logo

|

Home >

information-to-know >

thiruvasaga-thevara-oppumai-agaradhi

திருவாசக தேவார ஒப்புமை அகராதி (மயிலை கிழார் இளமுருகனார்)

சிவமயம்

மயிலைகிழார் இளமுருகனார் தொகுத்தது.

தேவாரத்திற் காணப்படும் கருத்துக்கள் நுட்பங்கள் சொற்றொடர்கள், அரிய சொற்கள் முதலியன திருவாசகத்திலும் காணப்படுகின்றன. இவை நூற்றுக்கணக்கிலுள்ளன. எடுத்துக்காட்டுகளாக ஈண்டு சில தொகுக்கப்பட்டுள்ளன. இக்குறிப்புக்களுள் முதலில் திருவாசகத் தொடரும், பின்பு அதற்கொத்த தேவாரப்பகுதியும் தரப்பட்டுள்ளன. உதாரணமாக 3.115. "பூவின் நாற்றம் போன்று..." என்ற தொடர் மூன்றாவது பகுதியாகிய திருவண்டப்பகுதியுள் 115-வது அடியிலுள்ளது. இதற்கொத்த தேவாரத் தொடர் 6ம் திருமுறையுள் 38-ம் பதிகத்தில் 8-ம் பாட்டிலுள்ள "பூவினில் நாற்றமாய் நின்றாய்" என்ற அப்பர் திருவாக்கிலுள்ளது. இவ்வாறே பிறவற்றிற்கும் கொள்க. தேவாரம் சமாஜ இரண்டாம் பதிப்புக்களில் திருமுறை எண். பதிக எண். பாட்டெண் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. அவ்வெண்களே இவ்வகராதியுட் காணப்படுகின்றன.                                                  

திருவாசகம் 

தேவாரம் 

1.2 இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்.  4.1-2 நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்  நினையாதொரு போதும் இருந்தறியேன்.
1.70 இன்பமுந் துன்பமு மில்லானே உள்ளானே.  6.48.3 இன்பன்காண் துன்பங்களில்லாதான்காண்.
2.7 அடியாருள்ளத் தன்புமீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்.  6.66.7 என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த சிறையானை. 5.2.1 நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்.
2.43 இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்.  1.105.10 இந்திர ஞாலமொழிந் தின்புற.
2.85 ஐயாறதனிற் சைவன் ஆகியும்.  3.78.10 தஞ்சமென என்று முணராத அடியார் கருது சைவனிடமாம், 4.62.4 மழுவொன்றேந்தும் சைவனே. 6.75.9 சதுர நடம் ஆட்டுகந்த சைவர்.
3.17 அறுவகைச் சமயத் தறுவனையோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி.  2.29.5 இருமூன்று சமயங்களவையாகிப் பின்னையருள் செய்த பிறையாளன்.
3.79 இருமுச்சமயத் தொருபேய்த் தேரினை.  6.50.7 இரு மூன்று சமயமாகிப் புக்கானை.
3.93 அருச்சனை வயலுள் அன்பு வித்திட்டுத் தொண்ட உழவர் ஆரத்தந்த அண்டத்தரும்பெறன் மேகன். 4.76.2 மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்தி..... சிவகதி விளையுமன்றே.
3.115 பூவின் நாற்றம் போன்றுயர்த் தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை.  6.38.8 அளவில் பெருமையுடையாய் நீயே! பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே!
4.34 ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்  1.54.2 இடையீர் போகா இளமுலையாளை.
4.88 வினைகெடக் கைதரவல்ல கடவுள்.  4.92.4 தம்மைப் பரவ கொடுநரகக் குழி நின்றருள் தரு கைகொடுத்தேற்றும் ஐயாறன்.
4.131 தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி.           6.5.8 தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி    
4.137-141 பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி, தீயிடை  மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி, வளியிடையிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி. வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி,  6.54.5 மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத் தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலில் நான்காய்த் தரணி தலுத் தஞ்சாகி எஞ்சாத்தஞ்ச மன்னுரு.
5.5 கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு.   2.41.7 மலர்க் கொன்றைத் தொங்கலான்அடியார்க்குச் சுவர்க் கங்கள் பொருளலவே.
5.8 உள்ளேன் பிற தெய்வம் உன்னையல்லாதெங்கள் உத்தமனே.  6.98.5 சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோமல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்.
5.29 உழிதரு காலுங் கனலும்.  6.27.1 எம்மான் தன் அடித்தொடர்வான் உழிதர்கின்றேன்.
5.54-56 பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான் நின்திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன்.  6.31.3 எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி.
5.119 யாமார்க்குங் குடியல்லோம் யாதுமஞ்சோம்.   6.98.1 நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்.
5.137 அளவறுப்பதற் கரியவன் இமையவர்க் கடியவர்க் கெளியான்.   2.108.6 அன்புசெய்வாரவர்க் கெளியவர் அரியவர் அல்லார்க்கு.
5.140 பளகறுத்துடையான் கழல்பணிந்திலை.  3.84.10 பாசுர வினைதரு பளகர்கள். 6.27.3 பஞ்சபூதப் பளகீரும் வசமன்றே.
5.158 படிறிடை மத்திடு தயிராகித் தேனிலாவிய திரு. அருள்.  4.52.9 மத்துறு தயிரேபோல மறுகும் என்னுள்ளம்.
5.161 என்உளக் கருவையான் கண்டிலன்.  6.47.1 உள்ளத்தினுள்ளே நின்ற கருவே.
5.196 எட்டினோ டிரண்டும் அறியேனையே.  5.99.3 எட்டும் ஒன்றும் இரண்டும் அறியிலென்.
5.215 மலமாக் குரம்பை இதுமாய்க்கமாட்டேன்.  6.12.9 மாயக்குரம்பை நீக்க வழிவைத்தார்.
5.269 வானோர் குருவனே போற்றி.  5.13.5 குருவனே அடியேனைக் குறிக்கொளே.
5.334 பாணேபேசி என்றன்னைப் படுத்ததென்ன.  7.46.3 பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்.
5.381 விச்சதின்றியே விளைவு செய்குவாய்.  4.4.2 விச்சின்றி நாறு செய்வானும்.
5.389 அகநெக அள்ளூறு தேன்ஒப்பனே.  6.86.3 அமரர் கோனை அள்ளூறி யெம்பெருமான் என்பார்க்கு.
6.69 விற்றுக்கொள் ஒற்றிவை.  7.95.2 விற்றுக்கொள்வீர் ஒற்றியல்லேன்.
6.155 எனக்கெய்ப்பில் வைப்பே.  7.67.2 நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை.
6.175 சோத்தெம்பிரான்  7.67.4 தேவர்கள் போற்றும் சோத்தானை.
7.1 ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் சோதியை.  2.14.2 ஆதியும் அந்தமுமில்லாத வேதியை.
7. 27 என் ஆனை என் அரையன் இன் அமுது.  5.37.3 ஞானமாகிய நன்குணர் ஆனையார் ஊனை வேவ உருக்கிய ஆனையார்.
7.33 முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே.  6.11.7 புதியனவுமாய் மிகவும் பழையான்.
7.71 பெண்ணாகி ஆணாய் அலியாய்.  6.22.2 பெண்ணானை ஆணானைப் பேடியானை , 6.60.6 பெண்ணவனை ஆணவனைப் பேடானானை.
7.76 எங்கெழிலென் ஞாயிறெமக் கேலோ ரெம்பாவாய்.  6.95.2 எங்கெழிலென் ஞாயிறெளியோ மல்லோம்.
8.66 உள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலைக்கப்பாலைப் பாடுதுங் காண் அம்மானாய்.  6.26.4 மனத்தகத்தே மன்னினானை அப்பாலைக்கப்பாலைக் கப்பாலானை  4.6.1 வனபவள....அப்பாலைக் கப்பாலென்கின்றாளாற்... கொல்லோ. 
8.71 எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம் நம் சிவனை.  4.12.5 மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை. 
8.93 வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்.  7.41.3 வானோர் அறியா நெறியானே.
8.113 என் ஆனை என்னப்பன்.  5.37.5 ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார். 5.37.8 அன்புடையார் மனத்தானையார்.
9.47 பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யை.   4.16.1 மெய்யர் மெய்ந்நின்றவர்க் கல்லாதவர்க்கென்றும் பொய்யர்.
9.50 இமவான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்.   4.88.1 மலைமகள் தன்னுடைய பாலனைப் பால்மதி சூடியை. 5.91.1 மனோன்மனியைப் பெற்ற தாயிலானை.
9.78 சோதியுமாய் இருளாயினார்க்கு.  6.26.6 சோதியாய் இருளாகிச் சுவைகளாகி.
9.79 பந்தமுமாய் வீடுமாயினாருக்கு.  5.7.2 பந்தம் வீடவையாய பராபரன்.
9.80 ஆதியும் அந்தமுமாயினாருக்கு.  4.37.9 ஆதியாய் அந்தமானார். 4.95.2 அந்தமும் ஆதியுமாகி நின்றீர்.
10.31 என் தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்.  4.64.7 எந்தையும் எந்தை தந்தை தந்தையுமாய ஈசர். 5.35.6 எந்தைதாய் தந்தை எம்பெருமானுமே. 7.18.7 என்னைப் பெற்ற முற்றவை தம்மனை தந்தைக்குந் தவ்வைக்குந் தம்பிரானார்.
11.17 அருமந்ததேவர் அயன்திருமாற் கரியசிவம்.  6.32.10 அருமந்த தேவர்க்கரசே போற்றி.
12.76 தம்பெருமை தானறியாத் தன்மையன்.  2.91.8 தனதொரு பெருமையை யோரான்.
13.9-11 நாயிற்கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து...ஆண்டான்.  4.76.6 நாயினும் கடைப்பட்டேனை நன்னெறிகாட்டி ஆண்டாய்.
14.19 வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய கையைத்தறித்தான். 14.37 நாமகள் நாசிசிரம் பிரமன்படச் சோமன் முகனெரித்துந்தீபற.  3.118.5 சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன்         கரமும் முன்னியங்கு பரிதியான் பல்லுமிறுத்தவர்க்கருளும் பரமனார்.
15.17 நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்.  6.94.1 இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி.
15.49 ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே. 4.31.6 பழியுடை யாக்கை தன்னிற் பாழுக்கே நீரிறைத்து வழியிடை வாழமாட்டேன். 4.52.7 பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்கு நீரிறைத்து.
18.6 தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப் பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேயபிரான்.  6.35.10 மாக்குன் றெடுத்தோன் தன்மைந் தனாகி.
18.19 முந்து நடுவு முடிவுமாகிய மூவரறியாச் சிந்துரச் சேவடியான்.  6.4.3 முதலாகி நடுவாகி முடிவானானே. 6.17.1 ஈறும் நடுவும் முதலுமானவர்.
18.37 கொந்தணவும் பொழிற் சோலைக் கூங்குயிலே.   7.25.7 கொந்தணவும் பொழில்சூழ் குளிர்மாமதில்.
21.17 அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள் நோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்.  6.31.9 நேசத்தை நீபெருக்கி நேர்நின்றுள்கி நித்தலுஞ்         சென்றடிமேல் வீழ்ந்துநின்று ஏசற்று நின்று.
21.19 அடியேன்பால் பிரைசேர் பாலின்நெய் போலப் பேசாதிருந்தால் ஏசாரோ.  5.90.10 பாலிற் படுநெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்.
22.14 இணங்கிளி எல்லா உயிர்கட்கும் உயிரே.  1.132.4 உரைசேரும் எண்பத்தி நான்கு நூறாயிரமாம் யோனி பேதம் ... அவற்றின் உயிருக்குயிராய் நின்றான்.
22.23 ஆகாய நீர்நிலம் தீகால் ஆய்அவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே.  6.45.9 மண்ணல்லை விண்ணல்லை.... கடலல்லை வாயுவல்லை.... எரியுமல்லை. பிறிதல்லை ஆனாயும் பெரியாய் நீயே.
28.9 பாடிமால் புகழும் பாதமே அல்லாற் பற்று நான் மற்றிலேன் கண்டாய்.  7.48.1 மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப்பாதமே மனம் பாவித்தேன். 
28.17 பண்ணினேர் மொழியாள் பங்க.  5.10.1 பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ.
29.1 சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே.  2.50.6 சோதியே சுடரே சுரும்பமர் கொன்றையாய். 5.29.3 சோதியே சுடரே என்று சொல்லுமே.
30.6 சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன்.  4.95.1 நான் சட்ட உம்மை மறக்கினும்.
30:6 சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்.  4.67.7 சழக்குடைப் பதிக்கு நாதர்.
31.99 உருத் தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளமன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக்  6.89.9 கருவுற்ற காலத்தே என்னை யாண்டு கழற்போது தந்தளித்த கள்வர்.
கருணையினால் ஆண்டு கொண்ட   
33.7 எத்துக் கெங்கள் சிவலோகா.  7.49.1 எத்துக் கிங்கிருந்தீர்.
33.21 வேண்டத்தக்க தறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ  6.23.1 வேண்டுவார் வேண்டுவதே  ஈவான் கண்டாய். 6.80.3 மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை.
37.35 புறம்புறந் திரிந்த செல்வமே.  6.31.10 புறம்புறமே திரியாத போது நெஞ்சே.
38.2 கரும்புதரு சுவை எனக்குக் காட்டினை.  6.33.1 கரும்பு தரு கட்டியை இன்னமிர்தை.
39.11 குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தா.  4. 9.10 குற்றாலத் துறை கூத்தனல்லால்,
40.3 கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்.  5.52.5 தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டையது கெட.
43.4 ஆதிப்பிரமம் வெளிப்படுத்த அருளறிவார் எம்பிரான் ஆவாரே.  7.75.9 ஆதியை நாளும் இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே.
51.27 ஓங்காரத் துட்பொருளை ஐயன் எனக்கருளியவாறு.  6.39.10 ஓங்காரத்துட் பொருளாய் நின்றான்.

                திருச்சிற்றம்பலம்


 
 

Related Content