பன்னிரு திருமுறையிலுள்ள வினை தீர்க்கும் பாடல்கள்
(தொகுப்பு தீபமலை சிவ பூ முருகன், திருச்சி சிவ சுப்பிரமணியன் )
முதலாம் திருமுறை
நட்டபாடை
திருப்பிரமபுரம்
அருநெறியமறை வல்லமுனியகன்
பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய
பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்
பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை
தீர்தல்எளி தாமே. 1.1.11
திருப்புகலூர்
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர்
சேரும் மடியார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத்
தென்றும் பணிவாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட
மென்ப ரருள்பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாது
பொருந்தும் புகலூரே. 1.02.5
திருவலிதாயம்
படையிலங்குகரம் எட்டுடை
யான்படி றாகக்கனலேந்திக்
கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங்
கள்வன்னுறை கோயில்
மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது
வீசும் வலிதாயம்
அடையநின்றஅடி யார்க்கடையாவினை
அல்லல் துயர்தானே. 2
ஐயனொய்யன்அணி யன்பிணியில்லவ
ரென்றுந் தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு
மாதோ டுறைகோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்
துயர்கின்ற வலிதாயம்
உய்யும்வண்ணம்நினை மின்நினைந்தால்
வினைதீருந் நலமாமே. 3
புந்தியொன்றிநினை வார்வினை
யாயினதீரப் பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியான்
அமர்கோயில் அயலெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி
வணங்கும் வலிதாயஞ்
சிந்தியாதஅவர் தம்மடும்வெந்
துயர்தீர்த லெளிதன்றே. 1.03.5
திருக்காட்டுப்பள்ளி
முடிகையி னாற்றொடு மோட்டுழவர்
முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி
காதல்செய் தான்கரி2 தாயகண்டன்
பொடியணி மேனியி னானையுள்கிப்
போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்
றடிகையி னால்தொழ வல்ல தொண்டர்
அருவினை யைத்துரந் தாட்செய்வாரே 1.05.7
திருமருகல் & திருச்செங்காட்டாங்குடி
நாலுங்குலைக்கமு கோங்குகாழி
ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும்
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
சொல்லவல் லார்வினை யில்லையாமே. 1.06.11
திருஅண்ணாமலை
உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவாவண்ணம் அறுமே. 1
தேமாங்கனி கடுவன்கொள
விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை
சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில்
அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி
2நினைவார்வினை யிலரே.
திருவீழிமிழலை
வீழிம்மிழ லைம்மேவிய
விகிர்தன்றனை விரைசேர்
காழிந்நகர்க் கலைஞானசம்
பந்தன்தமிழ் பத்தும்
யாழின்இசை வல்லார்சொலக்
கேட்டாரவ ரெல்லாம்
ஊழின்மலி வினைபோயிட
வுயர்வானடை வாரே. 1.11.11
திருப்புள்ளமங்கை – ஆலந்துறை
பாலுந்துறு திரளாயின
பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு
பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய
கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை
யடையாவினை தானே.
மெய்த்தன்னுறும் வினைதீர்வகை
தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில்
கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்னிடை ஆந்தைபல
பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம்
ஆலந்துறை யதுவே. 1.16.5
திருக்கழுமலம்
வரியுறு புலியத ளுடையினன்
வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புரைபொழில்
விழவொலி மலிகழு மலம்அமர்
எரியுறு நிறஇறை வனதடி
யிரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை
யிருள்கெட நனிநினை வெய்துமதே. 3
வினைகெட மனநினை வதுமுடி
கெனில்நனி தொழுதெழு குலமதி
புனைகொடி யிடைபொருள் தருபடு
களிறின துரிபுதை யுடலினன்
மனைகுட வயிறுடை யனசில
வருகுறள் படையுடை யவன்மலி
கனைகட லடைகழு மலம்அமர்
கதிர்மதி யினன்அதிர் கழல்களே. 4
வரைபொரு திழியரு விகள்பல
பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய
கழுமலம் அமர்கன லுருவினன்
அரைபொரு புலியதள் உடையினன்
அடியிணை தொழவருவினையெனும்
உரைபொடி படவுறு துயர்கெட
வுயருல கெய்தலொரு தலைமையே. 6
கொழுமல ருறைபதி யுடையவன்
நெடியவ னெனவிவர் களுமவன்
விழுமையை யளவறி கிலரிறை
விரைபுணர் பொழிலணி விழவமர்
கழுமலம் அமர்கன லுருவினன்
அடியிணை தொழுமவ ரருவினை
எழுமையு மிலநில வகைதனி
லெளிதிமை யவர்விய னுலகமே. 9
அமைவன துவரிழு கியதுகி
லணியுடை யினர்அமண் உருவர்கள்
சமையமும் ஒருபொரு ளெனுமவை
சலநெறி யனஅற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமம
ரிறைவன தடிபர வுவர் தமை
நமையல வினைநல னடைதலி
லுயர்நெறி நனிநணு குவர்களே. 1.19.10
தக்கராகம்
திருக்கோலக்கா
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. 6
எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோலக் காவையே
8நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே. 1.23.11
திருச்செம்பொன்பள்ளி
வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்
சேரா தவர்மேற் சேரும் வினைகளே.
மலையான் மகளோ டுடனாய் மதிளெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே.
அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்டத் தீசன் கழல்களை
6நிறையால் வணங்க நில்லா வினைகளே.
பையார் அரவே ரல்கு லாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே. 1.25.7
திருப்புன்கூர்
முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிகள் அவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே. 1.27.1
திருக்குரங்கணில்முட்டம்
மையார்நிறம் மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணில் முட்டம்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே. 8
வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகும்
குறியால் நிமிர்ந் தான்றன் குரங்கணில் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககிலாவே 1.31.9
சீர்காழி
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே. 1.34.9
திருவீழிமிழலை
புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே. 2
மருள்செய் திருவர் மயலாக
அருள்செய் தவனார் அழலாகி
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. 9
துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே. 1.35.10
திருப்பாம்புரம்
கடிபடு கமலத் தயனொடு மாலுங்
காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
தீவண ரெம்முடைச் செல்வர்
முடியுடை யமரர் முனிகணத் தவர்கள்
முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே. 1.41.9
திருப்பெருந்துறை
மூவரு மாகி இருவரு மாகி
முதல் வனுமாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப்
பல்கணம் நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு
தண்மதிள் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார்
தீதில் பெருந்துறை யாரே. 2
விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
வினைகெட வேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்
பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
தண்ணரிசில் புடைசூழ்ந்து
குழையார் சோலை மென்னடை யன்னங்
கூடு பெருந்துறை யாரே. 1.42. 7
திருப்பாச்சிலாச்சிராமம்
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிரா மத்துறை கின்ற
புகைமலி மாலை புனைந்தழ காய
புனிதர்கொ லாமிவ ரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்
சாரகி லாவினை தானே. 1.44.11
திருஆலங்காடு
போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலே துற்றித் திரிவாரும்
கேழல் வினைபோகக் கேட்பிப் பாருங் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.11
திருஅதிகை வீரட்டானம்
ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழுந் துணையாக நினைவார் வினையிலரே. 1.46.11
பழந்தக்கராகம்
திருநள்ளாறு
உண்ணலாகா நஞ்சுகண்டத்
துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழல்
ஆரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென்
றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான்
மேயது நள்ளாறே. 1.49.9
வலிவலம்
ஆதியாய நான்முகனும்
மாலுமறி வரிய
சோதியானே நீதியில்லேன்
சொல்லுவன்நின் திறமே
ஓதிநாளும் உன்னையேத்தும்
என்னைவினை அவலம்
வாதியாமே வந்துநல்காய்
வலிவலமே யவனே. 1.50.9
திருஓத்தூர்
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேயருள் நல்குமே. 4
என்றா னிம்மலை யென்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே. 8
குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே. 1.54.11
திருமாற்பேறு
இருவர் தேவருந் தேடித் திரிந்தினி1
ஒருவராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்
9பரவு வார்வினை பாறுமே.
மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னும் மாற்பேற் றடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே. 1.55.11
திருவேற்காடு
காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஒல்லையே. 5
தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே. 1.57.6
திருக்கரவீரம்
அரியும் நம்வினை யுள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டம்
கரிய வன்திக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே. 1
தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்திக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே. 2
பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
மறையும் மாமணி போற்கண்டம்
கறைய வன்திக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழல் ஏத்தவே. 4
பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னான்உறை யுங்கர வீரத்தைத்
நண்ணு வார்வினை நாசமே. 5
வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தான்உறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை ஓயுமே. 1.58.9
திருத்தூங்கானைமாடம்
மண்ணார் முழவதிரும் மாடவீதி
வயற்காழி ஞானசம் பந்தன்நல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்
பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல் பத்துங்
கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும்
விதியது வேயாகும் வினைமாயுமே. 1.59.11
திருத்தோணிபுரம்
எறிசுறவங் கழிக்கானல்
இளங்குருகே என்பயலை
அறிவுறா தொழிவதுவும்
பயனன்றே அருவினையேன்
செறிசிறார் பதம்ஓதுந்
திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி
வேதியர்க்கு விளம்பாயே. 2
பண்பழனக் கோட்டகத்து
வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே
கடுவினையேன் உறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ்
திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தால்
பழியாமோ மொழியாயே. 1.60.3
தக்கேசி
திருப்பிரமபுரம்
சங்கோடிலங்கத் தோடுபெய்து
காதிலொர் தாழ்குழையன்
அங்கோல்வளையார் ஐயம்வவ்வா
யானலம்வவ்வுதியே
செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ்
செய்வினைமெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட
வெங்குருமேயவனே. 4
கட்டார் துழாயன் தாமரையா
னென்றிவர் காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய்
செய்கலைவவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள
நல்வினையாலுயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ்
கொச்சையமர்ந்தவனே. 11
கடையார்கொடிநன் மாடவீதிக்
கழுமலவூர்க்கவுணி
நடையார்பனுவல் மாலையாக
ஞானசம்பந் தன்நல்ல
படையார்மழுவன் மேல்மொழிந்த
பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும்
அமருலகாள்பவரே. 1.63.12
திருப்பூவணம்
பைவாயரவம் அரையிற்சாத்திப்
பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி
ஏறுகந் தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங்
கலவியி னால்நெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத்
தென்திருப் பூவணமே. 1.64.7
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம்
பத்த ரேத்தும் பட்டினத்துப்
பல்லவ னீச்சரத்தெம்
அத்தன் தன்னை அணிகொள்காழி
ஞானசம் பந்தன்சொல்
சித்தஞ் சேரச் செப்பும்மாந்தர்
தீவினை நோயிலராய்
ஒத்த மைந்த உம்பர்வானில்
உயர்வினொ டோங்குவரே. 1.65.11
திருவண்ணாமலை
வந்தித்திருக்கும் அடியார்தங்கள்
வருமேல் வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும்
பரமனுறை கோயில்
முந்தியெழுந்த முழவின் ஓசை
முதுகல்வரைகள் மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல்
அண்ணாமலையாரே. 1.69.7
ஈங்கோய்மலை
வினையாயினதீர்த் தருளேபுரியும்
விகிர்தன் விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும்
நம்பா னலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான்
தலையோ டனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும்
ஈங்கோய் மலையாரே. 1.70.7
திருக்குடந்தை காரோணம்
மூப்பூர் நலிய நெதியார்
விதியாய் முன்னே அனல்வாளி
கோப்பார் பார்த்தன் நிலைகண்
டருளுங் குழகர் குடமூக்கில்
தீர்ப்பா ருடலில் அடுநோய
அவலம் வினைகள் நலியாமைக்
காப்பார் காலன் அடையா
வண்ணங் காரோணத்தாரே. 1.72.6
குறிஞ்சி
அச்சிறுபாக்கம்
மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்
அன்புடை யடியவர் அருவினை யிலரே. 1.77.11
திருக்கழுமலம்
அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயிலுறு சாயல வனமுலை யொருபால்
மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்
பாடியும் ஆடியும் பலிகொள்வர் வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
பண்டலர் அயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
படர்சடை யடிகளார் பதியத னயலே
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 2
எண்ணிடை யொன்றினர் இரண்டினர் உருவம்
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்
வகுத்தனர் ஏழிசை யெட்டிருங் கலைசேர்
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 3
எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்
ஏறுகந் தேறுவர் நீறும்மெய் பூசித்
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 4
ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக
உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்
படஅர வாமைஅக் கணிந்தவர்க் கிடமாம்
நீரெதிர்ந் திழிமணி நித்திலம் முத்தம்
நிரைசுரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
காரெதிர்ந் தோதம்வன் றிரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 5
முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி
முடியுடை யமரர்கள் அடிபணிந் தேத்தப்
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
பேரரு ளாளனார் பேணிய கோயில்
பொன்னியல் நறுமலர் புனலொடு தூபஞ்
சாந்தமும் ஏந்திய கையின ராகிக்
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 6
கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
மலைக்கணித் தாவர வன்றிரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென அரும்பக்
கலைக்கணம் கானலின் நீழலில் வாழுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 7
புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்தோள்
பயம்பல படஅடர்த் தருளிய பெருமான்
பரிவொடு மினிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
கயம்பல படக்கடல் திரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 8
விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்
வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரி தாய
பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
மலங்கிவன் றிரைவரை யெனப்பரந் தெங்கும்
மறிகட லோங்கிவெள் இப்பியுஞ் சுமந்து
கலங்கடஞ் சரக்கொடு நிரக்கவந் தேறுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 9
ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர்தம் மேனிச்
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
காம்பன தோளியொ டினிதுறை கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 10
கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே. 1.79.11
திருஅம்பர் மாகாளம்
அடையார் புரம்மூன்றும் அனல்வாய்விழ வெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே. 1
கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே. 1.83.8
திருக்கடல் நாகைக் காரோணம்
புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.1.84.1
திருநல்லம்
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே. 6
குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே. 1.85.10
திருஆப்பனூர்
முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படஅரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1
குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 2
முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 3
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை அணியாப்ப னூரானைப்
பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 4
தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகரம் ஒருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 5
ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை அணியாப்ப னூரானைப்
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 6
இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 7
கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் திறலழித்தான் அணியாப்ப னூரானைப்
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 8
கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே. 9
செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே. 1.88.10
திருஎருக்கத்தம்புலியூர்
படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே. 1
இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே. 2
விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே. 3
வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே. 5
நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே. 6
மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார்மிடற்றானைக் கருதக் கெடும்வினையே. 1.89. 9
திருவாரூர்
உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னால்தொழ, நையும் வினைதானே. 4
பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
கண்டு மலர் தூவ, விண்டு வினைபோமே. 5
ஐயன் அணியாரூர்வெய்ய வினைதீர
செய்ய மலர்தூவ, வையம் உமதாமே. 7
துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே. 1.91.9
முதுகுன்றம்
ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
வாச மலர்தூவப், பாச வினைபோமே. 1.93.4
திருவிடைமருதூர்
கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே. 2
கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.
திருவன்னியூர்
குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. 1 .96.10
திருக்குற்றாலம்
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லின் ஒல்க மும்மதி லெய்து வினைபோக
நல்கு நம்பான் நன்னகர் போலுந் நமரங்காள். 1.99.3
திருப்பரங்குன்றம்
மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
பத்தினதிண்தோள் இருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று
நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே. 8
குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்
தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே. 1.100.10
திருக்கண்ணார்க்கோயில்
தண்ணார் திங்கட் பொங்கர வந்தாழ் புனல்சூடிப்
பெண்ணா ணாய பேரரு ளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழு வோர்கட் கிடர்பாவம்
நண்ணா வாகும் நல்வினை யாய நணுகும்மே. 1.101.1
சீர்காழி
எண்ணார் முத்தம் ஈன்று
மரகதம் போற்காய்த்துக்
கண்ணார் கமுகு பவளம்
பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர் பாகா பித்தா
பிரானே யென்பார்க்கு
நண்ணா வினைகள் நாடொறும்
இன்பந் நணுகும்மே. 4
குறியார் திரைகள் வரைகள்
நின்றுங் கோட்டாறு
கறியார் கழிசம் பிரசங்
கொடுக்குங் கலிக்காழி
வெறியார் கொன்றைச் சடையா
விடையா என்பாரை
அறியா வினைகள் அருநோய்
பாவம் அடையாவே. 6
ஆவிக் கமலத் தன்னம்
இயங்குங் கழிசூழக்
காவிக் கண்ணார் மங்கலம்
ஓவாக் கலிக்காழிப்
பூவில் தோன்றும் புத்தே
ளொடுமா லவன்தானும்
மேவிப் பரவும் அரசே
யென்ன வினைபோமே. 9
மலையார் மாடம் நீடுயர்
இஞ்சி மஞ்சாருங்
கலையார் மதியஞ் சேர்தரும்
அந்தண் கலிக்காழித்
தலைவா சமணர் சாக்கியர்க்
கென்றும் அறிவொண்ணா
நிலையா யென்னத் தொல்வினை
யாய நில்லாவே. 1.102.10
திருஊறல்
பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர்
மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா
ஈசன் இடம்வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில்
சூழ்ந்தழகார் தன்னை
உன்னவினை கெடுப்பான்
திருவூறலை உள்குதுமே. 1.106.10
திருக்கொடிமாடசெங்குன்றூர்
ஓங்கிய மூவிலைநற் சூல
மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு
மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார்
வினையாய பற்றறுமே. 6
நீடலர் கொன்றையொடு நிமிர்புன்
சடைதாழ வெள்ளை
வாடலுடை தலையிற்
பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார்
வினையாய தேயுமே. 7
செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு
மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போல்
ஒளியாய ஆதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார்
வினையாய நாசமே. 9
போதியர் பிண்டியரென் றிவர்கள்
புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட்
டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழநும்
வினையான வீடுமே. 10
அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார்
புகலிந்நகர் பேணுந்
தலைமக னாகிநின்ற
தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச்
செங்குன்றூ ரேத்தும்
நலம்மலி பாடல்வல்லார்
வினையான நாசமே. 1.107.11
திருப்பாதாளீச்சரம்
தாமரை மேலயனும் அரியுந்தம
தாள்வினையாற் றேடிக்
காமனை வீடுவித்தான்
கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலாள் உமைநங்கை
பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தான்
உறைகோயில் பாதாளே. 9
அவ்வினைக் கிவ்வினை யாமென்று
சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும்
உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற்
போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 1
காவினை யிட்டுங் குளம்பல
தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித்
தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 2
முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற்
றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை
யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும்
மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 3
விண்ணுல காள்கின்ற விச்சா
தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந்
தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை
யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 4
மற்றிணை யில்லா மலைதிரண்
டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா
தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந்
திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 5
மறக்கு மனத்தினை மாற்றியெம்
மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்
கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை
யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 6
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை
கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை
யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி
லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 8
நாற்ற மலர்மிசை நான்முகன்
நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும்
முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது
வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 9
சாக்கியப் பட்டுஞ் சமணுரு
வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப்
போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை
யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 1.116.10
திருப்பருப்பதம்
துனியுறு துயர்தீரத்
தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாதல்
இரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறிக்
கருமுசுக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான்
பருப்பதம் பரவுதுமே. 3
மருவிய வல்வினைநோய்
அவலம்வந் தடையாமல்
திருவுரு அமர்ந்தானுந்
திசைமுகம் உடையானும்
இருவரும் அறியாமை
எழுந்ததோ ரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான்
பருப்பதம் பரவுதுமே. 1.118.9
திருவையாறு
பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.1
திருவிடைமருதூர்
துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே. 10
தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே. 1.121.11
திருவிடைமருதூர்
சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடல்நலி விலதுள வினையே. 3
செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே. 8
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே. 1.122.11.
திருச்சிவபுரம்
கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே. 1
வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
7அடைதரும் அடியவர் அருவினை யிலரே.
புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே. 1.125.11
மேகராகக்குறிஞ்சி
திருக்கச்சியேகம்பம்
பிரமனுந் திருமாலுங் கைதொழப்
பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை அந்தணன்
அணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக்
கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ
வல்வினை மாய்ந்தறுமே. 1.133.9
திருப்பராய்த்துறை
நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும் அறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே. 1.1359
இரண்டாம் திருமுறை
இந்தளம்
திருப்பூந்தராய்
மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. 02.01.11
திருஅனேகதங்காவதம்
நீடல் மேவுநிமிர் புன்சடைமேலொர் நிலாமுளை
சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம்
பாடல் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே. 1
ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்ப தணிவான்றன் அனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே. 8
கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமையெ ழுந்ததோ ராரழல்
அண்ணல் நண்ணுமணி சாரல் அனேகதங் காவதம்
2.05.9நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே.
திருவாஞ்சியம்
அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
மருவியேத் தமட மாதொடு நின்றஎம் மைந்தரே. 6
மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாடநீ டுமனத் தார்வினை பற்றறுப் பார்களே. 8
செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
நெடிய மாலோடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்
தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே. 2.07.9
திருச்சிக்கல்
வானுலா வும்மதி வந்துலா வும்மதில் மாளிகை
தேனுலா வும்மலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே. 1
கந்தமுந் தக்கைதை பூத்துக் கமழ்ந்து சேரும்பொழிற்
செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே. 4
முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத்
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே. 7
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே. 2.08.8
திருமழபாடி
களையும் வல்வினை யஞ்சல்நெஞ்சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே. 1
பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
வெள்ளம் ஆதரித் தான்விடை யேறிய வேதியன்
வள்ளல் மாமழ பாடியுள் மேயம ருந்தினை
உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே. 4
தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே. 6
சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
எந்தை யான்இமை யாதமுக் கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்
சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே. 2.09.7
திருமங்கலக்குடி
கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே. 3
ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்
மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி
ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே
ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே. 2.10.5
சீர்காழி
அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே. 3
நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே. 5
துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே. 2.11.7
திருக்கச்சியேகம்பம்
நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே. 2
குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கு முகில்கள் தோயும் வியன் கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பம்
சென் றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே. 4
மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தம்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே. 6
போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியால் தொழுமின்நும் மேல்வினை நில்லாவே. 2.12.10
திருக்கோழம்பம்
மையான கண்டனை மான்மறி யேந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
செய்யானைத் தேன்நெய்பா லுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே. 2
ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே. 2.13.3
திருவெண்ணியூர்
சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டஎம்
ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே. 2
நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலொர் பாகமு டையானைச்
சீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை
ஊரானை உள்கவல் லார்வினை ஓயுமே. 5
காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்
பாய்ந்தானைப் பரியகை மாவுரித் தோல்மெய்யில்
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே. 2.14.7
திருக்காறாயில்
தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே. 4
கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 5
ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர
வேற்றானே யேழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 6
சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யடராவே. 7
கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே யென்பவர் மேல்வினை யடராவே. 8
பிறையானே பேணிய பாடலொ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே. 2.15.9
திருமணஞ்சேரி
விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே. 2
எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையும் ஆள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே. 3
சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. 2.16.10
திருமருகல்
அறையார் கழலும் அழல்வா யரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. 2.18.3
திருநெல்லிக்கா
பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.02
திருஅழுந்தூர்
கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடம்மே வினையே. 2.20.2
பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறும்
கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழமா மடம்மே வினையே. 2.20.8
திருக்கழிப்பாலை
முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
கதிரும் வினையா யினஆ சறுமே. 7
நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே. 2.21.9
திருநாகேச்சுவரம்
பொன்நேர் தருமே னியனே புரியும்
மின்நேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயல்நா கேச்சுர நகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே. 1
சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த் தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சுர நகருள்
அறவா எனவல் வினையா சறுமே. 2
கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சுர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே. 3
நகுவான் மதியோ டரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சுர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே. 4
கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சுர நகருள்
தலைவா எனவல் வினைதான் அறுமே. 5
முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
கடையார் பலிகொண் டுழல்கா ரணனே
நடையார் தருநா கேச்சுர நகருள்
சடையா எனவல் வினைதான் அறுமே. 7
ஓயா தஅரக் கன்ஒடிந் தலற
நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத் துவர்நா கேச்சுரத்
தாயே எனவல் வினைதான் அறுமே. 8
மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
நலம்பா வியநா கேச்சுர நகருள்
சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே. 10
கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலமார் தருசெந் தமிழின் விரகன்
நலமார் தருநா கேச்சுரத் தரனைச்
சொலமா லைகள்சொல்லநிலா வினையே. 2.24.11
திருப்புகலி
உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 1
வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
பேசு மின்பெரி தின்ப மாகவே. 3
புல்லம் ஏறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லும் மாலைஈ ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை இருநி லத்துளே.
திருநெல்வாயில்
ஆதி யாரந்த மாயி னார்வினை
கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல் வாயி லார்மறை
ஓதி யாரெம துச்சி யாரே. 1.26.7
திருஇந்திரநீலபருப்பதம்
நாச மாம்வினை நன்மை தான்வரும்
தேச மார்புக ழாய செம்மையெம்
ஈசன் இந்திர நீலப் பர்ப்பதம்
கூசி வாழ்த்துதுங் குணம தாகவே. 4
மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
இரவன் இந்திர நீலப் பர்ப்பதத்
தருவி சூடிடும் அடிகள் வண்ணமே. 5
பூவி னானொடு மாலும் போற்றுறும்
தேவன் இந்திர நீலப் பர்ப்பதம்
பாவி யாதெழு வாரைத் தம்வினை
கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே. 2.27.9
திருப்புகலி
நல்குரவும் இன்பமும்
நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளும்
மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி
யாரஇசை பாடிச்
செல்வமறை யோருறை
திருப்புகலி யாமே. 2.29.7
திருப்புறம்பயம்
அனற்படு தடக்கையவ
ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர்
வினைப்பகையு நீயே
தனற்படு சுடர்ச்சடை
தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடைக்கையை
புறம்பயம் அமர்ந்தோய். 2.30.6
திருக்கருப்பறியலூர்
நலந்தரு புனற்புகலி
ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல்
மேயகட வுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி
பத்துமிவை கற்று
வலந்தரு மவர்க்குவினை
வாடலெளி தாமே. 2.31.11
தென்குரங்காடுதுறை
பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மேய அழகார்
குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே. 1
பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவம் குழல்மொந்தை முழங் கெரியாடும்
அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
குழகன் நகர்போல் குரங்கா டுதுறையே. 2.35.7
சீகாமரம்
திருசாய்க்காடு
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே. 2.41.3
திருப்புள்ளிருக்குவேலூர்
திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 6
செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே. 2.43.11
திருநாலூர்மயானம்
கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்தில்
சூலத்தா னென்பார்பால் சூழாவாந் தொல்வினையே. 2.46.4
திருவெண்காடு
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. 2
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே. 2.48.7
சீர்காழி
மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே. 2
நாடெ லாமொளி யெய்த நல்லவர்
நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழித்
தோடு லாவிய காது ளாய்சுரி
சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர்கள் வினைநீங்க லுற்றாரே. 3
மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்
கலிக டிந்தகையார் மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினைநோ யவைமே வுவர்வீடே. 5
மற்றும் இவ்வுல கத்து ளோர்களும்
வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தையராய்க் கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானை
நினைந்தி ருந்திசை பாடுவார் வினை
செற்ற மாந்தரெனத் தெளிமின்கள் சிந்தையுளே. 2.49.6
திருக்கோட்டாறு
அம்பின் நேர்விழி மங்கை மார்பலர்
ஆட கம்பெறு மாட மாளிகைக்
கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்
நம்ப னேநட னேந லந்திகழ்
நாதனே யென்று காதல் செய்தவர்
தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே. 2.52.4
காந்தாரம்
திருவெண்காடு
விடையார் கொடியான் மேவி
யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து
தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம்
பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைகள் அமர
லோகம் ஆள்வாரே. 2.61.11
திருமீயச்சூர்
காயச் செவ்விக் காமற்
காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற்
பதித்த பரமேட்டி
மாயச் சூர்அன் றறுத்த
மைந்தன் தாதைதன்
மீயச் சூரே தொழுது
வினையை வீட்டுமே. 2.62.1
திருஅரிசில்கரைபுத்தூர்
இத்தேர் ஏக இம்மலை
பேர்ப்பன் என்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீழ்
அலறப் பாதந்தான்
வைத்தா ரருள்செய் வரதன்
மருவும் ஊரான
புத்தூர் காணப் புகுவார்
வினைகள் போகுமே. 2.63.8
திருஆலவாய்
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.4
திருப்பாண்டிக்கொடுமுடி
தனைக்கணி மாமலர் கொண்டு
தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும்
விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார்
நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார்
பாண்டிக் கொடுமுடி யாரே. 2.69.2
திருக்குறும்பலா
கொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா
மேவிய கொல்லேற்றண்ணல்
நம்பான் அடிபரவும் நான்மறையான்
ஞானசம் பந்தன் சொன்ன
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார்
விரும்பிக் கேட்பார்
தம்பால தீவினைகள் போயகலும்
நல்வினைகள் தளராவன்றே. 2.71.11
திருநணா
முத்தேர் நகையா ளிடமாகத்
தம்மார்பில் வெண்ணூல்பூண்டு
தொத்தேர் மலர்சடையில்
வைத்தாரிடம்போலுஞ் சோலைசூழ்ந்த
அத்தேன் அளியுண் களியா
லிசைமுரல ஆலத்தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார்
வினைகெடுக்குந் திருநணாவே. 2.72.5
சீர்காழி
வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
பலிவி ரும்பியதொர் கையினான்பர மேட்டியான்
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்
நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே. 2.75.2
திருஅகத்தியான்பள்ளி
துன்னங் கொண்ட வுடையான் துதைந்த வெண்ணீற்றினான்
மன்னுங் கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர்
அன்னந்தங்கும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னஞ் செய்த மனத்தார்கள் தம்வினை யோடுமே. 2
ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச்
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே. 7
சிரமு நல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
அரவு மல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரம னோடுதிரு மாலுந் தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. 9
செந்துவ ராடையினாரும் வெற்றரை யேதிரி
புந்தியி லார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. 10
ஞாலமல் குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
ஆலுஞ்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்
சூல நல்லபடையான் அடிதொழு தேத்திய
மாலைவல்லா ரவர்தங்கள் மேல்வினை மாயுமே. 2.76.11
திருஅறையணிநல்லூர்
தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ
ஆயினாய் கொன்றை யாய்அன லங்கையாய் அறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே. 5
வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்
வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே. 2.77.7
திருவிளநகர்
மென்சிறைவண் டியாழ்முரல்
விளநகர்த்துறை மேவிய
நன்பிறைநுதல் அண்ணலைச்
சண்பைஞானசம் பந்தன்சீர்
இன்புறுந்தமிழாற்சொன்ன
ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
துன்புறுந்துய ரம்மிலாத்
தூநெறிபெறு வார்களே. 2.78.11
திருக்கடவூர்மயானம்
மரவம் பொழில்சூழ் கடவூர்
மன்னுமயானம் அமர்ந்த
அரவம் அசைத்த பெருமான்
அகலம்அறிய லாகப்
பரவுமுறையே பயிலும்
பந்தன்செஞ்சொல் மாலை
இரவும்பகலும் பரவி நினைவார்
வினைகள் இலரே. 2.80.11
பியந்தைக்காந்தாரம்
திருநனிபள்ளி
கடல்வரை யோதம்மல்கு கழிகானல் பானல்
கமழ்காழி யென்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி
னிசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க
வினைகெடுதல் ஆணை நமதே. 2.84.11
திருமறைக்காடு
செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 2.85.7
திருநாரையூர்
தீயுற வாயஆக்கை யதுபற்றி வாழும்
வினைசெற்றவுற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல
விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே. 4
வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்கம் மிக்க
பகைதீர்க்கு மேய வுடலில்
தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
கரவைக் கரந்து திகழும்
சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத்
திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே. 2.86.9
தென்திருமுல்லைவாயில்
நெஞ்சார நீடு நினைவாரை மூடு
வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
அனலாடு மேனி அரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்
உளதென்று வைகி வரினுஞ்
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்
திருமுல்லை வாயி லிதுவே. 2.88.7
திருக்கொச்சைவயம்
குண்டர் வண்துவ ராடை
போர்த்ததொர் கொள்கையி னார்கள்
மிண்டர் பேசிய பேச்சு
மெய்யல மையணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும்
பண்பின ரொண்கொடி யோடுங்
கொண்டல் சேர்மணி மாடக்
கொச்சை வயம்அமர்ந் தாரே. 10
கொந்த ணிபொழில் சூழ்ந்த
கொச்சை வயநகர் மேய
அந்த ணன்னடி யேத்தும்
அருமறை ஞான சம்பந்தன்
சந்த மார்ந்தழ காய
தண்தமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும்
2.89.11 புகவலர் முனைகெட வினையே.
திருநெல்வாயில்அரத்துறை
கறையி னார்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞான சம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த
அரத்துறை யடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல்
மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுற வில்லைப்
பாட்டிவை பத்தும் வல்லார்க்கே. 2.90.11
திருமறைக்காடு
ஏழை வெண்குரு கயலே
யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந்
தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண்
மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக
நினைபவர் வினைநலி விலரே. 2.91.4
திருத்தெங்கூர்
புரைசெய் வல்வினை தீர்க்கும்
புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை
உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய் தாரழ லூட்டி
யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்
விரைசெய் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்ற மர்ந்தாரே. 1
சித்தந் தன்னடி நினைவார்
செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் தாழ்சடை முடிமேற்
கோளெயிற் றரவொடு பிறையன்
பத்தர் தாம்பணிந் தேத்தும்
பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
அடையும் வல்வினை யகல
அருள்பவர் அனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர்
பைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித்
தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 3
பண்டு நான்செய்த வினைகள்
பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக்
குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமல ரூதி
மதுவுண இதழ்மறி வெய்தி
விண்ட வார்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.4
தொல்லை வல்வினை தீர்ப்பார்
சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி3 சூடிநின் றாடும்
இறையவர் இமையவ ரேத்தச்
சில்லை மால்விடை யேறித்
திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.6
நெறிகொள் சிந்தைய ராகி
நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொள் மேனிமுக் கண்ணர்
முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளர வணிந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 7
சடங்கொள் சீவரப் போர்வைச்
சாக்கியர் சமணர்சொல் தவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும்
ஏத்துமின் இருமருப் பொருகைக்
கடங்கொள் மால்களிற் றுரியர்
கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 2.93.10
சீர்காழி
மங்கை கூறமர் மெய்யான்
மான்மறி யேந்திய கையான்
எங்க ளீசனென் றெழுவார்
இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
சங்கை யின்றிநல் நியமந்
தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுவர் கீர்த்தி
மறையவர் காழிநன் னகரே. 2.96.5
நட்டராகம்
திருக்கோடிகா
துக்கமிக்க வாழ்க்கையின்
சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச்
சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந் தரைமிசை
யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன்
கோடிகாவு சேர்மினே. 3
பண்டுசெய்த வல்வினை
பற்றறக் கெடும்வகை
உண்டுமக் குரைப்பன்நான்
ஒல்லைநீர் எழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை
வைத்துமாதொர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான்
கோடிகாவு சேர்மினே. 2.99.4
திருக்கோவலூர் வீரட்டம்
கனைகொள் இருமல் சூலைநோய்
கம்பதாளி குன்மமும்
இனையபலவும் மூப்பினோ
டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற்
பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையை வென்ற வேடத்தான்
வீரட்டானஞ் சேர்துமே. 2.100.4
திருச்சிரபுரம்
அன்ன மென்னடை அரிவையொடினிதுறை
அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக்
கம்மலர் வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர்
பருமதிற் சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும்
அடியவர் வினையொடும் பொருந்தாரே. 1
கோல மாகரி உரித்தவர்
அரவொடும் ஏனக்கொம் பிளஆமை
சாலப் பூண்டுதண் மதியது
சூடிய சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின்
பளிப்பவர் பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார்
சிரபுரந் தொழவினை நில்லாவே. 2
மானத் திண்புய வரிசிலைப்
பார்த்தனைத் தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா
யமர்செயக் கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள்
திரிதருஞ் சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக்
கொடுவினை குற்றங்கள் குறுகாவே. 3
மாணி தன்னுயிர் மதித்துண
வந்தஅக் காலனை உதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர்
பெருந்துயர்ப் பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர்
வியன்புகழ்ச் சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும்
அடியவர்க் கருவினை யடையாவே. 4
ஊழி யந்தத்தில் ஒலிகடல்
ஓட்டந்திவ் வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள்
சரண்புக அந்தரத் துயர்ந்தார்தாம்
யாழின் நேர்மொழி யேழையோ
டினிதுறை இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந்
தொழுதெழ வல்வினை அடையாவே. 6
இலங்கு பூண்வரை மார்புடை
இராவணன் எழில்கொள் வெற்பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங்
கழலடி நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த்
தென்றல்மன் றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொள் மாமறை யவர்சிர
புரந்தொழு தெழவினை குறுகாவே. 8
வண்டு சென்றணை மலர்மிசை
நான்முகன் மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோ
டன்னமாய்க் கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே
நீண்டஎம் பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந்
தொழுதெழ வினையவை கூடாவே. 9
பறித்த புன்தலைக் குண்டிகைச்
சமணரும் பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந்
தேர்கிலாத் தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின்
றாவியின் மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந்
தொழவினை விட்டிடும் மிகத்தானே. 2.102.10
திருஅம்பர்மாகாளம்
புல்கு பொன்னிறம் புரிசடை
நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க்
கொன்றையும் பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும்
அடியவர்க் கருவினை அடையாவே. 1
குணங்கள் கூறியுங் குற்றங்கள்
பரவியுங் குரைகழலடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர்
பரவவுங் கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோ டணையவல்லார்களை
வல்வினை யடையாவே. 3
பவ்வ மார்கடல் இலங்கையர்
கோன்றனைப் பருவரைக் கீழூன்றி
எவ்வந்தீர அன் றிமையவர்க்
கருள்செய்த இறையவன் உறைகோயில்
மவ்வந் தோய்பொழில் அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
கவ்வை யால்தொழும் அடியவர்
மேல்வினை கனலிடைச் செதிளன்றே. 2.103.8
திருக்கடிக்குளம்
பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்
புலியுரி யதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு
குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை
முன்வினை மூடாவே. 1
நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்
தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப்
பசும்பொனை விசும்பாரும்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகந்தன்னைச்
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை
தேய்வது திணமே. 4
மாதி லங்கிய பாகத்தன் மதியமொ
டலைபுனல் அழல்நாகம்
போதி லங்கிய கொன்றையும் மத்தமும்
புரிசடைக் கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத்
துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை
பற்றறக் கெடுமன்றே. 6
குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
குழாம்பல குளிர்பொய்கை
உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்
பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்
துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை
நிற்ககில் லாதானே. 7
நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு
நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர்
பவளத்தின் படியாகிக்
காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகத்தின்றன்
சீரினார்கழல் ஏத்தவல் லார்களைத்
தீவினை யடையாவே. 2.104.9
திருக்கீழ்வேளூர்
மின்னு லாவிய சடையினர் விடையினர்
மிளிர்தரும் அரவோடும்
பன்னு லாவிய மறையொலி நாவினர்
கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
யோடிட வீடாமே. 1
நீரு லாவிய சடையிடை யரவொடு
மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு
மணிசிலம் பவையார்க்க
ஏரு லாவிய இறைவன துறைவிடம்
எழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்
பிணியொடு வினைபோமே. 2
துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவர் இனிதியல்
மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்
நிமலனை நினைவோடும்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே. 5
பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
வன்னியுந் துன்னாரும்
கறைநி லாவிய கண்டர்எண் தோளினர்
காதல்செய் கீழ்வேளூர்
மறைநி லாவிய அந்தணர் மலிதரு
பெருந்திருக் கோயில்மன்னும்
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்
நினைபவர் வினைபோமே. 7
மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை
யெடுத்தலும் அரக்கன்றன்
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான்
உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர் காதல்செய்
பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
நினையவல் வினைபோமே. 2.105.8
திருவலஞ்சுழி
என்ன புண்ணியஞ் செய்தனை
நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப்
பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு
வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும்
பாடியும் வழிபடும் அதனாலே. 1
விண்டொ ழிந்தன நம்முடை
வல்வினை விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத்
தாங்கிய இறைவனை உலகத்தில்
வண்டு வார்குழல் மங்கையொர்
பங்கனை வலஞ்சுழி யிடமாகக்
கொண்டநாதன்மெய்த் தொழில்புரி
தொண்டரோ டினிதிருந்தமையாலே. 2
அழல தோம்பிய அலர்மிசை
அண்ணலும் அரவணைத் துயின்றானும்
கழலுஞ் சென்னியுங் காண்பரி
தாயவர் மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு
வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை
யதனொடு துன்பங்கள் களைவாரே. 9
மாதொர் கூறனை வலஞ்சுழி
மருவிய மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம்
பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல்
லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும்
இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே. 2.106.11
திருக்கேத்தீச்சுரம்
விருது குன்றமா மேருவில் நாணர
வாவனல் எரிஅம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
றுறைபதி யெந்நாளும்
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
கடுவினை யடையாவே. 1
பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது இருங்கடற் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரங் கைதொழக்
கெடுமிடர் வினைதானே. 2
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர்
அகந்தொறும் இடுபிச்சைக்
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
உயர்தரு மாதோட்டத்
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்
கருவினை யடையாவே. 3
பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்டத்
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்
பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே. 2.107.4
திருவிற்குடி வீரட்டம்
வடிகொள் மேனியர் வானமா மதியினர்
நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை
விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
அருவினை யடையாவே. 1
பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு
கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடை யானிடம்
விற்குடி வீரட்டம்
சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி
தீவினை கெடுமாறே. 4
கடிய ஏற்றினர் கனலன மேனியர்
அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன
தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை
விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற்
பற்றறும் அருநோயே. 2.108.5
திருக்கோட்டூர்
உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்
அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு
பத்திசெய் தெத்திசையுங்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
அவனருள் பெறலாமே. 2.109.5
திருவாய்மூர்
திங்களொ டருவரைப் பொழிற்சோலைத்
தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமொ டருமறை யொலிபாடல்
அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே. 2.111.11
திருஆடானை
மாதோர் கூறுகந் தேற தேறிய
ஆதி யானுறை ஆடானை
போதி னாற்புனைந் தேத்து வார்தமை
வாதி யாவினை மாயுமே. 1
வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்
றாட லானுறை ஆடானை
தோடு லாமலர் தூவிக் கைதொழ
வீடும் நுங்கள் வினைகளே. 2
கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கைய ணிம்மல ரால்வ ணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே. 5
துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை
அலங்க லானுறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்
வலங்கொள் வார்வினை மாயுமே. 7
வெந்த நீறணி மார்பில் தோல்புனை
அந்த மில்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழும்
சிந்தை யார்வினை தேயுமே. 8
மறைவ லாரொடு வான வர்தொழு
தறையுந் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை யேத்தத் தீவினை
பறையும் நல்வினை பற்றுமே. 9
மாய னும்மல ரானுங் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவிக் கைதொழத்
தீய வல்வினை தீருமே. 2.109.10
செவ்வழி
சீர்காழி
கருகுமுந்நீர் திரையோத
மாருங்கடற் காழியுள்
உரகமாருஞ் சடையடிகள்
தம்பாலுணர்ந் துறுதலாற்
பெருகமல்கும் புகழ்பேணுந்
தொண்டர்க்கிசை யார்தமிழ்
விரகன்சொன்ன இவைபாடி
யாடக்கெடும் வினைகளே. 2.113.11
திருக்கேதாரம்
மடந்தைபாகத் தடக்கிம்
மறையோதி வானோர்தொழத்
தொடர்ந்த நம்மேல்வினை
தீர்க்கநின்றார்க் கிடமென்பரால்
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை
பூத்துதிரக் கல்லறைகள்மேல்
கிடந்தவேங்கை சினமாமுகஞ்
செய்யுங் கேதாரமே. 7
கடுக்கள் தின்று கழிமீன்
கவர்வார்கள் மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா ரவரெய்த
வொண்ணா இடமென்பரால்
அடுக்கநின்றவ் வறவுரைகள்
கேட்டாங் கவர்வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான்
உறைகின்ற கேதாரமே. 2.114.10
திருஇரும்பைமாகாளம்
வேதவித்தாய் வெள்ளைநீறு
பூசி வினையாயின
கோதுவித்தா நீறெழக்
கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க்
கும்மிடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர்
தொழநின்ற மாகாளமே. 2
குறைவதாய குளிர்திங்கள்
சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன்
பகவன் பரந்தசடை
இறைவன்எங்கள் பெருமான்
இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித்
தொழுகின்ற மாகாளமே. 2.117.6
திருநாகேச்சுவரம்
கூசநோக் காதுமுன் சொன்னபொய்
கொடுவினை குற்றமும்
நாசமாக் கும்மனத் தார்கள்வந்
தாடுநா கேச்சரம்
தேசமாக் கும்திருக் கோயிலாக்
கொண்டசெல் வன்கழல்
நேசமாக் குந்திறத் தார்அறத்
தார்நெறிப் பாலரே. 4
வேயுதிர் முத்தொடு மத்தயா
னைமருப் பும்விராய்ப்
பாய்புனல் வந்தலைக் கும்பழங்
காவிரித் தென்கரை
நாயிறுந் திங்களுங் கூடிவந்
தாடுநா கேச்சரம்
மேயவன் றன்அடி போற்றியென்
பார்வினை வீடுமே. 2.119.7
திருப்பாதிரிப்புலியூர்
கொள்ளிநக்க பகுவாய
பேய் கள்குழைந் தாடவே
முள்ளிலவம் முதுகாட்
டுறையும்முதல் வன்னிடம்
புள்ளினங்கள் பயிலும்
பாதிரிப் புலியூர்தனை
உள்ள நம்மேல்
வினையாயினஒழியுங்களே. 2
வீக்கமெழும் இலங்கைக்
கிறை விலங்கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ்
விரலாலிறை யூன்றினான்
பூக்கம ழும்புனற்
பாதிரிப் புலியூர்தனை
நோக்கமெ லிந்தணு
காவினை நுணுகுங்களே. 8
அந்தண்நல் லாரகன்
காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில்
பாதிரிப் புலியூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத்திவை
தரித்தார் கள்மேல்
வந்துதீயவ் வடை
யாமையால் வினைமாயுமே. 2.121.11
முன்றாம் திருமுறை
காந்தார பஞ்சமம்
திருத்தில்லை
ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய்மறை யோடுபல் கீதமும்
பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே. 1
கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடைக்
கோலவாண்மதி போல முகத்திரண்
டம்பலைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்பலைத்தெழு காமுறு காளையர்
காதலாற்கழற் சேவடி கைதொழ
அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே. 4
தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர்
தூமணிமிட றாபகு வாயதோர்
பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா
தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்தலாற்கழற் சேவடி கைதொழ
இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே. 5
ஆகந்தோயணி கொன்றை யாய்அனல்
அங்கையாய்அம ரர்க்கம ராஉமை
பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா
மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம்
மன்னினாய்மழு வாளி னாய் அழல்
நாகந்தோயரையாய் அடியாரை நண்ணாவினையே. 6
சாதியார்பளிங் கின்னொடு வெள்ளிய
சங்கவார்குழை யாய்திக ழப்படும்
வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள்
ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம்
அங்கையால்தொழ வல்லடி யார்களை
வாதியாதகலுந் நலியாமலி தீவினையே. 3.01.7
திருப்பூந்தராய்
தேம்பல் நுண்ணிடை யாள்செழுஞ்சேலன
கண்ணியோ டண்ணல் சேர்விடந் தேன்அமர்
பூம்பொழில்திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமென்
றோம்புதன்மையன் முத்தமிழ்நான்மறை
ஞானசம்பந்தன் ஒண்தமிழ் மாலைகொண்
டாம்படியிவை யேத்தவல் லார்க்கடை யாவினையே. 3.02.11
திருப்புகலி
நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல
முழவொடும் அருநட முயற்றினனே
முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே. 4
அடியவர் தொழுதெழ அமரரேத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகலல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே
புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர்
நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே. 3.03.7
திருஆவடுதுறை
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 7
அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே. 3.04.11
திருப்பூந்தராய்
வேந்த ராயுல காள விருப்புறிற்
பூந்த ராய்நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச்
சாதி யாவினை யான தானே. 3
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்திய ராகி வணங்கிட
நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
எந்தை யாயஎம் ஈசன் தானே. 5
மத்த மான இருவர் மருவொணா
அத்த னானவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந் தானே. 9
புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
அந்த மில்லெம் மடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும்
பந்த மார்வினை பாறி டுமே. 3.05.11
திருவீழிமிழலை
நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண்
டந்தக னைச்செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர்
வீழிமி ழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர்
கங்கையங் காடிய
மஞ்சனச் செஞ்சடை யாரென
வல்வினை மாயுமே. 3
சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நல்
மூவிரு தொன்னூலர்
வீடர்முத் தீயர்நால் வேதத்தர்
வீழிமி ழலையார்
காடரங் காவுமை காணஅண்
டத்திமை யோர்தொழ
நாடக மாடியை யேத்தவல்
லார்வினை நாசமே. 3.09.7
திருவிராமேச்சுரம்
தேவியை வவ்விய தென்னிலங்
கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித்
தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய்
தஇரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம்
மேல்வினை வீடுமே. 2
சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங்
கட்பல தீயன
முனிவது செய்துகந் தானைவென்
றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடென் றண்ணல்செய்
தஇரா மேச்சுரம்
பனிமதி சூடிநின் றாடவல்
லபர மேட்டியே. 3.10.7
திருப்புனவாயில்
போதியெ னப்பெய ராயினா
ரும்பொறி யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந்
துதளர் வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந்
தண்புன வாயிலில்
வேதனை நாடொறும் ஏத்துவார்
மேல்வினை வீடுமே. 3.11.10
திருவெண்காடு
நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எஞ் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே. 3.15.11
திருப்பூவணம்
வெந்துய ருறுபிணி வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
நந்தியை யடிதொழ நன்மை யாகுமே. 3
வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை
நாசனை யடிதொழ நன்மை யாகுமே. 3.20.4
பஞ்சாக்கரப்பதிகம்
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே. 3.22.6
திருவிற்கோலம்
முந்தினான் மூவருள் முதல்வ னாயினான்
கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே. 3.23.5
கொல்லி
திருந்துதேவன்குடி
வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே. 3.25.2
திருஏடகம்
கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்
தடிகளை அடிபணிந் தரற்றுமின் அன்பினால்
இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே. 3.32.2
திருக்காளத்தி
வீங்கிய உடலினர்
விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும்
பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி
யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை
வானவர்க் கொருவனே. 3.36.10
திருப்பிரமபுரம்
ஊடினாலினி யாவதென்னுயர்
நெஞ்சமேயுறு வல்வினைக்
கோடிநீயுழல் கின்றதென்னழ
லன்றுதன்கையி லேந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான்பிர
மாபுரத்துறை வேதியன்
ஏடுநேர்மதி யோடராவணி
எந்தையென்றுநின் றேத்திடே. 6
செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில
ரென்றும்ஏத்தி நினைந்திட
ஐயன்ஆண்டகை அந்தணன்அரு
மாமறைப்பொரு ளாயினான்
பெய்யும்மாமழை யானவன்பிர
மாபுரம்இடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந்
தேத்துமின்வினை வீடவே. 3.37.7
திருஏகம்பம்
கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவாவினையே. 1
கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியாவினையே. 3
வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவாவினையே. 4
படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையாவினையே. 5
நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே. 3.41.6
கெளசிகம்
சீர்காழி
நலியுங் குற்றமும் நம்முட னோய்வினை
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே. 3.43.5
திருக்கழிப்பாலை
துள்ளும் மான்மறி அங்கையி லேந்தியூர்
கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின வோயுமே. 6
இலங்கை மன்னனை ஈரைந் திரட்டிதோள்
துலங்க வூன்றிய தூமழு வாளினார்
கலங்கள் வந்துல வுங்கழிப் பாலையை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
ஆட்சி யால்அல ரானொடு மாலுமாய்த்
தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்
காட்சி யாலறி யான்கழிப் பாலையை
மாட்சி யால்தொழு வார்வினை மாயுமே. 3.44.9
திருக்கருக்காவூர்
விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
கமுத நீழலக லாததோர் செல்வமாங்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 2
கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர்
நிலவு பாடலுடை யான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே. 3.46.11
திருமழபாடி
மின்னி னாரிடை யாளொரு பாகமாய்
மன்னி னானுறை மாமழ பாடியைப்
பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
துன்னி னார்வினை யாயின வோயுமே. 7
திருவின் நாயக னுஞ்செழுந் தாமரை
மருவி னானுந் தொழத்தழல் மாண்பமர்
உருவி னானுறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே. 9
நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே
மெலியும் நம்முடன் மேல்வினை யானவே.
நமச்சிவாய பதிகம்
மந்த ரம்மன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே. 3.49.6
திருஆலவாய்
தேரருஞ் சமணரும்தேற்றமில் வினைத்தொழில்
போற்றிசைத்து நின்கழற் புகழ்ந்துபுண்ணி யங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றிசைக்கும் மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே. 3.52.10
திருஆனைக்கா
தாரமாய மாதராள் தானொர்பாக மாயினான்
ஈரமாய புன்சடை யேற்றதிங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை யானைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே. 3
ஊழியூழி வையகத் துயிர்கள்தோற்று வானொடும்
ஆழியானுங் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே. 3.53.11
திருப்பாசுரம்
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ. 3
ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். 3.54.4
திருவான்மியூர்
கன்றா ருங்கமுகின்
வயல்சூழ்தரு காழிதனில்
நன்றா னபுகழான்
மிகுஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர்
திருவான்மி யூரதன்மேற்
குன்றா தேத்தவல்லார்
கொடுவல்வினை போயறுமே. 3.55.11
பஞ்சமம்
திருவக்கரை
தண்புன லும்மரவுஞ் சடைமேலுடை யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன்னுறை வக்கரையைச்
சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லா ரவர்தம்வினை பற்றறுமே. 3.60.11
திருவெண்டுறை
கரமிரு பத்தினாலுங் கடுவன்சின மாயெடுத்த
சிரமொரு பத்துமுடை அரக்கன்வலி செற்றுகந்தான்
பரவவல் லார்வினைகள் அறுப்பானொரு பாகமும்பெண்
விரவிய வேடத்தினான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 8
திண்ணம ரும்புரிசைத் திருவெண்டுறை மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தருசண்பையர் தந்தலைவன்
எண்ணமர் பல்கலையான் இசைஞானசம் பந்தன்சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே. 3.61.11
திருப்பனந்தாள்
உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே. 3
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் அனல் பொங்கர வும்புனைந்த
தாழ்சடை யான்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே. 4
தண்வயல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரத்துக்
கண்ணய லேபிறையான் அவன் றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம் பந்தன்நல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர் தம்வினை பற்றறுமே 3.62.11
திருப்பெருவேளூர்
பைம்பொன்சீர் மணிவாரிப் பலவுஞ்சேர் கனியுந்தி
அம்பொன்செய் மடவரலார் அணிமல்கு பெருவேளூர்
நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான
சம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய் சாராவே. 3.64.11
சாதாரி
திருப்பிரமபுரம்
தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர்
பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி
மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொள்
மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி
காணநடு வேணுபுரமே. 3.67.2
திருக்கயிலாயம்
சிங்கவரை மங்கையர்கள் தங்களன
செங்கைநிறை கொங்குமலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்ககல
வங்கமொழி யெங்குமுளவாய்த்
திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர்
தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை
தங்குகயி லாயமலையே. 3
முடியசடை பிடியதொரு வடியமழு
வுடையர்செடி யுடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி
நொடியமகிழ் அடிகளிடமாங்
கொடியகுர லுடையவிடை கடியதுடி
யடியினொடு மிடியினதிரக்
கடியகுரல் நெடியமுகில் மடியவத
ரடிகொள்கயி லாயமலையே. 4
அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை
சந்தனமொ டுந்தியகிலுங்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல
சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு
செந்தமிழ் இசைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை
நைந்துபர லோகமெளிதே. 3.68.11
திருவைகாவூர்
இன்னவுரு இன்னநிறம் என்றறிவ
தேலரிது நீதிபலவும்
தன்னவுரு வாமெனமி குத்தவன்
நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போம்வகையி னால்முழு
துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதுமரு வித்தொழுது
சேரும்வயல் வைகாவிலே. 3.71.4
திருமாகறல்
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே. 1
கலையினொலி மங்கையர்கள் பாடலொலி
யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள்
வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன்
ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை
யேத்தவினை யகலுமிகவே. 2
காலையொடு துந்துபிகள் சங்குகுழல்
யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள்
ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர்
நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை
யேத்தவினை பறையுமுடனே. 3
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள்
உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன
லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி
பாடுநுக ராவெழுமினே. 4
துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி
தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட
மாடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்
வானொர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி
யாரைநலி யாவினைகளே. 5
மன்னுமறை யோர்களொடு பல்படிம
மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை
யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள்
கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர்
வானுலகம் ஏறலெளிதே. 6
வெய்யவினை நெறிகள்செல வந்தணையும்
மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி
மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி
தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை
யாவினைகள் அகலுமிகவே. 7
தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு
தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள்
ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென ஏத்தவினை
நிற்றலில போகுமுடனே. 8
தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு
நீர்குவளை தோன்றமருவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும்
ஓசைபயில் மாகறலுளான்
சாயவிர லூன்றியஇ ராவணன
தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை
யாயினவும் அகல்வதெளிதே. 9
காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின்
மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானும்அறி யாமையெரி
யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய
நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி
யாரையடை யாவினைகளே. 10
கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ்
வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி
கூடுசம் பந்தன்உரையான்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில்
மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள்
தொல்வினைகள் ஒல்குமுடனே. 3.72.11
திருப்பட்டீச்சரம்
பாடன்மறை சூடன்மதி பல்வளையொர்
பாகமதில் மூன்றோர்கணையாற்
கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல்
கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர
மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
காட்டிவினை வீடுமவரே. 1
நீரின்மலி புன்சடையர் நீளரவு
கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது ஏந்தியுடை
கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர
மேத்தவினை பற்றழியுமே. 2
மருவமுழ வதிரமழ பாடிமலி
மத்தவிழ வார்க்கஅரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர
மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை
அஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை
யாரையடை யாவினைகளே. 5
பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை
யோருலகு பேணலுறுவார்
துறவியெனும் உள்ளமுடை யார்கள்கொடி
வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி
பாடுமற வாதவவரே. 7
நேசமிகு தோள்வலவ னாகியிறை
வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண
ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலின் நண்ணலெளி
தாம்அமரர் விண்ணுலகமே. 8
தடுக்கினையி டுக்கிமட வார்களிடு
பிண்டமது வுண்டுழல்தருங்
கடுப்பொடியு டற்கயவர் கத்துமொழி
காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல்வ யல்கொள்மழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர
மேத்தவினை பற்றறுதலே. 10
மந்தமலி சோலைமழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர
மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி
ஞானசம் பந்தன்அணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல
தொண்டர்வினை நிற்பதிலவே. 3.73.11
திருக்கோகர்ணம்
வரைத்தலம் நெருக்கிய முருட்டிருள்
நிறத்தவன வாய்கள்அலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு
மானினிது மேவுமிடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி
வாகிவினை தீரஅதன்மேல்
குரைத்தலை கழற்பணிய ஓமம்வில
கும்புகைசெய் கோகரணமே. 3.79.8
திருத்தோணிபுரம்
பண்ணமரு நான்மறையர் நூன்முறைப
யின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை
பேசும்அடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள்
செய்தலுடை யானூர்
துண்ணெனவி ரும்புசரி யைத்தொழிலர்
தோணிபுர மாமே. 3.81.7
திருநல்லூர்
பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல்
பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத
லாளரவ ரிடமாம்
இடிகொள்முழ வோசையெழி லார்செய்தொழி
லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமனம் இனியவர்கள்
சேர்திருந லூரே. 3.83.5
திருப்புறவம்
சொன்னய முடையவர் சுருதிகள்
கருதிய தொழிலினர்
பின்னையர் நடுவுணர் பெருமையர்
திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறஅரு
ளினருறை முதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ்
பொழிலணி புறவமே. 6
திருவிழிமிழலை
பொன்னன புரிதரு சடையினர்
பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை
மருவிய ஒருவனார்
தென்னென விசைமுரல் சரிதையர்
திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதொர் அரவினர்
பதிவிழி மிழலையே. 3.85.6
திருவிளமர்
பண்டலை மழலைசெய் யாழென
மொழியுமை பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு
மவர்வினை குறுகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய
அருள்புரி விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம்
வளநகர் விளமரே. 5
மனைகள்தொ றிடுபலி யதுகொள்வர்
மதிபொதி சடையினர்
கனைகடல் அடுவிடம் அமுதுசெய்
கறையணி மிடறினர்
முனைகெட வருமதிள் எரிசெய்த
அவர்கழல் பரவுவார்
வினைகெட அருள்புரி தொழிலினர்
செழுநகர் விளமரே. 6
வெந்தவெண் பொடியணி யடிகளை
விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற வுரைசெய்த
தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர்
அருமறை ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயு
மவர்வினை பறையுமே. 3.88.11
திருவடகுரங்காடுதுறை
கோலமா மலரொடு தூபமுஞ்
சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்
திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை
நினையவல் வினைகள்வீடே. 3.91.6
திருநெல்வேலி
பெருந்தண்மா மலர்மிசை அயனவன்
அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே
லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள்
ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா
டக்கெடும் அருவினையே. 3.92.11
திருவெங்குரு
வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே. 3.94.6
திருஇன்னம்பர்
யாழ்நரம் பின்னிசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை யிலரே. 2
இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழல்தொழும்
அடியவர் அருவினை யிலரே. 4
எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ் மேனியி னீரே
நிழல்திகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே. 7
ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவ
ரார்துயர் அருவினை யிலரே. 3.95.10
திருநெல்வெண்ணை
நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே. 3.96.2
திருச்சிறுகுடி
செற்றினின் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவர் அருவினை யிலரே. 5
செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவுசெய் தீரே
இருவரை அசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவினை யொடுதுய ரிலரே. 3.97.9
பழம்பஞ்சுரம்
திருஇராமேச்சுரம்
தேவியை வவ்விய தென்னிலங்கை
அரையன் திறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும்
இராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தன்நல்ல
மொழியான் நவின்றேத்தும்
பாவியன் மாலைவல் லாரவர்தம்
வினையாயின பற்றறுமே. 3.101.11
திருநாரையூர்
தீவினை யாயின தீர்க்கநின்றான்
திருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடியான்
புடைசூழப் பலபூதம்
ஆவினில் ஐந்துங்கொண் டாட்டு
கந்தான் அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை யெய்தழித் தான்கழலே
பரவா எழுவோமே. 2
மாயவன் சேயவன் வெள்ளியவன்
விடஞ்சேரும் மைமிடற்றன்
ஆயவ னாகியொ ரந்தரமும்
மவனென்று வரையாகம்
தீயவன் நீரவன் பூமியவன்
திருநாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர்மேல்
வினையா யினவீடுமே. 3
கள்ளி யிடுதலை யேந்துகையர்
கரிகாடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடைதன்மேன்
மிளிரா டரவார்த்து
நள்ளிருள் நட்டம தாடுவர்நல்
நலன்ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்திலெம் மேல்வரு
வல்வினை யாயின வோடுமே. 7
தண்மதி தாழ்பொழில் சூழ்புகலித்
தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர்சடை யான்உறையுந்
திருநாரை யூர்தன்மேல்
பண்மதி யாற்சொன்ன பாடல்பத்தும்
பயின்றார் வினைபோகி
மண்மதி யாதுபோய் வான்புகுவர்
வானோர் எதிர்கொளவே. 3.102.11
திருவலம்புரம்
நல்லியல் நான்மறை யோர்புகலித்
தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடையினான்
வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல
வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச்
சிவலோகஞ் சேர்வாரே. 3.103.11
திருப்பரிதிநியமம்
அரவொலி வில்லொலி அம்பினொலி
அடங்கார் புரமூன்றும்
நிரவவல் லார்நிமிர் புன்சடைமேல்
நிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த
இறைவர்க் கிடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும்
பரிதிந் நியமமே. 3.104.2
திருக்கலிக்காமூர்
மடல்வரை யின்மது விம்முசோலை
வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ்
சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய
வொருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும்
இறைவன் னருளாமே. 1
துறைவளர் கேதகை மீதுவாசம்
சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங்
கலிக்கும் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை
மனத்தால் நினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை
நினையா வினைபோமே. 6
மாசு பிறக்கிய மேனியாரும்
மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும்
அறியார் அவர்தோற்றங்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும்
வளமார் கலிக்காமூர்
ஈசனை யெந்தைபி ரானையேத்தி
நினைவார் வினைபோமே. 3.105.10
திருநாரையூர்
விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம்
விரிபூ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த
பெருமான் எரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந்
திருநாரை யூரானென்
றெண்ணுமின் நும்வினை போகும்வண்ணம்
இறைஞ்சும் நிறைவாமே. 2
வானமர் தீவளி நீர்நிலனாய்
வழங்கும் பழியாகும்
ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற
முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான்
திருநாரை யூரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா
கொடுவல் வினைதானே. 5
ஊழியும் இன்பமுங் காலமாகி
உயருந் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை
வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகி
நளிர்நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும்
வகையின் விளைவாமே. 3.107.7
திருப்பிரமபுரம்
துங்க மாகரி பங்க மாவடுஞ்
செங்கை யானிகழ் வெங்கு ருத்திகழ்
அங்க ணானடி தங்கை யாற்றொழத்
தங்கு மோவினையே. 4
ஏந்த ராவெதிர் வாய்ந்த நுண்ணிடைப்
பூந்த ணோதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்த ராய்தொழும் மாந்தர் மேனிமேற்
சேர்ந்தி ராவினையே. 6
உறவு மாகியற் றவர்க ளுக்குமா
நெதிகொ டுத்துநீள் புவியி லங்குசீர்ப்
புறவ மாநகர்க் கிறைவ னேயெனத்
தெறகி லாவினையே. 8
பண்பு சேரிலங் கைக்கு நாதன்நன்
முடிகள் பத்தையுங் கெடநெ ரித்தவன்
சண்பை யாதியைத் தொழும வர்களைச்
சாதியா வினையே. 2.110.9
திருவீழிமிழலை
விளங்கு நான்மறை வல்ல வேதியர்
மல்கு சீர்வளர் மிழலை யானடி
உளங்கொள் வார்தமை உளங்கொள் வார்வினை
ஒல்லை யாசறுமே. 2
விசையி னோடெழு பசையு நஞ்சினை
யசைவு செய்தவன் மிழலை மாநகர்
இசையு மீசனை நசையின் மேவினான்
மிசை செயாவினையே. 3
தக்கன் வேள்வியைச் சாடி னார்மணி
தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்க னாரடி தொழுவர் மேல்வினை
நாடொ றுங்கெடுமே. 3.111.6
திருக்கழுமலம்
காதம ரத்திகழ் தோடினனே
கானவ னாய்க்கடி தோடினனே
பாதம தாற்கூற் றுதைத்தனனே
பார்த்த னுடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே
சார்ந்த வினைய தரித்தனனே
போத மமரு முரைப்பொருளே
புகலி யமர்ந்த பரம்பொருளே. 3.113.3
புறநீர்மை
திருவீழிமிழலை
புள்ளித்தோ லாடை பூண்பது நாகம்
பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளீத்தீ விளக்குக் கூளிகள் கூட்டங்
காளியைக் குணஞ்செய்கூத் துடையோன்
அள்ளற் காராமை அகடு வான்மதியம்
ஏய்க்கமுட் டாழைக ளானை
வெள்ளைக்கொம் பீனும் விரிபொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 1
இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோர்
இழுகுசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய்
கரப்பாய் பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ
டடுத்தரிந் தெடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 2
நிருத்தனா றங்கன் நீற்றன் நான்மறையன்
நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்
ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கும் உயிராய்
யுளனிலன் கேடிலி யுமைகோன்
திருத்தமாய் நாளும் ஆடுநீர்ப் பொய்கை
சிறியவர் அறிவினின் மிக்க
விருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 3
தாங்கருங் காலந் தவிரவந் திருவர்
தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம்
பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச்
செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 4
கூசுமா மயானங் கோயில்வா யிற்கண்
குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி
பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர்
மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 5
பாதியோர் மாதர் மாலுமோர் பாகர்
பங்கயத் தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற
அடிகளார் அமரர்கட் கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்
பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத் தொலியறா வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 6
தன்றவம் பெரிய சலந்தர னுடலந்
தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத்
திறையவன் பிறையணி சடையன்
நின்றநாட் காலை யிருந்தநாள் மாலை
கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 7
கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த
கரமுரஞ் சிரநெரிந் தலற
அடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க
அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள்
பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 8
அளவிட லுற்ற அயனொடு மாலும்
அண்டமண் கெண்டியுங் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த
முக்கண்எம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னந்
தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவீற் றிருக்கும்
மிழலையா னெனவினை கெடுமே. 9
கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக்
கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய எழுந்தநஞ் சதனை
யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின்
குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 3.119.10
திருபந்தனைநல்லூர்
கல்லிசை பூணக் கலையொலி ஓவாக்
கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளா
நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி
மேவிய பந்தணை நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல்
தொல்வினை சூழகி லாவே. 3.121.11
திருக்கோணமாமலை
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலை யீரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே. 3.123.11
திருக்கிளியன்னவூர்
எண்பெ றாவினைக்கேதுசெய் நின்னருள்
நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறி
மண்பொ றாமுழுச் செல்வமும் மல்குமால்
புண்பொ றாதகி ளியன்ன வூரனே. 3.127. 6
நான்காம் திருமுறை
கொல்லி
திருவதிகைவீரட்டானம்
முன்னம்மடி யேன்அறி யாமையினான்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 4.01.4
காந்தாரம்
திருவாரூர்பழமொழி
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
டென்னையோர் உருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்
டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்
டருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
காக்கைப்பின் போன வாறே. 4.05.2
காந்தாரபஞ்சமம்
திருக்கெடிலவாணர்
குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்
கெழுவின யோகினர் கெடில வாணரே. 4.10.5
பழந்தக்கராகம்
திருப்பழனம்
புள்ளிமான் பொறியரவம்
புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த
இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும்
என்றுரைப்பர் உலகெல்லாங்
கள்ளியேன் நான்இவற்கென்
கனவளையுங் கடவேனோ. 4.12.9
இந்தளம்
திருஆரூர் அரநெறி
துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணந்
தற்றவர் தம்வினை யானவெல் லாமற
அற்றவர் ஆரூர் அரநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே. 5
கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும்
பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி
நாடவல் லார்வினை வீடவல் லாரே. 4.17.7
சீகாமரம்
திருஆரூர்
அளித்துவந்தடி கைதொழுமவர்
மேல்வினைகெடு மென்றிவையகங்
களித்துவந் துடனே
கலந்தாடக் காதலராய்க்
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந்
தாடுகோதையர் குஞ்சியுள்புகத்
தெளிக்குந் தீர்த்தமறாத்
திருவாரூ ரம்மானே. 4.20.6
திருநேரிசை
திருவதிகைவீரட்டானம்
தெருளுமா தெருள மாட்டேன் தீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே அழுந்தி நாளும் போவதோர் நெறியுங் காணேன்
இருளுமா மணிகண் டாநின் இணையடி இரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டும் அதிகைவீ ரட்ட னீரே. 4
கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி உணர்வெனும் இமைதி றந்து
கொண்டேன்விழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனுஞ் சரக்குக்
அழித்திலேன் அயர்த்துப் போனேன் அதிகைவீ ரட்ட னீரே.4.26.7
நாதனா ரென்ன நாளும் நடுங்கின ராகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார் இணையடி தொழுதோம் என்பார்
ஆதனா னவனென் றெள்கி அதிகைவீ ரட்ட னேநின்
பாதநான் பரவா துய்க்கும் பழவினைப் பரிசி லேனே. 4.28.3
திருமறைக்காடு
அறுமையிவ் வுலகு தன்னை யாமெனக் கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவு ணாதே
சிறுமதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை யாவார் மாமறைக் காட னாரே. 4.33.3
திருப்பழனம்
போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார் குணமிலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார் பழனத்தெம் பரம னாரே. 2
கண்டராய் முண்ட ராகிக் கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித் தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைகள் தீர்ப்பார் பழனத்தெம் பரம னாரே. 3
காற்றனாற் காலற் காய்ந்து காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சைத் தோடுடைக் காதர் சோதி
ஏற்றினார் இளவெண் டிங்கள் இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம் பழனத்தெம் பரம னாரே. 4.36.8
திருவையாறு
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் ஐயனை யாற னாரே. 5
சங்கணி குழையும் வைத்தார் சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே. 4.38.6
பாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே. 4
குருந்தம தொசித்த மாலுங் குலமலர் மேவி னானுந்
திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே. 4.39.9
திருஏகம்பம்
மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபாலம் ஏந்திக் கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே. 5
தருவினை மருவுங் கங்கை தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றுந்
திருவினைத் திருவே கம்பஞ் செப்பிட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின் றேனே. 6
துருத்தியார் பழனத் துள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார் வல்வினை மாயு மன்றே. 5.44.10
திருவொற்றியூர்
பின்னுவார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுள் தொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவார் உள்ளத் துள்ளார் ஒற்றியூ ருடைய கோவே. 4.45.8
திருவாரூர்
பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே அமரர் கோவே ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.9
வணங்கிமுன் அமரர் ஏத்த வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர் மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி ஆரூரெம் அடிக ளாரே. 4.53.8
திருவலம்புரம்
தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டே அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே. 4.55.3
திருஆவடுதுறை
கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை யேந்திப் பலிதிரிந் தூர்கள் தோறும்
அட்டமா வுருவி னானே ஆவடு துறையு ளானே. 3
துட்டனாய் வினைய தென்னுஞ் சுழித்தலை அகப்பட் டேனைக்
கட்டனாய் ஐவர் வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும் ஆவடு துறையு ளானே. 5
காரழற் கண்ட மேயாய் கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பி னாலே யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையு ளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தி யாடும் ஆவடு துறையு ளானே. 6
கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய
சீலமே அறிய மாட்டேன் செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே. 4.57.8
திருஇராமேச்சுரம்
வாக்கினால் இன்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மால்தான்
தேக்குநீர் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க்கு நோய்வினை நுணுகு மன்றே. 7
வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே. 4.61.10
திருஆலவாய்
ஒருமருந் தாகி யுள்ளாய் உம்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய் ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந் தால வாயில் அப்பனே அருள்செ யாயே. 4.62.3
திருஅண்ணாமலை
உருவமும் உயிரு மாகி ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லால் மற்றொரு மாடி லேனே. 4.63.3
திருநாகேச்சரம்
வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் நாகஈச் சரவ னாரே. 4.66.2
திருக்கொண்டீச்சரம்
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்ட வாணா அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.2
திருஆலங்காடு
வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலுங்
கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே. 4.68.1
திருக்கோவிலூர்வீரட்டம்
படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்கல் நின்றும்
விடகிலா வாத லாலே விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலேன் என்செய் கேன்நான் இரப்பவர் தங்கட் கென்றுங்
கொடையிலேன் கொள்வ தேநான் கோவல்வீ ரட்ட னீரே. 4.69.7
திருநனிப்பள்ளி
பண்ணினார் பாட லாகிப் பழத்தினில் இரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக் கருத்தொடு கற்ப மாகி
எண்ணினார் எண்ண மாகி ஏழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிக ளாரே. 4.70.4
திருநாகைக்காரோணம்
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே.4.71.1
பொது
வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் இருந்த சூழல் வான்றவழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன் வஞ்சனேன் என்செய் கேனே.5
மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொள்நோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வுதா உலக மூர்த்தீ.4.75.7
நிறைவிலேன் நேச மில்லேன் நினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும் வகையெனக் கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே திருவடி பரவி யேத்தக்
குறைவிலேன் குற்றந் தீராய் கொன்றைசேர் சடையி னானே. 4.76.9
சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
மந்திரம் நமச்சி வாய ஆகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே.4
தொண்டனேன் பிறந்து வாளாத் தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும் பெரியதோர் அவாவிற் பட்டேன்
அண்டனே அமரர் கோவே அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைக் கங்கை சூடுந் திகழ்தரு சடையி னானே. 4.77.6
செம்மைவெண் ணீறு பூசுஞ் சிவனவன் தேவ தேவன்
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே.5
விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் இயல வெள்ளந்
திளைக்கின்ற முடியி னான்றன் திருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி என்செய்வான் தோன்றி னேனே. 4.78.8
கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலும் இறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணின் நல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு மென்செய்வான் தோன்றி னேனே. 3
மூர்த்தியை நினைய மாட்டேன்முன்னையென் வினையி னாலே
பின்னைநான் பித்த னாகிப் பிதற்றுவன் பேதை யேன்நான்
என்னுளே மன்னி நின்ற சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே. 4.79.4
திருவிருத்தம்
திருக்கழுமலம்
கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ் சூடி உகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன் வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க நாடொறும் ஆடுவரே. 2
சிந்தித் தெழுமன மேநினை யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென் றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும் நந்தம்மை ஆள்வனவே. 4.82.5
திருச்சோற்றுத்துறை
அளக்கு நெறியினன் அன்பர்கள் தம்மனத் தாய்ந்துகொள்வான்
விளக்கு மடியவர் மேல்வினை தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்குங் குழையணி சோற்றுத் துறையுறை வார்சடைமேற்
றிளைக்கும் மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே. 4.85.3
திருவொற்றியூர்
சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன செய்தி உலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு நாமென்று கண்குழித்துத்
தெற்றித் திருப்பதல் லாலென்ன செய்யுமித் தீவினையே. 4.86.9
திருப்பழனம்
ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந் தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர சேயென் பழவினைநோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே. 4.87.6
திருப்பூந்துருத்தி
உருவினை ஊழி முதல்வனை ஓதி நிறைந்துநின்ற
திருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் தேனுடைய
பொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் தியுறையுங்
கருவினைக் கண்மூன் றுடையனை யானடி போற்றுவதே. 4
திருநெய்த்தானம்
கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேற்
சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியுங்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேற்
சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே. 3
பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த்தானத் திருந்தவனே. 4.89.7
திருவேதிகுடி
முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர் புரம்பொடி யானசெய்யுஞ்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை நாமடைந் தாடுதுமே. 3
எண்ணும் எழுத்துங் குறியும் அறிபவர் தாமொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாமடைந் தாடுதுமே. 4.90.6
திருவையாறு
குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
செறிவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 1
கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங் கூர்வித்தநோய்
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
ஆர்வித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 2
தாக்கின வாசல மேவினை காட்டியுந் தண்டித்தநோய்
நீக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி
ஆக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 3
இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்துக்
கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 5
இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்து
உடைவித்த வாறுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
அடைவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 6
படக்கின வாபட நின்றுபன் னாளும் படக்கினநோய்
அடக்கின வாறது வன்றியுந் தீவினை பாவமெல்லாம்
அடக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
தொடக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 7
மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
இறப்பித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 8
துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித் துயக்கினநோய்
இயக்கின வாறிட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்தருளி
அயக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 4.91.9
திருவையாறு
சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ யாறன் அடித்தலமே. 1
சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்று நீங்காப் பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்த
அழலார் ஒளியன காண்கஐ யாறன் அடித்தலமே. 4.92.19
திருக்கண்டியூர்
முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் தானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண் டீரண்ட வானவரே. 4
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரான்அங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே.4.93.9
திருப்பாதிரிப்புலியூர்
விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடி யோங்கட் கரியதுண்டே. 4.94.3
திருச்சத்திமுற்றம்
பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப் புற்றவன் பொன்முடிதோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட் டலற இரங்கிஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.96.10
திருவேகம்பம்
உரைக்குங் கழிந்திங் குணர்வரி யான்உள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண் வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க் கறியவொண் ணானெங்கள் ஏகம்பனே. 4.99.5
திருவாரூர்
வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர்தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே. 4.102.1
திருப்புகலூர்
தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே. 1
ஓணப் பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனுங்
காணப் பராவியுங் காண்கின் றிலர்கர நாலைந்துடைத்
தோணற் பிரானை வலிதொலைத் தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே. 4.105.10
பசுபதி திருவிருத்தம்
ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண் டாயண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே. 4.110.4
ஐந்தாம் திருமுறை
திருக்குறுந்தொகை
திருத்தில்லை
அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. 3
அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே. 4
வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே. 5.01.9
திருஅண்ணாமலை
காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ. 4
மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மறந் துய்வனோ. 5.04.5
திருஅண்ணாமலை
பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே. 1
பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே. 4
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே. 5
கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே. 7
கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே. 8
முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே. 05.05.9
திருவாரூர்
நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்
காரொத் தமிடற் றர்கனல் வாயரா
ஆரத் தர்உறை யும்மணி ஆரூரைத்
தூரத் தேதொழு வார்வினை தூளியே. 9
விண்ட மாமலர் மேலுறை வானொடுங்
கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலா
அண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழப்
பண்டை வல்வினை நில்லா பறையுமே. 05.07.11
திருஅன்னியூர்
பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடங்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே. 3
எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி இருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே. 5.08.5
திருவீழிமிழலை
புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவன் ஈசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே. 3
எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர்
உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்துப் போவது வீழி மிழலைக்கே. 5.12.5
திருவிடைமருதூர்
கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை பிரான்இடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமே. 3
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளும் இடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே. 4
வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே. 5
ஏற தேறும் இடைமரு தீசனார்
கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்
கூறி யூறி உருகுமென் உள்ளமே. 6
விண்ணு ளாரும் விரும்பப் படுபவர்
மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
நண்ணி னாரைநண் ணாவினை நாசமே. 7
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச்
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே. 8
முற்றி லாமதி சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை யாலரக் கன்முடி
எற்றி னார்கொடி யாரிடை மருதினைப்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. 5.14.11
வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே. 5.15.3
திருப்பேரெயில்
செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே. 5.16.4
திருவெண்ணி
காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடுங்
கூற்றி னையுதைத் திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே. 3
சடைய னைச்சரி கோவண ஆடைகொண்
டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
படைய னைமழு வாளொடு பாய்தரும்
விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே. 8
இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னாலரக் கன்றிறல் வாட்டினார்
சிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியைத்
தலையி னாற்றொழு வார்வினை தாவுமே. 5.17.11
திருகடம்பந்துறை
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவருங்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே. 4
மறைகொண் டம்மனத் தானை மனத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீரத் தொழுமினே. 5
பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநந் தீவினை நாசமே. 8
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே. 5.18.10
திருக்கடம்பூர்
சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை
நினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே. 5
அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத்
தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே. 8
வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை
அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கும் உள்ளத் தவர்வினை ஓயுமே. 5.19.11
திருக்கடம்பூர்கோயில்
வேறு சிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. 5.20.4
திருக்குடமூக்கு
தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே. 5.22.7
திருநின்றியூர்
புற்றி னார்அர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. 3
நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயில் எய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னாற்றொழு வார்வினை ஓயுமே. 8
எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வூன்ற வலானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே. 5.23.10
திருஒற்றியூர்
ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே. 1
படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் ணீற்றினர்
உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர்
அடையு முள்ளத் தவர்வினை யல்குமே. 5.24.9
திருப்பாசூர்
முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே. 1
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார்
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே. 5.25.2
திருவன்னியூர்
இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை
மெய்ம்மை தானறி யாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின் தீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே. 5.26.4
திருவையாறு
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமு மாவர்ஐ யாறரே. 5.28.7
திருப்பராய்த்துறை
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே. 1
எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற்
பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே. 8
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே. 5.30.11
திருஆனைக்கா
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே. 4
உருளும் போதறி வொண்ணா உலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே. 5.31.8
திருச்சோற்றுத்துறை
ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயறத்
தொட்டு நின்றுமச் சோற்றுத் துறையர்க்கே
பட்டி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 3
ஆட்டி னாயடி யேன்வினை யாயின
ஓட்டி னாயொரு காதில் இலங்குவெண்
தோட்டி னாயென்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே. 5.33.5
திருநெய்த்தானம்
மாலொ டும்மறை யோதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செருச் செய்யும்நெய்த் தானனை
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே. 9
வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே. 5.34.10
திருப்பழனம்
ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர் தீவினை யாளர்கள்
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னானுமை யாளொடுங் கூடவே. 8
சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி யும்புர மூன்றெய்தான்
பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை
எற்றி னான்மறக் கேனெம் பிரானையே. 5.35.9
திருசெம்பொன்பள்ளி
என்பும் ஆமையும் பூண்டங் குழிதர்வர்க்
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே. 2
வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே. 5.36.8
திருக்கடவூர்வீரட்டம்
மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே. 1
சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வூரரே. 5.37.8
திருமயிலாடுதுறை
பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவன் இன்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழுங்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே. 5.39.11
திருப்பைஞ்சீலி
மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே. 2
விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருட் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப்பைஞ் ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே. 5.41.3
திருவேட்களம்
நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே. 1
அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே. 4
கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே. 6
வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே. 5.42.9
திருநல்லம்
அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாத னடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே. 6
வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய சிவகதி சேரலாஞ்
சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை யானிடம் நல்லமே. 5.43.8
திருவாமாத்தூர்
சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமாத்தூர் அழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே. 5.44.2
திருவேகம்பம்
பண்டு செய்த பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே. 1
மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்
தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி யேகம்பனே. 5.47.7
திருப்பாலைத்துறை
உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
இரக்க மாவருள் செய்தபா லைத்துறைக்
கரத்தி னாற்றொழு வார்வினை யோயுமே. 5.51.11
திருநாகேச்சரம்
நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே. 1
நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு நாகேச் சரவரே. 2
வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே. 5.52.9
திருவதிகைவீரட்டம்
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னாரடி சேரு மவருக்கே. 1
நீள மாநினைந் தெண்மலர் இட்டவர்
கோள வல்வினை யுங்குறை விப்பரால்
வாள மாலிழி யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே. 2
கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண்
டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே. 3
பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட்டு
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே. 4
தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன்
தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேன லானை யுரித்தவீ ரட்டரே. 5
ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார்
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே. 6
உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே. 7
ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற்
காலை யேத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே. 8
தாரித் துள்ளித் தடமல ரெட்டினாற்
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்டிரை பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே. 5.54.9
திருக்கோளிலி
மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே. 1
பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவுங் கங்கையுந் திங்களும் ஒண்சடை
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்றனை நித்தல் நினைமினே. 4
ஆவின் பால்கண் டளவில் அருந்தவப்
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே. 6
மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை
அடர்த்துப் பின்னும் இரங்கி யவற்கருள்
கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே. 5.56.10
திருக்கோளிலி
விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினைப்
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே. 2
விழவி னோசை ஒலியறாத் தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கை யானம ருந்திருக் கோளிலிக்
குழக னார்திருப் பாதமே கூறுமே. 5.57.4
திருப்பழையாறைவடதளி
திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண்
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை
அருட்டி றத்தணி யாறை வடதளித்
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே. 7
ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண்
வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே. 8
வாயி ருந்தமி ழேபடித் தாளுறா
ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்
பாயி ரும்புன லாறை வடதளி
மேய வன்னென வல்வினை வீடுமே. 9
செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல்
எருத்தி றவிர லாலிறை யூன்றிய
அருத்த னைப்பழை யாறை வடதளித்
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே. 5.58.10
திருமாற்பேறு
பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங்
கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு
திருமாற் பேறு தொழவினை தேயுமே. 1
தீத வைசெய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின்வினை யாயின போகுமே. 4
பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத் தீருங் கவலையே. 5.59.6
அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே. 5.60.2
அரிசில்கரைபுத்தூர்
முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே. 5.61.1
திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட்
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக்
கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
அண்ட னைக்கண் டருவினை யற்றெனே. 5.62.5
திருக்குரங்காடுதுறை
ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப்
பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங்
கூட்டி னான்குரங் காடு துறையனே. 6
நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாலருள் செய்தநற்
கொற்ற வன்குரங் காடு துறைதொழப்
பற்றுந் தீவினை யாயின பாறுமே. 5.63.10
திருப்பூவனூர்
குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே. 3
ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே. 4
புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல்
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல்
வல்ல மூரென வல்வினை மாயுமே. 5.65.5
திருவலஞ்சுழி
நாக்கொண் டுபர வும்மடி யார்வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன்
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே. 5.66.7
திருநள்ளாறு
உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை
நள்ளா றாவென நம்வினை நாசமே. 1
இலங்கை மன்னன் இருபது தோளிற
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும்
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. 5.68.10
திருக்கருவிலி
மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே. 5.69.1
திருக்கொண்டீச்சரம்
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே. 6
அல்ல லோடரு நோயில் அழுந்திநீர்
செல்லு மாநினை யாதே கனைகுரற்
கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே. 5.70.7
திருக்குரக்குக்கா
மிக்க னைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனற்கரைக்
கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா
நக்க னைநவில் வார்வினை நாசமே. 4
செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்
அக்க ரையரெம் மாதிபு ராணனார்
கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா
நக்க னைத்தொழ நம்வினை நாசமே. 5.75.8
திருக்கானூர்
தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம்
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்
காயத் தேயுளன் கானூர் முளையினை
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே. 5.76.3
திருக்கோடிகா
வாடி வாழ்வதென் னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை உள்கிநீர் நாடொறுங்
கோடி காவனைக் கூறீரேற் கூறினேன்
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே. 5.78.2
புள்ளிருக்குவேளூர்
உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக் குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. 8
அரக்க னார்தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக் குவேளூர்
விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே. 5.79.10
திருஅன்பிலாந்துறை
நுணங்கு நூலயன் மாலும் இருவரும்
பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா
அணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே. 5.80.8
திருப்பாண்டிக்கொடுமுடி
சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே. 1
நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்
திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டுமிது கைகண்ட யோகமே. 5.81.5
திருவான்மியூர்
படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே. 5.82.5
திருநாகைக்காரோணம்
பாணத் தால்மதில் மூன்று மெரித்தவன்
பூணத் தானர வாமை பொறுத்தவன்
காணத் தானினி யான்கடல் நாகைக்கா
ரோணத் தானென நம்வினை ஓயுமே. 1
வண்ட லம்பிய வார்சடை ஈசனை
விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக்
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை யான கழலுமே. 2
புனையும் மாமலர் கொண்டு புரிசடை
நனையும் மாமலர் சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை
நினைய வேவினை யாயின நீங்குமே. 3
கொல்லை மால்விடை யேறிய கோவினை
எல்லி மாநட மாடும் இறைவனைக்
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்
சொல்ல வேவினை யானவை சோருமே. 4
அலங்கல் சேர்சடை ஆதி புராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. 6
சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனங்கொள் வானவ ரேத்திய ஈசனைக்
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே. 7
கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை
இருவ ருக்கறி வொண்ணா இறைவனை
ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த
செருவ னைத்தொழத் தீவினை தீருமே.
திருக்காட்டுப்பள்ளி
எண்ணி லாவரக் கன்மலை யேந்திட
எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்
கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை
நண்ணு வாரவர் தம்வினை நாசமே. 5.84.10
திருச்சிராப்பள்ளி
அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 3
தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே. 5.85.4
திருவாட்போக்கி
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே. 2
வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்
உந்தி யோடி நரகத் திடாமுனம்
அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார்
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே. 5.86.3
திருமணஞ்சேரி
துன்னு வார்குழ லாளுமை யாளொடும்
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை யாயின ஓயுமே. 5.87.2
பொது
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. 5.90.7
புதிய பூவினைப் புண்ணிய நாதனை
நிதியை நீதியை நித்திலக் குன்றினைக்
கதியைக் கண்டங் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான்மறக் கிற்பனே. 5.93.9
ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும்
வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச்
சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள்
சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.8
வெப்பத் தின்மன மாசு விளக்கிய
செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும் ஒண்கழ லாற்கல்ல
தெப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே. 5.96.7
எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச்
சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்த மாவளப் பாரடைந் தார்களே. 8
தருமந் தான்றவந் தான்றவத் தால்வருங்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே. 21
பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப்
புற்ப னிக்கெடு மாறது போலுமே. 5.97.23
வென்றா னைப்புல னைந்துமென் தீவினை
கொன்றா னைக்குணத் தாலே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.7
ஆறாம் திருமுறை--திருத்தாண்டகம்
திருவதிகை வீரட்டானம்
முந்தி யுலகம் படைத்தான் றன்னை
மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
சந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னைத்
தவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னைச்
சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்
செழுங்கெடில வீரட்ட மேவி னானை
எந்தை பெருமானை ஈசன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 3
உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன்
மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் றன்னை
மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 8
தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் றன்னைக்
கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலு மூதுங்
கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.03.10
திருவதிகைவீரட்டானம்
செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்
சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகி லதிகைவீ ரட்ட னாமே. 6.04.4
திருவீரட்டானம்
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி. 6.05.3
திருவதிகைவீரட்டானம்
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி. 6.06.2
திருக்காளத்தி
இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 2
செற்றான்காண் என்வினையைத் தீயா டிகாண்
திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க்
குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்
சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே. 4
கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 6.08.7
பந்தணைநல்லூர்
தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலாய் அடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.5
திருப்புன்கூர்
பின்றானும் முன்றானு மானான் றன்னைப்
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் றன்னை
நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி
நல்வினையுந் தீவினையு மானான் றன்னைச்
சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நின்றாய நீடூர் நிலாவி னானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.2
திருநல்லூர்
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 1
விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 5
பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.10
திருக்கருகாவூர்
அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.7
திருவிடைமருதூர்
சூலப் படையுடையார் தாமே போலுஞ்
சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே. 1
ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலுந்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.6
திருவாக்கூர் தான்தோன்றி மாடம்
மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள்
மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
முதலு மிறுதியு மில்லார் போலுந்
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.6
திருமறைக்காடு
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்
டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய்
என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கு மருந்து கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே. 8
அயனவனும் மாலவனு மறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க வன்று
சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே. 6.23.10
திருவாரூர்
மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை
உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. 6.26.4
பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்
கில்லையே கிடந்துதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே. 6.27.1
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை
மூவாத மேனிமுக் கண்ணி னானைச்
சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்
சங்கரனைச் சங்கக் குழையான் றன்னை
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
மறுமையு மிம்மையு மானான் றன்னை
அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 4
பழகிய வல்வினைகள் பாற்று வானைப்
பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங்
குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்
கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை
விழவனை வீரட்ட மேவி னானை
விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
அழகனை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.6
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்
ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட
அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 6.30.1
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்
சிந்தித்தே நெஞ்சமே திண்ண மாகப்
பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்
அம்மானே ஆரூரெம் மரசே யென்றுங்
கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே. 2
பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற்
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டிற்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற்
சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்
பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே. 6.31.7
பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப்
பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்
கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்
காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
இருங்கனக மதிலாரூர் மூலட் டானத்
தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்
அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 1
கற்பகமும் இருசுடரு மாயி னானைக்
காளத்தி கயிலாய மலையு ளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை
விசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னைப்
பொற்பமரும் பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியவெம் பெருமானைப் பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 2
பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்
பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னை
வேதியனைத் தன்னடியார்க் கெளியான் றன்னை
மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூலட் டானம்
புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 3
நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை
நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்
தத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம்
இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 4
சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச்
சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை
விடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை
மிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூலட் டானம்
மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 5
தாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்
தகுதில்லை நடம்பயிலுந் தலைவன் றன்னை
மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னை
மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம்
விரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6
பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப்
புகலூரும் புறம்பயமும் மேயான் றன்னை
மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை
மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை
இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத்
தினிதமரும் பெருமானை இமையோ ரேத்த
அருளியனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 7
காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்
காரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப்
பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப்
பணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச்
சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ்
சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற
ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 8
ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை
ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
வைப்பவனை மாணிக்கச் சோதி யானை
மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானை
மெய்ப்பொருளாய் அடியேன துள்ளே நின்ற
வினையிலியைத் திருமூலட் டானம் மேய
அப்பொன்னை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப்
பராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
இகலவனை இராவணனை இடர்செய் தானை
ஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்
புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.10
திருவையாறு
அவனென்று நானுன்னை அஞ்சா தேனை
அல்ல லறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்
செல்வந் தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று
பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 8
வில்லாடி வேடனே யென்றேன் நானே
வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
சொல்லாய சூழலா யென்றேன் நானே
சுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே
எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே
இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே
அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.10
நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 2
எல்லா வுலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.7
திருமழபாடி
சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.6
திருநெய்த்தானம்
மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக்கூடாம்
இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்
இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்
வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 1
அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே
யகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்
தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து
தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
இலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள்
இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோரேத்தும்
நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 4
மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென்றெண்ணி
வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை
கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப
அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.42.6
திருப்பூந்துருத்தி
வைத்தானை வானோ ருலக மெல்லாம்
வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்
வித்தானை வேண்டிற்றொன் றீவான் தன்னை
விண்ணவர்தம் பெருமானை வினைகள் போக
உய்த்தானை யொலிகங்கை சடைமேற் றாங்கி
யொளித்தானை யொருபாகத் துமையோ டாங்கே
பொய்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 6.43.8
திருச்சோற்றுத்துறை
மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழலகு மாயி னானே
இன்பனாய்த் துன்பந் களைகி ன்றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 1
முற்றாத பான்மதியஞ் சூடி னானே
முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே
உற்றாரென் றொருவரையு மில்லா தானே
உலகோம்பும் ஒண்சுடரே யோதும் வேதங்
கற்றானே யெல்லாக் கலைஞா னமுங்
கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 3
தன்னவனாய் உலகெலாந் தானே யாகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
என்னவனா யென்னிதயம் மேவி னானே
யீசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.44.8
திருஆவடுதுறை
பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்
பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை
வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 6.46.3
திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 1
நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி
நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்
துறவாத துன்பந் துறந்தேன் தன்னைத்
சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னெ
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட
அறவா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 5
கோன்நா ரணன் அங்கத் தோள்மேற் கொண்டு
கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்
கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்
நானார் உமக்கோர் வினைக்கே டனேன்
நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 6.47.6
திருக்கோகரணம்
வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண்
வீரன்காண் வீரட்டம் மேவி னான்காண்
பொட்ட அநங்கனையும் நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையி னான்காண்
கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. 6.49.9
திருவீழிமிழலை
அறுத்தானை அயன்தலைகள் அஞ்சி லொன்றை
அஞ்சாதே வரையெடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை
இந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்
பறித்தானைப் பகீரதற்கா வானோர் வேண்டப்
பரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்
செறித்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 6.50.10
மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்
விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி
எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை
உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.8
திருக்கயிலாயம்
மாலை யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைக ளறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 3
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலி லொளியாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 4
அண்டமே ழன்று கடந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.7
அதிரா வினைக ளறுப்பாய் போற்றி
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி
எதிரா உலக மமைப்பாய் போற்றி
என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.2
திருவலம்புரம்
தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல
அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்
நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்
துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.3
திருக்கன்றாபூர்
விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.2
திருக் கச்சியேகம்பம்
பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண்
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 6.64.2
திருநாகேச்சரம்
உரித்தானை மதவேழந் தன்னை மின்னார்
ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்
தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. 6.66.2
திருக்கீழ்வேளூர்
தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத்
தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக்
கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்
கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 4
நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்று மானான் றன்னைத்
தொண்டாகிப் பணிவார்கட் கணியான் றன்னை
வில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னை
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.5
திருமுதுகுன்றம்
கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்
கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக்
குருமணியைக் கோளரவ மாட்டு வானைக்
கொல்வேங்கை யதளானைக்கோ வணவன் றன்னை
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 1
காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்
காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளத் தானைப்
பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் றன்னைப்
பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 2
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை
ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்
பாமாலை பாடப் பயில்வித் தானை
முத்தினை யென்மணியை மாணிக் கத்தை
முளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச்
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 3
ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை
உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்
கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக்
கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்
தான்றெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு
தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த
தீங்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 4
தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்
தாமரையான் நான்முகனுந் தானே யாகி
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்
மேலுலகுக் கப்பாலாய் இப்பா லானை
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்
கங்கங்கே அறுசமய மாகி நின்ற
திக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 5
புகழொளியைப் புரமெரித்த புனிதன் றன்னைப்
பொன்பொதிந்த மேனியனைப் புராணன் றன்னை
விழவொலியும் விண்ணொலியு மானான் றன்னை
வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக்
கழலொலியுங் கைவளையு மார்ப்ப வார்ப்பக்
கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந்
திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6
போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப்
புலியதளே உடையாகத் திரிவான் றன்னைக்
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றுங்
காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னை
மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்
வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்
தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 7
துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச்
சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்
பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னை
மறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 8
பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்
புவலோக மெல்லா முழிதந் தானை
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்
கற்றூணைக் காளத்தி மலையான் றன்னைக்
கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற்
செற்றானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 9
இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி
எழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் றன்னைப்
புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து
வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்
திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.10
திருப்பள்ளியின்முக்கூடல்
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்
கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே
தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.5
பொது
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே. 5
மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே. 6
கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே. 6.71.7
திருப்புத்தூர்
கருமருவு வல்வினைநோய் அகற்றி னான்காண்
காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்
பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும்
பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டீகாண்
தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன்றன்
சங்காதி ஆரூரில் தனியா னைகாண்
திருமருவு பொழில்புடைசூழ் திருப்புத் தூரில்
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.6.76.5
திருவாலங்காடு
காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே
கயிலை மலையை யுடையார் தாமே
ஊரா வேகம்பம் உகந்தார் தாமே
ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.6.78.9
வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலத் தானன் கண்டாய்
கொண்டாடு மடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 2
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்
புகலூரை யகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.5
திருச்செங்காட்டங்குடி
எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை
ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 7
பலவகைத் திருத்தாண்டகம்
இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்
ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்
அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே என்பீ ராகிற்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே. 4
கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற்
கள்ளக் கடலி லழுந்தி வாளா
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்
நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்
அலஞ்சுழிக்கும் மன்னாகந் தன்னான் மேய
அருமறையோ டாறங்க மானார் கோயில்
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்
வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே. 6
தண்டி குண்டோ தரன்பிங் கிருடி
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை உலகம் படைத்தான் றானும்
பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்
சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்
கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே. 7
விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே
வெள்ளேற்றான் தன்றமரைக் கண்ட போது
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று
மாதவத்தார் மனத்துளார் மழுவாட் செல்வர்
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்
பங்கயத்து மேலயனும் பரவிக் காணா
குடமூக்கே குடமூக்கே என்பீ ராகிற்
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே. 8
தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்று
எரிவீசி இரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே. 6.93.9
வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே. 6.95.2
ஏழாம் திருமுறை
இந்தளம்
திருப்பரங்குன்றம்
பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர்
பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீரும்
துணிவண் ணத்தின்மேலும் ஓர்தோல் உடுத்துச்
சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி
மணிவண்ணத் தின்மேலும் ஓர்வண்ணத் தராய்
மற்றுமற் றும்பல் பலவண் ணத்தராய்
அணிவண் ணத்தராய் நிற்றீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.02.8
திருக்கச்சியனேகதங்காவதம்
கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி
லாலுமி டம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்
கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு
வாகுமி டந்திரு மார்பகலத்
தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக்
கச்சி யனேகதங் காவதமே. 3
வீடு பெறப்பல வூழிகள் நின்று
நினைக்கு மிடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்குமிடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தவிம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடு மிடஞ்சிவ லோக னிடங்கலிக்
கச்சி யனேகதங் காவதமே. 7.10.10
திருப்பூவனம்
திருவுடை யார்திரு மால்அய னாலும்
உருவுடை யார்உமை யாளைஓர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ. 1
எண்ணி இருந்து கிடந்தும் நடந்தும்
அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்
புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ. 7.11.2
திருநாட்டுத்தொகை
தழலும் மேனியன் தையலோர்
பாகம் அமர்ந்தவன்
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற
சோதி சோற்றுத்துறை
கழலுங் கோவை உடையவன்
காதலிக் கும்மிடம்
பழனம் பாம்பணி பாம்புரம்
தஞ்சைதஞ் சாக்கையே. 7.12.9
தக்கராகம்
திருப்பாச்சிலாச்சிராமம்
செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன்
தீவினை செற்றிடு மென்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்
ஆவதும் அறிவரெம் மடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்
இவரலா தில்லையோ பிரானார். 7.14.6
திருநாட்டியத்தான்குடி
ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர
நினைந்தேன் உள்ளமுள் ளளவும்
உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன்
உகவீ ராகிலும் உகப்பன்
நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ. 7
குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
கொண்டா ராகிலுங் கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்
கண்ணா நின்னல தறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
தொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயல் தண்டலை வேலி
நாட்டியத் தான்குடி நம்பீ. 7.15.9
நட்டராகம்
திருநாவலூர்
அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்
சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத்
தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே. 4
நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
ஊரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டனா
ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
தம்வினை கட்டறுமே. 7.17.11
திருநின்றியூர்
சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
அறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாயிருந்
தானைத் திருநாவலா
ரூரன் உரைத்த உறுதமிழ்
பத்தும்வல் லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர
மன்னடி கூடுவரே. 7.19.11
திருக்கழிப்பாலை
செடியேன் தீவினையிற்
றடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவவெனா
தொழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும்
அரவும் உடன்றுயிலும்
வடிவே தாமுடையார்
மகிழுங்கழிப் பாலையதே. 1
எங்கே னும்மிருந்துன்
அடியே னுனைநினைந்தால்
அங்கே வந்தென்னோடும்
உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை
அறுத்திட் டெனையாளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயானே. 2
ஒழிப்பாய் என்வினையை
உகப்பாய் முனிந்தருளித்
தெழிப்பாய் மோதுவிப்பாய்
விலையா வணமுடையாய்
கழிப்பால் கண்டடங்கச்
சுழியேந்து மாமறுகிற்
கழிப்பா லைமருவுங்
கனலேந்து கையானே. 5
ஆர்த்தாய் ஆடரவை
அரையார் புலியதள்மேற்
போர்த்தாய் ஆனையின்றோல்
உரிவை புலால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார்
வினைகள் அவைபோகப்
பார்த்தா னுக்கிடமாம்
பழியில்கழிப் பாலையதே. 7.23.6
திருக்காளத்தி
காரா ரும்பொழில்சூழ்
கணநாதனெங் காளத்தியுள்
ஆரா வின்னமுதை
அணிநாவலா ரூரன்சொன்ன
சீரூர் செந்தமிழ்கள்
செப்புவார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம்
பெறுவார்பிழைப் பொன்றிலரே.7.26.10
திருக்கருப்பறியலூர்
விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி
வினைபோக வேலி தோறுங்
கருந்தாள வாழைமேற் செங்கனிகள்
தேன்சொரியுங் கருப்ப றியலூர்க்
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள்
அவளோடுங் கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே. 4
செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந்
தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின்
கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி
கண்படுக்குங் கருப்ப றியலூர்க்
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள்
அவளோடுங் கொகுடிக் கோயில்
அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே. 7
பண்டாழின் இசைமுரலப் பன்னாளும்
பாவித்துப் பாடி யாடிக்
கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம்
பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க்
குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும்
புறங்கூறுங் கொகுடிக் கோயில்
எண்டோ ளெம் பெருமானை நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே. 7.30.10
கொல்லி
திருஇடையாறு
தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர்
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே. 8
ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்
கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே. 7.31.10
திருப்புறம்பயம்
முன்னைச்செய்வினை இம்மையில்வந்து
மூடுமாதலின் முன்னமே
என்னைநீதியக் காதெழுமட
நெஞ்சமேயெந்தை தந்தையூர்
அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்
கூடிச்சேரு மணிபொழிற்
புன்னைக்கன்னி கழிக்கணாறும்
புறம்பயந்தொழப் போதுமே. 7
மலமெலாமறும் இம்மையேமறு
மைக்கும்வல்வினை சார்கிலா
சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள்
சங்கரன்வந்து தங்குமூர்
கலமெலாங்கடல் மண்டுகாவிரி
நங்கையாடிய கங்கைநீர்
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்
புறம்பயந்தொழப் போதுமே. 7.35.8
திருப்பைஞ்சீலி
குரவம்நாறிய குழலினார்வளை
கொள்வதேதொழி லாகிநீர்
இரவும்இம்மனை அறிதிரேயிங்கே
நடந்துபோகவும் வல்லிரே
பரவிநாடொறும் பாடுவார்வினை
பற்றறுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம்ஆட்டவும் வல்லிரோசொல்லும்
ஆரணீய விடங்கரே. 7.36.6
கொல்லிக் கெளவாணம்
திருவதிகை திருவீரட்டானம்
வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்கு
மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்
தெண்டோ ளெம் பெருமானைப் பெண்பாகம் ஒருபாற்
செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய்
அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 7.38.7
திருக்கச்சூர் ஆலக்கோயில்
சாலக் கோயில் உளநின் கோயில்
அவையென் றலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்கட் டுரைத்த அம்மானே. 3
மேலை விதியே வினையின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே. 7.41.5
திருநாகைக்காரோணம்
மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
சுந்தரனே கந்தமுதல் ஆடையா பரணம்
பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நும்மைக்
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 7.46.5
பழம்பஞ்சுரம்
பொது
துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய்
சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப்
பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை
இடங்கொள் கயிலாயா
அருத்தித் துன்னை அடைந்தார் வினைக
ளகல அருளாயே. 7.47.8
திருப்புனவாயில்
எற்றே நினை என்னொடுஞ்
சூளறும் வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை
யாயின மாய்ந்தறக்
கற்றூறு கார்க் காட்டிடை
மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக்
கும்புன வாயிலே. 9
பொடியாடு மேனியன் பொன்புனஞ்
சூழ்புன வாயிலை
அடியார் அடியன் நாவல
வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை யேத்தவல்
லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகப் பாடிநின் றாடவல்
லார்க்கில்லை குற்றமே. 7.50.10
திருவாரூர்
செப்பரிய அயனொடுமால்
சிந்தித்துந் தெரிவரிய
அப்பெரிய திருவினையே
அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை
இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 7.51.5
திருஆலங்காடு
தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரமூன்றும்
பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 3
மறிநேர் ஒண்கண் மடநல்லார்
வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தே னையாநான்
மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அறிவே ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 4
வண்டார் குழலி உமைநங்கை
பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்க ளெரிசெய்த
விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 7
பேழ்வா யரவி னணையானும்
பெரிய மலர்மே லுறைவானுந்
தாழா துன்றன் சரண்பணியத்
தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழையனூர் தன்னை
ஆள்வாய் ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 7.52.8
தக்கேசி
திருஒற்றியூர்
மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானும் இத்தனை வேண்டுவ தடியேன்
உயிரொ டும்நர கத்தழுந் தாமை
ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 6
கூடினாய் மலை மங்கையை நினையாய்
கங்கை ஆயிர முகம்உடை யாளைச்
சூடி னாயென்று சொல்லிய புக்கால்
தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே
வாடி நீயிருந் தென்செய்தி மனனே
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி
ஊடி னாலினி ஆவதொன் றுண்டே
ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.8
திருப்புன்கூர்
கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானை
உம்பர் ஆளியை உமையவள் கோனை
ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை இலரே. 7.55.10
திருநீடூர்
மாய மாய மனங்கெடுப் பானை
மனத்து ளேமதி யாய்இருப் பானைக்
காய மாயமும் ஆக்குவிப் பானைக்
காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
ஓயு மாறுரு நோய்புணர்ப் பானை
ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
வேய்கொள் தோள்உமை பாகனை நீடூர்
வேந்த னைப்பணி யாவிட லாமே. 8
கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்
காணப் பேணும வர்க்கெளி யானைத்
தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்
துன்ப முந்துறந் தின்பினி யானைப்
பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்
பாக மாமதி யாயவன் தன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
கேண்மை யாற்பணி யாவிட லாமே. 7.56.9
திருக்கழுமலம்
திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 3
வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 6
திருவாரூர்
நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்
அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்
அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
உரைப்பன் நானுன சேவடி சேர
உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 2
திருவிடைமருதூர்
புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 3
‘முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீயெனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 4
ஏழை மானுட இன்பினை நோக்கி
இளைய வர்வலைப் பட்டிருந் தின்னம்
வாழை தான்பழுக் கும்நமக் கென்று
வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்
கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்
போக மும்பொருள் ஒன்றறி யாத
ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.60.9
திருயேகம்பம்
சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.8
திருக்கோலக்கா
அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக்
கன்றி ரங்கிய வென்றியி னானைப்
பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள்
பரவி யும்பணி தற்கரி யானைச்
சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம்
ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக்
குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.9
திருவாவடுதுறை
தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச்
சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே. 2
திகழும் மாலவன் ஆயிரம் மலரால்
ஏத்து வானொரு நீண்மலர் குறையப்
புகழி னாலவன் கண்ணிடந் திடலும்
புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித்
தேவ தேவநின் றிறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே. 7.66.3
பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
சந்தித் ததிற லாற்பணி பூட்டித்
தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச்
சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ்
சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.7
திருநள்ளாறு
விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை
வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய
கோனை ஞானக் கொழுந்தினைத் தொல்லை
நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. 2
மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேத னைவேத வேள்வியர் வணங்கும்
விமல னையடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை அருளித்
தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. 7.68.8
காந்தாரம்
திருமறைக்காடு
முளைவளரிள மதியுடையவன்
முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை ஆளல்லுறு
கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு
குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடு சலஞ்சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே. 7.71.7
திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
பழவினை உள்ளன பற்றறுத் தானை. 2
பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
அருவினை உள்ளன ஆசறுத் தானை. 4
வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
உலகறி பழவினை அறவொழித் தானை. 7.74.7
திருவானைக்கா
வலங்கொள் வாரவர் தங்கள்
வல்வினை தீர்க்கும் மருந்து
கலங்கக் காலனைக் காலாற்
காமனைக் கண்சிவப் பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே. 7.75.9
பியந்தைக்காந்தாரம்
திருவாஞ்சியம்
பொருவ னார்புரி நூலர்
புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்
வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணிந் தேத்துந்
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவ னார்அடி யாரை
ஊழ்வினை நலிய வொட்டாரே. 1
கரந்தை கூவிள மாலை
கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
வல்வினை நலிய வொட்டாரே. 6
களங்க ளார்தரு கழனி
அளிதரக் களிதரு வண்டு
உளங்க ளார்கலிப் பாடல்
உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளானிழற் கீழ்நற்
குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
விளங்கு தாமரைப் பாதம்
நினைப்பவர் வினைநலி விலரே. 7.76.8
நட்டப்பாடை
திருக்கேதாரம்
பொதியேசுமந் துழல்வீர்பொதி
அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று
குழிவீழ்வதும் வினையாற்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை
மலங்கவரை அடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங்
கேதாரமெ னீரே. 7.78.9
திருக்கேதீச்சரம்
வெய்யவினை யாயஅடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரிற்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
செய்யசடை முடியான்றிருக்
கேதீச்சரத் தானே. 6
மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரிற்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்னெனை ஆள்வான்றிருக்
கேதீச்சரத் தானே. 9
கறையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருட்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டனுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே. 7.80.10
திருக்கழுக்குன்றம்
கொன்று செய்த கொடுமை
யாற்பல சொல்லவே
நின்ற பாவம் வினைகள்
தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின்
தேவர் பிரானிடங்
கன்றி னோடு பிடிசூழ்
தண்கழுக் குன்றமே.1
நீள நின்று தொழுமின்
நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள்
அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய
மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந்
தண்கழுக் குன்றமே. 7.81.3
திருச்சுழியல்
சைவத்தசெவ் வுருவன்றிரு
நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண்
மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய
குழகன்றிருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை
தீர்தல்லெளி தன்றே. 7.82.7
புறநீர்மை
திருவாரூர்
அந்தியும் நண்பகலும்
அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய
வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத்
தென்றிரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை
யென்றுகொல் எய்துவதே. 1
நின்ற வினைக்கொடுமை
நீங்க இருபொழுதுந்
துன்று மலரிட்டுச்
சூழும் வலஞ்செய்து
தென்றல் மணங்கமழுந்
தென்றிரு வாரூர்புக்
கென்றன் மனங்குளிர
என்றுகொல் எய்துவதே. 7.83.2
திருக்கூடலையாற்றூர்
கூடலை யாற்றூரிற்
கொடியிடை யவளோடும்
ஆடலு கந்தானை
அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால்
நாவல வூரன்சொற்
பாடல்கள் பத்தும்வல்லார்
7.85.10 தம்வினை பற்றறுமே.
சீகாமரம்
திருப்பனையூர்
செங்கண்மேதிகள் சேடெறிந்து
தடம்படிதலிற் சேலினத்தொடு
பைங்கண் வாளைகள்
பாய்பழனத் திருப்பனையூர்த்
திங்கள்சூடிய செல்வனாரடி
யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி
லங்கிருந் துறைவார்
அவரே அழகியரே. 7.87.3
திருவெண்பாக்கம்
செய்வினையொன் றறியாதேன்
திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா
யோவென்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான்
உளோம்போகீர் என்றானே. 3
ஏராரும் பொழில்நிலவு
வெண்பாக்கம் இடங்கொண்ட
காராறும் மிடாற்றானைக்
காதலித்திட் டன்பினொடுஞ்
சீராருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க்
கடையாவல் வினைதானே. 7.89.11
குறிஞ்சி
கோயில்
முட்டாத முச்சந்தி மூவா
யிரவர்க்கு மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார்
பாவமும் வினையும் போக
விட்டானை மலைஎடுத்த இராவணனைத்
தலைபத்தும் நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.7
திருஒற்றியூர்
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே. 1
படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றி யூரே. 6
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி யூரே. 7
கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே. 8
பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே. 9
ஒற்றி யூரும் அரவும் பிறையும்
பற்றி யூரும் பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே. 7.91.10
கெளசிகம்
திருச்சோற்றுத்துறை
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டன் பிடைய றாத
தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே. 7.94.2
பஞ்சமம்
திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறுங்
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
அடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.9
திருநனிபள்ளி
உறவிலி ஊன மிலிஉண ரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினை வார்வினை யாயின தேய்ந்தழிய
அறவில கும்மரு ளான்மரு ளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையி னான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.2
திருநாகேச்சரம்
கொங்கணை வண்டரற்றக்
குயிலும்மயி லும்பயிலும்
தெங்கணை பூம்பொழில்சூழ்
திருநாகேச் சரத்தானை
வங்கம் மலிகடல்சூழ்
வயல்நாவலா ரூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல்லார்
அவர்தம்வினை பற்றறுமே. 7.99.11
திருநொடித்தான்மலை
வாழ்வை உகந்தநெஞ் சேமட
வார்தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென் னைஅது
மாற்றி அமரரெல்லாஞ்
சூழ அருள்புரிந் துதொண்ட
னேன்பரம் அல்லதொரு
வேழம் அருள்புரிந் தான்நொடித்
தான்மலை உத்தமனே. 7.100.4
எட்டாம் திருமுறை - திருவாசகம்
8.1 சிவபுராணம்
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
20முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
25பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
8.3.திருஅண்டப்பகுதி
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90.
8.4.போற்றி திருஅகவல்
யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் 20
சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரம அதிசயம் ஆகக்
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அது போல
முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80
அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்பச்
சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90
8.5.1.திருச்சதகம்-மெய்யுணர்தல்
தவமே புரிந்திலன் தண்மலர்
இட்டுமுட் டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை
யேன்உனக் கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு வெய்திற்றி
லேன்நின் திருவடிக்காம்
பவமே யருளுகண் டாய்அடி
யேற்கெம் பரம்பரனே. 5
உழிதரு காலும் கனலும்
புனலொடு மண்ணும்விண்ணும்
இழிதரு காலம்எக் காலம்
வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி
யேன்செய்த வல்வினையைக்
கழிதரு காலமு மாய்அவை
காத்தெம்மைக் காப்பவனே. 8
8.5.2.அறிவுறுத்தல்
வாழ்கின்றாய் வாழாத
நெஞ்சமே வல்வினைப்பட்
டாழ்கின்றாய் ஆழாமற்
காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடுனக்குச்
சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீஅவலக்
கடலாய வெள்ளத்தே. 20
8.5.3. சுட்டறுத்தல்
வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையும் மரமாம் தீவினையி னேற்கே. 21
வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை
ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை
அனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான்ஆன வாறு
முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே. 22
8.5.4. ஆத்துமசுத்தி
புகுவ தாவதும் போதர
வில்லதும் பொன்னகர் புகப்போதற்
குகுவ தாவதும் எந்தையெம்
பிரான்என்னை ஆண்டவன் கழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும்
அமுதொடு தேனொடு பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின்
மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. 36
வினைஎன் போல்உடை யார்பிறர்
ஆர்உடை யான்அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது
திருக்குறிப் பன்றுமற் றதனாலே
முனைவன் பாதநன் மலர்பிரிந்
திருந்துநான் முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்புகல்
மனம்செவி இன்னதென் றறியேனே. 37
8.5.9ஆனந்தபரவசம்
பணிவார் பிணிதீர்த் தருளிப்
பழைய அடியார்க்குன்
அணியார் பாதங் கொடுத்தி
அதுவும் அரிதென்றால்
திணியார் மூங்கி லனையேன்
வினையைப் பொடியாக்கித்
தணியார் பாதம் வந்தொல்லை
தாராய் பொய்தீர் மெய்யானே. 89
யானேபொய் என்நெஞ்சும் பொய்
என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந் துறுமாறே. 90
8.5.10. ஆனந்தாதீதம்
பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையேன்
போத என்றெனைப் புரிந்து நோக்கவும்
வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன்
மாண்டி லேன்மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்
நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை
இருத்தி னாய்முறை யோஎ னெம்பிரான்
வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே. 93
8.6. நீத்தல் விண்ணப்பம்
மறுத்தனன் யானுன் அருளறி
யாமையின் என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண்
டாய்வினை யின்தொகுதி
ஒறுத்தெனை யாண்டுகொள் உத்தர
கோசமங் கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு
நாய்கள்தம் பொய்யினையே. 6
தீர்க்கின்ற வாறென் பிழையைநின்
சீரருள் என்கொ லென்று
வேர்க்கின்ற என்னை விடுதிகண்
டாய்விர வார்வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தர
கோசமங் கைக்கரசே
ஈர்க்கின்ற அஞ்சொடச் சம்வினை
யேனை இருதலையே. 8
மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப
யானுன் மணிமலர்த்தாள்
வேறுபட்டேனை விடுதிகண்
டாய்வினை யேன்மனத்தே
ஊறுமட் டேமன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
நீறுபட் டேயொளி காட்டும்பொன்
மேனி நெடுந்தகையே. 11
மடங்கவென் வல்வினைக் காட்டைநின்
மன்னருள் தீக்கொளுவும்
விடங்கஎன் தன்னை விடுதிகண்
டாயென் பிறவியைவே
ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர
கோசமங் கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித்
தாய்வஞ்சிக் கொம்பினையே. 19
ஆனைவெம் போரிற் குறுந்தூ
றெனப்புல னாலலைப்புண்
டேனையெந் தாய்விட் டிடுதிகண்
டாய்வினை யேன்மனத்துத்
தேனையும் பாலையுங் கன்னலை
யும்மமு தத்தையு மொத்து
ஊனையு மென்பினை யும்உருக்
காநின்ற ஒண்மையனே. 21
பரம்பர னேநின் பழவடி
யாரொடு மென்படிறு
விரும்பர னேவிட் டிடுதிகண்
டாய்மென் முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய்
பிறவியை வாயரவம்
பொரும்பெரு மான்வினை யேன்மனம்
அஞ்சிப் பொதும்புறவே. 35
அரைசே அறியாச் சிறியேன்
பிழைக்கஞ்சல் என்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண்
டாய்வெண் ணகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த
திருப்பொற் பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை
தான்வந்து அடர்வனவே. 37
தனித்துணை நீநிற்க யான்தருக்
கித்தலை யால்நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்
டாய்வினை யேனுடைய
மனத்துணை யேஎன்தன் வாழ்முத
லேயெனக் கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும் பொறேன்துயர்
ஆக்கையின் திண்வலையே. 39
8.8. திருஅம்மானை
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 5
ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 14
8.9. திருப்பொற்சுண்ணம்
காசணி மின்கள் உலக்கையெல்லாம்
காம்பணி மின்கள் கறையுரலை
நேச முடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்
தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப்
பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 4
8.11 திருத்தெள்ளேணம்
கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே
அயல்மாண்ட ருவினைச் சுற்றமுமாண்ட வனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 11
8.13 திருப்பூவல்லி
நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பெருமான்
மாயப் பிறப்பறுத் தாண்டானென் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 3
நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே
குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 8
8.14 திருவுந்தியார்
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற. 13
8.19 திருத்தசாங்கம்
ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம் உவந்த தார். 9
8.24 அடைக்கலப்பத்து
மாழைமைப் பாவிய கண்ணியர்
வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல்
தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்நாள்
வணங்குவன் வல்வினையேன்
ஆழியப் பாவுடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 6
வழங்குகின் றாய்க்குன் அருளார்
அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை
யேன்என் விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர்
பருகத்தந் துய்யக்கொள்ளாய்
அழுங்குகின் றேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 10
8.26 அதிசயப்பத்து
முன்னை என்னுடை வல்வினை போயிட
முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன்
எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்
இளமதியதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 3
எண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என்
ஏழைமை யதனாலே
நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற்
கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 6
இருள்திணிந்தெழுந்திட்டதோர் வல்வினைச்
சிறுகுடி லிதுவித்தைப்
பொருளெனக்களித் தருநரகத்திடை
விழப்புகுகின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச்
சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய
அதிசயங் கண்டாமே. 10
8.30 திருக்கழுக்குன்றப்பதிகம்
பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
மான் உன்நாமங்கள் பேசுவார்க்
கிணக்கிலாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. 1
மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி
மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி
மேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்றநின்சேவடிகள்
இரண்டும் வைப்பிடமின்றியே
கலங்கினேன் கலங்காமலேவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. 3
இயக்கி மாரறு பத்து நால்வரை
எண்குணம்செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்மலப்பழ
வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின்
தூய்மலர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்முனேவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. 7
8.31 கண்டபத்து
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. 2
பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. 9
8.32 பிரார்த்தனைப்பத்து
அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங்
கூர யான் அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால்
அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடுவினையைக் களைந்துன்
கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா
துருக அருளாயே. 2
8.33 குழைத்தபத்து
குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தா லுறுதியுண்டோ தான்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோவென்
றழைத்தால் அருளா தொழிவதே
அம்மானே உன்னடியேற்கே. 1
8.34 உயிருண்ணிப்பத்து
பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகமதாய் என்
மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே. 1
வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்எனதென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான்
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே. 4
8.35 அச்சப்பத்து
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல்
கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான்
தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத்
தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 2
8.36 திருப்பாண்டிப் பதிகம்
அழிவின்றி நின்றதோர் ஆனந்த
வெள்ளத் திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக்
கடிய வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன்
பாண்டிப் பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை
யேசென்று முந்துமினே. 8
விரவிய தீவினை மேலைப்
பிறப்புமுந் நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக்
கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திக்
கொளப் பட்ட பூங்கொடியார்
மரவியல் மேல்கொண்டு தம்மையும்
தாம் அறியார் மறந்தே. 9
8.37 பிடித்த பத்து
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 2
8.40 குலாப் பத்து
என்புள் ளுருக்கி
இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து
துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை
முழுதழிய உள்புகுந்த
அன்பின் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 3
8.40 அற்புதப் பத்து
நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேனே. 3
ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின
இருவினை அறுத்தென்னை
ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன்
உணர்வுதந் தொளியாக்கிப்
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன்
பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய
அற்புதம் அறியேனே. 8
8.47 திருவெண்பா
வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் - செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 1
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்- தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 4
8.48 பண்டாய நான்மறை
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை- வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 3
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ்- சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 4
8.51 அச்சோப் பதிகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 1
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 6
எட்டாம் திருமுறை-திருக்கோவையார்
8. கலவியுரைத்தல்
சொற்பா லமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில்
கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே. 8.1.8
8. விதியொடு வெறுத்தல்
நல்வினை யும்நயந் தந்தின்று வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன் சொல்ல
வில்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென தாருயிர் துப்புறவே.
9. பாங்கனொந்துரைத்தல்
ஆலத்தி னாலமிர்தாக்கிய கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள்பொருட் டாகவமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும்நினையா தொழிவதென் தீவினையே.
9. காப்புடைத்தென்று மறுத்தல்
முனிதரு மன்னையு மென்னையர்சாலவும் மூர்க்கரின்னே
தனிதரு மிந்நிலத் தன்றைய குன்றமுந் தாழ்சடைமேற்
பனிதரு திங்க ளணியம் பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே.
3. குறியிடத்துக் கொண்டு சேறல்
தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணியம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன காண்டும் புனமயிலே.
22. அயலுரையுரைத்து வரைவு கடாதல்
உருப்பனை அன்னகைக் குன்றொன் றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன் னாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென்னோவினை யேன்யான் புகல்வதுவே.
25. தினையொடு வெறுத்து வரைவுகடாதல்
நினைவித்துத் தன்னையென் நெஞ்சத் திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே.
26. வேங்கையொடு வெறுத்து வரைவுகடாதல்
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய்
வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே.
27. இரக்கமுற்றுவரைவு கடாதல்
வழுவா இயலெம் மலையர் விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல் லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவதித் தொல்புனத்தே.
4. இரவுக்குறி நேர்தல்
கூளி நிரைக்கநின் றம்பலத் தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிரைத்த சுடர்முடி யோயிவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தட லானைகள் தேரு மிரவில்வந்து
மீளி யுரைத்தி வினையே னுரைப்பதென் மெல்லியற்கே.
12. துணிந்தமைகூறல்
குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன் னத்தகும் பெற்றியரே.
17. குறியிடங்கூறல்
முன்னோன் மணிகண்ட மொத்தவன் அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந் தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன் னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே.
24. அயர்வகற்றல்
முன்னோ னருள்முன்னும் உன்னா வினையின் முனகர்துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே.
35. அடிநினைந்திரங்கல்
தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற் கானிற் சிலம்படிபாய்
ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே.
44. சுவடு கண்டறிதல்
தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி யென்று கருதுவனே.
45. சுவடுகண்டிரங்கல்
பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற் பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின் நின்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே.
56. அழுங்குதாய்க்குரைத்தல்
ஆண்டி லெடுத்தவ ராமிவர் தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்த பஃறாமரை கீழும் பழனங்களே.
10. பகலுடம்பட்டாள் போன்றிரவரவு விலக்கல்
கலரா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை யோநும் வரையிடத்தே.
2. வருத்தந்தணித்தல்
நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலுந் திருநுதலே.
14. முகிலொடுகூறல்
அருந்தே ரழிந்தனம் ஆலமென் றோலமிடு மிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்தே ரழிந்து பழங்கண் தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே.
15. வரவெடுத்துரைத்தல்
பணிவார் குழையெழி லோன்தில்லைச் சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கும் மாவோட ணுகினரே.
5. திணைபெயர்த்துரைத்தல்
சுருடரு செஞ்சடை வெண்சுட ரம்பல வன்மலயத்
திருடரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த
அருடரு மின்சொற்க ளத்தனை யும்மறந் தத்தஞ்சென்றோ
பொருடரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே.
7. பள்ளியிடத்தூடல்
தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை நோவதென் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந் தொடல்விடு நற்கலையே.
ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா-திருப்பல்லாண்டு
காடாடு பல்கணம் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகற் கான்நடந்த
வேடா ! மகேந்திர வெற்பா ! என்னும்
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என்னும் செல்வர்மூ வாயிரம்
செழுஞ்சோதி அந்தணர் செங்கைதொழும்
கோடா என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 9.03.2
மண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த
மருந்தைஎன் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு)
எளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக்
குறுகவல் வினைகுறு காவே. 9.05.3
புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து
புணர்பொருள் உணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
வளரொளி மணிநெடுங் குன்றே
முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த
வெள்ளமாய் உள்ளமா யினையே. 2
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்
மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே !
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்
விழுமிய விமானமா யினதே. 9.11.6
நீரோங்கி வளர்கமல
நீர்பொருந்தாந் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு)
அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து)
உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே ! 9.12.1
கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியினை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன்
அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க
நிலைவிளக்(கு) அலகில்சா லேகம்
புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப்
பூவணங் கோயில் கொண் டாயே. 9.14.5
எம்பந்த வல்வினை நோய்
தீர்த்திட்(டு) எமையாளும்
சம்பந்தன் காழியர்கோன்
தன்னையும் ஆட் கொண்டருளி
அம்புந்து கண்ணாளும்
தானும் அணிதில்லைச்
செம்பொன்செய் அம்பலமே
சேர்ந்திருக்கை ஆயிற்றே. 9.19.4
படங்கொள் பாம்பணை யானொடு
பிரமன் பரம்பரமா அருளென்று
தடங்கையால் தொழவும்
தழலாடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும்அத் தோள்களும்
தடமார்பினில் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்ட மன்றே
வினையேனை மெலிவித்தவே. 9.22.7
ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
அருவினை யேனைவிட்டு அம்மஅம்ம
பாவிவன் மனமிது பையவே போய்ப்
பனிமதிச் சடையான் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
நெஞ்சமும் தஞ்சமி லாமையாலே
ஆவியின் வருத்தம் இதாரறிவார்
அம்பலத்(து) அருள்நடம் ஆடுவானே. 2
அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்று
அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடையாரின் மிக்கார்
ஏத்துகின் றார் இன்னம் எங்கள்கூத்தை
மருள்படு மழலைமென் மொழியுமையாள்
கணவனை வல்வினை யாட்டி யேனான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
ஆசையை அளவறுத் தார்இங் காரே 9.26.10
பத்தாம் திருமுறை திருமந்திரம்
ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. 10.1.02.49
விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 10.1.04.1
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. 10.1.05.1
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே. 10.1.05.5
கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 10.1.07.8
தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே. 10.1.13.4
அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே. 10.1.13.5
பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே. 10.1.14.9
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன்
விளைக்கும் தவம்அறம் மேற்றுணை யாமே. 10.1.19.8
வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே. 10.1.20.6
கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே. 10.1.25.4
நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 10.1.25.5
தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே. 10.2.11.10
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே. 10.2.14.13
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே. 10.2.18.1
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பந்தருள் ளானே. 10.2.18.3
ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே. 10.2.23.2
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிளக் கானதே 10.3.11.28
மனைபுகு வீரும் மகத்திடை நாடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே 10.3.14.5
ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே 10.3.12.12
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று 1மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே 10.3.12.13
மனையில்ஒன் றாகும் மாதமு மூன்றுஞ்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற வோங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே 10.3.15.16
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே 10.3.17.2
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே 10.3.18.8
தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும் பாமே 10.3.18.9
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே 10.3.18.13
தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாகவத் துள்ளவன்
மாவினை யாளர்தம் மதியிலுள் ளானே 10.3.18.14
சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல்
சூக்கும மான வழியிடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதுஆ னந்தமே. 10.4.1.26
வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே. 10.04.2.54
நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முதல் ஆகும் சதாசிவந் தானே. 10.04.2.70
எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே. 10.4.05.5
ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவும் கிழத்தி வினைகடிந் தாளே. 10.04.6.48
வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்
தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனைஅடிமைக் கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே. 10.04.6.49
தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை சங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே. 10.4.07.27
சொல்லவொண்ணாத அழற்பொதி மண்டலஞ்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மனி தானே. 10.4.8.10
எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்துறு மாறே. 10.4.8.50
வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர்வோர்க்கே. 10.4.8.78
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நண்மைக ளாகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானுஞ் சலமது வாமே. 10.4.11.8
நலந்தரு ஞானமுங் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை யும்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே. 10.4.13.4
கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடுஞ் சக்கரம் நினைக்கு மளவே. 10.4.13.5
வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்
கலங்கிடுங் காம வெகுளி மயக்கந்
துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே. 10.4.13.22
ஆமே அனைத்துயி ராகிய அம்மையுந்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே யவனடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே. 10.4.13.24
சேர்ந்தவர் என்றுந் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே. 10.4.13.30
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளங் கலந்தெங்குந் தானாகக்
கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே. 10.4.13.35
பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்
டெத்திக்கி லவரில்லை என்பதின் அமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. 10.5.06.1
மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே. 10.5.17.5
இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. 10.5.17.14
மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்
முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி
இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே. 10.5.18.10
வழிசென்ற மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே. 10.5.18.20
அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டுங் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே. 10.5.19.5
மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 10.6.2.10
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 10.6.2.13
சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே. 10.6.7.5
கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. 10.6.10.2
மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 10.6.13.2
பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி
யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. 10.6.14.2
தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே. 10.6.14.6
வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கன்னி உணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே. 10.7.06.4
உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. 10.7.08.1
தானே அறியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே யனையன் நம் தேவர் பிரானே. 10.7.09.5
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 10.7.13.6
தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. 10.7.13.11
வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. 10.7.21.34
நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார்
நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே. 10.7.31.6
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான் பிற வித்துயர் தானே. 10.7.35.2
பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்
சுராமயம் உன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே. 10.7.36.10
வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. 10.7.37.1
விடுகின்ற சீவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. 10.7.38.9
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண்டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே. 10.7.38.20
தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே. 10.8.01.13
மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்
வேறாய மாயா தனுகர ணாதிக்குஇங்கு
ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே. 10.8.03.19
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே. 10.8.07.2
ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்
ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யான்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே. 10.8.07.31
இருவினை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. 10.8.07.36
துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே. 10.8.08.8
ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே. 10.8.13.39
மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே. 10.8.13.41
ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே. 10.8.15.21
வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து
ஆட்கு நரக சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே. 10.8.16.16
நனவின் நனவாகி நாலாம் துரியம்
தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே. 10.8.22.7
உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி
அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினை யோடறுத் தானே.
தேராத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாத நரக சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே. 10.8.32.8
கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்
துரிமையுங் கன்மமும் உன்னும் பிறவிப்
கருவினை யாவது கண்டகன் றன்பின்
புரிவன கன்மக் கயத்துட் புகுமே. 10.8.33.2
வினையா மசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்
வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே. 10.8.33.12
மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே. 10.8.34.8
அளந்து துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்
கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனு மாமே. 10.2.37.5
முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே. 10.2.38.1
தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே. 10.2.38.2
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே. 10.2.38.3
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்தொழி லற்றுச் சுத்தம தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே. 10.8.40.6
முத்தியில் அத்தன் முழுத்த அருல்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியி லுற்றோர் படானந்த போதரே.
அந்தக் கருவை யருவை வினைசெய்தற்
பந்தம் பணியச்சம் பல்பிற ப்பும்வாட்டிச்
சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகுஞ் ச்துரர்க்கே. 2604
மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்துள்ளம் காணவல்லார்க்குஇங்கு
அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே.
ஈசன்நின் றான்இமையோர்கள் நின் றார்நின்ற
தேசம் ஒன்றின்றித் திகைத்து இழைக்கின்றனர்
பாசம் ஒன்றாகப் பழவினை பற்றற
வாசம்ஒன் றாமலர் போன்றதுதானே.
வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுற்ம் மாயை
திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
வாரில்லைவிழித்துஅங்கு உறங்கும் வினைஅறி
எழுத்து அறிவோம் என்று உரைப்பர்கள் ஏதர்
எழுத்தை வ்ழுத்தும் எழுத்து அறியாரே.
ஆனை துரக்கிர்லென் அம்பூடு அறுக்கிலென்
கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்
தழுவி வினைசென்று தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடையோனே.
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அறிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிராமே.
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.
ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே.
விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனல் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் ப்ற்றறு விக்கும்
பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே.
உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டும்
சிறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்
இறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே.
நோக்கும் கருடந் நொடிஏழ் உலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணரவல் லானே.
பதினொன்றாம் திருமுறை
திருஇரட்டை மணிமாலை
கழற்கொண்ட சேவடி காணலுற்
றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்தும் நில்லா
வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச் செம் மேனிஎம்
மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி
நம்மடுந் தொல்வினையே. 11
தொல்லை வினைவந்து
சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி
உமையென்னும்- மெல்லியல்ஓர்
கூற்றானைக் கூற்றுருவங்
காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை. 12
அற்புதத் திருவந்தாதி
இனியோ நாம்உய்ந்தோம்
இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம்
நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும்
மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண். 16
ஆமா றறியாவே
வல்வினைகள் அந்தரத்தே
நாமாளென் றேத்தார்
நகர்மூன்றும் - வேமாறு
ஒருகணையாற் செற்றானை
உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை அடும். 34
காலனையும் வென்றோம்
கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும்
வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய
வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து. 81
நாமாலை சூடியும்
நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு
புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால்
எற்றே தடுமே
87எறிவினையே என்னும் இருள்.
க்ஷேத்திரத் திருவெண்பா
உள்ளிடத்தான் வல்லையே
நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து
கலவாமுன் - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான்
தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள். 19
கோயில்
இருந்தனம் எய்தியும் நின்றுந்
திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு
போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன்
புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் தானே
களையும்நம் தீவினையே. 17
ஆவன யாரே அழிக்கவல்
லார்அமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற்
பார்புரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத்
திருந்தடி கைதொழுது
தீவினை யேன்இழந் தேன்கலை
யோடு செறிவளையே. 84
திருவாரூர்
அகவல்
புனமயிற் சாயற்
பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம்
மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன்
காதல னாக
விடுசுடர் நடுவுநின்
றடுதலின் நிழலும்
அடியகத் தொளிக்கும்
ஆரழற் கானத்து
வெவ்வினை வேடர்
துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியுஞ்
செவ்வித் தாகி
முள்ளிலை ஈந்தும்
முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த
வெள்ளிடை மருங்கில்
கடுங்குரற் கதநாய்
நெடுந்தொடர் பிணித்துப்
பாசந் தின்ற
தேய்கால் உம்பர்
மரையதள் மேய்ந்த
மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல்
வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல்
தானே திருந்தாக்
கூற்றெனப் பெயரிய
கொடுந்தொழில் ஒருவன்
ஆற்றல் செற்ற
அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க்
குயில்மொழிக் கொடியே. 13
திருக்கயிலைப்பாதி—திருக்காளத்திப்பாதி
நம்பால் மதித்துறையும்
காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய்
வணங்காதே - நம்பாநின்
சீலங்கள் ஏத்தாதே
தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து. 20
விளையும் வினையரவின்
வெய்ய விடத்தைக்
களைமினோ காளத்தி
ஆள்வார்- வளைவில்
திருந்தியசீர் ஈசன்
திருநாமம் என்னும்
மருந்தினைநீர் வாயிலே வைத்து. 38
ஆமென்று நாளை
உளஎன்று வாழ்விலே
தாமின்று வீழ்கை
தவமன்று - யாமென்றும்
இம்மாய வாழ்வினையே
பேணா திருங்கயிலை
அம்மானைச் சேர்வ தறிவு. 73
அறியாம லேனும்
அறிந்தேனுஞ் செய்து
செறிகின்ற தீவினைகள்
எல்லாம் - நெறிநின்று
நன்முகில்சேர் காளத்தி
நாதன் அடிபணிந்து
பொன்முகிலி ஆடுதலும் போம். 74
ஈங்கோய்மலை
ஆளி தொடர
அரிதொடர ஆங்குடனே
வாளி கொடுதொடரும்
மாக்குறவர் - கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும்
ஈங்கோயே நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று. 6
ஏழை இளமாதே
என்னொடுநீ போதென்று
கூழை முதுவேடன்
கொண்டுபோய் - வேழ
இனைக்குவால் வீட்டுவிக்கும்
ஈங்கோயே நந்தம்
வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு. 13
ஏனங் கிளைத்த
இனபவள மாமணிகள்
கானல் எரிபரப்பக்
கண்டஞ்சி - யானை
இனம்இரிய முல்லைநகும்
ஈங்கோயே நம்மேல்
வினைஇரியச் செற்றுகந்தான் வெற்பு. 15
தோகை மயிலினங்கள்
சூழ்ந்து மணிவரைமேல்
ஓகை செறியாயத்
தோடாட - நாகம்
இனவளையிற் புக்கொளிக்கும்
ஈங்கோயே நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு. 50
திருமுருகாற்றுப்படை
1. திருப்பரங்குன்றம்
உலகம் உவப்ப
வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு
கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்குஞ்
சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய
மதனுடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த
செல்உறழ் தடக்கை (5)
மறுவில் கற்பின்
வாணுதல் கணவன்
கார்கோள் முகந்த
கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில்
வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய
தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய
பராஅரை மராஅத்து (10)
உருள்பூந் தண்டார்
புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த
சேணுயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய
ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய
நுசுப்பிற் பணைத்தோள்
கோபத் தன்ன
தோயாப் பூந்துகில் (15)
பல்காசு நிரைத்த
சில்காழ் அல்குல்
கைபுனைந் தியற்றாக்
கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய
பொலம்புனை அவிரிழைச்
சேண்இகந்து விளங்குஞ்
செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த
இணையீர் ஓதிச் (20)
செங்கால் வெட்சிச்
சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத்
தூஇதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு
வலம்புரி வயின்வைத்துத்
திலகம் தைஇய
தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய்
தாழமண் ணுறுத்துத் (25)
துவர முடித்த
துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகம்
செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின்
ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு
கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல்
வளைஇத் துணைத்தக (30)
வண்காது நிறைந்த
பிண்டி ஒண்தளிர்
நுண்புண் ஆகந்
திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய
பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர்
கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக்
கொட்டி விரிமலர் (35)
வேங்கை நுண்தா
தப்பிக் காண்வர
வெள்ளில் குறுமுறி
கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய
வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென்
றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம்
சிலம்பப் பாடிச் (40)
சூரர மகளிர்
ஆடும் சோலை
மந்தியும் அறியா
மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச்
சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி
மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல்
கலங்கஉள் புக்குச் (45)
சூர்முதல் தடிந்த
சுடர்இலை நெடுவேல்
உலறிய கதுப்பிற்
பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண்
சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு
கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும்
காதின் பிணர்மோட்டு (50)
உருகெழு செலவின்
அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய
கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட் டுண்ட
கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின்
ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம்
பாடித்தோள் பெயரா (55)
நிணந்தின் வாயள்
துணங்கை தூங்க
இருபேர் உருவின்
ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின்
அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம்
அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த
மறுவில் கொற்றத்து (60)
எய்யா நல்லிசைச்
செவ்வேல் சேஎய்
சேவடி படரும்
செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப்
புலம்பிரிந் துறையும்
செலவுநீ நயந்தனை
ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து
இன்நசை வாய்ப்ப (65)
இன்னே பெறுதிநீ
முன்னிய வினையே
செருப் புகன் றெடுத்த
சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு
பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த
போர்அரு வாயில்
திருவீற் றிருந்த
தீதுதீர் நியமத்து (70)
மாடமலி மறுகில்
கூடல் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல்
விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத்
துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல்
ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த
காமர் சுனைமலர் (75)
அஞ்சிறை வண்டின்
அரிக்கணம் ஒலிக்கும்
குன் றமர்ந் துறைதலும் உரியன்,
அதா அன்று 1
2. திருச்சீரலைவாய்
வைந்நுதி பொருத
வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை
ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும்
மருங்கின் கடுநடைக் (80)
கூற்றத் தன்ன
மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன
வேழமேல் கொண்டு
ஐவேறு உருவின்
செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய
முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின்
சென்னிப் பொற்ப (85)
நகைதாழ்பு துயல்வரூஉம்
வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை
வாண்மதி கவைஇ
அகலா மீனின்
அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத்
தந்தொழில் முடிமார்
மனன்நேர் பெழுதரு
வாள்நிற முகனே (90)
மாயிருள் ஞாலம்
மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்
றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த
அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத்
தன்றே ஒருமுகம்
மந்திர விதியின்
மரபுளி வழாஅ (95)
அந்தணர் வேள்வியோர்க்
கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை
ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக்
கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச்
செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு
களம்வேட்டன்றே ஒருமுகம் (100)
குறவர் மடமகள்
கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந்
தன்றே ஆங்குஅம்
மூவிரு முகனும்
முறைநவின் றொழுகலின்
ஆரந் தாழ்ந்த
அம்பகட்டு மார்பில்
செம்பொறி வாங்கிய
மொய்ம்பின் சுடர்விடுபு (105)
வண்புகழ் நிறைந்து
வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின்
ஐயர்க் கேந்தியது
ஒருகை உக்கம்
சேர்த்தியது ஒருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை
அசைஇயது ஒருகை
அங்குசம் கடாவ
ஒருகை இருகை (110)
ஐயிரு வட்டமொ டெஃகுவலம்
திரிப்ப ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்
கொட்ப ஒருகை
பாடின் படுமணி
இரட்ட ஒருகை (115)
நீல்நிற விசும்பின் மலிதுளி
பொழிய ஒருகை
வான்அர மகளிர்க்கு வதுவை
சூட்ட ஆங்குஅப்
பன்னிரு கையும்
பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியம்
கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப
வால்வளை நரல (120)
உரம்தலைக் கொண்ட
உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை
வெல்கொடி அகவ
விசும் பாறாக
விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த
ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே,
அதா அன்று (120) 2
உன்னை ஒழிய
ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான்
பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர்
கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே. 11
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
திருக்கண் ணப்பன்
செய்தவத் திறத்து
விருப்புடைத் தம்ம விரிகடல்
உலகே, பிறந்தது
தேன்அழித்து ஊன்உண் கானவர்
குலத்தே, திரிவது
பொருபுலி குமுறும் பொருப்பிடைக்
காடே, வளர்ப்பது
செங்கண் நாயொடு தீவகம்
பலவே, பயில்வது (5)
வெந்திறற் சிலையொடு
வேல்வாள் முதலிய
அந்தமில் படைக்கலம்
அவையே, உறைவது
குறைதசை பயின்று
குடம்பல நிரைத்துக்
கறைமலி படைக்கலங்
கலந்த புல்லொடு
பீலி மேய்ந்தவை
பிரிந்த வெள்ளிடை (10)
வாலிய புலித்தோல்
மறைப்ப வெள்வார்
இரவும் பகலும்
இகழா முயற்றியொடு
மடைத்த தேனும்
வல்நாய் விட்டும்
சிலைவிடு கணையிலும்
திண்சுரி கையிலும்
பலகிளை யவையொடும்
பதைப்பப் படுத்துத் (15)
தொல்லுயிர் கொல்லும்
தொழிலே, வடிவே
மறப்புலி கடித்த
வன்திரள் முன்கை
திறற்படை கிழித்த
திண்வரை அகலம்
எயிற்றெண்கு கவர்ந்த
இருந்தண் நெற்றி
அயிற்கோட் டேனம்
படுத்தெழு குறங்கு (20)
செடித்தெழு குஞ்சி
செந்நிறத் துறுகண்
கடுத்தெழும் வெவ்வுரை
அவ்வாய்க் கருநிறத்து
அடுபடை பிரியாக் கொடுவிற
லதுவே,மனமே
மிகக்கொலை புரியும்
வேட்டையில் உயிர்கள்
அகப்படு துயருக்கு அகனமர்ந்
ததுவே, இதுஅக் (25)
கானத் தலைவன்
தன்மை, கண்ணுதல்
வானத் தலைவன்
மலைமகள் பங்கன்
எண்ணரும் பெருமை
இமையவர் இறைஞ்சும்
புண்ணிய பாதப்
பொற்பார் மலரிணை
தாய்க்கண் கன்றெனச்
சென்றுகண் டல்லது (30)
வாய்க்கிடும் உண்டி வழக்கறி
யானே, அதாஅன்று
கட்டழல் விரித்த
கனற்கதிர் உச்சியிற்
சுட்டடி இடுந்தொறும்
சுறுக்கொளும் சுரத்து
முதுமரம் நிரந்த
முட்பயில் வளாகத்து
எதிரினங் கடவிய
வேட்டையில் விரும்பி (35)
எழுப்பிய விருகத்
தினங்களை மறுக்குறத்
தன்நாய் கடித்திரித்
திடவடிக் கணைதொடுத்து
எய்து துணித்திடும்
துணித்த விடக்கினை
விறகினிற் கடைந்த
வெங்கனல் காய்ச்சி
நறுவிய இறைச்சி
நல்லது சுவைகண்டு (40)
அண்ணற்கு அமிர்தென்று
அதுவேறு அமைத்துத்
தண்ணறுஞ் சுனைநீர்
தன்வாய்க் குடத்தால்
மஞ்சன மாக முகந்து மலரெனக்
குஞ்சியில் துவர்க்குலை
செருகிக் குனிசிலை
கடுங்கணை அதனொடும்
ஏந்திக் கனல்விழிக் (45)
கடுங்குரல் நாய்பின்
தொடர யாவரும்
வெருக்கோ ளுற்ற
வெங்கடும் பகலில்
திருக்கா ளத்தி
எய்திய சிவற்கு
வழிபடக் கடவ
மறையோன் முன்னம்
துகிலிடைச் சுற்றித்
தூநீர் ஆட்டி (50)
நல்லன விரைமலர்
நறும்புகை விளக்கவி
சொல்லின பரிசிற்
சுருங்கலன் பூவும்
பட்ட மாலையும்
தூக்கமும் அலங்கரித்து
அருச்சனை செய்தாங்கு
அவனடி இறைஞ்சித்
திருந்த முத்திரை
சிறப்பொடுங் காட்டி (55)
மந்திரம் எண்ணி
வலமிடம் வந்து
விடைகொண்
டேகின பின்தொழில்
பூசனை தன்னைப்
புக்கொரு காலில்
தொடுசெருப் படியால்
நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில்
ஆட்டித் தன்தலைத் (60)
தங்கிய துவர்ப்பூ
ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம்
படைத்துப் பிரானைக்
கண்டுகண் டுள்ளங்
கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன்
ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக
இறைஞ்சி ஆரா (65)
அன்பொடு கானகம்
அடையும் அடைந்த
அற்றை அயலினிற்
கழித்தாங் கிரவியும்
உதித்த போழ்தத்
துள்நீர் மூழ்கி
ஆதரிக்கும் அந்தணன் வந்து
சீரார் சிவற்குத்
தான்முன் செய்வதோர் (70)
பொற்புடைப் பூசனை
காணான் முடிமிசை
ஏற்றிய துவர்கண்
டொழியான் மறித்தும்
இவ்வாறு அருச்சனை செய்பவர்
யாவர்கொல் என்று
கரந்திருந் தவண்அக்
கானவன் வரவினைப்
பரந்த காட்டிடைப்
பார்த்து நடுக்குற்று (75)
வந்தவன் செய்து
போயின வண்ணம்
சிந்தையிற் பொறாது
சேர்விடம் புக்கு
மற்றை நாளும்அவ்
வழிப்பட்டு இறைவ
உற்றது கேட்டருள்
உன்தனக்கு அழகா
நாடொறும் நான்செய்
பூசனை தன்னை (80)
ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து
மிதித்து உழக்கித்
தொடுசெருப் படியால்
நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில்
ஆட்டித் தன்தலை
தங்கிய சருகிலை உதிர்த்தோர்
இறைச்சியை (85)
நின்திருக் கோயிலில்
இட்டுப் போமது
என்றும் உன்தனக்
கினிதே எனைஉருக்
காணில் கொன்றிடும்
யாவ ராலும்
விலக்குறுங் குணத்தன்
அல்லன் என்நும்
திருக்குறிப்பு என்றவன்
சென்ற அல்லிடைக் (90)
கனவில்ஆ தரிக்கும்
அந்தணன் தனக்குச்
சீரார் திருக்கா
ளத்தியுள் அப்பன்
பிறையணி இலங்கு
பின்னுபுன் சடைமுடிக்
கறையணி மிடற்றுக்
கனல்மழுத் தடக்கை
நெற்றி நாட்டத்து
நிறைநீற் றாக (95)
ஒற்றை மால்விடை
உமையொடு மருங்கில்
திருவுருக் காட்டி அருளிப்
புரிவொடு பூசனை செய்யும்
குனிசிலை வேடன்
குணமவை ஆவன
உரிமையிற் சிறந்தநன்
மாதவன் என்றுணர் (100)
அவனுகந் தியங்கிய இடம்முனி
வனம்அதுவே, அவன்
செருப்படி யாவன
விருப்புறு துவலே
எழிலவன் வாயது
தூய பொற்குடமே
அதனில் தங்குநீர்
கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி
அவன்நிரைப் பல்லே (105)
அதற்கிடு தூமலர்
அவனது நாவே
உப்புனல் விடும்பொழு
துரிஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும்
நம்முடிக் கினிதே, அவன்தலை
தங்கிய சருகிலை
தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத்
தலரே அவனுகந்து (110)
இட்ட இறைச்சி
எனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே
இதுவெனக்கு உனக்கவன்
கலந்ததோர் அன்பு
காட்டுவன் நாளை
நலந்திகழ் அருச்சனை
செய்தாங் கிருவென்று (115)
இறையவன் எழுந்த ருளினன்
அருளலும் மறையவன்
அறிவுற் றெழுந்து
மனமிகக் கூசி
வைகறைக் குளித்துத்
தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை
புகழ்தரச் செய்து (120)
தோன்றா வண்ணம் இருந்தன
னாக இரவியும்
வான்தனி முகட்டில்
வந்தழல் சிந்தக்
கடும்பகல் வேட்டையில்
காதலித் தடித்த
உடும்பொடு சிலைகணை
உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு
தோன்றினன் தோன்றலும் (125)
செல்வன் திருக்கா ளத்தியுள்
அப்பன் திருமேனியின்
மூன்று கண்ணாய்
ஆங்கொரு கண்ணிலும்
உதிரம் ஒழியா தொழுக
இருந்தன னாகப்
பார்த்து நடுக்குற்றுப்
பதைத்து மனஞ்சுழன்று
வாய்ப்புனல் சிந்தக்
கண்ணீர் அருவக் (130)
கையில் ஊனொடு
கணைசிலை சிந்த
நிலப்படப் புரண்டு
நெடிதினில் தேறிச்
சிலைக்கொடும் படைகடி
தெடுத்திது படுத்தவர்
அடுத்தஇவ் வனத்துளர்
எனத்திரிந் தாஅங்கு
இன்மை கண்டு நன்மையில் (135)
தக்கன மருந்துகள்
பிழியவும் பிழிதொறும்
நெக்கிழி குருதியைக்
கண்டுநிலை தளர்ந்தென்
அத்தனுக் கடுத்ததென்
அத்தனுக் கடுத்ததென் என்று
அன்பொடுங் கனற்றி
இத்தனை தரிக்கிலன்
இதுதனைக் கண்டஎன் (140)
கண்தனை இடந்து
கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன்
என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக்
கையில் வாங்கி
அணைதர அப்பினன்
அப்பலுங் குருதி
நிற்பதொத் துருப்பெறக்
கண்டுநெஞ் சுகந்து (145)
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை
மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் ணப்ப நில்லு
கண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல்
நில்லுகண் ணப்பஎன்று
இன்னுரை அதனொடும்
எழிற்சிவ லிங்கம்
தன்னிடைப் பிறந்த
தடமலர்க் கையால் (150)
அன்னவன் தன்கை அம்பொடும்
அகப்படப் பிடித்து
அருளினன் அருளலும்
விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தனர்
வளையொலி படகம்
துந்துபி கறங்கின
தொல்சீர் முனிவரும் (155)
ஏத்தினர் இன்னிசை வல்லே
சிவகதி பெற்றனன்
திருக்கண் ணப்பனே. 1
பரிவின் தன்மை
உருவுகொண் டனையவன்
போழ்வார் போர்த்த
காழகச் செருப்பினன்
குருதி புலராச்
சுரிகை எஃகம்
அரையிற் கட்டிய
உடைதோற் கச்சையன்
தோல்நெடும் பையிற்
குறுமயிர் திணித்து (5)
வாரில் வீக்கிய
வரிக்கைக் கட்டியன்
உழுவைக் கூனுகிர்
கேழல்வெண் மருப்பு
மாறுபடத் தொடுத்த
மாலைஉத் தரியன்
நீலப் பீலி
நெற்றி சூழ்ந்த
கானக் குஞ்சிக்
கவடி புல்லினன் (10)
முடுகு நாறு
குடிலை யாக்கையன்
வேங்கை வென்று
வாகை சூடிய
சங்கரன் தன்னினத்
தலைவன் ஓங்கிய
வில்லும் அம்பும்
நல்லன தாங்கி
ஏற்றுக் கல்வனம்
காற்றில் இயங்கிக் (15)
கணையில் வீழ்த்துக்
கருமா அறுத்துக்
கோலின் ஏற்றிக்
கொழுந்தீக் காய்ச்சி
நாவில் வைத்த
நாட்போ னகமும்
தன்தலைச் செருகிய
தண்பள்ளித் தாமமும்
வாய்க்கல சத்து
மஞ்சன நீரும் (20)
கொண்டு கானப்
பேருறை கண்ணுதல்
முடியிற் பூசை அடியால் நீக்கி
நீங்காக் குணத்துக்
கோசரிக்கு அன்றவன்
நேசங் காட்ட
முக்கண் அப்பனுக்கு
ஒருகணில் உதிரம் (25)
தக்கி ணத்திடை
இழிதர அக்கணம்
அழுது விழுந்து
தொழுதெழுந் தரற்றிப்
புன்மருந் தாற்றப்
போகா தென்று
தன்னை மருந்தென்று
மலர்க்கண் அப்ப
ஒழிந்தது மற்றை
ஒண்திரு நயனம் (30)
பொழிந்த கண்ணீர்க்
கலுழி பொங்க
அற்ற தென்று
மற்றக் கண்ணையும்
பகழித் தலையால்
அகழ ஆண்டகை
ஒருகை யாலும்
இருகை பிடித்து
ஒல்லை நம்புண்
ஒழிந்தது பாராய் (35)
நல்லை நல்லை எனப்பெறும்
திருவேட் டுவர்தந்
திருவடி கைதொழக்
கருவேட் டுழல்வினைக்
காரியம் கெடுமே. 1
11.021 - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
வெண்பா
விநாயகனே வெவ்வினையை
வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி
விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும்
நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து. 5
வெண்பா
கணங்கொண்ட வல்வினைகள்
கண்கொண்ட நெற்றிப்
பணங்கொண்ட பாந்தட்
சடைமேல் - மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலும்
கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம். 9
வெண்பா
வேட்கை வினைமுடித்து
மெய்யடியார்க் கின்பஞ்செய்
தாட்கொண் டருளும்
அரன்சேயை - வாட்கதிர்கொள்
காந்தார மார்பிற்
கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்தமரர் விண். 15
கட்டளைக் கலித்துறை
விண்ணுதல் நுங்கிய விண்ணுமண்
ணுஞ்செய் வினைப்பயனும்
பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய்
அன்பர்கள் பாய்மதமா
கண்ணுதல் நுங்கிய நஞ்சம்உண்
டார்கரு மாமிடற்றுப்
பெண்ணுதல் நும்பிரி யாவொரு
பாகன் பெருமகனே. 16
11.022 - சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை - அந்தி மதிமுகிழான்
வெண்பா
விதிகரந்த செய்வினையேன்
மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு
வந்தாய் - நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேல்
கொன்றைக்குறுந் தெரியல்
தொட்டுக்காட் டாய்சுழல்வாய் தொக்கு. 29
11.024 - சிவபெருமான் திருவந்தாதி
கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயார் கடநாகம்
மாளஉரித் தாடுவார்
நம்மேலை வல்வினைநோய்
மாளஇரித் தாடுமால் வந்து. 35
அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர் - அறமாய
வல்வினைகள் வாரா வளமருக லாரென்ன
வல்வினைகள் வாராத வாறு.
11.025 - சிவபெருமான் திருமும்மணிக்கோவை
கட்டளைக் கலித்துறை
இடர்தரு தீவினைக் கெள்கிநை
வார்க்குநின் ஈரடியின்
புடைதரு தாமரைப் போதுகொ
லாம்சரண் போழருவிப்
படர்தரு கொம்பைப் பவளவண்
ணாபரு மாதைமுயங்
கடைதரு செஞ்சுடர்க் கற்றையொக்
குஞ்சடை அந்தணனே. 15
உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மை
பயிற்று நாவலர்க்
கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.
11.027 - கோயில் நான்மணிமாலை
நேரிசை ஆசிரியப்பா
அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி வினையெனும்
தொன்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் .....(5)
புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப்
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும்
துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து
நிறையெனும் கூம்பு முரிந்து குறையா ........(10)
உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்
பையர வணிந்த தெய்வ நாயக .....(15)
தொல்லெயில் உடுத்த தில்லை காவல
வம்பலர் தும்பை அம்பல வாணநின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே. 16
இணைக்குறள் ஆசிரியப்பா
ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவதுன்
ஐந்தெழுத் தவைஎம் சிந்தையிற் கிடத்தி
நனவே போல நாடொறும் பழகிக் ......(5)
கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்
கேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பது
நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த
மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென
அருத்திசெய் திடுவ துருத்திர சாதனம் .......(10)
காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்
ஆலயம் வலம் வரு தற்கே சால்பினில்
கைகொடு குயிற்றுவ தைய நின்னது
கோயில் பல்பணி குறித்தே ஓயாது
உருகி நின்னினைந் தருவி சோரக் ...........(15)
கண்ணிற் காண்பதெவ்
வுலகினும் காண்பனஎல்லாம்
நீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன்
தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்
அலைகடல் பிறழினும் அடாதே அதனால்
பொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு .........(20)
வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்து
வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு .........(25)
நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரைகுடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும் ......(30)
நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ
ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய்
நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச்
செம்பொன் தில்லை மூதூர் .......(35)
அம்பலத் தாடும் உம்பர் நாயகனே. 24
11.028 - திருக்கழுமல மும்மணிக் கோவை
சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெரும
கருணை முதுவெள்ளம் பெருகு திருநயன
கைவலம் நெல்லியங் கனியது போலச்
சைவசித் தாந்தத் தெய்வ ஆகமத்தை
வரன்முறை பகர்ந்த திருமலர் வாய .....(5)
பவளவரை மீதில் தவளமின் என்னச்
செப்பரு மார்பணி முப்புரி நூல
பேரிகல் ஆணவக் காரிரு ளினுக்கும்
பின்றொடர் வல்வினை வன்றொட ரினுக்கும்
மாயைமா மாயை ஆயபே யினுக்கும் ...... (10)
அஞ்சல்என் றமைத்த கஞ்சமென் கரதல
அருமறைச் சிரத்தும் பெருமைமெய் அன்பர்
துங்க இதயத்தும் தங்கு பொற்பாத
துன்னிய பயோதரம் மின்னினம் மிடைதலின்
அளப்பரும் பெருமை வளத்தினை விளைத்தலின் ......(15)
சந்திர திலகம் சிந்துரம் மருவலின்
உறுகண் டீரவந் துறுமுழை உறுதலின்
சாதமுறை சுழீஇச் சோதிமீ தமர்தலின்
பணைஎழு மரவம் பிணையொடு மேவலின்
காமரஞ் செவ்வழி காமரின் எய்தலின் ......(20)
அளகை எதிரெனும் ஆசையுற் றுறைதலி
னாடக மருவி நீடறை பெருதலின்
நாட்டியத் தோகை ஈட்டமங் கணைதலின்
அகத்தியன் மன்னும் மகத்துவம் சிவணலின்
மலையா சலமென நிலைசேர் மாட .......(25)
மாளிகை சூழ்ந்த சூளிகைப் புரிசை
நேமிமால் வரைஎனப் பூமிமீ திலங்கும்
காழிமா நகரம் தூழிதே ரமர்ந்த
அமையா அன்பின் உமையாள் கொழுந
தெரியநான் முகன்பணி பெரியநா யகநின் ......(30)
பொன்மலர்ப் பாதம் சென்னிவைத் திறைஞ்சுதும்
மேற்படும் இதயப் பாற்கடல் நடுவுள்
பரம்பரை தவறா வரம்பெறு குரவன்
மருளற இரங்கி அருளிய குறிஎனும்
நிந்தையில் கனக மந்தரம் நிறுவி ......(35)
மாண்அறிவென்னும் தூணிடைப் பிணித்த
நேசம் என்னும் வாசுகி கொளுவி
மதித்தல் என்னும் மதித்தலை உஞற்றிய
பேரா இன்பச் சீர்ஆ னந்தம்
பெறலறும் அமுதம் திறனொடும் பெற்று .......(40)
ஞானவாய் கொண்டு மோனமாய் உண்டு
பிறப்பிறப் பென்னும் மறப்பெரும் பயத்தால்
பன்னாட் பட்ட இன்னாங் ககற்றி
என்னையும் தன்னையும் மறந்திட்
டின்ப மேலீ டெய்துதற் பொருட்டே. ......(45) 13
இன்றென உளதென அன்றென ஆமென
உரைதரு நூலையும் பொருளையும் தனித்தனி
பல்வித மாகச் சொல்வகைச் சமய
மாகிய பயம்பில் போகுதல் குறித்த
நிலையில் துறைபல நிலையுள துறைசில .....(5)
பொருந்திடும் உலகப் பெருங்கட லிடத்தின்
மயிர்நூல் கிடத்திப் பயில்வுரு தோலெனும்
வன்புறு பலகையின் என்பெனும் ஆணியில்
நரம்பெனப் பெயரிய உரம்பெறு கயிற்றின்
வெரிந்உறும் என்பெனும் பெரிய கூம்பின் .....(10)
ஐம்பொறி யாகிய மொய்ம்புறு வாய்தலின்
காயமென அமைத்த மாயநா வாயில்
இருவினை என்ன வருசரக் கேற்றிக்
காமம் உலோபம் ஏமமா மோகம்
மிதமறு குரோதம் மதமாச் சரியமென் .....(15)
றுரைபெறு யவனர் நிரையுற இருத்தி
நெடுநீர் என்னப் படுநெடு நாணில்
தங்கிய மடிஎனும் நங்குரஞ் சேர்த்தி
அற்றமில் மனம்எனப் பெற்றபாய் விரித்துத்
தடைபடா ஆசைக் கடுவளி துரப்பத் .......(20)
தானம் ஆதி யான தீவுகளிற்
செல்வுழிச் சென்று புல்வுழிப் புல்லி
இவ்வா றியங்கும் அவ்வா றதனுள்
முன்பார் கால வன்பார் தாக்கத்
தொக்குறு மரக்கலம் பக்குவிட் டம்ம . ...(25)
அக்கடல் நீருள் புக்கறி வழிவுழி
மறலி என்னும் சுறவுபிடித் தீர்ப்பக்
கடுநர கென்னும் படுகுழி அழுந்தி
உளதுய ரினுக்கோர் அளவிலை அதனால்
இம்முறை இயங்குதல் செம்மை அன்றென்று ....(30)
முற்றுணர் பெரியோய் அற்றமில் வலியோய்
ஓதா துணர்ந்த நாதா தீத
அருவுரு என்னும் பொருள்முழு துடையோய்
யாவரும் நின்வய மேவரப் புரிவோய்
கரையறும் இன்பப் புரைதவிர் நிமல .......(35)
சாந்தணி வனமுலை ஏந்திழை பாக
ஞானமா மணநிறை மோனமா மலரே
வித்தகம் பழுத்த முத்திவான் கனியே
பரைமுதல் ஐம்பணை
நிரைபெறக் கிளைத்த
திருத்தகு நீழல் அருட்பெருந் தருவே ...(40)
பத்திகொள் நித்திலம் ஒத்துற நிரைத்த
பசும்பொனிற் செய்த நசும்பு பலதொக்க
தோற்றம் போல வீற்றுவீற் றமைந்த
தீங்கனி பணைதொறும்
தாங்குமா தணையும்
வித்துரு மத்திணை ஒத்தசெந் தளிரும் .....(45)
ஒளிர்வயி டூரியக் குளிர்மது மலரும்
மேலிடு வண்டெனும் நீலமா மணியும்
மரகதம் என்ன விரவுகாய்த் திரளும்
மறுவில்மா மணிஎனும்
நறியசெங் கனியும்
கிடைத்தசீர் வணிகரில்
படைத்தமாந் தருவும் ....(50)
எண்டிசை சூழ்ந்து விண்தொடும் புகலி
மேவிய பெரும ஆவி நாயகனே
கணபணக் கச்சைப் பணஅர வசைத்த
மட்டலர் புழுகணி சட்டை நாயகன்
எனுமீ காமன் மன்னினன் புரப்பநீ ....(55)
வீற்றினி திருக்க ஏற்றமெய்ப் பிரணவத்
தோணியே பற்றெனத் துணிந்து
காணுறும் அறிவொடு கண்டு கொண்டேனே. 16
ஆகுவா கனனைத் தோகைவா கனனை
உற்றசீர் மகார்எனப் பெற்றசுந் தரனை
ஞானவா ரிதியில் ஆனஆ ரமுதே
கற்றவர் கருதும் நற்றவக் கரும்பே
இருட்குறும் பெறிந்த அருட்கலா மதியே .......(5)
கதிர்த்தொகை குன்றா துதித்த செங்கதிரே
நிறைந்தஅன் பவரின் உறைந்த செந்தேனே
துன்பமொன் றறியா இன்பவா ரிதியே
மறைமுடி விளக்கும் சுடர்விடு மணியே
விறலரி பிரமன் பெறலரும் பொருளே .....(10)
சிற்பநூல் முழுதும் அற்பமின் றுணர்ந்த
ஓவியர் அற்புத மேவுகைத் தொழிலர்
சுத்தவெண் படிகப் பித்திகைத் தலத்தின்
நவமணி தெளித்துக் குவவின கூர்நுதித்
தூரியங் கொண்டு சீரிதிற் குயிற்றும் .......(15)
இமைப்பிலா நாட்டத் தமைப்பருங் கலாப
நீலமே காரமும் கோலமார் குயிலும்
துப்பமர் வளைவாய் ஒப்பறு பச்சைத்
தகைசிறைக் கிளியும் புகைநிறப் புறவும்
மேல்நிமிர் தூவிப் பால்நிற அனமும் ......(20)
நன்மது நிகர்த்த இன்மொழிப் பூவையும்
இனமெனக் கருதி மனமுவந் தணைத்த
உயிர்நிலை பெற்ற மயில்முதற் பறவையும்
கூறுபட நோக்கினர் வேறுபா டறியா
வளனொடு செறிந்த அளவிலா மாடத் ...(25)
துறைதரு கற்பு நிறைகுல மடவார்
அளிமுரல் குழலும் ஒளிகிளர் முகமும்
குலாவிய புருவமும் நிலாவிரி குழையும்
நறியமென் சொல்லுஞ் சிறிய நுண்ணிடையும்
தத்துநீர் உவரி முத்தமா லிகையும் ......(30)
பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்
திருநகர் இதுவெனக் கருதிவான் முகிலும்
சந்திர விம்பமும் இந்திரத் தனுவும்
இலங்குசெங் கதிரும் துலங்குவா னமுதும்
வாரா மின்னும் தாரா கணமும் ...(35)
ஒருங்குவந் திருந்த பெருந்திறன் ஏய்ப்பக்
காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த
காழிநா யகனே வாழிபூ ரணனே
ஏர்தரும் பொற்கிரி சேர்கருங் கொடியும்
பொன்னிற மாமெனச் சொன்னதொல்
மொழியும் ......(40)
ஏதமில் நிறைமதிச் சீதள நிலவால்
ஆரும்மெய் உருப்பம் தீரும் என்பதும்
மொழிதரும் இரத குளிகைதற் சேர்ந்த
காளிமச் சீருண நீள்இயற் கனக
மாமெனக் கூறும் தோமறு மொழியும் .......(45)
கருட தியானம் மருள்தப வந்தோர்
நோக்கினில் தவிரும் தீக்கடு என்றலும்
ஆயிரங் கிரணத் தலர்கதிர் முன்னம்
பாயிருள் கெடுமெனப் பகர்பழ மொழியும்
அங்கண்மா ஞாலத் தெங்கணும் ஒப்ப ....(50)
இயலும் பட்டாங் கயல்அல என்னல்
சரதமெய்ஞ் ஞான வரதநிற் சேர்ந்த
பேதையேன் பாசத் தீவினை அகற்றித்
திருவருட் செல்வம் பெருகுமா றுதவி
அளித்தருள் பேரின் பாகும் ....(55)
களித்திடும் முத்திக் காழிவான் கனியே. 19
செருக்குடன் இகலித் தருக்கமே தேற்றி
எம்ம னோரின் இறந்துபிறந் துழலும்
மம்மரிற் பெரிய வானவர் குழுவை
மெய்ப்பொருள் என்று
கைப்பொருள் உதவியும்
வழுத்தியும் நெஞ்சத் தழுத்தியும் வறிதே ...(5)
புறவார் பசும்புற் கறவாக் கற்பசு
வாயிடைச் செருகித் தூயநீர் உதவி
அருஞ்சுவைப் பால்கொளப்
பெருஞ்சுரை வருடும்
பேதையர் போலவும் ஓதுநஞ் சமரும்
எட்டியை விரும்பி மட்டுநீர்த் தேக்கி ....(10)
ஈநுழை கல்லா மேல்நிமிர் வேலி
உறும்படி அமைத்து நருங்கனி கொள்ளக்
கருதி முயலுந் திருவிலி போலவும்
இலகுவால் அரிசி உலைபெய எண்ணி
வெற்றுமி குற்றும் பற்றிலர் போலவும் ....(15)
அருநிலம் உழுததின் எருமிகப் பெய்து
வித்திட் டாங்கே விளைபயன் கொள்ளச்
சித்தத் துன்னும் மத்தர் போலவும்
வாழ்நாள் அனைத்தும் வீழ்நா ளாக்கி
இம்மையும் மறுமையும்
செம்மையிற் பொருந்தா ....(20)
திடருறும் மாந்தர் புடவியிற் பலரால்
அன்னவா றெளியனும் உன்னிமதி மயங்கா
தெய்ப்பினில் உதவு மெய்ப்பொரு ளாகி
என்றும்ஓர் இயல்பொடு நின்றகா ரணநின்
சேவடி த் தாமரைப்
பூவினைப் புனைந்து ......(25)
நாத்தழும் பேற ஏத்திஉள் ளுருகிப்
பெருகிய அன்பென வருநீர் நிறைந்த
இதய வாவிப் பதுமமா மலரின்
குணனெனப் பொருந்தும்
மணமாம் நின்னைக்
கண்டிறு மாந்து பண்டைவா தனைதீர்ந் ....(30)
தறைகடல் அழுந்தும் நிறைகுட மதுபோன்
றசைவற் றிருக்க இசையத் தருதி
நிலைமிகப் பொருந்திப் பலமுறை சாரலால்
உந்திய வன்ன உருமரு வுதலான்
மந்திரத் துறுசுடர் மகத்துயர் தலினால் ......(35)
இதம்பயில் இசைகொள் பதங்கவந் துறுதலால்
வேதமே ஒப்பென ஓதுகோ புரமும்
ஒழுக்குநெறி சிறிதும் வழுக்கில அதனால்
நூற்பதப் பிரிவின் மேற்பதம் அதனால்
பலகலை ஒளிர்மதி நிலவிய அதனால் ......(40)
முத்தரை வியக்கும் பத்திமை அதனால்
சிவாகமம் எனஒளிர் துவாமணி மேடையும்
வெள்ளைவா ரணமேற்
கொள்ளுமாங் கதனால்
கட்டா மரைபல மட்டார் தலினால்
அஞ்சுமந் தூரம் விஞ்சிஓங் குதலால் .........(45)
இந்திரன் எனப்பொலி யந்திர வாவியும்
எங்கணும் நிறைந்த வெங்குரு நாதா
கருவலி தொலைக்கும் பெருமலை மருந்தே
கருணைசூற் கொண்ட பெரியவான் முகிலே
சிற்றிடைக் கருங்கட்
பொற்றொடிக் கரத்தூள் ........(50)
ஆகமார் வனமுலை அணையும்
போகமார் இதழிப் பூங்கண் ணியனே. 22
பெறுவது பெற்ற உறுதிஉத் தமர்கட்
காயினும் சிறந்த நேயநெஞ் சினனே
யாகக் கழனியின் யோகத் தபோதனர்
ஆனபேர் உழவர் மானமோ டாக்கிய
முயலகன் என்னும்
இயல்பெருங் கரும்பை ........(5)
உதிரம் என்னும் முதிர்சா றொழுக
நகையெனும் முத்தந்
தொகையுறத் தோன்றச்
சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்
டரைத்தக வயிரங் கரைத்த வித்தகனே
குங்குமக் கொங்கை அங்கயற் செங்கட் .....(10)
பெண்ணரசி பிரியா வண்ணமெய்ப் பாக
பாடலம் புன்னை ஏடவிழ் இலஞ்சி
வெளிய கற்பூரம் களிகொள் கத்தூரி
நறுமணம் எவையும்
உறுமுறை பொருந்தி
உண்ணீர் பெற்ற தண்ணீர்ப் பந்தரும் ......(15)
நெய்கமழ் கருணையும் குய்கமழ் கறியும்
மதிதரு நிலவெனப் புதிய வெண்டயிரும்
வருக்கையின் கனியும்
சருக்கரைக் கட்டியும்
முதல்உப கரணம் பதனொடு மரீஇத்
தளவரும் பென்ன வளமலி போனகம் .....(20)
மாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும்
நன்னயத் துடன்அருள் அன்னசத் திரமும்
பாடகச் சீரடிப் பான்மொழி மடவார்
நாடகத் தொழில்பயில்
நீடரங் கெவையும்
கலைபயில் கழகமும்
பலர்பயில் மன்றமும் ......(25)
உள்ளன கரவா துவந்தெதிர்ந் தளிக்கும்
வள்ளியோர் வாழும்
மணிநெடு வீதியும்
பூமகள் உறையு ளாமென விளங்கும்
பெரும்புகழ்க் காழி விரும்புசங் கரனே
ஏந்தெழிற் புவன வேந்தன்நீ ஆதலின் .......(30)
வளமலி நான்முகக் களமருன் ஏவலின்
உரம்பெறு குலவரைக் குறும்பகப் பட்ட
மண்டலம் என்னும் கண்டநீள் வயலுள்
சராசரத் தொகுதி விராயவித் திட்டுப்
பாதவ மிருகம் பறவை மானிடர் ......(35)
ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்ப
மாவுறை மருமக் காவ லாளர்
வளமையின் ஓம்ப விளைவுமுற் றியபின்
புரிபயன் பெறுவான் அரிதர வியற்றி
மெய்வலிக் கூற்றுவக்
40) கைவினை மாக்கனி .......(
புலாலுடை யாக்கைப் பலாவம தகற்றி
அற்றமில் உயிரெனப் பெற்றநெற் றிரளைப்
பூதசா ரத்தனுப் பூத மகாதனு
பூத பரிணாமம் புகலுறு யாக்கை
மூவகைப் பண்டியின் மேவர ஏற்றிப் ........(45)
பொன்னில நிரயம் இந்நிலம் என்னும்
இடந்தொறும் ஆங்கவை
அடங்கவைத் தவற்றுள்
ஒருசில வற்றைநின் திருவடி வீட்டிற்
சேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில்
அரசுகொள் கடமை ஆறிலொன் றென்னும் ....(50)
புரைதீர் முறைமை புதுக்கினை
போலும் அதனால்
மாசுகம் நீயுறும் வண்மை
பேசுக கருணைப் பெரியநா யகனே. 25
11.029 - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
நேரிசை ஆசிரியப்பா
அடிசார்ந் தவர்க்கு
முடியா இன்பம்
நிறையக் கொடுப்பினும்
குறையாச் செல்வ
மூலமும் நடுவும்
முடிவும் இகந்து
காலம் மூன்றையும்
கடந்த கடவுள்
உளக்கணுக் கல்லா
தூன்கணுக் கொளித்துத் ...(5)
துளக்கற நிமிர்ந்த
சோதித் தனிச்சுடர்
எறுப்புத் துளையின்
இருசெவிக் கெட்டாது
உறுப்பினின் றெழுதரும்
உள்ளத் தோசை
வைத்த நாவின்
வழிமறுத் தகத்தே
தித்தித் தூறும்
தெய்வத் தேறல் ........(10)
துண்டத் துளையிற்
பண்டை வழியன்றி
அறிவில் நாறும்
நறிய நாற்றம்
ஏனைய தன்மையும்
எய்தா தெவற்றையும்
தானே யாகி
நின்ற தத்துவ
தோற்றுவ தெல்லாம்
தன்னிடைத் தோற்றித் .....(15)
தோற்றம் பிறிதில்
தோற்றாச் சுடர்முளை
விரிசடை மீமிசை
வெண்மதி கிடப்பினும்
இருள்விரி கண்டத்
தேக நாயக
சுருதியும் இருவரும்
தொடர்ந்துநின் றலமர
மருதிடம் கொண்ட
மருதமா ணிக்க ......(20)
உமையாள் கொழுந
ஒருமூன் றாகிய
இமையா நாட்டத்
தென்தனி நாயக
அடியேன் உறுகுறை
முனியாது கேண்மதி
நின்னடி பணியாக்
கல்மனக் கயவரொடு
நெடுநாட் பழகிய
25) கொடுவினை ஈர்ப்பக் ....(
கருப்பா சயமெனும்
இருட்சிறை அறையில்
குடரென் சங்கிலி
பூண்டு தொடர்பட்டுக்
கூட்டுச்சிறைப் புழுவின்
ஈட்டுமலத் தழுந்தி
உடனே வருந்தி
நெடுநாட் கிடந்து
பல்பிணிப் பெயர்பெற்
றல்லற் படுத்தும் ..(30)
தண்ட லாளர்
மிண்டிவந் தலைப்ப
உதர நெருப்பிற்
பதைபதை பதைத்தும்
வாதமத் திகையின்
மோதமொத் துண்டும்
கிடத்தல் நிற்றல்
நடத்தல் செல்லாது
இடங்குறை வாயிலின்
முடங்கி இருந்துழிப் ....(35)
பாவப் பகுதியில்
இட்டுக் காவற்
கொடியோர் ஐவரை
ஏவி நெடிய
ஆசைத் தளையில்
என்னையும் உடலையும்
பாசப் படுத்திப்
பையென விட்டபின்
யானும் போந்து
தீதினுக் குழன்றும் ....(40)
பெரியோர்ப் பிழைத்தும்
பிறர்பொருள் வெளவியும்
பரியா தொழிந்தும்
பல்லுயிர் செகுத்தும்
வேற்றோர் மனைவியர்
தோற்றம் புகழ்ந்தும்
பொய்பல கூறியும்
புல்லினம் புல்லியும்
ஐவரும் கடுப்ப
அவாவது கூட்டி ....(45)
ஈண்டின கொண்டு
மீண்டு வந்துழி
இட்டுழி இடாது
பட்டுழிப் படாஅது
இந்நாள் இடுக்கண்
எய்திப் பன்னாள்
வாடுபு கிடப்பேன்
வீடுநெறி காணேன்
நின்னை அடைந்த
அடியார் அடியார்க்கு ....(50)
என்னையும் அடிமை
யாகக் கொண்டே
இட்டபச் சிலைகொண்
டொட்டி அறிவித்து
இச்சிறை பிழைப்பித்
தினிச்சிறை புகாமல்
காத்தருள் செய்ய வேண்டும்
தீத்திரண் டன்ன
செஞ்சடை யோனே. ...(55) 22
11.030 - கச்சி ஏகம்பம் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி
தரித்தேன் மனத்துன் திகழ்தரு
நாமம் தடம்பொழில்வாய்
வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப
னேஎன்றன் வல்வினையை
அரித்தேன் உனைப்பணி யாதவர்
ஏழைமை கண்டவரைச்
சிரித்தேன் உனக்கடி யாரடி
பூணத் தெளிந்தனனே. 3
திரியப் புரமெய்த ஏகம்ப
னார்திக ழுங்கயிலைக்
கிரியக் குறவர் பருவத்
திடுதர ளம்வினையோம்
விரியச் சுருள்முத லானும்
அடைந்தோம் விரைவிரைந்து
பிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற
தென்அங்குப் பேசுமினே. 22
மணியார் அருவித் தடம்இம
யங்குடக் கொல்லிகல்லின்
திணியார் அருவியின் ஆர்த்த
சிராமலை ஐவனங்கள்
அணியார் அருவி கவர்கிளி
ஓப்பும்இன் சாரல்விந்தம்
பணிவார் அருவினை தீர்க்கும்ஏ
கம்பர் பருப்பதமே. 57
இறைத்தார் புரம்எய்த வில்லிமை
நல்லிம வான்மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்ற மன்னல்குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்
குன்றம்என் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர்
குன்றென்று கூறுமினே. 59
கார்முகம் ஆரவண் கைக்கொண்ட
கம்பர் கழல்தொழுது
போர்முக மாப்பகை வெல்லச்சென்
றார்நினை யார்புணரி
நீர்முக மாக இருண்டு
சுரந்தது நேரிழைநாம்
ஆர்முக மாக வினைக்கடல்
நீந்தும் அயர்வுயிர்ப்பே. 89
11.031 - ஒற்றியூர் - திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
உருவாம் உலகுக் கொருவன் ஆகிய
பெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின்
எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்
அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித் ....(5)
தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்
நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்
ஓங்கிய மறையோற் கொருமுகம் ஒழித்ததும்
பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும் ......(10)
திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதலின்
உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர .....(15)
பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழின் அல்லது
புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே. 3
பொருள்உணர்ந் தோங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும்
5)வெவ்வே றாகி வினையொடும் பிரியாது ....(
ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும்
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கும் ...(10)
ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே. 4
மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை
துயக்க நின்திறம் அறியாச் சூழலும்
உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது
கறைபட ஆங்கே கரந்த கள்ளமும்
5)செய்வினை உலகினில் செய்வோய் எனினும் .....(
அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்
இனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர்
மனத்திடை வாரி ஆகிய வனப்பும்
அன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச்
சேய்மையும் நாள்தொறும் ......(10)
என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்
கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்
உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர
மன்னிய பெரும்புகழ் மாதவத்
துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே. ........(15) 5
ஒற்றி யூர உலவா நின்குணம்
பற்றி யாரப் பரவுதல் பொருட்டா
என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி
நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்
ஆவலித் தழுதலின் அகன்ற அம்மனை ...(5)
கேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும்
பிரித்தற் கரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவிய தியல்பினை
அறியா தெண்ணில் ஊழிப் பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கே ...(10)
தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்
வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்
மல்கிய இன்பத் தோடுடன் கூடிய
எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்
கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது ....(15)
எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்
துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி
வெள்ளிடை காண விருப்புறு வினையேன்
தந்தையும் தாயும் சாதியும் அறிவும்நம்
சிந்தையும் திருவும் செல்கதித் திறனும் ...(20)
துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும்
இன்பமும் புகழும் இவைபல பிறவும்
சுவைஒளி ஊறோசை நாற்றம் தோற்றம்
என்றிவை முதலா விளங்குவ எல்லாம்
ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து ...(25)
நின்றனன் தமியேன் நின்னடி அல்லது
சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிக்
சேர்விட மதனைத் திறப்பட நாடி
எய்துதற் கரியோய் யான்இனிச்
செய்வதும் அறிவனோ தெரியுங் காலே. ...(30) 9
11.032 - நாரையூர் - திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
மலஞ்செய்த வல்வினை நோக்கி
உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு
முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன்
தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி
றேஉன்னை வாழ்த்துவனே. 8
வனஞ்சாய வல்வினைநோய்
நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவான்
அன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன்
திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம். 9
11.033 - கோயில் - கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கறுத்தகண் டாஅண்ட வாணா
வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
யாய்என்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ
பிறர்என் உறுதுயரை
அறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ
வருஞ்சொல் அரும்பழியே. 39
நேசன்அல் லேன்நினை யேன்வினை
தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ்
சேன்என்தன் வாயதனால்
தேசன்என் னானை பொன்னார்
திருச் சிற்றம் பலம்நிலவும்
ஈசன்என் னேன்பிறப் பென்னாய்க்
கழியுங்கொல் என்தனக்கே. 55
தவனைத் தவத்தவர்க் கன்பனைத்
தன்அடி எற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத்
தைச்சிவந் தானைச் செய்ய
அவனைத் தவளத் திருநீ
றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை
வல்வினை பற்றறவே.
நண்ணிய தீவினை நாசஞ்
செலுத்தி நமனுலகத்
தெண்ணினை நீக்கி இமையோர்
உலகத் திருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம்
பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை
யாரத் தொழுமின்களே. 69
11.034 - திருத்தொண்டர் திருவந்தாதி
ருத்தொண்டத்தொகையில் உள்ள தொகை அடியார்கள் தனியடியார்கள்
கூட்டம்ஒன் பானொ டறுபத்து
மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத் தோர்எழு
பத்திரண் டாம்வினையை
வாட்டும் தவத்திருத் தொண்டத்
தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டும் திகழ்திரு
நாவலூராளி பணித்தனனே. 88
நூற் பயன்
ஓடிடும் பஞ்சேந் திரியம்
ஒடுக்கிஎன் ஊழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம்
செய்தனன் வானினுள்ளோர்
சூடிடும் சீர்த்திருப் பாதத்தர்
தொண்டத் தொகையின்உள்ள
சேடர்தம் செல்வப் பெரும்புகழ்
அந்தாதி செப்பிடவே. 90
11.035 - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
மேனாட் டமரர் தொழஇருப்
பாரும் வினைப்பயன்கள்
தானாட் டருநர கிற்றளர்
வாரும் தமிழர்தங்கள்
கோனாட் டருகர் குழாம்வென்ற
கொச்சையர் கோன்கமலப்
பூநாட் டடிபணிந் தாரும்அல்
லாத புலையருமே. 36
குழலியல் இன்கவி ஞானசம்
பந்தன் குரைகழல்போல்
கழலியல் பாதம் பணிந்தேன்
உனையும் கதிரவனே
தழலியல் வெம்மை தணித்தருள்
நீதணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை
யேன்பெற்ற ஆரணங்கே. 38
மண்ணில் திகழ்சண்பை நாதனை
வாதினில் வல்அமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம்
பந்த வினைஅறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா
கரனைஎங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையல் கவுணியர்
தீபனைச் சேர்ந்தனமே. 98
11.037 - ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
மானசம் பந்தம்
மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை
நயவார் கிளைபோல்
வினையேன் இருக்கும்
மனைபிரி யாத
வஞ்சி மருங்குல்
அஞ்சொற் கிள்ளை
ஏதிலன் பின்செல
விலக்கா தொழிந்தனை ..(15)
ஆதலின் புறவே
உறவலை நீயே. 22
கட்டளைக் கலித்துறை
ஊரும் பசும்புர வித்தேர்
ஒளித்த தொளிவிசும்பில்
கூரும் இருளொடு கோழிகண்
துஞ்சா கொடுவினையேற்
காரும் உணர்ந்திலர் ஞானசம்
பந்தன்அந் தாமரையின்
தாரும் தருகிலன் எங்ஙனம்
யான்சங்கு தாங்குவதே. 24
11.038 - ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
பூந்துகிலைப் பூமாலை
என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் எனமெய்யில்
தைவருவார் - வாய்ந்த
கிளியென்று பாவைக்குச்
சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலையென்
றுடுப்பார் -அளிமேவு
பூங்குழலார் மையலாய்க்
கைதொழமுன் போதந்தான்
ஓங்கொலிசேர் வீதி யுலா. 140
11.039 - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
அலையார்ந்த கடலுலகத்
தருந்திசைதோ றங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம்
நெறிமனிதர்க் கினிதியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க்
கிடர்கெடுத்தல் காரணமாய்
ஓங்குபுகழ்ச் சண்பையெனும்
ஒண்பதியுள் உதித்தனையே.
செஞ்சடைவெண் மதியணிந்த
சிவன்எந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள்
மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி அளவிறந்த
ஞானத்தை அமிர்தாக்கிப்
பொற்கிண்ணத் தருள்புரிந்த
போனகமுன் நுகர்ந்தனையே.
தோடணிகா தினன்என்றும்
தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச்
செழுமறையின் அகன்பொருளை
அந்திச்செம் மேனியனை
அடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காணஅரன்
உவனாமென் றுரைத்தனையே.
(இவை மூன்றும் நான்கடித் தாழிசை)
வளமலி தமிழிசை
வடகலை மறைவல
முளரிநன் மலரணி
தருதிரு முடியினை.
கடல்படு விடமடை
கறைமணி மிடறுடை
அடல்கரி உரியனை
அறிவுடை அளவினை.
(இவை இரண்டும் அராகம்)
கரும்பினு மிக் கினியபுகழ்க்
கண்ணுதல்விண்ணவன்அடிமேல்
பரம்பவிரும் புவியவர்க்குப்
பத்திமையை விளைத்தனையே.
பன்மறையோர் செய்தொழிலும்
பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும்
ஒழிவின்றி நவின்றனையே.
(இவை இரண்டும் இரண்டடித் தாழிசை)
அணிதவத் தவர்களுக்
கதிகவித் தகனும்நீ
தணிமனத் தருளுடைத்
தவநெறிக் கமிர்தம்நீ
அமணரைக் கழுநுதிக்
கணைவுறுத் தவனும்நீ
தமிழ்நலத் தொகையினில்
தகுசுவைப் பவனும்நீ
(இவை நான்கும் நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்)
மறையவர்க் கொருவன் நீ
மருவலர்க் குருமு நீ
நிறைகுணத் தொருவன் நீ
நிகரில்உத் தமனும் நீ
(இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போதரங்கம்)
அரியை நீ. எளியை நீ.
அறவன் நீ. துறவன் நீ.
பெரியை நீ உரியை நீ.
பிள்ளை நீ. வள்ளல் நீ.
(இவை எட்டும் இருசீர் ஓரடி அம்போதரங்கம்)
எனவாங்கு (இது தனிச்சொல்)
அருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை
நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக்
கற்றொகு புரிசைக் காழியர் நாத
நற்றொகு கீர்த்தி ஞானசம் பந்த
நின்பெருங் கருணையை நீதியின்
அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.
(இது சுரிதகம்) 1
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வகைதகு முத்தமி ழாகரன்
மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன் வானவில்
மதியணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில்
திகழ்புக லிக்கர சாகிய
திருவளர் விப்ரசி காமணி
செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரண
மிடைவரு டைக்குலம் யாளிகள்
விரவிரு ளிற்றனி நீணெறி
வினைதுயர் மொய்த்துள வேமணி
நகையெழி லிற்குற மாதுன
தருமை நினைக்கிலள் நீயிவள்
நசையின் முழுப்பழி யாதல்முன்
நணுகலி னிக்கிரி வாணனே. 6
பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பண்டமுது செய்ததுமை நங்கையருள்
மேவுசிவ ஞானம்
பைந்தரள நன்சிவிகை செம்பொனணி
நீடுகிற தாளம்
கொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு
மானருள் படைத்துக்
கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க
ளுக்குலகில் இன்பம்
கண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு
துங்கழுவில் ஏறக்
கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை
காதலது வன்றி
விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு
கின்றமணி மாட
வேணுபுர நாதன்மிகு வேதியர்
சிகாமணி பிரானே. 9
பன்னீருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தொகுவார் பொழில்சுற் றியவான்
மதிதோ யுமதிற் கனமார்
தொலையா ததிருப் பொழில்மா
ளிகைமா டநெருக் கியசீர்
மிருகா ழிமன்முத் தமிழா
கரன்மே தகுபொற் புனைதார்
விரையார் கமலக் கழலே
துணையா கநினைப் பவர்தாம்
மகரா கரநித் திலநீர்
நிலையார் புவியுத் தமராய்
வரலா றுபிழைப் பினினூ
ழியிலக்................ கிதமா
தகுவாழ் வுநிலைத் தெழில்சே
ரறமா னபயிற் றுவர்மா
சதுரால் வினைசெற் றதன்மே
லணுகார் பிறவிக் கடலே. 36
பன்னிரண்டாம் திருமுறை
12.006 - தடுத்து ஆட்கொண்ட புராணம் -
சிவன் உறையுந் திருத்துறையூர்
சென்ற ணைந்து தீவினையால்
அவநெறியில் செல்லாமே தடுத்து
ஆண் டாய் அடியேற்குத்
தவ நெறிதந்து அருள்
என்று தம்பிரான் முன்நின்று
பவ நெறிக்கு விலக்கு
ஆகுந் திருப்பதிகம் பாடினார். 79
பாசமாம் வினைப் பற்று
அறுப்பான் மிகும்
ஆசை மேலும் ஓர்
ஆசை அளிப்பதோர்
தேசின் மன்னி என்
சிந்தை மயக்கிய
ஈசனார் அருள் என்
நெறிச் சென்றதே. 152
பஞ்சின் மெல் அடிப்
பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள் தம்வல்
வினையும் அரன்
அஞ்சு எழுத்தும் உணரா
அறி விலோர்
நெஞ்சும் என்ன இருண்டது
நீண்ட வான். 159
புலரும் படியன்றி இரவென்னளவும்; பொறையும்
நிறையும் இறையும் தரியா,
உலரும் தனமும் மனமும் வினையேன்
ஒருவேன் அளவோ? பெருவாழ்வுரையீர்
பலரும்புரியும் துயர்தான் இதுவோ படைமன்
மதனார்புடை நின்று அகலார்!
அலரும் நிலவும் மலரும் முடியார்
அருள்பெற்று உடையார் அவரோ அறியார். 176
12.010 - இளையான்குடி மாற நாயனார் புராணம்
றுவள் மற்று ஒன்றுங் காண்கிலேன்
ஏதிலாரும் இனித் தருவார் இல்லை
போதும் வைகிற்றுப் போம் இடம் வேறில்லை
தீது செய்வினை யேற்கு என் செயல் என்று. 12
12.011 - மெய்ப்பொருள் நாயனார் புராணம்
அவ்வழி அவர்கள் எல்லாம்
அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன்
திருநகர் கடந்து போந்து
கை வடி நெடுவாள் ஏந்தி
ஆளுறாக் கானஞ் சேர
வெவ் வினைக் கொடியோன் தன்னை
விட்ட பின் மீண்டு போந்தான். 19
12.013 - அமர்நீதி நாயனார் புராணம்
முஞ்சி நாணுற முடிந்தது
சாத்திய அரையில்
தஞ்ச மா மறைக்
கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல் வினைக்
கறுப்பறும் மனத்து அடியார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடி
மலர் நீணிலம் பொலிய. 8
12.016 - கண்ணப்ப நாயனார் புராணம்
பல துறைகளின் வெருவரலொடு பயில்
வலையற நுழை மா
உலமொடு படர்வன தகையுற உறு
சினமொடு கவர் நாய்
நிலவிய இரு வினை வலை இடை
நிலை சுழல் பவர் நெறி சேர்
புலனுறு மனனிடை தடைசெய்த
பொறிகளின் அளவுளவே. 85
இவ் வண்ணம் பெருமுனிவர்
ஏகினார் இனி இப்பால்
மைவண்ணக் கருங் குஞ்சி
வன வேடர் பெருமானார்
கைவண்ணச் சிலை வளைத்துக் கான்
வேட்டை தனி ஆடிச்
செய்வண்ணத் திறம் மொழிவேன்
தீவினையின் திறம் ஒழிவேன். 141
முன்பு திருக் காளத்தி
முதல்வனார் அருள் நோக்கால்
இன்புறு வேதகத்து இரும்பு பொன்
ஆனால் போல் யாக்கைத்
தன் பரிசும் வினை இரண்டும்
சாரும் மலம் மூன்றும் அற
அன்பு பிழம் பாய்த் திரிவார்
அவர் கருத்தின் அளவினரோ?. 154
12.018 - மானக்கஞ்சாற நாயனார் புராணம்
குழைக் கலையும் வடி
காதில் கூத்தனார் அருளாலே
மழைக்கு உதவும் பெருங்கற்பின்
மனைக் கிழத்தியார் தம்பால்
இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த
இப் பிறவிக் கொடுஞ்சூழல்
பிழைக்கும் நெறி தமக்கு உதவப்
பெண் கொடியைப் பெற்று எடுத்தார். 11
12.019 - அரிவாட்டாய நாயனார் புராணம்
மனை மருங்கு அடகு மாள
வட நெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க
அமுது செய்து அன்பனாரும்
வினை செயல் முடித்துச் செல்ல
மேவு நாள் ஒருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க்கு அங்கு
நிகழ்ந்தது மொழியப் பெற்றேன். 13
திருக்கை சென்று அரிவாள் பற்றும்
திண் கையைப் பிடித்த போது
வெருக்கொடங் கூறு நீங்க வெவ்
வினை விட்டு நீங்கிப்
பெருக்கவே மகிழ்ச்சி நீடத்
தம்பிரான் பேணித் தந்த
அருட் பெரும் கருணை நோக்கி
அஞ்சலி கூப்பி நின்று. 19
12.020 - ஆனாய நாயனார் புராணம்
ஆயர் குலத்தை விளக்கிட
வந்து உதயம் செய்தார்
தூய சுடர்திரு நீறு விரும்பு
தொழும்புள்ளார்
வாயினின் மெய்யின் வழுத்து
மனத்தின் வினைப் பாலில்
பேயுடன் ஆடு பிரான்
அடி அல்லது பேணாதார். 9
தீது கொள் வினைக்கு வாரோம்
செஞ்சடைக் கூத்தர் தம்மைக்
காது கொள் குழைகள் வீசும் கதிர்
நிலவு இருள் கால் சீப்ப
மாது கொள் புலவி நீக்க
மனையிடை இரு கால் செல்லத்
தூது கொள்பவராம் நம்மைத் தொழும்பு
கொண்டு உரிமை கொள்வார். 42
12.021 - மூர்த்தி நாயனார் புராணம்
தாழும் சமண் கையர் தவத்தை
மெய் என்று சார்ந்து
வீழும் கொடியோன் அது
அன்றியும் வெய்ய முன்னைச்
சூழும் வினையால் அரவம்
சுடர்த் திங்களோடும்
வாழும் சடையான் அடியாரையும்
வன்மை செய்வான். 14
12.024 - திருநாளைப் போவார் நாயனார் புராணம்
அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர்
துதி செய்தார்
வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை
வினை மாசு அறுத்துச்
சுந்தரத் தாமரை புரையும் துணை
அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்தப் பெரும்
கூத்தர் அருள் புரிந்தார். 36
மாசு உடம்பு விடத் தீயின்
மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசில் மறை முனியாகி
அம்பலவர் தாள் அடைந்தார்
தேசுடைய கழல் வாழ்த்தித் திருக்
குறிப்புத் தொண்டர் வினைப்
பாசம் அற முயன்றவர்தம் திருத்
தொண்டின் பரிசு உரைப்பாம். 37
12.025 - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
தீது நீங்கிடத் தீக்
கலியாம் அவுணற்கு
நாதர் தாம் அருள் புரிந்தது
நல்வினைப் பயன் செய்
மாதர் தோன்றிய மரபுடை
மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய
பொற்பினால் விளங்கும். 30
கொடு வினைத் தொழில்
நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படு மணற் கரை
நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடு கடல் சங்கு துறையவர்
குளிப்பன அவர் தம்
வடு வகிர்க் கண்மங்கையர்
குளிப்பன மணற்கேணி. 35
மாறிலாத இப் பூசனை என்றும் மன்ன
எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி
ஈறிலாத இப்பதியினுள் எல்லா அறமும் யான்
செய அருள் செய வேண்டும்
வேறு செய் வினை திருவடிப் பிழைத்தல்
ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன் கொடுத்து அருளப்
பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள். 69
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக
பரத் திரு நாழி நெல் அளித்துக்
கடையர் ஆகியும் உயர்ந்தவராயும் காஞ்சி
வாழ்பவர் தாம் செய் தீவினையும்
தடைபடாது மெய்ந் நெறி அடைவதற்காம்
தவங்களாகவும் உவந்து அருள் செய்தார். 70
ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு
தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்புடைத் தீர்த்தம் மூன்று உலகில்
நிகழ்ந்த சாருவ தீர்த்தமு முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும்
அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார். 78
விழவு மலி திருக் காஞ்சி வரைப்பின் வேளாண்
விழுக் குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன்
மலைவல்லிக் களித் தவளர் உணவின் மூலம்
தொழ உலகு பெறும் அவள் தான் அருள
பெற்றுத் தொன்னிலத்து மன்னு பயிர் வேத வாய்மை
உழவுத் தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம்
ஓங்க வரும் தரும வினைக்கு உளரால் என்றும்.
தேசுடைய மலர்க் கமலச்
சேவடியார் அடியார்தம்
தூசுடைய துகள் மாசு கழிப்பார்
போல் தொல்லை வினை
ஆசுடைய மல மூன்றும் அணைய
வரும் பெரும் பிறவி
மாசு தனை விடக் கழித்து வரும்
நாளில் அங்கு ஒரு நாள். 114
12.026 - சண்டேசுர நாயனார் புராணம்
பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர்
தம்முள் பெருமனை வாழ்
தருமம் நிலவு காசிப கோத்திரத்துத்
தலைமை சால் மரபில்
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும்
அளிக்கும் அரவு போல்
இருமை வினைக்கும் ஒரு வடிவு
ஆம் எச்ச தத்தன் உளனானான். 10
12.027 - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
மாதினியார் திரு வயிற்றின்
மன்னிய சீர்ப் புகழனார்
காதலனார் உதித்த தற்பின்
கடன் முறைமை மங்கலங்கள்
மேதகு நல் வினை
சிறப்ப விரும்பிய பாராட்டினுடன்
ஏதமில் பல் கிளை போற்ற
இளங் குழவிப் பதம் கடந்தார். 19
ஆய நாள் இடை இப்பால்
அணங்கு அனையாள் தனைப் பயந்த
தூயகுலப் புகழனார் தொன்று
தொடு நிலையாமை
மேய வினைப் பயத்தாலே இவ்
உலகை விட்டு அகலத்
தீய அரும் பிணி உழந்து விண்
உலகில் சென்று அடைந்தார். 27
நாளும் மிகும் பணி செய்து
குறைந்து அடையும் நன்னாளில்
கேளுறும் அன்புற ஒழுகும்
கேண்மையினார் பின் பிறந்தார்
கோளுறு தீவினை முந்தப் பர
சமயம் குறித்து அதற்கு
மூளும் மனக் கவலையினால் முற்ற
வரும் துயர் உழந்து. 45
தூண்டு தவ விளக்கு அனையார்
சுடர் ஒளியைத் தொழுது என்னை
ஆண்டு அருளும் நீராகில்
அடியேன் பின் வந்தவனை
ஈண்டு வினைப் பர சமயக்
குழி நின்றும் எடுத்து ஆள
வேண்டும் எனப் பல
முறையும் விண்ணப்பம் செய்தனரால். 46
தவம் என்று பாய் இடுக்கி
தலை பறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான்
வீழாமே அருளும் எனச்
சிவம் ஒன்று நெறி
நின்ற திலகவதியார் பரவப்
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார்
திரு உள்ளம் பற்றுவார். 47
அவர் நிலைமை கண்ட அதற்பின்
அமண் கையர் பலர் ஈண்டிக்
கவர் கின்ற விடம் போல் முன்
கண்டு அறியாக் கொடும் சூலை
இவர் தமக்கு வந்தது இனி
யாது செயல் என்று அழிந்தார்
தவம் என்று வினைப் பெருக்கிச்
சார்பு அல்லா நெறிசார்வார். 52
இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு
இறைஆகிய அன்பரும் இந்நெடுநாள்
சித்தம் திகழ் தீவினையேன் அடையும்
திருவோ இதுஎன்று தெருண்டு அறியா
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும்
கருணைத் திறமான அதன்
மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே
மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே. 75
ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட
வரும் அடி வணங்கி
வேண்டியவர்க் கொண்டு ஏக
விடை உகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான்
உளன் என்று இசைந்து இருந்தார்
மூண்ட சினப் போர் மன்னன்
முன் அணைந்து அங்கு அறிவித்தார். 94
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம்
சமயத்தினில் விடம் தீர்
தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா
வகை தடுத்தான்
எஞ்சும் வகை அவற்கு இலதேல்
எம் உயிரும் நின் முறையும்
துஞ்சுவது திடம் என்றார் சூழ்
வினையின் துறை நின்றார். 107
பாவக் கொடு வினை முற்றிய
படிறுற்று அடு கொடியோர்
நாவுக்கரசர் எதிர் முற்கொடு
நணுகிக் கருவரை போல்
ஏவிச் செறு பொருகைக்
கரியினை உய்த்திட வெருளார்
சேவிற்று திகழ்பவர் பொன் கழல்
தெளிவு உற்றனர் பெரியோர். 114
ஆங்கு அது கேட்ட அரசன்
அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம்
உறக் கொடு போகிப்
பாங்கு ஒரு கல்லில் அணைத்துப்
பாசம் பிணித்து ஓர் படகில்
வீங்கு ஒலி வேலையில் எற்றி
வீழ்த்துமின் என்று விடுத்தான். 123
அவ் வினை செய்திடப் போகும்
அவருடன் போயர் உகந்த
வெவ்வினை யாளரும் சென்று
மேவிட நாவுக்கரசர்
செவ்விய தம் திரு உள்ளம்
சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி
முடித்தார் அப்பாதகர். 124
அப்பரிசு அவ்வினை முற்றி அவர்
அகன்று ஏகிய பின்னர்
ஒப்பரும் ஆழ் கடல் புக்க
உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரிசு ஆயினும் ஆக
ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண் தமிழ் தன்னால்
சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார். 125
இருவினைப் பாச மும்
மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில் வீழ்
மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்செழுத்து
அரசை இக்கடல்
ஒரு கல் மேல் ஏற்று
இடல் உரைக்க வேண்டுமோ. 129
புல் அறிவில் சமணர்க்காப்
பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினைப்
பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி
ஆண்ட அரசினைப் பணிந்து
வல்லமணர் தமை நீத்து
மழவிடையோன் தாள் அடைந்தான். 145
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை
வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகை நெறி விடுவீர்
இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம்
பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில்
சூழ் சினை மிசை குயில் கூவும்
செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு
திரு நந்தன வனம் எதிர் கண்டார். 159
ஆய பொழுது திரு நாவுக்கரசு
புகலி ஆண் தகைக்குக்
காய மாசு பெருக்கி உழல்
கலதி அமணர் கடுவினை செய்
மாயை சாலம் மிக வல்லார் அவர்
மற்று என்னை முன் செய்த
தீய தொழிலும் பல கெட்டேன்
செல்ல இசையேன் யான் என்றார். 287
இம் மாயப் பவத் தொடக்காம்
நோக்கிஇருவினைகள் தமை
உம்மால் இங்கு என்ன குறை
உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன்
அலையேன் மின் என்று
பொய்ம் மாயப் பெருங் கடலுள்
எனும் திருத் தாண்டகம் புகன்றார். 423
12.034 - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்
அனைய செய்கையால் எதிர்
கொளும் பதிகள் ஆனவற்றின்
வினை தரும் பவம்
தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்
புனையும் வண் தமிழ் மொழிந்து
அடி பணிந்து போந்து அணைந்தார்
பனை நெடும் கை மா
உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர். 235
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து
அணைந்தார் எனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடம்
சூழ் புகலிப் பெருந்தகையாரும்
ஆக்கிய நல் வினைப் பேறு என்று
அன்பர் குழாத் தொடும் எய்தி
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்
கொள எய்தும் பொழுதில். 269
அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து
ஐயர் அமுது செய்த
வெவ்விடம் முன் தடுத்து எம்
இடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும் அடியார் இடர்
காப்பது கண்டம் என்றே
செய்வினை தீண்டா திரு நீல கண்டம்
எனச் செப்பினார். 335
அவ்வுரையும் மணி முத்தின்
பந்தரும் ஆகாயம் எழச்
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர்
சிரபுரத்துப் பிள்ளையார்
இவ் வினைதான் ஈசர் திரு அருளால்
ஆகில் இசைவது என
மெய் விரவு புளகம் உடன்
மேதினியின் மிசைத் தாழ்ந்தார். 393
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர்
நாட் கூறு திரு அமுது செய்யக் கண்டு
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம்
திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித்
தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர்
திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம்
விளைந்தவாறு என் கொலோ விளம்பும் என்றார். 567
இவ் வகை இவர்கள் அங்கண்
இருந்தனர் ஆக இப்பால்
செய் வகை இடையே தப்பும்
தென்னவன் பாண்டி நாட்டு
மெய் வகை நெறியில் நில்லா
வினை அமண் சமயம் மிக்குக்
கை வகை முறைமைத் தன்மை
கழிய முன் கலங்கும் காலை. 599
தென்னவன் தானும் முன்
செய் தீவினைப் பயத்தினாலே
அந் நெறிச் சார்வு தன்னை
அறம் என நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை
வைதிக வழக்கம் ஆகும்
நன் நெறி திரிந்து மாறி
நவை நெறி நடந்தது அன்றே. 600
திரு உசாத் தானத்துத்
தேவர் பிரான் கழல் பணிந்து
மருவிய செந்தமிழ்ப் பதிகமால்
போற்றும் படி பாடி
இரு வினையும் பற்று
அறுப்பார் எண்ணிறந்த தொண்டருடன்
பெருகு விருப்பினர் ஆகிப்
பிற பதியும் பணிந்தணைவார். 624
பாய் உடைப் பாதகத்தோர்
திரு மடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி
உள்ளழி திரு உள்ளத்தான்
மேய அத்துயரம் நீங்க
விருப்புறு விரைவினோடு
நாயகப் பிள்ளையார் தம்
நற்பதம் பணிவார் ஆகி. 724
தென்னவன் மாறன் தானும்
சிரபுரத்துத் தலைவர் தீண்டிப்
பொன் நவில் கொன்றையார்
தம் திருநீறு பூசப் பெற்று
முன்னை வல் வினையும் நீங்கி
முதல்வனை அறியும் தன்மை
துன்னினான் வினைகள் ஒத்துத்
துலை என நிற்றலாலே. 819
தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான்
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என
இம்மையே நினைவார் தம் இருவினைப்
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம். 830
அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும்
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத்
தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர். 833
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன்
கலந்து உளன் முத்தியில் என்றான் என்னக் காணும்
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம் தானும்
இல்லையேல் அவர் உணர்ச்சி இல்லை என்றார்
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து
மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு
வந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வரும்
அன்றோ நன்மை என மறுத்துச் சொன்னான். 918
அந்தணர் சூளா மணியார்
பூந்துருத்திக்கு அணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை
வாகீசர் கேட்டருளி
நம் தமையாளுடையவரை நாம்
எதிர் சென்று இறைஞ்சுவது
முந்தை வினைப்பயன் என்று முகம்
மலர அகம் மலர்வார். 931
திங்கள் தோறும் முன் செய்யும்
அத் திருவளர் சிறப்பின்
மங்கலம் புரி நல்வினை
மாட்சியில் பெருக
அங்கண் மாநகர் அமைத்திட
ஆண்டு எதிர் அணைந்து
தங்கு பேர் ஒளிச்
சீறடி தளிர் நடை பயில. 1045
விடம் தொலைத் திடும்
விஞ்சையில் பெரியராம் மேலோர்
அடர்ந்த தீ விடம்
அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர்
திடம் கொள் மந்திரம் தியானம்
பாவக நிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தனித்
தனித் தொழிலராய்ச் சூழ்வார். 1060
மருந்தும் எண்ணில மாறில
செய்யவும் வலிந்து
பொருந்து வல் விடம் ஏழு
வேகமும் முறை பொங்கிப்
பெரும் தடங்கண் மெல் கொடியனாள்
தலை மிசைப் பிறங்கித்
திருந்து செய் வினை
யாவையும் கடந்து தீர்ந்திலதால். 1061
சிந்தை வெம் துயர்
உறும் சிவநேசரும் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில்
வையகத்து உள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு
ஈகுவன் என்னுடைய
அந்தமில் நிதிக் குவை
எனப் பறை அறைவித்தார். 1063
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால்
மலர் அயன் அனைய
சீர்மறைத் தொழில் சடங்கு செய்
திருந்து நூல் முனிவர்
பார் வழிப்பட வரும்
இரு வினைகளின் பந்தச்
சார்பு ஒழிப்பவர் திருக்கையில்
காப்பு நாண் சாத்த. 1187
கண்ட மாந்தர்கள் கடி மணம்
காண வந்து அணைவார்
கொண்ட வல்வினையாப்பு
அவிழ் கொள்கைய ஆன
தொண்டர் சிந்தையும் வதனமும்
மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம் எழுந்து
ஆர்த்தன மகிழ்ந்தே. 1188
அணி முத்தின் சிவிகை முதல்
அணி தங்கிச் சென்றேர்கள்
மணி முத்த மாலை புனை
மடவார் மங்கலம் பெருகும்
பணி முற்றும் எடுத்தார்கள்
பரிசனங்கள் வினைப்பாசம்
துணிவித்த உணர்வினராய்த் தொழுது
உடன் புக்கு ஒடுங்கினார். 1251.
12.035 - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
செய் வதனை அறியாது திகைத்து
அருளி நெடிது உயிர்ப்பார்
மைவிரவு கண்ணார் பால் சூல்
உறவு மறுத்த அதனால்
இவ்வினை வந்து எய்தியது ஆம்
என நினைந்து எம்பெருமானை
எய்திய இத் துயர் நீங்கப்
பாடுவேன் என நினைந்து. 275
முன்னை வினையால் இவ் வினைக்கு
மூலம் ஆனாள்பால் அணைய
என்னை உடையாய் நினைந்த அருளாய்
இந்தயாமத்து எழுந்து அருளி
அன்னம் அனையாள் புல வியினை
அகற்றில் உய்யலாம் அன்றிப்
பின்னை இல்லைச்செயல் என்று பெருமான்
அடிகள் தமை நினைந்தார். 323
தம்பி ரான் அதனைக் கண்டு
தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால்நோக்கி நாம் இன்னம்
அவள் பால்போய் அக்
கொம் பினை இப்போதே நீ
குறுகுமா கூறு கின்றோம்
வெம்புறு துயர் நீங்கு என்றார்வினை
எல்லாம் விளைக்க வல்லார். 356
12.036 - திருமூல நாயனார் புராணம்
அந்தணர்தம் சாத்தனூர் ஆமேய்ப்பார்
குடித் தோன்றி
முந்தை முறை நிரை மேய்ப்பான்
மூலன் எனும் பெயருடையான்
வந்து தனி மேய்க்கின்றான்
வினைமாள வாழ்நாளை
வெந்தொழில் வன் கூற்று உண்ண
வீடி நிலத்திடை வீழ்ந்தான். 11
12.040 - சாக்கிய நாயனார் புராணம்
செய்வினையும் செய்வானும் அதன்
பயனும் கொடுப்பானும்
மெய் வகையால் நான்காகும் விதித்த
பொருள் எனக் கொண்டே
இவ்வியல்பு சைவநெறி அல்ல
வற்றுக்கு இல்லை என
உய்வகையால் பொருள் சிவன் என்று
அருளாலே உணர்ந்து அறிந்தார். 5
12.043 - கழறிற்றறிவார் (சேரமான் பெருமாள்) நாயனார் புராணம்
வாச மலர்க் கொன்றையார்
மகிழ்கோயில் வலம் கொண்டு
நேசமுற முன் இறைஞ்சி நெடும்
பொழுது எலாம் பரவி
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து
ஏத்தி எழுந்து அருளால்
பாச வினைத் தொடக்கு அறுப்பார்
பயில் கோயில் பணிந்து அணைவார். 122
12.051 - கலிய நாயனார் புராணம்
எண்ணில் திரு விளக்கு நெடு
நாள் எல்லாம் எரித்து வரப்
புண்ணிய மெய்த் தொண்டர்
செயல் புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும்
வினைச் செயல் ஓவி
மண்ணில் அவர் இருவினை
போல் மாண்டது மாட்சிமைத்தாக. 8
12.053 - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
வேறு - கொச்சகக் கலிப்பா (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி)
உளத்தில் ஒரு துளக்கம் இலோம்
உலகு உய்ய இருண்ட திருக்
களத்தர் முது குன்றர் தரு
கனகம் ஆற்றினில் இட்டு
வளத்தின் மலிந்தேழ் உலகும்
வணங்கு பெரும் திருவாரூர்க்
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய்
நின்று எனை எடுத்தார். 9
12.054 - கணம்புல்ல நாயனார் புராணம் -
முன்பு திருவிளக்கு எரிக்கும்
முறையாமம் குறையாமல்
மென் புல்லும் விளக்கு
எரிக்கப் போதாமை மெய்யான
அன்பு புரிவார் அடுத்த
விளக்குத் தம் திருமுடியை
என்புருக மடுத்து எரித்தார்
இருவினையின் தொடக்கு எரித்தார். 7
12.056 - நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்
கொச்சகக் கலிப்பா
தடுமாறும் நெறி அதனைத் தவம்
என்று தம் உடலை
அடுமாறு செய்து ஒழுகும்
அமண் வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ் விரகர் வினை
மாறும் கழல் அடைந்த
நெடுமாறனார் பெருமை உலகு
ஏழும் நிகழ்ந்ததால். 1
12.058 - முனையடுவார் நாயனார் புராணம்
செறிவுண்டு என்று திருத்தொண்டில்
சிந்தை செல்லும் பயனுக்கும்
குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று
இல்லோம் நிறை கருணையினால்
வெறியுண் சோலைத் திருமுருகன்
பூண்டி வேடர் வழிபறிக்க
பறியுண்டவர் எம்பழவினை வேர்
பறிப்பார் என்னும் பற்றாலே. 7
12.063 - கோட்புலி நாயனார் புராணம்
தந்தையார் தாயார் மற்றுடன்
பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார் பதி
அடியார் மதி அணியும்
எந்தையார் திருப்படி மற்று
உண்ண இசைந்தார் களையும்
சிந்த வாள் கொடு துணிந்தார்
தீய வினைப் பவம் துணிப்பார்.
12.064 - பத்தராய்ப் பணிவார் புராணம்
யாதானும் இவ்வுடம்பால்
செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின் பால்
ஆக எனும் பரிவால்
காதார் வெண் குழையவர்க்காம்
பணி செய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர் புகழ்க்குப்
புவனம் எல்லாம் போதாவால். 4
12.069 - முழுநீறு பூசிய முனிவர் புராணம்
ஆதாரமாய் அனைத்தும் ஆகிநின்ற அங்கணன்
எம்பெருமான் நீரணிந்த வேணிக்
காதார் வெண் திருக் குழையான் அருளிச்
செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம் தானாம்
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம்
நீக்கி ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம்
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது
நம் இரு வினைகள் கழிவதாக.
12.073 - நேச நாயனார் புராணம்
வேறு - அறுசீர் விருத்தம்
கற்றை வேணி முடியார் தம் கழல்
சேர்வதற்குக் கலந்த வினை
செற்ற நேசர் கழல் வணங்கிச்
சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக
அமைத்து மண் ஆண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட்
சோழர் பெருமை கூறுவாம். 5
12.078 - வெள்ளானைச் சருக்கம்
படியில் நீடும் பத்தி முதல்
அன்பு நீரில் பணைத்து ஓங்கி
வடிவு நம்பி ஆரூரர் செம்
பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய இருவினையின் களை
கட்டெழுந்து கதிர் பரப்பி
முடிவு இலாத சிவ போகம்
முதிர்ந்து முறுகி விளைந்ததால். 2
அன்ன தன்மையில் இருவரும் பணிந்தெழுந்து
அருள் தலை மேல் கொண்டு
மன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தரர்
ஆகித் தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழில் தலை
நின்றனர் முதல் சேரர் பெருமானும்
நன்மை சேர் கண நாதராய் அவர்
செயும் நயப்புறு தொழில் பூண்டார். 49
தலத்து வந்துமுன் உதயம் செய்
பரவையார் சங்கிலியார் என்னும்
நலத்தின் மிக்கவர் வல்வினைத்
தொடக்கற நாயகி அருளாலே
அலத்த மெல்லடிக் கமலினியாருடன்
அனிந்தை யாராகி
மலைத் தனிப் பெருமான் மகள் கோயிலில்
தம் தொழில் வழிநின்றார். 50