logo

|

Home >

information-to-know >

thirumuraiyil-kuritha-malarkal

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள்

(Flowers mentioned in Thirumurai)

  • திருமுறைகளில் சிவபெருமான் சூடியுள்ள  மலர்களைக் கூறும்பொழுதும், இயற்கை வருணனையிலும் பல மலர்களை அருளாளர்கள் குறித்துள்ளார்கள் 
  • இந்தப் பூக்கள் பலவும் சங்ககாலம் தொடங்கிக் குறிக்கப்படுபவை.
  • இந்த மலர்கள் தவிர பல மரங்கள், தாவரங்களையும் குறித்துள்ளார்கள். அவற்றைத் தலமரங்கள் பகுதியில் காணலாம்.
  • இந்த மலர்களின் தொகுப்பு பண்டைத் தமிழரின் இயற்கையோடு இயைந்த வாழ்வைப் பறைசாற்றுவது.
  • இந்தத் தொகுப்பின் மூலம் சைவ அன்பர்கள் அருளாளர்கள் கூறிய இந்தப் பூக்கள் பற்றி அறிவதுடன், அவற்றைப் பேணியும் வளர்க்கலாம்.
  • இவற்றில் சில மலர்கள் விடுபட்டிருக்கலாம். அவ்வாறு இருப்பின் தெரிவிக்கவும்.
எண் பெயர் படம் திருமுறைக் குறிப்பு 
1.  அடும்பு Adumbu Flower அடும்பு மலர் அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே. 5.84.6
2. அனிச்சம் Anicham flower அனிச்சம் மலர்

....

பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத்
திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி 

.....   11.29.1

3. அலரி Alari Flower அலரி மலர் தொடைத்தலை மலைத்திதழி துன்னிய வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே. 3.79.5
4. அல்லி / குமுதம்  Alli (Lilly) Flower அல்லி ( குமுதம் ) மலர்

அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி அடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த
வல்ல வானுல கெய்தி வைகலு மகிழ்ந்திருப் பாரே . 2.95.11

 

சேவுயருந் திண்கொடியான் றிருவடியே சரணென்று சிறந்தவன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே.  1.129.1

5. ஆம்பல் Ambal Flower ஆம்பல் மலர் வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர் தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா னடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே 4.102.1
6. இண்டு Indu Flower இண்டு மலர் விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே 2.35.2
7. இருவாச்சி (அடுக்குமல்லிகை) Iruvatchi flower இருவாச்சி அடுக்குமல்லிகை

புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி

தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய 12. 38

8. ஈகை Egai flower ஈகை மலர் வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப 
    மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே
கூகையொ டாண்டலை பாட ஆந்தை 
    கோடதன் மேற்குதித் தோட வீசி
ஈகை படர்தொடர் கள்ளி நீழல் 
    ஈமம் இடுசுடு காட்ட கத்தே
ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள் 
    அப்ப னிடம் திரு ஆலங் காடே 11.2.3
9. எருக்கு Erukku flower எருக்கு மலர் கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் 
    போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் 
    டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத் 
    திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக் 
    குஞ்சென்னி ஈசனுக்கே  11.4.1
10. கண்டல் / கேதகை / தாழை  Kandal Kedhagai Thazhai Flower கண்டல், கேதகை, தாழை மலர்

தொழிலான் மிகுதொண் டர்கள்தோத் திரஞ்சொல்ல
எழிலார் வரையா லன்றரக் கனைச்செற்ற
கழலா னுறையும் மிடங்கண் டல்கண்மிண்டிப்
பொழிலான் மலிபூம் புகலிந் நகர்தானே.  1.30.8

 

வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கவழகார்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே  3.71.5

 

மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே  1.66.3

11. கமலம் / தாமரை /கஞ்சம் / அம்புயம் Thamarai Lotus flower கமலம் , தாமரை மலர்

வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க விசைபாடு மளியரசே யொளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற் பகராயே 1.60.1

 

தளையவிழ் தண்ணிற நீலநெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங்
களையவி ழுங்குழ லார்கடியக் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்
துளைபயி லுங்குழ லியாழ்முரலத் துன்னிய வின்னிசை யாற்றுதைந்த
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் காட்செய வல்ல லறுக்கலாமே  1.5.6

 

கஞ்சத்தே னுண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
    கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
    தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்த மைத்தகொண்
    டேழேயேழே நாலேமூன் றியலிசை யிசையியல்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
    மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதன் மடவரலே 1.126.11

 

எம்பிரான் சிவனே எல்லாப்
    பொருளும்என் றெழுதும் ஏட்டில்
தம்பிரா னருளால் வேந்தன்
    தன்னைமுன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன்
    அநபாயன் என்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத்
    தென்னன்கூன்நிமிர்ந்த தன்றே 12.28.847

12. கரந்தை Karandhai Flower கரந்தை மலர் இட்டி தாகவந் துரைமி னோநுமக்
    கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
    மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
    வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
    கடிக ளாகிய அடிகளே 7.33.2
13. கவ்வை / கௌவை (எள்) Kavvai Flower கவ்வை  கௌவை எள் பூ ஏதமில ரரியமறை மலையர்மக ளாகியவி லங்குநுதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாம்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே 3.70.4
14. குவளை / கழுநீர் Kuvalai Kazhunir Lilly flower குவளை  கழுநீர் மலர்

இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்
அளவு காணலுற் றாரங் கிருவரே 5.95.9

 

....

காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்

....   8.2

15. களா Kala Flower களா  மலர் காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்  2.84.1
16. காசை   பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார்
ஆசைதீரக் கொடுப்பா ரலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போன் மிடற்றார் கடவூர்மயான மமர்ந்தார்
பேசவருவா ரொருவர் அவரெம்பெருமா னடிகளே 2.80.7
17. காஞ்சி Kanji Flower காஞ்சி மலர் அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால்
இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச் சிறிதெளியரே. 2.115.5
18. காந்தள் Kandhal flower காந்தள் மலர் உரைசேரு மெண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே 1.132.4
19. காரை Karai flower காரை மலர் வாரணவு முலைமங்கை பங்கினரா யங்கையினில்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே 3.65.1
20. காவி Kavi Saffron flower காவி  மலர் திருவளர் தாமரை சீர்வளர்
    காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
    காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி
    னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக்
    கொடிபோன் றொளிர்கின்றதே 8.கோவை.1
21. கிஞ்சுகம் / பலாசம்  Kinjukam Palasam Flame of forest flower கிஞ்சுகம் பலாசம்

வஞ்சகம னத்தவுணர் வல்லரண மன்றவிய வார்சிலைவளைத்
தஞ்சக மவித்தவம ரர்க்கமர னாதிபெரு மானதிடமாம்
கிஞ்சுக விதழ்க்கனிக ளூறியசெவ் வாயவர்கள் பாடல்பயில
விஞ்சக வியக்கர்முனி வக்கண நிறைந்துமிடை வேதவனமே  3.76.7

 

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காண்கரு வேட்டில் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சா டனத்துக்கே 10.4.2.86

22. குடசம் (பூவரசம்) Kudasam Poovarasu flower குடசம் பூவரசம் திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே 3.89.1
23. குரவம் Kuravam flower குரவம்  மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே 1.10.5
24. குருக்கத்தி / மாதவி Kurukkathi flower குருகத்தி

புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர்
    தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்
    காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்
    குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே  7.10.8

ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும்
கோலமார் தருவிடைக் குழகனா ருறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமா ரேடகஞ் சேர்தலாஞ் செல்வமே 3.32.4

25. குறிஞ்சி Kurinji flower குறிஞ்சி பூ நெறிகொண்ட குஞ்சிச் சுருள்துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறிகொண்ட வண்டின்குலம் சீர்கொளப் பின்பு செய்து  12.10.57
26. கூவிளம் (வில்வப்பூ) Kuvilam Vilavam flower கூவிளம் வில்வப்பூ செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
    விரவிய சடைமுடி யடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
    அறிவரி தவன்றிரு வடியிணை யிரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
    சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமல ரெடுத்தகை அடியவர் தம்மைத்
    துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே 7.58.10
27. கைதை Kaidhai flower கைதை  கொண்டலுநீலமும் புரைதிருமிடறர் கொடுமுடியுறைபவர் படுதலைக்கையர்
பண்டலரயன்சிர மரிந்தவர்பொருந்தும் படர்சடையடிகளார் பதியதனயலே
வண்டலும்வங்கமுஞ் சங்கமுஞ்சுறவு மறிகடற்றிரைகொணர்ந் தெற்றியகரைமேற்
கண்டலுங்கைதையு நெய்தலுங்குலவுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே  1.79.2
28. கொகுடி Kogudi mullai flower கொகுடி  அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென விருப்பது கருப்பறிய லூரே 2.31.10
29. கொட்டம் Kottam flower கொட்டம்  கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே 3.6.1
30. கொன்றை / இதழி Konrai Ithazhi flower கொன்றை  இதழி

பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா 
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் 
பாவா ரின்சொற் பயிலும் பரமரே 1.24.1

 

தேவனைப் பூதப் படையனைக் கோதைத் திருஇதழிப்
பூவனை
க் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேன் இவை நான்வல்ல ஞானங்களே 11.22.22

31. கோங்கம் Kongam flower கோங்கம்  வளர்பூங்கோங்க மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போன்மேனித் தையனல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே 1.100.4
32. கோடல் Kodal flower கோடல்  கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும் பிறரறி யாததோர்
ஆடு நாக மசைத்த அடிகளே 5.41.8
33. சண்பகம் Champak flower Sanbagam சண்பகம்  திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்
உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே 4.97.10
34. சூரை Sural Surai flower சூரை  எட்டி இலவம் ஈகை 
    சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த 
    கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த 
    காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி
    பாடக் குழகன் ஆடுமே 11.3.1
35. செங்கழுநீர் Senkazhunir flower red water lily செங்கழுநீர்  வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
    கரும்பொடு மாந்திடு மேதி
பிரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப்
    பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புரை முடிவா னவர்அடி முறையால்
    இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
    நினைந்துநின் றொழிந்ததென் நெஞ்சே 9.2.3
36. செருந்தி Serundhi flower செருந்தி  மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே 3.92.1
37. செவ்வந்தி  Sevandhi flower செவ்வந்தி அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே  10.4.3.1
38. ஞாழல் Gyazhal flower ஞாழல் ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி
மாடவல செஞ்சடையெ மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே 2.33.1
39. தளவம் (ஜாதி) Dalavam flower தளவம் (ஜாதி) காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார் 11.16.8
40. தில்லை Thillai flower தில்லை கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே 1.80.1
41. தும்பை Thumbai flower தும்பை  ஏடேறு மலர்க்கொன்றை யரவு தும்பை
    இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கை
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்
    செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே 6.90.6
42. துழாய் Thulasi Thuzhai flower துழாய் கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங் கண்ணியோர்  பான்மகிழ்ந்தான்
நின்மல னாட னிலயநெய்த் தானத் திருந்தவனே 4.89.5
43. நந்திவட்டம் Nandiyavattai flower நந்திவட்டம் முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாமுடி வேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும் நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்ததென் னாருயிரே 4.84.8
44. நரந்தம் Narandham flower நரந்தம் நாக சூதவகு ளஞ்சர ளஞ்சூழ் 
   நாளி கேரமில வங்க நரந்தம்
பூக ஞாழல்குளிர் வாழை மதூகம் 
   பொதுளும் வஞ்சிபல வெங்கு நெருங்கி
மேக சாலமலி சோலைக ளாகி 
   மீது கோகில மிடைந்து மிழற்றப் 
போக பூமியினு மிக்கு விளங்கும் 
   பூம்பு றம்பணை கடந்து புகுந்தார்   12.0.5.239
45. நறவம் Naravam flower நறவம் நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி 
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறையன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே 2.110.7
46. நீலம் /நெய்தல் Neydal flower நீலம் நெய்தல்  சேவுயருந் திண்கொடியான் றிருவடியே சரணென்று சிறந்தவன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே 1.129.1
47. படர்தொடரி Padar Todari flower படர்தொடரி  காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் 2.84.1
48. பாதிரி Padiri flower பாதிரி  ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே  4.94.1
49. பித்திகம் Pittigam flower பித்திகம் நீடியஅப்பதிகளெலாம்
    நிரைமாடத் திறைகள்தொறும்
பேடையுடன் பவளக்கால்
    புறவொடுங்கப் பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார்
    துணைக்கலச மென்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளும்
    மணிமார்பும் அடங்குவன  12.28.331
50. பிண்டி (அசோகப்பூ) Pindi Ashoka flower பிண்டி (அசோகப்பூ) அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே 2.114.8
51. புன்கு (புங்கை) Pungu pungai flower புன்கு (புங்கை ) அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற் றைம்புலனு மடக்கிஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யு மிழலையாமே 1.132.6
52. புன்னாகம் Punnagam nagam flower புன்னாகம் சூதபா டலங்கள் எங்குஞ் 
   சூழ்வழை ஞாழல் எங்குஞ்
சாதிமா லதிகள் எங்குந் 
   தண்டளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும் 
   வகுளசண் பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும் 
   பூகபுன் னாகம் எங்கும்  12.0.2.79
53. புன்னை Punnai flower புன்னை குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக் காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித் தலழகே 2.37.3
54. பூகம் / கமுகு (பாக்கு) Pugam Kamugu areca betel pakku tree பூகம்  கமுகு பாக்கு

நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே 3.78.1

 

பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர் 11.38

55. பூளை Poolai flower பூளை  சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங் கையொடும் முடனாகி
ஏராரி ரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காரார் கடனஞ் சமுதுண் டகருத்தே 2.36.1
56. மகிழ் / வகுளம் Magizh Vagulam flower மகிழ் / வகுளம் தாதலர் தாமரைமே லயனுந் திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய வுமைகோ னுறையுமிடம்
மாதவி வான்வகுள மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே 1.104.9
57. மத்தம்  (ஊமத்தம் ) Umatham poo மத்தம் ஊமத்தம் தண்ணறு மத்தமும் கூவிளமும் வெண்டலை மாலையும் தாங்கியார்க்கும்
நண்ணல ரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே 1.7.3
58. மந்தாரம் Mandhara flower மந்தாரம்  பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி
விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண்
மணிப்பணிலங்
கொழித்துமந் தாரம்மந் தாகினி நுந்தும்பந்
தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு
தாரவனே 8.6.47
59. மரு  

இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு

மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே 11.38

60. மல்லிகை Malligai Jasmine flower மல்லிகை  வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடி விண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தவிடம்
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர் குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே 1.65.7
61. மௌவல்/மவ்வல் (மரமல்லிகை) Mauval Mavval Maramalligai flower மௌவல் மவ்வல் மரமல்லிகை மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே 1.14.7
62. முல்லை Mullai flower முல்லை முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
    முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
    ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
    சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி
    திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி  6.5.3
63. வஞ்சி   வளவனார் பெருஞ்சேனை
    வஞ்சிமலர் மிலைந்தேற்ப
அளவில்அர ணக்குறும்பில்
    அதிகர்கோன் அடற்படையும்
உளநிறைவெஞ் சினந்திருகி
    யுயர்காஞ்சி மலைந்தேற்ப
கிளர்கடல்கள் இரண்டென்ன
    இருபடையுங் கிடைத்தனவால்  12.41.19

 

Related Content