logo

|

Home >

hindu-hub >

temples

ஓரியூர் சேயுமானவர் திருக்கோயில் (Oriyur Seyumanavar Sivan Temple)

இறைவர் திருப்பெயர்: சேயுமானவர்

இறைவியார் திருப்பெயர்: மட்டுவார் குழலி

தல மரம்:

பனை 

தீர்த்தம் : சிவகங்கை

வழிபட்டோர்: மாணிக்கவாசகர்

Sthala Puranam

  • சிவபெருமான் விருத்த குமார பாலரான திருவிளையாடல் நிகழ்த்திய தலம்.
  • கௌரி என்ற சிவ பக்தி மேம்பட்ட பெண்ணிற்காக இறைவன் வயோதிகராய் வந்து இளைஞராய் மாறி சிறு குழந்தையாகவும் மாறினார். இதனால் திருக்கோயில் இறைவர் சேயும் ஆனவர் என்று அழைக்கப்படுகிறார்.
  • திருவாசகத்தில் கீர்த்தித் திரு அகவலில் "ஓரியூரினில் உகந்தினிது அருளிப் பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்" என இத்தலத்தை தலத்தில் நிகழ்ந்த திருவிளையாடலை மாணிக்கவாசகப் பெருமான் சிறப்பித்துள்ளார்.
  • பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடல் புராணத்தில் விருத்த குமார பாலர் ஆன படலம் என்று இந்த வரலாறு விளக்கப்பட்டுள்ளது.

Specialities

  • திருக்கோயிலுக்கு சற்று தூரத்தில் சிவகங்கை என்ற தீர்த்தம் பன்னெடுங்காலமாக அமைந்துள்ளது.
  • திருத்தலத்தில் இப்போது விளங்கும் திருக்கோயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது

Contact Address

Related Content

திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)