logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பூந்துருத்தி கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : காசிப தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பூந்துருத்திநம்பி காடநம்பி, சேக்கிழார், இந்திரன், திருமால், இலக்குமி, சூரியன், காசிபர் ஆகியோர்.

Sthala Puranam

 

Tiruppunturutti temple

மக்கள் வழக்கிலும் - அஞ்சல் பெயர் வழக்கிலும் தற்போது திருப்பந்துருத்தி என்று வழங்குகிறது. கோயில் உள்ளபகுதி மேலத்திருப்பூந்துருத்தியாகும்.

 

ஆற்றிடைக் குறையிலுள்ள ஊர்கள் "துருத்தி" என்று பெயர் பெறும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது.

 

அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்றெண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சித் தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. (திருப்புங்கூர் தலத்தில் நந்தனாருக்காக நந்தி விலகியதும் குறிப்பிடத்தக்கது)

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    அப்பர்     -    1. மாலினை மாலுற (4.88),                                      2. கொடிகொள் செல்வ விழா (5.32),                                      3. நில்லாத நீர்சடைமேல் (6.43); பாடல்கள்      :    அப்பர்     -       நெருப்பனைய (6.59.2),                                         இகழ்ந்தானை (6.68.10),                                         பூச்சூழ்ந்த (6.75.8),                                         மற்றாருந் (6.81.4),                                         கன்னியையங் (6.84.6),                                         வரையார்ந்த (6.86.5),                                         நேர்ந்தொருத்தி (6.93.1);    பூந்துருத்திநம்பி காடநம்பி    -     சேடர் உறைதில்லைச் (9.19.10) கோயில் - முத்து வயிரமணி திருவிசைப்பா;                சேக்கிழார்        -     நீடிய அப்பதி நின்று (12.21.386,391,392,396,398 & 401) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                         அங்கு அப்பதி நின்று (12.28.351,928,931,938 & 948) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                         தேவர் பெருமான் (12.29.71) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.    

 

தல மரம் :  வில்வம்

 

Specialities

  • சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.

 

  • பூந்துருத்தி காடவநம்பி "யின் அவதாரத் தலம்.

 

இத்தலத்திலும் நந்தி விலகியுள்ளது. (தலபுராணம் தொடர்புடையது.)

 

ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்தத் தலம். இவ்விடம் சம்பந்தர் மேடு என்று சொல்லப்படுகிறது. (திருவாம்பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரப்பூரையடுத்து இம் மேடு உள்ளது. இங்கு இருவருக்கும் கோயில் உள்ளது; விழா நடைபெறுகிறது.)

 

அப்பர் அமைத்த - "திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்" என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம். இங்கு இருந்து தான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார்.

 

கருவறையின் தென்பால் தென்கயிலையும், வடபால் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன.

 

மகிடனையழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன.

முந்தைய தலம்<திருஆலம்பொழில் (திருவாலம்பொழில், திருவாம்பொழில்)

 அடுத்த தலம்>திருக்கண்டியூர்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருக்கண்டியூரிலிருந்து 3-கி. மீ. தொலைவில், திருக்காட்டுப்பள்ளிச் சாலையில் உள்ள தலம். திருவையாற்றிலிருந்தும் செல்லலாம். தொடர்பு : 09486576529

Related Content

Thiruppunthuruthi Sri Poiyiliyappar temple