எண் | பெயர் | படம் | திருமுறைக் குறிப்பு |
---|---|---|---|
1. | அடும்பு | அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும் துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான் கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே. 5.84.6 |
|
2. | அனிச்சம் |
.... பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் ..... 11.29.1 |
|
3. | அலரி | தொடைத்தலை மலைத்திதழி துன்னிய வெருக்கலரி வன்னிமுடியின் சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம் படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக் குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே. 3.79.5 |
|
4. | அல்லி / குமுதம் |
அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி அடிகளைக் காழி
சேவுயருந் திண்கொடியான் றிருவடியே சரணென்று சிறந்தவன்பால் |
|
5. | ஆம்பல் | வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித் தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர் தொண்டீர் ஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா னடிநிழற்கீழ்ச் சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே 4.102.1 |
|
6. | இண்டு | விண்டார் புரமூன்று மெரித்த விமலன் இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம் கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே 2.35.2 |
|
7. | இருவாச்சி (அடுக்குமல்லிகை) |
புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய 12. 38 |
|
8. | ஈகை | வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே கூகையொ டாண்டலை பாட ஆந்தை கோடதன் மேற்குதித் தோட வீசி ஈகை படர்தொடர் கள்ளி நீழல் ஈமம் இடுசுடு காட்ட கத்தே ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடம் திரு ஆலங் காடே 11.2.3 |
|
9. | எருக்கு | கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்த் தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை இளந்திங் களும்எருக் கும்இருக் குஞ்சென்னி ஈசனுக்கே 11.4.1 |
|
10. | கண்டல் / கேதகை / தாழை |
தொழிலான் மிகுதொண் டர்கள்தோத் திரஞ்சொல்ல
வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய |
|
11. | கமலம் / தாமரை /கஞ்சம் / அம்புயம் |
வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
தளையவிழ் தண்ணிற நீலநெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங்
கஞ்சத்தே னுண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
எம்பிரான் சிவனே எல்லாப் |
|
12. | கரந்தை | இட்டி தாகவந் துரைமி னோநுமக் கிசையு மாநினைந் தேத்துவீர் கட்டி வாழ்வது நாக மோசடை மேலும் நாறுக ரந்தையோ பட்டி ஏறுகந் தேற ரோபடு வெண்ட லைப்பலி கொண்டுவந் தட்டி யாளவுங் கிற்ப ரோநமக் கடிக ளாகிய அடிகளே 7.33.2 |
|
13. | கவ்வை / கௌவை (எள்) | ஏதமில ரரியமறை மலையர்மக ளாகியவி லங்குநுதலொண் பேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாம் காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளால் மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே 3.70.4 |
|
14. | குவளை / கழுநீர் |
இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
.... காதல னாகிக் கழுநீர் மாலை .... 8.2 |
|
15. | களா | காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் 2.84.1 |
|
16. | காசை | பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார் ஆசைதீரக் கொடுப்பா ரலங்கல்விடைமேல் வருவார் காசைமலர்போன் மிடற்றார் கடவூர்மயான மமர்ந்தார் பேசவருவா ரொருவர் அவரெம்பெருமா னடிகளே 2.80.7 |
|
17. | காஞ்சி | அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப் பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள் முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால் இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச் சிறிதெளியரே. 2.115.5 |
|
18. | காந்தள் | உரைசேரு மெண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்கோயில் வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே 1.132.4 |
|
19. | காரை | வாரணவு முலைமங்கை பங்கினரா யங்கையினில் போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர் காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே 3.65.1 |
|
20. | காவி | திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே 8.கோவை.1 |
|
21. | கிஞ்சுகம் / பலாசம் |
வஞ்சகம னத்தவுணர் வல்லரண மன்றவிய வார்சிலைவளைத்
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் |
|
22. | குடசம் (பூவரசம்) | திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக் குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப் பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே 3.89.1 |
|
23. | குரவம் | மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல் உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார் குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே 1.10.5 |
|
24. | குருக்கத்தி / மாதவி |
புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர் ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும் |
|
25. | குறிஞ்சி | நெறிகொண்ட குஞ்சிச் சுருள்துஞ்சி நிமிர்ந்து பொங்க முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி சேர்த்தி வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி செறிகொண்ட வண்டின்குலம் சீர்கொளப் பின்பு செய்து 12.10.57 |
|
26. | கூவிளம் (வில்வப்பூ) | செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் விரவிய சடைமுடி யடிகளை நினைந்திட் டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் அறிவரி தவன்றிரு வடியிணை யிரண்டுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன் சடையன்றன் காதலன் பாடிய பத்துந் தொழுமல ரெடுத்தகை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே 7.58.10 |
|
27. | கைதை | கொண்டலுநீலமும் புரைதிருமிடறர் கொடுமுடியுறைபவர் படுதலைக்கையர் பண்டலரயன்சிர மரிந்தவர்பொருந்தும் படர்சடையடிகளார் பதியதனயலே வண்டலும்வங்கமுஞ் சங்கமுஞ்சுறவு மறிகடற்றிரைகொணர்ந் தெற்றியகரைமேற் கண்டலுங்கைதையு நெய்தலுங்குலவுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே 1.79.2 |
|
28. | கொகுடி | அற்றமறை யாவமண ராதமிலி புத்தர் சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக் குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில் கற்றென விருப்பது கருப்பறிய லூரே 2.31.10 |
|
29. | கொட்டம் | கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர் நட்டம் ஆடிய நம்பனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே 3.6.1 |
|
30. | கொன்றை / இதழி |
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
தேவனைப் பூதப் படையனைக் கோதைத் திருஇதழிப் |
|
31. | கோங்கம் | வளர்பூங்கோங்க மாதவியோடு மல்லிகைக் குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம் தளிர்போன்மேனித் தையனல்லாளோ டொருபாகம் நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே 1.100.4 |
|
32. | கோடல் | கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல் பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார் பேடு மாணும் பிறரறி யாததோர் ஆடு நாக மசைத்த அடிகளே 5.41.8 |
|
33. | சண்பகம் | திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல் குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர் உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே 4.97.10 |
|
34. | சூரை | எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும் சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப் பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய் கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே 11.3.1 |
|
35. | செங்கழுநீர் | வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம் கரும்பொடு மாந்திடு மேதி பிரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப் பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச் சிரம்புரை முடிவா னவர்அடி முறையால் இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால் நினைந்துநின் றொழிந்ததென் நெஞ்சே 9.2.3 |
|
36. | செருந்தி | மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம் செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே 3.92.1 |
|
37. | செவ்வந்தி | அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல் வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே 10.4.3.1 |
|
38. | ஞாழல் | ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி மாடவல செஞ்சடையெ மைந்தனிட மென்பர் கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை நாடுமலி வாசமது வீசியநள் ளாறே 2.33.1 |
|
39. | தளவம் (ஜாதி) | காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப் பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே ஏந்தொளிசேர் அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர் கண்டம்போல் மீதிருண்ட கார் 11.16.8 |
|
40. | தில்லை | கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே 1.80.1 |
|
41. | தும்பை | ஏடேறு மலர்க்கொன்றை யரவு தும்பை இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கை சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச் செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக் கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங் காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே 6.90.6 |
|
42. | துழாய் | கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும் மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான் மைம்மலர் நீல நிறங்கருங் கண்ணியோர் பான்மகிழ்ந்தான் நின்மல னாட னிலயநெய்த் தானத் திருந்தவனே 4.89.5 |
|
43. | நந்திவட்டம் | முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாமுடி வேந்தர் தங்கள் பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும் நக்கசென்னி அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்ததென் னாருயிரே 4.84.8 |
|
44. | நரந்தம் | நாக சூதவகு ளஞ்சர ளஞ்சூழ் நாளி கேரமில வங்க நரந்தம் பூக ஞாழல்குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சிபல வெங்கு நெருங்கி மேக சாலமலி சோலைக ளாகி மீது கோகில மிடைந்து மிழற்றப் போக பூமியினு மிக்கு விளங்கும் பூம்பு றம்பணை கடந்து புகுந்தார் 12.0.5.239 |
|
45. | நறவம் | நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறையன்றங் கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால் நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே 2.110.7 |
|
46. | நீலம் /நெய்தல் | சேவுயருந் திண்கொடியான் றிருவடியே சரணென்று சிறந்தவன்பால் நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயில் வாவிதொறும் வண்கமல முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக் காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே 1.129.1 |
|
47. | படர்தொடரி | காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் 2.84.1 |
|
48. | பாதிரி | ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே 4.94.1 |
|
49. | பித்திகம் | நீடியஅப்பதிகளெலாம் நிரைமாடத் திறைகள்தொறும் பேடையுடன் பவளக்கால் புறவொடுங்கப் பித்திகையின் தோடலர்மென் குழன்மடவார் துணைக்கலச மென்முலையுள் ஆடவர்தம் பணைத்தோளும் மணிமார்பும் அடங்குவன 12.28.331 |
|
50. | பிண்டி (அசோகப்பூ) | அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால் வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால் குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல் கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே 2.114.8 |
|
51. | புன்கு (புங்கை) | அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற் றைம்புலனு மடக்கிஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்கோயில் தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத்தீயுள் மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யு மிழலையாமே 1.132.6 |
|
52. | புன்னாகம் | சூதபா டலங்கள் எங்குஞ் சூழ்வழை ஞாழல் எங்குஞ் சாதிமா லதிகள் எங்குந் தண்டளிர் நறவம் எங்கும் மாதவி சரளம் எங்கும் வகுளசண் பகங்கள் எங்கும் போதவிழ் கைதை எங்கும் பூகபுன் னாகம் எங்கும் 12.0.2.79 |
|
53. | புன்னை | குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல் மருவும் பொழில்சூழ் மறைக் காட் டுறைமைந்தா சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல் அரவம் மதியோ டடைவித் தலழகே 2.37.3 |
|
54. | பூகம் / கமுகு (பாக்கு) |
நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம்
பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை |
|
55. | பூளை | சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர் வாரார் முலைமங் கையொடும் முடனாகி ஏராரி ரும்பூ ளையிடங் கொண்டவீசன் காரார் கடனஞ் சமுதுண் டகருத்தே 2.36.1 |
|
56. | மகிழ் / வகுளம் | தாதலர் தாமரைமே லயனுந் திருமாலுந் தேடி ஓதியுங் காண்பரிய வுமைகோ னுறையுமிடம் மாதவி வான்வகுள மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே 1.104.9 |
|
57. | மத்தம் (ஊமத்தம் ) | தண்ணறு மத்தமும் கூவிளமும் வெண்டலை மாலையும் தாங்கியார்க்கும் நண்ணல ரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துட னேத்தப் புனையிழையார் அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே 1.7.3 |
|
58. | மந்தாரம் | பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண் மணிப்பணிலங் கொழித்துமந் தாரம்மந் தாகினி நுந்தும்பந் தப்பெருமை தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவனே 8.6.47 |
|
59. | மரு |
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே 11.38 |
|
60. | மல்லிகை | வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடி விண்ணோர் வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தவிடம் மந்தலாய மல்லிகையும் புன்னைவளர் குரவின் பந்தலாரும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே 1.65.7 |
|
61. | மௌவல்/மவ்வல் (மரமல்லிகை) | மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம் அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே 1.14.7 |
|
62. | முல்லை | முல்லையங் கண்ணி முடியாய் போற்றி முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி 6.5.3 |
|
63. | வஞ்சி | வளவனார் பெருஞ்சேனை வஞ்சிமலர் மிலைந்தேற்ப அளவில்அர ணக்குறும்பில் அதிகர்கோன் அடற்படையும் உளநிறைவெஞ் சினந்திருகி யுயர்காஞ்சி மலைந்தேற்ப கிளர்கடல்கள் இரண்டென்ன இருபடையுங் கிடைத்தனவால் 12.41.19 |