Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.
இது கைக்கு அடக்கமான வட்ட வடிவிலான உலோகத்தால் ஆன இரு பாகங்களைக் கொண்டது. இரண்டையும் சேர்ந்து தட்டி தாளம் எழுப்புவர். பல்வேறு இசைக்கருவிகள் சேர்ந்து வாசிக்கப்படும் போது இசையின் கால அளவுகளை நெறிப்படுத்தும் கருவி தாளம் ஆகும்.
Instrument | Reference |
தாளம் | மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5 உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார் கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந் தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார் பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 1.65.10 தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார் குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார் கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே. 1.73.8 தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில் கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார் கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 2.94.06 விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே அலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா துலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே 3.57.5 கல்லவடம் மொந்தைகுழல் தாளமலி கொக்கரைய ரக்கரைமிசை பல்லபட நாகம்விரி கோவணவர் ஆளுநகர் என்பரயலே நல்லமட மாதரரன் நாமமும் நவிற்றிய திருத்தமுழுகக் கொல்லவிட நோயகல்த ரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே. 3.79.7 சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக் கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர் சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே. 3.81.2 கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும் வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும் நக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே. 4.66.9 காளங் கடந்ததோர் கண்டத்த ராகிக் கண்ணார்கெடில நாளங் கடிக்கோர் நகரமு மாதிற்கு நன்கிசைந்த தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனே வேடங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே. 4.104.7 விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந் தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 4.111.8 கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும் வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும் நக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே. 4.66.9 கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல் கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே. 5.92.1 குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும் அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.7 பாடுமே யொழியாமே நால்வே தமும் படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள் சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ் சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங் கூடுமே குடமுழவம் வீணை தாளங் குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத் தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.5 மழுங்கலா நீறாடும் மார்பர் போலும் மணிமிழலை மேய மணாளர் போலுங் கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலுங் கொடுகொட்டி தாள முடையார் போலுஞ் செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலுந் தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும் அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.10 திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற் குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப் பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும் அருமணியை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.1 குழையார் திருத்தோடு காதிற் கண்டேன் கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன் இழையார் புரிநூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன் தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன் மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.7 தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர் பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால் அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9 நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந் தன்மை யாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங் கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.8 தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவா றன்னே என்னும். 8.திருவா.345 மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே 10.189 விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் இடமாந் தடாரி படகம் - இடவிய மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300 நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால் காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் தாமரைச் செங்கை களினால் சப்பாணி கொட்டினார் 12.1944 கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த வையம் எல்லாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே 12.2001 காழி வரும் பெரும் தகையார் கையில் வரும் திருத் தாளக் கருவி கண்டு வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயில் ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித் தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார் 12.2002 செங்கமல மலர்க் கரத்துத் திருத் தாளத்துடன் நடந்து செல்லும் போது தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மேல் தரித்துக் கொள்ள அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத் தோணிச் சிகரக் கோயில் 12.2004 எடுத்த திருப் பதிகத்தின் இசை திருத் தாளத்தினால் இசைய ஒத்தி அடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னி மடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ விளங் கோலத்துக் காட்சி கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞானக் கொண்டலார் தாம் 12.2006 திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறைக் கற்பின் மாதர் மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து துங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சி புக்குச் சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் 12.2158 இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும் மன்னும் இசை வடிவான மதங்க சூளா மணியாரும் பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப் பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார் 12.2176 பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் பின்பு பெரும் பாணனார் தாம் தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கிக் கொள்ள இடும் பொழுதின் கண் குவலத்தோர் களிகூரக் குலவு சண்பை வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத் தொண்டர் உடன் மருவும் காலை 12.2356 பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப 12.2518 பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு எல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத 12.2641 சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம் வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம் பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம் எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே 12.3097 திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப் பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார் 12-3308 |
See Also: