logo

|

Home >

hindu-shaivaite-festivals-and-vratas >

amavasai-sirappu

அமாவாசை சிறப்பு


அமாவாசை சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மாதத்தின் துவக்க நாள்.  சிவாலயங்களில் மாதந்தோறும் சிறப்பு பெறும் பஞ்ச பர்வ உற்சவங்கள் அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிறப்பு, கிருஷ்ணபக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி ஆகிய ஐந்து தினங்களாகும்.

chUla thEvarஅமாவாசை பாவங்களைப் போக்கும் நாளாக, சிறப்பான நீராடலுக்குரிய நாளாகப் போற்றப்படுகிறது. இதன் காரணமாக பல சிவாலயங்களில் அமாவாசை தினங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

குறிப்பாக சோமவாரம் அதாவது திங்கட்கிழமை அமாவாசையோடு இணைந்து வருகின்ற நாள் அமாவாசை சோம பிரதக்ஷணம் என்று சிறப்பு பெறுகிறது. சிவபெருமானின் அஷ்ட மகாவிரதங்களில் ஒன்றான சூலவிரதம் தை அமாவாசையில் அமைகிறது.

சாம வேத வம்சப் பிராமணத்தில் வருகின்ற ஒரு ரிஷியின் பெயர் அமாவாசை.

முன்னோர் கடன் தீர்ப்பதற்கும் அமாவாசை சிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது

See Also: 
1. Shula Vrata 

Related Content

Shula vrata

மகாமகம்

அஷ்டமி விரதச் சிறப்பு

Ashtami Vrata Significance

பௌர்ணமி சிறப்பு