சிவமயம்
திரு.மா.வே. நெல்லையப்பப் பிள்ளை அவர்கள் தொகுத்தது
முழுமையான எண்கள் பாட்டின் வரிசை எண்களைக் குறிக்கும் . உதாரணமாக அண்டத்தவர்நாதன் 332 ஆவது பாட்டு.
புள்ளி வைத்துள்ள எண்கள் 3.45 என்று குறிப்பிடப்பட்டிருப்பவை மூன்றாவது பதிகத்தில் 45ஆவது அடியைக் குறிக்கும்.
இவ்வாறு புள்ளி வைத்த இரட்டை எண்கள் முதல் நான்கு பதிகங்களுக்கு மட்டுமே உண்டு.
அகநெக அள்ளூறு தேன் ஒப்பன் 102
அங்கணரசு 171
அங்கணன் 175,414,598
அங்கணாளன் 75
அங்கிதங்கிய கையான் 406
அச்சந் தவிர்த்த சேவகன் 3.98
அச்சன் 577
அஞ்ஞானந்தன்னை யகல்விக்கு நல்லறிவு 1.40
அடிகளார் 345
அடிநாயேனை விற்றெலா மிக ஆள்வதற்குரியவன் 38
அடியவர்க் கெளியவன் 39
அடியனேனுடைய அப்பன் 390
அடியார்க்கமுதன் 598
அடியார் உள்ளத்துள்ளான் 118
அடியார்க்கு எளியவன் 430
அடியார் சிந்தனையுள் சிறந்து தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் 1.48
அடியார் பிறப்பகலக் காணும் பெரியான் 633
அடியார் பெயராத பெருமையன் 129
அடியே னிடர்களைந்த அமுது 488
அடியேனை யாண்டு கொண்டு பத்திக்கடலுட் பதித்த பரஞ் சோதி 246
அடியொடுநடுவீறானவன் 4.212
அடியோங்கட் காரமுது 171
அடியோங் கண்ணாரவந்து நின்றான் 253
அடைந்தவர்க்கருளும் அப்பன் 4.161
அடையார் புரமெரித்த சிலையன் 400
அட்டமூர்த்தி 580
அணங்கின் மணவாளன் 373
அணிதில்லைவாணன் 203
அணு 4.112
அணுத்தருந் தன்மையிலையோன் 3.45
அணுவணுவி லிறந்தான் 29
அண்டத்தரும் பெறன்மேகன் 3.95
அண்டத்தவர் நாதன் 332
அண்டமுதலாயினான் 183
அண்டரண்டமாய் நின்ற ஆதி 543
அண்ணல் 369, 433, 653
அண்ணன் 14
அண்ணாமலையான் 172, 184
அண்ணாமலையெம் அண்ணா 4.149
அத்தனொப்பான் 120
அத்தன் 1.79,4.123, 4.174,7, 88, 157, 195, 204, 320, 335, 340, 398, 423, 431, 434, 436, 543, 584, 618, 622; 640
அத்திக்கருளிய அரசு 4.163
அத்தியுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் 293
அநேகன் 1.5, 3.39, 29
அந்தணன் 2.42, 175, 235, 357, 375
அந்தம் நடுவாகி அல்லான் 1.73
அந்தமிலமுது 455
அந்தமிலா ஆனந்தம் பண்டையப் பரிசே பழவடியார்க் கீந்தருளுமவன் 183
அந்தமிலாரியன் 2.22
அந்தமிலா ஆனந்தன் 177, 475
அந்தமில் பெருமை அருளுடையண்ணல் 2.101
அந்தமில்லான் 264, 348
அந்தமுமாதியு மகன்றோன் 3.51
அந்தரர்கோன் 197
அந்தாமரை மேனியப்பன் 133
அப்பன் 101, 102, 120, 419, 428, 523, 538, 575
அப்பாண்டி நாட்டைச் சிவ லோகமாக்குவித்த அப்பார் சடையப்பன் 185
அமரர்கோமான் 591
அமலன் 4.178
அமுதத்தெண்கடல் 390
அமுதப் பெருங்கடல் 30
அமுதளித்தூறும் ஆநந்தன் 353
அமுதன் 102,157
அமுதின் சுவை 441
அமுது 4.104, 14, 54, 59, 89, 94,117, 190, 356, 388, 514, 551
அமுதுண்ண க் கடையவன் 154
அம்பரன் 124
அம்பலக்கூத்தன் 384
அம்பலத்தாடினான் 205
அம்பலத்தே யாடுகின்ற புணையாளன் 275
அம்பலவன் 55, 231
அம்மான் 4.168, 193, 195,418 - 427, 442, 496
அம்மை 538
அயன்மாலுடைய வைப்பு 253
அயன்மாற்கறி யொண்ணாச் செய்யமேனியன் 398
அயன்றன் பெருமான் 197
அரக்கர் புரமெரித்தான் 451
அரசு 4.104, 4.119, 141, 382, 398, 439, 513
அரத்தமேனியான் 97
அரன் 1.85, 4.123, 139, 513, 514
அராப்பூண்பவன் 409
அரியயனிந்திரன் வானோர்க் கரிய சிவன் 241
அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும்படித்தன்றி நின்றசிவன் 237
அரியதிலரிய வரியோன் 3.47
அரிய பொருள் 649
அரியான் 4.178, 21, 22
அரியொடுபிரமற் களவறியாதவன் 2.115
அரியொடுபிரமற் களவறியொண்ணான் 2.35
அருக்கனிற் சோதி யமைத்தோன் 3.20
அருட்பெருங்கடல் 398
அருணனி சுரக்குமமுது 3.59
அருந்தவர்க் கருளுமாதி 3.97
அருந்தவன் 467
அருந்துணைவன் 572
அருபரத்தொருவன் 4.75
அருமந்ததேவரயன் திருமாற்கரியசிவன் 239
அருமருந்து 513, 514
அருமாமணிமுத்து 488
அருமையிலெளிய அழகு 4.126
அரும்பெரும் பொருள் 455
அரும்பொருள் 120
அருவமும் உருவமும் ஆனான் 4.193
அருவாம் ஒருவன் 396
அருவாயுருவமுமாய பிரான் 236
அருவாய் மறைபயில் அந்தணன் 228
அருளீசன் 638, 639
அருளுடைச்சுடர் 539
அருள் 4.199
அரையாடுநாகம் அசைத்த பிரான் 240
அலிப்பெற்றியன் 126
அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசைவாரியன் 176
அலைகடன் மீமிசை நடந்தவன் 4.208
அலைநீர்விட முண்டநித்தன் 400
அல்லற்பிறவி அறுப்பான் 1.91
அல்லிக் கமலத் தயனுமாலும் அல்லாதவரு மமரர்கோனுஞ் சொல்லிப்பரவு நாமத்தான் 441
அவனிவந்த எங்கள் பிரான் 598
அவிநாசியப்பன் 649
அவிர்சடை வானத்தடலரைசு 140
அழகன் 580
அழிதரும் ஆக்கை செய்தோன் 3.120
அழிதரும் ஆக்கையொழியச் செய்த வொண்பொருள் 3.118
அழிவது மாவதுங் கடந்தவன் 4.133
அழிவிலா ஆனந்தவாரி 4.132
அழுக்கடையாமலாண்டு கொண்டருள்பவன் 2.109
அளவிலா ஆநந்த மளித்தென்னை யாண்டான் 482
அளவிலாப் பெம்மான் 1.67
அளவிறந்த பல்லுயிர்க்குங்கோன் 190
அளிந்ததோர் கனி 539
அளிபவருள்ளத்தமுது 4.142
அளிவந்த அந்தணன் 192
அறிவன் 54
அறிவாந்தேற்றன் 1.81, 1.82
அறிவு 4.107
அறைகூவி வீடருளும் அங்கருணையன் 175
அற்புதன் 3.39
அனலேந்தி ஆடுவான் 191
அனல்காலொடப்பானவன் 124
அனைத்துலகும் ஈன்ற மறையோன் 621
அன்பருக்கன்பன் 1.71
அன்பர்க்கு அரசன் 390
அன்பர்க்கு மெய்யான் அல்லாதார்க் கல்லாத வேதியன் 187
அன்பன் 353
அன்பினில் விளைந்த ஆரமுது 538
அன்புடையடிமைக்கு உகந்தான் 380
அன்னை 430
அன்னையொப்பான் 120
ஆகமமாகிநின்றண்ணிப்பான் 1.4
ஆக்கமளவிறுதியில்லான் 1.41
ஆடகச் சீர்மணிக்குன்று 15
ஆடகமதுரையரசு 4.90
ஆடகமாமலை யன்னகோ 201
ஆட்கொண்டு பேரருளால் நோக்கு மருந்து 622
ஆட்கொள்ளும் வித்தகன் 169
ஆட்டான்கொண் டாண்டவாறு 180
ஆண் 88
ஆண்ட பிரான் 243, 282
ஆண்டான் 2.40, 28, 559 - 568, 647
ஆதி 4.107,168, 657
ஆதிகுணமொன்றுமில்லான் 348
ஆதிப்பிரமம் 589
ஆதிமுதற் பரமாய பரஞ்சுடர் 637
ஆதியன் 1.73
ஆதியும் அந்தமானவன் 101
ஆதியுமந்தமுமாயினான் 214
ஆதியுமந்தமுமில்லா அரும் பெருஞ்சோதி 155
ஆரமுது 4.93, 88, 375, 377, 419, 422, 438, 440, 455, 463, 547
ஆரழல்போற் செய்யான் 165
ஆராத இன்பம் அருளுமலை 1.16
ஆராவமுது 1.67, 4.199, 424 , 623
ஆரூரமர்ந்த அரசு 4.147
ஆரூரன் 358
ஆரூரெம்பிச்சைத் தேவன் 85
ஆலமுண்டான் 530
ஆழாமற்காப்பான் 24
ஆழியப்பன் 413
ஆழியான் நாதன் 197
ஆளானவர்கட் கன்பன் 4.198
ஆற்றின்ப வெள்ளம் 1.79
ஆனந்தக்கூத்தன் 322, 591
ஆனந்தத்தேன் சொரியுங்குனிப்புடையான் 217
ஆனந்த மாக்குமென்சோதி 395
ஆனந்த மூர்த்தியான் 579
ஆனந்தன் 102, 157, 340
ஆனா அறிவு 190
ஆனெய் 42
இகபரமாகி யிருந்தவன் 121
இடரைக்களையும் எந்தாய் 4.101
இடைமருதுறையுமெந்தாய் 4.145
இடைமருதே யிடங்கொண்ட அம்மான் 554
இணங்கிலி யெல்லாவுயிர்கட்கு முயிர் 391
இணங்கு கொங்கை மங்கை பங்கன் 79
இந்துசிகாமணி 641
இமவான் மகட்குத்தகப்பன் 207
இமவான் மகட்குத்தமையன் 207
இமவான் மகட்கு தன்னுடைக் கேள்வன் 207
இமவான் மகட்கு மகன் 207
இமைப்பொழுது மென்னஞ்சில் நீங்காதான் 1.2
இமையவர்க்கு அளவறுப்பதற்கரியவன் 39
இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச் சேவடியான் 393
இயக்கிமா ரறுபத்து நால்வரை யெண்குணஞ் செய்த ஈசன் 474
இரவு நின்றெரியாடி 432
இருங்கழல் சென்னியில் வைத்த சேவகன் 4.129, 4.130
இருசுடர்க் கடவுளான் 67
இருஞ்சீரான் 161
இருவர் காணாக் கடவுள் 333
இருள் 121
இருள்கெட அருளும் இறைவன் 4.169
இலங்குசுட ரெம்மீசன் 4.186
இவ்வுலகிற் பிள்ளை 293
இளமுலைபங்கன் 298
இறைவன் 1.5, 2.144, 4.102, 6, 392, 578
இன்பப் பெருமான் 1.39
இன்பமாகடல் 490
இன்பமும் துன்பமும் இல்லான் 1.70
இன்பமும்துன்பமும் உள்ளான் 1. 70
இன்பம் 545
இன்பேயருளி யெனை யுருக்கி உயிருண்கின்ற எம்மான் 601
இன்னதென் றறியாத்தேன் 42
இன்னமுதாய ஆநந்த வெள்ளத்தான் 580
இன்னமுது 161
இன்னிசை வீணையிலிசைந்தோன் 3.35
ஈங்கோய் மலையெம் மெந்தாய் 4.158
ஈசனார் 156
ஈசன் 1.11, 3.46, 4.102, 28, 54, 55, 81, 82, 153, 157, 213, 255, 271, 321, 383, 397, 542, 545, 590, 594
ஈண்டு வாராவழி யருள் புரிபவன் 2.117
ஈறறியா மறையோன் 642
ஈறிலாக் கொழுஞ்சுடர்க்குன்று 392
ஈறிலாதவன் 95
ஈறிலாப் பதங்களி யாவையுங் கடந்த இன்பம் 388
உடையநாதன் 101
உடையவன் 105, 604
உடையாருடையான் 60
உடையான் 1.83, 4.110, 5, 7, 15, 38, 39, 59, 60, 132, 148, 166, 387, 408 - 417, 485- 487, 490, 491 495 - 497, 505, 547, 551, 557, 605, 609, 644, 654
உணர்ந்த மாமுனிவ ரும்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும்பொருள் 391
உணர்வதுவாய வொருத்தன் 351
உணர்வு 4.110
உண்மையுமா யின்மையுமாய்ப் பூத்தான் 553
உத்தமன் 6, 7
உத்தரகோசமங்கைக்கரசு 105 -124, 152
உத்தரகோசமங்கை மன்னிக்கழி யாதிருந்தவன் 632
உத்தரகோச மங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் 335
உத்தரகோசமங்கை வள்ளல் 293
உமைபாகமதாயென் மெய்ந்நாள் தொறும் பிரியா வினைக்கேடன் 506
உமையாள்கணவன் 496
உம்பரார் தம்பராபரன் 101
உம்பரான் 62, 71, 587
உம்பருமறியா வொருவன் 449
உம்பர் 68
உம்பர்கட்கரசு 536
உம்பர்தம்பிரான் 65
உம்பர்நாட் டெம்பிரான் 70
உயிர் 4.181
உம்பர்தம்பிரால் 65
உம்பர்நாட் டெம்பிரான் 70
உயிர் 4.181
உயிர்நாதன் 601
உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்றமெய் 133
உரியனாயுனைப்பருக நின்றதோர் துப்பன் 102
உருகிநானுனைப் பருகவைத்தவன் 99
உருத்திரநாதன் 299
உருமூன்றுமாகி உணர்வரிதா மொருவன் 280
உரைமாண்ட வுள்ளொளியுத்தமன் 328
உரையுணர்விறந்த வொருவன் 4.124
உரையுணர்விறந்து நின்றுணர்வதோருணர்வு 390
உலகுக்குயிரானான் 376
உலகுடைய ஒருமுதல் 480
உலகூடறுத்தப்புறத்தனாய் நின்ற எம்பிரான் 587
உள்ளத்துணர்ச்சியிற் கொள்ளவும்படா அன் 3.112
உறவு 4.181
உறவு செய்தெனை யுய்யக் கொண்டபிரான் 585
உற்ற ஆக்கையினுறு பொருள் 436
உன்னையொப்பான் 120
ஊர்ச்சுடுகாட்டெரிப் பிச்சன் 153
ஊழிமுதல்வனாய் நின்ற ஒருவன் 162
ஊழிமுதற்சிந்தாத நன்மணி 327
ஊற்றிருந் துள்ளங்களிப்போன் 3.121
ஊனாடிநாடி வந்துள்புகுந்தான் 279
ஊனாருடைத்தலையி லுண்பலிதே ரம்பலவன் 216
ஊனெலா நின்றுருகப் புகுந்தாண்டான் 23
ஊன நாடகமாடுவித்தவன் 99
எங்களப்பன் 207
எங்களமரர் பெம்மான் 598
எங்கள் திருப்பெருந்துறைமேவினான் 583
எங்கள் நாயகன் 460
எங்கள் நின்மலன் 65
எங்கள் பெருமான் 173
எங்கள் விடலை 65
எங்குஞ் செறிந்தான் 187
எங்குநிறைந்தமுதூறு பரஞ்சுடர் 642
எங்கூத்தன் 196
எங்கோன் 2.40, 163, 167, 173, 196
எண்டோண் முக்கணெம்மான் 498, 502
எண்ணில் வானவர்க்கெல்லாம் நிலையன் 400
எந்தரமு மாட்கொண்டு தோட்கொண்ட நீற்றன் 177
எந்தாய் 8, 28, 29, 63, 64, 125, 133, 137, 276
எந்தை 1, 11, 28, 36, 40, 51, 55, 75, 80, 83, 276, 323, 397, 461, 594
எந்நாட்டவர்க்கும் இறைவன் 4.165
எமக்கும் ஏனோர்க்குந் தங்கோன் 160
எமக்கருளிய பேராளன் 176
எம்பிரான் 8, 11, 13, 14, 26, 40, 51, 69, 70, 71, 76, 77, 81, 82, 97, 98, 103, 105, 148, 202, 204 230, 256, 324, 467, 468, 517, 524, 578, 586
எம்பெருமான் 1.31, 1.50, 16, 27, 28, 29, 32, 33, 63, 169, 205, 207, 271, 273, 281, 358, 368, 370, 374, 376, 421, 425, 439, 449, 424, 550 - 553, 594, 602, 603, 624
எம்மான் 16,55, 58, 88, 487
எம்மிறை 2, 96, 432
எம்மீசன் 586, 595
எம்மையன் 1.85, 207
எய்தினர்க்காரமு தளிப்போன் 3.101
எய்ப்பில் வைப்பு 143
எரிசடை மிளிர்கின்ற அரவன் 432
எல்லார்க்குந் தானீசன் 256
எல்லாவுயிர்க்கு மீறாயீறின்மை யானான் 74
எவ்வுயிர்க்குந் தோற்றமாகி தோற்றமில்லான் 74
எவ்வுயிர்க்கு மியல்பானான் 255
எவ்வெவர் தன்மையுந்தன்வயிற் படுத்துத் தானே யாகிய தயாபரன் 2.95, 2.96
எழில்கொள் சோதி 586
எளிவந்த எந்தை 119
எனக்குள்ளவன் 127
எனைப்பிறப்பறுக்கு மெம்மருந்து 391
எனையாட்கொண்ட கூத்தன் 47
எனையாள்வான் 496
எனையுடையான் 368
என் சிந்தனையுள் ஊற்றான உண்ணாரமுது 1.82, 1. 83
என் நெஞ்சில் மன்னியானாகி நின்றான் 514
என் பிறப்பறுத்த இணையிலி 476
என்பிறவி நாசன் 55
என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்தரும் பெருமான் 410
என் மனத்தினுள்ளே வரும் பெருமான் 410
என் வாழ்முதல் ஆகிய பொருள் 368
என்வாழ் முதல் 127
என்றாதைதாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் 222
என்றொழுகுலம் 132
என்னப்ப னென்பார்கட் கின்ன முதை அன்னான் 193
என்னப்பன் 218, 256
என்னமுது 604
என்னரையன் 161
என்னாயகன் 644
என்னாருயிர் 231
என்னான் 161, 193
என்னுடை நாயகனாகிய ஈசன் 637
என்னுடையப்பன் 586
என்னுடை யன்பு 388
என்னுடை யாரமுது 207
என்னுயிர்த் தலைவன் 460
என்னை ஈர்த்தாட் கொண்ட எந்தை 1.74
என்னை முனாளுடை ஈசன் 640
என்னை யாண்டவன் 40
என்னையாண்டான் 626
என்னையாளுடை ஒருவன் 71
என்னையாளுடை நாயகன் 636
என்னையாளுடையான் 154
என்னையாளுடை யென்னப்பன் 119
என்னையாள்வான் 449
என்னையின்னிதா யாண்டு கொண்டவன் 99
என்னையுடைப் பெருமான் 638, 639
என்னையு மாளுடைப் பிச்சன் 153
ஏகம்பத்துறை யெந்தாய் 4.151
ஏகம்ப மேயபிரான் 288
ஏகம்பர் 296
ஏகன் 1.5, 29
ஏதிலர்க்கேதிலெம் மிறைவன் 3.104
ஏதில்பெரும்புக ழெங்களீசன் 596
ஏலவார்குழலிமாரிருவர் தங்கள் நாயகன் 460
ஏலநற் குழலிபங்கன் 98
ஏழுலகும் முழுதாளி 353
ஏழை பங்கன் 498
ஏழை பங்காளன் 162
ஏழ்பொழிற்கும் நாதன் 359
ஏறுடை ஈசன் 2.25
ஏறுடையான் 636
ஏற்றன் 521
ஏற்றுயர் கொடியுடையான் 368
ஏனத்தொல்லெயி றணிந்தோன் 3.31
ஏனை நாடருந்தெரியொணாதவன் 99
ஏனோர்க் கெளிய இறைவன் 4.117
ஐயர்பிரான் 206
ஐயன் 4.112, 4.174, 63, 76, 77, 165, 203, 206, 231, 398, 402, 425, 592, 615, 652, 656
ஐயாறமர்ந்தான் 187
ஐயாறன் 195
ஐயாற்றரசு 425
ஒண்பட அரவக்கச்சையன் 135
ஒண்பொருள் 46
ஒண்மையன் 126
ஒப்பாகவொப்புவித்தவுள்ளத்தாருள்ளிருக்கும் அப்பாலைக் கப்பால் 185
ஒப்பாடாச் சீருடையான் 363
ஒப்பிலப்பன் 72
ஒப்பில்லாதவன் 133
ஒப்பிலாமணி 538
ஒப்பில் ஒருத்தன் 65
ஒப்புனக்கில்லா ஒருவன் 540
ஒருங்கு திரையுலவு சடையுடையான் 546
ஒருத்தன் 459
ஒருநாம மோருருவம் ஒன்றுமில்லான் 235
ஒருவனென்னுமொருவன் 3.43
ஒருவன் 72, 161, 526
ஒலிதரு கைலையுயர் கிழவோன் 2.146
ஒழிவற நிறைந்த யோகம் 537
ஒழிவற நிறைந்த வொருவன் 4. 215
ஒளி 62
ஒளிவளர்சோதி 595
ஒற்றைச் சேவகன் 535
ஒன்றல்லன் 164
ஒன்றுமிலாதவன் 526
ஓங்காரத் துட்பொருள் 656
ஓசையாலுணர்வார்க் குணர்வரியவன் 576
ஓதமலி நஞ்சுண்டவுடையான் 548
ஓம் நமச்சிவாய 66
ஓயாதேயுள்குவா ருள்ளிருக்கு முள்ளான் 181
ஓராதா ருள்ளத் தொளிக்கும் ஒளியான் 1.68
கங்கையான் 406
கடம்பூர் மேவிய விடங்கன் 4.160
கடலமுது 376
கடலில் வலைவாணன் 630
கடல்வாயமுது 513
கடவுள் 68, 537
கடுந்தகையேனுண்ணுந் தெண்ணீரமுதப் பெருங்கடல் 116
கடுந்தழற்பிழம்பன்ன மேனிச் செய்யன் 464
கட்கிறந்ததோர் வாணிலாப் பொருள் 48
கண்சுமந்த நெற்றிக்கடவுள் 182
கண்டங் கரியான் 183
கண்ணகத்தே நின்று களிதருதேன் 376
கண்ணஞ்சனத்தன் 339
கண்ணாரமுதக்கடல் 4.150
கண்ணார் நுதலோன் 504
கண்ணார்விசும்பின் விண்ணார்க்கெல்லாம் மூப்பான் 447
கண்ணினகத்தான் 509
கண்ணுக்கு இனியான் 158
கண்ணுதலான் 1.21
கண்ணுதல் 503, 516
கண்முதற் புலனாற் காட்சியுமில்லோன் 3.113
கதி 4.108
கதிரை மறைத்தன்னசோதி 527
கயன்மாண்டகண்ணிதன்பங்கன் 245
கயிலாயமென்னும் மலைத் தலைவன் 144
கயிலைப் பரம்பரன் 138
கயிலைமாமலை மேவிய கடல் 407
கரணங்க ளெல்லாங் கடந்து நின்ற கறைமிடற்றன் 223
கரப்பவைகருதாக் கருத்துடைக் கடவுள் 3.15, 3.16
கரியான் 135
கருங் குருவிக்கன் றருளினன் 4.209
கருணாகரன் 132, 144
கருணாலயன் 438
கருணைக் கடலினன் 339
கருணைமாகடல் 537
கருணையாளன் 101
கருணையின் பெருமை 3.60
கருமுகிலாகிய கண் 4.127
கரும்பணக் கச்சைக் கடவுள் 3. 96
கரும்பினின்றேறல் 42
கரும்பின் தெளிவு 59, 94
கரும்பு 376
கலையாரரிகேசரியான் 4.190
கவைத்தலைமேவிய கண் 4.187
கழியாத்தொழும்பர் முன்னவன் 147
கழுநீர் மாலைக்கடவுள் 4.217
கழுமணி 131
கள்வன் 10
கள்ளும் வண்டும் அறா மலர்க் கொன்றையான் 50
கற்பமுமிறுதியுங் கண்டோன் 3.54
கற்றைச் சடைமுடியான் 208
கற்றைவார் சடையெம் மண்ணல் 516
கனகக்குன்று 4.98
கனவிலுந் தேவர்க் கரியவன் 4.143
கனவேயுந்தேவர்கள் காண்பரிய கனைகழலோன் 244
கனி 4.108
கன்னல் 62
கன்னாருரித்தகனி 4.97
கன்னெஞ் சுருக்கிக் கருணையினா லாண்டு கொண்ட அணி தில்லையம்பலவன் 225
காக்கும் எங்காவலன் 1.78
காட்டகத்து வேடன் 630
காணலாம்பரம் 48
காண்பரிய பேரொளி 1.78
காதலர்க் கெய்ப்பினில் வைப்பு 3.105
காதலவர்க் கன்பாண்டு மீளா அருள் புரிவான் 359
காதலன் 2.113
காத்தாட் கொள்ளுங் குருமணி 420, 646
காப்பவன் 12
காப்பவை கரப்போன் 3.14, 3.15
காரணன் 4.224
காரார் கடனஞ்சை யுண்டுகந்த காபாலி 284
காலம் 472
காலனாருயிர் கொண்ட பூங்கழலான் 406
காலினூக்கங் கண்டோன் 3.24
காவிசேருங் கயற்கண்ணாள் பங்கன் 489
கானப்புலியுரியரையோன் 3.32
கிழவோன் 3.19
கிளிவந்த மென் மொழியாள் கேழ்கிளரும் பாதியன் 192
கிளையிலான் 32
குணங்களுங் குறிகளுமிலாக் குணக்கடல் 574
குணங்கள் தாமில்லாஇன்பம் 391
குணமாம்பெருந்துறைக் கொண்டல் 472
குணமிலி 150
குணம் 4.114
குமரன்றன்றாதை 311
குருபரன் 4.76
குருமணி 1. 3
குவளைக் கண்ணிகூறன் 3.64
குவைப்பதி மலிந்தகோ 4.188
குழகன் 3.12, 505
குறி 4.114
குறியு நெறியுங்குணமு மிலார் குழாங்கள் தமைப் பிறியு மனத்தார் பிறிவரிய பெற்றியன் 562
குறியொன்று மில்லாத கூத்தன் 651
குறைவிலா நிறைவு 392
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் 558
குற்றாலத்தெங் கூத்தன் 4.156
குன்றாத செல்வன் 222
குன்றேயனையான் 502
கூடலிலங்கு குருமணி 4.91
கூத்தன் 420
கூரிருட் கூத்தொடு குனிப்போன் 3.102
கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நுணுக்கரிய நுண்ணுணர்வு 1.75, 1.76
கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கு 1.75, 1.76
கூற்றை வென்றாங் கைவர்கோக்களையும் வென்றிருந்தழகால் வீற்றிருந்தான் 535
கேடிலாதான் 646
கேடொன்றில்லான் 32
கேட்டாரு மறியாதான் 32
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளி 484
கேழில் பரங்கருணை 162
கேழில் பரஞ்சோதி 162
கேழில் விழுப்பொருள்கள் 162
கேளாதே யெல்லாங் கேட்டான் 32
கைதரவல்ல கடவுள் 4.89
கொங்குலவு கொன்றைச் சடையான் 337
கொடியே ரிடையாள் கூறன் 497
கொண்ட புரிநூலான் 183
கொம்பரார் மருங்குன் மங்கை கூறன் 71
கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறன் 568
கொழுமணி 131
கொன்றை மதியமும் கூவிள மத்தமும் துன்றிய சென்னியன் 347
கோ 294, 419, 420, 497, 498, 648
கோகழிக்கரசு 632
கோகழிநாதன் 353
கோகழி மேவியகோ 4.157
கோகழியெங் கோமான் 628
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறன் 556
கோதிலமுதானான் 479
கோதிலா அமுது 392
கோதில் பரங்கருணை 589
கோமளக் கொழுந்து 72
கோமளம் 124
கோமான் 607
கோலங்காட்டி யாண்டான் 645
கோலச்சடையன் 311
கோலமறையோன் 505
கோலமா வூர்தியான் 183
கோலமேனிவராகன் 472
கோலாலமாகிக் குரைகடல்வாயன்றெழுந்த ஆலாலமுண்டான் 262
கோற்றேன் 513
கோன் 1.9, 19, 227, 330, 494, 499, 505
சங்கங் கவர்ந்து வண்சாத்தினோ டுஞ் சதுரன் 598
சங்கரன் 65, 69, 324 ,397,400, 600
சச்சையன் 135
சடைமகுடத் தெங்கள் பரன் 511
சடைமுடியான் 510
சடையவன் 105
சடையான் 557
சடையிடைக் கங்கை தரித்தவன் 4.146
சடையுளே கங்கை வைத்த சங்கரன் 68
சதுரப் பெருமான் 410
சதுராலே சார்வான் 18
சந்தனச் சாந்தினன் 345
சந்தனச் சாந்தின் சுந்தரன் 4. 203
சிட்டன் 469, 580
சிட்டாய சிட்டன் 21
சித்தத் திருப்பவன் 340
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் 3.41
சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோன் 209
சித்தன் 588
சித்தனைக் கரிய சிவன் 4.204
சிந்தனைக்கும் மரியான் 372
சிந்தைக் கரியான் 89
சிந்தைமேய ஒருத்தன் 623
சிந்தை யெழுந்ததோர்தேன் 395
சிந்தையே கோயில்கொண்ட எம்பெருமான் 397
சிரங்குவிவாரோங்கு விக்குஞ் சீரோன் 1.10
சிராப்பள்ளி மேவிய சிவன் 4.154
சிவபிரான் 582
சிவபுரத்தரசு 389,448 - 453, 455 - 457
சிவபுரன் 1. 63
சிவபெருமான் 210, 388, 389, 536 - 544, 554, 592
சிவமாக்கி யெனையாண்ட அத்தன் 650
சிவலோகக்கோன் 42,614
சிவலோகன் 87, 156, 401, 469, 493, 497, 500, 588
சிவன் 1.12, 1.17, 1.94, 3.62, 4.182, 13, 16, 37, 42, 59, 90, 111, 145, 149, 157, 159, 161, 177, 191, 204, 320, 377, 420, 439, 475, 492, 559, 563, 610, 613.
சிவாயநம 555
சிறவு 4.182
சிறியேன் பவந் தீர்ப்பவன் 111
சிறியேன் பிழை பொறுக்குங்கோன் 89
சிறுமருங்குல்மையார் தடங்கண் மடந்தை மணவாளன் 165
சிற்றம்பலத் தெங்கள் செல்வன் 213
சிற்றம்பல மன்னும் ஒல்லைவிடையான் 179
சிற்றம்பலம் 168
சிற்றுயிர்க்கிரங்கிக் காய்சின ஆலமுண்டான் 154
சினமால்விடையுடையான் 508
சீயேதுமில்லா தென்செய்பணிகள் கொண்டருளுந்தாயான ஈசன் 226
சீரார்திருவையாறு 4.148
சீரார் பெருந்துறை நந்தேவன் 1.15
சீரார்பெருந்துறையான் 627
சீருருவாய சிவபெருமான் 599
சீர்ப்புயங்கன் 354
சுடர் 458, 491
சுடர்ச்சோதி 435
சுடர்பொற்குன்று 438
சுடர்மாமணி 136
சுடர்முடியன் 102
சுடுகாட்டரசு 142
சுண்ணப்பொன்னீற்றன் 218
சுரிகுழற்பணை முலைமடந்தை பாதி 458
சூழிருந்துன்பந் துடைப்போன் 3.100
சூழொளி விளக்கு 458
சூழ்த்து மதுகர முரலுந்தாரோன் 20
செங்கமலப் பொற்பாதந்தந்தருளுஞ் சேவகன் 171
செங்கமல மலர்போல ஆருருவாய வென்னாரமுது 599
செச்சை மலர்புரை மேனியன் 514
செச்சைமாமலர் புரையுமேனி எங்கள் சிவபெருமான் 33
செஞ்சாந் தணிசச்சையன் 341
செந்தழல் போல்வான் 455
செந்தழல் போற்றிருமேனித் தேவர்பிரான் 357
செந்தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடர் 30
செந்தார் பொழில்புடைசூழ் தென்னன் 189
செப்பார் முலைபங்கன் 185
செப்புதற்கரிய செழுஞ்சுடர் மூர்த்தி 540
செம்பவள வெற்பின் தேசுடையான் 154
செம்பிரான் 71
செம்பெருமான் 358, 449
செம்பொருட்டுணிவு 536
செம்மலர்ப்பாதங்கள் காட்டுஞ் செல்வச் சேவக மேந்திய வெல் கொடியான் 210
செம்மேனியான் 183, 338
செய்யமேனியன் 135
செய்யவன் 111
செய்யான் 187
செல்வன் 165,356, 536, 538, 540, 541, 542, 544
செழுஞ்சுடர்மூர்த்தி 542
செழுமதி யணிந்தான் 457
செழுமலர்ச்சிவபுரத்தரசு 4.216
செறியுங் கருத்திலுருத் தமுதாஞ்சிவபதம் 562
செறிவுடை மும்மதிலெய்த வில்லி 199
சேயநெடுங்கொடைத் தென்னவன் 532
சேயான் 181
சேரலன் 354
சேர்ந்தறியாக்கையான் 187
சேவகன் 181, 352
சேவார் வெல்கொடிச் சிவன் 4.95
சைவன் 4.113
சொல்லற்கரியான் 1.92
சொல்லாத நுண்ணுணர்வு 1.80
சொல்லுதற்கரிய ஆதியேநடுவே அந்தமே 396
சொல்லும் பொருளு மிறந்த சுடர் 441
சொற்கழிந்தவன் 147
சொற்பதங் கடந்த அப்பன் 521
சொற்பதங்கடந்த தொல்லோன் 3.40, 3.111
சோதி 168, 393, 458, 491,531, 545, 597, 627, 641
சோதியன் 1.72
சோதியாய்த் தோன்றுமுருவம் 396
சோதியுமா யிருளாயினான் 214
சோழன் 354
ஞாலமும் விசும்பும் வந்து போங்காலம் 47
ஞாலமே விண்ணே பிறவேயறி வரியான் 159
ஞாலம் விளங்கவிருந்த நாயகன் 350
ஞானக்கரும்பின்றெளி 209
ஞானநாடக மாடுவித்தவன் 99
தகவேயுடையான் 606
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டான் 184
தந்தை தாயிலான் 51
தந்தையிலி 257
தமியேன் புகலிடம் 121
தமியேன்றனி நீக்குந் தனித்துணை 142
தம்பிரான் 51, 517
தம்பெருமை தானறியாத் தன்மையன் 273
தயங்குமூவிலைச்சூலப் படையான் 557
தலைவன் 4.113, 63
தழலாடீ 557
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவன் 151
தனித்துணை 143
தனியன் 257
தனையொப் பாரையில்லாத் தனி 444
தன்றொழும்பிற் கொண்டருளும் வானவன் 188
தன்னடிகள் பாடுவித்த நாயகன் 226
தன்னேரில்லோன் 3.146
தாட்செய்ய தாமரைச்சைவன் 567
தாணு 603
தாதாடு கொன்றைச்சடையான் 334
தாதை 446
தாபதவேடத்தன் 346
தாயாய் முலையைத் தருவான் 647
தாயான தத்துவன் 181
தாயிலாகிய இன்னருள் புரிந்த வென் தலைவன் 43
தாயிற் சிறந்த தயாவான தத்துவன் 1.61
தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் 277
தாயுமிலி 257
தாயுற்று வந்தென்னை யாண்டு கொண்ட தன் கருணைத் தேயுற்ற செல்வன் 224
தாவிவரும் பரிப்பாகன் 355
தாழ்சடையோன் 229, 355
தாளடைந்தார் நெஞ்சுதப்பாமே உருக்குந் தன்மையினான் 185
தாளி அறுகின் தாரான் 4. 201
தாளியறுகினன் 345
தானேயான தன்மையன் 3.146
தானே யுலகேழும் ஆயானை யாள்வான் 181
தான்கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையன் 252
திணிந்த தோரிருளிற் றெளிந்த தூவெளி 391
திதலைச் செய்பூண் முலைமங்கை பங்கன் 144
தித்திக்குஞ் சிவபதம் 477
தித்திக்கும் மான் 94
திரிபுரம்வேவச்செற்றவில்லி 594
திரு 249
திருக்கழுக்குன்றிற் செல்வன் 4.191
திருத்துருத்தி மேயான் 477
திருத்தென் பெருந்துறையான் 623
திருநீற்றையுத்தூளித்தொளி மிளிரும் வெண்மையன் 126
திருப்புயங்கன் 612, 614
திருப்பெருந்துறை மன்னன் 372, 374
திருப்பெருந்துறைமேவிய சிவன் 398 - 407
திருப்பெருந்துறையில் செழு மலர்க்குருந்தமேவிய சீரங்கணன் 460
திருப்பெருந்துறையில் செழு மலர்க்குருந்தமேவிய சீரடிகள் 462
திருப்பெருந்துறையில் செழு மலர்க்குருந்தமேவிய சீரத்தன் 465
திருப்பெருந்துறையில் செழு மலர்க்குருந்தமேவிய சீரப்பன் 463
திருப்பெருந்துறையில் செழு மலர்க்குருந்தமேவிய சீரமலன் 461
திருப்பெருந்துறையில் செழு மலர்க்குருந்தமேவிய சீரருத்தன் 459
திருப்பெருந்துறையில் செழு மலர்க்குருந்தமேவிய சீரருளன் 446
திருப்பெருந்துறையில் செழு மலர்க்குருந்தமேவிய சீரையன் 464
திருப்பெருந்துறையில் நிறை தானே யுலகேழும் ஆயானை யாள்வான் 181
திருப்பெருந் துறையிறை 510, 512
திருப்பெருந்துறையுறை சிவ பெருமான் 368 - 371, 373
திருப்பெருந்துறையுறை சிவன் 388, 390 - 397, 448 - 457
திருப்பெருந்துறையுறையுஞ் சிவபெருமான் 552
திருப்பெருந்துறையுறையும் பனவன் 508
திருப்பெருந்துறை யுறைவான் 377, 507, 514, 515
திருவாரூருடையான் 556
திருவாரூருறைவான் 107
திருவார்பெருந்துறைச் செல்வன் 2.54
திருவார்பெருந்துறை மேய பிரான் 236
திருவார் பெருந்துறையான் 617
திருவானதேவன் 228
திருவுயர்கோலச் சிவப்புரத்தரசு 454
திருவேகம்பன் 199
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற்பதப் புயங்கன் 141
தில்லைத் திருச்சிற்றம்பலவன் 71
தில்லை நடமாடீ 648
தில்லைநிருத்தன் 65
தில்லைமூதூர் நடஞ்செய்வான் 582
தில்லை யம்பலத்தே திருநடஞ் செய் கூத்தன் 315
தில்லையம்பலவன் 250
தில்லையுட்கூத்தன் 1.90
தில்லைவாழ்கூத்தன் 451
திறவிலே கண்ட காட்சி 541
தீங்கரும்பின் கட்டி 190
தீட்டார்மதில் புடைசூழ் தென்னன் 180
தீதிலா நன்மைத் திருவருட் குன்று 396
தீமேனியான் 234
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தவன் 4.139
தீயின் வெம்மை செய்தோன் 3.22
தீர்த்தன் 166, 315
தீர்ந்தவன்பாய அன்பர்க்கவரினும் அன்பன் 73
துஞ்சல் பிறப்பறுப்பான் 332
துடிகொள் நேரிடையாள் சுரிகுழன்மடந்தை துணை முலைக் கண்கள் தோய் சுவடு பொடி கொள்வான்
தழலிற் புள்ளி போலிரண்டு பொங்கொளி தங்கு மார்பினன் 462
துணிநிலா அணியினான் 520
துணையாளன் 102
துணைவன் 4.120
துண்டப்பிறையான் 183
துப்பன் 463
துரியமு மிறந்தசுடர் 4.195
துன்பமுமாயின்பமாயினான் 214
தூண்டா விளக்கின் சுடரனையான் 488
தூயவெண்ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத் தொப்பன் 463
தூயான் 463
தூவெள்ளை நீறணி யெம்பெருமான் 597
தெய்வம் 4.74, 6, 549, 550
தெரியவரிய பரஞ்சோதி 649
தெரிவரிதாகிய தெளிவு 4.196
தெருளிடத்தடியார் சிந்தையுட்புகுந்த செல்வன் 539
தெளிகின்ற பொன்னுமின்னும் மன்ன தோற்றச் செழுஞ்சுடர் 108
தெளிந்தார்தம் ஊனை யுருக்கு முடையான் 62
தெளிவந்ததேறல் 192
தெளிவு 62
தென்பராய்த் துறையான் 401
தென்பாண்டிநாடன் 349
தென்பாண்டி நாட்டான் 1.90, 193
தென்பா லுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன் 263
தென்பெருந்துறைக்கோன் 596
தென்பெருந்துறைச்சேவகன் 580
தென்பெருந்துறை நாயகன் 579
தென்பெருந்துறையான் 389
தென்றில்லைக்கோன் 59
தென்றில்லை மன்றினுளாடி 4.92
தென்னனன்னாட்டிறைவன் 529
தென்னன் 161, 175, 176, 179, 181, 185, 249, 597, 620, 649
தென்னாடுடையசிவன் 4.164
தென்னானைக்காவான் 193
தேசப்பளிங்கின்றிரள் 4.103
தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சித் திருவேகம்பன் 198
தேசன் 1.12, 1.63, 55, 82, 156, 383
தேசுடை விளக்கு 542
தேய்மதியன் 150
தேரார்ந்தவீதிப் பெருந்துறையான் 292
தேவதேவன் 2.122, 579
தேவருமறியாச் சிவன் 3.56
தேவர்கோ அறியாத தேவ தேவன் 34
தேவர்க்கரியான் 420
தேவர்தந்தேவன் 456
தேவர்தொழும் பதம் வைத்த ஈசன் 597
தேவர் பிரான் 358, 402
தேவன் 370, 420
தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான் 294
தேவு 648
தேறலின் தெளிவு 388
தேற்றத்தெளிவு 1.82
தேனாடுகொன்றை சடைக் கணிந்த சிவபெருமான் 279
தேனாயின்னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் 555
தேனாரமுது 1.63
தேனார் சடைமுடியான் 507
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் 190
தேனேயுமலர்க் கொன்றை 16
தேனையும் பாலையும் கன்னலையு மொத்தினிய கோனவன் 188
தேனையும் பாலையுங் கன்னலையும் அமுதத்தையு மொத்தூனையு மென்பினையும் முருக்காநின்ற வொண்மையன் 125
தேன் 59, 62, 89, 94, 190, 441
தையலிடங்கொண்ட பிரான் 652
தையலோர்பங்கினன் 346
தொடர்வரியான் 142
தொண்டருளன் 164
தொழுதகை துன்பந்துடைப்பவன் 4.131
தொழும்பர்க்கமுது 142
தொழும்பாள ரெய்ப்பினில் வைப்பன் 102
தொழுவார்மையல் துணிப்பவன் 4.218
தொன்மையாண்மையன் 126
தோலுடைப்பிச்சன் 153
தோழன் 4.120
தோளாமுத்தச்சுடர் 4.197
தோளாமுத்து 438
தோளுலாநீற்றன் 521
தோன்றாப் பெருமையன் 1.72
நங்கள்நாதன் 581
நங்கள் பெருமான் 171
நச்சரவாட்டியநம்பன் 3.106
நஞ்சமர்கண்டத்தன் 332
நஞ்சமுதா அருந்தினன் 122
நஞ்சமுதாக்குங் கறைகண்டன் 136
நஞ்சமேயமுதமாக்கு நம்பிரான் 524
நஞ்சிந்தை சேரையன் 361
நஞ்சுதனை ஊணாகவுண்டருளு முத்தரகோச மங்கைக் கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் 333
நஞ்சூண்பிச்சன் 153
நஞ்சேயமுதாய் நயந்தவன் 4.173
நடம்பயிலும் வானாடர்கோ 279
நணியான் 1.44
நதிசேர் செஞ்சடைநம்பன் 4.109
நந்தம்மை யாட்கொண்ட நாயகன் 181
நந்தம்மை யாளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் 170
நந்தாத்தேன் 209
நமையாளுடையான் 359
நம்பணி கொண்டவன் 581
நம்பன் 271
நம்பி 386, 494, 647
நம்பெருமான் 169
நம்வினையை வீட்டி அருளும் பெருந்துறையான் 630
நயனங்கள் மூன்றுடைய நாயகன் 258
நல்ல மருந்து 634
நல்வேலன் தாதை 197
நள்ளுங்கீழுளு மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போனின்ற எந்தை 50
நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடுங் கூத்தன் 166
நன் பொன்மணிச் சுவடொத்த நற்பரிபேல் வருவான் 353
நாடற்கரிய நலன் 209
நாட்டிற் பரிபாகன் 630
நாட்டுத் தேவரு நாடரும் பொருள் 402
நாதப் பறையினன் 338
நாதன் 1.1, 1.89, 27, 67, 100, 212, 402, 638
நாயகன் 460, 581, 646
நாயேன்றனை யாண்ட பேதை 446
நாற்றத்தின் நேரியான் 1.44
நான்மறையோன் 2.21
நான்முகன் மாலுக்கு நாதரிந் நாதனார் 338
நிச்சலுமீர்த்தாட்கொள்வோன் 3.99
நித்தமணாளன் 340
நித்தன் 4.175
நிமலன் 4.175, 459
நிரந்தரமாய் நின்ற ஆதி 429
நிரம்பவழகியன் 340
நிருத்தன் 459
நிலன் 124
நிறங்கள் ஓர் ஐந்துடையான் 1.49
நிறைகழலோன் 287
நிறையின்னமுது 441
நிற்பதுஞ் செல்வது மானோன் 3.53
நினைக்க மனத்தமுதாஞ் சங்கரன் 221
நினைப்பரிய தனிப் பெரியோன் 247
நினைவு 4.115
நின்பழவடியார்திரள்வான் குழு மிக்கெழு முதல் 381
நின்புகழிகழ்வார் வெருள் 121
நின்மலன் 82, 395
நின்றிருவருளாலென் பிறவியை வேர் அறுப்பவன் 409
நின்னை ஐம்புலன்கள் புணர்கிலாப் புணர்க்கையான் 74
நீணிலா அணியினான் 525
நீண்டகரத்தன் 342
நீண்டமாலு மயனும் வெருவ நீண்ட நெருப்பு 440
நீராயுருக்கி யென்னாருயிராய் நின்றான் 1.69
நீரிடை நான்காய் நிகழ்ந்தவன் 4.138
நீரி லின்சுவை நிகழ்ந்தோன் 3.25
நீளொளியாகிய நிருத்தன் 4.202
நீறுபட்டே யொளி காட்டும் பொன்மேனிநெடுந்தகை 115
நீற்றன் 459
நீற்றார் தருதிருமேனி நின்மலன் 513
நீற்றொடு தோற்ற வல்லோன் 3.108
நீற்றோன் 3.33
நூலுணர் வுணரா நுண்ணியோன் 3.49
நெஞ்சில் வஞ்சங்கெட நேச அருள்புரிந்து பேராது நின்ற பெருங்கருணைப் பேராறு 1.65, 1.66
நெடுந்தகை 116
நெல்லிக்கனி 441
நெறி 4.115
நெறிதரு குஞ்சியன் 342
நெற்றிக்கண்ணன் 459
நேயத்தே நின்ற நிமலன் 1.13
பங்கயத் தயனுமா லறியாநீதி 458
பசுபதி 557
பசுபாச மறுத்தான் 478
பச்சைத் தாளர வாட்டீ 549
பச்சையன் 135
பஞ்சின் மெல்லடியாள் பங்கன் 453
பஞ்சேரடியாள் பங்கன் 4.184
பஞ்சேரடியாள் பாகத்தொருவன் 427
படர்சடையான் 549
படிதானில்லாப் பரம்பரன் 426
படியுறப்பயின்ற பாவகன் 4.211
படைத்தவை காப்போற் காக்குங்கடவுள் 3.13, 3.14
படைப்போற் படைக்கும் பழையோன் 3.13
பணிவார் பிணிதீர்த் தருளுபவன் 93
பணைமுலைபாகன் 302
பண்ணார்ந்த மொழிமங்கை பங்கன் 547
பண்ணினேர் மொழியாள் பங்கன் 452
பண்பட்டதில்லைப்பதிக்கரசு 278
பதஞ்சலிக் கருளிய பரம நாடகன் 2.138
பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வன் 543
பத்தன் 4.176
பத்திசெய்யடி யரைப்பரம்பரத் துய்ப்பவன் 2.119
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதிகொடுத்தருள் செய்யுஞ் சித்தன் 465
பத்திவலையிற் படுவோன் 3.42
பந்தனை விண்டற நல்குமெங்கள் பரமன் 593
பந்தணை விரலாள் பங்கன் 455
பந்தமறுத்தென்னையாண்டு கொண்ட பாண்டிப் பிரான் 276
பந்தமுமாய் வீடுமாயினான் 214
பந்தமும் வீடும் படைப்போன் 3.52
பந்தம் அறுக்கு மானந்தமா கடல் 396
பந்தம் பறியப் பரிமேற் கொண்டான் 177
பந்தனை யறுப்பான் 36
பரகதி பாண்டியற் கருளினன் 4.214
பரங்கருணைத் தடங்கடல் 554
பரஞ்சுடர் 508
பரஞ்சோதி 88, 156, 388, 424, 557
பரமன் 3.37
பரமானந்தப் பழங்கடல் 3.66, 489
பரம்பரஞ் சோதிப்பரன் 4.222
பரம்பரன் 9, 139, 327, 548, 618
பரம்பாண்டியனார் 534
பரன் 326, 375, 447, 458
பராவமுது 636, 637
பராபரன் 201, 582, 641
பராய்த்துறை மேவிய பரன் 4.153
பரிதிவாழொளியான் 454
பரிமிசைவந்தவள்ளல் 354
பரிமேற்கொண்ட பாண்டியனார் 528
பரியின்மேல் வந்தவள்ளல் 629
பருகற் கினியபரங் கருணைத் தடங்கடல் 249
பருவரை மங்கை தன்பங்கன் 526
பலவமர ருன்னற்கரியான் 161
பவமாயங் காத்தென்னையாண்டு கொண்டபரஞ்சோதி 238
பவளம் 434
பவன் 4.176, 13
பழச்சுவையாயினான் 209
பழமலம் பற்றறுத்தாண்டவன் 533
பழுதில் தொல்புகழாள் பங்கன் 457
பழை தருமாபரன் 150
பழைய அடியார்க்குன் அணியார் பாதங் கொடுத்தி 93
பழையோன் 3.37
பள்ளிக்குப்பாயத்தர் 344
பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் 436
பன்னிப்பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் 335
பாகம் பெண்ணுருவானான் 4.152
பாகு 209
பாங்கார் பழனத்தழகன் 4.159
பாசமாம்பற்றறுத்துப் பாரிக்கு மாரியன் 1.64
பாசவேரறுக்கும் பழம்பொருள் 542
பாடகமெல்லடியார்க்கு மங்கை பங்கினன் 201
பாண்டிநன்னாடன் 342
பாண்டிநன்னாடுடையான் 635
பாண்டிநாட்டான் 184
பாண்டிப்பிரான் 530
பாண்டியற்காரமுதாம் ஒருவன் 526
பாண்டியன் 531
பாண்டி வெள்ளம் 649
பாதமலர் உச்சத்தார் பெருமான் 549
பாதமலர் என்னாகந்துன்ன வைத்த பெரியோன் 283
பாதாளத்தார்வித்து 253
பாதாளமேழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர் போதார்புனைமுடியு மெல்லாப் பொருண்முடிவே பேதையொருபாற்றிருமேனி 164
பாதிமாதொடுங்கூடிய பரம்பரன் 429
பாதியுமாய் முற்றுமாயினான் 214
பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் ஆராலுங்காண்டற்கரியான் 176
பாரிடை ஐந்தாய்ப்பரந்தவன் 4.137
பாரொடு விண்ணாய்ப்பரந்த எம்பரன் 448
பாரோர் விண்ணோர் பரவியேத் தும்பரன் 424
பார்பதம் அண்டமனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப்பரப்பு 395
பார்ப்பான் 447, 582
பாலுமமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க் கோலங்குளிர்ந்துள்ளங்கொண்ட பிரான் 285
பால் 62,441
பால்கொள்வெண்ணீற்றான் 458
பாவநாசன் 103, 456
பாற்கடலான் 358
பாற்றிருநீற் றெம்பரமன் 604
பிச்சதேற்றும் பெருந்துறையான் 649
பிச்செமையேற்றிய பெரியோன் 3.107
பிச்சேற்றி வாராவழியருளிவந்தென்னுளம் புகுந்த ஆராவமுது 176
பிஞ்ஞகன் 1.7, 193, 541
பிணிகெடநல்கும் பெருந்துறை யெம்பேரருளாளன் 591
பித்தன் 469, 543
பிரமன் மாலறியாப் பெற்றியோன் 3.182
பிரமன்மால்காணாப்பெரியோன் 3.38
பிரான் 4.177, 119, 163, 230, 284
பிறப்பறுத்த அத்தன் 250
பிறப்பறுத் தாண்டுகொண்ட கூத்தன் 209
பிறருக்கரிய நினையநெருப்பு 444
பிறர்க்கறிதற்கரிதாம் பெண்மையன் 126
பிறர்க்கு என்றும் சேயான் 126
பிறவிப்பிணிக்கோர் மருந்து 446
பிறவிப்பிணிப்பட்டு மடங்கினர்க்கே மருந்தினன் 122
பிறவியென்னுமிக்கடலை நீந்தத் தன் பேரருள் தந்தருளினான் 585
பிறைகுலாஞ் சடைப்பிஞ்ஞகன் 404
பிறைசேர் சடையான் 496
பின்னுமானவன் 147
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியன் 163
புகழ்ச்சியைக் கடந்த போகம் 539
புங்கமான போகம் 75
புத்தன்புரந்தராதி யயன்மால் போற்றிசெயும் பித்தன் 250
புயங்கப் பெருமான் 4. 223, 605, 606
புயங்கனாள்வான் 607, 609
புயங்கன் 66, 610, 613
புரஞ்செற்ற கொற்றச்சேவகன் 210
புரம்பல எரித்த புராணன் 4. 221
புராணன் 4. 221, 505
புவனநீர் தீக்காலொடு வானமானான் 74
புவன் 13
புறத்தார்க்குச் சேயோன் 1.8
புனிதன் 466
பூங்கமலத் தயனொடுமாலறியாத நெறியான் 556
பூவலர் கொன்றையம் மாலை மார்பன் 596
பூவார் சென்னி மன்னன் 605
பூவியல்வார் சடை யெம்பிரான் 196
பெண் 88
பெண்சுமந்த பாகத்தன் 182
பெண்ணாகி யாணா யலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகியித்தனையும் வேறாகிக்
கண்ணாரமுதமுமாய் நின்றான் 172
பெண்ணாணலி யெனும் பெற்றியன் 3.57
பெண்பாலுகந்தான் 263
பெம்மான் 182, 379, 509, 516
பெரியவெம் பொருள் 541
பெரியான் 4.177, 22
பெரியோன் 3.6
பெருந்திற லருந்தவர்க்கரசு 539
பெருந்துறைக்கோன் 358, 362, 364, 365, 367
பெருந்துறைமேயசேவகன் 581
பெருந்துறை மேய தென்னவன் 354
பெருந்துறைமேய பிரான் 250, 349
பெருந்துறையாதி 592, 593, 594
பெருந்துறையாளி 597, 598
பெருந்துறையான் 175 - 177, 179, 180, 182, 183, 185, 189, 194, 203, 284, 361, 366, 557, 618, 622
பெருந்துறையி லென்றும் பிரியான் 633
பெருந்துறையின் மன்னான் 193
பெருந்துறையின் மேயபிரான் 619
பெருந்துறையின்மேய பெருங்கருணையாளன் 620, 626
பெருந்துறையின் மேயான் 181
பெருந்துறையுள்மேய பெருமான் 621
பெருந்துறையெம் புண்ணியன் 589, 595
பெருமான் 1.74, 28, 55, 139, 348, 425, 468, 493, 600, 611, 612
பெரும்பித்தன் 263
பெரும்பெருமான் 410
பெற்றி பிறர்க்கரிய பெம்மான் 194
பேசும் பொருளுக் கிலக்கிதம் 634
பேச்சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை 634
பேதங்களனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையன் 484
பேத மில்லதொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளம் 473
பேயேனதுள்ளப் பிழைபொறுக்கும் பெருமையன் 226
பேரமைத்தோளி காதலன் 3.103
பேரரையன் 169
பேராயிரமுடைப் பெம்மான் 4.200
பேராளன் 620
பொங்கு கங்கைசடைச் செறுப்பவன் 409
பொங்குவாள ரவங் கங்கைநீர் தங்கு செஞ்சடையான் 466
பொடிசேர் மேனிப் புயங்கன் 608
பொய்யர் தம்பொய்யன் 206
பொய்யாயின வெல்லாம் போயகல மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடர் 1.38
பொய்யிருள் கடிந்த மெய்ச் சுடர் 390
பொருதலை மூவிலை வேல்வலனேந்திப் பொலிபவன் 113
பொருப்பமர் பூவணத்தரன் 4.192
பொருளன் 466
பொருளான் 553
பொருளுடைக்கலை 539
பொருள் 121
பொல்லாமணி 418, 438 - 447, 518
பொற்பாலொப்பாந்திருமேனிப் புயங்க னாள்வான் 611
பொன் 385
பொன்னம்பலக் கூத்தன் 385
பொன்னம்பலக் கூத்துகந்தான் 379
பொன்னம்பலத் தரசு 381
பொன்னம்பலத்தாடுந் தலைவன் 386
பொன்னம்பலத் தாடுமமுது 382
பொன்னம்பலத் தாடுமெந்தாய் 383
பொன்னம்பலத் தெம்முடியா முதல் 378
பொன்னம்பலத் தெம்முழு முதல் 380
பொன்னையழித்த நன்மேனிப் புகழிற்றிகழு மழகன் 354
போரிற் பொலியும்வேற் கண்ணாள் பங்கன் 613
போருகிர் வன்புலிகொன்ற வீரன் 596
போரேறு 56, 57
போற்றி போற்றியென்போர் விடைப்பாகன் 403
மகேந்திரநாதன் 597
மங்கையோர் பங்கன் 69
மஞ்சன் 4.183, 362
மடலின் மட்டு 117
மட்டுவார் குழன் மங்கையாளையோர் பாகம் வைத்த அழகன் 580
மணாளன் 4.183
மணி 117
மணிகண்டத் தெம்மமுது 404
மணியனையான் 602
மண்ணாளு மன்னவர்க்கு மாண்பாகி நின்றான் 184
மண்ணிற்றிண்மை வைத்தோன் 3.26
மண்ணோர் மருந்து 253
மதிநெடு நீரிற்குளித் தொளிக் குஞ்சடை மன்னவன் 146
மதிபொதியுஞ் சடை வானக் கொழுமணி 130
மதியிற்றண்மை வைத்தோன் 3.21
மதுரையர் மன்னன் 527
மதுவெள்ளம் 117
மந்திரமாமலை மேயான் 4.205
மரகதம் 484
மரணம் பிறப்பென்றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடல் 223
மருந்து 405
மருவிய கருணைமலை 4.194
மருவியெப்பொருளும் வளர்ப்போன் 3.48
மலரோ னெடுமா லறியாமனின்ற அரும்பெருமான் 410
மலர்க்கமலபாதன் 97
மலர்க்குருந்த மேவிய சீராதி 458
மலைக்கு மருகன் 200
மலைநாடுடைய மன்னன் 4.189
மலைமாதொரு பாகன் 407
மலையாள் மணவாளன் 144
மழவிடையான் 457
மழவெள்ளை விடையான் 557
மழைதருகண்டன் 150
மறிகடல் விடமுண்ட வானவன் 404
மறுமாற்றத்திடையான் 509
மறுவில்வானன் 98
மறைபயின்ற வாசகன் 589
மறையான் 183
மறையிலீறுமுன் தொடரொணாதவன் 99
மறையீறறியா மறையோன் 89
மறையோர் கோலநெறி 4.179
மறையோனு மாலுமால்கொள்ளும் இறையோன் 621
மனத்தான் 509
மனத்திடை மன்னிய மன்னன் 392
மனத்துணை 143
மனவாசகங் கடந்தான் 508
மன் 499
மன்னவன் 147
மன்னன் 102, 103, 354, 399
மன்னிய திருவருண்மலை 4.128
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடர் 1.62
மாசற்ற மணிக்குன்று 28
மாசிலாமணி 545
மாணிக்கக்கூத்தன் 206
மாணிக்கம் 434
மாதாடுபாகத்தன் 334
மாதாடும் பாகத்தன் 360
மாதாளும் பாகத்தெந்தை 34
மாதியலும் பாதியன் 193
மாதிருக்கும் பாதியன் 181
மாதிவர்பாகன் 589
மாதிற்கூறுடை மாப்பெருங்கருணையன் 2.107
மாதுநல்லாளுமை மங்கைபங்கன் 596
மாதேவன் 155
மாதொரு கூறுடைய பிரான் 657
மாமணி 434, 449
மாமலர் மேயசோதி 589
மாயப்பிறப்பறுக்கும் மன்னன் 1.14
மாயப்பிறப்பறுத்தாண்டான் 277
மாயவன் 532
மாயன் 404
மாலறியா நான்முகனுங் காணா மலை 159
மாலுக்கரியான் 336
மாலு நான்முகத் தொருவன் யாரினும் முன்னன் 103
மாலேபிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழைவரியான் 248
மால்விடை யூர்தி 69
மாவடுவகிரன்ன கண்ணிபங்கன் 415
மாவுரியான் 456
மாறிலாதமாக்கருணைவெள்ளம் 95
மாற்றமனங்கழிய நின்றமறையோன் 1.45
மானக்கயிலைமலையான் 4.167
மானனநோக்கிதன் கூறன் 42
மானிடன் 150
மானேர்நோக்கி உடையாள் பங்கன் 89
மானேர்நோக்கி உமையாள் பங்கன் 59
மானேர்நோக்கிமணவாளன் 499
மானேர்நோக்கி மணவாளன் 4.135
மானோர்பங்கன் 494
மான்பழித்தாண்டமென்னோக்கி மணாளன் 351
மிக்காய்நின்ற தோற்றச்சுடரொளி 1.79, 1.80
மின்னவன் 147
மின்னாருரு விகிர்தன் 4. 96
மீன்வலை வீசியகானவன் 635
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் 522
முக்கணதுடை யெந்தை 430
முக்கணப்பன் 199, 588
முக்கணன் 465
முடிவிலாமுதல் 389
முடிவில்லா ஓத்தான் 553
முதலந்தமாயினான் 26
முதலாயமுதல்வன் 658
முதல்வன் 4.122, 4.180, 465, 602
முதல்வித்து 588
முதற்சோதி 588
முத்தனையான் 602
முத்தன் 4.122, 423, 465, 588
முத்திமுழுமுதல் 293
முத்து 434
முந்திய முதல்நடு இறுதியுமானான் 375
முந்துநடுவு முடிவுமாகிய மூவரறியாச் சிந்துரச் சேவடியான் 352
முழங்கழலாய் நிமிர்ந்தான் 456
முழுச்சோதி 434
முழுதோன் 3.29
முழுமுதல் 381
முழுவதுமிறந்தமுதல்வன் 4.134
முனிவர்முழுமுதல் 601
முனிவன் 465, 601
முனைவன் 26, 31, 41
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப்பரந்த முத்தன் 389
முன்னான் 193
முன்னீறுமாதியு மில்லான் 331
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்பழம்பொருள் 163
முன்னோன் 3.29
மூதாதை 34
மூத்தான் 553
மூர்த்தி 34
மூவராலுமறியொணாமுதல் 579
முப்பத்து மூவரு மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான் ன்625
மூவர்கோனாய்நின்ற முதல்வன் 34
மூவர்க்கு முற்றுமாய் முற்றுக்கும் பின்னான் 193
மூவாத முதலான் 553
மூவா நான்மறை முதல்வன் 4.94
மூவா முதலாய்நின்ற முதல்வன் 447
மூவுலகுக்கொரு தலைவன் 113
மூவேழுலகுக்குந் தாய் 446
மூன்றங்கிலங்கு நயனத்தன் 330
மெய்ச்சிவலோக நாயகன் 580
மெய்ச்சேவகன் 579
மெய்தரு வேதியன் 4.88
மெய்த்தேவன் 219
மெய்ப் பொருட்கட் டோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்குந் தானேயா யாவைக்கும் வீடாகும் அப்பொருளா நஞ்சிவன் 186
மெய்ப்பொருள் 537
மெய்ம்மையார்விழுங்கும் அருள் 121
மெய்ம்மையும் பொய்ம்மையுமாயினான் 214
மெய்யடியவர்கட் கண்மையன் 126
மெய்யடியார்க்கருட்டுறையளிக்குஞ்சோதி 604
மெய்யர் மெய்யன் 104, 206
மெய்யவன் 111
மெய்யன் 464, 569
மெய்யிலங்கு வெண்ணிற்று மேனியான் 96
மேதகு தென்னன் 203
மேதாமணி 446
மேலைவானவரு மறியாததோர் கோலம் 47
மேலொடு கீழாய் விரிந்தோன் 3.50
மைகலந்த கண்ணி பங்கன் 77
மையமர் கண்டன் 206
மையிலங்கு நற்கண்ணி பங்கன் 96
யாதுமீறிலாச் சித்தன் 543
யார்க்கு மரும்பொருள் 52
யாவராயினு மன்பரன்றி யறியொணா மலர்ச் சோதியான் 579
யாவருஞ்சிந்தையாலு மறிவருஞ் செல்வன் 51
யாவரு மறிவதற் கரியவன் 430
யாவரும்பெற வுறுமீசன் 3.55
யாவர்கோன் 34
யாவர்க்குந் தந்தைதாய் 51
யாவர்க்குமேலா மளவிலாச் சீருடையான் 624
யாவையுமாய் அல்லையுமாம் துன்னிருள் 1.72, 1.73
யாவையு மிறுதியுற்ற நாள் பின்னன் 103
யானெனதென்றவரவரைக்கூத்தாட்டுவான் 19
யோகத்தின் பொலிவு 539
வந்திப்பார் மதுரக்கனி 494
வயிரம் 434
வருந்துயரந் தீர்க்குமருந்து 620
வலிநின்ற திண்சிலையால் புரமெரித்தான் 114
வல்லாளன் 179, 478
வழிமுதல் 381
வளியிடையிரண்டாய் மகிழ்ந்தவன் 4.140
வளைக்கை யானொடு மலரவனறியா வானவன் 407
வள்ளல் 67, 233, 351
வாருறு பூண்முலையாள் பங்கன் 107
வார்ந்த நஞ்சயின்று வானோர்க் கமுதமீ வள்ளல் 73
வாழ்முதல் 143, 144
வாழ்வற வாழ்வித்தமருந்து 536
வாழ்வு 4.121
வானகத்தமரர்தாய் 4.136
வானத்தவரவரேறு 71
வானநாடரு மறியொணாதவன் 99
வானநாடர் மருந்து 206
வானந்தொழுந் தென்னன் 322
வானவன் 193
வானவன் மாலயன்மற்றுமுள்ள தேவர்கட்கும்கோன் 286
வானவிருத்தன் 65
வானிற் கலப்பு வைத்தோன் 3.23
வானுந்திசை களுமா கடலுமாய பிரான் 229
வானுந்துதேவர்கட்கோர் வான்பொருள் 264
வானுளோர்க் கொருவன் 45
வானே நிலனே பிறவே யறிவரியான் 160
வானோ ரறியா மலர்ச் சேவடியான் 423
வானோர் குருவன் 72
வானோர்க்கரிய மருந்து 4.116
வானோர் பிரான் 216
வான்வந்த தேவன் 353
விகிர்தன் 464
விச்சையன் 135
விடமுண்மிடற்றுமையவன் 111
விடைப்பாகன் 1.34, 400, 506
விடையவன் 105
விடையான் 25
விடை விடாதுகந்த விண்ணவர்கோ 537
விண்சுமந்தகீர்த்தி வியன்மண்டலத் தீசன் 182
விண்ணர் நண்ணுகில்லா உம்பருள்ளான் 124
விண்ணவரு மறியாத விழுப்பொருள் 641
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியன் 184
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லையிலாதான் 1.24
விண்ணுக்கொரு மருந்து 158
விண்ணு மண்ணு மெல்லாங் கலங்கமுந்நீர்நஞ்சமுது செய்தான் 132
விண்ணுளோர் பிரான் 459
விண்ணோர் பெருமான் 13, 25, 412
விண்ணோர் முழுமுதல் 253
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன் 3.114
வித்தகத்தோன் 220
வித்தகனார் 481
விமலன் 1.34, 1.37, 1.56, 4.106, 461
வியன்மாத் தடக்கைப் பொள்ளனல் வேழத்துரியான் 128
விரிகடலுலகின் விளைவு 4.125
விரிசுடராய் நின்ற மெய்யன் 355
விரிந்தே யெரியுஞ் சுடரனையான் 142
விரிபொழின் முழுதாய் விரிந்தோன் 3.44
விரும்படியார் எண்ணகத்தான் 376
விரைசேர் சரண விகிர்தன் 4.105
விரைசேர்முடியான் 141
விழுத்தொண்டர்க் கல்லால் தொடற்கரியான் 136
விழுப்பொருள் 376
வினைப்பிறவி சாராமே கள்ளப்புலக் குரம்பைக் கட்டழிக்க வல்லான் 1.87, 1.88
வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி 3.18
வீரன் 152
வெங்கரியின் உரிப்பிச்சன் 153
வெண்டிருமுண்டத்தன் 344
வெண்ணீறணிந்தான் 187
வெண்ணீறன் 71
வெண்ணீறாடி 165, 556
வெண்ணீற்றன் 338
வெண்ணீற்றான் 183
வெண்மதியி னொற்றைக் கலைத்தலையான் 144
வெண்மலரான் 358
வெய்யகூற்றொடுங்க உறுங்கடிப் போதவையே யுணர்வுற்றவரும்பரும்பர் பெறும்பதம் 129
வெய்யவன் 301
வெருள்புரிமானன்ன நோக்கி தன்பங்கன் 412
வெளி 121
வெளிய நீறாடு மேனி வேதியன் 519
வெளியான் 135
வெளியிடை ஒன்றாய் விளைந்தவன் 4.141
வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகன் 192
வெள்ளத்தழுத்தி வினைகடிந்த வேதியன் 179
வெள்ளந் தாழ்விரி சடையான் 25
வெள்ளப்பிரான் 230
வெள்ளைக் கலிங்கத்தன் 344
வெறிகமழ்சடையான் 523
வெறுப்பனவே செய்யுமென் சிறுமையை நின்பெருமையினாற் பொறுப்பவன் 409
வேகங்கெடுத்தாண்ட வேந்தன் 1.6
வேண்ட முழுதுந் தருவோன் 501
வேண்டுமயன் மாற்கரியோன் 501
வேதங்கள் ஐயாவென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன் 1.35
வேதப்பொருள் 168
வேதமுதல் விண்ணோருமண்ணுந் துதித்தாலும் ஓதவுலவா ஒருதோழன் 164
வேதமும் வேள்வியுமாயினான் 214
வேதமெய்ந்நூல் சொன்னவன் 147
வேதமொழியன் 338
வேதவிழுப்பொருள் 158
வேதி 4.106
வேதியன் 181
வேந்தன் 570
வேயதோளுமைபங்கன் 583
வைப்பு 4.121