logo

|

Home >

hindu-hub >

temples

பூவனூர்

இறைவர் திருப்பெயர்: புஷ்பவனநாதர், சதுரங்க வல்லபநாதர்.

இறைவியார் திருப்பெயர்: கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி.

தல மரம்:

தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரணி, கிருஷ்ணகுஷ்டஹர தீர்த்தம். கற்பக தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், சுகப்பிரம்மரிஷி.

Sthala Puranam

 

gOpuram
 

  • வசுசேன மன்னனுக்கு மகளாகப் பிறந்து சதுரங்க ஆட்டத்தில் சிறந்து விளங்கிய அம்பாளை, சதுரங்கத்தில் வென்று, மணந்து கொண்டதால் இறைவன் சதுரங்கவல்லப நாதர் என்னும் திருநாமம் பெற்றார்
  • தேவாரப் பாடல்கள்   : பதிகங்கள்     :    அப்பர்   -    1. பூவ னூர்ப்புனி தன்றிரு (5.65); பாடல்கள்      : சேக்கிழார்  -       பழுதில் சீர்த் திருப் பரிதி (12.28.375) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

சுகப்பிரம்மரிஷி மலர்வனம் வைத்து வழிபட்ட தலம்.

 

இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது. ஆனபோதிலும் இவ்விரண்டும் பிணி தீர்க்கும் குளங்களாக உள்ளன.

 

இத்தலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. விஷம் தோஷம் நீக்கவல்ல பிரத்யட்ச பிரார்த்தனைச் சந்நிதி, விஷக்கடிக்கு, எலிக்கடிக்கு இங்குத்தரப்படும் வேரைக்கட்டிக் கொண்டு இவ்வம்பிகையை வழிபட்டு மக்கள் குணமடைகின்றனர்.

 

இறைவனுக்கு நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

pUvanUr temple with pond

 

முந்தைய தலம்<திருவெண்ணியூர் (கோயில்வெண்ணி)

 அடுத்த தலம்>பாதாளேச்சுரம் (பாமணி)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர், நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றுப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் கோயிலையடையலாம். மன்னார்குடி - அம்மாப்பேட்டை; வலங்கைமான் - மன்னார்குடி நகரப் பேருந்துகள் பூவனூர் வழியாகச் செல்கின்றன.

Related Content