உடுப்பூர் என்னும் இத்தலம் தற்போது உட்டுகூர் என்று வழங்குகின்றது.
இத்தலம் கண்ணப்ப நாயனாரி திருவவதாரத் திருத்தலமாகும். அவதாரத் தலம் : உடுப்பூர் (உட்டுகூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருக்காளத்தி குருபூசை நாள் : தை - மிருகசீரிடம்.
இத்தலத்தில் கண்ணப்ப நாயனாருக்குத் திருவுருவச் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. (2008).
கண்ணப்ப நாயனார் முத்தியடைந்தத் திருத்தலமான திருக்காளத்தி திருக்கோயில் வளாகத்திலும், கண்ணப்பர் மலையிலும் நாயனாருக்கு தனிச் சந்நிதி உள்ளது.
அமைவிடம்
அ/மி. நாகலிங்கேசுவரர் திருக்கோயில்,
உட்டுகூர்,
கடப்பா மாவட்டம்,
ஆந்திரா மாநிலம்.
மாநிலம் : -
சென்னையிலிருந்து - அரக்கோணம், ரேணிகுண்டா வழியாகக் கடப்பா செல்லும் வழியில் ராசம்பேட்டை இரயில் நிலையம் உள்ளது; ராசம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 3-கி.மீ தொலைவில் உள்ளது உடுப்பூர் (உட்டுகூர்) என்னும் தலம். கர்நாடக மாநிலம் காம்பீலியிலிருந்து - ஹோஸ்பேட், பெல்லாரி, குண்டக்கல், கடப்பா வழியாக ராசம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 3-கி.மீ தொலைவாகும்.