logo

|

Home >

hindu-shaivaite-festivals-and-vratas >

annabishegam

அன்னாபிஷேகம்

  • சிவ வழிபாட்டில் அன்னம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்னாபிஷேகம் நித்திய அபிஷேகத்தில் சிறப்பாகச் செய்யப்படுவது. நித்தியம் செய்ய இயலாத பொழுதும் ஐப்பசி பௌர்ணமியில் மகா அன்னாபிஷேகமாகச் சிறப்பு பெறுவது.
  • நித்திய வழிபாட்டில் நிவேதனங்களில் சிறந்த மகா நிவேதனமாக அமைவது அன்னமே.
  • வேத வேள்வியில் ஹவிஸாக அன்னம் இடப்படுகிறது.வேத வேள்வியின் வடிவமான சிவலிங்கத் திருமேனியில் அன்னாபிஷேகமாக அது அமைகிறது.
  • அன்னம் என்பது உயிராற்றல் (அதனை வேதம் "அன்னம் ந நிஷிந்த்யாத்", "அஹமன்னம்" என்று போற்றுகிறது.). அதனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வழிபாடு அன்னாபிஷேகம்.
  • சோறு என்ற சொல் உணவையும், மேலான வீடுபேறையும் குறிப்பது. (பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்  - திருவாசகம்). பொதுமக்கள் வழக்கிலும் "சோத்துல இருக்கான் சொக்கநாதன்" என்று இப்பொருள் குறிக்கப்படுகிறது.
  • கொதிக்கும் அன்னத்தை இறைவன் திருமேனி மீது அபிஷேகிக்காமல், கை பொறுக்கும் சூட்டில் சார்த்த வேண்டும்.
  • இறைவனுக்கு அபிஷேகிக்கப்பட்ட அன்னம் சிறிதளவேனும் பிரசாதமாக உட்கொள்ளச் சிறந்தது.

தேனமர் பொழில் கொளாலை வளர் செம்பொன் எங்கும் நிகழ!

 

Related Content

தென்பாண்டி நாட்டில் தசரதராமன் வழிபட்டு பேறுபெற்ற பஞ்சலிங்க த

பூவும் நீரும்

பிரதோஷ மகத்துவம்

நடராஜர் அபிஷேகம் - சிறப்புரை  - திரு. சிவபாதசேகரன் அவர்கள்

அமாவாசை சிறப்பு