பன்னி றங்கெழு புள்ளினம் இனையன பலவும்

இன்ன தொன்னகர் மங்கையர் கரந்தொறும் இருப்ப.                       70

 

பண்டு வேட்டவர் பின்முறைப் பாவையர் பரிவிற்

கண்டு பின்வரை மங்கையர் கானம தியற்றிக்

கொண்ட இல்வழிப் பரத்தையர் கணிகையர் குழாத்துள்

வண்டு பூவுறு தன்மைசென் றாடவர் மணப்பார்.                  71

 

தக்க மெல்லடிப் பரிபுரம் முழுவுறத் தனமா

மிக்க தாளங்கள் ஒத்தமென் புள்ளிசை விரவ

இக்கு வேளவை காணிய பூந்துகில் எழினி

பக்க நீக்கியே மைந்தரோ டாடுவார் பலரே.                              72

 

பாட்ட மைந்திடு காளையர் அணிநலம் பாரா

வேட்டு மங்கையர் ஒருசிலர் தமதுமெய் விளர்ப்பக்

கூட்ட முன்னியே பன்னிறக் கலவையுங் குழைத்துத்

தீட்டு வாரவர் உருவினை வியன்கிழி திருத்தி.                           73

 

சுற்று விட்டலர் தாருடை வயவர்தொல் லுருவிற்

பற்று விட்டுடன் உளத்தையும் விட்டுமென் பார்ப்பைப்

பெற்று விட்டிலாப் பெடைமயில் தழீஇத்துயர் பேசி

ஒற்று விட்டனர் ஒருசிலர் ஆறுபார்த் துழல்வார்.                 74

 

அகன்ற கொண்கரை நனவின்எக் காலமும் அகத்தில்

புகன்று மட்டித்த வெம்முலைச் சாந்தொடும் புலர்வார்

பகன்றை போல்முரல் சிலம்படிப் பாவையர் பல்லோர்

முகன்த னில்கரு மணிகளிற் சொரிதர முத்தம்.                  75

 

மங்கை மார்சிலர் ஆடவர் தம்மொடு மாடத்

துங்க மேனிலத் திடைப்படு சேக்கையில் துன்னி

வெங்கண் மெல்லிதழ் வேறுபட் டணிமுகம் வியர்ப்பக்

கங்குல் ஒண்பகல் உணர்கிலர் விழைவொடு கலப்பார்.            76

 

மறிகொள் சோரிநீர் பலியுட நோக்கிநாண் மலர்தூய்

இறைகொள் இல்லிடைத் தெய்வதம் வழிபடல் இயற்றிப்

பறைகள் தங்கஅக் கடவுளை ஆற்றுறப் படுத்தி

வெறிய யர்ந்துநின் றாடுவர் அளப்பிலர் மின்னார்.                 77

 

அலங்கல் வேல்விழி மாதரும் மைந்தரும் அமர்ந்த

பொலங்கொள் மாடமேல் ஆடுறு பெருங்கொடி பொலிவ

மலங்கு சூழ்தரு தெண்டிரைப் புணரியில் வைகுங்

கலங்கள் மேவிய கூம்பெனக் காட்டிய அன்றே.                   78

 

புரசை வெங்கரி புரவிதேர் பொருபடைத் தலைவர்

பரிச னங்களா தோரணர் வாதுவர் பரவ

முரச மேமுதல் இயமெலாம் முன்னரே முழங்க

அரச வேழமா எண்ணில கோயில்வந்த தடைவ.                 79

 

கள்ளு றைத்திடு மாலையம் பங்கியர் கமஞ்சூல்

வள்ளு றைப்புயன் மேனியர் ஒருசிலர் வார்வில்

ஔ¢ளு றைப்படை பிறவினிற் கவரிதூங் குறுத்துத்

தள்ளு தற்கரும் வயமுர சறையமுன் சார்வார்.                          80

 

அறுகு வெம்புலி வலியுடை மடங்கல்மான் ஆமாச்

சிறுகு கண்ணுடைக் கரிமரை இரலையித் திறத்திற்

குறுகு மாக்களைப் படுத்தவற் றூன்வகைக் குவால்கள்

மறுகு ளார்பெறப் பண்டிகொண் டளப்பிலோர் வருவார்.            81

 

மஞ்சு லாவரு சிகரியுஞ் சூளிகை வரைப்பும்

விஞ்சு மேனில அடுக்கமுஞ் சோலையும் வெற்புஞ்

சஞ்ச ரீகமார் ஓடையும் வாவியுந் தடமும்

எஞ்சல் இல்லதோர் மாடங்கள் எங்கணு முளவே.                 82

 

எற்றி முன்செலும் முரசினர் கம்மியர் எல்லில்

பற்று தீபிகைச் சுடரினர் மாலைதாழ் படையர்

ஒற்றை முக்குடை இருபுடைக் கவரியர் உலப்பில்

கொற்ற வீரர்ஈண் டளப்பிலோர் வந்தனர் குலவி.                 83

 

மண்ப டைத்திடு தவமெனும் மகேந்திர மலிசேர்

எண்ப டைத்தகண் ணிரண்டினர் காணுதல் எளிதோ

விண்ப டைத்தவற் காயினும் அமையுமோ மிகவுங்

கண்ப டைத்தவர்க் கன்றியே கண்டிட லாமோ.                    84

 

வரம்பில் கட்புலங் கொண்டவ ரேனுமற் றிவ்வூர்

விரும்பி இத்திரு நோக்கினும் அளத்தல்மே வருமோ

வரும்பு யற்குழு வைகலும் பருகினு இதனாற்

பெரும்பு னற்கட லானது முடிவுபெற் றிடுமோ.                           85

 

கழியும் இந்நகர் ஆக்கமோ கரையிலா இவற்றுள்

விழிகள் எண்ணில பெற்றுளார் தாங்கண்ட வெறுக்கை

மொழிவர் என்னினும் நாவதொன் றான்முடிந் திடுமோ

அழிவில் ஆயிர கோடிநாப் பெறுவரேல் அறைவார்.                      86

 

வாழ்வின் மேதகு மகேந்திரப் பெருமித வளத்தைத்

தாழ்வி லாநெறி கண்டனர் தாலுஎண் ணிலவால்

சூழ்வின் நாடியே பகரினும் மெய்யெலாந் துதையக்

கேள்வி மூலங்கள் இல்லவர் எங்ஙனங் கேட்பார்.                 87

 

ஆயி ரம்பதி னாயிரங் கோடிநா அளவில்

ஆயி ரம்விழி ஆயிரம் ஆயிரஞ் செவிகள்

ஆயி ரம்புந்தி கொண்டுளார்க் கல்லதிவ் வகன்சீர்

ஆயி ரம்யுகங் கண்டுதேர்ந் துரைப்பினும் அடங்கா.                       88

 

பொய்த்தல் இன்றியே இந்நகர்த் திருவைஐம் புலத்துந்

துய்த்தல் முன்னியே விழைந்துகொல் நோற்றிடுந் தொடா¢பால்

பத்து நூறுடன் ஆயிரங் கோடியாப் பகரும்

இத்தொ கைச்சிரங் கொண்டனர் ஈண்டுளார் எவரும்.              89

 

முன்ன வர்க்குமுன் னாகிய அறுமுக முதல்வன்*

தன்ன ருட்டிறத் தொல்லையில் பேருருச் சமைந்தே

இந்ந கர்த்திரு யாவையுங் காண்குவன் இன்னே

ஒன்ன லர்க்கெனைக் காட்டுதல் தகாதென ஒழிந்தேன்.             90

 

( * வீரவாகு தேவர் சண்முகக் கடவுளின் திருவருட்டிறத்தால் எதுவும்

  நடத்துபவரே அன்றித் தனக்கென்று ஒரு சுதந்தரமும் இல்லாதவர் என்-

  பார், “முன்னவர்க்கு முன்னாகிய அறுமுக முதல்வன்” என்றார்.)

 

இனைத்த வாகிய பெருவளம் எல்லையின் றிவற்றை

மனத்தில் நாடினும் பற்பகல் செல்லுமால் மனக்கு

நுனித்து நன்றுநன் றாய்ந்திவை முழுவதும் நோக்க

நினைத்து ளேன்எனின் இங்கிது பொழுதினில் நிரம்பா.             91

 

அம்பு யாசனன் தௌ¤கிலா அருமறை முதலைக்

கும்ப மாமுனிக் குதவியே மெய்யருள் கொடுத்த

வெம்பி ரான்பணி புரிகிலா திந்நகர் இருஞ்சீர்

நம்பி நாடியே தெரிந்துபா ணிப்பது நலனோ.                             92

 

என்று முன்னியே அறுமுகன் தூதுவன் இமயக்

குன்றம் அன்னகீழத் திசைமுதற் கோபுரக் குடுமி

நின்று மாநகர் வளஞ்சில நோக்கியே நெடுஞ்சீர்

துன்று சூருறை திருநகர் அடைவது துணிந்தான்.                 93

 

வனைந்த மாளிகை ஔ¤யினில் இடைப்படு மறுகில்

கனைந்து செற்றியே பரிசனம் பரவுதல் காணா

நினைந்த சூழ்ச்சியான் கீழ்த்திசைச் சிகரியை நீங்கி

நனந்த லைப்பட நகரத்து விண்ணிடை நடந்தான்.                94

 

வான மாநெறி நீங்கியே மறைகளின் துணிபாம்

ஞான நாயக அறுமுகன் அருள்கொடு நடந்து 

தூநி லாவுமிழ் எயிறுடைச் சூர்முதற் சுதனாம்

பானு கோபன துறையுளை எய்தினன் பார்த்தான்.                 95

 

பாய்ந்து செஞ்சுடர்ப் பரிதியைப் பற்றினோன் உறையுள்

ஏந்தல் காணுறீஇ விம்மிதப் பட்டவண் இகந்து

காந்து கண்ணுடை அங்கிமா முகன்நகர் கடந்து

சேந்த மெய்யுடை ஆடகன் உறையுளுந் தீர்ந்தான்.                96

 

உச்சி யையிரண் டிருபது கரதல் முடைய 

வச்சி ரப்பெரு மொய்ம்பினோன் மாளிகை வரைப்பும்

அச்செ னத்தணந் தேகிமூ வாயிரர் ஆகும்

எச்சம் எய்திய மைந்தர்தம் இருக்கையும் இகந்தான்.                      97

 

உரிய மந்திரத் துணைவரில் தலைமைபெற் றுறையுந்

தரும கோபன்றன் கடிமனைச் சிகரமேல் தங்கிச்

சுரரும் வாசவன் மதலையும் அவுணர்கள் சுற்றப்

பரிவு கொண்டமர் சிறைக்களம் நாடியே பார்த்தான்.                       98

 

கறைய டித்தொகை பிரிதலும் கயமுனி* கவர்ந்து

மறையி டத்தினில் வேட்டுவர் உய்ப்பவை குவபோல்

பொறையு டைத்துயர் இந்திரன் போந்தபின் புல்லார்

சிறையி லுற்றவர் செய்கையிற் சிறிதுரை செய்வாம்.                     99

 

( * கயமுனி - யானைக் கன்று.)

 

ஆகத் திருவிருத்தம் - 336

     - - -

 

 

9.  ச ய ந் த ன்  பு ல ம் பு று  ப ட ல ம்

 

பரஞ்சுடர் நெடுங்கணை படுத்த பாயலில்

வருஞ்சசி அனையதோர் வாணு தற்சசி

தருஞ்சிறு குமரனாஞ் சயந்தன் அவ்விடை

அருஞ்சிறை இருந்தனன் அமரர் தம்மொடும்.                     1

 

வாலிதாம் அமரர்சூழ் வைப்பில் இந்திரன்

கோலமா கியதனிக் குமரன் வைகுதல்

மேலைநாள் அமுதெழும் வேலை தன்னிடை

நீலமா முகிலுறை நீர்மை போலுமே.                            2

 

மழைபுரை அவுணர்சூழ் வைப்பில் வாலொளி

தழுவிய அமரருட் சயந்தன் மேயினான்

கழதரு பணிபல கவரச் சோர்தரும்

முழுமதி அதனிடை முயலுற் றென்னவே.                       3

 

வென்றிவில் லியற்றிய விஞ்சை நீர்மையால்

கன்றிய கரமெனக் காவற் சாலையில்

பொன்றிகழ் வல்லிகள் பூண்டு பற்பகல்

தன்றுணைத் தாள்களில் தழும்பு சேர்ந்துளான்.            4

 

இயற்படு மானமும் இகலும் நாணமும்

அயற்பட வெம்பழி அனலஞ் சுற்றிட

உயிர்ப்பெனும் ஓதைநின் றுயிர லைத்திடத்

துயர்ப்பெரும் பரவையூ டழுந்திச் சோருவான்.                    5

 

அண்டருஞ் சிறையினால் வீடும் அல்லதேல்

எண்டரு முகம்பல இடருண் மூழ்கலின்

மண்டுதொல் பழியற வலிது துஞ்சுமால்

 உண்டநல் லமுதினால் அவையொ ழிந்துளான்.          6

 

தணிப்பரும் வெஞ்சினத் தகுவர் மன்னவன்

பணிப்படு சிறைக்களம் பட்டுத் தம்முடல்

துணிப்புறு வோரெனத் துயர்கொண் டோர்கணங்

கணிப்பரு முகங்களாக் கழித்து வைகுவான்.                     7

 

தேவியல் மரகதந் தௌ¤த்துத் தீட்டிய

ஓவிய உருவமா சுண்ட தன்மையான்

ஆவியம் புனலறா தமருங் காவியம்

பூவியல் ¦னிறொடை புலர்ந்த தேயனான்.                8

 

வியலுகம் நூறுடன் மிக்க வெட்டினுள்

இயலுறு சிறுவரை எனினுந் துஞ்சுமேல்

மயல்சிறி தகலுமால் மரபின் வைகலுந்

துயில்கிலன் ஆதலால் அறாத துன்பினான்.                      9

 

நெஞ்சழி துன்பிடை நீட வைகலில்

துஞ்சலன் வலிதுயிர் துறப்பு மாற்றலன்

எஞ்சுமோ ரிறைவரை இமையுங் கூட்டலன்

விஞ்சிய தவந்துயர் விளைக்கு மாங்கொலோ.                    10

 

இலங்கிய மரகதத் தியன்று பொன்குலாய்

நலங்கிளர் தன்வனப் பிழந்து நாடொறுஞ்

சலங்கெழும் அவுணர்கள்தமைக்கண் டஞ்சியே

கலங்கினன் உய்வகை யாதுங் காண்கிலான்.                      11

 

சுந்தர மரகதத் தனது தொல்லுரு

வெந்துயர் உழத்தலின் வெய்து யிர்ப்பென

வந்தெழு புகைபட மறைந்து கட்புனல்

சிந்திட உடனுடன் திகழத் தோன்றுமால்.                 12

 

முழுதுறு தன்றுயர் முன்னி முன்னியே

இழுதையர் அவுணரும் இரங்க ஏங்குறா

அழுதிடுங் காப்பினோர் அச்சஞ் செய்தலும்

பழுதுகொல் என்றுவாய் பொத்தும் பாணியால்.           13

 

இந்திரன் சசியொடும் இருந்த சூழல்போய்த்

தந்தனர் பற்றினர் தமரெ னச்சிலர்

முந்துறு காவலோர் மொழிந்த பொய்யுரை

அந்தம தடையுமுன் அயர்ந்து வீழுமே.                          14

 

ஐந்தரு நீழலை நினைக்கும் ஆய்மலர்

தந்தமென் பள்ளியை உன்னும் தானெனப்

புந்திகொள் மங்கையர் புணர்ப்பை யுட்கொளும்

இந்திரப் பெருவளம் எண்ணிச் சோருமே.                15

 

தன்னிணை இல்லதோர் தருவின் நீழலுள்

நன்னலந் துய்த்தியாம் நாளும் இன்புறும்

பொன்னகர் பூழியாய்ப் போங்கொ லோவெனா

உன்னிடுந் தொன்மைபோல் உறுவ தென்றெனும்.         16

 

ஈண்டையில் அவுணர்கோன் ஏவத் தானைகள்

சேண்டொடர் துறக்கமேற் செல்ல நாடியே

காண்டகு தம்முருக் கரந்து போயினார்

யாண்டைய ரோவெமை ஈன்று ளாரெனும்.                       17

 

ஏயின துறக்கநா டிழிந்து தொல்லைநாள்

தாயொடு பயந்துள தந்தை பாரகம்

போயினன் எனச்சிலர் புகலக் கேட்டனன்

ஆயிடைப் புகுந்தன அறிகி லேனெனும்.                  18

 

அண்டர்கள் ஒருசிலர் அயர்வு கூறவுட்

கொண்டனர் ஏகினர் குறுகி எந்தையைக்

கண்டன ரேகொலோ கலந்துளார் கொலோ

விண்டன ரேகொலோ விளைவெ னோவெனும்.           19

 

சீரகம் மிக்கசூர் செயிர்த்துச் செய்திடும்

ஆகுல முழுவதும் அறைய அம்மையோர்

பாகம துடையநம் பரமன் மால்வரைக்

கேகின னேகொலோ எந்தை யென்றிடும்.                 20

 

பொருந்தலர் கண்ணுறாப் பொருட்டுத் தம்முருக்

கரந்தன ரோவழீஇக் குரவர் கள்வர்பால்

பொருந்தின ரேகொலோ புவனம் எங்குமாய்த்

திரிந்தன ரேகொலோ தௌ¤கி லேனெனும்.                      21

 

மாண்கிளர் சூரபன் மாவின் ஏவலால்

ஏண்கிளர் அவுணர்கள் யாயைத் தந்தையை

நாண்கொடு பிணித்திவண் நல்கப் போயினார்

காண்கில ரேகொலோ கரந்த வாறெனும்.                 22

 

அன்புடை யம்மனை அத்தன் ஈங்கிவர்

வன்புடை அவுணர்கள் வரவு காண்பரேல்

துன்புடை மனத்தராய்த் துளங்கி ஏங்கியே

என்படு வார்கொலோ அறிகி லேனெனும்.                23

 

பொன்னகர் கரிந்ததும் புதல்வ னாகுமென்

றன்னையிம் முதுநகர்த் தந்து தானவர்

துன்னருஞ சிறையிடு துயருங் கேட்டபின்

என்னினைந் திரங்குமோ ஈன்ற தாயெனும்.                       24

 

பன்னெடு மாயைகள் பயின்ற தானவர்

அன்னையொ டத்தனை ஆய்ந்து பற்றியென்

முன்னுறக் காண்டகு முறையின் உய்ப்பினும்

என்னுயிர் பின்னரும் இருக்குங் கொல்லெனும்.           25

 

ஆற்றருஞ் செல்லலுள் அழுந்தும் பான்மையான்

மேற்றிகழ் பரஞ்சுடர் விமலற் போற்றியே

நோற்றனர் முத்தியின் நுழைகுற் றார்கொலோ

பேற்றினர் இருந்தசொற் பிறந்த தில்லெனும்.                     26

 

தீங்கதிர்ப் பகையொடு செருமு யன்றநாள்

தாங்கியெற் கொண்டுழித் தந்தம் இற்றிட

ஆங்கனம் வீழ்ந்ததால் அதற்கு மேற்பட

யாங்குசென் றதுகொலோ யானை என்றிடும்.                     27

 

பிறப்புறு வைகலைத் தொட்டுப் பின்னரே

இறப்புறு நாள்வரை யாவர்க் காயினும்

உறப்படு துய்ப்பெலாம் ஊழின் ஊற்றமால்

வெறுப்பதென் அவுணரை வினையி னேனெனும்.         28

 

தாவறு தொன்னகர் விளியத் தந்தைதாய்

ஆவியொ டிரிந்திட அளிய னோர்மகன்

வீவருஞ் சிறைப்பட மேலை நாட்புரி

தீவினை யாவதோ தௌ¤கி லேனெனும்.                29

 

துப்புறழ சடையினான் சூரற் கீறிலா

அப்பெரு வரத்தினை அளித்த லாலவன்

மெய்ப்பட விளிகிலன் வீடுஞ் செய்கிலன்

எப்பொழு திச்சிறை தீரும் என்றிடும்.                            30

 

மட்டறு வெறுக்கையும் நகரும் வாழ்க்கையும்

விட்டனர் கடந்தனர் மேலை யோரென

உட்டௌ¤ந் தகன்றிலன் உவர்பி ணித்திடப்

பட்டன னேகொலோ பாவி யேனெனும்.                  31

 

மாற்றலன் இவ்வுயிர் வசையு றாவகை

போற்றலன் குரவர்பாற் புகுந்த புன்கணைத்

தேற்றலன் தமியனுந் தௌ¤கி லன்சறை

ஆற்றலன் ஆற்ற லனைய கோவெனும்.                 32

 

துறந்ததோ பேரறந் தொலையுந் தீப்பவஞ்

சிறந்ததோ மாதவப் பயனுந் தேய்ந்ததோ

குறைந்ததோ நன்னெறி கூடிற் றோகலி

இறந்ததோ மறைசிவன் இல்லை யோவெனும்.                   33

 

கூடலர் வருத்தலிற் குரவர் தங்களைத்

தேடினர் விரைவுடன் சென்ற தேவர்போல்

ஓடினர் புகாவகை ஒழிந்து ளோரையும் 

வீடருஞ் சிறையிடை வீட்டி னேனெனும்.                34

 

அந்தியின் மறைமொழி அயர்த்து வைகினன்

சந்தியில் வினைகளுந் தழலும் ஓம்பலன்

எந்தையை வழிபடும் இயல்பு நீங்கினன்

முந்தையின் உணர்ச்சியும் முடிந்து ளேனெனும்.          35

 

மெய்யுயிர் அகன்றிட விளிகி லேன்எனின்

எய்யுறும் அலக்கண்நீத் தினிது மேவலன்

வையுறு நெடும்புரி வடிவம் வெந்தெனப்

பொய்யுடல் சுமந்தனன் புலம்புற் றேனெனும்.                    36

 

சொல்லுவ தென்பிற தொல்லை வைகலின்

மெல்லென ஆற்றிய வினையின் பான்மையால்

அல்லுறழ் மிடற்றின்எம் மடிக ளேயெமக்

கெல்லையில் இத்துயர் இயற்றி னானெனும்.                     37

 

ஆவியும் உலகமும் அனைத்து மாகியும்

ஓவியுங் கருணையின் உருக்கொண் டாடல்செய்

தேவர்கள் தேவனாஞ் சிவன்மற் றல்லதை

ஏவரென் குறையுணர்ந் திரங்கு வாரெனும்.                       38

 

பெறலருந் திருவெலாம் பிழைத்துச் சூருயிர்

அறுவதும் அவுணர்கள் அவிந்து மாய்வதுஞ்

சிறையிது  கழிவதுந் தீர்கி லாவசை

இறுவதும் ஒருபகல் எய்து மோவெனும்.                 39

 

நூறொடர் கேள்வியோர் நுணங்கு சிந்தைசேர்

கூறுடை மதிமுடிக் குழகன் தன்னருட்

பேறுடை யேனெனிற் பெருந்து யர்க்கடல்

ஏறுவன் வினையினேற் கில்லை கொல்லெனும்.          40

 

இத்திறம் அளப்பில எண்ணி யெண்ணியே

மெய்த்துயர் உழந்துவெய் துயிர்த்து விம்மியே

அத்தலை சுற்றிய அமரர் யாவருந்

தத்தமில் இரங்குறச் சயந்தன் வைகினான்.                       41

 

கண்டகன் உதாவகன் கராளன் மாபலன்

சண்டகன் இசங்கனே சங்க னாதியா

எண்டகும் அவுணர்கள் எண்ணி லோர்குழீஇக்

கொண்டனர் சிறைக்களங் குறுகி ஓம்பினார்.                      42

 

ஆயதோர் காப்பினோர் அறுமு கத்தனி

நாயகன் தூதுவன் நணுகு மப்பகல்

ஏயுறு சயந்தனை இமைப்பி லாரொடு

காயெரி யாமெனக் கனன்று சுற்றினார்.                   43

 

வேறு

மன்னா நங்கோன் தன்பணி நில்லா மகவேந்தும்

மின்னா டானும் யாண்டுறு கின்றார் விரைவாகிச்

சொன்னால் உய்வீர் அல்லதும் மாவி தொலைவிப்பேம்

முன்னா ளேபோல் எண்ணலிர் உண்மை மொழிகென்றார்.          44

 

என்னுங் காலைக் கேட்ட சயந்தன் எம்மாயும்

மன்னும் வானின் றோடின கண்டாம் மற்றன்னோர்

பின்னங் குற்ற தன்மையும் ஓராம் பிணிநோயுள்

துன்னுந் தீயேம் யாவ துரைத்துஞ் சூழ்ந்தென்றான்.                       45

 

விண்டோய் மன்னன் முன்னொரு நாள்மெல் லியல்தன்னைக்

கொண்டே போனான் இன்னுழி யென்று குறிக்கொள்ளேங்

கண்டோம் அல்லங் கேட்டிலம் உள்ளங் கழிவெய்தப்

புண்டோய் கின்றோம் என்சொல்வ தென்றார் புலவோர்கள்.         46

 

சொற்றார் இவ்வா றன்னது போழ்தில் துணிவெய்தி

உற்றார் போலும் இங்கிவர் எல்லாம் உளமொன்றி

எற்றால் உண்மை ஓதுவர் இன்னோ ரெனவெண்ணாச்

செற்றா ராகுங் காவலர் துன்பஞ் செய்கின்றார்.                   47

 

வென்னஞ் சென்னக் காயெரி யென்ன மிகுதீஞ்சொல்

முன்னஞ் சொற்றே வைவர் தெழிப்பர் முரணோடுங்

கன்னஞ் செல்லத் தோமரம் உய்ப்பர் கடைகிற்பார்

சின்னஞ் செய்வார் போலுடன் முற்றுஞ் சேதிப்பார்.                       48

 

கண்டந் துண்டஞ் செய்திடும் அங்கம் கடிதொன்றிப்

பிண்டந் தன்னிற் கூட வெகுண்டே பேராற்றல்

கொண்டங் கையால் வாள்கொடு மார்பங் குடைகிற்பார்

தண்டந் தன்னான் மோதுவர் அன்னோர் தலைகீற.                49

 

இத்தன் மைத்தாக் காவலர் யாரும் எண்ணில்லா

மெய்த்துன் பத்தைச் செய்திட மைந்தன் விண்ணோர்தங்

கொத்துந் தானும் ஆற்றல னாகிக் குலைவெய்தி

நித்தன் றன்னை உன்னி அரற்ற நிற்கின்றான்.                    50

 

சீற்றத் துப்போர் பல்படை கொண்டே செறுபோழ்து

மாற்றத் துன்பம் பட்டத லான்மெய் யழிவாகி

ஈற்றுத் தன்மை சேர்ந்திலன் விண்ணோர் இறைமைந்தன்

கூற்றிற் பட்டுச் செல்லல் உழக்குங் கொடியோர்போல்.             51

 

நெஞ்சினில் வாலறி வெய்தினர் ஐம்புல நெறிநின்றும்

எஞ்சிய மேல்வினை பெற்றில தேயென இறும்வண்ணம்

தஞ்செயல் வெய்யோர் செய்யவும் மைந்தன் தமரோடும்

துஞ்சிலன் ஊறும் பெற்றிலன் உற்றான் துயரொன்றே.                     52

 

மாடே சூழ்வார் தம்மொடு மைந்தன் சிறைபுக்கான்

காடே போனான் இந்திரன் ஏனோர் கவலுற்றார்

பாடே விண்ணோர் தம்பதம் முக்கட் பரன்நல்கும்

வீடே அல்லால் துன்பறும் ஆக்கம் வேறுண்டோ.                 53

 

அந்தா வாளந் தோமரம் எ•கம் அடுதண்டம்

முந்தா வுற்ற பல்படை யாவும் முரிவெய்தச்

செந்தார் மார்பிற் காவலர் கையுந் திறலெஞ்ச

நொந்தார் இன்னா செய்வது நீத்தார் நுவல்கின்றார்.                       54

 

வீவார் பின்னாள் அல்லது வேறார் வினையத்தால்

சாவார் எஞ்சார் பேரமிர் துண்டார் தவமிக்கார்

நோவார் நாமிங் காற்றிய பாலான் நோய்நொந்தும்

ஆவா யாதுஞ் சொற்றிலர் என்றற் புதமுற்றார்.                           55

 

இன்னோர் யாரும் மைந்தனை வானோர் இனமோடு

மெய்ந்நோ வாகும் பாங்கின் அலைத்த வினையாலே

கைந்நோ வெய்தி வன்மையும் நீங்கிக் கவலுற்றார்

முன்னோர் தம்பாற் செய்த துடன்சூழ் முறையேபோல்.            56

 

வேறு

 

அத்தகைய காவல் அவுணர் அவர்க்கணித்தாய்

மொய்த் தொருசார் ஈண்டி முறைநீங் கலர்காப்ப

எய்த்த அமரருடன் இந்திரன்சேய் பண்ணவருள்

உத்தமனாங் கண்ணுதலை உன்னிப் புலம்புறுவான்.                       57

 

வந்திப்பவர் பவங்கள் மாற்றுவோய் எத்தேவர் 

சிந்தைக்கும் எட்டாச் சிவனே செழுஞ்சுடரே

இந்தப் பிறவி இடருழப்பச் செய்தனையோ

வந்தித்த நின்புணர்ப்பை யாரே கடந்தாரே.                        58

 

கைந்நாகத் துக்குங் கயவாய்க்கும் நாரைக்கும்

பைந்நாகத் துக்கும் படருஞ் சிலந்திக்கும்

பின்னாகிய வுயிர்க்கும் பேரருள்முன் செய்தனையால்

என்னா யகனே எமக்கேன் அருளாயே.                           59

 

கங்கை முடித்தாய் கறைமிடற்றாய் கண்ணுதலாய்

திங்கள் புனைந்தாய் சிவனே சிவனேயென்

றிங்கு நினதடியேம எல்லேங் களும்அரற்றல்

நங்க ளுயிர்க்குயிராம் நாயகநீ கேட்டிலையோ.                   60

 

பாசங்கொண் டாவி பலவும் பிணிப்போனும்

நேசங்கொண் டாங்கதனை நீக்கியருள் செய்வோனும்

ஈசன் சிவனென் றியம்புமறை நீயிழைத்த

ஆசொன்றும் இத்தீமை ஆர்தவிர்க்க வல்லாரே.                   61

 

நாரா யணனும்அந்த நான்முகனும் நாடரிய

பேராதி யான பெருமான் உயிர்க்கெல்லாம்

ஆராயின் நீயன்றி யாரே துணையாவார்

வாராய் தமியேன் உயிரளிக்க வாராயே.                         62

 

சீற்றம் விளைத்துமுனந் தேவர் தொகைஅலைப்பான்

கூற்ற மெனவே குறுகுற்ற அந்தகனும்

ஆற்றல் இழப்பஅகல் மார்பில் முத்தலைவேல்

கூற்றியவன் நீயன்றோ எமக்கேன் இரங்கலையே.                 63

 

ஏங்கி அமரர் இரிந்தோட வேதுரந்த

ஓங்கு குரண்டத் துருக்கொண்ட தானவனைத்

தீங்கு பெறத்தடிந்து சின்னமா ஓர்சிறையை

வாங்கி அணிந்தஅருள் இங்கென்பால் வைத்திலையே.             64

 

ஞாலத் தினையளித்த நான்முகனும் நின்றவற்றைப்

பாலித் தவனும் பிறரும் பணிந்திரங்க

ஓலக் கடலுள் உலகந் தொலைப்ப வந்த

ஆலத்தை உண்டஅருள் என்பால் அயர்த்தனையோ.                       65

 

மோடி தரவந்த முக்க ணுடைக்காளி

ஓடி உலகுயிர்கள் உண்ணும் படியெழலும்

நாடி யவள்வெருவி நாணிச் செருக்ககல

ஆடி யருள்செய்த அருளிங் கணுகாதோ.                         66

 

பொற்றைக் கயிலைப் புகல்புக்க தேவர்தமைச்

செற்றத் துடனடவே சென்ற சலந்தரனை

ஒற்றைத் திகிரிப் படையால் உடல்பிளந்தே

அற்றைப் பகல்அவரை அஞ்சலென்றாய் நீயன்றோ.                       67

 

நந்துற்ற கங்கை நதிசெறியும் காசிதனில்

தந்திக் கொடியோன் தவத்தோர் தமைத்துரந்து

வந்துற் றிடச்சினவி வன்தோ லினையுரித்த

அந்தக் கருணைக் களியரேம் பற்றிலமோ.                        68

 

ஈரஞ்சு சென்னி இருபான் புயங்கொண்டோர்

ஓரஞ் சரக்கர் உலகலைப்ப அன்னவரை

வீரஞ்செய் தட்ட விமல எமைஅவுணர்

கோரஞ்செய் கின்ற கொடுந்தொழிலுட் கொள்ளாயோ.              69

 

பண்டை மகவான் பரிசுணராத் தக்கனைப்போல்

அண்டர்பிரான் நின்னை அரியாதோர் வேள்விசெயத்

துண்டமது செய்து சுரரையவன் தோள்முரித்தாய்

தண்ட மதனையின்று தானவர்பாற் காட்டாயோ.                  70

 

சிந்தப் புரங்கொடிய தீயவுணர் மூவகைத்தாம்

அந்தப் புரங்கள் அடல்செய்தாய் எம்பெருமான்

சந்தப் புரங்கொண்ட தானவரோ டொன்றாகும்

இந்தப் புரமும் எரிக்குதவ ஒண்ணாதோ.                         71

 

அன்பான் அவருக் கருளுதியாற் பத்திநெறி

என்பால் இலையால் இறையும் எவனளித்தி

நன்பால் மதிமிலைச்சு நாயகனே நல்லருள்கூர்

உன்பால் மிகநொந்தே ஓதியதென் பேதைமையே.                 72

 

ஆனாலுந் தீயேன் அழுங்க அருள்கொடுநீ

தானாக நண்ணித் தலையளிசெய் தாண்டாயேல்

ஆனாத இத்துயரம் ஆறுமே ஆறியக்கால்

மேனாள் எனயான் துறக்கவளன் வேண்டிலனே.                   73

 

வென்றி அரக்கரால் மேதகைய தானவரால்

அன்றி முனிவரால் அண்டரால் ஏனையரால்

ஒன்று செயவொன்றாய் உறுதுயரத் தாழ்ந்ததன்றி

என்று மகிழ்வாய் இடரற் றிருந்தனமே.                                  74

 

கீற்று மதியுங் கிளர்வெம் பொறியரவும்

ஆற்றி னொடுமிலைந்த ஆதியே நின்னருளால்

ஏற்ற மிகும்இலக்கண் ஏகின் இழிந்தவளம்

போற்று கிலன்நோற்றல் புரிவேன் புரிவேனே.                            75

 

தண்டேன் துளிக்குந் தருநிழற்கீழ் வாழ்க்கைவெ•கிக்

கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோதென்றே

கண்டேன் பிறர்தம் பதத்தொலைவுங் கண்டனனால்

தொண்டேன் சிவனேநின் தொல்பதமே வேண்டுவனே.             76

 

அல்லற் பிறவி அலமலம்விண் ணாடுறைந்து

தொல்லைத் திருநுகருந் துன்பும் அலமலமால்

தில்லைத் திருநடஞ்செய் தேவே இனித்தமியேற்

கொல்லைத் துயர்தீர்த் துனதுபதந் தந்தருளே.                    77

 

ஒன்றாய் இருதிறமாய் ஓரைந்தாய் ஐயைந்தாய்

அன்றா தியின்மீட்டும் ஐந்தாய் அளப்பிலவாய்

நின்றாய் சிவனேயிந் நீர்மையெலாந் தீங்ககற்றி

நன்றா விகட்கு நலம்புரிதற் கேயன்றோ.                         78

 

பொன்பொலியுங் கொன்றைப் புரிசடையாய் இவ்வழிசேர்

துன்ப மகற்றித் துறக்கத்துள் தாழாது

பின்பு நனிநோற்றுப் பெறற்கரிதாம் நின்னடிக்கீழ்

இன்பம் ஒருதலையா எய்தவரு ளாய்எனக்கே.                    79

 

வேறு

 

என்று பற்பல இரங்கியே விடஞ்செறிந் தென்னச்

சென்று சென்றிடர் மூடுறா உணர்வெலாஞ் சிதைப்ப

ஒன்றும் ஒர்கிலன் மயங்கினன் உயிர்கரந் துலையப்

பொன்றி னார்களின் மறிந்தனன் இந்திரன் புதல்வன்.                      80

 

ஆங்க வன்றனைப் போலவே அமரரும் அழுங்கி

ஏங்கி ஆருயிர் பதைத்திட வீழ்ந்துணர் வீழந்தார்

தூங்கு வீழுறு பழுமரஞ் சாய்தலுந் தொடா¢ந்து

பாங்கர் கூற்றிய வல்லிகள் தியங்கிவீழ் பரிசின்.                  81

 

ஆகத் திருவிருத்தம் - 417

     - - -


·  முந்தையது : அசுர காண்டம்...

·  அடுத்தது : மகேந்திர காண்டம் - பகுதி 2...

 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்