இறைவர் திருப்பெயர்: முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி.
இறைவியார் திருப்பெயர்: ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை, முயங்குபூண்முலையம்மை, ஆவுடைநாயகி, மங்களாம்பிகை.
தல மரம்:
வில்வம்
தீர்த்தம் : பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணியதீர்த்தம். ஷண்முக தீர்த்தம், நொய்யல் ஆறு
வழிபட்டோர்:சுந்தரர், அப்பர், சேக்கிழார், முருகப்பெருமான், அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர்.

- முருகப்பெருமான் வழிபட்ட தலம். அதனால் முருகன் பூண்டி எனப் பெயர் பெற்றது. முருகப்பெருமான் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவிப் பூஜை செய்தார்.
- அகத்தியர் மார்க்கண்டேயர் துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம்.
- துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மர (குருக்கத்தி மர)த்தை இங்கு கொண்டு வந்தார் என்பர்; ஆதலால் இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.
- மகாரதன் என்னும் பாண்டிய மன்னன் சண்முக தீர்த்தத்தில் நீராடிபி புத்திரப் பேறு கிடைப்பதற்காகப் பசும்பால், கற்கண்டு சேர்த்து செய்த பாயசத்தை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து அந்தணர்களுக்கு வழங்கினான். அதன் பயனாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ந்தான்.
- சுந்தரர் பெருமான் கொடுங்கோளூரில் தமது நண்பரான சேரமான் பெருமாள் அளித்த வெகுமதிகளைப் பெற்றுக்கொண்டு இந்த வழியாகத் திருவாரூர் செல்லும் போது இறைவன் வேடர்களை அனுப்பி அவர் வைத்திருந்த வெகுமதிகளைக் கவர்ந்து வரச் செய்தார். சுந்தரர் பெருமான் திருமுருகன்பூண்டி திருத்தலத்து இறைவனிடம் "கொடுகு வெஞ்சிலை" என்ற பதிகம் பாடி முறையிட, இறைவன் தம்முடைய திருவருளாக அந்த வெகுமதிகளை மீண்டும் சுந்தரருக்கு அளித்தார்.
- இத்தலம் பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம்.
- இத்தலத்திற்கு செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடிய தலபுராணம் உள்ளது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. கொடுகு வெஞ்சிலை (7.49); பாடல்கள் : அப்பர் - தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1); சேக்கிழார் - ஆரூரர் அவர் தமக்கு (12.37.164,165 & 168) கழறிற்றறிவார் நாயனார் புராணம், செறிவுண்டு (12.52.7) முனையடுவார் நாயனார் புராணம், (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி), செற்றார் தம் புரம் எரித்த (12.64.2) அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம், (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி).
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
அவிநாசியிலிருந்து 5-கி. மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் நிறைய உள்ளது.
தொடர்பு :
04296 - 273507