Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.
Instrument | Reference |
பேரிகை | கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம் ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின் பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே. 1.117.3 பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும் வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில் கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித் தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே. 2.38.2 செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி இருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற் பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும் பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங் களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே. 7.16.2 மணிகடல் யானை வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே 10.606 விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் இடமாந் தடாரி படகம் - இடவிய மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300 சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581 ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் கூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும் பேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும் 12.1053 வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின் மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் 12.1693 சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 12.2101 பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப 12.2518 |