logo

|

Home >

hindu-hub >

temples

திருமூக்கீச்சரம் - (உறையூர்)

இறைவர் திருப்பெயர்: பஞ்சவர்ணேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: காந்திமதியம்மை.

தல மரம்:

தீர்த்தம் : சிவ தீர்த்தம், நாக தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், பிரமன், உதங்க முனிவர், கார்கோடகன் முதலியோர்

Sthala Puranam

  • உதங்க முனிவருக்கு, ஈசன், ஐந்து காலங்களில் ஐந்து நிறங்களில் காட்சி நல்கியத் தலம்.

 

வேதச் சுருதி என்ற அந்தணன் பூஜித்து, பேயுருவம் நீங்கப் பெற்றான்.

 

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி வென்றமையால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.

 

  • உறையூர்ப் புராணம்

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :    சம்பந்தர்    -    1. சாந்தம் வெண்ணீறெனப்பூசி (2.120); பாடல்கள்     :   சேக்கிழார்   -       கற்குடி மாமலை (12.28.343) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

தல மரம் :  வில்வம்

Specialities

  • இது புகழ்ச்சோழ நாயனார் அவதரித்து ஆட்சி செய்தபதி. அவதாரத் தலம் : உறையூர் (மூக்கீச்சுரம்). வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : கருவூர் (கரூர்) குருபூசை நாள் : ஆடி - கார்த்திகை.

 

  • புகழ்ச்சோழ நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.

 

  • தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட பதி.

 

  • சோழர் காலக் கல்வெட்டுகள் ஒன்பது படி எடுக்கப்பட்டுள்ளன.

 

  • கோச்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.
முந்தைய தலம்<கற்குடி  (உய்யக்கொண்டான்மலை,  உய்யக்கொண்டான்திருமலை)

 அடுத்த தலம்>திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

 

Contact Address

அமைவிடம் நிர்வாக அதிகாரி, அ/மி. பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி : 0431 - 2768546, 094439 19091.

Related Content

திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில் தலவரலாறு