logo

|

Home >

hindu-shaivaite-festivals-and-vratas >

ashtami-viradha-sirappu

அஷ்டமி விரதச் சிறப்பு

புராணங்களில் சிவபெருமானுக்கு மிக உகந்த திதிகளாகக் கூறப்படுபவை அஷ்டமியும் சதுர்த்தசியும் ஆகும். இந்நாட்களில் செய்யப்படும் சிவ வழிபாடு மிகுந்த பலனைத் தரும்.  அதனால் தான் அஷ்டமியில் வேறு உலகியல் விஷயங்களை முனைப்புடன் செய்வதற்கு உகந்த நாள் அல்ல என்றும் கூறுவது உண்டு.

குறிப்பாகத் தேய்பிறை அஷ்டமி சிவபெருமானின் அம்சமாகிய பைரவ மூர்த்திக்கு உகந்த நாளாக வழங்கி வருகிறது. அதிலும் சிறப்பாக் கார்த்திகை மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமி என்று சிவபெருமானால் பைரவமூர்த்தி தோற்றுவிக்கப்பட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

மிக உயர்ந்த சிவத்துடன் ஒன்றிய நிலையில் இருக்கும் பொழுது புறத்தே உள்ள கோலங்களும், உலகில் சாதாரண மனிதர்கள் பெரிதாக எண்ணும் பொருள்களும் ஒரு பொருட்டன்று என்பதைக் காட்டுகின்ற கோலமே பைரவ மூர்த்தியின் அற்புதக் கோலம். பைரவர் உயர்ந்த ஞானத்தின் திரு உருவம். காஷ்மீர் சைவத்தில் ஞானத்தின் திருவுருவமாகவே பைரவர் வழிபடப்படுகிறார்.  சங்கரரும் ஞான முக்தி தாயகராகிய இந்த பைரவரைப் போற்றிக் கால பைரவாஷ்டகம் செய்துள்ளார்.

அட்டமியில் சிவபெருமானையும் அவரது அம்சமான காவலிற் சிறந்த க்ஷேத்ர பாலகரான பைரவ மூர்த்தியையும் வழிபடுபவர்கள் உடற்பிணி, பகை முதலான நீங்கப் பெற்று நல் வாழ்வு வாழ்வர். சிவபெருமான் திருவருளால் உயர்ந்த ஞானத்தையும் அடைவர்.

விரித்தபல் கதிர்கொள் சூலம் 
 வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல காலப் 
 பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு 
 ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் 
 செந்நெறிச் செல்வ னாரே.  4.73.6 

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே.  10.4.6.1  

அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகிநின்றாளே.  10.4.6.2 

ஓதிய நந்தி உணரும் திருவருள்
நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத்து எழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே.  10.4.6.6 

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.  10.4.6.23 

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே.  10.4.6.25 

நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுது
படர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.  10.4.10.2  

ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவன்
ஆமே கபாலமுஞ் சூலமுங் கைகொண்டங்
காமே தமருக பாசமுங் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.  10.4.10.3  

கையவை யாருங் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.  10.4.10.4 

இத்தன்மை நிகழும் நாள் 
 இவர் திருத்தொண்டு இருங்கயிலை
அத்தர் திருவடி இணைக் கீழ்ச் 
 சென்று அணைய அவருடைய
மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து 
 அருளுதற்கு விடையவர் தாம்
சித்தம் மகிழ் வைரவராய்த் 
 திருமலைநின் றணைகின்றார்.  12.42.25 

அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் 
 உரையாய் என்ன அவர் மொழிவார்
வடி சேர் சூல கபாலத்தர் 
 வட தேசத்தோம் என்றார் வண்
துடிசேர் கரத்துப் பயிரவர் யாம் 
 சொல்ல இங்கும் இராதே போய்க்
கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் 
 இருந்தார் கணபதீச் சரத்து.  12.42.43 

அரியது இல்லை எனக் கேட்ட 
 பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிரவக் கோலப் பெருமான் 
 அருளிச் செய்வார் யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தால் 
 பசு வீழ்த்திட உண்பது
உரிய நாளும் அதற்கு இன்றால் 
 ஊட்ட அரிதாம் உமக்கு என்றார்.  12.42.48 

பண்பு மிக்க சிறுத்தொண்டர் 
 பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம் உண்ணப் 
 படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்பதஞ்சு பிராயத்துள் உறுப்பில் 
 மறுவின்றேல் இன்னம்
புண் செய் நோவில் வேல் எறிந்தால் 
 போலும் புகல்வது ஒன்று என்றார்.  12.42.50 

அரிய கற்பின் மனைவியார் அவரை 
 நோக்கி உரை செய்வார்
பெரிய பயிரவத் தொண்டர் அமுது 
 செய்யப் பெறுவதற்கு இங்கு
உரிய வகையால் அமுது அமைப்போம் 
 ஒருவன் ஆகி ஒரு குடிக்கு
வரும் அச்சிறுவன் தனைப் பெறுமாறு 
 எவ்வாறு என்று வணங்குதலும்.  12.42.55 

பனி வெண் திங்கள் சடை விரித்த 
 பயில் பூங்குஞ்சிப் பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும் 
 கறியும் படைக்கும்படி பொற்பின்
வனிதை யாரும் கணவரும் முன் 
 வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம்
இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் 
 ஒக்கப் படைக்க என.  12.42.72 

வந்த மகனைக் கடிதில் கொண்டு 
 அமுது செய்விப்பான் வந்தார்
முந்தவே அப் பயிரவராம் முதல்வர் 
 அங்கண் மறைந்து அருளச்
சிந்தை கலங்கிக் காணாது 
 திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறி அமுதும் 
 கலத்தில் காணார் வெருவுற்றார்.  12.42.83  

செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழும் 
 கஞ்சுகத்துப் பயிரவர் யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது 
 எங்கே எனத் தேடி
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த 
 அவர் தாம் மலை பயந்த
தைய லோடும் சரவணத்துத் 
 தனயரோடும் தாம் அணைவார்.  12.42.84 

மேலும் காண்க:

Related Content

புராணம் - மண்டையோட்டை ஏந்தியது (பைரவர்)

பைரவ மூர்த்தி

ஆபதோத்தாரண மூர்த்தி

வடுக மூர்த்தி

க்ஷேத்திரபாலக மூர்த்தி