logo

|

Home >

information-to-know >

thirumuraiyil-ramayanam

Om symbol

திருமுறையில் இராமாயணம்

Om symbol

1. திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பதிகம் தோறும் இராவணன் கயிலையில் செருக்கு அடங்கியமை பற்றி வரும் குறிப்புகள்

2. சடாயு இராமற்காகப் போர் புரிந்தமை 

3. வாலியார் சிவபூசைச் சிறப்பு 

4.  நீரிடைத் துயின்றவன் 
 தம்பிநீள் சாம்புவான் 
போருடைச் சுக்கிரீ 
 வன்னநு மான்றொழக் 
காருடை நஞ்சுண்டு 
 காத்தருள் செய்தஎம் 
சீருடைச் சேடர்வாழ் 
 திருவுசாத் தானமே  3.33.1

5.  செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்  
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப் 
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற  
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ 
அங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றி 
அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள் 
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி  
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.10

6. இராமன் சிவவழிபாடு - இராமேச்சரம்   

7. தேவியை வவ்விய தென்னிலங்கை 
 அரையன் திறல்வாட்டி 
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும் 
 இராமேச் சுரத்தாரை 
நாவியன் ஞானசம் பந்தன்நல்ல 
 மொழியான் நவின்றேத்தும் 
பாவியன் மாலைவல் லாரவர்தம் 
 வினையாயின பற்றறுமே. 3.101.11

8. இராமன் சிவவழிபாடு  இராமேச்சரம் 

9. இராமன் சிவவழிபாடு - இராமனதீச்சரம்  

10. தென் இலங்கை இராவணன்  
 தன் சிரம் ஈரைந்தும் துணித்த  
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும்  
 பெரும் பாதகம் தீர்த்த  
பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து  
 போய்ப் பெரு மகிழ்ச்சி  
துன்னி மனம் கரைந்து உருகத்  
 தொழுது எழுந்தார் சொல் அரசர். 12.27.408

11. புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்  
 புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று  
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து  
 பாடி நல்தொண்டருடன் நாளும் போற்றிச் செல்வார் 
விண்ணவரைச் செற்று உகந்தான் இலங்கை செற்ற  
 மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டித்  
திண்ணிய பொற் சிலைத் தடக்கை இராமன் செய்த  
 திரு இராமேச் சுரத்தைச் சென்று சேர்ந்தார்.  12.34.887

12. செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித்  
 திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடு  
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை  
 மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில்  
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப்  
 புடைவலம் கொண்டு உள் அணைவார் போற்றி செய்து  
பங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று  
 பாடினார் மன்னவனும் பரவி ஏத்த.  12.34.888

13. சேதுவின்கட் செங்கண் மால் பூசை செய்த  
 சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து  
காதலுடன் அந் நகரில் இனிது மேவிக்  
 கண் நுதலான் திருத் தொண்டனார்க் கெல்லாம்  
கோதில் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க்  
 குலச்சிறையார் குறைவு அறுத்துப் போற்றிச் செல்ல  
நாதர் தமை நாள் தோறும் வணங்கி ஏத்தி  
 நளிர் வேலைக் கரையில் நயந்து இருந்தார் அன்றே.  12.34.889 

14. குராம னுங்குழ 
 லாளொரு கூறனார் 
அராம னுஞ்சடை 
 யான்றிரு வாமாத்தூர் 
இராம னும்வழி 
 பாடுசெய் ஈசனை 
நிராம யன்றனை 
 நாளும் நினைமினே. 5.44.5

15. பீலிகை இடுக்கி நாளும்  
 பெரியதோர் தவமென் றெண்ணி 
வாலிய தறிகள் போல  
 மதியிலார் பட்ட தென்னே 
வாலியார் வணங்கி ஏத்துந்  
 திருவையா றமர்ந்த தேனோ 
டாலியா எழுந்த நெஞ்சம்  
 அழகிதா எழுந்த வாறே. 4.39.2

16. ஏன முகத்து அவ புத்தரை இந்திர சித்து மணம் புணர்வுற்றான் 
ஈழவனார் சொரி தொட்டி இனங்களை வெட்டி இசித்தனர் பட்டர் 
தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர் 
சக்கரவர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப் பரிசுண்டே 
ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரையுங் கார் 
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களியேன் எளியேனோ 
சோனகனுக்கும் எனக்கும் எனத்தரை அம்மனை சூலது கொண்டாள் 
தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகிறாரே.  11.39.11 
 

17. வட குரங்காடுதுறையில் வாலியார்  
 தாம் வழிபட்ட  
அடைவும் திருப்பதிகத்தில் அறிய  
 சிறப்பித்து அருளிப்  
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து  
 புறத்துள்ள தானங்கள் போற்றி  
படை கொண்ட மூவிலை வேலர்  
 பழனத் திருப்பதி சார்ந்தார். 12.34.298

18. தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய் 
தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய் 
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய் 
எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய் 
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் 
மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய் 
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற் 
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.

19. ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு  
 வுந்தன் னுருவாய் 
ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர்  
 வண்டோ தரிக்குப் 
பேரருளின்ப மளித்த பெருந்துறை  
 மேய பிரானைச் 
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி  
 நாடனைக் கூவாய். 

20.  வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு  
 ணைக்கட லாய்அடியார் 
பந்தனை விண்டற நல்கும்எங்கள் பரமன்  
 பெருந்துறை ஆதி அந்நாள் 
உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு  
 மதிலிலங்கை அதனில்  
பந்தணை மெல்லிர லாட்கருளும் பரிசறி  
 வார்எம் பிரானாவாரே.

21. செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச்
செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற
கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக்
கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்
நம்பனையெம் பெருமானை நாதன் றன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.   6.74.04

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்