logo

|

Home >

information-to-know >

yaazh-thirumurai-musical-instruments

யாழ் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Yaazh - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

Yazh Yal Yaz music instrument

Instrument Reference
யாழ் கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்துதுங்கப்
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப் புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.3 

தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங் 
களையவி ழுங்குழ லார்கடியக் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித் 
துளைபயி லுங்குழல் யாழ்முரல துன்னிய இன்னிசை யால்துதைந்த 
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே. 1.5.6 

வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே. 1.11.11 

பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே 
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார் 
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண் 
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.6 

முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே 
நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே 
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச் 
சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. 1.63.7 

கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை
உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட
வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே. 1.67.10 

சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக் 
கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே 
பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார் 
ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே. 1.70.2 

முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய்
எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ளத்
தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே. 1.73.6 

துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே. 1.81.2 

வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.1 

துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.4 

காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே. 1.108.10 

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன்நகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே. 1.112.1 

கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல் 
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர் 
வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந் 
துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப் 
புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே. 1.136.6 

பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி 
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர் 
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச் 
சேராதார் இன்பமா யந்நெறி சேராரே. 2.12.3 

அறையார் கழலன் னமலன் னியலிற் 
பறையாழ் முழவும் மறைபா டநடங் 
குறையா அழகன் குடவா யில்தனில் 
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.7 

உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 2.25.1 

பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணிலா மதியம் பொழில்சேருந் திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ணலாய எம்மான் அடைந்தார்க் கருளாயே. 2.51.9 

செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார்க் கருளாயே. 2.53.5 

நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே. 2.53.10 

உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித் 
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள் 
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும் 
வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே. 2.61.1 

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம் 
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர் 
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய் 
குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே. 2.71.1 

மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய 
நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர் 
இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் 
துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே. 2.78.11 

பல்லிதழ் மாதவி அல்லிவண் 
டியாழ்செயுங் காழி யூரன் 
நல்லவே நல்லவே சொல்லிய 
ஞானசம் பந்தன் ஆரூர் 
எல்லியம் போதெரி யாடுமெம் 
மீசனை யேத்து பாடல் 
சொல்லவே வல்லவர் தீதிலார் 
ஓதநீர் வைய கத்தே. 2.79.11 

ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 2.81.5 

நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற்
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே. 2.91.3 

அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான்
மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட்
டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே. 2.91.5 

கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே. 2.100.2 

ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
அந்தரத் துயர்ந்தார்தாம்
யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை
இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ
வல்வினை அடையாவே. 2.102.6 

மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன் 
முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக் 
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள் 
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே. 3.8.4 

ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர்ப் புன்னையுந்
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழம துரித்தவெண் காடு மேவிய
யாழின திசையுடை இறைவ ரல்லரே. 3.15.4 

அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே. 3.24.8 

நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே. 3.42.1 

நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவுள் அல்லனே. 3.42.3 

ஊழிக ளாயுலகா யொருவர்க்கும் உணர்வரியான்
போழிள வெண்மதியும் புனலும்மணி புன்சடையான்
யாழின்மொ ழியுமையாள் வெருவவ்வெழில் வெண்மருப்பின்
வேழமு ரித்தபிரான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 3.61.6 

பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே. 3.67.10 

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர் 
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான் 
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப் 
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3.72.3 

வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன் நலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய அன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை யாழ்மருவு தேவூரதுவே. 3.74.9 

போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென உந்துதகு சண்பைநகரே. 3.75.3 

சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக் 
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து 
அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர் 
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே. 3.81.2 

கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செய்யப் 
பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடுங் 
காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி 
ஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே. 3.82.7 

பண்டலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே. 3.88.5 

யாழ்நரம் பின்னிசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை யிலரே. 3.95.2 

பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப் பிரட்டே திரிவாரும்
பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலும் இராமேச் சுரமேய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே. 3.101.10 

நாமம் எனைப்பல வும்முடையான் நலனோங்கு நாரையூர் 
தாமொம் மெனப்பறை யாழ்குழ றாளார் கழல்பயில 
ஈம விளக்கெரி சூழ்சுடலை யியம்பு மிடுகாட்டிற் 
சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே. 3.102.8 

ஊனுடை வெண்டலை கொண்டுழல்வான் ஒளிர்புன் சடைமேலோர்
வானிடை வெண்மதி வைத்துகந்தான் வரிவண்டி யாழ்முரலத்
தேனுடை மாமலர் அன்னம்வைகுந் திருநாரை யூர்மேய
ஆனிடை யைந்துகந் தானடியே பரவா அடைவோமே. 3.102.9 

வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்
துஞ்சிருள் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பருதிந் நியமமே. 3.104.4 

பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் 
தண்ண லாயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார். 3.112.4 

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. 3.117.1 

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. 3.117.2 

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ. 3.117.4 

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே. 3.117.8 

சூழு மரவத் துகிலுந் 

துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச 

அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும் 

விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலும் 

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 4.2.9 

நங்கையைப் பாகம் வைத்தார் 
ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் 
ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார் 
தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் 
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4.30.1 

சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் 

காவுந் துதைந்திலங்கு
பெற்றிகண் டால்மற்று யாவருங் 

கொள்வர் பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங் 

கைவிட் டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப 

தில்லிடம் வேதியனே. 4.86.8 

காளங் கடந்ததோர் கண்டத்த ராகிக் கண்ணார்கெடில 
நாளங் கடிக்கோர் நகரமு மாதிற்கு நன்கிசைந்த 
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனே 
வேடங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே. 4.104.7 

குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணும் உணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே. 5.12.6 

பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
மேல ளாவது கண்டனள் விண்ணுறச்
சோலை யார்தரு தோணி புரவர்க்குச்
சால நல்லளா கின்றனள் தையலே. 5.45.4 

வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை 
விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்
கந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக்
கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய் 
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே. 6.9.2 

அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும் 
அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த 
மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு 
வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே 
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக் 
கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம் 
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே 
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.2 

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.7 

குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்
ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன்
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.7 

தாழ்வெனுந் தன்மை விட்டுத்
தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது
வலக்கணில் ஒருவர்க் காவர்
யாழ்முயன் றிருக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 7.8.7 

யாழைப்பழித் தன்னமொழி 
மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை 
வைத்தான்இடம் பேணில் 
தாழைப்பொழி லூடேசென்று 
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங் 
குண்ணும்மறைக் காடே. 7.71.1 

கரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருட்
பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேற்
றெரியும்மறை வல்லான்றிருக் கேதீச்சரத் தானே. 7.80.4 

கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித் தொண்டனுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே. 7.80.10 

மண்ணெலாம்முழ வம்மதிர்தர 
மாடமாளிகை கோபுரத்தின்மேற்
பண்ணி யாழ்முரலும் 
பழனத் திருப்பனையூர்
வெண்ணிலாச் சடைமேவிய
விண்ணவரொடு மண்ணவர்தொழ
அண்ணலாகி நின்றார் 
அவரே அழகியரே. 7.87.8 

இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால் 
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் 
துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால் 
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் 
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் 
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே 
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் 
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 8.திருவா.371 

ஏழுடை யான்பொழில் எட்டுடை யான்புயம் என்னைமுன்ஆள்
ஊழுடை யான்புலி யூர்அன்ன பொன்இவ் உயிர்பொழில் ஆகச்
சூழுடை ஆயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணம் காண்அணங்(கு) ஆய்வந்(து) அகப்பட்டதே. 8.கோவை.7 

அடிச்சந்தம் மால்கண் டிலாதன காட்டிவந்(து) ஆண்டுகொண்டென்
முடிச்சந்த மாமலர் ஆக்குமுன் னோன்புலி யூர்புரையும்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி அனநடைக்குப்
படிச்சந்தம் ஆக்கும் படம்உள வோநும் பரிசகத்தே. 8.கோவை.78 

யாழும் எழுதி எழில்முத்(து) எழுதி இருளின்மென்பூச்
சூழும் எழுதியொர் தொண்டையும் தீட்டியென் தொல்பிறவி
ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம்
போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே. 8.கோவை.79
யாழார் மொழிமங்கை பங்கத்(து) இறைவன் எறிதிரைநீர்
ஏழாய் எழுமொழி லாய்இருந் தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழல்எழில் தொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா(து) எதிர்வந்து கோடும் சிலம்ப தரும்தழையே. 8,கோவை.93
யாழியல் மென்மொழி வன்மனப் பேதையொர் ஏதிலம்பின்
தோழியை நீத்(து)என்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே
வாழிஇம் மூதூர் மறுகச்சென் றாள்அன்று மால்வணங்க
ஆழிதந் தான்அம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே. 8.கோவை.230
கேழ்ஏ வரையும்இல் லோன்புலி யூர்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியாள் இரவரி னும்பகற் சேறியென்று
வாழேன் எனஇருக் கும்வரிக் கண்ணியை நீவருட்டித்
தாழேன் எனஇடைக் கண்சொல்லி ஏகு தனிவள்ளலே. 8.கோவை.269
வாழும் படியொன்றும் கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்(று)இருளா நின்ற கோகிலமே. 8.கோவை.322
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தான்அமைத்த
ஊழின் வலியதொன்(று) என்னை ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்ன
சூழும் தொகுநிதி யோ(டு)அன்பர் தேர்வந்து தோன்றியதே. 8.கோவை.351
விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை இறைஅமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலும்மன்னோ
அறலியல் கூழைநல் லாய் தமியோமை யறிந்திலரே. 8.கோவை.375 

மணிகடல் யானை வார்குழல் மேகம் 
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் 
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் 
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே 10.606 

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் 
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் 
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் 
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் 
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை 
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் 
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் 
இடமாந் தடாரி படகம் - இடவிய 
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் 
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே 
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் 
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300 

போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை 
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் 
சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு 
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் 12.1054 

குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி 
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை 
மழலை மென் கிளி மருதமர் சேக்கைய மருதம் 
நிழல் செய் கைதை சூழ் நெய்தலங் கழியன நெய்தல் 12.1087 

பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர் 
தாமருங் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து 
மா மருங்கு தண்ணீழலின் மருத யாழ் முரலும் 
காமர் தண் பணைப் புறத்தது கருங்கழி நெய்தல் 12.1110 

வாம் பெருந் திரைவளாக முன் குடி பயில் வரைப்பில் 
தாம் பரப்பிய கயல்களின் விழிக் கயல் தவிரக் 
காம்பி நேர் வருந் தோளியர் கழிக் கயல் விலை செய் 
தேம் பொதிந்த சின் மழலை மென் மொழிய செவ்வழி யாழ் 12.1115 

பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து 
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் 
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் 
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341 

வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் 
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று 
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் 
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே 12.1363 

பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக் 
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி 
மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் 
குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம் 12.1716 

ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று 
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர 
தாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர் 
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார் 12.1858 

திரு நீல கண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின் 
வருநீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார் 
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத் 
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் 12.2029 

கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக் கும்பிடுவித்து 
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என 
ஆய புகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி 
மேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் 12.2032 

யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி 
வாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத் 
தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்று 
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் 12.2034 

எண்ணரும் சீர் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப் 
பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின் 
கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து 
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப 12.2035 

காழியர் தவப்பயனாம் கவுணியர் தம் தோன்றலார் 
ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசை 
யாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார் 
ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர் 12.2037 

சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் 
நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும் 
அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் 
பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார் 12.2038 

மற்றதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள 
பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச் 
சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே 
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் 12.2039 

தாழ்வில் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும் 
மேவிய சீர் அடியார்கன் புடை வர வெம் குரு வேந்தர் 
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த் 
தேவர்கள் தம் பெரும் தேவர் திருத் தில்லை வழிச் செல்வார் 12.2042 

பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி 
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் 
நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் 
ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் 12.2066 

பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து 
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்லச் 
செங்கை யாழ்த் திரு நீலக் கண்டப் பெரும் பாணருடன் சேர 
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வரவந்தார் 12.2075 

பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணைத் திருவருளின் பரிசு போற்றி 
விரவு மலர்க் கண் பனிப்பப் கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச் 
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே 
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள் செய்து தம் திரு மாளிகையின் வந்தார் 12.2159 

இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும் 
மன்னும் இசை வடிவான மதங்க சூளா மணியாரும் 
பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப் 
பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார் 12.2176 

ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தேணி மேவும் 
நீண்ட சடையார் அடிக்கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே 
ஈண்டு புகழ்த் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும் 
காண் தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார் 12.2179 

தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார 
வரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர் கொண்டு அடி வணங்கி வாழ்த்தக் கண்டு 
பெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த 
அருமை உடைப் பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளிச் செய்தார் 12.2342 

அலகில் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் 
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் 
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் பண்பு நீடி 
இலகும் இசை யாழின்கண் அடங்காமையான் காட்டப் பெறுவன் என்றார் 12.2344

வண் புகலி வேதியனார் மாதர் மடப்பிடி எடுத்து வனப்பில் பாடிப் 
பண் பயிலும் திருக்கடைக் காப்பு சாத்த அணைந்து பெரும் பாணர் தாம் 
நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்தப்புக்கு 
எண் பெருகும் அப் பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே 12.2346 

அப்பொழுது திருநீல கண்ட இசைப் பெரும்பாணர் அதனை விட்டு 
மெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி 
இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்னச் 
செப்பியது இக் கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் 12.2347 

வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனைப் போக்க 
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் 
ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என வாங்கிக் கொண்டு அவனி செய்த 
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் 12.2348

ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அதென் ஆள் உடையாள் உடனே கூடச் 
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்பால் 
எய்திய இக் கருவியினில் அளவு படுமோ நம் தம் இயல்புக்கு ஏற்ப 
வையகத்தோர் அறிவு உற இக்கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் 12.2349 

சிந்தையால் அளவு படா இசைப் பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் 
இந்த யாழினைக் கொண்டே இறைவர் திருப் பதிக இசை இதனில் எய்த 
வந்தவாறே பாடி வாசிப்பீர் எனக் கொடுப்பப் புகலி மன்னர் 
தந்த யாழினைத் தொழுது கைக் கொண்டு பெரும் பாணர் தலை மேல் கொண்டார் 12.2350 

பங்கய பாசடைத் தடம் சூழ் பழன நட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி 
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனைப் பலவும் வணங்கிப் போற்றித் 
தங்கி இசை யாழ்ப் பெரும் பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் 
செங்கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திரு நள்ளாறு 12.2352 

யாழ்நரம்பில் ஆர இயல் இசை கூடப் பாடியே எண்ணில் கற்பச் 
சேணளவு பட ஓங்கும் திருக் கடைக் காப்பு சாத்திச் செங்கண் நாகப் 
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும் 
பாணனார் யாழில் இடப் பால் அறா வாயர் அருள் பணித்த போது 12.2355 

பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் பின்பு பெரும் பாணனார் தாம் 
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கிக் 
கொள்ள இடும் பொழுதின் கண் குவலத்தோர் களிகூரக் குலவு சண்பை 
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத் தொண்டர் உடன் மருவும் காலை 12.2356 

யாழ்நரம்பில் ஆர இயல் இசை கூடப் பாடியே எண்ணில் கற்பச் 
சேணளவு பட ஓங்கும் திருக் கடைக் காப்பு சாத்திச் செங்கண் நாகப் 
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும் 
பாணனார் யாழில் இடப் பால் அறா வாயர் அருள் பணித்த போது 12.2355 

நீடு திரு நீல நக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மைப் 
பாடும் யாழ்ப் பெரும் பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி 
ஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று 
நாடிய நண்புடை நீல நக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து 12.2361 

யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக் 
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும் 
சூழும் ஆகிய பர சமயத்து இடைத் தொண்டு 
வாழும் நீர் மையீர் உமைக் காண வந்தனம் என்றார் 12.2571 

கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர் பால் கோல 
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்க 
ஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும் 
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு பாலலாக 12.3098 

யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் 
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து 
வீழும் அவர்க்கு இடைதோன்றி மிகும் புலவி புணர்ச்சிக் கண் 
ஊழியாம் ஒரு கணம் தான் அவ் வூழி ஒரு கணம் ஆம் 12.3422 

யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம் 
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன 
ஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால் 
வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார் 12.3631 

கருநீல மிடற்றார் செய்ய கழலடி நீழல் சேர 
வருநீர்மை உடைய செங்கட் சோழர் தம் மலர்த்தாள் வாழ்த்தித் 
தருநீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் 
திருநீல கண்டப் பாணர் திறம் இனிச் செப்பல் உற்றேன் 12.4214 

எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன் தன் சீர் 
திருத்தகும் யாழில் இட்டுப் பரவுவார் செழுஞ்சோணாட்டில் 
விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல் 
பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார் 12.4215 

ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று 
பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக் 
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து 
ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் 12.4216 

மற்றவர் கருவிப் பாடல் மதுரை நீடு ஆலவாயில் 
கொற்றவன் திருவுள்ளத்துக் கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம் 
அற்றைநாள் கனவில் ஏவ அருள் பெரும் பாணனாரைத் 
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் 12.4217 

அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை பாகன் 
தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே 
மன் பெரும் பாணனாரும் மா மறை பாட வல்லார் 
முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரைப் பாடுகின்றார் 12.4218 

அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும் 
சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று 
சுந்தரப் பலகை முன்நீர் இடும் எனத் தொண்டர் இட்டார் 
செந்தமிழ் பாணனாரும் திரு அருள் பெற்றுச் சேர்ந்தார் 12.4220 

தமனியப் பலகை ஏறித் தந்திரிக் கருவி வாசித்து 
உமையொரு பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி 
இமையவர் போற்ற ஏகி எண்ணில் தானங்கள் கும்பிட்டு 
அமரர் நாடாளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் 12.4221 

கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும் 
தாயின் நல்ல பெருங் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும் 
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டுப் பாடக் கேட்டு அங்கண் 
வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார் 12.4222 

ஆழி சூழும் திருத் தோணி அமர்ந்த அம்மான் அருளாலே 
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் 
காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு 
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசைப்பாணர் 12.4224 

ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ்ப் பெரும் பாணர்க்கு 
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும் 
மேன்மை பதிகத்து இசை யாழில் இடப் பெற்று உடனே மேயபின் 
பானற் களத்தார் பெருமணித்தில் உடனே பரமர் தாள் அடைந்தார் 12.4225 
 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்