logo

|

Home >

hindu-hub >

temples

திருப்புக்கொளியூர் அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

இறைவர் திருப்பெயர்: அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிஈஸ்வரர், அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்.

இறைவியார் திருப்பெயர்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.

தல மரம்:

மாமரம், பாதிரி

தீர்த்தம் : காசிக் கங்கை, காசிக்கிணறு, நாகக்கன்னிகைத் தீர்த்தம், ஐராவதத்தீர்த்தம்.

வழிபட்டோர்:சுந்தரர் - எற்றான் மறக்கேன், மாணிக்கவாசகர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

avinaci temple

  • பழைய பதியாகிய புக்கொளியூர் நத்தம் தற்போது அழிந்து வெட்டவெளியாகவுள்ளது. பிற்காலத்தில் தோன்றிய நகரமே தற்போதுள்ள அவிநாசியாகும்.
  • அவிநாசி - விநாசம் இல்லாதது. ஊர்ப்பெயர் - புக்கொளியூர், இறைவன் - அவிநாசி, இறைவன் பெயரே இன்று ஊர்ப்பெயராயிற்று.
  • சிவபிரான் அக்னித் தாண்டவம் செய்தபோது தேவர்கள் அஞ்சி நடுங்கி இங்கு வந்து புகுந்தொளிந்த காரணத்தால் புக்கொளியூர் எனப் பெயர் பெற்றது.
  • இதற்குத் தட்சிண காசி, தட்சிண வாரணாசி என்ற பெயர்களும் உள்ளன.
  • பிரம்மா 100 ஆண்டுகளும், ஐராவதம் 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாக கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகம்.
  •  வசிஷ்டருக்கு ஏற்பட்ட சனி தோஷம் இத்தலத்தில்  சிவ வழிபாடு செய்தால் நீங்கியது.  இங்குள்ள  சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இருக்கிறார்.
  • சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இத்தலம் சென்ற போது, ஒரு வீட்டில் மங்களவாத்திய கோஷமும், எதிர் வீட்டில் அழுகுரலும் கேட்டது. இருமறை சிறுவர்கள் ஒரு மடுவில் நீராடச் சென்ற போது ஒருவனை முதலை விழுங்கிற்றென்றும், மற்றவனுக்கு உபநயன சடங்கு வாத்திய கோஷத்தோடு நடக்கிறதென்றும், எதிர் வீட்டில் மாண்ட சிறுவனின் தாய், தன் மகனும் உயிரோடிருந்தல் அவனுக்கும் உபநயனம் சிறப்பாக நடைபெறும் என நினைத்து அழுகிறாள் என்றும்,அங்குள்ள முதியோர் கூறக் கேட்டார்.இறந்த சிறுவனின் தாய் தந்தையர்  சுந்தரரை விழுந்து வணங்கினர். இரக்கம் மிக்க சுந்தரர் மடுவிற்குச் சென்று, அதில் முதலையை வரவழைத்து, வளர்ச்சி பெற்ற மறைச்சிறுவனை அது தரும்படியாகக் காலனுக்குக் கட்டளையிடுமாறு அவிநாசியப்பனுக்கு பதிகம் பாடி வேண்டுகோள் விடுத்தார்.உடனே முதலை மறைச்சிறுவனை மடுக்கரையிற் சேர்த்தது. அவனுக்கும் அப்பொழுதே உபநயனம் செய்து வைத்தார்.
  • இத்தலத்துத் தலபுராணம் இளையான்கவிராயரால் இயற்றப் பட்டது

 

திருமுறை பாடல்கள் : பதிகங்கள்  :   சுந்தரர்           -  1. எற்றான் மறக்கேன் (7.92); பாடல்கள்   :   மாணிக்கவாசகர் -     நரியைக் குதிரைப் பரியாக்கி (8.50.7) ஆனந்தமாலை;                 சேக்கிழார்       -     மைந்தன் தன்னை (12.72.9 & 13) வெள்ளானைச் சருக்கம்.  

 

Specialities

  • இக்கோயிலில் முதலில் உள்ள வழிகாட்டி விநாயகரை தரிசித்து, பிறகு தவத்திலிருக்கும் (பாதிரி மரத்து) அம்பாளைத் தரிசித்து, பிறகுதான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.
  • கல்லாலான தீபஸ்தம்பத்தின் கீழ் தனியே சுந்தரர் உருவம், முதலை பிள்ளையை வெளிப்படுத்தும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
  • காலபைரவர் சந்நிதி உள்பிரகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்; இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம்.
  • கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கி.மீ. தொலைவில் முதலையுண்ட பாலனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும் உள்ளது.
  • ஹரதத்தாசாரிய ஸ்வாமிகள் "ஹரிஹரதாரத்ம்யம்" என்ற வடமொழி  நூலில் ஒரு ஸ்லோகத்தில் இதை புகழ்கிறார்.
  • அம்பாள் சந்நிதியில் சுவரில் தேள் உருவம் உள்ளது. இப் பகுதியில் தேள் கடித்தால், அவர்கள் இங்கு வந்து வலம் வந்தால் விஷம் இறங்கி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. 
  • மைசூர் அரச வம்சத்திற்கும் அவிநாசி திருக்கோயிலுக்கும்  மிகுந்த தொடர்பு உண்டு.  பதவியேற்கும் முன்  இங்கு  பூஜை செய்த பின்னரே பதவி ஏற்பர்.
  • ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளது.
  • சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம்  மிருகசீர்ஷ நட்சத்திரத்தில்  கொடியேற்றத்துடன் தொடங்கி  பூரத்தில்  தேர்த்திருவிழாவுடன் நடைபெறுகிறது.
  •  தலவிருட்சமான பாதிரி மரம் பிரம்மோற்சவ காலத்தில் பூக்கிறது
  • கல்வெட்டு: வீரராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன், வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் வீரநஞ்சராய உடையார், வீரசிக்கராய உடையார், விஜயநகர அச்சுததேவ மகாராயர் முதலியோர் காலங்களில் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானங்களைக் குறிக்கின்றன.
  • குளக்கரையில் உள்ள சுந்தரர் கோயிலைக் கட்டியவன் சுந்தரபாண்டியன் என்பது ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது.
  • 1695-ல் வாழ்ந்த சிக்கதேவராய உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் சுற்றுப்புற மண்டபச் சுவர்களிலும்; சந்நிதித்தூண்களிலும் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். கோவையிலிருந்து 40 கி. மீ; திருப்பூரிலிருந்து 14 கி. மீ; திருமுருகன்பூண்டியிலிருந்து 5 கி. மீ; கோவை - ஈரோடு நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. தொடர்பு : 04296-273113, 09443139503.

Related Content

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருநணா (பவானி) சங்கமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீஸ்வரர் தி

வெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாங்கூடலூர்)

திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) மகுடேஸ்வரர் திருக்கோயில் வ