logo

|

Home >

information-to-know >

thiruvasaga-uvamai-agaradhi

திருவாசக உவமை அகராதி

சிவமயம்

(திரு. மா.வே. நெல்லையப்பப் பிள்ளை அவர்கள் தொகுத்தது)

முழுமையான எண்கள் பாட்டின் வரிசை  எண்களைக் குறிக்கும். உதாரணமாக அண்டத்தவர்நாதன் 332-ஆவது பாட்டு 
புள்ளி வைத்துள்ள எண்கள் 3.45 எனக் குறிப்பிடப்பட்டிருப்பவை மூன்றாவது பதிகத்தில் 45-ஆவது அடியைக் குறிக்கும்.
இவ்வாறு புள்ளி வைத்த இரட்டை எண்கள் முதல் நான்கு பதிகங்களுக்கு மட்டுமே உண்டு.

அடற்கரிபோ லைம்புலன்களுக்கஞ்சி யழிந்தனன் 136 

அடித்தடித்து வக்காரமுன் தீற்றிய அற்புதம் 571

அடியேனுடை யாக்கை புளியம் பழ மொத்திருந்தேன் 422

அதுபழச்சுவையென அமுதென அறிதற்கரிதென எளிதென அமரரு மறியார் 374 

அருளாரமுதப் பெருங்கடல்வாயடியா ரெல்லாம் புக்கழுந்த இருளாராக்கை யிதுபொறுத்தே யெய்த்தேன் 487

அலைகடற்றி ரையினார்த்தார்த் தோங்கித் தலைதடுமாறா வீழ்ந்து புரண்டலறி 3.151, 3.152

அழலுறு மெழுகாம் என்பராய் நினைவார் 401 

அழல்சேர் மெழுகொப்ப ஐயா வென்றன் வாயாலரற்றி 425

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டளவிலா ஆனந்த மருளி 541 

அறிவொண்கதிர்வாளுறை கழித்தானந்த மாக்கடவி எறியும் பிறப்பை யெதிர்ந்தார் 529

அன்பா மனமா யழல்சேர்ந்த மெழுகே யன்னார் 92

அன்பெனுமாறு கரையது புரள 4.81

அன்று ஒருத்தரும்வழாமை அடியோம் அடிக்குடில் அருட்பெருந் தீயின் ஒடுக்கினன் 3.160,  3.161 

அன்னத்தின்மே லேறியாடுமணி மயில்போல் என்னத்தனென்னையு மாட்கொண்டான் 335

ஆரழல்போற் செய்யான் 165

ஆராவமுதினருட்டாளிணைபாடி 329

ஆள்வாரிலி மாடாவேன் 384

ஆனைவெம்போரிற் குறுந்தூறெனப் புலனா லலைப்புண்டேன் 125

இங்கொர் பார்ப்பெனப் பாணனேன்படிற் றாக்கையை  விட்டுனைப் பூணுமாறறியேன் 48

இடர்க்கடற் சுழித்தலைப் படுவேன் 434

இந்திரஞால இடர்ப் பிறவித்துயர் 637

இருகை யானையை ஒத்திருந்தென்னுளக் கருவையான் கண்டிலேன் 45

இருதலைக் கொள்ளியினுள்ளெறும் பொத்துநினைப்பிரிந்த விரிதலையேன் 113 

இருமுச் சமயத்தொரு பேய்த் தேரினை நீர்நசை தரவருநெடுங்கண் மான் கணந்தவப்பெருவாயிடைப் 
பருகித் தளர்வொடும் அவப் பெருந்தாப நீங்கா தசைந்தன 3.79 - 3.82 

இரும்பு தருமனத்தேனை ஈர்த்தீர்த்தெ னென்புருக்கிக் கரும்பு தருசுவையெனக்குக் காட்டினை 546

இருவினை மாமரம் வேர்பறித்தெழுந்துருவ அருள்நீர் ஒட்டாவருவரைச் சந்தின் வான்சிறைகட்டி
 மட்டவிழ் வெறிமலர்க்குளவாய் கோலி நிறையகின் மாப்புகைக் கரைசேர்வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேன் மகிழ்தலினோக்கி அருச்சனை வயலுள் அன்பு வித்திட்டுத்
தொண்டவுழவராரத் தந்த அண்டத்தரும் பெறன் மேகன் 3.87 - 3.95 

இருள்கடிந் துள்ளத்தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை 394 

இருள்திணிந் தெழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடிலிது 437 

இரைதேர் கொக்கொத் திரவு பகலேசற்றிருந்தே வேசற்றேன் 382

இன்னுழை கதிரின்றுன்ன ணுப்புரைய 3.5

உணக்கிலாததோர் வித்துமேல் விளையாமலென் வினையொத்தபின் 468

உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத் தீயினொப்பாய் விழைதருவேன் 150 

உள்ளங்கொண்டோ ருருச்செய் தாங்கெனக் கள்ளூறாக்கையமைத்தனன் 3.176, 3.177 

உள்ளனவேநிற்க இல்லனசெய்யுமையற்றுழனி வெள்ளனலேன் 128 

உன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவன் 558

ஊசலாட்டு மிவ்வுடலுயிராயின இருவினையறுத்து 576 

ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்து 91 

ஊரேறாயிங் குழல்வேன் 57

ஊழி முதற்சிந்தாத நன்மணிவந்தென்பிறவித்தாழைப்பறித்தவா 327 

ஊற்றுமணற் போனெக்கு நெக்குள்ளே யுருகி யோலமிட்டுப் போற்றி நிற்பது 439

ஊன்பாவிய வுடலைச் சுமந்தடவி மரமானேன் 515

எறும்பிடை நாங்கூழெனப் புலனாலரிப்புண் டலந்தவெறுந்தமியேன் 129 

என்செவி யிரும்பினும் வலிது 401

என்னுடைய சிந்தையே உவந்து ஊராகக் கொண்டான் 627

ஏற்றார் மூதூரெழில் நகையெரியின் வீழ்வித்தாங்கன்று  3.158, 3.159

ஐம்புலனாய சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து 439

ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரையுள்ளங்கொண்டார் 528 

கடக்களி றேற்றாத் தடப்பெருமதத்தின் ஆற்றேனாக 3.155, 3.156

கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விட லரியேன் 117

கடலின் திரையது போல்வரு கலக்கம் 511

கடலே யனைய ஆனந்தம் 491

கடுந்தகையே னுண்ணுந் தெண்ணீரமுதப் பெருங்கடல் 116

கடுந்தழற் பிழம்பன்ன மேனிச் செய்யன் 464

கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை 218

கதிரை மறைத்தன்ன சோதி 527

கருணையின் சூரிய னெழவெழ நயனக் கடிமலர் மலரமற்றண்ணலங் கண்ணாந்திரணிரையறுபத முரல்வன 369

கரைமாண்ட காமப்பெருங்கடலைக் கடத்தலுமே இரைமாண்ட இந்திரியப் பறவையிரிந்தோட 328

கல்லைப் பிசைந்து கனியாக்கி 179 

கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண் டென்னைநின் கழற்கன்பனாக்கினாய் 98 

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற்போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று 1.46, 1.47

கற்றாமனமெனக் கதறியும்பதறியும் 4.73

கன்றை நினைந்தெழு தாயென வந்தகணக்கது வாகாதே 636

கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையு மிருப்பதாக்கினன் 3.178, 3.179

கன்னாருரித் தென்ன என்னையுந் தன் கருணையினாற் பொன்னார் கழல் பணித்து 243

கன்னா ருரித்தென்னை யாண்டு கொண்டான் 283 

கன்னேரனைய மனக்கடை. 643

காருறுகண்ணிய ரைம்புலனாற்றங் கரைமரமாய் வேருறுவேன் 107

காவிசே ருங்கயற்கண்ணாள் 489

கிளியனார் 519

குணமாம் பெருந்துறைக்கொண்டல் 472

குலமஞ்ஞை போன்றங்கன நடையீர் 330

குன்றேயனைய குற்றங்கள் 498

கையிலங்கு பொற்கிண்ண மென்றலால் அரியையென்றுனைக் கருதுகின்றிலேன் 96

கொடியேரிடையாள் 497

கொடிறும் பேதையுங்கொண்டது விடா தெனும்படியேயாகி 4.63, 4.64 

கொம்ப ரில்லாக் கொடிபோலலமந்தனன் 124 

கொம்பிலரும்பாய்க் குவிமலராய்க் காயாகி வம்புபழுத்துடல மாண்டு 564

கொள்ளேர் பிளவகலாத்தடங்கொங்கையர் 106

கோலவரைக்குடுமி வந்து குவலயத்துச் சால வமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து  ஞாலமிகப் 
பரிமேற்கொண்டு நமையாண்டான் 336 

கோற்றேனெனக்கென் கோ குரை கடல்வா யமுதென்கோ 513

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலிநாயேன் 479 

சிறைபெறா நீர்போற் சிந்தை வாய்ப்பாயுந் திருப்பெருந்துறையுறை சிவன் 392

சுடர்பொற்குன்று 438

சுழல்வன்தயிரிற் பொருமத்துறவே மலங்களைந்தாய் 133

சூழ்சுடர் ஞாயிறுபோல அந்த ரத்தே நின்றிழிந்திங்கடியவராசையறுப்பான்  352

செக்கர்போலுந் திருமேனி 445

செங்கமலமலர் போல ஆருருவாய வென்னாரமுது 599

செங்கயலொண்கண் மடந்தையர் 642

செந்தழல்புரைதிருமேனி 375 

செந்தழல்போல்வாய் 455

செந்துவர்வாய்மடவார் 637

செப்புநேர் முலைமடவரலியர் 428

செழிகின்ற தீப்புகுவிட்டிலிற் சின்மொழியாரிற் பன்னாள் விழுகின்ற என்னை 109

செழுக்கமலத் திரளனநின் சேவடி 408

சேலன கண்கள் 637

ஞானவாள் 615

தடக்கையி னெல்லிக்கனியெனக் காயினன் 3.162

தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத் தந்துய்யக் கொள்ளாய் 417 

தழலதுகண்ட மெழுகதுபோல தொழுதுளமுருகி யழுதுடல் கம்பித்து 4.60, 4.61

தளிர்ப்பொற்பாதம் 492

தாம்வளர்த்ததோர் நச்சுமாமர மாயினுங் கொலார் நானுமங்ஙனே 100

தாயாய் முலையைத் தருவான் 647

திணியார் மூங்கிற்சிந்தையேன் 492

துடிகொள் நேரிடையாள் 462 

துடியேரிடுகிடைத் தூய்மொழியார் 560

துணைமுலைக்கண்கள் தோய் சுவடு பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு பொங்கொளிதங்கு மார்பினன் 462

தூண்டாவிளக்கின் சுடரனையாய் 448 

தென்னாவென்னா முன்னந்தீ சேர்மெழுகொப்பாய் 161

தையலாரெனுஞ் சுழித்தலைப்பட்டு நான்தலைதடுமாறாமே 569 

தோலின்பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேன் 645

தோளாமுத்து 438

நல்ல மருந்தினடி யென்மனத்தே வைத்துப் பேசிப் பிறப்பறுத்தேன் 634 

நள்ளுங் கீழளுமேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போனின்ற எந்தை 50

நறுமலரெழுதரு நாற்றம் போற்பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள் 436 

நாதப்பறை 615

நானெனதெனுமாயக்கடித்த வாயிலே நின்று முன்வினை மிகக்கழறி யேதிரிவேன் 571

நானோர் தோளாச்சுரையொத்தால் 494

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக்குளிக்கின்ற நெஞ்சங் கொண்டீர் 528

நீருறு தீ 395

நீற்றுக்கவசம் 615

நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்து 435

பசுமரத்தாணி யறைந்தாற் போல 4.65

பஞ்சாய வடிமடவார் 551, 654

பஞ்சின் மெல்லடியாள் 453

பண்ணார்ந்தமொழி 547

பண்ணினேர் மொழியாள் 452 

பண்ணின் மொழியாள் 632

பள்ளந் தாழுறு புனலிற் கீழ் மேலாக 25 

பாசமெனுந் தாழுருவி 656

பாண்டியற் காரமுதாம் ஒருவன் 526

பால் நினைந்தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து 544

பாவிடை யாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம் 415

பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்ப் கிடப்பேற்குக் கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு 567

பாற்றிரு நீற்றெம் பரமன் 604

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து 3.153

பித்தனிவனென வென்னையாக் குவித்துப்பேராமே சித்தமெனுந்திண் 
கயிற்றாற்றிருப்பாதங்கட்டுவித்த வித்தகனார் 481

பிரைசேர்பாலினெய் போலப் பேசாதிருந்தாலேசாரோ 382 

பிறிவினையறியா நிழலதுபோல முன்பின்னாகி 4.78, 4.79

புலனின்கட்போத லொட்டா மெள்ளனவே மொய்க்கு நெய்க் குடந்தன்னை யெறும் பெனவே 128

புனவே யனவளைத்தோளி 244                                    (திருத்தம்: யனைவளை/யனவளை)

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங்கோயிலாப் புகுந்து 545

பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே யெனக்கருதிப் பேய்த்தேர்முகக் குறும் பேதை குணம் 315 

பெருநீரறச் சிறுமீன் துவண்டாங்கு நினைப்பிரிந்த வெரு நீர்மையேன் 130 

பெருந்துறையின் மேயபெருங்கருணையாளன் மருந்துருவாயென் மனத்தேவந்து தரும் 626 

பெருந்துறையின் மேயபெருங்கருணையாளன் வருந்துயரந் தீர்க்குமருந்து 620

பேணொணாத பெருந்துறைப் பெருந்தோணி பற்றி யுகைத்தலுங் காணொணாத் 
திருக்கோல நீவந்துகாட்டினாய் 471

பைந்நாப்பட அரவேரல்குல் 506 

பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப் புலன் தீக்கதுவ வெதும்புறுவேன் 140 

பொத்தையூன் சுவர்புழுப் பொதிந்துளுத்தசும்பொழுகிய பொய்க்கூரை 434 

பொழிகின்ற துன்பப்புயல்வெள்ளத்தினின் கழற்புணைகொண்டிழிகின்ற அன்பர்களேறினர்வான் 411 

பொற்பா லொப்பாந் திருமேனிப்புயங்கன் 611

பொன்னியலுந் திருமேனி 640 

பொன்னேரனையமலர் 643

பொன்னை வென்றதோர் புரிசடைமுடி 430

போரிற் பொலியும் வேற்கண்ணாள் 613 

மங்கையர் தம்மோடும் பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்தி 574

மடங்கவென் வல்வினைக் காட்டை நின்மன்னருட்டீக் கொளுவும் 123

மணியனையான் 602

மதிவெண்குடை 615

மத்துறுதண்தயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கிவித்துறுவேன்  134

மரகதக்குவா அல்மாமணிப்பிறக்கம் 3.124

மரக்கணேன் 406

மரக்கண் 401

மரவியன்மேல்கொண்டு தம்மையுந் தாமறியார் மறந்தே 534 

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந்து 554

மலர்ப்பாதம் 638, 639

மாவடுவகிரன்ன கண்ணி 415

மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவுதயிர் போற்றளர்ந்தேன் 413

மானிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகி 44

மானேர்நோக்கி 499

மிடைந்தெலும்பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலிநடைக்கூடம் 421 

மிண்டியமாயாவாத மென்னுஞ்சண்டமாருதஞ் சுழித்தடித்தா அர்த்து 4.54, 4.55

மின்கணினார் 414

மின்னொளிகொண்ட பொன்னொளி திகழ 3.124

முத்தனையான் 602

முத்துமாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி 434

முரசெறிந்து மாப்பெருங்கருணையின் முழங்கிப்பூப்புரை யஞ்சலி காந்தள்காட்ட 3.74, 3.75 

முழுதயில் வேற்கண்ணிய ரென்னு மூரித்தழன் முழுகும் விழுதனையேன் 148 

முன்னிக்கடலைச் சுருக்கியெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம்பிராட்டி திருவடிமேற் பொன்னஞ்சிலம்பிற்சிலம்பித் திருப்புருவம் 
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற்பிரிவிலா எங்கோமா னன்பர்க்கு 
முன்னியவணமக்கு முன்சுரக்கு மின்னருளே என்னப் பொழியாய் மழை 170

மையலாயிந்த மண்ணிடை வாழ்வெனு மாழியுளகப்பட்டு 569

மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை யென்புதோல் போர்த்தற்குப் பாயம்புக் கிருக்க கில்லேன் 419

யானிடர்க் கடல் வாய்ச்சுழி சென்று மாதர்த்திரைபொரக்காமச்சுற வெறிய அழிகின்றனன் 411

வருநீர் மடுவுண் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் குருநீர் மதிபொதியுஞ் சடைவானக் கொழுமணி 130

வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினைதான் வந்தடர்வனவே 141 

வலைத்தலை மானன்னநோக்கியார் 144 

வல்வினையின் வாயிற் பொடியட்டி 277

வழியற்றேன் வற்றன் மரம் போல் நிற்பேன் 495

வன்பராய் முருடொக்கு மென் சிந்தை 401

வாழைப்பழத்தின் மனங்கனி வித்து 138

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போற் கண்ணாரிரவி கதிர்வந்து கார் கரப்ப 172 

விரவியதீவினை மேலைப்பிறப்பு முந்நீர்கடக்கப்பரவிய அன்பர் 534

வில்லியனன்னுதலார் 641

வெஞ்சேலனைய கண்ணார் 427

வெருள்புரிமானன்ன நோக்கி 412

வெள்ளத்துள்நாவாற்றியாங்குன்னருள் பெற்றுத் துன்பத்தினின்றும் விள்ளக்கிலேன் 118

வையத்திருந்துறையுள் வேல் மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான் 619

 

Related Content

திருவாசகத்தில் சிவபெருமான் பெயர்கள்