Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. Here is the list of the instruments.
கொடுகொட்டி என்பது தோற்கருவி வகை சார்ந்த இசைக்கருவிகளுள் ஒன்று. இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இக்கருவி தற்காலத்தில் கிடுகிட்டி என்றழைக்கப்படுகிறது. நாகசுரக் கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது.
Instrument | Reference |
கொடுகொட்டி | வண்டணை கொன்றை வன்னியு மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க கொண்டணி சடையர் விடையினர் பூதங் கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப் பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல் வெண்பிறை சூடி உமையவ ளோடும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.4 தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டி வீணை முரல வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி *நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள். 2.84.7 கோத்தகல் லாடையுங் கோவணமுங் கொடுகொட்டி கொண்டொருகை தேய்த்தன் றனங்கனைத் தேசழித்துத் திசையார் தொழுதேத்தக் காய்த்தகல் லாலதன் கீழிருந்த கடவுள் ளிடம்போலும் வாய்த்தமுத் தீத்தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே. 3.103.2 விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந் தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 4.111.8 கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி பக்க மேபகு வாயன பூதங்கள் ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய் அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. 5.7.1 குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை விரவி னார்பண் கெழுமிய வீணையும் மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம் பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே. 5.51.7 கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல் கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே. 5.92.1 வீறுடைய ஏறேறி நீறு பூசி வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக் கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து பாறுடைய படுதலையோர் கையி லேந்திப் பலிகொள்வா ரல்லர் படிறே பேசி ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.6 மழுங்கலா நீறாடும் மார்பர் போலும் மணிமிழலை மேய மணாளர் போலுங் கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலுங் கொடுகொட்டி தாள முடையார் போலுஞ் செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலுந் தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும் அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.10 காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார் களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார் உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணாற் பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப் பாடலா ராடலார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.2 நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட் டியுங் குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை நல்லாலை நல்லூரே தவிரே னென்று நறையூரிற் றாமுந் தவிர்வார் போலப் பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.8 பழகிய வல்வினைகள் பாற்று வானைப் பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங் குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக் கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை விழவனை வீரட்ட மேவி னானை விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை அழகனை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.6 கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன் கள்ள விழிவிழிப்பார் காணாக் கண்ணாற் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் வெள்ளச் சடைமுடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.5 நீறேறு திருமேனி நிகழக் கண்டேன் நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன் கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன் கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன் ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன் அடியார்கட் காரமுத மாகக் கண்டேன் ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன் இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே. 6.97.8 கோணல்மாமதி சூடரோகொடு கொட்டிகாலர் கழலரோ வீணைதானவர் கருவியோ விடையேறுவேத முதல்வரோ நாணதாகவோர் நாகங்கொண்டரைக் கார்ப்பரோநல மார்தர ஆணையாகநம் மடிகளோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.5 கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே கொடுகொட்டி யோர்வீணை யுடையவனே பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற் பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார் துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல் வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.9 விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங் கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர் மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.6 |