logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) மகுடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

இறைவர் திருப்பெயர்: கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர்.

இறைவியார் திருப்பெயர்: மதுரபாஷிணி, பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி.

தல மரம்:

வன்னி

தீர்த்தம் : காவிரி, பிரமதீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், தேவதீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பரத்வாஜர், அகத்தியர் முதலியோர்

Sthala Puranam

thirupandi kodumudi temple

  • ஆதிசேஷனுக்கும்,வாயுவிற்கும் நடந்த வல்லமைப் போட்டியில்,ஆதிசேஷனால் முழுமையாக மூடப்பட்டிருந்த மேருமலையிலிருந்து ஐந்து மணிகள் சிதறிச் சிகரங்களாக விழுந்தன.அவற்றுள், வைரம் இத் தலமாகும்.ஏனயவை1.சிவப்பு மணி-திருவண்ணாமலை,2.மரகதம்-திரு ஈங்கோய்மலை,3.மாணிக்கம்-திரு வாட்போக்கி,4.நீலம்-பொதிகை மலை.
  • பாண்டிய மன்னனின் விரல் வளர்ந்து குறை தீர்ந்த தலமாதலின் 'பாண்டிக் கொடுமுடி' என்றாயிற்று (அங்கவர்த்தனபுரம்)
  • பரத்வாஜருக்கு, ஈசன் முயலகன் இல்லாமல் நடனக் காட்சி அருள் புரிந்த தலம்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. பெண்ணமர் மேனியினாரும் (2.69);                       அப்பர்      - 1. சிட்டனைச் சிவனைச் (5.81);                       சுந்தரர்     - 1. மற்றுப் பற்றெனக் கின்றி (7.48); பாடல்கள்      :      அப்பர்     -        கடுவெளியோ (6.82.7);                      சேக்கிழார்   -        அப்பதியின் கண் (12.28.337 & 338) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                             பரவி அப்பதிகத் (12.29.85,86 & 87) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

Specialities

  • வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி ஓடுகிறது.  காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது.
  • சுயம்புமூர்த்தி தலம். சிவலிங்கம் சிகர வடிவில் உள்ளது. அகத்தியர் தழுவிய விரல் தழும்பு மேலே உள்ளது. சதுரபீடம். 
  • சித்திரை பௌர்ணமியில் பரத்துவாசருக்கு நடனக்காட்சி தந்த குஞ்சிதபாத நடராசர் முயலகன் இல்லாமல் நின்று சதுர்முகத் தாண்டவ நடனமிடுவதாக அமைந்துள்ள மூர்த்தம். இதுபோல் காண்பது அரிது. 
  • இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் கீழ் முயலகன் வடிவமும் சனகாதி நால்வர்களுக்குப் பதிலாக ஒருவருடைய வடிவமுமே உள்ளது. தட்சிணாமூர்த்திக்குச் சடாமுடி உள்ளது. ரிஷபம் உள்ளது. 
  • வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களும், மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள்ளது. ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை, காய்கள் காய்ப்பதில்லை என்பது சிறப்பம்சம். இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை.
  • இத்தலம் மும்மூர்த்தித் தலம் என்பர். இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.
  • சித்திரையில் 11 நாள் பெருவிழா நடைபெறுகிறது.
  • ஆடிப்பெருக்கன்று பெருந்திரளான மக்கள் கூடி வழிபடுகின்றனர்.  
  • இக்கோவிலில் எட்டு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
  • திருப்பாண்டிக் கொடுமுடியுடையாருக்கும், பெரிய திருவடி நாயனாருக்கும் மாசி மகத்து விழா, வழிபாடு, கோயில் திருப்பணி முதலியவற்றிற்காக விதரி என்ற திருச்சிற்றம்பல நல்லூர், எழுநூற்றுவர் சதுர்வேதி மங்கலம், திருவூஞ்சலூர், வள்ளிபுரம், வடிவுடைய மங்கை ஐயகரம், திருக்காட்டுத்துறை என்ற ஊர்கள் இறையிலியாகக் கொடுக்கப்பட்டன. 
  • அம்மன் கோயில் அர்த்தமண்டபத்தில் உள்ள கல்வெட்டின் படி கோனேரின்மை கொண்டான் மூன்றாம் ஆண்டில் பாண்டி மண்டலத்து மயிலூர் உடையான் என்னும் போதமுதியான் என்பவன் பாண்டிக் கொடுமுடி ஆளுடையார் கோயிலில் இளைய பிள்ளையாரையும், பள்ளிகொண்ட பெருமாள் கோயிலில் கருடாழ்வாரையும் எழுந்தருளுவித்து அரசன் நன்மையின் பொருட்டு இருகூறாக ஐந்து பொன் தந்தான்.
  • அம்மன் கருவறைச் சுவரில் உள்ளதன்படி விதரி என்ற திருச்சிற்றம்பல நல்லூரில் இருபது மா நிலத்தை இறையிலியாக மேல்கரை அறையூர் நாட்டார்க்கு விட்ட நான்கு மா போக மற்றவைகள் திருப்பாண்டிக் கொடிமுடியுடையார்க்கும், விதரி திருச்சிற்றம்பலமுடையாருக்கும் கொடுக்கப்பட்டன.
  • வீர நாராயணன் ரவிவர்மன் இருபத்தேழாம் ஆண்டில் திருக்கொடுமுடி மகாதேவர்க்கு வழிபாட்டிற்காகவும், மாசி மகத்திற்காகவும் மேல்கரை, அறையூர் நாட்டு ஊஞ்சலூரை இறையிலியாகக் கொடுத்துள்ளான்.
  • சுந்தரபாண்டிய தேவர் இரண்டாவது ஆண்டில் பூந்துறை நாட்டார்கள் திருப்பாண்டிக் கொடுமுடி நாயனாருக்கு வேம்புரியான கண்டியதேவ நல்லூரைத் தேவதானமாகக் கொடுத்துள்ளார்கள். 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில் நிலையமாகும். கொடுமுடி என தற்போது வழங்கப்படுகின்றது. இரயில் நிலையத்திலிருந்து 1-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. திருச்சி, கரூர் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04204 - 222375

Related Content

திருப்புக்கொளியூர் அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருநணா (பவானி) சங்கமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீஸ்வரர் தி

வெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாங்கூடலூர்)