logo

|

Home >

information-to-know >

thirumuraiyum-thirukkuralum

திருமுறையும் திருக்குறளும்

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

 

S.No திருமுறை திருக்குறள்
1

மனனுணர் வொடுமலர் மிசையெழு

தருபொருள் நியதமும் உணர்பவர்

தனதெழி லுருவது கொடுஅடை

தகுபர னுறைவது 1.21.5

 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

2

அஞ்சொண் புலனும் மவைசெற்ற

மஞ்சன் 1.38.4

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

3

ஓரைந்து

புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த

புண்ணியர் 1.42.4

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

4

மண்ணும்விண்ணும்

தாய அடியளந்தான் 1.59.9

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.

5

வென்றவன் புலனைந்தும் 1.113.10

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

6

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்

றைம்புலனும் அடக்கிஞானப்

புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்

துள்ளிருக்கும் புராணர்கோயில் 1.132.6

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

7

அகரமுதலானை அணியாப்பனூரானை 1.88.5

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

8

எண்ணும் ஒரெழுத்தும் இசையின் கிளவி தேர்வார்

கண்ணும் முதலாய கடவுள் 2.34.4

எண் என்ப ஏனை ஏழுத்தென்ப இவ்இரண்டும்

கண் என்ப வாழும் உயிர்க்கு

9

எண்ணமருங் குணத்தாரும் 2.69.1

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

10

பொய்யிலா மெய்ந்நெறிக்கே

தக்கிருந்தார் ஆக்கூரில்

தான்தோன்றி மாடமே 2.42.1

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

11

இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லை என்னாது ஈத்துவக்கும்

தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே 2.42.9

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன் கணவர்

12

ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே 2.44.4

ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே 2.44.7

ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே 2.44.8

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

13

வெய்யநோயிலர் தீதிலர்

வெறியராய்ப்பிறர் பின்செலார்

செய்வதேயலங் காரமாம்

இவையிவை தேறி யின்புறில்

ஐயமேற்றுணுந் தொழிலராம்

அண்ணலார் அறையணிநல்லூர்ச்

சைவனாரவர் சார்வலால்யா

துஞ்சார்விலோம் நாங்களே. 2.77.9

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.

14

வாராத நாடன் 2.88.3

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

15

தாவி அடிமூன்

றளந்தவன் 2.121.9

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.

16

அற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற

ஆலவா யாவதும் இதுவே 3.120.2

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

17

சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்

தன்மையார் நன்மையால் மிக்க உலப்பில்

பல்புகழார் 3.122.5

 

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்.

18

வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர் 2.42.3

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

19

கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே 4.5.1

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

 

20

ஆக்கை யாற்பயனென் - அரன்

கோயில் வலம்வந்து

பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்

வாக்கை யாற்பயனென் 4.9.8

கால்க ளாற்பயனென் - கறைக்

கண்ட னுறைகோயில்

கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்

கால்க ளாற்பயனென் 4.9.9

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

21

எண்ணானாய் எழுத்தானாய் 4.13.7

எண் என்ப ஏனை ஏழுத்தென்ப இவ்இரண்டும்

கண் என்ப வாழும் உயிர்க்கு

22

பற்றற் றார்சேர் பழம்பதியை 4.15.1

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

23

எட்டுக்கொ லாமவர்

ஈறில் பெருங்குணம் 4.18.8

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

 

24

வாய்மையால் தூயே னல்லேன் 4.54.7

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

25

ஓர்த்துள வாறு நோக்கி

உண்மையை உணராக் குண்டர் 4.73.2

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

26

வாய்மையே தூய்மை யாக 4.76.4

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

27

இன்றுளேன் நாளை யில்லேன் 4.78.1

நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு.

28

துன்பக் கடலிடைத் தோணித்

தொழில்பூண்ட தொண்டர்தம்மை

இன்பக் கரைமுகந் தேற்றுந்

திறத்தன 4.92.6

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

 

29

மண்பா தலம்புக்கு மால்கடல்

மூடிமற் றேழுலகும்

விண்பால் திசைகெட் டிருசுடர்

வீழினும் அஞ்சல்நெஞ்சே

திண்பால் நமக்கொன்று கண்டோ ந்

திருப்பா திரிப்புலியூர்க்

கண்பாவு நெற்றிக் கடவுட்

சுடரான் கழலிணையே. 4.94.9

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்

30

வானந் துளங்கிலென் மண்கம்ப

மாகிலென் மால்வரையுந்

தானந் துளங்கித் தலைதடு

மாறிலென் தண்கடலும்

மீனம் படிலென் விரிசுடர்

வீழிலென் வேலைநஞ்சுண்

டூனமொன் றில்லா ஒருவனுக்

காட்பட்ட உத்தமர்க்கே 4.112.8

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்

31

மதகளி றஞ்சினைப்

பொருங்கை யானைகண்

டீர்புக லூரரே 5.46.8

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

32

கலை

ஞானிகள் காதலெண்

குணவன் காண் 5.63.4

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

33

இன்று ளார்நாளை

இல்லை யெனும்பொருள்

ஒன்று மோரா

துழிதரும் ஊமர்காள் 5.84.9

நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு.

34

எட்டு வான்குணத்

தீசனெம் மான்றனை 5.89.8

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

35

வென்றா னைப்புல

னைந்து 5.98.7

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

36

வாரா வுலகருள வல்லான் றன்னை 6.3.2

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

37 பற்றற்றார் பற்றும் பவளவடி 6.6.9 பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
38

எண்குணத்தார் 6.16.4

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

39

சுவையொளியூ றோசை நாற்றத்

துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் 6.27.4

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

40

ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும் 6.28.5

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

 

41

வாரா வுலகருள வல்லாய் நீயே 6.38.9

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

42

யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங்

கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்

தோணியைத் 6.46.4

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

43

வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை 6.46.9

வேண்டுதல்வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

44

நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்

வென்றானை 6.50.3

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

45

இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி

இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்

தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்

சிவலோக நெறியறியச் சிந்தை தந்த

அருளானை 6.54.4

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.

46 பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
47

பொறிவாயில் இவ்வைந்தினையும் அவிய 7.3.2

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

48

உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி 7.3.4

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு

49

அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் 7.3.7

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

50

அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி

அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே 7.3.3

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

51

புறந்திரைந்து நரம்பெழுந்து

நரைத்துநீயுரை யாற்றளர்ந்

தறம்புரிந்து நினைப்பதாண்மை

அரிதுகாண்இஃ தறிதியேல்

திறம்பியாதெழு நெஞ்சமேசிறு

காலைநாமுறு வாணியம்

புறம்பயத்துறை பூதநாதன்

புறம்பயந்தொழப் போதுமே 7.35.3

 

நாச்செற்றுவிக்குள்மேல்வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்.

 

52

குற்றொருவரைக் கூறைகொண்டு

கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்

செற்றொருவரைச் செய்ததீமைகள்

இம்மையேவருந் திண்ணமே 7.35.4

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்.

53 அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற் றிருந்தே வேசற்றேன் 8.21.5 ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
54 ஒப்பிலாதன உவமனிலிறந்தன 8.26.1 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
55 வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ 8.32.11 அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பார்க்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று
56

வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட

முழுதுந் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி

என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள்செய்தாய் யானும்

அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும்

உன்றன் விருப்பன்றே. 8.33.6

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

57 பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி அடைவோ 8.34.5 பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
58 அச்சப்பத்து 8.35 அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
59 செம்பொருட் டுணிவே 8.37.1

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு

60

போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ

யாதோ வறிகுவ தேது மரிதி யமன்விடுத்த

தூதோ வனங்கன் றுணையோ விணையிலி தொல்லைத்தில்லை

மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே. 8.கோவை.2

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும் என் நெஞ்சு

61

செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச்சிற் றம்பலத்தெம்

மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்

வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக் கலுழந்து புலந்துநைந்தாள்

இவ்வா றருள்பிறர்க் காகுமென நினைந் தின்னகையே. 8.கோவை.366

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரர் ஆகுதிர் என்று.

62

காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல்

சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத்

தாரணி கொன்றையன் தக்கோர் தஞ்சங்க நிதிவிதிசேர்

ஊருணி உற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கும் ஊதியமே. 8.கோவை.400

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

63 ஐந்து வென்றனன் 10.0.1.1

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

64 தன்னை யொப்பாயொன்றும் இல்லாத் தலைமகன் 10.0.1.7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
65

ஒருமையு ளாமைபோல் உள்ளைந் தடக்கி

இருமையுங் கேட்டிருந்தார்புரையற்றே 10.1.1.21

ஒருமையு ளாமைபோல் ஐந்தடக்க லாற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து

66 யாக்கை நிலையாமை 10.1.2 நிலையாமை
67 கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே 10.1.3.5

கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

68 கொல்லாமை 10.1.6 கொல்லாமை
69 புலால் மறுத்தல் 10.1.7 புலால் மறுத்தல்
70 பிறன்மனை நயவாமை 10.1.8 பிறன் இல் விழையாமை
71 மகளிர் இழிவு 10.1.9 வரைவில் மகளிர்
72 நல்குரவு 10.1.10 நல்குரவு
73 அந்தண ரொழுக்கம் 10.1.12 நீத்தார் பெருமை
74 அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் 10.1.12.11 அந்தணர் என்போர் அறவோர் மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
75 அரசாட்சி முறை 10.1.13 அரசியல்
 

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி

நாடோறும் நாடி யவனெறி நாடானேல்

நாடோறும் நாடு கெடுமூட நண்ணுமால்

நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே 10.1.13.2

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்

76

வேட நெறி நில்லார் வேடம்பூண் டென் பயன்

வேடநெறிநிற்பார் வேடம் மெய் வேடமே

வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்

வேடநெறி செய்தால் வீடது வாகுமே  10.1.13.3

தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை

அஃதிலார் மேற்கொள் வது

77 வானச் சிறப்பு 10.1.14 வான் சிறப்பு
  காக்கை கரைந்துண்ணுங் கால மறிமினே 10.1.15.1

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே யுள

78 அறஞ்செய்வான் திறம் 10.1.16 அறன் வலியுறுத்தல்
79 அறஞ்செயான் திறம் 10.1.17 அறன் வலியுறுத்தல்
80 அன்புடைமை 10.1.18 அன்புடைமை
81 கல்வி 10.1.20 கல்வி
82 பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் 10.1.20.9 பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
83 கேள்வி கேட்டமைதல் 10.1.21 கேள்வி
84 கல்லாமை 10.1.22 கல்லாமை
85

ஒதியுணரவல்லோமென்பர் உள் நின்ற

சோதி நடத்தும் தொடர் வறியாரே 10.1.22.10

கற்றதன லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅ ரெனின்

86 நடுவு நிலைமை 10.1.23 நடுவு நிலைமை
87 விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது 10.1.21.6
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
88 கள்ளுண்ணாமை 10.1.24 கள்ளுண்ணாமை
89 பொறையுடைமை 10.2.24 பொறையுடைமை
90 பெரியாரைத் துணைக்கோடல் 10.2.25 பெரியாரைத் துணைக்கோடல்
91

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை யுதைக்குங் குறியது வாமே 10.3.5.8

கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

92 போதுகந் தேறும் புரிசடையான் 10.3.10.1 மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
93 கலங்கிடுங் காம வெகுளிமயக்கம் 10.4.13.22

காம வெகுளி மயக்க மிவை மூன்றன்

நாமங் கெடக்கெடும் நோய்

94 ஆமே சுவையொளி யூறோசை கண்டவள் 10.4.13.32

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

95 சிறப்பொடு பூசனை செய்ய நின்ருர்க்கே 10.5.17.11 சிறப்பொடுபூசனைசெல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
96 மலருறை மாதவன் 10.5.18.2 மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
97 துறவு 10.6.4 துறவு
98 தவம் 10.6.5 தவம்
99 தவ நிந்தை 10.6.6 கூடா ஒழுக்கம்
100 அவ வேடம் 10.6.8 கூடா ஒழுக்கம்
101 ஆரும் அறியார் அகரம் அவனென்று 10.7.4.22 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
102 அகரமுதலாய் அனைத்துமாய் நிற்கும் 10.7.5.1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
103 அறவாழி அந்தணன் ஆதிபராபரன் 10.7.9.12 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
104 பிட்சா விதி 10.7.16 இரவு
105 கூடா ஒழுக்கம் 10.7.36 கூடா ஒழுக்கம்
106 கமலத்துறையீசனை 10.7.37.9 மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
107

உடம்போ டுயிரிடை நட்பறியாதார்

மடம் புகு நாய்போல் மயங்குகின் றாரே 10.8.3.7

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு.

108 ஆமை யகத்தினி லஞ்சு மடங்கிடும் 10.8.3.17

ஒருமையு ளாமைபோல் ஐந்தடக்க லாற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து

109 திருவருளா னந்தி செம்பொருளாமே 10.8.13.38

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு

110 சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் 10.8.15.25

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு

111 காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து 10.8.18.2

காம வெகுளி மயக்க மிவை மூன்றன்

நாமங் கெடக்கெடும் நோய்

112 உடந்த செந்தாமரையுள்ளுறு சோதி 10.8.24.7 மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
113 மதமற் றெனதி யான் மாற்றி விட்டாங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்
114 செம்பொரு ளான சிவமென லாமே 10.8.36.6

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு

115 வாய்மை 10.8.38 வாய்மை
116 அவா அறுத்தல் 10.8.40 அவா அறுத்தல்
117 செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால் 10.9.8.5.4

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு

118 செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே 10.9.11.2

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு

119 பற்றற் றவர் பற்றி நின்ற பரம்பொருள் 10.9.16.2 பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
120

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு 11.9.136

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு

121

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள 11.9.173

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள

122 சுவைஒளி ஊறோசை நாற்றம் தோற்றம் 11.31.9

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

123 மன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப் பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

124

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார். 12.5.8

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

   நுணங்கிய கேள்வி மேலோன் 12.6.14 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
125 பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் 12.27.140 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும்
126 செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான் மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான் 12.9.29 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
127 வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்க 12.35.12 தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்கா தெனின்

 

Related Content