நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! சுகப்பிரசவம் வேண்டி. காவிரிக்கரை திருச்சிரபுரத்தில் பிரசவ வேதனையில் தாயை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் பெண்ணொருவர். காவிரியில் வெள்ளப் பெருக்கேற்பட்டு தாயார் அக்கரையிலேயே தங்கநேர்ந்துவிட, இறைவனே தாய்வடிவில் வந்து பிரசவம் பார்த்தருளியதாய்த் தலபுராணம் சொல்லும் திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில். அத்தலம் தந்த மற்றொரு மகான் தாயுமான சுவாமிகள். காலம் 1707 - 1783. எங்கோ திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரி அம்மனின் ஆடையில் கற்பூரம் தவறி விழுந்து தீப்பிடிக்க, அதனைத் திருச்சியில் தாம் பணியாற்றி வந்த இடத்திலிருந்தே கண்டணைத்த யோகீஸ்வரர். அவரின் அற்புதமான பாடலொன்றுடன், இத்தலத்தில் ஞானசம்பந்தப் பெருமான் பாடியருளிய பதிகத்தையும் பார்ப்போம். தந்தை தாயும்நீ! என் உயிர்த் துணையும்நீ! சஞ்சலம் அதுதீர்க்க வந்த தேசிக வடிவுநீ! உனை அலால் மற்றுஒரு துணைகாணேன்; அந்தம் ஆதியும் அளப்பரும் ஜோதியே! ஆதியே! அடியார்தம் சிந்தை மேவிய தாயுமானவன்எனும் சிரகிரிப் பெருமானே! திருஞானசம்பந்தர் நல்கிய பதிகம்:
முழுப்பதிகம்- நன்றுடையானைத்
திருச்சிற்றம்பலம்