Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.
Instrument | Reference |
பணிலம் | காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார் நாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில் தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால் வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே. 3.76.3 பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம் கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 8.திருவா.151 மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன் படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில் கொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்(கு) ஆயகுற் றேவல் செய்கோ தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் கரிகுழற்கே. .. 8.கோவை.63 மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக் கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள் தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார் வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார் 12.0063 வண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித் தண் தலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடித்தாழ தெண் திரைக் கடல் பவழமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும் கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி 12.2044 அத் திருப்பதி பணிந்து அகன்று போய் அனல் கைத் தலத்தவர் பதி பிறவும் கை தொழு முத் தமிழ் விரபராம் முதல்வர் நண்ணினார் செய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் 12.2140 மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி எணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக் கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செம்சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத் தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திருப்பிரம புரம் சாரச் செல்லும்போது 12.2154 வில் பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது பொற்பமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த நற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி அற்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட 12.2999 |