logo

|

Home >

information-to-know >

sinnam-thirumurai-musical-instruments

சின்னம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Sinnam - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

 

Instrument Reference
சின்னம் ஏறுதற்குச் சிவிகை இடக்குடை 
கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள் 
மாறில் முத்தின் படியினால் மன்னிய 
நீறு வந்த நிமலர் அருளுவார் 12.2093 

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் 
மான முகத்தின் சிவிகை மணிக் குடை 
ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக் 
கோன் அவன் பால் அணைந்து கொடும் என 12.2095 

திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால் 
துங்க வெண் குடை தூய சிவிகையும் 
பொங்க ஊதும் பொருவரும் சின்னமும் 
அங்கண் நாதர் அருளினால் கண்டனர் 12.2099 

ஆய போழ்தின் அரவு எனும் ஆர்ப்புடன் 
தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை 
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு 
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார் 12.2108 

சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவே 
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம் 
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட 
பெற்ற பாலறா வாயன் வந்தான் எனப் பிடிக்க 12.2120 

மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி 
எணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக் 
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செம்சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத் 
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திருப்பிரம புரம் சாரச் செல்லும்போது 12.2154 

சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார் 
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற 
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப 
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க 12.2181 

புரசை வயக் கட களிற்றுப் பூழியர் வண் தமிழ் நாட்டுத் 
தரை செய் தவப் பயன் விளங்கச் சைவ நெறி தழைத்து ஓங்க 
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணிச் சின்னம் எலாம் 
பர சமயக் கோளரி வந்தான் என்று பணிமாற 12.2551 

தென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான் 
மன்றுளார் அளித்த ஞான் வட்டில் வண்கையன் வந்தான் 
வென்றுலகு உய்ய மீளவை கையில் வெல்வான் வந்தான் 
என்றுபன் மணிச் சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க 12.2708 

சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து சிவபெருமாள் தனைப் பரவிச் செல்லும் போது 
சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை சார்தலும் மற்ற அது அறிந்த சைவர் எல்லாம் 
ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப் 
பார் குலவு தனக் காளம் சின்னம் எல்லாம் பர சமய கோள் அரி வந்தான் என்று ஊத 12.2802 

புல் அறிவில் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப் புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள் 
எல்லையினில் எழுந்து அருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று 
மல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் 
கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி முதலான தேரார்க்கும் கனன்று சொன்னார் 12.2803

மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளையார் முன் வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் 
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போது 
செற்றமிகு உள்ளத்துப் புத்த நந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழச் சென்று 
வெற்றிபுனை சின்னங்கள் வாதில் எமை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான் 12.2804 

புத்தர் இனம் புடை சூழப் புத்த நந்தி பொருவில் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும் 
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி 
இத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று 
முத்து நிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் 12.2805 

அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் 
எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தைப் பொடி ஆக்கும் எதிரில் அன்பர் 
பொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம் போற்றி அருளால் சாரிபுத்தன் தன்னை 
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்னஉற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் 12.2812 

திருச்சின்னம் பணிமாறக் கேட்ட நால்திசை உள்ளோர் 
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச் சூழ்ந்த 
நெருகின் இடையவர் காணா வகை நிலத்துப் பணிந்து உள்ளம் 
உருக்கி எழும் மனம் பொங்கத் தொண்டர் குழாத்துடன் அணைந்தார் 12.2831 

மாதவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரிச் சின்னம் வரம்பு இன்று ஆகப் 
பூதி நிறை கடல் அணைவது என்னச் சண்பைப் புரவலனார் எழுந்து அருளும் பொழுது சின்னத் 
தீதில் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞான சம்பந்தன் வந்தான் என்னும் 
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண 12.2914 

சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம் 
வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம் 
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம் 
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே 12.3097 

சீரணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின் 
ஏரணி காளம் சின்னம் இலங்கு ஒளித் தாரை எல்லாம் 
பேரொலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு 
தாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று 12.3118 

மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள் 
எண்ணில பலவும் ஏத்திச் சின்னங்கள் எழுந்த போது அவ் 
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப் பெற்ற 
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க 12.3119 
 

See Also:

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்