துலா / ஐப்பசி மாதங்களில் கங்கா தேவி காவிரியில் வசிப்பதாகத் துலா புராணம் கூறுகிறது. அதனால் தான் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராட வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் காவிரியில் நீராடுவதை ‘கடை முழுக்கு’ அல்லது ‘கடைமுகம்’ என்பார்கள். இது மாயூரத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாயூரத்தில் காவிரியில் சிறப்பு வாய்ந்த துலாக் கட்டம் உள்ளது. இந்நாளில் மயிலாடுதுறையில் உள்ள அனைத்துக் கோயில்களில் இருந்தும் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரிக்காகக் காவிரிக்கு வருகிறார்கள்! இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் நீராடி, மயூரநாதரை தரிசனம் செய்ய மயிலாடுதுறைக்கு வருகின்றனர்.
மாயூரம் அருகே ஒரு கிராமத்தில் கால் ஊனமுற்ற ஒருவர் இருந்தார். கடைமுழுக்கு நாளில் காவிரியில் நீராட ஆசைப்பட்டார். அதனால், மிகவும் சிரமப்பட்டுச் சென்றார். ஆனால் கடை முழுக்குக்கு மறுநாளே அவரால் துலாக் கட்டத்தை அடைய முடிந்தது. அவர் வந்த வைராக்கியத்தை அறிந்த கங்கா தேவி, காவிரியில் இன்னும் ஒரு நாள் தங்கி அவருக்கு அருள்பாலித்தார். கடைமுழுக்கிற்குப் பிறகு வரும் இந்த நாளை, அதாவது கார்த்திகை மாதத்தின் முதல் நாள் 'முடவன் முழுக்கு' என்று அழைக்கப்படுகிறது.
See Also: